Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பாட்டும், பட்டுச் சேலையும்... பாடகிகளின் ஃபேவரிட் பட்டுப் புடவைகளின் கதை!

 


மார்கழி மாதம், இசை மாதம். டிசம்பர் மாத கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், பாடகிகளின் குரலுடன், அவர்கள் உடுத்தியிருக்கும் பட்டுப்புடவைகளும் கவனம் பெறும். தங்களின் பட்டுப்புடவை காதல் கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், இந்தப் பாடகிகள்!  

sudha_ragunanan_13130.jpg

சுதா ரகுநாதன்

''என் கச்சேரியில் என் பாட்டை மிகவும் ரசித்து அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர், என் பட்டுப் புடவைகளையும் ரசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ' 'அடுத்த கச்சேரிக்கு சுதா எந்த கலர் பட்டு கட்டுவாங்க?'னு நாங்க ஆர்வமா இருப்போம்' என்று என்னிடமே சிலர் சொல்லியிருக்கிறார்கள். எனவே, கச்சேரிகளில் புடவைக்கு தரவேண்டிய முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

பொதுவாக என்னிடம்  ஊதா, பச்சை, பிங்க் வண்ணப் புடவைகள்தான் அதிகமாக இருக்கும். அல்லது, இந்த ஷேட்ஸ் இருக்கக்கூடியப் புடவைகளாகத்தான் விரும்பி வாங்குவேன். மிக முக்கியமான கச்சேரிகளில், மேடை அலங்கார வண்ணத்தை கேட்டறிந்து, அதற்குப் பொருத்தமான நிறத்தில் உடுத்துவேன். நான் உடுத்திச் செல்லும் புடவை பெரும்பாலும் மேடைக் கலரோடு மெர்ஜ் ஆகாமல் பார்த்துக்கொள்வேன். ஒரே புடவையை அடிக்கடி உடுத்துவதைத் தவிர்க்க, அதிகம் பயன்படுத்தியவற்றை தெரிந்தவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். எப்போது நண்பர்களோடு வெளியில் சென்றாலும், பட்டுப்புடவை ஷாப்பிங் நிச்சயம் உண்டு.

ஆரம்பத்தில் தாவணி உடுத்திதான் கச்சேரிகளில் பாடினேன். தம்புரா வாசிக்கும்போதுகூட தாவணிதான் உடுத்தியிருக்கிறேன். பிறகு முழுக்க முழுக்க காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு மாறிவிட்டேன். பத்ம பூஷன் விருது வாங்கியபோதுகூட, என் மனதுக்கு நெருக்கமான காஞ்சிப் புடவைதான் உடுத்தியிருந்தேன். 'போத்தீஸ் பரம்பரா பட்டுக்கு அம்பாஸிடராக இருந்ததால், நிறைய காஞ்சிப் பட்டுகள் அங்குதான் வாங்கினேன். இது மட்டும் அல்லாது, நல்லி, துளசி, ஆரெம்கேவி என பல இடங்களில் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை வாங்குவேன். எங்கு நல்லப் புடவைகள் கிடைத்தாலும் வாங்கிவிடுவேன்.  

திருமணப் பட்டு, அம்மா வீட்டில் சீராகக் கொடுத்த பட்டுப்புடவைகள் எல்லாம் எப்போதும் எனக்குப் பொக்கிஷம். கோவையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், மான், மயில், அன்னம் வேலைப்பாடுகள் செய்த, சிவப்பு, மஞ்சள் காம்பினேஷன் பட்டுப்புடவையை அன்புப் பரிசாக அனுப்பியிருந்தார். அதை நிறைய மேடைகளில் உடுத்தியிருக்கிறேன். 20 வருடத்துக்கும் மேல் ஆனதால், இப்போது அதற்கு ஓய்வு கொடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன்."

singer_mahathi_13356.jpg

மஹதி

''எனக்குப் பெரும்பாலும் டெம்பிள் பார்டர் பட்டுப் புடவைகள் பிடிக்கும். பிரைட் கலர்களில்தான் புடவையைத் தேர்ந்தெடுப்பேன், டல் கலர்களைத் தவிர்த்துவிடுவேன். பிங்க், சிவப்பு, ஊதா நிறப் புடவைகள் எல்லாம் கச்சேரி மேடைக்கு அவ்வளவு அழகாக இருக்கும். 

கல்லூரி முதல் வருடத்தில் இருந்தே, கச்சேரிக்கு ஒரிஜினல் காஞ்சிப் பட்டுப் புடவைதான் என்னுடைய ஒன் அண்ட் ஒன்லி சாய்ஸ். அதை உடுத்தும்போது பாசிட்டிவ் எனர்ஜி, சந்தோஷம், தைரியம் எல்லாமே அதிகமாகக் கிடைக்கும். அந்தப் புடவைகளின் கனமே அழகு. சில்க் காட்டன், சில்க் மிக்ஸ்டு புடவைகளுக்கு எல்லாம் நோ. 

நல்லி, குமரன், சுந்தரி, பாலம் சில்க்ஸ், பரிசரா ஆன்லைன் வெப்சைட்... இங்கெல்லாம்தான் பொதுவாகப் புடவைகள் வாங்குவேன். ஜூவல்லரிகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவேன். கச்சேரியில் ஒருமுறை உடுத்திய புடவையை, இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் உடுத்த மாட்டேன். 

சிங்கிள் ப்ளீட் வைத்துதான் புடவை கட்டுவேன். ஹாஃப் அண்ட் ஹாஃப் புடவையாக இருந்தால் மட்டுமே, ப்ளீட் வைத்து உடுத்துவேன். டிசைனிங் பிளவுஸ் தைக்க, பிரத்யேக டிசைனர்கள் கைவசம் இருக்கிறார்கள். 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் சீஸனுக்கு, அப்பா வீட்டில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு பட்டுப் புடவைகளாவது வந்துவிடும். அதேபோல, கணவர், தோழிகள் என அனைவரும் பட்டுப் புடவைகள் பரிசளிப்பார்கள். இப்படி என்னிடம் உள்ள பல புடவைகள் நான் பரிசாகப் பெற்றது என்பதால், எல்லாமே எனக்கு ஸ்பெஷல்தான்!"

priya_sis_13531.jpg

ஹரிபிரியா(பிரியா சகோதரிகள்)

''10, 15 வயதில் இருந்து நானும் அக்கா சண்முகபிரியாவும் பாட ஆரம்பித்துவிட்டோம்.  16, 17 வயதில் சுடிதார் அணிந்து பாடியிருக்கிறோம். அதற்குப் பிறகுதான் பட்டுப் புடவை உடுத்த ஆரம்பித்தோம். ஒவ்வொரு கச்சேரியிலும்  ஆடிட்டோரிய விளக்கு வெளிச்சத்தைப் பொருத்து புடவைகள் உடுத்துவது எங்கள் வழக்கம். 

ஆரம்பத்தில் கச்சேரிகளின்போது புடவை கட்டுவதில் அம்மா, தோழிகள் என உதவியாக இருந்தாலும் சமயங்களில் சரியாக அமையாது. எனவே, அதற்காகவே ஒருவரை உதவிக்கு வைத்திருந்தோம். அதற்குப் பிறகு, நன்றாக கட்டிப் பழகிகொண்டோம். 

ஆரம்பத்தில் இருந்தே  தி.நகர் குமரன் சில்க்ஸில்தான் புடவைகள் வாங்குகிறோம். அது எங்களுக்கு ராசியும்கூட.  அவர்களும் எங்களின் ரசனைக்கு ஏற்றவாறு பிரத்யேகமாகப் புடவைகளை வரவழைப்பார்கள். பொதுவாக ஜூவல்லரியில் கோல்டன் பீட்ஸ், ரூபி, எமரால்டு கற்களை பதித்து அணிவது எங்களுக்குப் பிடிக்கும். 

நாங்கள் இருவரும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் ஆடைகள் அணிவோம். சில நேரங்கள் இரண்டு புடவைகள் ஒரே மாதிரி கிடைக்காமல் போகும். அப்போது கலர் மட்டும் வேறு, டிசைன் மட்டும் வேறு என்று காம்ப்ரமைஸ் செய்துகொள்வோம். ஆனால், கச்சேரிகளில் இருவரும் ஒரே மாதிரி உடுத்தினால்தான் அழகு என்பதால், அதில் எந்த சமரசமும் இல்லாமல், ஷாப்பிங், பிளவுஸ் என அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவிடுவோம். கச்சேரிக்கு உடுத்திக்கொள்ளலாம் என்பதால், அக்கா அவர் திருமணத்துக்கு புடவைகள் எடுத்தபோது, நானும் புடவை எடுத்துக்கொண்டேன். நான் என் திருமணத்துக்குப் புடவைகள் எடுத்தபோது, அக்காவும் அதேபோல் ஒரே மாதிரியானப் புடவையை எடுத்துக்கொண்டார்!"   

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

p110a.jpg

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான பிராட்லீ கூப்பரும் ஐரினா செய்க்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார்கள். இந்த ஜோடி தங்களின் பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி அதிகம் வெளியே காட்டிக்கொள்வதில்லை. இந்நிலையில் ஐரினாவின் கையில் முளைத்திருக்கும் புது மோதிரம் சில கதைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது. `இருவருக்கும் எங்கேஜ்மெண்ட் முடிந்துவிட்டது. கர்ப்பமாக இருக்கும் ஐரினாவிற்கு வரும் மே மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. அதற்குள் இருவரும் கண்ணாலம் கட்டிக்கொள்வார்கள்’ என ஹாலிவுட் கிசுகிசுக்கிறது. #புள்ளகுட்டி பெத்துக்கிட்டு...

p110b.jpg

மெரிக்க டி.வி நடிகையான கேட் கோஸ்லின் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்தியாவார். ‘ஏன் ஜி இப்படி?’ என சமீபத்தில் கேட்டதற்கு, ‘என் பெர்சனல் பிரச்னைகள் காரணமாகவே அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறேன். சிங்கிள் அம்மாவாய் இருந்து இந்தச் செய்திகளின் பின்விளைவுகளில் இருந்து என் எட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றுவதே என் பெரிய வேலையாகிவிட்டது’ என மனம் திறக்க, பாவம்ல என உச்சுக் கொட்டி நகர்கிறார்கள் ரசிகர்கள். #கண்ணு வேர்க்குது!

p110c.jpg

ஹாலிவுட்டில் எப்போதும் எல்லாம் தலைகீழாகத்தான் நடக்கும் என்பதற்கான உதாரணம் இது. பிரபல நடிகையான லேனா ஹெட்லியும் அவர் கணவரும் சில மாதங்களுக்கு முன் பிரிந்தார்கள். ‘லேனா சொல்லித்தான் நான் என் ஸ்டைலிஸ்ட் வேலையை விட்டேன். இப்போது பணம் இல்லை. எனவே லேனா எனக்குப் பணம் தர வேண்டும். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியலில் எபிஸோடுக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளம் வாங்கும் அவருக்கு இது பெரிய விஷயமல்ல’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் லேனாவின் முன்னாள் கணவர். #ஓ!

p110d.jpg

ந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட சினிமா ஸ்டார்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது கூகுள். அதில் சர்ப்ரைஸாக முதலிடம் பெற்றிருக்கிறார் அமெரிக்க நடிகையான மேஹன் மார்க்கிள். இரண்டு மாதங்களுக்கு முன் வரை இவரை யாரும் தேடவே இல்லை. இங்கிலாந்து இளவரசர் ஹாரி இவரோடு காதலில் விழுந்துவிட்டார் என்ற தகவல் வரவும் மொத்த உலகமும் அடித்துப் பிடித்து இவரைத் தேடியிருக்கிறது. அதன் விளைவுதான் இது. #எவ்ளோ ஆர்வமாய் இருக்காய்ங்க!

  • தொடங்கியவர்

சுனாமி பேரழிவின் 'வலி'யை கடத்திய புகைப்படம்... அதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு? #tsunamiday2016

 

a1_23326.jpg

ல ஆயிரம் உயிர்களை பலி கொண்ட சுனாமி நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது. இதே நாளில் 2004-ம் ஆண்டு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர வடமாவட்டங்கள், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதியில் புரட்டிப்போட்டது சுனாமி.  2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பதற்கு பதில், கறுப்பு ஞாயிறாக அமைந்தது.

a2_23092.jpg

சுனாமியின் வலியை மக்களிடம் கடத்தியவை புகைப்படங்களும், வீடியோக்களும் தான். உறவினர் ஒருவர் சுனாமி தாக்குதலில் இறந்து கிடக்க, அந்த உடலைப் பார்த்து  கடற்கரை தரையில் மண்டியிட்டு, முகம் மண்ணில் பதிய... கைகளை விரித்தபடி பெண் ஒருவர் கதறி அழுதபோது எடுக்கப்பட்ட படம் தான், சுனாமி பேரழிவின் அடையாளமாகவே மாறிப்போனது. பிணத்தின் கை மட்டும் தெரிய அதன் அருகே பெண் அழும் காட்சி புகைப்படமாக பதியப்பட்டிருந்தது.

சுனாமியின் பேரழிவுகளை பதிவு செய்ய புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்திய புகைப்படப் பத்திரிகையாளரான ஆர்க்கோ தத்தா பதிவு செய்த புகைப்படம் தான் அது.  இழப்புகளின் ஒட்டுமொத்த வலிகளையும் பொட்டில் அறைந்தது மாதிரி உணர்த்தும் அந்தப் புகைப்படம் 2005-ம் ஆண்டின்  'வேர்ல்டு பிரஸ் போட்டோ'விருதை வென்றது.

இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது. பேரழிவின் சாட்சியாக மாறிப்போன அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை இப்போது கடலூர், சோனங்குப்பம் சுனாமி குடியிருப்பில் சந்தித்து பேசினோம். அவர் பெயர் இந்திரா. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த புகைப்படம் பற்றி பேசிய போது, இந்திராவின்  கண்களில் பெருக்கெடுத்தது கண்ணீர்.

a3_23425.jpg

"அப்பா.. எதுவும் பேச வேண்டாம் தயவு செஞ்சு கிளம்புங்கப்பா" என்ற இந்திராவின் கண்களில் அதே வேதனையை இன்றும் காண முடிந்தது. "அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம் இவரது வீட்டுக்கு படையெடுப்பதாகவும், வருபவர்கள் பணம் கொடுத்து விட்டு செல்வதாக ஊர் மக்களும், உறவினர்களும் தவறாக நினைத்துக்கொள்வதால் ஏற்கெனவே பிரச்னையாக இருக்கிறது. அதனால் தான் அவர் யாரிடமும் பேசுவதை தவிர்க்கிறார்," என நம்மிடம் தெரிவித்தனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்,

நம் தொடர் முயற்சிக்கு பின்னர் பேசத்துவங்கினார். சுனாமி பேரலை தாக்குதல் குறித்து பேசும் போதே அவர் கண்களில் அச்சம் நிழலாடியதை காண முடிந்தது. “அது ஞாயிற்றுக்கிழமை. அன்னைக்கு அப்படி விடியும்ம்னு நாங்கள் யாருமே நினைச்சு கூட பாத்ததில்லை. கடலுக்கும் ஆத்துக்கும் இடையில தான் எங்கள் கிராமங்கள் இருக்குது. அப்போ கடைக்கு போகணும்னாலும் பசங்க ஸ்கூலுக்கு போகணும்னாலும் கடலூருக்கு ஆத்தைக் கடந்து படகுல தான் போக முடியும்.

அன்னைக்கு காலைல 8 மணி இருக்கும். என்னோட மூணு பிள்ளைகளையும் வீட்டுல விட்டுட்டு பால் வாங்க கடைக்கு போனேன். திடீர்னு கீழ் வானம் தென்னை மரம் உயரத்திற்கு கறுப்பாக மாறியது. என்ன ஏதுனு யோசிக்க கூட முடியலை. பார்த்தா கடல் தண்ணீ தான் அந்த உயரத்துக்கு அலையா வந்தது தெரியவந்துச்சு. ரொம்பவே பயந்துட்டேன். உடனே வீட்டை நோக்கி ஓட ஆரம்பிச்சேன்.

a4_23379.jpg

வீட்டுல பிள்ளைங்க இருக்காங்கங்கறது தான் மனசு முழுக்க ஞாபகமாக இருந்துச்சு. வீட்டுக்குப் போய் பாத்தா, வீட்டுல இடுப்பளவுக்கு தண்ணீ இருந்துச்சு. எல்லா பொருளும் மூழ்கீடுச்சு. பிள்ளைகளையும் காணலை. எனக்கு கண் இருட்டிக்கிட்டு வந்துச்சு. கதறி கதறி அழுதேன். அப்போ தான் என் ரெண்டு பொண்ணுகளையும் ஊர்மக்கள் மிதகு படகுல காப்பாத்தி சத்திரத்தில் தங்க வைச்சிருக்கிறதா சொன்னாங்க.

ஆனா என் 7 வயசு பையனைக் காணோம். எல்லோரும் பையன் இறந்திருப்பான்னு சொன்னாங்க. எனக்கு மயக்கமே வந்துடுச்சு. அழுதுகிட்டே அவனை தேடி திரும்பவும் கடலை நோக்கி போனேன். கடல் தண்ணீ  ஊருக்குள்ள புகுந்து எதிர் திசையில் தள்ளுச்சு. அதை மீறி பையனை தேடிப்போன என்னை எல்லோரும் பிடிச்சுட்டாங்க. கொஞ்ச நேரத்துல படகுல என் பையனை பாத்தேன். அப்போ தான் எனக்கு நிம்மதியே வந்துச்சு.

ஆனா என் அண்ணி மகேஸ்வரியை காணலை. நம்பிக்கையோட தேடினோம். மூணாவது நாள் கடலோரத்துக்கு போய் தேடினோம்," என்றவர் உணர்ச்சி வசப்பட்டு அழத்துவங்கினார். சற்று சமாதானமாகி கடற்கரை முழுக்க படகும், பிணங்களுமா இருந்துச்சு. ஒரு படகுக்கு கீழ தான் என் அண்ணி உடல் இருந்துச்சு. அந்த சம்பவத்தைப் பார்த்த போது என்னையும் அறியாம கடற்கரையில மணல்ல முகம் புதைச்சி கதறி அழுதேன். இதைத்தான் போட்டோவா எடுத்திருக்காங்க. இந்த போட்டோ எங்க கஷ்டங்களை எல்லாம் சொல்லுதுனு சொல்றாங்க. அவ்வளவு சுலபமா சொல்லிட முடியாது எங்க கஷ்டங்களை..12 வருடம் ஓடிப்போச்சு. இப்போ நாங்க அந்த பாதிப்புல இருந்து மீண்டு வரலை," என்றார் கண்ணீர் மல்க.

எல்லோர் மனதிலும் அழியாத வடுவாக நீடிக்கிறது சுனாமி பேரலைத் தாக்குதல், இன்னும் பலரின் மனதில் ஆறாத காயமாகவே இருக்கிறது. அவர்களில் ஒருவர் இந்திரா.

vikatan

  • தொடங்கியவர்

பழம்பெரும் நடிகை சாவித்திரி இறந்த நாள் டிச.26- 1981

 
 

கொம்மாரெட்டி சாவித்திரி என்ற சாவித்திரி 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார்.

 
 
 
 
பழம்பெரும் நடிகை சாவித்திரி இறந்த நாள் டிச.26- 1981
 
கொம்மாரெட்டி சாவித்திரி என்ற சாவித்திரி 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.

சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார்.

இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். காதல் மன்னன் ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி, சதீஷ்குமார் ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1811 - வெர்ஜினியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வெர்ஜினியாவின் ஆளுநர் ஜார்ஜ் வில்லியம் ஸ்மித் இறந்தார். * 1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய ராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது. * 1862 - ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 பேர் தூக்கிலிடப்பட்டனர். * 1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடருடான 12.8-கிமீ நீள ரெயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. * 1882 - யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின. * 1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1925 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. * 1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது. * 1944 - ஆங் சான் பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார். * 1943 - இரண்டாம் உலகப் போர்: நார்வேயில் ஜெர்மனிய போர்க்கப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. * 1948 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது. * 1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது. * 1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. * 1976 - நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.

* 1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். * 1985 - கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபொசி கொல்லப்பட்டார். * 1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது * 1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. * 1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. * 2003 - தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.

* 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 3,00,000 பேருக்கு மேல் இறந்தனர். * 2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.
  • தொடங்கியவர்

12 நாட்கள் இடைவிடாத கடல் பயணம்: ஃபிரான்ஸ் மாலுமி புதிய சாதனை

 

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமியான தாமஸ் கோவில் 12 நாட்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் கடலில் பயணம் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஃபிரான்ஸ் மாலுமி புதிய சாதனை
 

48 வயதாகும் அவர் அந்தப் பயணத்தை 49 நாட்கள், 3 மணி நேரம், 7 நிமடங்கள் மற்றும் 38 நொடிகளில் முடித்துள்ளார்.

இதற்கு முந்தைய சாதனையான 57 நாட்கள், 13 மணி நேரங்கள், 34 நிமிடங்கள் மற்றும் 6 நொடிகள் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் ஜோயனால் நிகழ்த்தப்பட்டது.

தாமஸ் கோவில் தனது ஐந்தாவது முயற்சியில் அந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

நவம்பர் 6ஆம் தேதியன்று ஃபிரான்ஸின் பிரஸ்ட் நகரிலிருந்து தனது பயத்தை தொடங்கிய அவர், அரிதாக மூன்று மணி நேரங்கள் மட்டுமே உறங்கியுள்ளார்.

"மனரீதியாக எனது பலம் மற்றும் பலவீனங்கள் எனக்கு தெரிந்திருந்தது ஆனால் நான் எங்கு சென்றடைய வேண்டும் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது" என்று செய்திதாள் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் கோவில்.

உடல் ரீதியாக அதற்கு மேல் தான் சென்றிருக்க முடியாது என்றும் கோவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேல் என்னால் பயணித்திருக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும் என்றார் அவர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

அருகிவரும் லீமார்ஸ் - காணொளி

மடகாஸ்கரில் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடல் போன்ற காரணங்களால் லீமார்ஸ் விலங்கினம் தீவிரமாக அருகிவரும் இனமாகவுள்ளது.

  • தொடங்கியவர்

குரானில் யேசு
--------------------------
முஸ்லிம்களின் புனித நூலான குரானில் யேசு மற்றும் மேரியின் பெயர்கள் காணப்படுகின்றன.

BBC

  • தொடங்கியவர்

ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

 
ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
 
உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.

தினமும் 20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.

நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.

குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும்.

சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
மௌனமே பதிலாக இருக்கட்டும்
 

article_1482558048-fyufygu.jpgஒருவர் உங்களைத் திட்டினால் அல்லது நியாயமற்ற முறையில் தவறாகப் பேசினால் எதிர்வாதம் புரிவதில் அர்த்தமே இல்லை. உங்களது மௌனமே அதற்கான பதிலாக இருக்கட்டும்.  

இதனால், அவரது குற்றச் சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமில்லை. பேச வேண்டிய இடம், காலம், ஒருவரது மனநிலை உணர்ந்துதான், உங்கள் பக்கத்து நியாயங்களைப் பேசமுடியும்.  

கோபத்தின் உச்சியில் உள்ளவர்கள் நியாயங்களை மறந்தவர்களாவர். தன்னைவிட நியாயம் தெரிந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இத்தகையோர் இருப்பதில்லை.  

உண்மையிலேயே, நாங்கள் தவறுகளைப் பிறருக்கு எம்மையறியாமல் இழைத்திருந்தால், எவ்வித தயக்கமும் இன்றித் தாழ்மையுடன் மன்னிப்பைக் கேட்டேயாக வேண்டும். 

கடமைகளை அர்ப்பணிப்புடன் எமக்காக மட்டுமின்றி, எவருக்கும் செய்தால், அடுத்தவர் விமர்சனங்களைச் செவிமடுக்கத் தேவையில்லை. எங்களால் எவரும் விசனப்படவும் கூடாது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 27

 

1512 : அமெரிக்க கண்டத்தில் குடியேற்றப்பட்ட ஸ்பானியர்கள், பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களுடன் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த சட்டங்ளை ஸ்பானிய அரசு வெளியிட்டது. செவ்விந்தியர்களின் உரிமைகள், பாரம்பரியங்களை பலவற்றை இச்சட்டங்கள் அங்கீகரித்திருந்தன.

 

874Benazir-Bhutto.jpg1703 : இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக் கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்து கலுக்கும் இடையில் ஏற்பட்டது.

 

1831 : சார்ள்ஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

 

1836 : இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் தாக்கியது.

 

1845 : பிள்ளைப் பேறுக்கு மயக்க மருந்தாக ஈதர்  முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டது.

 

1864 : இலங்கையில் முதலாவது ரயில் சேவை கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸவுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

 

1918 : ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

 

1922 : ஜப்பானின் ஹோஷோ,  உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவனைக்கு வந்தது.

 

1923 : ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.

 

1934 : பேர்சியா எனும் நாட்டின் பெயர்  ஈரான் என மாற்றப்பட்டது.

 

1939 : துருக்கியில் ஏர்சின்கன் நகரில்  ஏற்பட்ட பூகம்பத்தினால் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

 

1945 : 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.

 

1949 : இந்தோனேஷியாவை ஒன்றுபட்ட சுதந்திரம் பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.

 

874page-08.jpg1956 : தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

1968 : சந்திரனின் சுற்றுப்பாதைக்கு சென்று திரும்பிய முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8, பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

 

1978 : ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.

 

1979 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஜனாதிபதி ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

 

1985 : ரோம் மற்றும் வியன்னா விமான நிலையங்களில் பலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

 

1996 : தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றின.

 

2002 : செச்சினியாவில் மொஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.

 

2007 : கென்யாவில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாரிய வன்முறைகள் ஆரம்பமாகின.

 

2007 : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ ராவல்பிண்டி நகரில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குலில்  கொல்லப்பட்டார்.

 

2008 : காஸா மீது 3 வார கால முற்றுகையை இஸ்ரேல் ஆரம்பித்தது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Bart und Text

 
 
நுண்ணுயிரியலின் தந்தை என போற்றப்படுகின்ற லூயி பாஸ்ச்சரின் பிறந்தநாள் இன்று
இவரே வெறிநாய்க்கடிக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் ஆவார்
  • தொடங்கியவர்

டீன் ஏஜில் ஏற்படும் 10 மாற்றங்களும் அதன் தீர்வுகளும்!

 

டீன் ஏஜ்

''ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான பகுதி, டீன் ஏஜ் பருவம். இது சந்தோஷமான காலம் மட்டுமல்லாமல், சிக்கலான காலமும்கூட. எப்படி?

10-ம் வகுப்புக்கு மேல், ஒவ்வொரு மாணவரும் தன் வாழ்க்கைக்கான கல்வியைத் தேர்ந்தெடுக்கவும், நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்ற அவசியமும் உண்டாகிறது. இதே காலத்தில் ஆண், பெண் இரு பாலரின் உடல்ரீதியான மாற்றத்தினால், வெளியில் சொல்ல முடியாத உணர்வுகளை மனம் கூடுகட்டத்தொடங்கிவிடும். சிலரிடம் மட்டும் அதிக அன்பு தோன்றும். இவை மட்டுமல்லாமல், இத்தனை காலம் ஒன்றாகப் படித்தவர்கள்... ஆண்டுத் தேர்வு முடிந்ததும் பிரியப்போகிறோமே என்கிற கவலையும், நட்பைப் பலப்படுத்தவேண்டும் என்ற ஆவலும் தோன்றும். இந்தப் புயலில் பத்திரமாகக் கரை சேர்ந்துவிட்டால், வெற்றி பெறலாம். இதற்கு, பெற்றோர்களின் அணுகுமுறையும் நல்ல சூழ்நிலையும் அமையவேண்டும்'' என்கிறார், சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் 'பேஸ்' மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.இராமன்.

teen_11201.png

டீன் ஏஜ் வயதில் உண்டாகும் மாற்றங்கள்:

1. ஆண், பெண் இரு பாலரிடத்தும் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள்
2. எதிலும் ஈடுபாடற்ற மனநிலை
3. பெற்றோர்களிடம் அதிக இடைவெளி உண்டாக்குதல்
4. நண்பர்களிடம் அதிகநேரம் உரையாட விரும்புதல்
5. புதிதாக ஏதேனும் செய்ய விரும்புதல்
6. தானே முடிவு செய்ய நினைப்பது
7. அலைபாயும் மனது
8. தனி அங்கீகாரம் எதிர்பார்க்கும்
9. கட்டுப்பாடுகளிலிலிருந்து வெளிவர நினைத்தல்
10. தனிமையை விரும்புதல்

தீர்வுகள்:

1. தன் மகனோ, மகளோ இன்னும் சிறு குழந்தைகள் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2. கம்ப்யூட்டர், செல்போன்  போன்ற அத்தியாவசிய கருவிகளைத் தேவையான அளவுக்கு பயன்படுத்துவதும், அதன் மூலம் அறியப்படும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தனிமையில் சந்தோஷம் தருபவைகளிலிருந்து விலகியிருப்பதும் நல்லது.
3. பிடித்த டிரெஸ்ஸை வாங்குவதற்கும் பிடித்த சினிமாவைப் பார்ப்பதற்கும், பாடல்களைக் கேட்பதற்கும் தடைவிதிக்காமல், அதன் நன்மை, தீமையைப் பக்குவமாக உணரச் செய்யலாம்.
4. பெற்றோர்களின் ஐடியாவைப் பிள்ளைகளின் ஐடியாவாக மாற்றலாம்.
5. பிள்ளைகளிடம் அதிகாரியைப்போல எப்போதும் நடந்துகொள்ளாமல் நண்பனாக, தோழியாக இருப்பதே நல்லது. அப்போதுதான் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்வார்கள்.
6. சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, பிள்ளைகள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
7. பெற்றோர்களைப்போலவே பிள்ளைகளும் இருக்க வேண்டும் என நினைக்கக்கூடாது.
8. பிள்ளைகளுக்கும் பொறுப்புகள் உள்ளது என்பதை பெற்றோர்கள்  உணரவைக்கலாம்.
9. நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்வது அவசியம். மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தவும், அவர்கள் உயர்வாகக் கருதும்படிப் பேசுவதும் முக்கியம்.
10. ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வைத்தால், அதில் கற்றுக்கொள்ளும் ரூல்ஸ்  இவர்களை முறைப்படுத்தும்.

இவற்றையெல்லாம் சட்டமாக இல்லாமல் அன்பாக வெளிப்படுத்தினால், குழந்தைகள் பெற்றோர்களை நம்புவார்கள். சிக்கலின்றி டீன் ஏன் பருவத்தைக் கடப்பார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்! #2016Rewind

 

இந்த ஆண்டின் மிக முக்கிய லிஸ்ட்களில் இதுவும் ஒன்று. இது இல்லாமல் ஆண்டுக்கடைசி  டாப் 10 பட்டியல்கள் முழுமை பெறாது. ஆம் இந்த ஆண்டில் தமிழில் அறிமுகமான கதாநாயகிகளின் பட்டியல் இது. ஆனால் மற்ற டாப் 10 பட்டியல் போல சிறப்பான நடிகை 1 வது இடம் என்றெல்லாம் கிடையாது. பத்து நடிகைகளின் வரிசை அவ்வளவே. இனி லிஸ்டுக்கு போவோம். 

நாயகி

 

மஞ்சிமா மோகன் - நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' மூலமாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. படம் பட்டாசு கிளப்பவே அடுத்த சில வாரங்களில் கௌதம் மேனன் படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுடன் தமிழில் அறிமுகமானார். தற்போது விக்ரம் பிரபுவின் படம் உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். "மஞ்சிமாவின் இப்போதைய ஒரே கவலை கொஞ்சம் வெயிட் போட்டதுதானாம்"

நாயகி

நிவேதா பெத்துராஜ் - அக்மார்க் மதுரைப்பொண்ணு கூடவே இன்னோரு தகவல் மிஸ்.துபாய் பட்டம் வாங்கிய பொண்ணும் கூட. இவரின் புகைப்படம் 'ஒரு நாள் கூத்து' படத்தின் இயக்குநர் நெல்சனின் கண்ணில் படவே ஆடிசனுக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் இவர் தான் அந்த படத்தின் பாத்திரத்துக்கு பொருந்துவார் என முடிவு செய்யப்பட்டு தேர்வானார். இன்று கையில் இரண்டுபடங்களுடன் நடித்துக்கொண்டுள்ளார். "இந்த பொங்கல் மதுரையிலதான் கொண்டாடணும்ன்னு ஆசைப்படுறாராம்" 

நிவேதா பெத்துராஜ் ஆல்பத்திற்கு க்ளிக்கவும்

நாயகி

தன்யா - மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா இந்த ஆண்டு இயக்குநர் சசிக்குமார் தயாரிப்பில் வெளியான " பலே வெள்ளையத்தேவா" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். படம் தற்போதுதான் வெளியாகியுள்ளது என்ற போதிலும் தன்யா நடிப்பில் ஓகே ஆகிதான் உள்ளார். விரைவில் புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது. "பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்ட போது அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாக  பார்த்தாராம்" 

நாயகி

நிகிலா விமல் - ஒரே வருடத்தில் இரண்டு படத்தில் ஒரே நாயகனுடன் நடித்துள்ளார் நிகிலா. சசிக்குமாருடன் 'வெற்றிவேல்' மற்றும் 'கிடாரி' ஆகிய படத்தில் நடித்து அறிமுகமான நிகிலா பிரபல மலையாள நடனக்கலைஞர் 'கலாமண்டபம்' விமலா தேவியின் மகள். தற்போது கையில் மேலும் இரண்டு படங்கள் வைத்துள்ளார் நிகிலா. "மேடம் தாவரவியல் இளங்கலை முடித்துள்ளார்"

நாயகி

ஷாலின் ஷோயா - தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஹீரோயின் சப்ளை பேக்டரியான மல்லுவுட்டிலிருந்து வந்துள்ள மற்றொரு நடிகை ஷாலின். 'ராஜா மந்திரி' படத்தில் நாயகியாக அறிமுகமானார். 19 வயதே ஆகும் ஷாலின் டிவி தொகுப்பாளராக இருந்தார். கையில் மூன்று மலையாளப்படம் இருக்கிறது. அதை முடித்த பின் தான் தமிழுக்கு கால்ஷீட் என்கிறார் ஷாலின். "ஸீடா என்கிற குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்" 

நாயகி

ஷனயா - நிறைய டிவி கமர்சியல்களில் தலைகாட்டியுள்ள ஷனயா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து 'தில்லுக்கு துட்டு' படத்தில் தமிழில் அறிமுகமானார். சந்தானத்தின் அடுத்த படம் ஒன்றில் இவர் நடிக்க இருந்ததாக வெளியான தகவல்கள் தற்போது இல்லை என்றாகியுள்ளது. இருந்தாலும் தற்போது இவரிடமும் இரண்டு தமிழ்ப்படங்கள் கையில் உள்ளன.

 

Shamili-Stills-From-Veera-Sivaji-Movie-4

ஷாம்லி - நமக்கு நல்லா தெரிஞ்ச பேபி ஷாம்லிதான் இருந்தாலும் ஹீரோயினா கொடுத்த எண்ட்ரி இல்லையா. 'வீர சிவாஜி' படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏற்கனவே தெலுங்கிலும், மலையாளத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் எண்ட்ரி.  

நாயகி

மடோனா செபாஸ்டின் - கடந்த வருடத்தில் 'பிரேமம்' படம் கொடுத்த 'வெல்வெட் கேக்' நாஸ்டாலஜியை தமிழுக்கு நலன் குமாரசாமி அள்ளி வந்தார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதியுடன் அறிமுகமான மடோனாவின் கையில் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் அதில் ஒன்று விஜய் சேதுபதியின் 'கவண்' மற்றொன்று தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' ரைட்டு!

நாயகி

அனுபமா - 'பிரேமம்' தமிழ் ரீமேக் தனுஷ் நடிக்கிறார் என்கிற பேச்சு இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. அதன் காரணம் பின்னர் தான் தெரிய வந்தது. 'பிரேமம்' படத்தில் நடித்த அனுபமா 'கொடி' படத்தில் தனுஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதுதான் அப்படி ஒரு வதந்திக்கு காரணம் ஆனது. தமிழ் யூத்துக்களுக்கு கூந்தலை விரித்துப்போட்டு நிவின் சைட் அடித்த அனுபமாவைத்தான் தெரியும். கொடியின் மூலம் தமிழ் நேட்டிவிட்டியுடன் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார் சோ கால்ட் மோஸ்ட் லவ்வபிள் 'மேரி'.  

arundhathi-nair-photos-at-saithan-movie-


அருந்ததி நாயர்: சைத்தானில் நடித்த தேவதை. முதலில் பாந்தமான மனைவியாகவும், பிறகு கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனமான நடிப்பிலும் பெயர் சொல்லும்படி செய்திருப்பார். வில்லன்கள் கூடாரத்தில் மிரட்டப்படும்போது கண்களில் கலவரமும், விஜய் ஆண்டனியைப் பார்க்கும்போது அதே கண்களில் காதலுமாய்.. கண்ணாலேயே பேசியிருப்பார். 

vikatan

  • தொடங்கியவர்

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! #AndroidTips

 

ஆண்ட்ராய்டு


ஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது. ஸ்மார்ட்ஃபோந்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த ‘இதமா...பதமா...” என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.

1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:
   மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா, மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும். பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க. அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க. 

2) ஃபோனையும், உங்களையும் கூலா வைங்க்:
   பல்லு டைப் அடிக்கிற அளவுக்கு நம்ம ஆஃபீஸ்ல ஏசி போடுறாங்களே...அது நமக்குன்னா நினைச்சீங்க? எல்லாம் கம்ப்யூட்டருக்கு. ஏடிஎம் செண்டர்ல மிஷுனுக்கு போட்டு வைக்கிற மாதிரிதான். அதே லாஜிக்தான் மொபைலுக்கும். நல்ல கூலான டெம்பரேச்சர்ல இருக்கிற ஃபோனு கோஹ்லி மாதிரி நிண்ணு விளையாடும். 

3) ஆப்ஸை மூடுங்க...
  4ஜிபி ரேம் இருக்கிற மொபைலே 12000த்து கிடைக்குது. அதனால, நாம யூஸ் பண்ர ஆப்ஸோட எண்ணிக்கை அஷ்வின் விக்கெட்டை விட வேகமா ஏறிட்டு இருக்கு. அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஓப்பன் பண்ண ஆப்ஸை ஒழுங்கா மூடுறோமா? இல்லை. நிறைய ஆப்ஸ் திறந்திருந்தா, சிஸ்டம் ஸ்லோ ஆகும். சார்ஜும் சீக்கிரம் தீரும். அதனால, தினமும் ஒரு தடவையாவது எல்லா ஆப்ஸையும் க்ளோஸ் பண்ணிடுங்க.

4) அந்த ஒரு ஒரே மாத்திரை...
  உடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு. அது தான் ரீபூட். மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா இருக்கா? ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க. 99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ் ஆயிடும். பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ் ஆயிடும்.

p40f_23243.jpg

5) டெம்பர்ட் கிளாஸ்:
  கீறல் விழாம பாத்துக்கிறது லட்சியம்; கீழ விழாம பாத்துக்கிறது நிச்சயம் என்பதுதான் பெரும்பாலான ஆண்ட்ராய்டு யூஸர்களின் புத்தாண்டு உறுதிமொழியா இருக்கும். அதையும் மீறி ஃபோன் விழுந்து ஸ்க்ரீன் உடையுன்றதாலதான் மேல டெம்பர்ட் கிளாஸு போட்டு வைக்கிறோம். அந்த கிளாஸு கண்ணாபின்னான்னு டேமேஜ் ஆகத்தான் செய்யும். அதுவே நமக்கு மொபைல் பிடிக்காம போக காரணம் ஆயிடும். புது ஃபோனு மாத்துறதுக்கு முன்னாடி டெம்பர்டு கிளாஸ ஒரு தடவை மாத்தி பாருங்க. ஃபோனே புதுசு மாதிரி தோணும்.

6) மெமரி க்ளியர்:
 உங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில் நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம். மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர் போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எடுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங் ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

vikatan

  • தொடங்கியவர்
கடும் குளிரில் கடலில் நீச்சல்
 

நத்தார் தினமான நேற்று முன்தினம் பல நாடுகளில் கடும் குளிருக்கு மத்தியில் பாரம்பரிய நத்தார் நீச்சல் நிகழ்வுகள் நடைபெற்றன.

 

21439_monaco-%281%29.jpg

 

21439_monaco-%282%29.jpg

 

21439_mozxxxnaco-%281%29.jpg

 

21439_-Porthcawls-coney-beach.jpg

 

பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தின் போர்த்கவ் கடற்கரையில் நடைபெற்ற நீச்சலில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர்.

 

21439_wales.jpg

 

21439_wales2.jpg

 

21439_wales3.jpg

 

52 வருடங்களாக வருடாந்தம் அந் நகரில் நடைபெறும் நத்தார் நீச்சல் நிகழ்வில் இம் முறை பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை மிக புதிய சாதனையாக இருக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

21439_wales4.jpg

 

21439_wales5.jpg

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

இயந்திரக்கண் இழந்த பார்வையை மீட்கிறது

மரபணுக்களால் உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோய்க்கு இதுவரை உரிய சிகிச்சை இருக்கவில்லை.

தற்போது Bionic Eye எனப்படும் இயந்திரக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரிட்டன் மருத்துவர்கள் செய்துகாட்டியுள்ளனர்.

இதற்கான மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த இயந்திரக்கண் எப்படி பொருத்தப்படுகிறது; எப்படி செயற்படுகிறது அதன் எதிர்கால பயன்பாடுகள் என்ன என்பதை விளக்கும் பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

துப்பாக்கித் தோட்டாக்களுக்கு சவால் விட்ட பெனசீர் பூட்டோ

 

பெனாசீர் பூட்டோ

ணாதிக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இக்கூற்றுக்கு பாகிஸ்தானும் விதிவிலக்கு அல்ல. அந்நாட்டின் வரலாற்றிலேயே பெண் அரசியல் தலைவர் என்றாலே மக்களின் நினைவில் முதலில் வருபவர் பெனாசீர் பூட்டோ.

கலவரமும், தீவிரவாதமும் நாட்டையே பெரிதும் அச்சப்பட வைத்த சூழலில், பெண் என்றும் பாராமல் அரசியல் களத்தில் இறங்கி துணிச்சலுடன் செயல்பட்ட பெனாசீர் பூட்டோ, 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அவரது 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட பெனாசீர் பூட்டோ தொடர்ந்து பல நாடுகளின் கல்வி நிலையங்களில் படித்து, பல பட்டங்களைப் பெற்றார். குறிப்பாக தன் கல்லூரிப் பருவம் போல், மீண்டும் ஒரு பொற்காலம் எனக்குக் கிடைக்காது என்று கூறியவர், அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ தானும் பிற்காலங்களில் அரசியல் களத்தில் இறங்கி பல சவால்களை எதிர்கொண்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிக்காரி அலி பூட்டோ, ஈரானிய-குர்திஷ் வம்சாவழியில் வந்த பேகம் நஸ்ரத் பூட்டோ தம்பதிக்கு மூத்த மகளாக 1953-ம் ஆண்டு பிறந்தார், பெனாசீர் பூட்டோ. பெற்றோர் அரசியல், ஆட்சி நிர்வாகத்தில் இருந்ததால், தானும்  சிறு வயதில் இருந்தே அரசியல் நிலவரச் சூழலிலேயே வளர்ந்தார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பல பள்ளிகளில் பள்ளிப் படிப்பை படித்த நிலையில், அமெரிக்காவில் ஹேவர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ரேட்கிளப் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பும், பின்னர் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் எல்எல்டி பட்டமும் பெற்றார். அடுத்தடுத்து பல கல்வி நிறுவனங்களில் தத்துவம், அரசியல், பொருளாதாரப் பாடங்களையும் படித்தார். ஏன், எதற்கு என பள்ளி, கல்லூரிக் காலங்களில் தீர்க்கமான கேள்விகளையும், விவாதங்களையும் முன்வைத்தார். அவையே அவரை துணிச்சலுடன் பல பிரச்னைகளையும் எதிர்கொள்ள வைத்தது. தன் கல்வி அறிவின் சாதனையாக, 1976-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியாவைச் சேர்ந்த பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

பெனாசீர் பூட்டோ

தனது கல்லூரிப் படிப்புகளை முடித்து பாகிஸ்தான் திரும்பிய போது, பெனாசீர் பூட்டோ அடுக்கடுக்கான பல சோதனைகளைச் சந்தித்தார். சிறைவாசம் வைக்கப்பட்ட தன் தந்தை, அதன்பின்னர் தூக்கிலிடப்பட்டது, தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது என பல நிகழ்வுகளுக்குப் பின்னர் நாட்டின் கள நிலவரத்தையும், அரசியல் நிலவரத்தையும் நன்கு உணர்ந்தார். கடும் சிக்கலிலும் தீர்க்கமான முடிவெடுத்து, தந்தையின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அப்போது பாகிஸ்தான் நாட்டு அரசியலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய பெண் ஆளுமைகள் யாரும் இல்லை. ஆனாலும், துணிந்து அரசியல் களத்தில் இறங்கினார்.

1987-ம் ஆண்டு கராச்சியில் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு, பிலாவால், பக்த்வார், ஆசிஃபா ஆகிய குழந்தைகள் பிறந்தனர். இதற்கிடையே தனி ஒரு பெண்ணாக தொடர்ந்து மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தன்னளவில் பல எதிர்ப்புகளையும், இடர்களையும், துயர்களையும் அதிகமாகவே சோதித்த பெனாசீர், 1988-ம் ஆண்டு தன் 35-ம் வயதில் தான் சந்தித்த முதல் பொதுத்தேர்தலிலேயே தன் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற காரணமானார். தானும் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன், நவீன காலத்தில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட அரசை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பெற்றார்.

தன் பிரசாரக் கூட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு பிரச்னைகள், பெண்கள் சமூக, சுகாதார பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவது தொடர்பான பிரச்னைகளைப் பற்றி அதிக அளவில் குரல்கொடுத்தார். தான் பிரதமர் ஆனதும், மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அபிவிருத்தி வங்கிகளை அதிக அளவில் நிறுவினார். கருக்கலைப்பு எதிராக குரல்கொடுத்து வந்ததுடன், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் முரண்பாடான பல சட்டங்களை நீக்கினார். 'உலக பெண் தலைவர்களின் கழகம்' என்ற அமைப்பை நிறுவி, அதன் உறுப்பினராகவும் இருந்தார்.

பிரதமாக பொறுப்பேற்ற, 20 மாதங்களிலேயே பதவியை இழந்து, எதிர்கட்சித் தலைவரானார். மீண்டும் 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராகி மீண்டும்1996-ம் ஆண்டு பதவியை இழந்தார். இந்த இருமுறையும் பெனாசீர் பதவியை இழக்க, அவரது கணவரின் மீதான ஊழல் புகார்களே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்பட்டது. பின்னர், தனிப்பட காரணங்களினால் 1998-ம் ஆண்டு துபாய்க்குச் சென்று குடியேறினார். 

பெனாசீர் பூட்டோ

 2007-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பெனாசீர், தன் மீதான முந்தைய குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து முழுமையாக மீண்டு வந்தார். அதன் பின்னர் தொடர்ந்து அரசியலில் மீண்டும் தடம்பதிக்க, போராடினார். அந்த சமயங்களில் அவரை குறிவைத்து பல்வேறு முறை தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவரது உயிரைப் பறிக்க ஏராளமான தீவிரவாதிகளும், அவர்களின் குண்டுகளும், துப்பாக்கிகளும் தொடர்ந்து காத்துக்கொண்டே இருந்தன. அவரும் தொடந்து தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு சவாலாகவே இருந்தார். தொடர்ந்து உயிர் தப்பினாலும், தன் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தும், பாகிஸ்தான் மக்களுக்கு பெரிதும் போராடினார். தீவிரவாதிகளுடன், சில எதிர்கட்சியினரின் சூழ்ச்சிகளையும் சமாளித்தார். பல்வேறு பேரணி, பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் பிரச்னைக்காக முழங்கினார்.

தீவிரவாதம் மற்றும் அரசியல் பழிவாங்கும் பிரச்னைகளைக் கண்டு பெனாசீர் எப்படியும் அரசியலை விட்டே வெளியேறிவிடுவார் எனத்தான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், எதையுமே நேரடியாகவும், சவாலாகவும் எடுத்துக்கொண்டு பிரச்னையை எதிர்கொண்டுவந்தார்.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்கட்சியான தன் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களத்தில் இருந்தார், பெனாசீர். தேர்தலுக்கு சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெனாசீர் பூட்டோவின் மறைவுக்குப் பிறகு மனித உரிமைகளுக்கான ஐநா சபையின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இவரது வாழ்கை வரலாறு குறித்த திரைப்படமும் வெளியானது. பெனாசீரின் சகோதரர்கள் ஷாநவாஜ் மற்றும் மிர் முர்தாஜா இருவருமே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அதற்கு பெண்கள் துணிந்து எந்த ஒரு துறையிலும் களம் இறங்க வேண்டும் என அடிக்கடிச் சொல்லும் பெனாஷீரின் வாழ்க்கையும், துணிச்சலும் பல பெண்களுக்கும் எடுத்துக்காட்டு. பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய பெண் அரசியல் ஆளுமையாக இருந்த பெனாஷீரின் வெற்றிடத்தை, இதுவரை வேறு எந்த ஒரு பெண்ணாலும் நிரப்ப முடியவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில், பெனாசீரைப் போன்ற உறுதியோடு தற்போது களம் இறங்கியிருக்கிறார், இளைய நம்பிக்கை நட்சத்திரம் மலாலா.

vikatan

  • தொடங்கியவர்

p32a.jpg

டோலிவுட் ரேஷ்மா ரத்தோர்

தெலுங்கானாவில் பிறந்த தேங்காய்ப் பூ! முதல் பிரேக் தெலுங்கு ‘பாடிகார்ட்’ படம் வழியாகக் கிடைத்தது. அதில் த்ரிஷாவின் தோழியாக வந்து கவனம் ஈர்த்தார். டோலிவுட் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட ‘ஈ ரோஜுல்லோ’, ‘ஜெய் ராம்’, ‘லவ் சைக்கிள்’, `ஜீலக்கரா பெல்லம்’ எனத் தொடர்ந்து நடித்தார். தமிழிலும் ‘அதாகப் பட்டது மக்களே’ என்ற படத்தில்  வந்துபோனார். இப்போது மலையாளத்திலும் களமிறங் கியிருக்கிறார். #வரணும் வெயிட்டா தமிழ்ல வரணும்!

மல்லுவுட் பல்லவி ப்ரோகித்

p32b.jpg

பாலக்காட்டைப்  பூர்விகமாகக் கொண்ட பால்கோவா. ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்துவிட்டு பெங்களூரில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர், சினிமா ஆசையில் வேலையைத் துறந்தார். முதலில் அறிமுகமானது ‘கரம் அப்னா அப்னா’ என்ற இந்தி சீரியலில். தொடர்ந்து சில இந்திப் படங்களில் நடித்தவரை மம்மூட்டிக்கு ஜோடியாக்கி மலையாளக் கரையோரம் கூட்டி வந்தார்கள். ‘சைலன்ஸ்’ படத்தில் அவரோடு ஜோடி சேர்ந்தவர் சீக்கிரமே மோகன்லாலோடும் ஜோடி சேர்ந்தார். #இரு பெரும் துருவங்களோடு இவ்வளவு சீக்கிரம் ஜோடி சேர்ந்தது பல்லவியாய்த்தான் இருக்கும்.

சாண்டல்வுட் ரேகா வேதவியாஸ்

p32c.jpg

பெங்களூரில் பிறந்த பேரழகி. ஸ்கூல் முடித்துவிட்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் டிகிரி படித்துக்கொண்டிருந்தவர் பார்ட் டைமாக மாடலிங் செய்ய, அதன் வழியே சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. சித்ரா என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் வரிசைகட்டி தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தவர் தமிழில் ‘புன்னகைப் பூவே’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் அடித்தது ராஜயோகம். ஆண்டுக்கு சராசரியாய் நான்கு படங்கள் என வெளுத்து வாங்குகிறார் சாண்டல்வுட்டில். #வீனஸ் பூ!

  • தொடங்கியவர்

நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்

இந்த ஆசனத்தை செய்வதனால், உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்
 
நமது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனமாக உள்ளது.

செய்முறை :

முதலில் தரையில் அமர வேண்டும். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமர வேண்டும். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யவும்.

இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்த பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

பயன்கள் :

இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். இரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக இந்த ஆசனத்தை செய்வதனால், உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யப்படுகின்றன.
  • தொடங்கியவர்
பரந்த உலகைப் பிள்ளைகளுக்கு காட்டுக
 
 

article_1482899822-ioiuo.jpgசுயநலத்துடனும் கர்மித்தனத்துடனும் வாழும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளையும் தங்களைப் போலவே உருவாக்கிக் கொள்கின்றார்கள். நாங்கள் மட்டுமே வாழ வேண்டும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதே; உதவிகளைப் பிறருக்குச் செய்து ஊதாரியாகாதே என அடிக்கடி நினைவு படுத்தும் பெற்றோர் சிலர், எல்லோருக்குமே நல்ல சுபீட்சமான எதிர்காலத்தினை அமைக்க வேண்டும் என எண்ணிப்பார்த்தேயாக வேண்டும்.  

தனித்து வாழ்வது முடியாத காரியம். ஆனால், சிலர் இப்படியான பெரிய உண்மைகளை விடுத்து பணம் படைத்தவர்களுடன் மட்டும் இணங்கினால் போதும் என எண்ணுகின்றார்கள்.  

ஏழைகளுடன் தோழமை கொள்ளாது, செல்வந்தர்களுடன் அட்டைபோல ஒட்டுவதே எதிர்கால நலனுக்கு உகந்தது எனத் தப்புக் கணக்குப் போடுகின்றார்கள்.  

இன்று செய்யும் தர்மம், நாளைக்குப் பெரும் முதலீடாகும் என்பதை உணர்வோமாக. பரந்த உலகைப் பிள்ளைகளுக்குக் காட்டுக. அடைபட்ட வீட்டில் படுத்துக்கிடக்கலாகாது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாவ்! தோனி மாற்றி வடிவமைத்த ஸ்கார்ப்பியோவில் இத்தனை வசதிகளா? #MSDhoni

 

341_07523.jpg

கிரிக்கெட்டுக்குப் பிறகு மகேந்திர சிங் தோனிக்கு ரொம்பவும் பிடித்தது - கார், பைக்ஸ் என்று சொல்லலாம். மேட்ச்சில் போர் அடித்தால் ஃபோர், சிக்ஸ் என்று ஹெலிகாப்டர் ஷாட்கள் அடித்து பட்டையைக் கிளப்புவதுபோல், வீட்டில் போர் அடித்தால் பைக், கார் ஏதாவது ஒன்றை ஸ்டார்ட் செய்து பப்ளிக்கை அசத்தி விடுபவர் தோனி. கார்/பைக்கில் ஸ்பீடோமீட்டரின் முள் தெறிக்க, டாப் ஸ்பீடில் பறப்பது தோனியின் ஸ்பெஷல். இன்றைய தேதி வரை 22 பைக்குகளும், 15-க்கும் மேற்பட்ட கார்களும் தோனியின் கராஜில் வீற்றிருக்கின்றன. கவாஸாகி, ஹார்லி டேவிட்சன், நார்ட்டன் என்று வெரைட்டியாக பைக்குகள் இருந்தாலும், முதன்முதலாக 4,500 ரூபாய்க்கு, தான் வாங்கிய யமஹா RD350 பைக் மீதுதான் தோனிக்கு பாசம் அதிகம். அதேபோல் கார்கள் லிஸ்ட்டும் வேற லெவல். ஹம்மர், லேண்ட்ரோவர், போர்ஷே, ஃபெராரி, ஆடி என்று காஸ்ட்லி கார்கள் இருந்தாலும், ஆஃப் ரோடு எஸ்யூவி வாகனங்கள் மீது தோனிக்கு எப்போதும் ஒரு தனி கண் இருக்கிறது.

MS-Dhoni-customized-Mahindra-Scorpio-2_2

முன்பு, தான் வாங்கிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை செமையாக தற்போது மாடிஃபிகேஷன் செய்திருக்கிறார். அண்மையில் தனது ஊரான ராஞ்சி ஸ்டேடியத்தில், ரூஃப் இல்லாத ஸ்கார்ப்பியோவில் தோனி வந்து இறங்க, அனைவரது கண்களும் விரிந்தன. காரணம், இதன் வெளித்தோற்றம் அப்படி. கார்களை அதன் உருவத்திலிருந்து மொத்தமாக மாற்றி, ரீ-மாடிஃபிகேஷன் செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், மஹிந்திராவாலேயே இந்த கார் ரீ-டிஸைன் செய்யப்பட்டிருப்பதுதான் ஸ்பெஷல். 

MS-Dhoni-customized-Mahindra-Scorpio-6_2

இதன் கலர் தீமே ‘வாவ்’ என்று வியக்க வைக்கிறது. சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணத்தில், செம கான்ட்ராஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று ஸ்பெஷலாக இந்த கலர்களைக் கேட்டு வாங்கினாராம் தோனி. ஓப்பன் டைப் வாகனமாக மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்கார்ப்பியோ, முழுக்க முழுக்க ஆஃப்ரோடு வாகனமாக மாற்றப்பட்டிருக்கிறது. எவ்வளவு பெரிய பொருளின் மீது மோதினாலும் காரைப் பாதுகாக்கும் Bull Bar, (இது ராணுவ வாகனங்களிலும் பீரங்கிகளிலும் இருக்கக்கூடிய வசதி) தண்ணீருக்குள்கூட ஒளிரும் ஃப்ளட் லைட்ஸ், காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும்போது நேரடியாக காற்றை இன்ஜினுக்குள் அனுப்பும் Hood Scoop, ORVM-ல் இண்டிகேட்டர்கள், ஸ்ட்ராங்கான அலாய் வீல்கள், டூயல் எக்ஸாஸ்ட்டுகள் என்று முரட்டுத்தனமான ஆஃப்ரோடு வாகனமாக மாறியிருக்கிறது தோனியின் ஸ்கார்ப்பியோ. இது கிட்டத்தட்ட 3 அடி வரை தண்ணீருக்குள் செல்லும் தன்மை கொண்டது.

MS-Dhoni-customized-Mahindra-Scorpio-5_2

இன்டீரியரைப் பொறுத்தவரை, வழக்கமான ஸ்கார்ப்பியோவில் இருக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் இங்கே காலி. லெக் ரூம் அதிகம் கிடைப்பதற்காக, இரண்டாவது வரிசை சீட்டுகளைப் பின்னே தள்ளியிருக்கிறார்கள். இன்ஜினைப் பொறுத்தவரை, எந்த மாற்றங்களுக்கும் தென்படவில்லை. 120bhp பவரும், 29kgm டார்க்கும் கொண்ட அதே 2.2 லிட்டர், M-Hawk, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான். ‘‘சிட்டிக்குள் என்றாலும் சரி; காட்டுக்குள் என்றாலும் சரி - இந்த ஸ்கார்ப்பியோதான் என் செல்லம்!’’ என்று தனது ஆஃப்ரோடு ஸ்கார்ப்பியோவை உச்சிமுகர்கிறார் தோனி.

MS-Dhoni-customized-Mahindra-Scorpio-3_2

எப்போதாவது சாலைகளில், காருக்குப் பின்னால் ‘MS' என்ற நம்பர் பிளேட் கொண்ட ஸ்கார்ப்பியோ ஓடினால், அது தோனியோட ஸ்பெஷல் ஸ்கார்ப்பியோ என்பதை மறந்து விடாதீர்கள்!

vikatan

  • தொடங்கியவர்

என்னோடு ஓடிய எல்லோருக்கும் நன்றி : மார்க் சக்கர்பெர்க்

 

2016-ன் நியூ இயர் ரெசல்யூஷனாக 365 மைல்கள் ஓடுவேன் என அறிவித்திருந்தார் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க். அதன்படி இன்று அவரது ஃபேஸ்புக் பதிவில் 2016-ல் உலகம் முழுவதும் ஓடிய 12 புகைப்படங்களுடன் அனைவருக்கும் நன்றி  என குறிப்பிட்டு தனது இலக்கை அடைந்ததை தெரிவித்துள்ளார்.

Bild könnte enthalten: 1 Person, lächelnd, im Freien

Berlin

Bild könnte enthalten: 1 Person, Himmel, Schuhe und im Freien

Barcelona

Bild könnte enthalten: 1 Person, steht, Shorts, Schuhe und im Freien

San Francisco

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Himmel und im Freien

Rom

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Personen, die stehen, Himmel, Brücke, Wolken und im Freien

Lagos

Bild könnte enthalten: im Freien

 
 
Palo Alto

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Personen, die stehen und im Freien

Peking

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel und im Freien

Delhi

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen, Himmel, Berg, Kind, im Freien und Natur

Facebook HQ

Bild könnte enthalten: 1 Person, steht, Schuhe, Himmel, im Freien und Wasser

Xi'an

Bild könnte enthalten: Pflanze, im Freien, Natur und Wasser

Seoul

Bild könnte enthalten: 6 Personen, im Freien und Innenbereich

Thanks for running with me! Here's to a whole new year of running in 2017!

இந்தியாவில் ஓடிய புகைப்படத்துடன் துவங்கிய இந்த பயணம் பெர்லின், சீனா என பல நாடுகளில் தொடர்ந்தது. 365 மைல்களை உலகம் முழுவதும் ஓடி முடித்துள்ளார் மார்க். 2015ல் இயர் ஆஃப் புக்ஸ், 2016ல் இயர் ஆஃப் ரன்னிங் என மாஸ் காட்டிய மார்க். 2017ல் என்ன அறிவிப்பார் என ஆவலை அதிகரித்துள்ளார். 2017 இஸ் வெயிட்டிங்

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விநோதமான புத்தாண்டுக் கொண்டாட்டம்!

 

 
times_square_3109475f.jpg
 
 
 

குழந்தைகளே! புது வருஷம் பிறக்க இன்னும் மூன்று தினங்கள்தான் உள்ளன. புத்தாண்டு அன்று நீங்கள் என்ன செய்வீர்கள்? கேக் வெட்டி கொண்டாடுவீர்கள், கோயில், சர்ச்சுக்குப் போவீர்கள், ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வீர்கள். சரி, வெளி நாடுகளில் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவார்கள்? பெரும்பாலும் வண்ண வண்ண வாண வேடிக்கைகள், இரவு முழுவதும் இசை நிகழ்ச்சி என விடிய விடிய கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால், சில நாடுகளில் விநோதமாகக் கொண்டாடுவதும் உண்டு. நாடுகளின் வித்தியாசமான சில புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் புத்தாண்டு தகவல்களையும் பார்ப்போமா?

# புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கம் களைகட்டி காணப்படும். இந்தப் பகுதியில் கழிவறைகள் குறைவு. அதனால், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பெரியவர்கள் குழந்தைகளைப் போல ‘டயபர்’ மாட்டிக்கொண்டு விடிய விடிய நடனமாடுவார்கள்.

# மிகக் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ள தென் துருவப் பகுதியிலும் புத்தாண்டு களைகட்டியிருக்கும். அண்டார்ட்டிகாவில் புத்தாண்டு அன்று முதல் நாள் இரவு பெரிய விருந்து நடக்கும். வழக்கத்தைவிட அன்று குளிர் நடுநடுங்க வைக்கும். அந்த நடுங்கும் குளிரில் இசைத்தபடி, நடனமாடிப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். இந்தக் குளிர் நிகழ்ச்சியை ‘ஐஸ்ஸ்டாக்’ என்று அழைக்கிறார்கள்.

icestock_3109477a.jpg

# புத்தாண்டு அன்று தாய்லாந்தில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொள்வார்கள். அதற்காகத் தாய்லாந்து நகர வீதிகளில் தண்ணீரும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் கருவியின் விற்பனை அமோகமாக நடக்கும். புத்தாண்டை ஜாலியாக வரவேற்பது இவர்களின் பாணி.

# ரஷ்யாவில் ஜனவரி 1 , 14 என இரண்டு நாள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் ஜூலியன் காலண்டர்படி ஜனவரி 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கிரகோரியன் காலண்டர் பழக்கத்துக்கு வந்த பிறகு புத்தாண்டு ஜனவரி 1 என்றானது. எனவே ரஷ்யர்களில் சிலர் புத்தாண்டோடு பழைய புத்தாண்டு நாளையும் சேர்த்தே கொண்டாடுகிறார்கள்.

# புத்தாண்டு அன்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரின் சில பகுதிகளில் பழைய பொருட்களைச் சேகரிப்பார்கள். பின்னர் அவற்றைக் கட்டிடங்களின் மேல் கொண்டு சென்று தெருவில் கொட்டுவார்கள். புத்தாண்டு அன்று இப்படி ஒரு கேளிக்கை அவர்களுக்கு.

thailand_3109476a.jpg

# 2000-ம் ஆண்டு புத்தாயிரத்தை முன்னிட்டு லண்டனில் ஒரு இசைக்கோவையை கம்ப்யூட்டரின் உதவியுடன் உருவாக்கினார்கள். இந்த இசை லண்டன் டிரினிட்டி பாய்வார் கலங்கரை விளக்கத்தில் தினமும் இசைக்கப்பட்டு வருகிறது. ‘லாங் பிளேயர்’ என்றழைக்கப்படும் இந்த இசைக்கோவை 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தொடங்கியது. இந்த முழு நீள இசைக்கோவை 2999-ம் ஆண்டுதான்

முடிகிறது. நீங்கள் இந்த இசையின் முதல் பகுதியைக் கேட்க வேண்டுமானால் 3000-ம் ஆண்டு வரை உயிரோடு இருந்தால்தால் முடியும்.

# பண்டைய ஹவாய் தீவில் புத்தாண்டை நான்கு மாதங்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்களாம். புத்தாண்டையொட்டிப் போரைக்கூட நிறுத்திவிடுவார்கள். நான்கு மாதங்களுக்கு இசை, பாட்டு, நடனம் எனக் கொண்டாடியிருக்கிறார்கள்.

# எத்தியோப்பியா நாட்டுக்கு மொத்தம் 13 மாதங்கள். அதனால், அவர்கள் தற்போது 2009-ம் ஆண்டில்தான் இருக்கிறார்கள். நாள் கணக்கின்படி அவர்களுக்கு செப்டம்பர் 11-ம் தேதிதான் புத்தாண்டு பிறக்கிறது.

# கொரியா போன்ற சில ஆசிய நாடுகளில் பிறந்த உடனே குழந்தைக்கு ஒரு வயதாகி விடுவதாகக் கணக்கிடப்படுகிறது. அதுபோல் புத்தாண்டு அன்றும் ஒரு வயதைக் கூட்டிக் கொள்கின்றனர். இதனால் டிசம்பர் 29-ம் தேதி பிறக்கும் குழந்தைக்கு, இரண்டு நாட்கள் கழித்து, புத்தாண்டு அன்று 2 வயதாகிவிடுவதாகக் கணக்கிடப்படுமாம்.

# 2006-ம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி மையத்தில் புத்தாண்டு அன்று விண்கலம் சுற்றுவது தானாகவே நின்றுவிடும். கம்ப்யூட்டரில் ஆண்டு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இப்படித் தற்காலிகத் தடை ஏற்பட்டது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

''708 மகள்களுக்கு தந்தை நான்!''- சூரத் தொழிலதிபரின் பெருமிதம்

 

தந்தை

சூரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் சவானி, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தந்தை இல்லாத ஏழை  இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து  வைத்து வருகிறார்.

தொழிலதிபர்கள் என்றாலே மக்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். பணம் பதுக்கும் தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் பற்றி தினமும் செய்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிலதிபர்கள் பற்றிய நல்ல செய்தி அவ்வப்போது கண்களில் தென்படும். ஒரு சில தொழிலதிபர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சூரத்தைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனத் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கினார். அண்மையில் அவுரங்கபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே முன்னோட்டின் மகள் ஷ்ரேயா தனது திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு இலவச வீடுகளைக் கட்டிக் கொடுத்திருந்தார். இந்த வரிசையைச் சேர்ந்த தொழிலதிபர்தான் குஜராத்தைச் சேர்ந்த சவானி குழுமத் தலைவர் மகேஷ் சவானி. 

wed_10199.jpgசூரத்தைச் சேர்ந்த பிபி சவானி குழுமம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தக்குழுமத்தின் தலைவர் மகேஷ் சவானி குடும்பத்தினர் பல்வேறு நாட்டு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. அதுபோல் ஏழை பெண்கள், தந்தையர்களை இழந்த இளம் பெண்களுக்கு திருமணம் முடித்து வைப்பதையும் மகேஷ் சவானி ஒரு கடமையாகவே செய்து வருகிறார்.

மகேஷ் சவானி இளம் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு பிளாஷ்பேக்  இருக்கிறது. இவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர், தன் மகளின் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் இறந்து போனார். அந்த தொழிலாளியின் மகளுக்கு, தந்தை ஸ்தானத்தில் இருந்து மகேஷ் சவானி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். அப்போது, அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம். அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி, மகேஷ் சவானியின் மனதில் பெரும் மாறுதலைத் தந்திருக்கிறது. அதற்கு பிறகுதான் தந்தையர் இல்லாத இளம் பெண்களை இனம் கண்டு திருமணம் நடத்தி வைக்கும் பணியில் இறங்கினார் மகேஷ் சவானி.

கடந்த டிசம்பர் 26-ம் தேதி  மகேஷ் சவானியின் மகன் மிதுல் சவானிக்கும் ஜான்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  மகனது திருமணத்தை முன்னிட்டு  236 இளம் பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதில் 5 முஸ்லிம் மணமக்களும் ஒரு கிறிஸ்துவ மணமக்களும் அடங்கும்.

பெயருக்காகவும், பெருமைக்காகவும் சில அரசியல் கட்சிகள் நடத்திவைக்கும் இலவசத் திருமணம் போல அல்ல இவர் நடத்தி வைக்கும் திருமணங்கள்! ஆம்! சவானி குழுமத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு எந்த மாதிரியாக திருமணம் நடைபெற்றதோ, அதே போலவே - மண அரங்கத்தில் இருந்து மற்ற எந்த விஷயங்களிலும் வேறுபாடு காட்டாமல் - சரிசமமாக அனைவருக்கும் ஒரே விதத்தில் திருமணம் நடைற்றதுதான் இந்த மாஸ் வெட்டிங்கின் ஸ்பெஷல். இஸ்லாமிய மணமக்களுக்கு இஸ்லாமிய முறைப்படியும் கிறிஸ்துவ மணமக்களுக்கு கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதற்காக சூரத்தில் உள்ள மைதானத்தில் தனித் தனியாக திருமண அரங்குகள் தயார் செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிதுல் - ஜான்கி மாலை மாற்றிக் கொண்ட போது மற்றவர்களும் மாலை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மணமக்களை சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும் புதுமண தம்பதியரை மலர் தூவி வாழ்த்தினர். 
 
குஜராத்தைச் சேர்ந்த மணமக்கள் மட்டுமல்ல ராஜஸ்தான், மகராஷ்டிரா  போன்ற மாநிலத்தைச் சேர்ந்த மணமக்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  திருமணம் நடத்தி வைப்பதோடு, மணமக்கள் குடும்பம் நடத்த தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நகைகள் என ஒவ்வொரு தம்பதியருக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சீர்வரிசை செய்து வைக்கப்பட்டது. 

mahesh__10069.jpg

திருமணம் குறித்து சவானி குழும இயக்குநர் மகேஷ் சவானி கூறுகையில், '' இது போன்ற திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். இதே அரங்கத்தில்தான்  எனது மகன் மிதுல் எனது மருமகன் ஜே ஆகியோருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்து வைப்பதோடு எனது பணி முடிந்து விட்டதாகக் கருதவில்லை. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்காக என்னால் என்ன உதவியெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தும் கொடுக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக இதனை செய்து வருகிறேன். இதுவரை தந்தைகள் இல்லாத 708 இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துக்கொள்கிறேன். அந்த வகையில் 708 மகள்களுக்கு நான் தகப்பன் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் '' என்கிறார்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 பாடல்கள்

 

 
tamilsongs_3109855f.jpg
 
 
 

2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த பாடல்களின் பட்டியல் இது.

தமிழ் சினிமா 2016-ல் 'இறுதிச்சுற்று', 'காதலும் கடந்து போகும்', 'மனிதன்', 'இறைவி', 'கபாலி', 'கொடி' மற்றும் 'காஷ்மோரா' படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலமாக கவனம் ஈர்த்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 'ஜில் ஜங் ஜக்' மூலமாக விஷால் சந்திரசேகர், 'சேதுபதி', 'ஜீரோ' மூலமாக நிவாஸ் கே.பிரசன்னா, 'தெறி', 'விசாரணை' மூலமாக ஜி.வி.பிரகாஷ், 'மெட்ரோ' மூலமாக ஜோகன், 'ஜோக்கர்' மூலமாக ஷான் ரோல்டன் என இளம் இசையமைப்பாளர்கள் கவனம் ஈர்த்தார்கள்.

'குற்றமே தண்டனை' மற்றும் 'தாரை தப்பட்டை' மூலம் இளையராஜா, '24' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' மூலம் ஏ.ஆர்.ரஹ்மான், 'இருமுகன்' மூலம் ஹாரிஸ் ஜெயராஜ், 'ரெமோ' மூலம் அனிருத், 'ரஜினி முருகன்' மற்றும் 'மிருதன்' மூலமாக இமான், 'தர்மதுரை' மற்றும் 'சென்னை- 600028' 2-ம் பாகம் மூலம் யுவன் உள்ளிட்ட பிரபலமானவர்களும் கவனம் ஈர்க்கத் தவறவில்லை.

தமிழ் சினிமா 2016-ல் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி பரவி, பகிரப்பட்ட 15 பாடல்களின் பட்டியல் இதோ:

இறுதிச்சுற்று - ஏ சண்டக்கார

சேதுபதி - கொஞ்சி பேசிட வேண்டாம்

அச்சம் என்பது மடமையடா- தள்ளிப் போகாதே

றெக்க - கண்ணம்மா

ரஜினிமுருகன் - உன் மேல ஒரு கண்ணு

தர்மதுரை - மக்க கலங்குதப்பா

24 - மெய் நிகரா

ரெமோ - செஞ்சிட்டாளே

கபாலி - மாயநதி

தெறி - உன்னாலே

ஜில் ஜங் ஜக் - ஷுட் தி குருவி

காதலும் கடந்து போகும் - கககபோ

கோ 2 - கண்ணம்மா

மிருதன் - முன்னாள் காதலி

மனிதன் - அவள்

ஒரு நாள் கூத்து - அடியே அழகே

 
 

tamil.thehindu

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.