Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்: செலவு எவ்வளவு தெரியுமா?

சவுதி

மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இந்த நாட்டில் கடந்த 1938ம் ஆண்டில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ் என பரலாக அழைக்கப்பட்டவர். பெட்ரோலிய வளத்தை முறையாகப் பயன்படுத்தி சவுதி அரேபியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வித்திட்டவர் இவர்தான். இரண்டாம் உலகப் போரின் போது,  உலகம் முழுக்க பெட்ரோலின் தேவை அதிகமாக, அதைப் பயன்படுத்தி  பாலைவனத் தேசத்தை பணக்கார பூமியாக மாற்றினார் கிங் அப்துல்லாசிஸ். இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு. இப்படிதான் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பம் உருவாகத் தொடங்கியது.

சவுதியின் இரண்டாம் அரசரான கிங் சாத்துக்கு (கிங் அப்துல்லாசிசின் மகன்) மகன்கள் மட்டும் 53 பேர். ஆயிரக்கணக்கில் உறவினர்கள். சவுதி அரேபிய மன்னர் குடும்பம் பற்றி, ஜோசம் ஏ. கென்சியன், 'சவுதி அரசமைப்பு வரலாறு ' என்ற புத்தகத்தில் சவுதி அரேபியாவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார். கிங் சாத்தின் மகள், இளவரசி பாஸ்மா பின் சாத், ராயல் நம்பர் 15000 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதியைப் பொறுத்தவரை 13 மாகாணங்கள் உள்ளன. அதனை நிர்வகிக்கும் உரிமைகள் பெரும்பாலும் மூத்த இளவரசர்கள் கையில் ஒப்படைக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளிலும் மூத்த இளவரசர்களே நியமிக்கப்படுகிறார்கள். சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர், அப்துல்லா 1963ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தேசிய பாதுகாப்புப் படைத் தலைவராக இருந்தவர்தான். பின்னர் மன்னராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்தப் பதவியைத் துறந்தார்.

தற்போது இந்த நாட்டின் மன்னராக கிங் சல்மான் இருக்கிறார். கிங் சல்மான், கடந்த 2015ம் ஆண்டு  தந்தை அப்துல்லா மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்துள்ளார். மன்னர் அப்துல்லாவின் 25வது குழந்தை சல்மான். இவரது தாய், ஹாசா அல் சுதாரிதான் கிங் அப்துல்லாசிசின்  ஃபேவரைட் மனைவி என்று சொல்லப்படுகிறது. கிங் அப்துல்லா - ஹாசா அல் சுதாரிக்கு இடையே 7 குழந்தைகள் உண்டு. கிங் சல்மான், சவுதியின் பாராம்பரியமான உடை அணிந்தாலும் இளம் பருவத்தில் மேற்கத்திய உடைகளை விரும்பி அணிவாராம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ரியாத் மாகாண கவர்னராக இருந்திருக்கிறார். இவரது காலத்தில்தான் ரியாத் நகரை ஒட்டிய பாலைவனங்களில் பிரமாண்டமான வானளவு உயர்ந்த கட்டங்கள் எழுப்பப்பட்டு மக்கள் வசிக்குமளவுக்கு புறநகர் பகுதியாக உருவாக்கப்பட்டது.

weds__10146.jpg

தற்போது நாட்டில் மொத்தம் 15 ஆயிரம் இளவரசர் - இளவரசிகள் இருக்கின்றனர். ராஜ குடும்பத்துக்கு இப்போது கிங் சல்மான்தான் தலைவர். தற்போது சவுதியே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றன. இதற்கிடையே சவுதி அரச குடும்பத்தினர் சுகபோக வாழ்க்கையில் வாழ்வதாக  வெளிநாட்டு மீடியாக்கள் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன.

அரச குடும்பத்தினர்   சுவிஸ் வங்கியில் பணம் போடுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஆடம்பரப் படகுகளில் உல்லாசமாக வலம் வருகின்றனர் என்ற செய்திகளைப் பார்க்க முடிகிறது. கிங் சல்மான் பெயர் கூட  கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட பனமா பேப்பரில் இடம் பெற்றுள்ளது. லக்ஸ்ம்பர்க் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் நிறுவனங்கள், லண்டனில் சொத்துக்கள், பிரமாண்டமான படகுகள் வைத்திருக்கிறார் என பனாமா பேப்பர் சொல்கிறது.

சவுதியின் முக்கிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் முழுவதுமே சவுதி அரசக் குடும்பத்தினர் செலவுக்காகத்தான் ஒதுக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதாவது தினமும் 10 லட்சம் பேரல்கள் குரூட் ஆயில் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இளவரசர்கள் - இளவரசிகள் செலவுக்காக ஒதுக்கப்படுகிறதாம். அரசக் குடும்பத்திலும் நேரடி இளவரசர்களுக்கும் உறவுமுறையில் வலம் வருபவர்களுக்கும் வழங்கப்படும் படிகள் உள்ளிட்ட விஷயங்களில் அனேக வித்தியாசங்கள் இருக்கின்றன. நேரடி உறவுகளுக்கும் மறைமுக உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்...நேரடி உறவுகள் லம்போகினி, புகாட்ரி ரக கார்களில் வந்தால், மறைமுக உறவுகள்  ரேஞ்ச் ரோவர், மெர்சிடெஸ் பென்ஸ் கார்களில் வருவார்கள்.

pinces_10300.jpg

அரசரின் நேரடி மகனுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மாதம் ஒன்றுக்கு செலவுக்காக  வழங்கப்படும். பேரக்குழந்தைகளுக்கு மாதம் 8 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். அரச வாரிசுகளுக்குத் திருமணம் நடந்தால் 3 மில்லியன் டாலர்கள் வரை அரண்மனைக் கட்டிக் கொள்ள திருமணப் பரிசாக வழங்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் இது. 

சவுதி அரேபியாவின் மொத்த பட்ஜெட் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில், 2 பில்லியன் டாலர்கள் அரசக் குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிலும் முன்னுரிமை. அரசு துறைகளில் நல்ல பணிகள் ஒதுக்கப்படும், நிர்வாகரீதியிலான பதவிகள் வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்களில் கௌரவத் தலைவர்கள் பதவியில் இருப்பார்கள். அதில் இருந்து படிகள் கிடைக்கும். மற்றபடி செல்போன் பில்லில் இருந்து சவுதி ஏர்லைன்சில் நினைத்த நேரம் பயணம் செய்யும் வசதி வரை உண்டு. 

ஆனால் இந்தத் தகவல்களை சவுதி அரசின் செய்தித் தொடர்பாளர் குவாசேயர் மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,'' மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே ஆண்டுக்கு 2.7 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என சொல்லப்படுவது தவறானது. சவுதியின் அரச பரம்பரையின் அமைப்பைத் தெரிந்தவர்களுக்கு அதனை விளக்கத் தேவையில்லை. நாட்டின் பல மாகாணங்களில் பூர்வக் குடிகள் உள்ளனர். அந்த பூர்வக்குடித் தலைவர்களுக்கு பெரும் தொகை போய் சேர்கிறது'' எனக் கூறியுள்ளார்.

தற்போதைய சவுதி மன்னர் சல்மான் செலவுகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அமைச்சர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மன்னரால் நியமிக்கப்படும் சவுரா கவுன்சில் உறுப்பினர்களின் சம்பளத்தில் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் படிகள் உள்ளிட்ட இதர செலவுகளையும் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.  

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காணாமல் போன 105 வயது திமிங்கலம்

வாஷிங்டன் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 105 வயதான க்ரானி என்ற திமிங்கலத்தைக் காணவில்லை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது Killer Whale வகையைச் சேர்ந்ததாகும். கடைசியாக அக்டோபர் மாதம் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் தென்பட்டது க்ரானி. இரண்டரை மாதங்களாய் காணாததால் அது உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உலகின் அதிக வயதான திமிங்கலம் க்ரானிதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

whale_02575.jpg

  • தொடங்கியவர்

மீண்டும் ஆன்மீகப் பாதைக்குத் திரும்பினார் ஃபேஸ்புக் நிறுவனர்

 

தன்னை ஒரு நாஸ்திகராக, கடவுள் நம்பிக்கையற்றவராக, பகுத்தறிவுவாதியாகப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெக் மீண்டும் ஆஸ்திகராக, கடவுள் மீது நம்பிக்கை கொண்டவராக மாறியுள்ளார்.

8_Mark_Prays.jpg

கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் கொண்டாடிய ஸக்கர்பெக், அதை தனது ஃபேஸ்புக் கணக்கிலும் படங்களாகப் பதிவேற்றி, “நண்பர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, ஸக்கர்பெக் பௌத்த சமயத்தின் பால் பெரிதும் கவரப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

உலகில் 76% அதிகமானோர் 'overfat'..!

obesity_1_600_15576.jpg

உலக மக்கள் தொகையில் 76 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு (overfat) அதிகம் என்று கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.

நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் என பலர் இந்த ஆய்வில் பங்கெடுத்து இம்முடிவை கூறுகின்றனர். 

தேவையைவிட உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பினால் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாவதையே ஓவர் ஃபேட் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

'இந்த ஓவர்ஃபேட் பாதிப்பு சாதாரண எடை கொண்டவர்களுக்கும் இருக்கிறது. சாதாரண எடை கொண்டவர்கள் கூட அதிக வயிற்று கொழுப்பு காரணமாக க்ரானிக் நோய்களினால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்' என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு, உலகில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம்  மக்களுக்கு அன்டர்ஃபேட் (underfat) இருக்கிறது என்றும், உலகில் 14 சதவிகிதம் மக்கள்தான் சரியான உடல் கொழுப்புடன் இருக்கின்றனர் என்றும் கூறுகிறது ஆய்வு.

  • தொடங்கியவர்

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971

1971-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது. போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு

 
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971
 
1971-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது.

போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன.

இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு ஜனவரி-5ந்தேதி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் ஆஸ்திரேலியா 5 விகெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே நாளில் விளையாட்டு முடிந்து விடுவதாலும், போட்டி அதிரடியாக அமைந்ததாலும் ரசிகர்களிடையே ஒருநாள் போட்டி பிரபலமானது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இந்த பளபள கத்தியோட வயசு 2300!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 2300 ஆண்டுகள் பழமையான வாள் ஒன்று கிடைத்துள்ளது. கல்லறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கத்தி இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூர்மையாக இருப்பது எப்படி என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஹெனான் மாகாணத்தில்தான் சீன நாகரீகம் பிறந்ததாக நம்பப்படுகிறது.

sword_01257.jpg

  • தொடங்கியவர்

'நான் சென்னைவாசி, ஹிந்தி நஹி மாலும்!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை

sundarindia_16118.jpg

கூகுள் CEO சுந்தர் பிச்சை இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் உற்சாகம் பொங்க உரையாடினார்.

‘என் கல்லூரி காலங்களில் வகுப்பை மட்டம் அடிப்பேன். அதே சமயம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  ‘இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  அனைத்து இந்திய மொழிகளிலும் கூகுள் இயங்க வழிவகை செய்யப்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் பேராதரவளிக்கும்’ என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார். 

  • தொடங்கியவர்

முதல் பயணத்துக்கு முன்னரே டைட்டானிக்கில் பழுது! விபத்துக்கு உண்மை காரணம் என்ன?

டைட்டானிக்

துவரை உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்துகளில், ‘டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய விபத்து’ம் முக்கியமானதாக இருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் நிகழ்ந்த அந்தக் கோர விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், அந்த விபத்து ஏற்படுத்திய வடு இன்றும் நம் மனங்களில் வலித்துக்கொண்டிருக்கிறது. தனது முதல் பயணத்தை சந்தோஷமாக ஆரம்பித்த டைட்டானிக் கப்பல் பயணம், அடுத்த சில தினங்களிலேயே இப்படியொரு கோர விபத்தைச் சந்திக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். புது வாழ்க்கையைத் தொடங்குகிறோம் என்ற உற்சாக மனநிலையோடு ஆர்ப்பரித்துச் சென்றவர்களின் எண்ணத்தை இயற்கை, அடியோடு மாற்றியமைத்தது. துரதிர்ஷ்டவசமாக கப்பல் பனிப் பாறையில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. அதில், பயணித்த 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்துபோயினர். 

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவைத்து எடுக்கப்பட்ட ‘டைட்டானிக்’ திரைப்படம்தான் இந்தத் துயர சம்பவத்தின் வலியை இன்றைய தலைமுறையினர் மத்தியில் பதியச்செய்தது. கப்பல் பனிப் பாறையில் மோதி... அதன், அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டு... அதன் வழியாக தண்ணீர் உள்ளே வந்ததாகத்தான் டைட்டானிக் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிக்கும். ஆனால், அந்தக் கப்பல் எல்லா இயற்கைத் தாக்குதல்களையும் தாங்கும் சக்திகொண்டதாக வடிவமைக்கப்படிருந்தது. பின், எப்படி இந்த விபத்து நடந்தது என்று இன்றுவரை கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு தெளிவான காரணமும் கிடைக்காதிருந்த நிலையில், பிரபல ஊடகவியலாளரான செனான் மொலாணி, ‘‘டைட்டானிக் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தே இந்த மாபெரும் பேரழிவுக்கு முக்கியக் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார். ‘‘ஆக, டைட்டானிக் விபத்து பற்றிய இத்தனை வருட ரகசியமும் இவரால் உடைபட்டுவிட்டது’’ என்கின்றனர் டைட்டானிக் ஆராய்ச்சியாளர்கள்.

taitanic006_17052.jpg

டைட்டானிக் ஆரம்பமும்... முடிவும்!

உலகின் முதல் நீளமான மற்றும் சொகுசுக் கப்பலான டைட்டானிக் கப்பலின் உணமையான பெயர், ‘RMS TITANIC’. அதாவது, Royal Merchant Ship TITANIC. இந்தக் கப்பலை இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான White Star Line கட்ட ஆரம்பித்தது. 1909-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி, 1911-ம் ஆண்டு மே 31-ம் தேதி முடிவடைந்தது. 46000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட இந்தக் கப்பல், வாணிப நோக்கத்துக்காகக் கட்டப்பட்டது. இப்படி ஒரு கப்பலை இதுவரை உலகம் கண்டிராதலால், அதன் முதல் பயணத்தை மட்டும் மக்கள் செல்வதற்கான பிரத்யேகப் பயணமாக அறிவித்திருந்தது.

இங்கிலாந்தில் சதாம்ப்டன் நகரில் இருந்து... ஃபிரான்ஸ், அயர்லாந்து வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதுதான் அதன் இலக்கு. பல மக்கள், முதல் பயணத்துக்காக டிக்கெட் வாங்க அலைமோதினர். கட்டணம் சற்று அதிகம். அதனால், பெரும்பான்மையானோர் பணக்காரர்களாகவே இருந்தனர். கப்பலின் பணியாளர்கள் 900 பேரையும் சேர்த்து... மொத்தம் 2,224 பேர்களுடன் ‘டைட்டானிக்’ கப்பல் தனது முதல் பயணத்தை 1912-ம் வருடம் ஏப்ரல் 12-ம் தேதி ஆரம்பித்தது. பெரும் மக்கள் கூட்டம் துறைமுகத்துக்கு வந்து வழியனுப்ப, அந்தக் கப்பல் மெதுவாகக் கடல் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல்லத் தொடங்கியது.

taitanic001_17395.jpg

கப்பலினுள் மக்கள்... பாடல், நடனம், விருந்து, மது என சகல வசதிகளுடன் தங்கள் புதிய பயணத்தைக் கொண்டாடினர். மூன்றாம் நாள் நள்ளிரவு சரியாக நேரம் 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடலில்... சுமார் 220 அடி நீளமுள்ள பனிப் பாறையில் டைட்டானிக் மோதியது. அதன்மீது விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புக ஆரம்பித்தது. பயத்தால், சிலர் நீரில் குதித்தனர். ஆனால், நீரின் குளிர்ச்சி -2 டிகிரி அளவைவிடக் குறைவாக இருந்தது. அதாவது, தண்ணீரைக் கொட்டினால் சில நிமிடங்களில் பனிக்கட்டியாகும் நிலைமை. 16 படகுகள் 65 பேரையும், 4 படகுகள் 47 பேரையும் ஏற்றிச் செல்லும் அளவில்... அந்தக் கப்பலில் அவசரப் பாதுகாப்புப் படகு இருந்தது. இதன்மூலம் சுமார் 1,100-க்கும் அதிகமான பயணிகள் தப்பித்து இருக்க முடியும். ஆனால், நீ... நான் என முந்திக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெறும், 710 பயணிகளே தப்பிக்க முடிந்தது. விபத்து ஏற்பட்டவுடன் அருகில்... அதாவது, 98 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த Carpathia கப்பலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரியாக அதிகாலை 4.10 மணிக்கு அந்தக் கப்பல், ‘டைட்டானிக்’ கப்பலை அடைந்தபோது... 1,500-க்கும் அதிகமானோர் தண்ணீரில் விறைத்துப்போய் இறந்திருந்தனர். தன் முதல் பயணத்தைச் சந்தோஷமாக ஆரம்பித்த ‘டைட்டானிக்’ கப்பலின் முடிவு கொடூரமாக அமைந்துபோனது உலக வரலாற்றில் எப்போதுமே ஓர் அழியாத வடுதான். 

விபத்துக்கான பலதரப்பட்ட காரணங்கள்!

taitanic004_12313.jpg

கப்பல் சரியான காலநிலையில் தன் பயணத்தைத் தொடங்கவில்லை என்றும், கேப்டனின் அதீத ஆர்வக் கோளாறின் காரணமாகவே கப்பல் பனிப்பாறையில் மோதியது என்றும் பலதரப்பட்ட மக்கள் காரணம் சொல்லி வந்தனர். ஆனால், உண்மையான விபத்துக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு ரே பாஸ்டன் என்ற ஆராய்ச்சியாளர், டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு 20 நாட்களுக்கு முன், கப்பலில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது என்று அறிவித்திருந்தார். எனினும், ‘உண்மையான காரணம் இதுவல்ல’ எனப் பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில் செனான் மொலாணி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டானிக் கப்பலைப் பற்றி, ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். கப்பல் கட்டுமானப் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், பயணத்தைத் தொடங்கத் தயாராக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், விபத்து ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கியபோது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தும், பலரைச் சந்தித்தும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். ஆராய்ச்சியின் முடிவில் கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு... கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்துதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

செனான் மொலாணியின் ஆராய்ச்சி அறிக்கை:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே கப்பலின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தப் பகுதியானது அதிக வெப்பத்தினால் 75 சதவிகிதத்துக்கும் மேல் பலவீனமாக இருந்துள்ளது. விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில்... கப்பல் இரண்டாக உடைந்த இடத்துக்கு அருகில் மிக பெரிய அளவில் கறுப்பு நிற அடையாளங்கள் இருந்துள்ளன. இந்த அடையாளங்கள்... கப்பல் நீரில் மூழ்கும் ஏற்பட்ட தீவிபத்தினால் உருவானது கிடையாது. வாணிப நோக்கத்துக்காகச் செய்யப்பட இந்தக் கப்பலில் கறுமை நிற அடையாளம் பதியப்பட்ட அந்த இடத்தில் எரிபொருட்கள் ஏதும் வைக்கப்படவில்லை. அப்படியிருக்க அந்த இடத்தில் இப்படி ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஏற்பட்ட தீவிபத்தால்தான் இந்தப் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்படிருக்கிறது. அதனால், இந்தப் பகுதி இரண்டாக உடைந்து மிகப்பெரிய அழிவினை உண்டாக்கியிருக்கிறது. இதுதவிர, இப்படி ஒரு தீவிபத்து ஏற்பட்டதை அந்தக் கப்பலின் உரிமையாளர் பயணிகளிடத்தில் மறைத்துள்ளார். காரணம், சொன்ன நேரத்தில் அந்தக் கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதாலும், ஒருவேளை... இதுபற்றித் பயணிகளுக்குத் தெரியவந்தால், இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவான அந்தக் கப்பலில் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதாலும், அதனால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதாலுமே அவர், இந்த தீவிபத்தைப் பயணிகளிடமிருந்து மறைத்திருக்க வேண்டும்’’ என அதில் தெரிவித்துள்ளார். 

டைட்டானிக் கோர விபத்துக்கு எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும்... அதன் அழிவு, வரலாற்றிலிருந்து ஒருபோதும் மறையாது என்பதே உண்மை!

vikatan

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

 
 
இந்தியாவின் அழகு நடிகை, ஹிந்தியின் முன்னணி நடிகை, தமிழிலும் கோச்சடையானில் 'நடித்த' தீபிகா படுகோனின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Deepika Padukone
  • தொடங்கியவர்

ஒரு அன்னாசிப் பழம் எழுபதாயிரம் ரூபாயாம்..! இன்னும் இருக்கு ஆச்சரியம்

பழம்

மனிதனுக்கு சலிக்கவே சலிக்காத ஒரு விஷயம் சாப்பாடு. அதில்தான் எத்தனை எத்தனை வகைகள், எத்தனை டயட்கள். இன்றைய தேதிக்கு பழத்தை மட்டும் சாப்பிட்டு வாழ்கிற பழக்கம் பரவலா வளர்ந்துக்கிட்டு இருக்குன்னு ஆன்லைன்ல செய்திகள் பரவுது. சரி பழங்கள் சாப்பிடுறவங்க இதயும் நோட் பண்ணிக்குங்கப்பா. உலகின் காஸ்ட்லியான பழங்கள் பட்டியல் இதோ..  

8. புத்தர் பேரிக்கா :

புத்தர் பேரிக்கா பழங்கள் (Buddha pear)

இந்த ரக பழம் போதி தர்மர் சமாதியான சீனாவில் கிடைக்கிறது. சிங் மங் ஹல்-ங்குற (கொஞ்சம் படிக்க கஸ்டமாத்தான் இருக்கு) விவசாயி தான் புத்தர் பேரிக்காய சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாரு. மொத்த சீனாவுக்கு இவர் தான் சப்ளையராம். புத்தர் வடிவில் இருக்கும் பேரிக்காய (pear) சாப்டா  நீண்ட நாளுக்கு வாழலாமுன்னு யாரோ கொளுத்திப் போட்டுட்டாங்க. எல்லாருக்கும் அல்வா கொடுக்குற சீனா காரனுக்கு புத்தர் பேர சொல்லி, எவனோ புஸ்வானம் கொளுத்தி இருக்கான். எது எப்புடியோ இன்னக்கி ஒரு பழம் 260 ரூவான்னு வாங்கி சாப்டுக்கிட்டு தான் இருக்காங்க ஜிங் மங் சங் சைனீஸ்கள்.

7. செம்பிகியா க்வின் ஸ்ட்ராபெர்ரி :

செம்பிகியா க்வின் ஸ்ட்ராபெர்ரி, Sembikiya queen strawberry

சொம்புல தண்ணி குடுக்கணுமா-ங்குற மாதிரியே பேர் இருக்கு. இந்த ஸ்ட்ராபெர்ரி பழம்தாங்க, உலகின் அழகான மற்றும் சுவையான ஸ்ட்ராபெர்ரிகள். குறிப்பாக இதோட தோற்றப் பொலிவு மற்றும் வடிவத்துக்குத்தான் காசை இறைக்கிறோம். இதுல ஒரு ஸ்ட்ராபெர்ரிய டேஸ்ட் பண்ணனும்னா கூட 485 ரூவா கொடுக்கணும். இதயும் நம்ம ஜப்பான் தோழர்கள் தான் கண்டுபிடிச்சிருக்காங்க மக்களே.

6. டெகொபான் சிட்ரஸ் :

டெகொபான் சிட்ரஸ் பழங்கள், Dekopon citrus

ஆரஞ்சு பழத்துக்கு தாங்க இந்த பேரு. இதோடு சிறப்பு என்னன்னு கேக்கறீங்களா...? உலகின் இனிமையான ஆரஞ்சுப் பழங்கள் இதுதான். இதுல கொட்டை கிடையாது. கியோமி மற்றும் பொன்கன் என்கிற இரண்டு ஆரஞ்சு ரகங்களின் கலப்பு உருவம் இந்த டெகொபான் சிட்ரஸ். இதயும் இந்த ஜப்பான்காரங்க தான் கண்டு பிடிச்சிருக்காங்க. இதுல ஒரு ஒத்த ஆரஞ்ச வாங்கணும்னா 800 ரூவா செலவாகும்.

இதுல 6 + 5 = 11 சொலையாச்சும் இருக்குமா?

5. ரூபி ரோமன் திராட்சை :

ரூபி ரோமன் திராடை பழங்கள், Ruby roman Grapes

இசிகோவா-ங்குற ஒரு ஜப்பான் கம்பெனி இந்த ரக திராட்சைய சாகுபடி செய்யுது. 2008-ல இருந்துதான் இந்த திராட்சை உற்பத்தி செய்யப்பட்டு வருது.  ஒரு கொத்துல சராசரியா 25 பழங்கள் இருக்கும். இந்த திராட்சையோட சைஸ்தான் கொஞ்சம் பெரிசு. டேபிள் டென்னிஸ் பால் சைஸ்ல இருக்கும். 25 பழங்கள் கொண்ட இந்த திராட்சை கொத்து, இந்தியாவுல அமேஸான்ல 810 ரூவாய்க்கு கிடைக்குது.

"மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்... "

4. சிகாய் ஈச்சி ஆப்பிள் :

சிகாய் ஈச்சி ஆப்பிள் பழங்கள், sekai ichi apple

இந்த சிகாய் ஈச்சிக்கு அர்த்தம் உலகின் நம்பர் 1. இந்த ஆப்பிளோடு ஸ்பெஷாலிட்டியே, ஒரே ஆப்பிள் சுமாராக 12 - 18 இன்ச் விட்டத்துடன், 750 கிராம் - 1 கிலோ எடை இருக்கும். 2014-ல் தான் இதோடு 40-வது பிறந்த நாள் கொண்டாடுனாங்க.  இந்த ரக ஆப்பிள்ல  முதன்முதல்ல ஜப்பான்லதான் பயிர் செய்யப்பட்டது. ரெட் டெலிசியஸ் மற்றும் கோல்டன் டெலீசியஸ் ஆகிய இரண்டு ரக ஆப்பிள்களின் ஹைபிரிட் வெர்சன் தான் இந்த சிகாய் ஈச்சி. இதுல ஒரு ஆப்பிள வாங்கணும்னா 1,365 ரூவா செலவாகும். பரவாயில்லயா? இந்த காசுல நம்ம ஊர்ல 6 - 8 கிலோ ஆப்பிள் வாங்கலாம்ல.

3. கட்ட தர்பூசணி :

கட்ட தர்பூசனி பழங்கள், Square watermelon

கட்டதுரைன்னே கண்டுபிடிச்சிருப்பாங்க போல. என்ன ஆச்சர்யம்னா இந்த தர்பூசணியே கனசதுரமாத் தான் இருக்கும். இந்த பழம் சராசரியாக 6 கிலோ எடை இருக்கும். கடந்த 2014-ல் இருந்து தான் இத ஜப்பான்காரங்க ஏற்றுமதி பண்ணவே ஆரம்பிச்சிருக்காங்க. இந்த கட்ட தர்பூசணிய வாங்கி பல பேர் சப்பிடுறது இல்ல. மாறா வீட்டு டெகரேஷனுக்கு வெச்சிடுறாய்ங்க. ஒரு முழு தர்பூசணியோட விலை 5000 ரூவாப்பு.

"நம்ம பாடியவே ஷேப்பா வெச்சுக்குறது இல்ல, இதுல வாட்டர்மிலன ஷேப்பாக்கி இருக்காங்க.. சில்லி கய்ஸ் "

2. டயோ நோ டமாகோ மாம்பழம் :

டயோ நோ டமாகோ மாம்பழங்கள், Tayo No Tamago Mangoes

 “முட்டை சூரியனில் இருப்பது"-ங்குறது தான் அர்த்தமாம் இந்தப் பெயருக்கு! என்ன பெயர் இது உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதா..?  டயோ கொயா, சுயோன்னு  பெயரை பாத்த உடனே புரிஞ்சிருக்குமே... இதையும் நம்ம ஜப்பான்காரனுகளோடதுன்னு. சராசரியா இந்த மாம்பழம் 350 கிராம் எடை இருக்கும். இதோட ஸ்பெஷாலிட்டி வழக்கமா மாம்பழத்துல இருக்குற சர்க்கரை அளவோட குறைவான சர்க்கரை தான் இந்த ரக மாம்பழங்கள்ல இருக்கும். சராசரியா, ஒரு கிலோ மாம்பழம் 6,500 ரூவா தான். 

1. பைன்ஆப்பிள்ஸ் ஃப்ரம் தி லாஸ்ட் கார்டன் ஆஃப் ஹெலிகன் :

அண்ணாசி பழங்கள், pineapples from the lost gardens of heligan

ஐரோப்பிய கண்டத்துலேயே அன்னாசி விளையுற ஒரே இடம், இங்கிலாந்துல இருக்குற "தி லாஸ்ட் கார்டன் ஆஃப் ஹெலிகன்" -ங்குற தோட்டத்துல தான். பொதுவா குளிர் பிரதேசங்கள்ல அன்னாசிப் பழங்கள் விளையாது. இதுக்காகவே பிரத்யேகமா சில ஏற்பாடுகளை செய்து, குதிரைகளின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி இந்த ரக அன்னாசிப் பழங்கள விளைய வைக்கறாங்க. தோராயமாக இதில் ஒரு பழத்தின் சராசரி விலை 70,000 ரூவா. இதுல சோகமான விஷயம் என்னான்னா, இந்த பழம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் டேஸ்ட் எல்லாம் கிடையாது. இந்த பழத்தோட உற்பத்தி செலவு ரொம்ப ஜாஸ்தி, அதோட ஐரோப்பியாவுல கிடைக்காதுங்குற காரணத்தால தான் இவ்வளவு விலை.  பலம் தரும் பழங்கள்  நம்ம ஊர்லயே  கிடைக்கத் தான் செய்யுது.

"நாம அன்னாசி 2 ஸ்லைஸ் 10 ரூவாயக்கு தள்ளுவண்டி அக்காகிட்ட வாங்கிக்கலாம் பாஸ்."

vikatan.

  • தொடங்கியவர்

p19a.jpg

டோலிவுட் ரிட்டு பர்மேச்சா

டெல்லியில் பூத்த சிவப்பு ரோஜா. அல்லரி நரேஷின் `ஆஆ நா பெல்லன்டா' படத்தில் அறிமுகமானார். பார்க்க பளபளவென நெய்க்குழந்தை மாதிரி இருப்பவரைக் கண்டவுடன் காதலில் விழுந்தார்கள் ரசிகர்கள். பின் `வசூல் ராஜா', `ஆக்‌ஷன் 3டி' போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு பெரிய பிரேக் எடுத்தவர், இப்போது இந்தியில் `அகர் தும் சாத் ஹோ' என்ற சீரியலில் ஹீரோயினாக கெத்து காட்டி வருகிறார். இவரின் சகோதரர்களும் சினிமாவில்தான் இருக்கிறார்கள்.  #கலைக் குடும்பம்!

மல்லுவுட் நிமிஷா சுரேஷ்

p19b.jpg

இந்தக் கேரளத்துப் பைங்கிளி அறிமுகமானதே `திலீப்' படத்தில்தான். `பச்சக்குதிர' படத்தில் அறிமுகமானவரின் நடிப்பு பிடித்துவிட, அடுத்த ஆண்டே மூன்று படங்களில் கமிட்டானார். அதன்பின் ஒரு பெரிய இடைவெளி. பின் தன் செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கியவர், ஆண்டுக்கு நான்கு படங்கள் என முறைவைத்து கலக்கினார். தமிழில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான `நினைத்தது யாரோ' படத்தில் இவர்தான் ஹீரோயின். கடைசியாய் `ஓம் சாந்தி ஓஷானா' படத்தில் தலைகாட்டினார். #சீக்கிரம் தேர்ட் இன்னிங்ஸ் ஆரம்பிங்க!

சாண்டல்வுட் செளந்தர்யா

p19c.jpg

பெங்களூரில் பிறந்து வளர்ந்த காரமான குடமிளகாய். பிரபல கன்னட நடிகையான ஜெயமாலாவின் செல்ல மகள். முதல் படம் உபேந்திராவோடு. `காட்ஃபாதர்'. அந்தப் படத்துக்காக ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்தார் செளந்தர்யா. அதன்பின் `பரு வொய்ப் ஆஃப் தேவதாஸ்', `சிம்மாத்ரி' எனத் தொடர்ந்து படங்கள். நடுவே தெலுங்கிலும் `பிரேமிகுடு' என்ற படத்தில் வந்துபோனார். தன் முதல் பெரிய பிரேக்குக்காக இப்போது வெயிட்டிங். #வாழ்த்துகள் சௌ!

vikatan

  • தொடங்கியவர்

 

சீனாவின் ஐஸ் திருவிழா - காணொளி

  • தொடங்கியவர்

105 வயது முதியவர் 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி உலக சாதனை


105 வயது முதியவர் 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி உலக சாதனை
 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 105 வயது முதியவர், 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ராபர்ட் மர்ச்சான்ட் எனும் குறித்த முதியவர் தனது 40 ஆவது வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அன்றிலிருந்து சைக்கிளோட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.

இவர் தனது 102 ஆவது வயதில் 1 மணி நேரத்தில் 26.9 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளோட்டிக் கடந்தார்.

100 ஆவது வயதில் 4 மணி 27 நிமிடத்தில் 100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இதற்காக 6 மாதங்கள் பிரத்தியேக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து சாதனைகள் படைத்து, சாதனைக்கு வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

https-_blueprint-api-production-s3-amazonaws-com_uploads_card_image_336618_612a9045-c7ce-4276-9b98-a982997cf742

https-_blueprint-api-production-s3-amazonaws-com_uploads_card_image_336601_55b4ce5d-4c5e-4b97-942a-d0ebf59edb09

nintchdbpict000292274797

  • தொடங்கியவர்

வல்லரசுகளை மிரட்டும் ஒசாமாவின் வாரிசு

ஒசாமா பின்லேடனின் மகனும் அல்கொய்தா தலைவனுமான ஹம்ஸா பின்லேடனை 'குளோபல் டெர்ரரிஸ்ட்' என அறிவித்துள்ளது அமெரிக்கா. ஹம்ஸா தொடர்ந்து உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதால் இந்த முடிவு எனக் கூறியுள்ளது அமெரிக்கா. ஒசாமாவின் மறைவிற்கு பின் தலைமைப் பொறுப்பு ஹம்சா வசம் வந்தது. ஹம்ஸாவிற்கு தற்போது 25 வயதாகிறது. 

Hamza-bin-Laden_23579.jpg

 

 

 

நான் அரசியலுக்கு வருவதை தடுக்கமுடியாது - தீபா

ஜெ. மறைந்து இன்றோடு ஒரு மாதமாகிறது. அ.தி.மு.கவில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகளின் விளைவாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என ஆங்காங்கே குரல்கள் எழுந்து வருகின்றன. தீபாவை சந்திக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் அவரை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 'நான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது' என தற்போது கூறியுள்ளார் தீபா. 

deepa_22499.jpg

 

15823649_1074122789382731_84301038576733

 

உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போர்ன் நகரில் 1971- ம் ஆண்டு நடைபெற்ற தினம் இன்று.

 

15871461_1073948212733522_44520255437195

 

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நிறுவிய முகலாய மன்னர் ஷாஜகான் பிறந்த தினம்(ஜனவரி 5, 1592)

 

 

  • தொடங்கியவர்

இடுப்பு, வயிற்று பகுதியை ஃபிட்டாக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சிகள்

 

ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. இடுப்பு, வயிற்றை ஃபிட்டாக்கும் 20 நிமிட பயிற்சிகளை கீழே பார்க்கலாம்.

 
 
 
இடுப்பு, வயிற்று பகுதியை ஃபிட்டாக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சிகள்
 

(swiss ball Abdominal crunch



ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றை ஃபிட்டாக்கும் 20 நிமிட பயிற்சிகளை கீழே பார்க்கலாம்.

ரிவர்ஸ் கிரன்ச் (swiss ball Reverse crunch) :

தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, மேல் உடலை சாய்த்து தரையில் படுக்க வேண்டும். பின்னர், மெதுவாக கால்களால் பந்தினை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை, 15 முதல் 20 முறை செய்யலாம்.

பலன்கள்: வயிறு, அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசைகள் வலுவடையும்.

அப்டாமினல் கிரன்ச் (swiss ball Abdominal crunch) :

கால்களை அகட்டி தரையில் நன்கு பதித்து, சுவிஸ் பந்தின் மீது நேராக அமர வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளலாம். அப்படியே மெதுவாக பந்தின் மீது படுத்து, தலையை நன்கு சாய்க்க வேண்டும். இப்போது,  கைகளை மேலே உயர்த்த வேண்டும். அதேநேரம் தலையையும் உயர்த்த வேண்டும். பின்னர், இயல்புநிலைக்குத் திரும்பலாம். இப்படி, 10 – 15 முறை செய்யலாம்.

பலன்கள்: புவி ஈர்ப்பு விசைக்கு (anti gravity) எதிராகச் செய்யப்படும் உடற்பயிற்சி என்பதால் மேல் வயிறு, இடுப்பு மற்றும் கைகளில் உள்ள கொழுப்பு கரையும். தசைகள் வலுவடையும்.

ஸ்குவாட் (swiss ball Squat) :

சுவருக்கும், முதுகுக்கும் இடையில் பந்தை வைத்து, தரையில் கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, நாற்காலியில் அமர்வதுபோல,  உட்கார்ந்து எழ வேண்டும். இப்பயிற்சியின் போது, மூச்சை சீராக உள்ளிழுத்து, வெளிவிட வேண்டியது அவசியம். இதை, 15 முறை செய்யலாம்.

பலன்கள்: உடல் முழுவதுக்குமான பயிற்சி இது. முதுகுத் தசைகள் மற்றும் தொடைத் தசைகள் வலுவடையும், ஃபிட்டாகும்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஜனவரி 06
 
 

there.jpg1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ' குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.

1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கொல்கொத்தாவை சென்றடைந்தார்.

1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.

1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.

1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.

1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.

2007: இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

2007: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா ? #HealthTips

து கும்பகோணம் டிகிரியோ, உள்ளூர் கடையில் அரைத்ததோ... காலையில் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பது நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். சிலருக்கு அது ஓர் அடையாளமாகவே ஆகிப்போன அன்றாடச் செயல். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா... அது ஆரோக்கியமானதுதானா? நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். நம் வயிற்றுக்குள் போகும் காபி என்ன செய்யும்... என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

 

 

 

காபி குடிக்கலாமா

 

 

வயிறு பத்திரம் பாஸ் !

உடல் என்கிற மாயாஜாலம் நிகழ்த்துகிற அற்புதம் ஏராளம். தேர்ந்த ஓர் இயந்திரம் செய்யும் வேலையைவிட எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்துகிற உயிர் இயந்திரம் அது. உணவை செரித்து, அதில் இருந்து சத்துக்களைப் பிரித்துக் கொடுத்து, இதயத்தைத் துடிக்கவைத்து, மூளையை சிந்திக்கவைத்து, நம்மைப் பேசவைத்து, சிரிக்கவைத்து, அழவைத்து... என அது நிகழ்த்துகிற ஜாலங்கள் அநேகம். அதில் ஒரு சிறு துளி உதாரணம்... நாம் சாப்பிடும்போது, வாசனையை நுகரும்போது, சமயத்தில் உணவைப் பற்றி நினைக்கும்போதே... நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகத் தொடங்கிவிடும். அன்றைய தினம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என நினைத்து நாம் அருந்தும் காபி, இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் சுரக்கச் செய்யும். ஏற்கெனவே, இரவில் சாப்பிட்டுவிட்டு, உறங்கி நீண்ட நேரத்துக்கு வயிற்றைக் காயப் போட்டு வைத்திருப்போம். அந்த வெறும் வயிற்றில் காபி குடித்தால் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அதன் செயல்பாட்டைப் பாதிக்கும். வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும். பின்னாட்களில், இதுவே வயிறு தொடர்பான பல பெரிய பிரச்னைகளுக்கும் காரணமாகலாம்.

அசிடிட்டி உள்ளவர்கள் கவனிக்க..!

சிலருக்கு வயிற்றில் ஏற்கெனவே சில பிரச்னைகள் இருக்கும். அதாவது, அசிடிட்டி, அல்சர், `இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம்' (Irritable Bowel Syndrom) எனும் அடிக்கடி மலம் கழிக்கத் தூண்டும் பிரச்னை ஆகியவை. இப்படிப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் காபியைக் கையால்கூடத் தொடக் கூடாது. காபி கொட்டையில் இருக்கும் `காஃபின்’ என்கிற பொருளும் சில அமிலங்களும் சிறுகுடலைக் கடுமையாக பாதித்து, எரிச்சலை ஏற்படுத்திவிடும்.

ஹார்மோன் அலெர்ட் !

நம் உடல் 24 மணி நேர சுழற்சிக்கு உட்பட்டது. இதை ஆங்கிலத்தில், `சர்கேடியன் ரிதம்’ (Circadian Rhythm), `சர்கேடியன் சைக்கிள்’ (Circadian Cycle) என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது, நம் உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்யும். இந்தப் பணிகளை ஒழுங்குபடுத்துபவை, ஹார்மோன்கள். அவற்றில் கார்ட்டிசால் (Cartisol) என்கிற ஸ்டீராய்டு ஹார்மோன்தான் நம்மை எப்போதும் எச்சரிக்கை உணர்வோடும் விழிப்போடும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் ஒரு நாளைக்கு மூன்று முறை உச்சக்கட்ட நிலையில் இருந்து பணியாற்றும். நாம் பயத்தில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இந்த ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். அப்படி ஒரு நாளின் மூன்று முறைகளில் காலையில் 8 மணி முதல் 9 மணி வரைக்கான நேரம், கார்ட்டிசால் செயல்படும் முதல் காலம். அந்த நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது, கார்ட்டிசாலின் செயல்பாட்டைச் சீர்குலைத்துவிடும். இப்படி காபி சாப்பிடுவது தொடர்ந்தால், அந்த ஹார்மோன் அழியும் நிலையேகூட உண்டாகி, உடலுக்கு வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

உடல் வறட்சி உஷார் !

`காலையில் வெறும் வயிற்றில் காபி சாப்பிடுவது, நாளின் பிற்பாதியில் நாக்கு மற்றும் உடலை வறட்சி அடையச் செய்துவிடும்’ என எச்சரிக்கின்றன சில ஆய்வுகள். அதன் காரணமாக, நாம் உடலில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவைக் கடுமையாகப் பாதிக்கும். சரியான அளவில் நம் உடலில் இருந்து வியர்வையாகவோ, சிறுநீராகவோ நீர் வெளியேறவில்லை என்பது, உடலுக்குப் பல பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.

வேண்டாமே உயர் ரத்த அழுத்தம் !

`வெறும் வயிற்றில் காபி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வழிவகுக்கும்’ என எச்சரிக்கிறார்கள் சில மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தம் பற்றிச் சொல்லவே வேண்டாம். சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்ற மெகா வியாதிகளுக்கு ஆரம்பப்புள்ளியே உயர் ரத்த அழுத்தம்தான். எனவே, காலை காபியா... அதிலும் வெறும் வயிற்றில் காபியா? `நோ’ சொல்லிப் பழகுவோம். `பிறகு, எப்போதான் காபி குடிக்கலாம் பாஸ்?’ என்று கேட்கிறீர்களா? காலை சிற்றுண்டிக்குப் பிறகு 10:00 மணியில் இருந்து 11:30 காபி அருந்த அருமையான நேரம். நம் வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு ஊறு ஏதும் விளைவிக்காத அற்புதமான தருணம். அந்த நேரத்தில் காபி குடிக்கலாம்... மணக்க மணக்க!

vikatan

  • தொடங்கியவர்

“அமெரிக்க அதிபர் கரடி வேட்டைக்கு போன கதை தெரியுமா...?” : தியோடர் ரூஸ்வெல்ட் நினைவு நாள் சிறப்புப் பகிர்வு!

ரூஸ்வெல்ட்

குட்டீஸ்களுக்கு சாக்லேட்டைவிட மிகவும் பிடித்தமான பொருள் ஒன்று இருக்க முடியுமா என்ன? ஆம். நிச்சயம் இருக்கிறது. அதுதான், ‘டெடி பியர்’ (teddy bear). குண்டு கண்கள், பெரிய மூக்கு, நீளமான காதுகள் என பஞ்சினால் செய்யப்பட்டிருக்கும் ஓர் அழகான கரடிப் பொம்மையே ‘டெடி பியர்.’ அதை, ஒரு குழந்தையாக நினைத்து... குழந்தைகள் கொஞ்சி விளையாடும் காட்சி, பார்ப்போரைப் பரவசப்படுத்தும். குழந்தைகளை மட்டுமல்ல... குமரிப் பெண்களையும்கூடக் கவர்ந்திழுத்துவிடும் சக்தி டெடி பியருக்கு உண்டு. வரவேற்பரையில்கூட, அது முதலிடம் பிடித்திருக்கும். சில நேரங்களில்... பலருடைய பெட் பார்ட்னராகக்கூடத் (bed partner) தன்னைச் சங்கமித்துக்கொள்ளும். இப்படிப்பட்ட ‘டெடி பியரை’ உங்களுக்குப் பிடிக்குமேயானால்... நீங்கள் கண்டிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான தியோடர் ரூஸ்வெல்ட் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். டெடி பியருக்கும், ரூஸ்வெல்ட்க்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைத்தால்... உங்களுக்கான பதில் இதுதான், ‘டெடி பியர்’ உருவாகுவதற்குக் காரணமே தியோடர் ரூஸ்வெல்ட்தான். இதன் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, இன்றைய தினத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். அமெரிக்காவின் 26-வது ஜனாதிபதியும்... அமைதிக்கான நோபல் பரிசும் வென்றவரான தியோடர் ரூஸ்வெல்ட்டின் நினைவு நாள், இன்று.

‘டெடி பியர்’ பிறந்த கதை!

டெட்டி பியர்

தியோடர் ரூஸ்வெல்ட், வேட்டையாடுவதில் அலாதி பிரியம்கொண்டவர். 1902-ம் ஆண்டு நவம்பர் மாதம்... அது, அவர் ஜனாபதிபதியாகப் பதவி வகித்த காலகட்டம். மிஸிசிப்பி மாகாண கவர்னர், ‘‘வேட்டையாடச் செல்லலாம்’’ என ரூஸ்வெல்ட்டிடம் வற்புறுத்த... அவரும் சம்மதித்தார். அந்த நாட்களில்... அமெரிக்காவில் கரடியை வேட்டையாடினால், சிறந்த வேட்டைக்காரனாக அனைவாரலும் புகழப்படுவார். மிஸிசிப்பி கவர்னர் மற்றும் ஒரு வேட்டைக்காரக் கும்பலுடன்.... ரூஸ்வெல்ட், வேட்டையாடக் காட்டுக்குப் புறப்பட்டார். காட்டில், தன்னுடன் வந்தவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேட்டையாட அனுப்பப்பட்டனர். வேட்டையின் தீவிரம் மூன்று நாட்களைக் கடந்தது. ஆனாலும், ஒரு கரடியும் கண்ணில் சிக்கவில்லை. இதனால் ரூஸ்வெல்ட் சோர்வடைந்தார். அவர், ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்று கருதிய வேட்டைக்காரக் கும்பல்... எங்கிருந்தோ ஒரு வயதான கரடியைப் பிடித்துவந்து... மரத்தில் கட்டிப்போட்டு, ‘‘இந்தச் கரடியைச் சுடுங்கள்’’ என்றனர். அதை உற்றுப் பார்த்த ரூஸ்வெல்ட், ‘‘நீங்கள் பிடித்துவந்த கரடியை... நான் சுட்டால் எனக்குக் கெட்டப்பெயர்தான் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பாவம் அந்தக் கரடி. அதற்கு வயதாகிவிட்டது. இருக்கும் கொஞ்ச நாட்களையாவது அது சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். கரடியை விடுவியுங்கள்’’ என்றார். அடுத்த நாளே, ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில்... இந்தச் சம்பவம் ஒரு கார்ட்டூனாக வெளிவந்தது. அதில், ஒருவர் கரடியைக் கயிற்றால் கட்டிப் பிடித்திருப்பது போலவும்... அதைச் சுடாமல் ரூஸ்வெல்ட் திரும்பிச் செல்வது போலவும் அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இது, காட்டுத்தீபோல் மக்களிடத்தில் பரவியது. 

ரூஸ்வெல்ட்

இந்தச் சம்பவத்தை மனதில்கொண்டு... மோரிஸ் மைக்டாம் எனும் பொம்மை செய்து விற்கும் வியாபாரி, பஞ்சால் செய்யப்பட்ட ஓர் அழகான கரடிப் பொம்மையைச் செய்தார். அந்த ஒரு பொம்மையை விலை கொடுத்து வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஒரு பொம்மையை வாங்கவே இவ்வளவு கூட்டம் சேருகிறது என்றால்... தியோடர் ரூஸ்வெல்ட் பெயரில் கரடிப் பொம்மை செய்து விற்றால், தனக்கு நல்ல லாபம் வரும் என்று எண்ணிய மோரிஸ் மைக்டாம், ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘நான்... ஒரு கரடிப் பொம்மை செய்யலாம் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். அதில், உங்களுடைய சம்பவத்தைக் குறிக்கும்வகையில்... உங்கள் பெயரையும், கரடியின் பெயரையும் இணைத்து ஒரு பெயர்வைக்க உள்ளேன். அதற்கு, நீங்கள் அனுமதியளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். ‘‘அப்படியானால், என் புனைப்பெயரான ‘டெடி’ என்ற பெயரை இணைத்து, உங்கள் கரடிப் பொம்மைக்கு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்’’ என சம்மதம் தெரிவித்தார். மோரிஸ் மைக்டாமும், தன்னுடைய கரடிப் பொம்மைக்கு ரூஸ்வெல்ட் சொன்ன புனைப்பெயரை இணைத்து, ‘டெடி பியர்’ என்று பெயர்வைத்தார். அன்று பிறந்த இந்த டெடி பியர்தான், இன்றும் குழந்தைகளின் கனவு உலகமாக இருக்கிறது. 

தியோடர் ரூஸ்வெல்ட்...

ரூஸ்வெல்ட்

1858-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் பிறந்த ‘டெடி’ எனும் தியோடர் ரூஸ்வெல்ட், சிறுவயதில் விலங்குகளைப்பற்றி ஆராய்வதில் அதிக விருப்பம் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாகவே இறந்த உயிரினங்களை வீட்டில் பதப்படுத்தி வைத்திருந்தார். இதற்கு ‘ரூஸ்வெல்ட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி’ என்று பெயரும்வைத்தார். அதன்பின், ‘தி நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் இன்செக்ட்ஸ்’ என்ற கட்டுரையை மிக இளம் வயதில் எழுதினார். திருமண வாழிவில் ஈடுபட்டிருந்தபோது மனைவியும், மகளும் இறந்துவிட... இதற்கு மேல் வாழவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிலிருந்து மீண்டுவர... பல புத்தகங்களைத் தனது நண்பர்களாக்கிக் கொண்டார். பின், 1888-ல் நடந்த அதிபர் தேர்தலில் பெஞ்சமின் ஹாரிசனுக்கு, பிரசாரப் பணிகளை ரூஸ்வெல்ட் மேற்கொள்ள... அவரும், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். அதன் காரணமாக ரூஸ்வெல்ட்க்கு சிவில் சர்வீஸ் ஆணையர் பதவி கிடைத்தது. அமெரிக்காவின் காவல் துறையில் ஊழல் அதிகமாக இருந்த காலம் அது. அந்த ஊழலை ஒழிப்பதற்காக போலீஸ் கமிஷனராகப் பதவியேற்ற அவர், அதை முற்றிலுமாகச் செய்தும் காட்டினார். அமெரிகாக்கவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஏற்பட்ட போரில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். அதற்காக இவருக்கு அமெரிக்கக் கடற்படையில் முக்கியப் பதவி வழங்கப்பட்டது. பின் மீண்டும் அரசியலில் ஆர்வம் வர... தீவிர பிரசாரம் செய்து, நியூயார்க் மாகாண ஆளுநர் ஆனார். 

ரூஸ்வெல்ட்

1896 வில்லியம் மெக்கின்லே அதிபர் பதவிக்குப் போட்டியிட... அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் ரூஸ்வெல்ட். அதன்காரணமாக, வில்லியம் மெக்கின்லே அமெரிக்காவின் அதிபரானார். ரூஸ்வெல்ட், துணை அதிபரானார். 1901-ல் மெக்கின்லே படுகொலை செய்யப்பட... துணை அதிபராக இருந்த ரூஸ்வெல்ட், தனது 42-வது வயதில் அமெரிக்காவில் மிக இளம்வயதில் அதிபராகப் பதவியேற்றார். சுற்றுச்சூழல், பாதுகாப்பு, உணவு, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தினார். பல கொளகைகளை மறுசீரமைப்புச் செய்தார். இதன் காரணமாக அமெரிக்க மக்களின் மனதில் ரூஸ்வெல்ட் நிரந்தரமாக இடம்பிடித்தார். 1904-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அதிபரானார். பதவிக்காலம் முடிந்த பிறகு, அமேசான் வனப் பகுதிக்குச் சென்று வாழத் தொடங்கினார். இதனிடையே 1906-ம் ஆண்டு ரூஸ்வெல்ட்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. தனிமை, இவரை வாட்ட... மீண்டும் புத்தகம் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய ‘ஆப்பிரிக்கன் கேம் ட்ரைல்ஸ்’, ‘தி நேவல் வார் ஆஃப் 1812’, ‘தி வின்னிங் ஆஃப் தி வெஸ்ட்’ போன்ற புத்தகங்கள் இன்றும் மிகச் சிறந்தவையாக விளங்குகின்றன. இன்றும், உலகின் பலமிக்க மனிதர்களின் வரிசையில் ஒருவராகப் பார்க்கப்படும் ரூஸ்வெல்ட், ‘தொலைநோக்கு சிற்பி’ என்று அழைக்கப்பட்டார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், 1919-ம் ஆண்டு ஜனவரி 6-ம் நாள் இயற்கை எய்தினார். 

‘டெடி பியர்’ இருக்கும்வரை... ரூஸ்வெல்ட்டின் புகழ் மென்மேலும் உயர்ந்துகொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்.

vikatan

  • தொடங்கியவர்

ஒரு மீனின் விலை 9.6 கோடிகளா?

 

 

புளுபின் டூனா எனப்படும் மீன்வகை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள துஸ்கிஜி மீன் சந்தையிலே 74.2 மில்லியன் யென்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 

3BDCABCA00000578-4089768-image-a-35_1483

டோக்கியோ நகரில் அமைந்துள்ள சுசீ சென்மாய் உணவகத்தின் உரிமையாளரான கியோசி கிம்பூரா என்பவரே குறித்த ஒரு மீனை இலங்கை பெறுமதி படி 9.6 கோடிகளுக்கு வாங்கி அணைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். 

3BDC864A00000578-4089768-image-a-56_1483

உலகில் மிகவும் பெரிய மீன் சந்தையாக கருதப்படுவது ஜப்பானின் துஸ்கிஜி மீன் சந்தையாகும். குறித்த சந்தையானது தனது இருப்பிடத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தமது பழைய இடத்திலேயே புதுவருடத்திற்கான விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

குறித்த விற்பனையின் போது ஒரு மீனை அதிக விலைக்கு வாங்கி சுசீ சென் உணவகத்திற்கு கொண்டு சென்ற கியோசி கிம்பூரா தனது சமையல் நிபுனர்களை கொண்டு மீனை வெட்டி பகிர்வதற்கு தயாராகிய நிலையில், குறித்த மீனின் பாகங்களை சுவைப்பதற்கு நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்துள்ளனர்.

3BDCC9EA00000578-4089768-image-a-74_1483

3BDCC9E600000578-4089768-image-a-64_1483

3BDC85EA00000578-4089768-image-m-53_1483

இதற்கு முதல் கடந்த 2013 ஆம் ஆண்டு சுமார் 155 மில்லியன் யென்கள் கொடுத்து மீன்களை இவர் வாங்கியிருந்தார். தற்போது இவர் வாங்கியுள்ள மீனின் ஒரு துண்டு பகுதியின் விலை சுமார் 10,000 யென்களுக்கு விற்பனையாகின்றதாம்.

ஜப்பானின் ‘டூனா கிங்’ என அழக்கப்படும் கியோசி கிம்பூரா புது வருட மீன் கொள்வனவில் தொடர்ந்து 6 வருடங்கள் அதிக விலைகொடுத்து ஆண்டின் மீன் வியாபாரத்தை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

3BDA900400000578-4089768-image-a-73_1483

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா?

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சையின் இந்திய பயணத்தின் முக்கியமான சில நிகழ்வுகளும், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரின் பதில்கள் இங்கே!

சுந்தர் பிச்சையின் இந்தியப் பயணம்:

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தியா வந்தால் தன் வழக்கமான அலுவல்களை கவனித்துவிட்டு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த முறை ஐ.ஐ.டி கரஹ்பூரில் மாணவர்களுடன் கலந்துரையாடல், பத்திரிகையாளர் சந்திப்பு, டெல்லி கான்பிரன்ஸ் என வலம் வந்திருக்கிறார் சுந்தர் பிச்சை. இந்த சந்திப்புகளில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் மிகவும் சுவாரஸ்யமனவை. கூகுள் நிறுவனத்தில் அவரது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

டிஜிட்டல் இந்தியா மீது நம்பிக்கை :

தங்கள் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் பற்றி கூறுகையில்,”சர்க்கரை அளவுக் கருவி மேம்பாடு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பிக்ஸல் (கூகுளின் ஸ்மார்ட் போன்) கொண்டு மக்கள் எளிதாக பயன்படுத்தும் விதமான AI (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) உருவாக்கும் முயற்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன” என்றார்.

இந்தியாவில் டிஜிட்டல் பற்றிய கேள்விக்கு, “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் டிஜிட்டல் மயம் என்பது எளிதல்ல. ஆனாலும் அதனை சாத்தியப்படுத்த முடியும். இங்கு ஆங்கிலம் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் மொத்தத்தில் மிகவும் குறைவு.எனவே முடிந்த வரை அந்தந்த பிராந்திய மொழிகளிலேயே தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிகழ்த்த வேண்டும். கூகுள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 2000 ரூபாய்க்கு மொபைல் போன் விற்கும் திட்டம் உள்ளது” என்றார்.

மேலும் தொழில்நுட்பத்தில் இந்தியா சீனாவை விஞ்சுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்தியா எதிர்வரும் காலத்தில் ஒரு உலகத்தர தொழில்நுட்ப போட்டியாளராக வளரும். அது எந்த நாட்டுடனும் மோதும் திறன் கொண்டிருக்கும். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். மேலும்,இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டுக்குத் தயாரிக்கப்படும் எந்தவொரு தயாரிப்பும் உலகம் முழுதற்கும் தயாரிக்கப்பட்டது போன்றது” என்றார்.

 

சுந்தர் பிச்சையின் உரையாடலில் சில சுவாரஸ்ய தகவல்கள்:

1. சுந்தர்பிச்சை கூகுள் நிறுவன பணிக்காக இன்டெர்வியூ செய்யப்பட்டது முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ம் தேதியன்று தானாம்.

2. சுந்தர் பிச்சைக்கு இன்டெர்வியூவின் போது ஐஸ்க்ரீம் தரப்பட்டுள்ளது. காரணம் கூகுள் ஒரு வித்தியாசமான அலுவலக அமைப்பை கொண்ட நிறுவனம் என்பதை காட்டுவதற்காகவாம்.

3. இவருக்கு விராட் கோலியை மிகவும் பிடிக்குமாம். அவரது இளமைகாலத்தில் கவாஸ்கரை மிகவும் பிடிக்கும் என்றும் தற்போது கோலியை மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

4. எனக்கு நிறைய நடிகர்களை பிடிக்கும் .ஃபேவரைட் என்று கேட்டால் ஷாருக், தீபிகா படுகோன் தான் என்கிறார் சுந்தர் பிச்சை.

5. ஐஐடியில் படிக்கும் போது முதல் வருடத்தில் சி க்ரேடு வாங்கியது இன்னமும் வருத்தமளிப்பதாக கூறினார்.

6. இவரது இன்ஸ்ப்ரேஷனாக விளங்கியது இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி என்று கூறினார்.

7.ஐஐடி கரஹ்பூரின் கூகுள் டூடுலை ஒரு நாள் இடம்பெற வைக்க முடியுமா என்றதற்கு அனுப்பி வைய்யுங்கள். ஆனால் தேர்வாவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்று பதிலளித்தார்.

8. சுந்தர் பிச்சையின் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் ஐஐடியில் படித்த நாட்கள் தான் என்கிறார்.

சுந்தர் பிச்சையின் கலந்துரையாடல் வீடியோ:

 

 

vikatan

  • தொடங்கியவர்

 

நதியின் மீது நாட்டியம்
--------------------------------------------
சீனாவில் ஹாங்ஷூய் நதி மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மிதக்கும் நடைபாதையும், அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு #HBDARRahman #HBDARR50

ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார். இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்..

அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை.

பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்... லண்டன் இசைக்
கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.

ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

"பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !" என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்

ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

இளம் வயதில் 'சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர் மணிரத்னம் மூலம் 'ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,"பிடிக்கலையா அம்மா ?" என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா

"காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் " என்றும் பதிவு செய்திருக்கிறார்.

ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக 'ரோஜா’வை அறிவித்தது. 'மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

'பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் 'வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக
நகைகளை அணிய மாட்டார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது "எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

'அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, 'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், 'ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’
எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்

'வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக 'வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.

ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.

ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. "லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்" என்று சொன்னார்

இசையை... ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ''இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்பார்.

வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான்
என்பார். ஈகோ என்பதை 'edging god out !' என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !" என்பது ரஹ்மானின் வாக்குமூலம்

 

 

 

 

 

50ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான்
 

21635_ar_rahman.jpgஇசைப்­பு­யல் ஏ.ஆர்.ரஹ்­மான் இன்று ஜன­வரி 06 ஆம் திகதி தனது 50 ஆவது பிறந்­த­நாளை கொண்­டா­டு­கின்றார்.


 

1992 ஆம் ஆண்டு தனது 26 ஆவது வயதில் ‘ரோஜா’ திரைப்­ப­டத்தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மானார்.

 

ஒஸ்கார் விருதை வென்ற மேடை யில் கூட "எல்லா புகழும் இறை­வ­னுக்கே" என்று தமிழில் பேசி நம்மை வியப்பில் ஆழ்த்­தி­யவர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் வெளி­வ­ரு­கி­றது என்றால், இளை­ஞர்கள் மத்­தியில் பெரும் வர­வேற்பு கிடைக்கும் என்­பதில் ஐய­மில்லை.

 

ஏ.ஆர்.ரஹ்­மானைக் கண்டு வியக்க அவ­ரது இசை மட்­டு­மல்ல தனிப்­பட்ட சிறப்பு அம்­சங்­களும் நிறைந்­துள்­ளன.

 

* பொது நிகழ்ச்­சியில் கலந்­து­கொள்­ளும்­போது எந்த ரசிகர் ஆட்­டோ­கிராப் கேட்­டாலும் நின்று போட்டு விட்­டுதான் கிளம்­புவார். அதற்கு எவ்­வ­ளவு நேர­மா­னாலும் பொறுத்­தி­ருக்க தயங்­க­மாட்டார்.

 

ஆனால், அவர் மசூ­தியில் தொழுகை செய்­து­விட்டு வரும் போது, யார் கையெ­ழுத்து கேட்­டாலும் "இங்கு இறை­வன்தான் பெரி­யவர். அவரை மிஞ்­சிய ஆள் நானில்லை. இங்கு வைத்து என்­னிடம் கையெ­ழுத்து கேட்­கா­தீர்கள்" என்று கூறி­விட்டு கிளம்­பி­வி­டுவார்.

 

21635_Lata-mangeskar.jpg

 

* தொடர்ச்­சி­யாக பல்­வேறு படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து வரும்­போது, ஒரே நேரத்தில் பல்­வேறு பாடல்கள் கொடுக்க வேண்­டி­யது இருக்கும். அந்த சம­யத்தில் தனி­யாக அவ­ரு­டைய ஸ்டூடி­யோவில் போய் உட்­கார்ந்து கொண்டு நிறைய பாடல் மாதி­ரி­களைத் தயார் செய்வார்.

 

அதனை தனது உத­வி­யா­ளர்­க­ளிடம் கொடுத்­து­வி­டுவார். "3, 5 மாதி­ரி­களை இந்த இயக்­கு­ந­ருக்கும் 7, 9 மாதி­ரி­களை இந்த இயக்­கு­ந­ருக்கும் அனுப்­பி­வி­டுங்கள்" என்று சரி­யாக இயக்­குநர் எந்த மாதி­ரி­யான பாடல்­களை விரும்­பு­வார்கள் என்று தேர்ந்­தெ­டுத்து அனுப்பி ஒப்­புதல் வாங்­கு­வது தான் ரஹ்மான் ஸ்டைல்.

 

* பாடல்கள் இசை­ய­மைப்பைத் தாண்டி அவ­ருக்கு நடிப்­பதில் ஆர்­வமே கிடை­யாது. அந்த அள­வுக்கு பயங்­கர கூச்ச சுபாவம் கொண்­டவர். 'ஜெய் ஹோ' பாடலை தயார் செய்­த­வுடன் இந்­தி­யாவே கொண்­டா­டி­யது. ஆனால், அதை பட­மாக்­கப்­பட்ட கஷ்டம் இயக்­குநர் பரத் பாலா­வுக்கு மட்­டுமே தெரி­யுமாம். கெமரா முன்னால் நடிப்­ப­தற்கு மிகவும் கூச்­சப்­பட்­டி­ருக்­கிறார். முழு படப்­பி­டிப்பும் முடிந்து முழு­மை­யாக தயா­ரா­ன­வுடன் ஏ.ஆர்.ரஹ்­மா­னிடம் கொடுத்­தி­ருக்­கிறார் பரத் பாலா. உடனே அப்­பா­டலை திரை­யிட எல்லாம் தயார் செய்­து­விட்டு தன் அம்­மாவை அழைத்து வந்து, "இந்த மாதிரி ஒரு பாடலை தயார் செய்­தி­ருக்­கிறேன் அம்மா. நீங்கள் பாருங்கள்" என்று கூறி­விட்டு அந்த இடத்தில் இருந்து சிரித்துக் கொண்டே நகர்ந்­து­விட்டார்.

 

21635_Foot-ball-player-michel-pele.jpg

 

* ரஹ்மான் உடன் பணி­பு­ரி­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே தெரியும் அவர் வேக­மாக கார் ஓட்டக் கூடி­யவர் என்று. அவர் கார் ஒட்­டும்­போது அவ­ருடன் உட்­கார்ந்து போக அவ­ருடன் பணி­பு­ரி­ப­வர்கள் பயப்­ப­டு­வார்கள். அந்­த­ள­வுக்கு படு­வே­க­மாக கார் ஓட்டக் கூடி­யவர். ஆனால், சாலை விதி­களை கச்­சி­த­மாகக் கடை­பி­டிப்­பவர்.

 

* எவ்­வ­ளவு பெரிய மதிப்­பு­டைய கார்கள் வைத்­தி­ருந்­தாலும், பழைய அம்­பா­சிடர் காரை மட்டும் மிகவும் ரசித்து ஓட்­டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

* ரஹ்மான் மிக அரு­மை­யாக மிமிக்ரி செய்வார். அதிலும் வைர­முத்து போல மிமிக்ரி செய்­வது அவ­ருக்கு விருப்­ப­மான ஒன்று.

 

21635_rahman.jpg

 

* பெரும்­பாலும் இரவு நேரங்­களில் தான் இசை­ய­மைப்பார். வீட்டில் இருந்து இரவு நேர பாடல் ஒலிப்­ப­தி­வுக்கு கிளம்­பும்­போது, குழந்­தைகள் தூங்­கி­ய­வு­டன்தான் கிளம்­புவார். அந்த அள­வுக்கு குழந்­தைகள் மீது அளவு கடந்த பாசம் உடை­யவர். மேலும், இவ­ரு­டைய மகன் அமீ­னுக்கும், இவ­ருக்கும் ஒரே திக­தியில் பிறந்த நாள். (ஹேப்பி பேர்த் டே அமீன்!!)

 

* உலக அளவில் எவ்­வ­ளவு பெரிய  அளவில் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், இவருடைய பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அனுமதியே கிடையாது.

 

* ரஹ்மான் தனது முதல் சம்­ப­ள­மாக 50 ரூபா பெற்­றி­ருந்தார். ஒலிப்­ப­திவு கரு­வி­யொன்­றினை செயற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இந்த கொடுப்­ப­னவு தொகையை அவர் பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

21635_ar-rahman-reacts-to-his-names-and-* ரஹ்மான் தனது பிறந்­த­நாளை சிறப்­பாக கொண்­டா­டு­வ­தில்லை. மாறாக தனது காலை நேர தொழு­கையை முடித்­து­விட்டு சிறுவர் இல்­லத்­துக்கு சென்று தனது பிறந்­த­நாளை அங்­குள்ள ஆத­ர­வற்ற சிறு­வர்­க­ளுடன் கொண்­டா­டுவார்.

 

* கன­டா­வி­லுள்ள ஒன்­டா­ரியோ, மர்­க­மி­லுள்ள வீதி­யொன்றுக்கு 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஹ்­மானின் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

 

* ஒஸ்கார் விருது வென்ற ஜெய் ஹோ பாட­லுக்­கான மெட்­டினை ரஹ்மான் முதன் முத­லாக சல்மான் கானின் யுவராஜ் படத்­திற்கே அமைத்­தி­ருந்தார். அப்­ப­டத்தில் இந்த மெட்டு இடம்­பெ­றா­மை­யினால் அதனை ஸ்லம்டொக் மில்­லி­யனர் படத்தில் ரஹ்மான் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

 

* அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் 2012 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் கொண்­டாட்­டங்­களில் கலந்து கொள்­வ­தற்­காக ரஹ்­மா­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

* ஒரே ஆண்டில் 2 ஒஸ்கார் விரு­து­களை வென்ற முதல் ஆசிய நாட்­டவர் என்ற பெரு­மையும் இவ­ரையே சாரும்.

 

* ரஹ்­மானால் இசை­ய­மைக்­கப்­பட்ட எயார்­டெலின் அறி­மு­கப்­பா­ட­லா­னது உல­கி­லேயே அதி­க­ளவு பதி­வி­றக்கம் செய்­யப்­பட்ட தொலை­பேசி இசை­யாகும். இதனை உல­க­ளா­விய ரீதியில் சுமார் 150 மில்­லியன் கணக்­கானோர் பதி­வி­றக்கம் செய்­துள்­ளனர்.

 

21635_AR-Rahman-600.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெய்சிலிர்க்கும் தருணங்கள்: கடல் கொலையாளியுடனான பெண்ணின் சந்திப்பு

 

கடலடியில் மிகவும் ஆபத்து எனக் கருதப்படும் இராட்சத புலி சுறாவுடன் முகத்திற்கு முகம் பெண் ஒருவர் சந்தித்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள ஜொபிப்பர் கடல் பிராந்தியத்தில் இம்பெற்றுள்ளது.

3BDCD7D700000578-0-image-a-2_14836080209

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியை சேர்ந்த கெசி ஜென்சன் என்பவர் கடலுக்கடியில் பயணித்த போது எதிர் பாராமத விதமாக இராட்சத புலிச் சுறா ஒன்றை கண்டுள்ளார்.

3BDCD96300000578-0-image-a-8_14836080615

3BDCD7DB00000578-0-image-a-11_1483608070

இந்நிலையில் தான் கொண்டு சென்ற மாமிச வகைகள் அடங்கிய பொதியுடன் சுறாவிற்கு அருகில் சென்று எவ்வித தாக்குதலும் இன்றி மீண்டும் உயிருடன் திரும்பியுள்ளார்.

குறித்த சுறா வகையானது உலகில் மிகவும் அச்சுறுத்தலுக்குரிய ஒரு கடலினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

3BDCD92F00000578-0-image-a-7_14836080547

இந்நிலையில் பெண் ஒருவர் ஆபத்துமிகு சுறாவின் அருகில் சென்று உயிருடன் மீண்டுள்ளமையை வெளிநாட்டு ஊடகங்கள் விசித்திர சம்பவமாக வெளிப்படுத்தி வருகின்றன.

3BDCD91F00000578-0-image-a-13_1483608076

3BDCD7C400000578-0-image-a-4_14836080486

3BDCDA7F00000578-0-image-a-16_1483608087

மேலும் குறித்த சுறா வகை மீன்கள் மானுட தேவைகளுக்காக தோல் எண்ணெய்வகை உற்பத்தி மற்றும் விட்டமீன்கள் தயாரிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

17 பிள்ளைகள்... ஆனாலும் இந்த தம்பதிக்கு தீரவில்லை குழந்தை ஆசை!

குழந்தை

ணோ, பெண்ணோ ஒரு பிள்ளையே போதும் என்று நினைக்கிறார்கள் இந்தத் தலைமுறை தம்பதிகள். அவர்களை வளர்த்து எடுப்பதற்குள்ளாகவே விழி பிதுங்கிவிடுகிறது என்று புலம்புகிறார்கள். ஆனால், குஜராத்தில் உள்ள பழங்குடி மாவட்டமான தஹோதியில் வசிக்கும் ராம்சின், கனு சங்கோட் தம்பதி 17 குழந்தைகளைப் பெற்றுள்ளனர். இருந்தும் அவர்களின் குழந்தை ஆசை இன்னும் தீரவில்லை என்பதுதான் ஹைலைட்!

ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆசைக்காக அடுத்தடுத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர் ராம்சின், கனு தம்பதி. அவர்களின் 17 குழந்தைகளில் 16 பெண் பிள்ளைகள். அதனால் இன்னும் ஓர் ஆண் பிள்ளை வேண்டும் என்று அவர்கள் விருப்பம்கொள்ள, ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி 'இந்தக் பிள்ளைகளே போதும்... குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளுங்கள்' என்று வலியுறுத்த, அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் கனுவுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

''ஆண் பிள்ளை பிறந்தால், வயதான காலத்தில் பெற்றோரைக் காப்பாற்றுவான் என்ற ஆசையில், ஒவ்வொரு முறையும் ஆண் பிள்ளையை எதிர்பார்த்திருப்போம். ஆனால், தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகளாகப் பிறந்தன. ஒரு கட்டத்தில், நம்மைப் பார்த்துக்கொள்ள இல்லை என்றாலும், இந்தப் பெண் பிள்ளைகளுக்குத் துணையாக இருக்கவாவது ஓர் ஆண் பிள்ளை வேண்டுமே என்ற எண்ணம் வலுப்பெற, பிடிவாதமாக தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டோம்'' என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ராம்சின்.

2013-ல் கனுவுக்கு முதன் முறையாக ஆண் பிள்ளை பிறந்துள்ளது. தங்களுக்குத் துணையாக, மற்ற பெண் பிள்ளைகளுக்குத் துணையாக, பிறந்திருக்கும் ஆண் குழந்தைக்கு துணையாக என்று ஆண் குழந்தைக்கான ஆசையையும் காரணங்களையும் அடுக்கிக்கொண்டே போன கனு, ராம்சிங் தம்பதியிடம், ஊர்ப் பெரியவர்கள் பக்குவமாகப் பேசியிருக்கிறார்கள். ''கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளியான நீங்கள், இந்த ஏழ்மையான சூழ்நிலையில் இத்தனை பிள்ளைகளைக் காப்பாற்றுவதே கடினம். இதில் மேலும் குழந்தை பெற ஆசைப்பட்டால் என்னாவது? உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள்...'' என்று எடுத்துக்கூறியிருக்கிறார்கள்.

தற்போது இந்தத் தம்பதியின் 17 பிள்ளைகளில், இரண்டு பெண் குழந்தைகள் மரணமடைந்துவிட்டனர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இரண்டு பெண்கள் கூலி வேலைக்காக ராஜ்காட் நகரத்துக்குச் சென்றுவிட்டனர். ஏழ்மை நிலையிலும் தங்களின் பெரிய குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளை தைரியத்துடன் வளர்த்தெடுத்து வருகிறார்கள் இந்தத் தம்பதி!

vikatan

  • தொடங்கியவர்

'எனக்கு நீங்கதான் கேப்டன் தோனி பாய்' - கோலி'

dhonikohlifb-story_647_031516061613_1411

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி கடந்த சில தினங்களுக்கு முன் விலகினார். இந்நிலையில் தோனியின் விலகல் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் வருத்தம் தெரிவித்தும், தங்களது நினைவுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் விலகல் குறித்து டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், 'எப்போதும் இளைஞர்கள் விரும்பும் தலைவராக, இருந்தமைக்கு நன்றி. நீங்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும்,  எனக்கு எப்போதும் நீங்கதான் கேப்டன்' எனக் கூறியுள்ளார்.

 

 

Thanks for always being the leader a youngster wants to have around him. You'll always be my captain @msdhoni Bhai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.