Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

 
 
பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாதனை நீச்சல் வீரர் கு.நவரத்தினசாமி அவர்களின் பிறந்தநாள்.
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஹைவேயில் லேண்ட் ஆன ஹெலிகாப்டர்!

Helicopter lands in Highway

கஜகஸ்தானில், Mi-8  ரக ஹெலிகாப்டர் ஒன்று ஹைவேக்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கஜகஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, பயிற்சியின் போது வழி மாறி ஹைவேக்கு வந்து விட்டது.  மோசமான வானிலை காரணமாக ரன்வே தெரியாமல், அந்த ஹெலிகாப்டர் ஹைவேக்கு வந்துவிட்டதாம். இதையடுத்து எதிரில் வந்த ட்ரக் டிரைவரிடம் வழி கேட்டு, ஹெலிகாப்டரை டேக் ஆஃப் செய்துள்ளனர். கஜகஸ்தானில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அரைநூற்றாண்டின் பின்னர் ஓடிய நீராவி ரயில்

அரை நூற்றாண்டுக்கு பிறகு இங்கு இங்கிலாந்தில், முக்கியமான ரயில் தடத்தின் காலஅட்டவணைக்குள் நீராவி ரயில் ஒன்று முதல் தடவையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

'டொர்னாடோ' என்ற இந்த நீராவி ரயில், நாட்டின் வடபகுதியில் அழகிய இயற்கை வனப்பு மிக்க பாதையில் பன்னிரெண்டு சேவைகளை செய்தது.

ஒரு வருடத்துக்கு முன்னதாக நடந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இந்த ரயில் பாதை மீளத்திறக்கப்பட்டதை அடுத்து இந்த சேவை நடத்தப்பட்டது. பயணிகளுக்கும் இந்த ரயில் பயணம் நல்ல மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.

  • தொடங்கியவர்

கொஞ்சம் கொஞ்சலாம்... தப்பேயில்ல! #LoveAndLoveOnly

மனிதர்கள் சூழ் இப்புவியில் ஆண், பெண் இரண்டும் ஓரினம்தான் என்று வார்த்தைகளில் சொன்னாலும், அது எல்லா விஷயங்களிலும் சாத்தியம் ஆவதில்லை. ஒருவர் மீது மற்றவருக்கு ஏற்படும் இனக்கவர்ச்சி என்னும் ஒரு புள்ளியில், இருவரும் தனித்தனிதான் என்கிற பிரிவு வெளிப்படுகிறது. அதற்கு காதல், காமம், அன்பு என்று என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ள முடியும். அத்தகைய காதல், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி அவர்களை ஈர்த்தவர்களிடம் பொங்கி பிரவாகமாய் வழிய வேண்டுமென்றால் அதற்கும் சில ஸ்பெஷல் பாயின்ட்ஸ் தேவை. 

காதல்*எதிர் பாலினத்தைப் பார்த்தவுடன் மனதில் முதலில் பதிவது அவர்கள் செய்யும் மந்திரப் புன்னகை. ஒரு சிரிப்பிற்காக சரிந்த ராஜ்ஜியங்களும், ஒரே ஒரு சிரிப்பு கொடுத்த உற்சாகத்தால் உயர்வடைந்த மனிதர்களும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக் கிடக்கிறார்கள். பிரிட்டிஷ் அறிஞர்களின் ஒப்புமையில் பற்களுக்கு உவமை, மயிலின் வால். அதனால் பற்கள் ஜாக்கிரதை பாஸ்!

*பற்களுக்கு அடுத்தபடியாக ஒருவரைச் சுண்டி இழுப்பது பளபளப்பான ஸ்கின். தோல் பளபளக்க முக்கியம் நல்ல உணவு. மா, பலா, வாழை என்னும் முக்கனிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலுக்கு பளிச் தோற்றத்தைக் கொடுக்கும். இதை மட்டும் ஃபாலோ பண்ணினா தமன்னா, அஜீத் எல்லாரும் உங்க ஃபேன் ஆய்டுவாங்க.

*சார்லி சாப்ளின் அளவிற்கு இல்லாவிட்டாலும், ஒரு மீம்ஸ் போடும் அளவிற்காவது ஹுயுமர் சென்ஸ்-ம், சிந்திக்கும் திறனும் உள்ள ஆண்கள்தான் பெண்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். அதனால், மூளையிலும் சிக்ஸ் பேக்ஸ் `சிட்டி’யாக இருக்க வேண்டியது அவசியம் பாய்ஸ்!

                  
* நூற்றில் 90 பையன்களுக்கு ‘நோ ஷேவ்’ என்பதுதான் ஃபேஷன். காரணம் சார்லி, பிரேமம் பீவர். ஆனால், பெரும்பாலும் பெண்களுக்குத் தாடி வைத்த பையன் ஒரு முரட்டு பீஸ். அதனால், முடிஞ்சவரை மீசை, தாடிக்கு நோ சொல்லுங்க...

*ப்ளம் நிற உதடுகளைப் பராமரிப்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், உங்கள் மனம் கவர்ந்த துணையிடம் நீங்கள் பேசும்பொழுது அவர்கள் உங்களது கண்களை 0.95 செகண்ட் பார்ப்பார்களாம். தலைமுடியை 0.85 செகண்ட் பார்ப்பார்களாம். ஆனால் உங்களது உதடுகளை மட்டும் 7 விநாடி விடாமல் பார்ப்பார்களாம். 

*இது ஆண்களுக்கு....ஒரு பெண்ணிடம் நீங்கள் பழகும்போது தோன்றும் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அப்பொழுது தான் நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைத்து வைத்திருப்பீர்கள் என்று உங்களைப் பற்றியே பெண்கள் சிந்தித்துக் கொண்டிருப்பார்களாம். 


*மனம் கவர்ந்த பெண், உங்களால் இம்ப்ரஸ் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லா ஆண்களுக்கும் இருக்கும். அதற்கு ஐ லவ் யூ சொன்னால் மட்டும் போதாது. கொஞ்சம் மனதைத் தொடுகிற மாதிரியான வார்த்தைகளும் வேண்டும். அந்த வார்த்தைகள் அடி மனதில் இருந்து வரவேண்டும். அலட்சியப்படுத்தினால் அது அவர்களை அவமதித்தது போலாகிவிடும். ஏனென்றால் பெண்களுடைய மனம் எப்போதுமே நல்ல சொற்களுக்கு மயங்கிவிடும்.

சாம்பிளுக்கு சில...

* என் வாழ்வுக்கு அர்த்தம் புரியவைத்தவளே நீதானடி...! 

* நீ இல்லாத வாழ்க்கையை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது! 

 *என் இனிய காதலியே! நீ என்னோடு இருக்கிற நொடிகளில் என்னுடைய வாழ்க்கை முழுமையடையும்.

* உன்னுடன் இருக்கும் நேரங்களை அப்படியே நிறுத்தி வைக்க ஆசை. ஆனால் சிட்டாய் பறந்து விடுகிறதே அந்த பாழாய்ப் போன நேரம். 

* காற்றுக்குக் கொடுக்கிறாயே; உனது முடியை கோதி விடுகிற அந்த வாய்ப்பை எனது கைகளுக்கும் கொடுத்தால்தான் என்ன? 

* ஒவ்வொரு நாளையும் உன் நினைவுகளுடன் தொடங்கி உனைப் பற்றிய கனவுகளோடு முடிக்கிறேன். 

* உன்னை எந்தளவு காதலிக்கிறேனோ அந்தளவு தலை வணங்கவும் செய்கிறேன். 

*இப்போது உன்னுடன் வாழ வேண்டும். இனியும் தாமதிக்காதே.

இவ்ளோதான்... இதை எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மாதிரி உள்ளம் உருக சிலவற்றை மட்டும் சொன்னாலே போதும். லவ் மட்டுமல்ல லைஃப்லயும் சக்சஸ்தான். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாவ்... என்னா லுக்கு! - வளர்மதியின் நவரச ரியாக்‌ஷன்கள்!

சிகலா  முழு நேர அரசியல்வாதியாக ஆனதிலிருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதுவரை சசிகலாவின் பின்னால் நிற்கும் வளர்மதியின் ரியாக்‌ஷன்கள் இணையத்தில் வைரல் மெட்டீரியல்! அனைத்து போட்டோக்களிலும் தெறிக்கவிடும்  வளர்மதியின் பார்வைக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என கைகளை தாவாங்கட்டையில்  முட்டுக் கொடுத்து நான் யோசித்தபோது... 

* ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ், சசிகலா இருவரும் சமரசமாக இருந்த காலத்தில் சமாதியை கும்பிட்டு கொண்டிருந்தார்கள்.  `அவுட் ஆஃப் ஃபோக்கஸி'ல் வளர்மதியும் நின்று இரு கரங்களையும் கூப்பி அம்மாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கண்களோ சின்னம்மாவின் பக்கம்தான் இருந்தது. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தமாக இருக்கும் தெரியுமா? `கரகாட்டக்காரன்' படத்தில் வரும் `செய்றதை எல்லாத்தையும் செஞ்சிட்டு அப்பாவி போல் முகத்தை வச்சிருக்குறதைப் பாரு' என்ற கவுண்டமணியின் டயலாக்கை மனசுக்குள் சொல்வதைப்போலவே இருந்தது. 

வளர்மதி

* சின்னம்மாதான் கிளிப் பிள்ளை போல் 33 ஆண்டுகள், 33 ஆண்டுகள் என்று சொல்கிறார் என்று பார்த்தால் வளர்மதியும்  சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் அதையே கூறியிருந்தார். `அம்மாவுடனே இருந்து அரசியல் வியூகங்களையெல்லாம் கற்றுக்கொண்டு சின்னம்மாவும் அதே மாதிரி செய்வார்!' என்றும் கூறியிருந்தார். ஆனால் இவர் அனைத்து புகைப்படங்களிலும் பார்த்த பார்வைக்கான அர்த்தம் 'ஏன் எங்களுக்கெல்லாம் அந்த வியூகம் அமைக்கத் தெரியாதா? இல்லை வியூகத்துக்குனு தனியா டிப்ளமோ கோர்ஸ் இருக்கா'? என்பது போன்றே தெரிந்தது.

* வார்த்தைக்கு வார்த்தை `மரியாதைக்குரிய சின்னம்மா அவர்கள் ஆட்சியிலும் பங்கெடுக்க வேண்டும், நாட்டின் முதலமைச்சராகவும் இருக்க வேண்டும், பொதுச் செயலாளராகவும் வர வேண்டும்' என்று சொல்லத் தெரிந்த வளர்மதிக்கு அந்த பார்வைக்கான அர்த்தம்... `நமக்கும் ஒருநாள் அந்த சீட்டு கிடைக்குமா..?' என்பது போலவும் இருந்ததே..! மணியாடர் நாங்க கட்டலாமா?

வளர்மதி

* சசிகலா கொடுத்த போயஸ் கார்டன் பிரஸ்மீட்டிலும்  அருகே வளர்மதி நின்று கொண்டிருந்தார். பத்திரிகையாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ஆவேசமாக சசிகலா பதில் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்.. என்னது சின்னம்மாவிற்கு இப்படியெல்லாம் பேச வருமா வாவ்டா அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்ததது. தட்  'நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்' மொமெண்ட்.

வளர்மதி

*  க்ளைமாக்ஸ் அத்தியாயமான பரப்பன அக்ரஹார பயணத்துக்கு முன், ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மூன்று முறை அம்மாவின் சமாதியில் தன் கையினை வைத்து ஓங்கி 3 முறை அடித்தார் சசிகலா! அவரின் அருகில் வளர்மதியும் நின்றுகொண்டிருந்தார். அப்போதுகூட எந்த அர்த்தத்துடன் அப்படிப் பார்த்தார் என்பது பலருக்குத் தெரியவில்லை. 'ஒரு பெண் இருந்த இடத்திற்கு இன்னோறு பெண் தான் வரவேண்டும்' என்ற ஐடியாவை சி.ஆர்.சரஸ்வதிக்கு இவர் தான் சொல்லியிருப்பாரோ? 

 நல்லா உற்றுப் பார்த்து நீங்களும் முடிவுக்கு வாங்க மக்களே..!

 

Bild könnte enthalten: 9 Personen, Text

வளர்மதி மேடம் கண்ணை ஸ்கேன் செய்து பார்த்தபோது...1f602.png?1f61d.png

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

நிலவில் விண்கலம் செலுத்தவுள்ள முதல் தனியார் நிறுவனம்

இண்டஸ் என்னும் இந்திய தனியார் நிறுவனம், நிலவில் தங்கள் விண்கலத்தை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இண்டஸ் குழுவால் உருவாக்கப்பட்ட ஈக்கா என்னும் ஒரு சிறிய நான்கு சக்கர ரோவர் நிலவின் மேற்பரப்பில் இயங்குவதைப் போல இயங்கும். இந்த ரோவர் நிலவை அடைந்து அதனை சுற்றி வர சுமார் 60 மில்லியன் டாலர் வரை செலவாகும். இது 2017 டிசம்பர் பிற்பகுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

  • தொடங்கியவர்
பரம்பரை சொத்துக்காக...
 
 

article_1487175903-keppapulavoo-1-copy.j

முல்லைத்தீவு,  கேப்பாப்புலவு மக்களின் போராட்டம், 16 ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி, பிள்ளைகளும் குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோருடன் சேர்ந்து, போராடுகின்றனர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வீராங்­க­னையின் ஆடை கழன்­றதால் ரத்துச் செய்­யப்­பட்ட WWE ரெஸ்லிங் போட்டி
 

WWE ரெஸ்லிங் (மல்யுத்த) போட்­டி­யின்­போது வீராங்­கனை ஒரு­வரின் ஆடை கழன்­றதால் போட்டி ரத்துச் செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் அண்­மை யில் இடம்­பெற்­றது.

 

22358ddddd.jpgWWE  மல்­யுத்­தத்தில் மிகப் பிர­ப­ல­மான வீராங்­க­னை­களில் ஒரு­வ­ரான ஈவா மேரிக்கே இந்த நிலை ஏற்­பட்­டது.

 

32 வய­தான ஈவா மேரி, 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து WWE போட்­டி­களில் பங்­கு­பற்றி வரு­கிறார்.

 

அண்­மைக் ­கா­லத்தில் தொடர்ச்­சி­யாக பல வீராங்­க­னை­களை அவர் தோற்­க­டித்து வெற்றி வாகை சூடி வந்தார்.

 

இந்­நி­லையில், அண்­மையில் நடை­பெற்ற போட்­டி­யொன்றில் அயர்­லாந்து வீராங்­கனை பெக்கி லின்­சுடன்  வுடன் ஈவா மேரி மோதினர்.

 

இப்­ போட்டி நடை­பெற்­றுக் ­கொண்­டி­ருந்­த­போது, ஈவா மேரியின் பிரா திடீ­ரென கழன்­றது. இதனால் அவரின் மார்­ப­கங்கள் வெளிப்­பட்­டதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

 

ஈவா மேரி அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் தனது மார்­ப­கங்­களை கைகளால் மறைத்­துக் ­கொண்­டி­ருந்தார். சில விநா­டி­களில் போட்­டியின் மத்­தி­யஸ்தர் விரைந்து வந்து ஈவா மேரியின் மீது துவாய் ஒன்றை போர்த்­தி­விட்டார்.

 

அத்­துடன் WWE அதி­கா­ரி­க­ளிடம் ஓடிச் சென்ற மத்­தி­யஸ்தர், 'அவர் (ஈவா மேரி) போட்­டியில் பங்­கு­பற்ற முடி­யாத நிலையில் இருக்­கிறார். இந்தப் போட்­டியை நாம் தொடர்ந்து நடத்­தப்­போ­வ­தில்லை. அவரால் போட்­டியில் பங்­கு­பற்ற முடி­யாது' என்றார்.

 

22358wwe_divas_malfunction_21_-copy.jpg

 

அதன் பின்னர் போட்­டியின் அறி­விப்­பாளர், ஒலி­வாங்­கியை கையில் எடுத்து, 'ஈவா மேரியின் ஆடையில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக இப்­ போட்­டியை நடத்த முடி­யாது என பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்தார்.

 

இந்த அறி­விப்பு ஈவாவின் போட்­டி­யா­ள­ரான பெக்கி லின்­சுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யது. 'நான் ஒரு போராளி. ஒவ்­வொரு தட­வையும் நான்  சண்­டை­யி­டு­வ­தற்குத் தயா­ரா­கவே களத்­துக்கு வரு­கிறேன்' என பெக்கி லின்ச் கூறினார்.

 

223581.jpg

 

முன்னர் ஒரு தட­வையும் பெக்கி லின்­சு­ட­னான போட்­டி­யின்­போது கணுக்­காலில் உபாதை, ஏற்­பட்­டதால் போட்­டி­ய­ிலி­ருந்து விலகியிருந்தார் ஈவா மேரி.

 

இதேவேளை, ஆடையில் கோளாறு ஏற்பட்டு மார்பகத்தை வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் ஈவா மேரிக்கு 30 நாள் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சுயநலத்துக்காக இரப்பதே பிச்சை
 
 

article_1487046821-beg.jpgயாசகம், பிச்சை இரண்டுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. யாசகம் கேட்பவர் ஞானி. இவர் தனக்காக வாழ்வதுமில்லை; பசி ஏற்பட்டால் அந்த வேளைக்கான உணவை மட்டும் யாசகமாகக் கேட்பார்.  

ஆனால், பிச்சை கேட்பவர்கள் அப்படியானவர்கள் அல்லர். இவர்கள் சமானியர்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் இரந்து கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருப்பதாகப் பொலிஸார் தெரிவிப்பதுண்டு. 

சுயநலத்துக்காக இரப்பதே பிச்சையாகும். தங்கள் சுயநலத்துக்காக அடுத்தவரைச் சுரண்டுவது, பிச்சை எடுப்பதிலும் பார்க்க குறைவான, இழிவான செயலாகும். உழைக்க வலு இருப்போரை இரந்துவாழ அனுமதிக்கலாகாது. 

உழைக்காத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டாம். 

www.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்கள் ஆற்றலை மேம்படுத்த உதவும் வழிகாட்டியைக் கண்டறிவது எப்படி?

வழிகாட்டி

இராமகிருஷ்ணர்-விவேகானந்தர், காந்தி-வினோபா பாவே, தோனி-கோலி என இந்திய நாடு பல சிறந்த வழிகாட்டி-மாணவ உறவுகளை பார்த்துப் போற்றியுள்ளது. எண்ணம், செயல், தியாகம் என்று சாதனைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறந்த மனிதர்களாக திகழ்ந்தவர்கள், தங்கள் வழிகாட்டியிடமிருந்து நிறைய கற்று வந்துள்ளனர்.  இந்த சிறந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்கு காரணமாகத் தங்கள் வழிகாட்டிகளை பலமுறை குறிப்பிட்டுள்ளனர். என்னதான் மிகுந்த திறமை படைத்த மனிதராக இருந்தாலும், அவரின் திறமையை சீர்படுத்தி சரியான திசையில் செலுத்த ஒருவர் தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டியின் எண்ண ஓட்டமும் மாணவனின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இல்லை என்றாலும், மாணவனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அவரை வழிநடத்தும் சிறந்த பண்பு கொண்டவராய் அந்த வழிகாட்டி அமைய வேண்டும்.

இப்படிப்பட்ட சிறந்த பண்பு கொண்ட வழிகாட்டியை கண்டறிவது  எவ்வாறு?

முதலில் ஒரு சிறந்த வழிகாட்டிக்கு இருக்க வேண்டிய  குணங்கள் என்னவென்று பட்டியலிடுவோம்.

நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருத்தல்

உங்கள் வழிகாட்டி உங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல் வேண்டும். உங்கள் வெற்றியைத் தன் வெற்றியாக கருதுபவராக இருக்க வேண்டும். அது உங்களின் நோக்கத்தை மேம்படுத்தும்.

வழிகாட்டல்

உங்கள் துறையில் சிறந்த அனுபவம் உடையவராய் இருத்தல் அவசியம். அனுபவம்தான் சிறந்த ஆசிரியர். அனுபவம் அவருக்கு கற்றுக்கொடுத்ததை, அவர் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

குறை தீர்த்தல்

மனதளவில் உங்களுக்கு எழும் குறைகளைத் தீர்த்து வைப்பவராக அவர் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு உங்களைப் புரிந்து வைத்திருக்கும் நபரையே நீங்கள் வழிகாட்டியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

உத்வேகம்

உங்கள் வழிகாட்டி உத்வேகம் உடையவராய், உங்களை ஊக்குவிப்பவராய் இருத்தல் வேண்டும். நீங்கள் சோர்ந்து போகும் போது உங்களை உற்சாகப்படுத்திட வேண்டும்.

இதெல்லாம் சரிதான், ஒரு நல்ல வழிகாட்டியை கண்டறிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சிந்தனைத் தெளிவும், தீராத பசியும்

ஒரு துறையில், அல்லது ஒரு செயலில் உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை என்றால், வெல்வதற்கான தெளிவான சிந்தனை ஓட்டம் தேவை. தெளிவான சிந்தனை ஓட்டம், உங்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிவதில் முக்கிய பங்காற்றும். அது உங்களுக்குத் தெரிந்துவிட்டால், என்ன கற்க வேண்டும் என்று எளிதில் முடிவு செய்து உங்கள் வழிகாட்டியை நாடலாம். இது மட்டுமன்றி வேண்டியதை கற்கும் வரை வழிகாட்டியைப் பின்தொடரும் தீராத பசி இருந்தால், உங்களுக்கு உதவ அவருக்கும் ஒரு தூண்டுதலைத் தரும்.

உங்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் இருப்பவர்களிடம் நன்றாகப் பழகுவது

உங்களின் வழிகாட்டி, உங்களை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டுமென்றோ, உங்களை விட மேல் பதவியில் இருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை. உங்களுக்குத் தேவையான பதிலை உங்கள் குழந்தைகூட இரண்டே நிமிடத்தில் சொல்லிச் சென்றுவிடும். எனவே, அனைவரிடமும் நல்ல உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் இயங்கும் மனிதர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டுபிடித்துப் பேசிப் பழகுங்கள்.

வழிகாட்டியை நாடுவது

ஒரு மனிதரைப் பற்றித் தெரிந்துக் கொண்டு, அவரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள விழைகிறீர்கள் என்றால்,  அதனைப் பற்றி, அவரிடம் பேசுவது முதல்படி. அவரிடம் பேசும் போது உங்கள் நோக்கத்தையும் தேவையையும் தெளிவாகக் கூறி, அவருக்குப் புரிய வைக்க வேண்டும். மேலும், அவரைக் கவர வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேவையானவற்றை மட்டும் பேச வேண்டும்.

வழிகாட்டுதல் – இரு முனை வாள்

ஒருவர் உங்களுக்கு வழிகாட்டியாக உதவ முன் வருகிறார் என்றவுடன் ஆனந்தமடைந்து அப்படியே முயற்சியை நிறுத்துவது கூடாது. ஒவ்வொரு சந்திப்பிற்குப் பின்னும், அடுத்த சந்திப்பிற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஆலோச்னை கேட்பது, அவர்  கூறுவதைப் பின்பற்றி அவருகுக்கு மரியாதை என்று அந்த உறவை சரியான திசையில் எடுத்துச் சென்று பயன்பெறுங்கள்!!

நல்ல ஒரு வழிகாட்டி சினிமாவுல மட்டுமல்ல, நிஜத்திலும் நிச்சயம் அமைவர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு! #HBD_Sivakarthikeyan

எந்தப் பின்புலமும் இல்லாமல் தானாக ஒரு பாதை அமைத்து வந்து ஜெயிப்பவர்கள் வெகு சிலர்தான். அந்தத்துறை சினிமாவாக இருக்கும் பட்சத்தில் அது இன்னும் சவாலான ஒன்று. தொலைக்காட்சித் தொகுப்பாளர் சினிமாவில் ஜெயிப்பதெல்லாம் ஷாரூக்த்தனம் என நினைத்திருந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் வெற்றி வியப்பாகவே இருக்கும். அவரின் வெற்றிகூட "கண்டிப்பா இன்னும் ரெண்டு படம்தான், காலி ஆயிடுவான் பாரு" என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால், எந்த நெகட்டிவ் வார்த்தைகளும் தன்னை பாதிக்கவிடாமல், எல்லோருக்கும் பிடிக்கும் ஹீரோ ஆகியிருக்கும் சிவாவுக்கு இன்று பிறந்தநாள்.

இன்றைய பர்த்டே பேபியின் வளர்ச்சியும் மக்கள் மனதில் இடம் பிடித்த வரலாற்றையும் பற்றி...

சிவா

சிவாவுக்கு இது சினிமாவில் ஐந்தாவது ஆண்டு, இப்போது அவருக்கு இருக்கும் வரவேற்பை வைத்துப்பார்க்கும் போது, தன்னை ஒரு என்டர்டெயினராக நிரூபிக்க அவருக்கு இந்தக் காலமே போதுமானதாக இருந்திருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸுக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும் ஹீரோவாக இருப்பது அல்லது அதற்குத் தன்னை வடிவமைத்துக் கொள்வது என்பது லேசுபட்ட காரியம் கிடையாது.  தொலைக்காட்சி என்ட்ரி மூலம் அதை முன்பே செய்திருந்தார் சிவா. ஆனால், அதனால் தான் அவரது சினிமாவும் ரசிக்கப்படுகிறது என்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. சினிமா, தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு ஆடவேண்டிய ஆட்டமே வேறு. படத்தில் டான்ஸ் ஆடவேண்டும் என்றால் முறையாக கற்றுக் கொள்ளத் தான் வேண்டும், ஃபைட் இருக்கிறது என்றால் சண்டைபிடிக்கத் தான் வேண்டும். "அவர் டிவியில் இருந்து வந்தவர். அதனால் அவர் டான்ஸ், ஃபைட் செய்யத் தேவையில்லை, ச்சும்மா வந்து நின்னா போதும்" என யாரும் சொல்லப் போவதில்லை. எவ்வளவு பெரிய ஸ்டார் ஆனாலும் உழைப்பு இல்லாமல் எதுவும் கிடைக்காது. 

தொடர்ச்சியான வெற்றி யாருக்குமே ஒரு தடுமாற்றத்தைத் தந்தே தீரும். ஆனால், அந்தத் தடுமாற்றம் இல்லாமல், கொஞ்சம் நிதானமாக தனக்கு என்ன வரும், அதை வைத்து வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்கிற சிவாவின் மூவ் கவனிக்கப்படப் வேண்டியது. `மனம் கொத்திப் பறவை’ சிவகார்த்திகேயனுக்கும் `எதிர்நீச்சல்’ சிவகார்த்திகேயனுக்கும், `ரெமோ’ சிவகார்த்திகேயனுக்குமான மாறுதல்களை கவனித்தால் அது புரியும். மிகச் சிறந்த நடிப்பு அனுபவத்தால் தான் கற்றுக் கொள்ள முடியும்.. ஆனால் அது தவிர வேறு என்ன விஷயங்களில் நாம் வீக் என யோசிப்பதும், அதை சரி செய்வதுமான மெனக்கெடல்களை சிவாவால் செய்ய முடிந்தது. 

Sivakarthikeyan

சிவா நல்ல நடிகர்னு இன்னும் நிருபிக்கலையே என்கிற கேள்வி மிக சுலபமாக எல்லோரும் கேட்கக் கூடியது. காமெடி, எண்டர்டெயினர் எல்லாம் ஓகே, புதுப் புது முயற்சி பண்றதா ஐடியா இல்லையா? என்ற கேள்விக்கு ஆனந்தவிகடன் பேட்டியில் சிவா சொன்ன பதிலையே நானும் பகிர்கிறேன்,

" 'இவன் பயங்கரமா கதை சொல்வான்’னு எதிர்பார்த்து யாரும் என் படத்துக்கு வர்றது இல்லை. ஜாலியா இருக்கும்னு வர்றாங்க. எங்கே போனாலும், 'என் மூணு வயசுப் பொண்ணு உங்க ஃபேன்’, 'என் அஞ்சு வயசுப் பையன் உங்களை மாதிரியே பண்ணுவான்’னு சொல்றாங்க. குழந்தைங்களுக்கு என் காமெடி, பாடி லாங்வேஜ் பிடிச்சிருக்கு. அதனால அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் பண்ணணும்னு யோசிச்சுத்தான் கதை கேட்கிறேன். வித்தியாசமா பண்றோம்னு ஏடாகூடமா ஏதாவது பண்ணி அவங்களைப் பயமுறுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். அதே சமயம் ஆக்ஷன், எமோஷன், காதல்னு எல்லா ஃபீல்லயும் அடுத்தடுத்த லெவல் போகணும்னு ஆசை இருக்கு"

Sivakarthikeyan

ஆடியன்ஸுக்கு சிவாவைப் பிடிப்பதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கிறது,

1. சிவாவை யாரோ எனப் பார்க்க நம்மால் முடியாது. நம் வீட்டுக்குள்ளயே இருந்த ஒருத்தர், இப்போ ஜெயிச்சிட்டார் என்கிற நினைப்புதான் அதற்கு காரணம். எல்லாருடனும் நட்பு பாராட்டுவதால், நல்ல ஃப்ரெண்ட்லி இமேஜ். ஃப்ரெண்டா இருந்தாலே, டிரெண்டிங் ஆகிடுவாங்கள்லயா! அப்படித்தான் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் இவர் படங்களும் டிரெண்டாக ஆரம்பித்து.... இந்த உயரம் எட்டியிருகிறார்.  

2. நமக்குத் தேவையான என்டெர்டெயின்மென்டைக் கொடுத்துக் கொண்டே அவர் அடுத்த லெவலுக்கு செல்வது. சடாலென முழு நீள ஆக்‌ஷன் படத்தில் சிவா நடித்து மாஸ் ஹீரோ ஆக முயற்சி செய்திருந்தால் அது வெற்றியடைந்திருக்குமா தெரியவில்லை. ஆனால், நம்மையும் மகிழ்வித்துக்  கொண்டே தனக்கு ஆக்‌ஷனும் வரும் என காக்கிசட்டையில் காட்டினார். அதற்குப் பிறகு ரஜினிமுருகனிலும், ரெமோவிலும் அவர்  சண்டை போடும் போது நமக்கு அது தொந்தரவாக இல்லை. இது தான் சிவாவின் ஸ்மார்ட்னெஸ்.

 

3.சிவா தவிர்க்கவே முடியாத ஒரு ரோல் மாடலும் கூட. இன்றைக்கும் தொலைக்காட்சியில் வேலை செய்யும் பல வி.ஜேக்களுக்கும், ‘நம்மால் ஜெயிக்க முடியுமா?’ என யோசிக்கும் பலருக்கும் அவர்கள் முன்பே நிகழ்ந்த சிவாவின் வளர்ச்சி நம்பிக்கை தரக்கூடியது.

 தொடர்ந்து பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் சிவா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிங்கிள் பசங்களே... உங்களுக்குக்காகத்தான் இந்த வாரம்!

வாலன்டைன் வீக் தெரியும், ஆன்ட்டி- வாலன்டைன் வீக் தெரியுமா?

எப்படியோ காதலர் தினமும் முடிந்துவிட்டது. ஏதாவது ப்ரொபோசல் வரும்ம்ம்... வரும்ம்ம்ம்னு காத்திருந்து ஏமாற்றமடைந்த பல சிங்கிள்கள் இருப்பீர்கள். மீம்களைப் பார்த்து மனசைத் தேற்றிக்கொண்டிருக்கும் உங்களுக்கு காதலின் நெகடிவ் விஷயங்களைக் கொண்டாடும் ட்ரெண்ட் ஒன்று இருப்பது தெரியுமா? அதுதான் ஆன்ட்டி-வாலன்டைன்ஸ் வீக். பிப்ரவரி 14-க்குப் பிறகான நாட்களை காதல் எதிர்ப்பாளர்கள் எப்படிக் கொண்டாடுறாய்ங்கனு பார்ப்போமா?

முதல் நாள் : பிப்ரவரி 15- ஹாப்பி ஸ்லாப் டே(அறை வாங்கும் தினம்)

சிங்கிள்

'சச்சின்' படத்தில் வடிவேலு மாதிரி யாரிடமாவது ப்ரொபோஸ் பண்ணி அறை வாங்கியிருக்கும் இரும்பு மனிதர்களுக்கு இந்நாள் சமர்ப்பணம்.

இரண்டாவது நாள் : பிப்ரவரி 16- ஹாப்பி கிக் டே(மிதி வாங்கும் தினம்)

மேலே சொன்னதில் அறைக்குப் பதிலா மிதி வாங்கியிருக்கும் மக்களுக்கு இந்த நாள் சமர்ப்பணம். அப்படியும் எடுத்துக்கலாம், காதலரின் வாழ்க்கையிலிருந்து மிதித்து வெளியே தள்ளப்பட்டோருக்கும் இந்த நாள் பொருந்தும்.

மூன்றாவது நாள் : பிப்ரவரி 17- ஹாப்பி பெர்ஃபியூம் டே.

காதலனையோ, காதலியையோ கவர பலவிதமான சென்ட் அடிச்சி சுற்றியும் கடைசியில் பல்பு வாங்கின குரூப்ஸுக்கு அதை நினைவுகூறும் இந்த நாள் கொண்டாட்டம்.

நான்காவது நாள் : பிப்ரவரி 18- ஹாப்பி ஃப்ளிர்ட் டே(கடலை தினம்)

இரவும், பகலும் ஓயாமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எங்கும் வேகாத கடலை வறுத்தவங்களுக்கு இந்த நாள் கொண்டாட்டம்.

ஐந்தாவது நாள் : பிப்ரவரி 19- ஹாப்பி கன்ஃபெஷன் டே.

காதலில் தோல்வியடைந்த மக்கள் காதலின்போது என்ன டுபாக்கூர் வேலைகள் செய்தார்கள் என்பதை உலகுக்குக் கூறும் தினம் இது.

ஆறாவது நாள் : பிப்ரவரி 20- ஹாப்பி மிஸ்ஸிங் டே

கடைசிவரை ஒன்றாகவே இருப்போம், அப்படி இப்படினு வசனம் பேசிப் பிரிந்த காதலர்கள் தங்கள் காதல் நாட்களை நினைவுகூறும் நாள் இந்த மிஸ்ஸிங் டே.

ஏழாவது நாள் : பிப்ரவரி 21- ஹாப்பி பிரேக்அப் டே.

ரோமியோ ஜூலியட் ரேஞ்சுக்கு லவ் பண்ணிட்டு கடைசியில் எதாவது சொற்ப காரணத்திற்கு 'தங்கமகன்' தனுஷ்-எமி ஜாக்சன் மாதிரி பிரேக்அப் செய்து கொண்டவர்களுக்கு இந்த தினம் சமர்ப்பணம்.

காதலர் வாரம் மாதிரி இந்த ஆன்ட்டி- வாலன்டைன் வீக் ட்ரெண்டும் வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதிலும் எந்த தினமும் கொண்டாடுற அளவுக்கு இல்லைனா எதுக்கு பாஸ் ஃபீல் பண்ணிட்டு... உங்களுக்கு ஆல் டே ஹாப்பி டேதான்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வெற்றியை பாதிக்கும் பதற்றத்தை தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. 

பதற்றம் 


‘உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையை செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே... ‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு வேலையைச் செய்வார்கள் சிலர். அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய ‘அவுட்புட்’  கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்கொள்ளும்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும் பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

தென்கச்சி கோ. சுவாமிநாதன்இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன ஒரு குட்டிக்கதை... 

கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாறோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார். 

அன்றையக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார். 

“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.

அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான். 

“தவறு.’’ 

“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன். 

“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’ 

மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.

“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிற்களா. என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன். என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

டென்ஷன் 

 

பயம்

ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப் போகலாம்.

மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள். அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களை புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல... அவர்களின் நல்உறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.

இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் ‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு, இறைவனின் அருள் கிடைக்கும் வரும் வரை நாம் பொறுமையோடு இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள். 

இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில் ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப் பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே அடைய முடியும். பதற்றத்தை தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்போம்..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுட்டீஸ்களுக்கு இந்த கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது..?

இந்த உலகம் வேறு மாதிரியானது. சமோசா, மூங்கில் விமானம், எங்கேயும் போகக்கூடிய கதவு, லட்டு, டோலக்பூர் எனப் பலபல கோட் வேர்ட்ஸ்கள் உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஹீரோ பிடிக்கும். பகல் முழுக்க லீவு நாட்களில் சேனல்களை அங்கும் இங்குமாக மாற்றியபடி இருப்பார்கள். எத்தனை முறை ரீ-டெலிகாஸ்ட் செய்தாலும், அவர்கள் பார்க்கும் கார்ட்டூன்களில் ஒரு ‛டாப் - 5’ இல்லாமலா இருக்கும். இதோ லிஸ்ட்... 

கார்ட்டூன்


ஓகி மற்றும் கரப்பான்கள் 

'டாம் அண்ட் ஜெர்ரி' -  'சில்வெஸ்டர் அண்ட் ட்வீட்டி' மாதிரி மற்றொரு 'அடி புடி' வகை ‛ஸ்லாப்ஸ்டிக் அட்வென்ஞ்சர்’ நிகழ்ச்சிதான் என்றாலும் செம ஹிட்டாகி விட்டது. ஓகி என்கிற சோம்பேறி பூனை அதன் நிம்மதியைக் குலைக்கும் மூன்று கரப்பான் பூச்சிகள்தான் கதை. கார்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் டாப்- 5 இடத்தில் உள்ளது. 

மோட்டு பத்லு குங்ஃபு கிங்ஸ் 

‛நிக்’ சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க இந்திய கார்ட்டூனாக உருவாகி, மோட்டு-பத்லுவின் வெற்றியைத் தக்க வைத்துள்ளது. காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பினாலும் இதைப் பார்க்கும் நேயர்கள் அதிகம் என்பதால் நான்காவது இடத்தில் உள்ளது.

மோட்டு பத்லு குங்ஃபு கிங் ரிட்டர்ன்ஸ் 

இதுவும் அதே நிக் சேனலில்தான் ஒளிபரப்பாகிறது. குங்ஃபூ கிங்ஸின் போலவே திரைப்படமாகவும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது இந்த கார்ட்டுன் படம். தொடராகவும் ஒளிபரப்பாகிறது. இதற்கும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பு. இந்திய அளவிலான டி.ஆர்.பி ரேட்டிங்கில் பிப்ரவரி முதல் வார நிலவரத்தின் படி டாப் - 3 இடத்தில் உள்ளது. தமிழில் டப் செய்யப்பட்டிருப்பதால் அதிகளவிலான குட்டிப் பார்வையாளர்களை போய்ச் சேர்கிறது.

சோட்டா பீம் - பேட்டில் ஆப் ஹீரோஸ் 

இந்தியாவில் முழுக்க முழுக்க உருவாகிய மற்றொரு கார்ட்டூன் ஹீரோதான் இந்த சோட்டா பீம். வழக்கமாக அமெரிக்க சேனல்களில் உருவான கார்ட்டூன் கேரக்டர்கள்தான் தொடர்ந்து உலகம் முழுவதும் ஹிட் ஆகும். ஆனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஜப்பானில் உருவான கார்ட்டூன் கேரக்டர்களும், இந்தியாவிலேயே உருவான கார்ட்டூன் சூப்பர் ஹீரோக்களுமே அதிகம் விரும்பப்படுகிறார்கள். கிராமத்துப் பையனாக வரும்  சோட்டா பீம் மற்றும் அவரது சிறு நண்பர்களுமே கேரக்டர்கள். அவர்கள் தீயசக்திகளிடம் இருந்தும் தீயவர்களிடம் இருந்தும் தங்கள் கிராமத்தையும் டோலக்பூரையும் காப்பாற்றுகிறார்கள். ‛போகோ’ சேனலில் ஒளிபரப்பாகும் இந்த ‛சோட்டா பீம்’ தொடரின் திரைப்படமான 'பேட்டில் ஆப் ஹீரோஸ்' சக்கைப்போடு போடுவதால் இந்திய அளவில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  

டோரேமான் மற்றும் நோபிட்டா 

'ஷிஷுகா மினாமோட்டோ'... 'ஜியான்'... 'சுனேவொ ஹோனே ஹவா'... இதெல்லாம் என்னவென்றுதானே நாம் யோசிப்போம். சின்னக் குழந்தைகளிடம் கேளுங்கள். உடனே பதில் வரும். ஒவ்வொன்றும் 'டோரேமான்' கார்ட்டூனில் வரும் கேரக்டர்களின் பெயர்கள். நோபிட்டா ஒரு மக்கு சிறுவன், அழுமூஞ்சி. அவனை நிறையப் பேர் வம்பில் மாட்டிவிடுவதும், சீண்டுவதுமாக இருக்கின்றனர். நோபிட்டாவின் வம்சாவளியினர் ‛டோரேமான்’ என்கிற ரோபட் பூனையை அனுப்புகின்றனர். அதனுடன் சேர்ந்துகொண்டு இருவரும் அடிக்கும் கொட்டம்தான் இந்த டோரேமான் கார்ட்டூன் சீரிஸ். 'ஹங்காமா' சேனலில் ஒளிபரப்பாகும் இந்த கார்ட்டூன் மூவி சீரிஸ்தான் டி.ஆர்.பி-யில் டாப் -1 இடத்தில் உள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Sportler

உலகின் மிகச்சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான மைக்கேல் ஜோர்டானின் பிறந்தநாள்
Happy Birthday Micheal Jordan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நள்ளிரவில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்!

2_04203.jpg

 புதிய முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி பதவியேற்றுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். நேற்று நள்ளிரவு அண்ணா சாலை முழுவதிலும் இந்த போஸ்டரை ஒட்டினார்கள். அந்த போஸ்டரில் 'மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' ,'NEXT நீங்க CM ஆனா BEST' என்ற வாசகங்களுடன் பின்புறம் தலைமைச்செயலகத்தின் படமும், ஆளுயர ரஜினி படத்தையும் வைத்து அமைத்திருந்தார்கள். நள்ளிரவு நேரத்திலும் இந்த போஸ்டரை பலர் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

bullet1.jpgபிலிப்பைன்ஸ் நாட்டில் `மிஸ் யுனிவர்ஸ்' போட்டி நடுவர்களில் ஒருவர், நம்ம சுஷ்மிதா சென். 1994-ம் ஆண்டு சுஷ்மிதா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற போது, அவருடைய பெயரை பிலிப்பைன்ஸ் நாட்டினர் பலரும் தங்களுடைய குழந்தைகளுக்குச் சூட்டினர். அப்படி பெயர் சூட்டப்பட்ட அழகுக் குழந்தைகள், இப்போது 23 வயதில் மங்கைகளாகிவிட்டனர். அவர்களில் நான்கு பேரை விழா மேடையில் ஏற்ற... பிலிப்பைன்ஸ் மக்களின் அன்பில் சுஷ்மிதா திக்குமுக்காட... பிறகென்ன செல்ஃபி, பார்ட்டி என ஐந்து சுஷ்மிதா சென்களும் தெறிக்கவிட்டிருக்கிறார்கள். பாசக்காரப் புள்ளைக!

p35.jpg

36p11.jpg

 

bullet1.jpgஏப்ரலில் வெளியாக இருக்கிறது `ஜக்கா ஜஸூஸ்' இந்திப் படம். ரன்பீர் கபூர், காத்ரீனா கைஃப் ஜோடி. `பர்ஃபி' புகழ் அனுராக் பாஸு இயக்கியிருக்கிறார். படத்தில் 29 பாடல்களாம். இதற்கு முன் அதிக பாடல்களோடு வந்தது `ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்'தான் என்கிறது பாலிவுட் வட்டாரம். `ரன்பீர், கம்மியாத்தான் பேசுவார். அவரோட ஃபீலிங்ஸைப் பாடித்தான் காட்டுவார். அதனால்தான் அவ்வளவு பாட்டு!' என்றிருக்கிறார் இசையமைப்பாளர் ப்ரீதம். ஓ... பாட்டாவே படிச்சுட்டீங்களா?

36p21.jpg

bullet1.jpgமல்லுவுட், டோலிவுட், பாலிவுட் என அழகு ஹீரோயின்கள் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்துக் கொண்டுவருவதில் கில்லி,  கெளதம் வாசுதேவ் மேனன். கடந்த ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த `பெல்லி சூப்புலு' படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கினார் கௌதம் வாசுதேவ் மேனன். இதற்கிடையே விக்ரமை வைத்து இயக்கும் `துருவநட்சத்திரம்' படத்தில் `பெல்லி சூப்புலு'வில் ரொமான்ஸில் கலக்கிய  ரித்துவர்மாவையே ஹீரோயினாக்கி தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் கெளதம். வெல்கம் டு கோலிவுட்!

36p31.jpg

bullet1.jpgதெலுங்குதேசத்தின் புரட்சித் தலைவர் என்.டி.ராமராவ். அவருடைய வாழ்க்கை இப்போது பயோபிக்காக மாறுகிறது.  படத்தில் என்.டி.ஆர்-ஆக நடிக்க இருப்பது அவரது மகன் பாலகிருஷ்ணா. `நிம்மகுருவில் பிறந்து வளர்ந்தது, சினிமாவுக்கு வந்தது, தெலுங்குதேசம் கட்சியை உருவாக்கியது... என என் தந்தையைப் பற்றி யாரும் அறியாத பல விஷயங்களை இந்தப் படத்தில் பதிவுசெய்ய இருக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார் பாலையா. ராமய்யா ஒஸ்தாவய்யா!

36p41.jpg

bullet1.jpgஜார்ஜ் க்ளூனி. இவரின் ஹேர்ஸ்டைலில் இம்ப்ரஸ் ஆகித்தான் நம்ம `தல'யே சால்ட்-பெப்பர் லுக்குக்கு மாறினார். நரைத்த பிறகும் பேச்சுலராகவே வாழ்ந்துகொண்டிருந்த க்ளூனி, 2014-ம் ஆண்டில் அமல் என்கிற வழக்குரைஞரை மணந்தார். இப்போது க்ளூனி அப்பாவாகப்போகிறார். அதிலும் ட்வின்ஸாம். `சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை' என ஹேப்பி ஸ்மைலியுடன் ஹாலிவுட்டில் சுற்றுகிறார் க்ளூனி. மகிழ்ச்சி!

  • தொடங்கியவர்

கொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்! #HBDABD

நன்றாக நினைவிருக்கிறது! பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரீபிய மண்ணில் நடந்த உலகக்கோப்பைத் தொடர் அது. சச்சின், சேவாக், டிராவிட், தோனி, யுவராஜ், கங்குலி, ஜாகீர் என அத்தனை நட்சத்திர வீரர்களும் இந்திய அணியில் இருந்த காலகட்டம். `இந்தமுறை இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும்’ என நம்பியது கிரிக்கெட் உலகம். ஏனெனில், அசுர வலிமையுடன் வெஸ்ட் இன்டீஸுக்கு புறப்பட்டிருந்தது இந்தியா. `2003-ல் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்டது போல, இம்முறை மிஸ் செய்யவே செய்யாது’ என்ற அபாரமான நம்பிக்கையில் கோடிக்கணக்கான ரசிகர்களும் டிவி முன் அமர்ந்தார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கும் கிரிக்கெட் ஜுரம். எனக்கோ தேர்வு ஜுரம். 

மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் உலகக் கோப்பை தொடங்கியபோது, தேர்வா, கிரிக்கெட்டா என்ற கேள்வி வந்தபோது கிரிக்கெட்தான் முக்கியம் என தேர்வை புறக்கணித்து, வீட்டில் உட்கார்ந்த எத்தனையோ லட்ச மாணவர்களில் நானும் ஒருவன். இந்தியா தன் முதல் போட்டியில் வங்கதேசத்தைச் சந்தித்தது. அதிர்ச்சித் தோல்வி இந்தியாவுக்கு! நானும் அதிர்ந்தேன். ஆனால் இரண்டே நாளில் ஆறா கொதிப்புக்கு மயிலிறகால் வருடி மருந்து போட்டனர் இந்திய வீரர்கள். பெர்முடா அணியின் பவுலிங்கை நொறுக்கித் தள்ளி 413 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது புலிகளின் தேசம். அந்த மகிழ்ச்சி இந்தியர்களுக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்தியா - இலங்கைக்கு இடையேயான போட்டியில், சச்சின், தோனி போன்ற வீரர்கள் `டக் அவுட்’ ஆக 255 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் படுதோல்வி அடைந்து, உலகக்கோப்பை தொடரில் இருந்தே வெளியேற்றப்பட்டது நம் அணி. 

கொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ் !

ஒரு மாதம் நடக்க வேண்டிய கிரிக்கெட் கொண்டாட்டம், ஒரே வாரத்தில் முடிந்தது. மோசமான தோல்வியைத் தாங்கிக் கொள்ளாமல் தோனி, யுவராஜ் போன்றோர்களின் வீட்டில் கல் எறிந்து அநாகரிகமாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். 'ச்ச... இந்தியா இல்லேல்ல' என்ற துக்கத்துடன் அந்த உலகக்கோப்பைத் தொடரை டிவியில் பார்ப்பதையே பலரும் நிறுத்தியிருந்தார்கள். ரசிகர்களின் அந்த அபத்தமான செயலை நியூஸ் சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. கடுப்பில்  சேனலை மாற்றும்போது ஒரு 23 வயது தென் ஆப்பிரிக்க இளைஞன், ஆஸ்திரேலியாவின் நாதன் பிராக்கனின் பந்தை `டீப் மிட் விக்கெட்’ திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார். செம செக்ஸியான ஷாட் அது!

அதன் பின்னர்தான் அது என்ன மேட்ச் என கவனித்தேன். உலகக்கோப்பை லீக் போட்டியொன்றில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதின. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 378 ரன்கள் தேவை. கிரீம் ஸ்மித்துடன், டிவில்லியர்ஸ் தொடக்க வீரராக களமிறங்கியிருந்தார். முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸருமாக அமர்க்களப்படுத்திய அந்த இளைஞன் டிவில்லியர்ஸ். தொடர்ந்து மேட்ச்சை கவனித்தேன். பிராக்கன், ஷான் டேயிட், கிளென் மெக்ராத் என ஒரு பவுலரையும் விடாமல் உரித்தார் டிவில்லியர்ஸ். குறிப்பாக மெக்ராத்தின் ஓர் ஓவரில் `ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விளாசி அதிர வைத்தார் ஏ.பி.டி. 

ஒரு பொடிப்பையன் தன் பந்துவீச்சை நொறுக்குவதை பார்த்து வெறுத்துப் போனார் மெக்ராத். 5.3 ஓவரில் ஐம்பது ரன்களையும், 13.1 ஓவரில் நூறு  ரன்களையும், இருபதாவது ஓவரில் 150 ரன்களையும் கடந்தது தெ.ஆப்பிரிக்கா. 21வது ஓவரின் கடைசி பந்தில், அணிக்காக இரண்டாவது  ரன் ஓடும் போது  ரன் அவுட் ஆனார் ஏ.பி.டி. அப்போது அணியின் ஸ்கோர் 160. டிவில்லியர்ஸின் ஸ்கோர் 70 பந்துகளில் 14 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 92  ரன்கள். இரண்டு ஆண்டுகளாக அணியில் இருந்தும் ஒரு சதம் கூட அப்போது வரை அவர் அடித்திருக்கவில்லை. டிவில்லியர்ஸின் அந்த இன்னிங்ஸ் எனக்கு ஷேவாக்கை நினைவு படுத்துவதாக அமைந்தது. ஆஃப் சைடில் போடப்படும் ஒரு பந்தை, எளிதாக கவர் திசையில் ஆடி விடலாம்தான். அப்படித்தான் கிரிக்கெட் புத்தகம் சொல்லித் தருகிறது. ஆனால் அதை வேறு விதமாக ஷாட் ஆடும் வழக்கம்தான் டிவில்லியர்ஸின் பழக்கம். 

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸுக்காக அந்த உலகக்கோப்பையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் `டக் அவுட்’ ஆனார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 15 ரன்னில் அவுட் ஆனார். இந்தியாவை போலவே தென் ஆப்பிரிக்காவும் வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது. அடுத்த மேட்ச்சில் வெஸ்ட் இண்டீசுடன் தெ.ஆ மோதியது.  சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. காலிமோர், டேரன் பவல், பிராட்ஷா, பிராவோ, கெயில், பொல்லார்டு, சந்திரபால், லாரா, சர்வான், ராம்தின் என டெர்ரர் அணியாக கோலோச்சியது வெ.இ. வலிமையான பந்துவீச்சை எதிர் கொண்டு அந்த போட்டியில் முதல் சதத்தைப் பூர்த்திச் செய்து 146 ரன்கள் விளாசினார் டிவில்லியர்ஸ். அந்த முதல் சதத்துக்குப் பிறகு அவர் வேற லெவல் ஆட்டக்காரர் ஆனது வரலாறு அறியும். கிரிக்கெட்டில் பலர் சாதனைகள் செய்வார்கள். ஆனால் சாதனைகள் படைப்பதில் சாதனை புரிவது ஒரு சிலர் தான். இவர் இரண்டாவது ரகம். 

ஒருநாள் போட்டியில் 31 பந்தில் சதமெடுக்கவும் தெரியும், அதே சமயம்  டெஸ்ட் போட்டியில் அணிக்குத் தேவைப்பட்டால் மேட்சை டிரா செய்ய 297 பந்துகளைச் சந்தித்து 43 ரன்களை எடுக்கவும் தெரியும். சமகாலத்தில் இப்படி இரண்டு எதிரெதிர் பாணி ஆட்டத்திலும் கில்லியாக இருக்கக்கூடிய ஒரே வீரர் டிவில்லியர்ஸ் மட்டும் தான்.

 டிவில்லியர்ஸுக்கு இன்னொரு பெருமை உண்டு. ஆசிய கண்டத்துக்கு அப்பால் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய மண்ணில் விளையாடுவது என்றாலே `ஜெர்க்’ அடிப்பார்கள். குக், காலிஸ் என  விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்கள்தான் இங்கே  சிறப்பாக  ஆடியிருக்கிறார்கள். தொடர்ந்து இந்திய மண்ணில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ.பி.டி. 

ஐ.பி.எல் தொடர் ஆடுவதற்கு முன்னரே டெஸ்ட் போட்டியில் அகமதாபாத்தில் இரட்டைச் சதம் அடித்துச் சரித்திரம் படைத்தவர். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று சதங்கள் விளாசினார். சென்னை மண்ணில், கடும் வெக்கைக்கு இடையே ஒரு பக்கம் அணி சரிந்து கொண்டிருந்தபோது அபாரமாக ஆடி சதம் எடுத்த இன்னிங்ஸை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

டிவில்லியர்ஸ் - கிரிக்கெட்டின் ஏலியன்

டிவில்லியர்ஸை நன்றாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும். பெரும்பாலான போட்டிகளில் அவர் எடுத்தவுடன் பவுண்டரி, சிக்ஸரை விளாச முற்படமாட்டார். முதல் பத்து - பதினைந்து பந்துகளில்  தன்னை நிலைப்படுத்திக் கொள்வார். மைதானம் எந்த விதமான பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கிறது என கவனிப்பார். கணிப்பார். அதற்கேற்ப ஆட்டத்தின் பாணியை மாற்றிக் கொள்வார். நிலைமை சீராக இருக்கிறது, கியரை மாற்றலாம் என அவருக்குத் தோன்றிவிட்டால், தடாலடியாக நான்காவது, ஐந்தாவது கியரை போட்டு சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழையைப் பொழிவார். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, அவரது கேரியருக்கும் பொருந்தும். ஆரம்ப காலங்களில் சுமாராக ஆடியவர் அதன் பின்னர் நடத்திய வேட்டை வெறித்தனம்.

இவர் இப்படித்தான் ஆடுவார் என கணிக்க முடியாது; இவர் இந்த திசையில் தான் பந்தை விளாசுவார் என ஃபீல்டிங் நிறுத்தவும் முடியாது; என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது. இப்படி ரசிகர்ளுக்கும், கேப்டன்களுக்கும், ஃபீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் புரியாத புதிராக விளங்குவார் டிவில்லியர்ஸ். ஆனால் நிமிடங்களில் முடிவுகளை, நிலைமைக்கேற்ப மாற்றி எடுக்கும் திறன் கொண்டவர்.

அவர் சார்ந்த அணி ஒரு இலக்கைத் துரத்துகிறது  என வைத்துக் கொள்வோம். இவர் களத்தில் நிற்கிறார் எனில் எதிரணியின் இதயத்துடிப்பு நார்மலாக இருக்காது. அந்த பயம்தான் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டிங்கில் அவருக்கு `வீக் ஜோன்’ என்ற ஒன்று கிடையவே கிடையாது. டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் ஐம்பது ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் முக்கியமான வீரர்; அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிவேக 150 ரன்கள், அதி மெதுவான நாற்பது ரன்கள் என எத்தனையோ சாதனைகள் அவர் பக்கம் இருக்கின்றன . இன்னும் பல சாதனைகள் அவரால் உடைக்கப்படுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சாதனைகள் பற்றிக் கேட்டால் மெல்ல சிரிக்கிறார்.  

“விளையாட்டில் ஒரு வீரனின் பங்கு என்பது அவன் சார்ந்த அணியை வெற்றி பெற வைக்க முயற்சிப்பதுதான். அதில் தனி நபர் சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. ஒருவேளை நான் ஓய்வு பெற்று வீட்டில் உட்காரும்போது, வயதான காலத்தில் இந்த சாதனைகளை நினைத்து நான் மட்டும் பெருமை பட்டுக்கொள்ளலாம், அதைத் தவிர வேற எதற்கும் சாதனைகள் உதவாது. உரிய நேரத்தில் அணிக்கு முப்பது ரன்கள் தேவைப்படும்போது அந்த ரன்களை அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. அதுதான் நான் விரும்புவது!" என பக்குவமாகச் சொல்கிறார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸின் எண்ணமெல்லாம் அவரது நாட்டுக்கு உலகக்கோப்பையை வாங்கித் தருவது தான். 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா தோற்றபோது இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது. டிவில்லியர்ஸ் கண்ணோரத்தில் கண்ணீர் துளிகள் துளிர்த்த போது, இங்கேயும் சிலர் கலங்கினார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக டிவில்லியர்ஸ்காக தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என இந்தியர்கள் விரும்பினார்கள். அது அப்போது நடக்கவில்லை. 2019 உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாப்போம். “என் கரியரை வெற்றியுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன்" எனச் சொல்லியிருக்கிறார் டிவில்லியர்ஸ். விராட் கோஹ்லியை கிரிக்கெட்டின் ரொனால்டோ எனச் சொன்னால் நாட்டுக்காக கோப்பையைத் தூக்க துடிக்கும் டிவில்லியர்ஸ் தான் கிரிக்கெட்டின் மெஸ்ஸி.

இன்றைய பிறந்தநாளில் அவர் கனவுகள் நிறைவேற வாழ்த்துகளை பகிர்வோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய் (Photos)


பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய் (Photos)
 

துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர்.

இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்ஸி சேவையாக, ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையிலான பறக்கும் கார் என்றழைக்கப்படும் தானியங்கி பறக்கும் வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டது.

எதிர்வரும் ஜூலை மாதம் குட்டி விமானம் போன்று காணப்படும் இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஹோவர் டாக்ஸி” என்று குறிப்பிடப்படும் இந்த பறக்கும் வாகனம் அதிகபட்சம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது. தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும்.

தரைக்கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும்.

இதன் நீளம் 12 அடி, அகலம் 14 அடி, உயரம் 5.2 ஆகும்.

இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும். பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும்.

தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம் அதிகபட்சமாக 2 மணிநேரம் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

டிடிக்கும் இன்னிக்குப் பிறந்தநாள்! #HBDதங்கமகள்DD

பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் டிடி என்கிற திவ்யதர்ஷினி கில்லாடி. 


10_05356.jpg

ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்கும் விழாமேடையில், ஒத்தரோசாவாக கட்டவிழ்த்துவிட்டாலும்...தனி ஒருத்தியாக நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்ததுதான், இவருடன் ஷாரூக்கானையும் ஆடச்செய்தது. எப்போதுமே மக்களின் ஆஸ்தான தொகுப்பாளினி, வாயாடி, ஆல் ரவுன்டர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்குப் பிறந்தநாள் 

Vikatan

  • தொடங்கியவர்

ஃபேஸ்புக்கை கலக்கும் ஊதாக்கலர் பறவை... வைரல் ஆனது எப்படி? #TrashDove

ட்ராஷ் டவ் ஸ்டிக்கர்

ரிரு நாட்களில் வைரல் ஆகி, ஃபேஸ்புக்கையே வீடியோக்களால் கதிகலங்கச் செய்த ஐஸ்பக்கெட் சேலஞ்ச் நினைவிருக்கிறதா? தற்போது அதேபோல, ஃபேஸ்புக் முழுக்க ஒரு விஷயம் தீயாகப் பரவிவருகிறது. ஊதா நிறத்தில், தலையை மேலும் கீழுமாக ஆட்டும் புறா ஸ்டிக்கர் ஒன்றுதான் அது. கடந்த சில தினங்களாக ஃபேஸ்புக் கமென்ட் பகுதிகளில் இந்த ஸ்டிக்கர்களை அதிகளவில் கண்டிருக்கலாம். இங்கே மட்டுமல்ல; உலகம் முழுவதுமே வைரலாகப் பரவி வருகிறது இந்த ஸ்டிக்கர் கமெண்ட். 'யார்ரா யார்ரா இவன்' என நெட்டிசன்ஸ் அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் இந்த ஊதா கலர் புறாவின் பெயர் என்ன தெரியுமா? ட்ராஷ் டவ். அறிமுகமாகி சில நாட்களிலேயே உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது இந்த ட்ராஷ் டவ். இது எப்படி ஹிட் ஆனது தெரியுமா?

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் சித் வைலர் என்னும் பெண். இவர் அடோப் நிறுவனத்தில் மின்னணு விளக்கப்படங்களை உருவாக்கும் பிரிவில் வேலை செய்கிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோருக்காக வெவ்வேறு செயல்களை செய்யும் ஊதா நிறத்திலான புறாக்களை கொண்ட ஸ்டிக்கர்களை பதிவேற்றினார். அதற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், அந்த ஸ்டிக்கர்கள் கடந்த ஜனவரி மாத இறுதியில் பேஸ்புக்கிலும் அதன் மெசஞ்சர் ஆப்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் உடனே வரவேற்பு கிடைத்துவிடவில்லை. 

இந்நிலையில் தாய்லாந்தில் இருக்கும் ஒரு பிரபலமான பேஸ்புக் பக்கத்தில் இந்த ஊதா நிறத்திலான, தலையை மேலும் கீழும் ஆட்டும் புறா எமோஜி ஒரு பூனையுடன் சேர்ந்து நடனமாடுவது போன்ற வீடியோ வெளியானது. இதுவரை 4.8 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ள அந்த வீடியோவால் அந்த ஸ்டிக்கரும் சில மணிநேரங்களிலேயே மிகவும் பிரபலமடையத் தொடங்கியது. இதுகுறித்து தாய்லாந்தின் செய்தி நிறுவனங்கள் கட்டுரைகளையும் எழுத, அதைப் பார்த்த வைலருக்கு அந்த மொழி புரியாவிட்டாலும் தன் முயற்சி இத்தனை மக்களை சென்று சேர்ந்துள்ளதை கண்டு பூரிப்படைந்தார்.

“ட்ராஷ் டவ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எமோஜிக்கள் முக்கியமான செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களின் கமெண்ட் பகுதிகள் முதல் தனிப்பட்ட உரையாடல்கள் வரை அனைத்து இடங்களிலும் ஸ்பேம் செய்யும் விஷயமாக மாறி வைரலாக பரவி வருகிறது. தலையை மேலும் கீழும் ஆட்டும் புறா மட்டுமல்லாமல் பிரட் சாப்பிடும் டவ் ஸ்டிக்கர்,, பீட்ஸா மற்றும் டோனட் சாப்பிடும் ஸ்டிக்கர்கள் என பலதரப்பட்ட ஸ்டிக்கர்கள் ட்ராஷ் டவ்வில் இருக்கின்றன. இவை அனைத்துமே பிரபலம் அடைந்துவிட்டன.

ட்ராஷ் டவ் ஸ்டிக்கர்ஸ்

சம்பந்தமே இல்லாமல் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கும் இந்த ஸ்டிக்கர்களைப் பார்த்த சிலர், வெறுப்படைந்து வைலரை அதற்கு குற்றம்சாட்டியும், மிரட்டியும் வருகின்றனராம். இன்னும் சிலர் அதற்கும் மேலே சென்று, இந்த ஸ்டிக்கர்களை முற்றிலும் நீக்கும் வகையில் இணையதள கோரிக்கை மனுக்களையும் உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (வைரல் ஆன அந்த வீடியோவை நீங்களே கூகுள் பண்ணிப் பாருங்க பாஸ்; அப்பதான் ஏன் கடுப்பாகுறாங்கன்னு புரியும்!). நமது ஊரிலேயே பலரும் இது தொடர்பாக, மார்க்குக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்களும் வலம் வரத்துவங்கின. 

trash dove

இந்த எதிர்மறையான கருத்துக்களுக்கு எல்லாம் செவி சாய்க்காத சித் வைலர், ரக்கூன்ககளை அடிப்படையாக கொண்ட தனது அடுத்த ஸ்டிக்கரை உருவாக்கும் வேலையைத் தொடங்கிவிட்டாராம்! எமோஜிக்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் என்பவை நமது உணர்வை எளிதாக அனிமேஷன் மூலம் வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று. பல நேரங்களில் டெக்ஸ்ட் கமெண்ட்டுகளை விடவும், இவைதான் இணையதளங்களில் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ட்ராஷ் டவ் வைரல் ஆக, கடுப்பில் இருக்கின்றனர் சிலர். 

http://www.vikatan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நயன்தாராவின் டோரா டீசர்!

Nayanthara Dora

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. விவேக் - மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமமைத்துள்ளனர். ஹாரர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வைரலாகி இருந்தன. இந்நிலையில், படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெய்லரும் ரீலிஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

 

 

 

  • தொடங்கியவர்

கமல் பரிந்துரைத்த அந்த புத்தகத்தில் என்ன ஸ்பெஷல்? #Sapiens

"மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தபோது வரலாறு தோன்றியது. மனிதன் கடவுளாகும்போது அது முடிந்துவிடும்"- இது, பிரபல வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான 'நோவா ஹராரி'யின் புகழ்பெற்ற மேற்கோள். மேற்கு நாடுகளில் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களில் அதிகம் அறியப்பட்ட ஹராரி, தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரே நாளில் பிரபலம் ஆனார். காரணம், ஹராரியின் புத்தகம் குறித்து நடிகர் கமல்ஹாசன் எழுதிய ஒற்றை ட்வீட்.

கமல் பரிந்துரைத்த புத்தகத்தில் என்ன ஸ்பெஷல்

கமல்ஹாசன் தனது  கீச்சில் "'சேபியன்ஸ்' என்கிற புத்தகம் தமிழிலும் வரவேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 2014-ம் ஆண்டு ஹீப்ரூவில் வெளியான இந்தப் புத்தகம் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலரும் இந்த நூலைப் பரிந்துரைத்துள்ளனர். இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. 

சேப்பியன்ஸ் - கமல் பரிந்துரைத்த புத்தகம்இந்தப் புத்தகம் மனிதர்களின் வரலாற்றைச் சுருக்கி 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து தொடங்குகிறது. 

இந்த உலகத்தில் பல்வேறு மனித இனங்கள் இருந்தன. அதில் ஒன்றாக இருந்த `ஹோமோ சேபியன்ஸ்’ என்கிற நாம் மட்டும் எப்படி இன்றைக்கு எஞ்சி நிற்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தை ஆள்கிறோம்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் சாதாரண விலங்குகள்தான். நம்மை விட கொரில்லாக்களும் ,மின்மினிப்பூச்சிகளும், ஜெல்லி மீன்களும் நமது சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது உண்மை. 

பன்றிகளில் பல வகை இருப்பதைப்போல, நாய்களில் பல வகை இருப்பதைப்போல, நாமும் பலவகையாக இருந்தோம். கிழக்கு ஆசியாவில் உருவான `ஹோமோ சேபியன்ஸ்’, ஐரோப்பியாவில் நமது உறவினர்களான `நியான்டர்தால்கள்’, ஆசியாவில் `ஹோமோ எரக்டஸ்’, கீழ்த்திசையில் ஜாவா தீவுகளில் ‛ஹோமோ ஸோலொனிஸிஸ்’ என மனிதர்கள் பல்வகையாகவும் பல்வகை குணங்களுடனும் இருந்தோம். அதில் ஒரு குழு, பெரும் உருவத்துடனும் அச்சமறியாத வேட்டைக்குழுவாகவும் இருக்க, மற்றவை குள்ளமான உருவத்துடன் திகழ்ந்தது என ஒவ்வொரு மனிதக்குழுவும் தனித்த அடையாளங்களுடன் இருந்தது. அதேபோல் `ஹோமோ சேபியன்ஸ்’-ஸைத் தவிர மற்ற மனிதக்குழுக்களும் முற்றாக அழியவில்லை.அவற்றுள் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குச் சாட்சியாக இன்று ஐரோப்பிய பூர்விகக் குடிகளுள் நியாண்டர்தால் மனிதர்களின் ஜீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

மற்ற மனித இனத்துக்கும்தான் மூளை இருந்தது. இருந்தாலும் சேபியன்ஸ் மட்டும் உலகை வெற்றிகொண்டு ஆளும் ரகசியம் என்னவென்றால், அவர்களிடம் கூட்டணியாகச் செயல்படும் "அறிவாற்றல் புரட்சி" கண்ணுக்குத் தெரியாத இழையைப்போல் வேலை செய்தது. தொடர்ந்த அனுபவங்களின் அறிவுத்தொகுப்பாக அவர்களின் மூளை இருந்தது. அது பபூன்களைப்போல,ஓநாய்களைப்போலக் கூட்டாக செயல்படும் மூளை. ஆனால் அவை அதை ஒரு குழுவுக்குள் மட்டுமே செயல்படுத்தி நிறுத்திவிடும். ஆனால், `சேபியன்ஸ்’ அதைப் பல லட்சம் பேர்களை பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தன. உதாரணம்: "நாடு, மொழி, கடவுள், சட்டம், முதலாளித்துவம்,கம்யூனிசம் போன்றவை. 

இப்படி பல்வேறு சுவையான செய்திகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தில்...

"மனித குல வரலாற்றில் மிகப்பெரிய மோசடி விவசாயப் புரட்சிதான்"  

"இதுவரை நடந்த வரலாற்றுக் குற்றங்களில் மிகப்பெரியது  நவீன நிறுவன வேளாண்மைதான்" 

"நாம் ப்ரிட்ஜ் கொள்ளாத உணவுடன் வசதியான அபார்ட்மென்ட்களில் நிம்மதியாக இருந்தாலும், நமது ஜீன்கள் இப்போதும் நாம் சவன்னா காட்டில் உணவு தேடி அலைந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறது" என அதிரடிக் கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

Bild könnte enthalten: 1 Person, lächelnd

முன்னைய முன்னணி கதாநாயகி, அழகு நடிகை சதாவின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை உருவாக்கத் திட்டம்


செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை உருவாக்கத் திட்டம்
 

செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இவ்விருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

உலகில் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயற்பாட்டிற்கு வரும். இங்கு வசிக்கும் மக்களை இதே வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

 

மனிதனுடைய குறிக்கோள்களுக்கு எல்லையில்லை. கனவாக உள்ள அனைத்தையும் நிறைவு செய்யும் வாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிக நீண்ட திட்டமாகும். அடுத்து வரும் தலைமுறைகள் இந்த பலனை அனுபவிப்பார்கள். இந்த திட்டம் அமீரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு படிப்படியாக கட்டமைக்கப்படும்.

பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழ குறைந்தபட்ச தகைமைகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன. இதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 டிகிரி செல்சியசாக உள்ளது. ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் ஆகும். இங்கு பூமியில் இருந்து 2021 ஆம் ஆண்டு மனிதர்கள் சென்று ஆய்வு நடத்தவுள்ளார்கள். இதற்காக அமீரகம் சார்பிலும் ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த செவ்வாய் கிரக நகரமைப்புத் திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.