Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று : பெப்ரவரி 26

 

606 : டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஜான்சூன், அவுஸ்;திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியரானார்.


1658 : வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசர்; ஏறத்தாழ அரைப்பகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினார்.


1794 : டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.

 

varalaru2
1815 : பிரித்தானியரால் கைது கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினார்.


1848 : இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.


1914: டைட்டானிக் கப்பலின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.பிரிட்டானிக், வெள்ளோட்டம் விடப்பட்டது.


1952 : பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.


1960: இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தினால் விமானத்திலிருந்தவ 52 பேரில் 36 பேர் உயிரிழந்தனர்.


1972 : அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.


1980: எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ராஜதந்திர உறவு ஆரம்பமாகியது.


1984 : லெபனான்pன் பெய்ரூத் நகரிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1991 : உலகம் பரவிய வலையை (றறற) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை (பிரௌஸர்அறிமுகப்படுத்தினார்.

1991 : வளைகுடாப் போரின்போது குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அறிவித்தார்.


1993 : நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


2001 : ஆப்கானிஸ்தானில் மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை தலிபான் அரசு  அழித்தது.


2004 : மஸிடோனியாவின் ஜனாதிபதி போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.


2013: எகிப்தில் வெப்ப வாயு பலூனொன்று உடைந்து வீழ்ந்ததால் 19 பேர் உயிரிழந்தனர்.

 

http://metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இளமை .நெட்: இன்னும் இன்னும் நோக்கியா..!

 

 
 
nokia_3137164f.jpg
 
 
 

புதிய அறிமுகங்கள் கோலோச்சும் கைபேசி உலகில், இப்போது பழைய கைபேசி ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்திதான் பலரிடமும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் கைபேசிதான் அது.

ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த கைபேசி, மீண்டும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுவது உண்மைதானா? இந்த கைபேசி அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்னென்ன புது அம்சங்கள் இருக்கும்? இப்படிப் பல கேள்விகளோடு கைபேசிப் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

ஸ்மார்ட்ஃபோன் உலகில் இந்த பழைய போனால் வெற்றி பெற முடியுமா, எனும் கேள்வி எழுந்தாலும், அறிமுகமான 17 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த கைபேசி இன்னமும் மறக்கப்படாமலிருப்பதும், அதன் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியமான விஷயம்தான்.

ஒரு காலத்தில் கைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது. இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் கைபேசி உலகின் ஃப்ளாஷ்பேக் தகவல்களாக நினைவுக்கு வரலாம்.

நோக்கியா ஃபோன்களைப் பயன்படுத்தியவர்கள், என்னதான் இருந்தாலும் நோக்கியா ஃபோன் போல வருமா என்றுகூட அதன் புகழ் பாட முற்படலாம்.

நோக்கியா பற்றிப் பழம்பெருமை பேசலாமே தவிர, ஸ்மார்ட்ஃபோன் யுகத்தில் நோக்கியா கைபேசிகளுக்கு இடமில்லையே என்றும் நினைக்கலாம். ஆனால் நோக்கியா இரண்டாவது இன்னிங்ஸுக்குத் தயாராகி வருகிறது.

இம்மாத இறுதியில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்’ கண்காட்சியில் நோக்கியாவின் என் 3, 5 மற்றும் 6 கைபேசிகள் அறிமுகமாக இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளன. இவை அனைத்தும், நோக்கியா பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு கைபேசிகளாக இருக்கும். இவற்றில் நோக்கியா 6 ஏற்கெனவே சீனாவில் மட்டும் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

நோக்கியா பிராண்டில் கைபேசிகளை அறிமுகம் செய்வதற்கான விநியோக உரிமை பெற்றுள்ள பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டீ. குளோபல் சார்பில் இந்த அறிமுகங்கள் நிகழ உள்ளன. இந்தப் புதிய மாடல்களோடு, பழைய 3310 மாடல் போனும் மறு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் உலகில் புதிய அறிமுகங்கள் தொடர்பான ரகசியச் செய்திகளைக் கசிய விடுவதில் வல்லவராகக் கருதப்படும் தொழில்நுட்பப் பத்திரிகையாளர் இவான் பிளாஸ் மூலம் வெளியான தகவல் என்பதால், இதை வெறும் வதந்தி என அலட்சியபடுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, நோக்கியா 3310 மாடல் மறு அவதாரச் செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நவீன ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் என்ன, இரண்டாவது கைபேசியாக நோக்கியாவை வைத்துக்கொள்வேன்’ என்று சமூக ஊடகங்களில் பலர் உற்சாகமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்ற‌னர். இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இதன் விலை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன.

ஐஃபோனுக்கும், விதவிதமான ஆண்ட்ராய்டு போனுக்கும் பழக்கப்பட்ட தலைமுறைக்கு நோக்கியா பழைய அற்புதமாகவே தோன்றும். ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகும் நோக்கியா 3310 மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

முதல் விஷயம் இந்த கைபேசி அது அறிமுகமான காலத்தில் அதன் விலைப் பிரிவில் மற்ற கைபேசிகளில் எல்லாம் இல்லாத மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது. கால்குலேட்டர், நெட்வொர்க் மானிட்டர், ஸ்டாப் வாட்ச், நினைவூட்டல் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த கைபேசி கொண்டிருந்தது. இப்போது இவை சாதாரணமாகத் தோன்றினாலும், புத்தாயிரமாண்டின் தொட‌க்கத்தில் இந்த அம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தவே செய்தன.

இவை தவிர, கைபேசி பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டையும் இந்த கைபேசி பெற்றிருந்தது. மேலும் நாட்கணக்கில் தாக்குப் பிடிக்கக் கூடிய இந்த பேட்டரியும், கீழே போட்டாலும் உடையாத‌ இதன் கட்டமைப்பும், இந்த போனை விருப்பத்துக்கு உரியதாக்கின. நீளமான குறுஞ்செய்திகளை டைப் செய்யும் வசதி, மேல் உரையை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நோக்கியா பிரியர்கள் பேசித் தீர்க்கத் தயாராக இருக்கின்றனர்.

1999-ல் அறிமுகமான நோக்கியாவின் 3210 மாடலின் அடுத்த கட்டமாக 2000-மாவது ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கைபேசி நோக்கியாவின் சூப்பர் ஹிட் ஃபோனாக அமைந்தது. மொத்தம் 126 மில்லியன் கைபேசிகள் விற்பனையானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே வரிசையில் வேறு சில ரகங்களும் அறிமுகமாயின.

நம்பகமானது, நீடித்து உழைக்கக் கூடியது, உடையாத தன்மை கொண்டது என்றெல்லாம் பலவிதங்களில் பாராட்டப்பட்ட இந்த கைபேசி, ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் மீண்டும் அவதாரம் எடுக்க இருப்பதாகக் கூறப்படும் தகவல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இதன் செல்வாக்கிற்குச் சான்று.

நெருக்கடிகள் மிகுந்த நவீன வாழ்க்கையில், மீண்டும் இயற்கைக்குத் திரும்புதல் எனும் கருத்து முன்வைக்கப்படுவது போல, கைபேசி உலகிலும் கூட எண்ணற்ற அம்சங்களும், எல்லையில்லா வசதிகளும் கொண்ட நவீன ஸ்மார்ட்ஃபோன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட பழைய கைபேசிகளே சிறந்தவை எனும் ஏக்கமும் வலுப்பெற்று வருகிறது. அதனால்தான் நோக்கியா 3310 இன்னமும் பேசப்படக்கூடிய ஃபோனாக இருக்கிறதோ!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

90-களில் பிறந்தவரா நீங்கள்..? அப்படினா இதைப் படிச்சுப் பாருங்க! #நாஸ்டால்ஜியா #NostalgicCharacters

நீங்கள் 90 களில் பிறந்தவர்களா..? அப்படினா இவங்களை உங்களால மறக்கவே முடியாது தெரியுமா..?  இதோ நான் சொல்லச் சொல்ல அப்படியே நாஸ்டால்ஜியா உலகத்துக்குள்ள கண்ணு முன்னாடி  வருவாங்க பாருங்க..!

Macaulay Culkin :

நாஸ்டால்ஜியா

என்னடா இது பெயரே கொச கொசனு கொஸக்ஸி பசப்புகழ் மாதிரி இருக்கேன்னு பார்க்காதீங்க. இந்தப் பேருக்கும் 90-களில் பிறந்த குழந்தைகளுக்கும் நிறைய பந்தம் இருக்கு. இன்னும் யார்னு தெரியலையா..? உங்களுக்கெல்லாம் 'ஹோம் அலோன்'னு ஒரு படம் ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தில் சுட்டித் தனம் செய்யும் அதே சிறுவன் தான் 'மெக்குலே குல்கின்' அதுமட்டுமல்லாமல் 'ரிச்சி ரிச்'னு ஒரு தொடர் ஞாபகம் இருக்கிறதா மக்களே? எப்படி மறக்க முடியும்? அது இல்லாமல் நம்ம பிறவி முழுமையடையாதே..! சிறு வயதில் அதானே நமக்குப் பொழுதுபோக்கே. குழந்தை நட்சத்திரமாக இவர் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் பிடித்தமானவராக இருந்தார். இன்னமும்கூட ஒரு சிலர் போர் அடித்தால் இவர் நடித்த 'ஹோம் அலோன்' 'ரிச்சி ரிச்' போன்ற படங்களைப் பார்ப்பது வழக்கம். 50 சிறந்த குழந்தை நட்சத்திரப் பட்டியலில் இன்றுவரை இவருக்கெனத் தனி இடமே உண்டு! 

Mukesh Kanna :

நாஸ்டால்ஜியா

என்னடா இது பெயரே சாம்பார் மாதிரி இருக்குனு பாக்காதீங்க. அட இவருதான்யா நம்ம 'சக்திமான்'!  இவரை சக்திமான் என்றே நெஞ்சில் விதைத்து விட்டு உண்மையான பெயரைச் சொன்னவுடன் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பின்னங்கால் பொடனியில் பட ஓடிவந்து டி.வி முன் உட்கார்ந்து பார்க்கும் முதல் நாடகம் இதுவாகத் தான் இருக்கும். மொத்தம் 400 எபிசோடுகள்...அத்தனையும் அதகளம்!  இந்த சீனைச் சொல்லி `இது எந்த எபிசோட்?' என்று கேட்டால் இன்ச் மாறாமல் யாராவது சொல்லிவிட்டால் அவர்கள் நிச்சயம் 90-களில் பிறந்த குழந்தையாக மட்டும் தான் இருக்க முடியும்! எத்தனை சூப்பர் ஹீரோ இருந்தாலும் நமக்கு இவர் தான் முதல் சூப்பர் ஹீரோ. அந்த டைட்டில் சாங்கை இப்பக்கூட மனப்பாடமாய் பாடும் மீசை வைத்த குழந்தைகள் ஊருக்குள் ஏராளம். அந்த நாடகத்திற்கு இவர் தான் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Rowan Atkinson :

நாஸ்டால்ஜியா

பருவம் ஆரம்பித்த பின்னர் இவரது காமெடிகளை பார்த்துத் தான் வளரத் தொடங்கினோம். யார்னு இன்னுமா தெரியவில்லை? அட இவர் தான்யா நம்ம மிஸ்டர் பீன். இவரின் உண்மையான பெயரைச் சொன்னால் 'என்னடா கெட்ட வார்த்தையெல்லாம் பேசுற?'னு கேட்கும் கூட்டம் நிறைய. எந்தத் தலைமுறையினருக்கு கிடைக்காத 90-களில் சந்தோஷமான தருணங்களைக் கொடுத்ததில் இவருக்கும் பெரும் பங்குள்ளது. மனிதனுக்கு சோற்றுக்கு பிறகு தேவை சிரிப்பு தான். அதை அள்ளி அள்ளித் தருவதில் வள்ளல் இவர். இவரைப் பார்த்து சிரிக்காதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்கையில் இவர் ரொம்ப சீரியஸாம் பாஸ். இவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சார்லி சாப்ளினிற்குப் பிறகு ப்ளாக் காமெடியில் கிங் என்றால் அது சாட்சாத் நம்ம மிஸ்டர் பீன் தான் மக்களே!

G.S.Pradeep :

நாஸ்டால்ஜியா

இவர் யார் என்று தெரிந்த பின் உதட்டோரத்தில் கண்டிப்பாக சிரிப்பு வரும் மக்களே. ஒரு சிலருக்கு குபீர் சிரிப்பாகக் கூட அது இருக்கலாம். இதச் சொல்றேன் ஞாபகம் வருதான்னு பாருங்க? 'யார் மனசில யாரு? உங்க மனசில யாரு... அவங்களுக்கு என்ன பேரு?' கரெக்ட்... அவரே தான்! மலையாளம் கலந்து அழகாகத் தமிழ் பேசும் ஜி.எஸ். பிரதீப் தான் அவர். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'க்ராண்ட் மாஸ்டர்' ப்ரோகிராமின் மாஸ்டர் இவர் தான். நமக்குத் தெரிந்த முதல் விஞ்ஞானி இவர் தான். மனதில் யாரையாவது நினைத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று சொன்னாலே போதும். அது யார் என்று சொல்லிவிடுவார். அவர் பேச்சைக் கேட்டாலே தெரிந்து விடும் ஹீ இஸ் ஃப்ரெம் கேரளா என்று! ஆளு ஸ்டேட் லெவல் கேரம் ப்ளேயர்! இவரே 5 புத்தகங்களும் எழுதி இருக்கார்னா பார்த்துக்கோங்க! 

Kinshuk Vaidya, Hansika Motwani :

நாஸ்டால்ஜியா

சிலருக்கு இவர்களைத் தெரிந்திருக்கலாம், சிலருக்குத் தெரியாமலும் இருக்கலாம். இவங்க ரெண்டு பேரும் தான் சிறு வயதில் நாம் செய்த கிறுக்குத் தனத்திற்குக் காரணம். ஆம்! கோவில் திருவிழாக்களில் அம்மாவிடம் சண்டை போட்டு ஒரு பென்சில் வாங்கியது நினைவில் இருக்கிறதா ஃப்ரெண்ட்ஸ்? அதை எழுதினால் அப்படியே அந்தப் பொருள் கண் முன் வந்து நிற்கும் என்ற எண்ணத்தை விதைத்தவர்கள் இவர்கள் தான். அதற்குக் காரணம் இந்த 'ஷகலக்க பூம் பூம்' என்னும் நாடகத் தொடர். இவர்கள் இருவரும் தான் இந்த சீரியலில் வரும் முக்கிய கதாபாத்திரம். மும்பை வாலாக்கள் என்றாலும் டப்பிங் உபயத்தால் நம்ம வீட்டுச் சுட்டீஸாய் ஆனார்கள். நாங்கூட இவங்களுக்கு ஃபேந்தான் ஃப்ரெண்ட்ஸ்! 

John Tui :

நாஸ்டால்ஜியா

பெயரைப் பார்த்து கன்ஃபியூஸ் ஆகாதீங்க.  'பவர் ரேஞ்சர்ஸ்'னு சொன்னா 'கபால்'னு புடிச்சுக்குவீங்க. கையில் பொம்மை போன் போல வைத்துக் கொண்டு 'எஸ்.பி.டி எமர்ஜென்ஸி' என்று இவர் பேசிய டயலாக் ஞாபகம் இருக்கிறதா? நாய் வடிவத்தில் முகத்தை வைத்து பவர் ரேஞ்சர்ஸில் ஒரு கேரக்டர் வருமே அவர் தான் 'ஜான் டுய்'... அந்த பவர் ரேஞ்சர்ஸ் டீமிற்குத் தலைவன். அதில் வரும் 'டாகி க்ரூகர்' இவரே தான். ஹாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிய 'தி ஹாபிட்' என்னும் திரைப்படத்தில் 'போல்க்' என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தவரும் இவர் தான்! 

Kamal Chopra :

நாஸ்டால்ஜியா

இவரின் பெயர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இப்போ டி.வி-யில் விளம்பரங்களைப் பார்த்தால் அடுத்த சேனலை மாற்றுவது தான் வழக்கம். ஆனால் அந்தக் காலத்தில் விளம்பரங்களும் கூட ரசிக்கும் விதமாக இருக்கும். அப்படி ஒரு வின்டேஜ் விளம்பரத்தைச் சொல்றேன்... ஞாபகம் வருதான்னு பாருங்க! ஏரியில் ஒருவர் பல மணி நேரமாக உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப்பார். அப்போது ஒருவர் வந்து அவர் கையில் இருக்கும் குச்சியில் 'ஃபெபி க்விக்கை' எடுத்து மூன்று சொட்டுகளை வைத்து மூன்று மீன்களை மூன்றே செகண்டில் பிடித்துவிட்டுக் கிளம்பிவிடுவார். இந்த விளம்பரத்தை யாராலும் மறக்கவே முடியாது தானே.? அதில் தொப்பி போட்டு வரும் தாத்தா தான் 'கமல் சோப்ரா'. பாலிவுட்டில் 'பரின்டா' 'சிங் இஸ் கிங்' என சில படங்களில் பிரமாதப்படுத்தி இருப்பார் இந்த சோப்ரா தாத்தா!

 

அடுத்த வாரம் வேறு சில நபர்களுடன்  சந்திக்கலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வழுக்­கைத்­தலை ஆண்­க­ளுக்­கான விளை­யாட்டுப் போட்டி

வழுக்கைத் தலை கொண்ட ஆண்­க­ளுக்­கான விளை­யாட்டுப் போட்­டி­யொன்று ஜப்­பானில் நடை­பெற்­றுள்­ளது.  சுரூட்டா எனும் நகரில்  நேற்று முன்­தினம் நடை­பெற்ற இப்­ போட்­டியில் 30 ஆண்கள் கலந்­து­கொண்­டனர். 

சுரூட்டா நகரின் வழுக்கைத் தலை கொண்ட ஆண்­களின் கழ­கத்­தினால் இப் ­போ­ட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. கயி­றி­ழுத்தல் போட்டி பாணியில் விநோ­த­மான போட்­டி­யொன்றில் வழுக்கைத் தலை ஆண்கள் பங்­கு­பற்­றினர். கயிறின் இரு முனை­களும் போட்­டி­யா­ளர்கள் இரு­வரின் தலை­யுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.  அக் ­க­யிற்றை இழுத்து தமது எதி­ரா­ளியின் தலை­யி­லி­ருந்து அதை விடு­படச் செய்­வ­து தான்   இப்­ போட்டி.

baldness

1989 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட மேற்­படி கழ­கத்­தினால் வரு­டாந்தம் பெப்ர­வரி 22 ஆம் திகதி இப் ­போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. 64 வய­தான டோஷி­யுக்கி ஒகா­ச­வரா இவ்­ வ­ருடம் முதல் தட­வை­யாக இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றினார்.

baldness223

 

இப்­ போட்டி தொடர்­பாக அவர் கருத்துத் தெரி­விக்­கையில், எனது வழுக்கைத் தலை தொடர்­பாக இது­வரை நான் கவ­லை­ய­டைந்­தி­ருந்தேன். இன்று வித்­தி­யா­ச­மாக உணர்ந்தேன்' என்றார்.  

baldness22

இக் ­க­ழ­கத்தின் தலை­வ­ரான டெய்­ஜிரோ சுகோ (70) கூறு­கையில், உலகம் முழு­வ­து­மி­ருந்து ஆண்கள் இப்­ போட்டியில் பங்­கு­பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன்மூலம் வழுக்கைத் தலை ஆண்களுக்கான ஒலிம்பிக் போட் டியை நாம் ஏற்பாடு செய்யலாம்' என்றார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

30 வரு­டங்­க­ளாக தினமும் செல்பீ படம்­பி­டித்த மனிதர்

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வரு­டங்­க­ளாக செல்பீ படம்­பி­டித்து வந்­துள்ளார்.

selfie1

கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்­பாட்­டுக்கு வரு­வ­தற்கு வெகு காலத்­துக்கு முன்­னரே தன்னைத் தானே படம்­பி­டிக்க ஆரம்­பித்­தாராம். 


போஸ்டன் கல்­லூ­ரியில் பேரா­சி­ரி­யாகப் பணி­யாற்றும் இவர்,  1987 ஆம் ஆண்­டி­லி­ருந்து தினமும் ஒரு செல்பீ பட­மா­வது பிடித்­துக்­கொண்­டாராம்.  

 

பல்­வேறு இடங்­களில் ஏறத்­தாழ ஒரே பின்­னணி. ஒளி­ய­மைப்­புடன்  இவர் செல்பீ படம் பிடித்து வந்தார். இது­வரை சுமார் 11,000 செல்பீ படங்­களைப் பிடித்­துக் ­கொண்­டுள்ளார். 


தனது இத்­திட்­டத்­துக்கு எவ்­ரிடே செல்பீ ப்ரஜெக்ட் என  இவர் பெய­ரிட்­டுள்ளார்.

 

நேற்­றுடன் இந்த செல்பீ திட்­டத்­துக்கு 30 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின. இனியும்  இந்நடவடிக்கையை தொடரவுள்ளதாக கார்ல் பெடேன் கூறுகிறார்.

selfie2

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

அம்மா பாசம்... தோழியின் நேசம்...சிம்பன்ஸி கனகோவின் கண்ணீர் கதை..!

அவள் எங்கோ வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்தக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, திரும்புகிறாள். ஆனால், அவள் பார்வை கதவை நோக்கியதாக இல்லை. உள்ளே வந்த அந்தப் பெண், ஜப்பானிய மொழியில் ஏதோ சொல்கிறார். அவள்... கொஞ்சம் சிரிக்கிறாள். புதர்களுக்கிடையில் இருந்து தன் முழு உருவத்தை வெளிக்காட்டுகிறாள். மரங்களின் கிளைகளிலும், கூண்டின் கம்பிகளிலும் தொங்கியபடியே தாவி, குரல் வந்த இடத்திற்கு வருகிறாள். கம்பியில் தொங்கியபடி அந்தப் பெண்ணை கால்களால் தொட்டு விளையாடுகிறாள். அவள் மனிதக் குரங்கு எனப்படும் சிம்பன்ஸி இனத்தைச் சேர்ந்தவள். அவளைப் பார்த்தால் தெரியாது அவளுக்கு வயது 24 என்பது. அவளைக் கூர்ந்து கவனிக்காவிட்டால் தெரியாது, அவளுக்கு கண்கள் தெரியாது என்பது. அவள் பெயர் கனகோ...

சிம்பன்ஸி ஜப்பான் கனகோ

1992ல் கனகோ பிறந்த போது சாதாரணமாகத் தான் இருந்தாள். அவள் பிறந்தது ஒரு மிருக காப்பகத்தில். கனகோ பிறந்த 156வது நாள், அவளின் தாய் கனே மருத்துவப் பரிசோதனைக்காக தனியாக அழைத்துச் செல்லப்பட்டார். நான்கு நாட்களுக்குப் பின்பு கூண்டுக்கு திரும்பிய கனே, ஏனோ கனகோவை தன்னிடம் நெருங்கவிடவில்லை. அன்று முதல் மனிதர்களின் அரவணைப்பிலேயே வளர்ந்து, வாழ்ந்து வருகிறாள் கனகோ. 

சிம்பன்ஸி ஜப்பான் கனகோகனகோ மற்ற சிம்பன்ஸிகளைப் போன்றவள் அல்ல என்பதை வெகு சீக்கிரமே கண்டுபிடித்து விட்டனர் காப்பகத்திலிருந்த மருத்துவர்கள். மனிதர்களுக்கு ஏற்படும் டவுன் சின்ட்ரோம்  போன்ற ஒரு குறைபாட்டால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மனிதர்களுக்கு 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். அதில் 21வது குரோமோசோம் ஜோடியில் கூடுதலாக ஒரு இணை இருந்துவிட்டால் டவுன் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்படும். அதே போல, 24 ஜோடி குரோமோசோம்களைக் கொண்ட சிம்பன்ஸிகளுக்கு 22வது ஜோடியில் கூடுதல் இணை இருந்தால் ட்ரைசோமி 22 (Trisomy 22) என்ற குறைபாடு ஏற்படும். இதற்கு முன்னர் முதன்முறையாக இது போன்ற குறைபாட்டோடு இருந்த ஒரு சிம்பன்ஸி 1969யில் பதியப்பட்டது. ஆனால், பிறந்து இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அது இறந்துவிட்டது. உடல் மற்றும் மூளை வளர்ச்சியை தடை செய்யும் இந்த குறைபாட்டோடு இருக்கும் ஒரே சிம்பன்ஸி கனகோ மட்டுமே.

தன்னுடைய 7 வயதில் கண் பார்வையை இழந்தாள் கனகோ. அதனால், பிற சிம்பன்ஸிகளிடம் கனகோவால் சரிவர பேசிப் பழக முடியவில்லை. நீண்ட காலத்திற்கு தனிமையிலேயே வாழ்வைக் கழித்தாள். இயற்கையின் ஆச்சரியமாய், சில ஆண்டுகளுக்கு முன்னர் காப்பகத்திற்கு வந்த ரோமன் என்கிற சிம்பன்ஸி கனகோவிடம் நன்றாகப் பழக ஆரம்பித்தாள். தற்போது தினம் சில மணி நேரங்கள் ரோமனோடு நேரத்தை செலவிட்டு வருகிறாள் கனகோ. 

ரோமனோடு சேர்ந்த பிறகு தான், சிரிக்கவே ஆரம்பித்தாள் கனகோ. ஆனால், இப்போது அந்த சிரிப்பும் நீண்ட காலத்திற்கு இருக்கப் போவதில்லை. அவளின் சிரிப்பு மட்டுமல்ல.. அவளும் கூடத் தான். சமீபத்தில் கனகோவிற்கு இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவள் உயிர் வாழ்தலின் சாத்தியங்கள் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. காடுகளைக் காணவில்லை, காதலை அனுபவிக்கவில்லை, வாழ்தலை ருசிக்கவில்லை... ஆனால், இறத்தலை ரசிக்க கிளம்பிவிட்டாள் கனகோ. ஒளி இழந்து, ஒலி கொண்டு வாழ்ந்து வந்த கனகோவின்  வாழ்வில் மொத்தமாய் இருள் சூழ இருக்கிறது. 

சிம்பன்ஸி ஜப்பான் கனகோ

கனகோவைப் பார்த்துக் கொள்ளும் அந்த காப்பக பெண் பச்சை நிற தோலும், சிகப்பு நிற சதையும் கொண்ட அந்த தர்பூசணியைக் கொடுக்க... அதை அத்தனை மகிழ்ச்சியோடு விளையாடியபடியே ரசித்து, ருசித்து சாப்பிடுகிறாள் கனகோ... அடுத்தக் கூண்டிலிருந்து  தன் தோழியை  சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ரோமன். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பேச்சை அளந்து பேசுதல் நல்லது
 
 

article_1488171853-mouth-with-speech-bub“உனக்கு மட்டும் இந்த இரகசியத்தைச் சொல்கின்றேன். தப்பித்தவறி வேறு ஒருவரிடமும் இந்த இரகசியத்தைச் சொல்ல வேண்டாம்” எனச் சொல்லுவார்கள். ஏற்கெனவே, இந்தச் சமாசாரத்தைப் பலபேரிடமும் சொல்லியிருப்பார்கள். இந்த இரகசியம் இப்படியே பலபேரூடாகப் பரவி, வேற்று உருவுடன் பரபரப்பாய்ப் போய்ச் சேருவதை, முதலில் சொன்னவர் கேட்டாலே ஆச்சரியப்பட்டுப் போய்விடுவார். 

ஒருவரது இரகசியத்தை அல்லது பல நபர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரகசியமாக்குவது சிலருக்கு இஷ்டமான பொழுதுபோக்கு.

ஆனால், தங்கள் வீட்டு விடயங்களை, மூடிமறைத்துவிட்டு, மற்றவர் விடயங்களில் கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது வேடிக்கையானது; ஆனால் விஷமத்தனமானது.

சில அப்பாவிகளிடம் கண்ட விடயங்களையும் பரிமாறினால் அவர்களும் சொல்லக் கூடாத விடயங்களை உடன் மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்டு விடுவர். 

நாங்கள் பேசுபவர்களின் நடத்தையறிந்து, பேச்சை அளந்து பேசுதல் நல்லது. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிறுகதையின் இலக்கணம் சுஜாதா! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

சுஜாதா

''தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. அவருடைய நினைவு தினம் இன்று. 

இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர், சுஜாதா. அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம் அவர் இறக்கும்வரை தொடர்ந்தது. கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள் கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார். அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

சிறுகதைக்கு இலக்கணம்!

''இன்றைக்கு எல்லாரும் ஒப்புக்கொள்ளும்படியாகச் சிறுகதையை அறுதியிட்டால், 'சின்னதாகச் சொல்லப்பட்ட கதை'.  அவ்வளவுதான்... வேறு எந்த விதிகள்  இருந்தும் அதன் வீச்சைக் கட்டுப்படுத்தவதாகத் தெரியவில்லை. 'சின்னதாக' என்பதும் ஓர் அளவுக்குத்தான்'' என்று சிறுகதைக்குச் சின்னதாக இலக்கணம் சொல்லும் சுஜாதா, 'ஒரு சிறுகதை, எப்படி இருக்கவேண்டும்' என்பதை இப்படி விவரிக்கிறார்.  

சுஜாதா எழுதிய திருக்குறள் புதிய உரை நூல்''எனக்குத் தெரிந்தவரை ஒரேயொரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது, சிறிதாகச் சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால், சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்துமதிப்பாகக்கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால், அதைச் சிறுகதை என்று ஒப்புக்கொள்வது கடினம். அதேபோல், ஒரு பக்கத்தில் இருந்தால்... அது, கதைச் சுருக்கம். நான்கு வரிகளுக்குக் கீழிருந்தால் கவிதையாகச் சொல்லிவிடலாம். சில நேரங்களில், சில கட்டுரைகளைக்கூடச் சிறுகதையாகக் கருதலாம். கதை, சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள். ஒரு கதை, ஜீவித்திருக்க... அது, சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம்; நூற்றாண்டுக்காலத்தையோ...  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கறுப்போ... சிவப்போ, ஏழையோ... பணக்காரனோ, வயதானவர்களோ... இளைஞர்களோ, நோயாளிகளோ... தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ... வேதாந்திகளோ எந்தக் கதாபாத்திரங்களும் தடையில்லை. மனிதர்களே இல்லாமல்கூட கதை சொல்லலாம்; கண்ணீர் வரச் சொல்லலாம்; சிரிக்கச்சிரிக்கச் சொல்லலாம். கோபம், ஆர்வம், வெறுப்பு போன்ற ஒன்பதில் ஏதேனும் ஒன்று வரும் அளவுக்கு ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.'' 

சுஜாதா

'கணேஷ் - வசந்த்' கதாபாத்திரங்கள்!

அவர் சொன்ன சிறுகதைக்கான இலக்கணத்தை அனைவரும் பின்பற்றியதால்தான் என்னவோ தெரியவில்லை, இன்று அவர் வழியில் ஆயிரம் சிறுகதை எழுத்தாளர்கள் முளைத்துள்ளார்கள். ''சுஜாதாவைப் பற்றியும், அவருடைய எழுத்துகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்'' என்று  அவர் வழியிலேயே அறிவியல் புனைவுக் கதைகள் எழுதிவரும் அவருடைய பரமவிசிறியும், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஒருவரிடம் பேசினோம். ''நறுக்...நறுக்கான வார்த்தைகளையும், சட்... சட்டெனச் சொல்வதையும் அவர் கடைப்பிடித்தார். சங்க இலக்கியங்களுக்கும், திருக்குறளுக்கும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையான முறையில் உரை எழுதியுள்ளார்.

சுஜாதாவின் மீண்டும் ஜீனோ நாவல்சின்னச்சின்ன வார்த்தைகளைக்கொண்டு எளிமையாக எழுதினார். உதாரணத்துக்கு, 'இறங்கினான்' என்ற வார்த்தையை ஒவ்வொரு வரியாக... அதாவது, ஓர் எழுத்தை மட்டும் வரியாகப் போட்டு ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதும் புதுமையைக் கையாண்டார். நிறைய விஞ்ஞானக் கதைகளையும், துப்பறியும் கதைகளையும் எழுதினார். துப்பறியும் கதைகளில், 'கணேஷ் - வசந்த்' என்கிற இரண்டு கதாபாத்திரங்களைவைத்து கதை எழுதியிருப்பார். 'கணேஷ் - வசந்த்' கதை என்றாலே, அந்தக் காலத்தில் பிரபல வார பத்திரிகைகளின் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டும். கணேஷும், வசந்த்தும் சம்பந்தப்பட்ட ஒரு கதையில், இருவருக்கும் சண்டை வந்து பிரிந்துபோகும்படியான சூழ்நிலை உருவாகும். இதைப் படித்த அவர்களுடைய வாசகர்கள் துடித்துப்போனதுடன், சுஜாதாவுக்கு போன் செய்து முடிவை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர். 'அவர்கள் பிரியமாட்டார்கள்' என்று அவர் சொன்னபிறகே, அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. அவருடைய மற்றொரு கதையில், வசந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அப்போதும் இதேபோன்று பிரச்னை எழுந்தது.

சுஜாதாவின் ஏன்... எதற்கு... எப்படி? நூல்'ஏன், எதற்கு, எப்படி?'

கணேஷ் - வசந்த்தைப்போன்று அறிவியல் கதைகளில் ஆத்மா - நித்யா என்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார். அந்தக் கதைகளில் செவ்வாய்க்கிரகத்தைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், நம் பிரச்னைகளை அறிவியல் மூலமாக உணர்த்தியிருப்பார். திருப்பதியைப் பற்றி ஒரு கதை எழுதியிருப்பார். அதில், வேற்றுக்கிரகவாசிகளிடம் திருப்பதியைச் சுற்றிக்காட்டும் நபர், ஒரு கடலைக் காண்பித்து... 'இதுதான் திருப்பதி, இதைக் கும்பிட்டுக்கோங்க' என்று சொல்வார். காரணம், இயற்கை மற்றும் அறிவியலால் திருப்பதி கடலுக்குள் மூழ்கியதாகத் தன் கற்பனையைப் பதிவுசெய்திருப்பார். அவர் எழுதிய அறிவியல் கதைகளில், 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ' போன்றவை மிகவும் பிரபலமானவை. இவையிரண்டும் 'ஆனந்த விகடனி'ல் வெளியானவை. இதுதவிர, அறிவியல் கேள்வி - பதில்கள் பற்றி, 'ஏன், எதற்கு, எப்படி' என்கிற தலைப்பில், 'ஜூனியர் விகடனி'ல் ஒரு தொடர் எழுதினார். இதை வாசகர்கள் வெறிகொண்டு படித்தனர். 'அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படியான ஒருமுறையில் எழுதுகிறார்கள்' என புதுப்புது எழுத்தாளர்களை அவர் உருவாக்கினார். ஒருமுறை தொலைக்காட்சி நேர்காணலின்போது, வாசகர்கள் அவரிடம் பலவாறு கேள்வி கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் மிகவும் பொறுமையாக விடையளித்த அவர், நிகழ்ச்சியின் முடிவில், 'இதுவரை நீங்க என்னைக் கிழிகிழினு கிழிச்சதுக்கு நன்றி' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லிவிட்டுச் சென்றாராம்'' என்றார், சுவைபட.

சுஜாதாவின் மனைவி சுஜாதா

''எழுத சலித்துக்கொண்டதில்லை!''

''உண்மையில் என் சிந்தனையும், அவருடைய கதை சித்தரிப்பும் ஒப்பாகவில்லை. காரணம், தன்னுடைய கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்பினார். நான் அப்படியில்லை. மிகவும் பழமையான சிந்தனைகொண்டவள். திருமணமான புதிதில், அவரது கதையை விமர்சனம் செய்தது உண்டு. பின்னாளில் அதை விட்டுவிட்டேன். அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே வாழ்ந்தவர்; உணர்ச்சிகளைப் பெரும்பாலும் வெளியே காட்டாதவர்; அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை... ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார்; விருப்புவெறுப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ளமாட்டார்; எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். கதை பற்றிய விஷயமும் அதுபோல்தான். என்ன எழுதுகிறார், எதைப் படமாக எடுக்கிறார்கள் என எதையும் பகிர்ந்துகொள்ளமாட்டார். என்றுமே அவர், எழுத்துப் பணியில் சலித்துக்கொண்டதில்லை. எழுத ஆரம்பித்துவிட்டால்... அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டியதில்லை. எழுதுவது , படிப்பது... இவை இருந்தால் போதும். 'சாகும்வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார். அதுபோலத்தான் நடந்தது'' என்று தன் கணவரின் குணங்களை, 'விகட'னின் நேர்காணலின்போது ஒருமுறை சொல்லியிருந்தார் அவர் மனைவி சுஜாதா.

''நான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலவில்லை. அவற்றை, ஒழுங்காக விவரிப்பதில்தான்... சொல்வதில்தான் அக்கறை காட்டியுள்ளேன்'' என்று சொல்லும் சுஜாதா, ''ஒரு வாசகன், தனக்குப் பிடித்தமான எழுத்தாளனை... நண்பனைப்போலத் தேர்ந்தெடுக்கிறான். காரணம், அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது'' என்று அவர் சொன்னதால்தான்...  இறந்த பிறகும் இன்றைய இளம் தலைமுறையினரின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

''மொத்தத்தில் சிறுகதை என்பது, அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்'' என்று சுஜாதா சொன்னது எத்தனை உண்மை?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘திட்டமிட்டதை முடிப்பது எப்படி?' - வாசகருக்கு மிஸ்டர் K-வின் பதில்! #MondayMotivation

"எதையும் திட்டமிடும் பழக்கம் எனக்கு உண்டு. ஆனால் எதிர்பாராத விதமாக, அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. திட்டமிட்டும்  நின்றுபோன விஷயங்கள் நிறைய. எப்படி மேற்கொண்டு முயற்சி செய்வது என்று பயமாக இருக்கிறது. நாம் ஆரம்பித்து, நம்மால்தானே நின்றுவிட்டன என்று கூற நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. இதை எப்படி சரி செய்வது?” -  வாசகர் ஒருவரிடமிருந்து வந்த கடிதம் இது.

“எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணணும்!” என்று வடிவேலு சொல்வதுதான் அடிப்படை. ஆனால், ப்ளானிங் சொதப்பாமல் நிறைவேறும் கட்டம் வரை எப்படிக் கொண்டு செல்வது?

மிஸ்டர் K


மிஸ்டர் K நேற்று வந்தபோது, இந்த கேள்வியைக் கேட்டதும், 4-P என்றொரு மந்திரம் சொன்னான். 

Plan. Prepare. Proceed. Pursue 

இதை,  உங்கள் கண்ணில் படும் இடமெல்லாம் ஒட்டி வையுங்கள். இவற்றை எப்படிக் கையாள்வது என்பதற்கு -   ஒரு விஷயத்தை   உதாரணமாகப் பார்க்கலாம். 

Plan - திட்டமிடுங்கள்

இதுதான் அடிப்படை. திட்டமிடுதல். என்ன செய்யவேண்டுமோ அதற்கான ‘ஒன்லைன்’ என்ன என்பதை உங்கள் மனதுக்குள் திட்டமிடுங்கள். ‘அதாவது, உடல் இளைக்க வேண்டும்’ - இதுதான் குறிக்கோள் என்றால் அதற்கு நிறைய சின்னச் சின்னத் திட்டங்கள் தேவைப்படும் அல்லவா.. அவற்றைத் திட்டமிடுங்கள்.  தினமும் 30 நிமிடம் வாக்கிங், நொறுக்குத் தீனிக்கு டாட்டா என்று, இதற்கு நிறைய குட்டித் திட்டங்கள்   இருக்கும். சுருக்கமாக 2 அல்லது 3-ஐ எழுதி வைத்துக் கொண்டு அவற்றை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போங்கள்.

Prepare - ஆயத்தமாகுங்கள்

‘நாளையிலிருந்து தினமும் 30 நிமிட வாக்கிங்’ என்று தீர்மானித்தீர்களென்றால், அதற்கு ஆயத்தமாகவேண்டும். முந்தைய நாள் 1 மணிவரை விழித்திருந்தால், அதிகாலை வாக்கிங் சாத்தியமற்றதாகிவிடும். வாக்கிங் எங்கே செல்வது, எத்தனை நேரம் செல்வது, சரியாக ஒரே நேரத்தில் செல்லலாமா, இல்லை காலை மாலை என்று மாற்றி மாற்றிச் செல்லலாமா போன்றவற்றை உங்கள் மனநிலைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளுங்கள். ஆனால், இப்படி Prepare ஆகிவிட்டால், அதிலிருந்து பின்வாங்கக்கூடாது. அதற்காக இவற்றை அங்கங்கே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
 

Proceed - கடைபிடியுங்கள்.

திட்டமிட்டாச்சு.. ஆயத்தமாயாச்சு. அடுத்ததாக, அந்த சுபயோக சுபநாளில் ஆரம்பியுங்கள். ‘இன்னைக்கு விட்டுடலாம்.. நாளைல இருந்து..’ என்பதே வேண்டாம். ‘அப்படித் தள்ளிப் போடறேனே.. அதுக்கென்ன பண்ண?’ என்கிறீர்களா? உங்கள்  நண்பர்கள், அலுவலக ஊழியர்கள், வாட்ஸப், ஃபேஸ்புக் வகையறா எல்லாவற்றிலும் ‘நான் ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்’ ரேஞ்சில், ‘நான் நாளைல இருந்து வாக்கிங் போகப்போறேன்’ என்று தம்பட்டம் அடியுங்கள். 8 மணி ஆனால், அவர்களுக்கு அப்டேட் செய்வதற்காகவாவது போக ஆரம்பிப்பீர்கள். தினமும் உங்கள் நண்பர்களுக்கு வாக்கிங் புகைப்படம் பகிருங்கள். ‘இன்னைக்கு என்னாச்சு?’ என்று கேட்க ஆளிருந்தால்,  திட்டம் தானாக கடைபிடிக்கப்படும்.

Pursue - தொடருங்கள்.

மேற்சொன்னவற்றைத் தொடருங்கள், அவ்வளவுதான்.

இதை வாக்கிங்கிற்கு மட்டுமல்ல, இன்றைக்கு அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் என்றாலும் இந்தத் திட்டமிடல் அவசியம்.

அதற்கும் ஒரு திட்டமிடல் பார்ப்போம். இன்றைக்கு ஆறு வேலைகளை முடிக்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அவற்றை எந்த வரிசையில் முடிக்க வேண்டும் என்று வரிசைப்படுத்துங்கள். அதில் 4தான் இன்றைக்கு முடியும் என்று ப்ராக்டிகலாக முன்னரே கணிக்க முடியும் என்றால், வெல்.. ஆறையும் எழுதி, நான்கிற்கு கீழ் அடிக்கோடிடுங்கள். அதாவது, ‘ஆறு லட்சியம் - நான்கு நிச்சயம்’ என்ற கோட்பாடுதான். அதன்பிறகு அவற்றிற்கான நேரத்தைக் கணக்கிலெடுங்கள். இவற்றை ஒரு நோட் போட்டு ஒட்டிவையுங்கள்.  அதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் பின்பற்றுங்கள்.  

உதாரணமாக, டாஸ்க் ஒன்று, 12 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று இருந்தால், அதற்கு நடுவில் வேறெந்த வேலையும் செய்யாதீர்கள். அப்படி, அதைவிட முக்கியமானது வந்தால், டாஸ்க் 1-ஐ, 2 என்று மாற்றி, எடுத்த புதிய வேலையை முதலிடத்தில் எழுதி வையுங்கள்.   

வேலை முடிந்து கிளம்பும் முன், திட்டமிடல் எப்படி செயல்பாட்டிற்கு வந்தது என்று நீங்களே ‘ரிவ்யூ’ செய்யுங்கள். உண்மையாகவே, மீட்டிங் அல்லது இன்னபிற வேலைகளால் தள்ளிப்போனதென்றாலும் சரி, உங்கள் சோம்பேறித்தனம், அதிக நேர ப்ரேக்  இவற்றால் தள்ளிப் போனாலும் சரி.. தளர்வாக உணராதீர்கள். அவற்றையும் நோட் செய்து வைத்துக் கொண்டு அடுத்தநாள், தொடருங்கள். தொடர்ந்து 4 நாட்கள் இப்படி, திட்டமிடுதலுக்கும், செயல்பாட்டுக்குமான இடைவெளி எங்கே விழுகிறது என்று கண்டுகொள்ள ஆரம்பித்தீர்கள் என்றாலே போதும், அந்த இடைவெளி  தானாகக் குறையும். எந்தக் கணத்திலும் தாழ்வு மனப்பான்மை வேண்டாம். ஆனால், தவறுகள் தொடராமல் இருப்பது முக்கியம்! 

மிஸ்டர் K சொன்ன மீன் கதை!

பாதி எழுதிக் கொண்டிருக்கும்போதே அறைக்குள் வந்த மிஸ்டர் K என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஒரு காபி போட்டுக்கொண்டு வந்து வைத்துவிட்டு, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். 

3 மீன்கள்

“நேத்து நீ ப்ளானிங் பத்தி சொன்னதத்தான் எழுதிருக்கேன்.. எதாவது குட்டிக்கதை இருக்கா?” என்று கேட்டேன். 

சிரித்தபடி அருகே வந்து, எழுதியதைப் படித்துப் பார்த்தான்.

“சரிதான். ப்ளானிங் தப்பாப் போச்சுன்னா, பயந்துக்கறதோ, தொடர்ந்து முயற்சி செய்யாமயோ இருக்கத் தேவையில்லை. ஆனால், சுதாரிச்சுக்கறது ரொம்ப முக்கியம். நீ சொன்னமாதிரி, தினமும் திட்டமிடலுக்கும் அது செயலா மாறினதுக்குமான இடைவெளிகளை கவனிச்சாலே அது சாத்தியம்” என்றவன் குட்டிக்கதை சொல்ல தயாரானான்.

“ஒரு குளத்துல மூணு மீன்கள் இருந்துச்சுங்க. ஒரு மீன் பேரு,  ‘Plan ahead’, அடுத்ததோட பேரு, ‘Think fast’, மூணாவது மீன், ‘Wait and see’. ஒருநாள் மீனவன் குளத்துகிட்ட வந்து, ‘நாளைக்கு  மீன் பிடிக்கணும்’னு தன் நண்பன்கிட்ட பேசிட்டே  போறார். அத இந்த மீன் மூணும் கேட்டுடுது. ‘Plan ahead’, ‘அச்சச்சோ... நான் நாளைக்கு அடி ஆழத்துக்கு நீந்தப் போய்டுவேன்பா’ங்குது.  ‘Think fast’, அப்டி மாட்னா என்ன பண்ணணும்னு ஐடியா பண்ணுவேன்’னு சொல்லுது.  ‘Wait and see’, ‘ப்ச்.. நடந்தா பாத்துக்கலாம் போய்யா’னு அசால்டா இருக்கு.

அடுத்த நாள் வலை விழுந்ததும், அடி ஆழத்துல நீந்திகிட்டிருந்த Plan ahead தப்பிச்சுக்குது. பாக்கி ரெண்டும் மாட்டிக்குது. Think fast டக்னு வயித்தத் திருப்பிகிட்டு செத்தமாதிரி நடிக்குது. ”இதென்ன என்னமோ மாதிரி இருக்கு?”ன்னு மீனவன் தூக்க, டக்னு தண்ணில குதிச்சு ஓடிருது. Wait and see என்ன பண்ணன்னு தெரியாம, மாட்டிகிச்சு. அதுனால.....”

“ஓகே ஓகே... நல்லாவே புரிஞ்சது. திட்டமிடணும். அப்படி இல்லைன்னா, சமயோசிதமா யோசிச்சு, நம்மளைக் காப்பாத்திக்கணும். இல்லைன்னா காலிதான். அதானே” 

ஓகே... நீங்க எந்த வகை மீன்? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சக்ஸஸ் மீட்... பிரேக்கிங் நியூஸ்.. அ.தி.மு.க. - முடியலை குருநாதா மொமென்ட்ஸ்..! #VikatanFun

ஜம்மு-காஷ்மீரில், கல்யாணத்துக்கு இவ்வளவுதான் சமைக்கணும், இவ்வளவு பேர்தான் கல்யாணத்துக்கே வரணும்னுலாம் சட்டமாகவே போட்டிருக்காங்களாம். நம்ம ஊருல அப்படியே இன்னும் சில சட்டங்களைப் போட்டா 'முடியலையே குருநாதா..'னு இருக்குற சில மொமென்ட்ஸ்ல இருந்து மக்களைக் காப்பாத்த ரொம்ப உதவியா இருக்குமேனு நினைக்கத்தோணுது. அந்த லிஸ்ட்தான் இது.

 

திருமணம்

நாக்கைத்துருத்தி செல்ஃபி போடுற ட்ரெண்டெல்லாம் செத்து, நாக்கைத்துருத்தி பல வருஷம் ஆச்சு. இன்னமும் அதை ட்ரெண்டுனு நினைச்சு அப்லோடாதீங்க ஃப்ரெண்ட்ஸ்னு...னு இந்த அரைமணிநேரத்துக்கு அஞ்சு புரொஃபைல் பிக்சர் மாத்துற க்ரூப்கள்கிட்டே ஸ்ட்ரிக்டா ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும். எத்தன...

கிரைண்டர் இல்லாதப்போலாம் ஆட்டுக்கல்லுல மாவு ஆட்டிக்கிட்டு இருந்தவங்க இப்போ வீட்டுக்கு வீடு கிரைண்டர் வந்ததும் கடையில மாவு பாக்கெட் வாங்குற விஞ்ஞான உளவியலே இன்னும் புரியாம ஒரு பக்கம் இருக்கும்போது, வாங்கி வெச்ச மாவை வெச்சு.. வெச்சு.. வெச்சு செய்யுறதுக்கெல்லாம் நிரந்தரமா ஒரு தடையைப் போட்டுட்டுப் போனா நிம்மதி அடைவோமே ஃப்ரெண்ட்ஸ். அதையும் மீறிப்பண்னுனா அட்லீஸ்ட்  ஃபிரிட்ஜை தூக்கிட்டுப் போயி பிரிட்ஜுல இருந்து தள்ளிவிட்டுடுவோம்னாவது லைட்டா ஒரு ஆர்டரைப் போறபோக்குல போட்டுட்டுப்போனீங்கனா பலபேரைக் காப்பாத்தலாம்.

பிரேக்கிங் நியூஸ். என்ன சொல்ல ஏது சொல்ல. இதை எழுதிக்கிட்டு இருக்கும்போது கூட பின்னாடி பிரேக்கிங் நியூஸ்தான் ஓடிக்கிட்டு இருக்குது. போறபோக்கைப்பார்த்தா  பிரேக்கிங் நியூஸ் போடப்போறோம்ங்கிறதையே பிரேக்கிங் நியூஸா போட்டுடுவாங்க போல. ராத்திரியில இளையராஜா மியூசிக் காலையில யுவன்ஷங்கர்ராஜா மியூசிக்னு கேட்டுட்டு இருந்த மக்களெல்லாம் காலையும் மாலையும் இப்போ பிரேக்கிங் நியூஸ் மியூசிக்கை கேட்குற நிலைமை வந்துருச்சு. ஒருநாளுக்கு இத்தனை பிரேக்கிங்குகளைத்தான் போடணும்னு ஒரு சட்டத்தைப் போட்டுட்டுப் போனீங்கனா...

கல்யாணத்துக்கு இவ்வளவு ரெஸ்ட்ரிக்சன் போட்டது மாதிரி அப்படியே கல்யாணத்துக்கு இந்தப் பொண்ணுங்க போடுற ரெண்டு இஞ்ச் மேக்கப்புகளையும் கொஞ்சம் குறைச்சிட்டா அவங்களுக்கு நல்லதோ இல்லையோ மத்தவங்களுக்கு நல்லதாப் போகும். அதுலேயும்  கல்யாணப்பொண்ணைவிட கல்யாணத்துல கறி சோறு சாப்பிட வர்ற பொண்ணுங்கதான் ஏசியன் பெயின்டையே எடுத்து ஊத்துனமாதிரி மேக்கப்போட வர்றாங்க. அதுக்கும் ஏதாச்சும் லைட்டா ஒரு சட்டத்தை அமல்படுத்துனா... ஆங்க் அதேதான். (அவ்வளவு அப்பிக்கிட்டு வந்தும் இன்னைக்கு லைட் மேக்கப்லதான் வந்தேன்னு சொல்லுற மொமென்ட்டெல்லாம் இருக்குது பாருங்க.. அதுலாம் வேற ஏரியா.  கெரகத்த..)

படம் வந்த ரெண்டாவது நாளே சக்சஸ்மீட் வைக்கிறதைக்கூட தலையெழுத்துனு நினைச்சு ஏத்துக்கலாம். ஆனா இப்ப புதுசா சக்சஸ் மீட்டுகளையே வெச்சு முடிச்சிட்டுப் படத்தோட பேரை அறிவிக்கிற கொடுமையெல்லாம் இருக்குது பாருங்க. கொடுமையிலும் கொடுமையினா இதைத்தான் சொல்லணும். அதிரடியா ஒரு அறிவிப்போடு அள்ளிப்போட்டுக்கிட்டு போனீங்கனா அட்ராசிட்டீசெல்லாம் கொஞ்சம் குறையுமே பாஸ்..

அ.தி.மு.க

அப்புறம் இதைச் சொல்லியே ஆகணும். இந்த அ.தி.மு.க வுல மொத்தம்  எத்தனை அணிதான் இப்போ இருக்குது. யார் யார் எந்தெந்த அணியில இருக்குறாங்கனே தெரியலை. ஜெயலலிதாவுடைய பேரை வச்சிக்கிட்டே இன்னும் பலபேர் தனித்தனியா ஆரம்பிச்சாங்கனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.ஒருத்தரின் பேரைச்சொல்லி ஊருக்குள்ள இவ்வளவு பேருலாம் கட்சி ஆரம்பிக்காதீங்கய்யா..னு ஒரு சட்டத்தை மட்டும் போட்டீங்கன்னா இதுவரைக்கும் தனித்தனியா கட்சி நடத்திட்டு இருக்குறவங்களோட சேர்த்து, மக்களும் உங்களுக்கு இன்பாக்ஸுல வாழ்த்து சொல்வாங்க. செய்வீர்களா..?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்றைக்கும் ஏன் சுஜாதாவை மிஸ் செய்கிறோம் தெரியுமா? #Sujatha

சுஜாதா... இன்றைய இணைய உலகில், யார் இன்மையை நீங்கள் உணர்கிறீர்கள் என்று கேட்டால் சட்டென்று என் மனதில் தோன்றும் பெயர். “இல்லாதது நல்லதுதாண்டா. இருந்தா என்னையும் ட்ரோல் பண்ணிருப்பீங்க” என்ற அவரது கமென்ட்  அவர் இல்லாமலும் கேட்கிறது. 

சுஜாதா

நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ் பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார். இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார். அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்று முயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்துவிளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். அப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்தேன்” என்கிறார் சுஜாதா.

1963ல் முதல் சிறுகதை. அதற்குப் பிறகு நிற்காமல் ஓடிய குதிரை இது. எழுதாத துறைகள் இல்லை எனலாம். திருக்குறள், புறநாநூறு என்று இலக்கியங்கள் பற்றி எழுதியிருக்கிறார். கிட்னி ட்ரான்ஸ்ப்ளண்டேஷன் பற்றி நாவல் எழுதுகிறார். அதைப் படமாக்கும் விவாதத்தில், “டிஷ்யூ ரிஜக்‌ஷன்னா என்னன்னா..” என்று விஞ்ஞானம் பேசுகிறார். பீத்தோவனின் சிம்பனி பற்றி எழுதுகிறார். உலகப்படங்கள் பற்றி விவாதிக்கிறார். “இதெல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள்ல வந்ததுதானே.. உதாரணத்துக்கு..” என்று தாவுகிறார். லிமரிக் சொல்லிக் கொடுக்கிறார். கம்மிங்ஸ் (Cummings) கவிதைகள்தான் எனக்குப் பிடிக்கும் என்கிறார். பவுல்ஸ், லீகரி, வுட் ஹவுஸ், ஓ,ஹென்றி என்று ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி எழுதிப் பரவலாக்குகிறார். எம்.டி. ராமநாதனின் சங்கீதம், ஓஸிபிஸாவின் ஜாஸ் இசை என்று கலந்து கட்டி அடிக்கிறார். இவர் ஒரு கவிதையைப் பாராட்டினால், அவர்மீது புகழ்வெளிச்சம் விழுந்து, அவரும் அதற்கு முயன்று உழைத்து முன்னேறுகிறார்.  நாற்பது வயதுக்கு மேல்தான் சினிமாவுக்குள் எட்டிப் பார்க்கிறார். ஆனாலும் திரைமொழியை தன் வசமாக்குகிறார்.

இவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு கார்ட்டூன். ஒரு சிறுவன், சுஜாதா போல மீசை வைத்துக் கொண்டிருக்க ஒரு வரி கமெண்ட்: ‘சுஜாதா மீசை வெச்சுகிட்டா மட்டும் எழுத்தாளனாய்டுவியா?’    

வெறும் வார்த்தை விளையாட்டுகள் அல்லாமல், கணினி அச்சுமுறையில் ப்ரிண்ட் ஆகிக் கொண்டிருந்த காலத்திலேயே பல புதுமைகளைச் செய்தவர். ஒரு கதையில் கதாபாத்திரம் மாடிப்படியில் இருந்து கீழே இறங்குவதை..

         ற

                 ங் 

                          கி

                                   னா

                                             ன் - என்று எழுதினார். இன்னொரு கதை, முடிவில் ‘இப்போது இந்தக் கதையின் ஆரம்ப வரிகளைப் படியுங்கள்’ என்றிருக்கும். முடிக்கிற இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிற இடத்திற்கு வந்து.. தொடர்ந்து  இப்படி முடிவிலியாய் இருக்கும். மற்றொரு கதையில் ஒருவன் வீட்டுக்குள் வருவான்.

சுஜாதா

என்று வீட்டுக்குள்ளிருந்து குரல் வரும்..  அதற்கு வீட்டுக்குள் வருபவனின் பதில் இப்படி இருக்கும்: “அதிருக்கட்டும்.. இன்னும் சிரசாசனம் பண்ணி முடிக்கலயா நீ?”

அதுதான் சுஜாதா. 

இவருக்கும் வாசகர்களுமான பிணைப்பு அலாதியானது.  காகிதச் சங்கிலிகள் நாவலைப் படித்துவிட்டு, சிறுநீரக அறுவைசிகிச்சை பற்றி, தொலைபேசியில் இவரிடம் அரை மணிநேரம் பேசி தெளிவு பெறுகிறார் ஒரு வாசகர்.  மிடில் ஈஸ்ட் விமானநிலையத்தில் இவரை அடையாளம் கண்டுகொண்ட வாசகர் ஒருவர், ஓடிப்போய் அங்கேயே ஒரு ரேடியோவும், டேப் ரெகார்டரும் இணைந்த  ‘டூ-இன்- ஒன்’ வாங்கிப் பரிசாய்த் திணிக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையை மையமாக வைத்து எழுதிய ‘நகரம்’ சிறுகதையைப் படித்துவிட்டு அந்த மருத்துவமனையின் டீன், இவரிடம் கடிதம் எழுதி விசாரிக்கிறார். . ‘வஸந்தைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். எங்கிருக்கிறான் அவன்?” என்று சுஜாதாவுக்கு வந்த தந்திகள் நிறைய. பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றில் சுஜாதாவும், கமல்ஹாசனும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,  வந்த இளைஞரிடம், ‘கமல் உங்க ஆட்டோகிராஃபுக்காக வெய்ட் பண்றார்” என்றிருக்கிறார் சுஜாதா. அந்த இளைஞர், ‘இல்லை சார். எனக்கு உங்க ஆட்டோகிராப்தான் வேணும்” என்கிறார் சுஜாதாவிடம். 

சுஜாதா

இவர் எழுத்துக்கு சீரியஸான எதிர்ப்புகளும் நிறைய வந்ததுண்டு. இவரது நாவல் ஒன்றைப் படித்துவிட்டுத்தான் தன் தங்கை நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்தார் என்று அந்தப் பெண்ணின் அண்ணன் பெங்களூரு சென்று மிரட்டுகிறார். ஒரு நாவலில் இவரது கதாபாத்திரமான வஸந்த் குண்டடிபட, ‘அவனைக் காப்பாற்று... நீ வேண்டுமானால் போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொள்’ என்று ஒரு பெண் தந்தி அனுப்புகிறார். தொடர்கதையில்,  பிடிக்காத அத்தியாயம் வந்தால், இவருடைய கதையை, சுக்குநூறாகக் கிழித்து போஸ்டில் அனுப்புவார்கள். “வாங்கிப் படித்த அவருக்கு, நிச்சயம் கிழித்து அனுப்பவும் உரிமை உண்டு” என்பார் இவர். ஒருநாவலை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வர, நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி எழுதும்போது இப்படிச் சொல்கிறார்: ‘எனக்கு இடது கையில் எழுதிப் பழக்கம் இல்லை என்பதால் நிறுத்திக்கொண்டேன்”

இன்றைக்கு எழுதும் இளைய தலைமுறையிடம் எதாவது ஒரு வரியில், சிந்தனையில், உத்தியில் இருந்துகொண்டுதான் இருக்கிறார் சுஜாதா. சிறுகதை எழுத நிறைய உத்திகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்தார் சுஜாதா.

‘முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். ‘தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் ‘தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லை’ என்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு...’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.’

‘எதிர்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.’

இன்றைய கணினி யுகத்தில் ஏன் அவர் இன்மையை உணர்கிறேன் என்றால், இன்றைக்குப் பேசப்படும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் எளிய முறையில் அவரிடமிருந்து விளக்கங்கள் வந்து விழுந்திருக்கும்.  வாட்ஸப் வதந்திகளுக்கு சாட்டையடி பதில்கள் வந்திருக்கும். சட்டென்று தெறிக்கும் ட்விட்டுகள் இருந்திருக்கும். இவற்றின் எதிர்காலம் குறித்தும் பேசியிருப்பார். ஜிலேபி சுற்றும் வார்த்தை ஜாலமின்றி, எளிய முறையில் அறிவியலைக் கொண்டு சேர்த்திருப்பார். 

இவருக்கு எழுத்துதான் எல்லாம். யாரிடமாவது ஏதாவது பேசும்போது உருவாகிற சிறு பொறியை மூளைக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டே இருந்து, சரியான தருணத்தில் கதையாக்குவார். பலராலும் பாராட்டப்பட்ட, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ அப்படி உருவானதுதான். ‘ஒரு கிராமத்தில் நடைபெறும் மிஸ்ட்ரி ஒண்ணு எழுதுங்களேன்’ என்று பிரபலம் ஒருவர் சொல்ல, அதை மனதில் இருத்திக் கொண்டு, தொடர்கதையாக எழுதியதுதான் அந்த நாவல். அப்படி சுஜாதாவைக் கேட்டுக் கொண்ட பிரபலம்.. இளையராஜா. 

இன்றைக்கு சுஜாதாவின் நினைவுநாள். என்னைப் போன்ற பலருக்கு,  என்றைக்கும்தான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பறக்கும் பறவைகளை பார்ப்பதன் பயன்..!

பறக்கும் பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வுடனான ஆர்வம் பிறக்குமென பிரிட்டனின் எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Awesome-Birds-in-Rain-Wallpapers-HD-Pict

குறித்த ஆய்வின் மூலம் பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு, மன அழுத்தம், மனப்பதற்றம் மற்றும் சோர்வுகள் நீங்குவதோடு, ஆர்வமிகு புத்துணர்வு தன்மை ஒன்று உருவாகுமென தெரியவந்துள்ளது. மேலும் வீட்டைச் சுற்றி மரங்கள் இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்குமெனவும் கண்டறியபட்டுள்ளது.

Beautiful-flying-birds-desktop-wallpaper

இந்நிலையில் குறித்த ஆய்வு பற்றி கருத்து பகிர்ந்துள்ள, எக்ஸீடர் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் கோக்ஸ் குறிப்பிடுகையில் பறவைகளுடனும்,  இயற்கையை வளங்களுடனான வாழ்க்கைதான் உண்மையான மகிழ்ச்சியை தரக்கூடியது என்பதை கண்டறிவதற்காகவே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!

Priyanka Chopra's daring dress attracts more at Oscar red carpet

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. லா லா லேண்ட் படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

மூன்லைட் மற்றும் மான்செஸ்டர் பை தி ஸீ தலா மூன்று விருதுகளை வென்றன.

 

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் கலந்து கொண்டனர். ஆனால் தீபிகா ரெட் கார்ப்பெட் வரவேற்பில் பங்கேற்வில்லை. ப்ரியங்கா சோப்ரா அசத்தலான உடையில் கலந்துகொண்டார்.

வெள்ளை மற்றும் வெள்ளி நிறத்திலான கேடயம் போன்ற ஒரு வித்தியாச உடையை அவர் அணிந்து வந்திருந்தார். இந்த உடை அவரது அழகிய உடலை முன்பக்கமும் பின்பக்கமும் கவ்விப் பிடித்திருந்தது. பக்கவாட்டுகளில் திறந்தபடி, அவர் உடல் அழகைக் காட்டியது.

 


அவரது இந்த உடையும், கவர்ச்சியும் புகைப்படக் கலைஞர்களை அவர் பக்கமே இருக்க வைத்தது. வந்திருந்த விஐபிக்களும் ப்ரியங்காவை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

லவ்லி ப்ரியங்கா முதல் வாவ் ஜாக்கிஜான் வரை ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

லவ்லி ப்ரியங்கா முதல் வாவ் ஜாக்கிஜான் வரை ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

  • தொடங்கியவர்

ரியோ டி ஜெனெய்ரோ 2017 களியாட்ட விழா ஆரம்பம்

பிரே­ஸிலின் புகழ்­பெற்ற ரியோ டி ஜெனெய்ரோ களி­யாட்ட விழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

076202-01-04

076202-01-03

இந்த விழாவின் ஒரு பகு­தி­யான சம்பா நடன ஊர்­வ­லங்­களில் பங்­கு­பற்­று­வ­தற்கும் பார்­வை­யி­டு­வ­தற்கும் தினமும் 20 இலட்சம் பேர் ரியோடி ஜெனீரோ நகர வீதி­களில் திர­ளு­வது வழக்கம்.

076600-01-02

மத ரீதி­யான பின்­ன­ணி ­கொண்ட ரியோடி ஜெனெய்ரா களி­யாட்ட விழா 1723 ஆம் ஆண்டு முதல் வரு­டாந்தம் நடை­பெ­று­கி­றது. 'ரியோ ஊர்­வலம்', மற்றும் 'சம்பா ஊர்­வலம்' என அழைக்­கப்­படும் சம்பா நடன ஊர்­வ­லங்கள் கவர்ச்சி நட­னங்­க­ளுக்குப் பெயர் பெற்­றவை.

077054-01-02

இந்த நடன ஊர்­வ­லங்கள் சம்பா நடனப் பயிற்சிப் பாடசாலைகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை கடு­மை­யான போட்­டி­களின் ஒரு பகு­தி­யாகும். இந் நடனங்களுக்குப் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. மார்ச் முதலாம் திகதி வரை சம்பா ரியோ டி ஜெனெய்ரோ களி­யாட்ட விழா நடைபெறவுள்ளது.

076202-01-02

http://metronews.lk/

  • தொடங்கியவர்

 

கால்பந்து விளையாடும் புத்திசாலி வண்டுகள்

வண்டுகளுக்கு புதிய உத்திகளை கற்பிக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

  • தொடங்கியவர்

பழைய நண்பர்களை மறக்காத தோனி!

இந்திய அணிக்கு தோனி வருவதற்கு முன்பு ரயில்வேயில் பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். தற்போது, தோனி தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று ஜார்க்கண்ட்- சத்தீஸ்கர் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தாவில் நடந்தது.

Dhoni met his old friends

தோனியின் அதிரடி சதத்தால், அந்தப் போட்டியில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்தவுடன், காரக்பூரில் அவர் ரயில்வேயில் பணியாற்றிய போது பழகிய நண்பர்களை சந்தித்துள்ளார். ரயில்வே நண்பர்கள், உடன் தங்கியவர்கள், டீக்கடைக் காரர் என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

குறிப்பாக, அவர்களுடன் டின்னர் சாப்பிட்டுள்ளார் தோனி. இதையடுத்து, மனுஷன் மாறவே இல்லை என அவரின் நண்பர்கள் உருகியுள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுஜாதாவின்  இந்த பத்து கட்டளைகளை அறிவீர்களா இளைஞர்களே? #10RULES

எழுத்தாளர் சுஜாதா மறைந்த தினம் இன்று (27-02- 2008) . இன்றோடு அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன . எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு. அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும் மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும். அவர் இளைஞர்களுக்கு சொன்ன  பத்து கட்டளைகள் மிகப்பிரபலமானவை. அவற்றை நினைவு கூர்வோமா? 

சுஜாதாவின் 10 கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை.கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்.ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால்செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும்  மதிய ஷோ  போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண  வேண்டி வரும்.தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்திவேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்டதலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள்என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள்,மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். 

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய ஜனத்தொகையின்ஆறு சதவிகித  மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள். 

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம்.காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில்காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு  முக்கியம்

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள்.உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகதூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கையாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்கவேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில்  நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி... ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா

முனியாண்டி விலாஸ்

மிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது. இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ள வடக்கம்பட்டியில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதங்களில் ஒன்று கூடி முனியாண்டி கோயில் திருவிழாவை நடத்துவார்கள். முனியாண்டியை வழிபட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் என்னவென்று தெரியுமா? முனியாண்டி விலாஸ் புகழ் மண் மணக்கும் பிரியாணியே தான்.

இந்தாண்டு முனியாண்டி கோயில் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. ஊரை சுற்றி வயல். பழமை மாறாமல்  புதுமையும் கலந்த வீடுகள் என்று பளிச்சிட்டது வடக்கம்பட்டி. ஆண்டுதோறும் தை மாதத்தில் நடக்கிறது இந்தத் திருவிழா. இந்த நாளில் இந்தியா முழுக்க முனியாண்டி விலாஸ் வைத்திருப்பவர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி விடுகிறார்கள். திருவிழாவைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் சமூக வரலாற்றில் மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு என்று தனி இடமுண்டு. அசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் இது. இந்தத் தலைமுறையினரிடம் அசைவ உணவகங்கள் என்றால் கே.எப்.சி., அரேபியன் கபாப், டொமினோஸ் என வாயில் நுழையாத பெயர்களை சொல்வார்கள். அவர்களுக்கு முனியாண்டி விலாஸ் பற்றி தெரியுமா என தெரியவில்லை. அசைவ உணவகம் என்றால் முனியாண்டி விலாஸ் தான் என்ற நிலைமை இப்போது இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழா

குளிரூட்டப்பட்ட அறை, அழகிய கட்டமைப்பு, வித்தியாசமான தோற்றம், புரியாத பெயர்களில் உணவகங்கள் பெருத்து விட்டன. இது போன்ற பிரமாண்ட ஹோட்டல்கள் வருவதற்கு முன்பு, நம் மக்களை சுவையால் கட்டி போட்டவர்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்தான். .

இப்போதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் , ஆர்பாட்டமில்லாமல் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டமுள்ளது. நியாயமான விலை, வீட்டுச் சாப்பாடு போன்ற உணர்வு. கலப்படமில்லாத செய்முறை. காசுக்கு உணவு விற்றாலும் அதில் அறத்துடன் நடந்து கொள்ளும் விதம். இதுதான் இன்னும் அவர்களை இயங்க வைத்து வருகிறது.

இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலை நடத்துபவர்களில் கணிசமானவர்கள்,  வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். தங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்க வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் தான் காரணம் என நம்பும் அவர்கள், ஆண்டுதோறும் முனியாண்டி கோயிலுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு சமூகத்தினர் தை, மாசி மாதங்களில் தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.

"தினமும் தங்கள் ஹோட்டலில் நடக்கும் முதல் வியாபார பணத்தை அப்படியே சாமிக்கென்று என்று எடுத்து வைத்து விடுவோம். ஆண்டுதோறும் சேரும் மொத்த பணத்தை ஆண்டு முடிவில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடுவோம்.  எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதில் ஒரு ரூபாயை கூட எடுக்க மாட்டோம். அதில் தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்" என்கின்றனர் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்.

திருவிழாவில் முனியாண்டி சாமிக்கு வழிபாடு நடத்தி வழிபட்ட பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மண் மணக்கும் பிரியாணியும், இதற்காக நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகிறது. உற்சாகமாய் கொண்டாடுகிறார்கள் மக்கள்.

முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழா

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராமசாமி, ‘’நான் சென்னை பூந்தமல்லியில் ஹோட்டல் வைத்திருக்கிறேன். பெரிய விளம்பரம் இல்லாவிட்டாலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தேடி வந்து சாப்பிடத்தான் செய்கிறார்கள். நாங்கள் இன்னும் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை விற்பதில்லை. எல்லாமே கைப்பக்குவத்தில் உருவான மசாலாக்கள் மூலம் உணவு தயாரிக்கிறோம். கறிகளில் கலப்படமோ, கெட்டுப்போனதையோ பயன்படுத்த மாட்டோம். அந்த காலத்தில் எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது விவசாயத்தில் நல்ல வசதியாக இருந்த எங்கள் முன்னோர்கள், உணவு சமைத்துக்கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளார்கள். நீண்ட நாட்கள் இந்த அறப்பணியை செய்ததன் மூலம், ஊரிலுள்ள பலரும் சமையல் வேலையை கற்று கொண்டிருக்கிறார்கள்.

விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக பிழைப்பு தேடி பலரும் வெளியுர்களுக்கு சென்றார்கள். அதன் பின்பு சுப்பையா நாயுடு என்பவர் 1937 ல் காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து ராமரெட்டி என்பவர் கள்ளிக்குடியில் இரண்டாவது முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுக்கவும், மற்ற மாநிலங்களிலும் டெல்லி, மும்பையிலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் உருவாகின. எங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனியாண்டி விலாஸ் பெயருக்கு முன்பு மதுரையை போட்டுக்கொண்டோம். அதன் பின்பு மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பிரபலமானது. உணவு வழங்குவது புண்ணியம். அதற்கு பணம் வாங்கக்கூடாது என்றாலும், இக்கால பொருளாதாரச்சூழலில் இலவசமாக உணவு வழங்கமுடியாது. அதனால்தான் ஆண்டுக்கொரு முறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். அதை சாதாரண அன்னதானமாக இல்லமால் பிரியாணியாக கொடுக்கிறோம்.

முனியாண்டி விலாஸ்

தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ரெட்டியார் சமூகத்தினரும் இந்த அன்னதானத்தை செய்கிறோம். இரண்டு நாட்கள் சைவ அன்னதானம் வழங்கும் நாங்கள் மூன்றாம் நாளில் பிரியாணியை வழங்குகிறோம். எவ்வளவுதான் புதுப்புது பெயர்களில் ஹோட்டல்கள் வந்தாலும், முனியாண்டி விலாஸ் இருக்கும். அதுக்கு காரணம் வடக்கம்பட்டி முனியாண்டி சாமியின் அருள்தான்’’ என்றார்.

மலை போல குவித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், 120 ஆடுகள், 400 கோழிகளைக் கொண்டு, தங்களுக்கே உரிய கைப்பக்குவத்தில் பிரியாணி சமைத்து, சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அங்கேயே சாப்பிட்டும், பார்சல் கட்டியும் எடுத்து செல்கிறார்கள் மக்கள்.
பிரியாணி மணமுடன் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் பெயரும் அந்த வட்டாரம் முழுக்க பரவுகிறது.

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி... ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா

முனியாண்டி விலாஸ்

மிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது. இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ள வடக்கம்பட்டியில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதங்களில் ஒன்று கூடி முனியாண்டி கோயில் திருவிழாவை நடத்துவார்கள். முனியாண்டியை வழிபட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் என்னவென்று தெரியுமா? முனியாண்டி விலாஸ் புகழ் மண் மணக்கும் பிரியாணியே தான்.

இந்தாண்டு முனியாண்டி கோயில் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. ஊரை சுற்றி வயல். பழமை மாறாமல்  புதுமையும் கலந்த வீடுகள் என்று பளிச்சிட்டது வடக்கம்பட்டி. ஆண்டுதோறும் தை மாதத்தில் நடக்கிறது இந்தத் திருவிழா. இந்த நாளில் இந்தியா முழுக்க முனியாண்டி விலாஸ் வைத்திருப்பவர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி விடுகிறார்கள். திருவிழாவைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் சமூக வரலாற்றில் மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு என்று தனி இடமுண்டு. அசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் இது. இந்தத் தலைமுறையினரிடம் அசைவ உணவகங்கள் என்றால் கே.எப்.சி., அரேபியன் கபாப், டொமினோஸ் என வாயில் நுழையாத பெயர்களை சொல்வார்கள். அவர்களுக்கு முனியாண்டி விலாஸ் பற்றி தெரியுமா என தெரியவில்லை. அசைவ உணவகம் என்றால் முனியாண்டி விலாஸ் தான் என்ற நிலைமை இப்போது இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழா

குளிரூட்டப்பட்ட அறை, அழகிய கட்டமைப்பு, வித்தியாசமான தோற்றம், புரியாத பெயர்களில் உணவகங்கள் பெருத்து விட்டன. இது போன்ற பிரமாண்ட ஹோட்டல்கள் வருவதற்கு முன்பு, நம் மக்களை சுவையால் கட்டி போட்டவர்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்தான். .

இப்போதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் , ஆர்பாட்டமில்லாமல் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டமுள்ளது. நியாயமான விலை, வீட்டுச் சாப்பாடு போன்ற உணர்வு. கலப்படமில்லாத செய்முறை. காசுக்கு உணவு விற்றாலும் அதில் அறத்துடன் நடந்து கொள்ளும் விதம். இதுதான் இன்னும் அவர்களை இயங்க வைத்து வருகிறது.

இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலை நடத்துபவர்களில் கணிசமானவர்கள்,  வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். தங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்க வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் தான் காரணம் என நம்பும் அவர்கள், ஆண்டுதோறும் முனியாண்டி கோயிலுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு சமூகத்தினர் தை, மாசி மாதங்களில் தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.

"தினமும் தங்கள் ஹோட்டலில் நடக்கும் முதல் வியாபார பணத்தை அப்படியே சாமிக்கென்று என்று எடுத்து வைத்து விடுவோம். ஆண்டுதோறும் சேரும் மொத்த பணத்தை ஆண்டு முடிவில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடுவோம்.  எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதில் ஒரு ரூபாயை கூட எடுக்க மாட்டோம். அதில் தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்" என்கின்றனர் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்.

திருவிழாவில் முனியாண்டி சாமிக்கு வழிபாடு நடத்தி வழிபட்ட பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மண் மணக்கும் பிரியாணியும், இதற்காக நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகிறது. உற்சாகமாய் கொண்டாடுகிறார்கள் மக்கள்.

முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழா

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராமசாமி, ‘’நான் சென்னை பூந்தமல்லியில் ஹோட்டல் வைத்திருக்கிறேன். பெரிய விளம்பரம் இல்லாவிட்டாலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தேடி வந்து சாப்பிடத்தான் செய்கிறார்கள். நாங்கள் இன்னும் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை விற்பதில்லை. எல்லாமே கைப்பக்குவத்தில் உருவான மசாலாக்கள் மூலம் உணவு தயாரிக்கிறோம். கறிகளில் கலப்படமோ, கெட்டுப்போனதையோ பயன்படுத்த மாட்டோம். அந்த காலத்தில் எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது விவசாயத்தில் நல்ல வசதியாக இருந்த எங்கள் முன்னோர்கள், உணவு சமைத்துக்கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளார்கள். நீண்ட நாட்கள் இந்த அறப்பணியை செய்ததன் மூலம், ஊரிலுள்ள பலரும் சமையல் வேலையை கற்று கொண்டிருக்கிறார்கள்.

விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக பிழைப்பு தேடி பலரும் வெளியுர்களுக்கு சென்றார்கள். அதன் பின்பு சுப்பையா நாயுடு என்பவர் 1937 ல் காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து ராமரெட்டி என்பவர் கள்ளிக்குடியில் இரண்டாவது முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுக்கவும், மற்ற மாநிலங்களிலும் டெல்லி, மும்பையிலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் உருவாகின. எங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனியாண்டி விலாஸ் பெயருக்கு முன்பு மதுரையை போட்டுக்கொண்டோம். அதன் பின்பு மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பிரபலமானது. உணவு வழங்குவது புண்ணியம். அதற்கு பணம் வாங்கக்கூடாது என்றாலும், இக்கால பொருளாதாரச்சூழலில் இலவசமாக உணவு வழங்கமுடியாது. அதனால்தான் ஆண்டுக்கொரு முறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். அதை சாதாரண அன்னதானமாக இல்லமால் பிரியாணியாக கொடுக்கிறோம்.

முனியாண்டி விலாஸ்

தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ரெட்டியார் சமூகத்தினரும் இந்த அன்னதானத்தை செய்கிறோம். இரண்டு நாட்கள் சைவ அன்னதானம் வழங்கும் நாங்கள் மூன்றாம் நாளில் பிரியாணியை வழங்குகிறோம். எவ்வளவுதான் புதுப்புது பெயர்களில் ஹோட்டல்கள் வந்தாலும், முனியாண்டி விலாஸ் இருக்கும். அதுக்கு காரணம் வடக்கம்பட்டி முனியாண்டி சாமியின் அருள்தான்’’ என்றார்.

மலை போல குவித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், 120 ஆடுகள், 400 கோழிகளைக் கொண்டு, தங்களுக்கே உரிய கைப்பக்குவத்தில் பிரியாணி சமைத்து, சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அங்கேயே சாப்பிட்டும், பார்சல் கட்டியும் எடுத்து செல்கிறார்கள் மக்கள்.
பிரியாணி மணமுடன் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் பெயரும் அந்த வட்டாரம் முழுக்க பரவுகிறது.

http://www.vikatan.com

அரோகரா...அரோகரா....
இப்பிடியான நல்ல விசயத்தை புலம்பெயர் தேச கோயில்களிலையும் கொண்டு வரவேணும்.

சனம் வியாபாரம் வருமானம் எல்லாம் களைகட்டும்.

  • தொடங்கியவர்

இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஒன்றையாவது மிஸ் செய்திருப்பீர்கள்! #RareRajaSongs

இளையராஜா

 “இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை.  

அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 

1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? 

 

‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தில், இளையராஜா இசையில், இளையராஜாவே பாடிய பாடல். பாண்டியன் நடித்திருக்கிறார். கண்ணைமூடிக் கொண்டு கேட்க வேண்டிய பாடல். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் ‘கண்ணை மூடிட்டுக் கேட்கலாம்ப்பா’ ரகம்தான். ஆனால், இங்கே எந்த அர்த்தம் என்பது வீடியோ பார்த்தால் தெரியும். அருமையான மெலடி.  ‘முகவரி வாங்கிக் கொண்டோம்.. முகங்களைத் தாண்டிச் சென்றோம்’ என்ற அருமையான வரிகள் எல்லாம் உண்டு. சரணத்தில் ராஜாவின் ரமணமாலையின் ‘சதா சதா உனை நினைந்து நினைந்து ’ பாடலை நினைவு படுத்தும் மெட்டு.  இரண்டாவது இடையிசையின் புல்லாங்குழல்.. டிபிகல் ராஜா ட்ரீட்!

 

2.   நீர்வீழ்ச்சி  தீ முட்டுதே.. தீகூட குளிர்காயுதே.. 

’என்னது.. இந்த மெட்டுல எத்தனை பாட்டுதான் இருக்கு!’ என்று உங்களில் பெரும்பாலோர் ஆச்சர்யப்படப்போவது உறுதி. ஆம்.. ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலின் அதே  மெட்டு. அறிவுமதி வரிகள். அதெப்படி ஒரே மெட்டு ரெண்டு படத்துக்கு என்றால், மலையாள தும்பி வா’ பாடல் எல்லார் மனசையும் கொள்ளையடிக்க ‘அதே மெட்டுல போடுங்க’ என்று கேட்டிருப்பார்கள் போல. அப்படி டிராவலான மெட்டு, தெலுங்கில் போடப்படுகிறது. அந்தப்படம், 1988ல் கண்ணே கலைமானே என்ற பெயரில்  டப்பிங் ஆக, நமக்கு லக்கி ப்ரைஸாக...  அதே மெட்டில்   இன்னொரு பாட்டு.  இதுவும் எஸ்.ஜானகியின் மெஸ்மரிசக் குரல்தான். அறிவுமதியின் வரிகள் அத்தனை அழகு. இடையிசைகளில் அதே சங்கத்தில் பாடாத பாடலின் வாசனைதான். இந்தப் பாடலின் மெட்டுக்கு, எத்தனை விதமாகப் போட்டாலும் கேட்கலாம்தானே.. அந்த தைரியம்! ம்ம்ம்.. நடத்துங்க ராஜா.. நடத்துங்க!  

3. தூரத்தில் நான் கண்ட உன்முகம்

நிழல்கள் (1980) படத்தில், இது ஒரு பொன்மாலைப் பொழுது, மடைதிறந்து, பூங்கதவே பாடல்கள்தான் ஹிட். ஆனால் இது, ராஜா ரசிகர்கள் பலரின் ஃபேவரைட்.   என்ன ஒரு பாடல் இது! எஸ்.ஜானகிக்கு குரல் அப்படியே இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்.  பல்லவி முடிந்து, முதல் இடையிசையில் வயலின்கள் விளையாட்டு. தொடர்ந்து கோரஸ். வீணை. இசைக்கோர்ப்பு என்பது என்னவென்று பாடமே எடுக்கலாம். சரணத்தில் ஜானகியின் ஆலாப், கண்மூடிக் கேட்டால் கண்ணீரே வரும். ‘மீரா பாடும் இந்தப் பாடலைக் கேட்டு வரவில்லை என்றால்.. என்னடா கண்ணன் நீ’ என்று கேட்கத் தோன்றும். இரண்டாம் இடையிசை கொஞ்சம் பதற்றமான ஸ்பீட் எடுத்து, மீண்டும் வயலினில் அமைதியுறும். இரண்டாம் சரணம்.. வேறு மெட்டு. எங்கெங்கோ திரிந்து, அமைதியாகி... வேற லெவல் பாட்டு பாஸ் இது!

4. வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்

ராஜாவும், எஸ்.பி.பி-யும் சேர்ந்து பாடிய பாடல். பாட்டு பாடவா (1995) படம். இளையராஜாவின் குரல்...   ரகுமானுக்கு! ஆம், நடிகர் ரகுமான் பாஸ்.  அப்ப, எஸ்.பி.பி.குரல் யாருக்கு என்று தெரியாதவர்கள் கேட்கலாம். எஸ்.பி.பிக்குதான். அவரும், ரகுமானும் இணைந்து நடித்த படம். பாடலின் சூழலில் ராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் போட்டி இருக்கும். ஆனால், பாடலில் இருவருக்குமான நட்பு தெரியும். அப்படி ஒரு அசால்டாக, தோழமையாக, நேர்த்தியாக பாடியிருப்பார்கள் இருவரும்.  இசையைப்   பிரிக்கும், டெக்னிகல் விற்பன்னர்கள் இருந்தால்.. முதல் சரணத்தின் தபேலாவை பிரித்துக் கேளுங்கள். பித்துப் பிடிக்க வைக்கும்.  கடைசி பல்லவியின்போது, ‘வில..கிடு’ என்றொரு சங்கதி போடுவார் எஸ்.பி.பி. ப்ச்.. தெய்வமே!     

5.  நீலவேணி அம்மா நீலவேணி

 சாமி போட்ட முடிச்சு 1991. வந்த புதிதில், டீக்கடையெங்கும் கேட்டுக் கொண்டிருந்த பாடல். மலேசியா வாசுதேவன், சித்ரா பாடிய பாடல்.  ஒரே நேர்கோட்டில் செல்லும் இசைதான். பல்லவி ஒரு ஜானரும், சரணம் ஒரு ஜானருமாக இருக்கும். பல்லவி  பெப்பியாக இருக்கும். சரணத்தில் நல்ல மெலடியாக மாறும். இரண்டாம் சரணத்தில் மலேசியாவின் ஆளுமையை நிச்சயம் ரசிக்க முடியும். நல்லதொரு மெட்டு.   

 

6. மங்கை நீ மாங்கனி

இன்னிசை மழை என்றொரு படம். 1992ல் வெளிவந்தது. ஷோபா சந்திரசேகர் இயக்கம். அந்தப் படத்தின் பாடல்தான் இது. கேசட் வாங்கி, முதல்முறை கேட்டபோது, சரணத்தின்போது கத்தியது இன்னும்  ஞாபகம் இருக்கிறது. காரணம்; எஸ்.என். சுரேந்தர் பல்லவியில் ஆரம்பிக்கும். இடையிசை முடிந்து  சரணத்திலிருந்து ராஜா குரல்! தபேலா விளையாடும் இன்னொரு பாடல்.  சரணத்தின் இரண்டிரண்டு வரிகளுக்கும் தபேலா இசை மாறும். கடைசி இரண்டு வரிகளில் மெட்டு அருவி போல விழும்.  இரண்டாவது சரணத்தில் ‘பா... மாலை சூட்டி’ சங்கதியும், ‘எங்கேயும் உன் தோற்றம்’ பாடும்போது ஒரு மயக்கமும் ஸ்பெஷலாக இருக்கும். கேட்டுப் பாருங்கள். அதே போல, ‘ தாத்ததா.. ராத்ததா... தராரா.. தராரா....’ என்று வரும்  பாடலின் எண்டிங்.. என்னமோ சொல்லுவாங்களே.. ஆங்... சான்ஸே இல்ல!   

7. தாலாட்டும் பூங்காற்று

கோபுர வாசலிலே (1991) படத்தில் ப்ரியசகி, தேவதை போலொரு பாட்டெல்லாம் கேட்டுத் தீர்த்திருப்பீர்கள். இந்தப் பாடல், ஒருபடி அதிகமாக  கொண்டாடப்படவேண்டிய பாடல்.  ராஜா ரசிகர்களின் ஃபேவரைட். முன்னரே சொன்னது போல புல்லாங்குழல் துவக்கத்திலேயே இழுக்கும். எஸ்.ஜானகியின் குரல். இடையிசையில் வயலின் விளையாடும். சரணம் ஆரம்பித்ததும் தபேலா. ஒவ்வொரு வரி முடிவிலும் புல்லாங்குழல். அங்கங்கே மாறும் தபேலா இசை. கூடவே வரும் வயலின். சரணம் முடியும்போது, தாளக்கட்டு மாறி.. நின்று தொடரும் தபேலா.   பாடலின்போது எந்த இசைக்கருவியை எங்கே நிறுத்த வேண்டுமென்பது கனகச்சிதமாய் தெரிந்தவர்தானே ராஜா. இதில் அதை ரசிக்கலாம். இரண்டாம் இடையிசை முடிந்து, சரணம் தொடங்கும் முன் தபேலா இசை.. டக்கென்று ஆரம்பிக்கும். அட்டகாசம் பண்ணியிருப்பார்.

8. மாதுளங்கனியே.. நல்ல மலர்வனக்கிளியே.... 
 
இதுவும் சாமி போட்ட முடிச்சு -தான். இளையராஜா - எஸ்.ஜானகி குரல்கள். இன்னொரு ‘கண்ணை மூடிக்கொண்டு கேட்கலாம்பா’ பாடல். துள்ளலாக ஆரம்பிக்கும் இசை முடிந்ததும், ஆரம்பிக்கும் ராஜா குரல். தபேலா இசை கலக்க, முதல் இடையிசையில் புல்லாங்குழல் வசீகரிக்கும். சரணத்தின் மெட்டும், தபேலா விளையாட்டும் இன்னும் வசீகரம். எஸ்.ஜானகி, சிரிப்பு, ஆலாப் என்று புகுந்து விளையாடும் பாடல்.   

 

9. ஏஞ்சல் ஆடும் ஏஞ்சல்   

இந்த லிஸ்டின், முதல் பாடலை, பெரும்பாலானோர்  கேட்டிருக்க மாட்டீர்கள். அதே போல, பெரும்பாலானோர் கேட்காத இன்னொரு செம சர்ப்ரைஸ் சாங் கடைசியாக இருக்க வேண்டும் என்று இதை வைத்திருந்தேன்.  1986ல் வெளியான நானும் ஒரு தொழிலாளி படப்பாடல். முதன்முறை நான் கேட்டபோதே, ‘எப்டி இதை மிஸ் பண்ணினேன்’ என்று நினைத்த பாடல். அந்தப் புல்லாங்குழல்  ஆரம்பம், நிச்சயம் உங்களை இழுக்கும். வளையோசை, பனிவிழும், இந்தப்பாடல் என்று புல்லாங்குழல் ஆரம்பத்தில் இழுக்கும் பாடல்கள் என்று ஒரு லிஸ்டே போடலாம். பி.சுசீலா குரல். அப்படி ஒரு ஸ்லோ மெலடி.  1.12ல் துவங்கும் சாக்ஸஃபோன்  இடையிசை   உங்களை மயக்கவில்லை என்றால்.... இல்லை என்றால் என்ன.. மயக்கும். கேட்டுப்பாருங்கள். அதைத் தொடர்ந்து வரும் ஜலதரங்க பாணி  கீபோர்ட் இசையும்.. சரணத்தின் மெட்டும்.. ‘ ராஜா சார்..  ஏன் இப்படி மயக்கறீங்க’ என்று கேட்க வைக்கும்.  உடனே டவுன்லோட் பண்ணி, ஃபேவரைட் லிஸ்டில் வைக்கச் சொல்லும் பாடல். 

வெளிநாடுகளிலேயே இவர் பாடலை யாரென்று தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பாடல்கள் போட்டால் என்னதான் செய்வது!  முன்னரே சொன்னது போல, பெரும்பாலானவர்கள் நிச்சயம் ஒரு பாடலையாவது மிஸ் செய்திருப்பீர்கள். ஹானஸ்டாக கமெண்டில், இந்த லிஸ்டில் எந்தப் பாடலை முதன்முறை கேட்டீர்கள் என்று சொல்லுங்களேன்.. ப்ளீஸ்!

  • தொடங்கியவர்

ஆஸ்கர் நாயகனுக்கு கை தட்டாத நாயகி.. காரணம் இது தான்!

ஆஸ்கர் 2017 விருது விழாவில் ’Manchester By The Sea’ படத்தின் நாயகன் கேசி அஃப்லெக் சிறந்த நடிகருக்கான விருது பெற்றபோது அரங்கே அதிரும்படி கைதட்டல் ஒலி எழுந்தது. ஆனால் அவருக்கு விருது வழங்கிய நடிகை ப்ரி லார்சன்  (Brie Larson) மட்டும் கை தட்டவில்லை.

My aesthetic: Brie Larson not clapping for literal trash hole casey affleck pic.twitter.com/Ci5LWXLkCr

— Tyler Struble (@tyler_struble) February 27, 2017

கடந்த 2010-ம் ஆண்டு சக நடிகைகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கேசி மீது குற்றம்சாட்டப்பட்டதே லார்சன் கை தட்டாததற்கு காரணம். கேசி மீது பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் அவரை எப்படி ஆஸ்கர் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கலாம் என சர்ச்சை எழுந்தது. தற்போது அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கியதால் நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவருக்கு விருது வழங்கிய நடிகை பிரை லார்சன் கை தட்டாமல் அமைதியாக நின்றதை பலர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

Brie Larson

 ’Room’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ப்ரி லார்சன். இத்திரைப்படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாக நிற்கும் வக்கீலாக பிரை லார்சன் நடித்திருப்பார். இத்திரைப்படத்துக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட கேசி விருது பெற்றபோது கை தட்டாமல் அமைதியாக நின்று தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிப்ரவரி 30 என்ற தேதி இருந்த வரலாறு தெரியுமா?

பிப்ரவரி 30

இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும். நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா???

புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வந்ததாம். அந்தக் காலண்டரை வைத்து, அதற்குப் பின் வந்த செம்பு காலத்தில் எகிப்த்தியர்களும் சுமேரியர்களும் நிலவின் சுற்றுவட்டப்பாதையைப் பொறுத்தும், அது பூமியை சுற்றி வருவதைப் பொறுத்தும் 29 3/4 நாள் என்பதை ஒரு மாதமாக கணக்கிலிட்டு பின்பற்றி வந்தனர். `Moonth` என்ற வார்த்தை மருகி ``Month`` என்றானது என்கிறது வரலாறு.

பிறகு, கி.மு.45 வந்த ஜூலியஸ் சீஸர், மீதமுள்ள 6 மணி நேரத்தை சரிசெய்ய லீப் ஆண்டு என்று ஒன்றை கொண்டுவரலாம் என்று தீவிர ஆலோசனைகளில் இறங்கினார். 4 வருடத்துக்கான கால் நாள்களை சேர்த்து ஒரு நாளாக பிப்ரவரியில் 29 நாட்கள் கொண்டு லீப் ஆண்டு என்ற முறையை கொண்டுவந்தார். ஒரு சில காலங்கள் இந்த முறை காலண்டரையே மக்கள் பின்பற்றி வாழ்ந்து வந்தனர். இந்த காலண்டர் முறை தவறு என்று பதிமூன்றாம் போப் கிரிகேரியின் கூட்டம் குற்றம் சொல்ல, மக்கள் எதைப் பின்பற்றுவது என்று குழம்பி இருந்தனர். இவர் கூறியது என்னவென்றால், ஒரு வருடத்தை நானூற்றால் வகுத்தால் மீதம் வரக்கூடாது, அவ்வாறு வருமெனில், அதுவே, லீப் ஆண்டு என்று 1582ல் உறுதி செய்தார்.

பிப்ரவரி 30

இவர் கணிப்புடைய காலண்டர் மதச்சார்புடையது என்று மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த கிரிகேரியன் காலண்டரை உலகம் முழுக்க பின்பற்ற வேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது. அப்போது, ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் மக்கள் பின்பற்றி வந்த காலண்டரும் இந்தக் காலண்டரும் முரண்பட்டவையாக தெரிந்தது. அவர்களுக்கு அன்று அக்டோபர் 4 (வியாழன்),1582 அடுத்த நாள் இந்த கிரிகேரியன் காலண்டரை அமல்படுத்திய பின் மறுநாள் அக்டோபர் 15 (வெள்ளி), 1582 ஆக அமைகிறது. இதனால், அம்மக்களுக்கு 11 நாள் சம்பளம் கிடைக்காமல் போவதால் `இந்த முறை எங்களுக்கு வேண்டாம்` என்று போராட்டம் வலுப்பெற்ற நிலையில் இருந்தது. அதே போல், 1752ல் இந்த காலண்டரின் முறை அமல்படுத்திய பிறகு, பிரிட்டனிலும் இவர்கள் பின்பற்றிய காலண்டரை விட12 நாட்கள் முன்னால் சென்றது கிரிகேரியன் காலண்டர். ஆக, அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன.  

1700 முதல் ஸ்வீடன் நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வந்தது. எந்தக் காலண்டர் முறையை பின்பற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர் மக்கள். சிலர் கிரிகேரியன் காலண்டருக்கு முழு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் ஆதரவும் தெரிவித்தனர். அதன்பின், மக்களின் எதிர்ப்பினால், 1712-ம் ஆண்டு தங்களுடைய பழைய காலண்டருக்கே சென்றார்கள் ஸ்வீடன் மக்கள். இதனால், 2 நாட்கள் இடித்தது. இந்த காரணத்தில் 1712-ம் ஆண்டில் மட்டும் ஸ்வீடன் மக்கள் காலண்டரில் பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இடம்பெற்றது. இதை வரலாற்றின் ஆச்சரியம் என்றே சொல்லலாம். அவர்கள் மீண்டும் 1753-ம் ஆண்டு கிரிகேரியன் காலண்டருக்கு மாறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி வரலாற்றில் இடம்பிடித்தது, மறைந்த சுவடாக மாறிவிட்டது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கேர்ள்ஸ்க்கும் செல்ஃபிக்கும் அவ்ளோ பெரிய பந்தம் இருக்கு..எவ்ளோ?!

 

selfie


து அக்மார்க் ஆன்லைன் உலகம். கன்ஃப்யூஷன் ஆகாதீங்க. எப்படினு சொல்றேன். காலையில தூங்கி எழுந்ததும், (ஆமா தூங்குன பிறகு எழுந்துக்க தானே செய்யணும். மேல..மேல..)
வெயிட் அவசரப்படாம கேளுங்க!. தூங்கி எழுந்ததும் ரெண்டு கைகளையும் பொத்துனாப்ல கண்கள் மேல வச்சு லைட்டா கசக்கிட்டு சோம்பல் முறிச்சிட்டு பல்லு வெலக்குறோமோ இல்லையோ..ஆனா சத்தமே இல்லாம கிச்சனுக்குள்ள நுழைஞ்சு காபியை குடிக்குறது தானே காலை எழுவதன் உலக வழக்கமா இருக்கும்?
ஆனா பாருங்க.. இதெல்லாம் ஆஃப்லைன் வாழ்க்கை. இதுதான் நிஜமும் கூட!. ஆனா ஆன்லைன் உலகில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கால் நம் கேலரியை நிரப்பும் அழகிய கேர்ள்ஸின் செல்ஃபிக்கள் அப்படியா சொல்கின்றன?. இல்லவே இல்லை.
’ராஜா ராணி’  படத்தில்  நைட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பல் தேய்த்துக் கொண்டே குத்தாட்டம் போடும் நஸ்ரியா போல தான் காலை நேரங்கள் பெரும்பாலும் பரபரப்பா இயங்கிட்டு இருக்கும்.  அதுக்கு நடுவுல ஆவி பறக்கும் காபி கப்போடு, காஜல் பூசிய அழகிய கண்களோடு, லிப்ஸ்டிக் மினுக்கும் பிங்கி உதடுகளோடு எப்படி இப்படியெல்லாம் செல்பி எடுத்து அனுப்ப முடியும்னு ஆச்சர்யப்பட்டீங்கனா, டோண்ட் வொர்ரி. சின்ன டெக்னிக் தான். ஆல்ரெடி குடிச்சு முடிச்ச காலி காபி கப், டிரஸிங் டேபிள் பக்கத்துல தான் இருக்கும். அதை அப்படியே அங்கேயே வச்சுட்டு, ஆற அமர குளிச்சிட்டு பிறகு லைட்டா மேக்கப் கூட்டிக் கொண்டிருக்கும் போதே கனக்கச்சிதமாக 10 வித்யாசமான செல்பிகளை பக்காவா எடுத்து தள்ளிவிட வேண்டும். அதுல ஒன்னு காலியாக இருக்கும் காபி கப்பில் காபி குடிக்குற மாதிரி, அப்புறம் டெடி பியர் வச்சு தூங்குற மாதிரியும் உடனுக்குடன் எடுத்துக் கொண்டால் இரவு குட்நைட் சொல்லும் போதும் மேக்கப் கலையாமல் பத்திரமாக கேலரியில் நிறையலாம்.

சரி ..காபி குடிக்கும் செல்ஃபிக்கும் டெடி பியர் செல்ஃபிக்கும் நடுவுல எடுத்த மத்த 8 செல்ஃபிக்களும் என்னாச்சுனு கேட்கணும்னு தோணனுமே.. கையில புத்தகம் வச்சு தீவிரமா வாசிக்குறது போல, பொட்டு வைக்கிறது போல, ஹெட்செட் போட்டுட்டு பாட்டு கேக்குறது, இப்படி பல கோணங்கள்ல எடுத்த அவற்றை கால இடைவெளிகள் விட்டு புதிதாக எடுத்தது போலவே அப்லோடு செய்து பெருமை தேடிக் கொள்ளலாம்.
இதனால் ஆகச்சிறந்த பயன் என்ன என்று கேட்கிறீர்களா...காலை முதல் மாலை வரை வந்து சேரும் லைக்குகள் அந்த நாள் முழுவதையுமே ஆக்குமே கூல்!

 

selfie

 

செல்ஃபிக்களில் பல வகைகள் உண்டு. பசங்க எடுப்பதற்கும் பொண்ணுங்க எடுப்பதற்கும்  நிறைவே வித்யாசங்கள் இருக்கு. காலை எழுந்ததும் டாப் ஆங்கிளில் எடுத்த மார்னிங் செல்ஃபியை குரூப் ஷேரிங் செய்தால் அந்த நாள் இனிய நாளாகும் என்கிறது செல்போன் ஜோதிடம்.

 யாரேனும் பார்க்கிறார்களா என பார்த்துவிட்டு லாகவமாய்  லெக் பீஸை சாப்பிடுவது ஆஃப்லைனில் நிஜம் என்றால் ,  ஃபோர்க்கில் கொத்தி  நூடுல்ஸ் சாப்பிடுவது, உதடுகளை மட்டும் லைட்டாக டச் செய்யும்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவது, அப்படியே உதடுகளைக் குவித்து ஸ்ட்ராவில் ஜூஸ் குடிப்பது என சிந்தாமால் சிதறாமல் செல்ஃபி எடுப்பதில் கேர்ள்ஸை யாரேனும் அடிச்சுக்க முடியாது. இதுவே பசங்க என்றால் ஈட்டிங் பிரியாணி செல்ஃபிகளை அதிகமாய் பார்க்கலாம் ரைட்டா?!

செல்ஃபி

 

செல்ஃபி என்பது என்ன?  செல்போனை வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது மட்டும் தானா?. ஆன்லைனுக்கு மட்டுமல்ல ஆஃப்லைனுக்கும் செல்ஃபிகள் எப்படி உதவுதுனு பாக்கலாமா? உதாரணத்துக்கு , காலைல நெத்தியில பொட்டு வைக்க மறந்துட்டோம்னு வைங்க...என்ன பொட்டு வைக்கலையானு யாராவது கேட்டா ஹாண்ட்பேக்ல இருக்குற மினி மிர்ரரை தேடுவதெல்லாம் அதரப் பழைய ஸ்டைல் . செல்போனின் ஃப்ரெண்ட் கேமராவை ஓபன் செய்து டக்கென பொட்டு வைத்துக் கொண்டு கூடவே ஒரு செல்ஃபியை கிளிக் செய்து ஆஃப்லைனில் நமக்கு நாமே ரசித்துக் கொள்வது தான் இப்போது புது ஸ்டைல்.

அப்புறம் இதோட எல்லாம் முடிய போறதில்லை. பில்லியன்ல போனா செல்பி, ரெஸ்டாரண்ட் போனா செல்பி, ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்தா செல்பி,கோவிலுக்குப் போனா செல்பி, பீச்சுக்குப் போனா செல்பி,டெடிபியர் செல்ஃபி, தியேட்டர் செல்ஃபி, டிராவல் செல்ஃபி, படிச்சா செல்ஃபி, பாடுனா செல்ஃபி, சமைச்சா செல்ஃபி, நின்னா செல்ஃபி, நடந்தா செல்ஃபி, உட்கார்ந்தா செல்ஃபினு அட்ராசிட்டீஸ் ஓவர் லோடு!. கேர்ள்ஸையும் செல்ஃபியையும் பிரிக்கவே முடியாது. அவ்ளோ பெரிய பந்தம் இருக்கு. எவ்ளோவா?!
இதோ இப்ப மூச்சு வாங்குதுல்ல...அவ்ளோ!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

பெப்ரவரி – 28

 

1710 : சுவீ­டனில் ஆக்­கி­ர­மிப்பு முயற்­சியில் ஈடு­பட்ட டென்மார்க் படைகள் ஹெல்­சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவீ­டியப் படை­களால் தோற்க­டிக்­கப்­பட்­டனர்.


1784 : ஜோன் வெஸ்லி மெத­டிஸ்த திருச்­ச­பையை ஆரம்­பித்தார்.


1844 : யூ.எஸ்.எஸ். பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்­தப்­பட்ட துப்­பாக்கி வெடித்துச் சித­றி­யதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்­கிய அமெ­ரிக்க அமைச்­சர்கள் உட்­படப் பலர் கொல்­லப்­பட்­டனர்.


varalaur21854 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் குடி­ய­ரசுக் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது.


1897 : மட­கஸ்­காரின் கடைசி அர­சி­யான மூன்றாம் ரன­வ­லோனா பிரெஞ்சுப் படை­க­ளினால் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1922 : எகிப்தின் சுதந்­தி­ரத்தை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.


1928 : இந்­திய விஞ்­ஞானி சி.வி. ராமன், “ராமன் விளைவை” கண்­டு­பி­டித்தார்.


1935 : வொலஸ் கரோதேர்ஸ் என்­ப­வ­ரினால் நைலோன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1942 : இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் யூஎஸ்எஸ் ஹுஸ்டன் என்ற கப்பல் இந்­தோ­னே­ஷி­யாவின் சுந்தா நீரி­ணையில் இடம்­பெற்ற போரில் ஜப்­பா­னினால் மூழ்­க­டிக்­கப்­பட்­டதில் 693 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1947 : தாய்­வானில் அர­சுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறி­ய­டிக்­கப்­பட்­டது. 30,000 பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர்.


1953 : ஜேம்ஸ் வட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்­ஏயின் இர­சா­யன அமைப்பைக் கண்­டு­பி­டித்­த­தாக அறி­வித்­தனர்.


1958 : அமெ­ரிக்­காவின் கென்­டக்கி மாநி­லத்தில் பாட­சாலைச் சிறு­வர்­களை ஏற்றிச் சென்ற பஸ், லொறி ஒன்­றுடன் மோதி ஆற்­றுக்குள் வீழ்ந்­ததில் 26 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.


1975 : லண்­டனில் மூர்கேட் ரயில் நிலை­யத்தில் இடம்­பெற்ற புகை­யி­ரத விபத்தில் 112 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1986 : சுவீடன் பிர­தமர் ஓலொஃப் பால்மே, ஸ்டொக்ஹோம் நகரில் நள்­ளி­ரவில் தனது மனை­வி­யுடன் திரை­ய­ரங்­கி­லி­ருந்து வீடு நோக்கி நடந்து சென்­ற­போது சுட்டுக் கொல்­லப்­பட்டார்.


1991 : முதலாம் வளை­குடாப் போர் முடி­வுற்­றது.


1998 : கொசோ­வோவில் கொசோவோ விடு­தலை இரா­ணு­வத்தின் மீது சேர்­பியக் காவல்­து­றை­யினர் தாக்­கு­தலைத் தொடுத்­தனர்.


2002 : இந்­தி­யாவின் அஹ­ம­தா­பாத்தில் இடம்­பெற்ற மதக் கல­வ­ரத்தில் குறைந்­தது 55 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2007 : புளூட்­டோவை நோக்கி ஏவப்­பட்ட நியூ ஹரைசன்ஸ் தானி­யங்கி விண்­கலம் வியாழனை அண்மித்தது.


2012 : ஈராக்கின் அல் ஹிலாஹ் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 127 பேர் உயிரிழந்தனர்.


2013 : பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

 

"ஆப்பிளில் இருந்து காதுகள் தயாரிக்கும் அதிசயம்"

உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என்கிறார் கனடா நாட்டு விஞ்ஞானி.


சேதமடைந்த மனித செல்களுக்கு பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களை, மாற்று மனித உடலுறுப்புகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது மட்டுமல்ல அதிக செலவு பிடிக்கக்கூடியது.


கனடாவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி செலவுகுறைந்த மாற்று உடலுறுப்புகளை ஆப்பிள் மூலம் உருவாக்கியுள்ளார்.


ஆப்பிளிலிருந்து காதுகளை வளர்த்தேன் என்கிறார் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங்.


ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியராக பணிபுரிகிறார் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங்.


"விலை மலிவான சிறந்த மூலப்பொருளை நாங்கள் கண்டெடுத்திருக்கிறோம். இதன் விலை மிக மிக மலிவு. இதிலிருந்து நீங்கள் பலவற்றை உருவாக்கலாம்; மனிதஉடலில் பொருத்தலாம்; உடலும் இதை ஏற்றுக்கொள்ளும்"


முதலில் ஆப்பிள்கள் தேவையான உடல் உறுப்பின் உருவில் செதுக்கப்பட்டு அதன் மரபணுக்கள், செல்கள் அனைத்தும் நீக்கப்படும்.


இறுதியில் நாரிழை கட்டமைப்பு மட்டும் மிஞ்சும்; இந்த நாரிழைக்கட்டமைப்பில் மனித மரபணுக்கள் பற்றி வளரும்.


சோதனைச்சாவடியில் உரிய உபகரணங்கள் கொண்டு மனிதசெல்கள் வளர்க்கப்படும் அது காதாக உருவெடுக்கும்.


இந்த காதுகளை விலங்குகளின் உடல் ஏற்றுக்கொண்டதை பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக பெல்லிங் கூறுகிறார்.


இந்த பரிசோதனையின் பாதுகாப்பு, நடைமுறை சாத்தியம் குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடக்கவுள்ளன.


அதில் வெற்றி கிட்டினால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இது மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்


சேதமான உடலுறுப்புகள் மட்டுமல்லாமல் பிறவியில் இல்லாத உடலுறுப்புகளை உருவாக்குவது கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.