Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தோனிக்கு முன்னாடியே சச்சின்! - சரவெடி ஷாட்ஸ் via gifs

சச்சினோட பிறந்தநாள் அன்னைக்கு மட்டும்தான் சச்சின் பத்திப்பேசணுமா என்ன கிரிக்கெட்னாவே சச்சினைப் பத்தி பேசுறதுதானே பாஸ் உலக வழக்கம். அதுவும் ஏப்ரல் மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுனாலே அவரோட பர்த்டே செலப்ரேசன் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னுதான் அர்த்தம். சரி அவரோட சில ஷாட்ஸ்களைலாம் ஒரு ரீவைண்ட் பண்ணிப்பார்க்கலாமா மக்களே...

சச்சின்

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சொல்லுவாங்கள்ல அந்தமாதிரியான இந்த ஷாட்டுக்குப்பேருதான் 'ஊப்பர்கட்'. தலைக்கு நேரா வர பந்தை அப்படியே தலைக்கு மேலே திருப்பி விட்டா கேம் ஓவர். அந்தமாதிரியான ஷாட்தான் இது. பிரட்லீ  போடுற பாலை சச்சின் எப்படி புரட்டிவிடுறார் பாருங்க.

                                             

இது கவர் ட்ரைவ். கோலி இப்போ இந்தமாதிரியான ஷாட் அடிக்கிறதுலதான் கில்லியாக இருக்குறார்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.கிரிக்கெட்லயே கொஞ்சம் அழகான ஷாட்னு சொல்லலாம். ஒரு நல்ல தொழில்முறை ஆட்டக்காரர்னா கண்டிப்பா அவரோட கவர் ட்ரைவ் ஷாட்களைத்தான்  நோட் பண்ணுவாங்கங்கிறது கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லுற தகவல். 

மாங்கு மாங்குனு ஓடி வர பிளேயருக்கு நேர் எதிராகவே அடிக்கிறதுக்குப்பேருதான் ஸ்ட்ரைட் ட்ரைவ். ஸ்டம்புல அடிக்காம எதிர்ல நிக்கிற பிளேயர் மேல படாம அம்பயரையும் டச் பண்ணாம கொஞ்சம் அழுத்தி அடிச்சா, அதிகபட்சம் அது எல்லாமே நாலு ரன்களாக வந்துரும்ங்கிறது உறுதி. ஆனா பலபேருக்கு இந்த ஷாட் வராது. பட் சச்சினுக்கு இது அத்துப்படி. இந்த ஷாட்டில் இன்னொரு முக்கியமான விசயம் பந்துவீசுற ஆளுக்கு நேராகவே அடிச்சு ஆடும்போது அது பவுலர்களுக்கு சோர்வைக்கொடுக்கிறதோட அவங்களோட கான்ஃபிடண்ட் லெவலையும் குறைச்சிடும்ங்கிறது வெரிஃபைடு தகவல் மக்களே.

ஹெலிகாப்டர்னா இப்பத்தான் நீயா நானா ஞாபகத்துக்கு வருது அதுக்கு முன்னாடிலாம் தோனிதான் ஞாபகத்துக்கு வருவாரு ஏன்னா அவருதான் இதை அடிக்கடி அடிச்சிக்கிட்டு இருக்குறாரு. ஆனா அதுக்கு முன்னாடியே சிலபேர் அந்தமாதிரியான ஷாட்டை ஆடிருக்காங்க. அதுல சச்சினும் ஒருத்தர்ங்கிறதுதான் விசயம். எப்போவோ சச்சின் ஆடுன ஹெலிகாப்டர் ஷாட்டைப்பாருங்க.

 

லிஸ்ட்டுல அடுத்தது 'ஸ்கொயர்கட்' ஷாட் . தமிழ் வர்ணனையில சொல்லணும்னா இது ஒரு அற்புதமான ஷாட்னு சொல்லலாம். வர்ற பந்தை அப்படியே ஸ்கொயர்லெக் திசையில் வெட்டி ஆடுனா மிசன் கம்ப்ளிட்டேடு. ஷேவாக் இந்தமாதிரியான ஷாட் ஆடுறதுல கைதேர்ந்தவர்னு சொல்லலாம். ரொம்ப கவனமாக ஆடவேண்டிய ஷாட் இது. ஏன்னா, எப்போவாவதுதான் சிக்ஸருக்கு போகும். ஆனா பேட்ல எக்குத்தப்பான இடத்துல பட்டு அடிக்கடி அது கேட்சுக்குப்போயி பிளேயர் பெவிலியனுக்குப் போயிடுவாருங்கிறது கிரிக்கெட் வரலாறு. ஆங்க்க்.

லிஸ்ட்டுல அடுத்தது 'ஸ்கொயர்கட்' ஷாட் . தமிழ் வர்ணனையில சொல்லணும்னா இது ஒரு அற்புதமான ஷாட்னு சொல்லலாம். வர்ற பந்தை அப்படியே ஸ்கொயர்லெக் திசையில் வெட்டி ஆடுனா மிசன் கம்ப்ளிட்டேடு. ஷேவாக் இந்தமாதிரியான ஷாட் ஆடுறதுல கைதேர்ந்தவர்னு சொல்லலாம். ரொம்ப கவனமாக ஆடவேண்டிய ஷாட் இது. ஏன்னா, எப்போவாவதுதான் சிக்ஸருக்கு போகும். ஆனா பேட்ல எக்குத்தப்பான இடத்துல பட்டு அடிக்கடி அது கேட்சுக்குப்போயி பிளேயர் பெவிலியனுக்குப் போயிடுவாருங்கிறது கிரிக்கெட் வரலாறு. ஆங்க்க்.

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கால் இழந்த நாய்... விபத்தில் சிக்கிய மனிதர்... நம்பிக்கை விதைத்த செயல்!

நாய் கால்

சார்லி டிஸ்ராச்சர்ஸ்... சில காலம் முன்பு ஒரு கார் விபத்தில் காயம்பட்டவர். அப்போது தலையில் அடிபட்டு, பின் சரியானது. ஆனால் அதைவிட மோசமான விஷயம், விபத்துக்கு பின்னால் அவருக்கு வந்த post-concussion symptoms. கன்கஷன் என்றால், தலையில் விழுந்த வேகமான அடி என சொல்லலாம். தலையில் அடிப்பட்டு மயக்க நிலைக்கு சென்றவருக்கு, அதன் பின் சில மாதங்கள் வரை தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகள் தொடரலாம். அதைத்தான் post-concussion symptoms என்பார்கள். சார்லிக்கு அந்த பிரச்னைதான்.

சார்லிக்கும், அவரது கேர்ள் ஃப்ரெண்டுக்கும் நாய்கள் என்றால் அலாதி பிரியம். அதனால், புதிதாக ஒரு நாயை வாங்கி வளர்க்கலாம்; அது சார்லிக்கு ஒரு மாற்றாக அமையும் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த நாய்க்குட்டி சாதாரண ஒன்றாக இல்லாமல், அதுவும் விபத்தில் சிக்கியதாக இருந்தால் நல்லது என்ற முடிவுக்கு வந்தார்கள். பல நாள் தேடலில் அவர்களுக்கு கிடைத்தவன் தான் பிராட்லி.
பிராட்லிக்கு தெருக்கள் தான் வீடு. ஒருநாள் அவன் தெருவுக்கு வந்த விருந்தாளி ஒருவன் தனது காரினால் பிராட்லியை இடித்துவிட்டு சென்றுவிட்டான். பிராட்லியின் காலில் நல்ல அடி. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கால் அழுக ஆரம்பித்தது. ஆனால், அதனுடன் தான் பிராட்லி வாழ்ந்து வந்தான். இந்தச் சூழலில் தான் சார்லியின் கண்களில் பிராட்லி பட்டான். உடனே மருத்துவமனைக்கு பிராட்லி அழைத்துச் செல்லப்பட்டாலும், அந்தக் காலை அகற்ற வேண்டியதாகிவிட்டது. 

அடிப்பட்ட காலுடனே வாழ்ந்த பிராட்லிக்கு, கால் இல்லாமல் வாழ்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சார்லி போல இல்லாமல், நொடிப்பொழுதில் இந்த வாழ்க்கைக்கு பிராட்லி தயாராகிவிட்டான். அவன் பிரச்னை எல்லாம் புதிய வீடும், புதிய நண்பர்களும் தான். தெரு சைஸ் வீட்டில் இருந்தவனுக்கு சார்லி வீடு சிறியதாக தெரிந்திருக்கலாம். ஆனால், இங்கே அவன் பாதுகாப்பாக உணர்ந்தான். காரில் இடித்துவிட்டு ஒரு சாரி கூட சொல்லாமல் செல்லும் விருந்தாளிகள் இந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது அவனுக்கு ஆசுவாசமாக இருந்திருக்கும்.

பிராட்லியின் வலி சார்லிக்கு புரிந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், விரைவிலே சார்லியின் வலியை பிராட்லி புரிந்துகொண்டான். அவனது கதகதப்பான அன்பு, சார்லிக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. சார்லி மற்றும் அவரது தோழிக்கு இதுவரை பல நாய்கள் பரிச்சயம். ஆனால், அவை எதுவுமே பிராட்லிக்கு நிகர் இல்லை. கால் இழந்த பிராட்லி, நிம்மதி இழந்த சார்லி, அதனால் சந்தோஷம் இழந்த சார்லியின் தோழி... மூவருமே புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தார்கள்.

இந்த சந்தோஷத்தை உலகுக்கு தெரிவிக்க விரும்பினார் சார்லி. அதே சமயம் பிராட்லிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த விஷயம்... அவ்வளவு அழகு.

பிராட்லி நாய்

 

சார்லியும், அவரது தோழியும் அடிக்கடி ஜோக்ஸ் சொல்லி மகிழும் ஹாஸ்ய தம்பதிகள். அப்படி அவர்கள் பேசும்போது, பிராட்லியும் பேசுவதாக கற்பனை செய்துகொள்வார்கள். கற்பனைதானே.. அதனால் பிராட்லிக்கு டப்பிங் கொடுத்தது மிக்கி மவுஸ். இந்த பிராட்லி - மிக்கி கூட்டணியை விஷுவலாக கொண்டு வர விரும்பினார் சார்லி. பிராட்லியை விதவிதமாக படம் பிடித்து, கை இல்லாத பகுதியில், மிக்கியின் கைகளை வரைந்து ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டு இருப்பது போல ஆக்கினார்.

பார்க்க அழகாகவும், பிராட்லி முழுமையாகவும் இருப்பதாக உணர்ந்தார் சார்லி. இந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய, அன்பாலான மனிதர்கள் அழுதே விட்டார்கள். தெறி வைரல் ஆனான் பிராட்லி.

பாஸ்கட் பால் விளையாடினான்... பிரீஃப்கேஸுடன் அலுவலகம் கிளம்பினான். போக்கர் விளையாடினான். பிராட்லி இன்னும் என்னனென்னவோ செய்தான். 

சார்லியின் செயல் முதலில் பிராட்லிக்கு வாழ்க்கை தந்தது. பின் சார்லிக்கே நிம்மதியை தந்தது. சார்லியின் தோழிக்கு சந்தோஷம் தந்தது. இப்போது ஒட்டு மொத்த உலகுக்கும் நம்பிக்கையை தந்திருக்கிறது.

லவ் யூ சார்லி...பிராட்லி!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஜென் கதை: மனிதனின் ஆயுள் காலம்

 

நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும் என்று புத்தர் சீடர்களுக்கு உணர்த்தியதை பார்க்கலாம்.

 
 
ஜென் கதை: மனிதனின் ஆயுள் காலம்
 
கவுதம புத்தரின் முன்பாக அவரது சீடர்கள் பலர் அமர்ந்திருந்தனர். தினமும் அவரிடம் புதிது புதிதாக விஷயங்களையும், தெளிவையும் கற்றுவந்ததால், அனைத்து சீடர்களின் முகத்திலும் ‘இன்று என்ன?’ என்ற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.

புத்தருக்கு சீடர்களின் முகமே காட்டிக்கொடுத்து விட்டது.. அவர்களிடம் கற்றுக்கொள்ளும் அல்லது புதியதாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுந்திருப்பதை.

அவர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். ‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்?’.

அனைவருக்குமே பதில் தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடன் ‘நூறு வருடங்கள்’ என்றான்.

புத்தரின் முகத்தில் புன்னகை. அதே புன்னகையுடன், ‘தவறு’ என்றார்.

சீடர்கள் அனைவரும் திகைத்தனர். ‘ஒரு மனிதனின் ஆயுள் காலம் 100 ஆண்டுகள் இல்லையா?. அப்படியானால் எவ்வளவு காலமாக இருக்கும். 100 ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழ்வது என்பது அத்தி பூத்தாற்போன்றதுதான். ஆகையால் வருடம் குறைவாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று கருதினர் சீடர்கள்.

உடனே ஒரு சீடன் எழுந்து, ‘எழுபது வருடங்கள்’ என்றான்.

‘இதுவும் தவறு’ என்றது புத்தரின் மென்மையான குரல்.

‘அறுபது வருடங்கள்’ என்றான் மற்றொரு சீடன்.

201704041535293356_Zen-story-spiritual-s

‘இது கூட தவறுதான்’ என்றார் புத்தர்.

இவை அனைத்தும் அதிக காலம் போல என்று எண்ணிய மற்றொரு சீடன் ‘ஐம்பது வருடங்கள்’ என்று கூறிவிட்டு, புத்தரின் பதிலை எதிர்பார்த்து மவுனமாக நின்றிருந்தான்.

புத்தரின் வார்த்தை அந்தச் சீடனையும் வருத்தம் கொள்ளச் செய்தது. ஆம்.. அந்தப் பதிலையும் தவறானது என்று கூறிவிட்டார் புத்தர்.

சீடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மனிதனால் ஐம்பது ஆண்டுகள் கூடவா உயிர்வாழ முடியாது?’ என்று குழம்பிப் போனார்கள்.

கொஞ்ச நேரம் தன்னுடைய சீடர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் புத்தர். சரியான பதிலைச் சொல்ல முடியாமல் வருந்துவதை அவர்களின் முகமே காட்டிக்கொடுத்தது. தன்னுடைய சீடர்களின் மன வருத்தத்தை காணச் சகிக்காத புத்தர், ‘ஒரு மனிதனின் ஆயுள் ஒரு மூச்சு விடும் நேரம்!’ என்றார்.

சீடர்கள் அனைவருக்கும் வியப்பு. அந்த வியப்பு மாறாமலேயே, ‘மூச்சு விடும் நேரம், கணப் பொழுதுதானே!’ என்றனர்.

‘உண்மைதான். மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் இருக்கிறது. எனவே ஒவ்வொரு கணமாக நாம் வாழ வேண்டும். மனிதர்கள் பலர் கடந்த கால சந்தோஷங்களிலும், இன்னும் பலர் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும்தான் வாழ்கிறார்கள்.

நேற்று என்பது முடிந்த விஷயம். அது இறந்து போன காலம். அதே போல நாளை என்பது யாரும் அறிந்துகொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தை செலவிடுவது மடமை. அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும்’ என்றார் புத்தர்.
 

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

'என் குரல் ஒருவரைக் கொல்லுமென்றால், இனி பேசவே மாட்டேன்!' #MayaAngelou

மாயா ஏஞ்சலோ

உங்கள் கடுப்பான, திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் என்னை நீங்கள் வரைந்திருக்கலாம்

பாழ் சகதியில் என்னை நீங்கள் மிதித்துத் துவைத்திருக்கலாம். அப்படி இருந்தாலும், தூசிப்புழுதியாக, நான் உதித்தெழுவேன்.

- மாயா ஏஞ்சலோ.

கறுப்பின எழுத்தின் பெண்ணிய அடையாளமாக ஒளிவீசியவர் மாயா ஏஞ்சலோ. ஆனால், மாயாவின் வாழ்க்கை மகிழ்ச்சியின் பிரகாசம் படர்ந்ததாக இல்லை. மிக எளிய குடும்பத்தில் பிறந்து எண்ணற்ற ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர் மாயா. மாயா ஏஞ்சலோ ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. கவிஞர், நடிகை, நாடக ஆசிரியர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பெண்ணுரிமைப் போராளி... இப்படிக்கூறிக்கொண்டே செல்லலாம்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ம் நாள் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ. இவருடைய சகோதரர் பெய்லி ஜூனியர் தான் 'மாயா' எனும் பெயரைச் சூட்டுக்கிறார். குழந்தைகள் மீதான வன்முறை அவர்களுடன் நன்றாக பழகும் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களால்தான் நிகழ்கிறது என்பார்கள். அதுபோன்ற சம்பவம்தான் மாயாவுக்கும் நிகழ்ந்தது. மாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவரின் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். தன் உடல் பற்றிய முழுமையாக அறிந்துகொள்ளும் வயதுக்கு முன்பே இப்படியான நடந்ததில் கதறி அழுகிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை தன் சகோதரனிடம் சொல்கிறார். மாயாவை பலாத்காரம் செய்தவர் ஓரிரு நாட்களில் இறந்துவிடுகிறார் எனும் செய்தி கிடைக்கிறது. இதனால், மாயா மன ஆறுதல் அடைவார் என எண்ணத்திற்கு மாறாக, மாயா இன்னும் பேரதிர்ச்சியில் ஆழ்கிறார்.

மாயா ஏஞ்சலோ

'தன் குரல் ஒருவரைக் கொல்லும் என்றால் இனி நான் பேசவே மாட்டேன்' என முடிவெடுக்கிறார். சில ஆண்டுகள் வரை அவரின் உறுதி நீடிக்கிறது. பெர்கா ஃபிளவர்ஸ் என்பவர் மாயாவின் நண்பர் மட்டுமல்ல ஆசிரியரும்கூட. அவரே மாயாவை இயல்பு நிலைக்குத் திரும்ப வைக்கிறார். புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளைத்தந்து படிக்க வைக்கிறார். எழுதவும் தூண்டுகிறார்.

மாயா தனது 17 வது வயதில் தன் வலிகளை எழுத்தாக இறக்கி வைத்து 'I Know Why the Caged Bird Sings' என்ற நூலை எழுதுகிறார். அதனை தொடர்ந்து வெவ்வேறு விஷயங்களை எழுதுகிறார். மாயா ஏஞ்சலோவுக்கு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் பல கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நாடக நடிகை, நைட் கிளப் டான்ஸர் உள்ளிட்ட ஏராளமான வேலைகளைப் பார்த்துள்ளார்.

மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை வரலாறாக ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வலிமிகுந்த சிக்கலான தருணங்களை, அதன் துயர் கொஞ்சமும் குறையாமல் தன் படைப்புகளில் பதிவுசெய்பவராக மாயா திகழ்ந்தார். இவரின் கவிதைகள் வெளிப்படையாக தன் குரலை உரக்கக் கூறியப்போதிலும் இலக்கிய நுட்பங்களிலும் கொஞ்சமும் குறை வைப்பன அல்ல. 'கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்' எனும் தன் சுயசரிதை மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். சர்வதேச அளவில் பலவித விருதுகளையும் பெற்றார்.

பெண் விடுதலையின் முகமாக வாழ்ந்த மாயா கடந்த 2014 ஆம் ஆண்டு தன் இன்னுயிரை நீத்தார். ஆயினும் அவரின் படைப்புகள் வாசகர்களோடு உரையாடிக்கொண்டேத்தான் இருக்கின்றன. அவை மாயா ஏஞ்சலோவின் இருப்பை தொடர்ந்து தக்கவைக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.
 
மாயா ஏஞ்சலோவின் கவிதை...

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப் பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்
விசைதீரும் வரை சமநிலைகொண்டு மிதக்கும்
ஆரஞ்சுவண்ண சூரியக் கதிர்களில்
தன் சிறகுகளை நனைக்கும்
வானத்தை உரிமைகொள்ளும் தைரியமும் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்
குறுகிய கூட்டுக்குள் அலைகிறது.
ஆத்திரம் அதன் கம்பிகள்
எப்போதாவது அதன் வழியே பார்க்க முயலும்

அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் விலங்கிடப்பட்டும் உள்ளன.
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு,
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது
தொலைதூர மலைகளில்
அதன் இசை எதிரொலிக்கிறது.

சுதந்திரப்பறவை இன்னுமொரு தென்றலை நினைக்கிறது
பருவக்காற்று சலிக்கும் மரங்கள் வழியே மெதுவாக வீசும்.
கொழுத்த புழுப்பூச்சிகள் உணவாகக்
விடியல் வெளித்த புல்தரையில் காத்திருக்கும்,
வானம் தனக்கே சொந்தம் என்று அது பெயரிட்டழைக்கும்.

ஆனால் கூண்டுப் பறவை
கனவுகளின் கல்லறையில் நிற்கிறது.
ஒரு பயங்கரக் கனவின் அலறல் மீது
அதன் நிழல் பிரவேசிக்கிறது
அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் கட்டுண்டும் உள்ளன,
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது,
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது,
தொலைதூர மலைகளில்
அதன் இசை மோதி எதிரொலிக்கிறது.

(‘I Know Why The Caged Bird Sings’)

(நன்றி: கால சுப்ரமணியன் மொழிபெயர்த்து, மலைகள் இதழில் வெளிவந்தது)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

தேனீக்கள்

தேனீக்களை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதன் வாழ்க்கை முறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேனீக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடானது. அதனால்தான், தனது வேலையைச் சரியான முறையில் செய்து கொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது பெண்தேனீக்களின் ஆதிக்கம் நிறைந்த உலகம். ஆம், ராணித் தேனீதான், ஒரு தேன்கூட்டினையே நிர்வகிக்கும் தலைவி. கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும், ராணித்தேனீயின் கட்டளைகளுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். வேலைக்காரத் தேனீக்கள் மட்டுமல்ல, ஆண்தேனீக்களும் ராணித்தேனீக்களுக்கு அடிபணியும் சேவகன்தான். தோரணையிலும் ஆண்தேனீயைவிட பெண்தேனீ மெஜாரிட்டிதான், கூடவே வடிவத்திலும் ஆண்தேனீயைவிட பெரியது.

ராணித்தேனீ தேன்கூட்டினை கண்காணிப்பது, நிர்வகிப்பது மற்றும் முட்டையிடுவது ஆகிய செயல்களை மட்டும்மேற்கொள்ளும். ராணித்தேனீ தவிர மற்ற தேனீக்களின் ஆயுட்காலம் வெறும் இரண்டு மாதங்கள்தான். ஆனால், ராணித்தேனீயின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாகும். இதற்குக் காரணம் மற்ற தேனீகளைப்போல ராணித்தேனீ வெறும் மகரந்தங்களை உணவாக எடுத்துக் கொள்வதில்லை. இது ராயல் ஜெல்லி என்ற உணவைத்தான் எடுத்துக் கொள்ளும். இந்த ராயல் ஜெல்லி 7 முதல் 14 நாள் வயதுடைய தேனீக்களின் உடலில் சுரக்கும் திரவம். இது முழுக்க முழுக்க புரோட்டீன் நிறைந்த திரவம். இதுதான் ராணித்தேனீயின் வாழ்நாளை அதிகரிக்கக் காரணம். அதேபோல ராணித்தேனீ லட்சக்கணக்கான முட்டைகளை இடுவதற்கும் ராயல் ஜெல்லிதான் காரணம். ஒரு கூட்டில் 100 ஆண்தேனீக்களும், பல வேலைக்காரதேனீக்களும் இருக்கும். ராணித்தேனீ தனது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே ஆண்தேனீயுடன் இணையும். அவ்வாறு இணைவதற்கு 100 ஆண்கள் தேனீக்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இணையும் ஆண்தேனீ அத்துடன் மரணித்துப் போகும்.

அந்தப் போட்டி என்னவெனில் நன்றாகப் புரதம் உண்டு வளர்ந்த ராணித்தேனீ உயரமாகப் பறக்கத் தொடங்கும். அதேபோல, அதனுடன் சேர விரும்பும் ஆண்தேனீக்களும் உயரப் பறக்க ஆரம்பிக்கும். பறக்கும் ஆண்தேனீக்களில் எந்த ஆண்தேனீ தனது உயரத்திற்கு இணையாகப் பறக்கிறதோ அதையே தனது துணையாக ராணித்தேனீ தேர்வு செய்யும். அந்த ஒருமுறை இணையும் ராணித்தேனீ பல லட்சம் தேனீக்களை உருவாக்கும் தன்மையை பெற்று விடும். ராணித்தேனீ தனது மூன்றாண்டுக் காலத்தில் தொடர்ந்து முட்டையிட்டுக் கொண்டே இருக்கும். ராணித்தேனீ ஒவ்வொரு தேனீக்கும் ஒவ்வொரு வேலையை நிர்ணயம் செய்யும். அவ்வாறு நிர்ணயம் செய்யும் வேலைகளை வேலைக்காரத் தேனீக்கள் தட்டாமல் செய்ய வேண்டும். ஒன்று முதல் மூன்று வயதுடைய தேனீக்கள் தேன் கூட்டினை சுத்தம் செய்யும் வேலையைச் செய்யும். 3 வயது முதல் 6 வயதுள்ள தேனீக்கள் எடுத்து வந்து வைக்கும் இனிப்பு துகள்களை தன்னுடைய சிறகால் தேன் கூட்டில் அடுக்கும் வேலையைச் செய்யும். 7 முதல் 14 வயதுடைய தேனீக்கள் ராணித்தேனீக்கு ராயல்ஜெல்லியை உருவாக்கி ஊட்டிவிடும் வேலையைச் செய்யும். 14 முதல் 21 நாள் வயதுடைய தேனீக்கள்தான் தேன்கூட்டை வடிவமைக்கும் பொறியாளர்கள்.

தேனீ

21 முதல் 23 நாள் வயதுடைய தேனீக்கள் மருத்துவ தேனீக்கள், சிப்பாய் தேனீக்கள் மற்றும் பிணம் தூக்கி தேனீக்கள் என மூன்று குழுக்களாக பிரிந்து பணியினை செய்யும். மருத்துவ தேனீயானது காயம்பட்ட தேனீக்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. சிப்பாய் தேனீக்கள்தான் கூட்டை பாதுகாக்கும் வேலையைச் செய்யும். தேன்கூட்டைக் கலைத்தால் பறந்து பறந்து தாக்கும் சிப்பாய்கள் இவைதான். பிணம் தூக்கும் தேனீக்கள், இறந்த தேனீக்களை கூட்டில் இருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யும். 23 முதல் 25 நாள் வயதுடைய தேனீக்கள், தேன்கூட்டின் ஒற்றர்கள். பூக்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைப் பணியாளருக்கு தெரியப்படுத்துவது இதன் வேலை. ஒற்றர்தேனீ தனது வயிற்றை ஆட்டி வட்டம் போட்டு பணியாளர் தேனீக்குத் எவ்வளவு தூரத்தில் தேன் இருக்கிறது என்பதை காட்டும். 25-60 நாள் வயதுடைய தேனீக்கள், ஒற்றர்கள் காட்டிய திசையில் இருக்கும் மகரந்தங்களை தேன் சேகரிக்கும் பையிலும், தனது வயிற்றில் மதுரத்தையும் சுமந்து வரும் வேலையைச் செய்யும்.

இவ்வளவு செயல்கள் நடந்தும் ஒரு தேனீ தனது வாழ்நாளில் 1 டீஸ்பூன் தேனை மட்டுமே சேகரிக்கும். இதற்காக ஒருநாளில் 50 ஆயிரம் மலர்களின் மேல் அமர்ந்து தேன்களை இந்த தேனீக்கள் சேகரித்து வருகின்றன.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கேப்டன்கள் சந்திப்பு: செல்பி படத்துடன் ஐ.பி.எல். தொடருக்கு விராட் கோலி வாழ்த்து

ஐ.பி.எல். தொடரின் 8 அணிகளின் கேப்டன்கள் இன்று சந்தித்தனர். அப்போது உலசின் தலைசிறந்த தொடரான ஐ.பி.எல். சீசன் 10 தொடங்கட்டும் என்று விராட் கோலி டுவிட் செய்துள்ளார்.

 
கேப்டன்கள் சந்திப்பு: செல்பி படத்துடன் ஐ.பி.எல். தொடருக்கு விராட் கோலி வாழ்த்து
 
ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. ஐதராபாத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 2-ம் இடம்பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
 
போட்டிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் 8 அணியின் கேப்டன்களும் இன்று சந்தித்தனர். இதற்கு முன் தொடர் தொடங்குவதற்கு முன் 8 அணிகள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது 8 அணி கேப்டன்களும் பங்கேற்பார்கள்.
 
இந்த தொடர் 10-வது சீசன் என்பதால் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் தொடக்க விழாவை கொண்டாட பி.சி.சி.ஐ. அனுமதி அளித்துள்ளது. இதனால் தொடருக்கு முன்பு அனைத்து கேப்டன்களும் சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆகவே, கேப்டன்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
 
அப்போது விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஜாகீர்கான் (டெல்லி டேர்டெவில்ஸ்), காம்பீர் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்), ஸ்மித் (ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்), வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ரெய்னா (குஜராத் லயன்ஸ்) ஆகிய 8 கேப்டன்கள் ஐ.பி.எல். கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
  • தொடங்கியவர்

 

"சாட்-நாவ் வழிகாட்டி மூளையை பாதிக்கும்"

Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்தும்போது மனித மூளையின் குறிப்பிட்ட செயற்பாடு நின்றுபோவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


அது மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

உலக சாதனை படைத்த வைர விற்பனை..!

இளஞ்சிவப்பு நிறமான நட்சத்திர வைரம் ஒன்று ஏலத்தில் விடப்பட்ட நிலையில், அது அதிக விலையில் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. 

3EBB980C00000578-4378792-image-a-39_1491

ஹொங்கொங் நகரில் இன்று (ஏப்ரல் 4)  நடைபெற்ற ஏல விற்பனையில் 71.2 மில்லியன் டொலரில் (இலங்கை ரூபா மதிப்பில் 1081கோடியே 81 இலட்சம்) வைரத்தை விற்பனை செய்துள்ளதாக வைரத்தை வைத்திருந்த சொதேபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

000_N315Q.jpg345A202700000578-4378792-image-m-48_1491

மேலும் இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் விற்பனை செய்யப்பட்ட நீலநிறமான வைரமே (48 மில்லியன் டொலர்கள்) இதுவரை அதிக விலைக்கு விற்பனையான வைரமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது குறித்தஇளஞ்சிவப்பு வைரம் 71.2 மில்லியன் டொலருக்கு விறபனையாகி உலக சாதனை படைத்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

சச்சினுக்கு ESPN தரும் பிறந்த நாள் பரிசு

ESPN தொலைக்காட்சி சச்சினின் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 24-ம் தேதி சச்சினின் 44-வது பிறந்த நாள். சச்சினுக்கு பிறந்தநாள் பரிசாக 'லிட்டில் மாஸ்டர்' என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது ESPN. ஏப்ரல் 23-ம் தேதி இ.எஸ்.பி.என் தொலைக்காட்சியில் சச்சினின் ஆவணப்படம் ஒளிபரப்பப்படுகிறது.

sachin_ok_19305.jpg

இந்தியர்களை பொறுத்தவரையில் கிரிக்கெட்டும், சச்சினும் வேறுவேறில்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியை தனது நுட்பமான ஆட்டத்தால் பல வெற்றிகளை பெற செய்தவர் சச்சின். தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் சச்சினுக்கு இ.எஸ்.பி.என் தொலைக்காட்சி ஒரு பிறந்தநாள் பரிசை தயார் செய்துள்ளது. 25 ஆண்டு கால சச்சினின் சாதனையை விளக்கும் வகையில் ஒரு ஆவணப்படத்தை தயார் செய்துள்ளது இ.எஸ்.பி.என். சச்சினின் ஆரம்பகால கிரிக்கெட் தொடங்கி உலகக் கோப்பையை வென்ற உணர்ச்சிமிகு தருணங்கள் வரை ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் மற்ற வீரர்களும் சச்சினுடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். இது குறித்து ஆவணப்படத்தின் இயக்குனர் கெளதம் சோப்ரா கூறுகையில், 'இந்தியர்களுக்கு சச்சின் என்றுமே கொண்டாடப்பட கூடிய மனிதராவார். இப்படம் வாயிலாக அவரிடம் அனுபவங்களை கேட்டறிந்த வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்' என்றார்.
ஏப்ரல் 23-ம் தேதி மாலை சச்சினின் ஆவணப்படம் ESPN தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இப்படத்திற்கு 'லிட்டில் மாஸ்டர்' என பெயரிடப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

04.04.1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கப்பட்ட தினம் இன்று!

 

 
microsoft

 

மைக்ரோசாப்ட்  என்பது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.

கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் சேர்ந்து ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது.

உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.]விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.

http://www.dinamani.com/

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen

1997 ஆம் ஆண்டு வன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்!
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட உயர அழகி!
இளைஞர்களின் இதயங்களில் இவர் முன்னாள் கனவு கன்னி!
என்றென்றும் Evergreen கதாநாயகி!

மயக்கும் விழிகளாலும், உடல் மொழியாலும் தன் வசீகர நடிப்பால் தமிழ் ரசிகர்களை
கட்டிப்போட்டு சிறைப்பிடித்த சிம்ரனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் Simran

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின்னின் Steven Finn பிறந்தநாள் இன்று
 பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

இன்று நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள் !

இலங்கை போன்ற யுத்தம் நடைபெற்ற நாடுகளில் ஏராளம் உயிர்ப்பலிகளையும், பல அவயவ இழப்புக்களையும் ஏற்படுத்திய கொடுமையான விடயம் இந்த நிலக்கண்ணிகள்.

வாழும் சமுதாயம் மட்டுமன்றி, எதிர்காலத்துக்கான சமுதாயத்துக்காக இளையவர்களையும் பாதித்துள்ள நிலக்கண்ணிகளுக்கு எதிராக அனைவருமே குரல் உயர்த்தவேண்டும்.

நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

 

 

துபாயில் கடற்­கரை நூலகம் அங்­கு­ரார்ப்­பணம்

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் ஒரு பிரந்­தி­ய­மான துபாயில் கடற்­கரை நூலகம் (பீச்லைப்­ரரி) திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. துபாய் மாந­கர சபை­யினால் கடந்த சனிக்­கிழமை இந்த நூலம் திறந்­து­வைக்­கப்­பட்­டது.

Beach-Library-Dubai-2

கடற் ­கரைக்குச் செல்­ப­வர்கள் புத்­த­கங்­களை வாசிப்­பதை ஊக்­கு­விப்­ப­தற்­காக இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மத்­திய கிழக்கில் இத்­த­கைய கடற்­கரை நூலகம் ஸ்தாபிக்­கப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும். அரபு மற்றும் ஆங்­கில மொழி மூல­மான நூல்கள் இங்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

 

 

Beach-Library-Dubai

 

துபாய் கடற்­க­ரை­களில் 8 கடற்­கரைநூல­கங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் துபாய் மாந­கர சபை அறி­வித்­துள்­ளது . இந்­நூ­ல­கங்கள் சூரிய ஒளிமூல­மான மின்­சா­ரத்தைப் பெறு­வ­துடன் தானாக ஒளிர்ந்து அணையும் மின் விளக்குகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Beach-Library-Dubai-UAE

http://metronews.lk

  • தொடங்கியவர்

சீனாவில் உருவாகிறது புதிய மெகா நகரம்!

அதிவேக ரயில், மிகப் பெரிய கட்டடம் என உலகில் உள்ள பல நாடுகளின் சிறப்புகளை எல்லாம் முறியடிக்கும் விதமாக தங்கள் நாட்டில் புதிய விஷயங்களை உருவாக்கி, மற்ற நாடுகள் மத்தியில் தங்களை முன்னிலைப்படுத்தி வல்லரசாகக் காட்டிக்கொள்வது சீனாவின் ஸ்டைல். அந்த வகையில், சீனாவின் அடுத்த இலக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரம். 

City-China-Big-City-Skyscraper-Hong-Kong

சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'பெய்ஜிங்கில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் புதிய நகரத்தை உருவாக்குவது சம்பந்தமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பெரிய விவாதிக்கப்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய சீன அதிபர், "புதிதாக உருவாக்கப்படும் இந்த நகரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் புதிய நகரம் இருக்கும்" என்றார். 

இந்தப் புதிய நகரம், அமெரிக்காவின் நியூயார்க்கைவிட மூன்று மடங்கு பெரியதாக இருக்குமாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஏப்ரல் 04

unnamed-file-2.jpg1814 : பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் முதற்­த­ட­வை­யாக முடி துறந்து, தனது மகன் இரண்டாம் நெப்­போ­லி­யனை அர­ச­னாக அறி­வித்தார்.

1841 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி வில்­லியம் ஹென்றி ஹாரிசன் நுரை­யீரல் அழற்­சி­யினால் கால­மானார். பத­வியில் இருக்கும் போது இறந்த முத­லா­வது அமெ­ரிக்க ஜனா­தி­பதி இவ­ராவார்.     

1905 : இந்­தி­யாவில் இமாச்­சலப் பிர­தேசம், கங்க்ரா அருகில் இடம்­பெற்ற பூகம்­பத்தில் சுமார் 20,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1944 : இரண்டாம் உலகப் போர்: ஆங்­கி­லோ-­ அ­மெ­ரிக்கப் படை­யி­னரால் ருமே­னி­யாவின் புக்­கரெஸ்ட் நகர் மீது நடத்­தப்­பட்ட வான் தாக்­கு­தல்­களில் சுமார் 3,000 பேர் வரை உயி­ரி­ழந்­தனர்.

1945 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் இரா­ணு­வத்­தினர் ஹங்­கே­ரியை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

1949 :  ஐக்­கிய அமெ­ரிக்­காவின் தலை­மையில் 12 நாடுகள் ஒருங்­கி­ணைந்து நேட்டோ அமைப்பை உரு­வாக்­கின.

1960 : செனகல் மற்றும் பிரெஞ்சு சூடானை உள்­ள­டக்­கிய மாலி கூட்­ட­மைப்­புக்கு சுதந்­திரம் அளிப்­ப­தற்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்­டது.

1968 : அமெ­ரிக்­காவின் கறுப்­பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்­னஸி மாநி­லத்தில் மெம்­பிசு நகரில் படு­கொலை செய்­யப்­பட்டார்.

1968 : அப்­பல்லோ 6 விண்­கப்பல் நாசா­வினால் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

1969 : டெண்டன் கூலி என்­பவர் உலகின் முத­லா­வது தற்­கா­லிக செயற்கை இத­யத்தைப் பொருத்­தினார்.

1973 : உலக வர்த்­தக மத்­தி­ய­நி­லையம் நியூயோர்க் நகரில் நிறு­வப்­பட்­டது.

1975 : மைக்­ரோசொப்ட் நிறு­வனம் பில் கேட்ஸ், போல் அலென் ஆகி­யோரின் கூட்டில் ஆல்­பு­கெர்க்­கியில் தொடங்­கப்­பட்­டது.

1975 : வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அநாதைக் குழந்­தை­களை ஏற்றிச் சென்ற அமெ­ரிக்க விமானம் வீழ்ந்து நொருங்­கி­யதில் 172 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1976 : இள­வ­ரசர் நொரடோம் சீயனூக் கம்­போ­டி­யாவின் அர­சுத்­த­லைவர் பத­வியில் இருந்து வில­கினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்டார்.

1979 : பாகிஸ்­தானில் இரா­ணுவப் புரட்சி மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்ட முன்னாள் பிர­தமர் சுல்­பிகார் அலி பூட்டோ தூக்­கி­லி­டப்­பட்டார்.

1983 : செலேஞ்சர் விண்­ணோடம் தனது முத­லா­வது விண்­வெளிப் பய­ணத்தை ஆரம்­பித்­தது.

1984 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரொனால்ட் றீகன் இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை செய்யும் கோரிக்­கையை முன்­வைத்தார்.

2002 : அங்­கோ­லாவின் உள்­நாட்டுப் போரை முடி­வுக்குக் கொண்­டு­வரும் நோக்கில் அங்­கோலா அரசும் யுனிட்டா கிளர்ச்சி இயக்கமும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2013:  இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததால் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/?

  • தொடங்கியவர்
அன்புக்கு அடித்தளம் நம்பிக்கை மட்டுமே
 
 

article_1491366040-.jpgநம்பிக்கையீனமான அன்பினால் உறவுகள் வலுப்பெறுவதில்லை. அன்புக்கு அடித்தளமும் உரமுமாக இருப்பது நம்பிக்கை மட்டும்தான். 

இன்று பலரும் ஏதோ ஒரு காரணத்தையிட்டு ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டுவார்கள். ஒருவரிடம் உதவி பெற்ற பின்னர், அதன் பிரதியீடாக, நன்றி மறவாமல் அவருக்கு நன்மை செய்தல், பாராட்டுதலுக்குரியது.

ஆனால், உள்ளத்தில் கள்ளம் வைத்து, நடிப்புடன் காட்டும் பரிவு, பாசம் ஏற்றுக் கொள்ள முடியாத பாசாங்குதான். 

நாம் என்னதான் கர்வத்துடன் சுயமரியாதை எனும் பெயரில் எவரிடமும் பழகாது விலகி வாழ்ந்தாலும் அச்செயல் தன்னைத்தான் வருத்துவதாக அமையலாம்.

அன்புக்குப் பெறுமதிகூற முடியாது. ஆனால் அதனைப் பகிர்ந்து கொள்வதோ மிகவும் இலகுவானது. இதன் சக்தியும் அபாரம்.உலகமே இதனுள் அடக்கம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மணப்பெண் கிடைக்காததால் ரோபோட்டை திருமணம் செய்த சீன வாலிபர்

 

சீனாவில் மணப்பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

 
மணப்பெண் கிடைக்காததால் ரோபோட்டை திருமணம் செய்த சீன வாலிபர்
 
பீஜிங்:

சீனாவில் தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்தது.

அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

இப்படி பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபரின் பெயர் செங் ஜியா ஜியா (வயது 31). ரோபோட் என்ஜினீயரான இவர், பல்வேறு ரோபோட்டுகளை உருவாக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய ரோபோட் ஒன்றை உருவாக்கினார். அதற்கு இங் இங் என்று பெயரிட்டார்.

செங் ஜியா ஜியா திருமணத்துக்கான பெண் தேடி வந்தார். அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் உருவாக்கிய பெண் ரோபோட்டையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
 
201704051049157388_robot-1._L_styvpf.gif

இதையடுத்து அவருக்கு காங்சுகு என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் அவரது தாயார் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுடைய பாரம்பரியப்படி திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் முகத்தை மூடி அவரை மணமகன் தூக்கி செல்வது வழக்கம். அதேபோல் ரோபோட்டின் முகத்தை மூடி மணமகன் தூக்கி சென்றார்.

இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லும். ஆனாலும், திருமண வாழ்க்கைக்கு தகுந்தபடி செயல்பட ரோபோட்டில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாக செங் ஜியா ஜியா கூறினார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

புத்தகங்கள் வாசிக்க... சீன அறிவியலாளர்கள் சொன்ன காரணம்! #MustRead #3MinsRead

புத்தகம்

புத்தகம் என்னவெல்லாம் செய்யும்...? உங்களை தனிமையிலிருந்து மீட்கும்; கடந்த காலத்துக்கும்... எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும்; குழப்பங்களிலிருந்து விடுவிக்கும்.  உங்கள் கற்பனைக்கான வெளியை திறந்துவிட்டு காற்றில் நீந்தச் செய்யும்.  இன்னும் இன்னும் என புத்தகங்கள் அனைத்து அற்புதங்களையும் செய்யும். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘புத்தகங்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட, கைக்கு அடக்கமான மாயாஜால வித்தை’. ரஷ்ய கவிஞர் ஜோஷப், ‘புத்தகங்களை எரிப்பதைவிட மோசமான கொடுஞ்செயல், ஒருவரை புத்தகங்கள் படிக்கவிடாமல் தடுப்பது’ என்கிறார்.  இதையே அமெரிக்க புனைவு எழுத்தாளர் ராய் பிராட், “ஒரு கலாசாரத்தை அழிக்க வேண்டுமென்றால், நீங்கள் புத்தகங்களை எரிக்க வேண்டாம்... மக்களை புத்தகங்கள் படிக்கவிடாமல் தடுத்தாலே போதும்’ என்கிறார். இதை அப்படியே நமது அரசுகள்  உள்வாங்கிக் கொண்டதா என்று தெரியவில்லை. ஈழத்தில் புத்தகங்களை எரித்து வரலாற்றை அழிக்கிறது... தமிழகத்தில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதலை நிறுத்தி சமூகத்தை அறிவிலியாக ஆக்குகிறது. 

"சரி... ஏன் இப்போது இத்தனை மேற்கோள்கள். புத்தகங்களின் மகத்துவம் எங்களுக்குத்  தெரியும்... புரியும். ஆனால், ஒளியின் வேகத்தில் காலச் சூழல்கள் மாறிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கப்பட்ட இவ்வுலகத்தில், புத்தகங்களுக்காக எப்படி நேரம் ஒதுக்க... எங்கே சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்க...  பணி சார்ந்த சஞ்சிகைகளே மேஜையெங்கும் குவிந்திருக்கின்றன. இதைத்தாண்டி நாங்கள் எதைத் தேர்ந்தெடுத்து படிக்க...?” என்கிறீர்களா...  வெற்றிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் சூழ்நிலையில், உங்கள் கேள்வியின் அடர்த்தியான அர்த்தம் புரிகிறது. ஒவ்வொரு நிமிடமும் காட்சியில் நம் இருத்தலை தக்க வைத்துக் கொள்ள, நம்மை நிரூபிக்க நாம் அனைவருமே போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்; மறுப்பதற்கில்லை. ஆனால், தினம் தினம் நம்மை நிரூபித்தலில் நம் சுயம் தேய்மானம் அடைகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமலே போய்விடுகிறது. அந்த சுயத்தை காக்க, அதற்கு புடம் போட புத்தகங்கள் வேண்டும்.   

டெட்லைன்கள் மத்தியில் நாம் திணறும் ஒரு புதன்கிழமை புத்தகங்கள் குறித்தும்...  வாசித்தல் குறித்தும் நான் எழுத காரணம் அண்மையில் நான் படித்த புனைவு எழுத்தாளர் நீல் கெய்மெனின்  உரை. அவர், ’நம் எதிர்காலம் புத்தகங்களிலும், வாசித்தலிலும்... பகல் கனவு காணுவதிலும்தான் இருக்கிறது’ என்கிறார்.  இதில், ’நம் எதிர்காலம்’ என்று அவர் சொல்வது இந்தப் பூவுலகின் எதிர்காலம். அவரது உரையின் சாரத்தை  மிகச் சுருக்கமாக இங்கு பகிர்கிறேன். 

வன்மம் கரைய...

புத்தகம் “நான் (நீல் கெய்மென்) சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் சென்றபோது   தனியார் சிறைச்சாலைகள் குறித்த ஒரு விவாதம் எழுந்தது. எதிர்காலத்தில் தனியார் சிறைச்சாலைகளின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என விவாதிக்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் எத்தனை கைதிகள் இருப்பார்கள்... அவர்களுக்கு எத்தனை சிறைக்கொட்டகைகள் தேவைப்படும் என்றெல்லாம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு  அவர்கள் சிறிய வழிமுறையைத்தான் பின்பற்றினார்கள். அந்த வழிமுறை என்ன தெரியுமா...? வாசித்தல் பழக்கத்தைத்தான் ஆய்வு செய்தார்கள். ஆம், சமூகத்தில் பத்து, பதினோரு வயதில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேருக்கு வாசித்தல் பழக்கம் இருக்கிறது...? குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாசிக்கிறார்கள்? என்றெல்லாம் கணக்கிடத் திட்டமிட்டார்கள். வாசித்தல் பழக்கம் இல்லாத குழந்தைகள் வழிமாற வாய்ப்பிருக்கிறது என்பது அவர்களின் கணிப்பு. சரியான கணிப்புதானே...?  எப்படி சொல்கிறீர்கள்... வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் தவறே செய்வதில்லையா...?  அப்படி அறுதியிட்டுச் சொல்லமுடியாதுதான். ஆனால், வாசிக்கும் பழக்கமுடையவர்கள் புனைவு படிக்கும்போது, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆர்வத்திலும்... புதியதை அறிந்துகொள்வதிலும்  மனதின் வன்மம் கரைகிறது”
ஆம்... வாசித்தலில் வன்மம் கரையும்! 

புதியதை படைக்க...

“சீனாவில்  2007- ம் ஆண்டு அறிவியல் புனைவு சம்பந்தமான மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்டேன். அப்போது சீன அறிவியலாளர்களிடம் கேட்டேன், ‘சீனாவில் அறிவியல் புனைக்கதை மாநாட்டுக்கு பல தசாப்தங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுதானே... இப்போது   இந்த மாநாட்டை ஒருங்கிணைக்க என்ன காரணம்...?’ என்று. அதற்கு அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், “எளிமையான காரணம்தான்... சீனர்கள் எப்போதும் திறமைசாலிகள்...  உழைப்பாளிகள். நீங்கள் ஒரு திட்டத்துடன் வரும்போது அவர்களால் ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், புதுமையாக ஒரு விஷயத்தை அவர்களால் யோசிக்க முடியாது... கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், அவர்களால் கற்பனை செய்யமுடியாது. என்ன காரணமென்று கண்டறிய எங்கள் அறிவியலாளர்கள் குழுவை நாங்கள் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அனுப்பினோம்... அங்கு எங்கள் குழு கண்டறிந்த விஷயம், அம்மக்கள் அதிகமாக  ‘அறிவியல் புனைவு’ படிக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் கற்பனா சக்தி விரிவடைகிறது... புதிது புதிதாக கண்டுபிடிக்க முடிகிறது  என்பதைதாம்.”

ஆம்... வாசித்தல் புதிய படைப்புகளை உண்டாக்க வைக்கும்!

புத்தகம்

“குழந்தைகளை புத்திசாலியாக்க...”

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை பெற்றோர்கள் இவ்வாறாகக் கேட்டார்கள், “உங்களைப் போல எங்கள் பிள்ளைகளும் அறிவியலாளராக... புத்திசாலியாக... என்ன செய்ய வேண்டும்...?”  அதற்கு ஐன்ஸ்டீன், “உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வேண்டுமா...? அப்படியானால் அவர்களுக்கு கதைகள்  சொல்லுங்கள்... புனைவு படிக்க வையுங்கள்.  மேலும் மேலும் புத்திசாலியாக்க வேண்டுமா... மேலும் மேலும் புனைவு படைக்க வையுங்கள்” என்கிறார். 

ஆம்... வாசித்தல்...  உங்கள் குழந்தைகளை புத்திசாலியாக்கும்!
- இது நீல் உரையின் சாரம். 

நீல் சொல்வது உண்மைதானே...? நம் பிள்ளைகளை  சிறந்த குடிமகனாக்க... அறிவியலாளராக்க, படைப்பாளியாக்க  வாசித்தலின் சுவையைக் கற்றுத் தருவோம்... நாமும் அவர்களுடன் சேர்ந்து வாசித்து... வாசித்ததை விவாதிப்போம்!

ஊடகவியலாளர் அன்னா குயிண்ட்லென் சொல்லிய மேற்கோளுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்...  ’புத்தகங்கள் விமானங்கள்; புத்தகங்கள் தொடர்வண்டி; புத்தகங்கள் சாலை... பயணமும் புத்தகம்தாம்... போய் சேரும் இடமும் புத்தகம்தான்! புத்தகங்கள்தான் எல்லாமும்’

 ஆம்... புத்தகங்கள்தான் எல்லாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

 

 
guiness_3150894f.jpg
 
 
 

பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்! அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம், நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்டார். இவரது அப்பா அப்துல் ஹமீத் பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, இந்தச் சிறுவனும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.

ஒரு கட்டத்தில் கற்கும் திறனும் தட்டச்சுத் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றன. அறிவாற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட்டபோது, `அக்ரம் இயல்பான குழந்தை இல்லை’ என்பதை பெற்றோர் புரிந்துகொண்டனர். அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்க ஊக்கப்படுத்தினர்.

5-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களோடு மொழிகளையும் கற்று வந்தார். நானூறு மொழிகள் கற்றுக்கொண்ட பிறகு, வழக்கமான கல்வியிலிருந்து விலகி மொழியியலில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்தார். இந்தியக் குழந்தைகள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட இஸ்ரேலியக் குழந்தைகள் வெகு வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால், இப்போது இஸ்ரேலியப் பள்ளியில் ஆன்லைன் மூலம் படித்துவருகிறார் அக்ரம், ஹீப்ரு மொழி தெரிந்ததால் மட்டுமே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்கிறார் அவர்.

சரி, எப்படி அவர் கற்றுக்கொண்டார்? எழுத்துகளைக் கற்கும் முன் அகர வரிசை எழுத்துகளையும் பட எழுத்து களையும் தன்னுடைய மூளையில் துல்லியமாகப் பதிவு செய்துகொள்கிறார். பிறகு சொற்களைப் படிக்கிறார். பொருள் புரிந்துகொள்கிறார். இப்படி நானூறு இந்திய, உலக மொழிகளில் மூன்று லட்சம் எழுத்துகளை மூளையில் பத்திரப்படுத்தி இருக்கிறார் இந்த அசாத்திய சிறுவன். தற்போது இரண்டு முதல் நான்கு நாட்களில் ஒரு மொழியைத் தன்னால் கற்றுவிட முடியும் என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் அக்ரம்.

அந்தந்த மொழி தெரிந்தவர்களோடுதான் பேச முடியும் என்பதால், அக்ரமால் சரளமாகப் பேச முடியாது. மொழி தெரிந்தவர்கள் கேள்வி கேட்டால், புரிந்துகொண்டு பதிலளிக்கிறார். ஸ்பானிஷ், பிரெஞ்சு, தமிழ், அரபிக், ஜப்பானிய மொழிகள் மிகவும் விருப்பமானவை என்று சொல்லும் அக்ரம், சீனம், தாய், கொரிய மொழிகள் கடினமானவை என்கிறார்.

நினைவாற்றலை இழக்காமல் இருப்பதற்காக வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை, பதப்படுத்தப்பட்ட பால், நொறுக்குத் தீனிகள், சாக்லேட், ஐஸ்க்ரீம், காபி, டீ போன்றவற்றைகூட அக்ரம் சாப்பிடுவதில்லை. `ஒரு குழந்தையாக ஐஸ்க்ரீமையும் சாக்லேட்டையும் சாப்பிடமால் எப்படி இருக்க முடிகிறது’ என்று கேட்டால், “அவற்றைச் சாப்பிட்டால் என் நினைவாற்றல் குறைந்துவிடுமோ என்ற பயம்தான் காரணம். அதனால் நான் மட்டுமல்ல, என் வீட்டில் யாரும் இவற்றைச் சாப்பிடுவதில்லை” என்கிறார். சிறுதானிய உணவுகளும், தாகம் எடுத்த 4 நிமிடங்களுக்குள் தண்ணீர் பருகுவதும், தினமும் சுடோகு பயிற்சி எடுத்துக்கொள்வதும் நினைவாற்றலுக்கு நல்லது என்று டிப்ஸும் கொடுத்தார் அக்ரம்.

யூனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், 2014-ம் ஆண்டு `World's Youngest Multi Language Typist’ என்ற விருதை இவருக்கு வழங்கியிருக்கிறது. 75 நிமிடங்களில் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி முடித்ததன் மூலம் ‘Indian Achiever Book of Records’ விருதையும் பெற்றிருக்கிறார். இந்தச் சாதனையைச் சரிபார்ப்பதற்கே மூன்று மாதங்கள் தேவைப்பட்டதாம். நானூறு மொழிகளைப் பரிசோதிக்கக்கூடியவர்கள் கிடைக்காமல் கின்னஸ் சாதனை இன்னும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது!

‘ஆழமாகச் சில மொழிகளையாவது கற்க வேண்டாமா’ என்று கேட்டால், “அதுதான் தன்னுடைய லட்சியம்” என்கிறார். “சில மொழிகளில் நிபுணத்துவம் பெற்று, தமிழின் தலைசிறந்த படைப்புகளை உலக மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதைத் தவிர, மொழிகளைப் பயிற்றுவிக்கும் மொழியியல் வல்லுனராகவும் இருப்பேன். அதனால்தான் தென்னாப்பிரிக்கா எனக்கு அளித்த குடியுரிமையை மறுத்துவிட்டேன். நான் பிறந்த தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று உறுதியாகச் சொல்லும் மஹ்மூத் அக்ரம், தன்னைப் போன்ற குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் வலம்வருகிறார்!

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

1960: சேகுவேராவின் புகழ் பெற்ற புகைப்படம் பிடிக்கப்பட்டது

வரலாற்றில் இன்று…
ஏப்ரல் 05

varalru

 

1496 : இங்­கி­லாந்து மன்னன் 7 ஆம் ஹென்றி, கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத புதிய நிலப்­ப­ரப்­பு­களை கண்­ட­றி­வ­தற்­கான உரி­மையை இத்­தா­லிய கட­லோடி ஜோன் காபோட்­டுக்கும் தனது மகன் ­க­ளுக்கும் வழங்­கினார்.

1770 : அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் அமெ­ரிக்­கர்­க­ளுக்கும் பிரித்­தா­னியப் படை­யி­ன­ருக்கும் இடையில் கிளம்­பிய கல­வ­ரத்தை அடுத்து ஐந்து அமெ­ரிக்­கர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். 1793 : பிரெஞ்சுப் படைகள் ஆஸ்­தி­ரி­யா­வினால் தோற்­க­டிக்­கப்­பட்­டன.

1824 : பர்­மாவின் மீது பிரித்­தா­னியர் போர் தொடுத்­தனர்.

1912: துருக்­கியின் மீது இத்­தா­லிய படை­யி­னரின் விமா­னங்கள் பறந்­தன. இரா­ணுவ நட­வ­டிக்­கையில் விமா­னங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும்.

1931: அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கும் உப்பை வறிய மக்கள் சுதந்­தி­ர­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்கும் அனு­ம­தி­ய­ளிக்கும் உடன்­ப­டிக்­கையில் இந்­தி­யா­வுக்­கான பிரித்­தா­னிய ஆளுநர் எட்வர்ட் பிரெட்ரிக் லின்ட்­லேயும் மகாத்மா காந்­தியும் கையெ­ழுத்­திட்­டனர்.

1933 : ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அடோல்வ் ஹிட்­லரின் நாஸி கட்சி 43.9 சத­வீத வாக்­குளைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. 1940 : சோவியத் உயர்­பீடம் 25,700 போலந்துப் பிர­ஜை­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதிக்கும் உத்­த­ரவில் கையொப்­ப­மிட்­டது.

1946 : பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில் “இரும்புத் திரை” எனும் வார்த்­தையை முதல் தட­வை­யாக பயன்­ப­டுத்­தினார்.

1960 : மார்க்­ஸிஸ புரட்­சி­யாளர் சேகுவே­ராவின் புகழ்­பெற்ற புகைப்­ப­ட­மொன்றை மரணச் சடங்­கொன்­றின்­போது கியூப புகைப்­ப­டக்­க­லைஞர் அல்பர்ட்டோ கோர்டா பிடித்தார்.

1966 : ஜப்­பானில் இடம்­பெற்ற விமான விபத்தில் 124 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1970 : அணு­வா­யுத பரவல் தடை ஒப்­பந்தம் 43 நாடு­களால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு அமு­லுக்கு வந்­தது.

1982 : சோவியத் யூனியனின் வெனேரா 14 விண்­கலம் வெள்ளி கிர­கத்தில் தரை­யி­றங்­கி­யது.

2003 : இஸ்ரேலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

2010 : அமெரிக்காவின் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பறக்கும் சிக்சர்... தெறிக்கும் விக்கெட்! CSK VS Mumbai Indians நினைவுகள் #IPL

கிரிக்கெட் என்றாலே தவிர்க்க முடியாத டோர்னமெண்ட்- ஐ.பி.எல். இந்த வருடத்தில் IPL தனது 10வது சீசனைத் தொடுகிறது. இந்த 9 வருடங்களில் சென்னை-மும்பை அணிகளின் ரசிகர்கள் போல் யாரும் அடித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு சென்னை அணி விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தும், இன்னும் சென்னை-மும்பை ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் சண்டையை விடவில்லை. இந்த இரு அணிகளிடையே உள்ள இந்த போட்டிக்கான காரணம் என்ன?

IPL2


மும்பையில் இறங்கி அடித்து ஃபோர், சிக்சர் என்று பறக்க விட சச்சின், பொலார்ட்; விக்கெட்டுகளைத் தெறிக்க விட மலிங்கா, ஹர்பஜன் என்றால், ‘நாங்கன்னா மட்டும் யாரு?’ என்று இந்தப் பக்கம் பேட்டிங்கில்  மேத்யூ ஹைடன், சுரேஷ் ரெய்னா;  பவுலிங்கில் அஸ்வின், முரளிதரன் என்று ஸ்டார் ப்ளேயர்களின் டீமாக இரண்டுமே இருந்தன. 

மும்பையின் ரசிகர்கள் அந்த மாநிலத்தில் மட்டுமல்ல மொத்த இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அணியில் சச்சின் இடம்பெற்றதே. சச்சின் ஓய்வுபெற்றாலும் அவ்வப்போது அணியுடன் காணப்படுவதால் இன்னும் ரசிகர்கள் மும்பை அணியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இதேதான் சென்னை அணிக்கும் தோனி அணி என்பதற்கே அவ்வளவு ரசிகர்கள் சென்னை அணிக்கு. இதனால்தானோ என்னவோ ரசிகர்கள் எண்ணிக்கையில் எப்போதும் இந்த அணிகள்  முன்னிலையிலேயே உள்ளன. இவர்களுக்கு அடுத்து பெங்களூரு, கொல்கத்தா அணிகள்.  ஒன்று விராட் கோலிக்காக மற்றொன்று ஷாருக்கானுக்காக. ஆனாலும் மும்பை-சென்னை அணிகளின் ரசிகர்கள் எண்ணிக்கையை நெருங்க முடியாது. இதற்கு ஃபாண்டஸி லீக்கில் இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை ஒரு சாட்சி.

சென்னை - மும்பைதான் தல தளபதி ரசிகர்கள் போல. மும்பை ரசிகர்கள், சென்னை ரசிகர்களின் வாயை அடைக்கப் பயன்படுத்தும் முதல் புள்ளிவிவரம் மும்பை-சென்னை இதுவரை மோதியுள்ள போட்டிகளில் மும்பை தான் அதிகமுறை  (மும்பை-13,சென்னை-11) வென்றுள்ளது என்பதே. சென்னை ரசிகர்கள் கெத்து காட்டிக் கொள்வது, சென்னை அணி இதுவரை அரையிறுதி அல்லது ப்ளே ஆப் வரை தகுதி பெறாமல் வெளியேறியதே இல்லை என்ற புள்ளிவிவரத்தையே. மும்பையின் தொடக்க சீசன்கள் கொஞ்சம் மோசமாகவே இருந்துள்ளதால் மும்பை ரசிகர்களும் இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறுவர்.

இது மட்டுமல்லாமல் இரு அணிகளுகிடையே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதுவரை மூன்றுமுறை இறுதிபோட்டிகளில் நேருக்குநேர் சந்தித்துள்ளன இந்த அணிகள். அதில் 2 முறை மும்பையும், ஒரு முறை சென்னையும் வென்றுள்ளது. இறுதிபோட்டிகளில் அதிகமுறை மோதியுள்ள அணிகள் இவைதான். இரு அணிகளும் தலா இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், இரண்டு ஐபிஎல் பட்டங்களையும் வென்றுள்ளன. இதுவே ஒரு ஐபிஎல் அணியின் அதிகப்பட்சம். இப்படி அனைத்திலும் சமமாக இருக்கும். 2015 ப்ளே-ஆஃப் சுற்று வரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளிலும் தலா 11 வெற்றிகளுடனே இருந்தன. ப்ளே-ஆஃப்பிலும், இறுதிபோட்டியிலும் சென்னை தோற்றதால் தான் இந்த 13-11 நிலவரம். ஆனால் இரு அணிகளும் மீண்டும் மோத ஒரு வருடம் ஆகும் என்பது தான் சென்னை ரசிகர்களின் சோகம்.

CSK

இவ்விரு அணிகளிடையேயான மற்ற சுவாரசியமான புள்ளிவிவரங்களையும் காண்போம்.

மிகப்பெரிய வெற்றி (விக்கெட்கள்)- மும்பை இந்தியன்ஸ் (9 விக்கெட் -  2008)

மிகப்பெரிய வெற்றி (ரன்கள்)- மும்பை இந்தியன்ஸ் (60 ரன் - மே, 2013)

அதிக ரன்கள்-சுரேஷ் ரெய்னா (557 ரன்)

அதிக விக்கெட்கள் - லசித் மலிங்கா (24 விக்கெட்)

இரண்டு அணிக்கும் விளையாடியுள்ள வீரர்கள்-வெய்ன் பிராவோ, வெய்ன் ஸ்மித்,மைக்கேல் ஹஸ்ஸி, ஆஷிஷ் நெக்ரா, திசரா பெரேரா, பார்த்திவ் படேல்,

என்னதான் ஐபிஎல் தொடங்க இருந்தாலும் இந்த இரு அணிகளுக்கிடையேயான போட்டி இல்லை என்பதால் கொஞ்சம் டல்லடித்துதான் காணப்படுவார்கள் ரசிகர்கள். மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே மனதின் ஒரு ஓரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் திரும்புவதை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருப்பர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒலியை வெல்லப்போகும் காஷ்மீர் பெண்!

ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடிய அதிவேக ஜெட் விமானத்தை இயக்கவிருக்கும் முதல் பெண் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண்.

pilot

 

காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது இளம்பென் ஆயிஷா அசிஸ். கடந்த வாரம் வணிக ரக விமானங்களை ஓட்டுவதற்கான பைலட் உரிமத்தைப் பெற்றார். தற்போது ஒலியை விட வேகமாகச் செல்லகூடிய MIG-29 என்ற போர் விமானத்தை இயக்கவிருக்கிறார். இச்சாதனை நிகழ்த்தப்பட்டால் இம்மாதிரியான கனரக போர் விமானத்தை இயக்கக்கூடிய முதல் இந்தியப் பெண் என்ற அந்தஸ்த்தை பெறுபவர் ஆவார். 

இந்த ரக விமானத்தை ரஷ்ய விமான தளத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிஷா தனது 16-ம் வயதிலேயே விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார். விமானியாவதே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு வருபவர் விண்வெளி வரை பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார். 

வின்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சை தனது முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் ஆயிஷா தன்னை போர் ரக விமானியாக அறிவிப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கலெக்டராக நயன்தாரா... 'அறம்' சொல்லும் டீசர்!

Aram_2_17170.jpg

விவசாயம், தண்ணீர் பஞ்சம் மற்றும் பல அடிப்படை பிரச்னைகளால் சிக்குண்டிருக்கும் ஒரு கிராமத்தில், கலெக்டர் நயன்தாரா எவ்வாறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற கதைக்களத்தைக் கொண்டதுதான் 'அறம்' திரைப்படம். தொடர்ச்சியாக, லீட் ரோலில் பலதரப்பட்ட படங்களில் நடித்துவரும் நயன்தாரா இதிலும் கலக்குவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

இந்த டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ஜிப்ரான் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அறம் திரைப்படத்தின் இயக்குநர் கோபி நயினார். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த 'கத்தி' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கோபி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

  • தொடங்கியவர்

ஐஸ் அசுரர்களின் ரகசிய உலகம்... உலகின் மிகப் பெரிய பனிக் குகை அதிசயம்!

ஆண்டு 1930, அந்த மலைத்தொடர் கோடைக்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. நடுவே இலையுதிர்காலம் வந்து சென்றதால், இலைகள் முழுவதும் உதிர்ந்து மரங்கள் அனைத்தும் களையிழந்து நிற்கிறது. கடுமையான பனிக்காலம் என்பதால், பகல் நேரத்திற்கான அவகாசம் மிகவும் குறைவு. மலையின் பாறைகளும் குகைகளும் நீர்நிலைகளும் பனியால் உறைந்துவிட்டன. 

உலகின் மிகப்பெரிய பனிக் குகை

பனி உறைந்த இடம், ஸ்கேட்டிங் நடனப் பயிற்சிக்கு வசதியாக இருக்கும் என்று நம்பிய ஒலிம்பிக் ஜோடி ஒன்று, பல அடிஉயரம் பாறைகள்மீது பயணித்து. குகை ஒன்றின் அருகே, கால்களில் பொருத்தப்பட்ட தகடுகளுடன் சறுக்கு நடனமாடுகிறார்கள். அப்போது எதிர்பாராமல் விபத்து நிகழ்கிறது. உயிர் பிரிந்த நிலையில் அவர்களும் அவ்விடத்தில் உறைந்துவிடுகிறார்கள். அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகள் அந்தக் குகைப்பகுதிக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின் 1938-ல் பல நிபந்தனைகளுடன் மீண்டும் அந்தக் குகை திறக்கப்பட்டது. ஐரோப்பாவின் ஆஸ்திரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் "ஐஸ் அசுரர்களின் உலகம்" ( World of the Ice Giants ) என்று பலரால் வர்ணிக்கப்படுகிற ஐஸ்ரிஸன்வெல்ட் ( Eisriesenwelt ) எனும் இந்தக் குகைதான் உலகிலேயே மிகப்பெரிய பனிக் குகை.

நம் கிரகத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான குகைகள் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே பனிக் குகைகள். அதிலும் ஐஸ்ரிஸன்வெல்ட் குகை இன்றுவரையிலும் பல நாட்டு சுற்றுலாப் பயணிகளின் ’சில்’ தேசமாக விளங்குகிறது. 

ஐஸ்

ஐஸ்ரிஸன்வெல்ட் குகை சாம்ராஜ்யம், பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இன்றைய தலைமுறையினருக்கு சில நூற்றாண்டுகளாகத்தான் தெரியும் !. 19-ம் நூற்றாண்டில் பல வேட்டைக்காரர்களுக்கு இந்தக் குகை நன்கு பரிச்சயமானாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை எவர் பார்வையிலும் இந்தக் குகை சிக்கவில்லை. முதன்முறையாக Anton Csorich von Monte Creto எனும் பெயிண்டரே ஐஸ்ரிஸன்வெல்ட் குகைக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரால் 200 மீட்டர் மட்டுமே குகைக்குள் பயணிக்க முடிந்தது. தொடர்ந்து பயணிக்க முடியாததால் திரும்பிவிட்டார். இவர் முதலாம் உலகப்போரில் ராணுவ அதிகாரியாக இருந்து மறைந்தார். 

ஐஸ்

ஐஸ்ரிஸன்வெல்ட் குகைக்கு நாம் செல்ல பனிக்காலம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அது அவ்வளவு சுலபமும் அல்ல, குகையினைச் சென்று சேர, 1000 அடி உயரம், பனிமலையில் பயணிக்க வேண்டும்!  எவ்வளவு அலுப்புடன் நாம் பயணித்திருந்தாலும், குகையை அடைந்ததும் மனம் குளிர்ந்துவிடும். குகையினை 42 கிமீ தூரம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருந்தாலும், பார்வையாளர்களுக்கு 1 கிமீ வரையே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தக் குகையானது மொத்தம் 30000 சதுர மீட்டர் பரப்பளவுடையது. குகையில் இயற்கையாய் உருவான உறைபனியின் வடிவங்கள் நம்மை வியக்கவைக்கும். தானே தோன்றிய பனிச்சிலைகளின் உருவங்களைக் கண்டு, நமக்குள் படிந்த பிம்பங்களுடன், கற்பனையில் நாமே ஒப்பிட்டுக்கொள்வோம். மொத்தத்தில் அங்கே செல்லும்போது, வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் வெளியிட்ட ராணி எல்சாவின் பனி அரண்மனையில் இருப்பது போன்றே உணர்வீர்கள்! அவ்வாறு பனியால் நிறைந்த சொர்க்கமே இந்த இடம்.

ஆனால் இங்கு பயணிக்க, முக்கியக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, திடமான உடல்நலம், ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டுமே குகைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அவ்வாறு செல்பவர்களும், உடன் வரும் வழிகாட்டிகளின் மேற்பார்வையில்தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முறையான பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம். பனிக்காலங்களில் பயணிகளின் வருகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் இதே வேளையில், இவ்விடத்தை ஒலிம்பிக் ஸ்கேட்டிங் வீரர்களுக்காக ஒதுக்கி அவர்கள் பயிற்சி எடுக்க உதவ வேண்டும் என்கிற கோரிக்கையும் பல ஸ்கேட்டிங் ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது. குகைக்கு மக்கள் பயணிக்க 1955-ம் ஆண்டு முதல் கேபிள் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மே 1 முதல் அக்டோபர் 26 வரை மட்டுமே பயணிகள் குகைக்குள் அனுமதிக்கப்படுவர். அடுத்த மாதம் மே ! சும்மா இருந்தா எப்படி?
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Sonnenbrille

தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பேராசிரியர்
க. கைலாசபதி அவர்களது பிறந்ததினம்.
எம்மொழிக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்த ஒரு சகலதுறைப் படைப்பாளி ஒரு பத்திரிகையாளர், இலக்கியவாதி இவர்.

Bild könnte enthalten: 1 Person, Brille, Sonnenbrille und Nahaufnahme

 
 
இலங்கையின் தேசிய கீதத்தை எழுதி, இசையமைத்த சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் ஆனந்த சமரக்கோனின் நினைவுதினம்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme

சுதந்திர ஊடகவியலுக்காக போராடி, உண்மைகளை வெளிக்கொண்டுவந்த காரணத்தாலேயே 'இனம் தெரியாதவர்களால்' கொலைசெய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

முடிவுக்கு வந்தது 33 வருட சகாப்தம்... மிஸ் யூ அண்டர்டேக்கர்!

`தி அண்டர்டேக்கர்', உலகெங்கிலும் உள்ள ரெஸ்ட்லிங் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் பெயர். அதை செய்ய கிட்டதட்ட 33 ஆண்டுகள் உதிரம் சிந்தி, எலும்புகள் நொறுங்க, சதை கிழிந்து சண்டை போடவேண்டியிருந்தது மார்க் காலவேவுக்கு.

 

 

 

1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்துவந்த ஃபிரான்ட் காம்ப்டன் காலவேவுக்கு ஐந்தாவது ஆண் குழந்தையாக பிறந்தான் மார்க் காலவே. சிறுவயதில் இருந்தே விளையாடுவதில் அவனுக்கு பெரிதளவில் ஆர்வம் இருந்தது. கடைக்குட்டி மார்க் காலவேவுக்கு தனது நான்கு அண்ணன்களுடன் இணைந்து விளையாடுவது தான் ஒரே பொழுதுபோக்கு. தனது பள்ளியின் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம் வந்தான். ஆறே முக்கால் அடி உயரமும் ஒல்லியான தேகமும் கூடைபந்து விளையாட்டில் பெரும் பக்கபலமாய் அமைய, நிறைய விளையாடி, நிறைய வென்றான்.

அந்த தகுதி, ஏஞ்சலினா கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தது. அங்கு படித்து பட்டம் பெற்ற பின்னர் டெக்சாஸ் வெஸ்லியான் பல்கலைகழகத்தில் விளையாட்டுத் துறை சம்பந்தமாக சில காலம் படித்தான். அந்த சமயத்தில்தான் மார்க் காலவேவுக்கு மல்யுத்தம் மீது ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. நாளடைவில், கூடைப்பந்து விளையாட்டையே மறந்துபோய், 'மல்யுத்தம் தான் வாழ்க்கை' என மாறினான். 

உலகசாம்பியன் ஷிப்


டெக்ஸாஸ் மாகாணத்தில் இயங்கிவந்த பிரபல ரெஸ்ட்லிங் நிறுவனமான WCCW-வில் `டெக்ஸாஸ் ரெட்' என்ற பெயரில் 19-வது வயது இளைஞனாக அறிமுகமானார் மார்க் காலவே. முதல் போட்டியே தோல்வி. நான்கு ஆண்டுகள் கழித்து WCCW நிறுவனத்தில் இருந்து வெளியேறி CWA நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே `மாஸ்டர் பெய்ன்' என்ற பெயரில் மல்யுத்தம் செய்துவந்த மார்க், அந்த ஆண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதி, அப்போதைய சாம்பியன் ஜெரி லாலரை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மல்யுத்த போட்டிகளில் அவர் பெற்ற முதல் சாம்பியன்ஷிப் பட்டம் அது. மார்க்கின் ஆறே முக்கால் அடி உயர உடம்பும், மல்யுத்த அசைவுகளும் அவரை ஊர் முழுக்க பிரபலமாக்கியது. `மல்யுத்த வீரனாவதற்காகவே பிறந்தவன்' என ரசிகர்கள் மெச்சினர். அந்த வார்த்தைகள் தான் அப்போதைய உலகின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த நிறுவனங்களில் ஒன்றான WWF/WWE-ற்கு அவரை கூட்டிச் சென்றது. 

மினிஸ்ட்ரி ஆஃப் டார்க்

1990 ஆம் ஆண்டு `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் டெட் டிபியாஸியின் 'மில்லியன் டாலர்' அணிக்கும் டஸ்டி ரோட்ஸின் 'ட்ரீம்' அணிக்கும் இடையே `4 ஆன் 4 எலிமினேஷன் மேட்ச்' நடத்த திட்டமிட்டது WWE. மேலும், டெட் டிபியாஸியின் மில்லியன் டாலர் அணியில் மர்ம மனிதர் ஒருவர் விளையாடுவார் எனவும் விளம்பரம் செய்தது. மார்ச் 22,1990 ஆம் நாள் ஹார்ட்போர்ட் நகரின் சிவிக் சென்டரில் பிரம்மாண்டமாக துவங்கியது `சர்வைவர் சீரிஸ்' போட்டி. `யார் அந்த மர்ம மனிதன்?' என மக்கள் ஆர்வமாய் காத்திருந்தார்கள்.

இரு அணி வீரர்களும் மேடையேறிய பின், மில்லியன் டாலர் அணியின் தலைவர் டெட் டிபியாஸி மைக்கை வாங்கி இப்படி அறிவித்தார். `என் அணியில் விளையாடவிருக்கும் அந்த மர்ம மனிதனை அழைக்கிறேன். 320 பவுண்ட் எடை கொண்ட டெத் வேலி ( மரண பள்ளத்தாக்கு ) பகுதியைச் சேர்ந்த `தி அண்டர்டேக்கர்' உங்கள் முன் இதோ'... கருப்பு நிற லாங் கோட், கருப்பு நிற தொப்பி, பழுப்பு நிற லாங் பூட் அணிந்து 6 10' உயரத்தில் அரங்கித்திற்குள்ளே நுழைந்த அண்டர்டேக்கரை பார்த்து மக்கள் அரண்டுபோனார்கள்.

 

போட்டி ஆரம்பித்த ஒரே நிமிடத்தில் கோகோவிற்கு ‛டாம்ப் ஸ்டோன் பைல் டிரைவர்’ போட்டு, போட்டியிலிருந்து அண்டர்டேக்கர் வெளியேற்றிவிட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பேரமைதியும், பெருங்கோபமும் ஒரு சேர கலந்திருந்த அண்டர்டேக்கரின் கண்கள் அவர்களை என்னவோ செய்தது. அப்போது தன்னைப் பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஒருவிதமான உணர்வை, அந்த வியப்பை தன் கடைசி போட்டியின் போதும் ஏற்படுத்தியது தான் அவரின் சாதனை.

1990 ஆம் ஆண்டு `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் அறிமுகமான அண்டர்டேக்கர் அதற்கு அடுத்த ஆண்டு நடந்த 'சர்வைவர் சீரிஸ்' போட்டியிலேயே உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டம் ஜெயித்தார். அதுவும், அப்போதைய WWE சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகனை எதிர்த்து. அதன் பிறகு அண்டர்டேக்கர் இல்லையேல் WWE இல்லை என்றாகிவிட்டது. உலக ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப், ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப், WWE சாம்பியன்ஷிப் என எல்லா சாம்பியன்ஷிப்களையும் தனது தோள்களில் தாங்கியிருக்கிறார் அண்டர்டேக்கர்.

அமெரிக்கன் படாஸ்

`ரெஸ்ட்ல்மேனியா' போட்டிகளில் வேறெந்த வீரரும் செய்யாத சாதனையாக 25 முறை சண்டையிட்டுள்ளார். அதிலும் தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வென்றிருக்கிறார். ரெஸ்ட்லிங் வரலாற்றில் எட்டமுடியாத சாதனையாக இது கருதப்படுகிறது. WWE நிறுவனம் `மன்டே நைட் ரா' நிகழ்ச்சியை தொடங்கியதிலிருந்து இன்றுவரை அதில் சண்டையிட்டு வரும் ஒரே வீரன் அண்டர்டேக்கர் மட்டுமே. ஹல்க் ஹோகன் ஆரம்பித்து ஸ்டீவ் ஆஸ்டின், தி ராக், ஜான் செனா, ரோமன் ரெயின்ஸ் வரை எல்லா தலைமுறையினருடனும் மல்லுக்கட்டியிருக்கிறார். அண்டர்டேக்கரை எதிர்த்து சண்டையிடுவதையே தான் வாழ்க்கையில் பெற்ற பெரும் வரமாக பார்க்கிறார்கள் மல்யுத்த வீரர்கள். இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை வளர்த்துவிடவும் செய்வார் அண்டர்டேக்கர். ப்ராக் லெஸ்னர், ரேன்டி ஆர்டன், பட்டிஸ்டா என சொல்லிக்கொண்டே போகலாம். 

பிஜி எரா அண்டர்டேக்கர்


இளைஞர்களுக்கு நிகராக சிறுவர் கூட்டமும் WWE போட்டிகளுக்கு ரசிகர்களாக இருந்துவருகின்றர். பறந்து பறந்து அடிப்பது, கலர்ஃபுல்லான ஆடைகள் அணிவது, நகைச்சுவையாக பேசுவது போன்ற அம்சங்கள் தான் குழந்தைகளை ரசிக்கவைக்கும். ரே மிஸ்டிரியோ, ஜான் செனா போன்றோரை குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்க காரணம் இது தான். ஆனால், இது எதுவும் இல்லாமலேயே குழந்தைகளை ரசிக்கவைத்தவர் அண்டர்டேக்கர். கருப்பு நிறங்களில் ஆடைகள் அணிந்துகொண்டும், பயமுறுத்தும் உடல்மொழிகளை கொண்டுமே அதை செய்து காட்டினார். ஆக்ரோஷத்தில் சண்டையிட்டு கொண்டிருக்கும் அண்டர்டேக்கர் திடீரென ரெஃப்ரிக்களை திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். அதில் பயந்துபோய் ரெஃப்ரிக்கள் தெறித்து ஓடுவார்கள்.

ஒருமுறை ஸ்டோரி லைனுக்காக பிக்பாஸ் மேன் என்பவரை அண்டர்டேக்கர் தூக்கில் ஏற்றினார். மேன்கைன்டுடன் அவர் சண்டையிட்ட 'ஹெல் இன் எ செல்' போட்டியை பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தாலும் ரத்த சிவப்பில் தான் தெரியும். உயிரோடு புதைப்பது, எரிப்பது என எத்தனையோ கண்கட்டு வித்தைகளை நிகழ்த்தி கதிகலங்க வைத்திருக்கிறார். 30 நிமிட சண்டையும் போட்டிருக்கிறார், 18 நொடிகளிலேயே மேட்சையும் முடித்திருக்கிறார். ரெஸ்ட்லிங் அரங்கில் அண்டர்டேக்கர் செய்யும் ஒவ்வொரு அசைவும் புத்தகத்தில் இருப்பவை.

தொழில்முறை ரெஸ்ட்லிங் போட்டிகளில் அண்டர்டேக்கர் அளவு நுட்பம் மற்றும் திறனோடு சண்டையிடும் ஆளே கிடையாது. வெவ்வெறு அவதாரங்கள், ஓட்டி வந்த புல்லட்டுகள், சண்டை நுணுக்கங்கள்,பட்டப்பெயர்கள், கேன் உடனான ஆன் ஸ்கிரின் உறவு என அண்டர்டேக்கரை பற்றி பேச எத்தனையோ இருக்கிறது. இப்படி பல எட்டமுடியாத சாதனைகளைப் புரிந்து, தொழில்முறை மல்யுத்த அரங்கில் மகுடம் சூடா மன்னனாக வலம் வந்த அண்டர்டேக்கர் நேற்றிலிருந்து வரலாறு ஆகிவிட்டார்.

 

அண்டர்டேக்கரின் ஹிட் வரலாறு 25 படங்களில்!

மார்க் காலவே தனது `அண்டர்டேக்கர்' அடையாளத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டார். வயதில் அரை சதத்தை கடந்துவிட்ட மார்க் காலவே ரெஸ்ட்லிங் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டார். ரெஸ்டில்மேனியா போட்டிகளின் 21 வருடங்களாக 21-0 என விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டு வந்த அண்டர்டேக்கர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராக் லெஸ்னரிடம் தோல்வியடைந்தபோதே அவரது ரசிகர்கள் உடைந்துபோய்விட்டனர். மேலும், முதுமையால் தளர்ந்த உடல், சுருங்கிய தோல்களோடு அண்டர்டேக்கர் சண்டையிடுவதை பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அப்போதே ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்த்தனர். எனவே, அவர்களுக்கு இந்த ஓய்வு அறிவிப்பு நிம்மதியைத் தான் தந்திருக்கும். ஆனால், அடுத்த தலைமுறை ரெஸ்ட்லிங் ரசிகர்கள் நிச்சயமாக ஒரு மாவீரனை இழந்திருக்கிறார்கள்.

ரெஸ்ட் இன் ஹோம் மார்க்...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மிகவும் நாற்­ற­ம­டிக்கும் பாத­ணி­க­ளுக்­கான போட்டி நியூ­யோர்க்கில் நடை­பெற்­றது

பாத­ணிகள் நாற்­றத்தை சகித்­துக்­கொள்ள முடி­யாது. ஆனால், மிகவும் நாற்­ற­ம­டிக்கும் சப்­பாத்­து­க­ளுக்­கான போட்டி அமெ­ரிக்­காவில் அண்­மையில் நடை­பெற்­றது.

shoe2

வரு­டாந்தம் நடை­பெறும் இப்­போட்டி 42 ஆவது தட­வை­யாக நடை­பெற்­றது. இவ்­வ­ருடப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.  அமெ­ரிக்­காவின் அலாஸ்கா, நியூ மெக்­ஸிகோ, கொல­ராடோ உட்­பட பல்­வேறு மாநி­லங்­க­ளி­லி­ருந்தும் போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றினர். 4 நடு­வர்கள் பாத­ணி­களை மணந்­து­பார்த்து புள்­ளி­களை வழங்­கினர்.

shoe-4

12 வய­தான கொனோர் ஸ்லோகொம்பே எனும் சிறுவன் கொண்­டு­வந்த சப்­பாத்து மிக நாற்­ற­ம­டிக்கும் பாத­ணி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டது. அச்­சி­று­வ­னுக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன் 2,500 டொலர் (சுமார் 38,000 ரூபா) பணப்­ப­ரிசு வழங்­கப்­பட்­டது.

shoe

பாத­ணி­களை நாற்­ற­ம­டிக்கச் செய்­வ­தற்­காக பல்­வேறு உபா­யங்கள் பின்­பற்­றப்­பட்­ட­னவாம். ஒரு­போதும் காலு­றை­களை (சொக்ஸ்)அணி­யா­தி­ருத்தல், சேற்றுக்கூடாக நடத்தல் ஆகிய நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டதாக போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.