Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 09
 
 

article_1491457555-SADDAM-HUSSEIN.jpg1867: ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா பிராந்தியத்தை வாங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

1947: அமெரிக்காவின் கான்ஸாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ சூறாவளியினால் 181 பேர் பலி.  

1957: சில மாதங்களாக மூடப்பட்டிருந்த  சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும்  திறக்கப்பட்டது.

1967: போயிங் 737 ரக விமானத்தின் கன்னிப் பறப்பு இடம்பெற்றது.

1992: பனாமாவின் முன்னாள் சர்வாதிகாரி மனுவல் நொரிகாவுக்கு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.

1999: நைஜீரிய ஜனாதிபதி இப்ராஹிம் பாரே மெய்னாஸ்ஸரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

2003: ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாம் ஹுஸைனின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

2005: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்ஸுக்கும் கமீலா பார்கருக்கும் திருமணம் நடைபெற்றது.

tamilmirror.lk/

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்


வாழையிலும் போதை!
3a.jpg
ஸ்பெயின் நாட்டிலுள்ள வலென்சியா நகர துறைமுகத்தில் இறக்குமதியான பச்சைப்பசேல் வாழைப்பழங்களின் மீது போலீசுக்கு டவுட் வந்திருக்கிறது. உரித்துப் பார்த்தால் 57 டூப் பழங்கள்! உள்ளே கோகைன். மொத்தம் 7 கிலோ கோகைனை இப்படி வாழைப்பழத்தில் வைத்து கடத்த முற்பட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓபன் தி பீர் சுறா!

ப்ளோரிடாவில் உள்ள பீச்சில் ஒருவர் சுறாவின் வாயைத் திறந்து பிடிக்க இன்னொருவர் பீர் கேனை அதன் பற்களின் மூலம் உடைத்து திறக்கிற ஃபேஸ்புக் வீடியோ இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. விலங்குநேசர்கள் நரம்பு புடைக்க சவுண்ட் விட, வீடியோ செம ஹிட். ‘பீர் டேஸ்ட்டாக இல்லை. அதனால் என்ன... வீடியோ ஹிட். அது போதும்...’ என குசும்பாக பதிவிட்டிருக்கிறார்கள் இந்த சுறா பாய்ஸ்.

ஜட்டியால் மாட்டிய திருடன்!

திருடினாலும் தப்பித்து ஓட ட்ரெய்னிங் தேவைதானே! அரிசோனாவின் டக்ஸன் நகரிலுள்ள பள்ளியில் புகுந்த திருடன் மாட்டும் நிலை வந்ததும் தப்பித்து ஓடினான். என்ன... கேட்டில் எகிறிக் குதித்தபோது அவனது பேன்ட், கம்பிகளில் சிக்கி ஜட்டி தெரிய கிழிந்துவிட்டது. பிறகென்ன, அலேக்காக கைது செய்து லாக்கப்பில் அடைத்துவிட்டனர்.

பர்கரே கோயில் பிரசாதம்!

கோயிலில் எதை பிரசாதமாக கொடுப்பார்கள்? சுண்டல், பொங்கல்தானே! ஆனால், சென்னையின் படப்பையிலுள்ள ஜெயதுர்கா பீடத்தில் பர்கர், சாண்ட்விச், தக்காளி சாலட்தான் பிரசாதமாம்! பக்தர்களின் பிறந்த நாளுக்கு பர்த்டே கேக்கும் இக்கோயிலில் தருகிறார்கள்.

ஸ்வீட் ராபர்!

டோக்கியோவில் வசிக்கும் யாஷூஹிரோ வகஷிமாவுக்கு வயது 51. மனிதருக்கு ஸ்வீட் என்றால் கொள்ளை இஷ்டம். முஷாசினோ நகரிலுள்ள நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு திரும்பியது இவரின் பலவீனம். திருடிய பணத்தைவிட தின்ற ஸ்வீட்டுகள் 250. கூடவே 4 கோலா பானங்கள். FIRல் பணக் கொள்ளையுடன் இந்த ஸ்வீட் கொள்ளையையும் சேர்த்திருக்கிறார்கள்!

www.kungumam.co

  • தொடங்கியவர்

இயற்கையின் அழகு உணர்த்தும் தென்னாபிரிக்க காட்டுகளின் வான்வழி படங்கள்

 

இயற்கையின் அழகு உணர்த்தும் தென்னாபிரிக்க காட்டுகளின் வான்வழி படங்கள்

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

எட்வர்டு மைபிரிட்ஜ்

 

 
edward_3152439f.jpg
 
 
 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரும், புகைப்படத் துறையில் பல புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவருமான எட்வர்டு மைபிரிட்ஜ் (Eadweard Muybridge) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* லண்டனின் கிங்ஸ்டன் பகுதியில் (1830) பிறந்தார். இயற்பெயர் எட்வர்டு ஜேம்ஸ் மாக்ரிட்ஜ். கல்வி கற்ற பிறகு அமெரிக்காவில் குடியேறி னார். தொடக்கத்தில் ஒரு வெளியீட் டாளரிடம் முகவராகவும், புத்தக விற்பனையாளராகவும் பணியாற்றினார்.

* அப்போது, புகைப்படத் துறையில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அவ்வளவாக தொழில் நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும்கூட, ஆர்வத்தோடு ஏராளமான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டார். விரைவில் புத்திசாலி புகைப்படக் கலைஞர் என்று பெயர் பெற்றார். இவர் ‘ஃபோட்டோ கார்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்ட புகைப்படங்கள் நல்ல விலைக்கு விற்றன.

* வர்த்தகரீதியாக வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக மாறினார். வடக்கு கலிபோர்னியா மலைப்பகுதியை ஒட்டியுள்ள யோசெமிட்டி பள்ளத்தாக்கின் அழகை பல்வேறு விதமான கோணங்களில் படம்பிடித்தார். 1868-ல் பிரம்மாண்ட அளவில் வெளியான இந்த புகைப்படங்கள் இவரை உலக அளவில் புகழடைய வைத்தன.

* அதுவரை ஸ்டில் புகைப்படங்கள் எடுத்துவந்தவர், 1872 முதல் மோஷன் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். இதற்காக பல கேமராக்களை பயன்படுத்தி பலவிதமான பரிசோதனையில் ஈடுபட்டார். 4 கால்களையும் உயர்த்திய நிலையில் குதிரை பாய்ந்தோடுவதை படம் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இவரது கேமராவில் சில வசதிகள் இல்லாததால் அந்த முயற்சி முதலில் வெற்றிபெறவில்லை.

* யூனியன் பசிபிக் ரயில்ரோடு நிறுவனத்துக்காக பல விளம்பரப் புகைப்படங்களை எடுத்தார். 1877-ல் கலிபோர்னியா சென்றவர், மோஷன் போட்டோகிராபி குறித்த ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். சிறப்பு ஷட்டர் ஒன்றை வடிவமைத்து, பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டார்.

* இவர் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பல இதழ்களில் வெளிவந்தன. தனது பிரத்யேக ஷட்டர் உதவியுடன், 4 கால்களும் அந்தரத்தில் இருக்கும் குதிரையைப் படம்பிடிக்கும் சவாலை நிறைவேற்றினார். இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதிலும், இவருக்கு மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.

* புகைப்படத் துறையில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தினார். நகரும் அல்லது சலனம் கொள்ளும் படத்தை அறிமுகம் செய்தார். விலங்குகளின் லோகோமோஷன் குறித்து அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் விரிவுரை நிகழ்த்தினார். 1883 முதல் 1886-க்குள் தன் கேமராவில் 10,000 இமேஜ்களை பதிவு செய்திருந்தார்.

* பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆதரவுடன் சலனப்படங்கள் குறித்த முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் மனித உருவங்களின் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியிருந் தன. இது கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. இந்தப் புகைப் படங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று 1887-ல் வெளியிடப்பட்டது.

* விலங்குகள், மனிதர்களின் அசைவுகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இதுகுறித்து பல நூல்கள் எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அசாத்தியமாக கருதப்பட்ட பல அற்புதப் புகைப்படங்களை எடுத்தார். இயற்கை, நிலப்பரப்பு, விலங்குகள், மனிதர்கள் என அனைத்தையும் படமெடுத்தார்.

* சலனப்படங்களின் முன்னோடியாக இருந்து, ஒளிப்படங்களில் பல்வேறு புதுமைகள் புரிந்து, புகைப்படத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய எட்வர்டு மைபிரிட்ஜ் 74-வது வயதில் (1904) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

குரங்குகளுடன் தனியாக வாழ்ந்த வந்த சிறுமி மீட்பு

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.

குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்

அதிசயப் பனிப்பாறைகள்

 
iceberg_3150889f.jpg
 
 
 

மிகப் பெரிய, உறுதியான, கெட்டியான பனிக் கட்டியைத்தான் பனிப்பாறை (Glacier) என்று அழைக்கிறார்கள். இந்தக் கோடைக் காலத்தில் பனிப்பாறைகள் பற்றிய ஜில் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?

> பனிப்பாறை என்பது சில தினங்களிலோ, பல மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ உருவாகிவிடுவதில்லை. ஓர் இடத்தில் பனி விழுந்து, சேர்ந்து பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டு, கெட்டியாகிப் பனிக்கட்டியாக மாறி, நாளடைவில் பிரமாண்டப் பனிப் பாறையாக மாறும்.

> பூமியின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீதத்தைப் பனிப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளன.

l‘கிளேஸியர்’ என்பது பிரெஞ்சு வார்த்தை. இது லத்தீன் மூல வார்த்தையான ‘கிளேஸிஸ்’ என்பதிலிருந்து உருவானது. ‘கிளேஸிஸ்’ என்றால் ‘ஐஸ்’ என்று பொருள்.

> பூமியில் சுமார் ஒன்றரை கோடி சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவுக்குப் பனிப் பாறைகள் காணப்படுகின்றன. இவை சுமார் 50 நாடுகளில் பரவிக் கிடக்கின்றன.

icebergs_3150888a.jpg

> இன்று உலகில் காணப்படும் பெரும்பாலான பனிப்பாறைகள், கடைசி பனி யுகத்தின் மிச்சங்களே. இவற்றின் வயது 11 ஆயிரம் ஆண்டுகள் முதல் ஒன்றே முக்கால் கோடி ஆண்டுகள் வரை இருக்கலாம்.

> பனிப்பாறைகளைப் பார்க்கும்போது ஆடாமல் அசையாமல் இருப்பது போலத் தெரியும். ஆனால், அவை உண்மையில் மெதுவான நதி போல், லேசாக நகர்ந்து கொண்டிருக்கும். எனவே, அவற்றை ‘பனியாறுகள்’ என்றும் சொல்வார்கள்.

> சில பனியாறுகள், ஆண்டுக்குச் சில அடிகள் நகரும். சில பனியாறுகள், ஒரே நாளில் பல அடி தூரம்கூட நகர்ந்து விடும்.

> உலகின் மிகப் பெரிய பனிப்பாறை, அண்டார்டிக்காவின் லாம்பெர்ட் ஃபிஷ்ஷர் பனிப்பாறை.

> உலகின் இரண்டாவது பெரிய பனிப்பாறை, இமாலய- காரகோரம் பகுதியில் உள்ள இந்தியாவின் சியாச்சின் பனிப்பாறை.

> அலாஸ்கா, சிலி, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய இடங்களிலும் பனிப்பாறைகள் உள்ளன. ஆண்டிஸ், இமயமலை, ராக்கி மலை, காகசஸ், ஆல்ப்ஸ் ஆகிய மலைகளில் பனிப்பாறைகள் உள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஜான்டியின் குழந்தை இந்தியாவும், ஹர்பஜனின் குழந்தை ஹியானாவும் தான் தற்போது வைரல்!

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ஹர்பஜன் சிங் தனது ஒரு வயது மகள் தென் ஆப்ரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸின் மகளுடன் விளையாடும் புகைப்படத்தை இன்று ட்விட்டரில் வெளியிட்டார். ஐ.பி.எல் போட்டிகள் மூலம் பிற நாட்டு வீரர்களுடனான உறவுகள் மேம்படுவதாக அவர் கூறியுள்ளார்.

hinaya

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி அதிரடியாக பயணிக்க ஆரம்பித்துள்ளது. மற்ற போட்டிகளை போல் இல்லாமல் பொழுதுபோக்கு நிறைந்த போட்டியாக நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகளை வெளிநாட்டு வீரர்கள் அதிகமாகவே விரும்புகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சுற்றுலாவை போல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்தியா வருவது வழக்கமாகியுள்ளன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்பஜன் தனது மகள் ஹினாயா தென் ஆப்ரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸின் மகள் இந்தியா ரோட்ஸுடன் விளையாடி மகிழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அனைவரும் ஒன்று கூடும் தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஜான்டி ரோட்ஸ் இந்தியாவை அதிகம் விரும்பியதால் தனது மகளுக்கு இந்தியா ரோட்ஸ் என பெயரிட்டது குறிப்பிடத்தக்கது. ஜான்டி ரோட்ஸ் தனது மகளுக்கு, ’இந்தியா’ என்று பெயரிட்டதால், அந்த சுட்டி குழந்தை முன்னரே ட்ரெண்டாகிவிட்டது. தற்போது ஹர்பஜன் குழந்தையுடன் விளையாடும் புகைபடம் வெளியாகி மிண்டும் ஒருமுறை ட்ரெண்டாகிவிட்டாள் இந்தியா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

“உலகம் சுற்ற சைக்கிள் போதும்!” - சென்னை பெண்ணின் பயணக் காதல்

பயணம்

சைக்கிள்... சின்ன வயதில் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளில் ஆரம்பித்து கல்லூரி வரை விதவிதமாக சைக்கிள் ஓட்டியவர்களின் அது தரும் சுகமும், ஆனந்தமும் தெரியும். நினைத்தால் நினைத்த நேரத்தில் சைக்கிளில் பறக்கும் ஆண்களைப் போல அல்ல பெண்கள். பயணங்கள் அவர்களுக்கு அத்தனை எளிதாக வாய்த்துவிடுவதில்லை. இதனை சற்றே மாற்றி, ’மெளண்டைன் பேக்கிங்’ (Mountain Biking) மூலம் தான் விரும்பும் இடத்திற்கு நினைத்த நொடியில் சைக்கிளில் பறந்துக்கொண்டே இருக்கிறார் , சென்னையைச் சேர்ந்த ஹேமா மணி.

''சின்ன வயசுல நமக்கெல்லாம் சைக்கிள் ஓட்டுறதுல ஆர்வம் இருக்கும். அந்த மாதிரிதான் நானும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சேன். அதை காதலிக்க ஆர்மபிச்சேனு சொல்லலாம். ஸ்கூல் படிக்கும்போது, கடைக்குப் போறதுல இருந்து, நண்பர்கள் வீட்டுக்குப் போறவரைக்கும் எல்லாமே எனக்கு வாங்கி கொடுத்த சைக்கிள்லதான் போவேன். வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் வண்டி பயன்படுத்த ஆரம்பிச்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, என்னடா வண்டியிலேயே நம்ம வாழ்க்கைப் போகுதேனு ஒரு கவலை வந்துச்சு. நாம ஏன் நம்ம சின்ன வயசு ரசனையை மறுபடியும் ரசிக்கக் கூடாதுனு நினைச்சேன். சைக்கிள் வாங்கணும்னு முடிவு பண்ணினது அப்பதான்” என்று தன் பால்யகால நினைவுகளை ரசித்தபடி பேச ஆர்மபிக்கிறார் ஹேமா மணி.

”அப்போ எனக்கு ‘கியர்’ சைக்கிள் இருக்குதுனுகூட தெரியாது. என் பக்கத்துவீட்ல இருக்கிறவங்க,  ’கியர்’ சைக்கிள் வைச்சிருந்தாங்க. அதைப் பார்த்ததும் மனசுக்குள்ள குறுகுறுனு சந்தோஷம் பரவுச்சு. அதைப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். அப்போ, சைக்கிள் வொர்க்‌ஷாப் ஒண்ணு சென்னைல நடந்தது. அந்த வொர்க்‌ஷாப்புல கலந்துகிட்ட அடுத்த நாள் நானும் கியர் சைக்கிள் வாங்கிட்டேன். 

ஹேமா சைக்கிள் பயணம்

நான் சைக்கிள் வாங்குறதுக்கு முன்னாடி ’பேக்பாக்கிங் டிராவல்’ (Backpacking Travel) பண்ணி இருந்தேன்.  ஆனா, நான் சைக்கிள்ல முதன்முறையா, கேரளா வழியா வயநாடு, மைசூருக்கு ஒன்பது நாட்கள் பயணம் போனேன். என் வாழ்க்கையே புதுசா பார்க்குற மாதிரி இருந்தது, அந்த அனுபவம். நாம ரயிலையோ, கார்லையோ பயணம் செய்யும்போது, பாதைகள்ல இருக்கிற அழகான  காட்சிகளை ரசிக்கமுடியாம போயிடும். ஆனா, சைக்கிள்ல போகும்போது நாம கடக்குற ஒவ்வொரு அடியையும் ரசிக்கமுடியும்.  சைக்கிள் பயணத்துல இருக்கிற சிறப்பே இதுதான்” என சிலிர்க்கிறார்  ஹேமா.

ஹேமாவுக்கு மாதவிடாய் காலம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. “எனக்கு எப்போ லீவு கிடைக்கும்; என் நண்பர்களுக்கு  எப்போ டைம் கிடைக்கும்னு பார்த்துதான், ஒரு ட்ரிப்புக்கு நான் முடிவு செய்வேன். மாதவிடாய் காலத்துல, நான் நாப்கின்ஸ் யூஸ் பண்ணமாட்டேன். துணிதான் பயன்படுத்துவேன். 

இரவு நேரங்களில் பயணிக்கும்போது,  எனக்கு உதவியா இருக்கிறது, மேப் தான்! மலைப்பகுதியில பயணிக்கும்போது, பக்கத்துல என்னென்ன கிராமங்கள் இருக்குனு தெரிஞ்சிப்பேன். சாப்பாட்டுக்கு, அந்த கிராமங்கள்ல இருக்கிற வீட்லதான் கேட்பேன்.  சில நேரங்கள்ல எதுவும் கிடைக்காது. அப்போ, தண்ணீர்தான் எனக்கு உணவு. ஒரு ட்ரிப் போறதுக்கு முன்னாடியே, நாங்க எந்த ரூட்ல போகப்போறோம்னு முடிவு பண்ணிப்போம். ஒரே ஒரு டிரஸ் செட், ஒருவேளை சைக்கிள் பஞ்சரான அதை சரிசெய்ய வேண்டிய சில பொருட்கள்னு ரொம்ப முக்கியமானவற்றை மட்டும்தான் எடுத்துட்டு போவேன்.” என்கிறார் கூலாக.

ஹேமாவின் பயணங்களில் மறக்கமுடியாதது காஷ்மீருக்கு சென்ற பயணமாம்!  ''ஜூலை மாசம் வரைக்கும் அங்க மழை பெய்யும். அதனால, நாங்க ஆகஸ்ட்  மாசம்  ட்ரிப் போனோம். ஆனா, எதிர்பாரா விதமா,  கடுமையான மழையில் நானும் என் நண்பர்களும்  சிக்கிக்கொண்டோம். நாங்க  சைக்கிள் ஓட்டியிருந்த பகுதியில, மண்சரிவு வேற... என்ன பண்றதுனே தெரியல. கிட்டதட்ட 16 கிலோமீட்டர் வரைக்கும்,  சைக்கிள்ல தலைல தூக்கிவச்சிட்டுப் போனோம் ” என்கிறார்அந்த நாளின் நிகழ்வோடு.

சைக்கிள் பயணம்

சென்னை ட்ரக்கிங் க்ளப்பில் உறுப்பினராக இருக்கும் இவர், கடந்த 2015ஆம் ஆண்டு இமாலய மலைப் பகுதியில்  பேக்கிங் செய்த அனுபவம், சாகங்களும் சவால்களும் நிறைந்து இருந்தது. ”இந்த மாதிரி மலைப்பகுதில  சைக்கிளிங் செய்றதுக்கு முன்னாடி, நம்ம சாதாரண தார் சாலைகள்ல ஓட்டிப் பழகிக்கணும். அப்போதான், கடுமையான மலைப்பகுதிகள்ல தாக்குபிடிக்கிற அளவுக்கு நமக்கு பலம் வரும். இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஃபலோ பண்ணா, அப்புறம், சைக்கிள் பயணம் ரொம்ப சுலபமாயிடும்.  நம்ம மனசு,மூளை, உடம்பு - இந்த மூன்றையும் புதுப்பிக்கிறது  பயணங்கள்தான்! எல்லாரும் என்னை சைக்கிளிஸ்ட்னு நினைக்குறாங்க. ஆனா,  பயணம் செய்றதுல இருக்கிற ஆர்வம்தான், என்னை சைக்கிளே ஓட்ட வைச்சுது”, என்று  நமக்கு ’டாடா’  காட்டிக்கொண்டு, தனது சைக்கிளில் பறக்கிறார் ஹேமா. 

தொடரட்டும் இவரின் பயணங்கள்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1953 - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) -ஐ வெளியிட்டது 1959 - மெர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது

 
போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967
 
அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1953 - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) -ஐ வெளியிட்டது 1959 - மெர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது. 1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 - முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது. 1999 - நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார். 2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

http://www.maalaimalar.com

வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953

 

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1940 - இரண்டாம் உலகப் போர்: நார்வே மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது. 1947 - டெக்சாஸ்

 
 
 
 
வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953
 
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது
 
* 1940 - இரண்டாம் உலகப் போர்: நார்வே மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.
 
1947 - டெக்சாஸ், ஒக்லகோமா மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர். 1948 - ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • தொடங்கியவர்

42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழு

 

42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர் அந்த விமானக் குழுவினர்.

42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழுபடத்தின் காப்புரிமைTURKISH AIRLINES Image caption28 வாரமாகும் நஃபி டியாபி என்ற அந்த பெண் பயணி, பிரசவ வலியால் அவதிப்பட்டதை அந்த விமான குழு கவனித்தது

அந்த விமானம் கின்னியாவின் தலைநகர் கொனக்ரியிலிருந்து ஒக்காடவ்கெளவ் வழியாக இஸ்தான்புல்லிற்கு சென்று கொண்டிருந்தது.

தாய் மற்றும் கடிஜு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தை புர்கினோ ஃபாசோவின் தலைநகரில் விமானம் தரையிறங்கப்பட்டதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழுபடத்தின் காப்புரிமைTURKISH AIRLINES Image captionவிமான பயணத்தின் போது அவர் குழந்தை பெற விமான குழு உடனடியாக உதவி செய்தனர்

இருவரும் உடல் சோர்வுடன் இருந்தாலும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

"28 வாரமாகும் நஃபி டியாபி என்ற அந்த பெண் பயணி, பிரசவ வலியால் அவதிப்பட்டதை அந்த விமான குழு கவனித்தது" என துருக்கிய விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழுபடத்தின் காப்புரிமைTURKISH AIRLINES

"விமான பயணத்தின் போது அவர் குழந்தை பெற விமான குழு உடனடியாக உதவி செய்தனர்."

பெரும்பாலுமான விமான சேவைகள், 36 மாத வரையிலான கர்பிணி பெண்களை அனுமதிக்கின்றனர்; ஆனால் 28 மாதத்திலிருந்து உள்ளவர்கள் அவர்கள் குழந்தை பெறும் தேதியை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவரின் கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

1,854 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான பாலம்

world's-highest-bridge26-full

சீனாவில் மலைச் சிக­ரங்­களை இணைக்கும் வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாலம் உலகின் மிக உய­ர­மான பால­மாக விளங்­கு­கி­றது.

பேய்­பான்­ஜியாங் பாலம் என பெய­ரி­டப்­பட்­டுள்ள இப் ­பாலம், சீ தியூ எனும் நதி­யொன்­றுக்கு மேலாக 565 மீற்றர் (1854 அடி) உய­ரத்தில் உள்­ளது.

இப் ­பா­லத்தின் நான்கு வழி வாகனப் போக்­கு­வ­ரத்து நடை­பெ­று­கி­றது. இப்­ பா­லத்தின் நீளம் 1341 மீற்­றர்­க­ளாகும்.

100  கோடி சீனா யுவான் (சுமார் 2152 கோடி ரூபா) செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

இப்­ பா­ல­மா­னது யுனான் மற்றும் குய்ஸோ ஆகிய இரு மாகா­ணங்­களை இணைக்கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

யுனான் மாகா­ணத்தின் ஸுவான்வேய் நக­ரி­லி­ருந்து குய்ஸோ மாகா­ணத்தின் ஷுய்சேங் நகரை அடை­வ­தற்கு முன்னர் 4 மணித்­தி­யா­லங்கள் தேவைப்­பட்­டன.

ஆனால், இப் ­பாலம் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பின் இப் பயண நேரம் ஒரு மணித்தியாலமாக குறைந்துள்ளது.

 

world's-highest-bridge

world's-highest-bridge225

world's-highest-bridge2

http://metronews.lk/

  • தொடங்கியவர்

இதயங்களை வென்ற மகான் மகாவீரர்..! பிறந்த நாள் இன்று

வீரம் என்றால்,போர்க்களங்களில் வீரர்களைக் கொன்று குவிப்பதில் இல்லை. உண்மையான வீரம் என்பது மனதின் ஆசைகளை வென்று வாழ்வதில்தான்  அடங்கி இருக்கிறது. ஆனால், வீரம் என்பது மற்றவர்களைக் கொன்று அவர்களுடைய நாடு மற்றும் உடைமைகளை அபகரிப்பதுதான் என்று மன்னர்கள் மண்ணாசையும் பொன்னாசையும் கொண்டு, பாரத புண்ணிய பூமியை யுத்தக் களமாக மாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவதரித்தவர் பகவான் மகாவீரர்.

மகாவீரர்

சுய விருப்பு வெறுப்புகளால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அறிந்து, அறிந்த உண்மைகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, சமூகத்தை நல்ல நிலைக்கு உயர்த்தவேண்டும் என்பதற்காக துறவு மேற்கொண்ட கர்மவீரர் மகாவீரர். அகிம்சையை முதன்மையான கடமையாகப் போற்றும் சமண சமயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே.

பண்டைய வைசாலி தேசத்தின் (தற்போதைய பீகார்) அரசராக இருந்தவர் சித்தார்த்தன் .அவரது மனைவியின் பெயர் த்ரிஷாலா தேவி .இவ்விருவருக்கும் கி.மு. 599 - ம் ஆண்டு சைத்ர (சித்திரை) மாதம் வளர்பிறை 13 - ம் நாளில் பிறந்த குழந்தைக்கு வர்த்தமானன் என்று பெயரிட்டு அழைத்தார்கள் .வர்த்தமானன் என்றால் வளம் சேர்ப்பவன் என்று பொருள் .சித்தார்த்தனைப் போலவே நாடாளும் அரசனாக பின்னாளில் வர்த்தமானன் உருவெடுப்பான் என்றே அனைவரும் எதிர்பார்க்க, வர்த்தமானனுக்கு சிறுவயதில் இருந்தே தீர்த்தங்கரர்கள் வகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளிலேயே அதிகமான நாட்டம் இருந்தது. தியானத்திலும்,தன்னை அறிவதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவருடைய போக்கை மாற்ற எண்ணிய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண்குழந்தையும் பிறந்தது.

சமணர்படுகை

தீர்த்தங்கரர்களின் சமணக் கொள்கைகளின் மீதிருந்த அதீத பற்றால் தனது முப்பதாவது வயதில் அரசவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டார்.தமது இடைவிடாத ஆன்மிகத் தேடலில் 12 ஆண்டுகள் கழித்தார், தீர்த்தங்கர்கள் தொகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளை சீர் செய்து சமண மதத்தை தோற்றுவித்தார்.ரிஜுபாலிகா நதிக்கரையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார். மனதை அடக்கி எல்லாவற்றையும் வென்றவர் என்று பொருள்படும் வகையில் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார்.பிறகு நாடு முழுவதும் சென்று சமண மதக் கருத்துக்களை பரப்பினார்.

சிறு உயிர்களுக்கும் ஆன்மா உண்டு; மனிதனின் ஆன்மாவும் சிறு உயிர்களின் ஆன்மாவும் சமமானதே என்றும் பொதித்தார். ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கர்மா என்னும் வினைப்பயனை அடைகிறது என்றும், 'நன்னம்பிக்கை', 'நல்லறிவு', 'நற்செயல்' என்னும் மூன்று ரத்தினங்களைக் கடைப்பிடித்தால், முக்தி நிலையை அடைய முடியும் என்றும் போதித்தார்.

மகாவீரர் போதித்த ஐந்து உபதேசங்கள்:

பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்கக்கூடாது.

திருடுவது கூடாது.

எந்தச் சூழ்நிலையிலும் உண்மையே பேச வேண்டும்.

புலனின்பங்களில் நாட்டம் இருக்கக்கூடாது.

பொன் பொருளில் ஆசை இருக்கக்கூடாது.

என்னும் இந்த ஐந்து உபதேசங்களை பஞ்ச ரத்னங்களாக நினைத்துப் போற்றி கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

சமணர் சிற்பங்கள்

'கவனமுடன் செயலாற்றுங்கள்; நல்ல விஷயங்களில் மட்டும் மனதைத் திருப்புங்கள்' என்று அறிவுறுத்தினார். மகாவீரர் சமண மதத்தின் வழிகாட்டியாக மட்டுமே இல்லாமல், அகிம்சையை உலகுக்கு போதித்த சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார்.

மனித இதயங்களை வென்றெடுத்த மகான் மகாவீரர் கி.மு 527- ல் தற்போதைய பீகாரின் பாவா என்னும் இடத்தில் முக்தி அடைந்தார்.

சமணக் கொள்கைகள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதில் இருந்து சிறிதும் வழுவிச் செல்லாமல், இன்றளவும் அதே நோக்கத்தோடு சமண சமயம் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உகாண்டாவை சேர்ந்த பெண் கட்டுடல் பயிற்சியாளர் ஐரீன் கசுபோ

  • தொடங்கியவர்

நான்கு வயது ஜேம்ஸ்பாண்ட்

 

 
boss_baby_3148422f.jpg
 
 
 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான பதவியில் இருக்கலாம். அல்லது, மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பில் உள்ளவராகக்கூட இருக்கலாம், மிகப்பெரிய பலசாலியாகக்கூட இருக்கலாம். ஆனால், எப்போது உங்கள் வீட்டில் ஒரு சுட்டிப் பையன் / குட்டிப் பையன் வந்துவிடுகிறானோ, அப்போது உங்கள் வீட்டின் ‘பாஸ்’ யாரென்பதில் சந்தேகமே வரக்கூடாது. அதன்பிறகு உங்கள் வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு செயலையும் முடிவு செய்வது அந்த ‘குட்டி பாஸ்’தான், நீங்கள் இல்லை.

அதன்பிறகு, நமக்கான நேரம் முற்றிலுமாக மாறிவிடும். சாப்பிடுவது, தூங்குவது என்று எதற்கும் தனியாக நேரம் ஒதுக்க முடியாது. எப்போது நம்ம வீட்டு ‘பாஸ்’ தூங்குகிறாரோ, அப்போது நாமும் தூங்கப் பழகிக்கொள்ள வேண்டியதுதான். இப்படி நம் அனைவரின் வீட்டிலுமே நடக்கும் அழகான சம்பவங்களை, போராட்டங்களை மிகவும் அழகாக ஒரு சிறுவர் கதை புத்தகமாக எழுதினார், மார்லா ப்ரஸி. அதுதான் ‘பாஸ் பேபி‘.

boss_3148421a.jpg

புதிய கதாநாயகர்

2010-ல் வெளியான மார்லாவின் ‘பாஸ் பேபி’ புத்தகம் உலக அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் வழக்கமான விஷயங்களை மாறுபட்ட பார்வையில், அட்டகாசமான ஓவியங்களுடன் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாக, அதன் இரண்டாம் பாகத்தையும் கொண்டுவந்தார் மார்லா.

முதல் பாகத்தில் ஒரு குழந்தையின் வருகை எப்படிப் பெற்றோரின் உலகத்தையே மாற்றிவிடுகிறது என்று எழுதி இருந்தார். இரண்டாம் பாகத்தில், இரண்டாவது குழந்தையின் வருகை மூன்று பேரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது (அப்பா, அம்மா + முதல் குழந்தை) என்று ஜாலியாகச் சொல்லி இருந்தார். இந்த இரண்டு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வாரம் வெளியாக இருக்கும் ‘பாஸ் பேபி’ அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

boss_2_3148423a.jpg

மும்முனைப் போட்டி

குழந்தைகள் இருக்கும் வீட்டில் பலவிதமான போராட்டங்கள் இருக்கும். விதம் விதமான சண்டைகள் வரும். ஆனால், இப்படி ஒரு மோதல் உருவாகும் என்று நாம் யாருமே நினைத்திருக்க மாட்டோம். சொல்லப்போனால், இது ஒரு நேரடியான மோதல்கூட இல்லை. இது ஒரு மும்முனைப் போட்டி.

இதுநாள்வரை வீட்டில் ஒரே ஒரு செல்லப்பிள்ளையாக இருந்த மூத்த வாரிசுகளுக்கு, திடீரென்று தம்பிப் பாப்பாவோ, தங்கச்சிப் பாப்பாவோ வருவதைப் போட்டியாகவே நினைக்கத் தோன்றும். ஏழு வயது டிம்முக்கும் அப்படித்தான். அப்பா, அம்மாவோடு ஜாலியாக இருந்துவந்த அவனுக்குத் திடீரென்று கோட், சூட் அணிந்த நான்கு வயது தம்பி ஒரு போட்டியாகவே தெரிந்தான். அவன்தான் ‘பாஸ் பேபி‘ இது முதல் போராட்டம் என்றால், இரண்டாவது போராட்டம் இன்னமும் வேடிக்கையானது.

சுட்டிக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் செல்லமும் அன்பும் முழுவதுமாக அவர்களைச் சேராமல், மற்றவர்களுக்குப் பகிரப்பட்டால், அவர்களால் அதைத் தாங்க முடியாது. அப்படிப் பகிரப்படுவது நாய்க்குட்டிகளுக்கு என்றால், அவர்களால் அதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

நாய்க்குட்டிகள் தங்களது இடத்தைப் பிடித்துக்கொண்டு, பெற்றோர்களின் அன்பைப் பெறுவதை விரும்பாத ஒரு ரகசிய அமைப்பு, நாய்க்குட்டிகளின் அடுத்த கட்டப் படைப்பான ஒரு புதிய வகை நாய்க்குட்டியைப் பற்றிய தகவலைச் சேகரிப்பதற்காக ‘பாஸ் பேபி’ பெற்றோரின் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

குட்டி ஜேம்ஸ்பாண்ட்

டிம்முக்கும் அவனது தம்பியான ‘பாஸ்’ பேபிக்கும் இடையே ஆரம்பத்தில் நடக்கும் போட்டிகள், பின்னர் நட்பாக மாறி அவர்கள் இருவரும் இணைந்து, நாய்க்குட்டிகளின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கச் செல்லும் சாகசமே இந்தத் திரைப்படத்தின் ஹைலைட். அதிலும் குறிப்பாக, சகோதரர்கள் இருவரும் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் துப்பறிவது காமெடியின் உச்சம்.

பாஸ் பேபிக்கு, தனது தனித்துவமான குரல் மூலமாக உயிர் கொடுத்து இருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின். ஜாலியாக ஒரு கார்ட்டூன் படத்தை ரசிக்க விரும்பினால், ‘பாஸ்’ பேபி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்.

marla_3148420a.jpg

எட்டு வயதில் புத்தகம் எழுதிய மார்லா

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பார்சல் கட்டி தருவார்களே, (Happy Meal Box) காகித அட்டையிலான அந்தப் பார்சல் பெட்டியின் டிசைனை உருவாக்கியதற்காகப் புகழ்பெற்றவர்தான் இந்த மார்லா. அசாத்தியத் திறமைசாலியான இவர், மூன்றாவது படிக்கும்போதே கதை எழுதி, ஓவியம் வரைந்த ‘நட்பு வட்டம்’ என்ற புத்தகம் மாகாண அளவிலான பரிசைப் பெற்றது. அதன் பின்னர், வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் ஜாலியாக, சந்தோஷத்துடன் எதிர்கொண்டு முத்திரையைப் பதித்தார். நாமெல்லாம் வியந்து பார்க்கும் ஹீமேன் பொம்மைக் கம்பெனியிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார், மார்லா.

ராட்டினக் கதை

ஒரு ஓவியராகத் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். ஏகப்பட்ட புத்தகங்களுக்கு ஓவியங்கள் வரைந்து வந்த அவர், ஒரு கதைசொல்லியாக மாறியது ஒரு சுவையான சம்பவம். தனது மூன்று மகன்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்கள் தொடர்ந்து ராட்டினத்தைப் பற்றியே பேசியது வியப்பை அளிக்க, பல ஆண்டுகளுக்குப் பிறகு, ராட்டினத்தை மையமாக வைத்து அவர் எழுதிய கதைக்கு, அவரே ஓவியம் வரைய, அந்தப் புத்தகம் ஹிட் ஆனது, அதன்பிறகு மார்லா தொடர்ச்சியாகப் பல கதைகளை எழுதி, ஓவியம் வரைந்துவருகிறார்.

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அறிவு கொழுந்து..:grin:

  • தொடங்கியவர்

நகத்தை வெட்டினால் படுக்கையில் வீழ்ந்து விடுவேன்: வியட்நாமைச் சேர்ந்தவருக்கு விநோத நோய் (Photos)

 

நகத்தை வெட்டினால் படுக்கையில் வீழ்ந்து விடுவேன்: வியட்நாமைச் சேர்ந்தவருக்கு விநோத நோய் (Photos)
 

வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.

நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என இவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஜாலியாக நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் நகங்களால் இடையூறு ஏற்பட வெட்டிவிட்டேன். உடனே உடல்நிலை மிகவும் மோசமானது. பல மருத்துவர்களைப் பார்த்தும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வருடம் படுக்கையில் இருந்தேன். பிறகு உடல் தேறி, நகங்களை வெட்டியபோது மீண்டும் உடல்நிலை மோசமானது. நகங்களுக்கும் உடலுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நினைத்தேன். அதிலிருந்து நகங்களை வெட்டாமலும் உடையாமலும் பாதுகாத்து வருகிறேன். ஒரு நகம் தானாக உடைந்தாலும் சில மாதங்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன். இதனால் என் மனைவியும் குடும்பத்தினரும் நகங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. பார்ப்பதற்கு உறுதியாகத் தோன்றினாலும் ரொம்ப எளிதாக உடைந்துவிடும். தண்ணீர் பட்டால் உடையும் என்பதால் நகங்கள் மீது தண்ணீர் படாமல் குளிப்பேன். அதனால் அடிக்கடி குளிப்பதில்லை. உணவைக் கூட மனைவிதான் ஊட்டிவிட வேண்டும். மழை வரும்போது நகங்களை மட்டும் பிளாஸ்டிக் பையால் மூடிவிடுவேன். உடைகளைப் போடும் போதுதான் அதிக சிரமத்துக்கு உள்ளாகிறேன். இரவில் இரண்டு பக்கங்களிலும் தலையணைகளை வைத்து நகங்களைக் கிடத்தி வைத்திருப்பேன். தூக்கத்தில் கூடப் புரண்டு படுக்க முடியாது. வண்டி ஓட்டினாலும் சிரமமாகவே இருக்கும். ஒருமுறை விபத்தில் மாட்டிக்கொண்டேன். என்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட நகங்களைத்தான் காப்பாற்ற நினைத்தேன். சிலர் நகங்களைக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார்கள். எப்படிக் கொடுப்பேன்? சுவர்களில் ஓவியம் தீட்டுவதுதான் என் தொழில். எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை மட்டும் விட்டுவிடவில்லை. குழந்தைகள் என்னைப் பார்த்தாலே பயந்து அலறுவார்கள். பெரியவர்கள் பாராட்டுவார்கள். 55 செ.மீ. நீளமிருக்கும் என் நகங்களை கின்னஸில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது

 


என லூ காங் குறிப்பிட்டுள்ளார்.

 

2

3

4

5

6

7

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

45 நொடியில் விநாயகர் சிலை செய்து அசத்தும் கலைஞர்!

புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த முனுசாமி என்பவர் விநாயகர் சிலையை அதிவேகமாக செய்வதில் கில்லாடி. தற்போது 45 நொடியில் விநாயகர் சிலை செய்து விடுவார். கின்னஸ் சாதனைக்காக 30 நொடியில் விநாயகர் சிலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 10
 

article_1428646400-LechKaczy%C5%84ski.jp1815: இந்தோனேஷியாவின் தாம்போரா எரிமலை வெடிப்பினால் சுமார் 71,000 பேர் பலி. இவர்களில் 11,000 பேர் நேரடியாகவும் ஏனையோர் பஞ்சம் மற்றும் நோய்களினால் இறந்தனர்.

1912: டைட்டானிக் கப்பல், இங்கிலாந்தின் சௌதம்டன் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

1963: அமெரிக்க நீர்மூழ்கியொன்று கடலில் மூழ்கியதால் 129 பேர் இறந்தனர்.

1972: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 5,200 பேர் பலியாகினர்.

1998: 30 வருட கால வட அயர்லாந்து மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பெரிய வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

1972: உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில் 74 நாடுகள் கையெழுத்திட்டன.

1979: டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42பேர் பலியாகினர்.

1984: ஈழப்போர் - பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985: ஈழப்போர் - யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1991: இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல், லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140பேர் உயிரிழந்தனர்.

1992: லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம், ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

1998: அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.

2002: விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டார்.

2006: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60பேர் உயிரிழந்தனர்.

2010: போலந்து விமானப்படை விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த போலந்து ஜனாதிபதி லேச் கஸின்ஸிக் உட்பட 96 பேர் பலி.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இதைப் படிக்காதவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு மிஸ்டர். K பொறுப்பல்ல!  #MondayMotivation #MisterK

நான்  மிஸ்டர் K.. ’Only For You' என்ற ஒரு குறிப்பில் என் மேசையில் ஒரு கடிதம் இருந்தது. கடிதம் என்று சொல்ல முடியாது... துண்டு அறிவிப்பு எனச் சொல்லலாம். 

திறந்து பார்த்தேன். நண்பன் பரிசல் கிருஷ்ணாதான் எழுதியிருந்தான். 'அவசர வேலையாக ஊருக்கு செல்கிறேன். நாளைக்கான #MondayMotivation-ஐ நீயே எழுதிவிடு’  - இதுதான் அந்தக் குறிப்பில் இருந்தது. 

பாவி. இதை அவன் வாட்ஸ் அப்பிலோ, மெசேஜிலோ, அல்லது ஒரு போன்காலில்கூடச் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு குறிப்பெழுதிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

அவன் சொல்ல வந்ததை, எப்படிச் சொன்னால் என் கவனத்தை ஈர்க்கும் என்பதை யோசித்துச் செய்திருக்கிறான்.   'Only For You' என்று எழுதி வைத்துவிட்டு, வாட்ஸ் அப்பில், ‘மேசை மேல் ஒரு தகவல் இருக்கிறது. பார்க்கவும்’ என்று அனுப்பியிருக்கிறான். என்னை வேலை செய்யத் தூண்டும் ஒரு விஷயம். அல்லது, அதை நான் மறக்காமல் இருக்கச் செய்யும் ஓர் உத்தி. 

சரி, இதையே இன்றைக்கான தகவலாக உங்களுக்குச் சொல்வது என்று முடிவெடுத்துவிட்டேன். 

மிஸ்டர் K

மார்க்கெடிங்! சந்தைப்படுத்துதல் அல்லது விற்றல் எனலாம். பொருட்களுக்கு மட்டும்தான் மார்க்கெடிங் தேவைப்படும் என்ற காலம் போய்விட்டது.   பொருளுக்கும், மனிதனுக்கும் , நிறுவனத்திற்கும்,  ஒரு மாநிலத்துக்கும்,  நாட்டுக்கும் ஏன், உணர்வுகளைக்கூட சந்தைப்படுத்தியே ஆகவேண்டி உள்ளது.  

”கொஞ்சம் லேட் ஆகும். நீ சாப்டுட்டு தூங்கு. லவ் யூ’ என்று மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது சேர்க்கும் ‘லவ் யூ’ அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பின் மார்க்கெடிங்.

கிரிக்கெட்டில் இடது கை ஆட்டக்காரரின் ஹெல்மெட்டில் வலதுபுறம் லோகோ இருப்பதும், வலது கை ஆட்டக்காரர் ஹெல்மெட்டில் இடதுபுறம் இருப்பதும்.. மார்க்கெடிங்.

இந்த #MondayMotivationக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு ஒரு மார்க்கெடிங். சரி, முக்கியமாக நாம் மார்க்கெடிங் செய்ய வேண்டியவை நிறைய இருக்கும். ஆனால், கீழே சொல்லப்பட்டுள்ளவற்றை நிச்சயம், பிறருக்குத் தெரியும் வண்ணம் சந்தைப்படுத்துதல் அவசியம். 

அன்பை...

“ ‘நீ வெச்ச சாப்பாடு நல்லாருக்குனு ஒரு நாளைக்காவது சொல்லீருக்கீங்களா?’ - திருமணமான கணவன்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு வழக்கமான கேள்வி. அன்பு இருக்கும்தான். ஆனால் வெளிக்காட்டாவிட்டால் என்ன பயன்? வெளிக்காட்டுங்கள். உங்கள் அன்பை துணையிடம் மார்க்கெடிங் செய்யுங்கள். நண்பர்களிடத்தில் மார்க்கெடிங் செய்யுங்கள். சும்மா, அன்பு இருக்கு’ என்று சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை; காட்டிக்கொண்டால் குற்றமில்லை!   

அறிவை..

அலுவலகத்தில் இந்தக் கேரக்டரை நீங்கள் பார்த்திருக்கலாம். சம்பந்தமே இல்லாமல், எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஜஸ்ட் லைக் தட், கையாண்டு முடிப்பார். ஆனால் அவருக்கு அந்தத் திறமை இருப்பதை அவர் வெளிக்காட்டியே இருக்க மாட்டார். ‘நமக்கு இருக்கற வேலையே போதும்பா’ எனும் ஆசாமியாக இருந்தால்.. ஸாரி.. இது உங்களுக்கில்லை. ஆனால், தொடர்ச்சியாக வளர்ச்சியை விரும்புபவர்கள் நிச்சயம் தங்களுக்கு இருக்கும் அறிவை, திறமையை மார்க்கெடிங் செய்தே ஆகவேண்டும். யாருக்குத் தெரிய வேண்டுமோ.. அவர்களிடம்!

monday motivation

கலையை....

அது என்ன கலை? வேலையை கலையாகச் செய்வதாய் இருக்கலாம்.  வேலையைத் தவிர, பிற கலையாக இருக்கலாம். ஓய்வு நேரத்தில் உங்களுக்கு இருக்கும் நடிப்புக்கலையை டப்மாஷில் நண்பர்களோடு பகிர்வதாய் இருக்கலாம். வரையத் தெரியுமா.. வரையும் ஓவியங்களை ஃபேஸ்புக்கில் பகிர்வதாய் இருக்கலாம். விளம்பரப்படுத்துங்கள். அது நிச்சயம் உங்களை உற்சாகப்படுத்தும்!

விலையை...

அது என்ன’விலை’யை விளம்பரப்படுத்துவது? உங்களுக்கென்று ஒரு விலை இருக்கிறது. பல புத்திசாலித்தனமான ஊழியர்கள் இதைச் செய்வதுண்டு; குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ‘மார்க்கெட் வேல்யூ’ என்ன என்பதை வேறொரு நிறுவனத்திற்கு அப்ளிகேஷன் போட்டுத் தெரிந்து கொண்டு, அதை எப்படியாவது தங்கள் மேனேஜருக்கு / மேலதிகாரிக்குத் தெரிவித்துவிடுவார். ‘இன்னைய தேதிக்கு என் வேல்யூ இவ்வளோ... ஞாபகம் வெச்சுக்கோங்க’ என்று மறைமுகமாய் மார்க்கெடிங் செய்துகொள்வார். இது உங்கள் வாழ்க்கைத் தரத்துக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.   

இப்போது ஒரு குட்டிக்கதை. இது உண்மையாகவே  நடந்த கதை என்பவர்களும் உண்டு.  
இங்கிலாந்தில் ஒரு ஃபேன்சி கடை. ஊருக்குள் ஓரளவு ஃபேமஸான அந்தக் கடையைச் சுற்றியுள்ள இடத்தை மொத்தமாக வாங்கி, பெரிய ஷாப்பிங் மால் கட்ட திட்டமிடுகிறார்கள். இவரது கடையையும், அதைச் சார்ந்த இடங்களையும் விலை பேச, இவர் முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

ஷாப்பிங் மால் கட்டும் ஐடியாவில் இருந்தவர்கள், இவரைப் பழிவாங்கும்விதமாக, இவர் கடை 40, 50 அடி உள்ளே போகும் வண்ணம், தங்களது ஷாப்பிங் மாலை -  இவரது ஃபேன்ஸி கடைக்கு இருபுறமும் - கீழே உள்ள படத்தில் உள்ளவாறு - கட்டிவிட்டனர்.  

மிஸ்டர் கே

 இதனால் இவர் கடைக்கு, வழக்கமாக வரும் கூட்டம் கன்னாபின்னாவென கம்மி ஆனது. உடனே ஒரு விளம்பர நிறுவனத்தை அணுகுகிறார்.  ரொம்ப சிம்பிளாக ஒரு ஐடியாவில் அதைச் சரிசெய்தார்கள், விளம்பர நிறுவனத்தினர். 

என்ன தெரியுமா?

இவரது கடையின் பெயரை ENTERANCE என்று மாற்றிவிட்டார்கள். பிறகு, அந்த ஷாப்பிங் மாலின் நான்கு மூலைகளிலும் Enterance என்று எழுதி இவர் கடை இருக்கும் இடத்திற்கு அம்புக்குறியிட்டுவிட்டார்கள். பலரும் ஷாப்பிங் மாலுக்கான வழி என்று நினைத்து உள்ளே வந்து, ‘ஆஹா.. இந்தக் கடையிலேயே எல்லாம் இருக்கே.. ஏன் பத்து மாடி ஏறிகிட்டு’ என்று இவரிடம் இருப்பதை வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

சொல்ல மறந்துவிட்டேன்; இது ரொம்ப முக்கியம். அவர் அப்படி கடைக்குப் பெயர் மாற்றினாலும், தரமான பொருட்கள், குறைவான விலை என்று வைத்திருப்பதால், அந்த மார்க்கெடிங் உத்தி செல்லுபடி ஆகிற்று. அதேபோல, நீங்கள் செய்யும் விஷயங்களில் பாசாங்கு இல்லாத நேர்மை, மிக முக்கியம்! 

ஆல் த பெஸ்ட்!    

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வானத்தில் பிறந்த தேவதை... 42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்!

நஃபி டியாபி என்ற பெண், 42,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம், உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Turkey Airlines


துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்றுகொண்டிருந்தார் ஏழு மாத கர்ப்பிணி டியாபி. அவருக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். விமானத்தில் பறந்துக்கொண்டே உலகுக்கு வந்த அந்த குட்டிக் பெண்ணின் புகைப்படங்களை ’Welcome on board Princess!’ என்று துருக்கி ஏர்லைன்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. வானத்தில் பிறந்த பெண் குழந்தையை விமானப் பணிப்பெண்கள் பாசமுடன் கொஞ்சும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்!

Welcome on board Princess! Applause goes to our cabin crew!

  • தொடங்கியவர்

போயிங் 737 விமா­னத்தை வீடாக மாற்­றிய நபர்

bruce-campbell-woods

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் பாரிய விமா­ன­ மொன்றை வீடாக மாற்­றி­யுள்ளார். அடர்த்­தி­யான மரங்கள் நிறைந்த பகு­தியில் இவ்­ வி­மா னம் வீடாக அமைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

புரூஸ் கெம்பல் எனும் இவர் ஓய்வு பெற்ற மின்­சார  பொறி­யி­ய­லாளர் ஆவார். விமா­ னங்­களின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், வான் பய­ணங்­க­ளி­லி­ருந்து ஒதுக்­கப்­பட்ட போயிங் 737 விமா­ன­மொன்றை வாங்கி வீடாக மாற்­றி­யுள்ளார்.  

3 என்­ஜின்­களைக் கொண்ட விமானம் இது. இப்­ பா­ரிய விமா­னத்தை ஓரிகன் மாநி­லத்தின் போர்ட்லேண்ட் புற­நபர் பகு­தியில், மரங்கள் நிறைந்த பகு­தி­யொன்றில் கொங்­கிறீட் தூண்­களை நிர்­மா­ணித்து அவற்­றின்­மீது இவ் ­வி­மா­னத்தை வைத்­துள்ளார் புரூஸ் கெம்பல்.

இதனால் வீதி­யி­லி­ருந்து இவ்­வி­மா­னத்தை பார்க்க முடி­யாது. இவ்­ வி­மா­னத்தின் உட்­பு­றப்­ப­கு­தி­களில் சில மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

தற்­போது வரு­டத்தில் 6 மாதங்கள் மாத்­திரம் இவ்­ வி­மா­னத்தில் தங்­கி­யி­ருக்­கிறார் புரூஸ் கெம்பல்.

ஏனைய 6 மாதங்­களில் ஜப்­பா­னிலும் போயிங் 747 ரக விமானமொன்றை இதே போன்று வீடாக மாற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.

 

plane-woods-14

plane-woods-12

plane-woods-15

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஹாரி பாட்டரை உருவாக்கிய அந்த 4 மணி நேர நம்பிக்கை! ஜே.கே.ரெளலிங்கின் வெற்றிக் கதை #MondayMotivation

ஜே.கே.ரௌலிங்

'ஹாரி பாட்டர்' என்பதைப் படித்ததுமே ஹாரியும் அவனது நண்பர்களும் துடைப்பத்தில் பறப்பதுதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்க்கும் விதத்தில் ஹாரிபாட்டரின் கதை அமைந்திருக்கும். ஜே.கே.ரெளலிங் எழுதிய ஹாரி பாட்டர் இதுவரை ஏழு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பகுதி வெளியாகும் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள அதன் வாசகர்கள், புத்தகக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று நூலை வாங்குவார்கள்.

ஹாரி பாட்டர் கதை திரைப்படமாக வெளியாகி கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. ஆனால், அந்தக் கதையை எழுதிய ஜே.கே.ரௌலிங்க் மிகவும் வறுமையான சூழலில் வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

ஜே.கே.ரெளலிங், இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டன் எனும் நகரில் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஒரு கிராமத்துப் பள்ளியில் படித்தாலும் ஆசிரியர்கள் விரும்பும் மாணவியாக விளங்கினார். குடும்பச் சூழல் கல்வியைப் பாதிக்காத அளவு கவனம் செலுத்தினார். தனது ஆறாவது வயதிலேயே கதைகள் மீது பேரார்வம் கொண்டவராக விளங்கினார். தனது தங்கைக்கு நிறையக் கதைகளைச் சொன்னார். கதைகளை எழுதவும் செய்தார்.

ரெளலிங் போர்ச்சுகல் நாட்டில் ஆசியராக பணியாற்றியபோது, காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அந்தப் பந்தம் நீடிக்கவில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் விவகாரத்தானது. அந்த நாட்களில் ரெளலிங் கடுமையான மன வலியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையின் கரம் பிடித்து மீண்டு வந்தார். அந்த நாட்களில் கதைகளைப் படிப்பதை அன்றாட வழக்கமாக்கி கொண்டார். அதன் வழியே ஏராளமான கதைகள் அவர் மனதினுள் உருவாகின. ஆனாலும் பொருளாதாரச் சூழல் நின்று நிதானமாக எழுதும் நிலையில் இல்லை.

ஹாரி பாட்டர்

ஒருநாள், மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தார் ரெளலிங். ரயில் சுமார் 4 மணிநேரம் தாமதமாக வந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் கருவாக உருவானதுதான் ஹாரி பாட்டர் கதை. ரயில் பயணத்தின்போது அந்தக் கதையை இன்னும் செதுக்கினார். எதுவும் மறந்துவிடக் கூடாதென்று கைக்குட்டையில் குறிப்பெடுத்துக்கொண்டார். அந்தக் கதையை எழுத நேரமும் கம்ப்யூட்டரோ இல்லை. ஒரு டைப்ரைட்டரில் கிடைக்கும் இடங்களில் அமர்ந்து எழுதி முடித்தார்.

ரெளலிங் கஷ்டப்பட்டு அந்த நாவலை எழுதி முடித்து, பதிப்பகத்தினரை அணுகும்போது பெரிய ஏமாற்றமே கிடைத்தது. பெரும்பாலோர் அதைப் பதிப்பக்க தயாராக இல்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ப்ளும்ஸ்பரி எனும் பதிப்பகம் மிகக் குறைந்த பணம் கொடுத்து, அதைப் பதிப்பத்தது. ஆனால், வாசகர்கள் அந்த நாவலுக்காக காத்திருந்ததைப் போல அச்சடித்த 1000 பிரதிகளை வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ரெளலிங்கின் அடையாளம் ஹாரி பாட்டராக மாறிபோனது. அவரின் கையெழுத்து பிரதி மிகப் பெரிய தொகைக்கு விற்றது.

ஜே.கே.ரெளலிங் வாழ்வில் துயரமான நாட்களில் அவர் மனதில் உருவான எண்ணங்களின் பாதிப்பில் வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்கினார். இவரது நாவல் திரைப்படமானதும் உலகில் பணக்காரப் பெண்களில் ஒருவராக மாறினார். ஹாரி பாட்டரின் இறுதி பகுதி வெளியான 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்று உலகையே ஆச்சர்யப்பட வைத்தது.

வறுமையில் வாடிய ஒருவர் இந்த நிலைக்கு ஆளானது ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டியது. ஆனால், அவரின் வாழ்க்கைப் பற்றி பலராலும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் ஒரு விமர்சனம் கூறப்பட்டது. இந்தக் கேள்வி அவரைத் துரத்திக்கொண்டேயிருந்தது. அதற்கு, அவர், 'என் கணவர் பிரிந்த நிலையில் அப்படியொரு மனநிலையில்தான் இருந்தேன். இதில் ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை' என்று பதில் அளித்தார். விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளியாமல் துணிவோடு, உண்மையைப் பகிர்ந்துகொண்டார் ரெளலிங்க். இது அவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தது.

எளிய குடும்பத்திலிருந்து இன்று உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் நிலையில் வாழும் ரெளலிங் வாழ்வே ஒரு பாடம்தான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சாமுவேல் ஹானிமன்

 
 
 
yui_3152776f.jpg
 
 
 

ஹோமியோபதியைக் கண்டறிந்தவர்

ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜெர்மனி மருத்துவர் கிறிஸ்டியன் சாமுவேல் ஹானிமன் (Christian Samuel Hahnemann) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் மிசென் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1755) பிறந்தவர். தந்தை பீங்கான் பொருள் வடிவமைப்பாளர், வண்ணம் பூசும் தொழிலாளி. அவர் தன் மகனிடம் நேர்மை, மனிதநேயம், கடின உழைப்பு போன்ற பண்புகளை விதைத்தார்.

* சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார் ஹானிமன். ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, கிரேக்கம், லத்தீன், அரபிக், சிரியாக் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றார். மொழி ஆசிரியர், மொழிபெயர்ப்பாளராக வேலைசெய்துகொண்டே, லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.

* வியன்னாவின் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, மருத்துவராகப் பணியாற்றினார். சிறந்த மருத்துவர் என பெயர் பெற்றபோதிலும், இது தவறான மருத்துவ முறையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

* குணம் பெற்றுச் சென்ற நோயாளிகள் மீண்டும் மீண்டும் மருத்துவரை நாடிச் செல்வது இவரை வருத்தப்படச் செய்தது. மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் இவரை சங்கடப்படுத்தியது. அந்தத் தவறை இனி செய்யக் கூடாது என்ற எண்ணத்துடன் மருத்துவம் பார்ப்பதையே நிறுத்திவிட்டு, மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

 வில்லியன் கலின் என்ற புகழ்பெற்ற மருத்துவரின் நூலை மொழிபெயர்க்கும்போது, சின்கோனா மரப்பட்டையின் மருத்துவ குணம் பற்றி அறிந்தார். இதையடுத்து, அலோபதி மருத்துவ முறையின் பிரச்சினை என்ன? எது சரியான மருத்துவம்? என்ற கேள்வியுடன் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

* அப்போது, மலேரியா காய்ச்சலுக்கு அலோபதியில் சின்கோனா மருந்து வழங்கப்பட்டது. அதன் பட்டையைச் சாறு பிழிந்து அருந்தி காய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டு, தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனமாகக் குறிப்பெடுத்தார். அதிக வீரியம் கொண்ட அதே மரப்பட்டையின் சாற்றை உட்கொண்டு, நோயை குணப்படுத்திக்கொண்டார். இதை மற்றவர்களுக்கும் கொடுத்து குணமாக்கினார்.

* தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு, புதிய மருத்துவ முறையைக் கண்டறிந்தார். நோய் எதனால் தோன்றுகிறதோ, அதன்மூலமே நோயைக் குணப்படுத்த முடியும் என்றார். இவரது இந்தக் கண்டுபிடிப்பு உலகையே புரட்டிப் போட்டது. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர், மருந்து குறித்த புதிய கோட்பாட்டை விளக்கும் கட்டுரையை 1796-ல் வெளியிட்டார்.

* தான் கண்டறிந்த மருந்துகளால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தினார். 1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மொத்தம் 99 மருந்துகளைக் கண்டறிந்தார். இவற்றை தான் சாப்பிட்டும், நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தும் சோதித்துப் பார்த்தார்.

* இந்த மருந்துகள், அவற்றின் பண்புகள் குறித்த தொகுப்பு ‘மெட்டீரியா மெடிக்கா’ என்ற நூலாக வெளிவந்தது. விரைவிலேயே உலகம் முழுவதும் இது ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பரவியது. ஹோமியோபதி பள்ளி, கல்லூரி, கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஹோமியோபதிக்கான தத்துவத்தையும் உருவாக்கினர்.

* இவரது நூல்கள்தான் ஹோமியோபதி மருத்துவத்துக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. தனி மனிதனாக சுமார் 53 ஆண்டுகாலம் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் (1843) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நடிகை ரம்பா, கணவருடன் திருப்பதியில் தரிசனம்

நடிகை ரம்பா, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

ரம்பா


‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’ எனப் பல தமிழ்ப் படங்களில் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்தவர்  ரம்பா. 2010-ம் ஆண்டு கனடாவில்  தொழிலதிபராக இருக்கும் இலங்கைத்தமிழர் இந்திரக்குமார் என்பவரைத் திருமணம்செய்துகொண்டார்.

கனடாவில், கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த நடிகை ரம்பா, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். சமீபத்தில், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விருப்ப மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார் ரம்பா. வழக்கு விசாரணையின்போது, ரம்பாவுடன் சேர்ந்து வாழ அவர் கணவரும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது கணவர் இந்திரக்குமார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ரம்பா இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

சவுதியில் இனி வருமான வரி கிடையாது! 

சவுதி அரேபியாவில், அந்த நாட்டு மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என, சவுதி நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

saudi income tax
 

கடந்த 2014-ம் ஆண்டு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால், சவுதி பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. மேலும் வரி விதிப்பில்  தீவிரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், சவுதியின் நிதி அமைச்சர் முகமது அல் ஜதான் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கு, இனி வருமான வரி கிடையாது. சவுதி நிறுவனங்களுக்கும் வரி கிடையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தனியே காடு வளர்த்த தனி ஒருவன் ரகுநாத்தின் கதை!

"காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. பிறந்த நாளன்றாவது ஒவ்வொருவரும் மரக்கன்று நடுவது அவசியம்", "விளை நிலங்கள் எல்லாம் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவருகின்றன" போன்ற செய்திகளைப் படித்து அவ்வப்போது நாமும் பரபரப்பாக பேசியிருப்போம். அதன் பின் வேறு பிரச்னைகளில் இதை அப்படியே மறந்து போயிருப்போம். இந்தியாவின் தேசிய வனக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்தின் நிலப்பரப்பளவிலும் 33.33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். 2015-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 21.34 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளது.

மர வளர்ப்பு அவசியம் காடு

ஒவ்வொரு தனி மனிதனும் காட்டை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்றாலும், முடிந்த வரை ஒரு மரமாவது நடலாம் என்கிறார் 'பசுமை மனிதர்' என எல்லோராலும் அழைக்கப்படும் பூனேவைச் சேர்ந்த ரகுநாத் மாருதி தோலே! கடந்த 30 வருடங்களாக இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் இவர், இதுவரை லட்சக்கணக்கான மரங்களை வளர்த்த பெருமைக்குரியவர்.

"ஒரு மரமானது 50 வருடங்களில் கோடிக்கணக்கான மதிப்பில் சுற்றுப்புறத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சுமார் 24 லட்சம் மதிப்பில் தண்ணீர் மாசுபடுவதைத் தடுக்கிறது. சுமார் 20 லட்சம் மதிப்பில் மண் அரிப்பைத் தடுக்கிறது. சுமார் 40 லட்சம் மதிப்பில் காற்று மாசுபடுவதைத் தடுக்கிறது. சுமார் 24 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. பறவை மற்றும் விலங்குகளுக்கு உறைவிடமாக இருப்பதோடு, உணவுப் பொருள்களையும் தருகிறது. மேலும், அடர்த்தியாக வளர்ந்த ஒரு மரமானது, பத்து குளிர்சாதன மிஷின்கள் தரக்கூடிய குளிர்ச்சியை ஒவ்வொரு நாளின் 20 மணி நேரமும் தருகிறது" என சுற்றுப்புற ஆர்வலர்கள் கணக்கிடுகிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரகுநாத் மாருதி தோலே தன் சார்பில் இந்த பூமிக்கு ஆயிரம் கோடிகளுக்கும் மேலான சொத்துகளை வழங்கியிருக்கிறார்.

மரக்கன்றுகளைப் பராமரிக்கும் ரகுநாத்!

2012-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தொடர்ந்து இலவசமாக வழங்கி வரும் இவர், மரம் வளர்ப்பதில் தனக்குள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஃபாரன்சிக் துறை வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். மேலும், சுற்றுப்புறச் சூழலுக்கு மரங்கள் எவ்வளவு நன்மைகள் தருகின்றன என்பது பற்றித் தனது ஓய்வு நேரத்தில், பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

மரம் வளர்ப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதே ஒரு சுவாரசியமான கதை. 1982-ம் வருடத்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு ரகுநாத்தின் தந்தையால் செல்ல முடியாத சூழல். 5 ரூபாய் பணத்தை ரகுநாத் கையில் கொடுத்த அவர் தந்தை, தனக்குப் பதிலாக ரகுநாத்தை சென்று வரச் சொல்லியிருக்கிறார். 3 ரூபாயை தம்பதியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டுத் திரும்பியிருக்கிறார். கையில் இருந்த மீதி 2 ரூபாயை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. வரும் வழியில் நர்சரி கார்டன் ஒன்றைப் பார்த்தவுடன், ரகுநாத்தின் மூளையில் சின்ன மின்னல் வெட்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கும் மரக்கன்றுகளை வாங்கி தான் வேலை பார்த்த வளாகத்தில் நட்டு, அச்செடிகளுக்கு தம்பதியர் இருவரின் பெயர்களைச் சூட்டியிருக்கிறார். செடிகள் கண் முன்னாடி செழித்து வளர்வதைப் பார்த்த ரகுநாத்துக்கு உள்ளுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி. மரம் வளர்ப்பது இவ்வளவு மகிழ்ச்சியான விஷயமா என சிந்திக்க ஆரம்பித்த ரகுநாத், அன்றிலிருந்து இன்று வரை பல லட்சம் மரக்கன்றுகளைப் பராமரித்து, மற்றவர்களும் மரங்களை வளர்க்கும் வகையில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

மரக்கன்று

கையில் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு வெளியே சுற்றுவதை ரகுநாத் வழக்கமாக வைத்திருக்கிறார். ஏதாவது ஒரு செடி தண்ணீர் இல்லாமல் வாடியிருந்தாலும், அதைப் பத்திரமாக எடுத்துவந்து தனது தோட்டத்தில் இயற்கை உரமிட்டு செழிக்க வைத்து விடுகிறார். "வாடிப்போன செடியைப் பார்த்தா எனக்கு மனசு கேட்காது. அதே செடியை செழிப்பா வளர்த்ததும் கிடைக்கிற சந்தோசத்துக்கு அளவே இல்லைங்க. நான் ஏன் இலவசமா மரக்கன்று தர்றேன்னா... மரம் வளர்க்கறதோட அருமையை மத்தவங்களும் தெரிஞ்சுக்கனும்னு தான். இயற்கை அன்னைக்கு நாம திரும்ப செலுத்த வேண்டிய நன்றிக் கடன் இது. மனுசங்க பாதி பேருக்கு மரங்களோட உண்மையான மதிப்பு தெரியறதில்லை. ஒரேயொரு தடவ அந்த மதிப்பு தெரிஞ்சதுன்னா,  அதுக்கப்புறம் பார்க்குற இடத்துலல்லாம் செடி நட ஆரம்பிச்சிருவாங்க" என ஆணித்தரமாகப் பேசுகிறார் ரகுநாத்.

சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு என்பதால் ரகுநாத் மற்றவர்கள் வளர்ப்பது போல, பிளாஸ்டிக் பைகளில் செடி வளர்ப்பதில்லை. "நான் இலவசமாக செடி தரும்போது சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பூந்தொட்டி விற்பவர்கள் பயனடைகிறார்கள். பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு மொத்தமாக என்னிடமிருந்து மரக்கன்றுகள் வாங்கும்போது, அருகே ஆட்டோ வைத்திருப்பவர்களுக்கோ அல்லது லாரி வைத்திருப்பவர்களுக்கோ கொஞ்சம் பணம் கிடைக்கிறது. நம்ம சுற்றி இருப்பவர்களும் நம்மால் பயனடைவது மகிழ்ச்சி தானே?!" என்கிறார் ரகுநாத்.

பணம் மட்டுமே முக்கியம் என அதன் பின்னே ஓடும் இயந்திர உலகில், மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி இயற்கையை நேசித்த நோபல் பரிசு வென்ற வங்காரி மாத்தாய், நூற்றுக் கணக்கில் மரங்களை நட்ட கர்நாடகத்தை சேர்ந்த 103 வயது திம்மக்கா பாட்டி போன்றவர்களின் வரிசையில் ரகுநாத் நிச்சயம் இடம்பெறுகிறார். இவரைப் போன்ற மனிதர்களால் தான் இயற்கை இன்னும் நிம்மதியாக மூச்சு விடுகிறது.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.