Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஏப்ரல் – 12 

 

1633 : ரோமன் கத்­தோ­லிக்க மத பீடத்­தினால் கலி­லியோ கலி­லிக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.


1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்புப் படைகள் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­களை தென் கரோ­லி­னாவில் தாக்­கி­ய­துடன் போர் வெடித்­தது.


1864 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: டென்­ன­ஸியில் சர­ண­டைந்த அனைத்து ஆபி­ரிக்க அமெ­ரிக்க படை­யி­னர்­களும் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்பு படை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


gagarin-portrait--varalaru21865 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அல­பா­மாவில் மொபைல் என்ற நகரம் கூட்­டணி இரா­ணு­வத்­திடம் வீழ்ந்­தது.


1927 : ஷாங்­காயில் சீனக் கம்­யூனிஸ்ட் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.


1937 : விமா­னங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான முத­லா­வது ஜெட் என்ஜின் இங்­கி­லாந்தில் சேர் பிராங் வைட்­டினில் தரையில் பரி­சோ­திக்­கப்­பட்­டது.


1945 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் கால­மானார். உப ஜனா­தி­ப­தி­யான ஹரி ட்ரூமன் புதிய ஜனா­தி­ப­தி­யானார். 


1955 : ஜோனாஸ் சால்க் என்­ப­வ­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போலியோ நோய்த் தடுப்­பூசி பாது­காப்­பா­ன­தென பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. 


1961 : சோவியத் ஒன்­றி­யத்தின் யூரி ககாரின் விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் மனி­த­ரானார்.


1980 : லைபீ­ரி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றினார். 130 ஆண்­டு­கால மக்­க­ளாட்சி அமைப்பு முறை முடி­வுக்கு வந்­தது.


1981 : முத­லா­வது மீள் விண்­ணோ­ட­மான கொலம்­பியா ஓடம் முதல் தட­வை­யாக விண்­வெ­ளியை நோக்கி ஏவப்­பட்­டது.


1983 : பிரித்­தா­னியத் திரைப்­ப­ட­மான “காந்தி” எட்டு ஒஸ்கார் விரு­து­களை வென்­றது.


2007 : இந்­தியா அக்­னி-­III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்­படும் நடுத்­தர ஏவு­க­ணையை 3000 கிமீ தூரத்­துக்கு வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­தித்­தது


2009 : ஸிம்­பாப்வே டொலரின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்­சி­ய­டைந்த நிலையில் ஸிம்பாப்வே டொலர் பாவனையை அந்நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக கைவிட்டது. தற்போது அமெரிக்க டொலருடன் பிரித்தானிய, இந்திய, சீன, தென் ஆபிரிக்க நாணயங்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. 

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • 6,400 replies
  • 200,000 views

 

Bildergebnis für 200,000

Bildergebnis für 200,000

இந்த திரிக்கு ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி..:100_pray:

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

Vaalthukal....l ?

  • தொடங்கியவர்

கழிவறை கழுவி 1,200 மாணவர்களைப் படிக்க வைத்த தமிழக தம்பதி! #Inspiration

 
 

க்கன் போலீஸ் மந்திரியாக இருந்த சமயம். அவரது மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. முழுத் தகுதி இருந்ததால் பணி வழங்கப்படுகிறது. தந்தையிடம் வந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டுகிறார் அதனை வாங்கிப் பார்த்த கக்கன், கிழித்துப் போட்டு விட்டு,  மகனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,,' நான் போலீஸ் துறை மந்திரி... எனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?. அதனால் இந்த உனக்கு வேலை வேண்டாம்' என கோபமாகிறார். அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் வாழ்ந்த மண் இது. கடைசிக் காலத்தில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வழியின்றி, இறந்து போனார் கக்கன்.  

கழிவறை கழுவி மாணவர்களை படிக்க வைக்கும் தம்பதி

நல்ல தலைவர்கள் நாட்டுக்குத் தேவை என வீதிக்கு வீதி கூப்பாடு போடுகிறோம்.... வாய் கிழியப் பேசுகிறோம். தமிழகம் இப்போதுள்ள நிலையில் ‘தலைவர்கள்’  பற்றிச் சொல்லவே தேவையில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டுமென விரும்புகிறோம்.  அத்தகையை தலைவர்களை உருவாக்க நாம் விரும்புகிறோமா... முயற்சிக்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். நல்ல தலைவர்களாக வருவதற்கு தகுதியும் திறமையும் கொண்டிருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோமா என்றாலும் நிச்சயம் இல்லை.

 உண்மையை சொல்லப் போனால், 'இவர் நல்ல தலைவர்' எனத் தெரிந்தால் அவரைத் தோற்கடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் விசித்திர குணமும் நமக்கு இருக்கிறது. நாம் வாழும் காலத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நல்லக்கண்ணுவைச் சொல்லலாம்.  அவரைப் போலவே  நாட்டில் பல நல்லக்கண்ணுக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் லோகநாதன். இவருக்கும் கக்கன்தான் இன்ஸ்பிரேஷன். 

கோவை, சூலுரைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறிய லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். வயிற்றுப்பாட்டுக்காக லேத் பட்டறை. இந்த பணி போக லோகநாதன் நாமெல்லாம் கண்டாலே முகம் சுளிக்கின்ற பணியும் செய்வார். அது வீடு வீடாக சென்று கழிவறைகளை சுத்தம் செய்வது.  லேத் பட்டறை வைத்துதான் நடத்துகிறாரே... பின்னர் எதற்கு கழிவறை சுத்தம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?. கழிவறை கழுவி சம்பாதிக்கும் பணத்தில் லோகநாதன் படிக்க வைத்த மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 15 வருடங்களில் 1,200 பேர்.  இவர்களின் படிப்புக்காகத்தான் லோகாதன் 'பார்ட் டைம் ஜாப்' போல வீடு வீடாக சென்று கழிவறை கழுவி வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதம் 400 ரூபாய் வசூலிக்கிறார். அந்த தொகையை கொண்டு ஏழை மாணவர்கள், படிக்க வசதியில்லாதவர்களை பள்ளியில் சேர்க்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

லோகநாதனிடம் பேசிய போது, '' பெரியார், கக்கன், அண்ணா, காமராஜர் போன்றத் தலைவர்கள், 'எளிமையாக உயர்ந்த சிந்தனையுடன் வாழுங்கள்' என அறிவுறுத்தினார்கள். நானும்  அவர்களின் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன். தொடக்கத்தில் கழிவறை சுத்தம் செய்வது கடினமானதாகத்தான் இருந்தது. போகப் போக பழகி விட்டது. எனது மனைவியும் இதனை செய்கிறார். இருவரும் சேர்ந்து கிடைக்கும் பணத்தில் குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறோம். குழந்தைகளை அடையாளம் காண, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவியாக இருக்கிறது. அத்தனையும் வங்கி வழியாகவே பணம் செலுத்துகிறோம். அதனால்,ஒவ்வொன்றுக்கும் கணக்கு உண்டு. எத்தனை காலமாக ஒரு சமூகத்தினர் மட்டுமே நமக்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். அந்த சமூகத்தினர் சந்திக்கும் கஷ்டங்களையும் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டேன்'' என்கிறார்.

கழிவறைக் கட்டுவதில் இருந்து சுடுகாட்டுக் கொட்டகை அமைப்பது வரை ஊழல் புரியும் கில்லாடிகள்  நிறைந்த நம் நாட்டில்   லோகநாதனும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் லோகநாதன் கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களமிறங்கிய அவருக்க கிடைத்தது வெறும் 1,744 ஓட்டுகள்தான்.  அத்தோடு, அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு கழிவறை கழுவ சென்று விட்டார். 

தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் குறித்து லோகநாதன், ''நான் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க கழிவறையை சுத்தம் செய்கிறேன். அதே போலவே... இளைய சமுதாயத்தினரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய களமிறங்க வேண்டும். களமிறங்குவார்கள் என நம்புகிறேன்'' என்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஷூ லேஸ் தானாக அவிழ்கிறதா? - அப்போ அதுதான் காரணம்!

எவ்வளவு இறுக்கமாகக் கட்டினாலும் ஷூ லேஸ் எப்படியாவது அவிழ்ந்து மண்ணை முத்தமிடவைத்த அனுபவங்கள், நிறையப் பேருக்கு இருக்கும். எப்போதாவது, இது ஏன் இப்படி நடக்குதுனு யோசித்துப் பார்த்தீங்களா? அப்படி நீங்க காரணம் தேடியிருந்தா, இந்த மர்மம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

shoelaces


ஆமாங்க. இந்தப் பெரிய மர்மத்துக்குப் பின் இருக்கும் காரணத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஒன்று பல நாள்கள் ஆய்வுகள் நடத்திக் கண்டுபிடித்திருக்கிறது. அதெப்படி பாஸ், கட்டிய ஷூ லேஸ் அதுவா அவிழும்? கொஞ்சம் பொறுங்க பாஸ். ஆய்வின் முடிவுல அமெரிக்காகாரர் சொல்லியிருக்கார்ல!

ஒரு உறுதியோட காலையில வாக்கிங் போயிட்டிருப்போம், இந்த ஷூ லேஸ் அவிழ்ந்து விழுந்துட்டே இருக்கும். இந்த ரேஸ்ல நாமதான் ஜெயிப்போம்னு ஓடிட்டு இருப்போம், பாழாய்ப்போன ஷூ லேஸ், ரன்னிங் ரேஸை ஹர்ட்ல்ஸ் ரேஸா மாத்திடும். பைக்ல போனாலும் சரி, நீங்க கார்ல போனாலும் சரி, பலருக்கும் இந்த ஷூ லேஸ் அவிழ்ந்து காலை வாரிடும். இந்தப் பெரிய மர்மத்தின் பின்னணி முடிவை வெளியிட்டுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம், பல தடகள வீரர்களையும் அவர்கள் ஷூக்களையும் ’ஸ்லோ மோஷனில்’ படமெடுத்து, இந்த முடிவை வெளியிட்டுள்ளது.

அதாவது, நாம் நடக்கும் அல்லது ஓடும் வேகத்துல ஷூ லேஸ் கண்டிப்பா தானாதான் அவிழுமாம். நீங்க ஸ்ட்ராங்கா ரெட்டச் சுருக்கு முடிச்சு போட்டால் மெதுவா அவிழும். சும்மா, ஒரு சுருக்கு முடிச்சு போட்டால், சீக்கிரமே அவிழ்ந்திடுமாம், அமெரிக்க ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

"இனி முடியைப் பிடிச்சு இழுத்து அடிக்க மாட்டாங்க!" கூந்தலை வெட்டிய பெண்ணின் வைரல் வீடியோ

 
 

வீடியோ

ந்திய சமுதாயத்தில் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் அதிகம். அதிலும் குடும்ப வன்முறையை சகித்துக் கொண்டு வாழும் பெண்களே இங்கு அதிகம். பெரும்பாலான பெண்கள் பொறுத்துக்கொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே, இச்சமுதாயத்தின் போலி கட்டமைப்புகளிலிருந்து விடுபட்டு வெளிவருகின்றனர். மேலும் சிலர், தனக்கு நேர்ந்த வன்முறையை, மீண்டும் சந்திக்காத வண்ணம்  தன்னை மேம்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த  அழகு கலை நிலையத்தில்,  இடுப்பு வரை நீளும்  அலையலையான கூந்தலுடன் ஒரு பெண் காத்திருக்கிறாள். அப்போது மணமகள் கோலத்தில் பெண் ஒருத்தி  தயாராகிவிட்டு, விடைபெறுகிறாள்.  அடுத்து, அலையலையான கூந்தலுடன் இருப்பவரின் முறை!  அந்த பெண்ணின் கூந்தலைப் பார்த்து,  “உங்கள் கூந்தல் மிக அழகாக இருக்கிறது” என்று பணிப்பெண்  வியந்து கூறுகிறாள். அதற்கு அந்த பெண், ‘ அதனை கொஞ்சம் கத்தரியுங்கள்’ என்று கூறுகிறாள்.  பணிப்பெண்ணும் அவளது கூந்தலை கத்தரிக்கிறாள். “இப்போது சரியான அளவில் இருக்கிறதா’ என்ற பாணியில்  அந்த பணிப்பெண் கேட்கிறாள். ”இன்னும் கொஞ்சம் வெட்டுங்கள்’ என்று மீண்டும்  அவள் கூறுகிறாள். 

மீண்டும், அவளது தலைமுடியை வெட்டுகிறாள், அந்த பணிப்பெண்.  “உங்களுக்கு உங்கள் தலைமுடியை  பாதுகாப்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என்று கூறுகிறாள் அந்த  பணிப்பெண்.  ‘’என்  தலைமுடியை மேலும் கத்தரியுங்கள்’ என்று கூறுகிறாள். பணிப்பெண் சற்றே தயக்கத்துடன், அவளது தலைமுடியை மீண்டும் ஒட்ட நறுக்குகிறாள். ’இது போதுமா, மேடம்?’ என்று கேட்கிறாள். ’ யாரும் இதனை மறுபடியும்  பிடித்து இழுக்கமுடியாத வகையில், மேலும் என் தலைமுடியை வெட்டுங்கள்’, என்று  கூறிமுடித்து அழும்போது, அருகில் இருக்கும் பெண்கள் எல்லாரும் திரும்பி பார்க்கிறார்கள். அதிர்ச்சி அடைக்கின்றனர். 

கூந்தல்  பெண்ணுக்கு  பலமாக இருக்கவேண்டுமே தவிர, பலவீனமாக இருக்க கூடாது என்று முடிவடைகிறது, அந்த வீடியோ பதிவு. அழகின் அடையாளமாக பார்க்கப்படும் பெண்ணின் கூந்தல் அவளுக்கு ஆபத்தில் முடிகிறது. ஆண் தனது பலத்தை வெளிப்படுத்த கூந்தலைப்பிடித்து அடிப்பது வழக்கமாக உள்ளது. அடித்தட்டு குடும்பங்களில் பெண்ணை அடக்க "உன் முடியை ஒட்ட நறுக்கிடுவேன்" என்று சொல்வது வழக்கம். கணவனை இழந்த பெண் மொட்டை அடித்துக்கொண்டு தன் கூந்தல் அழகை இழக்க வேண்டும் என்ற சமுதாய வழக்கம் ஒரு காலத்தில் பெண்ணுக்கு  எதிராக இருந்தது. அழகை விட தன்னை வன்கொடுமையில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த பெண்ணின் தவிப்பாக பார்க்கும் கண்களில் பதிகிறது. 


பெண்கள் மீது குடும்பங்களில் தினமும் நடக்கும் வன்முறையை,  எளிமையாக படம்பிடித்திருக்கிறது,  மேற்குவங்கத்தைச் சேர்ந்த  தலைமுடி எண்ணெய் நிறுவனமான ’JUI’. பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்தும், வன்முறையில் இருந்தும் வெளியில் வர ஆண்களைப்போல தங்களது தலை முடியை கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். ஒரு பெண்ணிற்கு  நீளமான தலைமுடியை பராமரிப்பது, வீண்வேலை  என்று  அடித்துரைத்ததுடன்,  நீளமான கூந்தலை பராமரிப்பதால், அவளுக்கும் இந்த சமூகத்திற்கும்  என்ன பயன்  வந்துவிடப்போகிறது என்று ’பெண்  ஏன் அடிமையானால்?’ புத்தகத்தில் விவரித்து பேசியிருப்பார். 

 தலைமுடி ஒரு பெண்ணை  பலவீனமாக்குகிறது என்றும், அதிலிருந்து விடுபடுவதே  பெண்ணுக்கு விடுதலையாக இருக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்  இந்த வீடியோ பதிவு பார்க்கும் அத்தனை பெண்களிடமும் கூந்தல் பற்றிய சிந்தனையை மாற்றியுள்ளது. தனக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை எதுவாக இருப்பினும் அதற்கு எதிராக போராட வேண்டும். அழகை விட பாதுகாப்பே பெண்ணுக்கு முக்கியம் என்பதையும் உணர்த்துகிறது.. அந்த பெண்ணின் கண்களில் வழியும்  கண்ணீர்த் துளிகளும்...வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கூந்தலும் அவள் அனுபவிக்கும் வன்முறையின் வலியை நம் மனதில் பதிய செய்கிறது.

இந்த வீடியோ பதிவை காண: 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அட்லாண்டிக் கடலுக்குள் அதிசய கனிம மலை கண்டுபிடிப்பு

அரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பூமியிலேயே அதிகபட்ச அரிய கனிமங்களின் குவியலாக இது வர்ணிக்கப்படுகிறது.


அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருக்கும் மிகப்பெரிய மலையில் இவை இருக்கின்றன.


இயற்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் இந்த படிமங்களில் இருக்கும் அரிய கனிமங்கள், மின்னணுத்தொழில் முதல் சூரிய மின்சாரத்தகடுகள் வரை பயன்படக்கூடியவை.


இவை பெரும் மலையாக குவிந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இவற்றை வெட்டி எடுக்கும்போது ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் கடல்வாழ் உயிரிகள் பெருமளவு உயிரிழக்க நேரும் ஆபத்தும் பெரும் கவலையை அதிகரித்துள்ளது.


இதுகுறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.

  • தொடங்கியவர்

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

 
 
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12
 
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1832 - இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
 
* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
 
* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.

* 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
* 1955 - ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
 
* 1961 - சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.
 
* 1980 - லைபீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.

* 1981 - முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.
 
* 1983 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
 
* 1996 - யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல். * 2007 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

 

 

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7-ம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.

 
 
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12
 
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7-ம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.

உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961-ல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

 

ஐஸ்க்ரீம் செல்ஃபி போச்சே!

செல்ஃபீ எடுப்பது தெய்வக்குத்தமா? கலிஃபோர்னியாவில் வசிக்கும் கிரிஸ், தனது குடும்பத்தோடு சான்டா மோனிகா பீச்சுக்கு சென்றார். Snapshot வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்யவேண்டுமே என ஸ்நாப்ஷாட் செல்ஃபீ எடுக்க ஆசையாய் ஐஸ்க்ரீம் வாங்கினார். ஒரு கையில் ஐஸ்க்ரீமும், மறுகையில் ஸ்மார்ட் போனுமாக செல்ஃபீக்கு தோதாக இடம் பார்த்து கேமரா செட் செய்தபோது, மைக்ரோ செகண்டில் பாய்ந்து வந்த கடற்பறவை ஐஸ்க்ரீமை லபக்கியது.
22.jpg
அந்த அதிர்ச்சியில் கிரிஸின் ஐஸ்க்ரீமும் கடலில் விழுந்துவிட அதிர்ச்சி குறையாதவரை குடும்பமே தேற்றியிருக்கிறது. பிறகு இன்னொரு ஐஸ்க்ரீமை சப்பியபடி தன் போனை செக் செய்தபோது கடற்பறவை ஐஸ்க்ரீமை அபேஸ் செய்த படமும் பதிவாகியிருக்க சந்தோஷமாக அதனை டுவிட்டி ஊர் உலகிற்கே கடற்பறவையைக் காட்டிக்கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். ஆகாயத் திருடன்!

www.kungumam.co.

  • தொடங்கியவர்

எதிர்காலத்தில் வட்ட வடிவ, முடிவற்ற ரன்வே... ஏன் தெரியுமா?

 

முடிவில்லா ரன்வே

சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் இது. ஒரு விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டிய சூழல். அதே சமயம் இன்னொரு விமானமும் தரையிறங்கி கொண்டிருந்தது. விபத்து ஏற்படும் நிலையில் பைலட்டின் சாதுர்யத்தால் விபத்திலிருந்து விமானங்கள் தப்பித்தன. அப்படி ஒரு சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க இந்த விமான ஓடுதளங்கள் உதவும் என்று நெதர்லாந்தை சேர்ந்த ஹென்க் ஹெஸ்லின்க் எனும் அறிவியலாளர் கூறியுள்ளார். முடிவில்லா ரன்வே என்ற புதிய ஐடியா மூலம் வட்ட வடிவிலான ஓடுதளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

திட்ட அளவிலிருந்து சோதனைக்காக சிறு அளவில் சோதிக்கப்படும் இந்த முடிவில்லா ரன்வே திட்டம் 3.5 கிமீ விட்டம் என்ற அளவில் வட்ட வடிவமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ரன்வேயில் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. இந்த சோதனையில் மாறும் காற்றின் வேகம் மற்றும் திசை, விமானம் காற்றுடன் சேர்ந்து நகரும் விதம், தரையிறங்கும் போது உண்டாகும் அதிர்வுகள் போன்றவற்றை சோதித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

endless runway

பறக்கும் பயணிகளின் அனுபவம் உள்ளிட்ட விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக ஹெஸ்லின்க் கூறியுள்ளார். இந்த வட்ட வடிவிலான ஓடுபாதை மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், காற்றின் திசையில் பயணிப்பதால் குறைவான எரிபொருள் பயன்பாட்டில் ஓடுபாதையில் பறக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஓடுபாதையில் பைலட்களிடம் அதிகமான கட்டுப்பாடு இருக்கும். எங்கு பறக்க வேண்டும், எங்கு பறக்கக்கூடாது என்ற விஷயங்களில் கட்டுப்பாடு முழுவது பைலட்களிடம் இருக்கும். எந்த திசையில் வேண்டுமானாலும் பறக்கலாம் என்ற சுதந்திரமும் இந்த அமைப்பில் இருக்கும். இது விமான போக்குவரத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். இன்னும் சில விஷயங்களை தொடர்ந்து சோதிக்க வேண்டியுள்ளதாக திட்டக்குழு தெரிவிக்கிறது. எதிர்காற்றை சமாளிக்கும் விதம், ஏர்போர்ட்டின் செயல் திறனை நிர்வகிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும், காலநிலைகளுக்கு ஏற்ப செயல்படுவதை உறுதி செய்யவும் சோதனைகள் நடைபெற்று வருவதாக ஹெஸ்லின்க் தெரிவித்துள்ளார். இதற்காக நெதர்லாந்தில் சில சோதனைகள் ஃபைட்டர் ஃபைலட்களை வைத்து சோதித்து வருகிறது இந்த ஆய்வுக்குழு.

இந்த முடிவில்லா ஓடுதளத்தின் அளவு மூன்று நேர் ஓடுதளங்களின் அளவுக்கு சமமானதாக இருக்கும். போதிய இடவசதி அளிக்கும் ஏர்போர்ட்டாகவும் இருக்கும். இந்த திட்டத்தின் சோதனைக்கு நெதர்லாந்து ஏரோஸ்பேஸ் மையம் மற்றும், DLR, ONERA ஆகியவை இணைந்து உதவிவருகின்றன.

endless runway

முக்கிய நகரங்களின் ஏர்போர்ட்டின் முடிவில்லா ரன்வே திட்ட அமைப்பு

ஐரோப்பாவின் முக்கியமான விமான நிலையங்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் எப்படி இருக்கும் என்ற வரைவையும் ஹெஸ்லின்க் குழு வடிவமைத்துள்ளது. இப்படி ஒரு ரன்வே அமைந்தால் ஒரே நேரத்தில் ஒரு விமானம் டேக் ஆஃப் ஆவதையும், லேண்ட் ஆவதையும் பார்க்க முடியும். தரையிறங்க முடியாது என்ற சூழ்நிலை இருக்காது. சாதாரணமாக ஒரே நேரத்தில் 3 விமானங்கள் தரையிறங்கும் என்பாதால் வான் வழி போக்குவரத்தில் இந்த திட்டம் பல சாதனைகளை படைக்கும் என்கிறார் ஹெஸ்லின்க். அப்புறம் என்ன  இனி காற்று வெளியிடை பைலட்டுகள் இனி சுற்றி சுற்றி ஃப்லைட் ஓட்டலாம்.

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954
 
காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

இவர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடித் தீருங்கள்!! #MorningMotivation

 

Morning motivation

ங்கள் நண்பர், நெருங்கிய உறவினர் அல்லது யாரென்றே தெரியாத வழிப்போக்கன், இல்லைனா நீங்க காபி கேட்டு எழும்போது சர்ப்பிரைஸா உங்க முன்னாடி தோன்றின கடவுள்னு அவர் யாரா வேணா இருக்கலாம். திடீர்னு ஏதாச்சும் ஒரு இடத்தில உங்களை நிறுத்தி "உங்க வாழ்க்கையை நீங்க வாழுறீங்களான்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?" உங்க நண்பரிடம் 'ஏண்டா, என்னாச்சு திடீர்னு இப்படி கேக்குறான்'ன்னு கேப்போம். நெருங்கிய உறவினர்கிட்ட வேற ஒரு பதிலை சொல்லுவோம். யாருன்னே தெரியாத ஒரு வழிப்போக்கர்கிட்ட 'சார், உங்க வேலையை பார்த்துட்டு போறிங்களா?’ன்னு  அழுத்தமா சொல்லிட்டு அங்கே இருந்து நகர்ந்துடுவோம். அதுவே கடவுள்னு சொல்லி ஒருத்தர் உங்க முன்னாடி தோன்றி இப்படி ஒரு கேள்வியை கேட்டா? 'நீங்க உண்மையிலேயே கடவுள்தானா’ன்னு கேட்டு கலங்கடிப்போம் தானே? இவர்களில் யாரிடமும் உங்கள் பதிலைச் சொல்ல வேண்டும் என என்ற நிர்பந்தமும் இல்லை. ஆனால், கேள்வி இதுதான். நிதானமாக யோசித்துப் பாருங்கள். அந்த பதில் உங்களுக்கே, உங்களுக்கானது தான்.  

வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன் சத்தங்கள் இல்லாமல், லேப்டாப், மொபைல், தொலைக்காட்சி என அனைத்தும் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இளஞ்சூடான ஒரு காலைத் தேநீரை ரசித்து அருந்தி எத்தனை நாட்கள் ஆகின்றன? இந்த கேள்விக்கும் நீங்கள் கூகுளாண்டவரையோ, அல்லது வாட்ஸ் அப் குழுவையோ நாட நம் மனம் பழக்கப்பட்டிருக்கிறது என்றால் சுதாரித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.     

மழை - Morning motivation

ஒரு தேநீரை மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அருந்த நம் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? ஆனால், மண்டையை பிளக்கும் இந்தக் கோடை வெயிலில் மழையை எதிர்பார்க்கவும் முடியாதே. மழை நின்ற பின்னும் இலைகளில் தூறிக் கொண்டிருக்கும் பெரு மழையை போல, நம் மனம் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் பொழுது மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டே தேநீரை குடிப்பதற்கு இணையான மகிழ்வை பெற முடியும்தானே! 

அதேபோலத்தான் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தினம் தினம் வசந்தத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்து சோர்வடைவதை விட கோடையின் அழகையும் நீங்கள் ரசிக்க தொடங்கினால். சந்தேகமே இல்லாமல் உலகின் மிக மகிழ்ச்சியான மனிதர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். என்ன சார் இது, வீட்டை விட்டு வெளியே போனாலே குளுக்கோஸ் விளம்பரத்துல வர்ற மாதிரி சூரியன் நம்ம சக்தியையெல்லாம் உறிஞ்சு எடுக்குற மாதிரி இருக்கு. நீங்க என்னடான்னா சாவகாசமா கோடையை ரசிங்கன்னு சொல்லுறிங்க'ன்னு மைண்ட் வாய்ஸ் ஓடுதா? கோடையை ஏன் நீங்க சந்தோஷமா எடுத்துக்கணும்னு சொல்லுறேன் ஆனா, அதுக்கு முன்னாடி, ஜஸ்ட் எ மினிட் பாஸ்.  இயற்கையோட  பருவநிலை மாற்றங்கள் எப்படியோ, அதே போலத்தான் நம்ம வாழ்க்கையும் வருஷத்துல 365 நாளும் மழையே பெய்ஞ்சுட்டு இருந்தா எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்களேன். நீரை சேமிச்சுக்கலாம், ஆனா, சேமிச்சு வைச்ச தண்ணீரை பயன்படுத்தி நமக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செஞ்சுக்க முடியாதே. இதை அபப்டியே நம்ம வாழ்க்கையோட ஒப்பிட்டு பார்த்தா, தினசரி வாழ்க்கையில நிறைய பிரச்னைகளும், வருத்தங்களும் இருக்க அதே நேரத்துல சந்தோஷ தருணங்களும் நிறைஞ்சிருக்கும் தானே! அந்த சந்தோஷ தருணங்களை மட்டும் மழையைப் போல விரும்பி ஏத்துக்குற மனசுக்கு கொஞ்சம் சின்ன சின்ன வருத்தங்களையும் பழக்கப்படுத்துங்களேன்.

பூமியைப் போல இயற்கையின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நம் மனம் பழகும்பொழுது 'கோடையில மழை போல' ஒவ்வொரு நொடியையும் கொண்டாடித் தீர்க்கலாம்தானே!!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்டர்நெட் சென்டரில் இளைஞர்களை அலறவைத்த பாம்பு... வைரலாகும் வீடியோ!

 

Untitled_04019.jpg

இந்த வீடியோவில் நடக்கும் சம்பவம், தாய்லாந்தில் நடந்துள்ளது. அங்கு, ஒரு இன்டர்நெட் சென்டரில் இருந்து, ஒரு நபர் வெளியே வருகிறார். அப்போது, கதவு அருகே இருந்த பாம்பு ஒன்று அவரைக் கடிக்க முயல, அந்த நபர் பயத்தில் தெறித்து ஓடுகிறார். குறிப்பாக, பதற்றத்தில் இன்டர்நெட் சென்டரில் இருந்தவர்களையும் உதைத்துத் தள்ளிவிட்டு, விழுந்தடித்து ஓடுகிறார். தற்போது இந்த வீடியோ, யூடியூபில் செம வைரலாகிவருகிறது

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மறக்க முடியுமா இன்றைய தினத்தை?

 
 

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை நடந்தேறிய தினம் இன்று.

Jallianwala Bagh massacre 
 

வட இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில், ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13 ல், பிரிட்டிஷ் ராணுவம் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஏப்ரல் 13-ம் தேதி, குருகோவிந்த் சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய தினம். பஞ்சாபில் அந்த தினத்தை விமர்சையாகக் கொண்டாடுவார்கள். 1919-ம் ஆண்டு அந்த தினத்தைக் கொண்டாட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர்  ஜாலியன்வாலா பாக் திடலில்  திரண்டனர். அந்தத் திடலில், நான்குபுறமும் உயர்ந்த மதில்கள். உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழிதான். கொண்டாட்டங்கள் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்,  ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பெரிய துப்பாக்கிக்களோடு வந்திறங்கின. 


ரெஜினால்ட் டையர்,  திரண்டிருந்த மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் தராமல், கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு ராணுவத்திடம் உத்தரவிட்டான். திறந்திருந்த ஒரேயொரு குறுகிய வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். மதில் மீது ஏறிக் குதித்தனர். சிலர் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க அங்கிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில், அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால்,  காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் அங்கேயே காலை வரையில் இருக்கவேண்டியதாகிவிட்டது. அங்கே, உயிரிழந்தவர்களின் நினைவாக ஜாலியன்வாலா பாக் நினைவிடம் அமைக்கப்பட்டது!

Jallianwala Bagh massacre

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

 

p74a.jpgபுதிய தமிழ் வருடமான ஹேவிளம்பி வருடம் 13/14.04.2017 விடிந்தால் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.43க்கு கிருஷ்ணபட்சத்து திருதியை திதி, விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசி, மகர லக்னம், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகத்தில் பத்தரை நாமகரணத்தில் நேத்திரம், ஜீவனம் கூடிய நன்னாளில் பஞ்சபட்சிகளில், குரு தசையில், சுக்ர புத்தியில், சுக்ர அந்தரத்தில், புதன் ஓரையில் சிறப்பாக பிறக்கிறது.

மேஷம்

11.jpgதலைமைப் பண்புமிக்க உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள்களாக தள்ளிப் போன விஷயங்கள் நல்லவிதமாக முடியும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில், செல்வாக்கு உயரும். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால், அதுவரை பணப்பற்றாக்குறையும், கணவன்-மனைவிக்குள் மனத்தாங்கல்களும் வந்து மறையும். வீண் செலவுகளும் இருக்கும். ஆனால், 2.09.2017 முதல் குரு 7-ம் வீட்டுக்கு வருவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். புது வீடு கட்டி மகிழ்ச்சியாக குடிபுகுவீர்கள். வேலையும் கிடைக்கும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. ஆவணி, தை மாதங்களில் பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

வெற்றிக் கனிகளை சுவைக்கத் தொடங்கும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சனிக்கிழமைதோறும் செல்லுங்கள். ஆதரவற்றப் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். 

ரிஷபம்

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்கிற உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது2.jpg இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். 1.9.2017 வரை குரு பகவான் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் வருமானம் ஒருபடி உயரும். புதிய வேலையில் அமர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 2.9.2017 முதல் குரு 6-ம் இடத்தில் மறைவதால், கொஞ்சம் அலைச்சல்கள் இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. 27.7.2017 முதல் ராகு, உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்வதால், புது வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர் வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரியின் ஆதரவு பெருகும்.

தொடர் உழைப்பால் வெற்றி பெறும் வருடமாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குத் திங்கட்கிழமைதோறும் செல்லுங்கள்.எளியோருக்கு உதவுங்கள்.

மிதுனம்

31.jpg நகைச்சுவையாகவும், நாசூக் காகவும் பேசும் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சனி பகவான் நிற்கும்போது, இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆனால், 19.12.2017 வரை சனி 7-ம் இடத்தில் வந்து அமர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் பிறப்பதால், உங்களின் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். 2.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் குரு பகவான் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். ஆனால்,19.12.2017 முதல் கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். ஆனாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு பகவான் சாதகமாவதால், எதிர்ப்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த ஆண்டு வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ நாளில் வில்வ தளத்தால் நந்தி பகவானையும், சிவபெருமானையும் வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

கடகம்

‘காலம் உயிர் போன்றது’ என்பதை உணர்ந்த உங் களுக்கு சுக்கிரனும், புதனும் சாதகமாக இருக்கும்4.jpg நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பழுதான மின் சாதனங்களை மாற்றுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க  ராகுவும், கேதுவும் சரியில்லாததால், எவரிடமும் நிதானமாகப் பேசுங்கள். சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாகப் பேசப் போய் அது விபரீதமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க குருவின் போக்கு சரியில்லாததால் பணப்பற்றாக்குறை இருக்கும். 19.12.2017 முதல் சனி பகவான் 6-ம் இடத்தில் அமர்வதால், வழக்குகள் சாதகமாகும். பண வரவு அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். வைகாசி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு தன்னம்பிக்கையாலும், தொலை நோக்குப் பார்வையாலும் வெற்றிபெற வைக்கும். 

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

சிம்மம்

கனவு காண்பதோடு நனவாக்கு வதிலும் வல்லவர்களான உங் களுக்கு குரு பகவான் 2-ம் இடத்தில் 5.jpgஅமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். 27.7.2017 முதல் கேது சாதகமாக இருப்பதால், மகனின் திருமணத்தை ச்சிறப்பாக முடிப்பீர்கள். 18.12.2017 வரை சனி பகவான் 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.உத்தியோகத்திலே புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். அலுவலகத்தில் உங்களின் திறமையை நிரூபித்துக் காட்டுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

வளைந்துக்கொடுத்துப் போவதால் முன்னேற வைக்கும் வருடம்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

கன்னி

பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவுபவர்களாகிய உங்களின் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில்6.jpg சந்திரன் நிற்கும்போது   இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பண வரவு கூடும். வீடு கட்டுவீர்கள். இனி உற்சாகமாக வலம் வருவீர்கள். இந்த ஆண்டு பிறக்கும்போது செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையாருடன் கருத்துமோதல்கள் வந்து போகும். 2.9.2017 முதல் குரு பகவான் சாதகமாவதால் குடும்பத்தில் நிலவி வந்த நிம்மதியற்ற போக்கு மாறும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புது வேலை அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  19.12.2017 முதல் சனி 4-ம் இடத்தில் அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.

சாதுர்யமான பேச்சால் சாதிக்க வைக்கும்  ஆண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலிலுள்ள ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை வணங்குங்கள். கண் பார்வை இழந்தோருக்கு உதவுங்கள்.

துலாம்

7.jpgசொன்ன சொல்லை நிறைவேற்று பவர்களான உங்களுக்கு, இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில், ராகு சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாடு, வெளி மாநிலத்திலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். 19.12.2017 முதல் சனி 3-ம் இடத்தில் அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆடி, ஆவணி, மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. உங்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். 

சிக்கனமும் பொறுமையும் தேவைப்படும் வருடமாக அமையும்.

பரிகாரம்: அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவரை தீபமேற்றி வணங்குங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

விருச்சிகம்

தீவிரமாகவும், தெளிவாகவும் சிந்திக்கின்ற உங்களுடைய ராசிக்கு சுக்கிரன் 5-ம் இடத்தில் அமர்ந்திருக்கும் 8.jpgநேரத்தில், இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். ஆனால், உங்கள் ராசிக்கு 12-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஒரு பக்கம் துரத்தினாலும், வருமானம் குறையாது. குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். 27.7.2017 முதல் கேது பகவான் 3-ம் இடத்தில் அமர்வதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். ஏழரைச் சனி தொடர்வதால், அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆவணி, தை மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும்.

அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும் வருடம் இது.

பரிகாரம்: சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானை நெய் தீபமேற்றி வணங்குங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவுங்கள்.

தனுசு

ஊர்நலம், உலகநலம் பற்றி யோசிக்கின்ற உங்களுக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது  இந்தப் 9.jpgபுத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். வீடு, மனை வாகனம் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட  சாதனங்களை மாற்றுவீர்கள். 19.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு, ஜென்மச் சனியாக வருவதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். நடைபயிற்சியை மேற்கொண்டு உடல் எடையைக் குறையுங்கள். 02.09.2017 முதல் 13.02.2018 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 27.7.2017 முதல் ராகு, கேது சரியில்லாததால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

அதிகாரப் பதவியும், பணவரவும்  தேடிவரும் ஆண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள்.

மகரம்

ஆளுமைத் திறன் அதிக முள்ளவர்களே... உங்கள் யோகாதி பதியான சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். 10.jpgஎதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்னைகள் விலகும். ஆனால், 2.9.2017 முதல் குரு பகவான் 10-ம் இடத்தில் அமர்வதால் சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் ராசிக்கு 10-ம்  இடத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் ராசிநாதனாகிய சனி பகவான் 18.12.2017 வரை ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். ஆனால், 19.12.2017 முதல் சனி 12-ம் இடத்தில் மறைந்து விரயச் சனியாக வருவதால் வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். தூக்கம் குறையும். சித்திரை, ஆனி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். அதிகாரிகளிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

முற்பகுதி முன்னேற்றத்தையும் பிற்பகுதி அலைச் சலையும் தரும் ஆண்டு.

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோயிலிலுள்ள ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

கும்பம்

மன்னிக்கும் குணம் அதிக முள்ள உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ம் இடத்தில் இந்தப் 111.jpgபுத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். 1.9.2017 வரை குரு 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், 2.9.2017 முதல் 9-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நீண்ட நாள்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 18.12.2017 வரை உங்களின் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்தில் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 19.12.2017 சனி லாப வீட்டில் அமர்வதால் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். 19.12.2017-க்குப் பிறகு, அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும்.

 குடும்பத்தில் அமைதியையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் ஆண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை எலுமிச்சைப் பழ தீபமேற்றி வணங்குங்கள். திருநங்கை களுக்கு உதவுங்கள்.

மீனம்

அடுத்தவர்களின் உள்மனதை ஊடுருவிப் பார்ப்பவர்களே...உங்கள்  ராசியை குரு பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்  இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற 12.jpgவேலைகளெல்லாம் முடியும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். உங்கள் ராசிக்கு 8-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். 27.7.2017 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆனால், 2.9.2017 முதல் குரு ராசிக்கு 8-ம் இடத்தில் அமர்வதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர் பயணங்கள் இருக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். ராகு 5-ம் இடத்தில் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுப்படுத்துவீர்கள். பணியில் சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

இந்த ஆண்டு புது அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் படித்து வணங்குங்கள். வேப்பமரக் கன்று நட்டு பராமரியுங்கள்.

http://www.vikatan.com/avalvikatan

  • தொடங்கியவர்

ஐ.நா-வின் உலக சவாலில் வென்ற இந்தியர்!

ஐ.நா சபையின் நடவடிக்கைகளை, உலகம் முழுவதும் நேரடியாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்வதற்கான மென்பொருள் கருவியினைக் கண்டுபிடிக்கும் சர்வதேச அளவிலான போட்டியில், இந்தியருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

uno

இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், இளம் தொழிலதிபருமான அப்துல்காதர் ரஷீக் ஐ.நா-வின் சர்வதேச விருதினை வென்றுள்ளார். ஐ.நா சபை, தன்னுடைய சபை நடைமுறைகள், எடுக்கப்படும் தீர்மானங்கள், வாக்கெடுப்பு முறைகள் என அனைத்தையும் பார்வையாளர்கள் நேரடியாகப் பார்ப்பதற்கான மென்பொருள் கருவியினைக் கண்டுபிடிக்க, போட்டி ஒன்றை அறிவித்தது.

ஐ.நா-வின் இந்த சர்வதேச சவாலில், இந்தியர் அப்துல்காதர் ரஷீக் வென்றுள்ளார். இவருக்கான சர்வதேச அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அப்துல்காதர் ரஷீக், இதற்கு முன்னர் ஐ.நா நடத்திய போட்டியிலும், மென்பொருள் கண்டுபிடிப்பு தொடர்பான பல சர்வதேசப் போட்டிகளிலும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களது பிறந்த தினம்.

இளமைக் காலத்திலேயே மறைந்தாலும் எழுதிய அற்புதமான பாடல்களால் கோட்டை கட்டி வாழும் பட்டுக்கோட்டையார் காலத்தால் அழியாத கவிஞர் & பாடலாசிரியர்

" தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்"

 

 

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்

 

 
 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 
 

சமூக கருத்துகளை தனது பாடல்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுச் சென்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 87-வது பிறந்ததினம் இன்று.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் எப்ரல் 13-ம் தேதி 1930 ஆம் ஆண்டு பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.

இவரது பாடல்களில் கிராமிய மணத்துடன,் பொதுவுடமை கருத்துகளும் நிறைந்ததாக இருக்கும். அதுமட்டுமல்ல திரைப்பட பாடல்களை எளிய நடையில் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவர் இயற்றியது மக்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை எளிதாக ஏற்று கொள்ள வழிவகுத்தது.

பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தனது முத்திரையை பதித்தார்.

இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

இவரது பாடல்களில் ’குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்’ , ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம்’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை இன்றுவரை ஒலித்து கொண்டு இருகின்றன.

மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் 1959-ஆம் ஆண்டு மறைந்தார். வெறும் 5 ஆண்டுகள் மட்டு திரைத்துறையில் வாழ்ந்தாலும் பல ஆண்டுகள் நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்தி விட்டு மறைந்தவர் இம்மக்கள் கவிஞர்.

http://tamil.thehindu.com

 

  • தொடங்கியவர்

ஹாலிவுட் நடிகர்களைப் போல பேசி அசத்திய உலகநாயகன்

நடிகர் கமல்ஹாசன், அவருக்கு விருப்பமான ஹாலிவுட் நடிகர்கள் பேசி நடித்த வசனங்களை, அவர்களைப் போலவே பேசிக் காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சுமார் 50 ஆண்டுகளாக பயணிக்கும் நடிகர் கமல்ஹாசன். தன்னுடைய அழுத்தமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உலக அளவில் அறியப்பட்டவர்.

kamala hassan

 

அவர் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் தேர்வு செய்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். அவர் வெளிநாட்டு தொகுப்பாளினி ஒருவருக்கு பேட்டி அளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் கமல்ஹாசன் தனக்கு விருப்பமான உலக நடிகர்களைப் போல பேசிக்காட்டி அசத்தினார்.

 

மார்லன் பிராண்டோ, ஜான் வேய்ன், ராபர்ட் டி நிரோ ஆகியோரைப் போல பேசிக் காட்டி அசத்தினார் கமல். அந்தப் பேட்டியின் போது சிவாஜி கணேசன் தனது முன்மாதிரி என்று தெரிவித்தார். மேலும், சிவாஜி கணேசன் நடித்த 'கட்டபொம்மன்' படத்தில் வரும் கிஸ்தி, திரை, வட்டி வசனத்தையும் பேசிக் காட்டினார். சிவாஜியின் வசனத்தை அந்தத் தொகுப்பாளினியும் பேச முயற்சி செய்தார். அந்தத் தொலைக்காட்சிப் பேட்டி சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கவுதம் கம்பீர் ஆவேசத்துக்கு இதுதான் காரணம்!

‘நம் ராணுவ வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும்’ என காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தாக்குதல் குறித்து ட்விட்டரில் கவுதம் காம்பீர் ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார்.

கம்பீர்


காஷ்மீர் ஸ்ரீநகரில் சமீபத்தில் தேர்தல் நடந்து வந்த சமயம் ஓட்டுப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் ராணுவ வீரர்களை ஜிகாதிகள் சிலர் தொடர்ந்து தாக்கிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த வீடியோ காட்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’நம் வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். காஷ்மீரை பிரிக்க நினைப்பவர்கள் வெளியேறுங்கள். காஷ்மீர் எங்களுடையதே’ என ஆவேசமாக கூறியுள்ளார்.

அதேபோல் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் வீரர்களை இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மர்மங்களின் தேசம்!

 
BGs_3153408f.jpg
 
 
 

யூகடான் தீபகற்பம். இது மத்திய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவையும் கரீபியன் கடலையும் பிரிக்கும் நிலப்பகுதி இது. 1,97,600 ச.கி.மீ பரப்பளவு உள்ள இந்தக் கடலோரப் பகுதி, அழகிய கடற்கரைகளைக் கொண்டது. சில மர்மங்கள் நிறைந்த பகுதியும்கூட.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மாயன் இனத்தவர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது இங்கேதான். அந்த இனத்தவரின் மிச்சச் சொச்சங்கள் இந்த யூகடான் கடற்கரைகளில் காணப்படுகின்றன. இங்கே கடலுக்குள் 300 அடி ஆழத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைகள் இருக்கின்றன. அவற்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்தக் குகைகளில் கான்கிரீட் பாதைகள், மனித உருவச் சிற்பங்கள்கூட இருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளும்கூட இங்கே உள்ளன. நிலப்பகுதியை விட்டுவிட்டு, எதற்காக அந்தக் கால மனிதர்கள் கடலுக்குள் குகைகளை அமைத்தனர் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஒரு வேளை மாயன்கள் கல்லறைகளுக்காக இந்தக் குகையை அமைத்திருப்பார்களோ என்றெல்லாம்கூட ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

இந்தக் குகைகளில் மனித எலும்புகள் மட்டுமில்லாமல், விநோத விலங்குகளின் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன. இப்படி ஏராளமான தொல்பொருள் எச்சங்கள் யூகடான் கடற்கரைப் பகுதியில் கிடைத்தாலும், எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கவில்லை. எல்லாமே பல ஆண்டுகளாக ஆய்வு நிலையிலேயே இருக்கின்றன. யூகடான் கடற்கரை ஆராய்ச்சிகள் சந்தேகங்களுக்கு விடையை அளிக்குமா எனக் காலம்தான் பதில் சொல்லும்!

tamil.thehindu.

  • தொடங்கியவர்

100 கோடி பேரின் கனவு... 'சச்சின்' பயோகிராஃபியின் ட்ரெய்லர்!

 
 

sac_1_600_18286.jpg

கடந்த 2012-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது 100 கோடி இதயம் நொறுங்கியது. அந்த நொறுங்கிய இதயங்களை ஒன்று சேர்க்க யாராலும் முடியாது. ஆனால் சச்சினை மீண்டும் தரிசிக்க, சச்சினை மீண்டும் லயிக்க, சச்சினை மீண்டும் திரையில் பார்க்க, அதுவும் வெள்ளித்திரையில் பார்க்க இன்னொரு வாய்ப்பு. வரும் மே மாதம் 26-ம் தேதி வெளியாகப்போகும் 'சச்சின்' பயோகிராஃபியின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரைப் பார்க்கும் போதே புல்லரிக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களை மீண்டுமொரு முறை மகிழ்விக்க, மீண்டுமொரு முறை மெய்மறக்கச் செய்ய சச்சின் தியேட்டர்களில் வருகிறார். இந்த பயோகிராஃபிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இது ரிலீஸாகிறது.

 

 

  • தொடங்கியவர்

எம்.எஸ்.விஸ்வநாதனை தூங்கவிடாமல் செய்த பட்டுக்கோட்டையாரின் வரிகள் இவைதான்!

 
 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரமற்ற அற்புதன்,  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று. 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ‘செங்கபடுத்தான்காடு’ என்கிற கிராமத்தில் பிறந்து, தன் 29-வது வயதில் இறந்துபோன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்லாத தத்துவம் இல்லை. பாடாத அறிவுரை இல்லை. எழுதாத காதல் இல்லை. அவர் இல்லாமல் தமிழ் பாடல்களே இல்லை.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா.”

“காடு வௌஞ்சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும்தானே மிச்சம்”

“வசதி படைச்சவன் தரமாட்டான்

வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"

என்று எழுதப்படிக்கத் தெரியாத தமிழ்நாட்டின் கடைகோடி தமிழனுக்கும்  பொதுவுடைமை  போதித்த பட்டுக்கோட்டை  படித்ததோ இரண்டாம்வகுப்பு. வறுமையின் காரணமாக விவசாயம் பார்த்திருக்கிறார், மாடுமேய்த்திருக்கிறார், மீன் விற்றிருக்கிறார் இப்படி அவர் செய்யாத தொழில்கள் இல்லை. கல்யாணசுந்தரத்தின் அப்பா பொதுவுடமை சிந்தனை கொண்டவர். பொதுவுடமை சிந்தனை நிறைந்த குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்ததால் அவரால் தொழிலாளர்களின் வலியை, கோபத்தை, நியாயத்தை, மிக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிந்தது. ஆயிரமாயிரம் காலத்துக்கும் தேவையான சிந்தனைகளை  சினிமா பாடல்களின் மெட்டுக்குள் அடக்கிய அவரின் திறன் இன்றுவரை யாருக்கும் கை வரவில்லை  என்று அடித்துச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் ஏழைகளின் நாயகன் ஆனதற்கும் தமிழகத்தின் முதலமைச்சரானதற்கும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் மிகப்பெரிய காரணம். என்னுடைய நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார்.

பட்டுக்கோட்டை

சினிமாவுக்குள் நுழைவது இன்றுபோல் அன்று எளிதானது அல்ல. பட்டுக்கோட்டை சினிமா ஆசையில் சென்னை வந்து நாடகத்துக்குத்தான் முதன்முதலில் பாட்டெழுதினார். நாடகத்திலேயே அவர் பொதுவுடமை வேட்கை ஆரம்பமாகிவிட்டது.

“தேனாறு பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனால்,

மக்கள் வயிறு காயுது...”

என்ற பாடல் மூலம் பிரபலமானார். அதன்பிறகுதான் பாண்டிச்சேரியில் இருந்த பாரதிதாசனிடம் சிஷ்யனாகும் வாய்ப்பு பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்தது. எழுத்தில் ஆற்றல் பெற்றிருந்தாலும் பாரதிதாசனிடம் நேரடியாக தன் கவிதைகளை காட்ட பட்டுக்கோட்டையாருக்கு பயம். `அகல்யா' என்றபெயரில் எழுதிகாட்டியிருக்கிறார். கவிதைகளை படித்து பாரதிதாசன் பாராட்டிய பிறகே, அது தன் கவிதைகள் என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதுதான்  பாரதிதாசன்மேல் பட்டுக்கோட்டையார் கொண்டிருந்த பிரமிப்புக்கான அடையாளம்.

பட்டுக்கோட்டை சினிமாவுக்கு வந்த நேரத்தில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படப்பாடல்களில் கோலோச்சிக்கொண்டிருந்தனர்.  அந்த மலைகளுக்கு இடையில் மடுவாக நுழைந்த பட்டுக்கோட்டை, அடுத்த சில ஆண்டுகளில் அத்தனை ஜாம்பவான்களும் தன் நடையைப் பின்தொடரும் அளவுக்கு கூர்மையான வார்த்தைகளைக் கொண்டு பாடல் செய்தார். முதலாளிகளையும் அடிமைத் தனத்தையும் வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்.

சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது பல இடங்களில் பட்டுக்கோட்டையை பார்க்காமலேயே விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவத்தால் கோபத்துக்குள்ளான பட்டுக்கோட்டை அந்த நிமிடத்தில் எழுதிய வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனை பலநாட்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாசவலை படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருந்த சமயத்தில் அவரிடம் பாட்டெழுத வாய்ப்பு கேட்டு  சென்றிருக்கிறார் பட்டுக்கோட்டை.  `பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒருத்தர் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்' என்று மேனேஜர் மூலம் எம்.எஸ்.விக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது, “நமக்கு நாள்கள் குறைவாகத்தான் இருக்கிறது. புது ஆட்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுதச்சொல்லுங்க" என்று கோபமாக சொல்லி மேனேஜரை துரத்திவிட்டிருக்கிறார். அதே வேகத்தில் வந்து, "புது ஆட்களைப்பார்க்கும் எண்ணம் இப்போது இல்லையாம்"  என்று எம்.எஸ்.வி மேனேஜர் பட்டுக்கோட்டையாரிடம் சொல்ல...

“என்னைப்பார்க்க வேண்டாம். என் கவிதையை படிக்கச் சொல்லுங்கள்” என்று தன்னுடைய கவிதையை கொடுத்திருக்கிறார். மேனேஜரும் `இவன் புது டைப்பா இருப்பான் போலிருக்கே' என்று யோசித்துக்கொண்டு. எம்.எஸ்.வியிடம் போயிருக்கிறார். "அய்யா... நீங்கள் கவிஞனை பார்க்க வேணாடாமாம்.  அவரது கவிதையை படித்தால் போதுமாம்" என்று மேனேஜர் நீட்டிய தாளில்,

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…

சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை படித்த எம்.எஸ்.வி நெகிழ்ந்து போயிருக்கிறார்.   அந்த சம்பவத்தைப் பற்றி பின்னாட்களில், “அன்றைய தினம் சாப்பிடக்கூட முடியவில்லை. பூஜை அறையிலேயே கிடந்தேன்.  விஸ்வநாதா... அதற்குள் என்னடா   அகந்தை.? நீ.. என்ன அவ்வளோ பெரிய ஆளா" என்று எனக்குள் நானே வருந்தினேன். எவ்வளவு பெரிய திறைமைசாலியை நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்று அன்று முழுக்க  கடவுளிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டே இருந்தேன் ” என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு,  பட்டுக்கோட்டை எழுதிய ஒவ்வொரு பாட்டும்   இனிவரும் பல்லாயிரம் ஆண்டுக்கான பாடம்.

“முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் இன்பம் எத்தனை ஆனாலும்

இருவர்க்கும் பொதுவாக்கலாம் ”

பட்டுக்கோட்டையின் இந்த வரிகளை வியந்து, `அடேயப்பா.. நான் மேடையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... சட்டசபையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... பள்ளியில் பொதுவுடமை கேட்டிருக்கிறேன்...  பள்ளியறையில் பொதுவுடமை சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்'  என்று  ஒரு மேடையில் வைரமுத்து சிலாகித்தது நினைவுக்கு வருகிறது. ஆம், அவர் காதலில்கூட பொதுவுடை சிந்தனை நிறைந்திருந்தது என்பதன் வெளிப்பாடு அது.  அன்றைக்கு தனது ஒவ்வொரு பாடல்களிலும்  சமூக அவலத்தை எதிர்த்து எழுதிய பட்டுக்கோட்டையும்   பாடல் ஆசிரியர்தான். இன்றைக்கு மலிந்துகிடக்கும்  அவலங்களை  ஆராதித்து எழுதுகிறவர்களும் பாடல் ஆசிரியர்கள்தான் என்றால் சிரிப்புதான் வருகிறது.  

பட்டுக்கோட்டை அதற்கும் ஒரு பாடல் வைத்திருக்கிறார். 

"சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"

 

 

''சிவப்புக்கொடி பறந்தால்தான் பணிகள் நடக்கும்!'' - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

 
 

கல்யாணசுந்தரம்

‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் 'பாட்டுக்கோட்டை' என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருடைய பிறந்த தினம் இன்று. தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.

''எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது'' என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் கல்யாணசுந்தரம். இவருடைய வலிமிகுந்த வாழ்க்கையை, 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாட்டாளி - படைப்பாளியான வரலாறு (1930-1959)’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கி அசத்தியிருந்தார் பு.சாரோன். அவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா பேசியதை, 'ஆனந்த விகடன்' இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றின்போது இப்படிச் சொல்லியிருந்தார். ''1950-ம் வருஷம் நடிகர் டி.கே.பாலச்சந்தரோட மக்கள் நாடக மன்றம் சார்பா திண்டுக்கல் காந்தி மைதானத்தில் 'கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் போட்டாங்க. நாடகத்தைப் பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் பேசியபோது, நாடகத்துக்காக கல்யாணசுந்தரம் எழுதின,

'தேனாறு பாயுது
செங்கதிர் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது!

- என்கிற பாடல் வரியைச் சுட்டிக்காட்டி, 'மக்கள் கவிஞருக்குரிய தரம் இந்த வரிகளில் இருக்கிறது' என்றார் ஜீவா. அவருடைய வாக்கு, பின்னாளில் பலிச்சது'' என்று குறிப்பிட்டுள்ளார் ஆவணப்பட இயக்குநர், பு.சாரோன். 

கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம் திரைப்படத் துறையில் வாய்ப்புத் தேடியபோது எத்தனையோ துன்பங்களை அனுபவித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் இது... ஒருநாள், கலைவாணர் என்.எஸ்.கே-யைப் பார்க்கப் போயிருக்கார் கல்யாணசுந்தரம். இவரது கஷ்டங்களைத் தெரிஞ்ச அவர், ''ஏன் தம்பி இப்படிச் சிரமப்படறீங்க? ஊருக்குப் போயிப் பொழைக்கிற வழியைப் பாருங்க'’னு சொல்லி 100 ரூபாய் கொடுத்திருக்கார். அதற்கு, பட்டுக்கோட்டை எழுதிய பாடல்தான் இது.

'புழலேரி நீரிருக்க
போக வர காரிருக்க
பொன்னுசாமி சோறிருக்க
போவேனோ சென்னையைவிட்டு
தங்கமே தங்கம்
நான் போவேனோ தங்கமே தங்கம்..!’

இப்படியான பல பாடல்களை எழுதியவர் கல்யாணசுந்தரம். இவருடைய பாடல் புனையும் திறனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ''தன்னுடைய படங்களுக்கு மட்டுமே பாடல் எழுத ஒப்பந்தம் போடலாம்'' என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், அவர் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பாட்டு எழுதுபவராகத்தான் இருந்தார். 1955-58 காலகட்டங்களில், 19 இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதிய ஒரே கவிஞர்  கல்யாணசுந்தரம் மட்டும்தான். திரைப்பாடல்கள் தொகுப்பாகி முதன்முதலாகப் புத்தகமாக வந்த பெருமையும் இவருடைய பாடல்களுக்கு மட்டுமே உண்டு. சென்னைப் பெரம்பூரில் நடந்த தொழிலாளர் கூட்டமேடையில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

கல்யாணசுந்தரம்

ஒரு முறை கல்யாணசுந்தரத்திடம் நிருபர் ஒருவர், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரைச் சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டாராம். அதற்கு கல்யாணசுந்தரம், "அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன். ஆகையால், பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம் நகைச்சுவை ததும்ப. அதேபோல் மற்றொரு நிருபர் ஒருவர், ‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்க... அவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூட பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

கல்யாணசுந்தரம்

இப்படி நகைச்சுவை உணர்வுடன் விளங்கிய கல்யாணசுந்தரம், சென்னையில் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது,  வழியில் ஓர் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது; அதோடு, பழுதுபார்க்கும் வேலை நடப்பதாகச் சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அவர்.. தன் அருகிலிருந்தவரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்படவேண்டுமோ... அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்தப் பணிகள் நடக்க வேண்டும்போலும்’’ என்று கம்யூனிஸ்ட் கொள்கையுடன் தன்னுடைய நகைச்சுவை உணர்வை அவரிடம் வெளிப்படுத்தியிருந்தார். 

சமூக அவலங்களை மையப்படுத்திப் பல பாடல்களை எழுதிய கல்யாணசுந்தரம், தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,

‘தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் - மேலே
போனா எவனும் வரமாட்டான் - இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’

- என்று எழுதியிருந்தார்.

ஆம், உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மனித இன மர்மங்களை டார்வினுக்கு விளக்கிய தீவு இதுதான்!

 

அந்தக் கப்பலின் பெயர் ஹெச்.எம்.எஸ். பீகிள் ( HMS Beagle ) . பசிபிக் பெருங்கடலில் தன் பயணத்தை மேற்கொண்டிருந்தது. நீண்ட நாள் பயணம் தான். இருந்தும் பயணங்களை விரும்பும், தேடலை தேடும் பெருங்கூட்டம் அந்தக் கப்பலில் இருந்ததால் பீகிளும் சளைக்காமல் உற்சாகமாக தன் பயணத்தை தொடர்ந்தது. அந்த நிலப்பரப்பைக் கண்டுவிட்டார்கள். அவர்கள் கால்வைத்த அந்த தீவின் பெயர் " சான் க்ரிஸ்டபல்". கடுமையான வெப்பமும், புகையும், தூசுகளும் சூழ்ந்திருந்த அதில் கால்வைத்ததும்... " இந்த பூமியின் நரகம் இது" என்று சொன்னார் அந்த நீளமான தாடிக்காரர். மனித இனத்தின் தோற்றத்தையும், பரிணாம வளர்ச்சியையும் தேடி உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருந்தார் அந்த தாடிக்காரர். ஐந்து வாரங்கள் அந்தப் பகுதியிலிருக்கும் தீவுகளில் தங்கியிருந்தார். அந்த நரகத்தில் இருக்கும் போது தான்... தன் வாழ்நாள் கனவை அடைவதற்கான வழி அவருக்குத் தெரிந்தது. அங்கிருந்து தான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை அவர் உணர்ந்தார். மனித சமுதாயத்தின் ஆகப்பெரும் படைப்பாக கருதப்படும் " உயிரினங்களின் தோற்றம்  " ( The origin of Species ) எனும் நூலைப் படைத்தார் அந்தத் தாடிக்கார சார்ல்ஸ் டார்வின். 

கலாபகஸ் தீவுகள்

ஈக்வேடார் ( Ecuador ) நாட்டின் பகுதியில், பசிபிக் பெருங்கடலில் ஓடும் பூமத்திய ரேகையின்  ( Equator ) இரு பக்கங்களிலும் இருக்கும் தீவுக் கூட்டம் தான் கலாபகஸ் ( Galapagos ). உலகிலேயே தனித்துவமான உயிரியல் வாழ்க்கையும், பூகோள வரையறைகளையும் கொண்ட ஓர் நிலப்பரப்பு. டார்வினைத் தொடர்ந்து, இன்றுவரை இந்தத் தீவுகளில் எத்தனையோ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, எத்தனையோ ஆச்சர்யங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். ஆனால், அதனுடைய தனித்துவமான உயிரியல் வாழ்க்கை எப்படி உருவானது ? என்ற கேள்விக்கான விடை கிடைக்காமலேயே இருந்தது. ஆனால், சமீபத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் அதற்கான விடையைக் கண்டறிந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். 

கலாபகஸ் தீவுகளில் இருக்கும் பெரிய ஆமைகள்

ஒரு கோடியே, நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பிலிருந்து 19 பெருந்தீவுகளும், 120 சிறு தீவுகளும் உருவாகின. அது முழுக்கவே எரிமலைக் குழம்பின் படிமங்களாக நிறைந்திருந்தன. பின்னர், காற்றும், மழையும் அதை செழிப்பான மண்ணாக மாற்றின. மண்ணில் சில நுண்ணியிரிகள் உருவாகியிருக்கும். பின்னர், காற்றும், கடலும், மழையும், வெயிலும் இணைந்து அங்கு ஓர் புது உயிர்ச்சூழலை உருவாக்கியிருக்கும். இது தான், கலாபகஸ் தீவுகளின் தோற்றமாக இருந்திருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

கலாபகஸ் தீவுகளில் இருக்கும் பென்குயின்கள்

எரிமலைகள் இருப்பதால் கிழக்குப் பகுதி அதிக வெப்பமாக இருக்கும். அதே சமயம், அதன் மேற்குப் பகுதி குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது. எந்தளவிற்கு என்றால், பல  பென்குவின் கூட்டங்கள்  அங்கு ஆரோக்கியாக வாழ்ந்து வருகின்றன. கடலுக்கடியில் ஏற்படும் சில மாற்றங்களால் தீவுக்கூட்டங்களின் பழைய தீவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்குகின்றன. அதிலிருக்கும் உயிரினங்கள் அடுத்த தீவுகளுக்கு இடம் பெயர்கின்றன. மற்றுமொரு ஆச்சர்யம், ஒரு தீவிலிருக்கும் ஆமைகளும், மற்றொரு தீவிலிருக்கும் ஆமையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆமை, மட்டுமல்ல பல உயிரினங்களில் இந்த வித்தியாசங்கள் இருக்கின்றன. இத்தனைக்கும் தீவுகளுக்கிடையே பெரிய தூரங்கள் கிடையாது. 

கலாபகஸ் தீவுகளில் நீச்சலடிக்கும் பல்லி

நீச்சலடிக்கும் பல்லி...

இந்தத் தீவுகளில் மட்டுமே காணப்படும் பல உயிரினங்கள் இருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் இருக்கும் உயிரினங்கள் சிலவும் இங்கிருந்தாலும், அதன் குணங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. 

கலாபகஸ் தீவின் சில ஆச்சர்யங்கள்...

-  கலாபகஸ் பென்குயின் இனங்கள் சற்றே மாறுபட்டவையாக இருக்கின்றன. பனி சூழாமல், குளிர்ந்த நீர் இருக்கும் இடத்தில் இவை வாழ்கின்றன. பொதுவாக, பென்குவின் கூட்டங்களில் குட்டி வளர்ந்ததும் அது தனக்கான தனிக் குடும்பத்தை உருவாக்கிக் கொண்டு போய்விடும். ஆனால், இங்கிருப்பவை தனியாகப் போனாலும் தன் பெற்றோர்களிடத்தில் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றன. உணவு உட்பட பல விஷயங்களை தாயிடமிருந்து பென்குவின்கள் வாங்கிப் போகும் அதிசயம், இங்கு மட்டுமே காணக்கிடைக்கும். 

- இந்தத் தீவில் தனித்துவமான சீல் மற்றும் கடற் சிங்கம் இருக்கின்றன. 

- கார்மோரன்ட் ( Cormorant ) என்றொரு பறவையினம் இருக்கிறது. நீண்ட தூரம் பறக்கும் தன்மை வாய்ந்தது. ஆனால், கலாபகஸ் தீவில் இருக்கும் எந்த கார்மோரன்ட் பறவையும் பறப்பதில்லை. பறக்கும் தன்மையே அவைகளுக்கு இல்லை. 

- உலகில் எங்கும் காணக்கிடைக்காத மிகப் பெரிய ஆமைகள் இங்கிருக்கின்றன. 

- நீல நிற பாதங்களைக் கொண்ட பூபி ( Blue Footed Booby ) என்ற ஓர் பறவை இங்கிருக்கிறது. 

- கடலில் நீச்சலடிக்கும் ஒரு அதிசய பல்லியினம் இங்கிருக்கிறது. அதற்கு பிங்க் இகுனாஸ் ( Pink Iguanas ) என்று பெயர்.

- பிண்டா ஆமை ( Pinta Tortoise ) என்ற ஓர் ஆமை இனம் இங்கிருந்தது. ஆனால், அவை அழிந்துவிட்டன. அந்த இனத்தின் கடைசி ஆளாக, தன்னந்தனியாக வாழ்ந்து வந்த ஆமைக்கு ஜார்ஜ என்று பெயரிட்டிருந்தனர் ஆராய்ச்சியாளர்கள். 100 வயது வரை வாழ்ந்த ஜூன் 24, 2012 அன்று இறந்து போனான். அந்த மொத்த இனமும் அதோடு அழிந்தது. 

- இங்கு வருடம் முழுக்கவே பகல் சரியாக 12 மணி நேரமும், இரவு 12 மணி நேரமுமாக இருக்கிறது.

கலாபகஸ் தீவுக் கூட்டத்தின் மிகப் பழமையான தீவின் பெயர் எஸ்பனோலா. இது 3.5 மில்லியன் வருடங்கள் பழமையானது எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தோன்றிய தீவாக அறியப்படுவது ஃபெர்னன்டினா. 1 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்த மொத்த தீவுகளும் ஈக்வேடார் நாட்டின் ஆளுகைக்குக் கீழ் வருகின்றன. இந்த தனித்துவமான பல்லுயிர்ச் சூழலைக் கொண்ட தீவுக்கூட்டத்தைப் பாதுகாக்க, ஈக்வேடார் அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே இந்த தீவிற்கு செல்ல அனுமதி வழங்குகிறது. மொத்தத் தீவுகளின் பரப்பளவில் 2% அளவிற்கு மட்டுமே சுற்றுலாவை அனுமதிக்கிறது. அதற்கும் நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. 

கலாபகஸ் தீவுகளில் வாழ்ந்த ஜார்ஜ் ஆமை

தனியொருவன் ஜார்ஜ்...

இப்படியாக பாதுகாத்து வந்தும் கூட பல்வேறு காரணங்களால், கலாபகஸ் தீவுகளின் இயற்கைச் சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூமி குறித்த பல அறியாத மர்மங்களை அறிந்து கொள்ள, கலாபகஸ் தீவுகள் பத்திரமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bildergebnis für tamil new year

Bildergebnis für tamil new year

Bildergebnis für easter

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு, ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முல்லா சொன்ன வெற்றியின் ரகசியம்!! #MorningMotivation

 
 

முல்லா கதை - MorningMotivation

ம் எல்லோருக்குள்ளுமே ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள், சின்ன சின்ன சக்ஸஸ் சீக்ரெட்ஸ் இருக்கும் அல்லவா? ஆனால், அந்த ரகசியங்களை எவ்வளவு தூரம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் வெற்றிக்கான சூட்சுமம் அடங்கியிருக்கிறது. அப்படி நம் சக்ஸஸ் சீக்ரெட்டுகளை நமக்குள்ளயே வைத்துக் கொள்ள முல்லா கதை சொல்லும் ரகசியத்தைப் பார்ப்போமா!? சிறுவயதிலிருந்து முல்லா கதைகளை நாம் எல்லோருமே விரும்பிப் படித்து வந்திருப்போம். சுவாரஸ்யமாக இருப்பதோடு,   அவரின் சின்ன சின்ன செயல்களில் ஈர்த்தும் விடுவார்.

அந்த ஊரில் முல்லாவுக்கு நல்ல மரியாதை. மன்னராக இருந்தாலும், சாமானிய மனிதனாக இருந்தாலும் முல்லாவை பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் ஒன்று தான். இதனாலேயே எளிய மக்களுக்கும் முல்லாவை அவ்வளவு பிடிக்கும். எந்த செயலைத் தொடங்கும் முன்னும் முல்லாவிடம் ஆலோசனை கேட்டுவிட்டுத்தான் துவங்குவார்கள். ஒருநாள் அந்த ஊரிலேயே பெரிய மனிதர் ஒருவர் முல்லாவை சந்திக்க வந்திருந்தார். பல வெளிநாடுகளிலும் வியாபாரம் செய்து வந்தார். உள்ளூரிலும் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இவ்வளவு பெரிய செல்வந்தர் தன்னைத் தேடி வந்திருக்கிறாரே என்னவாக இருக்கும் என்று குழம்பிய முல்லா அவரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்தார்.

செல்வந்தர் பேச்சைத் துவக்கினார். "முல்லா, உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் உங்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மன்னர் கூட உங்களை அரசவைக்கு அழைத்து ஆலோசனை கேட்டுக் கொள்கிறராமே" எனச் சொல்ல முல்லாவுக்கோ குழப்பம் அதிகமானது. குழப்பத்துடன் அவருடன் உரையாடுவதை விட அவர் பேச்சை கேட்கலாமே என்று முடிவுக்கு வந்துவிட்டார். செல்வந்தரின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அமைதியாக அவர் பேச்சை கேட்க ஆரம்பித்தார்.       

செல்வந்தருக்கோ அவரைப் பற்றி நாம் இவ்வளவு புகழ்ந்து பேசுகிறோம். ஆனால், மனிதர் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறாரே. ரொம்பப் பெரிய ஆள்தான் போல என மனதுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் அவரே தொடர்ந்தார்.

"தங்களிடம் ஒரு ரகசியம் கேட்கலாம் என்று தான் வந்தேன். ஆனால், அதைக் கேட்க தயக்கமாக இருக்கிறது. ஊரெல்லாம் உங்களை பற்றிய பேச்சாக இருக்கிறது. அரசவையில் இருக்கும் என் நண்பர்கள் முல்லாவிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது. அதனால்தான் மன்னருக்குக்கூட அவரைப் பிடிக்கிறது எனச் சொன்னார்கள். உங்களுடைய அந்த சக்தி என்னவென்றே ரகசியத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்." எனத் தான் முல்லாவை தேடி வந்த காரணத்தை சொன்னார்.

கதை - MorningMotivation

முல்லாவுக்கோ சிரிப்பு தாங்கவில்லை. வாய் விட்டு நன்றாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஊரெல்லாம் தன்னிடம் ஏதோ சக்தி இருப்பதாகத் தான் பேசிக்கொள்கிறார்களா? என நினைத்துதான் சிரித்தார். செல்வந்தருக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது. எவ்வளவு பெரிய ஆள் நாம், இவ்வளவு தன்மையாக கேட்டும் இந்த மனிதர் எதையும் பொருட்படுத்தாமல் இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாரே. முல்லாவுக்கு தான் இப்படி சிரிப்பது அவருக்கு பிடிக்கவில்லை கோபப்படுகிறார் என்பது தெளிவாக புரிந்தது. சிரிப்பதை நிறுத்தி விட்டு அவரிடம் சொன்னார்.

"ஆம், என்னிடம் அபூர்வமான சக்திகள் நிறைய இருக்கிறது. ஆனால், என்னால் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல முடியாதே. அப்படிச் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே"

"இல்லை, நீங்கள் உங்களுடைய ரகசியத்தை என்னிடம் நம்பி சொல்லலாம். அது என்னைவிட்டு தாண்டி போகாது. என்னை நீங்கள் நம்பலாம்"

முல்லாவுக்கோ முழுமையாக அவர் மீது நம்பிக்கை பிறக்கவில்லை.

"நான் என்னுடைய வெற்றியின் ரகசியச்த்த உங்களிடம் சொன்னால். அதை யாரிடமும் சொல்ல மாட்டீர்களே!?"

"இல்லை, என்னை நீங்கள் நம்பலாம். என்னைத் தாண்டி வெளியே போகாது" என நம்பிக்கையூட்டினர்.

"உங்களிடம் யாராவது பணம் கொடுக்கிறேன் என ஆசைகாட்டினால்.." 

"இல்லை நண்பரே என்னிடம் இல்லாத செல்வமே இல்லை. என்னுடைய ரகசிய வியாபார நுணுக்கங்களால்தான் இவ்வளவு பெரிய செல்வந்தனாக உயர்ந்து நிற்கிறேன். ரகசியங்களின் அருமை எனக்கும் தெரியும். பயப்பட வேண்டாம் எனச் சொன்னார்"

"அப்படியானால் உங்களிடம் என்னுடைய ரகசியத்தை சொல்லலாம் என நினைக்கிறேன். மறந்து கூட யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் அல்லவா?" 

"இல்லை சொல்ல மாட்டேன்" உறுதியாக கூறினார் அந்த செல்வந்தர்.

"உண்மையிலேயே நீங்கள் ரகசியத்தை கட்டிக்காக்க கூடியவர்தான். ஆனால், என் வெற்றிக்கான ரகசியத்தை உங்களிடம் கூறினால் என்னுடைய ரகசியத்தை காப்பாற்ற தெரியாத முட்டாள் ஆகிவிடுவேன் அல்லவா. அதனால், என்னுடைய வெற்றிக்கான ரகசியத்தை உங்களிடம் சொல்ல நான் தயாராக இல்லை. உங்கள் வெற்றி ரகசியங்களைப் போல நானும் என் ரகசியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா!?" என சொல்லி முடிக்க அதை புரிந்து கொண்ட செல்வந்தர் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். 

செல்வந்தர் கிளம்பிப் போனதும் முல்லா என்னிடம் மட்டும் ரகசியமாக காதில் கிசுகிசுத்தார். அது என்ன தெரியுமா!?

முல்லாகிட்ட அப்படி எந்த ரகசியமுமே இல்லை என்பதுதான் அது.  

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.