Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம்

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

 

 
1_3153698f.jpg
 
 
 

பொதுப் பலன்

மங்களரகமான ஏவிளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ணியகாலம் நிறைந்த வியாழன் நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை 12மணி 43 நிமிடத்திற்கு 13/14.4.2017 கிருஷ்ண பட்சத்தில் திருதியை திதி, விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்திலும், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியிலும், சித்தி நாமயோகம், பத்தரை நாம கரணத்திலும், புதன் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் நிறைந்த பஞ்ச பட்சிகளில் காகம் வலுவிழந்த காலத்திலும், குரு மகாதசையில், சுக்கிர புத்தி, சுக்கிரன் அந்தரத்திலும் வெற்றிகரமான ஏவிளம்பி வருடம் பிறக்கிறது.

ஏவிளம்பி வருட வெண்பா

ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்

பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்

ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்

வேகுமே மேதினி தீ மேல்.

என்ற இடைக்காடர் சித்தர் மகானின் பாடலின்படி இந்த வருடத்தில் மழை குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், உணவு உற்பத்தியாகிய விளைச்சலும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் அதிகமாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் அதிகமாகும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் அதிகமாகும் என்கிறார்.

ஐப்பசி மாதம் வரை சுக்கிரன், கிழக்கு திசையில் நிற்பதால் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு போதிய மழை பொழியும். விளைச்சல் அதிகமாகும். சித்தர் பெருமானின் பாடலுடன் இந்த வருடப் பிறப்பின் நட்சத்திர கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது ஏவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் வருவதாலும் செவ்வாய் ஏவிளம்பி வருடப் பிறப்பின்போது சுக்கிரன் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் மறைந்ததாலும். நாட்டை ஆளும் மந்திரிகள் நிம்மதி இழப்பர். கறுப்புப் பணம் புது விதமாக அதிகரிக்கும். ரியல் எஸ்டேட்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தீர்க்கப் புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும்.

rasipalan_3153904a.jpg

ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காப்பாற்றப் புதுச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும். குதிரைகளை வினோத நோய் தாக்கும். மந்திரியாக சுக்கிரன் வருவதாலும், சுக்கிரன் உச்சம் பெற்று வலுவடைந்ததாலும், வீட்டாதிபதி குருவின் சமசப்தமப் பார்வையைப் பெற்றதாலும், தலைமைப் பொறுப்புக்கு அடுத்திருப்பவர்கள் வலுவடைவார்கள். யானைகள் அழியும், யானைகளைக் காப்பாற்ற அரசு அதிக அக்கறை காட்டும். தங்கம், வெள்ளி விலை குறைந்து ஏறும். ரத்தினக் கற்களான வைரம், வைடூரியம், மரகதப் பச்சை கற்களின் விலை உயரும். துணி உற்பத்தி அதிகரிக்கும். வாகனங்கள், ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்கும்.

9.3.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலகட்டத்தில் சனி, செவ்வாய் சமசப்தமமாகப் பார்ப்பதால் தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். 9.3.2018 முதல் ஏப்ரல் முடிய சனி, செவ்வாய் சேர்வதாலும் இரண்டு சந்திர கிரகணங்கள் இந்த ஆண்டு வருவதாலும் தமிழ்நாட்டில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கட்சி வலுவிழக்கும். புதிய கூட்டணி அமையும். திடீர் தேர்தலையும் சந்திக்க நேரிடும்.

குபேரனின் திருதியை திதியில் இந்த வருடம் பிறப்பதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், ஓரளவு நிம்மதியையும் தருவதாக இந்த வருடம் அமையும்.

மேஷ ராசி வாசகர்களே

அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளை அறிந்து அதற்கேற்ப வாழக் கற்றுக் கொண்டவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள இடத்திற்கு வீட்டை மாற்றுவீர்கள்.

18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபம் வேண்டாம். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். 19.12.2017 முதல் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் வெற்றி உண்டு. சொந்த பந்தங்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

26.7.2017 வரை ராகு பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் கனவுத் தொல்லை, பிள்ளைகள் விஷயத்தில் அலைச்சல் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அசைவ, கார உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். ஆனால், கேதுவால் திடீர் யோகங்களும், பண வரவும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். உங்களைச் சுற்றியிருப்ப வர்களின் சுயரூபத்தை உணர்ந்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். 27.7.2017 முதல் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீடு வாங்கும்போது சொத்துக்குரிய தாய்ப் பத்திரத்தைக் கேட்டு வாங்குங்கள். 10-ல் கேது அமர்வதால் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். வேலைச் சுமை இருக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

1.9.2017 வரை குரு பகவான் 6-வது வீட்டில் தொடர்வதால் அதுவரைக்கும் பணப் பற்றாக்குறை நீடிக்கும். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டிலே அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதனால் சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

பெண்களுக்கு: ஆகஸ்ட் மாதம் வரை குரு மறைந்திருப்பதால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தப் பாருங்கள். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி நீடிப்பதால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஆனால் செப்டம்பர் மாதம் முதல் குரு ராசியைப் பார்க்க இருப்பதால் கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடகிலிருந்த தங்க நகையை மீட்பீர்கள். நாத்தனாருக்கு இருந்த பிரச்சினையைத் தீர்த்துவைப்பீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கொழுந்தனாருக்குத் திருமணம் நிச்சயமாகும்.

ராமலிங்க சுவாமிகள் அருளிய இப்பாடலை ஸ்ரீமுருகர் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் மூன்று முறை படித்து தியானம் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

அருளார் அமுதே சரணம் சரணம்

அழகா அமலா சரணம் சரணம்

பொருளா எனைஆள் புனிதா சரணம்

பொன்னே மணியே சரணம் சரணம்

மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்

மயில்வா கனனே சரணம் சரணம்

கருணா லயனே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம்

 

ரிஷப ராசி வாசகர்களே

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கை தான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை முழுமையாக நம்பி அதற்கேற்ப உழைப்பவர்களே! உங்களுடைய லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த பனிப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகள் குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்குப் பணம் வரும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்குக் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வீர்கள்.

குலதெய்வக் கோவிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைவதனால் வேலைச்சுமை மற்றும் செரிமானக் கோளாறு வந்து நீங்கும். பணக் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்கிர கதியிலும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும் சென்று அமர்வதால் எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள்.

அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேற்று மதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். இந்த வருடம் முழுக்கச் சனியின் போக்கு சரியில்லாததாலும், 19.12.2017 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதாலும் கணவன், மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். ரத்தத்தில் ஹிமோகுளோபின் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்தில் அமைதியில்லையே எனப் புலம்புவீர்கள். பண விஷயத் தில் கறாராக இருங்கள். நெருங்கியவர் களாக இருந்தாலும் குடும்ப விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.

பெண்களுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். மாமனார், மாமியார் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். ஆனால் செப்டம்பர் முதல் குரு மறைவதாலும், கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி அடுத்தடுத்து தொடர்வதாலும் தங்க நகை இரவல் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். கணவரை அனுசரித்துப் போங்கள்.

அபிராம பட்டர் அருளிய இப்பாடலை அருள்மிகு அம்பாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள்; நினைத்தது நிறைவேறும்.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

 

மிதுன ராசி வாசகர்களே

வாக்குறுதி என்பது சத்தியத்திற்கும் மேலானது, என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிக்கு 5-ல் சந்திரன் நின்றுகொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். அவர்களின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு உடனே திருமணம் முடியும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி ஏமாந்தீர்களே! இனி யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறதி, சோம்பல் விலகும். சுறுசுறுப்பாவீர்கள். புதிய காரியங்களெல்லாம் கைகூடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

18.12.2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

19.12.2017 முதல் சனி 7-வது வீட்டில் அமர்வதால் கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. மனைவி வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத் துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது.

1.9.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் தாயாருக்குக் கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். பண வரவு தாமதமாகும். உறவினர்கள், நண்பர்களுடன் பகை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதப்படுத்த வேண்டாம். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்களைச் சந்தித்து அருளாசி பெறுவீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலே குரு அமர்வதனால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.

நீண்ட காலமாகத் தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

ஆனால் 14.2.2018 முதல் 13.04.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலே வக்கிரத்திலும், அதிசாரத்திலும் சென்று மறைவதனால் பணப் பற்றாக்குறை ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர் களிடையே குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். 26.7.2017 வரை ராகு 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியம் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு உண்டு. இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

பெண்களுக்கு: 18.12.2017 வரை சனிபகவான் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள். உங்களுக்கு இருந்துவந்த தைராய்டு தொந்தரவு குறையும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிட்டும். மாமியார், மாமனாரின் ஆதரவு கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு 5-ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். 19.12.2017 முதல் கண்டகச் சனியாக வருவதால் கணவர் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய இப்பாடலைப் பெருமாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள்; ஆசைகள் நிறைவேறும்.

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.

கங்கையில் புனிதமாய காவேரி நடுவுபட்டு

பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு

எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே

 

 

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: கடகம், சிம்மம், கன்னி

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
 
 
 
 
2_3153700f.jpg
 
 
 

கடக ராசி வாசகர்களே

ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற போக்கு மாறும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தைப் புரிந்து கொள்வார்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.

18.12.2017 வரை சனி பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டி வரும். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 19.12.2017 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம்பெற்று அமர்வதனால் பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக்கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

குரு பகவானின் போக்கு சரியில்லாததால் சுபச் செலவுகளும், திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதப்படுத்த வேண்டாம். வாகனத்தைக் கொஞ்சம் கவனமாக இயக்குங்கள்.

ஆனால் 14.02.2018 முதல் 13.04.2018 வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-வது வீட்டிலே அமர்வதனால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

26.7.2017 வரை ராகு 2-லும், கேது 8-லும் தொடர்வதால் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு கூச்சல் குழப்பங்கள் வந்து போகும். என்றாலும் ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். விபத்துக்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீடு, வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 27.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதனால் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பண வரவு அதிகரிக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல் வரும். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை வாய்ப்பும் தேடி வரும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும்.

பெண்களுக்கு: 18.12.2017 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 19.12.2017 முதல் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள். விலகி நின்ற சொந்த பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். இந்த ஆண்டு முழுக்க குரு சாதகமாக இல்லாததால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டிவரும். வீடு, வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். மாமியார், சில நேரங்களில் குறை கூறினாலும் மனசுக்குள் உங்களைப் புகழ்வார்.

கீழ் வரும் இப்பாடலைக் காமாட்சியம்மன் முன் அமர்ந்து தினந்தோறும் ஒன்பது முறை படித்து தியானம் செய்யுங்கள். கவலைகள் தீரும்.

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட

- பாதச் சிலம்பி னொலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும் ;

முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும் ,

சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையில் பொன்கங்கணம்,

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பி னழகும்,

அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை

அடியனாற் சொல்லத் திறமோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.

 

சிம்ம ராசி வாசகர்களே

ஊராரின் தூற்றல்களுக்குச் செவி சாய்க்காமல் வாழ்வின் உயரத்தை மட்டும் நோக்கிச் செல்லும் குணமுடையவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் புதுப் பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். ஏமாந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும்.

18.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலேயே தொடர்வதால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். தாய்வழிச் சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 19.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால் தாயாரின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும்.

26.7.2017 வரை ராகு உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள். 26.7.2017 வரை கேது, 7-ல் அமர்ந்திருப்பதால் பிரச்சினைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். அரசு காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ல் வந்து அமர்வதால் சுபசெலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கேது 6ல் அமர்வதனால் குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உடல்நலம் சீராகும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும்.

1.9.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். உங்கள் முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை நவீனப்படுத்துவீர்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆனால் 02.9.2017 முதல் 13.2.2018 வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவான் 3-ல் அமர்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 14.02.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் 4-ல் அமர்வதால் காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தாய் வழி உறவுகளால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

பெண்களுக்கு: ஆகஸ்ட் மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மாமனார், மாமியார், நாத்தனாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். ஜுலை 27-ம் தேதி முதல் கேது சாதகமாவதால் அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மச்சினருக்குத் திருமணம் முடியும். இந்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் சமையலறைச் சாதனங்கள் பழுதாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் மீது உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

நடராசப் பத்து எனும் இப்பாடலை சிவபெருமானின் முன் அமர்ந்து தினந்தோறும் ஒன்பது முறை படித்து தியானம் செய்யுங்கள்.நினைப்பது நிறைவேறும்.

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரம்மனாட,

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,

குஞ்சர முகத்தனாட,

குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட

குழந்தை முருகேசனாட,

ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு

முனியட்ட பாலகருமாட,

நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட

நாட்டியப் பெண்களாட,

வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை

விருதோடு ஆடிவருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற

தில்லைவாழ் நடராசனே.

 

கன்னி ராசி வாசகர்களே

மனத்திற்குச் சரியெனத் தோன்றுவதை திட்டவட்டமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்களே! இந்த ஆண்டு பிறக்கும்போது சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பழைய வாகனத்தை மாற்றிப் புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து, ஜென்ம குருவாகத் தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்க்கப் பாருங்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளைச் சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் 13.02.2018 வரை குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.

சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பம் விலகும். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்துவந்த ஆரோக்கியக் குறைவு சீராகும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு அதிசாரத்திலும், வக்கிர கதியிலும் சென்று 3-ல் அமர்வதால் பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. யாரையும் அநாவசியமாக வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வெளியிடங்களிலும் நிதானமாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது.

சனி பகவான் 18.12.2017 வரை உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் தொடர்வதால் அனுபவ அறிவைப் பயன்படுத்திச் சில பிரச்சினைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய சொத்தை விற்பீர்கள். 19.12.2017 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எந்தச் சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகு அமர்ந்திருப்பதனால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். கூடாப் பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 26.7.2017 வரை கேது உங்கள் ராசிக்கு 6-ல் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் நண்பராவார்கள்.

வழக்குகள் சாதகமாகும். ஆனால் 27.7.2017 வரை ராகு, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் தன்னம்பிக்கையும் பண வரவும் அதிகரிக்கும். வீண் செலவுகளும் குறையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆனால் 27.7.2017 வரை கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் உண்டு. அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்பப் புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப்போகும் மனப்பக்குவம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு தன வீடான இரண்டாம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பல நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு இனி வேலை கிடைக்கும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

புதியவர்கள் அறிமுகமாவார்கள். சிரித்துப் பேசி சிற்றுண்டி சாப்பிட மட்டும் இருந்த வி.ஐ.பி நட்பை இனி சரியாக பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்தலெல்லாம் போதும், இனி களத்தில் நேரடியாக குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு: ஆகஸ்ட் வரை குரு ராசிக்குள் இருப்பதால் கணவருடன் கொஞ்சம் மோதலும் வரும். நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஜுலை 27-ம் தேதி முதல் ராகு சாதகமாவதால் கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமியார், மாமனார் வகையில் உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

நம்மாழ்வார் அருளிய இப்பாடலைப் பெருமாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஆறு முறை படித்து தியானம் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

 

 

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: துலாம், விருச்சிகம், தனுசு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

 
3_3153702f.jpg
 
 
 

துலாம் ராசி வாசகர்களே

ஓடோடி வந்து யாருக்கும் உதவும் குணத்தை வாழ்வின் ஒரு அங்கமாகக் கடைப்பிடிப்பவர்களே! உங்கள் ராசியிலேயே, இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.

18.12.2017 வரை பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். வெளிமாநிலங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். பணம், நகையைக் கவனமாகக் கையாளுங்கள். 19.12.2017 முதல் சனி 3-ல் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பண வரத்து அதிகரிக்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

1.9.2017 வரை குரு 12-ல் தொடர்வதால் திடீர்ப் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நினைத்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் 02.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். உணவில் காய்கறிகள், பச்சைக் கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு பகவான் வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தமக்கைக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள்.

26.7.2017 வரை கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. யாருக்கும் உத்தரவாதக் கையெழுத்திடாதீர்கள். ஆனால் ராகு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் வர வேண்டிய பணம், கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். 27.7.2017 முதல் கேது 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வரும். ஆனால் 10-ம் வீட்டில் ராகு அமர்வதால் மன தைரியம் பிறக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஆனால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரியின் அறிமுகமும் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆனால் ஜுலை 27-ம் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக்கும்.

ராகுபகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்ம னைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் ஆரோக்கியமும் அழகும் கூடும். ஆனால் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இருவருக்குள் பிரச்னையை உருவாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உங்கள் குடும்பத்தினரையோ, உறவினரையோ யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் உடனே நம்பிவிடாதீர்கள்.

பெண்களுக்கு: ஜுலை 26ம் தேதி வரை ராகு சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், திருப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்னி யோன்னியம் அதிகரிக்கும். தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்.

குருவின் போக்கு சரியில்லாததால் ஈகோ பிரச்சினையால் கணவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். வங்கிச் சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கிறதா எனப் பார்த்துக் காசோலை தருவது நல்லது.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய இப்பாடலை சிவபெருமானின் படத்திற்கு முன்பு அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள். குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்.

ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்

வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்

தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

 

விருச்சிக ராசி வாசகர்களே

இஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையையே பெரிதென நினைக்கும் மனசுடையவர்களே! உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

1.9.2017 வரை உங்கள் ராசிக்கு குரு, லாப வீட்டில் தொடர்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் விலகி அன்னியோன்னியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஆனால் 02.9.2017 முதல் 13.02.2018 வரை குரு, 12-ல் வந்தமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது.

ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டி வரும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு, வக்கிர கதியிலும், அதிசாரத்திலும் ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.

18.12.2017 வரை ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் மற்றும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வாகனத்தை இயக்கும் முன் பிரேக்கை சரிபாருங்கள். பண வரவு இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 19.12.2017 முதல் சனி 2-ல் அமர்வதால் ஆரோக்கியம் சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும், இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அரசு சம்மந்தப்பட்ட காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

26.7.2017 வரை ராகு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக்காட்டுவிர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சிலருக்குப் பழைய வீட்டை இடித்துப் புதுப்பிப்பது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கேது 4-ம் வீட்டில் தொடர்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அரசாங்க அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டு உரிமையாளர்களால் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். 27.7.2017 முதல் ராகு 9-லும், கேது 3-லும் அமர்வதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையாருடன் மனக்கசப்பு வந்து செல்லும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, வீண் டென்ஷன் வந்து செல்லும். புதிய பதவிகள் தேடி வரும். சிறுகச் சிறுக சேமித்துவைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து அதைச் சரி செய்வீர்கள். பற்று வரவு உயரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.

பெண்களுக்கு: ஆகஸ்ட் வரை குரு சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். கணவர் உங்களை மதிப்பார். பிள்ளை பாக்கியம் உண்டாகும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மாமியார், மாமனாரின் ஆதரவு கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்கச் சனியின் போக்கு சரியில்லாததால் உறக்கமின்மை, சைனஸ் தொந்தரவு, நெஞ்சு வலி வந்து நீங்கும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய இப்பாடலை ஸ்ரீ முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு அமர்ந்து தினந்தோறும் மூன்று முறை படித்து தியானம் செய்யுங்கள். பிணிகள் அகலும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

 

தனுசு ராசி வாசகர்களே

ஈரமான மனசுடன் எப்பொழுதும் வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களே! உங்கள் ராசிக்குப் பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங்காலத்திற்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.

18.12.2017 வரை விரையச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்புவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 19.12.2017 முதல் ஜென்மச் சனியாக அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் பருகுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். வீண் வறட்டு கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன், மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். காலில் அடிபடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் தொடர்வதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. ஆனால் 2.9.2017 முதல் 13.02.2018 வரை குரு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும்.

பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமையும், அலைச்சலும் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.

பெண்களுக்கு: செப்டம்பர் மாதம் முதல் குரு சாதகமாவதால் தடைகள் யாவும் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். மாமியார் மனம் விட்டுப் பேசுவார். நாத்தனாரின் தொந்தரவுகள் குறையும். சகோதர வகையில் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். சனியின் போக்கு சரியில்லாததால் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, வீண் கவலைகள் வந்து செல்லும்.

கீழ்வரும் கம்பராமாயணப்பாடலை ஸ்ரீஆஞ்சநேயர் படத்திற்கு முன்பு அமர்ந்து தினந்தோறும் ஒன்பது முறை படித்து தியானம் செய்யுங்கள்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக

ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற

அணங்கைகண்டு ; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான்

அவன் நம்மை அளித்து காப்பான்

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மகரம், கும்பம், மீனம்

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

 

 
4_3153703f.jpg
 
 
 

மகர ராசி வாசகர்களே

எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழுபவர்களே! உங்கள் ராசிக்கு சந்திரன் 10-வது வீட்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளை அரவணைத்துப்போவீர்கள். மகனுக்குத் தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.

18.12.2017 வரை உங்களின் ராசிநாதன் சனி பகவன் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பண வரவு உண்டாகும். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். 19.12.2017 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள் வீடு, மனை சேரும். நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். தனித்திருந்த தந்தையார் இனி உங்களுடன் சேர்ந்துகொள்வார். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால் எதிலும் அலட்சியமின்றி முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அடுத்தவர்களைத் தாக்கிப் பேசுவது வேண்டாம். கவுரவத்திற்கு ஆசைப்பட்டு ஆடம்பரச் செலவுகள் செய்துகொண்டிருக்க வேண்டாம்.

முக்கிய வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டங்களைக் கண்காணியுங்கள். ஆனால் 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு வக்கிர கதியிலும், அதிசாரத்திலும் லாப வீட்டில் வந்தமர்வதால் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். அண்ணன் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

26.7.2017 வரை கேது 2-லும், ராகு 8-லும் தொடர்வதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச் சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். 27.7.2017 முதல் ராசிக்குள்ளேயே கேதுவும், ராசிக்கு 7-ல் ராகுவும் அமர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும். ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர், உங்களை புகழ்வதைப் போல் பேசி உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

ஆனால் கேது ராசிக்குள் வருவதால் எதிலும் ஒரு சலிப்பு, பதற்றம், தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக்கூடும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக்கொள்ளாதீர்கள். அனுபவ மிகுந்த வேலையாட்களைச் சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர் களானாலும் கடன் தர வேண்டாம். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். மேலதிகாரிகளை அனுசரித்துப்போவது நல்லது.

பெண்களுக்கு: ஆகஸ்ட் மாதம் வரை குருவும், டிசமபர் 18 வரை சனியும் சாதகமாக இருப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. மாமனார், நாத்தனார் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் கணவர் வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டுவார். அவருக்கு முதுகு வலி, மூட்டு வலி வந்து செல்லும்.

ஸ்ரீ திருமங்ககையாழ்வார் அருளிய இப்பாடலை ஸ்ரீ பெருமாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள். வசதி,

வாய்ப்புகள் பெருகும்.

வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய

வாளரவி னனை மேவிச்

சங்கமா ரங்கைத் தடம லருந்திச்

சாம மாமேனி என் தலைவன்

அங்கமாறைந்து வேள்வி நால் வேத

மருங்கலை பயின்றெரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில்

மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே

 

கும்ப ராசி வாசகர்களே

உணர்வுபூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்களே! உங்கள் ராசிக்கு 9-வது வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பண வரவு உயரும். எதிர்ப்புக்கள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். எதிர்பார்த்த பணம் வரும். வருடம் பிறக்கும் போது செவ்வாய் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

18.12.2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். பண பலம் கூடும். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் புகழ், கவுரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். 19.12.2017 முதல் சனி லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், பண வரவு, வீடு, வாகன வசதி, வி.ஐ.பி.களின் அறிமுகம் எல்லாம் உண்டாகும். வீட்டில் நல்லது நடக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்தபந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு, 9-ல் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வருங்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாட்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் 10-ல் வந்தமர்வதால் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் தொடர்வதால் யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்கள் சில ஆலோசனைகள் கூறினாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகள் வந்துபோகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும். சேமிப்புகள் கரையும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும்.

ஆனால் 27.7.2017 வரை ராசிக்கு 12-ல் கேதுவும், 6-ல் ராகுவும் அமர்வதால் உங்களைக் கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வெளி வட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சுப செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். உத்யோகத்திலே பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

பெண்களுக்கு: இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் சாதகமாக இருப்பதனால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் வலிய வந்து சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மகளுடன் கருத்து மோதல் வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

ஸ்ரீ பேயாழ்வார் அருளிய இப்பாடலை ஸ்ரீ சிவபெருமானின் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள். புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று

 

மீன ராசி வாசகர்களே

வெறுப்பு விருப்பு இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர்களே! சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளைக் கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும்.

18.12.2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். ஆனால் 19.12.2017 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதனால் பண பலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடன் உதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் 13.02.2018 வரை குரு 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்து போகும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்சினைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம்.

திடீர்ப் பயணங்களும், அலைச்சல்களும் வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பி.களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு 9-ல் அமர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதிப்பணம் தந்து மீதிப் பணம் தேடினீர்களே! இனி அது கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

26.7.2017 வரை ராகு 6-ல் தொடர்வதால் உங்களைக் கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வெளி வட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முடிவடையும். 12-ம்

வீட்டில் கேது தொடர்வதால் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சில காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாருக்கும் ஃபைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம்.

27.7.2017 வரை கேது, லாப வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்று மொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும்.ராகு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும்போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுத் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவ;ம் மிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பெண்களுக்கு: ஜுலை 27-ம் தேதி முதல் கேது சாதகமாவதால் திடீர் யோகம், பண வரவு, அந்தஸ்து உயரும்.

நாத்தனார் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார். குழந்தை பாக்கியம் உண்டு. வேற்று மதத்தவர்களால் ஆதாயம் உண்டு. கணவர் மனம் விட்டுப் பேசுவார். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார். செப்டம்பர் மாதம் முதல் குரு மறைவதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவது நல்லது.

பாரதியார் அருளிய இப்பாடலை ஸ்ரீ முருகப் பெருமானின் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் 9 முறை படித்து தியானம் செய்யுங்கள்.

நன்மை கிட்டும்.

தோகைமேல் உலவும் கந்தன்

சுடர்க் கரத்திருக்கும் வெற்றி

வாகையே சூடும் வேலை

வணங்குவ தெமக்கு வேலை

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

எண்ணெய் வளம் ஏராளம்-ஆனால் உணவுக்கு அல்லாடும் மக்கள்

உலகில் மிக அதிக அளவில் எண்ணெய் வளம் கொண்ட வெனிசுவேலாவில், மக்கள் ரொட்டிக்கும் பாலுக்கும் வரிசையில் காத்திருக்கின்றனர். இதையடுத்து தலைநகரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

 
 

தமிழர்களின் வாழ்வியலை கொண்டாடுவதில் வெளிநாடுகளை பொறுத்தவரையில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. ஈழத்தமிழர்கள் முதல் பல்வேறு நாட்டின் அகதிகளுக்கும் மற்ற நாடுகள் குடியேற எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அகதிகளாக வெளியேறுபவர்களை தங்களது நாட்டில் குடியேற அழைப்பு விடுக்கிறது கனடா.

justin

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன விழாக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் அன்று வாழ்த்துகள் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே, இனி வரும் வருடங்களில் ஜனவரி மாதம் (2017ம் ஆண்டு முதல்) கனடாவில் 'தமிழ் மரபுத் திங்கள்' என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கான, மசோதா கனடா பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவு மூலம் நிறைவேறியது.

இந்நிலையில், ஜஸ்டின் ட்ருடே கூறிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

’உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களின் புத்தாண்டு தினத்தை வரவேற்கிறேன். இந்த புத்தாண்டில், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் கூடி கொண்டாடுவதோடு மட்டுமின்றி வரும் வருடம் அவர்களுக்கு சிறப்பாக அமைய கடவுள் வழி காட்டுவார்.

கனடா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் பல்வேறு இன,மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உள்ளது. இந்நிலையை ஏற்படுத்தியதில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது. அதற்காக அவர்களுக்கு நன்றி.

அரசின் சார்பாக ஒரு அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டை கொண்டாட கனடா அரசின் சார்பாக தமிழர்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று தன்னுடைய வாழ்த்தில் ஜஸ்டின் ட்ருடே தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

Statement by the Prime Minister of Canada for Puthandu

 
Ottawa, Ontario
April 12, 2017

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement for Puthandu:

“Today, Tamils in Canada and around the world will welcome the New Year, known as Puthandu.

“On this occasion, families and friends will come together to feast, celebrate, and visit holy sites in a spirit of hope and optimism for the year to come.

“This year, as we mark the 150th anniversary of Confederation, let us take the opportunity to honour the many cultures, traditions, and beliefs that make Canada such a wonderful place to live. Our country is stronger and richer because of the contributions of Tamil Canadians.

“On behalf of the Government of Canada, Sophie and I wish all those celebrating a peaceful, joyous and healthy New Year.

“Iniya Tamizh Puthandu Nalvazhthukkal.”

http://pm.gc.ca/eng

  • தொடங்கியவர்

இரவில் ஒளிரும் இந்தியா.. சென்னையை கண்டுபிடிங்க பாக்கலாம்..!!

 

மின் விளக்குகளால் ஒளிரும் இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா

அவ்வப்போது உலகின் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து நாசா வெளியிட்டு வருகிறது. உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக நாசா நேற்று வெளியிட்டது. இதில், மின் விளக்குகளால் மிளிரும் ஒளிமயமான இந்தியாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டில் இதே மாதிரியான புகைப்படம் வெளியானது. தற்போது உள்ள படம் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டை விட இந்தப் புகைப்படத்தில் இந்தியாவின் குடியேற்றப் பகுதிகள் அதிகரித்துள்ளதைக் காணமுடிகிறது. இந்தத் தோற்ற வேறுபாடுகள் இந்தியாவின் நகர்ப்புற முன்னேற்றத்தைக் குறிப்பதாகவே உள்ளது.

 

 

விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள்.. 'திக்திக்' மெக்சிகோ..!

 

மெக்சிகோவில் விமானத்தில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் வீசப்பட்ட சம்பவம் திகிலை கிளப்பியுள்ளது. அவர்கள் கொலை செய்யப்பட்டு கீழே  வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2_ok_11523.jpg

மெக்சிகோவின் சினாலாவா மாகாணத்தில் மூன்று பேரின் சடலங்கள் வானில் இருந்து விழுந்துள்ளது. அங்கிருந்த மருத்துவமனை மாடியில் ஒருவரின் சடலம் விழுந்தது. இதையடுத்து, மேலும் இரண்டு சடலங்கள் அருகில் இருந்த வீட்டு வாசலில் விழுந்துள்ளது. இச்சடலங்கள் விமானத்தில் இருந்து வீசப்பட்டுள்ளதாக அங்கிருந்த பொது மக்கள் கூறுகின்றனர். மேலும், வீசப்படுவதற்கு முன்னர் இவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழே வீசப்பட்டவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என மெக்சிகோ போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மூக்கின் மேல் பியர் கோப்பையினை தாங்கிய நாய் (வீடியோ இணைப்பு)

 

 

வீட்டில் வழக்கும் செல்லபிராணிகளில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விலங்காக நாய் உள்ளது யாவரும் அறிந்த விடயமாகும்.

3F35A58500000578-4408158-The_dog_loves_t

செல்லபிராணியான நாய்கள் வீட்டு எஜமான் கூறும் அனைத்தையும் செய்வதால் மனிதர்கள் மத்தியில் நாயுடனான நட்பு மிக நெருக்கமாக அமைந்துள்ளது.

3F35AB7500000578-4408158-The_adorable_cl

இதேபோன்று வெளிநாட்டு ஒன்றில் வீட்டில் வளர்க்கும் நாய் தன் எஜமான் இட்ட கட்டளையினை சரியாக கடைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவிவருகின்றது.

3F35A6E900000578-4408158-Beer_is_then_po

 

குறித்த வீடியோவில் அந்த நாய் தனது மூக்கின் மேல் பியர் கோப்பையினை தாங்கியுள்ளது. அந்நாயின் எஜமான் அக்கோப்பையிக்கு பியரினை ஊற்றுகின்றார்.

3F35A58500000578-4408158-Everyone_around

பியர் சிந்தாமல் அக்கோப்பையினை தாங்கி கொண்டிருந்த குறித்த நாய் ரசிகர்கள் மக்கள் மத்தியில் பிரசித்தியடைந்துள்ளது.

3F35A60F00000578-4408158-The_patient_poo

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஆணி கொண்ட உன் காயங்களை... அன்புடன் முத்தி செய்கின்றேன்! #GoodFriday

 
 

`செந்நீர் வேர்வை சொரிந்தவனே
புண்படக் கசையால் துடித்தவனே
முண்முடி சூடிய மன்னவனே
துன்பச்சிலுவை சுமந்தவனே
எமக்காய் இன்னுயிர் துறந்தவனே' 
- கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய தினங்களான பெரிய வியாழன், புனித வெள்ளி நாள்களில் தேவாலயங்களில் பாடப்படும் பாடல்களில் இதுவும் ஒன்று.  

புனித வெள்ளி

இயேசுகிறிஸ்து தம் வாழ்நாளில் சமுதாயத்தால் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு அமர்ந்து பலமுறை உணவு உண்டிருக்கிறார். அதேவேளையில் அவர் இறப்பதற்குமுன் தன்னுடைய சீடர்களோடு சேர்ந்து கடைசியாக இரவு உணவு உண்ட நாள் நினைவுகூரப்படுவது பெரிய வியாழன்றுதான். மேலும் இயேசு தன்னுடைய சீடர்களின் மதிப்புக்குரியவராக இருந்தாலும்கூட அடிமைகள் செய்யக்கூடிய பாதம் கழுவும் செயலையும் இந்தப் பெரிய வியாழனன்றுதான் செய்தார். அதாவது, ஒருவர் மற்றவர்க்குப் பணிவிடை செய்யக்கூடிய மனநிலையை தன்னுடைய சீடர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தச் செயலைச் செய்து காட்டியிருக்கிறார். 

அடுத்ததாக, பணி செய்வதே சீடர்களின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காக குருத்துவத்தையும் இதேநாளில்தான் ஏற்படுத்தினார். குருத்துவம் என்பது கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்யும் பொறுப்பைத் தரக்கூடிய அருட்சாதனம் என்று சொல்லப்படுகிறது.

புனித வெள்ளி

பெரிய வியாழனன்று இயேசுவின் பாஸ்கா விழா கொண்டாடப்படுவது வழக்கம். பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள்படும். `பாஸ்கா' என்ற கடத்தல் நிகழ்வின் மூலம் தீமையின் ஆதிக்கத்தில் இருந்து கடந்து சென்று நிலையான இறைவனைப் பற்றிக்கொண்டனர். முதல் ஏற்பாட்டில் பாவத்துக்குக் கழுவாயாக செம்மறியாடுகள் பலியிடப்பட்டன. புதிய ஏற்பாட்டில் பாவத்தைப்போக்கும் செம்மறியாக இயேசுவே பலியாகிறார். இயேசு தன்னை உடைத்து தனது உடலையும் ரத்தத்தையும் உணவாகக் கொடுக்கிறார். இயேசுவின் இந்த பாஸ்கா விழா நமது தன்னல நாட்டங்களில் இருந்து விடுபட்டு நம்மை மனத்துணிவுடனும் மனித மாண்புடனும் வாழ வழிவகுக்கிறது.

அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குருத்துவம். இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய குருத்துவத்தில் நாமும் பங்கெடுக்க விரும்பினால் அவரைப்போல நாமும் பிறர் நலன்களுக்காக நம்மையே பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். நாம் வாழும் காலம் குறுகியதென்றாலும் நீதியின் வழியில் பயணிக்க  வேண்டும் என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்படுகிறது.

மரணம் என்பது ஒரு முடிவல்ல; அதிலிருந்துதான் உலகிற்கான விடுதலையே தொடங்குகிறது. ஆம்... மரணத்தின் அர்த்தத்தையே மாற்றி எழுதியது இயேசுவின் மரணம் என்பது உலகறிந்த உண்மை. விவிலியத்தில் சொல்லப்பட்டபடி இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். புனித வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடையை திருப்பாடுகளில் வெள்ளி (Good Friday) என்றும் சொல்கிறார்கள். இயேசுகிறிஸ்து தான் அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச்சாவையும் நினைவுகூரும்விதத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் விழா இது. 

புனித வெள்ளி

கல்வாரி மலையில் இயேசு அனுபவித்த துன்பங்களைப்போலவே தேவாலயங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலில் வெட்ட வெளியில் சிலுவையைச் சுமந்து செல்வது கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் ஒன்று. மேலும், அப்போது பலர் உணவு உண்ணாமல் ஆலயங்களில் வழங்கப்படும் கஞ்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் ஒருவர் இறந்தால் எப்படி இருப்போமோ அதேபோல் அன்றையதினம் உணவு உண்ணாமல் எந்தவிதக் கொண்டாட்டமும் இல்லாமல் அதிர்ந்து பேசாமல் மௌனமாக இருப்பதுமுண்டு.

இயேசுகிறிஸ்து உயிர்நீத்த சிலுவை மரம் கிறிஸ்தவர்களுக்குத் தனி அடையாளமாகும். எனவே, புனித வெள்ளியன்று திருச்சிலுவையை வணங்கி மரியாதை செலுத்துவது வழக்கத்தில் உள்ளது. எரியும் மெழுகுவத்திகளுக்கு நடுவே பவனியாகக் கொண்டுவரப்படும் சிலுவையை மண்டியிட்டு முத்தமிடுவார்கள். அப்போது, `ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன், பாவத்தால் உம்மைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்' என்ற பாடல் பாடப்படும். அப்போது பலர் கண்ணீர் விட்டு அழுவார்கள். இந்நிகழ்வு முடிந்த அன்றைய நாளின் மறுநாள் அதாவது சனிக்கிழமை நள்ளிரவு வரை ஆலயங்களில் எந்தவித வழிபாடும் இருக்காது. துக்க வீடு போல காட்சியளிக்கும். சனிக்கிழமை இரவு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வு நடைபெறும். அதை ஈஸ்டர் பண்டிகை என வெகுவிமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வாய்க்கு ருசியான சாப்பாடு; வாசலுக்கே கொண்டுவரும் ரோபோக்கள்

நீங்கள் அடுத்தமுறை சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்தால் அது தானியங்கி ரோபோக்கள் மூலம் உங்கள் வீட்டு வாசலில் கொண்டுவந்து கொடுக்கப்படலாம்.

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்ப்ள் ரோபோ நிறுவனமும் இணைந்து இதை ஏற்கனவே செய்ய ஆரம்பித்துவிட்டன.

சான்பிரான்ஸிஸ்கோவின் சில பகுதிகளின் உணவுவிடுதிகளின் உணவை இவை விநியோகம் செய்கின்றன.

இந்த செயலியில் உணவுக்குப்பணம் செலுத்தினால் வாடிக்கையாளர் வீட்டு வாசலுக்கே உணவு வந்து சேரும்.

இந்த ரோபோக்கள் உணரிகள், கேமெரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும்.

வழியில் எதிர்ப்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியும் என்பதோடு அந்த தடைகளை தவிர்த்து சாதுரியமாக இவற்றால் பயணிக்கமுடியும்.

அதேசமயத்தில் இவற்றின் செயற்பாடுகளை தொடர்ந்து மனிதர்கள் கண்காணிப்பார்கள் என்பதால் இவை சிக்கலுக்கு உள்ளானால் உடனடியாக மனிதர்கள் உதவிக்கு வருவார்கள்.

தற்போது இந்த வசதி சான்பிரான்ஸிஸ்கோ நகரின் இரண்டு புறநகர்ப்பகுதிகளில் மட்டுமே செயற்படுத்தப்படுகிறது.

விரைவில் மளிகை உள்ளிட்ட பலவித பொருட்களையும் இந்த ரோபோக்கள் மூலம் வீட்டுக்கே அனுப்ப மார்ப்ள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • தொடங்கியவர்

 

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில்... பரதம் 5 ஆயிரம் என்ற பெயரில், கின்னஸ் உலக சாதனை நிகழ்வு நடைபெற்ற து. 5 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில், 30 திருக்குறள் பாடல்களில் ஓர் நாட்டிய உலக சாதனை படைத்தனர். நாட்டியப்பேரரசி பத்ம்பூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

vikatan

7 hours ago, நவீனன் said:

 

"Every child is a different kind of flower, and all together, they make this world a beautiful garden".

???

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p38a.jpg

டந்த சில வருடங்களாக பெசன்ட் நகரில் இருந்த சூர்யா - ஜோதிகா ஃபேமிலி, தி.நகரில் உள்ள அப்பா வீட்டுக்கே குடிவந்துவிட்டது. பல கோடி ரூபாய் செலவில் பழைய வீட்டுக்குப் பின்னாலேயே `லட்சுமி இல்லம்' என்ற பெயரில் புது வீடு கட்டி மொத்தக் குடும்பமும் அங்கேயே செட்டில் ஆகியிருக்கிறது. `தேவ், தியா ரெண்டு குட்டீஸும் தாத்தா-பாட்டியை ரொம்பவே மிஸ்பண்றாங்க' என்ற ஜோதிகாவின் எண்ணமே கூட்டுக் குடும்பத்துக்குக் காரணமாம். ஆனந்தம் விளையாடும் வீடு!


p38b.jpg

சிம்பு, அனிருத் இருவருக்குமே இந்த ஆண்டு கல்யாண ஆண்டு. சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் இருவருக்குமே வீட்டில் வேகவேகமாகப் பெண் பார்த்துவருகிறார்கள். `அக்டோபர் மாதத்துக்குள் அனிருத்துக்குத் திருமணம். சிம்புவுக்கும் விரைவில்' என்கிறது இருவரின் நட்பு வட்டங்கள். கால்கட்டு!


p38c.jpg

காதலித்தவரையே கைப்பிடித்திருக்கிறார் மல்யுத்த மங்கை சாக்‌ஷி மாலிக். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி, பள்ளிகால நண்பரும் மல்யுத்த வீரருமான சத்யவர்த்தை திருமணம் செய்திருக்கிறார். கடந்த வாரம் நடந்த திருமண விழாவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். ரெஸ்லிங்கை விட்றாதீங்க!


வ்வொரு வருஷமும் மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாளை, அவரது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து உற்சாகமாகக் கொண்டாடுவது விஜயகாந்த் ஸ்டைல். ஆனால், இந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் எந்தக் கொண்டாட்டமும் இல்லை. சண்முகபாண்டியனிடம் மட்டும் `நீ நினைச்ச மாதிரி பெரிய ஸ்டார் ஆகிடுவ. நானும் நீயும் சீக்கிரம் சேர்ந்து நடிக்கிறோம்' என வாழ்த்தியிருக்கிறார் கேப்டன். மிஸ் யூ கேப்டன்!


p38e.jpg

`100 MB' என்ற பெயரில் சொந்தமாக மொபைல் அப்ளிகேஷனைத் தொடங்கியிருக்கிறார் சச்சின். MB என்றால், `மாஸ்டர் பிளாஸ்டர்' என்று அர்த்தம். `என்னுடைய கிரிக்கெட் இன்னிங்ஸ் 24 ஆண்டுகள் நீடித்தது. இத்தனை ஆண்டுகள் சிறப்பாக விளையாட உதவியது ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். அவர்களுக்காகத்தான் நான் இப்போது டிஜிட்டல் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறேன். இந்த அப்ளிகேஷன் மூலம் ரசிகர்களுடன் நானே நேரடியாக உரையாடுவேன். பேட்டிங் டிப்ஸ் முதல் கிரிக்கெட்டில் நான் கற்ற அத்தனை விஷயங்கள் வரை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்போகிறேன்' என்று சொல்லியிருக்கிறார் சச்சின். இந்த அப்ளிகேஷனுக்காக, சொந்தமாகப் பாட்டுகூட பாடியிருக்கிறார் ரன் மெஷின். ஸ்வீட் சச்சின்!


p38d.jpg

 பாலிவுட் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இயக்குநர் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குநர் வாசன் பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். `மர்த் கோ தர்த் நஹி ஹோத்தா' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு நெகட்டிவ் ரோலாம். சூப்பர்ஜி... சூப்பர்ஜி!


p38f.jpg

ழுத்தாளர் ஜெயமோகன், இப்போது வாசகர் சந்திப்புகளில் பிஸி. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய வாசகர்களுக்காக நடத்தப்படும் இந்தச் சந்திப்புகளில் இலக்கியம் மட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார். ஆனால், இதில் பங்கேற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. கூட்டத்தில் பங்கேற்க பல விதிமுறைகள் வைத்திருக்கிறார். என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைப்பாரோ!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரஷ்யாவின் 'வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தந்தை' பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். இலக்குகள் மீது 'வெடிகுண்டுகளின் தாய்' ( Mother of all bombs) என்று அழைக்கப்படும் GBU-43 வெடிகுண்டை அமெரிக்கா வீசியது.  GBU-43 வெடிகுண்டுகளின் தாய் என்றால் 'father of all bombs 'எது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?. அப்படி ஒரு வெடிகுண்டும் இருக்கிறது. இது ரஷ்யா தயாரிப்பு. ராட்சத வடிவிலான பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டு இது.

BOMB_21491.jpg

சிறிய அணுகுண்டு வெடிப்புக்கு இணையான சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. கதீர்வீச்சு தாக்கம் மட்டும் இருக்காது. 
விமானத்தின் மூலம் வீசப்படும் சக்தி வாய்ந்த உயர் அழுத்த வெடி குண்டுடான  (ATBIP) இது  சுமார் 7,100 கிலோ எடை கொண்டது. இதில், 40 டன் வெடிபொருள்கள் நிரப்பலாம். கடந்த 2007-ம் ஆண்டு இந்த பிரமாண்ட வெடிகுண்டை ரஷ்யா பரிசோதித்தது. 2011ம் ஆண்டு தங்களிடம் இப்படி ஒரு ராட்சத குண்டு இருப்பதை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 

 

 

சென்னையில் 5 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை!

 

Bharath_1_22191.jpg

சென்னை பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடினர். கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பத்மபூஷன் விருது பெற்ற டாக்டர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக அரங்கேற்றப்பட்ட இந்த பரதநாட்டிய நடன நிகழ்வை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பூட்ஸ் அணிந்த மங்கோலியன் பெண் மம்மி தோண்டியெடுக்கப்பட்டுள்ளது

 

 

3F2F0D2100000578-0-image-a-1_1492000323962.jpg

1000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பூட்ஸ் அணிந்த மங்கோலியன் பெண் மம்மி தோண்டியெடுக்கப்பட்டுள்ளது

 

 

3F2F0D3200000578-0-image-m-6_1492001600760.jpg

http://www.dinakaran.com

3 minutes ago, நவீனன் said:

 

 

3F2F0D3200000578-0-image-m-6_1492001600760.jpg

The 1,500-year-old mummy is wearing what appears to be Adidas boots (snowboarding boots pictured)

Mongolian woman mummy buried a thousand a years ago wearing 'ADIDAS boots' :grin:

Read more: http://www.dailymail.co.uk/sciencetech/article-4405232/Mongolian-mummy-buried-Adidas-boots-1-100-years-ago.html#ixzz4eFmfOTK5 
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

On 9.4.2017 at 0:06 AM, நவீனன் said:

Bild könnte enthalten: Blume, Pflanze, Text und Natur

இந்த பூவுக்கு ஊரில் என்ன  பெயர் சொல்வார்கள்? யாரும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இது எங்கள் வீட்டில் இருந்தது. மிக நல்ல வாசனை வரும் இந்த பூவில்

செண்பகமலர் / செண்பகபூ

Chanel No. 5 perfume இதிலிருந்துதான் தயாரிக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923

 

இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.

 
 
 
 
இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923
 
இன்சுலின்  ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.

இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை மூன்று வழிகளில் குறைக்கிறது. (அ) இது குளுக்கோசை, கிளைக்கோசனாக மாற்றிக் கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்க உதவுகின்றது. (ஆ) திசுக்களில் குளுக்கோசு ஆக்சிகரணம் (oxydation) அடைய உதவுகின்றது. (இ) குளுக்கோசு கொழுப்பாக மாற்றப்பட்டு அடிபோசு திசுக்களில் சேமிக்கப்படுவதற்கு உதவுகின்றது. (ஈ) அமினோ அமிலங்கள் சிதைவுற்று நீர் மற்றும் காபனீரொட்சைட்டு ஆக மாறும் செயலின் வீதத்தை ஒழுங்குபடுத்துகிறது. (உ) மிதமான அளவில், கல்லீரலில் காபோவைதரேட்டு அல்லாத பொருளிலிருந்து குளுக்கோசு உற்பத்தியையும் (குளுக்கோ நியோஜெனிஸிஸ்) சீராகப் பராமரிக்கிறது. ஆகவே, இன்சுலின் இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவை குறைக்கிறது (ஹைபோகிளைசிமியா).

போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிடில் தசைகள், கல்லீரல் இவற்றால் குளுக்கோஸை, கிளைகோசனாக மாற்ற இயலாது. இதன் விளைவாக இரத்தத்தில் குளுக்கோசு அதிக அளவு சேர்வதால் இரத்தச் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. இந்த மிகைச் சர்க்கரை நிலைக்கு ஹைபர்கிளைசிமியா என்று பெயர். இதன் காரணமாக, அதிக அளவு குளுக்கோசு சிறுநீருடன் வெளியேற்றப்படும். இதுவே நீரிழிவு நோயாகும் (டயாபடீஸ் மெல்லிடஸ்).

நீரிழிவு நோயாளி ஒருவர், அதிக அளவு சிறுநீரை வெளியேற்றுவார், (பாலியூரியா), மேலும் அதிகமாக நீர் அருந்துவர், (பாலிடிப்ஸியா), எப்போதும் பசி ஏற்பட்டு அதிகமாக உணவு உட்கொள்வர் (பாலிபேஜியா). இன்சுலின் அளவு குறையும்போது கொழுப்புச் சிதைவு அதிகரித்து குளுக்கோசாக மாற்றப்படுகிறது. இதனால் இரத்தத்தில் மேலும் குளுக்கோசு அளவு அதிகமாகி, அதன் விளைவாக கீட்டோன் பொருட்கள் சேர்கின்றன. இந்நிலைக்கு கீட்டோஸிஸ் என்று பெயர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

விவகார ஆபரேஷனுக்கு வால்வரின்!
15a.jpg
பிலிப்பைன்சின் ஆன்டிபோலோவிலுள்ள டையோனிசியோ மருத்துவமனையில்தான் இந்த கூத்து. வால்வரின் கத்தியோடு நிற்பது ரசிகர்களின் பேனரில் அல்ல. மருத்துவமனையில்,  ‘அந்த’ இடத்தில் மேல்தோல் அகற்றும் ட்ரீட்மென்ட் விளம்பரத்திற்காம்! சீப் ரேட். 28 டாலர்கள்.

தெனாலி போலீஸ்!

போலீசுக்கு திருடன் பயப்படலாம். ஆனால், போலீசே தெனாலியானால் மக்கள் கதி? ஃப்ளோரிடாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போலீஸ் ஸ்டேஷனில் நடந்து சென்ற ஒரு போலீஸ் ஆபீசரை ஓவர்டேக் எடுத்து சுண்டெலி ஒன்று ஓட, அதைப் பார்த்த போலீஸ்காரர், ‘பச்சாவ்’ என அலறிக் குதித்து சுவரோடு சுண்ணாம்பாக ஒட்டிய சிசிடிவி காட்சி ஆல்வேர்ல்டு வைரல்!

ஏப்ரல் ஃபூல் யாரு?

ஏப்ரல் 1 அன்று, மும்பையின் மேற்கு முலுந்திலிருந்து வகோலா மார்க்கெட் போக ஓலாவில் டாக்சி புக் செய்தார் சுசில். ஆனால், டாக்சி டிரைவரின் போன் மக்கராக, அவர் ஆர்டரை கேன்சல் செய்தார். சுசில் வேறொரு டாக்சியை புக் செய்ய முயற்சித்தபோது ஓலா அனுப்பிய மெசேஜில் இருந்த ஷாக் பில் தொகை, ரூ.149 கோடி! மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்!

வயிற்றிலே பல்பு!

சவுதி அரேபியாவிலுள்ள ஒருவருக்கு வயிற்றில் பயங்கர வலி, காய்ச்சல். சாட்பின் ஜாலவி மருத்துவமனையில் அட்மிட் ஆனவருக்கு எடுத்த ஸ்கேனில் டாக்டர்களுக்கே ஷாக். வயிற்றிலிருந்தது நிஜ பல்பு. வயிற்றில் கத்தரிக்கோல், கத்தி ஓகே. பல்பு எப்படி? பல்பை 10 வயதில் விழுங்கினேன் என அசால்ட்டாக சொல்லியிருக்கிறார் 21 வயதான அந்த பேஷன்ட்!

சுறாவோடு கடலில் ஃபைட்!

ப்ளோரிடாவின் டெஸ்டினிலுள்ள பீச்சில், கெய்ட்லின் டைலர் தன் தோழிகளோடு கெட்ட ஆட்டம் போட்டபோது, 5 அடி சுறா, டைலரை டின்னராக்க பற்களால் கவ்வி இழுக்க... ம்ஹும். டைலர் அசரவேயில்லை. முகம்மது அலி பன்ச்சுகளை அதன் முகத்தில் விட்டு தப்பியிருக்கிறார். ஃபைட்டின் ரிசல்ட், டைலரின் பாடியில் 140 தையல்கள்!

kungumam

  • தொடங்கியவர்
15 hours ago, ஜீவன் சிவா said:

செண்பகமலர் / செண்பகபூ

Chanel No. 5 perfume இதிலிருந்துதான் தயாரிக்கின்றார்கள்.

நன்றி ஜீவன், உண்மையில் இந்த பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்றுவிட்டது. எங்கள் பழைய நாச்சார வீட்டு வாசலில் இந்த மரம் இருந்தது.

நிறைய பூக்கும். அதே நேரம் இந்த மரத்தில் கூரிய முள்ளும் இருக்கும். பல தடவை கையில் குத்தி இருக்கு.

 

15 hours ago, ஜீவன் சிவா said:

செண்பகமலர் / செண்பகபூ

Chanel No. 5 perfume இதிலிருந்துதான் தயாரிக்கின்றார்கள்.

Bildergebnis für செண்பகபூ

Ähnliches Foto

Ähnliches Foto

Bildergebnis für செண்பகபூ

Chanel No. 5 perfume  இதுவும் புதிய செய்தி. நன்றி

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Nacht, im Freien und Innenbereich

இந்த மாதிரி வீடுகளில் வாழ்வது சொர்கத்தில் வாழ்வது போன்றது....

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விளம்பரம் எடுத்து, அது சோஷியல் மீடியாக்களில் பரவி, உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் கிளம்ப, 24 மணி நேரத்தில் அந்த வீடியோவே தூக்கி அடிக்கப்பட்டதுதான் கடந்த வாரத்தின் உலக ட்ரெண்டிங். அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மிக முக்கியமானது `பிளாக் லைவ்ஸ் மேட்டர் மூவ்மென்ட்'. இனவெறிக்கு எதிரான இந்தப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிட்டு `ஜம்ப் இன்' என்ற தலைப்பில் விளம்பரம் தயாரித்து வெளியிட்டது பெப்சி. இளைஞர்கள் எல்லோரும் போராடிக்கொண்டிருக்க, மாடல் ஒருவர் போலீஸுக்கு பெப்சி கொடுத்து சிம்பிளாகப் போராட்டத்தை முடித்துவைப்பதுபோன்ற விளம்பரம்தான் அது. `மக்கள் யோசிக்கும் கோணத்தில் நாங்கள் யோசிக்கவில்லை' என்று விளம்பரத்தைத் தடைசெய்து மன்னிப்பும் கேட்டது பெப்சி. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று போராட்டங்களை இழிவுபடுத்தும் பெப்சி விளம்பரம் இந்தியாவிலும் வெளியானது; தமிழிலும் ஒளிபரப்பானது. ஆனால், இங்கே இதுபோன்று எந்தக் கண்டனக் குரல்களும் எழவில்லை.

p118a.jpg

twitter.com/deebanece: நம்ம சொந்தக்காரன் எல்லாரும் ஹோம் தியேட்டர் மாதிரி. நாம ஒரு விஷயத்தைச் சொன்னா, அதை அப்படியே நாலா பிரிச்சு நாலு பக்கங்களுக்கும் சொல்வாங்க.

twitter.com/TheJIGSAW: காலையில் எழுந்து தொலைக்காட்சியில் `பள்ளிகள் விடுமுறை' என்ற செய்தியைப் பார்த்ததும் மீண்டும் சந்தோஷத்தில் தூங்கச் செல்லும் குழந்தையின் மனநிலையில் தீபா.

twitter.com/drnathiyakrishn: கங்கை அமரன் எல்லாம் பாவம்யா... சும்மா இருந்த மனுஷனை MLA ஆக்குறேன்னு கூட்டிட்டு வந்து, April Fool பண்ணிவிட்டிருக்காங்க.

p118c.jpg

twitter.com/twittornewton: ஒரே நேரத்தில் முகநூலிலும் ட்விட்டரிலும் பதிவிடுவது ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் படத்தை ரிலீஸ் பண்ணுவதுபோல. சிலது அங்கே ஹிட்... சிலது இங்கே!

twitter.com/Nunmathiyon: எப்போதும்போல் இருங்கள், எதிரிகளைக் குழப்ப அதைவிடச் சிறந்த உபாயம் வேறொன்றும் இல்லை.

twitter.com/ikrthik: செத்த பிறகு உங்கள் மனதில் வாழ்ந்தென்ன பிரயோஜனம்? இப்போது இங்குதான் இருக்கிறேன்!

twitter.com/iamkarthikeyank: வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னை வந்தாலும் அந்தப் பிரச்னைகள் எல்லாம் வேற ஒருத்தனுக்கு வந்ததா நினைச்சு யோசிச்சா போதும், உடனே தீர்வு கிடைக்கும்.

p118b.jpg

twitter.com/surya_ofcl: ஒரு தவறு செய்துவிட்ட பிறகு உங்கள் மனசாட்சி உறுத்தவில்லை என்றால், உங்கள் மனசாட்சி தவறுகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

twitter.com/twittornewton: மகனைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் ரெண்டு பேருக்கும் வேற வேற பிராண்ட் ஜட்டி வாங்க வேண்டும் என்பது.

twitter.com/BoopatyMurugesh: தேர்தலுக்கு முன்னதாகவே 89 கோடி செலவில் மக்கள் நலத்திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்தார் டி.டி.வி. தினகரன். பொதுமக்கள் மகிழ்ச்சி - ஜெயா டிவி.

twitter.com/thalabathe: தோனி கிளவுஸ் மாட்டிக்கிட்டு கிரவுண்ட்ல இறங்குறது, எங்களுக்கு அழகர் ஆத்துல இறங்குற மாதிரி.

facebook.com/prabhu.ramasamy.73: காபி ஷாப்ல இருந்து கிளம்பும்போது கார் கண்ணாடியைத் தட்டி காவலாளி கேட்டார், `டீ குடிக்கக் காசு கிடைக்குமா?' என்று.

p118e.jpg

facebook.com/suguna.diwakar: கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக தமிழகத்தில் உள்ள இந்துத்துவவாதிகள் கொந்தளிக்கிறார்கள். வடநாட்டு இந்துத்துவவாதிகளோ, அதே கமலின் மகள் அக்‌ஷரா நடிக்கும் இந்திப் படம் இந்தியக் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாகக் கொந்தளிக்கிறார்கள். அதாவது, அக்‌ஷரா படத்தில் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண் கர்ப்பமாவதைப்போல் காட்டப்படுகிறதாம். அட, அதுதானே மகாபாரதம்! அது இந்தியக் கலாசாரத்துக்கு எதிரானது என்றால், இப்போது மகாபாரதத்தை இழிவுபடுத்துவது யார்?

facebook.com/Santhosh Narayanan:

நகரம்
என் தாத்தாவுக்கு ஒரு ஹவுஸ் இருந்தது.
என் அப்பாவுக்கு ஒரு ஹவுஸ் இருந்தது.
எனக்கு ஒரு ஹவுஸ் ஓனர் இருக்கிறார்.

facebook.com/Raajaa Chandrasekar: எங்கேயாவது எதையாவது வைத்து விடுகிறேன். இந்த முறை என்னை!

p118d.jpg

கருத்தா பேசுவாரு!

ட்விட்டரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்புகொள்ளும் கலகல ஐடி roflmaxx. சொந்தப் பெயர் வினோத். பார்க்க ‘பேங்க் ஆபீஸராட்டம் இருப்பார். வேலையும் அதுதான்' என்கிறார்கள் அவரது நண்பர்கள். ‘சொந்த ஊர் நாகர்கோவில்தானே?' என்றால், ‘ல்ல... நாரோயிலு’ என்பார். டாப்பிகல் விஷயங்களில் தர லோக்கலாக எகிறியடிப்பார். இவர் ட்வீட்களில் எள்ளலோடு, சமூகக் கண்ணோட்டமும் இருக்கும். நீங்க விளையாடுங்க ப்ரோ!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“வரலாற்றின் வடு... உலக துயரம்!” டைட்டானிக் விபத்தில் மூழ்கிய தினம்

 
 

டைட்டானிக்

'ஒரு மனிதன் இறப்பதற்குள் பத்தாயிரம் மைல் பயணம் செய்திருக்க வேண்டும்' என்பது புகழ்மிக்க பழமொழி. பல நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கும், புதிய நாகரிகங்கள் தோன்றியதற்கும் பயணங்களே முக்கிய காரணமாக அமைந்தன. ஆனால், வரலாற்றின் திசையை மாற்றிய பல பயணங்களில் இழப்பு என்பதும் தவிர்க்கமுடியாதது. இன்று வரை உலகில், பயணங்களினால் எத்தனையோ விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், உலகம் காலம் கடந்தும் நினைவுகளில் வைத்துக்கொள்ளும் சில விபத்துகளில் முக்கியமானது 'டைட்டானிக் கப்பல் விபத்து'. டைட்டானிக் கப்பல் விபத்துக்கும் இன்றைய தினத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? 1912-ம் ஆண்டு இதே தினத்தில் தான் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்துபோயினர். இதனால், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 நாளை டைட்டானிக் நினைவு தினமாக உலகம் முழுவதும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை தொடர்ந்தது டைட்டானிக். இங்கிலாந்தின் சதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து... ஃபிரான்ஸ், அயர்லாந்து வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதுதான் அதன் இலக்கு. பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே அதாவது ஏப்ரல் 14-ம் நாள் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது கப்பல். அதனால் ஏற்பட்ட விரிசல் வழியாக கப்பலின் உள்ளே தண்ணீர் புக ஆரம்பித்தது. ஏழரை மில்லயன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு 46,000 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள சொகுசு கப்பல் சுமார் 2,200 க்கும் அதிகமான பயணிகளுடன் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, கடலில் தனக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல்களிடம் உதவி கோரியது. அந்த சமயத்தில் சுமார் 93 கடல்மைல் தொலைவில் இருந்த ஆர்.எம்.எஸ். கார்பெத்தியா உதவிக்கு வருவதாக அறிவித்தது. சரியாக ஏப்ரல் 15-ம் தேதி அதிகாலை 4.10-க்கு அந்த கப்பல் உதவிக்கு வரும்போது டைட்டானிக் கப்பல் 3,700 மீட்டர் ஆழத்தில் மூழ்கிவிட்டது.

டைட்டானிக்

கப்பல் மோதிய பாறை :

சமீபத்தில் லண்டன் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரண்ட் பிக் என்பவர் டைட்டானிக் கப்பல் மோதிய பாறையைப் பற்றி ஆராய்ச்சிகள் பல செய்து சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில், 'டைட்டானிக் கப்பல் மோதிய பாறையின் வயது சுமாராக ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலானது. இந்த பாறை தென்மேற்கு கிரின்லாந்தில் இருந்து தொடங்குகிறது. கப்பல் மோதும் போது பாறை 1.5 எட்வர்ட் ஜான் ஸ்மித்மில்லியன் டன் எடையும், 400 அடி உயரம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால், இன்று அதன் எடை 75 மில்லியன் டன்கள், 1,500 அடி உயரமாகவும் இருக்கிறது. கப்பல் மூழ்கிய 1912-ம் ஆண்டு இந்தப் பகுதியில் நிறைய பனிப்பாறைகள் இருந்துள்ளன. அதன் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்றன. அப்பனிப் பாறைகள் ஒன்றோடு ஒன்று கலந்துதான் இன்று இந்த அளவுக்குப் பெரியதாக மாறியுள்ளது' என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கப்பலின் கேப்டன் :

டைட்டானிக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் அனுபவம் மிக்கவராக இருந்தவர். கப்பல் மூழ்கும் போது செய்தி அறையில் மற்ற கப்பல்களிடம் உதவி கேட்பதற்காகவும், கப்பலை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்றும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தார் மேலும், தண்ணீரில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற கடலில் குதித்தார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. கூடவே, 'கப்பல் விபத்துக்குள்ளாக இவரின் அதீத ஆர்வக்கோளாறுதான் காரணம். கடைசி நேரத்தில் மாலுமிகளின் பேச்சை காதில் வாங்கி கொள்ளாததும் முக்கிய காரணம்' என்று இவர் மீதான எதிர் மறை கருத்துகளும் இருக்கின்றன. ஆனால், இந்த செய்தியை மறுத்து வருகிறது இங்கிலாந்து. கேப்டன் சிறப்பானவர். கடைசி நேரத்தில் கப்பலை மீட்க பெரும்பாடுபட்டார் என சொல்லி கேப்டனுக்கு சிலை வைத்து கௌரவப்படுத்தியுள்ளது இங்கிலாந்து அரசு. 

விபத்துக்கான காரணம் :

'கப்பல் சரியான காலநிலையில் தன் பயணத்தைத் தொடங்கவில்லை என்றும், கேப்டனின் அதீத ஆர்வக் கோளாறின் காரணமாகவே கப்பல் பனிப்பாறையில் மோதியது' என்றும் பலதரப்பட்ட மக்கள் காரணம் சொல்லி வந்தனர். ஆனால், உண்மையில் விபத்துக்கான காரணம் என்னவென்று இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெற்றுதான் வருகின்றன. செனான் மொலாணி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டானிக் கப்பலைப் பற்றி, ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். கப்பல் கட்டுமானப் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், பயணத்தைத் தொடங்கத் தயாராக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், விபத்து ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கியபோது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தும், பலரைச் சந்தித்தும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். ஆராய்ச்சியின் முடிவில், 'கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு... கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம்' என்று குறிப்பிட்டு இருந்தார். டைட்டானிக் கப்பல் குறித்த அறிக்கையில், ‘கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே கப்பலின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தப் பகுதியானது அதிக வெப்பத்தினால் 75 சதவிகிதத்துக்கும் மேல் பலவீனமாக இருந்துள்ளது.

டைட்டானிக்

விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில்... கப்பல் இரண்டாக உடைந்த இடத்துக்கு அருகில் மிகப் பெரிய அளவில் கறுப்பு நிற அடையாளங்கள் இருந்துள்ளன. இந்த அடையாளங்கள்... கப்பல் நீரில் மூழ்கும்போது ஏற்பட்ட தீ விபத்தினால் உருவானது கிடையாது. வாணிப நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட இந்தக் கப்பலில் கறுமை நிற அடையாளம் பதிந்துள்ள அந்த இடத்தில் எரிபொருட்கள் ஏதும் வைக்கப்படவில்லை. அப்படியிருக்க அந்த இடத்தில் இப்படி ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஏற்பட்ட தீ விபத்தால்தான் இந்தப் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் பகுதி இரண்டாக உடைந்து மிகப்பெரிய அழிவினை உண்டாக்கியிருக்கிறது. இதுதவிர, இப்படி ஒரு தீ விபத்து ஏற்பட்டதை அந்தக் கப்பலின் உரிமையாளர் பயணிகளிடத்தில் மறைத்துள்ளார். காரணம், சொன்ன நேரத்தில் அந்தக் கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதாலும், ஒருவேளை... இதுபற்றி பயணிகளுக்குத் தெரியவந்தால், இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவான அந்தக் கப்பலில் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதாலும், அதனால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதாலுமே அவர், இந்த தீ விபத்தைப் பயணிகளிடமிருந்து மறைத்திருக்க வேண்டும்’ என அதில் தெரிவித்துள்ளார். 

இந்தக் கோர விபத்துக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், வரலாற்றின் எந்த வருடம் சென்று திரும்பி பார்த்தாலும் டைட்டானிக் விபத்து என்றுமே அழியாத வடுதான்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு ஐஸ்கிரீமை ஐந்து லட்ச ரூபாய்க்கு வாங்கிய தலைவர்!

 
 

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன், கட்சிப் பொதுக்கூட்ட நிதிக்காக 7.5 லட்ச ரூபாக்கு ஐஸ்கிரீம் விற்றுள்ளார்.

ராமாராவ்

 

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பொதுக்குழு மாநாட்டுக்காக, கட்சித் தொண்டர்கள் அனைவரும் கூலிவேலை செய்து, நிதி திரட்ட வேண்டும் என கூறியிருந்தார். கட்சி நிதிக்காக தானே இரண்டு நாள்கள் கூலிவேலை செய்யப்போவதாக அறிவித்திருந்தார் சந்திரசேகர ராவ்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது மகனும், தொழில்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் ‘கூலி’ வேலையாக ஐஸ்கிரீம் விற்றுள்ளார். ஒரு மணி நேரத்தில் 7.5 லட்ச ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்று, கட்சிக்கு நிதியளித்துள்ளார் ராமாராவ் என்பதே இன்றைய தெலுங்கானா ஹிட்.

ஹைதராபாத்-நாக்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஐஸ்கிரீம் கடையில் நுழைந்த தெலுங்கானா தொழில்நுட்ப அமைச்சர், உடனடியாக வேலைக்குச் சேர்ந்துவிட்டார். ஒரு மணி நேரத்திலேயே 7.5 லட்ச ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்று, கட்சிக்கு நிதியளித்தார். இதில், கட்சியின் மூத்த தலைவரான மல்லா ரெட்டி மட்டும், ஒரு ஐஸ்கிரீமுக்கு ஐந்து லட்சம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாயும் காளைக்கு முன் பயமறியா சிறுமி... வெடித்தது புதிய சர்ச்சை!

 

நியூயார்க் நகரில் வால்ஸ்ட்ரீட் தெருவில் பாயும் காளை சிலைக்கு எதிராக நிறுவப்பட்டுள்ள சிறுமி சிலையை உடனடியாக அகற்ற வேண்டுமென காளை சிலை வடிவமைப்பாளர்  Arturo Di Modica கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வால் ஸ்ட்ரீட் தெருவில் உள்ள பயமறியா சிறுமி சிலை

பங்குச்சந்தை வர்த்தகத்தில் இரு குறியீடுகள் முக்கியமானவை. ஒன்று பாயும் காளை; இன்னொன்று கரடி. பங்குச்சந்தையில்நல்ல நிலை காணப்படுகிறது. பங்குகளின் விலை உயரத் தொடங்கி, பங்கு வர்த்தகத்தில் முதலீடு பெருகும் போது காளையின் பிடியில் சந்தை இருக்கிறது என்று அர்த்தம். மாறாக பங்குகளின் விலை சரியத் தொடங்கினால் பங்குச் சந்தை கரடியின் கையில் இருப்பதாக அர்த்தம். பங்குச் சந்தை கரடிப் பிடியில் இருக்கும் போது, விற்பவர்கள் அதிகம் இருப்பார்கள். முதலீடு செய்பவர்கள் குறைந்துவிடுவார்கள். அதனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 'காளை' நல்லது. 

வால்ஸ்ட்ரீட் தெருவில்தான் உலகிலேயே மிகப் பெரிய பங்குச்சந்தையான நியூயார்க் நகர பங்குச் சந்தை உள்ளது. இந்தத் தெருவில்  பாயும் காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டுவாக்கில் பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நெருக்கடியில் இருந்து பங்குச்சந்தை மீண்டு வரவேண்டும் என்பதற்காக  காளையின் சிலை நிறுவப்பட்டது. அரை டன் கொண்ட வெண்கலச்சிலை இது. Arturo Di Modica என்பவர் இதனை வடிவமைத்தார். இதற்கான காபிரைட் உரிமையும் இவரிடம்தான் உள்ளது

பாயும் காளை சிலை முன்பாக பயமறிய சிறுமி

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 7ம் தேதி  காளைச் சிலைக்கு எதிர்ப்புறமாக சிறுமி சிலை ஒன்றும் நிறுவப்பட்டது. கைகளை தன் இடுப்பில் ஊன்றிக்கொண்டு துணிச்சலாக நிற்பது போல, சிறுமி சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. 'பயமறியா சிறுமி' என்பது இந்தச் சிலையின் பெயர். பாஸ்டன் நகரைச் சேர்ந்த State Street Global Advisors என்ற நிறுவனம் சிறுமி சிலையை நிறுவியது. கார்ப்பரேட் நிறுவனங்களில் பெண்களின் தலைமைப் பண்பை உலகுக்கு உணர்த்துவதே சிறுமி சிலை அமைக்கப்பட்டதன் நோக்கம். 

வால்ஸ்ட்ரீட் தெருவுக்கு வருபவர்கள் முன்பு, காளை சிலையின் அருகில் நின்று படம் எடுத்துக்கொள்வார்கள். செல்ஃபி எடுப்பார்கள். சிறுமி சிலை நிறுவப்பட்டதில் இருந்து காளை சிலைக்கு மவுசு குறைந்தது. சிறுமி சிலைக்கு மவுசு அதிகரித்தது. குறிப்பாக பெண்கள் சிறுமி சிலையைக் கொண்டாடினார். இந்தச் சிலையைப் பார்க்கும் போது தங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிப்பதாக பெண்கள் தெரிவித்தனர். எல்லோரும் சிறுமி சிலையைக் கொண்டாட,  காளைச் சிலையைக் கண்டுகொள்வார் குறைந்தனர். 

வால்ஸ்ட்ரீட் தெருவில் உள்ள பயமறியா சிறுமி சிலை

இதனால், கோபமடைந்த காளை சிலையை வடிவமைத்த, Arturo Di Modica  சிறுமி சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்த போது, நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வகையில் பாயும் காளையை வடிவமைத்தேன். இப்போது பாயும் காளையைத் தாக்குவது போல சிறுமியின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாயும் காளையை மனதில் கொண்டுதான் சிறுமி சிலை உருவாக்கப்பட்டுள்ளது'' என வேதனைப்பட்டுள்ளார். 

ஆனால், நியூயார்க் நகர மேயர் Bill de Blasio சிறுமி சிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.' பெண்களைப் பிடிக்காதவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகலாம்... சிறுமி சிலையை ஏன் அகற்ற வேண்டும் 'என அவர் கூறியுள்ளார். முதலில், சிறுமி சிலைக்கு ஒரு வாரகாலம்தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  பெரும்வரவேற்பு கிடைத்ததையடுத்து 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வரை வால்ஸ்ட்ரீட் தெருவில் சிறுமி சிலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

விவகாரத்தை சுமுகமாக முடித்து வைக்க வால்ஸ்ட்ரீட் தெருவின் State Street Global  அமைப்பு நடவடிக்கை எடுத்துவருகிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சனிக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்: நாசா கண்டுபிடிப்பு

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக,, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று வானியலாளர்கள் அறிஉவித்துள்ளனர்.
தனது பதின்மூன்று ஆண்டு பயணத்தின் இறுதி நிலையில் இருக்கும் கசினி என்கிற நாசாவின் விண்ணோடம், இந்த சனிக்கிரகத்து நிலவின் மேற்பரப்பிலிருந்து பீறிட்டு அடிக்கும் தண்ணீரை கண்டறிந்துள்ளது.
அதனடிப்படையில் உயிர்கள் வாழ ஏதுவான சூழல் அங்கு நிலவக்கூடும் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: காற்று உரமான கதை

 

 
 
Desktop_3153413f.jpg
 
 
 

எந்த ஒரு பொருளும் மலிவானால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது மதிப்பை இழந்து விடும். ‘கத்தரிக்காய் மலிந்தால் கடைக்கு வரும்’என்பது கிராமத்துப் பழமொழி. அளவுக்கு அதிகமாக ஒரு பொருள் நிரம்பி வழிந்தால் அதற்கு மதிப்பு இருக்காது. எளிதாகக் கிடைக்கும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். ஆனால், ஒரு வேதிப்பொருள் நாம் திரும்பிய பக்கமெல்லாம் நிரம்பியிருக்கிறது. ஆனால், மதிப்பு குறையவில்லை. என்ன காரணம்?

நம்மைச் சுற்றியிருக்கும் காற்றில் நைட்ரஜன் பங்குதான் அதிகம். 78 சதவீதம். காற்று சுவாசத்திற்குப் பயன்படுவதில்லை. ஆனாலும், அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நைட்ரஜனை தேடித் தேடி அலைகிறோம். ஏன், எதற்கு, எப்படி?

தேவையை வைத்துப் பார்க்கும்போது, தங்கத்தைவிடவும் வைரம், பிளாட்டினத்தைவிடவும் நைட்ரஜன் மதிப்புமிக்கது. அவசியமானது.

நமக்கு புரோட்டீன் சத்து தேவை. இந்த புரோட்டீன் மூலக்கூறுகளில் பெருமளவில் இருப்பது நைட்ரஜன்தான். எனவே நைட்ரஜன் இல்லாமல் புரோட்டீன் இல்லை. புரோட்டீன் இல்லாமல் நாம் இல்லை. இப்போது நைட்ரஜன் மகத்துவம் தெரிந்துவிட்டதா? சரி, விஷயத்துக்கு வருவோம்.

நமக்குத் தேவையான புரோட்டீன் சத்துப் பொருளைத் தாவரங்கள் நமக்குத் தயாரித்துக் கொடுக்கின்றன. புரோட்டீன் மூலக்கூறுகள் உருவாக வேண்டுமானால் அதற்கு நைட்ரஜன் தேவை. அப்படியென்றால் தாவரங்கள் புரோட்டீன் தயாரிப்பதற்குத் தேவையான நைட்ரஜனை எங்கிருந்து எடுத்துக்கொள்கின்றன? விஷயம் இதுதான். காற்றில்தான் எவ்வளவோ நைட்ரஜன் இருக்கிறதே, அந்த நைட்ரஜனை எடுத்துக்கொண்டு புரோட்டீனைத் தயாரிக்க வேண்டியதுதானே! இதில் என்ன கஷ்டம் என்றுதானே கேட்கிறீர்கள்.

அதுதான் முடியாது. ஏனெனில், நைட்ரஜன் மற்ற தனிமங்களோடு வினைபுரியும் சக்தி மிகவும் குறைவு. காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு தாவரங்கள் பச்சையம் தயாரிப்பது போல நைட்ரஜனை எடுத்துக்கொண்டு புரோட்டீன் தயாரித்துவிட முடியாது. வெளிக்காற்றில் அளவில்லாமல் இருக்கும் நைட்ரஜனால் தாவரங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், தாவரங்கள் உயிர் வாழ நைட்ரஜன் சேமிக்கப்பட வேண்டுமே, என்ன செய்வது.

தாவரங்கள் வாழ்வது மண்ணை நம்பித்தான். மண்ணிலிருக்கும் நைட்ரஜன் சேமிப்பை நம்பித்தான். மண்ணில் உள்ள நைட்ரஜன் சேமிப்பு என்பதும் போதுமானது இல்லையே. மண்ணில் வளரும் பயிர்களும் தாவரங்களும் நைட்ரஜனை எடுத்துக்கொண்டே இருப்பதால், விரைவில் மண்ணில் உள்ள நைட்ரஜன் சத்து தீர்ந்து போய்விடும். அப்படியென்றால் நைட்ரஜன் வளத்துக்கு என்னதான் செய்வது?

100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கவலை தோன்றிவிட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி சர். வில்லியம் குரூக்ஸ், “நைட்ரஜன் சத்து தீர்ந்துகொண்டே போவதை உலகம் எச்சரிக்கையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

நைட்ரஜன் வேட்டை தொடங்கியது. தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ஓர் அழகிய குடியரசு நாடு சிலி. பசிபிக் பெருங்கடலின் 6,000 கிலோ மீட்டர் நீள கடற்கரையைக் கொண்ட நாடு. இந்த நாட்டில்தான் அடகாமா பாலைவனம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த அடகாமா பாலைவனம் தன்னுள் அற்புதமான பொக்கிஷத்தைப் புதைத்து வைத்திருப்பதை அப்போது கண்டுபிடித்திருந்தார்கள். ஆம், சோடியம் நைட்ரேட் படிவுகள் இந்தப் பாலைவனம் முழுவதும் மெல்லிய அடுக்காகப் பரவியிருந்தன.

பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன், உரமாக இந்தப் பாலைவன மணலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பல நாடுகளும் திட்டமிட்டன. கப்பல் கப்பலாக அடகாமா பாலைவன மணலை அள்ளிச் சென்றார்கள். அடகாமா பாலைவனத்தில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுத் தீவிரமாக வேலைகள் நடந்தன.

ஆனால், இந்தப் பாலைவன மணலும் சில வருடங்களில் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பெருங்கவலை எல்லோரையும் வருத்தியது. அதேசமயம் இந்தக் கவலை நீண்ட காலம் நிலைக்கவில்லை. எப்படியென்று கேட்கிறீர்களா? அறிவியல்தான் காரணம்.

எந்தத் தனிமத்துடனும் வினைபுரிய மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த நைட்ரஜனை ஒரு வழிக்குக் கொண்டுவந்தார், ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஃபிரிட்ஸ்ஹாபர்.

நைட்ரஜனுடன் ஹைட்ரஜனையும் சேர்த்து அம்மோனியாவாக்கும் வித்தையைக் கண்டுபிடித்தார் வேதியியல் அறிஞர் ஃபிரிட்ஸ்ஹாபர் (இதற்காக1918-ம் ஆண்டு இவர் நோபல் பரிசு பெற்றார்). இன்றைக்கு விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் அம்மோனியா உரங்கள் இப்படிக் காற்றைக் கரைத்துக் கண்டு பிடிக்கப்பட்டவைதான்.

ஒரு வேளை அம்மோனியா கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், அடகாமா பாலைவனம் ‘சதுர அடி’கணக்கில் என்றைக்கோ விலை போயிருக்கும்.

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.