Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தெரியும், ஸ்விட்ச் ஷாட் தெரியுமா?

 
 

கிரிக்கெட் விளையாட்டை மேலும் சுவாரஸ்யமாக்குவது, பேட்ஸ்மேன்கள் புதிது புதிதாய் கண்டுபிடித்து விளையாடும் ஹெலிகாப்டர் ஷாட், ஸ்விட்ச் ஷாட் போன்ற  வித்தியாசமான ஷாட்கள்தான். அப்படி கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றிய ஷாட்களில் சில...

ஹெலிகாப்டர் ஷாட் : 

தோனி ஹெலிகாப்டர் ஷாட்


‘இறுக்கிப் பிடி, முறுக்கி சுத்தி அடி...’ - இதுதான் ஹெலிகாப்டர் ஷாட்டின் சாராம்சம். வலிமையான மணிக்கட்டுகள், மட்டையை சுழற்றும் வேகம், உடல் வலு ஆகிய மூன்றும் இருந்தால் ஹெலிகாப்டரை செமையாக செலுத்தலாம். கடைசி ஓவர்களில் வீசப்படும் யாக்கர்களை சமாளிக்கவே பிரத்யேகமாக கையாளப்படும் ஷாட் இது. இந்த ஷாட்டை நிறைய வீரர்கள் ஆட முயற்சித்தும் தோனியின் அளவு யாராலும் ஆட முடியவில்லை. இதற்காகவே நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிக்கலாம்.


அப்பர் கட் : 

சச்சின் அப்பர் கட்


பவுன்ஸாகி தலைக்கு மேல் வரும் பந்தை அதன் போக்கிலேயே பவுண்டரிக்கு விரட்டிவிடும் ஷாட்டின் பெயர்தான் அப்பர் கட். அப்பர் கட் என்றவுடன் நம் மூளையில் உடனே உதிக்கும் பெயர் வீரேந்திர சேவாக். ஆனால், இந்த ஷாட்டைக் கண்டுபிடித்ததோ அவரின் ஆஸ்தான ஓப்பனிங் பார்ட்னர் சச்சின் டெண்டுல்கர். சச்சினிடம் பார்த்து அதை ஆட கற்றுக்கொண்ட சேவாக், பவுன்ஸர் பந்துகள் வந்தாலே பறக்கவிடுவார். சேவாக் சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவாப்டி...


ரிவர்ஸ் ஸ்வீப்

மேக்ஸ்வெல் ரிவர்ஸ் ஸ்வீப்


சுழற்பந்துகளை மடக்கி அடிக்கும் ஸ்வீப் ஷாட்களின் ரிவர்ஸ் வெர்ஷனே இந்த ரிவர்ஸ் ஸ்வீப். ஏலியன் ஏபிடி வில்லியர்ஸும், மேக்ஸ் வெல்லும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதில் கில்லாடிகள். குறிப்பாக, ஆஃப் சைடில் ஃபீல்டர்கள் வட்டத்திற்குள்ளே நிற்கையில், கையில் சுழற்பந்து மட்டும் கிடைத்தால், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் இருவரும். ஆனாலும், இது ரொம்பவே ரிஸ்க்கான ஷாட். கொஞ்சம் தடுமாறினாலும் பாயின்ட்டிலோ, கவரிலோ கேட்ச்சைக் கொடுத்து பெவிலியனுக்கு கிளம்ப வேண்டியதுதான். ஆனால், வேகப்பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய பெருமை இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனையே சேரும்.

 
ஸ்விட்ச் ஹிட்

வார்னர் ஸ்விட்ச் ஹிட்


கிட்டத்தட்ட இதுவும் ரிவர்ஸ் ஸ்வீப்பை போலத்தான். பவுலர் வீசிய பந்து பாதி பிட்ச்சைக் கடக்கையில் வழக்கமான ஸ்டேன்ஸில் இருந்து மாறி, பந்தை தூக்கி அடித்தால் சூப்பரான ஸ்விட்ச் ஹிட் ரெடி. இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனால் பிரபலமாக்கபட்ட இந்த ஷாட்டைத்தான் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது ஆடி எதிரணியினரைக் கலங்கடித்து வருகிறார்.

தில் ஸ்கூப் :

தில்ஷன் தில் ஸ்கூப்


ஆரம்பத்தில் ‘ராம்ப் ஷாட்' என அழைக்கப்பட்ட இது, திலகரத்னே தில்ஷனால் பிரபலமாகி `தில் ஸ்கூப்' ஆனது. அதாவது, குட் அல்லது கொஞ்சம் ஷார்ட் லெங்த்தில் வரும் பந்தை, அப்படியே மட்டையில் வாங்கி கீப்பரின் தலைக்கு மேல் பவுண்டரிக்கு தள்ளிவிடுவது. நம் ஊர் ரோகித் சர்மா, நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரும் இந்த ஷாட்டை செமையாக ஆடக்கூடியவர்கள்.

பேடல் ஸ்வீப் : 

பேடல் ஸ்வீப்


ஷேன் வார்னேவை சமாளிக்க சச்சின் டெண்டுல்கர் கையிலெடுத்த யுக்தி இது. தற்போது, பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இந்த ஷாட்டை ஆடிவருகிறார்கள். நம் ஊரில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக இந்த ஷாட்டை கச்சிதமாக ஆடும் வீரர் கெளதம் கம்பீர். 

இதேபோல் ஸ்கூப்பிங் ஸ்லாட், லேப் ஷாட் என நிறைய ஷாட்கள் இருக்கிறது. அவைகளெல்லாம் இதுவரை ஒரேயொரு தடவை கிரவுண்டில் சோதனை செய்யப்பட்டதோடு சரி. இன்னும் பல ஷாட்களுக்கு பெயரே வைக்கலை! குறிப்பாக ஏபிடி வில்லியர்ஸ், இயான் மோர்கன் போன்றோர் ஆடும் ஷாட்களுக்கு...

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 

லிட்டில் இளவரவசனைத் தேடிச்செல்லும் சிறுமியின் பயணம் #TheLittlePrince

 

 

The Little Prince - தி லிட்டில் பிரின்ஸ் 1943-ம் ஆண்டு வெளியான பிரெஞ்சு குறுநாவல்.  Antoine de Saint-Exupéry எழுதிய இந்தப் புனைவு 300 மொழிகளில் வெளியாகி, 140 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளது. உலகிலேயே அதிகமாக அச்சேறிய நூல்களில் மூன்றாவது இடத்தைப் பெற்ற புத்தகம். விமானியான தெகுபெறி, இரண்டாம் உலகப் போரின்போது சஹாரா பாலைவனத்தில் சிக்கிக்கொண்டார். அந்தத் தனிமையில் அவர் மனம் உணர்ந்த விஷயங்கள் அடிப்படையில் எழுதிய நூல். பல்வேறு தொன்ம அடையாளங்களின் மூலம் மனித வாழ்வின் புதிர்களை எளிமையான தத்துவ பாணியில் சித்தரிக்கும் கதை.

இந்த நூலின் அடிப்படையில் பல தொலைக்காட்சி தொடர்களும் திரைப்படங்களும் உருவாகியிருக்கின்றன. 2015-ம் ஆண்டு வெளியான இந்த பிரெஞ்சு திரைப்படமும் அதில் ஒன்று. மூல வடிவத்தோடு இணைந்து சில சுவாரசியமான சேர்க்கைகளோடு இதன் திரைக்கதை அமைந்துள்ளது.

லிட்டில்


நகரில் உள்ள சிறந்த பள்ளியில் தன் மகளை எப்படியாவது சேர்த்துவிடும் பதற்றத்தில் இருக்கிறார் அவளது தாய். இதற்காக சிறுமியை நன்றாகத் தயார்படுத்துகிறார். ஆனால், பதற்றம் காரணமாக பள்ளியில் நிகழும் நேர்காணலில் சிறுமி தடுமாற, விடுமுறை நாட்கள் நிறைவதற்குள், அங்கு இடம்பிடிக்கும் ஆவேசத்துடன் சிறுமிக்கு மேலதிகமான கட்டுப்பாடுகளை உருவாக்குகிறார் அந்தத் தாய். அந்த ஆண்டு மட்டுமல்ல, சிறுமியின் ஆயுள் முழுக்க ஒவ்வொரு மணி நேரத்தையும் எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்கிற கறாரான அட்டவணை உருவாக்கப்படுகிறது. தாயின் உத்தரவுக்கேற்ப சிறுமியும் ஓர் இயந்திரமாக மாறுகிறாள். வெளியுலகம் என்ன என்பதைப் பற்றியும் விளையாடுவது என்றால் என்ன என்பதுகூட அவளுக்குத் தெரிவதில்லை.

ஒரு நாள்... 'பத்திரமாக இரு, வேளா வேளைக்குப் படி. நான் மாலை வருகிறேன்' என்று பணிக்கு கிளம்பிச் செல்கிறார் தாய். படித்துக்கொண்டிருக்கும் சிறுமியை 'டமால்' என்கிற சத்தம் பதறவைக்கிறது. பயத்துடன் வெளியில் வந்து பார்க்கிறாள். அவள் வீட்டுச் சுவரில் எதுவோ மோதி ஓர் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் வந்து பார்க்கிறார்கள். 'அந்தக் கிழவன் மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா?' என்று தங்களுக்குள் முணுமுணுக்கிறார்கள்.

சிறுமியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பாழடைந்த வீடு. அங்கிருக்கும் ஒரு கிழவர் தன் வீட்டுக்குள்ளிருந்து வெளியேறுவதைப் பயத்துடன் பார்க்கிறாள் சிறுமி. உடனே போலீசுக்கு போன் செய்கிறாள். காவல்துறை அதிகாரி கிழவரிடம் விசாரிக்கிறார். 'என்னா பெரிசு, மறுபடியும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டியா?'

கிழவர் தடுமாற்றத்துடன், 'மன்னிச்சிடுங்க.. இதான் என்கிட்ட இருக்கு' என்று நாணயங்கள் நிரம்பிய ஒரு டப்பாவைத் தருகிறார்.

லிட்டில்


படித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் மேஜையில் ஒரு காகித ராக்கெட் வந்து விழுகிறது. சிறுமி பிரித்துப் பார்க்கிறாள். The Little prince கதையின் ஒரு பகுதி. பக்கத்து வீட்டுப் பைத்தியக்காரக் கிழவர்தான் அனுப்பியிருக்கிறார். சிறுமி அதை வாசிக்காமலேயே தூக்கியெறிகிறாள்.

கிழவர் அபராதமாகத் தந்திருந்த நாணயங்களை மறுநாள் கொட்டிப் பார்க்கிறாள். நாணயங்களுக்கு இடையில் சில பொம்மைகள் இருக்கின்றன. மரகதக்கல், கிளிஞ்சல், ரோஜா, விமானம். அதன் பிறகு... ஆம்! சிறிய இளவரசனின் உருவப் பொம்மை. குப்பைத் தொட்டியில் வீசியிருந்த கதையை எடுத்து வாசிக்கிறாள். இந்தப் பொருட்கள் எல்லாம் அந்தக் கதையின் பாத்திரங்களாக வருகின்றன.

கதையின் தொடர்ச்சியை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கிழவரின் வீட்டுக்குள் செல்கிறாள். பழுதடைந்து நிற்கும் விமானம் உள்ளிட்ட பல விநோதமான பொருட்களை விழிகள் விரியப் பார்க்கிறாள். கிழவரும் சிறுமியும் நண்பர்கள் ஆகிறார்கள். தான் எழுதிய கதையை வெவ்வேறு இடைவெளிகளில் சிறுமிக்குச் சொல்கிறார் கிழவர்.

சிறுமி பாடப்புத்தகங்களைப் படிக்காமல் கிழவரிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம் தாய்க்கு தெரிய வருகிறது. கடுமையான கோபத்துடன் சிறுமியைக் கண்டித்து, பாடத்தில் கவனம் செலுத்தச் சொல்கிறாள். ஆனாலும், கதையின் இறுதிப் பகுதியை அறியும் ஆவலில் கிழவரின் வீட்டுக்குச் செல்கிறாள் சிறுமி.

கதையில் விவரிக்கப்படும் சிறிய இளவரசன் இறந்துவிடுவது போன்ற சங்கேதக் குறிப்புடன் கதை முடிகிறது. ஆனால், அந்த முடிவு சிறுமிக்குப் பிடிக்கவில்லை. அவன் தனது குறுங்கோளுக்கு திரும்பிச் சென்று ரோஜாவுடன் இணைய வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். கதையின் குறிப்பு, கிழவரையும் பிரிவதற்கான அடையாளமாக அவளுக்குத் தோன்றுகிறது. 'நீங்களும் உங்க கதையும். என் விடுமுறை நாட்கள் வீணாகிவிட்டன' என்று கோபத்துடன் கத்திவிட்டு செல்கிறாள் சிறுமி.

லிட்டில்

விடுமுறையின் கடைசி நாள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் சிறுமிக்கு ஓர் அதிர்ச்சியான காட்சி கண்ணில் தென்படுகிறது. கிழவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவள் அருகில் போவதற்குள் வாகனம் சென்றுவிடுகிறது. அன்றைய நாளின் இரவு. சிறுமியால் தூங்க முடியவில்லை. சிறிய இளவரசனைப் பற்றியே அவளது நினைவு சுழன்றுகொண்டிருக்கிறது. கிழவரின் வீட்டுக்குச் செல்கிறாள். அவரைச் சந்திக்காத இடைவெளியில் குட்டி விமானம் பழுது பார்க்கப்பட்டு தயாராக இருக்கிறது. ஒரு தீர்மானத்துடன் விமானத்தை கிளப்பிக்கொண்டு பறக்கிறாள். சிறிய இளவரசனின் நிலைமையைத் தானும் கண்டறிந்து கிழவரிடமும் சொல்வதே அவளது நோக்கம்.

சிறுமியால் சிறிய இளவரசனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அவனுடைய நிலைமை என்னவாக இருந்தது? கிழவர் என்னவானார் என்கிற சுவாரசியமான காட்சிகளுடன் படம் நிறைகிறது. சிறுமி செய்யும் சாகசங்கள் ரசிக்கவைக்கின்றன.

FIGURE-014661_16022.jpg


இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த சூழலில் மக்கள் பல விதமான துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகி இருந்தார்கள். பல்வேறு உளவியல் சிக்கல்களும் மன வெறுமைகளும் நிறைந்திருந்தன. இதையொட்டி பல இலக்கிய ஆக்கங்கள் உருவாகின. அவற்றின் ஒரு நம்பிக்கைக் கீற்றாகவும், வாழ்க்கைப் புதிர்களின் மீதான சிந்தனையாகவும் 'சிறிய இளவரசன்' குறுநாவலைப் பார்க்கலாம்.

உலக நடைமுறை அனுபவங்கள் ஏதுமில்லாது வெற்றுக் கல்வியை மட்டும் மூளையில் திணிக்கும் சமகால விஷயத்தையும் குறுநாவலையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இதன் திரைக்கதை, சுவாரசியமாக உள்ளது. இரண்டு பகுதிகளின் காட்சிகளும் மாறி மாறி வருகின்றன. தன் வீட்டின் மேல் அமர்ந்திருக்கும் புறாக்களை, தண்ணீர் வீசித் துரத்தும் தாயின் குணாதிசயத்தின் மூலம் இயற்கையில் இருந்து விலகும் சமகால மனிதனின் அடையாளம், அந்த ஒற்றைக் காட்சியின் மூலம் துல்லியமாக உணர்த்தப்படுகிறது. இதற்கு எதிர்முனையில் கிழவரின் உற்சாகமான சித்திரம். ஆனால், சிறுமியைத் தவிர அவரை எவரும் புரிந்துகொள்வதில்லை.

சிறுமியின் இயந்திரத்தனமான வாழ்க்கை, கிழவர் செய்யும் குறும்புகள், விநோதங்கள், விமானியாக இருந்த அவருடைய கதையில் வரும் பாத்திரங்கள், ஒற்றை நபர் மட்டுமே வசிக்க முடியும் குறுங்கோளில் வாழும் சிறிய இளவரசன், இதர குறுங்கோள்களில் உள்ள நபர்களைச் சந்திப்பதற்காக அவன் செல்லும் பயணம், அங்கு ஏற்படும் அனுபவங்கள் என்று பலவிதமான சுவாரசியங்கள் இந்தத் திரைப்படத்தில் வெளிப்படுகின்றன.

குறுநாவலை வாசித்துவிட்டு பின்பு திரைப்படத்தைப் பார்த்தால், மேலதிகமாக ரசிக்க முடியும். ஆனாலும், அதுவொரு பெரிய தடையாகவும் இருப்பதில்லை. அனிமேஷன் திரைப்படங்களுக்கே சிறப்பான வண்ணங்களும் உருவங்களும் இந்தப் படத்தின் சுவாரசியத்தை அதிகமாக்குகின்றன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் * 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912
 

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.

* 1930 - பிபிசி வானொலி தனது பழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது. • 1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

* 1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1993 - பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

* 1996 - லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
 
 
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டு கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் 1879-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராக கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்பு கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார். 1955-ஆம்

 
 
 
 
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டு கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் 1879-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராக கருதப்படுகிறார்.

இவர் புகழ்பெற்ற சார்பு கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார். 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் ஐன்ஸ்டைன் மரணமடைந்தார்.

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாடு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப்பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999-ல் புதிய ஆயிராமாவது ஆண்டை குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதன் என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர் யார் தெரியுமா..?

 

Rodrigo-Duterte-1_05373.jpg

டைம்ஸ் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் 'உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை' வெளியிடும். இந்த ஆண்டு அப்படிப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்குவதற்கு முன்னர், ஆன்லைனில், ஒரு சர்வே நடத்தியது. அதில், யாரெல்லாம் உலகின் செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று வாசகர்கள் நினைக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த சர்வேயில், பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்ட், முதல் இடத்தில் வந்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், போப் பிரான்சிஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து இடங்களில் வந்தனர். ரோட்ரிகோ, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதவிக்கு வந்த பின்னர், போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால், பிலிப்பைன்ஸில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆன்லைன் சர்வேயில் இந்திய பிரதமர் மோடிக்கு, 'பூஜ்ஜியம் சதவிகித' வாக்குகள்தான் கிடைத்தது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சச்சின்...சச்சின்... தமிழ் ட்ரெய்லர்

 
 

சச்சின்... சச்சின்... இந்தக் கோஷங்கள், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் ஒலிக்கப்பட்ட கோஷம். சச்சின் ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், கிரிக்கெட் என்றால் சச்சின்தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், சச்சினின் வாழ்க்கைகுறித்து,  அவரது நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள 'சச்சின்' பயோகிராஃபி ட்ரெய்லர், கடந்த வாரம் வெளியாகி யூ-டியூபில் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

Sachin


இந்த நிலையில், தற்போது இதன் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் வந்த ட்ரெய்லரைப் பார்த்து புல்லரித்த நமக்கு, சச்சின் ட்ரெய்லர் தமிழில் வெளியானால் கேட்கவா வேண்டும். வரும் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஆங்கிலம் மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது. 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விஜய் மல்லையா கைது! - நெட்டிஸன்கள் ஏன் பதறினார்கள் தெரியுமா?

 
 

ந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுத் தலைமறைவான விஜய் மல்லையா, லண்டனில் தங்கி இருப்பதாகப் பல நாட்களுக்கு முன்னரே செய்தி வெளியானது. இன்று அவர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீயாகப் பரவிய சில நிமிடங்களில் இந்தியா முழுவதும் இருக்கும் நெட்டிஸன்கள் ஒரு விஷயத்திற்காகக் கவலைப்பட்டனர். அது என்ன விஷயமாக இருக்கும் என உங்களால் யூகிக்க முடிகிறதா..?

விஜய் மல்லையா

* 'கிங்ஃபிஷர் பீர் இனி கிடைக்குமா கிடைக்காதா...' என்பதைப் பற்றித்தான் ஒட்டுமொத்த சமூக ஊடக இளைஞர்களும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை நீங்கள் வாசிக்கும் இந்த நொடியிலும்கூட உங்கள் ஃபேஸ்புக் டைம்லைன் அல்லது ட்விட்டர் பக்கத்தில் இதே போன்ற பதிவுகள் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கும். அவரவர்க்கு அவரவர் கவலை. 

* இன்று தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமாக அனல் காற்று வீசும் என நேற்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணையப் போவதாகத் தகவல்கள் பரவின. எல்லோரும் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்க, இப்போது மல்லையா கைது செய்யப்பட்ட தகவல் வந்ததிலிருந்து சமூக வலைதளம் முழுக்க விஜய் மல்லையா ட்ரெண்ட் அடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த ட்ரெண்ட் காற்று கோடை அனலை விட உக்கிரமாகவே இருக்கிறது. 

* மல்லையா வாங்கிய கடன்களை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து வங்கிகள் தள்ளுபடி செய்தது, சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயமோகன், மல்லையாவை 'தோற்றுப்போன தொழில் முனைவர்' எனக்  கூறியது, மல்லையா உரிமையாளராக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி  ஐ.பி.எல் டி-20 போட்டிகளின் இந்தத் தொடரில் சொதப்புவது என எல்லாவற்றையும் கலந்து பொளந்தெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். விஜய் மல்லையாவைக் கலாய்க்கும் மீம்களும் வாட்ஸ்-அப் வழியே ஃபார்வர்டாகத் தொடங்கிவிட்டன.

விஜய் மல்லையா கைது - மீம்

* விஜய் மல்லையா தலைமறைவாக இருந்த நேரங்களிலும் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருந்துவந்தார். சமூக வலைதளங்களில் ஹாயாக சுற்றிவந்த அவரையே உங்களால் பிடிக்க முடியவில்லையே என ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரை வம்பிழுத்தனர் நெட்டிஸன்கள். இப்போது ஒருவழியாக அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்களாம். அவரைக் கைது செய்ததை ஒருபக்கம் எல்லோரும் கொண்டாடினாலும் இளைஞர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும் 'கே.எஃப்' பீர் இனி கிடைக்குமா என்பதுதான் பலருக்குக் கவலையாக இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஏப்ரல் 18: உலக பாரம்பரிய தினம்

world_heritage_day

 

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் தங்களது பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) கொண்டாடப்படுகிறது.

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

இந்த நாளில் கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது; கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது; இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது; பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது

புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது; பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது; பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட செயல்களை செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்
மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைக்க வேண்டும்
 
 

article_1492514166-.jpgமாணவர்களுக்கு உள்ள பல பிரச்சினைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் தரப்படும் வீட்டுவேலைகளை (பாடம் சம்பந்தமானது)மாணவர்கள் செய்யாது விடின், உடனே ஆசிரியர்கள் அவர்கள் மனம் போனபடி, திட்டித் தீர்த்தலாகாது.

தங்கள் வீட்டுப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சின்னஞ் சிறுவர்கள் சொல்லத் தெரியாவிட்டாலும் கூட அதனை உணர்ந்து மனவேதனைப் படலாம்.

வீட்டுச் சூழல் மாணவர்களைப் பெரிதும் பாதிப்படைய வைக்கின்றது. 

மேலும், தற்போது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் தீயவர்களுடன் வெளியே பழகுவதால், எல்லை மீறிய தீய காரியங்களில் ஈடுபடுவதை அறிகின்றோம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாகப் பிறர் கூறுவதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைத்தல் பெற்றோர், ஆசிரியர்களின் சிந்தையில் தங்கியுள்ளது. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!

 

இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு உண்டு. இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை, பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது. தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,  4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.

கின்னஸ் சாதனை

ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்ச்சியை நடத்தினர். உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு, நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க; 4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை நிகழ்த்தினர். நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச் சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின் பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.

கின்னஸ் சாதனையை சாத்தியப்படுத்திய தருணங்கள் குறித்துப் பேசிய அதிர்ஷ்ட பாலன், "இந்த 'கின்னஸ் உலக சாதனை' என்னுடைய பத்து வருடக் கனவு. அது இப்போது நனவாகி உள்ளது. திண்டுக்கல்லில் நான் ஒரு சாதாரண பரதநாட்டிய ஆசிரியர். ஏதாவது சாதனை புரிய வேண்டும் என மனம் ஏங்கிக்கொண்டே இருந்தது. அந்தத் தருணங்களில்தான் கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது வருடத்தில், நாட்டியப்பேரரசி பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன். அதையே முன் மாதிரியாக வைத்துக்கொண்டு, அதே நிகழ்வை பிரம்மாண்டப்படுத்தி உலக சாதனை புரிய நினைத்தேன். அதற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் சுற்றிவந்தேன். தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று நான் அலைந்து திரிந்த பயணத்தில், ஒவ்வொரு அறிமுகமாகத்தான் எனக்கு லஷ்மன் ஸ்ருதியும் பழக்கம் ஆனார்கள்.

கின்னஸ் சாதனை

நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்.. பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில் ‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள், பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள், காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம். அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன் ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால் (லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது என்றேன்.

அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான 5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன். அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும், பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர். முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்.. ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும் இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.

இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும், என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ் உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும் எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான் இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம். அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம். இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.

'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை, அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில் மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை, இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள். இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து, வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீங்கள் உருளைக்கிழங்கா, முட்டையா, காபியா? #MorningMotivation #MisterK

 

‘அலுவலகத்திலிருந்து புறப்படும்போதே  அலுவலகப் பிரச்னைகளை அங்கேயே வைத்துவிட்டு, வீட்டுக்கு வா’ என்பான் மிஸ்டர் K. ஆனால் யார் கேட்கமுடிகிறது இந்தக் காலத்தில்? 

நானும், என் நண்பன் மிஸ்டர் K-யும் என் வீட்டில் அமர்ந்து ஐ.பி.எல். பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் ராஜா உள்ளே வந்தான். ராஜா, பக்கத்து ப்ளாட் இளைஞன். IT ஊழியன். ‘வேலை வேலைனு கொல்றாங்கண்ணா’ என்பான். 'அதுக்குதானே சம்பளம் வாங்கற?’ என்று கவுண்டர் கொடுப்பான் மிஸ்டர் K.

நேற்றைக்கும் அப்படித்தான் ஏதோ ஆஃபீஸ் புலம்பல்களோடு வந்திருந்தான். 9 மணிக்கு அவன் உள்ளே வரவும் கெய்ல் அவுட் ஆகவும் சரியாக இருந்தது. 

”பார்த்தியா.. எனக்கு ராசியே இல்லை” என்று புலம்பினான் என்னுடன் அமர்ந்திருந்த மிஸ்டர் K வைப் பார்த்து.

“ஏன் என்னாச்சு?” 

”காலைல  கொஞ்சம் பேங்க் வேலை, முடிச்சுட்டு ஆஃபீஸ் போனேன். மேனேஜர் என்னமோ அந்தத் திட்டு திட்றான்.”  

”இந்தா..” என்று மிஸ்டர் K ஒரு வாட்ஸப் கார்டைக் காட்டினான். 

மிஸ்டர் K

“அது சரிதான்.. ஆனா.. டெய்லி நான் 6 மணிக்கு மேல வேலை செஞ்சு, வேலையெல்லாம் முடிச்சுட்டுதான் வர்றேன். அதெல்லாம் மட்டும் பார்க்கலயா அந்தாளு?”

“இந்தா” - இப்போது இன்னொரு கார்ட்.

Mister K

“சரி.. எல்லாத்துக்கும் வாட்ஸப் கார்ட் வெச்சிருப்பீங்க போல . நான் நல்லாதான் வேலை செய்யறேன். எனக்கு கீழ இருக்கறவங்ககிட்ட கண்டிப்பா இருக்கேன். மேலதிகாரிகள்கிட்ட பணிவா இருக்கேன். ஆனாலும் ஒரு திருப்தியே இல்லைண்ணா” - என்றான் ராஜா. மிஸ்டர் K அவனை ஆதரவாகப் பார்த்தான். 

எழுந்தான். சமையலறைக்குச் சென்றான். கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து  3 பாத்திரங்களை அவற்றின் மீது வைத்தான். அவற்றில் நீரை ஊற்றினான். 

நானும், ராஜாவும் அவனைத் தொடர்ந்து வந்து அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மிஸ்டர் K ஒன்றில் முட்டை ஒன்றைப் போட்டான். அடுத்ததில் உருளைக்கிழங்கு. மூன்றாவது பாத்திரத்தில் காபிக்கொட்டைகளைப் போட்டான். 

பிறகு அங்கிருந்தபடியே, ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டி.வியைப் பார்க்க ஆரம்பித்தான். ”ஸ்கோர் 200ஐத் தாண்டும் போல’ என்றான். 

Morning Motivation

“அண்ணா... நான் புலம்பிட்டிருக்கேன். நீங்க என்னமோ பண்ணிட்டிருக்கீங்க” என்றான் ராஜா. மிஸ்டர் K புன்னகைத்துவிட்டு, சிறிது நேரம் சென்றதும், அடுப்பிலிருந்து 3 பாத்திரங்களையும் இறக்கி, உருளைக்கிழங்கு, முட்டை இரண்டையும் ஒவ்வொரு கிண்ணத்தில் எடுத்து வைத்தான். 3 வது பாத்திரத்தில் இருந்த ப்ளாக் காபியை கப் ஒன்றில் ஊற்றினான்.

“ராஜா.. இது மூணையும் பாரு” என்றான்.

“உருளைக்கிழங்கு. மொதல்ல ரொம்ப கடினமான பொருளா இருந்தது. கொதிக்கற தண்ணீர்ல போட்டதும் மென்மையா மாறிடுச்சு. 

முட்டை, ஓடு கடினமா இருந்தது. உள்ள தண்ணியா இருந்தது. ஆனா தண்ணீர்ல கொதிச்சப்பறம் ஓடு, பிரிக்கற அளவுக்கு இலகாகவும், உள்ள தண்ணியா இருந்த கரு.. கெட்டியாவும் ஆகிடுச்சு”.

சொல்லிக்கொண்டே   கப்பில் இருந்த காபியை ராஜிடம் நீட்டினான். வாங்கிக் குடித்த அவன் முகத்தில் ஒரு ‘அப்பாடா’ ஃபீல். “சூடா இருக்கறதால.. நல்லா இருக்குண்ணா. கொஞ்சம் சர்க்கரையும் சேத்துட்டா இன்னும் நல்லா இருக்கும்” என்றான்.

”அதான். இதே காபிக்கொட்டைய கடிச்சுக்கோனு குடுத்திருந்தா சரின்னிருப்பியா?”

“என்ன தத்துவம்னு சொல்லிடு” என்றேன் நான் இடைமறித்து.

“அலுவலக சூழலோ, வாழ்க்கையோ ஒவ்வொரு காலகட்டத்துல வெறுமை வரும். செய்யற வேலைகள் எதிலயும் மாற்றம் இருக்காது. ஆனா வெறுமையும், ஒருவித பிடிப்பின்மையும் இருக்கும். அது நம்மளைக் கொதிநீர்ல போடற காலம்னு வெச்சுக்கலாம்.

நீங்க - உருளைக்கிழங்குபோல - ரொம்ப கடினமான ஆளா இருந்தா, அந்தக் கொதிநீர்க்காலம் உங்களை இலகுவா, மத்தவங்களுக்குப் பிடிச்சதா மாத்தற காலமா  இருக்கும். டக்னு உடைஞ்சா வீணாப்போற முட்டை மாதிரி, உள்ளுக்குள்ள மென்மையான ஆளா.. அல்லது  ரொம்ப வளைஞ்சு குடுத்து, இளிச்சவாய்த்தனமா இருந்தீங்கன்னா, அந்தக் காலம் உங்களை திடப்படுத்தும்.”

“நான் வேலைக்காகத்தானே எனக்குக் கீழ இருக்கறவங்ககிட்ட கடினமா நடந்துக்கறேன்?”

“யெஸ்.. நீ 3-வது டைப். காபிக்கொட்டை மாதிரி. அப்டி இருந்தா யாரும் ரசிக்க, ருசிக்க மாட்டாங்க. இந்தக் காலகட்டம் உன்னைக் கொதிக்கவெச்சு.. எல்லாருக்கும் பிடிச்ச காபியா மாத்திக்கொடுக்கும். இதைக் கடந்து வந்தே ஆகணும்!”

சிலநிமிடங்கள், காபியைக் குடித்து யோசித்துக்கொண்டிருந்தவன் கேட்டான் “அப்ப சர்க்கரை?”

“அது உன் புன்னகை” என்றான் மிஸ்டர் K. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரலாகும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி!

 

சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள ’Vistadome Coaches’ என்னும் ரயில் பெட்டியை இந்திய ரயில்வே கடந்த 16-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் முதல்முறையாக இதுபோன்ற கண்ணாடி ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.  
இந்தக் கண்ணாடி ரயில் பெட்டி, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொடியசைத்துத் துவக்கி வைத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். பிரமாண்டமாக இருக்கும் இந்தக் கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இந்த ரயில் பெட்டியில் கண்ணாடி மேற்கூரை, குளிர்சாதன வசதி, 360 டிகிரி அளவுக்கு சுற்றும் 40 இருக்கைகள், ஜி.பி.எஸ், தானியங்கிக் கதவுகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. விசாகப்பட்டினம்-கிரண்டூர் ரயில் பாதையில், அரக்கு மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்தக் கண்ணாடிப் பெட்டியில் பயணிப்போர், அரக்கு மலைப்பகுதியின் அழகை ரயிலில் அமர்ந்தவாரே கண்டு ரசிக்க முடியும். இந்தப் பெட்டியைத் தயாரிக்க சுமார் 3.38 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

Vistadome coaches

இது போன்ற கண்ணாடி ரயில் பெட்டிகள் சுற்றுலாத் தளங்களை இணைக்கக் கூடிய ரயில்களில் இணைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 

Glad to share pictures of new vistadome coaches having features like glass roofs,LED lights,rotatable seats,GPS based info system etc

C9g57dUW0AAsRei.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

 
  • 1 கப் டீ தயாரிக்க 27 லிட்டர் தண்ணீர் தேவை என்பது தெரியுமா? #VikatanPhotoCards
  • தொடங்கியவர்

கடலில்‌ மூழ்கும் வியட்நாம்... காக்கும் ஒரே வழி இதுதான்!

 
 

வியட்நாம் ரொம்ப அழகான நாடு. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்ன்னு சொல்ற விஷயம் இன்னிக்கு வியட்நாமுக்கு அப்படியே பொருந்திப் போகிறது. கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வியட்நாம் நாட்டின் பல பகுதிகள் விரைவில் கடலுக்குள் மூழ்கிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. 

வியட்நாமின் கடற்கரை நகரம் "ஹொய் ஆன்". 1700களில் சர்வதேச துறைமுகமாக இருந்த ஓர் நகரம். வியட்நாமில் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறுகளின் எச்சங்கள், இந்தப் பகுதிகளில் தான் மிச்சங்களாக இருக்கின்றன. ஹொய் ஆன் நகரம் தென் சீனக் கடலும், து பான் ஆறும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. சில வருடங்களாகவே மழைக்காலங்களில் இந்தப் பகுதிகளில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான வெள்ளம் வந்துவிடுவதால், மக்கள் இடம் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். 2100ம் ஆண்டிற்குள் இந்தப் பகுதியின் முக்கால் பங்கு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், வியட்நாமில் நெற்பயிர் அறுவடை அதிகமாக நடக்கும் "மெகாங் டெல்டா " பகுதியும் அடுத்த நூறாண்டுகளுக்குள்ளாக கடலில் மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடலில் மூழ்கும் வியட்நாம்

மோசமான வானிலை மாற்றங்கள், குறைந்த அளவிலான வளங்கள், நடுத்தரமான பொருளாதார பின்புலம் என இருக்கும் வியட்நாம், இந்த அபாயத்தைக் கையாள பல வகைகளில், பல யோசனைகளை செயல்படுத்த முயற்சித்தாலும், எதுவும் சரியான தீர்வைக் கொடுக்கும் வகையில் இல்லை. இறுதியாக, இந்தப் பிரச்னையைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி சதுப்பு நிலக் காடுகளை உருவாக்குவது தான் என்ற முடிவுக்கு வந்தது வியட்நாம் அரசு. 

உலகில் இருக்கும் பல வகைக் காடுகளில் "சதுப்பு நிலக் காடுகள்" ஒரு சூப்பர் ஹீரோ. நீர்ப்பகுதியை ஒட்டி இருக்கும், சொதசொதப்பான நிலப்பரப்பில் உருவாவது தான் சதுப்பு நிலக்காடுகள். சற்றே மெலிதான தண்டு, பின்னிப் பிணைந்து வளரும் கிளைகள், பரவலாய்ப் படரும் வேர்கள், நெருங்கி வளரும் மரங்கள், என அடர்த்தியாக இருக்கும் இந்த சதுப்புநிலக் காடுகள், கடல் சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடிய வலிமைப் பெற்றது.

புயல்களைத் தடுப்பது, கடற்கரையை ஒட்டியிருக்கும் விவசாய நிலங்களில் உப்புத்தன்மை கலக்காமல் பாதுகாப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக வளிமண்டலத்திலிருக்கும் அதீத கார்பனை இழுத்து, காற்றை சுத்தப்படுத்துவது போன்ற விஷயங்களை வெகு சிறப்பாக செய்யக்கூடியவை இந்த சதுப்பு நிலக்காடுகள். 

வியட்நாம் சதுப்பு நிலக்காடுகள்

இப்படி  இயற்கை சுழற்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சதுப்புநிலக்காடுகள் வியட்நாமில் 1940ல் இருந்ததுடன் ஒப்பிட்டால் இன்று, பாதியளவிற்கே இருக்கிறது. வியட்நாமின் கடல் மட்டம் உயர்ந்து, நகரங்கள் மூழ்குவதற்கு முக்கிய காரணமாக இந்த சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு இருக்கிறது. எனவே, தற்போது சதுப்பு நிலக்காடுகள் உருவாக்குவதை முக்கியப் பணியாகக் கருதி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இறால் பண்ணைகள் அமைக்கப்படுவது, இந்தக் காடுகளின் அழிவிற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. உலகிலேயே அதிகப்படியான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் வியட்நாம் முன்னணியில் இருக்கிறது. இந்த முயற்சிகளினால், ஏற்றுமதி வர்த்தகங்கள் சற்றே பாதிக்கப்பட்டாலும் கூட, நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அது சீரான வளர்ச்சியை அடையும் என்றே நம்பப்படுகிறது. 

சதுப்புநிலக்காடுகள் கடலில் உப்புத்தன்மையைக் குறைத்து, பல்லுயிர்ச்சூழலுக்கான வசதியை மேம்படுத்துகிறது. இதன் மூலம், நீர் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு பெருகும். மக்களை ஒதுக்கிவிட்டு இங்கு எந்தத் திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்திட முடியாது. கால் வயிறு கஞ்சிக்கே போராடிக் கொண்டிருப்பவனிடம் போய், இயற்கையைக் காக்க வா என்றால் நிச்சயம் வர மாட்டான். அவனுக்கான பொருளாதார சிக்கல்களை களைய கை கொடுக்க வேண்டியதும் முக்கியமாக இருக்கிறது. அந்த முயற்சிகளையும் வியட்நாம் அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. 

வியட்நாம் சதுப்பு நிலக்காடுகள்

அந்தப் பகுதியில் இருக்கும் மீனவர்களைக் கொண்டு அவர்கள் படகுகளிலேயே சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வசதி வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கும், வீட்டின் சிறு பகுதியை தங்கும் விடுதியாகவோ, உணவகமாகவோ நடத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களின் இயற்கை வாழ்வு மட்டுமல்ல, பொருளாதார வாழ்வும் இந்தக் காடுகளின் நலத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து அந்த மக்கள் அதீத அக்கறையோடு தங்கள் காடுகளைப் பாதுகாக்க முனைகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை நாடு முழுக்க முன்னெடுத்தால், சதுப்பு நிலக்காடுகள் பாதுகாக்கப்படும், இயற்கைக்கு ஏற்படுத்தப்பட்ட காயத்திற்கு சிறு ஆறுதலை அளிக்க முடியும்.

வியட்நாம் சதுப்பு நிலக்காடுகள்

 வியட்நாம் சின்ன நாடு தான். ஆனால், அது கற்றிருக்கும், கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் மிகப்பெரியது. அது... மண்ணின் மக்களை ஒதுக்கிவிட்டு இங்கு எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும் கண்டிர முடியாது என்பது தான்... 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சூதாட்டம்... லைவ் ஸ்ட்ரீமிங்... ஃபேண்டஸி லீக்... இது ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல்!

 
 

ஆப்ஸ்

10 வருடங்களுக்கு முன்பு நாம் கிரிக்கெட் பார்க்கும் ஸ்டைலே வேற. ஒட்டு மொத்த வீடும் டி.வி. முன்னால் கூடிவிடும். அவர்களுக்கு விளம்பர இடைவேளையோ, நமக்கு உணவு இடைவேளையோ... எதுவுமே நம்மை டி.வியை விட்ட அகல விடாது. டெஸ்ட் மேட்ச் ரீடெலிகாஸ்ட் என்றாலும் ஒரு பந்து விடாமல் பார்த்தவர்கள் தான் நாம். ஆனால், இது ஐ.பி.எல் காலம். கிரிக்கெட் என்பது டி.வியில் பார்க்கும் எண்டெர்டெயின்மெண்ட் மட்டுமே அல்ல. இன்னும் அதைச் சுற்றி ஏராளமான விஷயங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அப்படி நமக்கு அளவில்லா எண்டெர்டெயின்மெண்ட்டை வழங்கும் சில கிரிக்கெட் மொபைல் ஆப்ஸ் பற்றி பார்க்கலாம்.

IPL:

ipl


இது ஐ.பி.எல்-ன் அதிகாரப்பூர்வ ஆப். போட்டிகள், முடிவுகள், பாயிண்ட்ஸ் டேபிள் என ஐ.பி.எல் போட்டியின் சகல விஷயங்களையும் அட்டகாசமாக பிரித்து சொல்கிறது இந்த ஆப். நேற்றைய பெங்களூரு- புனே போட்டியில் தோனி அடித்த சிக்ஸ், மைதானத்தை விட்டு வெளியே பறந்தது. அந்த வீடியோ பார்க்க வேண்டுமென்றால், அதை மட்டுமே தனி வீடியோவாக தருகிறார்கள். லைவ் ஸ்கோர்ஸ், பேட்ஸ்மென், பவுலர்களின் சாதனைகளை, கருத்து கணிப்புகள்,  ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் யாருக்கு என ஐ.பி.எல் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

Play store link

Fantasy league:

aiipl


இதுவும் ஐ.பி.எல் ஆப்-ன் ஒரு பகுதிதான். ஆனால், இந்த ஏரியா மட்டுல் ஆப்-ல் திறக்காமல், பிரவுசரில் வரும். இந்த ஆட்டத்தின் விதிகள் இதுதான். நாம் முதலில் 11 பேர் கொண்ட டீமை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மதிப்பு இருக்கும். நமக்கு தரப்பட்டிருக்கும் காசை வைத்து, அதற்குள்ளாக ஓர் அணியை உருவாக்க வேண்டும். நமது அணியில் இருப்பவர்கள் எவ்வளவு ரன் அல்லது விக்கெட் எடுக்கிறார்களோ அவ்வளவு பாயிண்ட்ஸ். நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஒரூ லீக் ஆரம்பித்து, அதில் அனைவரது அணியையும் சேர்த்துக்கொள்ளலாம். யாருடைய டீம் அதிக பாயிண்ட்ஸ் எடுக்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். தினமும் போட்டிக்கு அரை மணி நேரம் முன்னால், விளையாடும்11 பேர் அறிவிக்கப்படுவார்கள். அடுத்த அரை மணி நேரத்துக்குள் நமக்கு யார் அன்றைக்கு நன்றாக விளையாடுவார்கள் எனத் தோன்றுகிறதோ அவரை அணியில் சேர்க்க வேண்டும். பெரும்பாலும் அதிர்ஷ்டம் என்றாலும், ஒருவரது கிரிக்கெட் பற்றிய அறிவை சோதிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும். விளையாடிப் பாருங்கள்.

Link


ஹாட் ஸ்டார்:

ஒரு ஆப் மூலம் எத்தனை பேர் லைவாக மேட்ச் பார்ப்பார்கள் என நினைக்கறீர்கள்? ஹாட்ஸ்டார் ஆப் மூலம் புனே-பெங்களூரு போட்டியை ஒரே லைவாக 12 லட்சம் பேர் பார்த்தார்கள். டி.வி. இல்லாத இடமென்றாலும் பிரச்னை இல்லை. மொபைல் சிக்னல் இருந்தால் போதும் என்பதால் அனைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய ஆப்-ஆக மாறி வருகிறது ஹாட்ஸ்டார்.

Playstore link

IPL App 2017:

இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு யூஸர்களிடம் பிரபலமாகி வருகிறது இந்த ஆப். லைவ் ஸ்கொர்ஸ், லைவ் சட என்பதைத் தாண்டி பல கோடி ரூபாய் பரிசுகள் தரும் போட்டிகளும் உண்டு. அது மட்டுமில்லாமல், போட்டிகளுக்கான கிரவுண்ட் டிக்கெட்கள் எக்ஸ்ட்ரா இருந்தால், அதை கைமாற்றிவிடவும் உதவுகிறது இந்த ஆப். 

Playstore link

சூதாட்ட ஆப்ஸ்:

இவைத் தவிர சூதாடுவதற்கும் மொபைல் ஆப்ஸ்-ஐ நிறைய பயன்படுத்துகிறார்கள். கேம்ப்ளிங் சில நாடுகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு விளையாட்டு. அங்கிருந்து உருவாக்கப்படும் ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல் சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியின் ரேட் இப்போது 3.75. அதாவது, 100ரூபாய் பெட் கட்டி பெங்களூரு வென்றுவிட்டால், திரும்ப 375 ரூபாய் கிடைக்கும். பெங்களூரு அணி வெல்லும் என நிறைய பேர் நம்புவதால் இதன் ரேட்தான் குறைவு. அதிகபட்சமாக பஞ்சாப் அணிக்கு 11. இவைத் தவிர ஒவ்வொரு போட்டியிலும் யார் 50 அடிப்பார்கள், யார் மேன் ஆஃப த மேட்ச் போன்ர சூதாட்டமும் ஆப்ஸ் மூலம் நடைபெற்று வருகிறது. betfair மற்றும் இது போன்ற ஆப்ஸ், இந்த ஏரியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கின்றன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அணுகுண்டு வெடிப்பின் அரிய காணொளி

ஆங்கிலத்தில் "ஆபரேஷன் டீபாட்" என்று அழைக்கப்பட்ட அமெரிக்க அணுச்சோதனை 1955 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.


அப்போது எடுக்கப்பட்ட இந்த காணொளி பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.


தற்போது அமெரிக்க அரசு இவற்றை வெளியிட அனுமதியளித்திருக்கிறது.


இந்த அணுச்சோதனை காணொளியை கலிபோர்னிய நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளது.


இந்த காணொளியை விஞ்ஞானிகள் விரிவாக ஆராயவுள்ளனர்.


இந்த அணுவெடிப்பு பரிசோதனைகள் பாலைவனத்திலும் கடலிலும் நிகழ்த்தப்பட்டன.

அணு ஆயுதங்களின் வல்லமையை மேலும் புரிந்துகொள்ள இந்த காணொளி உதவுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

  • தொடங்கியவர்

இருந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்கலாம்! கூகுள் புதிய கருவி அறிமுகம்

 
 

உலகை இருந்த இடத்திலிருந்தே சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்த கருவியினை இன்று புதிய அறிமுகமாக வெளியிட்டுள்ளது.

கூகுள்

உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய அறிமுகம் உங்களுக்கு உதவும். ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்தக் கருவி ஒரு நிமிடத்தில் உங்களை அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கூட்டிச் செல்லும்.

ஆற்றுப் படுகையிலிருந்து, கல்பாலங்கள் வரை சுதந்திரதேவி சிலையிலிருந்து உள்ளூர் கோயில்கள் வரை அத்தனையையும் கூகுள் டூல் கருவியில் பார்க்க முடியும். குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு விளையாட்டாகவே இதில் விளையாடலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஷாகித் அப்ரிடிக்கு இந்திய வீரர்களின் நெகிழ்ச்சியூட்டும் நினைவு பரிசு

 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற ஷாகித் அப்ரிடிக்கு, இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்டு வழங்கிய விராட் கோலி ஜெர்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
 
ஷாகித் அப்ரிடிக்கு இந்திய வீரர்களின் நெகிழ்ச்சியூட்டும் நினைவு பரிசு
 
புதுடெல்லி:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக சாதனை படைத்திருந்தார். இந்த சாதனை 19 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்து.

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றார். முன்னதாக பாகிஸ்தான் அணிக்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற  டி20 உலக கோப்பை போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.  டி20 உலக கோப்பை தொடர் நிறைவுற்றதும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஷாகித் அப்ரிடி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார்.

201704191837089579_6v2n8lb1._L_styvpf.gi

27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகித் அப்ரிடி 1176 ரன்களை குவித்துள்ளார், அதிகபட்சமாக 156 ரன்களையும் 48 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ரன்களை குவித்துள்ள ஷாகித் அப்ரிடி அதிகபட்சமாக 124 ரன்களையும், 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அரங்கில் டி-20 போட்டிகளை பொருத்த வரை 98 போட்டிகளில் களம் கண்ட ஷாகித் அப்ரிடி 1405 ரன்களையும் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தற்போது ஷாகித் அப்ரிடி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

201704191837089579_56vrzlct._L_styvpf.gi

இந்நிலையில், இந்திய வீரர்கள் விராட் கோலி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, முகமது ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரகானே, தவான் உள்பட பல்வேறு இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட விராட் கோலி ஜெர்சியை அப்ரிடிக்கு பரிசாக வழங்கினார்கள்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஜெர்சியில் கையொப்பமிட்ட நினைவு பரிசை அப்ரிடிக்கு வழங்கியது குறித்து விராட் கோலி கூறியதாவது, "ஷாகித் பாய் வாழ்த்துக்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்". இத்துடன் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியில் இதே வாசகம் எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியின் புகைப்படத்தை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

201704191837089579_pq0iaozq._L_styvpf.gi

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான தூதராக ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி

ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி; பள்ளியில் படிக்க தினமும் படகில் செல்லும் உகாண்டா குழந்தைகளின் கதை

  • தொடங்கியவர்

கிளென் தியோடர் சீபோர்க்

 

 
 
 
muthukal_pathu_3155752f.jpg
 
 
 

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர்

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிவியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான கிளென் தியோடர் சீபோர்க் (Glenn Theodore Seaborg) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மிச்சிகன் மாநிலத்தில் இஷ்பெமிங் என்ற நகரில் பிறந்தார் (1912). சிறுவனாக இருந்தபோதே குடும்பம் லாஸ் ஏஞ்சல்சில் குறியேறியது. மேல்நிலைக் கல்வி பயிலும்போது தனது வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியரால் கவரப்பட்டு இவருக்கும் அறிவியலில் ஆர்வம் பிறந்தது.

* முதல் மாணவராகத் தேறி லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். தனது ‘இன்டராக் ஷன் ஆஃப் ஃபாஸ்ட் நியுட்ரியன்ஸ் வித் லீட்’ என்ற ஆய்வுக் கட்டுரையில், அணுப்பிளவு (நியுக்ளியர் ஸ்பாலேஷன்) என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார்.

* அணு மருத்துவத் துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். புதிய ஐசோடோப் அயர்ன், அயர்ன்-59-ஐக் கண்டறிந்தார். இது மனித உடலில் ஹீமோகுளோபின் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஐசோடோப் கூறுகளைக் கண்டறிந்தார். இவை பல நோய்களைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் பயன்பட்டது.

* குறிப்பாக, அயோடின்-131, தைராய்டு நோய்க்கான சிகிச்சைக்குப் பயன்பட்டது. யுரேனியப் பின் தனிமங்கள் (transuranic elements) ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சிக்காக அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி எட்வின் மெக்மிலானுடன் இணைந்து இவருக்கு 1951-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* இந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆக்டினைடுகள் (Actinide) கருத்துருவை மேம்படுத்துவதற்கு வழிகோலியது. ஆக்டினைடுகள் என்பது 15 வேதியியல் தனிமங்கள் கொண்ட ஒரு வரிசை. அணுக்கரு வேதியியலின் முக்கிய கிளைகளில் ஒன்றான ஆக்டினைடுகள் வேதியியலை இவர் ஆராய்ந்தார்.

* கதிரியக்கம் கொண்ட புளுட்டோனியம், குயுரியம், பெர்க்கெலியம், ஃபெர்மியம், நொபிலியம் உள்ளிட்ட மொத்தம் 10 யுரேனியப் பின் தனிமங்களை (தனிம அட்டவணையில் யுரேனியத்துக்குப் பின்னால் வரும் தனிமங்கள்) ஆராய்ந்தார். அணு ஆற்றலை வணிக நோக்கங்களுக்காகவும் அமைதிப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவது குறித்தும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

* தன் வாழ்நாள் முழுவதும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து பேசியும் எழுதியும் வந்தார். அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை மற்றும் விரிவான பரிசோதனை தடை ஒப்பந்தத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* அமெரிக்காவின் பத்து ஜனாதிபதிகளுக்கு அணுக்கொள்கை ஆலோசகராகச் செயல்பட்டுள்ளார். ரொனால்ட் ரீகனின் ஆட்சிகாலத்தில் கல்விக்கான சிறப்பு தேசிய ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தனிமங்கள் குறித்த இவரது ஆராய்ச்சிகளில் எலிமன்ட் 106-க்கு ‘சீபோர்ஜியம்’ என இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* புளுட்டோனியம் வேதியியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஆரம்பத்தில் உலகப் புகழ்பெற்ற மன்ஹாட்டம் பிராஜக்டில் பங்கேற்றார். உலகம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் 50-க்கும் மேற்பட்ட டாக்டர் பட்டங்களை வழங்கின.

* பல பொது இடங்கள், அணுக்கூறுகள் முதல் விண்கோள் வரை இவரது பெயர் சூட்டப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அணு வேதியியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள கிளென் தியோடர் சீபோர்க் 1999-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

சார்ளி சப்ளின் வேடத்தில் 662 ரசிகர்கள்

சுவிட்ஸர்லாந்தில், மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் போன்று ஆடை அணிந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு, அவரின் பிறந்ததினத்தை கொண்டாடினர்.

chaplin

சார்ளி சப்ளினின் 128 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஞாயிறன்று இந்நிகழ்வு நடைபெற்றது.

chaplin3

சுவிட்ஸர்லாந்திலுள்ள சார்ளி சப்ளினின் வீட்டுக்கு முன்னால், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சப்ளின் போல் வேடமிட்டு நட்சத்திர வடிவில் அணிவகுத்து நின்றனர். சார்லி சாப்ளின் உடை, மீசை, தொப்பி ஆகியவற்றை அணிந்த மக்கள் புகைப்படங்கள் பிடித்துக்கொண்டனர். 662 பேர் இந்நிகழ்வில் பங்குபற்றியதாக சார்ளி சப்ளின் நூதனசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

1889 ஏப்ரல் 16 ஆம் திகதி லண்டனில் பிறந்த சார்ளி சப்பிளின், 1977 டிசெம்பர் 25 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் காலமானார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

இப்படியும் ஒரு வினோத போட்டி: நீண்ட நேரம் முத்தமிட்டு சொகுசு காரை பரிசாக வென்ற பெண்

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில், வானொலி நிலையம் நடத்திய வினோதமான போட்டியில், காரை நீண்ட நேரம் முத்தமிட்ட பெண், புதிய காரை பரிசாக தட்டிச்சென்றார்.

 
இப்படியும் ஒரு வினோத போட்டி: நீண்ட நேரம் முத்தமிட்டு சொகுசு காரை பரிசாக வென்ற பெண்
 
ஆஸ்டின்:

அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், பிரபல கியா கார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கியா ஆப்டிமா’ காரை முத்தமிடும் போட்டிக்கு அழைப்பு விடுத்தது.

இந்த போட்டியின் விதிமுறை என்னவென்றால், வாயை எடுக்காமல் காரை நீண்ட நேரம் முத்தமிட வேண்டும், அவ்வளவுதான். இதில் நீண்ட நேரம் முத்தமிடுபவருக்கு கார் பரிசாக வழங்கப்படும். சாப்பாடு, உதட்டுக்கு ஓய்வு, இயற்கை உபாதை உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்காக ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடம் பிரேக் வழங்கப்படும். 50 மணி நேரம் முடிவில் யாரும் வெற்றி பெறவில்லை என்றால், களத்தில் இருக்கும் போட்டியாளர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
201704192223327824_kiss2._L_styvpf.gif
வானொலியில் போட்டி குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஏராளமான நேயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் குவிய, இறுதியில் 20 பேர் போட்டிக்கு தேர்வு பெற்றனர். திங்கட்கிழமை போட்டி தொடங்கியது. காரை சுற்றி இருபது பேரும் முத்தமிடத் தொடங்கினர். நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் முத்தமிட்ட அவர்கள், எப்படியாவது காரை பரிசாக வென்றே ஆக வேண்டும் என்ற வேகத்தில் வைத்த வாயை எடுக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல சிலர் போட்டியில் இருந்து பின்வாங்கினர்.
201704192223327824_kiss4._L_styvpf.gif
போட்டி தொடங்கி 50 மணி நேரம் கடந்த நிலையில், 7 பேர் தொடர்ந்து கார் மீது முத்தமிட்டவண்ணம் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில், ஆஸ்டின் நகரைச் சேர்ந்த டிலினி ஜெயசூர்யா என்ற பெண், தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு புதிய கியா ஆப்டிமா கார் பரிசாக வழங்கப்பட்டது. காரின் சாவியைப் பெற்றுக்கொண்ட அவர் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றார். மற்ற 6 பேருக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டன.
 
  • தொடங்கியவர்

தெருவோர உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற ஊரிலேயே தடை!

 
 
 

தெருவோர உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற பாங்காக் நகரில் இனிமேல் தெருவோரங்களில் உணவு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

bangkok

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தெருவோரத்தில் யாரும் உணவுக் கடைகள் வைக்கக்கூடாது என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெருவோர உணவுகளுக்கு சிறந்த நகரம் என உலக அங்கீகாரம் கிடைத்த ஒரு மாதத்திலேயே இந்த அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாங்காக் நகரில் சுத்தம் மற்று சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்க தெருவோர உணவுக் கடைகள் விரைவில் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் தெருவோர உணவுகளுக்குப் பிரசித்திப்பெற்ற யோவார்ட், காவோ சான் ரோடு ஆகியவை சுத்தப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

’நடைபாதை பாதசாரிகளுக்கே’ என்று அறிவித்துள்ள அரசு பாங்காக்கில் உள்ள 50 மாவட்டங்களில் இந்த அறிவிப்பை செயல்படுத்தத் துவங்கியுள்ளது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஏப்ரல் – 19

 

1770 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிழக்குக் கரை­யோ­ரத்தை பிரித்­தா­னிய கடற்­படை மாலுமி ஜேம்ஸ் குக் முதன்­மு­தலில் கண்­ட­றிந்தார். 


1775 : பிரிட்­ட­னுக்கு எதி­ரான அமெ­ரிக்கப் புரட்சிப் போர் ஆரம்­பித்­தது.

 

1982 : அமெ­ரிக்­காவை ஒரு சுதந்­திர நாடாக நெதர்­லாந்து குடி­ய­ரசு அங்­கீ­க­ரித்­தது. அமெ­ரிக்­காவின் முத­லா­வது தூத­ரகம் ஹேக் நகரில் திறக்­கப்­பட்­டது.


1810 : வெனி­சூ­லாவில் இரா­ணுவ ஆட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1902 : குவாத்­த­மா­லாவில் 7.5 ரிச்டர் நில­ந­டுக்கம் தாக்­கி­யதில் 2,000 பேர் இறந்­தனர்.


Oklahoma_City_Bombing---varalaru1904 : கன­டாவின் டொரோண்டோ நக­ரத்தின் பெரும் பகு­திகள் தீயினால் அழிந்­தது.


1936 : பலஸ்­தீ­னர்­களின் ஆங்­கி­லே­யர்­க­ளுக்கு எதி­ரான முத­லா­வது கிளர்ச்சி தொடங்­கப்­பட்­டது.


1954 : உருது, மற்றும் வங்­காள மொழி ஆகி­யன பாகிஸ்­தானின் தேசிய மொழி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன.


1971 : முத­லா­வது விண்­வெளி ஆய்­வு­கூ­ட­மான சோவியத் ஒன்­றி­யத்தின் சல்யூட் 1 விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது.


1975 : இந்­தி­யாவின் முத­லா­வது செய்­மதி ஆரி­ய­பட்டா விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.


1988 : மட்­டக்­க­ளப்பில் அன்னை பூபதி  உண்ணா நோன்­பி­ருந்து இறந்தார்.


1989 : அமெ­ரிக்­காவின் யூ.எஸ்.எஸ். அயோவா என்ற கப்­பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்­ததில் 47 கடற்­ப­டை­யினர் கொல்­லப்­பட்­டனர்.


1993 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் டாவீ­டியன் என்ற மதக்­குழு ஒன்றின் கட்­டி­டத்தை 51 நாட்­க­ளாக சுற்றி வளைத்த அமெ­ரிக்க எவ்.பி.ஐ இன் முற்­றுகை கட்­டிடம் தீப்­பற்­றி­யதில் முடி­வுக்கு வந்­தது. மதக்­குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்­பட 87 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1995 : அமெ­ரிக்­காவின் ஓக்­ல­ஹாமா நக­ரத்தில் அரசுக் கட்­டடம் ஒன்று தீவி­ர­வா­தி­களின் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னாதில் 168 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1995 : ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­து­ட­னான – விடு­த­லைப்­பு­லிகள் பேச்­சு­வார்த்தை முறி­வ­டைந்­த­தாக தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அறி­வித்­தனர். அதனை அடுத்து திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தில் இரண்டு பீரங்கிக் கப்­பல்கள் புலி­களால் மூழ்­க­டிக்­கப்­பட்­டன.


1999 : ஜேர்­ம­னியின் நாடா­ளு­மன்றம் பேர்லின் நக­ருக்கு மாற்­றப்­பட்­டது.


2006 : நேபா­ளத்தில் மன்­ன­ராட்­சியை எதிர்த்து பொது­மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


2011 : கியூப கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்திய குழுவிலிருந்து பிடெல் கெஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். 


2013 : பொஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு சந்தேக நபரான தமேர்லன் சார்னேவ் பொலிஸாரினால் கொல்லப்பட்டர். 

http://metronews.lk/

  • தொடங்கியவர்

 

தேம்ஸ் நதியில் கொட்டப்படும் 10 லட்சம் டன் மனிதக்கழிவு; தீர்வு என்ன?

மக்கள் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் கழிவுகளின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும்.


குறிப்பாக நகர்ப்புற மனிதக்கழிவுகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் அகற்றுவது என்பது மிகப்பெரிய சவால்.
லண்டனின் பழைய கழிவுநீரகற்றும் கட்டமைப்பால் அதிகரித்த கழிவுகளை கையாள முடியாததால், தேம்ஸ் நதியில் ஆண்டுக்கு பத்துலட்சம் டன் மனிதக்கழிவு அப்படியே கொட்டப்படுகிறது.


இந்த பிரச்சனைக்கு தீர்வாக பிரம்மாண்ட புதிய கழிவுநீரகற்றும் கட்டமைப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


உலகின் பழமையான பெருநகரங்களில் ஒன்றான லண்டனின் மனிதக்கழிவுகளை அகற்றும் கட்டமைப்பின் மேம்படுத்தும் இந்த பணி மற்ற பெருநகரங்களுக்கும் உதாரணமாக அமையுமா? ஆராய்கிறது பிபிசி.

  • தொடங்கியவர்

7 X 13 = 28 

குமாரசாமி கணக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.