Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் .

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதரான பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள குழந்தைகளைச் சந்தித்து பாலியல் ரீதியான வன்முறைகளை எப்படி எதிர்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்து பரப்புரை செய்து வருகிறார்.

அந்த வீடியோவில் ஆப்பிரிக்க சிறுவர்கள் பிரியங்காவை சுற்றி நின்று, அவரின் தலை முடியை கோதிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்க சிறுவர்கள் பிரியங்காவிடம், ”உங்கள் தலைமுடி அழகாக உள்ளது” என்கிறார்கள். அதற்கு பிரியங்கா, ”உங்கள் தலைமுடி சுருள் சுருளாக அழகாக உள்ளது” என்கிறார் சிரித்தபடி. பூமியில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகு தான் என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரியங்கா!

 

  • தொடங்கியவர்

கூகுள் லூனார் எக்ஸ் பரிசுக்கு போட்டியிடும் இந்திய ரோபோ

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 07
 
 

article_1430975201-councilofeurope.jpg1697: சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள அரண்மனை தீவிபத்தினால் அழிந்தது. இதற்கு பதிலகா 18 ஆம் நூற்றாண்டில் மற்றொரு அரண்மனை நிர்மாணிக்கப்பட்டது.

1915: ஜேர்மன் நீர்மூழ்கித் தாக்குதலில் அமெரிக்க கப்பலொன்று மூழ்கியது இதனால் 1198 பேர் உயிரிழந்தனர்.

1946: சோனி நிறுவனம் டோக்கியோ டெலிகொம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் எனும் பெயரில் 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது.

1948: ஐரோப்பிய கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.

1960: அமெரிக்க யுத்த விமான விமானி கெரி பொவர்ஸ் தனது நாட்டில் கைதியாக்கப்பட்டுள்ளதாக சோவியத் யூனியன் தலைவர் நிகிட்டா குருஷேவ் அறிவித்தார்.

1999: யூகோஸ்லாவியாவில் நேட்Nடுh குண்டுவீச்சுவிமானங்களின் தாக்குதலில் சீனத் தூதரகத்திலிருந்த 3 சீனப்பிரஜைகள் பலி. 20 பேர் காயம்.

1999: கினியா பிஸு ஜனாதிபதி ஜோவா வியெரா இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

2000: ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதியேற்றார்.

2002: சீன விமானமொன்று மஞ்சள் கடலில் விழுந்ததால் 112 பேர் பலி.

2008: ரஷ்ய ஜனாதிபதியாக திமித்ரி மெத்வதேவ் பதவியேற்றார்.

2013: ஏவுகணைகளை வடகொரியா நகர்த்தியது.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வைரல்: காட்டுத் தீயில் இருந்து மான் குட்டியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்..!

 
 

C_LOhQhUwAAovnb_04525.jpg

அமெரிக்காவின், ஜார்ஜியா அருகே வனப்பகுதியில், கடந்த வாரம் திடீரென தீப்பற்றியது. பிறகு, இந்த தீ வனப்பகுதி முழுவதும் பரவியது. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த பகுதியில் தீயை அணைக்கும் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்த மான் குட்டி ஒன்றை, தீயணைப்பு வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டார். அந்த தீயணைப்பு வீரர், அந்த மானை மீட்காவிடின், அது உயிர் பிழைத்திருப்பது கடினம் என்று கூறப்படுகிறது.


இந்த போட்டோ, கடந்த ஒரு வாரமாக உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, மான் குட்டியை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

போர் களத்தின் அழகி.. ’மிஸ் ஈராக்’ ஷைமாவின் கனவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு!

கலவர பூமியான ஈராக் சார்பில் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள போகும் ஷைமா காசிம் அப்துல் ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அப்படியென ஸ்பெஷல் இந்த செய்தியில்... மேலே படிக்கவும்.. 

miss iraq
 

ஈராக் என்ற வார்த்தையை கூகிளில் டைப் செய்து தேடினால், போர் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் முதலில் வரும். இப்படி போர் களமாக மாறி இருக்கும் ஈராக்கில், 42 ஆண்டுகளுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு அழகி போட்டி நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அழகி போட்டியில் ’ஷைமா காசிம் அப்துல் ரஹ்மான்’ என்பவர் ’மிஸ் ஈராக்’ பட்டம் பெற்றார். 

miss iraq

 

மிஸ் ஈராக் பட்டம் பெற்ற போது ஷைமாவுக்கு வயது 20 தான். ஷைமா இளங்கலை தொழிற்படிப்பு பயின்றவர். பல தடைகளை மீறி அழகி போட்டியில் கலந்து கொண்டு, மகுடம் சூடி கொண்ட ஷைமாவுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனாலும் ஷைமா அசரவில்லை. தற்போது ஈராக் சார்பாக இந்தாண்டின் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள போகிறார் ஷைமா.

ஈராக் பெண்கள் தன்னம்பிக்கையிலும், தைரியத்திலும், அறிவாற்றலிலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலக அரங்கில் நிரூபிப்பதே ஷைமாவின் ஆசையாம். ஷைமாவுக்கு நீண்ட நாள் கனவு ஒன்று உள்ளதாம். முன்னாள் உலகி அழகியும், இந்திய நட்சத்திரமுமான ஐஸ்வர்யா ராயை சந்திக்க வேண்டும் என்பதே இவரின் கனவாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை

துபாயில் 101 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்­டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்­துள்­ளனர். 

 

Most-nationalities-having-a-continental-breakfast-group-photo_tcm25-469382

ஐக்­கிய எமி­ரேட்ஸில் பல்­லி­னத்­துவம் மற்றும் சக­வாழ்வு குறித்த சாத­க­மான ெசய்­தியை பரப்பும் நோக்­குடன், துபா­யி­லுள்ள சீக்­கி­யர்­களின் ஆல­ய­மான குருத்­வா­ரா­வினால் இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 


101 நாடு­களைச் சேர்ந்த 600 இற்கும் அதி­க­மானோர் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர். ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்­கான இந்­தியத் தூதுவர் நவ்தீக் சிங் சூரி, ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நிதி போர்ட் மௌரிங் மற்றும் பல நாடு­களின் ராஜ­தந்­தி­ரி­களும் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர். இவர்கள் அனை­வரும்  தரையில் அமர்ந்து உணவு உட்கொண்­டனர்.


மிக அதிக எண்­ணிக்­கை­யான நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்ட நிகழ்­வாக இது கின்னஸ் சாதனை நூலில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.


கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்­களின் நடுவர் ஹோடா கச்சாப் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­வுச்­சீட்டை பரி­சோ­தித்து அவர்­களின் நாடு­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டார்.


இதற்­குமுன் 2015 ஆம் ஆண்டு இத்­தா­லியில் நடை­பெற்ற மிலான் எக்ஸ்போ கண்­காட்­சி­யின்­போது 55 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து உணவு உட்­கொண்­ட­மையே கின்னஸ் சாத­னை­யாக இருந்தது எனவும் துபாய் நிகழ்வு இந்த எண்ணிக்கையை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் நடுவர் ஹோடா கச்சாப் அறிவித்தார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

இணைய அட்லஸ் தெரியுமா?

 
atlast_3161213f.jpg
 
 
 

சமீபத்தில் ஒரு வரைபடம் இணைய உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரைபடம் இணையத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் முதல் இணைய அட்லஸ் என இது அழைக்கப்படுகிறது. இணையத்தின் பெளதீக உள்கட்டமைப்பை விவரிக்கும் வகையில் இந்த வரைபடம் அமைந்துள்ளது.

இணையம் என்பது வலைப் பின்னல்களின் வலைப் பின்னல் என்பது நமக்குத் தெரியும். அது உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களாகவும் சர்வர்களாகவும் பரவியிருக்கிறது. டேட்டா சென்டர்களால் இணைக்கப்பட்டு, கடலுக்கடியிலான கேபிள்களும் அதன் இணைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால், இந்த பெளதீக உள்கட்டமைப்பின் விவரம் மிகவும் சிக்கலானது.

இந்த விவரங்களைச் சித்தரிக்கும் வரைபடத்தை அமெரிக்காவில் விஸ்கான்சின் மேடிசன் பல்கலையில் உள்ள ஆய்வாளர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர் ராமகிருஷ்ணன் துரைராஜன் என்பவரும் இந்த வரைபட உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

இந்த இணைய வரைபடம் இணைய உள்கட்டமைப்பு குறித்துப் புரிந்துகொள்ள உதவுவதோடு, பருவநிலை பாதிப்பு, தீவிரவாதத் தாக்குதல் போன்றவற்றிலிருந்து இணையத்தைப் பாதுக்காக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை வைத்துக்கொண்டு அவற்றில் உள்ள தகவல்களை இணையம் மூலம் ஒருங்கிணைத்து இந்த இணைய அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தின் அமைப்பைக் காட்சிரீதியாக இந்த அட்லஸ் விளக்குகிறது.

இணைய அடல்ஸ் முகவரி: http://internetatlas.org/

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

IQ டெஸ்டில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய சிறுமி இவர்தான்!

இங்கிலாந்தில் வசிக்கும்  ராஜ் கெளரி பவார், ஐ.க்யூ தேர்வில் அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

raj

மனிதர்களின் மூளைத் திறனை சோதிக்கும் வகையில் ஐ.க்யூ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் கெளரி பவார் அறிவியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் இவருக்கு 12 வயதே நிரம்பியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற 'பிரிட்டிஷ் மென்சா' ஐ.க்யூ தேர்வில் கலந்து கொண்ட இவர் 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஐன்ஸ்டீன், ஹாக்கிங் பெற்றதை விட 2 மதிப்பெண் கூடுதலாக பெற்றுள்ளார். இதையடுத்து பிரிட்டிஷ் மென்சா குழுவில் ராஜ் கெளரி உறுப்பினராக சேர அழைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜ் கெளரி கூறுகையில்,'தேர்வுக்கு முன்னர் சற்று பதற்றமாக இருந்தது, ஆனால் இப்போது மகிழ்ச்சியாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

பாலிவுட் பக்கம் போனால் பொம்மன் இரானி, பரேஷ் ராவல், ஜானி லீவர் என பட்டாசு கொளுத்தும் கலைஞர்கள், அப்படியே தென்னிந்தியா பக்கம் இறங்கிவந்தால் பிரம்மானந்தம், வடிவேலு, சந்தானம் என பின்னிப் பெடலெடுக்கும் ஸ்டார்கள் - நகைச்சுவைப் பிரியர்களுக்கு இவர்கள் தேவதூதர்கள். இவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உண்டு. இப்போது இவர்களுக்கு அடுத்தத் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது. யூ-டியூப் தான் அந்த இளைஞர் பட்டாளத்தின் ஏரியா. சும்மா இறங்கி இறங்கி அடிக்கிறார்கள். அப்படி யூ-டியூபில் கலக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் சிலரைப் பற்றிய அறிமுகம் இது.

அபிஷ் மாத்யூ:

ஸ்டாண்ட் அப்

யூ-டியூப் உலகின் மிஸ்டர்.சார்மிங். மலையாளம் வாடை வீசும் ஆங்கிலத்தில் பேசும் அபிஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஐ.பி, ஈஸ்ட் இண்டியா கம்பெனி என யூ-டியூப்பின் முன்னணி காமெடி சேனல்கள் அனைத்திலும் அபிஷுக்கு பங்குண்டு. அரசியல், மதம், சினிமா என எதையும் விட்டு வைக்காமல் வெளுத்து வாங்குவதில் கில்லாடி. இதன் காரணமாகவே அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். இவரின் 'சன் ஆஃப் அபிஷ் ஷோ' வெளியான கொஞ்ச நேரத்திலேயே லட்சக்கணக்கான வியூஸ்களை அள்ளும். கேரள நடிகை அர்ச்சனா கவிக்கும் இவருக்கும் கடந்த ஆண்டுதான் டும்டும்டும் நடந்தது.

கண்ணன் கில்:

ஸ்டாண்ட் அப்

இளசுகளின் இதயம் அள்ளும் ஹேண்ட்சம் ஜென்டில்மேன். பெங்களூருதான் பூர்வீகம். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்த கையோடு சாஃப்ட்வேரில் கீபோர்ட் தட்டிக்கொண்டிருந்தவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது ஒரு டேலன்ட் ஹன்ட் ஷோ. அதிலிருந்து முழுநேர காமெடியன் அவதாரம். இவரும் சக காமெடியனான பிஸ்வ கல்யாண் ரத்தும் இணைந்து பிரபல பாலிவுட் படங்களை எல்லாம் ரிவ்யூ செய்கிறோம் என கிழித்துத் தொங்கவிடுவார்கள். அப்பேர்ப்பட்ட கண்ணனின் லேட்டஸ்ட் அவதாரம் - நூர் படத்தின் மூலம் பாலிவுட் என்ட்ரி.

அதிதி மிட்டல்:

stand up

நியூயார்க்கில் கை நிறைய சம்பாதித்துக்கொடுத்த வேலையை விட்டுவிட்டு காமெடிதான் இனி நம்ம ஏரியா என இந்தியா வந்து இறங்கினார் அதிதி மிட்டல். இந்தியாவின் பெண் ஸ்டாண்ட் அப் காமெடியன்களுள் முக்கியமானவர் இவர். பெண்கள் மீதான பொதுப்பார்வை, பெண்கள் பேசத் தயங்கும் விஷயங்கள் போன்றவற்றை போகிறபோக்கில் ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டுப் போவது அதிதியின் ஸ்டைல். ஏ.ஐ.பி நடத்திய சர்ச்சைக்குரிய ரோஸ்ட்டில் ஆண் காமெடியன்களுக்கு நிகராக வி.ஐ.பிக்களை வறுத்தெடுத்தார். இப்போது உலகம் முழுக்க பறந்து பறந்து காமெடி செய்துகொண்டிருக்கிறார்.

பப்பா சி.ஜே:

stand up

இந்தியாவின் சீனியர் மோஸ்ட் சின்சியர் காமெடியன் இவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த கையோடு லண்டனில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அந்த வேலை போரடிக்கவே முழுநேர காமெடியனாகிவிட்டார். பி.பிசி. என்.பி.சி, காமெடி சென்ட்ரல், எம்.டிவி என முன்னணி சேனல்கள் அனைத்திலும் ஷோக்கள் செய்திருக்கிறார். 'இந்தியாவின் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன், ஆசியாவின் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் என எக்கச்சக்க பட்டங்கள் இவர் கைவசம். அண்டார்டிகா தவிர்த்த அனைத்து கண்டங்களிலும் ஷோ செய்து வரும் இவர் ஒரு யோகா நிபுணரும் கூட.

டேனியல் பெர்ணாண்டஸ்:

stand up

பார்ட்டி நகரமான கோவாதான் இந்த இளைஞருக்கு சொந்த ஊர். மற்ற கலைஞர்களைப் போலவே எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலை பிடிக்காமல் முழுநேர காமெடியனானவர். சீரியஸ் விஷயங்களை சிரிப்பு கலந்து சொல்வதில் வித்தகர். பேச்சு சுதந்திரம், தூக்குத் தண்டனை, அதிகரிக்கும் மாணவர்கள் தண்டனை என யாரும் தொடாத தலைப்புகளின் கவனம் செலுத்துவது டேனியலின் ஸ்டைல். காமெடிக்கு இவரின் சேனல் கியாரன்டி.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
பேஸ்பால் பேட் அளவிலான கடற்புழு
  • தொடங்கியவர்

நீங்க ஸ்ட்ரீட் கிரிக்கெட் வெறியனா? அப்போ கண்டிப்பா இதைப் படிங்க

 

சிறு வயதில் நாம் அனைவரும் கிரிக்கெட் விளையாடி இருப்போம். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் ஐ.சி.சி விதிமுறைகளை மிஞ்சும் அளவுக்கு எக்கச் சக்க விதிமுறைகளைப் போட்டு கலாட்டா செய்திருப்போம். அங்கு நடக்கும் அட்ராசிட்டிகளைச் சொல்லவா?

ஸ்ட்ரீட் கிரிக்கெட்

* ஒரு அணிக்கு 11 பேர் என்ற `ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்' எல்லாம் `ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரூல்ஸ்'-ல் இல்லை. ஏரியாவில் விளையாடும்போது மொத்தம் எத்தனைப் பேர் வருவார்கள் என்று சொல்ல முடியாது. விளையாட வருபவர்களைச் சரி பாதியாகப் பிரித்து விளையாடுவதுதான் வழக்கம். இரண்டு பக்கமும் ஆள் எடுத்ததுக்குப் பிறகும் ஒரு நபர் மட்டும் கூடுதலாக இருந்தால், அவனை காமன்மேனாக விளையாட வைக்கும் கலாசாரத்தை நாம்தான் தொடங்கிவைத்தோம். காமன்மேனா இருக்கிறதுல என்ன பிரச்னைன்னா... அவனுக்கு பேட்டிங் மட்டும்தான் கிடைக்கும். பெளலிங் போட பந்தைத் தொடவே முடியாது. மற்றவர்கள் இரக்கப்பட்டால் விக்கெட் கீப்பராகி, பந்தைத் தொடும் பாக்கியம் கிடைக்கும். காமன்மேன் கடைசியாகத்தான் பேட்டிங் பிடிக்க வேண்டுமென்பது எழுதப்படாத `விதி' பாஸ். ஆனால், நான் ரெண்டு டீம்லயும் ஓப்பனிங் பேட்ஸ்மேனா நின்னு போங்கு பண்ணி இருக்கேனே!

* விளையாடவே ஆள் வராதபோது, அம்பயருக்கு எங்கே போறது? பேட்டிங் பிடிக்கும் டீமிலிருந்து யாராவது ஒரு ஆள் அம்பயராக நிற்க வேண்டும். அதற்கும் நம்ம பசங்க ஒரு ட்விஸ்ட் வெச்சாங்க. ஓப்பனிங் பேட்ஸ்மேன்ஸ் யாராவது அவுட்டானால் அடுத்து பேட்டிங் பிடிக்கப்போகும் நபர்தான் அம்பயராக நிற்க வேண்டும். பேட்டிங் பிடிக்க வேண்டுமென்ற நப்பாசையில், அம்பயராக நிற்கும் நம்ம டீம் ஆளே சீக்கிரம் விக்கெட் விழ வேண்டுமென்று எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக்கொண்டிருப்பான். நான்லாம் எல்.பி.டபிள்யூலாம் கொடுப்பேனே! வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கள்களா!

* ஒருவன் பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் சகலகலா வல்லவனாக இருப்பான். அப்படி இருப்பவன் நிலைமை ரொம்பப் பாவம். ஏன்னா... ஓப்பனிங் பேட்ஸ்மேனா கெத்து காட்டிட்டு, பெளலிங் போடவந்தா பெரிய கலவரமே வெடிக்கும். `பேட்டிங் புடிச்சான்ல... ஓப்பனிங் பெளலிங் போடக்கூடாது' என்று நம்ம டீமிலிருந்தே சண்டைக்கு ஆள் கிளம்பி வருவார்கள். நான்லாம்  ஓவருக்கு 12 பால் போட்டிருக்கேனே!

ஸ்ட்ரீட் கிரிக்கெட்

* டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால், ரீ-ப்ளே போட்டுப்பார்த்து அதை அவுட்டா, இல்லையா என்று முடிவுக்கு வருவார்கள். ஆனால் இதெல்லாம் தெருவில் விளையாடும்போது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக ரீ-ப்ளேவை விட மிகக் கொடூரமான `மெத்தட்' ஒன்று இருக்கிறது. அதுதான் `அம்மா சத்தியம்'. பொதுவாக இந்த மாதிரியான க்ளைம், ரன் அவுட்டுகளின் போதுதான் அதிகம் நடக்கும். அது அவுட்டா இல்லையான்னு பேட்ஸ்மேனுக்கு மட்டும்தான் தெரியும். பேட்ஸ்மேன்கிட்டேயே `டேய் அம்மா சத்தியம் பண்ணு, இது அவுட் தானே?' எனக் கேட்டு முடிவை அறிவிக்கும் சாமர்த்தியம் உலகத்துலயே கிடையாது. நான்லாம் அழுதுடுவேனே!

* கிரிக்கெட்டை கிடைக்கும் சந்து பொந்தில் எல்லாம் விளையாடுவோம். அப்படி இடப்பற்றாக்குறையான இடத்தில் விளையாடும்போது `ஒன் பிட்ச் கேட்ச்' என்ற முத்தான ரூல்ஸைக் கொண்டு வருவோம். அதாவது பேட்ஸ்மேன் அடித்துப் பின்னர் அந்தப் பந்தை ஒருமுறை தரையில் குத்தவிட்டுப் பிடித்தாலும் பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்ப வேண்டும். தூக்கி அடிச்சி அவுட் ஆவேனே!

* ஸ்டம்பை வைத்து விளையாடுவதில் சிக்கல் இருக்கிறது. அதனால் சுவரில் கரியால் மூன்று கோட்டை வரைந்து ஸ்டம்ப் உருவாக்கி, விளையாடிக்கொண்டிருப்போம். போல்டாகி விக்கெட் விழுந்தால், `இதோ பார்... பந்துல கரியோட அச்சு இருக்கு. இது அவுட்தான்' என்ற வாக்குவாதங்களெல்லாம் செம ஜாலியாக நடக்கும். நான் எச்சி தொட்டு அழிச்சிடுவேனே!

* விளையாடும் இடத்தைச் சுற்றிலும் வீடுகளாகத்தான் இருக்கும். விளையாடும் சமயத்தில் யாராவது பந்தை வீட்டுக்குள் அடித்துவிட்டால், அவனேதான் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடி பந்தை வாங்கி வர வேண்டும். அப்படி இல்லையென்றால், பேட்ஸ்மேன்தான் புது பந்து வாங்கித் தர வேண்டும். எதற்கும் சரிவரவில்லையென்றால் பந்தை அடிச்சவனை அடுத்த மேட்ச்ல ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிருவாங்க. சும்மா தொங்கிட்டு இருந்த பல்பை உடைச்சிருக்கேனே!

ஸ்ட்ரீட் கிரிக்கெட்

* இந்த அட்ராசிட்டியானது மிக அதிக அளவில் நடக்கும். ஒரு ஓவர் முழுக்க தானே ஆட வேண்டும் என்ற `நல்லெண்ணம்' கொண்ட ஆள், ஐந்து பந்தையும் ஆடி முடித்துவிட்டு கடைசி பந்தில் சிங்கிள்ஸ் அடித்து ஸ்ட்ரைக்கை மாற்றிவிட ஓடி வருவான். ஆனால் நம்ம பசங்கதான் தெளிவாச்சே! `சிங்கிள் வேணாம் மச்சான்'னு சொல்லி நின்றுவிடுவான். அது ஆட்டத்தின் எவ்வளவு முக்கியமான ரன்னாக இருந்தாலும் சரி. நம்ம பய ஒரு இன்ச் நகர மாட்டான். பலவாட்டி பண்ணி இருக்கேனே!

* டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், அப்போது ஒருவரிடமும் ஒரு ரூபாய்கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் எங்கே டாஸ் போடும்போது ஆட்டையைப் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் எடுக்காமல் கள்ள மெளனம் சாதிப்பார்கள் சிலர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த முறை பயன்படுத்தப்படும். கட்டை விரலுக்கும் கைக்கும் நடுவில் ஒரு சிறிய கல்லை வைத்து இன் ஆர் அவுட் என்று கேட்பதும், சிறிய கல்லில் எச்சில் துப்பி டாஸ் போடுவது தமிழ்நாட்டு கலாசாரம். ஆட்டையப் போட்டிருக்கேனே!

 

* காலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மாலையானால்தான் ஓயும். அப்படித் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களாவது நடக்கும். அதனால் யார் முதலில் பேட்டிங் பிடிப்பது என்ற கேள்வி வரும். அதைச் சரி செய்யும் வகையில்தான் இந்த ரூல். ஒரு மேட்ச் மட்டும் டாஸ் போட்டு முடிவு செய்துவிட்டு, அதற்குப் பின்வரும் ஆட்டத்தில் முந்தைய மேட்சில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் அடுத்த மேட்சில் முதலில் பேட்டிங் பிடிக்கத் தகுதியானவர்கள். இதற்காகவே ஜெயித்தாக வேண்டுமென்று உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள். ஆடி இருக்கேனே!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகப் போர்களை அறிந்துள்ளீர்களா?

 
 
 
ilamai_3161212f.jpg
 
 
 

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டுப் போரோ ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினால் இரின் (IRIN)அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேருதவியாக இருக்கும். உலகின் மூலை முடுக்குகளில் நடைபெற்றுவரும் மோதல்களையும் அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது.

உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும் சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடகச் செய்திகளால் இந்தப் போர்கள் தொடர்பான செய்தியும் அவற்றின் பாதிப்புகளும் உலகின் பார்வைக்குத் தெரியவருகின்றன. ஆனால், மீடியாவின் கவனத்திலிருந்து விலகிய நிலையில் உலகின் பல பகுதிகளில் உள்நாட்டுப் போர்களும் ஆயுத மோதல்களும் நடைபெற்றுக்கொண்டிருகின்றன என்பது வேதனையான நிஜம்.

இவற்றில் பெரும்பாலான மோதல்கள் பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன என்பது இந்த வேதனையை இன்னும் தீவிரமாக்கக் கூடியது. இப்படி உலகம் மறந்த மோதல்களையும் இந்த வரைபடம் அடையாளம் காட்டுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதநேய நோக்கிலான உதவிகளை வழங்கிவரும் சேவை அமைப்பான இரின், உலகம் மறந்துவிட்ட மோதல்கள் குறித்துக் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது. ஆழமான தகவல்களைக் கொண்டுள்ள இந்தத் தொடர் வரிசையில் தற்போது உலகை உலுக்கும் மோதல்களைச் சுட்டிக்காட்டும் இணைய வரைபடத்தை இரின் அமைப்பு உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் மோதல் அல்லது போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிவப்புப் புள்ளியால் கவனத்தை ஈர்க்கின்றன. மோதல் நடைபெறும் இடத்தை இந்தச் சிவப்புப் புள்ளி குறிக்கிறது. மோதல் எவ்வளவு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை புள்ளியின் அளவு குறிக்கிறது. சில இடங்களில் சிவப்புப் புள்ளி சற்றுப் பெரிதாக இருப்பதைப் பார்க்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஆண்டுக்கணக்கில் மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு புள்ளியையும் கிளிக் செய்வதவுடன் மோதல் தொடர்பான மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மோதலுக்கான காரணம், எவ்வளவு காலமாக நடைபெறுகிறது, மோதலின் தற்போதைய நிலை ஆகியவை தனியே பெட்டிச் செய்தியாகத் தோன்றுகின்றன.

தெற்கு சூடானின் எல்லைப் பகுதியில் புளு நைல் எனும் மோதல் கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போர் மூன்றாவது சூடான் உள்நாட்டுப் போர் என்றும் அழைக்கப்படுகிறது. தெற்கு சூடான் தனி நாடாக உருவாக வழிவகுத்த இந்தப் போர் முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதலால் மக்கள் கடும் நெருக்கடிக்கு இலக்காகிவருவதாகவும், பசி பட்டினி என அவதிப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்காவில் மட்டும் ஒரே சிவப்பு வட்டங்களாகக் காட்சி அளிக்கிறது. அந்த அளவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் மோதல்கள் நிகழ்கின்றன. மேற்காசியா, ஆசியா, பசுபிக் பிராந்திய பகுதிகளிலும் அதிக மோதல்களைக் காண முடிகிறது. இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திவரும் மோதலும் காஷ்மீர் பிரச்சினையும் இந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வட கொரியா, தென் கொரியா இடையிலான மோதல், யுக்ரைன் பிரச்சினை என இந்த மோதல்கள் விரிகின்றன.

இந்த வரைபடம் மூலம் உலக மோதல்களை ஒரு பறவைப் பார்வையாக அறிந்துகொள்ளலாம். ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மறக்கப்பட்ட மோதல்கள் பிரிவில் உள்ள கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம். இந்தக் கட்டுரைகள் உலகம் மறந்த மோதல்கள் தொடர்பான விரிவான தகவல்களை அளிக்கின்றன. பல்வேறு சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸ், தெற்கு தாய்லாந்து , மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரிக்கும் தனிக் கட்டுரைகளும் இருக்கின்றன.

உலக மோதல்கள் பற்றி அறிய: http://www.irinnews.org/in-depth/forgotten-conflicts

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

07.05.1814: திராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் இன்று!

 

 
robert_caldwell

 

ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார்.

அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது. பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் 

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

அதிநவீன சொகுசு ரயில் சேவையை ஆரம்பித்தது ஜப்பான் (Photos)


அதிநவீன சொகுசு ரயில் சேவையை ஆரம்பித்தது ஜப்பான் (Photos)பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ”ஷிகி ஷிமா” என்ற சொகுசு ரயில் சேவையை ஜப்பான் நேற்று ஆரம்பித்தது.

ஜப்பானின் இந்த ஷிகி ஷிமா ரயில், உலகின் சொகுசு ரயில் என அழைக்கப்படுகிறது.

ரயில்வே துறையில் உலகளவில் முன்னிலையில் விளங்கும் ஜப்பானின் புல்லட் ரயில் உலகப்புகழ் பெற்றவை.

இந்நிலையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஷிகி ஷிமா ரயில் சேவையை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது.

10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து வட கிழக்கு தீவு நகரான ஹோக்கைடோ வரை இயக்கப்படுகிறது.

மரக்கட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறைகள், சொகுசு சோபாக்கள் போன்ற பல்வேறு வசதிகள் அடங்கிய இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என ஜப்பான் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை பயணம் செய்ய 34 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்த ரயிலில் 2 பெரிய அறைகள் உட்பட மொத்தம் 17 அறைகள் உள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் பணிப்பெண்கள் பணி புரிகின்றனர்.

பியானோ இசைக்கருவி இசைக்கும் வசதியும் இதில் உள்ளது.

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணம் ஒரு நபருக்கு 8,500 டொலர்கள் ஆகும்.

விலை அதிகமாக இருந்தாலும் 2018 மார்ச் வரை ஏற்கனவே முன்பதிவும் முடிந்து விட்டது.

இந்த ரயில், ஜப்பானின் மற்ற ரயில்களைப் போல வேகமாக செல்லாமல், மணிக்கு 110 கிலோமீட்டர் என்ற குறைந்த வேகத்திலேயே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

7c4b9184c95efa92b21a13714ef53bb0243a6ad7

68e87a3f63b245ecbd1000d9fb2635d01b99997a

82c29baffda3dc647fa91eaaf47e3df7918c18eb

 

c7bd46479a51ffa7ef1c058ba3a88415651fcfc4

e441696ba51225d0bdb3d2a8c5f82a521f5357dd

b758c26618efb11af501524724fe17e4d243f1e5

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person, Text
மே: 07 - பிராணம் குருதேவ்- தாகூர் எனும் தலைமகன் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

கவியரசர் தாகூரின் பிறந்த தினம் இன்று. வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார் ;அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின .நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார் ;அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார் .வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர் கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார் ;இயற்கையான சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார் .

அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;நல்ல ஓவியர்,நாவலாசிரியர்,சிறுகதை வல்லுநர்,நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே . என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக

உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும்,
ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழட்டும்
என் தேசம் !

****************
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட....ந்

  • தொடங்கியவர்

திராவிட மொழிகளுக்கு பெருங்கொடையளித்த பிதாமகன்! கால்டுவெல் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

 
 

கால்டுவெல்

வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்த அந்தப் பெருமகனாரின் 203-வது பிறந்த தினம் இன்று.

இளமைக்காலம்!

1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். இளமையிலேயே தரமான கல்வியை அளிக்க அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன் காரணமாகத் தங்களது தாயகமான தாய்லாந்துக்கு கால்டுவெல்லை அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆர்வத்தின் காரணமாக இளமையிலேயே ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்று விளங்கினார். அதோடு ஓவியக்கலையையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர், சமய நூல்களையும், மொழியியல் நூல்களையும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினார். கிரேக்க மொழியில் தொடங்கிய அவரது ஆர்வம் தமிழின் மீது தணியாத காதலை ஏற்படுத்திக்கொண்டது. 

தமிழின் மீதுகொண்ட காதல்!

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில்... பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக நூல்கள் சொல்கின்றன. வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு  மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்தை வடிவமைத்துக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளைக் கண்டறிந்தார்.  

அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலை எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் கால்டுவெல்

ஆய்வியலும்... கட்டுரைகளும்! 

சிங்கள இலக்கிய நூலான 'மகாவம்சம்' என்ற நூலின் துணைக்கொண்டு தமிழ் - ஈழ உறவுகளையும் ஆய்வு செய்துள்ளார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 

மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

"தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அன்பு!

தமிழோடு மட்டும் அவருடைய உறவு முடிந்துவிடவில்லை. தமிழ் மக்கள் மீதான அன்பும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் நெஞ்சில் பாய்ந்தோடியது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலக் கல்வி படித்துவிட்டு உயர்சாதி பிரிவினிரிடம் பணியாற்றலாம் என்ற காலகட்டம் அப்போது இருந்தது. ஆனால், கால்டுவெல் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் பணியாற்றவே விரும்பினார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வியறிவு பெறச் செய்வதற்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

''சமஸ்கிருதம்தான் மொழிக்கான தலைமையானது'' என்று வட மொழி ஆசிரியர்கள் பலரும் கர்ஜித்துவந்த நிலையில், ''காலம் காலமாகத் திராவிடர்கள் (தமிழர்கள்) பேசிவந்த மொழியே தமிழ்மொழி. அந்தமொழி மிகவும் தொன்மையானது'' என்று ஆய்வுகளின்படி வெளியிட்டார். இப்படித் தமிழுக்கும், திராவிடத்துக்குமான நெருங்கிய பந்தத்தை மிக அழகாக உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமகனார் கால்டுவெல்.

கால்டுவெல்

மதமும் மொழியும் தடை இல்லை!

செயற்கரிய காரியங்களைச் செய்யவும் பிற உயிர்களை நேசிக்கவும் மதமும் மொழியும் அவசியம் இல்லை என்பதை உணர்த்தியவர். எந்த மொழியும் நம் மொழியே எந்த மனிதரும் நமது உறவே என்ற தொடர்பை ஏற்படுத்தியவர் அந்தத் தமிழ்மகன். தமிழ்மொழியோடு சுவாசம் கொண்டிருந்த அவர், கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 1891-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி இயற்கை எழுதினார். 

 

தான் சார்ந்த மொழிகளை முழுமையாக அறியாதவர்களுக்கு மத்தியில் அறிந்துகொள்வதற்கும்,தெரிந்துகொள்வதற்கும் ஆர்வம் மட்டுமே அடி நாதம். அந்த நாதமானது எத்தனை  கடினப் பயணங்களையும், சரியான பாதைகளாக மாற்றும் என்பதில் உறுதிகொண்டவர் கால்டுவெல். அவருடைய அந்த உறுதிதான் மொழியியல் ஆய்வுக்கு துணையாக அமைந்தது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

செய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்... இது ஜப்பானில்!

 
 

செய்தித்தாள் செடி

ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பங்கள் சிறந்தவை மற்றும் துல்லியமானவை என்பதை உலகம் அறியும்.  காகிதத்திலும் சற்று வித்தியாசமான தொழில்நுட்பம் ஒன்றை முயற்சித்திருக்கிறார்கள். ஜப்பானியர்களுக்கு காகிதத்தின் மீது உள்ள  காதலை உணர்த்த ஒரிகாமி ஒன்று போதும். இருந்தாலும் அது செயற்கையானதுதானே என்று நினைத்திருப்பார்கள் போல. அதனால் காகிதத்தை உயிர்த்தெழ வைத்துவிட்டார்கள் அந்த காகிதக் காதலர்கள்.

ஜப்பானின் தினசரி நாளிதழ் தி மைனிச்சி (The mainichi). இது ஜப்பானின்  மிகப்பெரிய,அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் நிறுவனங்களில் ஒன்று.

இந்த மைனிச்சி நிறுவனம் தனது செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான காகிதத்தை சென்ற ஆண்டு தயாரித்தது. இந்தச் செய்தித்தாள்கள் மண்ணில் விழுந்த சில நாட்களில் அதில் இருந்து சிறிய தாவரங்கள் வளரத் துவங்கும். செய்தித்தாளை படித்து முடித்த பின்பு மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் சிறிய செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிடும்.

முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால்  தயாரிக்கப்படும் இந்த செய்தித்தாளில்  மலர்ச்செடிகளின் விதைகள் உட்பட பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலமாக கலந்து தயாரிக்கப்பட்டு பின்பு அச்சிற்கு செல்கிறது.

மைகளில் உள்ள ரசாயனங்களால் கூட செடிகளின் வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாயங்களை கொண்டே செய்தித்தாள் அச்சிடப்படுகிறது.காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறு சுற்றுச்சூழலையும் மாசு படுத்தாமலிருப்பதோடு மட்டுமின்றி செடிகள் வளர இயற்கை உரமாகவும் பயன்படுகின்றது இதனால் செடிகளும் செழித்து வளர்கின்றன.

ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்காக  அச்சடிக்கப்படும் இந்த நாளிதழ்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மறுசுழற்சியின் அவசியத்தையும்,இயற்கை வளத்தை காப்பது பற்றியும்,மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்தவும் பயன்படுகின்றன.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளிதழ்களை ஆர்வத்தோடு படிப்பதோடு மட்டுமில்லாமல் அதன் பின்பு நாளிதழை மண்ணில் வைத்து செடிகளாக மாற்றுகின்றனர்.இந்த புதிய முயற்சியின் மூலமாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மேம்படுவதோடு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது.

ஜப்பான்

இப்படி அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள் ஒரு நாளில் 4 மில்லியன் பிரதிகள் விற்றதோடு மட்டுமில்லாமல் $700,000 டாலர்கள் வருமானத்தையும் மைனிச்சி நிறுவனம் பெற்றது.

காலையில் தினசரி நாளிதழில் தொடங்கும் காகிதப் பயன்பாடு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு வகையில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது,காகிதம் என்றாலும் அது மக்குவதற்கு 2 வாரத்திற்கு மேல் ஆகும் மறுசுழற்சி செய்வது எளிது என்றாலும் அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இதுபோன்ற தொழில்நுட்பங்கள் குறைக்கலாம்.

ஜப்பானியர்களின் இந்த தொழில்நுட்பம் காகிதம் மக்கும் காலத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரிகாமி கொக்குகள் செய்வது  அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இனிமேல் ஒரிகாமி கொக்குகள் செய்யும்போது அவைகள் பறக்க சிறிய  காட்டையும் உருவாக்கிவிடுவார்கள் ஜப்பானியர்கள்.

டெக்னாலஜியை இப்படி சுற்றுசூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாமல் மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பயன்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி.

க்ரீன் நியூஸ்பேப்பர் பற்றிய வீடியோ

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹைவேஸில் படகு!
8a.jpg
ஃப்ளோரிடாவின் ஹைவேஸ் சாலையில் உச்சவேகத்தில் சென்ற கார் ஆச்சரியமில்லை. காரில் ‘டோ’ செய்திருந்த படகுதான் மேட்டர். சாய்வாக நிறுத்தி டோ செய்திருந்த படகுக்கு வீல்போல அதன் வெய்ட்டைத் தாங்கி நின்றது பிளாட்பார பலகைக்கல். ஆத்தாடி எவ்வளவு பெரிய மூளைக்காரய்ங்க!

பிளாஸ்டிக் ஜீன்ஸ்!

இங்கிலாந்தின் டாப்ஷாப் நிறுவனத்தின் கோக்குமாக்கு தயாரிப்பே கிளியர் பிளாஸ்டிக் ஜீன்ஸ். 100 டாலருக்கு விற்பனையாகும் பிளாஸ்டிக் ஜீன்ஸ் பற்றி, வியர்வை சொட்டுகிறது, அருவருப்பு தருகிறது என மானாவாரியான கமெண்டுகள் வந்தாலும், மாத்தி யோசிங்க மக்களே என்று ஸ்ட்ராங்காக சொல்லிவிட்டது ஜீன்ஸ் கம்பெனி.

வனமகனின் கூரை ஜம்ப்!

ஊருக்கு முன்னே வனமகன் சரி, ஆனால் சிறுத்தைக்கு முன்னே? ஒடிஷாவின் கண்டபாஞ்சி வனப்பகுதியின் ரேஞ்சர்தான் அந்த வனமகன். வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக்கு பயந்து பீதியில் பயமகனாகி ஓட்டைப் பிரித்துக்கொண்டு தெருவில் குதித்து ஓடியது ஐயகோ மொமண்ட். 12 மணிநேரம் ட்ரை செய்து சிறுத்தையை வலைவீசி கேட்ச் பிடித்துவிட்டார்களாம்.

  • தொடங்கியவர்

போகிற போக்கில்: ஓவியமே அடையாளம்

 
Desktop_3161814f.jpg
 
 
 

குடும்பம், அலுவலகம் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது சவால் நிறைந்தது. இந்த இரண்டையும் சமாளித்துக்கொண்டு, தன் மனதுக்குப் பிடித்த ஓவியத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியிருக்கிறார் ரேவதி ராதாகிருஷ்ணன்.

Desktop2_3161812a.jpg

சென்னையைச் சேர்ந்த ரேவதிக்குத் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை. “சின்ன வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஓவியம் வரைய நேரம் கிடைப்பதே இல்லை. வீடு, விட்டால் அலுவலகம், அலுவலகம் முடிந்தால் வீடு என்று நாட்கள் நகர்ந்தன. அப்போதுதான் எனக்கான ஒரு தனித்த அடையாளம் வேண்டும் என நினைத்தேன். விடுமுறை நாட்களில் ஓவியம் வரையத் தொடங்கினேன். பொதுவாக பென்சில், பேனாவில் தான் ஓவியம் வரைவேன்” என்று சொல்லும் ரேவதிக்கு ஓவியர்கள் பலர் குழுவாக இணைந்து செயல்படும் ‘சென்னை வார இறுதிக் குழுவின்’ தொடர்பு கிடைத்தது.

Desktop1_3161813a.jpg

அவர்களுடன் இணைந்து வாட்டர் கலர் மூலம் ஓவியம் வரைய மூன்று ஆண்டுகள் பயிற்சியெடுத்தார். பின்னர், வார இறுதி நாட்களில் பொது வான இடங்களில் சந்தித்து, குழுவுடன் சேர்ந்து ஓவியம் வரையத் தொடங்கினார். ரேவதியின் ஓவியங்கள் பெரும்பாலும் கடற்கரையின் அழகையும் கிராமப்புற எளிமையையும் இயற்கையின் அதிசயத்தையும் வண்ணமயமாக வெளிப்படுத்துகின்றன.

 

“குடும்பம், அலுவலகம் என்று இருந்த என் வாழ்வில் தற்போது ஓவியமும் ஒரு அங்கமாகிவிட்டது. ஓவியம் வரைவது எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனிவரும் நாட்களில் அக்ரிலிக் ஓவியங்கள் வரையக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் நிறைவான குரலில்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 08
 
 

article_1431000835-CocaCola.jpg1886: அமெரிக்க மருந்தகவியலாளர் ஜோன் ஸ்டெய்த் பெம்பேர்ட்டன் என்பவர் காபன் கலந்த பானமொன்றை கொகாகோலா என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

1927: முதல் தடவையாக பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு இடைநிறுத்தப்படாத விமானப் பறப்பை மேற்கொள்ள முயன்ற சார்ள்ஸ் நங்கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர்  காணாமல் போயினர்.

1933: இந்தியாவில் மகாத்மா காந்தி 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1980: சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

1945: ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார்.

1984: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது.

2007: புதிய வடஅயர்லாந்து உயர்சபை அமைக்கப்பட்டது.

www.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘திக் திக் திங்களை‘ வரவேற்போம் - #MondayBlues #MondayMotivation

 
 
 

#MondayBlues

திங்கள்கிழமையைப் பற்றிக் குறிப்பிடும்போது இன்றைய இளைஞர்கள் 'திக் திக் திங்கள்' என்றே சமூக ஊடகங்களில் குறிப்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமை மாலையில் என்ன மனநிலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பினீர்களோ, அதே மனநிலையில் திங்கள்கிழமை காலையில் இருக்க முடியாதுதான். ஆனால், திங்கள் அப்படியொன்றும் பயப்படவேண்டிய நாள் அல்ல. காரணம், ஆயிரக்கணக்கான திங்கள்கிழமைகளைக் கடந்துதான் இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் வந்திருப்பீர்கள். வேலை நாள்களில் முதல் நாளாக வரும் திங்களை நினைத்தால் வரும் சோர்வு மனநிலைக்கு 'மண்டே ப்ளூஸ்' என்று பெயர்.  இந்த 'மண்டே ப்ளூஸ்' #MondayBlues  மனநிலையை ரொம்ப ஈஸியாகக் கடப்பதற்கு சில டிப்ஸ்...

பாயின்ட் நம்பர் 1: "என்னது இன்றைக்குத் திங்களா? மறுபடியும் மொதயிருந்தா..." என உங்கள் மைண்ட்வாய்ஸ் வடிவேல் குரலில் அலறுகிறதா? கடந்த இரண்டு நாள்களாக நீங்கள் ஓய்வில் இருந்துள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இந்த மைண்ட்வாய்ஸ் எப்போதாவது ஒருமுறை கேட்டால் பரவாயில்லை; ஒவ்வொரு திங்களும் கேட்கத் தொடங்கினால் பிரச்னை திங்களில் அல்ல, உங்களிடம்தான். முதலில் உங்களுக்குப் பிடித்த வேலையை,உங்களுக்கு எது தெரியுமோ அந்த வேலையைச் செய்யத் தொடங்குங்கள். தேவையற்ற கமிட்மென்ட்டோ அல்லது சம்பந்தமே இல்லாத வேலையில் உள்ளவர்களுக்குத்தான் இப்படியான வெறுப்பு, திங்களை நினைத்து வரும். 

பாயின்ட் நம்பர் 2: உங்கள் அலுவலகம் உங்களுக்கு ஏற்றபடி இருக்கிறதா என யோசித்துக்கொள்ளுங்கள். உடன் பணியாற்றும் நபரை எதிர்கொள்வதோ அல்லது உங்கள் மேலதிகாரியை எதிர்கொள்வதோ சிக்கலாக இருந்தால், இந்த மனநிலை உருவாகிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. 

பாயின்ட் நம்பர் 3: வெள்ளி மதியத்தில் திங்களுக்கான டாஸ்கில் ஏதாவது ஒன்றை முடித்து வைத்துவிடுங்கள்.  வார இறுதியில் கொண்டாட்டத்துக்குத் தயாராவதைவிட முன்கூட்டியே திங்களுக்குத் தயாராகிவிடுவது சிறப்பு. திங்கள்கிழமை வேலையை வெள்ளிக்கிழமை அன்றே முடித்து வைத்துவிடுவது ஸ்மைலியுடன் அடுத்த வாரத்தைத் தொடங்க உதவும். 


பாயின்ட் நம்பர் 4: அடுத்த வாரம் செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான, உங்கள் மனம் விரும்பும் மூன்று டாஸ்குகளை திங்கள் அன்று செய்வதற்கு எனத்  தேர்வுசெய்யுங்கள். காலை அலுவலகம் சென்றவுடன் செய்ய மனதுக்குப் பிடித்தமான வேலைகள் இருப்பது #MondayBlues-ஐ வெல்ல சரியான வழி.  அதேபோல பிடித்தமான வேலை அந்தப் பட்டியலில் ஒன்றுகூட இல்லையா? அப்படியெனில்,  உடனடியாக வேறு வேலை தேடும் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அவர்களாக அனுப்பும் முன் வேலை தேடிக்கொள்வது நல்லது. 

பாயின்ட் நம்பர் 5: சிரிப்பும் இசையும்போல் செம டானிக் தரும் விஷயம் எதுவும் இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவின்படி, திங்கள் அன்று  ஒவ்வொரு பணியாளரும் தங்களின் முதல் சிரிப்பை 11 மணிக்குத்தான் வெளிப்படுத்துகின்றனராம். சிரிப்பைப்போல் மனதை ரிலாக்ஸ் செய்யும் மாமருந்து எதுவுமே இல்லை. உடன் வேலை செய்பவர்களைப் பார்த்து நாம் சிந்தும் ஒரு புன்னகை, அவருக்கும் நமக்கும் டானிக். காலையில் எழுந்தவுடனே மியூசிக் சேனலை ஒலிக்கவிடுங்கள். பயணத்தின்போதும் அலுவலகத்திலும் காதுகளில் ஹெட்போன் ஒலிக்கட்டும்.

“ ‘பிரெஞ்ச் டைம்' எனச் சொல்லப்படும் 11 மணி வாக்கில் ஒரு டம்ளர் மோர் அல்லது லஸ்ஸி உங்களின் ஒட்டுமொத்த மூடையும் மாற்றும் தன்மை படைத்தது” என்கின்றனர் பயோலாஜிஸ்ட்கள். 

 

வாரம் முழுக்க வெல்ல வாழ்த்துகள்

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பார்ட் 2

 

யூ-டியூப் பக்கம் இறங்கியடிக்கும் ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் சிலரைப் பற்றி முன்பே பார்த்தோம். இவர்களின் லிஸ்ட் நீளம் என்பதால் அதன் அடுத்த பகுதிதான் இது. கேலி, கொஞ்சம் கருத்து நிறைய கலாய் எனக் கலக்கும் அந்த விகடகவிகளைப் பற்றி பார்ப்போமா மக்களே?

பிஸ்வ கல்யாண் ரத்:

காமெடி

ஐ.ஐ.டியில் பயோடெக்னாலஜி படித்த மூளைக்கார இளைஞர். முடித்துவிட்டு ஆரக்கிள் நிறுவனத்தில் கணினி முன் தவம் செய்துகொண்டிருந்தார். பின்னர் கண்ணன் கில்லி அறிமுகம் கிடைக்க, இருவரும் சேர்ந்து ஹிட்டான பாலிவுட் படங்களை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். அதில் கிடைத்த ரீச் இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. அதன் பின் சோலோவாக கொஞ்ச நாள் காமெடி செய்தவர் இப்போது ஆல் இந்தியா டூரில் செம பிஸி.

கென்னி செபாஸ்டியன்:

காமெடி

மொழுமொழு அமுல்பேபி. பார்க்க பாப்கார்னை பறிகொடுத்த பாப்பா போல இருப்பது இவரின் பிளஸ். பெங்களூருதான் பூர்வீகம். இயக்குநராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. சில குறும்படங்களை இயக்கிய பின் முழுநேர ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆனார். நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை காமெடி கலந்து சொல்வதில் ஆள் கில்லி. அதனாலேயே இளசுகளின் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் கென்னிக்கு முக்கிய இடம் இருக்கிறது.

நீத்தி பால்டா:

comedy

அந்த ஊர் கோவை சரளா. ஸ்ட்ரிக்டான ஆர்மி ஆபிஸரின் மகள். விளம்பரத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு இருந்தவர். வேலை போரடிக்கவே பட்டென விட்டுவிட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டார். சின்ன சின்ன பப்களில் காமெடி செய்யத் தொடங்கிய இவருக்கு இன்று இந்தியா தாண்டியும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கூட்டம் அள்ளினாலும் அசராமல் என் பணி காமெடி செய்து கிடப்பதே என விலா எலும்புகளை நோகடிக்கும் காமெடி ராணி

ஜாகீர் கான்:

comedy

மிடில் க்ளாஸ் சாமானியன். படிப்பில் விருப்பம் இல்லாத ட்ராப் அவுட். 2012-ல் காமெடி சென்ட்ரல் நடத்திய டேலன்ட் ஷோவில் இந்தியாவின் பெஸ் காமெடியன் விருதை வென்றார். அப்போது தொடங்கியது சுக்ரதிசை. மற்றவர்கள் நிறைய ஆங்கிலம் கொஞ்சம் இந்தி என பேசினால் இவர் நிறைய இந்தி கொஞ்சம் ஆங்கிலம் என வெரைட்டி காட்டுவார். ஜாகீர் சிறந்த தொகுப்பாளரம் கூட.

வீர் தாஸ்:

comedy

 

பிறந்தது டேராடூனில், வளர்ந்தது ஆப்ரிக்காவில். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுவிட்டு நாடகக் கலைஞரானவர். அதன்பின் காமெடி பக்கம் கவனத்தைத் திருப்பினார். யூ-டியூப்பிற்கு எல்லாம் முன்னால் இவர் கோலோச்சியது டிவியில்தான். பல சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அடுத்து யூ-டியூப் பக்கம் வந்தவர் இப்போது நெட்ப்ளிக்ஸிலும் கால் பதித்து கலக்கி வருகிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அகதிகளின் ஓர் இரவு - துல்கர் படம் நினைவூட்டிய ஒரு கதை

 
 

CIA

 வறண்ட பாலைவனக் காடு. உங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது. உங்களோடு பயணிப்பவர் குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எதுவும் புரியாது. கையில் இருக்கும் ஒரு கேன் தண்ணீரும் தீரும் நிலையில்... பகலில் அந்த வெப்பம் உங்கள் தோலை உரித்தெடுக்கும். இரவில் அந்தப் பாலைவனக் குளிர், உங்கள் எலும்புகளை உறையவைக்கும். உடலும் மனமும் மரத்துப் போயிருக்கும். உணர்வுகள் செயலிழந்துப் போயிருக்கும். உணர்ச்சிகள் செத்துப் போயிருக்கும். ஆனாலும், எப்படியாவது வாழ்ந்திட வேண்டும் என்ற  நம்பிக்கையில் தான் இந்தப் பயணம். ஒன்று வாழ்வு, அல்லது சாவு. மலைகள், காடுகள், ஆறுகள், பாலைவனம், துப்பாக்கி, பாம்புகள், விஷப் பூச்சிகள், தாகம், பசி என இன்னும் இன்னும் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்தால்... கடந்து உயிர் பிழைத்திருந்தால்... உங்களுக்கு வாழ வழி கிடைக்கலாம். அகதியின் ஒரு நிமிடம் இப்படித்தான் இருக்கும். எல்லாம் இருக்கும் நமக்கு இந்த வலியை உணர்ந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். அகதியாக இருப்பதென்பது நூறு மடங்கு வலி மிகுந்தது.

இதுவரை இந்திய சினிமாவில் காட்டப்படாத ஓர் பயண வழியை, அதன் வலியை காட்டியிருக்கிறது துல்கர் சல்மான் நடிப்பில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'காம்ரேட் இன் அமெரிக்கா' திரைப்படம். மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்ஸிகோ வழியாக உயிரைப் பணையம் வைத்து புலம்பெயரும் மனிதர்களின் பயணத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. தமிழ் சினிமாவில்கூட இதுவரை காட்டப்படாத விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் போட்டாவை இதில் காட்டியிருக்கிறார்கள். படத்தின் விமர்சனத்துக்குள்ளோ, அதன் கமர்ஷியல் அமசங்களுக்குள்ளோ நான் போகவில்லை. அந்தப் படத்தின் களம், படித்த சில பழைய கதைகளை நினைவூட்டியது. அதைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். 

CIA_22_02364.jpg

மெக்ஸிகோ நாட்டின் கணக்குப்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானாவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் குடியேற முயல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்திய அமெரிக்க நாடுகளான கெளதமாலா, ஹண்டுராஸ், எல் சால்வேடார், நிக்காருகுவா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் கடக்கும் அந்தப் பாதையை ஸ்பானிய மொழியில், 'எல் கமினோ டெல் டியாப்லோ' என்று சொல்கிறார்கள். அதாவது, 'சாத்தான் நெடுஞ்சாலை' (Devils Highway).  பல நூறு ஆண்டுகளாகவே இந்தப் பாதைக்கு இந்தப் பெயர்தான் . ஒரு காலத்தில் சிவப்பிந்தியர்கள் இந்த வழியைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்து, விரிந்திருக்கும் பாலைவனக் காடு. சாலை வழியாக அமெரிக்காவுக்குள் குடியேற நினைப்பவர்கள், இந்த வழியில்தான் சென்றாக வேண்டும். 

மெக்ஸிகோவில் 'எல் அல்பெர்டோ' என்றொரு சிறிய டவுன் இருக்கிறது. இதை 'அகதிகளின் ஊர்' என்று சொல்வார்கள். அந்தளவுக்கு அகதிகளால் நிறைந்த ஊர் இது. இங்கிருப்பவர்கள் அனைவருக்குமே 'அமெரிக்கக் கனவு' உண்டு. சில ஆண்டுகளுக்கு  முன்னர், இந்த ஊரில் இருந்தவர்களில் 90 சதவிகிதத்துக்கு அதிகமானோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். வயதான தாத்தா, பாட்டிகள் மட்டுமே இருந்தனர். பின்னர், அமெரிக்காவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள், தங்களின் 'அமெரிக்க கனவு' மீது நம்பிக்கை இழந்தோர் போன்றோர், எல் அல்பெர்டோவுக்கு மீள் குடியேற்றம் செய்ய ஆரம்பித்தனர்.

வாழ்வோ, சாவோ அதை நம் சொந்த மண்ணிலேயே செய்துவிட்டுப் போகலாம். அடையாளங்களை இழந்து ஏதுமற்றவர்களான அகதிகளாக நிற்பதைக் காட்டிலும், சொந்த மண்ணில் இருக்கும் வாய்ப்புகளைக்கொண்டு வாழலாம் என்ற எண்ணம், அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்களை ஒன்றிணைத்தது. தங்கள் ஊரைப் புனரமைக்கத் தொடங்கினர்.

இதையெல்லாம் கடந்து இந்த ஊர் அதிகம் புகழ்பெற்றதற்குக் காரணம், அகதிகள் வலி சொல்லும் ஒரு விளையாட்டை இவர்கள் உருவாக்கியதுதான். கடந்த 2012-ம் ஆண்டு 'ஈகோ அல்பெர்டோ' என்ற பூங்காவை ஆரம்பித்தார்கள். இங்கு 'நைட் வாக்' என்று ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது, எல்லைகளைத் தாண்டும் அகதிகளின் ஓர் இரவு எப்படி இருக்கும் என்பதை நேரடியாக அனுபவிக்கலாம்.

CIA_1_02283.jpg

இரவு 9 மணிக்கு இது தொடங்கும். கும்பலான ஒரு வேனில் ஏற்றப்படுவார்கள். பாலைவனக் காட்டில் கொஞ்ச நேரம் நடப்பார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், எல்லையோரப் பாதுகாப்பு படைகள், திருடர்கள் என பல விஷயங்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என விளையாட்டாக இதில் உணர முடியும். இரவு 9 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயணம், காலை 5 மணி வரை நடக்கும். 

அகதிகளை கேவலப்படுத்துகிறார்கள், நாடு கடக்க மறைமுகப் பயிற்சிகளை வழங்குகிறார்கள் என இந்த ஊர் மக்களுக்கு பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும்கூட 'அகதிகளின் வலியை' உணர்த்தவே தாங்கள் இதை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். 

அதேபோல, 'பீஸ்ட்' என்றொரு ரயிலின் கதை மிகவும் வேதனை மிகுந்தது. மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் சரக்கு ரயிலான இதில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் அகதிகள் தொங்கிக்கொண்டுப் போவார்கள். இந்த ஆபத்தான பயணங்களில் இதுவரை பல ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். ஆனாலும், வாழ்வதற்கு இறுதியாக இருக்கும் இந்த ஒரு வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என ஒவ்வொரு நாளும் தாங்கள் பிறந்து, வளர்ந்த, தங்கள் வேர்கள் படர்ந்திருக்கும் சொந்த நிலங்களைவிட்டு இந்த நொடிகூட எத்தனையோ கால்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விவசாயத்திற்கு உதவும் அமெரிக்க ரோபோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.