Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை தொடர்ந்த நாள்: மே 9- 1502

 

கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர். * 1942 - இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள்

 
கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை தொடர்ந்த நாள்: மே 9- 1502
 
கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்
 
* 1942 - இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
 
சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய ராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க ராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நார்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நார்வேயில் கைது செய்யப்பட்டார்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் பிராக் நகரை அடைந்தன.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
 
* 1955 - பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.
 
* 1956 - உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
 
* 1980 - புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்தது. இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1985 - காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

* 1987 - போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1988 - கன்பராவில் ஆஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
 
* 2002 - ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 2004 - செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
 
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மென்பொருள்

  • தொடங்கியவர்

இந்தியரின் காரில் செல்ஃப் டிரைவிங்கில் பிரிட்டன் ராணி!

 

பிரிட்டன் நிறுவனத் தயாரிப்பு கார்களை இந்தியர்கள் விரும்பி ஓட்டிய காலம் மாறி, இந்திய நிறுவனம் தயாரிக்கும் காரை பிரிட்டன் ராணியே ஓட்டிச் செல்ல, இந்தியர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டுள்ளனர்.  

இந்திய காரை ஓட்டும் பிரிட்டன் ராணி(Photo credits : Jim Bennett)

இளவரசி டயானாவோடு,  பிரிட்டன் அரச குடும்பத்தினர் மீதான வசீகரம் போய் விட்டது என்றுதானே நினைத்திருந்தோம். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், சமீபத்தில் தானே காரை ஓட்டிச் செல்ல, அது இணையத்தில் வைரல்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் உலக மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் இளவரசி டயானா. 'பாண்டிய நாடே என் பாட்டுக்கு அடிமை' என்கிற மாதிரி ஒரு காலத்தில் டயானாவின் வசீகரத்துக்கு உலகமே அடிமையாக இருந்தது.  இளவரசி டயானா எங்கு சென்றாலும் பின்னல் பெரும் கூட்டமே திரளும். பாப்பரசிகளும் விடாமல் துரத்துவார்கள்.

அரச பூர்விகம் கொண்ட குடும்பத்தில் இருந்து பிரிட்டன் இளவரசியாக உயர்ந்தவர் டயானா. தற்போதைய இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் மிடில்டனும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து பிரிட்டன் இளவரசியானவர்தான்., ஆனால், அத்தை டயனா போல, பிரபலமடைய முடியவில்லை. இளவரசி டயானா உயிருடன் இருந்த வரை, அவர் என்ன செய்தாலும் செய்திதான். டயானா மறைந்த பிறகு, பிரிட்டன் மக்களுக்கே பிரிட்டன் அரச குடும்பத்தினர் மீது ஆர்வம் குறைந்து விட்டது என்கிற தோற்றம் உருவானது. 

சமீபத்தில் பிரிட்டன் இளவரசர் 95 வயது பிலிஃப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த செய்தி கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிலிஃப்பின் இந்த அறிவிப்பையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ராணி எலிசபெத், ராயல் சேப்பல்ஸ் ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். வழிபாடு முடிந்ததும் டிரைவர் இல்லாமல் ராணியே, தனது ஜாகுவார் காரை ஓட்டிக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். 

ராணி

பாதுகாவலர்கள் முன்னால் செல்ல, 91 வயது ராணி காரை ஓட்டி செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. பிரிட்டன் அரசி எலிசபெத்துக்கு கார்கள் பிடித்தமானது. வித விதமான கார்களை வைத்துள்ளார். அபாரமான டிரைவிங் திறமை கொண்டவர். இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டன் ராணுவத்தில் பெண்கள் படையில் கார் மெக்கானிக்காகவும் பணியாற்றியுள்ளார். பிரிட்டனைப் பொறுத்த வரை , கார் ஓட்டும் யாராக இருந்தாலும் நிச்சயம் லைசென்ஸ் தேவை. அந்த நாட்டில் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டும் உரிமை கொண்ட ஒரே ஒருவர் உண்டென்றால் அது... பிரிட்டன் ராணி மட்டும்தான். 

இரண்டாம் எலிசபெத் கார் ஓட்டும் புகைப்படம் வைரலாக, இந்தியர்கள் வேறுவிதத்தில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். பிரிட்டன் ஆட்சிக் காலத்தில், இந்திய சாலைகளை பிரிட்டன் தயாரிப்பு கார்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அம்பாசிடர் கார் கூட பிரிட்டன் தயாரிப்பு காரை மூலமாக கொண்டுதான் வடிவமைக்கப்பட்டது; தயாரிக்கப்பட்டது. பிரிட்டன் தயாரிப்பான ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது  இப்போதும் , இந்தியர்களுக்கு  பெரும் காதல் இருக்கிறது. இத்தகைய சூழலில் பிரிட்டன் ராணியே இந்திய நிறுவனம் தயாரிக்கும் காரில்தான் செல்கிறார் என இந்தியர்கள் ட்வீட்டியுள்ளனர்.

 

பிரிட்டன் ராணி ஓட்டிச் சென்ற ஜாகுவார் கார்களை தயாரிக்கும் லேண்ட் ரோவர் நிறுவனத்தை அண்மையில் டாடா நிறுவனம் வாங்கியது. இந்த நிறுவனம்தான்,  ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிரத்யேகமான கார்களை தயாரித்தும் வழங்குகிறது. ஒரு காலத்தில் பிரிட்டன் கார்களில் செல்ல இந்தியர்கள் செல்ல ஆசைப்பட்டனர். இப்போது பிரிட்டன் ராணியே இந்தியகாரில் செல்கிறார்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 10
 
 

article_1431143066-nelsonmandela.jpg1655: ஜமைக்காவை ஸ்பெய்னிடமிருந்து இங்கிலாந்து படைகள் கைப்பற்றின.

1774: பிரான்ஸில் 16 ஆம் லூயி மன்னரானார்..

1801: வடஅமெரிக்க முஸ்லிம் நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முதலாவது பார்பெரி யுத்தம் ஆரம்பமானது.

1857: இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிப்பாய் கலகம் நடைபெற்றது.

1872: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல்தடவையாக விக்டோரியா வூதுல் எனும் பெண் பரிந்துரைக்கப்பட்டார்.

1908: அமெரிக்காவில் முதல் தடவையாக அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

1940: பிரிட்டன் மீது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக குண்டுவீச்சு நடத்தின.

1940: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1940: வின்ஸ்டன் சேர்ச்சில் பிரித்தானிய பிரதமரானார்.

1993: தாய்லாந்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 156 பேர் பலி.

1994: தென்னாபிரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.

1997: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1567 பேர் பலி.

2001: கானாவில் இடம்பெற்ற கால்ப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.

2005: ஜோர்ஜியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு 20 அடி தூரத்தில் கிரனேற் ஒன்று வீசப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இந்த 5 பழக்கங்கள் இருந்தால் நீங்கள் வெற்றிகரமானவர்! #MorningMotivation

 

time-731110_960_720_05100.jpg

வாழ்க்கையில் குறை என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. நமக்குப் பிடித்தமான எந்த ஒரு செயலையும் அளவோடு வைத்துக்கொண்டால் நாம் போகும் பாதையை அது எப்போதுமே பாதிக்காது. டிவி பார்ப்பதில் ஆரம்பித்து மொபைல் கேம்ஸ், வீக் எண்ட் பார்ட்டி என உங்களின் லைஃப் ஸ்டைலைப் பாதிக்காத எதுவுமே சரிதான். ஆனால், அதை நீங்கள் கைக்குள் வைக்காமல் போனால் நிச்சயமாக உங்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

வெற்றிகரமானவர்களிடம் இருக்கும் குணங்கள் குறித்து செய்யப்பட்ட மிகப்பெரிய ஆய்வு ஒன்றில், கீழ்க்காணும் ஐந்து குணங்களைப் பட்டியலிடுகிறார்கள். இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நிச்சயமாக வெற்றிகரமான மனிதராக திகழ்வீர்கள்.

அடுத்த நாளுக்கான திட்டமிடல் - ஒவ்வோர் ஆண்டும் புது வருடம் பிறக்கும்போது நாம் சில உறுதிமொழிகளை எடுப்போம். அது அடுத்த நாள் வரை தாங்குகிறதா அல்லது சில வாரங்கள் செல்கிறதா என்பது நமது மனத்திடத்தைப் பொறுத்துத்தான் சொல்லமுடியும். ஆயிரத்தில் ஒரு சிலர்தான் இதுபோன்ற புத்தாண்டு உறுதிமொழியைக் காப்பாற்றுகிறார்கள். நாம் அவ்வளவு மெனக்கெட வேண்டாம். ஒவ்வொரு நாளும் படுக்கப்போகும் முன்பு, அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளை நினைவில்வைத்துக்கொள்வோம். முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய பாலபாடம் இதுதான்.

நேர மேலாண்மை -  திட்டமிட்ட வேலையை ஒழுங்காகவும் கவனம் சிதறாமலும் செய்து முடிக்க இது மிகவும் முக்கியம். உங்கள் வேலைகளில் உடனே செய்யவேண்டியது எது, அதிக நேரம் தேவைப்படும் வேலை எது எனக் கணக்குப்போட்டு அதற்குத் தகுந்தாற்போல் வேலையைத் தொடங்க வேண்டும். 

piggy_05362.jpg

அளவான செலவுகள் -   நடை,உடை போன்றவற்றில் உங்களுக்கெனத்  தனிப்பட்ட ஸ்டைல் வைத்திருப்பது போல, செலவழிப்பதிலும் உங்களுக்கெனக் குறிப்பிட்ட ஸ்டைல் இருக்கட்டும். வாழ்க்கையில் தாழ்வுகளும் உயர்வுகளும் அனைவருக்கும் இருப்பதுதான். பொருளாதாரச் சூழல் எப்படி இருந்தாலும் அளவான செலவுகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கையில் பணம் இருக்கிறதென அள்ளி வீசவும் வேண்டாம்,இல்லையென்று சோர்ந்துபோகவும் வேண்டாம். உடைகளில் ஆரம்பித்து உணவு,கேளிக்கை என அளவான செலவுகள் செய்யும் வாழ்க்கை முறைக்கு மாறினால், நீங்களே எதிர்பாரத வகையில் பணம் சேமிப்பாகும். 

உடல்நலம் - இந்த உலகில் உங்களைத்தவிர வேறு யாராலும் உங்கள் நலத்தைப் பற்றி அக்கறை கொள்ளமுடியாது. உங்கள் உடல்நலம் என்பது மிகப்பெரிய முதலீடு. உலகையே வெற்றிகொண்டு இந்தியா வரை வந்த மாவீரன் அலெக்ஸாண்டர் 33 வயதிலேயே காய்ச்சலில் இறந்துபோனார். அதிகாலை எழுவது,உடற்பயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் என உற்சாகமாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.

சரிபார்ப்பு - ஒவ்வொரு நாளின்போதும் அன்றைக்கு உங்களின் எதிர்கால லட்சியத்துக்காக என்ன செய்தீர்கள் என சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி ,அன்றைக்குச் செய்த வேலைகள்,அவற்றின் பலன்கள்.அடுத்து செய்யப்போகும் வேலை எந்த அளவுக்கு உங்களின் வளர்ச்சிக்கு உதவப்போகிறது போன்றவற்றை கணக்கிட்டுப் பாருங்கள். இது ஒரு முக்கியமான யுக்தி. தவறான வழிமுறைகளோடு தங்கள் கனவை நோக்கிய பயணத்திலிருந்த பல வெற்றியாளர்களைக் காப்பாற்றிய பழக்கம் இது.

மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்கள் உங்களிடம் இருந்தால், நிச்சயமாக வெற்றியாளராகும் பயணத்தில் இருப்பீர்கள். இல்லையெனில், இவற்றை இன்றே உங்கள் வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவாருங்கள். வாழ்த்துகள்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
எந்தச் செல்வத்தினாலும் நிம்மதியைப் பெற முடியாது
 
 

article_1493963712-perasaiyai-velvatharkதன்னிடம் உள்ள செல்வங்களால்கூட ஒன்றுமே செய்யமுடியாத நிலையில்தான், செல்வந்தர்களில் பலர் தங்களது இயலாமையினைப் புரிந்துகொள்கின்றார்கள்.

காலமாற்றங்கள் பின்விளைவைத் தரும்.  பணத்தினால் எதனையும் சாதித்துவிடலாம் என எண்ணி உறவுகளை வெறுத்து ஒதுக்கியவர்ககள், இறுதியில் மன இறுக்கத்துடன் தனித்து ஒதுங்கும்போதுதான், எந்தச் செல்வத்தினாலும் நிம்மதியைப் பெற முடியாது என உணருகின்றார்கள்.

வெறும் நடிப்புக்காகப் படுக்கை அருகே கூடும் அன்பில்லாத கூட்டம், பெருகி நின்றாலும் இத்தகையவர்கள் தனிமைப்பட்டவர்களேயாவர். 

அன்புடன் ஆதரிக்கும் ஒரு ஜீவன் மட்டும் அருகே இருக்கும்போது, ஆத்மா அமைதியுடன் ஆறுதலைப் பெற முடியும். ஆணவச் செருக்கு உடையவர்களுக்குப் பக்கத்தில் எவர் வருவர்?

இது தனவந்தர்களுக்கு மட்டுமல்ல; சிந்தனைத் திரிவுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஏற்புடைய உண்மை நிலைதான்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மனித எலும்புகளைச் சுவைக்கும் மான்... அதிரவைத்த புகைப்படம்!

 

deerstare1-13-15-e1494343543940_02542.jp

 புற்கள், இலை தழைகளைத் தின்னும் தாவர உண்ணியாகவே  மான்கள் அறியப்பட்டு வந்தன. ஆனால், அமெரிக்காவில் ஒரு மான், மனித மாமிசத்தைச் சுவைக்கும் புகைப்படம் வெளியாகி, உலகம் முழுக்க அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்காவில், 26 ஏக்கர் பரப்பளவிலான சிறு தோட்டத்தில் ஒரு மனித சடலத்தைப் போட்டு, அதை உண்ணும் மிருகங்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நரிகள், கழுகுகள் போன்றவை அதைச் சாப்பிடும் காட்சிகளைப் பதிவுசெய்தனர். கிட்டத்தட்ட 182 நாள்கள் அந்தச் சடலத்தை அங்கேயே வைத்திருந்தனர். சில நாள்களிலேயே, அதன் மாமிசத்தைப் பல விலங்குகள் சேர்ந்து தின்று தீர்த்திருந்தன. எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அந்த நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு மான் அந்த எலும்புகளைச் சுவைக்க ஆரம்பித்தது.

இந்த ஆச்சர்ய நிகழ்வுகுறித்து தொடர்ந்து ஆராய்ந்துவந்தனர். இரண்டு தடவை இதுபோன்ற நிகழ்வை அவர்கள் பதிவுசெய்திருந்தனர். மான்களுக்கு சரியான அளவு உணவுகள் கிடைக்காதபோது, அவை இப்படிச் செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, மான்களுக்கு தங்கள் சாப்பாட்டில் சோடியம், கால்சியம், ஃபாஸ்பரஸ் ஆகியவற்றின் பற்றாக்குறை இருந்தால், இதுபோன்று மாமிசங்களை உண்ணும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தாயை வழிபடும் சித்திரா பெளர்ணமி தினம்!

 
%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%
ஈழத்தைப் பொறுத்தவரையில் சித்திரா பௌர்மணிஅல்லது சித்திரா பூரணை தாய்மாரை வழிபடும் நாளாகும். இறந்துபோன தம்முடைய தாய்மாருக்காக விரதம் இருக்கும் வழக்கம் ஈழத்தில் பன்நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆலயங்களில் பொங்கல் பொங்கி, கஞ்சி காய்ச்சி வழிபாடுகளில் ஈடுபடுவர். ஈழத் தமிழ் சமூகத்தின் தாய் வழிபாட்டுப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வாகவும் சித்திரா பூரணை முக்கியத்துவம் பெறுகிறது.

 

 

சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர். எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும்தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பானவையாகும்.

சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ” நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.

சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.

சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். இந்த வழிபாட்டின்போது ”சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

 
ஈழத்தில் போரில் தாயை இழந்தவர்கள், தமது தாயின் மோட்சத்திற்காக விரதமிருந்து மோட்ச அர்ச்சனை செய்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

globaltamilnews

  • தொடங்கியவர்

"நானும் மதுரைக்காரன்தான்!'' - கலகல கூகுள் சுந்தர் பிச்சை

 

சுந்தர் பிச்சையுடன் மதுரைப் பேராசிரியை லட்சுமி

'மெரிக்கா போகும் முன்பும், போன பிறகும்கூட கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையைச் சந்திப்போம், அவர்கிட்ட பேசுவோம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. ஆனா நடந்த விஷயம் எல்லாமே கனவுமாதிரிதான் இருக்கிறது' என நெகிழ்ச்சியாகப் பேசும் லட்சுமி, மதுரையைச் சேர்ந்த பேராசிரியை. தன் மகன் வேலை செய்யும் அமெரிக்காவிலுள்ள கூகுள் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்தவர், அங்கு சுந்தர் பிச்சையை சந்தித்து புகைப்படமும் எடுத்திருக்கிறார். உற்சாகத்துடன் அவரை சந்தித்துப் பேசிய தருணத்தைப் பகிர்கிறார். 

"என்னோட பையன் சரவணன் கணேஷ், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிற கூகுள் தலைமை அலுவலகத்துல சாஃப்ட்வேர் இன்ஜினியரா வேலை செய்கிறான். தான் வேலை செய்ற ஆபீஸையும், அமெரிக்காவின் பல இடங்களையும் சுத்திக்காட்டுறேன்னு சொல்லி என்னை அமெரிக்காவுக்கு வரச்சொன்னான். அதன்படி கடந்த 20 நாளைக்கு முன்னாடி மதுரையில் இருந்து அமெரிக்கா போனேன். அங்க பல இடங்களைச் சுத்திப்பார்த்த நிலையில, சில தினங்களுக்கு முன்னாடி, தான் வேலை செய்யும் கூகுள் அலுவலகத்துக்குப் பையன் அழைச்சுக்கிட்டுப் போனான். 

கூகுள் அலுவலகத்தில் லட்சுமி

அந்த நிறுவனத்துக்குள்ள போக நிறைய கெடுபிடிகள் இருந்துச்சு. எனக்குன்னு தனியா ஒரு பார்கோடுடன் விசிட்டர் பாஸ் ஒன்றை வாங்கிக்கொடுத்து, நிறுவனத்துக்குள்ள அழைச்சுக்கிட்டுப் போனான். நம்மோட படிப்பு மற்றும் மற்ற பெரும்பாலான வேலைகளையும் எளிதாக்கும் கூகுள் நிறுவனத்தைப் பத்தி நிறைய கற்பனைகளை மனசுக்குள்ள வெச்சிருந்தேன். அந்த நிறுவனத்தின் முகப்புப் பகுதியை பிரமிப்போடு பார்த்தபடியே உள்ளே நுழைஞ்ச பிறகும் பிரமிப்பு அதிகமானதே தவிர, குறையவேயில்லை. பெரிய கட்டடங்கள், உள் கட்டமைப்பு வசதிகளின் பிரமாண்டம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்னு பார்த்த விஷயங்களோடு மேலும் பல விஷயங்கள் ஆச்சர்யத்தை அதிகப்படுத்துச்சு. நம்ம இந்திய மற்றும் தமிழக இளைஞர்களை அதிகமாகப் பார்க்க முடிஞ்சுது. தவிர அங்க வேலை செய்றவங்களோட பிள்ளைகளுக்கான தங்குமிடம், வேலை செய்பவர்களுக்கான ஓய்வு அறை, சுற்றிலும் எல்லா இடங்களிலும் ஃப்ரிட்ஜில் பழங்கள், உணவுப் பொருட்கள், எந்த நேரமும் கிடைக்கும் இலவச உணவுகள், மசாஜ் செய்யும் இடங்கள், லாண்டரி ரூம், ஒரு பில்டிங்கில் இருந்து இன்னொரு பில்டிங் போக சைக்கிள் வசதி, விளையாடும் வசதி, நீச்சல் குளம்னு அங்க பார்த்த விஷயங்கள் எல்லாமே ஆச்சர்யமா இருந்துச்சு" என்பவர் சுந்தர் பிச்சையைச் சந்தித்து உரையாடிய தருணத்தை நெகிழ்ச்சியாகக் கூறுகிறார். 

" இதுதான் கூகுள் சர்ச் டீம், பிளே டீம், டேட்டா டீம்னு ஒவ்வொரு பகுதியையும், என்னோட பையன் சுத்திக்காட்டினான். தொடர்ந்து தன்னோட மேனேஜர்கிட்ட அழைச்சுட்டுப்போய் அறிமுகப்படுத்தினான். அவர் அமெரிக்கராக இருந்தாலும், தமிழ்ல 'வணக்கம்'னு சொல்லி என்னை அறிமுகப்படுத்திகிட்டு, அப்புறமா அவர்கிட்ட கொஞ்ச நேரம் இங்கிலீஸ்ல பேசினேன். நானும் பையனும் அடுத்தடுத்து கூகுள் ஆபீஸூக்கு உள்ளேயே ஒவ்வொரு பகுதியா பார்த்துக்கிட்டே போய்க்கிட்டிருந்தோம். அதுவரைக்கும் அங்கங்க கும்பலா நின்னு பேசிக்கிட்டும், ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகிட்டும் இருந்த நிலையில, திடீர்னு ஆழ்ந்த அமைதி நிலை ஏற்பட்டுச்சு. என்னன்னு பார்த்தா, அங்க ஒரு பில்டிங்ல இருந்து இன்னொரு பில்டிங்குக்குப் போற பாதையில அந்த  நிறுவனத்தோட சிஇஓ-வான சுந்தர் பிச்சை கேசுவலா நடந்துபோயிட்டு இருந்தாரு. 

கூகுள் அலுவலகத்தில் பேராசிரியை லட்சுமி

சீட்ல உட்கார்ந்திருந்தவங்க, கும்பலா நின்னு பேசிட்டிருந்தவங்க எல்லோரும் அப்படியே அமைதியா எழுந்து நிற்க ஆரம்பிச்சிட்டாங்க. அவரைப் பார்த்த உற்சாகத்துல, 'டேய் அவர்ட்ட போய்ப் பேசலாமா?'னு பையன்கிட்ட கேட்டேன். 'சரி'னு பையன் சொல்ல, தைரியமா நாங்க ரெண்டு பேரும் அவர் பக்கத்துல போனோம். போன் பேசியபடி நடந்து வந்த நிலையில, போன் பேசி முடிச்சதும் எங்களைப் பார்த்து நின்னாரு. தன்னைப் பத்தியும், என்னைப் பத்தியும் பையன் அவர்கிட்ட அறிமுகப்படுத்தினான். சுந்தர் சார் உடனே எங்களைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தார். நான் உடனே, 'வணக்கம் சார். என்னோட பெயர் லட்சுமி. மதுரையில பேராசிரியையா வேலை செய்துகிட்டிருக்கேன். இங்க வேலை செய்யும் பையனைப் பார்க்க வந்திருக்கேன்'னு சொன்னேன். உடனே புன்னகைத்தபடியே, 'நானும் மதுரையில்தான் பிறந்தேன். என்னோட அப்பா அம்மாவும் மதுரையைச் சேர்ந்தவங்கதான். நானும் மதுரைக்காரன்தான்'னு ரொம்பவே பெருமையா சொன்னாரு. 

'நீங்க ஆசிரியர்னு சொன்னீங்க. என்ன பாடம்'னு கேட்டார். 'கணிதம்'னு சொன்னேன். 'ஓ...சிறப்பு'னு சொன்னார். அந்தத் தருணத்துல அவருக்கு ஒரு போன் கால் வந்துச்சு. போனை அட்டெண்டு செய்து, 'நான் ஒரு முக்கியமான வேலையா இருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிடுறேன்'னு ஆங்கிலத்தில் எதிர்ப்புறத்தில் பேசினவர்கிட்ட சொல்லி போன் காலைக் கட் பண்ணினாரு. தொடர்ந்து எங்கிட்ட சில விநாடிகள் பேசிய அவர்கிட்ட, 'உங்ககூட ஒரு போட்டோ எடுக்கலாமா'ன்னு ஆசையா கேட்டேன். 'நிச்சயமா. எடுத்துகிட்டாப் போச்சு'ன்னு சொன்னவரை நெருங்கி நின்னேன். புன்னகைத்தபடியே அவரும் நானும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, என் பையன் போட்டோ எடுத்தான். 'உங்களை சந்திப்பேன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. ரொம்பவே மறக்க முடியாத தருணம் இது. ஆனந்தமா இருக்கு. நன்றி'ன்னு அவர்கிட்ட சொன்னேன். 'எனக்கும் சந்தோஷம். நன்றி. நேரமாச்சு. வரேன்'னு சொல்லிட்டு வேறு பில்டிங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிச்சாரு. சாதாரணமா நம்ம பயணத்துல சந்திக்கிற ஒரு மனிதரைப் போலவேதான், அவரையும் சந்தித்துப் பேசின தருணம் இருந்துச்சு. அவ்வளவு எளிமையா, இயல்பா, முழுக்க தமிழ்லயே பேசினார்

சுந்தர் பிச்சையை சந்திச்சுப் பேசின பிறகு என் பையனோட வேலை செய்யும் நண்பர்கள் நிறைய பேர், 'என்ன ஆன்ட்டி, பல வருஷமா நாங்க இந்த ஆபீஸ்ல வேலை செய்துகிட்டு இருக்கோம். சுந்தர் சாரைப் பார்க்கிறதே அரிது. அதுவும் அவர்கிட்ட பேசும் வாய்ப்பும்கூட எங்களுக்கு இதுவரைக்கும் கிடைச்சதேயில்லை. நீங்க இப்போதான் ஆபீஸ்கே வந்திருக்கீங்க. எப்படி உங்களால மட்டும் அவர்கூட பேசி, போட்டோ எடுக்க முடிஞ்சுது'னு கேட்டாங்க. 'நான்கூட இதுவரைக்கும் சுந்தர் சாரைப் பார்த்ததேயில்லை'ன்னு என் பையன்கூடச் சொன்னான். அதனால அந்தத் தருணமே மறக்க முடியாத நிகழ்வா மாறிடுச்சு. கிட்டத்தட்ட அஞ்சு கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், ஏராளமான பெரிய பில்டிங்குகளோடு இருந்த கூகுள் நிறுவனத்தின் பல இடங்கள்ல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் லட்சுமி. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மெஸ்சியின் லுக்அலைக் இளைஞன்... சிறை சென்ற சோகம்!

`உலகில் ஒருவரைப்போல் ஏழு பேர் இருப்பார்கள்' என்பார்கள். ஈரானில் ரெஸா பராத்தேத் என்கிற மாணவர், பார்க்க அச்சு அசல் மெஸ்சியைப்போலவே இருக்கிறார் (ஹேர்ஸ்டைல், குறுந்தாடி உள்பட). இதனால், அவருக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பெருமை. மெஸ்சியின் தீவிர ரசிகரான ரெஸா, பார்சிலோனா அணியின் ஜெர்சி அணிந்துகொண்டு வந்தால் பார்ப்பவர்கள், 'ஐயோ... மெஸ்சியா... இங்கேயா..! ' எனப் பதறியடித்துகொண்டு ஓடிப்போய் பார்ப்பார்கள். 

மெஸ்சி - ஈரான்

ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹமேதான் நகரில் வசித்துவரும் ரெஸாவுக்கு 25 வயது. இந்த `டூப்ளிகேட் மெஸ்சி', இன்னொரு வேலையும் செய்கிறார். போக்குவரத்து நிறைந்த இடங்களில், மெஸ்சியின் ஜெர்சி அணிந்துகொண்டு கையில் பந்துடன் நின்றுகொள்வார். அதைப் பார்த்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் அலைமோதுவார்கள். கால்பந்து விளையாட்டுக்கு ஈரானில் ரசிகர்கள் அதிகம் என்பதால், ரெஸாவுக்கு மவுசு எகிறியது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமேதான் நகரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரசிகர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் ரெஸா பராத்தேத். போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக ஈரான் போலீஸார் அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

செல்ஃபி வித் மெஸ்சி

ஒருமுறை, ரெஸாவின் தந்தை இவரது புகைப்படத்தை ஐரோப்பாவின் புகழ்பெற்ற விளையாட்டு இணையதளத்துக்கு அனுப்பிவைக்க, அடுத்த நாளே 'எங்க இணையதளத்துக்கு உடனடியாக இன்டர்வியூ கொடுக்கணும்' எனக் கெஞ்சாத குறையாக போன் வந்துள்ளது. மீடியாக்காரர்கள் அவரை தொடர்ந்து மொய்க்கத் தொடங்கினர். இப்போது மாடலிங் துறையிலும் விளம்பரங்களிலும் நடித்து, பணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ரெஸாவும் ஒரு  கால்பந்து வீரர்தான். ஆனால், தொழில்முறை கால்பந்து ஆட்டம் விளையாடியதில்லை. தெருக்களில் மெஸ்சி போல ஷார்ட்ஸ்-ஜெர்சி அணிந்து சில சித்துவேலைகளைச் செய்வார். அவற்றைப் பார்த்தே கூட்டம் குவிந்துவிடும்.

இன்னொரு கூத்தும் நடந்துள்ளது. ரெஸாவின் தந்தை படுதீவிர கால்பந்து ரசிகர். கடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டத்தில் ஈரான் அணியை அர்ஜென்டினா எதிர்கொண்டது. ரெஸாவைப் பொறுத்தவரை, தாய்நாட்டு அணியை எதிர்த்து விளையாடினாலும் மெஸ்சி அணிக்குத்தான் சப்போர்ட். 

ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில், அதாவது 91-வது நிமிடத்தில் மெஸ்சி அடித்த ஒரே கோலால் ஈரான் அணி தோல்வி கண்டு போட்டியைவிட்டு வெளியேறியது. இந்த கோலை மெஸ்சிதான் அடித்தார். அப்போது, ரெஸாவின் தந்தையிடமிருந்து ரெஸாவுக்கு போன் வந்துள்ளது. 'எங்க டீமுக்கு எதிராவே நீ கோல் அடிக்கிறீயா... இனிமேல் வீட்டுக்கு வராதே!' என காச் மூச். தந்தையும் மகனும் அப்படி ஒரு கால்பந்து பைத்தியங்கள்.

ரெஸாவுக்கு, தன் வாழ்நாளில் எப்படியாவது ஒருமுறை மெஸ்ஸியைச் சந்தித்துவிட வேண்டும் என ஆசை. அது நிறைவேறுமா எனத் தெரியவில்லை. ''மெஸ்சி இப்போ ரொம்பதான் பிஸி''. 

 

காப்பிரைட் பிரச்னை வராமல் இருந்தால் சரி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அப்பா போலீஸ்; அம்மா தீயணைப்புத்துறை அதிகாரி. மனதைத் தொட்ட போட்டோஷூட்!

 

எழுத்து மற்றும் பேச்சின் தாக்கத்தை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். திருமணம், பிறந்தநாள் என வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமாகிவிட்டது. அமெரிக்காவில் பிறந்த குழந்தையை EPஎன்னும் நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மிகவும் ரசனையுடன், வித்தியாசமான முறையில் எடுத்த புகைப்படம், நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

viral photo
 

என்ஸோ ஆண்டனி பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது.  என்ஸோவின்  தாய் தந்தை அமெரிக்காவின் முக்கியத் துறைமுக நகரமான ஜாக்சன்வில்லியில் பொதுத்துறையில் பணிபுரிபவர்கள்.  என்ஸோவின் தந்தை போலீஸ் அதிகாரி. தாய் தீயணைப்புத்துறை அதிகாரி. இவர்களின் குழந்தைக்கு எப்படி போட்டோஷூட் செய்வது என்று யோசித்த புகைப்படக் கலைஞர், இருவரின் யூனிஃபார்ம் மீது என்சோவைத் தூங்கவைத்து, படம்பிடித்துள்ளார். இந்தப் புகைப்படம் செம்ம வைரல்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

அமெரிக்க அரசின் எக்ஸ்-37பி விண்வெளி விமானம் விண்ணில் இரண்டு ஆண்டுகள் பயணித்தபின் சமீபத்தில் தரையில் இறங்கியுள்ளது.
 

  • தொடங்கியவர்

கடலுக்கு அடியில் அவதார்!

2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படத்தை நாம் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டோம். அவதார் படத்தின் நான்கு பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார்.

Avatar-Teaser-Poster_17474.jpg

 

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  அவதார் படத்தின் 2-ம் பாகம் வெளியாகும்  என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்த நிலையில், ’அவதார் படத்தின் காட்சிக் களம் தண்ணீருக்கு அடியில் இருக்கும்’ என அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். இவர் தண்ணீரில் எடுத்த டைட்டானிக் மாஸ் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Bildergebnis für avatar 2 filmed underwater

Ähnliches Foto

Ähnliches Foto

  • தொடங்கியவர்

துபாய் குழந்தைகளுடன் ஷாருக்கான் !

 

துபாய் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக #Bemyguest எனும் விளம்பர படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். இந்தப் படத்தை பஜிரங்கி பைஜான் படத்தின் இயக்குநர் கபீர் கான் இயக்குகிறார்.

C_TCF9nXYAEwdcL-1024x748_14076.jpg

இதற்காக துபாய் சென்ற ஷாருக்கானுக்கு, துபாய் விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் துபாயில் உள்ள ஏல் ஜெயிலா குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு  சென்ற ஷாருக்கான், அங்குள்ள குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்துள்ளார். குழந்தைகளுடன் நேரம் செலவழித்தது மிகவும் புத்துணர்வளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர்  எடுத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

 

துபாய் சுற்றுலாத் துறைக்காக ஷாருக்கான் நடிக்கும் இரண்டாவது படம் இது. ஏற்கெனவே இவர் நடித்த முதல் படம் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிக்ஸ் விருது வென்றது. 

 

 

அனிருத்தின் நன்றி போஸ்ட் !

 
 

’கொலைவெறி’ பாடலின் மூலம் ஒரேநாளில் உயரம் போனவர் இசையமைப்பாளர் அனிருத். இவரை இசையமைப்பாளராக '3' படம் தமிழில் அறிமுகப்படுத்தினாலும், 'ஒய் திஸ் கொலைவெறி' பாட்டு வெளியான உடனே, இவரை சமூக வலைதளங்களில் பலர் தேட ஆரம்பித்துவிட்டனர். 

C_T3LljXUAEmL4k_14349.jpg

இவரின் பாடல்கள்தான்  பெரும்பாலான இளைஞர்களின் ரிங்டோன். 'எதிர்நீச்சல்', 'டேவிட்', ’வி.ஐ.பி’, 'நானும் ரவுடி தான்', 'கத்தி' போன்ற படங்களில் இடம் பெற்றப் பாடல்கள் இவரின் மாஸ் ஹிட் பாடல்கள். தற்போது அஜித் நடிப்பில் கூடிய சீக்கிரம் திரைக்கு வரப் போகின்ற 'விவேகம்' படத்துக்கும் இவர்தான் இசையமைப்பாளர். இது தவிர ’வேலைக்காரன்’, ’வேதாளம்’ தெலுங்கு ரீமேக் என இவர் எப்பொழுதும் பிஸிதான். 

இதற்கிடையே ட்விட்டரில் இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் ”என்றும் அன்புடன் அனிருத்” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

என்னை தத்தெடுத்து கொள்வீர்களா ?

வளர்ப்பு தந்தை பிராண்டனிடம் மகன் கலானி தன்னை தத்தெடுத்து கொள்ளுமாறு கோரிக்கை வைக்கும் நெகிழ்ச்சி காணொளி.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

தமிழ்த் திரைப்பட நடிகை நமீதாவின் பிறந்த நாள் இன்று.
மச்சான்ஸ் புகழ் முன்னாள் கவர்ச்சி - கனவுக் கன்னி இப்போது அரசியலிலும் குதித்துள்ளார்.
ஆசை யாரை விட்டது?

  • தொடங்கியவர்

பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபர் குறித்த 5 `குறும்புத்' தகவல்கள்

 
துப்புரவு வாளியில் சிறுநீர் : ஜஸ்டின் பீய்பர் குறித்த ஐந்து தகவல்கள்படத்தின் காப்புரிமைETHAN MILLER

பிரபல பாப் இசைப்பாடகரான ஜஸ்டின் பீபருக்கும் சர்ச்சைகளுக்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. மும்பையில் அவரது பிரமாண்டமான கச்சேரி நடைபெற்று வரும் நிலையில், அவர் குறித்த ஐந்து சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

  • 2013 ஆம் ஆண்டு கச்சேரி ஒன்றுக்காக வெளிநாட்டில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, தன்னுடைய ரசிகர்களை காண விடுதியின் பால்கனிக்கு வந்த ஜஸ்டின் பீபர் அங்கிருந்தபடியே ரசிகர்கள் மீது எச்சில் துப்ப அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • அதேபோல் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் வாளியில் பீய்பர் சிறுநீர் கழித்துள்ளார். அக்காணொளி இணையத்தில் பல லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
துப்புரவு வாளியில் சிறுநீர் : ஜஸ்டின் பீய்பர் குறித்த ஐந்து தகவல்கள்படத்தின் காப்புரிமைALBERTO PIZZOLI
  • ஆம்ஸ்டெர்டாமில் உள்ள ஆனி ஃபிராங் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஜஸ்டின் பீபர், நாஜிக்களின் சித்ரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆனி என்ற பெண் தன் ரசிகையாக இருந்திருக்கலாம் என்று அருங்காட்சியகத்தின் விருந்தினர் புத்தகத்தில் பதிந்து சர்ச்சையில் சிக்கினார்.
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தன்னுடைய அண்டை வீட்டின் மீது முட்டைகளை வீசி சர்ச்சையில் சிக்கினார் ஜஸ்டின் பீபர். அந்த மாவட்ட ஷெரீஃப் அங்கு அழைக்கப்பட்டு, முட்டைகள் பறந்து கொண்டிருப்பது அவருக்கு காட்டப்பட்டது.
  • மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான டிஸ்னி லேண்டில் நெரிசல் மிகுந்த வரிசையை தவிர்க்க மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை ஜஸ்டின் பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயத்தால் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார் என்று அவர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

BBC

  • தொடங்கியவர்

 

பல்டியடிக்கும் பாண்டா

ஃபூஷன் என்கிற இந்த பாண்டாவுக்கு பல்டியடிப்பதில் அலாதிப்பிரியம்.

அதன் முன்பக்க பல்டியடிக்கும் திறமையை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

இறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்... கலங்கடிக்கும் காரணம்!

 
 

ரசல்டேவிசன் -வென்டிடேவிசன்

முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகத் தாஜ்மஹாலைக் கட்டினார். மும்தாஜின் பிரிவுத்துயரில் இருந்து மீளமுடியாமல் இந்த நினைவுக் கட்டடத்தை எழுப்பினார் ஷாஜகான். அந்த அன்புக்கு இணையாக, உயிரிழந்த தனது காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடைய சடலத்துடன் ஆறு நாட்கள் ஒரே அறையில் வாழ்ந்துள்ளார் ரசல் டேவிசன். அதற்கு அவர் சொல்கிற காரணங்கள் கலங்கவைக்கின்றன. 

காதல் தம்பதி...

இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ரசல் டேவிசன் - வென்டி டேவிசன். அன்பு கலந்த அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் விதி அவ்வளவு எளிதில் நுழையும் என்று தம்பதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வென்டி டேவிசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவருக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோயின் தாக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் தளர்ந்துவிடாத அந்த தம்பதி சிகிச்சை எடுக்க முடிவெடுத்தனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால், வென்டியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மருத்துவர்கள் கையில் ஒப்படைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதன் காரணமாகத் தங்களுக்குத் தெரிந்த சிகிச்சை வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், 2014-ல்  ''இன்னும் 6 மாத காலம் மட்டுமே வென்டி உயிருடன் இருப்பார்'' என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்தத் தம்பதி இருக்கிற நாள்களை அணுஅணுவாக அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வென்டிக்குப் போராட்டக் களமாக இருந்தாலும் ரசல் டேவிசனின் அன்பும், அரவணைப்பும் மிகுந்த தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதனால், மருத்துவர்கள் கொடுத்த கெடு காலத்தைக் கடந்து வாழ்ந்துவந்தார் வென்டி.

அன்பும் அரவணைப்புமே மருந்து...

அவருடைய அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், வலியால் துடித்தார் வென்டி. அதைக் கண்டு கலங்கிய ரசல், வென்டியை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவெடுத்தார். ஆனால், அதை ஏற்காத வென்டி தனது கடைசிக்காலத்தைத் தம்பதியாக வலம்வந்த வீட்டிலேயே கழிக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் காரணமாகச் சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்பினர் தம்பதி. பின்னர் வென்டிக்கு வலி அதிகரித்ததால் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் ரசல். 

காதல் மனைவி

புற்றுநோயாளிகளுக்குக் கடைசிக்காலத்தில் கொடுக்கப்படும் ஆறுதல் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். மருத்துவர்களின் மருந்தால் மட்டுமல்ல, ரசலின் அன்பு மருந்தாலும் விடைபெற்றுக் கொண்டிருந்தார் வென்டி. மருத்துவமனையில் உயிரைவிட மனமில்லாத வென்டியின் நிலையை உணர்ந்து தங்களுடைய சொந்த வீட்டுக்குக் காதல் மனைவியை அழைத்துவந்தார் ரசல். இதனைத் தொடர்ந்து  வென்டி டெவிசன் உயிரிழந்தார். இறந்துபோன காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் ஆறு நாட்கள் மனைவியின் உடலுடனேயே இருந்துள்ளார் ரசல் டேவிசன்.

''இதயத்தைச் சிதறடித்துவிட்டது!''

ரசல் டேவிசனின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்துக்குத் தெரியவர நீதிமன்றமும் அவருடைய மனைவியை வைத்துக்கொள்வதற்கு உரிமை உள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ரசல் டேவிசன், "வென்டியின் பிரிவுத் துயர் இதயத்தைச் சிதறடித்துவிட்டது.அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை. அதன் காரணமாக என்னுடைய வீட்டிலேயே அவளை வைத்திருந்தேன்.அவளை அடக்கம் செய்யவோ அல்லது பிணவறையில் வைக்கவோ மனமில்லை. அதனால் அவளுடைய அறையில் வைத்திருந்தேன். அவள் உடல் இருந்த அறையிலேயே நானும் இருந்தேன்" என்றார்.

 

மரணவலியை மறந்துவிடச் செய்யும் வலிமை காதலுக்கு உள்ளது என்பதை பல ஆயிரம் ஜோடிகள் உணர்த்திடினும், ரசல் டேவிசனின் அன்பும் அசாதாரணமானதுதான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோலிவுட்டுக்கு வருகிறாரா ஷர்தா கபூர்!

 
 

C_TC6MDXcAAWHRF_15360.jpg

பாலிவுட்டில் 2013-ம் ஆண்டு வெளியாகி பல காதலர்கள் மற்றும் இளைஞர்களின் லைக்ஸ்ஸை அள்ளிய  திரைப்படம் ஆஷிக் 2. இந்த படத்தைப் பார்த்தவர்கள், படத்தின் கதாநாயகியான ஷர்தா கபூரை அதிகமாகவே ரசித்து இருப்பார்கள். இவர் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகளாவார்.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 100% லவ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க சந்திரமெளலி இயக்கயுள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஷர்தா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 

ஷர்தா கபூர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படமாக 100% லவ் இருக்கும். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரிய பொருட்செலவில் லண்டனில் நடக்கவுள்ளது.

  • தொடங்கியவர்

ஒளி ஓவியர்கள்: ஒளியோடு விளையாடிய பெரநீஸ்

 

 
 
 
photo_3161828f.jpg
 
 
 

1930 அமெரிக்காவில் புதிய அலை (avant garde) கலைஞர்கள் உத்வேகம் பெற ஆரம்பித்திருந்த காலம். அப்போது பொருளாதார மந்த நிலையின் தாக்கத்தைத் தன் ஒளிப்படங்களில் டோரதியா லாங்கே ஆவணப்படுத்தினார். இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான அம்சங்கள் பார்வையாளரின் கவனத்தைச் சட்டென்று ஈர்த்துவிடும். அதேநேரம் உயிரற்ற கட்டிடங்கள், அறிவியல் கோட்பாட்டு விளக்க ஒளிப்படங்கள் வழியாகக் கலையைக் கண்டுபிடித்தார் பெரநீஸ் அபாட் (Berenice Abbott).

s_3161827a.jpg

நவீனப் பரிசோதனை முயற்சிகள், ஆவணப்படுத்துதல், அறிவியல் படங்கள், உருவப்படங்கள் என ஐம்பது ஆண்டுகளுக்கு ஒளிப்படக் கலையின் பல்வேறு எல்லைகளுக்குப் பயணித்தவர் பெரநீஸ்.

l_3161830a.jpg

‘டார்க் ரூம்‘ உதவியாளர்

சிற்பம், ஓவியம் படிப்பதற்காக ஒஹையோ மாகாணத்தில் இருந்து நியூயார்க்குக்கு 1920-களில் வந்தார். பின்னர் மாடலாக மாறிய அவர், சர்ரியலிச ஓவியரும் நவீன ஒளிப்படக் கலைஞருமான மேன் ரேவுக்கும் மாடலாக இருந்துள்ளார். மேன் ரே பாரிஸுக்கு நகர்ந்தபோது, ஏற்கெனவே அவரை அறிந்திருந்ததால் அவருடைய படங்களை உருத்துலக்கும் ‘டார்க் ரூம்’ உதவியாளராகப் பெரநீஸ் சேர்ந்தார்.

j_3161831a.jpg

‘போர்ட்ரெய்ட்’ எனப்படும் உருவப்படங்கள் எடுப்பது ஒளிப்படத் துறையில் அந்தக் காலத்தில் பிரபலம். ஓவியத்துக்கு மாற்றாக ஒளிப்படங்கள் தனி அடையாளம் பெற ஆரம்பித்திருந்தன. சில ஆண்டுகளில் தனி ஸ்டுடியோ ஆரம்பித்த பெரநீஸ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபுக்கள் எனப் பல்வேறு ஆளுமைகளின் உருவப்படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவற்றில் பிரபல எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸின் படம் உலகப் புகழ்பெற்றது.

i_3161832a.jpg

ஒரு நகரின் முகம்

பாரிஸ் நகரம் தன் பழமையைத் துறந்துவிட்டு, புதுமையான கட்டிடக் கலைக்கு மாறிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மாற்றத்தைப் பாரிஸ் நகரத் தெருக்காட்சிகளின் வழியாக ஒளிப்படக் கலைஞர் யூஜின் அட்ஜெட் பதிவு செய்திருந்தார். அந்தப் படங்கள் பெரநீஸைப் பெரிதும் ஈர்த்தன.

h_3161833a.jpg

இன்றைக்கு உலகம் வியக்கும் மாபெரும் நகராக உருப்பெற்றிருக்கும் நியூயார்க் நகரமும் அப்போது நவீனமடைய ஆரம்பித்திருந்தது. கறுப்பு வெள்ளையில் அதன் அழகை, காட்சிகளை முதன்முதலில், தனிச்சிறப்பாகப் பதிவு செய்தார். இதற்கு உத்வேகம் அளித்தவை, யூஜின் அட்ஜெட் பாரிஸ் நகரை ஆவணப்படுத்திய படங்கள்.

a_3161837a.jpg

வேறு யாரும் யோசிக்காத கோணத்தில் பறவைப் பார்வையில், ஒரு புழுவின் பார்வையில் எனப் பல்வேறு கோணங்களில் மூன்று ஆண்டுகளுக்கு நியூயார்க் நகரத்தைப் பெரநீஸ் பதிவு செய்தார். கட்டிடங்களிலும் நகர்ப்புற வடிவமைப்பிலும் பொதிந்து கிடக்கும் அழகை, கட்டிடங்களின் முகங்களைத் தன் கேமராவில் சிறைபிடித்தார். ‘நியூயார்க்கின் மாறும் முகம்’ என்ற அந்தத் தொகுப்பு 1939-ல் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ஒளிப்படக் கலை வரலாற்றில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

g_3161834a.jpg

அறிவியலோடு கைகோத்த கலை

அடுத்ததாக அவர் கையிலெடுத்த விஷயம் அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் ஒளிப்படங்கள். காந்தப் புலம், இயக்க ஆற்றல் போன்ற இயற்பியல் விதிகளைக் குறித்த ஒளிப்படங்களை மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்காக 1950-களில் அவர் எடுத்தார்.

f_3161835a.jpg

தொழில்நுட்ப ரீதியில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தெளிவற்ற அறிவியல் கொள்கைகளை, இந்தப் படங்கள் காட்சிரீதியாகச் சிறப்பாக விளக்கின. அது மட்டுமல்லாமல் கோட்பாட்டின் இயல்பைக் குலைக்காமல் கலைத்தன்மையையும் அவருடைய படங்கள் உருவாக்கின.

ஆத்மார்த்தப் பிணைப்பு

தொடர்ச்சியான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுவந்த பெரநீஸ், தன் ஒளிப்படக் கலை அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கத்துடன் நியூயார்க் புதிய சமூக ஆராய்ச்சிப் பள்ளியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகளுக்கு இந்தப் பணியில் தொடர்ந்து சேவை புரிந்தார்.

d_3161836a.jpg

ஆவண ஒளிப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாக வளர்ந்த அவர், 93 வயதில் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னர்வரை படமெடுத்துக்கொண்டிருந்தார் என்பதிலிருந்து அவருக்கும் நவீன ஒளிப்படக் கலைக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான பிணைப்பைப் புரிந்துகொள்ளலாம்.

peranis_3161829a.jpg
பெரநீஸ் அபாட்

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994

நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.

 
 
நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994
 
நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008-ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

 

http://www.maalaimalar.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புத்தர் பிறந்த இடத்தில் பிக்குகளால் சுவாசிக்க முடியவில்லை; ஏன்?

நேபாளத்தின் லும்பினி நகரில் தான் 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பிறந்தார்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 11
 
 

article_1431143398-NCBomb300.jpg1812: பிரித்தானிய பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் நாடாளுமன்றத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

1867: லக்ஸம்பர்க் சுதந்திரம் பெற்றது.

1924: இரு நிறுவனங்களை இணைத்து மேர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1945: ஜப்பானின் ஒகினாவா கரையோரத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பங்கர் ஹில் மீது ஜப்பானிய கமிகாஸ் படையினர் தாக்கியதால் 346 பேர் பலியாகினர். இக்கப்பல் பலத்த சேதத்திற்கு மத்தியில் அமெரிக்காவை அடைந்தது.
1949: சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என இரண்டாவது தடவையாக மாற்றப்பட்டது.

1949: ஐ.நா.வில் இஸ்ரேல் இணைந்தது.

1995: அணுவாயுத பரவல் தடைச் சட்டத்தை நீடிப்பதற்கு நியூயோர்க்கில் 170  நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

1996: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 8 பேர் ஒரே தினத்தில் பலியாகினர்.

1997: ரஷ்ய செஸ் வீரர் கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புளூ எனும் கணினி தோற்கடித்தது.

1998: இந்தியாவின் பொக்ரான் பகுதியில் 3 அணுகுண்டுகளை வெடிக்கவைத்து இந்தியா சோதனை நடத்தியது.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாசிட்டிவ் எண்ணத்தை ஏன் வளர்க்க வேண்டும்? - ஜென் உணர்த்தும் குரங்கு தத்துவம் #MorningMotivation

 
 

ஒரு ஜென் துறவியொருவர் அந்த ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார்.  உள்ளூர்க்காரன் ஒருவன் அவரைத் தேடி வந்தான். 

ஜென் துறவி 


``என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. என் வயதுத் தோழர்கள், என் உடன் படித்தவர்கள், ஏன்... அடுத்த வீட்டுக்காரன் உள்பட எல்லோரும் எங்கெங்கேயோ போய்விட்டார்கள். நான் இன்னும் ஒரு துளிகூட முன்னேறவில்லை. நான் என்ன செய்யட்டும் ஐயா?’’ 

இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் அவன் துறவியிடம் வேண்டி வந்திருந்தான். துறவி அவனிடம் சில கேள்விகள் கேட்டார். வேலைக்காரர்

``என்ன வேலை பார்க்கிறாய்?’’

``கூலி வேலை.’’

``வருமானம்?’’

``போதுமான அளவுக்கு இல்லை. இருக்கிறதை வைத்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.’’

``வேறு வேலைக்கு முயற்சி செய்யவில்லையா?’’ 

``பயமாக இருக்கிறது. புது இடம், புது எஜமானன் சரியில்லை என்றால் என்ன செய்வது என்கிற அச்சம்...’’

``சுயதொழில் செய்ய உனக்கு ஆர்வம் இல்லையா?’’

``இருக்கிறது. ஆனால், அதுவும் பயமாக இருக்கிறது. தொழில் தொடங்கி நான் அதில் என் பொருளை இழந்துவிட்டால் என்ன செய்வது? என்னிடம் வியாபார நிமித்தமாக வருபவர்கள் என்னை ஏமாற்றிவிட்டால் நான் என்ன செய்வேன்? இதையெல்லாம் யோசித்துத்தான் நான் தொழில் தொடங்குவதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்...’’

ஜென் குரு அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். 

``சொல்லுங்கள் குருவே... நான் என்ன செய்ய வேண்டும்? என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கிற உபாயம் ஏதாவது இருக்கிறதா? எத்தனை நாள் பயிற்சி எடுக்க வேண்டும்? அதற்கான மந்திரங்கள் இருந்தால்கூட சொல்லுங்கள். நிச்சயம் அதைக் கடைப்பிடிக்கிறேன்...’’

``உன் பிரச்னை தீர ஒரு வழி இருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பாயா?’’  

வந்தவனின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ``நிச்சயமாக குருவே... நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.’’ - அவன் குரலில் அப்படி ஓர் உறுதி.

``சரி, இன்றைக்கு ஒரு நாள் இரவு மட்டும் நான் சொல்கிறபடி செய். உன் பிரச்னை  தீர்ந்துவிடும்’’ என்றார்.

 ``ஒரு நாளில் என் பிரச்னை  தீர்ந்துவிடுமா, அப்படி என்ன அற்புத மந்திரம் அது? உடனே சொல்லுங்கள் குருவே...’’ என்றான். 

``மந்திரம் எல்லாம் இல்லை. இன்று இரவு மட்டும் நீ குரங்குகளைப் பற்றி நினைக்கக் கூடாது.’’ 

``என்னது குரங்கா... நினைக்கக் கூடாதா? மந்திரம் எல்லாம் ஒன்றும் இல்லையா?’’

``எதிர்க் கேள்வி கேட்காதே! நான் சொல்கிறதை மட்டும் செய்!’’ 

துறவியின் குரலில் உஷ்ணம் ஏறிக் கிடந்ததை உணர்ந்தான். அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தான். வழியிலேயே துறவி கூறியதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. குரங்கு, அதன் வால், பற்கள், உருண்டைக் கண்கள், சேட்டைகள்... ``சே!’’ என்று தலையை உதறிக்கொண்டான்.

குரங்குகள் 

`ஏன், துறவி குரங்கு பற்றி நினைக்க வேண்டாம் எனச் சொன்னார்? நான் குரங்குக்கு ஏதாவது துன்பம் இழைத்திருப்பேனோ? அப்படி ஒன்றும் நினைவில்லையே. ஒருநாள் மலையில் ஒரு குரங்கைப் பார்த்தபோது அதுவல்லவா என் சோற்று மூட்டையைப் பறித்துக்கொண்டு ஓடியது? அந்தச் சமயத்தில்கூட நான் அதை ஒன்றும் செய்யவில்லையே! ஒரு சிறு கல்லைக்கூடத் தூக்கிப் போடவில்லையே! ஒருவேளை கடந்த பிறவியில் குரங்குக்கு ஏதாவது தீங்கிழைத்திருப்பேனோ!  சரி... துறவியே சொல்லிவிட்டார். அதனால், நிச்சயம் இதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால், கண்டிப்பாக இரவில் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது’ என்று மனதுக்குள் நினைத்தபடி வீட்டுக்கு நடந்தான். 

குரங்கு 

இரவு நெருங்கியது. வேலைகளை முடித்துவிட்டு தூங்கத் தயாரானான். தூக்கம் வரவில்லை. குரங்கு குறித்த சிந்தனையே அவனைத் துரத்தியது. ஜன்னலில் ஒரு குரங்கு ஏறி அவனையே பார்ப்பதாக எண்ணம். கதவைப் பிராண்டுவதாக உள்ளுணர்வு. நெடு நேரத்துக்கு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், களைப்பால் கண்ணயர்ந்தான். கனவிலும் குரங்கள் அவனைத் துரத்தின. நிஜத்தில் அவனை ஒரு குரங்கு பிராண்டவில்லையே தவிர, மற்ற எல்லாம் நடந்தது. குரங்குச் சிந்தனை அவனைப் பாடாகப்படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தச் சிந்தனையை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பைத்தியம் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான். எப்போது விடியும் எனக் காத்திருந்து ஜென் துறவி தங்கியிருந்த மடத்துக்கு ஓடினான். அவரைச் சரணடைந்தான்.

``குருவே, நான் முதலாளி ஆக வேண்டாம்.  இதைவிட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேலைகூட வேண்டாம். தயவு செய்து, அந்தக் குரங்களிடமிருந்து மட்டும் என்னைக் காப்பாற்றுங்கள்’’ மன்றாடியவன் மேலும் தொடர்ந்தான்.

``ஒன்று மட்டும் உண்மை. நான் குரங்குக்கு ஏதோ பாவம் இழைத்துவிட்டேன் என்பது மட்டும் தெரிகிறது. அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்துவிடுகிறேன். இந்தக் குரங்குச் சிந்தனை என்னை தற்கொலை செய்துகொள்வது வரை தூண்டுகிறது. காப்பாற்றுங்கள் குருவே!’’ 

குரங்குகள் 

அந்த ஜென் குரு மென்மையாகச் சிரித்தார். ``உண்மையில் நீ எந்தக் குரங்குக்கும் பாவம் செய்யவில்லை. இதைப் புரிந்துகொள். குரங்குக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதலில் நிம்மதிகொள்’’ என்றார்.

துறவியின் பதில் கேட்டு அவன்  தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ``என்ன... குரங்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அப்படி என்றால் என்னை ஏன் குரங்குகள் விடாமல் துரத்துகின்றன?’’ என்றான்.

சில நிமிட அமைதி காத்த பிறகு குரு அவனுக்கு விளக்கத் தொடங்கினார். 

குரங்கு 

``உன் எண்ணங்களுக்கு நீயே அதிபதி. அவற்றை நீயே தீர்மானிக்கிறாய். வெளியிலிருந்து யாரும் மற்றொருவரின் எண்ணத்தைக் கட்டுபடுத்தவோ, மாற்றவோ முடியாது. உனக்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கற்றுக்கொள். குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்றதும் நீ அதைப் பற்றியே நினைத்தாய். உன் சிந்தனை அதிலேயே இருந்தது. எனவே, உனக்குப் பயன்படாத ஒன்றைப் பற்றி சிந்திக்காதே. `எதுவும் நன்றாக நடக்கும்’ என்று நம்பு. ஒன்றை ஆரம்பிக்கும்போதே இப்படி நடந்து விடுமோ என நீயாக ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக்கொள்ளாதே. இந்த எதிர்மறை எண்ணம்தான் உன் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. அதை விட்டுவிட்டு நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்.’’

ஜென் குருவின் இந்த போதனை அவனுக்கு மட்டுமானதல்ல.  இது, நம் எல்லோருக்குமானது. நம் ஊரில், `மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே!’ என ஒரு வாசகம் உண்டு. அதுவும் இதற்குப் பொருந்தும். பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ள, அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். வேறு ஏதுவும் தேவையில்லை. எல்லாம் நல்லதாகவே நடக்கும். இன்றைய பொழுது இனிதாக அமைய வாழ்த்துகள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.