Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம்... உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய காதல் ஜோடி!

 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அந்த சொர்க்கத்திலே திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்... அப்படி ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் சிசோம் மற்றும் ஆஷ்லே ஸ்கீமேடர்.

Everest wedding
 

ஜேம்ஸும் ஆஷ்லேவும் தங்கள் திருமணத்தை எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, 10 டிகிரி செல்ஸியஸ் குளிரில்.. மேகங்களுக்கு மிக அருகில்... தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார் ஜேம்ஸ்.

marriage
 

ஜேம்ஸ், ஆஷ்லேவின் இந்தத் திருமண நிகழ்ச்சியில், போட்டோகிராஃபர் சார்லடன் சர்ச்சில் மற்றும் மலையேற்றத்தில் கைதேர்ந்த இருவர் உடனிருந்தனர்.  'எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்பில் திருமணம் செய்வது அவ்வளவு சுலபமில்லை' என்று தெரிவித்துள்ளார், மணமக்களுடன் மலையேறிய போட்டோகிராஃபர். 

everest marriage
 

 எவரெஸ்ட் சிகரத்தின்   ’base camp’-ஐ அடைய ஒரு வாரம் ஆகியுள்ளது. இந்த ஒரு வாரத்துக்காக ஜேம்ஸ், ஆஷ்லே ஓராண்டு பயிற்சி மேற்கொண்டனராம். மலையேறும்போது ஜேம்ஸுக்குப் பல தடவை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இந்தத் திட்டத்தைக் கைவிடும் சூழலுக்குக்கூட தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தன்னம்பிக்கையுடன் பேஸ் காம்ப்பை அடைந்து, அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

 

 

நடுங்கும் குளிரில், திருமண ஆடை அணிகலன்களுடன் அசத்தல் போட்டோஷூட் வேறு நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு அற்புத தருணத்தையும் அழகாகப் படம்பிடித்துள்ளார், போட்டோகிராஃபர் சார்லடன். ’எங்கள் திருமணத்தில் பாதிரியார் இல்லை, உறவினர்கள் இல்லை.மேகங்கள் மத்தியில் என் காதலியின் கரம்பிடித்துள்ளேன். இயற்கையின் மடியில் நடந்துள்ளது எங்கள் திருமணம்' என்று நெகிழ்ந்துள்ளார் ஜேம்ஸ்.

 

mount everest

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர்!

 

Viv_111_400_00345.jpg

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தல' அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 
  • தொடங்கியவர்

‘பக்திக்குள் எல்லாமே அடக்கம்’
 

article_1494482975-relax_2556424f.jpgமாபெரும் விஸ்வரூபியான இறைவன் இந்தச் சின்ன இதயத்துக்குள் எப்படி நுழைந்தான்? பக்திக்குள் எல்லாமே அடக்கம். பவித்திரமான அன்பு மேவிய பக்தி, பல சாதனைகளைப் புரிந்த வண்ணமாய்த் துலங்குகின்றது; உலகத்தை, உங்களை நோக்கி வரச் செய்கின்றது; கருமங்களை இலகுபடுத்துகின்றது. 

கடவுள் பக்தியுள்ளவர்கள், சாமியார்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இல்வாழ்க்கையில் புகுந்து அறவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஈகைக்குணம் இருந்தால் மிகவும் எளிதாகவே கடவுளின் கடாட்சம் வந்தெய்திவிடுகின்றது. 

இருப்பதைக் கொடுப்பவனுக்கு எதுவுமே பெரியது என்று ஒன்றுமில்லை. எனவே தெய்வம் தானாகவே அவன் உள்ளத்தில் குடிகொண்டு விடுகின்றது. 

தானும் தான் சார்ந்த உலகமும் உய்ந்து உய்ய வேண்டும் என எவர் கரிசனை காட்டினாலும் பரந்த பூமியில் நிரந்தர அமைதியுடன் வாழ்ந்திடுவார்கள். 

பற்று அற்ற இறைவனும் பக்தனை விரும்புகின்றான்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என்னமா தேளை லட்டு சாப்புடுற மாதிரி சாப்புடுது இந்த பொண்ணு ....

  • தொடங்கியவர்

மெரினாவை பறவைகள் தேடிவரக் காரணம் தெரியுமா?

 

தினமும் காலையில் மெரினா கடற்கரைப் பக்கம் போனா கூட்டம் கூட்டமா புறாக்களும் காகங்களும் நெறஞ்சு இருக்கும். அங்கதான் தினமும் வாக்கிங் போறோம், ஜாகிங் போறோம்... எப்போதாவது இத யோசிச்சிருக்கீங்களா, கடற்கரைக்கு எதுக்கு தினமும் அவ்வளவு புறாக்கள் வருதுன்னு.

 

birtsss_1_14330.jpg

மெரினா கடற்கரைக்கு ஒரு தன்னார்வக் குழுவினர் தினமும் காலையில் முதல் ஆளா வந்துடுறாங்க. இவுங்களுக்கு என்ன வேலை தெரியுமா? பறவைகளுக்காகவே தானியங்கள் எடுத்துட்டு வந்து கடற்கரை மணல் முழுக்கத் தூவுறாங்க.  அதோடு இல்லாம, வெளுத்துவாங்குற வெயில் காலத்தை பறவைகளும் சமாளிக்க மணல் பரப்புல குழி வெட்டி பேப்பர் தொட்டி வச்சு தண்ணீரும் வைக்கிறாங்க. 

birdss1_14503.jpg


‘யார் இந்தக் குழு? எதுக்கு இப்படிப் பண்றாங்க?’ இந்தக் கேள்விகளைவிட முக்கியமான விஷயம் எது தெரியுமா? அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க முடியாமல் ஆறறிவுள்ள மனிதனே இவ்வளவு கொடுமைய அனுபவிக்கும்போது பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? அதுக்காக நீங்களும் தினமும் மெரினா வரணும்னு அவசியமில்ல. இந்தத் தன்னார்வலர்கள் சொல்ற மாதிரி நம்ம ஒவ்வொருத்தரோட வீட்டிலும் பறவைகளும், நாய், பூனை போன்ற விலங்குகளும் தண்ணீர் குடிக்கவாவது சின்ன தண்ணித்தொட்டியோ, பாத்திரமோ வச்சாலே போதும்! என்ன, தயாரா மக்களே?! 
 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விலங்குகளின் ரகசியங்கள்!

 
kangaroo_3163032f.jpg
 
 
 

# தன் உடலின் நீளத்தைப் போல இரண்டு மடக்கு பெரிய நாக்கு உள்ள விலங்கு பச்சோந்தி.

# முன்னால், பின்னால், பக்கவாட்டில் என எல்லாப் பக்கமும் பறக்கும் திறன் கொண்ட பறவை தேன்சிட்டு.

# நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

# மணிக்குச் சுமார் 140 மைல் தூரத்தைத் தாவலின் மூலம் கடக்கும் விலங்கு கங்காரு.

# உலகின் பெரிய உயிரினமாகக் கருதப்படும் நீலத் திமிங்கிலத்தின் நீளம் சுமார் 30 மீட்டர் வரை இருக்கும்.

insect_3163033a.jpg

# பாம்பு முட்டை இடப்பட்ட பிறகு பெரிதாகும் திறன் கொண்டது.

# ஒரு கிலோ தேன் எடுக்க ஒரு தேனீ செல்லும் தூரம், பூமியை 4 முறை சுற்றி வருவதற்குச் சமமானது.

# திமிங்கிலத்தின் இதயம் நிமிடத்துக்கு 540 முறை துடிக்கும்.

# உயிரினங்களில் நீண்ட காலம் வாழும் பிராணி ஆமை.

# அடிபட்டால் மனிதரைப் போல அழும் பண்புடையது கரடி.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

* பேட்மின்டன் கில்லி பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. இந்தி நடிகர் சோனு சூட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். `பயோபிக் எடுக்கவிருக்கும் நபருக்கு என வித்தியாசமான கதையும் முடிவும் நிச்சயம் வேண்டும். ஆனால், வெறும் 21 வயதான சிந்துவுக்கு பயோபிக் எடுப்பது செம சவால். சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பம்’ என சோனு சூட் சொல்ல, சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. சாம்பியன் ஸ்டோரி

p58a.jpg

ஐ.சி.சி-யிடம் முறுக்கிக்கொண்டு நிற்கிறது பி.சி.சி.ஐ. `ஐ.சி.சி கொண்டுவந்துள்ள புதிய கொள்கைப்படி இந்தியாவுக்கு வழக்கமாக வரவேண்டிய 570 மில்லியன் டாலருக்குப் பதிலாக, 293 மில்லியன் டாலர் மட்டுமே தரப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் நஷ்டம். இதை பி.சி.சி.ஐ கடுமையாக எதிர்த்துவருகிறது. `ஐ.சி.சி-யின் ஒட்டுமொத்த வருமானத்தில் 70 சதவிகிதம் இந்தியாவிலிருந்துதான் செல்கிறது. ஆனால், பி.சி.சி.ஐ-க்கு நிதி குறைப்பா?’ என மோதல் எழுந்துள்ளது. இதையடுத்து, சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்தியா இன்னா... அவுட்டா? என்பதிலேயே குழப்பம். ஐ.சி.சி-யின் தூஸ்ரா

`` ‘2.0’ படத்தில் ஹீரோயின் ஏமிஜாக்சன். ஆனால், முதல் பார்ட்டில் நடித்த ஐஸ்வர்யா ராய் இல்லாமல் படம் எடுத்தால் எப்படி?’ எனப் பலரும் ஷங்கரிடம் லாஜிக்கலாக கேள்வி எழுப்ப, மனுஷன் ரொம்பவே கூலாகத் தீர்வுகண்டுவிட்டார். ‘2.0’ படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் போனில் பேசுவதுபோல் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரியாலிட்டிக்காக ஐஸ்வர்யா ராயின் க்ளோசப் காட்சிகளையும் பயன்படுத்தப்போகிறார்களாம். ஷங்கரிசம்

அழகிரி வீட்டில் தாலாட்டு கேட்கிறது... மகன் துரை தயாநிதி - அனுஷா தம்பதியினருக்கு அழகு மகன் பிறந்திருக்கிறான். பேரனுக்கு என்ன பெயர் வைப்பது எனத் தீவிர டிஸ்கஷனில் இருக்கிறார் அழகிரி தாத்தா. சூர்ய வம்சம்

p58b.jpg

அழகிய நாகமாக `நாகினி', `நாகினி பார்ட் 2' என இரண்டிலும் கலக்கிக்கொண்டிருப்பவர் மௌனி ராய். பல ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் இவருக்கு, தற்போது பாலிவுட் வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது. நாகினியில் மௌனி ராயின் அசத்தலான நடிப்பைப் பார்த்த சல்மான்கான், தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் படத்தில், ஹீரோயின் ரோலுக்கு மெளனியை டிக் அடித்திருக்கிறார்.
எதிர்பாராத இந்த வாய்ப்பால் நெகிழ்ந்து, தன் நட்பு வட்டாரத்தில் சல்மான்கான் புகழாரம் பாடிக் கொண்டிருக்கிறார் மௌனிராய். மிஸ்யூ நாகினி

p58c.jpg

*   ‘சாமி’ இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி ரெடி. முதல் பாகத்தில் நடித்த விக்ரம்தான் ஹீரோ. ஆனால், ஹீரோயின் த்ரிஷா இல்லை கீர்த்தி. அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார் சீயான். த்ரிஷா இல்லன்னா கீர்த்தி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்ணீர் மல்க அறிவித்த செய்தி வாசிப்பாளர்! இதுதான் காரணம்

 
 

தன்னுடைய சேனலின் கடைசி நிகழ்ச்சி இதுதான் என்பதை நேரலையின் போது அறிந்துகொண்ட செய்தி வாசிப்பாளரின் நெஞ்சுறுக்கும் அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

செய்தி வாசிப்பாளர்

இஸ்ரேலிய செய்தி வாசிப்பாளர் கீலா தன்னுடைய சேனல் மூடப்படுவதை நேரலையின் போதே கண்ணீர் மல்க வாசித்த காட்சியினை சேனல்-1 தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 55 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ க்ளிப்பிங்கில் உணர்ச்சி பொங்க சேனலின் கடைசி நேரலையை வாசிக்கிறார் கீலா.

இஸ்ரேல் அரசின் புதிய நடவடிக்கையால் சேனல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை செய்தி வாசிப்பாளர் கீலா, ‘இன்றைய இந்த நிகழ்ச்சிதான் நம்முடைய கடைசி நிகழ்ச்சியாகும். இதற்குப் பின்னர் இந்நிகழ்ச்சியைப் பார்ப்பது பொருத்தமற்றதாகிவிடும். இன்றைய தினத்தின் முடிவில் பலரும் வேலை இழக்கவுள்ளோம். அனைவருக்கும் சிறப்பானதொரு வேலை கிடைக்கும் என நம்புகிறேன்’ என செய்தி வாசித்துக்கொண்டே குரல் உடைந்து அழுதுவிட்டார்.

தற்போது வரை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோ இதுவரையில் 3,45,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசின் புதிய மாற்று நிறுவனங்கள் அமைக்கும் முயற்சியில் இந்தச் சேனல் முடக்கப்பட்டாலும், ஊடகத்துறையினைக் கட்டுப்படுத்தவே அரசு இம்முடிவினை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார்.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: பரிசாக மாறும் பூக்கூடை பூச்சி

 

 
panju_3163026f.jpg
 
 
 

உங்களுக்குப் பிறந்த நாள் என்றால் என்ன செய்வீர்கள்? நண்பர்களுக்கு சாக்லெட் கொடுப்பீர்கள். நண்பர்களுக்குப் பிறந்த நாள் என்றால், ஏதாவது பரிசு கொடுப்பீர்கள். அம்மா, அப்பா யாருடைய திருமண விழாவுக்காவது சென்றால் பரிசு பொருள் வாங்கிக்கொண்டு போவார்கள். பெரிய மனிதர்களின் வீட்டு விழாக்கள் என்றால் பூங்கொத்து (பொக்கே) வாங்கிக்கொண்டு போவோம். சில சமயம் பூக்களால் செய்யப்பட்ட பூக்கூடையைக்கூடக் கொடுப்போம். ஆனால், யாராவது பூச்சியைப் பிடித்துக்கொண்டுபோய்த் திருமணப் பரிசு கொடுப்பார்களா? ஜப்பானில் ஒரு பூச்சியைத்தான் திருமணப் பரிசாகக் கொண்டுபோய்க் கொடுக்கிறார்கள்.

அது என்ன பூச்சி? வீனஸ் பூக்கூடை (Veenus Basket). இந்தப் பூச்சிதான் ஜப்பானில் எல்லோருக்கும் பிடித்த திருமணப் பரிசு. கண்ணாடி இழைகளைக் கொண்டு கைகளால் பின்னப்பட்டது போலப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஓர் உயிரினம்தான் இந்த வீனஸ் பூக்கூடை. உண்மையில் இது ஒரு கடல் பஞ்சு.

மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள், வீரத்துக்கு ஒரு கடவுள் என்று நாம் வழிபடுவது போல ரோம் நாட்டு மக்கள் அன்புக்கு என்று ஒரு பெண் கடவுளை ஆதிகாலத்திலிருந்து வழிபட்டு வருகிறார்கள். அந்தப் பெண் கடவுளின் பெயர்தான் வீனஸ். பார்ப்பதற்கு அன்புக்கான கடவுள் வீனஸ் தேவதை மாதிரியே இந்தக் கடல் பஞ்சு இருப்பதால் இதற்கு வீனஸ் பூக்கூடை என்று பெயர்.

அதெல்லாம் சரி, எதற்காக இந்தக் கடல் பூச்சியை (கடல் பஞ்சை) திருமணப் பரிசாகக் கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. அதற்கு முன் இந்தக் கடல் பஞ்சு பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

20 சென்டி மீட்டர் நீளம் வரை வளரும் கடல் பஞ்சு, மேற்கு பசிபிக் கடலில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளின் ஆழமிக்க பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலிலும் வீனஸ் பூக்கூடையைப் பார்க்க முடியும். இதன் உயிரியல் பெயர் எப்லெக்டெல்லா ஆஸ்பரிஜிலம் (Eplectella Asperigillum).

அறுகோண வடிவில் (மத்தளத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்) இருக்கும் இந்தக் கடல் பஞ்சு ஓர் இயற்கை அற்புதம். மனிதனால்கூடச் செய்ய முடியாத செயலைச் செய்து தங்கள் உடலைத் தாங்களே எழுப்பிக் கொள்கிறது.

gift_3163027a.jpg

இன்று ஆப்டிகல் ஃபைபர் (கண்ணாடி இழைகள்) பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் தொலைத்தொடர்புத் துறையில் கண்ணாடி இழையின் பங்கு அதிகம். கண்ணாடி இழைகளைத் தயாரிப்பது என்பது மிகச் சிக்கலான காரியம். அதிக வெப்பநிலையில் உலோகம் உருக்கப்பட்டுத் தேவையான கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன.

விஞ்ஞானிகள் சிரமப்பட்டுத் தயாரிக்கும் இந்தக் கண்ணாடி இழைகளைக் கடல் பஞ்சுகள் போகிற போக்கில் அசால்ட்டாக தயாரித்து விடுகின்றன. உண்மையில் சிலிக்கன் என்கிற தனிமத்திலிருந்துதான் கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கடல் பஞ்சு கடல் நீரில் இருக்கக்கூடிய சிலிசிக் அமிலத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிலிகாவாக மாற்றுகிறது. இந்தச் சிலிகாவிலிருந்து கண்ணாடி இழைகளைத் தயாரித்து, பெரிய வலை பின்னலை உருவாக்கி, அழகிய கூடு போல மாற்றுகிறது.

இவை உருவாக்கும் கண்ணாடி இழைகள் நம் தலைமுடி போல மெலிதாக இருப்பது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த அளவுக்குத் துல்லியமாக இழைகளை உருவாக்கிக் கூடுகளை நெய்துகொள்கின்றன. ஒவ்வொரு கண்ணாடி இழையின் நீளமும் 5 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் நீளம் வரை இருக்கும்.

இப்படித்தான் உயிருள்ள கண்ணாடி இழைகளை இந்தக் கடல் பஞ்சு உருவாக்குகிறது. இந்த இழைகளில் உள்ள குண்டூசி போன்ற அமைப்பு (படிகச் சிம்பு ஊசிகள்) இந்த இழைகள் வலிமையாக நிற்பதற்கு உதவுகின்றன. இதற்கு ஒளி உமிழும் தன்மை இருக்கிறது. இந்தப் பூக்கூடை பூச்சிகளின் இன்னொரு சிறப்பு இது. கண்ணாடி இழைப் பூச்சிகள் தங்களுடைய ஒளி உமிழும் திறனால் மற்ற சிறிய உயிரினங்களைக் கவர்ந்திழுத்து உணவாக்கிக் கொள்கின்றன.

அதெல்லாம் சரி, இதை எதற்குத் திருமணப் பரிசாகக் கொடுக்கிறார்கள்? பூக்கூடை பூச்சிகள் சிறிய அளவில் இருக்கும்போது இதற்குள் இரை தேடி இறால் மீன் குட்டிகள் உள்ளே வந்து விடுகின்றன. அதுவும் ஆணும், பெண்ணுமாக இரண்டு இறால் மீன் குட்டிகள் பூக்கூடை பூச்சிக்குள் எப்படியும் வந்துவிடும்.

பூக்கூடை பூச்சிகள் அனுப்பும் மீதி உணவுப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் சாப்பிட்டு இந்த இறால் மீன்கள் உயிர் வாழ்கின்றன. பின்னால், வீனஸ் பூக்கூடை தங்கள் கண்ணாடி இழைகளால் இறால்களையும் சேர்த்து மூடி விடுகின்றன. இறால் மீன்களும் பெரிதாக வளர்ந்து விடுவதால் அவைகளால் வெளியே வர முடிவதில்லை. கடைசி வரை இறால்கள் பூக்கூடைக்குள் இணைந்தே வாழ்கின்றன. வீனஸ் பூக்கூடை இறக்கும்போது இறால்களும் இறந்து போய்விடுகின்றன. இறந்து காய்ந்து போன வீனஸ் பூக்கூடைகள்தான் ஜப்பானில் பரிசளிக்கப்படுகின்றன.

திருமணத்தில் இணையும் தம்பதிகள் இறுதிவரை இணைந்தே வாழ வேண்டும் என்பதன் காரணமாக இந்த வீனஸ் பூக்கூடைகளைப் பரிசாக வழங்குகிறார்கள்.

அழகான பரிசுதானே!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

சார்ளி சாப்ளினின் அமெரிக்க விசா ரத்தானது ஏன்? மனம் திறக்கும் மகன்

மௌனப்படக்காலத்தின் உலக புகழ்பெற்ற திரைநட்சத்திரம் சார்ளி சாப்ளின், கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்கிற சந்தேகத்தில் அவரது அமெரிக்க விசா திடீரென ரத்து செய்யப்பட்டது.


ஆனால் 20 ஆண்டுகள் கழித்து அதே அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்றபடி 20 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி பாராட்டினர்.


இடையில் என்ன நடந்தது? சார்ளி சாப்ளினின் வாழ்வு எப்படி இருந்தது? என்பது குறித்தும் உலகப்புகழ்பெற்ற தந்தைக்கும் அவரது பிள்ளைகளுக்குமான குடும்ப உறவு என்பது எப்படி இருந்தது என்பது குறித்தும் சார்ளி சாப்ளினின் மகன் யூஜின் சாப்ளின் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விரிவாக விவரிக்கிறார்.


சார்ளி சாப்ளினுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அதிகம் அறியப்படாத வரலாற்றுப் பக்கங்களை விளக்கும் காணொளி.

  • தொடங்கியவர்

ஒரே கணவரை திருமணம் செய்ய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் விருப்பம்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மே 12
 
 

article_1431405014-sichuan460x276.jpg1551: அமெரிக்க கண்டத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகம் பெரு நாட்டின் லீமா நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.

1797: வெனிஸ் நகரை நெப்போலியன் வென்றார்.

1942: நாஜி படைகளால் அஸ்ச்விட்ஸ் காஸ் வதை முகாமுக்கு 1500 யூதர்கள் அனுப்பப்பட்டனர்.

1949: பேர்லின் முற்றுகையை சோவியத்  யூனியன் தளர்த்தியது.

1949: ஜேர்மனியின் மேற்குப் பகுதியை தக்கவைத்திருந்த மேற்குலக நாடுகள் மேற்கு ஜேர்மனி எனும் புதிய நாட்டுக்கான அடிப்படை சட்டங்களை அங்கீகரித்தன.

1952: ஜோத் மகாராஜா காஜ் சிங் முடிசூடினார்.

1955: சிங்கப்பூரில் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பை தொடர்ந்து பாரிய கலவரம் ஏற்பட்டது.

2002: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு விஜயம் செய்தார். கியூபாவில் 1959ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின்பின் அந்நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர்  விஜயம் செய்தமை அதுவே முதல் தடவையாகும்.

2003: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அல் கயீடாவின் தாக்குதலில் 26 பேர் பலி.

2007: பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 50 பேர் பலி, 100 பேர் காயம்.

2008: சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 69,000 பேர் பலி.

2008: அமெரிக்காவில் வேலைத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, சட்டவிரோத குடியேற்றவாசிகள் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த 8 குணங்கள் இருந்தால் உங்கள் டீம் லீடர் கெத்துதான்! #FridayFeels

 
 

Team_05514.jpg

'நாம் எப்படி வேலைப் பார்க்கிறோம்' என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட யாரிடம் வேலைப் பார்க்கிறோம் என்பதும் முக்கியம். நல்ல பாஸ் அமைந்தால்தான் உங்கள் தவறுகளைக் கண்டுபிடித்துத் திருத்துவதில் ஆரம்பித்து, உங்களின் திறமைக்கு ஏற்ற வேலையைக் கொடுப்பார். ஒழுங்கா வேலை செய்தால், நமக்கான சம்பள உயர்வை போராடி வாங்கித்தருவார். 'அது சரி.. எல்லா பாஸும் வேலை வேலைன்னுதானே விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..இதில் நல்ல பாஸை எப்படிக் கண்டுபிடிக்கிறது" எனக் கேட்கிறீர்களா? கீழ்க்காணும் இந்த 6 குணங்கள் இருந்தால், கண்டிப்பாக நல்ல பாஸாகத்தான் இருப்பார். உங்கள் உழைப்பைச் சரியான நபரிடம்தான் கொட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

நம்பிக்கை - ஒவ்வொரு விஷயத்தையும் பாஸிட்டிவாக அணுகுவார். ஒரு புராஜெக்ட் ஆரம்பித்து அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்க வில்லை என்றாலும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை தன் டீமிடம் பகிர்ந்துகொள்வார். சிறிதுகூட தயக்கமின்றி அடுத்தக்கட்ட வேலைக்கு நம்பிக்கையுடன் தயாராவார்.

வெளிப்படை - உண்மையாக இருப்பார். நீங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. ஆனால், அவருக்கு நீங்கள் நெருக்கமானவர் என்றாலும் தயங்காமல் முகத்துக்கு நேராக உங்கள் குறைகளைச் சொல்லிவிடுவார். ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் ரகசியத் தொனியில் பேசமாட்டார்.  இந்த வெளிப்படைத்தன்மையுடன் அவர் இருப்பதால்தான் 'டீம் ஸ்ப்ரிட்'  உண்டாகிறது. இதன் பயன் வேலையில் தெரியும்.

 இடைவெளி - தன் டீமுடன் எப்போது நெருக்கமாக இருக்க வேண்டும், எப்போது விலகி இருக்க வேண்டும் என அறிந்தே இருப்பார். ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு, சும்மா சும்மா அது குறித்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க மாட்டார். நம்மை சுதந்திரமாக செயல்பட விடுவார்.

ஊக்கம் - உங்களின் டீம் லீடராக இருந்தாலும், தானும் ஒரு ஊழியன்தான் என்கிற நினைப்பில் எந்தச் சூழலிலும் நிறுவனத்தைத் தவறாக பேசமாட்டார். மாறாக, நிறுவனத்தைத் தான் நேசிக்கும் விதத்தை உங்களுக்குப் புரியும்படி நடந்துகொள்வார். உங்களுக்கும் அப்படியான நேசம் நிறுவனத்தின் மீது வரும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருக்கும். நிறுவனத்தின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் நேசமும் அர்ப்பணிப்புடன் வேலைப் பார்க்கவைக்கும் என அவருக்குத் தெரியும்.

கணிப்பு - யாருக்கு எந்த வேலையைக் கொடுப்பது என்பதை இலகுவாகக் கணித்துவிடுவார். அதிக வேலை பார்க்கும் நபரிடம் தேவையற்ற சுமைகளைக் கொடுக்கமாட்டார். அதேபோல, சராசரியைவிடக் குறைவான வேலைப் பார்க்கும் நபர்களிடம் நேரடியாகவே தெரிவித்துவிடுவார்.

வளர்ச்சி - தன் டீமில் உள்ள நபர் தகுதிகளை வளர்த்துக்கொள்வதை ஆதரிப்பார். அதை தனக்கு எதிரான ஒன்றாக எந்தச் சூழலிலும் கருதமாட்டார். அப்படி ஒருவர் உருவாகும்பட்சத்தில் தனக்குச் சமமான இடத்தில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்க முன்வருவார்.

பகிர்வு - செய்த வேலைகளில் கிடைக்கும் வெற்றியை தன் அணியுடன் பகிர்ந்துகொள்வார். அந்த வெற்றிக்குப் பங்களித்த ஒவ்வொருவரையும் நிர்வாகத்திடம் அறிமுகம் செய்வார். அவர்களால் கிடைத்த வெற்றியை, ஒரு நல்ல டீம் லீடர் தனிப்பட்ட ஒன்றாகக் கருதவேமாட்டார்.

பாஸ் அல்ல வழிகாட்டி - உங்கள் மீது அதிகாரம் உள்ள பாஸ் போல நடந்துகொள்ளவே மாட்டார். மாறாக, உங்களை கனிவுடன் வழிநடத்தும் ஆசிரியராக,வழிகாட்டியாக நடந்துகொள்வார். 

மேற்காணும் எட்டு குணங்களும் உங்கள் டீம் லீடரிடம் இருந்தால் கவலையே படவேண்டாம். சரியான டீமில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கான கடமையைச் சரியாகச்செய்து உயர வாழ்த்துகள்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சியர் லீடர்(கேர்ள்)களின் உற்சாகக் கதை!

 

 
cheer_3163475f.jpg
 
 
 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பறக்கும்போதெல்லாம் ‘சியர் கேர்ள்’களின் உற்சாகத் துள்ளல் நடனம் மைதானத்தை அதிரவைக்கத் தவறுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அடையாளமாகவே ‘சியர் கேர்ள்’களும் மாறிவிட்டார்கள். கிரிக்கெட் மட்டுமல்ல, பல விளையாட்டுகளிலும் ‘சியர் லீடர்கள்’ என்றழைக்கப்படும் இளம் மங்கைகள் வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகமூட்டுவது வழக்கமானதாக மாறிவிட்டது. விளையாட்டில் ‘சியர் கேர்ள்’கள் எப்படி நுழைந்தார்கள்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில்தான் நடனமாடி உற்சாகப்படுத்தும் இளம் பெண்களை ‘சியர் கேர்ள்ஸ்’ என்று அழைக்கிறார்கள். பொதுவாக ‘சியர் லீடர்கள்’ என்றே மற்ற விளையாட்டுகளில் அழைக்கிறார்கள். ‘சியர் லீடர்கள்’ என்பது தொடர் உடல் அசைவுகளின் மூலம் விளையாடும் அணிகளை உற்சாகமூட்டும் ஒரு செயல். உற்சாகமூட்டுவது என்பது நடனமாடுவது மட்டுமல்ல, ஒரு போட்டி நிகழ்வாகவும் நடைபெறலாம். வித்தையாகவும்கூட இருக்கலாம்.

‘சியர் லீடர்கள்’ முதன் முதலில் அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில்தான் அறிமுகமானார்கள். அதுவும் 1869 முதல் 1880 வரையிலான காலகட்டத்தில் அறிமுகமானார்கள். மூன்று இளைஞர்கள் பாட்டுப் பாடியும், உற்சாகமான வார்த்தைகளைக் கூறியும் தங்கள் அணிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். அது விளையாடும் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பரவசத்தைத் தரவே, அது தொடர ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் ‘சியர் லீடர்கள்’ பெண்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தொடக்கத்தில் ஆண்கள்தான் சியர் லீடர்களாக இருந்தார்கள்.

அமெரிக்காவில் தொடங்கிய சியர்ஸ் லீடர்கள் கலாச்சாரம் பிறகு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவின. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சியர்ஸ் லீடர்களாக இருக்க பெண்களும் அனுமதிக்கப்பட்டார்கள். 1923-ம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆண்களோடு சேர்ந்து உற்சாகப்படுத்தும் பணியைப் பெண்களும் செய்தார்கள். ஒரு கட்டத்தில் விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்த வந்த ஆண் சியர் லீடர்கள், விளையாட்டு வீரர்களாக மாறுவதில் கவனம் செலுத்த, பெண்களின் பங்கேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அமெரிக்காவில் 1970-களுக்குப் பிறகு பெண்களே அதிகளவில் சியர் லீடர்களாக வரத் தொடங்கினார்கள்.

cheered_3163474a.jpg

அமெரிக்காவில் முதன் முறையாக 1973-ம் ஆண்டில் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்டப் போட்டித் தொடர்களுக்கு பெண் சியர் லீடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அது படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் பரவியது. 2005-ம் ஆண்டு நிலவரப்படி விளையாட்டுகளில் உள்ள சியர் லீடர்களில் 97 சதவீதம் பேர் பெண்களே. இவர்களில் பெரும்பாலானோர் மாடல் அழகிகள். அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் சியர் லீடர்கள் இல்லாமல் தொடங்குவதில்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது.

2007-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சியர் லீடர்கள் முதன் முதலாகத் தலைகாட்டினார்கள். அதன் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அவர்கள் அங்கமாகி, அதன் அடையாளமாகிப் போனார்கள். ‘சியர் (லீடர்ஸ்) கேர்ள்’ இல்லாத இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க இன்று பலரும் விரும்புவதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் இருபது ஓவர் கிரிக்கெட்டுக்குள் ஊடுருவி விட்டார்கள்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 11 Personen
செவிலியர் சேவையைப் போற்றுவோம்!

இன்று - மே 12 - சர்வதேச செவிலியர் தினம். அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்துக்கு ஆற்றிவரும் சிறப்பானப் பங்களிப்பை, நன்றியுடன் நினைவுகூரும் நாள் இது.

செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கித் தந்தவரும், செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாகத் திழந்தவருமான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள்தான் 'செவிலியர் தினம்' ஆக அனுசரிக்கப்படுகிறது.

செவிலியர் என்றாலே 'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ என்ற பெயர்தான் நினைவுக்கு வரும். 'கைவிளக்கேந்திய காரிகை’ என்று போற்றப்பட்ட ஃப்ளாரன்ஸ், இங்கிலாந்தின் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு சிறு வயதாக இருக்கும் போது, குடும்பத்தினர் பல்வேறு நாடுகளுக்கு தங்களது சொந்த கோச் வண்டியிலேயே

சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். சொந்தமாக கோச் வண்டி வைத்துக்கொள்வது அந்தக் காலத்தில் மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

அவருக்கு எல்லாக் கலைகளையும் ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து கற்றுக்கொடுத்தனர். அவர் கணிதத்தை விரும்பிக் கற்றார். ப்ளாரன்ஸ் செல்வச் செழிப்புடன் வளர்ந்தாலும் அவரது உள்மனம் 'மக்களுக்கு நம் சேவை அவசியம்’ என சொல்லிக் கொண்டே இருக்குமாம்.

ஃப்ளாரன்ஸ் குடும்பத்தினரோ, அவரை தக்க வயதில் திருமணம் செய்துகொடுத்து, ஒரு பிரபு குடும்பத்துத் தலைவியாக்க நினைத்தனர். ஃப்ளாரன்ஸ்க்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன செய்வது என்கிற தெளிவுக்கும் வரமுடியவில்லை.

தன்னைப் போன்ற செல்வக் குடும்பத்துப் பெண்களைத் தவிர, மற்ற பெண்களின் வாழ்வு மிகவும் மோசமாகவே இருந்தது. அவர்களுக்கு எந்த விதத்திலாவது தான் உதவியாக இருக்கவேண்டும் என எண்ணினார். அந்தச் சமயத்தில் அவரது வீட்டுக்கு டாக்டர் சாமுவேல் என்ற அமெரிக்கர் விருந்தினராக வந்தார். அவருடன் பேசியபோது, ''என்னைப் போன்ற செல்வச் சீமாட்டிகள் செவிலியாகப் பணிபுரிய முடியுமா?'' எனக் கேட்டார் ஃப்ளாரன்ஸ். அதற்கு டாக்டர், ''கொஞ்சம் சிரமமான பணிதான். சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டி இருக்கும்'' என்றார். இதனால் கொஞ்சம் தெளிவுபெற்ற ஃப்ளாரன்ஸ், தன் வழி இதுதான் என முடிவு செய்தார். முதல் முயற்சியாக உள்ளூர் மருத்துவ மனைகளுக்குச் சென்று, நோயாளிகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தார். மருத்துவமனை முறையாக இயங்காமல் இருந்தது. தொற்று நோயாளியையும் இதர நோயாளிகளையும் ஒன்றாகத் தங்கவைத்து இருந்தனர்.

அப்போது, மருத்துவமனையில் இருந்த செவிலியர் பணிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர், சமூகத்தில் மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்களே. தங்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கும் நோயாளிகளை நன்றாகக் கவனித்தார்கள். மற்ற நோயாளிகளை குளிக்க வைப்பது, ஆடைகள், படுக்கை விரிப்புகளை மாற்றுவது என எதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. நோயாளிகளிடம் பெற்ற பணத்தில் மது அருந்திவிட்டு, போதையிலேயே மருத்துவமனைப் பணிகளைச் செய்தனர். இதனால் ஃப்ளாரன்ஸ் மருத்துவமனைக்குப் போய், நோயாளிகளுக்குச் சேவை செய்வது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. தங்களது குடும்பத்தின் கௌரவம் குறையலாம் என நினைத்தனர்.

அன்புத் தேவதைகளாகப் பணியாற்ற வேண்டிய செவிலியர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வது ஃப்ளாரன்ஸுக்குப் பிடிக்கவில்லை. அதேபோல, மருத்துவமனைகளின் போக்கும் சரியில்லை என உணர்ந்தார். தினமும்... ஒரு மருத்துவமனை எப்படி நடக்கவேண்டும், எதை எல்லாம் மேம்படுத்தவேண்டும் என்பது பற்றி நிறைய குறிப்புகள் எழுதிவைத்தார்.

இந்த நேரத்தில்தான் இங்கிலாந்து மகளிர் மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். ஃப்ளாரன்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியேறி, விடுதி ஒன்றில் தங்கிப் பணிபுரியலானார். ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் மருத்துவமனை தொடர்பான வினாத்தாள் தயார்செய்து, வெளிநாடுகளில் இருந்த தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அனுப்பிய பதில்கள் மூலம் மருத்துவமனையை மேம்படுத்தினார்.

படுக்கை விரிப்புகளைச் சீரான இடை வெளியில் சுத்தம் செய்து பயன்படுத்துவது முதற்கொண்டு, செவிலியரை நோயாளிகள் அவசரமாக அழைப்பதற்கு அழைப்பு மணி பொருத்துவது வரை பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

மருத்துவமனையின் கண்காணிப்புக் குழு, ஃப்ளாரன்ஸின் செயல் வேகத்தைக் கண்டு அஞ்சியது. அதேசமயம், அவர் செய்யும் மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்து, அவற்றை நிறைவேற்றியும் கொடுத்தது. மோசமான ஊழியர்கள் விலக்கப்பட்டனர் அல்லது விலகிவிட்டனர். அந்த மருத்துவமனையே சுகாதாரத்தின் இருப்பிடமாக மாறியது. நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மீதும் குறிப்பாக செவிலியர் மீதும் நன்மதிப்பு ஏற்பட்டது.

அப்போது நடைபெற்ற போர் மற்றும் காலரா நோயினால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து குவிந்தார்கள். மலர்ந்த முகத்துடன் சிகிச்சை அளித்தார். எந்த நேரமும் மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளைக் கவனித்து வந்தார். இரவு நேரத்திலும்கூட தூங்காமல், அவர்களுக்குத் தேவையான ஆறுதல் வார்த்தைகளைப் பேசி, மன ரீதியாகவும் தேற்றினார்.

''அவர் எங்கள் அறைக்கு வந்து சென்றாலே நிம்மதி கிடைக்கும். அவரது நிழல் பட்டாலே எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்'' என்பார்கள் நோயாளிகள்.

செல்வச் செழிப்பில் இருந்தாலும் அடித்தட்டு மக்களுக்கு, அதிலும் குறிப்பாக நோயாளிகளுக்குச் சேவை செய்து உலகப் புகழ்பெற்ற ஃப்ளாரன்சின் வாழ்க்கையில் இருந்து சேவை மனப்பான்மையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

- சுட்டி விகடன் இதழில் இருந்து

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

ப்ஸ்மேஷ், ஸ்மூல் என சமூக வலைதளங்களை அவ்வப்போது எதாவது ஓர் மொபைல் அப்ளிகேஷன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அப்படி, சென்ற வாரம் சோஷியல் மீடியாவின் பாகுபலி ஆனது FACEAPP. புகைப்படங்களுக்கு ஏழு ஃபில்டர்தான் தருகிறது. ஆனால், ஒவ்வொன்றும் தசாவதார லெவல். ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்தால், அவரைச் சிரிக்க வைப்பது, வயதானவராக்குவது, டிஜிட்டல் ப்யூட்டி பார்லராகவே செயல்படுவது, ஆணைப் பெண்ணாக மாற்றுவது என ஓவர் டைம் பார்க்கிறது ஃபேஸ்ஆப். நெட்டிசன்ஸ் படங்களை அப்லோடு செய்ய சசிகலா தொடங்கி அஜித் வரை பலரின் கெட்அப்களை ஃபேஸ் ஆப்போடு இணைத்து ஒரு லோடு மீம்ஸ்களும் களம் இறங்கின.

p109b.jpg

facebook.com/boopath23
கடைசியா பண்ணிக்கலாம்னு ஒதுக்கி வச்ச விஷயத்தாலதான் முதல் அடி விழும்!

facebook.com/billa.mani
கிழிந்த வெண்சுவரை
தையலிட்டிருந்தது
எறும்புச் சாரை.

twitter.com/ameerfaj
வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு செல்லும். அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

twitter.com/jeytwit
டிவில சேனல் மாத்தாமல் ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டு இருந்தா... ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கனும். இல்ல மனசு சரியில்லாம இருக்கனும்

twitter.com/writernaayon
பெண்களிடம் ரகசியம் தங்காது என யார் சொன்னது?
அது தன்னைப் பற்றியதாய் இருந்தால் மூச்சுகூட விட மாட்டார்கள்!

p109a.jpg

twitter.com/iam_vinoth
கல்யாணம் பண்ணவனும் பொலம்புறான்... கல்யாணம் பண்ணாதவனும் பொலம்புறான். அப்போ எவன்தான்டா சந்தோசமா இருக்கறது?

facebook.com/nithyabharadhi
பழைய நட்புகளிடம் பேசும்போது தெளிவாகப் புரிகிறது. வாழ்க்கை எத்தனை மாற்றம் கண்டுவிட்டதென்று!

twitter.com/Itz_rajez
போற வழில, சட்ட கிழிஞ்சிருந்தவங்களை பார்த்துட்டு, சில்ற எதுனா தூக்கிப் போட்ராதீங்கடா... பாவம் அவங்க, நீட் எக்ஸாம் எழுத வந்தவய்ங்களாக்கூட இருக்கலாம்.

twitter.com/jeytwits
திகில் படங்கள்ல ஒரு பங்களாவ காட்டி அங்க ஒவ்வொருத்தரா மர்மமா சாகுற மாதிரி காட்டுவாங்க... அதெல்லாம் படத்துல மட்டும் தான் நடக்கும்னு நினைச்சேன்.

twitter.com/Kozhiyaar
எதைப் படிச்சா நல்ல மார்க் எடுக்கலாம்னு தெரிஞ்ச முதல் பெஞ்சைவிட, எதைப் படிச்சா ஃபெயில் ஆகமாட்டோம்னு தெரிஞ்ச கடைசி பெஞ்சுதான் வாழ்க்கையில் வெல்வது!

twitter.com/its_nabi
மிஸ் யூனு யாரைப் பார்த்துவேணாலும் ஈசியா சொல்லலாம். ஆனால், அந்த வார்த்தையின் முடிவில் நம் கண் முன்னே கண் கலங்கி நிற்கும் உறவு கிடைப்பது வரம்.

twitter.com/Dhrogi
புள்ளைக்கு நல்லபுத்திய சொல்லிக் கொடுங்கனு மனைவி சொன்னா அவங்களுக்குப் பிடிச்சதா சொல்லிக் கொடுக்கணும்னு அர்த்தம்.

twitter.com/bLaCkYTwitS
வேலை தேடுபவர்களும் உழைப்பாளிகளே!

p109c.jpg

twitter.com/Railganesan
10மீ. இடைவெளி விட்டு வரவும்னு பின்னாடி எழுதியிருக்கிற எந்த வாகனமும் தனக்கு முன்னாடி போற வாகனத்திலிருந்து 10மீ. இடைவெளி விட்டுச் செல்வதில்லை!

twitter.com/jeytwits
ஷங்கர் என்பார், ராஜமௌலி என்பார்... மோடியின் டைரக் ஷன் அறியாதோர்!

twitter.com/thoatta
கோலி 100 அடிப்பானா, கெயில் 100 அடிப்பானான்னு பார்க்கிற காலம் போய் டீம் 100 அடிக்குமான்னு ஏங்குற காலத்துல இருக்காங்க RCB எண்டர்டெயினர்ஸ்

twitter.com/pshiva475
நம்மைவிட மோசமான நிலைமையில இருப்பவனை பாத்துவரும் சந்தோஷத்தை விட நம்மைவிட, தொப்பை அதிகமா இருப்பவனை பாத்ததும் வரும் மகிழ்ச்சியின் `அளவே' தனிதான்.

twitter.com/Akniee1
இந்தக் காலத்தில முக்கால்வாசிப் பேருக்கு ஒரு வியாதி இருக்கு... அது அடுத்தவன் மூளை என்ன நினைக்குதுன்னு யோசிக்கிறதுதான்.

p109e.jpg

twitter.com/Kozhiyaar 
உலகில் அதிகம் தொலைந்தவை கனவுகளாகத்தான் இருக்கும்!

twitter.com/mekalapugazh 
அம்மா-அப்பா போடும் சண்டையே...
குழந்தைகளின் முதல் உலகப்போர்!

twitter.com/teakkadai1
பிதாமகன் சூர்யா - சிம்ரன் ஆட்டம் ஓர் அட்டகாசமான டப்ஸ்மாஷ்.

p109f.jpg

twitter.com/Kozhiyaar
 அமைதியாய் இருப்பதற்கே அதிக மெனக்கெட வேண்டி இருக்கிறது!

கருத்தா பேசுவாருp109d.jpg

‘காமன்மேன்’ டிபியில் இருக்கும் கலக்கல் மேன் @thirumarant. வெத்தலைச் சொம்பு இல்லாத விர்ச்சுவல் நாட்டாமை. ட்விட்டர் சந்தில் எந்தப் பஞ்சாயத்தென்றாலும் தரவுகளோடும் தகவல்களோடும் வந்து தீர்த்து வைப்பவர்களுக்கு இவர்தான் முன்னோடி. ஆர்ப்பாட்டமின்றி எல்லா வயதினரோடும் நட்பு பாராட்டும் இவர், அப்பாய்ன்மென்ட் வாங்கிக்கொண்டுதான் பார்க்க வேண்டுமென்ற அளவுக்கு ஐடி நிறுவன உயரதிகாரி. பாண்டிச்சேரிக்காரர் இப்போது சென்னையில்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மனிதரைப்போன்ற இன்னொரு இனம் கண்டுபிடிப்பு

மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

சுமார் இரண்டு லட்ச ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆப்ரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது.

தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது.

  • தொடங்கியவர்

சல்வடோர் டாலியும் வடிவேலுவின் புலிகேசி மீசையும் #SalvadorDali

 

'சர்ரியலிஸம்' என்ற கலை வடிவக் கோட்பாட்டிற்கு தன் தூரிகைகள் மூலம் முலாம் பூசிய, ஸ்பெயின் ஓவியர் சல்வடோர் டாலி (Salvador Dali) பிறந்த தினம் இன்று. ஓவியர் சரி... அதென்ன 'சர்ரியலிஸ' ஓவியர்? சல்வடோர் டாலி-யைத் தெரிந்துகொள்வதற்கு முன் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டுவோம்.

முதலாம் உலப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது 'டாடா' என்ற இயக்கம். கலை இலக்கியங்கள், வினோத ஆடல் பாடல்கள், துண்டுப் பிரசுரங்கள் வழியாக யுத்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்த இந்த இயக்கத்தின் வேறொரு வடிவமாக, ஆன்ட்ரே ப்ரீடன் (André Breton) என்பவரால் ஃபிரான்ஸில் தொடங்கப்பட்டது 'சர்ரியலிஸம்'. 1920-களில் தொடங்கிய இந்தக் கலை வடிவக் கோட்பாடு, 'மனித மனத்தை விடுதலை செய்வதன் மூலம் தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம்' என்கிறது. எப்படி? கனவுகளோ, கற்பனைகளோ... மனிதனின் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களை கதை, கவிதை ஓவியம் போன்ற கலைகளின் வழியாகப் பிரதிபலிப்பது. உதாரணத்திற்கு, நமக்குத் தோன்றும் கனவுகளை ஓவியமாகத் தீட்டலாம். உலகம் எப்படி இருக்கவேண்டும் என்று உள்ளத்தில் நினைப்பதைக் கவிதை, கதையாகக் கட்டமைக்கலாம். இந்தக் கட்டுரையின் நாயகனான சல்வடோர் டாலி, தனது ஆழ்மனச் சிந்தனைகளை ஓவியங்களாக வடித்து, வரலாற்றில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆம், சர்ரியலிஸ ஓவியங்களின் ஹீரோ இவர்! 

சல்வடோர் டாலி

மே 11, 1904-ல் பிறந்த சல்வடோர் டொமிங்கோ பிலிப்பே ஜசிண்டோ டொமெனிக்... உச்சரிக்க கொஞ்சமல்ல ரொம்பவே கஷ்டமா இருக்கும். அதனால், சுருக்கமாக  சல்வடோர் டாலி ஆனார். சிறு வயதிலேயே எதையாவது கிறுக்குவதிலும், திரைப்படங்களைப் பார்ப்பதிலும் ஆர்வமாக இருந்த சல்வடோருக்குப் பிடித்ததைச் செய்ய அவரது அம்மா ஃபெலிபா உறுதுணையாக இருந்தார். ஓவியப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். டாலியின் தந்தையும், வழக்கறிஞருமான சல்வடோர் டாலி இ குஷி, தாயோடு சேர்ந்து மகனின் ஓவியத் திறமையை உச்சிமுகர்ந்தார். தனது மகன் வரைந்த ஓவியங்களைக் கண்காட்சியாக வைத்து அழகு பார்த்ததில் இருந்தது அவரது பெருமிதம். 

சல்வடோர் டாலியின் மூத்த சகோதரர், இவர் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். சல்வடோர் டாலிக்கு ஐந்து வயது ஆகும்போது, அவனது மூத்த சகோதரரின் கல்லறைக்கு அழைத்துச்சென்ற அப்பா, 'உன் அண்ணனுடைய மறுபிறவிதான் நீ' என்று கூறினார். அதைத் தீவிரமாக நம்பத் தொடங்கிய சிறுவன் சல்வடோருக்கு, 'மறுபிறவி' என்ற சிந்தனையின் தாக்கம் பெரிதாக இருந்தது. அந்தச் சிந்தனைகளைத் தான் வரையும் ஓவியங்களில் பிரதிபலிக்கத் தொடங்கினார். 'சகோதரரின் மறுபிறவி நான்' என்ற சிந்தனை பல காலங்களுக்கு  அவரின் மனதில் தங்கி இருந்தது, 1963-ஆம் ஆண்டு 'மறைந்த என் சகோதரன்' என்ற பெயரில் அண்ணனை அவர் ஓவியமாகத் தீட்டியதில் தெரிந்துகொள்ளலாம். 

சால்வதோர் தலி ஓவியங்கள்

சல்வடோரின் ஓவியங்களில் ஆரம்ப காலத்தில் இல்லாத சர்ரியலிஸம், 1930-க்குப் பிறகு தீவிரம் ஆனது. தனக்குள் முளைக்கும் சிந்தனைகளை ஓவியமாகத் தீட்டிப் புகழ் பெற்றார். 'சர்ரியலிஸ' ஓவியமாக இருந்தாலும், சல்வடோர் டாலியின் ஓவியங்களில் இருந்த கவர்ச்சி, அவரது ஓவியங்களைப் பேசுபொருள் ஆக்கியது. இக்காலத்தில் இவர் வரைந்த 'நீங்கா நினைவு (the persistence memory)' என்ற ஓவியம், சர்ரியலிஸ ஓவியங்களுக்கான கிளாஸிக் உதாரணம் எனப் போற்றுகிறார்கள். இந்த ஓவியத்தின் அர்த்தத்தை உள்வாங்கிக்கொண்ட பலரும், இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 'சார்பியல் கொள்கை'யை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது எனப் பேசிக்கொண்டிருக்க, 'அப்படியா? நான் வெயியில் வைத்த பாலாடைக் கட்டியை மனதில் வைத்து வரைந்துவிட்டேனே?' என விளக்கம் கொடுத்தார்.

the persistence memory

கிறித்துவக் கொள்கைகளில் தீவிர நாட்டம் கொண்டிருந்த சல்வடோர் டாலி, 1951-ல் வரைந்த 'Christ of Saint John of the Cross' என்ற இயேசு கிறிஸ்து ஓவியம் உலகப் புகழ் பெற்றது. ஆணிகள் அறையப்படாமல், ரத்தம் சிந்தாமல், முள் கிரீடம் இல்லாமல் சிலுவையில் தொங்கும் இந்த இயேசு ஓவியத்தை, கனவில் கண்ட இயேசுவின் உருவத்தை அடிப்படையாக வைத்து வரைந்ததாகக் கூறினார் டாலி. தவிர, 1955-ல் ஒன்பது மாத உழைப்பிற்குப் பிறகு இவர் வரைந்த ''The Sacrament of the Last Supper' என்ற இயேசு கிறிஸ்துவின் ஓவியம், வாஷிங்டன் தேசியக் கலைக்கூடத்தில் இருக்கும் முதன்மையான ஓவியங்களில் ஒன்றாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

Christ of Saint John of the Cross

'நவீன மனநல மருத்துவத்தின் தந்தை' எனப் போற்றப்படும் சிக்மண்ட் ஃபிராய்டின் கொள்கைகளை உள்வாங்கி, தனது ஓவியங்களில் பிரதிபலித்திருக்கிறார் சல்வடோர். ஓவியங்கள் மட்டுமல்லாது, சிற்பம், திரைப்படக் கலை, புகைப்படக் கலைகளிலும் ஆர்வமாக இயங்கினார். அவற்றிலும் சர்ரியலிஸமே முதன்மையாக இருந்தது. தொலைபேசியின் பேசும் பகுதியில் பெரிய இறால் மீன் வடிவத்தை இணைத்தது, உதடு வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஷோஃபா... இவை இரண்டும் சல்வடோர் டாலியின் 'பெஸ்ட்' லிஸ்டில் இருக்கும் வடிவமைப்புகளில் முக்கியமானவை. 

1929-ல் வெளியான 'Un Chien Andalou' என்ற ஒரு குறும்படத்தில், சவரக் கத்தி ஒன்றைக் கூர்தீட்டி, பெண் ஒருத்தியின் கருவிழியைக் கிழிப்பார்கள். அந்தக் காட்சி நிலவு இரண்டாகக் கிழிந்து தொங்குவதொடு தொடர்பு படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படி ஒரு சர்ரியலிஸக் காட்சியை  'சர்ரியலிஸ சினிமாவின் பிதாமகன்' எனக் கொண்டாடப்படும் லூயி என்பவருடன் இணைந்து, சல்வடோர் டாலிதான் உருவாக்கினார். இந்தக் காட்சி, இன்று உருவாகும் பரிசோதனை முயற்சியான படங்களுக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. தவிர, சினிமா பிதாமகன்களில் ஒருவரான ஹிட்ச் காக்கின் 'ஸ்பெல் பவுண்ட்' படத்தின் கனவுக் காட்சிகளும், சல்வடோரால் வடிவமைக்கப்பட்டவையே. 

Un Chien Andalou

 

சர்ரியலிஸக் கலைஞர்களில் முதன்மையானவரும், அதைப் பலருக்கும் கொண்டுசேர்த்தவர்களில் முக்கியமானவருமான சல்வடோர் டாலி, தனது மீசையை அலங்கரித்துக்கொண்ட விதம் ரகளையான ரசனை. ஆம், மேல்நோக்கிச் செங்குத்தாக நிற்கும் இவரது மீசையை அடிப்படையாகக் கொண்டுதான், 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' படத்தில் வடிவேலுவின் மீசை வடிவமைக்கப்பட்டது. ஓவியங்கள், சினிமா, சிற்பம்... எனப் பல வடிவங்களிலும் ஆழ்மன சிந்தனைகளை கலையாகக் கொடுத்த சல்வடோர் டாலி, சர்ரியலிஸக் கலையின் சின்னம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Text

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை வீரரும், தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கலக்கி வரும் சகலதுறை வீரர் கிரண் பொல்லார்டின் பிறந்தநாள் இன்று

Happy Birthday Kieron Pollard

Bild könnte enthalten: 1 Person

'விளக்கேந்திய சீமாட்டி' புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்.

தாதியர் சேவையை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய இவரது ஞாபகார்த்தமாகவே இன்றைய நாளை உலக தாதியர் தினமாகக் கடைப்பிடிக்கிறோம்.

பொறுமையுடன் தங்கள் புண்ணிய சேவையைச் செய்யும் அத்தனை தாதிய சகோதரியர்க்கும்  இனிய வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

புத்தகங்களால் உலகைக் கடக்கும் சிறுமி!

 

 
baby_3163024f.jpg
 
 
 

புத்தகங்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்? இதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. புத்தகங்களுடன் எப்போதும் நட்பில் இருப்பவர்களின் உலகம் எப்போதும் அதிசயங்களாலும் சாதனைகளாலும் நிரம்பியிருக்கும். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா எஸ்பானியின் சின்னஞ்சிறு உலகமும் இயங்குகிறது.

புத்தகங்கள் மீதிருக்கும் பேரார்வத்தால் இவர் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ஒரே ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டுமென்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதற்காகப் பேஸ்புக்கில் ‘@reading197countries’ என்ற பக்கத்தைத் தொடங்கி அனைவரிடமும் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்டு, ஒரு சிறப்பான புத்தகப் பட்டியலையும் உருவாக்கியிருக்கிறார். இதுவரை 80 நாடுகளில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறார் இவர். புத்தகங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான விமர்சனங்களையும் ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார். 13 வயதில் இவர் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பாராட்டுகளும் ஆதரவும் கிடைத்துவருகின்றன. அத்துடன் இவர் படிப்பையும் புத்தக வாசிப்பையும் திறம்படக் கையாள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

புத்தக அலமாரியில் உலகம்

கடந்த ஆண்டு, மார்ச் மாதம் தன்னுடைய புத்தக அலமாரியை அலசிக்கொண்டிருந்தபோதுதான் ஆயிஷாவுக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறது. தன்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் ஏன் இங்கிலாந்து அல்லது வட அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதுதான் அவருக்கு உலக நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக இணையத்தில் தேடும்போது ஆயிஷாவுக்கு ஆன் மோர்கன் (Ann Morgan) பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. 196 உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ஒரு புத்தகத்தைப் படித்த முதல் நபர் அவர். அவருடைய பிளாக்கைப் படித்தபிறகு கிடைத்த உத்வேகத்தால் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் புத்தகங்கள் படிக்கும் ஆசை வேகம் பிடித்தது.

புத்தகப் பரிந்துரைகள்

இதற்காகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அனைவரிடமும் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்கத் தொடங்கினார். “உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரேயொரு நாவலோ சிறுகதையோ வாழ்க்கை நினைவுக்குறிப்போ படிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். உலக நாடுகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களைப் பற்றி தேட ஆரம்பித்தேன். இந்தப் புத்தகப் பட்டியலைத் தயாரிக்க என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பலரும் உதவினார்கள். 8 மாதங்களில் 43 நாடுகளின் புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தேன்.

அப்போது, எதிர்பாராதவிதமாக என்னுடைய வயதின் காரணமாக ஃபேஸ்புக் என் பக்கத்தை நீக்கிவிட்டது. இது எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. ஆனால், என் பெற்றோர்களும் நண்பர்களும் எனக்கு நம்பிக்கை அளித்து, மீண்டும் என்னை ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கவைத்தார்கள். இந்த முறை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துக்கு முன்பைவிட அதிகமான ஆதரவு கிடைத்தது. ஆனால், இன்னும் சில நாடுகளுக்கான புத்தகப் பரிந்துரைகள் கிடைக்கவில்லை. இந்தப் பட்டியல் முழுமையடைவதற்காகக் காத்திருக்கிறேன்”. இது ஆயிஷா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்பு.

kid_3163023a.jpg

புத்தகங்கள் தேடித்தந்த பேராதரவு

ஆயிஷாவுக்கு நைஜீரிய முன்னாள் அதிபர் குட்லக் எபில் ஜோனதன் சிறந்த நைஜீரியப் புத்தகங்களை ஃபேஸ்புக்கில் பரிந்துரைத்திருக்கிறார். அதேமாதிரி, உலகெங்கும் இருக்கும் எழுத்தாளர்களும் இவருக்குத் தங்களுடைய புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளை அனுப்புகிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிஷாவுக்குக் கிடைக்கும் இந்த ஆதரவு, புத்தக வாசிப்புக்கு எல்லைகள் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஆயிஷாவின் புத்தகப் பட்டியலையும் புத்தக விமர்சனங்களையும் படிக்க: http://bit.ly/2pHRQ1V

www.facebook.com/reading197countries

tamil.thehindu

  • தொடங்கியவர்

போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942

அவுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் என்ற நகரருகில் அமைந்திருந்தது.

 
 
போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942
 
அவுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் என்ற நகரருகில் அமைந்திருந்தது.

இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைவிட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் தொடருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள் தாய்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வயதான பெண்களுடன் சேர்த்து நச்சுவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மற்றும் பலர் கடும் உழைப்பு, ஊட்டச்சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர்.

1942-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் 1500 யூதர்கள் இந்த வதை முகாமில் நச்சு வாயு அறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

*1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.

*1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.

*1797 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.

*1922 - 20 டன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.

*1949 - சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.

*1952 - காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.

*1965 - சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

*1978 - சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 13
 
 

article_1431493569-jayasikuru.jpg1648: டில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1787: அவுஸ்திரேலியாவில் புதிய குடியேற்றமொன்றைஅமைப்பதற்காக இங்கிலாந்திலிருந்து குற்றவாளிக் கைதிகளைக் கொண்ட 11 கப்பல்களுடன் கப்டன் ஆர்தர் பிலிப் புறப்பட்டார்.

1846: மெக்ஸிகோ மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.

1912: பிரித்தானிய விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1917: போர்த்துக்கலில் பாத்திமா மாதா தமக்கு காட்சியளித்ததாக 3 சிறுமிகள் அறிவித்தனர்.

1939: அமெரிக்காவில் முதலாவது வர்த்தக எவ்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1940: பிரான்ஸை ஜேர்மனியப் படைகள் வெற்றிகொள்ளத் தொடங்கின.

1940: ஜேர்மனியின் படையெடுப்பின் காரணமாக நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா பிரட்டனுக்கு தப்பிச் சென்றார்.

1942: இந்திய நாடாளுமன்ற ராஜ்ய சபாவின் முதல் அமர்வு நடைபெற்றது.

1967: கலாநிதி ஸாகிர் ஹூஸைன் இந்தியாவின் 3 ஆவது ஜனாதிபதியானார். இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி இவராவார்.

1972: ஜப்பானின் ஒசாகா நகரில்  மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயினால் 118 பேர் பலி.

1981: வத்திகானில் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் 20,000 மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் மீது துருக்கிய பிரஜையான மெஹ்மெட் அலி 4 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் பாப்பரசரின் வயிற்றிலும் கையிலும் காயமேற்பட்டது.

1996: பங்களாதேஷ் சூறாவளியில் 600பேர் பலி.

1997: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1998: இந்தியா இரு நாள் இடைவெளியில் இரண்டாவது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியா மீது பொருளாதார தடை விதித்தன.

2005: உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 187பேர் கொல்லப்பட்டனர்.

2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை படுகொலை செய்யப்பட்டனர்.

2006: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி 5ஆவது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

2007: திருகோணமலை மொறவெவ பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரர் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

tamilmirror.lk

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

சிசேரியன் தழும்புகளை மறைக்க எளிய வழி

சீனாவின் ஷாங்காயிலுள்ள பச்சைகுத்தும் கலைஞர் ஷி ஹைலிய்.

  • தொடங்கியவர்

கொஞ்சம் இடம்... கொஞ்சம் கழிவு... காடு ரெடி! தமிழகத்தில் பரவும் ஜப்பான் ’மியோவாக்கி’ முறை

 

 

‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே பொழப்பா போச்சு’னு கிராமத்துல ஒரு சொலவடை சொல்வாங்க. அதுக்கு நாமதான் சரியான உதாரணம். இயற்கையா இருந்த காடு கரையை அழிச்சு, கான்கிரீட் காடுகளை உருவாக்கிக்கிட்டே போறோம். இதனால, மாதம் மும்மாரி பெய்த மழை, இப்ப மூணு வருஷத்துக்கு ஒருமுறை எட்டிப்பார்த்துட்டுப் போயிடுது. இதுக்கெல்லாம் காரணம், மரங்களை வெட்டியதும், காடுகளை அழிச்சதும்தான்னு சொல்றாங்க. அதனால, மரம் நடும் விழாக்களை நடத்திட்டு இருக்கோம். இப்ப மறுபடியும் ஒருமுறை முதல் வரியை படிச்சுப் பாருங்க. 

மியோவாக்கி காடு

அரசாங்கம், தனியார் அமைப்புகள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மரம் வளர்க்கணும்கிற எண்ணம் இப்ப வந்திருக்கு. தாமதமா வந்தாலும், இப்பவாவது வந்திருக்கேன்னு சந்தோஷப்படணும். இதை இன்னும் வேகமா செஞ்சாலே, பழைய நிலைமை திரும்ப பல வருஷம் ஆகும்னு சொல்றாங்க சுற்றுச்சூழல் அறிஞர்கள். ஆக, ‘‘காடுகளை உருவாக்கணும்... அதுவும் வேகமா உருவாக்கணும். பத்து வருஷத்துல வளர்ற மரம், ரெண்டே வருஷத்துல வளரணும். அப்பதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை திரும்பும். எல்லாம் சரிதான், பத்து வருஷம் ஒரு மரம் வளர்ந்தா என்ன வளர்ச்சி இருக்குமோ, அது ரெண்டே வருஷத்துல எப்படி சாத்தியம்?  

'நிச்சயம் சாத்தியம்'னு சொல்கிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’. ஜப்பான் நாட்டுல இருக்கும் ‘யோகோஹாமா’ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இவர், மரங்கள் அதிவேகமா வளர்ற மாதிரியான ஒருமுறையைக் கண்டுபிடிச்சிருக்கார். ‘இடைவெளி இல்லா அடர்காடு’ங்கிற இவரோட தத்துவப்படி, குறைஞ்ச இடத்துல அதிக எண்ணிக்கையில் மரங்களை நடலாம். இந்த மரங்களும் அதிவேகமா வளர்றதை நிரூபிச்சிருக்கார் இந்த விஞ்ஞானி. இந்த முறையில், இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியோவாக்கி. இவரது இந்த சேவைக்காக 2006 - ம் வருஷம், ‘புளூ பிளானெட்’ விருது கொடுத்துக் கௌரவிச்சிருக்கு, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு.

உலகம் முழுக்க மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை, வேகமா பரவிக்கிட்டிருக்கு. தமிழ்நாட்டுலயும் இந்த முறையில காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.

அது என்ன மியாவாக்கி முறை? அந்த முறையில் எப்படி காடுகளை உருவாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றாரு, கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான வின்சென்ட். ‘‘ மியாவாக்கி முறைங்கிறது கம்மியான இடத்துல, காடுகளை உருவாக்கும் ஒரு முறை. குப்பைகளை வெச்சே குட்டி வனத்தை உருவாக்கும் அற்புதமான தத்துவம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளைப் போட்டு, நெருக்கமா செடிகளை நடும் முறைக்குப் பேர்தான், மியாவாக்கி. இந்த முறையைக் கண்டுபிடிச்ச விஞ்ஞானியின் பெயர் மியாவாக்கிங்கிறதால, அந்தப் பெயரையே இதுக்கு வெச்சிட்டாங்க. இந்த முறை,  உலகம் முழுக்க பிரபலமாகிட்டு வருது. ஒவ்வொரு நாட்டுலயும், அந்தந்த நாட்டுக்கு ஏற்ப இந்த முறையில் சின்னச்சின்ன மாற்றம் செஞ்சு, செயல்படுத்துறாங்க. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்கள் செஞ்சு, கோயம்புத்தூர் பகுதிகள்ல சோதனை முயற்சியா சில இடங்கள்ல மியாவாக்கி காடுகளை உருவாக்கினேன். அத்தனையும் அருமையா வளர்ந்திருக்கு. இந்த முறையோட சிறப்பு, பத்து வருஷத்துல ஒரு மரம் என்ன வளர்ச்சியில் இருக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும். மரங்கள் நெருக்கமா இருக்கிறதால, ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத் தேடி ஒண்ணுக்கொண்ணு போட்டி போடும் செடிகள் வேகமா வளருது. ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும்.

மியோவாக்கி      மியோவாக்கி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏகப்பட்ட குப்பைகள் சேருது. அவற்றை, இதுவரைக்கும் முறையா கையாளவில்லை. காலி இடங்களைத் தேர்வு பண்ணி, மூணடி ஆழத்துக்கு குழியெடுக்கணும். அந்தக் குழிக்குள்ள, நமக்குக் கிடைக்கிற குப்பைகளைக் கொட்டி, குழியை நிரப்பணும். மேலே, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம் ஆகியவற்றைப் போட்டு, அதுல செடிகளை நெருக்கமா நட்டு வைக்கணும். இப்படி நடும்போது, நம்ம நாட்டு மரங்களை நடுறது நல்லது. சிலர், ரொம்பப் பெரிய செடிகளை நடுவாங்க. பெரிய செடிகளோட வேர், பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுத்தியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது, வேர் நேராகப் போகாது. அதனால, நடுத்தரமான செடிகளை நடுறது நல்லது. இந்த முறையில் நான் நடவு செஞ்ச ஒரு இடத்துல, அக்டோபர் மாசம் ஆறு அடி உயரத்துல இருந்த ஒரு செடி, பிப்ரவரி மாசம் 12 அடி உயரத்துக்கு வளர்ந்திடுச்சு. இந்த முறையை பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்து, காலியான இடங்களிலெல்லாம் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கணும். இப்படிச் செய்றதால குப்பையையும் முறையா பயன்படுத்த முடியும், அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும். இந்த முறையில் நடவு செய்ய, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செஞ்சதும் உயிர்த் தண்ணி. அதன் பிறகு, ரெண்டு, மூணு தண்ணி கொடுத்துட்டாப் போதும். அதுக்குப் பிறகு, தன்னால காடு உருவாகிடும். 

இந்த முறையில், உலகளவுல ‘ஃபுட் பாரஸ்ட்’ ங்கிற முறைதான் அதிக இடங்கள்ல செயல்பாட்டுல இருக்கு. இந்த முறையில், நமக்குத் தேவையான பழ மரங்களை நடவு செய்யலாம். 600 சதுர அடி இடத்துலகூட ஒரு வீட்டுக்குத் தேவையான எல்லா வகையான பழங்களும் கிடைக்கும். பழச்செடிகளை நடவு செஞ்சா, ஆறாவது மாசத்துல இருந்து பழங்களைப் பறிக்கலாம். இந்த முறையை அரசாங்கமும், வனத்துறையும் பொதுமக்கள் கிட்ட கொண்டுபோய், இதை ஒரு இயக்கமாக்கினா, இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறிடும்‘‘ என்றார்.

 

மியாவாக்கி முறையால் கிடைக்கும் நன்மைகள் : 

  • குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். 
  • நெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறையும்.
  • காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். 
  • குட்டி வனத்துக்குள் பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவு வாழும். இதனால், உயிர்ச்சூழல் மேம்படும்.
  • கடற்கரைப் பகுதிகளில் இந்தக் காடுகள் இருந்தால், சுனாமியால் ஏற்படும் பேரிழப்பு தடுக்கப்படும்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.