Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நாசா வெளியிட்ட 'நிஜ' சனி புகைப்படம்! #Cassini

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சனிக்கோள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக 1997-ம் ஆண்டு கெசினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுப் பயணத்துக்குப் பின், 2004-ம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப்பாதையைக் கெசினி விண்கலம் அடைந்தது. சனி மற்றும் அதன் துணைக்கோள்கள் குறித்த நிறைய தகவல்களை, கடந்த 13 ஆண்டுகளாக இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அவ்வப்போது நாசா இதை வெளியிட்டு வருகிறது.

கெசினி வெளியிட்ட சனிக்கோளின் புகைப்படம்

இந்நிலையில், சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், சனிக்கோளை சுற்றியிருக்கும் வளையங்களையும் கெசினி அழகாகப் படம்பிடித்துள்ளது. இருள் சூழ்ந்த சனிக்கோளைச்சுற்றிப் பனிப்படலம்போல அதன் வளையங்கள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளன. சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

சனிக்கோளுக்கும் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22 முறை டைவ் செய்யும் கெசினி விண்கலத்தின் பயணத்துக்கு 'கிராண்ட் ஃபைனல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கூகுளுக்கு டூடுல் ஐடியா தோன்றியது எப்படி தெரியுமா? #GoogleDoodle

 

டூடுல்கள் Winter Olympics 2014

சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை முறை கூகுளின் உதவியை நாடுகிறீர்கள்? அப்படி செல்லும் பொது, அதன் முகப்பு பக்கத்தில் காட்டப்படும் டூடுல்கள் எத்தனை முறை உங்கள் மனதைக் கவர்ந்திருக்கிறது? "அட! அத்தனை முறையும் தான்!" என்று நீங்கள் கூறுவது எங்களுக்கு கேட்காமல் இல்லை. பிரபல மனிதர்களின் பிறந்தநாட்கள் தொடங்கி, வரலாற்றில் முக்கியமான நாட்கள், அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படும் பண்டிகை தினங்கள், சமகால நிகழ்வுகள் என அனைத்திற்கும் மரியாதை அளித்து தனது டூடுல்களின் மூலம் கவுரவப்படுத்துகிறது கூகுள். சமகால இன்டர்நெட் உலகில் இதை ஒரு கலாச்சரமாகவே கொண்டிருக்கும் கூகுள், இந்த டூடூல்களை எப்போது அறிமுகப்படுத்தியது? என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது? பார்த்துவிடுவோமா?

முதல் டூடுல்

"இதைத்தான் தினமும் செய்கிறோம். இன்று இதையே கொஞ்சம் புதுமையாக செய்யலாமே" என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஆகிய இருவருக்கும் இப்படி யோசிப்பது தான் அன்றாட வேலையே!

ஆரம்பக் காலத்தில் கூகுளின் சர்வர்கள் கிராஷ் ஆவதும், உடனே அதை லேரியும், செர்ஜியும் சரி செய்வதும் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு. அப்படி ஒரு இக்கட்டான காலக்கட்டமான 1998ல், இருவருக்கும் நெவாடா பாலைவனத்தில் வருடந்தோறும் நடக்கும் 'பர்னிங் மேன் பெஸ்டிவல்' (Burning Man Festival) என்ற புகழ்பெற்ற விழாவில் கலந்துகொள்ள ஆசை. ஆனால் அந்த நேரத்தில் சர்வர்கள் கிராஷ் ஆகிவிட்டால்? மக்களுக்கு தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைத் தெரிவிக்கவேண்டுமே? அப்போது தான் தோன்றியது டூடுல் ஐடியா! அதே 'பர்னிங் மேன்' விழாவின் லோகோவை எடுத்து தங்கள் கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது 'O' விற்கு பின்னால் குறியீடாக வைத்துவிட்டு  நெவாடா பறந்துவிட்டனர் இருவரும். மக்களும் அந்த குறியீட்டை சரியாக புரிந்துகொண்டனர். பலர் அந்த நகைச்சுவை கலந்த கற்பனைத் திறனை வெகுவாக பாராட்டினார். கூகுள்  டூடுலின் முதல் வெற்றி இது தான்!

அதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 2000ஆம் வருடம், கூகுளில் இன்டெர்ன்னாக பயிற்சிப்பெற வந்திருந்த டெண்னிஸ் வாங் என்பவரிடம் பிரான்சிய தேசிய தினமான "பாஸ்டில் டே"விற்கு (Bastille Day) ஒரு டூடுல் வடிவமைக்குமாறு கட்டளை வருகிறது. அதை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கிறார் டெண்னிஸ். மக்களும் அதற்கு பேராதரவு அளிக்க டெண்னிஸயே தலைமை டூடுலாராக ஆக்கிவிடுகிறார்கள் லேரியும், செர்ஜியும்! மிகவும் எளிமையான முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த டூடுல் கலாச்சாரம் இப்போது பல்வேறு டெக்னாலஜிகள் உதவியுடன் உச்சம் தொட்டிருக்கிறது.

சந்தித்த நெருக்கடிகள்

கூகுள் டூடுல்கள் பெரும் வரவேற்பு பெற்று வந்தாலும் அவ்வப்போது பல பிரச்னைகளையும், பல்வேறு விமர்சனங்களையும் சந்திப்பது உண்டு. கடந்த செப்டம்பர் 13, 2007 அன்று ரோல்ட் டாஹ்ல் (Roald Dahl) எனப்படும் பிரபல ஆங்கில எழுத்தாளரை கௌரவிக்க டூடுல் ஒன்றை வைத்தது. துரதிஷ்டவசமாக, அன்று யூதர்களின் புத்தாண்டும் கூட. அதுமட்டுமல்லாது, ரோல்ட் டாஹ்ல் யூதர்களின் நாடான இஸ்ரேலின் எதிர்ப்பாளர் வேறு! உடனே கிளம்பியது எதிர்ப்புகள். வேறு வழியின்றி, மதியம் 2 மணிக்கே ரோல்ட் டாஹ்லின் டூடுலை நீக்கியது கூகுள். அது மட்டுமல்லாது அமெரிக்காவின் முக்கிய தினங்களான மெமோரியல் டே (Memorial Day) மற்றும் வெட்டறன்ஸ் டே (Veterans Day) போன்றவற்றிற்கு டூடுல் வைத்து  மதிப்பளிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த வருடமே வெட்டறன்ஸ் டேவிற்கு டூடுல் வைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது கூகுள்.

டூடுல்கள் Veterans Day 2007

கடந்த மார்ச் 31, 2013 அன்று தொழிலாளர்கள் தலைவரும், ஐக்கிய பண்ணை தொழிலாளர்கள் சங்கத்தின் துணை நிறுவனருமான சீசர் சாவேஸ் (Cesar Chavez) அவர்களுக்கு டூடுல் வைத்து கௌரவித்தபோது, புனித நாளான ஈஸ்டரை ஏன் மதிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதன்பிறகு, மே 19, 2016 அன்று ஆசிய-அமெரிக்க ஆர்வலரான யூரி கோச்சியமா (Yuri Kochiyama) அவர்களுக்கு கூகுளின் அமெரிக்க முகப்பு பக்கத்திலேயே டூடுல் வைத்தபோது, பலரும் நேரடி எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் அவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவு தெரிவித்தவராம்!

 

இந்தப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க, கூகுள் வெள்ளைக்காரர்களை மட்டுமே டூடுல் வைத்துக் கொண்டாடுகிறது. கறுப்பர்களையோ, மற்ற நாட்டவர்களையோ கவனிக்கத் தவறிவிட்டது என்பது போன்ற பிரச்சனைகளும் அவ்வப்போது தலைக்காட்டும். எது எப்படி இருந்தாலும், கூகுள் டூடுல்களின் மதிப்பு மட்டும் நாளுக்குநாள் கூடிக் கொண்டேதான்  இருக்கிறது. கூகுளும் அதைத் தக்கவைக்கும் வண்ணம் அனிமேஷன் முதல் பல்வேறு விடியோக்கள், குஷிப்படுத்தும் விளையாட்டுகள் என புதுப்புது விஷயங்களை புகுத்திக் கொண்டேதான் இருக்கிறது! நாமும் அதை வரவேற்கும் விதமாக, குறைக்கூறுவதை நிறுத்திவிட்டு கலையை மட்டும் ரசிக்கலாமே?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

ஏஎடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபடத்தின் காப்புரிமைCHANDAN KHANNA/AFP/GETTY IMAGES)

ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன.

தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை.

ஆனால் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது.

ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு Image captionஉலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்ட லண்டன் என்ஃபீல்ட் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்கிளை ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு Image captionஉலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டதைக் குறிக்கும், லண்டன் என்ஃபீல்ட் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்கிளையின் நீல நிறப் பலகை

ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோனால் கண்டுபிடிக்கப்பட்டது

இயந்திரத்தின் பொன்விழாவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த ஏடிஎம் இயந்திரம் தங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த பரோனிற்கும் பார்க்லேஸ் வங்கி கிளைக்கும் ஏற்பட்ட துரித ஒப்பந்தங்களால் பார்க்லேஸ் கிளையில் ஏடிஎம் இயந்திரம் தொடங்கப்பட்டது.

"உலகெங்கிலும் அல்லது பிரிட்டனில் எனது பணத்தை நானே எடுத்துக் கொள்ள ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தோன்றியது" என 2007 ஆம் பிபிசியிடம் தெரிவித்தார் பரோன். மேலும் சாக்லெட் வழங்கும் இயந்திரத்தை பார்த்து தனக்கு ஏடிஎம் இயந்திரத்திற்கான யோசனை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபார்க்லேஸ் கிளையில் முதல் ஏடிஎம் தொடங்கப்பட்டது

ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் 1967ஆம் ஆண்டு பெரும் விழாக் கோலத்துடன் நிறுவப்பட்டது.

முதல்முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், வவுச்சர் ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து மொரமொரப்பான ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.

அதன்பின் ஒன்பது நாட்களுக்கு பிறகு தனது நாட்டில் வடிவமைப்பட்ட ஏஎடிஎம் இயந்திரத்தை ஸ்வீடன் அறிமுகம் செய்தது.

இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்கள் உள்ளன.

தங்களுக்கு தேவையான பணத்தை தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டு பண பரிவர்த்தனையில் மக்கள் தாங்கள் விரும்பும்படியான சேவையை பெற்று வருவதற்கு இது வித்திட்டுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்
வசந்தகால ஆடைகள்
 

image_bf7639335a.jpgimage_e90bf1ac1c.jpgimage_7caf1ab4f2.jpgimage_c6374ef689.jpgimage_36e3e936bd.jpgimage_2baed16e2f.jpgimage_50220a2070.jpgimage_ba91ab8941.jpgimage_622405c127.jpgimage_fd3733290b.jpgimage_6322ef1ab0.jpg“வசந்தகால ஆடை வடிவமைப்பு” என்ற தொனிபொருளில், பாரிஸில் நடைபெற்ற பெஷன் சோவில் 18 ஆடவர்கள் பங்குபற்றினர். இவர்கள், வசந்தகாலத்துக்காக வடிவமைப்பக்கட்ட ஆடைகளை அணிந்து, இந்த பெஷன் சோவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

19424214_1568538059871645_10947483805648

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text und im Freien

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த துடுப்பாட்ட வீரரும், சர்ச்சைகள் பலவற்றின் நாயகனுமான கெவின் பீட்டர்சன்னின் பிறந்தநாள்
Happy Birthday Kevin Pietersen

Bild könnte enthalten: 1 Person, Brille und Nahaufnahme

இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான 'மல்லிகை' டொமினிக் ஜீவா ஐயாவின் 90வது பிறந்தநாள் இன்று.

தனி நபராக நின்று மிக நீண்டகாலமாக இலங்கையில் மல்லிகை என்ற மாத இதழை வெளிக்கொண்டு வருகிறார்.
டொமினிக் ஜீவா சாகித்திய மண்டல பரிசை வென்றிருக்கிறார்.

Bild könnte enthalten: 1 Person, Brille und Nahaufnahme

'பாவை விளக்கு' , 'வேங்கையின் மைந்தன்', சித்திரப்பாவை, நெஞ்சின் அலைகள் போன்ற அற்புத நாவல்களைப் படித்துத் தந்த மறைந்த எழுத்தாளர் அகிலன் பிறந்தநாள் இன்று.

ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.
பல சிறுகதைகளையும் எழுதியுள்ள அகிலனின் பாவை விளக்கு உட்பட சில படைப்புக்கள் திரைப்படங்களாக மாறியுமுள்ளன.

Bild könnte enthalten: 1 Person, Text

இளம் நடிகை கார்த்திகா நாயரின் பிறந்தநாள் இன்று.
முன்னாள் நடிகை ராதாவின் புதல்வி இவர்.
Happy Birthday Karthika Nair

Bild könnte enthalten: 1 Person, machen Sport und Text

உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர், தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டெய்னின் பிறந்த நாள்.
Happy Birthday Dale Steyn

உபாதையால் ஓய்வில் இருக்கும் இந்தப் புயலை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

Bild könnte enthalten: 1 Person, Text

புலன்களின் குறைபாடு சாதனைகளுக்குத் தடையில்லை என்பதை நிரூபித்த வரலாற்றுப் புகழ் கொண்ட பெண்மணி ஹெலன் கெல்லரின் பிறந்தநாள்.

இள வயதிலேயே விழிப்புலன், கேட்கும், பேசும் ஆற்றல்களை இழந்திருந்தும் எழுத்தாளராக சாதித்தவர் ஹெலன் கெல்லர்.

கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது.

  • தொடங்கியவர்
‘பேர்வழிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுவே மேல்’
 

image_6f5895101b.jpgபிறரிடம் பொய் பேசுவதை விடத் தன்னிடமே பொய்யுரைத்தல் ஆபத்தானது. பொய் பேசும் மனத்துக்கு அடிமையானால், அது சத்தியத்துக்கு எதிராகவே செயற்படும்.  

சிலர் எதிர்மறையாகவே பேசிப் பழக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், நாம் எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கக் கூடாது. ஆயினும், நல்ல விடயங்களைக் கூட மூர்க்கத்தனமாக எதிர்த்து, அதையே சாதித்து, விவாதிக்கும் பேர்வழிகள் தங்களின் உருவத்தை யார் எனத் தெரியப்படுத்தி விடுகின்றனர்.  

ஒருவித பித்துப்பிடித்த நிலையிலேயே சமூகத்தில் சஞ்சரித்த வண்ணம் உலாவரும் இவர்களை எதிர்த்துப் பேச யாருக்கும் துணிச்சல் இல்லை. 

எனவே, இத்தகைய பேர்வழிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுவே மேல்.  

நியாய தர்மங்களுக்கு எதிரானவர்கள் தனிமைப்பட்டு, இனிய வாழ்க்கையை உணராது போய்விடுவர். 

  • தொடங்கியவர்

வரலற்றில் இன்று….

ஜூன் – 28

 

1651 : 17ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் போர் போலந்­துக்கும் யுக்­ரை­னுக்கும் இடையில் ஆரம்­ப­மா­னது.


1776 : ஜோர்ஜ் வோஷிங்­டனை கடத்தத் திட்­ட­மிட்­ட­தற்­காக அவ­ரது மெய்ப்­பா­து­காப்­பா­ள­ராக இருந்த தோமஸ் ஹின்க்கி தூக்­கி­லி­டப்­பட்டார்.


1838 : பிரிட்­டனில் விக்­டோ­ரியா ராணிக்கு முடி­சூ­ட்டப்­பட்­டது.


Tyson-and-Holyfield1881 : ஆஸ்­தி­ரி­யாவும் சேர்­பி­யாவும் இர­க­சிய உடன்­பாட்டை எட்­டின.


1894 : தொழி­லாளர் தினத்தை உத்­தி­யோ­கபூர்வ விடு­முறை தின­மாக அமெ­ரிக்கா பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.


1904 : “நோர்ஜ்" என்ற டென்மார்க் பய­ணிகள் கப்பல் வடக்கு அட்­லாண்டிக் சமுத்­தி­ரத்தில் சிறு திட்டு ஒன்­றுடன் மோதி மூழ்­கி­யதில் 635 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1914 : ஆஸ்­தி­ரி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் பிரான்ஸ் பேர்­டினண்ட், மற்றும் அவ­ரிது மனைவி சோஃபி இரு­வரும் சேர்­பி­யாவில் கொல்­லப்­பட்­டனர். இச்­சம்­பவம் முதலாம் உலகப் போர் ஆரம்­பிப்­ப­தற்கு வழி­வ­குத்­தது.


1919 : முதலாம் உலகப் போர்; பாரிசில் போர்­நி­றுத்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு போர் முடி­வுக்கு வந்­தது.


1922 : ஐரிஷ் உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­னது.


1940 : பெச­ரா­பி­யாவை (தற்­போ­தைய மோல்­டோவா) ருமே­னி­யா­விடம் இருந்து சோவியத் ஒன்­றியம் கைப்­பற்­றி­யது.


1942 : சோவியத் யூனிய­னுக்கு எதி­ராக பாரிய படை நட­வ­டிக்­கையை ஜேர்­மனி ஆரம்­பித்­தது.


1950 : தென்­கொ­ரிய தலை­நகர் சியோலை வட கொரியா கைப்­பற்­றி­யது.


1967 : கிழக்கு ஜெரு­ச­லேமை இஸ்ரேல் தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.


1981 : ஈரா­னிய தலை­நகர் தெஹ்­ரானில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 73 பேர் பலி­யா­கினர்.


1994 : ஓம் ஷின்­றிக்­கியோ என்ற மத­வ­ழி­பாட்டுக் குழு­வினர் ஜப்­பானில் மட்­சு­மோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்­ததில் 7 பேர் கொல்­லப்­பட்டு 660 பேர் காய­ம­டைந்­தனர்.


1997 : அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடை­பெற்ற உலக அதி­பார குத்­துச்­சண்டைப் போட்­டியில் இவான்டர் ஹொலி­பீல்ட்டின் காதைக் கடித்ததால் மைக் டைசன் தகு­தி­நீக்கம் செய்­யப்­பட்டார்.


2004 : ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஈராக்கியர்களிடம் ஐக்கிய அமெரிக்கா ஒப்படைத்தது.


2009 : ஹொண்டுராஸில் இராணுவப் புரட்சியின் மூலம் ஜனாதிபதி மனுவெல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

நெதர்லாந்து மக்களின் பிரதான வாகனத்துடன் டெல்லி வந்த மோடி!

பிரதமர் மோடியின் மூன்று நாடுகள் சுற்றுப்பயணத் திட்டத்தில், ஐரோப்பாவின் பணக்கார நாடான நெதர்லாந்தும் இருந்தது. இந்தக் குட்டி நாட்டில், நீர்வழிப் போக்குவரத்துதான் பிரதானம். வீட்டுக்குவீடு படகு வைத்திருப்பார்கள். மற்றொரு முக்கிய வாகனம் சைக்கிள். இங்கு 36 சதவிகித மக்கள், சைக்கிளில் செல்வதையே வழக்கமாகக்கொண்டவர்கள். ஏன்... அந்த நாட்டுப் பிரதமர் மார்க் ரட்டே கூட அலுவலகத்துக்கு சைக்கிளில்தான் செல்வார். உடன் ஒரே ஒரு பாதுகாவலர்தான் இருப்பார். மக்களோ, `முதலமைச்சர் கான்வாய், பிரதமர் கான்வாய், ஜனாதிபதி கான்வாய் என்றால் என்ன' எனக் கேட்கும் ரகம்.

modi_12165.jpg

செல்வச்செழிப்பில் கொழிக்கும் இந்த நாட்டின் பிரதமரே அலுவலகத்துக்கு சைக்கிளில் வருவது கண்டு, நெதர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் வரும் உலகத் தலைவர்கள் வியக்கிறார்கள். பிரதமர் மோடியும் அதற்கு விதிவிலக்கல்லவே. நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி , தி ஹேக் நகரில் பிரதமர் மார்க் ரட்டேவைச் சந்தித்தார். அப்போது, மார்க் ரட்டே தன் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வது குறித்து மோடி வியப்பு தெரிவித்தார்.  பிரபல டச் தயாரிப்பான `பெட்வுஸ் சைக்கிளை மோடிக்குப் பரிசளித்தார் நெதர்லாந்து பிரதமர். இந்த சைக்கிள், எல்இடி பல்ப் பொருத்தப்பட்ட டைனமோகொண்டது. 

மோடி, சைக்கிளை ஓட்டுவாரோ... இல்லையோ, அதனுடன் நிச்சயமாக போஸ் கொடுப்பார்.  அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், பெட்வுஸ் சைக்கிளுடன் அவரின் போஸ் இடம்பெற்றிருந்தது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மூடநம்பிக்கையால் விமானத்தை தாமதப்படுத்திய சீனப் பயணி

ஷாங்காய் விமான நிலையத்தில் , மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பயணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது காசுகளை வீசியதை அடுத்து, அந்த விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது என்று அந்த சீன விமான நிறுவனம் கூறியது.

ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

`சைனீஸ் சதர்ன் ஏர்லைன்ஸ்` விமானத்தை சென்றடையும் வழியில், அந்த 80 வயதான அந்த பெண்மணி தன்னிடம் இருந்த நாணயங்களை விமானம் மீது வீசினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், தனது "பாதுகாப்புக்காக பிரார்த்தனை" செய்வதற்காக அவர் நாணயங்களை வீசியதாக காவல்துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

ஒன்பது நாணயங்களை வீசியதில், ஒரே ஒரு நாணயம் அவர் இலக்கு வைத்தபடி இயந்திரத்தின் மீது பட்டது.

ஆனால் பல மணிநேரங்களுக்கு 150 பயணிகளை வெளியேற்றுவதற்கு இது போதுமானதாக இருந்தது.

இந்த பெண்மணி `பாதுகாப்பான விமானப் பயணத்துக்காக `நாணயங்களை வீசும் விநோதமான நடத்தையை கவனித்த ஒரு பயணி, உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததை அடுத்து, ஷாங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்

தனது கணவர், மகள் மற்றும் மருமகளுடன் பயணம் செய்த அந்தப் பெண்மணி விசாரணைக்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பயணி அதிர்ஷ்டத்திற்காக, விமானத்தின் என்ஜினில் காசுகளை வீசிய நாணயங்கள்படத்தின் காப்புரிமை@FLIGHTORG/TWITTER

விமானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சைனா சதர்ன் நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவு, விமானத்தின் இயந்திரத்தை முழுமையான பரிசோதித்துள்ளது," என சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வளைதலமான வெய்போவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் (Weibo)தெரிவித்துள்ளது.

கியு என்ற பெயர் கொண்ட, இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டபிறகு, அவர் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக கூறினார்.

தங்களது கண்டுபிடிப்பைப் பகிர்ந்து கொண்ட காவல்துறையினர், இது 1.7 யுவானுடைய மதிப்பைக் கொண்ட ஒரு நாணயத்திற்கு ஒப்பானது என்று கூறினர்.

கியுவின் நண்பர் ஒருவர், கியு புத்த மதத்தில் நம்பிக்கை உள்ளவர் என்று கூறினார்,'' என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விமானம் இறுதியாக சோதனைகளுக்குப் பிறகு எல்லாம் நல்லமுறையில் இருப்பதாக சான்று அளிக்கப்பட்டு, 5 மணி நேரம் தாமதமாக கிளம்பியது.

சீனாவின் தெற்கு ஏர்லைன்ஸ் நிர்வாகம், பின்னர் பயணிகளை, உள்நாட்டு விமானச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும், விமானங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய நடத்தைகளைத் தவிர்க்கவும் என்றும் கூறியது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

பிரம்மாண்ட போர்க்கப்பல் கடலுக்குள் இறக்கப்பட்டது

போர்விமானங்களைத் தாங்கும் பிரிட்டன் கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல் முதல்தடவையாக கடலில் இறக்கப்பட்டுள்ளது.


அறுபத்தையாயிரம் டன் எடைகொண்ட HMS Queen Elizabeth என்கிற இந்த போர்க்கப்பல், அது கட்டப்பட்ட ஸ்காட்லாந்தின் ரோசித் துறையில் இருந்து சோதனை ஓட்டமாக ஆறு வாரங்கள் கடலில் பயணிக்கவுள்ளது.


பல ஆண்டுகளாக பிரிட்டனில் கட்டமைக்கப்பட்ட, தொழில்நுட்பரீதியில் மிகவும் சிக்கலான இந்த திட்டத்துக்கு 380 கோடி அமெரிக்க டாலர் செலவானது.


300 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல், கட்டுமான தளத்திலிருந்து மிக கவனமாக பதினோறு சரக்குப்படகுகள் உதவியுடன் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.


செல்லும் வழியில் இருக்கும் பல பாலங்களை கடப்பதற்காக இது தன் உயரமான கொடிமரத்தை கீழிறக்க வேண்டி வந்தது.


எல்லாம் முடிந்து இது கடலுக்குள் சென்று சேர்ந்துள்ள இந்த கப்பலின் முழுமையான செயற்திறன் பரிசோதிக்கப்படவிருக்கிறது.


திட்டமிட்டபடி எல்லா பரிசோதனைகளும் கட்டுமானங்களும் முடிக்கப்பட்டால் இந்த ஆண்டின் இறுதியில் அது தன் புதிய வீடான போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் குடியேறும்.

  • தொடங்கியவர்

21 வயதில் மிஸ் வேர்ல்டு பட்டம்... பாடி பில்டிங்கில் அசத்திய பெண் பாகுபலி!

உலக பாடி பில்டிங் போட்டி இத்தாலியில் நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். இந்திய அணி தரப்பில் உத்தரகாண்டைச் சேர்ந்த பூமிகா ஷர்மா என்ற பெண் கலந்துகொண்டார். போட்டியின் அனைத்து ரவுண்டுகளிலும் அசால்டாக புள்ளிகளை அள்ளினார் பூமிகா. இதனால், பாடி பில்டிங்கில் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.

Bhumika Sharma


இந்தப் படத்தை வெல்லும் முதல் இந்தியப் பெண் பூமிகாதான். கிட்டதட்ட WWE-இல் கலந்துகொள்பவர்கள்போல கட்டுமஸ்தான உடலைக் கொண்டுள்ள அவருக்கு 21 வயதுதான். ஆரம்பத்தில் பெற்றோர்கள் வற்புறுத்தல் காரணமாக, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் பூமிகா. ஆனால், அவருக்குப் பாடி பில்டிங்கில்தான் விருப்பம்.

Bhumika

 


இதனால், பாடி பில்டிங்கில் பங்குபெற்று பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார். பூமிகாவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெற்றி குறித்து பூமிகாவிடம் கேட்டபோது, "அனைத்து ரவுண்ட்களிலும் போதுமான அளவுக்குப் புள்ளிகளைப் பெற்றதால், நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளேன். அடுத்ததாக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்குத் தயாராகி வருகிறேன்" என்று கூறியுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
உலகில் மிக நீளமான பீசா
 

image_92f0f77440.jpgimage_e29b9efaab.jpgimage_86d9204de8.jpgimage_e554fb31a3.jpgimage_00fd5b49ed.jpgநூற்றுக்கும் மேற்பட்ட பீசா தயாரிப்பாளர்கள் இணைந்து, மிக நீளமான  பீசாவைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. Pizzaovens.com இன் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சாதனை நிலைநாட்டல் பயணத்தில், பீசா தயாரிப்பதில் மிகச் தேர்ச்சிப்பெற்ற சமயற்கலை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

இவர்கள், சுமார் 1,930 அடி நீளமான பீசாவை தயாரித்து, இந்த  சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இந்த பீசாவை தயாரிப்பதற்காக, 3,632 கிலோகிராம் மா, 1,634 கிலோகிராம் சீஸ், 2,542 கிலோகிராம் சோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு,  நேபாளம் நாட்டில் நிலைநாட்டப்பட்ட  சாதனையை, அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணம் முறியடித்துள்ளது.

http://www.tamilmirror.lk

 

  • தொடங்கியவர்

பேருந்து மோதியும் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி - காணொளி

இங்கிலாந்தில் ரெட்டிங் பகுதியில் வேகமாக வந்த பேருந்து இந்த நபர் மீது மோதியது.அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் மீண்டும் எழுந்து கடைக்கு செல்கிறார்.இது குறித்த விசாரித்து வருவதாக அந்த பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்

ஜாலி துறைமுக கடற்கரையில் ஜாலியாக விளையாடும் டோனி மகள், தவான் மகன்

வெஸ்ட் இண்டீஸ் ஆன்டிகுவா துறைமுக கடற்கரையில் டோனி மகன் ஷிபா, தவான் மகன் ஷோராவர் பாண்ட் ஆகியோர் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்தனர்.

 
 
ஜாலி துறைமுக கடற்கரையில் ஜாலியாக விளையாடும் டோனி மகள், தவான் மகன்
 
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் டிரினிடாட்டில் நடைபெற்றது. 3-வது மற்றும் 4-வது போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி 30-ந்தேதியும், 4-வது போட்டி ஜூலை 2-ந்தேதியும் நடக்கிறது.

25-ந்தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆட்டத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி ஆன்டிகுவா புறப்பட்டது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள டோனி மற்றும் தவான் ஆகியோர் தங்களை குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளனர்.

டோனி மற்றும் தவான் ஆகியோர் மனைவி தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். இந்திய அணி ஆன்டிகுவா சென்றதும் டோனி மகள் ஷிவா, தவான் மகன் ஷொராவர் பாண்ட் ஆகியோர் ஜாலி ஹார்பர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஜாலியாக கடற்மணலில் விளையாடி மகிழ்ச்சியடைந்தனர். இதை படம்பிடித்து டோனி மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வெளியிடப்பட்ட 'வனமகன்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!

 

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ்ராஜ், வருண், தம்பிராமையா எனப் பலர் நடித்திருக்கும் படம் `வனமகன்.' இந்தப் படம் கடந்த 23-ம் தேதி ரிலீஸானது. இதைத்தொடர்ந்து கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்று வருகிறது.

Vanamagan  

'காட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மனிதன், நகரத்துக்கு வந்து ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டால் என்ன ஆகும்' என்ற ஒன்-லைனை வைத்து கதைக்களம் அமைத்திருக்கிறார், இயக்குநர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு. இந்நிலையில், வனமகன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘பசித்தால் மட்டும் உணவு தேடுவர்’
 

image_2786506b54.jpgஆசைகளை அடக்கு என்று சொல்லுகின்ற சாமியார்களில் பலர் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

பெரும்பாலான சாமியார்களின் இருக்கை, படுக்கைகளைப் பாருங்கள், அவை சொகுசாகவே அமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் இல்லங்கள் குடில்கள் அல்ல. 

முன்னர் வாழ்ந்த யோகிகள், பரதேசிகள் போல் காட்டிலும் மேட்டிலும் வெறும் காலுடன் சுற்றித் திரிந்தார்கள். வாகனப் பாவனை இல்லாது விட்டாலும் வண்டிகளில் குதிரைகளில் சவாரி செய்வதுமில்லை. ஒருவேளை அன்னத்துக்கு திருவோடு ஏந்தினர். பசித்தால் மட்டும் உணவு தேடுவர். 

இப்போது அப்படி எவர் இருக்கின்றனர். பெண்பக்தைகள் புடை சூழ வாழ்கின்றனர். ஆன்ம ஈடேற்றத்துக்கு இவர்கள் வழி சொல்லப்போகிறார்கள்? ஆலயம் சென்று வழிபாடு செய்தலே ஆன்ம விமோசனம்.

  • தொடங்கியவர்

அலுவலகத்தில் ஒரு நல்ல ‘டீம் ப்ளேயர்’ ஆகவேண்டுமா.. இந்த 10 டிப்ஸ் அவசியம்! #MorningMotivation

ஓர் அலுவலகம் என்று எடுத்துக்கொண்டால் அங்கே பலர் வேலை செய்வார்கள் அவர்களோடு இணைந்து பணியாற்ற, அவர்களோடு ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியமான ஒன்று. ஒவ்வொரு அப்ரைசலிலும் ‘நீங்கள் குழுவில் இணைந்து பணியாற்றுவதில் (Team Player) வல்லவரா?’ எனும் கேள்வியை எதிர்கொண்டுதான் இருப்பீர்கள். அப்படி ஒரு ‘டீம் ப்ளேயராக’ பணியாற்ற, உடன் பணிபுரிபவர்களிடம் நெருக்கத்தை, நட்பை வலுப்படுத்திக்கொள்ள சில சிம்பிள் டிப்ஸ்களைப் பார்ப்போம்! 

சிரிப்போடு தொடங்குங்கள்

முதன் முதலில் ஒருவரோடு பேசத்தொடங்கும்போது உங்களுடைய முகத்தில் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது மிகமுக்கியமானது. அதனால் முதலில் பேசத் தொடங்கும்போது உதட்டில் ஒரு சிறு புன்னகையோடு பேசத் தொடங்குங்கள். அருகில் இருப்பவர்களிடம் இயல்பாக நலம் விசாரியுங்கள். ‘ஹாய் டூட்.. அப்றம்...’ என பேசி அவர்களை இலகுவாக்க முடியும்!   கூடிய விரைவில் உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும்.

டீம்
 

உடல் மொழியை மேம்படுத்துங்கள்
 

வெளியில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அது தேவையில்லாதது அலுவலகம் என்று வந்து விட்டால் உங்கள் உடல்மொழி மிகவும் முக்கியம்.எல்லோரிடமும் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இறுக்கமாக இருக்காதீர்கள். கைகுலுக்கும்போது, உச்சபட்ச அன்பை அவர் உணரும் வண்ணம் கைகுலுக்குங்கள். மென்மையாக. உடன்பணிபுரிபவர் ஒரு பாராட்டும் செயலைச் செய்யும்போது, இயல்பாக அவர் தோளில் தட்டிக்குடுத்து ‘செம ப்ரோ!’ என்று சொல்லுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் நட்பை மேம்படுத்தலாம் பாஸ்!
 

கவனமாகப் பேசுங்கள்

நண்பர்களிடம் நீங்கள் பேசுவது வேறு அதுபோல இல்லாமல் புதிதாக அறிமுகம் ஆனவர்களிடம் வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் முதலிலேயே தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்த்து விடலாம். முடிந்தவரை அவர்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள் அதிலேயே அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட முடியும். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் ரசனை, உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்குப் பிறகு அதிகமாக நெருங்குவது, எப்போதும் நல்லது!

உதவி செய்வதில் தொடங்கட்டும் உங்களது நட்பு

மற்றவர்களோடு உங்களுக்கான தொடர்பு என்பது உதவி செய்வதில் ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய நண்பரைப் பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் மற்றவர்களுக்கு உதவும் பண்பு என்பது உங்களது மீதான பார்வையை உயர்த்தும் என்பதால் கூடுமானவரை உங்கள் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். ’ஒரு லட்சம் கடன் கிடைக்குமா?’ என்று கேட்பவர்களுக்கு உதவி மாட்டிக்கொள்ளச் சொல்லவில்லை, ‘ஃபோன்ல சார்ஜ் கம்மியாகுது’ என்று யாரிடமோ புலம்பிக்கொண்டிருக்கும் சக அலுவலக நண்பருக்கு ‘இந்தாங்க ப்ரோ. போறப்ப குடுங்க’ என்று சார்ஜரை எடுத்துக் கொடுத்துப் பாருங்கள். உங்கள் நட்பின் சார்ஜும் 100% ஏறும்!  
 

மற்றவர்களின் நேரத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் நேரம் என்பது முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உயரதிகாரியோ அல்லது உங்களோடு பணிபுரியும் நண்பர்களோ  - அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நேரங்களில் நீங்கள் தேவையில்லாததைப் பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் நட்பை இழக்க வேண்டியிருக்கும். எனவே, எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டும் உரையாடுங்கள்.

சமூக வலைத்தளங்கள் கவனம்

டீம் ப்ளேயர்

இப்பொழுதெல்லாம் உங்களைப் பற்றி உங்கள் அலுவலக நண்பர்கள், அதிகாரிகள் கணிக்க சமூக வலைத்தளங்களைத்தான் நாடுகிறார்கள்.  வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களை உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களோடு நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துங்கள். கொஞ்சம் மரியாதையான தூரத்தில் வைத்திருக்கும் ஒரு சிலரை, நண்பர்களாக அக்செப்ட் செய்யாமல், நட்பு அழைப்பு அனுப்பாமல் இருப்பதே உசிதம். அலுவலக  வாட்ஸ்அப் குரூப்களில் ஆக்டிவாக இருங்கள். ஒருவருக்கு பதிலளித்து மற்றவர்களுக்குப் பதிலளிக்காமல் இருக்காதீர்கள். உங்களது ஒரு தவறான பதிவு அல்லது ஒரு ஃபார்வார்டு மெசேஜ் உங்கள் மீதான பார்வையையே மாற்றிவிடலாம். 

கோபத்தைத் தவிர்த்து விடுங்கள்

கோபம் என்றைக்கும் ஆபத்தானதுதான். அது உங்கள் மதிப்பைச் சிதைக்கும். கோபம் உங்களை விரும்புகிறவர்களையும் உங்களிடத்தில் இருந்து விலக்கிவிடும். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், சரி அமைதி காக்கப் பழகுங்கள். பிறகு அந்தக் கோபத்தீ அணைந்தபின், உங்கள் தரப்பு நியாயத்தை அவரிடம் விளக்குங்கள். 

உங்களது எல்லைகளை அறிந்துகொள்ளுங்கள்

அனைவரிடத்திலும் சகஜமாக பழகுங்கள்; அது நல்ல விஷயம்தான். ஆனால், அலுவலகத்தில் உங்கள் எல்லைகளை அறிந்து செயல்படுங்கள். அவசர கதியில் உயரதிகாரிக்கு ஆலோசனை கூறி, சிக்கலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு இருந்தால் உடனே அதை மறந்து விடுங்கள். பெரும்பாலான இடங்களிலும் அமைதியாக இருப்பதே நலம்..
உங்கள் அருகில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் மட்டும் அறிவுரை கூறுங்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

தவறுகளை உணருங்கள்

ஒரு தவறு செய்தால் அதைச் சமாளிக்காதீர்கள். யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் உங்களுக்கும் மற்றவர்களுக்கான பிணைப்பு மேம்படும் .

அனைவரையும் சமமாகக் கருதுங்கள் 

 

உங்களை விட வயதில் சிறியவரோ பெரியவரோ உங்களுக்குக் கீழே வேலை செய்பவரோ அல்லது உயரதிகாரியோ யாராக இருந்தாலும் சரி மரியாதை கொடுக்கக் கற்று கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மரியாதை தரும் விதத்தில்தான் உங்களுக்கு மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களுக்கு மரியாதை தருவதன் மூலமாகவே, பலர் மற்றவர்கள் உங்களிடத்தில் பழகுவதை விரும்புவார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரல்: இங்கிலாந்து வீரர் குக்கின் மேஜிக் கேட்ச்!


இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், குக். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த அவர், ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், தற்போது அவர் 'Essex Cricket Country Club' என்ற அணிக்காக விளையாடிவருகிறார். இதனிடையே, அங்கு நடந்துவரும் போட்டிகுறித்து குக், செய்தியாளர் ஒருவருக்கு பேட்டியளித்தார்.

Cook


அந்த நேரத்தில், சக வீரர் ஒருவர் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். குக்-செய்தியாளர் தீவிரமாக உரையாடி வந்த நேரத்தில், அங்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வீரர் அடித்த பந்து, அந்தச் செய்தியாளரை நோக்கி ஜெட் வேகத்தில் வந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார் குக்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

7 வருடங்களாக காடுதான் வீடு என வாழும் ஜோடி... பொறாமைப்படாமல் இருக்க முடியுமா?

"மிரியம் ஒரு பைத்தியக்காரி..." , " அவர்கள் இருவருக்கும் புத்தி பேதலித்துவிட்டது..." தங்களின் முடிவை, தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொன்னபோது, அவர்களை இப்படித்தான் திட்டி தீர்த்தார்கள். ஆனால், இன்று வாழ்வில் ஒரு நாளாவது அவர்களைப் போல் வாழ்ந்திட மாட்டோமா? என்று உலகமே அவர்களை அத்தனை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுதான் இந்தக் கதையின் சாராம்சம்... இனி கொஞ்சம் முன்கதையையும், பின்னர், பின் கதையையும் பார்க்கலாம்.

காடு இவர்களின் வீடு

ஹாலந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர் மிரியம் லான்ஸ்உட் ( Miriam Lancewood ). நல்லபடியாக படித்து முடித்துவிட்டு, பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி  ஆசிரியையாக வேலைக்குச் சேர்கிறார். வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லா குடும்பம்தான். ஆனால், மிரியத்துக்கு அப்படியிருக்கப் பிடிக்காது. அரைத்தூக்கத்தில் அவசர அவசரமாக எழுந்து, பரபரப்பாக வேலைக்குப் போய், ஏதோ ஒன்றை செய்துவிட்டு, திரும்ப வீடு திரும்பி, சாப்பிட்டு தூங்கி, எழுந்து... திரும்ப அதே காலை .. ! . இந்த வாழ்க்கை முறையில் ஏதொரு அர்த்தமும் இருப்பதாக மிரியத்துக்குத் தோணவில்லை. உலகில் எந்தவொரு கேள்விக்கும் பதில்... பயணத்தில் கிடைக்கும். இதை உறுதியாக அவர் நம்பினார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தன்னைக் கட்டி இழுத்துக் கொண்டிருந்த வேலையை பின் தள்ளிவிட்டு, முன்னோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்.

2010-ம் ஆண்டு இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நாள் இரவு நேரம்... மெலிதாக பனி பொழிந்துகொண்டிருந்தது. கடுமையாக குளிரடித்துக் கொண்டிருந்தது. சாலையோரம் இருக்கும் ஒரு தட்டுக் கடையில் சாப்பிட வந்தார் மிரியம். அப்போதுதான், அங்குதான்... பீட்டரை சந்தித்தார். இருவரும் சில மணிநேரம் பேசினர். அடுத்த நாள் விடிந்ததும், பீட்டரோடு வாழக் கிளம்பிவிட்டார் மிரியம். இன்று பீட்டருக்கு வயது 63. மிரியத்துக்கு வயது 33. இருவருக்குமிடையே 30 வருட வயது இடைவெளி... 

காடு சொல்லும் வாழ்க்கை - மிரியம் மற்றும் பீட்டர்

பீட்டர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் பேராசிரியர். ஒவ்வொரு நாளும், காடுகளில் வாழ வேண்டுமென்ற தங்களின் ஆசைக் குறித்து இருவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். திடீரென ஒரு நாள் அந்த முடிவை எடுத்தார்கள். " நமக்கு எதைச் செய்யப் பிடிக்கிறதோ... அதைத் தானே செய்ய வேண்டும். நாம் ஏன் அதை நோக்கி நகராமல் ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கிறோம்?". தங்களிடமிருந்த பண்ட, பாத்திரங்களை எல்லாம் மொத்தமாக விற்றனர். தங்களுக்கு அத்தியாவசியமானப் பொருள்களை 85 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பேக் பேக்கில் நிரப்பினர். 12 பக்கெட்களில் முதல் சில நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு நியூசிலாந்தில் இருக்கும் "'சவுத் மார்ல்பரோ" ( South Marlborough ) காட்டுக்குள் நடக்கத் தொடங்கினர். அது குளிர் காலம்... காட்டில் எப்படி வாழ வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் இருவருக்கும் பெரிய அறிவெல்லாம் கிடையாது. முழுவதுமாக தங்களை இயற்கையிடம் அர்ப்பணித்துவிட்டு, இயற்கையிடமிருந்தே பாடம் கற்றுக் கொள்ளலாம் என்ற முடிவில் காட்டுக்குள் சென்று ஒரு கூடாரத்தை அமைத்தனர்.

காடுகளை நேசிக்கும் பெண்

செல்போன், கம்ப்யூட்டர், டிவி, ரேடியோ... ஏன் ஒரு கடிகாரம் கூட கிடையாது அவர்களிடம். எந்த நவீன தொழில்நுட்பமும் கிடையாது. முதல் சில நாள்கள் மிகவும் கடுமையானதாகத்தானிருந்தன.. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாழ்க்கைக்குள் பெரும் காதலோடு பயணிக்கத் தொடங்கிவிட்டனர். கொண்டு போன உணவுப் பொருள்கள் முழுவதும் தீர்ந்துவிட்டது. இனி வேட்டையாடித்தான் சாப்பிட வேண்டும். ஒரு கத்தி, வில் அம்பு இதுதான் மிரியத்தின் ஆயுதம். பசி... ஏதாவது சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம். வாழ்வில் முதன்முதலாக ஒரு ஆட்டை வேட்டையாடினார் மிரியம். வேட்டையாடியதும் அதனருகே போய் உட்கார்ந்துகொண்டு கதறியழத் தொடங்கினார். ஏனென்றால், பிறந்ததிலிருந்தே அவர் சைவம். அசைவ உணவுகளை சாப்பிட்டதே கிடையாது. ஆனா, இயற்கையின் விதி அதுதான் என்பதை புரிந்துகொண்டார். தன் முதல் வேட்டையின் நினைவாக, அந்த ஆட்டின் சிறு கொம்பினை எடுத்து தன் கழுத்தில் மாட்டிக்கொண்டார்.

காடு எனும் வீடு

தண்ணீர் வசதி, மிருகங்களின் இருப்பு, சீதோஷ்ண மாற்றங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலிருந்து புலம்பெயர்வார்கள். இப்படியாக ஒரு தடவை மலை உச்சியிலிருக்கும்போது, எதிர்பாரா விதமாக கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. எங்குமே நகர முடியாமல் கூடாரத்தின் உள்ளேயே மூன்று வாரங்கள் வரை முடங்கிக் கிடந்தனர். தன் வாழ்வை முழுமையாக ரசிக்க இயற்கை தனக்கு கற்றுக் கொடுத்த நாள்கள் அவை என்று அதைக் குறிப்பிடுகிறார் மிரியம்.
இவர்கள் பெரும்பாலும் இந்திய முறை உணவுகளைத்தான் சமைத்து சாப்பிடுகின்றனர். அரிசி சோறு, குழம்பு என செய்து சாப்பிடுகிறார்கள். மாதத்திற்கொருமுறை மிரியம் காட்டிலிருந்து தன் கிட்டாரோடு வெளிவருகிறார். அந்தச் சாலையில் வரும் ஏதேனும் வண்டிகளில் லிப்ட் கேட்டு, அருகிலிருக்கும் நகரத்தை அடைகிறார். அங்கு நின்று சிறிது நேரம் கிடார் வாசித்துப் பாடல்களைப் பாடுகிறார். அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு, தனக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கி, மாலை இருட்டுவதற்குள் கூடாரத்துக்குத் திரும்பிவிடுகிறார்.

 

 

மிரியத்தைப் பற்றியும், அவர் வாழ்வைப் பற்றியும் கேள்விப்பட்ட பதிப்பாளர் ஒருவர் அவரை அணுகி, புத்தகம் எழுதித் தருமாறு கேட்டார். "வுமன் இன் தி வைல்டர்னெஸ் " ( Woman in the Wilderness ) என்ற அந்தப் புத்தகம், சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் புத்தக விளம்பரத்துக்க்காக, சமீபகாலமாக மிரியம் பல நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறார். அங்கு அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் என பல ஸ்டார் வசதிகள் செய்து தரப்பட்டன. இது குறித்து... " என்னை இவர்கள் இப்படி பார்த்துக்கொண்டது நன்றாகத் தானிருந்தது. ஆனால், இதெல்லாம் நிரந்தரம் அல்ல .... என் காட்டு வாழ்க்கைத்தான் என்றுமே நிரந்தரமானது. அதற்காகத்தான் என் மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது..." என்று சொன்னார்.

காடு எனும் வீடு

மிரியம் மற்றும் பீட்டரின் வாழ்வைப் புரிந்துகொண்டவர்கள் சிலர் தான். பலரும் அவர்கள் வாழ்வை விமர்சிக்கின்றனர். வெளியுலகிற்கு வந்தபோது பல கடுமையான கேள்விகளை எதிர்கொண்டபோதும், சிரித்த முகத்துடனே அதற்கான பதிலை அளித்தார் மிரியம்...

" மாதவிடாய் காலத்தில் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, " அங்கு ஓடும் சிறு ஓடையில் கழுவிக் கொள்வேன்..." என்றார்.

" உங்களைவிட 30 வயது மூத்தவரை கல்யாணம் செய்தது சரியா ? " என்ற கேள்விக்கு... " நாங்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோமே..." என்றார்.

" எதிர்காலம் ? " ... " எதிர்காலம் குறித்து நாங்கள் அதிகம் சிந்திப்பதில்லை... அது இயற்கைப் பார்த்துக் கொள்ளும். அது காட்டும் வழியில் தொடர்ந்து பயணிப்போம்..."

காடுகளை நேசிக்கும் பெண்

 

தற்போது மிரியமும், பீட்டரும் மற்றுமொரு பெரிய முடிவினை எடுத்துள்ளனர். பிரான்ஸிலிருந்து, இஸ்தான்புல் வரையிலான பத்தாயிரம் கிலோமீட்டரை காடு, மலைகள் வழியே நடந்து கடக்க இருக்கின்றனர். இவர்களின் வாழ்வு பலருக்கு அதிசயமாக, ஆச்சர்யமாக தெரியலாம்... சிலருக்கு மிகவும் முட்டாள்தனமானதாக இருக்கலாம். இருவருக்குமிடையிலான உறவு கொச்சையாக புரிந்துகொள்ளப்படலாம். எதுவாக இருந்தாலும், அது அவரவரின் பார்வையாக மட்டுமே இருக்க முடியும். அப்படி நினைப்பவர்களில் எத்தனைப் பேர் தங்களுக்குப் பிடித்த வாழ்வை, எந்த சமரசமும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், மிரியமும், பீட்டரும் தங்களுக்குப் பிடித்த வாழ்வை யாருக்கும் எந்த தொந்தரவையும், தீங்கையும் செய்திடாத வகையில் இயற்கையின் மடியில் வாழ்ந்து வருகிறார்கள்...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஜூன் – 29

 

1534 : சாக் கார்ட்­டியே, தற்­போ­தைய கனே­டிய மாகா­ண­மான பிரின்ஸ் எட்வேர்ட் தீவை அடைந்த முதல் ஐரோப்­பி­ய­ரானார் என்று ஐரோப்­பி­யரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1613 : லண்­டனில் உள்ள குளோப் நாட­க­மா­ளிகை தீயில் எரிந்து அழிந்­தது.


varalru1786 : அலெக்­சாண்டர் மாக்­டொனெல் மற்றும் 500 கத்­தோ­லிக்­கர்கள் ஸ்கொட்­லாந்தில் இருந்து சென்று ஒன்­டா­ரி­யோவின் கிளென்­கரி என்ற ஊரில் குடி­யே­றினர்.


1814 : மெத­டிஸ்த திருச்­ச­பையைச் சேர்ந்த ஆறு மதப்­ப­ரப்­பு­னர்கள் இலங்­கையின் காலி நகரை வந்­த­டைந்­தனர்.


1850 : கன­டாவின் வான்­கூவர் தீவில் நிலக்­கரி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1864 : கன­டாவின்  கியூபெக் மாகா­ணத்தில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 99 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1880 : டெஹீட்டி தீவை பிரான்ஸ்  கைப்­பற்­றி­யது.


1904 : மொஸ்­கோவை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் சுமார் 1.500 வீடுகள், கட்­ட­டங்கள் அழிந்­தன.


1914 : ரஷ்ய அரச குடும்­பத்தின் நண்­ப­ரான கிரி­கோரி ரஸ்­புட்டீன் சைபீ­ரி­யாவில் தனது வீட்டில் இடம்­பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்­பினார்.


1925 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் 6.3 பூகம்பம் ஏற்­பட்­டதில் சாண்டா பார்­பரா என்ற இடம் முற்­றாக அழிந்­தது.


1974 : ஆர்­ஜென்­டீன ஜனா­தி­பதி ஜூவான் பெரோன் கால­மா­ன­தை­ய­டுத்து அவரின் மனை­வியும் உப ஜனா­தி­ப­தி­யு­மான இஸபெல் பெரோன், புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார். நாடொன்றின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த முதல் பெண் இஸபெல் பெரோன் ஆவார்.


1975 : அப்பிள் 1 கணனி மாதி­ரியை ஸ்டீவ் வொஸ்­னியாக் சோதித்தார். 


1976 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் இருந்து சீஷெல்ஸ் சுதந்­திரம் பெற்­றது.


1995 : அட்­லாண்டிஸ் விண்­ணோடம் ரஷ்­யாவின் மீர் விண்­வெளி நிலை­யத்­துடன் முதற்­த­ட­வை­யாக இணைந்­தது.


1995 : தென் கொரி­யாவின் சியோலில் சம்பூங் எனும் சந்தைக் கட்­டடம் இடிந்து வீழ்ந்­ததில் 501 பேர் கொல்­லப்­பட்டு 937 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.


2002 : தென் கொரி­யா­வுக்கும் வட கொரி­யா­வுக்கும் இடையில் இடம்­பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலு­மிகள் கொல்­லப்­பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.


2007 : அப்பிள் நிறு­வனம் தனது முத­லா­வது செல்­லிடத் தொலை­பே­சி­யான  ஐ-போனை வெளியிட்டது.


2014 : சிரியா, ஈராக்கின் வட பிராந்­தி­யங்­களை உள்­ள­டக்­கிய புதிய  தனி­நாட்டை ஐ.எஸ். எனும் “இஸ்­லா­மிய அரசு” கிளர்ச்சி அமைப்பு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. 

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பறவைகளின் வினோதச் செயல்கள்

 
பறவைகளின் வினோதச் செயல்கள்
 

பறவைகள் தங்களின் இருப்பிடத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், தன் இணைப் பறவைக்குத் தெரிவித்து அவற்றை கவர்ந்திழுக்கவும் அவை ஏற்படுத்துகின்ற இனிய ஓசைதான் பறவைகளின் பாட்டு என்று வழங்கப்படுகிறது.

birds-2-300x185.jpg

அவை தங்கள் தொண்டையில் இருகின்ற ஸைரின்க்ஸ் (syrinx) எனும் உறுப்பின் உதவியுடன்தான் பாடுகின்றன. தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டும்தான் உள்ளது.

பறவைகள் சில சமயம் வித்தியாசமாகக் குரல் எழுப்பும். அதில் உணவு வேண்டி பறவைக் குஞ்சுகள் கொடுக்கும் குரலும், அபாய எச்சரிக்கை செய்வதற்காக எழுப்புகின்ற குரலும் வழக்கமான குரலைவிட சற்று வித்தியாசமாக இருக்கும்.

blue-birds.jpg.824x0_q71.jpg

பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை மிகப் பொதுவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கலாம். தன் வண்ணத் தோகையை விரித்து அழகாக நடனமாடுபவை ஆண் மயில்கள்.

பல நிறங்களுடைய இறகுகளும் கொண்டையுமுடைய சேவல்தான் பெட்டைக் கோழியைவிட அழகாக இருககிறது.

tray-of-eggs-crop-1-300x142.jpg

பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிலவகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, அல்லது இளம் நிறமுடையதாகவோ இருக்கும்.

புறாக்கள், ஆந்தைகள், மரம் கொத்திகள், மீன் கொத்திகள் ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

how-to-draw-a-bird-nest.jpg

இப் பறவைகள், பொந்துகளிலோ மரக் கிளைகளிலோ கூடு கட்டி முட்டையிடுகின்றன. எனவே எதிரிகளால் அவ்வளவு விரைவாக கூட்டில் உள்ள முட்டைகளைக் கவர்ந்துவிட முடியாது.

எனவே, இப் பறவைகளின் முட்டைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நிறம் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லலாம்.

RA-0602080021-300x300.jpg

வேறு சில பறவைகளின் முட்டைகள் அடர்ந்த நிறமுடையதாகவோ, புள்ளிகளுடையதாகவோ இருக்கும்.இவ்வகையான முட்டைகள் தரையிலோ, திறந்த வெளிகளிலோ பொரிக்க வேண்டியவையாக இருக்கும்.

எனவேதான் இவை சுற்றுச்சூழலிருந்து எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடர்ந்த நிறங்களுடனோ, புள்ளிகளுடனோ இருக்கின்றன. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்குதான் இந்த ஏற்பாடு.

artificial_robin_and_eggs_in_natural_grass_bird_nest_2.jpg

விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலவகைப் பறவைகள் மட்டுமே முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாப்பதில்லை.

கரு வளரும் சமயத்தில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் நோக்கில்தான் பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன.

ஆனால் சில இடங்களில் பறவைகள் அடைகாக்காமலேயே தங்கள் முட்டைகளின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.

2111166568_232d723ebf-300x240.jpg

ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள ‘Scrub fowl’ எனும் ஒருவகைப் பறவைகள் புற்களையும், இலைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து பதினைந்தடி உயரமும் முப்பத்தைந்தடி பரப்பளவும் உள்ள ஒரு வகையான குவியலை உருவாக்குகின்றன.

சில சமயம் பல பறவைகள் சேர்ந்து தங்களுக்கான ஒரே குவியலை உருவாக்கின்றன. பிறகு குவியலில் மூன்றடி நீளமுள்ள சிறு சுரங்கங்களை உருவாக்கி அதனுள் முட்டையிடுகின்றன.

அந்த தாவரக் குவியலிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் முட்டைகள் பொரிகின்றன. வேறொரு வகை பறவையான ‘mallee fowl’ இலைகளுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தி குவியல் அமைக்கின்றன.

coucou-koel-male-sg-300x200.jpg

தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்காத சில பறவைகள் உள்ளன. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு அவை பறந்துவிடும்.

அந்தக் கூட்டில் வசிக்கும் பறவை அது தன் முட்டைதான் என்று தவறாகக் கருதிக்கொண்டு அந்த முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். வெளிவந்த குஞ்சை தன் சொந்தக் குஞ்சுபோல வளர்க்கும். காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில் (indian cucoo) இதற்கு ஒரு உதரணம்.

images1.jpg

தங்கள் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு அளவு வரை இறகுகளின் ஈரம் சேராதிருக்கவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன.

இப்படி இறகுகளைத் தூய்மையாக வைத்திருப்பதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இறகுகள் வளரத் தொடங்கும்போதே பறவைக் குஞ்சுகள் கோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. சிறுவயதில் இதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றன பறவைகள்.

2-1-apicturetake-300x223.jpg

முதிர்ந்த பறவைகள் இந்தப் பழக்கத்தை கடைசிவரை தொடர்கின்றன. அவற்றின் உடலின் பின் முனையில் வாலுக்குச் சற்று மேலுள்ள எண்ணெய்ச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் கொத்தியெடுத்து இறகுகளில் தடவிக் கொள்கின்றன.

இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு இறகுகளில் திடிரென்று நீர் சேராமலும், இறகுகளின் மென்மையையும் காக்கிறது. இறகுகளின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

maxresdefault-3.jpg

இறகுகளைக் கோதிக்கொள்வதுடன் இவை மண்ணில் புரளவோ அல்லது தண்ணீரில் குளிக்கவோ செய்கின்றன.

வாத்துக்கள் தலையைத் தண்ணீரில் மூழ்க விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு சிறகு விரித்து உடம்பை உதரிக் கொள்கின்றன.

1259390571HHcYDRR.jpg

முதுகைச் சொறிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும்போது, நமக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதல்லவா.

அதைப் போல பறவைகளுக்கும் தங்கள் உடலில் அலகு எட்டாத இடத்தில் எண்ணெய்த் தேய்ப்பதற்கு இணைப் பறவையின் உதவியை நாடுகின்றன

http://uthayandaily.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கத்தியைத் திருடிய கனடா காகம், தபால் ஊழியரைத் தாக்கி, தபால் சேவையை நிறுத்தியது

 

கனடாவில் கிழக்கு வான்கூவர் நகரத்தில் தபால் ஊழியரை கேனக் (Canuck ) என்றறியப்படும் ஒரு காகம் தாக்கியதை அடுத்து அந்த பகுதிக்கு தபால் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் காகத்தின் தாக்குதலால் தபால் விநியோகம் நிறுத்தம்படத்தின் காப்புரிமைTHE CROW AND I / FACEBOOK Image caption`காக்கா மூக்குல கத்தியிருக்க` !

கிழக்கு வான்கூவரில், இந்தப் பிரச்சனை இல்லை என்று உறுதியான பிறகுதான் அங்குள்ள பல முகவரிகளுக்கு அளிக்கப்படவேண்டிய தபால்கள் வழங்கப்படும் என்று கனடா தபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர் ஒருவருக்கு ரத்தம் வரும் அளவுக்கு கேனக் காகம் கடித்ததாக கூறப்படுகிறது.

அக்காகம், கிழக்கு வான்கூவர் நகரத்தில் ஓடும் மெட்ரோ ரயிலில் தொத்திக்கொண்டு வருமாம். மேலும் அது குற்றச் சம்பவங்கள் நடந்த இடத்தில் இருந்து ஒரு கத்தியை எடுத்துச் செல்வது உட்பட, பல பளபளப்பான பொருட்களை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

''துரதிருஷ்டவசமாக, வான்கூவர் சுற்றுப்புறத்தில், தபால்களை வழங்க முயற்சி செய்யும்போது, எங்களின் ஊழியர்கள் ஒரு காகத்தால் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளனர். எங்களுடைய ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால், மூன்று வீடுகளுக்கு அஞ்சல் விநியோகம் செய்வது இடை நிறுத்தப்பட்டுள்ளது,'' என்று பிபிசியிடம் பேசிய கனடா போஸ்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டார்சியா க்மெட் தெரிவித்தார்.

கனடாவில் காகத்தின் தாக்குதலால் தபால் விநியோகம் நிறுத்தம்படத்தின் காப்புரிமைTHE CROW AND I / FACEBOOK

தெருவில் மற்ற வீட்டினருக்கு தபால்களை கொடுக்கும்போது நாங்கள் சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம். மற்ற மூன்று வீடுகளுக்கு தபால் வழங்குவது பாதுகாப்பானது என்று எங்கள் ஊழியர்கள் நம்பினால், அப்போது அவர்கள் விநியோகம் செய்வார்கள், " என்று அவர் தெரிவித்தார்.

''இந்த காகம் அஞ்சல் ஊழியரை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது. அதில் அவருக்கு தோல் கிழிந்து, ரத்தம் வழியும் அளவுக்கு தாக்கியுள்ளது,'' என `கேனக் அண்ட் ஐ` (Canuck and I) என்ற பேஸ்புக் குழுவில் அந்த காகத்தின் செயல்களை பதிவு செய்துவரும் ஷான் பெர்க்மென் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் சிறிது காலத்தில், தனது வீட்டிற்கு அஞ்சல்கள் வருவது மற்றும் அருகில் உள்ள இரண்டு வீட்டினருக்கு தாபால்கள் வருவது நின்ற நிலையில், அவர் ஒரு பேஸ்புக் குழுவை தொடங்கினர்.

கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அஞ்சல்கள் வருவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

''இங்குள்ளவர்கள் வருத்தப்படுகின்றனர். மேலும் அந்த காகத்துக்கு மறைமுக மற்றும் சற்று வெளிப்படையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன,'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கனடா அஞ்சல் நிறுவனத்தில் இருந்து பெர்க்மென்னுக்கு வந்த பதிலில், 'காகம் தாக்கும் என்று அறியப்பட்ட இடங்களில், அபாயம் இனி இல்லை என்று நிலை வரும்வரை தபால்களை விநியோகிக்காததன் மூலம் நாங்கள் எங்கள் ஊழியர்களை பாதுகாக்கிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.

கனடாவில் காகத்தின் தாக்குதலால் தபால் விநியோகம் நிறுத்தம்படத்தின் காப்புரிமைTHE CROW AND I / FACEBOOK

கேனக்கின் `சமூக விரோத நடத்தை` என்பது குற்றம் நடந்த இடங்களில் தடயங்களை அழிக்கும் அளவுக்கு இட்டுச்சென்றுள்ளது.

2016ல் மே மாதத்தில் காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்தலுக்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கத்தியைத் அது பாய்ந்து வந்து திருடியாகக் கூறப்படுகிறது.

கான்ஸ்டபிள்களில் ஒருவர் துரத்தியபோது காகம் அக்கத்தியை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வான்கூவரில் காகத் தாக்குதல்கள் சாதாரணமாக நடப்பவைதான் ; 'பறவைகளின் 'தாக்குதல்கள்' பற்றிய தரவுகளை சேகரிக்கும் ஒரு ஆன்லைன் தளம் ஒன்று கூட காகத் தாக்குதல்கள் நடக்கும் இடங்களை வரை படமாகக் காட்டுகிறது.

வடையைத் திருடிய காகத்தின் கதையைக் கேட்டிருக்கிறோம். இது கத்தியைத் திருடிய கனடா காகம் !

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஹேப்பி பர்த்டே ஐபோன்: ஐபோன் உருவாக முக்கிய காரணமாக இருந்த மைக்ரோசாப்ட் ஊழியர் (வீடியோ)

சர்வதேச மொபைல்போன் சந்தையில் தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் ஐபோன் உருவாக, ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு பிடிக்காத அந்த மைக்ரோசாப்ட் ஊழியர் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 
ஹேப்பி பர்த்டே ஐபோன்: ஐபோன் உருவாக முக்கிய காரணமாக இருந்த மைக்ரோசாப்ட் ஊழியர் (வீடியோ)
 
சான்பிரான்சிஸ்கோ:
 
உலகின் முதல் ஐபோன் ஜூன் 29, 2007-இல் வெளியிடப்பட்டது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கைகளால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் வரலாற்றில் இத்தகைய வரவேற்பை பெறும் என ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 
 
பத்து ஆண்டு வரலாற்றில் ஸ்மார்ட்போன் தரம், அதன் விற்பனை, லாபம் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆப்பிள் ஐபோன்கள் தொடர்ச்சியான சாதனைகளை படைத்து வருகிறது. முதல் ஐபோன் வெளியான நாளில் இவை உருவாக்கப்பட்ட முக்கிய காரணமாக இருந்தவரை பற்றி தான் இங்கு தொகுத்துள்ளோம். 
 
201706291902031235_scott%20forstall._L_s
 
கம்ப்யூட்டர் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தில் முன்னாள் ஐஒஎஸ் தலைவரான ஸ்காட் ஃபோர்ஸ்டால், ஐபோன்கள் கடந்த வந்த பாதை மற்றும் இவை உருவாக்கப்பட முக்கிய காரணமாக இருந்தவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.  
 
ஆப்பிள் நிறுவனருக்கு பிடிக்காத மைக்ரோசாஃப்ட் ஊழியர் தான் ஐபோன்கள் உருவாக்கப்பட முக்கிய காரணமாம். ஒவ்வொரு முறை இந்த மைக்ரோசாப்ட் ஊழியரை பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆத்திரத்துடன் வருவார் என ஸ்காட் கூறியுள்ளார்.   
 
மைக்ரோசாப்ட் ஊழியரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் நண்பர் என்று மட்டும் தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோசாரப்ட் நிறுவனத்தின் டேப்லெட் மற்றும் ஸ்டைலஸ்களை திட்டமிடுபவராக பணியாற்றியுள்ளார். மைக்ரோசாப்ட் ஊழியரை ஸ்டீவ் ஜாப்ஸ் அவரது வழியிலேயே வீழ்த்த நினைத்தார்.   
 
201706291902031235_steve%20jobs._L_styvp
 
குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் ஊழியர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இடம் டேப்லெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் இடம் இருந்து வாங்கி உலகையே மாற்றலாம் என தெரிவித்துள்ளார். இதில் கோபமுற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் உண்மையில் டேப்லெட் எவ்வாறு இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும் என தெரிவித்ததாக வால்டர் ஐசக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
ஸ்டைலஸ் சாதனத்தை அடியோடு வெறுத்த ஸ்டீவ், ஒருவருக்கு பத்து விரல்கள் இருக்கும் போது தனியே ஸ்டைலஸ் எதற்கு என நினைத்தார். இதைத் தொடர்ந்து ஐபேட்களின் வடிவமைப்பு பணிகள் துவங்கின, சில காலத்திலேயே ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என நினைத்தார். 
 
மேலும் ஐபாட் வியாபாரத்திற்கு அச்சுறுத்தலாக இது அமையலாம் என்பதால் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வரும் சாதனத்தை பாக்கெட்டில் எளிமையாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாக மாற்ற திட்டமிட்டார், மேலும் இதில் ஆப்பிள் ஏற்கனவே உருவாக்கி வரும் மல்டி டச் அம்சத்தை வழங்கும் முடிவு செய்யப்பட்டது.
 
201706291902031235_iphone%201._L_styvpf.
 
இதன் தொடர்ச்சியாக டேப்லெட் தயாரிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு, பிரத்தியேக போனினை உருவாக்கும் பணிகள் துவங்கின. அன்று துவங்கிய பணிகள் இன்று வரை தொடர்கிறது. தற்சமயம் உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் ஐபோன் 2017 மாடலை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 
 
புதிய ஐபோன் வெளியீட்டிற்கு சில மாதங்கள் உள்ள நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோனினை வெளியிட்ட நிகழ்ச்சி வீடியோவை கீழே காணலாம். 
 
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

'புனித பூமியில்' தின்பண்டங்களும், செல்ஃபிகளும் (புகைப்படத் தொகுப்பு)

 
Tourists take photographs in front of three crucifixesபடத்தின் காப்புரிமைERICA CANEPA

உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா என்று கூறப்படும் அமைப்பை, பேனோஸ் ஐரீஸின் மையத்தில், டியர்ரா சான்டா என்ற பெயரில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உருவாக்கியுள்ளது.

இயேசு காலத்தில் இருந்த ஜெருசலத்தின் தெருக்களை அப்படியே பிரதிபலிக்க டியர்ரா சான்டா என்ற அமைப்பு முயற்சித்துள்ளது.

பொழுது போக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ள பார்வையாளர்கள், குறுகிய தெருக்களில் நடப்பட்டுள்ள பிளாஸ்டிக் பனை மரங்கள், சிலைகள் மற்றும் இயேசுவின் வாழ்விலிருந்து முக்கியமான காட்சிகளிலிருந்த நடிகர்களின் உருவங்கள் வரை அதில் இடம்பெற்றுள்ளவற்றைக் காண முடியும்.

A woman sweeps the floorபடத்தின் காப்புரிமைERICA CANEPAA statue showing Roman soldiers putting the crown of thorns on Jesusபடத்தின் காப்புரிமைERICA CANEPA An audience sit in an amphitheatreபடத்தின் காப்புரிமைERICA CANEPA

பொழுது போக்கு பூங்காவின் நுழைவாயிலில் நீண்ட வரிசையில் குடும்பங்கள், சுற்றுலாவாசிகள் மற்றும் இளம் தம்பதியர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.

பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்ஜென்டினா முழுவதிலிருந்தும் வந்தவர்கள்.

சில பார்வையாளர்களுக்கு இந்த பூங்கா கிட்டத்தட்ட ஒரு புனித இடமாக கருதப்படுகிறது.

A man takes a selfie outside a Roman style buildingபடத்தின் காப்புரிமைERICA CANEPA Tourists browse for cardsபடத்தின் காப்புரிமைERICA CANEPA Jesus rises from a mountainபடத்தின் காப்புரிமைERICA CANEPA

பொழுது போக்கு பூங்காவின் முக்கிய அம்சமே இயேசுவின் 60 அடி உயர இயந்திர சிலைதான். பிளாஸ்டரில் செய்யப்பட்ட கோல்கோத்தா மலை உச்சியின் பிரதிபலிப்பிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயேசுவின் சிலை மேலெழும்பும்.

இந்த நிகழ்வின் போது ஹாண்டெல்லின் மெஸ்ஸையா பாடலும் ஓங்கி ஒலிக்கும்.

Tourists watch Jesus riseபடத்தின் காப்புரிமைERICA CANEPA A basket of holy water fontsபடத்தின் காப்புரிமைERICA CANEPA A member of staff selling snacksபடத்தின் காப்புரிமைERICA CANEPA

இந்த பொழுது போக்கு பூங்காவிலுள்ள பணியாளர்களின் ஆடை இயேசு கால ஆடை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழங்கால ரோமானியர்களை போல உடையணிந்துள்ள பாதுகாவலர்களுடன் அருகில் நின்று பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் அல்லது மத்திய கிழக்கால் ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கஃபே ஒன்றிலிருந்து அப்பங்களை வாங்கிக்கொள்ளலாம்.

A woman looks at a Roman guardபடத்தின் காப்புரிமைERICA CANEPA A statue of Jesus turning bread into wineபடத்தின் காப்புரிமைERICA CANEPA An overview of the theme parkபடத்தின் காப்புரிமைERICA CANEPA

அனைத்து புகைப்படங்ளையும் எடுத்தவர் எரிகா கேனப்பா

http://www.bbc.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.