Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாம்பின் தலையில் நாகமணி... வைரல் வீடியோ சொல்வது உண்மையா?

 

எல்லா காலத்திலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு கொண்டே இருக்கிறார். அது கதையாக இருக்கிறது, அல்லது தொடர்கதையாய் மாறுகிறது. இணையதளத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. அதில் ஒருவர் நாகப்பாம்பைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அதன் கழுத்திலிருந்து சீதாப்பழ கொட்டை வடிவிலான ஒன்றை வெளியே எடுக்கிறார், அதை நாகமணி எனச் சொல்கிறது அந்தக் காணொளி. உண்மையில் நாகமணி, நாக ரத்தினங்கள் எல்லாம் உலகத்தில் இருக்கிறதா?

நாகமணி 

30 வருடங்களுக்கும் மேலாக விஷப்பாம்புகளைப் பிடித்து விஷம் எடுக்கும் வடநெமிலிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் நாகமணி குறித்து உரையாடிய போது "பாம்பு புடிக்கிற எங்க ஆட்கள் மொத்தம் 372 பேர் இருக்கோம். எல்லாரும் சேர்ந்து வருசத்துக்கு 8300 பாம்பு பிடிக்கிறோம், அதுல 2500 நாக பாம்புகள். ஒரு நல்லப்பாம்பு விடாம நாகமணிய நாங்க எடுத்து இருந்தா இன்றைய தேதியில் ஊருக்குள்ள பாம்புப் பிடிக்குற நாங்கதான் மிகப் பெரிய பணக்காரரா இருப்போம். நாகமணி, நாக ரத்தினம் எல்லாமே சுத்தப் பொய். நல்லபாம்புல இருந்து விஷம் மட்டும்தான் எடுக்க முடியும், நல்ல பாம்புன்னு இல்ல, எல்லா பாம்புகளிலும் விஷம் மட்டும்தான் எடுக்க முடியும். விலங்குகளை வைத்து பிழைப்பு நடத்துவதில் இதுவும் ஒரு வழி’’ என்கிறார். 

மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆறுவருடங்களாகப் பாம்பு பிடிக்கும் வேலையே சேவையாகச் செய்து வரும் ஜெஸ்வின் அவர்கள் சொல்லும் போது “பாம்புகள் சம்பந்தமா நெறயப் புத்தகம் படிச்சிருக்கேன். பாம்புகள் தொடர்பான எல்லா நிகழ்வுகளுக்கும் போய் வந்துருக்கேன். நாகமணி பற்றிய செய்திகள் மொத்தமாக பாம்புகள் பற்றிய தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிருக்கு. உண்மையா நாகமணிக்குப் பின்னாடி நடக்குற விஷயம் இதுதான். காடுகளிலிருந்து பிடித்துக்கொண்டுவரப்படுகிற   நாகப்பாம்பை அதன் தலையை அறுத்து, அதற்குள் மணி மாதிரியான ஒரு பொருளை உள்ளே வைத்து விடுகிறார்கள். பின்னர் மக்கள் நடமாட்டம் இருக்கிற பகுதியில் கொண்டு வந்து தலையை அறுப்பது போல அறுத்து உள்ளே வைத்த மணியை எடுக்கிறார்கள். பின்பு அதை மக்களிடம்  நாக மணி எனச் சொல்லி விற்பனை செய்கின்றனர். நாகமணி தங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என நினைக்கிற சிலர் எவ்வளவு பணம் கொடுத்தேனும் அதை வாங்கிச் செல்கிறார்கள். நம்ம மக்கள் அறிவியல் கூடவே பயங்கரமா விளையாடுவாங்க. இதில் வேடிக்கை என்னவென்றால் நாகமணியின் ஒளியில் வேட்டையாடுகிற பாம்பு வேட்டை முடிந்ததும் மீண்டும் நாகமணியை விழுங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியெனில் நாகமணி வயிற்றுக்குள் தானே போகவேண்டும் எப்படி பாம்பின் தலைப்பகுதிக்குச் செல்கிறது” எனவும் கேட்கிறார். 

பத்திலிருந்து முப்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கிற பாம்பின் விஷம்தான் ஒரு கட்டத்தில் இறுகி நாகமணியாக   மாறுவதாகச் சொல்கிறார்கள். சிலர் நாக ரத்தினம் எனவும் சொல்கிறார்கள். இன்றைய  காலகட்டத்தில் எந்த வகை பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ்வது என்பது சாத்தியமில்லாதது. அப்படியே உயிர்வாழ்வது சாத்தியமென்றாலும் இன்னொரு இரை மீது விஷம் பாய்ச்சாமல் உயிர் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. மேலும், இணையதளங்களில் நாகரத்தினத்தின் ஒளியில் பாம்பு வேட்டையாடுகிறது எனச் சில காணொளிகள் காணக்கிடைக்கின்றன. அவையெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படுகிற பொய் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . நாக பாம்புகள் நாகமணியின் வெளிச்சத்தில் இரையைப் பிடிப்பதற்காகத் தனது விஷத்தை 20 வருடங்கள் சேமிக்குமானால் அவை 20 ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். 

உணவிற்காக, மருந்திற்காக என்று எல்லா நாடுகளிலும் பாம்புகளை மையமாக வைத்து பல கறுப்புச் சந்தைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டும்தான் பாம்பில் நாகமணி இருக்கிறது , நாகரத்தினம்  இருக்கிறது என்று சொல்லி சிலர்   மூடநம்பிக்கையைக் காசாக்கி கொண்டிருக்கிறார்கள், சிலர் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுயமாக ஓடும் வாகனங்களுக்காக 'ஹைபர்லேன்'

ஓட்டுநர் இல்லாமல் சுயமாக ஓடும் வாகனங்களுக்காக சிறப்புப் பாதைகள் அமைக்க அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இன்று நண்பகலில் இருந்து கடந்த 10 மணித்தியாலமாக ஜெர்மனி பெர்லின் நகரில் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருவதால்...

பஸ்ஸில் வெள்ளம்

 

பெர்லின் நகரில்

Überflutete Straße am Donnerstag im Berliner Stadtteil Wilmersdorf. (Quelle: dpa/Michael Kappeler)
(Quelle: dpa/Michael Kappeler)

Autos fahren am 29.06.2017 über überflutete Straßen bei Starkregen in Berlin-Wilmersdorf.

DDgjv_GXcAIGg0o.jpg

Ein Blick hinter die Kulissen. Es wird auch nass im Regierungsviertel. #Bundestag #Berlin #Unwetter

Unwetter behindert den Verkehr auf dem Berliner Boulevard Unter den Linden. (Quelle: dpa/Wolfgang Kumm)

Unwetter behindert den Verkehr auf dem Berliner Boulevard Unter den Linden

 

 

Heftige Regenfälle legen die Stadt lahm

 
 
Live-Ticker

Feuerwehr-Chef an Berliner: "Bleibt zu Hause!"

Über 1000 wetterbedingte Einsätze hat die Feuerwehr bis zum Abend bewältigt. Und der Regen hört nicht auf.

Von Patrick Goldstein
29.06.2017, 19:22
  • Hauptsache, das Kind ist gegen den Regen geschützt.
    Hauptsache, das Kind ist gegen den Regen geschützt. Foto: joerg Krauthoefer#
  • Land unter in Berlin!
    Land unter in Berlin! Foto: Reto Klar
  • Auf dem Flugfeld des Flughafens Tegel staute sich das Wasser
    Auf dem Flugfeld des Flughafens Tegel staute sich das Wasser

Es goss wie aus Kübeln: Wer draußen unterwegs war, wurde mitunter nass erwischt.

Der U-Bahnhof Spichernstraße lief voll Wasser. Mit Besen versuchen diese Menschen, das Wasser von einem Geschäft wegzuschieben.

Das Regenwasser läuft im U-Bahnhof Spichernstraße die Treppe hinab.

Eine Mitarbeiterin eines Kiosks versucht, mit einem Besen das Wasser aus dem Laden zu treiben.

Ein Auto fährt bei starkem Regen durch eine Pfütze.

Auch diese beiden Frauen bekamen nasse Füße.

...diese beiden waren besser vorbereitet.

Schnell über die Straße...

Haltung bewahren trotz strömenden Regens.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Dieser Herr sprintete schnell über den Kudamm.

1-format1007.jpg

5-formatOriginal.jpg

1-format1007.jpg

1-format1012.jpg

1-format1012.jpg

  • தொடங்கியவர்

‘சும்மா’ இருக்கற நேரத்துல இதெல்லாம் செய்யலாமே..! #MorningMotivation

 

ஒரு நாளைக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்க, வெட்டியாத்தான் இருப்போம். இல்லைன்னா நமக்கு உபயோகமில்லாத வேலையைச் செஞ்சிட்டிருப்போம். ‘சும்மா இருக்கிறது ஒண்ணும் ஈஸி இல்லை பாஸ்'னு வடிவேல் வாய்ஸ்ல நீங்க சொல்றது கேட்குது. இருந்தாலும் காலம் பொன் போன்றதுங்கிறதால அதை எப்படி நமக்கு உதவுற மாதிரி மாத்தலாம்னு பார்க்கலாமா..?

சும்மா

 

புத்தகம் படிக்கலாம்:

நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் உங்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வோர் அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.

இயற்கையை ரசிக்கலாம்:

அதிகாலையில் பறக்கும் பறவைகளைப் பார்த்தால், உங்கள் மனமும் பறப்பதற்கான ஆற்றலை பெற்றுவிடும். மரங்களை ரசித்துப் பாருங்கள். உங்களுக்குள் பசுமை துளிர்விடும். மலைகளை ரசித்துப் பாருங்கள், உயரம் செல்வதற்கான வழி தென்படும்.

உடற்பயிற்சி:

வேலை நேரங்களில் மூளைக்கு வேலைகொடுக்கும் நாம், மற்ற நேரங்களில் உடலுக்கு வேலை தர மறந்துவிடுகிறோம்.
சும்மா இருக்கும் நேரங்களில்கூட சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வேலைகள் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.

இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்:

`இப்பவே சும்மா இருக்கும்போது ஹெட்செட்ல பாட்டுதானே கேட்குறோம்'னு சொல்கிறீர்களா... பாடல்கள் கேட்பது நல்ல பொழுதுபோக்குதான். ஆனால், எத்தனை நாளைக்குதான் கேட்க மட்டுமே செய்வீர்கள்? அதனால் இசையை இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கிட்டாரோ, கீபோர்டோ வாசிக்கக் கத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.

கற்றுக்கொள்ளுங்கள்... பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்:

நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுகொடுங்கள். அது உங்கள் அனுபவமாக இருக்கலாம், உங்களுக்குத் தெரிந்த விஷயமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பிறருக்குக் கற்றுக்கொடுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொடுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கும் பொழுதுபோகும் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

மனிதர்களோடும் கொஞ்சம் பேசுங்க பாஸ்!

டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். வேலை நேரத்தை விடுங்க, மற்ற நேரங்களிலாவது அவர்களிடம் பேசலாமே! `எப்படி இருக்க?' எனக் கேட்பதற்குப் பதிலாக `பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல' என்றுதான் ஆரம்பிக்கிறது இன்றைய நண்பர்களின் தொலைபேசி உரையாடல்கள். சும்மா இருந்தால், உங்க நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடிங்க!

உதவி செய்யுங்கள்:

வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது. அலுவலக வேலை முடிந்து வந்ததும் வீட்டில் இருக்கும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ப்ளான் பண்ணுங்க பாஸ்:

 

அடுத்த நாள் என்ன வேலை பண்ணலாம்னு ப்ளான் பண்ணுங்க. வேலை பார்க்கும் நேரத்தைவிட சும்மா இருக்கும் நேரத்தில்தான் நம் க்ரியேட்டிவிட்டி லெவல் அதிகமாகுமாம். அதனால் சும்மா இருக்கும்போது உதிக்கும் ஐடியாக்களைச் செயல்படுத்திப் பார்க்கலாமே!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

90% நீருக்குள் மூழ்கிய அமெரிக்க நகரம்... என்ன காரணம்?

 
 

மூழ்கிய அமெரிக்க நகரம் Top

Isle de Jean Charles என்ற அந்தச் சிறியத் தீவு வட அமெரிக்காவின் தென்கிழக்கு லூசியானாவில் உள்ள டெரிபோன் (Terribonne) என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 170 வருடங்களாக Band of Biloxi-Chitimacha-Choctaw Indians எனப்படும் மாநில அங்கீகாரம் பெற்ற பழங்குடி மக்களுக்கு இதுதான் அன்னைபூமி. ஆனால் அவர்களே இன்று தங்கள் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவலநிலை!

என்ன காரணம்?

அறுபது வருடங்களுக்கு முன்னர், லூசியானா மாகாணத்தில் மரம் வெட்டியவர்களுக்கும், எண்ணெய் வளத்தை துளையிட்டு உறிஞ்சியவர்களுக்கும், இப்படி ஒரு இழப்பு வருங்காலத்தில் ஏற்படப் போகிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அதிலும் இந்த சிறிய தீவின் எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் சிந்திக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருந்திருக்கும்? வெட்டிய மரங்களையும், உறிஞ்சிய எண்ணெய் வளத்தையும் இடம்பெயர்த்துக் கொள்ள பல மரங்களை வெட்டி, ஒய்யாரமாக வழித்தடம் அமைத்துக்கொண்டனர். இந்தச் செயல் அதைச் சுற்றியுள்ள ஈரநிலங்கள் மற்றும் சிறிய தீவுகள் உருவாக உதவிய காரணிகளை மிகவும் பாதிக்கத் தொடங்கியது. மண்ணரிப்பு ஏற்பட்டு பெரும்பாலான நிலப்பகுதிகள் கடலுடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனுடன் பருவநிலை மாற்றமும் சேர்ந்துக்கொள்ள மாபெரும் பேரழிவைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கொடுத்து வாங்கிய கதைதான் இதுவும்!

90% நிலப்பரப்பு மாயமானது

மூழ்கிய அமெரிக்க நகரம் middle

ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தால் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கும் லூசியானா கடற்பகுதிகள் போல இந்தத் தீவும் மெக்ஸிகன் வளைகுடாவில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 60 வருடங்களில், கிட்டத்தட்ட 90% மேல் நிலப்பரப்புத் தண்ணீருக்குள் சென்றுவிட,  தற்போது இந்த நகரில் ஒரேயொரு நீண்ட சாலை மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் அதுவும் இருபுறமும் நீர் சூழ்ந்து அபாயக் கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு இப்போது வெறும் 29 வீடுகளில், 100 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். அவர்களையும் வேறு இடத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதாரம் அமைத்துத்தர $48 மில்லியன் டாலர்கள் ஒதுக்கி முயன்றுக் கொண்டிருக்கிறது அதன் அரசாங்கம்.

தொடரும் சோகங்கள்

இங்கே இப்படியென்றால், வட அமெரிக்காவின் மற்றொரு புறமிருக்கும் அலாஸ்காவிலும் இதே கதைதான்! நிங்க்ளிக் (Ninglick) என்ற நதிக்கரையில் இருக்கும் நியூடோக் (Newtok) என்ற ஒரு கிராமத்தில் 350 பேர் வசிக்கின்றனர். அலாஸ்க்காவின் மேற்கு முனையில் இருக்கும் இதில், பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகத்தொடங்க கடல் மட்டம் வருடத்திற்கு 70 அடி விகிதம் அபாயகரமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்திகள் இரண்டும் தற்போது கடற்சார்ந்து வாழும் அனைத்து அமெரிக்க நகரங்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை, தங்கள் நகரத்திற்கும் இந்த நிலைமை வந்தால் தங்களை எங்கே இடம்பெயரச் சொல்வார்கள்? எப்படி வாழ்வாதாரம் அமைத்துக் கொடுப்பார்கள்? அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது போன்ற கேள்விகள் அங்கே எழத் தொடங்கிவிட்டது.

 

இன்று வெகு விரைவாக புவி வெப்பமடைய மிக முக்கியக் காரணமாக கருதப்படுவது பசுங்குடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்கள் பெருமளவில் உருவாவது. காடுகளை அழித்து நகரங்களை விரிவுபடுத்துவது, கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு வழிவகுக்கும் எரிபொருள் பயன்படுத்துவது என்று முழுக்க முழுக்க பாதிப்பை ஏற்படுத்தும் வழிமுறைகளையே நாம் கையாளுவதால் இவ்வகை பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது நடக்க வேண்டும் என்று யாரும் வேண்டுமென்றே செய்யவில்லைதான். ஆனால், இப்படி ஒரு நிலை வந்தபின்பாவது நாம் விழித்துக் கொள்ளவேண்டாமா? ஒருபுறம் வறட்சி என்றால், மறுபுறம் அதற்கு நேர்மாறான அவலம்! எது எப்படியோ, இது இயற்கையின் சட்டப்புத்தகத்திலிருக்கும் மனிதனுக்கான தண்டனை என்பதை மட்டும் நாம் மறுக்கமுடியாது!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுட்டது நெட்டளவு

 
kannadi_3180452f.jpg
 
 
 

 

இளம் தம்பதி புதிதாக ஓர் இடத்துக்குக் குடி போனார்கள்.

அதிகாலை தேநீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்துவிட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்துக்கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்...

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

அவர்கள் எழுந்து தேநீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்:

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டுவிட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்றுதான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்:

“இன்றைக்கு அதிகாலையில்தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.

நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாதபோது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்றுகூட நம்மால் யோசிக்க முடிவதில்லை!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

’கர்ப்பிணி’ செரினா வில்லியம்ஸின் படம் கிளப்பும் விவாதம்! #CelebrateMotherhood

 

செரினா

சில மாதங்களுக்கு முன்பு பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்கள் பரபரப்பாக பேசியது. தொடர்ந்து, தனது வலைத்தளப் பக்கத்தில், தன் கர்ப்பம் பற்றி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார் செரினா. தற்போது, ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், ‘வானிட்டி ஃபார்’ என்ற சர்வதேசப் பத்திரிகைக்கு ஆடைகளின்றி போஸ் கொடுத்திருக்கிறார். இது, வைரலாகி வருகிறது.

மேலும், அவரின் காதல் வாழ்க்கை பற்றி, கர்ப்பமானது தெரிந்தபோது முதலில் அதிர்ச்சி அடைந்தது, பிறகு தாய்மையை நேசிப்பது எனப் பல விஷயங்களை அந்தப் பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்த அட்டைப் படத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், ‘எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா?' என்று ரசிகர்களிடம் உற்சாகமாகக் கேட்டிருக்கிறார்.

வெளிநாட்டு பிரபலங்கள், கர்ப்பக் காலத்தில் இதுபோன்று போஸ் கொடுப்பது புதிதல்ல. இதற்கு முன்பு, அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான ஜெசிக்கா சிம்ப்சன், ஆஸ்திரேலியா மாடல் அழகி மிராண்டா கெர், அமெரிக்காவின் பிரபலப் பாடகிகள் மரியா கரே , ப்ரிட்னி ஸ்பீயரஸ் மற்றும் அமெரிக்க நடிகை டெமி மோர் போன்றோர் ஆடைகளின்றி போஸ் கொடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், செரினாவும் இணைந்திருக்கிறார்.

செரினாவின் காதலர், ரெட்டிட் (Reddit) என்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹனியன் (Alexis Ohanian). இவரும் செரினா வில்லியம்ஸூம் 2015-ம் ஆண்டு முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். இருவரும் இத்தாலியில் உள்ள கவாலிரி (cavalieri) ஹோட்டலில் தங்கினர். கடந்த டிசம்பர் மாதம், இதே ஹோட்டலில்தான் செரினா வில்லியம்ஸிடம்  தனது காதலைச் சொல்லியிருக்கிறார் ஒஹனியன். இதுபற்றி செரினா, “காதலைச் சொல்லத்தான் அவர் என்னை சந்திக்கப்போகிறார் என்று முன்பே தெரிந்துகொண்டுவிட்டேன்” என்று வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.  

செரினாசெரினா பற்றி ஒஹனியன் பேசுகையில், “செரினாவுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும், என்னை நானே மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவருடைய பண்பும் திடமும் அப்படியானது” என்று நெகிழ்ந்துள்ளார்.  தொழில்நுட்பத்தில் கில்லியான அவர், தனது ரெட்டிட் பற்றி செரினாவிடம் கூறியபோது, செரினா அதைப்பற்றி தெரிந்ததுபோல நடித்தாராம். உண்மையில், தனக்குத் தொழில்நுட்பம் பற்றி பெரிதாகத் தெரியாது என்கிறார் செரினா. அதேபோல, டென்னிஸ் போட்டிகளைத் தொலைக்காட்சியில்கூட ஒஹனியன் பார்த்ததில்லையாம். செரினாவுடன் காதலான பின்பு, டென்னிஸ் போட்டிகளைப்  பார்க்கத் தொடங்கியிருக்கிறார். 

ஐனவரி மாதம், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் செரினாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரின் தோழி ஜெஸ்சிகா, 'ஒருவேளை நீ கர்ப்பமாக இருக்கலாம். எதற்கும் டெஸ்ட் எடுத்துப் பார்' என்று சொல்லியிருக்கிறார். 

ஆஸ்திரேலிய நிறுவன விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் கர்ப்பப் பரிசோதனை செய்துகொண்டார் செரினா. பாஸிட்டிவ் ரிசல்ட் வந்ததும் அதிர்ந்துபோனார். “ஒ மை காட். நான் ஆஸ்திரேலிய ஓப்பன் விளையாட வேண்டுமே. இந்த வருடம் விம்பிள்டன் விளையாடவும் திட்டமிட்டிருந்தேன்’ என்று கூறியிருக்கிறார். பிறகு, கர்ப்பத்தை உறுதிசெய்ய, அடுத்தடுத்து ஆறு முறை பரிசோதனை செய்துகொண்டாராம். ஆனால், இப்போது தாய்மையை முழுமையாக ரசித்துவருகிறார் செரினா. குழந்தை பிறந்த பிறகுதான் திருமணமாம்.

 

மேலும், டென்னிஸ் போட்டிகளிலிருந்து செரினா தற்காலிமாக விலகியிருக்கிறார். இதற்கிடையே, சமீபத்தில் முன்னாள்  டென்னிஸ் வீரரான ஜான் மெக்கென்ரோ, செரினாவைப் பற்றி கூறியது சர்ச்சைக்குள்ளானது. “செரினா  பெண்கள் பிரிவில் சிறந்த  டென்னிஸ் வீராங்கனைதான். ஆனால், அவர் ஆடவர் பிரிவில் விளையாடினால், உலக தரவரிசையில் 700-வது இடத்தை  பிடிப்பார்”, என்று கூறினார். இதற்கு செரினா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜான், உங்கள்மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், தேவையில்லாத சர்ச்சையில் என்னை இழுக்காதீர்கள். நான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன். என் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்”, என்று பதிலடி கொடுத்திருக்கிறார். செரினா டென்னிஸ் போட்டிகளில், வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வயலின் வாசித்துக் கொண்டிருந்த இசைக் கலைஞர்கள்... சிரிப்பை ஏற்படுத்திய நாய்... வைரலாகும் வீடியோ

 
 

துருக்கியில் ஆர்கெஸ்ட்ரா இசைக் கச்சேரி நடைபெற்ற மேடையில் நாய் ஒன்று நடந்து சென்ற வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. 

Untitled_14034.png


துருக்கியில் வியன்னா என்ற ஆர்கெஸ்ட்ரா குழுவின் சார்பாக இசைக் கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக் கச்சேரியை ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருந்தனர். 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் வயலின் வாசித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நாய் ஒன்று மேடையில் ஏறிச் சென்றது. பின்னர் ஒரு சில விநாடிகள் அங்குமிங்கும் பார்த்த அந்த நாய், இசைக் கலைஞர் ஒருவருக்கு அருகில் படுத்துக் கொண்டது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 
 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை முந்திய இந்திய வம்சாவளிச் சிறுவன்!

 

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் IQ அளவு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவைவிட இரண்டு புள்ளிகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

arnav sharma
 

தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் 11 வயது சிறுவன் அர்னவ் சர்மா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கடந்த வாரம் ’Mensa test’என்னும்
IQ அளவை சோதிக்கும் தேர்வை அர்னவ் எதிர்கொண்டுள்ளார். மிகவும் கடினமான இந்த IQ தேர்வை எழுதுவதற்கு முன்னர், அர்னவ் எதுவும் படிக்கவில்லையாம். மேலும், எந்தப் பதற்றமுமின்றி தேர்வை எதிர்கொண்டுள்ளார் அர்னவ்.

இந்தத் தேர்வில் வெற்றிபெற்று, புத்திசாலி என்னும் பெயரை வாங்கி மென்சா க்ளப்பில் இணைய 130 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். உலகம் முழுவதும் நடத்தப்பட்ட மென்சா IQ தேர்வில், தற்போதுவரை 20,000 பேர் மட்டுமே 130-க்கு மேல் பெற்றுள்ளனர். அவர்களில் 1,500 பேர் மட்டுமே 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

இந்நிலையில், இந்த முறை நடத்தப்பட்ட IQ தேர்வில், 162 புள்ளிகள் பெற்று மென்சா புத்திசாலிகள் க்ளப்பில் உறுப்பினராகி உள்ளார் அர்னவ். இந்த ஸ்கோர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட இரண்டு புள்ளிகள் அதிகம். அவர்கள் பெற்றது 160 தானாம்.

இதற்கு முன்னர், இதே மென்சா IQ தேர்வை எதிர்கொண்ட இந்திய வம்சாவளிச் சிறுவன் 12 வயது ராஜ் கெளரி பவார், 162 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜப்பான் ஆண்களை கவரும் சிலிக்கன் மனைவிகள்

காதலுக்கு கண்ணுமில்லை; கட்டுப்பாடுகளுமில்லை என்பதற்கு 45 வயது ஜப்பானியரான மசயுகி ஒசாகி இன்னுமொரு உதாரணம்.


தனது பாலியல் தோழியான சிலிக்கன் பொம்மையிடம் தான் காதலில் கிறங்கிக்கிடப்பதாக கூறுகிறார் அவர்.


“அலுவலகத்தில் நல்லநாளாக இல்லாமல் போகலாம்; பொதுவில் மோசமான நாளாகக்கூட இருக்கலாம். ஆனாலும் எனக்கு கவலையில்லை. எனக்காக இவள் கண்விழித்து எந்நேரமும் காத்திருப்பாள் என்கிற நினைப்பே பாதுகாப்பான உணர்வை தருகிறது”, என்கிறார் மசயுகி ஒசாகி.


ஜப்பான் ஆண்கள் பலரும் சிலிக்கன் காதலிகளை மோகிக்கும் போக்கு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.


ஜப்பானில் ஆண்டுக்கு சுமார் 2000 பாலியல் பொம்மைகள் விற்கப்படுகின்றன. இந்த
பொம்மைகளில் ஒன்றின் விலை 6000 அமெரிக்க டாலருக்கு மேலே.


சிலர் ஒரே ஒரு பொம்மையுடன் குடும்பம் நடத்துகிறார்கள். பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் வாழ்கிறார்கள்.


சிலர் இந்த பொம்மைகளுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.


தன் வாழ்வில் இனி மனிதர்களுடன் உறவை நாடவேமாட்டேன் என்கிறார் 62 வயது செஞ்சி நகஜிமா.
ஜப்பானிய ஆண்கள் மத்தியில் அதிகரித்துவரும் தனிமையே இதற்கு காரணம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


வேறு சிலரோ இந்த ஆண்கள் எதிர்காலத்தின் முன்னோடிகளாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.
பொம்மைகளை காதலிப்பது என்பது எதிர்காலத்தில் இயல்பானதாகும் என்று கூறுபவர்கள், இவர்கள் உண்மையில் எதிர்கால ஆண்களின் தற்கால பிரதிநிதிகள் என்றும் கருதுகிறார்கள்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Nahaufnahme und Text

 
 
இலங்கையின் பிரபல நீச்சல் வீரராகத் திகழ்ந்த முருகுப்பிள்ளை நவரத்தினசாமியின் நினைவுதினம்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாதனை வீரராகத் திழந்த இவர், பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர்.

Bild könnte enthalten: 1 Person

முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசனின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Mike Tyson

Bild könnte enthalten: 1 Person, Text

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் சர்வதேசப் புகழ்பெற்ற சகலதுறை வீரரான ரயான் டென் டொஸ்கட்டின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Ryan ten Doeschate

  • தொடங்கியவர்

பூச்சிகளை உண்ணும் தாவரங்கள்

பூச்சிகளை உண்ணும் தாவரங்கள்
 

தாவரங்களை உண்ணும் பூச்சிகள் பற்றி அனைவரும் அறிந்தாலும் அதைவிட சுவாரஷ்யமான இன்னுமொரு விசித்திர விடயம் என்னவென்றால், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா….

 

150126-ziegler-pitchers-08.jpg

பூச்சியுண்ணும் தாவரம் பற்றி ஜவஹர்லால் நேரு தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வறிக்கையில், பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில் பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றனவாம்.

இது புழு பூச்சிகளை எளிதில் கவர்கிறது. (அவதார் திரைப்படத்தில் இது போன்ற தாவரங்கள் காட்டப்பட்டது)

maxresdefault-3-1.jpg

பூச்சிகளை உண்ணும் இவ்வகையான தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்று உலக ஆய்வாளர்கள் கூறிவந்தாலும் பூச்சியுண்ணும் தாவரம் கோப்பை போன்ற வடிவிலான பூக்களை கொண்டிருக்கும் அதனுள் சுவையான நீர்மம் நிரம்பிக் காணப்படும்.

bcf54-insect-eating-flowers-19-300x225.jpg

உட்பாகம் வழுவழுப்பான மெழுகு போன்ற சுவர் அமைப்பு உடையது. சிக்கிக்கொள்ளும் எறும்பு, பூச்சி, புழுக்கள்,சிலந்திகள் இதிலிருந்து வெளியேற முடியாமல் மூழ்கிவிடும்.

இந்த பூவின் மேலுள்ள மூடி போன்ற அமைப்பு இதை மூடி விடுகிறது.

download-1-16.jpg

உள்ளே சிக்கிய பூச்சிகள் அந்த நீர்மத்தில் கரைந்து ( ingested) அந்த தாவரத்திற்கு உணவாகி விடுகிறது.

போர்னியோ, சுமத்திரா தீவு மழைக்காடுகளில் சுமார் 100 வகையான இத்தகைய ( largest carnivorous plants) ஊன் உண்ணும் தாவரங்கள் காணப்படுகின்றன.

1251361649-clip-78kb-300x243.jpg

டிராபிகல் பிட்சர் (Tropical pitchers ) எனும் தாவரம் சிறு எலிகள், பல்லிகளை உணவாக்கி கொள்கிறது.

இந்த கொடி வகை தாவரம் பெரிய கோப்பை (மங்கி கப்) போன்ற பூக்களை கொண்டது மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வளர்கிறது.

nepenthes-spectabilis-x-ventricosa-pitchers-leaves.jpg

இதனுள் உள்ள திரவம் இவற்றை செரிக்க செய்கிறது. ஊன் உண்ணும் மனிதர்கள்,விலங்குகள் போல இவையும் அசைவம் மட்டுமே சாப்பிடுகிறது.

உலகத்திலேயே நிபந்தஸ் ராஜா (Nepenthes rajah ) என்பதுதான் பெரிய ஊன் உண்ணும் தாவரம் இதனுடைய திரவ கொள் அளவு இரண்டு லிட்டர்.

http://uthayandaily.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961

இவரது இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹாரி) ஆகியோர் இங்கிலாந்தின் முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய

 
 
 
 
டயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961
 
இவரது இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹாரி) ஆகியோர் இங்கிலாந்தின் முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்பட்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008-ல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் கார் ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பத்திகையாளர்களின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: கோமாளி மீன்கள் தப்பிப்பது எப்படி?

 

 
 
28chsuj_karanam1_j_3179799f.jpg
 
 
 

கடலில் வாழும் விஷமுள்ள உயிரினம் கடல் தாமரை (Sea anemone). தாமரைப் பூவின் வடிவத்தைப் போன்று இருப்பதால் இந்தப் பெயர். இதைக் கண்டாலே கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி ஓடிவிடுகின்றன. ஆனால், இந்தக் கடல் தாமரைக்குள்தான் பெரும்பாலும் வசிக்கிறது கோமாளி மீன் (Clown Fish).

கடல் தாமரை உண்ணும் உணவின் மீதியையும் அவற்றின் மீதுள்ள ஒட்டுண்ணிகளையும் கோமாளி மீன்கள் சாப்பிட்டு வளர்கின்றன.

ஏன் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை ஒன்றும் செய்வதில்லை?

கோமாளி மீன்களால் இரண்டு நன்மைகள் கடல் தாமரைகளுக்குக் கிடைக்கின்றன. கடல் தாமரையின் ஒட்டுண்ணிகளைக் கோமாளி மீன்கள் சாப்பிட்டு விடுவதால் நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகின்றன. கோமாளி மீன்கள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருப்பதால், கடல் நீர் தூய்மைப்படுத்தப்பட்டுப் புதிய காற்று சுவாசிக்கக் கிடைக்கிறது.

இந்த இரண்டு காரணங்களால்தான் கடல் தாமரைகள், கோமாளி மீன்களை விட்டு வைத்திருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உதவி செய்யும் பண்போ உணர்வோ கடல்வாழ் உயிரினமான கடல் தாமரைக்கு இருக்க வாய்ப்பில்லை.

கடல் தாமரை அப்படியெல்லாம் பார்க்காது. தனக்கு உதவுபவர், உதவாதவர் என்றெல்லாம் அதற்குத் தெரியாது. கடல் தாமரையை யார் தீண்டினாலும் மரணம்தான்.

அப்படியென்றால் கோமாளி மீன்கள் எப்படிக் காப்பாற்றப்படுகின்றன? தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வளையத்தைத் தாங்களே தயார் செய்துகொள்கின்றன கோமாளி மீன்கள்.

இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலியக் கடற்கரை, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கோமாளி மீன்கள் காணப்படுகின்றன. இவற்றில் முப்பது வகைகள் இருக்கின்றன. கொஞ்சம் வெப்பமான பகுதிகளை விரும்புகின்றன.

கோமாளி மீன்கள் 18 செ.மீ. வரை வளரக்கூடியவை. தாவரங்களையும் பிற உயிரினங்களையும் சாப்பிடக்கூடியவை. கடல் தாமரை மிச்சம் வைக்கும் உணவும் கழிவும் இவற்றின் முக்கிய உணவு. கடல்வாழ் விலங்குகளின் லார்வாக்களையும் சாப்பிடுகின்றன.

பெண் கோமாளி மீன்கள் ஒரு தடவைக்கு 600 முதல் 1500 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஆண் மீன்கள் எடுத்துக்கொள்கின்றன.

கோமாளின் மீன்கள் கண்கவர் வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. இவற்றின் வண்ணங்களால் கவரப்பட்டு அருகில் வரும் சிறு உயிர்களைக் கடல் தாமரை உணவாக்கிக்கொள்கிறது. கடல் தாமரையில் வசிப்பதால் இந்தக் கோமாளி மீன்களை எதிரிகள் நெருங்குவதில்லை.

கோமாளி மீன்கள் சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்து, தங்களைச் சுற்றி ஒரு கவசம்போல உருவாக்கிக்கொள்கின்றன. இந்தச் சளி போன்ற திரவம்தான் கடல் தாமரையிடமிருந்து கோமாளி மீன்களைக் காப்பாற்றுகிறது. இந்தத் திரவத்தின் உள்ளே இருக்கும் கோமாளி மீன்களைத் தங்களுடைய உணர்திறனால் கண்டுபிடிக்க முடியாமல் கடல் தாமரைகள் ஏமாந்து போய்விடுகின்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் ஆலமரம்

புதுச்சேரி மாநில வரலாற்றில் தவிர்க்க முடியாதது வில்லியனூரை அடுத்துள்ள கீழூர் கிராமம்.

கீழூர் ஆலமரம்

1954-ல் பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, சுதந்திர இந்தியாவில் இணைய வேண்டுமா அல்லது  பிரான்சின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமா என்று மிகப்பெரிய விவாதம் நடந்தது. அதற்காக, மக்கள் பிரதிநிகள் 178 பேரிடம் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது புதுச்சேரி.

இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கீழூரிலிருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம், இங்கிருக்கும் ஆலமரம். நூற்றுக்கணக்கான விழுதுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த ஆலமரத்தின்  வயது 300 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது.

நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய “லைஃப் ஆஃப் பை” ஹாலிவுட் திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள், இந்த ஊரிலும், இந்த ஆலமரத்தைச் சுற்றியும் எடுக்கப்பட்டவைதான். நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த ஆலமரத்தை, கடந்த 45 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார் மகேஸ்வரி என்ற பாட்டி.

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

கிரிக்கெட் வீரர்கள் எல்லோருமே பெவிலியனில் இருந்தால், மேட்ச்சைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணிப் பெண்கள் ரன்களை குவித்துக்கொண்டிருக்க,  ரிலாக்ஸாக உட்கார்ந்து `தி எசென்ஷியல் ரூமி’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார் மித்தாலி. அன்று மித்தாலியின் பேட்டில் இருந்து 71 ரன்கள் தெறித்தன!

p16a.jpg

லிம்பிக் சாம்பியனும், இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான செங் லாங்கைத் தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றிருக்கிறார் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி. 18 வயதுவரை எந்த விளையாட்டுகளிலும் ஆர்வமின்றி இருந்தவர்தான் கிடாம்பி. 100 மீட்டர்கூட ஓடியவரில்லை. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர், 18 வயதில்தான் பேட்மின்டன் பயிற்சியில் சேர்ந்தார். முதல்முறையாகப் பயிற்சியாளர் இரண்டு கிலோமீட்டர் தூரம் கிடாம்பியை ஓடிவரச்சொல்ல, மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். அந்த வீழ்ச்சியில் மனம் தளர்ந்துவிடவில்லை. அதன் பிறகுதான், வெறித்தனமான பயிற்சியில் இறங்கி 24 வயதில் உலக சாம்பியனையே வீழ்த்தியிருக்கிறார்!

p16b.jpg

p16c.jpg

மல்ஹாசன் தொகுத்து வழங்க பிரமாண்டமாகத் துவங்கியிருக்கிறது `பிக் பாஸ்’ நிகழ்ச்சி.  முதல் வாரமே சமூகவலைதளங்களில் நிகழ்ச்சி குறித்து ஏடாகூட கமென்ட்ஸ் குவிகின்றன.100 நாள் வேலைத்திட்டம் போல ஒரு வீட்டுக்குள் நூறு நாள்கள் வாழப்போகும் 15 பிரபலங்களில் ஆச்சர்ய என்ட்ரி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது `எங்கம்மா எங்கம்மா சின்னம்மா எங்கம்மா’ எனப் புரட்சியில் இறங்கிய நர்ஸ் ஜூலியானா. சிவப்புத் துண்டோடு ஜூலி நடனம் ஆட, ஒரு மாபெரும் போராட்டத்தை இப்படித் தனி மனிதத் துதியென சுருக்கலாமாவென ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கொந்தளித்தது இணையசமூகம்!

  • தொடங்கியவர்

வீட்டை அழகாக்கும் சுடுமண் சிற்பங்கள்

 

 

suduman_3181423f.jpg
 
 
 

மரபுக்குத் திரும்புதல் என்பதுதான் இப்போதைய பாணி. உதாரணமாக இருதலைமுறைக்கு முன்பு கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளைத்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இடையில் அரிசியே பிரதான உணவானது. இப்போது மீண்டும் பழைய உணவுப் பழக்கம் பிரபலமாகிவருகிறது. அதுபோலக் கட்டுமானக் கலையிலும் ரெட் ஆக்ஸைடு, தரை ஓடு எனப் பழமையான முறைகள் இன்றைக்குப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த வகையில் ஒன்றுதான் டெரகோட்டா (terracotta). பொதுவாக டெரகோட்டா என்பதைச் சுடுமண் சிற்பங்கள் எனலாம்.

வீடுகளில் புழக்கத்திலுள்ள பூந்தொட்டிகள் போன்ற சுடு மண்ணால் ஆன சில பொருட்களும் இந்தச் சொல்லால் குறிக்கப்படுகின்றன. தேவை காரணமாக இன்றைக்கு டெரகோட்டாவில் பலவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக வீட்டுக்கான அலங்காரத் தோரணங்கள், சிறிய மேஜைகள், விளக்குகளுக்கான நிழற்கூடுகள் போன்றவை செய்யப்படுகின்றன. இன்றைக்கு வீடு கட்டும் செலவில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி உள் அலங்காரத்துக்கானதாக உள்ளது. விலை உயர்ந்த பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துவதைவிட இம்மாதிரியான சுடுமண் பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தினால் செலவும் குறையும்; மரபுக்குத் திரும்பிய திருப்தியும் கிடைக்கும்.

ஓசை எழுப்பும் சிம் (chime) அலங்கார மாலைகள் மூங்கில், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களில்தான் முன்பு சந்தையில் கிடைத்தது. இப்போது டெரகோட்டாவிலும் சிம் வந்துவிட்டது. அதிலும் நீலம், சிவப்பு, பச்சை எனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. நம்முடைய பாரம்பரியமான பூஜை மணியின் வடிவத்தில் இவை உள்ளன என்பது சிறப்பு. இதன் தொடக்க விலை ரூ. 80.

பால்கனியை அழகாக்கவென்று சில தனிப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் சிறு மட்பாண்டங்கள் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகளும் பலவிதமான வடிவங்களில் கிடைக்கின்றன. உதாரணமாக அன்னப் பறவையின் உடல் பகுதியில், காளையின் உடல் பகுதியில் செடி நடுவதுபோன்ற வடிவைப்பில் கிடைக்கின்றன. பூந்தொட்டியின் தொடக்க விலை ரூ. 150.

வீட்டு வரவேற்பறையை அழகுபடுத்த ஏராளமான சுடுமண் சிற்பங்கள் இருக்கின்றன. யானைச் சிற்பங்கள், குதிரைச் சிற்பங்கள் அவற்றை வைப்பதற்கான சிறிய யானை முகம் கொண்ட ஸ்டூல் எனப் பல வகையான பொருட்கள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது புத்தர், காந்தி போன்ற மகான்களின் சிலைகளும் கிடைக்கின்றன. சிலைகளின் தொடக்க விலை ரூ.1000.

சுவரில் மாட்டுவதற்கென்று ஓவியம் போன்ற புடைப்பு மண் சிற்பங்களும் கிடைக்கின்றன. சூரியக் கடவுளின் சுவர் சிற்பங்களும் பழங்குடி மனிதர்களின் முக அமைப்பைக் கொண்ட சுவர் சிற்பங்களும் இவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை. இதன் தொடக்க விலை ரூ.100.

இவை அல்லாது துளசி மாடம் கிடைக்கிறது. மிகச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு என வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் துளசி மாடம் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.150

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
 
 
 
விசித்திரமும் விநோதமும்
 

image_d594b8c49e.jpgimage_ad4d729cec.jpgimage_c6a9556274.jpgimage_e117fe5c79.jpgimage_42d5a863ab.jpgimage_09b9f35147.jpgimage_459cdf2314.jpgimage_a19340fe53.jpgimage_d8dcb98a99.jpgimage_ab9f7cab2d.jpgimage_9abb4eaa08.jpgimage_c0fe4e0608.jpgimage_2f93279bfd.jpgimage_e1a9101a77.jpgimage_1f07b11f27.jpgimage_6c25d6fe4a.jpgimage_e6d9bdd697.jpgஸ்மார்ட் அலைபேசிகளின் அதிகரித்த வருகையால், புகைப்பட கலைஞர்களுக்கும் வேலையில்லாமல் செல்லும் காலம் நெருங்கிக்கொண்டே வருகின்றது என்லாம். ஏனெனில், புகைப்படக் கருவிகள் செய்யும் வேலைகளை, ஸ்மார்ட் அலைபேசிகளிலுள்ள கமராக்கள் செவ்வனே செய்து முடித்து விடுகின்றன. 

 

ஸ்மார்ட் அலைபேசிகளிலுள்ள கமராக்களைக் கொண்டு செல்பி எடுப்பதும் விதம்விதமாக புகைப்படங்களை பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையுமே, இன்றை இளம் சமூகம் தமது பொழுதுபோக்காக கொண்டுள்ளன.

இவ்வாறிருக்க, லண்டனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் டெய்லிமெயில் இணையத்தளமானது, ஸ்மார்ட் அலைபேசிகளில் பிடிக்கப்பட்ட விசித்திரமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அவைக் காட்சிக்கு....

  •  

 
 
 

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் திருமணம் (புகைப்படத் தொகுப்பு)

 

நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கும், அவரது குழந்தை பருவ தோழியான ஆண்டோனெல்லா ரோக்குசோவுக்கும் அர்ஜெண்டினாவில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGES

    நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியும், அவரது குழந்தை பருவ தோழி ஆண்டோனெல்லா ரோக்குசோவும் திருமண பந்தத்தில் இணைந்தனர்

  • செர்ஜியோ ரேமேரோ மற்றும் அவரது மனைவிEITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGES

    மான்செஸ்டர்ஸ் யுனைட்டட் கோல் கீப்பரான அர்ஜென்டீனா கால்பந்து விளையாட்டு வீரர் செர்ஜியோ ரேமேரோ மனைவியுடன் வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGES

    அர்ஜெண்டினாவில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் வெள்ளிக்கிழமை இந்த திருமணம் நடைபெற்றது.

  • தந்தை கோகெயோ ராசியோ மெஸ்ஸியும் (நடுவில்)? தாய் செலியா மரியா சுச்சிட்டினி (இடது) மற்றும் சகோதரி மரியா சோல் மெஸ்ஸிEITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGES

    லியோனல் மெஸ்ஸியின் தந்தை கோகெயோ ராசியோ மெஸ்ஸியும் (நடுவில்) தாய் செலியா மரியா சுச்சிட்டினி (இடது) மற்றும் சகோதரி மரியா சோல் மெஸ்ஸி

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    ''இந்த ஆண்டின் திருமணம்'' மற்றும் ''இந்த நூற்றாண்டின் திருமணம்'' என்று அர்ஜென்டினாவிலிருந்து வெளிவரும் கிளரின் பத்திரிகை இத்திருமணத்தை வர்ணித்துள்ளனது

  • கால்பந்து விளையாட்டு வீரர் ஸார்டி அல்பா மனைவியுடன்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    பார்சிலோனோ கால்பந்து விளையாட்டு வீரர் ஸார்டி அல்பா மனைவியுடன் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார்

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என 260 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்

  • உருகுவே கால்பந்து விளையாட்டு வீரர் லுயிஸ் சுவாரஸூம் அவரது மனைவி ஷேஃபியா பால்பியும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    உருகுவே கால்பந்து விளையாட்டு வீரர் லுயிஸ் சுவாரஸூம் அவரது மனைவி ஷேஃபியா பால்பியும்

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    தனது நண்பரும், தொழில்முறை கால்பந்தாட்ட வீரருமான லூகாஸ் ஸ்காக்லியாவின் தங்கையான ரோக்குசோவை, தன்னுடைய ஐந்தாவது வயதில் மெஸ்லி சந்தித்தார்

  • பார்சிலோனியாவின் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் கார்லெஸ் புயாலும் அவரது மனைவியும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    பார்சிலோனியாவின் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் கார்லெஸ் புயாலும் அவரது மனைவியும் திருமணத்திற்கு வந்திருந்தனர்

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் ஓர் ஆடம்பர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது

  • அர்ஜென்டினாவை சேர்ந்த செர்ஜியொ அகுயிரோவும் காதலியும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    காதலியுடன் திருமணத்திற்கு வந்திருந்த மான்செஸ்டர்ஸ் சிட்டி கால்பந்து வீரரான அர்ஜென்டடினாவை சேர்ந்த செர்ஜியொ அகுயிரோ

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    பார்சிலோனாவில் வாழும் மெஸ்ஸி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன

  • கால்பந்து விளையாட்டு வீரர் எசெக்கியோல் லாவெஸ்ஸியும் அவரது மனைவியும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    மெஸ்ஸியின் திருமணத்திற்கு வந்திருந்த அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் எசெக்கியோல் லாவெஸ்ஸியும் அவரது மனைவியும்

  • லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்EITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    ஹார்மோன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த மெஸ்ஸியின் சிகிச்சைக்கு பணம் அளிக்க பார்சிலோனா அணி முன்வந்ததால், தன்னுடைய 13வது வயதில் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாட தொடங்கினார்.

  • சாவி ஹெர்னான்டஸ் மற்றும் அவரது மனைவிEITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    முன்னாள் பார்சிலோனியா கால்பந்து விளைாயட்டு வீரர் சாவி ஹெர்னான்டஸ் மற்றும் அவரது மனைவி

  • செல்சியா கால்பந்து விளையாட்டு வீரர் செசி ஃபபிரெகாஸ் மற்றும் அவரது மனைவிEITAN ABRAMOVICH/AFP/GETTY IMAGE

    செல்சியா கால்பந்து விளையாட்டு வீரர் செசி ஃபபிரெகாஸ் மற்றும் அவரது மனைவி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பறவைகளிடம் கற்போம்!

 
birds_3181359f.jpg
 
 
 

“அடிக்கிற வெயிலுக்கு இப்போ எந்தப் பறவையும் வெளிய வராது. நீ எங்க கிளம்பிட்ட” என்று அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது. “மாடிக்குத் தாம்மா போறேன்” என்றேன். வெயில் எட்டிப் பார்க்கும் முன்னரே என் தினசரி 15 நிமிடப் பறவை நோக்குதலை முடித்துவிடுவேன். ஆனால், அன்று நான்கு மணி அளவில்தான் என்னுடைய குறிப்பேட்டையும் இருநோக்கியையும் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன்.

வழக்கம்போலவே இரண்டு அண்டங்காக்கைகளும் மைனாக்களும் தென்னங்கிளையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. பக்கத்து வீட்டு முருங்கைப் பூவிலிருக்கும் தேனைக் குடிக்கத் தவறாமல் வரும் தேன்சிட்டு வந்தது. முதலில் ஆண் வந்த சில நிமிடங்கள் கழித்து, பெண் வரும். செல்லும்போது இரண்டும் ஒன்றாகப் பறந்துவிடும். தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் எச்சரிக்கை ஒலி வல்லூறு அமர்ந்திருந்த கிளையைக் காட்டிக் கொடுத்தது. சில நொடிகளில் அந்த வல்லூறு கீழே பாய்ந்து ஒரு ஓணானை வேட்டையாடிச் சென்றது.

அருகிலிருக்கும் சிறிய குளத்தில் கம்புள்கோழி இணை தன் அழகிய ஆறு குஞ்சுகளுடன் இரை தேடிக்கொண்டிருந்தது. இந்த அற்புதமான தருணத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். நான்கு சின்னான்கள் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன. எப்போதும் தனியாகச் செல்லும் பாம்புத்தாரா அன்று மேலும் ஒன்பது உறுப்பினர்களுடன் வானில் வட்டமடித்தது.

பொதுவாகச் சில நொடிகள்கூட வீட்டின் அருகே நிற்காத செம்மார்புக் குக்குறுவான் அன்று நீண்ட நேரம் ‘குக்.. குக்.. குக்...’ என்று கத்தியது. பார்க்க முடியாவிட்டாலும் வீட்டின் பின்னிருந்து ஆண் குயிலின் பாட்டு செவிகளை வந்தடைந்தது. இவை அனைத்தையும் வெறும் 15 நிமிடங்களுக்குள்ளாகவே நான் பதிவுசெய்தேன்.

valluru_3181355a.jpg

குழந்தைகளுக்குக் கடத்தலாமே!

இப்படி நம் வீட்டைச் சுற்றிப் பல விஷயங்களை இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் அவற்றைக் கவனிப்பதில்லை; நம் குழந்தைகளுக்கும் காண்பிப்பதில்லை. பள்ளி விடுமுறைக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென ‘சம்மர் கேம்ப்’பில் சேர்த்துவிடுகிறார்கள். இந்நிலையில் இலவசமான, வண்ணமயமான ‘பறவை நோக்குதல்’ (Bird Watching) என்னும் இனிய கலையைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

காலை, மாலை வேளையில் நம் வீட்டிலிருந்தோ அருகிலிருக்கும் வறண்டு போகாத நீர்நிலையிலோ பறவைகளைப் பார்த்து ரசிக்கலாம். குழந்தைகளுக்கு எத்தனையோ விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைப் பல பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். அதில் ஒன்றாகக் குழந்தைகளுக்கு இருநோக்கியைப் (8x40, 10x50 பைனாகுலர்) பரிசளிக்கலாம். காணும் புதிய பறவைகளின் பெயர்களைக் கண்டுபிடிக்க களவழிகாட்டிகளான (Field guide) ரிச்சர்ட் கிரிம்மெட், கரோல் & டிம் இன்ஸ்கிப் எழுதிய ‘Birds of the Indian Subcontinent (2nd edition)’ என்ற புத்தகத்தையோ தமிழில் ப. ஜெகநாதன் & ஆசை எழுதிய ‘பறவைகள்: ஓர் அறிமுகக் கையேடு’ என்ற புத்தகத்தையோ வாங்கலாம். ஓவியங்கள்-படங்கள் நிறைந்த இந்தப் புத்தகங்கள் குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதுடன், நிறைய கற்றுக்கொள்ளவும் உதவும். இது போன்ற சிறு முயற்சிகளே பின்னாளில் இயற்கைக்கும் அவர்களுக்குக்குமான தொடர்பை அறுபடாமல் பாதுகாக்கும்.

myna_3181357a.jpg

இது இயற்கையைப் பாதுகாப்பதன் முதற்படிகளுள் ஒன்று. நம்மில் பலர் அதை இழந்துவிட்ட காரணத்தால்தான் இன்றைக்கு நம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தெரிந்தாலும் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறோம்.

கண் – காது ஒருங்கிணைப்பு

பறவை நோக்குதல் மூலம் நம் குழந்தைகளின் கண் – காது ஒருங்கிணைப்புத் திறனும் வளரும். உதாரணத்துக்கு ஒரு காகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சுற்றுவட்டாரத்தில் கேட்கும் பல பறவைகளின் ஒலிகளை வைத்து, ஒவ்வொன்றும் என்ன பறவை என்று சொல்லும் திறன் இது. இதன் மூலம் கண்களும் காதுகளும் சீராகவும் ஒரே நேரத்திலும் வேலைசெய்து கவனக்குவிப்பை அதிகரிக்கச் செய்யும். பலருக்குப் படிப்பில் கவனம் செலுத்தவும் இது உதவக்கூடும். தொடர்ந்து பறவை நோக்குதலில் ஈடுபடுவதன் மூலம் இத்திறன் வலுப்பெறும்.

நம் வீட்டிலிருந்தே தினசரி குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்துக் கணக்கிட்டு ‘eBird’ (www.ebird.org/india) என்னும் இணையதளத்தில் அதைச் சமர்ப்பிக்கலாம். பறவைகளைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு இது பெரிதும் உதவும்.

இயற்கை மிச்சமிருக்க…

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பறவை ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்புகொண்டு குழந்தைகளைக் குதூகலிக்கவைக்கும் பறவை நோக்குதல் குறித்து ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் தரச் சொல்லலாம். இது போன்ற செயல்பாடுகளின் மூலம் நம்மைச் சுற்றி உள்ள பகுதியின் சூழலியல் மாற்றங்களைப் புரிந்துகொண்டு பறவைகளையும் மற்ற உயிர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் பங்கெடுக்க முடியும். நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் இயற்கையை உயிர்ப்புடன் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், இதுபோன்ற சிறுசிறு நடவடிக்கைகளில் இருந்தே தொடங்குகின்றன.

kukkuruvan_3181358a.jpg

பறவைகள் தேடி வர...

பறவைகளை நாம் தேடிச் செல்லாமல், நம்மைத் தேடி சில பறவைகளை வரவழைக்கலாம்.

பறவைகள் வெப்பத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக மண்சட்டியில் நீர் ஊற்றி வைக்கலாம். இப்போது தமிழகத்தில் அவ்வப்போது மழை எட்டிப் பார்த்தாலும், அடிக்கும் வெயிலுக்குக் குறைவில்லை. பறவைகள் தாகம் தணித்துக்கொள்ளவும் குளிக்கவும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும். பிளாஸ்டிக் அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் நீர் சூடாகிவிடும். இப்படிக் குளிர்வித்துக்கொள்ள வரும் பறவைகளை ஜன்னல், கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று நோக்கலாம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

`கும்கி 2’ படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் பிரபுசாலமன். ஆனால், இந்தப் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. வேறு கதை, வேறு நடிகர்கள். சென்டிமென்ட்டாக இந்தப் படத்திலும் முழுக்க புதுமுகங்களை நடிக்க வைக்கத் திட்டம் போட்டிருக்கிறார் பிரபு சாலமன். படத்தின் நாயகியாக நடிக்க இருப்பவர் டாக்டர் ராஜசேகரின்  மகள் ஷிவானி! சாலமன் சாய்ஸ்!

p36a.jpg

`கவண்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த டி.ஆர். அடுத்து விஷாலுடன் இணைகிறார். இந்தப் படத்தை இயக்கப்போவது பேரரசு என்பதுதான் இன்னொரு ஹைலைட் #அடங்காதவன்... அசராதவன்!

ப்ரோ கபடி லீக் போட்டியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்போகிறது. இந்த முறை 12 அணிகள் 130 போட்டிகளில் மோத உள்ளன. முதல்முறையாக தமிழ்நாடு அணியும் கலந்துகொள்ள இருக்கிறது. `தமிழ் தலைவாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புது அணியை வாங்கி இருக்கிற பிரபலம் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்! வா தலைவா!

p36b.jpg

ட்விட்டரில் 10 கோடி ஃபாலோயர்களைத் தொட்ட முதல் ட்விட்டர்வாசி, பாப் பாடகி கேட்டி பெர்ரி.  இவரின்  ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டபோது, ட்விட்டர் நிறுவனம் கேட்டி பெர்ரியை வாழ்த்தி ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் 9 கோடியே 67 லட்சம் ஃபாலோயர்களுடன் ஜஸ்டின் பைபர் இருக்கிறார். சுமார் 9 கோடியே 8 லட்சம் ஃபலோயர்ஸ் உள்ள ஒபாமாவுக்கு, இந்த ரேங்கிங்கில் மூன்றாவது இடம். வொண்டர் உமன்!

p36c.jpg

மீர்கான் நடிக்கும் அடுத்தபடம் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்.’ இந்தப் படத்துக்காக மீண்டும் எடையைக் குறைத்து ஸ்லிம் ஃபிட் ஆகியிருக்கிறார்  அமீர். `` `தாரே ஸமீன் பர்’, `தூம்’, `தங்கல்’ என  எதுவாக இருந்தாலும் நான் நடிக்கும் எல்லா படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவைதான். அதில் இப்போது நடிக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படமும் அடக்கம். படத்துக்குத் தேவையென்றால், என்ன வேண்டுமோ அதை செய்துதானே ஆகவேண்டும்’’ எனச் சிரிக்கிறார்  அமீர். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் இந்தப் படத்தில், முதல்முறையாக அமிதாப் பச்சனுடன் இணைகிறார் அமீர்கான்! செம்ம காம்போ!

p36d.jpg

டிகர் ஷாரூக் கான், புதிதாக ஓர் அணியை வாங்கியிருக்கிறார். இந்தியாவில் அல்ல; தென் ஆப்பிரிக்காவில். ஐ.பி.எல் மற்றும் பிக்பேஷ் டி20 தொடர்கள்போல தென்னாப்பிரிக்காவிலும் ஒரு டி20 லீக் உண்டு. அதில்தான் ‘கேப்டவுன் நைட் ரைடர்ஸ்’ என்கிற அணியை வாங்கியிருக்கிறார். ஏற்கெனவே ஐ.பி.எல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உரிமையாளராக இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக்கில்  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் எனும் அணிக்கு உரிமையாளராக இருக்கிறார். இது அவருக்கு ஹாட்ரிக் அணி! ரைட் ரைடர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிங்கங்கள் சூழ்ந்து நிற்க குழந்தை பெற்றெடுத்த பெண்

 
சிங்கங்கள் சூழ்ந்து நிற்க குழந்தை பெற்றெடுத்த பெண்
 

அடர்ந்த காட்டு வழியில் சிங்கங்கள் புடை சூழ, பெண்ணொருவர், ஆண் குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது நிறைமாத கர்ப்பிணியான மேன்குபென் மேக்வானா என்ற பெண்ணுக்கு, ஜூன் 29ஆம் திகதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அம்ரேலி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தின் அருகே கிர் வனப்பகுதி வழியாக நோயாளர்காவு வண்டியில் அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது திடீரென மேக்வானாவுக்கு பிரசவ வலி அதிகரித்தால் நோயாளர்காவு வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் தொழில்நுட்ப உதவியாளர் அசோக்.

அது அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது தைரியமாக வாகனத்தை நிறுத்தி, மகப்பேறு மருத்துவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அளித்த தகவலின் படி பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால், மனிதர்கள் இருப்பதை உணர்ந்த 12 சிங்கங்கள் நோயாளர்காவு வண்டியைச் சுற்றி வந்துள்ளன.

ஜாதவ் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால் சிங்கம் குறித்து அச்சப்படாமல், அவற்றை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். இந்த இடைபட்ட நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு அசோக், மேக்வானாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

மேக்வானாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஒட்டுநர் ராஜூ ஜாதவ் மெல்ல நோயாளர்காவு வண்டியை நகர்த்த, சிங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அழகாக வழிவிட்டு சென்றுள்ளன. தாயும், சேயும் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன். அவர்கள் இருவரும் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

http://uthayandaily.com

  • தொடங்கியவர்
விமர்சிப்பதைவிட செயல்பெரிது
 

image_1525b7a179.jpgவிமர்சிப்பதைவிட செயல்பெரிது. அவர் அப்படிச் செய்கிறார்; இவர் இப்படிச் செய்தார் எனச் சொல்லிச்சொல்லியே காலத்தைக் கழிப்தைவிட, நாங்கள் என்ன செய்தோம்? இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? என என்றாவது எம்மை நாம் கேட்பதுண்டா? 

ஆயினும், எல்லோரும் இப்படியானவர்கள் அல்ல; பெரும் பணிகளை உலகுக்கு ஆற்றியவர்கள் கூட, ஒன்றுமே பேசாமல் இருக்கின்றனர்.  

இத்தனை நல்லவர்களைக் கூடச் சீண்டி வெறுப்பேற்றும் பிரகிருதிகள் ஏராளம்! ஏராளம்!! செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்தைவிடப் பணிகளைச் செய்பவர்களை வீணாக விமர்சனம் செய்வது பாதகச் செயல். 

காழ்ப்புணர்வு பொல்லாதது.மனம் சுத்தமானால் செயல் புனிதமாய் இருக்கும். குணம் கெட்டவர்களுக்கு நறுமணத்தின் மேன்மையும் புரியாது. குட்டையில் சீவிக்கும் பன்றியைப் போல், அருவருப்பைத் தனதாக்கிக் கொள்பவர்களுக்கு தர்மத்தை தேவையற்றது எனக் கருதுவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.