Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/thirumarant

கிரிக்கெட்டைக் கொண்டாடித் தீர்த்த வெஸ்ட் இண்டீஸில் காலி ஸ்டேடியத்தைக் கண்டதுண்டா? ஆயிரம் தற்கொலைக்குச் சமம் அது.

twitter.com/manipmp

கூகுளில் தேடுவதை விட சிரமமானது,கூட்டத்தில்விட்ட நம் செருப்பைத் தேடுவது!

facebook.com/Guru Srini

GST tax Advisorனு ஒரு புது தொழில் தொடங்க நிறைய பேர் ரெடியாகிறாங்க போல. # நல்ல பிஸினஸாம்.

twitter.com/sundartsp

பக்கத்து வீட்டுக்காரன் ஹோம் தியேட்டர் வாங்கிட்டு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தெர்மகோலைக் குப்பையில போட்ருக்கான். என்னத்த சொல்ல!

p112a.jpg

twitter.com/HAJAMYDEENNKS 

குழந்தைகளைப் பொறுத்தவரை மொபைல்தான் இப்ப மிட்டாய்...!

twitter.com/Aruns212

இயற்கைக்கு ஃபேன்சி நம்பர்கள்மேல் ஆர்வம் இல்லை போலும். ஒரு நாளுக்கு 24 மணி நேரம்; ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். வாரத்திற்கு ஏழு நாட்கள்.

twitter.com/yalisaisl
 
ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டு எதிர்க்கட்சியிடம் எதிர்பார்ப்புகளைச் சொல்லி முறையிடுவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்!

twitter.com/GunaSeaker

இப்பல்லாம் ஆறு வயசில ஒரு பையன் Girl பற்றிப் பேசுறான்.

அந்த வயசில நான் எல்லாம் பென்சிலை சீவி சுடுதண்ணில போட்டா ரப்பர் ஆகும்னு பார்த்திட்டு இருந்தேன்!

twitter.com/araathu

குழந்தை தன் கோபத்தைக் கோபமாக காட்டக் கற்றுக்கொண்டபின், அதன் அழுகை குறைகிறது.

p112b.jpg

twitter.com/Endhirapulavan

படிக்கும்போது ஒரு பய ஐ.டி கார்ட் போட மாட்டான். ஆனா இப்ப என்னடான்னா ஐ.டி.கார்ட் போடாம வெளியவே வர மாட்றான். கேட்டா ஐ.டி பீப்புள்ஸ்!

twitter.com/dhayai
 
எப்படியாவது வைகோவையும் ரஜினியையும் சந்திக்க வெச்சிடு கோமாதா..

twitter.com/g_for_Guru

அட்டென்ஷன் சீக்கிங்குக்காக பையன் தனியா ரூம்ல போய் உம்முன்னு இருப்பான், யாரும் கண்டுக்கலைன்னா அவனே வந்து விளையாடுவான். குழந்தைய்யா வைகோ.

p112c.jpg

twitter.com/pshiva475

இங்கிலீஸ்ல இருக்கிற பாஸ்போர்ட்டையே ஃபாரீன்காரன் ஒருமணி நேரம் செக் பண்ணுவான்.

இதுல இந்தியிலும்னா மூணு நாளைக்கு முன்னாடியே ஏர்போர்ட் போகணும்!

twitter.com/thowfiqs 

இந்த மூன்று வருசத்துல நல்ல டெவலப்மென்ட் இருக்கிற ஒரே துறை photoshopதான்.

இதுக்குமுன்ன குஜராத். இப்ப இத்தியாவையே photoshop பண்றாய்ங்க.

twitter.com/introvert_offl  

பேர் சொல்லியே கூப்பிடுங்க என்பதில் ஆரம்பிக்கிறது நட்பு.

twitter.com/Dhrogi

கலையான முகம்னாலே அது கருப்புதான். சிவப்புக்கு அந்த கொடுப்பினை இல்ல.

p112d.jpg

twitter.com/withkaran

சினேகனா? பைப்ல தண்ணி வரலைன்னாகூட இராத்திரி குடம் குடமா வந்தீக. காலைல ஏன்மா நின்னீகன்னு அனத்துவாரே...

twitter.com/sundartsp

டயட்டின் முதல் எதிரி அம்மாக்கள் தான்.

twitter.com/Kozhiyaar
 
உலகிலேயே கடுமையான காரியம், குழந்தைக்கு ஒருவர் சோறு ஊட்டும் போது நாம் விளையாட்டு காட்டுவது தான்!


p112e.jpg

ட்ரெண்டிங்

ட்விட்டர், ஃபேஸ்புக் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை சென்ற வார ஹாட் டாபிக் ஒன் ப்ளஸ் ஃபைவ் மொபைல்தான். டூயல் கேமரா, அதுவும் DSLR கேமரா தரத்தில் படங்கள் எடுக்க முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். புது மொபைல் கைக்கு வந்தவர்கள் மெர்சல் படங்களாக எடுத்து அப்லோடு செய்ய, மற்ற ஸ்மார்ட்போன் பயனர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள். 33,000 என்ற விலை அதிகம் தான். ஆனால், இந்த வசதிகளுக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள் ஒன் ப்ளஸ் வாசிகள். #NeverSettle என்ற ஒன் ப்ளஸ் ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட். ஆன்லைன் விற்பனை தொடங்கிய ஒரே நாளில் ஸ்டாக் தீர்ந்து விட்டது.`அடுத்து எப்ப கதவைத் தொறப்பீங்க’ என அமேசான் கேட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஸ்மார்ட்போன் பிரியர்கள்!

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: பிக் பாஸ் னா என்னாண்ணே!

 

bigg_boss_3180880a.jpg

 

 

 

memes_1_3180881a.jpg

 

 

 

memes_11_3180882a.jpg

 

 

 

rajini_memes_3180891a.jpg

 

 

 

memes_9_3180890a.jpg

 

 

 

memes_6_3180889a.jpg

 

 

 

memes_5_3180888a.jpg

 

 

 

memes_4_3180887a.jpg

 

 

 

memes_14_3180885a.jpg

 

 

 

 

memes_13_3180884a.jpg

 

 

 

memes_12_3180883a.jpg

 

 

  • தொடங்கியவர்
மனச் சுமைகளை மாற்றிட வல்லவை
 

image_e660852476.jpgதனிமைத் தீயில் வெந்துகொண்டிருக்கும்போது, காக்கை, குருவிகளின் சத்தம் தேவகானம் போலிருக்கும். 

வெறுப்பு வரும்போது, அரவணைப்புத் தேவையாக உள்ளது. இதை மனிதர்கள்தான் வழங்க வேண்டும் என்பதல்ல; பிராணிகள், மரம்செடிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.  

சில்லென்ற காற்று, மெல்லிய மழைத்தூறல், அழகழகான மேகக்கூட்டம், மலர்களின் நறுமண வாசனை, கரையைத் தழுவும் அலைகளின் ஆர்ப்பரிப்பு, அடிவானத்தின் வர்ணஜாலம் என எல்லாமே எங்கள் மனச் சுமைகளை மாற்றிட வல்லவை.  

மனிதன் இத்தனை படைப்புகளின் மத்தியில் வாழும்போது, தன்னை மட்டும் தனித்தவனாக எண்ணுதல் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?  

பூமித்தாய் புனிதமானவள். எங்களை என்றும் அரவணைத்தபடி, எல்லாவற்றையும் அள்ளி நமக்கு ஊட்டுகின்றாள். குறை என்ன? நிறைந்த மனத்துடன் வாழ்க.

  • தொடங்கியவர்

மகன் செய்துகொடுத்த காலை உணவு..! சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி..!

மகன் அர்ஜூன், காலை உணவு தயாரித்துக் கொடுத்ததை, சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

606698-sachin-insta_06186.jpg


கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகிறார். குடும்பத்தினருடனான சந்தோஷமான நிகழ்வுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். நேற்று அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் பெட்டில் இருக்கிறார்; அருகில் ஒரு தட்டில் உணவு இருக்கிறது. அந்தப் புகைப்படத்துக்கு அருகில், 'இது என் மகன் தயாரித்த காலை உணவு. நான் உண்ட காலை உணவுகளிலேயே இதுதான் சிறந்தது' என்று பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

“கனடா 150”: கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

கனடா முழுவதுமுள்ள மக்கள் நாட்டின் 150வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வின் முக்கியப் பதிவுகள்

  • கனடா மூக்கு கண்ணாடி அணிந்த பெண்ணொருவர்AFP

    ஒவ்வோர் ஆண்டும் கனடா மக்கள் தங்களடைய தேசிய நாளை ஜூலை முதல் நாள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு 150வது ஆண்டாக இருப்பதால் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மிக பெரிய விருந்துகள் நாடெங்கும் நடைபெற்றுள்ளன.

  • கனடா 150REUTERS

    முன்னாள் பிரிட்டன் மூன்று காலனிகள் ஒன்றாக இணைந்தபோது கனடா நாடாக உருவானது.

  • கனடா 150REUTERS

    1982-ஆம் ஆண்டுதான், பிரிட்டன் முழுமையான தன்னாட்சியை கனடாவுக்கு வழங்கியது. அப்போது, அதன் அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொள்ளும் அதிகாரத்தையும் கனடாவுக்கு வழங்கியது.

  • கனடா 150REUTERS

    இருப்பினும், பிரிட்டன் அரசிதான் கனடாவின் அரசியாகவும் இருக்கிறார். அதனால்தான் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒட்டவாவில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றினார்.

  • கனடா 150EFF VINNICK/GETTY IMAGES

    512 கப் கேக்குகளை பயன்படுத்தி செய்யப்பட்ட கனடா தேசிய கொடி

  • 35.2 மில்லியன் மக்களுக்கு இன்று கனடா தாயகமாக உள்ளது. 1867 ஆம் ஆண்டு இருந்ததைவிட இது 10 மடங்கு அதிகம்.REUTERS

    35.2 மில்லியன் மக்களுக்கு இன்று கனடா தாயகமாக உள்ளது. 1867 ஆம் ஆண்டு இருந்ததைவிட இது 10 மடங்கு அதிகம்.

  • உலகிலுள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பகுதியும் கனடாவில்தான் உள்ளது.REUTERS

    உலகிலுள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பகுதியும் கனடாவில்தான் உள்ளது.

  • கனடா 150JEFF VINNICK/GETTY IMAGES

    “கனடா 150” கொண்டாட்டத்தை முன்னிட்டு வான்கூவரில் நடைபெற்ற யோகா அமர்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  • கனடா 150CHRIS ROUSSAKIS/AFP/GETTY IMAGES

    கனடாவின் 150வது பிறந்தநாளில் ஒட்டவாவில் உரையாற்றிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ (ஜூலை 1)

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

கையில் நயா பைசா இல்லாமல் அன்ஷ் மிஷ்ரா இந்தியா முழுக்க சுற்றிய கதை!

அன்ஷ் மிஷ்ரா, தான் பிறந்த ஊரான அலஹாபாத்தில் இருந்து கிளம்பி இன்றோடு(ஜூலை 3) 150 நாள் நிறைவடைந்துள்ளது. ‘சரி; அதுக்கென்ன இப்போ?’ என்பவர்கள் தொடர்ந்து படித்தால், ‘நம்ப முடியலையே... எக்ஸெலன்ட்... வாழ்த்துகள்... எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஸ்டே பண்ணிட்டுப் போங்க’ என்று கமென்ட் தெளிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

கேமரா, லேப்டாப், மொபைல் போன், நான்கைந்து செட் ஆடைகள், ஷூ, ஒரு டிராவல் பேக் - சத்தியமாக இது மட்டும்தான் அன்ஷ் மிஷ்ரா கிளம்பும்போது எடுத்து வந்தவை. கையில் ஒரு ரூபாய்கூடக் கிடையாது. ஆனால், அலஹாபாத் வழியாக குஜராத், ராஜஸ்தான், ஜெய்சால்மர், வயநாடு, கேரளா, பெங்களூரு என்று செம டூர் அடித்துக் கொண்டிருக்கிறார். 

அன்ஷ் மிஸ்ராஅன்ஷ் மிஷ்ரா

நீங்கள் நினைப்பதுபோல் இந்தப் பயணம் எல்லாமே முன்கூட்டியே டிக்கெட்கூஸ்.காமிலோ, ரயிலிலோ முன்பதிவு செய்துவிட்டு, வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு தொடர்கிற பயணம் இல்லை. எல்லாமே லிஃப்ட்தான். அங்கங்கே கிடைக்கும் உணவுப் பொருள்கள்தான் சாப்பாடு. நடுரோட்டில் நின்று கையை ஆட்டி லாரியிலோ, பைக்கிலோ, காரிலோ லிஃப்ட் கேட்டுத்தான் இத்தனை தூரம் வந்திருக்கிறார். பிச்சைக்காரன் படத்தில் வரும் விஜய் ஆண்டனிபோல், கையில் நயா பைசாகூட இல்லை; அப்புறம் சாப்பாடு எல்லாம் எப்படி?

‘‘சாப்பாடு எல்லாம் டெய்லி கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனா, நான் சந்தோஷமா இருக்கேன்!’’ என்று கன்னியாகுமரிக்குச் செல்வதற்காக லிஃப்ட் கேட்டு நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தவரை சென்னை பைபாஸில் மடக்கினோம். ‘‘எதுக்கு இந்தப் பயணம்? கைல காசு இல்லாம இவ்வளவு தூரம் எதுக்கு வரணும்? ஏதேனும் வேண்டுதலா?’’

traveller

அன்ஷ் மிஷ்ரா, பிறப்பிலேயே பணக்காரர். வளர்ந்தவுடன் மாடலானார். பி.எட் பட்டப்படிப்பை முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பாதித்தவருக்கு, திடீரென அந்த யோசனை வந்தது. ‘காசு இருந்தால்தான் இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?’ 

‘‘இந்த உலகத்தில் பணம்தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுதுனு ஒரு பேச்சு இருக்கு. பணத்தால எது வேணாலும் வாங்கலாம். ஆனால் ஜாலியை வாங்க முடியாது. அதை நிரூபிக்கத்தான் இந்தப் பயணம். அதுக்காகவே நான் பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். ‘எல்லோரும் லூசு பிடிச்சுடுச்சா’னு திட்டினாங்க. வீட்ல அம்மாகூட ரொம்ப வருத்தப்பட்டாங்க. பணம் இல்லாமலும் இந்த உலகத்துல ஜாலியா இருக்கலாம். இந்த உலகம் அன்பால் நிறைந்ததுனு எடுத்துக்காட்டத்தான் வீட்ல இருந்து பிப்ரவரி 3-ம் தேதி கிளம்பினேன்’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார் அன்ஷ் மிஷ்ரா.

சாதாரணமாக சொந்த ஊருக்கு லிஃப்ட் கேட்டாலே, ஒரு மாதிரி பார்ப்பார்கள். அலஹாபாத்தில் இருந்து பென்ஸ் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றிலும் லிஃப்ட் மூலமாக மட்டுமே சென்னைக்கு வந்திருக்கிறார் அன்ஷ் மிஷ்ரா. இருந்தாலும், அவருக்கு அதிகமாக லிஃப்ட் கொடுத்து உதவியது லாரி டிரைவர்கள்தானாம். ‘‘எனக்கு லாரி டிரைவர்கள் மேல் ஒரு நல்ல மதிப்பு வந்திருக்கு. இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதில் ட்ரக் டிரைவர்கள்தான் ஹீரோன்னு சொல்லுவேன். எனக்கு லிஃப்ட் கொடுத்ததுக்காக மட்டும் இதைச் சொல்லலை. அவங்க படும் கஷ்டங்கள் இந்த நெடுஞ்சாலை வாழ்க்கையில்தான் எனக்குத் தெரிஞ்சது. நான் பாதி தூரம் வந்ததே லாரியில்தான். ஒரு தடவை இரண்டரை நாள் எதுவும் கிடைக்காம சாப்பிடாமலே நடந்துக்கிட்டு இருந்தேன். அப்போ எனக்கு அன்பா சாப்பாடு சமைச்சுக் கொடுத்து கிட்டத்தட்ட 500 கி.மீ வரை எனக்கு லிஃப்ட் கொடுத்து உதவியது லாரி டிரைவர்கள்தான்’’ என்று சொல்லும் அன்ஷ் மிஷ்ரா, தங்குவதற்கு என்று எதையும் தேடிப் போவதில்லை. செல்லும் வழியில், நெடுஞ்சாலையிலோ, கோயில் வாசலிலோ காட்டில் குட்டியாய் டென்ட் அடித்தோ தங்கிக் கொள்வாராம்.

traveller

சும்மா ‘பயணம்’ என்றாலே எக்கச்சக்க அனுபவங்கள் கிடைக்கும். அன்ஷ், பர்ஸ் இல்லாமல் ‘சும்மாவே’ பயணிக்கிறார். அனுபவம் இல்லாமலா இருக்கும். கேரள மாநிலம் வயநாட்டில், நட்ட நடு ராத்திரியில் இவர் தங்கும்போது விலங்குகளிடம் இருந்து தப்பித்தது, போலீஸ் வளையத்திடம் இருந்து தப்பித்தது, குஜராத்தில் மிகப் பெரிய டவரில் ஏறி மூச்சுத் திணறியது என்று பல சிலீர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். காட்டுக்கு நடுவில் செல்ஃபி ஸ்டிக் மூலம் மொபைல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்ததை, துப்பாக்கி வைத்திருக்கும் வேட்டைக்காரன் என்று தவறாக நினைத்து கேரள போலீஸ் சுற்றிவளைக்க... தீவிரவாதியின் விசாரணை வளையத்துக்குள் சிக்கித் தப்பித்த அனுபவமெல்லாம் மறக்கவே முடியாதது என்று சொன்னார் அன்ஷ் மிஷ்ரா. 

இதுவரை 2 யூனியன் பிரதேசங்களையும், 8 மாநிலங்களையும் இந்த 150 நாள்களில் கடந்துவிட்டார் அன்ஷ் மிஷ்ரா. ஒவ்வொரு மாநிலத்திலும் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தந்த ஏரியாவில் இருப்பவர்கள், இப்போது இலவசமாக தங்கும் இடம், சாப்பாடு எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தான் சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் தங்கி, இப்போது கன்னியாகுமரிக்குக் கிளம்பி விட்டார். ‘‘இவ்வளவு அன்பு நிறைந்த உலகத்தில் நாம்தான் பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்! என்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை. ஆனால், இந்த உலகத்திலேயே சந்தோஷமானவன் நான்தான்’’ என்று தத்துவக் குத்து குத்தும் அன்ஷ், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ கமல்போல் ஒரு ஆப்பிள், மூன்று பன், பிஸ்கட் பாக்கெட் என்று பல நாள்கள் ஓட்டியிருக்கிறாராம். அன்ஷ்ஷிடம் இருக்கும் ஒரு குறிக்கோள்: ‘சாப்பாடு கொடுங்க’ என்று யாரிடமும் கேட்டதில்லையாம்.

கன்னியாகுமரியில் இருந்து மேலும் ஒரு திட்டம் வைத்திருக்கிறாராம் அன்ஷ். அதாவது, அந்தமானுக்கு லிஃப்ட் கேட்டே போவது. சிலர் அந்தமானுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகச் சொல்லியும் அதை மறுத்துவிட்டாராம் அன்ஷ். அப்புறம் எப்படி? வான் பயணத்தைத் தாண்டி, அந்தமானுக்குச் சாலைகள் இல்லை; அதனால் கப்பலில்தான் லிஃப்ட் கேட்டாக வேண்டும். ‘‘எப்படியும் அந்தமான் போயிட்டுத்தான் அலஹாபாத் போவேன். எத்தனை நாள்களானாலும் பரவாயில்லை’’ என்று பை பை சொல்லிவிட்டு, பைக்கில் லிஃப்ட் கேட்டுக் கிளம்பிவிட்டார் அன்ஷ் மிஷ்ரா. கப்பல்ல லிஃப்ட் கேட்டுப் போற முதல் ஆள் அன்ஷ்தான்.

 

கையில் காசு இல்லையென்றால், மூஞ்சியை சிடுசிடுவென வைத்திருப்பவர்களுக்கு அன்ஷ் மிஷ்ரா சொல்வது இதுதான்: "சந்தோஷமாக இருப்பதற்குக் காசு பணம் தேவையில்லை!"

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அழிவின் விளிம்பில்தேனீக்கள்; பூச்சிக்கொல்லியே பிரதான காரணம்

தேனீக்கள் மீதான பூச்சிக்கொல்லியின் பாதிப்பு குறித்த புதிய ஆய்வின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். உலங்கெங்கிலும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தாக்கத்தை புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கம். இந்த பூச்சிக்கொல்லிகள் தேனீக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக, இது தொடர்பாக செய்யப்பட்ட மிகப்பெரிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நியோநிகோடினாய்ட்ஸ் என்கிற ஒருவகை பூச்சிக்கொல்லியின் தாக்கமே இதை செய்வதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் விதத்தை இந்த நியோநிகோடினாய்ட்ஸ் பூச்சி மருந்து பெரிதும் மாற்றியது. பூச்சிக்கொல்லிகளை வயலில் தெளிப்பதற்கு பதில், தானிய விதைகள் இந்த இரசாயனங்களால் பூசப்பட்டு நிலத்தில் விதைக்கப்படும். அவை வளரும்போது பூச்சிக்களிடமிருந்து அந்த மருந்து பயிரை காப்பாற்றும். ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் பிரிட்டனில், சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள வயல்வெளியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு, நியோநிகோடினாய்ட்ஸ் தேனீக்களுக்கு தீங்கு செய்வதை உறுதிசெய்துள்ளது. நியோநிகோடினாய்ட்ஸ் பூச்சிக்கொல்லி மருந்து தேனீக்களை மட்டுமல்லாமல் வண்டுகள் உள்ளிட்ட எல்லா வகையான மகரந்தச்சேர்க்கைக்கான பூச்சிகளையும் மோசமாக பாதிப்பது முதல்முறையாக நிரூபிக்கப்பட்டிருப்பது முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. உலகளாவிய மகரந்தச்சேர்க்கையாளர்களான தேனிக்கள் வேகமாக மறைந்துவருவது விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது. காரணம் உலகின் உணவுத் தாவர மகரந்தச்சேர்க்கையின் பெரும்பகுதி தேனீக்கள் மற்றும் வண்டுகளால் நடக்கிறது. அவை அழிந்தால் பெரும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்.

  • தொடங்கியவர்

கண் இல்லாமல் திட்டமிட்டுச் செயலாற்றும் கரையான்கள்

 
கண் இல்லாமல் திட்டமிட்டுச் செயலாற்றும் கரையான்கள்
  •  

கரையான்கள் எறும்புகளைப் போல் இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. () எறும்புகள் என்ற வரிசையைச் Isoptera சேர்ந்தது. ஆனால், கரையான்கள் என்ற வரிசையைச் சேர்ந்தது. () என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்று பொருள். Ptera என்றால், ‘இறக்கை ‘ என்று பொருள். அதாவது, கரையான்களின் மறு வடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பட்டியல் பெயர் இதற்கு.

download-15-1.jpg

கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.

கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி ( (Social insect) ) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக் கரையான் (Queen)), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும்.

download9-300x195.jpg

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு விசேட அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும்.

இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக் கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு.

images-17-300x120.jpg

இராணுவ வீரர்கள் மற்றும் பணிக் கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக் கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம் கரையான் , இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

இராணிக் கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக் கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக் கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு.

termites.jpg

ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக் கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும்.

இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றல் என்று நினைக்கும்போது வியப்பாகவே இருக்கிறது

பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?

paampu-putru.jpg

ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும்.

அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஒக்சிஜன், கார்பன் டை ஒக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும்.

images-25.jpg

எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றுக்குள் Surface conduits மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?

பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை.

images-32.jpg

கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும்.

இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.

இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப் பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா

http://uthayandaily.com

  • தொடங்கியவர்

முதலையை மணந்த மனிதர்

மெக்ஸிகோவில் உள்ள ஒரு மீனவ நகரத்தின் மேயருக்கும் இந்த முதலைக்கும் திருமணம் நடந்தது. உள்ளூர் மீனவர்களுக்கு அதிர்ஷ்டம் தருவதாக நம்பப்படும் பழங்குடி பாரம்பரிய நிகழ்வு இது. 1789ஆம் ஆண்டு முதல் ஒக்ஸாகாவில் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.பாரம்பரியத்தின்படி முதலை ஒரு இளவரசியாக கருதப்படுகிறது.

  • தொடங்கியவர்

“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்!’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்!

லைவ் ஷோவில் மொக்கைபோடுவதில் தொடங்கி சீரியலில் கண்ணீர்விடுவது வரையில் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் தொலைக்காட்சிகளின் ஹார்ட் பீட். டிவி ப்ரியர்களின் குட் புக்கில் இருக்கும் சின்னத்திரை ஸ்டார்களின் பெர்சனல் பக்கங்கள் இதோ! 

மணிமேகலை - சின்னத்திரை

மணிமேகலை:

“ஐ லைக் டான்ஸ்! யார் டான்ஸ் ஆடினாலும் உறைஞ்சுபோய் வேடிக்கை பார்ப்பேன். என்னை இம்ப்ரெஸ் பண்ணணும்னா நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சாலே போதும். நல்லா டான்ஸ் ஆடுற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” 

ரக்‌ஷன் - சின்னத்திரை

ரக்‌ஷன்: 

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பதே ஒருகாலத்தில் ரக்‌ஷனின் கனவு. பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வீட்டுக் கதவைத் தட்டியவர்.  சினிமாவுக்காக போட்டோ ஷூட் எடுக்க 17,000 ரூபாயை ஒருவரிடம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். ``கடைசிவரைக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகூட எடுக்கலை. அப்போ வீட்டுல ரொம்ப கஷ்டம். சினிமாவே வேணாம்னு வந்துட்டேன். கொஞ்சநாள் சேலை பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். மெஸ்கூட வெச்சு நடத்தினேன். அப்புறம் ஃபார்மசியில் வேலை பார்த்தேன். கடைசி முயற்சியா ராஜ் மியூசிக்ல ஆடிஷன் போனேன். வேலையும் கிடைச்சது. அப்புறம் விஜய் டிவி-யில் கிடைச்ச வாய்ப்புனால இவ்வளவு தூரம் வந்திருக்கேன். 

ஜாக்குலின்

ஜாக்குலின்:

ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சின்னத்திரைக்கு வந்த முதல் பெண் தொகுப்பாளினி. ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் நுழைந்தவர். விஜய் டிவி-யின் டாப் ஃபேவரைட் தொகுப்பாளினி. கலாய் வாங்கியே பிரபலமான சின்னப்பொண்ணு. ``என் ஊருக்கெல்லாம்  எந்த சினிமா பிரபலமும் வந்ததா எனக்கு ஞாபகமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு சின்ன ஊரில் இருந்து வந்து விஜே-வா இருக்கிறதே எனக்குப் பெருமைதான். நான் ரொம்பத் துணிச்சலான பொண்ணு. கலாய் வாங்கினாத்தானே திருப்பிக் கலாய்க்க முடியும். என்னப் பற்றி ஒரு சீக்ரெட் சொல்லவா, பொண்ணுங்கன்னாலே மெலடி சாங்ஸ்தான் பிடிக்கும்னு  நினைப்பீங்க. ஆனா, எனக்கு குத்துப்பாட்டுதான் ஃபேவரைட்.” 

தியா

தியா: 

பிறந்தது மலையாளக் கரை. படித்து வளர்ந்தது குன்னூரில்.  திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டாலும், வேலைக்காக அடிக்கடி சென்னைக்கு வந்துவிடுகிறார். தனிமை விரும்பி, அமைதியான இடங்களில் நேரம் கழிப்பது தியாவின் பொழுதுபோக்கு. ``இந்த உலகத்துலேயே சாப்பாடுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். `கிரேசி கண்மணி' நிகழ்ச்சி பண்ணியதால் சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் நல்ல சாப்பாடா தேடித் தேடிச் சாப்பிட்டிருக்கேன். `நல்ல ஹோட்டல் எங்கே இருக்குனு சென்னைவாசிகளுக்கே நான்தான் கைடு. பாஸ்... நீங்க எந்த ஏரியா?” என்று கேப் விடாமல் பேசிக்கொண்டே போகிறார் தியா. 

நட்சத்ரா

நட்சத்ரா: 

இணையத்தைத் தட்டினால் நட்சத்ரா நடித்த குறும்படங்கள் வந்து குவியும். குறும்பட நடிகையாகத் தொடர்ந்து நடித்ததால், தந்தி டிவி-யில் தொகுப்பாளினியாக  இவருக்கு வாய்ப்பு வந்தது. இவர் சிறந்த ஒடிசி டான்ஸர். `சன் சிங்கர்- 2' சீஸன்களை ரகளையாகக் கொண்டுசென்றவர். மூன்றாவது சீஸனிலும் தொகுப்பாளினியாக அசத்திவருகிறார்.

சித்ரா

சித்ரா:- 

``என்னுடைய க்யூட் ஸ்மைலிக்குப் பின்னாடி ஒரு சீரியஸ் எமோஜி இருக்கிறது யாருக்குமே தெரியாது. நான் பயங்கர கோவக்காரிங்க. எந்த அளவுக்குன்னு பார்த்தீங்கன்னா, பசங்களை ரோட்ல நிக்கவெச்சு காலரைப் பிடிச்சு அடிக்கிற அளவுக்கு. ஒருநாள், அப்படித்தான் சிக்னலில் கார் நின்னுட்டு இருந்தப்போ, ஒருத்தன் பயங்கர வேகத்துல வந்து கார் பின்னாடி இடிச்சுட்டான். கார்ல இருந்து இறங்கி அவனோட சட்டையைப் பிடிச்சு பளார் பளார்ன்னு அறைஞ்சுட்டேன். அதுக்கு அப்புறம்தான் தோணுச்சு, `ச்ச்ச்சா... அந்தப் பையன் பாவம் ரொம்ப அடிச்சுட்டோம்'னு இப்படி என்னோட கார்ல மோதி அறை வாங்கின பசங்க ஏராளம்.” 

நவீந்தர்

நவீந்தர் மூர்த்தி, சீரியல் ஆர்ட்டிஸ்ட்:

``ஒவ்வொரு முறையும் சீரியல் ஷூட் ஆரம்பிக்கிறப்போ, பூஜை போட்டு சாமி கும்புடுவாங்க. அப்போ கற்பூரம் ஏற்றி அதை எல்லாரும் தொட்டுக் கும்பிடும்போது, நானும் அதை ஒரு பேச்சுக்குத் தொட்டுக்கும்பிடுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கிற விஷயம் என்கூட வேலைபார்க்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. நிறைய பொண்ணுங்ககிட்ட லவ் சொல்லி திட்டு வாங்கியிருக்கேன். நல்லா சைட் அடிப்பேன். இப்படியான லெளகீக மொமன்ட்ஸ் நிறைய இருக்கு. அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா... அதுவே ஒரு தனி ஆர்ட்டிக்கிளா வந்திருமே... பரவாயில்லையா!"

விஜய் டிவி

ஆண்ட்ரூஸ்

``நான் ஸ்கூல் படிக்கும்போதே நல்லா டான்ஸ் ஆடுவேன். ஒருதடவை அப்படித்தான் டான்ஸ் போட்டியில என்னை `லேடி கெட்டப்' போட்டு ஆடச் சொன்னாங்க (!) உங்க கேள்வி எனக்குப் புரியுது பாஸ். அது பாய்ஸ் ஸ்கூல்... ஸோ, நாங்கதான் லேடி கெட்டப்லாம் போடுவோம். அந்தத் தடவை குறவன், குறத்தி டான்ஸ் டீம்ல இருந்தேன். குறத்தியான எனக்கு ஷார்ட் ஸ்கர்ட்தான் காஸ்ட்டியூம். அதைப் போட்டுட்டு நான் ஆடும்போது விசில் பறந்துச்சு. எக்கச்சக்க கிளாப்ஸ். நானும் குதூகலமா ஆடி முடிச்சுட்டு மேடையிலிருந்து கீழ இறங்கி வந்தா... என்னோட டீச்சர், `ஏன்டா... இப்படி வேட்டியைத் தூக்கித் தூக்கி `லுங்கி டான்ஸ்' ஆடுற மாதிரி, பாவாடையைத் தூக்கித் தூக்கி ஆடுற? மொத சீட்ல உட்காந்துட்டு இருந்த கெஸ்ட் மேடம் என்னையே பார்த்துட்டிருந்தாங்க தெரியுமா? ரொம்ப அசிங்கமா போச்சுடா. இனிமேலாவது நல்லவிதமா டான்ஸ் ஆடு'ன்னு அறிவுரை சொன்னது இன்னிக்கு எந்த ஷூட்டிங் செட்ல ஆடச் சொன்னாலும் ஞாபகத்துக்கு வரும். "

அஞ்சன

அஞ்சனா:- 

``நான் அழகு சாதன பொருள்கள் அதிகம் வாங்க மாட்டேன். ஆனா, லிப்ஸ்டிக் மட்டும் அவ்வளோ பிடிக்கும். நிறைய கலெக்‌ஷன்ஸ் வேற வேற கலர்ல வெச்சிருக்கேன். என்னமோ தெரியலை, என்னால லிப்ஸ்டிக் வாங்குறதை மட்டும் குறைச்சுக்கவே முடியலை. அதுலயும் குறிப்பா `பிங்க்' கலர் என்னோட ஆல்டைம் ஃபேவரிட். ஒரே கலர் வேற வேற பேக்கிங்ல இருந்தா, எல்லாத்தையும் வாங்கிருவேன். `இந்த கலர் எல்லாமே உன்கிட்ட இருக்கே'ன்னு கேட்டா, `அது டார்க் பிங்க், இது லைட் பிங்க்'ன்னு சொல்லி என் கணவரை எப்படியாவது சமாளிச்சு வாங்கிக் கொடுக்கவெச்சுருவேன். 

kamal

கமல் - சீரியல் ஆர்ட்டிஸ்ட்

``எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. `தூத்துக்குடி'ன்னு ஒரு படத்துல சின்ன சீன்ல, ஃப்ரேம் ஓரத்துல நின்னுட்டிருப்பேன். அந்தப் படத்துல நடிச்சதை இதுவரை நான் யார்கிட்டயுமே சொன்னதில்லை. அந்தப் படம் வந்ததே பாதிப் பேருக்குத் தெரியாது. இதுல நான் நடிச்சேன்னு எப்படிச் சொல்றது? இருந்தாலும் தூத்துக்குடி என்னோட ஊரு. அதனால் அந்தப் படத்துல நடிச்சதை நான் ரொம்பப் பெருமையா நினைக்கிறேன்."

அருள்

அருள், சீரியல் ஆர்ட்டிஸ்ட்:

``லேட் நைட் பார்ட்டி முடிஞ்சதும், நண்பர்கள் எல்லாரையும் வீட்ல கொண்டுபோய் பத்திரமா டிராப் பண்றது எப்பவுமே என்னோட வேலையாத்தான் இருக்கும். ஏன்னா... நான் குடிக்க மாட்டேன். அப்படி ஒருநாள், நண்பர்கள் எல்லாரையும் டிராப் பண்ணப் போகும்போது, மஃப்டியில இருந்த போலீஸோடு பயங்கர தகராறு. அவங்க போலீஸ்னு தெரியாம நண்பர்கள் எல்லாரும் அவங்களைத் திட்டிட்டாங்க. சண்டை பெருசாகிடுச்சு. நானும் கோபத்துல அவங்களை அடிச்சுட்டேன். அப்புறம் எங்க எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுபோயிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு அவங்க போலீஸ்ங்கிற விஷயமே தெரியவந்துச்சு. மீடியா நண்பர்களை வரச் சொன்னதுக்கு அப்புறம்தான் பிரச்னை ஒருவழியா முடிஞ்சது. அதெல்லாம் ஒரு திக் திக் மொமென்ட்!"

ரியோ

ரியோ ராஜ்  நிகழ்ச்சித் தொகுப்பாளர்:

``நான் சன் மியூசிக்ல `கல்லூரி காலம்' ஷோ பண்ணிட்டிருந்த நேரம். அப்போ நிறைய காலேஜுக்கு நேர்ல போய் பசங்களைப் பேட்டி எடுத்து அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வர்றதுதான் அந்த ஷோவின் நோக்கம். அதுக்காக மதுரையிலிருந்த பிரைவேட் காலேஜுக்குப் போயிட்டிருந்தப்போ, நடு வழியில் அவங்க எனக்காக பத்தாயிரம் வாலா சரவெடியெல்லாம் வெடிச்சு மெர்சல் பண்ணிட்டாங்க. என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம்னா அதுதான். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், அந்தப் புகைமூட்டத்துல இருந்து நான் ஹீரோ மாதிரி என்ட்ரி ஆனேன் பாருங்க... அதெல்லாம் வேற லெவல் மெமரீஸ். நீங்களே சொல்லுங்க... யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்? 

தினேஷ்

தினேஷ், சீரியல் ஆர்ட்டிஸ்ட்:

``நான் எட்டாவது படிக்கும்போது வீட்ல இருந்து சென்னைக்கு ஓடிவந்துட்டேன். `சென்னையில சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ்ல இருக்கிற ஆர்ட் கேலரியைப் பார்க்கணும், எனக்கு பெர்மிஷன் கொடுங்க'ன்னு வீட்ல கேட்டேன். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கடைசி வரைக்கும் அவங்க விடவே இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து சென்னைக்கு பஸ் பிடுச்சுப் போயிடலாம்னு முடிவுபண்ணேன். ஒருவழியா மதுரைக்கு வந்து சென்னை பஸுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ, ஒருத்தன் என்னோட பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான். நடுராத்திரில என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சுட்டிருந்த நேரத்துல, மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட  நூறு ரூபாய் வாங்கிட்டு ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன்.

 

அந்த நேரம் நடுராத்திரி 12 மணி. வேற வழியில்லாம பீச்ல படுத்துத் தூங்கிட்டு, காலையில எழுந்து பெல்ஸ் ரோடு சிக்னல் வழியா சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜை நோக்கிப் போயிட்டிருந்தேன். அப்போ என்னை ஒரு நூறு போலீஸ் மடக்கிப் பிடிச்சுட்டாங்க. என்னன்னு பார்த்தா, மறுநாள் காலையில சேப்பாக்கம் ஸ்டேடியத்துல இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கப்போகுது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு `ஹிந்துத்துவ செளராஷ்டிரா' கட்சியினர், பிட்சில் மண்ணைத் தோண்டி பன்னி தலையை நட்டுவெச்சதுனால ஒரே கலவரம். அந்த ரோட்ல நூறு போலீஸுக்கு மேல பாதுகாப்பு. அதுல ஒரு போலீஸ் என்னைப் பிடிச்சு, `யார் நீ, எதுக்காக இங்கே வந்த?'ன்னு கேட்டார். நான் சரியா பதில் சொல்லாததுனால, D-1 போலீஸ் ஸ்டேஷன்ல என்னை உட்காரவெச்சுட்டாங்க. அதுக்கப்புறம், வீட்டுல சொல்லி என்னோட சொந்தக்காரங்க ஸ்டேஷனுக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போனாங்க.''

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1988 : 290 பேருடன் பய­ணித்த ஈரா­னிய பய­ணிகள் விமா­னத்தை அமெ­ரிக்க கடற்­படை சுட்­டு­வீழ்த்­தி­யது

வரலாற்றில் இன்று

ஜூலை 03

 

1608 : கன­டாவின் கியூபெக் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1767 : நோர்­வேயில் தற்­போதும் வெளி­வரும் மிகப்­ப­ழைமை­யான பத்­தி­ரி­கை­யான அட்­ரெ­ஸா­வி­செனின் முதல் பதிப்­பு­வெ­ளி­யா­கி­யது.


21602cfb168eaa8631a49b633ac4cafe_L1819 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது சேமிப்பு வங்கி நியூயோர்க்கில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1886 : மோட்­டாரில் இயங்கும் முதல் பென்ஸ் காரை ஜேர்­ம­னியின் மன்ஹெய்ம் நகரில் கார்ல் பென்ஸ் காட்­சிப்­ப­டுத்­தினார்.


1938 : இங்­கி­லாந்தில் நீராவி ரயி­லொன்று 203 கிலோ­மீற்றர் வேகத்தில் பயணம்  செய்து புதிய சாதனை படைத்­தது.


1940 : 2 ஆம் உலக யுத்­தத்­தின்­போது பிரெஞ்சு கடற்­படை கப்பல் அணி­யொன்று பிரித்­தா­னிய படை­களின் எதிர்­பா­ராத குண்­டு­வீச்­சுக்­குள்­ளா­னது. இதனால் 1297 பிரெஞ்சு படை­யினர் உயி­ரி­ழந்­தனர். பிரான்ஸும் பிரிட்­டனும் நேச­நா­டு­க­ளாக விளங்­கி­ய­போ­திலும் ஜேர்­ம­னி­யிடம் பிரான்ஸ் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.


1944 : பெலா­ரஸின் தலை­நகர் மின்ஸ்கை நாஸி ஜேர்­ம­னி­யி­ட­மி­ருந்து சோவியத் யூனியனின் படைகள் கைப்­பற்­றின.


1962 : பிரான்­ஸுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட அல்­ஜீ­ரிய சுதந்­திரப் போர் முடி­வுற்­றது. 132 வரு­ட­கால பிரெஞ்சு ஆட்­சி­யி­லி­ருந்து அல்­ஜீ­ரியா சுதந்­திரம் பெற்­றது.


1969 : சோவியத் யூனியனின் விண்­வெளி ரொக்கெட் ஏவு­த­ளத்தில் ஏற்­பட்ட பாரிய வெடிப்பின் கார­ண­மாக அந்த ஏவு­தளம் அழிந்­தது.


varalaru-mohamed-morsi01011979 : ஆப்­கா­னிஸ்­தானில் சோவியத் ஆத­ரவு அர­சாங்­கத்தின் எதி­ர­ணி­யி­ன­ருக்கு இர­க­சிய உத­வி­ய­ளிக்கும் முதல் பணிப்­புரை ஆவ­ணத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் கையெ­ழுத்­திட்டார்.


1988 : பார­சீக வளை­கு­டா­வுக்கு மேல் பறந்­து­கொண்­டி­ருந்த ஈரானின் ஈரான் எயார் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான பய­ணிகள் விமா­ன­மொன்றை அமெ­ரிக்க யுத்தக் கப்­ப­லான யூ.எஸ்.எஸ்.வின்சென்ஸ் சுட்­டு­வீழ்த்­தி­யது. இதனால் விமா­னத்­தி­லி­ருந்த 290 பேரும் உயி­ரி­ழந்­தனர்.


2001 : ரஷ்­யாவின் இர்குட்ஸ்க் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில்  145 பேர் உயி­ரி­ழந்­தனர்.


2006 : ஸ்பெய்னின் வலென்­சியா நகரில் இடம்­பெற்ற ரயில் விபத்தினால் 43 பேர் உயிரிழந்தனர்.


2013 : எகிப்தில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியான மொஹமட் முர்ஸி, ஆர்ப்பாட்டங்களையடுத்து  இராணுவத்தினரால் அப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

சென்னையில் 'சிறை அனுபவம்' தரும் உணவகம்

சிறைக்குப் போகக் `கொடுத்து` வைக்காதவர்களுக்கு, சிறை அனுபவம் தருகிறது இந்த சென்னை உணவகம்

இந்த உணவு விடுதியின் மேசைப்பணியாளர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் கைதிகள் போன்றே உடையணிகின்றனர்.

சிறைச்சாலையை ஒத்த உள்ளரங்க வடிவமைப்பு கொண்டுள்ள இங்கு, முழுமையாக சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன.

இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறைக்கூட வடிவ அறைகளில், `கம்பி எண்ணிக்கொண்டே` இங்கு உணவு உண்ணலாம்.

குடும்பமாக அல்லது குழுவாக வருபவர்களுக்கு இந்த தனி “சிறைக்கூடங்கள்” ஒதுக்கப்படுகின்றன.

சினிமாவில் மட்டுமே சிறைச்சாலையை பார்த்திருப்பவர்களுக்கு, இது புதிய அனுபவத்தை கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சுவர்களும், இருட்டும், இரும்புக் கம்பிகளும், இங்கு உணவு உண்ண வருபவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மனச் சுமைகளை மாற்றிட வல்லவை
 

image_e660852476.jpgதனிமைத் தீயில் வெந்துகொண்டிருக்கும்போது, காக்கை, குருவிகளின் சத்தம் தேவகானம் போலிருக்கும். 

வெறுப்பு வரும்போது, அரவணைப்புத் தேவையாக உள்ளது. இதை மனிதர்கள்தான் வழங்க வேண்டும் என்பதல்ல; பிராணிகள், மரம்செடிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.  

சில்லென்ற காற்று, மெல்லிய மழைத்தூறல், அழகழகான மேகக்கூட்டம், மலர்களின் நறுமண வாசனை, கரையைத் தழுவும் அலைகளின் ஆர்ப்பரிப்பு, அடிவானத்தின் வர்ணஜாலம் என எல்லாமே எங்கள் மனச் சுமைகளை மாற்றிட வல்லவை.  

மனிதன் இத்தனை படைப்புகளின் மத்தியில் வாழும்போது, தன்னை மட்டும் தனித்தவனாக எண்ணுதல் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?  

பூமித்தாய் புனிதமானவள். எங்களை என்றும் அரவணைத்தபடி, எல்லாவற்றையும் அள்ளி நமக்கு ஊட்டுகின்றாள். குறை என்ன? நிறைந்த மனத்துடன் வாழ்க.

  • தொடங்கியவர்

வைரலாகி வரும் 2-ம் வகுப்பு படிக்கும் பெரியமருது எழுதும் அழகுத் தமிழ் வீடியோ! #GovtSchoolStudent

பெரிய மருது

‘என் மகன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ஆனால், தமிழ் படிக்கவோ எழுதவோ தெரியல' இப்படிக் கூறும் பெற்றோரைச் நாம் பார்த்திருப்போம். எட்டு வருடங்கள் படித்தும் தாய்மொழியான தமிழில் படிக்கவும் எழுதவும் முடியவில்லை என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துவதான் இல்லையா? சமீபத்தில், அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருதுவின் எழுதும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும்போது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேர நம்மைச் சூழந்துகொள்கின்றன. அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆர்வமா? பள்ளி நோட்புக்கில் மூன்று கேள்விகள் எழுதப்பட்டிருந்தன.

1. பசு எங்கு மேய்ந்தது?

2. கன்றுக்குட்டி என்னவெல்லாம் செய்தது?

3. பசு, கன்றுக்குட்டியிடம் எவ்வாறு அன்பு காட்டியது?

https://www.facebook.com/permalink.php?story_fbid=1751539191811260&id=100008655887860&pnref=story

 

இவைதாம் அந்தக் கேள்விகள். இதற்கான பதிலை, ஓர் இடத்திலும் தவறு இல்லாமல் எழுதுகிறார் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருது. அதுவும் வார்த்தைகளை ராகம்போட்டுக்கொண்டு படிப்பது கொள்ளை அழகு. எந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் எனத் தேடினோம்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், பாதிரி எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் மாணவர்தான் அவர். அப்பள்ளியின் ஆசிரியர் கணபதியிடம் பேசினோம்.

கணபதி“பெரியமருது மட்டுமல்ல, எங்கள் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் வகுப்புப் படிக்கும் அனைத்து மாணவர்களும் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் செய்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி எல்லாம் படித்தவர்கள் அல்ல. நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள்தாம். இதற்குக் காரணம், இருவர்தாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒலக்கூர் ஒன்றிய மையத்தில் நடைபெற்ற வகுப்பில், சென்னையைச் சேர்ந்த ஆசிரியை கனகலெட்சுமி என்பவர் புதிய முறையில் தமிழைக் கற்பிக்கப் பயிற்சி அளித்தார்.

‘தொல்காப்பியரின் சொற்பிப்பு’ என்று அதற்கான பெயரைக் கூறினார். அவர்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணம். அடுத்தது, அந்தப் பயிற்சியை வகுப்பில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள். நீங்கள் பார்த்த பெரியமருதுவின் ஆசிரியர் கிறைஷ்டியன் நிஷா. அவர், வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே சிறப்பான பயிற்சி அளித்துவருகிறார். வழக்கமாகக் கற்பிப்பதை விட, தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை எளிமையானதாக இருக்கிறது. மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியவும் உதவுகிறது" என்கிறார் கணபதி.

'தொல்காப்பியரின் சொற்பிப்பு' முறை என்றால் என்னவென்ற கேள்வி எழுந்ததும் பயிற்சி அளித்த ஆசிரியை கனகலெட்சுமியிடமே கேட்டோம். இவர் சென்னை, ஷெனாய் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார்.

“தமிழைத் தமிழாகக் கற்பிப்பதுதான் தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை. உதாரணமாக, 'அ' எனும் எழுத்தை எழுதவதற்கு கனக லெட்சுமிமாணவர்களிடம் இப்படிக் கூற வேண்டும். முதலில், சுழியை எழுதிகொள்ளுங்கள். பின் கீழ்ப் பிறை, அடுத்து, படுக்கைக் கீற்று, இறுதியாக மேலிருந்து இறங்கும் கீற்று எழுதினால் 'அ' எழுதிவிடலாம். இப்படிச் சொன்னால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் புரியுமா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி. முட்டைப் போடு, பக்கத்துல கோடு போடு, குறுக்குக் கோடு போடு என்றால் பிள்ளைகளுக்குப் புரியும் என்றால் அவற்றையே திருத்தமாகச் சொன்னாலும் புரியும். இதை ஒரு தொடர்ப்பயிற்சியாகச் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளதால் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். சின்ன வயது பிள்ளைகளுக்கு மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில், இந்த முறை பயிற்சி நிச்சயம் பலன் அளிக்கும். அதற்கு நல்ல உதாரணம் பெரிய மருது எழுதியதைப் பார்க்கிறீர்கள்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஒரு கையேடு தந்திருந்தார்கள். அதில் கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி முறைதான் இது. (நன்னூல் விருச்சிகத்தில் இது உள்ளது.) அந்தப் பயிற்சியை இன்னும் எளிமையாக்கி, மாணவர்களிடையே கொண்டுசேர்க்கிறேன். ஒலக்கூர் ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்ததன் பலன் இப்போது நன்றாகத் தெரிகிறது. தொடக்க வகுப்புகளிலேயே மொழியைச் சரியாகக் கற்றுக்கொடுத்துவிட்டால் அது அவர்களின் வாழ்நாள் முழுக்க உதவும்." எனக் கூறும் கனகலெட்சுமியின் குரல்களில் வழிகிறது நம்பிக்கை.

அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி.

  • தொடங்கியவர்

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

 

ஃபேஸ்புக்

சிறு வயதில் தொலைந்து போன அல்லது பிரிந்து போன பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகளைக் கண்டறிய இந்திய சினிமா ஏகப்பட்ட வழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஹை பிட்ச்சில் தொண்டைக் கிழிய பாடும் குடும்பப் பாட்டில் தொடங்கி டாலரை பாதியாய் வெட்டி ஆளுக்கு ஒரு பீஸை கழுத்தில் மாட்டிக்கொள்வது வரை நிறைய நிறைய ஆப்ஷன்ஸ். அந்தப் படங்களை எல்லாம் இன்று ரீமேக் செய்தால், காலத்துக்கு ஏற்ப மாற்றுவது சற்று சிரமம்தான். ஆனால், அதற்கு ஒரு ஐடியா தந்திருக்கிறது அமெரிக்காவில் நடந்திருக்கும் நிஜ சம்பவம் ஒன்று.

லாஸ் வேகாஸில் இப்போது வசிக்கும் பெல்கினின் சொந்த ஊர் தெற்கு கரோலினா. 10 வயது ஆகும் வரை பெல்கினுக்கு ’சாக்லெட் கிடைக்குமா’ என்பதைத் தவிர வேறு எந்தக் கேள்வியும் எழவில்லை. ஆனால், அதன் பின் ஒரு சந்தேகம் அடிக்கடி எழுந்திருக்கிறது. தனது அம்மாவிடம் “நான் மட்டும் ஏன் நம்ம குடும்பத்துல வித்தியாசமா இருக்கேன்?” எனக் கேட்டிருக்கிறாள். பெல்கினின் அம்மாவும் கண்ணாடியைக் கழட்டியபடி “உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு தங்கம்... நீ எங்க சொந்த மக கிடையாது. நாங்க உன்னை தத்தெடுத்தோம்” என அவர் கன்னத்தில் முத்தம்மிட்டிருக்கிறார்.

இந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தாலும், சொந்தப் பெற்றோரைக் காண பெல்கினுக்கு ஆசை வராதா? ஒரு வழியாக தனது அப்பா, அம்மாவைத் தேடி சந்தித்துவிட்டார். ஆனால், தனக்கு ஜேசன் என ஒரு சகோதரன் இருக்கிறான் என்ற தகவல் தாமதமாகத்தான் பெல்கினுக்குத் தெரிய வந்திருக்கிறது.

லோக்கல் ரெக்கார்டுகள் அனைத்தையும் அலசினார் பெல்கின். ஜேசனின் ஜாதகம் மட்டும் மிஸ்ஸிங். அவர் கழுத்தில் டாலரும் இல்லை. நினைவில் பாடலும் இல்லை. கையில் வளர்ப்புத் தந்தை வாங்கித் தந்த ஸ்மார்ட்போன் மட்டும்தான். ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் தான் அமெரிக்காவில் தெருவுக்குத் தெரு சென்று ’கனெக்ட்... கனெக்ட்’ எனப் பிரசாரம் செய்கிறாரே? அவர் மீது பாரத்தைப் போட்டு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். சென்டிமென்ட் பதிவு என்றால் கண்களைக் கசக்குவது உலக வழக்கம் தானே? 30,000 பேர் அதை ஷேர் செய்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்  ஃபேஸ்புக்

ஒரு வழியாக ஜேசனின் நண்பனின் கண்ணில் இந்த போஸ்ட் பட்டிருக்கிறது. அவர் ஜேசனை டேக் செய்ய, அங்குத் தொடங்கியது ஒரு ’லாலாலா’ பிஜிஎம். பெல்கினும், ஜேசனும் வீடியோ சாட் வழியே பாசத்தை ஊற்றியிருக்கிறார்கள். ஜேசன் இருக்குமிடம், பெல்கின் இருக்கும் இடத்தில் இருந்து தூரம். இப்போது பெல்கின் கையில் காசுமில்லை. தம்பியைக் கண்டறிய உதவிய இணையம் இதற்கு உதவாதா? கிரவுட்ஃபண்டிங்கை நம்பினார் கைவிடப்படார் என இந்தப் பக்கத்தை தொடங்கியிருக்கிறார்.

ஃபேஸ்புக்

இந்த இணையதளத்தில் யார் வேண்டுமென்றாலும் பணம் கேட்கலாம். அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அது தொழிலாக இருக்கலாம். பொழுதுபோக்காக இருக்கலாம். கண்டுபிடிப்பாக இருக்கலாம். மக்களுக்குப் பிடித்திருந்தால் பணம் தருவார்கள். இந்த ஆன்லைன் மொய் விருந்துக்கு (சின்ன கவுண்டர் சுகன்யா நினைவிருக்கிறதா) நல்ல வரவேற்பு. 5000 டாலர் லட்சியம். 4000 டாலர் நிச்சயம் என்ற நம்பிக்கையில் தொடர்கிறது பெல்கினின் சகோதரனைத் தேடும் பயணம். எப்படியும் பணம் சேர்ந்துவிடும். பாச மலர்களும் சேர்ந்து விடுவார்கள்.

வாழ்க ஃபேஸ்புக்... வளர்க க்ரவுட்ஃபண்டிங்.!

  • தொடங்கியவர்

பெண் மீன்களாக மாறிவரும் ஆண் மீன்கள்... திடுக் ஆய்வு முடிவு!

 

சாக்கடையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனங்களால் நன்னீரில் (Fresh Water) உள்ள ஆண் மீன்கள் டிரான்ஜெண்டராக மாறி வருவதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

transgender fish

 

 

இங்கிலாந்தில் உள்ள எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சார்லஸ் டெய்லர், ஏரி, குளங்களில் வாழும் மீன்கள் குறித்த அவரின் ஆய்வை கருத்தரங்கு ஒன்றில் சமர்ப்பித்தார். அவர் நடத்திய ஆய்வில் நன்னீரில் உள்ள ஆண் மீன்கள் பெண் மீன்களாக மாறி வருவதும், அவற்றில் சில முட்டையிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆண் மீன்களின் இந்த குணாதிசயங்களுக்கு காரணம் என்ன?

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரி, குளங்களில் கலக்கின்றன. அந்த கழிவு நீரில் கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்துள்ளதாம். இதனால் ஆண் மீன்களுக்கு பெண்  மீன்களின் குணாதிசயங்கள் ஏற்படுகிறது. கருத்தடை ரசாயனம் போன்று 200 வெவ்வேறு தன்மையுடைய ரசாயனங்களாலும் இந்த விளைவு ஏற்படுகிறதாம். சார்லஸ் டெய்லர் பிரிட்டனில் உள்ள நன்னீர் மீன்களை ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.  அதில் 20% ஆண் மீன்களுக்கு பெண் மீன்களின் குணாதிசயங்களும் இருந்துள்ளது.

இதுபோன்று பெண்ணாக மாறும் ஆண் மீன்களின் (transgender /intersex fish) விந்து தரம் குறைந்து வருவதாகவும், சில ஆண் மீன்கள் முட்டையிடுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

’பிரிட்டனில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அனைத்து நன்னீர் மீன்களுக்கும் இதே கதிதான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் மீன் இனத்தை காப்பாற்ற சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று சார்லஸ் டெய்லர் வலியுறுத்தியுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நவீன மூளை ஸ்கானர்

மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இவை மருத்துவர்களுக்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  • தொடங்கியவர்

டீ கடை டு இந்திய கிரிக்கெட் அணி! அசத்திய மகளிர் கிரிக்கெட் வீரர் ஏக்தா பிஷித்

 

கடந்த ஞாயிறு அன்று, இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது, ஏக்தா பிஷித் என்ற சுழல் மங்கை. 10 ஓவர் வீசி, வெறும் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

ekta_11237.jpg


ஏக்தா பிஷித், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை குண்டன் சிங் பிஷித், ராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்திலிருந்து 1988-ல் ஓய்வுபெற்ற அவர், அதன் பிறகு, பென்ஷன் தொகையில் வாழ்ந்துவந்தார். ஆனால், ஏக்தா பிஷித்தின் கிரிக்கெட் ஆசைக்கு இன்னும் அதிகமாக செலவு ஆவதால், கூடுதல் வருமானத்துக்கு டீ கடை ஒன்றைத் தொடங்கினார். குண்டன் சிங்கிற்கு ஏக்தா பிஷித்துடன் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள்.

ஏக்தா பிஷித் குறித்து  தந்தை குண்டன் சிங் பிஷித் கூறுகையில், "ஆறு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவரது விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்வதில்லை. பிஷித், 2011-ல் இந்திய அணியில் இடம்பிடிக்கும்போது, 'ஒருநாள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வார்' என்று நம்பினோம்" என்றார்.

தாயார் தாரா கூறுகையில், "என் கணவரது ஓய்வுத்தொகை ஆரம்பத்தில் போதாததால், டீ கடை ஒன்றை ஆரம்பித்தோம். ஏக்தா, இந்திய அணிக்குத் தேர்வான பின்னர், போதுமான வருமானம் வந்தது. அவருக்கும் ஓய்வுத்தொகை கூடியது. அதனால், டீ கடையை நிறுத்திவிட்டோம்" என்றார்.

ஏக்தா பிஷித், 2006-ம் ஆண்டு உத்தரகாண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2007 முதல் 2010-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச அணியிலும் விளையாடியுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது

 

பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150

 
பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது
 
பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

28 லட்சம் லைக்ஸ் அள்ளிய ரொனால்டோவின் சர்ச்சை புகைப்படம்!

ரியல் மாட்ரிட் அணியின் ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் நண்பருடன் நீச்சல் குளத்தில் நின்றிருக்கும் புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியதோடு லைக்ஸ்களையும் அள்ளியிருக்கிறது.

ரொனால்டோ

உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக இருக்கும் கால்பந்து ஆட்டத்தின் சூப்பர் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் தன் நண்பர் ஜோஸ் செமிடோவுடன் நீச்சல் குளத்தில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து அதற்கு இவ்வாறு கேப்ஷனும் கொடுத்திருந்தார். 'Perfect (Match) Black and white chocolate.' 

அவர் நிறத்தைக் குறிப்பிட்டு அவ்வாறு செய்திருந்த கமென்ட்டைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை நிறவெறியர் என்ற அளவுக்கு திட்டி தீர்த்திருக்கிறார்கள். மேலும், அந்தப் புகைப்படத்தில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில்தான் இருக்கிறீர்கள் என்றும் கமென்ட் செய்திருக்கிறார்கள். 

நெட்டிசன்களிடையே சர்ச்சையைக் கிளப்பினாலும் இந்தப் புகைப்படம் 28 லட்சம் லைக்ஸை அள்ளியிருக்கிறது

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வல்லமை எப்படிக் கிட்டுகின்றது?
 

image_45356bbf85.jpgநீங்கள் அன்றாடம் விழித்து எழுகின்றீர்கள். பின்னர் படுக்கைக்குப் போகும் முன்னர், பல காரியங்களைச் செய்கின்றீர்கள். 

நடக்கின்றீர்கள், ஓடுகின்றீர்கள், படிக்கின்றீர்கள்; உங்கள் அன்றாடக் கருமங்களை ஓயாமல் செய்து வருகின்றீர்கள். அப்படியாயின் இத்தனை காரியங்களையும் எப்படி உங்களால் செய்யக்கூடியதாக உள்ளது? இந்த வல்லமை எப்படிக் கிட்டுகின்றது. 

உணவும் நீரும் காற்றும் எமக்குச் சக்தியை ஊட்டுகின்றன. ஆயினும் எம்மை அதனூடாக இயக்கும் வல்லமை, எவரால் ஊட்டப்படுகின்றது என்று அனுதினம் சிந்திப்பதுண்டா?  

இந்தத் தேகத்தை அடங்க விடாமல் இயங்கச் செய்யும் ஆண்டவன் கிருபை மகத்தானது அல்லவா? பல நோய்களில் இருந்து எப்படி மீண்டு வருகின்றீர்கள் என நினைப்பதும் உண்டா?  

தெய்வ நம்பிக்கை விரிவானால், வல்லமை சக்தி உயர்ந்தோங்கும். உண்மை! 

  • தொடங்கியவர்

மோடிக்கு சைக்கிள் தவிர்த்து வேறு என்னவெல்லாம் பரிசாகத் தரலாம்? - ஒரு ஜாலி ஆய்வு!

 

உலகம் சுற்றும் பிரதமரான மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ஒரு சைக்கிளைப் பரிசாக அளித்திருக்கிறார். உள்ளூரில் சுற்றி வர மோடிக்கு சைக்கிள் பயனளிக்கும் என மார்க் நினைத்தாரோ என்னவோ? இப்படி சதா சர்வகாலமும் நமக்காக ரேடியோவிலும் ஃபாரீனிலும் உழைக்கும் மோடிக்கு உலகத் தலைவர்கள் என்னவெல்லாம் பரிசாகத் தரலாம்? லிஸ்ட் சின்னதுதான். படிச்சிடுங்க.

மோடி

செல்ஃபி ஸ்டிக்:

'மதராசப்பட்டினம்' கொச்சின் ஹனிஃபாவின் நிஜ வெர்ஷன்தான் மோடி. கேமராவைப் பார்த்தாலே பிறவி மாடல் போல போஸ் கொடுக்கத் தயாராகும் மோடிக்கு செல்ஃபி ஸ்டிக்கை விட சிறந்த கிஃப்ட் இருக்க முடியுமா என்ன? 'மீ வித் மித்ரோன்' என்ற கேப்ஷனோடு ஆட்டோமேட்டிக்காக இன்ஸ்டாவில் போஸ்ட் ஆகும் நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய செல்ஃபி ஸ்டிக்கை கொடுத்தால் பசுவைக் கண்ட பி.ஜே.பிகாரராய் அகமகிழ்ந்து போவார்.

அலாரம் க்ளாக்:

பேய்க்குப் பிடித்த நேரமான மிட்நைட் 12 மணிக்குத்தான் இப்போதெல்லாம் புதிய இந்தியா பிறக்கிறது. சராசரியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய இந்தியாவை பிறக்க வைக்கும் மத்திய அரசின் கடின உழைப்பை மிஞ்ச ஆளே இல்லை. இப்படி நேரங்காலம் தெரியாமல் உழைக்கும் மோடி அண்ட் கோவிற்கு பரிசாகத் தர எல்லா நாடுகளின் நேரத்தையும் காட்டும் அலாரம் க்ளாக் ஒன்றை பரிசாகத் தரலாம். இந்திய நேரப்படி சட்டங்கள் போடுவது போரடித்தால் கஜகஸ்தான் நேரப்படி சட்டங்கள் போட்டு விளையாடலாம்.

வார்ட்ரோப்:

'துபாய்ல எல்லாம் ஒருதடவை யூஸ் பண்ணதை இன்னொரு தடவை யூஸ் பண்ணமாட்டாங்களாம்' என்ற வைகைப் புயலின் தத்துவத்தைக் கனகச்சிதமாகக் கடைபிடிக்கிறார் மோடி. ஒரே ஒரு கோட் சூட்டுக்கே பத்து லட்சம் வரை செலவழிக்கும் அவர் மொத்தம் எத்தனை கோடி மதிப்புள்ள ஆடைகள் வைத்திருப்பார்? அவை அனைத்தும் பத்திரமாக இருக்க, பாச்சா உருண்டை போடப்பட்ட வார்ட்ரோப்களை யாராவது பரிசாகத் தந்தால் நலம்.

உலக உருண்டை:

'இந்தியப் பிரதமராக என் கால் படாத இடமே உலகத்தில் இருக்கக் கூடாது' என்ற உயரிய நோக்கத்தோடு மோடி செயல்படுவதால் அவர் டேபிளில் இருக்கும் உலக உருண்டையே தேய்ந்து போய்விட்டதாம். எனவே துண்டு துக்கடா நாடுகள், அவற்றில் இருக்கும் குட்டிக் குட்டித் தெருக்களைக் கூட பக்காவாக விவரிக்கும் வேர்ல்ட் மேப் ஒன்றை யாராவது பரிசளித்தால் மோடிக்கு வசதியாக இருக்கும். விட்டுப்போன நாடுகளுக்கு டூர் ப்ளான் செய்ய ஒரு ப்ளானரும் இலவச இணைப்பாகத் தரலாம்.

சொகுசு விமானம்:

ஆடிய டான்ஸரும் பாடிய சூப்பர் சிங்கரும் சும்மா இருப்பார்களா? பிரதமர் பதவி முடிந்த பிறகும் மோடி கண்டிப்பாக உலக நாடுகளை விசிட் செய்யத்தான் போகிறார். எனவே இப்போதே தொலைநோக்கு பார்வையோடு யோசித்து அவருக்கு ஒரு விமானத்தை பரிசளிக்கலாம். ஏற்கெனவே மல்லையா கடன் தொல்லையால் அவதிப்படுவதால் அவரிடம் விமானம் வாங்கலாம். விமானத்துக்கு விமானமும் ஆச்சு. கடன் தொல்லையும் தீர்ந்தாச்சு.

சோஷியல் மீடியா:

இதைவிட தி பெஸ்ட் கிஃப்ட்டை யாராலும் மோடிக்குத் தரவே முடியாது. 'மோடி ஒரு சூப்பர் ஹீரோ', 'மோடி தொட்டதெல்லாம் பொன்' என்பதை நிரூபிக்க அவரின் ரசிகர்கள் படாதபாடுபடுகிறார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும் கடைசியில் ஆடியன்ஸ், 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' என்பதால் மனம் தளர்ந்து போகிறார்கள் அவர் ரசிகர்கள். இந்தக் குறையை நீக்கப் பேசாமல் ஃபேஸ்புக்கையே மோடிக்குப் பரிசாகத் தந்துவிட்டால்? ட்ரம்ப் தலைமையிலான அரசு இதற்கு உடனே ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பாலே நடனத்தில் அசத்தும் 16 வயது மும்பை சிறுவன்!

  • தொடங்கியவர்

வைரலாகி வரும் கேரளா பாதிரியாரின் நடனம்!

சமீபத்தில், கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், ‘ஃப்ளாஷ் மாப்’பில்  (Flash Mob)  நடனம் ஆடிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

கேரளா


இந்த வீடியோ பதிவில், கொச்சி தேவாலய வாசலில், இளைஞர்கள் பலர்  நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, இந்த நடனக் குழுவுடன் கலந்துகொண்டு பாதிரியார் மெர்டன் டி சில்வா உற்சாகமாக நடனமாடியிருக்கிறார். இதனை ஷேனி ஆண்டனி என்பவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவை, கிட்டதட்ட  2.3 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். பாதிரியார் இளைஞர்களுக்கு இணையாக  நடனம் ஆடியதைப் பலரும் கண்டு ரசித்திருக்கின்றனர்.

 

பாதிரியார் நடனம் ஆடிய வீடியோ பதிவு: 

 

  • தொடங்கியவர்

1977 : பாகிஸ்­தானில் பிர­தமர் சுல்­பிகார் அலி பூட்­டோவின் அர­சாங்கம், ஜெனரல் ஸியா உல் ஹக் தலை­மை­யி­லான இரா­ணு­வத்­தினால் கவிழ்க்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

ஜூலை – 05

 

1594 : கண்டி இராஜ்­ஜி­யத்தின் மீது, பெடலோ லோபஸ் டி சௌஸாவின் தலை­மையில் போர்த்­துக்­கேய படைகள் படை­யெ­டுப்பை ஆரம்­பித்­தன. இப்­ப­டை­யெ­டுப்பு தோல்­வி­ய­டைந்­தது.


1811 : ஸ்பெய்­னி­ட­மி­ருந்து பிரி­வ­தாக வெனி­சூலா பிர­க­டனம் செய்­தது.


1865 : இரட்­ச­ணிய சேனை இங்­கி­லாந்தின் லண்டன் நகரில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

varalaru

1884 : கெம­ரூனை ஜேர்­மனி கைப்­பற்­றி­யது.


1945 : ஜப்­பா­னி­ட­மி­ருந்து பிலிப்பைன்ஸ் விடு­விக்­கப்­பட்­ட­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.


1950 : கொரிய யுத்­தத்தில் அமெ­ரிக்க மற்றும் வட­கொ­ரிய படை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது சமர் நடை­பெற்­றது.


1954 : பி.பி.சி. தொலைக்­காட்­சியில் முத­லா­வது செய்தி அறிக்கை ஒளி­ப­ரப்­பா­கி­யது.


1970 : கன­டாவின் டொரண்டோ நகரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 109 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1971 : அமெ­ரிக்­காவில் வாக்­கு­ரி­மைக்­கான வயது 21 இலி­ருந்து 18 ஆக குறைக்­கப்­பட்­டது.


1975 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ், விம்­பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்­றையர் போட்­டியில் சம்­பி­ய­னான முத­லா­வது கறுப்­பின வீர­ரானார்.


1977: பாகிஸ்­தானில் பிர­தமர் சுல்­பிகார் அலி பூட்­டோவின் அர­சாங்கம், ஜெனரல் ஸியா உல் ஹக் தலை­மை­யி­லான இரா­ணு­வத்­தினால் கவிழ்க்­கப்­பட்­டது.


1987 : தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்­பால் முத­லா­வது தற்கொலை குண்டுத் தாக்­குதல் யாழ். நெல்­லி­ய­டியில் நடத்­தப்­பட்­டது.


1996 : டோலி எனும் செம்­மறி ஆடு முதல் தட­வை­யாக குளோனிங் முறையில் உரு­வாக்­கப்­பட்ட முலை­யூட்­டி­யா­கி­யது.


1999 : தலி­பான்­களின் ஆட்­சி­யி­லி­ருந்து ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் பொரு­ளா­தார, வர்த்­தக தடை­களை விதித்தார்.


2004 : இந்­தோ­னே­ஷி­யாவின் முத­லா­வது நேரடி ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட்டது.


2009 : சீனாவின் ஸின்­ஜியாங் உய்குர் பிராந்­தி­யத்தில் பாரிய வன்­மு­றைகள் மூண்­டன.


2009 : விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யதன் மூலம் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் எனும் சாதனைக்குரியவரானார் ரோஜர் பெடரர்.


2012 : ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடமான ‘ஷார்ட்” லண்டனில் திறக்கப்பட்டது. இதன் உயரம் 310 மீற்றர்கள் (1020 அடி).

http://metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.