Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இலக்கியத்தின் மகிழ்ச்சியான தொன்மம் வைக்கம் முகமது பஷீர்! - நினைவுதினப் பகிர்வு

 
 

பஷீர்

“முன்னொரு காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ளத் தாய் தந்தை யாருமில்லாத ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் நிறைய கொலை பாதகங்களைச் செய்தவன். தனது இருபத்து நான்காவது வயதில் அவன்...”

“இடையிலே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திக்கிறேனே, நீங்க கதையைத் தொடங்கிவிட்டீர்களா?”

“ஆமாம்!”

“சரி இப்போ நீங்க சொல்லப்போறது யாரைப் பற்றி?”

“என்னைப் பற்றித்தான்!”

“அது சரி.”

“கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்?”

“ஆமாமா, நான் அதை அவ்வளவு முக்கியமா நினைக்கலே. அப்புறம், நான் என்ன நினைச்சேன்னா... நீங்க ஒரு...”

“பைத்தியக்காரன் என்று.?”

“உண்மையாகவே கேட்கிறேன். உங்க உடம்புக்கு இப்போ என்ன செய்யுது?”

“பைத்தியம்தான். வேறென்ன?”

- கதைசொல்லிக்கும் ஒரு வாசகருக்குமான உரையாடல் வடிவிலான பஷீரின் ‘சப்தங்கள்’ குறுநாவல் இப்படித் தொடங்குகிறது. தனது கதைகளும், கதைமாந்தர்களும், சொல்முறையும் எவ்வளவு சுவாரஸ்யமானவையோ அதைவிடக்கூடுதலான சுவாரஸ்யம் கொண்டவர் பஷீர் என்னும் கதைசொல்லி.

ஒருநாள் ‘திருச்சூர் வடக்கும்நாதர்’ பஷீரின் கனவில் வந்து “நன்றாகப் பழுத்த பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது” என்று சொல்ல, மறுநாள் நல்ல பாக்குகளை வாங்கிப் பொட்டலம் செய்து கோயில் சுவருக்குள் வீசியெறிந்தாராம். செல்லுமிடங்களுக்கெல்லாம் சைக்கிளில் தனது சாய்வு நாற்காலியையும் கிராமபோனையும் எடுத்துச் செல்கிறவர். தோட்டத்துப் பாம்புகளிடம் ‘என் மனைவி வருவதற்குள் ஓடிவிடுங்கள் என்று சொல்கிறவர். ஒரு கலைஞனுக்கே உரித்தான மெல்லிய பைத்தியத் தன்மையும், நாடோடி மனமும், பேரன்பின் ஆன்மிகக் குணமும்கொண்டவர் பஷீர்.

மினுக்கும் சிகையற்ற தலை, குட்டைக்கும் சற்று பெரிய மீசை, மூக்குக்கண்ணாடி, சுழலும் இசைத்தட்டுக்கு நளினம் செய்யும் பீடி புகையும் விரல்கள் என பஷீர் தமிழ் வாசகனின் மனதிலும் ஆழப் பதிந்தவர். ‘பால்யகால சகி’, ‘பாத்துமாயுடே ஆடு’, ‘மதிலுகள்’ போன்ற அவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ் வாசகப் பரப்பில் பெரிதும் கொண்டாடப்பட்டவை. தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகவே பின்னாள்களில் மாறிப்போனவர். 'Reading pleasure' என்று சொல்லப்படுகிற ‘வாசிப்பின்பம்’ தரக்கூடிய படைப்பாளர்களில் முதன்மையானவர். புதிதாக எழுத வரும் எழுத்தாளன் பொறாமைப்படும் சரளமான சொல்நடைகொண்டவர். நகைச்சுவை ததும்பும் விவரிப்பினூடே மிக ஆழமான தத்துவார்த்த விஷயங்களை எளிமையாகப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறவர். அவரது உக்கிரம் மிகுந்த பயண அனுபவங்களும், வறுமையும், அதன் வழியில் அவர் செய்துபார்த்த நூற்றுக்கணக்கான வேலைகளும் (கப்பல் ஊழியர், சமையற்காரர், சூதாட்டவிடுதி ஊழியர் இன்னும் பலவற்றோடு திருட்டும் உண்டு!), சந்தித்த மனிதர்களும், பெற்ற காயங்களும் சந்தோசங்களும்தான் அவரது கதையுலகம். பஷீர் ஒரு நாடோடி! பஷீர் ஒரு சூஃபி! பஷீர் மலையாளத்திண்டே ஓர் வல்லிய எழுத்துக்காரன்!

வைக்கம் முகமது பஷீர், 1908 -ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கமில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே விட்டை விட்டு ஓடிவிட்டவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுந்ததிரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பலமுறை சிறைதண்டனை அனுபவித்தார். பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியா முழுக்க தேசாந்திரியாக அலைந்து திரிந்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள்வரைகூட அந்தத் தேசாந்திரி பயணம் நீண்டது. இந்தக் காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சில வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கைக் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமியச் சூஃபியாகவும் வாழ்ந்தார். மலையாளத்தில் சிறுகதை, நாவல், உரைநடை என விரிவாக இயங்கி மலையாள இலக்கியத்தின் முக்கியமான முகமாக மாறினார். பத்மஸ்ரீ உள்பட பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். 1994 -ம் ஆண்டில் இதே நாளான ஜூலை 5-ம் நாளில் தனது 86வது வயதில் காலமானார். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்தியல்மீது நெருக்கம்கொண்டிருந்தவர், பின்நாள்களில் காந்தியக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு தனது இறுதிக்காலம் வரை அதில் நிலைகொண்டிருந்தார்.

பஷீரை வாசிக்கும்போது பஷீரின் குரலை, அவரது உடல்மொழியை, புன்னகையை ஒரு வாசகன் உணர்வான். பஷீர் அவரது எழுத்துகளில் தனது குரலை நிலைக்கச் செய்துவிட்டார். அதற்கு எப்போதும் ஓய்வில்லை. அழிவில்லை. இந்த இடத்தில் பஷீரின் ஆளுமையை நாம் உணர்ந்துகொள்ளத் துணையாக இரண்டு படைப்புகளை இணைத்துத் தர விரும்புகிறேன். ஒன்று, கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் பஷீர் குறித்த கவிதை. மற்றொன்று அவரைப் பற்றி எம்.ஏ.ரஹ்மான் இயக்கிய ‘பஷீர் த மேன்’ எனும் ஆவணப்படம். இவை அவரைக் கூடுதலாக  அறிந்துகொள்ள நமக்கு உதவும்.

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்

வைக்கம் முகம்மது பஷீர்

கேரளத்தின்டே சூஃபி

அவருக்கு ஆயிரம் வேலைகள் தெரியுமாம்

அவர் பார்த்த முதல் வேலை

குரங்குக்குப் பேன் பார்ப்பது

சாதரணக் குரங்கு இல்லை

பைத்தியம் பிடித்த

பெரும் மசைக் குரங்கு

இன்னொரு வேலை

சுமை கழுதைகளை மலையேற்றுவது

பஷீர் கழுதை ஒன்றை

இழுத்துக்கொண்டு கொண்டு போகும்

சித்திரம்

சிலுவை சுமக்கும் தேவகுமாரனுக்கு

நிகரானது

வேறொரு வேலை

குட்டிச்சாத்தான்களை கட்டிவைப்பது

பஷீர்

ஒரு குட்டிச்சாத்தனை கட்டிவிட்டு

இன்னொன்றை துரத்திக்கொண்டு

ஓடும் போது

முதல் சாத்தான்

தப்பித்துக்கொள்ளும்

நான்காவது வேலை

கொஞ்சம் கவித்துவமானது

பேய்களை சிங்காரித்து

மேடைக்குக் கூட்டி வருவது

இப்படியாக

பஷீர்

தன் ஆயிரமாவது வேலையில்

மூச்சிரைத்துக்கொண்டிருந்த போது

அல்லா அவர் முன் தோன்றினார்

மோனே

பஷீர்!

என்னை தெரியலையா?

பஷீர்

ஸ்டைலாய் பீடி வழித்துக்கொண்டே

சொன்னார்

தெரியாம என்ன அச்சனே!

நான் கண்ட

குரங்கும், கழுதையும்

குட்டிச்சாத்தானும் பேயும்

நீ தன்னே...

 

ஆவணப்படம்

 

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கியூபாவில் வரப்போகுது காதலர்களுக்கான ஸ்பெஷல் ஹோட்டல்!

காதலர்களுக்கென்றே ஸ்பெஷல் ஹோட்டல் வசதியை அறிமுகப்படுத்த கியூபாவின் தலைநகரான ஹவானாவில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 

hotel for lovers

 

 

ஏற்கெனவே இங்கு நடத்தப்பட்டு வந்த ‘பொசாடா’ என்ற காதல் விடுதிகள் பொருளாதார நெருக்கடி மற்றும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இதையடுத்து தனியார் ஹோட்டல் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வசூலித்தன. மூன்று மணி நேரத்துக்கு 5 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டுமாம். இது கியூபா நாட்டு மக்களின் சராசரி மாத வருமானத்தில் 6-ல் ஒரு பகுதியாம். இவ்வளவு அதிக வாடகையைப் பெரும்பாலான மக்கள் கொடுக்க முடியாமல் திணறியுள்ளனர்.

ஹவானாவில் இட நெருக்கடியாக இருப்பதால் விவாகரத்து பெற்றவர்கள்கூட தொடர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு தற்போது திட்டமிட்டுள்ள புதிய காதல் ஹோட்டல்கள் காதலர்களுக்கு வசதியாகவும் மலிவாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

காற்று மாசை சமாளிக்க சீனாவின் பிரம்மாண்ட வன நகரம்

லியுஸோ வன நகரம் ஆண்டுதோறும் சுமார் 10,000 டன்கள் கார்பன் டை ஆக்சைட் வாயுவை உறிஞ்சி 900 டன்கள் ஆக்ஸிஜன் வாயுவை உருவாக்கும்.
இந்த நகரத்தில் அமைய உள்ள அனைத்து கட்டடங்களின் முகப்பு பக்கங்களிலும் மரங்கள் மற்றும் செடிகள் அமைய உள்ளன.
அதனால், பள்ளிகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், அலுவலக கட்டடங்கள், சமூக இல்ல கட்டடங்கள் அனைத்திலும் மரங்கள் இருக்கும்.
இயற்கை சார்ந்த கட்டடங்களை இதற்கு முன்பு ஸ்டெஃபெனோ போரி ஆர்கிடெட்டி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

  • தொடங்கியவர்

சிறுவர்களுக்குக் குட்டி இளவரசனைப் பரிசளித்த அந்த்வான் து செந்த்-எக்சுபெரி! #AntoinedeSaintExupery

 
 

அந்த்வான் து செந்த் எக்சுபெரி

சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களின் பெயர்களை உலகின் எங்கு, யார் பட்டியலிட்டாலும் அதில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒருநூல் நூல் 'குட்டி இளவரசன்' (The Little Prince). பிரெஞ்சு மொழியில் 1943-ம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல் 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நாவலின் 80 மில்லியனுக்கு அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. சிறுவர் இலக்கியம் எழுத விரும்பும் எவர் ஒருவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நாவலாக குட்டி இளவரசன் பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புக்குரிய நூலை எழுதியவர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி. அந்த மகத்தான எழுத்தாளர் பிறந்த நாள் இன்று.

குட்டி இளவரசன் நாவல், ஒரு விமானி தான் பயணித்த விமானம் பழுதடைந்து, பெயர் தெரியாத கோள் ஒன்றில் விழுகிறான். யாருமே இல்லாத அந்தக் கோளில் இறந்து மடியப் போகிறோம் எனும் அச்சம் அவனைச் சூழ்கிறது. அந்த நேரத்தில் ஒரு சிறுவனின் குரல் விமானிக்குக் கேட்கிறது. பிறகு, விமானிக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையேயான பயணம் என்பதாக நாவல் விரியும். நாவலில் குறிப்பிடும் சம்பவம் எக்சுபெரி வாழ்வில் நடந்தது.

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஒரு விமானி. புதிய நிலப்பரப்புகளைத் தேடிச் சென்று, அந்தச் சூழலை அனுபவித்து பரவசமடைபவர். அப்படி ஒருமுறை சகாரா பாலைவனத்தின் மேல் பயணிக்கும்போது, விமானம் கோளாறாகிறது. அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களுடன் கதையையும் இணைத்து அருமையான நாவலாக்கிவிட்டார்.

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி 1900-ம் ஆண்டு, பிரான்ஸில் பிறந்தார். அவரின் சின்ன வயது ஆசைப்படியே விமானியாக ஆனார். நாவலாசிரியர், கவிஞர், விமானி, பத்திரிகையாளர் எனும் பல முகங்கள் இவருக்கு உண்டு. தனது 26-ம் வயதில் The Aviator எனும் இவரது சிறுகதை நூலை வெளியிட்டார். பின்னாளில் அமெரிக்காவின் நேஷனல் புக் விருது பெற்ற Wind, Sand and Stars எனும் நூலை 1939-ம் ஆண்டு எழுதினார்.

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி

எக்சுபெரியை புகழின் உச்சியில் ஏற்றிய The Little Prince எனும் சிறுவர் நாவலை 1943-ம் ஆண்டு வெளியிட்டார். இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு, இதே பெயரில் 1974-ம் ஆண்டு ஆங்கில மொழியில் திரைப்படம் வெளிவந்தது. டிவி சீரியல்களாக ஒளிபரப்பானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட அனிமேஷன் திரைப்படமாக்கப்பட்டது. பல்வேறு குழுக்களால் நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

உலகமே கொண்டாடும் அந்த நாவலை எழுதிய அடுத்த ஆண்டே தனது பயணத்தை முடித்துக்கொண்டார் எக்சுபெரி. 1944-ம் ஆண்டு இவர் மேற்கொண்ட விமானத்திலிருந்து திடீரென்று தொடர்பு அற்றுப்போனது. அதனால் அவரின் மரணம் இன்றுவரை மர்மமாகவே இருந்துவருகிறது.

குட்டி இளவரசன் எனும் மகத்தான நாவலைக் கெளவரவப்படுத்தும் விதத்தில் பிரெஞ்சு அரசு பணத்தில் குட்டி இளவரசன் ஓவியத்தை அச்சிட்டுள்ளது. இன்னும் பல விருதுகளை அள்ளியுள்ளது. இந்த நாவல் குழந்தைகளுக்கானது என்றாலும் பெரியவர்கள் படிக்கையில் புதுவித தரிசனத்தை உணரமுடியும்.

 

குழந்தைகளுக்கு புத்தம் புதிய உலகை தன் எழுத்துகளால் பரிசளித்துள்ளார் எக்சுபெரி. அவர் மறைந்தாலும் குட்டி இளவரசன் நாவலைப் படிக்கும்போது குழந்தைகள் அடையும் மகிழ்ச்சியில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.  இந்நாவலை பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் வெ.ஶ்ரீராம், மதனகல்யாணி ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். (க்ரியா பதிப்பக வெளியீடு)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தள்ளிப்போகாதே என் அன்பே!
இந்தோனேஷியாவின் புகிட் லாவாங் வனப்பகுதியில்தான் இந்த அன்பு பரிமாற்றம். பழம் கொடுத்த இளம்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட குரங்கின் முரட்டு அன்பால் அப்பெண்ணும், காதலரும் டென்ஷனாகிவிட்டனர்.   5 நிமிடம் நீடித்த இந்த மூர்க்கப்பிடி, பழம் கொடுத்ததும்தான் தளர்ந்திருக்கிறது.
10a.jpg
பழத்திற்குள் தோட்டா!
அமெரிக்காவின் கொலராடோ நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவகாடோ பழத்தை ஆசையாக வாங்கியுள்ளார் நிச்சே. வீட்டில் வந்து பழத்தை வெட்டினால் உள்ளே இருந்தது அசல் துப்பாக்கித் தோட்டா! மிரண்டு போனவரை, அணில் பழத்தை சாப்பிடும்போது, விவசாயி துப்பாக்கியால் சுட்டு விரட்டியிருப்பார் என ஆறுதல் சொல்லி பழத்தை சாப்பிட வைத்திருக்கிறார்கள்!

கடைக்குள் கார் பார்க்கிங்!
கொஞ்சம் சிப்ஸும், யோகர்ட்டும் அவசரமாகத் தேவை. பார்க்கிங்கில் காருக்கு இடம் தேடி பர்ச்சேஸ் பண்ண சோம்பல். தடாலடியாக நேராக கடைக்குள்ளேயே வந்து காரை நிறுத்திவிட்டார் அந்த மர்ம மனிதர். சீனாவின் ஸென்ஜியாங் பகுதி சூப்பர் மார்க்கெட்டில் நடந்திருக்கிறது இந்த அவசர பர்ச்சேஸ் விவகாரம். சிசிடிவியில் பதிவாகிய வீடியோதான் இன்று ஆன்லைனில் காமெடி ஹிட். 

www.kungumam.co.

  • தொடங்கியவர்

மாஸ்கோ நதியின் தூய்மையின் ரகசியம் என்ன?

கடந்த சிலவாரங்களில் மாஸ்கோவை தாக்கிய புயல் மற்றும் பெருமழையில் வேரோடு விழுந்த மரங்கள் பல ரஷ்யத் தலைநகரின் நதியில் மிதக்கத்துவங்கின.

ஆனால் ரஷ்ய தயாரிப்பான குப்பை அள்ளும் படகுகள் நகரின் நதியை தூய்மையாக வைத்திருக்கின்றன.
அத்தகைய படகு ஒன்றில் பயணித்தார் பிபிசி செய்தியாளர்.

அடிப்படையில் குப்பை அள்ளும் இந்த படகு மாஸ்கோ நதியின் நாற்பது மைல் நீளத்துக்கு மேலும் கீழுமாக பயணித்து நதியிலுள்ள குப்பைகளை சேகரிக்கிறது.

படகில் பயணிக்கும் பணியாளர்கள் நீண்ட கழியால் குப்பைகளை ஒன்றுசேர்க்கிறார்கள். அதை அப்படியே படகின் குப்பை அள்ளும் தட்டுப்பகுதிக்கு தள்ளுகிறார்கள்.

செடிகொடிகள் முதல் கார்கள் வரை பலதும் நதியில் மிதக்கும். உயிருள்ள மீன்களும் கூட சிக்கிக்கொள்ளும். சேகரமாகும் அனைத்தும் படகின் கண்டெய்னர் பகுதிக்குள் கொட்டப்படும்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஏழுடன் குப்பைகளை இந்த படகுகள் சேகரிக்கின்றன.

இதில் எல்லாவகையான பொருட்களும் இருக்கும். மரக்கிளை முதல் மதுபாட்டில்கள் வரை.

இந்த குப்பை அனைத்தும் இறுதியில் மாஸ்கோ நகரின் குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும்.

அதற்கு முன்பாக நதியில் தம் பொருட்களை தவறவிட்டவர்கள் வந்து கேட்டால் அவர்களுக்கு அவை அளிக்கப்படும்.

  • தொடங்கியவர்
‘கேவலமான அத்துமீறல்’
 

image_e70260e7de.jpgகேள்வி கேட்கும் உரிமை யாவருக்கும் உண்டு என்கின்றோம். ஆனால், கேட்பதில் வரைமுறைகள் உண்டு. கண்ணியம் குறைவாக, எண்ணியபடி பேசக்கூடாது. இது முறையற்ற அநாகரிகமான உரிமைமீறல். 

தவறு இழைத்தவராகக் கருதப்படுபவரை பழைய கோபத்தை மனதில் வைத்து, ஒருவர் வைதல் கேவலமான அத்துமீறல்தான்.  

பொது இடங்களில் தங்களது சாமர்த்தியத்தைக் காட்டுவதற்கு, யாரையாவது வம்புக்கு இழுத்து, எப்பவோ நடந்து முடிந்த கதைகளைப் புதுப்பித்து, அவர்கள் மீது பழிசுமத்துவது இழிவான குணமல்லவா? 

வாய் பேசும் போது, தன்னிலை மறந்து, சொற்களை அழுக்காக வெளியேற்றுவது, கேட்பவர்களுக்கு கட்டாயம் கோபத்தை உருவாக்கும்.  

அன்போடு கூடிய அறிவு; பேச்சைக் குறைத்து, நிறைவை மேம்படுத்தும்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஜூலை – 06

 

640 : அமீர் இபின் அல் அஸ் தலை­மை­யி­லான அரே­பிய படைகள், பைஸாண்டைன் ராஜ்­ஜிய படை­களை எகிப்தின் ஹேலியோ பொலிஸ் நக­ருக்கு அருகில் தேற்­க­டித்­தன. 


1044 : ஹங்­கேரி மீது ரோமப் பேர­ரசின் மன்னர் மூன்றாம் ஹென்றி,  படை­யெ­டுத்தார்


canada---Varalaru1189 : முதலாம் ரிச்சார்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.


1484 : போர்த்­துக்­கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்­ட­றிந்தார்.


1535 : சேர் தோமஸ் மோர், தேசத் துரோ­கத்­துக்­காக இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்­றி­யினால் தூக்­கி­லி­டப்­பட்டார்.


1560 : ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் எடின்­பரோ ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.


1785 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நாணய அல­காக டொலர் தெரி­வு­செய்­யப்­பட்­டது.


1854 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் குடி­ய­ரசுக் கட்­சியின் முத­லா­வது மாநாடு மிச்­சிகன் மாநி­லத்தில் நடை­பெற்­றது.


1885 : பிரெஞ்சு இர­சா­ய­ன­வி­ய­லாளர் லூயி பாஸ்டர், தான் கண்­டு­பி­டித்த தடுப்­பூசி மருந்தை விசர் நாய் ஒன்­றினால் கடி­பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறு­வனில் வெற்­றி­க­ர­மாகச் சோதனை செய்தார்.


1892 : பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தின் முத­லா­வது இந்­தியப் பிர­தி­நி­தி­யாக தாதாபாய் நௌரோஜி  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.


1939 : ஜேர்­ம­னியில் யூதர்­களின் தொழிற்­சா­லைகள் மூடப்­பட்­டன.


1944 : அமெ­ரிக்­காவின் கனெக்­டிகட் மாநி­லத்தில் கலை அரங்கில் ஏற்­பட்ட பெரும் தீயில் சிக்­கிய 168 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1947 : சோவியத் ஒன்­றியம் ஏகே-47 துப்­பாக்­கி­களை தயா­ரிக்க ஆரம்­பித்­தது.


ak-471957: அல்­தியா கிப்ஸன், விம்­பிள்டன் டென்னிஸ் சுற்­றுப்­போட்­டியில் சம்­பி­ய­னான முதல் கறுப்­பின பெண் ஆனார். 


1962 : இலங்கைப் பிர­தமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்­காவைக் கொலை செய்த குற்­றத்­திற்­காக சோமா­ராம தேரர் என்ற பௌத்த பிக்­கு­வுக்கு தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.


1964 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக மாலாவி பிர­க­டனம் செய்­தது.


1966 : மலாவி குடி­ய­ர­சா­கி­யது.


1967 : நைஜீ­ரியப் படை­யினர், தனி நாடு கோரிய பயாஃப்ரா பிராந்­தி­யத்­தினுள் நுழைந்து போரை ஆரம்­பித்­தனர்.


1988 : வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 167 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.


2005 : லண்டன் நகரம் 2012ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளை­யாட்­டு­களை நடத்தத் தெரி­வு­செய்­யப்பட்­டது.


2006 : 44 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இந்தோ – சீனப் போரின் போது மூடப்­பட்ட இந்­தி­யாவின் சிக்­கி­மையும் திபெத்­தையும் இணைக்கும் 'நது லா, பாலம் மீண்டும் திறக்­கப்­பட்­டது.


2013 : அமெ­ரிக்­காவின் சான்பி­ரான்­சிஸ்கோ விமான நிலை­யத்தில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் அவ்­வி­மா­னத்­தி­லி­­ருந்த 307 பேரில் மூவர் பலியானதுடன் 181 பேர் காயமடைந்தனர்.


2013 : கன­டாவின் கியூபெக் மாநி­லத்தில் எண்ணெய் ரயில் ஒன்று பாதை­யை­விட்டு விலகி தீப்­பற்­றி­யதால் 47 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 30 இற்கும் அதி­க­மான கட்­ட­டங்கள் தீக்கிரையாகின.

http://metronews.lk

  • தொடங்கியவர்

13 பேர் மட்­டுமே சனத்­தொகை : அமெ­ரிக்­காவில் தனி­நா­டாக சுய பிர­க­டனம்

அமெ­ரிக்­கா­வி­ல்  13  பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட  சிறிய பிராந்­தி­ய­மான மொலோ­ஸி­யா­வா­னது  தன்னை ஒரு தனி நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்டு   தனக்­கென  சொந்த நாணயம் ,  சட்­டங்கள், கட­வுச்­சீட்டு மற்றும் அடை­யாளம் என்­ப­வற்றை உள்­ள­டக்கி செயற்­பட்டு வரு­கி­றது.

Molossia.jpg

தனி­நா­டாக தன்னைத் தானே சுய பிர­க­டனம்  செய்து கொண்­டுள்ள அந்­நாட்டின் 40  ஆவது  ஆண்டு விழா  அண்­மையில் கொண்­டா­டப்­பட்­டது.

மேற்­படி பிராந்­தி­யத்தை அமெ­ரிக்காவும் ஏனைய நாடுகளும்  ஒரு நாடாக

அங்­கீ­க­ரிக்­காத போதும் அந்தப் பிராந்­திய மக்கள் அதைப்பற்றி சிறிதும் கவலைப் படாமல்  தமது பிராந்தியத்தை இறை மையுள்ள தனிநாடாகவே கருதுகின்றனர். 

அந்தப் பிராந்தியத்தை தனிநாடாக சுய பிரகடனம் செய்த  அதன் ஆட்சியாளரான கெவின் போக் (54  வயது),  தான் சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவராக விளங்குவதில் விருப்பம் கொண்டுள்ளதாக  தெரிவித்தார்.

சுய நாடாக பிரகடனம் செய்து கொண்ட போதும் மேற்படி பிராந்தியம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்துக்கு வரி செலுத்தி வருகிறது. அந்த வரியை   மொலோஸியா மக்கள் தம்மால் வழங்கப்படும்  வெளிநாட்டு   உதவியொன்றாகவே கருதுகின்றனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

முத்தங்களின் ஈரம் காயாமலிருப்பது ஒரு பாக்கியம்! #WorldKissDay

 

முத்தம் - வெகு சாதாரணமாக கடந்துவிட முடியாத வார்த்தை. திளைக்கும் காமத்தில் முத்தம் ஒரு சிறு அங்கம் என்பது அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் பதம். ஆனால் முத்தத்தில் காமமில்லை என்பதுதான் சகலத்தவரும் உணர வேண்டிய உண்மை.  KISS - a way to express love.

முத்தம்

முத்தம் - முழுநிலை 

முத்தமென்றால் சட்டென நினைக்கத்தூண்டுவது காதலின் முத்தங்கள்தான். துளியும் காமம் சேராத முத்தங்களையும் இங்கு ஆசீர்வதிக்கப்பட்ட காதலர்கள் பரிமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தையின் முதல் தொடுகையை எப்படி உணர்ந்தீர்கள் என்று நீயா நானா கோபிநாத் ஒரு தாயிடம் கேட்பார். 

"அந்தக் குட்டி சுண்டு விரல் என் மேல படறப்போ உலகத்துல இருக்க எல்லா கடவுளோட ஆசீர்வாதமும் ஒன்னா கிடைச்ச மாதிரி தோனுச்சு" - என்று அந்தத் தாய் பதில் சொல்லும்போது விழியோரத்தில் ஒரு நீர்த்துளி கசிந்திருக்கும். அத்தகைய முதல் தொடுகையின் அனுபவத்தைக் கொஞ்சம் கடன்வாங்கி உணர்ந்தால் முதல் முத்தத்தின் அனுபவம் கிடைக்கும்.

முதல் முத்தம்- காதலின் ஏற்பு (ரஞ்சித்-மெட்ராஸ்)

காதலின் மீதும் காதலனின் மீதும்  தனக்குள்ள பார்வைகளை எதிர்பார்ப்புகளை மற்றவரோடு ஒப்பிட்டு அவள்  கோபித்துக்கொள்ளும்போது அவன் மனநிலை அந்த அதிகாலை நேரத்தில் விடிய காத்துக்கொண்டிருக்கும் பகலின் மனநிலையை ஒத்திருக்கும்.

காட்சி தொடங்கி அவள் அழத்தொடங்க 'ஏன் இப்போ அழற' என்று அவன் குரல் உயர்ந்தவுடன் அதே அழுகையினூடே அதுநாள் வரை கட்டமைத்து வைத்திருந்த egoistic characterization சுக்குநூறாய் உடையத்தொடங்கும். அதனோடு உடைந்த கண்ணீரில் 'கல்யாணம் பண்ணிக்கிறியா' என்ற அவளது வார்த்தைகள் கண்ணீரோடு கீழிறங்கி நீளும்.

ஆச்சர்யம் கலந்த ஆசையின் மகிழ்வில் 'எப்போ' என்று அவன் கேட்க,  'இப்போ. வா தாலி கட்டு' என்று சொல்லும் அவள் பதிலில் இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கும்.  

அவள் தாலி கட்டச் சொல்லி முடித்ததும் அவளிடம் இன்ச்களில் நெருங்கி 'அப்போ ஒரு முத்தம் கொடு' என்று கேட்பான். அதுவரை கரையில் நின்று அலையை ரசித்த சிறுவன் மெது மெதுவாக தனது கால்களை நனைத்து ஒரு பிடி அலையை எனது கடல்தானே என்று கையில் ஏந்துவது போல இருக்கும் அந்த முதல் முத்தம் கேட்கும் நொடி.

ஏனென்றால் முதல் முத்தம் ஒரு பொக்கிஷம்.

இடைநிலை முத்தம் - பிழைத்தலின் சுகம் (மணிரத்னம் - அலைபாயுதே) 

முத்தம் - அலைபாயுதே

"சக்தி முழிச்சுக்கோ முழிச்சுக்கோ" என்று உயிர் தேடும் கார்த்திக்கிடம் உயிர் பிழைத்த சக்தி சொல்லும் காதல் காதலிப்பவர்கள் அனைவரும் நனையவேண்டிய மழை
சக்தி : பயந்துட்டியா 
கார்த்திக் : உயிரே போச்சு 
சக்தி : பொண்டாட்டி பொயிட்டா ஜாலியா இருக்கலாம் பாத்தியா.........., 
கார்த்திக்: ஐ லவ் யூ 
கார்த்திக் : எனக்காக என்ன வேணாலும் செய்வியா 
சக்தி : ஐ லவ் யூ 
கார்த்திக் : எனக்காக ட்ரைன்ல இருந்து குதிப்பியா 
சக்தி : ஐ லவ் யூ
கார்த்திக் : அப்டினா என்ன மீன் பண்ற 
சக்தி : தெரியாது.. ஆனா... ஐ லவ் யூ 
இந்த உரையாடல் முழுவதுமே ஐ லவ் யூக்கள் பதிலைச் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் காட்சியில் சக்தி சொல்லும் ஒவ்வொரு ஐ லவ் யூக்கும் எதிர்வினையாக சக்தியின் தோளில் கார்த்திக்கின் முத்தம் பதிந்துகொண்டே இருக்கும். அவனுக்கான காதலை அவளுக்கான பரிதவிப்பை ஒவ்வொரு முத்தமும் சொல்லும். இங்கு கண்ணீரை மீறிய முத்தங்கள் இறுக்கத்தில் இணைய வைத்திருந்தன.

கடைசி முத்தம் (1) - பிரிவின் துயர் (வைரமுத்து - பார்த்தாலே பரவசம்) 

காதலில் பிரிவென்பது நிரந்தரமல்ல. மரணம் கூட காதலில் பிரிவல்ல. செல்லச் சண்டைகளிலும் சிதறும் கோபங்களிலும் ஏற்படும் பிரிவுகள் காதலைக் கூர் செய்யும் ஆயுதங்கள். பிரிவின் இரு திசைகளிலிருந்து அதை அப்படியே மீட்டிச்செல்ல நலமறிய ஏங்கிக்கொள்ளலாம். காதலுக்காக ஏங்குவதை விட காதலியின் ஞாபகங்களோடு ஏங்குவது சுகம்.   

கன்னம் ரெண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா? 

பிரிந்து சென்றவளின் முகத்துடன் அன்று பதித்த கடைசி முத்தமும் கூட அவனுக்கு ஞாபகமிருக்கிறது. சர்வசாதாரணமாக மிஸ் யூ என்று சொல்லிவிடுவதைவிட இப்படிப் பிரிந்து வாடும்போது கடைசி முத்தத்தின் ஞாபகம் கலந்திருப்பது வலிநிகர் மென்மை. காரணம் பிரிவில் கொடுத்த முத்தமென்பது வெறும் செய்கையல்ல. சொல்லிவிட முடியாத சோக உணர்வின் வெளிப்பாடு. 

கடைசி முத்தம் (2) - பயணமுடிவு (கே.பாலச்சந்தர் - புன்னகை மன்னன்) 

முத்தம் - பயண முடிவு

காதல் கைகூடாத காதலர்கள் பிரிவை யாசிக்காமல் மரணத்தினை தேர்வு செய்கிறார்கள். "இந்தப் புனிதப் பயணம் இன்னுமொரு சரித்திரம்" என்று கல்லறைக்காவியம் எழுதி வைத்துவிட்டு தங்கள் பயணத்தின் இறுதி நொடிகளை வாழ்ந்து களிக்கிறார்கள். 

'கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே' - முத்தங்களின் ஈரம் காயாமலிருப்பது ஒரு பாக்கியம். அந்த ஈரங்களில் காதலும் காயாது உயிர் மறைந்தாலும் மரணிக்காதிருக்கும் . மலையுச்சியில் நின்றுகொண்டு "உங்க favorite புன்சிரிப்ப நான் பாக்கணும் சேது. கடைசியா நான் பாத்தது அதுவாத்தான் இருக்கணும்" என்று கன்னத்தைப்பற்றி அவள் கேட்கும்போது அவனது கன்னத்தில் மீதமிருந்த ஈரத்தை அவள் உணர்ந்திருப்பாள். அழுகைக்குள் பொதிந்திருந்த சிரிப்பு உடைந்தும் 1,2,3 என்ற countdownஇல் நிகழ்ந்தது மரணம் மட்டுமல்ல அவர்களது கடைசி முத்தமும்தான். 

முத்தங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. பின்னொரு நாளில் நினைக்க, ரசிக்க, சிரிக்க, கண்ணீர் கசிய என அனைத்துக்கும் ஏதேனுமொரு முத்தம் அவசியம்.

http://www.vikatan.com

Bildergebnis für world kiss day

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ரியல் லைஃப் ஜோடி அபிஷேக்-ஐஸ்வர்யா இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். பாலிவுட்டின் மெர்சல் இயக்குநரான அனுராக் காஷ்யப் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். இயக்குநர் புதுமுகம். இப்போதைக்கு `குலாப் ஜாமுன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் அனுராக். ச்சோ ச்வீட்ட்ட்!

p38a.jpg

விக்ரம் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’, படப்பிடிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமோடு பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்க இருக்கிறது. விக்ரமுக்கு இணையான பாத்திரத்தில் நடிக்கிறார் பார்த்திபன். ‘பெல்லி சூப்லு’ நாயகி ரீது வர்மா, விக்ரமுக்கு ஜோடி. இன்னொரு நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்கள் தவிர, ராதிகா, சிம்ரன் என லிஸ்ட் நீள்கிறது... அவ்ளோதானா இன்னும் இருக்கா?

p38b.jpg

மெஸ்ஸியும் ரொனால்டோவும் இந்த வாரம் வெவ்வேறு காரணங்களுக்காகச் செய்திகளில் நிறைந்து இருந்தனர். கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி காதலி ஆண்டோலினாவோடு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பல ஆண்டுகளாக லிவிங் டு கெதரில் இருந்தார். ஒருவழியாக இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறார். கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கெனவே கிறிஸ்டியானோ ஜூனியர் எனும் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில்தான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியிருக்கிறார் ரொனால்டோ. அம்மா யார் என்பது வழக்கம்போலவே சஸ்பென்ஸ். இதற்கிடையே ரொனால்டாவின் காதலி ஜார்ஜியா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவலும் வந்திருக்கிறது. நலம் வாழ எந்நாளும் நம் வாழ்த்துகள்...

p38c.jpg

ன் ஒவ்வொரு படத்திலும் புதுமையான பின்னணிகளைப் பிடிக்கிற இயக்குநர் விஜய்மில்டன், அடுத்த படத்திற்கான கதையைத் தயார் செய்துவிட்டார். இந்த முறை கூடைப்பந்து விளையாட்டுதான் படத்தின் களம். ஜூலை 10-ல் ஷூட்டிங்காம். இப்படத்தில் முழுக்க முழுக்க நடிக்கவிருப்பது புதுமுகங்கள்! வெல்டன் மில்டன்!

மோடியின் கண்கள் இப்போது மேற்கு வங்கத்தில். மம்தா பானர்ஜியின் பலத்தை அசைத்துப் பார்த்துவிடவேண்டும் என்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். வெறும் பேப்பரில் மட்டுமே நிறுவனங்களைத் துவங்கி, கோடிக்கணக்கில் ஹவாலா பணப் பரிமாற்றம் செய்துள்ளார் என்கிற வழக்கு வெகு விரைவில் மம்தாவின் நெருங்கிய உறவினர் மீது பாய உள்ளது. இந்தப் பணப் பரிமாற்ற விவகாரத்தில், மம்தாவுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தொடரலாம். பக்கா பா.ஜ.க!

p38d.jpg

பிள்யுடபிள்யுஇ (WWE) போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ளப்போகும் முதல் மல்யுத்த வீராங்கனை, கவிதா தேவி. ஜூலை 13 மற்றும் 14-ம் தேதிகளில் அமெரிக்காவில் நடக்கும் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் கவிதா தேவி கலந்துகொள்கிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மல்யுத்தப் பயிற்சி எடுத்துக்கொண்டது, முன்னாள் WWE சாம்பியனான கிரேட் காளியிடம். பஞ்சாப் சிங்கம்டா! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சச்சின் முதல் பேபி டிரைவர் வரை... மிஸ் பண்ணக் கூடாத பாலிவுட், ஹாலிவுட் படங்கள்!

கவனிக்கும்படியான படங்கள், அறிமுக இயக்குநர்களின் படங்கள் என, கடந்த ஆறுமாதங்களில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ் போன்றே மற்ற மொழிகளிலும் எக்கச்சக்கப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் எதெல்லம் தவறவிடக்கூடாது என்ற லிஸ்ட் இதோ...

ஹாலிவுட்

ஸ்ப்லிட்:

ஒரே மனிதனுக்குள் இருக்கும் வெவ்வேறு நபர்கள் அல்லது ஆளுமைகள். இந்த பாதிப்பு உள்ளவன்தான் படத்தின் நாயகன் கெவின் வென்டல் க்ரம்ப். பளிச்செனப் புரியும் படி சொன்னால், அந்நியன் விக்ரம் போன்று. அந்நியனில் விக்ரமே மூன்று பேராய் நடந்து கொள்வது போல இதில் கெவின் இருபத்தி மூன்று பேராய் நடந்து கொள்ளும் பாதிப்பு கொண்டவன். இந்த ப்ளாட்டை மையமாக வைத்து வந்த படம் ஸ்ப்லிட். ஜேம்ஸ் மெகாவாயின் நடிப்பு மிரட்டும். படம் புதுவிதமான அனுபவத்தைத் தரும்.

லோகன்:

படங்கள்

வுல்வரின் கதாபாத்திரத்திற்கான செம சென்ட் ஆஃப் படம் லோகன். எக்ஸ் - மேன் சீரிஸில் பலருக்கும் பிடித்தது ஹூ ஜேக்மேன் நடித்த வுல்வரின் பாத்திரம். அவரின் எமோஷனல் பக்கங்களைப் புரட்டும்படியாக அமைக்கப்பட்டிருந்தது படத்தின் கதை. வுல்வரின், அவனது டி.என்.ஏவிலிருந்து உருவாக்கப்பட்ட மியூட்டென்ட்டான லௌரா மற்றும் அவள் போலவே மியூட்டன்ட்களாக உருவாக்கப்பட்ட குழந்தைகளை எப்படி பத்திரமாக ஈடனுக்கு அனுப்புகிறான் என்பதே கதை. படத்தில் ஹூ ஜேக்மேனையே தூக்கி சாப்பிடும் பெர்ஃபாமென்ஸ் தந்து மிரட்டியிருப்பார் லௌராவாக நடித்திருந்த டேஃப்னி கீன். 

ஃபார்ஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்:

சைஃபர்  என்ற டெக்கி வில்லியின் பிடியில் சிக்குகிறார் டோம்னிக்காக நடித்திருக்கும் வின் டீசல். அவள் சொல்லும் வேலையை முடிக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறாள். அவளுக்காக தன் நண்பர்கள், காதலி என அனைவரையும் பகைத்துக் கொண்டு அவர்களிடமே மோதுகிறான். அவள் பேச்சை எதற்காக வின் டீசல் கேட்கிறார், கடைசியில் தன் டீமோடு மீண்டும் இணைந்து எதிரியை பழி வாங்குகிறாரா என்ற சேஸ் ரேஸ் கதைதான். முந்தைய பாகங்கள் போல கார்கள் பறக்கிறது, அதிரடி சேஸிங் நடக்கிறது என பக்கா என்டெர்டெய்னர். 

வொண்டர் வுமன்:

மனிதர்களின் பார்வையில் இருந்து விலகி, தெமிஸ்கீரா தீவில் வாழ்கிறார்கள் அமேசான்ஸ். ஆரீஸை அழிப்பது மட்டுமே, தன் நோக்கமாகக் கொண்டு வளர்கிறாள் இளவரசி டயானா (கேல் கேடாட்). அங்கு இருக்கும் ஆயுதங்களால் தான் ஆரீஸை அழிக்க முடியும் என உறுதியாக நம்புகிறாள். ஜெர்மன் படையிடமிருந்து தப்பிவரும் ஸ்டீவை காப்பாற்றி, ஒருகட்டத்தில் அவனுடன் தெமிஸ்கீரா தீவில் இருந்து கிளம்பி நகரத்துக்குப் போக வேண்டியதாகிறது. பின்பு அவள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆரீஸை அழித்தாளா என்பதுதான் கதை. படம் முழுக்க வொண்டர் வுமனாக அசத்தியிருப்பார் கேல் கேடாட்.

பேபி டிரைவர்:

ஒயிட் காலர் வில்லன் டாக்கிடம் டிரைவராக வேலை செய்கிறார் பேபி. சிறுவயதில் பேபிக்கு ஏற்படும் ஒரு விபத்தால், அவனுக்கு காது இரைச்சல் `டின்னிடஸ்' (tinnitus) ஏற்படுகிறது. ஒவ்வொரு திருட்டுக்கும் தன் டீமை மாற்றிக்கொண்டே வருகிறார் டாக். ஆனால், காரின் டிரைவர் மட்டும் எப்போதுமே பேபிதான். இந்த திருட்டு கும்பலில் போலீஸிடம் யார் சிக்கினார்கள்; யார் தப்பினார்கள் என்பதை அதிரடி வேகத்தில் இசையுடன் சொல்லியிருக்கிறது `பேபி டிரைவர்'. படத்தின் சவுண்ட் டிசைனிங், நரேட்டிவ் ஸ்டைல் என ஹாலிவுட்டே கொண்டாடித்தீர்த்திருக்கிறது படத்தை. 

பாலிவுட்

ட்ராப்டு:

மும்பையில் வசிக்கும் மிடில் க்ளாஸ் இளைஞன் சொரியா. அவனுக்கு உடன் பணிபுரியும் நூருடன் காதல். நமக்குன்னு ஒரு வீடு வேணும் என காதலி கண்டிஷன் போட ஒரு அபார்ட்மென்ட்டில், 35 வது மாடியில் ஒரு பிளாட்டை, ஒரே நாளில் வாடகைக்கு பிடிக்கிறான். மாநகராட்சியின் முழு அனுமதி கிடைக்காததால், அந்த அப்பார்ட்மென்டில் ஒருவர்கூட வசிக்கவில்லை. இவர் மட்டுமே அந்த பிளாட்டில் குடியேறுகிறார். மறுநாள் காலை, வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது, எதிர்பாராத விதமாக காற்றடித்து, சாவியுடன் இருக்கும் கதவு வெளிப்புறமாக மூடிவிட, உள்ளே மாட்டிக் கொள்கிறான் சௌரியா. பிறகு என்ன ஆகிறது சௌரியா வெளியேறினானா என்பதுதான் ட்ராப்டு படத்தின் கதை.

பூர்ணா:

தெலுங்கானா பகுதியில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பூர்ணா. பூர்ணாவின் திறமை, படிப்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவளின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணாவின் தந்தை. அந்த ஊருக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரி பூர்ணாவின் மலை ஏறும் திறமையை அடையாளம் கண்டு அதை ஊக்குவிக்கிறார். கிராமம் தாண்டவே சிரமப்படும் சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய நிஜ சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் ராகுல் போஸ். திரைவிழாக்களிலும், விமர்சன ரீதியிலும் பலப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது படம்.

இந்தி மீடியம்:

மிட்டா மற்றும் ராஜ் பத்ரா தம்பதி அவர்களது மகள் ப்ரியாயுடன் டெல்லியின் சாந்தினி சௌக் பகுதிக்கு வருகிறார்கள். மகளை இங்லிஷ் மீடியம் பள்ளியில் சேர்ப்பதுதான் தங்கள் நிலையை மேம்படுத்தும் முதல் அடியாக நினைக்கிறார்கள். அவர்கள் செல்லும் அந்தப் பிரபலமான பள்ளியில் இந்தி பேசும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. அதன் பின் நடக்கும் சட்டையரிகல் காமெடிதான் படம். கல்விமுறையின் குறைபாடுகள் பற்றி பிரம்பால் அடித்தபடி சுட்டிக் காட்டும் படம் பலத்த வரவேற்பு பெற்றது.

எ டெத் இன் த கன்ஜ்:

பீகாரில் இருக்கும் மக்கல்ஸ்கீகஞ் என்ற காட்டுக்குள் உள்ள வீட்டிற்கு, ஒரு குழு செல்கிறது. புது வருடத்தை அங்கு கொண்டாடுவது அவர்கள் திட்டம். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம், ஒரு கணவன் மனைவி, ஒரு சிறுமி, கணவனின் நண்பர்கள், ஒரு பெண், தந்தையை சமீபத்தில் இழந்த ஒரு இளைஞன், புத்தாண்டு கொண்டாட்டம், ஒரு கொலை இவைதான் படம். நடிகை கம் இயக்குநர் கொங்கனா சென் சர்மாவிடமிருந்து இப்படி ஒரு படமா என பாலிவுட்டே மிரண்டு நின்றது. படம் பேசியிருந்த நுட்பமான உணர்வு சார்ந்த விஷயம் மிக அழுத்தமான ஒன்று.

சச்சின்:

ஆவணப்படம்தான் என்றாலும் தவிர்க்கவே முடியாத பதிவு இந்த 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்.’ சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஜாம்பவானின் வாழ்க்கை. பாட்டி சொல்லும் கதைகளைப் போல, 'ஒரு ஊர்ல ஒரு சச்சின்...' பாணியில் தொடங்கும் கதையைக் கேட்க ஸாரி... பார்க்கத் தொடங்கினால், படம் முடியும்போது, 'ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல 'ஒரே ஒரு சச்சின்தான்!' என கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சிலிர்க்கும்!  இது சச்சினின் சுயசரிதை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரலாகும் ரஜினியின் வீடியோ!

'காலா' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை மும்பையில் முடித்துவிட்டு நடிகர் ரஜினி, அங்கிருந்து கடந்த 29-ம் தேதி அமெரிக்கா சென்றார்.  ரஜினி தனது மருத்துவ சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா செல்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அவருடன் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார். 

ரஜினி

இந்நிலையில்,  அமெரிக்காவில் உள்ள கேசினோவில் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது. இந்தப் புகைப்படத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ரஜினியின் சொத்துகள் எங்கிருந்து வந்தது என்று அமலாக்கத்துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

 

 

தற்போது ரஜினியின் செல்ஃபி வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினி, இருவர் மட்டும் அமரக்கூடிய விலை உயர்ந்த காரில் அமர்ந்துகொண்டு, செல்ஃபி வீடியோவை எடுப்பதுபோல் உள்ளது. ரஜினி, அப்பாவி போல் கேள்வி கேட்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கமெண்ட்டுகளை கடந்து  வைரலாகி வருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது

 

ஏகே-47 தானியங்கி துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது. ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் தயாரிக்கப்பட்டது. 870 மிமீ நீளம் கொண்ட இந்த துப்பாக்கியில் 7.62x39 மிமீ கொண்ட தோட்டாக்களை பயன்படுத்தலாம். இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள்

 
 
 
 
சோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது
 
ஏகே-47 தானியங்கி துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது. ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன்  தயாரிக்கப்பட்டது.

870 மிமீ நீளம் கொண்ட இந்த துப்பாக்கியில் 7.62x39 மிமீ கொண்ட தோட்டாக்களை பயன்படுத்தலாம்.

இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சேர்க்கப்பட்டது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் உலகப்போர் முடிவுற்ற பின்தான் பயன்பாட்டுக்கு வந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

”பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்....?!" - நெகிழும் இளையராஜா

 

கம்பீரக் குரலும், பல தலைமுறைகளின் கற்பனைத்திறனைத் தூண்டிவிடும் இசைத்திறனும்கொண்ட மூத்த இசை அறிஞர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. `திருவிளையாடல்'  படத்தில் `ஒரு நாள் போதுமா...', `கவிக்குயில்' படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்...', `நூல்வெளி' படத்தில் `மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...' இப்படி இன்னும் ஆயிரமாயிரம் பாடல்களின் மூலம் சென்ற ஆண்டு வரை இசையில் நம்மைத் திளைக்கச்செய்தவர். பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது 2005-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. உலகம் முழுவதும் 25 ஆயிரம் இசைக் கச்சேரிகளை அரங்கேற்றி, தன் குரலாலும், இசை ஞானத்தாலும், இசை சார்ந்த கண்டுபிடிப்புகளாலும் பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீதக் கலாநிதி, சங்கீதக் கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி போன்ற பல விருதுகளைப் பெற்றார். மேலும், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகருக்கான தேசிய விருது ஆகியவை இவருக்கு இரண்டு முறை கிடைத்துள்ளன. இசை குறித்த இவரது ஆய்வுகள்தான் இவரின் வாழ்நாள் சாதனைகள். தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெரும் புலமை உடையவர். இசையைத் தவிர்த்து `பக்தப்பிரகலாதன்' படத்தில் `நாரதர்' கதாபாத்திரமாக மாறி நடிப்பிலும் தன் ஆர்வத்தை வெளிக்காட்டியவர். 

பாலமுரளி கிருஷ்ணா

400-க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை 72 மேளகர்த்தாக்களைக்கொண்டு அரங்கேற்றியது, பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்தது, சந்த ஒலிகளைக் கோவையாக்கித் தாள சங்கிலியில் ஸ்ருதி பேதத்தைக் கொண்டுவந்தது, தில்லானாக்களில் சங்கதிகளைப்  புதுப்பித்தது மற்றும் புதிய தாள முறைகளை உருவாக்கியது போன்ற இவரின் இசைப் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். முதன்முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புதுக் கீர்த்தனைகளைப் பாடி, இசைக் கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசை மேதையாகி, இசை உலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா

 இவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்கிற இடத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்தொண்டு புரிந்த மகாகலைஞரின் தாய் சூர்ய காந்தம்மாள், வீணை வாசிப்பதில் வல்லுநர். தந்தை பட்டாபி ராமய்யா, சிறந்த இசைக் கலைஞர். பாலமுரளி கிருஷ்ணாவுக்கு ஐந்து வயதிலேயே இசை ஆர்வம் வந்துவிட்டது. அப்போதே ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி நிகழ்த்தும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன. இசை ஆர்வம் காரணமாக, பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் நிலைமை இவருக்கு. இப்படிப்பட்ட இசை மேதையின் 87-வது பிறந்த நாள் இன்று. 

இதை முன்னிட்டு நேற்று, ஜூலை 5-ம் தேதி, `பாலமுரளி நாதா மஹோத்சவ் - 2017', சென்னை நாரதகான சபாவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இளையராஜா, பத்மா சுப்பிரமணியம், பி.உன்னிகிருஷ்ணன், க்லெவ்லேன்ட் சுந்தரம், சுதா ரகுநாதன், நல்லி குப்புசாமி மற்றும் கார்த்தி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். `பாலமுரளி கிருஷ்ணா மெமோரியல் டிரஸ்டை இளையராஜா தொடங்கிவைத்து, `பாலமுரளி தேசிய விருது' - 2017-ஐ `முரளி நாதா லகரி' என்ற பட்டத்துடன் டி.வி கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும், 24 பாடகர்கள் மற்றும் அவரது சீடர்களால்  முதன்முறையாக `பாலமுரளி பஞ்சரத்தினம்’  இசைக்கப்பட்டது. 

HBDBalaMuraliKrishna

 இந்த ட்ரஸ்ட் சார்பில்  இசை பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும் எனவும், இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் 'பாலமுரளி தேசிய விருது'  வருடா வருடம் வழங்கப்படும் எனவும் இசைக்கவி ரமணனால் அறிவிக்கப்பட்டது. டாக்டர். கே.கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் பாடிய 'பாலமுரளி பஞ்சரத்தினம்' பாடல் சிடியை டாக்டர். பத்மா சுப்ரமணியம், சுதா ரகுநாதன் ஆகியோர்  இணைந்து வெளியிட்டனர். 

சுதா ரகுநாதன் பாலமுரளி கிருஷ்ணாவைப் பற்றிக் கூறுகையில், 'நான் அவரைப் பார்க்கச் செல்லும் ஒவ்வொருமுறையும் அவர் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும்,  ‘வா...சுதா’ என்று புன்னகைத்தபடி  கூப்பிடுவார். ஒருமுறை ரெக்கார்டிங்கிற்காக அவரது ஸ்டுடியோவுக்குச் சென்றபோது பாடல் வரிகளைக் கொடுத்து என்னைப் பாடச் சொன்னார். எனக்கு என்ன முயன்றும் அவர் முன் சரிவர பாட வரவில்லை.  ‘பாடு சுதா...உனக்கா பாட்டு பாட சொல்லிக்கொடுக்கணும்? நான் வேணும்னா ஒரு முறை பாடிக் காட்டட்டுமா?’ என்றபடி ஸ்ருதியையும், தாளத்தையும் சொல்லிக்கொடுத்தார். கூடவே பாடியும் காட்டினார். அப்போதும் எனக்கு ஒன்றுமே வரவில்லை. கேசட்டில் அவரின் குரலைப் பதிவு செய்து வீட்டுக்கு சென்றேன்.  திரும்பத் திரும்ப அவர் பாடியதைக் கேட்டுத்தான், அந்தப் பாடலைப் பாடக் கற்றுக்கொண்டேன்" என்று கூறினார். 

பாலமுரளி கிருஷ்ணாவைப் பற்றி நெகிழ்ந்து பேசினார் இளையராஜா. ‘பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்  இந்த உலகத்தில் பிறக்க முடியாது’ என்று புகழ்ந்த அவர்  ‘பால முரளி லகரி’ பட்டத்தை வென்ற டி.விஜியைப் பற்றிக்கூறுகையில், "டி.விஜிக்கு உலகம் முழுவதும் சீடர்கள் இருப்பார்கள். ஆனால் என்னைப்போல் ஒரு சீடனை என்றைக்காவது நீங்கள் பார்த்திருப்பீர்களா? காலையில் 4 மணிக்கும், இரவு 12 மணிக்கும் எப்போது நீங்க வீட்டில் இருப்பீர்கள் என்று உங்களைத் தேடி வந்து பாட்டு கற்றுக்கொண்டேன். டி.வி.ஜியும் எனக்காக காலையில் குளித்த ஈரத் தலையோடு காத்துக்கொண்டிருப்பார். அப்படித்தான் வளர்ந்தது எங்களின் இசை உறவு."என்று கூறினார்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வாழ்வில் மமதை, அகம்பாவம் எதற்கு?
 

image_2934567a2b.jpgமிகவும் பிடிவாதமாக உறவுகளை வெறுத்து, தனித்து வாழுபவர்கள் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியாது. ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

முதியவர் ஒருவர் வழியில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். முதுமை காரணமான கால்தடக்கி, வீதியில் வீழுந்து, மயங்கி விட்டார். அப்போது அந்த வழியால் சென்ற இளைஞன், அவரைத் தூக்கி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.  

அவருக்கு நினைவு திரும்பியதும் தன்னை மருத்துவமனையில் அனுமதித்தவர் யார் என வினவினார்? அப்போது அவன் தனது சொந்தப் பேரன் என அறிகின்றார்.  

இது நாள்வரை, வெளிநாடு சென்று திரும்பிவந்தும் கூட, உறவுகளையே தேடாத அந்த முதியவர், இப்போது தன்னை அறியாமல் கண்கலங்கி நின்றார். 

உறவுகளை உதறியதால் என்ன பலன்உண்டு? இருக்கும் வாழ்வில் மமதை, அகம்பாவம் எதற்கு? வாழ்வு மிக நீண்டதல்ல. 

  • தொடங்கியவர்

ஞாபக சக்தி, எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், முதுமை தள்ளிப்போகும்... ‘பிக் பாஸ்’ ஆயுர்வேத சிகிச்சை!

 

கதிராமங்கலம், நெடுவாசல், ஜனாதிபதித் தேர்தல் எல்லாவற்றையும் தாண்டி, இப்போது தமிழகத்தில் விவாதப் பொருளாகி இருப்பது 'பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான். பரணியின் அழுகை, கஞ்சா கருப்புவின் காமெடி, ஓவியாவின் புலம்பல்... என 'பிக் பாஸ்' வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள்தான் டாப் டாக். சீரியல்களை எல்லாம் விட்டுவிட்டு, மக்கள் 'பிக் பாஸ்' வீட்டின் முன் காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள். சமூக ஊடகங்களிலும் அதுதான் விவாதப்பொருளாக இருக்கிறது. 

பிக் பாஸ் 

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய பத்து நாள்களிலேயே பங்கேற்ற பலரும் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கஞ்சா கருப்பு, "என்னை உடனடியாக வெளியேற்றுங்கள்" என்கிறார். ஏற்கெனவே இருவர் வெளியேறிவிட்டார்கள். `பங்கேற்பாளர்களை உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி’ என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, வயது முதிர்வைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப்போலவே ஓர் ஆயுர்வேத சிகிச்சை முறை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

உண்மைதான்.

ஆயுர்வேதம்

“வெளியில் அதிகம் பிரபலமாகாத `குடி பிரவேசிஹா’ என்ற இந்தச் சிகிச்சை முறை ஏராளமான பலன்களைத் தரக்கூடியது" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், இந்தச் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விளக்குகிறார் அவர்.ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

ஆயுர்வேத மருத்துவத்தில் ஆதி காலத்திலேயே ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனி பிரிவுகள் இருந்திருக்கின்றன. அதில் ஒரு சிறப்புப் பிரிவுதான் 'ரசாயன தெரபி' எனப்படும் சிகிச்சைத் துறை. இந்தத் துறை, நோய் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வயது முதிர்வைத் தடுக்கவும் உதவக்கூடியது. இது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பலன்களைத் தரக்கூடியதாகும். இந்தச் சிகிச்சை குறித்து 'சரஹ சம்ஹிருதை' என்கிற ஆயுர்வேத நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தெரபிகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று குடி பிரவேசிஹா, மற்றொன்று வாதாபிஹா. இதில், குடி பிரவேசிஹா தெரபிதான் சிறந்த ஒன்று. இந்த சிகிச்சை முறைதான் கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அளிக்கப்படுகிறது. இந்த தெரபி, மற்ற சிகிச்சைபோல அல்லாமல் சிகிச்சை பெறும் நபர்களைத் தனி அறையில் அடைத்துத் தரப்படும்.

அதாவது, குடி பிரவேசிஹா - குடி என்றால் குடில் அல்லது குடிசை என்று பொருள். பிரவேசிஹா என்பதற்கு 'உள்ளே நுழைதல்' என்று பொருள். அதாவது, வெளி உலகத் தொடர்பு இல்லாமல், ஓர் அறையின் உள்ளே அடைத்துவைத்து அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும்.

படுக்கை அறை 

சிகிச்சை எப்படி அளிக்கப்படும்?

இந்தச் சிகிச்சையில் முக்கியமானது சிகிச்சை அளிக்கப்படுவதுக்கு முன்பான பத்தியங்கள். கூடவே சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதனால், சிகிச்சைக்கு முன்னர் உடலில் உள்ள அழுக்குகள், கழிவுகள் வெளியேறி சிகிச்சைக்கு உடல் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும். அதன் பின்னர், பிரத்யேகமாக வடகிழக்கு பார்த்த வாசல் உடைய ஒரு வீடு அமைக்கப்படும். அந்த வீடு தூசி, மாசு இல்லாத மிகவும் தூய்மையானதாகவும், சுத்தமான காற்று உள்ளே நுழையுமாறும் அமைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில், வெளியிலிருந்து வரும் சத்தங்கள், இரைச்சல் உள்ளே நுழையாதவாறு மூன்று அடுக்கு சுவர் கொண்டதாகவும் இருக்கும். வீட்டில் மெழுகுவர்த்தி போன்று சிறிய அளவில் வெளிச்சம் இருக்குமாறு பராமரிக்கப்படும். உள்ளே உள்ள நபருக்கு உணவு வெளியிலிருந்து கொடுக்கப்படும். உணவுடன் 'சயாவானா பிரஹாசன்' என்ற லேகியம் கொடுக்கப்படும். சிகிச்சையில் இருக்கும்போது, தொலைபேசி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு பொருள்களோ, செய்திதாள்களோ, புத்தகங்களோ தரப்படாது. வெளியுலகத் தொடர்பே இருக்காது. இது சித்தர்கள் மேற்கொள்ளும் தியானநிலையைப் போன்றது. ஒரு மாதம் முதல் அதிகபட்சமாக 240 நாள்கள் வரை நபருக்கு ஏற்றவாறு இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

ஆயுர்வேத சிகிச்சை

பலன்கள்...

 

இந்தச் சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் தாதுகள் சீராகும். உடலில் உள்ள மாசுக்கள், உடல் உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஐம்புலன்களின் திறன் மேம்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். முதுமை தள்ளிப் போகும்..."

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தல டோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

 

தோனினு சொன்னாலே... சிக்சர் தெறிக்கும், விசில் பறக்கும்! #HBDDhoni

கிரிக்கெட் உலகின் பெருமைக்கு இன்று பிறந்த நாள். 36 வயதில் அசத்திக்கொண்டிருக்கும் அதிரடிக்காரனுக்கு முதலில் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம். இந்தியாவில்  கிரிக்கெட் மதத்துக்கு முன்னதாக மற்ற மதங்கள் தோற்றுத்தான்போகும். ஒரு தென்னை மட்டையும் ஒரு டென்னிஸ் பந்தும் ஒரு சுவரும் ஓரிரு செங்கல் துண்டுகளும் ஒரு சிலருக்கு கிரிக்கெட் விளையாடப் போதுமானவை. இன்னும் சிலருக்கு பரீட்சை அட்டை பேட்டாகும்; பரீட்சை பேப்பர் பந்தாகும்; வகுப்பு அறை மைதானமாகும். வயது வித்தியாசமின்றி வருமான பேதமின்றி கிரிக்கெட் விளையாடுவதை இந்தியாவில் மட்டும்தான் பார்க்க முடியம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவை இணைக்கும் ஒரே ஒரு பொதுவான விஷயம் கிரிக்கெட் மட்டும்தான். நான் இங்கே போலி தேசப்பற்றைப் பற்றிச் சொல்லவில்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பது, மாநிலங்கள் கடந்து, மொழி கடந்து இந்தியர்களின் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கிறது. மைதானம் இல்லாத சூழ்நிலையில்கூட புக் கிரிக்கெட், கணினியில் கிரிக்கெட், கைபேசியில் கிரிக்கெட் என அனுதினமும் கிரிக்கெட் பித்துபிடித்து அலையும் மனிதர்களை இங்கே பார்க்க முடியும்.

கிரிக்கெட் விளையாடுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்களின் அல்டிமேட் குறிக்கோள் என்பது இந்திய அணியில் இடம்பிடிப்பதாகத்தான் இருக்கும். இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களிடம் பேச்சுக்கொடுத்துப்பாருங்கள், அவர்களின் ஆசையும் கனவும் அவர்கள் இடம்பெற்றிருக்கும் அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

1990-களின் மத்தியில் ராஞ்சியில் கிரிக்கெட் விளையாடித் திரிந்த சிறுவன் ஒருவனுக்கும் அப்படித்தான் ஆசை வந்தது. அவனுக்கு சச்சின் என்றால் கொள்ளை ப்ரியம். சச்சினை நேரில் பார்க்க வேண்டும் என்பது அவனின் பெருங்கனவு. அந்தச் சிறுவன் வாலிப வயதை எட்டிய பிறகு சச்சினைப் பார்த்தார். சச்சினுக்கு எதிர் அணியில் ஆடினார்; பிறகு சச்சினோடு  இணைந்து அதிரடி காட்டினார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் 200 ரன்களை அடிக்கும்போது எதிரே இருந்தார். அதன் பிறகு சச்சினின் 22 வருடக் கனவை நிறைவேற்றினார்.  சச்சின்  டெண்டுல்கருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியின் ரசிகர்களின் ஆசைகளையும் அதிரடியாக நிறைவேற்றியவர்.  அவர் டிக்கெட் கலெக்டரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு `தல'  ஆன மகேந்திர சிங் தோனியைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பேசுவோம். 

தோனி

ஒரு பேட்ஸ்மேனாகவும் சரி,  விக்கெட் கீப்பராகவும் சரி,  கேப்டனாகவும் சரி தோனி சாதித்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஐசிசி தரவரிசையில் பல மாதங்கள் `நம்பர் 1' பேட்ஸ்மேனாகவும், பல ஆண்டுகள் தொடர்ந்து டாப் 10 இடத்துக்குள்ளும்  இருந்தவர் தோனி. உலகிலேயே அதிக ஸ்டம்பிங் செய்தவர் இவர்தான். ஒரு கேப்டனாக தோனி தொட்ட உயரங்கள் மிக அதிகம். `கிரிக்கெட் உலகில்  நல்ல பேட்ஸ்மேன்கள்'  எனப் பலரைச் சொல்லலாம்; நல்ல பெளலர்கள்  எனச் சிலரைச் சுட்டிக்காட்டலாம்; நல்ல ஆல்ரவுண்டர் என சிலரைக்  கொண்டாடலாம். ஆனால் நல்ல கேப்டன்  என உச்சிமுகர, தோனியைவிட பொருத்தமானவரை அடையாளம்  காட்டுவது மிகவும் சிக்கலான பணி. தோனியின் சாதனைகள் மகத்தானவை. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு டிக்கெட் கலெக்டராக வேலைபார்த்த ஒரு நபர், அடுத்த பத்து ஆண்டுகளில் எப்படி உலகம் போற்றும் அசாதாரணன் ஆனார் என்பதை இன்னமும் கிரிக்கெட்  உலகம் ஆச்சர்யத்தோடுத்தான் பார்க்கிறது.

சச்சின் டெண்டுல்கர் அவுட்டானதும் டிவி-யை ஆஃப் செய்துவிட்டு எழுந்தவர்களை, ஒருகட்டத்தில் ஆடாமல் அசராமல் கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை அமரவைத்தவர் தோனி. தன் அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளின்போது நம்பிக்கை தந்தவர் அவர். தோனி நினைத்திருந்தால் அவர் பேட்டிங்கில் பல சாதனைகளைச் செய்திருக்க முடியும்.

ஆரம்பகட்டங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் அவர் களமிறங்கிய போட்டிகளின் புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நிச்சயம் பிரமித்துப்போவீர்கள். ஆனால், தனிப்பட்ட சாதனைகளை எப்போதுமே தோனி கணக்கில் எடுத்துக்கொண்டதில்லை. அவருக்கு வெற்றி என்பது முக்கியம். 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 148 ரன்களும், இலங்கைக்கு எதிராக எடுத்த 183 ரன்களும் வரலாற்றில் பதிந்தவை. 

தோனி

சிறிய வயதில் கிரிக்கெட் அகாடமிகளில் சேரும் அளவுக்கு எல்லாமே தோனிக்கு வசதியில்லை. அதனாலேயே  இந்திய அணிக்குள் புகுந்த ஆரம்பகட்டங்களில் அவருக்கு  அழகான கவர் டிரைவோ, அட்டகாசமான ஸ்ட்ரெயிட் டிரைவோ, ஃபுல் ஷாட்டோ, ஸ்கூப் ஷாட்டோ  பெர்ஃபெக்ட்டாக வராது. சிறு வயதிலிருந்தே அவர் பழகியதெல்லாம் பந்து வந்தால் தோணுகிற இடத்தில் சரியாக அடிக்க வேண்டும் என்பதே. பேட்டிங்கை ரசித்துச் செய்யக்கூடிய ஆள் கிடையாது; மேட்ச்சை ஜெயிக்க, பேட்டிங்கில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வார்.

அவரது வித்தியாசமான பேட்டிங் ஸ்டெயில்தான் இந்தியாவை பலதடவை காப்பாற்றியிருக்கிறது. ஹெல்மெட்டைக் கழட்டி, கிளவுஸைக் கழட்டித்  திரும்பவும் மாட்டிய பிறகு அவர் அடித்த சிக்ஸர்களுக்குக்  கிடைத்த முத்தங்கள் எண்ணற்றவை. எனக்கு ஒரு பேட்ஸ்மேனாக அவரைப் பிடித்ததைவிட அவரின் கேப்டன்சி மிகவும் பிடிக்கும். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறிய விதம் `வாவ்'.

இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இருந்த காலகட்டத்தில்தான் தோனி கேப்டன்சி பதவியை ஏற்றார். அவர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியிலேயே மேட்ச் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல், யாசர் அராபத் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டைத் தவறவிட்டனர். பதற்றத்தில் அஃப்ரிடியும் தவறவிட்டார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், அகர்கர் என விக்கெட்டைத்  தகர்க்கும் பெளலர்கள் இருந்தும்கூட சேவாக்கிடமும் உத்தப்பாவிடமும் பந்தைக் கொடுத்தார் தோனி. அவர்கள் சரியாக விக்கெட்டைச் சாய்த்தனர். பவுல்அவுட் போன்ற சூழ்நிலைகளில் சுழற்பந்தில் எளிதில் விக்கெட் கிடைக்கும் என்பதையும், சுழற்பந்தை எளிதாக நல்ல லைனில் வீசலாம் என்பதை உணர்ந்தே தோனி அப்படியொரு முடிவை எடுத்திருக்கக்கூடும்.

அவரது சமயோசித்த புத்தியும் வித்தியாசமான கேப்டன்சியும் ரசிகர்களைக் கவர்ந்தன. 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டத்தில்  கடைசி ஓவரை ஜோகீந்தர் ஷர்மாவிடம் கொடுத்தபோது  ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். `உள்ளூர் போட்டிகளில் பல முறை உன் பந்துவீச்சைக்  கவனித்திருக்கிறேன். அங்கே மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறாய். ஆனால், அங்கே  உன் ஆட்டத்தைப் பார்க்க ஆள் இல்லை. இது உன் களம், உனக்கான நேரம். நம்பிக்கையோடு வீசு; கிரிக்கெட் உன்னை  நிச்சயம் கைவிடாது'  இதைத்தான் அன்று ஜோகீந்தரிடம் சொன்னார் தோனி. அந்த ஓவரில் ஸ்ரீசாந்த்தைச் சரியான இடத்தில் ஃபீல்டிங்கில் நிறுத்தியதும் ஆச்சர்யமானது. அதன் பிறகு நடந்தது வரலாறு. 

தோனி

இந்தியா உலககோப்பைக்குச் செல்லும்  முன், ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில்தான் ஆடியிருந்தது. ஆனால், டி20  உலகக்கோப்பை தோனியின் கைகளில் பெருமிதமாகத் தவழ்ந்தது . அதன் பிறகு தோனியின் கரியர் ஏறுமுகம்தான். ஒரு நாள் ஃபார்மெட்டுக்கு இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு முக்கியமான பல முடிவுகளை எடுத்தார் தோனி. இந்திய அணியில் சரியான பினிஷர் இல்லாததை உணர்ந்து ஆறாம் நிலையிலும் ஏழாம் நிலையிலும் தொடர்ந்து களமிறங்கத் தொடங்கினார். தோனி தலைமையில் இந்தியா தொடர்ந்து ஆறு தொடர்களை வென்ற வரலாற்று நிகழ்வு 2008 - 2009-ம் ஆண்டு சீஸனில் நடந்தது. உள்ளூர் மட்டுமல்ல இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய மண்ணிலும் தொடரை வென்று, சாதனை புரிந்தார் தோனி. தென் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் தோனி தலைமையில் இந்திய அணி ஒரு நாள் தொடரை வெல்லவே இல்லை. 

2008 - 2011-ம் ஆண்டு காலகட்டம் இந்திய கிரிக்கெட்டுக்குப் பொற்காலம். கோலி, ஜடேஜா, ரோகித் என அடுத்த தலைமுறை வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் தந்து அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நுவான் குலசேகரா பந்தில் தோனி அடித்த சிக்ஸரை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கும். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை வார்த்தெடுத்ததில் தோனியின் பங்கு அபாரமானது. ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணிக்கு சோதனை காலம் வந்த சமயங்களில் சிறப்பான பல ஆட்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தோனி. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமொன்றில் 29/5  எனத் தடுமாறிய அணியை, அவர் கெளரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்ற ஆட்டம் மறக்கவே முடியாதது. 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இந்திய ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ் கிஃப்ட்டாக அமைந்தது. கேப்டனாகப் பதவியேற்ற ஆறு ஆண்டுகளில், மூன்று ஐசிசி கோப்பை, ஆசிய கோப்பை, அயல் மண்ணில் தொடர் வெற்றிகள், சிபி சீரீஸ், மூன்று ஃபார்மெட்டிலும் தரவரிசையில் `நம்பர் 1'  இடம் என அத்தனையும் சாதித்தார் தோனி. 

டெஸ்ட் ஃபார்மெட்டிலும் தோனி தலைமையில்தான் பல சாதனைகளைச் செய்திருக்கிறது இந்திய அணி. அவர் முதன்முதலில் தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில்தான் கேப்டன் பதவியேற்றார். 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோனி கேப்டன் பதவியேற்றார். அந்த இரண்டிலும் இந்தியா வென்றது. தோனி கேப்டனாகப் பதவியேற்று விளையாடிய முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒன்றில்கூட தோற்கவே இல்லை. தோனி தலைமையில்தான் இந்தியா, நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. ஆஸ்திரேலியா இங்கே வந்தபோது 4-0 என வாஷ்அவுட் செய்தது. 

தோனி

இந்தியாவுக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்ததும் சரி, அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்ததும் சரி தோனிதான் நம்பர் 1. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தோனி சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். 2007-ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய அபாரமான இன்னிங்ஸ் (76 ரன்கள்) சிறப்பானது. 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியில் கங்குலி ஓய்வுபெற்றபோது அவருக்கு தோனி செலுத்திய மரியாதை கங்குலி ரசிகர்களை நெகிழ்த்தியது. அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தோனி அரை சதம் அடித்து போட்டியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். அதே தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் எடுத்து மேன் ஆஃப் தி மேட்ச் விருது ஜெயித்தார். சென்னை டெஸ்டில் அவர் அடித்த 224 ரன்கள் அசத்தலான சாதனை. 

நான்கு, ஐந்து பேர்கொண்ட ஒரு குழுவுக்குத் தலைவராகப் பணியாற்றி, வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதே ஒரு சராசரி மனிதனுக்கு சிரமமான விஷயம்தான். இந்தியா போன்ற கிரிக்கெட் வெறி ஊறிய நாட்டுக்கு, அரசியலும் வணிகமும் விளையாடும் பிசிசிஐ அமைப்பில் இருக்கும் அணியை வழிநடத்துவது என்பது மிகப்பெரிய சவால். ஒரு பேட்ஸ்மேன் தன்னைப் பற்றியும் தன் ஃபார்ம் குறித்தும் யோசிப்பதற்கும் கவலைப்படுவதற்குமே அதிக நேரம் தேவைப்படும். ஆனால், ஒரு கேப்டனுக்கு அணி குறித்தும், அணி நிர்வாகம் குறித்தும், திறமையான வீரர்களை கண்டெடுத்தல் குறித்தும், எதிரணியின் பலம் பலவீனங்கள், தன்னுடைய ஃபார்ம் என எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இருக்கும். 

தோனி

தோனி பொதுவாக யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஆனால், எந்த வீரரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். 2007-ம் ஆண்டு டி20  உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று தொடர்களிலும் விளையாடிய ஒரே வீரர் தோனி மட்டும்தான். மூன்று தொடர்களில் வெவ்வேறு பாணி ஆட்டத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய வீரர்களை வைத்து கோப்பையை ஜெயித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் பலமுறை இறுதிப்போட்டிக்கு  அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு முறை சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தையும் வென்றது. வெவ்வேறு அணிகள் வெவ்வேறு சூழ்நிலை என்றாலும்கூட களத்தில் யாரிடம் எந்த வேலையை வாங்க வேண்டும் என்ற தெளிவு இருப்பதால் தோனி சக்சஸ்ஃபுல் கேப்டனாக மிளிர்கிறார்.

ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்களில் அவரின் ஃபீல்டிங் வியூகங்கள் அருமையாக இருக்கும். தோனி, ஆட்டத்தில் கூர்மையாகக் கவனம் செலுத்துபவர். எதிர் அணியினர் செய்யும் சிறு தவறையும்  தன் அணிக்குச் சாதகமாக்கிக்கொள்வார். பாண்டிங் மற்றும் ஆலன் பார்டருக்கு அடுத்தபடியாக கேப்டனாக 100 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் வென்ற ஒரே வீரர் தோனி மட்டுமே. ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் விளாசிய ஒரே இந்தியர் என்ற பெருமையும் தோனியைச் சேரும். ஒருநாள் போட்டிகளில் அசத்தினாலும், டெஸ்ட் ஃபார்மெட்டில்  அவர் எடுத்த டிஃபன்சிவ் முடிவுகள் இந்தியாவுக்கு அயல் மண்ணில் பெரும்பின்னடைவை ஏற்படுத்தியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

அணியில் இருப்பிடத்தைத் தக்கவைக்க ஏதாவதொரு ரோலை சிறப்பாகச் செய்துவிடுவார். பேட்டிங்கில் சோடைபோனால் கேப்டன்சி, கேப்டன்சியில் சோடைபோனால் பினிஷர், பினிஷிங்கில் தளர்ந்த சமயங்களில் விக்கெட் கீப்பிங் என வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அதனால்தான் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் நீடிக்க முடிகிறது. அவர் கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகும்கூட தோனியின் இடத்தை நிரப்பக்கூடியவர்களை இன்னமும் பிசிசிஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை. கேப்டன்சியைத் துறந்த பிறகு ஒன்பது ஒருநாள் இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறார் தோனி. 

தோனி

தோனியின் விவேகமான ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்கள் அபாரமானவை. உலகிலேயே விக்கெட்டுகளை இடையே மிக வேகமாக ஓடக்கூடியவர்களில் முக்கியமானவர் டி வில்லியர்ஸ். அவரை பல முறை ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் செய்திருக்கிறார் தோனி. கடந்த டி20 உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக அவரின் கடைசி நேர வியூகம் அட்டகாசமாக இருந்தது. சேஸிங்கில் மட்டுமல்ல, இந்திய அணியின் ஸ்கோரை எதிர் அணி சேஸிங் செய்யும்போதும் சரி, ரசிகர்கள் தோனியை நம்பினார்கள். இவர் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய சமயங்களில், பல முறை குறைந்த இலக்கை டிஃபெண்ட் செய்திருக்கிறது. தோனி பற்றிப் பேசும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் பல டி20 லீக்குகள் நடக்கின்றன. அதில் மிகச்சிறந்த டி20 பிரான்சீஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனும் தோனி மட்டும்தான். அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் தலைமையேற்றால் கச்சேரி களைகட்டும்.

 

தோனியின் கால்கள் இன்னமும் வலுவாகவே இருக்கின்றன. விக்கெட்டுகளுக்கு இடையே அசத்தலாகவே ஓடுகிறார். நாளுக்கு நாள் விக்கெட் கீப்பிங் பணியில் அட்டகாசம் செய்கிறார். தோனியின் ஓய்வுக்கு நாள் குறிக்கப் பார்க்கிறார்கள் பலர். ஆனால், அதற்கான அவசியம் இன்னும் வரவில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கக்கூடியவர் தோனி. அது ஃபீல்டுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி, வெளியேவாக இருந்தாலும் சரி... அவர் இன்னும் பல போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமைத் தேடித்தருவார் என நம்புவோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காக்காவுக்காக காரை மாற்றிய முதல்வர் யார் தெரியுமா? - இந்திய அரசியல்வாதிகளின் கார் ரகசியங்கள்

‘அப்துல் கலாமே அம்பாஸடர்லதான் வர்றாரு..’ என்று ஒரு படத்தில் நடிகர் விவேக் சொல்வார். அதெல்லாம் ஜனாதிபதி அப்துல் கலாம் காலம். இப்போதெல்லாம் கவுன்சிலர்களே பென்ஸில்தான் டாடா காட்டிப் பறக்கிறார்கள். படா படா அரசியல்வாதிகள் என்றால் சும்மாவா? அதுவும் பெட்ரோல் செலவிலிருந்து டெலிபோன் செலவு வரை எல்லாமே நமது வரிப்பணம் எனும்போது, புகுந்து விளையாட வேண்டியதுதானே! கவுன்சிலர்கள் போல் அலப்பரை பண்ணாமல், விலை குறைந்த காரில் எளிமையாக வலம் வரும் அரசியல்வாதிகளும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது ஆறுதல். பிரதமரில் ஆரம்பித்து இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதிகளின் கார் லிஸ்ட் இதோ!

நரேந்திர மோடி (பிரதமர்)

Modi BMW

சொல்லித் தெரிய வேண்டியதில்லை; மோடிக்கு ஊர் சுற்றுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். காரில் போவதும்தான். ஒவ்வொரு நாட்டில் இறங்கும்போதும், தான் பயணிக்கும் கார்களின் விவரங்களைப் பற்றி ஆர்வமாகக் கேட்பாராம் பிரதமர். இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்னால், குஜராத்தின் முதல்வராக இருந்தபோது மோடியின் செல்லம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. செடான் கார்களைவிட எஸ்யூவிகளில்தான் ஆர்வம் அதிகமாம் பிரதமருக்கு. அண்மையில் கோவை ஈஷா மையத்துக்கு வந்தபோது, சத்குரு பயன்படுத்தும் எஸ்யூவி பற்றி இருவரும் வியந்து பேசி மகிழ்ந்தார்களாம். பிரதமர் ஆனபிறகு, பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார் மோடி. 

ஒரு நாட்டின் பிரதமர் என்றால் சும்மாவா? சாதாரண பிஎம்டபிள்யூதான். ஆனால், குண்டுகள் துளைக்காத புல்லட் புரூஃப் விண்ட்ஷீல்டு, பஞ்சர் ஆனாலும் பறக்கும் ரன் ஃப்ளாட் டயர்கள், டிராக்ஷன் கன்ட்ரோல், ABS, VSP என்று பலத்த பாதுகாப்பு வசதிகளுடன் பயணிக்கிறார் மோடி. மார்க்கெட்டில் இந்தக் காரின் விலை 1.50 கோடி. ஆனால், பிரதமர் பயன்படுத்தும் காரின் விலை கிட்டத்தட்ட 3.5 கோடி வரை இருக்கலாம்.

சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்)

sonia

ரஜினிக்குக் கமல் போட்டி என்றால், மோடிக்கு இந்த லேடிதானே? எதிர்க்கட்சித் தலைவர் என்றால், கெத்து இல்லாமலா? ராஜீவ்காந்தி இருக்கும்போது அந்தக் கால டாடா சியராவில்தான் கணவன்-மனைவி-குழந்தைகள் என்று மொத்தமாகப் பயணிப்பார்களாம். மோடியைப்போல் சோனியாவுக்கும் எஸ்யூவிகள்தான் விருப்பம். ‘பிரசாரத்துக்கு இதுதான் ஈஸி’ என்பது சோனியாவின் கருத்து. வேன் என்றால், பெரிய வாகனம். அதனால், டாடா சஃபாரி காரையே பிரசாரக் காராக வடிவமைத்து அதில்தான் வலம் வருவாராம் சோனியா. இதுவே பொது நிகழ்ச்சிகள், தொகுதியைப் பார்வையிடுவது, ஊர் சுற்றுவது என்றால், சோனியாவின் ஃபேவரைட் - ரேஞ்ச்ரோவர் இவோக். ரேஞ்ச்ரோவர் காரின் ஸ்பெஷல் - இதை வைத்து ஆன்ரோடிலும் பறக்கலாம்; ஆஃப்ரோடிலும் அசத்தலாம். இதுவும் பாதுகாப்பு வசதிகளுடன் எக்ஸ்ட்ராவாக ரீ-மாடல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் காரின் விலை 65 லட்சம். சோனியா பயன்படுத்தும் ரேஞ்ச்ரோவரின் மதிப்பு கிட்டத்தட்ட 1 கோடியைத் தாண்டும்.

ராகுல் காந்தி (காங்கிரஸ் துணைத் தலைவர்)

ragul

picture courtesy - Outlook india

அம்மாவைப்போலவே மகனுக்கும் எஸ்யூவிகள்தான் விருப்பம். ராகுல் காந்தியை கார் பிரியர் என்கிறார்கள். டாடா சஃபாரி, டொயோட்டா ஃபார்ச்சூனர், பஜேரோ, இனோவா, டொயோட்டா லெக்ஸஸ் LX470, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் என்று கார் கலெக்ஷனே வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. பொதுப் பிரசாரங்கள் என்று வரும்போது ஃபார்ச்சூனர், டாடா சஃபாரி, லேண்ட் க்ரூஸர்தான் ராகுலின் சாய்ஸாம். டிமானிட்டைசேஷன் வந்தபோது, அதைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, 4,000 பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக, தனது லெக்ஸஸ் சொகுசு காரில் வந்ததைக் கடுமையாக விமர்சித்தார்கள் பா.ஜ.க.வினர். (அந்தக் காரில் டீசல் டேங்க் நிரப்பவே 6,000 வரை ஆகும்.) உ.பி.யில் நடந்த தேர்தலுக்காக நாமினேஷனில், ‘கார்கள் இல்லை’ என்று கையெழுத்திட்ட ராகுல்காந்தி, அதே நாமினேஷனின்போது லேண்ட்க்ரூஸர் காரில் வந்தார்.

மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

car

picture courtesy - carToq.Com


வெளியே அதிரடிப் படையாக இருந்தாலும், உள்ளே அமைதிப் படை - மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா. எளிமையின் வடிவம் என்கிறார்கள் இவரை. தயாரிப்பிலேயே இல்லாத பழைய மாருதி ஜென் கார்தான் மம்தாவின் வாகனம். ஜென்னின் இப்போதைய பழைய மார்க்கெட் விலை இப்போது 1.5 லட்சத்தைக்கூடத் தாண்டாது. மம்தா பானர்ஜி சாலையில் பயணித்தால், நம்மூர் முதல்வர்கள்போல் கான்வாய் கார்கள் வலம் வர, டிராஃபிக்கெல்லாம் அதகளப்படாது. சிக்னலில் கும்பலோடு கும்பலாக ஒரு பழைய சாம்பல் நிற ஜென் நின்றுகொண்டிருந்தால், உள்ளே மம்தாவாகக்கூட இருக்கலாம். ‘‘எவ்வளவு போல்டு லேடி நீங்கள்; இன்னும் பழைய ஜென் காரைப் பயன்படுத்துவது எடுபடவில்லை’’ என்ற கட்சித் தொண்டர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க, இப்போது புதிய இனோவாவைப் பயன்படுத்துகிறார் மம்தா பானர்ஜி. 'அமைச்சர்கள் சிவப்புச் சுழல் விளக்கு பயன்படுத்தக் கூடாது' என்ற சட்டம் வருவதற்கு முன்பாகவே, "எனது காரில் ரெட்-பீகான் பயன்படுத்த மாட்டேன்!’’ என்று கறாராகச் சொன்னவர் மம்தா.

அர்விந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்)

எளிமையில் மம்தாவின் அண்ணன் என்று சொல்லலாம் கெஜ்ரிவாலை. ஆம்! ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், முதல்வராவதற்கு முன்பிருந்தே பயன்படுத்தும் பழைய மாருதி வேகன்-ஆர். மாதச் சம்பளக்காரர்கள்கூட ‘வேகன்-ஆர் காரா’ என்று மண்டையைச் சொறிவார்கள். காரணம் - முதல் கார் வாங்கும் பட்ஜெட் மிடில்கிளாஸ் மக்களின் சாய்ஸ் வேகன்-ஆர். ஒரு மாநில முதல்வர், 4 லட்ச ரூபாய் வேகன்-ஆரில் பயணிப்பது கெஜ்ரிவாலுக்கு நற்பெயரைத்தான் பெற்றுத் தந்தது. இப்போது மம்தா வழியில் இனோவா ஓனர் ஆகிவிட்டார் கெஜ்ரி. ஒருமுறை பஞ்சாபில் நடந்த கலகக்காரர்கள் தாக்குதல், இன்னொரு தடவை வேறு ஒரு கான்வாய் கார் மீது மோதி விபத்து என்று கெஜ்ரிவாலின் இனோவா பல ஓட்டை உடைசல்களைச் சந்தித்தும் கெத்தாக இருக்கிறதாம். இதுவே வேகன்-ஆராக இருந்தால்? 

அருண் ஜெட்லி (மத்திய நிதி அமைச்சர்)

arun

picture courtesy - Hindustan times

பார் முதல் கார் வரை எல்லாவற்றுக்கும் வரி விதிக்கும் தந்தை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ஒரு தடவை அமிர்ஸ்தரில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நாமினேஷனுக்கு வந்திருந்த அருண் ஜெட்லி, தான் வைத்திருக்கும் சொகுசு கார்களோடு சேர்த்து தனது சொத்து மதிப்பு 113 கோடி என்று தெரிவித்திருந்தார். அந்த சொகுசு கார்கள் என்னென்ன தெரியுமா? போர்ஸேவின் டாப் மாடல் எஸ்யூவி (1.5 கோடி), மெர்சிடீஸ் பென்ஸ் (80 லட்சம்), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (90 லட்சம்), ஹோண்டா அக்கார்டு (20.45 லட்சம்), டொயோட்டா ஃபார்ச்சூனர் (24 லட்சம்). அடிப்படையில் வழக்கறிஞரான அருண்ஜெட்லிக்கு, சொகுசு செடான் கார்களைவிட டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் தனது செல்லம் என்கிறார். ஒவ்வொரு பட்ஜெட் ‘தாக்குதல்’களின்போதும், ஃபார்ச்சூனரில் இருந்து அருண்ஜெட்லி இறங்குவதைப் பார்க்கலாம்.

உமர் அப்துல்லா (முன்னாள் முதல்வர், காஷ்மீர்)

‘இந்தியாவின் குறைந்த வயது முதல்வர்’ என்ற பெருமையைப் பெற்றவர், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா. குளிர் பிரதேசமான காஷ்மீர் போன்ற ஏரியாக்களுக்கு, கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவான செடான் கார்கள் திணறிவிடும். அந்த வகையில் உமரும் எஸ்யூவிகளின் ரசிகர். அதிலும் கார் ஓட்டுவது என்றால் உமருக்கு ரொம்பப் பிடிக்குமாம். ரெட் பீகான் அலறும் டொயோட்டா ஃபார்ச்சூனர் அல்லது ரேஞ்ச்ரோவர் காரின் டிரைவர் சீட்டுகளில், அடிக்கடி உமர் அப்துல்லாவைப் பார்க்கலாம். எதிர்க்கட்சியினர் உமரைப் பற்றி அடிக்கடி குறை சொல்லும் விஷயம்: ‘‘முதல்வர் ஓகே! ஆனால் டெல்லியில் படிக்கும் அவரின் மகன்கள்கூட காரில் பீகானை அலறவிட்டுப் பறக்கிறார்களே? இது எந்த வகையில் நியாயம்?’’

நவீன் பட்நாயக் (ஒடிசா முதல்வர்)

car

picture courtesy - Huffington post

ஒடிசாவின் முதல்வரான நவீன் பட்நாயக், சுத்தமான சுதேசி. அதாவது, இந்தியப் பொருள்களைத்தான் பயன்படுத்துவாராம். அந்த வகையில் அவர் பயன்படுத்தும் கார்கள்கூட மேட் இன் இந்தியாதான்! மாருதிதான் நவீனின் ஃபேவரைட். முதல்வராவதற்கு முன்பு மாருதி எஸ்டீம் பெட்ரோல் கார் பயன்படுத்தி வந்தவரிடம், இப்போது மாருதி SX4 கார் இருக்கிறது. இதன் விலை 10 லட்ச ரூபாய்தான். முதல்வருக்கென்று அஃபீஷியலாக 10 கார்கள் இருந்தாலும், SX4 காரில்தான் பயணிக்கிறார். ‘‘எனக்கு சொகுசு முக்கியம் இல்லை; கம்ஃபர்ட்தான் முக்கியம்!’’ எனும் நவீன் பட்நாயக், நாமினேஷன் தாக்கலில் தன்னிடம், ரூ.17,000 மதிப்புள்ள 1980 மாடல் அம்பாஸடர் கார் மட்டும்தான் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

வசுந்தரா ராஜே (ராஜஸ்தான் முதல்வர்)

vasundra

picture courtesy - India today

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் வசுந்தரா ராஜே. இவரும் ஒரு கார் பிரியை. அதுவும் சொகுசு கார்கள்தான் வசுந்தராவுக்குப் பிடிக்கும். ராஜஸ்தானில் நடக்கும் கார் லாஞ்ச்களில் வசுந்தராவைப் பார்க்கலாம். ராஜஸ்தானில் உள்ள ஹோண்டா தொழிற்சாலையைத் திறந்து வைத்தது வசுந்தரா ராஜேதான். இவரிடம் இருப்பது மெர்சிடீஸ் பென்ஸ் ‘E’ க்ளாஸ் 350 டீசல். ராஜஸ்தான் ஹைவேஸ்களில் வெள்ளை நிற பென்ஸ் கார் பறந்து கொண்டிருந்தால், வசுந்தரா என்று அர்த்தம். இது தவிர, அடிக்கடி தனது ஃபார்ச்சூனரிலோ, டாடா சஃபாரியிலோ வந்து இறங்குவார் வசுந்தரா. ஹைஸ்பீடில் பறப்பது வசுந்தராவுக்குப் பிடிக்கும். ஜோத்பூரில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த முதல்வரின் கான்வாய் கார் ஒன்று, பைக் ரைடர் ஒருவரை இடித்து விபத்துக்குள்ளாக்கியது பரபரப்பாகப் பேசப்பட்டது.

நிதிஷ்குமார் (பீகார் முதல்வர்)

எவர்டைம் ஃபேவரைட் அம்பாஸடர்தான், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் பிடித்த கார். பீகாரை மட்டுமல்ல; இந்தியாவில் எங்கே சுற்றினாலும் நிதிஷின் அம்பாஸடர் பறக்கும். அம்பாஸடர் தற்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், ‘அரசியல்வாதிகளுக்கு அம்பாஸடர்தான் பெஸ்ட். அதில் போகும்போதே கெத்து கிடைக்கிறது’ என்பது நிதிஷின் வாதம். 

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சித் தலைவர், உ.பி)

car

picture courtesy - Daily mail

சமாஜ்வாடி கட்சித் தலைவரில் இருந்து தொண்டர்கள் வரை அனைவரும் கார் பிரியர்கள். தந்தை முலாயம்சிங் யாதவ் போலவே சொகுசு கார்கள் மீது அகிலேஷ், அவரது சகோதரர் பிரதீக் யாதவ் எல்லாருக்குமே ஒரு ‘இது’! பென்ஸிலேயே காஸ்ட்லி கார் S க்ளாஸ் செடான். இதன் விலை 1.50 கோடி. இதுதான் முலாயம் சிங் யாதவ்வின் கார். தந்தையைப்போலவே S க்ளாஸ் வைத்திருந்தாலும், புல்லட் புரூஃப் டொயோட்டா பிராடோ மற்றும் பென்ஸ் GLE க்ளாஸ் கார்களில்தான் வெளியே செல்வது வழக்கம். இரண்டின் விலையும் முறையே 2 கோடி முதல் 2.5 கோடி வரை. அண்மையில் நீல நிற லம்போகினியை 4 கோடிக்கு வாங்கி சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு லைக்ஸ் அள்ளினார் அகிலேஷின் தம்பி பிரதீக் யாதவ்.

சந்திரபாபு நாயுடு (ஆந்திரா முதல்வர்)

chandra

picture courtesy - The hans india.Com

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்பாஸடருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார். இருக்காதா பின்னே..? முதல் தடவை முதல்வராக இருந்தபோது, நக்ஸலைட்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சந்திரபாபுவின் புல்லட் புரூஃப் அம்பாஸடர்தான் அவரைக் காப்பாற்றியது. இரண்டாவது முறை முதல்வரான பிறகு, இப்போது டாடா சஃபாரியில்தான் பயணிக்கிறார். 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள இது, எக்ஸ்ட்ராவாக 40 லட்சம் செலவழித்து புல்லட் புரூஃப் ஆக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் அடிக்கடி கறுப்பு நிற லேண்ட்க்ரூஸர் பிரேடோவிலும் படு பாதுகாப்போடு வருவார் சந்திரபாபு நாயுடு. இது தவிர, முன்னேயும் பின்னேயும்  படா படா லேண்ட் க்ரூஸர், ஃபார்ச்சூனர், இசுஸூ, இனோவா, ஜீப், ஆம்புலன்ஸ் என்று 15 முதல் 20 வாகனங்களுக்கு நடுவில்தான் சந்திரபாபு நாயுடுவின் கார் பயணிக்கும். 

தேவேந்திர ஃபட்நாவிஸ் (முதல்வர், மஹாராஷ்ட்ரா)

devendra

picture courtesy - India today

இவரும் மேக்-இன் இந்தியா யூஸர். இந்தியப் பொருள்களைத்தான் பயன்படுத்துவார் ஃபட்நாவிஸ். மஹாராஷ்ட்ரா மாநிலம் முழுதும் இதை வலியுறுத்தவும் செய்கிறார். அதனால், இந்தியத் தயாரிப்பான டாடா வாகனங்களையே பயன்படுத்துவார். லேட்டஸ்ட்டாக டாடா சஃபாரி வாகனத்தைப் பயன்படுத்தி வருகிறார் ஃபட்நாவிஸ். பிம்ப்ரியில் உள்ள டாடா மோட்டார்ஸில் இவருக்காகவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது சஃபாரி. 

சித்தராமைய்யா (முதல்வர், கர்நாடகா)

‘காக்காவுக்காக காரை மாற்றிய முதல்வர்’ தெரியுமா? அது சித்தராமைய்யாதான். ஒரு தடவை தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விண்ட்ஷீல்டு ஓரமாக ஒரு காக்கை அமர, செக்யூரிட்டிகள் விரட்டியும் காக்கை போகவில்லையாம். ‘இது கெட்ட சகுனம்; உயிருக்கு ஆபத்து... காரை உடனே மாற்றிவிடுங்கள்’ என்று புல்லட் ப்ரூஃப் காரை மாற்றிய பெருமை சித்தராமைய்யாவையே சேரும். அடுத்த காரும் டொயோட்டாதான் என்று உறுதியாக இருந்தாராம் முதல்வர். அதனால் இப்போது வேறு புல்லட் ப்ரூஃப் டொயோட்டாவில் பயணிக்கிறார்.

பினராயி விஜயன் (முதல்வர், கேரளா)

கேரளாவுக்குக் கிடைத்த எளிமையான முதல்வர் பினராயி விஜயன், திடீர் திடீரென மக்களோடு மக்களாக பஸ்ஸில் வந்து மெர்சல் கூட்டுவார். இருந்தாலும், ஆரம்பத்தில் டாடா சஃபாரி காரில்தான் இவரது சவாரி. இப்போது டொயோட்டா காரில்தான் பயணம். புல்லட் ப்ரூஃப் பாதுகாப்பையெல்லாம் கார்களில் விரும்பமாட்டார். ஹைதராபாத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றபோது, ‘கார் குடுங்க; செக்யூரிட்டி வேண்டாம்’ என்ற கட்டளையோடுதான் ஆந்திராவில் இறங்கினாராம்.

எடப்பாடி பழனிசாமி (முதல்வர், தமிழ்நாடு)

edappadi

 

அ.தி.மு.க என்றாலே டொயோட்டாதான் போல! மறைந்த அம்மாவுக்கு டொயோட்டா பிடிக்கும் என்பதாலோ என்னவோ, அவரின் ஆதரவாளர்களான சசிகலாவில் இருந்து டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ், நாஞ்சில், நடராஜன் வரை அனைத்து ரத்தத்தின் ரத்தங்களும் டொயோட்டா கார்தான் பயன்படுத்துகிறார்கள். எடப்பாடி மட்டும் விதிவிலக்கா? அவரிடம் இருப்பதும் டொயோட்டா இனோவாதான். ‘சிவப்புச் சுழல்விளக்கை அமைச்சர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது’ என்று யூனியன் கேபினட் அறிவித்ததைத் தொடர்ந்து, இனோவாவின் ஃபுட்பெக்கில் தானே ஏறி நின்று ரெட் பீகான் லைட்டைக் கழற்றி, சட்டத்தை மதித்து ட்ரெண்டிங் ஆனார் எடப்பாடி பழனிசாமி.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிரிக்கெட் - கவுண்டமணி ஸ்டைலில் வழியனுப்பிய தென்னாப்பிரிக்க வீராங்கனைகள்!

அவுட் ஆகி வெளியேறிய இங்கிலாந்து வீராங்கனையைத் தென்னாப்பிரிக்க பெண் வீரர்கள் கவுண்டமணி ஸ்டைலில் வழியனுப்பியது வைரலாகியுள்ளது. ஆங்கிலத்தில் "Kick in the Shins" என்கிற ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, ஒரு செயலில் ஈடுபட்டு அது மோசமான பின்விளைவுகளைக் கொடுத்தால் அதற்கு உவமானமாக இந்தச் சொற்றொடரைச் சொல்வார்கள். ஷின் என்றால் முழங்கால்களுக்கு கீழ் இருக்கும் பகுதியைக் குறிக்கும். இந்த இடத்தில் அடிபட்டால் கடுமையான வலிகொடுக்கும். எனவே, எதிர்பாராதத் தோல்வியையும் மோசமான பின்விளைகள் கொண்ட நிகழ்ச்சிகளை இதைக் கொண்டு குறிப்பிடுவார்கள். ஆனால், நடந்துவரும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதே 'கிக் இன் தி ஷின்'ஷை நிஜமாகச் செய்கிறார்கள். ஆனால், வலி கொடுக்கும் வகையில் இல்லாமல் அனைவரும் பாராட்டும் வகையில் இதை நடைமுறை படுத்தியுள்ளார்கள். நேற்று தென்னாப்பிரிக்காவின் பிரிஸ்டலில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க பெண்கள் அணியும் இங்கிலாந்தும் மோதின. முதல் பேட் செய்த இங்கிலாந்து அணி அடி நொறுக்கி 50 ஓவர்களில்
373 என்கிற மிகப்பெரிய இலக்கை எட்டியது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
68 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து வென்றது.

qjy1My.gif

https://gifs.com/gif/kick-in-the-shin-qjy1My

இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் ப்யோமோன்டும் சாரா டெய்லரும் அடி வெளுத்தனர். இதில் சாரா டெய்லர்
135 பந்துகளில் 145 ரன்களை எடுத்தார். கடுமையான போராட்டத்தின் பின்னரே இவரை அவுட் செய்ய முடிந்தது. இவர் அவுட் ஆகி வெளியேறிக்கொண்டிருந்தபோது தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனைகள் ஓடி வந்து அவரின் பேடில் கால்களால் கிக் செய்தனர். தங்களுக்கு 'கிக் இன் தி ஷின்' என்பதை போன்ற வலியை ஏற்படுத்திய வீரரை அப்படி ஒரு செய்கை மூலம் வாழ்த்தி வழியனுப்பினர். இதை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர். இப்படி ஒரு நட்புரீதியிலான வழியனுப்புதலை வரவேற்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபருக்கு கை கொடுப்பதில் இத்தனை பிரச்னையா?

 

ட்ரம்ப் மற்றும் மெலினியா ட்ரம்ப்

ருத்தர் கை கொடுக்கும்போது எப்படிக் கொடுக்கணும்... எவ்வளவு நேரம் கொடுக்கணும் என்பதற்கெல்லாம் வரைமுறை இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருப்பவருக்கும்கூட இந்த விஷயம் தெரியும். ஆனால், அமெரிக்கா மாதிரியான ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு கை கொடுப்பதில்தான் எத்தனை கன்ஃப்யூஷன்! பதவியேற்ற தினத்திலிருந்து ட்ரம்ப்புக்கு கை கொடுப்பதில் மட்டும் பல சிக்கல்கள்... அண்மையில் அவர் போலாந்த் அதிபரை சந்தித்தபோது கை கொடுப்பதில் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

போலந்து நாட்டின் ஃபர்ஸ்ட் லேடியான அகதா கார்ன்ஹவுசர்-துடா முதன்முதலாக வார்ஷா நாட்டுக்கு வந்திருந்தபோது, ட்ரம்ப்புக்குக் கை கொடுக்காமல் அவரது மனைவி மெலினியா ட்ரம்ப்புக்குக் கை கொடுத்தார். வீடியோவாகப் பதிவான இந்தக் காட்சி ஃபேஸ்புக், ட்விட்டர் எனச் சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலினியா ட்ரம்ப், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா மற்றும் அவருடைய மனைவி அகதா கார்ன்ஹவுசர்-துடா ஆகியோர் மேடையில் நின்றுகொண்டிருந்தனர். மேடையில் இருந்து கீழே இறங்குவதற்காக போலந்து அதிபர் நகர்ந்தபோது அவருடன் ட்ரம்ப் கை குலுக்கினார். பின்னர், அவருடைய மனைவியுடன் கை குலுக்க எத்தனித்து கைகளை நீட்டினார். ஆனால், அகதா, ட்ரம்ப்புக்கு கை கொடுக்காமல், மெலினியா ட்ரம்ப்புடன் கை குலுக்கினார். பின்னர் ட்ரம்ப்புக்குக் கை கொடுத்தார். 

அகதா கார்ன்ஹவுசர்-துடா

கை குலுக்குவதில், ட்ரம்ப்புக்கு இது முதல்முறையான சொதப்பலில்லை. ட்ரம்ப்பின் கை கொடுக்கும் சொதப்பல்கள் பல சீசன்களைத் தாண்டியுள்ளது. அதில் சுவாரஸ்யமானது... ஜப்பான் பிரதமருக்கு நீண்ட நேரம் கை குலுக்கியதுதான். கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபி. இந்த சந்திப்பை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்குத் திடீரென அவர்கள் வித்தியாசமாகக் கைகுலுக்கும் பதிவு கிடைத்தது. ட்ரம்ப், ஜப்பான் அதிபரது கையை வித்தியாசமாகப் பிடித்ததோடு, கையை லேசாகத் தட்டியும் கொடுத்தார். பின்னர் நீண்ட நேரமாகக் கைகுலுக்கினார். ட்ர்ம்ப்பின் இந்தச் செயலுக்கு அபி எந்தவிதமான எதிர்ப்பும் செய்ய முடியாமல் இருந்தார். பாவம் ஜப்பான் பிரதமர்... 'எவ்வளவு நேரம்தான் கை கொடுக்குறது' என்ற மைண்ட் வாய்ஸோடு நெளிந்துகொண்டிருந்ததுதான் பரிதாபத்தின் உச்சம். 

அடுத்தது, ஏஞ்சலா மெர்கலுடன் கைகுலுக்க மறுத்த ட்ரம்ப். ஜெர்மன் நாட்டின் ஆளுங்கட்சி 'கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி'. இந்தக் கட்சியின் தலைவரான அதிபர் ஏஞ்சலா மெர்கல், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது மெர்கலுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார் ட்ரம்ப். இது மெர்கலுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வியப்பாக இருந்தது. கைகொடுக்க வேண்டிய சமயத்தில், அவரை நேராகப் பார்க்காமல், தலையைத் திருப்பிக் கொண்டார் ட்ரம்ப். 

கை குலுக்குவதில் ட்ரம்ப்புக்கு பார்ட்னர் இன் க்ரைம் மோடிதான். இருவருமே வி.ஐ.பி-களுடன் கைகுலுக்குவதில் சொதப்பல் மன்னர்கள். சமீபத்தில், அமெரிக்கா சென்ற மோடி ட்ரம்ப்பை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மோடியும் ட்ரம்ப்பும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கும் நேரத்தில், சொல்லிவைத்தாற்போன்று இருவருமே சொதப்பித் தள்ளினர். பின்பு இருவரும் சுதாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டு சமாளித்தனர். 

ஏஞ்சலா மெர்கல்

ட்ரம்ப்புடன் கைகுலுக்கும் எல்லோருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்று சொல்வதில் தவறில்லை. கை குலுக்கும்போது எதிரே இருப்பவரின் கையைப் பிடித்து, இழுத்து, குலுக்கி பின்னர் அவர்களின் கையைத் தட்டிக் கொடுப்பது ட்ரம்ப்பின் வழக்கமாக இருந்து வருகிறது. அதை எதிர்கொள்பவர்களுக்குத்தான், அந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பது தெரியும். 

ட்ரம்ப்புடன் கை குலுக்க நேர்ந்தால், எதிராளி நேரே புத்தூரில் போய் கைக்கு கட்டுதான் போடவேண்டும். இல்லையென்றால், கை கொடுக்கிற நேரத்தில் கை கொடுக்காமல், நகர்ந்து சம்பந்தப்பட்ட நபரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவார் ட்ரம்ப். 'சிரியா மக்களுக்கு அமெரிக்கா கை கொடுக்கும்' என்று ஒபாமா ஏற்கெனவே சொல்லியது, செல்லாது என்று கூறினார் ட்ரம்ப்

 

'ஒரு நாட்டைக் கை கொடுத்துக் காப்பாத்தத் தெரியாதவர்னு நெனச்சா... நேர்ல ஒருத்தரோட கை குலுக்கக்கூடத் தெரியாதவரா இருக்கிறாரே இந்த ட்ரம்ப்!' எனக் கமென்ட் செய்கிறார்கள் சிரியா மக்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

19732081_10156155938064578_9102708349881

மகேந்திர சிங் தோனி

dhoni_3114554f.jpg
 
 
 

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவருமான மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பிறந்த தினம் இன்று (ஜூலை-7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் (1981). பள்ளிக்கூட நாட்களில் பாட்மின்டன் மற்றும் கால்பந்து ஆட்டங்களில் சிறந்து விளங்கினார். இவரது பயிற்சியாளர் இவரை உள்ளூர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக களம் இறக்கினார்.

* முதன்முதலாக பிஹாரில் 19 வய துக்குட்பட்ட பிரிவில் 1998-ல் விளை யாடினார். அடுத்தடுத்து ரஞ்சி டிராஃபி, தியோடர் டிராஃபி, துலீப் டிராஃபி ஆடியதோடு கென்யா சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஏ பிரிவு ஆட்டங்களிலும் வெளுத்து வாங்கினார். 2004-ல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், துணைக் கேப்டன், மிகவும் வெற்றிகரமான கேப்டன் என உயர்ந்தார். முதன்முதலாக 2007-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் 2008-ல் டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

* ஒரு விக்கெட் கீப்பர் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தது, ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச்கள் செய்தது, 50 ஆட்டங்களுக்கும் மேல் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச சராசரி ரன் விகிதம், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 7-வதாகக் களமிறங்கி அதிகபட்சமாக 139 ரன்கள் குவிப்பு… என அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தியவர்.

* ஒரு இன்னிங்சில் 6 பேரை அவுட்டாக்கி அதிகபட்சமாக ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர், இதுவரை 250-க்கும் மேற்பட்ட கேட்ச்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஸ்டம்ப் அவுட்கள் சாதனை, 6 முறை தொடர் நாயகன் விருது, 20-க் கும் மேற்பட்ட தடவை ஆட்டநாயகன் விருது, 324 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் (204) அடித்தது என இவரது சாதனைப் பட்டியல் நீளமானது.

* மொத்தம் 331 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்… 2007-ல் டி-20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அத்தனை சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்ற தனிப் பெருமைக்குரியவர்.

* மேலும், இவரது தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 2009-ல் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. எதற்கும் பதற்றமோ கோபமோ கொள்ளாமல் அமைதியான மனோபாவம் கொண்டுள்ளதால், ‘கேப்டன் கூல்’ என கிரிக்கெட் உலகம் கொண்டாடுகிறது.

* ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இவரது வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

* தன் மனைவியின் பெயரால் சாக் ஷி அறக்கட்டளையை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார்.

* இன்று 37-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் சென்னையின் எப்சி அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.

 

  • தொடங்கியவர்

குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் டார்க் சாக்லேட் நல்லது..! #WorldChocolateDay

சாக்லேட் என்ற வார்த்தையே வாயில் நீர் ஊற வைத்து விடும். மகிழ்ச்சியின் அடையாளமாகவும், கொண்டாட்டத்தி்ன் வடிவாகவும் இருக்கும் இந்த இனிப்புப் பண்டம் உருவாக்கப்பட்ட நாள் இன்று. இந்த நாளை உலக சாக்லேட் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

டார்க்சாக்லேட்

சாக்கொலேட் அல்லது சாக்லேட் என்பது, கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்கச் சொல்லாகும். கேக், ஐஸ்க்ரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் இது ஒரு முக்கிய இடுபொருளாகப் பயன்படுகிறது.. உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பப்படும் சுவை மணங்களில் இதுவும் ஒன்றாகும். கொக்கோ கொட்டையின் திடப்பொருள் மற்றும் அதன் கொழுப்புப் பாகம் ஆகியவை சேர்ந்ததே இந்த இனிப்புப் பண்டம். இவற்றுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருள்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

வொயிட் சாக்லேட்
கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால்பொருள், நறுமணப் பொருள்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இதில் கொக்கோ திடப்பொருள் பயன்படுத்துவதில்லை. இதில் அதிக அளவு கலோரிகள் இருந்தாலும் மருத்துவக்குணங்கள் மிகமிகக் குறைவே. சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்படுகிறது.

ஸ்வீட்

டார்க் சாக்லேட்
இதில் கொக்கோ திடப்பொருள் அதிக அளவு உள்ளது. மேலும் இதனுடன் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை போன்றவை சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. இதில் கசப்புச் சுவை இருந்தாலும்கூட இது ஆரோக்கியமானதே. காரணம் இதில் சேர்க்கப்படும் கொக்கோ திடப்பொருளில் ஃப்ளவோனல் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்ற உடலுக்கு நன்மையளிக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.

சத்துகள்
ஒரு அவுன்ஸ் சாக்லேட்டில் 168 கலோரிகள் உள்ளன.
கார்போஹைட்ரேட் - 12.8 கிராம்
புரோட்டின் - 2.2 கிராம்
நார்ச்சத்து - 3.1 கிராம்
கொழுப்பு - 12 கிராம்
இவைதவிர மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.

இதில் டார்க் சாக்லேட், வொயிட் சாக்லேட், மில்க் சாக்லேட் என பலவகை இருந்தாலும் அதில் கொக்கோ எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ அந்த அளவு அது ஆரோக்கியமானது. ஆகவே இவற்றை வாங்கும்போது அதில் கொக்கோவின் அளவு 70 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்குவது நல்லது.

இனிப்புப் பொருள்

பொதுவாக இவற்றைச் சாப்பிடும் குழந்தைகளிடம் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல என்பார்கள். அது உண்மை தானா?
உணவியல் நிபுணர் யசோதரை கருணாகரனிடம் கேட்டோம்.

``இது நம்ம ஊர் உணவுப்பொருள் இல்லை என்றாலும், இன்றைய சூழலில் நம் கலாசாரத்தோடு ஒன்றிவிட்டது. ஆகவே இதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சாக்லேட்டில் கொக்கோவில் தயாரிக்கப்படும் டார்க் சாக்லேட்தான் நல்லது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் நல்ல ஒரு உணவுப்பண்டமாகும்.

சாதாரண சாக்லேட்டைச் சாப்பிடுவதால் எந்த ஒரு பயனும் இல்லை. ஆனால் டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. மேலும், மற்ற சாக்லேட்டுகளைவிட டார்க் சாக்லேட்டில் கலோரி அதிக அளவில் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் வயதானவர்களும் சாப்பிட உகந்தது.

இது நல்ல ஒரு உணவுப்பொருள்தான் என்றாலும் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறியவர் முதல் பெரியவர் வரை வாரத்தில் இரண்டு நாள் சாப்பிடலாம். அது ஒருநாளைக்கு 75 கிராம் அளவு இருப்பது நல்லது.

சாக்லேட் சாப்பிடுவதால் பற்கள் பாதிக்கப்படும்; ஆகவே அது சாப்பிட உகந்ததல்ல என்று பல் மருத்துவர்கள் எச்சரிப்பார்கள். பொதுவாக நாம் எந்த ஒரு உணவுப்பொருளை உண்டதும் அதன்பிறகு வாய் கொப்பளிக்க மறக்கக்கூடாது. குறிப்பாக, சாப்பிட்டதும் வாய் கொப்பளித்துவிட்டால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு இடமில்லை...'' என்கிறார் அவர்.

 

கண்ணைக்கவரும் விதத்தில் பல்வேறு வண்ணங்களில் இவை இருந்தாலும் கொக்கோ நிறைந்த டார்க் சாக்லேட்தான் உண்ணத்தகுந்தது என்று கூறப்படுவதால், அவற்றை விரும்பிச் சாப்பிடுவோம். இதய பாதிப்புகளைக் குறைப்பதிலும் உடல்பருமன் தவிர்க்கவும் மன அழுத்தம் குறைக்கவும் மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கவும் சருமத்தைப் பாதுகாப்பதிலும் சர்க்கரை நோய் தடுப்பதிலும் டார்க் சாக்லேட்டின் சிறப்பாக செயலாற்றுகிறது என்பது கூடுதல் தகவல். உலக சாக்லேட் தினமான இன்று முதல் நலம் காக்கும் சாக்லேட்டுகளை அளவுடன் உண்போம்; மற்றவற்றைத் தவிர்ப்போம்.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

எவ்வளவு காலத்துக்கு ஜம்போ ஜெட்டுகள் பறக்கும்?

உங்களுக்கு விமானங்களில் ஆர்வம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், உங்களுக்கு ஜம்போ ஜெட்டை தெரியாமல் இருக்காது.

அதன் பிரம்மாண்ட உருவமும், தனித்துவமான பெரிய திமிலும் எழுபதுகளில் விமான உலகில் பெரும் மறுமலர்ச்சியாக பார்க்கப்பட்டவை.

ஆனால், அந்த பெரிய விமானத்தின் விற்பனை குறைந்து போனதால், தயாரிப்பையும்
குறைத்துவிட்டார்கள்.

மிகப்பெரிய விமானங்களுக்கான காலமும் முடிவுக்கு வருகிறது. ஆகவே ஜம்போ ஜெட்டுகளின் எதிர்காலம் என்ன?

  • தொடங்கியவர்

எம்.எஸ். தோனி 36 (புகைப்படத் தொகுப்பு)

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பாவனாக பார்க்கப்படுபவரும், வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவருமான மகேந்திர சிங் தோனி வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வயது 36.

ஐசிசியின் மூன்று முக்கிய போட்டிகளில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு வழிநடத்திய கிரிக்கெட் கேப்டன்தான் மகேந்திர சிங் தோனி. இந்த வெற்றிப்பாதையின் உச்சத்தில் இருந்தபோது, கேப்டன் நிலையில் இருந்து அவர் விலகினார்.

தற்போது சிறந்த பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இந்திய அணிக்கு சிறந்த பங்காற்றி வருகிறார். அவரது கிரிக்கெட் பயணத்தில் வெளியான சில புகைப்படங்களை பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிரிக்கெட் களத்திற்கு அப்பாற்பட்டு, அவருடைய ஸ்டைலுக்காக அறியப்படுபவராகவும் தோனி விளங்குகிறார்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிரிக்கெட் விளையாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டவராக தோனி அறியப்படுகிறார்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சக விளையாட்டு வீரர்களின் நம்பகரமான ஆதரவை பெற்றது தோனியின் வலிமைகளில் ஒன்று.

தொடர்புடைய செய்திகள்

மறக்க முடியாத தோனியின் அதிரடி ஆட்டங்கள்

தலைமைப் பண்பால் அணிக்கு வெற்றிகளை ஈட்டித் தந்த மிஸ்டர் கூல் கேப்டன்

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

களத்திற்கு வெளியே உள்ள கிரிக்கெட் அதிகாரிகளோடு தோனி சிறந்த உறவை பேணுபவர்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிரிக்கெட் உலகில் நுழைவதற்கு முன்னால் தோனி ஒரு கால்பந்து விளையாட்டு பிரியர். கால்பந்தில் கோல் கீப்பராக விளையாடியுள்ளார்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிரிக்கெட் விளையாட்டில் முடிவெடுப்போர் வழக்கமாகவே மிக குறைவாகவே புரிந்து கொள்ளப்படுவர். ஆனால், தோனி எடுத்த முடிவுகளை கிரிக்கெட் அணியினர் மிகவும் நம்பி விளையாடினர்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒய்வு பெறுவதற்கு முன்னால், தன்னுடைய வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்ட முதலாவது கிரிக்கெட் வீரராகவும் மகேந்திர சிங் தோனி மாறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த படத்தில் காண்பதுபோல பந்தை அடித்து விளாசுவதுதான் தோனியின் புகழ்பெற்ற “ஹெலிகாப்டர் ஷாட்”.

http://www.bbc.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.