Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மாற்றுத்திறனாளி மகள் விளையாடுவதற்காக தீம் பார்க் கட்டிய பாசக்கார தந்தை

அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கும் கோர்தன் ஹர்ட்மன், குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தார். சில குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது மகள் மோர்கன் அவர்களிடம் பழக விரும்பி சென்றபோது, அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

மொர்கன் வொண்டர்லேண்டில், பெற்றோர்களுடன் மொர்கன் Image captionமொர்கன் வொண்டர்லேண்டில், பெற்றோர்களுடன் மொர்கன்

மாற்றுத் திறனாளியான ஒருவருடன் நடந்து கொள்வது பற்றி அவர்களுக்குத் தெரியாததால்தான் அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றதற்கு காரணம் என்பதை ஹர்ட்மன் புரிந்துக் கொண்டார். ஏனெனில் அவரது 12 வயது மகள் மொர்கனுக்கு ஐந்து வயது குழந்தைக்கு இருக்கும் மனவளர்ச்சியும், 'ஆட்டிசம்' குறைபாடும் இருந்தது.

இந்த சம்பவம் அவருக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

"மொர்கன் அற்புதமானவள். எப்போதும் புன்சிரிப்புடன் இருக்கும் அவள், கட்டியணைத்து அன்பை தெரிவிப்பாள். ஆனால் பல இடங்களுக்கு அவளை அழைத்துச் செல்லமுடியவில்லை" என்று அவர் ஆதங்கத்துடன் கூறுகிறார்.

மகளை எங்கு அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும், மற்றவர்கள் அவளுடன் இயல்பாக இருக்கும் இடம் எது என்று தெரிந்து கொள்வதற்காக, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோரிடம் ஹர்ட்மனும் அவரது மனைவி மேகியும் ஆலோசனை கேட்டபோது, அப்படியொரு இடமே இல்லை என்று தெரியவந்தது.

தந்தையுடன் மொர்கன்

எனவே, 2007ஆம் ஆண்டு மகளை அழைத்துச் செல்வதற்கு ஏற்ற ஓர் இடத்தை தானே கட்ட தீர்மானித்தார் ஹார்ட்மன்.

சக்கர நாற்காலி உதவியுடன் இயங்கும் ஒரு பெண், மாற்றுத் திறனாளி அல்லாத மற்றொருவரிடம் சென்று ஒன்றாக விளையாடுவதை பார்த்தேன், அதைத்தானே நான் விரும்பினேன்!" கோர்தன் ஹர்ட்மன், மொர்கனின் தந்தை

வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், 2005ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தை விற்றுவிட்டு, 'கோர்டன் ஹார்ட்மன் குடும்ப அறக்கட்டளை'யை தொடங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் அந்த தன்னார்வ அறக்கட்டளை மூலம், "அனைவரும் அணுகக்கூடிய உலகின் முதல் அல்ட்ரா தீம் பார்க் எனப்படும் கேளிக்கைப் பூங்காவை” உருவாக்கினார்.

"அனைவரும் பயன்படுத்தக்கூடிய தீம் பார்க்கை உருவாக்க விரும்பினோம். அங்கு பல்வேறு சிறப்புத் தேவைகள் அவசியமாகும். மாற்றுத் திறனாளிகளும் விளையாடலாம்" என்கிறார் ஹர்ட்மன்.

மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் உடல் குறைபாடு உடையவர்கள், குறைபாடு இல்லாதவர்கள், சிறப்பு கவனம் தேவைப்படுபவர்கள் என பலரையும் கலந்தாலோசித்து, பல்வேறு தரப்பினரின் தேவைகளை தெரிந்துக் கொண்டு தீம் பார்க்கை கட்டியமைத்தார்.

டெக்ஸாசின் சேன் அன்டொனியோவில் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த தீம் பார்க் அமைந்துள்ளது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள் Image captionசிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள்

34 மில்லியன் டாலர் (26 மில்லியன் பவுண்ட்) செலவில் கட்டப்பட்ட 'மொர்கன் வொண்டர்லாண்ட்' என்ற அந்த புதிய தீம்பார்க் 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஃபெர்ரிஸ் சக்கரம், சாகச விளையாட்டரங்கம், மினியேச்சர் ரயில் ஆகியவை கொண்டது இந்த தீம் பார்க். முதன்முறையாக இத்தகைய இடங்களுக்கு வந்து, இவற்றை அனுபவிக்க முடிந்தது என பார்வையாளர்கள் ஹர்ட்டனைப் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள், மேலும்- கீழுமாக அசையும் சக்கர நாற்காலிகளுடன் இணைக்கப்பட்ட விலங்கு வடிவ ரதங்கள் என குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் வகையில் தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முதல்முறை அவற்றை பயன்படுத்தும்போது, மொர்கன் எச்சரிக்கையாக இருந்ததை ஹார்ட்டன் சுட்டிக்காட்டுகிறார்.

சில வழிகளில் நாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் அடிப்படையில் ஏதாவது ஒரு வழியில் ஒன்றே என்பதை மக்கள் உணர இந்த தீம் பார்க் உதவுகிறது" கோர்தன் ஹர்ட்மன், மொர்கனின் தந்தை

"முதலில் மொர்கன் மிகவும் அச்சப்பட்டாள். ஏன் அது சுற்றுவதும், விலங்கு பொம்மைகள் மேலும்-கீழும் செல்வதும் அவளுக்கு புரியவில்லை" என்கிறார் அவர்.

"முதலில் பக்கத்தில் நின்றாள், பிறகு விலங்கின் மீது அமர்ந்தாள். ஆனால் அதை இயக்கவில்லை. நாளடைவில் இயல்பான பிறகு, அச்சத்தில் இருந்து வெளிவந்த பிறகு இயக்கினோம். மெதுவாக ஆனால் பெரிய அளவில் மொர்கனிடம் மாற்றங்கள் ஏற்பட்டன.

மொர்கன் வொண்டர்லாண்ட் திறக்கப்பட்ட பிறகு, 67 நாடுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வந்துள்ளனர். அங்கு பணிபுரிபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாற்றுத் திறனாளிகள். மொர்கன் வொண்டர்லாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி இலவசம்.

"மொர்கன் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். அவளுக்குத் தேவையான பல விசயங்கள் கிடைத்துவிட்டன. சிறப்புத் தேவைகள் தேவைப்படும் சவாலோடு வருகின்ற பிறருக்கு கட்டணம் என்ற சுமையை சுமத்த விரும்பவில்லை" என்கிறார் ஹர்ட்மன்.

"ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் (750 ஆயிரம் பவுண்ட்) அளவுக்கு நட்டம் ஏற்படும் என்பது தெரியும், அவற்றை நன்கொடை மற்றும் வர்த்தக பங்காளிகளிடம் இருந்து சமாளிக்க வேண்டும்" என்று அவர் சொல்கிறார்.

சக்கர நாற்காலியில் ஊஞ்சலாடும் பெண் Image captionசக்கர நாற்காலியில் ஊஞ்சலாடும் பெண்

'மொர்கன் இன்ஸ்பிரேஷன் ஐலேண்ட்' இந்த ஆண்டு திறக்கப்பட்டது, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் முழுமையாக அணுகக்கூடிய நீர் பூங்காவாக இந்த தீம் பார்க் விரிவாக்கப்பட்டது.

"சக்கர நாற்காலி மிகவும் சூடாக இருப்பதால், அருகிலேயே ஒரு நீர்பூங்காவை உருவாக்கினோம்" என்று ஹார்ட்மன் கூறுகிறார்.

தசை பிரச்சனை கொண்டவர்கள் பயன்படுத்த ஏதுவாக அந்த தீவின் ஒரு பகுதியில் சூடான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரிகளில் அல்லாமல் அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும் நீர்ப்புகா மோட்டார் சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த தீம் பார்க்கை உருவாக்க செலவான தொகை 17 மில்லியன் டாலர் (13 மில்லியன் பவுண்ட்).

ஸ்பிலாஷ் பார்க் ஒன்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது Image captionஸ்பிலாஷ் பார்க் ஒன்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

"சிறப்பு கவனம் தேவைப்படும் தனது மகன் இதுவரை தண்ணீரில் விளையாடியது இல்லை" என்று சொல்லி இன்ஸ்பிரேஷன் தீவுக்கு வந்த ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார் என்று சொல்கிறார் ஹர்ட்மன். ஒன்றல்ல, ஓராயிரம் நன்றிகள் தொடர்ந்து ஹர்ட்மனுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த தீம் பார்க்கிற்கு வரும் நான்கில் மூவர் மாற்றுத் திறனாளிகள் அல்ல என்பதை குறிப்பிட்டுச் சொல்லும் ஹர்ட்மன், தனது விருப்பம் நிறைவேறிவிட்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

"சில வழிகளில் நாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் அடிப்படையில் ஏதாவது ஒரு வழியில் ஒன்றே என்பதை மக்கள் உணர இது உதவுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"சக்கர நாற்காலி உதவியுடன் இயங்கும் ஒரு பெண், மாற்றுத் திறனாளி அல்லாத மற்றொருவரிடம் சென்று ஒன்றாக விளையாடுவதை பார்த்தேன், அதைத்தானே நான் விரும்பினேன்!"

மாற்றுத் திறன் கொண்டவர்களும், மற்றவர்களும் மொர்கன் இன்ஸ்பிரேசன் தீவில் ஒன்றாக விளையாடலாம் Image captionமாற்றுத் திறன் கொண்டவர்களும், மற்றவர்களும் மொர்கன் இன்ஸ்பிரேசன் தீவில் ஒன்றாக விளையாடலாம்

தங்கள் பகுதியிலும் இதுபோன்ற தீம் பார்க்குகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்தாலும், சிறப்புத் தேவை கொண்டவர்களுக்கு கல்வி வசதிகளை சேன் அன்டோனியோவில் ஏற்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தவிருக்கிறார்.

"மொர்கன் வொண்டர்லேண்ட் போன்று, தீம் பார்க் உருவாக்கும் பல்வேறு முயற்சிகளில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்”, என்று அவர் கூறுகிறார்.

தீம் பார்க்கில் விளையாடும் மொர்கன் அங்கு பிரபலராகிவிட்டார்.

"என் மகள் இங்கு வரும்போது, அவள் தான் அனைவரின் ஈர்ப்பு மையம். மொர்கனுடன் பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனைவரும் விரும்புவார்கள், அவளுக்கும் அது பிடித்தமானது" என்கிறார் பாசத் தந்தை.

தீம் பார்க்கின் சில இடங்களில் சுடுநீர் பயன்படுத்தப்படுகிறது Image captionதீம் பார்க்கின் சில இடங்களில் சுடுநீர் பயன்படுத்தப்படுகிறது

தற்போது 23 வயதாகும் மொர்கனின் உடல்நிலை சீரடைந்து வருகிறது.

"மொர்கன் இப்போது பேசுகிறாள், பல அறுவை சிகிச்சைகள் மூலம் உடல் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. அவள் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமைப்படுகிறோம்" என்கிறார் மொர்கனின் தந்தை.

தன்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியைப் பற்றி அறியாமல், மொர்கன் அங்குள்ள ஊஞ்சல்களிலும், மணல் பகுதிகளிலும் மகிழ்வாக விளையாடுகிறார்.

"தன்னுடைய பெயரைக் கொண்டது தீம் பார்க் என்று மொர்கனுக்கு தெரியும், ஆனால், அதன் பின்னணியையும், தன்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியின் ஆழத்தையும் அவளால் புரிந்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்" என்கிறார் ஹர்ட்மன்.

"வாழ்க்கையில் விஷயங்களை எப்படி கையாண்டார் என்பதையோ, அவள் கொடுத்துள்ள உண்மையான உத்வேகத்தையோ மொர்கன் உணரவில்லை" என்கிறார் மொர்கனின் அன்பான அப்பா.

http://www.bbc.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு ( 30 ஜூலை - 5 ஆகஸ்ட்)

இந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

Prince Philip raises his hat

பொது கடமைகளிலிருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெறுவதற்குமுன், அவர் தனியாக கலந்து கொண்ட இறுதி கூட்டத்தில் அரச கடற்படையினர்களை இளவரசர் சந்தித்தார். 96 வயதாகும் எடின்பர்க் கோமகன் அரசியாருடன் சேர்ந்து சில நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

 

A protester spreads his arms out as he runs in front of a fire.

பிரேசிலின் வீடற்ற பணியாளர்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், அந்நாட்டு அதிபர் மிஷெல் டெம்மருக்கு எதிராக சவும் பெளவ்லோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் எதிர்வினை ஆற்றினார். அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், பொருளாதார சீர்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Theresa May and The Duke and Duchess of Cambridge watch poppies fall

கேம்பிரிட்ஜ் கோமகன், அவரது மனைவி மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ஆகியோர் பாஷென்டேல் போரின் 100வது ஆண்டு நினைவுகூறல் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது, பெல்ஜியத்தின் ஈப்ராவில் உள்ள மெனின் கேட்டின் மாடியிலிருந்து வண்ணக் காகிதங்கள் கீழே விழுந்தன.

 

A priest sprays water as troops walk by

 

ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபூல் நகரில் உள்ள ராணுவ தளத்தில் ரஷ்ய படையினருக்கு பழமைவாத மதகுரு ஒருவர் ஆசீர்வாதம் வழங்குகிறார்.

A graffiti artist work on a huge mural of John Lennon as he takes part in Upfest, a street art and graffiti festival in Bristol.

பிரிஸ்டலில் ஒரு வீதி ஓவிய திருவிழாவின்போது, அதன் அங்கமாக ஜான் லெனனின் மிகப்பெரிய சுவர் ஓவியம் ஒன்றை இந்த கிராஃபிட்டி கலைஞர் வரைகிறார். பொதுவெளி சுவர்களில் ஓவியம் வரைவதே கிராஃபிட்டி ஓவியமாகும்.

A woman paints sculptures of goddesses

திரிபுராவில் உள்ள அகர்தலாவில், இந்திய கலைஞர் ஒருவர் இந்து மதக்கடவுள் துர்கையின் களிமண் சிலையை தயாரித்து வருகிறார்

Horse and riders take part in the Riding of the Marches ford on the River Esk, alongside the Roman Bridge in Musselburgh, East Lothian, during the annual Musselburgh Festival

ஸ்காட்லாந்தில் உள்ள கிழக்கு லோத்தியனில், முஸெல்பர்க் திருவிழாவில் பங்கேற்ற குதிரைகள் மற்றும் குதிரை வீரர்கள்.

Dancers in costumes perform at a festival

ஐவரி கோஸ்டின் அபிட்ஜானில் 8வது ஃபிராங்கோபோனி விளையாட்டின் நிறைவு விழாவில் நடனமாடும் நடன கலைஞர்கள்.

 

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'ஒரு கத சொல்ட்டா சார்?' - டாம் அண்ட் ஜெர்ரி சொல்லும் நண்பேன்டா கதை

 

எலிக்கும் பூனைக்குமான சண்டைக்கு நம் சண்டைகளை விட வயது அதிகம். அந்த 'நீயா நானா' குடுமிப்பிடியை கேலிச் சித்திரத்தின் வாயிலாக தந்தவர்கள்தான் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோஸப் பர்பேரா. நம் குழந்தைப் பருவத்தை நினைத்து நெகிழவும், மகிழவும் இந்தக் கார்ட்டூனைப் போல உதவும் கருவி வேறில்லை. டாம் என்றழைக்கப்படும் பூனை, ஜெர்ரி என்றழைக்கப்படும் எலியைத் துரத்தித் துரத்தி பல்பு வாங்கும். நிஜ வாழ்க்கையில் பூனைதான் எல்லோருக்கும் பெட், எலியைக் கண்டால் கட்டையை தூக்கிப் போட்டு கொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் எல்லோருக்குமே தோன்றும். ஆனால் இந்த கார்ட்டூனில் எல்லோருக்கும் ஃபேவரைட் நம்ம ஜெர்ரிப் பயதான். அத்தகைய டாம் அண்ட் ஜெர்ரி உருவான கதையைதான் இக்கட்டூரையில் காணப்போகிறோம். தற்பொழுது மீசை வைத்த 90ஸ் கிட்ஸுக்கு சமர்ப்பணம். 

ஹன்னா, பர்பேரா டாம் அண்ட் ஜெர்ரி

'டாம் அண்ட் ஜெர்ரி' உருவான கதை :

டாம் ஜெர்ரி

ஒரு நாள் ஹன்னா அவரது வீட்டுக் கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பூனை இவரை நோக்கிப் பாய்ந்தது. இதைப் பார்த்த பதட்டத்தில் வீடு முழுக்க தலை தெறிக்க ஓடியிருக்கிறார். பதட்டம் குறைந்ததும், 'நம்ம ஏன் இதையே கார்ட்டூன் கான்செப்டா மாத்தக் கூடாது?' என்ற தெளிவு பிறக்க, டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் பூனைக்கும் எலிக்கும் உயிர் கொடுத்தார். கான்செப்ட்டை உடனே ஸ்க்ரிப்டாக மாற்றும் வேலையில் பர்பேரா உதவியுடன் இறங்கினார். எலியை வில்லனாக பார்த்த மக்களிடையே ஹீரோவாக காட்டிவிடலாம் என்ற முயற்சியில் இருவரும் மும்மரமாக வேலையைத் தொடங்கினர். எலியைத் துரத்தும் போது பூனை வாங்கும் அடி, அந்த சமயத்தில் நடக்கும் ரகளைகள், சுற்றியிருக்கும் பொருட்கள் உடைவது, பூனைக்கு ஏற்படும் அடியால் அதனுடைய உடலமைப்பு மாறுவது என பல கோணங்களில் யோசித்து சுடச்சுட ஒரு ஸ்க்ரிப்ட்டை உருவாக்கினார்கள். அதே சூட்டில் அக்கேலிச் சித்திரத்துக்கு 'Puss Gets The Boot' என்று பெயரும் வைத்தனர். 1940ல் எம்.ஜி.எம்மின் உதவியோடு கார்ட்டூன் திரையிடப்பட்டது. ஆனால் தொடக்கமே தோல்விதான். முயற்சியை கைவிடாமல் கார்ட்டூனுக்கு வேறு பெயர் வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அதற்காக போட்டி ஒன்றை நடத்தினர். அதில் பங்கேற்ற ஜான் கார் என்பவர் சொன்ன பெயர்தான் 'டாம் அண்ட் ஜெர்ரி'. கேட்டவுடன் பச்சக்கென பிடித்துவிட பெயர் வைத்து பிள்ளையார் சுழி போட்டார்கள். பெயர் மாற்றங்களுக்கு ஏற்ப ஸ்க்ரிப்ட்டையும் ப்ரொடக்‌ஷன் வேலைகளையும் மெருகேற்றி 'டாம் அண்ட் ஜெர்ரி' என்ற பெயரில் கார்ட்டூனை ஒளிபரப்ப அது முதல் பாலிலேயே ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது.  டாமுக்கு ஜாஸ்பர் என்றும், ஜெர்ரிக்கு ஜிங்க்ஸ் என்றும் வேறு பெயர்களும் உள்ளன. 

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி :

கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது அதில் சில மாற்றங்களை புகுத்தி ரசிகர்களுக்கு போரடிக்காமல் பார்த்துக்கொண்டனர். இந்த ரகளையான மாற்றங்கள் காரணமாகவே ஷோ ஆல்டைம் ஹிட்டானது. இந்த ஜெனரேஷன் குழந்தைகளுடன் பேச்சுக் கொடுத்தால், 'ஷேப் ஆஃப் யூ தெரியுமா?', 'டெஸ்பாஸிட்டோ தெரியுமா?', 'அட்லீஸ்ட் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலாவது தெரியுமா ப்ரோ?' என்று கேட்கும் கேள்விகளை சமாளிக்கவே முடியவில்லை. 'நான் கடைசியா பார்த்த கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி பா'னு சொன்னா எகத்தாளச் சிரிப்புதான் பதிலுக்குக் கிடைக்கும். 90ஸ் கிட்ஸ் இன்னமும் போர் அடிச்சா பாக்குற கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரிதான். என்ன மக்களே உண்மை தானே?. எத்தனை விருதுகளை வாங்கிக் குவித்திருந்தாலும், நாளுக்கு நாள் அசராமல் தங்களை அப்டேட் செய்துகொண்டே இருந்ததுதான் டாம் அண்ட் ஜெர்ரி நம்மை இவ்வளவு தூரம் பாதிக்கக் காரணம். 

டாம் அண்ட் ஜெர்ரியில் இவர்களும் ஹீரோதான் :

டாம் அண்ட் ஜெர்ரி

பல எபிசோடுகளுக்குப் பின் புது புது கதாபாத்திரங்கள் சேரத் தொடங்கியது. ஸ்பைக் என்ற புல் டாக்கும் எல்லோருக்கும் ஃபேவரட்டாக இருந்தது. ஜெர்ரி ஆபத்தில் மாட்டிக் கொண்டால் முதலில் வந்து நிற்பது ஸ்பைக்தான். திடகாத்திரமான உடற்கட்டு, கூர்மையான பற்கள், கழுத்தில் ரவுடி செயின், இதுதான் ஸ்பைக்கின் தோற்றம். கொஞ்ச நாள் கழித்து ஸ்பைக்கோடு சேர்த்து குட்டி ஸ்பைக்கும் கலக்கியது. பிறகு, ஜெர்ரியின் நண்பனாகவும், சமயத்தில் எதிரியாகவும் வரும் பூனை கேரக்டர்தான் பட்ச்.  புத்திசாலி ஜெர்ரியோ டாமுக்கும், பட்ச்சுக்கும் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும். மஞ்சள் குருவியாக வரும் குவாக்கர், ஆரஞ்ச் வண்ணப் பூனை லைட்னிங், இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கதாபாத்திரம் டாமின் முதலாளி அம்மா மேமி ஷூஸ். மேமி வீட்டில்தான் டாம் செல்லப் பிராணியாக வளரும். மேமி வீட்டில் அட்ராஸிட்டி செய்யும் ஜெர்ரியைப் பிடித்தால் டாமுக்கு சிக்கன் பீஸ், இல்லையென்றால் அடித்து துவைத்துவிடுவார் மேமி. ஒரு கட்டத்தில் டாமும் ஜெர்ரியும் கூட்டு சேர்ந்து சிக்கனை கைப்பற்றிய எபிசோடுகள் எல்லாம் கூட இருக்கிறது. முக்கியமாக முதலாளி அம்மா மேமியின் முகத்தைக் காட்டாமலே கடைசி வரை கால்களை மட்டுமே காட்டி வந்ததுதான் இந்த கார்ட்டூனில் பயன்படுத்திய நுணுக்கம். லேட்டஸ்ட்டாக இப்படித்தான் மேமியின் முகம் இருக்கும் என்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகியது.  

என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் :

டாம் அண்ட் ஜெர்ரி

 

இந்த கட்டுரையின் முக்கியமான நோக்கமே இன்று ஃப்ரெண்ட்ஷிப் டே. பல எபிசோடுகளில் இவங்க ரெண்டு பேரும் அடிச்சு மல்லுக்கட்டுவதைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்திருந்தாலும், ஒரு சில எபிசோடுகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து கலக்கிய நிகழ்வுகள் நெகிழ வைக்கும். அதுதான் நமக்கான மாரல் மக்களே. என்னதான் நண்பன் கூட அடிச்சு உருண்டாலும் ஆபத்துனு வந்தா கைகொடுக்கிற முதல் ஆள் நாமதானே! ரெகுலரா கொலம்பஸ் கொலம்பஸ், முஸ்தபா முஸ்தபானு எல்லாம் பாடாம டாம் அண்ட் ஜெர்ரி வழியா இந்த நண்பர்கள் தினத்தை கொண்டாடுவோம் மக்கா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

அதிவேக மனிதனை வென்றதுக்கு மைதானத்திலேயே மரியாதை செய்த ஜஸ்டின் கேட்லின்!

அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் உலக தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை வென்ற ஜஸ்டின் கேட்லின் உசைன் போல்ட்டுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

  • தொடங்கியவர்

மரணம் மற்றும் வயோதிகத்தை நம்மால் தடுக்க முடியுமா..? திகிலூட்டும் அறிவியல் முயற்சிகள்

 
 

மரணம், முதுமை - தவிர்க்க முடியாத ஒன்றா?

முயற்சி 1: அது மரணம் அல்ல, உறக்கம்!

சில்வியா மற்றும் ஆலன் சின்க்ளைர் தம்பதிகள் 40 வருடங்களாகக் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு 4 குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள். அதுமட்டுமில்லாமல், பல குழந்தை பராமரிப்பு இல்லங்களை பார்த்துக் கொண்டவர்கள். சஸ்ஸேக்ஸ் கடற்கரையை ஒட்டிய வீட்டில் இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்த போது, 66 வயதான சில்வியாவிற்கு நுரையீரல் புற்றுநோய், அதுவும் முற்றிய நிலை என்று தெரிய வருகிறது. மருத்துவம் கையை விரிக்க, ஒரு சில வாரங்களில் மரணம் சில்வியாவை அழைத்துச் சென்று விடுகிறது. ஆலனுக்கும் அவரது குடும்பத்திற்கும் இது ஒரு எதிர்பாராத பூகம்பம்! ஒருவரை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. ஒரு மனைவி, ஒரு நல்ல தாய், ஒரு அன்பான பாட்டி என்று மூன்று பேர் அன்று மரணித்ததாகத் தான் கருதப்பட்டது. ஆம், சில்வியா எல்லாமுமாய் இருந்தார்!

அவரது இறப்பு, அந்தக் குடும்பத்திற்கு வேண்டுமானால் பெரிய இழப்பு. ஆனால் அந்த மருத்தவமனையின் பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த நண்பர்கள் கூட்டத்திற்கு இல்லை. அவர்கள் கண்களில் ஒரு துளி கண்ணீர் இல்லை. அழுவதற்கான நேரம் இதுவல்ல என்று உணர்ந்தவர்கள் அவர்கள். இறப்புச் செய்தி வந்தவுடன் தாமதிக்காமல் களத்தில் இறங்கினார்கள். தனி ஆம்புலன்ஸ் ஒன்றில் சில்வியாவின் உடலை பெற்றுக் கொண்டார்கள். உடல் கெட்டுப்போகாமல் இருக்கச் செய்யப்படும் எம்பாமிங் (embalming) செய்முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஐஸ் பெட்டியில் வைக்கும் முன், அமிலத்தை முறிக்கத் தொண்டை வழியே ஒரு திரவம், மார்பெலும்பிற்குத் தகுந்த மருத்துவம், CPR என அனைத்தும் செய்தாயிற்று. இரத்தத்தில் Anti-Freeze சொல்யூஷன் கலக்கப்பட்டு லண்டன் மாநகரத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.

பெட்டியில் வெப்பநிலை -70 டிகிரியை தொட்டவுடன், உடல் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்பு, அங்கே ஒரு உலோக பெட்டகத்தில் க்ரையோஜெனிக் முறையில் உடல் பதப்படுத்தப்பட்டது. அதே அறையில் தான் அவரின் முன்னோர்களின் உடல்களும் அதே முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன. 1977ஆம் வருடம் இறந்தவர்களின் உடல் கூட கெடாமல் இன்னும் பாதுகாக்கப்படுகிறதாம். இவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், இவர்கள் இதற்காக நம்புவது கடவுளை அல்ல. நேரம் வரும்போது, சரியான தொழில்நுட்பம் வரும்போது, அறிவியலால் இறப்பு என்ற ஒன்றை நிச்சயம் மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள் இவர்கள். அதற்காகவே அனைத்து உடல்களும் பாதுகாக்கப் படுகின்றன. இது மரண கடிகாரத்தை நகராமல் நிறுத்தி வைக்கும் அதிசயம்!

முயற்சி 2: மறுபிறப்பு மருத்துவம்

செல்கள்

நீங்கள் ஒரு கார் வைத்திருக்கிறீர்கள். அதன் எதோ ஒரு ஸ்பேர் பார்ட் செயலிழந்து விடுகிறது, உடனே வேறு ஒரு புது பார்ட்டை கடைகளில் வாங்கி காரை சரி செய்வதில்லையா? உங்கள் மடிக்கணினியில், டேட்டாவை பேக்கப் எடுத்து வைப்பீர்கள். ஹார்ட் டிஸ்க்கிற்கு எதாவது சேதம் ஏற்பட்டு டேட்டா காணாமல் போனால், பேக்கப் டேட்டாவை எடுத்துக் கொள்வது இல்லையா?  அதையே தான் மனித உடலில் அறிவியல் மூலம் இங்கே செய்ய முற்படுகிறார்கள். இதில், முன்னரே பல படிகளைக் கடந்து விட்டோம் என்பதும் உண்மை. மீளுருவாக்கம் என்ற முறைப்படி, சேதமடைந்த மற்றும் செயலிழந்த உறுப்புகள் அனைத்திற்கும் அந்த நோயாளியின் ஸ்டெம் செல்கள் வைத்தே புத்துயிர் ஊட்டுகிறார்கள். முழுக்க முழுக்க பரிசோதனை கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இரத்தக் குழாய்கள், சிறுநீர்ப்பை, பித்தப்பை போன்றவற்றை பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளது.

முயற்சி 3: அழிவில்லா டிஜிட்டல் மனிதன்

டிஜிட்டல் மனிதன்

அழிவில்லா மனிதர்களை உருவாக்க எதற்கு உயிரியல் மற்றும் மருத்துவம் பின்னால் ஓடுகிறார்கள்? டிஜிட்டல் டெக்னாலஜி பக்கம் வாருங்கள் என்று அழைக்கிறார் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியான ரே குர்சுவில். நம் மூளையில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் டவுன்லோடு செய்து கணினியில் சேமித்து வைத்து விட்டால் போதும். பின்னாளில், இதை ஒரு ரோபோவிற்கு அப்லோட் செய்துவிட்டால், உங்களுக்கும் உங்கள் நினைவுகளுக்கும் என்றும் அழிவு இல்லை. 2045ஆம் ஆண்டிற்குள் இது நிச்சயம் சாத்தியம் என்று அதிரவைக்கிறார் ரே. இவர் ஏதோ உளறுகிறார் என்று நினைத்து விட வேண்டாம். மூன்று அமெரிக்கா ஜனாதிபதிகள் இதுவரை ரேவின் ஆராய்ச்சிகள் மற்றும் முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள். முத்தாய்ப்பாக, பில்கேட்ஸ், “செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியைக் கணிப்பதில் ரேவை மிஞ்சிய ஆள் இந்த உலகத்திலேயே இல்லை” என்று புகழாரம் சுட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது இருக்கட்டும், இந்த டவுன்லோடிங் சமாச்சாரத்தை அப்போதே தனது ‘பேசும் பொம்மைகள்’ நாவலில் சுஜாதா எழுதியிருந்தார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்?

முயற்சி 4: வயோதிகம் ஒரு வியாதி தான், அதைக் குணப்படுத்தலாம்

மரணம், முதிர்ச்சி

மரணத்தைத் தடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். பலருக்கு இளமையோடு என்றும் வாழவேண்டும் என்பதே கனவு. எலிசபெத் பரேஷ் ஒன்றும் விதிவிலக்கல்ல. மார்க்கண்டேயனைப் போல் என்றும் இளமையோடு இருப்பதே அவர் எண்ணம். அவரைப் பொறுத்தவரை, வயது முதிர்ச்சி என்பது ஒரு வியாதி. கேன்சர், இருதய நோய் போல இந்தக் கொடிய வியாதியையும் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார். அதற்காக அவர் நடத்தும் ஒரு நிறுவனம் தான் பயோவிவா (BioViva). அதில் புகழ்பெற்ற அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் மற்றும் உயிரியல் நிபுணர் சிந்தியா கென்யோன் அவர்களின் ஆராய்ச்சிகளைச் சுற்றி பரிசோதனைகள் செய்து வருகின்றனர். அதன்படி, நம் உடம்பின் செல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயலிழந்து விடுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இதை ஜீன் தெரபி மூலம் மாற்றி அமைக்க முடியும். இப்படிச் செய்வதால், வயதான பிறகு ஏற்படும் எண்ணற்ற உடல் உபாதைகளை இல்லாமல் செய்து விட முடியும் என்று கூறுகிறார்கள். ஸ்பானிஷ் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் இந்த ஜீன் தெரபியை பயன்படுத்தி ஒரு எலியின் ஆயுளை 40 சதவீதம் வரை உயர்த்திக் காட்டியிருக்கிறதாம்.

இந்த ஆச்சர்யத்தின் அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மயோ கிளினிக்கில், நம்பத்தகுந்த வகையில் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் விளக்கம் அளிக்கிறார்கள். அதன்படி செனசென்ட் செல்கள் (Senscent Cells) எனப்படும் ஒருவகை செல்கள் தான் நம்மை கேன்சர் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது. வேலை முடிந்தாலும் இந்த செனசென்ட் செல்கள் உடலிலேயே தங்கி இரட்டிப்பாவதால் நமக்கு வயதாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே, இவ்வகை செல்களை உடலிலிருந்து அகற்றிவிட்டால், வயதாவதைத் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். கீழ்க்கண்ட காணொளியை பாருங்கள்…

 

இப்படி அறிவியல் இறக்கைகளைக் கொண்டு மனிதன் பறக்க முயற்சிக்கும் இந்தத் தருணத்தில், மரணம் மற்றும் வயோதிகத்திற்கு எதிரான ஆராய்ச்சிகள் இயற்கைக்கு எதிரானவை. இதைச் செய்வதால் மனித இனத்திற்கு அழிவு தான் வரும் என்று பலர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பது அவர்கள் கருத்து. மரணம் வந்துவிட்டுப் போகட்டும், ஆனால் அது ஒவ்வொரு மனிதனும் தாங்களாக விருப்பப்படும் போது தான் நிகழ வேண்டும் என்று கூறுகிறார்கள் இவ்வகை ஆராய்ச்சிகள் செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள். விபத்து, திடீர் மரணம், நோயால் மரணம் போன்றவை இல்லாமல், இயற்கை மரணம், அதுவும் விரும்பிய போது மரணம் இது தான் எங்களுக்கு இலக்கு, அதை நிகழ்த்தியும் காட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இவர்களை வாழ்த்துவதா, எச்சரிப்பதா தெரியவில்லை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘மாயா’ இயக்குநரின் அடுத்த படமான ‘இறவாக்காலம்’ பட டீஸர் !

 
 

’மாயா’ இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘இறவாக்காலம்’ படத்துக்கான டீஸர் வெளியாகியுள்ளது. 

இறவாக்காலம்

எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா நடிப்பில் அஸ்வின் இயக்கிவரும் படம் ‘இறவாக்காலம்’. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் த்ரில்லர் படம் இது. ‘மாயா’ படத்துக்கு இசையமைத்த யோஹன், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவையும், பிரசன்னா GK படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள்.  

சண்முகப்பாண்டியன், சமுத்திரகனி நடிப்பில் பி.ஜி.முத்தையா இயக்கும் ‘மதுரவீரன்’ படத்துக்கான டீஸரும் இன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இறவாக்காலம் டீஸருக்கு: 

 
  • தொடங்கியவர்

'உலகின் வேகமான மனிதர்' - உசைன் போல்ட்டின் சாதனை பயணம்

“உலகிலேயே வேகமான மனிதர்”, “பறக்க கற்றுக்கொண்ட பையன்”, "லைட்டனிங் போல்ட்" ஆகிய இத்தனை அடைமொழிகளுக்கும் சொந்தக்காரரான ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் சாதனை பயணத்தை தொகுத்து வழங்கும் புகைப்படத் தொகுப்பு.

  • உலகின் மிகவும் வேகமான மனிதர் உசைன் போல்ட்CAMERON SPENCER/GETTY IMAGES

    உலகின் மிகவும் வேகமான மனிதர் உசைன் போல்ட், தனது 16-ஆவது வயதில் தடகள தொழில்முறை வாழ்க்கையை தொடங்கினார்

  • ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வரலாற்று பதிவு படைத்த உசைன் போல்ட்ANDY LYONS/GETTY IMAGES

    17-ஆவது வயதில் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதலில் தோன்றினார்

  • உலகின் வேகமான மனிதரால் ஏற்படுத்தப்பட்ட உலக வரலாற்று பதிவுALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES

    உலகின் வேகமான மனிதரால் ஏற்படுத்தப்பட்ட உலக வரலாற்று பதிவு. பல வரலாற்று பதிவுகளை முறியடித்தவர் உசைன் போல்ட்

  • 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்போட்டியில்19.30 வினாடிகள் பதிவில் வரலாறு படைத்து தங்க வென்றதன் உணர்வுப்பூர்வ வெளிப்பாடுMICHAEL STEELE/GETTY IMAGES

    பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 19.30 வினாடிகள் பதிவில் வரலாறு படைத்து தங்கப்பதக்கம் வென்ற உணர்வுப்பூர்வ வெளிப்பாடு

  • 2008-இல் தங்கம் வென்ற ஜமைக்கா அணிEPA

    2008-இல் தங்கம் வென்ற ஜமைக்கா அணி

  • ஏப்ரல் 6, 2009 இல் கிம்ஸ்டன், ஜமைக்காவில் தேசிய அரங்கத்தில் பயிற்சியின்போதுIAN WALTON/GETTY IMAGES

    ஏப்ரல் 6, 2009 இல் கிம்ஸ்டன், ஜமைக்காவில் தேசிய அரங்கத்தில் பயிற்சியின்போது

  • 2016 ரியோ ஒலிம்பிக்கில் தொடரோட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட்PATRICK SMITH/GETTY IMAGES

    2016 ரியோ ஒலிம்பிக்கில் தொடரோட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட்

  • லண்டனில் 2012 ஜூலை 10 ஆம் தேதி தெரு ஓவிய கலைஞர் ஜேம்ஸ் கொக்ரான் வரைந்த வேகமான ஓட்டப்போட்டி ஜாம்பவான் உசைன் போல்ட்டின் உருவப்படம்DAN KITWOOD/GETTY IMAGES

    லண்டனில் 2012 ஜூலை 10 ஆம் தேதி தெரு ஓவிய கலைஞர் ஜேம்ஸ் கொக்ரான் என்பவரால் வரையப்பட்ட உசைன் போல்ட்டின் உருவப்படம்

  • 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெஸ்ட் இன்டிஸ் பல்கலைக்கழகத்தில் ஓட்டப்பயிற்சியில்MICHAEL STEELE/GETTY IMAGES

    2006 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெஸ்ட் இன்டிஸ் பல்கலைக்கழகத்தில் ஓட்டப்பயிற்சியில்

  • “மக்கள் ஆர்வத்தோடு, எனக்கு ஆதரவு அளித்தது அனைத்தும் உண்மையிலேயே சாதனைகள்"MICHAEL KAPPELER/GETTY IMAGES

    “மக்கள் ஆர்வத்தோடு, எனக்கு ஆதரவு அளித்தது அனைத்தும் உண்மையிலேயே சாதனைகள்" என்று ஜமைக்கா மக்களை உசைன் போல்ட் பாராட்டியுள்ளார்

  • 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அதிக இடைவெளியில் முதலிடம் படித்தார் உசைன் போல்ட்VLADIMIR RYS/BONGARTS/GETTY IMAGES

    2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அதிக இடைவெளி வித்தியாசத்தில் முதலிடம் பிடித்தார் உசைன் போல்ட்

  • 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரீஸில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் நிலத்தை முத்தமிடும் உசைன் போல்ட்STU FORSTER/GETTY IMAGES

    2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரீஸில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் நிலத்தை முத்தமிடும் உசைன் போல்ட்

  • தனக்கே உரித்தான அடையாள செயலான "லைட்டனிங் போல்ட்" தோன்றிய போதுIAN WALTON/GETTY IMAGES

    தனக்கே உரித்தான அடையாள செயலான "லைட்டனிங் போல்ட்" தோன்றிய போது

  • இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் "லைட்டனிங் போல்ட்" என்ற தன்னுடைய தனித்துவ தோற்றதுடன்CHRIS JACKSON/GETTY IMAGES

    இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் "லைட்டனிங் போல்ட்" என்ற தன்னுடைய தனித்துவ தோற்றதுடன்

  • 30 வயதான உசைன் போல்ட் தற்போதைய லண்டன் போட்டிகளுக்கு பின்னர் ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கிறார்DEAN MOUHTAROPOULOS/GETTY IMAGES

    30 வயதான உசைன் போல்ட் தற்போதைய லண்டன் போட்டிகளுக்கு பின்னர் ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கிறார்

http://www.bbc.com

  • தொடங்கியவர்

சமோவா

 

சமோவா (Samoa) ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia). இந்த நாட்டில் நாடாளுமன்றக் குடியரசாக அரசு செயல்படுகிறது.

நியூசிலாந்திலிருந்து 1 ஜனவரி 1962-ல் விடுதலை பெற்றது. இந்த நாட்டின் பிரதமர் துயிலேபா அயோனா சயிலெலெ மலியலெகாய் (Tuilaepa Aiono Sailele malielegaoi). கல்வியறிவு பெற்றவர்கள் 99.7%. சுதந்திரம் அடைவதற்குமுன் சமோவா மேற்கு சமோவா என்றும் ஜெர்மன் சமோவா என்றும் அழைக்கப்பட்டது.

20-ம் நூற்றாண்டில் சமோவா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி அமெரிக்காவால் ஆளப்பட்டது. தற்போது இப்பகுதி அமெரிக்கன் சமோவா என்று அழைக்கப்படுகிறது.

மேற்குப் பகுதி ஜெர்மனியர்களால் ஆளப்பட்டது. நியூசிலாந்து காவலர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 மாயு தலைவர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சாலையில் பயணம் செய்யும் போது இடதுபுறமாகச் செல்லும் விதியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நாடாகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

சமோவா நாட்டின் எல்லைகள்?

தெற்குப் பகுதியில் உள்ள ஹவாய் என்ற நாட்டிற்கும், நியுசிலாந்திற்கும் மத்தியப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் சமோவா நாடு அமைந்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

சுற்றுலாவின் சிறப்புகள்?

ஆபியாவிலுள்ள ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் மியூசியம், பாபாபாபைடை நீர்வீழ்ச்சி (Papapapaitai Falls) உபோலுவிலுள்ள சோபோயகா நீர்வீழ்ச்சி (Sopoaga Falls), லலோமானு கடற்கரையும் நியூடெலீ தீவும் (Lalomanu beach and Nu’utela island) போன்றவை சமோவா நாட்டின் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசிய மொழி எது? - English
  • சமோவா அழைப்புக்குறி எண்? - 685
  • சமோவா இணையக்குறி என்ன? - .ws
  • சமோவா சுதந்திர தினம்? - 1962 June 1
  • சமோவாவில் உள்ள மாவட்டங்கள் எத்தனை? - 11 மாவட்டங்கள்

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா நாட்டின் பரப்பளவு எவ்வளவு - 2,842 km²

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசியக் கொடி?

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசிய நினைவுச் சின்னம்?

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா மக்கள் தொகை எவ்வளவு? - 195,125
  • சமோவா பிரபலமான உணவு எது? - chicken and pork

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசியப் பறவை எது? - Tooth-billed pigeon

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசிய விலங்கு எது? - Manu Mea

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசிய மலர் எது? - Alpinia purpurata

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தேசிய விளையாட்டு என்ன? - Rugby union

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா நாட்டின் நாணயம்? - Samoan tala

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • சமோவா தலைநகரம் என்ன? - Apia

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com

  • தொடங்கியவர்
வாழ்க்கையில் எதுவும் நடக்கும்
 

article_1483934472-hdgjudi.jpgஎனது செயலுக்கு நானே பாத்திரமானவன். பிறர் அல்ல; பிறரைச் சாட்டுதல் சொல்லியே தப்பிக்கவும் முடியாது. எனவே, எனது பொறுப்புகளை  நானே சுமக்க வேண்டும். இதன் பொருட்டு எனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்மையாக்க வேண்டும்.

எல்லா மனிதர்களுமே தனித்தனியான பிறப்புகள்தான். அவரவர்களுக்கான வலிமையும் முயற்சியும் தனித்துவமானது. அவர்களே இதனைச் சிருஷ்டித்தாக வேண்டும்.

இந்த விடயத்தில் முழுமையான மனிதனாக, ஸ்திரமான மனநிலையைத் துணிச்சலாக உருவாக்குதல் வேண்டும்.

இறைதுணையுடன் காரியமாற்றினால் மமதையும் ஆணவமும் விட்டொழிந்து போகும். காரிய சித்தி மேலோங்கும். அன்பை உயிர்களுக்கு ஊட்டுவதால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

வாழ்க்கையில் எதுவும் நடக்கும். அதற்கு எம்மைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இன்பம், துன்பம் யதார்த்தம் என்பதை சிந்தையில் இருத்திக்கொள்க.

  • தொடங்கியவர்

எலினார் ஆஸ்ட்ரோம்

 
amr

அமெரிக்க அரசியல் அறிவியலாளரும், பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியுமான எலினார் ஆஸ்ட்ரோம் (Elinor Ostrom) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1933) பிறந்தார். பொருளாதாரத் தேக்கநிலையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிகழ்வு, சிறுவயதில் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், அரசியல் அறிவியல், பொருளியல், கூட்டுறவு துறைகளில் இயல்பாகவே ஆர்வம் பிறந்தது.

* கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றார். நிலத்தடி நீர்மட்டம், பாசன அமைப்புகள், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், மீன் வளர்ப்பு, நகர்ப்புற காவல்துறை உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

*புளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக 1965 முதல் 1991 வரை பணியாற்றினார். அங்கும் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு தனது பெயரில் அரசியல் அறிவியல் கொள்கை ஆராய்ச்சிக்காக தனி துறையை உருவாக்கி அதன் இயக்குநராகவும் பணியாற்றினார்.

*பொருளாதாரப் பிரச்சினைகள் குறிப்பாக சுற்றுச்சூழல், ஆதார வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இயற்கை வளங்களைப் பயனாளிகளே சுரண்டி அழிக்கின்றனர் என்பது அன்றைய காலக்கட்டத்தில் பொதுக் கருத்தாக இருந்தது. இதுகுறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

* மேய்ச்சல் நிலங்கள், மீன்பிடி நீர்நிலைகள், வனப்பகுதிகளை உள்ளூர் சமூகங்கள் எவ்வாறு பகிர்ந்துகொண்டு அவற்றை நிர்வகிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்து மேற்கண்ட பொதுக் கருத்தை ஆதாரத்துடன் மறுத்தார். பெரும்பாலான நவீன பொருளாதார நிபுணர்களின் முடிவுகளில் இருந்து இவர் முற்றிலுமாக மாறுபட்டிருந்தார்.

* அமெரிக்கா, ஸ்வீடன், ஸ்பெயின், நைஜீரியா, பொலிவியா, இந்தோனேஷியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் நீர்ப்பாசனம், மீன்பிடித் தொழில், வனத்துறை மேலாண்மை குறித்து தனித்தனியாக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அறிவார்ந்த விருப்பக் கோட்பாடு (Rational Choice Theory) மற்றும் மேம்பாட்டுப் பொருளாதார நுட்பங்களைத் தனது ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தினார்.

* காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள், புல்வெளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கை வளங்களின் பயன்பாட்டை அரசு மற்றும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, சாதாரண மக்களே சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை செயல்விளக்க அடிப்படையில் நிரூபித்துக் காட்டினார்.

* இந்த சாதனைக்காக, கலிபோர்னியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆலிவர் வில்லியம்சன்னுடன் இணைந்து இவருக்கு 2009-ல் பொருளியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன்மூலம் அத்துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் பெற்றார்.

* பொதுக் குளங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பல வழிகாட்டி நெறி களை வகுத்துக் கொடுத்தார். பொதுவான இயற்கை வளங்கள், பொது ஆதாரங்களைப் பராமரிப்பது, அவற்றில் இருந்து கிடைக்கும் பயன்களைப் பகிர்ந்துகொள்வது ஆகியவை தொடர்பாக தெளிவான வரையறைகளை வகுத்துக்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.

* அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல நூல்கள் எழுதியுள்ளார். பொருளாதாரக் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய எலினார் ஆஸ்ட்ரோம் 79-வது வயதில் (2012) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?

 

 
shutterstock252355738

ஆகஸ்ட் 6: சர்வதேச நண்பர்கள் தினம்

மனித வாழ்க்கையின் எல்லாக் காலகட்டங்களிலுமே நம்முடன் நண்பர்கள் இருப்பார்கள். சிறு பிராயத்தில் பள்ளிக்கூட நண்பர்கள், இளமைப் பருவத்தில் கல்லூரி நண்பர்கள், பணியாற்றும் காலத்தில் அலுவலக நண்பர்கள், எல்லா காலங்களிலும் உடனிருக்கும் ஏரியா நண்பர்கள், முகநூல் நண்பர்கள் என எப்போதும் நண்பர்களுக்குக் குறை இருந்ததில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நட்பு முளைவிட்டாலும், ஒவ்வொருவரையும் செதுக்குவது கல்லூரி கால நட்புதான்.

 

பள்ளிக் கால நட்பு

பள்ளிக் காலத்தில் பாடங்களுக்காகவும் மதிப்பெண்களுக்காகவும் ஓடிய ஓட்டத்தில், நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதையே மறந்திருப்போம். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். சுட்டித்தனமான நண்பர்களுடன் பழக வீட்டில் தடை போட்டுவிடுவார்கள். எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் ‘நல்ல’ பிள்ளைகளிடம் மட்டுமே பேச வேண்டும் என்பது அம்மாக்களின் கட்டளை. இத்தனையையும் தாண்டி, நமக்கான நண்பர்கள் அமைந்தாலும், அவரவர் பள்ளிப் படிப்பு முடியும்வரை பசை போட்டு ஒட்டியதுபோல் இந்த நட்பு இருக்கும். கல்லூரிக்குப் போகும்போது, ஒவ்வொருவரும் தனக்கான தனிப் பாதையில் புதிய பயணத்தைத் தொடங்கிவிடுவார்கள்.

 

விரிவடையும் கல்லூரி நட்பு

கல்லூரிக்குச் சென்ற பிறகு தொடர் நட்பில் வரும் பள்ளிகூட நட்பு மிகவும் குறைவுதான். மனதளவிலும் உடலளவிலும் மாற்றங்களைப் பார்க்கும் நேரத்தில்தான் கல்லூரிக் காலம் தொடங்குகிறது. எண்ணற்ற மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் வலிகளையும் முதலில் பார்ப்பதும் கல்லூரிக் காலத்தில்தான். அவற்றைக் கடந்து வர அப்போது உதவியாக இருப்பது கல்லூரி நண்பர்களே.

ஜாலியாக அரட்டை அடிக்க, தனியாக நண்பர்களுடன் சினிமா, வெளியிடங்களுக்குச் செல்ல, நண்பர்களின் வீட்டுக்குத் தாராளமாகச் செல்ல என வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது கல்லூரி நண்பர்கள்தான். கல்லூரிக் காலத்தில்தான் வீட்டு கஷ்டம், சமூகச் சிக்கல்கள் என அனைத்தையும் அறிந்துகொள்ளவும் முடிகிறது. வெவ்வேறு தளங்களிலிருந்து வரும் கல்லூரி நண்பர்களுடன் ஒன்றாகக் கலக்கும்போது அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கின்றன.

 

சமூகத்துக்காகக் குரல்

சமூக நலனுக்காக நண்பர்களுடன் இணைந்து போராடும் அளவுக்கு மனப்பக்குவம் அடைவதும் கல்லூரிப் பருவத்தில்தான். சமீபத்தில் போராட்டக் களம் ஒன்றில் நண்பர்களுடன் இருந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவி யாழினியிடம், நண்பர்கள் வட்டம் தொடர்ந்து சமூக பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருவதைப் பற்றிக் கேட்டபோது, “கல்லூரிக்கு வந்த பிறகுதான் வேறுபட்ட பின்னணியிலேர்ந்து வந்திருக்குற மாணவ மாணவிகளைப் பத்தி தெரிஞ்சுக்க முடிகிறது.

yazhini

யாழினி

முகநூல் வந்துட்டதால சமூகத்துல நடக்கும் பல பிரச்சினைகளைப் பற்றி விவாதம் போய்ட்டேதான் இருக்கு. அப்போதான் நண்பர்களுடன் இணைந்து எங்களால முடிந்தவரை எங்க கருத்துகள பதிவு செய்திட்டு வரோம்.

கல்லூரி நண்பர்களாகச் சேர்ந்து செயல்படுறப்ப இருக்கும் பலம், வேற எப்போதுமே இருக்காது” என்கிறார் யாழினி.

 

அலுவலக நட்பு

கல்லூரிக் கால நண்பர்கள் கூட்டாக இருக்கும்போது உள்ள பலம், வேறு எப்போதும் கிடைக்காது என்பது உண்மைதான். கூட்டாக ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி என்கிற சிறந்த பண்பைக் கல்லூரி நண்பர்கள் மூலமாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. கல்லூரிப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட கருத்துகளும் சிந்தனைகளும் விரிவடையும்.

கல்லூரி முடிந்து வேலை, அலுவலகம் எனச் செல்லும்போது, பள்ளிக்காலத்தில் அம்மா போட்ட கட்டளைகளை இப்போது நாமே வகுத்துக்கொள்வோம், ‘யாரிடமும் ரொம்ப வச்சுக்கக் கூடாது. நம்ம வேலையைப் பார்த்திட்டு வந்துடனும், எந்த வம்புக்கும் போகக் கூடாது. ரொம்ப குளோஸாகவும் இருக்கக் கூடாது, விலகியும் இருக்கக் கூடாது’ எனப் பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வோம். இந்தப் பருவத்தில் வரும் நட்பில் பெரிய அளவில் உண்மைத் தன்மை இருக்காது.

தனியாக எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் பாதையில் ஆதரவாகவும், துணையாகவும், கண்டிப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கூட்டாகவும், தொல்லை கொடுத்த படியும், சண்டை போட்டுக்கொண்டும், பல முதல் அனுபவங்களில்கூட இருந்தும், ஏமாற்றங்களில் பங்கெடுத்தும், ஒன்றாக வருந்தியும், எப்போதுமே நக்கலும் கேலியுமாகவும், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் மாற்றி பயணிப்பது கல்லூரி நட்புகளே.

கட்டுப்பாடுகளும் கட்டளைகளும் இல்லாத கல்லூரி நட்புகளுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள்!

நண்பர்கள் தினப் பரிசுகள் என்ன?

நாளை மறுதினம் (ஆகஸ்ட் 6) சர்வதேச நண்பர்கள் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் நண்பர்கள் தினத்துக்காகப் பரிசுகளைக்கூடப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இணையதளங்களில் வரும் தொடர்களை நாள் அல்லது வாரம் தவறாமல் படிக்கும் பழக்கம் உள்ளவரா உங்கள் நண்பர்? அப்படியானல் அவர் விரும்பிப் படிக்கும் இணையதளத்துக்கு ஒரு மாதத்துக்கான சந்தா கட்டி உங்கள் நண்பரைக் குஷிப்படுத்துங்கள்.

shutterstock361496144

சாக்லெட்டை விரும்பாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க மாட்டார்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விதவிதமான வண்ணங்களில் இருக்கும் சாக்லெட்டுகளை நண்பர்கள் தினத்தன்று வாங்கிக்கொடுத்துப் பாருங்களேன்.

பொதுவாகப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுப்பது இயல்பான விஷயம்தான். ஒரு வேளை உங்கள் நண்பர் புத்தகப் புழுவாக இருந்தால், ஒரு மாற்றத்துக்குப் புத்தகத்துக்குப் பதிலாகப் புத்தகங்களை வைக்கும் சிறிய அலமாரியைப் பரிசாகக் கொடுக்கலாம். அதை அவர் காலத்துக்கும் மறக்கமாட்டார்.

விரும்பிய உடையை வாங்கித் தருவது அரதப்பழசான பரிசு வகைதான் என்றாலும், உடையில் நட்பு பற்றிய வாசகங்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்.

நண்பர்கள் அதிகம் விரும்பும் பூக்கள் கொடுப்பதும் பழைய பரிசுதான். பூக்களைக் கொடுப்பதற்குப் பதிலாகச் சிறிய பூந்தொட்டியில் பூச்செடியை வைத்துக் கொடுங்கள். தண்ணீர்விட்டு பூச்செடியை உங்கள் நண்பர் வளர்ப்பதுபோல உங்கள் நட்பும் ஆழமாக வளரும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

82 வயதில் ஐபோன் செயலி எழுதிய மூதாட்டி! - ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் ஆப்

 

ப்பானைச் சேர்ந்த மஸாகோ வகாமியா (Masako Wakamiya) என்ற 82 வயது மூதாட்டி, 'உலகின் மூத்த ஐபோன் ஆப் டெவலப்பர்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

Wakamiya

டோக்கியோவை அடுத்த சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த வகாமியா, ஐபோன் செயலிகள் எழுதக் கற்றுக்கொண்டதன் பின்னணி சுவாரஸ்யமானது. சமுதாயத்தைப் போலவே டெக் துறையிலும் மூத்த குடிமக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற கோபம் அவருக்கு தொடக்கம் முதலே இருந்துவந்திருக்கிறது. உலகில், மூத்த குடிமக்கள் அதிகம் பேர் வாழும் ஜப்பானில், அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வந்த அவர், 'மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கப்பட  வேண்டும்' என்றும் விரும்பியுள்ளார். இதற்காக, ஆப் டெவலப்பர்களுக்கு அவர் பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் விடுத்துவந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கைக்கு டெவலப்பர்கள் செவிசாய்க்காத நிலையில், அவரே நேரடியாகக் களமிறங்கியுள்ளார். 

1990-களில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், செயலிகளுக்கான கோடிங் எழுதுவதுகுறித்து இணையதளத்தின் உதவியுடன் கற்றுத் தேர்ந்தார். அத்துடன், 60 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்காக ஹினாடன் (Hinadan) என்ற பிரத்யேக செயலியையும் வடிவமைத்துள்ளார். ஜப்பானில், ஆண்டுதோறும் நடைபெறும் ஹினா மட்சூரி (Hina Matsuri) என்ற பொம்மைத் திருவிழாவை அடிப்படையாக வைத்து அந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திருவிழாவில், மன்னருக்கும் மன்னரின்  குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் பொம்மைகளைப் பரிசாக அளிப்பர். அந்தப் பொம்மைகள்  வரிசையாக அடுக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். நவராத்திரி கொலுவில் பொம்மைகளை அடுக்குவது போன்ற அந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து, மூத்த குடிமக்களின் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் ஹினாடன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐபோனில் இயங்கும் ஜப்பானில், நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்ற அந்தச்  செயலி, ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கின் கவனம் ஈர்த்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் டெவலப்பர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு, வாகாமியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட உலகின் மூத்த ஆப் டெவலப்பர் வாகாமியாதான்.

'உங்களுக்கு வயதாகிவிட்டால், நிறைய இழப்புகளை நீங்கள் கடந்துசெல்லவேண்டி இருக்கும். வேலை, கணவன், தலைமுடி, கண்பார்வை உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் இழப்புகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டால், அது உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்' என்கிறார் இந்த 82 வயது  ஆப் டெவலப்பர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனை

தன்னுடைய மனைவியின் உடல் அழகை வர்ணித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அமெரிக்கக் கணவர் ஒருவர், உடல் வடிவம் மற்றும் பெண்ணியம் குறித்த எதிர்வினைகளை இணையதளத்தில் சந்தித்து வருகிறார்.

காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனைபடத்தின் காப்புரிமைROBBIE TRIPP

"வளைவுகள் நிறைந்த தேவதையின் கணவர்" என்று தன்னைக் கூறிக்கொள்ளும், ராபி டிரிப் எனும் தொழில் அதிபர், பிரபலமடைந்த அந்தப் பதிவில், தன் மனைவியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, ஒரு பெண்ணியவாதியாக தான் ஆன பின்பு, உடலில் நிறைய வளைவுகள் இருக்கும் பெண்களும் ஈர்ப்பு மிக்கவர்களாக இருக்கலாம் என்பதைத் தான் உணர்ததாக விவரித்துள்ளார்.

"நான் இந்தப் பெண்ணையும், அவளது வளைவான உடலையும் நேசிக்கிறேன். உடல் எடை அதிகமுள்ள பெண்கள் மீதான ஈர்ப்பின் காரணமாக, பதின்ம வயதில் என் நண்பர்கள் என்னை அடிக்கடி கேலி செய்தனர்," என்று ராபி எழுதியிருந்தார்.

  •  

நான் வளர்ந்து ஆளான பிறகு, பெண்ணியம், ஊடகம் எவ்வாறு பெண்களைக் குறுகலான வகையில், மெல்லிய, இளைத்த, உயரமான உடல்வாகுமே அழகு என்று ஓரங்கட்டுகின்றன என்பதைப்பற்றிய அறிவைப் பெற்றபோது, அந்தப் பொய்களை நிறைய ஆண்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்றும் உணர்ந்தேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"அடர்த்தியான தொடைகளையும், பின்னழகையும், மெல்லிய இடை மடிப்புகளையும் உடைய இந்தப் பெண்ணைவிட வேறு எதுவும் என்னை ஈர்க்கவில்லை," என்று அவர் எழுதியுள்ளார்.

காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனைபடத்தின் காப்புரிமைROBBIE TRIPP

பொதுவாக ஈர்ப்புள்ளதாகக் கருதப்படும் "உயரமான மற்றும் ஒல்லியான" உடல்வாகுடைய பெண்களை ஆண்கள் விரும்புவதைப் புகழும் வகையில் உள்ள அந்தப் பதிவு இணையதளத்தில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை முதல் 18,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டுள்ள தன் பதிவில், பத்திர்கையாளர் ஜூலியா புகாசேவ்ஸ்கை, "பெண்ணியம் என்பது வளைவுகளைக் கொண்ட பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதல்ல," என்று கூறியுள்ளார்.

"ஒரு வழக்கமான உடலைமைப்பைப் பெற்றுள்ள பெண்ணுடன் உறவாடுவதால் உங்களை ஏன் ஒரு நவீனத் துறவி என்று நினைக்கிறீர்கள்," என்று லூசியா ட்ரேகோ என்னும் பயன்பாட்டாளர் கேட்டுள்ளார்.

  •  

"நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் பெரும்பான்மையாக சமூகத்தில் பெண்களைக் காட்சிப்பொருளாக்கும் காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக அவர்களைக் காட்சிப்பொருளாக்குவேன்," என்பதே அந்தப் பதிவின் பின்னால் உள்ள பொருள் என்று காட்டமாக எழுதியுள்ளார் நேட் குக் என்னும் ட்விட்டர் பயன்பாட்டாளர்

தன்னுடைய மனைவி வழக்கமான உடலமைப்பைப் பெற்றவரல்ல என்று மறைமுகமாகக் கூறுவதைப் பிறரும் விமர்சனம் செய்துள்ளனர். சிலர் அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.

"எனக்கு இந்தப் பதிவு பிடித்துள்ளது. எதற்கெடுத்தாலும் சிலர் கோவப்படுகின்றனர். உங்களைப்போன்று இன்னும் நிறைய ஆண்கள் இந்த உலகில் வேண்டும்," என்று அமந்தா ஃபோத்தரின்கம் என்னும் இஸ்டாகிராம் பதிவாளர் எழுதியுள்ளார்.

பெண்களின் அழகைப் பற்றிய சிந்தனையை மாற்றியதற்கான உரையாடலைத் தொடங்கியதாக டிரிப்பை சிலர் பாராட்டியுள்ளனர். "அழகாகவும், உண்மையாகவும், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி உள்ளது. உண்மையான ஆணாகவும், உண்மையான பெண்ணாகவும் நீங்கள் உள்ளீர்கள். உண்மையைக் கூறியதற்கும், பலருக்கும் நம்பிக்கை அளித்ததற்கு நன்றி," என்று லெட்டிஸ் ட்லூவ் என்பவர் பாராட்டியுள்ளார்.

"ஒரு ஆணோ, பெண்ணோ, பிறரையும் தன்னையும் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள் என்றால், நீங்கள் ஒரு அற்புதமான செயலைச் செய்துள்ளீர்கள் என்று பொருள்," என்று கேர்514 @char514 என்னும் பயன்பாட்டாளர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்

 
 

கடந்த 2016-ம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில், தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் அர்ச்சுனன்.  ``ஒரு கேமரா வாங்குவது என்பது, இன்றைக்கு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அதை வாங்கிக் கையாளக் கற்றுக்கொண்ட பிறகு, உங்களின் நோக்கம் என்னவாக இருக்கிறதோ, அதிலேயே கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் அர்ச்சுனன். நேஷனல் ஜியோகிராஃபியின் `டெய்லி டஜன்' என்கிற சிறந்த 12 புகைப்படங்களில் ஒன்றாக இவர் எடுத்த `தாயிடம் பால் குடிக்கும் குரங்குக் குட்டி'யின் போட்டோ கடந்த வாரம் வெளியானது.  

நேஷனல் ஜியாகிராஃபி

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சுனன், ஐடி நிறுவனம் ஒன்றில் டிசைன் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறார். பெரும்பாலான இன்றைய இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமரா கனவுதான் இவருக்கும் இருந்தது. வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, தன் வருமானத்தில் சொந்தமாக ஒரு கேமரா வாங்கினார். ஆனால், தனக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் வருவதற்குக் காரணமாக இருந்த நண்பர்களைப்போல, தொழில்முறை திருமண போட்டோகிராஃபராக ஆவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். 

``கடந்த இரண்டு ஆண்டுகளாக நேஷனல் ஜியோகிராஃபிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். அதில் மூன்று நான்கு வகை உள்ளன. `எடிட்டர் பேவரைட்' என ஒரு பிரிவு உள்ளது. அதில் எனது புகைப்படங்கள் இதுவரை ஐந்து தேர்வாகியுள்ளன. அதில் வெளியிடப்படும் படங்களில் அதிகம் ஓட்டு விழும் படம் `நேஷனல் ஜியோகிராஃபி' புத்தகத்தில் இடம்பெறும். இது இல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் `வன உயிர் புகைப்படங்கள்' போட்டி ஒன்று நடத்துவார்கள். அதிலும் டெய்லி டஜன் பிரிவில் வெளியான புகைப்படங்கள் போட்டியிடும். என் எண்ணமெல்லாம் நேஷனல் ஜியோகிராஃபி தொடங்கி போட்டோகிராஃபிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழ்களில் பரிசு வாங்க வேண்டும் என்பதே! நான் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். நிலப் படங்கள், இரவுப் படங்கள் மற்றும் வன உயிர்கள் இவற்றை மட்டும்தான் நான் படம் எடுப்பேன். என் நண்பர்கள் சிலர்  ஆர்வத்தில் எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கி இயற்கை, நிலப்படங்கள்(Landscape) என்றெல்லாம் படம் எடுக்கத் தொடங்கியவர்கள், இப்போது மேரேஜ் போட்டோகிராஃபர்களாக மாறிவிட்டனர். சிலர் பகுதி நேரமும், சிலர் முழு நேர போட்டோகிராஃபர்களாவும் ஆகிவிட்டனர்.  

என் வேலை என்பது, ஒவ்வொரு புராடெக்ட்டுக்குமான சிறந்த பேக்கிங் டிசைன் செய்து தருவது. ஓர் அடுக்கில் மூன்று அரிசிகள் இருக்கின்றன என்றால், எது நேர்த்தியான பேக்கிங்கோ அதுதான் முதலில் விற்பனையாகும். அந்த பேங்கிங்  டிசைனிங்தான் என் பணி. என் வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் புகைப்படங்களைப் பயன்படுத்துவோம். அவை ஒவ்வொன்றும் எடுக்கப்பட்டவிதம் என்னைக் கவரத் தொடங்கியது. அதுதான் எனக்கு புகைப்படங்கள் மீதான ஆர்வத்தைக் கொடுத்தது. ஆசைப்பட்டு வாங்கினாலும் ஒரு கேமராவை இயக்குவதிலும் அதை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக்கொள்ள ஓர் ஆண்டு ஆனது" என்றவர், இந்தக் குறிப்பிட்ட படத்தை எடுத்த நிகழ்வு குறித்து கூறினார்.

நேஷனல் ஜியோகிராபி

``மாமல்லபுரத்தில் ஒரு `வாக்' போயிருந்தோம். அதாவது அங்கு உள்ள கட்டடக் கலை குறித்து ஒவ்வொரு பகுதியாகச் செல்லும் நடைப்பயணம் அது. அன்று மேகங்களும் சரியாக இல்லாத காரணத்தால், கையில் கேமரா இருந்தாலும் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அப்போதுதான் இந்தக் குட்டிக் குரங்கைப் பார்த்தேன். அதன் அம்மா மடியில் இருந்ததைப் பார்த்தவுடன் அதைப் படம் எடுக்க வேண்டும் எனப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். அன்றைக்கு மாமல்லபுரத்துக்குச் சென்றதன் முக்கியக் காரணமே, காலை சூரிய உதயத்தைப் படம்பிடிக்கத்தான். ஆனால், அது நடக்கவில்லை என்கிற கவலையை இந்தக் குரங்குக்குட்டி போக்கிவிட்டது. வெறும் மூன்று படங்கள் மட்டுமே எடுத்தேன். அதில் ஒன்றுதான் தேர்வாகியுள்ளது" என்றார். 
 
``பொதுவாக நேஷனல் ஜியோகிராஃபியில் படம் வெளியாகிவிட்டாலே, புரொஃபஷனல் தகுதி கிடைக்கும். பொதுவாக ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்றால் என்ன செய்வோம், ஃபேஸ்புக்கில் போடுவோம். அதில் போட்டோகிராஃபி தெரிந்தவர்கள் நான்கைந்து பேர் படம் குறித்து கருத்துச் சொல்வார்கள். மீதி விழும் லைக் எல்லாமே என் நட்பின் காரணமாகத்தான் இருக்கும். ஆனால், நேஷனல் ஜியோகிராஃபி மாதிரி இதழ்களின் இணையத்துக்கு அனுப்பும்போது பல்வேறுபட்ட கருத்துகள் கிடைக்கும். இதுவரை நூறு படங்கள் அனுப்பியிருந்தாலும் எடிட்டர் ஃபேவரைடில் ஐந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் ஒரு படம் மட்டுமே டெய்லி டஜனுக்குத் தேர்வாகியுள்ளது. ஆனால், நாம் படங்களுக்கு உரிய அங்கீகாரமும் விமர்சனங்களும் அங்கேதான் கிடைக்கும். அங்கு அனுப்பும் படங்கள் தேர்வாகவில்லை என்றால், என்ன காரணத்தால் தேர்வாகவில்லை, என்ன தவறு செய்துள்ளோம் என்று நாம் கூர்ந்து நோக்கி அறிந்துகொள்ளலாம். பெரிய அளவில் கலர் கரெக்‌ஷன் போன்றவை மிக மிகக் குறைந்த அளவில் செய்திருந்தால் அனுமதிப்பார்கள். கொஞ்சம் கூடுதலாக இருந்தால்கூட தேர்வு செய்ய மாட்டார்கள்.  முகநூலில் படம் போடலாம்தான். இருந்தாலும் ஆர்வத்துடன் நீங்கள் எடுக்கும் படங்கள் அதை ரசிப்பவர்களைச் சென்று சேர இப்படியான தளங்களில்தான் பகிரவேண்டும்" என்று முடித்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தியப் பெற்றோர்களிடம் ‘டேட்டிங்’ பற்றி எப்படிச் சொல்வது? - கலாய்க்கும் லில்லி சிங்

 
 

லில்லி சிங்

லில்லி சிங்... 

நீங்கள் இணையத்தில் வித்தியாசமான காமெடி வீடியோக்களைத் தேடிப் பார்ப்பவராக இருந்தால், நிச்சயம் இந்தப் பெயரைத் தெரியும். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சிக்கல்களை எல்லாம் செம காமெடியாகக் கலாய்த்துத் தள்ளுவதில் லில்லி சிங்... ஒரு வொண்டர் வுமன், சூப்பர் வுமன், அயன் வுமன் எல்லாமே! 

பெற்றோரிடம் ’டேட்டிங்’ பற்றியும், ’பாய் ஃப்ரெண்ட்’ பற்றியும் பெண்கள் எப்படியெல்லாம் சொல்வார்கள் என்று விதவிதமான சைகைகளுடன் லில்லி சிங் கூறியது செம வைரலானது. அந்த வீடியோவில் அம்மா கேட்கிறார்... 'உனக்கும் அந்தப் பையனுக்கும் ‘என்னமோ’ நடக்கிறதே?' 

உடனே லில்லி சிங், இந்தக் கேள்வியை எதிர்கொண்ட ஓர் இளம்பெண்ணின் மனம்போல திணறுகிறார். 'எனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுபோல நடிக்கலாமா? இல்லை... இல்லை... நான் வளர்ந்தவள். அதனால், உண்மையைச் சொல்லிவிடலாம்' என நினைக்கிறார். 

மீண்டும் அம்மா அதைப் பற்றி கேட்க, ஹார்ட் அட்டாக் வந்தவர்போல நடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் லில்லி சிங். கண் திறந்தவுடனே, 'உனக்கும் அந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம்?' என அம்மா மீண்டும் கேட்கிறார். இப்படிக் களபரமான காமெடியாக நகரும் வீடியோ, ’டேட்டிங்’ பற்றி இந்தியப் பெற்றோர்கள் என்ன புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்கிறது. 

அவர் அம்மா, 'பையனுடைய அப்பா, அம்மாவைப் பார்த்துப் பேசணும். நிறைய வேலை இருக்கு' என்கிறார். உடனே லில்லி, ‘அவன் அம்மா, அப்பாவை நானே இன்னும் பார்க்கலை. நாங்க இரண்டு மாசமாகத்தான் டேட்டிங் செய்றோம்' என்கிறார். அம்மா கொதித்தெழுந்து (காமெடியாகத்தான்!) 'இந்தத் தலைமுறை இளைஞர்கள் அதிகச் சுதந்திரம் எடுத்துக்கொள்கிறீர்கள்” என்று கத்துகிறார். இறுதியில் லில்லி, 'அந்தப் பையனுக்கும் எனக்கும் பிரேக்அப் ஆகிவிட்டது' என்கிறார். அதற்கும் வழக்கமான பெற்றோராக, 'ஊர் என்ன பேசும்? இந்த உலகம் என்ன பேசும்?' எனப் புலம்புகிறார். 'இனி எந்தப் பையனுடன் ‘டேட்டிங்’ செய்தாலும், உங்கள் பெற்றோர் உங்களை நம்ப மாட்டார்கள்' என்ற கருத்துடன் முடிகிறது இந்த வீடியோ. இந்த வீடியோவைப் பார்க்க:

மற்றொரு வீடியோவில், பள்ளியில் தேர்வு நடந்தால், மாணவர்கள் எப்படியெல்லாம் திக்கித் திணறி தயார்படுத்திக்கொள்கிறார்கள் என்று நடித்துக்காட்டுகிறார் லில்லி சிங். அதன் முதல் படி, அலாரம். யோகா செய்ய வேண்டும், டிராஃபிக்கிலிருந்து தப்ப வேண்டும் என்று காலை 8 மணி அலாரம் வைத்துவிட்டு உறங்குவார் லில்லி. ஆனால், காலையில் 8 மணிக்கு ஆரம்பித்து 8.10... 8.30... 9.00... 10.00 என அடுத்தடுத்த அலாரத்தை ‘மிஸ்’ செய்துவிட்டு, தூங்கிக்கொண்டே கணக்குப் பாடத்தை எழுதிப் பார்ப்பார். 

இதற்கிடையில், ’ஒரு பள்ளித் தேர்வு என் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது’, ‘என் வாழ்க்கையை நான்தான் தீர்மானிப்பேன்’ என வசனங்கள் லில்லி மூளையில் (நம்ம மூளையைப் போலதான்) ஓடிக்கொண்டிருக்கும். பிறகு என்ன? பள்ளித் தேர்வை நீ தவறவிட்டுவிட்டாய் என நண்பர்கள் கூற, உடம்பு சரியில்லாதவராக நடித்து சமாளிப்பதுதான் ஒரே வழி. அதைத்தான் லில்லி சிங்கும் செய்வார். இவையெல்லாம் நாம் அன்றாம் சந்திக்கும் சின்னச் சின்ன இடியாப்ப சிக்கல்கள். அதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பதுதான் லில்லி சிங் வீடியோக்களை, பலரும் ரசிக்கக் காரணம். இந்த வீடியோவை நீங்கள் பார்க்க:

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 7

 

1461 : மிங் வம்ச சீன தள­பதி காவோ சின் செங்டொங் பேர­ர­ச­ருக்கு எதி­ராக இரா­ணுவப் புரட்­சியை நடத்தி தோல்­வி­ய­டைந்­ததைத் தொடர்ந்து தற்­கொலை செய்து கொண்டர்.


1906 : கல்­கத்­தாவில் வங்­காளப் பிரி­வினை எதிர்ப்புப் போராட்­டத்தின் போது முதல் இந்­திய தேசியக் கொடி உரு­வாக்­கப்­பட்டு பார்சி பகான் சதுக்­கத்தில் ஏற்­றப்­பட்­டது.


Bombings-U-S-Embassies-Kenya-Tanzania1927 : கன­டாவின் ஒன்­டா­ரி­யோ­வுக்கும் அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்­கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்­கப்­பட்­டது.


1933 : ஈராக்கின் சுமைல் கிரா­மத்தில் அஸா­ரிய இனத்­த­வர்கள் 3000 பேர் ஈராக்­கிய அர­சினால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1942 : இரண்டாம் உலகப் போர்: குவா­டல்­கனால் போர் ஆரம்பம். அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் சொலமன் தீவு­களின் குவா­டல்­கனால் தீவில் தரை­யி­றங்­கினர்.


1944 : திட்­டப்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது கணித்தல் பொறியை (கல்­கு­லேட்டர்) ஐ.பி.எம். நிறு­வனம் வெளி­யிட்­டது. ஹாவார்ட் மார்க் 1 என இது அழைக்­கப்­ப­டு­கி­றது.


1945 : இரண்டாம் உலகப் போர்: ஹிரோ­ஷிமா மீது ஆகஸ்ட் 6 ஆம் திகதி அணு­குண்டு வீசப்­பட்­டதை அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஹரி ட்ரூமன் அறி­வித்தார்.


1955 : சொனி நிறு­வனம் தனது முத­லா­வது ட்ரான்­ஸிஸ்டர் வானொ­லியை ஜப்­பானில் விற்­பனை செய்ய ஆரம்­பித்­தது.


1960 : பிரான்­ஸிடம் இருந்து ஐவரி கோஸ்ட் சுதந்­திரம் பெற்­றது.


1970 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் ஜோர்ஜ் ஜக்ஸன் எனும் மார்க்­சி­ஸ­வா­தியை பொலிஸ் காவ­லி­லி­ருந்து மீட்­ப­தற்­காக நீதி­பதி ஹரோல்ட் ஜக்ஸன் பண­யக்­கை­தி­யாக பிடிக்­கப்­பட்டு பின்னர் கொல்­லப்­பட்டார். 


1976 : வைக்கிங் 2 விண்­கலம் செவ்­வாயின் சுற்று வட்­டத்துள் சென்­றது.


1998 : தான்­சா­னி­யா­விலும் கென்­யா­விலும் அமெ­ரிக்க தூத­ர­கங்­களில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களில் 224 பேர் கொல்­லப்­பட்டு 4,500க்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.


2008 : ரஷ்­யாவின் கட்­டுப்­பாட்­டி­லிந்து தெற்கு ஒஷே­சி­யாவை மீளப்­பெ­று­வ­தற்­காக தெற்கு ஒஷேசியா மீது ஜோர்ஜியா பாரிய இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது.


2012 : நைஜீ­ரி­யாவில் தேவா­ல­ய­மொன்றின் மீது துப்­பா­கி­தா­ரிகள் நடத்­திய தாக்­கு­தலில் 19 பேர் 
உயி­ரி­ழந்­தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

“நீங்க ஷட் அப் பண்ணுங்க!” - மக்களை வதைக்கும் பிக்பாஸ்கள்

 

விகடன் டீம்

 

போராடக் காரணமானவர்களும், போராட்டங்களை  ஒடுக்குபவர்களும் போராட்டக்களத்தில் போராளிகளாக இருந்திருந்தால்...

நம் ஓவியர்களின் கற்பனையில்...


17p1.jpg

17p2.jpg

17p3.jpg

17p4.jpg

  • தொடங்கியவர்

500க்கும் மேற்பட்ட வீடியோக்களால் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

 
 

அரசுப் பள்ளி

கணக்கு என்றாலே பலருக்கு வேப்பங்காய் போல கசக்கும். ஆனால், கணக்குப் பாடத்தையே சுவையாக நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா. நாமக்கல், திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ரூபி கேத்தரின் தெரசா. கணித ஆசிரியரான இவர், கணிதத்தில் கடினமான பகுதிகளையும் எளிமையாக நடத்துவதில் கைதேர்ந்தவர். இவரைப் பற்றி இன்னொரு வியப்பூட்டும் செய்தி இருக்கிறது! பாடங்களை வீடியோக்களாக நடத்துகிறாராம். அது குறித்து அவரிடம் கேட்டோம். 

"அரசு வேலைக்கு வருவதற்கு முன் சுமார் 18 ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். 2007 ஆம் ஆண்டுதான் அரசுப் பணி கிடைத்தது. சேலத்திலும் பின் முளைச்சூரில் பணியாற்றி இப்போது இந்தப் பள்ளிக்கு வந்திருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகள் மிகவும் எளிமையான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள். அவர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்குக் கல்விதான் அடித்தளம். அந்தப் பொறுப்புஉணர்வை நான் மனதளவில் உணர்ந்துகொண்டேன். 

மாணவர்கள் பாடத்தின் எந்தப் பகுதியைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவார்களோ அந்தப் பகுதியை எளிமையாக்க வேண்டும் என்பதாக என் பணியை அமைத்துக்கொண்டேன். உதாரணமாக, பல மாணவர்களுக்கு வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யமுடியாமல் கஷ்டப்படுவர். அவர்களுக்காக புதுவிதத்தில் வாய்ப்பாட்டைக் கற்பித்தேன். என் மாணவர்கள் செய்யும் எஃப் ஏ செயல்பாட்டை வீடியோவாக எடுத்துக்கொள்வேன். முரளிதரன் எனும் ஆசிரியர் வாட்ஸ் அப்பில் கணிதக் குழு வைத்திருப்பதாக நண்பர்கள் வழியே கேள்விப்பட்டேன். அதில் என்னையும் இணைத்துக்கொண்டார்கள். அதில் என் வீடியோக்களைப் பதிந்தபோது பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டுகள் வந்தன. எனக்கே இது ஆச்சர்யமாக இருந்தது. 

இதற்கு முன் நான் பணியாற்றிய பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கரும்பலகைகள் இல்லை. அதனால், ஒரு வகுப்பில் நான் நடத்தும் பாடங்களை வீடியோ எடுத்து, அடுத்த வகுப்பில் போட்டுக்காட்டுவேன். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் இது சாத்தியமானது. அந்த வீடியோக்களை வாட்ஸ் அப் குரூபில் பதியவும் அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் பல குரூப்களிலும் சேர்த்துவிட்டார்கள். இப்போது 30க்கும் மேற்பட்ட குரூப்களில் வீடியோக்களைப் பதிந்துவருகிறேன். 

யூ டியூப்பில் சேனல் ஆரம்பித்து, அதில் வீடியோக்களைப் பதிந்தால் இன்னும் அதிகமானவர்களைச் சென்றடையும் என்றனர். அதனால், என் பிள்ளையின் உதவியுடன் யூ டியூப் சேனல் ஆரம்பித்தேன். இப்போது உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிக்கின்றன. எனக்குப் பெரிய அளவில் தொழில்நுட்பம் எல்லாம் தெரியாது. நான் பாடம் நடத்தும் என் மாணவிகள்தாம் எனது செல்போனில் வீடியோ எடுப்பார்கள். அதிலும் சென்ற வருடத்தில் ரம்யா எனும் மாணவி ரொம்பவே ஆர்வமாக வீடியோ எடுத்தாள். பள்ளியில் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பதால் சிம் இல்லாத மொபைலையே பள்ளியில் வீடியோ எடுக்கப் பயன்படுத்துகிறேன். சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் தொடர்புகொண்டு சந்தேகங்களைக் கேட்கின்றனர். அயன் கார்த்திகேயன் என்பவர் ஒரு ஆப் தயார் செய்யலாம் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். 

என் நோக்கம், பாடம் எளிமையாக மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இந்த வீடியோக்களைப் பார்த்து அதில் கூறப்படும் முறையில் தங்கள் பள்ளியில் பாடம் நடத்துவதாகப் பல ஆசிரியர்கள் கூறும்போது நான் செல்லும் பாதை சரியானதாக இருக்கிறது என்கிற மகிழ்ச்சி. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் என்னைச் சென்னைக்கு அழைத்துப் பாராட்டினர். 

என்னைப் பொறுத்தவரை என் குழந்தைகளைப் போலத்தான் என்னிடம் படிக்க வருகிற மாணவர்களைப் பார்க்கிறேன். அப்படித்தான் ஆசிரியர்கள் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்த எண்ணமே மாணவர்களை உயர்த்துவதற்கான வேலைகளைச் செய்ய வைத்துவிடும்." என்று மாணவர்களின் மீது அக்கறையோடு கூறுகிறார் ஆசிரியை ரூபி. 

இவர், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்ககாவே தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இதுவரை 520 வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்கள் வழியே பகிர்ந்து வருகிறார். அவற்றில் சில ஒரு லெட்சம் வியூஸைத் தொட்டிருக்கின்றன.

 

 

மாற்றம் விதைக்கும் ஆசிரியர்களின் பணிக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
இருசாராரும் வல்லவர்களே!
 

article_1472613314-po%5B.jpgவயது முதிர்ந்தோர் ஆற்றல் அற்றவர்கள் என்று இளைஞர்களும் அதேவேளை புதிய வரவுகளான இவர்களுக்கு உலகம் பற்றி ஒன்றுமே புரிவதில்லை என்று பரஸ்பரம் இருதரப்பினரும் குறைப்பட்டுக் கொள்ளும் பழக்கம் இன்றும் தொடர்கின்றது.

இப்படிச் சொல்வது எல்லோரினதும் குணம் அல்ல‚ திறமை ஆழுமை எந்தப் பராயத்திலும் பூக்கும். மிகச் சிறிய வயதிலும் சிந்தனைகளைக் கண்டு வருகின்றது இந்தப் புவனம்.

அதேபோல் வயது முதிர்ந்த பின்னரும் சாதனை செய்தபடி வாழ்ந்தவர்களும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் அறிவோம்.

உலகிற்குக்குக் கொடை வழங்கும் இருசாராரும் வல்லவர்களே! எவருமே சாதனையாளராக முடியும். முடிந்தவரை போராடித் தோற்றவர்களும் சாதனையாளர்கள்தான். பலர் இதைப் புரிந்துகொள்வதுமில்லை. படுத்துக்கிடப்பவர்களை எழுந்திருக்கச்செய்து, விழிப்படைய வைப்பதே பெரும்பணி.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 08
 

article_1470632157-Kobbakaduwa.jpg1509: இந்தியாவில் விஜய நகர பேரரசின் முதல் மன்னராக கிருஷ்ணதேவ ராயர் முடிசூடினார்.

1768: ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.

1848: மாத்தளை கிளர்ச்சி - இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.

1863: அமெரிக்க உள்நாட்டுப் போர் - டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.

1908: வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.

1942: இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945: இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.

1945: ஐ.நா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நா.வில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.

1947: பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.

1949: பூட்டான் சுதந்திரம் பெற்றது.

1963: பிரிட்டனில் ரயிலொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் 26 லட்சம் ஸ்ரேலிங் பவுண் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

1967: ஏசியான் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1973: தென்கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.

1974: வாட்டர்கேட் ஊழல் விவகாரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தான்  ராஜினாமா செய்வதாக ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.

1988: மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.

1989: ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா, கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990: குவைட்டை கைப்பற்றிய ஈராக், அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1992: யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில், இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

2000: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டமைப்பினரின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

2006: திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007: நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை, கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

கொண்டாட கண்டுபிடித்த 'வாவ்' தீவுகள்!

 
 
183787.jpg 183788.jpg 183789.jpg 183790.jpg 183791.jpg 183792.jpg 183793.jpg 183794.jpg 183795.jpg 183796.jpg 183797.jpg 183798.jpg 183799.jpg 183800.jpg 183801.jpg 183802.jpg 183803.jpg 183804.jpg 183805.jpg 183806.jpg 183807.jpg 183808.jpg 183809.jpg 183810.jpg 183811.jpg
  • தொடங்கியவர்

நாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9-வயதுச் சிறுவன்!

 
நாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9-வயதுச் சிறுவன்!
 

பதவிக்கான விண்ணப்பம் ஒன்றை நாசா வெளியிட்டிருந்தது.
சுவாரசியமாகத் தலைப்பிடப்பட்டிருந்த குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. விண்ணப்பங்களும் குவிந்தன.

ஆனால் ஒரு விண்ணப்பம் குறிப்பாக சில நாசாவின் உயர் மட்ட தேர்வாளர்களின் கண்ணிற்குப் பட்டது. ஆகஸ்ட 3திகதியிட்டு 9-வயதுடைய ஜக் டேவிஸ் என்ற சிறுவனால் கையால் எழுதப்பட்ட இந்த விண்ணப்பம் . இந்தப் பதவிக்குத் தனது ஆர்வத்தை தெரிவித்ததுடன் தான் பொருத்தமானவனென்றும் ஏனெனில் நான் ஒரு ஏலியன் என எனது சகோதரி கூறுகின்றாள் எனவும் தெரியப்படுத்தியுள்ளான்.

நான் மிகவும் சிறியவன் அதனால் ஒரு ஏலியனை போன்று யோசிக்க என்னால் அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்ததோடு கிட்டத்தட்ட அனைத்து விண்வெளி மற்றும் ஏலியன் படங்களையும் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளான். நான்காம் வகுப்பு படிக்கும் ஜக் டேவிஸ், கலக்சியின் கார்டியன் எனவும் கையொப்பமிட்டுள்ளான்.

சிறுவனால் அழகாக எழுதப்பட்ட இந்தக்கடிதம் நாசா கிரக அறிவியல் விஞ்ஞான இயக்குநர் ஜிம் கிரினின் கண்களில் பட்டது. இந்தப்பதவி குறித்த விரிவான விளக்கத்தை டேவிசிற்கு எழுதிய கிரின் கடுமையாக படித்து நல்ல நிலைமைக்கு வருமாறு டேவிசை ஊக்கப்படுத்தியது மட்டுமன்றி ஒரு நாள் நாசாவில் பணிபுரிவாய் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கோள்களின் ஆராய்ச்சி இயக்குநர் ஜொனத்தன் றோலிடமிருந்து டேவிஸ் ஒரு தொலைபேசி அழைப்பையும் பெற்றான். குறிப்பிட்ட பணிக்கான டேவிசின் ஆர்வம் குறித்து அவனிற்கு நன்றியை தெரிவித்தும் வாழ்த்துக்கள் கூறியும் இயக்குநர் பாராட்டினார்.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

பால் அட்ரியன் டிராக்

 

 
10

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான பால் அட்ரியன் டிராக் (Paul Adrien Dirac) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் பிறந்தார் (1902). பிஷப்டன் பகுதியில் வளர்ந்தார். பிஷப் சாலை ஆரம்பப் பள்ளியில் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார்.

* பின்னர் தந்தை வேலை பார்த்த மெர்சன்ட் வென்சர்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி உள்ளிட்ட பல மொழிகளை அறிந்திருந்தார். கல்வி உதவித்தொகை பெற்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார்.

*பொது சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் களங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகக் கிடைத்த கல்வி உதவித்தொகை குறைவாக இருந்ததால் அங்கு சேர முடியவில்லை.

*எனவே பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திலேயே இலவசமாகப் படிக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கணிதத்தில் இளங் கலைப் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். அதிலும் முதல் வகுப்பில் தேறினார். இதனால் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சித் துறையின் உதவித்தொகையைப் பெற்றார்.

* கேம்பிரிட்ஜ் சென்று, தான் ஆர்வம் கொண்டிருந்த விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். 1926-ல் குவாண்டம் விசையியல் குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் தனது ஆராய்ச்சிகளைக் கோபன்ஹேகனில் உள்ள கோடிங்கன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.

* எர்வின் ஷ்ரோடிங்கர் அலைவிசையியல் வெர்னர் ஐசன்பர்கில் அணி விசையியலை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை உருவாக்கினார். கதிர்வீச்சின் குவாண்டம் கோட்பாட்டை மேம்படுத்தி னார். 1928-ல் சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியலுக்கான தொடர்பை விளக்கும் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார்.

*மேலும் பருப்பொருளுக்கு (matter) எதிரான பருப்பொருளின் (antimatter) இருப்பை முன்கணித்துக் கூற இவரது இந்தச் சமன்பாடு வழிகோலியது. ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் குவாண்டம் மெக்கானிக்ஸ்’, ‘டைரக் ஷன்ஸ் இன் ஃபிசிக்ஸ்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் ‘லெக்சர்ஸ் ஆன் குவாண்டம் மெக்கானிக்ஸ்’ மற்றும் ‘குவான்டிசேஷன் ஆஃப் தி கிராவிடேஷனல் ஃபீல்ட்ஸ்’ உள்ளிட்ட கட்டுரைகளை வெளியிட்டார்.

* குவாண்டம் இயக்கவியலுடனான பொது சார்பியல் ஒப்புரவாக்கல் (reconciliation of general relativity) களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார். குவாண்டம் விசையியல், சுழற்சி சார்புத் தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார்.

* அணுவியல் கோட்பாட்டின் புதிய உற்பத்தி வடிவங்களைக் (new productive forms) கண்டறிந்தமைக்காக ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கருடன் இணைந்து 1933-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், மாக்ஸ் பிளாங்க் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

*அமெரிக்கன் இயற்பியல் கழகம் மற்றும் லண்டன் இயற்பியல் கழகங்களில் கவுரவ ஃபெலோஷிப்பும் பெற்றார். அமெரிக்கா, ஜெர் மனி மற்றும் இங்கிலாந்தில் இவரது பெயரில் அறிவியல் விருதுகள் வழங்கப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க இயற்பியலாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட பால் அட்ரியன் டிராக் 1984-ம் ஆண்டு தமது 82-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

தூக்கத்தில் கும்பகர்ணன்... சுத்தத்தில் நம்மவர்... பூனைகள் பற்றிய ‘அடடே’ தகவல்கள்! #WorldCatDay

 
 

பூனைகள் 

”இந்தப் பூனையும் பால்குடிக்குமா?” 

”பண்றதெல்லாம் பண்ணிட்டு பூனை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்குற” 

என்று பலர் திட்டுவதை நாம் கேட்டிருப்போம். குழம்பு சட்டியில் இருக்கும் மீனை தின்று விட்டாலும் அமைதியாக எதுவுமே நடக்காதது போல் பூனை இருக்கும் அந்த அப்பாவியான லுக் பூனைக்கு மட்டுமே பொருந்தும். இந்த குறும்பு பூனைக்குத்தான் இன்று (ஆகஸ்ட் 8) ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டாடுகிறது உலகம்.

பூனைகள் பண்டைய எகிப்தியர்கள் வழிபாட்டு விலங்காக ஏற்றுக்கொண்டு, அதை வழிபட்டு வந்தனர். பூனைகள் மனிதனால் 10,000 ஆண்டுகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வளர்க்க தொடங்கினர். 

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணி. வீடுகளில் வளர்க்கப்படுவதால் சைவ உணவை உண்ணும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தன் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகள் நுழைந்துவிடும். பூனைகளுக்கு சிறந்த இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. எனவே, இரவில் சிறு சத்தம் கேட்டாலும் இரையை வேட்டையாடி உண்டுவிடும். சத்தமின்றி வேட்டையாடி முடிக்கும் திறமை பூனைக்கு உண்டு.

பூனைகளின் உடலமைப்பு:

பூனைகள் பெரும்பாலும் 4-5 கிலோ எடை கொண்டவை. பூனைகளின் சராசரி உயரம் 23-25 செ.மீ மற்றும் உடல் நீளம் 46 செ.மீ, பூனையின் வால் சராசரியாக 30 செ.மீ நீளமுடையதாக இருக்கும். பூனைகளின் காதுகளில் 32 தசைநார்கள் உண்டு. அவற்றின் உடல் வெப்பநிலை 38-39° (101-102.2°F) தாடையிலுள்ள 35 பற்களும் இரையைக் கொல்லும் வகையிலும், மாமிசத்தை கிழிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. பூனைகள் குறைந்த அளவிலான ஒளியை (டபீட்டம் லூசிடம்) கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வை திறன் கொண்டுள்ளது.

cats

 

பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
1. பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும்.
2. பூனைகள் 13-14 மணி நேரம் தூங்குவதிலேயே கழித்துவிடுகின்றன.
3. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை.
4. பூனைகள் தமது காதை 180° வரை அசைக்கக்கூடியதுடன் அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது.
5. பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகம்.
6. பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதற்கு காரணம் பூனைகளுக்கு சுவை அரும்புகள் கிடையாது.
7. பூனைகள்  100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்ககூடியது.
8. மனிதர்களின் கைரேகையினை போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள்  தனித்துவமானவை.
9. பூனைகள் உள்ளங்கால்கள் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
10. பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
11. பெண் பூனைகள் வலது கால் பழக்கமுடையது, ஆண் பூனைகள் இடது கால் பழக்கமுடையது.
12. 32 மாடிகள் உயரத்திலிருந்து விழந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.
13.பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவுக்கு திறன் உடையவை.
14. பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12-15 ஆண்டுகள்.

 

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எஜமானரை கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், பூனை எப்போதும் செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மீம்ஸ் மூலம் இயற்கை விவசாயம்... லைக்ஸ் அள்ளும் Learn Agriculture பக்கம்..!

 
 

Learn Agriculture

ஃபேஸ்புக் தொடங்கி அனைத்து சமூக வலைதளங்களிலும் மாஸ் ஹிட் என்றால் அது மீம்ஸ்தான். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத விஷயங்களை ஒரேயொரு புகைப்படத்தில் செய்துவிடுகிறார்கள் மீம் கிரியேட்டர்கள். அதேசமயம் இவை பெரும்பாலும் சிரிக்கவைக்கவும் அடுத்தவர்களை கலாய்ப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. ஒரு சிலர்தான் இதை ஆக்கபூர்வமாகவும் அடுத்தவருக்கு அறிவு புகட்டவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியம் குறித்தும், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்கம்தான் "Learn agriculture".  இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் சந்தோஷை சந்தித்துப் பேசினோம்.....

எல்லாரும் மத்தவங்கள சிரிக்க வைக்க மீம்ஸ் போடும்போது, நீங்க மட்டும் வேளாண்மை சார்ந்து மீம்ஸ் போட என்ன காரணம்?

நான் அண்ணாமலைப் பல்கலையில இளங்கலை வேளாண்மை படிச்சேன் படிக்கும்போதே இயற்கை வேளாண்மையைப் பற்றி விவசாயிகளிடத்துல விழிப்புஉணர்ச்சி ஏற்படுத்தனும்னு ரொம்ப ஆசை. படிப்பு முடிஞ்சதும் நம்மாழ்வார் இயற்கை முறை வேளாண் பயிற்சியில கலந்துகிட்டு இயற்கை வேளாண்மையைப் பத்தி எல்லாமே கத்துக்கிட்டேன். அத விவசாயிகளிடமும் மற்றவர்களிடமும் சொல்லணும்னு எடுத்த முயற்சிதான் இது. 

இயற்கை விவசாயத்துக்காக மீம்ஸ் தவிர வேற என்னவெல்லாம் செஞ்சு இருக்கீங்க?

ஆரம்பத்துல மீம்ஸ் மட்டும்தான் போட்டுட்டு இருந்தேன். அதுவும் ஒரு நாளைக்கு ஒன்னு அந்த மாதிரிதான். நாம இன்னும் நிறைய செய்யணும்னு தோணுச்சு. அதனாலதான் நண்பர்களோட உதவியோட இப்ப "Learn agriculture"னு ஒரு யூ-ட்யூப் சேனலையும் உருவாக்கியிருக்கோம். இதுவரைக்கும்  வேளாண்மை சார்ந்து கிட்டத்தட்ட ஐந்நூறு மீம்ஸுக்கும் மேல போட்டிருப்போம். நமக்குத் தெரிஞ்ச விஷயத்த நாலுபேருக்கு சொல்லிக் கொடுப்பதுதான கல்வியோட அடிப்படை!

மீம்ஸ்

மீம்ஸ் ஆல்பம் பார்க்க

நீங்க எடுத்துகிட்ட முயற்சியில எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கீங்கனு நினைக்குறீங்க?

வெற்றினு நான் எதையும் சொல்லிக்க விரும்பல. ஆனா நான் தனியா போய் வேளாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கும்போதெல்லாம் நான் சின்னபையன்னு விவசாயிகள் மத்தியில அவ்வளவா எடுபடவே இல்ல. அதன் காரணமாத்தான் நான் மீம்ஸ்கள சாதனமா பயன்படுத்திகிட்டேன். ஆரம்பத்துல நான் சொல்றத கேட்க யாருமே இல்ல. ஆனா இப்போ என்னுடைய பேஜ்க்கு ஆயிரக்கணக்குல ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நிறைய விவசாயிகள் மெஸேஜ் மூலமா நிறைய ஆலோசனை கேக்குறாங்க. இதுவே பெரிய சாதனையா நினைக்குறேன்

நீங்க என்ன வேலை பாக்குறீங்க?

வேலைக்கு எல்லாம் போற மாதிரி எனக்கு ஐடியா இல்ல. என் சொந்த ஊரு திருவாரூர் மாவட்டத்துல இருக்குற நன்னிலம். அங்க கொஞ்சம் நிலம் வாங்கி இயற்கை முறையில விவசாயம் செய்யணும். எல்லாரும் வேற வேற வேலைக்குப் போயிட்டா யாரு பாஸ் விவசாயம் செய்றது?

இது உங்களோட தனிப்பட்ட முயற்சியா?

நிச்சயமா நண்பர்களோட உதவி இல்லாம இது சாத்தியம் இல்ல. எல்லாருமே எனக்கு முழுசா சப்போர்ட் பன்றாங்க. ஐ.டி துறையில வேலை பார்க்குற நிறைய நண்பர்கள் ஆர்வமா இதுல பங்கெடுத்துக்குறாங்க. அதுமட்டும் இல்லாம எங்களுக்கு எல்லா மாவட்டதுல இருக்கிற "அக்ரி அக்ட்டிவிஸ்ட்" கூடவும் தொடர்பு இருக்கு. விவசாயிகள் சந்தேகம்னு கேட்டா அவங்களுக்கு அருகில் இருக்குற ஆளுங்க மூலமா தீர்த்து வைக்குறோம். இது ஒரு டீம் வொர்க் தான் நிச்சயமா தனிப்பட்ட முயற்சி இல்ல.

உங்களுடைய லட்சியம் என்ன?

குறைந்தபட்சம் என் ஊர்ல இருக்குற எல்லா விவசாயிகளயும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தணும். மாற்றம் என்னிலிருந்தே தொடங்கணும் அவ்வளவுதான்.

 

என்றவரிடம் பெருமையோடு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டோம்.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.