Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ரோஜா... ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்ரியர்களிடம் கொடுத்த கோல்டன் விசிட்டிங் கார்ட்! #25YearsOfRoja

பொதுவான நண்பர் ஒருவரது பார்ட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இளைஞரை சந்திக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். விளம்பர ஜிங்கிள்ஸில் பிஸியும் கூட. ‘ரோஜா படத்துக்கு அவருக்குக் கிடைத்த சம்பளம் 25000. அதை மூன்று நாட்களில் விளம்பரத்துக்கு இசையமைத்து சம்பாதிக்கும் நிலையில்தான் அவர் இருந்தார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவரது லியோ காபி (என்ன ஒரு ஒற்றுமை. அதில் நடித்திருந்தவர் அரவிந்த்சாமி!) விளம்பர ஜிங்கிள்ஸுக்காக , விளம்பர உலகில் பெரும் பாராட்டுகள், விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானை வந்து சேர்ந்து கொண்டிருந்த நேரம் அது.

ஏ.ஆர். ரஹ்மான் மணிரத்னம்

மணிரத்னத்தை தனது ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார் ரஹ்மான். அவ்வளவு பெரிய டைரக்டர். வருவாரா என்று தெரியாது. ஆனால், வருகிறார் மணிரத்னம். ஒன்றிரண்டு ட்யூன்களை வாசிக்கச் சொல்கிறார்.

“நான் அசந்துபோனேன். ஒரு கார்ஷெட்டை, ரெகார்டிங் ஸ்டூடியோவாக மாற்றியிருந்தார் ரஹ்மான். இந்த இடத்தில் இருந்து இப்படி அசத்தலான ட்யூன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரா என்று வியந்தேன். அத்தனை வசீகரிக்கற இசைத்துணுக்குகளை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் மணிரத்னம்.

“அந்த சமயம் நான் விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைத்துக் கொண்டிருந்த காலம். அங்கே 100 ட்யூன் போட்டால், அவற்றிலிருந்து ஒன்றிரண்டுதான் தேர்வாகும். ஆகவே நான் ஒரு ஜென் நிலையில்தான் இருந்தேன். அவருக்கு என் ட்யூன்ஸ் பிடிக்குமா என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது வேறு!” -என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை.

சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை

கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

******** 
தி
ருப்பூரில் பாளையக்காடு FC குடோனில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் நான்.  ‘செகண்ட் ரயில்வே கேட்’ அருகே  கவுண்டர் மெஸ் என்றொரு கடை இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு க்யூவில் அமர்ந்து, நம் வரிசை வரும்போதுதான் போய் சாப்பிட முடியும். அங்கே, வெளியில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்துதான் இந்த வரிகளை முதன்முதலில் கேட்டேன். சின்ன வயதிலிருந்தே பாடல்களின் பைத்தியமாக இருந்தேன்.  இளையராஜாவின் தீவிர ரசிகனான (இன்றும்) எனக்கு, ‘இது ராஜா ம்யூசிக் இல்லையே’ என்று தோன்றியது. போய்ப் பார்த்தபோது ‘ரோஜா’ கேசட்டைக் காண்பித்தார் கடைக்காரர். பாலசந்தர் தயாரிப்பு. மணிரத்னம் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. 

Roja Tamil Movie

இரண்டாம் இடையிசையில், கோலாட்டம் போல ஆரம்பித்து, ‘ஏலேலோ.. ஏலே.. ஏலேலோ’ அப்படி ஈர்த்தது.  இந்தப் பாடலின் மூலம் தமிழர்களின் வீடெங்கும் தன் இசையைப் படரவிட்ட ரஹ்மான், அதன்பின் அடைந்த உயரங்கள், இமயத்தைத் தாண்டிய சிகரங்கள். “அந்தப் பாட்டைக் கேட்டதுமே அழுதுட்டேன். ஏன்னா, சினிமாவுக்குப் போட்ட முதல் பாட்டில்லையா?” என்றார் அவரது அம்மா. படத்தின் தயாரிப்பாளர், கே.பாலசந்தர், இந்தப் பாடலைக் கேட்டதும்  மணிரத்னத்தை அழைத்துச் சொன்னது ‘Its going To Be Song of The Decade". ஆனால் அந்தப் பாடலைப் பற்றி இரண்டு  Decades கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசுவோம்.

என்னைக் கவர்ந்தது அந்தப் பாடலில் பல உண்டு. பல்லவி முடிந்ததும் தனியே ஒலிக்க ஆரம்பிக்கும் வயலின், ஒரு இடத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின், அந்த ‘ஏலேலோ’க்களுக்கு இடையே ஒலிக்கும் வீணை, ‘மீன்பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், மொத்தப்பாடலும் முடியும்போது  ‘ஆசை!’ என்று சட்டென்று முடியும் இடம் என்று நிறைய.

தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இந்தக் கலைஞன், என் போன்ற இசைப்ரியர்களிடம் நீட்டிய கோல்டன் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்தின் பாடல்கள்! 

ரஹ்மான் அப்போது செய்தது, இசையை விட ஒலித்தரத்தில் மேஜிக். துல்லிய ஒலித்தரம் என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 6 வயது முதல் அப்பாவுடன் ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார் ரஹ்மான். 9 வயதில் தந்தை இறந்துவிடுகிறார். ரஹ்மானுக்கு பள்ளிக் காலம்தொட்டே எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இவற்றின்மீது மோகம் அதிகம். அவை சார்ந்த துறைகள்மீதுதான் ஆவல். ஆனால், தந்தை இறந்துவிட்டதால், ‘கொஞ்சம் இசை தெரியுமே உனக்கு.. தெரிந்த தொழிலைச் செய்’ என்ற அன்னையின் கட்டளைப்படிதான் அவர் இசைக்கூடங்களுக்குச் செல்கிறார். சின்னச் சின்ன ஆர்கஸ்ட்ரைசேஷன் வேலைகள், செய்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார்.  இசை சார்ந்த தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு Sounding மீது மிகப்பெரும் அறிவும், ஆவலும் உண்டு. 

ரோஜா  இசையமைத்து பாடல்களெல்லாம் ஹிட் ஆனாலும், தியேட்டரில் அவற்றைக் கேட்கும்போது மிகவும் மனம் தளர்ந்து போகிறார் ரஹ்மான். Sounds குறித்த அறிவு வாய்க்கப்பெற்ற அவருக்கு, தியேட்டர்களின் ஒலித்தரம் ஏமாற்றமளித்தது.  “இப்படியா கேட்கும் தியேட்டர்களில்? இப்படியானால் நான் சினிமாவுக்கு இசையமைக்க மாட்டேன்” என்கிறார். மணிரத்னம், சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் இருவரும்தான் ‘இந்த நிலை மாறும்’ என்று நம்பிக்கையளித்தவர்கள். அதன்பிறகே சமாதானமாகிறார்.

ரஹ்மானின் இந்த ‘சவுண்ட் க்வாலிட்டி கறார்த்தனம்’ பற்றி சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் சொன்னது முக்கியமானது: “புல்லாங்குழலில் வரும் காற்று மட்டும்தான் வேண்டும். அந்த ’Base' பாடலில் கேட்கக்கூடாது ” என்பாராம். கீழுள்ள வீடியோவில் 1.25ல் கேளுங்கள்.

பல்லவி முடிந்து, முதல் இடையிசையில் ‘லலலல லலலா’ எனும் பெண்குரலுக்கு முன் வரும் புல்லாங்குழலிசையைக் கேட்டால் அது புரியும். அந்த ஷார்ப் - துல்லியம் - ரஹ்மானிசம்! காதல் ரோஜாவே பாடலின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, சோகத்தை அத்தனை எளிமையாகக் கடத்துகிற மெட்டு. மனைவியைப் பிரிந்தவன் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருப்பான். அவன் சோகத்தை ராகங்களாகும்போது, சிக்கல்களில்லாத எளிமை மிக முக்கியம் என்று ரஹ்மான் நினைத்திருக்க வேண்டும். அத்தனை எளிய மெட்டு. (அதாவது கேட்பதற்கு. இசையமைக்க அல்ல!)  



வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்றுபோ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்ததில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்துபோ
பாவையில்லை பாவை... தேவையென்ன தேவை...
ஜீவன்போன பின்னே.. சேவையென்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்!

ஏமாற்றத்தையும் சோகத்தையும் இயலாமையையும் ஒருசேரக்கடத்துகிற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். அத்தனை எளிமையாகவும் அழுத்தமாகவும் அமைந்த வைரமுத்துவின் வரிகள் என்று அது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்! 

‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். மதுபாலாவின் கண்களை மூடியிருக்கும் தன் கைகளை, அரவிந்த்சாமி விடுவிக்கும் தருணத்திலிருந்து பாடல் தொடங்கும். அதன்பின் 10 நொடிகளுக்குப் பிறகு கண்ணாடி உடைவதைப் போன்ற ஒரு ஃப்யூஷன். அதன்பின் மெலிதான கோரஸ். தொடர்ந்து வயலினின் ஒரு இழுப்பு. இதற்குப் பிறகுதான் ‘புது வெள்ளை மழை’ என்று சுஜாதாவின் குரல் தொடங்கும். படத்தைக் காட்சி வடிவில் பார்க்கும்போதெல்லாம், இந்த விஷுவல்ஸ்குப் பிறகு அமைத்த இசையோ என்று தோன்றும். அந்த அளவுக்கு, காஷ்மீரின் அழகை மதுபாலா வியந்து பார்ப்பதை, கண்ணை மூடி நாம் கேட்டாலும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இசையாகக் கொடுத்திருப்பார் ரஹ்மான்.


நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்நிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ


 

பாடல் முழுவதுமே ஒரு நேர்கோட்டில், ஒரே மாதிரியான ஒரு இசை பின் தொடர ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘உந்தன் காதோடு யார் சொன்னது’ எனும் வரிகளில் ஒரு அருவி விழுவதை உணரலாம்.

‘ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்’ இந்த ஆல்பத்தின் மற்ற பாடல்களைவிட, குறைந்த அளவு பேசப்பட்ட பாடல். ஆனாலும் அதன் ஆர்க்கஸ்ட்ரைசேஷன்.. அபாரம். பெரும்பாலும், பாடகர்களை வைத்தே - A cappella பாணியில் பல இடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். ஜுகல்பந்தி பாணியில் தபேலாவும், ட்ரம்ஸும் போட்டிபோடும் இரண்டாம் இடையிசையும் டாப்.

ரோஜாவுக்குப் பின் ஒன்றிரண்டு படங்கள்  வந்த புதிதில், பேட்டிகளில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல் எது என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டால் ‘தமிழா தமிழா’, ‘சின்னச் சின்ன ஆசை’ என்றுதான் டக்கென்று பதில் வரும்.  தாய் மண்ணே வணக்கம், செம்மொழிப் பாடல் என்று தொடங்கி  ஆஸ்கர் பெற்றுத் தந்த ஜெய்ஹோ வரை இந்த மாதிரியான ஜானர் பாடல்களில் தனி முத்திரை பதிப்பதற்கான ஆரம்பப் புள்ளி இந்தப் பாடல் எனலாம். 

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னைக் காக்கும் இல்லையா

 

படத்தில் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. ‘தமிழா தமிழா’. பல்லவி, இடையிசை, சரணம் என்ற வகைக்குள் இதை அடக்க முடியாது. ஹரிஹரனின் மென்குரலில் ‘தமிழா தமிழா’ என்று ஆறுதல் வரிகளோடு வரும் பாடலில், நாடி நரம்பை உசுப்பேற்றும் இசையும், ‘இம்மண்ணிலா பிளவென்பது?’ என்று முறுக்கேற்றும் வரிகளுமாய்.. ஒரு புதிய அனுபவம் தந்தது இந்தப் பாடல். 

 

25 வருடங்களுக்கு முன், இதே ஆகஸ்ட் 15ல் வெளியான 'ரோஜா' படம் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. மணிரத்னம் எனும் கலைஞனை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது. இந்தியிலும் ரோஜா படமும், பாடல்களும் ஹிட்டடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அங்கும் பிரபலமானார். மூன்று இந்திப் படங்கள் ஒப்பந்தமாக அவற்றில் முதலில் வெளியான ‘ரங்கீலா’ வடக்கத்தியவர்களைப் பித்துப் பிடிக்க வைத்தது. அதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது ரோஜா தான்.

ரோஜா என்ற திரைப்படம்தான்... ரஹ்மானுக்கு ஃப்லிம்ஃபேர் விருது, மாநில அரசின் விருது என்று துவங்கி தேசிய விருதுவரை பெற்றுத் தந்தது.  வைரமுத்துவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மணிரத்னத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுத்தந்தது. அரவிந்த்சாமிக்கு விருதைப் பெற்றுத் தந்தது. சரி... ரசிகர்களுக்கு? 

ஏ.ஆர். ரஹ்மான் எனும் பெருங்கலைஞனை அடையாளம் காட்டியது! எத்தனை கொடுத்தாலும் பத்தாத இசைப்ரியர்களெனும் யானைகளுக்கு  ‘ரஹ்மானிசம்’ என்ற மதம்பிடிக்க வைத்தது!  

Thank you A.R Rahman... Feed us More!

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இப்பிடியும் திருக்குறளை கேட்கலாமா? சிரிக்காம சிந்திங்க!!! - 15-08-2017

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

  • தொடங்கியவர்

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில்... 1f60d.png?1f60a.png? அரிய காணொளி 1f3ac.png?

அந்தநாள் ஞாபகம் வந்ததே!

  • தொடங்கியவர்

இலங்கையில் தேசியக் கொடியேற்றிய விராட் கோலி

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் கொண்டாடினர். 

சுதந்திர தினம் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியினர்.

புகைப்படம்: பிசிசிஐ

 


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முதல்முறையாக வொயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தை கண்டியில் இந்திய வீரர்கள் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை கேப்டன் விராட் கோலி ஏற்றினார். இதில், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 15 பேர் கொண்ட இந்திய அணி மற்றும் துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஏற்றிய பின்னர் தேசிய கீதம் பாடி அவர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தம்பூலாவில் வரும் 20-ம் தேதி நடக்கிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

70-ஆவது சுதந்திர தினம்: இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

இன்று (செவ்வாய்க்கிழமை), தனது 70 ஆண்டுகால சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் முக்கியமான இடங்களின் பொக்கிஷமான புகைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

    போர் காலங்களில் புகைப்படம் எடுக்கும் வழக்கம் தொடங்கிய காலகட்டத்தின் ஆரம்பக்கால புகைப்பட கலைஞர்களில் ஒருவர் பெலிஸ் பீட்டோ. கிரீமியா போரில் புகைப்படங்களை எடுத்த அவர், இந்தியாவிற்கு வந்தார். 1857 இல் நடைபெற்ற இந்திய சிப்பாய்க் கலகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ‘ஆக்ரா போர்’ நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட தாஜ்மஹாலின் புகைப்படம் இது. தொடரும் புகைப்படங்கள் பீட்டோவின் புகைப்பட பொக்கிஷங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில…

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்HULTON ARCHIVE / GETTY IMAGES

    புந்தியின் மஹாராவ் ராஜா ராம் சிங் சாஹிப் பஹதூரின் இந்த உருவப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பு அவரை "காட்டுத்தனமானவர்" என விவரிக்கிறது. ராணி விக்டோரியாவுக்கு சொந்தமான நான்கு தொகுதிகள் கொண்ட புகைப்படக் கலை அச்சிடல்களில் (Photogravure) இருந்து எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்PHOTOGLOB CO. VIA HULTON ARCHIVE / GETTY IMAGES

    பாம்பே (மும்பை)யின் கிர்கெளம் சாலையின் இந்த புகைப்படம், வண்ணப் புகைப்படங்களின் ஆரம்பக்கால செயல்முறையான ஃபோட்டோக்ரோம் (photochrom) தொழில்நுட்பத்திற்கு ஒரு உதாரணம். கருப்பு-வெள்ளை புகைப்பட நெகடிவ்களில் இருந்து “வண்ண கற்கள்” (tint stones) மூலமாக வண்ணப் புகைப்படங்கள் இந்த செயல்முறையில் உருவாக்கப்படுகின்றன.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்HULTON ARCHIVE / GETTY IMAGES

    நவநாகரீக ஆடைகள் உடுத்தும் லினிரியின் ராஜா ஷாஹிப்பின் `புக்ரி` தலைப்பாகை, வெள்ளி கம்பிகளை பின்னிப் பிணைத்தது போல் அழகாக காணப்படுகிறது. அவருடைய ஆடைகள் அற்புதமான வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அரசர்களின் அதிகாரம் மட்டுப்பட்டாலும், அவர்களது வெளித்தோற்றமும், கெளரவமும் வழக்கம் போலவே பராமரிக்கப்பட்டது.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்HULTON ARCHIVE / GETTY IMAGES

    1856 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த பாம்பே துறைமுகத்தின் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உயரமான கொடிமரங்களைக் கொண்ட இந்த கப்பல்கள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை காட்டுகின்றன. 1855 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய பிராந்தியங்கள் மற்றும் தொல்பொருட்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக, வரைபடங்களை உருவாக்குபவர்களை அனுப்புவதற்கு பதிலாக புகைப்படக்காரர்களை கிழக்கிந்திய கம்பெனி அனுப்பியது.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்HULTON ARCHIVE / GETTY IMAGES

    புகைப்படங்களின் வெளிப்பாடு காலங்களை சுருக்குவது என்பது, நிலையான புகைப்படங்கள் ஓவியங்களை விட அதிகமானபோதே சாத்தியமானது. வண்ணமில்லா புகைப்படமாக இருப்பதால், ஜெய்பூரின் இந்தத் தெரு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 1875-76களில் ஜெய்பூர் வருகை தந்த வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு அளிக்கும்விதமாக ஜெய்பூரில் உள்ள கட்டிடங்களின் வெளிப்புறங்களில் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டது.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்SAMUEL BOURNE / HULTON ARCHIVE / GETTY IMAGES

    19 ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான சாமுவேல் பார்ன் எடுத்த புகைப்படம் இது. கங்கை நதியின் மீது அமைந்துள்ள மணிகர்னிகா காட்டின் இந்த புகைப்படம், இந்திய காலநிலையை உணர்த்துகிறது. வறட்சியான காலங்களில், கேமராக்களின் கண்ணாடி தகடுகளில் புழுதி படிந்து புகைப்படம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். ஈரப்பதம் அதிகமான காலத்தில், கேமராவின் மர பாகங்களில் பூஞ்சை வளரும். வெயில் காலத்தில் வெப்பத்தால் கேமாரவில் உள்ள ரசாயனங்கள் சீர்குலையும். தகடுகளை கழுவுவதற்கு உடனடியாக நீர் கிடைக்காமல் போவதும் புகைப்படக் கலைஞர்கள் எதிர்கொண்ட பிரச்சனை.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்ROBERT PHILIPS / HULTON ARCHIVE / GETTY IMAGES

    புவியியலை ஆய்வு செய்வதோடு, இந்திய மக்களையும் படம் எடுக்குமாறு அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டார்ஜிலிங்கில் வரிசையாக அமர்ந்திருக்கும் பெளத்த இசைக் கலைஞர்களின் இந்த புகைப்படமானது, பழங்குடியினரையும், பழக்கவழக்கங்களையும் பதிவு செய்வதற்கான முயற்சிகளுக்கான ஒரு சிறந்த உதாரணம்.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்SAMUEL BOURNE / HULTON ARCHIVE / GETTY IMAGES

    தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி (முன்பு திருச்சினோபோலி) உலகின் பழமையான பாறைப் படிமங்களின் ஒன்றாகும். சாமுவேல் பார்னுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்திய இந்த பாறைகள், இங்கிலாந்து ராணுவத்தின் ஆரம்ப வெற்றியாகவும் கருதப்பட்டது. இந்த புகைப்படமானது, தொன்மை மற்றும் நவீன காலணி வரலாற்றின் கலவையாக காணப்படுகிறது.

  • இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்SAMUEL BOURNE / HULTON ARCHIVE / GETTY IMAGES

    தமிழ் பாணியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி ஆலயம் உலகில் உள்ள மாபெரும் மத வளாகங்களில் ஒன்று. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின்கீழ் இந்தியா இருந்தபோது எடுக்கப்பட்ட போர்னின் புகைப்படங்கள் பிரபலமானவை. ஏனெனில் அவை இந்தியாவின் கலாசார வரலாற்றுடன் தொடர்புடையவை.

 

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Derana Offmarks Miss Sri Lanka Earth 2017

 

 

Derana Offmarks Miss Sri Lanka Earth 2017

 

 
Derana Offmarks Miss Sri Lanka Earth 2017 இறுதி போட்டி நேற்று (13) இரவு Citrus Waskaduwa இல் இடம்பெற்றது.

மிஸ் சிறிலங்கா அழகிப் போட்டியில் ஷியாமா தசநாயக்க கிரிடத்தை பெற்றார்.

தில்ருஷி விரபெரும இரண்டாவது இடத்தை பெற்றார்.

சலனி ஷெஹானி மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இறுதி போட்டி தொடர்பான காணொளிகளை எதிர்வரும் 19 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 9.30 அளவில் ரீ.வி தெரண ஊடாக நேயர்கள் காண முடியும்.

http://tamil.adaderana.lk

  • தொடங்கியவர்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது ‘டிக் டிக் டிக்’ பட டீசர்!

 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டிக் டிக் டிக்

'மிருதன்' படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக இயக்கும்' டிக் டிக் டிக்' படத்தின் டீசர் தான் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.  இதுவரை ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த ஸோம்பி கான்செப்ட்டை, 'மிருதன்' படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தினார், இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அறிவிப்போடு வெளியான 'டிக் டிக் டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரையும் கவர்ந்தது. விண்வெளி வீரர்களின் உடையில் ஜெயம் ரவி இருக்கும் இந்தப் படம், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

 

 

 
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்

சுழலுக்குள் தள்ளும் சுழலி

shutterstock634117832

மெ

ய்நிகராக நம்மை கட்டிப்போடும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகம் அல்ல அது. கற்பனையான உலகைக் கண்முன்னே உலாவவிடும் வீடியோ கேம்ஸூம் அல்ல. பார்க்க மிகச் சாதாரணமாகத் தோன்றும் அதை, ஒருதரம் கையில் பிடித்துச் சுழற்றத் தொடங்கியவர்கள் மீண்டும் அதைத் தரையில் வைப்பதில்லை. மனதை ஒருமுகப்படுத்தும் என உளவியல் ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்பட்ட அந்தச் சாதனம் இன்று மனதை ஆட்டிப்படைக்கும் ஆபத்தான பொருளாகத் தடை செய்யப்பட்டுவருகிறது. 1990-களிலேயே சந்தைக்கு வந்துவிட்ட ‘ஃபிட்ஜட் ஸ்பின்னர்’தான் இப்போது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும் பதின்ம வயது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கிறது.

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுவிட்டாலும் சில மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் பாரன், ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலிருந்து இறங்கும்போதுகூட ஃபிட்ஜட்டை சுழற்றிக்கொண்டிருந்த ஒளிப்படம் செய்தி ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வளர்ந்த நாடுகளில் தடை

ஆட்டிசம், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க உதவும் எனச் சொல்லப்பட்ட ஃபிட்ஜட் ஸ்பின்னர் இப்போது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சில பள்ளிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம், வகுப்பறையில் மாணவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் எந்நேரமும் ஃபிட்ஜெட்டைச் சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிளாஸ்டிக் அல்லது இரும்பால் ஆன இந்த பொம்மையின் நடுவில் வெங்கலம் அல்லது பித்தளை பேரிங் பொருத்தப்பட்டிருப்பதால் அதைச் சுழற்றி வீசி விளையாடிய சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதைவிடவும் பயங்கரமான குற்றச்சாட்டை ரஷ்யா முன்வைத்துள்ளது. ஃபிட்ஜட்டை போதை வஸ்துகளைப் பூசி இளைஞர்களை வசியப்படுத்த எதிர்க்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுவதாக அங்குச் சர்ச்சை எழுந்தது.

போதாக்குறைக்கு இந்த வாரம், அமெரிக்காவின் சிகாகோ நகர அருங்காட்சியகத்தில் உலகின் மிகப் பழமைவாய்ந்த ஃபிட்ஜட் ஸ்பின்னரை தன்னுடைய மகள் கண்டதாக ட்வீட் போட்டார் ஒரு தந்தை. இதனையடுத்து முதல் ஃபிட்ஜட்டை தேடும் படலம் இணையத்தில் மையம்கொண்டுள்ளது.

 

இந்தியாவில் ஃபிட்ஜட்

அட! எங்கேயோ, யாரோ விளையாடும் பொம்மையைப் பற்றி இங்கே எதற்குப் பேச்சு என நினைத்தால் அது தவறு. மருந்து முதல் ஸ்மார்ட்ஃபோன்வரை எதெல்லாம் பணக்கார நாடுகளில் தடைசெய்யப்படுகிறதோ அவை அனைத்தும் அடுத்து வந்திறங்கும் நாடு இந்தியாதானே! அதான் ஃபிட்ஜட்டும் இந்தியாவுக்குள் வந்துவிட்டது.

வந்த வேகத்தில் ஆன்லைனிலும் தெருக்கடைகளிலும் வியாபாரம் அள்ளுகிறது. யூடியூபில் இதற்கான டெமோ வீடியோக்கள்கூட ஹிட் அடிக்கின்றன. ஸ்மார்ட்ஃபோனிலேயே இதை விளையாட எக்கச்சக்கமான ஃபிட்ஜட் ஆப்ஸுகளும் வந்துவிட்டன. இதனால், பம்பரம்விட்ட பாரம்பரியத்தைச் சேர்ந்த நம் வாண்டுகளும் இளவட்டங்களும் இதை கை விரல்களில் மட்டுமல்ல கால்விரல், கழுத்து, மூக்கின் மேலேகூடச் சுழலவிட்டு வித்தைக் காட்டுகிறார்கள்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக நம்மை வசியப்படுத்த ஃபிட்ஜட் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கையடக்கப் பொம்மை ஒன்று நம்மை அடக்கிவைக்க அனுமதிக்கலாமா?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
பயங்கரமான கடற்பயணங்கள்
 

image_c3da443e41.jpg

உலகின் பல்வேறு கடற்பிராந்தியங்களில் கடற்பயணத்தின் பயங்கரத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

image_ebec7a624a.jpgimage_dd825ddab2.jpgimage_c737dfc8ca.jpgimage_fc38ca3821.jpgimage_59442709d4.jpgimage_9afb28c2a6.jpgimage_1b72a262b1.jpg

 

நன்றி: டெய்லி மெயில்

  • தொடங்கியவர்
‘மரணம் கசக்கும் உணர்வு’
 

image_593e7feedf.jpgஅந்தத் தாத்தாவின் பேரனுக்கு குழந்தை பிறந்துவிட்டது. அவருக்கு பூட்டன் என்று பெயர் சொல்லப் புதிய வாரிசு அல்லவா? வீட்டில் ஒரே குதூகலம். அவரைச் சுற்றிப் பிள்ளைகள், பேரன்கள் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினார்கள். 

ஆனால், தாத்தாவின் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது. “ஏன் தாத்தா ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள்” என்று பேரன்கள் கேட்க, தாத்தா சொன்னார். “நான் என் பூட்டனின் கல்யாணம், கச்சேரிகளைப் பார்ப்பேனா என நினைத்ததும் கவலை வந்துவிட்டது” என்றார்.  

பத்துப் பிள்ளைகள், 25 பேரப்பிள்ளைகள் இப்போது பூட்டனும் பிறந்துவிட்டான். இனிமேலாவது சந்தோசப்படாது, தன் ஆயுள் விருத்தியைப் பற்றிக் கவலைப்படுகின்றார். 

முதுமையிலும் கூட, உலகவாழ்வின் யதார்த்தம் பற்றி, இன்னமும் பலருக்குப் புரியாமல் இருக்கின்றது. மரணம்  கசக்கும் உணர்வு என்று எல்லோரையும் பயப்படுத்திவிடுகின்றது. இறைவனிடம் சரணடையும் பாக்கியத்தை மரணம் எற்படுத்துகின்றது என்பதை உணர்க. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 16
 

image_b530bb8db4.jpg1581: இங்கிலாந்து நாடாளுமன்றம், ரோமன் கத்தோலிக்க மதத்தை தடைசெய்தது.

1707: பெரிய பிரித்தானியா உருவாக்கத்துக்கான யூனியன் சட்டத்தை, ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் அங்கிகரித்தது.

1761: இந்தியாவின் பாண்டிச்சேரி பிரதேசத்தை, பிரான்ஸிடமிருந்து பிரிட்டன் கைப்பற்றியது.

1886: ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிரிழந்தார்.

1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 விண்கலங்களின் விண்வெளி நிபுணர்கள் விண்வெளியில் வைத்து பரஸ்பரம் இடம்மாறினர். இத்தகைய நிகழ்வு இடம்பெற்றமை, இதுவே முதற்றடவை.

1979: ஈரானின் மன்னர் ஷா ஈரானைவிட்டு தப்பிச்சென்றார்.

1987: அமெரிக்காவின் மிச்சிகனில் MD - 82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில், 155பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4 வயது குழந்தை மட்டும் உயிர்பிழைத்தது.

2003: சிறுநீரக கோளாறு காரணமாக, உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன், சவூதி அரேபியாவில் வைத்து உயிரிழந்தார்.

2005: வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

2006: இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 5பேர் கொல்லப்பட்டனர்.

2006: லைபீரியாவில் எல்லன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆபிரிக்க நாடொன்றில் அரசாங்கத் தலைவராக தெரிவான முதல் பெண் இவராவார்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

பற்களைப் பார்த்து வயது... சுழியை வைத்து விலை... அந்தியூர் குதிரைச் சந்தை சுவாரஸ்யங்கள்! #VikatanExclusive

 

குதிரைச் சந்தை

குதிரைப் பிரியரா நீங்கள்? அப்படியென்றால் அந்தியூர் குதிரைச் சந்தை பற்றி அறியாமல் இருக்க மாட்டீர்கள். வடஇந்தியாவில் பல இடங்களில் குதிரைச் சந்தைகள் நடத்தப்பட்டாலும் தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே குதிரைச் சந்தை அந்தியூர் சந்தைதான். இதனாலயே, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக தங்களின் குதிரைகளுடன் படையெடுக்கின்றனர் குதிரை ஆர்வலர்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள குருநாதசாமி கோயிலில் ஆடி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும். ஆடி மாதம், மூன்றாவது வாரத்தில் நடைபெறும் இந்தத் திருவிழா ஒரு வாரத்துக்கு நடைபெறும். அதில்தான் இந்தக் குதிரைச் சந்தையும் கூடும். திப்பு சுல்தான், குறுநில மன்னர்களைத் திரட்ட இங்கு வந்தபோது தனது படைக்குத் தேவையான குதிரைகளை வாங்குவதற்காகவும், தம்மிடம் உள்ள தேவையற்றக் குதிரைகளை விற்பதற்காகவும் சந்தையைக் கூட்டினார். அப்போது குருநாதசாமி கோயில் திருவிழா நடைபெற்றதாகவும், அந்த வழக்கமே இன்று வரை தொடர்வதாகவும் அந்தியூர் குதிரைச் சந்தை வரலாறு நீள்கிறது. மக்கள் அனைவரும் தினமும் கோயில் திருவிழா முடிந்ததும், குதிரைகளைக் கண்டு ரசிக்க சந்தைக்குப் புறப்பட்டுவிடுவர்.

பெரும்பாலானோர் ராஜஸ்தானிலிருந்து குதிரைகளை வாங்கிவந்து அவற்றை வளர்த்து, இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனி ஸ்டால்கள் அமைத்து குதிரைகளை நிறுத்தி வைத்துள்ளனர். சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டக் குதிரைகளை இங்கு காணமுடியும். ஒவ்வொரு வருடமும் இங்கு வரும் குதிரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் குதிரையை ரசிக்க வருபவர்கள்.

இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் குதிரைகளை ஆசைக்காகவே வளர்க்கின்றனர். இவர்களைத் தவிர, பந்தயத்துக்காகவும் நாட்டியத்துக்காகவும் வாங்கவும் விற்கவும் வருகின்றனர். இந்திய பாரம்பர்ய குதிரைகளான கத்தியவாரி, மார்வாரி போன்ற ரகங்கள் இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன. குதிரைகளின் காது அமைப்பைப் பொறுத்து ரகங்களை அடையாளம் காண்கின்றனர். இவற்றைத் தவிர பந்தயத்துக்குப் பயன்படும் வெளிநாட்டுக் குதிரைகள், டிரம்ஸ் வாசிக்கும்போது நடனமாடும் நாட்டியக் குதிரைகள் போன்றவற்றையும் இங்கு காணமுடிகிறது. குதிரைகளின் நடனத்தைக் காண்பதற்காக மட்டும் இங்கு கூடும் கூட்டம் ஏராளம்.

குதிரைகள் 9 சுழிகளை முகம் மற்றும் கழுத்தில் கொண்டிருந்தால் அவற்றை ராசியான குதிரைகளாக நம்புகின்றனர். குதிரைகளின் விலை அவற்றின் சுழி மற்றும் அழகைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் 1 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் விலை போகின்றன இங்குள்ள குதிரைகள். குதிரை வாங்க வருவோர் தனது ஜாக்கியை வைத்து ஓட்டி, பரிசோதித்து பார்ப்பர். இதற்காக அந்தியூர் ஹார்ஸ் பெடரேஷன் சார்பில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. குதிரையின் வயதானது அவற்றின் பற்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது.

குதிரை

 

முழு வெள்ளை மற்றும் முழுக் கருப்பு நிறத்திலுள்ள குதிரைகள், கத்தியவாரி ரகங்களாகவே இருக்கும். இவை எளிதில் மக்களைக் கவர்ந்து விடுகின்றன. இதுபோன்ற ’அட்ராக்டிவ் குதிரைகள்’ அதிக விலைக்குப் போகின்றன. குதிரை வாங்குவதைவிட வளர்ப்பதுதான் பெரிய விஷயம் என்கின்றனர் குதிரை வளர்ப்பவர்கள். ஏனெனில் ஒரு குதிரையை நல்ல திடமானதாக வளர்க்க மாதம் ரூ.10,000 வரை செலவு ஆகுமாம். ஓட்ஸ், பார்லி, கோதுமைத்தவிடு, கோதுமை, சோளம் போன்றவை குதிரைகளின் உணவாகும். தினமும் குதிரைச் சவாரி செய்வது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
 
குதிரை விரும்பிகள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் இது. இந்தச் சந்தையில் மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. சுமார் 900க்கு மேற்பட்ட மாடுகளும், ஆடுகளும் ஆண்டுதோறும் விற்பனைக்கு வருகின்றன

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

2017 களாப்பகஸ் புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள் எவை?

பசிபிக் கடலில் இருக்கும் களாப்பகஸ் தீவில் உள்ள வன விலங்குகள் மற்றும் அதன் இயற்கைக் காட்சிகளை படம்பிடிக்கும், `2017 களாப்பகஸ் பாதுகாப்பு அறக்கட்டளை புகைப்படப் போட்டி` நடைபெற்றுள்ளது.

விலங்கின் செயல்பாடு, தாவரவியல், நிலப்பரப்பு, தீவில் மனிதர்கள், விலங்கின் உருவப்படம் எனப் பல தலைப்புகளில் புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள் இங்கே..

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

மெக்கெனா பால்லே எடுத்த இந்த புகைப்படம் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஸ்ட்ராம் பீட்ரல் என்ற கடற்பறவை தண்ணீரில் நடந்தபடியே தனது இரையைத் தேடுகிறது. புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் நடுவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

கார்லோஸ் குன்கா சோலானா எடுத்த `கல்` என்ற கடல் பறவையின் புகைப்படம், இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், விலங்கின் உருவப்படம் என்ற தலைப்பின் கீழ் முதலிடத்தைப் பெற்றது.

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

சான் கிரிஸ்டோபல் தீவின் கரையில் இருக்கும் செம்பயர் ஏஞ்சல்டோ VI என்ற சேதமடைந்த கப்பலின் புகைப்படம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர் ஆண்ட்ரெஸ் பியூனானோ எடுத்த இப்புகைப்படம் தீவில் மனிதர்கள் என்ற தலைப்பின் கீழ் முதலிடத்தை பெற்றுது.

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

ஹெரான் என்ற கொக்கு, கடல் ஆமையைப் பிடிக்கும் இப்புகைப்படத்தினை இவான் டாரியோ எடுத்துள்ளார். 'விலங்கின் செயல்பாடு' தலைப்பின் கீழ் இப்புகைப்படம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

கலாபாகோஸ் மாக்கிங்பேர்ட் என்ற பறவை தனது குஞ்சுக்கு உணவளிக்கும் இப்புகைப்படம் விலங்கின் நடத்தை தலைப்பின் கீழ் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

சுவூத் ப்ளாசா தீவில் உள்ள இந்த உடும்பின் புகைப்படத்தினை ஷேரி வந்தர்மொலென் எடுத்துள்ளார். இந்த உடும்பின் குணாதியசத்தை சரியான நேரத்தில் படம் பிடித்துள்ளார் புகைப்பட கலைஞர். விலங்கின் உருவப்படம் என்ற தலைப்பின் கீழ் இப்புகைப்படம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

கள்ளிச்செடியின் தண்டில் மாலைநேர சூரிய ஒளி படர்ந்திருக்க, இதனை வலுவான, எளியக் கோணத்தில் எரிக் வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துள்ளார். தாவரவியல் தலைப்பின் கீழ் இப்புகைப்படம் முதலிடம் பெற்றுள்ளது

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

செர்ரோ ப்ரூஜோ கடற்கரை கடலில் உள்ள கிக்கர் பாறையினை அசாதாரண நேரத்தில் எரிக் வில்லியம்ஸ் படம் பிடித்துள்ளார். நிலப்பரப்பு தலைப்பின் இப்புகைப்படம் முதலிடத்தைப் பெற்றது.

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

மாஸ்க்யூரா தீவின் கடற்ரையில், ஒரு அமைதியான காலை நேரத்தில் பாறைகள் மீது நண்டுகள் ஊறும் புகைப்படம் 'நிலப்பரப்பு' என்ற தலைப்பின் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

 

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

மனிதனால் உருவாக்கப்பட்ட குடிலுக்கும், கடல் உடும்புக்கும் உள்ள தொடர்பை குறிக்கும் இப்புகைப்படம் தீவில் மனிதர்கள் தலைப்பின் கீழ் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இப்பிடியும் திருக்குறளை கேட்கலாமா? சிரிக்காம சிந்திங்க!!! - 16-08-2017
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.

 

  • தொடங்கியவர்

 

பிக்பாஸ் ஓவியாவிற்கு இலங்கை ரசிகர்கள் வெளியிட்ட பாடல்

  • தொடங்கியவர்

கேப்ரியல் லிப்மன்

 

 
16CHRGNGAPRIEL
 
 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞரும், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான கேப்ரியல் லிப்மன் (Gabriel Lippmann) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

பிரான்சில் லக்சம்பர்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார் (1845). சிறிது காலத்தில் குடும்பம் பாரீசில் குடியேறியது. ஆரம்பக் கல்வி வீட்டியேயே கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் லைசி நெப்போலியன் மற்றும் நார்மலே ஆகிய ஊர்களில் பள்ளிக் கல்வியை முடித்தார்.

1873-ல் அரசால் அமைக்கப்பட்ட அறிவியல் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றி ஆய்வுகள் நடத்த ஜெர்மன் சென்ற அந்தக் குழுவில் இவரும் இடம்பெற்றார். அப்போது அங்கு பிரபல அறிவியல் அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றார்.

பெர்லினில் இவர் மேற்கொண்ட மின் நுண்புழைமை (electro-capillarity) ஆய்வுகளுக்காக 1974-ல் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 1875-ல் பாரீஸ் திரும்பி, இயற்பியல் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்போன் பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராகவும் அதன் பிறகு ஆய்வியல் இயற்பியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

சார்போனில் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றின் இயக்குநராக நியமனம் பெற்றார். இயற்பியலில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். மின்னியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், ஒளியியல், ஒளிப்பட வேதியியல் ஆகிய களங்களில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு இவரது ஆய்வுகள் வழிகோலின.

இயற்பியலில் பல பிரிவுகளில் பயன்படுத்தப்படும் பல அளவுக் கருவிகள் கண்டறியப்படுவதற்கும், மேம்படுத்தப்படுவதற்கும் இவர் காரணமாக இருந்தார். ஹெய்டல்பர்கில் ஆய்வுகள் மேற்கொண்ட சமயத்தில், நுண்புழைத் தன்மைக்கும் மின்சாரத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.

மிகவும் பிரபலமான ‘நுண்புழை மின்னழுத்தமானி’ ஒன்றை உருவாக்கினார். இது மிகக் குறைவான மின் அழுத்தத்தை அளக்க உதவியது. இதயத் துடிப்பை வரைபடமாக அளவிடும் (Electro Cardio Graph-ECG) கருவியில் இது பயன்பட்டது. எந்த ஒரு வெப்ப இயக்க முறைக்கும், மீள்செயல் முறையும் உண்டு என்பதையும், அவ்வாறு மீள் செயல்முறை நடைபெறும்போது உண்டாகும் மாற்ற அளவைக் கணக்கிடப் பொதுவான தேற்றம் ஒன்றையும் இவர் உருவாக்கினார்.

ஒளிப்படங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகளில் 1886-ல் ஈடுபட்டார். ஒளியின் நிறங்களைக் கொண்டு குறுக்கீடு நிகழ்வு அடிப்படை (interference phenomenon) முறையில் வண்ணப் புகைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தார்.

வானவியலில் கொயலோஸ்டாட் (coelostat) என்ற கருவியைக் கண்டறிந்தார். வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போது அதில் தீர்க்க ரேகை பதியும்படி ஒரு கருவியை இவர் வடிவமைத்தார். தந்தி அலைகளைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தைப் பதிவு செய்வதோடு அது எவ்வாறு பரவிச் செல்கிறது என்பதையும் இவரது கருவி பதிவு செய்தது.

சார்போனில் பணியாற்றிய சமயத்தில் அங்கு பயின்ற மேரி கியூரிக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். வண்ணப்படம் எடுப்பது பற்றிய ஆய்வுகளுக்காக 1908-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

பாரீஸ் அறிவியல் சங்கத்தில் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் செயல்பட்டார். இறுதிவரை இயற்பியலின் பல்வேறு களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, மகத்தான பங்களிப்புகளை வழங்கிய கேப்ரியல் லிப்மன் 1921-ம் ஆண்டு தனது 76-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மலேசிய இளவரசி - டச்சுக்காரரை மணந்த ஆடம்பர திருமண விழா

ஜோஹர் சுல்தானின் மகளுக்கும், முன்னாள் மாடலும் கால்பந்து நிர்வாகியுமான டச்சு நாட்டு மணமகனுக்கும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.

மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

31 வயதான துன்கு துன் மைமுனா இஸ்காந்தரியாவுக்கும், இஸ்லாமியராக மாறிய டச்சுக்காரரான 28 வயதான டென்னிஸ் முஹமத் அப்துல்லாவுக்கும் திங்களன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் சில பொதுவானதாகவும், சில குடும்ப நிகழ்ச்சிகளாகவும் நடத்தப்பட்டன.

மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

பிரதான திருமண நிகழ்வில் சுமார் 1,200 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இயல்பாக அமர்ந்த நிலையில் திருமணம் நடைபெற்றதாக AFP செய்தி நிறுவனம் கூறுகிறது. ஜொகூர் பாருவில் நகர சதுக்கத்தில் தாதரன் பண்டாராயாவில் பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்ட திருமண நிகழ்ச்சியை பெருமளவிலான மக்கள் கண்டு ரசித்தனர்.

 

மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

ஜோஹரின் சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயிலின் ஆறு குழந்தைகளில் துன்கு துன் மைமுனா மட்டுமே பெண். திங்களன்று மாலையில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்களை ஆசீர்வதிக்கிறார் சுல்தான். புனித தீர்த்தமும், மஞ்சள் அட்சதை அரிசியையும் தூவி குடும்பத்தினரும், விருந்தினர்களும் மணமக்களை வாழ்த்துகின்றனர்.

மலேசியா இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

  • ஆம்ஸ்டர்டாமுக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் பிறந்த டென்னிஸ் விர்பாஸ் சிங்கப்பூரில் மாடலிங் செய்துவந்தார். அவரது தந்தை மலர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார், தாயார் துணிக்கடையில் பணிபுரிகிறார். 2015 ஆம் ஆண்டில் இஸ்லாம் மதத்தை தழுவிய டென்னிஸ் விர்பாஸ், ஜோகரில் ஒரு வீட்டுமனை நிறுவனத்தில் பணிபுரியும் விர்பாஸ், சிங்கப்பூரில் உள்ள டிம்பின்ஸ் ரோவர்ஸ் கால்பந்துக் கழகத்தின் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்தவர்.

     

    மலேசியா இளவரசி துன்கு அமினா

    அரச குடும்பத்தின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாக, அலங்காரமாக செய்யப்பட்டிருந்தன. அரண்மனை அரங்குகள் அலங்கரிக்கப்பட்டன, தெருக்களில் நாட்டின் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

     

    மலேசியாவின் தெற்கு ஜோஹர் மாநிலத்தின் அரச குடும்பம் அதிகாரம்மிக்க செல்வந்த குடும்பம். நாட்டில் தனியார் ராணுவத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே மாநிலம் ஜோஹர் மட்டுமே.

     

    மலேசியாவின் தெற்கு ஜோஹர் மாநிலத்தின் அரச குடும்பம் அதிகாரம்மிக்க செல்வந்த குடும்பம். நாட்டில் தனியார் ராணுவத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே மாநிலம் ஜோஹர் மட்டுமே.

     

    மலேசியா இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

    முன்னதாக, மணமக்களுக்கு தனிப்பட்ட முறையில் சடங்குகள் நடத்தப்பட்டன. மலேசியாவின் காபி விடுதியில் முதல் சந்திப்பில் பார்த்ததுமே பற்றிக் கொண்ட காதல், மூன்று வருடங்களுக்கு பின் திருமணமாக கனிந்தது.

     

    மலேசியா இளவரசி துன்கு அமினா

    இளவரசி, அழகான வெண்ணிற ஆடை அணிந்து, ஜொலிக்கும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பாரம்பரிய உள்ளூர் வழக்கப்படி, மணப்பெண்ணுக்கு 22.50 ரிங்கிட் (£ 4) வரதட்சணை பணத்தை மணமகன் வழங்கினார்.

     

    மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துகொண்டார்

    "எங்கள் சொந்த வீட்டில் மண வாழ்க்கையை தொடங்குவோம், முதன்முறையாக என் பெற்றோரிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் பிரிந்து தனியாக வசிக்கப் போகிறேன்" என்று இளவரசி கூறியதாக ஜோஹர் ராயல் பிரஸ் அலுவலகம் வெளியிட்டஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு (Video)

 


பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு (Video)
 

பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது செய்து, கொண்டாடுவது வழமை.

இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராம மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் தயாரித்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.

பத்திற்கும் மேற்பட்ட சமையற்காரர்களும் மக்களில் சிலரும் இணைந்து அதற்கு உதவி புரிந்தனர்.

அவர்கள் மிகப்பெரிய பாத்திரத்தில் 10,000 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம் மற்றும் இறைச்சியைக் கலந்து ஆம்லெட் செய்து, அந்த ராட்சத ஆம்லெட்டை விழாவில் பங்கு பெற்ற அனைத்து மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

வெளியானது 'விவேகம்' பட டிரெய்லர்!

 

'வீரம்', 'வேதாளம்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்திருக்கும் படம் 'விவேகம்'. இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. 'சர்வைவா', 'தலை விடுதலை' போன்ற பாடல்கள் சாவன் மற்றும் யூட்யூப் தளங்களில் அதிக வியூஸ் பெற்ற பாடகளாகியிருக்கிறது.

 

 

 

பல நாள்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் படத்தின் டிரெய்லர்  தற்போது வெளியாகியிருக்கிறது. அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும் படியாக இப்படம் தயாராகியிருக்கிறது என சொல்கிறது படக்குழு. யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 17
 

image_cfcc5ffa72.gif1958 - “பயனியர் 0' சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.

1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.

1918 - போல்ஷெவிக் புரட்சியாளர் மொயிசேய் யுரீட்ஸ்கி படுகொலை செய்யபட்டார்.

1945 - இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.

1969 - மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

1807 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூயோர்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.

1862 - லக்கோட்டா பழங்குடியினர், அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1982 - முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது

1999 - துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில், 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1999 - துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1960 - காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1943 - இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்துகொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.

1959 - மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

லைக்குகளை அள்ளிக்குவித்த ஒபாமா ட்வீட்!

 

மெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, சனிக்கிழமை இரவு ட்விட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ஜன்னல் ஓரத்தில் பல இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் நிற்கின்றனர். அவர்களிடத்தில் ஒபாமா கொஞ்சி மகிழ்வது போன்ற புகைப்படத்தில், 'நிறத்தாலும் இனத்தாலும் மதத்தாலும் மற்றொருவரை வெறுப்பதற்காக யாரும் பிறப்பதில்லை' என அதில் கூறியிருந்தார்.

வரலாறு படைத்த ட்விட்

ஒபாமா பதிவிட்ட சில மணி நேரங்களில் அந்தப் புகைப்படம் வைரலாகியது. இந்த ட்விட்டை 39 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். 12 லட்சம் பேர் ரீட்விட் செய்திருந்தனர். ட்விட்டர் வரலாற்றில், அதிக முறை ரீட்விட் செய்யப்பட்ட 5-வது பதிவு இது. ஒபாமாவின் ட்விட்களில் அதிக முறை பகிரப்பட்டதும் இதுதான்.

"No one is born hating another person because of the color of his skin or his background or his religion..

 

இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி அரீனா கிரான்டே, மான்செஸ்டர் குண்டு வெடிப்பின்போது, ''என்னை மன்னித்து விடுங்கள்'' என பதிவிட்ட ட்விட் 28 லட்சம் லைக்குகளைப் பெற்றிருந்தது. செவ்வாய்க்கிழமையன்று அந்த ட்விட்டை பின்னுக்குத் தள்ளி ஒபாமாவின் ட்விட் முதலிடத்தைப் பிடித்தது.

சனிக்கிழமை அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள, சார்லேட்டஸ்வில்லி நகரில் வெள்ளையர்கள் நடத்திய பேரணியில் ஒருவர் காருடன் புகுந்தார். இந்த சம்பவத்தில் 32 வயது பெண் ஒருவர் இறந்தார். 19 பேர் காயமடைந்தனர். பேரணியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றும் விபத்துக்குள்ளாகி, இரு போலீஸார் இறந்தனர்.

 

இந்நிலையில்தான் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒபாமா மனதை உருக்கும் வகையில் அந்த ட்விட்டை பதிவிட்டார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தேசியக் கொடி ஏற்றிய குரங்கு

 

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் திகதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தொடர்ந்து 4-வது ஆண்டாக மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார்.

மாநில தலைநகரங்களில் நடந்த சுதந்திரதின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழ கொண்டாட்டத்திற்காக கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக கொடி கம்பத்தில் கொடி கட்டி வைக்கப்பட்டிருந்தது. கொடி ஏற்ற சிறப்பு விருந்தினர் வருவதற்காக நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குரங்கு கொடியை ஏற்றி விட்டு ஓடிவிட்டது.

http://newuthayan.com/

 

  • தொடங்கியவர்

ஷங்கர்... பிரமாண்டங்களின் காதலன்... எளிமையான நண்பன்... பாக்ஸ் ஆஃபீஸின் முதல்வன்! #HBDShankar 

 
 

ஷங்கர்

“ஜென்டில்மேன் படம். ஹிட். டைரக்டரைப் பேட்டி எடுக்கலாம்னு தேடிப்போனோம். தி.நகர் பக்கத்துல ஒரு சின்ன ரூம். மாடில இருக்கார்னாங்க. நாங்க மேல போறப்ப ஒல்லியா ஒரு ஆளு, கைல ரெண்டு குடத்தோட அவசர அவசரமா எங்களைத் தள்ளிட்டு இறங்கிப்போனார். அப்பறமா மேல அந்த ரூமுக்கு முன்னால நாங்க வெய்ட் பண்ணிட்டிருந்தோம். தண்ணிக்குடத்தோட மேல வந்த அவர்தான் ஷங்கர். பேட்டின்னதும், இருங்க டிரெஸ் மாத்திட்டு வரேன்னு மாத்திட்டு வந்து உட்கார்ந்தார். அதுக்கப்பறம் பலமுறை அவரை போட்டோ எடுத்ததுண்டு. அந்த தண்ணிக்குடம் தூக்கிட்டு வந்த ஷங்கர்கிட்ட என்ன எளிமை இருந்ததோ, அதே எளிமையும், புன்னகையும் இப்ப  இவ்ளோ பெரிய இடத்துக்கு அவர் வந்த பிறகும் இருக்கு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பா நான் பார்க்கறேன்” 

மேலே இருக்கிற புகைப்படத்தை எடுத்த விகடனின் முதன்மை புகைப்படக்கலைஞர் ராஜசேகரன் இந்தப் புகைப்படம் எடுத்த நாளை நினைவு கூர்ந்து என்னிடம் சொன்னது இது.
 
பள்ளிநாள்கள். பலர் குடியிருக்கும், ஒட்டுக்குடித்தன சூழலில் வசித்த ஷங்கர்தான், அந்த இடத்தின் ஜாலி நண்பன். எல்லாரையும் கலகலப்பாக வைத்துக்கொள்வது இவர்தான். அதன்பின் பாலிடெக்னிக் படிக்கும்போது பஸ்ஸில் வெகு ஜாலியாக, கலாட்டா மன்னனாக இருந்திருக்கிறார். ‘அதெல்லாம்தான் சிக்கு புக்கு ரயிலே, ஊர்வசி பாட்டெல்லாம் அந்தப் பாதிப்புல எடுத்ததுதான்’ என்பார் ஷங்கர். அதனாலேயே பெரிய நண்பர் வட்டாரம். பாட்டு, மிமிக்ரி என்று வெகு ஜாலியாக இருந்தவரின் பெயரை விழா ஒன்றில் போட்டியாளராகப் பதிவு செய்கிறார்கள் நண்பர்கள். கவர்னர் முன்னிலையில் போட்டி. 5000 மாணவர்கள் முன்பு தயங்கியபடியே ஒரு பெர்ஃபார்ம் செய்கிறார். பெரிய வரவேற்பு. கவர்னர் கையால் முதல்பரிசு. 

ஷங்கர்

படிப்பு முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோல் சூபர்வைசர் பணி. அந்த ஃபேக்டரியில் ஸ்டிரைக் நடக்க, அப்போது நண்பர்களுடன், தில்லை ராஜன் குழுவினர் நடத்திய கிரேஸி மோகன் எழுதிய நாடகம் ஒன்றைப் பார்க்கிறார். அதில் வரும் சின்ன காமெடி வேடம் ஒன்றிற்கு பெரிய வரவேற்பும் கைதட்டலும் கிடைக்க, இவருக்கும் நடிக்க ஆசை. கேட்கிறார். அவர்களும் ஒப்புக்கொள்ள, இங்கே ஸ்டிரைக் தொடர.. நடிப்பில் ஆர்வம். காமெடி, கேரக்டர் ரோல் என்று செய்து கொண்டிருக்கிறார். அதன்பின் நடிக்கும் ஆர்வத்தில்தான் உதவி இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சேர்கிறார். சேரும்போது நடிக்க வேண்டும், முடிந்தால் ஒரே ஒரு படம் இயக்கினால்கூட போதும் என்பதுதான் ஷங்கர் மனதில் இருந்தது. ஆனால், திரையுலகம் இந்த ஜென்டில்மேனை சினிமா இயக்குநராக அங்கீகரித்து தூக்கித் தோளில் வைத்துக் கொண்டது!

ஜென்டில்மேன் அப்போது அடித்த அடி, அதிரடி! ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளியாகி மெகாஹிட். அதிலும்  ‘சிக்குபுக்கு ரயிலே’ மரணமாஸ் ஹிட். அந்தப் பாடலுக்காகவே தியேட்டரில் மக்கள் குவிந்தார்கள். பாடலோடு படமும் மக்களை ஈர்த்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரவென்ற திரைக்கதை. தேவையான இடங்களில் காமெடி, பாடல்கள் என்று ‘யார்றா இது’ என்று யோசிக்க வைத்தார். அதன்பின் காதலன். 3வது படமே கமலுடன் இந்தியன்.

இவர் படங்களில் ஒரு வரிசை இருப்பதை உணரலாம். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ். முதல்வன். பாய்ஸ். அந்நியன். சிவாஜி. எந்திரன். நண்பன். ஐ..   ஒரு படம் சமூக விஷயத்தைப் பேசும். அடுத்தபடம் பெர்சனல் விஷயத்தை அலசும். ‘அப்படித் திட்டமிடவெல்லாம் இல்லை. ஒன்று சூப்பர் ஹீரோயிசக் கதையாக இருக்கும். இன்னொன்று சாதாரணமாக இருக்கும்’ என்கிறார் ஷங்கர். அதை உடைக்க ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் முயன்றார். அந்நியனுக்கு அடுத்து வந்த சிவாஜியும் சமூகபிரச்னையை பேசியதால், அது உடைந்தது எனலாம். 

சிந்திக்கும்போதே பிரமாண்டம்தான். இது முடியுமா முடியாதா என்றெல்லாம் யோசித்ததில்லை. அதனால்தான் ஆம்ஸ்டர்டாம், சைனா என்று பிடிக்க முடியாத லொகேஷன்களிலெல்லாம் பாடலெடுக்கிறார். உலக அதிசயங்களை ஒரே பாடலில் காட்டுகிறார். 

ஷங்கர் ரஜினி

எனக்கு ஷங்கரிடம் பிடித்த இன்னொரு விஷயம், ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை வித்தியாசமாக வைப்பார்.

ஜென்டில்மேன் - சரண்ராஜ் - அழகர்நம்பி
காதலன் - கிரிஷ் - காகர்லா 
இந்தியன் - சுகன்யா - அமிர்தவள்ளி
ஜீன்ஸ் - நாசர் - பேச்சியப்பன் ராஜாமணி (படத்தில் பிரசாந்த் இருவரின் பெயர், விஸ்வநாதன் - ராமமூர்த்தி!)
முதல்வன் - மணிவண்ணன் - மாயக்கிருஷ்ணன்
பாய்ஸ் - விவேக் - மங்களம்
அந்நியன் - விவேக் - ச்சாரி
சிவாஜி - சுமன் - ஆதிசேஷன்
எந்திரன் - ரஜினி - வசீகரன் 
நண்பன் - விஜய் - பஞ்சவன் பாரிவேந்தன், கொஸாக்ஸி பசப்புகழ், சேவற்கொடி செந்தில் (ஜீவா) 
ஐ - ஓஜாஸ்- ஓஸ்மா ஜாஸ்மின்

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரது முத்திரை இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தன் படம் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும், அதைப் பற்றி அலசி ஆராய்வது ஷங்கருக்குப் பிடித்த ஒன்று. தேவைப்பட்டால், அந்த விஷயம் குறித்து கற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டார். அப்படித்தான் அந்நியன் பட சமயத்தில் ஒரு ஆசை துளிர்விட, ஒன்றரை வருடம் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்று கொண்டார் ஷங்கர்!

இவரின் பெயர்க்காரணம் மிக சுவாரஸ்யம். இவர் வயிற்றில் இருக்கும்போது, அம்மா ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டொரு நாளில் டெலிவரி டேட். படத்தில் சிவாஜியின் பெயர் ஷங்கர். ‘பையன் பொறந்தா இந்தப் பேர் வைக்கணும்’ என்று மனதில் நினைத்திருக்கிறார் இவர் அம்மா. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரசவ வலி வந்திருக்கிறது. அப்படித்தான் இவருக்கு ஷங்கர் என்ற பெயரை செலக்ட் செய்தார்களாம். யார் படத்தைப் பார்க்கும்போது பிறந்தாரோ, அதே நடிகரின் பெயரில் ஏ.வி.எம் பேனரில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் என்று த பெஸ்ட் கூட்டணியுடன் திரைப்படம் இயக்கினார் என்பது... எஸ்... வரலாறு!   

 

ஷங்கரிடம் ஒரே ஒரு கேள்விதான்: உங்களின் முதல் ஸ்கிரிப்ட்  ‘அழகிய குயிலே’ எப்ப வரும் சார்?

Happy Birthday Shankar!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.