Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

இப்பிடியும் திருக்குறளை கேட்கலாமா? சிரிக்காம சிந்திங்க!!! - 17-08-2017

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைர மோதிரத்தை தேடித் தந்தது கேரட்

13 ஆண்டுகளுக்குமுன் காணாமல் போன வைர மோதிரத்தை எடுத்துதந்த கேரட்படத்தின் காப்புரிமைSUBMITTED PHOTO

வைரத்தின் எடையை கேரட் என்னும் அலகால் மதிப்பிடுவது வழக்கம். கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த மோதிரத்தில் இருந்த வைரம் எத்தனை கேரட் என்பது தெரியாது. ஆனால், எதிர்பாராத ஆச்சரியமாக அந்த வைர மோதிரத்தை மீட்டுத் தந்திருக்கிறது ஒற்றை கேரட்.

2004 ஆம் ஆண்டு அல்பெர்டாவில், தனது குடும்பத்துக்கு சொந்தமான காய்கறி பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேரி கிராம்ஸ் தனது வைர மோதிரத்தைத் தவறவிட்டார். இதனால் மிகவும் வருத்தத்துக்குள்ளானார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது.

ஆனால், மோதிரம் தொலைந்த சம்பவத்தை ஒரு தசாப்தத்த்திற்கும் மேலாக மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் மேரி கிராம்ஸ். தம் கணவரிடமும் கூறாமல் மறைத்த இந்த ரகசியத்தை அவர் தம் மகனிடம் மட்டும் கூறியிருந்தார்.

தொலைந்த மோதிரத்துக்கு பதிலாக மலிவு விலைகொண்ட மோதிரம் ஒன்றை வாங்கி அணிந்து கொண்ட மேரி, அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்காததை போன்று சமாளித்து வந்தார்.

கடந்த திங்கள்கிழமையன்று, மேரி கிராம்ஸின் மருமகள் கொலீன் டேலீ தங்கள் காய்கறி தோட்டத்தில் நல்ல தடிமனான கேரட் ஒன்றை பிடுங்கியபோது, அத்தோடு சேர்ந்து மோதிரம் காணாமல் போன ரகசியமும் வெளேியே வந்தது! ஆம், அந்தக் கேரட்டுக்கு நடுவே காணாமல் போன வைர மோதிரம் சிக்கிக்கொண்டிருந்தது.

மண்ணுக்குள் பல ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த வைர மோதிரத்தின் ஊடாக வளர்ந்த அந்தக் கேரட், பல ஆண்டுகளுக்குப் பிறகு மோதிரம் கண்டுபிடிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

13 ஆண்டுகளுக்குமுன் காணாமல் போன வைர மோதிரத்தை எடுத்துதந்த கேரட்படத்தின் காப்புரிமைSUBMITTED PHOTO

கேரட்டோடு கண்டெடுக்கப்பட்ட மோதிரம் யாருடையது என்பதைத் தெரிந்து கொண்ட மேரியின் மகன் உடனடியாக தம் தாயைத் தொலைப்பேசியில் அழைத்து தகவலைத் தெரிவித்தார்.

பழைய சம்பவங்களை நினைவு கூறும் மேரி, மோதிரம் தொலைந்த விஷயத்தை தனது கணவரிடம் அப்போதே சொல்லியிருக்கலாம் என்கிறார்.

மேரியின் கணவர் தற்போது உயிருடன் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

கேரட் ஒன்றில் வைர மோதிரம் கிடைக்கும் சம்பவம் முதல்முறையாக நடக்கவில்லை. ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருவர் தான் தவறவிட்ட திருமண மோதிரத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த சம்பவம் 2011-ல் நடந்தது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

’மெர்சல்’ படத்தின் ’நீதானே’ பாடல் டீசர்..!

 
 

DHWCsTJUAAAMqRm_12120.jpg

விஜய் - அட்லி கூட்டணியில் இரண்டாவதாகவும், விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவதாகவும் உருவாகிவரும் திரைப்படம், ‘மெர்சல்’. 'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யை வைத்து அட்லி இயக்குவதால், 'மெர்சல்' திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம். 

 
  • தொடங்கியவர்

பத்து அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள கோவாச் செடி

 
பத்து அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள கோவாச் செடி
 

ஹற்றன் – குடாகம பிரதேசத்தில் பத்து அடி உயரத்திற்கு கோவாச் செடியொன்று அதிசயிக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இந்த இலைக் கோவாச் செடியானது 6 மாத காலத்தில் உயரமாக வளர்ந்துள்ளதாக வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளர் குமாரி திசாநாயக தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து கொண்டு வந்த இலைக் கோவாவின் ஒரு கிளையை வீட்டுத் தோட்டத்தில் நாட்டி வைத்து பசுவின் சாணம் உரமாக இட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கோவாச் செடியிலிருந்து கிடைக்கும் இலைக் கோவாவை வீட்டு சமையலுக்கும் அயலவர்களுக்கும் வழங்குவதுடன் இலைக் கோவா 1 கிலோகிராம் 45 ரூபாய் விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

14.jpg

17-1.jpg

16.jpg

http://newuthayan.com

  • தொடங்கியவர்

2017 தெரண மிஸ் ஸ்ரீலங்கா அழகுராணி போட்டியின் நிகழ்வு

 
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

சன்னி லியோனை நேரில் பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்ட கொச்சி ரசிகர்கள்! (வீடியோ)

 

 
sunny2xx

 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கேரளாவிலுள்ள கொச்சிக்கு இன்று வருகை தந்துள்ளார். அங்குள்ள மொபைல் நிறுவனத்தின் தொடக்க விழாவுக்கு அவர் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சன்னி லியோனை நேரில் பார்க்க கொச்சி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்துள்ளார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.  

இதுகுறித்து ட்விட்டரில் கூறிய சன்னி லியோன், என் கார், மக்கள் கடலில் மாட்டிக்கொண்டுவிட்டது. சொல்ல வார்த்தைகள் இல்லை. கொச்சி மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர்கள் வெளிப்படுத்திய அன்பில் நெகிழ்ந்து போயிருக்கிறேன். இதை மறக்கவே மாட்டேன். கேரளாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதோடு மக்கள் கூட்டத்தைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோன் நடிப்பில் Tera Intezaar என்றொரு படம் வெளிவரவுள்ளது. மேலும் Baadshaho, Bhoomi ஆகிய படங்களில் பாடல் காட்சிகளில் அவர் நடித்துள்ளார்.

 

 

sunny12.jpg

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

ரோம பேரரசின் அதிசய தொங்கும் தோட்டம்

 

பண்டைய ரோம அறிஞர்கள் மற்றும் கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான ஸ்ட்ராபோ, ஃபைலோ, டையோடோரஸ், சிகுலஸ் ஆகியோர் தொங்கும் தோட்டம் பற்றி பல குறிப்புகள் எழுதி உள்ளனர். தோட்டம் எப்படி, ஏன் கட்டப்பட்டது, தோட்டத்தின் அளவுகள், தண்ணீர் பாய்ச்சப்படும் முறைகள் என்று பல குறிப்புகளை எழுதி உள்ளனர்.

தொங்கும் தோட்டம் ஏன், யாரால் கட்டப்பட்டது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. பாபிலோனிய வம்சத்தின் முக்கிய மன்னராக விளங்கிய இரண்டாம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar II) என்பவரால் கி.பி.600ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது ஒரு சாராரின் யூகமாகும்.

இரண்டாம் நெபுகத்நேசருடைய மனைவியான ராணி அமைடிஸ், மலை நாட்டைச் சேர்ந்தவராம். குன்று, மலை, காடுகளைக் கண்டு வளர்ந்த ராணியின் கண்களுக்கு பாபிலோனின் பரந்த வயல்வெளிகளும், வெற்றிடங்களும் மனம் கவரவில்லை. எனவே, ராணியின் மனதை குளிர்விக்கும் விதமாக, இயற்கை எழிலுடன் கூடிய அரண்மனையையும் தொங்கும் தோட்டத்தையும் உருவாக்கினாராம் நெபுகத்நேசர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இந்த அதிசய தோட்டம், 75 அடி உயரம் இருந்ததாம். அதாவது ஐந்து மாடி கட்டிடத்தின் உயரம். ஒவ்வொரு நாளும் அங்குள்ள செடிகளுக்கு சுமார் 8,200 காலன் தண்ணீர் ஊற்றப்பட்டதாம்.பெரிய பெரிய தூண்களை எழுப்பி, ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. யூப்ரடீஸ் நதியிலிருந்து அடுக்குக் குழாயின் மூலம் சக்கரங்கள், சங்கிலி போன்றவற்றின் உதவியால் சிறிய வாளிகளால் தண்ணீர் இறைக்கப்பட்டன. இம்முறைக்கு ‘செயின் பம்பிங்’ என்று பெயர்.

மாளிகையின் ஒவ்வொரு அடுக்கிலும் உட்புறமாக சுவர் எழுப்பப்பட்டு, இடைப்பகுதி யில் மண் போட்டு நிரப்பப்பட்டது. குறிப்புகளின்படி, தொங்கும் தோட்டத்தின் சுவர்கள் 22 அடி தடிமனும், பத்து அடி அகல கூடங்களும் கொண்டவையாக இருந்தன. ஒவ்வொரு தளமும் நாணல்களாலும், சுட்ட செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன; ஈரத்தைத் தாங்கி நிற்கும் வகையில் அதன் அடித்தளம் ஈயத்தால் அமைக்கப்பட்டு இருந்தனவாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இதில் பழ மரங்களும், செடார், பைன், புரூஸ் போன்ற மரங்களும், வண்ண மலர்ச் செடிகளும் வளர்க்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்துச் சொல்வதானால், இன்றைய நவீன யுகத்தின் ‘மாடிப் பூங்கா’ என்று குறிப்பிடலாம்.தொங்கும் தோட்டம் அமைந்திருந்த இடம் பற்றி பல யூகங்கள் நிலவுகின்றன. டைக்ரீஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ‘நினேவா’ (Ninevah) என்ற இடத்தில் அமைந்திருக்கலாம் என்பது ஒரு சாராரின் யூகமாகும். இது உண்மையென்றால், தொங்கும் தோட்டத்தை ‘சேனாசெரிப்’ என்ற மன்னர் கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நினேவா நகரம் பாபிலோனிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை ‘செமிராமிசின் தோட்டம்’ என்று குறிப்பிடுவோர் சிலர். அசிரியன் பேரரசி செமிராமிஸ் என்பவரால் இது உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹெரோடோட்டஸ்’ எழுதிய தொங்கும் தோட்டத்தின் வர்ணனை மிகவும் புகழ் பெற்றதாகும்.

கி.மு. 290ல் ‘பெரோசஸ்’ என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். நெபுகத்நேசரால் கட்டப்பட்டது என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும் சில புராண இதிகாச சம்பவங்கள் சாட்சிகளாக இருக்கின்றன.டயோடரஸ், தனது ‘ஸ்டேசியஸ் ஸ்நீட்டஸ்’ என்னும் நூலிலும், கியூட்டஸ் க்யூரியஸ் தனது ‘அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்ற வரலாற்று நூலிலும் நெபுகத்நேசரால் தொங்கும் தோட்டம் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

வருங்காலத்தை முன் கூட்டியே தெரிவித்ததாகக் கூறப்படும் தீர்க்கதரிசி டேனியல், நெபுகத்நேசரின் அரண்மனையில் வேலை பார்த்திருக்கிறார். அவரது குறிப்புகளிலும் நெபுகத்நேசரால் தொங்கும் தோட்டம் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.பூகம்பத்தினாலோ, இயற்கை சீற்றத்தினாலோ இந்த அதிசய தோட்டம் முற்றிலும் அழிந்து விட்டது. மேலும் ஒரு சாரார், மண் அரிப்பினாலோ, எதிரிகளின் படையெடுப்பினாலோ அழிந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதனுடைய சுவடுகள் கூட இப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் கோல்மே, சுமார் 14 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு, 1899ம் ஆண்டு பாபிலோனிய பெருஞ்சுவரின் சில பகுதிகளையும், அரண்மனையின் சில அறைகளையும் அகழ்வாராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினார்.

நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள், எகிப்து, பெர்சியா, பாபிலோன் ஆகிய நாகரிகங்களில் இருந்து ‘கண்டிப்பாக பார்க்க வேண்டிய, சிறப்பான கட்டிடக் கலை சின்னங்களை’த் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டனர். இதில் பாபிலோனின் தொங்கும் தோட்டமும் அடங்கும். இதுதான் உலகின் முதல் பயணக் கையேடு ஆகும். இதுவே பிற்காலத்தில் ஏழு உலக அதிசயப் பட்டியலாக உருவானது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

- Vikatan

http://news.lankasri.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘வாழ்க்கை பற்பல விதம்தான்’
 

image_c0e733031c.jpgஎதையும் தெரிந்து கொள்ளாமலும் தெரிவதற்கு பிரியப்படாமலும் எதற்கும் ஆசைப்பட்டு ஓடாமலும் இருப்பவர்கள் திருப்தியுடன் வாழ்பவர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். ஆசைக்குள் அடைபடாமல் வாழ்வது எப்படி? 

 ஆனால் இவ்வண்ணம் வாழ்வதோ மெத்தக் கடினம். உலகம் பற்றிய பிரக்ஞை இன்றி இயங்குவது எப்படி? இருப்பதைக் கொண்டு, களிப்புடன் அதனை ஏற்பது கூட ஒரு துறவு மனப்பான்மையை ஒத்ததுதான். ஆசைகளை அறுத்தல் துறவு. 

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும்போது, ஐயங்களும் தொடர்ந்து வரும். அறிவுத் தேடல்கள் நீண்ட பயணம். அதில் எப்படிப் பூரண பயன்பெற முடியும். 

மேலும், தங்களுக்குப் பக்கத்தில், இருப்பவர்களைப் பற்றி, துருவித்துருவி ஆராய்பவர்களும் எங்கோ நடக்கும் உலக அதிசயங்களை, மாற்றங்களை அறியாமல் வாழ்பவர்கள் விசித்திரப்பிரவிகள் தான். 

ஆனால், இதுவே சிலருக்குப் பிடித்தும் போய்விடுகின்றது. சிலரின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கேயானது. 

 எதுஎப்படியிருப்பினும் துன்பத்திலிருந்து விலகாமலும் இன்பத்துக்குள் நுளையாமலும் வாழ்வது கடினம். வாழ்க்கை பற்பல விதம்தான்.  

  • தொடங்கியவர்

உலக ஒளிப்பட நாள்: எளிமையில் பொதிந்து கிடக்கும் அழகு

 

 
18CHVANSelvan01jpg

புதிய பாதையைத் தேடி: சேலம் மாவட்டம் காவேரிப்பட்டியில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வேளைகளில் சிம்னி விளக்கில் தன் எதிர்காலத்தைத் தேடும் கிராமத்துச் சிறுவன், 1988

இயற்கை நிலக்காட்சிகளாலும் பிரகாசமான வண்ணங்களாலும்தான் ஒளிப்படங்கள் ரசிக்கப்படுகின்றன என்று நம்புகிறோம். ஒளிஓவியர் நெய்வேலி செல்வனின் படங்கள் அந்த நம்பிக்கையை மாற்றுகின்றன.

18CHVANPhotographerselvan14jpg

ந. செல்வன்

அவருடைய கிராமத்துக் காட்சிகள், எளிய மனிதர்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் இடம்பெற்றுள்ள படங்கள் மாறுபட்ட அழகை முன்னிறுத்துகின்றன.

அடிப்படையில் ஓவியரான செல்வன், கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரியும் செல்வன், படமெடுப்பதற்காகக் கிராமங்களை நோக்கிப் பயணிக்கிறார்.

பெட்டர் போட்டோகிராஃபி, ஏஷியன் போட்டோகிராஃபி, அலைவ் உள்ளிட்ட தேசிய இதழ்களிலும் மாநில இதழ்களிலும் இவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பத்திரிகை அட்டைகளை அலங்கரித்துள்ளன. ஓவியத்துக்கு இணையான அவருடைய சில படங்கள் இங்கே

18CHVANSelvan02jpg

சட்டென்று மாறுது வானிலை: நெய்வேலியில் தானே புயலுக்கு அடுத்த நாள் மாலை சூரியனின் ரம்மியம் குறையாத அஸ்தமனம், 2011

18CHVANSelvan03jpg

காற்று மெத்தை: நெய்வேலி இந்திரா நகரில் தாயின் கருவறைக்கு வெளியே ஒரு கருவறை, 1995

18CHVANSelvan04JPG

நட்பு முகிழும் தருணம்: நெய்வேலியில் ஒரு வீட்டுத் தோட்டத்திலிருக்கும் பலா மரத்தை ஒரு பெண் குழந்தை முதன்முதலாக ஸ்பரிசித்த பொழுது, 2000

18CHVANSelvan06jpg

மண்ணின் மைந்தன்: சேலம் மாவட்டம் அமரம் கிராமத்தில் தன் நிலத்தில் முதன்முதலில் நெல் பயிரிடுவதற்கு தாய் மாமனுடன் இணைந்து நிலத்தைப் பண்படுத்திய பிறகு வீடு திரும்பும் விவசாயி, 1987

18CHVANSelvan07jpg

ஆடி அடங்கிய பொழுது: தானே புயல் அடித்து ஓய்ந்த பிறகான ஒரு நாள் காலையில் நெய்வேலி திருவள்ளூர் சாலையில் பால்காரரின் வருகை, 2011

18CHVANSelvan09JPG

 

 

 

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

ஒரு நாள் முழுவதையும் அழகாக்கலாமா? #Morning Motivation

 
 

நாள் முழுவதையும் அழகாக்க வேண்டுமா? சில விஷயங்களைச் செய்துபார்ப்போமா... `காலையில அட்வைஸ் பண்ண வந்துட்டான்டா!' எனத் தெறித்து ஓட வேண்டாம் பாஸ்... சும்மா ஒருநாள் செஞ்சுதான் பார்ப்போமே!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, காலை படுக்கையிலிருந்து எழுவதே சிரமமான வேலைதான். பலரும் `நாங்களெல்லாம் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, உடற்பயிற்சி செய்வோம்'னு சொன்னாலும், தனுஷ் சொல்ற மாதிரி அவங்க எல்லாரும் இரண்டு சதவிகிதம்தான். மீதி இருக்கிறவங்க எல்லாரும் யாரு நம்ம பயலுகதான்.

நமக்குப் பிடித்த இசையோடு நாளை தொடங்குங்க நண்பர்களே. நமது அலைபேசியில் அலாரம் டோனாக நமக்குப் பிடித்த பாடலை வைத்துவிட்டு, மறுநாள் காலை நமக்குப் பிடித்த பாடலுடன் தொடங்குவதே தனி மகிழ்ச்சிதான். அதுக்காக இளையராஜாவின் மெலடி கீதங்கள்தான் அலாரம் டோனாக ஒலிக்கவேண்டும் என்பதில் எந்தக் கட்டாயமும் இல்லை. உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாடல் `மக்க கலங்குதப்பா...'வாக இருந்தால் அதையே அலாரம் டோனாக வைக்கலாம். என்ன பாட்டு காலையில் கேட்கிறோம் என்பது முக்கியமல்ல. நமக்குப் பிடித்த மாதிரி காலைப் பொழுது உற்சாகமாக தொடங்குவதே முக்கியம்.

காலை

அலாரத்தை off செய்துவிட்டு உடனே மொபைல் டேட்டாவை ஆன் செய்து instagram, whatsapp என போகாமல், மொபைலைத் தள்ளிவைப்பது மிகச்சிறப்பு.

நாள்காட்டியில் தேதி கிழிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றால், இப்பெல்லாம் பலரும் அதைப் பண்றது இல்லையாம். அதனால படுக்கையைவிட்டு எழுந்த உடனே போய் முந்தைய தேதி இருக்கிற அந்தத் தாளைக் கிழிக்கும்போது ஒரு நொடி அந்த நாளில் ஏற்பட்ட கஷ்டமான சம்பவங்கள் கசப்பான சம்பவங்கள் போன்றவை எல்லாத்தையும் சேர்த்து உங்க மனசுல இருந்து கிழிச்சு எரியுறதா நினைத்து, அந்தத் தேதி இருக்கிற தாளைக் கிழிங்க. என்னடா இது சின்னப்புள்ளதனமா இருக்குனு நினைக்காம, இதைச் செஞ்சுபாருங்க. உங்க மனசு இலகுவான மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். காசா... பணமா... சும்மா செஞ்சுதான் பாருங்களேன் பாஸ்!

`சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கை இறுப்பு, வேறு ஜீவராசிகள் செய்யாத செயலாகும் இந்தச் சிரிப்பு'னு N.S.K சொன்னார். புன்சிரிப்புடனே எல்லோரையும் எதிர்கொள்ளுங்கள். அப்படிச் சிரிக்கிற நேரத்துல EMI, வங்கிக் கடன், HR மேனேஜர் இப்படி எதையும் யோசிக்காம, நமக்குப் பிடித்தமான நம் வீட்டின் உறவுகளை சிரிப்புடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு நம்ம மனசுக்கான உடற்பயிற்சி. அப்புறம் நம்ம உடலுக்கு உடற்பயிற்சி கொடுக்கணும்ல அதையும் பண்ணிடுவோம். அதுக்காக `தில்' விக்ரம் மாதிரி காக்க காக்க கனகவேல் காக்க-னு எக்கச்சக்கமான எடையெல்லாம் தூக்கத் தேவையில்லை. எளிமையான நடைபயிற்சி, சுவாசப்பயிற்சினு செஞ்சாலே போதும். அலுவலகத்துக்கோ கல்லூரிக்கோ புறப்படும்போது என்ன மனநிலையில் கிளம்புறோம்கிறது ரொம்ப முக்கியம். நம்ம மனசுக்குள்ள `இந்த நாள் இனிய நாளா அமையும்'னு மூன்று முறை சொல்லிட்டுக் கிளம்புவோம். கொஞ்சம் குறிப்பிட்ட நேரத்தைவிட விரைவாகவே செல்ல முயல்வோம். ஏன்னா, டிராஃபிக் டென்ஷனை இது குறைக்கும்.

காலை

வழியில் யாரை எதிர்கொள்ளும் சூழல் வந்தாலும் முகமலர்ச்சியுடன் வணக்கம் தெரிவிப்போம். இதில் நமக்கு வேண்டப்பட்டவர் நமக்கு வேண்டாதவர் என ஈகோ எல்லாம் பார்க்க வேண்டாம். நாம வணக்கம் சொன்னாலே அவங்களும் நமக்கு நிச்சயமா வணக்கம் சொல்வாங்க. ஒருவேளை, வேணும்னே கண்டும் காணாம அவங்க போனா, உடனே டென்ஷன் ஆக வேண்டாம். ஒரு குட் மார்னிங் மிச்சம்னு சொல்லிட்டு, நம்ம வேலையைப் பார்ப்போம்.

என்னதான் நாம நம்ம வேலையை சரியா செஞ்சாலும், அதுல குற்றம் குறை கண்டுபிடிக்க, கொஞ்சம் பேர் அலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ கட்டாயம் இருப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல நம்ம டென்ஷனைக் குறைக்கப் பெரிதும் உதவி செய்பவர் நம்ம கைப்புள்ள வடிவேலுதான். கைபேசி கேலரியிலோ, youtube-லோ நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பது நமது ஸ்ட்ரெஸைக் குறைக்கும். இது என்னடா புதுப் புரளியா இருக்குனு நினைக்க வேண்டாம். சும்மா ஒருமுறை முயற்சி செஞ்சு பார்ப்போமே!

காலை

 

வேலை முடிந்து அலுத்துப்போய் வீட்டுக்கு வந்த உடனே தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். ஏன்னா, அது இன்னும் கொஞ்சம் சோர்வைக் கொடுக்கும். அதனால் தொலைக்காட்சியையும் அலைபேசியையும்விடுத்து நம் வீட்டில் உள்ளவர்களிடம் அன்று நடந்த நிகழ்வுகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வோம். முகநூலில் பகிர்வது மட்டுமே sharing கிடையாது மக்களே... நம்மைச் சார்ந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்வதும் sharingதான். இவ்வாறு நாமே நம் நாளை அழகாகுக்குவோமே!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

முகம் தெரியாத 5,000 பேருக்கு 'ட்ரீட்' கொடுத்த சீன இளைஞர்

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சாங்கிங் நகரைச் சேர்ந்த ஒருவர், காணாமல் போன நிச்சயதார்த்த மோதிரம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட 5,000 பேருக்கான நூடுல்ஸ் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

உணவு விடுதியில் நூடுல்ஸ் உண்ண வரிசையில் காத்திருப்போர்.படத்தின் காப்புரிமைTENCENT NEWS Image captionஉணவு விடுதியில் நூடுல்ஸ் உண்ண வரிசையில் காத்திருப்போர்.

சாங்கிங் மார்னிங் போஸ்ட் செய்தித்தாளின்படி, வாங் என்னும் குடும்பப் பெயர் கொண்ட அந்த இளைஞர், தனது பெண் தோழியுடனான உறவின் முதலாம் ஆண்டின்போது, அவரிடம் தன் காதலைத் தெரிவித்து வியப்பூட்ட விரும்பியுள்ளார்.

ஆகஸ்ட் 13 அன்று, ஒரு உணவு விடுதியில் தன் பெண் தோழியைச் சந்தித்து, காதலைத் தெரிவிக்க விரும்பினார் அவர். அந்த உணவு விடுதியில் தான் காத்திருந்தபோது தன் தோழியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர, அவரை அப்பெண் பார்த்துவிடக் கூடாது என்று கருதி அங்கிருந்து மறைந்து வேறு இடத்திற்குச் சென்று விட்டார்.

திரும்பி வந்து பார்த்தவருக்கு, அதிர்ச்சிதான் மிஞ்சி இருந்தது. சுமார் மூன்று லட்சம் யுவான் மதிப்புள்ள மூன்று காரட் எடை கொண்ட, அவரின் காதல் பரிசான அந்த வைர மோதிரத்தை வைத்திருந்த பை காணாமல் போயிருந்தது.

ஆனால் எப்படியோ, ஒரு உள்ளூர் வாசி, சற்று நேரம் கழித்து அந்தப் பையை, உணவகத்தின் மேலாளர் யூ ஷியாஹுவாவிடம் ஒப்படைத்தார்.

எதிர்பாரா விதமாக வாங் அதே உணவு விடுதிக்கு, மீடனும் வந்தார். அந்த மேலாளர் மூலம், கடைசியாக அது மீண்டும் வாங்கின் கைவசம் வந்தது. மகிழ்ச்சியில் திளைத்த வாங், தன்னிடம் அந்த விடுதியில் நாளொன்றுக்கு எத்தனை கிண்ணம் நூடுல்ஸ் அங்கு விற்பனையாகும் என்று கேட்டு, அவரிடம் 35,000 யுவங்களைக் கொடுத்துள்ளார். அது 5,000 பேரின் பசியைப் போக்க போதுமானதாக இருந்தது. "இன்று ஒரு நாள் மட்டும் அனைவரையும் இங்கு பணம் கொடுக்காமல் உன்னைத் சொல்லுங்கள்," என்று கூறிவிட்டு வாங் சென்று விட்டதாக, யூ சாங்கிங் மார்னிங் போஸ்ட் நாளிதழிடம் கூறியுள்ளார்.

முகம் தெரியாத 5,000 பேருக்கு 'ட்ரீட்' கொடுத்த சீனர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

வாங் அளித்த நன்றிக் கடிதத்தில், அவரது பெண் தோழி தன காதலை ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கு இசைவு தெரிவித்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, "சாங்கிங் நகரில் நான் நேசிக்கும் பெண் மட்டுமல்லாமல், நிறைய நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளதாக, சௌத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

"நான் மிகவும் கௌரவிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்," என்றும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார், வாங்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

38 அங்குல நீளத்துக்கு நகங்களை வளர்த்த அதிசய மனிதன்

 
38 அங்குல நீளத்துக்கு நகங்களை வளர்த்த அதிசய மனிதன்
 

38 அங்குல நீளத்துக்கு நகங்களை வளர்த்து இந்த அதிசய மனிதர் சாதனை படைத்துள்ளார்.

அந்த நகங்களை 31 ஆண்டு காலமாக குறித்த நபர் வளர்த்து வந்திருக்கிறார் என்றால் ஆச்சரியம் தான்.

இவர் மிக நீளமான நக வளர்ப்பில் சாதனை படைத்து, கின்னஸ் ஏட்டில் 1975-ம் ஆண்டு இடம் பிடித்து இருக்கிறார் என்பது சிறப்பு.

2 அல்லது 3 அங்குல நீள நகம் வளர்க்கவே கஷ்டப்படுகிறவர்களுக்கு மத்தியில் இந்த அதிசய மனிதர் 38 அங்குல நீளத்துக்கு நகங்களை வளர்த்து இருக்கிறார் என்பது உண்மையில் பெரிய விடயம் தான்.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg

* ‘`மறுபடியும் பாண்டாக நடித்தால், என் மணிக்கட்டுகளை அறுத்துக்கொள்வேன்’’ என `ஸ்பெக்டர்’ படத்தில் நடிக்கும்போதே பொங்கி எழுந்து பேட்டி கொடுத்து இருந்தார் டேனியல் கிரெய்க். `ஸ்பெக்டர்’தான் அவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசிப்படம் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, மீண்டும் பாண்டாக நடிக்க ஒப்பந்தம் ஆக இருக்கிறார் என்கிற ஹாலிவுட் வட்டாரம். 1969-ல் வெளியான `ஆன்  ஹெர் மெஜெஸ்டீஸ் சீக்ரெட் சர்வீஸ்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். பாண்ட் இஸ் பேக்!


* இயக்குநராகிறார் ஷாம்லி. கடந்த ஆண்டு விக்ரம் பிரபு உடன் ‘வீரசிவாஜி’ படத்தில் நடித்தார் ஷாம்லி. படம் சரியாகப் போகததால் தமிழுக்கு பிரேக் போட்டுவிட்டு தற்போது மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புகொண்டு இருக்கிறார். ஆனால் ஷாம்லிக்கு நடிப்பைவிட இயக்கமே விருப்பம். தமிழில் இயக்குநராக அறிமுகமாக தயாரிப்பாளர்களிடம் தீவிரமாக கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். சீக்கிரமே டைரக்டர் ஷாலினியைப் பார்க்கலாம். ஹீரோ தலதானே!


* ஜி.வி.பிரகாஷின் அட்ராசிட்டிகள் தொடர்கின்றன. ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’  இயக்கி திகிலூட்டிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைகிறார் ஜி.வி.பி. ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தின் பார்ட்-2 வாக இருக்குமாம் இந்தப் படம். ஆனால், இதில் பிரகாஷுக்கு நாலு ஹீரோயின்களாம். கெட் ரெடி ஃபோக்ஸ்!


36p2.jpg

* ரஜினிகாந்த்-எஸ்.பி.முத்துராமன் காம்போபோல அஜித்- சிவா காம்போ தொடர்கிறது. ‘வீரம்’ என்ற கிராமத்துக் கதையில் தொடங்கிய நட்பு, ‘வேதாளம்’ கடந்து இப்போது ‘விவேகம்’ படத்தில் வந்து நிற்கிறது. அடுத்த படத்தையும் இவர்கள் இருவரும்தான் சேர்ந்து செய்கிறார்கள். ‘‘அஜித் சாருடன் நான்காவது படம் எனக்கே ஆச்சர்யம்’’ என கொண்டாடிக்கொண்டிருக்கிறார்  சிவா. இயக்குநர் ஓகே, படத்தின் தயாரிப்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என இங்கி, பிங்கி, பாங்கி போட்டுக்கொண்டிருக்கிறார் தல! சாய்...சாய்!


36p3.jpg

* ஆர்சனல் கால்பந்தாட்ட அணி வீரர் தியோ வால்காட் தன் முதுகில் ‘ஓம் நமசிவாய’ என்று பச்சைக் குத்திக்கொண்டது தான் சென்ற வார வைரல். புதிய டாட்டூவை ஆர்வத்தோடு ட்விட்டரில் பகிர்ந்துகொள்ள... ஓம் நமசிவாயவுக்குப் பதிலாக அது ஓம்நமசவாய என்று தவறாக இருந்தது. இந்திய ரசிகர்கள் ‘அண்ணா தெய்வக் குத்தம் ஆகிடுச்சுங்கண்ணா’ எனப் பொங்கித் தீர்த்தனர். பரிகாரம் பண்ணிடுங்க தியோ!


36p4.jpg

* நூறு நாள்களுக்கு முன்பு மும்பையின் சமீர் சிங் ஒரு முயற்சியில் இறங்கினார். நூறு நாள்களில் தினமும் நூறு கிலோமீட்டர் வீதம், பத்தாயிரம் கிலோ மீட்டர்கள் ஓடுவது! 99 நாள்களாகத் தொடர்ந்த அவருடைய முயற்சி நூறாவது நாளில் தோற்றுப்போனது. 9,964 கிலோமீட்டர்கள்தான் அவர் ஓடி முடித்தார். இது உலக அளவில் மிக முக்கியமான முயற்சி. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவை ஒன்றே முக்கால்முறைச் சுற்றி வருகிற அளவுக்கு ஓட வேண்டும்; அதுவும் தினமும். கடைசி நாளில் அவருக்கு உடல்நலக் குறைபாடு உண்டாக, அவரால் இந்தச் சவாலை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவருடைய முயற்சிக்கு உலக அளவில் வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதைவிடப் பெரிய முயற்சியை மீண்டும் செய்வேன் என்று உற்சாகம் குறையாமல் சொல்லி இருக்கிறார் சமீர். வாட் ஏ மேன்!


35p1.jpg

* துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபஹத் பாசில் வரிசையில் தமிழுக்கு வருகிறார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். இவர் தனுஷ் தயாரிக்கும் மலையாளப் படமான ‘தரங்கம்’ பட ஹீரோ. இவர் பி.ஆர்.பந்துலுவின் மகள் விஜயலட்சுமி இயக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தில் நடிக்கிறார்.
வெல்கம் சேட்டா


35p2.jpg

* பாட்மின்டன் சிந்து  இப்போது டெபுடி கலெக்டர். ‘`இந்த மக்களுக்காகப் பணியாற்றுவதையும், அவர்களுக்காக உழைப்பதையும் பெருமையாக நினைக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாட்மின்டனில் மட்டும்தான் கவனம் செலுத்த இருக்கிறாராம் சிந்து. அதற்குப் பிறகுதான் முழுநேர மக்கள் பணியாம். நைஸ் தோழி!


35p3.jpg

* வெப்சீரிஸ் பண்ணுவதுதான் இப்போது ஃபேஷன். சீக்கிரமே ஒரு புதுமையான வெப்சீரிஸ் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார் தனுஷ். ‘`இரண்டு வருடங் களாகவே இந்த புராஜெக்ட் கிடப்பில் இருக்கிறது. இந்த வெப்சீரிஸில் நானும் நடிப்பேனா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், `வட சென்னை’ முடிந்ததும் ஆரம்பித்து விடுவோம்’’ எனச் சொல்லியிருக்கிறார் தனுஷ். நீங்க நடத்துங்க ப்ரோ!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

”இங்கெல்லாமா இருக்கும்..!” - 138 எரிமலைகளைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

 
 

அண்டார்டிகா எரிமலை

“நாங்கள் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறோம். அது எரிமலைத் தொடர்களால் ஆன நரகம். 138 எரிமலைகள் பனி மலைகளின் உள்ளே உறைந்து போய், அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன” சற்றே நடுங்கிய குரலில் அந்தச் சர்வதேச ஊடகத்துக்குப் பதிலளித்தார் அந்தப் புவி விஞ்ஞானி.

எரிமலைக் கூட்டத்தின் அமைப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தப் புவி விஞ்ஞானிகள் குழு ஒரு அதிர்ச்சிகர செய்தியை இந்த உலகுக்குத் தெரிவித்துள்ளது. அது அண்டார்டிகா பனி விரிப்பின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலைகள் பற்றியது. சமீபத்திய ஆராய்ச்சியில் மேற்கு அண்டார்டிக்காவின் ஆழமான பகுதிகளில் 91 எரிமலைகள் புதைந்த வண்ணம் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இதனுடன் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 47 எரிமலைகளை சேர்த்துக்கொண்டால், இதுதான் உலகிலேயே நெருக்கமாகவும், எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கும் எரிமலைத் தொடர். இது மிகச் சரியாக ‘மேற்கு அண்டார்டிக் பிளவு’ அமைப்பின் மைய அச்சைச் சுற்றியே அமைந்துள்ளது.

புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

அண்டார்டிகா என்றாலே நம்மைப் பொறுத்தவரை குளிர் பிரதேசம். மனிதர்கள் உயிர் வாழ முடியாது. ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அவ்வப்போது சென்றுவருவார்கள் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். 14,000,000 சதுர கிலோமீட்டர்கள் விரியும் இது, உலகிலேயே ஐந்தாவது பெரிய கண்டமாக இருந்தாலும், இதன் அதிகபட்ச மக்கள்தொகை 4000 பேர். அதிலும், குளிர்காலங்களில், ஆயிரத்தை விடவும் குறைந்துவிடுகிறது இந்த எண்ணிக்கை. இருந்தாலும், அதை உலகுக்குத் தொடர்பில்லாத பகுதி என ஒதுக்கிவிட முடியாது. காரணம், அங்கிருக்கும் பனிப்பாறைகள்! உலகின் எதோ ஓர் மூலையில் வெப்பநிலை உயர்ந்தால், அண்டார்டிகாவில் இருக்கும் பனி உருகும். அங்கே பனி உருகினால் உலகின் வேறொரு மூலையில் கடல் மட்டம் உயரும்.

அண்டார்டிகா எரிமலை

பென்குவின்கள் ஜாலியாக உலாவும் இந்தக் கண்டத்தில் எண்ணற்ற அதிர்ச்சியான விஷயங்களும் நிறையவே உள்ளன. அழிந்துபோன ஆற்றின் அமைப்புகள், பண்டைய குகைகள், மர்மமான நுண்ணுயிர்கள் என அண்டார்டிகா எப்போதுமே நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. சென்ற வருடம் இதே அண்டார்டிகாவில்தான் உலகின் மிகப்பெரிய பனிப் பள்ளத்தாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு செயற்கைக்கோள் அளவீடுகள் மற்றும் சக்தி வாய்ந்த ரேடார் நுட்பங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த எரிமலைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால் இம்மலையில் அனைத்தும் எவ்வகை பனி அரிப்பிலும் சிக்காமல் கூம்பு வடிவ மலையாகவே இருக்கின்றன. எனவே, இது மிகவும் இளமையான ஒன்று, அதுவும் மிகச் சமீபத்தில் உருவான ஒன்றுதான் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நமக்கு ஆபத்து வருமா?

உருகும் பனிப்பாறைகள்

எரிமலைகளைக் கண்டுபிடித்த அதிர்ச்சியில் இருந்தாலும், இன்னொரு விஷயத்துக்காகத்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அது, இந்த எரிமலைகளில் எத்தனை உயிருடன் இருக்கின்றன என்ற விஷயம்தான்.  இதை எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தெரியாமல் முழிக்கிறது ஆராய்ச்சிக் குழு. ஏனென்றால், இந்த எரிமலைத் தொடர் நம்பமுடியாத வேறுபாடுகளைக் கொண்ட ஒன்றாய் இருக்கிறது. சிறியது முதல் 3850 மீட்டர்கள் உயரம் வரை வேறுபட்டு நிற்கின்றன. இதில் அந்தப் பெரிய எரிமலை, கிட்டத்தட்ட டோக்கியோவில் இருக்கும் ஃபுஜி எரிமலையின் அளவுக்கு இருக்கிறதாம். கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அளவுக்கு அண்டார்டிகாவிலும் இந்தப் பெரிய எரிமலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சந்தேகமில்லாமல் ஒரு மைல்கல் கண்டுபிடிப்புதான் என்றாலும், அச்சுறுத்தும் தன்மையுடையதுதான் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

 

மனிதனின் தவறுகளால் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெப்பநிலை, பூமியை மிகவும் சோதித்துக்கொண்டிருக்கும் தருணம் இது. பாரம்பர்ய பவளப்பாறைகளே நீரின் அதிக வெப்பத்தால் அழிந்து வரும் நிலையில், அண்டார்டிக்காவிலும் ஆங்காங்கே பனிக்கட்டிகள் மற்றும் அதனால் உருவான நில அமைப்புகள் உருகி வருகின்றன. இதனால், இந்தத் தொடர் எரிமலைகள் மேலிருக்கும் பனிப் போர்வைகள் உருகும் பட்சத்தில் பெரும்பாலான எரிமலைகள் வெடிக்கக் கூடும். இதனால் பெருமளவில் கடல் சீற்றம் ஏற்படலாம் என்று கணித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பனிப் போர்வை விலகும்போது, உறங்கும் எரிமலையின் உள்ளே இருக்கும் நெருப்புக் குழம்பு பல்வேறு வாயுக்களால் ஆன நெருப்பு குமிழிகளை உருவாக்கும். இது எரிமலையை மூடியிருக்கும் பாறைகளை சிதைத்து விடக் கூடிய திறன் படைத்ததாய் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து... உலகில் என்னவெல்லாம் நடக்கும்?

 
 

ஒரு ஐந்து நொடிகளை ஒதுக்கி நீங்களாகவே கற்பனை செய்து பாருங்கள்... ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்த நொடியிலிருந்து இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும்...


5
4
3
2
1
0

மனித இனம் அழிந்தால் என்னவாகும் ?


முதல் சில நொடிகள் :

- பெரும் அமைதி சூழும். மொத்த சத்தங்களும், இரைச்சல்களும் அடங்கிப் போயிருக்கும். 
- பறவைகளும், வீட்டுப் பிராணிகளும் அச்சத்தோடும், ஆச்சர்யத்தோடும் இறந்து கிடக்கும் உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். 

மனித இனம் அழிந்தால் என்னவாகும் ?

சில நிமிடங்கள் :

- பறவைகள் கூட்டம், கூட்டமாகப் பறக்கத் தொடங்கும். 
- பொந்துகளிலிருந்து எலிகளும், பாம்புகளும் வெளிவரத் தொடங்கும். 
- பூச்சிகள் அதிகம் பறக்கத் தொடங்கும்.
- புழுக்கள் நெளியத் தொடங்கியிருக்கும். 

மனித இனம் அழிந்தால் என்னவாகும் ?

சில மணி நேரங்கள் :

- கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
- இறந்துக் கிடக்கும் மனித உடல்களைப் புழுக்களும், கழுகுகளும் இன்னபிற உயிரினங்களும் உண்ணத் தொடங்கும்.
- கொஞ்சம், கொஞ்சமாக உலகம் இருளில் மூழ்கத் தொடங்கும். 
- ஓடிக் கொண்டிருந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றாக நிற்கத் தொடங்கும். 

மனித இனம் அழிந்தால் என்னவாகும் ?

சில நாள்கள் :

- வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள், பூனைகள், கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் உண்ண உணவில்லாமல், குடிக்க நீரில்லாமல் இறக்கத் தொடங்கும். 
- பண்ணைகளில் வளர்க்கப்பட்ட மாடுகள், கோழிகள் போன்றவை இறந்திருக்கும். 
- உலகின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியிருக்கும். சோலார் மற்றும் காற்றாலைகள் மட்டுமே மெதுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

காற்றாலைகள்

சில மாதங்கள் :

- வீட்டுப் பிராணிகள் மொத்தமும் இறந்துப் போயிருக்கும்.
- வீட்டில் வளர்க்கப்பட்ட பக், ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்கள் இறந்துப் போய்... நாட்டு நாய்கள் மட்டும் கூட்டம், கூட்டமாக வலம் வந்துகொண்டிருக்கும்.
- பராமரிப்பின்றி சோலாரும், காற்றாலைகளும் செயலிழந்து மொத்த உலகமும் இருளில் மூழ்கிப் போயிருக்கும்.
- பெரும்பாலான மனித உடல்கள், எலும்புகளாக மட்டுமே மிச்சமிருக்கும்.
- அணு உலைகளைக் குளிர்ச்சி செய்ய ஓடிக் கொண்டிருந்த குளிர்ந்த நீர் அனைத்தும் வற்றிப் போய், அணு உலைகளிலிருந்து ஆபத்தான கதிர்வீச்சுகள் வெளியேறத் தொடங்கியிருக்கும்.
- அந்தக் கதிர்வீச்சுக்குப் பல உயிரினங்கள் பலியாகியிருக்கும்.
- அணு உலைகள் மற்றும் பல தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள், ரசாயனங்கள் போன்றவை ஒன்றோடொன்று உரசி ஆங்காங்கே தீ விபத்துகள் நடைபெறும். அதை அணைக்க ஆளில்லாமல் பல தூரங்களுக்கு நெருப்பு பரவும்.
- விவசாய நிலங்களில், பராமரிப்பின்றி பயிர்கள் செத்துக் கொண்டிருக்கும். 
- அனைத்து சப்வேக்களிலும் நீர் புகுந்திருக்கும்.
- ஆங்காங்கே வெள்ளம் புகுந்திருக்கும்.

சில வருடங்கள் :

- வானில் சுழன்று கொண்டிருக்கும் பல செயற்கைக்கோள்களும் விழுந்து பூமிக்கருகே வெடித்துச்  சிதறும்.
- மொத்த நகரங்களும், கட்டடங்களும் செடி, கொடிகளால் சூழப்பட்டிருக்கும். 
- பாலைவனத்தை ஒட்டியிருக்கும் நகரங்கள் மொத்தமும் மணலால் மூடப்பட்டிருக்கும்.
- மொத்த கடலும் நாசமாகியிருக்கும்.
- எல்லா நீர்நிலைகளிலும் குப்பைகள் நிறைந்து காணப்படும். இதனால் பல உயிரினங்கள் இறக்கும். 
- புகை மற்றும் காற்று மாசுக்கள் குறைந்து வானம் தெளிவாகத் தெரியும். 
- கம்ப்யூட்டர், செல்போன், டிவி என மொத்தமும் செயலிழந்து மிகப்பெரிய "இ-வேஸ்ட்"  கிடங்காக பூமி மாறிப்போயிருக்கும். 

சில நூறாண்டுகள் :

- 300 ஆண்டுகள் கழித்து மனிதன் உருவாக்கிய ஈஃபில் டவர், புர்ஜ் துபாய் போன்ற பல கட்டுமானங்கள் சரிந்து விழுந்திருக்கும்.
- இரும்புப் பாலங்கள் துருப்பிடித்து தளர்ந்து விழும். 
- ஏரிகளை, சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் அழிந்து அங்கு மீண்டும் அந்த ஈரநிலங்கள் உயிர்பெற்றிருக்கும்.
- மிருகங்கள்தான் இந்த உலகை ஆளும்.
- இன்று அழியும் தருவாயிலிருக்கும் பல மிருகங்கள், இனப்பெருக்கம் ஆகி கூட்டங்களாக வலம் வந்து கொண்டிருக்கும்.
- குப்பைகள் ஆங்காங்கே ஒதுங்கி நீர்நிலைகள் சரியாகத் தொடங்கியிருக்கும்.
- இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு சீராக வாழத் தொடங்கியிருக்கும். 

10 ஆயிரம் வருடங்கள் :

- மனித இனம் வாழ்ந்ததற்கான தடங்கள் இல்லாமல் போயிருக்கும்.
- சீனச் சுவர் போன்ற சில கற்களால் ஆன இடங்களும், மலைகளும் மட்டுமே மனித இனம் வாழ்ந்ததற்கான சாட்சிகளாக நின்று கொண்டிருக்கும். 

பல ஆயிரம் வருடங்கள் :

- மொத்த பூமியும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதியதோர் உலகாய் செயல்படத் தொடங்கியிருக்கும். ஏலியன்கள் கூட பூமியைப் பார்க்க வந்திருப்பார்கள். இந்த பூமியின் அனைத்து விஷயங்களையும் ஆராய்ச்சி செய்து பல முடிச்சுகளை அவிழ்த்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்றின் விடை மட்டும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் . அது பிளாஸ்டிக். காரணம் பிளாஸ்டிக் அழிய 5 கோடி ஆண்டுகள் ஆகும். 

பிளாஸ்டிக் அழிய 5 கோடி ஆண்டுகளாகும்

 

பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன. மனித இனத்திற்கு முன்பும் இந்த பூமி இருந்தது. மனித இனத்திற்குப் பின்பும் இந்த பூமி இருக்கும். மற்ற உயிரினங்களிலிருந்து மனித இனம் சற்று மாறுபட்டிருக்கலாமே தவிர, மேம்பட்டு இல்லை என்பதை மனித இனம் உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டம்

 


மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டம்
 

எஃகு உலோகத்திற்குப் பதிலாக மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தற்போது கார்கள் ‘ஸ்டீல்’ எனப்படும் எஃகு உலோகப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன.

கார்களின் எடையைக் குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மரத்தில் உள்ள ‘ஃபைபர்’ எனப்படும் நாரிழைகள் மூலம் கார் தயாரிக்க பயன்படும் உலோகக்கலவை உருவாக்கப்படவுள்ளது. அது எஃகு உலோகத்தை விட ஐந்தில் ஒரு பங்கு எடை மட்டுமே கொண்டது. அதே நேரத்தில் 5 மடங்கு பலம் வாய்ந்தது.

அதற்கான ஆய்வை ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். அதை ஜப்பானின் டென்கோ கார்ப்பரேசன், டொயோட்டோ, டய்க்கோ நிஷிகவா கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளவுள்ளன.

மரக்கட்டைகள் மூலம் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணி 2020 ஆம் ஆண்டிற்குள் முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

புதுமை உலகம்: மொபைலில் வரப்போகுது 3டி காட்சி!

 

 
3d

இதுவரை திரையில் நீங்கள் பார்த்து ரசித்த 3டி காட்சிகளை ஸ்மார்ட் போன்களில் காணும் பாக்கியம் கிடைத்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கும்போதே தேனாக இனிக்கிறது அல்லவா? உண்மையில் 3டி காட்சிகளை ஸ்மார்ட் போன்களில் காணும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

ஒளிப்படங்கள், வீடியோக்களை முப்பரிமாண முறையில் நிஜமான தோற்றம் போலக் காட்டும் தொழில்நுட்பம்தான் ஹோலோகிராம். இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் ஆஸ்திரேலியா, சீன விஞ்ஞானிகள் நானோ தொழில்நுட்பமாக ஸ்மார்ட் போன்களில் புகுத்தியுள்ளனர்.

hallogram%20phone
 

பொதுவாக இதுபோன்ற தொழில்நுட்பத்தைக் கணினி அல்லது திரையரங்குகளில் 3டி கண்ணாடிகளை அணிந்து பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்மார்ட் போன்களில் முப்பரிமாணக் காட்சிகளை, 3டி கண்ணாடிகள் இல்லாமலேயே பார்க்க முடியுமாம். வழக்கமாகக் கணினிகளில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் சற்றுப் பெரியதாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட் போன்களில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் தலை முடியைவிட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கும்.

இதன்மூலம் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் போனில் முப்பரிமாண காட்சிகளைப் பார்க்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்ல, வீட்டில் உள்ள கணினி, தொலைக்காட்சிகளிலும்கூடப் பயன்படுத்த முடியும். ரெட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த போன், அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த போனின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகம்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘இதயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்’
 

image_09b4c7a3de.jpgஇந்தத் தேகமும் மனமும் மாறும் தன்மையுடையது. மனசும் அடிக்கடி மாறியபடியே இருக்கின்றது. தேகமும் பராயம் மாறமாற, அதன் உருவமும் மாறிவிடுகின்றது. முதுமை வரும் என்பதை இளையவர்கள் உணர்வதில்லை. 

அறிவு கூட, மேல் நோக்கியபடி செல்லும். ஆனால், அது, தனது அந்தத்தை எட்டுவதில்லை. இவை, எல்லாமே இயற்கையுடன் இயைபுபட்டவை.எனவே, வாழும் நாட்களில் உடலையும் மனத்தையும் ஸ்திரமாக்க முடியுமா என்பது கேள்விக்குறி? எதுவும் முடியாது எனச் சொல்ல முடியாது. 

ஆன்ப பலம் என்ற ஒன்று உண்டு. மனதில் தூய்மையை ஏற்றி வைக்க, மனிதரால் முடியும். படிப்படியாக மனிதன், தன்னை மேலும்மேலும் மெருகேற்றுவது, பணம் பொருளை மட்டுமல்லாது அதைவிட மேலான இதயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.  

மனம் தூய்மையானால் தேகமும் தேஜசாகும். இறைநற்கருணை கூடிவரும்.  

  • தொடங்கியவர்

பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919

 

ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன்

 
 
 
 
பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்-  19-8-1919
 
ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாகச் செல்கிறது.

கி.பி. முதலாம் நூற்றாண்டில தொசேரியன், குசானர்கள் போன்றோர் இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர், சித்தியர் மற்றும் மங்கோலியரான கூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும், சாசானியர்கள் போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாகிகள் போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652-ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706-709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாறினர்.

19-ம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய– ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919-ல் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பிரிட்டகிடம் இருந்து பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது.

http://www.maalaimalar.com

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1862- மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.

* 1895- கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

* 1915- முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.

* 1919- பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.

* 1934- ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9 சதவித மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

* 1944- இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.

* 1945- ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.

*  1953 - பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

* 1960- சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.

*  1980- சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டு 301 பேர் பலியானார்கள்.

* 1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும்போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

*  2002 - ரஷ்யாவின் எம்.ஐ.-26 ரக விமானத்தை செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

* 1918- சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9-வது குடியரசுத் தலைவர்

* 1929 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர்

* 1931 ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர்

* 1946 - பில் கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் 42-வது குடியரசுத் தலைவர்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று 'உலகப் புகைப்பட தினம்'

 

உலக புகைப்பட தினம்

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படத்துக்கு உண்டு. அவ்வளவு சாதனைகளை நிகழ்த்தும் புகைப்படக்காரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உலகப் புகைப்பட தினம் ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் எடுத்த சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. 1989-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, சீன வீரர்களின் பீரங்கிகளை எதிர்த்து நின்ற 'டேங்க் மேன்' புகைப்படம், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், சூடானில் உணவுப்பஞ்சத்தை எடுத்துரைத்த பிஞ்சுக் குழந்தையின் புகைப்படம் என இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

19-ம் நூற்றாண்டில் லூயிசு டாகுவேரே என்பவர்தான் 'டாகுரியோடைப்' என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இம்முயற்சிக்கு பிரான்ஸ் அகாடமி 1839-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அனுமதி அளித்தது. அதன் பின்னர், 1839-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு, ஆகஸ்ட் 19-ம் தேதி டாகுரியோடைப் செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. அந்த ஆகஸ்ட் 19-ம் தினம்தான் உலகம் முழுவதும் புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது லூயிசு டாகுவேரே பாரீஸில் உள்ள போல்வர்டு கோயிலைப் புகைப்படமாக எடுத்தார். அதுதான் தனிநபர் எடுத்த உலகின் முதல் புகைப்படம். சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல அமைப்புகளால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு 'வேர்ல்டு பிரஸ் போட்டோ' , 'டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த புகைப்படத்துக்காகப் பல மணிநேரங்கள் பொறுமை காக்கும் புகைப்பட நண்பர்களுக்கு 178-வது புகைப்பட தின வாழ்த்துகள்...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சென்னைக்குப் பிறந்தநாள்: மதராஸுக்கு உயிர் தந்தவர்கள்!

 

 
18chgowold%20madras%208

சைதாப்பேட்டையில் மாட்டு வண்டி. ஆண்டு: 1900

 

இன்றைய சென்னை மாநகரம், ஒரு பன்முகக் கலாச்சார மையமாகத் திகழ்கிறது. ஒரு நகரத்துக்கு இந்தப் பன்முகக் கலாச்சாரக் கூறுகளை வழங்குபவர்களாக எப்போதுமே அந்த நகரத்தின் சாதாரண மக்கள் இருந்திருக்கிறார்கள். சென்னை மாநகரம், தனது 378-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்நகரில் வாழ்ந்த மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஓர் ஒளிப்படக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது தக்‌ஷின் சித்ரா.

       
18chgowold%20madras%201

ஆயாக்கள்

 

‘பழைய மெட்ராஸின் பழங்கால ஒளிப்படங்கள்: 1800-களின் மக்களும் கலாச்சாரமும்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியை, தக்‌ஷின் சித்ரா கலை அருங்காட்சியகத்தின் காப்பாளர் கீதா ஹட்சன் ஒருங்கிணைத்திருக்கிறார்.

18chgowold%20madras%202

வேப்பேரியில் இயங்கிய பள்ளிக்கூடம், ஆண்டு: 1862

 

“இந்த ஆண்டு ‘மெட்ராஸ் தினக் கொண்டாட்டத்தை மக்கள் சார்ந்து வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால், மூன்று நூற்றாண்டுகளுக்குமுன் இந்நகர மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்யும்படி இந்க் கண்காட்சியை அமைத்திருக்கிறோம். பழங்கால மெட்ராஸ் பற்றி இதுவரை வெளிவராத தனித்துவமான இருபது ஒளிப்படங்கள் இந்தக் கண்காட்சியில் வைத்திருக்கிறோம்.

18chgowold%20madras%203

மட்பாண்டம் வனையும் குயவர்கள். ஆண்டு: 1890

 

அந்தக் காலக்கட்டத்தின் பள்ளி மாணவர்கள், வண்டிக்காரர்கள், குயவர்கள், பொற்கொல்லர்கள், கொத்தவால் சாவடி சந்தை விற்பனையாளர்கள் போன்ற பலதரப்பு மக்களையும் இந்தக் கண்காட்சியில் பார்க்க முடியும்” என்கிறார் கீதா ஹட்சன். இந்தக் கண்காட்சி சென்னை தக்‌ஷின்சித்ராவில் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

18chgowold%20madras%204

பாத்திரம் கழுவும் பெண். ஆண்டு: 1890

18chgowold%20madras%205
18chgowold%20madras%206

கொத்தவால் சாவடி சந்தை. ஆண்டு: 1939

18chgowold%20madras%207

பொற்கொல்லர்கள். ஆண்டு: 1870

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகுபலி சிவகாமி தேவிக்கும் ராணித்தேனீக்கும் என்ன சம்பந்தம்? #HoneyBeeDay

 
 

'தேனீ மாதிரி சுறுசுறுப்பா இரு' என்பது கிராமங்களில் புழங்கும் சொலவடை. இச்சொலவடை வெறும் சுறுசுறுப்புக்காக மட்டும் சொல்லப்படுவதில்லை. தேனீக்கே உடையச் சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் எனப் பல காரணங்களுக்காக சொல்லப்படும். "தேனீக்கள் மட்டும் இவ்வுலகில் இல்லையென்றால் உலகம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது" என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.  தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டு தாவரங்களின் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக தேனீக்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. தேனீக்களின் அவசியத்தையும், பயன்பாட்டையும் விளக்கும் விதமாகத்தான் ' தேனீக்கள் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.  

உலக தேனீக்கள் தினம் ராணித்தேனீ

ஒரு டீஸ்பூன் அளவு தேனை உருவாக்கத் தேனீ தனது வாழ்நாள் மொத்தத்தையும் செலவழிக்கிறது. இதற்காக 50 ஆயிரம் மலர்களின் மேல் அமர்ந்து தேன்களை இந்த தேனீக்கள் சேகரித்து வருகின்றன. தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீக்கள், மேற்குலகத் தேனீக்கள் எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீக்களும் உலகில் உள்ள நிலப்பரப்பிற்கு ஏற்றது போல ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறது. மலைத்தேனீ, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் மலைகளிலும், கொம்புத்தேனீ ஆசிய நாடுகளிலும், அடுக்குத்தேனீ துணைக்கண்ட நாடுகளிலும், மேற்குலகத் தேனீ ஆப்பிரிக்காவில் தோன்றி வடக்கு ஐரோப்பாவிற்கும், கிழக்குலகத் தேனீ ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளிலும், கொசுத்தேனீ உலகம் முழுவதும் பரவலாகவும் காணப்படும். தேனீக்கள் குடும்பத்தில் ராணித்தேனீ, ஆண்தேனீ, பொறியாளர் தேனீக்கள், மருத்துவ தேனீக்கள், சிப்பாய் தேனீக்கள், பிணம் தூக்கி தேனீக்கள், ஒற்றர் தேனீக்கள் எனப் பல வகையாகப் பிரிந்து செயல்படும். இவற்றில் 'ராணித்தேனீதான் கூட்டின் ராஜா'. ராணித்தேனீயின் கட்டளைப்படித்தான் இங்கு எல்லாமே நடக்கும். ராணித்தேனீ தேன்கூட்டை கண்காணிப்பது, நிர்வகிப்பது மற்றும் முட்டையிடுவது ஆகிய செயல்களை மேற்கொள்ளும். இதுவும் ஒரு விதத்தில் பாகுபலி மகிழ்மதி அரசாங்கத்தை ஒற்றைப் பெண்ணாக நிர்வகிக்கும் சிவகாமி தேவிக்கு நிகரான வேலைதான். ராணித்தேனீ தவிர மற்ற தேனீக்களின் ஆயுட்காலம் வெறும் இரண்டு மாதங்கள்தான். ஆனால், ராணித்தேனீயின் ஆயுள்காலம் 3 ஆண்டுகளாகும். 

தேன்கூடு

ஒரு கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இடம்பெறும். எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் இவற்றிற்கு இடையே எந்தவிதமான குளறுபடிகளும் வருவதில்லை. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் செம்மையாக செய்து முடிக்கும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரையிலும் இருக்கும். எண்ணிக்கை அதிகமானால் தேன்கூடு விழுந்து விடும். இதைத் தவிர்ப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் தங்கள் உடலில் வரும் பிசினை கொண்டு மெழுகாக மாற்றி கூட்டை கெட்டியாக ஒட்டி வைத்துவிடும். தேனீக்களின் பயன்களை கருதி தேனீக்களை கொண்டு செயற்கையான பெட்டிகள் அமைத்து வருமானம் பார்த்து வருகிறார்கள், விவசாயிகள். இவற்றிலிருந்து பெறப்படும் தேன் உடலின் பல வகையான இன்னல்களுக்கு அருமருந்து. சிறிய பெட்டிக்குள் தேனீக்கள் வைக்கப்பட்டாலும், அவை வழக்கம்போல தேனை எடுத்து வரும்.

 

சமீபகாலமாக, தேனீக்கள் அழிந்து வருவதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தேனீக்கள் எண்ணிக்கை சொற்ப விகிதத்தில்தான் இருக்கின்றன. இதற்கு எதிராகப் பல சுற்றுச்சூழல் அமைப்புகளும், அறிவியல் வல்லுநர்களும் போராடி வருகிறார்கள். தேனீக்களின் அழிவு, பல வகைப் பயிர்களிலும், பழ உற்பத்தியிலும் அழிவை ஏற்படுத்தும். இதனால்தான் தேனீக்கள் அழிந்து வருவதும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது வனங்கள் அழிக்கப்படுவதும், குறைந்துவிட்ட விவசாயமும், மாசடைந்த சுற்றுச்சூழலும் தான். எனவே சுற்றுச்சூழலை நாம் பாதுகாத்தால் தேனீக்கள் தானாகவே பெருகிவிடும். தேனீக்களைப் பாதுகாப்போம். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகப் புகைப்பட தினத்தன்று சன்னி லியோன் தேர்வு செய்த புகைப்படம்!

 

sunny__11504.jpg

கொச்சி நகரில் நடந்த fone4 தொடக்க விழாவில் பங்கேற்க பாலிவுட் சென்சேஷன் சன்னிலியோன் சென்றிருந்தார். சன்னிலியோனைப் பார்க்க சேட்டன்கள் அலைமோதினர். கூட்டத்திலிருந்து சன்னிலியோனைப் பாதுகாப்பதே பாதுகாவலர்களுக்குப் பெரும் பாடாகிப் போனது. இந்த நிகழ்ச்சியின்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பாப்புலராகியது. விழா மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகையில், ஓட்டைப்போட்டு, இளைஞர் ஒருவர், சன்னி லியோனைப் பார்க்க முயல்வதையும் பாதுகாவலர் அதைத் தடுப்பது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியது.  

leone__11201.jpg

 

கேரளக்காரர்கள் காட்டிய அன்பில் மயங்கிய, சன்னி லியோன் மும்பை சென்ற பின்னரும் கொச்சிக்காரர்களை மறக்கவில்லை. தற்போது, கேரள விசிட்டின்போது மிகச்சிறந்த புகைப்படமாக அந்தப் படத்தை சன்னி தேர்வு செய்திருக்கிறார். ''எல்லா புகைப்படங்களையும்விட இதுதான் டாப். இந்தப் படத்துக்கு நிறைய கேப்ஷன்கள் எழுதணும்போல இருக்குது. ஆனா, எப்படித் தொடங்க என்றுத் தெரியவில்லை'' என சன்னி ட்வீட்டியுள்ளார். தற்போது, 36 வயதான சன்னி லியோனுக்கு கேரளக்காரர்கள் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.