Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மகளுக்கு மார்க் சக்கர்பெர்க் வைத்த அடடே பெயர்!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் என்றால் இன்றைய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மார்க் தம்பதிக்கு நேற்று இரண்டாவது பெண்குழந்தை பிறந்தது. 

இன்று பெரும்பாலானோர் தாங்கள் பெற்றோர் ஆவதை ஃபேஸ்புக் மூலமாகத்தான் உலகிற்கு தெரியப் படுத்துகிறார்கள். இதற்கு ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க்கும் விதிவிலக்கில்லை. தனது இரண்டாவது குழந்தையை நேற்று இந்த உலகிற்கு அறிமுகம் செய்தார். அந்தக் குழந்தைக்கு 'ஆகஸ்ட்'என்று பெயரிட்டுள்ளார். 

mark with is family


அந்தத் தகவலை,தனது மகளுக்கு எழுதும் ஒரு கடிதமாக அவர் எழுதியுள்ளார். அதில் அவர், "இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறேன். வளர்ந்த பிறகு நீ என்னவாக ஆவாய் என்பதை தெரிந்துகொள்ள நானும் உனது அம்மாவும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உனது அக்கா பிறந்த போது, இந்த உலகம் குறித்து ஒரு கடிதம் எழுதினோம். இந்த சமத்துவமான உலகில் வலிமையான சமூகத்தில் அவளும், இப்பொழுது நீயும் நல்ல கல்வியுடனும் நல்ல உடல்நலத்துடனும் வளர வேண்டும். 

இதை நாங்கள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தை மனதில் வைத்துக் கூறுகிறோம். ஆனால், அதைச் செய்வதில் எங்களின் பங்களிப்பு நிறையவே உள்ளது. உங்களின் வளர்ந்த பருவத்தைப் பற்றி பேசுவதை விட உங்களின் குழந்தை பருவத்தைப் பற்றி பேசவே விரும்புகிறோம். இந்த உலகம் ரொம்ப சீரியஸ் ஆன இடம். அதனால், வெளியே சென்று விளையாடுவது மிக முக்கியம். 

குழந்தை பருவம் என்பது அழகானது. தவிர அது ஒரு முறைதான் நம் வாழ்வில் நடக்கும். அதனால் எதிர்காலம் குறித்த கவலைகளின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் " என்று கூறியுள்ளார். 

எப்பொழுதும் கிரே நிற உடை மட்டும் அணிவது ஏன் என்று ஒரு முறை மார்க்-யிடம் கேட்ட போது, "எனக்குத் தினமும்,மில்லியன் மக்கள் சேவை செய்ய உதவி செய்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. எனது சக்தியை வேறு  வேலைகளுக்குச் செலவிட்டால், அது எனக்குத் திருப்பதியாக இருக்காது" என்று தெரிவித்தார். 

உடை தேர்வு செய்வதில்தான் நேரத்தைச் செலவழிக்க மாட்டார் என்று பார்த்தால் மகளுக்குப் பெயர் சூட்டுவதிலுமா நேரம் செலவழிக்காமல் பிறந்த மாதமான ஆகஸ்ட் என்றேவா பெயர் சூட்டுவீங்க மார்க்?

http://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

''இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது!'' - 135 ஆண்டு முந்தைய செய்தியின் பின்னணி என்ன? #OnThisDay #Ashes

ஒரு கிரிக்கெட் போட்டி ஒரு போர் உருவாக காரணமாக இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா? போர் என்றால் ஆயுதங்கள் ஏந்தி நாடு பிடிக்கும் போர் அல்ல. ஒரு விளையாட்டை விளையாட்டு என்று பார்க்கமால் போர் போல அணுகும் ஆட்டமுறை. அது ஒரு சில நாடுகளுக்கு இடையே மட்டும்தான் இருக்கும். அதில் முக்கியமானவை இந்தியா - பாகிஸ்தான். ஆனால் இதற்கு முன்பே ஒரு போர் கிரிக்கெட் உலகில் நடந்து வருகிறது. ஆம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் (Ashes) தொடர் தான்.

Ashes

'ஆஷஸ் போட்டிகள் என்றால் ஏன் இவ்வளவு கோபம்? களத்தில் ஏன் இத்தனை ஆக்ரோஷம்...?' என்ற கேள்விகள் பலருக்குள் எழுவது உண்டு. மற்ற ஒருநாள், டி-20 போட்டிகளில் கூட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து வீரர்கள் இவ்வளவு ஆக்ரோஷம் காட்டுவதில்லை. ஏன் ஆஷஸுக்கு மட்டும் இவ்வளவு கோபம் என்றால், 1882-ம் ஆண்டு தான் இதற்கான விதை விதைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட இங்கிலாந்து செல்கிறது. லண்டனில் துவங்கும் இந்த போட்டியில் ஆஸி 63 ரன்களுக்கு ஆல் அவுட். அடுத்து ஆடிய இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட். 2-வது இன்னிங்ஸில் ஆஸி 122 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்துக்கு 85 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால், இங்கிலாந்து 77 ரன்களில் சுருண்டு 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தோல்வியை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்',  ''இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு, சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது'' என இரங்கல் செய்தியாக அறிவித்தது.

பின்னர் 1882-83களில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மூன்று டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட்டை இங்கிலாந்து வென்று பழிதீர்த்தது. அதற்கு பரிசாக மெல்பர்னை சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு ஒரு கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கினார்கள்.

ஆஷஸ்

அதன்பின் 20 வருடங்கள் கழித்து 'ஆஷஸ்' என்ற பெயரில் அதிகாரப்பூர்வ தொடர் தொடங்கப்பட்டது. 1921-ல் லண்டனைச் சேர்ந்த பத்திரிகையில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக் கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பை அது. தற்போது அந்த கோப்பையை எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு ஆஷஸ் சாம்பியன் என்ற பெயர் இருக்கும்; ஆனால் கோப்பை எம்சிசியில் பாதுகாக்கப்படும். ஆனால் இது பிள்க்கிடம் இருந்த கோப்பையின் மாதிரிதான் என்று கூறப்படுகிறது. புதுமையாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் - வேதாவான ஆஸி - இங்கிலாந்து!

இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெற்றுவருகிறது. இதுவரை 68 தொடர்கள் நடைபெற்றுள்ளது. மொத்தம் 320  டெஸ்ட் போட்டிகள். இதில் 130 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், 106 போட்டிகளை இங்கிலாந்தும் வென்றுள்ளன, 89 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. சொந்த மண்ணில் தான் இரு அணிகளும் அதிக தொடர்களை வென்றுள்ளன. 69 தொடர்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து  தலா 32 தொடர்களை வென்றுள்ளது. 5 தொடர்கள் சமனில் முடிவடைந்துள்ளன.

ஆஷஸ்

ஸ்லெட்ஜிங்கின் தாயகம்!

களத்தில் வார்னே, ஃபிளின்டாப், ஸ்ட்ராஸ், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவை மிகவும் பிரபலமாகும். 1989-க்கு பிறகு தொடர்ந்து தோற்ற இங்கிலாந்து 2005-ல் ஃப்ளின்டாப், பீட்டர்சன் என பெரும்படையோடு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை 'ரிட்டர்ன் ஆஃப் ஆஷஸ்' ஆக்கியது. பின்னர் ஹாட்ரிக் தொடர் ஜெயித்த இங்கிலாந்து அடுத்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.

கடைசியாக சென்ற வருடம் நடந்த ஆஷஸ் தொடரில் அணிகளின் பழைய ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று புதிய அணியோடு களமிறங்கின. இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. வரும் நவம்பரில் துவங்கும் போரில் யார் வென்று தொடர் வெற்றியில் முன்னிலை பெறப்போகிறார்கள் என்ற ஆர்வம் கூடியுள்ளது.

ஆஷஸ் எனும் போர் பிறந்த தினம் இன்று..

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிறந்த இயக்குநர் மோடி, சிறந்த தயாரிப்பாளர் அமித் ஷா... இது செம கலாய் விருதுகள்!

 

தமிழகத்தில் இன்றைய தினங்களில் நடந்துவரும் அரசியல் மாற்றங்கள் ஒரு சினிமாவைப் போல் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆஸ்கரை மிஞ்சும் ஆக்டிங், நோலன் படங்களை மிஞ்சும் டிவிஸ்ட்டுகள் என ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியலில் நடந்தவற்றை வைத்து சிலருக்கு விருது கொடுக்கலாம் என்ற ஒரு யோசனை. யார் யாருக்கு என்னென்ன விருது, அண்ட் தி நாமினீஸ் ஆர்.

சிறந்த நடிகர், துணை நடிகர், வில்லன்:

விருது

 

நடிகர் : 'தர்மயுத்தம்' என்று சொல்லி தியான காட்சியுடன் அந்தர் மாஸ் என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து தன் பேட்டிகள் மூலம் தமிழகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். ஊழல் ஆட்சி என்று சொல்லி அடுத்த 20 நாள்களில் ஈபிஎஸ் அணியுடன் இணைந்த பெருமைக்குரியவர். அதனால், மத்திய தலைமை இயக்கிய இப்படத்தின் சிறந்த நடிகர் ஓ.பி.எஸ் அவர்களே! 

துணை நடிகர் : பன்னீர் அண்ட் பழனிசாமி மேக்ஸ் பெஸ்ட் பேர் என்பது போல் அவருக்குச் சிறந்த நடிகருக்கான விருது என்றால் கட்டாயம் இவருக்குதான் சிறந்த துணை நடிகருக்கான விருதைக் கொடுக்க வேண்டும். யாருக்கு லாபமோ இல்லையோ, இவருக்குதான் ஜாக்பாட் லாபம். சேலத்தில் இருந்தவரை இந்தியாவுக்கு அடையாளம் காட்டிய அந்தத் தருணங்களை நினைத்தாலே இனிக்கும். வழ வழ கொழ கொழவென இழுத்துக்கொண்டிருந்த திரைக்கதைக்கு எண்ட் கார்டு போட்ட பெருமை இவரையே சேரும்.

வில்லன்: இவரது பிக் பாஸ் பெங்களூரில் ஷாப்பிங் வேலையில் பிஸியாக இருப்பதால் இவர்தான் இப்போதைய தலைவர். தன் பக்கம் உள்ள ஆட்களை வைத்து அவ்வப்போது எதிர்பாராத மாஸ் காட்டுவார். இணைந்த கைகள்தான் இவரது டார்கெட். சிரித்துக்கொண்டே வில்லத்தனம் செய்வதில் இவர்தான் சித்தார்த் அபிமன்யூ. இப்படி பல பெருமைகளையுடைய தினகரனுக்கே சிறந்த வில்லனுக்கான விருது போய்ச் சேரும். 

சிறந்த தயாரிப்பாளர், இயக்குநர் :

அமித் ஷா, மோடி

தயாரிப்பாளர் : இயக்குநர் கதை சொல்லிய மறு கணமே 'எப்படியும் படம் ப்ளாக்பஸ்டர். அதனால், படத்தை நானே தயாரிக்கிறேன், நல்லா பண்ணுங்க' என்று ஆதரவு தந்தவர் அமித் ஷா. அவ்வப்போது கதையில் இவரும் என்ட்ரி கொடுத்தார். அதனால் இவருக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருதைக் கொடுக்கலாம்.

இயக்குநர் : இப்படியொரு படைப்பை இயக்கிய பெருமை கண்டிப்பாக மோடிக்குத்தான் போய்ச் சேரும். டீ கடையில் இருந்தவருக்குள் இப்படி ஒரு டெடிகேஷனா என்ற ரகத்தில் தந்திரமான படம் ஒன்றை இயக்கியுள்ளார். பாரம்பர்யம் நிறைந்த தமிழ்நாட்டில் 'இவிங்களுக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியதுதான்' என்ற மைண்ட்வாய்ஸில் படம் இயக்கியுள்ளார். இப்படி ஒரு பெருமை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரையே போய்ச் சேரும். ஆதலால், சிறந்த இயக்குநருக்கான விருது மோடிக்கும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருது அமித் ஷாவுக்கும் போய்ச் சேரும். 

சிறந்த வசனகர்த்தா, பேச்சாளர் : 

சென்கோட்டையன், நாஞ்சில் சம்பத்

வசனகர்த்தா : இவர் வைரலாவதைப் பேசுகிறாரா? இல்லை இவர் பேசுவது வைரலாகிறது என்பது தெரியவில்லை. இவர் துப்பினாலும் வைரல், காத்திருந்தாலும் வைரல். அதனால் இந்த விருது நாமினேஷன் இன்றி சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது நாஞ்சில் சம்பத்தையே போய்ச் சேரும். பேட்டிகளே இல்லாமல் தான் கொடுக்கும் பேட்டி மாஸ் ஹிட் அடிக்கும். அரசியலில் ஆகச் சிறந்த வசனகர்த்தா இவரே. அதனால் விருதும் இவருக்கே.

பேச்சாளர் : விருதுகளுக்கு தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த இவர், ஆங்கிலப் பத்திரிகை கேட்ட கேள்விக்குப் பிறகு வைரல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஆம், கேள்விக்கு இவர் சொன்ன 'All members anybody admk peoples madam supporting' பதில்தான் இவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அதுமட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றே இவ்வார்த்தைகளைக் கூறலாம். ஆதலால் சிறந்த பேச்சாளருக்கான விருதை நம் பேச்சுப் புயல் செங்கோட்டையன் தட்டிச் சென்றார். 

சிறந்த தொகுப்பாளர், காஸ்ட்யூம் டிசைனர் :

ஜெயக்குமார், ஸ்டாலின்

தொகுப்பாளர் : இந்த அணி பிரிந்ததில் இருந்து ஒரு அரசியல் திருப்பம் வரப்போகின்றது என்பதை முன்னமே தெரிவித்து லீட் கொடுத்தார். அதை வைத்து என்னல்லாமோ நடக்கப் போகிறது என்பதை உணரலாம். பொதுச் செயலாளர் நீக்கம் குறித்த செய்தியை நமக்குக் கொடுத்தமைக்காகவே ஜெயக்குமாருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருதைக் கொடுக்கலாம். 

காஸ்ட்யூம் டிசைனர் : இவரின் காஸ்ட்யூம்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாறிக் கொண்டே இருக்கும். இதுதான் இவரது சிறப்பம்சமும் கூட. ஜாகிங் போனால் ஷர்ட் - ட்ராக் பேன்ட், கட்சி வேலை என்று வந்தால் வெள்ளை வேஷ்டி, சட்டை என வெரைட்டி காட்டுவார். 'சண்டையில கிழியாத சட்டை எங்க டூட் இருக்கு?' என்ற வசனத்துக்கு வாழும் உதாரணமான ஸ்டாலினுக்கே இந்த விருது போய்ச் சேர வேண்டும். ஆக.....!  

 

விருதுகளை வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!!!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

அறிவாளித்தனத்தை விட அன்பே வெல்லும்... - சார்லி சாப்ளின்

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person, auf einer Bühne, steht, Konzert und Text
 

ஆகஸ்ட் 29: பாப் உலகின் மன்னன் "எம்.ஜெ" மைக்கேல் ஜாக்சன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..
#MichaelJackson

"தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40 வருடங்களுக்கு மேல் இந்த உலகையே கட்டிவைத்திருந்த "மைக்கேல் ஜாக்சன்" பிறந்த தினம் இன்று."

"நம்ம ஊர்ல துருதுருன்னு இருக்க பசங்களையோ, கால் ஒரு இடத்துல நிக்காம ஆடுற பசங்களப் பாத்து எல்லாரும் கேட்குற ஒரே கேள்வி..இது தான்.."மனசுல என்ன பெரிய மைக்கேல் ஜாக்சன்னு நினைப்போ?". இந்த மாதிரி பேச்சுகளைத் கேட்டிராமல் எந்த ஒரு நடன கலைஞர்களும் தன்னுடைய லட்சியத்தை அடைந்திருக்க மாட்டார்கள். நடனம் மீது காதல் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இவர் நிச்சயம் ரோல் மாடலை இருந்திருப்பார். பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

'மைக்கேல் ஜோசப் ஜாக்சன்' என்ற இயற் பெயரை விட "கிங் அஃப் பாப்" (பாப் இசையின் மன்னர்) என்றும் "எம்.ஜெ" என்றும் உலகில் உள்ள அனைத்து ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்டார். தன்னுடைய திறமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் தந்தாரோ, அந்த அளவிற்கு தன்னுடைய தோற்றத்துக்கும் முக்கியத்துவம் தந்தவர். ஜாக்சன் உடுத்தும் உடைகளுக்கும்,அவரது தொப்பிக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற பாண்டு இசைக்குழுவில் பணியாற்றினார். 'அப்பல்லோ' தியேட்டரில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் ஆல்பத்தை அந்நாளில் மிகவும் பிரபலமான 'டயானா ராஸ்' எனும் பாடகி வெளியிட்டார். பின்னர், டயனா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.இந்த நிகழ்ச்சியே ஜாக்சனின் இசைப்பயணத்துக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின் ஜாக்சன் உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே ஜாக்சன் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

தன்னுடைய தீவிரமான உழைப்பாலும், இசையின் மீது கொண்ட காதலாலும் 80-களில் புகழின் உச்சியில் இருந்தார். 1982-ல் வெளிவந்தக் ஜாக்சனின் 'திரில்லர்' அல்பம் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசை ஆல்பங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இன்று வரை இருக்கிறது. பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தில் அவர் புதிய புரட்சியே செய்து காட்டினார். ஜாக்சன் படைத்த 'ரோபாட், மூன்வாக்' போன்ற நடன வகைகளும் இவரால் பிரபலமானது.

இவரது, நடனத்தாலும் இசையாலும் பல இசை வகைகள் இந்த உலகத்தையே ஆடவைத்தது. பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவியும் செய்துவந்தார். "காட் டு தி தேர், ஆப் தி வால், திரில்லர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி" போன்ற இவரது ஆல்பங்கள் அனைத்தும் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்றன.

"திரில்லர்" இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆல்பம். பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார் ஜாக்சன் .கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார்.75 கோடி ஆல்பங்கள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன். ‘ப்ளாக் அண்ட் ஒய்ட்’ என்ற விடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள்.இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும். இது அத்தனையும் ஜாக்சனின் சில சாதனைகள் தான். தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் 'மைக்கேல் ஜாக்சன்' எனும் ஒரு சரித்திரம் தூண்டுகோளாய் எப்போதும் அமைந்திருக்கும்.

தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40 வருடங்களுக்கு மேல் இந்த உலகையே கட்டிவைத்திருந்த "மைக்கேல் ஜாக்சன்" பிறந்த தினம் இன்று.

vikatan

  • தொடங்கியவர்

மார்க் சக்கர்பெர்க் குழந்தையின் பெயருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா?

 
 

ஆகஸ்ட் மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க்கிற்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ''ஆகஸ்ட்'' எனப் பெயர் வைத்துள்ளார். ஆகஸ்ட் அவரது இரண்டாவது குழந்தை. ஆகஸ்ட் பிறந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த மார்க், பெயர்க்காரணத்தையும் தெரிவித்தார். ஆகஸ்டஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ஆகஸ்ட். இதற்கு மிகுந்த மரியாதைக்கு உரியவர், உச்சங்களைத் தொடுபவர் என்று பொருள்.

ஆகஸ்ட் என்பது இருபாலருக்குமான பொதுவான பெயர். இதில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுகே இந்தப் பெயர் அதிகம் வைக்கப்படுகிறது. 2016ல் இந்தப் பெயர் 2076 ஆண் குழந்தைகளுக்கும், 222 பெண் குழந்தைகளுக்கும் வைக்கப்பட்டுள்ளது.  இதுதான் 2016ல் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயரிலேயே பிரபலமான பெயராம். எப்போதும் “கனெக்ட்” என்ற வார்த்தையே மந்திரமாக உச்சரித்து வரும் மார்க், தனது குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் விஷயத்திலும் மக்களோடு ‘கனெக்ட்’ ஆகும்படி பார்த்துக்கொண்டிருப்பதுதான் நேற்றைய ஃபேஸ்புக் டாக்.

2வது குழந்தைக்கும் மட்டும் மார்க் இப்படி ஆராய்ச்சி செய்து வைக்கவில்லை. தன் முதல் குழந்தையான மேக்ஸுக்கும் இதே உத்தியை தான் கையாண்டுள்ளார். 2015ன் பிரபலமான பெயரான  மேக்ஸ் என்பதை தன் குழந்தைக்கு சூட்டினார். மேக்ஸிமஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பெறப்பட்ட வார்த்தை தான் மேக்ஸ்.

Mark Zuckerberg
vor 22 Stunden
 

Priscilla and I are so happy to welcome our daughter August! We wrote her a letter about the world we hope she grows up in, and also hoping she doesn't grow up too fast.

---

Dear August,

Welcome to the world! Your mom and I are so excited to see who you will become.

மார்க் தன் முதல் குழந்தையின் வளரும் வேகத்தை ஃபேஸ்புக்கில் சிலாகித்துக் கொண்டாடியது அனைவரும் அறிந்ததே. தனது இரண்டாவது மகள் பிறந்ததற்காக ஒரு கடிதம் ஒன்றை தன் மனைவி பிரிசில்லாவுடன் சேர்ந்து மார்க் எழுதியுள்ளார்.

டியர் ஆகஸ்ட்,

இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறோம். நானும், உன் தாயும் நீ என்ன ஆகப்போகிறாய் என்பதை காண ஆவலாய் இருக்கிறோம்.

உன் சகோதரி பிறந்த போது உனக்கான உலகம் எப்படி இருக்கப்போகிறது என்ற கடிதம் ஒன்றை எழுதினோம். இப்போது அந்த உலகம் வளர்ந்து வருகிறது. நீ காணும் உலகில் நல்ல கல்வி, குறைவான எண்ணிக்கையில் நோய்கள், வளமான சமூகம் மற்றும் சமத்துவம் ஓங்கி இருக்கும். அறிவியல் தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகள் குறித்து எழுதியிருந்தோம். உன் தலைமுறை எங்களுடைய தலைமுறையை விட சிறப்பானதாக இருக்கும். அதனை உருவாக்கித் தருவதில் எங்களின் பங்கு அதிகமாக உள்ளது.  இன்றைய தலைப்பு செய்திகள் தவறாக இருந்தாலும், அதனை சரியாக மாற்ற வேண்டியது எங்கள் கடமை. உனது தலைமுறையை செம்மையாக்குவது தான் எங்களது வேலை.

ஆனால், உன் எதிர்காலத்தை பற்றி எழுதுவதை விட உன் குழந்தைப்பருவம் பற்றி பேச வேண்டியது அவசியம். உலகம் தற்போது உள்ள மோசமான சூழலில் நீ வெளியில் சென்று விளையாட சாதகமான சூழல் இப்போது இல்லை. அதனை ஏற்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

நீ வளர்ந்த பின்பு  பிஸியாகி விடுவாய். அதனால் இப்போது நீ பூக்களின் வாசம் நுகர வேண்டும், இலைகளின் பசுமை அறிய வேண்டும். நீ மேக்ஸுடன் சேர்ந்து புத்தகங்களைப் படிக்க வேண்டும், வீட்டின் எல்லாப் பக்கங்களின் தவழ்ந்து விளையாட வேண்டும். மேலும் நீ நிறைய தூங்குவாய் என நினைக்கிறேன். உன் கனவிலும் நாங்கள் உன்னை எவ்வளவு அன்போடு பார்த்துக்கொள்கிறோம் என்பது உனக்கு தோன்றும் என நம்புகிறேன்.

குழந்தைப்பருவம் என்பது அதிசயமானது. ஒருமுறைதான் நமக்கு அது கிடைக்கும். அதனால் எதிர்காலத்தை குறித்து கவலைப்படாமல் குழந்தைப்பருவத்தை அனுபவி. உன் எதிர்காலத்தை நாங்கள் கவனித்து கொள்கிறோம்.  உனக்கு மட்டுமல்லாமல் உன் தலைமுறை குழந்தைகள் அனைவருக்குமான சிறந்த உலகை உருவாக்குவோம்.

ஆகஸ்ட் உன்னை அதிகம் நேசிக்கிறோம். உன்னுடனான ஆச்சர்யங்களுக்குக் காத்திருக்கிறோம். உன் வாழ்க்கை மகிழ்வாக அமைய வாழ்த்துகிறோம். நீ தந்த மகிழ்ச்சியை நாங்கள் உனக்குத் திரும்பத் தருவோம்.

அன்புடன்

அம்மா, அப்பா

இப்படி ஓர் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார் மார்க். வாழ்த்துக்கள் மார்க்...

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

புதிய தொழில்நுட்பத்துடன் திறக்கப்படுகிறது பிரிட்டனின் நீளமான பாலம்

இங்கு பிரிட்டனில் செப்டம்பர் நான்காம் தேதி மகாராணியார் புதிய குவீன்ஸ்ஃபெர்ரி கடவையை அதிகாரபூர்வமாக திறந்து வைப்பார்.

குறைந்தது இரண்டு புள்ளி ஏழு கிலோமீட்டர்கள் நீளமான இந்தப் பாலம், இதே போன்ற பாலங்களை பொறுத்தவரை உலகில் மிகவும் நீளமானது என்பதுடன், பிரிட்டனில் மிக உயரமான பாலமும் கூட. ஸ்காட்லாந்தின் வடக்கு கிழக்கு பகுதிகளை இது எடின்பராவுடன் இணைக்கும்.

  • தொடங்கியவர்

ஹலோ ஃபிரெண்ட், ‘டெனிம்’ லுங்கிதான் இப்போ டிரெண்ட்!

denim_18553.jpg

  
தமிழனின் பாரம்பர்ய உடை என்றதும் நினைவுக்கு வருவது வேட்டி. வேட்டிக்கு இணையாகத் தொன்றுதொட்டு ஆண்கள் பயன்படுத்தி வரும் உடை ‘லுங்கி’. வேட்டியைப் போலவே அணிவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், மக்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் உடையாக இருக்கிறது. இது பல்வேறு டிசைன்களிலும், வண்ணங்களிலும் வரும், தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், கம்போடியா, எத்தியோப்பியா, நேபாளம், மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ‘லுங்கிகள்’ மக்கள் அன்றாடம் அணியும் ஆடையாக இருக்கிறது.
  
‘லுங்கி’ பெரும்பாலும் 2 மீட்டர் மற்றும் 2.25 மீட்டர் அளவிலும் இருக்கும். பல்வேறு வண்ணங்கள், கோடுகள், கட்டங்கள், பூக்கள், டிசைன் பிரிண்ட்டட் லுங்கிகள் என பல்வேறு மனம் கவரும் டிசைன்களில் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இதன் ஓரங்கள் இணைக்கப்படாமல் இருக்கும். பெரும்பாலானோர் இவ்வாறு இணைத்து உபயோகிக்கவே விரும்புவார்கள். விழாக்கள் மற்றும் பொது இடங்களுக்கு  வேட்டியை அணிந்து செல்வது போல, ‘லுங்கியை’ அணிந்து செல்வதில்லை. வேட்டியைப் போன்ற பொலிவான தோற்றத்தை அளிக்காததே, அதற்குக் காரணம். இதற்கு மாற்றாக, நான்கு தலைமுறையாக ‘லுங்கி’ தயாரிப்பில் தலைசிறந்து விளங்கும் ‘999 லுங்கிகள்’ நிறுவனம் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு புதிய வகை லுங்கிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இன்றைய இளைஞர்கள் அதிகம் அணிய விரும்பும் ‘டெனிம்’ வகைத் துணியில் உருவாக்கப்பட்ட ‘லுங்கிகள்’, இன்றைய ஜென்-z தலைமுறையினரைக் கவரும் வகையில் ஐந்து விஷயங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 
1. மிகவும் இலேசானது.
2. ஸ்டைலான டிசைன்
3. இன்றைய பேஷனுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது.
4. நியாயமான விலையில் தரமான உடை.
5. குளிர்ச்சியான உணர்வைத் தருவதால், வெயிலிலும் அணிந்துகொள்ளலாம்.
 
வழக்கமான ‘லுங்கி’ போல் அல்லாமல், இது ‘டிரெண்டியாக’ இருப்பதால்,
இதை பொது இடங்கள், விழாக்கள் போன்ற இடங்களுக்கும் அணிந்து செல்லலாம்.  இந்த வகை ‘டெனிம் லுங்கிகளில்’ பத்து பேன்சி டிசைன்கள் மற்றும் இரண்டு ‘ப்ளைன்’ டிசைன்கள் உள்பட 12 டிசைன்களில் வடிவமைத்திருக்கிறார்கள். ஸ்ட்ரைப்ஸ், ஜியோமெட்ரிகல் பிரிண்ட், ரெகுலர் பிரிண்ட் என உங்கள் மனம் கவரும் ஸ்டைல்களில் வெளிவருகிறது.
 
வீட்டில் பயன்படுத்த சாதாரண லுங்கிகளும், வெளியிடங்களுக்கு, எளிதில் ஒட்டிக்கொள்ள உதவும் ‘வெல்க்ரோ’ பட்டை மற்றும் மொபைல் போன் வைப்பதற்கு ஏற்ப பாக்கெட்களுடனும் வருவதால் மார்க்கெட்டில் இந்த வகை லுங்கிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. என்ன ப்ரோ, நீங்களும் ‘டெனிம்’ லுங்கிக்கு மாறீட்டீங்களா?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தியாவின் ஹாக்கி கடவுள்!

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் சிங் பிறந்த நாள் இன்று!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்

 

p12a.jpg

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் சிங் பிறந்த நாளைத்தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆகஸ்டு 29, 2012-ம் ஆண்டில், தயான் சந்தின் 108-வது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நாளில் விளையாட்டுகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு... அர்ஜுனா, துரோணாச்சார்யா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய விளையாட்டு தினமாக, ஒரு விளையாட்டு வீரரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

red-dot2.jpg சச்சின் எப்படி கிரிக்கெட் கடவுளோ, அதுபோல ஹாக்கியில் தயான் சந்த். நிகரற்ற பல சாதனைகள் படைத்தவர். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ல் பிறந்தவர். சிறு வயதில் எங்கே போனாலும் ஹாக்கி மட்டையும் கையுமாகவே இருப்பார். நிலா வெளிச்சத்திலும் விளையாடுவார். அதனால், அவரது நண்பர்கள் ‘சாந்த்... சாந்த்' என்று அழைத்தனர். அதுவே அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டு, பின்னாளில் ‘தயான் சந்த் சிங்' என மாறியது. ‘சாந்த்' என்றால், இந்தி மொழியில் ‘நிலவு' என்று பொருள்.

red-dot2.jpg இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம். ஒரு ஹாக்கி போட்டியைப் பார்க்கப்போனார் தயான். இந்தியர்கள் அணியுடன் வெள்ளையர் அணி மோதிக்கொண்டிருந்தது. இந்தியர்கள் அணியை ஊக்குவித்து ஆர்ப்பரித்தார் தயான். இதைப் பார்த்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், ‘உன்னால் விளையாட முடியுமா?' என தயானிடம் சவால் விடுத்தார். சவாலை ஏற்று களம் இறங்கிய தயான், வெள்ளையர் அணிக்கு எதிராக 4 கோல்களை அடித்து மிரளவைத்தார்.

p12b.jpg

red-dot2.jpg 16 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்துவிட்டார் தயான் சந்த். அங்கும் ஹாக்கி பயிற்சி செய்தார். அப்போது, ஒலிம்பிக் போட்டியில் ‘பிரிட்டிஷ் இந்தியா' என்ற பெயரில்தான் இந்தியா பங்கேற்கும். 1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் தயான் சந்த் இடம்பெற்றார். இந்திய அணி தங்கம் வென்றது.

red-dot2.jpg அடுத்து நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், தயானின் ஹாக்கி மட்டை, மந்திர மட்டையாக மாறியது. அவரது சகோதரர் ரூப் சிங்கும் ஹாக்கி வீரர்தான். தயானுடன் அவரும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 24 கோல்கள் அடித்து, அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் நொறுக்கியது இந்தியா. ஹாக்கி உலகில் இந்தியா பெற்ற மிகப் பெரிய வெற்றி இது. இந்த ஆட்டத்தில், ரூப் சிங் 10 கோல்களும் தயான் சந்த் 8 கோல்களும் அடித்தனர். இறுதி ஆட்டத்தில், ஜப்பான் அணியை 11 கோல்கள் அடித்து வீழ்த்தி, தங்கம் வென்றது இந்தியா.

red-dot2.jpg 1936-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கேப்டன் ஆனார் தயான் சந்த். ‘ஒலிம்பிக் மைதானத்தில் மேஜிக் ஷோ நடக்கிறது. இந்திய மந்திரவாதி தயான் சந்த் ஹாக்கி மட்டையால் மேஜிக் காட்டுகிறார். பார்க்கத் தவறாதீர்கள்' என பெர்லின் பத்திரிகைகள்  விளம்பரம் செய்தன. பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பயிற்சி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஆனாலும், லீக் சுற்று ஆட்டங்களில் திறமையாக விளையாடி, இறுதிச் சுற்றுக்கு வந்துவிட்டது. இறுதி ஆட்டம், மீண்டும் ஜெர்மனி அணியுடன். ஆட்டத்தைப் பார்க்க, முன் வரிசையில் தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருந்தார் ஹிட்லர். முதல் பாதியில் இந்திய அணியால் ஒரு கோல்தான் அடிக்க முடிந்தது. இடைவேளையின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார் தயான்.  இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது, தயான் சந்த் காலணி அணியாமல் வெறுங்காலுடன் விளையாடினார். தயானின் கால்களும் கைகளும் மாயாஜாலம் செய்யத் தொடங்கின. தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்தார் தயான். இறுதியில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, ஹாட்ரிக் தங்கத்தை வென்றது இந்தியா.

red-dot2.jpg தயானின் ஆட்டத்தைக் கண்ட ஹிட்லர், அவரது ரசிகராக மாறிவிட்டார். போட்டி முடிந்ததும் தயானிடம் வந்த ஹிட்லர், ‘‘ஜெர்மனி ராணுவத்தில் கர்னல் பதவி தருகிறேன், இங்கேயே வந்துவிடுங்கள்'' என்றார். உலகமே பார்த்து நடுங்கும் ஒரு மனிதரான, வானளாவிய அதிகாரம்கொண்ட ஹிட்லரின் வேண்டுகோளைக் கேட்ட தயான், ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. ‘‘தாய்நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டு அணிக்கும் விளையாடும் உத்தேசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டார்.

red-dot2.jpg ‘ஹாக்கியின் பீலே' என்று இவரைச் சொல்லலாம்.   தனது ஹாக்கி வாழ்க்கையில், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 39 கோல்கள் உள்பட 400 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.

red-dot2.jpg ஹாக்கியில் இவருக்கு அபார நுண்ணறிவு உண்டு. ஒரு போட்டியில், பல முறை கோல் அடிக்க முயற்சித்தார். பந்து, கோல் கம்பங்களுக்குள் புகவில்லை. நடுவரிடம் சென்று, ‘‘இரு கோல் கம்பங்களுக்கும் இடையே உள்ள அளவு, விதிகளின்படி இல்லை, வித்தியாசம் இருக்கிறது'' என்றார். அளந்து பார்த்தபோது, வித்தியாசம் இருப்பது தெரிந்தது.

p12c.jpg

red-dot2.jpg 1956-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து மேஜர் அந்தஸ்துடன் தயான் ஓய்வுபெற்று, உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் வசித்தார். தேசம், அந்த மாவீரனைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தது. தயானின் இறுதி நாட்களில் புற்றுநோய் தாக்கியது. 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, அரசு மருத்துவமனை ஒன்றில் யாரென்று தெரியாமலேயே இறந்துபோனார்.

red-dot2.jpg தயான் சந்த்-துக்கு இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், மலை மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது, பாதாள ரயில் நிலையம் ஒன்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டது. 2002-ம் ஆண்டிலிருந்து விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு, தயான் சந்த் பெயரில் ‘வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.

red-dot2.jpg தயான் சந்த்-தின் மகன் அசோக்குமாரும் ஹாக்கி வீரர்தான். கடந்த 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அணியிலும், 1975-ம் ஆண்டு நடைபெற்ற கோலாலம்பூர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் அசோக்குமார் இடம்பெற்றிருந்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

ஓகஸ்ட் – 29

 

708 : செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்­பானில் உரு­வாக்­கப்­பட்­டது.


1498 : போர்த்­துக்­கேய கட­லோ­டியான வாஸ்­கொ­ட­காமா இந்­தி­யா வின் கோழிக்­கோட்டில் இருந்து போர்த்­துக்கல் திரும்ப முடிவு செய்தார்.


1521 : ஓட்­டோமான் இரா­ணுவம் சேர்­பி­யாவின் பெல்­கிரேட் நகரைக் கைப்­பற்­றி­யது.


brasil-e-portugal1541 : ஒட்­டோமான் துருக்­கியர் ஹங்­கே­ரியின் தலை­ந­கரைக் கைப்­பற்­றினர்.


1825 : பிரே­ஸிலின் சுதந்­தி­ரத்தை  போர்த்­துகல் அங்­கீ­க­ரித்­தது.


1831 : மின்­காந்தத் தூண்­டலை மைக்கேல் பரடே கண்­டு­பி­டித்தார்.


1842 : நாஞ்சிங் உடன்­ப­டிக்­கை யின் படி முதலாம் அபின் போர் முடி­வுக்கு வந்­தது. ஹொங்கொங் ஐக்­கிய இராச்­சி­யத்தின் குடி­யேற்ற நாடாக அறி­விக்­கப்­பட்­டது.


1885 : கோட்லீப் டாயிம்லர் மோட்டார் சைக்­கி­ளுக்­கான காப்­பு­ரிமை பெற்றார்.


1898 : குட்­இயர் டயர் கம்­பனி ஆரம்­பிக்­கப்­பட்­டது.


1907 : கியூபெக் பாலம் அமைக்­கப்­ப­டும்­போது இடிந்து வீழ்ந்­ததில் 75 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.


1910 : கொரி­யாவில் ஜப்­பா­னி­யரின் ஆட்சி ஆரம்­ப­மா­கி­யது. 


1944 : அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்­னம்­பலம் தலை­மையில் அமைக்­கப்­பட்­டது.


1949 : சோவியத் ஒன்­றியம் ஜோ 1 என்ற தனது முத­லா­வது அணு­குண்டுச் சோத­னையை கஸ­கஸ்­தானில் நடத்­தி­யது.


1966 : புகழ்­பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழு­வினர் தமது கடைசி நிகழ்ச்­சியை சான் பிரான்­சிஸ்­கோவிலில் நடத்­தினர்.


1991 : சோவியத் உயர்­பீடம், அந்­நாட்டு சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சியின் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முடக்­கி­யது.


1995 : முல்­லைத்­தீவுக் கடற்­ப­ரப்பில் இலங்கைக் கடற்­ப­டை­யி­னரின் ஐரிஸ் மோனா என்ற கப்­பலை விடு­தலைப் புலிகள் மூழ்­க­டித்­தனர்.


1996 : நோர்­வேயில் பய­ணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்­பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலை­யுடன் மோதி­யதில் 141 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1997 : அல்­ஜீ­ரி­யாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


2003 : ஈராக்கில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் சுமார் 100 பேர் உயி­ரி­ழந்­தனர்.


2004 : மைக்கல் ஷுமாக்கர் தொடர்ச்­சி­யாக 5 ஆவது தடவை போர்­மியூலா வன் சம்­பியன் பட்­டத்தை வென்று சாதனை படைத்தார்.


2005 : அமெ­ரிக்­காவின் லூசி­யானா முதல் புளோ­ரிடா வரையான கரையோரப் பகுதிகளை கத்ரீனா  சூறாவளி  தாக்கியதில் 1,836 பேர் உயிரிழந்தனர். 


2012 : சீனாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 26 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒரே மரத்தில் நாற்பது வகைப் பழங்கள்:

 

ஒரே மரத்தில் நாற்பது வகைப் பழங்கள்: அமெரிக்க வேளாண் விஞ்ஞானி சாதனை
 
ஒரே மரத்தில் நாற்பது வகைப் பழங்களை காய்க்கச் செய்து அமெரிக்க வேளாண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் என்பவர் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

இவர் தனது பண்ணைத் தோட்டத்தில் விதவிதமான மரங்கள், தாவரங்களை வளர்த்து வருகிறார்.

அவற்றில் குறிப்பிட்ட ஒரு மரத்தில் பல்வேறு விதமான பழங்களை காய்க்கச் செய்ய கடந்த 7 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்தார்.

இதற்காக அந்த மரத்தில் வெவ்வேறு விதமான மரங்களின் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்தார். அந்த மரத்தில் தற்போது செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், நெக்ரறின் என 40 வகையான பழங்கள் காய்த்துத் தொங்குகின்றன.

சிறுவனாக இருக்கும்போதே தனக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும் தற்போது அதனை செயற்படுத்தி இருப்பதாகவும் சாம் வான் அகேன் தெரிவித்துள்ளார்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

1835 : மெல்பேர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 30

 

1791 : இங்­கி­லாந்தின் பண்­டோரா என்ற கடற்­படைக் கப்பல் அவுஸ்­தி­ரே­லி­யாவில் மூழ்­கி­யதில் 4 கைதிகள் உட்­பட 35 பேர் பலி­யா­கினர்.


1813 : அமெ­ரிக்கப் பழங்­குடி கிறீக் இனத்­தவர், அல­பாமா மாநி­லத்தில் ஆங்­கி­லேயக் குடி­யே­றிகள் நூற்­றுக்­க­ணக்­கா­னோரைக் கொன்­றனர்.


melbourne1835 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் மெல்பேர்ன் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1918 : ரஷ்ய போல்ஸ்விக் தலைவர் விளா­டிமிர் லெனின், ஃபான்யா கப்லான் என்­ப­வனால் சுடப்­பட்டு, படு­காயம் அடைந்தார்.


1941 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனி­யனின் லெனின்­கிராட் மீதான தாக்­குதல் ஆரம்­ப­மா­யிற்று.


1945 : பிரித்­தா­னி­ய­ரி­ட­மி­ருந்து ஹொங்­கொங்கை ஜப்பான் கைப்­பற்­றி­யது.


1963 : அமெ­ரிக்க, சோவியத் யூனியன் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான நேரடி துரித தொலை­பேசி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.


1974 : குரோ­ஷி­யாவில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 153 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1984 : டிஸ்­க­வரி விண்­வெளி ஓடம் தனது முத­லா­வது பய­ணத்தை ஆரம்­பித்­தது.


1991 : சோவியத் ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தாக அஸர்­பைஜான் அறி­வித்­தது.


1995 : பொஸ்­னிய சேர்­பிய படை­யி­ன­ருக்கு எதி­ராக நேட்டோ படை­யினர் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.


1999 : கிழக்குத் தீமோர் மக்கள் இந்­தோ­னே­ஷி­யா­லி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.


2003 : பாரென்ட்ஸ் கடலில் ரஷ்ய நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்று மூழ்­கி­யதால் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்.


2013 : பாகிஸ்­தா­னி­லி­ருந்து கொழும்பு துறை­மு­கத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட கொள்­கலன் ஒன்­றி­லி­ருந்து சுமார் 131 கிலோ­கிராம் ஹெரோயின் போதைப்­பொருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

சா. ஞானப்பிரகாசம்

 
30CHRGNGNANAPRAKASAR

இலங்கையைச் சேர்ந்த பன்மொழிப் புலவரும், தமிழின் தொன்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படுபவருமான சா.ஞானப்பிரகாசம் (S.Gnanaprakasham) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் பிறந்தவர் (1875). இவரது இயற்பெயர், வைத்தியலிங்கம். தந்தை இவரது 5 வயதில் காலமானார். தாய், கத்தோலிக்கர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், இவரது பெயர் ஞானப்பிரகாசம் என மாற்றப்பட்டது. அமெரிக்க மிஷன் ஆங்கிலப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்.

* இலக்கணப் பிழையின்றி கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே தமிழ், வடமொழி, ஆங்கிலம் மொழிகளைக் கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் பயின்றார்.

* பின்னர் இறைபணிக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பள்ளியிலும் கல்லூரியிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சிங்களம் கற்றிருந்த நிலையில், பாதிரியாரான பிறகு லத்தீன், பிரெஞ்ச் மொழிகள் கற்றதால், பல்வேறு மொழிகளில் ஆர்வம் பிறந்தது. தமிழ்மீது தனிப் பற்றுக்கொண்டிருந்த இவர், தமிழ் சொற்களோடு பிறமொழிச் சொற்களையும் ஒப்பிட்டார்.

* 72 மொழிகளைக் கற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட 18 மொழிகளில் பேசும், எழுதும் திறன் பெற்றிருந்தார். ஊர்காவல் துறையில் பணியாற்றியபோது, மக்களிடம் நிதி வசூல் செய்து, தமிழில் வெளிவந்த அத்தனை நூல்களிலும் ஒவ்வொரு பிரதியை வாங்கி, ஒரு நூலகத்தை உருவாக்கினார்.

* ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார். வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அத்தனை களங்களிலும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார்.

* தமிழர் பூர்வீக சரித்திரம், யாழ்ப்பாணத்தரசர்கள், யாழ்ப்பாண சரித்திரம், இந்திய நாகரிகம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, தமிழர் வரலாறு, தமிழரிடையே ஜாதி பிறந்த முறை, தமிழ் சொற்பிதிர், தமிழ்த் தாதுக்கள், மொழிக்குடும்பம், தருக்க சாத்திரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். அவற்றில் பெரும்பாலானவற்றை இவரே வெளியிட்டார்.

* இவரது ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில், தமிழ் சொற் தொகுதிகள், பெயரீடு, முதற் சொல்லடிகள், வழிச்சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடை நிலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

* ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’ என்ற இவரது தமிழ் ஒப்பியல் அகராதி, இன்றும் தமிழின் தலைசிறந்த அகராதியாகக் கருதப்படுகிறது. மொழி ஆக்கத் துறையில் பெரும் சாதனையாக இது குறிப்பிடப்படுகிறது.

* இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்து சாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம், அமலோற்பவ ராக்கினி தூதன் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.

* இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவர், பின்னர் தலைவராகவும், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். ‘சொற்கலைப் புலவர்’ எனப் போற்றப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசம், 1947-ம் ஆண்டு தமது 72-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

டிமென்ஸியா நோயை அறிய ஒரு வீடியோ கேம்
===========================
புதிதாக இன்று ஒரு வீடியோ கேம் அறிமுகம் செய்யப்படுகின்றது. ஆனால், இது ஒரு மருத்துவ பரிசோதனைக்கான முயற்சி.

இதனைக் கொண்டு உங்கள் திசையறியும் திறனை கணித்து, டிமென்ஸியா என்னும் ஞாபக மறதி நோய் குறித்த ஆய்வுகளை செய்ய விஞ்ஞானிகள் முயல்கிறார்கள்.

டிமென்ஸியாவின் ஆரம்பக் கட்டத்தில் ஒருவர் தனது திசையறியும் திறனை இழப்பாராம்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

 

  • தொடங்கியவர்

விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.

கீழே குதிக்கும்போது வயலின் இசைக்கும் கிளென் டோனலி.

கீழே குதிக்கும்போது வயலின் இசைக்கும் கிளென் டோனலி.

 

தனது 30-வது பிறந்தநாள் அன்று தனக்குத் தானே சவாலான ஒரு இலக்கை அவர் நிர்ணயித்துக்கொண்டார். பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும்போது வயலின் இசைக்க வேண்டும் என்பதே அது.

தன் கைகளில் 50 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள ஒரு வயலின் மற்றும் அதை வாசிப்பதற்கான வில் தவிர வேறு எதுவும் இல்லாமல், கடந்த ஞாயிறன்று நியூ சௌத் வேல்ஸ்-இல் தன் இலக்கை நிறைவேற்றியுள்ளார் டோனலி.

தான் கீழே குதிக்கும்போது, தன் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 'ஹேப்பி பர்த்டே' பாடலை இசைத்துள்ளார் அவர்.

தனது பாராசூட் விரிந்து, அவர் வானில் மிதக்கத் தொடங்கியதும் ஆங்கில இசையமைப்பாளர் ரால்ஃப் வான் வில்லியம்ஸ் இசையமைத்த 'தி லார்க் அசெண்டிங்' என்னும் இசைப் படைப்பின் தொடக்கப் பகுதிகளை இசைத்துள்ளார்.

"அது ஒரு பறவை காற்றில் உயர உயரப் பறப்பதைப் பற்றிய இசை. பாராசூட் திறந்த பின்பு, என்னால் சுதந்திரமாக வயலினை இசைக்க முடிந்தது. அது ஒரு முழு சுதந்திர உணர்வு," என்கிறார் அவர்.

 

பாதுகாப்புக்காக வயலின் அவரது மூன்று உடல் பாகங்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது.

பாதுகாப்புக்காக வயலின் அவரது மூன்று உடல் பாகங்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது.

 

தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஆண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே காஃப்ஸ் ஹார்பர் நகரில் இப்படி ஒரு சாகசத்தை அரங்கேற்றியுள்ளார் வயலின் கலைஞர் டோனலி.

அவரின் 18-ஆம் வயதில், சக இசைக்க கலைஞர் ஒருவர் அவரது வயிறு 'தொப்பையாக' இருப்பதாகக் கேலி செய்ததால், அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

"அச்சிக்கலை நான் கொஞ்சம் கொஞ்சமாக, நாளின் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் உள்வாங்கிக்கொண்டேன். அது என் உடலின் அகத்திலும் புறத்திலும் ஒரு சிறையை உருவாக்கிவிட்டது," என்கிறார் டோனலி.

தங்களுக்கு நல்ல உடல் அமைப்பு இல்லை என்ற எண்ணத்தை அதீதமாகத் தூண்டும் 'பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்' (body dysmorphic disorder) என்னும் உளவியல் சிக்கலால் பின்னர் அவர் பாதிக்கப்பட்டார். அதனால், 2013-ஆம் ஆண்டு பிரிட்டனை விட்டே வெளியேறினார். அதுவரை, அங்கு அவர் லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்டரா என்னும் இசைக்குழுவின் ஒரு அங்கமாக இருந்தார்.

15,000 அடி உயரத்தில் இருந்து குதிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகக் கூறுகிறார் கிளென் டோனலி.

15,000 அடி உயரத்தில் இருந்து குதிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகக் கூறுகிறார் கிளென் டோனலி.

அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் மன நல மருத்துவரின் உதவியுடன் மீண்டு வரும் டோனலி, இப்பிரச்சனை குறித்து பிறர் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை, உடல் அமைப்பைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'நியூட் மூவ்மண்ட்' எனும் தனது தொண்டு நிறுவனத்துக்காக செலவிடுவதுடன் வேறு இரண்டு தொண்டு நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்.

வானத்தில் இருந்து குதிப்பது எவ்வளவு முக்கியமோ, குதிக்கும்போது நிர்வாணமாக இருப்பதும் அதே அளவு முக்கியமாக இருக்கிறது இந்த இசைக் கலைஞருக்கு.

"வானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும் பதற்றமும், பிறர் முன்பு ஆடைகளைக் களையும்போதும் உண்டாகிறது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன், " என்கிறார் அவர்.

"இந்த சாகசத்தை செய்து முடித்ததையும், பய உணர்வில் இருந்து வெளியே வருவதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்," என்று கூறும் டோனலி, "என் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரை தொடர்ச்சியாக என்னை நானே மதிப்பீடு செய்து வந்த ஒரு பயணம் இது. தற்போது என் சுயத்தை நான் ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், என்னை நானே கொண்டாடவும் தொடங்கிவிட்டேன்," என்று முடிக்கிறார்.

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களை தன்பக்கம் ஈர்த்த இலங்கை இளைஞன்!

சர்வதேச ரீதியாக பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு சிகையலங்காரம் செய்து இலங்கை இளைஞன் ஒருவர் பிரபல்யம் அடைந்துள்ளார்.

இன்ஜித விஜயசிங்க என்ற இளைஞரே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார்.

அவரது திறமையினாலும், அனுபவத்தினாலும் பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு இன்ஜித பிடித்த ஒருவராக மாற்றியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான இயன் மோர்கன், எலெக்ஸ் ஹேல்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராஹுல், பாகிஸ்தானின் யூனிஸ் கான், அஹமட் ஷேஷாட், பங்களாதேஷின் மஸ்தாபிஸர் ரகுமான் உட்பட வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த இளைஞரிடம் விரும்பி தங்கள் தலையை அலங்கரிக்க கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியின் குசல் மென்டிஸ், தில்ருவன் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கும் இந்த இளைஞரே சிகையலங்காரம் செய்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்

”இது ‘கனடா’வின் வணக்கம்”: வாழ்த்துகளை அள்ளிய ஒரு ட்வீட்!

 

கனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் ‘வணக்கம்’ ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

ஜஸ்டின் ட்ரூடே

கனடாவின் டொரன்டோ நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற ‘தமிழர் திருவிழா’ நடைபெற்றது. பேதமின்றி பல நாட்டு மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் நட்பு நாடுகளின் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் நாடு ‘கனடா’. கலாசார வேற்றுமைகள் மறந்து உலகின் அத்தனை நாடுகளின் பல முக்கிய விழாக்களை அந்தக் கலசாரத்துக்குச் சொந்தமான மக்களோடு இணைந்து அதை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது கனடா. கனடாவின் இந்த நட்புறவு முயற்சிகளுக்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் கனடா பிரதமர் ‘ஜஸ்டின் ட்ரூடே’.

இந்த வகையில், சமீபத்தில் ‘தமிழர் விழா’ ஒன்றை கனடா சிறப்பானதொரு விழாவாகக் கொண்டாடியுள்ளது. இந்தச் சிறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் ஜஸ்டின் ட்ரூடே. தமிழர்களின் கலாசாரத்தைப் பல்வேறு பரிமாணங்களிலும் அரங்கேற்றிய அவ்விழாவில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, ‘கனடா என்றுமே தமிழர்களுக்குத் தன்னுடைய தொடர் ஆதரவை அளித்து வருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும் கனடா குரல் கொடுக்கத் தவறியதில்லை. இலங்கையில் போர் நடந்த சமயங்களில் கனடா தமிழர்களுக்கு பெரும் ஆதரவு அளித்தது. போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்னைகளுக்கான நீண்ட நாள் தீர்வு விரைவில் கிடைக்கும். 1980-களில் அதிகளவிலான தமிழர்கள் கனடாவில் குடியேறத் தொடங்கினர். இன்று பல லட்சம் தமிழ்க் குடும்பங்கள் கனடாவில் வசிக்கின்றன. அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இனி ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தமிழர் பாரம்பர்ய மாதமாகக் கொண்டாடப்படும்’ என்றார்.

இதையடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் இளநீர் அருந்தும் புகைப்படத்துடன் ‘வணக்கம்’ தெரிவித்திருந்த ஜஸ்டின் ட்ரூடேவின் புகைப்படம் அவரது செயல்களுக்காவும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.

It's an honour to be back at #Tamilfest, this time as Prime Minister, alongside @gary_srp. Vanakkam!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிறை வாழ்க்கையை சிரிக்க சிரிக்க விவரித்த கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவுக் கட்டுரை #KalaivanarNSKrishnan

 
 

என்.எஸ்.கிருஷ்ணன்

திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது நினைவு நாள் இன்று. இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது. 

திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். தந்தை சுடலைமுத்துப்பிள்ளை, தாயார் இசக்கிஅம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார். சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.
 
முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்துசென்றுவிடவில்ல. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். 40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கே. 

என்.எஸ்.கிருஷ்ணன்நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர். நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு.  தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

தோல்வியடையும் எனக் கருதப்பட்ட திரைப்படங்களைக்கூடத் தன் நகைச்சுவைக்காட்சிகளால் வெற்றி பெற வைத்தவர். அந்நாளில் பிரபல நிறுவனங்களின் படங்களில் அவரது குழுவினரின் தனிக்கதைகள் இடம்பெறும். தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது என சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் கலைவாணர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவையும் இதற்குச் சான்று. 

பழம்பெருமை பேசி தமிழர்கள் வீணாகிவிடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.  

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய கலைவாணர், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

திரையுலகை உலுக்கிய வழக்குகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு முக்கியமானது. இந்த வழக்கில் அன்றைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர் பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே ஆகியோர் மீது வழக்கு பதிவானது. வழக்கின் ஆரம்பத்திலேயே ஸ்ரீராமுலு நாயுடு விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்தவழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே இருவரும் கைதாகினர். வழக்கில் சென்னை செசன்ஸ் கோர்ட்டு இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது. 1945 ம் ஆண்டு மே 3ந்தேதி இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட இந்த வழக்கின் மேற்முறையீட்டில் தண்டனை உறுதியானது. இதையடுத்து சென்னை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். 

எம்.ஜி.ஆர்

லண்டன்பிரிவியு கவுன்சிலில் இந்த வழக்கில் மீண்டும் மேற்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டுமென பிரிவியு கவுன்சில் உத்தரவிட்டது. வழக்கறிஞர் எத்திராஜ் இவர்களுக்காக வாதாடினார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய தீர்ப்பு வெளியானது.  பாகவதர் மற்றும் என்.எஸ்.கே இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 வருடங்கள் 2 மாதங்கள 13 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் கலைவாணர் விடுதலையானார். 

இந்த வழக்கிற்காக பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. பிரச்னைக்கு ஒரே தீர்வாக ஒரு திரைப்படம் தயாரிப்பதென முடிவெடுத்தது கலைவாணரின் குடும்பம். 'பைத்தியக்காரன்'என்ற அந்தப் படத்தில் பலரும் ஊதியம் இன்றி கலைவாணரின் குடும்பத்துக்குச் செய்யும் கைமாறாக எண்ணிப் பணியாற்றினர். தான் பெரிதும் மதித்துவணங்குபவர்களில் ஒருவரான கலைவாணருக்கு ஏற்பட்ட இன்னலில் தானும் பங்கெடுக்க விரும்பி படத்தில் ஒரு வேடத்தினை ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர். 

ஆச்சர்யமாக படம் தயாரிக்கப்பட்டு வந்தநேரத்திலேயே கலைவாணர் விடுவிக்கப்பட்டார். இதனால் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் கலைவாணரை நடிக்கவைத்தனர். படம் பெரு வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத் தொடங்கினார் கலைவாணர். சிறைமீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் கலைவாணரின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது. 

தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் சிறப்பான குணங்களாக நாம் பேசுகிற விஷயங்களுக்குச் சொந்தக்காரர் என்.எஸ்.கே. இப்படி தன் வாழ்வின் முக்கிய பங்கு வகித்த கலைவாணர் குறித்து  “கலைவாணர் ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில் 1966 ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலரில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார். 

அதில் கலைவாணர் பற்றி அவர் தெரிவித்த கருத்து இதோ....

“ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தெரிந்தோ தெரியாமலோ இருவிதத் தன்மைகளைக் கொண்டதாக அமைத்துக்கொள்ளுகிறான்.
ஒன்று: தனக்காக. இன்னொன்று: பிறருக்காக. தனக்கு என்று அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையில் அவனுடைய உடல் முக்கிய குறிக்கோளாக அமைகிறது. அந்த உடலைப் பேணிகொள்ளும் முயற்சிகளை அவன் பலவாறு மேற்கொள்ளுகிறான். கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்வதும், விதம் விதமான உடைகளை உடுப்பதும், அணிவகைகளில் ஆர்வம் செலுத்துவதும் அவன் தனக்காகச் செய்து கொள்ளும் செயல்கள். மேலும், தனக்குப் பிடித்தமானதைத் திரட்டிக் கொள்வது, தன் மனைவியை விரும்பிக் காப்பது, தன் குழந்தைகளைப் பராமரிப்பது, தன் உற்றாரை ஆதரிப்பது, இவை எல்லாம் கூட அவன் தனக்காகத் தன் வசதிக்காகச் செய்து கொள்ளும் சில காரியங்கள்தான்.

என்.எஸ.கிருஷ்ணன்

இதேபோல் பிறருக்காக அவன் செய்கின்ற காரியங்களும் உண்டு. பிறர் என்ற இந்தச் சொல், அவனைத் தவிர மற்றவர் என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை. அவனுக்கு உற்றாராக, நலம் தருவோராக பயன்படுவோராக இருப்பவர்கள் பிறர் என்ற சொல்லால் அழைக்கப்படக்கூடியவர்கள் அல்ல; அவனைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவனுடன் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், ஏன், அவனுக்குச் சிறிதளவும் பழக்கமே இல்லாதவர்கள்தான் இந்தப் பிறர். அத்தகையவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு திருப்தி அடைவதும், அவர்களின் நன்மைக்காகத் தன்னை, தன் பொருளை, தன் அறிவை அளிக்க முன்வருவதும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக. தனக்காக மற்றவரிடம் ஒன்றை வேண்டுவது யாசகம். பிறருக்காகப் பிறரிடம் ஒன்றை வேண்டுவது பெருந்தன்மை. முதலாவது உடலுக்காக, இரண்டாவது உள்ளத்திற்காக.

இவ்வாறு இருவகைப்பட்ட வாழ்க்கை அமைப்புக்களையும் கலைவாணர் நன்றாக அறிந்தவர். அறிந்தே அவற்றைத் தன் புகழ் வந்ததனால் அவர் அதிலே செருக்குக் கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல.

பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.
மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள்.
சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.
இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். 

எம்.ஜி.ஆர்

கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.
இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
மாய மச்சேந்திரா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம். டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், பட கம்பெனிச் சொந்தக் காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார்.

பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத்தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.

பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள். மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள்.

இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;

'நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துகொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்துக் கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்துக் கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால், பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?

என்.எஸ்.கிருஷ்ணன்

அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். இவர்தான் கலைவாணர்.

நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்.

ஆனால், ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.
லட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர்) கலைவாணரை என்னடா கிருஷ்ணா என்று தான் அழைப்பார், எல்லோருக்கும் கலைவாணரை அவர் டா போட்டு அழைப்பதும் அதைப் பற்றிக் கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜகமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் கூட இருந்தன. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம் கூட உண்டாயிற்று. அவர் எப்படிக் கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்திற்குக் காரணம்.
ஒரு நாள் சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.

மறுநாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில் கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு மற்றவர்களிடம், “லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் காண்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடந்து முடிச்சதுக்கப்புறம் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் காண்ட்ராக்ட்ரோட போராடிப் பணத்தை வசூல் பண்ணி, நாங்கள் எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.

அப்போது நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன்தான். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணுமின்னு  நான் எதிர்பார்க்க முடியுமோ? ‘என்னடா கிருஷ்ணா?’ன்  அவர் கூப்பிடாம வேறுயாரு கூப்பிடறது?” என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.

இதில் ஒரு புதிய விளைவு என்ன வென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை என்னப்பா! வாப்பா! என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

என்.எஸ்.கே

தஞ்சையில் புயல் விபத்து நேரிட்டது அல்லவா? அதைப் பற்றி அவசரமாகக் கலைவாணரிடம் பேசச் சென்றேன். அவரிடம் புயல் விபத்து பற்றியும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும், ஏழை மக்கள் படும் அல்லல் பற்றியும் நான் பேசியபோது அவர் கண்ணீர் விட்டார். அப்போது தாங்க முடியாத துயரத்தோடு அவர் சொன்னார்; இந்நேரம் அரிசி மூட்டைகள் வாங்கிக் கொடுத்திருக்கணுமே? துளித்து விட்டது. அவருடைய கண்ணீரின் காரணம் என்ன என்பதை அறிந்த பிறகு யாரால்தான் கண்ணீர் விடாமல் இருக்க முடியும்!
அவர் தன் வாழ்வுக்காகவா கண்ணீர் சிந்தினார்? தன் புகழுக்காவா கண்ணீர் விட்டார்! இல்லையே! தன் நாட்டு மக்களில் பலர் அவதிப்படுகிற நிலையையும், அந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்டுக் காக்கும் பணியை உடனடியாகத் தன்னால் செய்ய முடியாத சூழ்நிலையையும் பற்றி நினைத்தல்லவா கண்ணீர் சிந்தினார்!

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால், அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.

கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலிலும் பெரியது; மலையிலும் உயர்ந்தது.
அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை. அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார். ஆனால், பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்திற்குள் தெரிந்துகொண்டு விடுவார்கள். ஆனால், அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துகொள்வார்கள்.

NS Krishnan

 

கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்திற்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாள்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன்

அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போ றாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னா  மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்தான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!

அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது! எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.”

http://www.vikatan.com/

 

  • தொடங்கியவர்

 

 

பரிஸ் பொலிஸார்    தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

 

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான தமிழ் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்த் திருவிழாவின் போது பரிஸ் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர் .

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.

  • தொடங்கியவர்

தக்காளித் தாக்குதல் திருவிழாவில் , 22,000 பேர் வரையில் பங்குபற்றி உள்ளார்கள்

ஆளுக்கு ஆள் தக்காளிப் பழங்களால் எறியும், ஸ்பெயின் நாட்டின் பிரபல்யமான தக்காளித் திருவிழா , இன்று அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது .இந்தத் தக்காளித் தாக்குதல் திருவிழாவில் , 22,000 பேர் வரையில் பங்குபற்றி உள்ளார்கள் . 165தொன் எடையுடைய பழங்கள் , ஒரு மணி நேர கூத்துக்காக , எறிந்து , நசுக்கப்பட்டு , எங்கும் சிதறடிக்கப்பட்டுள்ளன .

தக்காளித் தாக்குதல் திருவிழாவில் , 22,000 பேர் வரையில் பங்குபற்றி உள்ளார்கள்

“ரொமாற்றீனா திருவிழா” என்று இங்கு அழைக்கப்படும் இந்தத் திருவிழா , வருடாவருடம் ஆகஸ்ட் மாதம்  இடம்பெறுவதுண்டு .வழமைபோல இன்று  புதனன்று வலேன்சியாவுக்கு 25மைல் மேற்கே உள்ள ஒரு பட்டினத்தில் இடம்பெற்ற இந்தத் திருவிழாவில் 17,000 உல்லாசப் பயணிகளும் , 5000 பேர் வரையில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டுள்ளார்கள் . பொதுவாக ஆகஸ்ட் மாதம் வரும் கடைசிப் புதனன்று இந்த விழா இடம்பெறுவதுண்டு.

தக்காளித் தாக்குதல் திருவிழாவில் , 22,000 பேர் வரையில் பங்குபற்றி உள்ளார்கள்

36,000  யூரோ பெறுமதியான பழங்கள்,  ஆறு பெரிய லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன . கண்களைப் பாதுகாக்க எல்லோருமே , கொகிள்ஸ்(Goggles)  அணிந்து கொள்கிறார்கள் . காலை 11.00மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் இந்த விழா முடிவுக்கு வந்து விடும் . ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட 80 பேர் , இரு மணி நேரத்தில் , விழா நடந்த  இடத்தை  எந்தச் சுவடும்  இல்லாமல் துப்பரவாக்கி முடித்து விடுவார்கள் .

இந்தத் தடவை 700பொலிசார் வரையில் இந்த விழா நடந்த இடத்தில் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டிருந்தார்கள். சமீபத்தில் நடந்த தாக்குதலின் எதிரொலியாகவே இந்த ஏற்பாடு என்று நகரபிதா கூறி இருந்தார் .இந்தியா , கொரியா போன்ற நாடுகள் உட்பட பல உலக நாடுகளின் பத்திரிகையாளர்கள் இங்கு சமூகமளித்திருந்தனர்.

1945இல் ஆரம்பித்து இன்றுவரை தொடரும் இந்த பாரம்பரிய விழா , 2012இல் மாட்ரிட் அதிகாரிகளால் , சர்வதேச திருவிழா என்று பிரகடனப்படுத்தபட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

நகரவாசிகளை அச்சுறுத்தும் பெலாரஸ் வீடு (Photos)

 


நகரவாசிகளை அச்சுறுத்தும் பெலாரஸ் வீடு (Photos)
பெலாரஸின் ரட்டோம்கா நகரில் உள்ள வீடு, அப்பகுதியில் வசிக்கும் மக்களை பெரிதும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலானவர்கள் அந்த வீட்டின் வழியே பகலில் செல்வதைக்கூட நிறுத்திவிட்டனர். இரவில் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர யாரும் அந்தப் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை.

அந்த வீட்டின் வெளிப்பகுதி முழுவதும் விநோத உருவங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம்.

வீட்டின் கூரையில் கறுப்பு வண்ணத்தில் மனித மண்டை ஓடுகள் வரிசையாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. சுவர்களில் எலும்புக்கூடுகளின் கைகள் பாய்ந்து பிடிப்பதைப்போல வைக்கப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, கோரமான முழு உருவச்சிலைகள் ஆக்ரோஷமாக நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் படங்கள் இணையத்தளங்களில் வெளியான பிறகு, வீடு மிகவும் பிரபலமாகிவிட்டது.

ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வீட்டைக் கண்டு அலறுகிறார்கள்.

“முக்கியமான சாலையில் இந்த வீடு இருக்கிறது. பலரும் இந்த சாலையைப் பயன்படுத்துகிறார்கள். பகலில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, அவர்கள் பயந்து அலறுகிறார்கள். இரவில் எங்களுக்கே பயம் வந்துவிடுகிறது. அந்த வீட்டைப் பார்த்தாலே, மண்டையோடுகளும் கைகளும் உருவங்களும் நம்மை வா, வா என்று அழைப்பது போலவே தோன்றுகிறது. நாங்கள் ஒரு புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அப்பகுதியில் வசிக்கும் நடாலியா கூறியுள்ளார்.

இந்த வீட்டின் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அங்கு சென்று தங்கியுள்ளார்.

திருடர்கள் எளிதில் நுழைந்துவிடாமலும் மக்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்கவும் இந்த உருவங்களை வைத்திருப்பதாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

ஆனால், தங்களால் நிம்மதியாகக் குடியிருக்க முடியவில்லை என பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

1

 

3

4

5

 

6

7

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

ரஸ்புடின் முதல் குர்மீத் சிங் வரை... உலகை உலுக்கிய சாமியார்கள் உணர்த்திய உண்மைகள்!

 
 

போலி சாமியார் குர்மீத் சிங்

குர்மீத் ராம் ரஹீம் சிங்... தற்போது இந்தியாவை புரட்டிப் போட்ட ஒரு பெயர். இந்த ஒரு பெயர் 30 -க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. 300-க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வீழ்த்தியுள்ளது. இரண்டு பெண்களின் கற்பை சூறையாடியுள்ளது. ஒரு போலி சாமியாருக்காக இவ்வளவு கலவரமா? 'நான் கடவுளின் அவதாரம், கடவுள் என்னுள் குடிகொண்டிருக்கிறார்' என பிதற்றிக்கொண்டிருக்கும் சாமியார்கள் 'போலிகள்' என்று அறிந்த பின்னும் 'செம்மறி ஆட்டுக்கூட்டங்கள் போல பள்ளத்தில் விழும்' மக்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சாமியார்களை தங்களின் ஆதர்ச நாயகர்களாக, தங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் இறைவனின் தூதுவர்களாக நினைத்து அந்தப் போலிகளின் காலடியில் விழுந்து கிடக்கும் கூட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ளனர். அந்தப் போலிகளின் மாயப்பேச்சு வலையில் வீழ்ந்துவிடுகிறார்கள். தங்களைக் காக்க வந்த கடவுளாகவே அவர்களை எண்ணி பிரார்த்திக்கவும் செய்கின்றனர். தன்னைக் 'கடவுள்' என்றும், தன்னால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே, 'கடவுளைச் சேருவதற்கான ஒரே வழி' என்றும் மக்களை முட்டாள்களாக்கி பல உயிர்களைக் காவு வாங்கிய உலக அளவிலான கொடூர சாமியார்கள் சிலரைக் காண்போம்.

ஜிம் ஜோன்ஸ் :

ஜிம் ஜோன்ஸ் கொலை

ஒரு சாமியார் தனது பேச்சால், பக்தகோடிகளை எந்த அளவுக்கு அடிமையாக, எந்திரமாக மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம்தான் ஜிம் ஜோன்ஸ்! அமெரிக்காவின் 'ஜோன்ஸ் டவுன்' என்கிற பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தார் ஜிம்ஜோன்ஸ். 1978 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தனது ஆசிரமத்தில், பிரமாண்ட இறையுரையாற்ற ஏற்பாடு செய்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கூடுகின்றனர். ஜிம் ஜோன்ஸ்அரங்கம் முழுக்க ஒரே பக்திமயம். வந்திருந்த பக்தகோடிகள் அனைவரும் கடவுளை காணும் ஆசையில் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர். திடீரென மேடையில் தோன்றிய ஜிம் ஜோன்ஸ், "என் அருமை குழந்தைகளே இந்த உலகை பொருத்தவரையில் இதுவே நமது கடைசி சந்திப்பு. தீய சக்திகள் இந்த உலகத்தை அழிக்கப் போகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க நாம் சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும். வேறுவழி இல்லை... நாம் உயிர் தியாகம் செய்யவில்லை என்றால், விளைவுகள் விபரீதமாக மாறிவிடும்" என்று பக்தர்களை மூளை சலவை செய்தான்.

பெரிய அளவு குடுவைகளில் எலுமிச்சை பழச்சாறுடன் சயனைடுகளை கலந்தார்கள். “அனைவரும் வரிசையில் வாருங்கள். குழந்தைகளுக்கு முன்னுரிமை. பின் அனைவருக்கும் வழங்கப்படும். மகிழ்ச்சியாக பருகுங்கள். நாம் அனைவரும் சொர்க்கத்துக்குச் செல்லப்போகிறோம்" என்றார் ஜோன்ஸ். கூட்டம் கூட்டமாக குடித்து மடிந்தார்கள் பலர். முரண்டு பிடித்த சிலர் துப்பாக்கி முனையில் குடிக்கவைக்கப்பட்டனர். பக்தகோடிகள், சிஷ்யர்கள் அனைவரும் இறந்ததை உறுதி செய்தபின் ''நானும் வருகிறேன்'' என்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இறந்தார் ஜோன்ஸ். விவரம் அறிந்து காவலர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த ஆசிரமத்தில் 900-க்கும் அதிகமானோர் இறந்து கிடந்தனர்.

ஷோகோ அசஹரா : 

ஜப்பானைச் சேர்ந்த ஷோகோ அசஹரா உருவாக்கிய 'ஒரே மதம் ஒரே கடவுள்' இயக்கம் தான் ஓம் ஷின்ரிக்கியோ. இந்த ஷோகோ அசஹரா கடவுளுக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றுகிறது. 'எப்படியும் இந்த உலகம் அழியபோகிறது. அதை நாமே அழித்தால் என்ன?' ஷோகோ அசஹராஎன்று புது அவதாரம் எடுக்கிறார். 1995 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஒரு சுரங்கப் பாதையின் ஓரத்தில் இருந்த ஒரு பொட்டலத்தை துப்புரவு தொழிலாளர் எடுத்து பிரித்துப் பார்க்கிறார். அந்த பொட்டலத்திலிருந்து ஏதோ ஒரு வித வாசனை காற்றில் கலக்கிறது. அதை சுவாசித்த அடுத்த நொடி அந்த பெண்ணின் கண் கருவிழிகள் இறுக ஆரம்பித்து, வாயில் நுரை தள்ளி இறந்து போனாள். அந்தப் பெண்ணுக்கு உதவ வந்தவர்களும் அதே போல இறந்து போனார்கள். அவர்களுக்கு உதவ வந்தவர்களுக்கும் அதே கதிதான். இதுபோன்ற தொடர் மரணங்கள் தொடர்கதையாக மாறின. மக்கள் அனைவரும் அப்படி என்ன பொருளைத் தொட்டார்கள்? சுவாசித்தார்கள்? அது 'சரின்' என்ற வேதிப்பொருள். இதை சுவாசிக்கும் மறுநொடியே வாயில் நுரை தள்ளி, கை, கால் வலிப்பு ஏற்பட்டு இறப்பார்கள். (நடப்பு ஆண்டில் [2017 ] இந்தக் கொடிய 'சரின்' என்ற வேதிப்பொருள் அடைத்து வைக்கப்பட்ட குண்டுகளை வீசியெறிந்து ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது சிரியா என்பது குறிப்பிடத்தக்கது).

இதனால் ஜப்பானில் பலநூறு பேர் இறந்துபோனார்கள். இந்தக் கொடிய செயலை செய்தவர்கள் ஷோகோ அசஹராவும், அவரது மதத்தைச் சேர்ந்த சிஷ்யகோடிகளும்தான். ஜப்பான் அரசு, இந்தக் குற்றவாளியைக் கண்டுபிடித்து மரண தண்டனை விதித்ததோடு, 'ஒரே மதம் ஒரே கடவுள்' இயக்கத்தையும் தடை செய்தது. இப்போது ஷோகோ அசஹரா ஜப்பான் நாட்டு சிறையில் மரண தண்டனையைக் கழித்து வருகிறார்.

டேவிட் கொரேஷ் :

இந்தச் சாமியாரின் செயல்கள் ஹாலிவுட் படங்களின் ஆக்‌ஷன் ரகத்தையே தூக்கிச் சாப்பிட்டுவிடும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் வாக்கோ நகர் அருகே ஆசிரமம் அமைத்து சாமியார் வேஷம் போட்டு வந்தவர் டேவிட் கொரேஷ். தாவீது மதப்பிரிவின் டேவிட் கொரேஷ்தலைவர் என்றும், இறைவனின் இறுதி தீர்க்கதரிசி என்றும் தன்னைக் கூறிவந்தார். இதனால் இவருக்கு பக்தகோடிகள் ஏராளம். போலியான மத இயக்கத்தை ஆரம்பித்து மக்களை மூளை சலவை செய்து வருகிறார் என்று FBI-க்குத் தகவல் போனது. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலர்கள் டேவிட் கொரேஷின் ஆசிரமத்தைச் சுற்றி வளைத்து சரணடைய கட்டளையிட்டனர். ''பக்தர்களே சாத்தான்கள் நம்மைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். கொடிய சாத்தான்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஆயுதம் ஏந்துங்கள்" என்று அனைவரிடமும் எந்திரத் துப்பாக்கியை நீட்டினான். பக்தர்கள் சுட்டதில் நான்கு காவலர்கள் பலியாயினர். விளைவு காவலர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. 51 நாட்கள் நடந்த யுத்தத்தின் முடிவில் பீரங்கி வந்ததால், டேவிட் கொரேஷுக்கு பின்னடைவு ஏற்பட்டது. "போலீஸ் என்ற சாத்தான்கள் கையில் ஒருவர்கூட சிக்கிக்கொள்ளக் கூடாது. உலக வாழ்வு முடிந்துவிட்டது. நாம் சொர்க்கத்துக்குக் கிளம்புவோம்" என்று டேவிட் கொரேஷ் சொல்ல... அனைவரும் தங்களது உடலுக்கும், ஆசிரமத்துக்கும் தீ வைத்துக்கொண்டனர். விளைவு 23 குழந்தைகள் உட்பட 80 பேர் தீயில் கருகி இறந்து போனார்கள்.

ரஸ்புடின் :

இந்தச் சாமியார் சற்று வேறு ரகம். 'பாப் சாங்' ஆல்பமெல்லாம் இவரால் தாறுமாறாய் எகிறியது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் ஆசை மனிதர்களைக் கொல்வதல்ல. 'பில்லி சூனியம், ஹிப்னாடிசம் கற்றுக்கொண்டு புகழின் உச்சத்தை அடைவது. அதனால் கிடைக்கப்படும் பலனை அனுபவிப்பது' ஆகியவைதான். இவருக்குக் 'குட்டி கடவுள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவருடைய சிறுவயதில், வீட்டில் வளர்க்கப்பட்ட குதிரை ஒன்று காணாமல் போனது. யார் திருடன் என்று ஒருவரை கைநீட்டிக் குற்றம்சொல்லி குத்துமதிப்பாக அள்ளிவிட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, அவரேதான் திருடன். இதுபோதாதா? குட்டிக் கடவுள் என்ற பெயரைச் சூட்டுவதற்கு. வளர வளர இவரின் ஆசை ரஷ்ய ராஜ குடும்பத்தின் பக்கம் திரும்பியது. இளவரசனுக்கு இருந்த நோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லி அரண்மனைக்குள் நுழைந்தவர் கடைசியில், ராணியைத் தன் மாயவலையில் சிக்க வைத்தார். இதனால் ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டு தடுமாறியது. ஒருபக்கம் இவரை மக்கள் குட்டிக் கடவுளாகக் கண்டாலும், மறுபக்கம் மக்களின் கோபம் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. ஒருநாள் ரஸ்புடின் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

ரஸ்புடின்

 

இதே போல எத்தனை எத்தனையோ போலி ரகங்கள் உலகம் முழுவதும் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதில் என்ன கொடுமை என்றால், ஒவ்வொரு முறையும் ஒரு போலி சாமியார் காவலர்களிடம் மாட்டிக்கொள்வதைப் பார்க்கும் மக்கள், அடுத்தமுறை புதிய போலி சாமியார் வரும்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்தப் புதுப் சாமியாரையும் நம்புகின்றனர். போலிச் சாமியார்களும் இதைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்துவருகின்றனர். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுதலே இதுபோன்ற போலிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் வழி! சுருக்கமாகச் சொன்னால், 'பகுத்தறிந்து செயல்படுவதே பாதுகாப்பு!'

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிரான்ஸ் தெருக்களில் வீதியுலா வந்த நித்தியானந்தா !

 
பிரான்ஸ் தெருக்களில் வீதியுலா வந்த நித்தியானந்தா !

தலைநகர் பரிசில் இடம்பெற்ற தேர்திருவிழா ஒன்றில் தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியாராக இருக்கின்ற நித்தியானந்தா வீதி உலா வந்த விடயம் அங்குள்ள தமிழர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியார்களில் ஒருவராக நித்தியானந்தா இருப்பதோடு, பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அவரது ஆசிரிமத்தவர்கள் இலக்காகி வருகின்றனர்.

இந்நிலையில் பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர் பவனி கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் பவனி வந்திருந்தது.

தேர்பவனி வந்த வீதியில் நித்தியானந்தாவின் உருவப்பொம்மையுடன் அவரது வெள்ளையின பக்தகோடிகள் வீதி உலா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://news.ibctamil.com

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன், எனக்கு ஒரு சந்தேகம், நீங்க தூங்குவீங்களா மாட்டீங்களா??

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.