Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

1997 : இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தார்

வரலாற்றல் இன்று…

ஓகஸ்ட் – 31

 

1422 : ஆறாம் ஹென்றி 9 மாத வயதில் இங்­கி­லாந்தின் மன்னர் ஆனார்.


1886 : தென் கரோ­லி­னாவில் சார்ள்ஸ்டன் நகரில் பூகம்­பத்­தினால் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.


princess-diana-7681897 : தோமஸ் எடிசன் முத­லா­வது திரைப்­படம் காட்டும் கரு­வி­யான கினெட்­டஸ்­கோப்­புக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.


1919 : அமெ­ரிக்க கம்­யூனிஸ்ட் கட்சி அமைக்­கப்­பட்­டது.


1920 : போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்­ஷெ­விக்­கு­க­ளுடன் இடம்­பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்­றது.


1942 : மேற்கு யுக்ரைன், டெர்­னோப்பில் என்ற இடத்தில் 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாஸி வதை­மு­கா­மிற்கு அனுப்­பப்­பட்­டனர்.


1957 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து மலாயா கூட்­ட­மைப்பு விடு­தலை பெற்­றது.


1962 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து ட்ரினிடாட் டொபாக்கோ விடு­தலை பெற்­றது.


1968 : கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்­டி­யொன்றில் ஒரு ஓவரில் 6 – 6 ஓட்­டங்­களை எடுத்து சாதனை புரிந்தார்.


1978 : இலங்­கையில் நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­திய 1978 ஆம் ஆண்டின் அர­சியல் யாப்பு வெளி­யி­டப்­பட்­டது.


1986 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் இரு விமா­னங்கள் வானில் மோதிக்­கொண்­டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரை­யிலும் கொல்­லப்­பட்­டனர்.


Dilma_Rousseff1986 : சோவியத் ஒன்­றி­யத்தின் பய­ணிகள் கப்­ப­லான "அட்­மிரல் நகீமொவ்" கருங்­க­டலில் மற்­றொரு கப்­ப­லுடன் மோதி­யபின், மூழ்­கி­யதில் 423 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1991 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரி­வ­தாக கிர்­கிஸ்தான்  அறி­வித்­தது.


1994 : ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவம் போர்­நி­றுத்­தத்தை அறி­வித்­தது.


1997 : பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா, அவரின் காதலர் டோடி அல் பயாத், மற்றும் கார் சாரதி ஹென்றி போல் ஆகியோர்  பாரிஸில் இடம்­பெற்ற கார் விபத்தில் கொல்­லப்­பட்­டனர். 


1998 : வட கொரியா தனது முத­லா­வது செய்­ம­தியை ஏவி­யது.


1999 : ஆர்­ஜென்­டீ­னாவின் புவனர்ஸ் அயர்ஸில் பய­ணிகள் விமானம் ஒன்று விமான நிலை­யத்தில் இருந்து புறப்­ப­டு­கையில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 65 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2005 : ஈராக்கின் பாக்தாத் நகரின் அல் ஆயிம்மா பாலத்தில் ஏற்­பட்ட சன நெரி­சலில் சிக்கி 1,199 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2016 : பிரேஸில் ஜனா­தி­பதி டில்மா ரூசெவ், வரவுசெலவுத் திட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் குற்றவியல் பிரேரணை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

http://metronews.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'ஓ நோ' விம்பிள்டன் பரிசை வைத்து மழைத்தண்ணீரை தடுத்த லாரா தத்தா

 

மும்பை மழை வெள்ளம், மும்பைவாசிகளின் பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் விளையாடியுள்ளது. இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதி, மும்பையில் தன் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான லாரா தத்தாவுடன் வசிக்கிறார். நேற்றும் மும்பையில் மழை கொட்டத்துவங்கியது. குடிசைப்பகுதிகளும், தாழ்வான பகுதிகளும் பாதிக்கப்பட்டதைத் தாண்டி, அப்பார்ட்மென்ட் வீடுகளும் மழையின் தாண்டவத்துக்கு தப்பிக்க முடியவில்லை. மும்பை வாழ் செலிபிரிட்டிகள் ஒருவருக்கு ஒருவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'மழை அப்டேட்ஸ்'களை அவ்வப்போது பகிர்ந்தபடியே இருந்தனர். தமிழ் நடிகர் மாதவன் கூட தனது மும்பை வீட்டிலிருந்து மழை கொட்டும் வீடியோவை ஒளிபரப்பினார். 

மழை

அப்படி ஒரு மழை ட்விட்தான், லாரா தத்தாவிற்கு மகேஷ் பூபதியிடமிருந்து திட்டு வாங்கிக்கொடுத்துள்ளது. மகேஷ் பூபதி மட்டுமே இந்தியாவிலிருந்து டென்னிஸ் விளையாடிய வீரர்களில், நான்கு இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும்,எட்டு கலப்பு இரட்டையர் பட்டங்களும் வென்றவர். அப்படி வெற்றிபெறும்போது, வெறும் கோப்பை மட்டும் வழங்கப்படுவதில்லை. அந்த அரங்கில் அவர்கள் பயன்படுத்திய பந்து முதல் வேர்வை துடைத்த பூத்துவாலை வரை அனைத்தும் நினைவுப்பரிசாக வழங்கப்படும். அப்படி பல்வேறு போட்டிகளில் மகேஷ் பூபதிக்கு பரிசாகக் கிடைத்த டர்க்கி டவல்களைக்கொண்டு, வீட்டுக்குள் வந்த தண்ணீரை அடைக்க அவரின் மனைவி லாரா தத்தா பயன்படுத்தியுள்ளார்.  அப்படி அவசரத்துக்குப் பயன்படுத்தியவர், அப்படியே விட்டிருந்தால் பரவாயில்லை. அதைப் போட்டோ எடுத்து, "விம்பிள்டன், ஆஸ்திரேலியாஓப்பன், அமெரிக்க ஓப்பன் மற்றும் ஃப்ரெஞ்ச் ஓப்பன் டவல்களை இன்றுதான் உருப்படியாகப் பயன்படுத்தினேன்"  என்று ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார். 

மகேஷ்

சில நிமிடங்களில் மகேஷ் பூபதி, "என்ன, விளையாடுகிறாயா? அத்தனையும் பல ஆண்டுகளின் உழைப்பு" என்று மூன்று கோப ஸ்மைலியுடன் பொங்கல் ட்விட் எழுதியுள்ளார். இது, செல்லச்சண்டையா அல்லது சீரியஸா என்று தெரியவில்லை. ஆனால், ஓப்பனாக ஒரு செலிபிரிட்டி ஜோடி சண்டை போடுவதற்கு மும்பை மழை காரணமாகிவிட்டது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 

இன்பாக்ஸ்

 

60p1.jpg

* `2.0’ ஷூட்டிங் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், வெளி உலகுக்குத் தெரியாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் அதகளமான பாடல் ஒன்று, 10 கோடி மதிப்பிலான செட் ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது. 300 டான்ஸர்களுக்கு மத்தியில் கெத்துகாட்டி ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் டான்ஸ்னா சும்மாவா!


60p2.jpg

* ‘`எனக்குக் கல்யாணத்தைவிட லிவிங்டுகெதர்தான் பிடித்திருக்கிறது’’ என மனம் திறந்து பேசியிருக்கிறார் இலியானா. தன்னுடைய ஆஸ்திரேலிய பாய்ஃப்ரெண்ட் ஆன்ட்ரூ நீபோனுடன் லிவிங்டுகெதரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலியானா ‘`கல்யாணமோ லிவிங்டுகெதரோ எதுவானாலும் ஆன்ட்ரூவுடனான அன்பு எனக்கு மாறாது’’ என்கிறார். ஆன்ட்ரூ ஒரு போட்டோகிராபர்.இலியானாவின் ஒவ்வொரு அசைவையும் கேமராாவில் பதிவு செய்வதுதான் ஆன்ட்ரூவுக்குப் பிடிக்குமாம். லவ்விங்டுகெதர்!


60p3.jpg

* பாலிவுட்டின் பாட்ஷாவாக மீண்டும் முடிசூட்டிக்கொண்டிருக்கிறார் ஷாரூக். சமீபத்தில் அதிகமாகச் சம்பாதிக்கும் சினிமா நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. அதில் ஆண்டுக்கு 243.7 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஷாரூக் உலக அளவில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். சல்மானுக்கும் அக்‌ஷய்குமாருக்கும் 9 மற்றும் 10-வது இடங்கள் கிடைத்துள்ளன. ஆண்டுக்கு 408 கோடி ரூபாய் சம்பாதிக்கும்  நடிகராக முதல் இடத்தில் இருக்கிறார் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க்! க்ரோர்பதிஸ்!


சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் தோனியும் ஹர்பஜனும் தீவிரமாக விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். திடீரென இப்போது அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பெரிய தொகையை வசூலித்துக்கொண்டு ஓடிவிட்டது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் எல்லாம் கூடி `உங்களை நம்பித்தானே காசு போட்டோம்’ என்று ஹர்பஜனை ட்விட்டரில் பிடித்து வெளுத்து வாங்க, ‘அவன் எனக்கும் எதுவும் கொடுக்கல, என்னையும் ஏமாத்திட்டாம்ப்பா’ என்று புலம்பி இருக்கிறார் ஹர்பஜன். ஒரு பக்கம் இவர் இப்படி வாடிக்கையாளர்களோடு மல்லுக்கட்ட, இன்னொரு பக்கம் தோனியோ வாயையே திறக்கவில்லை.`தோனி மேட்ச்ல பிஸி, வந்ததும் அவர்கிட்டயும் நியாயம் கேட்போம்’ எனக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்! ஏன்பா இப்படி!


தான் வளர்த்த கம்பெனியைவிட்டே விரட்டப்படுகிறார் இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி. சமீபத்தில் அந்த நிறுவனத்தின் சி.ஈ.ஓ. விஷால் சிக்கா பணியிலிருந்து விலகினார். அதற்கு அவர் சொன்ன முக்கியக் காரணம் நாராயண மூர்த்தியின் இம்சைகள். இதனால் நிறுவனத்தின் முன்னாள் போர்ட் உறுப்பினர்கள் பலரும், `இன்ஃபோஸிஸில் இருந்து நாராயணமூர்த்தி விலகி இருக்க வேண்டும், அவரால்தான் நிறுவனம் வீழ்ந்துகொண்டிருக்கிறது’ என்று குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஓனரையும் ஒருநாள் ஓட விடுவாங்க!


60p4.jpg

* தமிழில் இரண்டு ஹிட் கொடுத்ததும் மறுபடியும் பாலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாதவன். ‘சந்தா மாமா தூர் கே’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு விண்வெளி வீரர் வேடம். அதற்காக அமெரிக்காவில் இருக்கிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தங்கிப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். ‘அங்கே விதவிதமான ஸ்பேஸ் சூட்ஸ் போட்டுப் பார்த்து அது எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்கிறேன். இதுதான் எனது புதிய பொம்மைகள்’ என்று சொல்லியிருக்கிறார் மேடி. படத்தில் இன்னொரு நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் நாசாவில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். அசத்துங்க!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 20 ஆண்டுகள்

இளவரசி டயானா இறந்து இருபது ஆண்டுகள் ஆகிய நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம்.

டயானா

டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா.

டயானா

அவரின் பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு நார்தம்டர்ஷையர் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்த அவர்களின் வீடுகளுக்கு மத்தியில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது.

டயானா

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவர் லண்டனின் நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள கிண்டர்கார்டனில் , ஆயாவாகவும், சில சமயங்களில் சமையல்காரராகவும் பின் உதவியாளராகவும் பணிபுரிந்தார் டயானா.

டயானா

வேல்ஸ் இளவரசரிடம் அவருக்குள்ள நட்பு தீவிரமாக மாறிவருவதாக வதந்திகள் பரவின. பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்தன; அவர் வேலையில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு குறைந்தது. இந்த யூகங்களைக் குறைக்க அரண்மனையும் முயற்சி செய்தது ஆனால் அதில் பலனில்லை.

டயானா

1981ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, அதிகாரபூர்வ நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு 30,000 பவுண்ட் ஆகும். மேலும் அதில் நீலக்கல் சூழ 14 வைரங்கள் இருந்தன.

டயானா

1981ஆம் ஆண்டு தூய பால் தேவாலயத்தில் லேடி டயானா தனது தந்தை ஏர்ல் ஸ்பென்சருடன் திருமண மேடையில் நடந்து வந்தார். அவரின் ஆடை டேவிட் மற்றும் எலிசபெத் இம்மானுவேல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 10 மீட்டர் நீளம் கொண்ட அந்த திருமண கவுன் டஃபேட்டா மற்றும் பழங்கால லேசால் ஆனது.

டயானா

அச்சமயத்தில் டயானாவிற்கு வெறும் 20 வயது. தாயின் மேற்பார்வை, தந்தையின் அரவணைப்பு ஆகியவற்றிற்கு மத்தியில் டயானா தனது திருமண உறுதி மொழிகளை எடுத்தார். கணவரின் பெயரை சரியான வரிசையில் நினைவு கூரும் ஒரு தருணத்தில் மட்டும்தான் சற்று பதற்றப்பட்டார் டயானா.

டயானா

 

மில்லியன் கணக்கானவர்கள் தொலைக்காட்சியில் அந்த திருமணத்தை கண்டு களித்தனர். மேலும் 6 லட்சம் பேர் பங்கிங்காம் அரண்மனையிலிருந்து தேவாலயம் வரை வழி நெடுக நின்றிருந்தன

டயானா

 

டயானா மற்றும் சார்லஸ் தங்களது தேனிலவை பிரிட்டானியா என்ற உல்லாச கப்பலில் கழித்தனர். அக்கப்பல் 12 நாள் பயணமாக கப்பல் மத்திய தரைக்கடல் வழியாக எகிப்திற்குச் சென்றது; பின் அவர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரச மாளிகையில் தங்கினர்.

டயானா

டயானா எப்போதும் ஒரு பெரிய குடும்பத்திற்காக ஏங்கினார். டயானவின் திருமணம் நடந்த ஒரு வருடத்திற்கு பிறகு 1982ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஒரே வருடத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்தான் இளவரசர் வில்லியம். மகுடத்திற்கான இரண்டாவது இடத்தில் இளவரசர் வில்லியம் இருக்கிறார்.

டயானா

ராஜ குடும்பம் அனுமதிக்கும் பட்சத்தில் தனது குழந்தைகளுக்கு ஒரு சாதரண வளர்ப்பை வழங்க வேண்டும் என்று விரும்பினார் டயானா. வில்லியம் நர்சரிக்குச் சென்றார். நர்சரிக்குச் சென்ற ராஜ குடும்ப முதல் ஆண் வரிசு இவரே ஆவார். டயானாவின் குழந்தைகள் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் வைத்து கல்வி கற்காமல் பிற குழந்தைகளுடன் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

டயானா

1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வில்லியமிற்கு தம்பி பிறந்தார். அவருக்கு ஹென்றி என்று பெயர் சூட்டப்பட்டாலும் இளவரசர் ஹாரி என்று அழைக்கப்படுகிறார்.

 

டயானா

 

இளவரசி டயானா மிக விரைவில் ராஜ குடும்பத்தின் கடமைகளில் ஈடுபடத் தொடங்கினார். நர்சரிகளுக்கும், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அடிக்கடி விஜயம் மேற்கொண்டார். மக்களுடன் விரைவாக தன்னை தொடர்புபடுத்திக் கொண்டார் அது மக்களுக்கு மத்தியில் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

டயானா

அமெரிக்காவிற்கான தனது முதல் அதிகாரபூர்வ விஜயத்தை டயானா மேற்கொண்ட போது வெள்ளை மாளிகையில் நடிகர் ஜான் டிரவேல்டாவுடன் நடனம் ஆடினார். டயானாவின் அப்போதைய கணவருடன் சேர்ந்து நிகழ்த்திய முதல் பொது சந்திப்பு ஆக இது இருந்தது. அச்சமயத்தில் டயானாவின் ஆடை மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

டயானா

டயானாவின் சமூகப் பணிகள் பொது மக்களின் மத்தியில் அவருக்கு புகழை ஏற்படுத்தி கொடுத்தன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வெளிக்கொண்டு வந்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. எய்ட்ஸ் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார். எய்ட்ஸ் குறித்த பல கருத்துகளை அவர் தகர்த்தார். எய்ட்ஸ் நோயாளிகளிடம் கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களுடன் பேசுவதாலோ பழகுவதாலோ எந்த பாதிப்பும் இல்லை என்று நிருபித்தார்.

 

டயானா

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி சேர்ந்து, பல சந்திப்புகளை நிகழ்த்தினர். மேலும் பல வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கும் சென்று வந்தனர். இருப்பினும் 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர்கள் தனித்தனியாக வாழ்வது பொதுவெளிக்கு தெரியவந்தது.

டயானா

1992ஆம் ஆண்டு இந்தியாவிற்கான அதிகாரபூர்வ விஜயத்தில், `காதல் சின்னமாக` கருதப்படும் தாஜ்மஹாலில் தனியாக அமர்ந்து இருந்தார் டயானா. அதன்மூலம் இளவரசரும் இளவரசியும் அதிகாரபூர்வமாக ஒன்றாக இருந்தாலும், அவர்கள் தனித்து உள்ளனர் என்பது பொதுவெளிக்கு சூட்சகமாக சொல்லப்பட்டது.

 

டயானா

டயானா தனது இரண்டு மகன்களுக்கு அன்பு மிகுந்த தாயாக இருந்தார். டயானா “ஒரு குறும்புக்கார தாயாக” இருந்தார் என்றும் அவரின் “அன்பால் நிச்சயம் தங்களை மூழ்கடித்தார்” என்றும் இளவரசர் ஹாரி தெரிவித்திருந்தார்.

டயானா

டயானா தனது வாழ்நாள் முழுவதும் அன்னை தெரேசாவுடன் நெருங்கிய நட்பை கடைப்பிடித்தார். இந்த புகைப்படம் ரோமில் உள்ள கான்வெண்ட் ஒன்றிற்குச் சென்ற போது எடுக்கப்பட்டது. மேலும் டயானா இறந்த ஆறு நாட்களில் அன்னை தெரேசா உயிரிழந்தார்.

டயானா

1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிபிசியின் மார்டின் பஷிருக்கு குறிப்பிட தகுந்த வகையில் வெளிப்படையான ஒரு நேர்காணலை கொடுத்தார் டயானா. அதில் பேறுகாலத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம், இளவரசர் சார்லஸுடனான திருமண முறிவு, மற்றும் ராஜ குடும்பத்துடன் தனக்குள்ள பதற்றமாக உறவு ஆகியவற்றை குறித்து பேசினார்.

டயானா

இந்த துயரங்கள் நிறைந்த காலத்திலும் டயானா தனது சமூக சேவையை தொடர்ந்து மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூரில், இம்ரான் கானால் நடத்தப்படும் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆதரவு தெரிவிக்க இம்ரான் கானின் அப்போதைய மனைவியாக இருந்த ஜெமைமா கானை சந்தித்தார்.

டயானா

1996ஆம் ஆண்டு டயானா மற்றும் சார்ல்ஸின் விவாகரத்து உறுதியானது. விவாகரத்திற்கு பிறகு டயானா அதிகாரபூர்வமாக `வேல்ஸ் இளவரசி` என்ற பெயரை பெற்றார். 1997ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையின் அட்டைப் படங்களில் வெளியான ஆடைகளை அவர் ஏலம் விட்டார். அதன்மூலம் சமூகப் பணிகளுக்காக 3.5மில்லியன் பவுண்ட் சேகரிக்கப்பட்டது. அவரது கடந்த கால மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதைக் குறியீடாகக் காட்டும் ஒரு செயலாகவும் அது இருந்தது.

டயானா

1997ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி பணக்கார தொழிலதிபரான முகமத் அல் ஃபயீத்தின் மகன், தோதி அல் ஃபயத்துடனான விருந்திற்கு பிறகு ஆடம்பர் வாகனம் ஏறிச் சென்ற , அவரை, புகைப்படக்கலைஞர்கள் பின் தொடர்ந்தனர். இளவரசியின் புதிய தோழரை புகைப்படம் எடுக்க விழைந்து அவர்களை பின் தொடர்ந்து அது விபத்தில் முடிந்தது.

டயானா

டயானாவின் இறுதி ஊர்வலத்தில் ஒரு மில்லியனிற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவரது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி,இளவரசர் சார்ல்ஸ், எடின்பரோ கோமகன், மற்றும் டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்

http://www.bbc.com

  • தொடங்கியவர்

அழகான நட்பு தொடரட்டும்

 
அழகான நட்பு தொடரட்டும்
 

துருக்கியில் உள்ளது காஸியன்டெப், வனவிலங்குக் காப்பகம். இங்கு ஒரு புலிக்குட்டியும், குரங்குக் குட்டியும் தமக்குள் ஆழமான நட்பைப் பரிமாறிக் கொள்கின்றன.

iugug.jpg

குறித்த சிங்கக்குட்டி தாயிடம் இருந்து பிரிந்து தனியாக நின்றபோது துருக்கி எல்லைப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது. பிறகு காஸியன்டெப் வனவிலங்குகள் பூங்காவில் சேர்க்கப்பட்டது.

ஒரு மாதக் குழந்தையாக ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்த சிங்கக் குட்டிக்கு தேவையான அளவுக்குக்குப் பால் கொடுக்கப்பட்டது. தற்போது அது முழு உடலாரோக்கியத்துடன் உள்ளது. கேன் என்று பெயரிடப்பட்ட குரங்குதான் சிங்கக் குட்டியின் உற்ற தோழன்.4-tiger.jpg

மிகவும் அக்கறையாக சிங்கக் குட்டியைக் கவனித்துக்கொள்கிறது. இரண்டும் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் 

 
  • ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

 

ராஜாக்களின் தலைநகர் ராஜஸ்தான் - சிறப்பு ஆல்பம்!

  • தொடங்கியவர்

இந்த உலகமே ப்ளாக் ஹோலின் குழந்தைதான்... பிக் பேங்கின் ஃப்ளாஷ்பேக் கதை!

 
 

இருட்டு. ஒளியின்மையா இருட்டு அல்லது இருட்டு என்ற ஒன்று தனித்தன்மையுடன் வெளிச்சத்தைப் போல் விரிந்திருக்கிறதா? அப்படி என்றால் ஒளி என்ற ஒன்று எங்கிருந்து உருவானது? ஒன்றுமில்லாத அருவத்தில் இருந்தா? ஏதோ ஆன்மீக தர்க்கமாகவும், தத்துவ கோட்பாடாகவும் தோன்றும் இதை, உண்மையில் அறிவியல் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்திட வேண்டும். கடவுள் பூமியை படைத்தார் என்று பொதுவான கருத்து ஒன்றை முன்வைக்கும் போது, அறிவியல் ஆர்வலர்கள் அந்தக் கடவுளை யார் படைத்தார் என்று எதிர்வாதம் புரிவார்கள். அதே போல், பிக் பேங்கால் (அதிர்வெடித் தத்துவம்) உலகம் உருவானது என்று விஞ்ஞானிகள் விளக்கும் போது, அதற்கு முன்னால் என்ன இருந்தது என்ற கேள்வி எழாமல் இருப்பது இல்லை. விடையில்லா கேள்வியாக மிதந்து கொண்டிருந்த அதற்கு தற்போது விடை கிடைத்து விட்டதாய் விளக்கம் தர விழைகிறார்கள் விஞ்ஞானிகள்.

பிளாக் ஹோல்

கருந்துளை பிரசவித்த பிரபஞ்சம்

இயற்பியலாளர்கள் ஆராய்ச்சி படி பிக் பேங் தியரியால் உலகம் உருவானது கிட்டத்தட்ட 13-15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்படியானால் அந்த பிக் பேங் எப்படி வந்தது? அதற்கு முன் என்ன இருந்தது? நேஷனல் ஜியோக்ராஃபிக்கின் புதிய ஆராய்ச்சியின் இயற்பியலாளர்கள் குழு ஒன்று சமீபத்தில் அளித்த விளக்கத்தில், “ஒரு மிகப்பெரிய கருந்துளையில் இருந்து தான் நமது அண்டம் உருவாகியுள்ளது. அதிலிருந்து வெளியே வரும்போது நிகழ்ந்ததுதான் பிக் பேங். அதற்கு முன் நம் அண்டம் ஒரு பேரண்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். அதிலிருந்து பிரிந்து வந்திருக்கலாம். அதற்கான பாதைகளாக இந்தக் கருந்துளைகள் செயல்பட்டிருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

பிக் பேங்

இன்னமும் நிரூபிக்கப்படாத இந்தத் தியரியை “சாத்தியமான ஒன்று தான்” என்று கூறி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் நியூ ஹேவன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இயற்பியலாளர் டாக்டர். நிக்கோடெம் போப்லவ்ஸ்கி (Dr. Nikodem Poplawski). அவர் ’தி மதர் நேச்சர் நெட்வொர்க்’ என்ற இணைய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மரண பொறிகள் என்று அழைக்கப்படும் இந்தக் கருந்துளைகள் ஒரு வாக்வம் கிளீனரை போல் செயல்படுகின்றன. அதனுள் இழுக்கப்பட்ட வெளிச்சம் கூட வெளியேறிவிட முடியாத சிறை அது. நிச்சயம் ஒவ்வொரு அண்டத்தின் மையப்பகுதியாக அவையே இருக்கும். நம் பால்வெளி அண்டத்தின் நடுவிலும் கருந்துளை ஒன்று நிச்சயம் இருக்கும். கருந்துளையின் நிறை அதிகரிக்கும் பொழுது, சிங்குலாரிட்டியின் எல்லையைக் கடக்கும் போது, ஒரு கட்டத்திற்கு மேல் உள்ளிருக்கும் அனைத்தையும் துப்பி விடுகிறது. அவற்றின் உள்ளே இருந்து வெளியே மீண்டு வந்தது தான் நம் அண்டமே!” என்று தெரிவித்துள்ளார்.

பிக் பவுன்ஸ் தியரி

போப்லவ்ஸ்கி அவர்களின் கூற்றுப்படி மற்ற கோள்களை போலவே கருந்துளைகளும் சுழன்று கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் ஒளியின் வேகத்திற்கு நிகராக சுழன்று கொண்டிருக்கின்றன. இதனால் அவை முறுக்கப்படுகின்றன, சுருக்கப்படுகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பல முனை அழுத்தத்தால், வெடிக்கத் தொடங்குகின்றன. அதை பிக் பேங் என்று அழைப்பதை விட பிக் பவுன்ஸ் என்று அழைப்பதே சரி.

பிளாக் ஹோல்ஸ்

ஸ்ட்ரிங் தியரி

இது இப்படியிருக்க டாக்டர். மிச்சியோ காக்கு (Dr. Michio Kaku) எழுதிய ஆய்வுக் கட்டுரையின் மற்றுமொரு கேள்வியை எழுப்புகிறது.

“பிக் பேங் தியரி என்ற கோட்பாடே நம் பிரபஞ்சம் உருவானதற்கான விளக்கத்தை முறையாகத் தரவில்லை. ஸ்ட்ரிங் தியரி நிதர்சனமான விளக்கம் ஒன்றை அளிப்பதாகக் கூறியுள்ளார். அதன் படி, பிக் பேங், பிக் பேங் என்று கூவிக்கொள்ளும் நாம், எது வெடித்தது என்று இதுவரை திட்டவட்டமாக கூறமுடியவில்லை. எனவே இது மிகவும் தவறான ஒரு கோட்பாடாகவே தோன்றுகிறது. பிக் பேங்கிற்கு முன்னால் ஒரு பெரிய நிகழ்வு நிச்சயம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதை விளக்குகிறது ஸ்ட்ரிங் தியரி. இரண்டு பிரபஞ்சங்கள் இணைந்து நம் பால்வெளி மண்டலம் உருவாகி இருக்கலாம். அல்லது நம் அண்டம் ஒரு பேரண்டத்திடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம்.”

 

எது எப்படியோ, இப்போது தலைதூக்கி இருக்கும் இந்தக் கருந்துளைகள் குறித்த செய்தி பல அண்ட கோட்பாட்டை ஆதரிக்கும் ஒன்றாக இருக்கிறது. இன்னமும் நிறையத் தகவல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கலாம். காத்திருப்போம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மக்கள் உள்ளத்தில் நிறைந்த இளவரசி டயனா
----------------------------------------------
மறைந்த இளவரசி டயனாவின் இருபதாவது ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் வகையில் லண்டன் ...

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று:செப்டெம்பர் 01
 

1715: ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் (72 வருடங்கள்) ஆட்சி செய்த பிரான்ஸின் 14 ஆம் லூயி  மன்னர் காலமானார்.

1894: அமெரிக்காவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 400 க்கும் அதிகமானோர் பலி.

1923: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் ஒரு இலட்சம் பேர் பலியாகினர்.
 
1939: போலந்து மீது ஜேர்மனி படையெடுத்தது. இதன்மூலம் ஐரோப்பாவில் 2 ஆம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.

1969: லிபியாவில் மன்னர் இத்ரிஸ் வெளிநாடு சென்றிருந்தபோது கேணல் கடாபி தலைமையிலான இராணுவ படையொன்று புரட்சி நடத்தி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் லிபியாவை குடியரசாக பிரகடனப்படுத்தியது.

1971: ஜோர்டான் மன்னர் ஹூஸைனை படுகொலை செய்ய பலஸ்தீன கெரில்லாக்களால் முயற்சிக்கப்பட்டது.

1983: பெரிய விமானமொன்றை சோவியத் யூனியன் சுட்டுவீழ்த்தியது. இதனால் விமானத்திலிருந்த 269 பேரும் பலியாகினர்.

1985: டைட்டானிக் கப்பல் சிதைவுகளை அமெரிக்க- பிரெஞ்சு ஆய்வுக்குழுவொன்று கண்டறிந்தது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

தொலைதூர கேலக்ஸியில் இருந்து வந்த 15 விசித்திர சிக்னல்கள்... ஹாய் ஏலியன்ஸ்!

 

“ஹலோ! யாராவது இருக்கீங்களா?” என்று புதுப்பேட்டை தனுஷ் கணக்காக நாசா விஞ்ஞானிகள் முதல் பல பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரை இதுவரை தென்படாத ஏலியன்களை வாலன்டியராக தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். விண்வெளி தொடர்பான சாகசங்கள் பல நிகழ்த்தி இருந்தாலும், மைல்கல் பல கடந்திருந்தாலும், நம் பூமியை தாண்டி வேறு கோள்களில், வேறு கேலக்ஸிகளில் உயிரினம் ஏதாவது இருக்குமா, அல்லது உயிர் வாழச் சாத்திய கூறுகளாவது இருக்குமா? அப்படி இருந்தால் மனிதர்களால் அங்குச் சென்று வாழ முடியுமா என்பது போன்ற ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.

ஹலோ ஏலியன்ஸ்

ப்ரேக்த்ரூ லிசன் (Breakthrough Listen) என்ற முன்முயற்சியின் முக்கிய பணியே மற்ற கோள்களில், கேலக்ஸிகளில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்வதே. அப்படி ஒரு நாள் ஆராய்ச்சியின் போது, காலை திடீரென 15 சுருக்கமான ஆனால் சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல்கள் வந்து சேர்ந்தன. ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (Fast Radio Burst - FRB) என்று அழைக்கப்படும் இது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் நம் பூமியில் இருந்து 3 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு குட்டி கேலக்ஸியில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

FRB 121102  

அதே கேலக்ஸியில் முன்னர் பலமுறை சிக்னல்கள் வந்தபோது அதன் ஆரம்பப்புள்ளிக்கு FRB 121102 என்று பெயர் வைத்திருந்தனர் விஞ்ஞானிகள். இதற்குக் காரணம் அவை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது நவம்பர் 2, 2012 அன்று. ஆனால், அங்கிருந்து இவ்வாறு தொடர்ந்து வீரியம் குறையாமல் வருவது இதுவே முதன் முறை என்று ஆச்சர்யப்பட்டுள்ளனர். 

“இவ்வளவு உயர் அதிர்வெண்ணுடன் இதற்கு முன் அங்கிருந்து எந்த சிக்னலும் வந்தது இல்லை. இப்போது கிடைத்திருக்கும் இந்த புதிய சிக்னல்களை ஆராய்வதன் மூலம் பல புரிதல்கள் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பெர்க்லி SETI ஆராய்ச்சி மையம் மற்றும் ப்ரேக்த்ரூ லிசனின் இயக்குநர் ஆண்ட்ரூ சிமியன்.

 

400TB டேட்டா

இந்த ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் முதன் முதலில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) அன்று மேற்கு விர்ஜீனியாவில் உள்ள கிரீன் பேங்க் தொலைநோக்கு இல்லத்தில் உள்ள ஒலிப்பதிவு கருவியில் கிடைத்துள்ளது. ஐந்து மணி நேரங்கள் தொடர்ந்து இந்த சிக்னல்களை பதிவு செய்ய 400 டெராபைட்ஸ் அளவிற்கு டேட்டா கிடைத்துள்ளதாம். 4 முதல் 8 GHz அதிர்வெண்ணிலிருந்து பதிவு செய்யப்பட்ட இதற்கு, பூமிக்கும் இதன் ஆரம்பப்புள்ளிக்கும் இடையில் இருக்கும் ஒரு சில வாயுக்கள் தடைகளாக இருந்தனவாம். அசாதாரண திறன்கள் கொண்ட இந்த ஒலிப்பதிவு கருவியானதால் மட்டுமே அதே அலைவரிசையில் பல கிகா ஹெர்ட்ஸ் டேட்டாவை பதிவு செய்ய முடிந்துள்ளது. இதை சேனல் சேனலாக பிரித்து ஆராய்ந்த குழு இந்த 15 ஃபாஸ்ட் ரேடியோ சிக்னல்களை உறுதி செய்துள்ளது.

என்ன காரணம்?

ப்ரேக்த்ரூ லிசன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இந்த புதிய சிக்னல்களை பற்றி தெரிந்து கொள்ள எல்லாவகை முயற்சிகளும் எடுக்கப்படும். உலகம் முழுவதும் இருக்கும் எங்கள் கருவிகளுக்கு இனி இது தான் முதல் வேலை. இதற்கான காரணமாக பல விஷயங்கள் இருக்கலாம். வலுவான காந்த புலங்கள் கொண்டு சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து ஏலியன்கள் வரை அனைத்தும் சாத்தியமே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், இது ஏலியன்களாக இருப்பினும், நீண்ட தொலைவில் இருப்பதால் இந்த சிக்னல்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக இருக்கலாம். எனவே, அதன் ஆரம்பப்புள்ளி, இப்போது அழிந்தே போயிருக்கலாம் என்பதும் சாத்தியங்களில் ஒன்று.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நிர்வாண விரும்பிகளை வரவேற்கும் பாரிஸில் `நிர்வாணப் பூங்கா`

பாரிஸில் திறக்கப்பட்டிருக்கும் `நிர்வாணப் பூங்கா`படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் நிர்வாணமாக வருபவர்களுக்கென ஒரு தனி `நிர்வாணப் பூங்கா` திறக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் போயிஸ் டி வின்சென்ஸ் என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு இந்த நிர்வாணப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக சோதனை முயற்சியாக அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தப் பூங்கா திறக்கப்பட்டிருக்கும்.

இந்த பூங்காவில் வேண்டுமென்றே பாலுறுப்புகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்து களிப்படைவது போன்றவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

``பாரிஸ் பொது இடங்களைப் பயன்படுத்துவதில், எங்கள் திறந்த மனதுடைய பார்வையின் ஒரு பகுதியே இது`` என பூங்காக்களை நிர்வகிக்கும் துணை மேயர் பெனிலோப் கோமிட்ஸ் கூறியுள்ளார்.

நிர்வாணமாகப் பூங்காவுக்கான இடம் என்பது அறிவிப்பு பலகை மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படும். 8:00 முதல் 19:30 மணி வரை இந்த நிர்வாணப் பூங்கா திறந்திருக்கும்.

பாரிஸில் திறக்கப்பட்டிருக்கும் `நிர்வாணப் பூங்கா`

பிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை, நிர்வாண விடுமுறை விடுதிகளைக் கொண்டிருக்கும் நாடு என்பதால், நிர்வாண விரும்பிகளுக்கு பாரிஸும் இடம் தர வேண்டும் என இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

"இது உண்மையான ஆனந்தம். நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம்" என பாரிஸ் நிர்வாண விரும்பிகள் சங்கத்தை சேர்ந்த ஜூலியன் க்ளாட்-பெனெக்ரி ஏஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

"இந்த நகரம் திறந்த மனதுடன் இருப்பதை இது காட்டுகிறது. நிர்வாணம் குறித்து மக்களின் அணுகுமுறை, எங்களின் மதிப்புகள் மற்றும் இயற்கைக்கான நமது மரியாதை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த இது உதவும்" எனவும் அவர் கூறுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பூங்காவை பயன்படுத்தலாம் என அவர் மதிப்பிடுகிறார்.

அதே சமயம் இத்திட்டம் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது ஒரு அரசியல்வாதி இதனை "பைத்தியக்காரத்தனம்" என விமர்சித்தார்.

பாரிஸில் ஏற்கனவே ஒரு நிர்வாண பொது நீச்சல் குளம் உள்ளது. 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

உலகின் முதல் பெண் டெலிபோன் ஆப்ரேட்டர் என்ன செய்தார்? #EmmaMNuttDay

 
 

டெலிபோன்

உலகில் எத்தனையோ துறைகளில் பெண்கள் காலூன்றி வெற்றி வாகை சூடி, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில பணிகளை நாம் நினைத்துப் பார்த்தாலே அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள் பெண்கள்தான் என்று கருத வைக்கும் விதத்தில் அற்புதமாக இயங்கி வருகின்றனர். வேலைகளில் ஆண், பெண் பேதமில்லை என்று இந்த உலகிற்கு உரக்கச் சொல்லி வருவதை நாம் பெருமையுடம் பார்த்து வருகிறோம். ஆனால், பெண்கள் ஏராளமான சவால்களைக் கடந்தே இந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு வேலையிலும் முதன் முதலாகப் பணிக்குப் பெண்கள் வந்ததே ஒரு சாதனைதான். அதுபோன்ற சாதனைக்கு உரியவர்தான் எம்மா நட். டெலிபோன் ஆபரேட்டர் என்றாலே பெண்களின் முகங்கள்தாம் இன்றைக்கு நினைவுக்கு வரும். உலகிலேயே முதன்முதலாக டெலிபோன் ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர்தான் எம்மா நெட். அவரின் இந்தத் துணிச்சலான முயற்சியைப் பாராட்டும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதி Emm M. Nutt day கொண்டாடப்படுகிறது. எம்மா நெட் 1978 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 1 -ம் தேதிதான் தன் பணியைத் தொடங்கினார். 

1878 ஆம் ஆண்டு Edwin Holmes Telephone Dispatch Company மற்றும் Boston Telephone Dispatch Company ஆகியவை ஆண்களைத்தான் டெலிபோன் ஆபரேட்டர் பணியில் சேர்த்து வந்தனர். George Williard Croy என்பவர்தான் முதலில் அந்தப் பணியில் சேர்க்கப்பட்டார். அங்கு எம்மா நெட்டின் கணவரும் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஆனால், இந்த வேலையை ஆண்களை விடப் பெண்களால் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதாக நிறுவனம் நினைத்தது. காரணம், ஆண்கள் தொலைபேசியில் பேசும் முறை மிகவும் முரட்டுத்தனமாகவும் கேலியான மொழிநடையிலும் இருந்ததாகப் பல குற்றச்சாட்டுகள் வந்தன. ஆகையால், இந்தச் சிக்கலைச் சீர்படுத்த நினைத்த நிறுவனம் பெண்களை டெலிபோன் ஆபரேட்டர் பணியில் அமர்த்துவது என முடிவெடுத்தது. இதன் விளைவாக 1878 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி  எம்மா நெட் பணியில் சேர்ந்தார். அவருக்குப் புதிய அனுபவமாக இருந்ததோடு, சவால் நிறைந்ததாக இருந்ததை உணர்ந்தார். அதற்காகக் கொஞ்சமும் தன் முயற்சியில் பின் வாங்காமால் உற்சாகமாகப் பணிகளை மேற்கொண்டார். அந்த உற்சாகமே சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த வேலையில் நிலைக்க வைத்தது.

டெலிபோன் எம்மா நெட் வேலைக்குச் சேர்ந்ததில் சுவாரஸ்யமான செய்தியும் உண்டு. டெலிபோனைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் எம்மா நெட்டைப் பணிக்குச் சேர்த்திருக்கிறார். ஆண்களால் சிறப்பாக முடிக்க முடியாத வேலை என்று தன்னிடம் தரப்பட்ட வேலையை மிகச் செம்மையாகச் செய்தார். இவை எல்லாம் 1878 - ஆம் ஆண்டுகளில் நடந்தவை எனும் பார்க்கும்போது எவ்வளவு சிரமமான ஒன்று எனப் புரிந்துகொள்ளலாம். அந்தச் சிரமங்கள் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை உலகிற்குச் சொல்லும் விதமாகத் தன் தங்கை ஷீலா நெட்டையும் (Shella Nutt) டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்குச் சேர வைத்தார். டெலிபோன் ஆபரேட்டர் வேலையில் இணைந்த இரண்டாம் பெண் எனும் பெருமையைச் சூடிக்கொண்டார் ஷீலா நெட்.

 

இந்தப் பணிக்கான விதிமுறைகள் கடுமையாக இருந்தன. வேலைக்குச் சேருபவர்கள் 17 முதல் 20 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். வேலை நேரமும் அதிகமாகயிருந்தது. இதோடு ஆப்ரிக்க மற்றும் யூத பெண்கள் டெலிபோன் ஆபரேட்டர் பணிகள் புரிய அனுமதி அளிக்கப்பட வில்லை. ஆண்களின் உலகில் துணிச்சலோடு களமிறங்கி, நம்பிக்கையோடு பணியாற்றிய எம்மா நெட்டின் நினைவுகளைப் போற்றுவோம். பெண்களின் திறமைகள் இன்னும் இன்னும் விரியட்டும்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு

அமேசான் காடுபடத்தின் காப்புரிமைEPA Image captionதனித்துவமான சிவப்பு வால்களை கொண்டுள்ள இந்த குரங்குகளுக்கு "பயர் டெய்ல்" என பெயரிடப்பட்டுள்ளது

அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், 381 புதிய உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக டபுள்யூ.டபுள்யூ.ஃப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் `பிரேசில்ஸ் மமிராவா இன்ஸ்டிடியூட் ஆஃப் சஸ்டெய்னபில் டெவலப்மெண்ட்` ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித செயல்பாடுகளால் ஆபத்தில் உள்ள பகுதிகளிலேயே புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விலங்குகள் மற்றும் தாவரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

1999 முதல் 2015 வரையிலான காலத்தில் இங்கு 2000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைக் கொண்டுள்ள இந்த அறிக்கை பிரேசிலில் உள்ள நகரான 'ஸா பாலோ'வில் வெளியானது.

அமேசானில் கண்டுபிக்கப்படும் புதிய இனங்கள் தொடர்பாக வெளியாகும் அறிக்கைகளில், இது மூன்றாவதாகும்.

அமேசான் காடு Image captionஆற்றில் வாழும் டால்பின் அமேசான் காடு Image captionஇந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே பறவை இதுவே அமேசான் காடு

முன்பு அறியப்படாத 216 தாவரங்கள், 93 மீன்கள், 32 நிலநீர் வாழிகள், 20 பாலூட்டிகள், 19 ஊர்வன மற்றும் ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமேசான் மழைக்காடு உலகிலே மிகப்பெரிய காடாகும். பல இனங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கொண்ட அமேசான் உயிர்கள் மற்றும் வாழ்விடப் பன்முகத்தன்மைக்கு பிரபலமானது.

``ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நூற்றுக்கணக்கான உயிரினங்களைக் கண்டுபிடித்துவருகின்றனர். அப்பகுதிகளில் இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது ``என டபுள்யூ.டபுள்யூ.ஃப் பிரேசில் அமேசான் திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ரிக்கார்டோ மெல்லோ கூறுகிறார்.

ஆனால், விவசாயம் செய்தல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற மனித செயல்பாடுகள் அமேசான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான ஆபத்தாக இருப்பதாக மெல்லோ எச்சரித்துள்ளார்.

அமேசான் காடு

`` மனிதர்களால் அமேசான் காடு அழிக்கப்படும் பகுதிகளில் தான் இந்த 381 உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நமக்கு மிக முக்கியமானது. ஏனென்றால், நமது பொருளாதார நடவடிக்கைகளால் உயிரினங்களைப் பற்றி நாம் அறிவதற்கு முன்பே அவை அழிந்து போவது பற்றிய உண்மையை இந்த ஆராய்ச்சி உணர்த்துகிறது.`` என்கிறார் மெல்லோ.

சுரங்க பணிகளுக்காக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பிரேசிலில் கடுமையான விவாதங்கள் நடந்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

தேனீ தாடி வைப்பதில் புதிய சாதனை !

தேனீ தாடிபடத்தின் காப்புரிமைKEYSTONE/GETTY IMAGES

தேனீக்களை தாடியாக வைத்திருப்பதில் புதிய வரலாற்று பதிவை கனடாவை சேர்ந்த ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ் படைத்திருக்கிறார்.

தேனீக்களை தாடியாக வைத்திருந்த முந்தைய நேர பதிவைவிட எட்டு நிமிடங்கள் அதிகமாக தேனீக்களை தாடியாக வைத்திருந்து அவர் இந்த புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.

ஒன்டாரியோ மாகாணத்தில் தேனீ பண்ணை ஒன்றில் வேலை செய்யும் ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ், சரியாக 61 நிமிடங்கள் தன்னுடைய முகத்தில் தேனீக்களை தாடியாக வைத்திருந்தார்.

தேனீ தாடிபடத்தின் காப்புரிமைKEYSTONE/GETTY IMAGES

"மென்மையானவை" என்று விவரிக்கப்படும் ஒரு லட்சம் தேனீக்களை இதற்காக இந்த தேனீ பண்ணை வழங்கியிருந்தது.

தேனீக்கள் இரண்டு முறை கொட்டியபோதும் அமைதியாக இருந்த ஆர்டிஸ், முந்தைய சாதனையை முறியடித்த பின்னர் தேனீக்களை விரட்டிவிடும் வரை அசையாமல் அமர்ந்திருந்தார்.

இந்த சாதனை-முறியடிப்பு முயற்சியில் ஈடுபடுமுன் இருமுறை மட்டுமே இதில் பயிற்சி எடுத்திருக்கும் ஆர்டிஸ், தான் இந்த தேனி தாடி வைத்துக்கொள்ளும் கலையில் இன்னும் ஒரு புதுமுகம்தான் என்று தன்னை பற்றி கூறிக் கொள்கிறார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

114p1.jpg

twitter.com/Scientist_Mani 

நாம் பயன்படுத்திய முதல் வெஸ்டர்ன் டாய்லெட் பாட்டியின் கால்களாகத்தான் இருக்கும்.

twitter.com/nithratweets 

ஊர்களை இணைப்பதும்... அவற்றையே ஊர் ஊராய்ப் பிரிப்பதும் சாலைகள்தான்.

twitter.com/Thaadikkaran

அவரு துணை முதல்வருங்க, இவரு இணை முதல்வருங்க. அப்புறம் அவரு பொது முதல்வருங்க. அந்தா நிற்கிறாரே, அவரு இணை துணை முதல்வருங்க.

twitter.com/ShivaP_Offl

வாட்ஸ்அப், போட்டோ கேலரியை கிளீன் செய்துவிட்டு போனைப் பார்க்கும்போது, என்னமோ ஐந்து கிலோ உடம்பிலிருந்து எடை குறைந்ததுபோல ஓர் உள் உணர்வு.

twitter.com/shanth_twits 

பெங்கால் வருமானவரி சோதனைக்கே துணை ராணுவத்தை அனுப்பத் தெரிஞ்ச மோடிக்குக் கலவரம் நடக்கும்னு தெரிஞ்சும், அங்கே ராணுவத்தை அனுப்பத் தெரியலை... பாவம்!

twitter.com/thoatta

பஞ்சாப், ஹரியானா, டெல்லின்னு கொளுத்திக் கிட்டே தென்னிந்தியா வந்துடாதீங்கடா... விந்திய மலை அடிவாரத்துல இந்தியன் யூனிஃபார்மில் ஆண்டவர் நிற்பார்.

114p2.jpg

twitter.com/erasaravanan

 துப்பினா துடைச்சுக்குவேன்னு சொன்னது நாஞ்சில் சம்பத்தா இருக்கலாம். ஆனா, அதைச் செய்வது பன்னீரும் பழனிசாமியும்தான்!

twitter.com/karunaiimaLar

நாம சொல்லாதவரைக்கும் நம்ம பர்சனல் விஷயங்களைப் பற்றிக் கேள்வி கேட்காதவங்க மேல ரொம்ப அதிகப்படியான ஒரு மரியாதை வந்துடுது :)

twitter.com/Kozhiyaar

தமிழ்நாட்டு அம்மாக்கள் பக்கத்து வீட்டுக்குப் போன பையன் வரலைனாகூட, கவலைப்பட மாட்டாங்க. பாத்திரம் வரலைனா கொலவெறி ஆகிடுவாங்க.

twitter.com/Baashhu 

மிட்டாய் வாங்கிக்கொடுங்கன்னு கேட்கிற குழந்தைகளையெல்லாம் பார்க்கவே முடியலை, போனை சார்ஜ் போட்டு வைங்க, சூசூ போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போகுதுங்க.

twitter.com/manipmp

பயம் கலந்து,குனிந்து கும்பிட்ட அ.தி.மு.க- வினரைப் பார்த்த கடைசித் தலைமுறை நாம்தான்.

114p3.jpg

twitter.com/Piramachari 

இப்போ எலெக்ஷன் வந்திருமோனு அ.தி.மு.க-காரங்களைவிட இந்த பி.ஜே.பி.காரங்கதான் உதறல்ல திரியுறாங்க.

அப்புறம் ஒரு 50-60 பேரை திடீர்னு புடிக்கணும்ல.

twitter.com/bommaiya

உயர்தர சைவ பவன்கள்ல காபி டம்ளர்களெல்லாம் பேலியோ டயட் இருந்திருக்கும்போல. இப்போ டம்ளர்களெல்லாம் முக்கா சைஸ்தான் இருக்கு.

facebook.com/Zabinath K

கரகாட்டக்காரன் கார் மாதிரி ஆகிடுச்சி கட்சியெல்லாம்... எப்போ யார்கிட்ட இருக்குன்னே தெரியலை.

twitter.com/withkaran

ஓர் ஆளுநர், தான் பதவி வகிக்கும் மாநிலத்துக்கு வர்றதே ப்ரேக்கிங் நியூஸானது நம் ஊரில் மட்டும்தான்.

twitter.com/ivenpu

பொண்டாட்டிகிட்ட சண்டை வராம இருக்க ஜெ.தீபா மோடுக்கு மாறிடலாம்னு இருக்கேன்.

“எத்தனை மணிக்கு கிளம்பணும்ங்க?”

“அதைத் தாங்கள்தான் கூற வேண்டும்.”

114p4.jpg

twitter.com/DeepaVaru

சரியாக முத்தமிட்டு விடாதே;

அடுத்த வாய்ப்பு தவறிவிடும்.

twitter.com/HAJAMYDEENNKS

இந்த உலகத்துல எல்லாமே பழசுதான். அதை நாம சொல்றவிதம்தான் புதுசா இருக்கணும்.

twitter.com/SKtwtz 

வீட்டில் ஒரு பொருளைத் தேடச் சென்றால், நூறு பொருள்களைக் கலைக்க வேண்டியுள்ளது.

twitter.com/BoopatyMurugesh

கவர்னர் ஓவியாவையும், ஆரவ்வையும் சேர்த்து வைக்கணுமாம்!

அடேய் ஆர்மிகளா.. அவரைப் பார்த்தா எப்படித் தெரியுது?

twitter.com/nilaavan

அதென்னவோ தெரியலை. அமெரிக்கா போயிட்டா தேசப்பற்று, மனித நலன், உடல் ஆரோக்கியம்,மனிதாபிமானம்லாம் பொத்துக்கிட்டு வந்திடுது. எவ்ளோ செலவானாலும் போறோம்.

twitter.com/iamvinish

“எந்தச் சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு...” அட்வான்ஸா எவ்ளோ அழகா சமாளிச்சிருக்காங்க!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தங்க கழிவறை: விசித்திர பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள்

அமெரிக்க அருங்காட்சியகத்திற்கு செல்கின்ற பார்வையாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சிப்பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதான் தங்க கழிவறை. ஒரு பவுண்ட் செலவிட்டு மக்கள் இதனை பயன்படுத்தலாம்

தங்கத்தாலான கழிவறை

தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கழிவறை கலைப்பொருள், ஒரு மில்லியன் பவுண்ட் மதிப்புள்ளது. இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இது நியூயார்க்கிலுள்ள குகென்ஹைய்ம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாதாரண கழிவறை போலவே இது செயல்படுகிறது. ஒரு பென்னி செலவிட்டு ஒரு லட்சத்துக்கு மேலானோர் இதனை பார்த்துள்ளனர்.

 

ஆரெஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களாலான கலைப்பொருள்

இந்தப் புகைப்பட தொகுப்பில் வருகின்ற சாப்பிடும் பழங்களால் செய்யப்பட்ட ஒரேயொரு கலைப்பொருள் இதுதான். ஆரெஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களால் இது செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள மாங்டோங் நகரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் எலுமிச்சை விழா ஒன்றின்போது, இடம்பெற்ற தலைசிறந்த கலைப்பொருள் இது.

பென்சில் முனையில் சிற்பம்

“முடிவில்லாதது மற்றும் அதற்கு அப்பால்!” உண்மையிலேயே பெரியவற்றிலிருந்து சிறியவற்றிற்கு. தைவானை சேர்ந்த கலைஞர் சியன் ச்சு லீ பென்சிலின் உள்ளிருக்கும் கரி பொருளில் இருந்து, ஆச்சரியமூட்டும் இந்த சிறிய வடிவ கலைப்பொருட்களை செய்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பென்சில் கரி முனையில் இதனை செய்கிறார். அவரது மிகவும் சிறிய கலைப்பொருட்கள் 0.1 மில்லிமீட்டர் நீளமுடையதாக இருக்கின்றன. இதனை முடிக்க பல மணிநேரங்கள் ஆகலாம். இவற்றை செய்வதற்கு அதிக பொறுமையும். நடுக்கமற்ற நிலையான கரங்களும் தேவை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பனி சிற்பங்கள்

பனி உங்களுடன் இருக்கட்டும்.. ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சப்போரோ பனி விழாவில் உருவாக்கப்பட்ட நட்சத்திர போர் கருப்பொருளிலான பெரிய கலைசிற்பங்கள் இவை. இப்போது 67ஆவது ஆண்டாக இந்தப் பனி விழா நடைபெறுகிறது, இந்த ஆண்டு 250 வேறுபட்ட கலைசிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. உள்ளூர் பூங்கா ஒன்றில் உயர் பள்ளி மாணவர்கள், சில பனி சிலைகளை செய்தபோது, 1950 ஆம் ஆண்டு இந்த பனி சிற்ப விழா தொடங்கியது.

 

காகித சிற்பம்

சீன சிற்பக்கலைஞர் லி ஹொங்போ உருவாக்கிய இந்த சிற்பத்தை பார்க்கும்போது, முதலில் அது பிளாஸ்டரால் செய்யப்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் இது காகிதத்தால் செய்யப்பட்டுள்ளது. காகித அடுக்குகளை பசையால் ஒட்டி ஒன்றாக இணைத்து, பின்னர் வெட்டி, வடித்து, அவர் விரும்பிய வடிவத்திற்கு உருவாக்கியுள்ளார்,

 

கடற்கரை கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பம்

அமெரிக்காவின் கடற்கரைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து இந்த சிற்பம் செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டிலிருந்து பெண் சிற்பக்கலைஞரான ஏஞ்சலோ போஸ்ஸி கடல்வாழ் உயிரினங்களின் சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்த முயற்சி மாசுபாடு பற்றியும், அது சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் மக்களுக்கு அதிகம் கற்பிக்கும் என்று அவர் நம்புகிறார்.

பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி செய்யப்பட்டது.

இது பறவையா அல்லது விமானமா? இல்லை. முழுவதும் பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி (லெகோ) சிற்பக்கலைஞர் நாதன் சவாயா உருவாக்கிய சிற்பமாகும். பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி கலைப்பொருட்களை உருவாக்குவதில் நாதன் பிரபலமானவர். டைனோசரின் கவரக்கூடிய இந்த தோற்றம், பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட கலைப்பொருட்களின் கண்காட்சியில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மணல் சிற்பம்

 

“ந-ந-ந-ந-ந மணல் மனிதர்!!” இந்த சிற்பம் நீங்கள் ஊகிப்பதுபோல மணலால் செய்யப்பட்டதுதான், இங்கிலாந்தின் மேற்கு கடற்கரையோரத்தில் இருக்கின்ற வெஸ்டன்-சூப்பர் மாரெயில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற விழாவிற்காக உருவாக்கப்பட்டது. இந்த சிற்பங்களை உருவாக்க சுமார் 4 ஆயிரம் டன் கடற்கரை மணல் கொண்டு வரப்பட்டது. இந்த சிற்பம் 2013 ஆம் ஆண்டு ஹோலிவுட் சிறப்பு காட்சியின் ஒரு பகுதியாக இருந்தது.

மலத்தால் செய்யப்பட்ட சிற்பம்

இறுதியாக, உங்களுடைய மூக்கை பிடித்துகொள்ளுங்கள். காரணம் ரஷ்ய விவசாயி ஒருவர் இந்த பெரிய சிற்பத்தை மலத்தை கொண்டு வடித்திருக்கிறார். ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கும் கலைஞர் மிகையில் போப்போசோஃப் ஒரு சிற்பத்தை உருவாக்குவார். நீங்கள் பார்ப்பதைபோல, இந்த ஆண்டு சேவல் ஆண்டு என்பதால், பெரிய சேவல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

அலைகள் மோதுமிடத்தில் பிரத்தியேக மணமேடை அமைத்து திருமணம்

உலக  பணக்காரர்கள் தரத்தில் 522வது ஆளாகக் கணிக்கப்படும் கோடீஸ்வரரான Jeff, தன் மகளின் திருமணத்தை மிக ஆடம்பரமாக , இத்தாலிய கடற்கரை ஒன்றில் நடாத்தி வைத்துள்ளார் . .  அமெரிக்கரான எலியாட் என்ற பெயர் கொண்ட இவர் மகளின் திருமணம் , நேற்று மாலை இத்தாலியின் மொனோபொலி என்னும் இடத்தில் பிரத்தியேக மணமேடை அமைத்து நடந்துள்ளது .இந்த மேடை நான்கு நாட்கள் எடுத்து எழுப்பப்பட்ட ஒன்றாகும் .

அலைகள் மோதுமிடத்தில்  பிரத்தியேக மணமேடை அமைத்து திருமணம்

வளைவுடன் கூடிய இந்த அழகிய கடற்கரைப் பிராந்தியம் , நடன மேடை உட்பட  ஒரு வைபவத்துக்குரிய அழகிய இடமாக மாற்றப்பட்டிருந்தது .  மணமகளும்    அவர் குடும்பமும் , நண்பர்கள் சகிதம் மொனோபொலி என்ற இடத்துக்கு விஷேட விமானம் மூலம்  வந்திறங்கி இருந்தார்கள் . பின்பு குதிரைகளால் இழுக்கப்பட்ட ஒரு வண்டி மூலம் தந்தையும் மகளும் வைபவம் நடக்கவிருந்த மேடைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள் .

மாலை ஆறு மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகளுக்கு , உலகப் பிரபல்ய பாடகி மரடோனா அல்லது லேடி Gaga வரலாம் என்று , இத்தாலிய பத்திரிகைகள் கிசுகிசுத்திருந்தாலும் , அது வெறும் வதந்தி என்று முடிவில் தெரிந்து விட்டது.. கிளிண்டனின் மகள் செல்சியும் . கசிந்த தகவல்களின்படி , வைபவத்துக்கு சமூகமளிக்கவில்லை . உள்ளூரிலிருந்து 100  பேர் இந்த வைபவத்தினை நேரில் காண அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அலைகள் மோதுமிடத்தில்  பிரத்தியேக மணமேடை அமைத்து திருமணம்

யூத முறைப்படி  நடந்த இந்த வைபவத்துக்கு ,இந்தக் கோடீஸ்வரர் செலவிட்டது  25 மில்லியன் டொலர் தொகை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

 

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: Berg, Himmel, im Freien und Natur
 

சீனப் பெருஞ்சுவரும் கட்டுக்கதையும்

மனிதர்கள் இன்று வரை மாபெரும் அதிசயப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். அதில் சீனப் பெருஞ்சுவரும் கண்டிப்பாக ஒன்றானது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் பலரால் நம்பப் படும் ஒரு தவறான தகவல் என்ன தெரியுமா? மனிதர்கள் உருவாக்கியதில் அந்தச் சீனப் பெருஞ்சுவரை மட்டும் தான் விண்வெளியில் இருந்தும் பார்க்கமுடியும் என்கின்ற கட்டுக்கதை தான்.

உண்மை சொல்லப்போனால், மிக நுணுக்கமான காமெராவைக் கொண்டே, நாம் பார்ப்பது சீனப் பெருஞ்சுவர் தானா என்பதைத் தீர்மானிப்பதே கஷ்டம். அப்படி இருக்க, பரந்த பூமியில் ஒரு மிகவும் சிறிய பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரைக் காண முடியும் என்பது முற்றிலும் சாத்தியம் இல்லாததாகும்.

இந்தக் கட்டுக்கதை விண்வெளியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கும் காலத்திற்கு முன்பில் இருந்தே பரப்பப்பட்டு வருகின்றது. பல கிலோ மீட்டர்களுக்கு பரவி நின்று கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரின் பிரம்மாண்டமும், மக்கள் இந்தக் கட்டுக்கதையை ஏற்றுக் கொண்டதற்கான காரணமாக இருக்கலாம். அது சரி, சீனப்பெருஞ்சுவரை ஏன் விண்வெளியில் இருந்து பார்க்கமுடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தச் சுவர் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டதால், அது கட்டப்பட்ட கற்களின் வண்ணத்தில் தான் இருக்கிறது. அதாவது அந்தச் சுவரின் வண்ணமும், அதன் சூழலின் வண்ணமும் ஒரே மாதிரி இருப்பதால், அதனை விண்வெளியில் இருந்து அடையாளம் காண்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் ஆகும். எனவே, விண்வெளியில் இருந்து சீனச் சுவரைக் காண முடியும் என்பது வெறும் கட்டுக்கதையாக மட்டுமே மக்களின் இடையே வாழ்ந்து வரும்!

சரி, சீனப்பெருஞ்சுவரை விண்வெளியிலிருந்து பார்க்க முடியாது என்பது தெரிய வந்துவிட்டது. அப்படி என்றால் மனிதர்கள் படைத்த ஒன்றையும் விண்வெளியிலிருந்து காணமுடியாது என்றா அர்த்தம்? இல்லைவே இல்லை! விண்வெளியிலிருந்து மனிதனால் காண முடிகின்ற, மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று படைப்புக்களைப் பார்க்கலாம். அவை தான் பெரிய நெடுஞ்சாலைகள், அணைகள் மற்றும் நகரங்கள் ஆகும். அதுவும் இவை அனைத்தும் வெளிச்சத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் மட்டும் தான் காண முடியும் என்பதே உண்மை.

https://www.facebook.com/SciNirosh

  • தொடங்கியவர்

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த தமிழர்கள் - இன்று வரை விளங்காத மர்மம்

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த தமிழர்கள் - இன்று வரை விளங்காத மர்மம்

'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இதோ தமிழனுடைய கண்டுபிடிப்புகளின், சாதனை பட்டியல்கள்

01-    தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.

கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.

சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

02-    கல்லணை

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?

03-    மாமல்லபுரம்

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனெசுகோ அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம்  பயின்றனா?

04-    அங்கோர்வாட் கோயில்

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான்.

இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.

40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும்.
இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

05-    திருநள்ளாறு கரி ஈசன் கோயில்

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்துவிடுகிறது.

அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது.

அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது.

தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

06-    கடல் நடுவே ராமேசுவரம்

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது .

1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும்.

பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் காதலர்கள்!

 

 
1chgowqi%20xi%20festival

காதலர் தினம் என்றாலே நமக்கெல்லாம் பிப்ரவரி 14-ம் தேதிதான் நினைவுக்கு வரும். ஆனால், சீனாவில் காதலர் தினம் என்றால் புத்தாண்டு பிறந்த 7-வது மாதத்தின் 7-வது நாள்தான் நினைவுக்கு வரும். ஏனென்றால், அன்றுதான் சீனாவில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தை ‘சீ ஷீ திருவிழா’ (Qi Xi Festival) என்றும் அங்கே அழைக்கிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் (28-ம் தேதி) சீனாவில் கொண்டாடப்பட்டது. இந்த சீனக் காதலர் தினத்துக்குப் பின்னணியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.

 

எப்படி உருவானது?

நெசவு திறமைக்குப் புகழ்பெற்ற ஸின்யூ என்ற பெண் தெய்வம், பூவுலக்கு வரும்போது நியுலங் என்ற மாடு மேய்க்கும் இளைஞனிடம் காதல் வயப்பட்டாள். அவர்கள் இருவரும் காதல் மணம்புரிந்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். இந்த விஷயம் தெரியவந்தவுடன், சொர்க்கத்தின் ராணியான ஸின்யூவின் தாய், அவளை மீண்டும் சொர்க்கத்துக்கே அழைத்துசென்றுவிடுகிறார். இதனால் நியுலங்கும் அவனுடைய குழந்தைகளும் மனமுடைந்துபோகின்றனர்.

இதன்பிறகு பறக்கும் காலணிகளின் உதவியோடு சொர்க்கத்துக்கு மனைவியைத் தேடிச் செல்கிறான் நியுலங். ஆனால், ஸின்யூவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கிவிடுகிறார். இந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’(magpie) பறவைகள், அவர்கள் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்துகொடுத்தன. ஒருகட்டத்தில், ஸின்யூவின் தாய் காதலர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் ‘சீ ஷீ’ தினத்தில் சந்திக்க சம்மதிக்கிறார். அந்தத் தினம் ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கு பிறகு ஏழாவது மாதத்தில் 7-வது தினத்தில்தான் வரும். அப்படி அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

 

கொண்டாட்டம்

சீனக் காதலர் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் வண்ணமயமான கொண்டாட்டத்தில் மக்கள் திளைப்பார்கள். வயது வித்தியாசமின்றி பெண்களும், குழந்தைகளும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை ஆற்றில் விடுவார்கள். கியூஜோவ் என்ற இடத்தில் உள்ள பழமையான காதல் தேவன் கோயிலை நோக்கி, காதல் ஜோடிகள் ஏராளமானோர் சீன பாரம்பரிய உடையுடன் அணிவகுப்பார்கள். அங்கு காதலர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் நடைபெறுவது வழக்கம்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் முதன்முதலாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்ட நாள்: 2-9-1969

 

அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரமான நியூயார்க்கில் முதன் முறையாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். * 1958 - அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

 
அமெரிக்காவில் முதன்முதலாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்ட நாள்: 2-9-1969
 
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரமான நியூயார்க்கில் முதன் முறையாக ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

* 1958 - அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

* 1965 - பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

* 1990 - மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

* 1992 - நிகராகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

* 1996 - பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 1998 - நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் கொல்லப்பட்டனர்.

* 2006 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

 

 

வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945

 

வியட்நாம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூனிச நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே சீனா, வடமேற்கே லாவோஸ், தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் தென் சீனக் கடல் உள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 85 மில்லியன்கள் ஆகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் தொகை மிகுந்த நாடு ஆகும். உலகில் மக்கள் தொகையில்

 
வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலையான நாள்: 2-9-1945
 
வியட்நாம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூனிச நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே சீனா, வடமேற்கே லாவோஸ், தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் தென் சீனக் கடல் உள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 85 மில்லியன்கள் ஆகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் தொகை மிகுந்த நாடு ஆகும். உலகில் மக்கள் தொகையில் 13-வது இடத்தையும் வகிக்கிறது. இதன் தலைநகரம் ஹனோய் ஆகும். ஹோ சி மின் நகரம் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம் 1945-ம் ஆண்டு செப்.2-ந்தேதி விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய் சேர்ந்தன.

* 1870 - பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் ஒரு லட்சம் பேரையும் கைது செய்தனர்.

* 1885 - வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.

* 1898 - பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.

* 1935 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.

* 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாசி ஜெருமனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் மிசூரி என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.

* 1945 - வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

* 1946 - பிரித்தானிய இந்தியாவில் ஜவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஃபிரெட்ரிக் சோடி

02CHRGNSODDY

இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஃபிரெட்ரிக் சோடி (Frederick Soddy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இங்கிலாந்தில் சசெக்ஸ் என்ற இடத்தில் பிறந்தார் (1877). 2 வயதில் தாயை இழந்தார். இவரது ஒன்றுவிட்ட சகோதரியால் வளர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர், ஈஸ்ட்போர்ன் கல்லூரியிலும் அடுத்து மெர்டோனில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியிலும் பயின்றார். 1898-ல் வேதியியலில் பட்டம் பெற்றார்.

# ஆக்ஸ்போர்டில் தனிப்பட்ட ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் கனடா சென்று, மான்ட்ரியலில் உள்ள மெக்கெல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுடன் இணைந்து தோரியம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

# கதிரியக்கக் கூறுகள் பிற கூறுகளாகச் சிதைவதுதான் அவற்றின் அசாதாரண செயல்பாடுகளுக்குக் காரணம் என்பதை இருவரும் உணர்ந்தனர். இந்தச் சிதைவு, ஆல்ஃபா, பீட்டா, காமா கதிரியக்கத்தை உற்பத்தி செய்வதையும் கண்டறிந்தனர். இருவரும் இணைந்து, உயர் ஆற்றல் வாய்ந்த கதிரியக்கப் பொருள் தோரியம் - X-ஐக் கண்டறிந்தனர்.

# 1902-ல் அணுக்கரு சிதைவுக் கோட்பாட்டை(Theory of Atomic Disintegration) நிறுவினர். 1904-ல் இயற்பியல் சார்ந்த வேதியியல் மற்றும் கதிரியக்கப் பாடங்களுக்கான விரிவுரையாளராக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

# சில ஆண்டுகள், கதிரியக்கப் பொருள்களைச் சுத்திகரிப்பதில் ஈடுபட்டார். பின்னர், குறைந்த காலமே நீடித்திருக்கும் கதிரியக்கக் கூறுகளை ஆராய்ந்தார். இடப்பெயர்ச்சி கோட்பாட்டை நிறுவினார். பொருட்களின் இயல்பு மாற்றம் காரணமாக கதிரியக்கம் உண்டாவதைக் கண்டறிந்து கூறினார்.

# கதிரியக்கத் தன்மை என்பது ஒரு அணு அதிர்வு என்பதையும், அணுக்களின் ரசாயன மாற்றங்கள் நிகழும்போது கதிரியக்க உமிழ்வு ஏற்படுகின்றது என்பதையும் எடுத்துக் கூறினார். மீண்டும் இங்கிலாந்து திரும்பிய இவர், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். தன் சகாக்களுடன் இணைந்து, ரேடியம் புரோமைட்டின் கதிரியக்கச் சிதைவு ஹீலியத்தை உற்பத்தி செய்கிறது என்பதை நிரூபித்தார்.

# 1914-ல் ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இணைந்தார். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கியதால், அனைத்து சோதனைக்கூடங்களும் யுத்தம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

# 1915-ல் அணு எண் 91-ன் வேதியியல் தனிமம் மற்றும் புரோடாக்டினியத்தைக் (protactinium) கண்டறிந்தார். மேலும் சில குறிப்பிட்ட கதிரியக்கக் கூறுகளில் ஐசோடோப்கள் இருப்பதையும் நிரூபித்தார்.

# 1919-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கனிம மற்றும் உடலியல் வேதியியலுக்கான பேராசிரியராக நியமிக்கப்பட்டார். வேதியியல் பாடத்திட்டங்களை மறுசீரமைப்புச் செய்தார். ‘தி இன்டர்பிரடேஷன் ஆஃப் தி ஆடம்’, ‘ரேடியோ ஆக்டிவிட்டி’, ‘தி இன்டர்பிரடேஷன் ஆஃப் தி ரேடியம்’, ‘சயின்ஸ் அன்ட் லைஃப்’, ‘தி ஸ்டோரி ஆஃப் அடாமிக் எனர்ஜி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

# கதிரியக்கப் பொருட்களின் வேதியியல், ஐசோடோப்களின் தோற்றம், அவற்றின் தன்மை பற்றிய இவரது ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1921-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். கதிரியக்க வேதியியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கிய ஃபிரெட்ரிக் சோடி 1956-ம் ஆண்டு தமது 79-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

விளையாட்டு புதுசு: நீங்கள்தான் இனி தலைவர்!

 

 
1CHFaintainfounders

இடமிருந்து விவேக் வேணுகோபால், ஆனந்த் ராமச்சந்திரன், அரவிந்த் ராமச்சந்திரன்.

கிரிக்கெட் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட விளையாட்டுக்கு வீரர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ரசிகர்களும் முக்கியம். இந்தக் கோணத்தில் கிரிக்கெட், கபடி, பாட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளின் ரசிகர்களை ஒரு புள்ளியில் இணைத்து அவர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தொடங்கப்பட்டதுதான் ஃபேன்டெயின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.

 

ரசிகர்களுக்கான ஆப்

விளையாட்டு அரங்கத்துக்குச் செல்வது அல்லது டி.வி.யில் பார்ப்பது மூலமாக மட்டுமே ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் இதுவரை கண்டுகளித்தார்கள். அதிலிருந்து அடுத்த தளத்துக்கு ரசிகர்களைக் கொண்டுசெல்லும் முயற்சியை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இணையதளம், மொபைல் ஆப் மூலமாக எந்நேரமும் விளையாட்டுடனும் பிரியமான விளையாட்டு வீரர்களுடனும் ரசிகர்கள் இணக்கமாகத் தொடர்புகொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது இந்நிறுவனம்.

“இப்போதெல்லாம் விளையாட்டு ரொம்பவே வியாபாரமயமாகிடுச்சு. இதனால ரசிகர்களும் விளையாட்டில் இருந்து அந்நியப்பட்டுகிட்டு இருக்காங்க. நானும் என்னுடைய நண்பர்களான ஆனந்த் ராமச்சந்திரனும் அரவிந்த் ராமச்சந்திரனும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் 10 ஆண்டுகள் சேர்ந்து வேலைபார்த்த காலத்தில் கிரிக்கெட் வெறியர்களாக இருந்தோம். சேர்ந்தே நிறைய போட்டிகளைப் பார்த்திருக்கோம்.

1CHFantain
 

ஆனால், அவங்க ரெண்டு பேருக்குமே வெளிநாட்டில் வேலை கிடைத்த பிறகு கிரிக்கெட் மீதான ஆர்வமும் காலப்போக்கில் குறைஞ்சிடுச்சு. ஒரு கட்டத்தில் நாங்க எவ்வளவு இழந்துகிட்டிருக்கோம்னு யோசிச்சோம். எங்களைப் போன்ற விளையாட்டு ரசிகர்களுக்காகவே ஏதாவது புதுசா பண்ணனும்னு முடிவெடுத்து 2013-ல் ஃபேன்டெயின் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைப் புதுவிதமான ஸ்டார்ட் அப் நிறுவனமா சென்னையில தொடங்கினோம்” என்கிறார் இந்த நிறுவத்தின் தொழில்நுட்ப அதிகாரி விவேக் வேணுகோபால்.

 

ரசிப்பதற்குப் பரிசு

ரசிகர்களே விளையாட்டின் கேப்டன் என்பதுதான் ஃபேன்டெயின் மொபைல் ஆப்ஸின் கான்சப்ட். இந்த அடிப்படையில் இவர்கள் ஃபேன்டெயின் ஃபேன்டஸி (Fantain Fantasy), பிளே கால் (Play call) உள்ளிட்ட ஆப்களை உருவாக்கியிருக்கிறார்கள். பரபரப்பாகப் போட்டிகள் நடக்கும்போது இந்த ஆப்ஸ் பயனாளிகள் அந்த மேட்சில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களில் பிடித்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் அணியை உருவாக்கலாம்.

1CHFantainpage2

களத்தில் ஆடும் விளையாட்டு வீரர்களின் ஸ்கோர்ஸுக்கு ஏற்றமாதிரி பயனாளிகளுக்குப் புள்ளிகள் தரப்படும். அதிகப் புள்ளிகள் வாங்குபவர்களுக்கு சினிமா டிக்கெட்டுகள் உட்படப் பல சிறப்புப் பரிசுகளைத் தருகிறார்கள் இவர்கள்.

நேரடியாக விளையாட்டில் பங்குபெறாமல் அவரவர் இஷ்டம்போல அணி திரட்டுவதில் ரசிகரின் பங்கேற்பு எந்தவிதத்தில் இருக்க முடியும் எனக் கேட்டால், “ஃபேன்டெயின் ஃபேன்டஸியைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் தலைவர், துணை தலைவர், வீரர்கள் என அத்தனை பேரையும் தேர்வு செய்வார்கள். விளையாட்டை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமலோ உணர்வுபூர்வமான ஈடுபாடில்லாமலோ அதைச் செய்ய முடியாது.

அதிலும் பிளே கால் ஆப்ஸில் ரசிகர்தான் அணியின் கேப்டனாக இருப்பார். ஓவர் முடிந்தால் அடுத்த பந்து வீச்சாளர் யார், யாரெல்லாம் ஃபீல்டிங் அல்லது பேட்டிங், யார் அடுத்த பேட்ஸ்மேன் என்பது உட்பட அத்தனை முடிவுகளையும் அவர்தான் எடுக்க வேண்டும். இந்த ஆப் கேமை விளையாடும் ரசிகரின் தேர்வும் விராட் கோலியின் தேர்வும் ஒத்துப்போனால் அவரே வெற்றியாளர்.

இந்த மாதிரி வெற்றி பெற்றவர்களுக்கு நிஜமான இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட்டுகளைப் பரிசாக வழங்கியிருக்கிறோம். இதன் மூலம் நேரடியாக ரசிகர்களை அவர்களுக்குப் பிரியமான விளையாட்டு வீரர்கள் அருகில் கொண்டுசெல்கிறோம்” என்கிறார் விவேக்.

உங்களுடைய பிரியமான விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முக்கியச் செய்திகள், வீரர்களின் சிறப்புப் பேட்டிகள், ட்விட்டர் அப்டேட்ஸ், ஒளிப்பட கேலரி, மேட்சுகளின் அட்டவணை உட்பட அத்தனை செய்திகளையும் சுவாரசியமான வடிவிலும் வழங்கிக்கொண்டிருக்கிறது ஃபேன்டெயின் ஆப்பை உருவாக்கிய இந்த ஸ்டார்ட் அப்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஒளிப்படங்களால் வசீகரிக்கலாம்!

 

 
2chgowphotodecor3

வீ

ட்டை ஒளிப்படங்களால் அலங்கரிப்பது பெரும்பாலானோருக்குப் பிடிக்கும். ஒளிப்படங்களால் அலங்கரிக்கலாம் என்று முடிவெடுத்த பின்னர், அவற்றை எப்படிக் காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் ஒளிப்படங்கள் மட்டுமல்லாமல் பொதுவான உங்கள் ரசனையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களாலும் வீட்டை அலங்கரிக்கலாம். இந்த ஒளிப்பட அலங்காரம் வீட்டுக்கு ஒரு புத்துணர்வான தோற்றத்தைக் கொடுக்கும். ஒளிப்படங்களால் வீட்டை அலங்கரிப்பதற்கான சில வழிகள்…

     
2chgowphotodecor1
 

 

ஒரே ஒரு படம்

ஒளிப்படங்களால் அலங்கரிக்க வேண்டும் என்றவுடன், நிறைய ஒளிப்படங்களைச் சேகரிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரே ஒரு ஒளிப்படத்தால்கூட அறையின் தோற்றத்தை மாற்ற முடியும். உதாரணமாக, உங்களுடைய அறைச் சுவரில் மென்மையான வண்ணத்தைப் பயன்படுத்தியிருந்தால், இயற்கைக் காட்சி, உருவப்படம் என ஏதாவது ஒன்றைப் பெரிய ஒளிப்படமாக மாட்டலாம். அந்த ஒளிப்படத்தில் போதுமான வண்ணங்கள் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இந்த ஒளிப்படம் அறையின் கவனத்தைக் குவிப்பதாக அமைந்திருக்கும்.

 

கருப்பொருள் தேர்ந்தெடுக்கலாம்

ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுக்க கருப்பொருளைப் பயன்படுத்துவதைப் பலரும் விரும்புகின்றனர். அதில் ஒரு கருப்பொருளில் மூன்று ஒளிப்படங்களை வைத்து ஒரு ‘டிரைடிக்’கை (triptych) ஒளிப்படத்தை உருவாக்கலாம். ஒரே விதமான சட்டகத்தில், இந்த மூன்று ஒளிப்படங்களும் இருக்க வேண்டும். உங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் இருந்தால், உங்கள் மனதுக்குப் பிடித்த வரலாற்று நிகழ்வை மூன்று ஒளிப்படங்களாக அறையில் மாட்டி வைக்கலாம். அப்படியில்லாவிட்டால் உங்களுடைய குடும்ப ஒளிப்படத்தைக் கூட இந்த ‘டிரைடிக்’ முறையைப் பயன்படுத்தி மாட்டிவைக்கலாம்.

2chgowphotodecor2
 

 

சிறிய ஒளிப்படங்கள்

ஒருவேளை, உங்களுடைய அறை சிறியதாக இருந்தால், அதற்கேற்ற மாதிரி சிறிய ஒளிப்படங்களால் அறையை அலங்கரிக்கலாம். உங்கள் அறையின் சுவர் அடர் நிறத்தில் இருந்தால், இந்தச் சிறிய ஒளிப்படங்களின் சட்டகங்களைக் கறுப்பு வெள்ளையில் அமைக்கலாம். ஒளிப்படங்கள் எந்தக் கருப்பொருளில் இருந்தாலும், அவற்றை வித்தியாசமாக அடுக்கிவைக்க முடியும். ஓர் ஒளிப்படத்தைக் கிடைமட்டமாகவும், மற்றொன்றைச் செங்குத்தாகவும் தொங்கவிடலாம். இப்படி ஒளிப்படங்களை மாறுபட்ட வரிசையில் அடுக்கினால் அறைக்கு வித்தியாசமான தோற்றம் கிடைக்கும்.

 

ஒளிப்படக்காட்சிச் சுவர்

உங்களுடைய அறை நீளமாக இருந்தால், சுவரில் ஒளிப்படங்களை ஒரு காட்சிக்கு வைப்பது போல அடுக்கிவைக்கலாம். வசதியிருந்தால், இந்த ஒளிப்படங்களுக்கு மேலே சிறிய விளக்குகளைப் பொருத்தலாம். உங்களுடைய அறை நீளமாக இல்லாமல், வீட்டின் கூரை உயரமாக இருந்தால் ஒளிப்படங்களைச் செங்குத்தாக மாட்டலாம். இப்படி ஒளிப்படங்களை மாட்டுவது அறையின் நீளத்தையும் உயரத்தையும் அழகாகப் பிரித்துக் காட்டும்.

 

ஒளிப்படங்களால் ஒரு ரயில்

உங்களிடம் கைவசம், நிறைய ஒளிப்படங்கள் இருந்தால், அறையில் ஒரு ஒளிப்படங்களாலான ரயிலை உருவாக்கலாம். இந்த ரயிலை எளிமையாக அமைக்க முடியும். சுவரில் சட்டகங்களை இரண்டு புறமும் பொருத்தி, அதில் ஒளிப்படங்களை வரிசையாக அடுக்கினால், ஒளிப்பட ரயில் தயார்.

shutterstock115051321
 

 

எங்கும் மாட்டலாம்

சுவரில் மட்டுமே ஒளிப்படங்களை மாட்ட வேண்டும் என்ற யோசிக்கத் தேவையில்லை. வீட்டில் சுவரைத் தவிர ஒளிப்படங்களைப் பொருத்தகூடிய இடங்களையெல்லாம் தேர்ந்தெடுங்கள். அந்த இடங்களிலும் ஒளிப்படங்களைப் பொருத்தலாம். உதாரணமாக, உங்கள் வீட்டின் ஜன்னல், கண்ணாடித் தடுப்புகளால் அமைக்கப்பட்டிருந்தால் அதில் ஒளிப்படங்களைப் பொருத்தலாம். அத்துடன், ஒளிப்படங்களைக் கொடி போல அமைத்து ஜன்னலில் தொங்க விடலாம்.

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.