Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Text

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Text

 

உலக ஓசோன் தினம் !

  • தொடங்கியவர்

ஆல்கஹால் காளை!

 

- ரோனி

ஷ்யூர். உலகிலேயே செமத்தியாக பைசா வசூல் செய்யும் காளை இதுதான். அரியானாவைச் சேர்ந்த பொலிகாளை பற்றிய வீடியோதான் இப்போது குளோபல் ஹிட். 6 அடி உயரத்தில் 1 டன் வெயிட்டில் மெகா பிரமாண்டமாக நம்மை பிரமிக்க வைக்கும் இந்த காளைக்கு தினமும் மாலையில் தனித்துவ வழக்கம் ஒன்றுண்டு. தன் விந்தணுக்களை விற்பதன் மூலமாகவே ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் சம்பாதிக்கும் இந்த பேராண்மை காளை, தினசரி மாலையானால் தன் முதலாளிகளின் முகம் பார்த்தபடி ஆவலாக ரெடியாகி விடுகிறது.
10.jpg
எதற்கு? தொட்டியில் கிடக்கும் புண்ணாக்கு சாப்பிடவா! சாதாரண காளைகளுக்கு அது ஓகே. காளைகளின் சூப்பர்ஸ்டாருக்கு? ஸ்பெஷல் அயிட்டம். யெஸ். கிளாஸில் அக்காளை குடிப்பது பரிசுத்தமான விஸ்கியை! தினசரி ஹார்லிக்ஸ் போல விஸ்கி குடித்தால் காளை உடம்பு என்னாவது என வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.

www.kungumam.co

  • தொடங்கியவர்
‘வாழாதிருப்பது ஏற்கக் கூடியதல்ல’
 

image_71ec996ae7.jpgதீமைகளை எதிர்க்கத் திராணியற்றவர்ளை, நல்லவர்கள் என்று சொன்னாலும் அதனால் சமூகத்துக்கு என்ன பயன்?  

கோழைகளாக இருப்பது சுலபமான வாழ்க்கைமுறை எனப் பலர் ஒதுங்கி நிற்பதுமுண்டு. இவர்களைச் சில தீயோர்கள், பாராட்டவும் செய்வார்கள். அதுவே வசதியான பாதுகாப்பு என எண்ணி, வாழாதிருப்பது ஏற்கக் கூடியதல்ல. 

தட்டிக்கேட்டு நீதியை நிலைநாட்ட முனைபவர்களைக் கூட, உங்களுக்கு ஏன் தேவையற்ற வேலை எனச் சொல்பவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுகூட மிரட்டும் ஒரு பாவனைதான்.  

துஷ்டர்களின் இஷ்டப்பட்ட செயல்களை அங்கிகரிப்பது போல் நடப்பது, கெட்ட குணம். வாழ்க்கையில் உண்மையாக வாழ்வதைவிடப் பாதுகாப்பு எதுவும் இல்லை. உணர்க!

  • தொடங்கியவர்

ஐன்ஸ்டீன் சொன்ன E=MC^2-ஐ இவ்வளவு ஈஸியாக விளக்க முடியுமா?

 

ஐன்ஸ்டீன்

உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman's Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC^2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள். 

ஆரம்பம் :
1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஆராய்ச்சியை சமர்ப்பிக்கிறார்.அதுதான் E=MC^2. 
இதில் M- நிறை ,E- ஆற்றல், C- ஒளியின் திசைவேகம். மேலும், செல்வதற்கு முன் நிறை (Mass), ஆற்றல்(Energy) பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆற்றல் (Energy):
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
நிலக்கரி ஒரு நிலை ஆற்றல். இதை எரிக்கும் போது வெப்ப ஆற்றலாக மாறுகிறது. இது ஜுல் என்ற அலகால் அளக்கப்படுகிறது..

நிறை (mass):
W=Mg என்பது அனைவரும் அறிந்ததே.
நிறை kg லும், எடை N அலகிலும் அளக்கப்படுகிறது. 
எடுத்துகாட்டு: ஐஸ் கட்டி 100கிராம் என்றால் அது உருகி தண்ணீராக மாறினால் கூட அதே 100கிராம்தான் இருக்கும். ஆக, நிறை ஆனது மாறிலி.

கதைக்குள் வருவோம்.  E=MC^2
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் மிகக் குறைந்த நிறையைக் கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே ஐன்ஸ்டீன் சொல்வது.

சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.

1.ஒரு பீரங்கி மற்றும் ஓர் இரும்புக் குண்டை எடுத்துக்கொள்வோம். இந்தக் குண்டை அதிக ஆற்றலுடன் உந்தி வெளியே தள்ளும் போது,  ஒளியின் திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

நாம் வெளியே தள்ளும் ஆற்றலில் (energy)ஒரு பாதி மட்டும் வேகத்தை அதிகப்படுத்தும். மற்றொரு பாதி, அந்த இரும்புக் குண்டின் நிறையை (mass) அதிகப்படுத்தும்.

ஆக, ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய எந்த ஒரு பொருளின் வேகத்தை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் அதன் நிறையைத்தான் அதிகப்படுத்தும்.

2. ஒரு கால்பந்தை ஒருவன் மெதுவாக கிக் செய்கிறான்.அது உருண்டு வந்து காலில் படுகிறது. நம்மீது ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
அதே பந்தை அதிக வேகத்தில்(m/s) கிக் செய்கிறான் என்றால் அது உங்கள் முகத்தில் வந்து படும் போது அந்தப் பந்தின் நிறையானது முதலில் இருந்ததை விட அதிகமாகக் காணப்படும். அதுவே அந்த பந்தானது ஒளியின் வேகத்தில் சென்றால் நினைத்துப் பாருங்கள்..

ஐன்ஸ்டீன்

3. ஆற்றலை நிறையாகவும், நிறையை ஆற்றலாகவும் மாற்ற முடியும்.
தங்கக் கட்டியை எடுத்து சுமார் 10-20 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தினால், அதனுடைய நிறையானது 0.000000000000014கிலோ கிராம் அதிகரிக்கும்.

வெப்பப்படுத்துவதை நிறுத்தினால் பழைய நிலைமைக்குத் திரும்பும்.

ஆகவே, நிறையும் ஆற்றலும் சமம்..(E=M).
இதில் C^2 என்பது மாறிலி..(3×10^8 *3×10^8 = 9×10^16 m/s)
இதைத்தான் ஆற்றல்-நிறை சமன்பாடு E=MC^2 என்று சொல்கிறோம்..

நிறை  ஒரு kg என்றால் C^2=9×10^16m/s. ஆக,  9,00,00,00,00,00,00,00,00 joule ஆற்றலை வெளிவிடும். இந்த ஆற்றல் ஐரோப்பா கண்டத்தை ஒரு மணி நேரத்துக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.  

மிக குறைந்த நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்றோமே. அது எப்படி என்று பார்ப்போம்.
யுரேனியம் 235 உடன் ஒரே ஒரு நியூட்ரானை மோதச் செய்தால், அது யுரேனியம் 236 ஆகும். மேலும் , பிரிந்து 141 BR + 92kr + 3நியூட்ரான் ஆகும். இதற்கு பெயர்தான் அணுக்கரு பிளவு(Nuclear Fission)..

இந்த 3 நியூட்ரான்கள் அருகில் உள்ள 3 யுரேனியத்துடன் மோதி அதே வினை நடைபெறும் .
அதோடு 9 நியூட்ரான்கள் வெளிவரும் ...
9 நியூட்ரான்கள் 9 யுரேனியத்துடன் இணைந்து 27 நியூட்ரான்களாக , அப்படியே சங்கிலித் தொடர் (chain reaction) நடத்துகிறது.

என்ன நடக்கிறது :
யுரேனியம் + நியூட்ரான்
235+1=236u

பிளவின் போது
140.883 + 91 +  3×1.008=235.812u
236- 235.812 =0.188u

0.188 u இது மாதிரி குறைந்த அளவு ஆற்றலை ஒரு யுரேனியம் நியூட்ரானிடம் மோதி வெளி வருகிறது. இதேபோல் பல கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்தும்....

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டில் யுரேனியத்தின் அளவு 0.860கிராம் மட்டுமே. அதாவது நமது பேனா மூடியின் நிறையின் பாதி அளவே.
0.8 கிராம் 15,000,000 அளவு TNT ஐ வெளிப்படுத்தியது. சுமார் 80000 பேர் இறந்தனர்..

ஐன்ஸ்டீன்ஸ் E=MC^2 விளக்கம் என்பது குறைந்த அளவு நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.

அணுகுண்டு இப்படித்தான் வெடிக்கிறது:

போரின் போது,  எடுத்துக்காட்டாக, அணு குண்டில் யுரேனியம் 100கி இருந்தால்தான் சங்கிலித் தொடரை ஏற்படுத்தும்.
ஆனால் ,95 கி மட்டுமே நிரப்பப்படும்.

குண்டு போடும் இடத்திற்கு வந்த உடன் 10கி உந்தித் தள்ளி 105கி ஆக ஆக்கி விடும். இது 100ஐ விட அதிகம் என்பதால் நியூட்ரானுடன் வினைபட்டு மிக அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும். அதாவது 5000 செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும்.

அறிவியலை ஆக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அழிவுக்குப் பயன்படுத்தினால் நினைக்க முடியாத சேதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதிர் வீச்சினால் ஏற்படும் புற்று நோய், DNA மாறுபாடு ஆகியவை அபாயகரமானவை.

 

அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டு வலிமை வாய்ந்தது. அது வெடிப்பதை நாமோ நமக்கு அடுத்தத் தலைமுறைகளோ நிச்சயமாக பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ட்ரம்பின் கீச்சகப் பதிவுகளுடன் வலம் வரும் காலணிகள்

Bildergebnis für sandals with trump's tweet

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீச்சகப் பதிவுகளைக் கொண்ட காலணிகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலணிகள் ட்ரம்ப்பைப் பெருமைப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்றும் மாறா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்யும் விதமாக அவரது கீச்சகப் பதிவுகளை அச்சிட்டு காலணிகளை வெளியிட்டு வருகிறது அந்தக் காலணி நிறுவனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் முரண்பட்ட கருத்துக்களை அச்சிட்டு அந்தக் காலணி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த காலணிகளின் மேல் பட்டைகளில், வலது காலணியின் பட்டையில் ஒரு கருத்தும், இடது காலணியின் பட்டையில் எதிர் கருத்தும் இருக்கும்படி அச்சிடப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று விதமான கருத்துகளை கொண்ட காலணிகள் விற்பனைக்கு வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்

memes9
memes10
memes11

memes12

memes2

memes13

memes14

memes3

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பியர்  திருவிழாவிற்காக (oktoberfest) படையெடுக்கும் மக்கள் - பியரின் விலை அதிகரிப்பு

 

ஜெர்மனியில் நடக்கும் பியர் திருவிழாவிற்காக, தற்போதே கூட்டம் கூட்டமாக முனிச் நகரில், மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

ஜெர்மனியின் முனிச் நகரில் ஆண்டுதோறும் பியர் திருவிழா நடப்பது வழக்கம்.

பியர்  திருவிழாவிற்காக  படையெடுக்கும்  மக்கள் - பியரின் விலை அதிகரிப்பு

இந்த ஆண்டும், பியர் திருவிழாவானது  வருகின்ற ஒக்டோபர் மாதம் 3 ம் திகதி நடக்கவுள்ளது.

184வது ஒக்டோபர்பெஸ்ட் எனப்படும் இந்த திருவிழாவானது, எந்தக்  குழப்பங்களுமின்றி நடைபெற, கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு,  வீடியோ கேமிராக்கள்,  உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டுப் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பியர்  திருவிழாவிற்காக  படையெடுக்கும்  மக்கள் - பியரின் விலை அதிகரிப்பு

தற்போது முனிச் நகரை நோக்கி, படையெடுக்க தொடங்கியுள்ள பியர் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, ஒரு ஜக் பியரின் விலை சுமார் 25 செண்டுகளாக அதிகரித்துள்ளது.

 

 

Bildergebnis für oktoberfest 2017

Bildergebnis für oktoberfest 2017

Bildergebnis für oktoberfest 2017

Bildergebnis für oktoberfest 2017

Bildergebnis für oktoberfest 2017

Bildergebnis für oktoberfest 2017

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Personen, die stehen und Text

இந்திய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர்
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

நடிகை பிரியா ஆனந் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

Happy Birthday Priya Anand

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Bart und Text

செப்.17: பெரியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு.. பெரியார் 25

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

  • தொடங்கியவர்

போலி சாமியார் ராம் ரஹீமின் கார்களும் ஒரிஜினல் அல்ல! #WhyInGodsName

 

கோடிகளை வாரி இறைத்து வெளிநாட்டுக் கார்களை வாங்குவது, கரன்சியில் மிதக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு முடியாத காரியம் அல்ல. காராக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, தன்னிடம் இருக்கும் ஒரு விஷயம் உலகத்தில் வேறு யாரிடமும் இருக்கக் கூடாது என்ற எண்ணம்கொண்டவர் குர்மீத் ராம். இவர், தன்னுடைய கார்களை வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக தானே டிசைன் செய்துகொள்வார். 

gurmeet

தன் கார் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க, ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் 800 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் தன் ஆசிரமத்தில் பெரிய பட்டறை ஒன்றை வைத்திருக்கிறார். பல பொறியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அவர் கார்களை டிசைன் செய்வதற்காகவே பிரத்யேகமாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். 

சீறிப்பாயும் ஸ்போர்ட்ஸ் கார்கள் தொடங்கி,  செடான், ப்ரீமியம் செடான், எக்ஸிக்கியூடிவ் செடான், லக்ஸூரி செடான்... என சிர்ஸாவில் இருக்கும் இவரது ஆசிரமத்தில் டிசைனர் கார்களுக்கு அளவே இல்லை. ரீமாடிஃபிகேஷன் செய்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த கார்களை யார் பார்த்தாலும் `சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவுக்கு வந்துவிட்டோமோ!' என்று ஒரு கணம் ஏமாந்துவிடுவார்கள். 

தன்னுடைய ஆசிரமத்தில் எத்தனையோ கார்கள் இருந்தாலும் குர்மீத் ராம் சிங் விரும்பி ஓட்டுவது `கடவுளின் ரதம்' (Chariot of God) என அவர் பெயரிட்டிருக்கும் இந்தக் காரைத்தான். 

கார்

ஜெர்மானிய டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டு, கலைகளுக்குப் பெயர்பெற்ற பிரான்ஸ் நாட்டினர் உருவாக்கப்பட்ட புகாட்டி வேரான் (Bugatti Veyron) காரின் வெளித்தோற்றம், குர்மீத் ராமுக்குப் பிடித்தமான ஒன்று. ரேஸ் கார் பிரியர்களின் முதல் தேர்வான இந்த காருக்கு சவால்விடக்கூடிய வகையில் சொந்தமாக ஒரு காரை உருவாக்க நினைத்த குர்மீத் ராம், புத்தம் புது ஹோண்டா அக்கார்டு  V6  காரை வாங்கி, அதன் இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்ற விஷயங்களை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, தன் கார் பட்டறையில் அதைப் புதிய தோற்றம்கொண்ட  புகாட்டி வேரான் (Bugatti Veyron) காராக மாற்றிவிட்டார்.  காரில் அமர்ந்தபடியே இவர் ஆற்றும் சொற்பொழிவை பக்தகோடிகள் கேட்பதற்கு வசதியாக,  இதயத்தின் வடிவில் இருக்கும் கார் கிரிலின் மத்தியில் ஒரு சின்ன ஒலிபெருக்கியும் பொருத்தியிருக்கிறார்.

``காரின் கிரில்லை ஏன் இதய வடிவில் வடிவமைத்தீர்கள்?'' என்று கேட்டால், ``இறைவன் அன்பு மயமானவன் அல்லவா!'' என்றார். 

gurmeet

`இத்தாலி நாட்டின் பியாஜியோ MP3  ஸ்கூட்டரைப்போல இருக்க வேண்டும். அதேசமயம் தன்னுடைய முத்திரையுடன் இருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் குர்மீத் ராம் புத்தம் புதிய கரிஷ்மா பைக்கை வாங்கி அதை பியாஜியோவாக மாற்ற,  அது செம டாக் ஆஃப் தி பஞ்சாப் ஆனது. காரணம், இது தயாரிக்கப்பட்டதற்கான காரணம் அப்படி!

இதற்கு `Agro Jetter' 'எனப் பெயர்வைத்தார். விவசாயப் பணிகளுக்குப் பயன்படும் வாகனம்தான் ஆக்ரோ ஜெட்டர். இது பைக்காகவும் இருக்காது; முழு காராகவும் இருக்காது. ஆனால், காரைப்போல் சீட்டிங் பொசிஷன்கொண்டிருக்கும். இங்கே குர்மீத் சாமியாரின் கொள்கைப்படி (!)  இந்த வாகனம், மருத்துவமனை இல்லாத ஏரியாக்களுக்கு மருத்துவர்களை பிக்கப் செய்வது, மருந்துகளை சப்ளை செய்வது என, நடமாடும் மருத்துவமனையாகச் செயல்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டதாம்.

gurmeet

இவை தவிர, தெருவுக்குத் தெரு நாம் பார்க்கும் சான்ட்ரோ  தொடங்கி அமெரிக்காவின் விலை உயர்ந்த ஹம்மர் கார் வரை இந்தப் போலிச் சாமியார் பல போலி கார்களை உருவாக்கியிருக்கிறார். அவற்றின் அணிவகுப்புதான் இங்கே நீங்கள் பார்ப்பது... 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகிலேயே நம்பர் 1 குடிகார நாடு எது? ஒரு அலசல் ரிப்போர்ட்!

 

 
os-25-drunkest-countries-in-the-world-20130924
 
 

ஆண்டுக்கு 2.5 மில்லியன் இறப்புகள் மது அருந்தும் பழக்கத்தால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது. 'உலகம் முழுவதிலும் 4 சதவிகித மரணங்கள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகிறது' என்றும் அந்த ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட ஆல்கஹால் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான மது அருந்தும் நாடுகளாக 193 நாடுகளைப் பட்டியலிட்டு அவற்றின் மது நுகர்வு விகிதங்களையும் வெளியிட்டது WHO. பொதுவாக வளர்ந்த நாடுகளில் மதுப் பழக்கம் மிக அதிக அளவிலும், முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இப்பழக்கம் குறைந்த விகிதத்திலும் இருந்து வருவதும் கண்டறியப்பட்டது.

12-Poland.jpg

மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுபானங்களில் முதலிடம் பெற்றது பீர்தான். அடுத்து வைன். அதன் பின்னரே மற்ற குடிபானங்களின் வரிசை. சிலர் குடிப்பதற்காக சொந்தமாக தொழிற்சாலை கூட வைத்திருக்கிறார்களாம். 

Latvia_Bee33r.jpg

உலகிலேயே அதிகமாக மது அருந்தும் பட்டியலில் முதல் 25 இடங்களைப் பிடித்த நாடுகள் :

பின்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்பர்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, டென்மார்க், யுனைடட் கிங்டம், பிரான்சு, ஐயர்லாந்து, போர்ச்சுகல், சவுத் கொரியா, லூதியானா, க்ரோஷியா, பெலாரஸ், ஸ்லொவேனியா, ரொமானியா, அண்டோரா, எஸ்தோனியா, உக்ரேன், ரஷ்யா, ஹங்கேரி, செக் ரிபப்ளிக், மால்தோவா, லத்வியா ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களைப் பிடிக்கின்றன.

யேமன் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் மிகக் குறைந்த அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது.

 

aufsec39f_bier.jpg

இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுதான். 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்
‘பொருந்தா ஆசைகளை உடைத்தலே சிறப்பு’
 

image_85376ec42f.jpgஆசைக்குள் அடைபடுவதால், விடை தெரியாத வாழ்வுக்குள் எம்மை இட்டுச் செல்ல வழிவகுக்கும்.  

பொருந்தா ஆசைகளை உடைத்தலே சிறப்பு. எல்லாமே வேண்டும் என எண்ணுதலே ஒரு மாயையான எண்ணம்தான்.  

எல்லோரும் துறவியாக முடியாது; ஆனால், முறைப்படி வாழ்ந்தால் நிறை மனிதராக வாழ முடியும்.  

தொடுவானத்தைப் பிடிக்க முடியாது. அதுபோல துரத்தும் பேராசையை, அதன் வேண்டுகோளை என்றும் திருப்திப்படுத்த முடியாது. ஒருவன் எங்வளவு தூரத்துக்குத்தான், தேகம் களைக்க பொருள் தேட முடியும். களைத்து அவன் வீழ்ந்துவிட்டதும் அவன் உயிர் பட்டென்று கழன்றுவிடும். தேடிய செல்வம் அவனைப் பார்த்துச் சிரிக்கும். கட்டில்லா வாழ்வு துன்பத்தில் முடியும். சந்தோசத்தை அனுபவிக்க காலத்தை வழங்குக. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 18

 

1201 : லத்­வி­யாவின் ரீகா நகரம் அமைக்­கப்­பட்­டது.


1505 : கிறிஸ்­டோபர் கொலம்பஸ் அமெ­ரிக்க கண்­டத்தை நோக்­கிய தனது கடைசிப் பய­ணத்தில் ஹொண்­டு­ராஸில் தரை­யி­றங்­கினார்.


1868 : பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிர­க­ணத்தை ஆரா­யும்­போது ஹீலியம் என்ற மூலகத்தைக் கண்­டு­பி­டித்தார்.


1877 : செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


varalau11872 : சுவீடன், – நோர்வே நாடு­களின் மன்­ன­ராக 2ஆம் ஒஸ்கார் பத­வி­யேற்றார்.


1906 : ஹொங்­கொங்கில் சுனாமி மற்றும் சூறா­வ­ளி­யினால் சுமார் 10,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1911 : ரஷ்ய பிர­தமர் பீட்டர் ஸ்டோலிபின் மீது துப்­பாக்­கிப்        ­பி­ர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது.


1917 : கிறீஸில் தெச­லோ­னிக்கி என்னும் நகரில் இடம்­பெற்ற தீவி­பத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்­தது. 70,000 பேர் வீடு­களை இழந்­தனர்.


1919 : நெதர்­லாந்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.


1938 : நியூ­யோர்க்­கையும் கன­டாவின் ஒண்­டா­ரி­யோ­வையும் இணைக்கும் ‘ஆயிரம் தீவுகள்’ பாலத்தை அமெ­ரிக்க அதிபர் பிராங்­கிளின் ரூஸ்வெல்ட் திறந்­து­வைத்தார்.


1945: அமெ­ரிக்க படைத் தள­ப­தி­யான ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர் தனது படைப்­பி­ரிவு தலை­மை­ய­கத்தை ஜப்­பானின் டோக்­கியோ நக­ருக்கு மாற்­றினார்.


1948 : ஹைத­ராபாத் நிஸாமின் படை­களின் சர­ண­டைவை இந்­திய இரா­ணுவம் ஏற்­றுக்­கொண்­டது.


1950 : பெல்­ஜியம் கம்­யூனிஸ்ட் கட்­சியின் தலைவர் ஜூலியன் லாஹுட் படு­கொலை செய்­யப்­பட்டார்.


1960 : ஐ.நா. மாநாட்­டுக்­காக கியூபாவின் தலை­வ­ராக பிடெல் காஸ்ட்ரோ முதல்  தட­வை­யாக நியூயோர்க்­குக்குச் சென்றார்.


1961 : ஐ.நா. பொதுச் ­செ­ய­லா­ள­ரான சுவீ­டனைச் சேர்ந்த டக் ஹம்­மர்ஸ்க்ஜோல்ட் கொங்­கோவில் இடம்­பெற்ற விமான விபத்தில் பலி­யானார்.


1962 : புரூண்டி, ஜமைக்கா, ருவண்டா, ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ ஆகிய நாடுகள் ஐ.நாவில் இணைந்­தன.


1971 : வியட்நாம் போர்: அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகி­யன தமது படை­களை திரும்ப அழைக்க முடிவு செய்­தன.


1973 : பஹாமஸ், கிழக்கு ஜேர்­மனி, மேற்கு ஜேர்­மனி ஆகி­யன ஐ.நாவில் இணைந்­தன.


1984 : ஜோ கிட்­டின்ஜர் என்­பவர் தனி­யாக பலூன் மூலம் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை கடந்து சாதனை படைத்தார்.


1997 : அமெ­ரிக்க ஊட­கத்­துறை வர்த்­த­க­ரான டெட் டேர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி டொலர்­களை அன்­ப­ளிப்புச் செய்தார்.


2007 : இரா­ணுவத் தள­பதி பத­வி­யி­லி­ருந்து வில­க­வுள்­ள­தாக பாகிஸ்தான் ஜனா­தி­பதி பர்வேஸ் முஸாரப் அறி­வித்தார்.


2014 : பிரிட்­ட­னி­லி­ருந்து பிரிந்து தனி நாடா­கு­வ­தற்கு எதி­ராக ஸ்கொட்­லாந்து மக்கள் வாக்­க­ளித்­தனர்.

 
2016 : பாகிஸ்­தானின் பெஷாவர் நக­ரி­லுள்ள விமா­னப்­படைத் தளத்­துக்குள் 14 தீவி­ர­வா­திகள் புகுந்து நடத்­திய தாக்­கு­த­லாலும் படை­யி­னரின் பதில் தாக்­கு­த­லாலும் 14 தீவி­ர­வா­திகள் உட்­பட 399 பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : கடலில் உணவு மழை!

 

 
Earth%20-3

முகத்தில் சுவாசக் கருவியை மாட்டிக்கொண்டு கடலுக்குள் நீந்துபவர்களைப் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். விசேஷ கேமராவைக் கொண்டு அவர்கள் வண்ண வண்ண மீன்களைப் படம் எடுப்பார்கள். இது கண் கவர் காட்சியாக இருக்கும்.

கடலுக்குள் இறங்கிப் படம் எடுப்பது என்பது ஒரு தனிக் கலை. தொலைக்காட்சியில் நீங்கள் காணும் கடலடிக் காட்சிகள் பெரும்பாலும் முப்பது அடி ஆழத்தில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். அதுவும் நல்ல வெயில் அடிக்கும்போது எடுக்கப்பட்டிருக்கும்.

கடலுக்குள் ஒருவர் எவ்வளவு ஆழம் இறங்கலாம் என்பது குறித்துப் பல விதிமுறைகள் உள்ளன. மேலே வருவது தொடர்பாகவும் இப்படி விதிமுறைகள் உண்டு.

இவை ஒருபுறம் இருக்க, கடல் வாழ் விலங்குகளில் பெரும்பாலானவை 60 அடி (சுமார் 20 மீட்டர்) ஆழத்துக்குள்ளாகத்தான் வாழ்கின்றன. கடல் வாழ் தாவரங்களும் அப்படித்தான். ஒளிச்சேர்க்கை மூலம் வளருவதற்கு அவற்றுக்குச் சூரிய ஒளி தேவை. கடலில் 200 மீட்டர் ஆழம் வரைதான் வெளிச்சம் இருக்கும். அந்த ஆழத்துக்குக் கீழே மிக மங்கலான நீல நிற வெளிச்சம் சுமார் 1,000 மீட்டர் வரை இருக்கும். கடலில் அதற்குக் கீழான ஆழத்தில் வெளிச்சமே இருக்காது. எப்பொழுதும் இருட்டாக இருக்கும்.

அந்த ஆழத்தில் வசிக்கும் மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவு ஒரு பிரச்சினை. அவை ஒன்றை ஒன்று தாக்கி உண்ண வேண்டும். அல்லது மேலிருந்து உணவு வரும் என்று காத்திருக்க வேண்டும். கடலின் மேல் மட்ட்த்தில் வாழும் உயிரினங்கள் மரித்த பின்னர், அவற்றின் உடல்கள் கடலில் கீழ் நோக்கி இறங்கும். ஆழத்தில் வசிக்கும் உயிரினங்களுக்கு இவைதான் உணவு. அந்த அளவில் கடலில் எப்போதும் உணவு மழை இருந்துகொண்டே இருக்கும்.

Earth%20-2
 

ஆழ்கடலில் கும்மிருட்டில் வாழும் மீன்களிடம் ஒளியை உண்டாக்கும் உறுப்புகள் உண்டு. மீன்களின் உடலில் உள்ள சில வேதியியல் பொருட்கள் மூலம் இந்த ஒளி உண்டாக்கப்படுகிறது. இது மின்மினிப் பூச்சிகளின் ஒளி போன்றதே. இது உயிரிஒளி என்று அழைக்கப்படுகிறது. சில மீன்களுக்கு இந்த ஒளி உறுப்புகள் முன்புறத்தில் அமைந்திருக்கும். தூண்டில் மீன் இதற்கு உதாரணம். இந்த வகை மீனின் தலைப்புறத்தில் நீண்ட உறுப்பு உண்டு. இது முன்புறமாக நீட்டிக்கொண்டிருக்கும். இதன் முனையில் ஒளிரும் பகுதி அமைந்திருக்கும். தூண்டில் மீன்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன. இவை சுமார் 3,000 அடி ஆழத்தில் வாழ்பவை.

ஒளி உமிழும் உறுப்புகளை இந்த மீன்கள் பெற்றுள்ளதற்கு இரண்டு காரணங்கள். என்னை நெருங்காதே என்று எச்சரிக்கை விடுப்பதாக இருக்கலாம். அல்லது அந்த ஒளியைப் பார்த்து அதனால் கவரப்பட்டு அருகே வருகிற வேறு உயிரினங்களைப் பாய்ந்து பிடிப்பதற்கான உத்தி என்றும் கூறலாம்.

கும்மிருட்டில் ஆழ்கடலில் வாழும் மீன்கள் பொதுவாக விகாரமாகக் காட்சி அளிக்கின்றன. சில வகை தூண்டில் மீன்கள் பயங்கரமான உருவில் காணப்படும்.

ஒரு காலத்தில் ஆழ்கடலில் உயிரினமே இருக்காது என்று கருதப்பட்டது. பின்னர்தான் ஆழ்கடலிலும் பல வகை உயிரினங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.

உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் மரியானா டிரெஞ்சில் உள்ள சேலஞ்சர் மடு. இது பசிபிக் கடலில் உள்ளது. அங்கு கடல் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். 1960-ம் ஆண்டில் விசேஷ மூழ்குகலம் மூலம் இரு நிபுணர்கள் அந்த இடத்தில் இறங்கினர். மூழ்குகலத்தின் ஜன்னல் கண்ணாடி வழியே அவர்கள் பார்த்தபோது சில மீன்கள் தென்பட்டன. அந்த ஆழத்திலும் உயினங்கள் இருக்கின்றன என்பது தெரியவந்தது.

கடலில் மிக ஆழத்தில் வாழும் உயிரினங்கள் கடலின் மேல் மட்டத்துக்கு வருவது கிடையாது. அதேபோல கடலில் முப்பது அல்லது நாற்பது அடி ஆழத்தில் வாழும் மீன்கள் ஆழ்கடலுக்குள் இறங்குவது கிடையாது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக பணக்காரர் பில்கேட்ஸை பிரம்மிக்க வைத்த பணக்காரர் யார் தெரியுமா?

கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்டாராம் உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா? என்று அதற்கு பதிலளித்த பில்கேடஸ் ஆம். ஒருவர் இருக்கிறார் என்று கூறினராம்.

உலக பணக்காரர் பில்கேட்ஸை பிரம்மிக்க வைத்த பணக்காரர் யார் தெரியுமா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டபோது நியூயோர்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. 
எனவே, அதை விடுத்தேன்.

உலக பணக்காரர் பில்கேட்ஸை பிரம்மிக்க வைத்த பணக்காரர் யார் தெரியுமா?

அப்போது,ஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.

என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை என்று கூறி இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.

மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது.

அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான். ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய இலாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.

பின்னர் 19 வருடங்கள் கழித்து நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.

உலக பணக்காரர் பில்கேட்ஸை பிரம்மிக்க வைத்த பணக்காரர் யார் தெரியுமா?

அவனைக் கேட்டேன். என்னைத் தெரிகிறதா என்று.தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ் என்று கூறினார்.

பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன்.

தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.
உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது. என்றான் அந்தக் கருப்பு இளைஞன்.

உலக பணக்காரர் பில்கேட்ஸை பிரம்மிக்க வைத்த பணக்காரர் யார் தெரியுமா?

ஏன்? என்றேன் நான்.

அந்த இளைஞன் நான் ஏழையாய் இருந்த போது உங்களுக்குக் கொடுத்தேன் ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீர்கள்.

ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும்? என்றான்

அந்த கருப்பு இளைஞன் தான் என்னை விட பணக்காரன் என்பதை உணர்ந்தேன் என்றார் பில்கேட்ஸ்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இனி மூளை நம் மனம் சொல்வதைக் கேட்குமாம்... எப்படி? #Brainternet

 
 

முளை

நம் உடலின் இயக்கங்கள் தமிழக அரசு என்றால், அதைக் கட்டுப்படுத்தும் பா.ஜ.க என்பது மூளைதான். பசி, தூக்கம், கோபம் போன்ற உணர்ச்சிகள், இந்த உணர்ச்சிகளால் செய்யப்படும் செயல்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூளைதான். மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலும் மூளையின் இயக்கம், அவை எவ்வாறு செய்திளைக் கடத்துகிறது போன்ற தகவல்கள் இன்றளவும் ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் மனித மூளையை இணையத்துடன் இணைக்கும் கருவியை விட்ஸில் (Witz School of Electrical and Information Engineering) உள்ள உயிரிமருத்துவ பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் பெயர் Brainternet. கேட்கும்போதே ‘வாவ்’ என்றிருக்கிறதா?

Brainternet என்பது புதிதாக கண்டறியப்பட்ட மூளை - கணினி இடைமுக அமைப்பு (Interface). மூளையின் அலைவரிசைகளை இணையத்துடன் இணைப்பது இதன் வேலை. Brainternet திட்டத்தின் மூலம் ஒரு மனிதனால் எளிமையாக தன்னுடைய மூளையின் செயல்பாடுகளை கண்டறியமுடியும். என்கிறார் “பாண்டனோவிட்ஸ்" (Adam Pantanowitz) . மூளையை எலக்ட்ரோ என்செபலோகிராம் ( மூளை அலைகளை) மாற்றுவதன் மூலம் வேலை செய்கிறது  Brainternet .

மூளையிலுள்ள மோட்டார் புறணிகள் (Motor Cortex) மனிதனின் திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல், செயல்படுத்துதல் போன்ற செயல்களை கவனித்துக்கொள்கின்றன. மூளையிலிருந்து வரும் மின்தூண்டுதல்கள் மோட்டார் நரம்புகள் வழியாக தசைகளை குறிவைக்கின்றன. மூளையின் இடது அரைபகுதியிலிருந்து தகவல்கள் உடலின் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள ராஸ்பெர்ரி பைக்கு (Rasberry pi) பதிலை தருகிறது.

இஇஜி (EEG)என்பது எலக்ட்ரோ என்செபலோகிராப். பாக்கெட் அளவிலான iwtha மொபைல் சாதனத்தில் எங்கும் எளிதில் எடுத்துக்செல்லலாம். இஇஜி (Emotiv EPOV ) 14 சேனல்களுடன் தொடர்புடைய14 மின்முனைகளை கொண்டு உச்சந்தலையில் பொருத்துவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தன் மூளையின் செயல்பாட்டை அறிய விரும்பும் ஒருவர் இந்த எமோட்டிவ் இஇஜி(Emotive EEG) எனும் மொபைல் சாதனத்தை நீண்ட நேரம் தலையில் அணிந்திருக்க வேண்டும். இந்த சமயத்தில் எமோட்டிவ் இஇஜி மூளையின் சமிக்ஞைகளை ராஸ்பெர்ரி பைக்கு கடத்துகிறது. ராஸ்பெர்ரி பை என்பது கிரெடிட் கார்ட் போன்ற சிறிய அளவிலான கணினி. இந்த லைவ் சமிக்ஞைகள் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்துக்கு காட்டப்படுகின்றன. இதன் மூலம் அந்த நபர் மூளையின் செயல்பாடுகளைக் கவனிக்கமுடியும்.

brainternet

பயனர்களின் மூளையின் செயல்திறனை அறிந்துகொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எனவே, இது பயன்பாட்டாளர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதோடு, பதிலை பார்க்கவும் உதவுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆராய்ச்சியின் இது ஆரம்பம் மட்டுமே என பாண்டோவிட்ஸ் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சிக் குழுவின் அடுத்த நோக்கம், பயனாளர் மற்றும் அவர்கள் மூளையின் இடையே ஓர் ஊடாடும் அனுபவத்தை ஏற்படுத்துவதேயாகும். “மேற்கூறப்பட்ட இந்த அமைப்புகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தில் இருந்தாலும் அவை குறுகிய வடிவமைப்புகளுடன் வரையறுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின்  மூலமாக பதிவுகளைப் பிரித்தெடுக்க மென்பொருளை மேலும் மேம்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.

எதிர்காலத்தில் மூளையின் உள்ளீடு மற்றும் வெளியீடு என ஓர் உரையாடல் போல இருதிசைகளிலும் தகவல் பரிமாற்றம் செய்யமுடியும் என பாண்டனோவட்ஸ் கூறியுள்ளார். அதாவது, நாம் மூளைக்கே வேலை சொல்ல முடியும்.

இந்த ஆராய்ச்சியில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் நம் மனதில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், நம் மூளையின் சக்தியை அதிகரிப்பதற்கு அறிவை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் நன்கு அறிந்துகொள்ளலாம்.

டெக்னாலஜி நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்தும் எனத் தெரியவில்லை. இதுபோன்ற ஆராய்ச்சிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஆபிரிக்க நாட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்!

 

ஆபிரிக்க  நாடான, போட்ஸ்வானாவின் தலைநகர், காபரோனில் இந்துக் கோயில்  ஒன்று அமைந்துள்ளது.

காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே, உள்ள  எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம், இந்த கோயில் அமைந்துள்ளது.

ஆபிரிக்க   நாட்டில்   அமைந்துள்ள    சிவன்  கோவில்!

கோயிலினுள் நுழைந்தவுடன் நவகிரகங்கள் உள்ளன.

கோயிலின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது.

சிவபெருமானை சுற்றி சுப்பிரமணியர், பார்வதி, விநாயகர் சிலைகள் அமைந்துள்ளன.

கோயில் சுவர்களில் சிறு குகைகள் போல அமைக்கப்பட்டு அதில், இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்திற்கு முன்னால், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் உட்பகுதியில்  பெரிய  மண்டபம்  ஒன்றும்    உள்ளது.

அதில் ராமர், சீதா, லட்சுமணன், அனுமான் சிலைகள் உள்ளது.

மேலும் வள்ளி, தெய்வானையுடன் முருகன், லட்சுமி, பத்மாவதியுடன் வெங்கடேஸ்வரர் சிலைகளும் உள்ளன.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் 'பிக் பாஸ்' ஓவியா!

 
 

ஓவியா

'பிக் பாஸ்' இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை அடையவிருக்கிறது. தமிழக மக்களை அடிக்கடி உச்சரிக்க வைத்த வார்த்தை சமீபத்திய வார்த்தை 'பிக் பாஸ்'. பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அனைவரையும் ஒருசேர ஈர்க்க வைத்த பெயர் ஓவியா. 

 

பிக் பாஸ் ஓவியா

 


நடிகை ஓவியா 'பிக் பாஸ்' ஓவியாவாகி, ஓவியா ஆர்மியாகிவிட்டார். இன்னும் அவருடைய ரசிர்களின் ஃபேன் பேஜ் ட்விட்டர், ஃபேஸ்புக் என இயங்கிக்கொண்டிருக்கிறது. ஓவியா 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, தன் வேலைகளில் பிசியாவிட்டார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி எப்படியாவது ஓவியா திரும்பி வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது நடக்காமலே போய்விட்டது. இந்நிலையில், அவ்வப்போது ட்விட்டரில் எதாவது ஒரு போஸ்ட் போட்டபடி இருந்தார். அந்த வரிசையில் தற்போது, ரசிகர்களுடன் பேசத் தயாராக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.

ட்விட்டரில் என்னுடன் கலந்துரையாட நிறைய பேர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் உரையாட ஆசையாகத்தான் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களைக் கடந்தபின் நம் கலந்துரையாடலை வைத்துக்கொள்வோம்” எனப் பதிவிட்டிருக்கிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வடிவேல் சொல்லும் திருக்குறள் | சிரிக்காம சிந்திங்க!!! - 18-09-2017

  • தொடங்கியவர்

சென்னை விமான நிலையத்தின் தரையில் உற்சாகமாக தோனி, கோலி, பாண்டியா

kiolpng

கே.எல். ராகுலுடன் பாண்டியா

DJ0SmNVoAA0hNbjpg

சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் கோலி, தோனி, பாண்டியா | படம் உதவி: ட்விட்டர்

kiolpng

கே.எல். ராகுலுடன் பாண்டியா

DJ0SmNVoAA0hNbjpg

சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் கோலி, தோனி, பாண்டியா | படம் உதவி: ட்விட்டர்

சென்னை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தரையில்  உற்சாகமாக அமர்ந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி, ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தினால்  ஆஸ்திரேலியாவை இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து 2வது ஒரு நாள் போட்டியில் போட்டி நடைபெறும் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்த புகைப்படங்கள் , வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

அவைகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில்  பயணிகள் காத்திருப்பு தளத்தில் தரையில் அமர்திருக்கும் காட்சிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால்  அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த புகைப்படங்களில் கோலி, பாண்டியா, பும்ரா, ராகுல் ஆகியோர் தரையில் அமர்ந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரரும் மிஸ்டர் கூலுமான முன்னாள் கேப்டன் தோனி தரையில் ரிலக்ஸாக படுத்திருக்கிறார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கான இன்றைய தேவையை பூர்த்தி செய்துள்ளது.

இந்தப் புகைப்படத்தை தோனி தனத் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

பெண்களின் உடற்பருமன் ஊதியத்தை நிர்ணயிக்கலாமா?

நூறு வருடங்களுக்கு முன்னதாக ரஷ்ய புரட்சி, பெண்களுக்கு முன்னெப்போதும் இல்லாத சமத்துவத்தை தந்தது. அவர்களுக்கு வாக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினேழில் கிடைத்தது. கருக்கலைப்பு விரைவில் சட்டமாக்கப்பட்டது.

அதனையடுத்து சோவியத் ஒன்றியந்தான் விண்வெளிக்கும் பெண்களை முதன் முதலில் அனுப்பியது. ஆனால், இன்று ரஷ்யாவின் நவீன பெண்கள் மீண்டும் பாரபட்சத்தை எதிர்கொள்கிறார்கள்.

அவர்கள் தோற்றம் மற்றும் திறன் போன்றவற்றில் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். தனது எடை அதிகமாக இருப்பதாகக்கூறி தனது சம்பளத்தை குறைத்த விமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுத்த விமான பணிப்பெண் குறித்த செய்தித் தொகுப்பு இது.

  • தொடங்கியவர்

மரங்களைக் கொண்டு QR தொழில்நுட்பக் குறியீட்டை உருவாக்கிய சீனக் கிராமம் (Photos)

 


மரங்களைக் கொண்டு QR தொழில்நுட்பக் குறியீட்டை உருவாக்கிய சீனக் கிராமம் (Photos)
 

வடக்கு ஹெபே மாகாணத்தில் உள்ள ஷிலின்சுவா கிராமம், தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள ஒரு புதிய முயற்சியாக மரங்களைக் கொண்டு QR கோடுகளை உருவாக்கியுள்ளது.

இந்த வடிவமைப்பு 130,000 சீன ஜூனைப்பர் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மேல் பகுதியிலிருந்து ஃபோன் அல்லது டேப்லட்டைக் கொண்டு அதை ஸ்கேன் செய்ய முடியும்.

எவ்வளவு உயரத்திலிருந்து ஸ்கேன் செய்ய வேண்டும், அந்த உயரத்திற்கு எவ்வாறு செல்வது என்பவை பற்றியெல்லாம் தெளிவான தகவல் இல்லை.

ஆனால், குறியீட்டை வெற்றிகரமாகப் பதிவு செய்யும் பார்வையாளர்கள், வி-சேட் என்ற சீன சமூக வலைத்தளத்தின் மூலம் அந்த கிராமத்தின் சுற்றுலாக் கணக்குடன் இணைக்கப்படுவார்கள்.

அதன் பரந்த வடிவமைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் 227 மீட்டர் (744 அடி) இருக்கும், அதற்கிடையில் இருக்கும் மரங்கள் 80 செ.மீ மற்றும் 2.5 மீ உயரத்தில் இருக்கும் என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் QR குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

கறுப்பு மற்றும் வெள்ளை சதுரங்களில் உள்ள சிறிய குறியீடுகள் பல தகவல்களை சேகரித்துக்கொள்ளும்.

உணவக சிப்பந்திகள் சில இடங்களில் தங்கள் சட்டைகளில் QR பட்டைகளைப் பொருத்தியிருப்பார்கள். வாடிக்கையாளர்கள் அவர்களின் QR பட்டையை ஸ்கேன் செய்து, டிப்ஸ் வழங்க முடியும்.

 

_97817962_qrcode2 11_qr_330_2

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘சுவைபட உரைத்தல் சுலபமானது அல்ல’
 

image_13115bab6a.jpgபுதிதுபுதிதாக மாணவர்களுக்குச் சுவாரஷ்யமாகச் சொல்லிக் கொடுப்பவரே நல்லாசான் ஆகிறார்.  

ஒரு திறமையான ஆன்ம வலுப்பெற்ற இவர்கள், கல்வியூட்டும்போதே, அதை உள்வாங்கி, உடன் மனனம் செய்யும் ஆற்றல்களை வழங்கிவிடுதல் அற்புதமானது.  

இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள், தமது கற்பித்தல் முடிந்தபின் வகுப்பைவிட்டு வெளியேறும்போது, எமது முகம் வாடுவதும், அவர் மீண்டும் வகுப்புக்குள் பிரவேசிக்கும்போது, எங்கள் முகம் மலர்வதும் நாம் பெற்ற அனுபவமாகும். 

சுவைபட உரைத்தல் சுலபமானது அல்ல! நல்ல உள்ளத்தெளிவும் அனுபவ ஞானமும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவச் செல்வங்களுடன் உள்ளத்துடன் உறவாடுவது மேலான கலையாகும்.  

முன்னைய ஆசிரியர்கள் கல்வியை காசாக்க எண்ணியவர்கள் அல்ல; விடுமுறை காலங்களிலும் போதித்தார்கள். ஏழை மாணவர்களை வாழவைத்த வள்ளல்கள் இவர்கள். இவர்களின் நினைவுகள் என்றும் எம் நெஞ்சத்தில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.