Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்

 


ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்
 

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் வளர்க்கும் பூனைகள் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.

இவர்களின் பூனைகளில் ஒன்றான சிக்னஸின் வால் மிக நீளமானது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இது தான். இதன் வாலின் நீளம் 18.4 அங்குலம்.

சிக்னஸுக்கு 2 வயதாகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இயல்பான பூனைகளைவிட இதன் வால் மிக நீளமாக இருந்தது. இந்தப் பூனையின் சகோதரனுக்கு வால் சாதாரணமாகத்தான் இருக்கிறது. காரணம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பூனையின் வால் அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பித்தது. அதற்குப் பிறகே சிக்னஸின் வாலைப் பாதுகாக்க ஆரம்பித்தோம். கதவு பின்னால் ஒளிந்து கொள்ளும்போது வால் கதவில் சிக்கிவிடும். உயரமான இடத்திலிருந்து குதிக்கும்போது வாலுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிடும். இவனைக் கண்காணிப்பதே ஒரு பெரும் வேலையாக மாறிவிட்டது. சென்ற வருடம் ஜூன் மாதம் கின்னஸ் நிறுவனத்திலிருந்து வந்து சிக்னஸின் வாலை அளந்தனர். 17.58 அங்குல நீளம் இருந்தது. தற்போது 18.4 அங்குலமாக வளர்ந்துவிட்டது. மாதந்தோறும் வளர்ச்சி தெரிகிறது.

என லாரன் தெரிவித்துள்ளார்.

சிக்னஸின் சகோதரன் ஆர்க்ட்ரஸும் ஒரு கின்னஸ் சாதனையை நிகழ்த்திவிட்டது.

உலகின் மிக உயரமான வீட்டுப் பூனை என்ற பட்டத்தை அது பெற்றிருக்கிறது. இதன் உயரம் 19.5 அங்குலம்.

ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றார்கள் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர்.

cats

http://newsfirst.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : பனி யுகம்

 

 
Snow%20-1

சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் மக்கள் வசித்துவந்தார்கள். அவர்கள் எப்படி வசித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் அப்போது இருக்கவில்லை. கனடாவும் இல்லை. ஏனெனில் அவை அனைத்தும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்தன. அமெரிக்காவின் வட பகுதியும் இதேபோல பனிக்கட்டிக்கு அடியில் இருந்தது. ரஷ்யாவின் வட பகுதியும் இப்படித்தான் இருந்தது.

பனிக்கட்டி என்றால் சாதாரணப் பனிக்கட்டி அல்ல. தரையிலிருந்து 3 முதல் 4 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பனிக்கட்டி மூடியிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே பனிக்கட்டிதான். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 3 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பனிக்கட்டி மூடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

பூமியில் இப்படிச் சில பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்த காலத்தை பனி யுகம் என்கிறார்கள்.

வட துருவப் பகுதியில் உள்ள கிரீன்லாந்தின் நிலப் பகுதி இப்போது 80 சதவிகித அளவுக்குப் பனிக்கட்டியால் மூடப்பட்டதாக உள்ளது. பூமியானது திடீரென்று குளிர்ந்து போனால் கிரீன்லாந்தின் பனிக்கட்டி தெற்கு நோக்கிப் பரவி பழையபடி மேலே குறிப்பிட்ட நாடுகளை எல்லாம் மூடிவிடும். அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் பனிக்கட்டியால் மூடப்பட்டுவிடும்.

கடந்த காலத்தில் பல நாடுகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்ததற்குப் பூமி குளிர்ந்து போனதே காரணம். சூரியனிடமிருந்து பூமியானது வெப்பத்தைப் பெறுகிறது. இந்த வெப்பம் குறைந்து போனால் பூமி குளிர்ந்து போகிறது. இதற்குச் சூரியன் காரணமல்ல, பூமிதான் காரணம்.

சூரியனை பூமி சுற்றி வருவதை நாம் அறிவோம். பூமியானது ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில்தான் சூரியனைச் சுற்றிவருகிறது. இந்தச் சாய்மானம் காரணமாகத்தான் பூமியில் கோடைக்காலம், குளிர்காலம் ஆகிய பருவங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்தச் சாய்மானம் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. இப்போது சாய்மானம் 23.5 டிகிரி அளவில் உள்ளது.

Snow%20-2
 

இது 24.5 டிகிரியாக அதிகரிக்கும். பின்னர் சாய்மான அளவு குறைய ஆரம்பித்து பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, சாய்மானம் 22.1 டிகிரியாக மாறும். பிறகு மறுபடி சாய்மானம் அதிகரிக்கும். தவிர, பூமியின் அச்சு வானில் ஒரு வட்டம் போடுகிறது. அந்த அளவில் சாய்மானம் நேர் மறுபுறத்துக்கு மாறி விடும். அப்படி மாறினால் என்ன ஆகும்? தமிழகத்தில் டிசம்பரில் வெயில் பொசுக்கும். மே மாதம் குளிர்காலமாக இருக்கும்.

இப்படியான மாறுதல்கள் மட்டுமின்றி, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரமும் மாறுபடுகிறது.

பூமியானது சூரியனைச் சற்றே நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே ஜனவரி மாதத்தின்போது சூரியனுக்கு உள்ள தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. ஜூலையில் இது 152 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. எனவே சூரியனுக்கு உள்ள தூரத்தில் ஏற்படும் மாறுபாடு 5 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. இது பெரிய வித்தியாசம் இல்லை.

எனினும் இந்த வித்தியாசம் சில நேரங்களில் அதிகரித்துவிடுகிறது. இதுவரை கூறப்பட்ட அம்சங்களின் விளைவாக சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போகிறது.

செர்பியா நாட்டைச் சேர்ந்த மிலுடின் மிலன்கோவிச் என்னும் நிபுணர்தான் 1913-ம் ஆண்டில் இந்த மாறுபாடுகள் குறித்த தமது கொள்கையை வெளியிட்டார்.

பூமியின் வட கோளார்த்தத்தில் கோடைக்காலத்தில் வெயில் நன்கு உறைக்கிற அளவுக்கு இருக்குமானால் குளிர்காலத்தில் சேர்ந்த பனிக்கட்டிகள் உருகிவிடும். கோடைக்காலங்களில் தொடர்ந்து வெயில் அளவு குறையுமானால் பனிக்கட்டிகள் மேலும் மேலும் சேர்ந்து இறுதியில் பனி யுகம் தலைகாட்ட ஆரம்பிக்கும்.

வருகிற ஆண்டுகளில் மறுபடி பனியுகம் தலைகாட்ட வாய்ப்பில்லை. இப்போது பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதன் விளைவாக துருவப் பகுதிகளில் குறிப்பாக வட துருவத்தில் பனிக்கட்டி அளவு குறைந்துவருகிறது.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

 

மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களால் உருவாகும் உணவு

மீத்தேன் வாயுவை உண்ணும் பாக்டீரியாவை பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை தயாரிக்கும் புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ஆலன் ஷாவின் சிந்தனையில் இது உதித்ததாகும்.

உணவுகளை தயாரிக்கும் போது சுற்றுச்சுழலுக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை இது பெரிதும் தவிர்க்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அந்தத் திட்டம் குறித்து பிபிசி அவரோடு பேசியது.

  • தொடங்கியவர்

கூகுள் டூடுலில் இருக்கும் அந்த பச்சைப் பெண் யார் என்று தெரியுமா?

|  

 
ASIMA-8751

 

அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணியான முனைவர். அசீமா சாட்டர்ஜி அவர்களின் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பச்சை நிறத்திலான இந்த டூடுல் எழுத்துக்கள் அறிவியலில் வேதியியல் ஃபார்முலாக்களை எழுதும் பாணியில் வடிவமைக்கப்பட்டு அதற்கு மத்தியில் மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு பெண் கண்களை மூடியபடி சிரித்த முகத்துடன் இருப்பது போல் உள்ளது. அந்தப் பெண் வேறு யாரும் இல்லை இந்தியாவில் இருக்கும் கொல்கத்தாவில் பிறந்து வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுத் தான் இந்தியாவின் அறிவியல் துறையில் சாதனைப் படைத்தது மட்டுமின்றி பல பெண்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர்.

Dr_A_Chatterjee_(1961).JPG

செப்டம்பர் 23, 1917-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொல்கத்தாவில் பிறந்து 1944-ம் ஆண்டிலேயே வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த காலத்தில் இந்தியப் பெண்கள் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படிப்பதே மிகவும் அரிது, அதிலும் மருத்துவப் படிப்பை தாண்டி வேதியியல் போன்ற துறைகளைத் தேர்வு செய்வது அதைவிட அரிதான ஒன்று. வேதியியல் துறையில் இயற்கைப் பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர் வலிப்பு நோய், மலேரியா மற்றும் கீமோதெரபி போன்ற பிரச்னைகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடித்தார்.    

அறிவியல் துறையில் இவர் செய்த சாதனைகளுக்காகப் பல உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.பாட்நகர் விருது, சி.வி.ராமன் விருது, பி.சி.ரே விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன்விருதையும் இவர் பெற்றுள்ளார். பேராசிரியராக கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். 

dfa.jpg

400-க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த பத்திரிகைகளை நாடு முழுவதும் இவர் வெளியிட்டார், இவருடைய மதிப்பாய்வு கட்டுரைகள் அனைத்தும் பல தொகுதிகளாகப் புத்தக வடிவுப் பெற்றன. மேலும் அவற்றில் பெரும்பாலானவை பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டன. 

1975-ம் ஆண்டு அசீமா இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையையும் பெற்றார். அந்தச் சங்கத்தின் 62-வது அமர்வில் ஜனாதிபதி முன்னிலையில் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்போதைய நிலையும், எதிர்காலமும்” என்கிற தலைப்பில் அவர் பேசிய அந்த ஆற்றல் மிக்க பேச்சை கேட்டவர்கள் எவராலும் அதை எளிதில் மறக்க முடியாது. 1975-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னீட்டு பெங்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆண்டின் தலைசிறந்த பெண்மணி என்கிற விருதை இவருக்கு வழங்கியது. 

 
 

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே பேராசிரியர் பாரதநந்த சாட்டர்ஜியை திருமணம் செய்து கொண்டார். இவரும் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, ஹவுராவில் உள்ள பெங்கால் பொறியியல் கல்லூரியில் புவியியல் மற்றும் உலோகத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ஜூலி எனப் பெயர் சூட்டினர். தனது கணவனின் துணையின்றி தன்னால் வாழ்வில் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்க முடியாது என்று அசீமாவே கூறியுள்ளார். அதே சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, மருமகளாக, சகோதரியாகத் தனது பணிகளைச் சரியாக செய்வார். காலையில் எழுந்து சமையல் உட்பட வீட்டில் உள்ள முக்கிய வேலைகளை செய்துவிட்டுதான் கல்லூரிக்குச் செல்வராம், அதே போல் இரவு தாமதமாக வந்தாலும் ஓய்வின்றி மீண்டும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவாராம்.

dfdgref.jpg

தனது பெற்றோர்களைப் போல ஜூலியும் வேதியியல் துறையிலேயே தனது முனைவர் பட்டத்தை பெற்று அதே கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் தலைவரானார். ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று இந்தச் சமூகம் பெண்ணைக் கல்லாமை என்கிற சிறையில் அடைத்து வைத்திருந்த காலகட்டத்திலேயே பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்யாத வேதியியல் துறையை தேர்வு செய்து அந்தத் துறையில் பல சாதனைகளையும் படைத்து பிற்காலத்தில் எண்ணற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்கிய அசீமா சாட்டர்ஜீயை அவருடைய நூறாவது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

8வது அதிசயம் நியுசிலாந்தில்

 

நியுசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலையை 8வது உலக அதிசயமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8வது அதிசயம் நியுசிலாந்தில்

மற்ற 7 அதிசயங்களை காட்டிலும் இந்த உலக அதிசயம் முற்றிலும் மாறுபட்டது  என தெரிவிக்கப்படுகிறது.

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும்.

8வது அதிசயம் நியுசிலாந்தில்

இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர் , சிடோனின் அண்டிப்பெற்றர் என்பவர்தான்.

இதற்கு முன்னர்,ஹிரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கிருந்தனர்.

சீனப் பெருஞ்சுவர்,எகிப்து பிரமிட்டுக்கள்,ஈபில் டவர் ,தாஜ்மஹால் போன்றவை நாம் அறிந்த பெரும்பாலான அதிசயங்களில் சிலவாகும்.

8வது அதிசயம் நியுசிலாந்தில்

இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு புதிய அதிசயங்கள் அறிவிக்கபட்டன. இந்நிலையில் உலகின் எட்டாவது அதிசயம் நியுஸிலாந்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மவுண்ட் தரவேரா எரிமலை செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி ,சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உருவாகியுள்ளது.

8வது அதிசயம் நியுசிலாந்தில்

இது சுற்றுல்லா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் இந்த தோற்ற அமைப்பு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இப்பகுதியை நியுஸிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாப்பற்ற இடமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் விரைவில் இவ்விடத்தினை உலகின் 8வது அதிசயமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

British tehcnology its 2020 1f60e.png?1f60e.png?
Saudi technology its 20301f60e.png?1f60e.png?
Khan technology its 20501f633.png?1f923.png?1f60e.png?1f60e.png

  • தொடங்கியவர்

 

சமோ தீவில் மட்டுமே வாழும் அபூர்வ பறவைக்கான தேடுதல்

டோடோ பறவை நானூறு வருடங்களுக்கு முன்பாக அழிந்து போய்விட்டது.

குட்டி டோடோ என்று அழைக்கப்படும் அதன் வகையை ஒத்த இன்னுமொரு பறவை இன்னமும் இருக்கிறது. ஆனால், அதுவும் அருகிவருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சமோ நாட்டின் தேசிய பறவையான இதன் பெயர் மனுமேயா. இந்த இன பறவைகளை காப்பாற்ருவதற்கான தேடுதல்கள் ஆரம்பித்துள்ளன.

அந்தப் பறவையின் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இருக்கும் சூழலில், தேடுதல் மிகவும் சிக்கலானதாக உள்ளது.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை போட முடியும் நம்புவீர்களா?

 

உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை  போட முடியும் நம்புவீர்களா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனியொருவனா, ஆயிரத்தில் ஒருவனா? உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் நீங்கள் யார் என்பதை...!  

1.பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது. தாடையை சொறிவது. மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.   

3. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதின் மூலமே சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள்  உங்கள் சின்ன சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை  போட முடியும் நம்புவீர்களா?

4. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும். 

5. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.   

உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை  போட முடியும் நம்புவீர்களா?

6. போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள். 
 உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை  போட முடியும் நம்புவீர்களா?
7. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர்  காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ. அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது. காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம். நம் மீதான நம்பிக்கையை  சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனியொருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான்.  ஆனால் நம் உடலை , நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

தனது குழந்தைகளை பாதுகாக்க பயங்கரமான எதிரிகளை சமாளிக்கும் தவளை

கோஸ்டா ரிக்காவில் பேராசை கொண்ட குளவியிடம் இருந்து முட்டைகளை பாதுகாக்கும் கண்ணாடி தவளை தந்தை

கோஸ்டா ரிக்காவில் பேராசை கொண்ட குளவியிடம் இருந்து முட்டைகளை பாதுகாக்கும் கண்ணாடி தவளை தந்தை

 

பிளானட் எர்த் II இன் "ஜங்கில்ஸ்" தொடரின் மூன்றாவது நிகழ்ச்சியில் இந்த சிறிய தவளை சண்டையிடுவதை பார்த்திருக்கலாம். காடுகள் மற்றும் காடுகளின் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த கண்ணாடி தவளை சிறியதாக தெரிந்தாலும், தந்தையான இதற்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது. பல பெண் தவளைகளின் முட்டைகளை கண்காணித்து, அவைகளை பசி கொண்ட குளவிகளின் கூர்மையான தாக்குதலில் இருந்து பாதுகாத்து காப்பாற்றவேண்டும்.

பல வாரங்களுக்கு குளவியின் கொடுக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும்

மேற்கு பப்புவாவில் மரங்களில் நடைபோடும் சிவப்பு நிற ஆண் சொர்க்கப் பறவை Image captionமேற்கு பப்புவாவில் மரங்களில் நடைபோடும் சிவப்பு நிற ஆண் சொர்க்கப் பறவை

உலகிலேயே மிகவும் செழுமையான இடங்கள் வனங்களே. ஆறு சதவீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்டுள்ள காடுகளில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.

பிளானட் எர்த் II இன் மூன்றாவது நிகழ்ச்சியில், ஒரு மாயாஜாலக் காட்டில் நாம் மேற்கொண்ட பயணத்தின்போது, உலகில் மறக்கமுடியாத பாத்திரங்களை நிரப்பி, இந்த்ரி, ஜாகுவார், சொர்க்கப் பறவைகள், சிலந்தி குரங்குகள் (spider monkeys) போன்ற மறக்கமுடியாத, காணக்கிடைக்காத விலங்குகளை கண்டு மகிழ்ந்தோம்.

இரையைத் தேடி வனத்தில் ரோந்து செல்லும் ஜாகுவார்படத்தின் காப்புரிமைEMMA NAPPER / BBC NHU 2016 Image captionஇரையைத் தேடி வனத்தில் ரோந்து செல்லும் ஜாகுவார் ஈகுவடார் வனத்தில் மேகமூட்டத்திற்கு இடையே வாள் அலகு ஓசனிச்சிட்டுபடத்தின் காப்புரிமைTOM HUGH-JONES / BBC NHU 2016 Image captionஈகுவடார் வனத்தில் மேகமூட்டத்திற்கு இடையே வாள் அலகு ஓசனிச்சிட்டு ஆசியக் காடுகளில் மரங்களில் வாழும் பறக்கும் டிராகன்கள் எனப்படும் டிராகோ பல்லிகள்படத்தின் காப்புரிமைMADELEINE CLOSE / BBC NHU 2016 Image captionஆசியக் காடுகளில் மரங்களில் வாழும் பறக்கும் டிராகன்கள் எனப்படும் டிராகோ பல்லிகள்

இங்குள்ள புகைப்படங்களைப் பார்த்து நீங்களும் உத்வேகமடைந்து, பூமியின் காடுகள் மற்றும் காடுகளின் வாழ்க்கையை புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும் என விரும்புகிறோம்.

5 மீட்டர் நீளம் வளரக்கூடிய தென் அமெரிக்காவில் வாழும் மிகப்பெரிய முதலை இனம் பிளாக் கெய்மான்படத்தின் காப்புரிமைEMMA NAPPER / BBC NHU 2016 Image caption5 மீட்டர் நீளம் வளரக்கூடிய தென் அமெரிக்காவில் வாழும் மிகப்பெரிய முதலை இனம் பிளாக் கெய்மான் கோஸ்டா ரிக்காவில் கூம்பு தலை கிரிக்கெட்படத்தின் காப்புரிமைBBC 2016 Image captionகோஸ்டா ரிக்காவில் கூம்பு தலை கிரிக்கெட்

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

 

உலகிலே விலை உயர்ந்த பொருட்கள் எவை?

  • தொடங்கியவர்

உலகின் பணக்கார பெண்மணிகள் யார்?

லோரியல் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசான லிலேனே பென்டன்கோட் $40 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை கொண்டிருந்தார்.படத்தின் காப்புரிமைAFP Image captionலோரியல் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசான லிலேனே பென்டன்கோட் $40 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை கொண்டிருந்தார்.

உலகின் பணக்கார பெண் தனது 94 வயதில் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்த லோரியல் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசான லிலேனே பென்டன்கோட் $40 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை கொண்டிருந்தார்.

எனவே, இவருக்கு அடுத்து உலகின் பணக்கார பெண்மணி யார்? என்று பார்ப்போம்.

உலகின் பணக்கார பெண்கள்

கலையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக Crystal Bridges Museum of American Art-ன் தலைவராகவும் உயர்ந்தார்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகலையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக Crystal Bridges Museum of American Art-ன் தலைவராகவும் உயர்ந்தார்.

1.அலிஸ் வால்டன் - நிகர சொத்து மதிப்பு $33.8 பில்லியன்

ஃபோர்ப்ஸ் இதழின் இவ்வாண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பென்டன்கோட்க்கு மூன்று இடங்கள் பின்தங்கி 17-வது பெற்றிருந்த இவர், தற்போது உலகின் பணக்கார பெண் என்ற நிலையை அடைந்துள்ளார்.

 

அமெரிக்க பல்பொருள் அங்காடி ஜாம்பவானாக வால்மார்டின் நிறுவனர் சாம் வால்டனின் ஒரே மகளான இவரின் நிகர சொத்து மதிப்பு $33.8 பில்லியன் ஆகும்.

அவ்வாறு இருந்தபோதிலும், இவர் தனது சகோதரர்களை போன்றல்லாமல், குடும்ப தொழிலில் இருந்து விலகி இருந்ததுடன், தனது சொந்த நகரமான அர்கன்சாஸில் உள்ள பென்டோவில்லேவில், தனக்கு கலையின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக Crystal Bridges Museum of American Art-ன் தலைவராகவும் உயர்ந்தார்.

2. ஜாக்குளின் மார்ஸ் - நிகர சொத்து மதிப்பு $27 பில்லியன்

போர்ப்ஸ் பட்டியலில் 26வது இடத்தில் உள்ள 77 வயதான இவர், உலகின் மிகப் பெரிய மிட்டாய்கள் செய்யும் நிறுவனத்தின் சொத்தை தனது இரண்டு சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக குடும்ப நிறுவனத்தின் வேலை மற்றும் கடந்தாண்டு வரை அந்நிறுவனத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் இருந்தார்.

தற்போது கொடையாளராக அறியப்படும் இவர், வாஷிங்டன் தேசிய ஆவண காப்பகம் மற்றும் வாஷிங்டன் தேசிய ஓபரா உள்ளிட்ட சிலவற்றின் குழுக்களிலும் உள்ளார்.

3. மரியா பிரான்க்கா பிஸோலோ:

இறந்த ஃபெரெரோ ரோச் புகழ் - மைக்கேல் ஃபெர்ரெரோவின் மனைவியான இவர் இப்பட்டியலில் இடம் பிடித்த முதல் ஐரோப்பிய பெண்மணி ஆவர்.

Nutella, Kinder மற்றும் Tic-tacs ஆகியவற்றைக் தயாரிக்கும் இவரின் நிறுவனத்தை, இப்போது தனது மகன் ஜியோவானி மூலமாக இயக்குகிறார்.

இவர் பொதுவாக, மொனோக்கோவில் நேரம் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

4. சுசன்னே ஸ்கேலாட்டென் - நிகர சொத்து மதிப்பு $20.4 பில்லியன்

ஜெர்மனியை சேர்ந்த இவரின் சொத்துக்கு காரணமாக கார்கள் மற்றும் மருந்து தொழில்கள் உள்ளன.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெர்மனியை சேர்ந்த இவரின் சொத்துக்கு காரணமாக கார்கள் மற்றும் மருந்து தொழில்கள் உள்ளன.

இப்பட்டியலில் இருக்கும் இரண்டாவது ஐரோப்பியரான இவருக்கு 55 வயதாகிறது. ஜெர்மனியை சேர்ந்த இவரின் சொத்துக்கு காரணமாக கார்கள் மற்றும் மருந்து தொழில்கள் உள்ளன.

இவரின் பெற்றோர்கள் இறந்தபோது இரசாயன நிறுவனமான அல்டானா ஏஜியின் 50% சதவீத பங்குகளும் மற்றும் இவரும் இவரது சகோதரரும் இணைந்து பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ-வில் 50% பங்குகளை வைத்துள்ளனர்.

அதன் பிறகு, அல்டானா தனியார் நிறுவனம் முழுவதையும் தனதாக்கியதோடு காற்றாலை மின்சாரம் முதல் கிராபைட் தயாரிப்பு நிறுவனங்கள் வரை என பலவற்றில் பங்குகளை வாங்கியதால் இந்த பட்டியலில் இடம் பிடிப்பதை உறுதி செய்தார்.

5. லாரன் பௌல் ஜாப்ஸ் - நிகர சொத்து மதிப்பு $20 பில்லியன்

இவர் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியாவார்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionஇவர் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியாவார்.

அமெரிக்க அளவில் ஐந்தாவது இடத்திலும் அல்லது உலகளவில் 40வது இடத்திலும் இருக்கும் இவர், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியாவார்.

53 வயதான இவர் எமர்சன் காலெக்ட்டிவ் என்னும் நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் மற்றும் சுற்றுசூழல் பிரச்சனைகள் சார்ந்த விடயங்களுக்காக செயல்பட்டு வருகிறார்.

இவர் காலேஜ் ட்ராக் என்னும் பின்தங்கிய மாணவர்களுக்கு மேற்கல்வியை பயில்வதற்கு உதவி செய்யும் அமைப்பொன்றின் இணை-நிறுவனராகவும் உள்ளார்.

மேலும், இவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 0.7% பங்குகளும் மற்றும் டிஸ்னி நிறுவனத்தில் 4% பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

உலகில் முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த சீன ரோபோ

 

உலகில் முதன் முறையாக சீன ரோபோ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்துள்ளது.

 
உலகில் முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த சீன ரோபோ
 
பெய்ஜிங்:

சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 40 கோடி மக்கள் புதிய பற்களுக்காக காத்திருப்பது தெரியவந்தது.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல் பல் டாக்டர்கள் இல்லை. மிக குறைவாக உள்ளனர். எனவே பல் மருத்துவ துறையில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக ஸியான் நகரில் உள்ள ராணுவ மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரி, பெய்ஜிங்கில் செயல்படும் பெய்காங் பல்கலைக்கழகத்தின் ‘ரோபோ’ நிறுவனம் இணைந்து ‘பல் மருத்துவ  ரோபோ’வை உருவாக்கினார்கள்.

அந்த ‘ரோபோ’ ஷான்ஸி மாகாணத்தின் ‘ஸியான்’ நகர ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு பெண்ணுக்கு பல் ஆபரேசன் (அறுவை சிகிச்சை) செய்தது.
 
201709241053038845_1_chinese._L_styvpf.j

அப்போது அந்த பெண்ணுக்கு புதிதாக 2 செயற்கை பற்களை பொருத்தியது. இந்த அறுவை சிகிச்சையின் போது ‘ரோபோ’வுடன் டாக்டர்களும் உடன் இருந்தனர். பற்களை ‘ரோபோ’ சரியாக பொருத்தியது. 0.2 முதல் 0.3 மி.மீட்டர் மட்டுமே மிக சிறு தவறு நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு பல் டாக்டர்கள் நோயாளிகளுக்குரிய கருவிகளை பொருத்தினர். அறுவை சிகிச்சைக்குரிய திட்ட செயல்பாடுகள் ‘ரோபோ’வில் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி ‘ரோபோ’ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் பல் அறுவை சிகிச்சை செய்த முதல் ‘ரோபோ’ என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதற்கு முன்பு பற்களில் ரூட் கேனால் ஆபரேஷன் மற்றும் பல் தாடை எலும்பு ஆபரேஷனில் மட்டுமே ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்பட்டன.  தற்போது பல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இசை கலைஞர் ஜார்ஜ் தன்னுடைய மகன் பாரிஸுக்காக பாடங்களை ஹிப்-ஹாப் முறையில் மாற்றுகிறார். பாரம்பரிய முறைகள் மூலம் படிக்க விருப்பமின்றி இணையம் வழியாக வரும் குழந்தைகளை உடனடியாக ஈர்க்கும் திறனை இந்த இசை கொண்டுள்ளது.

இசை கலைஞர் ஜார்ஜ் தன்னுடைய மகன் பாரிஸுக்காக பாடங்களை ஹிப்-ஹாப் முறையில் மாற்றுகிறார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வருகிறது பிங்க் நிற சாக்லேட்... நிறத்துக்காக என்ன சேர்க்கிறார்கள்? #RubyChocolate

 
 

பிங்க்


முன்பு ஒரு விளம்பரம் வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்துப் பார்க்கும் ஒரு பெண், “இதுல பிங்க் கலர் கிடைக்குமா?” என்பார். இன்று பெண்கள், ஆண்கள் என அனைவருக்குமே பிங்க் பிடித்த நிறம். சட்டையில் இருந்து கார் வரை பிங்க் நிறத்தில் வந்தால் விற்பனை தூள் கிளப்பும். ஆனால், சாக்லேட்டை இதுவரை பிங்க் நிறத்தில் பார்த்திருக்கிறீர்கள்? கூடிய சீக்கிரம் பார்ப்பீர்கள்.

வெறும் சாக்ரிம்களால் மட்டுமே செய்யப்பட்டு வந்த சாக்லேட் இப்போது ’பெர்ரி காலபட்’ நிறுவனத்தால் இயற்கைப் பொருட்களை கொண்டு செய்யப்பட்டு ரூபி சாக்லேட் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ’சாக்லேட் சாப்பிடக் கூடாது’ என்று சொல்லி வளர்க்கும் காலகட்டத்தில் நிறத்திற்காகவோ அதன் மனத்திற்காகவோ எந்தவித கெமிக்கல்களையும் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட  ரூபி சாக்லேட்டை தாராளமாக வரவேற்கலாம். 

சுவிஸ் நாட்டில் சாக்லேட் தயாரிப்பாளர்கள் ஒரு புதுவித வண்ணம் கொண்ட சாக்லேட்டை உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். பழச்சுவைகள் நிறைந்து நாவின் நுனி பட்டு ஒரு கடி கடிக்கும் போதே நம்மை அது பிங்க் உலகில் மிதக்க செய்து விடுகிறது. 80 வருடங்களுக்கு முன்பு நெஸ்லே வொயிட் சாக்லேட்டை அறிமுகம் செய்தது. வொயிட், டார்க் , மில்க் என்ற சாக்லேட் ரகங்கள் பெர்ரி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நான்காவது ரகமாக சிறந்த கோகோ விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தரம் வாய்ந்த ரூபி சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சிகப்பை விட பிங்க் நிறமே அதிகம் கொண்டதால் இதற்கு ரூபி எனவே பெயரிட வேண்டும் என முடிவு எடுத்தனர்.

ரூபி பீன் மற்றவற்றில் இருந்து தனித்து தெரியும் பண்புகளை கொண்டது. இதில் பழத்தின் சுவையும் நிறமும் இயற்கையாக இடம் பெற்றுள்ளது.உலகின் பல இடங்களில் இருந்து பெறப்படும் கோகோ விதைகளில் இருந்து ரூபி தயாரிக்கப்படுகிறது. ”சாக்லேட் வகையில் நான்காவது வகையான ரூபி சாக்லேட் ஆனது துவர்க்கும் தன்மையோ பாலின் சுவையாகவோ இனிப்பாகவோ இருக்கவில்லை. பழச்சுவைக்கும் மிகுந்த மென்மைக்கும் இடைப்பட்ட ஒரு புது வித சுவையை கொண்டுள்ளது” என்கிறார்கள் இதைச் சுவைத்தவர்கள்.
     
10 வருட வளர்ச்சிக்கு பிறகு பெர்ரி சாக்லேட் நிறுவனமானது கோகோ விதையின் தனித்துவம் நிறைந்த சுவையை பயன்படுத்துவதற்கே ஒரு புதுவித முறையை கையாள்கிறது. இதன் சுவையே போதுமானதாக இருப்பதால் வேறு எந்த செயற்கை சுவையூட்டிகளோ நிறமூட்டிகளோ எதுவும் புதிதாக சேர்ப்பது இல்லை.

”இந்த சாக்லேட் பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் நோக்கில் மட்டுமே தயரிக்கப்படவில்லை. மாறாக இது பழச்சுவையையும் அதன் மேன்மையையும் கூறும் நோக்கில் அமைந்துள்ளது. பார்த்தாலே வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் தன்மை உடையது. அதே சமயத்தில் சாக்லேட்டிற்கான உண்மைத் தன்மையையும் கொண்டுள்ளது” என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ அந்தோணி டி செயிண்ட் கூறியுள்ளார். இந்த நிறுவனத்தின் தரப் பிரிவு அதிகாரி பீட்டர் பூனே அவர்கள் ”விரைவில் வணிக பங்குதாரர்களுடன் இணைந்து, எந்த வித ரசாயனங்களும் இன்றி தயாரிக்கப்பட்ட இந்த ரூபி சாக்லேட் அனைத்து சந்தைகளிலும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.

 

ரூபி சாக்லேட் 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று அனைத்து விற்பனை கூடங்களிலும் கிடைக்கும். பிங்க் நிறம் கொண்ட ஹார்ட் வடிவ ரூபி சாக்லேட்க்கு  வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

twitter.com/Thaadikkaran 

 குழந்தைகளுக்கு டிரஸ் எடுக்கப் போகும்போது டிரஸ் தேடுறதைவிட குழந்தைகளைத் தேடவே நேரம் சரியா இருக்கு.

twitter.com/abuthahir707 

 பல இளைஞர்களின் உச்சக்கட்டப் போராட்டம் பின் பாக்கெட்டில் உள்ள சீப்பை எடுக்க நடக்கிறது.

twitter.com/amuduarattai

 டீ கடையில் போய் டீ கேட்டாலே `சர்க்கரை போட்டா,போடாமலா?’ என்று கேட்கும் அளவிற்கு, ஊருக்குள் சர்க்கரை நோயாளிகள் அதிகமாகிட்டாங்க.

112p1.jpg

twitter.com/Jeytwits

 மழை பெய்யும்போது ஆத்துல தண்ணி வரும்னு சந்தோசப்பட்டா, அது கிராம வாழ்க்கை. வீட்டுக்குள்ள தண்ணி வருமேன்னு பயப்பட்டா, அது நகர வாழ்க்கை.

twitter.com/MJ_twets

 லேசான மழைக்கும் பலமான துவட்டல் அன்னையின் மடியில்.

twitter.com/sundartsp 

 காருக்குப் பின்னாடி குடும்பத்தினர் பேர்களை எழுதுபவர்கள் பெரும்பாலும் புரொஃபைல் பிக்சரில் மனைவியுடன் காட்சி தருகிறார்கள்.

twitter.com/Jeytwits 

 அழகியும் கிழவியா தெரிஞ்சா, அது ஆதார் கார்டு. கிழவியும் அழகியா தெரிஞ்சா, அது ஸ்மார்ட் ரேஷன் கார்டு.

twitter.com/abuthahir707 

வேலையில் இருக்கும்போது வீட்டைப்பற்றிக் கவலைகளும் வீட்டில் இருக்கும்போது வேலையைப் பற்றிய கவலைகளும்தான் பலருக்கும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

twitter.com/palanikannan04

 `பொறியாளன்’ னா காத்துல உட்கார்ந்து பொறி சாப்பிடுறவன்னு நினைச்சீங்களாடா... பார்க்கிறவன் வாய் பொளக்குற அளவுக்கு பில்டிங் கட்றவன்டா.

facebook.com/Vignesh T

மரம் வளர்ப்போம்; மழையில் நனையாமல் டீ குடிப்போம்.

112p2.jpg

twitter.com/Jeytwits 

 இரண்டே வகை நடுத்தரவர்க்க மனிதர்கள்தான்; கடன் வாங்காமல் சமாளிப்பவர்கள்,  கடன் வாங்கிவிட்டுக் கடன்காரனைச் சமாளிப்பவர்கள்.

facebook.com/Muthu Krishnan

வணக்கம் மோடி,

உங்களது புல்லட் ரயில் மும்பை-அஹமதாபாத் நகரிடையே திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இதே வழித் தடத்தில் ஏற்கெனவே ஏராளமான விமானங்கள் பறக்கின்றன, புல்லட் ரயிலைவிட குறைந்த நேரத்தில் அவை சென்றடைவதாகவும் அறிகிறேன்.

புல்லட் ரயில் திட்ட மதிப்பீடு : 1,10,000 கோடி ரூபாய்.

மொத்த தூரம் : 500 கி.மீ.

ஒரு கிலோ மீட்டருக்குச் செலவு : 220 கோடி ரூபாய்.

இதேபோன்ற 500கி.மீ புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனாவில் செய்யப்படும் செலவு 50,000 கோடி ரூபாய்.

இந்த இந்தியத் திட்டத்தில் மட்டும் ஏன் 60,000 கோடிகள் கூடுதலாகச் செலவு செய்யப் படுகிறது, இப்போதுதான் உங்களின் புல்லட் வேக ஆர்வத்திற்கான காரணத்தை அறிகிறேன்.

இந்தத் திட்டத்தில் செலவு செய்யப்படும் 1,10,000 கோடி ரூபாய்களை எடுக்க 655 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். உங்கள் நண்பர்கள் அதானியும் அம்பானியும் ஏன் புல்லட் ரயிலில் முதலீடு செய்ய முன் வரவில்லை!

112p3.jpg

twitter.com/Elanthenral

 சில படத்தைவிட அதோட விமர்சனம் படு கேவலமா இருக்கு.

twitter.com/yugarajesh2

அடேய்... கட்சித்தாவல் தடைச் சட்டம்னு சொன்னதுக்குப் பதிலா, ரிசார்ட் தாவல் தடைச்சட்டம்னு சொல்லி இருந்தாலாவது ஒரு லாஜிக் இருந்திருக்கும்.

twitter.com/MJ_twets

அடிக்கடி கோயிலுக்குச் செல்லாதீர்கள் என்று பெற்றோர்களைத் திட்டாதீர்கள். ஒருபோதும் அவர்கள், அவர்களுக்காகக் கோயிலுக்குச் செல்வதில்லை.

twitter.com/sundartsp

 இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குரூப்பில் இல்லாத சொந்தங்களே தூரத்துச் சொந்தம்.

twitter.com/thoatta

எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்வது இருக்கட்டும், தமிழ்நாட்டில் எத்தனை

எம்.எல்.ஏ-க்களுக்குத் தகுதி இருக்குதுன்னு கமல் சார் கேட்டுட்டு வரச் சொன்னார்.

112p4.jpg

facebook.com/வாசுகி பாஸ்கர்

ஹோட்டல் ஊழியர்: “அண்ணே, நாளைக்கு சிக்கன் பத்து கிலோ வாங்கினா போதும்ல?”

ஹோட்டல் முதலாளி: “ஏன்?”

ஊழியர்:“நாளைக்குப் புரட்டாசின்னே, அதான் கம்மியா வாங்கலாம்னு.”

முதலாளி: “முட்டாள், முப்பது கிலோ வாங்குடா”

ஊழியர்; “ஏண்ணே?”

முதலாளி: “நாளையில் இருந்து தாண்டா வீட்ல சாப்பிடாம, ஹோட்டல்ல சாப்பிடுவானுங்க, என்னத்த தொழில் கத்துக்கிறியோ.”

twitter.com/thoatta

சட்டமன்றத் தேர்தல்ல ஓட்டு வாங்க முடியல, சாரணர் தேர்தல்ல ஓட்டு வாங்க முடியல, ஏன் பிக்பாஸ்லகூட ஓட்டு வாங்க முடியல, இதெல்லாம் கட்சியாம்மா?

facbook.com/Sivasankaran Saravanan

நான்கூட மோடி+அமித் ஷா ஜோடியை என்னவோ என்று நினைத்தேன். ஆஃப்ட்ரால் டி.டி.வி. தினகரனையே இவங்களால சமாளிக்க முடியலை. வட இந்தியாவில் இவர்கள் பாச்சா பலிக்குது என்றால், ஒன்று ஆப்போனன்ட் அவ்ளோ வீக்கா இருக்கணும்; இல்ல தமிழ்நாட்ல விளையாடத் தெரியாமல் புட்பால்னு நெனச்சு கிரிக்கெட் பாலைக் காலால உதைச்சிட்டு இருக்காங்க.

twitter.com/8tttuu 

நொடிக்கு நொடி சந்தோஷமாய் இருப்பது குழந்தை மட்டுமே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குழந்தைகளின் மனப்பிரச்சனையை கண்டுபிடிக்கும் கார்ட்டூன்!

  • தொடங்கியவர்

Fashion Pakistan Week (FPW)

பாகிஸ்தான் பெஷன் வீக் வின்ட்டர்  பெஸ்டிவ் 17 (Fashion Pakistan Week (FPW) Winter Festive 17) பெஷன் கண்­காட்சி பாகிஸ்­தானின் கராச்சி நகரில் கடந்த வாரம் நடை­பெற்­றது. பாகிஸ்தான் பெஷன் கவுன்­ஸி­லினால் இக்­கண்­காட்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

169095-01-02

21764792_10154891528638457_1806161942219675384_n

175048-01-02

21728089_10154891520698457_2051885923842397572_n

VRA-20170919-m06-MED2

 

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

மகள்களுக்கு ஐபோன் வாங்க சிங்கப்பூர் பறந்த தொழிலதிபர்!

தனது மகளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக, இந்திய தொழிலதிபர் ஒருவர் சிங்கப்பூருக்கு பறந்துள்ளார்.

ஐபோன்

 

ஐபோன் புதிய வரவுகள் கடந்த வாரம் வெளியானது. வெளியான முதலே விற்பனையில் சக்கைபோடு போட்டுவரும் ஐபோனின் புதுவரவுகள் இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. இதனிடையே, அமின் அகமது தியோலியா என்ற 43 வயது தொழிலதிபர், தனது மகளுக்கு ஐபோன் வாங்குவதற்காக, 13 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

குறிப்பாக, அங்கு வரிசையில் முதல் ஆளாக நின்று ஐபோன் 8 பிளஸ் போனை அவர் வாங்கியுள்ளார். தனது மகளுக்கு திருமண பரிசாக இதைக் கொடுப்பதற்காக, அவர் சிங்கப்பூருக்கு சென்று வந்துள்ளார். இதற்காக, இரவு முழுவதும் வரிசையில் நின்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமின் அகமது தியோலியா கூறுகையில், "நான் மொத்தம் இரண்டு ஐபோன்களை வாங்கினேன். என்னுடைய இன்னொரு மகளுக்கும் ஐபோன் வாங்கியுள்ளேன். இரவு முழுவதும் வரிசையில் நின்றது இதுவே முதல்முறை. ஆனால், தற்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். 

 

அமின் அகமது தியோலியாவுடன் சேர்த்து, மேலும் பல வெளிநாட்டுக்காரர்கள் வரிசையில் நின்றுள்ளனர்.

http://www.vikatan.com

Bildergebnis für für iphone wartet berlin

Bildergebnis für für iphone wartet berlin

Bildergebnis für für iphone wartet berlin

Bildergebnis für für iphone wartet berlin

 

ஜெர்மனி பெர்லினில் Apple store முன்பாக

  • தொடங்கியவர்

இப்படிப்பட்ட அனுபவம் யாருக்கு எல்லாம் இருக்கு.

  • தொடங்கியவர்

1959 : இலங்கைப் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்க சுடப்­பட்டார்

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 25

 

1513 : ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் டி பால்­போவா பசிபிக் பெருங்­க­டலை முதன் முதலில் கண்ட ஐரோப்­பி­ய­ரானார்.


1690 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது செய்­தி ­பத்­தி­ரி­கை­யான Publick Occurrences Both Foreign and Domestick முதலும் கடைசித் தட­வை­யா­கவும் வெளி­வந்­தது. இது அர­சினால் தடை செய்­யப்­பட்­டது.


varalaru21789 : அமெ­ரிக்கக் காங்­கிரஸ் அந்­நாட்டு அர­சி­ய­ல­மைப்­பிற்கு மனித உரி­மை­க­ளுக்­கான 10 திருத்­தங்கள் உட்­பட 12 திருத்­தங்­களைக் கொண்டு வந்­தது.


1846 : ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் சாச்­செரி டெய்லர் தலை­மையில் மெக்­ஸி­கோவின் மொண்­டெரே நகரைக் கைப்­பற்­றின.


1906 : கரை­யி­லி­ருந்து படகை வழி நடத்தும் முறை ஸ்பெய்னில் இயக்கிக் காட்­டப்­பட்­டது. இதுவே தொலைக் கட்­டுப்­பாட்டுக் கரு­வியின் (ரிமோட் கொண்ட்ரோல்)  பிறப்பு எனக் கரு­தப்­ப­டு­கி­றது.


1955 : ஜோர்தான் விமானப் படை ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1956 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை கடந்த முத­லா­வது தொலை­பேசிக் கம்­பித்­திட்டம்  நிறு­வப்­பட்­டது.


1957 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் ஆர்­கன்சஸ் மாநி­லத்தில் உள்ள பாட­சாலை ஒன்றில் 9 கறுப்­பின மாண­வர்கள் 300 இரா­ணு­வத்­தி­னர்­களின் பாது­காப்­புடன் பாட­சாலை சென்­றனர்.


1959 : இலங்கைப் பிர­தமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்கா, தல்­துவெ சோம­ராம தேரர் எனும்  பௌத்த பிக்கு ஒரு­வ­ரினால் சுடப்­பட்டு படு­கா­ய­ம­டைந்து அடுத்த நாள் இறந்தார்.


1962 : அல்­ஜீ­ரிய மக்கள் ஜன­நா­யகக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.


1964 : போர்த்­து­க­லுக்கு எதி­ரான மொஸாம்பிக் சுதந்­திரப் போராட்டம் ஆரம்­ப­மா­கி­யது.


1972 : நோர்வே மக்கள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றில் ஐரோப்­பிய சமூ­கத்தில் இணை­வ­தற்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். 


1978 : கலி­போர்­னி­யாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமா­னங்கள் மோதிக்­கொண்­டதில் 144 பய­ணிகள் கொல்­லப்­பட்­டனர்.


1983 : வட அயர்­லாந்தில் 38 ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்­பினர்.


2002 : இந்­தி­யாவில் குஜராத் மாநி­லத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்­பெற்ற வன்­மு­றையில் 32 பேர் கொல்­லப்­பட்­டதை அடுத்து அங்கு ஆயி­ரக்­க­ணக்­கான இரா­ணு­வத்­தினர் குவிக்­கப்­பட்­டனர்.


2003 : ஜப்­பானில் 8.0 ரிச்டர் அள­ வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. 


2008 : ஜென்ஸோ 7 விண்­க­லத்தை சீனா ஏவி­யது. 


2009 : ஜி.20 உச்­சி­மா­நாட்­டின்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி ஆகியோர் கூட்டாக தொலைக்காட்சியில் தோன்றி, ஈரான் இரகசியமாக அணுச் செறிவு உலைகளை அமைப்பதாக குற்றம் சுமத்தினர். 

http://metronews.lk

  • தொடங்கியவர்

வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் இதுவும் நடக்கலாம்! - ஓர் அமெரிக்க நகரின் கதை

 

அந்தப் பெண்ணின் தோல் நிறம் கருப்பாக இருக்கிறது. காய்ந்துப் போன புற்கள் புதராக வளர்ந்து அவர் வீட்டின் வாசலை ஆக்கிரமித்துள்ளது. வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒரு சின்ன மரவீடு அவருடையது. அந்தப் பெண்ணிற்கு அழகான பெரிய கண்கள். அந்த சிறு வீட்டின் முன்பு மூன்று மரப்படிக்கட்டுகள். அதில் ஏறித்தான் அவர் அந்த வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஒரு திண்மையான சரடு கயிறைப் போல் சுருள் செய்யப்பட்டிருக்கிறது அவரின் அந்தக் கருப்பு நிற முடி. அவர் வீட்டின் ஹாலில் ஒரு வெள்ளை நிற வாஷ் பேசின் இருக்கிறது. அது சற்றே பழுப்பேறி இருந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த அந்த ஸ்டீல் குழாய் துருவேறி இருந்தது. அது தண்ணீரைப் பார்த்தே பல நாட்கள் ஆனதுபோல் இருந்தது. 

தண்ணீர் துண்டிப்பு - டெட்ராய்ட் அமெரிக்கா

மரங்கள் சூழ்ந்தப் பகுதியில்தான் அந்த வீடு அமைந்திருக்கிறது. இருந்தும் ஏதோ ஒரு பாலைவன வீடுபோல் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்தது அந்த வீடு. அந்த மூன்று மரப் படிக்கட்டுகள் இருந்த பகுதிக்கு வந்து நின்றார் அந்தப் பெண். சாலைக்கும் அவர் வீட்டிற்கும் இடையே இருந்த இடத்தில் நீல நிறத்தில் ஒரு அம்புக் குறி வரையப்பட்டிருந்தது. அது வரைந்து நீண்ட நாட்கள் ஆனது போல்தான் தெரிந்தது. ஆனால், காலை அந்தச் சாலையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்திருந்ததால், அந்த நீல நிற அம்புக் குறி மிகத் தெளிவாகத் தெரிந்தது. அங்கு அந்த சாலையோரத்தில் காய்கறிகளை வாங்கிய மஞ்சள் நிர கவரோடு நடந்துப் போன பெண், அந்த நீல நிறக் குறியையும், அந்தப் பெண்ணையும் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். ஆனால், அந்த கருப்பு நிற தோல் கொண்டிருந்த பெண் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் யாருக்காகவோ... எதற்காகவோ ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் கழிந்திருக்கும். அந்தப் பெண்ணின் கண்களில் திடீர் மகிழ்ச்சி வெளிப்பட்டது. அவரின் வீட்டருகே அந்தக் கார் வந்து நின்றது. அது சாம்பல் நிற கார். அதிலிருந்து ஒரு பெண் இறங்குகிறார். அவர் சற்று குண்டாக காணப்பட்டார். தன் காரின் பின் கதவுகளைத் திறந்து, சிறு, சிறு தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டியை எடுத்து வருகிறார். முகம் முழுக்க அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. சிரித்தபடியே அந்த மூன்று மர படிகளில் ஏறி, அங்கிருக்கும் அந்தப் பெண்ணிடம் அந்தப் பெட்டியைக் கொடுக்கிறார்.

கண்களில் வெளியேறும் மெல்லிய கண்ணீரோடு அதை வாங்கியவர், அவரிடம் ஏதோ சொல்லி அழுகிறார். இவரும் அவருக்கு ஏதோ ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார். (தண்ணீரின்மைக் காரணத்தால் தனக்கு ஏற்பட்ட ஒரு சோகத்தைதான் அவர், பகிர்ந்தார். அது என்னவென்பதை இறுதியில் பார்க்கலாம்).

அந்தப் பெண் தன் கார் கதவுகளை மூடுகிறார். அந்தக் காரினுள் இது போன்ற நிறைய தண்ணீர் பெட்டிகள் இருக்கின்றன. தன் காரை எடுத்துக் கொண்டு மற்றொரு வீட்டிற்குக் கிளம்புகிறார் மோனிகா லீவிஸ் பாட்ரிக் (Monica Lewis Patrick).

தண்ணீர் போராளி - மோனிகா லீவிஸ் பாட்ரிக் (Monica Lewis Patrick).

இது அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டெட்ராய்ட் எனும் நகரம். அமெரிக்காவின் அதிக மக்கள் தொகைகொண்ட நகரங்களில் டெட்ராய்ட்டும் ஒன்று. கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இந்த நகரத்தில் வசிக்கிறார்கள். அதே சமயம், பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இங்கிருக்கும் பலரால் சரிவர தண்ணீர் வரியை செலுத்த முடிவதில்லை. தன் பொருட்டு நகர நிர்வாகம் அவர்களின் தண்ணீர் இணைப்பை பிடுங்கிவிடுகிறது. குடிக்கவும், சமைக்கவும், வேறெந்த அத்தியாவசியத் தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் போராடும் இவர்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது "வீ தி பீப்பிள் ஆஃப் டெட்ராய்ட்" (We the people of Detroit) எனும் அமைப்பு. இதன் தலைவர் மோனிகா லீவிஸ் பாட்ரிக்.

தண்ணீர் துண்டிப்பு

தண்ணீர் இணைப்பு பிடுங்கப்பட்டதும் சிலர் சில நாட்களின் பணம் கட்டி அதைப் பெற்று விடுகின்றனர். சிலர் சில வருடங்களாகியும் அதைப் பெற முடியாமல், தண்ணீரின்றி வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஏப்ரல் மாதம் மட்டுமே 18 ஆயிரம் வீடுகளின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்புத் துண்டிக்கப்பட்ட வீடுகளைக் குறிக்கும் வகையில் அவர்களின் வீட்டின் முன்னர் நீல நிற அம்புக் குறியை வரைகிறது நிர்வாகம். அதை நகர மக்கள் “அவமானத்தின் அம்புக் குறியாக” பார்க்கிறார்கள்.  

தண்ணீர் மனித உரிமை

“தண்ணிர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை ஒருவருக்கு கிடைக்காமல் செய்ய இங்கு யாருக்கும் உரிமை கிடையாது. பலமான அரசைத் தொடர்ந்து எதிர்ப்பதனால் மட்டுமே இவர்களுக்குத் தண்ணீர் கிடைத்துவிடாது. என்னைப் போன்ற ஒரு மனிதர் இங்கு தண்ணீரில்லாமல் தவிக்கும்போது என்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. அப்படியானவர்களுக்கு தண்ணீர் வழங்கிடத் தான் இந்த அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன்..." என்று சொல்கிறார்.

சில நூறு டாலர்களை கட்டாத வீடுகளுக்குத்தான் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நகரில் இருக்கும் 40 நிறுவனங்கள் 9.5 மில்லியன் டாலர் அளவிற்கான வரி பாக்கியை வைத்திருக்கின்றன. ஆனால், அவர்களுக்கான இணைப்பு துண்டிக்கப்படவில்லை. 

இப்படியாக தண்ணீரில்லாததால் அந்தப் பகுதியில் பல பிரச்னைகள் எழுகின்றன. குறிப்பாக, சரியான தண்ணீர் இல்லாததால் உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகின்றன. சிலர் தங்கள் வீட்டையே இதனால் இழக்க நேரிடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் முதலில் பார்த்த அந்தப் பெண்ணிற்கு நேர்ந்ததும் கூட நடக்கிறது. 

தண்ணீர் மனித உரிமை

அந்தப் பெண் விவாகரத்து ஆனவர். தன் மகனோடு அங்கு வாழ்ந்து வந்தவர். தண்ணீரில்லாததால், அந்தப் பெண் தன் மகனை அங்கு வைத்திருக்கக் கூடாது என்று சொல்லி, பிள்ளையை அவரிடமிருந்து பிரித்து அப்பாவிடம் ஒப்படைத்திருக்கிறது நீதிமன்றம். 

 

தண்ணீர்...!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மனிதர்களைப் பிணமாக்கும் ஆதிவாசிகள்..?

 

அந்தமானின் நிஜக் கதை

அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து 90 கி.மீ. உள்ளே சென்றால் காதம்தலாவில் உள்ள ஹாம்லெட் என்ற ஜாரவா வனப்பகுதி உங்களை வரவேற்கும். ஆனால் -சூரியன் மறையத் தொடங்கினதும் அங்குள்ள அரசு பழங்குடி நலவாழ்வு அமைப்பான ‘அந்தமான் ஜன்ஜதி விகாஸ் சமிதி’ (AAJVS) பரபரப்பாகிவிடும். காரணம் -வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக வழி அனுப்பி வைக்க வேண்டுமே என்ற பயம்தான்!
எனில், யாரால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சுகிறார்கள்? காட்டு விலங்குகளாலா..?இல்லை. ஜாரவா பழங்குடியின மக்களால்!
8.jpg
வெறும் நானூற்றுச் சொச்சம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்களைக் கண்டுதான் வலிமையான இந்தியா பயப்படுகிறது!  ஜாரவா பழங்குடியினர் ஆக்ரோஷமானவர்கள். தங்கள் நிலத்தின் மீது விமானம் பறந்தால்கூட அதன் மீது அம்பு எய்யும் ஆவேசக்காரர்கள். அத்துமீறி அவர்கள் மண்ணில் கால் வைத்தால் அவ்வளவுதான். பிணமாக்கி விடுவார்கள்.

ஜாரவா ஆதிவாசிகள்

ஜாரவா வனப் பகுதியைப் பிளந்து கொண்டு செல்லும் அந்தமான் ட்ரங்க் சாலையில் உள்ள எச்சரிக்கைப் பலகைகளைப் படித்தால் பீம்புஷ்டி லேகியம் சாப்பிடும் பயில்வான்களுக்கும் லைட்டாகத் தொடை நடுங்கும். முழுநிலவு நாட்களில் இந்த வனப்பகுதியில் வசிக்கும் மற்ற மக்களேகூட தங்களின் உயிர் பிழைக்குமா என டாஸ் போட்டுப் பார்த்தபடி வீட்டுக்குள்ளேயே நடுங்கிக் கிடப்பார்கள். இரவில் கடவுளே வந்து தரிசனத்துக்குக் கூப்பிட்டாலும் மக்கள் வெளியே வரவேமாட்டார்கள்.
8a.jpg
காரணம் ஜாரவா ஆதிவாசிகள். வனப்பகுதியில் உள்ள மற்ற குடிகளின் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து ஆடு, கோழிகள் முதல் பழங்கள் வரை கையில் கிடைப்பதை எல்லாம் கொள்ளை அடிப்பதும்; தடுக்க முயன்றால் உடலைத் துளைத்து அம்புப் படுக்கையில் கிடத்தி நதியோரம் வீசுவதும் இவர்கள் வழக்கம்.

இவ்வளவு கொடூரமானவர்களா இந்தப் பழங்குடிகள்?

‘ஆதிம் ஜன்ஜதி விகாஸ் சமிதி’யின் (AAJVS) அதிகாரி அதுல் மோண்டலிடம் பேசினோம். ‘‘ஜாரவா மக்கள் பூர்வகுடிகள். இப்போது அந்தமானில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்திய சுதந்திரத்தின்போது வங்காளதேசத்தில் இருந்து அகதியாக வந்தவர்கள்தான்.
8b.jpg
ஜாரவா மக்கள் இந்த நிலம் தங்களுக்கானது எனக் கருதுகிறார்கள். இவர்களுக்கு நவீன உலகின் சட்டதிட்டங்கள் பற்றி ஏதும் தெரியாது. எந்த விதிகளுக்கும் எல்லைகளுக்கும் அவர்கள் கட்டுப்படுவது இல்லை.

1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட AAJVS அமைப்பு பழங்குடி மக்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறது. இதன் மூலம், அழிந்துவரும் பழங்குடி இனமான ஜாரவா மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்...’’ என்கிறார்.
8c.jpg
ஆக்கிரமிப்புகள்-அல்லல்கள்!

சென்ற நூற்றாண்டுகளில் அந்தமான் நிலப்பரப்பை ஆக்ரமித்த வெள்ளை அரசு தனது தேவைகளுக்காக வெளிப்புற மக்களை அதிமாகக் குடியமர்த்தியது. அப்போது முதலே அவர்களுக்கும் ஜாரவா மக்களுக்குமான மோதல் போக்கு தொடங்கிவிட்டது எனலாம்.

கடந்த நூற்றாண்டில் அரசுகள் பழங்குடிகளோடு சுலபமான, சுமுகமான தொடர்பு கொள்வதற்கான சாதனமாக போதைப் பொருட்களைக் கையாண்டனர். போதைப் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து அடிமையாக்கி அவர்களிடமிருந்து நிலம் உள்ளிட்டவற்றை அபகரிக்கத் தொடங்கினர். பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக நடனமாடும் வீடியோக்களின் பூர்வீகம் இந்த துயரக் கதைதான்.

ஜாரவா வனப்பகுதியில் அமைக்கப்பட்ட ட்ரங்க் சாலை இன்னொரு துயரம். இதனால் கொடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட்டு ஜாரவா பழங்குடிகளில் பெரும்பகுதியினர் கொத்துக் கொத்தாக இறந்தனர்.ரயில் பாதை  கடந்த பிப்ரவரியில் இந்திய ரயில்வே அமைச்சகம் அந்தமானின் போர்ட் பிளேர் - டிக்லிபூர் வரையிலான 240 கி.மீ., தூரத்திற்கு யூனியன் பிரதேசத்தின் முதல் ரயில்பாதையை ஜாரவா வனப்பகுதியில் அமைக்கவிருப்பதாக அறிவித்தது.

இங்குள்ள சாலை மற்றும் கடல் மார்க்க வசதிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தாதபோது ரயில்பாதை எதற்கு?

அந்தமானில் உள்ள ஐந்து லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எம்பி பிஷ்ணு பாத ராய் பதிலளிக்கிறார். போர்ட் பிளேரிலிருந்து - டிக்லிபூருக்கு பஸ், கப்பல் மார்க்கமாகச் செல்ல 14 - 24 மணி நேரங்கள் தேவை. புதிய  ரயில்பாதையில் மூன்று மணி நேரம் போதும். பிராட்கேஜ் ரயில்பாதை அமைக்க செலவு ரூ.2,413 கோடி. ரயில்வே தனது 12% லாப அடிப்படையைக் கூட தளர்த்தி இதனை மேற்கொள்ளக் காரணம், டிக்லிபூரிலிருந்து நூறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மியான்மரின் கோகோ தீவில் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளதுதான்.

‘‘ஜாரவா வனப்பகுதியில் இந்தியா ரயில்பாதை அமைத்தால்... ஜாரவா பழங்குடிகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமே ஏற்படாது...’’ என்கிறார் அந்தமான் நிக்கோபார் ஈகோலஜி சொசைட்டி (SANE) தலைவர் சமீர் ஆச்சார்யா. 2002ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சுற்றுலாவுக்கான கட்டுப்பாடுகளை விதித்தாலும், அரசு இதனை முறையாக அமல்படுத்தாததால் தனியாரின் சுற்றுலா வியாபாரம் களைகட்டுகிறது.

தனக்கான உலகில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் வாழிடங்களை அழித்து, ஆதிவாசிகளையும் விலங்குகளையும் ஒரு பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட்டிற்காக பிச்சை எடுக்க வைத்து விட்டனர். ஜாரவா மக்களிடம் இப்போது மிச்சமிருப்பது உயிர் மட்டும்தான். அதையாவது விட்டுவைப்போமா?              

ஜாரவா

ஜாரவா இனத்தினர் காதம்தலா கிராமத்திலுள்ள பிஜோய் பரோய் என்பவரின் தோட்டத்திலுள்ள பழ மரங்களில் உள்ள கனிகளை 1996ம் ஆண்டு  பறித்துக்கொண்டு செல்லும்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் கால் முறிந்து கீழே விழுந்துவிட்டான். அவனை அரசு மருத்துவமனையில் ஐந்து மாதங்கள் வைத்து சிகிச்சையளித்தனர். அப்போது அவனுக்கு டிவி, ரேடியோ ஆகியவற்றைக் காட்டி உணவுகளை வழங்கி புதிய உலகினை அறிமுகப்படுத்த முயன்றனர்.

என்மெய் என்ற அவனின் மூலம் ஜாரவா பழங்குடிகள் சிறிது நெருங்கி வந்தனர். என்மெய்க்கு இன்று நடுத்தர வயது. ‘தனியாக வாழ்ந்து வரும் அவர் காட்டை விட்டு அபூர்வமாகவே வெளியே வருவார். தன் உணவுக்காக மீன்களைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள் திரும்பிவிடுவார்...’ என்கிறார்கள்.

பழங்குடி இனங்கள்!

அந்தமானீஸ்: 18ம் நூற்றாண்டில் இம்மக்களின் எண்ணிக்கை 10 ஆயிரம். 1900ல் 625 ஆக குறைந்தது. 1999ம் ஆண்டு கணக்கிடப்பட்டபோது 41 பேர்களே அந்தமானீஸ் இனத்தில் மிச்சம்.ஜாரவா: அந்தமானின் தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வசிப்பவர்கள். மூர்க்கமானவர்கள் என்பதால் இவர்களின் இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இவர்களின் எண்ணிக்கை 471.

சென்டினெலிஸ்: வடக்கு அந்தமானில் வாழும் தனியுலக வனவாசிகள். ஜாரவா, அந்தமானீஸ்களோடு உறவானவர்கள் என்றாலும் தீவை விட்டு வெளியே வருவது கிடையாது.

பிற பழங்குடிகளைக் காட்டிலும் வேறுபட்ட ஆதிவாசி இனத்தில் மிச்சமிருப்பது 50 பேர்கள். ஆங்கே: இயற்கையோடு இணைந்து வாழும் மிக தொன்மையான ஆதிவாசி இனம். பல்வேறு கலைப்பொருட்கள், கைவினைகள், ஓடம் செய்வதில் வல்லவர்கள். எண்ணிக்கை 50.
(Wikipedia.org, economictimes.com தகவல்படி)

www.kungumam.co

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.