Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

பரவசப் பயணம் 

உன்னோடே ரயிலிலேறி

அமர்ந்து உறங்கி

வழியோரக் காட்சிகள் ரசித்து

தேநீரருந்தி

கோழிக்கோடு சந்திப்பில் இறங்கி

பேருந்திலேறி

உன் ஊருக்குப் பயணிக்கும்

இந்த ஞாயிறின் திடீர் பயணம்

பரவசமாகவே இருக்கிறது

நான் என் ஊரில்

என் வீட்டிலிருந்தபோதும்.

 - சௌவி


நெருங்கிய தோழியென அறியப்பட்டவள்

நெருங்கிய தோழியென அறியப்பட்டவள்

காணொளி அழைப்பில் வந்திருந்தாள்

தன் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

நின்றுவிட்ட தகவலுடன்.

பதற்றமடைந்தவனின் மறுமொழி கவலையின்றித் தொடர்ந்தவள்

பீர் போத்தலையேந்திய 'அவனின்’

முகநூல் படம்தான் காரணமென்றாள்.

சிறுநேர அமைதிக்குப் பின்னர்

p74a.jpg

வாழ்வழிக்கும் மதுத் தீமைகளை ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்டவள்

அதோடு நிறுத்தியிருக்கலாம்.

உன்னைப்போல ஒருவன்தான் துணையாக

விருப்பமென்று குறும்புன்னகை தந்தவள்

துண்டித்துவிட்டாள் நேரடி அழைப்பை.

பன்னீர்ப்பூ நறுமணம் அறை பரவும் அத்தருணத்தில்

குற்றவுணர்வுச் சாராயம் நிரம்பி வழியுமென் மதுக்கோப்பை விரிசலை அறிந்திருக்கவில்லை என் நெருங்கிய தோழியென அறியப்பட்டவள்.

vikatan.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அழியாத தடங்கள் | 2015-ன் பெண்கள்

 
pengal_2696406f.jpg
 

முதல் மகளிர் படைப்பிரிவு

குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக அனைத்து மகளிர் படைப்பிரிவு இடம்பெற்றிருந்தது. 25 வயது கேப்டன் திவ்யா அஜித், 154 பெண்களுடன் ராணுவ படைப்பிரிவை வழிநடத்திச் சென்றார். கடற்படைப் பிரிவை லெப்டினன்ட் கமாண்டர் சந்தியா சவுகானும், விமானப்படைப் பிரிவைப் படைத் தலைவர் சினேகா ஷெகாவத்தும் வழிநடத்திச் சென்றனர். முப்படைப் பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றுவதைக் கனவாக வைத்திருக்கும் பெண்களுக்கு இந்த நிகழ்வு பெரிய உத்வேகத்தை அளித்தது.

rep_2696401a.jpg

சமத்துவத்தை நோக்கிய ஆஸ்கர் உரை

‘பாய்வுட்’ படத்துக்காக பாட்ரிசியா ஆர்க்கெட் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார். அவர் தன் ஆஸ்கர் உரையில், பெண்களுக்கு எதிராக நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வைப் பற்றி பேசினார். “உயிர்களைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும், வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் என எல்லோருடைய உரிமைகளுக்காகவும் நாம் போராடியிருக்கிறோம். இப்போது பெண்களின் ஊதிய சமத்துவத்துக்காகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது”. பாட்ரிசியாவின் இந்த ஆஸ்கர் உரை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்தியாவின் மகள்

ஆவணப்பட இயக்குநர் லெஸ்லி உட்வின், 2012 டெல்லி பாலியல் வழக்கு பற்றி ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்தை எடுத்திருந்தார்கள். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அந்தப் படத்தை பிபிசியில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், குற்றவாளி முகேஷ் சிங்கின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்று இந்திய அரசு படத்துக்குத் தடை விதித்தது. “இரவு ஒன்பது மணிக்கு மேலே, எந்த நல்ல பெண்ணும் வெளியே வர மாட்டாள்” என்ற முகேஷ் சிங்கின் கருத்துக்கும், “என் வீட்டுப் பெண்கள் யாராவது இரவு ஆண் நண்பருடன் வெளியே சென்றால், அவர்களை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன்” என்று குற்றவாளித் தரப்பு வழக்கறிஞரான ஏ.பி.சிங் சொன்ன கருத்துக்கும் நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

lessy_2696381a.jpg

திருமண வல்லுறவு குற்றமே!

உலக நாடுகளில் குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘திருமண வல்லுறவு’ (marital rape) இந்தியாவில் இன்னும் குற்றமாக அறிவிக்கப்படவில்லை. “சர்வதேச நாடுகள் வேண்டுமானால் திருமண வல்லுறவைக் குற்றமாகக் கருதலாம். ஆனால், இந்தியாவுக்கு அதெல்லாம் சரிவராது. ஏனென்றால், இந்தியாவில் திருமணம் புனிதமாகக் கருதப்படுகிறது” என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்திரி பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஏப்ரல் மாதம் இப்படிக் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சகம், டிசம்பர் மாதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருமண வல்லுறவைக் குற்றமாக அறிவிக்கும் சட்டத்திருத்தம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சொன்னார்.

சானியாவின் சாதனை

மகளிர் இரட்டையர் பிரிவில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார் சானியா மிர்சா. விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்ஸுடன் சேர்ந்து இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கிறார். 2015-ல், சானியா - ஹிங்கிஸ் ஜோடி, தாங்கள் விளையாடிய 62 போட்டிகளில் 55 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி ஜோடியை டென்னிஸ் ரசிகர்கள் ‘சான்டினா’ என்ற செல்லப்பெயர் வைத்து அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சானியாவின் டென்னிஸ் வாழ்க்கையில் 2015-ஐ நிச்சயம் மறக்க முடியாது.

சாதிக்கத் தூண்டுபவர்கள்

பிபிசி வெளியிட்டிருக்கும் உலகின் ‘சாதிக்கத் தூண்டும் 100 பெண்கள் 2015’ பட்டியலில் இந்தியாவிலிருந்து ஏழு பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். பாடகி ஆஷா போன்ஸ்லே, டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, நடிகை காமினி கவுஷல், விவசாயி ரிம்பி குமாரி, தொழில்முனைவோர்கள் ஸ்ம்ருதி நாக்பால், கனிகா தேக்ரிவால், பிரச்சாரகர் மும்தாஜ் ஷேக் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அதேமாதிரி, எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ‘ஐசிஐசிஐ’ தலைவர் சந்தா கோச்சார், ‘பயோகான்’ நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ குழுமத்தின் தலைவர் ஷோபனா பார்தியா ஆகிய நான்கு இந்திய பெண்கள் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் உலகின் ‘100 சக்தி வாய்ந்த பெண்கள்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.

சவூதி பெண்கள் வாக்களித்தனர்!

சவூதி அரேபியாவின் வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர். 2015 நகர சபை தேர்தலில், 1,30,637 பெண்கள் முதல் முறையாக வாக்களித்திருக்கின்றனர். 979 பெண்கள் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாகவும் நின்றிருக்கின்றனர். அதில் இருபது பெண்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். மொத்த நகரசபை தொகுதிகளில் இது வெறும் ஒரு சதவீதம்தான். சவூதி அரேபியப் பெண்கள் இதை ஒரு வரலாற்றுத் தருணமாகக் கொண்டாடுகின்றனர்.

saudi_2696399a.jpg

“ஹேப்பி டு பிளீட்!”

சபரிமலை தேவசம் போர்ட் தலைவர் பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பெண்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி யோசிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிகிதா ஆசாத் ‘ஹேப்பி டு பிளீட்’ (Happy to Bleed) என்ற பிரச்சாரத்தை பேஸ்புக்கில் தொடங்கினார். இந்தப் பிரச்சாரம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. மாதவிடாயை இழிவானதாக நினைக்கும் மனோபாவம் ஒழிய வேண்டும் என்பதை இந்தப் பிரச்சாரம் உரக்கப் பேசியது.

தாமதமாகக் கிடைத்த நீதி

கொல்கத்தா 2012 ‘பார்க் ஸ்டிரீட்’ பாலியல் வழக்கில், சூசெட் ஜோர்டன் மறைவுக்குப் பிறகு, அவருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரின் குற்றமும் கொல்கத்தாவின் அமர்வு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளாகியும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளைத்தான் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. மேலும் இரண்டு முக்கியக் குற்றவாளிகளை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி, ‘இது ஜோடிக்கப்பட்ட சம்பவம்’ என்று கூறியிருந்தார். மாநில அமைச்சர்களும் சூசெட் ஜோர்டனைத் தரக்குறைவாக விமர்சித்திருந்தனர். ஆனால், சூசெட் இதையெல்லாம் எதிர்த்து இறுதிவரை போராடினார். பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண் என்று தன்னை கூறுவதை அவர் கடைசிவரை எதிர்த்தார். கடந்த மார்ச் மாதம், அவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தார்.

பாலிவுட்டில் பெண்கள் ராஜ்ஜியம்

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாலிவுட்டில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. தீபிகாவின் ‘பிக்கு’, ‘பாஜிராவ் மஸ்தானி’, கங்கனாவின் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’, ரிச்சா சட்டாவின் ‘மசான்’, அனுஷ்காவின் ‘என்எச் 10’, கல்கி கேக்கிலானின் ‘மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’, அறிமுக நாயகி பூமி பெட்நேகரின் ‘தம் லகா கே ஹைசா’ எனப் பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன. தீபிகா படுகோன் மூன்றாவது முறையாக பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

12592230_668569086578970_656075945889534

934167_668569089912303_73153986716805078

12400966_668569083245637_630926307917469

12524203_668569119912300_672393438913269

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Flóra Borsi என்பவர் உருவாக்கியது, இந்த சுயஉருவப் படங்கள். ஒரு கண் மனிதனுடையதாகவும், மற்றொன்று விலங்குக் கண்ணாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக உருவாக்கியதுதான் இந்த வித்தியாசமான படைப்பு. இதற்கு, 'Animeyed' என்று பெயர் சூட்டியிருக்கிறார்

Vikatan

  • தொடங்கியவர்

''எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றும்?''

''ரோசா பார்க்ஸ் நினைவுக்கு வருவார். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண்மணி அவர். தையலகத்தில் பணிபுரிந்த ஏழைப் பெண். 1950-களில் அமெரிக்கப் பேருந்துகளில் வெள்ளையர்கள் ஏறினால், இருக்கையில் அமர்ந்து இருக்கும் கறுப்பர்கள் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். அந்தக் கறுப்பர்கள் பெண்களாக, முதியவர்களாக, கர்ப்பிணிகளாக இருந்தாலும் இதே நிலைதான். முதன்முதலாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கறுப்பினப் பெண்மணி ரோசாதான். இது தொடர்ச்சியாக கறுப்பர்கள் தங்கள் உரிமைகளை முன்னெடுக்கவும் காரணமாக இருந்தது.

ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் அரசியலில் முன்னுக்கு வர வழிவகுத்தவர், பேருந்துகளில் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சம உரிமை என்ற நீதிமன்றத் தீர்ப்பு வரக் காரண மாக இருந்தவர் என்று பல பெருமைகள் ரோசா பார்க்ஸுக்கு உண்டு. அமெரிக்கப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக அவரைப் பற்றி எழுதிக்கொண்டு இருந்தாலும், அவர் அமைதியாக 20 ஆண்டுகள் ஒரு சிறிய நகரத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். இப்படித்தான் சில சாதாரண மனிதர்கள் வரலாற்றுத் தேரின் வடம் பிடித்து நகர்த்திவிட்டு, தன்னடக்கத்துடன் ஒதுங்கிக்கொள்கிறார்கள்!''

1934436_1058886764170113_788746856192079

vikatan

  • தொடங்கியவர்

பெல்ஜியம் ஜேக்கப் ஏன் மதுரை ஒச்சப்பன் ஆனார்? - இது மதுரை ‘நண்பேண்டா’ கதை

 

ன்னது ஹென்க் ஒச்சப்பனா? பேரே வித்யாசமா இருக்கே... என்று உங்களுக்கு தோன்றும் சந்தேகம் சரியானதுதான். ஏனென்றால் இந்தப் பேருக்கு பின் இருக்கும் பயணம்.... அவ்வளவு சுவாரஸ்யம்!

பொதுவாக இந்தியாவுக்கு வரும் பல வெளிநாட்டவர்கள், ஓரிரு மாதங்கள் இங்கு தங்கி, இட்லி, சாம்பார், ஜிகர்தண்டா என சுவைத்து மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சாவூர் பெரிய கோவில் என ரசித்து, ஜல்லிக்கட்டு நடந்தால் அதையும் ஒரு எட்டு பார்த்து மிரண்டு, இறுதியில் "Incredible India" என்று பாராட்டி நமக்கு பை சொல்லி அவரவர் நாடுகளுக்கு திரும்பிவிடுவர். ஆனால் இங்கு ஒருவரோ, தமிழ் கலாச்சாரத்தை தனக்கு விளக்கிய ட்ரை சைக்கிள்காரரான ஒச்சப்பனுடன் தனக்கு ஏற்பட்ட நட்பால் ஹென்றி ஜேகப் என்ற தன் பெயரையே ஹென்க் ஒச்சப்பனாக மாற்றி இருக்கிறார். மதுரைக்கு வந்திருந்த பெல்ஜியம் சுற்றுலா பயணி ஹென்க் ஒச்சப்பனை சந்தித்தோம்.

12544136_10208469294880022_1848535030_o.


"இப்போ எனக்கும் ஒச்சப்பனுக்கு ஒரு குட்டி சண்டை. அதுவும் போக அவர் இப்போலாம் ரொம்ப பிஸி. சீக்கிரமே போய் அவனைப் பார்க்கணும்!’’ எனத் தொடங்கிய ஹென்க், 20 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளுக்கு ஃப்ளாஷ் கட் அடித்தார். "எனக்கு பெல்ஜியம். 1984ல் முதல் தடவை தமிழ்நாடு வந்தேன். அப்போ மதுரைல இருந்து கொடைக்கானல் போன ஒரு கூட்டமான பஸ்ல நின்னுட்டே போனேன். அந்தளவுக்கு கூட்டமான பஸ்ல எல்லாம் நான் போனதில்லையா... தள்ளாடிட்டே இருந்தேன். அதைப் பார்த்து ஒருத்தர் எனக்கு தன் சீட்டை விட்டுக் கொடுத்தார். அவர்தான் ஒச்சப்பன். love at first sight-னு சொல்ற மாதிரி எங்களுக்குள்ள பார்த்த நிமிஷமே ஃப்ரெண்ட்ஷிப் பத்திக்கிச்சு. 22 வருசமா அது தொடருது.

12545825_10208469301800195_978784944_o.j

அப்புறம் மதுரை வர்றப்பலாம் ஒச்சப்பன் வீட்டுக்குப் போயிருவேன். அவர் குடும்பத்துலயும் என் மேல பாசத்தைக் கொட்டுவாங்க. நானும் ஒச்சப்பனை என் கூட பிறக்காத சகோதரனா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். மதுரைல வழக்கமா டூரிஸ்ட் போற இடங்களுக்கே போயிட்டு இருந்தேன். ஆனா, ’I show you real India’-னு கூட்டிட்டுப் போயி அரைகுறை ஆங்கிலத்துல பேசிப் பேசி உண்மையான மதுரையை, தமிழர்களின் கலாசாரத்தை எனக்குப் புரிய வைச்சான் ஒச்சப்பன். அப்படியே மதுரை தாண்டி தமிழ்நாடு முழுக்க சுத்த ஆரம்பிச்சோம். எங்க புல்லட் பைக் சென்னைல ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரை போகாத இடமில்லை. பல ஊர், பல கலாசார மக்கள், பல கோயில்கள், பல பழக்கவழக்கங்கள்னு பார்த்திருக்கேன். ஆனா, எனக்குப் பிடிச்ச ஊர் மதுரைதான்!’’

ஆம்! இவருக்கு மதுரை என்றால் கொள்ளைப் பிரியம். கடந்த 20 வருடங்களாக, ஒவ்வொரு ஆண்டும்  மதுரையில் 3 மாதங்களேனும் தாங்காமல் இருந்ததில்லை. கிட்டதட்ட மதுரைக்காரனாகவே மாறிவிட்ட இவருக்குதான் காணும் அனைத்து மக்களையும் அவர்களது வாழ்க்கைமுறையும் படம் பிடிப்பதே விருப்பம். குறைந்தது 4,000 படங்களாவது  எடுத்திருப்பார். அவை எதையும் விற்றதில்லை. அப்படியே ஆசைப்பட்டு யாரும் விலைக்கு கேட்டால், அந்தக் காசை யாரேனும் உதவி தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.
 

12545864_10208469288079852_532290640_o.j


"என் நாட்டில் நான் இருக்கும் 9 மாதத்தை ஓய்வில்தான் கழிப்பேன். அப்போது நான் புகைப்படமாக சேகரித்த நினைவுகளை பார்த்து ரசித்து மற்றவர்களுக்கும் காண்பிப்பேன், 'பாருங்கள் இந்தியாவை ! பாருங்கள் என் மதுரையை' என்று பெருமிதத்தோடு சொல்வதில் எனக்கு அவ்வளவு பெருமை. ஏனென்றால், மூன்று மாதங்கள் மதுரையில் இருக்கும்போது அப்படி ஒரு மனநிம்மதி கிடைக்கும். ஆனால், பெல்ஜியம் அப்படி இல்லை. இயந்திர வாழ்க்கை. மதுரையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள் வருசநாடு, மேலக்கால், உசிலம்பட்டி. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி என் சொர்க்க பூமி 'மாங்குளம்'. இயற்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் அந்த கிராமமே சொர்க்கம்தான்!’’

collage11.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க

மதுரையை இவ்வளவு சிலாகிக்கும் இவருக்கு இப்போது ஒரே ஒரு வருத்தம்தான். முன்பைப் போல் தன் நண்பர் ஒச்சப்பனால் தம்மோடு நேரம் செலவிட முடியாததுதான். விவசாயம் பார்க்க அவர் ஊரரான கொப்பிளிபட்டி சென்றுவிட்டாராம் ஒச்சப்பன். நண்பனை மிஸ் செய்யும் ஹென்க் ஒச்சப்பன் பெல்ஜியத்தில் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? சிறைச்சாலையில் சீனியர் கறார் அதிகாரியாம்!

"நான் என் வேலையைப் பற்றி யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் சில நேரங்களில் என்னிடம் 'உங்களுக்கு போதை பொருள் வேண்டுமா' எனக் கேட்பார்கள். அப்போது என்னைப் பற்றிச் சொல்வதை தவிர்த்து வேற வழியே இல்லை. அவ்வாறு நான் சொன்னவுடன் பயந்து ஓடி விடுவார்கள்!’’ என்று சிரிக்கிறார் ஹென்க்.
 

007c2b05-b7d5-4825-a6bc-3dbb90b3b2a5.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க


பல வருடங்களாக மதுரை வந்து பழகிவிட்டதால், ஜல்லிக்கட்டு பற்றியெல்லாம் ஹென்க்குக்கு அத்துபடி! ஜல்லிக்கட்டு தடை பற்றி அவரிடம் கேட்டபோது, ’’என்னதான் தமிழ்நாடு எனக்கு நெருக்கமானதாக இருந்தாலும், நான் வெளிநாட்டுக்காரன்தான். இந்த ஊர் அரசியலை நான் விமர்சிக்க மாட்டேன். ஆனால் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை எந்தவொரு லாபி குழுவால் தடை செய்ய முடியாது. தமிழ்நாடு மக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காப்பாற்ற பொங்கியெழ வேண்டும்!’’ என நாசூக்காகக் கூறுகிறார்.

ஹும்... பெல்ஜியம் நாட்டுக்காரருக்குத் தெரியுது!    

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

12489394_973818986000129_550393567152322

தமிழ் சினிமாவின் கலக்கல் நகைச்சுவை மன்னன், கலக்கல் கதாநாயகன், அண்மைக்கால ஹிட் படங்களை ஹிட்டாக வைக்கும் கில்லாடி,
'சகலகலா' சந்தானத்தின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

ஒரு தலைவன் இப்படி தான் பேச வேண்டும்? மோடி முதல் தோனி வரை நமக்கு கற்று தரும் பாடம்

 

ஒருவரது குணத்தை பெரிதும் வெளிப்படுத்துவது அவரது பேச்சாக தான் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது போன்றது என்பது மிகவும் அவசியம். ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் துவங்கி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் பரிசளிப்பு விழா வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுபவரை பார்த்திருப்போம். வழக்கமான டெம்ளேட் வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் துவங்கி சர்ச்சையை ஏற்படுத்தும் செய்தி வரை வெவ்வேறு விதமாக பேசுபவர்களை பார்த்திருப்போம். அதிலும் ஒரு தலைவன் என்பவர் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. உலகின் சிறந்த தலைவர்களின் பேச்சில் என்ன இல்லை, என்ன இருந்துள்ளது என்பது குறித்த சிறந்த உதாரணங்கள் இதோ ....

எக்சாம்பிள் மோடி!

Modi.jpg


மோடி பேச்சில் எப்போதுமே மேற்கோள்களுக்கு பஞ்சமிருக்காது. உலகில் எந்த ஊருக்கு சென்றாலும் அதோடு இந்தியர்களை தொடர்புபடுத்தி பேசுவது, விநாயகர் தான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி என தொழில்நுட்பத்துக்கு உதாரணம் கூறுவது என துவங்கி பார்ப்பவர்களை வசீகரப்படுத்திவிடும் திறமை கொண்ட தலைவராக விளங்குபவர். இவரது பேச்சுக்கள் கேட்பவரை போரடிக்காமல் உள்ளது என கூற வைக்கிறது. உலகின் பல பிரதமர்/ அதிபர்கள் இதே பார்முலாவை தான் ஃபாலோ  செய்கிறார்கள்.


எமொஷனால் மார்க்!
 

facebook3.jpg


ஒரு தலைவனின் பேச்சு எமோஷனலாக இருக்கக்கூடாது தான். ஆனால் பாசிட்டிவான விஷயத்தில் எமோஷனலாக பேசி சூழ்நிலையை மாற்றுபவர் தான்  சிறந்த தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது பேச்சுகளில் ஏதாவது ஒரு எமோஷனலான விஷயத்தை நுழைத்து விடுகிறார். அமெரிக்காவில் மோடியுடனான உரையாடலின் போது 'இந்திய கோயில்கள் தான் மக்களின் இணைப்பை உணர்த்தியது. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரை தான் என்னை இந்தியாவுக்கு அனுப்பியது என பேசியது அனைத்து இந்தியர்களையும் கவர்ந்தது. எமொஷனலை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மார்க் மிகப்பெரிய உதாரணம்.


இன்ட்ரஸ்டிங்க் சுந்தர் பிச்சை!

google-ceo-sundar-pichai_5b1aaffc-a4c0-1


கூகுள் சிஇஒ, தமிழகத்தை சேர்ந்தவர் சுந்தர் பிச்சை. இவரது தலைமை பண்பு கூகுளின் பல திட்டங்களுக்கு உதவியாக இருந்துள்ளது. கூகுள் சிஇஓவாக பதவியேற்று முதல் முறையாக இந்தியா வந்த போது ஆன்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் பெயர் என்ன என்ற கேள்விக்கு பால்பாயசம், பால்கோவா என இந்திய உணவுகளின் பெயராக கூட இருக்கலாம் என அசால்ட்டான பதில் மூலம் இந்தியர்களை தன் வசப்படுத்தியவர் சுந்தர் பிச்சை. ஒரு தலைவனின் பேச்சு எவ்வளவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமோ அதே அளவு இன்ட்ரஸ்டிங்க்காகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் தலைவர்கள் போரடிக்கும் டேப் ரெக்கார்டர்கள் போல் மாறிவிடுவார்கள்.

ஃப்ளுயன்ட் கருணாநிதி!

maxresdefault.jpg



பேசும் போது தடங்கல் இல்லாமல் பேசுவது ஒரு கலை. சிலருக்கு என்ன பேச வந்தோம் என்பதே மறந்துவிடும். ஆனால் சில தலைவர்களின் பேச்சு சரியான வார்த்தைகளுடன், தெளிவாகவும், சாதூர்யமாகவும் பேசும் தலைவர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவரைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவே ஒரு கூட்டம் கூடும். இந்த ரகத்தை சேர்ந்தவர் தான் கருணாநிதி. அவரது பேச்சுகளில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகவும், நுட்பமான வார்த்தை பிரயோகம் நிறைந்ததாகவும் இருக்கும். இதுபோன்ற சாதூர்யமான பேச்சுக்கள் மூலமாக ஒரு தலைவனால் நீண்ட நாட்கள் தலைவன் என்ற இடத்தில் நீடிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.

கான்ஃபிடேன்ட் ஒபாமா!

OB-VG735_obama1_G_20121107022710.jpg


ஒரு தலைவரின் பேச்சில் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயம் தன்னம்பிக்கை. ஒரு நாட்டை, ஒரு கால்பந்து அணியை, அலுவலகத்தில் ஒரு குழுவை நிர்வகிக்கும் ஒரு தலைவர் என்பவர் தன்னம்பிக்கை நிறைந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு அணி துவண்டு இருக்கும் நேரத்தில் அந்த அணியை தன்னம்பிக்கையாக பேசி வெற்றி பாதைக்கு மாற்றுவது துவங்கி, ஒரு நாட்டின் பிரச்னையை முன்னின்று சமாளிக்கும் போது மக்கலுக்கு பிரச்னை தீர்ந்துவிடும் என்ற தன்னம்பிக்கையை கொண்டு வருவது இரண்டுமே ஒரு தலைவனின் முக்கிய பண்பாகும். ஒபாமாவின் பெரும்பாலான பேச்சுக்கள் இதனையே பிரதிபலிக்கின்றன. அவரது முதல் பிரச்சாரமான 'ஹோப்' துவங்கி அவரது அனைத்து பேச்சுக்களிலுமே. தன்னம்பிக்கைக்கு பஞ்சமிருக்காது.

ரெஸ்பான்சிபிள் தோனி!

ms-dhoni-press-conference.jpg


ஒரு தலைவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய பண்பு பொறுப்பேற்பது. வெற்றி பெறும் போது அதற்கு காரணமாக நபரை கைகாட்டி பாராட்டுவதும், தோல்விகளுக்கு மற்றவர்களை கைகாட்டாமல் தானே பொறுப்பேற்பதும் தலைவனின் தலைமை பண்பை மேலும் ஒரு படி உயர்த்தும் கருவிகள். இதற்கு சரியான உதாரணம் இந்திய கேப்டன் தோனி மட்டுமே. இந்தியா அபாரமாக வென்ற போட்டிகளில் அவரது பேச்சில் 'நான்' என்ற வார்த்தை பயன்படுத்தியிருக்கமாட்டார். அப்போது அளிக்கும் பேட்டிகளிலும் ஒட்டு மொத்த அணியை குறிக்கும் 'பாய்ஸ்' என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதேசமயம் தோல்விகளுக்கு மீடியாக்கள் முன்பாக தனி நபரை குறை கூறியதே  இல்லை. கடைசியாக தற்போது ஆஸ்திரேலியாவில் தோற்ற 4வது போட்டியிலும் எனது இன்னிங்க்ஸ் தான் தோல்விக்கு காரணம் என தோனி கூறியது அவரது தலைமை பண்பை உணர்த்துகிறது. எப்படி வெற்றிகளில் நான் என்ற வார்த்தையை பயன் படுத்த மாட்டாரோ அதேபோல்  தோல்விகளில் நான் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.

ஒரு தலைவன் தான் இதுபோன்று பேச வேண்டும் என்பதில்லை. ஆளுமை திறன் கொண்ட தன்னை தலைவனாக உயர்த்திக்கொள்ள விரும்பும் அனைவருமே இது போன்ற பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டால் ஒரு சாதாரண அணி அமர்விலோ அல்லது குழு சந்திப்பிலோ உங்கள் ஆளுமை நிறைந்த பேச்சு உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் கருவியாக அமையும். உங்களுக்குள் இருக்கும் தலைவனை உங்கள் பேச்சின் மூலம் வெளிக்கொண்டு வந்தால் நீங்கள் தான் நாளை தலைமுறைக்கு உதாரணமாக இருப்பீர்கள்.

vikatan

  • தொடங்கியவர்

ஈழத்தின் சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞருமான அமரர் சு.வித்தியானந்தன் அவர்களின் நினைவு தினம்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.

12592182_973828219332539_167681097287437

  • தொடங்கியவர்

ஜனவரி 21: சோவியத் ரஷ்யாவை உருவாக்கிய லெனின் நினைவு தினம் இன்று

லெனின்... காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து மூலதனம்
நூலை எழுதி, உலகத்தொழிலாளர்கள் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து ஆட்சியை
கைப்பற்றுவார்கள் என்று சொன்னதை மெய்ப்பித்தது இவர்தான்.

இவர் காலத்தில் ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள்
மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் ஆடம்பரங்களில் மூழ்கினார்கள். எளிய
தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள். கோரிக்கைகளை அளிக்க உள்ளே
அனுமதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிகவும் சாவகாசமாக சுட்டுகொன்ற கொடுமைகள்
எல்லாம் நடந்தன. இதை எதிர்த்து பல மக்கள் போராடினார்கள். மிகசிறிய நாடான
ஜப்பானிடம் போரில் பரிதாபமாக தோற்கவும் செய்தது ரஷ்யா.

லெனின் அப்பா ரஷ்யாவில் கல்வி அதிகாரியாக இருந்தார். அவரிடம் இருந்து
தீரத்தை சகோதரர்கள் கற்று இருந்தார்கள். அண்ணன் அரசரை கொல்லதிட்டமிட்டதாக
தூக்கில் போடப்பட்டார். அன்றைக்கு இறுதி தேர்வு மனதை
திடப்படுத்திக்கொண்டு தேர்வெழுதினார் லெனின். மாவட்ட அளவில் முதலிடம்
பெற்றார். சட்டம் பயில முயன்றார். கல்லூரி இடம் தர மறுக்க நான்கு வருடம்
படிக்க வேண்டிய சட்டத்தை ஒன்றரை வருடத்தில் முடித்தார்.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வகுத்தளித்த மூலதனம் நூலை படித்தார்.
தொழிலாளர்களை ஊக்குவித்தார் லெனின். அதிக வேலை நேரத்தை எதிர்த்து
போராடினார்கள். அவர்களை பின்னிருந்து இயக்குவது லெனின் எனத் தெரிந்தது.
கொடிய சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டார். 1905-ல் தொழிலாளர் புரட்சி
நடத்த முயன்று தோற்றுப்போனார். பின் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து,
ஜெர்மனி முதலிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். வெளியே இருந்து
தன் எழுத்தின் மூலம் உத்வேகம் ஊட்டியவண்ணம் இருந்தார். முதல் உலகப்போரில்
கலந்துகொண்ட ரஷ்யாவின் மக்கள் பசியால் வாடினார்கள்.

ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமலும், உணவில்லாமலும் நொந்து போனார்கள்.
ஜாரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து பிப்ரவரியில் ஆட்சியை மக்கள்
பிடித்தார்கள்; அதை நாடாளுமன்ற குழு ஒன்று நிர்வகித்தது. பின் லெனின்
நாடு திரும்பினார். புகழ்பெற்ற அக்டோபர் புரட்சி நடந்து லெனினிடம் ஆட்சி
ஒப்படைக்கப்பட்டது.

ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு போரை நிறுத்தினார்
தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர்
மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது; அனைத்தும் அரசாங்கத்தின்
கட்டுபாட்டுக்கு வந்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும்,
வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது.

ஜார்ஜியா மாகாணத்தில் ஒரே ஒரு இளைஞன் மருத்துவம் படிப்பதற்காக எல்லா
நூல்களையும் அவனின் தாய்மொழியில் மொழிபெயர்க்க சொன்ன பெருமனது லெனினுக்கு
சொந்தமானது.

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. நிலங்கள் பிரித்து
எளிய மக்களுக்கு தரப்பட்டன .லெனின் எந்த அளவுக்கு விமர்சனத்தை மதித்தார்
என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு விளாடிமர் மாயகொவஸ்கி ஆட்சியில் அதிகாரிகள்
கூட்டம் கூட்டம் எனச்சொல்லி மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் இருப்பதாக
கவிதை வடித்தார்; அதை வெளியிட பயந்தார்கள்.

லெனின் கேள்விப்பட்டு அவரை அழைத்து ஒரு கவிஞன் இதைத்தான் பாடவேண்டும்;
என்னை பற்றி இனிமேல் புகழ்ந்து எழுத வேண்டாம் என்றார். ஓயாத உழைப்பால்
உடல்நலம் பாதிக்கப்பட்டது; பக்கவாதம் வந்தது; வலது கை பாதிக்கப்பட இடது
கையால் எழுத கற்றுக்கொண்டு தன் கருத்துக்களை அந்த நிலையிலும் சொன்னார்.
பேசவே முடியாத சூழலிலும் எளிய மக்களுக்காக யோசித்த அவர் நினைவு தினம்
இன்று

12622391_1058926100832846_38281746084776

விகடன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 21

 

649varalu.jpg1643 : ஏபல் டாஸ்மான், டொங்கா தீவில் இறங்­கிய முதல் ஐரோப்­பியர் ஆனார். 

 

1793 : பிரான்ஸின் பதி­னாறாம் லூயி மன்னன் அர­ச ­து­ரோகக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக மர­ண­தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டான். 

 

1887 : அவஸ்­தி­ரே­லி­யாவின் பிரிஸ்பேன் நகரில் 465 மி.மீ. (18.3 அங்­குலம் ) மழை வீழ்ச்சி பதி­வா­கி­யது. அவுஸ்­தி­ரே­லிய மாநிலத் தலை­நகர் ஒன்றில் பதி­வான மிக அதி­க­பட்ச மழை­வீழ்ச்சி இது­வாகும். 

 

1924 : சோவியத் தலைவர் விளா­டிமிர் லெனின் இறந்தார். 

 

1925 : அல்­பே­னியா குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­பட்­டது. 

 

1941 : இரண்டாம் உலகப் போரில் அவுஸ்­தி­ரே­லிய மற்றும் பிரித்­தா­னியப் படைகள் லிபி­யாவின் டோபுருக் நகரைத் தாக்­கின. 

 

1947 : முத­லா­வது சிங்­களத் திரைப்­ப­ட­மான "கட­வுணு பொரந்­துவ" வெளி­யா­கி­யது.

 

1954 : உலகின் முத­லா­வது அணு­சக்­தி­யா­லான நீர்­மூழ்கிக் கப்பல், யூ.எஸ்.எஸ். நோட்­டிலஸ், ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வெள்­ளோட்டம் விடப்­பட்­டது. 

 

1960 : மேர்க்­குரி விண்­க­லத்தில் சாம் என்ற  குரங்கு விண்­வெ­ளிக்குப் பய­ண­மா­னது. 

 

1961 : அமெ­ரிக்­காவில் சுரங்­க­மென்றில் ஏற்­பட்ட விபத்­தினால் 435 பேர் உயி­ருடன் புதை­யுண்­டனர்.

 

1972 : இந்­தி­யாவில் திரி­புரா, மேகா­லயா, மணிப்பூர் ஆகி­யன தனி மாநி­லங்­க­ளாக்­கப்­பட்­டன. 

 

1968 : ஐத­ரசன் குண்­டு­களை சுமந்­து­சென்ற அமெ­ரிக்க விமா­னப்­படை விமா­ன­மெ­ான்று விமா­னப்­படைத் தள­ம­ருகே விபத்­துக்­குள்­ளா­னது. அதி­லி­ருந்த 6 பேர் பாய்ந்து தப்­பினர். ஒருவர் உயி­ரி­ழந்தார். இவ்­வி­மா­னத்தில் கொண்­டு­செல்­லப்­பட்ட 4 ஐத­ரசன் குண்­டு­களில் ஒன்று மீள கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. 

 

1976 : கொன்கோர்ட் விமான சேவை லண்டன், ஹ்ரேய்ன் மற்றும் பாரிஸ், ரியோ நக­ரங்­க­ளுக்­கி­டையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

 

1999 : அமெ­ரிக்க கரை­யோரக் காவல் படை­யினர் கப்­ப­லொன்­றி­லி­ருந்து 4300 கிலோ­கிராம் கொகேய்ன் போதைப்­பொ­ருளை கைப்­பற்­றினர். அமெ­ரிக்க வர­லாற்றில் ஒரே தட­வையில் கைப்­பற்­றப்­பட்ட மிக அதி­க­ள­வி­லான போதைப்­பொருள் இது­வாகும். 

 

2000 : ஈக்­கு­வ­டோரில் ஜனா­தி­பதி ஜமீல் மஹூவாத் புரட்சி மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

 

2003 : மெக்­ஸி­கோவில் ஏற்­பட்ட பூகம்­பத்தால் 29 பேர் இறந்­தனர். 10000 பேர் வீடு­களை இழந்­த­னர். 

 

2004 : நாசா­வினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்­பப்­பட்ட ஸ்பிரிட் ஊர்­தியின் தொடர்­புகள் துண் டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு 2004 பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன. 

 

2008 : அமெரிக்காவின் அலாஸ் காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி நபர் இறந்தார். 

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=649#sthash.wziCSB1a.dpuf
  • தொடங்கியவர்

 

சூரிய நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் என்னென்ன பலன்கள் என்பதையும் விளக்கும் அற்புதம்.

  • தொடங்கியவர்

160121123521_planetstamil.png

விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு அடுத்த மாதம் ஒரு அபூர்வ விருந்து காத்திருக்கிறது -- ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில் , சாதாரணமாக, தொலைநோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரியும்.

புதன், வெள்ளி,செவ்வாய், சனி மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ( கோள்கள்) பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் இது போல வரிசையாக அணிவகுத்து உங்கள் கண்களுக்குப் புலப்படப் போகின்றன.

இந்தக் காட்சி அடுத்த புதன்கிழமையிலிருந்து பிப்ரவரி 20 வரை தெரியும்.

பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன் பார்க்கத் தொடங்குமாறு விண்வெளி ரசிகர்களுக்கு அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

BBC

  • தொடங்கியவர்

north%20korea%20korya%20li.jpg

'நோ ஹேங் ஓவர்' - செல்லப்பிள்ளை நாட்டில் இப்படியும் ஒரு மதுபானம் கண்டுபிடிப்பு!

மது அருந்தினால் ஏற்படும் ஹேங் ஓவர் பிரச்னையில் குடிப்பவர்கள் சிக்கிக்கொள்ளாத வகையில்,  வடகொரியா புதுவகை மதுவைக் கண்டுபிடித்துள்ளது.

அணுசக்தி ஆராய்ச்சி, ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு என்று ஆயுத தயாரிப்பில் பரபரப்பாக இருக்கும் வடகொரியா, மது தயாரிப்பிலும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சாவல் விட்டுள்ளது. வடகொரியாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், அதிக போதையைக் கொடுத்து மூளை செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மது வகைகளுக்கு மாற்றாக மிகக் குறைந்த ஆல்ஹகால் அளவுள்ள மதுவைத் தயாரித்துள்ளது.

VIKATAN

  • தொடங்கியவர்

பாக்கெட் மணி கேட்ட மகன்... வங்கிக்கடன் பாணியில் தந்தை அனுப்பிய மறுப்பு கடிதம்!

 

ந்தையிடம் பாக்கெட் மணி கேட்ட மிசூரியை சேர்ந்த ஆறு வயது சிறுவனுக்கு,  வங்கி நோட்டீஸ் போல தந்தை அனுப்பிய மறுப்பு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் சிறுவனின் தந்தை,  “உங்கள் கணக்கை ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் சேமிப்பு கணக்கில் பணம் ஏதும் இல்லை. கிறிஸ்துமஸில் இருந்து ஏற்கனவே 80 டாலர்கள் கேளிக்கையில் செலவழித்து விட்டாயிற்று.

 

dad_vc_vc1.jpg

 

இந்நிலையில் மேலும் செலவு செய்ய கேட்கப்பட்டிருக்கும் 20 டாலர்களை  தர தற்போது
இயலாது. மேலும் உங்கள் வேலைகளை நீங்கள் சரிவர செய்யாததனாலும் நீங்கள் கடனாக கேட்டுள்ள 20 டாலர்களை கொடுக்க இயலாது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் புகார் பிரிவில் (சிறுவனின் தாயார்) தெரிவித்துகொள்ளலாம்” எனவும் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

“தந்தையின் சேமிப்பு மற்றும் கடன்” வங்கியின் பெயரில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் இந்த தந்தை.

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பு பழக்கம் மற்றும் பணத்தை சிக்கனமாக செலவு செய்யும் பழக்கத்தை கற்றுக் கொடுக்கவும், இந்த மாதிரியான ஐடியாக்களை பின்பற்றலாமே என பலரும் இந்த கடித புகைப்படத்திற்கு கமென்ட் கொடுத்துள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

வலது

அவர் எப்போதும்

இடது தோளிலேயே

மம்பட்டி சுமந்து நடந்தார்

இடது கையாலேதான்

ஒருவரை ஓங்கி அறைந்தார்

அரிவாள் பிடித்தார்            

தீப்பெட்டி கொளுத்தினார்

குழாய் மூடினார்

கல்லெறிந்தார்

களை பிடுங்கினார்

ஊரிலெல்லோரும் அவரை

'இடது’ என்றே அழைத்தார்கள்

 

அவருக்கு

வலது பக்க உதட்டுக்கு மேலே

ஒரு பெரிய மச்சம் இருந்தது

வலது கையில்தான்

ஒருமுறை கொப்பளம் வந்திருந்தது

வலது கால் செருப்பு மட்டும்            

எப்போதும் அதிகம் தேய்ந்திருந்தது

அவருக்கு வலது பக்கக் காதோரத்தில்தான் முதலில் நரைக்கத் தொடங்கியிருந்தது

படுக்கையிலேயே ஒருநாள்

அவர் மரணித்திருந்தபோது

வலது பக்கமாகத்தான் ஒருக்களித்துக்கிடந்தார்

ஊரிலெல்லோரும் அவரை

'இடது’ என்றே அழைத்தார்கள்.

 


சின்னக்கா

ஷாம்பு வாங்கிய ரெண்டு ரூபாயைக்

கணக்கெழுதி

ரவிக்கை கிழிய அண்ணன் சட்டையை

எடுத்துடுத்தி

தம்பி கழுத்தை இறுக்கிக்கட்டி

தெருவைச் சுற்றி

கருக்கலில் அப்பா எழுப்பி

பாடம் படிச்சு

ராப்பகலா அக்காகூட

வேலை செஞ்சு...

அம்மாவுக்கு நெஞ்சுவலி என்றதும்

மூணுமணி பஸ்ஸில் வந்த சின்னக்கா

திரும்பிக்கூடப் பாக்காம

அஞ்சுமணி பஸ்ஸுக்கு ஓடுது

’லேட்டாப்போனா

மாமா திட்டுவாரு’னு.

vikatan.

  • தொடங்கியவர்

 

 


ஸ்காட்லாந்தில் "தவறான பாதையில்" நடிகர் ஆர்னால்ட் ஸ்வார்ஸ்நெகார்

  • தொடங்கியவர்

அழியாத தடங்கள் | ஆடுகளம் 2015

 
coll_2696548f.jpg
 

மார்ச்

மார்ச் 20: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி கர்நாடகம் இரானி கோப்பையை வென்றது.

மார்ச் 26: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

மே

மே 4: ஹானவரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

மே.24: ஐபிஎல் 2015 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது.

ஜூன்

ஜூன் 4: இந்திய நடுவர் எஸ்.ரவி ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டார்.

ஜூன் 24: வங்கதேசம் இந்தியாவை ஒருநாள் தொடரில் 2-1 என்று வீழ்த்தியது.

ஜூன் 26: என்.பி.ஏ. கூடைப்பந்து தொடரில் முதல் இந்திய வீரராக சத்னம் சிங் பமாரா டலாஸ் மேவ்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஜூலை

ஜூலை 8: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை 5-வது ஒருநாள் போட்டியில் வீழ்த்தித் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.

கார்பைன் முருகுசாவை வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் தனது 6-வது விம்பிள்டன் பட்டத்தையும் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.

மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் சானியா மிர்சா.

ஜூலை 12: இந்தியாவின் சுமித் நாகல் பாயிஸ் இரட்டையர் விம்பிள்டன் பட்டம் வென்றார்.

லியாண்டர் பயஸ், மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து விம்பிள்டன் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 16-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

ஜூலை 14: முன்னாள் நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது.

ஜூலை 15: தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் 2-1 என்று வங்கதேசம் வீழ்த்தியது.

ஆகஸ்ட்

ஆக.15: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக நுழைந்த இந்திய வீராங்கனையானார் சாய்னா நெவால்.

ஆக.16: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் சாய்னா நெவால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆக.29: ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது சானியா மிர்சாவுக்கு வழங்கப்பட்டது.

செப்டம்பர்

செப்.1: 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி கோலி தலைமையில்டெஸ்ட் தொடரை வென்றது.

செப்.5: மியூனிக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை தொடரில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா வெள்ளி பதக்கம் வென்றார்.

உலக மல்யுத்தப் போட்டித் தொடரில் இந்திய வீரர் நரசிங் யாதவ் வெண்கலம் வென்றார்.

அக்டோபர்

அக்.25: இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரை 3-2 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டிசம்பர்

டிச.6: உலக ஹாக்கி லீக் போட்டித் தொடரில் ஹாலந்தை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது.

டிச.7: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி இந்தியா சாதனை புரிந்தது.

டிச.8. ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை மற்றும் ராஜஸ்தானுக்குப் பதிலாக புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் சேர்க்கப்பட்டன.

டிச.20: இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் கால்பந்து கிளப் கோவா அணியை 3-2 என்று வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தனித்துத் தெரிந்த நட்சத்திரங்கள்

அஸ்வின் சாதனை: 2015-ல் இந்திய கிரிக்கெட்டில் சாதனை நாயகர்களாகத் திகழ்ந்தவர்களில் அஸ்வினுக்கு முதலிடம். ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பிஷன் சிங் பேடிக்குப் பிறகு முதலிடம் பிடித்த இந்திய பவுலர் என்ற தகுதியை எட்டினார். ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வந்தார்.

கோலியின் தலைமை: ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலியை பிசிசிஐ தேர்வு செய்தது. அனுபவமற்ற டெஸ்ட் அணியைக் கொண்டு இலங்கையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதும், தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றதும் கோலிக்குப் பெருமை சேர்த்தன.

லட்சுமண அஸ்திரம்: ஈ.எஸ்.பி.என் - கிரிக்இன்ஃபோ இணையதளத்தின் கிரிக்கெட் மந்த்லி இதழ் கடந்த 50 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களைத் தேர்வு செய்தது. இதில் விவிஎஸ். லஷ்மண் 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஆடிய இன்னிங்ஸ் முதலிடம் பிடித்தது.

பிரகாசித்த மட்டைகள்: ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகளை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தட்டிச் செல்ல, ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராகத் தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஓய்வுபெற்றவர்கள்: மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), குமார சங்கக்காரா (இலங்கை) வீரேந்திர சேவாக் (இந்தியா) ஆகிய சாதனையாளர்கள் ஓய்வுபெற்றார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 21
 
 

article_1421815198-terror.jpg1789: அமெரிக்காவின் முதலாவது நாவல் பொஸ்டன் நகரில் அச்சிடப்பட்டது.

1793: பிரான்ஸின் 16ஆம் லூயி மன்னன் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1899: ஒபெல் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை ஆரம்பித்தது.

1908: நியூயோர்க் நகரில் பெண்கள் பொது இடத்தில் புகைபிடிப்பதை தடைசெய்யப்பட்டது.

1911: முதலாவது மொன்டே கார்லோ பந்தயம் நடைபெற்றது.

1921: இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1924: சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.

1925: அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1941: இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

1947: முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

1954: உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், ஊஸ்ஸ் நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960: ஜமைக்கா விமான விபத்தில் 37 பேர் பலியாகினர்.

1960: மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1972: திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

1981: ஈரானில் அமெரிக்கத் தூதரகத்தில் 444 தினங்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1999: அமெரிக்க கரையோரக் காவல் படையினர் 4300 கிலோகிரோம் கொகேய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/164318/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0-#sthash.nFOIKezc.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை''- கண்களில் நீர் கசிய வைக்கும் ஹோட்டல்

 

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார்,விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன்,  அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார்.  சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.

akil%20.jpg

அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.

அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை  அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.

அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து மிகவும் அமைதியாக  அமர்ந்து உணவை ருசித்து  சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.

பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை  விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.

பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம்  இதுதான்... ''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கடினமான விஷயங்கள்

w1_2706160f.jpg

w3_2706158a.jpg

w2_2706159a.jpg

2_2706162a.jpg

1_2706163a.jpg

twitter_2706161a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

அழியாத தடங்கள் 2015: தனிப் பெரும் நாயகியும் வசூல் நாயகனும்

2015__CINEMA_2696442f.jpg
 

இந்த ஆண்டும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் தமிழ் சினிமா என்பதே நாயகர்களின் சினிமாதான் என்ற நிலை அதிகம் மாறிவிடவில்லை. மசாலா வணிகப் படங்களின் ஆதிக்கம் 2015-ம் ஆண்டிலும் தொடர்ந்தது. பேய்ப்படங்களுக்குக் கிடைத்த தொடர் ஆதரவால், முன்னணி நட்சத்திரங்கள் சிலர் பேய் வேடம் போடவும் முன்வந்தார்கள்.

கதாநாயகர்களின் கள நிலவரம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிக்குப் படம் எதுவும் வெளியாகவில்லை. கமல் ஹாஸனுக்கு `உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்கா வனம்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இவற்றில் ‘உத்தம வில்லன்’ படுத்துக்கொள்ள ‘பாபநாசம்’ உறுதியான வெற்றியாக அமைந்தது. ‘தூங்காவனம்’ முதலுக்கு மோசமில்லாத படம்.

அஜித்துக்கு ‘என்னை அறிந்தால்’ சரியாகப் போகாத நிலையில் ‘வேதாளம்’ புயல், வெள்ள பாதிப்பையும் மீறி மிகப் பெரிய வெற்றிப் படமானது. ஃபான்டஸி கதையில் விரும்பி நடித்த விஜயின் ‘புலி’ சுருண்டது. சூர்யாவுக்கு ‘மாசு’, ‘பசங்க 2’ என இரண்டு படங்கள் வெளியானாலும் இரண்டுமே சுமார் ரகத்தில் சேர்ந்தன.

ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா – 2’ படம் மெகா வெற்றி. ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் அயராத உழைப்புடன் வெளியான ‘ஐ’ எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் படுதோல்வி அடைந்தது.

2014-ல் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் மீண்டு வந்த கார்த்திக்கு ‘கொம்பன்’ கைகொடுத்தது. நடிகர் சங்கத்துக்குப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷாலுக்கு ‘ஆம்பள’ வெற்றிப் படமாக அமைந்தாலும் ‘பாயும் புலி’ பரிதாபகரமாகத் தோற்றது. சினிமாவில் கிடைக்காத வெற்றியை நடிகர் சங்கத் தேர்தலில் அறுவடை செய்தார் விஷால். புதிய தலைமுறை நிர்வாகிகள் ‘பாண்டவர் அணி’யாகத் திரண்டு வெற்றிபெற இவரது துணிச்சலான நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைந்தன.

வசூல் நாயகன்

2015-ன் வசூல் நாயகன் ஜெயம் ரவி. இவர் நடித்த ‘தனி ஒருவன்’ பெரும் வெற்றி அடைந்தது. ‘ரோமியோ ஜூலியட்’, ‘பூலோகம் ஆகிய படங்களும் வெற்றிபெற்றன. ‘சகலகலா வல்லவன்’ வெற்றி அல்ல என்றாலும் பெரிதாகக் கையைக் கடிக்கவில்லை.

தனுஷுக்கு ‘அநேகன்’, ‘மாரி’, ‘தங்க மகன்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாயின. இவற்றில் ‘அநேகன்’, ‘மாரி’ ஆகிய படங்கள் சுமார் வெற்றியைப்பெற்றன. ‘தங்க மகன்’ ஜொலிக்கவில்லை. எனினும் ‘காக்கா முட்டை' படத்தைத் தயாரித்மைக்காகப் பெரும் பாராட்டுகள் இவருக்குக் குவிந்தன.

சிம்புக்கு வெளியான ஒரே படமான ‘வாலு’ அவருக்கு அவ்வளவாகக் கை கொடுக்கவிலை. தவறான காரணங்களுக்காகச் செய்தியில் அடிபட்டு வசைகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.

வளர்ந்துவரும் நாயகனான சிவகார்த்திகேயனுக்கு ‘காக்கிச் சட்டை’ வெற்றிப் படம் என்று கூறப்பட்டாலும் அதிக விலைக்குப் படம் விற்கப்பட்டதால் லாபமில்லை என்றும் கூறுகிறார்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில்.

விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’ ருசிக்கவில்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ வெற்றிபெற்றது.

ஜி.வி. பிரகாஷின் ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றன. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’ படம் சத்தமில்லாமல் வசூல் செய்தது.

அரவிந்த் சாமி வில்லனாக நடித்த ‘தனி ஒருவன்’ பெரிய வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ‘ஓ காதல் கண்மணி’ பெரிய வெற்றியாக அமைந்தது.

காமெடிக் களத்திலிருந்து நாயகன் அவதாரம் எடுத்த சந்தானம் (‘இனிமே இப்படித்தான்’), வடிவேலு (‘எலி’), விவேக் (‘பாலக்காட்டு மாதவன்’) ஆகியோர் தமது முயற்சியில் தோல்வியையே தழுவினார்கள் ‘49 ஓ’ மூலம் மீண்டும் நடித்த கவுண்டமணிக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. கருணாகரனுக்கு ‘உப்புக் கருவாடு’ படம் சுமார் வெற்றி.

‘குற்றம் கடிதல்’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்கள் தங்கள் தரத்தினால் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தன.

மொத்தமாகப் பார்க்கும்போது, அழுத்த மான கதை, வலுவான சித்தரிப்புகள், தொய்வில்லாத திரைக்கதை, நேர்த்தியான படமாக்கல் ஆகிய அம்சங்கள் சரியாக அமைந்தால் மட்டுமே அந்தப் படத்தைக் கொண்டாடுவோம். இல்லையென்றால் சீந்த மாட்டோம் என்று ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.

வழக்கத்துக்கு மாறாக

‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘ரேடியோ பெட்டி’ ஆகிய படங்கள் சர்வதேச அளவில் திரைவிழா விருதுகளைப் பெற்றன. குறும்படங்கள் திரையங்குகளை எட்ட வாய்ப்பில்லை என்ற நிலையை மாற்றும் விதமாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முயற்சியில் பல குறும்படங்கள் இணைந்த தொகுப்புத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

தனிப் பெரும் நாயகி

தமிழ் சினிமாவில் முதல்முறையாகக் கதாநாயகி ஒருவரை ‘லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித் திருக்கிறார்கள். கதாநாயகர்களை வசூல் கடவுளர்களாகப் பார்க்கும் தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளைக் கடந்து கதாநாயகியாகத் தொடரும் நயன்தாராவின் நடிப்பில் வெளியான ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய மூன்று படங்கள் 50 நாட்களைக் கடந்து ஓடி வெற்றியை அடைந்திருக்கின்றன. முன்னணிக் கதாநாயகர்களின் படங்கள் இரண்டு வாரங்களே தாக்குப்பிடிக்கும் நிலையில் நயன்தராவின் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

 

ஒரு மீனால் குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியுமா?

  • தொடங்கியவர்
இன்பாக்ஸ்
 

 

dot1.jpg `டைட்டானிக்' ஜேக்கையும் ரோஸையும் மறக்க முடியுமா? புகழ்பெற்ற அந்த லியோனார்டோ டிகாப்ரியோ - கேட் வின்ஸ்லெட் ஜோடி கோல்டன் குளோப் விருது விழா மேடையில் எமோஷனாகி, கட்டிப்பிடித்ததுதான் சென்ற வார ஹாட் ஹிட் வைரல். 73-வது கோல்டன் குளோப் விருது விழாவில், டிகாப்ரியோ ‘ரெவனன்ட்’ படத்துக்காக சிறந்த நடிகர் விருதையும், கேட் வின்ஸ்லெட் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ படத்துக்கான சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றிருக்கிறார்கள். டிகாப்ரியோவுக்கு இந்த முறையாவது ஆஸ்கர் கிடைக்குமா?!

p75a.jpg

dot1.jpg சினிமாவுக்கு இப்போது நம்பர் 1 மார்க்கெட் சீனா. கடந்த மாதம் சீனாவில் ரிலீஸான `ஸ்டார் வார்ஸ்' படம் முதல் மூன்று நாட்களிலேயே 53 மில்லியன் டாலர் அள்ளியிருக்கிறது. `பாகுபலி' சீனாவில் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. ரஜினியின் `2.0' படமும் சீன மார்க்கெட்டை மனதில்வைத்தே பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிறது. பின்றோம் ப்ரோ!

dot1.jpg இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக 2016-ம் ஆண்டிலும் தொடர்கிறார் தீபிகா படுகோன். `பாஜிராவ் மஸ்தானி', பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் எகிறி அடிக்க, தீபிகாவின் சம்பளமும் எகிறிவிட்டது. 15 கோடி ரூபாய் சம்பளமாம். அடுத்த இடத்தில்,  கங்கனா ரனாவத். இவரது சம்பளம் ஒன்பது கோடி ரூபாய். குரோர் லேடீஸ்!

p75b.jpg

dot1.jpg `காக்கா முட்டை', `நானும் ரெளடிதான்' என தயாரிப்பாளராகவும் ஹிட் அடித்துவிட்ட தனுஷ், `அம்மா கணக்கு' என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிவரும் `நில் பாதே சனாதா' என்ற இந்தி படத்தின் ரீமேக் இது. இன்னும் திரைக்கு வராத இந்தப் படத்தை இந்தியில் இயக்கிய பெண் இயக்குநர் அஷ்வினி ஐயர்தான் தமிழிலும் இயக்குகிறார். அம்மா-மகள் உறவு பற்றிய இந்தப் படத்தில், ரேவதி அம்மாவாகவும், அமலா பால் மகளாகவும் நடிக்கிறார்கள்.  விருது கணக்கு!

dot1.jpg `கோல்டன் ராஸ்பெரி விருது’ என்பது, ஹாலிவுட்டில் வந்த சொதப்பலான படங்களுக்காகத் தரப்படும் உயரிய(?) விருது. 2015-ம் ஆண்டில் இந்த விருதுக்காகப் பல படங்கள் போட்டிபோட, ரேஸில் முன்னணியில் இருப்பவை `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' மற்றும் `பிக்ஸல்ஸ்'. சக்கைப்போடு போட்ட ரொமான்ஸ் கில்மா நாவல்தான் `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே'. அது படமாகும்போது தெறிக்கவிடும் என எதிர்பார்க்க, படம் பப்படம் ஆனது. `2015-ம் ஆண்டின் சொதப்பல் படம்' என நெட்டிசன்ஸும் பொங்கியது, படத்துக்கு எக்ஸ்ட்ரா அட்வான்டேஜ். கோலிவுட்டுக்கும் ஒண்ணு கொடுங்கப்பா!

dot1.jpg  இயக்குநர் பாலாவின் அடுத்த  படம் `குற்றப் பரம்பரை'. விஷால், ஆர்யா, ராணா, அதர்வா, அர்விந்த் சுவாமி... என மல்ட்டி ஸ்டார் காஸ்ட் பிடித்திருக்கிறார் பாலா. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா. செஞ்சிருங்க!

p75c.jpg

dot1.jpg  த்ரிஷாவின் முதுகில் புதிதாக ஒரு டாட்டூ சேர்ந்திருக்கிறது. இதற்கு முன்னர் நீமோ ஃபிஷ் மற்றும் அவரது ராசியான ரிஷப டாட்டூவை வரைந்திருந்தவர், இப்போது கேமராவுடன்கூடிய கிளாப் போர்டு டாட்டூவைத் தவழவிட்டிருக்கிறார். `மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் என் உடம்பிலும் இருக்கிறது' என டாட்டூவுக்குக் காரணமும் சொல்லியிருக்கிறார் த்ரிஷா. டாட்டூ பொண்ணு!

p75d.jpg

p75e.jpg

dot1.jpg கரீனா கபூர், அர்ஜுன் கபூர் நடிக்கும் `கி அண்ட் கா' படத்தை இயக்கிவருகிறார் பால்கி. படத்தில் கரீனா வேலைக்குச் செல்லும் பெண்ணாகவும், அர்ஜுன் கபூர் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் கணவராகவும் நடிக்கிறார்கள். சற்று வித்தியாசமான காதல் கதையை கையில் எடுத்திருக்கும் பால்கி, `மோஷன்’ போஸ்ட்டரில் கரீனா, அர்ஜுனுக்குத் தாலி கட்டுவதுபோல வெளியிட, எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. படம் ஏப்ரல் 1-ம் தேதி ரிலீஸ். உண்மையான வீட்டுக்காரர்!

p75f.jpg

dot1.jpg சினிமா ஆசையால் போலீஸிடம் சிக்கியிருக்கிறான் மெக்ஸிகோ நாட்டு போதை மன்னன் எல் சாப்போ. சில  மாதங்களுக்கு முன்னர் சிறையில் இருந்த எல் சாப்போவை, அவனது ஆட்கள் 300 கோடி ரூபாய் செலவுசெய்து பாதாள சுரங்கம் அமைத்துத் தப்பிக்கவைத்தார்கள். இப்போது எல் சாப்போவை மீண்டும் பிடித்துவிட்டது மெக்ஸிகோ அரசு. வாழ்க்கை போரடிக்க, சிறையில் இருந்து தப்பித்த எஸ்கேப்பிஸ சாகசங்களை வைத்து ஹாலிவுட் படம் எடுக்க ஆசைப்பட்டான் எல் சாப்போ. அதற்காக, தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரையும் அணுகியவன், பிரபல நடிகர் ஷான் பென்னைச் சந்திக்க, அந்த நெட்வொர்க்கை வைத்தே வளைத்திருக்கிறது மெக்ஸிகோ போலீஸ். சொந்த செலவில் சூனியம்!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப்பில் ப்ளூ-டிக் காமிச்சும் பதில் வரலைன்னா.... GIFs கலாட்டா!

 

இப்போதெல்லாம் வாட்ஸ்அப் ''ப்ளூடிக்''தான் பிரேக்-அப், டைவர்ஸ், மெமோ, டிஸ்மிஸ்...ஏன் சமயங்களில் கொலை வரைகூட செல்கிறது. வாட்ஸ்அப்பில்  மெசேஜ் அனுப்பிய சில நொடிகளில் பதில் வராவிட்டால், யாராக இருந்தாலும் பொங்கலோ பொங்கல்தான். ’என்ன திமிரு...ப்ளூடிக் காட்டுது. ஆனா, ரிப்ளை பண்ணலை’ என கொலைவெறியுடன் நம்மை ‘வைச்சு செய்யக் காத்திருப்பார்கள்’. ஆனால், ப்ளூடிக்கே வந்தாலும், ‘நான் உங்க மெசேஜை படிக்கலை’ எனக் கதறும் சூழ்நிலைகளை நிறையவே நாம் எதிர்கொள்வோம். அதெல்லாம் என்ன தெரியுமா? 

 

jeyOajM.gif

. தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்யவோ, அஜித் பட ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவின்போதோ, திமிறும் கூட்டத்தில் அடித்துப் பிடித்துக் காத்திருப்போம். அப்போது வாட்ஸப் டோன் கேட்டு மொபைல் எடுத்துப் பார்த்த நொடி, கவுன்டர் படாரென திறக்கும். நீங்களே சொல்லுங்க... அப்போ எப்படிங்க பதில் அனுப்ப முடியும்?  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கட்டிக்கோ ஒட்டிக்கோ...!- சிறுவர்களின் வேட்டி மோகம்!

 

kids%20dhotti%20leftttt.jpgஃபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, 'கல்யாண மாப்பிள்ளை 'வேட்டி' க்கு தான் என்றும் மவுசு.

அந்தவகையில் புத்தாண்டு, பிறந்தநாள், பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கியமான கொண்டாட்டங்களில் இப்போது கட்டாயம் இடம் பிடித்திருப்பது, "கட்டிக்கோ, ஒட்டிக்கோ" வேட்டிகள்தான். சென்னையின் பிரபல வேட்டி விற்பனைக் கடைகளில் பொங்கலுக்கு முந்தைய ஓரிரு நாட்களில் மட்டுமே பல லட்சக்கணக்கில் வேட்டிக்கான வியாபாரம் நடந்திருக்கிறது.

விற்பனை ஏரியாக்கள்

எம்.சி.ரோடு, ராயபுரம் சுழல் மெத்தை, புரசைவாக்கம், தி.நகர் பஜார்களில் அதிகம் விற்ற ஆடைகளில் சிறுவர் வேட்டி, முதல் ஐந்து இடத்தில் இருந்துள்ளது.

விளம்பர உத்திகள்

வேட்டிகளை தயாரிக்கும் பிரபல கம்பெனிகள், 'எங்கள் வேட்டிகளைக் கட்டினால், ஆண்மை மிளிரும், தமிழர் பெருமை உயரும்' என்றெல்லாம் சினிமா நடிகர்களை வைத்து கோடி கோடியாய் செலவிட்டு விளம்பரங்கள் செய்வது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, 'கல்யாண மாப்பிள்ளை 'வேட்டி' யை  உடுத்திக்கொள்வதைக் காண முடியும்.

வேட்டியின் வேறு பெயர்கள்

தமிழர்கள் பெருமிதமாக உடுத்தும்  வேட்டிக்கு சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா என்று பெயர். குஜராத்தில் தோத்தியு, ஒரிய மொழியில் தோத்தி, வங்காளத்தில் தூட்டி, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாபி மொழியில் லாச்சா, உ.பி, பீகார்மாநிலங்களில் மந்தாணி, கன்னட மொழியில் கச்சே-பான்ச்சே, அசாமியில் சூர்யா, தமிழகத்தில் வேட்டி, வேஷ்டி.

ஐ.ஏ.எஸ். சகாயம் காட்டிய வழி

கோ-ஆப்டெக்ஸ் இயக்குநராக சகாயம் ஐ.ஏ.எஸ் இருந்தபோதுதான், "பொங்கல் திருநாளை நினைவுபடுத்தும் விதமாகவும், பண்பாட்டை போற்றும் விதமாகவும் அன்றைய தினத்தை 'வேட்டி உடுத்தும்' நாளாக கடை பிடிக்கலாமே என்று முதல் குரல் (வேண்டுகோள்) கொடுத்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வேட்டிக்கு தமிழர்கள் மத்தியில்  வரவேற்பு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

kids%20dhotti%20600%201.jpg

'கிளப்' தடை உடைத்த வேட்டி

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் மரபான வேட்டியை அணிந்து கொண்டு நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடுத்து அந்த உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது. கடைசியில், 'வேட்டிக்கு தடை' போடும் கிளப், ஓட்டல்கள் உரிமம் ரத்து என்று சட்டம் போட்டு தமிழர் வேட்டியை காப்பாற்றிக் கொடுத்தது அரசு .

உளவியல் நிபுணர் அபிலாஷா என்ன சொல்கிறார்?

பிரபல உளவியல் நிபுணர் அபிலாஷாவிடம் வேட்டிக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கேட்டபோது, "சிறுவர்கள் வேட்டி அணிவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அவர்களின் எண்ணங்களில் கண் முன்னே தெரிகிற நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி போன்ற இளையவர்கள் வேட்டியுடன் வந்து ஜொலிப்பதும் ஒரு காரணம். அதேபோல அப்பா, மாமா என்று கண்ணெதிரே இருக்கிற உறவு முறைகள் வேட்டியோடு இருப்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள், நாமும் அவர்களைப்போல பெரியவர்கள்தான் என்ற சின்னச் சின்ன ஆசைகள் சிறகடிக்கும் வயதும் ஒரு காரணம். மற்றபடி உளவியல் ரீதியாக பெரிய பிரச்னை எதுவும் இதில் இல்லை.

sychologist%20abhilasha.jpgசினிமா, தொலைக்காட்சி போன்றவைகளில் அடிக்கடி வேட்டி அணிந்து வந்து போகும் பிரபலங்களும் அவர்களின் மனதில் நுழைந்திருக்க வாய்ப்பு அதிகம். மொத்தத்தில்  இது ஒரு கலாச்சார மீட்டெடுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். எப்படிப் பார்த்தாலும் சிறுவர்கள் வேட்டிக்கு மாறியிருப்பதை நாம் ஆர்ப்பரித்து வரவேற்க வேண்டியவர்களே " என்கிறார் உற்சாகமாக...

வேட்டி வாண்டுகள் சொல்வது என்ன?

மல்லு வேட்டி, பட்டு வேட்டி என்று பல ரகங்கள் மாப்பிள்ளை 'முறுக்கு' டன் அந்த ஒருநாள் மட்டும் ஜொலிக்கும். இப்போது அதே ஸ்டைலில் சிறுவர்கள், குறிப்பாய் பள்ளி மாணவர்கள் இறங்கியுள்ளனர். இது என்ன கலாட்டா ? என 'வாண்டு' களிடமே பேச்சுக் கொடுத்தோம்.

"எல்லாப் பசங்களும் பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு 'டாடி' மாதிரி வேட்டி கட்டிக்கணும்னு ஆசைப்பட்டோம். வீட்டில் இதை சொன்னால் கிண்டல் செய்வாங்களோன்னு நினைச்சோம்...ஆனால், வீட்டில் பேரன்ட்ஸ் இதை ஜாலியா எடுத்துக்கிட்டாங்க.

வழக்கமா, ஃபெஸ்டிவல்களில் பேன்ட்-சர்ட்ஸ் இரண்டு 'செட்' டை  கலர், கலரா எடுத்துப்போம், இல்லையா..? அதை இந்த முறை ஒரு 'செட்'டுன்னு மாத்திக்கிட்டு, வேட்டி, மேட்சிங் சர்ட்டுன்னு எடுத்துக்கிட்டோம்..." என்கின்றனர் கூலாக.

"ஆமாம், வேட்டியை, உங்களுக்கு யார் கட்டி விட்டாங்க?" என்றதும், "அதெல்லாம் யாரும் கட்டணும்னு அவசியமே கிடையாது. இடுப்பில் வேட்டியை அப்படியே சுத்திக்கிட்டு வேண்டும் அளவுக்கு டைட் பண்ணி  அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எலாஸ்டிக் 'ஸ்பான்ச்' சில் ஒட்டி விட வேண்டியதுதான். வேட்டி அவிழவே செய்யாது. அது மட்டுமில்லே, இரண்டு பக்கமும் சைடு பாக்கெட்டை கொடுத்திருக்காங்களா, அதனால பேன்ட் போட்ட மாதிரிதான் இதுவும் இருக்கும். நடக்கும் போது, சர், சர்... னு வர்ற சத்தத்தை கேட்டு டாடி தான் வர்றாருன்னு அம்மா, எட்டிப் பாக்கறாங்க, ஜாலியா இருக்கு" என்கின்றனர்...

வாண்டுங்களா... இது வேறயா ?

vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.