Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 12

 

1492 : கரீ­பியன் பிராந்­தி­யத்தின் பஹாமஸ் தீவு­களை கிறிஸ்­டோபர் கொலம்பஸ் அடைந்தார். அவர் கிழக்­கா­சி­யாவை தான் அடைந்­த­தாக எண்­ணினார்.

1798 : இலங்­கை­யா­னது பிரித்­தா­னி­யாவின் அரச குடி­யேற்ற நாடாக (Crown Colony) பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்­கையின் ஆளு­ந­ராக பிரெ­டெரிக் நோர்த் நிய­மிக்­கப்­பட்டார்.

Sri_Lanka-Sri-Lanka-314x400.jpg1799 : பிரான்ஸை சேர்ந்த ஜேன் லெப்ரோஸ் எனும் பெண் 900 அடி உய­ரத்தில் பறந்த பலூ­னி­லி­ருந்து பர­சூட்டில் குதித்த முதல் பெண் ஆனார்.

1901 : அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­துக்கு அப்­போ­தைய ஜனா­தி­பதி தியோடர் ரூஸ்வெல்ட் “வெள்ளை மாளிகை” என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பெய­ரிட் டார்.

1918 : அமெ­ரிக்­காவின் மினெ­சோட்டா மாநி­லத்­தி­லி­ருந்து கிளம்­பிய காட்­டுத்­தீ­யினால் 453 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : யுக்­ரைனின் தினி­புரோ பெத்ரோவ்ஸ்க் நகரில் இந்­நா­ளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்­ம­னி­யினர் 11,000 யூதர்­களைக் கொன்­றனர்.

1964 : சோவியத் ஒன்­றியம் வஸ்கோத் 1 விண்­க­லத்தை விண்­ணுக்கு ஏவி­யது. இதுவே பல விண்­வெளி வீரர்­களை விண்­ணுக்குக் கொண்டு சென்ற முத­லா­வது விண்­க­ல­மாகும்.

1968 : ஸ்பெயி­னி­ட­மி­ருந்து கினியா சுதந்­திரம் பெற்­றது.

1992 : எகிப்தில் பூகம்­பத்­தினால் 210 பேர் உயி­ரி­ழந்­தனர்.

general_musharraf.jpg1994 : மகெலன் விண்­கலம் வெள்ளிக் கோளின் வளி­மண்­ட­லத்தை அடைந்­த­தை­ய­டுத்து, அத­னு­ட­னான தொடர்­பு­களை நாசா இழந்­தது. இவ்­விண்­கலம் அடுத்­த­டுத்த நாட்­களில் எரிந்து சேத­ம­டைந்­தது.

1999 : பாகிஸ்­தானில் இடம்­பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்­சியில் பர்வேஸ் முஷாரப் பிர­தமர் நவாஸ் ஷெரீப்பை ஆட்­சியில் இருந்து அகற்றி நாட்டின் அதி­ப­ரானார்.

1999 : உலகின் மக்கள் தொகை 6 பில்­லி­யனை எட்­டி­யது.

 

2000 : அமெ­ரிக்க கடற்­ப­டையின் யூ.எஸ்.எஸ். கோல் கப்பல், யேமனில் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னதால் 17 பேர் பலி.

2001 : அமை­திக்­கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனா­னுக்கும், ஐக்­கிய நாடு­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது.

2002 : இந்­தோ­னே­ஷி­யாவின் பாலித் தீவில் இரவு விடுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 202 பேர் கொல்­லப்­பட்டு 300 பேர் காய­ம­டைந்­தனர்.

2003 : பெலா­ரஸில் மனநோய் வைத்­தி­ய­சாலை ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 30 மன­நோ­யாளர் இறந்­தனர்.
2013 : மைக்கல் ஷுமேக்கர் 6 ஆவது தட­வை­யாக போர்­மி­யூலா வன் சம்­பி­ய­னானார்.

2005 : சீனாவின் சென்ஷோ 6, விண்­வெளி வீரர்கள் இரு­வ­ருடன் ஏவப்­பட்­டது. மனி­தர்­க­ளுடன் பய­ணித்த சீனாவின் 2 ஆவது விண்­கலம் இது­வாகும்.

2013 : பெரு நாட்டில் வாக­ன­மொன்று மலைச்­ச­ரிவில் வீழ்ந்­ததால் 51 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுறாவை கையால் பிடித்த துணிச்சல் பெண்: வைரலாகும் வீடியோ

 

சுறாவை கையால் பிடித்த துணிச்சல் பெண்:  வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிசா ஹத்ஹையர் என்ற பெண் சிட்னியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்கும்போது அங்கு மாட்டிக்கொண்ட சுறாவினை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து மெலிசா ஹைத்ஹயைர் கூறுகையில், நான் நீந்திக்கொண்டிருக்கும்போது சுறா மீன் ஒன்றின் வால்பகுதியை பார்த்துவிட்டு எனது தாயார் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு அந்த மீன் மாட்டிக்கொண்டதை உணர்ந்த நான் நீந்தி சென்று காப்பாத்த முயன்றேன். அது ஒரு மழலை போல இருந்தது, அதை தூக்கி கடலினுள் விடுவது ஒரு பிரச்சனையாகவே இல்லை.  தெரிவித்துள்ளார்.

சுறாவை கையால் பிடித்த துணிச்சல் பெண்:  வைரலாகும் வீடியோ

ஆனால் அந்த சுறா என்னை தாக்கவில்லை. நான் குழம்பிப்போய் என்ன என்று நன்கு பார்க்கும்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது, போர்ட் ஜாக்சன் வகை சுறாக்கள், ஒரு மீட்டருக்கும் குறைந்த அளவே இருக்கும், அவை மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல என்று”. இவ்வாறு மெலிசாதெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

ஒரு கோடிப் பேரைக் கவர்ந்த காஷ்மீர் சுற்றுலா வீடியோ

 

 
kipng

காஷ்மீர் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள 5 நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோ இன்டர்நெட்டில் வைரலாகி கலக்கி வருகிறது. யூடியூப்பில் அப்லோடு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேரும் 72 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதோடு பல லட்சம் பேர் லைக்கும் ஷேரும் செய்திருக்கிறார்கள். தற்போது வரை பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விட்டது. மிக அருமையாக எடுக்கப்பட்டுள்ள அந்த குறும்பட வீடியோவின் காட்சியும், பின்னணி இசையும், பாடல் வரிகளும் அனைவரையும் கவரக் கூடியவை.

அந்தக் குறும்படத்தில் மொத்தமே மூன்றே கேரக்டர்கள்தான். தேனிலவுக்கு வரும் கணவன், மனைவி மற்றும் ஒரு டாக்ஸி டிரைவர். காலையில், படுக்கையில் படுத்திருக்கும் கணவனை எழுப்புகிறார் இளம் மனைவி. ``கிளம்புங்க.. தூங்கவா வந்திருக்கிறோம்..'' என கிளப்புகிறாள். போன் வருகிறது. ``2 நிமிடத்தில் சிவப்பு கலர் கார் ஓட்டல் வாசலில் நிற்கும். டிரைவர் பெயர் மீர். அவர்தான் உங்கள் கெய்டு, காஷ்மீரை சுற்றிக் காட்டுவார். தயாராக இருங்கள்..'' என்கிறார் சுற்றுலா ஏஜென்ட். ``ஆஹா காஷ்மீர் என்ன அழகு`` என ஜன்னலில் விரியும் காட்சியைப் பார்த்துக் கூறும் கணவனும் மனைவியும் தயாராகி கீழே வருகிறார்கள்.

கீழே சிவப்பு நிறக் கார் தயாராக இருக்கிறது. வயதான டிரைவர் அருகிலேயே இருக்க, ``கொஞ்சம் நேரமாகி விட்டது. சாரி'' என இளைஞன் கூற, ``இவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொண்டு வர நேரமாகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள்'' என மனைவி அவரிடம் கூறிவிட்டு, இருவரும் காரில் ஏறிக் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் திகைக்கும் அந்த முதியவர், அவர்களைக் காரில் ஏற்றிக் கொள்கிறார். அப்போது முதியவரின் மனைவியிடமிருந்து போன் வருகிறது. ``இதோ வந்துர்றேன்..'' எனக் கூறுகிறார். ``மன்னிச்சுக்குங்க,, மனைவிதான்..'' எனக் கூறிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்கிறார்.

புதுமணத் தம்பதி அல்லவா.. காரிலேயே கொஞ்சியபடியே வரும் அவர்களின் சந்தோஷத்தை ரசித்தபடி வண்டியை ஓட்டும் முதியவர் தால் ஏரிக்கு அழைத்துப் போகிறார். அங்கு ஒருவரை அழைத்து ``இவர்களுக்கு சுற்றிக்காட்டு..'' எனக் கூறிவிட்டு, அவர்கள் வரும்வரை காத்திருக்கிறார். தால் ஏரியில் சிக்காரா என அழைக்கப்படும் அலங்காரப் படகு செல்ல, எதிரே வரும் படகில் இருக்கும் சிறுமி டாட்டா காட்டுகிறார். பின்னர் பழமையான கான்கா இ மொல்லா மசூதிக்கு கார் போகிறது. போகும் வழியில் வாலிபனுக்கு போன் வருகிறது. மனைவி அவரை முறைக்க, சாரி சாரி எனக் கூறிவிட்டு, போனை கட் செய்கிறார் கணவன். மசூதி வாசலில் புறாக்களுக்கு தானியம் வாங்கிப் போடுகிறார்கள். மசூதியில் பிரார்த்தனை செய்துவிட்டு, வெளியே வருகிறார்கள்.

போகும் வழியில் உயரமான ஒரு பாறையில் ஏறி நின்றபடி, டைட்டானிக் போஸ் கொடுக்கிறது அந்த இளம் ஜோடி. அருகில் இருக்கும் தெளிந்த நீரோடையில் நீரை அள்ளிப் பருகுகிறார்கள். மனைவியின் முகத்தில் குளிர்ந்த நீரை அள்ளி முகத்தில் வீசுகிறார் கணவன். பின்னர் ஒரு ஓடையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தின் மீது அமர்ந்து இயற்கை ரசிக்கிறது ஜோடி. அந்த நேரம் முதியவருக்கு மனைவியிடமிருந்து போன் வருகிறது. அதே நேரம் அந்தப் பெண் அவரை அழைத்து தங்களை செல்போனில் போட்டோ எடுக்குமாறு கூற, போனை கட் செய்துவிட்டு, அவர்கள் அருகே சென்று போனை வாங்கி போட்டோ எடுக்கிறார் முதியவர். அவருக்கு பிரியத்துடன் பிளையிங் கிஸ் கொடுக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து வெட்கத்துடன் சிரிக்கும் முதியவர் காருக்கு திரும்புகிறார்.

அடுத்து, ஒரு வீடு முன்பு கார் நிற்கிறது. காஷ்மீரின் சுவை மிகுந்த உணவு அந்த வீட்டில் தயாராக இருக்கிறது. அந்த வீட்டுக் குழந்தைகளோடு அமர்ந்து சந்தோஷமாக விருந்து சாப்பிடுகிறது அந்த ஜோடி.

அங்கிருந்து கிளம்பும் ஜோடி புல்வெளியில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறது. முதியவர் காருக்குத் திரும்புகிறார். அந்த ஜோடியின் போன் ஒலிக்கிறது. அதையும் சால்வையையும் எடுத்துக் கொண்டு வரும் அவர், போனை இளைஞனிடம் கொடுக்கிறார். சால்வையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ``போனில் பேசலாமா..'' என மனைவியிடம் கேட்டு அனுமதி வாங்கியபின், பேசுகிறார் கணவர். ``சார், நான்தான் டிரைவர் மீர். என்னாச்சு ஓட்டல்ல ஒங்கள காணோம். போன் அடிச்சா போனையும் எடுக்க மாட்டேங்கிறீங்க.. எங்க இருக்குறீங்க..'' எனக் கேட்கிறார் டிரைவர் மீர். அப்போதுதான் அந்த முதியவர் தங்களின் கெய்டு மீர் இல்லை எனத் தெரிய வருகிறது அந்த ஜோடிக்கு. தூரத்தில் குளிர் காய மரக்கட்டைகளை எடுத்து வந்து கொண்டிருக்கிறார் முதியவர். அவரிடம், ``நீங்க மீர் இல்லையா... என இந்த இளைஞன் கேட்க, அவர் சிரித்தபடி, ``இல்லை'' என்கிறார். ``அப்புறம் எப்படி நீங்க.. என இழுக்கும் அந்தப் பெண்ணிடம், ``மனைவி சர்க்கரை வாங்கச் சொன்னாள். காரில் வந்தேன். நீங்க உங்க டிரைவர் மீர்-னு நினைச்சு வண்டில ஏறிட்டீங்க. சரி எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. காஷ்மீர் என் வீடு. அதோட அழகை சுற்றிக் காட்டுறது என்னோட கடமை அல்லவா..'' என்கிறார் அந்த முதியவர். அவரின் அன்பில் அந்த ஜோடி நெகிழ்ந்து போய் நிற்கிறது. பின்னர் இரவில் அங்கேயே மூவரும் குளிர் காய்வதோடு முடிகிறது அந்த வீடியோ.

சாஹிபோ.. சாஹிபோ... என ஆரம்பிக்கும் அசத்தலான பின்னணி பாடலை காஷ்மீரின் முதல் ஐஏஎஸ் அதிகாரி ஷா பாஷல் எழுதியிருக்கிறார். காஷ்மீரின் அழகை வர்ணிக்கும் அருமையான பாடல் அது. காஷ்மீர் பண்டிட் விபா சரபும் அவருடைய முஸ்லீம் நண்பர் முடாசீர் அஹமதும் இணைந்து பாடியிருக்கிறார்கள். காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமது இந்த வீடியோவை வெளியிட்டு பேசியபோது, ``காஷ்மீரின் இயற்கை மட்டுமல்ல, மக்களின் மனதும் அழகானது. விருந்தோம்பல் அவர்களின் ரத்தத்தில் கலந்த ஒன்று. காஷ்மீர் வாருங்கள்.. அதை அனுபவியுங்கள்..'' எனப் பேசினார். அதோடு இந்த வீடியோவை ட்வீட். செய்தார். அதை ஹாலிவுட் பிரபலங்கள், அலியா பட், கரண் ஜோகர், ராக் ஸ்டார், ஹைவே இந்திப் படங்களை எடுத்த இம்தியாஸ் அலி ஆகியோர் ரீட்வீட் செய்ய, வைரலாக பரவத் தொடங்கி விட்டது வீடியோ.

oplpng
 

பூவுலகின் சொர்க்கம் என்பார்கள் காஷ்மீரை. அந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், தோட்டங்கள், ஏரிகள் என எங்கு பார்த்தாலும் சொர்க்கத்தின் பிம்பம் தெரியும். ஒரு காலத்தில் காஷ்மீரைப் பாடாத கவிஞர்களும் இல்லை, அதன் அழகை வர்ணிக்காத திரைப்படங்களும் இல்லை. இப்போது நிலைமை மாறி விட்டது. காஷ்மீர் என்றால் உடனே நினைவுக்கு வருவது தீவிரவாதம்தான். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

மற்ற மாநிலங்களுக்கு எப்படியோ, காஷ்மீரைப் பொருத்தவரை சுற்றுலாதான் பிரதான தொழில், ஆப்பிள் தோட்டம் எல்லாம் அப்பறம்தான். ஒரு லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாவைத்தான் நம்பி இருக்கிறார்கள். பயணிகளே வரவில்லை என்றால் இவர்கள் நிலைமை? அந்தக் கவலையில்தான் காஷ்மீர் சுற்றுலாத் துறை 5 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது. `வார்மஸ்ட் பிளேஸ் ஆன் எர்த்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், காஷ்மீரின் பிரமாண்டமான தால் ஏரி, பழமையான மசூதி, வீட்டு உணவு இவற்றோடு, முக்கியமாக காஷ்மீர் மக்களின் விருந்தோம்பல் பண்பும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

கடந்த 1988 வரை காஷ்மீருக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தது. 1989-ல் காஷ்மீரில் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச் சூடு, இந்தியாவுக்கு எதிரான கோஷம் போன்றவற்றால் சுற்றுலா பயணிகள் வருகை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. அந்த ஆண்டில் 2 லட்சம் பயணிகள் மட்டுமே வந்தனர். பின்னர் கலவரம் குறைந்ததால், அடுத்தடுத்த ஆண்டுகளில் வருகை அதிகரித்தது. 2012-ல் 1.25 கோடிப் பேர் வந்தனர். 2015-ல் 92 லட்சம் பேராகக் குறைந்தது. இவர்களிலும் 78 லட்சம் பேர் ஜம்முக்கு மட்டுமே சென்றனர். 13 லட்சம் பேர் மட்டுமே காஷ்மீர் சென்றனர். கடந்த ஆண்டில் 12 லட்சம் பேர் மட்டுமே வந்தனர். ஆனால் அதன்பிறகு அதிகரித்த, கல்லெறிதல் சம்பவம், ராணுவ முகாம் மீது தாக்குதல், தீவிரவாதிகள் என்கவுன்ட்டர் போன்றவற்றால் இந்த ஆண்டு பயணிகள் வருகை 75 சதவீதம் வரை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டில் தால் ஏரியில் இருக்கும் அத்தனை படகுகளும் முன்பதிவால் நிரம்பி வழிந்தன. இந்த ஆண்டு 5 சதவீத படகுகளுக்குத்தான் பயணிகள் வந்துள்ளனர். ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடி வரை நஷ்டம்.

``இந்தக் குறும்படத்தில் பனி படர்ந்த மலைகள், சலசலத்து ஓடும் நீரோடைகள், வளைந்து நெளிந்து போகும் பாதைகள் போன்ற அற்புதமான விஷயங்களைப் பற்றிச் சொல்லவில்லை. படத்தை கடைசி வரை பாருங்கள். காஷ்மீர் மக்களின் அன்பு, மனித நேயம், விரும்தோம்பல் பண்பு புரிய வரும்'' என்கிறார் காஷ்மீர் சுற்றுலாத் துறை இயக்குநர் மகமூத் அஹமது ஷா.

 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

“கட்டிலு வேணுமா கட்டில்?!” - கயிற்றுக் கட்டில் பிசினஸில் கலக்கும் ஆஸ்திரேலியக்காரர்!

 
 

வேப்ப மர நிழல்... மென்மையாக உடலை வருடும் காற்று... கயிற்றுக் கட்டில்! இந்த சுகத்துக்கு ஈடு எதுவும் இல்லை. மாத்திரை, மருந்துகள் தந்துவிடாத நிம்மதியான உறக்கத்துக்கு முழு உத்தரவாதம். நம் ஊர் பாரம்பர்யக் கயிற்றுக் கட்டில் இப்போது ஆஸ்திரேலியாவில் விற்பனையில் சக்கைபோடு போடுகிறது! உங்களால் நம்ப முடிகிறதா... ஒரு கயிற்றுக் கட்டிலின் விலை 50,236 ரூபாய்! நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. ஆஸ்திரேலியா, சிட்னி நகரத்தில் வசிக்கும் டேனியல் புளூர் (Daniel Bloore) என்பவர்தான் இந்த விலைக்குக் கயிற்றுக்கட்டிலை விற்பனை செய்கிறார். விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.

கயிற்றுக் கட்டில்

 

டேனியல் புளூரைத் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினோம்... “நான் 2010-ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்தேன். கல்கத்தாவில், பீகாரைச் சேர்ந்த ஒருவர் நண்பரானார். பீகாரிலுள்ள தன் கிராமத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கேதான் கயிற்றுக் கட்டிலை முதன்முறையாகப் பார்த்தேன். ஒவ்வொரு வீட்டிலும் இந்தக் கட்டில் இருந்தது. நடுமுற்றத்தில் இந்தக் கட்டிலைப் போட்டு, பலரும் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய நண்பர் வீட்டிலும் அப்படித்தான். மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. அந்தக் கட்டிலில் அமர்வதே ஒருவித மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.

ஒருநாள் வயதானவர்கள் இருவர், கையில் கயிற்றுக்கான நாரோடு வந்தார்கள்; கயிறு பின்ன ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு நான் உதவினேன். நானும் மெள்ள மெள்ள அவர்களிடமிருந்து கட்டில் தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, இந்தக் கட்டிலால் உடலுக்குப் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறினார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினேன். ஒரு கட்டில் தேவைப்பட்டது. அப்போது இந்தியாவில் பார்த்த கட்டில் நினைவுக்கு வந்தது. அதையே செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஆனால், நான் இருந்த இடத்தில் கயிற்றுக் கட்டில் செய்பவர்கள் யாரும் கிடையாது. எனக்கு இந்தியாவில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு நானே அதைத் தயார் செய்ய முடிவெடுத்தேன். கட்டிலுக்குத் தேவையான பொருள்களை முதலில் கொண்டு வந்தேன். கயிறு பின்ன ஆரம்பித்தேன். முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. போகப் போக அந்த லாகவம் வந்துவிட்டது. எனக்கான கட்டில்... நானே தயார் செய்தது... என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. தயாரானதும், அக்கம் பக்கத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வந்து காட்டினேன். என் கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாக ஆரம்பித்தது. பிறகு இதை, என் நண்பர்களுக்குச் செய்துகொடுக்க ஆரம்பித்தேன். நண்பர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. முதுகுவலி இருந்த என் நண்பர்களில் சிலர், `இப்போது வலி சரியாகிவிட்டது’ என்று சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

டேனியல் புளூர்

நண்பர்கள் அளித்த ஊக்கத்தில், கட்டில் தயார் செய்து மற்றவர்களுக்கும் விற்கலாம் என்று தோன்றியது. ஆர்டர் வாங்கி செய்து கொடுத்தேன். இப்போது கட்டிலுக்கு பலத்த வரவேற்பு! விற்பனையும் அமோகம்! இந்தக் கட்டிலின் கால்களுக்கு மேப்பிள் டிம்பர் (Maple timber) என்னும் மரத்தைப் பயன்படுத்துகிறேன். என்னிடம் இளம் வயதினர்தாம் அதிகளவில் இதை வாங்கிச் செல்கின்றனர். மற்ற மெத்தைகளில் படுப்பதைவிட கயிற்றுக்கட்டில் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலருக்குக் கடற்கரையில் உல்லாசமாக ஓய்வெடுப்பதற்கும் இந்தக் கட்டில் வசதியாக இருக்கிறதாம்" என்கிறார் டேனியல் புளூர்.

வயதானவர்கள்தாம் கயிற்றுக்கட்டிலில் தூங்குவார்கள், ஓய்வெடுப்பார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். கயிற்றுக் கட்டிலில் படுப்பதை கௌரவக் குறைச்சலாக நினைப்பவர்களும்கூட உண்டு. ஆனால் கடல் கடந்து, கண்டம்விட்டு கண்டம் தாண்டியும் கயிற்றுக்கட்டிலின் மகத்துவம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், நம்முடைய பாரம்பர்யமான கட்டிலின் அருமை நமக்குத் தெரியவில்லை.

“கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?’’ - சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.சித்த மருத்துவர்

சித்த மருத்துவத்தில் படுக்கைக்கும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைப் பாயில் படுக்கும்போதும் நமக்கு ஒருவித நன்மை கிடைக்கும். படுத்து ஓய்வு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே கயிற்றுக்கட்டில். தென்னை நார், பனை நாரால் திரிக்கப்பட்ட கயிற்றால் இது பின்னப்படுவதால், இதில் படுத்தால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். உடற்சூடு தணியும்.

சித்த மருத்துவ வகைப்பாட்டின்படி 4,448 நோய்கள் உள்ளன. அதில் 4,000 நோய்கள், பித்தம் அதாவது உடற்சூட்டால் உண்டாவது. மூலநோய் முதல் சர்க்கரைநோய் வரை முதன்மைக் காரணமாக பித்தம்தான் இருக்கிறது.

முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் நார்களால், மரத்தால் ஆன நாற்காலிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமே உடலில் சூடு தங்கிவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால் உடலை, எப்போதும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியக்களால் நமக்கு நன்மை கிடைக்கும்.

இலவம் பஞ்சைத் தவிர மற்ற வகைப் பஞ்சு மெத்தைகளில் படுப்பது நல்லதல்ல. இப்போது கிடைக்கும் ஸ்பிரிங் மெத்தைகளில் படுத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்படும். கயிற்றுக் கட்டிலில் படுத்தால், அது நம் உடலுக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும். ஆனால் ஸ்பிரிங் மெத்தைகளில், அதற்கு ஏற்றவாறு நாம் உடலை வளைந்து கொடுக்க வேண்டும். தண்டுவடப் பிரச்னைகள், சூடு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாவதற்கு மெத்தைகள்தாம் முக்கியக் காரணம்" என்றார் வேலாயுதம்.

 

 

“அப்படியானால், தரையில் படுத்துத் தூங்கலாமா?’’ என்று கேட்டோம். ``தரையைவிட மேலானது கயிற்றுக்கட்டில்தான். இப்போதுள்ள மார்பிள் தரைகளில் படுக்கவே கூடாது. அது அதிகக் குளிர்ச்சியாக இருக்கும். அதிகக் குளிர்ச்சி, எந்த வலியையும் அதிகப்படுத்திவிடும். பாய் விரித்து வேண்டுமானால் தூங்கலாம்.

நைலான் கயிறுகளால் செய்யப்பட்ட கயிற்றுக் கட்டில்களைப் பயன்படுத்தக் கூடாது, தென்னை, பனை நாரால் ஆன கயிற்றால் பின்னப்பட்ட கட்டில்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கிடைக்காத பட்சத்தில் வாழை நாரால் ஆன கட்டிலைப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

பாய்

 

உண்ணும் உணவிலிருந்து மருத்துவம் வரை உலகமே இயற்கையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. நாம்தான் அதன் அருமை புரியாமல் புறக்கணிக்கிறோம். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இயற்கையால் ஆன பொருள்களைப் பயன்படுத்துவோம், ஆரோக்கியமாக வாழ்வோம். அதற்கு ஆஸ்திரேலியாவுக்குப் போன நம்ம ஊர் கயிற்றுக் கட்டிலை உதாரணமாகக்கொள்வோம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ஷாம்பு பாட்டில்

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: ராணியின் படிக்கிணறு

 

 
11CHSUJSTEPWELL

குஜராத் மாநிலத்தில் மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் அங்கே தண்ணீர்ப் பிரச்சினை எப்போதும் இருந்திருக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க படிக்கிணறுகள் அமைக்கும் வழக்கம் கி.பி 4-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டுவரை இருந்திருக்கிறது.

   

அகமதாபாத்திலிருந்து 110 கி.மீ தூரத்தில் இருக்கிறது பதான் நகரம். பசுமையான புல்வெளிக்கு நடுவே ’ராணி கி வாவ்’ எனப்படும் மிகப் பிரம்மாண்டமான படிக்கிணறு அமைந்துள்ளது. படிக்கிணறுகளின் ராணி என்றே இதை அழைக்கலாம். உலகப் பாரம்பரியச் சின்னங்களில் இதுவும் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, யுனெஸ்கோ மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது.

11CHSUJSTEPWELL1
 

சோலாங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக அவருடைய மனைவி ராணி உதயமதியால் இந்தப் படிக்கிணறு ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுடைய மகன் முதலாம் கர்ணதேவ் மூலம் கட்டி முடிக்கப்பட்டது.

64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த படிக்கிணறு, 7 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே 30 கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது.

கி.பி 1063 முதல் 1068 வரை இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார்கள். காலப் போக்கில் இந்தப் படிக்கட்டு கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நீண்ட காலம் மக்களுக்கு இந்தப் படிக்கிணறு பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960-ம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டது.

11CHSUJSTEPWELL2
 

விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், முனிவர்கள், நாகக் கன்னிகைகள், கண்ணாடியைப் பார்த்து பொட்டு வைக்கும் பெண், யானைகள் போன்று 800க்கும் மேலான சிற்பங்கள் பக்கவாட்டுச் சுவர்களில் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும், இறங்கவும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

மழை நீரைச் சேமிக்கும் இடமாகவும் இந்தப் படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. 700 கிணறுகள் வரை இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுவரை 120 படிக்கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

11CHSUJSTEPWELL6

குஜராத் தலைநகர் காந்தி நகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அடாலஜ் நகரில் உள்ள படிக்கிணறும் புகழ்பெற்றது. இது 5 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து அகலமான படிகளில் இறங்கிய பிறகு தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. தூண்களிலும், சுவர்களிலும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

5 மண்டபங்களுக்குக் கீழே நீச்சல் குளம் அளவுக்குக் கிணறு வெட்டப்பட்டுள்ளது. கிணறு செவ்வக வடிவில் இருந்தாலும் மேல்கூரை முக்கோண வடிவில் உள்ளது. மேலே முழுவதுமாக மூடப்படாமல், சூரிய வெளிச்சமும் காற்றும் வரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் படிக்கிணறு குளிர்ச்சியாகவே இருக்கிறது.

தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் நம் முன்னோர்களின் மதிநுட்பத்தையும் கட்டிடக்கலையின் சிறப்பையும் இந்தப் படிக்கிணறுகள் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நடமாடும் கூகுள் மனிதர்கள்… ஒரு போன் செய்தால் விடை கிடைக்கும்! #AskNYPL

 
 

நடமாடும் கூகுள் மனிதர்கள்

நியூயார்க் பொது நூலகத்தில் மயான அமைதி. இருப்பவர்கள் மூச்சு விடுகிறார்களா என்பது கூட தெரியவில்லை. ஓர் ஓரத்தில் தனியாக அந்தப் பெரிய மேசை இருக்கிறது. சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறத்தில் தொலைப்பேசிகள். அதைச் சுற்றி ஐந்து பேர் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென இருளை அதிகாலை ஒளிக் கீற்று கிழிப்பது போல், நூலக மௌனத்தைக் கலைக்கும் விதத்தில் ஒரு தொலைப்பேசியின் அலறல். ஒருவர் அதை எடுத்துப் பேச தொடங்க, மற்றொன்றும் அலறுகிறது. இன்னொருவர் அதை எடுத்துப் பேசத் தொடங்கினார். அதில் நிகழ்ந்த உரையாடலின் விவரம்.

 

லைப்ரரி மனிதர்: ஹலோ Ask NYPL! (நியூயார்க் பப்ளிக் லைப்ரரியிடம் கேளுங்கள்)

மறுமுனை: பைபிளுக்கு காப்பிரைட் (Copyright) யாராவது வெச்சுருக்காங்களா?

லைப்ரரி மனிதர்: பைபிள் 1923ம் ஆண்டுக்கு முன்னாடியே வெளிவர ஆரம்பிச்சிருச்சு. அதனால காப்பிரைட் இருக்காது. இருந்தாலும் வெயிட் பண்ணுங்க. செக் பண்ணிக்கிறேன். (தேடிவிட்டு வருகிறார்) புதுசா எடிட் பண்ணி வெளிவர பைபிள்கள், அப்பறம் அதோட மொழிபெயர்ப்புகள், இதுக்கெல்லாம் காப்பிரைட் இருக்குங்க.

மறுமுனை: ரொம்ப தேங்க்ஸ்!

இது என்ன தேவை இல்லாத வேலை? கூகுள் செய்தால் இரண்டே நிமிடத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாமே? நிற்க! இது நடந்த வருடம் 1979. அப்போது கூகுள் இல்லை, நூலகங்களும், இவர்களைப் போல உதவும் நல்ல உள்ளங்களும் மட்டுமே இருந்தனர்.

இவர்கள் இந்தச் சேவையை ஆரம்பித்த வருடம் 1940களின் தொடக்கம். அப்போது இன்டர்நெட் எல்லாம் கிடையாது. ஏதாவது சந்தேகம் என்றால் நாமே பொடிநடையாக நூலகம் செல்ல வேண்டும். முழுக்கைச் சட்டையை மடித்துக்கொண்டு புத்தகங்களுக்குள் புகுந்து வெளியே வரவேண்டும். அப்போதும் விடை கிடைக்கும் என்று எந்தவித உறுதியும் கொடுத்துவிட முடியாது. ஆனால், அது ஓர் அற்புதமான அனுபவம் என்பது மட்டும் நிச்சயம். தேடல், அதுவும் அந்த விடை கிடைத்து விட்ட தேடல்... அதை விடச் சுகம் வேறு என்ன இருக்க முடியும்? அந்தத் தேடலை இவர்கள் மற்றவர்களுக்காகச் செய்கிறார்கள்.

அந்தக் காலத்தில், நூலகங்கள் அருகிலும் இருந்ததில்லை. எல்லோருக்கும் தொலைவில் இருக்கும் நூலகம் செல்ல நேரமும் இருந்ததில்லை. அவர்களுக்கு எல்லாம் உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தச் சேவை. ஆச்சர்யம் என்னவென்றால், இன்றும் இந்தச் சேவை இருந்து வருகிறது. யாரேனும் அழைத்தவுடன் பதிலுக்காக 120 வருட ஆவணக் காப்பகத்தை புரட்டிப் பார்க்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. இந்தச் சேவையைச் செய்வதற்கு இவர்கள் பணம் என்று எதுவும் வாங்குவதில்லை. நூலக அலுவல்களில் ஒன்றாகவே இதைப் பார்க்கிறார்கள்.

கூகுள் மனிதர்கள் - நியூயார்க் பொது நூலகம்

படம்: nypl.org

இப்போது இந்தச் சேவை சற்றே விரிவடைந்து தனித் துறை மற்றும் அதற்கு ஒரு தலைவர் என்ற வகையில் இயங்குகிறது. அதன் மேலாளர் ரோசா காபல்லெரோ-லி பேசுகையில், “செய்தி, அறிவியல் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட கேள்விகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும். இலக்கண சந்தேகங்கள், டெக்னாலஜி சந்தேகங்கள் அடிக்கடி வரும். தொடர்ந்து கேள்வி கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். எங்கள் எண்ணை ஸ்பீட் டயலில் வைத்திருப்பார்கள். சென்ற வருடம் புகழ்பெற்ற பாடகர் பிரின்ஸ் இறந்தபோது அவரின் ரசிகர்கள் பலர் மிகுந்த சோகத்துடன் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள எங்களைத் தொடர்பு கொண்டார்கள்” என்று விவரித்தார்,

வருடத்திற்கு 60,000 தொலைப்பேசி அழைப்புகள் கேள்விகளுடன் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்களும் இந்தச் சேவைக்காக வருடாவருடம் 20,000 மின்னஞ்சல்கள் அனுப்புகிறார்கள், 17,000 சாட் மெசேஜ்கள், 500 எஸ்.எம்.எஸ்-கள் பகிரப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 75 வருடங்களாக நடந்து வரும் இந்தச் சேவையில், மிகவும் வித்தியாசமான, கடினமான அல்லது மிக முக்கியமான கேள்விகளைப் பத்திரப்படுத்திப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவற்றுள் சில…

கேள்வி

படம்: New York Public Library

“கனவில் யானை ஒன்று நம்மைத் துரத்தினால் என்ன அர்த்தம்?” (மே 27, 1947)

“சரியான நேரத்தில், சரியான இடத்தில் நின்ற ஒரு காரணத்தால் வரலாற்றில் இடம்பெற்ற மனிதர்களின் பட்டியல் கிடைக்குமா?” (செப்டம்பர் 4, 1946)

“அமெரிக்காவில் நரம்பியல் பாதிப்புடன்  எத்தனை பேர் இருக்கிறார்கள்?” (டிசம்பர் 30, 1946)

“மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் எல்லா நாள்களிலும் பௌர்ணமி நிலவு தெரியுமா?” (அக்டோபர் 6, 1961)

“18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் ஓவியங்களில் எதற்காக  நிறைய அணில்கள் இடம்பெற்றிருக்கின்றன? அவற்றை எப்படி ஓவியர்கள் வளர்த்தார்கள்?” (அக்டோபர் 1976)

“அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ் - இந்த மூவரும் ஒரே ஆள் தானோ?” (நவம்பர் 24, 1950)

 

 

இன்றும் ஒன்பது பேர் தொலைப்பேசியின் முன் எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக. அதற்கான தொலைப்பேசி எண், நியூயார்க் பொது நூலகத்தின் இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 917-275-6975 என்ற எண்ணைத் திங்கள் முதல் சனி வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு இந்த நடமாடும் கூகுள் மனிதர்களிடம் சந்தேகங்களைக் கேட்கலாம். இந்தச் சேவையை ஒரு கலாசாரமாகவே கொண்டு செயல்படும் இந்த மனிதர்கள் உலவும் இதே உலகில்தான், ஒரு வங்கியையோ அல்லது அரசு அலுவலகத்தையோ தொடர்பு கொண்டால் சீறும் மனிதர்களும் இருக்கிறார்கள்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

 

நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டமை தெரிந்ததே. கோவாவில் சொற்ப அளவானோருக்கு மட்டுமே அழைப்புவிடுத்து இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.

சமந்தாவின் நிச்சயதார்த்ததில் அவரது புடவை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதற்கு சுவாரஸ்யமான காரணங்களும் இருக்கின்றன.

சரி அந்த சுவாரஸ்யம் என்னவென்று பார்த்தால், சமந்தாவின் புடவையில் அவர்கள் காதல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அழகாக பொறிக்கப்பட்டிருந்தமையே.

முதலாவதாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படத்தின் நினைவுகள்.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

இரண்டாவதாக நாக சைத்தன்யாவின் அண்ணனான அகில் நிச்சயதார்தத்தின் போது எடுத்து புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

மூன்றாவதாக, இருவருக்கும் இடையேயான முதல் காதலை நாக சைத்தன்யா சமந்தாவிடம் தெரிவித்தபோது எடுத்த புகைப்படம்.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

அடுத்ததாக இவர்கள் இருவரும் சேர்ந்து பங்கேற்ற கல்யாண நிகழ்வின் புகைப்படம்.

சமந்தா தன் காதலனான நாக சைத்தன்யாவிற்கு அன்பளிப்பாக கொடுத்த இருசக்கர வாகனத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து பயணித்தது.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

இவை அனைத்தும் ஒரு புகைப்படத் தொகுப்பாக சமந்தாவின் புடவையில் பொறிக்கப்பட்டு இருந்தமை அங்கு வந்த அனைவரையும் கவர்ந்திழுத்தது.

https://news.ibctamil.com

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

 

நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டமை தெரிந்ததே. கோவாவில் சொற்ப அளவானோருக்கு மட்டுமே அழைப்புவிடுத்து இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.

சமந்தாவின் நிச்சயதார்த்ததில் அவரது புடவை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதற்கு சுவாரஸ்யமான காரணங்களும் இருக்கின்றன.

சரி அந்த சுவாரஸ்யம் என்னவென்று பார்த்தால், சமந்தாவின் புடவையில் அவர்கள் காதல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அழகாக பொறிக்கப்பட்டிருந்தமையே.

முதலாவதாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படத்தின் நினைவுகள்.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

இரண்டாவதாக நாக சைத்தன்யாவின் அண்ணனான அகில் நிச்சயதார்தத்தின் போது எடுத்து புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

மூன்றாவதாக, இருவருக்கும் இடையேயான முதல் காதலை நாக சைத்தன்யா சமந்தாவிடம் தெரிவித்தபோது எடுத்த புகைப்படம்.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

அடுத்ததாக இவர்கள் இருவரும் சேர்ந்து பங்கேற்ற கல்யாண நிகழ்வின் புகைப்படம்.

சமந்தா தன் காதலனான நாக சைத்தன்யாவிற்கு அன்பளிப்பாக கொடுத்த இருசக்கர வாகனத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து பயணித்தது.

சமந்தாவின் முந்தானையை உற்றுப் பார்த்தீர்களா? என்ன தெரிந்தது?

இவை அனைத்தும் ஒரு புகைப்படத் தொகுப்பாக சமந்தாவின் புடவையில் பொறிக்கப்பட்டு இருந்தமை அங்கு வந்த அனைவரையும் கவர்ந்திழுத்தது.

https://news.ibctamil.com

 

ஒரு இனதெரியா நபர் கையில் நஞ்சு போத்தலுடன் இருக்கும் படத்தை காணவில்லை.

 

  • தொடங்கியவர்
‘மனதை அறிவுக்குள் ஆக்கிரமியுங்கள்’
 

image_7e5ef7ef1c.jpgஇந்த உடல் உங்களிடமே இருக்கின்றது. இந்த மனம் கூட உங்களுடன் சதா இயங்கியபடி உள்ளது.  

அப்படியிருக்க இந்த உயிரோடு கூடிய உடலையும், மனதையும் உங்கள் வசம் கட்டிப்போட்டு வைக்க ஏன் முடியாதுள்ளது.  

மனம் வழி செல்கிறீர்கள்; தேகம் கேட்பதையெல்லாம் வழங்கியபடியே இருக்கின்றீர்கள். அப்புறம் இதனால் வரும் துன்பங்களையும் அனுபவித்தபடியே இருக்கின்றீர்கள். வெட்கமாய் இல்லையா உங்களுக்கு? 

கெட்டவைகளை வெட்ட இயலவில்லை. தவறு எனத்தெரிந்து, அதையே செய்யப் புகுவது, பொருந்தாத உணவுகளைப் புசிப்து, வசதிக்கு மீறி ஆசைப்படுவது, எல்லாமே உடம்பு தேடும் பொல்லா வினைகள் அல்லவா? இவைகூட ஒரு போதை நிலைதான். மனதை உங்கள் அறிவுக்குள் ஆக்கிரமித்து வையுங்கள்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 13

 

54 : ரோமப் பேர­ரசன் குளோ­டியஸ், நஞ்­சூட்டிக் கொல்­லப்­பட்­டதை அடுத்து அவனின் மனைவி மூலம் பிறந்த வளர்ப்பு மகன் நீரோ ரோமப் பேர­ர­ச­னானான்.

1582 : கிற­கோ­ரியின் நாட்­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இத்­தாலி, போலந்து, போர்த்­துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் புதிய நாட்­காட்­டியில் இவ்­வாண்டின் இந்நாள் இடம்­பெ­ற­வில்லை.

1792 : வெள்ளை மாளி­கைக்­கான அடிக்கல் வொஷிங்டன், டிசியில் நடப்­பட்­டது.

16-500x327.jpg1884 : சர்­வ­தேச நேரம் கணிக்கும் இட­மாக இலண்­டனில் உள்ள “கிறீன்விச்” தெரிவு செய்­யப்­பட்­டது.

1923 : துருக்­கியின் தலை­நகர் இஸ்­தான்புல் நக­ரி­லி­ருந்து அங்­கா­ரா­வுக்கு மாற்­றப்­பட்­டது.

1943 : ஜேர்­ம­னிக்கு எதி­ராக புதிய இத்­தா­லிய அரசு போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1944 : இரண்டாம் உலகப் போரில் லாத்­வி­யாவின் தலை­நகர் ரீகா சோவி­யத்தின் செஞ்­சே­னை­யினால் கைப்­பற்­றப்­பட்­டது.

1946: பிரான்ஸில் நான்­கா­வது குடி­யரசு அர­சி­ய­ல­மைப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

1970 : ஐ.நாவில் பிஜி இணைந்­தது.

1972 : ரஷ்­யாவின் மொஸ்கோ நக­ருக்கு அருகில், வெளியில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்­கி­யதில் 174 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1972 : உரு­குவே விமானம் ஒன்று ஆர்­ஜென்­டீ­னா­வுக்கும், சிலிக்கும் இடையில் அந்தீஸ் மலை­களில் டிசம்பர் 23 ஆம் திகதி மோதியதில் 45 பேர்­களில் 16 பேர் மட்டும் மீட்­கப்­பட்­டனர்.

turkey_map1.jpg1976 : பொலீ­வி­யாவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று பொலீ­வி­யாவின் சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்­ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்­பா­லானோர் குழந்­தைகள்) உட்­பட 100 கொல்­லப்­பட்­டனர்.

1990 : லெபனான் மீது சிரியப் படைகள் தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.

2010 : சிலி சுரங்க விபத்­தொன்றில் சிக்­கிய, 33 தொழி­லா­ளர்கள் 69 நாட்­க­ளின்பின் மீட்­கப்­பட்­டனர்.

2013 : இந்­தி­யாவின் மத்­திய பிர­தேச மாநி­லத்தில் பால­மொன்­றுக்கு அருகில் ஏற்­பட்ட சன நெரி­சலில் சிக்கி 115 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2014 : 1990 ஆம் ஆண்டு முதல் யாழ் தேவி ரயில் சேவை வவு­னியா வரை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், இந்திய உதவியுடன் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

அதிக அழகு ஆபத்தைத் தருமா?

அதிக அழகு ஆபத்தைத் தருமா?

கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death valley). இந்த உலகம்தான் நம் வீடு என்றால் வீட்டில் இருக்கும் அடுப்புதான் இந்த இடம். அவ்வளவு வெப்பம்.  ஆனால், அந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக 14 மணி நேரம்தான் அங்கு உயிருடன் வாழ முடியும்.

அதிக அழகு ஆபத்தைத் தருமா?

இந்தோனேசியா - சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை. வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சீற்றம் கொள்ளாமல் இருந்ததில்லை. கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்கிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும், சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?

அதிக அழகு ஆபத்தைத் தருமா?

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு விளக்கம் வேறு வேண்டுமா? பிரேசிலில் இருக்கும் குட்டித்தீவுதான் இந்த பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள். இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட  தானியங்கிதான். ஏனென்றால், இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை. போனால் மரணம்தான் என்பதால், பிரேசில் அரசாங்கம் மனிதர்கள் செல்லத் தடை விதித்துள்ளது.

அதிக அழகு ஆபத்தைத் தருமா?

உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் அதிகம் வாழும் இடம் . இங்கிருக்கும் பறவை இனங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டுகிறது. கிட்டத்தட்ட அவதார் படத்தில் வரும் உலகின் மினியேச்சர் என்று இந்த இடத்தைச் சொல்லலாம்.  பார்த்தாலே சுற்றுலா செல்லத்தூண்டும் இடம்.  பார்க்க மட்டும்தான் அழகு. உள்ளே சென்றால் ஆபத்துதான். வித்தியாசமான உயிரினங்கள் இருப்பதாலோ என்னவோ, இங்கே செடிகளை உரசினாலே எரிச்சலும், மயக்கமும் வரும் அளவுக்கு தாவரங்களில் தொடங்கி, விலங்குகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை உடைய ஜந்துக்கள்.  எவற்றையும் தொடாமல் பார்த்துவிட்டு வரலாமா என்றால் இங்கு சென்று உடலில் சிறிய கீறல் ஏற்பட்டால் கூட ஒட்டுண்ணிகளால் மரணம் ஏற்படலாம்.

என்ன! உலகில் அதிக அழகு ஆபத்தானது என்பது உண்மைதானா?

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

பாரதியாரின் பெண் சிந்தனையில் மாற்றம் விதைத்த சகோதரி நிவேதிதா!

 
 

நிவேதிதா

“பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் 
பேதமை யற்றிடும் காணீர்!” 

 

பெண்களின் அறிவே இந்த உலகின் பேதமையை அற்றுப்போகச் செய்யும் என்று எழுதியவர் பாரதியார். அவரின் பெண் விடுதலை சிந்தனைக்கான புதிய போக்கைக் காட்டியவர்தான் சகோதரி நிவேதிதா. புகழ்பெற்ற அந்தச் சம்பவத்துக்கு முன் நிவேதிதா பற்றிய சில விஷயங்களைப் பார்ப்போம். 

இந்திய மக்களால் சகோதரி நிவேதிதா என நினைவுக்கூறப்படும் இவர் 1867 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் உள்ள டங்கானன் நகரில் பிறந்தவர். இயற்பெயர் மார்க்கரெட் எலிசபெத் நோபில். கிறிஸ்துவக் குடும்பத்தில் மதப்போதகருக்கு மகளாகப் பிறந்த இவருக்கு இயல்பிலேயே ஆன்மிகம் தொடர்பான தேடல் இருந்தது. 

படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பாடங்களைப் போதிப்பது மட்டுமே தன் பணி என்று இவர் ஒதுங்கிகொள்ளாமல், கல்வி குறித்த விரிவான தேடலை மேற்கொண்டார்.  தனியே ஒரு பள்ளியைத் தொடங்கி, நடத்தியவர். பத்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தலை சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார். 

நிவேதிதா

தனது ஆன்மிக ஈடுபாட்டை ஒரு மதம் என்பதாகக் கருதாமல், உண்மையை நோக்கிய பயணமாக மாற்றிக்கொண்டார். புத்த மதம் தொடர்பாகவும் படித்தார். அந்தச் சூழலில்தான் தன் தோழியின் மூலம் விவேகானந்தர் உரையைக் கேட்டார்.  அந்த உரை முதலில் பெரிய அளவில் அவருக்கு ஈர்ப்பை அளிக்காவிட்டாலும் நிறையக் கேள்விகளை உருவாக்கியது. அதன் பதில்களைத் தேடிக் கண்டடைந்தார். தெளிவடைந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரே தம் குரு என உணர்ந்தார். அவரின் வழிகாட்டலில் இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். நிவேதிதா எனும் பெயரைச் சூட்டுகிறார் விவேகானந்தர். (நிவேதிதா என்றால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள் என்பது அர்த்தம்)

கொல்கத்தாவில் 1898 ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். ஏனெனில் பெண்களுக்குக் கல்வி சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அன்னை சாரதா தேவிதான் அந்தப் பள்ளியைத் தொடங்கி வைத்தார். கல்வி மட்டுமல்லாமல், தொழில்கல்வியும் நுண்கலைகளையும் பயிற்றுவித்தார் நிவேதிதா. பள்ளியின் செலவுகளைப் பூர்த்திச் செய்ய, தம் நூல்களுக்கு வரும் பணம் முழுவதையும் பயன்படுத்தினார். இங்கிலாந்து நாட்டு நண்பர்கள் சிலரும்  அவருக்கு உதவினர்.

நிவேதிதா

கல்விப் பயணத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திவந்த நிவேதிதாவுக்கு விவேகானந்தர் மிகப் பெரிய பொறுப்பை அளித்தார். அந்த நேரத்தில் கொல்கத்தாவில் பிளேக் நோய் தீவிரமாகப் பரவி, மக்கள் தாங்க முடியாத இன்னலுக்கு உள்ளாயிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவேதிதா தலைமையில் நிவாரணக் குழு ஒன்றை அமைக்கிறார் விவேகானந்தர். அந்தப் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய களத்தில் இறங்குகிறார். நகரின் குடிசைப் பகுதிகளில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து, தன் சேவையைச் செய்கிறார். 

தான் நடத்தி வந்த பள்ளி நிதி நெருக்கடியைச் சந்திக்க, நிதி திரட்ட இங்கிலாந்து செல்கிறார். அப்போது நியூயார்க் செல்லும்போது ‘ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்' எனும் இளைஞர்களான அமைப்பை நிறுவுகிறார். தம் ஆன்மிகக் குரு விவேகானந்தர் மறைவுக்குப் பிறகு, சோர்ந்துவிடாமல், அவரின் கருத்துகளைப் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டார்.

பாரதியார்ஒருமுறை காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியார் கொல்கத்தாவில் தங்குகிறார். அங்குச் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உரையாடுகிறார். அப்போது நிவேதிதா, “ஏன் உங்கள் மனைவியை அழைத்து வர வில்லை?" எனப் பாரதியைப் பார்த்து கேட்கிறார். "எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. அதுமட்டுமல்லாமல் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது" என்கிறார். அதற்கு நிவேதிதா, “உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?" எனும் தொனியில் கேள்வி கேட்கிறார். அது பாரதியாரை உலுக்கியது, அதுவரை அவர் கொண்டிருந்த  பெண்கள் விடுதலை குறித்த சிந்தனையை முழுதாக மாற்றி அமைத்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக்கொண்டார் பாரதியார். அவருக்கு குரு ஸ்தோத்திரமும் இயற்றினார். 

நிவேதிதா இந்தியப் பெண் உரிமைக்களுக்கான பணிகளில் தம்மை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்டார்.  அறிவியலாளர் ஜெகதிஷ் சந்திரபோஸ் நூல் வெளிவர பெரிதும் உதவியாக இருந்தவர்.

 

தனது 44 வது வயதில் 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று மறைந்தார். ஆனாலும் அவர் ஆற்றிய சேவைகள் வழியே இன்றும் உயிர்ப்போடு உலவிகொண்டுதான் இருக்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு... வினோத திருவிழா... காணொளி இணைப்பு...

 

புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு... வினோத திருவிழா... காணொளி இணைப்பு...

உயிருள்ள அனைத்திற்கும் பிறப்பும் இறப்பும் இன்றியமையாதது. பிறப்பில் மக்கள் மகிழ்வதும் இறப்பில் துக்கம் அனுசரிப்பதும் வாடிக்கை தான். இந்நிலையில், இறந்த தங்களின் உறவினர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து, அவர்களுக்கு ஒரு கோலாகல விழா எடுத்து, அந்நாளை திருவிழாவாக கொண்டாடி மீண்டும் புதைக்கும் ஒரு வினோத நிகழ்வை அனுசரிக்கின்றனர் மடகாஸ்கரில் வாழும் மலைவாழ் மக்கள்.

அவர்களின் சடங்குகளையும் கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தி கொண்டாடும் காணொளி உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

 

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இன்று 'உலக முட்டை தினம்!' : சில சுவாரஸ்யத் தகவல்கள்! #WorldEggDay

 

ன்று, 'உலக முட்டை தினம்.' 1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. முட்டையின் நன்மைகள்குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். புரதச்சத்துகள் அதிகம் இருக்கும் கோழி முட்டை நம்மிடையே பிரபலமாக இருந்தாலும், உலகளவில் முட்டைக்கான சந்தையில், கோழிமுட்டை மட்டுமன்றி வாத்து, காடை, கௌதாரி போன்றவற்றின் முட்டைகளும் பிரபலமானவை.

உலக முட்டை தினம்

 

குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு, முட்டை மட்டும்தான். எனவே, வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ முதலியவை, கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன. 

மஞ்சள் கரு

 

கொழுப்புச் சத்துகளின் இருப்பிடமாக மஞ்சள் கரு இருப்பதால், அதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதயப் பாதிப்பு இருப்பவர்கள், வயதானவர்கள், உடலில் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளெல்லாம் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. கோழியின் உணவுமுறை எப்படி என்பதைப் பொறுத்தே, மஞ்சள் கருவின் நிறமும் அடர்த்தியும் அமையும் என்பதால், மஞ்சள் கருவின் நிறத்தைவைத்து அதன் தன்மையை முடிவுசெய்வது தவறு. அதேபோல, பச்சை முட்டையைக் குடிப்பது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதையும் தவிர்த்துவிடலாம். பல வீடுகளில், வளரும் குழந்தைகளுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் பச்சை முட்டை கொடுக்கும் வழக்கம் உண்டு. இதுபோன்ற விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருத்தல் அவசியம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
  • இன்பாக்ஸ்

     

    54p1.jpg

    * ‘பிரபு’ என்பதை பாசிட்டிவிட்டி என மாற்றியிருக்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவைக் காதலித்துக் கிட்டத்தட்ட திருமணம் வரை நெருங்கிய நயன்தாரா காதலுக்கு அடையாளமாகக் கையில் பிரபு எனப் பச்சைகுத்தியிருந்தார். காதல், மோதல், பிரிவு எனப் பல கட்டங்களைக் கடந்த பிறகும் கையில் இருந்த பெயரை அழிக்காமல் வைத்திருந்த நயன், இப்போது நியூயார்க்கில் காதலர் விக்னேஷ் சிவன் முன்பாக அதை பாசிட்டிவிட்டி என மாற்றிக் குத்தியிருக்கிறார். பி பாசிட்டிவ்!


    54p2.jpg

    * தேதி குறித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். ‘டிசம்பர் 12’ தனது பிறந்தநாள் அன்று தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினிகாந்த். ‘`நவம்பரில் காலா ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிடும். அதன்பிறகு ஒன்லி அரசியல்தான்’’ என நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்! போட்டி பலமா இருக்கும்!


    54p3.jpg

    * மம்தா கட்சியில் சேருகிறார் தாதா. இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான செளரவ் கங்குலி கம்யூனிஸ்ட் ஆதரவாளர். ஆனால், அவரை மம்தா திரிணமுல் கட்சிப் பக்கம் கொண்டுவர சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி பதவியைக் கொடுக்க முன்வந்தார். அப்போது மறுத்த கங்குலி, இப்போது ஓகே சொல்லியிருக்கிறார். விரைவில் டெல்லி பாராளுமன்றத்தில் அரசியல்வாதி கங்குலியின் இன்னிங்ஸ் ஆரம்பம்! எல்லாமே அரசியல்தான்!


    54p4.jpg

    * ஹீரோவாகிறார் விக்ரம் மகன் துருவ். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த  ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில்தான் துருவ் அறிமுகம். நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் & ஃப்லிம் இன்ஸ்ட்யூட்டில் முறைப்படி நடிப்பு பயின்றவர் துருவ். ‘குட் நைட் சார்லி’ என்னும் குறும்படத்தையும் ஏற்கெனவே இயக்கியிருக்கிறார். வாங்க ஜூனியர் சீயான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் குளிர்ப் பாலைவனங்கள்!

 

 
maxresdefault

பா

லைவனம் என்ற சொல்லில் வனம் இருந்தாலும் பாலைவனங்களில் புல்வெளி கிடையாது. காடுகள் கிடையாது. பாலைவனங்களில் விவசாயம் சாத்தியமில்லை. பாலைவனங்களில் நிறைய இருப்பது மணல்தான்.

பாலைவனம் என்றால் மனக்கண் முன் வந்து நிற்பது சகாரா பாலைவனம்தான். ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கிழக்கிலிருந்து மேற்குவரை அமைந்திருக்கிறது. சகாரா பாலைவனத்தில் 11 நாடுகள் அமைந்துள்ளன. லிபியா, எகிப்து ஆகிய நாடுகளின் பெரும் பகுதி பாலைவனமே.

சகாரா பாலைவனம் பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தப் பாலைவனம் முழுவதிலும் ஒரே மணலாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 30 சத விகிதப் பரப்பில் மட்டுமே மணல். மீதிப் பகுதியானது முட்புதர், பாறைகள் முதலியவற்றால் ஆனது. இத்துடன் ஒப்பிட்டால் அரேபியப் பாலவனத்தின் பெரும் பகுதி மணல்தான்.

NleviscaughtatCalperum09
 

இந்தியாவிலும் தார் பாலைவனம் உள்ளது. இதன் பெரும் பகுதி ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. லடாக்கிலும் பாலைவனம் உள்ளது. பாலைவனம் என்பதற்கு அளவுகோல் உண்டு. ஓரிடத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 25 அங்குலத்துக்குக் குறைவாக இருந்தால் அது பாலைவனம் என்று வகைப்படுத்தியுள்ளனர். தவிர, பாலைவனம் என்றால் பயங்கரமாக வெயில் அடிக்கும் என்று கருதுவதும் தவறு. ஏனெனில் கடும் வெயில் வீசுகின்ற பாலைவனங்கள் இருப்பது போன்றே, கடும் குளிர் வீசுகிற குளிர்ப் பாலைவனங்களும் உண்டு. அந்த அளவில் உலகின் பாலைவனங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

கோடைக்காலத்தில் கடுமையாக வெயில் அடிக்கிற பாலைவனங்கள் ஒரு வகை. கடும் குளிர் வீசுகின்ற பாலைவனங்கள் இரண்டாவது வகை. ,

சகாரா பாலைவனம், அரேபிய பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனம், அமெரிக்காவில் உள்ள மொகாவி பாலைவனம், தார் பாலைவனம் முதலியவை வெயில் வீசும் பாலைவனங்கள். சகாராவில் 1922 -ம் ஆண்டில் லிபியா நாட்டில் உள்ள அசிசியா என்னுமிடத்தில் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 58 டிகிரி வெப்பம் பதிவானது.

எனினும் சகாரா போன்று கடும் வெயில் அடிக்கும் பாலைவனங்களில் இரவில் நல்ல குளிர் இருக்கும். முதல் காரணம் மணலுக்கு வெப்பத்தை ஈர்த்துக்கொள்ளும் திறன் கிடையாது. வானில் மேகங்கள் கிடையாது என்பதால் பகலில் பெற்ற வெப்பம் உயரே சென்றுவிடும். எனவே நடுக்கும் குளிர் இருக்கும். சகாரா பாலைவனத்தில் கோடை இரவில் குளிர் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். ஒரு முறை பனிப்பொழிவு இருந்தது.

தென் அமெரிக்காவில் உள்ள அடகாமா பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனம், சீனாவில் உள்ள தக்கலாமக்கான் பாலைவனம், சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனம் முதலியவை கடும் குளிர் வீசுகிற பாலைவனங்கள். ஆனாலும் இவற்றில் கோபி, தக்கலாமக்கான் ஆகியவற்றில் கோடையில் வெயில் உண்டு.

பாலைவனங்களில் பல வகையான பிராணிகள் காணப்படுகின்றன. கடும் வெயில் வீசுகிற பாலைவனங்களில் வாழும் பிராணிகள் பகலில் பெரிதும் மணலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு, இரவில் நடமாடி இரை தேடுகின்றன. இவை பாலைவனச் சூழலுக்கு ஏற்ற வகையில் உடலமைப்பைக் கொண்டவை. ஆஸ்திரேலிய பாலைவனத்தில் வாழும் Thorny devil என்ற பிராணியின் முதுகில் முட்கள் போன்ற அமைப்புகள் உள்ளன.

Thornydevil

அதன் தோலானது காற்றில் உள்ள ஈரப்பசையை நீர்த் திவலைகளாக மாற்றுகிறது. இந்த நீர்த் திவலைகளை வாய்ப் பகுதிக்குக் கொண்டு வந்து அருந்துகிறது. நமீப் பாலைவனத்தில் உள்ள பல்லி போன்ற பிராணி காலை வேளையில் வாலைத் தூக்கிக் கொண்டு நிற்கும். காற்றில் உள்ள நீர்ப் பசையானது வால் பகுதியில் நீர்த் திவலைகளாக மாறி முதுகுப் பகுதியில் உள்ள வரிப் பள்ளங்கள் வழியே வாய்க்கு வந்துசேரும்.

பாலைவனங்களில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும் திறன் கொண்ட தாவரங்கள் உண்டு. இவற்றின் இலைகள் மிகச் சிறியவையாக இருக்கும். தண்டுப் பகுதிகள் கெட்டியாக இருக்கும். அமெரிக்காவில் அரிசோனா பாலைவனத்தில் வாழும் கள்ளி வகைத் தாவரம் மிக உயரத்துக்கு வளரக்கூடியது. சுமார் 150 ஆண்டுகள் வாழக்கூடிய இதன் பெயர் சகுவாரோ (saguaro). பாலைவனத்தில் புல் பூண்டு வகைகள் அதிகம். இவற்றின் வேர்கள் பக்கவாட்டில் நீண்ட தூரம் வளரக்கூடியவை. பாலைவனங்கள் உயிரற்றவை அல்ல.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'நோ ப்ரா டே' இன்று! #nobraday

 
 

ப்ரா

 

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு தனியார் அமைப்பு அக்டோபர் 13-ம் தேதியை 'நோ ப்ரா டே'-வாக அறிவித்தது. ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமானோர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நாடான இங்கிலாந்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, 2011-ம் ஆண்டிலிருந்து சமூக வலைதளங்களின் கவனத்தைப் பெற்று தற்போது 40-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடத்துக்கும் 76,000 பெண்களைக் கொல்லும் கொடிய நோயாக மார்பகப் புற்றுநோய் மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றதாம்! 

 
 

எனவே, இந்த நாளில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் சோதனைகளைச் செய்யவும், மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்த நடைமுறையில் இருக்கும் மருத்துவ வழிமுறைகள் குறித்தும், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய கதைகள் போன்ற மார்பகப் புற்றுநோய் குறித்த பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்வுகளையும் பல்வேறு நாடுகளிலும், தனியார் அமைப்புகள் நடத்தி வருகின்றன. பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் சேர்த்தே விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. #nobraday என்கிற ஹாஷ் டேகின் மூலம் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விழிப்பு உணர்வு செய்திகள், கதைகள் பகிரப்படுகின்றன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஏழு வயதுச் சிறுமிக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

பதுளையைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்திக்கும் தனது ஆசையை இன்று (13) பூர்த்தி செய்துகொண்டாள்.

8_President.jpg

எம்.என்.அமானி ரைதா என்ற இந்தச் சிறுமி, ஜனாதிபதியைச் சந்திக்க விரும்பி பதுளையில் இருந்து கொழும்பு வந்தாள். 

பாடசாலைச் சீருடையுடன் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற அமானி, வெளியே காத்திருக்குமாறு கேட்கப்பட்டாள்.

சிறுமி வந்திருக்கும் விடயம் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டதும், தனது வேலைகளைச் சற்றே இடைநிறுத்திவிட்டு, அமானியையும் அவளது பெற்றோரையும் உள்ளே அழைத்து கைகூப்பி வரவேற்றார்.

ஜனாதிபதியிடம், தான் கைப்பட வரைந்த ஓவியத்தையும் அமானி கையளித்தாள்.

ஜனாதிபதிக்கும் அமானிக்கும் இடையில் நடந்த உரையாடல், அப்படியே கீழே:

ஜனாதிபதி: உங்களுக்கு அக்கா, தங்கை இருக்கிறார்களா?

அமானி: இல்லை. தம்பி மட்டும்தான்!

ஜனாதிபதி: அப்படியா? தம்பி எங்கே?

அமானி: தம்பி வீட்டில்

ஜனாதிபதி: ஏன் அவரை அழைத்துக்கொண்டு வரவில்லை? பாலர் பாடசாலை போகிறாரா?

அமானி: ஆமாம்

ஜனாதிபதி: தம்பியின் பெயர் என்ன?

அமானி: ஆர்த்திக்

ஜனாதிபதி: அப்படியா?

அமானி: நான் உங்களுக்கு ஒரு ஓவியம் வரைந்து தந்தேன்தானே? அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை இந்தச் சுவற்றில் மாட்டி வையுங்கள்.

ஜனாதிபதி: நிச்சயமாக அதைச் சுவற்றில் மாட்டுவேன்.

அமானி: யாரும் நம்பவில்லை, நான் உங்களைச் சந்திப்பேன் என்று!

ஜனாதிபதி: யாரும் நம்பவில்லையா? ஆனால் நீங்கள்தான் என்னைச் சந்தித்துவிட்டீர்களே?

அமானி: நானே நம்பவில்லை. இந்த வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. மீண்டும் என்னை வரச் சொல்லுங்கள்.

ஜனாதிபதி: தாராளமாக வரலாம். எப்போது விரும்பினாலும் நீங்கள் என்னை வந்து சந்திக்கலாம். நீங்கள் வாருங்கள், என்னைச் சந்திக்க... சரியா? நானும் பதுளை வந்தால் உங்களை வந்து சந்திக்கிறேன்.

அமானி: பாடசாலைக்கு வரும்போது சொல்லுங்கள். எப்போது வருவீர்கள் என்று முன்கூட்டியே சொல்லுங்கள்...

இதையடுத்து அமானிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கிய ஜனாதிபதி, தன்னை ஞாபகப்படுத்திக்கொள்ளும் வகையில் அதை அவளது வீட்டில் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

நெகிழ்ச்சியான இந்தக் காணொளி சிங்கள தனியார் தொலைக்காட்சியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் (அக்.14, 1964)

 

ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவர் அமெரிக்க குருமார்களில் ஒருவர், ஆர்வலர், மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தவர். இவர் காந்திய வழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க

 
 
ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் (அக்.14, 1964)
 
ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவர் அமெரிக்க குருமார்களில் ஒருவர், ஆர்வலர், மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தவர்.

இவர் காந்திய வழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு போராட்டம், நிற பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' ஆகியவற்றை முன்னின்று நடத்தியுள்ளார். தெற்குக் கிழக்காசிய தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார்.

அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கம்பீர் - நிராகரிக்கப்படக் கூடாத கிரிக்கெட்டர்! #HBDGauti

`கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்’ என்ற பெயரைக் கேட்டவுடன், என்னவெல்லாம் நினைவுக்கு வரும்? தமிழக வீரர்; இந்திய அணியின் முன்னாள் கேப்டன்; தோனியின் தலைமையில் உலகக்கோப்பை வென்ற அணியைத் தேர்வுசெய்ததில் முக்கியப் பங்காற்றியவர்; முதல் பதினைந்து ஓவர்களில் அடித்து ஆடும் வித்தையை அறிமுகப்படுத்தியவர்... இன்னும் பல. இவையெல்லாம் இருந்தாலும் `ஸ்ரீகாந்த்' என்றதும் பட்டென நினைவில் ஃப்ளாஷ் ஆகக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. அது, 1983-ம் வருடம் ஜூன் 25-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் அசுரபலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்த 38 ரன்கள்தான்.

என்னதான் டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் என்றாலும், ஓர் உலகக்கோப்பையை வெல்வதற்கு நிகராக எதுவுமே இல்லை. அன்று இந்தியா அடித்த 183 ரன்களில், ஸ்ரீகாந்தின் 38-தான் அதிகபட்சம். 43 ரன்களில் இந்தியா வெற்றிபெற்று, அதுவரை கிரிக்கெட் உலகில் கோலோச்சிக்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

 

கம்பீர்

1983-ம் ஆண்டு முதல், அடுத்த இருபது வருடங்களில் அதாவது ஐந்து உலகக்கோப்பைகளில் ஒருமுறை மட்டுமே இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியது. 2007 உலகக் கோப்பையில் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தலைமையின் கீழ் அணி பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டதுதான் மிச்சம். இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்ப, கொந்தளித்தனர் ரசிகர்கள். அதே ஆண்டு ஐசிசி முதன்முறையாக டி-20 உலகக்கோப்பையை அறிவிக்க, சீனியர்ஸ் சச்சின், டிராவிட், கங்குலி எல்லோரும் விலகிக்கொள்ள, சேவாக்குடன்  தொடக்க ஆட்டக்காரராகக் களம்கண்டார் கவுதம் கம்பீர். அதற்கு முன்னரும் அவர் இந்தியாவுக்காக பலமுறை தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.  அவையெல்லாம் சச்சின் ஓய்வில் இருந்ததால் கம்பீருக்குக் கிடைத்த வாய்ப்புகள். 

ரஞ்சி முதல் இந்தியா வரை

வாசிம் ஜாஃபர், ஸ்ரீதரன் ஸ்ரீராம், ஸ்ரீதரன் சரத், அமோல் மசூம்தார் போன்ற ரஞ்சி ஜாம்பவான்களைப்போல கம்பீரும் சர்வதேச அரங்கில் ஜொலிக்காமல்போய்விடுவாரோ என்ற அச்சம் மேலோங்கியது. காரணம், டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அணியின் டீஃபால்ட் ஆப்ஷன்களாக இருந்தனர். அதிலும், தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா வந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை போராடி வென்றபிறகு, இந்த பேட்டிங் தூண்களைத் தாண்டித் துளைக்கவேண்டுமென்றால் தொடர்ந்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயமிருந்தது.  ஆனால், அதற்கு ஒரு வழியும் இருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் தரமான ஒரு தொடக்க ஆட்டக்காரர் இல்லாமல் இந்தியா வெகுகாலமாகத் திண்டாடியது.  நீண்ட காலம் விளையாடிய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் யார் எனப் பார்த்தால், நம்முடைய தேடல், சுனில் கவாஸ்கரில் முடியும். ஏனென்றால், நிரந்தரமாக நிலைத்து ஆடக்கூடியத் தொடக்க ஆட்டக்காரரைக் கண்டெடுக்க முடியாமல் இந்தியா திக்கித் திணறியது. இதனாலேயே, டிராவிட் கிட்டத்தட்ட ஒரு தொடக்க வீரரைப்போல பல ஆட்டங்களில் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

கம்பீர்

ரஞ்சி ஆட்டங்களில் ஒவ்வொரு சீஸனிலும் சதங்களைக் குவித்துவிட்டு, சின்ன வாய்ப்புக்காகக் காத்திருந்தார் கம்பீர். அவருக்கு முன்னர், சடகோபன் ரமேஷ், ஷிவ் சுந்தர் தாஸ், ஆகாஷ் சோப்ரா, ஜாஃபர், தினேஷ் கார்த்திக்... என ஒவ்வொரு சீஸனுக்கும் ஒவ்வொரு வீரரை வைத்து ஒப்பேற்றிக்கொண்டிருந்தது இந்தியா. சேவாக்கின் அடித்து ஆடும் திறனைப் பார்த்த கங்குலி, ‛டெஸ்ட் ஆட்டங்களில் மிடில் ஆர்டரில் ஆடியதுபோதும், ஓப்பனிங் இறங்குங்கள்’ என்று கேட்க, ஒரு பக்கம் சேவாக் பௌண்டரிகளாக விளாச, எதிர் திசையில் தொடருக்கு ஒரு வீரர் என ஆள்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள்.

2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற நிலையில் இழந்திருந்தபோது, கம்பீர் தன்னுடைய ரஞ்சி ரெக்கார்டுகள் மூலம் டெஸ்ட்டில் இடம்பிடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த அந்த ஆடுகளத்தில், இரு அணிகளிலும் சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் ரன் அடிக்கவில்லை. கிடைத்த போட்டியில் எதுவும் செய்ய முடியாமல்போனாலும், அதன் பிறகு மெதுவாக தன்னுடைய இருப்பை ஒரு நாள் ஆட்டங்களில் நிரூபிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது மிடில் ஆர்டரில் தலைகாட்டி பெரிதாக சோபிக்காமல்போனாலும், ஏதோ தன் பங்குக்கு அவ்வப்போது கம்பீர் அரை சதங்கள் அடித்தார். ஆனாலும், அவை 2007 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடத்தைப் பெற்றுத்தர உதவியாக இல்லை.

இயல்பிலேயே ஆக்ரோஷ குணத்தைக்கொண்ட கம்பீருக்கு, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது இன்னமும் வெறியேறும். பாகிஸ்தானின் அஃப்ரிடி முதல் அக்மல் வரை யாராவது ஒருவர் கம்பீரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டே இருப்பார்கள். இந்தியா முதல்முறை பாகிஸ்தானை `பெளல் அவுட்’ முறையில் வெற்றிகொண்டு, அடுத்தடுத்து போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அடித்து நொறுக்கி இறுதிக்கு முன்னேறினால், மீண்டும் பாகிஸ்தான். சேவாக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விலக, யூசுஃப் பதான் தன் முதல் ஆட்டத்தை இந்தியாவுக்காக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய, தனி ஆளாகப் போராடி அணியின் எண்ணிக்கையில் பாதி அடித்து (75) இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். இருபது ஓவர் உலகக்கோப்பையின் வெற்றிக்கு வித்திட்ட கம்பீர், அப்போது முதல் இந்தியாவுக்காக மூன்றுவிதமான போட்டிகளிலும் முன்னிலை ஆட்டக்காரராகத் திகழ ஆரம்பித்தார்.

கம்பீர்

அதே ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் கம்பீருக்கு இடம் கிடைக்காவிடினும், தோனியின் தலைமையில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற அணியில் இடம்பிடித்தார். இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக தலா ஒரு சதம் அடிக்க, சச்சினுக்குப் பிறகு சேவாக்குடன் ஆட்டம்போட தரமான ஒரு வீரர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரர்

2009-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள், இரட்டை சதம் அடித்தது, நியூஸிலாந்துக்கு எதிராக 11 மணி நேரம் களத்தில் இருந்து அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது என கம்பீர், இந்தியாவின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக உருமாறியிருந்தார்.

``சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர் என்றால் அது கம்பீர்தான்” என்று சேவாக் முன்மொழிந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் உபயோகப்படுத்தப்படும் பந்து, நீண்டநேரம் ஸ்விங் ஆகும். அதை மழுங்கடித்து, பந்து அதன் வீரியத்தை இழக்கும் வரையில் தொடக்க வீரர்கள் பொறுமையாக ஆடினால் மட்டுமே, மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் அடித்து ஆடி ரன்களைச் சேர்க்க முடியும். சடகோபன் ரமேஷுக்குப் பிறகு, இடதுகை தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாதபோது கம்பீரின் வருகை மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஒருபக்கம் சேவாக் அடித்து ஆட, மறுபக்கம் கம்பீர் பொறுமையாக விக்கட்டை இழக்காமல் அதே நேரத்தில், சிறுகச் சிறுக எண்ணிக்கையை உயர்த்தினார்.

தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தும், நியூஸிலாந்தில் வென்றும், இந்தியாவில் தொடர்ந்து யார் வந்தாலும் துவம்சம் செய்தும் முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய முதல் இடத்தைப் பிடிக்க, கம்பீரின் அநாயசமான ஆட்டத்திறன் உதவிபுரிந்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல 2011-ம் ஆண்டின் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கம்பீர் அடித்த 97 ரன்கள், இந்திய கிரிக்கெட்டின் பொக்கிஷம்.  

கம்பீர்

28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமுறை நிச்சயம் உலகக்கோப்பையை வென்றுவிடுவார்கள் என்று ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்க, முதல் ஓவரில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்புகிறார். இந்திய மக்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை சேவாக், சச்சின், யுவராஜ், தோனி எனப் பிரித்துப் பிரித்து வைத்திருந்தாலும், கொஞ்சம்கூட தடுமாறாமல் முதல் ஓவரிலேயே உள்ளே வந்தாலும், உலகக்கோப்பையில் இந்தியா ஒரு கையை வைத்துவிட்டது என நம்பிக்கை அளிக்க தொடங்கிய தருணம், கம்பீர் பொறுமையாக அடித்து ஆரம்பித்த நேரம்தான்.

ஸ்பின் பௌலர்கள் யாராக இருப்பினும், கம்பீரின் நேர்த்திக்கு பந்து வீசுவது கடினம். கொஞ்சம் ஏறி வந்து, பந்து ஸ்பின் ஆகும் முன்னரே கவர் - எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்கும் அந்த ஒரு ஷாட் இன்னமும் வேறு எவராலும் பிரதி எடுக்க முடியாதிருப்பது கம்பிரின் சிறப்பு. மூன்று ரன்களில் சதத்தை இழந்தாலும், வெற்றிக்குப் பிறகு `இந்த வெற்றியை இந்தியாவின் ராணுவ வீரர்களுக்குச் சமர்பிக்கிறேன்' எனக் கூறிய முதல் வீரர். நம் எல்லோருடைய மனதிலும் தோனி, குலசேகராவின் பந்தில் லாங் ஆன் திசையில் அடித்த சிக்ஸர்தான் ஞாபகம் வரும். ஆனால், அதன் பின்னால் கம்பிரின் வியர்வைத் துளிகள் வழிய வழிய பெற்ற 97 ரன்களும் என்றென்றும் நினைவுக்கூரத்தக்கது.

2015-ம் ஆண்டின் உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு, தோனி, ``சேவாக் - கம்பீர் - சச்சின் என மூவரில் இருவர்தான் விளையாட முடியும். ஒருவர் மற்றவருக்கு இடமளிக்க வேண்டும். ஏனெனில், மூவரும் களத்தில் கொஞ்சம் மெதுவாக ஃபீல்டிங் செய்பவர்கள்'' என கருத்துக்கூற, அங்கு ஆரம்பமாகியது பிரச்னை. உலகக்கோப்பை வென்ற கையோடு இங்கிலாந்தில் 0-4 என்று தோற்ற தொடரில், ஒரு கேட்சைத் தவறவிட்டு தலையில் அடிபட்டு நாடு திரும்பிய கம்பீர், அதே வருடத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரிலும் சோபிக்கவில்லை. தொடர்ந்து வாக்குவாதங்கள், அறிக்கைப் போர்கள். இவை எதுவும் அவருக்கு வலுசேர்க்கவில்லை.

கம்பீர்

அதற்கடுத்த வருடங்களில், தமிழ்நாட்டின் முரளி விஜய் தொடக்க வீரராகக் களம் காண, கம்பீரால் மீண்டும்  நிலையான ஓர் இடத்தை அடைய முடியாமல்போய்விட்டது.

ஐபிஎல் தொடரில் தன்னுடைய சொந்த அணி தன்னைக் கழட்டிவிட்ட பிறகு, சுமாராக இருந்த கொல்கத்தாவை தன்னுடைய திட்டமிட்ட தலைமையினால் அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வாங்க உதவினார். அதில் ஒரு தொடரில், தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ரன் ஏதும் குவிக்காதபோதும், மீண்டும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார். ஐபிஎல் தொடரில் 35 அரை சதங்களுக்குமேல் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் வீரர் கம்பீர்.

 

தன்னுடைய 36-வது வயதில் அடியெடுத்து வைத்தாலும், இன்னமும் இந்திய அணிக்காக விளையாடுவதில் முனைப்புடன் செயல்பட்டு, இந்த ரஞ்சி சீஸனை செஞ்சுரியோடு தொடங்கியிருக்கும் கம்பீருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உயிரிழந்தவரின் எஸ்.எம்.எஸ் உயிலாக மாறிய சம்பவம்

 

 

இறந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக  அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Local_News.jpg

தன் 55ஆவது  வயதில் இறந்த குறித்த நபர் தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்து அதில் அவரின் சகோதரரின் தொலைப்பேசி எண்ணை பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார்.

ஆனால் அந்தச் செய்தியை அனுப்பாமல் தன்  தொலைப்பேசியில் வரைவாகச் சேமித்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்ட பின் அந்த செய்தி அவரது தொலைப்பேசியில்  இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்தச் செய்தியில் இருக்கும் சொற்கள் மூலம் அது ஒரு உயிலாகச் செயல்பட வேண்டும் எனும் நோக்கிலேயே இறந்த நபரால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது என்று பிரிஸ்பேன் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

அந்தக் குறுஞ்செய்தியில் தன் வங்கிக் கணக்கின் விவரங்கள் மற்றும் வீட்டில் தான் பணத்தை மறைத்து வைத்துள்ள இடங்கள் பற்றிய விவரங்களை அவர் தெரிவித்துள்ளார்.

“என்னை எரித்த சாம்பலை என் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் வீசவும், தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் கொஞ்சம் பணம் உள்ளது, வங்கியிலும் கொஞ்சம் பணம் உள்ளது ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியைத் தன் கணவர் அவரது சகோதரருக்கு அனுப்பாததால் அது செல்லாது என்று கூறி அவரின் சொத்துகளை தான் நிர்வகிக்கக்  அனுமதி கோரி இறந்த நபரின் மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒரு உயில் செல்லுபடியாக வேண்டுமானால், அது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் மற்றும் அதற்கு இரண்டு சாட்சியாளர்கள் கையெழுத்து இட வேண்டும்.

“எனது உயில்” என்று அந்த நபர் தன் குறுஞ்செய்தியை முடித்துள்ளதால் அதை உயிலாகக் கருதலாம் என்று நீதிபதி சூசன் பிரவுன் கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு  குயின்ஸ்லாந்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் குறைவாக முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் உயிலாகக் கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

170 வலதுபக்க சுருள் கொண்ட நத்தைகளை ஈன்ற ஜெரிமி நத்தை !!

 

துணை தேடும் படலத்தின் மூலம் பிரபலமான இடதுபக்கம் ஓடுகள் சுருண்ட ஜெரிமி என்ற நத்தை மரணமடைந்தது.

170   வலதுபக்க சுருள்    கொண்ட   நத்தைகளை   ஈன்ற  ஜெரிமி நத்தை !!

இருந்தபோதும் இறப்பதற்கு முன்பு ஜெரிமியின் பரம்பரை வாழும் வகையில் அதன் துணையான டோமேயோ அதன் பிள்ளைகள் ஈன்றுள்ளது

லட்சத்தில் ஒன்றாக கருதப்படும் இந்த நத்தை புதன்கிழமை இறந்ததாக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் ஜெரிமிக்கு ஏற்ற நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட போது அவை பிள்ளைகள்' பெற்றெடுக்காமலே இருந்தன. இதனால் மே மாதகாலத்தில் ஜெரிமிக்கு பிள்ளைகள் பிறப்பது கடினம் என்பது போலவே தெரிந்தது.

டோமேயோ வலதுபக்கம் சுருண்ட ஓடுகளை கொண்ட 56 பிள்ளைகளை ஈன்றுள்ளது.  அதில் மூன்றில் ஒரு பங்கு குட்டிகளுக்கு மட்டுமே ஜெரிமி தந்தையாகும்.

மற்ற குட்டிகள் டோமேயோ இப்ஸ்விச்சிற்கு வருவதற்கு முன்பு  தொடர்பில் இருந்த வேறொரு இடபக்கம் சுருளப்பட்ட ஓடுகளை கொண்ட நத்தையினுடையதாகும்.

ஜெரிமியின் சரியான வயது என்ன என்பது தெரியவில்லை என கூறும் பல்கலைக்கழகம் அது கிட்டத்தட்ட தனது இரண்டாம் வயதில் இருந்தது என்றனர்.

அக்டோபர் 2016: நாட்டிங்காம் பல்கலைக்கழகம் ஜெரிமிக்காக ஒரு இடதுபக்க சுருள் ஓடுகள் கொண்ட நத்தை தேவை என்பதையும் அதற்கு மக்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்தது.  காரணம் இடதுபக்க சுருள் மற்றும் வலதுபக்க சுருள் கொண்ட நத்தைகளின் பிறப்புறுப்புகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

நவம்பர் 2016: இரண்டு பொருத்தமான நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு  நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன.

அதில் ஒன்று  இப்ஸ்விச்சில் உள்ள ஒரு மரத்தில் ஏறியது மற்றொன்று மஜோர்காவில் உள்ள ஒரு நத்தை பண்ணையின் பாணையில் தப்பி சென்றது.

ஜனவரி 2017: ஜெரிமி குட்டிகளை பெறவில்லை.

மே 2017: ஜெரிமி அங்கேயே இருந்தது. பின்பு இரு நத்தைகளும் இனப்பெருக்கம் செய்ய முடிவு செய்து 170 வலதுபக்க சுருள் கொண்ட நத்தைகளை ஈன்றன.

அக்டோபர் 2017: ஜெரிமி பிள்ளைகளை ஈன்றது; அவை அக்டோபர்   5 அல்லது 6 ஆம் தேதிகளில் குஞ்சுபொரித்தன.

அக்டோபர் 2017 : அந்த மாதம் 11ஆம் தேதி ஜெரிமி இறந்தது.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை அறிவியல் பள்ளியை சேர்ந்த டாக்டர் ஆங்கஸ் டேவிட்சன்  என்பவரின்  கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அவர் ஒரு நத்தையின் சுருள் கடிகாரச்  சுற்றாக பிறக்கிறதா அல்லது அதற்கு எதிர்திசையில் பிறக்கிறதா என்பதை தீர்மானிக்கும் மரபணுவை அவர் கண்டறிந்தார்.   இது ஜெரிமியின் முடிவாக இருக்கலாம். ஆனால் அது பிள்ளைகளை ஈன்றுள்ளது இது எங்களின் நீண்டகால ஆராய்ச்சியின் இலக்கு என்றும்  நாங்கள் இந்த வகை நத்தைகள் ஏன் அரிதானவை என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அதுமட்டுமின்றி உடலின் இந்த வலது மற்றும் இடது பக்கங்கள் மூலக்கூறு நிலையிலேயே எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றன.  இதே முறையை மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறதா என்பதையும் அறிய விரும்புகிறோம்  என்றார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

அண்மையில் ஓய்வுபெற்ற, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் , சகலதுறை வீரர்களில் ஒருவருமான 'DILSCOOP' புகழ் திலகரட்ன டில்ஷானின் பிறந்தநாள்.
Happy Birthday TM Dilshan

இலங்கை கிரிக்கெட்டின் நிரப்பப்பட முடியாத வெற்றிடங்களில் ஒருவராக டில்ஷான் இருக்கிறார்.

 

 

  • தொடங்கியவர்

வலைபாயுதே

twitter.com/abuthahir707

சூப்பர் மார்க்கெட்டில் ட்ராலிகள் பெரும் பாலும் குழந்தைகளுக்காகவே  வடிவமைக்கப் பட்டதாகும்.

twitter.com/saravananucfc

ஒரு படத்தை ஐந்து தடவை பார்த்தேன் பத்துத் தடவை பார்த்தேன்னு சொல்றவங்க அதிகமா விஜய் டீவி பார்க்குறவங்களாகவும் இருக்கலாம்.

138P1.jpg

twitter.com/ArunPandiyanMJ

நூறு நண்பர்களின் ஹெல்த் அட்வைஸுகள், ஆயிரம் டயட் புத்தகங்கள், லட்சம் ஜிம் விடியோக்கள் தரவியலாத உத்வேகத்தைத் தரவல்லது ஒரு ட்ரையல் ரூம் கண்ணாடி.

twitter.com/Calmrade 138p7.jpg

எப்ப சீமான் ஆட்சிக்கு வந்து… ஆடு மேய்க் கிறத அரசுப்பணி ஆக்கி… நாம பச்ச இன்க்ல கையெழுத்து போட்டு… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

twitter.com/ashoker

‘நேரத்துக்கு சாப்பிடு, நகம் கடிக்காத’ எனத் தனிமனித நலனில் துவங்கும் ஆனந்தியின் அக்கறை ‘அந்த சாக்ஸ தொவச்சிப்போடு’ எனும் பொதுநலனில் முடிகிறது.

twitter.com/yugarajesh2

அதிமுக அரசை  யார்? குறைகூறினாலும் ‘என் பப்லுவைத் திட்டாதீங்கன்னு’ முதலில் ஓடி வருவது நம்ம தமிழிசை அக்காதான்.

138p2.jpg

twitter.com/vellooraan

ஆயிரம்  இருந்தாலும் டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம்தானடா  கொடுக்கிறீங்க...அப்புறம் என்ன நீட்டு புண்ணாக்கெல்லாம்!

twitter.com/g_for_Guru 

வரன் பார்க்கும் போது வரும் போட்டோக்கள் சைட் போஸிலிருந்தால் உஷார்... லாரியவே சைடா நிறுத்துனா சின்னதாதான் இருக்கும்!

twitter.com/mujib989898

எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது தோசைக்குத்தான் சரியாக இருக்கும்!

twitter.com/azam_twitz

போனஸ் கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியைவிட கிடைத்த போனஸ்க்கு மேல் செலவு வந்துவிடுமே என்ற கவலைதான் குடும்பத் தலைவருக்கு அதிகம் இருக்கும்!

138p31.jpg

twitter.com/indhiratweetz

மெட்சூரிட்டி என்பது புரிஞ்சுக்குறதோ புரிய வைக்கிறதோ இல்ல. மூடிக்கிட்டு வேலையப் பார்க்குறது.

twitter.com/yugarajesh2

முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும்னு நினைச்சுக்கிட்டு இருந்த நம்மை,கொசுவை ஒழிக்க வேண்டும்னு நினைக்க வச்சிடுச்சு இந்த டெங்கு

twitter.com/thirumarant

யோகிய ப்ரொமோட் பண்ணக் காரணம்... அடுத்த தேர்தல்ல ஒழுங்கா மோடிக்கு ஓட்டு போடுங்க, இல்லனா இவர்கிட்ட புடிச்சிக் குடுத்துடுவோம்னு பயம் காட்டறதுக்காக இருக்கலாம்!

138p4.jpg

twitter.com/rubi_pings

ஷார்ட்ஸ் போட்டுட்டுத் திரிஞ்ச பசங்கலாம் கைலியைச் சுத்திட்டுத் திரியுறானுக... அந்த பயம் இருக்கணும். #டெங்குக் கொசு அட்ராசிட்டீஸ்!

twitter.com/ThirutuKumaran

சிலர் மைண்ட் வாய்ஸ்: ஒவ்வொருத்தனும் அவ்ளோ சம்பளம் இவ்ளோ சம்பளம்னு சொல்றீங்க. ஆனா முழுநேரம் ட்விட்டர்ல தான் இருக்கீங்க.. எப்டிடா முடியுது.

twitter.com/MJ_twets

கல்யாணம் ஆகிட்டா லைஃப்ஸ்டைல் மாறிடும்னு சொன்னாங்க, ஆனால் அப்புறம் தான் தெரிஞ்சது ஹேர்ஸ்டைலக்கூட மாத்த முடியாதென!

138p5.jpg

twitter.com/indhiratweetz 

‘நீயா இது!’ எனும் ஆச்சர்யத்தை எப்போதும் தக்கவைத்துக்கொள்கிறாய். நீயா இவ்வளவு நேசித்தாய்! நீயா இவ்வளவு வெறுத்தாய்!

twitter.com/CreativeTwitz 

ரெண்டு மணி நேரம் நான்ஸ்டாப்பா விளையாடியும் டயர்டு ஆகாத குழந்தை, ரெண்டு லெஸன் படிச்சதும் டயர்டு ஆனால் பிரச்னை குழந்தையிடம் இல்லை!
 
twitter.com/Sathriyan_

உங்களுக்காக நான் இருக்கேன்னு சொல்றாய்ங்க... அடுத்த ஒரு மணி நேரத்துல பார்த்தா ஆளையே காணோம்!

twitter.com/indhiratweetz

அடிச்சாச்சுனு நெனச்ச கொசு, கையைத் திறந்ததும் துள்ளிக்கிட்டுப் பறந்துபோறதை விடவா ஒரு லவ் ஃபெய்லியர் ஏமாற்றம் தந்துடப்போகுது!

138p6.jpg

twitter.com/ajmalnks 

வீட்டில் உள்ள ப்ளக்பாயின்ட்களை மொபைல் சார்ஜரும்,கொசு மருந்துகளுமே ஆக்கிரமித்திருக்கின்றன.

twitter.com/indiavaasan

பாதி அறுவை சிகிச்சையில்தான் மருத்துவர் இல்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் மோடி! மேசையில் கிழித்துக் குதறப்பட்டுக் கிடக்கிறது பொருளாதாரம்!

twitter.com/ChainTweter

எத்தனையாவது தோசையில் நாம்  எழுந்துவிட வேண்டுமோ அதைப் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பிரச்னையை ஆரம்பிப்பார்கள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.