Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/Divergent_offcl

முத்தத்தில் முடிக்காமல் குழந்தைக்குத் தலை சீவ அம்மாக்கள் பழகவே இல்லை.

twitter.com/kumarfaculty

டெங்குவை ஒழித்ததில் தீபாவளிப் பட்டாசு, பப்பாளி இலைச்சாறு, நிலவேம்புக் கசாயத்தைவிட மெர்சலின் பங்கு அதிகம்.

twitter.com/sivanujah

வலைதளம் என்பது ஒரு சிக்கலான வலைதான். சிங்கங்களும் எலிகளும் நரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஒரே இடம்.

112p1.jpg

twitter.com/abuthahir707

இறந்த பின்புதான் பலவிதப் பெயர்கள் சூட்டப்படுகின்றன கோழிகளுக்கும் ஆடுகளுக்கும்.

twitter.com/thoatta  112p6.jpg

கடைசி வரைக்கும் பிஜேபி சினிமா தியேட்டரை முற்றுகையிடாது, ஏன்னா அவங்க தொண்டர்கள் எண்ணிக்கையைவிட ஒரு தியேட்டருக்குள்ள படம் பார்க்கிறவர்கள் அதிகம்.

twitter.com/abuthahir707

இன்டர்வியூவில் எவ்வளவு அழகா பதில் சொன்னாலும் நம்மள நீக்க இரண்டு கேள்விகளே போதும்.

அரியர்ஸ் இருக்கா?

எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?

112p2.jpg

twitter.com/Railganesan

கோபம் வந்தால் பொருளைத் தூக்கிப் போட்டு உடைக்கும் நமக்கு அதே மதிப்பிலான பணத்தைக் கிழித்தெறியத் தோணுவதில்லை!

twitter.com/navi_n

நெருக்கத்தை நோக்கிய பயணம் நெருக்கத்தைவிட போதையானது.

112p3.jpg

twitter.com/writter_vambu

BJP யை எதிர்த்துக் கருத்து சொன்னால்

சீமான் “சைமன்” ஆகிறார்.

திருமுருகன் “டேனியல்” ஆகிறார்.

விஜய் “ஜோசப் விஜய்” ஆகிறார்.

என்னங்க சார் உங்க சட்டம்!

twitter.com/nilaavan

இந்த வசனங்கள்லாம் படத்துல இருக்குன்னு தெரிஞ்சிருந்தா எடப்பாடி விஜய்ய சந்திச்சிருக்கவே மாட்டாரு... இப்போ ஒரு பொஷிசன்ல நிக்கணும் மோடிகிட்ட...

twitter.com/amuduarattai

மரங்கள் வெட்டப்பட்டு அகலமாக்கப்பட்ட சாலைகளில், ஒரு வெறுமையான மனநிலையில்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது.

112p4.jpg

twitter.com/mekalapugazh

ஆதாரமற்ற செய்திகள் பட வசனத்தில் இடம் பெறக்கூடாதென்றால்... எல்லா பக்திப் படங்களுமே தடை செய்யப்படணுமா எனக் கேட்கிறார் அந்த ஏழை விவசாயி.

facebook.com/பா.மீனாட்சி சுந்தரம்

ஜிஎஸ்டி ரெய்டா? என்னயா இது புதுசா இருக்கு? இது டிஜிட்டல் இண்டியாண்ணே!

twitter.com/Timekeeper19 

இந்த சூப்பை எல்லாம் முழுசா குடிக்கணுமானே தெரியல... புல், பூண்டுனு கிச்சன்ல மீந்த அத்தனை அயிட்டத்தையும் அதுல கொட்டிடுறாங்க!

twitter.com/writernaayon

எங்க அப்பன நான் திட்டுவேன்; வேற எவன் திட்டுனாலும் வெட்டுவேங்கற மாதிரி இருக்கு, தளபதி-தல ரசிகர்களோட ஒற்றுமையான பிஜேபி எதிர்ப்பு!

twitter.com/smhrkalifa

ஒரு கிருஷ்ணசாமி உருவாக அஞ்சு நாள் போதும்; ஒரு மோடி உருவாக அஞ்சு வருஷம் போதும். ஆனால் ஒரு செல்லூர் ராஜு உருவாக ஒரு யுகம் ஆகும்டா.

112p5.jpg

twitter.com/raajaleaks

இன்ஜினீயர்ஸ்க்கு கால் சென்டர்ல 50,000 ரூ சம்பளம்னு படம் எடுத்தானுங்க, நாங்கலாம் கம்னு பாத்துட்டு வரல? போங்கடா.

twitter.com/Tamiltwits

விவேகம்ல பேசுனதும் நாட்டோட பிரச்னைதான் அந்த டிவைஸ் மட்டும் தல ஒடைக்கலனா இன்னேரத்துக்கு பூரா பயலும் செத்துப் போய்ருப்பிங்கடா சில்றைங்களா.


facebook.com/Sa Na Kannan

நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட எல்லாப் பத்திரிகைகளும் இணையத்துக்கு வந்துவிட்டன. எந்த நாளிதழ், வார இதழையும் இணையத்தில் படிக்கமுடியும். பெரும்பாலும் இலவச மாகவே. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இணையம் வழியாகக் காணமுடியும். செய்தித் தொலைக் காட்சிகளை நேரலையாகவே காணலாம். சன், விஜய் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளைச் சிறிது தாமதத்துடன் யூடியூப் தளத்தில் காணலாம். கிரிக்கெட் போட்டிகளின் தொகுப்பையும் இணையத்தில் காண்பது ஓரளவு சாத்தியம். அவன் மெதுவாத்தான் வருவான். ஆனால், அவன் வந்துகொண்டிருக்கிறான் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனில், தமிழ் சினிமா?

திரையரங்கில் மட்டுமே ஒரு படத்தைக் காணவேண்டும் என்கிற பிடிவாதம் உள்ளதால்தான் இத்தனை சீரழிவுகள். கிரிக்கெட் போட்டியை மைதானத்திலும் பார்க்கலாம். தொலைக்காட்சியில் நேரலையாகவும் காணலாம். இரு தரப்புக்கும் இதனால் தொந்தரவுகள் இல்லை. இரண்டும் அதனதன் வழியில் ஒழுங்காகவே சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா?

வருடத்துக்கு 200 தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றன. அனைத்தையும் திரையரங்குகளில் பார்ப்பது சாத்தியமா? காலத்துக்குத் தகுந்தாற்போல் எல்லாத் தொழில்களும் மாறிக்கொண்டிருக் கின்றன. தமிழ் சினிமா, பட வெளி யீட்டிலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பாகுபலி 2, மெர்சல் படங்களைத் திரையரங்கில்தான் பார்ப்பேன். அதேசமயம் கருப்பன் படத்தைத் திரையரங்கில் பார்க்கமுடியாது (ஜனரஞ்சகத்தன்மை குறைவு என்பதால்.). ஆனால் ஒரிஜினல் டிவிடி விற்றால் இப்போதே வாங்கத் தயார். தமிழ் சினிமா இதற்குத் தயாரா? கொஞ்சமாவது மக்களின் விருப்பத்துக்கு இறங்கிவர வேண்டும்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

11.4 மில்லியன் பவுண்ட் பெறுமதியான வைர செருப்பு

 

 

பிரித்தானியாவில் விலை அதிகமான ஆடைகளை வடிவமைப்பதில் கைதேர்ந்த  டெபி விங்கம் என்ற வடிவமைப்பாளர் உலகின் அதிக விலை உயர்ந்த வைரம் பொறிக்கப்பட்ட செருப்பை வடிவமைத்துள்ளார்.

Local_News.jpg

இதில் நீல மற்றும் பிங்க் நிற வைரங்களுடன் 24 கரட் தங்க நிறத்தில்  Leather Coating Paint  செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மல்லிகைப்பூக்களால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைப்பதற்கு  Chris Campbell  என்பவரும் துணைபுரிந்துள்ளார்.

59f30bb705ce4-IBCTAMIL.jpg

இதன் விலை 11.4 மில்லியன் பவுண்ட்களாகும்.

இதற்கு முன்பாக 11.7 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பில்  Red Diamond Abaya ஆடையை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கார்த்திகை தீபத்துக்காக தயாராகும் அகல் விளக்குகள்!

7904d0a1-c1fc-485c-b019-e2b66f3b0604jpg

 

 

ecb49de2-632c-4175-96d6-a160152cfcc7jpg

e135017a-5bc9-4a24-be72-64ea601cfc66jpg

afabc304-5e3b-4ecd-bf6e-8f07721f2053jpg

 

a3816677-01e9-4faf-aee5-b50883c629bcjpg

99871d57-d592-43db-87b8-9df7ee6dd715jpg

73e260c6-1504-420d-a621-bf1fd79bb62djpg

 

67376714-df22-4be5-9844-4b98c708ddcfjpg

 

58452aad-411f-4415-ba76-502f6f0f5883jpg

3e7f3b34-250d-4e8e-9bb6-045b6a04d13cjpg

 

 

 

http://tamil.thehindu.com/

முதியவர் கையில் அழகாக உருபெறும் கார்த்திகை விளக்கு!

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கம்பட்டியில் கார்த்திகை விளக்கு செய்யும் முதியவர்.

  • தொடங்கியவர்

பலூன்களின் உதவியுடன் 2 மணி நேரம் வானில் பறந்த நபர்

 

பலூன்களின் உதவியுடன் 2 மணி நேரம் வானில் பறந்த நபர்

தென்னாப்பிரிக்காவில் ஒருவர் நூறு பலூன்களின் உதவியுடன் 2 மணிநேரம் வானில் பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கைவை சேர்ந்தவ டாம் மார்கன் என்பவர் ஹீலியம் வாயுவினால் அடைக்கப்பட்ட 100 பலூன்களின் உதவியுடன் வானத்தில் பறந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார். பலூன்கள் அனைத்தையும் ஒரு நாற்காலியில் இணைத்து வானில் 8,300 அடி வரை அவர் பறந்து காட்டியுள்ளார். அவர் சாகசம் செய்த, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்த அனைத்து மக்களும் அவரை பாராட்டிய வருகின்றனர்.

பலூன்களின் உதவியுடன் 2 மணி நேரம் வானில் பறந்த நபர்

இதுகுறித்து டாம் மார்கன் கூறுகையில், குறைந்த செலவில் வானில் மிதந்து கொண்டு ஆப்பிரிக்காவை சுற்றி பார்ப்பது ஒரு அற்புதமான ஒன்று அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனக் கூறினார். பலூனில் வானில் பறப்பதற்கு முன் பல்வேறு சோதனை செய்யப்பட்டதாகவும். அதற்கு பின்னரே இந்த இடத்தை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

https://news.ibctamil.com

 

நூறு பலூன்களுடன் வானில் பறந்த சாகச வீரர்

  • தொடங்கியவர்

டெஸ்ட் ஹாட்ரிக்... டி20 சாம்பியன் ஹீரோ... இந்தியா மறந்த ஸ்விங் பதான்! #HBDIrfan

 

‘பாகிஸ்தானில் கடைசியாக இந்தியா எப்போது கிரிக்கெட் ஆடியது?' என யாரிடமாவது கேட்டால், கொஞ்சம் யோசித்து இரண்டு நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒன்று, சேவாக்கின் 300 ரன் குவிப்பு. இன்னொன்று, இர்ஃபான் பதான் எனும் இளம் பந்து வீச்சாளரின் டெஸ்ட் ஹாட்ரிக். 

இந்திய அணி 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றபோது முன்னணிப் பந்து வீச்சாளர் ஜாகிர்கானுக்குக் காயம் ஏற்பட்டதும் மாற்று வீரராகக் களமிறங்கியவர் இர்ஃபான் பதான். இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளர். முதல் தொடரின் 4-வது போட்டியில் கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ், ரிக்கிபாண்டிங் என ஆஸி. பேட்டிங் சாம்ராஜ்யத்தை அடியோடு அசைத்து இந்திய அணியின் இளம் புயலானார்.

 

பதான்

கிரிக்கெட் ஆட பாகிஸ்தானுக்குச் சென்ற அணியில் இடம்பிடித்த இர்ஃபானுக்கு வந்த விமர்சனம் `என்ன இது... ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்களை எல்லாம் அணியில் அழைத்துச் செல்கிறீர்கள்' என்பதுதான். பாவம், அந்த விமர்சனத்தை முன்வைத்தவர்கள். 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரை பாகிஸ்தான் வாழ்நாள் முழுக்கவும் மறக்கமுடியாதபடி செய்தார் இர்ஃபான். சல்மான் மற்றும் யுனிஸ்கான் இருவரும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற, அனுபவ வீரர் முகமது யூசுப் களமிறங்குகிறார். `ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்' என விமர்சனம் செய்யப்பட்ட பதானின் கையில் பந்து. அனுபவம் வாய்ந்த யூசுப்... கண் இமைக்கும் நொடியில் ஸ்டெம்புகள் சிதறி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Irfan-Pathan_Photo_Card3_20357_-_Copy_12

இர்ஃபான் பதான் மறக்க முடியாத இந்தியன் ஆல்ரவுண்டர். `இர்ஃபான்' என்ற பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருவது, தாவிக் குதித்து தன் கையிலிருந்து பந்துகளை ஸ்டெம்புக்கு நேராக ரீலிஸ் செய்யும் அந்த ஸ்டெயில்தான். ஜாகீர்கானுக்குப் பிறகு பெளலிங் ஸ்டெயிலுக்காக அதிகம் விரும்பப்பட்டவர்  இர்ஃபான் பதான். இவ்வளவு ஸ்டெயிலாக பந்து வீசும் இர்ஃபான், ஆரம்பக் காலத்தில் வீசிய பந்துகள் எதுவும் பேட்ஸ்மென் நிற்கும் கீரிஸ் வரைகூட செல்லாதாம். தினமும் ஆறு மணி நேரம் கடும் வெயிலில் பயிற்சி பெற்று, தன் பெளலிங்கைச் சரிசெய்தாராம் இர்ஃபான்.

27 அக்டோபர், 1984 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் வறுமைமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் இர்ஃபான். அதிரடி மன்னன் யூசுப் பதான், இவரின் உடன்பிறந்த மூத்த சகோதரர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவரையும் `இஸ்லாமிக் ஸ்காலர்' ஆக்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருந்தது. ஆனால், பதான் பிரதர்ஸின் கனவு, கிரிக்கெட்டை நோக்கியே இருந்தது. பயிற்சியாளர் எவருமின்றி இருவருமே தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டனர்.

பதான்

`ஒருநாள் போட்டியில் (59) 100 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர்' என்ற பெருமையும் இர்ஃபானையே சேரும். 2009-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக நடந்த பரபரப்பான டி20 போட்டியில் இர்ஃபான் (33), யூசுப் (22) இருவரும் அடித்து விளாசி வெற்றி பெறச் செய்ததை, எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது! 

2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. கம்பீர், 75 ரன் அடித்தார். ஶ்ரீசாந்த் கடைசி கேட்சைப் பிடித்து அசத்தினார். உண்மையான நாயகனான இர்ஃபான்தான், கேப்டன் மாலிக்கை எட்டு ரன்னில் வெளியேற்றினார். அதிரடி மன்னன் அஃப்ரிடியை டக் அவுட்டாக்கியவர், கடைசியில் யாசிர் அராஃபத் விக்கெட்டை வீழ்த்தி ட்விஸ்ட் தந்தார். 16 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்தியா கோப்பை வெல்ல முக்கியப் பங்கு வகித்த இர்ஃபான்,  ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

பதான்

பெளலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சில போட்டிகளில் முன்வரிசையில் இறங்கி அடித்து ஆடி கெத்தும் காட்டினார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரண்டருக்குச் சரியான ஆள் எனப் பெயர் எடுத்த இர்ஃபான், 2012-ம் ஆண்டுக்குப் பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிவருகிறார். பாகிஸ்தானைச் சொந்த மண்ணில் மிரட்டிய இர்ஃபானை என்றுமே மறக்க முடியாது. ஐ.பி.எல்-களில் தலையைக் காட்டினாலும் இன்னமும் நீல நிற ஜெர்ஸியில் ஒரு ஸ்விங் பந்தில் ஸ்டெம்புகள் சிதற பேட்ஸ்மேன் நடையைக் கட்டுவதை எதிர்பார்க்கிறோம் இர்ஃபான்.

 

ஹேப்பி பர்த்டே இர்ஃபான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விமானத்தைச் செலுத்திய 6 வயதுச் சிறுவன் !!

 

விமானி போன்று உடை அணிந்து, 6 வயது சிறுவன், விமானத்தைச் செலுத்திய காட்சியடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள எதிகாட் விமான நிறுவனத்தில் ஆதம் என்ற 6 வயது சிறுவன், ஒருநாள் விமானியாக பணியாற்றியுள்ளான்.

விமானத்தைச்     செலுத்திய    6 வயதுச்   சிறுவன்   !!

சிறுவன், ஆதம் விமானம் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளான்.  விமானத்தின் செயல்முறை குறித்த அவனது அறிவு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த சிறுவன் வருங்காலத்தில் சிறந்த விமானியாக வருவான் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவனுடைய கனவு விரைவில் நனவாகும் எனவும் தெரிவித்துள்ளனர் .

விமானி போன்று உடை அணிந்து மற்றொரு விமானியுடன் இணைந்து, எதிகாட் விமான பயிற்சி மையத்தில் உள்ள A -380 விமானத்தைச்  செலுத்தியுள்ளான்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, இதுவரை 21 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள் .

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
‘இந்த வீட்டில் இனி என்ன இருக்கின்றது’
 

image_b7917d3d89.jpgதனது அன்பு மனைவி, இவ்வளவு சீக்கிரத்தில் தன்னையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, பிரிந்து விண்ணுலகம் செல்வாள் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மூத்தவனுக்கு வயது மூன்று; மற்றைய பெண் குழந்தைக்கு வயது ஒன்று. 

என்னதான் அழுது அரற்றினாலும், உறவினர்கள் அவரை விட்டுவிடாமல் வற்புறுத்தி, ஓர் ஏழைப் பெண்ணை, இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துவைத்தனர்.  

அவள் குழந்தையைப் பெற்ற தாயிலும் மேலாக, வளர்த்து வந்தாள். இவளுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்துவிட்டது.  

காலம் உருண்டோடியது. மூத்த மகன் நல்ல தொழிலைத் தேடியதுதான் தாமதம், அந்த ஊரில் சட்டவிரோதமாகத் தொழில் செய்யும் ஒருவரின் மகளை நிச்சயம் செய்தபோது, கொதித்தெழுந்தாள். அவனோ வளர்த்த அன்னையை நோக்கி, “நீ யார்? என்னைப் பெற்றவளா? சும்மா குறுக்கே நிற்காதே” என கர்ஜனை செய்ய, வளர்ப்பு தாய் மௌனியானாள்; கட்டிய கணவன் சும்மா இருந்தான். மனமுடைந்து மரணப் படுக்கையில் விழுந்தாள். தனது மகனை அழைத்து “நீ எவரையும் வெறுக்காதே” என்றவள் கண் மூடினாள். ஈமக்கிரிகைகள் எல்லாம் முடிந்தன. அவளது மகன் சுடுகாட்டிலிருந்து புறப்பட்டான். எவரிடமும் சொல்லாமலேயே! இந்த வீட்டில் இனி என்ன இருக்கின்றது.  

  • தொடங்கியவர்

முதலாவது ஏர்பஸ் 'ஏ300' விமானம் பறந்த நாள் (அக்.28- 1972)

 

ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300 ரக விமானம் முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வானில் பறந்தது. 1974-ம் ஆண்டு மே 30-ந்தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.

* 1985 - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிகராகுவாவின் அதிபரானார். *

 
முதலாவது ஏர்பஸ் 'ஏ300' விமானம் பறந்த நாள் (அக்.28- 1972)
 
ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300 ரக விமானம் முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வானில் பறந்தது.  1974-ம் ஆண்டு மே 30-ந்தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார். * 1985 - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிகராகுவாவின் அதிபரானார். * 1985 - மிக்கேல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். * 2001 - பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். * 2001 - கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோவில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.

* 2006 - 1930-களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிச் சடங்குகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன. * 2006 - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

நெருப்பு டான்ஸ்!

 

விளம்பரம் என்பது அசகாய கலை. இங்கிலாந்து அரசு அதை கரெக்ட்டாக அப்டேட் செய்து க்யூட் மெசேஜ் சொல்லி அப்ளாஸ் அள்ளியுள்ளது. இங்கிலாந்தின் கென்ட் தீயணைப்பு நிலையம் வெளியிட்ட மக்களுக்கான விழிப்புணர்வு விளம்பரம் அது.
28.jpg
பாடாவதி கேமராவில் பராசக்தி ரக டயலாக்குகளைச் சொல்லி ஜனசமூகத்தை படுத்தாமல், ரொமான்டிக் பொங்க எடுத்திருப்பதுதான் விளம்பரத்தின் ஹிட்ஹாட் சக்சஸிற்கு காரணம். வீட்டில் தீ அணைப்பதற்கான கருவியை மறக்காதீர்கள் என்பதை ஃபயர் சர்வீஸ் ஜோடி, Dirty Dancing பாடலுக்கு டான்ஸ் ஆடி மெசேஜ் சொல்லுவதுதான் இதில் ஹைலைட். 

 

கிரேட் செல்ஃபீ ஜோடி!

 

காதல் வரும்போது ஆணும் பெண்ணும் செய்யும் அன்லிமிடெட் லூசுத்தனங்களுக்கு எல்லையே கிடையாது. ரஷ்ய காதல் ஜோடி, ஹாங்காங்கில் உலகம் பீதியடைய செய்திருப்பதும் அந்த வகையறாதான். ஏஞ்சலா நிக்கோலாவ் மற்றும் அவரது காதலரான இவான் பீர்கஸ் இருவருக்கும் வேலையே, உயரமான இடங்களில் காதல் பொங்க ஜோடியாக ஏறி, செல்ஃபீ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஹிஸ்டரியில் இடம்பிடிப்பதுதான்.
23.jpg
ஏஞ்சலா ஹைட்டான இடங்களில் யோகா, அக்ரோபாட் பயிற்சிகள் செய்து உலகையே மெர்சலாக்கிய வரலாறு கொண்டவர். ஹாங்காங்கில் உள்ள உயரமான கிரேனில் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் செல்ஃபீ ஸ்டிக் வித் கேமராவோடு ஏறி, ஜோடிகள் இருவரும் லவ் பெருக எடுத்த செல்ஃபீக்கள்தான் இணையத்தில் இன்று வைரல் புயல்!  

 

கண்ணுக்குள் ஷேவிங்!

 

சலூனுக்கு போனால் முடிவெட்டி பாண்ட்ஸ் பவுடர் போட்டு அனுப்புவதுதானே வழக்கம்? ஆனால், சீனாவைச் சேர்ந்த பார்பர் கண்ணுக்குள் கத்தியை விட்டே ஃபேமஸாகிவிட்டார்! சீனாவின் ஜியாங் காவு, கண்ணுக்குள் கத்தி சுழற்றுவது உண்மைதான். ஆனால், கத்தி மூலம் கண்ணுக்குள் உள்ள அழுக்கை ஷார்ப்பாக ஷேவ் செய்து எடுப்பதுதான் இவரின் ஸ்பெஷாலிட்டி.
4.jpg
‘‘முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு கண்களுக்குள் சேரும் அழுக்குகளைப் பற்றி தெரியாது. நாற்பது வருஷமாக இந்த வேலையை செய்கிறேன்!’’ என மார்தட்டுகிறார் ஜியாங் காவு. கண்ணுக்குள் ஷேவிங் மரபு, ஹாஸ்பிடல்களில் trachoma எனும் பார்வையிழப்பு ஏற்படுத்தும் நோய்க்கான சிகிச்சையாக 20ம் நூற்றாண்டிலேயே புழக்கத்திற்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

www.kungumam.co.

  • தொடங்கியவர்

 போட்டோஷாப் கவிதை

 

 
childhood%202

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிப்பட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிப்படங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ‘என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்தத் திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை அவர் உருவாக்கி இருக்கிறார்.

இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம்தான். தன்னுடைய சிறுவயதுப் படங்களில் தன்னுடைய இப்போதைய தோற்றத்தை போட்டோஷாப் மூலம் அழகாக ஒருங்கிணைத்திருக்கிறார். அதிலும் சிறு வயது போலவே உடைகளை அணிந்து கொண்டு ஒரே படத்தில் சின்ன பையனாகவும், பெரிய இளைஞனாகவும் அவர் காட்சி அளிக்கிறார். ஒளிப்பட ஆல்பங்களை வைத்துக்கொண்டு அந்த நாள் படங்களை புரட்டியபடி நிகழ்காலத் தோற்றத்தை ஒப்பிடுவது சுவாரசியமானதுதான் அல்லவா? அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வகையில், கடந்த கால படத்திற்குள் இப்போதைய தோற்றத்தை இடம்பெற வைத்திருக்கிறார் நிக்கர்சன்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

இறந்த தந்தையை புதுமையான வழியில் நினைவுக் கூறும் மகன்

புரோஸ்டேட் புற்றுநோயால் சைமனின் தந்தை கடந்த 2009ம் ஆண்டு காலமானார். ஆனால், சைமன் தனது தந்தையை நினைவில் வைத்திருக்கவும் மற்றும் இதேபோன்ற மற்றவர்களுக்கு உதவும் வகையில் புதுமையான வழியொன்றை கண்டறிந்துள்ளார்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்!

 

shutterstock152915756
18CHSUJLIVINGROOT
shutterstock152915756
18CHSUJLIVINGROOT

ஆற்றைக் கடந்து செல்ல பாலங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மரப்பலகைகளால் இவை கட்டப்பட்டிருக்கும். ஆனால் வேர்களாலேயே உருவான பாலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை உயிரிப் பாலம் என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அது உயிருடன் இருக்கிறது! வளர்ந்துகொண்டே இருக்கிறது!

   

வேர்ப் பாலத்தைப் பார்க்க வேண்டும் என்றால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்குச் செல்லவேண்டும். உலகில் அதிக மழை பெய்யும் இடம் என்று முன்னர் சொல்லப்பட்ட சிரபுஞ்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது தைரினா கிராமம். இங்கிருந்து சுமார் 4 மணி நேரம் நடந்தால் இந்த வேர்ப் பாலத்தைப் பார்த்துவிடலாம்! சமதளமான சாலைகள் கிடையாது. அடர்ந்த காட்டுக்கு நடுவே மலைப் பிரதேசத்தில் மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கவேண்டும்.

சில இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. சில இடங்கள் செங்குத்தாக உள்ளன. இரண்டு இடங்களில் இரும்புக் கம்பிகளால் ஆன தொங்கு பாலங்கள் இருக்கின்றன. கீழே குனிந்து பார்த்தால் பெரிய பெரிய பாறைகளுக்கு நடுவே தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும். இதையும் கடந்தால் 20 மீட்டர் நீளத்தில் ஓர் ஒற்றை வேர்ப் பாலம் வருகிறது.

18CHSUJLIVINGROOT1
 

சுமார் 3000 படிக்கட்டுகள் ஏறி இறங்கினால் நாங்கிரியாட் என்ற கிராமம் வரும். இங்குதான் இரட்டை அடுக்கு வேர்ப் பாலம் இருக்கிறது. வேறு எங்கும் காண முடியாத இந்த அதிசயம். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்று. நம் மலைவாழ் மக்களின் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது!

இங்கு வசிக்கும் மலையக மக்கள் 'காசி' என்னும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதிக மழையால் ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் ஏராளம் உண்டு. அவற்றைக் கடந்து ஷில்லாங், சிரபுஞ்சி போன்ற இடங்களுக்குப் பொருட்களை விற்க, வாங்க சிரமமாக இருந்திருக்கிறது. அந்தத் தேவையின் அடிப்படையில் உண்டானவைதான் வேர்ப் பாலம்.

அங்குள்ள ரப்பர் மரங்களின் வேர்கள் நீளமாகவும் வலிமையாகவும் இருப்பதை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஆற்றின் இரு பக்கங்களிலும் அந்த மரங்களை வளர்த்து, அவற்றின் வேர்களைப் பிணைக்கிறார்கள். அங்கு நெடிந்துயர்ந்த பாக்கு மரங்கள் நிறைய உண்டு. அவற்றைப் பிளந்து, நடுவில் இருக்கும் சதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதை ஆற்றின் குறுக்கே வைத்துவிடுகிறார்கள். ரப்பர் மரத்தின் வேர்களை இந்தப் பாக்கு மரங்களின் தண்டில் வைத்து, அடுத்த பகுதிக்குச் செல்லும் வரை கவனமாக வளர்க்கிறார்கள்.

18CHSUJLIVINGROOT3
 

இரண்டடி அகலத்துக்கு இந்தப் பாலத்தைக் கட்டுகிறார்கள். 15 வருடங்கள் வளர்த்த பிறகே, இந்தப் பாலத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். நடக்க வசதியாகப் பாலத்தின் நடுவில் தட்டையான கற்களையும் வைத்திருக்கிறார்கள். இரு பக்கங்களிலும் பிடித்துக்கொள்வதற்கு வசதியாக, வேர்களாலேயே கயிறுபோல் அமைத்திருக்கிறார்கள். இந்த வேர்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல வலிமை பெறுகின்றன. இது போன்ற சில வேர்ப் பாலங்கள் 500 ஆண்டுகளைக் கடந்தும் நல்ல நிலையில் இருக்கின்றன!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சில நாள்களில் 20 லட்சம் முறை பார்க்கப்பட்ட ஹாக்கிங்கின் பி.எச்டி. ஆய்வேடு

 

புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 1966-ம் ஆண்டு செய்த பி.எச்டி. ஆய்வேடு, இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்ட சில நாள்களில் சுமார் 20 லட்சம் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGRAHAM COPEKOGA Image captionஸ்டீஃபன் ஹாக்கிங்.

'விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு 133 பக்கம் கொண்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிடி ஹால் கல்லூரியில் தமது 24-வது வயதில் இந்த ஆய்வினைச் செய்தார் ஹாக்கிங்.

இதுவரை கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த இந்த ஆய்வேட்டினை, கடந்த திங்கள் கிழமை இலவசமாகப் படிக்கும் வகையில் தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.

செயலிழந்த இணைய தளம்

உடனே கேம்பிரிட்ஜ் தளத்தினை பெருமளவில் மொய்க்கத் தொடங்கினார்கள் இயற்பியல் ஆர்வலர்கள். அதிகம் பேர் இந்த ஆய்வேட்டினை ஒரே நேரத்தில் படிக்க வந்த காரணத்தால் கேம்பிரிட்ஜ் இணைய தளமே திணறி செயலிழக்கும் நிலைக்குப் போனது.

இந்த ஆய்வு இலவசமாக வெளியான சில நாள்களில் உலகம் முழுவதிலும் இருந்து 8 லட்சம் பேர் மொத்தம் 20 லட்சம் முறை இந்த ஆய்வேட்டை இணையத்தில் புரட்டிப் பார்த்துள்ளனர். இது தவிர, 5 லட்சம் பேர் இதைத் தரவிறக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்

"எங்கள் பல்கலைக்கழகத்தின் 'அப்பல்லோ தொகுப்பில்' உள்ள கட்டுரைகளிலேயே அதிகம் படிக்கப்பட்டது இந்த ஆய்வேடுதான்," என்று கூறியுள்ளார் இப்பல்கலைக்கழகத்தின் அறிவுசார் தகவல் தொடர்புத் துறைக்கான துணைத் தலைவர் டாக்டர் ஸ்மித்.

எந்த ஆய்வுத் தொகுப்பிலும் அதிகம் படிக்கப்பட்டது இந்த ஆய்வுதான் என்று கணிப்பதாகவும், இதைப் போன்ற எண்ணிக்கையில் ஆய்வேடு ஒன்று படிக்கப்பட்டதை எப்போதும் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, அதிகம் படிக்கப்பட்ட பி.எச்டி. ஆய்வேடுகள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள கட்டுரை, வெறும் 7,960 முறைதான் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலவசம் என அறிவிக்கப்படும் முன்பு இந்த ஆய்வேட்டைப் படிக்கவோ, ஸ்கேன் செய்துகொள்ளவோ 65 பவுண்டு பணம் செலுத்தவேண்டும். தற்போது ஹாக்கிங் தமது ஆய்வை படிப்பதை இலவசமாக்கியுள்ளதைப் போல கேம்பிரிட்ஜின் மற்ற முன்னாள் கல்வியாளர்களும் தங்கள் ஆய்வை இலவசமாகத் தருவதை ஊக்குவிக்க முடியும் என கேம்பிரிட்ஜ் நம்புகிறது.

  •  

யார் இந்த ஸ்டீபன் ஹாக்கிங்

1942 ஜனவரி 8-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். 1959ல் இயற்கை அறிவியல் படிக்க இவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜில் பட்டமேற்படிப்பு சேர்ந்தார்.

படிப்படியாக உடல் இயக்கத்தை முடக்கும் 'மோட்டார் நியூரோன் நோய்' எனப்படும் அரிய நோய் இவருக்கு இருப்பது 1963ல் கண்டுபிடிக்கப்பட்டது. அது முதல் படிப்படியாக இவரது உடல் இயக்கம் முடங்கிவந்தது. இப்போது ஏறத்தாழ இவரது மொத்த உடலும் முடங்கிப் போயுள்ளது.

1974-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள கருந்துளைகள் கதிரியக்கத்தை வெளியிடுவதைப் பற்றிய ஒரு கோட்பாட்டை வெளியிட்டார் இவர்.

1988ம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட 'ஏ பிரிஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்' (காலம் பற்றிய சுருக்கமான வரலாறு) என்ற நூல் 1 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

இவரது வாழ்க்கை 'எல்லாவற்றையும் பற்றிய கோட்பாடு' (த தியரி ஆஃப் எவரிதிங்) என்ற பெயரில் 2014ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

நடுக்கடலில் ஐந்து மாதங்கள்: ஒரு பழுதான படகு, இரண்டு பெண்கள்!

 

ஐந்து மாதங்களாக பசிபிக் கடலில் தனித்து விடப்பட்ட ஹவாய் பெண்கள் இருவரை அமெரிக்க கடற்படை மீட்டுள்ளது.

10_Ship.JPG

ஜெனிஃபர் அப்பல், டாஷா ஃபுயாவா என்ற இரண்டு பெண்களும் கடல் வழியாகப் பயணம் செய்து தாஹித்தி என்ற பகுதிக்குச் சென்றடையத் திட்டமிட்டனர். இரண்டு மாதங்களில் கரை சேர்ந்து விடலாம் என்று கணக்கிட்டு தமது உறவினர்களுக்கும் அதுபற்றி அறிவித்திருந்தனர்.

அதன்படி, கடந்த மே மாதம் மூன்றாம் திகதி ஹவாயில் இருந்து தமது வளர்ப்புப் பிராணிகளான இரண்டு நாய்களுடன் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் திட்டமிட்டதற்கு எதிராகவே அனைத்தும் நடந்தன.

புறப்பட்ட முதல் நாளே ஜெனிஃபரின் கைபேசி கைதவறிக் கடலில் விழுந்து மூழ்கியது.

மே மாதம் முப்பதாம் திகதி சீரற்ற காலநிலையால் கடல் நீர் புகுந்ததில், கப்பலின் என்ஜின் பழுதானது. கப்பலின் உச்சிக் கோபுரமும் சேதமடைந்தது. இதனால் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டது. வேறு வழியின்றி துடுப்பால் வலித்துப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அவர்களது படகின் என்ஜின் பழுதான கடல் பகுதி சுறா மீன்களுக்குப் பிரசித்தி பெற்றது. வீட்டுக்கே தேடி வந்த விருந்தாக சுறாக்கள் இவர்களது படகை அடிக்கடி தாக்கின. எனினும், தெய்வாதீனமாக அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

அபாய சமிக்ஞைகளை எழுப்பியும் அனுப்பியும் எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை.

தண்ணீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் இரண்டைக் கொண்டு சென்றிருந்தபோதும், அவையும் திடீரெனச் செயலிழந்தன.

அவர்கள் பயணம் செய்த படகில் சில பழுதுகள் இருந்தன. அவை பற்றித் தெரிந்தே அந்தப் படகை அவர்கள் வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். முன்கூட்டியே படகின் பிரச்சினை தெரிந்திருந்ததால், சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளைப் படகில் களஞ்சியப்படுத்தியிருந்தனர்.

குறிப்பிட்ட தினத்தில் அவர்கள் வந்து சேராததால் அவர்களது உறவினர்கள் கடற்படையில் புகாரளித்திருந்தனர். எனினும் கடற்படையின் தேடலிலும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான், ஜப்பானியக் கடற்பிராந்தியத்தில் சென்றுகொண்டிருந்த மீன்பிடிப் படகொன்று இவர்களின் படகைக் கண்டது. உடனடியாக இத்தகவல் அமெரிக்க கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. சட்டவிரோதிகளின் படகாக இருக்கக் கூடும் என்று விரைந்து சென்று பார்த்தபோதுதான், அவர்கள் ஐந்து மாதங்களாக நடுக்கடலில் காணாமல் போயிருந்தவர்கள் என்று கடற்படையினருக்குத் தெரியவந்தது.

மீட்கப்பட்டுள்ள இரண்டு பெண்களும், கடற்படைக் கப்பல் கரை சேர்ந்ததும் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

நுவரெலியாவில் கண்டுபிடிப்பு!

 

இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நுவரெலியா ஹாவாலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களாலேயே இந்தப் பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்து மக்களால் அதிக மருத்துவ தேவையுடைய பழமாகக் கருதப்படும் பெப்பினோ மெலன் (Pepino melon) என்ற பழமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைக்கப்போகும் மகா யோகம்; நுவரெலியாவில் கண்டுபிடிப்பு!

ஹெட்டி ஆராச்சி மற்றும் ஜயந்த பெரேரா ஆகிய இளைஞர்களால் இந்தப் பழம்குறித்து இணையதளங்களில் தேடல் மேற்கொண்டு இது பெப்பினோ பழம் என்றும் அதற்கு சர்வதேச அளவில் அதிக கேள்வி இருக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெப்பினோ பழமானது, பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல் மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, ஈக்வடார், பொலிவியா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளில் இந்தப் பழம் பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் ஏனைய வெளிநாடுகளில் இது குறைவாகவே உள்ளது. நியூசிலாந்து, துருக்கி, மொரிஷியஸ் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் இந்தப் பழங்களை உற்பத்தி செய்யவும் வர்த்தக நோக்கில் ஏற்றுமதி செய்யவும் பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Related image

இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் பழத்தில் விட்டமின் A, C, K, B மற்றும் புரதச்சத்துகள் என்பன நிறைந்து காணப்படுகின்றன.

இந்தப் பழத்திலுள்ள இரும்பு, செம்பு மற்றும் தாதுப்பொருட்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பிற்கு உதவுபவை. அதேபோல் கல்சியம் எலும்பு உறுதிக்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைவுக்கும் பயன்படுகின்றன.

Image result for pepINO MELON

மேலும் இதிலுள்ள டையூரிடிக் அமிலம் சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய வெளிநாடுகளில் இந்த பழத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இவாறான அதிகப் பெறுமதி வாய்ந்ததாக காணப்படுவதால்தான் இந்தப் பழத்துக்கு வெளி நாடுகளில் Super Fruits என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெப்பினோ மெலன் கண்டுபிடிக்கப்பட்டமையானது மிகப்பெரும் வரப்பிரசாதமான விடயம் சென்று சொல்லப்படுகிரது. சர்வதேச ரீதியில் வர்த்தக ஏற்றுமதிப் பழமாக இது இருப்பதனால் இலங்கையில் இந்தப் பழங்களுக்கான கேள்வி அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாஷிங்டன் சியாட்டிலில் வில்லியம்.எச்.கேட்ஸுக்கும் , மேரி மேக்ஸ்வெல் கேட்ஸுக்கும் மகனாக பிறந்தார்.இவருக்கு கிறிஸ்டி என்ற அக்காவும் லிஃப்பி என்ற தங்கையும் உள்ளனர்.இவரின் தந்தை ஒரு வழக்கறிஞர்.

தன் 13வது வயதில் லேக்ஸைடு பள்ளியில் தன் உயர்நிலைக் கல்விப் படிப்பை தொடங்கினார்.அப்போது தான் இவர் படிக்கும் பள்ளியில் கணினி வாங்க திட்டமிட்டனர்.கேட்ஸ் இயல்பிலேயே கணித ஆற்றல் உள்ளவர் எனவே கணிதத்துக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தன் நண்பன் பால் ஆலனுடன் சேர்ந்து கணினி கற்பதிலேயே செலவிட்டார். இருவரும் கணினிக்காக பேஸிஸ் கோடுகளை உருவாக்குவதில் ஆர்வமுடன் இருந்தர்.கேட்ஸ் அந்த கணினியில் முதன்முயலில் கோடிங் எழுதிய விளையாட்டு 'டிக்-டாக்-டோ'. அந்த கணினி 'பிடிபி 10' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கிக் கொணடிருந்தது , அதில் உள்ள சில குறைகளை கேட்ஸூம் அவரது நண்பர்களும் சுட்டிக்காட்ட அவர்களை பகுதி நேரமாக 'பஃக் பிக்ஸிங்' எனப்படும் குறை நிவர்த்தி வேலைக்காக 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் சேர்த்துக் கொண்டது. அதற்கு சம்பளமாக அங்குள்ள கணினிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.கேட்ஸ் அங்கு ஃபோர்ட்ரான்,லிப்ஸ் மற்றும் கணினி மொழிகள் பலவற்றைக் கற்றுக்கொண்டார்.1970 க்குப் பின் அந்நிறுவனம் பல காரணங்களால் மூடப்பட , 'இன்பர்மேஷன் சயின்ஸ் இன்கார்ப்பரேட்டர்' என்ற நிறுவனத்தில் 'கோபால்' ப்ரோக்கிராம் எழுதுவதற்காக கேட்ஸூம் அவர் நண்பர்களும் பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர்.அதற்காக அவர்களுக்கு கணினி பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் மேலும் பல சலுகைகளும் அளிக்கப்பட்டது.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர்வதற்கான எஸ்ஏடி(sat) தேர்வில் 1600 க்கு 1590 மதிப்பெண்கள் பெற்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் பட்டதாரி நிலை கணினி அறிவியல் பயின்றார்.கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தன் பள்ளி நண்பர் பால் ஆலனுடன் ஃஹனிவெல் நிறுவனத்தில் 1974 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.அந்த ஆண்டே 'எம்ஐஇடி ஆல்டெய்ர் 8800' வெளியாயிற்று. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடிவெடுத்த கேட்ஸ் மற்றும் ஆலன் தம் சொந்த சாஃப்ட்டுவேர் நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்தனர், எனவே கல்லூரியில் நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு எம்ஐஇடி நிறுவனத்தை நாடினர்.அதாவது தாங்கள் ஒரு அடிப்படை இயங்குதளத்தை வடிவமைத்துக் கொண்டிருப்பதாகவும் அதனை ஆல்டெய்ர் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட விரும்புவதாகவும் தெரிவித்தனர். அதன் பின் அந்நிறுவனத்துடன் இந்த திட்டம் ஒப்பந்தமானது. இதன் படி 'மைக்ரோசாஃப்ட்' என்ற பெயருடன் ஆல்டெய்ர் பேசிக் வெளிவந்தது. அதுவும் ஹிட்டாகவே நவம்பர் 26 1976 அன்று 'ஸ்டேட் ஆஃப் நியூமெக்ஸிகோவில்' மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர்.1976 ன் கடைசியில் எம்ஐஇடி நிறுவனத்திடம் இருந்து பிரிந்து தனித்தியங்கும் நிறுவனமாக உறுவெடுத்தது மைக்ரோசாஃப்ட்.அதன் பின் பல சாஃப்ட்வேர்களையும் உறுவாக்கயது.

1985ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் விண்டோஸின் முதல் பதிப்பு வெளியானது. அதன் பின் கேட்ஸூக்கு ஏறுமுகம் தான்.ஆனால் கேட்ஸ் அதன் பின் தன் கல்லூரி படிப்பை தொடரவே இல்லை.

இன்றும் பகுதி நேரமாக மைக்ரோசாஃப்டில் டெக்னிக்கல் அட்வைசராகவும், கேட்ஸ் அன்ட மெலிண்டா பவுண்டேஷனில் முழுநேரமாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வாழ்வில் சரியான தருணங்களில் சரியான முடிவெடுக்க வேண்டும் என்பதை இவர் வாழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இனி படிக்கவில்லையே பெற்றோர்கள் திட்டினால் "பில் கேட்ஸூம் காலேஜ் டிராப் அவுட்தான்" எனக் கூறி எஸ்கேப் ஆக முடியாது.

உலக பணக்காரர்கள் வரிசையில் 17 ஆண்டுகளாக முதல் இடம் வகிக்கும் பில் கேட்ஸின் 62வது பிறந்தநாள் இன்று.இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தன் சொத்தில் பெருமளவு தொகையை சமூக நலனுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிட வேண்டும் என்று கூறுபவர்.கூறுவது மட்டுமல்லாது 'பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன்' என்ற தனது சொந்த சேரிட்டி மூலமாக 29.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இல்லாதோர்க்கு உதவும் விதமாக தனது பங்களிப்பை செலுத்தினார்.

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Brille und Text
  • தொடங்கியவர்

ஓவியா செய்த மின்சார பூவே டப்ஸ்மாஷ் !

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen

  • தொடங்கியவர்
எல்லாத்துக்கும் இந்த 'ஈஸ்ட்மென்'தான்யா காரணம்...
 
 
இன்று நாம் செல்ஃபி வாழ்க்கை வாழ்வதற்கும், போகும் இடத்திலெல்லாம் புகைப்படம்  எடுத்துத் தள்ளுவதற்கும்,  எப்போதோ வரும் கலைப்படங்களையும், எப்போதுமே வரும் வணிக  படங்களையும் தயாரிப்பதற்கும், கைபேசி  முதல் கண் லென்ஸ் கேமரா வரை  புகைப்படக்கலையில்  ஏற்பட்டிருக்கும்  அனைத்து வளர்ச்சிக்கும் இவர்தான் முக்கிய காரணம்.  மொத்தத்தில் 'எல்லாத்துக்கும் இந்த பரணி பயதாங்க காரணம்" ங்குறமாதிரி  புகைப்படம்  மற்றும் திரைப்பட துறையில் ஏற்பட்ட எல்லா வளர்ச்சிக்கும் இந்த ஜார்ஜ் ஈஸ்ட்மென்தான்  முக்கிய காரணம். 
 
 
 
1.jpg
 
 
'ஈஸ்ட்மென் கோடாக்' என்ற ஒளிபடச்சுருள் நிறுவனத்தின் நிறுவனரான   ஜார்ஜ் ஈஸ்ட்மென்  ஃபிலிம் மூலம் புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். அதுவரை காகித  படச்சுருள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த  புகைப்படக்கலை அன்றுமுதல்  சாமானியர்களின் கைகளுக்கும் வந்தது.  
 
 
2.jpg
 
 
1914ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தான்   வண்ணப்புகைப்படத்திற்கான செயல்முறையை  தான் கண்டுபிடித்துவிட்டதை அவர் அறிவித்தார், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒட்டுமொத்த  ஒளிப்பட கலையுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தது. அதற்குமுன் புகைப்பட கலையில்  மாற்றங்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இது ஒரு புரட்சியையே செய்தது. தன்  வாழ்நாளில் 100 மில்லியன் டாலருக்கும் மேல் உதவி செய்த இவர் 1932, மார்ச் 14ல் "என் வேலை  முடிந்தது, காத்திருப்பானேன்? (my work is done. why wait?)" என எழுதிவைத்துவிட்டு தற்கொலை  செய்துகொண்டார். 1954ல் இவரின் 100வது பிறந்தநாளில் இவரின் உருவம் பொறித்த அஞ்சல்  தலையை அமெரிக்க அஞ்சல்துறை  வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 
  • தொடங்கியவர்
‘நல்லதை மட்டும் நெஞ்சத்தில் உட்புகுத்துக’
 

image_c65cb95852.jpgபிரபஞ்சம் மிகப்பெரியது; வலியது. ஆனால், அது ஆன்மாவுடன் நெருங்கிய தொடர்புபட்டது.  

எமது சிந்தனைகள், நேரிய வழியில் முரண்பாடுகள் இன்றி அமைந்தால், இந்தப் பிரபஞ்சமும் எமக்கு இயைபாக ஒன்றித்து, எங்கள் எண்ணங்களுக்கு வலுவூட்டும்.  

வெறும் காற்றையும் சூரிய ஒளியையும் மட்டும் உட்கொண்டு, காட்டில் வாசம் செய்யும் சித்தர்களை ஆதரிப்பவர் யார்? 

பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், நிலம் எல்லாமே இவர்களைப் போஷிக்கின்றன. இவர்கள் உணவைத்தேடி அலைவதுமில்லை. ஆனால், இப்படி எல்லாம் எம்மால் வாழமுடியாது. 

எமது எண்ணங்களைத் தூய்மையுடன் வைத்திருந்தால், இந்த உலகமும் பிரபஞ்சமும் அதை ஏற்று, எங்களை மிக வலிமை படைத்த மாமனிதர்களாக்கும். இந்தப் பிரபஞ்சத்தக்கு பூச்சியும் ஒன்று மனிதனும் ஒன்றுதான். இந்த உண்மையை உணர்க! நல்லதை மட்டும் நெஞ்சத்தில் உட்புகுத்துக. அதுபோதும்.     

  • தொடங்கியவர்

கடற்கரையில் நடைபயின்ற ஒக்டோபஸ்கள்! (காணொளி)

 

 

வேல்ஸ் கடற்கரையில் இருபதுக்கும் மேற்பட்ட ‘ஒக்டோபஸ்’கள் நடை பயின்ற காட்சி அப்பகுதிவாசிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

 

இந்த ஒக்டோபஸ்கள் நேற்றிரவு கடற்கரையில் இருந்து கடல் நோக்கிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். மேலும், இரவு நேரமாகையால் கண்ணுக்குத் தெரிந்த ஒக்டோபஸ்களை கடலில் விட்டுக் காப்பாற்றியுள்ளனர்.

எனினும், இன்று காலை அதே கடற்கரையோரத்தில் பல ஒக்டோபஸ்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபஸ்கள் ஏன், எப்படி கரைக்கு வந்தன என்பது இன்னும் மர்மமாகவே இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

புதுமை உலகம்: நோயாளியைக் கண்காணிக்கும் பேண்டேஜ்!

bandage

காயம் ஏற்பட்டால் பேண்டேஜைச் சுற்றிக்கொள்வோமே, அந்தக் காட்டன் துணி நோயாளியைக் கண்காணித்து அலர்ட் கொடுத்தால் எப்படியிருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? பிரிட்டனில் உள்ள ஸ்வான்ஸீ பல்கலைக்கழகத்தில் உள்ள லைஃப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இதற்காக புதுமையான பேண்டேஜ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன் பெயர் 5ஜி ஸ்மார்ட் பேண்டேஜ். இந்த பேண்டேஜ் என்ன செய்யும்?

நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஃபாலோ செய்யும் இந்த பேண்டேஜ், குணமாகும் தன்மையையும் துல்லியமாகக் கூறிவிடுமாம். தகவல் பரிமாற்றத்துக்காக இந்த பேண்டேஜில் நானோ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வயர்லெஸ் டெக்னாலஜி முறையில் தகவல்களை பேண்டேஜ் பரிமாற்றம் செய்கிறது.

தற்போது சோதனை முறையில் உள்ள இந்த ஸ்மார்ட் பேண்டேஜை வடிவமைப்பு வசதி உள்ளிட்ட பலவிதங்களில் இன்னும் 6 மாதங்களுக்கு பரிசோதிக்கவிருக்கிறார்கள். இதற்காக 130 கோடி டாலர் செலவில் ஆய்வையும் முடுக்கிவிட்டுள்ளது இந்தப் பல்கலைக்கழகம். இந்த சோதனை மட்டும் வெற்றிபெற்றால், ஸ்மார்ட் 5ஜி பேண்டேஜ் மூலமாக நோயாளி குறித்த தகவல்களைச் சுலபமாகக் கண்டறிமுடியும். மேலும், பரிசோதனைகள் தேவையா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும் என்று பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் புளங்காகிதம் அடைகிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மெக்சிகோ: இறந்தவர்களுக்காக ஒர் எலும்புக்கூடு பேரணி (புகைப்படத் தொகுப்பு)

மெக்சிகோவில் இறந்தவர்களின் திருநாளை முன்னிட்டு எலும்புக்கூடுகளைப் போன்று உடையணிந்து மக்கள் அணிவகுத்து ஊர்வலமாக செல்கின்றார்கள்.

 

மெக்சிகோவில் இறந்தவர்களின் திருநாளை முன்னிட்டு எலும்புக்கூடுகளைப் போன்று உடையணிந்து மக்கள் அணிவகுத்து ஊர்வலமாக செல்கின்றார்கள்.

அணிவகுப்பில் எலும்புக்கூடு அலங்காரத்துடன் இறந்தவர்களின் நினைவாக, மலர்தோட்டத்தின் மத்தியில் பூக்கள் அணிந்து செல்லும் ஒரு பெண்

இந்த அணிவகுப்பு நடைபெறும் நாளன்று அலங்கார நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாம்!

இந்த அணிவகுப்பு நடைபெறும் நாளன்று அலங்கார நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாம்

 

மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்கின்றனர்

மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்கின்றனர்

கடந்த ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் திரைப்பட்த்தினால் இந்த அணிவகுப்பு பிரபலமடைந்தது

கடந்த ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் திரைப்பட்த்தினால் இந்த அணிவகுப்பு பிரபலமடைந்தது

இந்த பேரணியில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.

இந்த பேரணியில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.

கத்ரினா பரேட் என்றும் அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு மக்கள் மனதை கவர்ந்தது.

கத்ரினா பரேட் என்றும் அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு மக்கள் மனதை கவர்ந்தது.

அணிவகுப்பில் கலந்துக்கொள்ள வெண்ணிற உடையில் அலங்காரம் செய்திருக்கும் பெண்

அணிவகுப்பில் கலந்துக்கொள்ள வெண்ணிற உடையில் அலங்காரம் செய்திருக்கும் பெண்

தாடியுடன் கூடிய எலும்புக்கூடு அலங்காரம்.

தாடியுடன் கூடிய எலும்புக்கூடு அலங்காரம்

http://www.bbc.com/

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 29

1422: பிரான்ஸில் 7 ஆம் சார்ள்ஸ், மன்னராக முடிசூடினார்.

1859: மொராக்கோவுக்கு எதிராக ஸ்பெய்ன் யுத்தப் பிரகடனம்.

1863: 18 நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அமைப்பதற்கு இணங்கின.

1922: இத்தாலிய மன்னர் 3 ஆம் விக்டர் இமானுவல், பெனிட்டோ முஸோலினியை பிரதமராக நியமித்தார்.

1923: ஒட்டோமான் இராஜ்ஜியம் கலைக்கப்பட்டபின் துருக்கி குடியரசாகியது.

1941: லிதுவேனியாவில் ஜேர்மன் படைகளால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1950 : அமரர் கல்கியின் வரலாற்று புதீனமான “பொன்னியின் செல்வன்” கல்கி இதழில் தொடராக வெளியான தினம்

1960: பின்னாளில், முஹம்மட் அலி என அறியப்பட்ட, கஸியஸ் கிளே தனது முதலாவது தொழிற்சார் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றார்.

1961: ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து சிரியா வெளியேறியது.

1964: தான்கானீய்காவும் ஸான்ஸிபாரும் இணைந்து தான்ஸானியா குடியரசு உருவாக்கப்பட்டது.

1969: கணினிகளுக்கிடையிலான முதலாவது இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1998: தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி ஆட்சிக்காலம் குறித்து  ஆராய நியமிக்கப்பட்ட 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' அறிக்கை வெளியிடப்பட்டது.

1998: ஜோன் கிளென் என்பவர் 77 ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.

1999: இந்தியாவின் ஒரிசாவில் பாரிய சூறாவளி தாக்கியது. 10 ஆயிரம் பேர் பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

2002: வியட்நாமின் ஹோசிமின் சிட்டி கடைத்தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 இற்கும் அதிகமானோர் உயரிழந்தனர்.

2004: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு ஒஸாமா பின்லேடன் நேரடி பொறுப்பேற்பதாகக் கூறும் வீடியோவை அல் ஜெஸீரா  தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

2004: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரோமில் சந்தித்து ஐரோப்பிய அரசியலமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2005: இந்தியாவின் டெல்லியில் நடந்த குண்டுத்தாக்குதலில் 60 பேர் பலி

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

பருமன் மிகுந்தவர்களுக்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல்

பருமன் மிகுந்­த­வர்­க­ளுக்­காக விசே­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட உல்­லாச ஹோட்­ட­லொன்று பஹா­மஸில் உள்­ளது.
இந்த ஹோட்­டலின் அனைத்து அம்­சங்­களும் உடற்­ப­ருமன் அதி­க­மா­ன­வர்­களை கருத்­திற்­கொண்டு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

beach-3.jpg

மிக அக­ல­மான கத­வுகள், அதிக எடையை தாங்­கக்­கூ­டிய அக­ல­மான கதி­ரைகள், சாய்­வுக்­க­தி­ரைகள் இந்த ஹோட்­டலில் உள்­ளன.

beach.jpg
கடற்­க­ரையில் பரு­ம­னான நபர் ஒருவர் கதி­ரை­யொன்­றி­லி­ருந்து விழு­வதை அவதானித்த ஜேம்ஸ் கிங் என்பவர் இந்த ஹோட்டலை ஸ்தாபித்தாராம்.

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.