Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியான நாள் (அக். 31- 1931)

காளிதாஸ் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

 
 
தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியான நாள் (அக். 31- 1931)
 
காளிதாஸ் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1863- நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் 'வைக்காட்டொ' என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது. * 1864– நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36-வது மாநிலமாக இணைந்தது. * 1876- இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 2 லட்சம் பேர் வரை இறந்தனர். * 1913 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை 'லிங்கன்' நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. * 1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

* 1931- தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. * 1941– இரண்டாம் உலகப் போர்: ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். * 1941– இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் கொல்லப்பட்டனர். * 1954- அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது. * 1956- ஐக்கிய பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், சூயஸ் கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின. * 1961- ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது. * 1963- இண்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் விழா ஒன்றின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.

* 1968– வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1ல் இருந்து நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார். * 1969 - வால் மார்ட் தொடங்கப்பட்டது. * 1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு ராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர். * 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். * 1994 - அமெரிக்க விமானம் ஒன்று கடும் பனி காரணமாக இண்டியானாவில் விபத்துக்குள்ளாகியதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

* 1996- விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்லப்பட்டனர். * 1999 - எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் கொல்லப்பட்டனர். * 2000 - சிங்கப்பூர் போயிங் 747- 400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் கொல்லப்பட்டனர். * 2000 - வடக்கு அங்கோலாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். * 2003 - 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.

http://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘பாசம் பொதுவானது’
 

image_d038645c88.jpgபிள்ளைகளிடம் ஈடிணையில்லாப் பாசம் காட்டும் தாயின் தாயன்புக்கு நிகரானதே, பிள்ளைகள் மீதான தந்தையின் பாசமும். எந்த ஓர் ஆணும், எல்லாப் பிள்ளைகளையும் அன்பு மீதூர அரவணைக்கும்போது, அந்த ஆணும் தாய் போலாகின்றான்.  

தற்காலத்தில், ஆண்களில் பலரும் குழந்தைப் பராமரிப்பில் மேலான பாசத்தை ஊட்டியே வளர்க்கின்றனர். 

பாசம் பொதுவானது; இன்று பிள்ளைகளை வளர்க்கும் விடயத்தில் ஆண்களின் பங்களிப்பு மேலதிகமாகத் தேவைப்படுகின்றது. இணைந்து வாழும் கூட்டுக் குடும்ப முறைமை இயலாதுள்ளது. சமூக அமைப்பே மாறிவிட்டது.  

எனவே கணவன், மனைவி இணைந்தே பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஆண்பாலாரின் பாசவலு அதிகரிக்கின்றது. கணவன், மனைவி உறவும் இறுக்கமடைகின்றது. 

  • தொடங்கியவர்

‘வயது தடையில்லை!’ - சாதித்த பெண்ணின் கதை #FeelGoodStory

 
 
 

40 வயதில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு, 50 வயதுக்குள் அந்தத் துறையில் கிடுகிடுவென முன்னேறி, ஊர் உலகத்தையே திரும்பிப் பார்க்கவைக்க ஒருவரால் முடியுமா? முடியும். அதற்கு உதாரணம் ஜூலியா சைல்டு (Julia Child). தேர்ந்தெடுத்த துறையில் கட்டுக்கடங்காத ஆர்வம், முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம், விடா முயற்சி இவை இருந்தால் வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையில்லை என்பதை ஜூலியா சைல்டின் கதை நமக்கு உரக்கச் சொல்கிறது. தனக்கு எது பிடிக்கும், தனக்கு ஏற்ற துறை எது என்பது தெரியாமல்தான் பலரும் தங்களுக்குப் பொருத்தமே இல்லாத துறையில் கால் பதித்துவிட்டு, அதிலிருந்து மீள முடியாமல் அல்லாடுகிறார்கள். நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பொருத்தமான வாய்ப்பு என்கிற கதவு திறக்கப்பட்டிருக்கும். அதைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அதன் வழியே பயணத்தைத் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம். அதைத்தான் தன் வாழ்க்கையில் செய்தார் ஜூலியா சைல்டு. 

உன்னை அறிந்தால்

 

1912, ஆகஸ்ட் 15. அமெரிக்கா, கலிஃபோர்னியவிலிருக்கும் பாஸாடெனா-வில் (Pasadena) பிறந்தார் ஜூலியா சைல்டு. அப்பா ஜான் மெக்வில்லியம், அம்மா ஜூலியா கரோலின்.  ஜூலியாவுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. அந்த வீட்டில் ஜூலியா உள்பட எல்லோருமே அசாதாரணமான உயரத்தோடு இருந்தார்கள். பண்ணை, அழகான வீடு, சொல்கிற வேலையைச் செய்ய வேலையாட்கள், சமையல்காரர்கள்... என ஒரு பெரிய பட்டாளமே அந்த வீட்டில் இருந்தது. 1930-ம் ஆண்டு மாசாசூசெட்ஸில் இருக்கும் ஸ்மித் கல்லூரியில் வரலாற்றுப் பாடப் பிரிவில் சேர்ந்தார் ஜூலியா. பட்டம் பெற்றதும் நியூயார்க்கில் இருந்த ஒரு ஃபர்னிச்சர் கம்பெனியில் காப்பிரைட்டர் வேலைக்குச் சேர்ந்தார். படிப்பு, வீடு, நண்பர்கள், உறவினர்கள், வேலை... என வழக்கமான சூழ்நிலையில் உப்புச்சப்பில்லாமல் நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை. அப்போதுதான் இரண்டாம் உலகப்போர் மூண்டது.

ஜூலியா - கதை

போர்க் காலங்களில் செயல்படும் அமெரிக்காவின் `ஆபிஸ் ஆஃப் ஸ்ட்ரேட்டஜிக் சர்வீசஸ்’ (ஓ.எஸ்.எஸ்) என்கிற புலனாய்வு ஏஜென்சியில் வேலைக்குச் சேர்ந்தார் ஜூலியா. அங்கே ஓர் உளவாளியாக வேலை பார்த்தார் என்று சொல்லப்படுகிறது. ராணுவ உடையில் வலம் வந்தார். பல வெளிநாடுகளுக்கு வேலையின் பொருட்டு பயணம் செய்தார். ஆனாலும், அங்கே தான் ஒரு `ஃபைல் கிளார்க்’ என்றுதான் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார் ஜூலியா. ஆனால், அந்த நிறுவனத்தில் சேர்ந்ததும், அவர் மேற்கொண்ட ஒரு வெளிநாட்டுப் பயணமும்தான் அவர் வாழ்க்கைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

ஃபிரெஞ்ச் உணவுகள் - ஜூலியாவின் கதை

அலுவலக வேலையாக சீனாவில் இருக்கும் குன்மிங்குக்குப் போனார் ஜூலியா சைல்டு. அங்கே அவருக்கு அறிமுகமானார் பால் குஷிங் சைல்டு (Paul Cushing Child). அவரும் ஆபிஸ் ஆஃப் ஸ்ட்ரேட்டஜிக் சர்வீசஸில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பாஸ்டனின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மேப்களைத் தயாரிப்பதுதான் முக்கியமான பணி. இருவரும் ஒன்றாக வேலை பார்க்கவேண்டிய சூழல்... அதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கம், மெள்ள மெள்ளக் காதலாகக் கனிந்துகொண்டிருந்தது. ஜூலியாவுக்கு பால் பலவிதங்களில் புதுமையானவராக இருந்தார். அவருடைய மெல்லிய உணர்வுகளும், ரசனையும் ஜூலியாவைத் திகைக்கவைத்தன. முக்கியமாக பால், உணவுகளின் காதலனாக இருந்தார். சிறந்த உணவகங்களைத் தேடித் தேடிப் போனார். அந்தந்த இடங்களுக்கே உரிய ஸ்பெஷல் உணவுகளைக் கண்டுபிடித்து ரசித்து, ருசித்துச் சாப்பிட்டார். பால்-ன் உணவு வேட்கை, ஜூலியாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் புரியாத ஒன்று அவருக்குப் புரிந்தது. `உணவில் பசி, ருசியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டால், சாப்பிடுபவர்களை அதைக்கொண்டே வசியப்படுத்திவிடலாம். நான்கு பேருக்கு நல்ல சமையலைக் கொண்டு சேர்க்கலாம்.’

பால், ஃபிரெஞ்ச் உணவுகளின் பிரியர். ஒரு சமையலறை எப்படி இருக்க வேண்டும், எப்படி சமைக்க வேண்டும் என்கிற ஆரம்பப் பாடங்களை ஜூலியாவுக்கு அறிமுகப்படுத்தினார் பால். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஜூலியா கலிஃபோர்னியாவில் இருந்த ஒரு சமையல் பள்ளியில் முறையாகச் சமையற்கலையைக் கற்றுக்கொண்டார். 1946-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். வாஷிங்டனுக்குத் திரும்பினார்கள். அங்கே வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்பட்டார் பால். புதுப் பதவி வந்த கையோடு அவரை பாரிஸுக்கு அனுப்பிவைத்தார்கள். 

ஃபிரெஞ்ச் உணவுகள் - கதை

வேலை, வேலை என்று போய்விடுகிறார் கணவர். பெரும்பாலான நாள்கள் உடன் இருப்பதில்லை; தனிமை. நேரம் நிறைய இருந்தது. `என்ன செய்யலாம்?’ ஜூலியா வெகு மும்முரமாக ஃபிரெஞ்ச் மொழியைக் கற்றுக்கொண்டார்... கூடவே ஃபிரெஞ்ச் சமையல் முறையையும். `லே கார்டன் ப்ளியூ’ (Le Cordon Bleu) உலகின் மிகப் பிரபலமான பள்ளி. அங்கே போய்ச் சேர்ந்தார். ஃபிரெஞ்ச் சமையல்முறையின் அடி முதல் ஆழம் வரை கற்றார். ஆனால், அவர் தேடலுக்கு அது போதுமானதாக இல்லை. பல பிரபல சமையல்கலை நிபுணர்களிடம் போய் ஃபிரெஞ்ச் சமையலைக் கற்றுக்கொண்டார். அவர் எண்ணம் முழுக்க சமையலிலேயே இருந்தது. தொடர்ந்து, பெண்களுக்கான `லே செர்க்கிள் டே கோர்மெட்ஸ்’ (Le Cercle des Gourmettes) என்ற கிளப்பில் உறுப்பினரானார். வார இறுதி நாள்களில் பாரிஸைச் சேர்ந்த பெண்கள் கூடுவார்கள். விதவிதமாக சமைத்துச் சாப்பிடுவார்கள். அங்கே இரண்டு பேர் ஜூலியாவுக்கு அறிமுகமானார்கள். அவர்களின் உதவியோடு ஒரு சமையல் பள்ளியை ஆரம்பித்தார். ஏற்கெனவே அவர்கள் அமெரிக்கப் பெண்களுக்கான ஒரு சமையல் குறிப்புப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு ஜூலியாவும் சேர்ந்துகொண்டார். புத்தக வேலை ஜரூராக நடந்தது. அதுவரை தான் கற்ற அத்தனை சமையல் நுணுக்கங்களையும் புத்தகத்தில் கொண்டு வந்தார் ஜூலியா. அவர் அதில் அவர் கொடுத்திருந்த சமையல் விளக்கங்களும், அற்புதமான புகைப்படங்களும் அந்தப் புத்தகத்தை மேலும் மெருகேற்றின. 

ஃபிரெஞ்ச் உணவுகள் - கதை

1961-ம் ஆண்டு. பால் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதே ஆண்டு ஜூலியும் அவருடைய பாரிஸ் நண்பர்கள் இருவரும் இணைந்து எழுதிய `மாஸ்டரிங் தி ஆர்ட் ஆஃப் ஃபிரெஞ்ச் குக்கிங்’ (Mastering the Art of French Cooking) நூல் வெளியானது. புத்தகம் பயங்கர ஹிட். ஒரு சமையல் புத்தகம் இந்த அளவுக்கு விற்பனையில் சக்கைபோடு போடுமா? என்று வியந்து போனது பதிப்புத் துறை. அதற்குப் பிறகு ஜூலியா சைல்டுக்கு ஏறுமுகம்தான். பல பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் சமையல் தொடர்பான கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி வாய்ப்பு. `தி ஃபிரெஞ்ச் செஃப்’ என்ற அந்தத் தொலைக்காட்சித் தொடரில் அவர் செய்துகாட்டிய ரெசிப்பிகளுக்கு அமெரிக்கப் பெண்களில் பல லட்சம் பேர் ரசிகைகளானார்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல், நம் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரணப் பெண்ணைப்போல அவர் இருந்ததும், அவருடைய நகைச்சுவை உணர்வும், ரெசிப்பிகளைத் தெள்ளத் தெளிவாகச் செய்து காட்டியதும் ஏராளமானவர்களைக் கவர்ந்தது. `பிரபல சமையல்கலை நிபுணர்’ என்கிற பெயரை ஜூலியா எடுத்திருந்தபோது அவருக்கு வயது ஐம்பது. சரியாக 40-வது வயதில் சமையல்கலைக்குள் நுழைந்து, 50 வயதுக்குள் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டார். பிறகு அமெரிக்காவின் பிரபல பீபாடி விருது, எம்மி அவார்டெல்லாம் வாங்கிக் குவித்தார் ஜூலியா. 

 

தொடர்ந்து எழுதினார் ஜூலியா. பல விருதுகள் பெற்றார். அவருடைய பல ஃபிரெஞ்ச் சமையல் ரெசிப்பிகள், குறிப்புகள், விளக்கங்கள் அடங்கிய அவருடைய `குக் புக்’ (Cook Book) சமையல்கலையில் முக்கியமான ஓர் ஆவணமாகவே கருதப்படுகிறது. இந்த வெற்றிக்கெல்லாம் அடிப்படை, `நல்ல சமையலை நான்கு பேருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்கிற ஜூலியாவின் நல்லமனதும் லட்சியமும்தான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
நவம்பர் – 01

 

1520 : தென் அமெ­ரிக்­காவில் மகலன் நீரிணை மக­லனால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1592 : கொரியக் கடற்­ப­டை­யினர் பூசான் என்ற இடத்தில் மிகப்­பெரும் ஜப்­பா­னியப் படை­களைத் தோற்­க­டித்­தனர்.

shirani-bandranayke-300x250.jpg1755 : போர்த்­துக்கல், லிஸ்பன் நகரில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி கார­ண­மாக 60,000 – 90,000 பேர் வரை கொல்­லப்­பட்­டனர்.

1805 : ஆஸ்­தி­ரி­யாவை நெப்­போ­லியன் முற்­று­கை­யிட்டான்.

1814 : நெப்­போ­லி­யன் தோல்­வி­ய­டைந்­ததைத் தொடர்ந்து ஐரோப்­பாவின் எல்­லை­களை மீள­வ­ரையும் பொருட்டு வியென்னா காங்­கிரஸ் கூடி­யது.

1876 : நியூ­ஸி­லாந்தின் மாகாண சபைகள் கலைக்­கப்­பட்­டன.

1894 : ரஷ்­யாவின் மூன்றாம் அலெக்­சாண்டர் இறந்­ததை அடுத்து இரண்டாம் நிக்­கலாஸ் மன்­ன­னானார்.

1904 : இலங்­கையில் அநு­ரா­த­புரம் வரை­யான வட பிராந்­திய ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1911 : இத்­தா­லிக்கும் துருக்­கிக்கும் இடையில் இடம்­பெற்ற போரில் முதற்­த­ட­வை­யாக விமா­னத்தில் இருந்து குண்­டுகள் வீசப்­பட்­டன.

1914 : முதலாம் உலகப் போர்: சிலியில் ஜேர்­ம­னியக் கடற்­ப­டை­யுடன் நடந்த மோதலில் பிரித்­தா­னியக் கடற்­ப­டை­யினர் முதன் முதலில் தோல்­வி­ய­டைந்­தனர்.

1922 : ஒட்­டோமான் பேர­ரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெஹ்மட் பத­வி­யி­ழந்தார்.

1928 : துருக்­கிய மொழி சீர்­தி­ருத்தம் ஏற்­பட்­டது. அரபு எழுத்­துக்கள் புதிய துருக்­கிய எழுத்­துக்­க­ளாக மாற்­றப்­பட்­டன.

JR.jpg1948 : சீனாவின் மஞ்­சூ­ரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்­கி­யதில் 6,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1950 : புவேர்ட்டோ ரிக்கோ தேசி­ய­வாதிகள் அமெ­ரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

1951 : அமெ­ரிக்­காவின் நெவா­டாவில் அணு­குண்டு வெடிப்புச் சோத­னையில் அமெ­ரிக்கப் படைகள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

1954 : புதுச்­சேரி, பிரெஞ்சு ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்று இந்­தி­யா­வுடன் இணைந்­தது.

1956 : நிசாம் என அழைக்­கப்­பட்ட பகுதி ஆந்­திரப் பிர­தேசம் என்ற மாநி­ல­மாக்­கப்பட்டது.

195 6: இந்­தி­யாவில் மைசூர், கேரளா, மதராஸ் ஆகிய மாநி­லங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.

1956 : இந்­தி­யாவில் கன்­னி­யா­கு­மரி பிர­தேசம் கேரள மாநி­லத்தில் இருந்து பிரிந்து தமிழ்­நாடு மாநி­லத்­துடன் புதிய மாவட்­ட­மாக இணைந்­தது.

1957 : அக்­கா­லத்தில் உலகின் மிக நீள­மான தொங்கு பால­மான மக்­கினா பாலம் மிச்­சிகன் மாநி­லத்தில் அமைக்­கப்­பட்­டது.

1970 : பிரான்ஸில் நடன மாளிகை ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1973 : மைசூர் மாநிலம் கர்­நா­டகா என பெயர் மாற்­றப்­பட்­டது.

1981 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து அன்­டி­குவா பர்­புடா விடு­தலை பெற்­றது.

1982 : ஜப்­பானின் ஹொண்டா நிறு­வனம் அமெ­ரிக்­காவில் வாகனத் தயா­ரிப்பை ஆரம்­பித்த முத­லா­வது ஆசிய நிறு­வ­ன­மா­கி­யது.

1993 : ஐரோப்­பிய ஒன்­றியம் அமைப்­ப­தற்­கான மாஸ்ட்ரிக்ட் ஒப்­பந்தம் நடை­மு­றைக்கு வந்­தது.

1996 : இலங்­கையின் முத­லா­வது நிறைவேற்று அதி­கார ஜனாதி­பதி­யான ஜே.ஆர்.ஜய­வர்­தன கால­மானார்.

1998 : மனித உரி­மை­க­ளுக்­கான ஐரோப்­பிய நீதி­மன்றம் அமைக்­கப்­பட்­டது.

2006 : இந்­தி­யாவின் பெங்­களூர் நகரின் பெயர் பெங்­க­ளூரு என மாற்­றப்­பட்­டது.

2012 : பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஐ.ம.சு.கூட்டமைப்பின் 117 எம்.பிகள் கையெழுத்திட்ட குற்றவியல் பிரேரணை, சபாநாயகர் சமல் ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டது.

2012 : சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் எரிபொருள் தாங்கி வாகனமொன்று வெடித்ததால் 25 பேர் உயிரிழந்ததுடன் 135 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்
குறுந்தகவலில் பெண்கள் பொய் கூறுவதை கண்டுபிடிக்கலாமா?
 

image_ec2eed99fe.jpg

அலைபேசிகளில் குறுந்தகவல்களின் ஊடாக பெண்களே அதிகம் பொய் கூறுவதாக ஆய்வுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொய் கூறும்போது, அதிகூடிய வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும், அதுவே பொய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவ்யோர்க்கில் உள்ள கோர்னல் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதாவது, நேரில் ஒருவர் பொய் கூறும்போது அவர்களின் கண்களையும் அசைவுகளையும் பார்த்து, பெரும்பாலும் கண்டறியக் கூடியதாக இருக்கும். ஆயினும் அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பும்போது, அவர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினமானதாகும். ஆதலால், இதனைக் கண்டறிவது குறித்து பல்பலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, ஆண்கள், பெண்களுக்கு நேரெதிராக செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் மிகச் சொற்பமான சொற்களையே பொய்கூறுவதற்காக குறுஞ்செய்திகளில் உபயோகிக்கின்றனர்.

இந்த ஆய்வுகளுக்கென ஆயிரத்து 703 பேரின் குறுஞ்செய்திகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

 

பயங்கர காற்றால் தள்ளாடிய விமானம் சாதுர்யமாக திருப்பிய விமானி

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் விமான நிலையத்தில் ஓர் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, அங்கு பயங்கர காற்றடித்தது. இதனை உணர்ந்துக்கொண்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலேழுப்பியதை காட்டும் காணொளி.

  • தொடங்கியவர்

‘இது முதல் தடவையல்ல!’ - உலக அளவில் சர்ச்சைக்குள்ளான சுயசரிதைகள்

 
Chennai: 

'நான் எனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியுள்ளவை யாருடைய உணர்வையாவது புண்படுத்தினால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ள எனது  சுயசரிதையைத்  திரும்பப் பெறுகிறேன்' - பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று இவ்வாறு பதிவிட்டிருந்தார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  'An ordinary man' என்ற தனது சுயசரிதையை சமீபத்தில் வெளியிட்டார் நவாசுதீன். அந்தப் புத்தகத்தில் தன்னைப் பற்றி மோசமாக எழுதியுள்ளதாக பாலிவுட் நடிகை நிகாரிகா சிங்  எதிர்ப்புத் தெரிவித்த பிறகு அந்த டிவிட்டை பதிவிட்டார் நவாசுதீன்.

சர்ச்சை

 

பல ஆண்டுகளுக்கு முன்  நேருவின் செக்ரெட்டரியாக இருந்த எம்.ஓ.மாத்தாய் 'ரெமினிசன்சஸ் ஆப் தி நேரு ஏஜ்' என்ற தன் சுயசரிதையில் இந்திராகாந்தி குறித்து சர்ச்சையான தகவல் ஒன்றைக் கூறியிருந்தார். பின்பு அந்தப் பகுதி மட்டும் நீக்கப்பட்டு புத்தகம் விற்பனையானது. இதைப் பற்றி மாத்தாய் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். எப்போதும் பிரபலமானவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகமோ , வாழக்கைத் தொகுப்போ வெளிவரும் போது இது போன்ற சர்ச்சைகளும் ஏற்படுவதுண்டு.

சுயசரிதைகளும் சர்ச்சைகளும்: 

சுயசரிதை

 Auto biography & Biography எனப்படும் சுயசரிதை மற்றும் வாழக்கை வரலாறு  எழுதும் பழக்கம் உலக அளவில் பிரபலமான ஒன்று. பிரபலங்கள், தங்கள் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றிகள், தங்களைப் பற்றி பிறருக்குத் தெரியாத பல தகவல்களைத் தாங்களாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமோ எழுதி புத்தகமாக வெளியிடுவர். சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்திருக்கும் காரணத்திற்காகவே இந்த வகைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதற்கு உலகெங்கிலும் வாசகர்கள் இருக்கிறார்கள். சில புத்தகங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய அரசியல் சார்ந்த தகவல்களை வெளிக்கொண்டுவரும். சில புத்தகங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிலும் மகாத்மா காந்தி தொடங்கி அப்துல்கலாம் வரை சுயசரிதை எழுதியவர்களின் பட்டியல் நீளும். அது வரவேற்பையும் அதே சமயம் சர்ச்சைகளையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய  சில புத்தகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ப்ளேயிங் இட் இன் மை வே - சச்சின் டெண்டுல்கர்:  

சச்சின்

இந்திய கிரிகெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. அதில் அவர் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் குறித்து எழுதியிருந்த தகவல் சர்ச்சைக்குள்ளானது. "சேப்பல் ஒரு ரிங் மாஸ்டர் போல அவரது கருத்துகளை வீரர்கள் மீது திணித்தார். மூத்த வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் உதாசீனப்படுத்தினார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஓர் அடி கூட முன்னேறவில்லை என்றால் அது மிகையாகாது. 2007 ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்து என்னை கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்" என அவரது புத்தகத்தில் கூறியிருந்த கருத்து, சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பிறகு கங்குலி, ஜாகீர்கான் உள்ளிட்ட வீரர்களும் கிரேக் சேப்பல் குறித்து இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார்கள். இந்தப் புத்தகத்தை சச்சினும் பத்திரிகையாளர் போரியா மஜிம்தாரும் சேர்ந்து எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரேகா  தி அன் டோல்டு ஸ்டோரி :

 

சர்ச்சை

 பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகையும், ராஜ்யசபா எம்.பியுமான ரேகா அவர்களின் வாழ்க்கைப் பற்றிய புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. பத்திரிகையாளர் யாசிர் உஸ்மான் புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் நடிகைகளுக்குத் திரைக்குப் பின்னான நிஜ வாழ்க்கை மிகக் கொடுமையான ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், 15 ஆவது வயதில் நடிக்க வந்தபோது முன்னணி நடிகர் ரேகாவைத் துன்புறுத்தினார். அதைச் சுற்றியிருந்த திரைப்படக்குழுவினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது திரைத்துறையிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓம்பூரி - அன்லைக்லி ஹீரோ: 

சர்ச்சை

சில மாதங்களுக்கு முன் மறைந்த ஓம்பூரி பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத முக்கிய நடிகர். பாலிவுட் படங்கள் மட்டுமன்றி ஆங்கிலப் படங்கள், பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் இறந்த பிறகு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் வாழ்க்கை குறித்த புத்தகத்தை அவரது மனைவியும் பத்திரிகையாளருமான நந்திதா பூரி எழுதினார். அந்தப் புத்தகத்தில் நடிகர் ஓம்புரி சிறுவயதில் செய்த தவறான நடவடிக்கைகள் குறித்தும், அவரது முன்னால் காதலிகள் பற்றி குறிப்பிட்டிருந்ததும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

தி பாலியிஸ்டர் பிரின்ஸ் - தி ரைஸ் ஆப் திருபாய் அம்பானி: 

சர்ச்சை

இந்தியாவின் பெரும் பணக்காரரான திருபாய் அம்பானியின் அனுமதி பெறாமலேயே எழுதப்பட்ட ‘தி பாலிஸ்டர் பிரின்சஸ்' புத்தகம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவரது வாழ்க்கை, தொழில் வளர்ச்சி குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் தகவல் பெற்று எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். இதை வெளிநாட்டுப் பத்திரிகையாளரான ஹேமிஸ் மெக்டொனால்டு எழுதினார். தன்னைப் பற்றி தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி அம்பானி தரப்பிலிருந்து தடை கோரப்பட்டது. பின்பு  இந்தியாவில் மட்டும் அப்புத்தகம் தடைசெய்யப்பட்டது.

 

இவர்கள் தவிர இன்னும் நிறைய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களும் சுயசரிதை எழுதியுள்ளனர். சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சுயசரிதை எழுதுவதும் அதில் தங்கள் துறை சார்ந்த விமர்சனங்களை முன் வைப்பதும் வழக்கமாகி வருகிறது. சில அதிகாரிகள் தாங்கள் பதவியிலிருந்த போது அரசின் வற்புறுத்தல் காரணமாகச் செய்த தவறான விசாரணைகளையும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வன்முறைக்கு நடுவே ஒரு வர்ணஜாலம்

ஆஃப்கானிஸ்த்தானில் உள்ள காபூல் நகரம் மிக ஆபத்தான நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தொடர்சியான பயங்கரவாத தாக்குதல்களால் இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் இங்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மலைகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வண்ணமயமான சுவர் பூச்சுகளை பூசும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.

  • தொடங்கியவர்

ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டம்: நேரில் சென்று ஓவியா வாழ்த்து! (படங்கள்)

 

 
oviya_arav1xx

 

பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திரையுலகப் பிரமுகர்கள், பிக் பாஸ் போட்டியாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியாவும் கலந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராமும் ரைஸாவும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட ஓவியா, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிறகு, காதல் நிலவரம்: நான் இப்போது சிங்கிளாக உள்ளேன். நிம்மதியாக உள்ளேன் என ட்வீட் செய்தார். இந்நிலையில் ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா பங்கேற்றுள்ளார். 

oviya8181.jpg

arav_bday1.jpg

oviya_ganesh1.jpg

http://www.dinamani.com

  • தொடங்கியவர்
நேர்மையுடன் வாழ்ந்தால் அதைவிடச் சிறப்பு ஏது?
 

image_34cbdd873f.jpgஒரு பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியதும், நல்ல, பெரிய பதவி கிடைத்தால்தான் வேலையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என நினைக்கவேயில்லை. வீட்டுச் சூழல் அப்படியிருந்தது. உடனே பஸ் நடத்துநர் வேலை கிடைத்தது. எல்லோரும் கண்டித்தனர். என்ன அவசரம்? நல்ல வேலை கிடைக்கும் வரை, பொறுத்திரு என்றனர்.  

இந்த வேலை பிடித்திருந்தது. மக்களுடன் தினசரி அந்நியோன்யமாகப் பழகும் பாக்கியம் அந்த வேலையில் கிடைத்திருந்தது. கருமத்தை கடவுள் பணியாக எண்ணிச் செய்யப்பட்டது. 

இன்று பிள்ளைகள் எல்லோரும் நன்கு படித்து, உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். மிகவும் எளிமையாக வாழுகின்றார்கள்.  

எந்தப் பணியாக இருந்தால் என்ன, அதில் மனம் இலயித்து நேர்மையுடன் வாழ்ந்தால் அதைவிடச் சிறப்பு ஏது? நண்பரின் கதை இது. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 02

 

1570 : வட கடலில் ஏற்­பட்ட சூறா­வளி கார­ண­மாக ஒல்­லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்­தனர்.

1834 : முதன்­மு­த­லாக இந்­தி­யாவில் இருந்து 75 ஒப்­பந்தத் தொழி­லா­ளர்கள் மொரீ­சியஸ் சென்­றனர்.

1868 : நியூ­ஸி­லாந்து சீர் நேரத்தை நாடு முழு­வதும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

1899 : தென் ஆபி­ரிக்­காவில் பிரித்­தா­னி­யர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகு­தியை போவர் படை­யினர் 188 நாட்கள் பிடித்து வைத்­தி­ருந்­தனர்.

Saud_of_Saudi_Arabia-300x400.jpg1914 : ஓட்­டோமான் பேர­ர­சுக்கு எதி­ராக ரஷ்யா போர் பிர­க­டனம் செய்தது.

1917 : பிரித்­தா­னி­யாவின் வெளி­நாட்டு விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான செய­லா­ள­ராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளி­யிட்ட பிர­க­ட­னத்தில், யூதர்­க­ளுக்கு பலஸ்­தீ­னத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை இங்­கி­லாந்து அரசு ஆத­ரிக்­கி­றது எனக் கூறப்­பட்­டது.

1930 : ஹைலி செலாசி எதி­யோப்­பி­யாவின் பேர­ர­ச­னானார்.

1936 : இத்­தா­லியின் சர்­வா­தி­காரி முசோ­லினி ரோம்-­பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறி­வித்தார்.

1936 : பிபிசி நிறு­வனம் தொலைக்­காட்சி சேவையை ஆரம்­பித்­தது.

1949 : டச்சு கிழக்­கிந்­திய கால­னித்­துவ பிராந்­தி­யங்­களை இந்­தோ­னே­ஷி­யா­விடம் கைய­ளிப்­ப­தற்கு நெதர்­லாந்து சம்­ம­தித்­தது.

1953 : பாகிஸ்­தா­னா­னது பாகிஸ்தான் இஸ்­லா­மியக் குடி­ய­ரசு எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

1963 : தெற்கு வியட்நாம் ஜனா­தி­பதி நியோ டின் டியெம், இரா­ணுவப் புரட்­சியை அடுத்து கொலை செய்­யப்­பட்டார்.

1964 : சவூதி அரே­பிய மன்னர் சௌத், குடும்பப் புரட்­சியின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார். அவரின் ஒன்­று­விட்ட சகோ­தரர் பைஸால் புதிய மன்­ன­ரானார்.

1974 : தென் கொரியத் தலை­நகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு முதன் முத­லாக விண்­வெளி வீரர்கள் சென்­ற­டைந்­தனர்.

2007 : இலங்கை வான்­ப­டையின் வான்­குண்டுத் தாக்­கு­தலில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2014 : பாகிஸ்தானில் இந்தியாவுடனான எல்லையிலுள்ள வாகா கிராமத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒரு நிமிட ஓவியம்... 10 லட்சம் டாலர் விலை! பிக்காஸோ கதை விவரிக்கும் பின்னணி #FeelGoodStory

 

உன்னை அறிந்தால்

வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை, ‘அவருக்கென்னப்பா ஈஸியா மேலே வந்துட்டாரு’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். இல்லையென்றால், `அவனுக்கென்னப்பா... எங்கே போனாலும் ரத்தினக் கம்பள வரவேற்புனு சொல்வாங்களே... அந்த மாதிரி! தொட்டதெல்லாம் துலங்குது. அவன் ராசி அப்படி!’ என்று ஜாதகம், ராசியின் மேல் பழிபோட்டுவிடுவார்கள். உண்மையில் ஒரு வெற்றியாளர் அந்த உயரத்தை அடைவதற்கு எவ்வளவு கடினமாக உழைத்தார், என்னென்ன தடைகளையெல்லாம் கடந்துவந்தார் என்று பலரும் யோசிப்பதில்லை; அறிந்துகொள்ள முயற்சி செய்வதும் இல்லை. ஒரு வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பை, மெனக்கெடலை, திறமையை எளிதாக மதிப்பிட்டுவிடலாமா? பிக்காஸோவின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதை இது தொடர்பாக ஓர் உண்மையை விவரிக்கிறது. பிக்காஸோவின் வரலாற்றில் உண்மையில் நடைபெறாத சம்பவமாக, கட்டுக்கதையாகவேகூட இது இருக்கலாம். ஆனால், இது உணர்த்தும் செய்தி மிக முக்கியமானது.

 

`20-ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர்களில் ஒருவர்’ என்று புகழப்படுபவர் பாப்லோ பிக்காஸோ (Paplo Picasso). ஸ்பெயினில் பிறந்த இந்த ஓவியர், தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது ஃபிரான்ஸில்தான். அது ஒரு காலை நேரம். பிக்காஸோ ஒரு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். இதமான காற்று... அந்தக் காற்றுக்கு ஏற்றபடி சாலையின் இருபுறமும் இருக்கும் மரங்களிலிருந்து அசையும் இலைகள்...  `கீச்’சிட்டுப் பறக்கும் பறவைகள்... ஏதோ ஒரு மரத்தில் தன் அலகால் கொத்திக்கொண்டிருக்கும் மரங்கொத்தி... எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி நடந்துகொண்டிருந்தார். 

பிக்காஸோ

 

சற்று தூரத்தில் அவருக்கு எதிர்ப்புறம் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு பெண், பிக்காஸோவையே பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். அதை பிக்காஸோ கவனித்தாலும், தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நடந்தார். அந்தப் பெண்மணி அவரைக் கடந்து போனார். சற்று தூரம் போனதும் நின்றார். ஏதோ யோசனை வந்தவராக பிக்காஸோவை நோக்கி ஓடிவந்தார். 

``ஐயா... சற்று நில்லுங்கள்!’’ 

பிக்காஸோ நின்றார். 

``நீங்கள்... நீங்கள்... ஓவியர் பிக்காஸோதானே..!’’ 

பிக்காஸோ மென்மையாகச் சிரித்தபடி `ஆமாம்’ என்பதுபோலத் தலையை அசைத்தார். 

உடனே அந்தப் பெண் மகிழ்ச்சியோடு சிரித்தார். பிக்காஸோவின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். ``நான் உங்கள் ரசிகை’’ என்றவர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதோடு, பிக்காஸோ வரைந்த சில குறிப்பிட்ட ஓவியங்களைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். சாலை ஓரத்தில் நின்று பேச சங்கடமாக இருந்தாலும், பிக்காஸோவால் அந்தப் பெண்ணைத் தவிர்க்க முடியவில்லை. லேசான புன்னகையுடன் அந்தப் பெண் சொல்வதையெல்லாம் தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் போனதும், அந்தப் பெண் பிக்காஸோவிடம் தயங்கித் தயங்கிக் கேட்டார். ``எனக்கு ஒரு ஆசை ஐயா. சொன்னால் தவறாக நினைத்துவிட மாட்டீர்களே...’’

``சொல்லுங்கள் மேடம்... என்ன?’’ 

``என்னை ஒரு ஓவியமாக வரைந்து தருவீர்களா? இப்போதே...’’ 

பிக்காஸோ சிரித்தார். ``இங்கேயா... இப்போதா? வரைவதற்கான உபகரணங்கள் எதுவும் என்னிடம் இல்லையே... நான் வெறும் கையுடன் அல்லவா வந்திருக்கிறேன்! இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்’’ என்று சொல்லி விடைபெறத் தயாரானார். 

``அப்படிச் சொல்லாதீர்கள். திரும்ப உங்களை என்னால் பார்க்க முடியுமோ, முடியாதோ... இப்பொழுதே என்னை எப்படியாவது ஒரு  ஓவியமாக வரைந்து தாருங்கள்!’’  

படம்

அந்தப் பெண்ணின் வற்புறுத்தலை அவரால் மறுக்க முடியவில்லை. பிக்காஸோ தன் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். வரைய ஆரம்பித்தார். ஒரு நிமிடம்தான். வரைந்து முடித்துவிட்டார். அந்தக் காகிதத்தை நீட்டினார். ``இதோ... இந்த பத்து லட்சம் டாலர் பெறுமானமுள்ள ஓவியத்தை வாங்கிக்கொள்ளுங்கள்!’’ என்றார். 

அந்த ஓவியத்தைப் பார்த்த அந்தப் பெண்ணுக்கு விழிகள் வியப்பால் விரிந்தன. ஒரு நிமிடத்துக்குள் வரைந்த ஓர் ஓவியம் பத்து லட்சம் டாலருக்கு விலை போகுமா? ஆனாலும், அந்தப் பெண் நன்றி சொன்னார். பிக்காஸோ விடைபெற்றுத் தன் வழியில் நடந்தார். 

வீட்டுக்கு வந்த பெண்மணிக்கு இருப்புகொள்ளவில்லை. உண்மையிலேயே இந்த ஓவியத்துக்கு அவ்வளவு விலை கிடைக்குமா? ஒருவேளை பிக்காஸோ நகைச்சுவைக்காக அப்படிச் சொல்லியிருப்பாரோ..! பரிசோதித்துப் பார்க்க முடிவுசெய்தார். கடைத்தெருவுக்குப் போனார். அந்த ஊரிலேயே ஓவியங்களை விற்கும் ஒரு பெரிய கடைக்குப் போனார். அதன் உரிமையாளரிடம் தயங்கித் தயங்கி ஓவியத்தை நீட்டினார். அதைப் பார்த்ததும் கடைக்காரர், ``இது ஓவியர் பிக்காஸோ வரைந்ததுபோல இருக்கிறதே...’’ என்றார். பெண்ணிடம் பேசி, உண்மையைத் தெரிந்துகொண்டார். அந்த ஓவியத்துக்குக் கடைக்காரர் சொன்ன விலை, பத்து லட்சம் டாலர். 

***

பல நாள்களுக்குப் பின்னர் அந்தப் பெண்மணிக்கு மறுபடியும் ஒரு சாலையில் பிக்காஸோவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் ஓடி வந்தார். ``ஐயா... நீங்கள் சொன்னது மிகச் சரி. அந்த ஓவியத்தின் விலை பத்து லட்சம் டாலர்.’’ 

பிக்காஸோ சிரித்தபடி அந்தப் பெண்ணைப் பார்த்தார். 

“எனக்கு இன்னொரு ஆசை ஐயா. என்னை உங்கள் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுங்கள். அப்போது, என்னாலும் உங்களைப்போலவே மிகக் குறைந்த நேரத்தில் பத்து லட்சம் டாலர் விலைமதிப்புள்ள ஓவியத்தை வரைய முடியும் இல்லையா?!’’ 

picasso

“மேடம்! நீங்கள் குறிப்பிடும் ஓவியத்தை நான் ஒரு நிமிடத்துக்குள்தான் வரைந்தேன். அதன் மதிப்பும் பத்து லட்சம் டாலர்தான். ஆனால், அந்த விலைக்காக என் வாழ்க்கையில் 30 ஆண்டுகளைச் செலவழித்திருக்கிறேன். அத்தனை வருடங்களும் மிகவும் போராடியிருக்கிறேன். இந்த ஓவியக்கலையைக் கற்றுக்கொள்வதற்காகக் கடுமையாக, அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறேன். என்னுடைய திறமை உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கையையே ஓவியம் வரைவதற்காக அர்ப்பணியுங்கள். அப்போது, என்னைப்போல ஓவியம் வரைவது உங்களுக்கும் சாத்தியமாகும்.’’ 

 

அந்தப் பெண்மணி என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றார். பிக்காஸோ அவரைக் கடந்து நடந்து போய்க்கொண்டிருந்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோலி முன்பு தந்தையைப்போல் பந்துவீசி அசத்திய நெஹ்ராவின் மகன்

 

நெஹ்ரா

19 வருட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா நேற்று ஓய்வுபெற்றார். போட்டியின் முடிவில் நடந்த கொண்டாட்டத்தில் நெஹ்ரா தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் கோலி முன்பு நெஹ்ராவின் மகன் அரூஷ் தனது தந்தையின் பந்துவீசும் ஸ்டைலை இமிடேட் செய்து அவரைப்போலவே பந்துவீசி அசத்தினார்.

 
 

இந்தப் போட்டி நடைபெற்ற டெல்லி பெரோஷா கோட்லா நெஹ்ராவின் சொந்த ஊர் என்பதால் ரசிகர்கள் நெஹ்ராவுக்கு பெரும் ஆதரவை அளித்தனர். இந்திய அணி சார்பில் கடந்த 25 வருடங்கள் இவ்வளவு மரியாதையுடன் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஓய்வுபெறுவது இதுதான் முதல் முறை. 2003 உலகக் கோப்பை சமயத்தில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த நெஹ்ரா, `பள்ளிப் போட்டியில் தனக்குப் பரிசு வழங்கியதைக் கோலி நினைவுகூர்ந்தார். மொத்த மைதானமும் ''மிஸ் யூ நெஹ்ரா ஜி'' என வாழ்த்து மழையைப் பொழிய சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் நெஹ்ரா... 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p36a.jpg

மிழக கிரிக்கெட் வரலாற்றில் ``இது ஒரு மெகா சாதனை’’ எனச் சிலிர்க்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். பல வருடங்களாக மும்பை அணியிடம் தோல்வியை மட்டுமே பெற்றுவந்த தமிழகம் இந்த முறை மும்பையைவிட அதிக ரன்கள் குவித்திருக்கிறது. மும்பை முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் குவிக்க, 69 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது தமிழ்நாடு. ஆனால், வாஷிங்டன் சுந்தரோடு பார்ட்னர்ஷிப் போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டார் பாபா இந்திரஜித். இந்த மேட்சில் 14 பவுண்டரிகளுடன் 152 ரன்கள் குவித்தார் இந்திரஜித். சில மாதங்களுக்கு முன்பு துலீப் டிராஃபி போட்டியில் முதல் மேட்சிலேயே இரட்டை சதமும் விளாசியவர்தான் இந்திரஜித். துலிப் டிராஃபி வரலாற்றில் அறிமுகப்போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த சாதனை இந்திரஜித் தவிர மூன்று பேருக்கு மட்டுமே உண்டு. அசாருதின், மஞ்ச்ரேக்கருக்கு அடுத்து இந்திரஜித்தின் சகோதரர் அபராஜித் இதே சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். கலக்குங்க பிரதர்ஸ்.

p36b.jpg

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் அடுத்த படம் ஜனவரியில் தொடங்குகிறது. விஜய்க்கு இந்தப் படத்தில் ரோஸ் மில்க் வாங்கித்தரவிருப்பவர் ‘தோனி’ படத்தில் நடித்த கியாரா அத்வானி. ‘சோலோ’, ‘அங்கமாலி டைரிஸ்’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன்தான் கேமரா. விஜய் படங்களுக்கு இதுவரை இசையமைக்காத ஒருவர்தான் வேண்டும் என்பதால் தேடல் தொடர்கிறது. மியூசிக் மிஸ்ட்ரி

p36c.jpg

‘தீரன் அதிகாரம் ஒன்று’க்குப்பிறகு கார்த்தியை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்குகிறார். ‘கொம்பன்’ படம்போல இதுவும் கிராமத்துக் கதை. படத்தில் மொத்தம் நான்கு ஹீரோயின்கள் என்பதுதான் குஷிப்படுத்தும் செய்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்தான் இந்தப் படத்துக்கும் ஹீரோயின். ‘ப்ரேமம்’ படித்தில் நடித்த மடோனா செபாஸ்டியன், அனுபமா இருவரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். நான்காவது ஹீரோயினுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்துகொண்டிருக்கிறது. கககபோ!

p36d.jpg

`` ‘சாமி-2’ல் நான் இல்லப்பா’’ என ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் த்ரிஷா. விலகலுக்குக் காரணம், த்ரிஷாவுக்குக் கொடுக்கப்பட்ட குட்டிக் கதாபாத்திரம்தான். ‘`கீர்த்தி சுரேஷுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கு. என்னுடைய சீன்ஸை அதிகப்படுத்தணும்’’ என்கிற த்ரிஷாவின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் போக, த்ரிஷா எஸ்கேப். த்ரிஷா இல்லைனா கீர்த்தி!

‘கோலிக்கும், அனுஷ்கா ஷர்மாவுக்கும் டிசம்பரில் திருமணம்’ என யாரோ கொளுத்திப்போட, கடுப்பாகிவிட்டார் அனுஷ்கா ஷர்மா. இந்திய கிரிக்கெட் அணி டிசம்பரில் இலங்கையுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ``இலங்கையுடனான ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு வேண்டும்’’ என கோலி பிசிசிஐ நிர்வாகத்திடம் கேட்க, அனுஷ்காவுடன் திருமணம் என்பதால் கோலி ஓய்வுக்கு விண்ணப்பித் திருக்கிறார் எனத் தகவல் பரவியது. அனுஷ்கா ஷர்மாவோ, ‘`நான் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். விராட் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கிறார். இந்தநேரத்தில் திருமணம் என்பது இருவருக்குமே சரியாக வராது என்னும்போது, எதற்காக இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்கள்’’ எனத் தெளிவாகப் பேச, கல்யாணப் பேச்சு ஓவர். வதந்திகளை நம்பாதீர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தடைகளை உடைத்து பிகினி போட்டியில் சாதித்த இரானிய பெண்

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: நேக் சந்தின் பாறைப் பூங்கா

 
1CHSUJROCKGARDEN3

ஹரியானாவின் தலைநகர் சண்டிகரில் அமைந்திருக்கிறது நேக் சந்த் பாறைப் பூங்கா. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் வீணாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

     

உடைந்த பீங்கான் கோப்பைகள், தட்டுகள், மின்சார உதிரி பாகங்கள், குழல் விளக்குகள், மிதி வண்டியின் பாகங்கள், பாட்டில்கள், பானைகள், குழாய்கள், கண்ணாடி வளையல்கள், மொசைக் கற்கள் என்று குப்பையில் எறியப்பட்ட பொருட்களைச் சேகரித்து, கலை நயத்துடன் உருவங்களை இங்கே படைத்திருக்கிறார்கள்.

1CHSUJROCKGARDEN1
 

கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள், ஆளுயர மனிதர்கள், அரசர்கள், அரசிகள், இசைக் கலைஞர்கள், போர் வீரர்கள், விலங்குகள், பறவைகள் என்று விதவிதமாக இருக்கும் சிற்பங்களை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இந்த அழகிய பாறைப் பூங்கா நேக் சந்த் சைனி என்ற தனி மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 1950களில் சண்டிகர் நகரம் சுவிட்சர்லாந்து கட்டிடக்கலை நிபுணர் லீ கார்பூசியர் என்பவரின் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. நேக் சந்த் சண்டிகரின் பொதுப்பணித்துறையில் சாலை ஆய்வாளராக இருந்தார். புது நகர் நிர்மாணித்ததால் பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டன.

1CHSUJROCKGARDEN2
 

தினமும் வேலை முடிந்தவுடன் பயன்படாத, உடைந்த பொருட்களைத் தன்னுடைய மிதிவண்டியில் எடுத்துச் சென்று, காட்டுப் பகுதியில் சேகரித்தார். மக்களின் பார்வைக்கு எளிதில் தெரியாத பகுதி அது. விடுமுறை நாட்களில் தான் சேகரித்த பொருட்களைக் கொண்டு விதவிதமான உருவங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

சுமார் 13 ஆண்டுகள் தனி மனிதராக கோட்டைகள், நீர்வீழ்ச்சி, பஞ்சாப் கிராமத்தின் வளைந்து செல்லும் பாதைகள், அரண்மனை, மனிதர்கள், விலங்குகள் என்று உருவாக்கியிருந்தார். நேக் சந்தின் பாறைப் பூங்கா ஒருநாள் அரசு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

1CHSUJROCKGARDEN

அது சட்டத்துக்குப் புறம்பான செயலாக இருந்தாலும் அவருடைய படைப்பாற்றலைக் கண்டு வியந்தனர்.

அவரை அந்தப் பாறைப் பூங்காவின் மேற்பார்வையாளராக நியமித்து, அவருக்குக் கீழ் 50 பணியாளர்களையும் அமர்த்தினர். அவர்களுக்கு நேக் சந்த் பயிற்சி கொடுத்து, தோட்டத்தை விரிவுபடுத்தினார். 18 ஏக்கரில் இருந்த இந்தப் பூங்கா, இன்று 40 ஏக்கர் அளவுக்குப் பரந்துவிரிந்துள்ளது. விரிவாக்கப் பணி இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நேக் சந்தின் இந்தப் படைப்பாற்றலுக்குக் காரணம் என்ன தெரியுமா? அவரது அம்மா கூறிய ராஜா, ராணி கதைகள், தேவதைக் கதைகள், மந்திரவாதி கதைகள்தான். கதைகளைக் கேட்கும்போது அவற்றைக் காட்சிகளாகக் கற்பனை செய்துகொள்வார். இதனால் அவரது கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் பெருகின. இந்தப் பாறைப் பூங்காவை உருவாக்கவும் வைத்தன.

1976-ம் ஆண்டு இந்தப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. தினமும் 5 ஆயிரம் பேர் இந்தப் பூங்காவைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

1983-ம் ஆண்டு பாறைப் பூங்காவைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது. நேக்சந்தின் சேவையைப் பாராடி, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சர்வதேச அளவிலும் நேக் சந்த் புகழ் பரவியது. பாரிஸ், பெர்லின் போன்ற நகரங்களில் அவருடைய படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

1CHSUJROCKGARDEN5

1986-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள தேசியக் குழந்தைகள் பூங்காவை வடிவமைத்தார் நேக் சந்த். இன்று நேக் சந்த் இல்லாவிட்டாலும் அவரது படைப்புகள் உலகம் முழுவதும் அவரது புகழைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

1CHSUJROCKGARDEN6
 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மனதை குளிர்விக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தருணங்கள்

வரும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு, சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ புகைப்பட முகமையான கெட்டி இமேஜஸ்-இன் கோப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முந்தைய குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.

2010-இல் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் கனட பனிச்சறுக்கு வீரர் ஜானி லியால், ஒலிம்பிக் வளையங்களின் வழியே தாண்டிச் செல்லும் காட்சி.

2010-இல் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் கனட பனிச்சறுக்கு வீரர் ஜானி லியால், ஒலிம்பிக் வளையங்களின் வழியே தாண்டிச் செல்லும் காட்சி

1980-இல் நடந்த போட்டிகளின் ஐஸ் ஹாக்கியின் அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க அணி. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 'பனி மீது நடந்த அதிசயம்' என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா பின்லாந்து அணியை 4-2 என்று வென்றது.

1980-இல் நடந்த போட்டிகளின் ஐஸ் ஹாக்கியின் அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க அணி. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 'பனி மீது நடந்த அதிசயம்' என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா பின்லாந்து அணியை 4-2 என்று வென்றது.

2014-இல் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸில், அமெரிக்க ஸ்கீயிங் வீராங்கனை எமிலி குக் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்.

2014-இல் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸில், அமெரிக்க ஸ்கீயிங் வீராங்கனை எமிலி குக் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்

யுகோஸ்லேவியாவில் 1984-இல் நடந்த போட்டிகளில் பிரிதனைச் சேர்ந்த பனி நடனக் கலைஞர்கள் ஜேய்ன் டார்வில் மற்றும் கிறிஸ்டோஃபர் டீன் நிகழ்த்தும் பொலேரோ நடனம்.

யுகோஸ்லேவியாவில் 1984-இல் நடந்த போட்டிகளில் பிரிதனைச் சேர்ந்த பனி நடனக் கலைஞர்கள் ஜேய்ன் டார்வில் மற்றும் கிறிஸ்டோஃபர் டீன் நிகழ்த்தும் பொலேரோ நடனம்

 

2010-இல் நடந்த வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்சில், பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்கேடிங்கில் அமெரிக்காவின் எல்லி ஒச்சோவிக்ஸ் உடன் போட்டியிடும் கனட வீராங்கனை ஷன்னான் ரம்பெல்.

2010-இல் நடந்த வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்சில், பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்கேடிங்கில் அமெரிக்காவின் எல்லி ஒச்சோவிக்ஸ் உடன் போட்டியிடும் கனட வீராங்கனை ஷன்னான் ரம்பெல்.

1988 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், போப்ஸ்லேக் ஃபோர்ஸ் எனப்படும் பனி விளையாட்டின்போது, ஜமைக்க வீரர்கள் டேவன் ஹாரிஸ், டட்லீ ஸ்டோக்ஸ், மைக்கேல் வைட், சாமுவேல் கிளேட்டன் ஆகியோர் பனிச் சறுக்கு தலத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த தடுப்புகளில் மோதிய காட்சி.

1988 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், போப்ஸ்லேக் ஃபோர்ஸ் எனப்படும் பனி விளையாட்டின்போது, ஜமைக்க வீரர்கள் டேவன் ஹாரிஸ், டட்லீ ஸ்டோக்ஸ், மைக்கேல் வைட், சாமுவேல் கிளேட்டன் ஆகியோர் பனிச் சறுக்கு தலத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த தடுப்புகளில் மோதிய காட்சி.

1992-இல் பிரான்சில் நடந்த போட்டிகளின்போது ஸ்கீயிங் செய்யும் வீரர் காற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்.

1992-இல் பிரான்சில் நடந்த போட்டிகளின்போது ஸ்கீயிங் செய்யும் வீரர் காற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்

1998-இல் ஜப்பானில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், டவுன்ஹில் எனப்படும் போட்டியில் எதிர்பாராமல் கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொள்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஜெர்மன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்பிட்ஸ்.

1998-இல் ஜப்பானில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், டவுன்ஹில் எனப்படும் போட்டியில் எதிர்பாராமல் கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொள்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஜெர்மன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்பிட்ஸ்.

1964-இல், ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைக் காணும் 80,000 பார்வையாளர்கள்.

1964-இல், ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைக் காணும் 80,000 பார்வையாளர்கள்

2010-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்கும் நார்வே வீரர் ஓல் எய்னார் ஜோர்தலென்.

2010-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்கும் நார்வே வீரர் ஓல் எய்னார் ஜோர்தலென்.

ரஷ்யாவில் 2014-இல் நடந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் போல்சோய் பனி குவிமாடம் மீது எரியும் காட்சி.

  • ரஷ்யாவில் 2014-இல் நடந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் போல்சோய் பனி குவிமாடம் மீது எரியும் காட்சி.

  • தொடங்கியவர்
‘சமூக விசுவாசம் மாந்தருக்கு அவசியம்’
 

image_a2b306d78a.jpgவீட்டில் பசு, ஆடு, நாய், பூனை, கோழி எனப் பலவற்றை மக்களில் பலர் வளர்க்கின்றார்கள். அவை எஜமானர்களுக்கு அன்புடனும் விசுவாசத்துடனும் இருக்கின்றன. 

கூப்பிட்டவுடன் நாய் ஓடிவந்து வாலை ஆட்டுகின்றது. பூனை வீட்டை விட்டு விலகுவதேயில்லை. பசு, ஆதாரமான கனிவுடன் எம்மை நோக்குகின்றது. கட்டுக்கடங்காத காளை தன்னை விழிகளால் நோக்கிய எஜமானனைப் பணிந்து நிற்கின்றது. 

 ஆனால், மனிதன் மட்டும் எவரது சொல்லையும் முழுமையாகக் கேட்பதுமில்லை; மதிப்பதுமில்லை. உணவளித்த தமது வீட்டாருக்குத் தனது ஆயுள் உள்ளவரை நன்றியுணர்வுடன் விலங்குகளும் பறவைகளும் இருக்கின்றன.  

சமூக விசுவாசம் மாந்தருக்கு அவசியம். எம்மை வளர்த்த பெற்றோரிடம் காட்டும் நன்றியறிதலை எங்களை மறைமுகமாக ஆதரிக்கும் மக்களிடம் காட்ட வேண்டும்.  

பணிவு, அன்பு, பரிவு ஆகியவற்றை நாம் ஐந்தறிவு உயிர்களிடம் இருந்து பெறுவோமாக. ஆணவம் அகற்றினால் வாழ்வு தழைக்கும்.  

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 03
 

644: இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல் - கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.

1493: கரிபியன் கடலில், டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.

1655: பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1793: பிரான்சின் நாடகாசிரியரும் செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1812: நெப்போலியனின் இராணுவத்தினர், வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.

1838: பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

1903: ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து, பனாமா, கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1905: ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.

1913: ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

1918: போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1943: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

1957: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.

1963: தி.மு.க செயற்குழு, திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

1963: ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில், காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1964 : வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1970: சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.

1973: நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1978: டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979: கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1982: ஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1986: மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1988: இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

1 மைல்... 4:06.8 நிமிடங்கள்... மரத்துப் போன கால்களின் மகத்தான சாதனை! #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

`இனி அவ்வளவுதான் வாழவே முடியாது’ என்கிற நிலை ஏற்படுகிறதா? உற்றார், உறவினர், நண்பர்கள்... உதவ யாரும் இல்லை என்கிற நிராதரவான சூழல் ஏற்படுகிறதா? ஒன்றே ஒன்று இருந்தால் போதும்... எப்பேர்ப்பட்ட இன்னலையும் எதிர்கொண்டு தவிடுபொடியாக்கிவிடலாம். அது, மன உறுதி! அவன் எட்டு வயது சிறுவன். `இனி பிழைக்க மாட்டான்; பிழைத்தாலும், பிரயோசனமில்லை. அவனால் நடக்க முடியாது. இவன் இனி இருப்பது ஒரு சுமை’ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தினார்கள் மருத்துவர்கள். அந்த சிறுவன் மன உறுதி என்ற ஒன்றை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். தனக்கு ஏற்பட்ட பிரச்னையில் இருந்து மீண்டெழுந்தான். உலகத்தையே தன் சாதனையால் திரும்பிப் பார்க்கவைத்தான். அவன் கதையைப் பார்க்கலாமா? 

 

அமெரிக்காவின் கான்சாஸ். அதற்கருகே ஒரு சின்னஞ்சிறு ஊர்... பெயர், எல்கார்ட் (Elkhart). அங்கேதான் இருந்தான் சிறுவன் கிளென் கன்னிங்ஹாம் (Glenn Cunningham). எட்டு வயது. அந்த வயதில் அவனுக்கு பெரிய பொறுப்பு ஒன்றைப் பள்ளியில் ஒப்படைத்திருந்தார்கள். எல்லோரும் வருவதற்கு முன்னதாகவே வகுப்பறைக்கு வர வேண்டும். வகுப்பின் ஒரு மூலையில் பானை வடிவில் இருக்கும் சிறிய நிலக்கரிக் கணப்பை (Pot belly Coal Stove) பற்றவைக்க வேண்டும். அது குளிர்காலம். ஆசிரியரும் மாணவர்களும் வகுப்பறைக்கு வருவதற்கு முன்னரே அந்த அடுப்பைப் பற்றவைத்திருந்தால், அதிலிருந்து எழும் வெப்பம் அறையைச் சூழ ஆரம்பிக்கும். பள்ளி நேரம் தொடங்கியதும் மாணவர்களுக்குக் குளிர் தெரியாமல் அறை கதகதப்பாக இருக்கும். 

மன உறுதி

கன்னிங்ஹாம், அந்த அடுப்பைப் பற்றவைக்க, ஒரு கேனில் இருக்கும் மண்ணெண்ணெயைப் பயன்படுத்துவான். ஒருநாள் யாரோ தவறுதலாக கேனில் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக, பெட்ரோலை ஊற்றிவைத்திருந்தார்கள். அது அவனுக்குத் தெரியாது. வழக்கம்போல எல்லோருக்கும் முன்னதாக பள்ளிக்கு வந்த கன்னிங்ஹாம் கேனில் இருந்ததை மண்ணெண்ணெய் என நினைத்து, அடுப்பில் ஊற்றினான். அடுப்பு வெடித்தது. அது, மிக மோசமான தீ விபத்து. அந்த விபத்தில் கன்னிங்ஹாம் மாட்டிக்கொண்டான். 

ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தபோது வகுப்பறை முழுக்க நெருப்புப் பற்றியெரிவதைப் பார்த்தார்கள். உள்ளே கன்னிங்ஹாம் இருப்பதை அறிந்து, உள்ளே ஓடினார்கள். பேச்சு மூச்சில்லாமல் கீழே கிடந்த அவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். கிளென் கன்னிங்ஹாமுக்கு உடலெல்லாம் தீக்காயம். என்றாலும், இடுப்புக் கீழே, குறிப்பாக முழங்காலுக்குக் கீழே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தான். 

மருத்துவமனை. தீக்காயங்களுடன், அரை குறை நினைவாக பெட்டில் படுத்திருந்தான் கன்னிங்ஹாம். உடம்பெல்லாம் எரிந்தது. வலியில் துடித்துக்கொண்டிருந்தான். டாக்டர், தன் அம்மாவிடம் பேசுவது தெளிவாகக் காதில் விழுந்தது. ``அம்மா... மனசைத் தேத்திக்கங்க. எனக்கு சொல்றதுக்குத் தயக்கமா இருக்கு. உங்க மகன் பிழைக்க மாட்டானு தோணுது. உண்மையைச் சொல்லணும்னா, அதுதான் அவனுக்கு நல்லது. ஏன்னா, அவனோட முழங்காலுக்குக் கீழே எல்லா சதைகளும் மிக மோசமா எரிஞ்சு போயிருக்கு. இனிமே இவன் பிழைச்சாலும், இவனால நடக்க முடியாது.’’ 

கன்னிங்ஹாம் டாக்டர் சொன்னதை முழுதாகக் கேட்டான். ஆனால், அவர் சொன்னதுபோல அவனுக்குச் சாவதில் விருப்பமில்லை. `பள்ளி மைதானம் அவன் விளையாட வர வேண்டுமென்று காத்திருக்கிறது. அவனுடைய நண்பர்கள் சிலர் அவனைப் போட்டிக்கு அழைத்திருந்தார்கள். அதில் ஜெயிக்க வேண்டும். அடுத்த தேர்வில் எப்படியாவது நல்ல கிரேடு வாங்கி அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. கடவுளே... நான் சாகக் கூடாது. எப்படியாவது பிழைத்துவிட வேண்டும்.’ அவன் மனதில் ஓர் உறுதி பிறந்தது... வெகு அழுத்தமாக! 

சாதனை

கிளென் கன்னிங்ஹாம் பிழைத்துக்கொண்டான்... அல்ல... அவனுடைய மன உறுதி அவனைப் பிழைக்கவைத்துவிட்டது. ஆனால், இடுப்புக் கீழே எதையும் அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. தன் மெலிந்த, தீக்காயம்பட்ட, துவண்டுகிடக்கும் கால்களைப் பார்ப்பான். `நான் ஊனமுற்றவன் இல்லை. நான் நடப்பேன். ஓடுவேன். நிறைய தூரம் ஓடுவேன்’ என தனக்குத் தானே சொல்லிக்கொள்வான். மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். தினமும் அம்மாவும் அப்பாவும் அவன் கால்களில் எண்ணெயெல்லாம் தடவி மசாஜ் செய்துவிடுவார்கள். அவனுக்குக் கால்களில் உணர்ச்சியே இருக்காது. ஆனால், ஒருநாள் நிச்சயம் தன் கால்களைத் தன்னால் அசைக்க முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. 

அவனுடைய உடம்பு கொஞ்சம் தேறியதும் அவனுக்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்தார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் அம்மா, அந்த நாற்காலியில் வைத்து அவனை வெளியே அழைத்துப் போவார். காற்றோட்டமாக இருந்தால் அவன் மனதுக்கு இதமாக இருக்குமே என்கிற எண்ணம். புல்வெளி, மரம், செடிகள், பூனை, பறவைகள்... இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு உற்சாகமாக இருந்தது. அதே நேரம் நடந்துவிட வேண்டும் என்கிற வேட்கை உள்ளே கனன்றுகொண்டிருந்தது. 

மன உறுதி

ஒருநாள் அவனை வெளியே அழைத்துச் சென்றபோது, தன் உடம்பை வலுக்கட்டாயமாக இழுத்து புல்தரையில் விழுந்தான். அம்மாவும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் பதறிப்போய் அவனைத் தூக்க ஓடி வந்தார்கள். அவன், அவர்களை சைகையாலேயே தடுத்தான். இயக்கமே இல்லாமல் மரத்துப் போயிருந்த தன் கால்களை இழுத்து இழுத்து நகர்ந்தான். அப்படியே வேலிக்கருகே போனான். வேலிக் கம்பிகளைக் கைகளால் பற்றிக்கொண்டு மெள்ள எழுந்திருக்க முயன்றான். அவனால் அன்றைக்கு முடியவில்லை. `என்னால் முடியும்’ என்கிற மன உறுதி மட்டும் அவனிடம் அழுத்தமாக இருந்தது. இது தினமும் நடந்தது.

 கொஞ்சம் கொஞ்சமாக வேலியைப் பிடித்து நிற்கப் பழகினான். இன்னொரு நாள் வேலி ஓரமாக அதைக் கைகளால் பிடித்தபடி மெதுவாக நடக்க முயற்சி செய்தான். நாளாக நாளாக அது அவனுக்குக் கைகூடியது. ஒரு நாள் நடக்க ஆரம்பித்தான். பிறகு மெள்ள ஓட்டம்... ஊரே அவனை விழி விரிய ஆச்சர்யமாகப் பார்த்தது. 

கிளென் கன்னிங்ஹாம்

கன்னிங்ஹாம் பள்ளிக்கூட மைதானத்தில் ஓடினார். எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடினார். கல்லூரியில் சேர்ந்தபோது, ஓடுவதற்காக ஒரு குழுவையே உருவாக்கினார். 1932, 1936-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு முறையே நான்காவது, இரண்டாவது இடங்களுக்கு வந்தார். 1934-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூயார்க்கில், பிரபல மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஓடினார். பிழைக்க மாட்டான், நடக்க மாட்டான் என்றெல்லாம் நம்பப்பட்ட கன்னிங்ஹாம் ஒரு மைல் தூரத்தை 4:06.8 நிமிடத்தில் ஓடி முதல் முறையாக உலக சாதனை படைத்தார். 1936-ம் ஆண்டில் 800 மீட்டர் தூரத்தை 1:49.7 என்ற நிமிடக் கணக்கில் ஓடி இன்னொரு உலக சாதனை! மன உறுதி இருந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் எதிர்கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, சாதனையே புரியலாம் என்பதற்கு கிளென் கன்னிங்ஹாமின் கதை கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த உதாரணம். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

twitter.com/Thaadikkaran 

சினிமா க்ளைமாக்ஸ்ல போலீஸ் வர்ற சீன்கூட மாறிடுச்சு. ஆனா, இந்தியன் டீம்ல கடைசில வர்றவனெல்லாம் அவுட் ஆகுற சீன் இன்னும் மாறலே!

twitter.com/SelvaBSctwitz

போர்டுரூம்ல பேசுற மாதிரி பெட் ரூம்ல  பேசிமட்டும் பாரு அப்ப தெரியும்!

twitter.com/HAJAMYDEENNKS

சுகப்பிரசவம் மட்டுமல்ல, இயற்கைக் கருத்தரித்தல்கூட இனி அதிசயமாகிவிடும்!

p100a.jpg

twitter.com/Jeytwits

பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேரை மாற்றிச் சொன்ன அ.தி.மு.க அமைச்சர்.

இதென்ன பிரமாதம்... அவங்ககிட்ட முதலமைச்சர் பேர் கேட்டா ஆளாளுக்கு ஒரு பேர் சொல்வாங்க!

twitter.com/manipmp 

ஆபீஸ்  மீட்டிங்கின்போது கொட்டாவி விடுவதற்கு மட்டும் வாயைத் திறப்பவன் புத்திசாலி!

twitter.com/Kozhiyaar 

மழை பெய்தால் பஜ்ஜி, போண்டா செய்ய பாத்திரம் தேடினா அது மற்ற ஊர்...

தண்ணியை எடுத்து ஊத்த பாத்திரம் தேடினா அது சென்னை! #அவ்ளோதான் வித்தியாசம்.

twitter.com/Akku_Twitz

பைக்குல ‘மை மாம்ஸ் கிஃப்ட்’னு எழுதி ஒட்டி ஏடாகூடமா ஸிக்ஸாக் பண்ணி ஓட்றதெல்லாம் எந்த வகையிலான தாய்ப்பசம்னே தெரியல.

p100b.jpg

twitter.com/Kozhiyaar

அம்மா நலமா இருக்காங்கன்னு அ.தி.மு.க-வினர் சொன்னதும், பொருளாதாரம் நல்லாதான் இருக்குன்னு பா.ஜ.க-வினர் சொல்வதும் ஒரே டோன்லதான் இருக்கு!

twitter.com/amuduarattai

“உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க” என்பதைப் பொய்யாக்கி, ஏகப்பட்ட பேர் இருப்பாங்க என்று நிரூபித்த பெருமை ஆதார் கார்டுகளையே சேரும்!

twitter.com/vickytalkz

காதலிக்காகக் காத்திருக்கும் நேரத்தைவிட உணவு ஆர்டர் செய்துவிட்டு டோர் டெலிவரிக்காகக் காத்திருக்கும் நேரம் மிகக் கொடுமையானது!

p100c.jpg

twitter.com/prakash_sakthi

விளம்பரங்கள் சொல்லாமல் கற்றுக் கொடுப்பது ஒண்ணே ஒண்ணுதான்.

உடனே சேனலை மாற்றவும்!

twitter.com/Thaadikkaran

இதுதான் தீபாவளி டிரஸ்ஸா என்று யாரேனும் கேட்கும்போது, மீண்டும் தீபாவளி கொண்டாடிய ஒரு மனநிறைவைத் தந்துவிட்டுச் செல்கிறார்கள்!

twitter.com/latha_Bharathy

கணவனிடம் வேலை வாங்கத் தெரிந்த மனைவியைவிட, மகளின் அப்பாவிடம் வேலை வாங்கத் தெரிந்த அம்மாக்கள் கில்லாடிகள்!

twitter.com/HAJAMYDEENNKS

பட்டாம்பூச்சிகளுடன் பறந்த அனுபவத்தைத் தருகிறது குழந்தை களுடன் செல்லும் பைக் பயணம்!

twitter.com/Aruns212

நாம் அறிவுரை சொன்னால் அடுத்தவனுக்கு ஏதோ பிரச்னை; தத்துவம் சொன்னால் நமக்கு ஏதோ பிரச்னை!

twitter.com/Writer_Naina

இந்தத் தனியார் பள்ளிகளெல்லாம் கந்துவட்டி லிஸ்ட்ல வரமாட்டாங்களா?!

p100d.jpg

twitter.com/amuduarattai 

டாக்டர்களின் மிக நீண்ட மெளனம் மட்டுமல்ல, மிக நீண்ட விளக்கமும், நமக்கு மரண பயத்தைக் காட்டத்தான் செய்கிறது.

twitter.com/MJ_twets  Oct 29

தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை மட்டுமல்ல, புருசனை அடிப்பதும் தப்புதாங்க...

p100e.jpg

facebook.com/Mugil Siva

மக்களாகிய நாம், ஓர் உலகில் டெங்கு, கனமழை, சாலைகளெங்கும் வெள்ளம், காய்கறி விலை உயர்வு, நாளை பள்ளிகள் விடுமுறையா... என வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நம் ஆட்சியாளர்களாகிய அவர்கள் தனியே இன்னோர் உலகில் ஜெயலலிதா மரணம் நீதி விசாரணை, இரட்டை இலை உரிமை, தேவர் ஜயந்தி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக் கொண்டாட்டம், தினகரன் எதிர்ப்பு அறிக்கை, மோடிக்கு உண்மையாக இருத்தல்... என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

facebook.com/Venky RKO

திங்கள்கிழமை ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பஸ்டாண்ட்ல நின்னு ஆபீஸ் போறவங்களை வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நள்ளிரவில் தண்ணீர் தேசமான சென்னை: மக்கள் தவிப்பு (புகைப்படத் தொகுப்பு)

 

நேற்று நள்ளிரவு (வியாழக்கிழமை) சென்னையில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கிப்போனது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் (புகைப்படத் தொகுப்பு) மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் மின் இணைப்பு இல்லை; சாலை எங்கும் வெள்ளம்: நள்ளிரவில் தவித்த சென்னைவாசிகள் (புகைப்படத் தொகுப்பு)

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

இப்படி ஓர் அழகிப் போட்டி... பார்த்திருக்கவே மாட்டீர்கள்?!

 
 

அழகிப் போட்டி

பெரு நாட்டில் நடைபெற்ற அழகிப் போட்டி குறித்த வீடியோக்கள், இரண்டு நாள்களாக ஆன்லைனை ஆக்கிரமித்துவருகிறது. வழக்கமாக அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்கள், தங்கள் உடல் அளவுகளைச் சொல்வார்கள். ஆனால், பெருவில் கடந்த வாரம் நடைபெற்ற ‘பெரு அழகி’ப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 23 பேர், வேறொன்றை ‘பேசு பொருளாக’ மாற்றியிருக்கிறார்கள். 

 

‘என்னுடைய [உடல்] அளவு’ (MisMedidasSon) என்று ஆரம்பிக்கும் அந்த வீடியோவில்... 

“70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் வீதிகளில் வன்முறைக்கு ஆளாகிறார்கள்” 

“13,000 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்” 

“25 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர் இளம் பெண்கள் அவர்களது பள்ளிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்” 

”ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறையால் கொல்லப்படுகிறாள்” 

என்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அடுத்தடுத்து கூறிவிட்டு மின்னல் வேகத்தில் மறைகிறார்கள். அதுதான் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. வீடியோவைக் காண : 

 

 

பெரு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த காலங்களைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன. இதற்கு எதிராகப் பெண்கள் அமைப்புகளும் சமூக இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. கடந்த வருடம், பெரு நாட்டின் பிரதமரான மெர்சிடஸ் அரோஸ், இதற்கு முன்பு இருந்த ஓர் உறவில் பாலியல் ரீதியிலாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 29.10.17) தேசியக் கணக்கெடுப்பில் தன்னார்வலராக வேலை பார்த்துவரும் ஒரு பெண், கணக்கெடுப்பு நடத்தச் சென்ற ஒரு வீட்டில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். 

இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட பெண்கள்போலவே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் பல்வேறு பெண்கள் #MisMedidasSon (என்னுடைய உடல் அளவு) என்ற ஹாஷ்டேகில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். பாலியல் பிண்டங்களாகப் பெண்களைக் காட்டுவதே அழகிப் போட்டிகள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், போட்டியாளர்களின் தைரியமான இந்த முடிவுக்கு பாராட்டுகள் குவித்துவருகின்றன. 

”குரலற்ற பெண்களின் குரலாக இருக்கவே விரும்பினேன். தற்போது, நான்தான் அவர்களுடைய குரல். நாம் எந்தக் காரணத்தாலும் தோற்கடிக்கப்படக் கூடாது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்” என்று சொல்லியிருக்கிறார், போட்டியில் வெற்றிபெற்ற ரோமேனியா என்ற பெண்.

பாலியல் வன்முறை

Photo credit : Pixabay.com

இரண்டு நாள்களுக்கு முன்பு மெக்சிகோவில், கறுப்பு உடையில், முகத்தில் மண்டை ஓட்டை வரைந்துகொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுப்பை நடத்தியது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. 

“நாங்கள் மிகவும் மோசமான வன்முறையைச் சந்திக்கிறோம்” என்கிறார், தன் 21 வயது மகளைப் பலி கொடுத்த தாய் க்ளாடியா. அவர் மகள், முன்னாள் காதலனால் நெஞ்சிலும் கழுத்திலும் கத்திக் குத்துகள் வாங்கி பிணமாகவே கண்டெடுக்கப்பட்டார். 

”இதுபோல கொடூர நிஜங்களைச் சுமந்தவாறு இந்தக் கூட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம்'' என்றார் அணிவகுப்பை ஒருங்கிணைத்த சமூகச் செயற்பாட்டாளர். 

அந்த அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் கொலையுண்ட பெண்களின் புகைப்படங்களோடு, மெழுகுவர்த்தி மற்றும் பூக்களையும் கைகளில் ஏந்தியவாறு ‘இனியும் ஒருவர் கொல்லப்படக் கூடாது’ (not one more) என்று முழக்கம் எழுப்பினர். 

 

சமீபத்தில், ஹாலிவுடில் புகழ்பெற்ற இயக்குநர் ஹார்வி வின்ஸ்டன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒட்டி #MeToo என்கிற கேம்பைன் வைரலானது. தற்போது, உலகம் முழுக்க ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் அந்தந்த நாட்டை உலுக்கி எடுத்துவருகின்றன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீர்ம நிலையிலும், திடப் பொருளாய் உயிர் காக்கும் கூ

நீர்ம நிலையிலும், திடப் பொருளாய் செயலாற்றி உயிர் காக்கும் கூ பற்றி விவரிக்கும் காணொளி

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: எங்க அம்மா அப்பவே சொல்லுச்சு

 
memes%2013
IMG-20171031-WA0029
IMG-20171031-WA0035
memes%201
memes%2011
memes%2014
memes%202
memes%203
memes%204
memes%205
memes%206
memes%209

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.