Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

2007 : பாகிஸ்தான் முன்னாள் பிர­தமர் பெனாஸிர் பூட்டோ கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 27

 

1512 : அமெ­ரிக்கக் கண்­டத்தில் குடி­யேற்­றப்­பட்ட ஸ்பானி­யர்கள், பூர்வீகக் குடி­க­ளான செவ்­விந்­தி­யர்­க­ளுடன் நடந்­து­கொள்ள வேண்­டிய முறை குறித்த சட்­டங்ளை ஸ்பானிய அரசு வெளி­யிட்­டது. செவ்­விந்­தி­யர்­களின் உரி­மைகள், பாரம்­ப­ரி­யங்­கள் பல­வற்றை இச்­சட்­டங்கள் அங்­கீ­க­ரித்­தி­ருந்­தன.

1703 : இங்­கி­லாந்­துக்கு வைன்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு போர்த்­துக்­ கீ­ச­ருக்கு தனி­யு­ரிமை வழங்கும் ஒப்­பந்தம் இங்­கி­லாந்­துக்கும் போர்த்­து­க­லுக்கும் இடையில் ஏற்­பட்­டது.

1831 : சார்ள்ஸ் டார்வின் உயி­ரி­னங்­களின் பரி­ணாமக் கொள்கை பற்­றிய ஆய்­வுக்­காக தென் அமெ­ரிக்கா நோக்கிப் புறப்­பட்டார்.
1836 : இங்­கி­லாந்தின் வர­லாற்றில் மிக மோச­மான புயல் சசெக்ஸ் நகரில் தாக்­கி­யது.

1845 : பிள்ளைப் பேறுக்கு மயக்க மருந்­தாக ஈதர் முதற் தட­வை­யாக ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜியா மாநி­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

1864 : இலங்­கையில் முத­லா­வது ரயில் சேவை கொழும்­புக்கும், அம்­பே­புஸ்­ஸ­வுக்கும் இடையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1918 : ஜேர்­ம­னி­ய­ருக்கு எதி­ரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்­ப­மா­னது.

1922 : ஜப்­பானின் ஹோஷோ, உலகின் முத­லா­வது விமானம் தாங்கிக் கப்­ப­லாக பாவ­னைக்கு வந்­தது.

1923 : ஜப்­பா­னிய மாணவன் ஒருவன் இள­வ­ரசர் ஹிரோ­ஹிட்­டோவைக் கொல்ல முயற்­சித்தான்.

1934 : பேர்­சியா எனும் நாட்டின் பெயர் ஈரான் என மாற்­றப்­பட்­டது.

1939 : துருக்­கியில் ஏர்­சின்கன் நகரில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 30,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1945 : 28 நாடு­களின் ஒப்­பு­த­லுடன் உலக வங்கி உரு­வாக்­கப்­பட்­டது.

1949 : இந்­தோ­னே­ஷி­யாவை ஒன்­று­ பட்ட சுதந்­திரம் பெற்ற நாடாக நெதர்­லாந்து அறி­வித்­தது.

1956 : தமிழ்­நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

1968 : சந்­தி­ரனின் சுற்­றுப்­பா­தைக்கு சென்று திரும்­ பிய முத­லா­வது மனித விண் வெ­ளிப்­ப­யணக் கப்­ப­லான அப்­பல்லோ 8, பாது­காப்­பாக பசிபிக் கடலில் இறங்­கி­யது.

page-08.jpg1978 : ஸ்பெயின் 40வருட கால சர்­வா­தி­கார ஆட்­சியின் பின்னர் ஜன­நா­யக நாடா­கி­யது.

1979 : சோவியத் ஒன்­றியம் ஆப்­கா­னிஸ்­தானைக் கைப்­பற்­றி­யது. ஜனா­தி­பதி ஹபி­சுல்லா அமீன் சுட்­டுக் ­கொல்­லப்­பட்டு பப்ராக் கர்மால் தலை­வ­ரானார்.

1985 : ரோம் மற்றும் வியன்னா விமா­ன­நி­லை­யங்­களில் பலஸ்­தீன கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தல்­களில்18 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1996 : தலிபான் படைகள் ஆப்­கா­னிஸ்­தானில் பக்ராம் வான்­படைத் தளத்தை மீளக் கைப்­பற்­றின.

2002 : செச்­சி­னி­யாவில் மொஸ்கோ சார்பு அரச தலை­மை­ய­கத்தில் இரண்டு குண்­டுகள் வெடித்­ததில் 72 பேர் கொல்­லப்­பட்டு 200 பேர் காய­ம­டைந்­தனர்.

2007 : கென்­யாவில் ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து பாரிய வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­கின.

2007 : பாகிஸ்தான் முன்னாள் பிர­தமர் பெனாஸிர் பூட்டோ ராவல்­பிண்டி நகரில் நடந்த துப்­பாக்கிப் பிர­யோகம் மற்றும் தற்­கொலைக் குண்டுத் தாக்­குலில் கொல்­லப்­பட்டார்.

2008 : காஸா மீது 3 வார கால முற்றுகையை இஸ்ரேல் ஆரம்பித்தது.

2013 : மாத்தறையிலிருந்து கண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் என்ஜின் வதுறவ ரயில் நிலையத்துக்கு அருகில் தீப்பற்றியபோது தண்டவாளத்தில் குதித்த மூவர் எதிர்த்திசையில் வந்த ரயில் மோதி உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

100-க்கும் மேற்பட்ட முதலைகளைக் காப்பாற்றிய ஸ்டீவ் இர்வின்! ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

தன்னம்பிக்கை கதை

‘வாழ்க்கை, கையில் வைத்திருக்கும் முட்டையைப் போன்றது. அதை பத்திரமாகக் கையாள வேண்டும்’ என்ற ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய பழமொழிதான். சமயத்தில், சக மனிதர்களைத் தாண்டி, பிற உயிர்கள் மீது அன்பு பாராட்டுகிறவர்களுக்கும் இது பொருந்திப்போகும். அதுதான் நம்மை வருத்தப்படவைக்கும் செய்தி. இயற்கையை நேசிக்கிறவர்கள், வன விலங்குகளைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடுகிறவர்கள், அருகிவரும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை மீட்பவர்கள்... இவர்களில் பலர், உயிரிழந்த செய்திகளைக் கேள்விப்படுகிறோம்... அதிலும் அவர்கள் சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபட்டிருக்கும்போதே அவர்கள் உயிர் பறிபோவது பரிதாபம். ஸ்டீவ் இர்வின் (Steve Irwin) கதை அந்த ரகத்தைச் சேர்ந்தது. தன் வாழ்நாளெல்லாம் பல்லி, உடும்பு, பாம்பு, முதலை போன்ற உயிரினங்களின் மேல் தீராக் காதல் கொண்டு, அவற்றின் காவலனாக விளங்கியவர் ஸ்டீவ். அவரை `முதலை வேட்டைக்காரர்’ (The Crocodile Hunter) என்றுதான் செல்லமாக அழைத்தார்கள். அவர், ஒரு மீனால் உயிரிழந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அந்த உண்மைக் கதையைப் பார்ப்போம்... 

 

ஸ்டீபன் ராபர்ட் இர்வின்

(Photo courtesy: www.australiazoo.com)

அவருடைய முழுப் பெயர் ஸ்டீபன் ராபர்ட் இர்வின். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகில் எஸ்ஸென்டென் (Essendon) என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தார். 1970-ல் அவர் குடும்பம், குயின்ஸ்லேண்டுக்கு அருகிலிருக்கும் பியர்வா (Beerwah) என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தது. அங்கே `பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ (Beerwah Reptile and Fauna Park) என்ற ஒரு ஜூவை ஆரம்பித்து நடத்தினார்கள் ஸ்டீவின் அப்பாவும் அம்மாவும். அந்த உயிரியல் பூங்காவில் இருந்தவையெல்லாம் ஊர்வன வகையைச் சேர்ந்தவை. அவற்றோடு வாழ்ந்ததாலேயோ என்னவோ, ஸ்டீவுக்கு பல்லி, முதலை, பாம்புகள் மேலெல்லாம் அலாதியான அன்பு. அவற்றின் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளும் விசித்திரமான அறிவு அவருக்கு இருந்தது. ஸ்டீவ், விஷமுள்ள பாம்பு ஒன்றை முதன்முதலாகப் பிடித்தபோது அவருக்கு ஆறு வயது. 

பள்ளிக்குச் செல்லும் மாணவனுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது? வீட்டிலிருந்து கிளம்பினால் ஸ்கூல். ஆனால், ஸ்டீவ் பல நாள்கள் தாமதமாகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். விஷயம் அவரின் அம்மா காதுக்குப் போனது. அன்றைக்கு அம்மா விசாரித்தபோது, ஸ்டீவ் சொன்னார்... “நடு ரோடும்மா. ஓணான் ஒண்ணு ரோட்டுல கால்ல அடிபட்டுக் கிடந்துச்சு. அதை அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா? அதான்... அதை எடுத்துட்டுப் போயி, பத்திரமா நிறைய மரங்கள் இருக்குற இடத்துல விட்டுட்டு வந்தேன்...’’ 

அப்போது ஸ்டீவுக்கு ஒன்பது வயது. அப்பாவோடு அவர் பார்த்த வேலை என்ன தெரியுமா? ஆற்றில் படகுகள் மீது மோதி தள்ளி, தொந்தரவு தரும் முதலைகளைப் பிடிக்கும் வேலை. வளர வளர முதலை போன்ற உயிரினங்களின் மீதான காதல் அவருக்கு அதிகமானது. முதலைகளை மீட்டுப் பராமரிக்கும் அமைப்பில் தன்னார்வலரானார். அடர்ந்த காடுகளுக்குள் சென்று மாதக்கணக்கில் பழியாகக் கிடந்தார். மற்றவர்களின் கைக்குச் சிக்கும் நிலையில் இருந்த பல முதலைகளை மீட்டார். அவற்றில் வழிதவறி வந்த பல முதலைகளை அவற்றின் இருப்பிடத்தில் பத்திரமாகச் சேர்த்தார்; சிலவற்றை தன்னுடைய குடும்பம் நடத்தும் உயிரியல் பூங்காவுக்கு எடுத்துப் போய் காப்பாற்றினார். அப்படி அவர் மீட்ட முதலைகளின் எண்ணிக்கை 100-க்கும் மேலிருக்கும். 

முதலை பண்ணை

முதலைகளை அவர் கையாண்ட வழிமுறைகளைத்தான் உலகின் பிரபல முதலை வேட்டைக்காரர்கள் இன்று பின்பற்றுகிறார்கள். அவருடைய குடும்பம் நடத்திய உயிரியல் பூங்கா, `குயின்ஸ்லேண்ட் ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ என்று 1980-ம் ஆண்டு அழைக்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் அதை `வீடு’ என்றுதான் அழைப்பார். 1991-ம் ஆண்டிலிருந்து அந்த பூங்காவை ஸ்டீவே நிர்வகிக்க ஆரம்பித்தார். அதற்கு `ஆஸ்திரேலியா ஜூ’ (Australia Zoo) என்று பெயரும் வைத்தார். அதே ஆண்டுதான் அமெரிக்காவிலிருந்து சுற்றிப் பார்க்க வந்த டெர்ரி ரெயின்ஸ் (Terri Rains) என்பவரைப் பார்த்தார். பார்த்ததும் காதல்... பிறகு அது திருமணத்தில் முடிந்தது. 

திருமணம் முடிந்ததும் தேன்நிலவுக்குப் போவார்கள் இல்லையா? ஸ்டீவும் டெர்ரியும் போன இடம் காடு... இருவரும் சேர்ந்து முதலைகளைத் தேடிப்போனார்கள். அந்த அனுபவத்தை `தி குரோக்கடைல் ஹன்ட்டர்’ என்ற ஆவணப் படமாக எடுத்தார்கள். அது தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பானது. இதுபோல வனவாழ் உயிரினங்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் பல ஆவணப்படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். குரோக் ஃபைல்ஸ் (Croc Files), `தி குரோக்கடைல் ஹன்ட்டர் டயரீஸ்’ இவையெல்லாம் மிக முக்கியமானவை; லட்சக்கணக்கானவர்களின் ஆதரவைப் பெற்றவை. கடல்வாழ் உயிரினங்கள், நத்தைகள், கடல் பாம்புகள், சுறா மீன்கள், ஆக்டோபஸ், உப்பு நீர்ல் வாழும் முதலைகள், விஷமுள்ள ஜெல்லி மீன்கள்... எனத் தேடித் தேடி படம் பிடித்தார் ஸ்டீவ். ஒருமுறை, ஒரு பேட்டியில் ``நான் பார்த்ததுலயே பெரிய பாம்பு, ஸ்டோக்ஸ்தான் (Stokes Sea Snake) ரொம்பப் பெருசு’’ என்று வியந்து சொல்லியிருக்கிறார் ஸ்டீவ். 

முதலை

ஸ்டீவ்-டெர்ரி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தபோது, தன் மகளுக்கு அவர் வைத்த பெயர் `பிண்டி’ (Bindi). `பிண்டி’ என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு முதலையின் பெயர். அதற்குப் பிறகு ஓர் ஆண் குழந்தை அவர்களுக்குப் பிறந்தது. `ராபர்ட்’ என்று பெயர்வைத்தார்கள். 

அது 2006-ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவின், பேட் ரீஃப் (Batt Reef)-க்கு அருகே கடலுக்கு அடியில் ஓர் ஆவணப் படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. நம் ஊரில் `திருக்கை மீன்’ என்று சொல்வோம். அங்கே `ஸ்டிங்ரே’ (Stingray) என்று சொல்வார்கள். வாலிருக்கும் பகுதியில் நீளமான கொடுக்கு ஒன்று அதற்கு இருக்கும். கிட்டத்தட்ட 2 மீட்டர் நீளம் கொண்டது. திடீரென்று எங்கிருந்தோ வந்த அந்த மீன், சில நொடிகளில் அவரைத் தன் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் அவருடைய இதயம் இருக்கும் பகுதியில். படக்குழுவினர் அவரை மீட்டு, கடற்கரைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குள் ஸ்டீவ் இறந்துபோயிருந்தார்.

 

மனிதனைத் தவிர பிற உயிரினங்களுக்குப் பிரத்யேகமான ஓர் உணர்வு உண்டு. அந்நியர்களிடமிருந்து எப்போதும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் `அலெர்ட்’ உணர்வு. கங்காருக் குட்டி, தாயின் மடிக்குள் தாவி உட்கார்ந்துகொள்வதும், ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வந்ததும் தன் தாயிருக்கும் கடலை நோக்கிச் சரியாக நகர்ந்து போவதும் அதனால்தான். அந்த ஸ்டிங்ரே மீனுக்கு ஸ்டீவைப் பற்றித் தெரியாது. அதைப் பொறுத்தவரை, ஸ்டீவ் ஓர் அந்நியன். அதனால் தாக்கியிருக்கிறது. அவருடைய மனைவி டெர்ரி ரெயின்ஸ்தான் இப்போது உயிரியல் பூங்காவைப் பார்த்துக்கொள்கிறார். மகன், ராபர்ட்டுக்கு அப்பாவைப்போலவே பல்லி, பாம்பு, முதலைகள் போன்ற ஊர்வனவற்றின் மேல் அலாதிக் காதல். அவற்றின் பின்னால் அப்பாவைப்போலவே ஓடிக்கொண்டிருக்கிறார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோலி - அனுஷ்கா மும்பை திருமண வரவேற்பு: குவிந்த பிரபலங்கள்! (புகைப்படங்கள்)

 

 
kohli_anushka1

 

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 15 நாள்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதையடுத்து தில்லியில் கடந்த 21 அன்று வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மும்பையில் விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஏ.ஆர். ரஹ்மான், தோனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

PTI12_26_2017_000179B.jpg

virushka_rohit1.jpg

virushka_dhoni1.jpg

 

 

virushka_dhoni122.jpg

virushka_dhoni133.jpg

PTI12_26_2017_000183B.jpg

PTI12_26_2017_000182B.jpg

 

virushka_amitab122.jpg

virushka_amitab1567.jpg

virushka_amitab1.jpg

virushka_indianteam1.jpg

virushka_rahman13.jpg

 

 

virushka_shah1.jpg

virushka_zaheer21.jpg

PTI12_26_2017_000178A.jpg

 

http://www.dinamani.com

இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி

இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர்.

DSCKYuaVoAAxqIv.jpg

 

DSCMrCgXkAAPu1C.jpg

 

DSCMrCpXkAEMpFk.jpg

 

DSCMrCgX0AE2A9X.jpg

  • தொடங்கியவர்

 

ஆஃப்கானிஸ்தானை சோவியத் படைகள் கைப்பற்றிய நாள்!

  • தொடங்கியவர்

இளமை முதல் உயிரைப் பறித்த தோட்டாக்கள் வரை! - பெனாசிர் புட்டோ நினைவுகள் #BenazirBhutto #RememberingBenazir

 

பெனாசீர் புட்டோ

ரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம்கொண்ட குடும்பம். அதனால், தானும் பிற்காலத்தில் அரசியல் களத்தில் இறங்கி, பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை இளமைப் பருவத்தில் சூசகமாக உணர்ந்திருந்தார் பெனாசிர் பூட்டோ. அதன்படியே, தந்தையின் மறைவுக்குப் பிறகு, அரசியலில் களமிறங்கினார். 24 வயதில் பிரதமானது, எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலாக இருந்தது, தன் உயிரைப் பறிக்க காத்திருந்த வெடிகுண்டுகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் சவாலாக இருந்தது என, பெனாசிரின் வாழ்க்கை முழுவதுமே போராட்ட அத்தியாயங்கள். 2008-ம் ஆண்டு, பெனாசிரின் உயிரைத் தோட்டாக்கள் பறித்த தினம் (டிசம்பர் 27) இன்று. 

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்ஃபிக்கார் அலி பூட்டோ - பேகம் நஸ்ரத் பூட்டோ தம்பதிக்கு மூத்த மகளாக 1953, ஜூன் 21-ல் பிறந்தவர், பெனாசிர் பூட்டோ. பெற்றோர் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இருந்ததால், சிறு வயதிலேயே அரசியல் சூழலில் வளர்ந்தார். படிப்பில் மிகுந்த ஆர்வம். கராச்சி நகரின் பல பள்ளிகளில் பள்ளிப் படிப்பையும் வெளிநாட்டுக் கல்லூரிகளில் தத்துவம், அரசியல், பொருளாதாரப் படிப்புகளையும் முடித்தார். 'என் கல்லூரிப் பருவம்போல, மீண்டும் ஒரு பொற்காலம் கிடைக்காது' என்று பலமுறை கூறியிருக்கிறார். 

பெனாசீர் புட்டோ

படிப்புடன் நிற்காமல் சமூக நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்தினார். 'ஏன் எதற்கு' எனப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே தீர்க்கமான கேள்விகளையும் விவாதங்களையும் முன்வைத்தார். அந்தக் குணமே, பெனாசிரை துணிச்சலுடன் பல பிரச்னைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வைத்தது. இவரின் கல்வி அறிவுத்திறனுக்காக 1976 டிசம்பரில், ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சங்கத்தின் தலைவரான முதல் ஆசியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார். 

கல்லூரிப் படிப்பை முடித்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார் பெனாசிர். சிறைவாசத்திலிருந்த தந்தை தூக்கிலிடப்பட்டது, தனது வீட்டுக் காவல் உள்ளிட்ட அடுத்தடுத்த நிகழ்வுகள் பெனாசிரைப் பெரிதும் பாதித்தது. இதனால், அரசியல் மற்றும் நாட்டின் கள நிலவரத்தை நன்கு உணர்ந்தார். கடும் சிக்கலிலும் தீர்க்கமான முடிவெடுத்து தன் 24 வயதில், தந்தையின் 'பாகிஸ்தான் மக்கள் கட்சி' தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போது, பாகிஸ்தான் நாட்டு அரசியலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய பெண் ஆளுமைகள் யாருமில்லை. 

பெனாசீர் புட்டோ

1987-ம் ஆண்டு ஆசிஃப் அலி ஜர்தாரியை திருமணம் செய்துகொண்டார் பெனாசீர். பிலாவால், பக்த்வார், ஆசீஃபா ஆகிய குழந்தைகள் பிறந்தன. தனி ஒரு பெண்ணாகத் தொடர்ந்து மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினரால் பல எதிர்ப்புகளையும் துயரங்களையும் எதிர்கொண்டார். 1988-ம் ஆண்டு தனது 35-ம் வயதில் முதல் பொதுத் தேர்தலை எதிர்கொண்ட்ஃபார் பெனாசீர். இவரது கட்சி மிகப்பெரிய வெற்றிபெற, பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். அரசை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பெற்றார். பிரதமராக இருந்த காலங்களில் மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அபிவிருத்தி வங்கிகளை அதிக அளவில் நிறுவினார். கருக்கலைப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தும், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் முரண்பாடான பல சட்டங்களையும் நீக்கினார். 'உலகப் பெண் தலைவர்களின் கழகம்' என்ற அமைப்பை நிறுவி, அதன் உறுப்பினராகவும் இருந்தார். 

20 மாதங்களிலேயே பதவியை இழந்து, எதிர்க்கட்சித் தலைவரானார். 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகி, மீண்டும் 1996-ம் ஆண்டு பதவியை இழந்தார். இந்த இருமுறையும் பெனாசீர் பதவியை இழக்க, கணவரின் மீதான ஊழல் புகார்களே முக்கிய காரணமாக இருந்தது. இப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளைச் சமாளிக்க கடும் சிரமத்தை எதிர்கொண்டார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் 1998-ம் ஆண்டு துபாயில் குடியேறினார். அங்கேயே குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண்டிருந்தார். 

2007-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பெனாசீர், தன் மீதான முந்தைய குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் மீண்டுவந்தார். அரசியலில் மீண்டும் தடம் பதிக்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கவும் முன்பைவிட அதிகமாகப் போராடினார். அந்தச் சமத்தில் அவரைக் குறிவைத்து பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடந்தன. அவற்றுக்கெல்லாம் கடும் சவாலாக இருந்தார் பெனாசீர். தன் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தும், அஞ்சாமல் களப்பணிகளில் ஈடுபட்டார். எப்போது வேண்டுமானாலும் தன் உயிர் போகும் என்பதை உணர்ந்திருந்தவர், 'உங்களுடன் எத்தனை நாள் அன்பு செலுத்தப்போகிறேன் எனத் தெரியவில்லையே' என்று பல முறை தன் குடும்பத்தாரிடம் நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார். 

பெனாசீர் புட்டோ

தன் பிரசாரக் கூட்டங்களில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் சமூகப் பிரச்னைகளுக்கு அதிக அளவில் குரல் கொடுத்தார். பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரம் இருந்த சூழல். முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்த பெனாசீர், டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டார். குண்டு துளைக்காத வாகனத்தின் மேற்கூரைப் பகுதியில் நின்றபடி மக்களைப் பார்த்து கையசைக்க ஆயத்தமானார். அப்போது, மறைந்திருந்து சுட்ட எதிராளியின் துப்பாக்கிக் குண்டுகள், பெனாசீர் உடலைத் துளைத்தன. சற்று நேரத்தில் கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்தன. மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெனாசீர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமானரான பெனாசீருக்குப் பிறகு, அந்நாட்டில் இதுவரை பெண்கள் யாரும் பிரதமராகவில்லை. அந்த நாட்டுச் சரித்திரத்தில் நீங்கா அடையாளம் பெற்ற, பூட்டோவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் இதுவரை கண்டறிந்து தண்டிக்கப்படவில்லை. பெனாசீரின் தைரியமான போராட்டக் குணம் பலருக்கும் பாடமாக திகழ்கின்றது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், உலகம் முழுக்கவே அரசியல் வாழ்வு பெண்களுக்கு பல மடங்கு சவால்களையும் போராட்டங்களையும் தருவதாகவே உள்ளன என்பதுக்கு பெனாசீரின் வாழ்க்கையும் எடுத்துக்காட்டு. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

`தாமரை மலர்ந்தே தீரும்', `தர்மயுத்தம்', `ஷட்அப் பண்ணுங்க' - 2017-ன் வைரல் வார்த்தைகள்

 
 

2017 முடியப்போகிறது. 'ஹாய் எவ்ரிபடி... விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என புல்லட்டில் டகடகவென வந்து உலக நாயகன் விஷ் செய்ய இன்னும் சில தினங்களே இருக்கின்றன. ஆகவே, வருஷக் கடைசி பதிவுகள் கட்டாயமாகின்றன. இங்கே நாம் பார்க்கப்போவது இந்த ஆண்டில் பலரால் உச்சரிக்கப்பட்டு பயங்கரமாக ட்ரெண்டான வைரல் வார்த்தைகள். லெட்ஸ் கோ ஃபார் எ ரீவைண்ட்!

தோழர்:

 

இந்த ஆண்டு தொடங்கியதே சமத்துவம் பேசும் இந்த சூப்பர் வார்த்தையில்தான். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் திடீரென வெடித்த போராட்டம் பட்டிதொட்டியெங்கும் பரவ, மாநிலமெங்கும் கருப்புசட்டை மயமானது. முதலில் துணைநின்ற காவல்துறையின் லத்திகள் பின்னர் உடனிருந்தவர்களின் உடல்களையே பதம்பார்த்தன. உச்சகட்டமாக ஒரு போலீஸ் அதிகாரி, 'இனிமே யாராவது தோழர்னு உங்க பையனை கூப்பிட்டா அவங்ககூட சேரவிடாதீங்க' என பெற்றோர்களுக்கு வான்டடாக வந்து அட்வைஸ் செய்தார். அவ்வளவுதான். கருப்பு, சிவப்பு, கருஞ்சிவப்பு என அத்தனை கொடிகளும் 'தோழர்' புகழ் பாடின. கெத்து வார்த்தை பாஸ் அது!

அம்மாவின் ஆன்மா:

நியாயமாக பார்த்தால் பிப்ரவரியிலேயே தமிழகத்தில் குருபெயர்ச்சி சனிபெயர்ச்சி எல்லாம் தொடங்கிவிட்டன. அம்மாவின் சமாதியில் அரை மணிநேரமாக மூக்கடைப்பு நீங்க பயிற்சி செய்த ஓ.பி.எஸ் வெளியே வந்து 'அம்மா ஆன்மாவின் ஆணைப்படி கட்சியைத் துண்டா உடைக்கிறேன்' என்றார். பற்றிக்கொண்டது தமிழகம். அதன்பின் ஆளாளுக்கு அம்மாவின் ஆன்மா வார்த்தையை தத்தெடுத்துக்கொண்டார்கள். பாவம் ஜெ. கடைசியாக ஓய்வெடுக்கும் இடத்தை தத்தெடுக்கத்தான் யாருமில்லை.

'பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்':

வைரல்

அந்தப்பக்கம் ஓ.பி.எஸ் மூச்சுப்பயிற்சி செய்ய, இந்தப்பக்கம் சின்னம்மா கண்களால் குச்சிபுடி ஆடிக்காட்டினார். நடுராத்திரி போயஸ் கார்டன் கேட் பக்கமாக நின்றுகொண்டு அவர் சொன்ன 'ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்' வார்த்தை நேரங்காலம் எல்லாம் பார்க்காமல் ட்ரெண்டானது. வார்த்தையைவிட அவர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் 'வாவ்டா' ரகம். பாவம் பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த எடப்பாடி டீமும் அதைத்தான் செய்துகொண்டிருந்தது என்பதை கவனிக்க மறந்துவிட்டார் சின்னம்மா!

'அதை நீங்கள்தான் கூறவேண்டும்':

வைரல்

'அரசியலில் தேக்கநிலை ஏற்படும்போதெல்லாம் ஒரு புண்ணியவான் படாரென என்ட்ரி கொடுத்து கிச்சுகிச்சு மூட்டுவார்' என்பார் பிரபல அரசியல் விமர்சகர் 'கான்ட்ராக்டர் நேசமணி'. இந்த ஆண்டின் பெருமைமிகு அறிமுகம் தீபா. என்ன கேள்வி கேட்டாலும், எவ்வளவு தெளிவாக கேட்டாலும், 'அதை நீங்கள்தான் கூறவேண்டும்' என சிம்பிளாக சொல்லிவிட்டு நடையைக் கட்டுவார். 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' காமெடியின் ரியல் வெர்ஷன் இது. அதன்பின் தீபா உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் வைரல்கள் அல்ல, வரலாறுகள்!

ஷட் அப் பண்ணுங்க:

வைரல்

இந்தியாவின் முப்படைகளைத் தாண்டி நான்காவது படையாக உருவானது 'ஓவியா ஆர்மி'. 'பிக்பாஸ் பி.ஜே.பி'யால் உருவான பஞ்சாயத்துகளை எல்லாம் தமிழர்கள் மறக்க உதவியது இந்த துறுதுறு தேவதையின் சேட்டைகள்தான். ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் மறுநாள் சார்ட்பஸ்டர் ஹிட்டாகின. 'ஷட் அப் பண்ணுங்க', 'ஸ்பிரே அடிச்சு போட்டுருவேன்', 'எங்க அடி பார்ப்போம்' என மிரட்டல் டயலாக்குகளால் தெறிக்கவிட்டார்.     

'தாமரை மலர்ந்தே தீரும்':

தேசியக்கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசையின் தங்க வார்த்தைகள் இவை. ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்தினால் ட்ரெண்டாகும் எனத் தெரிந்து ஆண்டு முழுக்க இதை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனா, மேடம் ஒரே ஒரு ஆள் மட்டும் திரும்ப திரும்ப சொன்னா எல்லாம் ட்ரெண்டாகாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க! ஒரு ஹியூமருக்காக இந்த லிஸ்ட்ல சேர்த்திருக்கோம். தாமரை ட்ரெண்டே ஆகலன்னா அப்புறம் எங்கே ஓட்டு வாங்க? ப்ச்!

'போர் வரட்டும்':

நான் குழந்தையாக இருந்தபோது திடீரென ஒருநாள் சுற்றுவட்டாரமே பரபரப்பானது. 'ரஜினி அரசியலுக்கு வரப்போறாராம்' என்ற தகவல் பரவியதே அதற்குக் காரணம். இப்போது என் செட்டில் உள்ளவர்களுக்கே குழந்தைகள் பிறந்துவிட்டன. இன்னும் அவர் வருவதற்கான அறிகுறியே காணோம். ஆனால் ஆண்டுக்கொரு முறை ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார். இந்தத் தடவை அவர் சொன்னது, 'போர் வரட்டும் பாத்துக்கலாம்' என்பது! 'நீங்க அரசியலுக்கு வர்றீங்க'னு பேச்சு வந்ததுக்குப் அப்புறம் ரெண்டு உலகப்போரே நடந்துடுச்சு தலைவா!

'வர்றேம்மா - மசாலா அரைச்சு வைம்மா!':

இந்த ஆண்டு கோலிவுட்டில் அதிகம் ட்ரெண்டான வார்த்தைகள் இவை இரண்டும்தான். நெட்டிசன்களால் அதிகம் வறுத்தெடுக்கப்பட்ட இரண்டு படங்களின் வசனங்கள் இவை. 'தலயை விட்டுடுங்க சிவா' என அஜித் ரசிகர்களே கதறுமளவிற்கு விவேகத்தில் 'வச்சு' செஞ்சிருந்தார் சிவா. மறுபக்கம் முத்துராமலிங்கம் படத்தில், பாவம் மீசைகூட ஒழுங்காக முளைக்காத கெளதம் கார்த்திக்கை வைத்து பன்ச் டயலாக்குகள் எல்லாம் பேச வைத்திருந்தார்கள். ஒருபடம் முழுக்க மீம் டெம்ப்ளேட்டா எடுக்கிற மனசு இருக்கே! அதான் சார் கடவுள்!

ஆன்டி இந்தியன்:

எவ்வளவோ சட்டங்கள் போடும் மோடி ஹெச்.ராஜா வாயைப் பூட்டும் சட்டம் ஏதாவது போட்டால் நமக்கு நல்லது. நம்மைவிட மோடிக்கும் பி.ஜே.பிக்கும் நல்லது. ஓட்டுமிஷினில் மாற்றி அமுக்கியதால் தவறிப்போய் விழும் ஒன்றிரண்டு ஓட்டுகளையும் பா.ஜ.கவுக்கு கிடைக்கவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ராஜா. போன ஆண்டே அவரின் 'ஆன்டி இந்தியன்' பன்ச் பேமஸானாலும் இந்த ஆண்டுதான் அதிகம் பயன்படுத்தினார். போக, 'ஜோசப்' என்ற பெயரும் அவர் புண்ணியத்தில் வைரலானது. நின் கொடை தமிழ்மொழிக்கு தேவை!

Peace Bro:

'மெர்சல்' டீசர் வெளியான நேரத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமே கொண்டாடிய இந்த டயலாக், படம் வெளியானபின் அனைவரும் கொண்டாடும் வசனமானது. உபயம்: ஹெச்.ராஜா! காரணம் - நாலாவது தெருவில் யாரோ ஒரு தங்கச்சி அவள் அண்ணனை அழைத்தாலும் தன்னை அழைத்ததாக வான்டடாக ஆஜராகும் ராஜாவின் குணம். ஜி.எஸ்டி வசனத்தால் ஜெலுசில் குடித்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் 'Peace Bro' சொல்லி இன்னும் வெறிப்பேற்றினார்கள் நெட்டிசன்கள். படம் ஐம்பதுநாட்கள் கடந்தும் மெர்சல் காட்டியதற்கு பி.ஆர்.ஓ ராஜாவும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. 

'அமைதியோ அமைதி':

வைரல்

மீசை வைத்த குழந்தைகள் நம்மிடையே அதிகம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திய ட்ரெண்ட் இது. எந்தக் காலத்திலேயோ டிவியில் வெளியான ஷின்ஷானை 'இந்திரஜித்' கெளதம் கார்த்திக் போல தோண்டியெடுத்து ட்ரெண்டாக்கிவிட்டார்கள் நெட்டிசன்கள். (இரண்டு நிமிட கார்ட்டூன் மொத்த இந்திரஜித் படத்தையும்விட நன்றாக இருக்கும் என்பது கூடுதல் செய்தி!) அதில் அந்த சிறுவன் பேசும் 'அமைதி அமைதி அமைதியோ அமைதி' வசனம் வயது பாரபட்சமே இல்லாமல் ஷேரிங் ஆனது.

தர்மயுத்தம்:

 

1979-ல் 'தர்மயுத்தம்' படத்தை எடுத்தபோது அதற்கான ப்ரொமோஷன் 38 ஆண்டுகள் கழித்து நடக்கும் என ரஜினியோ, ஆர்.சி சக்தியோ நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள். பிப்ரவரியில் தொடங்கி லேட்டஸ்ட்டாக ரிலீஸான ஜெயலலிதா வீடியோ வரை 'தர்மயுத்தம்' ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கிறது. இதுநாள் வரை நியாய தர்மங்களுக்கான அளவுகோலாக இருந்த அந்த வார்த்தை இன்று மலிவான அரசியல் செய்ய பயன்படுகிறது. இனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும்போதெல்லாம்...!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால 'சிங்க மனிதர்'

ஜெர்மனியில் உள்ள ஒரு பழங்கால குகையை 1939-இல் இரு ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது கிடைத்த மாமூத் யானையின் தந்தத்தின் துண்டுகளை ஒன்றாகப் பொருத்தியபோது அதில் ஒரு 'சிங்க மனிதரின்' உருவம் கிடைத்தது.

  • தொடங்கியவர்

அட இது தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்! - பிரமித்த ஹாலிவுட் நடிகர்

 
 

ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ’தி ராக்’ என்றழைக்கப்படும் 'டுவைன் டக்ளஸ் ஜான்சன்', இந்திய ரசிகர்களின் ஆதர்ஷ விளையாட்டான கிரிக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார்.

Dhoni_09405.jpg

 
 

வீடியோ நேர்காணல் ஒன்றில் கிரிக்கெட் குறித்து பேசிய ராக்கிடம், கிரிக்கெட் போட்டியின்போது நடுவர்கள் செய்யும் சைகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவுட், சிக்ஸர், மூன்றாவது நடுவர் முடிவு மற்றும் நோ பால் ஆகியவை குறித்து கள நடுவர் சைகை செய்வதுபோன்ற வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட ராக், சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் வீரர்கள் சிலரின் ஷாட்கள் காண்பிக்கப்பட்டு, அதன் பெயர் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

முதல் வீடியோவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் காண்பிக்கப்பட்டது. அது ஹெலிகாப்டர் ஷாட் என்பதைச் சரியாகக் கூறிய ராக், அடுத்து தில்ஷனின் ரேம்ப் ஷாட் மற்றும் ஸ்லோ பவுன்சர் என அடுத்தடுத்த வீடியோக்களில் காண்பிக்கப்பட்டவைகள் குறித்து சரியான விடை கூறி அசத்தினார். இந்தப் பேட்டியின்போது இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரிய அளவிலான ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் ராக் கூறினார். இந்த வீடியோ கேள்வி, பதில்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராக், ’கிரிக்கெட் விளையாட்டு குறித்து நிச்சயம் ஒருநாள் நான் முழுமையாக அறிந்துகொள்வேன். பொறுமையாக இருந்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

One day I will be a Cricket Master! I clearly have some work to do so thank you being patient with me INDIA.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐஸ்வர்யா ராயின் லெஹங்கா, ஸ்ரீதேவி வெல்வேட் சேலை, தோனி மகளின் சோலி...விருஷ்கா திருமண வரவேற்பில் பிரபலங்களின் உடைகள்! #Viruksha #VikatanPhotoStory

 
 

விருஷ்கா


மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்ற விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் திருமண வரவேற்பு விழாவில், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், மஹேந்திர சிங் தோனி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாரூக்கான், சாய்னா நேவால், யுவராஜ் சிங், அஸ்வின் உள்ளிட்ட பல பிரபலங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இந்தத் திருமண வரவேற்பு விழாவில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் உடைகள் மட்டுமல்ல, வந்திருந்த பிரபலங்களில் உடைகளும் கவனம் ஈர்த்தது. 

 
 

விருஷ்கா

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், தங்க வேலைப்பாடுகள் கொண்ட எம்ரால்ட் பச்சை நிற சேலையில் ஜொலித்தார். இதனை வடிவமைத்தது பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலேயனி. (Tarun Tahiliani) -  PC: instagram.com/madhuridixitnene/

 விருஷ்கா


பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த வெளிர் நீல நிற ஆடையை அணிந்திருந்தார் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப். அதிக மேக்-ஆப் இல்லாமல், சிம்பிள் லுக்கில் இருந்தார். 

விராட்

PC: Twitter

சச்சின் டெண்டுல்கர் தன் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாராவுடன் இந்த விழாவில் கலந்துகொண்டார். அஞ்சலி டிசைனர் சுடிதார் அணிந்திருக்க, மகள் சாரா க்ரீம் கலர் ஃபிராக்கில் ‘க்யூட்’டாக இருந்தார். 

விருஷ்கா

PC:instagram.com/manishmalhotra05

பாலிவுட் லெஜெண்ட் அமிதாப் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய், மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த வெள்ளை நிற ஹெலங்காவுடன் ட்ரான்ஸ்பரண்ட் துப்பட்டா அணிந்திருந்தார். 

விருஷ்கா

                                                                                             PC:instagram.com/manishmalhotra05
நடிகை ஸ்ரீதேவி தன் கணவர் போனி கபூருடன் கலந்துகொண்டார். ஸ்ரீதேவி நீல நிற பஷ்மீனா வெல்வேட் சேலைக்கு, தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட கறுப்பு ப்ளவுஸ் அணிந்து, நேர்த்தியாக இருந்தார். 

விருஷ்கா

                                                                                            PC:instagram.com/manishmalhotra05

’காற்று வெளியிடை’ நடிகை அதிதி ராவ் , மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த அடர் நீல நிற டாப் மற்றும் லெஹங்கா அணிந்து, கலர்பூல் லுக்கில் இருந்தார். 

விராட்

                                                                                              PC:instagram.com/manishmalhotra05
நடிகை ரேகா, பிரபல இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர். நடிகை ரேகா தங்க நிற பட்டுப்புடவையில் ‘கிளாசிக்’ லூக்கில் இருந்தார் நடிகை ரேகா. 

விருஷ்கா

                                                                                                                
நடிகை பிரியங்கா சோப்ரா, பாரம்பரிய தங்க நிற சேலைக்கு பச்சை நிற ப்ளவுஸ் அணிந்து வந்தார். அதற்கு ஏற்ப பொட்டு, தங்க நெக்லஸ் என ’இந்தியன் டச்’ இருந்தது. 

விராட்


ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார். ரஹ்மான் கறுப்பு கோட்-சூட்டில் கிளாசிக் லுக்கில் இருக்க, சாய்ரா பானு க்ரீம் நிற சல்வார் கமீஸ்சில் அணிந்திருந்தார். 

விராட்
 

 

மஹேந்திர சிங் தோனி, மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவாவுடன் கலந்துகொண்டார். அப்பா தோனி அனைவரையும் பார்த்து கையசைக்க, அதேபோல் மகள் ஸிவாவும் குட்டி சோலி அணிந்துக்கொண்டு, கையசைத்த்து ‘செம்ம க்யூட்’. சாக்‌ஷி ‘பேபி பிங்க்’ நிற லெஹங்கா அணிந்திருந்தார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

2017 உலகம் ஒரு பார்வை: ட்ரம்ப் முதல் ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா வரை

 

 
uiopjpg

2017-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்... இந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் குறித்த ஒரு தொகுப்பு

அமெரிக்க அதிபராக ட்ரம்ப்

பல விமர்சனங்கள், எதிர்ப்புகள் மத்தியில் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளில் ஒன்றான 7 முஸ்லிம் நாடுகளுக்கு  (இரான், ஈராக், ஏமன், சோமாலியா, லிபியா சூடான், மற்றும் சிரியா) விசா மறுக்கப்பட்டது. ட்ரம்பின் குடியேற்ற கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

வடகொரியா - அமெரிக்கா இடையே முற்றும் மோதல்

அணுஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க புதிய பொருளாதாரத் தடையை விதித்தது. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஆணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டது. இதன் காரணமாக ட்ரம்ப்- கிம் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டன. தென் கொரியா, ஜப்பானுடன் இணைந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் நிலவியது.

குறிவைக்கப்பட்ட கத்தார்

அல் கொய்தா, இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் முஸ்லிம் பிரதர்ஹூட் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவி செய்வதாக குற்றம் சாட்டி தடை விதிப்பதாக அறிவித்தன. இதனால் இப்பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கத்தாருடனான வான் வழி மற்றும் தரைவழி, கடல்வழி போக்குவரத்துக்கு சவூதி அரேபியா தடைவிதித்துள்ளது. தூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கத்தார் குடியுரிமை பெற்றவர்கள் 14 நாள்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் கெடு விதித்தது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகளுடன் லிபியா, மாலத்தீவுகளும் சேர்ந்து கத்தாருக்கு எதிராக இந்த முடிவை அறிவித்தன.

அதிர்வலையை ஏற்படுத்திய பாரடைஸ் பேப்பர்

2017-ல் பாரடைஸ் பேப்பர்ஸ் சர்வதேச அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணக்காரர்கள் வரிச்சலுகையைப் பயன்படுத்தும் ரகசியங்களைப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேசக் கூட்டமைப்பு நவம்பர் 5 அன்று ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ என்ற ஜெர்மன் நாளிதழில் அம்பலப்படுத்தியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலக நாடுகளின் 96 பத்திரிகைகள் இணைந்து நடத்திய இந்த விசாரணையில் கடன் ஒப்பந்தங்கள், நிதி அறிக்கைகள், மின்னஞ்சல் உட்பட 70 லட்சம் ஆவணங்கள் சிக்கின.

ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா!

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 2017 செப்டம்பர் மாதப் பதிப்பில் ‘அப்பா’, ‘அண்ணா’ உள்ளிட்ட தமிழ்ச் சொற்கள், மேலும் வடை, குலாப் ஜாமுன், கீமா, மிர்ச் மசாலா போன்ற இந்திய உணவுப் பண்டங்களின் பெயர்களும் இடம்பெற்றன.

வான்வழித் தாக்குதலும், ஏமனும்

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதிப் படைகள் உதவி வருகின்றன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ஏமனில் சவுதி - ஏமன் கூட்டுப் படை தொடர்ந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதாகக் கூறி 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஏமன் அரசு கூட்டுப் படைகள் ஏமன் எல்லையை மூட உத்தரவிட்டன.

இதனால் எல்லைப் புறத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர் இதனைத் தொடர்ந்து ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட்டது.

சிரியாவிலிருந்து வெளியேறுகிறது ரஷ்ய ராணுவம்

சிரியா நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைத் சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அந்த நாட்டின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை போரில் ஈடுபட்டதால் ஐ.எஸ். அமைப்பிடமிருந்து பெரும் பகுதியை அதிபர் ஆசாத் மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட ரோஹிங்கியாக்கள் - மவுனம் காத்த ஆங் சான் சூச்சி

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

இதில் போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

மியான்மர் அரசின் இந்த ராணுவ அடக்குமுறைகளை ஐ.நா. சபை உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டித்தன. மியான்மரில் நடக்கு வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, மியான்மரில் வன்முறை குறித்து சூச்சி, 'மியான்மர் நெருக்கடி குறித்து தவறாக புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன' என்று கூறினார்.

மோசூலை கைப்பற்றிய இராக் அரசு

இராக்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த மோசூல் நகரை அந்நாட்டு அரசுப்படைகள் கைப்பற்றியுள்ளன.மோசூல் நகரில் கட்டுப்பாட்டை இழந்ததன் மூலம் இராக்கில் பெரும் சரிவை ஐஎஸ் சந்தித்தது.

தன்னாட்சி - கேட்டலோனியா

ஸ்பெயினிடம் இருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா, தனி நாடாக தன்னை பிரகடனப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்தது. அதிபர் கார்லஸ் பூஜ்டிமாண்டையும் பதவியில் இருந்து நீக்கியது.

இதற்கிடையில் நடந்து முடிந்த கேட்டலோனியா நாடாளுமன்றத் தேர்தலில் கேட்டலோனியா பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றனர்.

பதவி விலகிய ராபர்ட் முகாபே

கடந்த 1980-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. அப்போதிலிருந்து, ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பின் (இசட்.ஏ.என்.யு) தலைவரான ராபர்ட் முகாபே (93) தொடர்ந்து (37 ஆண்டுகளாக) ஆட்சி செய்து வந்தார்.

இந்நிலையில் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வாவை சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

தொடர்ந்து முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அத்துடன் பதவி விலகுமாறு ராணுவம் அவரை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து 37 ஆண்டுகள் ஜிம்பாப்வேவை ஆண்ட ராபர்ட் முகாபே பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து எம்மர்சன் ஜிம்பாம்வே அதிபராக பதவி ஏற்றார்.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்த ட்ரம்ப்

அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாகவும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்த்து பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் போராட்டங்கள் நடந்தப்பட்டன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

25 ஆண்டுகளாக உறைநிலை கருவில் பாதுகாக்கப்பட்டு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி இந்தக் கருவை தானமாக வழங்கியபோது, அதை தற்போது பெற்றுள்ள பெண்ணுக்கு அப்போது ஒரு வயதே ஆகியிருக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

  • தொடங்கியவர்

98 வயதில் மாஸ்டர் டிகிரி வாங்கிய ராஜ்குமார் வைஷ்!

 
 

கல்விக்கு வயது தடையில்லை என பொதுவான பழமொழி உண்டு. ஆர்வத்தின் காரணமாக பலரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் படித்து பட்டம் பெற்று வருகின்றனர். இந்த வகையில் 98 வயதான ராஜ்குமார் வைஷ் என்ற நபர் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

ராஜ்குமார் வைஷ்

 
 

 

தற்போது ஜார்கண்டில் வசித்துவருகிறார் ராஜ்குமார் வைஷ். இவர் தனது இளங்கலை பட்டத்தை 1938-ம் வருடம் ஆக்ரா கல்லூரியில் பெற்றுள்ளார். அதன் பிறகு 1940 ல் L.L.B பட்டம் பெற்றார். அதன் பிறகு வேலை கிடைத்துவிடவே தனது முதுகலைப் பட்டம் கனவாகிவட்டது என எண்ணியுள்ளார். ஆனால், தற்போது தனது 98-வது வதில் நாலந்தா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ (பொருளாதாரம்) படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். 

ராஜ்குமார் வைஷின் மகன் பாட்னாவிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்யூட்டில் பேராசிரியராக இருந்து பணி ஓய்வுபெற்றவர். அவர் தனது தந்தை குறித்து கூறியதாவது," நான் எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன். நான் ஓய்வு பெற்றுவிட்டேன் ஆனால், அவர் இன்னும் படிப்பது எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகவுள்ளது." என்றார்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

அட்லாண்டிக் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் மாணவர்கள்

செனகலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், கடலில் மூழ்கிய அடிமை வர்த்தக கப்பல்களின் மிச்சங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

  • தொடங்கியவர்
இனியும் சொர்க்கம் வருமென எண்ண முடியுமா?
 

image_48db6e8cb0.jpgவயது முதிர்ச்சியடைய முதிர்ச்சியடைய முதியவர்கள் நல்ல மனப்பக்குவத்தை அடைய வேண்டும். இருக்கிற கொஞ்ச காலத்திலேயாவது எல்லா உயிர்களையும் சமமாகக் கருத வேண்டும்.  

ஆனால், கடைசி மூச்சு இருக்கும்வரை, தானும் தனது மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மட்டும் கருதி, முழுச் சுயநல சிந்தையுடன் வாழ்வது அறியாமையின் உச்சம்தான். 

எவ்வித ஈகைக் குணமும் இல்லாமல் காசை மட்டும் பெரிதாக எண்ணி, நெருங்கிய உறவுகள், ஊராருக்குக் கூட, எந்தவிதமான நல்லதைச் செய்யாமல் உலோபித்தனமான வாழ்க்கை வாழ்வதால் அவர்தம் ஆத்மா எப்போதுதான் ஈடேறுவதோ? 

கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்துவரும், இரக்கமற்ற பிள்ளைகளுக்காக இன்னமும் சொத்துச் சேர்ப்பதால், இனியும் சொர்க்கம் வரும் என எண்ண முடியுமா?  இந்த மாயையை அறுத்து, எந்த உயிரையும் நேசித்தால்த்தான், ஆன்மாக்கள் சுகானுபவங்களைச் சுவீகரிக்கும். 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 28

 

1065 : லண்­டனில் வெஸ்ட்­மின்ஸ்டர் தேவா­லயம் திறந்­து­வைக்­கப்­பட்­டது.

1612 : இத்­தா­லிய விஞ்­ஞானி கலி­லியோ கலிலி நெப்­டியூன் கோளைக் கண்­டு­பி­டித்தார்.

1836 : தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநிலம், அடிலெய்ட் நகரம் ஆகி­யன ஸ்தாபிக்­கப்­பட்­டன.

varalaru-28-12-2015.jpg1836 : மெக்­ஸி­கோவின் சுதந்­தி­ரத்தை ஸ்பெயின் அங்­கீ­க­ரித்­தது.

1879 : ஸ்கொட்­லாந்தில் டண்டீ என்ற இடத்தில் ரயில் மேம்­பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்­ததால், அதில் சென்­று­ கொண்­டி­ருந்த ரயில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1885 : இந்­தி­யாவின் வழக்­க­றி­ஞர்கள், அறி­வி­ய­லா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் 72 பேர் இந்­திய தேசிய காங்­கிரஸ் கட்­சியை ஆரம்­பிப்­ப­தற்கு பம்­பாயில் கூடினர்.

1895 : பிரான்ஸின் லூமி­யேர சகோ­த­ரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்­ப­டங்­களை முதன்­மு­த­லாகப் பொது­மக்கள் கட்­டணம் செலுத்தி பார்ப்­ப­தற்கு திரை­யிட்­டனர்.

1908 : இத்­தா­லியின் சிசிலி தீவில் பூகம்பம் ஏற்­பட்­டதில் 75,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1929 : நியூ­ஸி­லாந்தின் கால­னித்­துவ காவற்­து­றை­யினர் ஆயு­த­மின்றிப் போராட்­டத்தில் ஈடு­பட்ட சமோ­வாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்­றனர். இது சமோ­வாவின் விடு­தலை இயக்­கத்­துக்கு தூண்­டு­த­லாக அமைந்­தது.

1958 : கியூ­பாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

1972 : வட­கொ­ரிய பிர­தமர் கிம் இல் சுங் அந்­நாட்டின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார்.

1981 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது சோத­னைக்­குழாய் குழந்தை எலி­சபெத் கார் வேர்­ஜீ­னி­யாவில் பிறந்­தது.

1989 : அவுஸ்­தி­ரே­லியா, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் நியூ­காசில் நகரில் இடம்­பெற்ற 5.6 அளவை பூகம்பம் கார­ண­மாக 13 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2005 : இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்­றங்­க­ளுக்­காக ஜோன் டெம்­ஜான்ஜுக் என்­ப­வரை யுக்­ரை­னுக்கு நாடு கடத்த ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

2006 : எதி­யோப்­பிய மற்றும் சோமா­லிய அரசுத் துருப்­பு­க­ள் சோமா­லியா தலை­நகர் மொக­டி­சுவை கிளர்ச்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்­றினர்.

2007 : நேபா­ளத்தின் இடைக்­கால நாடா­ளு­மன்றம் நாட்டை குடி­ய­ர­சாக அறி­வித்து மன்­ன­ராட்­சியை முடி­வுக்குக் கொண்டு வந்­தது.

2009 : பாகிஸ்­தானின் கராச்­சியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர்.

2014 : இந்தோனேஷியாவின் ‘எயார் ஏசியா’ நிறுவன பிளைட் 8501 விமானம் ஜாவா கடலில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 162 பேரும் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத குழந்தைகளைக் காப்பாற்றிய அன்னா பாட்டியின் கதை! #FeelGoodStory

 
 

கதை

ன்பு என்ற ஒன்றைவிடப் பெரிய, வேறு எந்த ஞானத்தை உங்களால் அடைந்துவிட முடியும்?’ என்று கேட்கிறார் ஃபிரெஞ்ச் தத்துவவியலாளர் ரூஸோ (Jean-Jacques Rousseau). இதில் ஆழமான உட்பொருள் ஒன்று, இரண்டல்ல... நிறைய இருக்கின்றன. அவற்றை அனுபவபூர்வமாகத்தான் உணர முடியும். பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற மகளைப் பாராட்டப் பரிசுப் பொருள்கள் தேவையில்லை... நெற்றிப்பொட்டில் கொடுக்கும் முத்தம் ஒன்றே மிகச் சிறந்த கிஃப்ட். பெரும் துயரத்தைச் சுமந்து நிற்கும் நண்பனைத் தேற்ற வார்த்தைகளைவிட, தோளில் கைவைத்துக் கொடுக்கும் ஓர் அழுத்தம் போதுமானது. பல வருடங்கள் கழித்து ட்ரெயினில் வந்திறங்கும் தோழிக்குத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இறுக்கமான ஓர் அணைப்பு இன்னொரு தோழிக்குப் போதுமானது. புன்னகை, கை குலுக்குதல், தொடுதல், தட்டிக் கொடுத்தல், கைதட்டிப் பாராட்டுதல்... என நம் அன்பைப் பிறருக்கு வெளிப்படுத்த எத்தனையோ வழிகளும், உடல்மொழியும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் கையாள்வதில்லை. அன்பு மனதுக்கு மட்டுமல்ல... உடலுக்கும் உற்சாகம் கொடுக்கும், சமயத்தில் மருந்தாக, சிகிச்சையாகவும் செயல்படும் என்பதை விளக்கும் கதை இது.

 

20-ம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் இந்த உலகம் எதிர்கொண்ட பிரச்னைகள் அநேகம். அவற்றில் முக்கியமான ஒன்று, குழந்தைகள் இறப்பு. ஏதோ ஒரு நோய், பிரச்னை என ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒரு வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் இதுதான் காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமலேயே இறப்பதும் நடந்தது. ஐரோப்பிய நாடுகளில், சில மருத்துவமனைகள் ஒருவழிமுறையைக் கையாண்டன. சீரியஸான பிரச்னையோடு ஒரு குழந்தை மருத்துவமனைக்கு வந்தால், `நம்பிக்கையில்லை’ (Hopeless) என்று அடையாளப்படுத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது குழந்தைகள் இறப்பது.

மருத்துவர்கள் குழு

நிலைமை இப்படி இருந்தாலும், குழந்தைகள் இறப்பைத் தடுக்க, உண்மையான அக்கறையோடு, ஆத்மார்த்தமாகப் போராடிய மருத்துவர்களும் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரிட்ஸ் டால்போட் (Dr.Fritz Talbot). டஸ்ஸல்டார்ஃப் (Düsseldorf) என்ற நகரில் இருந்த குழந்தைகளுக்கான ஒரு கிளினிக்கில் இருந்தார். பல தாய்மார்களுக்கு டால்போட் கண்கண்ட தெய்வம். எத்தனையோ மருத்துவமனைகள் `நம்பிக்கையில்லை’ என்று கைவிட்ட கேஸ்களெல்லாம்கூட அவரிடம் வந்தன. தன்னால் முடிந்த வரை போராடுவார் டாக்டர் டால்போட். வெறும் மருந்து, மாத்திரைகளை நம்பாமல் பல புதுப்புது வழிகளையும் கடைப்பிடிப்பார். அவரின் பெரு முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. அந்தச் சிக்கலான காலகட்டத்திலும், அவரிடம் வந்த பெரும்பாலான குழந்தைகள் பிழைத்துக்கொண்டார்கள்.

மருத்துவமனையில் தன் மருத்துவர்கள் குழுவோடு ரவுண்ட்ஸ் போவார்; வார்டு வார்டாகப் போவார்; ஒவ்வொரு குழந்தையாக ஆராய்ந்து, குழந்தையின் நோயைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசிப்பார். பின்னர் புதிதாக ஒரு வழியைக் கண்டுபிடித்து, அதைக் கடைப்பிடிக்கச் சொல்வார். டாக்டர் டால்போட்டின் குழுவிலிருந்தவர்களில், அவரோடு உடன் பணியாற்றியவர்களில் டாக்டர் ஜோசப் பிரென்னெர்மேனும் (Dr. Joseph Brennermann) ஒருவர். பின்னாளில் அந்தக் காலகட்டத்தையும் டாக்டர் டால்போட் குழந்தைகளை அணுகும் முறையைப் பற்றியும் அவரே விவரித்திருக்கிறார்.

ரவுண்ட்ஸின்போது டாக்டர் டால்போட் ஒவ்வொரு குழந்தையாகப் பார்த்தபடி வருவார். மிக சீரியஸான நிலையிலிருக்கும் குழந்தையைப் பார்த்தால், ஒரு கணம் நிற்பார். கட்டிலின் முன்னால் தொங்கும் குழந்தையின் சார்ட்டில், ஏதோ எழுதுவார். அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது யாருக்கும் புரியாது. ஆனால், பல குழந்தைகள் அவர் எழுதிய `கிறுக்கல்’ எனப்படும் மாயாஜால கையெழுத்தில் பிழைத்து எழுந்திருக்கிறார்கள். டாக்டர் பிரென்னர்மேனுக்கு, டால்போட் சார்ட் ஷீட்டில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளத் தீராத ஆர்வம். அதில் அவர் பரிந்துரைத்திருப்பது அப்படி என்ன அற்புதமான மருந்து, அந்தச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் எப்படிப் பிழைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளத் தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால், டால்போட்டிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

குழந்தைகள் சிகிச்சை

அன்றைக்கு அப்படித்தான், பிழைக்கவே பிழைக்காது என மருத்துவமனையே நம்பிக்கொண்டிருந்த ஒரு குழந்தை பிழைத்துக்கொண்டது. பிரென்னெர்மேனால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ரவுண்ட்ஸ் முடிந்ததும், தன் வார்டுக்குப் போவதற்கு முன்னர் டாக்டர் டால்போட்டின் தனி அறைக்குப் போனார். அப்படியும் கதவைத் தட்ட அவருக்குக் கைவரவில்லை. தன் வார்டுக்குத் திரும்பும் வழியில் தலைமை நர்ஸைப் பார்த்தார். அவருக்குத்தான் டால்போட் எழுதும் கையெழுத்தும், அதில் உள்ள சிகிச்சையும் புரியும். தலைமை நர்ஸிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தார்.

“மேடம்... எனக்கு ஒரு சந்தேகம்...’’

“கேளுங்க டாக்டர்...’’

“இன்னிக்கி ஒரு குழந்தை உயிர் பிழைச்சுதே... அது எப்படி? டாக்டர் டோல்போட் அப்படி என்ன மருந்து கொடுத்தார்?’’

“இதைத்தான் தெரிஞ்சுக்கணுமா? அந்தக் குழந்தை பிழைச்சதுக்குக் காரணம் அன்னா பாட்டி’’ என்ற தலைமை நர்ஸ், ஓர் அறையைச் சுட்டிக்காட்டினார். அந்த அறையை எட்டிப் பார்த்தார் பிரென்னர்மேன். உள்ளே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் மடியில் ஒரு குழந்தை இருந்தது. அதை மென்மையாகத் தட்டிக் கொடுத்து, தாலாட்டிக்கொண்டிருந்தார் அந்த அன்னா பாட்டி.

அரவணைக்கும் அன்னா பாட்டி

 

நர்ஸ் சொன்னார்... “எங்களால முடிஞ்ச அத்தனை சிகிச்சைகளையும் செஞ்சும் பிழைக்கவே முடியாதுங்கிற நிலைமையில இருக்குற குழந்தையை அன்னா பாட்டிக்கிட்ட கொண்டு வருவோம். அவரோட அரவணைப்பு, தாலாட்டு பல குழந்தைகளைக் காப்பாத்தியிருக்கு. இந்த ஆஸ்பத்திரியில இருக்குற டாக்டர்களாலயும் நர்ஸுகளாலயும் கொடுக்க முடியாத சிறந்த சிகிச்சையை அன்னா பாட்டி பல குழந்தைகளுக்குத் தந்திருக்காங்க.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

பிக் பாஸுக்குப் பிறகு வந்து குவிந்த பட வாய்ப்புகளைப் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கிறார் ஓவியா. ராகவா லாரன்ஸோடு காஞ்சனா 3-ல் நடிக்க ஒப்புக்கொண்டவர், அதன்பிறகு எந்தப் படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை. `பிக் பாஸு’க்குப் பிறகு என் மார்க்கெட் வேற லெவல் என ஓவியா சொல்ல, `சம்பளம் செட் ஆகலம்மா’ எனப் பதறுகிறார்கள் தயாரிப்பாளர்கள். காத்திருக்கிறார் ஓவியா.
பேபியை மூட் அவுட் ஆக்காதீங்க!

p36a_1514278462.jpg

டையைக் குறைத்து, பொறுப்பைக் கூட்டி வந்திருக்கிறார் சிம்பு. மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், அர்விந்த்சாமி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் சிம்புவுடன் நடிக்கிறார்கள். முதலில் `அர்ஜுன் ரெட்டி’யில் நடித்த விஜய் தேவரகொண்டா நடிப்பதாக இருந்த கேரக்டரில்தான் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த ஸ்பெஷல் புராஜெக்ட்டுக்காக சமீபத்தில் மணிரத்னம் மேற்பார்வையில் சிம்புவுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மிகப்பொறுப்போடு நேரம் தவறாமல் பயிற்சியில் கலந்துகொண்டு மணிரத்னத்துக்கே ஷாக் கொடுத்திருக்கிறார் சிம்பு.
சிம்பு சிலிர்ப்புகள்!

p36b_1514278476.jpg

2017-ல் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இதில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சல்மான்கான். அவருடைய ஆண்டு வருமானம் 232 கோடி ரூபாய். ஒரு நாளுக்கு 63 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் சல்லு பாய்! இரண்டாமிடத்தில் ஷாரூக்கான் 170 கோடியுடன் இறங்குமுகம் காண,  மூன்றாவது இடத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விராட் கோலி. அவருடைய ஆண்டு வருமானம் 100 கோடி! இந்தப்பட்டியலில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களும் இருக்கிறார்கள். இதில் 25வது இடத்தில் சூர்யா, 27வது இடத்தில் அஜித்குமார், 31வது இடத்தில் விஜய்க்கும் இடம் கிடைத்திருக்கிறது. கோடியா கொட்டுது!

பால் தாக்ரேவாக தாறுமாறு லுக்கில் வந்திறங்கியிருக்கிறார் நவாஸுதின் சித்திக்கி. பால்தாக்ரேயின் பயோபிக்கான `தாக்ரே’-யில் நவாஸுதின்தன் அதிரடி நாயகன். படத்தை பால்தாக்ரேயின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இந்தப்படம் பாபர் மசூதி இடிப்பும், அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த கலவரங்களும், அந்தச் சமயத்தில் பால்தாக்ரே மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பற்றிப் பேசவிருக்கிறதாம்! தாக்கரே தாக்கம்!

p36c_1514278493.jpg

சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ஸ்பை த்ரில்லர்.  2018 தீபாவளிக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப்படம் சிம்புவுக்காக எழுதித் தொடக்கவிழா மட்டுமே கண்ட ‘கான்’ படத்தின் கதைதான். ஆனால், சூர்யாவுக்கு ஏற்றபடி மாற்றி எழுதியிருக்கிறார் செல்வராகவன். ஸ்க்ரிப்ட் எழுதும் இடைவேளைகளில் பாச அப்பாவாக, கடவுள் பக்தனாக ட்விட்டரில் நெகிழ்ச்சி ஸ்டேட்டஸ்களைத் தட்டிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். செல்வானாலே சென்ட்டிதான்!

ஞ்சலினா ஜோலியிடமிருந்து பிரிந்ததற்குப் பிறகு சிங்கிளாகவே இருந்த பிராட் பிட் இப்போது ஜெனிஃபர் லாரன்ஸோடு மிங்கிளாகியிருக்கிறார். ஜெனிஃபரைக் காதல் வலையில் விழவைக்கவேண்டும் என்பது பிராட் பிட்டின் பல நாள் ஸ்கெட்ச் என்கிறார்கள் பப்பராஸிக்கள். ஆனால், ஜெனிஃபரே `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்’ என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார். ஸ்க்ரிப்ட் இப்படித்தான் ஆரம்பிக்கும்!

p36d_1514278508.jpg

ளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. டிஸ்கவரியின் புகழ்பெற்ற ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷனை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். ``டிஸ்கவரி சேனல் என் ஆல்டைம் ஃபேவரிட். அதிலும் பியர் கிரில்ஸ் என் கனவு நாயகன். அவரால் பாப்புலரான அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவதன் மூலம், இன்னும் என்னை நான் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும். நிகழ்ச்சியை இதுவரை பார்த்திராதவர்களைக்கூட என்னால் பார்க்க வைக்க முடியும்” என எமோஷன் ஆகியிருக்கிறார் சன்னி. மறந்துவிடாதீர்கள்... மறந்தும் இருந்துவிடாதீர்கள்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மின்னணு குப்பைகளில் இருந்து புதிய சாதனங்கள்

மின்னணு குப்பைகளில் இருந்து மரச்சாமான்கள், ஆபரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஓர் நிறுவனம்.

  • தொடங்கியவர்

"என் சம்பளத்தைக் கூறினால் நீங்கள் சங்கடமாக உணர்வீர்கள்": ஷாருக்கானுக்கு அம்பானி மகன் பதில்

 
aharujpg

கோப்புப் படம்: ஆனந்த அம்பானி (இடது), ஷாருக்கான் (வலது)

என் சம்பளத்தை உங்களிடம் கூறினால்  நீங்கள் சங்கடமாக உணர்வீர்கள் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் முகேஷ் அம்பானியின் மகன் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திருபாய் அம்பானியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில், பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் தொகுப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது  முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியுடன் ஷாருக்கான் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டார்.

இந்த உரையாடலில் ஷாருக்கான் "நான் எனது முதல் சம்பளமாக 50 ரூபாயைப் பெற்றேன்... உங்களது முதல் சம்பளம் என்ன? "என்று கேட்டார், அதற்கு ஆனந்த் அம்பானி

 "என் சம்பளத்தை உங்களிடம் கூறினால் நீங்கள் தர்ம சங்கடமாக உணர்வீர்கள்" என்றார்.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றி குறித்து கூறும்போது, ''ரிலையன்ஸில் நாங்கள் அனைத்தையும் எளிமையாக வைத்திருக்கிறோம்.  நாங்கள் தகுதியை மதிக்கிறோம். நாங்கள் தலைமைத்துவத்தை மதிக்கிறோம்.  நாங்கள் புதுமைகளைக் கொண்டாடுகிறோம்'' என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

2017 - டாப் 10 இளைஞர்கள்

 

p22b_1514272347.jpg

ஆல்ரவுண்ட் ஆட்டக்காரர்

வாஷிங்டன் சுந்தர் -18

(கிரிக்கெட் வீரர்}

p22a_1514272337.jpg

`இந்தியாவின் அடுத்த விராட் கோலி’ என வாஷிங்டன் சுந்தரைப் புகழ்கிறது  கிரிக்கெட் உலகம். பேட்டிங், பெளலிங் இரண்டிலுமே கலக்கும் இளம் புயலுக்கு வயது 18. ஐ.பி.எல் வரலாற்றில் மிக இளம் வயதில் `மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வென்ற சாதனை இளைஞன். 2017 ஐ.பி.எல் போட்டிகளில் புனே அணியை ஃபைனல் வரைக்கும் அழைத்துச்சென்றது இந்த ஒல்லிகில்லியின் மந்திரப் பந்துவீச்சு. தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே வெளுத்துவாங்க, இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பு வந்தது. வாஷிங்டனின் அப்பா சுந்தர், தமிழ்நாட்டின் முன்னாள் ரஞ்சி பிளேயர். அவர் கிரிக்கெட் விளையாடவும் படிக்கவும் உதவியவர் வாஷிங்டன் என்னும் ராணுவ வீரர். அவர் இறந்த சில நாள்களிலேயே சுந்தருக்கு மகன் பிறக்க, வாஷிங்டன் சுந்தர் எனப் பெயர் வைத்தாராம். வர்லாம் வர்லாம் வா வாஷிங்டா!

அருவிக் குருவி

அதிதி பாலன் - 26 (நடிகை)

p22bb_1514272367.jpg

தூக்கி வாரிக் கொண்டை போட்டதற்கே ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். மூச்சுவிடாமல் பேசிய வசனத்திற்கு விசிலடிக்காத விரல்கள் இல்லை. இறுதிக்காட்சி வீடியோவில் கொட்டித்தீர்த்த அழுகைக்குக் கண்ணீரைக் காணிக்கையாக்கினர். அமைதியாய் ஓடி, பரவசமாகப் பாய்ந்து, மொத்தமாய் அன்பில் வீழ்ந்து அருவியாய் வாழ்ந்த அதிதி பாலனை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். சட்டம் படித்துவிட்டு வழக்காடப்போனவரை ``வாடி ராசாத்தி’’ எனத் தமிழ்சினிமா வாரிக்கொள்ள `அருவி’ அவருக்காக விரித்தது ரத்தினக்கம்பளம். பாசக்கார மகளாக, எய்ட்ஸ் நோயாளியாக, தனிமையின் துயரில் மூழ்கி வெடிக்கும் பெண்ணாக, துப்பாக்கியோடு அத்தனை பேரையும் நடுநடுங்கச் செய்யும் யட்சியாக ஒரே படத்தில் அதிதி பாலன் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார். இசை, நாடகம், பயணம், சினிமா என நிஜத்திலும் இந்த அதிதி... அருவியே!

நையாண்டி பிரதர்ஸ்

நக்கலைட்ஸ் குழு

(யூ-ட்யூப் இளைஞர்கள்)

p22bbb_1514272386.jpg

அரசியல் நையாண்டியின் அடுத்த லெவல் நக்கலைட்ஸ் யூ-ட்யூப் சேனல். கேலியும் கிண்டலும்தான் என்றாலும் அதன் அடியாழத்தில் அவசியமான அரசியல் மருந்தையும் குழைத்துக்கொடுக்கிற கோவைக்கார குறும்பு டீம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் தொடங்கிய அதன் வைரல் வரவு, `நாச்சியார்’ வரை வந்திருக்கிறது. ஆதிக்கசாதித் திமிரோடு திரிகிறவர்களைக் கலாய்த்து எடுத்த `ஆண்டபரம்பரை’ குறும்படம் வயிறுவலிக்கச்செய்யும் அரசியல் வெடி. இயக்குநர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சுஜித், நடிகர்கள் பிரசன்னா, அருண்குமார், செல்லா, விக்னேஷ், தனம் அம்மா என ஒட்டுமொத்த டீமும் கேடி, கில்லாடிகள். ஹிட்ஸ், வியூஸ் பின்னால் மற்ற சேனல்கள் ஓடிக்கொண்டிருக்க, நக்கலைட்ஸ் ஓடுவது மக்கள் பிரச்னைகளுக்குப் பின்னால்தான். மக்கள் அரசியலை மக்களிடமே மகிழ்வோடு பேசும் `நக்கலைட்ஸ்’ செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு!

இளம் தோழர்

வளர்மதி - 24

(சமூக செயற்பாட்டாளர்)

p22c_1514272416.jpg

கல்லூரிக்காலத்திலேயே கலகக்காரி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மாணவர் படையுடன் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகக் கொடிபிடித்தவர். படிப்பு முடிந்ததும் வேலை, வருமானம் எனத் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் போராட்டக்களத்தை விரிவாக்கிக்கொண்டார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகித்தார் என்று குண்டர் சட்டத்தைப் பிரயோகித்துச் சிறைக்கு அனுப்பியது அரசு. சிறையிலடைத்தால் முடங்கிவிடுவார் என அதிகாரம் எதிர்பார்த்திருக்க, 56 நாள்கள் சிறையிலிருந்துவிட்டுத் திரும்பிவந்தவர், நேராகச் சென்றது அதே போராட்டக்களத்துக்கு. அடுத்தடுத்த போராட்டங்கள், மக்களுக்கான முழக்கங்கள் என வளர்மதி தன்னை இன்னும் கூர்தீட்டிக்கொண்டே இருக்கிறார், அதிகாரத்தின் கோரப்பற்களை உடைத்தெறிய!

மெர்சல் கவி

விவேக் - 32 (பாடலாசிரியர்)

p22cc_1514272430.jpg

``பூ அவிழும் பொழுதில்’’ என மென்மையாகத்தான் ஆரம்பித்தார் விவேக். ஆனால் இதோ இப்போது `எகிறு அல்லு சில்லு’ என மெர்சலாகத் தொடர்கிறது பாடல்பயணம்.சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு பாட்டுக்கட்டும் அபூர்வக்கவிஞன். `வா கடவுள் செய்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவருக்குத் திறந்தன திரைக்கதவுகள். `ஏய் சண்டக்காரா’, `அடியே அழகே’ எனக் காதலில் காத்திரம் காட்டுபவர், ‘தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும்’ என டெம்ப்போ ஏற்றுகிறார். `வாடி ராசாத்தி’யில் கவனிக்கப்பட்டவர், இப்போது ஏ.ஆர். ரஹ்மான் படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ஆயிரம் பாக்கள் மலரட்டும்!

தங்கத் தமிழச்சி

பவானிதேவி - 24

(வாள்வீச்சு வீராங்கனை)

p22ccc_1514272444.jpg

மிடில் கிளாஸ் வடசென்னை சகோதரி. வீட்டில் ஐந்து பிள்ளைகளில் ஒருவர். பள்ளிக்காலத்தில் மற்ற விளையாட்டுகளில் இடமில்லாமல், அரைமனதாக வாள் பிடித்தவர். இன்று சர்வதேச அரங்கில் வாள்வீச்சில் நம்மைத் தலைநிமிரச் செய்கிறார். இதற்காக பவானிதேவி இரவு பகல் பாராமல் உழைத்தது ஒன்பது ஆண்டுகள். 14 வயதில் ஆசிய சாம்பியன், 15 வயதில் காமன்வெல்த் சாம்பியன் என ஆரம்பமே அமர்க்களம். சமீபத்தில் நடந்த சார்லே ஃபென்சிங் (Charlotte Fencing) போட்டியில் கிடைத்த தங்கப்பதக்கம், சர்வதேச அரங்கிலும் சாம்பியன் ஆக்கியது. பவானியின் இப்போதைய இலக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ். தங்கத்தோடுதான் வருவேன் என ஐரோப்பாவில் ஆக்ரோஷமாகப் பயிற்சியில் இருக்கிறார். தட்டிவா தங்கம்!

குட்டி விஞ்ஞானி

ரிஃபாத் ஷாருக் - 17

(இளம் கண்டுபிடிப்பாளர்)

p22d_1514272456.jpg

இன்னும் பள்ளிப்படிப்பே முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி சாதனை படைத்திருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். பள்ளி சகாக்கள் விதவிதமான விளையாட்டுகளில் ஆர்வமாயிருக்க, ப்ளஸ் டூ வகுப்பு மாணவரான ரிஃபாத்துக்கு விண்வெளி ஆராய்ச்சியில்தான் நாட்டம். சின்னதாக செயற்கைக்கோள் ஒன்றைத் தானாகவே உருவாக்கினார். அதை ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்போடு சேர்ந்து நாசா நடத்திய போட்டிக்கு அனுப்ப, கலந்துகொண்ட 86,000 ஐடியாக்களில் 80 பேருடைய ஐடியாக்களுக்கு டிக் அடித்தனர் நாசா விஞ்ஞானிகள். அதில் ஒன்று ரிஃபாத்தின் ‘கலாம்-சாட்’ செயற்கைக்கோள். வருங்கால கலாமை சலாம் போட்டு வரவேற்கிறான் விகடன்!

இசைஞன்

சாம் சி.எஸ் - 35 (இசையமைப்பாளர்)

p22dd_1514272468.jpg

இசைக்காதலால் ஐ.டி வேலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு கோடம்பாக்கத்துக்குப் பஸ் பிடித்தத் தேனிக்காரர். விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் போட்டு, கீ போர்டு வாசித்து, புரோகிராமிங் செய்து என இருந்தவருக்கு, திரைக்கதவுகள் எளிதில் திறந்துவிடவில்லை. ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்தது `விக்ரம்-வேதா’ வாய்ப்பு. ஒவ்வொரு காட்சியையும் தன் புதுமையான இசையால் உயிரூட்டியிருந்தார் சாம். திரைப்படம் முடிந்த பின்னும் உணர முடிந்த, இதயம் அதிர்ந்த இசை. நான்கு பாடல்கள், ஆறு தீம் மியூசிக் என சாம் காட்டியது வெரைட்டி வெடி. இப்போது தெலுங்கிலும் இவரே மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர்!

மாற்றத்தின் வண்ணங்கள்

மஞ்சள் (நாடகக் குழு)

p22ddd_1514272480.jpg

மனிதர் கழிவை மனிதரே அகற்றும் அவலத்துக்கு எதிராக விழுந்த சம்மட்டி அடி `மஞ்சள்’ நாடகம். `டிஜிட்டல் இந்தியாவிலும் ஏன் இந்த அவலம்?’ என்கிற கேள்வியை வலுவாக ஒலித்தது இந்த நாடகக்குழு. மலம் அள்ளும் மனிதர்களின் வேதனைகளை, அவர்களுடைய உரிமைகளை, அவர்களை இன்னமும் அந்தக் கேவலத்தில் மூழ்கடித்து வைத்திருக்கும் சாதியக் கட்டமைப்பு அரசியலை என ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது நாடகம். பாஷா சிங் எழுதிய ‘தவிர்க்கப்பட்டவள்’ நூலைத் தழுவி இந்த நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, காத்திரமான கதையை `கட்டியங்காரி’ நாடகக்குழு நிகழ்த்திக்காட்டியது. நாடகத்தைத் திறம்பட நடத்தி, பெருந்திரளான மக்களிடம் கொண்டுசேர்த்தது `நீலம்’ மற்றும் `ஜெய்பீம்’ அமைப்புகள். டிஜிட்டல் இந்தியாவே, திரும்பிப் பார் எங்கள் டாய்லெட் இந்தியாவை!

அபூர்வ நட்சத்திரம்

விதார்த் - 41 (நடிகர்)

p22e_1514272493.jpg

புதுமுக இயக்குநர்கள், வித்தியாசக் கதைக்களங்கள், அபூர்வமான கதாபாத்திரங்கள் எனத் தேடித்தேடி நடித்த விதார்த், இந்த ஆண்டின் வித்தியாச நாயகன். க்யூட் திருடனாக `விழித்திரு’வில்  சிரிக்கவைத்தார். தந்தையைத் தேடி அலையும் பாசக்கார மகனாக `குரங்கு பொம்மை’யிலும், குற்ற உணர்வில் குமைந்து திரியும் கொலைகாரனாக `ஒரு கிடாயின் கருணைமனு’விலும் இவர் வெளிப்படுத்தியது உணர்வுகளின் வானவில். பேருந்து ஓட்டுநர் ஆவதையே பெரிய லட்சியமாகக்கொண்டிருந்தவருக்கு, கூத்துப்பட்டறையில் கிடைத்தது நடிப்பதற்கான ஞானம். 2010-ல் `மைனா’வில் கிடைத்தது முதல் வெற்றி. ஏழாண்டுகளில் எக்கச்சக்கமாக நடித்துக்குவிக்காமல், வெற்றிகளுக்குப் பின்னால் ஓடுகிறவராக இல்லாமல், எப்போதும் நல்ல நல்ல படைப்புகளைத் தேடிப் பிடித்து நடிக்கிற விதார்த்... தமிழ்சினிமாவின் அபூர்வமான எளிய நட்சத்திரம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஜெர்மனில் இளைஞர் ஒருவர் சுயமாக வடிவமைத்த மூங்கில் மிதிவண்டியில் உலகை வலம் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்

  • தொடங்கியவர்

வணிக நோக்கில் சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று: சினிமா குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்!

வணிக நோக்கில் சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று

வணிக நோக்கில் முதல் முறையாக சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று. சினிமாடோகிராஃபி, அதாவது ப்ரொஜக்டர் என்ற கருவியைக் கண்டுப்பிடித்த லூயிஸ் மற்றும் அகஸ்டி லூமியர் எனும் ஃபிரஞ்சு சகோதரர்கள், தங்கள் தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வரும் காட்சியை (Leaving the Factory) படம் பிடித்து 1895-ம் ஆண்டு இதே நாளில்தான் பாரிஸில் திரையிட்டனர். இந்த காட்சியை திரையில் பார்க்க மக்களிடம் கட்டணம் வாங்கப்பட்டது.

வணிக நோக்கில் சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று: சினிமா குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்!படத்தின் காப்புரிமைTHOMAS ARNOLD Image captionஃபிலிம்களை ஆராயும் லூயிஸ் லூமியர்

ஒரு துண்டு காட்சியிலிருந்து, இன்று 7D வரை பரிணமித்து இருக்கும் சினிமா மற்றும் திரையரங்கம் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

திரையிடல்:

வணிக நோக்கில் முதல்முறையாக சினிமா பாரிஸில் திரையிடப்பட்டதிலிருந்து சரியாக இரண்டு ஆண்டுகள் பயணித்து, கலையும் தொழிற்நுட்பமும் கலந்த புதுவடிவம் மதராஸ் ராஜதானியை வந்தடைந்தது. 1897 ஆம் ஆண்டு சென்னை ரிப்பன் கட்டடத்துக்கு அருகே இருந்த விக்டோரியா ஹாலில் 'Leaving the Factory' திரையிடப்பட்டது.

திரையரங்கம்:

இந்த திரையிடலிருந்து சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பின், 1900 ஆம் ஆண்டு, தென்னிந்தியாவில் முதல் திரையரங்கம் சென்னையில் கட்டப்பட்டது. இதனை கட்டியவர் வார்விக் மேஜர்.

வணிக நோக்கில் சினிமா திரையிடப்பட்ட நாள் இன்று: சினிமா குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்!படத்தின் காப்புரிமைPAULA BRONSTEIN

சென்னையில் மட்டுமே திரையிடப்பட்டுக் கொண்டிருந்த திரைப்படங்களை, சென்னைக்கு வெளியே வாழ்ந்த மகக்ளிடமும் கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். 1905 ஆம் ஆண்டு ஃபிரஞ்சுகாரரான டூபானை சந்திக்கிறார் வின்சென்ட். டூபான் ஒரு 'எக்சிபிட்டர்', அதாவது திரைப்பட ரீல்களையும், ப்ரொஜக்டரையும் சுமந்துக் கொண்டு ஊர் ஊராக சென்று திரையிடுபவர். அவரை தற்செயலாக சந்தித்த வின்சென்ட், அவரிடமிருந்து திரைப்படத்தை காண்பிக்கும் கருவியையும், 'லைஃப் ஆஃப் கிறிஸ்ட்' என்ற குறும்படத்தையும் 2,000 ரூபாய்க்கு வாங்கி ஊர் ஊராக சென்று திரையிடுகிறார். இதில் ஈட்டிய வருவாயைக் கொண்டு, 1914 ஆம் ஆண்டு கோவையில் 'வெரைட்டி ஹால்'எனும் திரையரங்கத்தை கட்டினார். இதுதான் சென்னைக்கு வெளியே கட்டப்பட்ட முதல் திரையரங்கம்.

ஸ்டூடியோ:

மதராஸ் ராஜதானியில் முதல் ஸ்டூடியோவை உருவாக்கியவர் ஆர். நடராஜ முதலியார். மோட்டார் வியாபாரம் செய்து கொண்டிருந்த இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு பூனே சென்று சினிமா குறித்து பயின்றார். பின் சென்னை திரும்பியவர், எம்.எஸ். தர்மலிங்க முதலியார் என்பவரின் துணையோடு கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில், 'இந்தியா பிலிம் கம்பெனி' என்ற பெயரில் ஸ்டூடியோவை துவக்கினார்.

 
 

தமிழர் சினிமா:

சினிமா மதராஸ் ராஜதானியில் பிரபலமடைந்து இருந்தாலும், அதனை பெரும்பாலும் இயக்கியவர்கள், தயாரித்தவர்கள் வெளிநாட்டினர்தான். அவர்கள் கையில்தான் அந்த கலையும், தொழிற்நுட்பமும் இருந்தது.

சினிமாவை கூர்ந்து கவனித்து ஆழமாக ஊன்றி பயின்ற நடராஜ முதலியார் சினிமா தயாரிக்க முடிவு செய்கிறார். அந்த படத்துக்கு அவர்தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர். வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட அந்த படத்தின் பெயர், 'கீசகவதம்'. இந்த படம் 1916 ஆம் ஆண்டு வெளியானது. தமிழர் ஒருவர் தயாரித்த முதல் சலனப் படம் இதுதான்.

பேசும் படம்:

சினிமா நன்கு பிரபலமடைந்து இருந்தாலும் சினிமா குறித்த தகவல் கடைக்கோடி ரசிகனையும் போய் சேர்ந்து இருந்தாலும் அந்நாட்களில் சினிமா பேசவில்லை. முதல் பேசும் படத்தை இந்தியாவில் இயக்கியவர் அர்தேஷிர் இரானி; படத்தின் பெயர், 'ஆலம் ஆரா'. இந்த படம் 1931 ஆம் ஆண்டு வெளியானது. சென்னைக்கு அதே ஆண்டு ஜூன் மாதம் வந்தது. இது வரை பேசா படங்களையே பார்த்து இருந்த ரசிகர்கள், முதல் முதலில் பேசும் படத்தை பார்த்ததும், கேட்டதும் குதூகலிக்க தொடங்கினார்கள். ஆனால், அந்த படம் தமிழில் பேசவில்லையே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அந்த வருத்தமும் அதே ஆண்டு நீங்கியது. ஆம், அதே ஆண்டு தமிழில் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வந்தது. அந்த படத்தை இயக்கியவர் எச்.எம். ரெட்டி. தயரித்தவர் அர்தேஷிர் இரானி.

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காலண்டர் புராணம்!

 

 
calendar111jpg

டிசம்பர் மாதம் முடிந்து தொடங்கப் போகிறது ஜனவரி. இது வெறும் ஜனவரியா. புத்தாண்டு. ஆங்கிலப் புத்தாண்டு. ஒருவருடம் முடிந்து அடுத்த வருடம் ஆரம்பம். 2017 முடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே உள்ளன.

ஒவ்வொரு முறை புத்தாண்டு நெருங்கும் போதும் எண்பதுகள், ஏனோ படபடவென நினைவுகளாய் வந்து பறந்தடிக்கும். இப்போதும் அப்படித்தான்.

அப்போதெல்லாம் காலண்டர் கிடைக்க, டிசம்பரின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிடுவார்கள். தினசரி காலண்டர், மாதக் காலண்டர் என்றிருக்கும். இந்த மாதக் காலண்டரிலும் பல வகைகள் உண்டு. அதாவது ஒரேயொரு சுவாமி படம் போட்டிருப்பார்கள். கீழே ஒவ்வொரு மாதத்தையும் சின்னதாகப் பிரிண்ட் செய்து இணைத்திருப்பார்கள். இன்னொரு காலண்டரில் பனிரெண்டு ஷீட்டுகள். பனிரெண்டு சுவாமி படங்கள். அந்தப் படங்களின் ஓரத்தில், அந்தந்த மாதத் தேதிகள், கிழமைகள், நாள் நட்சத்திரங்கள்! இன்னொரு வகை காலண்டர் உண்டு. வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் கட்டம்கட்டமாகப் போட்டு, சிகப்புக்கலரில் தேதியிட்டிருந்தால் விடுமுறை எனும் அர்த்தத்தை உருவாக்கித் தருவார்கள்.

‘ஏன் இப்படி காலண்டர் காலண்டர்னு பைத்தியமா இருக்கே’ என்று அப்பாவிடம் சண்டையே போட்டிருக்கிறேன். பிள்ளையார், முருகன், வேங்கடாசலபதி, காசைக் கொட்டிக் கொண்டே இருக்கும் மகாலக்ஷ்மி என்று எந்தப் படக் காலண்டரையும் விடமாட்டார். எல்லாக் காலண்டரும் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். மின்விசிறிக்கு படபடவென அடித்துக் கொண்டே இருக்கும்.

அப்பா என்றில்லை. அப்போது நிறைய பேர் வீட்டில், இப்படியான காலண்டர்கள்தான் இருக்கும். அதேபோல சலூன்கடைகளுக்கு என்றே சில காலண்டர்கள் எப்படித்தான் கிடைக்கிறதோ என்று பலமுறை யோசித்தது உண்டு. கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு முன்பு வரை, சலூன் கடைகளில் அப்படி இப்படியான படங்கள் கொண்ட காலண்டர்கள் சுவரில் பிரமாண்டம் காட்டி நிற்கும். முடிவெட்டும் அண்ணன்கள், அடிக்கடி வெட்டுபவரைப் பார்த்து, ‘சும்மா அண்ணாந்து அண்ணாந்து பாத்துக்கிட்டிருந்தா எப்படி வெட்டுறது ஓய்’ என்பார்கள். வாயை மூடிக்கொண்டு சிரிப்பார்கள் பலரும்.

பிறகு அப்போது வந்த பாம்பே டையிங் காலண்டர் கவிதை மாதிரி இருக்கும். கவிதை என்றால் கவிதை அல்ல. ஸ்ரீதேவி, பானுப்ரியா முதலான இன்னும் பல நடிகைகள், கம்பீரமாகவும் களையாகவும் கவுரமான ‘போஸ்’களுடன் அரை ஆள் உயரத்துக்கு இருக்கும். ஆனாலும் அந்த ‘அப்படி இப்படி’யான படங்களுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. நல்லவேளையாக, இப்போது சலூன்கடைகளில் அந்தக் காலண்டர்கள் மாட்டுவது இல்லை (அதான் எல்லாமே நெட்ல, செல்லுல கிடைச்சிருதே என்கிறார் சலூன் கடை அண்ணன்).

போன வருஷம் கொடுத்தீங்களே. குழலூதும் கிருஷ்ணர். இந்த முறை திருச்செந்தூர் முருகன் கொடுங்க அண்ணாச்சி என்று காலண்டருக்கும் அது என்ன படமாக இருக்கவேண்டும் என்பதற்குமாக ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் வம்சத்தினர், இன்றைக்கு புத்தாண்டு ஆஃபர் பேப்பர்களுடன் ஹைடெக் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பரிதாபமாக வருகிறார்கள்.

அப்பாவிடம் இன்னொரு விஷயம். அங்கே இங்கே என்று எல்லா இடங்களிலும் காலண்டர் கேட்டு மாட்டிவைத்திருப்பார் இல்லையா. இந்தக் காலண்டர் படையெடுப்பு பிப்ரவரி, மார்ச் வரை தொடரும். வருஷக் கடைசியில் பார்த்தால், பீரோவின் மேல்பகுதி, பரண், ஷெல்ப்பின் இடுக்குப் பகுதி என்றெல்லாம் பயன்படுத்தாமல் ஜனவரி 1ம் தேதி காட்டியபடி பல்லிளிக்கும் காலண்டர்கள் பல இருக்கும். ‘சாமி படமா.. அதான் தூக்கிப் போடவும் மனசில்ல. யாருக்கும் கொடுக்கவும் மனசில்ல’ என்று செண்டிமெண்ட் பேசுவார்.

இதில் கொசுறு செய்தி... விவேகானந்தர் காலண்டர் தெரியுமா உங்களுக்கு. காலண்டருக்கு என உள்ள சைஸையே மாற்றிப் போட்ட தினசரி காலண்டர். அகலம் சிறுசு. உயரம் பெருசு. கம்பீரமாய் கைகட்டி நிற்பார் விவேகானந்தர். இந்தக் காலண்டரை வருடம் தவறாமல் காசு கொடுத்து வாங்கிவிடுவார் அப்பா.

இப்போது, சைக்கிள் கடை தொடங்கி சலூன் கடை வரை அவர்களே தங்கள் கடையின் பெயர் போட்டு, காலண்டர் அடித்துக் கொடுக்கிறார்கள். புத்தகக் கடை அண்ணன் வருடா வருடம் காலண்டர் கொடுத்துவிடுவார். கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் தம்பி, வாட்டர் கேன் சப்ளை யர்ஸ், போர்வெல்ஸ் அண்ணன், அடகுக் கடை சேட்டு, லோக்கல் ஜவுளிக்கடைக்காரர், மெஸ் நடத்தும் நாராயணன் அண்ணா, பழக்கடை வைத்திருக்கும் விருதுநகர் அண்ணாச்சி என காலண்டர்களுக்கு இப்போது பஞ்சமே இல்லை. காலண்டர்களில், தினமும் நல்ல நல்ல வாசகங்கள் இடம் பெறும். அத்துடன் ரிஷபம் - பணம், மிதுனம் - செல்வம் என்று பாஸிட்டீவ்வாகவே சொல்லியிருக்கிற விதமும் பாராட்டத் தக்கது .

இன்னொரு விஷயம்... தினசரி காலண்டரின் பின்பக்கத்தை, இந்த 365 நாளில் எத்தனை முறை திருப்பிப் பார்த்தீர்கள். அரசு விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்கள், கரிநாள், நியூமராலஜி நம்பர்... என பலதும் இருக்கும். அதை எவரும் கவனிப்பதே இல்லை என்பதை காலண்டர் தயாரிப்பாளர்கள் கவனிக்கவும்.

‘அந்தக் கடைப் பக்கம் போகவேணாம். இந்தா காலண்டர்னு கொடுத்துருவான்’ என்று பயந்து பம்மி அடுத்த தெரு வழியே எஸ்கேப் ஆகிச் செல்லும் அளவுக்கு காலண்டர்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டன.

போதாக்குறைக்கு, லோக்கல் வட்டம், சதுரச் செயலாளர்கள் தன் தலைவர்களின் படங்களைப் போட்டு, கீழே கைகூப்பிய தன்னுடைய படத்தையும் போட்டு, டெய்லி காலண்டர் தருவார்கள். அதுவும் எப்படி. வீடுவீடாக வந்து தருவார்கள். இவர்களின் நூதனப் பிரச்சாரத்திலும் ஐக்கியமாகி விட்டது காலண்டர்.

‘முன்னாடிலாம் காலண்டரை ஆணியடிச்சு மாட்டிவைப்போம். இப்ப ஆணியெல்லாம் அடிக்கக் கூடாதுன்னு ஹவுஸ் ஓணருங்க பெருந்தொல்லை பண்றாங்க. அதனால காலண்டர் சும்மா பேருக்கு ஒண்ணு வைச்சிக்கிட்டு, அக்கம்பக்கத்துல கொடுத்துடுறது’ என்கிறார்கள் காலண்டர் தானம் செய்யும் கர்ணப் பிரபுக்கள்.

‘தேதியை காலண்டர்லதான் பாக்கணும்னு இருந்த காலமெல்லாம் போச்சுங்க. செல்போன்ல தேதி தெரியுது. கிழமை தெரியுது. டைம் தெரியுது. அதனால காலண்டர் சும்மா செவனேன்னு தொங்கிட்டிருக்கும். கடிகாரம் தேமேனு மாட்டிவைச்சிருக்கோம். காலம் ரொம்பவே மாறிருச்சுங்க’ என்கிறார்கள் பலரும்!

எது மாறினால் என்ன... காலண்டர் கனவுகள் சுவாரஸ்யமானவை. காலண்டர் கிடைத்தவர்களுக்கும் இனி கையில் பெறப்போகிறவர்களுக்கும் காலண்டரை தயாரித்து, நிறைய பேருக்கு வழங்குகிற காலத்துக்கேற்ற பரிசு தருவோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்னும் நிறைய எழுதலாம்தான். நண்பர் ஒருவர், ஆலிலைக் கிருஷ்ணர் காலண்டர் தருகிறேன், வா என்று அழைத்ததால் அடுத்த 2018 டிசம்பரில் இன்னும் எழுதுகிறேன் காலண்டர் புராணத்தை!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட எகிப்து கிராமம்

விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை ஆதரிக்கும் எகிப்திய கிராமம் - ஆண்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வாழும் குடும்பங்கள்

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.