Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘பூமி, அழியப் போகின்றது’
 

image_c5e6aee939.jpgஇந்தப் பரந்த, பிரமாண்டமான பூமி, அழியப் போகின்றது என்று, பலர் அங்கலாய்ப்புடன் பேசிவருகின்றனர்.

பூமி உருண்டையானது. அதனால் அதை ஒரு துடுப்பாட்டப் பந்து போன்று எண்ணுவதும், பொறுப்பற்ற நகைப்பூட்டும் அறிவீனம்.

பூமி பிளப்பது, நொறுங்குவதைச் சொல்லிக்கொள்பவர்கள், ஏதோ களியாட்ட நிகழ்வில் நிகழும் வாணவேடிக்கை எனக் கருதுகின்றனர்.

யுத்த வடுவை, அதன் கோரத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும், இந்தப் பூமி அதிர்ந்தால் நெஞ்சின் வலியை உணர்வார்கள்.

ஆனால், எங்கள் அரசியல்த் தலைவர்கள், பேரிடியை அனுபவிக்காமல் வீரம் பேசுகின்றார்கள்.

நுளம்பு கடித்தாலே அலறுகின்ற இவர்கள், வீரவசனம் பேசி, மக்களைத் திசை திருப்புவது, இறைசினத்துக்கு ஆளாவதற்கேயாகும்.

கோரமான சிந்தனைகளை வேருடன் களை.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2013 : பனிச்சறுக்கலின்போது மைக்கல் ஷுமாக்கர் படுகாயமடைந்தார்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 29

 

1170 : இங்­கி­லாந்து, ஆயர் தோமஸ் பெக்கெட் அவ­ரது தேவா­ல­யத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்­னனின் நான்கு ஆத­ர­வா­ளர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார்.

1835 : மிசி­சிப்பி ஆற்றின் கிழக்­கே­யுள்ள செரோக்கீ இன மக்­களின் நிலங்கள் அனைத்­தையும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்குக் கொடுக்கும் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1851 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது இளைய கிறிஸ்­த­வர்­களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்­டனில் அமைக்­கப்­பட்­டது.

1876 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் ரயில் பாலம் இடிந்து வீழ்ந்­ததில் 92 பேர் கொல்­லப்­பட்டு 64 பேர் காய­ம­டைந்­தனர்.

1890 : அமெ­ரிக்­காவின் தென் டகோட்டா மாநி­லத்தில் ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் பெண்கள் குழந்­தைகள் உட்­பட 400 ஆதி­க்கு­டி­களை படு­கொலை செய்­தனர்.

1911 : சுன் யாட்-சென் சீனக் குடி­ய­ரசின் முத­லா­வது அதி­ப­ரானார்.

varalaru-29-12-2015.jpg1911 : மொங்­கோ­லியா கிங் வம்­சத்­திடம் இருந்து விடு­தலை பெற்­றது.

1930 : இந்­தி­யாவின் அல­காபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய கவி­ஞரும், மெய்­யி­ய­லா­ள­ரு­மான முஹ­மது இக்பால் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­நாடு கோரிக்­கையைக் கொண்ட தனது இரு-­நா­டுகள் கொள்­கையை முன்­வைத்தார்.

1937 : ஐரிஷ் சுதந்­திர நாடு புதிய அர­சி­ய­ல­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்தி அயர்­லாந்து குடி­ய­ரசு எனப் பெயரை மாற்­றி­யது.

1940 : இரண்டாம் உலகப் போரில் லண்டன் நகரின் மேல் நாஸி ஜேர்­ம­னியர் தீக்­குண்­டுகள் வீசி­யதில் 200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1972 : அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் மயாமி விமான நிலை­யத்தில் அமெ­ரிக்க விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 101 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1975 : நியூயோர்க் நகர விமான நிலை­யத்தில் குண்டு ஒன்று வெடித்­ததில் 11 பேர் கொல்­லப்­பட்டு 74 பேர் காய­ம­டைந்­தனர்.

1987 : 326 நாட்கள் விண்­வெ­ளியில் பய­ணித்த சோவியத் விண்­வெளி வீரர் யூரி ரொமா­னின்கோ பூமிக்குத் திரும்­பினார்.

1989 : ஹொங்கொங் வியட்­நா­மிய அக­தி­களை பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யதை அடுத்து அங்கு கல­வரம் மூண்­டது.

1993 : உலகின் மிகப்­பெ­ரிய செம்­பி­னா­லான புத்தர் சிலை ஹொங்­கொங்கில் அமைக்­கப்­பட்­டது.

1996 : குவாத்­த­மா­லாவில் அந்­நாட்டு அர­சுக்கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதால் 36 ஆண்டு கால உள்­நாட்­டுப்போர் முடி­வுக்கு வந்­தது.

1997 : ஹொங்­கொங்கில் கோழி­க­ளுக்கு தொற்­றுநோய் பர­வி­யதை அடுத்து அங்­கி­ருந்த அனைத்து 1.25 மில்­லியன் கோழி­களும் கொல்­லப்­பட்­டன.

1998 : கம்­போ­டி­யாவில் 1970களில் ஒரு மில்­லியன் மக்கள் கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு கெமர் ரூஜ் தலை­வர்கள் மன்­னிப்புக் கேட்­டனர்.

2001 : பெருவின் தலை­நகர் லீமாவில் வர்த்­தக நிலை­ய­மொன்றில் பெருந் தீ பர­வி­யதால் 291 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2013: போர்ம்யூலா வன் காரோட்­டத்தில் 7 தடவை சம்­பி­ய­னான மைக்கல் ஷு மாக்கர், பனிச்­ச­றுக்­கலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது படுகாயமடைந்தார். அதன்பின் 6 மாதங்கள் கோமா நிலையில் இருந்த அவர் இன்னும் தனது வீட்டிலிருந்து சிகிச்சைபெற்று வருகிறார்.

2013 : ரஷ்யாவில் வொல்கோகார்ட் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஐன்ஸ்டீனே விடை காணாத கணக்குக்கு தீர்வு சொன்ன மாணவரின் கதை! #MotivationStory

 
 

தன்னம்பிக்கை கதை

ரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் படிப்பினைகள் ஏராளம். அறிவியல், மருத்துவம், தொழில்துறை, அரசியல்... என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், `இது சாத்தியமில்லை’ என்று பலர் நினைத்துக்கொண்டிருந்த ஒன்றை, சாத்தியமாக்கிய சம்பவம் சரித்திரத்தில் நிச்சயம் இருக்கும். `ஒன்றைச் செய்து முடிக்கும் வரை, அதைச் செய்ய முடியாது என்றுதான் தோன்றும்’ என்று சொல்லியிருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலா. சில அசாதாரணச் செயல்களைச் செய்வதற்கு, மந்திரசக்தி தேவையில்லை... கொஞ்சம் முயற்சி, அதற்கான ஆத்மார்த்தமான உழைப்பு போதும். இதை உணர்த்துகிறது, அமெரிக்காவின் பிரபல கணித அறிவியலாளர் ஜார்ஜ் டேன்ட்ஜிக் (George Dantzig)-கின் வாழ்க்கைக் கதை. 

 

பொருளாதாரம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆபரேஷன் ரிசர்ச் ஆகியவற்றில் ஜார்ஜ் டேன்ட்ஜிக்-கின் பங்கு மகத்தானது. அதற்காக உலக கணிதவியலாளர்களெல்லாம் அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஐரிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா-வின் நினைவாக, `ஜார்ஜ் பெர்னார்டு டேன்ட்ஜிக்’ என்று பெயர்வைத்திருந்தார் அவரின் தந்தை. சிறு வயதிலிருந்தே கணக்கில் புலி டேன்ட்ஜிக். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கணிதம், புள்ளியியல், நேச்சுரல் சயின்ஸிலெல்லாம் கில்லி. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக கலிஃபோர்னியா, பெர்க்லீயில் இருக்கும் யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு புள்ளியியல் வகுப்பெடுக்கும் பேராசிரியராக இருந்தவர் ஜெர்ஸி நெய்மேன் (Jerzy Neyman). கணிதத்திலும் புள்ளியியலும் உலகப் புகழ்பெற்றவர். 

வகுப்பறை கரும்பலகை

இரவில் நெடு நேரம் படிக்கும் பழக்கம் டேன்ட்ஜிக்குக்கு இருந்தது. ஒருநாள் நள்ளிரவையும் தாண்டிப் படித்துவிட்டு, அசந்து தூங்கிவிட்டார். அடுத்த நாள் அவர் கல்லூரிக்கு 20 நிமிடம் லேட். முதல் வகுப்பை அன்றைக்கு எடுத்துக்கொண்டிருந்தவர் ஜெர்ஸி நெய்மேன். நம் ஊர் மாதிரி தாமதமாக வரும் மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்க மறுப்பதோ, வெளியே நிற்கச் சொல்லும் வழக்கமோ அங்கு இல்லை. வகுப்புகளைத் தவறவிட்டால், பல முக்கியப் பாடங்களையும் தவறவிடுவோம் என்பதை மாணவர்கள் அறிந்திருந்தார்கள். 

டேன்ட்ஜிக், தனக்கான இடத்தில் போய் அமர்ந்தார். போர்டில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் இரண்டு புள்ளியியல் கணக்குகளை எழுதி, அதற்குத் தீர்வு என்ன என்று கேட்டிருந்தார் நெய்மேன். அதைப் பார்த்ததும், அவர் மாணவர்களுக்கு ஏதோ ஹோம்வொர்க் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துவிட்டார் டேன்ட்ஜிக். அவசர அவசரமாக தன் நோட்டில், அந்த இரு கணக்குகளையும் எழுதிவைத்துக்கொண்டார். வகுப்பு முடிந்ததும், மாணவர்களும் நெய்மேனும் கலைந்தார்கள். 

கிளாஸ் ரூம்

அந்தக் கணக்குக்கு விடை காண்பது அத்தனை எளிதானதாக இல்லை. பல நாள்கள் போராடி, விடை கண்டுபிடித்தார் டேன்ட்ஜிக். பல்கலைக்கழகத்தில் இருந்த நெய்மேனின் அறைக்குப் போனார். தான் எழுதிய விடைத்தாளை நீட்டினார். 

``சார்... அன்னிக்கி நீங்க போர்டுல எழுதிவெச்சிருந்தீங்களே... அதுக்கான விடைகளைக் கண்டுபிடிச்சிட்டேன். இது வழக்கமான கணக்கு மாதிரியில்லை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனாலதான் இவ்வளவு லேட்டாகிடுச்சு. சாரி...’’ என்றார். 

நெய்மேனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், ``அதை மேஜையிலவெச்சுட்டுப் போ!’’ என்றார். மேஜை பல காகிதங்கள், ஃபைல்கள், நாளிதழ்கள், கணிதப் பத்திரிகைகள் எனக் கலைந்து கிடந்தது. இதில் வைத்தால், எங்கே தான் செய்துவைத்திருந்த ஹோம்வொர்க் கணக்கு காணாமல் போய்விடுமோ என்றுகூட பயமாக இருந்தது டேன்ட்ஜிக்குக்கு. ஆனால், பேராசிரியர் சொல்லிவிட்டாரே... மறுக்க முடியுமா? மேஜையில் ஓர் ஓரமாக அந்தக் கணக்குகளுக்கான தீர்வை (கிட்டத்தட்ட ஆய்வுக்கட்டுரை சைஸ்) வைத்துவிட்டுத் திரும்பினார். 
சரியாக ஆறு வாரங்கள் கழிந்தன. அது காலை 8 மணி. டேன்ட்ஜிக்கின் வீட்டு அழைப்பொலி அலறியது. அவரும் அவர் மனைவியும் எழுந்துகொண்டார்கள். போய்க் கதவைத் திறந்தார். வாசலில் நின்றுகொண்டிருந்தவர் ஜெர்ஸி நெய்மேன். 

``நீ எழுதின கணக்குகளுக்கான தீர்வுகளைப் பத்திரிகையில் வெளியிடப் போறேன். அதுக்காக சின்னதா ஒரு அறிமுகக் குறிப்பும் எழுதிவெச்சிருக்கேன்.’’ இதைக் கேட்டதும் டேன்ட்ஜிக்குக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், `சரி...சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டினார். 

ஜார்ஜ் டேன்ட்ஜிக்

பிறகுதான் தெரிந்தது... அன்றைக்கு நெய்மேன் போர்டில் எழுதிவைத்திருந்தது ஹோம்வொர்க் அல்ல... பல வருடங்களாக விடை காண முடியாத புள்ளியியல் கணக்கு என்பதும், அதை மாணவர்களுக்குச் சொல்வதற்காக அவர் போர்டில் எழுதிவைத்திருந்தார் என்பதும். `ஐன்ஸ்டீனாலகூட விடை காண முடியாத கணக்குப்பா’ என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். அவர் கண்டுபிடித்த கணக்குக்கான ஒரு விடை, ஒரு கணிதப் பத்திரிகையில் வெளியானது. இரண்டாம் உலகப் போரெல்லாம் முடிந்து, அவர் கண்டுபிடித்த இரண்டாம் கணக்குக்கான விடையை வெளியிடயிருந்த நேரத்தில் அதற்கு இன்னொருவரும் விடை கண்டுபிடித்திருந்தார். இருவரும் சேர்ந்து விடையை வெளியிட்டார்கள்... அதில் `இணை ஆசிரியர்’ என்ற பெயர் டான்ட்ஜிக்குக்குக் கிடைத்தது.    

 

சரி... ஜார்ஜ் டான்ட்ஜிக் எப்படி கணக்குக்கு விடை கண்டுபிடித்தார்? அவரால் முடியாது என்று அவர் நினைக்கவில்லை, முடியும் என்று நினைத்தார். அதனால்தான் கணக்குக்கு விடை கிடைத்தது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

2017: அனிதா முதல் மித்தாலி வரை பெண்கள் கடந்து வந்த பாதை

2017ஆம் ஆண்டில் இந்தியா கடந்து வந்த சாதனை பெண்களும், அவர்கள் தொடர்பான சில முக்கிய செய்திகளையும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

மித்தாலி ராஜ்

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை எவ்வாறு மறுக்க இயலாதோ, அதே அளவு அந்த வரவேற்பு, ஆண்கள் கிரிக்கெட்டிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் இந்த நிலையை மாற்றியவர் மித்தாலி ராஜ்.

2017:படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் கிரிக்கெட்டின் பக்கம் பார்வையாளர்களை திருப்பி, பல பெண்கள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுப்பதற்கு ஓர் உத்வேகமாக செயல்பட்டு வருபவர் மித்தாலி ராஜ். பெண்களுக்கான உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை இந்திய அணியை வழிநடத்திச் சென்ற மித்தாலி, கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் அனைவரின் மனதையும் வென்றார் என்பதை உறுதியாக கூறலாம்.

Presentational grey line

எளிய வீட்டிலிருந்து புறப்பட்ட மாபெரும் கனவு ‘அனிதா’

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்களை பெற்றும் நீட் தேர்வின் காரணமாக தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்ததால், தற்கொலை செய்துகொண்டார் அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்.

2017:

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தொடர்பான வழக்கில் பங்கேற்ற அனிதா செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்விற்கு எதிரான தன் நிலையை முன்வைத்தார்.

இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் அனிதாவின் கனவு தகர்ந்தது. இதை தொடர்ந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்தை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறப்பதற்கு வாய்ப்பில்லை.

Presentational grey line

சாதி எதிர்ப்பு போராளி கெளசல்யா

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், கெளசல்யாவின் உறவினர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

இது ஆணவ படுகொலை என்று கூறி நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடி வந்தார் கெளசல்யா. இந்த வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

2017: அனிதா முதல் மித்தாலி வரை

தனது கணவரின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடிய கெளசல்யா சாதி எதிர்ப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். இன்று சாதி எதிர்ப்பு போராளியாக பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் கெளசல்யா.

Presentational grey line

நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி

’ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் அமலுக்கு வந்தது சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி. இந்நிலையில், ஜிஎஸ்டி முறைப்படி 5 முதல் 28 சதவீத அளவில் தனித்தனிப் பிரிவுகளின் கீழ் பொருட்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டது. ஜிஎஸ்டி முறைக்கு எதிர்ப்பு அல்லது வரவேற்பு என்பதைக் காட்டிலும் அதுகுறித்த குழப்பமே பரவலாக நிலவியது.

2017: அனிதா முதல் மித்தாலி வரைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்த வரிசையில் பெண்களுக்கு மிகவும் அத்தியாவசமான ஒன்றாக கருதப்படும் நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தினர்.

நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்பட்ட மறுசீரமைப்பிலும் நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

நிர்மலா சீதாராமன்

2017:படத்தின் காப்புரிமைALL INDIA RADIO

நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்புத் துறை பெண் அமைச்சராக கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன். 35 வருடங்களுக்குமுன் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பாதுகாப்புத் துறை என்பது வலிமை வாய்ந்த துறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Presentational grey line

#Me too (நானும்)

2017ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேகில் #Me too மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

2017:படத்தின் காப்புரிமை@TARAOBRIENILLUSTRATION

2007ல் அமெரிக்க செயல்பாட்டாளரான தரனா பர்கே 'நானும்' என பொருள்படும் MeToo இயக்கத்தை முன்னெடுத்தார். அதுவே 2017ல் Me Too எனும் ஹேஷ்டேகாக மீண்டும் எழுந்தது.

ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீனின் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து இந்த ஹேஷ்டேக் மீண்டெழுந்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் முன்வந்து ஒற்றுமையை காண்பிக்கவேண்டும் என நடிகை அலிஸா மிலானோ ட்விட்டரில் பதிவிட்டதையடுத்து இந்த ஹேஷ்டேக் பலரின் கவனத்தை பெற்று பிரபலமடையத் துவங்கியது.

பாலியல் தொல்லைகளுக்கு ஆளானோர் தானாக முன்வந்து இது குறித்து பேசி, இப்பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று கோராப்பட்டதையடுத்து, பலரும் தாங்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை இந்த ஹாஷ்டேக்கின் மூலம் தெரிவித்தனர்.

Presentational grey line

ஹாதியா

காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அதிகம் பேசப்பட்டார் ஹாதியா. தற்போதைய இந்த நவீன உலகத்திலும், தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மறுக்கப்பட்டுதான் வருகிறது. அது மதத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது.

2017:படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

கேரளாவில் இந்து குடும்பத்தில் பிறந்த ஹாதியா இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஹாதியா மூளைச் சலவை செய்யப்பட்டார் என்றும், இது ’லவ் ஜிஹாத்’ என்றும் அவரின் தந்தை தெரிவித்தார்.

ஆனால், தன்னை மதம் மாறும்மாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹாதியா தெரிவித்தார்.

Presentational grey line

இவான்கா டிரம்பின் ஐதராபாத் வருகை

இவான்கா டிரம்பின் ஐதராபாத் வருகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில்முனைவோர் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பங்கேற்றார். இம்மாநாட்டிற்கு பெரும் நிதிசெலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருந்தது. இவான்காவின் வருகை அதற்கு மேலும் வலுசேர்த்தது.

Presentational grey line

பெண்களை முன்னிலைப்படுத்திய அறம், அருவி

2017:படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM

முன்னணி கதாப்பாத்திரத்தில் ஆண் நடிகர்கள் நடித்தால் மட்டுமே திரைப்படம் வெற்றிப்பெறும் என்ற நிலையை மாற்றியது இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த அருவி மற்றும் அறம் திரைப்படங்கள். ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட இத்திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட கதை பின்னணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

பத்மாவதி

இந்த வருடத்தில் பரபரப்பை பஞ்சமில்லாமல் ஏற்படுத்தியது பத்மாவதி திரைப்படம். இந்த திரைப்படம் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் கதை என்று கூறப்படுகிறது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் பத்மாவதியை "தவறாக சித்தரிப்பதால்" இத்திரைப்படம் வெளிவரக்கூடாது என்று தீவிர வலதுசாரி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2017:படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இத்திரைப்படத்தில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும், அவரின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி பரி்சு என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

கற்பனை கதாப்பாத்திரமான பத்மாவதிக்காக போராடும் குழுக்கள் இயல்பு நிலையில் இன்றைய அளவில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறை குறித்து போராடினால் நன்றாக இருக்கும் என்றே சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது.

Presentational grey line

தலாக்...தலாக்...தலாக்...

மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் என்னும் நடைமுறை சட்ட விரோதமானது என இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

2017:படத்தின் காப்புரிமைMAHMUD HAMS

அதனை தொடர்ந்து, வியாழக்கிழமை (டிசம்பர் 28) முத்தலாக் எனப்படும் விவாகரத்து முறை சட்டவிரோதமாக்கும் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

http://www.bbc.com/tamil

  • தொடங்கியவர்

மெக்சிகோவில் இருந்து பிரிந்த டெக்சாஸ்-ஐ தனி நாடாக மெக்சிகோ அங்கீகரிக்காததால் அமெரிக்காவுடன் ஒரு மாகாணமாக டெக்சாஸ் இணைந்த நாள் இன்று.

  • தொடங்கியவர்

யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?!

 
 

ஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.

பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்... மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த நிலப்பரப்பையும், வேறு எதையும்கூட பார்த்திட முடியாது. நீலக் கடலின் நடுவே, பச்சை புள்ளியாய் இருக்கும் அந்தத் தீவு. 

 

ஈஸ்டர் தீவு மர்மங்கள்

அந்தத் தீவின் வடக்கு மூலையில் "ராணா ரராக்கு" (Rana Raraku) எனும் அந்த எரிமலை எரிந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. புகை மூட்டம் எங்கும். புகை இன்னும் முழுமையாக விலகாத நிலையில், சிலர் அந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அவர்கள் அந்த எரிமலையின் அருகே சென்று, சில கூடைகளில் சாம்பல்களை சேகரிக்கிறார்கள். அதை சுமந்துகொண்டு மீண்டும் மலையிலிருந்து இறங்குகிறார்கள். கால்களில் செருப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காட்டில், மலையில் அவர்கள் வெறுங்கால்களோடு நடப்பது பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. சில மணி நேர நடைக்குப் பிறகு, ஒரு இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். அங்கு ஏற்கெனவே குழுமியிருக்கும், அந்தக் கூட்டம் ஏதேதோ கலவைகளைக் கலந்து சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உற்றுப்பார்த்தால், அவர்கள் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அங்கிருந்து சற்று நகர்ந்துப் போனால், பலர் அந்த மண்ணில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அந்த மொழி நமக்குப் பரிச்சயமானது அல்ல.

ஈஸ்டர் தீவு மர்மங்கள்

"எத்தனை மோவாய் (Moai) முடிந்தது?"

"கடைசி மோவாய் செய்துகொண்டிருக்கிறோம். கணக்குப் பார்த்தால், எப்படியும் 800க்கு மேல் இருக்கும்." என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. கடலும், காடும், மலையும், எரிமலையும், சிற்பக்கலையும், மீன் உணவும் என அத்தனை ரம்மியமாக ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 

இந்தத் தீவை "ஈஸ்டர் தீவு" என்று இன்று அழைக்கிறார்கள். இந்தக் கதைகள் நடப்பது 13-லிருந்து 15-ம் நூற்றாண்டு காலகட்டமாக இருக்கலாம். ஐரோப்பியர்களின் கால்கள் இந்தத் தீவை கண்டடையும் வரை நிம்மதியாகத்தான் இருந்தார்கள். முதல் ஐரோப்பியன் அந்தத் தீவில் கால்வைத்த அந்த நொடி முதல் இவர்களின் அழிவு தொடங்கியது. அதுவரை அதிக வேற்று மனித இடையூறு இல்லாமல், இயற்கையை மட்டுமே நாடி வாழ்ந்து வந்த அந்த இனம் சூறையாடப்பட்டது. பல நாடுகளுக்கு, அவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். இது அந்த இனத்தின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது. மிச்சமிருந்த மக்களையும் அந்த எலிகள் கடித்துக் குதற ஆரம்பித்தன. ஆம்...நிஜமான எலிகள் தான்.

ஈஸ்டர் தீவு மர்மங்கள்

பல வெளிநாட்டவர்கள் வரத் தொடங்கிய நிலையில், அவர்களின் கப்பல்களில் "பாலிநேசியன் எலி" (Polynesian rats) எனப்படும் அந்த எலிகள் தீவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அது பலவித நோய்களை அவர்களுக்கு ஏற்படுத்தின. கொந்தளிக்கும் கடலிலும், கொதிக்கும் எரிமலைகளிலும் துள்ளி விளையாடிய அந்த இனம், பலவீனமடையத் தொடங்கியது. 

வரலாற்றை ஆராய்ந்துப் பார்க்கும்போது, கிடைத்த முதல் தகவல்படி இந்தத் தீவில் 17,500 வரை வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகிறது. 1700-களில் தொடக்கத்தில் இந்தத் தீவில் 3,000 பேர் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 1877-ன் கணக்குப்படி 111 பேர் இருந்திருக்கிறார்கள். இந்தத் தீவின் பூர்வகுடி இனத்தின் பெயர் "ரபா நுய்" (Rapa Nui). இன்று இந்த ஈஸ்டர் தீவு உலகின் சில ஆச்சர்யங்களில் ஒன்று. குறிப்பாக, இங்கிருக்கும் "மோவாய்" என்று சொல்லப்படும் அந்த சிலைகள்.

1. ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் ஆளுகைக்குள் வருகிறது. சிலியின் தலைநகரான  சான்டியாகோவுக்கும் ஈஸ்டர் தீவுக்கும் 2,300 மைல்கள் தூரம். 5 மணி நேர விமானப் பயணம்.

2. இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டபடி உட்கார்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும். இது அந்தத் தீவின் "Red Puna Pua" எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.

3. "ரபா நுயி" இனத்தின் வழிபாட்டுத் தலம் ஒன்று இந்தத் தீவிலிருக்கிறது. அதற்கு "அஹு அகிவி" (Ahu Akivi) என்று பெயர். 

ஈஸ்டர் தீவு மர்மங்கள்

அந்த ஒரேயொரு வித்தியாச சிலை...

நீளமான மூக்கு, அகலமான கன்னங்கள், அடர்த்தியான புருவம், ஆழமான கண்கள், செவ்வக வடிவிலான காதுகள், அந்த நாசி துவாரம் சற்றே வளைவாக காணப்பட்டது. அதாவது ஒரு மீன் தூண்டிலைப் போல. இப்படித்தான் அந்த மோவாய்கள் இருக்கும். இதுபோன்ற சிலைகளை உலகின் வேறு எந்தப் பகுதியிலுமே பார்க்க முடியாது. 101 சதுரகிமீ பரப்பளவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் மொத்தம் 887 மோவாய்கள் இருக்கின்றன. இதில் பாதிக்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்த மாதிரியுமாக இருக்கின்றன. 
இந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருந்தன. முதலில் இந்தச் சிலைகளை யார் செய்தார்கள் என்ற கேள்வி வந்தது. ஒருவேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அந்த சிலைகளை ஆராய்ந்தபோது அது அந்தத் தீவிலிருக்கும் பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. குறிப்பாக 834 சிலைகள் "டஃப்" (Tuff) என்று சொல்லப்படும் எரிமலை சாம்பலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூலப்பொருளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.

ஈஸ்டர் தீவு மர்மங்கள்

அடுத்ததாக இந்தப் பெரிய சிலைகளை எப்படி தீவு முழுக்க பல இடங்களுக்கு நகர்த்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. 1980-களின் ஆரம்பத்தில் சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே அதே போன்ற சிலைகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாமல் அந்தக் காலகட்டத்திலிருந்த பொருள்களைக் கொண்டே அதை நகர்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை. பின்னர், சில ஆராய்ச்சியாளர்கள் அதை சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். 

ஈஸ்டர் தீவு மர்மங்கள்

இப்படியாகத் தான் அவர்கள் சிலைகளை நகர்த்தியிருக்கக் கூடும்...

சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர். இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: கடற்கரைகளின் தேசம்

 

 
Goa%20-2

இந்தியாவின் மிகச் சிறியதும் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதுமான மாநிலம் கோவா. 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களிடமிருந்த கோவா விஜய நகர மன்னர்களின் வசம் வந்தது. 1510-ல் வணிகத்துக்காக வந்த போர்த்துகீசியர்கள் பிஜப்பூர் மன்னரைத் தோற்கடித்து கோவாவைக் கைப்பற்றினர். நீண்ட காலம் கோவா அவர்கள் வசம் இருந்ததால், மக்களின் வாழ்க்கை முறை, இசை, நடனம், கலை,கட்டிடக்கலை, மதம், மொழி, இலக்கியம், சமையல் போன்ற அனைத்திலும் போர்த்துகீசியர்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது.

   

அழகிய கடற்கரைகளும் புகழ்பெற்ற தேவாலயங்களும் கோவாவின் அடையாளங்கள். உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுதும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

Goa%20-3
 

வட கோவாவிலும் தென் கோவாவிலும் ஏராளமான கடற்கரைகள் இருக்கின்றன. சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் கடற்கரையில் இருந்து பார்க்கும்போது, அற்புதமாக இருக்கும். சில கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் இந்தக் கடற்கரைகளில் மணல் சிற்பத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. உலகின் பல நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

கல்கிபாகா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யவருகின்றன. கடலில் இருந்து ஆமைகள் வருவதும் கடற்கரை மணலில் முட்டைகளை இட்டுச் செல்வதையும் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும். சில கடற்கரைகளில் கம்பீரமாக இருக்கும் கோட்டைகளைப் பார்ப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Goa%20-1
 

கோவாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று பசிலிகா டி பாம் ஜீஸஸ் எனப்படும் தேவாலயம். இந்தியாவின் மிகவும் பழமையான தேவாலயமாக இது கருதப்படுகிறது. கி.பி. 1552-ம் ஆண்டு மறைந்த செயின்ட் பிரான்சிஸ் சேவியர் என்ற புனிதரின் உடல் இங்கே வைக்கப்பட்டுள்ளது.

சே கதீட்ரல் தேவாலயம் புனித கேத்தரீன் அவர்களுக்கான நினைவுச் சின்னமாக உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேவாலயமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களும் மிகப் பெரிய மணியும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்கின்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

விடைபெறும் 2017: பிரகாசித்த நட்சத்திரங்கள்!

 

 
collage-2017-12-29jpg

வ்வோர் ஆண்டும் சாதனை படைத்த, வெற்றியாளர்களாக வலம்வந்த இளைஞர்கள், யுவதிகளுக்குப் பஞ்சமில்லை. இந்த ஆண்டு கவனம் பெற்ற சிலர்.

வாஷிங்டன் சுந்தர்

இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய பின்னணியோடு அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆண்டு எளிய பின்னணி கொண்ட வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் இவர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதியாட்டத்தில் விளையாடிய மிகக் குறைந்த வயது வீரர் என்றா பெருமையைப் பெற்றவர். அவர் விளையாடி புனே அணியில் மகேந்திர சிங் தோனி, ஸ்டீவன் ஸ்மித், பென்ஸ்டோக், அஜிங்கிய ரஹானே போன்ற நட்சத்திர வீரர்களைத் தாண்டி சிறப்பான செயல்பட்டால் கவனம் காட்டி ஈர்த்தார். டி20 போட்டிகளில் சிக்கனமாகப் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதில் தேர்ந்தவராகிவருகிறார். எதிர்காலத்தில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

 

தூயன்

சிறுகதைகள் வாயிலாக இந்த ஆண்டில் பேசப்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஒருவர் தூயன். 1986-ல் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘இருமுனை’ யாவரும் பதிப்பகம் வெளியீடாக சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் இளம் எழுத்தாளரின் முதல் தொகுப்பு போல இல்லாமல் முதிர்ச்சியான நடையுடனும் கதைக்களன்களுடனும் இருப்பது சிறப்பு. யதார்த்தத்தையும் தீவிரப் புனைவு சாகசத்தையும் கலந்து எழுதிக்கொண்டிருக்கும் தூயன் வருங்காலத்தில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இலக்கிய விமர்சனங்களிலும் தீவிரமாக ஈடுபடும் தூயன், கோவையைச் சேர்ந்தவர்.

கரண் ராஜன்

ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தியாவின் பாட்மிண்டன் முகங்களாக உள்ளவர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த கரண் ராஜனும் இந்த ஆண்டு சர்வதேச அளவில் சாதித்து இந்திய பாட்மிண்டன் அரங்கில் ஒளிரும் நாயகனாக மிளிர்கிறார். இந்த ஆண்டு ஜூலையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நடந்த ஃபியூச்சர் சீரியஸ் போட்டியில் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், சர்வதேசத் தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வெல்வது இதுதான் முதல்முறை. இந்த ஆண்டு 40 சர்வதேச தனி நபர் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடி, 29 போட்டிகளில் வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார். தரவரிசையில் தற்போது 107-வது இடத்தில் இருக்கும் கரண் ராஜன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகிவருகிறார்.

எழிலரசி

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்த ஆண்டு கவனம் பெற்ற வீராங்கனைகளில் ஒருவர் எழிலரசி. சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த இவர், மாற்றுத்திறனாளி. தமிழக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் இந்த ஆண்டு தங்கம் வென்றார். இதன்மூலம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக மாற்றுத்திறனாளி வீராங்கனை என்ற பெருமையையும் இவர் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு, வெறும் மூன்று மாத பயிற்சியில் இவர் நிகழ்த்திய சாதனை, அபாரமானது.

முகமது ரிஃபாக் ஷாரூக்

பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்த ஆண்டு நிரூபித்தவர் முகமது ரிஃபாக் ஷாரூக். இந்த ஆண்டு ஊடகங்களில் அதிகக் கவனம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் தயாரித்த ‘கலாம் சாட்’ என்ற குட்டி செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம்தான். இந்த கையடக்கச் செயற்கைக்கோள் நாசாவின் எஸ்.ஆர். ராக்கெட்டில் ஜூன் மாதம் விண்வெளிக்குப் பயணித்தது. இதை வெற்றிக்கரமாக உருவாக்கிய முகமது ரிஃபாக் ஷாரூக் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 62.5 சதவீதம்தான். தற்போது விண்வெளியில் வேளாண்மை குறித்து ஆய்வை மேற்கொண்டு வருகிறார் இந்த வளரும் விஞ்ஞானி.

சவுமியா

இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் மேற்படிப்புக்கு வருகிறார்கள். தகுதியால் அல்ல என்ற சொல்லப்பட்டுவரும் வாதத்தைத் தகர்த்தெறிந்த மாணவியானார் சவுமியா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சவுமியா, பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1200-க்கு 1187 மதிப்பெண்களைப் பெற்றார். அதோடு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தது. ஆனால், கால்நடை மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றதால், கால்நடை மருத்துவக் கல்லூரிக்கே சென்றார். நீட் தேர்வுக்கெனத் தனியாகப் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் கடைசி நேரத்தில் மட்டுமே தேர்வுக்குத் தயாரகி இவர் தேர்ச்சி பெற்றது பலருக்கும் முன்னுதாரமானது.

காஞ்சன மாலா

பாரா விளையாட்டுப் போட்டிகளில் இப்போதுதான் இந்திய வீரர், வீராங்கனைகள் உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளனர். அப்படி இந்த ஆண்டு கவனம் பெற்ற வீராங்கனை காஞ்சன மாலா. பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் காஞ்சன மாலா இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்திருக்கிறார். அண்மையில் மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தச் சாதனையைப் படைத்த காஞ்சன மாலா, இந்த ஆண்டு ஜூலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் பெற்று கவனம் ஈர்த்தார்.

ஜிக்னேஷ் மேவானி

 

இந்த ஆண்டு அரசியலில் கவனம் ஈர்த்த இளைஞர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவோடு சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார். தலித்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களுடைய தளபதி ஆகியிருக்கிறார் இந்த 35 வயது இளைஞர்.

கடந்த ஆண்டு குஜராத்தில் உனா நகரில் பசு மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகள் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவியபோது அந்தப் பிரச்சினைக்கு எதிராகப் போராட தொடங்கியதிலிருந்து குஜராத்தில் இவரது அரசியல் தொடங்கியது. தலித் மக்களுக்காகத் தொடர்ந்து நடத்திவரும் போராட்டம், தேர்தல் வெற்றி போன்றவை குஜராத்தைத் தாண்டி நாடு முழுவதும் ஜிக்னேஷைப் பிரபலமாக்கியுள்ளது.

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர்களில் திடீரென விஸ்வரூபம் எடுக்கும் வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இந்த ஆண்டு மட்டும் இரண்டு சாதனைகளை இவர் படைத்திருக்கிறார். ஒரு நாள் போட்டியில் ஏற்கெனவே இரண்டு முறை இரட்டைச் சதம் அடித்து உச்சத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, மொகாலியில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 208 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்து முத்திரைப் பதித்த வீரரானார்.

கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. இதேபோல மும்பையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசினார் ரோஹித். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் வங்கதேசதுக்கு எதிரானப் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையை ரோஹித் சர்மா தற்போது சமன் செய்திருக்கிறார்.

ராகுல் யாதவ்

தொழில்முனைவோராக வேண்டும் என நினைக்கும் இந்திய இளைஞர்களுக்கு ரோல் மாடல் ராகுல் யாதவ். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பிரபலமானவர்களின் பட்டியலில் உள்ளார். ஆன்லைன் மூலம் வீடு / சொத்துகளை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டாட். காம் நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி இவர். நிலங்களை மேம்படுத்துவது, வணிக மதிப்பு கொண்ட சொத்துகளை வாங்கி விற்பது, சர்வதேச விரிவாக்கம் செய்வது எனப் பல நிறுவனங்களை நடத்திவருகிறார். ‘இந்திய ஸ்டார்ட் அப்புகளின் கெட்ட பையன்’ என்று இவரது பிம்பம் சர்ச்சைகளால் கட்டமைக்கப்பட்டாலும், இவருக்கான பாப்புலாரிட்டி குறையவில்லை.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

இங்கெல்லாம் மின்தடை ஏற்பட்டால் என்ன நடக்கும்? மக்கள் வசிக்கும் உலகின் மிகவும் குளிரான இடங்கள்!

 
 

மார்கழி மாதத்தின் குளிரை தமிழகம் உணரத்தொடங்கியிருக்கிறது. இந்தக் குளிருக்கே காலையில் நடுங்கிப்போகிறார்கள் நம்மூர்க்காரர்கள். தண்ணீரில் கையை வைப்பதற்கே பல முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. இதற்கே இப்படியென்றால் மிகக்குளிரான இடங்களில் வசிப்பவர்களுக்கு எப்படியிருக்கும்? சரி... உலகில் மிகக்குளிரான இடம் எது? இந்தக் கேள்வியைக் கேட்டால் பலருக்கு அன்டார்டிகாதான் ஞாபகம் வரும். அது சரியான பதில்தான். ஆனால் அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதில்லை அங்கே பல்வேறு நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன. பல ஆராய்ச்சியாளர்கள் அங்கே வருவதும் போவதுமாக இருப்பார்கள். அப்படியென்றால் பூமியில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் பகுதிகள் இருக்கிறதா? பல நகரங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்யாவில் இருக்கின்றன. இந்த இடங்களில் மனிதர்கள் நிரந்தரமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அப்படி உலகம் முழுவதும் இருக்கும் இடங்களில் சில..

Oymyakon

 

உலகில் அதிகம் குளிர் இருக்கும் இடங்களில் ஒன்றான  ஒய்மியாகன்

ரஷ்யாவில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் இந்த ஒய்மியாகன். உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குளிரான இடங்களில் இதற்குத்தான் முதலிடம். இந்த ஊரின் மக்கள்தொகை எண்ணிக்கையே 500 தான். வருடத்தின் சராசரி வெப்பநிலையே -50°C என்பதால் அனைத்து நாள்களிலும் இங்கே குளிர் வாட்டி எடுக்கும். அதிலும் 1933-ம் ஆண்டு பிப்ரவரி  6-ம் தேதி வெப்பநிலை −67.7 °C யாக பதிவு செய்யப்பட்டது. அது வடக்கு அரைக்கோளத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைவான வெப்பநிலை. இங்கு இருக்கும் ஹீட்டிங் பிளான்ட் அனைத்து நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். ஐந்து மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உறைந்து விரிசல்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் இங்கு மின்தடையே ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

Yakutsk

Yakutsk

இதுவும் ரஷ்யாவில் இருக்கும் ஒரு நகரம்தான். சகா குடியரசின் தலைநகராக இது, 1891-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பதிவான −64.4°C தான் இங்கு பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை. மழை பெய்யும் மாதங்களில் மட்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும். 2010-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை 269, 601. இங்கு ஒரு விமான நிலையமும் இருக்கிறது. இந்த ஊரில் மக்கள் நடமாட்டத்தை அதிகமாகக் காண முடியாது பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கே விரும்புகிறார்கள்.

Norilsk

Norilsk

மக்கள் நிரந்தரமாக வசிக்கும் குளிரான இடங்களிலேயே பெரியதாகக் கருதப்படும் நார்சிலிக் இருப்பதும் ரஷ்யாவில்தான். இங்கு நிரந்தரமாக வாழும் மக்கள் மட்டுமே 1,75,000 பேர். இங்கு இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள், மற்றவர்களைச் சேர்த்துப் பார்த்தால் 2,20,000 பேர் இருப்பார்கள். இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை சராசரியாக -55 °C இருக்கும். ஒரு காலத்தில் தூய்மையான இடமாக இருந்தது நார்சிலிக். இங்கு கனிமவளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கு அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. வருடம் முழுவதும் வெளியேற்றப்படும் புகையாலும், இதரக் கழிவுகளாலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பொழுது உலகின் அதிகம் மாசடைந்த இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Fort Good Hope

Fort Good Hope

 

மற்ற இடங்கள்போல இங்கு நிலைமை அவ்வளவு மோசமில்லை. சாதாரணமான நாள்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதில்லை. ஆனால் குளிர்காலங்களில்  வெப்பநிலை குறைந்தே காணப்படும். 1917-ம் ஆண்டு ஒரு நாள்  வெப்பநிலை −56.1°Cயாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 515 பேர் வாழ்கிறார்கள். மக்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்தாலும் இந்த ஊரில் இரண்டு ரேடியோ நிலையங்கள் இருக்கின்றன; தபால் சேவையும் கிடைக்கிறது. இது தவிர 2013-ம் ஆண்டில் இங்கு 4G சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜன்னல் வைத்த ஜாக்கெட் எல்லாம் பழசு! இதுதான் புதுசு!

 

 
samantha_saree-wide

 

இந்தியப் பெண்கள் என்றாலே உலக மக்கள் வியக்கும் பல விஷயங்களில் ஒன்று நம் பெண்கள் அணியும் புடவை. அதை எப்படித்தான் கட்டுகிறார்களோ என்று ஒருகாலத்தில் வெளிநாட்டினர் வியந்து கொண்டிருந்தனர். இன்றைய நிலையில் நம் நாட்டுப் பெண்களே அப்படி சொல்லும்படியாகிவிட்டது.

5484eb69236d6ea0bc1a3263e1cae02f--saree-

வெஸ்டர்ன் ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் இளசுகள் பண்டிகை, அல்லது திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குப் போகும் போது இன்னும் புடவைகளில் வலம் வருவது மனத்துக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். 

blouse.jpg

சேலைக்கு ஏன் இளம் பெண்கள் நோ சொல்கிறார்கள் என்று கேட்ட போது அதற்கு ஜாக்கெட், பாவடை என மேட்சிங்காக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. மேலும் அந்த ஜாக்கெட்டை தைத்து அணிவதற்குள் பொறுமை போய்விடும். ஒருவருக்கு எல்லா உறவுகளும் வாழ்க்கையில் சரியாக அமைந்துவிட்டாலும், ஒரு சரியான டெய்லர் அமையவில்லையெனில் கஷ்டம்தான். பெண்களைப் பொருத்தவரையில் டெய்லர்கள் அன்றாடம் சந்திக்கக் கூடிய ஒரு முக்கிய நபர்களாகிவிட்டனர். 

blue-color-beautiful-heavy-work-designer

மேட்சிங் ப்ளவுஸ் வாங்கி தைத்தாகிவிட்டது.  எந்தந்த புடவைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் அணியலாம் என்ற ஜென்ரல் நாலெட்ஜ் இருந்தால் சேலை ஸ்பெஷிலிஸ்ட் ஆகிவிடலாம்.

full_sleeve.jpg

ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்

முழு நீளக் கை வைத்து ஜாக்கெட் தைப்பது பழைய கால பேஷன் என்று நீங்கள் சொல்ல முடியாது. காரணம் இப்போது இதுதான் லேட்டஸ்ட் ரசனை.

ee0d81b832242ad40ab874ea1b0e1f54--indian

லேஸ் வைத்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டுகள் அழகாகவும் இன்றைய யுவதிகளின் சாய்ஸாகவும் உள்ளது.

ஃபுல் நெக்லைன் ஜாக்கெட்

முக்கால் கை ஜாக்கெட் என்று இதனைச் சொல்வார்கள்.

 

Simple-blouse-back-design.jpg

இதில் கழுத்துப் பகுதி மேலே ஏறி இருக்கும். நெக் டிசைன் அதற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து தைத்துப் போட்டால் அழகாக இருக்கும்.

பஃப் ஜாக்கெட்

அந்த நாள் முதல் இந்த நாள் வரை பெண்கள் விரும்புவது பஃப் கை ஜாக்கெட்தான்.  

cute_girl.jpg

இது விதம் விதமாக டிசைன்களில் கிடைக்கிறது. ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியாக இந்த ஜாக்கெட்டை அணியலாம்.

pbiltthccddbh.jpg

டபுள் கலர் ஜாக்கெட்

இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். அந்தந்த புடவைக்கு ஏற்றபடி கலர் மேட்ச் செய்து தைக்கப்படும்.

double_color.jpg

இந்த ஜாக்கெட் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

இன்வர்டட் ஏ  ஜாக்கெட்

முன்பெல்லாம் லோ நெக் ஜாக்கெட் அணிந்த பெண்களைப் பார்க்கலாம். இப்போது நோ நெக் என்பதுதான் ஃபேஷன் போலும்.

Inverted-A-shaped-blouse-back.jpg

அதாவது முதுகுப்புறத்தை பெரும்பான்மையாக ஃப்ரீயாக விடுவதுதான். இதில் இன்வர்டட் ஏ, வி நெக், டீப் யூ, ஷீர் டைப் என பலவகையில் உள்ளது. 

ஹை நெக் ஜாக்கெட்

 

high-neck-blouse-design.jpg

கழுத்து வரை இழுத்து போர்த்தி தைக்கப்படும் அழகான சிம்பிள் ஜாக்கெட் இது. 

போட் நெக் ஜாக்கெட்

உங்கள் டெய்லரிடம் சொன்னால் அந்த டிசைனில் ஜாக்கெட் தைத்து தருவார்கள்.

boat.jpg

புடவையின் லுக்கை இந்த ஜாக்கெட் மாற்றிக் காண்பிக்கும். ரிச் லுக் கொடுக்கும் ஜாக்கெட் இது. 

க்ளிட்டரிங் ஜாக்கெட்

இதுவும் லேட்டஸ்ட் ஃபேஷன்தான். கல்லூரி அல்லது பள்ளி ஃபேர்வெல் பார்டிகளுக்கு டீன் ஏஜ் பெண்கள் இதையே விரும்பி அணிகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

Latest-Blouse-Designs-Glittery-Blouse.jp

இந்த ஜாக்கெட்டில் சம்கி, மிர்ரர் வொர்க் கலந்து தைக்கலாம். பொதுவாக ஜிகு ஜிகுவென அழகிய நிறங்களில் மின்னும் ஜாக்கெட் இது. 

சோளி ஸ்டைல் ஜாக்கெட்

இந்த ஜாக்கெட் மிகவும் எளிமையாக இருக்கும். 

Choli-Style-Blouse.jpg

பாரம்பரிய சேலைகளை அணியும் போது இந்த வகை ஜாக்கெட்டுகளை விரும்பி அணிகிறார்கள் இன்றைய யுவதிகள்.

கோல்டன் மற்றும் ரெட் கலர் ஜாக்கெட்

Golden-and-red-zari-border-blouse-back-n

கோல்டன் கலர் புடவை, மற்றும் ஹாஃப் வொயிட் சேலைகளுக்கு, இந்த சிவப்பும் தங்க நிறமும் கலந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும். பண்டிகை தினங்களில் அணிய ஏற்றது.

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

பாரபட்சமே இல்லாமல் எல்லோரையும் கலாய்த்த #தீவிர_ரசிகன்... !!#கலக்கப்போவது_யாரு

  • தொடங்கியவர்
‘இளைஞர்களும் முதியவர்களாவர்’
 

image_f71a537584.jpgமுதியவர்களே அனுபவங்களின் தொகுப்பாளர் ஆகின்றனர்.

காலங்கள் கடந்துபோகும்போது, பெற்ற அனுபவ ஞானங்களும் கூட, வந்த வண்ணமிருக்கும்.

இவர்கள் சொல்லும் அனுபவக் குறிப்புகள், இளைஞர்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.

சிலவிடயங்களைச் ஜீரணிப்பது கஷ்டம்தான். நல்ல  விடயங்களைக் கடைப்பிடிப்பது, பலருக்கு அது ஒரு தொந்தரவான சங்கதிகளாகவும் கருதப்படலாம்.

தாங்கள் சார்ந்த மதக் கோட்பாடுகள், பண்பாட்டு விடயங்களில் வயதானவர்கள் விட்டுக் கொடுக்காமல் தீவிரமாக  ஆர்வம் காட்டுவது அவர்களின் குணநலனாகும், அவர்கள் கோட்பாடுகள், பண்பாட்டு விடயங்களில் செயலுருவில் காப்பாற்றாது விட்டால் எமது நிலை என்னவாக மாறிவிடும் எனச் சற்றே சிந்தியுங்கள்.

அதுமட்டுமல்ல, இன்று நாம் பெருமையுடன் பேசிக்கொள்ளும் பாரம்பரியங்களைக் காப்பாற்றி, வருபவர்கள் இவர்களன்றோ. இளைஞர்களும் முதியவர்களாவர்; அப்போதுதான் உண்மைநிலை புரியும்.

  • தொடங்கியவர்

குளிக்கத் தேவையில்லை; பார்த்தாலே நனையலாம்! இந்தியாவின் நயாகரா அதிரப்பள்ளி! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம்-6 #Athirappally

 

 

athirappally

புரூஸ்லினா அடிக்கணும்; கமல்னா நடிக்கணும்; பாம்னா வெடிக்கணும்; காதலினா அணைக்கணும்; அருவினா..... குளிக்கணும்! ஆனால், ஓர் அருவி மட்டும் இதுக்குச் சரிப்பட்டு வராது. அது - அதிரப்பள்ளி. (Athirappally) "அப்புறம் என்னாத்துக்கு அங்க போகணும்" என்று இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்த பிறகும் உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு கவுன்சலிங் தேவை. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி எனும் இடத்தில் உள்ள அதிரப்பள்ளியில், சுனாமியில் ஸ்விம்மிங் போடுறவங்களாலகூட குளிக்க முடியாது என்பதுதான் ஸ்பெஷல். ஆனால், தினசரி அதிரப்பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை, நம் தமிழ்நாடு டாஸ்மாக் வாடிக்கையாளர்களைவிட அதிகம்.

"நீங்க வந்தா மட்டும் போதும்" என்று சொல்லும் 'சிவாஜி' ரஜினிபோல், 'பார்த்தா மட்டும் போதும்' எனும் மயக்க நிலைக்கு நம்மைத் தள்ளுவது அதிரப்பள்ளி அருவியின் அம்சம். 'நெருப்பில்லாமல் புகைகிறது அருவி' என்று வைரமுத்து ஒரு கவிதை பாடியது, அதிரப்பள்ளிக்குப் பொருந்தும். வெள்ளையாகப் புகையும் அருவி மட்டும் இதற்குக் காரணமில்லை; அதிரப்பள்ளிக்குச் செல்லும் அதிரிபுதிரி ரூட்டும் ஒரு காரணம். 'பில்ட்-அப்பை விட்டுட்டு ரூட்டைச் சொல்லுய்யா' என்று பேட் வேர்ட்ஸில் நீங்கள் திட்டுவது கேட்கிறது. 

சில காட்டு வழிகள் போல் ஒன்வே இல்லை. அதிரப்பள்ளிக்கு சில பல ரூட்கள் வெவ்வேறு திசையிலிருந்து இருக்கின்றன. கொச்சியிலிருந்து ஒரு பாதை உண்டு. இது 72 கி.மீ. எர்ணாகுளத்திலிருந்து கேரள நெடுஞ்சாலையில் அங்கமாலி தாண்டி வலதுபுறம் அதிரப்பள்ளிக்குச் செல்ல ஓர் அருமையான ரூட் இருக்கிறது. கேரளா போய்த்தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை; தமிழ்நாட்டிலிருந்து பொள்ளாச்சி, வால்பாறை, சோலையார் வழியாகவும் அதிரப்பள்ளிக்கு ஒரு க்ளீஷேவான ரூட் இருக்கிறது. நான் இதைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். 

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வழியாக அதிரப்பள்ளி போவதுதான் என் திட்டம். அதிரப்பள்ளியின் அழகைப் பற்றி ஏற்கெனவே பல கவிஞர்கள் வர்ணித்துத் தள்ளியிருந்ததை பல பிளாக்குகளில் வாசித்தது நினைவுக்கு வந்தது. 'Stop Wishing; Start Doing' என்று எனக்கு நானே வெறியேற்றிவிட்டுக் கிளம்பினேன். காலையில் ஆழியாரில் குரங்குகளோடு குரங்காய் ஒரு செல்ஃபி. அப்படியே ஆழியார் செக்போஸ்ட்டில் நுழைந்தபோது, வழக்கம்போல காரை சும்மானாச்சுக்கும் செக்கிங் பண்ணினார்கள். எதுவும் சிக்கவில்லை. 'எங்க? எதுக்கு? என்னைக்கு ரிட்டர்ன்? இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா? வேற யாரும் இல்லையா? கேமரா இருக்கா?' என்று மனைவியைவிடக் கேள்வி கேட்டார்கள். இங்கே 4 மணி வரைதான் என்ட்ரிக்கான அனுமதி கிடைக்கும். பெண்கள், குழந்தைகள் என ஃபேமிலியாக வந்தவர்களுக்கு மட்டும் செக்கிங் கிடையாது. ஆனால் மனைவியுடன் மட்டும் வந்தால், திருமண சர்ட்டிஃபிகேட்டெல்லாம் கேட்பார்கள் போல! தமிழ்நாடு ஃபாரஸ்ட் டூரிஸம் கடமை வியக்க வைத்தது.

Athirappally

 

அதிகபட்சம் மாலை 4.30-க்குள் ஆழியார் செக்போஸ்ட்டில் கையெழுத்திடுவதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். போகும் வழியிலேயே இடதுபுறம் அருமையான ஒரு வியூ பாயின்ட்டில் யானைகள் கும்பலாக மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு படத்தில் ஓப்பனிங் சாங்கே நம்மை உற்சாகமாக்கிவிட்டால், மொத்தப் படத்தையும் பார்க்க ஆர்வமாகி விடுவோமே... அதுபோல் அதிரப்பள்ளி டூர் இன்னும் வெறியேற்றியது. குழந்தைகள் கார்ட்டூனை ரசித்துப் பார்ப்பதுபோல், யானையார்களைத் தூரத்திலிருந்து பார்ப்பது செம ஃபன்னாக இருந்தது.

சிலருக்கு மலைப் பாதையில் காரில் செல்லும்போது தலைச்சுற்றல், வாந்தி, கூடவே பேதி எல்லாமே வான்டட் ஆக வண்டி ஏறும். இதற்கு 'Motion Sickness' என்று பெயர். கார் நகரும்போது தெரியும் காட்சிகளை பேலன்ஸ் செய்ய முடியாமல் மூளை திணறுவதுதான் 'மோஷன் சிக்னெஸ்'. இதற்கு ஒரு சரியான தீர்வு இருக்கிறது. டிரைவருக்குப் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து, பக்கவாட்டில் வேடிக்கை பார்க்காமல் நேராக ரோட்டைப் பார்த்தபடி பயணித்தால்... வாந்திக்கு வாய்ப்பிருக்காது. காரில் இருக்கும் ரப்பர், லெதர் வாசனையும் இன்னொரு காரணம். மலையில் செல்லும்போது, ஏ.சி போடாமல் கதவைத் திறந்துவிட்டு காட்டின் வாசனையை நுகர்வதுகூட நல்ல தீர்வு தரும்.

மலையேறும்போது, வாந்திக்கு இறங்குகிறீர்களோ இல்லையோ, குரங்கு அருவியில் இறங்கிக் குதூகலிக்க மறக்காதீர்கள். குரங்கு அருவியில் குளிக்க 30 ரூபாய் கட்டணம். இதில்கூட ஒரு ட்ரிக்கைக் கையாள்கிறது தமிழ்நாடு டூரிஸம். எப்படியென்றால், கீழே செக்போஸ்ட்டிலேயே குரங்கருவிக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதுதான் ரூல். உள்ளூர்க்காரனுக்குத்தானே ஊருணியின் ஆழம் தெரியும். என்போன்ற வெளியூர்வாசிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குரங்கு அருவிக்குத் தாவிச்சென்ற என்னை மடக்கிப் பிடித்தனர் செக்யூரிட்டிகள். 

''சார், டிக்கெட்டு?''
''எவ்வளவு? இந்தாங்க... டிக்கெட் குடுங்க!''
''கீழேதான் எடுக்கணும் சார்.''
''எனக்குத் தெரியாதே.. யாரும் சொல்லவே இல்லையே!''
''கீழே போர்டு போட்டிருக்குமே.. பார்க்கலையா? போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துடுங்க!''
''திரும்பவும் அரைமணி நேரம் கீழே இறங்கிப் போய் எடுத்துட்டு வரணுமா?''
''உங்க கஷ்டம் புரியுது. 50 ரூபாய் குடுங்க.. உள்ளே போய் ஜாலியா குளிச்சுட்டு வாங்க! அப்புறம், காரை லாக் பண்ணிடுங்க! குரங்குங்க தொல்லை அதிகம்!''

இப்படிப்பட்ட ஆஃபரை அறிவித்து, 'படித்துறை பாண்டி'போல் கலெக்ஷன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். 'போர்டுல எழுதியிருக்கே... பார்க்கலையா' என்று அந்த செக்யூரிட்டி சொன்னதை நினைவுபடுத்தி, டூர் முடியும்போது பார்த்தேன். நாளிதழ்களில் 'Classifieds' பகுதிக்கு விளம்பரம் கொடுப்பதுபோல் தேடித் தேடிப் படித்தேன். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எதுவும் இல்லாத எனக்கே படிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. இந்த 50 ரூபாய் சிக்கல், குரங்கு அருவி அமைந்திருக்கும் அழகைப் பார்த்தால் மறந்து போகிறது. பைக்கின் டூயல் எக்ஸாஸ்ட்போல், இரண்டாக ஸ்ப்ளிட் ஆகி விழுகிறது குரங்கு அருவி. இலியானா இடுப்புபோல் ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக ஒரு பக்கம் விழுந்து கொண்டிருந்த அருவியில் தலை கொடுத்தேன். குரங்கருவிக் குளியல் கிறங்கடித்தது. 

Athirappally

 

40 கொண்டை ஊசிகள். ஏதோ ஒரு கொண்டை ஊசி வளைவில் நின்று கீழே பார்த்தேன். அழகாக வளைந்து அம்சமாக ரயில் பூச்சி போல் நெளிந்திருந்தது பாதை. வழிநெடுக வரையாடுகள், சாலையில் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வால்பாறையில் சிறுத்தைகள் அதிகம் என்றார்கள். அதைவிட யானைகள் அதிகம் என்றார்கள். தேயிலைத் தோட்டத்தில் மூன்று பெண்களை மிதித்து அழிச்சாட்டியம் பண்ணிய யானைகளைப் பற்றிய நியூஸ் ஒன்றைப் படித்த ஞாபகம் வந்து 'டர்' அடித்தது. "ஆனையைப் பார்த்தா வயித்த நிரப்ப முடியாதே தம்பி" என்றார் ஒரு தேயிலை தேவதை.

வால்பாறையில் ஸ்டே. இங்கே குட்டிக் குட்டி காட்டேஜ்கள், 700-ல் இருந்து 1,500 வரை செம சீப் அண்ட் பெஸ்ட்டாகக் கிடைக்கின்றன. சாதாரண வீட்டை காட்டேஜ்களாக மாற்றி வாடகைக்கு விடுகிறார்கள். கையைக் கடிக்காத விலையில் என்போன்ற 'யூத்!(!)'களுக்கு வால்பாறை ஒரு வரப்பிரசாதம்தான். என் நண்பன் ஒருவன், 7 பேர் கொண்ட கும்பலுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குத் தங்கிய கதையெல்லாம் சொல்லி வெறுப்பேற்றியிருக்கிறான். வால்பாறையில் இரண்டு நாள் தங்கி சுற்றிப் பார்க்க எக்கச்சக்க இடங்கள் உண்டு. பாலாஜி கோயில், எரச்சிப்பாறை நீர்வீழ்ச்சி, சின்னக் கல்லார் அணை, நீரார் அணை, வெள்ளை மலை, சோலையார் அணை, மயிலாடும் பாறை, சூஸைடு பாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு, அக்காமலை புல்வெளி என்று எத்தனை இடங்கள்! டாக்ஸி பிடித்தீர்கள் என்றால், ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். இரண்டு நாள் கவரேஜில் மொத்தத்தையும் என்ஜாய் பண்ணலாம். 

 

Athirappally

 

வால்பாறைக்கு ஒரு சேப்டர் எல்லாம் போதாது. என் டார்கெட் இப்போது, அதிரப்பள்ளி மட்டுமே! 'இன்னொரு நாள் உன்னை வெச்சுக்குறேன்' என்று வால்பாறைக்கு 'Vengeance' வைத்துவிட்டுக் கிளம்பினேன். சோலையார் அணை வழியாகத்தான் அதிரப்பள்ளிக்குப் போக வேண்டும். மொத்தம் 85 கி.மீ. மூன்றரை மணி நேரம் ஆகும். வழியில் எங்காவது ரிலாக்ஸுக்கு இறங்கினீர்கள் என்றால், காரில் ஏறும்போது செக் செய்துவிட்டு காரைக் கிளப்புங்கள். அட்டைப் பூச்சி இருக்கலாம். போகும்போது 'நார்னியா' படத்தில் வரும் 'Beaver' போன்ற குட்டி விலங்கு பார்த்தேன். செம அழகு. 

சோலையார் அணை தாண்டி 7 கி.மீ-ல் ஒரு டிஃபன் கடை தெரிந்தது. இட்லி பார்சல் வாங்கிக் கொண்டேன். கேரளா செக்போஸ்ட்டில், ''பிளாஸ்டிக்குக்கு என்ட்ரி தரில்லா'' என்று கவரோடு இட்லியைப் பிடுங்கிக் கொண்டார்கள். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால் போல் அவமானமாக இருந்தது. கேரளாவில் பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் எல்லாவற்றுக்கும் தடை. அதையும் மீறிக் கொண்டுபோனால், அடுத்த செக்போஸ்ட்டில் இதே ஐட்டங்களைக் காண்பிக்க வேண்டும். 

 

Athirappally

 

இங்கே 6 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி. "காரிலின்னு பொறத்தே இறங்காருதே.... மிருகங்கள்னு ஆகாரம் கொடுக்காருதே..." என்று ரசீதில் நேரம் போட்டுத்தான் அனுப்புகிறார்கள். 50 கி.மீ. பயணம். அதிகபட்சம் இரண்டரை மணி நேரம். அதற்குள் வளச்சல் செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட வேண்டும். 2 மணி நேரத்தைக் கடத்திவிட்டு மொக்கையாக 2,000 காரணங்கள் சொன்னாலும், பல்க்காக 2,000 ரூபாய் அபராதம் கட்ட நேரிடலாம்.

அதிரப்பள்ளி சாலை அத்தனை அற்புதமாக இருந்தது. திடீரென இரு பக்கமும் பசுமை, மொட்டையாக வந்த காடு, சரேலென உயர்ந்து நின்ற மரங்கள், திடும்மென மேடு, ஷார்ப் பெண்டுகள், ஊழல் இல்லாமல் கட்டப்பட்ட அச்சமுறுத்தும் பாலங்கள் என்று கமல் போல் எத்தனை கெட்-அப்! சில நேரங்களில் சூரிய வெளிச்சம்கூட விழவில்லை. நான் சாலையின் இருபக்கமும் பார்த்துக் கொண்டே காரோட்டினேன். அதிரப்பள்ளி சாலையில் அனிமல்ஸ் பார்க்க விரும்புபவர்கள் - செக்போஸ்ட் கேட்டைத் திறந்ததும், அதாவது 6 மணிக்குக் கிளம்புங்கள். அல்லது மாலை 4 மணி.

பட்டப்பகலில் அனிமல்ஸ் எல்லாம் ஊருக்குள் போயிடுதுங்க போல! குணச்சித்திர நடிகர்கள் மாதிரி எப்போதாவது சாலையில் ஹாய் சொன்ன மந்திகள், மான்கள், அணில்கள் பார்த்தேன். வால்பாறையோடு சரி; யானைகள் எல்லாம் யு-டர்ன் அடித்து டாப்ஸ்லிப் பக்கம் போயிருக்கலாம். நான் யானை நினைப்பாகவே பயணித்தேன். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதுபோல், எனக்குக் கறுப்பாக எதைப் பார்த்தாலும் யானையாகவே தெரிந்தது. சில பைக் ரைடர்கள் மென்மையாகக் குத்திய பனிக்காற்றை முகத்தில் வாங்கியபடி ஜாலி ரைடு போனார்கள். காரில் காட்டில் பயணம் போகும்போது இளையராஜா, ஏஆர் போன்ற மேதைகளுக்கு லீவு விட்டு விடுங்கள். காட்டுக்கென்று ஓர் இசை இருக்கிறது. கதவைத் திறந்து விட்டால் 100 இளையராஜா, 50 ஏஆர் ரஹ்மான்களுக்கு இணையாக இசை கேட்கிறது. 

 

Athirappally

 

வளச்சல் செக்போஸ்ட்டில், சரியான நேரத்துக்குள் ஜாமீன் வாங்கிய கைதிபோல் சைன் போட்டேன். அதிரப்பள்ளி அருவிக்கும் சேர்த்து இங்கேயே டிக்கெட் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். (வால்பாறை டூரிஸம்... நோட் பண்ணுங்க!) கடைகளில் விழாக்காலங்களில் ஆஃபர் தருவதுபோல் அதிரப்பள்ளிக்கு ஆஃபர் என்று இந்த வளச்சல் அருவியை வைத்துக் கொள்ளலாம். உள்ளே குழந்தைகளுக்கான பார்க்கில், குழந்தைகள் தெளிந்த நீரோடைபோல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உயிரோட்டமாக இருந்தது. அதைத் தாண்டினால், ஒரு நிஜ நீரோடை. அதைவிட உயிரோட்டமாக இருந்தது. இதுதான் வளச்சல் என்றார்கள். அருவி என்றால், இதிலாவது குளிக்கலாம் என்று நினைத்தேன். குட்டி சுனாமி மாதிரி 'குய்'யென்ற சத்தத்துடன் வழிந்தோடிக்கொண்டிருந்தது வளச்சல். இந்த வளச்சல் பகுதிதான் வன விலங்குகள் வளமையாக வாழ வழி வகுக்கிறது என்றார்கள். கால்கூட நனைக்க முடியாதபடி பாதுகாப்பு வளையம் போட்டிருந்தார்கள். செல்ஃபிக்கள் மட்டும் எடுத்துக்கொண்டேன்.

 

Athirappally

 

மறுபடியும் காட்டுப் பயணம். இந்த முறை யானை பார்த்தே விட்டேன். ATM மெஷினில் பணம் எண்ணும் சத்தம் கேட்கும்போது ஒரு சந்தோஷம் வருமே... யானைகள் கிளையை முறிக்கும் சத்தம் எனக்கு அதற்கு இணையாக இருந்தது. தேங்க்ஸ் டு அதிரப்பள்ளி.

 

Athirappally

 

திடீரென வாகன இரைச்சலும், மனித நடமாட்டமும் தெரிந்தது. அதிரப்பள்ளி வந்துவிட்டதற்கான அறிகுறி. அதிரப்பள்ளியில் பார்க்கிங் இடத்துக்குப் பஞ்சமே இல்லை. கக்கத்தில் தோல் பையைச் செருகிக்கொண்டு, நாக்கைத் தடவி எச்சில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் எந்த அண்ணாச்சிகளும் இங்கே இல்லை. கிட்டத்தட்ட கி.மீ கணக்கில் காடு முழுக்க நெடுஞ்சாண்கிடையாக கார்களை பார்க் பண்ணியிருந்தார்கள். குழந்தைகளுக்குத் தலையைத் துவட்டும் தாய்மார்கள், ஈர உடம்பில் தங்கள் குல்ஃபிகளோடு செல்ஃபி எடுத்த காதலன்கள், கட்டுச்சோற்றைப் பிரித்து நம் நாக்கில் எச்சில் ஊறவைத்த கூட்டுக் குடும்பம் - எல்லாமே 'சொல்வனம்' கவிதைப் பகுதிக்கான விஷுவல்ஸ்.

'ஹோ'வென பேரிரைச்சல். அதிரப்பள்ளிதான் அலறியது. காரிலிருந்தே மரங்களின் கிளைகளினூடே அதிரப்பள்ளியின் அழகைப் பார்த்தேன். நெருப்பே இல்லாமல் புகைந்து கொண்டிருந்தது அதிரப்பள்ளி. சுற்றிலும் வெள்ளைப் புகைமூட்டமாய் 'திக்' என்று மனதுக்குள் அதிர்ந்தது. ஆனாலும் 'எப்படா போவோம்' என்றிருந்தது. வீக் எண்ட் என்பதால், திமுதிமுவெனக் கூட்டம். அருவிக்குப் பக்கத்தில் யாரையும் விடாமல் கயிறு கட்டி அத்தனை பாதுகாப்பாய் வைத்திருந்தார்கள் அதிரப்பள்ளியை. ஒரு வகையில் நமக்கும் இதுதான் பாதுகாப்பு. 

கயிற்றையொட்டி நின்று அதிரப்பள்ளியை ரசித்தேன். இயற்கையின் பிரம்மாண்டம் குளிர்ச்சியோடு செல்லமாய் முகத்தில் அறைந்தது. சரிதான்; குளிக்கவெல்லாம் தேவையில்லை. சும்மா நின்றாலே, மூஞ்சியில் உடம்பில் மனதில் உடையில் சாரல் அடித்து நனைத்து விடுகிறது. டிரெஸ் சேஞ்ஜ் பண்ணியே ஆக வேண்டும்போல! ஏதோ ஸ்பா ட்ரீட்மென்ட் எடுத்ததுபோல் இருந்தது. எதுவுமே அனுபவிக்காத வரைதான் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்பது சரிதான். அதேநேரம், குளிப்பதற்கு இங்கே வேறு ஒரு ஆப்ஷன் இருந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன். இடது ஓரம் கெட்டிக் கிடந்த நீரோடையில், குடும்பம் குடும்பமாய்க் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றுக்குள் மீன்கள் 'கிச்சு கிச்சு' மூட்டின. தண்ணீர் கம்மியாக இருப்பதால், குழந்தைகள்கூட கும்மியடித்துக் குளித்து என்ஜாய் பண்ணினார்கள். 

அதிரப்பள்ளி அருவியைக் கீழே இருந்தும் பார்க்கலாம். கிட்டத்தட்ட அரை கி.மீட்டர் கீழே ட்ரெக்கிங் போய் மேலே அண்ணாந்து பார்த்தேன். அந்தக் கணம் என்னை ஏதோ ஒரு மகிழ்ச்சியான தியான நிலைக்குக் கொண்டு சென்றது. உலகின் ஒட்டுமொத்த மழையும் ஒன்றாக ஒரே இடத்தில் பொழிந்தால், எத்தனை தடிமனாக இருக்கும்! அதுபோல் இருந்தது அருவி. கர்நாடகா 'ஜோக் நீர்வீழ்ச்சிக்குப்' பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. ஆனால் அகலத்தில் இதுதான் முதல் இடம். கிட்டத்தட்ட 260 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கும் தண்ணீர், மாவுத் துகள்களாய்ச் சிதறி எழுந்து சிரித்தபடி ஓடுகிறது. நாலு தூத்தலுக்கே நானூறு கவிதைகள் பாடும் கவிஞர்கள், அதிரப்பள்ளியைப் பார்த்தால் நிச்சயம் சும்மா விடமாட்டார்கள்! 'இந்தியாவின் நயாகரா' என்று இதைச் சொல்வது சரிதான். அருவி நீரின் அந்த ஆக்ரோஷமான, சந்தோஷமான தாண்டவத்தை மணிக்கணக்கில் நின்று ரசித்தேன். அலுக்கவே இல்லை. என்னைப்போல் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். கண்ணை மூடித் திறந்து பார்த்தால், சுற்றி வானவில் வளையம் தெரிந்தது. 

 

Athirappally

 

இதன் பெரிய வரலாற்றை சின்ன நீரோடைபோல் சொல்கிறேன். கு(றி)ளித்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 145 கி.மீ நீளம் கொண்ட சாலக்குடி நதி, ஆனைமலை மலையிலிருந்து ஆரம்பமாகிறது. அமைதியின் சொரூபமாக சாலக்குடி நதியிலிருந்து வரும் நீர், அதிரப்பள்ளியில் தாண்டவம் ஆடிவிட்டு, வளச்சல் காடு வழியாகப் பயணித்து, பெரியாற்றில் இணைந்து, அரபிக் கடலில் கலக்கிறது. 

இந்தப் பிரம்மாண்டத்தைத்தான் நிறைய சினிமாவில், கேமராவுக்குள் கொண்டுவந்திருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள். 'புன்னகை மன்னன்' படத்தில் கமலும் ரேகாவும் தற்கொலை செய்வது அதிரப்பள்ளி அருவியில்தான். 'குரு' படத்தில் 'வெண்மேகம் முட்ட முட்ட' பாடி உலக அழகி ஆடும் இடம் சாட்சாத் அதிரப்பள்ளியேதான். இது தவிர ராவணன், பையா, பேராண்மை என்று பல படங்கள் விஷுவலாக அழகாக வந்ததற்குக் காரணம் - அதிரப்பள்ளியாக இருக்கலாம். 

Athirappally

 

சாலக்குடிக்கும் அதிரப்பள்ளிக்கும் இடையே ஒரு சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் இருந்தன. குறிப்பாய் பட்டர்ஃபிளை பார்க் மற்றும் தீம் பார்க். அதிரப்பள்ளியில் தங்குவதற்கு நிறைய ரெஸார்ட்கள், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. சில ரெஸார்ட்கள், ஓடை ஓரத்தில் அமர்ந்திருக்கின்றன. பார்த்தாலே தங்க வேண்டும் போல் இருந்தது. நிறைய பேர் அருவியைத் தரிசித்துவிட்டு, அப்படியே தலை துவட்டிக் கிளம்பி விடுகிறார்கள். நானும் இப்போது அந்த ரகம்தான். வேறு வழியில்லாமல்தான் கிளம்பினேன். திரும்பவும் வந்த வழியே போய், இரண்டு மணி நேரத்துக்குள் கேரளா செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட வேண்டிய பெரிய டாஸ்க் எனக்கு இருக்கிறது.

 

நெருப்பில்லாமல் புகைந்த அதிரப்பள்ளி, அந்தக் கணத்திலிருந்து என் மனதிலும் ஒரு புகைச்சலை எழுப்பித் தொலைத்து விட்டது. 'இந்த அருவிக் கரையோரம் ஒரு வாழ்க்கை வாய்த்தால் எப்படி இருக்கும்!'

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

2017: விளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள்

 

விளையாட்டு உலகில் 2017- ஆம் ஆண்டு நடந்த சாதனைகள், சுவாரஸ்ய நிகழ்வுகள் மற்றும் சர்ச்சைகளை விளக்கும் தொகுப்பு இது.

வரலாற்று சாதனை நிகழ்த்திய ரஃபேல் நடால்

ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-ஆவது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை

10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால்.

Presentational grey line

சாதித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மித்தாலி

இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கே பெரும்பாலும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைப்பது வழக்கம். ஆனால், விதிவிலக்காக 2017-ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணியின் சாதனைகள் பெரிதும் பாராட்டப்பட்டன.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் நூலிழையில் தோற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டாலும், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

சாதித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை எட்டியதற்கு இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் பங்கும், தலைமையும் காரணமாக கூறப்பட்டது.

Presentational grey line

மெஸ்ஸியின் திருமணமும், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையும்

மெஸ்ஸிமெஸ்ஸியின் திருமணம்

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, தனது குழந்தை பருவ அன்புத்தோழியை திருமணம் செய்துகொண்டார். அவரது சொந்த ஊரில் நடந்த இத்திருமணம் ''நூற்றாண்டின் திருமணம்'' என வர்ணிக்கப்பட்டது.

கிறிஸ்டியானோ ரொனால்டோகிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி ஆர் (Ballon d'Or) விருதை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றார்.

கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருதை ஏற்கனவே 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ரொனால்டோ வென்றிருந்தார்.

Presentational grey line

பேட்மிண்டன் சாதனையாளர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 2017-ஆம் ஆண்டில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்தினார்.

கிடாம்பி ஸ்ரீகாந்த்nகிடாம்பி ஸ்ரீகாந்த்

சில பட்டங்களை அவர் தவறவிட்டாலும், தற்போது ஒற்றையர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் சிந்து உள்ளார்.

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், தொடர்ந்து ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ், டென்மார்க் ஓபன் மற்றும் ஃபிரஞ்சு ஓபன் என பல பட்டங்களை பெற்றார்.

மேலும் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த் இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தினார் என்பது மிகையாகாது.

Presentational grey line

அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற பெடரர்

பெடரர்

2017-ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம், ஆண்கள் பிரிவில் மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்தார்.

விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையும் ரோஜர் பெடரருக்கு கிடைத்தது. 35 வயதாகும் ரோஜர் பெடரர் வென்றுள்ள 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

Presentational grey line

ஊக்க மருந்து சர்ச்சையால் ரஷ்யாவுக்கு தடை

தென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக்ஸில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

2014 ஆம் ஆண்டு சூச்சி நகரில் ரஷ்யா சார்பில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் அரசு ஆதரவுப்பெற்ற ஊக்க மருந்து பயன்பாடு இருந்தததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையையடுத்து சர்வதேச ஒலிம்பிக் குழு இதனை அறிவித்துள்ளது.

ஆனால், ஊக்க மருந்து சோதனையை எதிர்கொண்டு தங்களை நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நடுநிலை கொடியுடன் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

Presentational grey line

விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன்

ஓய்வுபெற்றார் உசைன் போல்ட்ஓய்வுபெற்றார் உசைன் போல்ட்

வரலாற்றின் மிக அதிக வேக மனிதர் என்று கருதப்பட்ட ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் லண்டனில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியுடன் தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

தனது தடகள வாழ்வின் கடைசி சர்வதேசப் போட்டியில் தங்கம் வெல்ல விரும்பிய ஜமைக்க வீரர் உசைன் போல்ட்டின் கனவு நிறைவேறாமல் போனது.

அதிர்ச்சியில் முடிந்த உசைன் போல்டின் சாதனை பயணம் அதிர்ச்சியில் முடிந்த உசைன் போல்டின் சாதனை பயணம் Presentational grey line

2017-இல் தொடர்ந்த இந்திய அணியின் வெற்றி பயணம்

2017-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

Ravindar Jadeja (third from right) celebrates taking a wicket with his India team-mates

2017-இல் 4 டெஸ்ட் தொடரில் விளையாடி நான்கிலும் இந்திய அணி வென்றது. இலங்கைக்கு எதிராக 2 முறை வென்ற இந்தியா, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடர்களில் வென்ற இந்தியா, சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

சாதித்த இளம் வீரர்கள்சாதித்த இளம் வீரர்கள்

அனுபவம் வாய்ந்த மட்டைவீச்சாளர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல, இளம் வீர்களான கேதார் ஜாதவ், குல்தீப், அக்சர் பட்டேல், சாஹல் மற்றும் பூம்ரா போன்றோரும் சிறப்பாக பங்களித்தனர்.

Presentational grey line

கர்ப்பகாலத்தில் கடின விளையாட்டு: சாதனை நிகழ்த்திய செரீனா

2017-ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் வென்றார். கர்ப்பமாக இருந்தபோதே அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பதை பலரால் நம்பமுடியவில்லை.

Serena Williams

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் செரீனா வில்லியம்ஸூக்கு .புளோரிடா மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

23 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனையான செரீனா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

Presentational grey line

கோலிக்கு 'டும்..டும்..டும்..'

அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி திருமணம்இன்று நாம் ஒருவருக்கொருவர் என்றென்றும் அன்புடன் பிணைக்கப்பட்டிருப்போம் என்று உறுதியளித்தோம்

2017-ஆம் ஆண்டு இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் டிசம்பர் 11-ஆம் தேதியன்று திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஆண்டு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ஜொலித்த கோலியின் திருமண வரவேற்புக்கு ஏரளாமானோர் நேரில் வாழ்த்து தெரிவித்த நிலையில், சமூகவலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

Presentational grey line

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஒளிரும் கண்கள்  காட்சிகள் ஒளிந்திருக்கும் இடம் கேமராவா?

 

 
29CHVANSelvan1501jpg

ஒரு மழை நாளில் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்.

ழகிய சிற்ப வேலைப்பாடுகள், கோயிலைச் சுற்றி அருமையான புல்தரை, உள்ளே நுழைந்ததும் உடலும் உள்ளமும் இலகுவாகும் தன்மையும் சூழலும் கொண்ட இடம் கங்கைகொண்ட சோழபுரம். பனி விழும் அதிகாலை 6 மணிக்கு அங்கு நிலவும் அமைதியும் குறைந்த ஒளியில் கோபுரம் தென்படும் காட்சியும் அற்புதமானவை!

29CHVANSelvan1502jpg
         
 

கோபுரத்துக்குப் பின்னே மாலைச் சூரியன் நகர்ந்ததும், அந்த ஒளியில் சில படங்களை எடுத்துவிட்டுத் திரும்பும்போது எதிர்பாராத கடும் மழை. அவசர அவசரமாக கேமராவை உள்ளே பத்திரப்படுத்திவிட்டு, எங்கும் நகர முடியாமல் நுழைவாயிலில் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையின் கீழே 15 பேர் நின்றிருந்தோம்.

29CHVANSelvan1503jpg
 

ஒரு பக்கமாக வீசிய மழைக் காற்று எனது பின்பிறத்தையும் கேமரா பையையும் நனைத்தது. மேலே தகரக் கொட்டகை இடுக்கிலிருந்த ஓட்டையின் வழியே மழைநீர் சொட்ட ஆரம்பித்தது. கால் மணி நேரம் விடாமல் பெய்த மழையின் ஊடே வெயிலடித்து கோபுரத்துக்கு எதிர்த் திசையில் ஒரு பெரிய வானவில் கருமேகங்களுக்கிடையே பூத்திருந்தது. அந்தி மஞ்சள் வெயில் மழை மேகத்தைக் கிழித்துக்கொண்டு அங்கு படர, இதுவரை கங்கைகொண்ட சோழபுரத்தை அப்படிப்பட்ட ஒளியில் நான் பார்த்ததில்லை. ஒரு பிரம்மாண்டத் தைல வண்ண ஓவியம் என் கண் முன்னே தோன்றியது போலிருந்தது!

29CHVANSelvan1504jpg

தயாராகும் கால்பந்து வீரர்கள், நெய்வேலி.

 

கேமராவைப் பையிலிருந்து எடுக்க நேரமில்லாமலும் அந்த ஒளியைத் தவறவிடக் கூடாது என்ற வேகத்தில் அலைபேசி கேமராவை எடுத்து அந்தக் காட்சியைப் பதிவுசெய்தேன். படத்தை எடுத்த உடன் மதியை மயக்கிய அந்த ஒளியும் மேகத்துக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. கேமராவில் எடுத்திருந்தால் இன்னும் தரமான படமாக அமைந்திருக்கும். ஒளிப்படம் எடுக்காமலே தவறவிடுவதைவிடச் சில விநாடிகளுக்குள் மறைந்துபோகக்கூடிய அந்தக் காட்சியை அலைபேசி கேமராவிலாவது பதிவுசெய்தோமே என்ற மகிழ்ச்சி இருந்தது!

29CHVANSelvan1505jpg

தாமரை மலர்கள்.

 

இப்படி அவசர, அவசியத்துக்காக, கையடக்கமாக, எளிதாக, விரைவாகப் பதிவுசெய்வதற்கென்றே தரமான அலைபேசி கேமராவை வாங்கினேன். இதில் எவ்வகை ஒளியைப் பதிவுசெய்ய இயலும், எத்தகைய காட்சிகளைப் பதிவுசெய்வதற்கான சாத்தியம் உள்ளது, அசையும் உருவங்கள் - ஓடும் உருவங்களை எந்த அளவுக்குத் துல்லியமாகப் பதிவுசெய்ய இயலும் என்பது போன்ற பரிசோதனை முயற்சிகளைச் செய்துவருகிறேன்.

29CHVANSelvan1506jpg

பனி விழும் விடிகாலைப் பொழுதொன்றில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

"2017-ல் என் டாப் 10 பர்சனல் தருணங்கள்!" - நெகிழும் செரீனா வில்லியம்ஸ்

 
 

செரீனா

ந்த ஆண்டு, பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்துள்ளது. தாய்மை முதல் உலக அளவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது வரை, தனிப்பட்ட வாழ்க்கையிலும் டென்னிஸ் விளையாட்டிலும் பல சாதனைகளை இந்த ஆண்டில் பதிவுசெய்துள்ளார். தன் வாழ்க்கையில் நடந்த 10 சிறந்த தருணங்களை, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறார். 

 

செரீனா1. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்ட தருணம். இது சாதாரணமான ஒன்றுதான் என்று இயல்பாக இருந்தாலும், மனதளவில் எதையோ இழந்துகொண்டிருந்தேன். ஏனென்றால், அப்போது ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடவேண்டியிருந்தது. 

2. இரண்டு மாத கருவை வயிற்றில் சுமந்தவாறு, மெல்போர்னின் ஆஸ்திரேலிய டென்னிஸ் ஓபன் போட்டியில் விளையாடினேன். 

3. வாவ்! அந்தப் போட்டியில் நான் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது. நான் இரண்டு மாத கருவை சுமப்பது, என் காதலன் அலெக்சிஸ் ஒஹனியன் மற்றும் சகோதரி வீனஸை தவிர அப்போது வேறு யாருக்கும் தெரியாது. 

4. என் திருமணத்தின்போது அனைவரும் எனக்குத் தேவையானவற்றை செய்துகொடுத்து, என்னை ஒரு தேவதைபோல உணரச்செய்தது. 

5. நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது... 

6. என் திருமண உடை வடிவமைக்கப்பட்டபோது... 

7. 7.5 வாரங்கள் பற்றி நினைத்துக்கொண்டிருந்த தருணம்... 

8. ’வானிட்டி ஃபார்’ என்ற சர்வதேச பத்திரிகைக்கு நான் அளித்த போஸ். (ஆறு மாத கர்ப்பிணியாக, ‘வானிட்டி ஃபார்’ என்ற சர்வதேச பத்திரிகைக்கு ஆடைகளின்றி போஸ் கொடுத்திருந்தார் செரீனா. சமூகவலைதளங்களில், செரீனாவின் புகைப்படம் வைரலானது.) 

9. எனக்கு டெலிவரி டைம் நெருங்கியபோது... 

10. என் அழகான குழந்தை பிறப்பதற்கு ஒருநாள் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருணம்... 

செரீனா

PC:  instagram.com/serenawilliams

இப்படித் தன் வாழ்க்கையில் நடந்த 10 பர்சனல் தருணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் செரீனா. கடந்த ஏப்ரல் மாதம், தன் இன்ஸ்டா பக்கத்தில் 20 வாரங்கள் என்று பதிவிட்டு, மேடிட்ட வயிற்றுடன் தன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹனியனும் செரீனாவும் 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், செரீனா கர்ப்பம் தரித்தார். தான் கர்ப்பமாக இருப்பதை நம்பமுடியாமல் ஆறு முறை பரிசோதனை செய்துள்ளார். அப்போது, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிக்காகப் பயிற்சியில் இருந்தார். இரண்டு மாத கருவுடன் அந்தப் போட்டியில் விளையாடி, மகளிர் ஒற்றையர் பிரிவில் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இதன்மூலம், உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் செரீனா. அதன்பிறகு, தன் தாய்மை தருணங்களை ரசிக்க ஆரம்பித்தார். 

கடந்த செப்டம்பர் முதல் தேதி, பெண் குழந்தையைப் பெற்றார். சில நாள்கள் கழித்து, தன் அம்மாவுக்கு ஓர் உருக்கமான கடிதம் எழுதினார் செரீனா. அதில், 'நான் என் வாழ்க்கையில் சறுக்கிய தருணங்கள் எல்லாம், நீங்கள்தான் பக்கபலமாக இருந்தீர்கள். அம்மா, நீங்கள் எனக்கு ஒரு ரோல்மாடல்' என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 16-ம் தேதி அலெக்சிஸ் ஒஹனியனை திருமணம் செய்துகொண்டார். 

 

2017-ம் ஆண்டுபோலவே 2018-ம் ஆண்டும் உங்களுக்குச் சிறப்பாக அமைய வாழ்த்துகள் செரீனா!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வன விலங்குகள் குறும்பு செய்த தருணங்கள் - புகைப்படத்தொகுப்பு

 

இயற்கையின் வேடிக்கையான காட்சிகளை பாராட்டும் நகைச்சுவையான காட்டுவிலங்கினங்களின் வாழக்கை 2017 எனும் போட்டியில் ஒரு ஆந்தை நகைப்புக்குரிய வகையில் தடுக்கி விழுந்து மீண்டும் கிளையை பிடிக்க முயலும் ஒரு புகைப்படம் பரிசை வென்றது.

இந்த போட்டி மூன்றாவது வருடமாக நடக்கிறது. இது நகைப்புக்குரிய படங்களை அனுபவிப்பதோடு அதே சமயம் இந்த கிரகத்தில் மற்ற உயிரினங்களுடன் நாம் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டுள்ளதை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புகிறது.

3,500 போட்டியாளார்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிகவும் கவனம் ஈர்த்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

ஆந்தை Photo: Tibor Kercz

ஆந்தை தனது நிலைத்தன்மையை இழந்து மீண்டும் கிளையை பிடிக்க முயற்சிக்கும் இந்த படமே போட்டியில் வெற்றி பெற்றது. இது ஒபுஸ்டாஸ்ஜெரில் டைபர் கெர்ஸ்ஜ் என்பவரால் எடுக்கப்பட்டது.

 

Dormouse. Photo: Andrea Zampatti

எலியையொத்த உருவத்தில் இருக்கும் டார்மவுஸ் எனும் விலங்கின் அழகான புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது. நிலத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துக்கான பிரிவில் இந்த புகைப்படத்தை எடுத்த ஆண்ட்ரியா ஜம்பட்டிவுக்கு பரிசு கிடைத்தது.

 

கடல் ஆமைக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும் மீன். Photo: Troy Mayne

கடல் ஆமைக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும் மீன். இந்த புகைப்படத்தை எடுத்த டிராய் மாய்னுக்கு கடலுக்கு கீழ் எடுக்கப்படும் புகைப்படத்துக்கான பிரிவில் முதல் பரிசு கிடைத்தது.

 

பறவை. Photo: John Threlfall 

'வானத்துக்கு மேல்' பிரிவுக்கான வெற்றியாளர் ஜான் த்ரெல்ஃபால். இந்த புகைப்படத்தில் ஒரு பறவை நீராவி பாதைகளை விட்டுச்செல்வது போல தெரிகிறது. விமானத்தை இந்த பறவை மறைத்துவிட்டதன் விளைவே இதற்கு காரணம். புகைப்படம் - ஜான் த்ரெல்ஃபால் .

 

தாய் மீது ஏறும் ஒரு சிறு பனிக்கரடி. Photo: Daisy Gilardini

கனடாவின் மனிடோபாவில் தாய் மீது ஏறும் ஒரு சிறு பனிக்கரடியை புகைப்படம் எடுத்திருப்பவர் டைசி கிலார்டினி.

 

Beaver. Poto: Penny Palmer 

நீர் நாய் சோம்பல் முறிப்பது போன்ற இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பென்னி பால்மெர் என்பவர் படம்பிடித்துள்ளார்.

 

Penguins. Photo: Carl Henry.

இந்த பென்குயின்கள் தேவாலயத்துக்கு செல்ல தயாராகின்றன. தென் ஜார்ஜியாவில் இந்த புகைப்படத்தை கார்ல் ஹென்றி என்பவர் எடுத்திருக்கிறார்.

 

முயல் . Photo: Olivier Colle. 

பெல்ஜியமில் வாய் முழுவதும் புல்களை வைத்திருக்கும் முயல் குறித்த புகைப்படத்தை ஆலிவர் கோலே எடுத்திருக்கிறார். இந்த படம் மிகவும் பாராட்டப்பட்ட புகைப்படத்திற்கான விருது பெற்றது.

Dos monos sobre una motocicleta. Foto: Katy Laveck-Foster.

இந்த இரண்டு குரங்குகளும் ஒரு சாலை சவாரிக்கு தயாரிக்கின்றன. இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசி தீவில் இந்த புகைப்படத்தை கெட்டி லாவெக் ஃபாஸ்டர் எடுத்திருக்கிறார்.

 

African wildebeest. Photo: Jean-Jacques Alcalay.

ஆஃப்ரிக்க காட்டு எருமையொன்று தனது மந்தையில் சவாரி செய்யும் தருணத்தை ஜீன் ஜேக்குவஸ் அல்கலே கென்யாவில் படம் பிடித்துள்ளார்.

 

photo: Douglas Croft. 

இந்த நரியானது தனது வேலையை முடிக்க ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது - அமெரிக்காவின் சான்ஜோசில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் உள்ள துளைகளில் ஒன்று இது.

 

photo: George Cathcart.

இந்த கடல் சிங்கம் எது குறித்து யோசிக்கிறது? கலிஃபோர்னியாவின் சான் சைமனில் ஜார்ஜ் காத்கார்ட்டால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் பெரிதும் பாராட்டப்பட்டது.

 

சேற்று மீன். Photo: Daniel Trim.

தாய்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கும் இரண்டு சேற்று மீன்களை டேனியல் ட்ரிம் புகைப்படம் எடுத்துள்ளார்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2017ல் தொழில்நுட்ப உலகம்: ’வான்னாக்ரை முதல் பிட்காயின் வரை ’

9917461198837187google1jpg
977803688c8884b2-38c3-49c2-9394-02b21618
 
 

ஒவ்வொரு நாளும் புதிதாக தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில், 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

ஒவ்வொரு நாளும் புதிதாக தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில், 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

ஒவ்வொரு செய்தியிலும் அது தொடர்பான முழு தகவலை தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்காக அந்த செய்தியுடன் அதுகுறித்த கட்டுரைக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

உலகையே அதிர வைத்த வான்னாக்ரை தாக்குதல்

2017-ஆம் ஆண்டு மே மாதம் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது `வான்னாக்ரை` ரேன்சம்வேர் தாக்குதல். பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 150 நாடுகளின் 3 லட்சம் கணினிகளை இந்த ரேன்சம்வேர் தாக்கியது.

96037658fbe0996f-acd7-442d-b563-e6688c34

இதன் மூலம் முடக்கப்பட்ட கணினிகளில் உள்ள கோப்புகளை மீட்க, பணம் கோரப்பட்டது. இந்த ஆண்டின் மிக மோசமான இணையத் தாக்குதலாக கருதப்படும் வான்னாக்ரை, வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

புதிய ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் எக்ஸ் திறன்பேசி, இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தனது ஐ போன் பதிப்புகளில் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டும் தனது ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது எனலாம்.

977803688c8884b2-38c3-49c2-9394-02b21618

கைரேகை மூலம் உரிமையாளரை சரிபார்க்கும் ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக, முகத்தைக் கொண்டு உரிமையாளரை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் ஐஃபோன் 10ல் இடம்பெற்றது. மேலும் முந்தைய பதிப்புகளை விட அதிக செயல்பாட்டு வேகம், சிறந்த கேமிரா மற்றும் அதிக அளவிலான நினைவகம் ஆகிய சிறப்பம்சங்களும் ஐஃபோன் 10ல் இடம்பெற்றிருந்தன. ஆனால் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட ஐ போன் வரிசைகளின், ஐஃபோன் 10தான் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உயர்வு

கிரிப்ட்டோ கரன்சி என அழைக்கப்படும் பிட்காயினின் மதிப்பு, இந்த வாரம் வரலாறு காணாத அளவு முதல்முறையாக பதினைந்தாயிரம் டாலர்களுக்கு மேல் அதிகரித்தது. ஆனால் இதன் நிச்சயமற்ற நிலை காரணமாக, பிட்காயினின் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

99020324gettyimages-865708314jpg

மீண்டும் களத்தில் குதித்த நோக்கியா

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது; அறிமுகமான 17 ஆண்டுகளுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெற்றது.

நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் இடம்பெற்றது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன. ஆனால் 2ஜி அம்சம் மட்டுமே கொண்ட நோக்கியா 3310 அலைபேசியில், ஸ்னாப் சாட், வாட்ஸ் ஆப் போன்ற பல செயலிகளை பயன்படுத்துவதில் சிரமங்கள் இருந்ததாக பயனர்கள் தரப்பில் கூறப்பட்டது.

ரோபோவுக்கு குடியுரிமை அளித்த செளதி அரேபியா

மனித வடிவ இயந்திரம் (ஹூனாய்ட் ) வகையைச் சேர்ந்த சோஃபியா என்ற ரோபோவுக்கு, சவுதி அரேபியா அரசு குடியுரிமை அளித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரியாத்தில் நடைபெறவுள்ள எதிர்கால முதலீடு பற்றிய மாநாட்டில் பேச்சாளராக கலந்துகொண்ட இந்த ரோபோ, ஒரு அமர்வுக்கு நடுநிலை வகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

9850373377d3cc55-94cb-4024-ba54-11df9fda

செளதி அரேபியாவின் கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தகவல்படி, சர்வதேச தகவல் தொடர்பு மையம் இதை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அறிவித்துள்ளதுடன், புதிய செளதி குடிமகளை வரவேற்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.

தானியங்கி கார்களை திரும்பப் பெற்ற ஊபர்

ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்திய தானியங்கி கார் ஒன்று,சாலையில் வந்துகொண்டிருந்த மற்றொரு காருடன் மோதியதில் மோசமாக சேதமடைந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரிஜோனா, பென்சில்வேனியா மற்றும் கலிஃபோர்னியா ஆகிய மூன்று மாகாணங்களில் இயங்கி வந்த தனது தானியங்கி கார்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஊபர் நிறுவனம் அறிவித்தது.

95323375carjpg

 

http://tamil.thehindu.com/bbc-tamil

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: மீம்ஸ் அரசன்!

 

 
5

மீம்ஸ் கிரியேட்டர்களின் தவிர்க்க முடியாத நாயகனாக இந்த ஆண்டும் ஃபுல் மீல்ஸ் கொடுத்தார் வடிவேல். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா என விதவிதமான மீம்ஸ் கிரியேட்டர்களின் கைவண்ணத்தில் உருவான மீம்ஸ்கள் மூலம், இந்த ஆண்டும் முழுக்க ரசிக்க வைத்தார் வடிவேல். மீம்ஸ்களில் வடிவேல் ஏன் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார்?

சமூக ஊடகங்கள் பெருகிய பிறகே மீம்ஸ்களும் பெரிய அளவில் வரத்தொடங்கின. மீம்ஸ்கள் வரத் தொடங்கிய காலத்தில், வடிவேல்தான் உச்சத்தில் இருந்தார். அந்த வகையில் பகடிகளையும் நையாண்டித்தனத்தையும் வெளிப்படுத்தும் மீம்ஸ்களுக்கு வடிவேல் சட்டென பொருந்தியது ஒரு காரணம். அதற்கேற்ப வடிவேலுவின் வித்தியாசமான உடல்மொழியும் முகபாவனைகளும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வசதியாகவே இருக்கின்றன.

vaivel

சுயமாகத் தன்னை பகடி செய்துகொண்டு அவர் செய்த காமெடிகள் அனைத்தும் இன்று மீம்ஸ்களில் அதிகம் வெளிப்படுகின்றன. ஊருக்குள் உதார்விட்டுத் திரிவது, ஹீரோக்களின் பஞ்ச் வசனங்கள், அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள், போலித்தனமான ஆவேசம், வாய்ச்சவடால் மேடை பேச்சைக் காலங்காலமாகப் பார்த்தவர்கள் தமிழக மக்கள்.

இவற்றை மையமாக வைத்து வடிவேல் செய்த காமெடிகள், தமிழர்களின் வயிற்றைப் புண்ணாக்கின. அந்தக் காட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இன்றைய சூழ்நிலையோடு பொருந்திபோகவே செய்கின்றன. அதனால், வடிவேலுவின் காமெடி காட்சிகளைக் கொண்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீஸ்ஸ்களை உருவாக்குகிறார்கள்.

சினிமாவில் வடிவேல் நடிப்பதில் தொய்வு ஏற்பட்டாலும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்அப் செய்திகள் எனப் பலவற்றிலும் மீம்ஸ்களாக வடிவேலு நீக்கமற நிறைந்திருக்கிறார். தமிழகத்தில் ஹீரோக்கள் பேசிய பஞ்ச் வசனங்களைவிட, ஆத்மார்த்தமாக இளைஞர்களின் மனதுக்குள் ஊருவிய வசனங்கள் வடிவேலுவுடையவை. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமல்ல, மீம்ஸ்கள் இருக்கும்வரை மீம்ஸ் கிரியேட்டர்களின் நாயகனாக வடிவேலு சிம்மாசனமிட்டிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்!

வாட்ஸ் அப் கலக்கல்

 

1

 

4

 

6

 

7

 

8

 

IMG-20171227-WA0006

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அடுக்கடுக்காக செல்ஃபீ எடுத்துத் தள்ளினாலும் இன்னும் ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிட்டாதவரா நீர்?!

 

 
perfect_selfiee

 

ஃபோட்டோகிராபி போலத்தான் செல்ஃபீட்டோகிராபியும்... ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிடைக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எடுத்த செல்ஃபீ உங்களுக்கே பிடித்தமானதாக இருக்க வேண்டும். ஆனால், சூட்டோடு சூடாக எடுத்த செல்ஃபீக்களை எல்லாம் ஒன்றும் தேறாது என திருப்தியில்லாமல் டெலிட்டுபவர்கள் தான் நம்மில் அனேகம் பேர். எடுத்த செல்ஃபீக்களை கண்ணுக்குக் கண்ணாக நினைத்து பாஸ் வேர்டு போட்டு லாக் செய்து பத்திரப்படுத்தி வைப்பவர்கள் குறைவே! காரணம் திருப்தியின்மை. ஒரு பக்கா பெர்ஃபெக்ட் செல்ஃபீ எப்படி இருக்க வேண்டுமென்பதில் இன்னமும் நமக்குக் குழப்பங்கள் நிறைய உண்டு. அதை நிவர்த்தி செய்யாமல் எப்படி கச்சிதமான ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்ள முடியும்?! முதலில் பெர்ஃபெக்ட் செல்ஃபீ என்றால் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிளைத் தீர்மானியுங்கள்....

0_1selfie.jpg

முதலில் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் போது முகத்துக்கு நேரே நீட்டி ஏதோ ஒரு டைரக்‌ஷனில் கேமரா ஆங்கிளை வைத்து கன்னா, பின்னாவென கிளிக்கித் தள்ளக் கூடாது. கேமரா ஆங்கிளுக்குச் சரியாக நமது இருப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கேமரா ஆங்கிள் எங்கோ இருக்கும், நாம் எங்கோ பார்த்துக் கொண்டிருப்போம். முடிவு செல்ஃபீயில் கோயில் திருவிழாவில் காணாமல் போன சவலைப் பிள்ளைக்களை தெரியும் நம் முகத்தில். அது தேவையா? அதனால் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் ஆசை இருப்பவர்கள் முதலில் உங்கள் அலைபேசிக் கேமராவின் ஆங்கிளுக்குப் பொருத்தமாக நீங்கள் உங்கள் இருப்பைத் தீர்மானித்து விட்டீர்களா? என்பதில் தான் உங்கள் பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுக்கும் பயணத்தைத் துவங்க வேண்டும். சரி ஒருவழியாக நெட்டுக்குத்தாகவோ, குறுக்கு வெட்டாகவோ, அல்லது மூலை விட்டமாகவோ உங்களையும், கேமரா ஆங்கிளையும் செட் செய்து முடித்து விட்டீர்கள் எனில் உடனே கிளிக்கி விடத் தேவையில்லை. அப்புறமும் இருக்கின்றன சில முக்கியமான வேலைகள்.

லைட்டிங் செட் செய்யுங்கள்...

000_lighting.png

நீங்கள் செல்ஃபீ எடுத்துக் கொள்ள தீர்மானித்த ஆங்கிளில் வெளிச்சம் அதாவது ஃபோட்டோகிராபி மொழியில் சொல்வதென்றால் லைட்டிங் உங்களது செல்ஃபீயை அழகூட்டக் கூடிய விதத்தில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். அதிக வெளிச்சமென்றால் உருவம் வெந்நிற ஆவி அலைவதைப் போல செல்ஃபீயில் விழுந்து தொலையும், அதிக இருள் என்றால் இருட்டுக்கடைப் பிசாசுகள் போலத் தோற்றமளிப்போம். அதனால் சரியான உருவம் பொருத்தமான கலர் காண்ட்ராஸ்டுடன் அலைபேசித் திரையில் பதிவாகிறதா? என ஒன்றுக்கு இருமுறை சோதித்த பிறகு அம்மாதிரியான லைட்டிங்கை ஒப்புக் கொள்ளலாம். அடுத்ததாக;

உராங்குட்டான் போல கடுப்படிக்காமல் கொஞ்சம் சிரிங்க பாஸ்...

selfie_smile.jpg

செல்ஃபீ எடுக்க வேண்டும் என்றால் இன்று ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் கூட கொஞ்சம் புன்னகைத்துத் தான் தீர வேண்டும். அந்த அளவுக்கு பக்கா செல்ஃபீ என்றால் அதில் நிச்சயம் புன்னகை மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புன்னகையில் தான் எத்தனை எத்தனை வகைகள் உள்ளன. உங்களுக்குத் தெரியாததா? மோனாலிஸா புன்னகை முதல் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, புன்னகை இளவரசி சினேகா, கோல்கேட் பேஸ்ட் காஜல் அகர்வால் வரை எத்தனை எத்தனை புன்னகைகள் நமக்குத் தெரியுமோ? அத்தனை விதமாகவும் புன்னகைத்துப் பார்த்து அதிலொன்றை நமக்கே, நமக்கான பெர்ஃபெக்ட் செல்ஃபீக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஓகே செல்ஃபீ எடுக்க இப்போது நமது புன்னகையும் ரெடி, அடுத்து என்ன?

இது பிராப்பர்ட்டி ரவுண்டு...

selfie_pets.jpg

 

 

இதேதடா... புதுதாக செல்ஃபீக்கு கூட பிராப்பர்ட்டி ரவுண்டு கண்டீஷனெல்லாம் போடுகிறீர்களே! என்று சலித்துக் கொள்ளாதீர்கள். ஃபோட்டோவோ, செல்ஃபீயோ எதுவானாலும் நமக்கே, நமக்கானதாக ஒரு ஸ்பெஷல் பிராப்பர்ட்டியுடன் எடுத்துக் கொண்டால் தான் அது ரசனையானதாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் செல்ல நாய்க்குட்டியையோ, பூனைக்குட்டியையோ, ஃபிஷ் டேங்கையோ அட எதுவும் தேறவில்லை என்றால் செல்லக் கணவரையோ கூட பிராப்பர்ட்டியாக செட் செய்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் குழந்தைகளைக் கூடத்தான். அப்போது தானே சமூக வலைத்தளங்களில் நமது ஆஹா, ஓஹோ செல்ஃபீ பார்த்து லைக்குகளும், கமெண்டுகளும் போடக்கூடியவர்கள், மகளைப் பார்த்து கூட நிக்கறது யார்? உங்க தங்கையா? என்றும் கணவரைப் பார்த்து கூட நிக்கறது யார் உங்க அப்பாவா? என்றும் கேட்டு நம் வயிற்றில் பாலையும் கணவர்/மகள் வயிற்றில் ஆஸிட்டையும் கரைக்க முடியும்! இந்த உணர்வுகளை எல்லாம் தராவிட்டால் பிறகெப்படி அது ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீயாக இருக்க முடியும்.

பேக்ரவுண்டு...

selfie_backgrounds.jpg

எல்லாம் முடிந்தது. இது தான் கடைசி ரவுண்டு அதாவது பேக்ரவுண்டு. நமது உடைகளுக்கும், இரவா, பகலா என்பதைப் பொறுத்தும் ஒரு பக்கா செல்ஃபீக்கான பேக்ரவுண்டை நாம் தீர்மானிக்க வேண்டும். அது மொட்டைமாடியாக இருக்கலாம், காஃபீ டே வாக இருக்கலாம், டூர் சென்ற இடமாக இருக்கலாம், அல்லது உங்களது சமையலறையாகக் கூட இருக்கலாம். அத்தனை ஏன் மீன் மார்க்கெட்டாகக் கூட இருக்கலாம். ஆனால், எந்த பேக்ரவுண்டாக இருந்தாலும் மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் நாம் எடுக்கவிருக்கும் செல்ஃபீக்குள் அடங்கி இருக்கின்றனவா? என்று சோதித்த பின்னரே நமது கட்டைவிரல் செல்ஃபீ கேமராவைக் கிளிக்கத் துணிய வேண்டும்.

இப்படி செல்ஃபீ எடுத்துப் பாருங்கள். பெர்ஃபெக்ட் செல்ஃபீ ரெடி!

அப்புறம் உங்கள் செல்ஃபீ மீது உங்கள் கண்ணே பட்டு விட்டதென்று சொல்லி இரவில் கண்ணேறு கழிக்க வேண்டியது தான் பாக்கி!

http://www.dinamani.com

 

 
  • தொடங்கியவர்

2017: தமிழ்நாட்டின் கலக்கல் அமைச்சர்கள்

99411504gettyimages-672182862jpg

முதலைமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் தமிழக அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேசுவது, தன்னிச்சையாகச் செயல்படுவது போன்றவை மிகவும் அரிதிலும் அரிதாகவே நிகழ்ந்தன. 2016ன் இறுதியில் அவர் மறைந்த பிறகு, இந்த ஓராண்டில் தமிழக அமைச்சர்கள் செயல்பட்டதும் பேசியதும் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயின. அவற்றில் சில:

செல்லூர் ராஜு: வைகை அணையை தெர்மகோல் அட்டையால் மூடும் திட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் கோடை காலத்தில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இருக்கும் நீர் மேலும் ஆவியாகாமல் தடுப்பதற்காக அமைச்சரும் அதிகாரிகளும் தீட்டிய திட்டம் இது. இதன்படி, வைகை அணையின் நீர்ப் பரப்பை தெர்மகோல் அட்டைகளால் மூடிவிடவேண்டும்.

99411501gettyimages-672182862jpg

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் 300 தெர்மோகோல் அணைப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு, 2-3 அட்டைகள் ஒன்றாக ஒட்டப்பட்டு, அவை படகின் மூலம் அணையின் நீர்ப்பகுதியில் வீசப்பட்டன.

அணைப் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக, இந்த தெர்மகோல் அட்டைகள் உடனடியாகக் கரை ஒதுங்கின. சில அட்டைகள் உடைந்து தூள்தூளாகி அணையின் பல்வேறு பகுதிகளில் ஒதுங்கின. இதற்கு பத்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தெர்மகோல் அட்டைகள் லேசாக இருந்ததால் காற்றில் பறந்துவிட்டதாகவும் அவற்றைச் சுற்றி கட்டைகளை அடித்து வீசினால், பறக்காமல் இருக்கும் என ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் கேலிக்கு உள்ளானது.

முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி: 'கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழார்'

கடந்த நவம்பர் 29ஆம் தேதி தஞ்சாவூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் கே. பழனிச்சாமி, தன்னுடைய உரையில் பல தவறான தகவல்களைத் தந்தார். விழா நடக்கும் தஞ்சாவூரின் பெருமைகளைப் பற்றிப் பேசும்போது "கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்" உள்ளிட்டோரைத் தந்த மாவட்டம் என்று குறிப்பிட்டார்.

99411227b2593fdd-5add-48a6-9a5d-7cb9fb03

மேலும் பொருளாதார மேதையும் காந்தியவாதியுமான ஜே.சி. குமரப்பாவை, மகாத்மா காந்தியின் உதவியாளர் என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் பெரும் கேலிக்குள்ளான நிலையிலும் இது குறித்து எந்த விளக்கத்தையும் முதல்வர் அலுவலகம் தரவில்லை.

திண்டுக்கல் சீனிவாசன்: "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்"

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் பிரபலமாக இருந்தவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன். ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்த்தாகச் சொன்னது பொய்; சசிகலாவுக்குப் பயந்தே பொய் சொன்னோம் என்ற அமைச்சரின் பேச்சு செப்டம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அக்டோபர் மாதம் ஒரு கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளித்ததாகக் கூறினார்.

அதற்கு முன்பாக ஒரு விழாவில் பேசிய அமைச்சர் பாடகி சுதாரகுநாதனை, சுதா ரங்கநாதன் என்றும் பரத நாட்டியக் கலைஞர் என்றும் குறிப்பிட்டார். அவர் தன்னைப் பாடகி என்று குறிப்பிட்ட பிறகும் அமைச்சர் திருத்திக்கொள்ளவில்லை. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

ராஜேந்திர பாலாஜி: "பாலில் கலப்படம்; சட்ட நடவடிக்கை எடுத்தா தப்பிச்சிடுவாங்க"

கடந்த மே மாத இறுதியில் இருந்தே, தமிழகத்தில் தனியார் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூற ஆரம்பித்தார். ஜூன் மாத இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரிலையன்ஸ், நெஸ்லே நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் அளவுக்கு அதிகமாக காஸ்டிக் சோடா இருப்பதாகத் தெரிவித்தார்.

99411502d91803e9-e05d-47f1-a378-e6094e95

ஆட்சியில் இருக்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்றே கேள்விக்கு, சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தப்பித்துவிடுவார்கள் என்பதால் மக்களிடம் தெரிவிப்பதாக விளக்கம் அளித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, தங்களைப் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசக்கூடாது என தடை உத்தரவு வாங்கின. அதேபோல பால்வளத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய அமைச்சர், புதிதாக 10 ரூபாய் பால் பாக்கெட்டுகளை ஆவின் பால் விற்பனை செய்யுமென அறிவித்தார். ஆனால், பல ஆண்டுகளாக ஆவின் பத்து ரூபாய்க்கு பால் பாக்கெட்டுகளை விற்றுவந்தது.

http://tamil.thehindu.com/bbc-tamil/

  • தொடங்கியவர்

Wife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,

Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,

TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,

TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,

TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,

TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,

முக்கியமா mobile க்கு 2 வகையான uses இருக்கும் , ஒன்னு நீங்க பேசலாம் ,,,,மற்றொன்று கேட்கலாம் !

ஆனா TV யில் நீங்க பேச முடியாது அது சொல்றததான் கேட்கோனும்,,,!

கடைசியா ஒன்னே ஒன்று ,,,,

TV யில virus கிடையாது ,,,,
ஆனா mobile யில virus உண்டு,,,,

so be careful1f61c.png

 

முகநூலில் பார்த்தது..tw_blush:

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Malen

  • தொடங்கியவர்

Ähnliches Foto

Bildergebnis für goodbye 2017 welcome 2018

  • தொடங்கியவர்

2017: இணையத்தை அதிரவைத்த தருணங்கள்!

 

 
sofia%20robot

ணையம், தொழில்நுட்ப உலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் நிகழ்வுகளும் மைல்கற்களும் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. கூடவே சர்ச்சைகளும் சோதனைகளும். ரோபோட், இயந்திரக் கற்றல், பொய்ச் செய்தி பிரச்சினை, சைபர் தாக்குதல், புதிய கேட்ஜெட்கள், தானியங்கிமயம் என இந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்திய நிகழ்வுகள், போக்குகள் பற்றி ஒரு கண்ணோட்டம்.

நான் ரோபோட்!

               

இந்த ஆண்டு முழுவதும் விதவிதமான ரோபோட்கள் பற்றிய செய்திகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தன. ஜனவரியில் நடந்த நுகர்வோர் மின்னணுக் கண்காட்சியில் இல்லத் தேவைகளுக்கான நவீன ரோபோட் உள்ளிட்ட எந்திரன்கள் ஹைலைட்டாக அமைந்தன. ஆண்டின் மத்தியில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட ‘சோபியா ரோபோ’ சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்று உலகின் முதல் ரோபோ பிரஜையானது. சோனி நிறுவனம் ஐபோ நாய்க்குட்டி ரோபோட்டை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. சர்வதேச ஒளிப்படப் போட்டியில், ஆண்ட்ராய்டு ரோபோட்டின் ஒளிப்படச் சித்திரம் பரிசுக்காகத் தேர்வானது விவாதத்தை ஏற்படுத்தியது.

Machine-Learning-hero
 

இயந்திரக் கற்றல்

இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த மற்றொரு முதன்மைக் கருத்தாக்கம் ‘மெஷின் லேர்னிங்’ எனப்படும் இயந்திரக் கற்றல். அதே போலவே செயற்கை நுண்ணறிவு குறித்தும் பெரிதாகப் பேசப்பட்டது. இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட பாட்கள் எனப்படும் அரட்டை மென்பொருள்களும் கவனத்தை ஈர்த்தன. ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் உதவியாளராக வீற்றிருப்பதோடு, சேவைத்துறை உள்ளிட்ட பல துறைகளில் அரட்டை மென்பொருட்கள் கோலோச்சும் நிலை உருவாகும் என ஆருடம் கூறப்பட்டது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித குலத்துக்கே ஆபத்தாக முடியும் எனும் எச்சரிக்கைக் குரல் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட விஞ்ஞானிகளால் எழுப்பப்பட்டது.

Fake%20News
 

பொய்ச் செய்தி

‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்தி பிரச்சினை பரவலாகக் கவனத்தை ஈர்த்தது. இணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவது எப்படி என வல்லுநர்களையும் நெட்டிசன்களையும் அது யோசிக்க வைத்தது. பொய்ச் செய்தி பகிரப்படுவதில் ஃபேஸ்புக், கூகுள் இரண்டும் விமர்சனத்துக்கு ஆளாயின. இரண்டு நிறுவனங்களுமே தங்கள் பங்குக்குப் பொய்ச் செய்திகளை வடிகட்டும் அம்சங்களை அறிமுகம் செய்தன. உலக அளவில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும்கூட உள்ளூர் அளவில் பொய்ச் செய்திகளின் தாக்கத்தை உணர முடிந்தது. இணையம் சமாளிக்க வேண்டிய முக்கிய பிரச்சனையாகப் பொய்ச் செய்தி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

net-neutrality-op

இணைய சமநிலை

பொய்ச் செய்தி பிரச்சினை போலவே இணைய சமநிலையும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவாதம் அமெரிக்காவில் அனல் பறந்தது. இணைய சமநிலை காக்கப்பட வேண்டும் என இணைய முன்னோடிகள் ஒருமித்த குரல் எழுப்பியதை மீறி, அந்த நாட்டில் இணைய சமநிலைக்கு ஆதரவான விதிமுறைகள் விலக்கப்படுவதற்கான முடிவு மேற்கொள்ளப்படது. இது தொடர்பான சட்டரீதியிலான போராட்டம் தொடங்கியிருக்கிறது. மாறாக, இந்தியாவில் இணைய சம நிலைக்கு ஆதரவான உறுதியான பரிந்துரைகளை டிராய் அமைப்பு வழங்கி முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

google%20camera
 

சூப்பர் கேட்ஜெட்கள்

இந்த ஆண்டு எண்ணற்ற ஸ்மார்ட்போன் மாதிரிகள் அறிமுகமாயின. ஆனாலும், ஸ்மார்ட் கேட்ஜெட்கள்தான் அதிகக் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, கூகுள் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவால் தானாகப் படம் எடுக்கக்கூடிய கேமரா இந்தப் பிரிவில் புதிய போட்டியைத் தொடங்கிவைத்தது. கூகுள் நிறுவனம் பிக்சல் ரக போனை நேரடியாகவும் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தவிர, இல்லங்களுக்கான ஸ்மார்ட் சாதனங்களும் அறிமுகமாயின.

Blue%20whale%20Game
 

புளுவேல் பீதி

கேண்டி கிரஷ், டெம்பிள் ரன், ஆங்ரி பேர்டு போன்ற விளையாட்டுகளுக்கு இளசுகளும் வாண்டுகளும் அடிமையாகிவிடுவதாக விமர்சனம் இருந்தாலும், இவை பெரும் ஆபத்தானவையாகக் கருதப்படவில்லை. ஆனால், திடீரென இணைய உலகில் முளைத்த புளுவேல் கேம், விடலைகள் மத்தியில் தற்கொலை உணர்வை தூண்டும் தன்மை கொண்டதாகப் பெரும் பீதியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தியாவில் இந்த பீதி அதிகமாக இருந்தது. நீதிமன்றங்கள் கடிவாளம் போடும் அளவுக்குப் பிரச்சினை தீவிரமானது.

sarah%20app
 

சர்ச்சைச் செயலி

இந்த ஆண்டு வைரலாகப் பரவிய செயலி எனும் பெருமையை சாரா தட்டிச்சென்றது. அனாமதேயமாக நண்பர்களிடம் இருந்து கருத்துகளைக் கோர வழி செய்த இந்தச் செயலி அறிமுகமான சில மாதங்களிலேயே லட்சக்கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டுப் பரவலானது. ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக் டைம்லைனில் பார்த்தால் நண்பர்களின் சாரா செயலி சார்ந்த பதிவுகளாக இருந்தன. இந்தச் செயலியின் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு பலரும் இணைய தாக்குதலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தச் செயலி அந்தரங்க உரிமை சார்ந்த கவலையையும் ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் செயலி வந்த வேகத்தில் காணாமலும்போனது.

twitter
 

ட்விட்டர் 280

குறும்பதிவு சேவையான ட்விட்டரின் அடையாளமே அதன் 140 எழுத்துகள் எனும் கட்டுப்பாடுதான். ஆனால், அந்த வரம்பை இரட்டிப்பாக்கி 280 எழுத்துக்களாக உயர்த்துவத்துவதாக ட்விட்டர் அறிவித்தது. தீவிர ட்விட்டர் அபிமானிகள் இதை ரசிக்கவில்லை என்றாலும், சோதனை முறையில் பயன்படுத்தி பின்னர் அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டரின் இந்த உத்தி சரியானாதா, அது தன் ஆதார அடையாளத்தை இழக்கிறதா என்ற விவாதத்தையும் இது கிளப்பியது.

mp3
 

எம்பி 3-க்கு குட்பை

டிஜிட்டல் இசைத்துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த எம்பி 3 கோப்பு வடிவத்தின் உரிமம் முடிவுக்கு வந்தது. இதைவிட மேம்பட்ட வடிவமான ஏஏசி கோப்பு வடிவம் முன்னிறுத்தப்படும் என எம்பி 3-யை உருவாக்கிய ஆய்வு அமைப்பு அறிவித்தது. எம்பி 3 கோப்பு வடிவத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும், அதற்கான அதிகாரபூர்வ ஆதரவு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதேபோலவே எம்.எஸ். பெயிண்ட், ஆறு நொடி வீடியோ சேவையான வைன் ஆகியவையும் இந்த ஆண்டு மூடுவிழா கண்டன.

Hashtags
 

ஹாஷ்டேக் இயக்கம்

ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஹாஷ்டேக் அறிமுகமான பத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு நடந்தது. 2007-ல் ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் முதலில் அறிமுகமான ஹாஷ்டேக் இன்று இணையம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஹாஷ்டேகின் ஆற்றலை உணர்த்தும் வகையில் இந்த ஆண்டு பல ஹாஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் #மீடு ஹாஷ்டேக் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்தியாவில் அப்பாவிகள் மீது மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக #நாட் இன்மைநேம் ஹாஷ்டேக் அமைந்தது. தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவைப் போற்றும் வகையிலும் அவரது மரணத்துக்கு நியாயம் கேட்கும் வகையிலும் #RIPDrAnitha, #JusticeForAnitha போன்ற ஹாஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.