Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

25 கைவினைஞர்கள், 30 நாள்கள், 1 பட்டுப்புடவை... நடிகை பாவனாவின் திருமண டிரெஸ்ஸிங்!

 
 

`கண்ணன் வரும் வேளை... அந்தி மாலை நான் காத்திருந்தேன்...' என ரீல் கண்ணனுக்காகத் துள்ளி ஆடிய பாவனா, ரியல் கண்ணனோடு சேர்ந்துவிட்டார். `சித்திரம் பேசுதடி', `தீபாவளி', `அசல்', `வெயில்', `ஜெயம்கொண்டான்' என, பல தமிழ்ப் படங்களில் க்யூட் பெண்ணாக வலம்வந்த பாவனா, தன் காதலன் நவீனை ஜனவரி 22 அன்று மணந்தார். கன்னடத் திரையுலகின் தயாரிப்பாளரான நவீனும் பாவனாவும் ஐந்து வருட காதல் ஜோடி. இவர்களின் திருமண நிகழ்வு, எந்தவித ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேரள மாநிலம் திரிசூரில் நடைபெற்றது.

பாவனா திருமணம்

 

நிச்சயதார்த்த விழாவில் ஆம்பர் பிரெளன் லெஹெங்கா புடவையில் அழகு தேவதையைப்போல் தோற்றமளித்தார் பாவனா. முத்துகள் சிதறிய வேலைப்பாடுடன் பல அடுக்குகளைக்கொண்ட நெட் லேயர்டு லெஹெங்கா (Net Layered Lehenga), அதன் உட்புறம் கடுமையான வேலைப்பாடுகளாலான `சிக்கன்கரி' எம்ப்ராய்டரி பார்ப்பதற்கு கொள்ளை அழகு. லெஹெங்காவை ஈடுசெய்ய முத்துகள் பதிக்கப்பட்ட ஹய்நெக் பிளவுஸ். மேலும் மெருகேற்றுவதற்கு ஸ்வரோவ்ஸ்கி கற்கள் பதித்த தாவணி. பன் கொண்டையுடன் பூக்கள், காதில் சாண்ட்பாலி காதணி, நெற்றியில் சிறிய பொட்டு. இவைதான் பாவனாவின் அன்றைய அடையாளங்கள். பொன் நிற ஷெர்வானி செட்டில் நவீன் லுக்கும் ரொம்பவே ஸ்மார்ட்.

பாவனா நிச்சயதார்த்தம்

திருமணத்துக்கு முதல் நாள், மெஹெந்தி நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் மஞ்சள் நிற உடை அணிந்து தன் திரையுலகத் தோழிகளுடன் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினார் பாவனா.

பாவனா மெஹெந்தி

இந்து முறைப்படி திரிசூர் மாவட்டம் திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணா கோயிலில் நிகழ்ந்த பாவனாவின் திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே நிறைந்திருந்தனர். இதில் தங்க நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து தங்கச் சிலைபோல் காட்சியளித்தார் பாவனா. LABEL `M பிராண்டின் உரிமையாளர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் அணு மற்றும் ரேஷ்மாவின் கைவண்ணத்தில் உருவானதுதான் இந்த அழகிய பட்டுப்புடவை. கிருஷ்ணன் - ராதாவின் புராண காதல் கதையை மையமாக வைத்து வடிவமைத்த இந்தப் புடவையின் சிறப்பு, மெட்டல் சீக்வன்ஸ் பொருந்திய கனமான `டபுள் பார்டர்'. ராதாகிருஷ்ணனின் அழகிய உருவத்துக்கு, மின்மினுக்கும் க்ரிஸ்டல்ஸ், பீட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி மெருகேற்றியுள்ளனர். 25 கைவினைஞர்களைக் கொண்டு 30 நாள்களில் முடிக்கப்பட்டது இந்த அழகிய பட்டுப்புடவை. வளையல், நெக்லஸ், ஒட்டியாணம், காதணி என அனைத்தும் `டெம்பிள் ஜுவல்லரி (Temple Jewellery)' ரகம். வெள்ளை நிற பட்டு வேஷ்டி-சட்டையில் நவீனும் பக்கா தென்னிந்திய மாப்பிள்ளை லுக்.

திருமணம்

திருமணமான அதே நாள் மாலை, வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரெயின்ஸ்டோன், சீக்வன்ஸ் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த தங்க நிற லெஹெங்கா சோலி அணிந்து ஜொலித்தார் பாவனா. `Back Trail' அதாவது விளிம்பு நீண்டிருக்கும் லெஹெங்கா, கனமான வேலைப்பாடுகள் பொருத்திய தாவணி, அத்தனையும் பெங்காலிலிருந்து வரவழைக்கப்பட்டன. சோக்கர் நெக்லஸ், டாங்லர் காதணியுடன் நிறைந்திருந்தார் பாவனா. வெள்ளை குர்த்தா பைஜாமா, அதன் மேல் பீச் (Peach) நிற ஜக்கார்டு ஓவர்கோட் என நவீனும் பாவனாவுக்கு ஈடுகொடுத்தார்.

வரவேற்பு விழா

 

இந்த விழாவில், மம்மூட்டி, ப்ருத்விராஜ், ஜெயராம், ரம்யா நம்பீசன், ஜெயசூரியா, மஞ்சு வாரியார், நஸ்ரியா, ரீமா கல்லிங்கல் உள்பட பல மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். 

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

``நன்றி தோனி!’’ - நெகிழ்ந்த ஜான்டி ரோட்ஸ்

 
 

தென்னாப்பிரிக்காவுக்குத் தன் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

Dhoni_16495.jpg

 


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அதன் பின்னர் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிவடையயிருக்கும் நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய வீரர்கள் துபாய் வழியாகத் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்குச் சென்றனர். 

இந்தநிலையில், மும்பையிliருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பயணித்த விமானத்தில், தன் குடும்பத்தினரைத் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தோனி மற்றும் தன் குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜான்டி ரோட்ஸ், ``இரண்டு மாதங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட பின்னர், அவர்கள் தனியாகப் பயணம் மேற்கொள்வது கடினமான விஷயம்தான். ஆனால், அவர்களைப் பத்திரமாக தோனியிடம் ஒப்படைத்துவிட்டதால், அவர்கள் தனியாகப் பயணிப்பது குறித்து நான் அச்சமடையத் தேவையில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தன் குழந்தைகளான இந்தியா மற்றும் நாதன் ஜான் ஆகியோர் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவது எப்படி என்பது குறித்து தோனிக்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும், அது தமக்குத் தெரியும் என்று தோனி பதிலளித்ததாகவும் அந்தப் பதிவில் ஜான்டி ரோட்ஸ் விளையாட்டாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், துபாயிலிருந்து ஜோகன்ஸ்பெர்க் செல்லும் விமானத்தில் தோனி மற்றும் அக்சர் படேலுடன் இருப்பது போன்ற புகைப்படத்தைச் சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சஹாலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. 

Jonty RhodesVerifizierter Account @JontyRhodes8
Folgen @JontyRhodes8 folgen
Mehr

There are always feelings of concern when family leaves after 2 incredible months together, but I need not have feared; as they were in safe hands @msdhoni getting some advice from India and Nathan Jon on how to play in SA - he told them “mujhe pata hai” #SAvIND dhanyavaad Mahi

DUW-mvAVoAAtZpe.jpg

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

30 கிலோ லெஹங்கா முதல் கடின நடனம் வரை...பத்மாவத்தாக மாறிய தீபிகா!

 
 

பத்மாவத்

ல்வேறு  எதிர்ப்புகளைத் தாண்டி, தீபிகா  படுகோனே நடித்த  ’பத்மாவத்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது ‘ஒரு  வரலாற்றுத் திரைப்படத்துக்குக் கொலை மிரட்டல்களும்  கலவரங்களும்  தொடர்ந்துகொண்டிருக்கும்  நிலையில், திரைப்படம்  குறித்து பலதரப்பட்ட விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு ஒரு குழுவே பல வருடங்கள் சேர்ந்து கடுமையாக உழைக்கிறது. அப்படி  200 கோடி  ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட திரைப்படத்தில், அதிகம் பேசப்படாதது,  பத்மாவத்தாக மாறிய தீபிகா படுகோன் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு. அவற்றில் சில...

 

தீபிகா படுகோனுக்கு நடனம்  கைவந்த கலை. தான் அறிமுகமான ‘ஒம் சாந்தி ஒம்’ திரைப்படத்தில் வெஸ்டர்ன் நடனத்தில் சாந்தி ப்ரியாவாக கலக்கியதில் தொடங்கி,  ’ராம் லீலா’ படத்தில்  கர்பா நடனம் கற்றுக்கொண்டது, ‘ஹேப்பி நியூ இயர்’ படத்துக்காக ‘போல்’ டான்ஸ் (pole dance) ஆடியது என ஒவ்வொரு படத்திலும்  நடனத்தில் தனி கவனம் செலுத்துவார். ’பத்மாவத்’ திரைப்படத்தில், யூடியூப்பில் பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘கோமர்’ பாடலுக்கு , ராஜஸ்தானி நடனமான  கோமரை (Ghomar),  ஜோதி டி டோம்மார்  என்ற ராஜஸ்தானி கோமர்  கலைஞரிடம்  கற்றுக்கொண்டார் தீபிகா.  இந்தப் பாடலுக்கு  க்ருதி மகேஷ் மித்யா  என்பவர்  நடனம் அமைத்திருக்கிறார்.  

இந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் பற்றி தீபிகா கூறுகையில், “என் சினிமா வாழ்க்கையில் மிகவும் கடினமான பாடல் இது.  அந்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அந்தப் பாடலின் ஷூட்டிங்  ஆரம்பித்தபோது, பத்மாவத் ஆன்மாவே என்னுள் புகுந்ததுபோல உணர்வு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு இந்த உணர்வு எனக்குள் இருக்கும்”  என்றார்.

அந்தக் குறிப்பிட்ட  கோமர்  நடனம், சுழன்று சுழன்று  ஆடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலுக்காக 66 முறை  சுழன்று  சுழன்று நடனமாடியிருக்கிறார் தீபிகா. அதிலும், 30 கிலோ எடையுள்ள லெஹங்காவையும்,  அதிக எடை தங்க நகைகளையும் அணிந்து அவர் நடனமாடியிருப்பது  தீபிகாவின் அபார உழைப்புக்கு எடுத்துக்காட்டு. 30 கிலோ  லெஹங்காவை வடிவமைத்தது,  புதுடெல்லியைச் சேர்ந்த   ரிம்பிள், ஹர்பீத் நாரூலா என்ற ஆடை வடிவமைப்பாளர்கள். இந்த லெஹங்காவின் விலை 30 லட்சம்.


தீபிகா  படுகோன் அணிந்திருந்த நகைகளை வடிவமைத்தது, தனிஷ்  ஜூவல்லர்ஸ்.  இந்தத் திரைப்படம் முழுவதும் தீபிகா அணிந்துவரும் தங்க நகைகள் கிட்டதட்ட 400 கிலோ எடை. 200 நகை வடிவமைப்பாளர்கள், 600 நாட்கள் இந்த  நகைகளை வடிவமைத்ததாக தனிஷ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தீபிகா

இந்தத்  திரைப்படத்துக்காக, தீபிகா படுகோன்  சிறப்பு ஃபிட்னஸ் பயிற்சிகள் மேற்கொண்டார். பிரபல ஃபிட்னஸ் பயிற்சியாளர்  யாஸ்மின் காரச்சிவாலா,  தீபிகாவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டியிருக்கிறார். இதுபற்றி யாஸ்மின் கூறுகையில், “தீபிகாவுக்கு 20-20-20  என்ற முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மூன்றுவிதமான மிஷின்களில் பயிற்சி அளித்தோம். அவருக்கு இயல்பாகவே தன் உடலை எப்படி  உறுதியாக வைத்துக்கொள்ளவது என்பது தெரியும். அதனால், இரண்டே வாரங்களில் பத்மாவத்தாக மாறுவதற்கான உடலை பெற்றுவிட்டார்” என்கிறார்.

 


தீபிகாவுக்கு உடல் பலம் மட்டுமின்றி, மனவலிமையும் இருக்கிறது என்பதற்கு ‘பத்மாவத்’ திரைப்படம் ஒரு சான்று!   

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/roflkanth

ஆகவே மக்களே, இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை.

#BusFareHike

twitter.com/Kozhiyaar

ஆகச் சிறந்த குடும்ப காமெடி என்பது, குழந்தை அப்பாவிற்கு பயப்படும் என்று நினைத்து, அம்மா கம்ப்ளெய்ன்ட் செய்வது தான்!

twitter.com/amuduarattai

விருந்தினரின் மொபைலை வாங்கி, சார்ஜில் போட்டுத் தருவதும், விருந்தினர் உபசரிப்பில் சேரும்.

twitter.com/idumbaikarthi

உங்கள் எல்லையைத் தாண்டாதீர்கள். அப்புறம் பிணமாகத்தான் வீடுதிரும்புவீர்கள்.

நேற்று தமிழக மீனவர்களுக்குச் சொல்லப்பட்டது. இன்று தமிழக மாணவர்களுக்குச் சொல்லப்படுகிறது.

twitter.com/thoatta

அரசுப் பேருந்துகள் இன்னைக்கு இருக்கிற லட்சணத்துக்கு, நியாயமா கட்டணத்தை 50% குறைச்சு, அதுல ட்ராவல் இன்ஸுரன்ஸ் இணைச்சுத் தரணும்.

p110a_1516774144.jpg

twitter.com/sThivagaran

விரல்களுக்குப் பேசக் கற்றுக்கொடுத்த தொழில்நுட்ப வளர்ச்சி வாயை ஊமையாக்கிவிட்டது!

twitter.com/teakkadai1

ஒரு தனியார் நிறுவனத்தில் நீங்கள் எத்தனை பேரின் ஈகோவைத் திருப்திப்படுத்துகிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்கள் வளர்ச்சி.

twitter.com/ChittizeN

ஆல்ரெடி சிம்பு ஆன்மிகம், இமயமலைன்னு சுத்திட்டிருந்தாரு. இந்த வீடியோவெல்லாம் பாத்துட்டு இப்பவே ட்ரெஸ் பேக் பண்ண ஆரம்பிச்சிருப்பாப்ல!

twitter.com/SKtwtz

ஹெச். ராஜா ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விக்கெட் கிடைக்கும்னு நினைச்சுதான் பால் போடுறாரு.. ஆனா அது என்னமோ நோ பால் ஆகி ஃப்ரீ ஹிட்ல சிக்ஸ் அடிச்சுர்றாணுங்க...

twitter.com/HAJAMYDEENNKS

அரசியலுக்கு வரணும், நடிகர் ஆகணும், தொழிலதிபர் ஆகணும்னு கனவு கண்ட எல்லோரையும் ஒரு ஆசிரமம் வைக்கணும் என நினைக்க வைத்த பெருமை நித்யானந்தாவையே சேரும்...!

twitter.com/saravananucfc

பேருந்து நஷ்டத்தை மட்டும் மக்களிடமே திருப்பி விடும் அரசுக்கு டாஸ்மாக் லாபத்தைத் திருப்பித் தர புத்தியில்லையானு கேட்கிறான் ஒரு பாமரன்.

p110b_1516774165.jpg

twitter.com/ansari_masthan

கணவன் : என்ன டின்னர்?

மனைவி : மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகுபோட்டு தாளிச்சு வெச்சிருக்கேன்.

கணவன் : எனக்குப் பசிக்கலை.

வேறு ஒரு வீட்டில்:

கணவன் : என்ன டின்னர்?

மனைவி : பெப்பர் எக் ஃப்ரைடு ரைஸ்.

கணவன் : அட சூப்பர்.

சோறு வைக்கிறது பெருசு இல்லை... பேரு வைக்கணும்.

twitter.com/withkaran

போன நோண்டுறதால தூக்கம் வரமாட்டுதா இல்ல தூக்கம் வராததால போன நோண்டுறோமா?!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

எகிப்திய மம்மிகள் ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம்

லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மம்மி முகமூடி பாப்பிரஸ் பெட்டியில் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

 
 

"உங்கள் கோட்டை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மக்கள் கேட்டால் என்ன சொல்வது" 
........ 
"இது சாதாரணமான வாழ்க்கை முறை அல்ல" 
......... 

"தேங் யூ வெரி மச்" என்று ஒரு தம்பதியினரின் உரையாடல் நடந்து கலகலவெனச் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அறுபது வயதைத் தாண்டிய அந்தத் தம்பதியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்கத்தான் அங்கே ஆட்கள் யாருமில்லை. ஆம், அவர்களைச் சுற்றி அங்கே யாரும் இல்லை. தாங்கள் உண்ண காய்கறிகளையும் மீன்களையும் பிடித்துக் கொண்டு தங்கள் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் மேற்சொன்னபடி பேசி சிரித்துக் கொள்கிறார்கள். 

 

கோட்டை

Photo - boredpanda.com

அது கனடாவின் வான்கோவர் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தீவுப்பகுதி. நகர வாழ்க்கையை வீசியெறிந்துவிட்டு அந்தக் கடல் முகத்துவாரத் தண்ணீரில் கோட்டையை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள், அந்தத் தம்பதியினர். அவர்கள் வசிக்கும் வீட்டை அவர்கள் கோட்டை என்றுதான் அழைக்கிறார்கள். பசுமை வீடு, நடன அரங்கம், கலைக்கூடம், விருந்தினர்களுக்கான கலங்கரை விளக்கக் கோபுரம்,  ஸ்டுடியோ, சோலார் மற்றும் ஜெனரேட்டர் மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 அறைகள் கொண்ட பரந்து விரிந்த ஒரு கட்டிடத்தைக் கோட்டை என்றுதானே சொல்ல வேண்டும். இதனை வடிவமைத்து வாழும் தம்பதியின் பெயர் வெய்ன் ஆடம்ஸ் (66) மற்றும் கேத்ரின் கிங் (59). இந்தக் கோட்டை கடற்கரை கழிமுகப் பகுதியில் இருக்கும் நீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மற்றொரு சிறப்பு. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதற்கு ஏற்றதுபோல கோட்டை தன்னை உயர்த்தியும், தாழ்த்தியும் தானாக அமைத்துக் கொள்ளும். 1992-ம் ஆண்டு மிதக்கும் கோட்டையை வெய்ன் ஆடம்ஸ் அமைத்தார்.

காய்கறிகள்

Photo - boredpanda.com

இந்தக்கோட்டை முதன்முதலில் சாதாரணமாகத்தான் கட்டினார்கள். பின்னர் அங்கேயே வாழ்க்கையை வாழ விரும்பிய தம்பதிகள் இருவரும் கோட்டையாக மாற்றிக் கொண்டார்கள். தன்னுடைய கோட்டையை ரசிக்க வரும் விருந்தினர்களை உபசரிக்க விருந்தினர்களுக்கான கூடாரமும் அமைத்தனர். வெய்ன் ஆடம்ஸ் காவலர் மற்றும் ஓவியராக இருந்தவர். கேத்ரின் கிங் ஓவியர், நடன கலைஞர், எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர். வயதான தம்பதிகளின் இறுதிக்காலம் ஓவியம் வரைதல், எழுதுதல் மற்றும் விளையாடுதல் என இப்படித்தான் கழிகிறது. உணவுக்காக அரை ஏக்கரில் நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். உணவுக்காகத் தேவைப்படும் மீன்களை வெய்ன் ஆடம்ஸ் தனது மனைவி கேத்ரின் கிங்குடன் அவ்வப்போது படகில் சென்று பிடித்துக் கொள்கிறார். மழை எப்போது பெய்தாலும் குடிநீராக சேமித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தீவில் உள்ள தண்ணீரில் வாழ்ந்து வந்தாலும் கோடைக்காலத்தில் அருகில் இருந்து வரும் தண்ணீரால் கோட்டையும், அதனால் தம்பதியும் எப்போதும் மிதந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

தனியாக வாழும் தம்பதி

Photo - boredpanda.com

இக்கோட்டையைச் சுற்றிலும் 14 சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இரவில் எப்போதும் கோட்டை மிளிர்ந்து கொண்டே இருக்கும். கோடைக்காலத்தில் இந்தத் தம்பதிகளைப் பார்க்க அதிகமான நண்பர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர, இப்படி ஒரு தம்பதியினர் வாழ்கிறார்களா எனக் கேள்விப்பட்டும் இங்கு அதிகமான விருந்தினர்கள் வருகின்றனர். இந்தக் கோட்டையில் இவர்களுக்குத் துணை இவர்கள் வளர்க்கும் நாய்கள் மட்டும்தான். இக்கோட்டையில் வெய்ன் ஆடம்ஸ் எந்தத் தொலைத்தொடர்பு சாதனத்தையும் வைத்துக் கொண்டதில்லை, இனியும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த மிதக்கும் கோட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் சொல்வது "இவ்வளவு நாட்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்" என்றுதான் அந்தத் தம்பதியினரைப் பற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மரணம் வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இறுதி ஆசை. இவ்வளவு வயதாகியும் வெய்ன் ஆடம்ஸ், கேத்ரின் கிங் ஆகிய இருவருக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய சிறிதும் கவலை இல்லை. அவர்களது முகத்தில் எப்போதும் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. 

 

இறுதி வரை தொடரட்டும் அவர்களது மகிழ்ச்சி!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்திய பெண் ராணுவ வீரர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்

இந்தியா ராணுவத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்த பெண் வீரர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அதன் காணொளி.

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: கும்ஹார் மண்பாண்டங்கள்

 

 
24CHSUJKUMHAR1

பரபரப்பான தலைநகர் டெல்லியிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது கும்ஹார் கிராமம். இங்குள்ள மக்களுக்கு மண்பாண்டங்கள் செய்வதுதான் தொழில். இந்தக் கிராமத்தில் வசிக்கும் 700 குடும்பங்களும் விதவிதமான கண்கவர் மண்பாண்டங்களைச் செய்து வருகிறார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மண்பாண்டங்கள் செய்யும் ஒரே இடம் கும்ஹார்தான்!

40 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் உள்ள அல்வார் என்ற வறண்ட கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் இந்த மக்கள். இப்போது தங்களின் கற்பனைத் திறனாலும் கடின உழைப்பாலும் வெளிநாடுகளுக்கும் மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்!

24CHSUJKUMHAR3

பானை செய்வதற்கான களிமண்ணை ஹரியானாவிலிருந்து கொண்டுவருகிறார்கள். மண்பாண்டங்கள் செய்வதற்கான மண்ணைத் தயார் செய்வது பெண்களின் வேலை. சக்கரங்களில் வைத்து உருவங்களைச் செய்வது ஆண்கள் வேலை.

கும்ஹாரில் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் களிமண் கொட்டிக் கிடக்கும். மண்ணை உடைத்து, சலிக்கிறார்கள். பிறகு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, அரை நாள் முழுவதும் ஊறவைக்கின்றனர். மீண்டும் ஒருமுறை காலால் பிசைகிறார்கள். வெண்ணை போன்று மென்மையாகக் களிமண் மாறும்.

தயார் செய்யப்பட்ட அந்தக் களிமண்ணை சக்கரங்களிலோ அச்சிலோ வார்த்து விதவிதமான மண்பாண்டங்கள் செய்கின்றனர். காய்ந்த பிறகு சூளையில் வைத்து 4 முதல் 5 மணி நேரம் வரை சுடுகின்றனர். பிறகு அவற்றின் மீது அழகான சாயம் பூசுகின்றனர்.

24CHSUJKUMHAR

அகல் விளக்கு, தண்ணீர்ப் பானை, அலங்காரங்கக் கிண்ணம், பூந்தொட்டி, பூச்சாடி, சுவரில் தொங்கும் அலங்கார பொருட்கள், தலைவர்களின் சிலைகள் என்று வெவ்வேறு அளவுகளில் செய்கிறார்கள். தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாளைக்கு 3000 - 4000 அகல் விளக்குகள் தயாரிக்கின்றனர். இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளான கனடா, இலங்கை, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இவற்றை அனுப்புகின்றனர்.

இந்த மக்களின் வீடுகளும் மண்ணால்தான் கட்டப்பட்டுள்ளன. உடைந்த பானைகளை அடுக்கி, மண் சேற்றால் பூசி, சுவர்களாக்கி வீடு கட்டுகின்றனர். வெளியிலிருக்கும் வெப்பத்தைவிட, வீட்டுக்குள் வெப்பம் குறைவாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இவர்களிடம் உரையாடலாம். பானை செய்யக் கற்றுக்கொள்ளலாம். மிகச் சிறந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது கும்ஹார்.

24chsujkumhar5jpg

http://tamil.thehindu.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா தினம் கொண்டாடப்படும் திகதி மாற்றப்படவேண்டும் என வலியுறுத்தி மெல்பேர்னில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
ஆஸ்திரேலியக் கண்டத்தில் குடியேறவென, பிரிட்டன் நாட்டவர் 1788 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி, கப்பலில் வந்து, சிட்னியில் முதன் முதலாக பிரிட்டிஷ் கொடியை நிலைநாட்டிய தினமே ஆஸ்திரேலிய தினம் ஆகும். அந்தவகையில் ஜனவரி 26ம் திகதியன்று ஆஸ்திரேலியா தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டாலும், எமது நாடு எம்மிடமிருந்து களவுபோன தினம் அல்லது எமது நாட்டை அந்நியர் ஊடுருவிய தினம்-Invasion Day என்று ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் பல அமைப்புகள் இந்த நாளை அனுசரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எத்தனை பீச்... எத்தனை அருவி... இங்கே போனால் நனையாமல் வர முடியாது...! ஊர் சுத்தலாம் வாங்க.. பெருந்தேனருவி

 

 

 

 

 

perunthenaruvi

 

இப்போதெல்லாம் அருவி என்றாலே ‘அருவி’ ஹீரோயின்தான் நினைவில் வந்து கும்மியடிக்கிறார். இனிமேல் எனக்கு அருவி என்றால், கேரளாவின் பெருந்தேனருவியோ, (Perunthenaruvi) தமிழ்நாட்டின் திற்பரப்பு (Tirparappu) அருவியோ நினைவுக்கு வரலாம். கடவுளின் தேசமான கேரளாவில் எத்தனையோ அருவிகள் உண்டு. வளச்சல், அதிரப்பள்ளி பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், இதற்கெல்லாம் முன்னோடி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அது, கேரளாவின் பம்பை தாண்டி உள்ள பெருந்தேனருவி. அதற்காக அதிரப்பள்ளிக்கு வரும் தண்ணீர் பெருந்தேனருவியில் இருந்து வருகிறதா என்றால், இல்லை. ஆனால், பம்பை ஆற்றுக்கு மூலம் இந்தப் பெருந்தேனருவி.

பெருந்தேனருவிக்கு தேனி, குமுளி வழியாகப் போவதுதான் சரியான ரூட். ஆனால், நான் நாகர்கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன். காரணம், திற்பரப்பு. ‘இந்த முறை ஈரப்பதம் அதிகமா இருக்கணும். நனைஞ்சபடி அலுவலகம் வந்தாலும் பரவாயில்லை’ என்று ஆசிரியர் சொல்லியிருந்ததால், கடற்கரைகளாகவும், அருவிகளாகவும் பார்த்துத் தலை சிலுப்பி வரலாம் என்பதால்தான் இந்தத் திட்டம்.

இந்தப் புத்தாண்டு முதல் மாதத்தில் நடந்த அரசுப் பேருந்துகளின் விலையேற்றத்துக்கு ஒரு வகையில் நானும் காரணமாக இருக்கலாம். ‘450 ரூபாய்தானே... நாகர்கோவில் வரைக்கும் பஸ்ல போயிட்டு, அங்கிருந்து காரை எடுத்துக்கலாம்’ என்று நான் திட்டம் போட்டது தமிழகப் போக்குவரத்துத் துறைக்குக் கேட்டிருக்கலாம். இப்போது சென்னை to நாகர்கோவிலுக்கு 875 ரூபாய் பஸ் கட்டணம். மன்னிச்சூ! நண்பர் ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பே திருவனந்தபுரத்துக்கு 1000 ரூபாய்க்கு விமான டிக்கெட் முன் பதிவு செய்து காட்டியதை டைமிங்காகச் சொல்லி வெறுப்பேற்றினார்.

‘குளத்துடன் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனால் நஷ்டம் குளத்துக்கு இல்லை’ என்பதைப் புரிந்து கொண்டு, வேறு வழியில்லாமல் நாகர்கோவிலுக்கு முன்பே பேருந்தில் இறங்கினேன். சில பல பீச்களில் போட்டோ ஷூட் பண்ணிவிட்டு, அப்படியே திற்பரப்புக்குப் பயணம் போவதுதான் திட்டம். செம குளிர் அடித்தது.

ஹூண்டாய் கார் ஒன்றைக் கிளப்பி, புகைப்பட நிபுணரை ஏற்றிக்கொண்டு காலையில் கிளம்பினேன். சென்னைக்கு குயின்ஸ்லேண்ட், விஜிபி, கிஷ்கிந்தா.. ஊட்டிக்கு பிளாக் தண்டர், மதுரைக்கு அதிசயம் மாதிரி... கன்னியாகுமரி தாண்டி நாகர்கோவில் செல்லும் வழியில் ஒரு தீம் பார்க் இருக்கிறது. தீம் பார்க்கின் பெயரே ஆளை இழுக்கிறது. ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் நடித்த சீரியல் தொடரான ‘பே வாட்ச்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கு 200 ரூபாயும் பெரியவர்களுக்கு 350 ரூபாயும் கட்டணம். ஜாலி பார்ட்டிகளுக்காக இதைச் சொல்கிறேன்.

 

perunthenaruvi

கடற்ரை வழியாகவே நேரே போனேன். மணக்குடி எனும் கிராமம் வந்தது. எந்நேரமும் மீன் வாசமும், அலையடிக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. சர்ச்சைகளுக்குப் பிறகு ஹிட் ஆகும் சுமாரான படங்கள்போல் சாதாரண கிராமமாக இருந்த மணக்குடி, சுனாமிக்குப் பிறகு ஓவர்நைட்டில் பிரபலமானது. 2004-ல் ஏற்பட்ட சுனாமியில், இங்குள்ள பாலம் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடப்பது இப்போது சுற்றுலாத் தலமாக மாறி வரலாறாகிவிட்டது. ‘‘சுனாமியில பாதி மணக்குடி காலி... இந்தப் பாலம் மட்டும்தான் மிச்சம். அப்படியே இருக்கட்டுனு விட்டுப்புட்டானுவ...’’ என்றார் மணக்குடிவாசி ஒருவர். ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்பதுபோல், உடைந்த பாலத்தின் கொஞ்சூண்டு பகுதியை அப்படியே விட்டு விட்டார்கள். 

perunthenaruvi

 

அதற்குப் பதிலாக புதுப் பாலம் இப்போது ஜொலிக்கிறது. ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் போன்ற இயக்குநர்களின் படங்களில் வரும் செட் போல பயமாக இருந்தது உடைந்த மணக்குடி பாலம். கவிழ்ந்து கிடந்த பாலமே சுனாமியின் வீரியத்தைச் சொல்லியது. மணக்குடி பாலத்துக்காக வருந்தினேன்.

 

perunthenaruvi

நாகர்கோவில் என்றால், முட்டம் கடற்கரைதான் ரொம்ப ஃபேமஸ். ‘கடலோரக் கவிதைகள்’, ‘நீர்ப் பறவை’, ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘சிங்கம்’ என்று ஏகப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் அலையடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் முட்டம் கடற்கரை. தள்ளுமுள்ளுகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது கடற்கரை. கொஞ்சூண்டு கூட்டம் இருந்தது. விசாரித்ததில் ‘‘நண்டு பிடிக்க வந்தோம்ணா’’ என்றார்கள்  சில இளவட்டப் பசங்கள். சில நேரங்களில் கரையிலிருந்தே ஆழம் ஆரம்பிப்பதால், குளிப்பதற்குத் தடை. ஒரு சாயங்கால வேளையோ, காலை வேளையோ - டென்ஷன் பார்ட்டிகளுக்கு முட்டம் அருமையான ரிலாக்ஸிங் பாயின்ட்டாக இருக்கும். சூரிய உதயம், அஸ்தமனம் - இரண்டுமே முட்டத்தில் பிரமாதமாக இருக்கும் என்றார்கள்.

 

perunthenaruvi

கடற்கரை வழியாக கார் ஓட்டுவது செமயாக இருந்தது. ‘பீச் டிரைவ் இன்’ என்று போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ்கூட வைக்கலாம். முட்டம் போலவே குளச்சல் என்றொரு இடம் வந்தது. சின்னக் கடற்கரை நகரமாக இருந்தது குளச்சல். ஆனால் குளச்சலுக்குப் பெரிய வரலாறு இருந்ததைச் சொன்னார்கள். வாஸ்கோடகாமா இதை ‘குளச்சி’ என்று செல்லமாக அழைப்பாராம். 1741 ஆகஸ்ட் மாதம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்ததாம் குளச்சல். திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மனுக்கும், டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் கடுமையாகப் போர் நடந்த இடம் - குளச்சல் கடற்கரைதானாம்.

perunthenaruvi

வரலாற்றில் ஒரு இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த அரசு, ஐரோப்பியக் கடற்படையை முதன்முறையாக வெற்றிகொண்ட இடம் என்ற பெருமை குளச்சலுக்கு உண்டு. டச்சு - கிழக்கிந்தியக் கம்பெனியினரின் தோல்விக்குப் பிறகு, பிரிட்டீஷ் கடற்படை அட்மிரல் டெலன்னாய், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் கடற்படையில் முதன்மை அட்மிரலாகப் பணிபுரிந்தது இந்திய வரலாற்றிலும், பிரிட்டிஷ் வரலாற்றிலும் மறக்க முடியாத ஒன்று. குளச்சலில் இருந்து சில கி.மீ தொலைவில் இருக்கும் உதயகிரி கோட்டை, அட்மிரல் டெலன்னாய்யின் நினைவாக எழுப்பப்பட்டதாம்.

perunthenaruvi

 

பீச் முடியமாட்டேன் என்று அடம்பிடித்தது. சங்குதுறை என்றொரு இடம் வந்தது. ஆள் அரவமே இல்லை. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது. இதில் ஏறி நின்றால் - விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் சூப்பராகப் பார்க்கலாம் என்றார்கள். பார்த்தேன்; ரசித்தேன். இங்குள்ள மிகப் பெரிய சங்கு ஒன்றில் நுழைந்து செல்ஃபி எடுத்துக் குவிக்கலாம். சங்குதுறை - மாலை நேரத்துக்கு சூப்பரான ஸ்பாட். மாலை முடியும் நேரம் சங்குதுறை, மஞ்சள் சிவப்பு ஆரஞ்ச் என்று வெரைட்டியாக சில்ஹவுட்டில் எடுத்த புகைப்படம் போல் இருந்தது. திரும்பி வரும்போது சூரிய அஸ்தமனம் - அட்ராசிட்டி பண்ணியது.

 

perunthenaruvi

நாகர்கோவில் டூரில் தயவுசெய்து மறக்காமல் மாத்தூர் தொட்டிப் பாலத்தை டிக் அடித்துவிடுங்கள். நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தாண்டினால், பரளியாற்றின் மேல் பிரம்மாண்டமாக வரவேற்கிறது தொட்டிப் பாலம். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலமான மாத்தூர் தொட்டிப் பாலம், 1966-ல் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது . காமராஜரிடம் அவரின் சாதனைகளைப் பற்றிப் பேசிய ஒரு சினிமா அதிபர், ''ஐயா, 5 லட்ச ரூபாய் இருந்தால், உங்கள் சாதனைகளைப் பற்றி ஒரு திரைப்படம் பண்ணலாம்!'' என்றதற்கு, ''5 லட்ச ரூபாயில் நான் ரெண்டு பள்ளிக்கூடமோ, தொட்டிப் பாலம் மாதிரி ஒரு பாதியோ கட்டி முடிச்சுப்புடுவேன் சாரே!'' என்றாராம்.

perunthenaruvi

கிட்டத்தட்ட வெறும் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், 7.5 அடி அகலத்தில், 28 தூண்களைக் கொண்டு, 115 அடி உயரத்தில், ஒரு கி.மீ. நீளத்துக்கு, தென்குமரியின் விவசாயப் பாசனத்திற்காகக் கட்டப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இருந்து, பரளியாற்றின் தண்ணீரை, இன்னொரு புறத்திற்கு அதன் புவியீர்ப்பு விசையிலேயே கொண்டுவரும் அழகு, அற்புதம்! 'கணினியைத் தட்டி ஆயிரம் மென்பொருள் தயாரிக்கலாம்; ஆனால், ஒரு நெல்மணியைத் தயாரிக்க முடியாது!’ என்பதுபோல, ஆயிரம் ஆயிரம் வசதிகள் வந்தாலும், இன்னும் விவசாயம்தான் நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியாக தொட்டிப்பாலம், தென்குமரியின் விவசாயத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.

பாலத்தில் இருந்து மொத்த அழகையும் பார்த்தேன். குழந்தைகள் மேக்-அப் போடத் தெரியாமல் முகம் முழுதும் பவுடரை அப்பிவிட்டு வந்து நிற்பதுபோல் அத்தனை அழகாகச் சிரித்தது. பச்சைப் புல்வெளியும் நீல வானமும் சலசலவென தண்ணீரும் கலந்து பெரிய பனோரமா மோடில்கூட சிக்க வைக்க முடியாத அளவு ரம்மியமாய் இருந்தது. நீளமாக இருந்த பாலத்தில், சிக்னல் போட்டதும் சீறிக் கிளம்பும் வாகனங்கள்போல் பரபரவெனப் பறந்து நிற்காமல் பயணித்துக் கொண்டிருந்தது தண்ணீர். ‘‘இந்தத் தண்ணிக்குள்ள சுழல் சக்தி அதிகம். தண்ணிக்குள்ள விழுந்தா அவ்வளவுதான். சுழட்டியடிச்சிடும்.’’ என்று தெரிந்த ஒருவர் எச்சரிந்திருந்ததால், பாலத்தில் கவனமாக நடந்து, நானும் சிலரை எச்சரித்து நல்ல பெயர் வாங்கினேன். ஆனால், ‘தொப் தொப்’ என சில வாண்டுகள் பாத்ரூம் தொட்டிக்குள் குதிப்பதுபோல் தொட்டிப்பாலத் தண்ணீரில் குதித்து, தண்ணீரின் போக்கில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘நாங்க அந்தப் பக்கம் போகணும். தண்ணில இறங்கினா அதுவா ஸ்பீடா கொண்டுபோய் விட்டுடும் கேட்டீயளா?’’ என்று நக்கலாகச் சிரித்தார்கள் வாண்டுகள். தொட்டிப் பாலம் செம பல்பு கொடுத்தது. நண்பரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

 

perunthenaruvi

கீழே பரளியாற்றில் தண்ணீர் வரத்து அம்சமாக இருந்தது. ஆற்றில் நீரின் வேகம் சில நேரங்களில் அதிகம் இருப்பதால், 'நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இறங்க வேண்டும்’ என்ற எச்சரிக்கைப் பலகையைப் படித்துவிட்டு, தண்ணீரில் டைவ் அடிப்பது நலம். அங்கங்கே இயற்கையாக குளியல் குளங்கள் இருக்கின்றன. எல்லாமே பரளியாற்றுத் தண்ணீர்தான். கும்பலாக வந்து குளித்துவிட்டுப் போகும் சில குடும்பங்களின் அட்ராசிட்டிகளை கேமராவுக்குள் திணித்துக் கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர். ஸ்நாக்ஸ் டைமில் மாங்காய், இலந்தைப் பழ ஜெல், ஆவக்காய் என்று பள்ளிக்கால நாஸ்டால்ஜியாவைக் கிளறி விட்டது தொட்டிப் பாலக் கடைகள்.

அடுத்து திற்பரப்புக்கு வண்டியை மிதித்தேன். 24 கி.மீ தாண்டினால் திற்பரப்பு வந்துவிடுகிறது. கன்னியாகுமரியில் இருந்து கிளம்புபவர்கள் குலசேகரம் வந்து அங்கிருந்து 5 கி.மீ கடந்தும் திற்பரப்பு வரலாம். காரை நிறுத்தும்போதே அருவிச் சத்தம் எக்கோ அடித்தது. ‘குமரிக் குற்றாலம்’ என்றொரு செல்லப் பெயர் திற்பரப்புக்கு இருக்கிறது. கோதையாறு எனும் நதியிலிருந்து கிளம்பும் திற்பரப்பு அருவி, 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து அழகாக அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தது. அருவி நீரை நேரடியாகத் தலைக்கு வாங்கிக் கொள்ள பில்டிங்கும் பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டியது அவசியம். பேஸ்மென்ட் வீக்காக இருப்பவர்களுக்கு, கீழே நீச்சல் குளம்கூட உண்டு. குறைந்த அளவில் 10 ரூபாய், 5 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். சீஸன் டைம் இல்லாத நேரங்களில்கூட பெருசுகளும் சிறுசுகளுமாக பரபரப்பாக இருக்குமாம் திற்பரப்பு.

 

Perunthenaruvi

 

குளிப்பதற்கு முன்பு போட்டிங்குக்கு அழைக்கிறார்கள். திற்பரப்பு அணையில் போட்டிங் வசதி உண்டு. நான்கு பேர் கொண்ட பெடல் போட்டுக்கு 100 ரூபாயும், துடுப்பு போட்டுக்கு 150 ரூபாயும் வசூலிக்கிறார்கள். குளித்து வரும் வரை பொறுக்கமாட்டார்கள் போல் இருந்தது. டாஸ் போட்டுப் பார்த்தேன்; போட்டிங் வந்தது. படகுச் சவாரியை முடித்து விட்டுக் குளியலுக்குக் கிளம்பினோம். கன்னாபின்னா இரைச்சலுடன் அருவி நீர் அழகாக கிராமம் முழுவதும் வழிந்தோடுவது, கேரளாவுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று நினைக்க வைக்கிறது. திற்பரப்பு அருவிக் குளியலின் பலம் என்னவென்றால்... வயிறு முட்ட வாழைக்காய்/நேந்திர பஜ்ஜிகளை அமுக்கிவிட்டு திற்பரப்பில் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தால், மொத்தமும் செமித்து மீண்டும் பஜ்ஜிகளுக்கு ஏங்குகிறது வயிறு.

 

perunthenaruvi

நான்வெஜ் பார்ட்டிகளுக்கு ஒரு டிப்ஸ்: திற்பரப்பு ஏரியாவில் ‘கௌலா’ எனும் அணை மீன் வறுவலை மிஸ் பண்ணி விடாதீர்கள். ஆற்றின் இன்னொரு பக்கம் சிவன் கோவில் இருக்கிறது. மகாதேவரைத் தரிசிப்பதற்கென்றே சிவனடியார்கள் இந்தக் கோவிலுக்குக் குவிகிறார்கள்.

 

perunthenaruvi

 

அருவிக்கு மேலே வாக்கிங்கும் போகலாம். அருவி விழும் இடத்திலிருந்து அபாயகர செல்ஃபிக்களெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர் நரம்பு முறுக்கேறிய இளசுகள். அருவிக்கு மேலேயும் ஸ்விம்மிங் நடந்து கொண்டிருந்தது. தெளிந்த நீரோடைகளில் தெளிந்த நீரோடை போல் குழந்தைகள் குளித்து முடித்து வந்து கொண்டிருந்தனர். அருவிக்கு அந்தப் பக்கம் ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் எடுத்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்துவாசிகள். ரப்பர் மரக் காட்டுக்குள் ஒரு ட்ரெக்கிங் போய்விட்டு வந்து மீண்டும் காரில் ஏறிக் கிளம்பினோம்.

திற்பரப்பில் ரூம்கள் வாடகைக்கு ரூம்கள் அவ்வளவாக இல்லை. ஆனால், சாப்பிடுபவர்களைத் திணறடிக்காமல் தரப்படும் லிமிட்டெட் மீல்ஸ் மாதிரி போதுமான அளவு ரூம்கள் கிடைக்கின்றன. 1,000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. பிக்கல் பிடுங்கல் இல்லாத ஒரு ரூமில் தங்கிவிட்டு மறுநாள் பெருந்தேனருவிக்குத் திட்டம் போட்டு விட்டோம்.

மறுநாள் காலையில் இருந்து கேரளா வாசம்தான். திற்பரப்பில் இருந்து பெருந்தேனருவிக்கு இரண்டு பாதைகள். நெடுமங்காடு, கிளிமன்னூர், கோட்டரக்கரா வழியாக பத்தினம்திட்டா போவது ஒரு வழி. அட்டிங்கல், வெள்ளியம் வழியாகவும் பத்தினம் திட்டா போகலாம். பத்தினம்திட்டாதான் பெரும்பாலான டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு ஏற்ற தங்கும் இடம். லாட்டரி விற்கும் சேட்டன்கள், வளர வளரப் பணிந்து நிற்கும் நெற்பயிர்கள் கொண்ட வயல்வெளி, கறுப்பு கட்டஞ்சாயா போடும் வெள்ளைச் சேட்டன்கள், குலுக்கி சர்பத், புளிப்பு மாங்காய், யானைகள் என்று வழி நெடுக கேரள மணத்தோடேயே பயணித்தேன். பெண்களும் பெண் குழந்தைகளும் வீடுகளை அழகாக்குவதுபோல், சேச்சிகள் கேரளாவை மேலும் அழகாக்குகிறார்கள்.

 

perunthenaruvi

பத்தினம்திட்டா செல்லும் வரை மார்கழிக் குளிரும், மிதமான வெயிலும் மழையும் ஒரு சேரக் குளிர்வித்தது. இதன் பெயர்க் காரணமே ஜிவ்வென்றிருந்தது. ‘நதியோரத்தில் கொத்தாக அமர்ந்திருக்கும் பத்து வீடுகள்’ என்று இதற்குப் பொருளாம். கேரளாவின் வணிக மையமாகி விட்டது பத்தினம்திட்டா. பம்பை போன்ற இடங்களுக்கு வருபவர்கள் பத்தினம்திட்டாவில்தான் தங்குகிறார்கள். பட்ஜெட் ரூம்களில் இருந்து பிசினஸ் க்ளாஸ் மக்கள் வரை எல்லோரையும் அரவணைக்கிறது பத்தினம்திட்டா. ராணி, கோணி - இவை இரண்டும் பத்தினம்திட்டாவுக்கு அருகில் இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகள். ராணி எனும் ஊரைத் தாண்டியதும், பம்பை ஆறு பெரிதாக வரவேற்றது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்காகவே கடவுளால் படைக்கப்பட்ட ஆறு என்று இதைச் சொல்கிறார்கள். ‘இருப்பதை இயல்பாகப் பார்க்க வேண்டும்’ என்பதுதான் அழகு. ஆனால், பம்பையை இயல்பாகப் பார்க்க முடியவில்லை. டாப் ஆங்கிளில் பார்த்தேன். வேற லெவலில் இருந்தது.

 

perunthenaruvi

 

திடீரென காடுபோல் பரந்து விரிந்த ஏரியாவுக்குள் இடதுபுறம் திரும்பச் சொல்லிக் கூக்குரலிட்டது கூகுள் மேப். திடீர்த் திருப்பங்கள், ஒற்றையடிப் பாதை, திடும் திடும் என முளைத்த மேடுகள், சரளைக் கற்கள், நடுவே குறுக்கிட்ட ஓடைகள், மண் தரை, காய்ந்த சருகுகள் என்று ரியல் காட்டுப் பயணமாகவே இருந்தது. மரங்களின் கிளைகளினூடே சூரியன் ஒளிபரப்பியது, கவிதைக்கான கருப்பொருள். ‘அடர்ந்த காடு மாதிரி இருக்கே; விலங்குகள் ஏதும் உண்டோ’ என்று விசாரித்தோம். மனிதர்கள் தொந்தரவு விலங்குகளுக்கு இல்லை என்றார்கள். அதாவது, விலங்குகள் இந்தக் காட்டில் இல்லை. பம்பை, சபரிமலை பக்கம் யு-டர்ன் அடித்து கேரளக் காடுகளுக்குப் போய்விடுவதாகச் சொன்னார்கள்.

35 கி.மீ வந்திருப்போம். ஓர் இடத்தில் காரை நிறுத்தச் சொல்லிப் பறைந்தார் சேட்டன் ஒருவர். எலெக்ட்ரிக் ஹைட்ரோ பவர் புரொஜெக்ட் இப்போதுதான் நடந்து முடிந்ததாகச் சொன்னார்கள். பெருந்தேனருவியின் வேலையாகத்தான் இருக்கும். ‘‘டேம் கட்டிக்கொண்டிருக்கின்னு. கட்டன்னுதன்னே வல்லிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆகான் போகுன்னு!’’ என்றார் அதிகாரி ஒருவர். காரில் இருந்து இறங்கி கூழாங்கற்களாகத் தாவித் தாவிச் சென்றால், ஏதோ ஒரு ஃபேன்டஸி உலகத்துக்கு வந்ததுபோல் இருந்தது. சுற்றிலும் குட்டிக் குட்டி மலைகளாக கூழாங்கல் பாறைகள், சலசல தண்ணீர்ச் சத்தம்... ட்ரெக்கிங் போவது போலவே இருந்தது.

 

perunthenaruvi

 

அருவி என்றதும் அதிரப்பள்ளி, திற்பரப்பு போன்ற அருவிகளைக் கற்பனை செய்து கொண்டுபோனால், கம்பெனி பொறுப்பல்ல. ஆனால், ‘இப்படி ஒரு இடத்தைத்தான்யா எதிர்பார்த்தேன்’ என்று உள்மனசு நிச்சயம் கூவும். அருவி என்றால், ஓர் இடத்தில் மட்டும் விழவில்லை. நம்மூரில் ஸ்பீடு பிரேக்கர்கள் போல, பாறைகளுக்கு நடுவே அங்கங்கே அடிக்கு ஓர் அருவி விழுந்து ஆசையாய் அழைக்கிறது. தட்டு நிறைய முந்திரி இருக்கும்போது, ஒரு முந்திரியை மட்டும் தின்றுவிட்டுப் பேசாமல் இருப்பது முதிர்ச்சியின் அடையாளம். அதேபோல், கண்ணுக்கெட்டிய தூரம் வரை குட்டிக் குட்டி அருவிகள்... அவ்வளவு முதிர்ச்சி அடையவில்லை நான். பேசாமல் இருக்க முடியவில்லை.

 

perunthenaruvi

குழந்தையாய்க் குதூகலிக்கத் தோன்றுகிறது. எதையும் விடவில்லை. மழை நேரங்களில் இங்கே நிற்கவே முடியாத அளவு, பாறை இடுக்குகளிலெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமாம். பெருந்தேனருவியில் இருந்து விழும் தண்ணீர், பம்பை நதியில் கலப்பதாகச் சொன்னார்கள்.

 

perunthenaruvi

 

ஒரு தடவை அ.தி.மு.க. கொ.ப.செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்தை மோட்டார் விகடன் டூர் பகுதிக்காக அழைத்து வந்து குளியல் போட வைத்தது இதே இடத்தில்தான். ஜில்லென்று விழுந்த ஓர் குட்டி அருவியைத் தேர்ந்தெடுத்து குழந்தைபோல் குதூகலித்துக் குளித்துவிட்டு, ‘இது கேரளாவே இல்லை; தமிழ்நாடு’ என்று தனது பாணியில் பொடேரென்று ஒரு போடாகப் போட்டது நினைவில் இருக்கிறது. ‘‘இந்த அருவியைப் பார்த்ததும், நினைவுக்கு வந்த பாடல் ஒன்றைச் சொல்கிறேன். நமது சங்க கால இலக்கியமான குறுந்தொகையில் இருந்து ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்றொரு பாடல் வருகிறது. அதாவது, ‘பெருந்தேன் போன்ற அருவி வீழ்கின்ற நாட்டினுடைய தலைவனோடு நான் நட்பு வைத்திருக்கிறேன்’ என்று தலைவி பாடுகிறாள். அப்படியென்றால், சங்க காலத்தில் இது நிச்சயமாக நமது தமிழ்நாடாகத்தான் இருந்திருக்க வேண்டும். அடுத்த கட்சி மீட்டிங்கில் பெருந்தேனருவியைத் தமிழ்நாட்டோடு இணைக்கக் கோரி வலியுறுத்தினால் என்ன என்று யோசிக்கிறேன்! இது நமது நாடு; இந்த அருவி இன்னும் பெருக்கெடுத்து நாட்டைக் குளிர்விக்க வேண்டும்!’’ என்று ஈர உடம்போடு தவமிருந்தபடி சொன்னார் நாஞ்சில் சம்பத்.

 

perunthenaruvi

 

ஒருவேளை - இது தமிழ்நாடாகவும் இருந்திருக்கலாம். டூரிஸத்தைப் பொறுத்தவரை நாம் ஏங்கிக் கொண்டிருக்க, பெருந்தேனருவி போன்ற ஸ்தலங்களை வைத்து கேரளா இயங்கிக் கொண்டிருக்கிறது. நாஞ்சில் சம்பத் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், 'உடலோடு சேர்த்து, இறுக்கமான இதயத்துக்குள்ளும் படர்ந்து ஈரமாக்குகிறது பெருந்தேனருவி என்று சொல்லிக் கொண்டு...'

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இசை கேட்டு குளிக்கலாமா?

shutterstock312378470

குளியல் மனிதனின் இன்றியமையாத அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. காலையில் நம் தூக்கத்தைக் களைத்து, சோம்பலை முறித்து, நமது அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கான புத்துணர்வையையும் உற்சாகத்தையும் இரவில் நம் களைப்பைப் போக்கி நமக்கு நிம்மதியான தூக்கத்தையும் இந்தக் குளியல் நமக்கு வழங்குகிறது.

பழங்கால இந்தியாவில் மூன்றுவேளை குளிக்கும் வழக்கமிருந்திருக்கிறது. இந்த வழக்கம் முதல் நூற்றாண்டில் எகிப்திலும் இரண்டாம் நூற்றாண்டில் கிரீஸிலும் இருந்ததாகப் பல வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கிரேக்கர்கள் அப்போதே தூவாலைக்குழாயைப் பயன்படுத்தியதாக அந்த ஆய்வுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இன்று இந்தத் தூவாலைக்குழாய் இல்லாத குளியலறையே இல்லையெனலாம். குழாயைத் திறந்தவுடன் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை நம்மை நனைத்து வழிந்தோடும் செல்லும் தண்ணீர் நமக்களிக்கும் சுகம் அத்தகையது. இது சுகத்தையளித்தாலும் இதனால் விரயமாகும் தண்ணீர் மிக அதிகம். ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பம் வழங்கும் ஸ்மார்ட் தூவலைக் குழாய் இந்த விரயத்தைத் தடுக்கிறது.

 

ஸ்மார்ட் தூவலைக் குழாய் என்பது என்ன?

குழாயின் கீழ் நின்றவுடன் இதமான சூட்டில் நாம் விரும்பும் அழுத்தத்தில் தண்ணீரை ஒளியுடனும் இசையுடனும் சேர்த்து நம் உடலின் மேல் ஒத்தடமளிப்பதுபோல் பீச்சியடிக்கும் கருவிதான் இந்த ஸ்மார்ட் தூவலைக்குழாய். நீர் சூடாவதற்கோ அதிகம் சூடான நீரின் சூடு தணிவதற்கோ நாம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். மேலும் சோப்பு போடுவதற்கோ கைப்பேசியில் பேசுவதற்கோ நாம் குழாயின் கீழிலிருந்து நகன்றவுடன் உடனடியாகத் தண்ணீர் விழுவதை முற்றிலும் நிறுத்துவதன்மூலம் தண்ணீர் விரயத்தையும் வெகுவாகக் குறைக்கும்.

 

இதன் பணி

இது ஒரு ஸ்மார்ட் கருவி என்பதால் வயர்லெஸ் வழியாகவோ புளுடூத் வழியாகவோ இது நம் வீட்டிலிருக்கும் ஸ்மார்ட் ஹப்புடன் இணைந்திருக்கும். இந்தக் கருவியில் உள்ள உணரிகள் நம் முக அமைப்பைக் கொண்டு நம்மையறியும் திறன்கொண்டவை. இதற்கென்று தனிச் செயலி உண்டு. அந்தச் செயலியின் மூலம் நாம் முதலில் நமது தேவைகளையும் விருப்புகளையும் இதனில் நிறுவிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்குத் தண்ணீரின் வெப்பநிலை, தண்ணீரின் அழுத்தம், உபயோகிக்க விரும்பும் தண்ணீரின் அளவு, ஒளியின் வண்ணம், இசையின் விருப்பத்தேர்வுகள் முதலியவை.

நாம் காலையில் எழுந்துவிட்டதை ஸ்மார்ட் ஹப்மூலம் தெரிந்துகொண்டு தன்னைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டு நமக்காக இது காத்துக்கொண்டிருக்கும். இதில் உள்ள உணரிகள் நம் முகவமைப்பை உணர்ந்துகொள்ளும் என்பதால், நாம் இந்த உணரியின் உணர்வு வட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன் அது தண்ணீர் கொட்டுவதை முற்றிலும் நிறுத்திவிடும்.

இது ஐந்துவிதமான அழுத்தங்களில் தண்ணீரைப் பாய்ச்சும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவை முறையே பூத்தூறல், தண்ணீர் சேமிப்பு, கன மழை, மித மழை மற்றும் மசாஜ் ஆகும். இதனில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சுவதற்கு விளக்குகளும் இசையை ஒலிப்பதற்கு ஸ்பீக்கர்களும் உண்டு. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் நாம் குளிக்கும்போது கைப்பேசியில் பேசவும் முடியும். இதன் நடுவில் இருக்கும் காட்சித் திரையில் நாம் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு ஒளிர்ந்துகொண்டிருக்கும். இதன் மூலம் நாம் உபயோகிக்கும் தண்ணீரின் அளவை வரம்பு மீறாமல் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளலாம்.

 

இதன் விலை

தண்ணீர் அழுத்தங்களின் எண்ணிக்கை, இணைப்பின் வகை, ஸ்பீக்கர்களின் தரம், ஒளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்ப இதன் விலை நான்காயிரம் ரூபாயிலிருந்து எழுபது ஆயிரம் ரூபாய் வரை மாறுபடுகிறது. H2O வைப் ரெயின் ஷவர் ஹெட், மொயின் யு ஷவர் ஸ்மார்ட், டிரீம் ஸ்பா, வாட்டர் ஹாக் ஸ்மார்ட் ரெயின் ஷவர் ஹெட், கோஹ்லெர் மோக்ஷி ஷவர் ஹெட், பிடெட்4மி மியுசிக் ஷவர் ஹெட், ஹைட்ரோ ஸ்மார்ட் ஷவர், இவா ஸ்மார்ட் ஷவர் போன்றவை சந்தையில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற தயாரிப்புகள் ஆகும்.

25jkrshower
 

 

தண்ணீரைச் சேமிப்போம்

நகரமயமாக்கல் பெருவாரியான ஏரிகளையும் குளங்களையும் விழுங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிய ஏரிகளையும் குளங்களையும் ஆறுகளையும் முறையாக நாம் பேணுவதில்லை. நகரம் தொடங்கி கிராமம்வரை இன்று நிலத்தடி நீர்தான் நமது தண்ணீர் தேவையைப் பெருவாரியாகப் பூர்த்திசெய்கிறது. இந்த நிலத்தடி நீரையும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக உறிஞ்சியெடுப்பதால் அதன் நீர் மட்டமும் அபாயகரமான அளவுக்குக் கீழே சென்று கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பெருகும் மக்கட்தொகையும் விரியும் நகரங்களும் வளரும் தொழிற்சாலைகளும் தண்ணீருக்கான நமது தேவையை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் 2050-ல் தண்ணீரின் தேவை தற்போதைய தேவையைவிட 32 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இன்று கிடைக்கும் தண்ணீரில் வெறும் 22 சதவீதம் மட்டுமே நமது பயன்பாட்டுக்கு 2050-ல் கிடைக்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் அந்தக் கணிப்பு நமக்குத் தெரிவிக்கிறது. தேவைக்கும் இருப்புக்கும் இடையேயிருக்கும் இந்த இடைவெளியால் நாம் வருங்காலத்தில் தண்ணீரை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம். இதைத் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் தண்ணீரை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

அவசியமென்பதைவிட நம் ஒவ்வொருவரின் முன்னிருக்கும் தலையாய கடமையென்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்தச் சிக்கனத்தை அன்றாட வாழ்வில் நமது வீடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். குளியலறைகளில்தான் நம் வீடுகளில் தண்ணீர் அதிகமாக விரயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் தூவலைக் குழாய் அந்த விரயத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் நமக்குச் சொகுசான குளியலையும் அளிக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

உலகின் சமீபத்திய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு
  • தொடங்கியவர்

7 மீட்டர் உயர அலைகளைச் சமாளித்து, உலகைச் சுற்றும் கடல் ராணிகள்! #IndianNavy

 
 

கோடியக்கரையிலிருந்து சென்னை வரை பாய்மரப் படகைச் செலுத்தும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. பல மாதங்கள் பயிற்சி எடுத்திருந்தாலும் கடற்காய்ச்சலிலிருந்து தப்பிக்க முடியவில்லை. கரை ஒதுங்கினால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற சூழலில், பரங்கிப்பேட்டை (port nova) அருகே ஆற்றுக் கழிமுகத்தில் படகைச் செலுத்த முடியாமல் இடுப்பு வரை புதையும் மணலுக்குள் இறங்கி இழுத்துக்கொண்டு வந்த த்ரில் நிறைந்த பயணம் அது.  வெறும் 15 நாள்கள் sailing expedition-னிலேயே இத்தனை சவால்கள் இருந்தால், உலகம் முழுக்க பாய்மரப் படகில் சுற்றுபவர்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், `அப்படிப்பட்ட சவால்களைச் சமாளித்து உலகின் ஆபத்தான கேப்ஹார்ன் முனையைக் கடந்து சாதித்துள்ளனர் இந்தியக் கடற்படை வீராங்னைகள்' என்ற தகவல் அறிந்தேன்!

கடற்படை வீராங்கனைகள் தாரிணியில் கடல் பயணம்

 

இந்தியக் கடற்படையிடம், ஐ.என்.எஸ்.வி மான்டோவி, தாரிணி என இரு பாய்மரப் படகுகள் (Indian Navy sailing vessel) உள்ளன. கடந்த ஆண்டுதான் தாரிணி, கடற்படையில் இணைக்கப்பட்டது. 56 மீட்டர் நீளம்கொண்ட  ஒற்றை அடுக்குப் படகான இது, ஃபைபர் கிளாஸால் தயாரிக்கப்பட்டது.  ஆறு பாய்மரங்கள்  25 மீட்டர் உயரமான மரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய பெரிய கப்பல்களையே புரட்டிப்போடும் அலைகளை பாய்மரப் படகுகள் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளவைப்பதுதான், செயிலர்களுக்கு உள்ள சவால் நிறைந்த பணி.

இதுபோன்ற சிறிய படகில்  உலகைச் சுற்றுவது சாதாரண விஷயமா... சுமார் 21 ஆயிரம் நாட்டிகல் மைல் பயணம் செய்ய வேண்டும். ஒரு நாட்டிகல் மைல் என்பது, 1.852 கிலோமீட்டர். அப்படியென்றால், 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்வதற்குச் சமம். அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், ஆழமும் ஆபத்தும் நிறைந்த பசிபிக் கடல், சுறாக்கள் நிறைந்த அட்லான்டிக் கடல் வழியாக உலகைச் சுற்றி வர, சுமார் எட்டு மாதங்கள் பிடிக்கும். கோவாவிலிருந்து புறப்படும் படகு, ஐந்து துறைமுகங்களில்தான் நிற்கலாம். மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள ஃபெர்மான்டில் துறைமுகம்தான் முதல் ஸ்டாப்.  நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமான ஃபாக்லேண்ட் தீவு, கேப்டவுன் நகரங்கள் அடுத்தடுத்த நிறுத்தங்கள். 

தாரிணி உள்புறத் தோற்றம்

கோவாவிலிருந்து புறப்பட்டால் முதல் இலக்கான ஃபெர்மான்டில் நகரை அடைய 45 நாள்கள் ஆகும். உணவுப் பொருள்களிலிருந்து மருந்து மாத்திரைகள் வரை  படகில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைமுகத்திலும் 10 நாள் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அப்போது, தேவையான பொருள்களை வாங்கி மீண்டும் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். ஃபெர்மான்டில் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நோக்கிய பயணத்துக்கு 25 நாள்கள் பிடிக்கும். அங்கிருந்து ஃபாக்லாந்துக்கு 30 நாள்கள். பிறகு, கேப்டவுன் நோக்கிய பயணத்துக்கு 30 நாள்கள். கேப்டவுனிலிருந்து கோவாவை அடைய 30 முதல் 40 நாள்கள் ஆகும். இதுதான், இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வரும் கடல்பாதை. நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட நாள்களுக்குள் எந்த இலக்கையும் நாம் எட்டிவிட முடியாது!

கடல் ராணி தாரிணி

சவால் நிறைந்த கடற்பயணத்தைப் ஃலெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில் பிரதீபா ஜாம்வால், ஸ்வாதி, விஜயாதேவி, ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதத்தில் கோவாவிலிருந்து தாரிணி படகில் தொடங்கினர். ஷிப்ட் முறையில் படகைச் செலுத்த வேண்டும்.  நான்கு மணி நேரத்துக்கு இருவர் படகுக்குப் பொறுப்பு. இரவு நேரத்தில் படகைச் செலுத்துவது சவால் நிறைந்தது. பாய்மரத்தைப் பராமரிப்பது, உணவுத் தயாரிப்பு, நேவிகேஷன் என்கிற தகவல் தொடர்புகொள்வது என ஒவ்வொரு பணியையும் கப்பல் கேப்டன் பிரித்தளிப்பார். தாரிணியில்  சிறிய கிச்சன் உள்ளது. சமையலுக்கு, பாயல் குப்தா பொறுப்பு. ஒவ்வோர் இலக்கை படகு எட்டும்போதும், `அல்வா' தயாரித்து தன் தோழிகளை சந்தோஷத்தில் ஆழ்த்திவிடுகிறார். உணவுக்கும் ரேஷன்தான். துறைமுகம் சென்றடைந்தால்தான் வயிறார சாப்பிட முடியும். 

ஃபாக்லாந்தில் கடல் ராணிகள்

இந்தப் பயணித்தின்போது, ஆபத்து நிறைந்த பசிபிக் கடலில் மட்டும் 41 நாள்கள் தாரிணி பயணித்தது. உலகிலேயே ஆபத்து நிறைந்த கடல் தென் அமெரிக்காவின் கேப்ஹார்ன் பகுதி. உலகின் மற்றொரு முடிவாக இது கருதப்படுகிறது. சுமார் 7 மீட்டர் உயரத்துக்கு இங்கு அலை எழும். ஜனவரி 18-ம் தேதி கேப்ஹார்ன் பகுதியை தாரிணி கடந்ததும், குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்திருந்தார் பிரதமர் மோடி. தற்போது ஃபாக்லாந்தில் உள்ள ஸ்டான்லி துறைமுகத்தில் தாரிணி ஓய்வெடுத்துவருகிறது. கூடவே கடற்படை வீராங்கனைகளும். அடுத்ததாக கேப்டவுன் வழியாக தாய்நாட்டை நோக்கிப் பயணிப்பார்கள். வரும் ஏப்ரல் மாதத்தில் தாரிணி கோவாவை வந்தடையும்.

 

பாய்மரப் படகைப் பொறுத்தவரை, கயிற்றையும் பாய்மரத்தையும் இணைத்துப்போடும் தவறான சிறிய முடிச்சு (knot)கூட படகைப் புரட்டிப்போட்டுவிடக்கூடும். கடலுக்குள் தவறு இழைத்தால் மன்னிப்பு இல்லை என்பதற்கு, டைட்டானிக் கப்பல் ஓர் உதாரணம். சவால்களை முறியடித்து, தாய்மண்ணுக்கு தாரிணி பத்திரமாகத் திரும்பட்டும்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மீண்டும் ஒருமுறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கனேடிய பிரதமர்: சுவாரஸ்ய சம்பவம்

 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ வித்தியாசமான சோக்ஸ் ஒன்றை அணிந்து அனைவரையும் மீண்டும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

டாவோஸ் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலகின் பெரும்பான்மையான வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அங்கு அமைதிக்கான நொபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாய் என்பவரை சந்தித்து உரையாடியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

அப்போது கனேடிய பிரதமர் அணிந்து வந்த சோக்ஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நீல வண்ணத்தில் மஞ்சள் வண்ண அன்னப்பறவையுடன் கூடியதாக அது அமைந்திருந்துள்ளது.

46 வயதாகும் கனேடிய பிரதமர் இதுபோன்று கண்ணைக்கவரும் சோக்ஸ் அணிந்து சர்வதேச தலைவர்களை சந்திப்பது இது முதன்முறை அல்ல. முன்னர் ஒருமுறை சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரை நியூயார்க் நகரில் சந்தித்த போது கனேடிய பிரதமர், அப்போது பிரபலமாக பேசப்பட்ட ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் கதை அம்சம் கொண்ட சோக்ஸ் ஒன்றை அணிந்திருந்தார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

மேலும் கடந்த ஆண்டு மே மாதம் இருவேறு சோக்ஸ் அணிந்து ஊடகங்களில் அதிகமாகவும் பேசப்பட்டார்.

மட்டுமின்றி, கனடாவில் உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் சிவப்பு வண்ணத்தில் வெள்ளை மேப்பில் இலைகளுடன் கூடிய சோக்ஸ் அணிந்து வந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

”எல்லாவற்றையும் மறந்துவிடு. எல்லோரையும் பார்த்து சிரி” - ஆன் ஃப்ரன்க் டைரி குறிப்புகள்! #InternationalHolocaustRemembranceDay #VikatanPhotoStory

 
 

உலக வரலாற்றில் மறக்கமுடியாதவற்றில் ஒன்று, யூத இனப்படுகொலை. இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படையால், 6 மில்லியன் யூதர்கள், 2 லட்சம் ரோமானிய இனக்குழு மக்கள், 2,50,000 மாற்றுத்திறனாளிகள், 9000 ஓரின ஈர்ப்பாளர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இன்றளவும் அந்த இனப்படுகொலையை எழுத்து, திரைப்படம், ஆவணப்படம் வழியே நினைவுகூர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த இனப்படுகொலையின் மிக முக்கியமான சாட்சி, ஆன் ஃப்ரன்க்  ( Anne Frank) எனப்படும் யூதச் சிறுமியும் அவர் குடும்பம் நாசிப் படைகளிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது எழுதிய டைரி குறிப்புகளும். இனப்படுகொலை நினைவு நாளான இன்று (27 ஜனவரி), அவரது டைரி குறிப்பிலிருந்து சில வரிகள்... 

anne_frank_k_18380.jpg
நமக்குள் எழும் கனவுகளும் நம்பிக்கைகளும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மையான உலகில் நசுக்கப்படுவது சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளக் கடினமானதாக இருக்கிறது. என்னுடைய எல்லா ஆசைகளையும் அவை நடைமுறைப்படுத்த வாய்ப்பேயில்லாத அபத்தமானவையாக இருந்தாலும் கைவிடவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவற்றைக் கைவிடாமல் வைத்திருப்பதற்கான காரணம், என்ன நடந்தாலும் மனிதர்கள் அவர்களுடைய மனதளவில் நல்லவர்கள் என்று நம்புகிறேன். 

 

anne_frank_6_18231.jpg
நான் பெரும்பாலானவர்கள்போல வீணாக வாழ விரும்பவில்லை. மற்ற மக்களுக்கு, இதுவரை சந்தித்திராத மனிதர்களுக்கும் ஏதேனும் வகையில் பயன்பட வேண்டும்; அவர்களிடத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். என் இறப்புக்குப் பிறகும் அப்படியே இருக்க விரும்புகிறேன். 

anne_frank_3_18244.jpgயூதர்களானாலும் சரி, யூதர்கள் அல்லாதவர்களானாலும் சரி… நான் மகிழ்வான வேடிக்கைகளை விரும்பும் ஒரு சிறிய பெண் என்பதைப் புரிந்துகொள்வார்களா?

anne_frank_1_18410.jpg
நாம் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்கிறோம். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வெவ்வேறானது. ஆனால், அவை (நோக்கம்) ஒரே மாதிரியானது. 

anne_frank_18499.jpg
ஒரு சிறிய மெழுகுவர்த்தி எப்படி இருளை நீக்கவும், காட்டவும் பயன்படுகிறது? 

anne_frank_8_18499.jpeg
நம்முடைய வளங்கள் எல்லாம் காணாமல்போகலாம். ஆனால், இன்பத்தை மட்டுமே இதயத்தில் மறைத்துவைக்க முடியும். அது நீங்கள் உயிர் வாழும் வரை உங்களுக்கு மீண்டும் மீண்டும் மகிழ்வைத் தரும். நீங்கள் களங்கமில்லாதவர் என்பதை அறிந்துவைத்திருக்கும் வரை, பயமில்லாமல் வானத்தை நோக்கும் வரை உங்களால் அந்த மகிழ்வைக் கண்டடைய முடியும். 

anne_frank_m_18338.png
மனிதரின் மேன்மை அதிகாரத்திலும் செல்வத்திலும் இல்லை. அது நற்பண்பிலும் குணத்திலும் இருக்கிறது. மனிதர்கள் மனிதர்கள்தான். எல்லோரிடமும் தவறுகளும் குறைபாடுகளும் இருக்கும். ஆனால், நாம் அனைவருமே அடிப்படை நற்பண்புடன் பிறந்தவர்களே. 

Anne_frank_l_18157.png
சிலர் உன்னுடைய வாயை மூடச் சொல்லலாம். ஆனால், அது உன்னுடைய சொந்தக் கருத்திலிருந்து உன்னைத் தடுக்காது. மிகவும் குறைந்த வயதுடையவர்களானாலும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்தினை சொல்வதிலிருந்து தடுக்கப்படக் கூடாது. 

anne_frank_1_18410.jpg
நீங்கள் நினைவில்வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான விதி இருக்கிறது. எல்லாவற்றையும் மறந்துவிடு. எல்லோரையும் பார்த்து சிரி. இது தற்பெருமையாகத் தோன்றலாம். ஆனால், சுய இரக்கத்தில் அவதியுறும் ஒருவருக்கு இது ஒன்றுதான் தீர்வு. 

anne_frank_3_18244.jpg
இந்த உலகை முன்னேற்ற யார் விரும்பினாலும், அவர் ஒரு நிமிடம்கூட தாமதிக்க தேவையில்லை என்பது எவ்வளவு அருமையான உண்மை.

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் எது?

 

  • தொடங்கியவர்

”4 மணிக்கு ஒலித்த வானொலி...பதப்படுத்தப்பட்ட லெனின் உடல்!”

 
 



லெனின்ரு மனிதனுக்கு உலகமே எழுந்து நின்று இறுதி மரியாதை செய்தது என்றால் அது புரட்சியாளன் லெனினுக்கு மட்டுமே. ஆம், ஜனவரி 27, 1924 அன்று  சோகம் நிறைந்த கண்களோடும், சிவப்பு கொடிகளை கையில் ஏந்தி தொழிலாளர்கள் ஊர்வலமாக செல்ல, சோவியத் ரசியாவின் மயான அமைதி உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அது இவ்வுலகில் புரட்சியாளன் லெனின் இறுதி நாள்.

கடும் குளிர் உடலை வாட்ட, லெனின் மரணம் மனதை வாட்ட சரியாக 4 மணியளவில் வானொலி அறிவிப்பாக ”எழுந்து நில்லுங்கள் தோழர்களே! லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்” என்று வர உலகமே எழுந்து நின்று 5 நிமிட மௌன அஞ்சலியை லெனினுக்கு செலுத்தியது. உலகத்தில் எந்த தலைவருக்கும் கிடைக்காத இந்த மரியாதை லெனினுக்கு கிடைக்க காரணம் அவரது விடுதலை புரட்சி தொடக்கம் மட்டுமே!

 

ஏழைகளின் உழைப்பை தன் இலாப சம்பாத்தியத்திற்கு பயன்படுத்திய முதலாளிகள் ஒரு புறம், வறுமையில் அவர்களை சித்திரவதை செய்த அரசு என்று ரசியாவில் துன்ப வாழ்க்கை வாழ்ந்த மக்களுக்கு விடியலாக கிடைத்தவர் லெனின்.

ரசியாவின் சிம்பெர்ஸ்க் என்ற நகரில் 1870, ஏப்ரல் 22அன்று இல்யா உல்யனவ், மரியா உல்யனவ் ஆகியோருக்கு விளாமிடிர் உல்யானவாக பிறந்தவர் தான் லெனின். கல்வி அதிகாரியின் மகன் என்பதால் அறிவுடையவராக திகழ்ந்தார். தந்தையிடம் நியாத்தையும், தாயிடம் நீதி கதைகளையும், அண்ணன் அலெக்சாண்டரிடம் அறிவியலையும் கற்றார்.

அறிவில் சிறந்து விளங்கிய லெனினுக்கு முதல் இழப்பு தந்தையின் மரணம். அதிலிருந்து மீளுவதற்குள் அரசை எதிர்த்ததாக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அண்ணனுக்கு மரண தண்டனை என அடுத்தடுத்த இழப்பு அவரை சோகத்தில் ஆழ்த்தினாலும், புரட்சிக்கு வித்தாக்கியது.

கொடுங்கோல் ஆட்சி செய்த ஜார் மன்னனை எதிர்க்க முடிவு செய்தார் லெனின். உயர் கல்வி மட்டும் போதாது, தொழிலாளார்களை காப்பாற்ற சட்டம் அவசியம் என சட்டக்கல்லூரியில் சேர முடிவு செய்த போது அவரை சேர்க்க மறுக்கப்படுகிறது. வீட்டில் இருந்தே சட்டம் பயின்று, முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார். பின், பெத்ரோகோட் என்ற நகரில் ஏழைத் தொழிலாளார்களுக்கு இலவசமாக வழக்கு நடத்தினார். தொழிலாளார்களை ஒன்று சேர்ப்பதின் மூலமே ஜார் மன்னனின் ஆட்சியை கவிழ்க்க முடிவும் என்றும் தீர்மானித்தார்.

காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோரின் நூல்களை படித்து உழைக்கும் மக்கள் எப்படிபட்ட புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கத்தையும், அரசையும் எதிர்க்க முடியும் என்று கற்றுக் கொண்டார். புரட்சியை தொடங்கி கம்யூனிஸவாதியானார் லெனின்.

இரவு நேரங்களில் தொழிலாளார்களின் இடங்களுக்கு சென்று அவர்கள் அந்நிலையில் இருக்க என்ன காரணம். அதை மாற்ற என்ன தீர்வு என்று புரட்சியை வித்திட்டார். இதனால் 1895ல் கைதும் செய்யப்பட்டு, காதலித்து திருமணம் செய்த கிர்ப்ஸ்காயாவுடன் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு புத்தகம் எழுதினார். புது கம்யூனிச கட்சியையும், பத்திரிக்கையையும் தொடங்க முடிவு எடுத்தார்.

Pogrzeb_Lenina1924_13205.jpg

1899ல் விடுதலை செய்யப்பட்டவுடன் ஜெர்மனிக்கு தப்பித்து சென்று அங்கு இஸ்காரா என்னும் முதல் கம்யூனிச பத்திரிக்கையை தொடங்கினார். அதன் மூலம் தொழிலாளர்களிடம் பேசினார். 1905ல் மன்னனின் ஒடுக்கு முறை அதிகமாக தொழிலாளார்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுட்டும் கொல்லப்பட்டனர். படுதோல்விகள், கம்யூனிச அழிப்பு என்று தொடர்ந்தது.

அரசுக்காக போரில பங்கு கொண்டு ஏழை நாடுகள் மீது போரிட்டு உயிர் நீத்தும் படை வீரர்களை ஆளும் அரசுக்கு எதிராக போரிட்டு உனக்கான உரிமையை பெறு என்ற வார்த்தை அடிபட்டு திருந்திய பின் அவர்களின் மண்டையில் ஏறியது. 1917, பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது.

மன்னரிடம் இருந்து முதலாளிகளின் கையில் ஏறிய அரசை நவம்பர் மாதம் 7ம் தேதி பெத்ரோகிராட்டில் ஆயுதங்களுடன் தொழிலாளர்கள் அணிவகுத்து அரசு அலுவலகங்களை கைப்பற்றினர். உலகின் முதல் தொழிலாளர்கள் ஆட்சி அமைந்து சோசலிச ரசியாவானது.

வாழும் பூமியிலேயே சொர்க்கத்தை நிலைநாட்டும் சோசலிசத்தை ரசியாவில் கொண்டு வந்த லெனின் உலக அரங்கில் அறியப்பட்டார். லெனின் பாதையே வெற்றி பாதை என பல்வேறு நாடுகள் பின்பற்ற அவர்களின் வெற்றியை காணும் முன் 1924ம் ஆண்டு ஜனவரி 21ல் மரணமடைந்தார் லெனின்.

உலத்தில் யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பாக லெனினுக்கு பல்வேறு நாடு எழுந்து நின்று விடை கொடுத்தது. அந்த விடை லெனினுக்கு மட்டுமே அன்றி புரட்சிக்கு இல்லை. விளாதிமிர் என்பதற்கு உலகை ஆள்பவர் என்று பொருள். அது போலவே இன்றும் மக்களின் மனதை ஆளுகிறார் லெனின்.

 

 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

'மாமியாருக்கு யோகா கற்றுக்கொடுத்தேன்' - யோகா நானம்மாள்

தனது திருமணத்தின் பின்னர் புகுந்த வீட்டினருக்கு எவ்வாறு யோகா கற்றுக்கொடுத்தேன் என்பதை நானம்மாள் பகிர்ந்துகொள்ளும் காணொளி.

தான் இளம் வயதிலேயே எவ்வாறு யோகா கற்றுக்கொண்டேன் என்றும் தனது திருமணத்தின் பின்னர் புகுந்த வீட்டினருக்கு எவ்வாறு யோகா கற்றுக்கொடுத்தேன் என்பதையும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நானம்மாள் பகிர்ந்துகொள்ளும் காணொளி.

  • தொடங்கியவர்

சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் (ஜன.28- 1882)

 
அ-அ+

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதேநாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1820 - பாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது. 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர். 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத்

 
 
 
 
சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் (ஜன.28- 1882)
 
சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதேநாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1820 - பாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது. 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர். 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர். 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர். 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73-வது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர். 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

கருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து (ஜன.28- 1935)

 
அ-அ+

கருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்து விடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு எனப்படும். ஏதேனும் ஒரு மருத்துவக் காரணம் கருதி உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும்

 
 
 
 
கருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து (ஜன.28- 1935)
 
கருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்து விடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு  அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு எனப்படும்.

ஏதேனும் ஒரு மருத்துவக் காரணம் கருதி உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக்கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றனவே பொதுவாக இவ்வகையான தூண்டப்படும் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

கருக்கலைப்பு என்பது நீண்ட வரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர். கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.

தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில், பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டே கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. ஆனாலும், உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர். உலக அளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 4.4 கோடி கருக்கலைப்புகளில், கிட்டத்தட்ட அரைவாசி பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருக்கின்றன.

மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக, அண்மைய ஆண்டுகளில் கருக்கலைப்பு நிகழ்வானது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அறியப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசியம் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலையை எண்ணி ஐஸ்லாந்து முதன்முதலாக கருக்கலைப்பை இதே நாளில் சட்டப்பூர்வமாக்கியது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அறையின் வடிவமைப்பு ரகசியங்கள்

 

 
shutterstock543421996

உங்கள் வீட்டு அறையை எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கலாம். அதற்கு எந்த விதிமுறையும் இல்லை. உங்கள் ரசனைதான் அறை அலங்காரத்துக்கான அளவுகோல். அந்த ரசனையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ரசனையைக் காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொள்ளலாம். ஆனால், உங்கள் அறையின் தோற்றத்தை முழுமைப்படுத்தும் சில வடிவமைப்பு அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சங்களில் கவனம் செலுத்தினால், அறையின் தோற்றத்தை முழுமையானதாக மாற்றிவிடலாம்.

 

கலை வடிவமைப்பு

   

கலை ரசனையை வெளிப்படுத்தும் பொருட்கள் இல்லாமல் உங்களால் ஓர் அறையை அழகாக்கிவிட முடியாது. உங்கள் அறையில் வெளிப்படும் கலைத் தன்மையில்தான் உங்களுடைய காட்சி அழகியல் வெளிப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த, உங்கள் ரசனைக்கு ஒத்துப்போகும் கலைப் பொருட்களை வைத்து அறையை அலங்கரியுங்கள். இந்தக் கலைப் பொருட்கள் உங்கள் அறைக்குத் தனித்தன்மையான அழகைக் கொடுக்கும்.

shutterstock549055441
 

 

வெளிச்சம்

ஒரு நல்ல அறைக்கும் சிறந்த அறைக்குமான வித்தியாசத்தை விதவிதமான விளக்குகளின் வெளிச்சம்தான் ஏற்படுத்துகிறது. ஒரு சின்ன அறைக்குக்கூட மூன்று விதமான விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்த அம்சத்தைப் பெரும்பாலும் நாம் மறந்துவிடுவோம். ஆனால், இந்த விளக்குகளின் வெளிச்சமும் அறை அலங்காரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கின்றன.

 

திரைச்சீலைகள்

திரைச்சீலைகளை வீட்டின் தனிமையை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது திரைச்சீலைகளும் அறையின் அழகைத் தீர்மானிக்கின்றன. உங்கள் அறையின் மற்ற அம்சங்களோடு ஒத்துப்போகுமாறு திரைச்சீலைகளை வாங்க வேண்டும். கோடைக்காலம், குளிர் காலம் என இரண்டுக்கும் ஏற்ற மாதிரி இப்போது தனித்தனியாகத் திரைச்சீலைகள் கிடைக்கின்றன. உங்கள் அறைக்கு மென்மையான தோற்றத்தை அளிக்கக்கூடிய வலிமை திரைச்சீலைகளுக்கு இருக்கின்றன. இப்போது சுருள், வளையங்கள் போன்ற பல வித்தியாசமான தையல் அமைப்பில் வரும் திரைச்சீலைகளை வாங்கலாம்.

shutterstock709983034
 

 

புதுமை

ஓர் அறையில் வெளிச்சம், மென்மை இருந்தால் மட்டும் போதாது. சில புதுமையான டெக்ஸ்ச்சர்களைத் தரும் குஷன்களும் தரைவிரிப்புகளும் சுவர் அலங்காரங்களும் செடிகளும் தேவை. அப்போதுதான் அந்த அறைக்கு அழகான தோற்றம் கிடைக்கிறது.

 

தனித்துவமான ரசனை

அறை வீட்டின் அங்கமாக இருக்கவேண்டுமானால், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் பொருட்கள் அங்கு நிச்சயமாக இருக்க வேண்டும். அது உங்களுடைய இனிமையான பயணத்தின் நினைவுகளை வெளிப்படுத்தும் பொருட்களாகவோ ஒளிப்படங்களாகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் அறையில் உங்களுடைய சுவடுகள் ஏதாவது ஒரு விதத்தில் இருக்க வேண்டியது அவசியம். இந்த ஐந்து அம்சங்களையும் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் அறையின் தோற்றம் முழுமை அடைந்துவிடும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பேசும் படம்:

 

 
28CHLRDAANCHALTHAKUjpg

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஆஞ்சல் தாகூர் சில நாட்களுக்கு முன் துருக்கியில் நடந்த பனிச்சறுக்குப் போட்டியில் வெண்கலப் பதகத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் 2022-ல் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதே அடுத்த இலக்கு என இவர் தெரிவித்திருக்கிறார்.

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

   

தொகுப்பு: அன்பு

28CHLRDAKKAIPADMASHALI

சமூகச் செயல்பாட்டாளரான திருநங்கை அகாய் பத்மஷாலியின் திருமணம் இந்தியாவில் நடைபெற்ற முதல் திருநங்கை பதிவுத் திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பெங்களூரு சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த திருமணத்தின்போது கணவர் வாசுதேவுடன் அகாய்.

28CHLRDCHILD

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்றுவரும் குழந்தைத் திருமணம், வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலிப் பேரணி நடத்தினர் . அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் நான்கு கோடி பேர் கலந்துகொண்டனர்.

 
28CHLRDTARINI

இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட பெண்கள் குழு ஐ.என்.எஸ். தாரணி என்னும் கப்பலில் உலகைச் சுற்றிப் பயணித்துவருகின்றனர். தற்போது தென் அமெரிக்காவில் உள்ள ஹார்ன் முனைப் பகுதியைக் கடந்து இந்தக் குழு பயணிக்கிறது.

28CHLRDWOMEN%20MARCH

அமெரிக்கா அதிபர் டிரம்பின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து சிகாகோ நகரில் இரண்டாவது ஆண்டாகப் பெண்கள் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பெண்ணுரிமை, சமூக நீதிக்கான முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: பஸ்ல போனா ட்ரீட் !

mem%201

அரசு பேருந்தில் பயணம் செய்யும் அளவு வசதியான பையன்தான் வேணும்னு பெண்வீட்டில இனி ஒரு கண்டிஷன் போடுவாங்களே, அத நினைச்சாதான் கவலையா இருக்கு

mem%2010
mem%2011
mem%2012
mem%207
mem%208
mem%209

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வளர்ப்புப் பூனையால் 10 கோடி ரூபா சம்பாதித்த பெண்

 

 

வளர்ப்புப் பூனையால் 10 கோடி ரூபா சம்பாதித்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் வளர்ப்புப் பூனையின் புகைப்படத்தைப் பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபா (£500,000) நட்ட ஈடு பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டபாத்தா பண்ட்சி என்ற பெண்ணின் வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை ஒரு நிறுவனம் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தியது. இந்த பூனை கடந்த 2012 ஆம் ஆண்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் மூலம் மிகவும் பிரபலமானது. கோபத்துடன் இருக்கும் பூனையின் முகத்தை அனைவரும் பார்த்து இரசித்தனர்.

இந்நிலையில், கிரனேட் பிவரேஜ் என்ற நிறுவனம் பூனையின் புகைப்படத்தை குளிர்பான விளம்பரத்திற்கு பயன்படுத்தப் போவதாக உரிமையாளர் பண்ட்சியிடம் அனுமதி கோரியது.

ஆனால், அனுமதி இல்லாமல் பல பொருட்களின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மீது மூன்று ஆண்டுகளுக்கு முன் காப்புரிமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பண்ட்சிக்கு 10 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தனது வளர்ப்புப் பூனையின் மூலம் டபாத்தா பண்ட்சி 10 கோடி ரூபா சம்பாதித்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

cb24c783038b30e8f3611b2203fb2c9d

http://newsfirst.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.