Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கடிகார வீடு

 

 

- ப்ரியா

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளது ராபர்ட் கென்னடியின் வீடு. வாசல் கதவைத் திறந்த அடுத்த நிமிடம் ஆச்சர்யத்தில் மெய்மறக்கிறோம். காரணம், சுவர் முழுக்க பொருத்தப்பட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிகாரங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தை காண்பிக்கின்றன; ஒவ்வொரு கண்டத்தின், நாட்டின் காலத்தை சுட்டிக் காட்டுகின்றன. இவை அனைத்தையும் தன் குழந்தை போல் பராமரிக்கிறார் ராபர்ட் கென்னடி. கம்ப்யூட்டர் சார்ந்த தொழிலைச் செய்து வரும் இவர், அடிப்படையில் பழமை விரும்பி; கடிகார சேகரிப்பாளர். இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா... என பல நாடுகளைச் சேர்ந்த பழங்கால கடிகாரங்களை தேடித் தேடி சேகரிக்கிறார்.
19.jpg
அனைத்தும் சாவி கொடுத்தால் மட்டுமே இயங்கக் கூடியவை. பேட்டரியால் இயங்கக் கூடிய எலக்ட்ரானிக் கடிகாரங்கள் ஒன்று கூட இல்லை. மட்டுமல்ல, ஒவ்வொரு கடிகாரமும் குறைந்தது 300 ஆண்டுகளுக்கு முந்தையவை! ‘‘எங்க வீட்ல பழங்கால பெண்டுல கடிகாரம் இருந்தது. அப்பா தினமும் அதை துடைச்சு சாவி கொடுப்பார். ஒவ்வொரு முறை சாவி கொடுக்கும்போதும், ‘இது தாத்தாவோடது’ என்பார். 1910ல மூணார் எஸ்டேட்டுல முதன்மை கிளர்க்கா தாத்தா இருந்தார். அவர் சேவையைப் பாராட்டி வெள்ளைக்காரர் ஒரு காரும், கடிகாரமும் பரிசா கொடுத்தார். அதனாலயே, ‘துரை கொடுத்தது’னு அப்பா அடிக்கடி சொல்வார்.
19a.jpg
அப்ப எனக்கு 8 வயசு  இருக்கும். துபாயிலிருந்து வந்த அப்பாவின் நண்பர் ஒரு பேட்டரி கடிகாரத்தை பரிசா கொடுத்தார். ‘சாவி போட வேண்டாம். பேட்டரில ஓடும்’னு சொன்னார். அப்பாக்கு ஒரே ஆச்சரியம். தாத்தா கடிகாரம் இருந்த இடத்துல புது கடிகாரம். ‘தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறணும்’னு அப்பா சொன்னார். தாத்தா கடிகாரத்தை தூக்கிப் போட மனசில்லாம அதை என் அறைல மாட்டினேன்...’’ என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, இப்போதும் அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.‘‘அதுதான் என் சேகரிப்புல முதல் கடிகாரம். ஒரு நாள் என் நண்பன் வீட்ல இருந்த இரண்டு கடிகாரங்களைத் தூக்கிப் போட்டாங்க. அதை நான் எடுத்து ரூ.10 செலவுல சரிபண்ணினேன்.
19b.jpg
‘எனக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கு’னு அப்பா சொன்னார். இதுக்கு அப்புறம்தான் கடிகாரங்களை சேகரிக்கணும்னு தோணிச்சு. காரணம், நண்பன் வீட்ல இருந்து கிடைச்ச கடிகாரங்களோட இயக்க அமைப்பு. வீட்ல வந்து அதைப் பிரிச்சுப் பார்த்தேன். இரண்டு கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டினாலும் மெக்கானிசம் வேற வேறயா இருந்தது. பார்க்கப் பார்க்க பிரமிப்பா இருந்தது. 1987ல பி.எஸ்சி பிசிக்ஸ் முடிச்சுட்டு முதுகலை படிப்புக்காக சென்னை வந்தேன். வீட்ல செலவுக்கு மாசம் ஆயிரம் ரூபா அனுப்புவாங்க. அதுல மிச்சம் பிடிச்சு கடிகாரங்கள் வாங்க ஆரம்பிச்சேன். அந்த வகைல, படிப்பு முடிச்சப்ப 14 கடிகாரங்கள் சேர்த்துட்டேன். வீட்ல ‘குப்பை சேர்க்கறேன்’னு திட்டினாங்க.
19c.jpg
இதுக்கு இடைல புதுச்சேரில வேலை கிடைச்சது. பொக்கிஷங்களைத் தூக்கிட்டு கிளம்பினேன். பாண்டிச்சேரி கடற்கரைச் சாலை ஓரங்கள்ல நிறைய உணவகங்கள் இருக்கும். பிரெஞ்சு காலனி என்பதால் பழங்காலக் கடிகாரங்கள் அங்க இருக்கும். அவங்ககிட்ட நட்பா பழகி அந்த கடிகாரங்களை வாங்கினேன். அடுத்து சென்னைக்கு மாற்றம். பொக்கிஷங்களைத் தூக்கிட்டு வந்து சேர்ந்தேன்...’’ என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, திருமணத்துக்குப் பின் கடிகாரங்களை வைப்பதற்காகவே தனி வீடு வாங்கியுள்ளார்! ‘‘1993ல கல்யாணமாச்சு. வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் செய்ய ஆரம்பிச்சேன். கல்யாணமானப்ப என் மனைவி சீர் கொண்டு வந்தாங்களோ இல்லையோ நான் கடிகாரங்களை என் சீரா கொண்டு வந்தேன்!வீட்டுப் பரண், கட்டிலுக்கு கீழனு அடுக்கி வைச்சேன்.

இதனாலயே என் மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்தது. ஒருமுறை பசங்களுக்கு ஃபீஸ் கட்ட வேண்டிய பணத்துல கடிகாரம் வாங்கிட்டேன். பெரிய பிரச்னையாகிடுச்சு. அப்பாதான் சமாதானம் செய்தார். கிட்டத்தட்ட என்னை பைத்தியக்காரன்னே வீட்ல முடிவு கட்டிட்டாங்க. ‘நேரத்தை வீணாக்கறேன்’னுதான் வீட்ல புலம்பிட்டிருந்தாங்க. எனக்குமே குற்ற உணர்வா இருந்தது. இணையம் பரவலான பிறகுதான் இதனோட மதிப்பே தெரிஞ்சுது. சர்வதேச அளவுல அருங்காட்சியகம் கூட இதுக்குனே இருக்கு. தினமும் குறைஞ்சது நான்கு மணி நேரங்களாவது கடிகாரங்களோட செலவிடறேன். சிலது திடீர்னு ஓடாது. அதை உடனுக்குடன் சரி செய்யணும்.

என் பிள்ளைகளால இதுக்குனு நேரத்தை ஒதுக்க முடியாது. அதனாலதான் இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தொடங்கணும்னு நினைக்கறேன். என்கிட்ட பொருள் இருக்கு. தேவை இடம். யாராவது கொடுக்க முன்வந்தா நல்லா இருக்கும்...’’ என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, தன்னிடமுள்ள பெரும்பாலான கடிகாரங்களை பழைய பேப்பர் / இரும்புக் கடைகளில்தான் வாங்கியுள்ளார். ‘‘ஆக்சுவலா ஒவ்வொண்ணும் பல லட்சங்கள் மதிப்புடையது. ஆனா, அவ்வளவு விலை கொடுத்து எல்லாம் எதையும் நான் வாங்கலை. நாடு நாடாகவும் அலையலை. என்கிட்ட இருக்கிற 2200 கடிகாரங்கள்ல பெரும்பாலானவை தமிழ்நாட்டு பழைய பேப்பர் கடைகள்ல வாங்கினதுதான்.
19d.jpg
உடைஞ்ச நிலைல இருக்கும். கண்டிப்பா யாரும் தொட்டுக் கூட பார்க்க மாட்டாங்க. சிலதுல மோட்டார் இருக்காது. இன்னும் சிலதுல கதவு இருக்காது. முட்கள் சுத்த சக்கரம் இருக்காது. இதையெல்லாம் வாங்கி சரி செய்வேன். கடிகார சக்கரத்துல இருக்கிற பற்களை டிரையல் அண்ட் எரர் முறைல கைகளாலதான் தயாரிப்போம். முதல்ல 82 கட் வர்றா மாதிரி சக்கரம் தயாரிப்போம். அது வேகமா ஓடும். குறைச்சா மெதுவா சுத்தும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியாக்குவோம். இந்த சக்கரங்களை சரிசெய்யவே 20 நாட்களுக்கு மேல ஆகும். எல்லா கடிகாரங்களும் குறைஞ்சது இருநூறு வருட பழமையானது. ஸோ, மெக்கானிசம் தெரியாது. நாமாதான் கத்துக்கணும். எல்லாமே கையால செய்யப்பட்டது.

அதனால உதிரிப் பாகங்களையும் கைலதான் செய்யணும். இதுக்குனே எனக்கு சிலர் இருக்காங்க. மோட்டார்ல ஆரம்பிச்சு நான் கேட்கறதை செய்து கொடுப்பாங்க. இதையெல்லாம் பாலீஷ் பண்ணி பளபளப்பாக்க விருப்பமில்ல. பழைய பொருட்கள், பழமை மாறாம இருக்கணும். அதுதான் அழகு...’’ என்றவர் தன் சேகரிப்புக்காக பல ஊர் பழைய பேப்பர் கடைகளில் பலநாட்கள் தவம் இருந்திருக்கிறார்.‘‘பொதுவா பழைய பேப்பர் கடை வியாபாரிங்க கொஞ்சம் கறாரா இருப்பாங்க. ஆரம்பத்துல கஷ்டப்பட்டேன். பேச மாட்டாங்க. பழக மாட்டாங்க. அவங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதும்தான் கடைக்குள்ளயே நம்மை அனுமதிப்பாங்க.

மாயவரத்துல ஒரு கடைல 20 கடிகாரங்கள் வரை இருக்கறதா கேள்விப்பட்டுப் போனேன். கடைக்காரர் நிறைய கேள்வி கேட்டார். ஆனா, கடைசி வரை காண்பிக்கவே இல்ல. தோல்வியோடு திரும்பினேன். 20 நாட்கள் கழிச்சு ஸ்வீட் பாக்கெட் வாங்கிட்டு திரும்பவும் போனேன். முதல்ல வாங்கலை. அப்புறம் என்ன நினைச்சாரோ... மனைவியை கூப்பிட்டு கடிகாரங்களை காட்டச் சொன்னார். எல்லாமே சூப்பர் பீசஸ்! அப்படியே அவர் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன்...’’ என்ற ராபர்ட் கென்னடி, ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது என்கிறார்.‘‘சில கடிகாரத்துல மூணு சாவி கொடுக்கும் துவாரம் இருக்கும். பொதுவா அரை மணி; ஒரு மணிக்கு ஒருமுறைதானே மணி அடிக்கும்?
19f.jpg
மூணு துவாரங்கள் இருக்கற கடிகாரங்கள் கால் மணிக்கு ஒருமுறை மணி அடிக்கும்! சிலதுல பெண்டுலம் சின்னதா இருக்கும். இன்னும் சிலதுல பெண்டுலம் வெளியவே தெரியாது. பெண்டுல கடிகாரங்கள் நிலையா ஓரிடத்துல இருந்தாதான் ஓடும். அமைப்பு கொஞ்சம் மாறினாலும் ஓடாது. இது யதார்த்தம். ஆனாலும் நீர்மூழ்கிக் கப்பல்ல கடிகாரம் இருந்திருக்கு! எப்படி இது சாத்தியம்? கப்பல் நிலையா இருக்காதே... அசைந்து கொண்டே இருக்குமே... இதை கணக்குல வைச்சுதான் நீர்மூழ்கிக் கப்பல் கடிகாரத்தை உருவாக்கினாங்க.

இந்த ஃபார்மட்லதான் இப்ப நாம பயன்படுத்தற எலக்ட்ரானிக்ஸ் கடிகாரங்கள் தயாரிக்கப்படுது. பிக் பென், ஸ்காட்லாந்துல உள்ள பிரபலமான கடிகார நிறுவனம். அலாரம், டவர் கடிகாரங்களுக்கு இவங்கதான் ஃபேமஸ். இவங்க தயாரிச்ச அனைத்து ரக அலார கடிகாரங்களும் என்கிட்ட இருக்கு. அதே மாதிரி அமெரிக்காவின் செத் தாமஸ் நிறுவனம். இவங்க பெண்டுலம் மற்றும் டவர் கடிகாரங்களுக்கு புகழ்பெற்றவங்க. இவங்க தயாரிப்பும் என்கிட்ட இருக்கு...’’ என்ற ராபர்ட் கென்னடி, லிம்கா மற்றும் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்திருக்கிறார்.    

 

http://www.kungumam.co.in/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

உலகின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சுவாரயஸ்மான தகவல்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/abuthahir707

இன்ஜினீயரிங் காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூக்கு கால் சென்டர் கம்பெனி வருகிறது. இதுதான் இன்ஜினீயரிங் காலேஜின் மகத்துவம்!

twitter.com/Kozhiyaar

இனிமே அலுவலக மீட்டிங்ல தூங்கினா மேனேஜர்கிட்ட “உங்கள தெய்வமா மதிக்கிறதால உங்க பேச்ச கடவுள் வாழ்த்தா நினைச்சு தியானம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்”ன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்!!

twitter.com/amuduarattai

தாய் வீட்டிற்கு “பெண்களின் புத்துணர்ச்சி முகாம்” என்று பெயர்.

p100a_1517391087.jpg

twitter.com/chithradevi_91

ஒரு கல்யாணத்தை நடத்திக்காட்டுவதை விடக் கஷ்டமானது கல்யாணப் பந்தியில் ஒரு குழந்தையை சாப்பிட வைத்துக் கூட்டி வருவது.. :)

twitter.com/BoopatyMurugesh

இந்தியாவோட ராணுவ பலத்த குடியரசு தினத்துக்கு பிரதமர்ட்ட  காட்றதோட சரி.
சாமானிய மீனவன் புயலில் செத்தாகூட அதெல்லாம் நம்ம கண்ல காட்ட மாட்டாங்க..

twitter.com/HAJAMYDEENNKS

பாஸ்வேர்டுகள் என்பவை பெரும்பாலும் `பாசம்’வேர்டுகளே...!

twitter.com/aysha_yusuff

முன்னாடிலாம் பஸ்’ல சொந்தக்காரங்கள பார்த்தா... நான் டிக்கெட் எடுக்குறேன் நீங்க சும்மா இருங்க, நான்தான் எடுப்பேனு அடம் பண்ணி எடுப்பேன்.  ஆனால் இப்ப பார்த்தா... தீவிரவாதிபோல இழுத்து முகத்தக் கட்டிட்டு, உட்கார வேண்டியதா இருக்கு.

twitter.com/amuduarattai

அலுவலகத்தை விட்டு எங்கு சென்றாலும், அலுவலக நினைவுகளைச் சுமந்தே திரிபவர்கள், அலுவலகத்தில் சரியாக வேலை செய்யாதவர்களாகவும் இருப்பார்கள்.

twitter.com/KeethaSj

முன்னெல்லாம் சுதந்திர நாள், குடியரசு தினம் வந்தா தீவிரவாதிங்க எங்கயனா குண்டு வைக்கப் போறாங்கன்னு ஜனங்க பயப்படுவாங்க.

இப்பெல்லாம் பிரதம மந்திரி என்ன குண்டு போடப்போறாரோன்னுதான் ஜனங்க பயப்படுது!

p100b_1517391106.jpg

twitter.com/sashi16481

மல்லிகைப்பூ கிலோ 6000 ரூபாய்.

இனி இந்த HDFC பேங்க்காரன் பூ வாங்க லோன் தரேன்னு போன் பண்ணுவானே அத நினைச்சாதான்...

twitter.com/Scientist_Mani

ஒரு பொண்ணு ஒரு பையனையே இரவு பகலா நினைச்சிட்டு இருந்தா, அவன் அவளுக்குக் காதலனாகத்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல.  அவகிட்ட கடன் வாங்குனவனாகவும் இருக்கலாம்.

twitter.com/HAJAMYDEENNKS

எல்லோரும் ஐபிஎல்லைப் பற்றிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க...இந்த நேரம் பார்த்து பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கலாம்..எடப்பாடி கத்துக்க இன்னும் நிறைய இருக்கு!

p100c_1517391120.jpg

twitter.com/manipmp

இணையத்தில் இருப்பவர்கள் விரல் வலிக்கப் பேசிக்கொள்கிறார்கள்.

twitter.com/Kozhiyaar

ஓலமிட்டுக் கதற வேண்டிய ஒரு சூழலை, ஒன்றுமே நடக்காதது போல் கடக்கப் பழக்கிவிடுகிறது நம் முதிர்ச்சி!

twitter.com/Aruns212

பழைய காதலியைப் பார்த்தால் ஏற்படும் ஃபீலிங்கைவிட, நமது பழைய போட்டோவைப் பார்க்கும்போது ஏற்படும் ஃபீலிங் கடுமையானது.

twitter.com/navi_n

பணப் பிரச்னையின் தனிச்சிறப்பு நமக்கிருக்கும் மற்ற பிரச்னைகளை மறக்கச் செய்துவிடுவது.

twitter.com/Kozhiyaar

ஒரு மசால் பூரி கேட்டதுக்கு சேட்டு வண்டில இருக்கிற எல்லாக் குப்பையையும் வாரி வழிச்சி போட்டுத் தர்றார்! நம்மோடது கல்லத் தின்னாலும் செமிக்குற உடம்புதான, அள்ளிப் போடுவோம்!

p100d_1517391134.jpg

twitter.com/amuduarattai

பால்காரரிடம் நாம் வாங்கும் பாலில், ஏதேனும் ஒரு மாடு குடிக்க வேண்டிய தண்ணீரும் கலந்திருக்கும்.

twitter.com/indupriya911

கள்ளம் கபடம் இல்லாமல் வளர்வது எளிதாக இருந்தது... வாழ்வதுதான் கடினமாக உள்ளது...

twitter.com/ShivaP_Offl

குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும் போது அலாரங்கள் தேவைப்படுவதில்லை..!

twitter.com/twittornewton

சிங் சென்னைக்கு. அஸ்வின் பஞ்சாபுக்கு. தேசிய ஒருமைப்பாடு!

twitter.com/kalasal

திங்கட்கிழமை காலைல தூங்கி எழுந்து செய்ய எந்த வேலையும் இல்லாம உட்கார்ந்திருக்கிற நிலைமை இருக்கே... ரெண்டாயிரம் தற்கொலைகளுக்குச் சமம்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und Text

 

பிரபல கொலம்பிய பொப் பாடகியும் நடிகையுமான ஷாகிராவின் பிறந்தநாள்.

Happy Birthday Shakira

Bild könnte enthalten: 1 Person, Bart und Text

கூர்ப்புக் கொள்கையின் தந்தை, பரிணாம வளர்ச்சி தத்துவங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர் சார்ல்ஸ் டார்வினின் பிறந்தநாள்.
Charles Darwin

Bild könnte enthalten: 1 Person, machen Sport, steht, Text und im Freien

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் உபுல் தரங்கவின் பிறந்தநாள்.

Happy Birthday Upul Tharanga

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

 
 

பாறை உச்சியில் உள்ள கோட்டைக்கு நடுவிலிருக்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய நீர்க்குளம் காற்றில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இவைத்தவிர, பாறை உச்சியில் அரண்மனை ஒன்று பிரமாண்டமாக அமைந்துள்ளது. அந்த அழகைக் காண ஆட்கள் இரும்பினால் செய்யப்பட்ட படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு இறங்க ஒரு நாளாகும். ஆம், அது 660 அடி உயரமுள்ள சிங்கப் பாறை. 

சிகிரியா சிங்கப் பாறை

 

பார்ப்பதற்குச் சிங்கம் படுத்திருப்பதைப் போன்ற அமைப்பில் இருக்கிறது இந்தப் பாறை. 600 அடி உயரத்துக்கு மேற்புறம் பாறைகளில் அமைந்துள்ள மரங்களும், குளங்களும் இன்றளவும் பசுமை மாறாமல் நிலைத்து நிற்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளிவரும் லாவாக்கள் காலப்போக்கில் உறைந்ததுதான் இந்தப் பாறை என்ற வரலாறும்  உண்டு.

இலங்கையிலுள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கிராமத்தில் இப்பாறை அமைந்துள்ளது. இலங்கையின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. இப்பாறைக்கோட்டை உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் 1982-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.  இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களைப் போலவே ஓவியம் இக்கோட்டையின் மீது அமைந்துள்ளது. இத்தனை காலமாக, மழை வெயில் என அனைத்தையும் கடந்து ஓவியங்கள் புதுமை மாறாமல் காட்சியளிப்பது, உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போது அங்கு வரும் பயணிகளால் ஓவியங்கள் சேதமடையத் துவங்கியுள்ளன. இதனைப் பாதுகாக்க அரசே இத்தாலியில் இருந்து ரசாயன திரவங்களை வாங்கி ஓவியங்களின் மீது பூசி இருக்கிறது. இக்கோட்டையை காசியப்பன் எனும் அரசன் கி.பி 477 முதல் கி.பி 495-ம் ஆண்டு வரையில் வடிவமைத்து ஆட்சி செய்து வந்தான் என வரலாறு சொல்கிறது. சிகிரியா கிராமமானது கொழும்பிலிருந்து 165 கிமீ தூரத்திலும், தம்புள்ளாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்ததுள்ளது. 

சிகிரியா கோட்டை

முழுவதும் பாறையாக இருந்தாலும் இதன் மேற்புறம் எப்போதும் பசுமையாகவே இருக்கிறது. இம்மலையைச் சுற்றி அடர்ந்த நீரூற்றுகளும், குளியல் குளங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன என்பது மற்றொரு சிறப்பு. காசியப்ப அரசன் தன் சகோதரனுக்குப் பயந்து பாதுகாப்பான இடமாக இக்கோட்டையைத் தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தபோது பாறை கரடு முரடான உச்சியைக் கொண்டு இருந்திருக்கிறது. அப்பாறையைச் சிங்கம் போன்ற தோற்றத்துக்கு மாற்றி பாறையிலும், பாறையைச் சுற்றிலும் பசுமையை ஏற்படுத்தினார். காசியப்பனுக்குப் பின்னர் இது புத்த துறவிகளின் தங்கும் இடமாக மாறியது. இப்பாறையின் உச்சியில் அரண்மனை, பயிற்சி எடுக்கும் பகுதி, விருந்தினர் தங்கும் இடங்கள், குளங்கள் எனப் பலவகை அமைப்புகள் பார்க்க பிரமாண்டமாக அமைந்துள்ளன. பழங்காலத்தில் மலையின் உச்சியை சமன்படுத்தி அமைத்த கோட்டைகளில் இது முக்கியமானது. சுமார் 1.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பாறையின் உச்சியில் உருவாக்கப்பட்ட குளம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும், 21 மீட்டர் அகலமும் கொண்டது. பாறையின் உச்சியில் மேற்புறம் 360 டிகிரி கோணத்தில் சுற்றிப் பார்க்கலாம். 

சிகிரியா கோட்டை

பாறையின் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்பகுதிக்குள் பார்வையாளர்கள் பாறைக்குள் நுழையுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதுவே பார்வையாளர்களுக்கு திகில் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர, மலையேறும் படிக்கட்டுகளும் பாறைகளில் ஒட்ட வைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நடந்து செல்லும்போது நிச்சயமாகப் பதற்றம் உருவாகும். பாறைமீது அமைக்கப்பட்டுள்ள படிகளை ஒட்டி இளைப்பாற, தியானம் செய்ய பாறையில் குகை வடிவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையிடச் செல்லும் பயணிகள் உடன் குடிநீரை எடுத்துச் செல்வது நல்லது. அங்கே கடைகள் ஏதும் இல்லை. சிங்கப் பாறையில் அப்போது ஏற்படுத்திய நீரூற்றுகள் இன்னும் நீரை ஊற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பாறையில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாவாசிகளுக்கு சிங்கப்பாறை சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். ஆம், சிகரியா பாறைக்குச் சென்று திரும்பும் அனைவரும் மனதில் உள்ள பாரம் குறைவதாகத்தான் சொல்கிறார்கள்.

 

சிகரியா பாறையை ஒட்டி பிதுரங்கல் குன்று ஒன்று உள்ளது. அங்கு யானையின் மீது அமர்ந்தவாறே தண்ணீருக்குள் சவாரி செய்யலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
ஆண்டவனுக்கு, மனிதன் எதைத்தான் வழங்குகின்றான்?
 

image_38ae4ea979.jpgஓசைகள் பலவிதம். இதில் இரசனைக்குரியது; இரசனைக்கு ஏற்றதல்ல எனப் பலவகையுண்டு. கடலில் இசைபாடும் பேரலைகள் நீரோடையின் சலசலப்பு ஓசை, வீச்சாடனான இடியோசை. 

ஆனால், இடியோசையும் மின்னலும் மனிதனைப் பயமுத்த அல்ல; பயன் அளிக்கவேயாகும். இதனாலன்றோ, மழை பூமியை முத்தமிட்டுச் செழிப்பூட்டுகின்றது. இவை இறைவன் தந்த இயற்கை ஓசைகள்.

ஆனால், இந்த மானுடர் கொடுக்கும் ஓசை எது? விமானக்குண்டு வீச்சின் ஓலக்குரல், துப்பாக்கிகளின் வேட்டுகள் இவை மனிதன் உலகுக்குக் கொடுக்கும் தண்டனை ஒலிகள். ஆண்டவன் எதைத் தருகின்றான்;  பிரதியுபகாரமாக மனிதன் எதைத்தான் வழங்குகின்றான்? 

  • தொடங்கியவர்

வெள்ளை ரோஜாவுக்குப் பின்னால் இருக்கும் கதை... 2018 கிராமி விருதுகள்! #MeToo

 
 
Chennai: 

உலகில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் கனவு விருதான 60-வது `கிராமி விருதுகள்' வழங்கும் விழா, சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்றது. சிறந்த பாடல், பாடகர்கள், இசைத் தொகுப்பு, பாடல் வரிகள், ஆல்பம் என இசை தொடர்பான அனைத்து துறைகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. வளர்ந்துவரும் இளம் பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் எனப் பன்முகங்களைக்கொண்டிருக்கும் `புரூனொ மார்ஸ் (Bruno Mars)', ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு, ஆறிலும் வெற்றிபெற்று இந்த விழாவின் நாயகனாகத் திகழ்ந்தார். இந்த விழாவின் மற்றுமொரு ஹைலைட், #MeToo, #TimesUp இயக்கங்களை ஆதரித்து, ஆண், பெண் என இசைக்கலைஞர்கள் பலர் `வெள்ளை ரோஜா'வை தங்கள் உடையோடு பொருத்திக்கொண்டதுதான்.

கிராமி விருதுகள்

 

சென்ற மாதம் நடந்த `கோல்டன் குளோப்' விருதுகள் விழாவில், உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கருநிற ஆடைகளை அணிந்து `மீ டூ', `டைம்ஸ் அப்' போன்ற பிரசாரங்களுக்கு ஆதரவளித்தனர். இதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களும் வெள்ளை ரோஜா ஏந்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர். அமைதி, நம்பிக்கை, அனுதாபம் முதலியவற்றின் சின்னமாக வெள்ளை ரோஜா கருதப்படுவதால், `Do It Yourself' என்ற அமைப்பு, மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலைப் பகிர்ந்து, கிராமி விருது விழாவன்று விழிப்புஉணர்வு ஏற்படுத்த முன்வந்தனர்.

வெள்ளை ரோஜா

இசை விருதுகளாச்சே, ஆடல் பாடல் என சுவாரஸ்யமான பல நிகழ்வுகளுக்கு இடையில் ஹிலாரி கிளின்டனின் என்ட்ரி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமி விருதைத் தொகுத்து வழங்கும் ஜேம்ஸ் கார்டனுடன் இணைந்து ஹிலாரி கிளின்டனின் முன்பதிவு செய்யப்பட்ட காணொலி அனைவரையும் கவர்ந்தது. இதில் ஹிலாரி, பிரபல எழுத்தாளர் மைக்கேல் வுல்ஃப் எழுதிய `Fire and Fury: Inside the Trump's White House' எனும் புத்தகத்தைப் படிப்பதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டன.

ஹிலாரி கிளின்டன்

சென்ற வருடத்தில் `ஷேப் ஆஃப் யூ' (Shape of You), `டெஸ்பாசிட்டோ' (Despacito), `24k மேஜிக்' உள்பட பல சர்வதேசப் பாடல்கள் இந்தியாவிலும் ஹிட்டடித்தன. அவை கிராமி விருதையும் தட்டிச் சென்றன. லேடி காகா, ரிஹானா, கென்ரிக், `டெஸ்பாசிட்டோ' Luis Fonsi, தி செயின்ஸ்மோக்கர்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டு, இந்த விழாவில் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.

Hit List

இந்த விழாவில் அதிக கவனம் ஈர்த்த சிலரின் ட்ரெண்டி ஆடையுடன் ரெட் கார்பெட் மொமன்ட் இங்கே...

பாடகி ஜாய் வில்லா, கைகளால் வரையப்பட்ட ஓவியம் பதித்த வெள்ளை நிற கவுன், கையில் `Choose Life' என்ற வாசகம்கொண்ட ஹாண்ட்பேக், கைக்கடிகாரம், கஃப், தலையில் கிரீடம் அணிந்து தேவதையைப்போல் காட்சியளித்தார்.

ஜாய் வில்லா


அனைவரின் ஃபேவரைட் லேடி காகா, நிலம் படரும் லேஸ் வேலைப்பாடுகளுடைய ட்ரெயின் கவுன், காதுகளில் டேங்க்லர் மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்தோடு மிளிர்ந்தார். கருநிற உடையில் வெள்ளை ரோஜாவைத் தோளில் ஏந்தி `MeToo' பிரசாரத்துக்கு தன் ஆதரவையும் பதித்தார்.

லேடி காகா

ராப்பர் (Rapper) கார்டி, வெள்ளை நிற bo-peep உடை அணிந்து, கைகளில் பிரேஸ்லெட், மோதிரம், கால்களில் வெள்ளை நிற ஹீல்ஸ், படிந்த சிகையலங்காரத்தோடு கைகளில் ஒரு வெள்ளை ராஜாவையும் ஏந்தி, கற்பனைக் கதைகளில் கண்ட தேவதைபோல் காட்சியளித்தார்.

கார்டி

நீல நிற சிகை, கைகளில் க்ளவுஸ், கருநிறக் கண்ணாடி, உடலை ஒட்டிய கருநிற பாடிகான் டிரஸ் என, கார்ட்டூன்களில் வரும் வில்லியைப்போல் தோற்றமளித்தார் மாடலும் நடிகையுமான ஜென்னி மேக்கார்த்தி.

ஜென்னி மேக்கார்த்தி

வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித், வண்ண வண்ண பேட்ச் (Patch) வேலைப்பாடுகள் நிறைந்த பேன்ட், டிசைனர் ஜாக்கெட், ஹேர் கலரிங் என அவருக்கே உரிய பாணியில் மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளித்தார்.

ஜேடன் ஸ்மித்

`MeToo' பிரசாரம், ஹிலாரியின் காணொலி, கலைஞர்களின் ஆடல்பாடல் எனக் கோலாகலமாக நிகழ்ந்தது, 2018-ம் ஆண்டின் கிராமி விருதுகள் வழங்கும் விழா.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

புளி விலை குறைவுக்குக் காரணம் சொன்ன அண்ணா! நினைவுதினச் சிறப்புப் பகிர்வு!

 
 

அண்ணா

Chennai: 

“சீமான்களில் சிலருக்குக்கூடச் சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது” என்றவர் பேரறிஞர் அண்ணா. ஆம், அவர் சொன்னது உண்மைதான். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் கிடையாது என்கிறார்கள் நம் ஊர் அரசியல்வாதிகள்.

 

எழுத்து, பேச்சு, நாடகம், சினிமா, அரசியல் எனப் பலவற்றிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் அண்ணா. அவருடைய நினைவு தினம் இன்று. அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காகவே காத்திருந்த மக்கள் கூட்டம் பல. அவருடைய கூட்டம் எந்த ஊரில் நடைபெற்றாலும் அந்த ஊர், அன்று திருவிழாக் கோலம் பூண்டுவிடும் அளவுக்கு அண்ணாவின் பேச்சு இருக்கும். இன்றும் நம் ஊர் ஆட்சியாளர்களில் சிலர் பேசுகிறார்கள், என்ன பேசுவதென்றே தெரியாமல். இதுநாள்வரை... ஜெயலலிதா, அவர்களை எல்லாம் பேசாமல் வைத்திருந்ததற்கு இப்போதுதான் காரணம் தெரிகிறது என்று நாள்தோறும் சமூக வலைதளங்கள் வறுத்தெடுக்கின்றன. 

பாட்டியிடம் பேச மறுப்பு:

குறுகிய நேரமே கிடைத்தாலும் அதை மக்கள் விரும்பும்படியாகப் பேசுவதில் வல்லவரான அண்ணா, ஒருசமயம் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, “மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது எமக்கிடுங்கள் முத்திரை” என ஒருசில மணித்துளிகள் மட்டுமே பேசி தன்னுடைய பேச்சாற்றல் மூலம் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்துநின்றார். அதேபோல் ஆங்கிலத்திலும் திறமையாகப் பேசக்கூடியவராக அண்ணா திகழ்ந்தார். 

ஆங்கிலத்தில் பேசுவதே மிகப்பெரிய கெளரவம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த அன்றைய காலத்தில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா, ஒரு விடுமுறையின்போது அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றாராம். அப்போது பேரனைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்த பாட்டி, “காலேஜ் படிப்பெல்லாம் படிக்கிறியே துரை.. பாட்டிக்கு கொஞ்சம் இங்கிலீஷ்லே பேசிக் காட்டேன்...” என்று பாசத்துடன் கேட்டாராம். பாட்டி எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்துவிட்டாராம் அண்ணா. அத்துடன், “ஆங்கிலத்தில் பேசினால் உனக்கென்ன புரியும்? தேவையில்லாமல் வேண்டாம்” என்று கூறி மறுத்துவிட்டாராம். 

அண்ணா

மாணவர்களுக்குப் பதில்:

பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தபோதிலும், போலித்தனமான கெளரவத்துக்காகத் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லையாம். அதே நேரத்தில், தன்னுடைய அறிவுக்குச் சோதனை வருகிறது எனும் பட்சத்தில் அதற்கு முடிவுகட்டாமல் விட மாட்டார் அண்ணா. ஒருமுறை அண்ணாவின் ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நினைத்த சில இங்கிலாந்து மாணவர்கள்,  “ ‘Because’ (ஏனெனில்) என்ற வார்த்தை தொடர்ந்து மூன்றுமுறை வருவது போன்றதொரு ஆங்கிலச் சொற்றொடரைக் கூற முடியுமா” என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அண்ணா, “No sentence can begin with because because, because is a conjunction” (எந்த வாக்கியமும் ஏனெனில் என்ற வார்த்தையைக் கொண்டு தொடங்காது. ஏனெனில், ‘ஏனெனில்’ என்பது ஓர் இணைப்புச்சொல்.) என்று மின்னல் வேகத்தில் பதிலளித்தாராம். 

அதேபோல், ஒருசமயம் அமெரிக்க நாட்டு மாணவர்களிடம் உரையாடியுள்ளார். அப்போது மாணவர்களில் ஒருவர் எழுந்து, “தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான, ‘A, B, C, D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா” என்று கேட்டாராம். அதற்கு அண்ணா, ஒன்றுமுதல் தொண்ணூற்று ஒன்பது (1 - 99)வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னாராம். நூற்றை (100) ஆங்கிலத்தில் சொன்னால், அதில் ‘D’ என்னும் எழுத்து வந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது, “STOP” என்று நூறு வார்த்தைகளையும் கூறி, அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம். தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் சுவாரஸ்யமாகவும், தொடர்ச்சியாகவும் பேசக்கூடிய ஆற்றல்பெற்றவரான அண்ணா, “பேசும் பொருள் பயன்படத்தக்கதாகவும் வீணான வம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக்கொள்வது நல்லது” என்று மேடைப்பேச்சுக்கு இலக்கணம் கொடுத்தார்.

எதிர்க்கட்சி என்றால் என்ன?

ஒருவருடைய பேச்சு என்பது மற்றவருக்கு மாற்றத்தையும் மகத்துவத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியானதாகத்தான் இருந்தது அண்ணாவின் பேச்சு. பேச்சில் நடைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் நகைச்சுவையாய்ப் பேசியவர் அண்ணா. அவர், முதல்வராக இருந்த சமயம் சட்டசபையில், “விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறினர். இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், “புளி விலை குறைந்துள்ளதே... அது யார் சாதனை” என்று கேலியாய்க் கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணா, “அது, புளியமரத்தின் சாதனை” என்று சொல்ல சபையே மகிழ்ச்சியில் திளைத்ததாம்.

எந்த மனிதருக்கும் எதிரி இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது. அதுபோன்றுதான் எந்தக் கட்சிக்கும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஓர் எதிர்க்கட்சி இருக்கும். நாட்டில் ஓர் எதிர்க்கட்சியின் மதிப்பு எப்படி என்பதை அண்ணா சொன்ன இந்த உவமை மூலம் அறியலாம். “சமையல் செய்யும்போது,குழம்பு கூட்டுவோர் தாய்மார்கள். அப்போது, உற்றுக் கவனியுங்கள். கூட்டினது சட்டிக் குழம்பு. அதற்கு ஒருபிடி உப்பு சேர்ப்பார்கள். ஏன் ஒருபிடி உப்பு..? சட்டிக் குழம்பு போதாதா என்றால், அந்தக் குழம்பு யாருக்கும் பயன்படாது; யாரும் அதனைச் சாப்பிடவும் மாட்டார்கள். அப்படி உப்பில்லாத குழம்பு சாப்பிடுபவர்கள் இருப்பார்களானால், அவர்கள் நாக்கு செத்துப்போனவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும். எப்படி ஒரு சட்டிக் குழம்புக்கு, ஒருபிடி உப்புத் தேவையோ, அப்படித்தான் ஓர் ஆட்சிக்கு ஓர் எதிர்க் கட்சியும் தேவை” என்று சரியான உவமை சொன்ன பேரறிஞர் அவர்.

அண்ணா

“ ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா?” 

ஒருவர், பிரபலமானவராக இருந்தாலே பிரச்னைதான். அப்படியே அவர் அமைதியாக இருந்தாலும், மற்றவர்கள் அவரை விடுவதில்லை. இது, இன்று நேற்றல்ல. காலந்தொட்டே வருகிறது. அண்ணாவின் வாழ்க்கையிலும் இதுபோன்று ஒருசம்பவம் அரங்கேறியிருக்கிறது. நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகக் கோவைக்குச் சென்றிருந்தார் அண்ணா. அப்போது கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர், கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கின்றனர். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தாராளமாய்ப் பதில்சொல்ல, இறுதியில், “கார்ல் மார்க்ஸ் எழுதிய, ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா” என்றார்களாம். அதற்கு அண்ணா, “நான் திருக்குறள் படித்திருக்கிறேன்” என்றாராம். “நாங்கள் கேட்டது ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா என்பதுதான்” என்று மறுபடியும் வினா தொடுத்திருத்திருக்கின்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். அதற்கு அண்ணா, “நான் திருக்குறளையே படித்து முடித்துவிட்டேன் என்கிறபோது, ‘கேப்பிட’லை  ஏன் தனியாகப் படிக்கவேண்டும்? ‘கேப்பிட’லில்  தொழில் துறைகளைப் பற்றியும், ஆலைகளைப் பற்றியும் இருக்கிறது. ஆனால், திருக்குறளில் நீங்கள் சொல்கிற தொழில் துறைகளும் ஆலைகளும் மட்டுமல்லாது, மனிதச் சமுதாயத்துக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறது”  என்றாராம். கேள்விக் கணைகள் தொடுத்தவர்கள் வாயடைத்துப் போனார்களாம்.

திரு.வி.க-வுக்குப் பதில்:

1936-ம் ஆண்டு, சென்னை நகரசபைத் தேர்தலுக்காகக் களமிறக்கப்பட்டார் அண்ணா. அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டார். அவரை ஆதரித்துப் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திரு.வி.க., “நந்தவனத்தில் நாயொன்று செத்துக் கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ... நந்தவனத்தை அழிப்பரோ... நாயையே அகற்றுவர். அதுபோலக் காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா அல்லது அதற்காகக் காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தைத் தூய்மைப்படுத்திக் காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும்” என்று பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். 

அதற்கு அண்ணா, அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறாகப் பதில் சொன்னாராம். “திரு.வி.க. பேசும்போது, ‘நந்தவனத்தில் நாய் செத்துக்கிடந்தால் நாயை அகற்றுவதா அல்லது நந்தவனத்தை அழிப்பதா' என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம்பெறவும் நலிவடைந்தோர் குணம்பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா... நாய் நுழைந்தால், பின் அது நந்தவனமாகுமா? நலிந்தவர்க்கும் நலம்பயக்க வேண்டிய நந்தவனம் நாயைச் சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால், நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாம். அதனை அழித்துப் புதிதாகத் தோற்றுவிப்பதுதானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும்” என்ற அண்ணா பதிலுரைத்தாராம். அதற்கு, மறுபதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ்காரர்கள் கலைந்துவிடுவார்களாம். 

அண்ணா

“ஆலயங்களில் விளக்கு எரியாது!” 

அதேநேரத்தில், தன்னை எதிர்த்து நின்ற தோழர் பாலசுப்பிரமணியத்தைப் பற்றி அண்ணா பேசும்போது, “என்னுடைய நண்பர் பாலசுப்பிரமணியம். அவர், ‘நெய்க்கு தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா' என்ற தத்துவத் துறையைப் பற்றிப் படித்தவர். நான், ‘நெய்யும் தொன்னையும் மக்களுக்குக் கிடைக்கச் செய்வது எப்படி' என்று ஆராயும் பொருளாதாரத் துறையைப் பற்றிப் படித்தவன். இருவரில் யார் உங்களுக்குப் பயன்படுவோம் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுப் பேசுவாராம்.
இதற்கெல்லாம் மறுத்துப் பதில் சொல்ல முடியாத காங்கிரஸ்காரர்கள், வேறுவகையில் திசையைத் திருப்புவார்களாம். அந்தச் சமயத்தில், கோயில்களுக்கும் மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. இதை வைத்து காங்கிரஸ்காரர்கள், “அண்ணாதுரைக்கு ஓட்டுப்போட்டால், ஆலயங்களில் விளக்கு எரியாது” என்று துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து அண்ணாவுக்கு எதிராக வெளியிட்டனர்.

ஆனால், இவை எவற்றுக்கும் பயப்படாத அண்ணா, “இந்த நகரத்தில் உள்ள சேரிகள் எல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்தச் சேரிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கிற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளில் மக்கள் இருட்டிலே வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்க்காலி கடித்தாலும் அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்குப்போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப்போட்டால் ஆண்டவன் முகம் கறுக்குமேயொழிய, ஒளி பெறாது” என்று உண்மையை உரைத்தார். ஆனால், மக்கள் விழிப்படையவில்லை என்பதை அன்றைய தேர்தல் காட்டியது. ஆம், அண்ணா அதில் தோல்வியுற்றார். அதேபோல், இன்றும் மக்கள் தாம் செய்த தவற்றை எண்ணி வருந்திக்கொண்டிருக்கின்றனர். 

தோல்விக்குப் பதில்:

தேர்தலில் தோல்வியுற்ற அண்ணாவிடம் அவரது நண்பர்கள், “தேர்தலில் தோற்றும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறீர்களே” என்று வினவினராம். அதற்கு அண்ணா, “தேர்தலில் போட்டியிடுவதும் பிரசாரம் செய்வதும் நமது உரிமை; ‘மக்களை அணுகி, எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பதுகூட நமது உரிமைதான். ஆனால், ‘ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை' என்று கேட்கக்கூடிய உரிமை நமக்கேது? வெற்றியோ... தோல்வியோ... நம் கையில் இல்லை; மக்கள் கையில்தான் இருக்கிறது என்கிறபோது அதைக் கண்டு நாம் ஏன் வருத்தப்படவேண்டும்; துயரம்கொள்ள வேண்டும்” என்றாராம்.

இப்படியெல்லாம் தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் பாடுபட்ட அண்ணாவை, “இன்னும், இரண்டு ஆண்டுகள் அவர் இருந்திருந்தால், உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார்” என்று புகழ்ந்திருந்தார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். அதனால்தானோ, என்னவோ, காலன் அவரைக் கடத்திச் சென்றுவிட்டான்.
 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பல்லாயிரம் மைல் பறந்து கோடியக்கரை வரும் பறவைகள்

ஆர்ட்டிக் பகுதியிலிருந்து உள்ளான், ஐரோப்பாவிலிருந்து கடல் ஆலாக்கள் & கடல் காகம், ஈரானிலிருந்து பூனாரை உள்ளிட்ட பறவைகள் பல்லாயிரம் மைல்கள் பறந்து கோடியக்கரை சரணாலயம் வந்துள்ளன.

  • தொடங்கியவர்

முயல் தீவு... பாம்புத் தீவு... முதலைத் தீவு... விலங்குகள் ராஜ்ஜியமான சில தீவுகள்!

 
 

உலகில் உள்ள பல தீவுகளில் மனிதர்கள் அதிகம் வாழ்வதுபோல சில தீவுகளில் விலங்குகளின் எண்ணிக்கையும் அபரிமிதமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட அந்தத் தீவை அவை ஆக்கிரமித்திருக்கின்றன என்றே சொல்லலாம். அவ்வாறு விலங்குகள் அதிகமாக வாழும் ஆச்சர்யமான தீவுகளில் சிலவற்றைக் காணலாம். 

கொமோடோ தீவு:

 

இந்தோனேசியாவில் 350 கி.மீ பரப்பளவு கொண்ட தீவுதான் கொமோடோ தீவு. இத்தீவில் உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகன் என்ற ராட்சத உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த டிராகன் விலங்குகள் கொமோடோ தீவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்த டிராகனுக்கு கொமோடோ டிராகன் எனப் பெயரிடப்பட்டது. சமீபகாலமாக கொமோடோ தீவிற்கு அருகிலுள்ள ரின்கா தீவிலும் இந்த உயிரினம் அதிகமான எண்ணிக்கையில் வளர ஆரம்பித்துள்ளன. இந்த உயிரினங்கள் 10 அடி நீளம் வரை வளரக்கூடியது. சிறுவர்களை அதிவேகமாக வேட்டையாடி உண்ணும் திறன் படைத்தது. அதனால் இந்த இரு தீவுகளிலும் மக்கள் வசிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டனர். 

கொமோடோ விலங்கு தீவு

Photo - allindonesiatourism

பாம்புத் தீவு! 

இவ்வுலகில் மனிதர்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமான பகுதிகள் சில இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது பாம்புத் தீவு. இத்தீவு பிரேசிலில் உள்ள அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தத் தீவில் கொடிய விஷம் கொண்ட அதிகமான பாம்புகள் காணப்படுகின்றன. இத்தீவில் பாம்புகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இத்தீவில் நீங்கள் கால்வைக்கும் ஒவ்வொரு மூன்று அடிக்கு ஒரு பாம்பு ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும். இதனால்தான் இத்தீவிற்குள் முற்றிலுமாக மனிதர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஸ்னேக் தீவு - விலங்குகள்

ஓக்குநோஷிமா தீவு!

ஜப்பானில் உள்ள ஓக்குநோஷிமா தீவிற்கு 'ரேபிட் தீவு' என்று பெயர். இதற்குக் காரணம் இந்தத் தீவில் வாழும் எண்ணிலடங்கா முயல்கள்தாம். இப்பகுதியில் இவ்வளவு முயல்கள் இருப்பதற்குப் பின்னால் நீண்ட காரணமும் இருக்கிறது. இத்தீவில் உள்ள ஆயுதங்கள் செய்யும் ரசாயன ஆலை ஒன்று வெடித்தது. இந்த விபத்தினால் வெளியேறிய நச்சு வாயுக்களால் இத்தீவு முழுமையாகக் கைவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஆய்வுக்கூடத்தில் இருந்த முயல்கள் சில இத்தீவிற்குள் தப்பிச் சென்றுள்ளன. பின்னர் பல வருடங்கள் கழித்து கதிர்வீச்சு குறைந்த பின்னர் ஆய்வாளர்கள் மீண்டும் அத்தீவிற்குச் சென்றனர். அங்கே முயல்கள் லட்சக்கணக்கில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அந்த முயல்கள் அனைத்துமே மனிதர்களுடன் அதிகமாக நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் ஆராய்ச்சியாளர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்போது இந்தத் தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தர ஆரம்பித்துள்ளனர். 

ரேபிட் விலங்குகள் தீவு

Photo - vancouversun.com

சீல் தீவு! 

தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில்  ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறு தீவுதான் சீல் தீவு. இந்தத் தீவில் பல ஆண்டுகளாக 64 ஆயிரத்திற்கு மேற்பட்ட பழுப்பு நிற சீல் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. மேலும், இந்த சீல்களை சுறாக்கள் விரும்பி உண்பதால் இத்தீவைச் சுற்றிலும் சுறாக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றன. இதுதவிர, சிறு சிறு திமிங்கலங்களும் உணவுக்காக அடிக்கடி இத்தீவின் பக்கம் வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் வேறு சில கடல் வாழ் உயிரினங்களும் இத்தீவிற்குச் செல்வதில்லை. 

சீல் தீவு

Photo - Noelnadesan's Blog

ராம்ரீ தீவு! 

இந்தியப் பெருங்கடலில் பர்மாவையொட்டிய மிகப்பெரிய தீவு, ராம்ரீ. சுமார் 1,350 சதுர கிலோ மீட்டர் பரப்பரளவு கொண்டது. இந்தத் தீவின் ஒரு பகுதியில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இத்தீவின் மேற்குப் பகுதி முழுவதும் ராட்சத உப்புநீர் முதலைகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. 1945-ம் ஆண்டு கடற்படை வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 1000 ஜப்பானியர்கள் இத்தீவிற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இறுதியில் வெறும் 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். மீதம் இருக்கும் 980 பேரும் முதலைகளின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். உலகில் மற்ற எந்த விலங்குகளாலும் இவ்வளவு வீரர்கள் ஒரே நேரத்தில் உயிர் இழந்ததில்லை.

முதலை தீவு

 

இதுபோல சிவப்பு நண்டுகள், கடல் குதிரைகள் என வகைவகையான உயிரினங்கள் ஒவ்வொரு தீவிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

“இதுதான் என் வாழ்வின் ஆகச்சிறந்த மகிழ்வான நாள்!” என்றார் அன்னை தெரசா #OnThisDay

 

“இதுதான் என் வாழ்வின் ஆகச்சிறந்த மகிழ்வான நாள்” - அந்த நிகழ்வுக்குப் பிறகு இப்படித்தான் தன் உணர்வை வெளிப்படுத்தினார் அன்னை தெரசா. 

சரியாக 32 வருடங்களுக்கு முன்பு இன்றுதான் அந்த நிகழ்வு நடந்தேறியது. 1986-ம் ஆண்டு, பத்து நாள் பயணமாக போப் ஜான் பால் II இந்தியா வந்திருந்தார். அந்தப் பயணத்தின்போது, அன்னை தெரசா நடத்திக்கொண்டிருந்த 'நிர்மல் ஹ்ருதய்' (தூய இதயங்களுக்கான இல்லம்) என்கிற ஆசிரமத்துக்குச் சென்ற நாள் பிப்ரவரி 3.

 

அன்னை தெரசா

இறப்பின் விளிம்பில் இருந்தவர்களுக்காக அன்னை தெரசா நடத்திவந்த ஆசிரமம், நிர்மல் ஹ்ருதய். காளி கோயிலின் ஒரு பகுதியில் அமைந்திருந்தது. கல்கத்தாவின் தனித்துவமான வழிபாடு, காளி. போப் வந்தபோது கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்குக் கூட்டம் சூழ்ந்தது. கூடியவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது. 

“நகரத்தில் போப்பின் வருகை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்கத்தா மக்களின் இதயத்தையும் மனதையும் போப் கைப்பற்றிவிட்டார். தும் தும்மிலிருந்து நிர்மல் ஹ்ருதய் செல்லும் வழியில் 10 கிலோமீட்டருக்கு அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக நிறைந்திருந்தனர். 'கல்கத்தாவில் இவ்வளவு கத்தோலிக்க கிறித்தவர்களா?' என்று போப் வியந்தார். 'இல்லை. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் உங்களது ஆசீர்வாதத்தைப் பெற வந்திருக்கிறார்கள்’ எனச் சொன்னேன்'' - அந்த நிகழ்வு குறித்து தெரசாவின் நெருங்கிய நண்பர் பிஷப் ஹென்றி டிசோசா இப்படிச் சொல்கிறார். 

அன்னை தெரசா - போப் ஜான் பால்அன்னை தெரசா பாதுகாத்த எண்ணற்றோர் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்தானே? தெரசாவே பல நாள்கள் மதநம்பிக்கைகளிலிருந்து விலகித்தான் இருந்தார். ஒரு கட்டத்தில் இறைவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். 

போப்பும் தெரசாவும் பலமுறை சந்தித்துள்ளனர். அவர் போப் ஆவதற்கு முன்பே, தொண்டு நிறுவனங்கள் சார்ந்த கருத்தரங்கங்களில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதைப்பற்றி போப் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த நினைவலைகள் போப்புக்கு வந்திருக்கலாம். நிர்மல் ஹ்ருதயை அடைந்ததும், அவரை வரவேற்றார் அன்னை தெரசா. போப்பின் கையில் முத்தம் பதித்து, தன் மகிழ்வை வெளிப்படுத்தினார். போப் பதிலுக்கு தெரசாவின் தலையில் முத்தம் கொடுத்தார். போப் தலையில் முத்தம் பதிப்பது என்பது சாதாரணமான நிகழ்வல்ல. ஆனால், அன்னை தெரசாவை போப் எப்போதும் நெற்றியில் முத்தம் பதித்தே வரவேற்பார்.

ஆசிரமத்தின் உள்ளே சாவின் விளிம்பில் 120 பேர் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அந்த ஆசிரமத்தைப் பார்வையிட்டார் போப். அங்கிருந்த நோயாளிகளை அன்னை காட்ட, போப் ஆசி வழங்கினார். அவர்களின் நிலையைக் கண்டு ஆடிப்போனார். ஆசிரமத்தில் மட்டுமன்றி, இந்தியாவில் கண்ட ஏழ்மைக் காட்சிகள் அவரை உலுக்கின. ஆசிரமத்தில் இருந்த ஒவ்வொருவரையும் தழுவி, “விரைவில் உங்களைச் சந்திக்க இருக்கும் இவர்களை ஆசீர்வதியுங்கள்” என்று இறைவனிடம் வேண்டினார்.

“உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் நான் முழுமையாகப் பதிலளிக்க முடியாது. எல்லா வலியையும் நான் அகற்ற முடியாது. ஆனால், இதை நான் உறுதியாக நம்புகிறேன். நித்திய அன்பினால் கடவுள் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவருடைய பார்வைக்கு அருமையானவர்” என்பதை மட்டுமே அவரால் சொல்லமுடிந்தது.

அன்னை தெரசாவும் போப் ஆண்டவரும் 

இந்த நிழ்வுக்குப் பிறகு வெளியே பேசிய போப், ”நிர்மல் ஹ்ருதய் நம்பிக்கையின் இடம். தைரியம் மற்றும் நம்பிக்கையினால் கட்டப்பட்ட கட்டடம். அன்பினால் நிறைந்த கட்டடம்” என்றார். 

”இது என் வாழ்வின் ஆகச்சிறந்த தருணம். அவருடைய தொடுதல், ஏசுவின் தொடுதல்” என்றார் அன்னை தெரசா

 

நிர்மல் ஹ்ருதயைப் பார்வையிட்ட போப்புக்கு அன்னை தெரசாவின் மீது, மரியாதை பல மடங்கு அதிகரித்தது. இவர்கள் இருவருக்குமான பரஸ்பர அன்பும் நட்பும் பேசப் பேச சிலிர்ப்பூட்டுவது..

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: மாத்தூர் தொட்டிப் பாலம்

 

 
31CHSUJMATHUR

KANYAKUMARI : 15/01/2010 : A view of Kanyakumari. Photo : Heena Lohia

வறட்சியிலிருந்து தப்பிக்கவும் விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் கட்டப்பட்டது மாத்தூர் தொட்டிப் பாலம். இதைத் தொங்கும் கால்வாய் என்றும் தொட்டில் பாலம் என்றும் கூட அழைக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்தத் தொட்டிப் பாலம், தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகிறது.

thottipalam

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மகேந்திரகிரி மலையில் உற்பத்தியாகிறது பறளியாறு. அருகில் இருந்த மலைகளால் இந்த ஆறு மாத்தூர் பகுதில் பாய முடியாமல் போனது. இதனால் வறட்சி ஏற்பட்டது. கணியான் மலையையும் கூட்டு வாயுப்பாறை மலையையும் ஒரு கால்வாய் மூலம் இணைத்தால், நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு வளம் பெறும் என்ற எண்ணத்தில் இந்தத் தொட்டிப் பாலம் கட்டப்பட்டது.

1962-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த காமராஜரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், 1969-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் நீளம் 1204 அடிகள். உயரம் 104 அடிகள். 28 தூண்கள் இந்தத் தொட்டிப் பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 32 அடி சுற்றளவு கொண்டது. இந்தப் பாலம் வழியாகத் தண்ணீர், ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

கால்வாய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கால்வாய் மேல் கான்கிரீட் பலகைகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் அந்தக் கால்வாய் மீது நடந்து செல்கிறார்கள்.

31CHSUJMATHUR1

தண்ணீர் செல்லும் பகுதியில் பெரிய பெரிய தொட்டிகளாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொட்டியும் ஏழு அடி அகலமும் ஏழு அடி உயரமும் உள்ளது. இரு மலைகளுக்கு இடையே தொட்டில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருப்பதால், இது தொட்டில் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வழியாக வரும் நீர் கல்குளம், விலவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் நீர்பாசனத்துக்குப் பயன்படுகிறது.

மாத்தூர் தொட்டிப் பாலத்தால் பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றியப் பெருமை மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு உண்டு.

பாலத்தின் மேல் நின்று எங்கு நோக்கினாலும் பசுமையாகவே காணப்படுகிறது. தென்னை, ரப்பர், வாழை மரங்களும், நெல் வயல்களும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன. பாலத்திலிருந்து இறங்க படிகள் உள்ளன. குழந்தைகள் விளையாட ஒரு சிறிய பூங்காவும் குளியலறைகளும் இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தை அவசியம் ஒருமுறை காண வேண்டும்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
பத்மாவத் படத்தில் வரும் கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் வீடியோ

பத்மாவத் படத்தில் வரும் கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் வீடியோ
 
 
அமெரிக்காவின் பனிசறுக்கு வீராங்கனை பனித்தரையில், பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் போல நடனமாடினார். இந்த கூமர் நடனம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற பனிசறுக்கு  வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
 
பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் சிறந்தவரான  அவருக்கு  பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் மிகவும் பிடித்து விட்டது
 
இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த நடனக்காட்சியும் இணையதளங்களில் பரவி லட்சக்கணக்கானோர் கண்டு  வருகின்றனர். 
 
 
 
 

http://www.dailythanthi.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: அஸ்வின் பாலசிங்கம்

 
 
mem%209
mem%201

ஐபிஎல் ஏலம்: இந்த வீரரின் அடிப்படை விலை 9000 கோடி.

mem%2010
mem%2011
mem%206
mem%207
mem%208

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்
‘மகிழ்ச்சி, தானாகவே நெஞ்சத்தில் பிரவாகிப்பதாகும்’
 

image_7d66ea488b.jpgமகிழ்ச்சியில் ஒருவகை, தானாகவே நெஞ்சத்தில் பிரவாகிப்பதாகும்.  மற்றையது, நாமாகவே அதை உருவாக்குவதாகும்.

சதா கவலையை வரவழைத்து, மனம் குமைவதைவிட, நாமே எம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைக்க, நல்ல வழியில் சென்று அதைச் சுவீகரிப்பதுமாகும். பிறரைச் சந்தோசப்படுத்துவதால் உருவாகும் மகிழ்ச்சி உயர் நிலையானது. நமது சந்தோசத்துக்காக இன்னொருவரை வருத்துவது மகாபாவச் செயலாகும்.

அறிவு ஞானத்தில் மேலோங்கி இருப்பவர்கள் சதா இனிய சிந்தனையுடன் புனிதமான நிலையில் களிப்பெய்திய வண்ணம் இருப்பார்கள். படிப்படியாக நாமே பக்குவப்படுத்தினால் உங்களை அறியாமலே, சந்தோச சாகரத்தில் மிதந்துநிற்பீர்கள்.

  • தொடங்கியவர்

இலங்கை விடுதலை அடைந்த நாள் (பிப்.4, 1948)

 

இலங்கை விடுதலை அடைந்த நாள் (பிப்.4, 1948)
 
இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் வரலாறு கி.மு. 6-ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் 700 பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். கி.மு. 3-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் முதன்முதலாக வர்த்தகத் தளத்தை அமைத்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்தான். அரசியல் உட்பூசல்களை பயன்படுத்தி இலங்கையில் தனது பலத்தை அவர்கள் விஸ்தரித்துக் கொண்டனர்.

ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் இலங்கை விடுதலை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமூக நிலையில் இருந்துவந்த தமிழ், சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள் சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. 1958-ல் ஆரம்பித்து இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் ஆயுதேமந்திய உள்நாட்டு போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
 
 
 

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் (பிப்.4, 1969)

 
அ+

பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார்.

 
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் (பிப்.4, 1969)
 
பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். சிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர் 1948-ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபு படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டார்.

1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-களில் லிபியா-ஈராக்-சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்று, அதைக்கொண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.

1990-ல் யாசர் அரபாத் தனது 61-வது வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலாஸ்தீன கிறிஸ்தவ பெண்ணை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வயதில் இறந்துவிட்டார். இவருடைய சாவில் ஏகப்பட்ட மர்மங்கள் நிறைந்திருந்தது.


மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

• 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டார்.
• 1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
• 1834 - இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
• 1899 - பிலிப்பைன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
• 1936 - முதற்தடவையாக ரேடியம் இ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
• 1966 - ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
• 1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
• 1997 - இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
• 1998 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
• 2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

https://www.maalaimalar.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண்

04CHLRDAMENDA%202

அமெரிக்க அமெண்டாவைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்தது இசையின் மீதான ஈர்ப்பு. கர்னாடக சங்கீதம், சினிமா இசை ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்து, அதைப் புத்தகமாகக் கொண்டுவருகிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமெண்டா வைண்ட்மென். தெள்ளுத் தமிழில் தங்கு தடையின்றிப் பேசுபவரைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் அதிகம்.

‘‘இசையின் வரலாறு, அதன் கலாச்சாரம் குறித்துப் பாடம் நடத்திட்டிருக்கேன். சின்ன வயசுலயே வெஸ்டர்ன் வயலின் வாசிப்பேன். அப்படிக் கத்துக்கிட்டதால இந்தியன் மியூஸிக் மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுச்சு. குறிப்பா, கர்னாடக சங்கீதத்தின் மேல. அதைக் கேட்கக் கேட்க என்னவோ பண்ணுச்சு. 93-ல் காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப சென்னைக்கு வந்தேன். இங்கே வயலின் கத்துக்கிட்டேன். என்னோட குரு, துவாரம் மங்கைத்தாயார். துவாரம் வெங்கட்சாமி நாயுடுவோட மகள்’’ எந்த யோசனையும் செய்யாமல் மளமளவெனப் பேசுகிறார்.

“சென்னைக்கு வந்தப்ப தமிழ் சினிமா பார்த்தேன். அப்ப வந்த பல படங்களோடு பழைய படங்களையும் பார்த்தேன். அப்படித்தான் தமிழ் சினிமாப் பாடல்கள் எனக்கு அறிமுகமாச்சு. குறிப்பா, பழைய பாடல்களும் அந்த மெட்டுகளும் குரல்களும் இத்தனை வருஷமா கேட்காம விட்டுட்டோமேனு ஏங்க வச்சுச்சு. அப்படிக் கேட்கும்போது டிஎம்எஸ்-ன் குரல் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. அமெரிக்காவுக்கு வந்திருந்தப்ப அவரை நான் பாத்தேன். அப்ப அவர் யாருன்னே தெரியாது எனக்கு. சென்னைல அவரைச் சந்திச்சப்பதான் இதை உணர்ந்தேன்’’ என்று சொல்கிறார்.

04CHLRDAMENDA%201
 

டிஎம்எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி காலத்துக்கும் முன்னதாகத் தொடங்கி, எஸ்.பி.பி., ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோருடன் தற்போதைய பாடகர், பாடகிகள் இசையமைப்பாளர்கள்வரை பலரைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து, அதைப் புத்தகமாகவும் அமெண்டா எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ் இசையைப் புரிந்துகொள்வதற்காகவே மதுரையில் தமிழ் மொழியை கற்றுக்கொண்டார். இது தமிழ் சினிமா இசையைக் கேட்கவும் ரசிக்கவும் பயன்படுவதாகச் சொல்கிறார்.

‘Brought To Life By The Voice’ என்ற தலைப்பில் தான் எழுதிவரும் புத்தகத்தில் தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக அமெண்டா சொல்கிறார்.

“அமெரிக்காவில் பாப் மாதிரியான இசை உண்டு. ஆனால், சினிமாப் பாடல்களோட தாக்கம் இங்கே அதிகம். எங்கே வேணும்னாலும் கேட்க முடியுது. தெருவுல, வண்டி ஓட்டிக்கிட்டுப் போகும்போது, விழாக்கள்னு சினிமாப் பாட்டுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அங்கே சினிமாவுல இசை இருக்கும். பாட்டு கிடையாது. இங்கே சினிமாவும் முக்கியமான விஷயம். சினிமாவுக்கு ஒரு பவர் இருக்கு.

இங்கே சினிமாவுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கு. ஆனால், அங்கே அப்படியில்லை. அங்கே சினிமாவுல இருக்கறவங்க பெரும்பாலும் அரசியலுக்கு வரமாட்டாங்க. ஆனா இங்கே சினிமாவும் அரசியலும் சேர்ந்தேதான் இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் அமெண்டா.

அமெண்டாவின் வீடியோ பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உணவுக்காகப் பரிதவிக்கும் ஆர்டிக் பனிக்கரடிகள்

ஒன்பது பெண் பனிக்கரடிகளின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் உணவுத் தேடல் ஆகியன கண்காணிக்கப்பட்டன. இதில் போதிய உணவைப் பெற அவை போராடுவது தெரிய வந்தது.

  • தொடங்கியவர்

``14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி #WorldCancerDay

 
 

மீபகாலமாக உலகம் முழுவதும் இதயநோயாளிகளைவிட கேன்சர் நோயாளிகள் பெருத்துவிட்டனர். பிப்ரவரி 4-ம்தேதி உலக கேன்சர் தினம். கடந்த பல ஆண்டுகளாக கேன்சர் நோயின் கொடுமைகளை எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி, உலக நாடுகளில் சுற்றுபயணம் செய்துவருகிறார், நடிகை கெளதமி. பொதுவாக, மற்ற துறைகளைச் சேர்ந்த பெண்களைவிட திரைப்பட நடிகைகள் தங்கள் மேனிஅழகைப் பேணி காப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, பின்னர் திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி வாழ்க்கையை நகர்த்திய தருணத்தில் ஒருநாள் உச்சிவானில் இருந்து உச்சந்தலையில் இடிவிழுந்த மாதிரி உருக்குலைந்து போனார் கெளதமி. தனிமனிதத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையையும் துணையாகக் கொண்டு புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்ற வீராங்கனை கெளதமியிடம் பேசினோம்...

கெளதமி

 

''முதலில் புற்றுநோய் வந்துவிட்டாலே 'நாம் வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்துவிட்டது' என்று விரக்தி கொள்வதை முதலில் கைவிட வேண்டும். நம் உடலில் எந்த நோய் வந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். ஜலதோஷம் தொடர்ந்து வந்தால், `சாதாரணச் சளிதானே...’ என்று அலட்சியமாக இருந்துவிட்டால், நிமோனியா வந்து நுரையீரலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறது.கேன்சர் நோய் குட்டிகுட்டியாக சிக்னல் காட்டிக்கொண்டே இருக்கும். நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். நம் உடலில் இருமலோ, சளியோ, காய்ச்சலோ தொடர்ந்து இருந்து, ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், புற்றுநோயிலிருந்து சுலபமாக விடுபட்டுவிடலாம். சிலர், தனக்கு நோய் இருப்பது தெரிந்தும், உயிர் பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை.

நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியப் பாதையில் செல்லாமல், தவறான வகையில் வளர்ச்சி அடையும்போது வியாதி கொண்ட செல்லாக உருமாறும். அதுதான் புற்றுநோய். பொதுவாக, `நம் எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன’ என்று சொல்கிறது விஞ்ஞானம். வழக்கமாக உடலில் தூங்கிக்கொண்டிருக்கும் செல்கள், நாம் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் வரை எந்தவிதத் தொல்லையும் தராமல் நம்மோடு வாழ்ந்து, நம்மோடு இறந்து போகும். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வருவது தெரியாது. திடீரென ஒரு தலைமுறையில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். புதிதாகச் சிலருக்கு புற்றுநோய் வருவது என்பது அவர்கள் தானாக வரவழைத்துக்கொள்வது. அதுபாட்டுக்கு தூங்கிக்கொண்டிருக்கிற செல்களை நாமே தூண்டிவிட்டு வரச்செய்வதும் ஒரு காரணம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தவறான உணவு வகைகளை பயன்படுத்துவது, பொதுவாக வாழ்க்கை நெறிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவை முக்கியக் காரணங்களாகும். இப்போதும் நம் முன்னோர்கள் 100 வயது வரை பிளட் பிரஷர், சர்க்கரைநோயில்லாமல் வாழ்ந்தார்கள் என்று நாம் பெருமையாகச் சொல்வதற்கு முக்கியக் காரணம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் காலம் தவறாத உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, நேர்த்தியான வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மிக்க உணவு வகைகளை உண்பது என இருந்ததுதான்.

புற்றுநோய்

இப்போது புற்றுநோய் வருவதற்குக் காரணங்கள்... உண்ணும் உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது, அதிக எண்ணெயைப்பயன்படுத்துவது, கண்ட நேரத்துக்கு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது. ஏனென்றால், நாம் உண்ணும் உணவு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் தன்மை கொண்டது. அது மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூ போன்ற பெரும்பாலானவற்றில் புற்றுநோயைப் பரப்பக்கூடிய கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்திருந்தும், அவற்றையே நாம் பயன்படுத்துகிறோம். வியாபாரிகளும் இவற்றை உற்பத்தி செய்து, நம் தலையில் கட்டுகிறார்கள். இப்போது இருப்பவர்கள் நம் முன்னோர்களின் பாரம்பர்ய உணவையே விரும்புவதில்லை. குறிப்பாக, இளம் தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் பீட்சா, பர்க்கரில் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. முதலில் பீட்சா என்பது ஒரு ரொட்டி. அதன் மேல் சீஸ், அதன் மேல் ரொட்டி வைப்பார்கள். அதில் வெறும் மைதா மற்றும் எண்ணெய் மட்டும் கலந்திருக்கவில்லை. மெல்லியதாக இருக்கிற பீட்சா, தடிமனாகத் தெரிவதற்காக ஒரு கெமிக்கலையும், இன்னும் பல பொருள்களையும் சேர்க்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு கிளைகளுக்கும் அனுப்புவார்கள். கிளையிலிருப்பவர்கள், பீட்சாவை ஃப்ரீஸரில் வைப்பார்கள் அதற்காக ஃப்ரீஸருக்குள் கெமிக்கலைப் போடுவார்கள் அதைப் பல வாரங்கள் கழித்து எடுத்து, ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்காக மீண்டுமொரு கெமிக்கலைச் சேர்துப் பயன்படுத்தி விற்பனை செய்வார்கள்.

கௌதமி

சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் இளம் தலைமுறையினர் பலர் ரிலாக்ஸுக்காக `டிஸ்கோதே செல்கிறேன்...’ என்று சொல்கிறார்கள். நிறையப்பேர் அங்கே செல்வதால்தான் டென்ஷனே ஏற்படுகிறது. இப்போது வாழ்பவர்களின் வாழ்க்கை முறையாலும், உணவுப் பழக்கத்தாலும் முன்பைவிட புற்று நோயாளிகள் அதிகமாகிவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை.முன்னோர்களுக்கு புற்றுநோய் இருந்திருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறையை சந்ததியினரும் கண்டிப்பாக சந்திக்கவேண்டி வரும் என்று சொல்வதும் தவறு. `என் முன்னோர்களுக்கு இல்லை. அதனால் எனக்கும் வரவே வராது’ என்று நினைத்துக்கொண்டிருப்பதும் தவறு. எனது குடும்பத்தில் இருந்த முன்னோர்கள் யாருக்குமே புற்றுநோய் வந்ததே இல்லை. எனக்கு வந்துவிட்டதே என்னத்தைச் சொல்வது? ஆண்களுக்கு புற்றுநோய் வந்துவிட்டால், அருகில் உறவுப் பெண்கள் இருந்து பராமரிப்பார்கள். பெண்களுக்கு வந்துவிட்டால், பெரும் துன்பம். அதனால் பெண்களைப் பாதுகாப்பது நம் முக்கியக் கடமை. நம் வீட்டில் இருக்கும் அம்மாவை, குடும்ப உறுப்பினர்கள் யாருமே கண்டுகொள்வதில்லை. வயதான அம்மா, தன் உடல்நிலையைச் சரியாக கவனித்துக்கொள்கிறாரா... சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளுகிறாரா... நீங்கள் ஆபிஸ்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவில் அருகில் உட்கார்ந்து ஜாலியாக ஜோக்கடித்து, அவரை மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்களா?’ இதையெல்லாம் கவனத்தில்கொண்டு நாம் அன்றாடம் செயல்பட வேண்டும். நம் நாட்டு, வீட்டு நடைமுறையே வேறு... ஆபிஸ் செல்லும் கணவன் தன் கோபத்தை மனைவியிடமும், காலேஜ் போகும் மகன் தன் டென்ஷனை அம்மாவிடமும் காட்டுவார்கள். அம்மாக்கள் தங்களுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. வீட்டில் மீந்துபோன உணவுகளைச் சாப்பிடுவது, எல்லோருடைய டென்ஷனையும் தன் தலையில் ஏற்றிக்கொள்வது என இருப்பதால், தாய்க்கு வியாதி ஏற்படும் சூழ்நிலை உண்டாகிறது.

கேன்சர் விழிப்புணர்வு

எனக்கு கேன்சர் நோய் வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு வந்த புற்றுநோயை நானாகத்தான் கண்டுபிடித்தேன். முதலில், என் உடலில் கட்டி தோன்றியபோது 'இது கேன்சர் கட்டிதானா?' என்கிற சந்தேகம் எழுந்தது. டாக்டரிடம் சென்று பரிசோதித்தபோது நான் நினைத்தது உண்மை என்று நிரூபணமானது. நான் அடிக்கடி டென்ஷனாகும் இயல்புகொண்டவள். அதனால்கூட எனக்கு புற்றுநோய் வந்திருக்கலாம். அப்போது என் மகள் குழந்தையாக இருந்தாள். புற்றுநோயை எதிர்த்துப் போராடி, என் மகளுக்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன். என்னைப்போல் பெண் குழந்தையிருக்கும் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய் வந்தால், என்னென்ன கஷ்டங்களையும் பிரச்னைகளையும் அனுபவிப்பாள் என்பதை நான் 14 ஆண்டுகள் அனுபவித்தேன். அதுபோல வேறு ஒரு பெண்ணுக்கு நேரவே கூடாது என்றுதான் நான் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறேன். சிலருக்கு சூழ்நிலை காரணமாக புற்றுநோய் வந்துவிட்டால், அதற்காக அவர்கள் கலங்கிப் போய், பயந்துவிடக் கூடாது. துணிச்சலாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைச் சாதாரணமான ஒருவர் எடுத்துச் சொல்வதைவிட, ஏற்கெனவே பாதிக்கப்பட்டு அந்த நோயில் இருந்து மீண்டுவந்த நான் சொல்வதைக் கேட்பது அவர்களுக்கு துணிச்சலையும் தைரியத்தையும் கண்டிப்பாக தரும் என்று நம்புகிறேன்.’’

https://www.vikatan.com

புற்றுநோய் தினம்: தயக்கத்தைப் போக்கும் தலைமுடி தானம்

 
 

இன்று உலக புற்றுநோய் தினம். உயிர்க்கொல்லி நோயாக இருக்கும், புற்றுநோய் பற்றிய விழி்ப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 'விக்' அணிவிக்கும் மருத்துவர். (கோப்புப் படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 'விக்' அணிவிக்கும் மருத்துவர். (கோப்புப் படம்)

புற்றுநோயாளிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவ முடியும். அதில் ஒன்றுதான் தலைமுடி தானம்.

சென்னை அடையாறிலுள்ள புற்றுநோய் மையத்தில் சைக்கோ ஆன்காலஜி மற்றும் ஆர்டிசிடி துறையிலுள்ள மருத்துவர் சுரேந்திரன் வீரய்யா தலைமுடி தானத்தை ஒருங்கிணைத்து புற்றுநோயாளிகளுக்கு உதவி வருகிறார்.

தலைமுடியை தானமாக பெற்று உதவி வருவது பற்றி அவரிடம் கேட்டோம். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது, முடி உதிர்வது இயல்பாக இருக்கும். குறிப்பாக, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது முடி அதிகமாகவே உதிர்ந்துவிடும்.

அப்போது அந்த நோயாளிகள் சமூகத்திலுள்ளோரை சந்திக்க தயங்குவார்கள். மன உளைச்சல் அதிகரிக்கிறது. இதனை கையாள எண்ணி, தலைமுடியை கொண்டு "விக்" செய்து கொடுத்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளியே வரலாமே என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாக தெரிவிக்கிறார் மருத்துவர் சுரேந்திரன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டபிள்யூ.சி.சி பெண்கள் கல்லூரியின் ஒரு துறை மாணவியர் தங்களின் தலைமுடியை தானம் செய்தனர். அந்த முயற்சியில் இருந்து புற்றுநோயாளிகளுக்கு உதவும் இந்த முயற்சி அனைவருக்கும் தெரிய தொடங்கியது என்று அவர் கூறினார்.

அவ்வாறு தானம் செய்யப்படும் தலைமுடியை அப்படியே பயன்படுத்த முடியாது. அதனை குறிப்பிட்ட வழிமுறையில் பக்குவப்படுத்தி விக் செய்ய வேண்டும். அதற்கு செலவு அதிகமாகிறது.

மருத்துவர் சுரேந்திரன் Image captionமருத்துவர் சுரேந்திரன்

இதற்கு உதவி செய்ய செரியன் பவுண்டேன் ராஸ் கேர் இன்டர் நேஷனல் குழுவினர் உதவ முன்வந்ததாகவும், இதற்கு தேவைப்பட்ட நிதி ஆதரவுக்கு கிரீன் டிரென்ட்ஸ் மற்றும் டபிள்யூசிசி கல்லூரி உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிக அளவில் தலைமுடி தானமாகக் கிடைத்தாலும், அதை விக்-காக மாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். இந்தியாவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களும் இந்த விக்கைப் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான விலை 20 ஆயிரம் ரூபாய். இவ்வளவு தொகை கொடுத்து விக் வாங்குவது ஏழை நோயாளிகளுக்கு சுலபமல்ல.

வெளிநாட்டில் இருந்து தலைமுடி தானம்

துபாயில் உள்ள பிரினி மேத்யூ என்பவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர். அவர் துபாயில் இருந்து தலைமுடியை பெருமளவு திரட்டி அதிகமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சுந்தர்ராஜன் குறிப்பிட்டார்.

சபரி ராஜகோபாலன். Image captionசபரி ராஜகோபாலன்

ஒரு புற்றுநோயாளி தன்னுடைய சிகிச்சையை முடித்துவிட்டு, 6 மாதங்கள் வரை அந்த விக்-கை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர்களுக்கு முடி தானாக வளர ஆரம்பித்துவிடும். பிறகு விக் தேவைப்படாது.

எனவே, அதனை எங்களிடம் கொடுத்து விடுவர். அதனை மீண்டும் சீரமைத்து அடுத்த நோயாளிக்கு வழங்கி வருகிறோம். இதனை இலவசமாக செய்து வருகிறோம். ரூ.20,000 வழங்க முடியாத ஏழைகளுக்கு இந்த சேவையை வழங்கி வருகிறோம் என்று அவர் கூறினார்.

 

 

தன்னுடைய சொந்த முடியை வெட்டி இவ்வாறு தானமாக வழங்கியவர்களிடமும் பேசினோம்.

தொலைக்காட்சியில் வந்த விளம்பரத்தை பார்த்து தலைமுடியை தானம் செய்ய தொடங்கியதாக குறிப்பிடுகிறார் சென்னையை சேர்ந்த இல்லதரசி வி.சிந்து.

ஸ்டைலுக்காக முடி வளர்க்க தொடங்கி, பின்னர், புற்றுநோய்க்கு தலைமுடி தானம் செய்வதை அறிய வந்து, இவ்வாறு தானம் செய்ய தொடங்கியதாக கூறுகிறார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற 32 வயதான சபரி ராஜகோபாலன்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

அமெரிக்கப் பெண்களுக்கு டாக்ஸி ஓட்டிய பிரபல பத்திரிகையாளர்

 
 

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளரான குஷ்வந்த் சிங் எளிமையானவர், ஆடை உடுத்துவதில் அக்கறை காட்டாமல் இயல்பாக இருப்பவர். அவர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்தார் தெரியுமா?

குஷ்வந்த் சிங்படத்தின் காப்புரிமைAFP

2002ஆம் ஆண்டு முதன்முதலில் நான் குஷ்வந்த் சிங்கை அவரது வீட்டில் சந்தித்தேன். அதுவொரு வெயில்கால மதிய நேரம்.

'முன்னனுமதி பெறாவிட்டால் தயவு செய்து அழைப்புமணியை அழுத்தவேண்டாம்' என்று அவரது கதவில் எழுதியிருந்தது. நான்கு மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்திருந்த்தால், 3.50 மணிக்கு சென்ற நான், பத்து நிமிடங்கள் காத்திருந்த பிறகே அழைப்புமணியை அழுத்திதேன்.

கதவைத் திறந்த குஷ்வந்த் சிங், "உங்களுக்கு 50 நிமிடங்கள் இருக்கிறது. கேள்வியை தொடங்கலாம்..." என்று சொன்னார்.

அவரது இருமுகங்களை உலகம் அறியும். குஷ்வந்த் சிங் என்றாலே மதுவும் மங்கையும் என்ற எண்ணமே மனதில் தோன்றும். அவரது மறுபுறமோ சிறந்த எழுத்தாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், வார்த்தை பிரயோகத்தில் வல்லவர், கண்ணியமானவர், எப்போதும் மகிழ்வுடன் இருப்பவர், ஆழமான சிந்தனையாளர் என்பதை காட்டும்.

இதே பண்புகளுடன் வேறுபல எழுத்தாளர்கள் இருந்தாலும், மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவது அவரது 'தற்பகடிகளே'. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியபோது கசங்கிய உடைகளுடன், வெற்றிலையால் சிவந்த வாயுடன் ஓட்டை அம்பாசிடர் காரை தானே ஓட்டிக் கொண்டு வருவார்.

ஒருமுறை அவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல காரில் அமர்ந்தார். அப்போது அமெரிக்க பெண்கள் இருவர் டாக்ஸி, டாக்ஸி என்றுகுரல் கொடுத்தவாறே காரின் கதவைத் திறந்துவிட்டு தாஜ் ஹோட்டலுக்கு போ என்று உத்தரவிட்டார்கள்.

பேசாமல் காரோட்டியாக செயல்பட்ட குஷ்வந்த் சிங் அதற்காக கவலை கொள்ளவில்லை. டாக்ஸிக்கான கட்டணத்தை வாங்கினாரா என்பதுதான் கேள்வி. இந்த சம்பவத்தை அவரே சொல்லக் கேட்டபோது சிரித்து சிரித்து வயிறே வலித்தது.

खुशवंत सिंहபடத்தின் காப்புரிமைRAHUL SINGH Image captionखुशवंत सिंह

பேனா திருடர் குஷ்வந்த் சிங்

1998ஆம் ஆண்டிற்கான 'நேர்மையான மனிதர்' விருது குஷ்வந்த் சிங்கிற்கு வழங்கப்பட்டபோது, "நேர்மையானவன் என்று என்னை நானே சொல்லிக் கொள்ளமாட்டேன். மற்றவரின் பொருளை திருடக்கூடாது, பொய் பேசக்கூடாது என்ற நேர்மைக்கு அடிப்படையான இரண்டு பண்புகளும் என்னிடம் இல்லை. பேனா திருடும் குணம் எனக்கு உண்டு. அதிலுள்ள சுகமே தனி. என்னிடம் நிறைய பேனாக்கள் வைத்திருக்கிறேன்.''

''எந்தவொரு மாநாட்டிற்கு சென்றாலும் அனைவருக்கும் முன்பே சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபோல்டர்களில் இருக்கும் பேனாக்களை எல்லாம் சுட்டுவிடுவேன். அடிக்கடி பொய் பேசுவேன், ஆனால் அது மற்றவர்களின் மனதை மகிழ வைக்கும் சிறுசிறு பொய்கள்தான். அதாவது நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்பதுபோல" என்று சொல்லி என்னை பகடி செய்தார் குறும்புக்கார குஷ்வந்த் சிங்.

குஷ்வந்தின் நண்பரும், அவருடன் இணைந்து பல புத்தகங்களை எழுதியிருக்கும் ஹும்ரா குரைஷி இவ்வாறு சொல்வார், "மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் குஷ்வந்த். உணவில் பருப்பு அல்லது காய் என்று எதாவது ஒன்று தான் இருக்கும். மதிய உணவு வெறும் சூப் மட்டும்தான். மொபைல் போனையோ, கணினியையோ அவர் பயன்படுத்தியதே இல்லை.''

லோதி கார்டனில் குஷ்வந்த் சிங்குடன் நடைபயிற்சி மேற்கொள்வது பற்றி சொல்கிறார் குரைஷி, ''சிறிது தூரம் நடந்தபிறகு, நீ நடந்துவிட்டு வா என்று சொல்லி அங்கிருக்கும் படிகளில் அமர்ந்துவிடுவார் குஷ்வந்த். திரும்பி வரும்போது அவரை சுற்றி சுமார் 40-50 பேர் அமர்ந்திருப்பார்கள், தனது பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்."

குஷ்வந்த் சிங்படத்தின் காப்புரிமைMUSTAFA QURAISHI Image captionகுஷ்வந்த் சிங்கும், ஹும்ரா குரைஷியும்

நேரம் தவறாதவர்

குஷ்வந்த் சிங்கின் வெளிப்படையான, புத்திசாலித்தனமான பேச்சுக்களில் பாலியல் மற்றும் ஸ்காட்ச் இடம் பெற்றிருக்கும். இயல்பாகவே மகிழ்ச்சியான அவர் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்வார். எந்தவொரு சங்கடமான நிலைமையையும் நகைச்சுவையால் இயல்பாக்கிவிடுவார் குஷ்வந்த்.

குஷ்வந்த் சிங்கின் மகனும், பிரபல எழுத்தாளருமான ராஹுல் சிங் தந்தையின் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். "காலை நான்கு மணிக்கே எழுந்து, தேநீரை தானே தயாரித்துக் கொள்வார். தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குருத்வாரா பக்தி பாடல்களை கேட்பார். பிறகு தினசரி வேலைகளை தொடங்குவார். சரியாக 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒன்று-ஒன்றரை மணி நேரம் உறங்குவார்.''

குஷ்வந்தின் மாலைப்பொழுதுகளில் மது விருந்து பற்றி சொல்கிறார் நண்பர் ஸ்வராஜ் பால், ''அவருடன் மது அருந்த விரும்புபவர்கள் ஏழு மணிக்கு வந்துவிடவேண்டும். அதுவும் முன்னனுமதி பெறாமல் வருபவர்களை பார்க்கவே மாட்டார். அதேபோல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சென்றுவிட்டால் வாசலிலேயே காத்திருப்பார்கள். யாராயிருந்தாலும் சரி எட்டு மணிக்கு கிளம்பச் சொல்லிவிடுவார். இரவு உணவுக்கு பிறகு சரியாக ஒன்பது மணிக்கு படுக்கைக்கு சென்றுவிடுவார்."

குஷ்வந்த் சிங்கின் மற்றொரு நண்பர் காம்னா பிரசாத் இவ்வாறு சொல்கிறார், "என் வீட்டுக்கு விருந்துக்கு வர ஒத்துக்கொண்டபோது பருப்பு, ஒரேயொரு காய்கறி, சப்பாத்தி தவிர வேறு எதுவும் சமைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். எட்டு மணிக்கு இரவு உணவு உண்ணும் அவரது பழக்கம், `பஞ்சாப் கேசரி` பத்திரிகை ஆசிரியருடனான விருந்தின்போது ஒரேயொரு முறைதான் மாறியிருக்கிறது.

காம்னா மற்றொரு சுவராசியமான சம்பவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். "அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், குஷ்வந்த் சிங்கின் வீட்டிற்கு இரவு விருந்திற்கு வந்திருந்தார். இரவு எட்டு மணியானதும், குஷ்வந்த் சிங்கின் மனைவி கன்வல் ஜெயில் சிங்கிடம் 'உங்களுக்கான நேரம் முடிந்துவிட்ட்து கியானி ஜி' என்று சொன்னார்."

டீ-ஷர்ட் போடுவதில் குஷியாகும் குஷ்வந்த் சிங்

இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எம்.ஜே அக்பருக்கு இடமளித்தவர் குஷ்வந்த் சிங். அவர் குஷ்வந்த் பற்றி இவ்வாறு சொல்கிறார், "உடலில் டீஷர்டும், முகத்தில் புன்னகையும்தான் குஷ்வந்த் சிங்கின் அடையாளம். அதிர்ச்சியான தகவல்களையும் அவருடைய நகைச்சுவை சொல்லாடலால், சொல்லும் விதத்தால் இயல்பானதாக்கிவிடும் திறமை கொண்டவர் குஷ்வந்த் ஜி.''

''அந்த காலத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பயிற்சி மாணவர்களுக்கு குழுமத்தின் பல்வேறு பத்திரிகைகளுக்கும் அனுப்புவார்கள். எனக்கு இல்லஸ்ட்ரேட் வீக்லி ஒதுக்கப்படவில்லை. ஆனால் விதிகளை மாற்றி, என்னையும் ரமேஷையும் மாற்றி இல்லஸ்ட்ரேட் வீக்லிக்கு அழைத்துக்கொண்டார் குஷ்வந்த் சிங். அங்கிருந்துதான் என்னுடைய பத்திரிகைப்பயணம் தொடங்கியது" என்று நினைவுகூர்கிறார் எம்.ஜே அக்பர்.

குஷ்வந்தின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் எம்.ஜே. அக்பர், "லண்டன் அல்லது கேம்பிரிட்ஜில் படிக்காதவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நுழையவே முடியாத காலகட்டம் அது. அந்த சமயத்தில் டீ-ஷர்ட் அணிந்துக் கொண்டு கொலாபாவில் இருந்து நடந்து வருவார் குஷ்வந்த் சிங். அவர் ஆசிரியராக இருந்தபோதுகூட சட்டை அணிந்ததே இல்லை என்று நினைக்கிறேன்".

குஷ்வந்தின் மற்றொரு நண்பர் ஜிக்ஸ் கால்ரா சொல்கிறார், "சுருங்க எழுதி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கலைஞர் குஷ்வந்த் சிங். 'ஒரு சொல்லில் எட்டு எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்து, எட்டு வார்த்தைகளுக்கும் அதிகமான பெரிய வாக்கியத்தை எழுதாதே, ஒரு பத்தியில் எட்டு வாக்கியங்களுக்கு மேல் பயன்படுத்தாதே' என்பதே எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் குறிப்பு."

குஷ்வந்த் சிங்படத்தின் காப்புரிமைERICH AUERBACH Image captionகுஷ்வந்த் சிங்

ஹும்ரா குரைஷி சொல்கிறார், "நான் குஷ்வந்த் சிங்குக்கு எந்தவிதத்திலும் சமமானவள் இல்லை. நான் மது அருந்தாதவள், அவரைப் போல அனைவருடனும் இயல்பாக பழகத் தெரியாது, ஆனால் அவருக்கு என்மீது தனி அக்கறை உண்டு".

"டெல்லியில் இருந்து குருகிராமத்திற்கு வீடு மாறிய பிறகு அவரை பார்க்க வாரம் ஒருமுறையாவது செல்லாவிட்டால், உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்று கேட்டு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்" என்று சொல்கிறார் குரைஷி.

"என் வீட்டில் வேலையாளோ, சமையல் செய்யவோ யாரும் இல்லை என்பதால் அவர் வீட்டுக்கு செல்லும்போது எனக்கு அடுத்த வேளைக்கான உணவை கட்டிக் கொடுக்கச் சொல்வார். அவரிடம் தயக்கமில்லாமல் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்" என்று குஷ்வந்தின் அக்கறையைப் பற்றி பகர்கிறார் குரைஷி.

குஷ்வந்த் சிங்படத்தின் காப்புரிமைSTR Image captionகுஷ்வந்த் சிங்

பழமைவாதி குஷ்வந்த் சிங்

குஷ்வந்த் சிங் தன்னை எவ்வளவுதான் நவீனமானவராக காட்டிக் கொள்ள முயற்சித்தாலும் அவர் அடிப்படையில் பழமைவாதியே என்று சொல்கிறார் அவரது மகன் ராஹுல் சிங்.

"எங்கள் வீட்டு மாடியில் ஒரு அழகான பெண் வசித்தார். ஆஃப்கன் தூதர் ஒருவரின் பெண்ணான அவருக்கும் எனக்கும் இடையில் ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தால் எனக்கு போன் செய்வார், நான் அவர் வீட்டிற்கு செல்வேன். என் வீட்டுக்கும் அவ்வப்போது வருவார் அந்த பெண். அவள் அப்பாவுக்கு தெரிந்தால் உன் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார் என்று என்னை திட்டுவார் அப்பா" என்கிறார் ராஹுல்.

"கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் என்றாலும்கூட சீக்கியர் என்பதில் பெருமை கொள்வார். நான் முடியை வெட்டிக் கொண்டதும் சீறினார் என்றாலும் எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களிலும் அப்பாவுக்கு நம்பிக்கை கிடையாது" என்கிறார் ராஹுல் சிங்.

குஷ்வந்த் சிங்-கன்வல் மலிக்கின் திருமணத்தில் முகமது அலி ஜின்னா கலந்துக் கொண்டார்படத்தின் காப்புரிமைRAHUL SINGH Image captionகுஷ்வந்த் சிங்-கன்வல் மலிக்கின் திருமணத்தில் முகமது அலி ஜின்னா கலந்துக் கொண்டார்

குறும்புக்கார குஷ்ந்த்சிங்

மகிழ்ச்சியான ஆளுமையைக் கொண்ட குஷ்வந்த் சிங் பல பரிமாணங்களை கொண்டவர். உருது கவிஞர், வரலாறு மற்றும் இயற்கையில் ஆர்வம் கொண்டவர், தனது இருப்பால் மற்றவர்களை மகிழ வைப்பவர். பெருங்கூட்டத்தின் மத்தியில் இருந்தாலும் அவரது அசாதரணமான ஆளுமை, தனியாக பிரித்து காட்டும்.

தனது வாழ்வின் இறுதிவரை இளமையான இதயத்துடன் வாழ்ந்தவர் குஷ்வந்த் சிங். அவருக்கு 90 வயதானபோது, அவரிடம் கண்ட நேர்காணலின் போது, நிறைவேறாத விருப்பம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்.

குஷ்வந்த் சிங்கின் பதில் இதுதான், "ஆசைக்கு முடிவேது? இதயத்தில் இளமை ஊஞ்சலாடினாலும், மனதில் விருப்பங்கள் ஊடாடினாலும் உடலோ ஊன்றுகோல் தேடுகிறது. இறுதி மூச்சு வரையில் இறக்காது ஆசைகள். மனதின் ஆசைகள் நிராசைகளாகும் என்பதை அறிவேன்."

http://www.bbc.com

  • தொடங்கியவர்

 

ஒரு நிமிட தாமதத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாத நாடுகள்

ஒவ்வொரு நாட்டினரும் நேரத்தைக் கடை பிடிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்? தாமதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

  • தொடங்கியவர்
‘தன்னை உணர்ந்தால், முன்னேறும் திறன் உருவாகும்’
 

image_3be826d1d1.jpgதங்களது பலவீனத்தையும் வல்லமையையும் தெரியாமலேயே பலர், பிறரை ஏளனம் செய்வது வேடிக்கையானதுதான்.

சபையில் ஓர் அறிஞர் நல்ல விடயங்களை மிகவும் அருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றுமே புரியாத நபர் ஒருவர், “இவருக்கு வேறு வேலை இல்லை; சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறார்” என்றால், சுவாரஷ்யமாக அறிஞர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு கோபம் வராதா?

தங்களது பலவீனங்களை மறைக்கத் தங்களை ஒரு புத்திமானது எனக் கருதி வீண்பேச்சுப் பேசுபவர்கள், கண்ணியம் எது என அறிந்திருத்தல் வேண்டும்.

தான் யார்? தனது அறிவு எத்தகையது என உணர்ந்தால்தான், முன்னேறும் திறன் உருவாகும்.

  • தொடங்கியவர்

1958 : 3400 கிலோ எடை­யுள்ள ஐத­ரசன் குண்டு காணாமல் போனது

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 05

 

62 : இத்­தா­லியின் பொம்பெய் நகரில் பாரிய பூகம்பம் இடம்­பெற்­றது.

1597 : ஜப்­பானின் ஆரம்­ப­கால கிறிஸ்­த­வர்கள் பலர் ஜப்­பானின் புதிய அரசால் ஜப்­பா­னிய சமூ­கத்­திற்குக் கெடு­த­லாக இருப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1649 : ஸ்கொட்­லாந்து இரண்டாம் சார்ள்ஸை அந்­நாட்டின் மன்­ன­ராகா நாட்டில் இல்­லாத நிலையில் அங்­கீ­க­ரித்­தது.

varlaru2-copy.jpg1778 : தென் கரோ­லினா அமெ­ரிக்க கூட்­ட­மைப்பு அர­சி­ய­ல­மைப்பை ஏற்­றுக்­கொண்ட முத­லா­வது மாநிலமானது.

1782 : பிரித்­தா­னியப் படை­களை ஸ்பானியர் தோற்­க­டித்து மினோர்க்கா தீவைக் கைப்­பற்­றினர்.

1782 : ஒஹை­யோவில் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 90 அமெ­ரிக்கப் பழங்­கு­டிகள் வெள்ளை இனத்­த­வரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1852 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரில் ஏர்­மிட்டேச் அருங்­காட்­சி­யகம் பொது மக்­க­ளுக்காக திறந்து விடப்­பட்­டது.

1885 : பெல்­ஜிய மன்­னர் இரண்டாம் லியோபோல்ட் கொங்­கோவைத் தனது தனிப்­பட்ட பிர­தே­ச­மாக்­கினார்.

1900 : பனாமா கால்வாய் தொடர்­பாக ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

1917 : மெக்­ஸி­கோவின் தற்­போ­தைய கூட்­டாட்சி அர­சி­ய­ல­மைப்பு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

1922 : றீடர்ஸ் டைஜஸ்ட் சஞ்­சி­கையின் முத­லா­வது இதழ் வெளி­யி­டப்­பட்­டது.

1945 : அமெ­ரிக்க இரா­ணுவ அதி­காரி ஜெனரல் டக்ளஸ் மெக்­ஆர்தர் தான் உறு­தி­ய­ளித்­த­படி மீண்டும் பிலிப்­பைன்ஸின் மணி­லா­வுக்குத் திரும்­பினார்.

1958 : எகிப்து, சிரி­யாவை இணைத்து ஸ்தாபிக்­கப்­பட்ட ஐக்­கிய அரபு குடி­ய­ரசின் முதல் ஜனா­தி­ப­தி­யாக எகிப்தின் கமல் அப்துல் நாசர் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

1958 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜி­யாவில் சவான்னா கரை­யோ­ரத்தில் 3400 கிலோ­கிராம் எடை­யுள்ள ஐத­ரசன் குண்­டொன்றை சுமந்­து­சென்ற விமா­ன­மொன்று பயிற்சியில் ஈடு­பட்டி ருந்த­போது மற்­றொரு விமா­னப்­படை விமா­னத்­துடன் மோதி விபத்­துக்­குள்­ளானது. இதன் போது காணாமல் போன ஐத­ரசன் குண்டு இது­வ­ரையில் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

1960 : ரஷ்ய மக்கள் நட்­பு­றவுப் பல் ­க­லைக்­க­ழகம் மொஸ்­கோவில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1962 : அல்­ஜீ­ரி­யா­வுக்கு சுதந்­திரம் அளிக்­கப்­பட வேண்­டு­மென பிரெஞ்சு ஜனா­தி­பதி சார்ள்ஸ் டி கோல் கோரினார்.

1971 : அப்­பல்லோ 14 விண்­கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகி­யோ­ருடன் சந்­தி­ரனில் தரை­யி­றங்­கி­யது.

1988 : பனாமா சர்­வா­தி­காரி மனுவெல் நொரீகா மீது போதைப்­பொருள் மற்றும் பணச்­ச­லவை குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

1994 : பொஸ்­னி­யாவில் சந்­தை­யொன்றில் எறி­க­ணை­யொன்று வீழ்ந்­ததால் 60 பேர் உயி­ரி­ழந்­த­துடன் சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

2000 : செச்னியாவில் ரஷ்ய படையினரால் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர்.

2008 : அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சுழற்காற்றினால் 57 பேர் உயிரிழந்தனர்.

2014 : ஹட்டன் திம்புலாபத்தனவில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் 29 பேர் காயமடைந்தனர்

http://metronews.lk

  • தொடங்கியவர்

‘ஒரு டாலர் மூக்குக்கண்ணாடி’! - பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

 
 

கதை

‘மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள்; உங்களுடைய வார்த்தைகளும் புதுப்புது ஐடியாக்களும் இந்த உலகையே மாற்றக்கூடியவை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மறைந்த முன்னாள் அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ் (Robin Williams). ‘உண்மையிலேயே ஒரு நல்ல யோசனையால் (Idea) இந்த உலகைப் புரட்டிப்போட முடியுமா?’ - ஆய்ந்து, தெளிவுபெற வேண்டிய ஒரு கேள்வி இது. ஆனால், ஒரு நல்ல ஐடியா பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அதற்கு வரலாற்றிலும், நாம் வாழும் காலத்திலுமேகூட பல உதாரணங்கள் இருக்கின்றன. ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் ஆஃப்மத் (Martin Aufmuth) கதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

 

மார்ட்டின் ஆஃப்மத்-தின் கதைக்குள் போவதற்கு முன்னர் மூக்குக்கண்ணாடி அணியவேண்டியவர்களின் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். மாணவர்களாகயிருந்தால், கண்ணாடியில்லாமல் படிக்க முடியாது; பிஸினஸ்மேனாக இருந்தால், கான்ட்ராக்டைக்கூடப் பார்க்க முடியாது; டிரைவராக இருந்தால் பேருந்தை ஓட்ட முடியாது... ‘வளரும் நாடுகளில் சுமார் 15 கோடிப் பேருக்கு பார்வைக்கோளாறு இருக்கிறது... அவர்கள் மூக்குக்கண்ணாடி அணியவேண்டிய நிலையிலிருக்கிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு.

மார்ட்டின் ஆஃப்மத் ஓர் ஆசிரியர். சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆசிரியர். ஒருநாள் கண்ணாடிகள் விற்கும் கடை ஒன்றுக்குப் போயிருந்தார். விதவிதமான, அழகழகான கண்ணாடிகளைப் பார்த்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் சீந்துவாரில்லாமல் குவியலாக சில மூக்குக்கண்ணாடிகள் கிடந்தன. கடைக்காரரை அழைத்து விசாரித்தார். “அது ஒண்ணுமில்லைங்க... இதெல்லாம் ரொம்ப சீப்ஃபான கண்ணாடிங்க. அதனால யாரும் இதை வாங்குறதில்லை. விலை குறைவான கண்ணாடியையும் விற்பனைக்கு வெக்கிறதுதானே நியாயம்?...’’

மார்ட்டின் ஆப்ஃமத்

கடையிலிருந்து வெளியே வந்த விநாடியிலிருந்து, கடைக்காரர் சொன்ன வார்த்தைகளே மார்ட்டினின் நினைவுக்கு வந்தன. அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இந்தத் தகவல் மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. ‘பணக்கார நாடுகளில் விலை குறைவான மூக்குக்கண்ணாடிகள் கிடைக்கும்போது, ஏழை நாடுகளில் மட்டும் ஏன் கிடைப்பதில்லை? பார்வைக்கோளாறு ஏற்பட்டு, கண்ணாடி வாங்க முடியாத எத்தனை ஏழைகள் இந்த உலகில் இருக்கிறார்கள்? இது உலக அளவில் நடக்கும் ஒரு சமூக அநீதியல்லவா?!’ இந்த எண்ணம் அவரைத் தூங்கவிடாமல் செய்தது.

இந்தப் பிரச்னைக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற எண்ணம் நாளுக்கு நாள் மார்ட்டினுக்குத் தீவிரமானது. விதவிதமான மூக்குக்கண்ணாடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார். அவற்றின் காப்புரிமை வரை படித்து ஆராய்ந்தார்; இணையதளம் தொடங்கி, கடை கடையாக ஏறி இறங்கி மூக்குக்கண்ணாடியின் ஜாதகத்தையே பல மாதங்களுக்கு அலசித் தீர்த்தார். பல முயற்சிகளுக்குப் பிறகு அவரே ஒரு கண்ணாடியை வடிவமைத்தார். வளைந்த ஸ்டீலாலான மூக்குக்கண்ணாடி. அது அவருக்கு மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அதைத் தயாரிப்பதற்கான செலவு ஒரு டாலருக்கும் குறைவாகவே ஆனது. மூக்குக்கண்ணாடியைத் தயாரிக்க ஒரு மெஷினையும் வடிவமைத்தார். அந்த இயந்திரம் 30 நிமிடங்களில் கண்ணாடியைத் தயாரித்துக் கொடுத்தது.

கண்ணாடி

சரி... குறைந்த விலை மூக்குக்கண்ணாடியைத் தயாரித்தாகிவிட்டது. அடுத்து...? தன் நண்பர்கள் சிலரின் ஆதரவோடு மூக்குக்கண்ணாடி பிசினஸில் இறங்கினார் மார்ட்டின் ஆஃப்மத். அவற்றை விற்பதற்கு முதலில் அவர் தேர்ந்தெடுத்த இடம் ஆப்பிரிக்கா. உலகம் தன் தயாரிப்பை வரவேற்கும் என்கிற நம்பிக்கையோடு, மெஷின், கண்ணாடிகள், இதரப் பொருள்களுடன் பயணத்தை ஆரம்பித்தார். உண்மையில், அவர் தயாரித்த கண்ணாடிகள் விற்காவிட்டால் என்ன செய்வது என்று அவர் கவலைப்படக்கூட இல்லை. ஆப்பிரிக்காவில் அவரே எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு... அவருடைய `ஒரு டாலர் மூக்குக்கண்ணாடிகள்’ முதல் கட்டத்திலேயே நூறு விற்றுத் தீர்ந்தன. அவருடைய கண்ணாடிகளின் உதவியோடு பார்வைத்திறன் குறைந்த குழந்தைகளால் படிக்க முடிந்தது; வயதானவர்களால் தங்கள் சொந்த கிராமத்தை, சக மனிதர்களைப் பார்க்க முடிந்தது. மார்ட்டினின் கனவு படிப்படியாக நனவாகிக்கொண்டிருந்தது.

மார்ட்டின் தயாரிக்கும் மூக்குக்கண்ணாடிகளின் சிறப்பு என்னவென்றால், அவற்றை உள்ளூரிலேயே தயாரிக்க முடியும்; குறைந்த விலைக்கு விற்கவும் முடியும். இது பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. உள்ளூரில் வேலையில்லாமலிருந்த பலருக்கு அந்தக் கண்ணாடிகளைத் தயாரிக்கும் வேலை கிடைத்தது. அவற்றை வாங்கி விற்கும் ஏஜென்ட்கள் உருவானார்கள். ஒரு டாலருக்குத் தயாரானதை மூன்று டாலர் வரை விற்று லாபம் பார்க்க முடிந்தது. கண்ணாடி விற்பவர்கள் ஒரு சைக்கிளை எடுத்துக்கொள்வார்கள்... கிராமம் கிராமமாகப் போய், யார் யாருக்கு எந்த மாதிரியான மூக்குக்கண்ணாடி தேவையோ அவற்றை கை மெஷினில் தயாரித்து விற்றார்கள். இதனால், போக்குவரத்தே இல்லாத உள்ளடங்கிய கிராமங்களில் இருப்பவர்களுக்குக்கூட மூக்குக்கண்ணாடி கிடைத்தது.

டாலர்

 

மார்ட்டின் ஆஃப்மத்-தின் `ஒரு டாலர் மூக்குக்கண்ணாடி’ மெள்ள மெள்ள உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. உலகின் பல நாடுகளிலிருந்தும் அதை வாங்க பல வியாபாரிகள் அவரை அணுக ஆரம்பித்தார்கள். இப்போது, பொலிவியா, பிரேசில், எத்தியோப்பியா, மாலாவி, ருவாண்டா... எனப் பல நாடுகளில் அவருடைய ஒரு டாலர் மூக்குக்கண்ணாடி, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. பல லட்சம் எளிய மக்களின் தெளிவான பார்வைக்கு உதவிசெய்கிறது. ஒரு தனிமனிதனால் எதையாவது சாதிக்க முடியுமா? முடியும் என்பதற்கு உதாரணம், மார்ட்டின் ஆஃப்மத்தின் புதுவிதமான ஐடியா!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

அமேசான் காட்டிலிருந்து சேகரித்த சுத்தமான ஆக்சிஜன்... விற்பனைக்கு!

 
 

இன்னும் சில வருடங்கள் எதிர்நோக்கிக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. நீங்கள் மருத்துவரிடம் போய் “சரியா மூச்சே விட முடியல டாகடர். ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்று சொல்கிறீர்கள். அதற்கு அவர் தன் அறையின் சன்னல் திரையை விலக்கிப் பார்க்கிறார். நீங்களும் எட்டிப் பார்க்கிறீர்கள். தூசும் புகை மண்டலமும் கூடி ஊரே பாலைவனம் போல காட்சியளிக்கிறது. சட்டென்று தன் பேனாவை எடுத்து "ஒரு லிட்டர் ஆக்சிஜன் கேன். காலை எழுந்தவுடன் சிறிதளவு, மதியம் உணவுக்குப் பின் சிறிதளவு, தூங்கப்போகும் முன் சிறிதளவு" என்று எழுதித் தருகிறார். நீங்கள் வீட்டுக்குப் போகும் வழியிலேயே பல பேனர்களில் "சுத்தமான சுகாதாரமான ஆக்சிஜன். ஆறு கேன்களை சேர்த்து வாங்கினால் ஒரு கேன் இலவசம். ஆடி ஆஃபர்ல ஆடிப் போய்டுவிங்க ஆடி.. உடனே முந்துங்கள்" என்று விளம்பரங்கள் ஊரெங்கும் இருக்கின்றன. உங்கள் மொபைலை எடுத்து அமேஸானில் ஆறு ஆக்சிஜன் கேன்களை ஆர்டர் செய்கிறீர்கள்.

ஏதோ ஆங்கிலப் படத்தில் பார்க்கும் காட்சிபோல தோன்றலாம். ஆனால், சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் ஆக்சிஜன் கேன்கள் அமேஸானிலும் ஃபிளிப் கார்டிலும் ஸ்நாப் டீலிலும் விற்பனைக்கு வந்துவிட்டன. 

 

ஆக்சிஜன் கேன்

1985-லிருந்து செயல்பட்டுவரும் இத்தாலி நிறுவனம் பாஸ்ச்சி. இதன் 'ஆக்சி99' எனும் ஆக்சிஜன் கேன் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு இணையதளமும் நான் நீ என்று போட்டி போட்டுக் குறைந்த விலையில் இதை விற்பனை செய்து வருகிறது. அமேசான் காடுகளிலிருந்து வேட்டையாடிய சுத்தமான காற்று என்று விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நிஜமாகவே காற்றை வேட்டையாடும் வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை "ஆக்சிஜன் வேட்டையர்கள்" என்று அழைக்கின்றனர். சீனாவில் ‘வ்ரூம்ம்ம்’ என பிக்அப் ஆகிவரும் தொழில்களில் இதுவும் ஒன்று. இதற்காக உலகளவில் பெரிய சந்தை உருவாகிக்கொண்டிருக்கிறது என்றும் அதுவே வருங்காலத்தின் முக்கியத் தேவையாக இருக்கக்கூடும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த கேனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்க வீடியோவே விளம்பரமாக யூ-டியூபில் காணக் கிடைக்கிறது.

 

சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. சுத்தமான காற்று, தெளிவான தண்ணீர், நிம்மதியான சுற்றுச்சூழல் இதைத் தேடித்தான் மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். ஆனால், அது கார்ப்பரேட் கைகளில் போகும்போது வியாபாரமாக மாறுகிறது. மாதம் ஓரிரு நாள்கள் ஆபீஸுக்கு லீவு எடுத்துக்கொண்டு நம் சொந்த ஊருக்கு விசிட் அடித்தால்போதும்; சுற்றமும் நட்பும் ஆக்சிஜனும் நிலைக்கும்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.