Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உறக்கம் தேடுவோரின் உள்ளம் கவரும் திரையரங்கு விடுதி

உறக்கம் தேடுவோருக்கான உள்ளம் கவரும் திரையரங்கு விடுதி இது. திரைப்படங்கள் மூலமாக மக்கள் உற்சாகமாக தூங்க வேண்டும் என்பதற்காக இந்த திரையரங்கத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறை உருவான இடம்… இது கிரீன்லாந்தின் என்சைக்ளோபீடியா!

 
 

1912-ம் வருடம். ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல். நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. டைட்டானிக் என்று அழைக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு அதுதான் முதல் பயணம். உள்ளே 2,224 பயணிகள் இருப்பதாகத் தகவல். கப்பலைச் சுற்றிச் சுற்றி வந்து வேவு பார்க்கும் (lookout) வேலையைச் செய்துகொண்டிருந்தனர் ஃப்ரெட்ரிக் ஃப்ளீட் மற்றும் ரெஜினால்ட் லீ. ஆனால், ஒரு பிரச்னை. இருவரிடமும் உளவு பார்க்கத் தேவையான பைனாகுலர்கள் இல்லை. சரியாக மணி 11.40. இருவரின் குரலும் ஒன்றாய், இரண்டு வார்த்தைகளை ஒலித்தன.

“Iceberg, right ahead!!!” (பனிப்பாறை, சரியாக நம் முன்னே!)

 

கிரீன்லாந்து

டைட்டானிக் கப்பலின் முதன்மை அதிகாரி உடனே சுதாரித்து கப்பலை அந்தப் பனிப்பாறையின் மீது மோதாமல் திருப்புமாறு கட்டளையிடுகிறார். ஆனால், அந்த இருவரும் அந்தப் பனிப்பாறையை பார்த்ததே தாமதம். அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டும் எப்படிச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும்? அந்தப் பெரிய பனிப்பாறை கப்பலின் அடிபாகத்தைப் பதம் பார்த்தது. தண்ணீரின் பரப்புக்கு அடியில் இருந்த கப்பல் பாகத்தில் ஓட்டைகள் உருவாகத் தண்ணீர் உள்ளே செல்லத் தொடங்கியது. கப்பலின் மேலே... இல்லை, அந்தக் கதை வேண்டாம். நம் பார்வையை அந்தப் பனிப்பாறைக்கு உள்ளாகவே சுருக்கிக் கொள்வோம். கப்பலின் பலம் வாய்ந்த மேலோடு (hull) பாதிப்படையும் அளவிற்கு அந்தப் பனிப்பாறை வலிமையானதாக இருந்தது. அது உருவானது கிரீன்லாந்து நாட்டில்!

புவியியல்
 

கிரீன்லாந்து பனிப்போர்வை

இது முழுக்க முழுக்கப் பனிப்போர்வையால் மூடப்பட்ட இடம். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், கனடாவிற்கு வடகிழக்கில் அமைந்திருக்கிறது கிரீன்லாந்து. இந்தத் தீவின் மொத்த பரப்பளவு 836,000 சதுர மைல்கள் (2.17 மில்லியன் சதுர கிலோமீட்டர்). கிரீன்லாந்துதான் உலகிலேயே மிகப்பெரிய தீவு. கிரீன்லாந்து என்றவுடன் பச்சைப் புல்வெளி நாடு என்று கற்பனை செய்துவிட வேண்டாம். சுவாரஸ்யமாக, அங்கே பெயரில் மட்டும் கிரீன் (Green) இருக்கிறது. மற்றபடி அதன் மேற்கு ஓரங்களைத் தவிர உள்ளே இருப்பது வெண்மை நிறைந்த பனிப்பாறைகள் மட்டுமே. இந்தப் பனிப்போர்வைக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து, இருக்கும் நிலங்களில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அப்படி வாழத்தகுந்த இடம் என்றால் அது வெறும் 158,000 சதுர மைல்கள் (410,000 சதுர கி.மீ.) மட்டுமே. அதாவது கிட்டத்தட்ட 80 சதவிகித நிலப்பரப்பு பனிப்பாறைகள் மட்டுமே.

பெயர்க் காரணம்

10-ம் நூற்றாண்டில், அருகில் இருக்கும் ஐஸ்லாந்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவன் கிரீன்லாந்து பக்கம் வந்து சேர்கிறான். அவன் நோர்ஸ் வைகிங் இனத்தைச் சேர்ந்த எரிக் தோர்வால்ட்ஸ்சன்  (Erik Thorvaldsson, Erik the Red). அவன்தான், கிரீன்லாந்தின் மேற்கு பக்கம் பயணம் செய்து அங்கே பச்சைப் புல்வெளிகள் நிறைந்த வளமான பகுதி இருப்பதை முதலில் கண்டறிந்தான். நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஐஸ்லாந்திற்கு அவன் சென்றவுடன் வளமான நாடு ஒன்றை தான் கண்டுவிட்டதாகக் கூறுகிறான். அது பச்சைப்பசேல் என இருப்பதால், அதை கிரீன்லாந்து என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறான். பின்னாளில், அதுவே அதன் பெயராகிப் போனது.  

அரசியல்

Hvalsey Church

Photo Courtesy: Number 57 at English Wikipedia

இது ஒரு தன்னாட்சி பெற்ற நாடு என்றாலும், டென்மார்க் ராஜ்ஜியத்தின் மூன்று உறுப்பின நாடுகளில் இதுவும் ஓர் அங்கம். தற்போதைய நிலவரப்படி அங்கே 57,000 மக்கள் வசிக்கின்றனர். கிரீன்லாந்தின் 12 சதவிகித மக்கள் டேனிஷ் இனத்தவர்களாகவும், 88 சதவிகிதம் பேர் இன்யூட் (Inuit) என்ற பூர்வகுடியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். மொத்தத் தீவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை, தலைநகரான நூயூக் (Nuuk) நகரில் இருக்கிறது. கிரீன்லாந்திற்கு வரும் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு இன்னமும் டென்மார்க் அரசிடம் இருந்தே வருகிறது.

பூர்வகுடி இனம்

கிரீன்லாந்து மக்கள் வசிப்பிடம்

கிரீன்லாந்தில் முதன் முதலில் கால்பதித்தவர்கள், தற்போது கனடாவாக இருக்கும் இடத்தில் இருந்து சென்றவர்கள். இது 4,500 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. அதன்பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கிரீன்லாந்தின் அதீத குளிரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு, கி,மு.600 முதல் கி.பி.200 வரை டோர்செட் இன மக்கள் அங்கே வசித்தனர். சிறிது காலம் கழித்து, துலே (Thule) கலாசாரத்தைப் பின்பற்றும் கயாக்ஸ் (Kayaks), டாக்ஸ்லெட்ஸ் (Dogsleds) மற்றும் ஹார்பூன்ஸ் (Harpoons) இன மக்கள் அங்கே குடியிருந்தனர். தற்போது அங்கிருக்கும் இன்யூட் இன மக்கள் இந்த துலே கலாசாரத்தின்படி வந்தவர்கள்தான்.

வெப்பநிலை

சொல்லவே தேவையில்லை. கிரீன்லாந்தின் சீதோஷண நிலை என்பது முழுக்க முழுக்க ஆர்க்டிக் வெப்பநிலைதான். முற்றிலும் பனிப்போர்வை போர்த்தப்பட்ட இடம் என்பதால் கோடைக்காலத்தில்கூடப் பகலில் 0 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். நாட்டின் தெற்குப் பகுதியில் மட்டும் சற்று தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பநிலை இருக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் இங்கேதான் வசிக்கின்றனர். தலைநகரான நூயூக் நகரத்தில் மைனஸ் 11 முதல் 10 டிகிரி செல்சியஸ் இருக்கும். ஈரப்பதம் குறைவான பகுதி என்பதால், உலகிலேயே தூய்மையான காற்று கிடைக்கும் இடங்களில் ஒன்றாக கிரீன்லாந்து கருதப்படுகிறது. இதனால் தூரம் இருக்கும் பகுதியில் பனி இருந்தாலும் நன்றாகவே தெரியும். ஈரப்பதம் இல்லாத காற்று என்பதால், குளிரும் அவ்வளவாகத் தெரியாது.

மிருகங்கள்

ஆர்க்டிக் மிருகம்

பல பாலூட்டிகள் மற்றும் பறவை இனங்களுக்கு கிரீன்லாந்துதான் சரணாலயம். பனிக் கரடிகள், கலைமான்கள், எருதுகள், ஆர்க்டிக் நரிகள், ஓநாய்கள், கழுகுகள், முயல்கள் எனப் பல மிருகங்களை கிரீன்லாந்தில் பார்க்க முடியும்.

புவி வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் என்ற ஒரு நிகழ்வே பொய் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள், தற்போது கிரீன்லாந்து சென்றுவிட்டு வந்தால், அவர்கள் எண்ணம் தவறானது என்பதை நிச்சயம் உணர்வார்கள். இந்தத் தீவின் நிலப்பரப்பில்,656,000 சதுர மைல்கள் (1.7 மில்லியன் சதுர கிமீ) தூரத்திற்கு கிரீன்லாண்ட் பனித்தாள் என்பது போர்வையைப்போல விரிந்திருக்கிறது. அன்டார்க்டிக் பனித்தாளுக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய பனித்தாள். இதன் பருமன் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர்கள். இப்போது பிரச்னை என்னவென்றால், வருடத்திற்கு 1 மிமீ வீதம் இந்த பனித்தாள் உருகி வருகிறது. இதனால் வருடத்திற்கு 23 அடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது.

உருகும் பனிப்பாறை

Photo Courtesy: NASA

 

இன்னொரு பிரச்னை என்னவென்றால், இங்குள்ள ஈரப்பதம் இல்லாத காற்று, பனிப்போர்வைக்குள் கரிய பாசி ஒன்றைப் படரவிடுகிறது. இது சூரிய வெப்பத்தை உறிஞ்சும் தன்மைகொண்டது. இதனால்தான் பனித்தாள்கள் உருகத் தொடங்கியுள்ளன. இது பலதரப்பட்ட ஆய்வாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கிரீன்லாந்து மட்டுமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இது மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கனடா பள்ளியில் சிறார்களுக்கு பாடம் நடத்தும் ஏழு மாத குழந்தை

வளரும் விதம், பிறரால் அச்சுறுத்தப்படுவது போன்றவற்றால் தங்களின் இளம் பருவத்திலேயே வாழ்க்கை பற்றிய புரிதலை அறிய சிறார்கள் தவறி விடுகின்றனர். இதற்கு தீர்வு காண வகுப்பறையில் குழந்தையை வைத்துப் பாடம் நடத்துகிறார் கனடாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குட்மார்னிங் வில்லங்கம்!

 

 
good%20morning

படுக்கையிலிருந்து எழும்போதே, ஸ்மார்ட்போனில் விழிக்கும் காலமாகிவிட்டது. எழுந்தவுடனே, குரூப்பில் இருப்பவர்கள், நண்பர்கள், சொந்தங்கள், உறவினர்களுக்கு குட்மார்னிங் மெசேஜ் தட்டிவிடுவதும் இன்று அன்றாட பழக்கங்களுள் ஒன்றாகிவிட்டது. அப்படி அனுப்பும் குட்மார்னிங் மெசேஜ் இன்று ஸ்மார்ட் போன்களின் வில்லனாக இந்தியாவில் மாறிவருகிறது என அமெரிக்க புள்ளிவிவரம் ஒன்று கொளுத்திப்போட்டுள்ளது.

குட்மார்னிங் மெசெஜ் அனுப்புவோர் டெக்ஸ்ட் வாக்கியமாக அனுப்புவதில்லை. கலர் கலரான படங்கள், வீடியோக்களில்தான் அனுப்புகின்றனர். இன்னும் பலர் அனிமேஷன் செய்யப்பட்ட அலங்கார வார்த்தைகள் இருந்தால்தான், அனுப்பிய மெசேஜை படிப்பார்கள் என்ற ரீதியில் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புகிறார்கள்.

இது மட்டுமல்ல, விதவிதமான குட்மார்னிங் மெசேஜ்களைத் தேர்வு செய்யவே குட்மார்னிங் கிரீட்டிங்ஸ், விஷ்சஸ் மெசேஜஸ் உள்ளிட்ட இணைய தளங்களும் செயல்படுகின்றன. இதிலிருந்து ஒரு குட்மார்னிங் மெசேஜைத் தேர்வு செய்து, தனக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பி வைத்துவிட்டு மகிழ்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உண்மை நிலை வேறுவிதமாக இருக்கிறது. இந்தியாவில் பத்தில் மூன்று ஸ்மார்ட் போன்களும், அமெரிக்காவில் பத்தில் ஒரு ஸ்மார்ட்போனும் குட்மார்னிங் மெசேஜ்களால் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரத்தை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்படி அனுப்பும் குட்மார்னிங் மெசேஜ்களில் வைரஸ் பிரச்சினை இருக்கிறதோ என விபரீதமாகக் கற்பனை செய்ய வேண்டாம். டேட்டா ஸ்டோரேஜில்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறதாம். அமெரிக்காவில் டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனமான வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷன் நடத்திய ஆய்வின்படி, மொபைலில் இடத்தை அடைக்கும் அனிமேஷன் பாணி குட்மார்னிங் மெசேஜ்களால் ஸ்மார்ட்போன்கள் போதிய இடமின்றி திணறுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் செல்போன்களில் பயன்படுத்தப்படும் செயலிகள் சுயமாகத் (சாஃப்ட்வேர் அப்டேஷன்) தங்களை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து செயலிகளை அப்டேட் வெர்ஷனுக்கு மாற்றும். அப்போது அதிகளவு இடத்தை அந்த செயலிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அதோடு குட்மார்னிங் மெசேஜ்களும் சேர்ந்துகொள்வதால் ஸ்மார்ட்போனின் மெமரி முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாகவே, பல்வேறு சிக்கல்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. குட்மார்னிங் மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக, தினமும் ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான தகவலை அறிந்துகொள்ளும் வகையில் பொதுஅறிவு செய்திகள், தேவையான விஷயங்களை சாதாரண டெக்ஸ்ட் வடிவத்தில் அனுப்பினாலே, அதைப் படிப்பவருக்கும் பலன் கிடைக்கும், ஸ்மார்ட்போனின் மெமரியும் அதிகம் நிரம்பாது.

இனியும் நீங்கள் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புவீர்கள்?

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

 

 

உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாள்.
Happy Birthday Cristiano Ronaldo

போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ உலகின் பல நாடுகளின் பிரபல கால்பந்து கழகங்களுக்காக ஆடி வருகிறார்.
இப்போது ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கழகத்தின் முன்னணி வீரராக ஆடிவரும் ரொனால்டோ கடந்த வருடத்தின் மிகச் சிறந்த சர்வதேச கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

Bild könnte enthalten: 1 Person, Text

இலங்கை நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமைக்குரியவர்
இராஜவரோதயம் சம்பந்தன் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

 

Bild könnte enthalten: 1 Person, machen Sport und im Freien

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் மிட்செல் சந்ட்னரின் பிறந்தநாள்.
இம்முறை IPLஇல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக வாங்கப்படுள்ளார் சந்ட்னர்.
Happy Birthday Mitchell Santner

Bild könnte enthalten: 1 Person, Meme und Text

உலகின் வளர்ந்துவரும் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான இந்தியாவின் புவனேஷ்வர் குமாரின் பிறந்தநாள்.
கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் சகலதுறை வீரராகவும் தன்னுடைய துடுப்பாட்டத் திறனை வெளிப்படுத்திவருகிறார்.
Happy Birthday Bhuvneshwar Kumar

  • தொடங்கியவர்

1952 : 2 ஆம் எலி­ஸபெத் பிரிட்டன் உட்­பட 7 நாடு­களின் அர­சி­யானார்

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 06

 

1658 : சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்­டாவின் படைகள் உறைந்த கடலைக் கடந்து டென்­மார்க்கை அடைந்­தன.

1819 : ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்­ப­வரால் சிங்­கப்பூர் ஸ்தாபிக்கப்­பட்டது.

1840 : நியூ­ஸி­லாந்தில் வைதாங்கி ஒப்­பந்தம் பிரித்­தா­னிய அரச பிர­தி­நி­தி­யாலும், மவோரி தலை­வர்­க­ளாலும் எட்­டப்­பட்­டது.

1918 : பிரிட்­டனில் 30 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

varalaru2-copy.jpg1938 : அவுஸ்­தி­ரே­லியா, சிட்னி கடற்­க­ரையில் பாரிய அலை­களால் 300 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1951 : அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்­ஸியில் பய­ணிகள் ரயில் ஒன்று தடம் புரண்­டதில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர். 500 பேருக்கு மேல் காய­ம­டைந்­தனர்.

1952 : 6 ஆம் ஜோர்ஜ் மன்­னரின் இறப்­பை­ய­டுத்து இரண்டாம் எலி­ஸபெத் ஐக்­கிய இராச்­சியம் உட்­பட 7 நாடு­க­ளுக்கு அர­சி­யானார்.

1958 : ஜேர்­ம­னியின் மியூனிச் நகரில் நடை­பெற்ற விமான விபத்தில் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் யுனைட்டட் கால்­பந்­தாட்ட அணியின் 8 பேரும் மேலும் 15 பய­ணி­களும் கொல்­லப்­பட்­டனர்.

1959 : கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முத­லா­வது டைட்டான் ஏவு­கணை புளோ­ரி­டாவில் வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

1975 : காங்­கே­சன்­துறை தொகு­தியில் இடைத்­தேர்தல் நடை­பெற்­றது.

1981 : உகண்டா இரா­ணுவ முகாம்கள் மீது கிளர்ச்­சிக்­கு­ழுக்­களின் தாக்­குதல் ஆரம்­ப­மா­னது.

1996 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் டொமி­னிக்கன் குடி­ய­ரசு அருகில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : டார்ஜா ஹலோனென் பின்­லாந்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யானார்.

2004 : மொஸ்­கோவில் சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2013 : சொலமன் தீவுகளில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

738 நாள்கள் மரத்தின் மேல் வாழ்ந்த பெண்! - ஒரு போராளியின் துணிச்சல் கதை! #MotivationStory

 
 

கதை

‘நம்முடைய எல்லாக் கனவுகளையும் நனவாக்க முடியும், அவற்றை விடாமல் பின்தொடரும் துணிவு நம்மிடம் இருந்தால்...’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்கத் தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான வால்ட் டிஸ்னி (Walt Disney). எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வந்துவிட்டால், வெற்றி என்பது கிட்டத்தட்ட கிடைத்த மாதிரிதான். பல உலக சாதனையாளர்களை உலகம் திரும்பிப் பார்த்தது அவர்களின் துணிச்சலான செயல்களால்தான். அந்தத் தைரியமும் எளிதில் வந்துவிடாது. மனம் பழக்கப்பட வேண்டும்; தளராத உறுதி வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்தவர்களில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா பட்டர்ஃப்ளை ஹில் (Julia Butterfly Hill). அவரின் வாழ்க்கை ஒரு பாடம்!

 

உலகின் மிக உயரமான மரங்களில் ஒன்று `ரெட்வுட்.’ சில நாடுகளில் `செம்மரம்’, `ஊசியிலை மரம்’ என்றும் இதைச் சொல்கிறார்கள். அமெரிக்காவில், `ரெட்வுட்’ (Redwood) என அழைக்கப்படும் இந்த மரம் அதிகக் காலம் வாழும் மரங்களில் ஒன்று. நம் நாட்டில் வளர்வதைவிட அமெரிக்காவில் இதன் வளர்ச்சி அபாரமானது. 100 மீட்டருக்கும் மேல் உயரமாக வளரக்கூடியது. 7 மீட்டருக்கும் மேல் பருமனாகச் செழித்து வளர்வது. விலை மதிப்புள்ள மரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இது போதாதா? பல பேராசைக்கார நிறுவனங்கள், பெரும் பரப்பளவில் இருந்த, செழித்து வளர்ந்த ஆயிரக்கணக்கான மரங்களை, பல ஆண்டுகளாக வெட்டி விற்பனை செய்துவந்தன. 1,000 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடித்து நிமிர்ந்து நிற்கும் ரெட்வுட் என்றால், அது பழங்குடியினருக்கு புனிதமான தெய்வம்! ஆனால், அமெரிக்காவில் அவ்வளவு வயதான மரங்கள் அருகிப்போய்விட்டன. அவற்றையெல்லாம் மரத்தை வெட்டி விற்கும் நிறுவனங்கள் வெட்டிக் கொண்டுபோய்விட்டன.

ஜூலியா ஹில்

( PC: Wkimedia)

இந்த வன அழிப்பை எதிர்த்துப் போராடும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அமெரிக்காவிலும் இருந்தார்கள். ஒருநாள் அவர்களுக்கு கலிஃபோர்னியாவிலிருக்கும் ஹம்போல்ட் கவுன்ட்டியில் (Humboldt County), மலையோரமாக இருக்கும் ஒரு பகுதியிலுள்ள மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து, ஒட்டுமொத்தமாக அவற்றைத் துடைத்தழிக்கப் போகிறார்கள்; அதற்கு பிரமாண்டமான மரம் அறுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்கிற செய்தி வருகிறது. உடனே அந்த இடத்துக்குக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஓடினார்கள். மரங்களை அறுக்கப் போவது `பசிபிக் லம்பர் கம்பெனி’ (Pacific Lumber Co) என்ற பெரிய நிறுவனம். செல்வம், செல்வாக்கு எல்லாம் உள்ள நிறுவனம். அதை எதிர்த்து எப்படிப் போராடுவது? கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்... மரங்களை அழிவிலிருந்து காக்க ஒருவர் மரங்களின் மேல் போய் அமர்ந்துகொள்வது. ' மர கம்பெனி, மரம் அறுப்பதை நிறுத்த வேண்டும். அதற்காக குறைந்தது ஒரு வாரத்துக்காவது மரத்தின் மேலேயே குடியிருந்து, அறவழியில் போராடுவது...’ இந்த முடிவு எல்லோருக்கும் பிடித்துப்போனது.

`ஆனால், ஒரு வார காலம்... மரத்தின் மேல் போய் வாழ்வதா? இது சாத்தியமில்லை’ என்றே அவர்களில் பலருக்குத் தோன்றியது. சிலருக்கு ஆர்வமிருந்தாலும், தைரியமில்லை. இதைக் கேள்விப்பட்ட ஒரு பெண் மட்டும் அந்த அசாதாரணமான காரியத்துக்கு முன்வந்தார்... அவர், ஜூலியா ஹில். இத்தனைக்கும் எந்தச் சுற்றுச்சூழல் அமைப்பிலும் அவர் உறுப்பினர்கூட இல்லை. அப்போது அவருக்கு 23 வயது. ஒரு வருடத்துக்கு முன்னர்தான் ஒரு கார் விபத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டிருந்தார். ஒரு நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்தவரைக் குடித்துவிட்டு கார் ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன் பின்னாலிருந்து மோதியிருந்தான். ஸ்டீயரிங் ஜூலியாவின் தலையைத் தாக்கி, அவருடைய மண்டை ஒடுவரை ஊடுருவியிருந்தது. ஓராண்டுத் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், இப்போதுதான் சாதாரணமாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்திருந்தார். ஜூலியாவுக்கு, தான் வாழும் வாழ்க்கைக்கு புது அர்த்தம் தேவைப்பட்டது. விபத்துக்கு முன்னர், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியங்களே அவருக்கு இருந்தன. விபத்துக்குப் பின்னர் அடியோடு போய்விட்டன. மரங்களைக் காக்க நடக்கும் அந்தப் போராட்டம் அவருடைய வாழ்க்கைக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றியது. அதனால்தான் அவர்களோடு இணைந்திருந்தார் ஜூலியா.

மரம்

1997, டிசம்பர் 10. ஜூலியா சுமார் 180 அடி (55 மீட்டர்) உயரமுள்ள மரத்தில் ஏறினார். மரத்தின் பெரிய கிளைகளில் ஒரு தற்காலிகக் கூடாரத்தைத் தார்ப்பாயால் சக தோழர்கள் வடிவமைத்துக் கொடுத்தார்கள். அவருக்குத் தேவையான சில பொருள்களையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். போராட்டம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நமக்கெல்லாம் கிடைக்கும் சொகுசான வாழ்க்கை ஜூலியாவுக்கு இல்லை. மரத்தின் மேல் புரண்டு படுக்க முடியாது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது. அவருடைய சக நண்பர்கள் கயிறு வழியாகக் கொடுத்தனுப்பும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். அவருடைய டிரங்க் பெட்டிதான், அவர் நடையை மறந்துவிடாமலிருக்க உதவும், நடை பழகும் ட்ரெட்மில். உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள ஒரு போர்வையைப் போத்திக்கொள்வார். மரக்கிளைகளுக்கு நடுவே ஒரு ஸ்டவ்கூட வைத்திருந்தார்.

ஜூலியா, தான் தங்கியிருந்த அந்த மரத்துக்கு `லூனா’ (Luna) என்று பெயர்வைத்திருந்தார். காற்று, மழை, புயல், வெயில் என அனைத்தையும் எதிர்கொண்டபடி அந்த மரத்தோடு வாழும் திறமைகளை வளர்த்துக்கொண்டார். இயற்கையோடு போராடி வாழ்வது அவருக்குப் பெரிய விஷயமாகப்படவில்லை. அதைவிட பெரிய எதிரியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது, பசிபிக் லம்பர் கம்பெனி. ஜூலியாவின் போராட்டம் மெள்ள மெள்ள வெளியுலகின் கவனத்துக்கு வந்தது. ஜூலியா, சோலார் சக்தியால் இயங்கும் மொபைல்போன்களைப் பயன்படுத்தி, பல வானொலிகளுக்குப் பேட்டி கொடுத்தார்; சில தொலைக்காட்சி சேனல்களும் ஒரு லட்சியத்தோடு மரத்தில் வாழும் அந்தப் பெண்ணைப் பேட்டியெடுத்தன. அந்த மரத்தில் ஜூலியா வசித்தது கிட்டத்தட்ட 738 நாள்கள்.

பசிபிக் லம்பர் கம்பெனி, பல வகைகளில் அவருக்குக் குடைச்சல் கொடுத்தது. ஆட்களைவிட்டு மிரட்டிப் பார்த்தது. ஹெலிகாப்டரில் சிலர் வந்து அவரை மோதி வீழ்த்துவதுபோல மிரட்டிவிட்டுப் போனார்கள். ஒருநாள் மரம் வெட்டவில்லையென்றாலும், இழப்பு கம்பெனிக்குத்தானே! ஆனால், ஜூலியா குறித்த செய்திகள் வெளியே பரவ ஆரம்பித்த பிறகு மரம் வெட்டும் நிறுவனத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரெட்வுட் மரங்களைக் காப்பாற்றக் களமிறங்கியிருந்த அந்தப் பெண்ணின் துணிச்சல் அமெரிக்காவையே திரும்பிப் பார்க்கச் செய்தது. கடைசியில், பசிபிக் லம்பர் கம்பெனி மனம் இறங்கிவந்தது. ஜூலியாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது... `லூனாவைப்போல் மிக உயரமான மரங்களை, குறிப்பிட்ட அந்தப் பகுதியில் வெட்டுவதில்லை’ என்பது ஒப்பந்தம்.

ஜூலியா ஹில்

738 நாள்களுக்குப் பிறகு ஜூலியா, `லூனா’-விலிருந்து கீழே இறங்கினார். இயற்கை மேல் இதுபோன்ற ஆபத்துகள் நேரும்போது, தனி மனிதப் போராட்டமும் வெற்றியைத் தரும் என்பதற்கு ஜூலியாவின் வாழ்க்கை ஓர் உதாரணம். துணிச்சலும், மரங்களை எப்படியும் தன்னால் காப்பாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கலகக்கார கலைஞன்... வாழ்க்கையைக் கொண்டாடும் போகன்! - பாப் மார்லே பிறந்தநாள் பதிவு

 
 

இசையால் உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். காரணம், இவர் பாடல்களில் புதைந்திருக்கும் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கை. சிக்கு விழுந்த தலைமுடி, வசீகரிக்கும் குரல், எதைப்பற்றியும் கவலைப்படாத யதார்த்த பேச்சு... இதற்குச் சொந்தக்காரரான பாப் மார்லேயின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சில தகவல்கள்!

பாப் மார்லி

 

நார்வல் மார்லே கப்பல் துறையில் வேலை செய்து வந்தார். 1944-ல் கருப்பினத்தைச் சேர்ந்த சிடெல்லா மால்கம் பூக்கர் என்பவரைச் சந்தித்ததும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொள்கிறார். அப்போது சிடெல்லாவுக்கு 18 வயது மட்டுமே ஆகியிருந்தது. பிப்ரவரி 6, 1945-ல் இருவருக்கும் பிறந்தவர் ராபர்ட் நெஸ்டா மார்லே. பிறக்கும்போது தன் மகனை உலகமே போற்றிப் புகழப்போகிறது என்பதை அவர்கள் அப்போது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், ராபர்ட் நெஸ்டா மார்லே என்பவர்தான் காலப்போக்கில் பாப் மார்லே என்றழைக்கப்பட்டார். மார்லேயின் பாடல் வரிகளுக்குள் புதைந்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் அவர் சிறுவயதில் கண்ணுற்றவை. மார்லே பிறந்த கொஞ்ச நாள்களிலேயே நார்வல் மார்லே மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்துவிட்டார். அதற்குப்பின் தன் தாயுடன் நைன் மைல் என்ற இடத்தை வந்தடைந்தார். அங்கு வந்த பின்னர், தன் தந்தையை 10 வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை மட்டுமே சந்தித்தார். பின், திடீரென ஒருநாள் மார்லேயின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். அதன் பின்னர், அங்கிருந்து ட்ரென்ச் டவுன் எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். 

இங்குதான் ஏழ்மை, அதிகார வர்க்கம், ஆளுமைகளின் கோரமுகம், தொழிலாளர்கள் வர்க்கத்தின் வலி என வாழ்க்கையின் பல கேள்விகளுக்குப்  பதில் கிடைத்தன. சிறு வயதிலிருந்தே இசையின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளார் மார்லே. ஆனால், தன் தாய்படும் கஷ்டங்களைப் பார்த்துவிட்டு தன் இசை ஆசையைத் தள்ளி வைத்துவிட்டு வெல்டிங் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றார். இருப்பினும் கிடைக்கும் நேரங்களில் தன் இசைப்பயிற்சியைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், இவர் தானாகத்தான் இசையைக் கற்றுக்கொண்டார். யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லை. விடுமுறை தினங்களில் தன் அம்மாவை உட்கார வைத்து, அவர் முன் பாடுவார். வாழ்க்கையில் தான் அனுபவித்த வலிகளையும் மக்கள் படும் வலிகளையும் இசை வாயிலாக அனைவருக்கும் கொண்டு சேர்த்தார். மக்களும் தாங்கள் அனுபவிக்கும் வலியை வரியாகக் கேட்கவும், இவரைக் கொண்டாடித் தள்ளினர். 

தற்போது கொண்டாடப்படும் பல வெற்றி நாயகர்களின் முதல் முயற்சி தோல்வியில் இருந்துதான் ஆரம்பிக்கும். இவரின் முதல் முயற்சியும் தோல்வியில்தான் ஆரம்பித்தது. முதலில் இவர் வெளியிட்ட `Judge not', `One cup of coffee' போன்ற பாடல்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. இருப்பினும், தன் முயற்சியைக் கைவிடாமல் போராடிக்கொண்டே இருந்தார். அதன் பயன், 1964-ல் நிகழ்ந்தது. அந்த ஆண்டு இவர் வெளியிட்ட 'Simmer down' என்ற பாடல், ஜமாய்க்கா ஹிட் லிஸ்ட் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. அது பாப் மார்லேவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனாலும், அடுத்த பாடலை வெளியிடுவதற்கான முதலீட்டில் பல கஷ்டங்களை எதிர்கொண்டார்.

1966-ல் ரீடா ஆண்டர்சன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில்தான் அவருக்கு `ரஸ்தஃபரி' என்கிற மதம் அறிமுகம் ஆனது. பார்த்ததும் அவர்களின் கொள்கைகள் பிடித்துப்போனது. அதற்குப் பிறகு, தன் தலைமுடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினார். அது மட்டுமில்லாமல் அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடி புனித மூலிகையாகப் பார்க்கப்பட்டது. அதையும் புகைக்கத் தொடங்கினார். இதுபோன்ற தோற்றம் கொண்டவர்களை `ட்ரெட்லாக்ஸ்' (Dreadlocks) என்று அழைப்பார்கள். அந்த மதத்தில் பின்பற்றும் சில வழிமுறைகளை பாப் மார்லே பின்பற்றினார். 

பாப் மார்லி

`Get up stand up' என்ற பாடல், இவரின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. கறுப்பின மக்களைப் பார்த்து `எழுந்து நில்லுங்கள், உங்களுக்கான உரிமையை மீட்கப் போராடுங்கள், உங்களுக்கான உரிமையைப் பெற நீங்கள்தான் போராட வேண்டும்' என்று அர்த்தம் வரும் இப்பாடலின் மூலம் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் குவிந்தார்கள். அதற்குப் பின் இவரது குழுவிலிருந்து ஆட்கள் வெளியேற, அவர் மனைவியே இவரது குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார். அதற்குப் பின் குழுவின் பெயர் `பாப் மார்லே & தி வெய்லர்ஸ்' (Bob Marley & The Wailers' என மாற்றப்பட்டது. பின் `No woman no cry' என்று இவர்கள் பாடிய பாடல் உலகின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. உலகம் முழுக்க மார்லே பிரபலமாகத் தொடங்கினார். அதோடு சேர்த்துக் கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால், அப்படித் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் `ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கருப்பினத்தவன்' என்றே தன்னை அடையாளம் காட்டினார். இது ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. எவ்வளவு உச்சத்துக்குச் சென்றாலும் இவரின் எளிமையும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்கு உதாரணமாக ஒருமுறை நிருபர் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மார்லே கூறிய இந்தப் பதிலைக் கூறலாம்.

Reporter: ``Are you rich?'' 

Bob Marley: ``What do you mean rich?''

Reporter: ``A lot of possessions, A lot of money in the bank?''

Bob Marley : ``Possession makes you rich?, I don't have that type of riches, My rich is life forever.'' என்று எளிமையாக பதிலளித்தார்.

பாடல் மூலம் புரட்சி செய்த மார்லே, உலகம் முழுக்க நீக்ரோ மக்களுக்கு ஆதரவாகத் தன் குரலை உயர்த்தினார். மக்கள், இவரது கொள்கைக்கு மட்டுமின்றி, குரலுக்கும் ரசிகர்களாக மாறத் தொடங்கினர். ஒருபக்கம் மக்கள் ஆதரவு முழுவதும் பாப் மார்லேவுக்குக் கிடைத்தது. கூச்சல் போடவில்லை, போராட்டம் செய்யவில்லை, கலவரம் வெடிக்கவில்லை. ஆனால், அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்களை எழுச்சிபெற வைத்தார். அதிகார வர்க்கம் நடுங்கியது. இதற்கு இவர் பரிசாகப் பெற்றது 1976-ல் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு. ஆனால், அதிலிருந்து எப்படியோ சில காயங்களுடன் தப்பிவிட்டார். இரண்டு நாள்கள் கழித்து `ஸ்மைல் ஜமாய்க்கா' என்ற ஓர் இசை விழாவில் கலந்துகொண்டார் மார்லே. `இந்த நிலையில் எதற்குக் கலந்துகொண்டீர்கள்’ எனப் பலரும் கேட்ட கேள்விக்கு, `இந்த உலகுக்குக் கேடு விளைவிக்கும் அவர்களே ஒருநாள்கூட விடுமுறை எடுப்பதில்லை, அவர்களே அப்படியென்றால் நல்லது செய்யும் நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்' என்று உத்வேகமாகப் பதிலளித்தார். 1990-ல் நிறுவப்பட்ட ஒரு சட்டத்தில், இவரின் பிறந்தநாளான இன்று ஜமாய்க்காவில் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. 

மார்லேயைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரின் வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அவரின் பாடல்களைக் கேட்டாலே போதும். ஏனென்றால் அவர் வாழ்க்கையின் அனுபவங்களைத்தான், அவரது பாடல் வரிகளும் பிரதிபலிக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் மார்லே!

https://www.vikatan.com

 

 

இசை அரசியலும்..காதலும்.. கொஞ்சம் துப்பாக்கிக் குண்டுகளும்! #HBDMarley

பாப் மார்லி

மாய்க்காவின் எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் எழுதிய,  ‘A Brief History of seven killings’ என்கிற புத்தகத்துக்கு 2015-ம் ஆண்டுக்கான புக்கர் விருது அளிக்கப்பட்டது. 70-களில் நிகழ்ந்த ஜமாய்க்கா நாட்டின் உள்நாட்டுக் கலவரங்களை, பாப் மார்லி என்னும் இசைக்கலைஞன்மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகள் வழியாக அந்தப் புத்தகம் பேசியது. பாப் மார்லி யார்... அவர்மீது எதற்காகக் கொலை முயற்சிகள் நிகழ்த்தப்பட வேண்டும்... ஜமாய்க்காவில் எதற்காக அப்போது உள்நாட்டுக் கலவரம் வெடித்தது? 

 

கலைஞர்கள் ஆன்மிக அரசியல் பேசும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்துள்ள தற்காலச் சூழலில், தவிர்க்காமல் நினைவுகூரப்பட வேண்டிய கலைஞன் பாப் மார்லி. கொள்கை என்னவென்று கேட்டால், தலைசுற்றிக் கீழே விழுந்துவிடாமல் மக்களுக்கான அரசியலையும் வாழ்வியல் தத்துவத்தையும் தனது இசைவழியாகப் பேசியவர். ராகம், தாளம், ஸ்வரம் என்று எவ்வித அமைப்பும் இல்லாமல் சற்றே கரகரத்த குரலில் அவர் பாடும் பாடலிலும் இசைக்கும் கிதாரிலும் அதிரஅதிர வாசித்த ஜேம்பே இசைக் கருவியிலும் மக்களுக்கான வார்த்தைகள் நிரம்பிக் கிடந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு சுரண்டப்பட்ட மக்களின் பசிப் பட்டினிக்காகவும், சுரண்டிய மக்களுக்கு எதிராகவும் அவர் தனது பாடல்களை எழுதினார். 

பாப் மார்லி

 

‘‘We sick an' tired of-a your ism-skism game -

Dyin' 'n' goin' to heaven in-a Jesus' name, Lord.

We know when we understand:

Almighty God is a living man.

You can fool some people sometimes,

But you can't fool all the people all the time.

So now we see the light (What you gonna do?),

We gonna stand up for our rights! (Yeah, yeah, yeah!)

 

So you better:

Get up, stand up!

Stand up for your rights! 

Get up, stand up!

Don't give up the fight!

 

Get up, stand up! 

Stand up for your rights! 

Get up, stand up!

Don't give up the fight! 

Get up, stand up!

Stand up for your rights!

Get up, stand up!

Don't give up the fight!’’  

 

முன்னேறிய நாடுகளின் வல்லரசுக் கனவுகளுக்கு பலியாகிக்கொண்டிருந்த ஹெய்த்தி போன்ற நாடுகளில் பயணம் செய்தபோது பாப் மார்லி எழுதிய இந்தப் பாடல், அதன்பிறகு அவரது இசை மேடைகளில் தொடர்ந்து பாடப்பட்டது. பெரும்பாலும் நிகழ்ச்சியின் இறுதியிலேயே அவரது இந்தப் பாடல் இசைக்கப்படும்.மேடைகளில் அவர், ‘Yeah, yeah, yeah!’ என்று தனக்கே உரிய தோரணையுடனும் குரலுடனும் இசைத்துப் பாடிய இந்தப் பாடல் பல்லாயிரக்கணக்கான ஜமாய்க்கா மக்களைப் புரட்சி செய்யத் தூண்டியது.

மார்லியின் இசைக்குழு

மாற்றத்தைத் தேடும் எந்த ஒரு புரட்சியாளனுக்கும் பெரும் பக்கபலம் அவனது காதல்தான் என்பதை அவரது 'Is this love' பாடல் பேசியது. காதல் இப்படியும் இருக்கும்... காதல் இப்படித்தான் இருக்கும்... காதலும் புரட்சிதான் என்பதை அவரது அந்தப் பாடல் வரிகள் பேசின. அதற்காகவே அந்தக் குறிப்பிட்ட பாடல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்திர முக்கிய இசைப் பாடல்கள் பட்டியலில் மிக நீண்டகாலமாக முதலாம் இடத்தில் இடம்பெற்றிருந்தது. கலைஞர்கள் அரசியல் பேசினால் அவர்களை ஒடுக்கிய சமூகத்தில் மார்லி மட்டும் விதிவிலக்கா என்ன? அமைதிக்காகப் பாடிய மார்லியை, 1976-ல் அவரது எதிர் அரசியல் தரப்பினர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். எப்படியோ அதிலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டு எழுந்துவந்த மார்லி, அதன்பிறகு அதே உத்வேகத்துடன் பல மேடைகளில் பாடினார்.

Bob marley quotesஜமாய்க்கா தேசத்துக் கலவரம் ஓய்ந்தபிறகு மார்லி வெறும் பாடகனாகவும், கலைஞனாகவும் மட்டுமே அந்நிய தேசத்தவர்களால் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால், அவர் கலைஞன் மட்டும் அல்ல, மக்கள் கலைஞன். அவரைக் குறுக்கிவிடுவதிலிருந்து மீட்டெடுக்க பாப் மார்லியின் சடைமுடி, அதனை மூடி மறைத்தபடி இருக்கும். பல வர்ணத் தொப்பி என அவரது அத்தனை அடையாளங்களும் ஜமாய்க்கா தேசத்து அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குக் கடத்தப்பட்டது. அவரைப்போலவே மக்களுக்கான பாடல்களைப் பலர் எழுதத் தொடங்கினார்கள். 

இன்றளவும் ஜமாய்க்கா தேசத்து இளைஞர்களின் உடைகளில், உருவத்தில் என மார்லியின் ஏதோ ஓர் அடையாளத்தை நாம் பார்க்கலாம். கலைஞன் அழிந்துவிடலாம். ஆனால், சமூகம் சார்ந்த அவனது கலைப் பயணங்கள் அந்தச் சமூகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருந்துகொண்டிருக்கும். நம் ஊர்களில் இன்றும் உலவிக்கொண்டிருக்கும் பாப் மார்லி உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகள் பேசும் அரசியலும் அதுதான்.

பாப் மார்லியின் 73-வது பிறந்த தினம் இன்று! இசையாளனுக்கு வாழ்த்துகள்.

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்: உயிர் பெறும் வண்ணங்கள்!

 

 
Pesum%20padam%202

உயிர்களிடத்தும் அன்பு உண்டு.

ஒளிப்படங்கள் எடுத்தவர்: ஜெனிக் கமலேசன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.

Pesum%20padam%2011

பிழைக்குமா, இறக்குமா?

       
 

ஆரம்பம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஒளிப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டேன். மனதுக்கு நிறைவுதரும் ஒளிப்படங்களை எடுத்து கலை உச்சத்துக்கு அருகில் செல்லும் சிறுமுயற்சியாக ஒளிப்படங்களைத் தொடர்ந்து எடுத்து வருகிறேன்.

Pesum%20padam%206

பறக்கத் தொடங்கும் நெருப்பு.

 

கேமரா: கேனான் 70டி.

Pesum%20padam%207

பிரம்மாண்டமும் சிற்றொளியும்.

 

விருப்பம்: தெருக்கள், சமவெளி, கறுப்பு-வெள்ளை ஒளிப் படங்கள் எடுப்பது.

Pesum%20padam%208

பருந்துப் பார்வையில் ஒருவரின் சலவைப் பணி.

Pesum%20padam%2010
Pesum%20padam%203
Pesum%20padam%209

ஜெனிக் கமலேசன்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

போதைக் கடத்தல் மன்னனை நல்லவனாக்கிய புறாக்கள்... அமெரிக்காவின் ‘மாரி’ தேவ் மலோன்!

 

வெள்ளை, சாம்பல், கறுப்பு எனப் பல நிறங்களைக்கொண்ட புறாக்கள் தங்களுடைய கூண்டிலிருந்து காலைப்பொழுதில் பறந்து செல்கின்றன. அப்போது அங்கு வரும் புறாக்களைப் பராமரிப்பவர், சங்கேத ஒலியை எழுப்புகிறார். பறந்ததுபோக மீதமுள்ள புறாக்கள் பறக்கத் தயாராகின்றன. அவர் மீண்டும் ஓர் ஒலி எழுப்பியவுடன் சடசடவெனப் புறாக்கள் பறக்கின்றன. அப்போது காலை 7 மணி, பறவைகள் சிதறடித்த தீவனங்களை வீணாக்காமல் சேகரிக்க ஆரம்பிக்கிறார். பறவைகள் இறைத்த உணவைப் பெருக்குவதுதான் பராமரிப்பவரின் வேலை. இப்போது பறந்து செல்லும் புறாக்கள்தான் அவரது வாழ்வை மாற்றியவை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கில் குற்றங்கள் பல புரிந்துகொண்டிருந்தவர் அவர். 

புறாக்கள்

 

நியூயார்க்கில் உள்ள புரூக்லின் மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தெருக்களில் குற்றச்செயல்கள் அதிகமாக நடப்பது வழக்கம். குற்றச் செயல்களில் ஈடுபடுவது அங்கு சாதாரணமாகவும் இருந்தது. அப்போது பத்து வயது கொண்ட சிறுவன் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறான். ஆனால், சிறிய குற்றம் அவனைப் போதை மருந்து கடத்தல் வரை இழுத்துச் செல்கிறது. இதற்காகத் தண்டனை பெற்றுத் திரும்பியவர், மீண்டும் தெருவிற்குள் நுழைகிறார். இப்போது அவர் குற்றம் புரிந்த மனிதராக அல்லாமல் பறவை வளர்க்கும் ஆர்வலராக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ’மாரி’ தனுஷ் போலவே தனது வாழ்க்கையைப் புறாக்களுடன் தொடங்கியவர், இன்றுவரை அனைத்துத் தீய பழக்கங்களையும் கைவிட்டு நல்ல மனிதராக வலம் வருகிறார். அவர் பெயர், தேவ் மலோன். 

Dave malone

முன்பெல்லாம் தெருவில்தான் தனது வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தவர் இன்று பறவைகள்தான் தனது வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் புறாவிற்கு மரக்கூண்டுகள்  அமைத்துப் பாதுகாத்து வருகிறார். காலையில் தினமும் 7 மணிக்கு எழுந்து புறாக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு கூண்டுகளைச் சுத்தம் செய்யத் துவங்கி விடுவார். அப்போது புறாக்கள் சோம்பல் முறிக்கப் பக்கத்தில் உள்ள கட்டடங்களிலும், மரங்களிலும் அமர்ந்து ஓய்வெடுக்கும். இன்னும் சில புறாக்கள் காலையிலேயே இரையைத் தேடிப் புறப்படும். தேவ் மலோன் தனது இருப்பிடத்தைச் சுத்தம் செய்து முடித்த பின்னர் கூட்டம் கூட்டமாகப் புறாக்கள் கூட்டிற்கு வரும். அப்படிப் பறந்துவரும் புறாக்களைச் சரிபார்க்கிறார், தேவ். சரிபார்த்து முடித்த பின்னர் புறாக்கள் ஏதும் காயம் அடைந்திருக்கிறதா என்று கவனிக்கிறார், காயமடைந்த புறாக்களைக் கவனமுடன் கையாள்கிறார். மீண்டும் புறாக்கள் இரைதேடப் பறக்கின்றன. இந்தப் புறாக்கள் கூடு திரும்பும் நேரம் இரவு 9.30 மணி. அதுவரைக் காயமடைந்த புறாக்களுக்கு மருந்து கொடுத்துக்கொண்டும், புறாக்களுக்குத் தேவையான தீவனங்களைக் வாங்கி வந்து நிரப்ப வேண்டும். இதுதவிர, இவர் கடந்த 40 வருடங்களாகப் புறாக்களை வளர்த்து வருகிறார். அதனால் வளர்க்கும் புறாக்களில் எந்தப் புறாக்கள் காணாமல் போனாலும், எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறார் . ஏனெனில் இவருடைய புறாக்களைத் திருட முயல்பவர்கள் அதிகம். அப்படியே திருடிக்கொண்டு போனாலும் மறுநாள் இவர் இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும். 

Dave malone

தனது புறா வளர்ப்பு பற்றிப் பேசும் தேவ் மலோன், "கடந்த 40 வருடங்களாக எனக்குப் புறாக்கள்தான் உலகம். என்னிடம் இருந்த தீய பழக்கங்களை அகற்றி, என்னை முழு மனிதனாக மாற்றிய பெருமை இந்தப் புறாக்களைத்தான் சேரும். தெருவில் கிடந்த என்னைத் தேரில் அமர வைத்துவிட்டது" என்கிறார். 

 

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் திருத்தலாம், ஆனால் இங்கு பல புறாக்கள் சேர்ந்து ஒரு மனிதனின் வாழ்க்கையைக் காப்பாற்றி இருக்கின்றன. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மிஷன் இம்பாஸிபிள் ஃபால்அவுட் ட்ரெய்லர் வெளியானது..!

 
 

டாம் குரூஸின் மிஸன் இம்பாஸிபிள் ஃபால்அவுட் (fallout) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பாரா மௌன்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

27173509_1729413927124733_72022554049024

 


அதிரடி சண்டைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற மிஸன் இம்பாஸிபிள் படத்தின் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலக அளவில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தொடர்ச்சியாக வெளியான ஐந்து பாகங்களிலும் டாம் குரூஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆறாவது பாகமான மிஸன் இம்பாஸிபிள் - ஃபால்அவுட் (fallout) படத்திலும் டாம் குரூஸ் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை கிரிஸ்டோபர் மெக்குயர் இயக்கியுள்ளார். ஜோ கிராயமைர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாரா மௌன்ட் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகள் குறைவில்லாமல் இருக்கின்றன. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
 

 

  • தொடங்கியவர்
‘உழைப்பு அழகைத் தரும்’

image_bef395a77c.jpgஉழைக்கும் முன் களைப்படைதல் ஆகாது. கருமம் எதுவெனப் புரியாமலே அது பெரிய கஷ்டமான காரியம் என எண்ணினால் எந்தப் பணியையும் செய்யமுடியாது.

வேலை செய்யும்போது ஏற்படும் உற்சாகத்தை அனுபவித்துப் பார்க்க வேண்டும். பலருக்கு இருக்கையில் இருந்து தொழில் செய்யவேண்டியுள்ளது. இதனால் உடல் பலம் இழந்து விடுகின்றது.

தேகத்துக்கு வலிமையூட்ட களைப்பை எண்ணி, கை கால் அவயவங்களுக்குரிய  பணிகளைச் செய்திட வேண்டும்.

வியர்வை சிந்துவது அயர்ச்சியைப் போக்கிவிடும். உடலை நோகாது வைத்திருக்கு எண்ணினால் நோய்களின் நண்பர்களாகி விடுவர்.எந்தப் பதவியில் இருப்பவர்களாயினும் உடலை வருத்தி உழைப்பை நாட வேண்டும். உழைப்பு அழகைத் தரும்.

  • தொடங்கியவர்

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் (பிப்.7- 1971)

 

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு முதன் முறையாக வாக்குரிமைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேதேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர். * 1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. * 1819 - ஸ்டாம்போர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து

 
 
 
 
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் (பிப்.7- 1971)
 
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு முதன் முறையாக வாக்குரிமைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதேதேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர். * 1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. * 1819 - ஸ்டாம்போர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார். * 1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். * 1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.

* 1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது. * 1962 - கியூபாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது. * 1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர். * 1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர். * 1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. * 1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது. * 1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது. * 1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. * 1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார். * 1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது. * 1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.

* 1991 - ஐரிஷ் குடியரசு ராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது. * 1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. * 1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது. * 2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

தெருவில் கிடந்தவர் வீட்டு அதிபரான கதை! - வாழ்க்கையை மாற்றிப்போட்ட 3 பவுண்ட் உதவி! #MotivationStory

 
 

கதை

வீடற்றவர்களின் உலகம் கடினமானது. அதே நேரத்தில் சுவாரஸ்யமானது’ என்கிறார் அமெரிக்க நடிகர் பால் டேனோ (Paul Dano). மிகவும் அர்த்தம் பொருந்திய வாசகம் இது. கொஞ்சம் வசதியான குடும்பச் சூழலில் வாழ்கிறவர்களின் மேலோட்டமான பார்வைக்கு வேண்டுமானால் வீடில்லாமல் தெருவோரத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமாகத் தெரியலாம். உண்மையில், அதைப்போல சிக்கல் நிறைந்த, துன்பமயமான வாழ்க்கை வேறொன்று இருக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகின் வளர்ந்த நாடுகளிலேயேகூட சாலையோரங்களில் வாழ்க்கையை நடத்துபவர்கள் ஏராளம். வேலையின்மை, அதன் காரணமாக எழும் வறுமைச் சூழல், நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலை, அரசியல் மாற்றம்... என ஏழ்மைக்குப் பல காரணங்கள். ஏழையாகப் பிறப்பதுகூட ஒரு காரணம். ஆனால், அவர்களிலும் இதயத்தில் ஈரம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சத்தமில்லாமல், தங்களால் முடிந்த உதவியைப் (!) பிறருக்கு செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இரக்க குணம், ஒருவரை எப்படியெல்லாம் உயர்த்தும் என்பதை உணர்த்தும் கதை இது.

 

பிரிஸ்டன் (Preston) ... வடமேற்கு இங்கிலாந்திலுள்ள ஒரு நகரம். இரவு நேரம். அது ஒரு குளிர்கால மாதம். கடுமையான பனி நகரை நனைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயர், டொமினிக் ஹாரிஸன் பென்ட்ஸென் (Dominique Harrison Bentzen)... 22 வயது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி. அன்றைக்கு ஒரு நிகழ்வுக்குப் போய்விட்டு வந்திருந்தார். வீடு திரும்ப வேண்டும். அதற்கு டாக்ஸி வேண்டும். டாக்ஸிக்குக் கொடுக்கப் பணம் வேண்டும். அது மட்டும்தான் அவரிடம் இல்லை.

பெண்

அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு ஏ.டி.எம்-மின் முன்பாகத்தான் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவர் பர்ஸில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டைக் காணவில்லை. `இப்போது, இந்த இரவில் எப்படி வீட்டுக்குத் திரும்புவது... யாரிடம் உதவி கேட்பது?’ ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒருவர் அவரருகே வந்தார்.

``என்னம்மா... தனியா நின்னுக்கிட்டிருக்கே... ஏதாவது பிரச்னையா?’’

பென்ட்ஸென் கேள்வி கேட்டவரின் தோற்றத்தைப் பார்த்தார். கிழிந்து, அழுக்கேறிய உடை. எண்ணெய் காணாத தலை. சோர்ந்து, பரிதவித்துப் போயிருக்கும் முகம். `இவரிடம் எப்படி நம் பிரச்னையைச் சொல்வது... அப்படியே சொன்னாலும், இவர் மூலமாக உதவி கிடைக்குமா?’ என்று யோசித்தார்.

``சொல்லும்மா... என்ன பிரச்னை?’’ அவர் இப்போது அழுத்தமாகக் கேட்டார்.

இப்போது பென்ட்ஸெனுக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை... ``ஒண்ணுமில்லை. இங்கே ஒரு இடத்துக்கு வந்தேன். திரும்ப வீட்டுக்குப் போகணும். ஏ.டி.எம்-ல பணம் எடுக்கலாம். ஆனா, ஏ.டி.எம் கார்டை எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன்...’’

``அவ்வளவுதானே... சரி... நீ வீட்டுக்கு டாக்ஸியில போக எவ்வளவு ஆகும்?’’

``ஒரு... ஒரு... மூணு பவுண்ட் இருந்தா போயிடலாம்...’’

பண உதவி

அவர் தன் கையிலிருந்த டப்பாவை எடுத்து, அதிலிருந்த நாணயங்களை எண்ணிப் பார்த்தார். சரியாக மூன்று பவுண்ட் இருந்தன. சிரித்த முகத்தோடு, அவற்றை அப்படியே எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். பென்ட்ஸெனுக்கு அந்தப் பணத்தை வாங்க மனமேயில்லை. ஆனால், கொடுத்தவரின் குரலும் அவரின் உடல்மொழியும் வாங்கவைத்துவிட்டன. அந்த நபரே, அந்த வழியில் வந்த ஒரு டாக்ஸியை நிறுத்தி, பத்திரமாக அவரை ஏற்றியும்வைத்தார்.

பென்ட்ஸென் கிளம்புவதற்கு முன்பாக அவரிடம் கேட்டார்... ``உங்களை எங்கே பார்க்கலாம்?’’

அந்த மனிதர் சிரித்தபடியே சொன்னார்... `எனக்கென்ன... இந்த மாதிரி தெருவுலதான் சுத்திக்கிட்டு இருப்பேன். இந்தத் தெரு இல்லைன்னா, அடுத்த தெரு. ஈஸியா என்னைக் கண்டுபிடிச்சிடலாம்.’’

பென்ட்ஸென் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்தார். ஆனால், மனம் அடித்துக்கொண்டே இருந்தது. `சே... தெருவோரம் வசிக்கும் ஒருவருக்கு இத்தனை தயாள குணமா? இவருக்கு எப்படிக் கைமாறு செய்வது?’ இந்த யோசனையிலேயே அன்றைய இரவைக் கழித்தார். அடுத்த நாள் தன் நண்பர்களுடன் தனக்கு உதவி செய்த நபரைத் தேடிப் போனார். முதல் நாள் பார்த்த தெருவில் அந்த மனிதரை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அன்றைக்கு முழுக்க அலைந்து திரிந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக நான்கு நாள்களுக்குப் பிறகு அந்த நல்ல மனிதரைக் கண்டுபிடித்தார். அவருக்குப் பல மாதங்களாக வேலையில்லை என்பதையும், அதனால் தெருவோரத்தில்கிடக்கிறார் என்பதையும் அறிந்துகொண்டார்.

ரோட்டில் உறங்கும் மனிதர்

இணையதளத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லாப் பக்கங்களிலும் கதையைச் சொல்லி உதவி கேட்டார் பென்ட்ஸென். உதவி குவிந்தது... அவர் எதிர்பார்த்ததைவிட! கிட்டத்தட்ட 20,000 பவுண்டுகளுக்கு மேலாக, கதையைக் கேட்டவர்கள் கொடுத்திருந்தார்கள். இப்போது, தெருவில் கிடந்த அந்த மனிதர் ஒரு வீட்டின் உரிமையாளர்... அவருக்குப் பொருத்தமான ஒரு வேலையும் கிடைத்தது. அவர் உதவி செய்த 3 பவுண்ட் அவர் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது. தன் கையிலிருந்த கடைசிக் காசையும் செலவழித்தவருக்குக் கிடைத்த உரிய மரியாதை அது!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பொம்மைகளுக்கு துன்புறுத்தல் சோதனை

லண்டனில் உள்ள லெஸ்னி பொம்மை தயாரிப்பு நிறுவனம் அதன் பொம்மைகளை சோதிக்க ஒரு துன்புறுத்தல் அறையையே உருவாக்கி தரத்தை ஆய்வு செய்தது.

  • தொடங்கியவர்

புதிதாக உணவகம் திறந்துள்ள பாகிஸ்தான் நடுவருக்கு விராட் கோலி வாழ்த்து!

 

 
aleem_dar1xx

 

பாகிஸ்தானில் புதிதாக உணவகம் திறந்துள்ள பிரபல நடுவர் அலீம் தாருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடுவர்களில் பிரபலமாக உள்ளவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் (49). சமீபத்தில் அவர் சொந்தமாக ஓர் உணவகத்தை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டகிராம் வழியாக அலீமுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அலீம் அவர்களே, சமீபத்தில் நீங்கள் ஓர் உணவகத்தைத் திறந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நடுவராக நீங்கள் வெற்றிகரமாக உள்ளதுபோல உங்கள் உணவகமும் வெற்றியடையவேண்டும் என விரும்புகிறேன். இந்த உணவகம் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு காது கேளாதோருக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். உங்கள் எண்ணப்படி எல்லாம் நிறைவேறும். அனைவரும் அவருடைய உணவகத்துக்குச் சென்று உணவு அருந்தவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

எந்த இசையும்..... ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம்.

  • தொடங்கியவர்

மரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்!

 

 

உயர்ந்த ‘ஓக்’ மரம் ஒன்றை வெட்டிய தச்சர்கள் சிலர், இருபது வருடங்களுக்கு முன் எதேச்சையாக அந்த மரத்தில் சிக்கிக்கொண்ட நாயின் உயிரற்ற உடல் எவ்வித சேதமுமின்றி இருக்கக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

9_Stucky.JPG

‘ஸ்டக்கி’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய் அமெரிக்காவின் ஜோர்ஜியாவைச் சேர்ந்தது. 1980ஆம் ஆண்டு இந்த நாய் காணாமல் போனது. 

பிராணி ஒன்றைத் துரத்திச் சென்றபோது இந்த நாய், குறித்த மரத்தினுள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓக் மரத்தில் கசியும் ஒரு வித அமிலமானது அதன் சுற்றுப்புறத்தை ஈரப்பதன் அற்றதாக வைத்துக்கொள்ளும் என்பதால், சிக்கிக்கொண்ட ஸ்டக்கியின் தோலும் காய்ந்து கடினத்தன்மை பெற்றிருக்கிறது என்று, அதை ஆராய்ந்த வனத் துறையினர் கூறியுள்ளனர்.

10_Stucky.JPG

மரத்தின் உட்பகுதியில் ஈரப்பதன் மிகக் குறைவாக இருந்ததால், உயிரற்ற உடலில் இடம்பெறும் பௌதீக மாற்றமும் நிகழாமல், ஸ்டக்கியின் உடல், அமைப்பு ரீதியாக எவ்வித சேதமும் இன்றிக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஸ்டக்கி மரத் துண்டு தற்போது ஜோர்ஜியாவின் ‘வன உலகம்’ என்ற நூதன சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வடிவேலுவுக்கு...... ஒரு பெண் வாரிசு!!!
(அபர்ணா சுந்தரராமன் என்ற இந்தப்பெண்ணுக்கு இணையத்தளத்தில் 5 . 5 மில்லியனுக்குமேல் ரசிகர்கள் சேர்ந்துள்ளார்களாம்.-

  • தொடங்கியவர்
‘நம்பிக்கைத் துரோகம்’
 

image_28d733fa36.jpgநண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் சொல்லக்கூடாத இரகசியங்கள் இருந்தால், அதனை மறந்து விடுவதே நல்லது. மிகவும் நெருக்கமாகப் பழகிய போது பகிரப்பட்ட இரகசியங்களை, பின்னர் மனஸ்தாபம் ஏற்பட்டதும் சொல்லித் திரிவது அழகல்ல. இது கூட, ஒரு நம்பிக்கைத் துரோகம்தான்.

இன்னும் சிலர், ஒருவரது அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி விடுவேன் எனப் பயமுறுத்துவதுடன் பணம் பறிக்கும் கெட்ட காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

துர்ச்செயலைத் தங்களது உரிமை எனக் கருதி, தவறான மோசமான காரியங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற கோழைத்தனம், வேறொன்றும் இல்லை.

எவரையும் நம்பி, கண்டபடி உளறுதல் ஆபத்தானது. நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பதும் கடினம்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 08
 

1879: கனடாவில் நடைபெற்ற மாநாடொன்றில், உலக நியம நேரத்தை பின்பற்றுவது குறித்து ஸ்டன்போர்ட் பிளெமிங் முதல் தடவையாக முன்மொழிந்தார்.

1922: அமெரிக்க ஜனாதிபதி வாரன் ஹார்டிங், வெள்ளை மாளிகையில் வானொலியை அறிமுகப்படுத்தினார்.

1942:சிங்கப்பூர் மீது ஜப்பான் படையெடுத்தது.

1963: கியூபாவுக்கு அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்தல், கியூபாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளல் சட்டவிரோதமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி அறிவித்தார்.

1974:  ஸ்கைலாப் விண்கலத்தில் 84 நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் பூமிக்குத் திரும்பினர்.

1981: கிறீஸில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது சன நெரிசலில் சிக்கி 21 பேர் பலி.

1983: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின்மீது 320 மீற்றர் உயரமான தூசுமண்டலம் பரவியதால் நகரம் பகலிலும் இருளானது.

1989: போர்த்துக்கல் கரையோரத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 144 பேர் பலி.

2010: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

http://www.tamilmirror.lk

 

இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் நிறுத்தம் உடன்பாடு (பிப்.8- 2005)

 
அ-அ+

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே 2005-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டன. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. 1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர். 1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

 
 
இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் நிறுத்தம் உடன்பாடு (பிப்.8- 2005)
 
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே 2005-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. 1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர். 1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

‘டெடி பியர்’ பிறந்த கதை! - ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணின் சாதனை! #MotivationStory

 

கதை

ன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்! இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்; நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்; ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்’ என்கிறார் சீனாவின் பிரபல தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma). ஆதரவு கொடுக்க ஆள் இல்லை, கையில் பணமில்லை, உங்களை ஒரு மனிதராக அங்கீகரிக்கக்கூட ஒருவரும் இல்லை... இருந்துவிட்டுப் போகட்டும். உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதா? நீங்கள் நிச்சயம் சாதனை படைப்பீர்கள்! வரலாற்றுப் பக்கங்களில் உங்களுக்கும் ஓர் இடம் இருக்கும். அதை உறுதிப்படுத்துகிறது மார்கரெட் ஸ்டீஃப்-ன் (Margarete Steiff) இந்தக் கதை.

 

ஜெர்மனியின், ஜியென்ஜென் (Giengen) நகரத்தில், 1847-ம் ஆண்டு பிறந்தவர் மார்கரெட் ஸ்டீஃப். குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தை. மார்கரெட்டுக்கு ஒன்றரை வயது ஆனபோது ஒரு காய்ச்சல் வந்தது. கடுமையான ஜுரம். மிக மிக மெதுவாகத்தான் அவரால் அந்தக் காய்ச்சலிலிருந்து மீண்டுவர முடிந்தது. அதன் காரணமாக அவருக்கு ஏற்பட்டிருந்தது மிக மோசமான பாதிப்பு... போலியோ! இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. வலது கையை ஓரளவுக்கு மேல் தூக்கவே முடியவில்லை. அந்தக் காலத்தில் போலியோவுக்கு மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. 

மார்கரெட் ஸ்டீஃப்

மார்கரெட்டின் பெற்றோர் பதறிப்போனார்கள். காலம் முழுக்க ஒரு பெண் குழந்தை வீல்சேரில் வலம் வருவதை எந்தப் பெற்றோரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அன்றைய நாள்களில் ஒரு மனைவியாகவோ, ஒரு அம்மாவாகவோ தன் பங்கை நிறைவேற்ற இப்படிப்பட்ட போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் முடியுமா? மார்கரெட்டின் பெற்றோர் கலங்கிப்போய் நின்றார்கள். ஆக, அந்தப் பெண்ணுக்கு எதிர்காலமே இல்லை. இதுதான் எல்லோருக்கும் தெரிந்திருந்த ஒரே விடை! அந்த விடையை அசைத்துப் பார்த்தது காலம். 
மார்கரெட்டுக்குத் தன் மேல் நம்பிக்கையிருந்தது. `நோய்தானே... அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும்... நான் என் வேலையைச் செய்வேன்... என் வயதில், என் ஊரில், என் நண்பர்களில் யாரும் தொடாத உயரத்தை நான் அடைவேன்’ என்கிற லட்சிய வெறி அவருக்குள் ஊறிப்போயிருந்தது. பெற்றோரிடம் அடம்பிடித்துப் பள்ளியில் சேர்ந்தார். சராசரிக்கும் மேலான மதிப்பெண்களை வாங்கினார். அதோடு, மற்றவர்களோடு இணைந்து, அன்பாக வாழ்கிற அவருடைய சுபாவம் நிறைய நண்பர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது. 

பள்ளிப் படிப்பை முடித்தார் மார்கரெட். அடுத்து..? அவருக்கு தையல்கலையில் அதீத ஆர்வம். வீட்டில் பிரச்னை, பல கஷ்டங்கள்... அத்தனையையும் மீறி அடம்பிடித்து ஒரு தையல் பள்ளியில் சேர்ந்தார் மார்கரெட். `கால்களில் செயல்பாடில்லை; வலது கையை ஓர் அளவுக்கு மேல் உயர்த்தக்கூட முடியாது. இந்தப் பெண்ணால் ஊசியில் நூலைக்கூடக் கோர்க்க முடியாது’ இப்படித்தான் ஏளனமாக நினைத்தார்கள் பலர். அதையும் உடைத்தார் மார்கரெட். தான் விரும்பிய, தேர்ந்தெடுத்த துறையில் மிக அழுத்தமாக, அழகாகக் காலூன்றினார். ஆனால், ஒரு சிறந்த தையல்கலைஞராக அவருக்குப் பல வருடங்கள் பிடித்தன. அவர் நிகழ்த்தியது யாருமே செய்திராத சாதனை! 

மார்கரெட்டும் அவருடைய சகோதரியும் இணைந்து ஜியென்ஜென் நகரில் ஒரு தையற்கடையை ஆரம்பித்தார்கள். மார்கரெட்டின் திறமையால் அது ஒரு ரெடிமேட் துணிகளை விற்கும் கடையாக உயர்ந்தது. அதிலும், அவருடைய படைப்பாற்றல் கைகொடுக்க, நிறைய வாடிக்கையாளர்கள் கடையை மொய்க்க ஆரம்பித்தார்கள். 

ஸ்டீஃப் டெடி பியர்ஸ்

1880-ம் ஆண்டு மார்கரெட்டுக்கு ஒரு யோசனை வந்தது. `இப்படி வெறுமனே காலம் முழுக்க உடைகளைத் தைத்து, தயாரித்துக் கொடுக்க வேண்டுமா என்ன..? புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்கலாமே!’ அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு மரங்களால் அல்லது பீங்கானால் செய்த பொம்மைகள்தான் அதிகமிருந்தன. ஒரு குழந்தை நெஞ்சோடு வைத்து தாலாட்டி விளையாட, எளிதாகக் கையாள ஒரு பொம்மைகூட இல்லை. அப்படி ஒரு மென்மையான பொம்மையைத் தயாரித்தால் என்ன என்று நினைத்தார் மார்கரெட். உடனே துணியால், உள்ளே பஞ்சை அடைத்த ஒரு யானை பொம்மையைச் செய்ய ஆரம்பித்தார். அப்படிச் செய்த பொம்மைகளைத் தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தார். அந்த வீட்டிலிருந்த குழந்தைகளெல்லாம் அந்த பொம்மையை அள்ளிக்கொண்டார்கள். 
அவ்வளவுதான்... துணியும் பஞ்சும் சேர்ந்த விதவிதமான சிங்கம், எலி, புலி... உள்ளிட்ட பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்தார் மார்கரெட்.

நிறையப் பேர் விலைக்கு பொம்மையை வாங்கத் தயாராக இருந்தார்கள். பிறகென்ன... படிப்படியாக பொம்மைத் தயாரிப்புத் தொழில் வளர்ந்தது. மார்கரெட்டின் மகன் ரிச்சர்டு ஒரு பொம்மையை வடிவமைத்தார்... அதுதான் இன்றைக்கு உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகள் விரும்பும் டெடி பியர் (Teddy bear). ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்த மோரிஸ் மிக்டாம் (Morris Michtom) என்பவரும் அதேபோல ஒரு டெடி பியரை வடிவமைத்திருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டின் நினைவாக, அந்த பொம்மைக்கு `டெடி பியர்’ எனப் பெயர் அமைந்தது. 

1907-ம் ஆண்டு, மார்கரெட்டின் கம்பெனியில் 400 நிரந்தரப் பணியாளர்கள் இருந்தார்கள்; வீட்டிலிருந்து பொம்மைகள் செய்து கொடுக்க 1,800 பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் இருந்த ஆர்டர்... 9,74,000 பொம்மைகள்! பிறகென்ன... ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார் மார்கரெட். வியாபாரம் சக்கைபோடு போட்டது. தன்னுடைய முதுமைக் காலத்திலும், அவரால் நடமாட முடிந்த வயதில் எல்லா பொம்மைகளையும் சரிபார்த்து அனுப்பும் வேலையைச் செய்துகொண்டிருந்தார் மார்கரெட். மிக உயர்ந்த தரத்திலான பொருள்களைக் கொண்டுதான் அவர் பொம்மைகளைத் தயாரித்தார். பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதை ஒரு லட்சியமாகவே வைத்திருந்தார். 

ஸ்டீஃப் டெடி பியர்ஸ்

 

தன்னுடைய 62-ம் வயதில் இறந்துபோனார் மார்கரெட். ஆனால், அவர் தொடங்கிய `ஸ்டீஃப் டெடி பியர்ஸ்’ (Steiff teddy bears) நிறுவனம் இன்றைக்கும் லண்டனில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விண்வெளியில் பட்மிண்டன் விளையாடிய விண்வெளி வீரர்கள் ( வீடியோ இணைப்பு)

 

முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பட்மிண்டன் போட்டி நடைபெற்றுள்ளமையானது  அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

online_New_Slide__3_.jpg

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பட்மிண்டன் விளையாடியுள்ளனர்.

நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்கு வெளியே பட்மிண்டன் விளையாடியது இதுவே முதல்முறையாகும்.

இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர்,

"விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்' என கூறியுள்ளார்.

மேலும் இது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

அம்மன் கனவில் சொன்னதால் சுடிதார் அலங்காரம் செய்தேன்: குருக்கள்

தமிழகத்தில், அம்மன் சிலைக்கு சுடிதார் அலங்காரம் செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட குருக்கள், அம்மன் தனது கனவில் வந்து கூறியதால்தான் அவ்வாறு அலங்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அம்மன் சிலை

இதுகுறித்து, ஆலய நிர்வாகத்துக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு அவருக்கு ஆறு கால பூஜை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இம் மாதம் 2-ஆம் தேதி அன்று அம்மனை தரிசிக்க வந்தவர்கள், அம்மன் நவீன சுடிதார் உடையுடன் சந்தன காப்பு அலங்காரத்தில் இருந்ததைக் கண்டனர்.. இதனை கண்ட பக்தர்கள் ருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து ராஜு மற்றும் கல்யாண் குருக்கள் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஆதீன நிர்வாகம் உத்தரவிட்டது.

அம்மன் சிலைக்கு சுடிதார் அலங்காரம்

இந்த நிலையில் ராஜு அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்தது குறித்து ஆதீன கட்டளையரான அம்பலவாண தம்பிரான் கூறும்போது, " ஆகம விதிகள் ஒவ்வொரு கோயிலுக்கும் மாறுபடும். அந்த வகையில் ராஜு குருக்கள் இதற்கு முன்பு சென்னையில் பணியாற்றியுள்ளார். அங்கு இது போன்ற பூஜை முறைகள் நடப்பது போல இங்கும் அம்பாளை குழந்தையாக பாவித்து சுடிதார் அலங்காரமிட்டு பூஜை செய்து விட்டார். இது குறித்து ஆதீன நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததால் அவருக்கு பணி நீக்க ஆணை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஏன் இவ்வாறு செய்தார் என விளக்கம் கேட்டும், 90 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது என்றார்.

குருக்கள்

திருவிடை மருதூர் மணிகண்ட குருக்கள் கூறுகையில், " ஆகம விதிகளை மீறி இரண்டு குருக்களும் செயல்பட்டது குற்றம். மயூரநாதர் கோயில், அபயாம்பிகை அம்மன் சன்னதி ஆகம விதிமுறைப்படி பூஜையில் ஈடுபடாமல் சுடிதார் அலங்காரம் செய்தது தவறு. இதனை நிவர்த்தி செய்ய ஆதீன நிர்வாகத்தால் ஆகம முறைப்படி பரிகாரம் செய்வோம். மேலும் இதுபோன்று நடக்கா வண்ணம் பணிபுரியும் அனைத்து குருக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இச்சம்பவம் குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜு குருக்கள் பிபிசி தமிழிடம் பேசும்போது, " சென்னையில் தனியார் நிர்வாக ஆலயத்தில் பணிபுரிந்த போது அம்பாளுக்கு பலவித அலங்காரங்கள் செய்துள்ளேன். மயூரநாதர் சன்னதியில் பணியில் சேர்ந்த பிறகு என் கனவில் அபயாம்பிகை அம்மன் வந்து கூறியதாலே நான் சுடிதார் அலங்காரம் செய்தேன். இது தவறென்று என்னை பணி நீக்கம் செய்துவிட்டார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். விரைவில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை ஆதின நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளேன்" என்று கூறினார்.

http://www.bbc.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.