Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘அன்பின் பயணம் நிறுத்தப்படுவதில்லை’
 

image_953d5388a6.jpgதன்னைச் சுற்றியுள்ள உறவுகளைச் சந்தோசப்படுத்தாமல், அவர்களை வெறுத்து, ஒதுக்கும் போதுதான், வெறுமை குடிகொள்கின்றது. பிறரை வெறுத்துக் கொண்டால், களையிழந்த நிலைதான் ஏற்படும்.

அன்பின் பயணம்  நிறுத்தப்படுவதேயில்லை. இது, தொடர்ந்தும் பல உரிமையுள்ள அன்பர்களை உருவாக்கிய படியே இனிமை சேர்க்கும்.

நல்லவர்கள், எவரையும் கலவரப்படுத்த மாட்டார்கள். சந்தோசமாக வாழ, மன அழுத்தங்களைப் பிரயோகிக்கும் எதிர்மறைக் குணங்களைக் கொண்டவர்களுடன்  விவாதிப்பதைத் தவிர்ப்பதே உத்தமம்.

கேலிக்குக்கூட ஒருவரைத் துயரூட்டும் காரியங்களைத் தவிர்த்திடுக. நாங்கள் படும் சின்ன வேதனையை, ஏற்றுக் கொள்ளாதிடத்து, மற்றவரை துன்பமூட்டுதல் எப்படிச் சரியானதாக அமையும்.

எவருக்கும் நாம் எதிரிகள் அல்லர். அதுபோல், எம்மையும் நாம் நல்ல தோழனாக்குவோம். எம்மைவிட, நல்லவரைத் தேடுவோம்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1986: சுவீடன் பிர­தமர் ஓலொஃப் பால்மே சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 28

 

1710 : சுவீ­டனில் ஆக்­கி­ர­மிப்பு முயற்­சியில் ஈடு­பட்ட டென்மார்க் படைகள் ஹெல்­சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவி­டியப் படை­களால் தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.

1784 : ஜோன் வெஸ்லி மெத­டிஸ்த திருச்­ச­பையை ஆரம்­பித்தார்.

1844 : யூ.எஸ்.எஸ். பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்­தப்­பட்ட துப்­பாக்கி வெடித்துச் சித­றி­யதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெ­ரிக்க அமைச்­சர்கள் இருவர் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டனர்.

1854 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் குடி­ய­ரசுக் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

Swedish-Prime-Minister-Olof-Palme-varala1897 : மட­கஸ்­காரின் கடைசி அர­சி­யான மூன்றாம் ரன­வ­லோனா பிரெஞ்சுப் படை­க­ளினால் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

1922 : எகிப்தின் சுதந்­தி­ரத்தை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.

1928 : இந்­திய விஞ்­ஞானி சி.வி. ராமன், “ராமன் விளைவை” கண்­டு ­பி­டித்தார்.

1935 : அமெ­ரிக்க விஞ்­ஞானி வொலஸ் கரோ­தேர்­ஸினால் நைலோன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1942 : இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் யூ.எஸ்.எஸ் ஹுஸ்டன் என்ற கப்பல் இந்­தோ­னே­ஷி­யாவின் சுந்தா நீரி­ணையில் இடம்­பெற்ற போரில் ஜப்­பா­னினால் மூழ்­க­டிக்­கப்­பட்­டதில் 693 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1947 : தாய்­வானில் அர­சுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறி­ய­டிக்­கப்­பட்­டது. 30,000 பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர்.

1953 : ஜேம்ஸ் வட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டி.என்­.ஏயின் இர­சா­யன அமைப்பைக் கண்­டு­ பி­டித்­த­தாக அறி­வித்­தனர்.

1958 : அமெ­ரிக்­காவின் கென்­டக்கி மாநி­லத்தில் பாட­சாலைச் சிறு­வர்­களை ஏற்றிச் சென்ற பஸ், லொறி ஒன்­றுடன் மோதி ஆற்­றுக்குள் வீழ்ந்­ததில் 26 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1975 : லண்­டனில் மூர்கேட் ரயில் நிலை­யத்தில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 112 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1986 : சுவீடன் பிர­தமர் ஓலொஃப் பால்மே, ஸ்டொக்ஹோம் நகரில் நள்­ளி­ரவில் தனது மனை­வி­யுடன் திரை­ய­ரங்­கி­லி­ருந்து வீடு நோக்கி நடந்து சென்­ற­போது சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1991 : முதலாம் வளை­குடாப் போர் முடி­வுற்­றது.

1998 : கொசோ­வோவில் கொசோவோ விடு­தலை இரா­ணு­வத்தின் மீது சேர்­பியக் பொலிஸார் பாரிய தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.

2002 : இந்­தி­யாவின் அஹ­ம­தா­பாத்தில் இடம்­பெற்ற மதக் கல­வ­ரத்தில் 55 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2007 : புளூட்­டோவை நோக்கி ஏவப்­பட்ட நியூ ஹரைசன்ஸ் தானி­யங்கி விண்­கலம் வியா­ழனை அண்மித்தது.

2012 : ஈராக்கின் அல் ஹிலாஹ் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 127 பேர் உயிரிழந்தனர்.

2013 : பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

வாழ்க்கை, காதோடு பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? - சிறுவன் பாடமெடுத்த கதை! #FeelGoodStory

 
 

கதை

`நாம் நாள்களை நினைவில் வைத்திருப்பதில்லை; தருணங்களைத்தான் நினைவில் வைத்திருக்கிறோம்’ - அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் இத்தாலியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் செசாரே பாவேஸே (Cesare Pavese). ஆனால், நம்மில் பலர் அப்படிப்பட்ட வாழ்வின் மிக முக்கியமான அனுபவங்களை, மகத்தான தருணங்களை நழுவவிட்டு விடுகிறோம். `வேகம், வேகம், மேலும் வேகம்...’ என்கிற எழுதப்படாத மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, விரைந்துகொண்டேயிருக்கிறோம். அந்த வேகத்தில், வாழ்க்கை நம் ஆன்மாவிடம் முணுமுணுப்பதை, இதயத்துடன் பேசுவதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அப்படிக் கவனிக்காமல் விடும்போது சில நேரங்களில் நம் மேல் கல் ஒன்று வீசியெறியப்படலாம். ஆக, நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, வாழ்க்கை நம்மோடு பேச முற்படும்போது, அதற்கு செவி கொடுப்பது அல்லது நம் மேல் கல் வந்து விழும்வரை காத்திருப்பது. இந்த யதார்த்தத்தை எடுத்துச் சொல்லும் கதை இது.

 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரம், மாலை நேரம். அந்த இளைஞன் ஓர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பிலிருப்பவன். புதிதாக ஒரு கார் வாங்கியிருந்தான். அலுவலகம் முடிந்து, திரும்பிக்கொண்டிருந்தான். அன்று இரவு ஒரு பார்ட்டிக்கு அவன் போகவேண்டியிருந்தது. காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரிய கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதையும், அவன் தன் கையில் எதையோ மறைத்து வைத்திருப்பதையும் பார்த்தான். காரின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்தான். அந்தச் சிறுவனைப் பார்த்தபடியே காரை ஓட்டினான். அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருக்கும் இடம் நெருங்கியதும், எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்து கார் கண்ணாடியில் விழுந்தது. கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இளைஞன் பதறிப் போனான். அந்தக் கல்லை எறிந்தது அந்தச் சிறுவன்தான் என்பதையும் யூகித்தான்.

கார்

`நல்லவேளை... பதற்றத்தில் கார் எங்கேயாவது மோதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அந்தக் கல் என் மேல் விழுந்து அடிபட்டிருந்தால்..?’ நினைக்க நினைக்க அந்த இளைஞனுக்குக் கோபம் எழுந்தது. அந்தச் சிறுவனை ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. காரைப் பின்னோக்கிச் செலுத்தி, அந்தச் சிறுவன் நின்றிருந்த கட்டடத்துக்கு அருகே வந்தான். காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, அவசரமாக இறங்கினான். சிறுவனைத் தேடினான். சிறுவன் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். இளைஞன் ஓடிப் போய் அவனைப் பிடித்தான்.

``என்னடா இது... எதுக்கு என் கார் மேல கல்விட்டு எறிஞ்சே... ஏன் அப்படி செஞ்சே... சொல்லு?’’ என்றபடி அடிக்கக் கையை ஓங்கினான்.

சிறுவன் பயந்துபோய் இளைஞனைப் பார்த்தான். அவன் கை விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அமைதியான, கெஞ்சும் குரலில் இப்படிச் சொன்னான்... ``மன்னிச்சுக்கங்க சார்... தெரியாம பன்ணிட்டேன்... எனக்கு வேற வழி தெரியலை. இந்தப் பக்கமா போன எத்தனையோ கார்களைக் கை நீட்டி நிறுத்திப் பார்த்துட்டேன், சத்தம் போட்டுக் கூப்பிட்டுப் பார்த்துட்டேன். ஒருத்தர்கூட காரை நிறுத்தலை. அதான் என்ன செய்யறதுனு தெரியாம கல்லை எடுத்து வீசிட்டேன்...’’

இப்போது சிறுவனின் கண்களில் வழிந்த கண்ணீர், அவன் கன்னங்களில் இறங்கி வழிந்தது. அவன், அந்த பார்க்கிங் பகுதியில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான்... ``அங்கே... அங்கே... என் அண்ணன் கீழே விழுந்துட்டான். அவனுக்கு நல்லா அடிபட்டிருக்கு... என்னால அவனைத் தூக்க முடியலை... அதான் கல்லை எடுத்து எறிஞ்சுட்டேன்...’’ என்ற சிறுவன் தேம்பியபடியே சொன்னான்... ``கொஞ்சம் உதவி செய்ங்க சார்... கீழே விழுந்ததுல அவனுக்கு நல்ல காயம்... ரொம்ப கனமா வேற இருக்கான்...’’

சிறுவன்

இளைஞன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான். சிறுவன் காட்டிய திசையில் அவனுடன் நடந்தான். அங்கே ஒரு சக்கர நாற்காலி ஒருபுறம் கிடக்க, மற்றொரு புறம், சிறுவனின் அண்ணன் கிடந்தான். கொஞ்சம் குண்டான உடல்வாகுகொண்ட மாற்றுத்திறனாளிச் சிறுவன். அந்தக் கட்டடத்தின் சற்று உயரமான விளிம்பில் அவன் தன் வீல்சேரில் போயிருந்தபோது விழுந்துவிட்டதாகச் சிறுவன் சொன்னான்... அந்த இடத்தையும் காட்டினான்.

இளைஞன், சிறுவனின் அண்ணனைத் தூக்கினான். சக்கர நாற்காலியில் அவனை உட்காரவைத்தான். தன் கார் நிற்குமிடத்துக்கு ஓடி, அவன் அதில் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தான். சிறுவனின் அண்ணனுக்கு ஏற்பட்டிருந்த காயங்களிலும், சிராய்ப்பிலும் மருந்து தடவினான்.

``இது ஃபர்ஸ்ட் எய்டுதான் தெரியுமில்லை... வீட்டுக்குப் போனதும் உன் அப்பாகிட்ட சொல்லி, இவனை ஏதாவது ஒரு கிளினிக்குக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லு! சரி, உங்க வீடு எங்கே இருக்கு/’’

``பக்கத்துலதான் சார்... இனி நாங்க போயிடுவோம். ரொம்ப தேங்க்ஸ் சார்... காட் பிளஸ் யூ!’’ என்ற சிறுவன், அண்ணன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை மெதுவாகத் தள்ளிக்கொண்டு போனான்.

மாற்றுத்திறனாளிச் சிறுவன்

இளைஞன் காருக்குத் திரும்பினான். காருக்கு பலமாகத்தான் சேதம் ஏற்பட்டிருந்தது. அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதைச் சரிசெய்துவிடலாம். ஒரு சிறுவனுக்கு உதவி செய்ய முடிந்ததே என்கிற எண்ணம் அவனுக்கு ஒரு நிறைவைத் தந்திருந்தது. அதோடு, அன்றைக்குக் கற்றுக்கொண்ட பாடத்தை மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான்... `வாழ்க்கை முழுக்க வேகமெடுத்து ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது. தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக யாராவது தன் மீது கல்லை எடுத்து வீசினாலும் வீசுவார்கள்!’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

`நேரலையில் வார்த்தைப் போரில் ஈடுபட்ட செய்தி வாசிப்பாளர்கள்!’ - வைரல் வீடியோ

 
 

பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள் இருவர், வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. 

Pakistan_09448.jpg

 

Photo Credit: Facebook/MediaLive

லாகூரிலிருந்து செயல்படும் சிட்டி 42 என்ற செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆண் மற்றும்  பெண் செய்தி வாசிப்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த 30 விநாடி வீடியோ, ` என்னிடம் எதுவும் பேச வேண்டாம். இவருடன் நான் எப்படி செய்தி வாசிக்க முடியும்’ என அந்த ஆண் செய்தி வாசிப்பாளர், பெண் செய்தி வாசிப்பாளரைக் குறிப்பிட்டு தயாரிப்புக் குழுவிடம் உருது மொழியில் குறைகூறுவது போல தொடங்குகிறது. அதற்கு, `நான், நீங்கள் பேசும் முறையைக் குறிப்பிட்டேன். மரியாதை கொடுத்துப் பேசுங்கள்’ என்று அந்த பெண் செய்தி வாசிப்பாளர் பதிலளிக்கிறார். ’நான் எப்படி உங்களை மரியாதைக் குறைவாக நடத்தினேன்’ என்று ஆண் செய்தி வாசிப்பாளர் கேட்க, ‘மரியாதை தெரியாதவர்’ என்று அந்தப் பெண் முணுமுணுக்கிறார். கோபத்தில், ‘அவரை வார்த்தையை அளந்து பேசச் சொல்லுங்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் வீடியோ பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறாதா’ என்று அந்த ஆண் செய்தி வாசிப்பாளர் கூறியதுடன், அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவிவருகிறது.

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பொம்மைகளின் கதை: பொம்மைகளில் இறங்கும் முன்னோர்கள்

 

28chsujKachinadollsjpg

வட அமெரிக்காவிலுள்ள அரிசோனாவைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் பெயர் ஹோபி. இறந்து போன தங்கள் மூதாதையர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காகச் செய்த பொம்மைகள்தான் கச்சினா. இந்தப் பொம்மைகளின் வழியாக மேல் உலகத்திலிருக்கும் முன்னோர்களிடம் பேசி மழையையும் நல்ல அறுவடையையும் வரமாகப் பெறுவதற்காக இந்தப் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.

குளிர் காலமான ஜூலை மாதம் நடுவில் ஒரு சடங்கு வைத்து கிராமத்திலுள்ள குழந்தைகளுக்குக் கச்சினா பொம்மைகள் அளிக்கப்படுகின்றன. அதை ஆசையோடு வாங்கிச் செல்லும் குழந்தைகள் தங்கள் வீட்டின் சுவர்களில் கச்சினாக்களைத் தொங்கவிடுகின்றனர். தங்கள் முன்னோர்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கற்பிக்கக்கூடிய முதல் ஆசிரியர்களாக இந்தக் கச்சினா பொம்மைகள் விளங்குகின்றன. மான், கரடி, பசு போன்ற விலங்கு கச்சினா பொம்மைகளும் உண்டு.

18-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கச்சினா பொம்மைகள் மூலம்தான் வெளியுலகுக்கு அவை அறிமுகமாகின. மிக எளிய வடிவமைப்பு, குறைந்த வண்ணங்களுடன் அந்தப் பாரம்பரிய பொம்மைகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. காய்கறி நிறமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் இதற்குப் பூசப்படுகிறது.

shutterstock522837916%20copy

1910 முதல் 1930 வரை செய்யப்பட்ட கச்சினா பொம்மைகளில் அலங்கார வேலைப்பாடுகளுடன், அந்தக் கால வாழ்க்கையையும் நமக்குக் காட்டுவதாக உள்ளன. அதற்குப் பிறகு செய்யப்பட்ட கச்சினா பொம்மைகள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தன. கை, கால்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்டன. தலையில் அபூர்வப் பறவைகளின் சிறகுகளும் செவ்விந்தியப் பழங்குடிகளின் தலைகளில் இருப்பதைப்போல் அலங்காரமாகச் சூட்டப்பட்டன.

ஒவ்வொரு கச்சினா பொம்மையின் உருவம், நிறம், வடிவமும் ஹோபி மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாறு, வாழ்க்கை முறையைச் சொல்வதாக உள்ளன. கச்சினா பொம்மையின் கண்களுக்குக் கீழே இரண்டு கோடுகள் வரையப்பட்டிருந்தால் அது வீரன் பொம்மை என்று அர்த்தம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பரிணாம வளர்ச்சியா, பரிதாப வீழ்ச்சியா... அறிவியல் படும் பாடு! #NationalScienceDay

 
 

"நான் தெளிவாகப் பேசுகிறேன். உடைத்துப் பேசுகிறேன். பயமின்றிப் பேசுகிறேன். அவர்கள் என்னை அதற்காக வெறுக்கிறார்கள். நான் உண்மையைப் பேசுகிறேன் என்பதற்கு அவர்களின் வெறுப்பே சாட்சி!" - சாக்ரடீஸ் 

ஏர்செல்

 

டீடீடீடீடீடீடீடீடீ...

சென்ற வாரம் இந்த ஒலியைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. ஏர்செல் மொபைல்களுக்கு கால் செய்த அனைவரும் இதைக் கேட்டு வெறுத்துப் போயிருப்பார்கள். ஆங்கிலத்தில் 'Black Out', 'Wash Out' என்பதுபோல ஓர் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது சோகம். முக்கியமான பணிகளில் மாட்டி, இன்று வீட்டிற்கு வர நேரமாகும் எனத் தகவல் தர, வீட்டில் இருக்கும் ஒரேயொரு மொபைலைத் தொடர்புகொள்ள நினைத்தபோது டீடீடீ... ஒலிதான் ஒலித்தது. பலர் வெறுத்துப்போய், டவர் வந்தவுடன் ஏர்டெல்லுக்கு மாறுவதாய் கற்பூரம் அடித்து சத்தியம் எல்லாம் செய்தனர்.

"என்னத்த டெக்னாலஜியோ, என்ன சயின்ஸோ!" என்று ஆரம்பித்த அறிவியல் ரீதியான வசைகள், "பாவம், நிதியில்லையாம்!" என்ற பரிதாபப் பொருளாதாரப் பேச்சுகளில் போய் முடிந்தது. உடனே ஏர்செல்லுக்கு ஆதரவாக, "என்ன இருந்தாலும், நம்மூர்க்காரன்!" என்பது போல சமூக வலைதளங்களில் பதிவுகளும், மீம்ஸ்களும் தெறித்தன. "எல்லாம் அந்த ஜியோ நெட்வொர்க்காரன் பண்ணது" என்று அரசியலும் பேசினார்கள். அதைப்பற்றிப் பேசி அலுத்துப் போகவும், பிரபல நடிகையின் இறப்புச் செய்தி வரவும் சரியாக இருந்தது. முதல் நாள், அவரின் நினைவலைகள் குறித்தும், அவரின் நடிப்பைக் குறித்தும் சிலாகித்தவர்கள், அடுத்த நாள் அடித்தனர் பல்டி. இறந்தவர் உடலில் 'ஆல்கஹால்' இருப்பதாகச் செய்திகள் வர, "இதுக்குத்தாம்பா பொண்ணுங்க சரக்கடிக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று கலாசாரக் காவலர்களாக ஆகிப்போயினர். ஏதோ, குடியால் ஆண்கள் இறக்காதது போலவும், பெண் என்றால் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் இறக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருப்பது போலவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

உண்மையோ பொய்யோ, சரியோ தவறோ, அபத்தமோ நியாயமோ, இன்றைய காலகட்டத்தில், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளை பரிமாற, ஒரு குரலை, ஒரு மேடையைக் கொடுத்திருப்பது தொழில்நுட்பம்தான். இது செய்த ஒரே நல்ல காரியம், ஒருவரின் அசல் நிறத்தை, அவரின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதுதான். "உன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் சொல்லு, நீ எப்படிப்பட்டவனென்று தெரிஞ்சுக்கலாம்" என்று புது பொன்மொழி ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்ப டவரில் நின்றுகொண்டு, தொலைநோக்குப் பார்வை பார்த்தது போதும் என இறங்கி, அறிவியல் மேடையில் ஏறினால் அங்கே களைகட்டுகிறது இதைவிட ஒரு பெரிய திருவிழா!  

சமூக வலைத்தளம்

"டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல் ரீதியாகத் தவறானது. நிரூபிக்கப்படாத ஒன்று. அதை கல்விப் பாடத்திலிருந்து நீக்க வேண்டும். மாற்றம் கொண்டுவர வேண்டும். மனிதன் எப்போதும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு, மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் குறிப்பிடவில்லை, யாரும் அப்படியொரு நிகழ்வைப் பார்த்ததாகக் கூறவில்லை" - அமைச்சர் சத்யபால் சிங்க்

“ப்ரோ! இங்க நாம அறிவியலுக்காகப் போராடிட்டு இருக்கும்போதே அங்கே எங்க கல்லூரியில பகவத் கீதையில நிறைய அறிவியல் விஷயங்கள் இருக்குனு செமினார் ஒண்ணு நடந்துட்டு இருக்கு. இதான் இன்னைக்கு நம்ம நாட்டோட நிலைமை” - சென்னை 'March For Science' பேரணியில் பேசிய சென்னை ஐஐடி மாணவர் அர்ஜுன்.

“மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன. பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கும் தெய்வீகப்பறவை அது. இந்துக்களின் புனித நூலில் ஒன்றான பகவத் புராணத்தில் இந்தத் தகவல் உள்ளது. மேலும், இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.”- நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா

"மிருகங்களில், பசு மாடுகள் மட்டுமே, கார்பன்டைஆக்ஸைடை எடுத்துக்கொண்டு,  உயிர்க்காற்றான ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன."  

"நியூட்டனுக்கு முன்பாகவே, புவி ஈர்ப்பு விசைக் குறித்து கண்டறிந்தவர் நம் இரண்டாம் பிரம்மகுப்தர்!" - ராஜஸ்தான் கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவானி

"அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் நாம்."

"விமானம் கண்டுபிடிக்கப்படும் முன்பாகவே, புஷ்பக விமானங்கள் வைத்து இங்கே பறந்துள்ளனர். அது மாட்டுச் சாண எரிவாயுவால் இயங்கக் கூடியது."

இன்னும் இன்னும் பின்னே போனால், மேலும் பல கருத்துகளை நம்மால் இங்கே தொகுக்க முடியும். அனைத்தும் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் மனிதர் உதிர்த்த முத்துக்கள் அல்லது ஓர் அரசு அமைப்பின் ஒட்டுமொத்தக் கருத்து. அறிவியல் ஆதாரமற்ற விஷயங்களை உண்மைக் கருத்தாக முன்னிறுத்த, பொய்யான முலாம் பூசி பொதுவில் வைப்பதுதான் தற்போது ஒரு மிகப்பெரிய ட்ரெண்டாக இருக்கிறது. அதை உண்மை என்று எண்ணிப் பெருமைப்பட்டுகொள்ளும் கூட்டமும் இருப்பதுதான் சோகமான விஷயம். ஆனால், நம்மிடமும் பிரச்னை இருக்கிறது. அறிவியல் போன்ற ஒரு துறையில் ஒரு பெரிய பொறுப்பில் உட்கார எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறதா என்பது விவாதத்திற்கான கேள்வியே.

அறிவியல் ஆராய்ச்சி

ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனிதருக்கு உணவு கொடுக்க மறுத்து, அவரையே கொன்ற கதைகள் இங்கே இருக்கும்போது, அவர்களுக்குக் கல்வி, அறிவியல் எனக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை நாம் எப்போது கொடுக்க போகிறோம் என்ற கேள்வி எழாமல் இல்லை. சமூக நீதி புரியாமல் சிக்கித்தவிக்கும் மனிதர்கள்தானே நாம்? மற்ற இனம், சாதியைக்கூட விட்டு விடுங்கள். நம் வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்காவது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா? அதிகபட்சமாக ஏதாவது ஒரு டிகிரி. பதின்பருவம் தாண்டிய சில மாதங்களிலேயே திருமணம். அதன் பிறகு சொந்தமாக ஒரு கனவுகூட  காண முடியாத வாழ்க்கை. கணவன் வீட்டில் அனுமதித்தால், மேற்கொண்டு படிக்கலாம், வேலைக்கும் போகலாம். எல்லாருக்கும் அப்படி இல்லை என்றாலும், பலருக்கு இப்படித்தானே வாழ்க்கை அமைகிறது? விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஒரு பெண் குழந்தை குதித்தால், எத்தனை பெற்றோர்கள் அவளைத் தூக்கி ஏணியில் ஏற்றுவார்கள்? விடை தெரியாது.

 

அது சரி. இன்று தேசிய அறிவியல் தினம். பொதுவாக, ஓர் ஆளுமையின் நினைவாகத்தான் தினங்கள் அறிவிக்கப்படும். ஆனால், ஒருவரின் கண்டுபிடிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் தினம் இதுவாகத்தான் இருக்கும். ராமன் எஃபெக்ட் (Raman Effect) என்று பெயர்பெற்ற... அட அந்த வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே! அது முக்கியமில்லை. மேலே கூறியவற்றை இன்னொரு முறை படித்துக்கொள்ளுங்கள்.

https://www.vikatan.com

 

 

 

பிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்- நம் காலத்தின் நியூட்டன்!

 

 
27chnvkarvind1jpg

‘அறிவியலின் ரகசியங்கள் எல்லாம் இருளில் கிடந்தன. நியூட்டன் வந்தார். எல்லாம் வெளிச்சம் பெற்றன’ என்பார்கள். அரவிந்த் குப்தாவை, ‘நம் காலத்தின் நியூட்டன்’ என்று நிச்சயமாகச் சொல்லலாம். அறிவியல், என்பது சமன்பாடுகளாகவும் கோட்பாடுகளாகவும் மாணவர்களை மிரட்டிக்கொண்டிருந்த காலத்தில், நாம் குப்பை என்று ஒதுக்கும் பொருட்களிலிருந்து அழகான பொம்மைகள் செய்து, அவற்றின் மூலம் அறிவியல் விதிகளை எளிமையாக மாணவர்களுக்குக் கடத்திவந்தவர்/வருபவர், அரவிந்த் குப்தா.

   

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘அறிவுக் கடத்தி’யாக இருந்துவரும் அரவிந்த் குப்தாவுக்கு, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு தன்னைக் கவுரவித்துக்கொண்டுள்ளது. புனே நகரத்தை வாழ்விடமாகக் கொண்டவர், கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் வசித்துவருகிறார். தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு, அவரின் இல்லத்தில் சந்தித்தோம்…

 

அம்மா தந்த கல்வி

“நான் இன்று கல்வி அறிவு பெற்றிருப்பதற்குக் காரணம் என் பெற்றோர்கள்தாம். குறிப்பாக, என் அம்மா படிக்காதவர். அப்படிச் சொல்வதைவிட, கல்வி அறிவு பெறுவதற்கான வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்படவே இல்லை என்பதுதான் சரி. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிக்குச் செல்ல பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படியிருந்த சூழலில், என்னையும் என் கூடப் பிறந்தவர்களையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற தாகம் அவருக்குள் இருந்தது.

ஏனென்றால், அவருடைய சகோதரர் அப்போது பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். அதனால் என் அம்மாவுக்குக் கல்வியின் மதிப்பு நன்றாகவே தெரிந்திருந்தது” என்று சொல்லிவிட்டு, தன் பால்ய கால நினைவுகளில் மூழ்கினார்.

உபயோகமில்லாத பொருட்களைக் கொண்டு பொம்மைகள் செய்யும் திறமையைச் சிறுவயது முதலே பெற்றிருந்த அரவிந்த் குப்தா, படிப்பிலும் சிறந்து விளங்கினார். அகில இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் 218-வது இடத்தைப் பெற்றார். வட இந்தியாவில் அப்போது அவர் 28-வது ரேங்க். இதனால் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்தது.

27chnvkarvind3JPG

“இடம் கிடைத்தாலும், கவுன்சலிங்கில் என்ன படிப்பைத் தேர்ந்தெடுப்பதென்று தெரியவில்லை. எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. எனவே, எனக்கு முன்னால் கவுன்சலிங் முடித்துவிட்டு வந்தவர்களை எல்லாம் ‘நீங்கள் எந்தப் பாடத்தைத் தேர்வு செய்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்களில் பெரும்பாலானோர், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் என்றார்கள். ஆகவே, நானும் அந்தப் பிரிவையே எடுத்தேன்” என்பவர், தனது கல்லூரிப் படிப்பு முழுவதையும் கல்வி உதவித் தொகையிலேயே முடித்தார்.

 

உத்வேகம் தந்த உரைவீச்சு

பிரபல அறிவியலாளர்கள் பேராசிரியர் சி.என்.ராவ், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘ஸ்பீக்கிங் ஆஃப் சயின்ஸ்’ எனும் தொடரை எழுதிவரும் டாக்டர் பாலசுப்பிரமணியன் போன்றோர் ஐ.ஐ.டி.யில் அரவிந்த் குப்தாவுக்கு ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

“ஒரு முறை, பேராசிரியர் அனில் சடகோபாலை எங்களிடையே உரையாற்ற அழைத்திருந்தார்கள். அனில் சடகோபால் நாடறிந்த பேராசிரியர். கலிஃபோர்னியாவில் உயிரி வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும், அதை ஒதுக்கிவிட்டு, கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக ‘கிஷோர் பாரதி’ எனும் அமைப்பை மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் எனும் கிராமத்தில் நடத்தி வந்தார்.

அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட நான், அவரைப் போல் கிராமப்புற மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் துப்புரவாளர்கள், சமையல்காரர்கள் போன்றோரின் குழந்தைகள் படிப்பதற்காக எங்களுடைய வளாகத்தில், ‘ஆப்பர்சூனிட்டி ஸ்கூல்’ என்ற ஒரு பள்ளி நடத்தப்பட்டு வந்தது. என்னுடைய ஓய்வு நேரத்தில், அங்கிருக்கும் மாணவர்களுக்கு நான் பாடங்கள் சொல்லித் தந்தேன்.

அந்த ஐ.ஐ.டி.க்கு அருகிலிருந்த நான்காரி எனும் கிராமத்திலிருந்தும் மாணவர்கள் என்னைத் தேடி என் அறைக்கு வருவார்கள். இப்படித்தான் தொடங்கியது மாணவர்களுடனான என் பயணம்” என்றவருக்கு, கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றியவர், ஒரு ஆண்டு விடுப்பு எடுத்துக்கொண்டார். அனில் சடகோபாலிடமிருந்து அழைப்பு வந்ததுதான் காரணம்.

 

மக்களுக்காக மக்கள் விஞ்ஞானி

1972-ம் ஆண்டு ‘ஹோஷங்காபாத் அறிவியல் கற்பிக்கும் திட்டம்’ என்ற ஒன்றை அனில் சடகோபால் தொடங்கினார். அதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 16 அரசுப் பள்ளிகளில் அறிவியலை எளிமையான முறையில் கற்பிப்பதுதான் திட்டம். அரவிந்த் குப்தாவின் கழிவுப் பொருட்களில் இருந்து பொம்மைகள் செய்யும் திறனை அறிந்த சடகோபால், அரவிந்தை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தினார்.

காலி தீப்பெட்டி, சைக்கிள் ரப்பர் ட்யூப்கள் ஆகியவற்றைக் கொண்டு ‘மேட்ச்ஸ்டிக் மெக்கான்னோ’ எனும் அறிவியல் கருவி ஒன்றைச் செய்தார். அதுதான் அவர் செய்த முதல் அறிவியல் ‘மாடல்’. தீப்பெட்டிகளைக் கொண்டு இன்னும் என்னவெல்லாம் ‘மாடல்’கள் செய்ய முடியும் என்பது குறித்து ‘மேட்ச்ஸ்டிக் மாடல்ஸ் அண்ட் அதர் சயின்ஸ் எக்ஸ்பெரிமெண்ட்ஸ்’ எனும் தனது முதல் புத்தகத்தை எழுதினார் அரவிந்த் குப்தா. அந்தப் புத்தகம் 12 மொழிகளில் வெளியானது. புதுச்சேரி அறிவியல் கழகம், அந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தது.

27chnvkarvind2JPG
 

இப்போதுவரை 28 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். எண்ணற்ற நூல்களை இந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து, தனது வலைத்தளத்தில் (http://www.arvindguptatoys.com) பதிவேற்றி வருகிறார். அந்தப் புத்தகங்களை இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம் என்பது, அதன் சிறப்பம்சம். அதேபோல் தனது அறிவியல் பரிசோதனைகளையும் பொம்மைகள் செய்யும் விதத்தையும் வீடியோவாகப் பல்வேறு மொழிகளில் பதிவேற்றி வைத்துள்ளார்.

அவற்றையும் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த வீடியோக்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காகவும், ஜெர்மனியில் உள்ள சிரிய அகதிக் குழந்தைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

“அந்த ஒரு வருடத்தில் எண்ணற்றக் குழந்தைகளைச் சந்தித்தேன். அறிவியலை எளிமையாகச் சொன்னால், எப்படி அவர்கள் விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தேன்” என்றவர், அந்த ஓராண்டு விடுப்பு முடிந்தவுடன் மீண்டும் ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிறகு 1980-ல் பணியை விட்டு விலகி, முழு நேரமாக, குழந்தைகளுக்கான அறிவியலை முன்னெடுத்துச் செல்பவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

 

வீதிதோறும் விஞ்ஞானக் கூடம்

“நிறையப் பணமும் மிடுக்கான தோற்றமும் கொண்டவர்கள் மட்டும்தான் அறிவியல் ஆய்வுகளைச் செய்ய முடியும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். நாம், ஒரு பக்கம் ‘கார்பன் சுவடு’களைக் குறைக்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால், இன்னொரு பக்கம் குப்பைகளின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. என்னுடைய பொம்மைகள், குப்பையைக் குறைக்கும் முயற்சி. இதுவரை கிட்டத்தட்ட 1,500 பொம்மைகள், அறிவியல் ‘மாடல்’களை உருவாக்கியிருக்கிறேன். அவற்றை என் தளத்தில் பார்க்கலாம்” என்றார்.

27chnvkarvind4JPG
 

இவ்வாறு தனது அறிவியல் நடவடிக்கைகள் குறித்துப் பேசி வந்தவரிடம், இன்று இந்தியாவில் அறிவியல் துறையின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, “அறிவியல் துறையை விடுங்கள். பள்ளிகளில் அறிவியல் பாடங்களை நடத்தும் முறையே தவறாக இருக்கிறது. பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், அதற்கேற்றவாறு ஆய்வக வசதிகள் அதிகரித்திருக்கின்றனவா என்றால், இல்லை. தவிர, நம் ஊரில் ஆசிரியர்களின் சமூக அந்தஸ்து மிகவும் கீழாக இருக்கிறது.

ஃபின்லாந்து நாட்டில், முனைவர் பட்டப்படிப்பு முடித்த ஒருவரின் கனவு, அந்நாட்டில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவு, அங்கு ஆசிரியர்களை மதிக்கிறார்கள்” என்பவருக்கு, நாட்டின் ஒவ்வொரு தெருமுனையிலும் ஒரு ஆய்வுக்கூடம் நிறுவ வேண்டும், அங்கே குழந்தைகளே தங்களுக்குத் தேவையான அறிவியல் மாதிரிகளை, பொம்மைகளைச் செய்து பார்க்க வசதி செய்ய வேண்டும் என்பதுதான் கனவு.

இன்னும் பல நியூட்டன்களை உருவாக்கட்டும் அந்தக் கனவு!

http://tamil.thehindu.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பொன்விழா கண்ட பூ
 

image_da8ecfed1f.jpg

 

image_8282490f62.jpg

அழகில் மட்டுமல்லாமல், தன் வசீகர நடிப்பாலும் பல கோடி ரசிகர்களைத் தனக்கெனக் கொண்டிருந்த ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். இவரின் அழகுக்கு இணை இவர் மட்டும் தான் என்று சொல்லலாம். ஸ்ரீதேவியின் கண்களாகட்டும் சிரிப்பாகட்டும், பார்ப்பவரை சுண்டியிழுக்கும் மாயாஜாலம் கொண்டது. அழகிய நடிகை என்று சொன்னால், நம் நினைவில் முதலில் வருபவர் இவராகத்தான் இருப்பார் அத்தனை கொள்ளை அழகு கொண்டவர்.

image_47528f1af8.jpg

நடிப்பிலும் இவரை மிஞ்ச ஆளில்லை என்றே கூறவேண்டும். தனக்குக் கிடைக்கும் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அத்தனை கச்சிதமாக பொருந்தி நடிப்பார். ரஜனி, கமலுக்கு கனகச்சித ஜோடி என்றால், அது ஸ்ரீதேவி மட்டும்தான். அவ்வளவு அழகும், திறமையும் கொண்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை, இவ்வளவு விரைவில் முடிந்து விட்டதை, இன்னமும் ஏற்கமுடியாமல் தான் உள்ளது.

image_e40000b9fc.jpg

1963ஆம் ஆண்டு, சிவகாசியில் (இந்தியா - தமிழ்நாடு) பிறந்த நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர், ஸ்ரீ அம்மா யங்கர் ஐயப்பன் (Shree Amma Yanger Ayyapan) என்பதாகும். 1969ஆம் ஆண்டு, இயக்குநர் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த 'துணைவன்' திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.  அதன் பிறகு, 'நம்நாடு', ‘கனிமுத்து பாப்பா', 'வசந்த மாளிகை' போன்ற பல தமிழ்த் திரைப்படங்களிலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பலமொழித் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

image_157dffd219.jpg

பின்னர், தனது 13ஆவது வயதில், இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில், 1976ஆம் ஆண்டு வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில், கதாநாயகியாக காலடி பதித்தார். அதற்கடுத்த வருடமே, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த '16 வயதினிலே' திரைப்படம், ஸ்ரீதேவிக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “செந்தூரப் பூவே” பாடலும் “சப்பானின்னு சொன்னா சப்புனு அறைஞ்சிரு” என்கிற வசனமும், அவரை பட்டி தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியது.

image_0d53e49340.jpg

அன்று முதல், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறிய அவர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் கூட, சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பலதரப்பு ரசிகர்களையும் கொண்டிருந்த 70-80களின் லேடி சூப்பஸ்டார் ஸ்ரீதேவி, ஹிந்தித் திரையுலகிலும் கொடிகட்டிப் பறந்தார். தென்னிந்தியர்களை வடஇந்தியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற பிம்பத்தை நொறுக்கினார். 15 வருட இந்திய சினிமாவில், உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

image_51f0a15609.jpg

முக்கியமாக, இந்த சிவகாசி அழகியை ஹிந்தித் திரையுலகம் தூக்கிச் சுமந்தது. இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி கண்ட 'மூன்றாம் பிறை' திரைப்படம், ஹிந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல், ஸ்ரீதேவிக்கு உச்ச புகழையும் தேடித்தந்தது. அதன் பின் வெளிவந்த 'ஹிம்மத்வாலா', 'சாந்தினி', 'நாகினி' போன்ற திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தித் துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார்.

image_0ddfbb2d88.jpeg

தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்த ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான  போனிகபூரை மணமுடித்தார்.  இத்தம்பதிக்கு ஜான்வி, குஷி என்று இருமகள்மார் உள்ளனர். ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம், விரைவில் வெளிவரவுள்ளது.

image_fc31fd07ae.jpg

திருமணத்துக்குப் பின், பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, 14 ஆண்டுகளுக்குப் பின்னர், 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்குப் பிரவேசித்தார். இதுவரை, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் 'புலி'.  2015ஆம் ஆண்டு ஒக்டோபரில், இது வெளிவந்தது. இதில், வில்லியாக அசத்தியிருந்தார். ஹிந்தியில் அவரது நடிப்பில் வெளியான கடைசித் திரைப்படம் ‘மாம்’.

image_6856d081ac.jpg

விருதுகள்

தனது நடிப்புக்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும், நான்கு முறை பிலிம்ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக, 2013ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

image_f309dcfc7a.jpg

 

image_6a9bf83aca.jpg

  •  
  • தொடங்கியவர்
‘சிருஷ்டிக்கு உருவம் வழங்குக’
 

image_d88312e887.jpgகற்பனைகளைக் கண்டபடி உலாவரச் செய்யக்கூடாது.

நல்ல கற்பனைகளை வளர்ப்பதுதான் ஒருவரைச் சாதனையாளராக்கும்.

எதையுமே செய்யாமல், மற்றவர் செய்யும் காரியங்களை விமர்சனம் செய்துகொண்டு, கற்பனை உலகில் வாழ்வதால் ஏதுபயன்?

கற்பனை செய்து காரியமாற்றுபவன், சிருஷ்டிக்கு உருவம் வழங்குகின்றான்.

இந்த வளர்ச்சி குறையப்போவதில்லை.

மூளையுடன் மனம் இணையவேண்டும். மனம் வெறுத்தால் மூளை உறங்கிப்போகும்.

விருப்பத்துடன் மூளைக்கு வேலை கொடுக்கவும். இதனால், அடுக்கடுக்காகக் காரியங்கள், மிகத் திருப்பதிகரமாக ஈடேறும்.

நினைத்தல் கூட கற்பனையின் பிரசவம்தான். இதிலிருந்தே கண்டுபிடிப்புகள் பிறந்தன.

செயல்வீரர்கள் என்றும், பயின்ற வண்ணமே இருக்கின்றார்கள்.

இந்த இயக்கம், அவன் இறந்த பின்னரும், விழித்தபடி உலகுக்குப் பாடம் புகட்டியபடி இருக்கும்.

  • தொடங்கியவர்

2014 : சீன ரயில் நிலையத்தில் 29 பேர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர்

வரலாற்றில் இன்று…

மார்ச் – 01

 

1562 : பிரான்ஸில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட புரட்­டஸ்­தாந்­தர்கள் கத்­தோ­லிக்­கர்­களால் கொல்­லப்­பட்­டதில் பிரான்ஸில் மதப் போர் ஆரம்­ப­மா­னது.

1565 : பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரம் அமைக்­கப்­பட்­டது.

1700 : சுவீடன் தனது புதிய நாட்­காட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

1815 : இத்­தா­லியின் தீவான எல்பாவில் நாடு கடத்­தப்­பட்ட நிலையில் வாழ்ந்த பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்­பினார்.

1873 : பாவ­னைக்­கு­கந்த முத­லா­வது தட்­டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோ­த­ரர்கள் நியூயோர்க்கில் தயா­ரித்­தனர்.

varalaru-01-03-china-copy.jpg1896 : ஹென்றி பெக்­கெரல் கதி­ரி­யக்­கத்தைக் கண்­டு­பி­டித்தார்.

1901 : இலங்­கையில் நான்­கா­வது மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. மொத்த மக்கள் தொகை 3,565,954 ஆக பதிவாகியது.

1912 : முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்­றி­லி­ருந்து அல்பேர்ட் பெரி என்­பவர் பர­சூட்டில் இருந்து குதித்தார்.

1953 : சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலி­னுக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. (நான்கு நாட்­களின் பின்னர் அவர் இறந்தார்.

1954 : ஐக்­கிய அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற கட்­டடம் மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசி­ய­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் ஐவர் காய­ம­டைந்­தனர்.

1954 : பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள பிகினி அட்டோ தீவில் அமெ­ரிக்கா ஐத­ரசன் குண்டு பரி­சோ­தனை நடத்­தியது.இதனால், அதி­க­ளவு கதிர்­வீச்சு மாசு ஏற்­பட்­டது.

1966 : சோவி­யத்தின் வெனேரா 3 விண்­கலம் வெள்ளி கோளில் மோதி­யது. வேறொரு கோளில் இறங்­கிய முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

1973 : சூடானில் சவூதி அரே­பி­யாவின் தூத­ர­கத்தை கறுப்பு செப்டெம்பர் இயக்­கத்­தினர் தாக்கி மூன்று வெளி­நாட்டு தூது­வர்­களைப் பண­யக்­கை­தி­க­ளாக்­கினர்.

1975 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் வர்ணத் தொலைக்­காட்சி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1981 : ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவ உறுப்­பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்­லாந்து சிறையில் சாகும்­வரை உண்­ணா­நிலைப் போராட்­டத்தை ஆரம்­பித்தார்.

1992 : யூகோஸ்­லா­வி­யா­விடம் இருந்து பிரி­வ­தாக பொஸ்­னியா ஹேர்­ஸ­கோ­வினா பிர­க­டனம் செய்­தது.

2002 : ஸ்பெயினில் யூரோ நாணயம் பாவனைக்கு வந்தது.

2014 : சீனாவின் குன்மிங் நகர ரயில் நிலையத்தில் 29 பேர் தீவிரவாதிகளால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதுடன் சுமார் 130 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்குங்களேன்!’ - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 

தன்னம்பிக்கை கதை

`ங்கிருந்து வந்திருந்தாலும் இனவெறி என்பது மோசமானது’ - உரத்த குரலில் ஒருமுறை சொன்னார் அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ஆலன் பால் (Alan Ball). `இப்போல்லாம் சாதி யாருங்க பார்க்கிறா...’ என்று நமக்கு நாமே கூறிக்கொண்டாலும், உள்ளங்கை செல்போனைக் கொண்டு உலகின் மூலை முடுக்கெல்லாம் தகவல் பரிமாற்றம் தொடங்கி பல மாயாஜாலங்கள் நிகழ்ந்தாலும், சாதிப் பாகுபாடும், இனவாதமும் பல இடங்களில் செழித்து வளர்ந்திருக்கின்றன என்பதே உண்மை. சில இடங்களில் இனவெறியின் குரூரமான முகம் எல்லோரையும் நடுக்கம்கொள்ளச் செய்கிறது. சக மனிதனை நேசிப்பதைவிட உயர்வான குணம் வேறொன்று இருக்க முடியாது. கணியன் பூங்குன்றனாரின் `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முதல் திருவள்ளுவரின் `அன்பிலார் எல்லாம் தமக்குரியர்’ வரை வலியுறுத்துவது மனிதநேயத்தைத்தான். அதேநேரத்தில், சக மனிதனிடம் பரிவுகொள்கிறவர்கள், கருணை காட்டுகிறவர்கள், ஒரு மனிதனுக்கு அநீதி நிகழ்கிறபோது வேதனைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டும் கதை இது! 

 

கதை

இன்றைக்கு வளர்ந்த நாடுகளில், முதன்மையான நாடு என தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது அமெரிக்கா. ஆனால், அதன் வளர்ச்சிக்குப் பின்னணியில் இருந்தவர்கள் கறுப்பின மக்கள். அமெரிக்கா செழிப்பான நாடாக மாறுவதற்கு அரும்பாடுபட்டவர்கள் அடிமைகளாக இருந்த, கறுப்பின மக்கள்தான். அமெரிக்கா சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும்கூட அங்கே அடிமைமுறையும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன. ரோஸா பார்க்ஸ் என்ற பெண்மணி பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட வரலாறு நமக்குத் தெரியும்; அதற்காகவே மார்ட்டின் லூதர் கிங் பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தி கறுப்பின மக்களுக்கு எல்லா இடங்களிலும் சம உரிமையைச் சட்ட ரீதியாக வாங்கித் தந்த வரலாறும் நமக்குத் தெரியும். ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த மக்களுக்கு எதிரான இனவெறி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது... இப்போதும். 

அந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் பயணிகளால் நிறைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கிலிருந்து, லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தது. ஓர் இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார்; அவருக்கு அருகே ஒரு கறுப்பின ஆண் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்பியதிலிருந்தே அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் எரிச்சல். அவரை அந்தப் பெண்மணிக்குப் பிடிக்கவேயில்லை என்பது அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தக் கறுப்பின மனிதரைக் கடுகடுவெனப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து ஏதோ முணுமுணுத்தார். பிறகு கொஞ்சம் சத்தமாகவே திட்ட ஆரம்பித்தார். இத்தனைக்கும் அந்த கறுப்பின மனிதர் அந்தப் பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தன் கையிலிருந்த புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்துபோயிருந்தார். இப்போது விமானத்திலிருந்த மற்ற பயணிகளின் கவனமெல்லாம் அந்தப் பெண்ணின் மேல் திரும்பியிருந்தது. 

ஆங்கிலேயப் பெண்மணி, கைதட்டி விமான பணிப்பெண்ணை அழைத்தார். அருகே வந்த விமானப் பணிப்பெண், ``மேடம்... சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்?’’ என்று கேட்டார். 

``என்ன வேணுமா... பார்த்தா தெரியலை? எனக்குப் பக்கத்துல ஒரு கறுப்பரை உட்கார வெச்சிருக்கீங்க. இந்த மாதிரி ஆள் என் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது எனக்குப் பிடிக்கலை. நான் ஊர்ப் போய்ச் சேர்ற வரைக்கும் இதையெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது. எனக்கு வேற சீட் குடுங்க...’’ 

விமானம்

``சரி மேடம். கொஞ்சம் அமைதியா இருங்க. இன்னிக்கி கிட்டத்தட்ட எல்லா சீட்டுகளுமே நிரம்பிடுச்சு. ஏதாவது சீட் கிடைக்குதானு பார்த்துட்டு வந்து சொல்றேன்...’’ 

``சீக்கிரம்...’’ என்றார் அந்தப் பெண்மணி. 

சில நிமிடங்கள் கழித்து விமானப் பணிப்பெண் திரும்பி வந்தார். 

``மேடம்... நான் நினைச்ச மாதிரியேதான் இருக்கு நிலைமை. நீங்க ட்ராவல் பண்றது எக்கனாமி கிளாஸ்ல... அதாவது குறைஞ்ச கட்டணப் பிரிவான மூன்றாம் வகுப்புல. இங்கே ஒரு சீட்கூட இல்லை. நான் எங்களோட ஃப்ளைட் கேப்டன்கிட்ட பேசிப் பார்த்தேன். இதுக்கு அடுத்த நிலையில இருக்குற பிசினஸ் கிளாஸ்லயும் சீட் எதுவும் காலியில்லைனு அவர் சொன்னார். அதே நேரத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல ஒரு சீட் இருக்காம்...’’ 

இப்போது ஆங்கிலேயப் பெண்மணியின் முகத்தில் பரவசமும் நிம்மதியும் தெரிந்தது. 

விமானப் பணிப்பெண் தொடர்ந்தார்... ``இருங்க... எங்க கம்பெனி விதிகள்படி, ஒருத்தரை எக்கனாமி கிளாஸ்லருந்து ஃபர்ஸ்ட் கிளாஸ்ல கொண்டுபோய் உட்காரவைக்கிறது வழக்கமில்லை. ஆனா, இங்கே இருக்கிற சூழ்நிலையில, அருவருப்போட இன்னொருத்தருக்குப் பக்கத்துல ஒருத்தர் உட்கார்ந்திருக்கிற நிலைமையில எங்க நிறுவனத்துக்குக் கெட்ட பேரு வந்துடக் கூடாதுனு எங்க கேப்டன் நினைக்கிறார்...’’ என்றவர் அந்தக் கறுப்பின மனிதரைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். 

``சார்... உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, உங்க ஹேண்ட்பேக்கை எடுத்துக்கங்க. என்கூட வாங்க. உங்களுக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் சீட் காத்துக்கிட்டிருக்கு...’’ 

பணிப்பெண் சொல்லி முடித்தார்... அவ்வளவுதான்.. சக பயணிகள் எல்லோரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆங்கிலேயப் பெண்மணி திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். 

***  

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்படுகின்றது

srithevi-art.jpg?resize=600%2C450
கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் துபாயில் நடக்கவிருக்கும் ஏலத்தில் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காகத்தான் ஸ்ரீதேவி தான் வரைந்த ஒரு ஓவியத்தை கொடுத்துள்ளார் எனவும் அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

10 லட்ச ரூபாய்க்கும் மேல் அந்த ஓவியம் விலைபோகலாம் என கூறப்படுகிறது. ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமின்றி நன்றாக ஓவியம் வரைவார் எனவும் அவரது ஏலத்திற்கு வரும் ஓவியம் நடிகை சோனம் கபூரின் முதல் படமான ‘சாவரியா’ படத்தைப் பார்த்து வரைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவர் வரைந்த பல ஓவியங்களைச் சேமித்து வைத்துள்ளார் எனவும் நடிப்புக்கு அடுத்தபடியாக, அவர் விருப்பமாகச் செய்யும் வேலை ஓவியம் வரைவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி தினமும் மாலை வேளைகளில் 4 முதல் 5 மணிநேரம் பெயின்டிங் செய்வாராம். வீட்டில் தனது மகள்களைப் பார்த்துக்கொண்டே இதிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sri.jpg?resize=276%2C183

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

ஏய்... பார்த்துப் போ!- குட்டி யானை சாலையைக் கடக்கும் தத்ரூப படம்

 
 

முதுமலை - பண்டிப்பூர் வனச் சரணாலயங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் புகழ்பெற்றவை. தமிழக அரசு முதன்முதலில் முதுமலையில்தான் கும்கி யானைகள் முகாமை ஏற்படுத்தியது. முதுமலை வனத்தில் நிலவும் கால நிலை, யானைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆயிரக்கணக்கான யானைகள் முதுமலை, பண்டிப்பூர் வனச் சரணாலயத்தில் வாழ்கின்றன. கோயில் யானைகளுக்கும் முதுமலையில்தான் 5 வருடங்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. 

சாலையை கடகும் குட்டி யானை

 

PIC: AKILRAJ M.S

உதகை- மைசூர் தேசிய நெடுஞ்சாலையும் முதுமலை, பண்டிப்பூர் வனச்சரணாலயங்களுக்கிடையேதான் செல்கிறது. இந்தச் சாலை போக்குவரத்து மிகுந்தது. வனச்சரணாலயத்துக்குள் நுழைந்ததும் வாகனங்கள் குறைவான வேகத்தில்தான் செல்ல வேண்டும். சாலை ஓரத்தில் யானைக்கூட்டம்  மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

 

சாலையை யானைக் கூட்டங்கள் கடப்பதும் இரு புறமும் வாகனங்கள் நிற்பதும் இந்தப் பகுதியில் வாடிக்கையான நிகழ்வு. யானைக் கூட்டங்கள் சாலையைக் கடக்கும்போது, குட்டி யானைகள் தாய் யானையின் காலுக்குள் நடந்து வரும். அண்மையில், வன உயிரின புகைப்படக் கலைஞர் எம்.எஸ்.அகில் ராஜ், முதுமலைக்குச் சென்றபோது, தாய் யானையுடன் வந்த குட்டி யானை ஒன்று துள்ளிக் குதித்து சாலையைக் கடப்பதை தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். இரு வாகனங்களுக்கு இடையே, குட்டி யானை புகுந்து ஓடும் காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p62a_1519740456.jpg

ந்தியில் வெளியான ‘Padman’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரிய பேரை வாங்கியிருக்கிறார் சோனம் கபூர். படத்துக்குக் கிடைத்த பாஸிட்டிவ் ரிசல்ட்டால் உற்சாகத்தில் இருக்கிறார். “காலம் மாறிடுச்சு. சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமால இருந்துட்டு பொறுப்பில்லாம இருக்க முடியாது” என்று அக்கறையோடு பேசியிருக்கிறார். இனி நடிக்கும் படங்களையும் பொறுப்போடு தேர்வு செய்யப்போகிறாராம். சூப்பர் சோனம்

p62b_1519740470.jpg

தொடர்ந்து `சிறுத்தை’ சிவா படங்களிலேயே நடித்துவரும் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் `சதுரங்க வேட்டை’, ‘தீரன்-அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத். ‘சதுரங்க வேட்டை’ பட வெற்றிக்குப் பிறகு அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறார் வினோத். ஆனால், பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டுவதற்குள் இருவருமே வேறு வேறு படங்களுக்குச் சென்றுவிட ‘தீரன்’ வெற்றிக்குப்பிறகு மீண்டும் வினோத்தை அழைத்திருக்கிறார் அஜீத்்.பேச்சுவார்த்தை ‘ஆல் இஸ் வெல்’ ஆக முடிய ‘விஸ்வாசம்’ படம் முடிந்ததும் வினோத் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம். ஹீரோயின், டெக்னீஷியன்களை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. வாழ்த்துகள் வினோத்!

p62c_1519740483.jpg

மிழின் முதல் சூப்பர்ஹீரோ கதையான ‘முகமூடி’யின் படுதோல்வியால் அப்போது கொஞ்சம் அப்செட்டில் இருந்தார் மிஷ்கின்.  ``இப்போதுதான் ‘முகமூடி’யில் நான் செய்த தவறுகள் என்னென்ன என்று புரிகிறது. விரைவில் ‘முகமூடி’ மாதிரியே இன்னொரு சூப்பர் ஹீரோ கதையை இயக்கி ஹிட் படமாகக் கொடுப்பேன். அது 3டி வெர்ஷனில் வரும். சோஷியல் நெட்வொர்க்கின் இன்னொரு முகத்தை காமெடியாக இந்த 3டி படம் பேசும். அதற்கான ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கின்மேன்!

p62d_1519740499.jpg

ந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எழுதியிருக்கும் ‘A century is not enough’ புத்தகம்  செம ஹிட். தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் தான் சந்தித்த சிக்கல்களையும் சவால்களையும் பற்றி இந்தப் புத்தகத்தில் மனம் திறந்து எழுதியுள்ளார் கங்குலி.  “என் சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்னைகள் எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும்” என்று முன்பொருமுறை சொல்லியிருந்தார் கங்குலி. இப்போது புத்தகம் வெளிவந்துள்ள நிலையில், வங்கப்புலி போட்டுத் தள்ளியிருக்கும் ஆட்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் புத்தகத்தை வாங்கிக் குவிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ரைட்டு ரைட்டரே!

p62e_1519740515.jpg

‘மாலிஃபசன்ட்’ படத்துக்குப் பிறகு தாய் ஏஞ்சலீனாவும் அவரின் 10 வயது மகள்  விவியனும் ஆக்‌ஷன் படமொன்றில் கைகோக்கிறார்கள்.  குட்டிக் குழந்தையாக `மாலிஃபசன்ட்’ படத்தில் மிரட்டியெடுத்த சுட்டி விவியனுக்கு இப்போது 10 வயது. கராத்தே, குங்ஃபூ, பாலே டான்ஸ் என சகலகலாவல்லியாக அம்மாவை மிஞ்சும் நடிகையாக வளர இப்போதே ஸ்கெட்ச் போட்டுப் பயிற்சி செய்துவருகிறார். ஜூனியர் ரெடி!

p62f_1519740531.jpg

ற்கெனவே ‘ஹனுமான் : த தாம்தர்’ அனிமேஷன் படத்தில் ஹனுமானுக்கு வாய்ஸ் கொடுத்துக் குழந்தைகளை மகிழ்வித்தவர் சல்மான். இப்போது  ஹாலிவுட்-பாலிவுட் கூட்டுத்தயாரிப்பில் `ஹனுமான்’ கதையை லைவ் ஆக்‌ஷன் படமாகவே எடுக்கவிருக்கிறார்கள். அதிலும் சல்லுபாய்தான் ஹனுமானாக நடிக்கவிருக்கிறார். படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சலோ சல்லுபாய் சலோ!

p62g_1519740646.jpg

ஹாலிவுட் போல இந்தியாவிலும் விண்வெளிப் படங்களின் சீசன் இது. தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் ‘டிக் டிக் டிக்’, இந்தியில் மாதவன் நடிக்கும் ‘சந்தா மாமா தூர் கே’ என ஏற்கெனவே இரண்டு விண்வெளிப் படங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் ஷாரூக்கானும் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மாவின் பயோ-பிக்கில் நடிக்கிறார்் ஷாரூக்கான். படத்துக்கு ‘சல்யூட்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். வானத்தையே எட்டிப்பிடிப்போம்!

p62h_1519740677.jpg

ன்ஸ்டாகிராமத்தில் குடியேறி ஹிட்டடிக்கிறார் இசைப்புயலின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன். அப்பா இசையால் மயக்குவதைப்போல மகன் செல்போன் கேமராவில் எடுக்கும் போட்டோக்கள் எக்கச்சக்க `ஹார்ட்ஸ்’ வாங்கிவிடுகிறது. நிறையபேர் இவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ‘அப்பா நல்லா இருக்காரா?’ என்று யாரேனும் கேட்டால்கூட, ‘நல்லா இருக்கார் அங்கிள்’ என சின்ஸியராய்ப் பதிலும் சொல்லி ஷாக் கொடுக்கிறது இந்த மினியேச்சர் புயல். அப்பா நல்லா இருக்காரா?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா, மாட்டீங்களா?’ - ஒரு தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

 
 

கதை

`ன் மேல் நம்பிக்கையில்லாதவர்களை எனக்குப் பிடிக்கும். அதுதான் என்னைக் கடினமாக உழைக்கவைத்து, அவர்கள் நினைப்பது தவறு என்பதை நிரூபிக்கச் செய்யும்’ - முன்னாள் அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் டீரெக் ஜீட்டர் (Derek Jeter) உதிர்த்த பொன்மொழி இது. பல நேரங்களில், பல மனிதர்கள் `நீ இதுக்கு லாயக்கில்லை’, `நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே’, `உன்னால இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது’... என்றெல்லாம் தலையில் குட்டப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு சுருங்கிப் போகிறவர்களும் உண்டு; `தங்களால் முடியும்’ என்று அதிலேயே இறங்கி நிரூபித்துக் காண்பிப்பவர்களும் உண்டு. தங்களை நிரூபிப்பவர்கள் சாதனையாளர்களாகிறார்கள். அப்படி சாதித்துக் காட்டிய ஒரு சாதனையாளரின் கதை இது.

 

1950-ம் ஆண்டு எகிப்தில் பிறந்தவர் இப்ராஹிம் எல்ஃபிகி (Ibrahim Elfiky). அப்போது அவருக்கு 28 வயது. திருமணமாகியிருந்தது. ஹோட்டல்கள் தொடர்பான படிப்பில் ஒரு பட்டமும் வாங்கியிருந்தார். ஆனால், உள்ளூரில் பெரிய அளவில் முன்னேறுவதற்கு வழியிருப்பதாகத் தோன்றவில்லை. வேறு நாட்டுக்குச் சென்றால் கொஞ்சம் சம்பாதிக்கலாம், மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. 1978-ம் ஆண்டு மனைவியுடன் கனடாவுக்குச் சென்றார்.

இப்ராஹிம் எல்ஃபிகி

(PC http://ibrahimelfiky.com) 

கனடாவில் அவர் சந்தித்த நண்பர்கள், உறவினர்கள், மனிதர்கள் எல்லோருமே அவருக்குச் சொன்ன வாசகம் இதுதான்... ``பேசாம திரும்ப உங்க ஊருக்கே போயிடுங்க. இப்போ இங்கே வேலை கிடைக்கிறது கஷ்டம்...’’ ஆனால், நம்பிக்கையை விட்டுவிடவில்லை இப்ராஹிம். ஒருநாள் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றைப் பார்த்தார். ஒரு ஹோட்டல் நிர்வாகம் `வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று விளம்பரம் செய்திருந்தது. அந்த முகவரியை எழுதிக்கொண்டு, அந்த ஹோட்டல் வைத்திருந்த இன்டர்வியூவுக்குப் போனார்.

அந்த ஹோட்டல் மேனேஜர்தான் அவரை இன்டர்வியூ செய்தார். இப்ராஹிம் எகிப்திலிருந்து வந்திருக்கிறார், அங்கே வாங்கிய பட்டம் ஒன்று இருப்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு உதட்டைப் பிதுக்கி இப்படிச் சொன்னார். ``கனடாவுல உங்களுக்கு ஹோட்டல் இண்டஸ்ட்ரி சரிப்பட்டு வராது... வேற வேலை தேடுங்க...’’ மற்றவர்களாக இருந்தால் இதைக் கேட்டு நொறுங்கிப் போய்விடுவார்கள். இப்ராஹிம் மன உறுதியுள்ளவர். ஹோட்டலைவிட்டு வெளியே வந்ததும் அவருக்கு இருந்த ஒரே எண்ணம், `இந்தத் துறையில் சாதித்துக் காட்டி, இந்த மேனேஜரின் மூக்கை உடைக்க வேண்டும்’ என்பதுதான்.

கனடாவில் அவரும் அவர் மனைவியும் வாழ்க்கையை ஓட்ட மாதத்துக்கு 1,000 டாலர்களாவது தேவைப்பட்டன. இரண்டு நாள்கள் அலைந்து, திரிந்தார். ஒரு வேலை கிடைத்தது அதுவும் ஹோட்டலில்... தட்டுகள், பாத்திரங்களைக் கழுவும் வேலை. அங்கே வேலை பார்க்கும்போதே இப்ராஹிமுக்கு ஒன்று புரிந்தது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், அவர் படித்திருக்கும் படிப்புப் போதாது. மேலும் படிக்க வேண்டும்... மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஹோட்டல்

இரவு, பகலாக வேலை பார்த்தார், படித்தார். சரியாக எட்டே வருடங்கள்... கனடாவில் இரண்டு பட்டப் படிப்புகளை முடித்தார். வாழ்க்கை அவருக்குப் புதிய கதவுகளைத் திறக்க ஆரம்பித்தது. கனடாவின், மான்ட்ரியல் (Montreal) நகரத்திலிருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஜெனரல் மேனேஜர் வேலை கிடைத்தது. ஆனால், இந்த உயரம் இப்ராஹிமுக்குப் போதும் என்று தோன்றவில்லை. `இன்னும்... உயர வேண்டும். என்னை ஹோட்டல் துறைக்கு லாயக்கில்லை என்று சொன்ன மேனேஜருக்கு நான் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும்’ என்கிற எண்ணம் மேலோங்கியிருந்தது.

மனிதவளத்துறையில் ஆர்வம் காட்டினார் இப்ராஹிம். பல்வேறு துறைகளில் 23 டிப்ளமோ பட்டங்களை வாங்கினார். சைக்காலஜி, மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ், ஹ்யூமன் டெவலப்மென்ட் மூன்று துறைகளிலும் மூன்று உயர்ந்த பதவிகளை வகித்தார். மெட்டா பிசிக்ஸில் டாக்டர் பட்டம் வாங்கினார். உலக அளவில் மனிதவளத்துறையில் மிக முக்கியமான ஓர் இடம் அவருக்குக் கிடைத்தது. பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டார். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வகுப்பெடுத்தார். அவர் பேச்சைக் கேட்க, ரசிக்க வட அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருந்தார்கள். புத்தகங்கள் எழுதினார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இப்ராஹிம் பேசிய வீடியோ, ஆடியோ டேப்கள் பல்லாயிரக்கணக்கில் விற்றன.

இப்ராஹிம்

 

ஒருநாள் இப்ராஹிமுக்கு ஒரு ஹோட்டலிலிருந்து அழைப்பு ஒன்று வந்திருந்தது. `என்னுடன் ஒரு நாள் டின்னர் சாப்பிட வர முடியுமா?’ என்று கேட்டிருந்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல, இப்ராஹிமுக்கு வேலை இல்லை என்று சொல்லி நிராகரித்த அதே ஹோட்டல் மேனேஜர். இப்ராஹிம் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நாளில் டின்னருக்கும் போனார்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மேனேஜர் கேட்டார்... ``இப்ராஹிம் நீங்க எப்படி இவ்வளவு பெரிய சாதனையாளரானீங்க?’’

``உங்களாலதான்.’’

``என்னாலயா?’’

``ஆமா. நீங்க மட்டும் அன்னிக்கி `ஹோட்டல் இண்டஸ்ட்ரிக்கு நீ லாயக்கில்லை’னு என்னைச் சொல்லலைன்னா நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கவே மாட்டேன்.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

p112c_1519806284.jpg

twitter.com/Kozhiyaar
மனமும் உடலும் பிரிந்து வேலை செய்யும் நாள்களில் திங்கட்கிழமை முதன்மையானது.

twitter.com/amuduarattai
குழந்தைகள் சாப்பிடும்போது, வீட்டில் மீதமானதை அம்மாவும், ஹோட்டலில் மீதமானதை அப்பாவும் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

twitter.com/thoatta
முகத்தைப் பார்த்து வளர்ந்திருந்தா ஒழுங்கா செஞ்சிருப்பாய்ங்க. இவங்க, கடைசி வரை காலைப் பார்த்துல்ல வாழ்ந்தாய்ங்க?!

p112_1519806221.jpg

twitter.com/Aruns212
தற்காலத்தில் ‘நல்லா வாழ்ந்து காட்டணும்’ என்ற வைராக்கியத்தைவிட, ‘நல்லா போட்டோ எடுத்துப் போடணும்’ என்ற ஆசையே அதிகம் உள்ளது.

twitter.com/latha_Bharathy
தனக்குத் தெரிந்த விஷயங்களைத் தன் வயதுப் பிள்ளைகளிடத்தில் பெரிய மனிதத் தோரணையோடு பகிர்ந்து கொள்ளும் குழந்தைகள் பேரழகு...

twitter.com/Thaadikkaran
நீ என்னதான் ஆணழகனா இருந்தாலும், குழந்தைக்குச் சோறு ஊட்டும் போது அந்த வழியா போனா நீ பூச்சாண்டிதான்..!

p112a_1519806237.jpg

twitter.com/yugarajesh2
ஹலோ ஏர் செல், உன்னால ஒரே ஒரு நன்மை, கடன்காரன் எவனும் இனி போன் பண்ண முடியாது!

twitter.com/fazzz_7
பெண் நம்பிவிடுவாள் என நினைத்துப் பொய் சொல்லும் ஆணின் அறியாமையே பெண்ணின் ஆயுதம்.

twitter.com/thoatta
கனடா பிரதமர், ‘மாரி’ தனுஷ் மாதிரி, ‘பிடிக்கலன்னா போடா’ ரேஞ்சுல மத்திய அரசை டீல் பண்ணிட்டு, இந்தியாவுல சுத்திக்கிட்டு இருக்காரு.

twitter.com/Kannan_Twitz
ஒண்ணு, அழுததை நினைச்சு சிரிப்போம்... இல்லனா, சிரிச்சத நினைச்சு அழுவோம். அம்புட்டுதான்... #Life

twitter.com/Kozhiyaar
ட்ராவிட் விளையாடும் போது ‘சுவராக’ இருந்தார். இப்போது அஸ்திவாரமாக இருக்கிறார்!

twitter.com/Kozhiyaar
பஸ்ல ஒரு பொண்ணு ஹெட்ஃபோனை மென்னுகிட்டிருந்துச்சு. பாவம் பசி போலன்னு பிஸ்கட் எடுத்து நீட்டும்போது தான் தெரிஞ்சுது, யாருகிட்டயோ பேசிட்டிருக்குது!

twitter.com/thoatta
சிரியா, விழுப்புரம், கேரளா - இந்த வாரத்துல நெஞ்சை உலுக்கிய இந்த மூன்றிலும் கவனிக்கப்பட வேண்டியது, கொலை செய்தவர்கள் அதே ஊர்/தேசத்தை சேர்ந்தவர்கள். நாமும் நம் குழந்தைகளும், மனிதம் மரணித்த இப்படி பலருடன்தான் எதிர்காலத்தைக் கழிக்கணும்ன்னு நினைச்சாலே பயமா இருக்கு

11p4_1519806269.jpg

twitter.com/thoatta
‘மைக்கேல் மதன காமராஜன் மாதிரி இப்ப படமெடுக்க முடியுமா’ன்னு இளையராஜா கேட்கிறாரு, அட்லி பத்தி ராஜா சாருக்கு தெரில போல.

twitter.com/manipmp
குருவி சத்தத்தைப்போல் வழக்கொழிந்துவிட்டன பேசிக் மாடல் மொபைல்களின் ரிங்டோன்கள்.

facebook.com/Musicallybaskar
மதுரை மாநாட்டுல சில இடங்களில் பேசிமுடித்து pause விட்டார் கமல். அந்த இடத்துல ஆக்சுவலா ஆர்ப்பரித்துக் கைதட்டணும். ஆனா நிறைய டைம் மக்கள் ஏமாத்திட்டாங்க. பானிபூரில தண்ணி ஓட்டை வழியா வெளியேறி, வெறும் பூரியை சாப்பிடுறமாதிரி சப்புன்னு இருந்தது அந்த இடமெல்லாம். திருச்சி மாநாட்டுல இதைச் சரிசெய்ய வேண்டுகிறோம்!

p112b_1519806303.jpg

p112d_1519806315.jpg

twitter.com/thoatta
பணப் பிரச்னைல செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டுப்போனவனைப் பார்த்திருக்கோம், ஒரு நெட்வொர்க் கம்பெனியே ஸ்விட்ச் ஆஃப் ஆனதை இப்பதான் பார்க்கிறோம்.

facebook.com/Bogan Sankar
தமிழ் இலக்கியவாதிகளில் நிறையபேருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. இன்னும் சிலருக்குத் தமிழ் படிக்க, எழுதத்தெரியாது. முன்னவர்கள் சர்வதேச எழுத்தாளர்களாக உலகமெங்கும் அறியப்படுகிறார்கள் எனும்போது பின்னவர்கள் பெயர் உசிலம்பட்டிவரையாவது பரவவேண்டாமா என்ற அவர்கள் ஆதங்கத்தில் பொருள் இருக்கிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

'அது என் குழந்தை இல்லை...பாலூட்டுவது போல் நடித்ததே நெகிழ்ச்சி'' - கேரள பெண் மாடல் ஜிலு ஜோசப்

 
 

பெண்களின் மார்பகம் என்பது, குழந்தைக்கான உயிர்ப்பால் சுரக்கும் இடம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அது வெறும் காமத்துக்கான தசைக் குவியலாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணத்தின் தலையில் அழுத்தமாகக் குட்டு வைத்திருக்கிறது, 'கிரஹ லக்ஷ்மி' என்ற மலையாள பத்திரிகையின் அட்டைப் படம். அப்படியென்ன அதில் இருக்கிறது என்கிறீர்களா? 

குழந்தை

 

மாடல், முன்னாள் ஏர்ஹோஸ்டஸ், நடிகை, கவிஞர்,  எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்டவர், ஜிலு ஜோசப் என்கிற 27 வயது இளம்பெண். ஒரு பிஞ்சுக் குழந்தைக்குப் பாலூட்டுவதுபோல பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளார். தேவைப்பட்டால் பொது இடங்களில் குழந்தைக்குப் பாலூட்ட தயங்க வேண்டியதில்லை என்ற பாசிட்டிவ் கருத்தை வலியுறுத்தி இந்தப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் புகைப்படம் இடம்பெற்ற பத்திரிகையை ஆதரித்தும் எதிர்த்தும்,  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். கூடவே அதில் நடித்த மாடலான ஜிலு ஜோசப்பின் தைரியத்தைப் பாராட்டி ஒரு சாராரும், அதை விமர்சித்து மற்றொரு சாராரும் போஸ்ட், கமென்ட் என பொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

''செக்ஸ், மாதவிடாய், குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற சாதாரண நிகழ்வுகளையும் நம் சமுதாயத்தில் பெண்கள் மறைத்து மறைத்து செய்யவேண்டியிருக்கிறது. அதனால், இப்படியொரு முயற்சியை நாம் பாராட்டியே வேண்டும்'' என ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. 

சிலர், ''இந்த போட்டோ ஷூட்டுக்கு அந்தக் குழந்தையின் நிஜ தாயையே பயன்படுத்தியிருக்கலாமே. அதுதானே ரியலாக இருந்திருக்கும். பாலூட்டும் கைக்குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண் தன் உடைகளைப் பற்றியோ, தன் அழகு பற்றியோ அக்கறையில்லாமல் இருப்பார். உண்மையான தாயின் கண்கள் பல இரவுகள் தூக்கத்தை இழந்ததினால் சோர்ந்து கிடக்கும். அந்த உண்மைத்தன்மை இந்தப் புகைப்படங்களில் இல்லையே'' என்று வருந்தியிருக்கிறார்கள். 

இன்னும் சிலர், ''பொது இடங்களில் பாலூட்டுவது கிராமப்புறங்களில் காலங்காலமாக சர்வசாதாரணமாக நடைபெற்றுவரும் விஷயம்தான். நகர்ப்புறங்களில்தான் இந்தப் பிரச்னை இருக்கிறது'' என்று சிம்பிளாக தங்கள் கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்கள். 

இதற்கிடையில், மாடல் ஜிலுவின் அப்பாவான ஜோசப், ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேசும்போது, ''இந்த போட்டோ ஷூட் தொடர்பாக என் மகளை அப்ரோச் செய்யும்போது, இது ஒரு பெருமைமிக்க வாய்ப்பு என்றே நினைத்தார்'' என்று பெருமிதமாகக் குறிப்பிட்டிருந்தார்.

கிரகலக்‌ஷ்மி 

ஜிலு ஜோசப், ''இந்த போட்டோ ஷூட்டுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டதும் யோசிக்காமல் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். அது என் குழந்தை இல்லை. ஆனால், பாலூட்டுவதுபோல நடித்ததே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேவைப்படும்போது பொதுவெளியில் குழந்தைக்குப் பாலூட்டுவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? இதைக் காமம் கலந்த கண்களுடன் பார்ப்பது தவறு. இது ஓர் அழகான விஷயம் இல்லையா நண்பர்களே...'' என உணர்வுப்பூர்வமாகப் பேசியதோடு, ''என் உடல் வடிவம்மீது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை இருக்கிறது. நான் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதால் இந்த புராஜெக்ட்டில் நடிக்க எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை'' என்று போல்டாக மீடியாக்களில் பேசியிருக்கிறார். 

 ஜிலுவின் இந்த பாசிட்டிவ் முயற்சிக்கு அவரது அம்மா மற்றும் சகோதரிகள் மத்தியிலேயே வரவேற்பு இல்லை  என்ற நிலையில் ஜிலுவின் கருத்துகளை அறிய, நாம் போனில் தொடர்பு கொண்டோம். மிகுந்த சந்தோஷமான குரலில், ''யெஸ், தட் வாஸ் வெரி ஹேப்பியஸ்ட் மொமென்ட். அது என்ட பேபி இல்லா. பட் ஞான் நெகிழ்ச்சியாயிட்டு ஃபீல் செய்றேன்!'' என்றார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: கேமராவுக்குள் சிக்கிய இயற்கை!

 

 
1jpg
2jpg
gayathrijpg
subhajpg
3jpg
4jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பண மோசடியில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி?#வரவுஎப்படி?

இரவும் பகலுமாக வேலை செய்து நாம் சம்பாதிக்கும் பணம், மோசடி செய்யப்படாமல் இருப்பதைத் தடுக்க நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை விளக்குகிறது பிபிசி தமிழின் இந்த வரவு எப்படி? நிகழ்ச்சி.

  • தொடங்கியவர்

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)

 
அ-அ+

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.

 
 
 
 
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)
 
அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.

இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.

இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார்.

கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்தபோது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக்கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்.

அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது.

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது. பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் "வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்." என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது.

அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை  என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.

பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர்[, மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை.

 

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: அமைதிக்கெல்லாம் அமைதி

 

 
memes%205
memes%201
memes%2010
memes%2011
memes%2013
memes%202
memes%204
memes%206
memes%207
memes%208
memes%209

 

 

  • தொடங்கியவர்

மிகப் பழமையான வாகனப் பேரணி யாழ் நோக்கி படையெடுப்பு

 

 

 

கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி ஒன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வருகைதந்துள்ளது.

IMG-0987.JPG

நேற்று முன்தினம்  முதலாம் திகதி  கொழும்பில் இருந்து ஆரம்பித்த பழமைவாய்ந்த பதினெட்டு கார் வகை வாகனங்களும் இரண்டுமோட்டார் சைக்கிளும் பேரணியாக அநுராதபுரம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை யாழ் நகரை வந்தடைந்தன.

 

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை ஊடாக நல்லூர் வீதி வழியாக மீண்டும் பேரணி அநுராதபுரம் ஊடாக கொழும்பு சென்றடையும் என கழகத்தின் ஒழுங்காமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG-0990.JPG

இன்று காலை வாகன பேரணி யாழ் கோட்டையை வந்தடைந்த போது வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார். மிகவும் பழமை வாய்ந்த வாகன பேரணியை பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

IMG-0991.JPG

IMG-0993.JPG

IMG-0995.JPG

IMG-0998.JPG

IMG-0999.JPG

IMG-1003.JPG

IMG-1004.JPG

IMG-1006.JPG

IMG-1007.JPG

IMG-1010.JPG

IMG-1011.JPG

IMG-1015.JPG

IMG-1020.JPG

 

http://www.virakesari.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு)

வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்

ஹோலி - HOLI

#பிஞ்சுக் கரங்களால் வண்ணங்களில் விளையாடும் சிறுமி.

ஹோலி - HOLI

ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது முகத்தில் வண்ண நிறப் பொடிகள் பூசப்பட்ட நிலையிலுள்ள ஒரு பார்வை குறைபாடுடைய சிறுவன்

 

ஹோலி - HOLI

கொல்கத்தாவில் வண்ணப் பொடிகள் தூவி விளையாடும் இந்திய மாணவர்கள்

ஹோலி - HOLI

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது முகத்தில் வண்ண நிறப் பொடிகளுடன் கொண்டாடும் பார்வை குறைபாடுடைய சிறுவர்கள்

ஹோலி - HOLI

 

அமிர்தசரஸ் கோயிலில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கிருஷ்ணர் வேடமணிந்த ஒரு சிறுவன் பக்தர்களுடன் இணைந்து வண்ணப் பொடிகளுடன் கொண்டாடுகிறார்

ஹோலி - HOLI

சிலிகுரி பகுதியில் ஹோலி கொண்டாடும் பெண்கள்

ஹோலி - HOLI

வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஹோலி - HOLI

 

மேற்கு வங்காளத்தில் வண்ணப் பொடிகளுடன் ஹோலியை கொண்டாடுகின்றனர்

ஹோலி - HOLI

கராச்சியில் உள்ள பாகிஸ்தானி இந்துக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

ஹோலி - HOLI

வண்ணப்பொடிகளை ஒருவர் மீ்து ஒருவர் தூவி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஹோலி - HOLI

கிருஷ்ணர் ராதா வேடமிட்டு ஹோலி கொண்டாடிய பழங்குடி மாணவர்கள்

ஹோலி - HOLI

ஹோலி கொண்டாட்டத்தில் பெண்கள்

ஹோலி - HOLI

கேமராவில் ஹோலியின் வண்ணமயமான தருணங்களை கைப்பற்றும் ஆண்

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஆப் அலசல்: கையில் ஒரு நூலகம்!

 

 
shutterstock790730305

ஒவ்வொருவருடைய வாட்ஸ்அப்பிலும் நிறைந்துகிடக்கும் மீம்ஸ்கள், வயது வித்தியாசமின்றி அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில மீம்ஸ்கள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கும், சில மீம்ஸ்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும். சில மீம்ஸ்கள் நம்மைப் பொங்கி எழவைக்கும்! ஆனால் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்துவது மீம்ஸில் இருக்கும் ஒளிப்படமா, வாசகமா? பழைய மீம்ஸ்களைக் கிளறிப் பார்த்தால், அதற்குக் காரணம், அதன் வாசகங்கள்தாம் என்பது புரியும்.

ஏனென்றால், படங்களால் காட்சியை மட்டுமே உணர்த்த முடியும். ஆனால் வாசகங்கள் காட்சியோடு எண்ண ஓட்டங்களையும் கருத்துகளையும் உணர்த்தும். அதனால்தான், வாசிப்பு முக்கியம் என்று எப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால், நவீன ஸ்மார்ட்ஃபோன் உலகில், ‘அதற்கு எல்லாம் நேரமில்லை, ப்ரோ’ என்று நீங்கள் சொல்லலாம். பிஸியானவர்கள்கூட வாசிப்பைப் பழக்கமாகக் கொள்ள உதவுகிறது ஒரு ஆப். அதன் பெயர் ‘அமேசான் கிண்டில்’.

 

இது ஒரு நூலகம்

அமேசான் கிண்டிலை ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையம் என்று சொல்லலாம். நூலகம் என்றும் சொல்லலாம். இதில் புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் வாங்கவும் முடியும். அதில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களை வாசிக்கவும் முடியும். ஸ்மார்ட்ஃபோனின் அளவை ஒத்த இது ஒரு வாசிப்பு சாதனம். அதன் விலை மிக அதிகம் இல்லை என்றாலும், கிண்டிலை வாங்குவதைவிட கிண்டில் ஆப்பை ஸ்மார்ட்ஃபோனில் தரவிறக்கம் செய்வதே புத்திசாலித்தனம்.

amazon%20kindle
 

கிண்டிலை ஸ்மார்ட்ஃபோனில் நிறுவி, கணக்கை தொடங்கி, அதனுள் நுழைந்தால், உலகில் உள்ள அனைத்து மொழிகளின் பெரும்பாலான புத்தகங்களும் நம் விரல்களின் தேர்வுக்காகக் காத்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் புத்தக அலமாரியிலிருந்து புத்தகத்தைத் தேடி எடுப்பதே கஷ்டம். அதிலும் லட்சக்கணக்கான புத்தகங்களிலிருந்து எப்படித் தேர்வு செய்வது என மலைக்கத் தேவையில்லை.

இது கூகுள் உலகம். உங்களுக்கு வேண்டிய புத்தகத்தின் பெயரைப் பதிவிட்டுத் தேடச் சொன்னால், அடுத்த நொடியில் ஸ்மார்ட்ஃபோன் திரையில் அந்தப் புத்தகம் விரியும். எந்தப் புத்தகத்தைப் படிப்பது எனத் தெரியவில்லையா? அதற்கும் மெனக்கெட தேவையில்லை. புத்தகங்கள் மொழி வாரியாகவும் வகை வகையாகவும் எழுத்தாளர் வாரியாகவும் சீராக அட்டவணையிடப்படுகிறது.

வேண்டிய மொழியைத் தேர்வுசெய்தால், அந்த மொழியில் குழந்தைகள் புத்தகம், சாகசப் புனைவுகள், காதல் புனைவுகள், குடும்ப புனைவுகள், புனைவற்றவை, பழங்கால இலக்கியங்கள் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அல்லது அதிகம் வாசிக்கப்பட்டதையோ வாங்கப்பட்டதையோ தேர்வுசெய்தும் படிக்கலாம். வாசித்த புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கான மதிப்பீட்டை வழங்கலாம். அது உங்களைப் போன்ற மற்ற வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

 

டிக்ஷனரியும் இருக்கே

‘ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க எனக்குப் பிடிக்கும், ஆனால், வார்த்தைகளின் அர்த்தங்களைத் தேடுவதற்கு அடிக்கடி அகராதியைப் பார்க்க வேண்டியுள்ளது. வாசிப்பை மிகவும் அலுப்பானதாகவும் சிரமமானதாகவும் மாற்றிவிடுகிறது’ என்று சொல்பவர்கள், ஒரு முறை கிண்டிலில் வாசித்துப் பாருங்கள். அந்தச் சலிப்பும் சிரமமும் இல்லாமல் ஆங்கில வாசிப்பை இலகுவாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

kindle

கிண்டிலில் ஆங்கில அகராதியும், விக்கிப்பீடியாவும் உள்ளடங்கி உள்ளது. வாசிக்கும்போது புரியாத வார்த்தையை அழுத்தித் தொட்டால் போதும், அதன் அர்த்தம் உடனடியாகத் திரையில் தோன்றும். ஒரு வேளை அந்த வார்த்தை ஊரின் பெயராகவோ வரலாற்று நிகழ்வுகளாகவோ இருந்தால் அவற்றின் விவரத்தை அகராதிக்குப் பதில் விக்கிப்பீடியாவின் மூலம் ஸ்மார்ட்ஃபோன் திரையில் விரியும். இதனால் உங்கள் வாசிப்பு எளிதாவதோடு உங்களின் ஆங்கில மொழி புலமையும் மேம்படும்.

நீங்கள் கவிஞராகவோ எழுத்தாளராகவோ இருந்தால், இனி அதை ஃபேஸ்புக்கிலோ பிளாக்கிலோ கிடைக்கும் லைக்குகளையும் ஹார்டின்களையும் மட்டும் கொண்டு திருப்தியடையத் தேவையில்லை. அதை நீங்கள் புத்தகங்களாக கிண்டிலில் பிரசுரிக்கலாம். அங்கு உங்கள் புத்தகத்தை இலவசமாகவோ விலைக்கோ பிரசுரிக்கலாம். இதன்மூலம் உங்கள் எழுத்து வெறும் லைக்குகளை மட்டுமின்றி பணத்தையும் பெற்று தரும்.

இனி, ஃபேஸ்புக்கில் லைக்குகள் போடுவதற்கும் வாட்ஸ்அப்பில் மீம்ஸ்களைப் பார்ப்பதற்கும், அவற்றைப் பலருக்கு ஃபார்வார்ட் பண்ணுவதற்கும் மட்டும் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தாமல், கொஞ்சம் புத்தகங்களையும் வாசிக்கலாமே, ப்ரோ.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கரும்பலகையில் 'வேர்ட்' நடத்திய கானா ஆசிரியர்: உதவ முன்வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

 
lopjpg

கணினி இல்லாமல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் தொடர்பான பாடங்களை நடத்தி வரும் கானா ஆசிரியருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உதவ முன் வந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களது பள்ளியில் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காரணத்தால் கரும்பலகையில் மைக்ரோசாஃப்ட் வோர்ட் எப்படி செயல்படுகிறது என்பதை மாணவர்களுக்கு வரைந்து பாடம் நடத்தி இருக்கிறார்.

கானாவின் குமாசி நகரத்தைச் சேர்ந்த ஒவாரா கவாட்வோ பாடம் நடத்தும் அப்புகைப்படம் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

இதுகுறித்து கவாட்டோ கூறும்போது, ''நான் எனது மாணவர்களை நேசிக்கிறேன். அவர்களுக்கு எந்த வகையிலாவது நான் நடந்தும் பாடங்கள் புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இதை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் மற்ற புகைப்படங்களைப் போலதான் பகிர்ந்தேன் ஆனால் இது இந்த அளவு மக்களிடையே ஆதரவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

உதவ முன் வந்த மைக்ரோசாஃப்ட்

காவட்டோவின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விரைவில் அவரது பள்ளிக்கு வேண்டிய உபகரணம் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882

 

பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்: * 1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது. * 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) ராணுவத்தில் வாகன ஓட்டுனராக இணைந்தார். * 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக்கோள் ஆனது.

 
 
 
 
பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882
 
பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:

* 1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது. * 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) ராணுவத்தில் வாகன ஓட்டுனராக இணைந்தார். * 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக்கோள் ஆனது.

* 1977 - ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர். * 1980 - றொபேட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமரானார். * 1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது. * 2001 - லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.

* 2001 - போர்ச்சுக்கல்லி பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். * 2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. * 2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

 

 

 

 

உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்த ஒப்பந்தம் செய்த நாள்- மார்ச் 4- 1931

 
 
 

இந்தியை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை எதிர்த்து மகாத்மா காந்தி உள்பட இந்திய தலைவர்கள் பல்வேறு இடங்களில் உப்பு சத்யா கிரக போராட்டத்தை நடத்தினார்கள். இதில் மகாத்மா உள்பட ஏராளமானோர் கைதானார்கள். தொடர்ந்து தலைவர்கள் போராடியதால் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர்

 
 
 
 
உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்த ஒப்பந்தம் செய்த நாள்- மார்ச் 4- 1931
 
இந்தியை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை எதிர்த்து மகாத்மா காந்தி உள்பட இந்திய தலைவர்கள் பல்வேறு இடங்களில் உப்பு சத்யா கிரக போராட்டத்தை நடத்தினார்கள். இதில் மகாத்மா உள்பட ஏராளமானோர் கைதானார்கள்.

தொடர்ந்து தலைவர்கள் போராடியதால் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1810 - பிரெஞ்சு ராணுவம் போர்ச்சுக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது. * 1813 - நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜெர்மனியின் பெர்லின் நகரை அடைந்தன. பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர். * 1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார். * 1877 - பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற்தடவையாக மேடையேறியது. * 1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

* 1894 - ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின. * 1899 - குயீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர். * 1908 - ஒகைய்யோவில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர். * 1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.