Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

‘இன்று நேற்று நாளை’  ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் நாயகி ரகுல்ப்ரீத்சிங் என்பது உறுதியாகிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பவர் நிரவ் ஷா! மே முதல் `ஆக்‌ஷன்... கட்’ ஆரம்பம்!

p19a_1520924322.jpg

p19b_1520924332.jpg


பேய்க்கதைகளின் ரசிகன் கார்த்தி. யார் சொன்னாலும் உட்கார்ந்து மணிக்கணக்கில் கேட்பவர். தானும் சொல்வதில் வல்லவர். ‘காஷ்மோரா’ போலவே இன்னும் ஒரு பேய்க்கதையில் நடிக்க கார்த்தி தயார். இளம் இயக்குநர்களே, நோட் பண்ணிக்குங்கப்பா!

p25a_1520929248.jpg


`எனை நோக்கி பாயும் தோட்டா’ நாயகி மேகா ஆகாஷின் அம்மா மலையாளி, அப்பா தெலுங்கர். அதனாலேயே மேகா தமிழில் ரொம்ப வீக். ஆனால் ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்புவார். ஆங்கில இலக்கியம் என்றால் ராப்பகலாகத் தூக்கமின்றி வாசிப்பார். ஆங்கிலத்தில் நிறைய கவிதைகள், கதைகள் எழுதுகிற எழுத்தாளரும்கூட!  தினமும் ரெண்டு மணிநேரமாவது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதும் மேகாவுக்கு வல்லிய இஷ்டம். இதுபோக சென்னையின் சந்துபொந்தெல்லாம் நண்பர்களோடு ஊர்சுற்றுவதுதான் மேகாவின் முக்கியமான பொழுதுபோக்கு!

p35a_1520931981.jpg

p35b_1520931991.jpg

p35c_1520932000.jpg


ஸ்குவாஷ் என்றால் ஹன்சிகாவுக்கு ரொம்பவே பிடிக்கும். எந்த அளவுக்கு என்றால், பிரத்யேகப் பயிற்சியாளர் வைத்துக்கொண்டு தீவிரமாகக் கற்றுக்கொள்கிற அளவுக்கு! ஸ்குவாஷ் மட்டுமல்ல தினமும் யோகா செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஹன்ஸ். அவருக்கு பிடித்த இன்னொரு பொழுதுபோக்கு ஓவியம். வரைய உட்கார்ந்துவிட்டால் ஓவியத்தை முடிக்காமல் தூரிகையை கீழே வைக்கமாட்டாரம்!

p84c_1521023027.jpg

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

ஐன்ஸ்டைனுக்குப் பிறகு அறிவியல் உலகில் அதிகம் பிரபலமடைந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

  • தொடங்கியவர்

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!

 
 

ளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா? இதற்கு அறிவியல் ரீதியாகப் பதில் கூற வேண்டாம். தர்க்க ரீதியாக, தத்துவ மட்டும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டுரையின் இறுதியில் பேசுவோம்.

சூரிய உதயம்

 

இந்த அண்டத்தில் வேகமாகச் செல்லக்கூடியது எது என்று கேட்டால் கண்களை மூடிக்கொண்டு ஒளி (Light) என்று சொல்லிவிடலாம். ஏனெனில் இந்தப் பேரண்டத்தின் தூரம் மற்றும் விரிவு ஆகியவற்றை அளக்கக்கூட ஒளியைத்தான் (Lightyears) பயன்படுத்துகின்றனர். அதன் வேகத்தில் பயணித்தால் காலப் பயணம் (Timetravel) கூடச் சாத்தியமே என்கிறது ஒரு கோட்பாடு. ஆனால், அதைவிட வேகமான ஒன்று இவ்வுலகில் என்ன, இப்பேரண்டத்தில்கூட இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள் இயற்பியலாளர்கள்.

ஒரு சாரர் மட்டும், ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது என்கிறார்கள். ஒளியின் அளவிலேயே அல்லது சில சமயம் அதைவிட வேகமாகப் பயணிக்கக் கூடியது அது என்கின்றனர். ஆம், அதன் பெயர் இருள்! அது எப்படிங்க எனச் சண்டைக்கு வராதீர்கள். இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகள் எதையும் உடைக்காமல் இது எப்படிச் சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.

டார்ச் லைட்

இதற்கு நேரடி ஆதாரம் என்பது அறிவியல் ரீதியாக இருப்பதால் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். எனவே, நம் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுவோம். இப்போது உங்களிடம் ஒரு சக்தி வாய்ந்த டார்ச் லைட் (Torch Light) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் சக்தி எவ்வளவு என்றால் பூமியில் இருந்து வியாழன் கோள் வரை அதன் வெளிச்சம் தெரியும். அது வியாழன் கோளின் மொத்த விட்டத்தையும் (Diameter) தன் வெளிச்சத்தைக்கொண்டு மூடிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம் (கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாயா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). இப்போது உங்களின் ஒரு கையை மட்டும் டார்ச் லைட்டின் இந்த முனையில் இருந்து அந்த முனைக்குக் கொண்டு செல்கிறீர்கள். இதற்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரமே செலவாகியிருக்கும். வியாழனின் மொத்த விட்டம் 86,881 மைல்கள், ஒளியின் வேகம் நொடிக்கு 1,86,000 மைல்கள். எனவே ஒளி இந்தத் தூரத்தைக் கடக்க வேண்டுமென்றால் அரை நொடிக்கும் குறைவான நேரமே செலவாகி இருக்கும். நீங்கள் கையை நகர்த்தும்போது உங்கள் கை ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒளியை மறைத்திருக்கும். அந்த இடத்தில் ஒளி இருக்காது அதற்குப் பதில் இருள் அங்கே தோன்றியிருக்கும். நீங்கள் கைகளை நகர்த்திய அரை நொடிக்கும் குறைவான வேகத்தில் இருளும் வியாழனின் அந்தத் தூரத்தைக் கடந்திருக்கும். அதாவது, ஒளி வியாழன் வரை பரவ எடுத்துக்கொண்ட நேரத்தைவிட, குறைவான நேரத்தில் இருள் பரவியிருக்கும்.

ஒளிக்கீற்று

எந்த ஒரு வெளிச்சமும் இல்லாத ஒன்றைத்தான் நாம் இருள் என்கிறோம். ஒளியின் பயணம் என்றால் ஃபோட்டான்களோ அல்லது ஒளித் துகள்களோ அந்த இடத்தில் பயணித்துக்கொண்டு இருக்கும். இதற்கு முரண்பாடாக, இருளின் பயணம் என்பதில் ஒரு பொருளோ, துகளோ பயணிப்பது அல்ல. ஒளியின் பாதையில் தடையை ஏற்படுத்தினால் அங்கே இருள் தானாக உருவாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது தூரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக வைத்துக்கொள்வோம். ஒளி பூமியில் இருந்து 6,00,000 கிலோமீட்டரைத் தாண்டி பயணித்துக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ஒளிக்குத் தேவைப்படும் நேரம்  இரண்டு நொடிகளுக்கு மேல் (நொடிக்கு 2,99,338 கிலோமீட்டர்கள் என்பதே ஒளியின் வேகம்). அந்தப் பாதையில் நீங்கள் ஒரு தடையை வைக்கிறீர்கள் எனில் வைத்த நொடியே அந்த 6,00,000 கிலோமீட்டர்களிலும் இருள் சூழ்ந்துகொள்ளும். அதாவது ஒளி அந்த 6,00,000 கிலோமீட்டருக்குப் பரவ எடுத்துக்கொண்ட நேரத்தைவிட, குறைவான நேரத்திலேயே இருள் பரவிவிட்டது. 

அவ்வளவுதான்,  அடிப்படை இயற்பியல் விதிகளை மாற்றாமல் உடைக்காமல் ஒளியைவிட வேகமானது இருள் என்பது உறுதியாகி விட்டதல்லவா? 

வெளிச்சம் - இருள்

 

நாம் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்வியை நினைவுகூர்ந்து கொள்வோம். 'ஒளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா?' தர்க்க ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் இருள் என்பதை, ஒளியின் எதிர்ப்பதமாக மட்டுமே நாம் பார்ப்பதாலும், அதையும் ஒரு பொருளாகக் கருதுவதாலும், இந்த அறிவியல் ரீதியான டார்ச்லைட் விளையாட்டை, ஒரு சிந்தனைப் பரிசோதனையாக (Thought Experiment) நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படை இயற்பியல் விதியின்படி, ஒளியின் வேகத்தை இதுவரை யாராலும் மிஞ்ச முடியவில்லை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களா?-அதிர்ச்சித் தகவல்

இந்தியா உட்பட 7 நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் பாட்டில் குடிநீரை பரிசோதித்த போது, அவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இந்த அவல நிலை ஏன் தொடர்கின்றது?
 

image_823bc7dddd.jpgசேரிப்புறம் என்றால் எமக்கு நினைவுக்கு வருவது அழுக்கான, சுகாதாரம் என்றால் என்ன என்று தெரியாது வாழும், மக்கள் வாழும் இடம் என்று எண்ணிக்கொள்கின்றோம். ஆனால், சேரி என்பது, மக்கள் சேர்ந்து வாழும் இடம். மக்களை இணைத்துக்கொண்டு, சமூகமாகக் கூடி வாழும் பிரதேசம். 

இன்று ஏழ்மையுடன் வாழும் மக்கள், ஒதுக்குப் புறமான இடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல், குடில்களில் அடிமை வாழ்வு போல் வாழும் இடத்தையே சேரி என்று அழைத்து, அதைக் கொச்சைப்படுத்துகின்றோம்.  

சமூக ஏற்றதாழ்வு, வறுமைகளை உருவாக்கி, அவர்களை ஒதுக்கிவைத்தவர்கள் யார்? இந்த அவல நிலை ஏன் தொடர்கின்றது? நல்ல தமிழ்ச் சொல்லை அவமதித்து, அதற்குள் ஏழைகளைப் புகுத்தி, துன்ப வாழ்வில் என்றும் திழைக்க வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஏழைஎளிய மக்களை ஏய்த்து, வாக்குக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளிடம்தான், இந்தக் கேள்விகளைக் கேட்கவேண்டும். 

  • தொடங்கியவர்

107 பயணிகளுடன் அமெரிக்கா விமானம் காணாமல் போன நாள்: மார்ச் 16- 1962

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானம் 107 பயணிகளுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சென்றபோது காணாமல் போனது. இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1926 - முதலாவது திரவ- எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார். * 1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா,

 
 
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானம் 107 பயணிகளுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சென்றபோது காணாமல் போனது.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1926 - முதலாவது திரவ- எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.
 
* 1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜெர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
 
* 1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

* 1963 - பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
 
* 1966 - ஜெமினி 8, நாசாவின் 12-வது மனிதரைக் கொண்டு சென்ற விண்கலம், ஏவப்பட்டது.
 
* 1968 - வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
* 1969 - வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

* 1985 - அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991-ல் விடுதலை ஆனார்
 
. * 1988 - ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
 
* 2006 - மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்கு ஐ.நா.வின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உருவத்தை வெச்சு எடைபோடாதீங்க பாஸ்!’ - குறள் நீதி சொல்லும் கதை! #MotivationStory

 

தன்னம்பிக்கை கதை

ஜிசேலி பந்தென் (Gisele Bündchen)... பிரேசிலைச் சேர்ந்த பிரபல மாடல். 2012-ம் ஆண்டு,  `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலக அளவில்  அதிகச் சம்பளம் வாங்கும் மாடல்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர். அவர் ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்... `மனிதர்கள் என்னை எடைபோடும்போது, அவர்கள் என்னைச் சரியாக எடைபோடவில்லை என்பதை நான் அறிவேன். ஏனென்றால், நான் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது.’ இன்றைக்கு நேற்றல்ல... வள்ளுவர் காலம் தொட்டே இந்தப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது... `உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்றார் வள்ளுவர். `எனக்கு எல்லாம் தெரியும், அவனுக்கு என்ன தெரியும்’ , `அவனால வேற என்ன செய்ய முடியும்?’... இப்படி தோற்றத்தை வைத்து எடைபோடும் சுபாவம் மனிதர்களுக்கு உண்டு. இது எவ்வளவு பெரிய தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதை!

 

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்திலிருக்கிறது அந்த மனநலக் காப்பகம். வாரத்துக்கு ஒருமுறை காப்பகத்துக்கு ஒரு ட்ரக் டிரைவர்தான் மளிகைப் பொருள்களை சப்ளை செய்வார். அப்படித்தான் அன்றைக்கும் டெலிவரி கொடுக்க வந்திருந்தார். அவருடைய ட்ரக் திறந்திருந்த ஒரு சாக்கடைக்குப் பக்கத்தில் நின்றிருந்தது. அவர் திரும்பி வந்தபோதுதான், ட்ரக்கின்  ஒரு டயர் பஞ்சராகியிருந்ததைக் கவனித்தார். நொந்துபோனவராக, ட்ரக்கிலிருந்த இன்னொரு ஸ்பேர் டயரை எடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சரான டயரைக் கழற்றினார். பிறகு, இன்னொரு டயரை மாற்ற ஆரம்பித்தபோது, தவறுதலாகத் தன் கையிலிருந்த நான்கு போல்ட்டுகளையும் நழுவவிட்டுவிட்டார். அவை திறந்திருந்த சாக்கடையில் போய் விழுந்துவிட்டன. அவ்வளவுதான். பதறிப்போய்விட்டார் அந்த மனிதர். `இப்போது என்ன செய்வது?’

ட்ரக்

அந்தப் பக்கமாக மன நலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நபர் வந்தார். திகைத்துப்போய் உட்கார்ந்திருந்த டிரைவரைப் பார்த்தார். ``என்ன ஏதாவது பிரச்னையா?’’ என்று கேட்டார். நிமிர்ந்து வந்தவரைப் பார்த்தார் டிரைவர். அந்த மனிதர் அணிந்திருந்த காப்பகச் சீருடை அவர் கண்ணை உறுத்தியது. அந்த மனிதரை ஒரு மூட்டைப்பூச்சியைப் பார்ப்பதுபோலப் பார்த்தார். `இந்த லூஸால எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?’ என நினைத்தார்.

``என்ன பிரச்னைனு சொல்லுப்பா... என்னால முடிஞ்ச உதவியை நான் செய்வேன்ல?’’

இப்போது ட்ரக் டிரைவருக்கு வேறு வழியிருக்கவில்லை. `சரி... சொல்லித்தான் பார்ப்போமே...’ என்றும் தோன்றியது. நடந்ததைச் சொன்னார்.

இதைக் கேட்டு அந்த மனிதர் சிரித்தார்... ``இந்தச் சின்னப் பிரச்னையையே உன்னால தீர்க்க முடியலைன்னா, வாழ்நாள் முழுக்க நீ இப்படியே ட்ரக் டிரைவராகவே இருந்துட வேண்டியதுதான்...’’

இதைக் கேட்டுத் திகைத்துப் போனார் டிரைவர். ``சரிங்க... ரொம்ப நல்லது. இந்தப் பிரச்னைக்கு என்ன செய்யலாம்... உங்களால ஒரு யோசனை சொல்ல முடியுமா?’’

ட்ரக் டயர்

``வேற ஒண்ணும் செய்ய வேணாம். இந்த ட்ரக்குக்கு மொத்தம் நாலு டயரு. மீதி இருக்குற மூணு டயர்ல இருந்தும் ஒரேயொரு போல்ட்டை மட்டும் கழற்று. அந்த மூணு போல்ட்டையும் இந்த நாலாவது டயர்ல மாட்டு. அப்புறம் மெதுவா, பக்கத்துல இருக்குற வொர்க்‌ஷாப்புக்கு ட்ரக்கை ஓட்டிட்டுப் போ. அங்கே போனதும், டயருக்கு ஒண்ணா, புதுசா ஒரு போல்ட்டை மாட்டிடு. பிரச்னை தீர்ந்துது. அவ்வளவுதான்...’’

இதைக் கேட்டு பிரமித்துப் போனார் அந்த டிரைவர். அவருக்கு ஒரு சந்தேகமும் வந்தது. தயக்கத்துடன் அதைக் கேட்கவும் செய்தார்... ``இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க... அப்புறம் ஏன் இந்த மன நலக் காப்பகத்துல வந்து இருக்கீங்க?’’

அவர் பதில் சொன்னார்... ``நண்பா... எனக்கு மன நலம் சரியில்லைங்கிறதுனால இங்கே இருக்கேன். உண்மைதான். ஆனா, நான் முட்டாள் இல்லை.’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நடுவுல கொஞ்சம் மூளையைக் காணோம்... அயர்லாந்தின் 84 வயது விந்தை மனிதர்!

 
 

ம் அன்றாட வாழ்வில் யாரேனும் ஒருவரையாவது "உனக்கு மண்டையில மூளை இருக்கா...?" என்று கேட்டிருப்போம். அப்படி யாராவது இவரிடம் கேட்டால், இவர் "கொஞ்சம் மட்டும் இல்லைங்க" என்றுதான் சொல்வார். ஆம், இவருக்கு நிஜமாகவே ஒரு பாதி மூளை இல்லை.

மூளை

 

அயர்லாந்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத அந்த முதியவருக்கு வயது 84. சென்ற மாதம், சில நாள்களாக அவருக்கு மயக்கம் வந்துகொண்டே இருந்துள்ளது. வயதானவர்களுக்கு இது சாதாரணமானதுதான் என்று நினைத்த அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாள்கள் போகப்போக தனது இடது கை மற்றும் கால் மிகவும் பலவீனமடைந்ததைப்போல் உணர்ந்ததால், சிகிச்சைக்காக வடக்கு அயர்லாந்தில் உள்ள காஸ்வே மருத்துவமனையை நாடியுள்ளார். சில அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்துபார்த்த மருத்துவர்கள், மூளையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்கூட இப்படி நடக்கலாம் என்பதால் தலையை ஸ்கேன் செய்துபார்க்க முடிவு செய்தனர்.

ஸ்கேன் செய்யும்போது அதிர்ந்துபோன டாக்டர்கள், ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையைத் தேடத் தொடங்கிவிட்டனர். மண்டையோட்டின் வலதுபுறத்தில் மூன்றரை இன்ச் அளவிற்கு இருக்க வேண்டிய பகுதி அவரது தலையில் வெற்றிடமாக இருந்துள்ளது.

பொதுவாக முகத்திலோ, தலையிலோ ஏதேனும் பலமான அடிபட்டால் அதன் தாக்கம் மூளைக்கும் செல்லும், அப்போது அதில் தாக்கப்படும் பகுதி சிதைந்து அங்கே இம்மாதிரியான வெற்றிடம் உருவாகி காற்று அடைத்துக்கொள்ளும். அவருக்கு அப்படி எதுவும் காயம் ஏற்படவில்லை. ஒருவேளை மூளைக்கட்டி (Brain Tumour) இருந்து அதற்காக அறுவைசிகிச்சை ஏதாவது செய்திருந்தால்கூட இப்படி ஏற்படலாம். அவர் அப்படி எதுவும் சிகிச்சை தனது இளமைக்காலத்தில் செய்திருக்கலாம், அதைத் தங்களிடம் தெரிவிக்க மறந்திருப்பார் என்ற கோணத்தில் அவரது பழைய மருத்துவ வரலாற்றினை ஆராய்ந்தார்கள். ஆனால், சிகிச்சை செய்ததாகத் தகவல் எதுவும் இல்லை.

மூளை

Photo Courtesy:  BMJ Case Reports

குழம்பிப்போன மருத்துவர்கள் அவரது மூளைப்பகுதியை மேலும் ஆழமாக ஆராய்ந்தபோது, மூளைக்கும் நாசிக்குழிக்கும் இடையிலான தொடர்பு ஏற்படுத்தும் மூக்கடி எலும்பின் மீது மற்றொரு எலும்பு வளர்ந்திருந்தது தெரியவந்தது. அந்த எலும்பு வெற்றிடத்தில் இருக்கும் காற்று வெளியே வர முடியாதவாறு அடைத்திருந்ததும், அந்தக் காற்றின் அழுத்தத்தால் மூளைத்திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புமே இவரது தலை சுற்றலுக்கும், கை கால் பலவீனத்துக்கும் காரணம் என்று புரிந்துகொண்டார்கள்.

அறுவைசிகிச்சையின் மூலம் அதைச் சரிசெய்து விடலாம் என்றாலும், அது மிகவும் சிக்கலான சிகிச்சை என்றும் அதில் ஆபத்துகள் நிறைந்துள்ளன என்பதையும் டாக்டர்கள் அவரிடம் விளக்கியுள்ளனர். அனைத்தையும் கேட்டுவிட்டு அவர் அறுவைசிகிச்சை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

1.4 கிலோ எடைகொண்ட மூளையில் பாதியைக் காணவில்லை என்று கூறினால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது? அதுவும் மருத்துவ வரலாற்றில் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், புகைப்பழக்கம்கூட இன்றி இதுவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்திருக்கிறார் இந்த முதியவர். அப்படியிருக்க இதைக் கேட்டபோது அவருக்கும் அதிர்ச்சியாகத்தானிருந்தது. அறுவைசிகிச்சை செய்துகொள்வதைத் தவிர்த்துவிட்டாலும், அவரை 2 வாரங்களுக்கு மருத்துவமனையில் இருக்க வைத்து மீண்டும் கை, கால் பலவீனம், தலைச்சுற்றல் போன்ற இன்னல்கள் வராமல் இருக்க சில அடிப்படை சிகிச்சைகளைச் செய்துள்ளார்கள். அதன் மூலமே அவர் தற்போது முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.

மூளை

Photo Courtesy:  BMJ Case Reports

 

இந்தப் பிரச்னை இருந்தாலும், இதுவரை மிகவும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளார். சென்ற மாத இறுதியில்தான், தன் மூளையைக் காணோம் என்பது இவருக்கே தெரிந்திருந்தாலும், அதற்குள் அவரை வைத்து ஆராய்ச்சிகள் பல செய்து பார்த்துவிட்டார்கள் மருத்துவர்கள். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஃபின்லே பிரவுன் (Dr. Finlay Brown) அவரது குறைபாடு பற்றி முழுமையான ஆய்வு செய்ய முயன்று கொண்டிருக்கிறார். இதுபோன்று இதுவரை எந்த நிகழ்வுகளும் நடந்ததாகப் பதிவுகள் இல்லாததால், குறிப்புகள்கூட இல்லாமல் சிரமப்படுவதாகவும், இருந்தாலும் நிச்சயம் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அறிவியல் உலகில் அதிசயங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவற்றுக்கான விடைகளைத் தேடி ஆராய்ச்சியாளர்களும் சளைக்காமல் முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க மூளைய காணோமுன்னு போலீஸ்ல புகார் கொடுத்துடுங்க தாத்தா!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ற்றைப் புருவ அசைவிலேயே இணையத்தைப் புரட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் பாடல் காட்சி மூலம் ஃபேமஸ் ஆன வாரியர், தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் லட்சக்கணக்கில் பாலோயர்ஸ் வைத்திருக்கிற இணையப்பிரபலம். இந்தத் திடீர் புகழ்வெளிச்சத்தைப் பயன்படுத்தி, தன் இணையப்பக்கத்தில் விளம்பரதாரர்களின் பதிவுகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி யிருக்கிறார். ஒரு விளம்பரப் பதிவுக்கு 8 லட்சம் வரை டிமாண்ட் செய்கிறார் என்கிறது மல்லுவுட் வட்டாரம். காற்றுள்ளபோதே...

p60a_1521004816.jpg

மெரிக்கா செல்கிறார் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முழு உடல்நலத்தோடு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவாம். அமெரிக்காவின் மருத்துவராகப் பணியாற்றும் கேப்டனின் பரம ரசிகர்தான் சிகிச்சைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று பார்த்துக்கொள்கிறாராம்.
பழைய பன்னீர்செல்வம் ரிட்டர்ன்ஸ்!

p60b_1521004828.jpg

ஜீவாவுடன் `ஜிப்ஸி’ படத்திற்கு பூஜை போட்ட ராஜூமுருகன், ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவைச் சுற்ற உதவி இயக்குநர்களோடு கிளம்பியிருக்கிறார். நாயகன் இந்தியாவையே குறுக்குவெட்டாகப் பயணிக்கிற கதை என்பதால், அந்த உணர்வைத் தன் உதவி இயக்குநர்களுக்கும் கடத்தவேண்டும் என்று சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கிறாராம். ஜீவா இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றவிருப்பதால் அதற்காகத் தாடியும் நிறைய முடியும் வளர்க்க வேண்டியிருக்கிறது, அந்த கேப்பில் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்புவதுதான் திட்டமாம். நாடோடிகள்!

p60c_1521004848.jpg

பாலிவுட்டிலும் சர்வதேசத் திரைப்படங்களிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துப் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான். ‘லைஃப்  ஆஃப் பை’, ‘லன்ச் பாக்ஸ்’  படங்களில் நடித்த இவர், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கேன்சர், மூளைக்காய்ச்சல் என வெவ்வேறு வதந்திகள் கிளம்பின. இது குறித்து இர்ஃபான்கான் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ‘எனக்குச் சில உடல்நலக்கோளாறுகள் இருப்பது உண்மைதான், சீக்கிரமே குணமடைந்து மீண்டும் நடிப்புப் பயணத்தைத் தொடருவேன்’ என்று பதிவிட, அவருக்கு ஆதரவாக இந்தியத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மீண்டு வாருங்கள் இர்ஃபான்!

p60d_1521004862.jpg

ந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றவர் பிரான்ஸிஸ் மெக் டார்மன்ட்.  விருதுக்குப் பிறகு நடந்த விருந்து நிகழ்வில் அவரிடம் இருந்த விருதினை யாரோ திருடிச்சென்றுவிட பரபரப்பானது ஆஸ்கர் டீம். நல்லவேளையாக சில மணிநேரத்தில் டிராபியை மீட்டு மெக்டார்மன்டிடமே சேர்த்திருக்கிறது அமெரிக்கக் காவல்துறை. டிராபியை எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரோ `நான் அப்பாவி, டேபிள் மேலே இது இருந்துதுனு எடுத்து செல்ஃபி எடுத்துக்கிட்டிருந்தேன், அதுக்குள்ள அந்தம்மா ஆர்ப்பாட்டம் பண்ணி போலீஸ் வரைக்கும் போய்ட்டாங்க’’ என்று வாக்குமூலம் கொடுக்க, ஆஸ்கர் கலகலப்பில் இதுதான் ஹைலைட்! செல்ஃபிமேனியா!

ழ்கடல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் பில் வாரன் என்ற அமெரிக்கர். கடலில் மூழ்கியவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கில்லாடி!  கடலுக்குள் பெட்டியில் வைத்து வீசப்பட்ட ஒசாமாவின் உடலை, கடந்த சில ஆண்டுகளாகத் தேடிவருகிறார்.  இதற்காக சி.ஐ.ஏ தன்னைக் கொல்லக்கூடும் என அச்சத்திலும் இருக்கிறார். சீக்கிரமே ஒசாமாவின் உடலைக் கண்டுபிடித்துவிட்டு, அடுத்து இந்தியப்பெருங்கடலில் மலேசிய விமானத்தையும் தேடிக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லிப் பரபரப்பு கிளப்பியிருக்கிறார். வெளிநாட்டு வினோதன்!

ல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் பேராசிரியர் மு.ராமசாமி, இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். கோலிவுட்டில் ‘வல்லமை தாராயோ’ மூலம் இயக்குநராக அறிமுகமான மதுமிதா. ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்திற்குப் பிறகு படங்கள் இயக்காமல் தொலைக்காட்சிப் பக்கமாக ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது அவர் இயக்கும் படம் `கே.டி என்கிற கருப்பு துரை.’ 80 வயது கிராமத்துத் தாத்தாவாக நடிக்கப்போவது மு.ராமசாமி. வாங்க தாத்தா வாங்க!

p60e_1521004877.jpg

போர்னோ படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் மியா கலிஃபா. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தொடர் மிரட்டல்களால் போர்னோ படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்ததுதான் இணையத்தில் சென்ற வார வைரல் செய்தி. இனி விளையாட்டுப் போட்டிகளின் தொகுப்பாளினியாக மட்டுமே வாழ்க்கையைத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார் மியா. மாற்றம்!

p60f_1521004893.jpg

‘நாச்சியார்’ படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் போன் செய்து, `இந்தியில ஒரு படம் பண்ணலாம். எப்போ கால்ஷீட்?’ என தேதி கேட்டதில் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார் ஜிவிபி. ``கைல இருக்குற புராஜெக்ட்டை எல்லாம் சீக்கிரமே முடிச்சிட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டு இப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். நீ கலக்கு மச்சான்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

குழந்தை முதல் பெரியவர் வரை யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? #WorldSleepDay

 
 

ந்த உலகில் தோன்றிய உயிரினங்களில் சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் தூக்கம் இன்றியமையாத ஒன்று. மறுநாளை உற்சாகத்துடன் தொடங்க, இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இதயம், சிறுநீரகம் நன்றாக இயங்க, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற நோய்களைத் தவிர்க்கவும் உறக்கம் நமக்குத் தேவை.

தூக்கம்

 

தூக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதற்காக `வேல்ர்டு அசோசியேஷன் ஆஃப் ஸ்லீப் மெடிசின்’ (World association of sleep medicine) என்ற அமைப்பு, 2008-ம் ஆண்டு முதல் உலக தூக்க தினத்தைக் கொண்டாடிவருகிறது. இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி, உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முழக்கமாக `உங்களுடைய வாழ்க்கையை இசை லயம் கெடாமல் அனுபவிக்க தூக்க உலகில் இணைந்துகொள்ளுங்கள்’ (Join the sleep world preserve your rhythms to enjoy life) என்ற வாக்கியத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இன்று உலக தூக்க தினம். தூக்கத்தின் முக்கியத்துவதையும், அதைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் பார்ப்போம்.

இன்றைய இளைஞர்கள் எப்படித் தூங்க வேண்டும் என்றே தெரியாமல் இருக்கிறார்கள். இரவு வெகுநேரம் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அதிலேயே லயித்திருப்பது இப்போது வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும். இதை இளம்தலைமுறையினர் உணரவேண்டியது அவசியம்.

இளைஞர்கள்

தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. `ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாகத் தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியலிருக்கிறது. அதன்படி, 

பச்சிளம் குழந்தைகள் - 16 முதல் 20 மணி நேரம்.

பதின்பருவத்தினர் - 9 முதல் 10 மணி நேரம்.

இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் - 7 முதல் 10 மணி நேரம்.

முதியவர்கள் - 8 முதல் 12 மணிநேரம்.

குழந்தைகள்

ஏன் நாம் உறங்க வேண்டும்... உறக்கம் என்பது அவ்வளவு முக்கியமானதா? நிச்சயமாக. நம் உடல் சரியாக இயங்குவதற்குத் தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்னைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்திலிருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

நன்றாகத் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்? 

* தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். 

* உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது. 

* செல்போன்,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். 

* இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ, மிக  அதிகமாகவோ  சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும். 

லேப்டாப்

சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மனஅழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தைச் சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலைச் சரியாகப் பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதைத் தெரிந்துகொண்டு, நன்றாகத் தூங்குவோம்... நோயின்றி வாழ்வோம்! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘வாழ்வின் தாற்பரியத்தை, உணர்க’
 

image_af6d95e008.jpgசின்னஞ்சிறு குடிலில் பிறந்து, வெற்றுடம்புடன் சேற்றுக்குள் தவழ்ந்து, துழாவி, வெய்யிலில் காய்ந்து, ஈற்றில் மாமேதைகளாக உருவான பலர் இருக்கின்றார்கள். கடவுளின் பார்வை எல்லோரின் மீதும் பட்டே தீரும்.  

ஆனால், குப்பை மேட்டருகே வாழ்ந்த, பாமரன் உயர்நிலை அடைவதைச் சிலரால் ஜீரணிக்க முடிவதில்லை. “பார்த்தீர்களா, இந்தப் பரதேசி மகனை...” எனக் குமுறுகின்ற பேர்வழிகள், தங்களின் குடும்பத்தைத் தவிர, வேறு ஒருவரையும் மனித உருவாகக் கருதுவதே இல்லை. 

இத்தகையவர்கள், உண்மை நிலையுணர்ந்து, எவரோ ஓர் ஏதிலிக்குத் தர்மம் செய்து, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வியூட்டும், கைங்கரியம் செய்தால், அவர்தம் பரம்பரைகள், உயர்ந்து நிலைபெறும் என்பதை உணரவேண்டும்.  

வாழ்வின் தாற்பரியத்தை, உணர்ந்தால்தான், தானதர்ம சிந்தனைகள் தானாக உருவாகும். கல்விக்கான கொடையை குறையறச் செய்து உய்மின்

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணி முதன்முதலாக உலககோப்பை வென்ற நாள் (மார்ச் 17, 1996)

 
 
 

ரணதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கோப்பையை வென்றது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறப்பான பேட்டிங்கும், சமிந்தா வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின்

 
இலங்கை கிரிக்கெட் அணி முதன்முதலாக உலககோப்பை வென்ற நாள் (மார்ச் 17, 1996)
 
ரணதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கோப்பையை வென்றது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறப்பான பேட்டிங்கும், சமிந்தா வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

மேலும், இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1805 - இத்தாலிய பேரரசனாக நெப்போலியன் ஆனான்.

• 1845 - இரப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.

• 1886 - மிசிசிப்பியில் 20 ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

• 1891 - பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.

• 1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

• 1969 - கோல்டா மெயர் இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

• 1988 - கொலம்பியாவின் போயிங் விமானம் மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

• 1992 - அர்ஜெண்டினாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 29 பேர் பலியாயினர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நீங்க நல்லவரா, கெட்டவரா?’ உங்கள் செல்போன் சொல்லிவிடும்!


 

 

nallavara-kettavara-cellphone

  

 

அம்புலிமாமா கதைகள் படித்திருக்கிறீர்களா. ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் பறவையின் வலது றெக்கையில், அரக்கனின் உயிர் இருக்கும் என்று எப்போதோ படித்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக் கதைகள் இப்போது எழுதப்பட்டால், அந்த உயிர் இருக்கும் இடம்... செல்போன் என்பதாகத்தான் எழுதுவார்களோ என்னவோ?!

ஒரு சிலரிடம் தடக்கென்று டயல் டோனுக்கும் ரிங் டோனுக்கும் உள்ள வித்தியாசம் கேட்டாலே தெரியாது. ஆனால் செல்போன் கண்டுபிடித்த கம்பெனிக்குக் கூட தெரியாத பல விஷயங்களை, இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

செல்லும் இடத்துக்கெல்லாம் எடுத்துச் செல்லும் பாக்கெட்டில் வைத்துச் செல்லும் செல்போன்களையும் அந்தக் காலத்து லேண்ட்லைன் போன்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அப்போது லேண்ட் லைனே கதி என்று யாரும் அதன் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கவில்லை. செல்லும் இடமெல்லாம்  லேண்ட்லைன் போனை கழுத்தில் கட்டிக் கொண்டு எடுத்துப் போகவில்லை. ஆனால் இன்றைக்கு?

ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறையும் செல்போனை எடுத்து, ஏதேனும் போன், மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.  டாய்லெட்டுக்கு பேப்பரும் வாரப்பத்திரிகையுமாகச் சென்ற காலமெல்லாம் போய்விட்டது. செல்போனுடன்  செல்பவர்களே அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

முன்பெல்லாம் ஏடிஎம்  இல்லை. கார்டும் கிடையாது. பணத்தை பீரோவில் வைத்திருப்பார்கள். அதைப் பூட்டி சாவியைப் பத்திரமாக வைத்திருப்பார்கள். இப்போதும் அப்படியான பூட்டு அதாவது லாக் பயன்படுத்துகிறார்கள். எங்கே என்கிறீர்களா? செல்போனில்தான்.

அப்பாவோ தாத்தாவோ ஒரு டைரியிலோ நோட்டுப்புத்தகத்திலோ சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என விலாசங்களையும் தொலைபேசி எண்களையும் எழுதிவைத்திருப்பார். எத்தனை வீடு மாறினாலும் கூட, நம்பர்களும் முகவரிகளும் கொண்ட நோட்டுப் புத்தகம் மிக மிக பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆறுமாதத்துக்கு ஒருமுறை  செல்போன்கள் புதிய புதிய மாடல்களாக உதித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படி புதிய மாடல் போனை வாங்காதவர்கள், அப்டேட்டில் இல்லாதவர்கள் என்று இளக்காரமாகப் பார்க்கப்படுகிற சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பிறகென்ன... புது மாடல்... புது செல்போன்.  விளைவு... ‘மாப்ளே. போன மாசம் போன் மாத்தும்போது உன் நம்பர் மிஸ்ஸாயிருச்சுடா’ என்று சர்வசாதாரணமாக தோள் குலுக்கிச் சொல்கிறோம்.

செல்போன் என்பது நவீன சாதனம். ஆமாம்... நவீனம்தான். செல்போன் புழக்கத்துக்கு வந்து பல வருடங்கள் ஓடிவிட்டாலும் இன்றைக்கும் நவீனம்தான். நாளொரு மாடலும் பொழுதொரு gbக்களுமாக  அப்டேட்டிக்கொண்டே இருக்கிறார்கள். 

எல்லா நல்லதுகளும் இருக்கின்ற அதேநேரத்தில் எல்லாக் கெட்டதுகளும் குவிந்து கிடக்கின்றன.  நம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, நம் குணாதிசயங்களைச் சொல்லும் ஜோதிடர்கள் போல, நம் செல்போன்களைக் கொண்டே நம் குணங்களை, எண்ணங்களை, செயல்களைச் சொல்லிவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சில கேள்விகளையும் அந்த ஆய்வு முன்வைக்கிறது.

1. உங்கள் செல்போனில் அதிகம் மெசேஜ் அனுப்புகிறீர்களா?

2.இரவு நேரங்களில் செல்போனில் அதிகம் பேசுகிறீர்களா?

3. உங்கள் செல்போன் லாக் ஓபன் பாஸ்வேர்டு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியுமா?

4. பாத்ரூமில் குளிக்கும் போது, உங்கள் செல்போன் அடித்தாலோ, மெசேஜ் சவுண்ட் கேட்டாலோ பதட்டமாகிவிடுவீர்களா?

5. அடிக்கடி செல்போன் லாக் ஓபன் பாஸ்வேர்டு மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?

6. குழந்தைகளோ மனைவியோ (கணவரோ)  உங்கள் செல்போனை எடுத்து ஓபன் செய்துவிட்டால், கலவரமாகி, காச்மூச்சென்று கத்துவீர்களா?

7.  வீட்டு ஹாலில் அமர்ந்திருக்கும் போது, எவரேனும் போனில் அழைத்தால், சட்டென்று பீதியுடன்  பால்கனிக்கோ வாசலுக்கோ சென்று, குரல் தாழ்த்தி ரகசியமாகப் பேசுகிறீர்களா?

இப்படியான ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டுவிட்டு, பதில்களை எங்களுக்குச் சொல்லவே வேண்டாம். நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதை உங்கள் செல்போனே சொல்லிவிடும் என்று   செல்போனில் அடித்து சத்தியம் செய்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நீங்க நல்லவரா கெட்டவரா?  

http://www.kamadenu.in

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/HAJAMYDEENNKS

ஏர்செல் மூடப்போறாங்கன்னு வந்த செய்தி மட்டும்தான் வாட்ஸ்அப்பில் வந்ததில் உண்மையாக நடந்தது...!

twitter.com/selvaraj851

இப்ப ரஜினி எதுக்கு இமயமலைக்குப் போயிருக்காருங்கிற, எல்லாம் அந்த ஏழு மந்திரத்த வாங்கிட்டு வந்து மக்களுக்கு நல்லது செய்யத்தேன்... அதுபுரியாம தலைவனைக் கலாய்க்காதப்பு!

p112a_1521032922.jpg

twitter.com/thoatta

தமிழ்நாட்டுல நடக்க வாய்ப்பில்லைன்னு நம்பின நிகழ்வுகள் எல்லாம் இப்ப நம்ம மாநிலத்துல நடந்துகிட்டிருக்கு.

twitter.com/Thaadikkaran

முதல்ல தலையைச் சுத்திக் காதைத் தொட்டு ஸ்கூல்ல சேர்ந்தோம், இப்போ ஊரைச் சுத்திக் கடன் வாங்கி ஸ்கூல்ல சேர்த்துவிடுறாங்க..! #பிரைவேட்ஸ்கூல்

twitter.com/HAJAMYDEENNKS

குழந்தைகளும் அரசியல்வாதிகளும் ஒண்ணுதான்... அவங்க காரியம் முடிஞ்சுட்டா நாம சொல்வதைக் கேட்கமாட்டாங்க...!

twitter.com/mufthimohamed1

சொந்தக்காரனுக முன்னாடி சொத்து சேர்த்து வாழத் தேவையில்ல, அவனுக முன்னாடி சிரிச்சுட்டே வாழ்ந்தாப் போதும், அவங்களால ஜீரணிக்க முடியாது.

p112b_1521032940.jpg

twitter.com/anbu_vimal

மறக்கப்பட வேண்டியவர்கள் ஏதோ ஒரு சாலையில், ஏதோ ஒரு சாயலில், எதிர்பாராத பொழுதில் நம்மைக் கடக்கிறார்கள்!

twitter.com/HAJAMYDEENNKS

படிப்படியாக உயர்ந்து முதலமைச்சர் நிலையை அடைந்துள்ளேன்  - எடப்பாடி. ஆமா, போயஸ்கார்டன் வீட்டுப்படி, தினகரன் வீட்டுப்படி, திவாகரன் வீட்டுப்படி...!

twitter.com/BlackLightOff

வீட்டுல ஏதாச்சும் சண்டை போட்டுட்டு, அதே கோபத்துல ஜீன்ஸ் பேன்ட்டைத் துவைத்தால்தான் அழுக்கு போகும்.  #verified #ஜீன்ஸ்

twitter.com/Thaadikkaran

சம்பளம் எவ்வளவு என்ற கேள்விக்கு, ‘உங்க அளவுக்கு இல்ல, ஏதோ வருது’ என்பதே அநேக மக்களின் ஒருமித்த பதில்.

twitter.com/ajmalnks

“மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்” - தமிழிசை. உங்களை வெச்சு மீம்ஸ் வளர்ந்திருக்குன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்க்கா.

p112c_1521032954.jpg

twitter.com/Kozhiyaar

கணக்குப் பாடம் படிக்கும் வரைதான் ‘கடன்’ வாங்குவது எளிதாக இருந்தது!

facebook.com/Nelson Xavier

Power சரியில்லை, System சரியில்லை, Admin சரியில்லை, But ஒரு மாநிலமே முழு வீச்சில் இயங்குகிறது. அதன் பேர் தமிழ்நாடு!

facebook.com/Mohammad Jinnah

சண்டை என வந்தால் நான்லாம் சட்டையைக் கழட்டிட்டுக் களத்துல நிற்பேன். எதிரில் நிற்பவன் என்னைப் பார்த்து, ‘ஐயோ பாவம், ரொம்ப வீக்கா இருக்கானே’ எனப் பரிதாபப்பட்டு விட்டுட்டுப் போய்டுவான். தப்பிச்சிடுவேன்!

p112d_1521032970.jpg

facebook.com/வாசுகி பாஸ்கர்

வருடத்திற்கு ஒரு கோடியே முப்பது லட்சத்துப் பதினாறாயிரம் பியர்ஸ் சோப்புகள் டாய்லெட் சிங்க்கில் விழுந்து விடுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

facebook.com/Karl Max Ganapathy

கலைஞர் நல்லவர்னு லெஃப்ட்ல இண்டிகேட்டரைப் போடு. எம்.ஜி.ஆர் நல்லவர்னு ரைட்ல இண்டிகேட்டரைப் போடு. கடைசில ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று வேணும்’னு வண்டிய நேரா ஓட்டிட்டுப் போய் ஓனர் வீட்ல நிப்பாட்டிடு # ஆன்மிக அரசியல்

p112e_1521032984.jpg

facebook.com/Vinayaga Murugan

சீனாவோட சண்டை வந்தா எங்க படைகள் எந்நேரத்திலும் தயார் என்று ஆர்எஸ்எஸ் ஆட்கள் அடிக்கடி சொல்வாங்க இல்லையா? சண்டை வராத நேரத்தில் இப்படிக் காட்டுத்தீ, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும்போது இவங்களை அங்க அனுப்பினா, இவங்க வீரசாகசத்தையும் மக்கள் பார்த்த மாதிரி இருக்கும். நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தினதா இருக்குமில்லையா?

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி

 

பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு பிரபல சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்தியுள்ளார். #sudarsanpattnaik

 
பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி
 
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஓவியத்தை பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். ஹாக்கிங் கடந்த புதன்கிழமை காலை மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவரின் மறைவிற்கு தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 
201803171449586109_1_odisa._L_styvpf.jpg

மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒடிசா சென்றுள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ராம்நாத் கோவிந்தின் உருவத்தை ஓவியமாக பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். 'வெல்கம் டு ஒடிசா' என்ற வாசகத்துடன் வரைந்துள்ள அவருடைய ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. #sudarsanpattnaik #tamilnews

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

குவளைகளாக மாறி வரும் சுவிங்கம் குப்பைகள்

வீதிகளில் குப்பைகளாக போடப்படும் சூவிங்கம்களை, பயன்தரும் குவளைகளாக மாற்றி வருகின்றனர் பிரிட்டன் வடிவமைப்பாளர்கள்.

  • தொடங்கியவர்

சிரியா: மக்களின் துயரத்தை பேசும் 'தத்ரூப ஓவியங்கள்' (புகைப்படத் தொகுப்பு)

 
ஏ.பி.ஸ்ரீதர்

ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாக விளங்க வேண்டும். குறிப்பாக, கலவரங்கள் ஏற்படுகின்ற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக அது இருத்தல் வேண்டும். ஆனால், அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னவாகும்?

ஏ.பி.ஸ்ரீதர்

கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை. அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது.அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார். அந்தத் தொடரானது, சிரியா மக்களுக்கான உதவிக் கரங்களுக்கு ஓர் அழைப்பை விடுத்துள்ளது.

ஏ.பி.ஸ்ரீதர்படத்தின் காப்புரிமைஏ.பி.ஸ்ரீதர் Image captionஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

இந்த சமூகத்தின் ஒரு பகுதி தொலைத்துவிட்ட மனிதாபிமானம் மற்றும் இரக்ககுணம் போன்றவற்றிற்கான கவன ஈர்ப்பை கேட்டுள்ளது. இவரது ஓவியங்கள் துயரத்தைப் பேசுவதுடன்,  உடைந்து கிடக்கும் தேசமொன்றினைக் குணப்படுத்தும் முயற்சியில் உதவிக்கான அவசரத் தேவையை அறிவுறுத்துகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உலகத்தில் இருத்தலுக்கான மனித இனத்தின் போராட்டத்தினைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

ஏ.பி.ஸ்ரீதர்

ஏ.பி.ஸ்ரீதர்

 

ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர்பட ஏ.பி.ஸ்ரீதர்பட ஏ.பி.ஸ்ரீதர்பட ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர்

ஏ.பி.ஸ்ரீதர்

 

ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர் ஏ.பி.ஸ்ரீதர்

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text

 

  • தொடங்கியவர்
‘காலங்கள் கரைந்து செல்கின்றன’
 

image_f8fca5a201.jpgஎங்கள் நினைப்புகளையும் அதன் அனுகூலங்களையும் ஆண்டவனே நிர்ணயிக்கின்றான். மெய்வருந்தியும் நியாயபூர்வமான வேண்டுதல்களையும் உரியகாலத்துக்கு அளித்தும் வருகின்றார்.

எனவே, உண்மையாக வாழ்பவர்களுக்கு எல்லாமே மிக இலகுவில் கிடைத்து விடுகின்றன. 

ஆன்மாவின் தூய்மையும் அதன் பலமும் மேலோங்கும் போது, எல்லா ஆசைகளும் பஸ்மமாகி விடுகின்றன. கிடைத்தற்கரிய பொருள் கிடைக்கும்போது, வெட்டித்தனமான சிந்தனை வேருடன் அகல, நாம் தெரிந்து கொள்வது உண்மையின் சொரூபம் மட்டும்தான். 

இதை அனுபவப்பட்ட ஆத்மாக்கள் மட்டுமே புரிந்து கொள்ளும். வெளியில் இருந்து பேசுபவர்களுக்கு, வேடிக்கையாக இருக்கலாம்.  

காலங்கள் கரைந்து செல்கின்றன. இனிமேலாவது ஸ்திரமாக வாழ, உண்மையை நோக்கிப் பயணித்தேயாக வேண்டும். 

  • தொடங்கியவர்

விண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் (மார்ச். 18, 1965)

 
அ-அ+

சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை

 
 
 
 
விண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் (மார்ச். 18, 1965)
 
சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை படைத்தார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் விருதையும் பெற்றுள்ளார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

* 1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜார்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

* 1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.

* 1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

* 1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

* 1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

* 1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

‘உங்கள் ஊரின் அடையாளங்கள்‘: பிபிசி-தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

  •  
அலெஸ்டா மிரான்டா, மணப்பாடுALASTA MIRANDA, MANAPAD திருச்சிலுவை தேவாலயம், மணப்பாடு அருண் குமார் விஜயன், கும்பகோணம்ARUN KUMAR VIJAYAN, KUMBHAKONAM அருண் குமார் விஜயன், கும்பகோணம் பாலா சிங், கன்னியாகுமரிBALA SINGH G, KANNYAKUMARI பாலா சிங், கன்னியாகுமரி எஸ்.காந்தி, பாண்டிGANDHI.S, PANDY   ஜே. ராமசந்திரன், சிதம்பரம்J.RAMACHANDRAN, CHIDAMBARAM   கபிலன், திருச்சிKAPILAN,TRICHY I

மதன கோபால், சென்னை

MADHANA GOPAL, CHENNAI

 

பிரபு தேவன்

PRABU DEVAN

  ராஜாராம், தஞ்சாவூர்RAJARAJAN THANJAVUR   சசி குமார், தர்மபுரிSASIKUMAR, DHARMAPURI   சுரேஷ் வேங்கடகிருஷ்ணன், சென்னைSURESH VENKATAKRISHNAN, CHENNAI   யோகலெட்சுமி ரேணுகோபால்YOGALAKSHMI RENUGOPAL   இக்வான் அமீர், எண்ணூர்இக்வான் அமீர், எண்ணூர்   சபுருல் அயூப்கான்.பீ, தஞ்சாவூர்சபுருல் அயூப்கான்.பீ, தஞ்சாவூர்   சூர்யா.ப.க, ஈரோடுசூர்யா.ப.க, ஈரோடு  

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்
 
 
 

இது ஒரு காதல் கதை!!

 

“பூமியில் வாழும் உயிர்களுக்கு திடீரென வரப்போகும் அணுஆயுத யுத்தம், மரபுசார் வடிவமைக்கப் பட்ட வைரஸ், புவி வெப்பமடைதல் போன்றவற்றால் ஆபத்துக்கள் நேரும் என்பதை மனிதர்கள் இதுவரை நினைத்திருக்கவில்லை. நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது…”-ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங்கின் மறக்க முடியாத, மறுக்க முடியாத வரிகள் இவை.

kinopoisk.ru-The-Theory-of-Everything-25

உலகத்தின் தலை சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் மிக முக்கியமானவர். அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ALS) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்டவர். ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து நடமாடவும் பேசவும் முடியாத நிலையில், இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் தாங்காது என மருத்துவர்களால் கணிக்கப்பட்ட இவர் தான் இன்றைய அறிவியல் உலகில் அசைக்க முடியாத வரலாறு.

Stephen-Hawking-v%C3%A0-%E2%80%9Cthi%C3%

 

இக்குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலமே இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத் துறையிலும், பொதுவாழ்விலும் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.

Stephen-Hawking-dead-300x145.jpg

சார்பியல் கோட்பாட்டையும், குவாண்டம் இயக்கவியலையும் இணைத்து புதிய அண்டவியல் கோட்பாட்டை அளித்த முதல் நபர் இவர் தான். அண்டவியல் துறைக்கு இவர் அளித்த பங்கு அளப்பறியது. உலகின் சிறந்த அறிவியல் மூளைகளை ஆராய்ந்தால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகராக இவருடைய மூளையை நிறுத்திப் பார்க்கலாம். இந்த அறிவியல் ஜாம்பவானின் வாழ்க்கையிலும் அழகான காதல் கதைகள் இருந்தது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

jane-hawking-1-644x362-300x169.jpg

ஆக்ஸ்ஃபோர்ட்டில் இயற்பியல் பயின்று வந்த ஹோக்கிங்குக்கு அவருடைய பாடத்திட்டங்கள் அவ்வளவு சவாலானதாக இல்லை. பெரிய அளவில் சிரத்தை எடுக்காமலேயே முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் Ph.D பயின்று வந்த ஹோக்கிங்குக்கு ஜேன் வீல்ட் அறிமுகமானார்.

images-1-2.jpg

இலக்கியம் பயின்று வந்த மாணவியான ஜேனும், அறிவியல் ஆராய்ச்சியாளராக உருவாகிக் கொண்டிருந்த ஹோக்கிங்கும் நட்பில் இணைந்தனர், காதலும் மலர்ந்தது.

hqdefault-1-300x225.jpg

வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் போது தான் பெரிய அளவில் துன்பமும் வரும் என சிலர் கூறுவது ஹோக்கிங்கின் விடயத்தில் உண்மையானது. ALS நோயின் தாக்கம் அதிகரித்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ இயாலாது என மருத்துவர்கள் சொன்னதும் தன் வாழ்க்கை ஒரு சோக கீதம் என மனதைத் தேற்றிக் கொண்டே அமைதியாக இருந்தவாறே, அதிகம் அமர்ந்தவாறே, இசை கேட்டவாறே, தன் வாழ் நாளைக் கழிக்க முற்பட்டார்.

hawking-wives-jpg_192838-300x169.jpg

ஆனால் ஜேன் தளரவில்லை ஹோக்கிங்கை விட்டு விலகவுமில்லை. இந்த நோயை நாம் சேர்ந்தே எதிர்கொள்வோம் என்றார். கடைசி நாள்களாக இருக்கும் என நினைத்த ஹோக்கிங்குக்கு திருமணத்தை நோக்கிய எண்ணம் புதிய உத்வேகத்தையளித்தது. படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்றார். அவர்களது திருமணமும் நடந்தது.

download-14.jpg

நாள்களை எண்ணிக் கொண்டிருந்த இருவரும் தங்களது நேரத்தை சந்தோஷமாக மட்டுமே கழிப்பது என உறுதியாயிருந்தனர். குழந்தைகள், இன்னும் கொஞ்சம் நீடி த்த வாழ்க்கை என நாள்கள் வளர அவரது நோயின் தீவிரமும் வளர்ந்தது. ஒரு மலைப்பாம்பு தன் இரையை மெல்ல மெல்ல விழுங்குவது போல நோய் அவரது ஒவ்வொரு செயல்பாட்டினையும் விழுங்கியது.

DKoaM-7XoAASdTu-267x300.jpg

நாளடைவில் எழுந்து நடமாட முடியாத, கை கால்களை அசைக்க முடியாத, பேசும் திறன் இழந்தவரானார். அடிக்கடி தலை ஒரு பக்கமாக சாய்ந்து கொள்ளும். சுயமாக அவரால் அதைக்கூட சரி செய்ய இயலாது. ஆனாலும் அவரது சிந்திக்கும் திறனுக்கும் அறிவியல் சாதனைகளுக்கும் முட்டுக்கட்டை போட அந்தக் கொடிய நோயால் முடியவில்லை.

15210303690660-300x176.jpg

1990 இல் தனக்கு சேவை புரிந்த செவிலியர் எலைன் மேசனைக் காதலித்து மணந்து கொண்டார். வயது, உடல் கடந்த மனப்பூர்வமான காதலாக இருந்திருக்க வேண்டும். ஜேனும் ஜோனத்தன் ஹெல்லர் என்பவரை மணந்து கொண்டார். 5 வருடங்களாக சிறப்பாகத் தொடர்ந்த ஹோக்கிங்மேசன் திருமண உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது.

2402951A00000578-0-image-a-21_1418421045

பின் ஒரு சில வருடங்களில் ஹாக்கிங் உடல் ரீதியாக
கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் வருந்தினர். ஆனாலும் பொலிஸ் விசாரணையில் ஹாக்கிங் எதையும் சொல்ல மறுத்துவிட்டார். 2006ம் வருடம் ஹோக்கிங் மேசன் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு ஹோக்கிங்க மீண்டும் ஜேனிடம் வந்து சேர்ந்தார். அவரது கடைசி 10 வருடங்களை ஜேன்- ஜோனத்தன் மற்றும் தன் மகன், மகள்கள் பேரப் பிள்ளைகளோடு கழித்தார்.

12-1-300x269.jpg

கல்லூரிக் காலத்தில் காதலித்து மணம் முடித்து, நோயுடன் இருவரும் சேர்ந்து போராடி, சாதனைகள் புரிந்து, மண வாழ்க்கை முறிந்து வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து வெவ்வேறு வழியில் சென்றாலும், வாழ்வின் கடைசி சில வருடங்களில் மீண்டும் இணைந்து, எவ்வித எதிர்பார்ப்புமில்லா அன்பை முதுமையிலும் பகிர்ந்து கொண்டு, வாழ்க்கையை இவ்வளவு அழகான முதிர்ச்சியோடு கடந்து சென்ற இவர்கள் உண்மையாகவே காலத்தையும் காதலையும் ஒருசேர வென்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல!

09_q2Xo2kE-300x193.jpg

எதை இழந்த போதிலும் இழந்ததைப் பற்றி கவலைகொள்ளாமல் நம்மிடம் மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என சொல்லிக்கொடுத்த ஹோக்கிங் அறிவியலில் மட்டுமல்ல அன்பிலும் அரசனே!

7-Hawk-Getty-300x225.jpg7a7b1745-8908-4f49-a8f9-ea465dd0e357viet7-1-300x194.jpgtumblr_inline_n1ni3jiIde1rkv4io-300x143.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

``18,000 கி.மீ பயணித்து கின்னஸ் சாதனை படைப்பேன்!’’ - இந்தியாவைச் சுற்றும் சைக்கிள் தமிழன்

 
 

நாம் மூன்று கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினாலே மூச்சுத்திணறி நிறுத்திக்கொள்கிறோம். ஆனால், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் என்கிற இளைஞர், ஒரு நாளைக்கு 150 முதல் 200 கிலோமீட்டர் தூரம் சர்வசாதாரணமாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றி, ஒரு வருடத்தில் 30,000 கிலோமீட்டர், இலக்கோடு தன் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சைக்கிள் பயணத்துக்கிடையில் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

சைக்கிள்

 

``நான், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி திருநகர் பகுதியில் குடியிருக்கிறேன். அப்பா பேரு பங்காருசாமி. அம்மா பேரு ஜெயா. என்கூட பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். நான் சேலம் சீரகாப்பாடியில் உள்ள இராஜாஜி பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தேன்.

ஊடகத் துறையில் ஆர்வம் இருந்ததால் மீடியாவில் சேர்ந்து தமிழகம் முழுவதும் சென்று 5000-க்கும் மேற்பட்ட நேரலை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். இதற்கிடையில் எனக்கு சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணம் ரொம்பப் பிடிக்கும். என் பள்ளி, கல்லூரிக் காலங்களில் மோட்டார் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தாமல், சைக்கிளையே அன்றாடம் பயன்படுத்தக்கூடியவனாக இருந்தேன். ஒரு கட்டத்தில் ஊடகத் துறை வெறுப்படைந்ததையடுத்து, ஒரு லட்சியத்தை நோக்கி நகர முடிவெடுத்தேன்.

சைக்கிள் தமிழன்

என்னுடைய 21-வது வயதிலிருந்து பேருந்து, ரயில் மூலம் இந்தியாவை 14 முறை சுற்றியிருக்கிறேன். அதன் விளைவாக இயற்கையை நேசிக்கத் தொடங்கினேன். வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, சைக்கிள் விழிப்புஉணர்வுப் பயணத்தை மேற்கொண்டேன். மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு சைக்கிளில் சென்று இளைஞர்களையும் கல்லூரி மாணவ, மாணவிகளையும் சந்தித்து `Save cycle, Save petrol, Save nature'  என்ற ஸ்லோகத்துடன் விழிப்புஉணர்வு பிரசாரம் செய்தேன்.

அதன் தொடர்ச்சியாக இதே பிரசாரத்தை மேற்கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு மே 10-ம் தேதி  உத்ராஞ்சலில் உள்ள ஹரிதுவாரிலிருந்து என் சைக்கிள் பயணத்தைத் தொடங்கி டேராடூன், சிம்லா, குலுமணாலி, ஹெலாங், காஷ்மீரில் உள்ள லே வரை தனியாகச் சென்று  ஜூன் 21-ம் தேதி பயணத்தை நிறைவுசெய்தேன். இந்தப் பயணத்தில் 30 நாள்களில் 1,780 கிலோமீட்டர் கடந்தேன். நான் சென்ற சிம்லா டு காசா பாதை, லேசான காற்று வீசினால்கூட மண்சரிவுகளோடு கற்களும் உருண்டு வந்து ஆட்களைக் காயப்படுத்துவதுடன், மண்ணுக்குள் புதைத்துவிடும். இந்தப் பாதை இந்தியாவிலேயே மிக மோசமான பாதையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பயணத்தில் கிடைத்த வெற்றி, இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய 15 ஆண்டுகாலக் கனவுக்கு அச்சாரமாக அமைந்தது. அதையடுத்து இந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினேன்.  ஒரு வருடத்தில் 30,000 கிலோமீட்டர் இலக்கோடு  2017 அக்டோடர் 2, காந்தி ஜெயந்தி அன்று சைக்கிள் பயணம் தொடங்கியது. கடந்த ஐந்து மாதங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற ஏழு மாநிலங்களைக் கடந்து 13,700 கிலோமீட்டர் சென்றிருக்கிறேன். இந்தப் பயணத்தை 2018 செப்டம்பரில் முடித்துவிடுவேன். எனக்கு தற்போது 48 வயதாகிறது. இந்த வயதில் நான் சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

ராஜன்

ராஜஸ்தானைச் சேர்ந்த ரானா என்பவர், 18,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்தப் பயணத்தை முறியடித்து நான் புதிய கின்னஸ் சாதனை படைப்பேன். என்னுடைய சைக்கிள் பயணத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இந்தப் பயணத்தை நிறைவுசெய்த பிறகு, புத்தகமாக எழுத  தீர்மானித்திருக்கிறேன். நான் பயன்படுத்தும் சைக்கிள்  ரேஸர் வகையானது. சைக்கிளின் எடை வெறும் 8 கிலோ. சைக்கிளின் விலை 37,000 ரூபாய் மதிப்புடையது.

சைக்கிள்

 

இந்த சைக்கிள் பயணத்தில் செல்லும்  இடமெல்லாம், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு ஏற்படுத்திச் செல்கிறேன். ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை பயணிப்பேன். கின்னஸ் சாதனைக்கான இந்த சைக்கிள் பயணத்துக்கு மட்டும் 7 லட்சம் ரூபாய் செலவு ஆகும். ஒரு சைக்கிள் பயணிக்கு நிச்சயம் பணம் மிக முக்கியம். பணம் இல்லையென்றால், பயணம் தடைபடும். நான் பயணிக்கும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடம், கோயில் போன்ற பொது இடங்களில் டென்ட் போட்டு இரவு தூங்கிவிட்டு காலை 5 மணிக்குப் பயணத்தைத் தொடங்கி இரவு 8 மணி வரை பயணம் செய்வேன். என்னுடைய எதிர்கால லட்சியம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சைக்கிள் க்ளப் உருவாக்க வேண்டும்'' என்றார்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

விஞ்ஞானத்தில் வென்ற ஐன்ஸ்டைன் திருமண வாழ்க்கையில் தோற்றது ஏன்?

உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா?

ஐன்ஸ்டைன்படத்தின் காப்புரிமைAFP

உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும்.

1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1855 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன்.

இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது.

2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்சன் எழுதிய, ஐன்ஸ்டைன்: அவரது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் (Einstein: His Life and the Universe) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐன்ஸ்டைன்படத்தின் காப்புரிமைAFP

உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக பரிணமித்த ஐன்ஸ்டைன், தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த பல முயற்சிகளை செய்ய வேண்டியிருந்தது, ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் அதில் தோல்வியையே கண்டார் என்று வால்டர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'ஐன்ஸ்டைன்' என்பது, அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்தில் இருக்கிறது. "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற புகழாரத்தையும் பெற்றவர் ஐன்ஸ்டைன்.

ஐன்ஸ்டைனின் தோல்விக்கு காரணம் என்ன?

ஐன்ஸ்டைன் தனது திருமண வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக வால்டர் கூறுகிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் திருவினையாகவில்லை, குடும்ப வாழ்க்கை போர்க்களமாகவே இருந்தது.

உண்மையில், காதல் குறித்த ஐன்ஸ்டைனின் மனப்பான்மைதான் அவரது தோல்விக்கும் காரணம். விஞ்ஞானியான மிலேவா மாரிக் உடன் காதல் மணம் புரிந்தார் ஐன்ஸ்டைன். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர், கடுமையான அம்சங்களைக் கொண்ட கோரிக்கை பட்டியலை கொடுத்து, அதை கடைபிடிக்கவேண்டும் என்று மனைவியிடம் சொன்னார்.

ஐன்ஸ்டைன்படத்தின் காப்புரிமைHULTON

குழந்தைகளுக்காகவாவது இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஐன்ஸ்டைன் நம்பினார்.

ஐன்ஸ்டைனின் பட்டியல்

வால்டர் இசாக்சனின் புத்தகத்தின் அடிப்படையில் பிரிட்டன் பத்திரிகை டெய்லி மெயில் இந்த பட்டியலை வெளியிட்டது. மாரிக் ஒரு காதலியாக இருக்கவேண்டாம், ஒரு வேலைக்காரியாக இருக்கலாம் என்ற கோரிக்கைகளின் பட்டியல் இது.

அந்த புத்தகத்தின்படி, 1914ஆம் ஆண்டு இந்த கோரிக்கை பட்டியலை எழுதும் கட்டாயத்திற்கு ஐன்ஸ்டைன் உள்ளானார். தனது முதல் மனைவியான மாரிக்குடனான திருமண வாழ்க்கை சீர்கெட்டுப் போவதை அவர் உணர்ந்தார்.

கணிதம் மற்றும் இயற்பியல் பயின்ற சில ஐரோப்பிய பெண்களில் மிலேவா மாரிக்கும் ஒருவர். குழந்தைகளின் நலனை முன்னிட்டு கணவன்-மனைவி ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டைன் மனைவியிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்காக அவர் மனைவியிடம் கொடுத்த பட்டியல் அதிர்ச்சியூட்டியது. மிலேவா மாரிக் கணவரிடம் வேலைக்காரியாக நடந்துக் கொள்ளவேண்டும் என்று ஐன்ஸ்டைன் சொன்னார். ஆனால் மனைவியை தான் நேசிக்கவேண்டும் என்றோ, அக்கறை செலுத்த வேண்டும் என்றோ எதிர்பார்க்கக்கூடாது என்று சொன்னார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானி.

அறிவார்ந்தவர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐன்ஸ்டைன், தனது மனைவியும் விஞ்ஞானியுமான மாரிக், கணவருக்காக மூன்று வேளையும் உணவு தயாரிக்க வேண்டும், வீட்டையும் தனது தனிப்பட்ட அறையையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும், தனது உடைகளை துவைத்து, ஒழுங்காக பராமரிக்கவேண்டும் என்று சொன்னார்.

ஐன்ஸ்டைனின் இரண்டாவது மனைவி இல்ஸாபடத்தின் காப்புரிமைTOPICAL PRESS AGENCY Image captionஐன்ஸ்டைனின் இரண்டாவது மனைவி இல்ஸா

தனது படுக்கையறையையும், படிக்கும் அறையையும் மனைவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டைன் விரும்பினார், ஆனால் தன்னுடைய மேசையை மனைவி பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்.

ஐன்ஸ்டைனின் கோரிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை. இதற்கு பதிலாக மனைவி தன்னிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார் ஐன்ஸ்டைன்.

தன்னிடம் மனைவி எதிர்பார்க்கக்கூடாதவை

மிலேவாவுடன் அமர்ந்து பேசவோ, அவரை வெளியில் அழைத்துச் செல்லவோ முடியாது என்றும், அதுபோன்ற எதிர்பார்ப்புகள் அவருக்கு இருக்கக்கூடாது என்றார் ஐன்ஸ்டைன். அதுமட்டுமல்ல, தனக்கு பிடிக்கவில்லை என்றால் மனைவி பேசக்கூடாது என்றும் ஐன்ஸ்டைன் கூறினார்.

படுக்கையறை அல்லது படிக்கும் அறையில் இருந்து வெளியே போ என்று சொன்ன அடுத்த கணமே மனைவி அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்பதையும் மனைவிக்கு கொடுத்த பட்டியலில் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டிருந்தார்.

ஐன்ஸ்டைன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐன்ஸ்டைனின் கோரிக்கைகளை அவரது மனைவி ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது, ஆனால் என்ன நடக்கும் என்று அவர் அச்சப்பட்டாரோ அதுவே நிகழ்ந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, பெர்லினில் இருந்த ஐன்ஸ்டைனைவிட்டு வெளியேறிய மாரிக், ஜ்யூரிக் சென்று அங்கு தனது மகன்களுடன் வசிக்கத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1919இல் அவர் விவாகரத்துக்காக விண்ணப்பித்து, திருமண பந்தத்தில் இருந்து விலகினார் மாரிக்.

ஐன்ஸ்டைனுக்கு பல பெண் தோழிகள் இருந்தனர். மேலும் 1912 ஆம் ஆண்டு முதல் இல்ஸா என்ற பெண்ணுடன் ஐன்ஸ்டைனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது, அந்த சமயத்தில் மாரிக்குடன் அவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிக்கை விவாகரத்து செய்த பிறகு 1919இல் ஐன்ஸ்டைன் இல்ஸாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு, தனது செயலாளரின் மகள் நியூமன் உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் ஐன்ஸ்டைன்.

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: ஆத்மா ’சாந்தி’ அடையட்டும்

 

 
memes%204
memes12
memes%209%202
memes%208
memes%207
memes%203
memes%202

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.