Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

2011 : லிபி­யாவில் வெளி­நாட்டு இரா­ணுவ தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது

வரலாற்றில் இன்று….

மார்ச் – 19

 

1279 : யாமென் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் மொங்­கோ­லி­யாவின் வெற்­றி­யுடன் சீனாவில் சோங் அரச பரம்­பரை ஆட்சி முடி­வுக்கு வந்­தது.

1861 : நியூ­ஸி­லாந்தில் முத­லா­வது தர­னாக்கி போர் முடி­வுக்கு வந்­தது.

1915 : புளூட்­டோவின் ஒளிப்­படம் முதற்­த­ட­வை­யாக எடுக்­கப்­பட்­டது. ஆனாலும் அது கோளாக கரு­தப்­ப­ட­வில்லை.

1918 : நேர வல­யங்­களை ஐக்­கிய அமெ­ரிக்க காங்­கிரஸ் நிறுவி பக­லொளி சேமிப்பு நேரத்தை அங்­கீ­க­ரித்­தது.

1932 : சிட்னி துறை­முகப் பாலம் திறந்து வைக்­கப்­பட்­டது.

1944 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் நாசிப் படைகள் ஹங்­கே­ரியைக் கைப்­பற்­றினர்.

varalaru-19-03-2018-copy.jpg1945 : ஜப்­பானில் யூஎஸ்எஸ் பிராங்­கிளின் என்ற அமெ­ரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்­க­டிக்­கப்­பட்­டதில் 800 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1945 : இரண்டாம் உலக யுத்­தத்தின் கடைசிக் கட்­டத்­தில் ஜேர்­ம­னி­யி­லுள்ள தொழிற்­சா­லைகள், இரா­ணு­வ­த­ளங்கள், கடைகள், தொலைத்­தொ­டர்பு கட்­ட­மைப்­பு­களை தகர்க்­கு­மாறு அடோல்வ் ஹிட்­ல­ரினால் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

1955 : முதல்­த­ட­வையாக தொலைக்­காட்­சியில் வர்­ணத்தில் ஒளி­ப­ரப்­பான குத்­துச்­சண்டை போட்­டியில் வில்லி டொரியை, ஜோய் ஜியார்­டெல்லோ தோற்­க­டித்தார்.

1972 : இந்­தி­யாவும், பங்­க­ளா­தேஷும் நட்­பு­றவு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

1982 : போக்­லாந்து போர்; ஆர்­ஜென்­டீ­னி­யர்கள் தெற்கு ஜோர்­ஜியா தீவில் தரை­யி­றங்­கினர்.

2002 : ஆப்­கா­னிஸ்தான் மீதான ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­யெ­டுப்பு முடி­வுக்கு வந்­தது.

2002 : மனித உரிமை மீறல், ஊழல் குற்­றச்­சாட்­டுகள் கார­ண­மாக, பொது­ந­ல­வாய அமைப்­பி­லி­ருந்து ஸிம்­பாப்வே இடை­நி­றுத்­தப்­பட்­டது.

2004 : தாய்வான் பிர­தமர் சென் ஷுயி-­பியான் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முதல்நாள் துப்­பாக்­கியால் சுடப்பட்டுக் காயப்படுத்தப்பட்டார்.

2011 : லிபியாவில் பிரெஞ்சு விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதன் மூலம் லிபிய யுத்தத்தில் வெளிநாட்டு இராணுவத் தலையீடு ஆரம்பமாகியது.

http://metronews.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முறிந்த உறவை ஒட்டவைத்த `தனியொருவன்’! - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

கதை

`நாம் எண்ணற்ற சுவர்களை எழுப்புகிறோம்; பாலங்களைக் கட்டத் தவறிவிடுகிறோம்’ - விஞ்ஞானி ஐசக் நியூட்டன் வெகு எளிமையாகச் சொல்லியிருக்கும் வாசகம்... மிகச் சிறந்த தத்துவமும்கூட. நம் உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்த சுற்றத்தைச் சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். உறவின் மதிப்பை, அருமையை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. அதே நேரத்தில் உறவுகளை வெகு ஜாக்கிரதையாகக் கையாள வேண்டியதும் அவசியம். ஒரு நட்பை, உறவை எத்தனையோ வருடங்கள் கட்டிக்காப்பாற்றி வந்திருப்போம். அதை உடைக்க ஒரு விநாடி போதும்; ஒரே ஒரு சொல்லில்கூட உதறிவிட முடியும். ஆனால், ஒன்று சேர்ப்பது கடினம். திரும்பப் புதுப்பிக்கப்பட்டாலும், பழைய வலுவோடு அந்த உறவு இருக்காது. அலுவலகத்தில் நட்பாகப் பழக ஆரம்பித்து வாழ்நாள் முழுக்க நண்பராக உடன் வருபவர்கள் இருக்கிறார்கள். பல வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியிருந்தாலும், முகமோ பெயரோகூட நினைவில் நிற்காத மனிதர்களும் இருக்கிறார்கள். தனி மரம் தோப்பாகாது. சமூகத்தோடு இணைந்து வாழ்வதுதான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றும். சில நேரங்களில் முறிந்த உறவை ஒட்டவைக்க சில நல்ல மனிதர்கள் உதவுவதும் உண்டு. அன்பின் அருமையைப் புரிந்தவர்களால்தான் இதற்கு உதவவும் முடியும். உறவைப் பேணவேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் கதை இது. 

 

போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள சின்னஞ்சிறு கிராமம் அது. அங்கே இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ரொம்ப காலமாக ஒன்றாக வாழ்ந்தவர்கள்; ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள்... இடையில் ஏற்பட்ட சின்ன மனக்கசப்பு இருவரையும் பிரித்துவிட்டிருந்தது. அவர்களின் தந்தையின் காலத்திலிருந்து 40 வருடங்களாக ஒன்றாக இருந்த கூட்டுக் குடும்பம் அது. ஒரே நிலத்தில் விவசாயம் செய்வார்கள். வீட்டிலிருக்கும் தளவாடங்களை, வேளாண்மைக்கான ஆயுதங்களை அண்ணனோ, தம்பியோ இஷ்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவார்கள். வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலோ, பொருள்களை வாங்குவதிலோ இருவருக்குமிடையில் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. அப்படி கல் கோட்டைபோல கெட்டியாகப் பிணைந்திருந்த அவர்கள் உறவு, சின்ன வார்த்தைத் தகராறால் முறிந்து போயிருந்தது.  

கார்பெண்டர்

அது ஒரு காலை நேரம். மூத்த சகோதரன் ஜானின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தான். வெளியே ஓர் ஆள் நின்றிருந்தார். தோளில் ஒரு பை, கையில் கருவிகளை வைப்பதற்கான ஒரு பெட்டியும் இருந்தன. வந்தவர் `வணக்கம்’ சொன்னார். 

``ஐயா... நான் ரொம்ப தூரத்துலருந்து வர்றேன். நல்லா தச்சு வேலை செய்வேன். சின்ன வேலையா இருந்தாக்கூட பரவாயில்லை. ஏதாவது வேலை குடுங்களேன்...’’ 

ஜான், வந்தவரை ஏற இறங்கப் பார்த்தான். அவர் முகம் பளிச்சென்று தெளிவாக இருந்தது. கண்களில் களங்கம் எதுவும் தெரியவில்லை. அவர் தோற்றமும் எளிய உடையும் அவர் மேல் ஒரு நம்பிக்கையை வரவழைத்திருந்தன. 

``வேலைதானே... தர்றேன். இந்தப் பக்கம் வாங்க...’’ என்று அந்த தச்சுத் தொழிலாளியை அழைத்துச் சென்றான் ஜான். ``இங்கே பாருங்க... சின்னதா வாய்க்கால் ஓடுதுல்ல...’’

வந்தவர் பார்த்தார். ஜானின் வீட்டுக்கு அருகே ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. ``ஆமாங்கய்யா...’’ 

``அந்த வாய்க்காலுக்கு அந்தப் பக்கம் ஒரு வீடு இருக்குல்ல... அது என் தம்பியோட வீடு. போன வாரம் வரைக்கும் எங்களுக்கு நடுவுல புல்வெளியா இருந்த இடம் அது. அவன் ஒரு புல்டோசரை எடுத்துக்கிட்டுப் போய் கொஞ்ச தூரத்துல இருக்குற ஆத்து மதகை உடைச்சு விட்டுட்டான். அதுலருந்து கெளம்பின தண்ணி, இப்போ எங்களுக்கு நடுவுல வாய்க்காலா ஓடுது. என் மேல இருக்குற வெறுப்புலதான் என் தம்பி அப்படி செஞ்சிருக்கான். அது எப்படியோ போகட்டும். எனக்கு அவன் இருக்குற திசையைப் பார்க்கவே பிடிக்கலை. நீங்க ஒண்ணே ஒண்ணு செஞ்சா போதும். இந்த இடத்துல எட்டடி உயரத்துல ஒரு வேலியை செஞ்சுடுங்க. மரத்தால செஞ்சா நல்லா இருக்கும். அவனும் என்னைப் பார்க்காம நிம்மதியா இருப்பான்...’’ 

வாய்க்கால்

``எனக்கு உங்க நிலைமை புரியுது. இந்த வேலையை நீங்களே நினைக்காத அளவுக்கு பிரமாதமா பண்ணிடுறேன். எங்கேயெல்லாம் குழி தோண்டலாம், எந்த மரத்தை வெட்டலாம்னு எனக்கு அடையாளம் மட்டும் காட்டுங்க... போதும்.’’ 

ஜான், அவருக்கு சில இடங்களை அடையாளம் காட்டினான். வேலி எப்படி இருக்கவேண்டும், எந்தெந்த மரங்களைப் பயன்படுத்தலாம் என்கிற குறிப்புகளைக் கொடுத்தான். அவனுக்கு அன்றைக்கு அவசரமாக அருகிலிருக்கும் நகரத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. ``நான் சாயந்திரம் வந்துடுவேன். அதுக்குள்ள வேலையை முடிச்சிடுவீங்களா?’’ 

``முடிஞ்சிடும் சார்...’’ 

ஜான் சந்தோஷமாக தலையை அசைத்துவிட்டு, வீட்டுக்குள் போனான். வந்திருக்கும் தச்சுத் தொழிலாளிக்கு உணவும், தேநீரும் தரச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனான். அந்தத் தச்சுத் தொழிலாளி தன் கருவிகளை எடுத்துக்க்கொண்டு, மரங்களை வெட்ட, அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வர என வேலையில் மூழ்கிப் போனார். 

மாலையில் சூரியன் மறையும் நேரத்துக்கு வீடு திரும்பினான் ஜான். அங்கே அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அப்போதுதான் அந்தத் தச்சுத் தொழிலாளி தன் வேலையை முடித்திருந்தார். ஜானின் முகம் முதலில் இறுகி பிறகு தளர்ந்தது. அங்கே அவன் எதிர்பார்த்ததுபோல வேலி இருக்கவில்லை. வாய்க்காலுக்கு மேல் ஒரு மரப்பாலம் உருவாகியிருந்தது. மிக அழகான பாலம் அது. பிடித்துக்கொண்டு நடக்க ஏதுவாக இரு பக்கமும் கைப்பிடிக் கட்டைகளெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. 

ஜான் பேச வார்த்தை வராமல், பாலத்தின் மேல் ஏறி நின்றான். மறுபக்கம் அவன் தம்பி நின்றுகொண்டிருந்தான். அங்கேயிருந்து கைகளை நீட்டிக்கொண்டு ஓடி வந்தான். ஜானும் அவனைப் பார்த்துவிட்டு வேகமாக பாலத்தின் மேல் நடந்தான். 

``அண்ணா, என்னை மன்னிச்சிடுண்ணா... நான் நம்ம உறவைப் பிரிக்கணும்கிறதுக்காக மதகை உடைச்சு, வாய்க்காலை வரவழைச்சேன். நீ நம்ம உறவு அறுந்து போயிடக் கூடாதுன்னு பாலம் கட்டியிருக்கே. பெரியவங்க, பெரியவங்கதாண்ணா...’’ ஜானைக் கட்டிக்கொண்ட தம்பியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. 

பாலம்

ஜானுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இருவரும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பிப் பார்த்தபோது, அந்த தச்சுத் தொழிலாளி, தன் பையையும், கருவிகள் பெட்டியையும் எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாராக இருந்தார். 

``சார்... என் கூலியைக் குடுத்தீங்கன்னா, நான் கெளம்பிடுவேன்.’’ 

``அதுக்குள்ள என்ன அவசரம்... இன்னும் இங்கே நீங்க செய்ய நிறைய வேலையிருக்கு...’’ 

``எனக்கும் இங்கே இருக்கணும்னுதான் ஆசை சார். ஆனா, இது மாதிரி இன்னும் நிறைய பாலங்களை நான் கட்டவேண்டியிருக்கு.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகம் சுற்றும் பாடகி!

 

 
image6483441%202

‘ஒட்டியாணம் போல...’ பாடலை யூடியூபில் கேட்டு, அந்தக் குரலில் மனதைப் பறிகொடுத்த நெட்டிசன்கள் ஆயிரக்கணக்கானோரின் விருப்பமான பாடகி ஸ்வாகதா. ‘எஸ்.பி.பி. 50’ கலை நிகழ்ச்சிகளுக்காக உலகத்தின் பல நாடுகளுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ள பாடகி இவர். தற்போது விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கரு’ படத்தில் இவர் பாடியிருக்கும் ‘ஆலாலிலோ...’ பாடல் மயிலிறகால் வருடும் தாலாட்டு! ‘மகளிர் மட்டும்’, ‘தொடரி’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்திருக்கும், வளர்ந்துவரும் நடிகை மாயாவுடைய தங்கை இவர். ஓவர் டூ ஸ்வாகதாவின் பாட்டுப் பேட்டி...

“மதுரையில்தான் படிப்பை முடித்தேன். தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்று, அதே துறையில் சில காலம் பணியாற்றினேன். சிறு வயதிலிருந்தே முறையான கர்னாடக இசைப் பயிற்சி பெற்றேன். மறைந்த விஜயலஷ்மி ராமசேஷனிடம் கர்நாடக இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

இசைதான் என்னுடைய அடையாளம் என்பதை உணர்ந்தவுடன் 2010-ல் சென்னைக்கு வந்தேன். அகஸ்டின் பால் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் கிளாசிக் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லும் ஸ்வாகதா, லண்டன் ட்ரினிடி இசைக் கல்லூரியின் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.

‘ஸ்வாகதா அண்ட் ஃபிரண்ட்ஸ்’ என்னும் பெயரில் சொந்தமாக இசைக் குழுவை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜாம் செக்ஷன், சுயாதீன இசை நிகழ்ச்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தியிருக்கிறார்.

“இப்படி நிகழ்ச்சிகள் நடத்திவந்த வேளையில்தான் எஸ்.பி.பி. அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ‘எஸ்.பி.பி. 50’ வோர்ல்ட் டூரில் இடம்பெற்றுப் பாட முடியுமா என்று கேட்டார்கள். அப்படித்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. விஷால் சந்திரசேகருக்கு டிராக் பாடிக் கொண்டிருந்தபோதுதான், விஜய்-விக்கி சகோதரர்களின் இசையில் ‘ஒட்டியாணம் போல...’ பாடலைப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான கிராமத்துக் காதல் பாட்டு அது ” என்றபடி அந்தப் பாட்டை ஹம் செய்து காட்டினார் ஸ்வாகதா.

 

image6483441
குரலில் மிமிக்ரி இல்லை

“மேடையில் பாடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆயிரக்கணக்கான மக்கள் முன் பாடும் சந்தோஷமே தனிதான். லைவ்வாக ஒருவர் பாடிவிட்டால் போதும்; பின்னணி பாடுவதில் சிரமம் இருக்காது என்பது என் கருத்து. இதுநாள்வரை யாரையும் இமிடேட் செய்து நான் பாடியதில்லை.

நான் பாடும் பாடல்களில் என்னுடைய ஸ்டைல்தான் தெரியும். பின்னணி பாடுவதற்குக் குரலில் தனித்தன்மை வேண்டும்.

அப்படி இருந்தால்தான் வாய்ப்புக் கிடைக்கும். ‘கரு’ படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். எனக்கு நல்ல நண்பர். அவருடைய இசையில் டிராக் பாடினேன். இயக்குநர் கேட்டுவிட்டு, குரல் புதிதாக இருக்கிறது... நான் பாடியதே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். தற்போது சாமிடமே மியூசிக் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறேன்” என்னும் ஸ்வாகதாவிடம் உங்கள் சகோதரி மாயாவைப் போல் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையா?” என்று கேட்டால்,

“வாய்ப்புகள் வந்தன. ஆனால், இசைதான் இப்போதைக்கு என்னுடைய சாய்ஸ்!" என்கிறார் தீர்க்கமாக.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

வரவு எப்படி?: பொருட்கள் வாங்கும் போது ஏமாற்றப்படாமல் இருப்பது எப்படி?

நுகர்வோர் உரிமை குறித்தும், பொருட்கள் வாங்கும் போது ஏமாற்றப்படாமல் இருப்பது எப்படி என்பது குறித்தும் விளக்கும் பிபிசி தமிழின் "வரவு எப்படி?"

  • தொடங்கியவர்

கான்கிரீட் காட்டில் : மஞ்சள் புல்வெளியாள்!

17CHVANConcrete26jpg

சில தாவரங்களின் மலர்கள் தனி அழகுடன் இருக்கும். தேனருந்த வரும் வண்ணத்துப்பூச்சி அதில் அமரும்போது மலர் கூடுதல் அழகு பெறும். படத்தில் அப்படி அழகு பெற்றுள்ள மலர் மயில்கொன்றை. அதில் அமர்ந்திருப்பது முப்புள்ளி மஞ்சள் புல்வெளியாள் என்ற சிறிய வண்ணத்துப்பூச்சி வகை.

அதென்ன 'முப்புள்ளி' என்றொரு முன்னொட்டு? இதைப் போலவே தோற்றம் கொண்ட இரண்டு மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதே அந்த முன்னொட்டுக்குக் காரணம். மூன்றுமே ஒன்றை ஒன்று ஒத்தது போலிருக்கும். வேறுபாடு பிரித்தறிவது சற்றே கடினம்.

நான் பார்த்த மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சியின் முன் இறக்கையின் பின்புற உச்சியில் பழுப்பு நிறத் திட்டு இருந்தது. பருவநிலை உலர்ந்து இருக்கும்போது, இந்த பழுப்புத் திட்டை தெளிவாகக் காணலாம். வழிகாட்டிப் புத்தகம் குறிப்பிட்டிருந்த இந்த அடையாளத்தை வைத்தே அது முப்புள்ளி வகை என்பதை உறுதிசெய்தேன்.

முன்இறக்கைகளின் கீழ்ப்புறம் உடல் அருகே மூன்று புள்ளிகள் காணப்படுவதே இந்த புல்வெளியாள் வகையின் பெயருக்குக் காரணம். இந்த வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மடித்து வைத்து இளைப்பாறுவதால் முப்புள்ளிகளை தெளிவாகக் காண்பது கடினம்.

மஞ்சள் புல்வெளியாள் வகை வண்ணத்துப்பூச்சிகளில் மூன்று வகைகளை தமிழகத்தில் காண முடியும். படத்தில் இருப்பது ஆங்கிலத்தில் 3 Spot Grass Yellow (அறிவியல் பெயர்: Eurema blanda). மற்ற இரண்டு வகைகள்: 1 spot grass yellow, Common grass yellow.

மஞ்சள் புல்வெளியாள் வகைகளில் மிகவும் சிறியது முப்புள்ளி வகை. இறக்கையை விரித்தால் 4 செ.மீ.க்கும் குறைவாகவே இருக்கும். நாடெங்கிலும் சமவெளி, மலைப்பாங்கான வாழிடங்களில் கீழ்மட்டப் பகுதிகள், சூரிய ஒளியுள்ள இடங்கள், புதர்கள், பூங்காங்களில் ஆண்டு முழுவதும் இதைக் காணலாம். தாழ்வான, நடுத்தர உயரத்துக்கு மெதுவாகப் பறக்கக்கூடியவை. புல்வெளியிலோ தாழ்வான தாவரங்களிலோ அடிக்கடி அமரும்.

புழுக்களுக்கு உணவாகும் தாவர இலைகளின் மேல் பெண் பூச்சி முட்டையிடுவதால் மரத்தின் மேல்மட்டத்திலும்கூட சில நேரம் பறக்கும். இதன் புழுக்களுக்கு உணவாகும் சில தாவரங்கள்: மயில்கொன்றை, கொடுக்காய்ப்புளி. நான் பார்த்தது மயில்கொன்றைத் தாவரத்தில். அறிவியல்பூர்வமாக உருவாக்கப்படும் வழிகாட்டிப் புத்தகங்கள் தவறு செய்வதில்லை.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

குண்டாக இருப்பவர்கள் எப்படி சில்க் புடவை கட்டுவது. இது போல கட்டினால் உங்கள் தொப்பை மறையும், ஒல்லியாக தெரிவீர்கள்.

 

  • தொடங்கியவர்

பாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன?

 

ஆதிகாலக் கதைகளில் இருந்து இன்று ஹாரிபாட்டர் வரையிலுமே பாம்புகள் என்றால் தீமையின் வடிவமாக, தீய சக்தியின் முழு உருவமாகவேதான் பார்க்கப்படுகிறது. அது கண்ணில் பட்டாலே அடித்துக் கொல்வதற்குத் துடியாய் துடிப்பதே மனிதர்களின் இயல்பாக இருந்துவருகிறது. ஒருமுறை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் பாம்புகள் அதிகமாக இருந்ததால், அதைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பணம் தருவதாக அந்தப் பகுதியின் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது. அதனால் அங்கிருந்த மக்கள் கண்ணில் பட்ட பாம்புகளை எல்லாம் பிடித்துக் கொடுக்க, காலப்போக்கில் அந்த கிராமத்தில் பாம்புகளே இல்லை என்ற நிலை வந்தது. பாம்புகள் இல்லைதான், ஆனால், எங்கு பார்த்தாலும் எலி மயம். வயல்களில் அதிகமாக எலிகள், பொந்துகள் அமைத்துவிடுவதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அவற்றால் லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever), பிளேக், லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) போன்ற நோய்கள் மனிதர்களுக்குப் பரவி பலரும் பாதிக்கப்பட்டனர். பிறகுதான் பாம்புகள் இருந்திருந்தால் எலிகளைச் சாப்பிட்டிருக்கும், எலிகளால் தொல்லை இருந்திருக்காது என்பதை மக்கள் புரிந்துகொண்டனர்.

பாம்புகள்

 

மனிதர்கள் பாம்பைக் கண்டால் இவ்வளவு தூரம் அஞ்சுவதற்குக் காரணம் அவற்றின் இரக்கமற்ற குணமே. இரைகளை வேட்டையாடுவதில் மிகவும் கொடூரமாக நடந்துகொள்ளும். வேட்டையாடி விலங்குகள் அனைத்தும் இரையைக் கொன்றுவிட்டுத்தான் சாப்பிடும். ஆனால், பாம்புகள் அப்படியல்ல. ஒரு முழு எருமை மாட்டையும் அது ஒன்றே, அதுவும் அப்படியே விழுங்கிவிடும். அதைக்கூட முழுமையாகக் கொன்றுவிடாமல் எலும்புகளை மட்டும் நொறுக்கி, சிறிது சிறிதாகத் தனது நெகிழ்வான கீழ் தாடையை விரித்து உயிருடன் விழுங்கும். எந்த உயிரினத்திற்குமே தான் சாப்பிடப்படுவதைக் கடைசித் துளி உயிர் பிரியும் வரை உணர்த்திவிடும் இந்தப் பாம்புகள். 

இரைகளை இவ்வளவு தூரம் இரக்கமின்றி வேட்டையாடும் இவை தனது குட்டிகளையும் விட்டுவைக்காமல் தின்றுவிடும் என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு. அது முழு உண்மை அல்ல. பொதுவாகப் பாம்புகள் தனது 3 வயதில் இருந்து இணைசேர்ந்து முட்டையிடத் தொடங்கும். முட்டையிடும் காலம் வந்ததும், குட்டிகள் பிறந்தால் அவற்றுக்கு வேறு எந்த விலங்காலும் ஆபத்து வராத வகையில் இடத்தைத் தேர்வு செய்து அங்கே மிதமான தட்பவெப்பநிலை இருக்கும்படியாக அமைத்து முட்டையிடும். ஒருமுறைக்கு அதிகபட்சம் 50 முட்டைகள் வரை இடும் இவை, வேலை முடிந்ததும் அவற்றை பிறர் கண்ணில் படாதவாறு மறைத்து வைத்துவிட்டுக் கிளம்பிவிடும். முட்டைகள் பொரிந்து வெளிவரும் குட்டிகள், தனது வாழ்க்கைப் பயணத்தைச் சுயமாகப் பார்த்துக்கொள்ளும்.

சில பாம்பு இனங்கள் முட்டையிடாது, நேரடியாகக் குட்டி போடும். குட்டிகளை ஈன்றவுடன் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும். அதற்குக் காரணமும் உண்டு. பிரசவத்திற்கு முந்தைய காலத்தின்போது எங்கும் செல்லாமல் எதையும் சாப்பிடாமல் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கேயே இருந்துவிடும். அதனால் மிகவும் பலவீனமாக இருக்கும் இந்தப் பாம்புகள், பசியில் தனது குட்டிகளையே தின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும். விலகிச் செல்லக்கூட முடியாமல் மிகவும் பலவீனமாக இருக்கும் பாம்புகள் வேறு வழியின்றி மட்டுமே தனது குட்டிகளில் பலவீனமாக இருக்கும் குட்டிகளைச் சாப்பிடும். உணவுத் தேவையின் பொருட்டு, சில மிருகங்கள் அவை ஈன்றவற்றையே உண்டு விடுகின்றன. இது பாம்புகளுக்கு மட்டுமே உரித்தான குணம் அன்று. 

இவை எல்லாவற்றையும் விட வித்தியாசமாக, ஆப்பிரிக்காவின் மலைப்பாம்பு இனம் ஒன்று முட்டையிடுவதோடு அவற்றை அடைகாக்கிறது. முட்டைகள் பொரிந்து குட்டிகள் வெளிவந்த பிறகும்கூட அவற்றைப் பாதுகாத்து வளர்க்கிறது. ஆப்பிரிக்க மலைப்பாம்பு (African Python) என்றழைக்கப்படும் இது, பாதுகாப்பான வகையில் குழிதோண்டி அதனுள் சென்று முட்டையிட்டு அடைகாக்கிறது. 
முட்டைகள் பொரிந்து தனது குட்டிகள் வெளிவந்ததும் அனைத்தையும் தன் உடலை வட்டமாக வளைத்து அந்த வளையத்திற்குள் வைத்துக்கொள்ளும். சாதாரணமாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மலைப் பாம்புகள், இந்தக் காலகட்டத்தில் கறுப்பு நிறத்திற்கு மாறிவிடும். பகல் நேரங்களில் தனது குழியின் வாசலில் உடலை நீட்டிப்படுத்து சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது. இந்தக் கறுப்பு நிறத்தால் தனது உடலில் கிட்டதட்ட 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது. இது, அவை இறப்பதற்குத் தேவைப்படும் வெப்பத்தைவிடக் கொஞ்சம்தான் குறைவு. அப்படியிருந்தும் இவ்வளவு வெப்பத்தை அது தாங்கிக்கொள்வது எதற்காகத் தெரியுமா?

பாம்புகள்

இரவில் தனது குட்டிகள் உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாமல் குளிரில் சிரமப்படக் கூடாது என்பதற்காக. அதாவது, இரவில் தனது குட்டிகளைச் சுற்றி வளைத்துப் படுத்துக்கொண்டு, பகலில் உள்வாங்கிக்கொண்ட வெப்பத்தை வெளியிடுவதன்மூலம் அவற்றைக் குளிர்காய வைக்கிறது. தனது குட்டிகளைப் பாதுகாத்து வளர்க்க இவை செய்யும் முயற்சிகளின் இறுதியில் தனது உடலின் மொத்த சத்துகளையும் இழந்து பலவீனமடைவதால் சில பாம்புகள் இறந்தும் விடுகின்றன. உயிர் பிரியும் என்று தெரிந்தாலும், தனது சத்துகளைக் கொடுத்துத் தன் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்ற தாயன்றி வேறு எவருக்கு வரும்?

 

இரைகளை இரக்கமே இல்லாமல் வேட்டையாடும் இந்தப் பாம்புகள் தன் குட்டிகளிடம் எவ்வளவு கரிசனமாக இருக்கிறது பாருங்கள்; எத்தனை ஆபத்தான உயிரினமாக இருந்தால் என்ன, அந்தக் குட்டிகளுக்கு அது தாய் அல்லவா!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள் (புகைப்படத் தொகுப்பு)

 

நான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதினை தேர்தெடுப்பதற்கு முன்னர் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை விளக்கும் புகைப்படத் தொகுப்பு.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்து கொண்டதன் நான்காம் ஆண்டை குறிக்கும் வகையில் மாஸ்கோவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெற்றியுரை ஆற்றினார்.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்து கொண்டதன் நான்காம் ஆண்டை குறிக்கும் வகையில் பேரணி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் வெற்றியுரை ஆற்றினார்.

தலைநகரான மானேஸ்னயா சதுக்கத்தில் புதினின் பேச்சை கேட்பதற்கு கூடிய பெருந்திரளான மக்கள்.

கிரிமியா தலைநகரான மானேஸ்னயா சதுக்கத்தில் புதினின் பேச்சை கேட்பதற்கு கூடிய பெருந்திரளான மக்கள்.

தலைநகரான மானேஸ்னயா சதுக்கத்தில் புதினின் பேச்சை கேட்பதற்கு கூடிய பெருந்திரளான மக்கள்.

புதின் மீண்டும் தேர்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் மாஸ்கோவிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் ஒரு நபர்.

100 மில்லியனுக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். படத்தில் காணும் வாக்காளர்கள் “போலார் கரடி” என்னும் நீச்சல் குழுவை சேர்ந்தவர்களாவர்.

100 மில்லியனுக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். படத்தில் காணும் வாக்காளர்கள் “போலார் கரடி” என்னும் நீச்சல் குழுவை சேர்ந்தவர்களாவர்.

புதினின் பிரச்சாரம் அளித்த நம்பிக்கை அளவுக்கு பெரியளவிலான வெற்றியை தேர்தல் முடிவுகள் காட்டவில்லை. வாக்குப்பதிவின்போது விதிகள் மீறப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வாக்குப்பதிவின்போது விதிகள் மீறப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

 

தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்களை ஈர்க்கும் வகையில் உணவுகள், திறன்பேசிகள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.8

தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்களை ஈர்க்கும் வகையில் திறன்பேசிகள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கப்பட்டன.

வாக்குப்பதிவு மையத்திற்கு வரவியலான நிலையிலுள்ள ஸ்மோலென்ஸ்க் போன்ற இடங்களை சேர்ந்தவர்களின் இல்லத்திற்கே வாக்குப்பெட்டி கொண்டுசெல்லப்பட்டது.

வாக்குப்பதிவு மையத்திற்கு வரவியலான நிலையிலுள்ள ஸ்மோலென்ஸ்க் போன்ற இடங்களை சேர்ந்தவர்களின் இல்லத்திற்கே வாக்குப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது.

இந்த தேர்தலில் புதினை எதிர்த்து ஏழு பேர் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கெசியா சோபோக் மட்டுமே பெண் வேட்பாளராவார்.

இந்த தேர்தலில் புதினை எதிர்த்து ஏழு பேர் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கெசியா சோபோக் மட்டுமே பெண் வேட்பாளராவார்.

புதினின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அரசியல் ரீதியான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டவருமான அலெக்ஸி நவால்னி ஒரு நேரலைக்காக தயாராகிறார்.

முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அரசியல் ரீதியான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டவருமான அலெக்ஸி நவால்னி ஒரு நேரலைக்காக தயாராகிறார்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குள் செல்கிறார் புதின்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குள் செல்கிறார் புதின்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்
‘கரிசனையுடன் தர்மம் இயற்றுக’
 

image_2257e31600.jpgஇல்லறத்தை ஏன் தர்மத்தினுள் உள்ளடக்கினார்கள் என்பதை அறியவேண்டும்.  

உலகத்தில் தர்ம நெறியை நிலைநாட்ட, இல்லற தர்மம் இன்றியமையாதது. கணவன், மனைவி உத்தம நெறியுடன் வாழ்ந்து, நன்மக்கள் பேற்றினூடாக உலகத்துக்கு அவர்களை அர்ப்பணிக்க வேண்டும். அறப்பணிகளைச் செய்தும், தங்கள் வாரிசுகளூடாக, அவர்களையும் இப்புனித பணிகளை மேற்கொள்வதுமே இல்லற தர்மமாகும். 

தனது நலத்துடன், பிறர் நலன் பேணுதல், நெஞ்சுக்கு இனிமை தரும் நற்பழக்கமாகும். புத்திரபாக்கியம் இல்லாத கணவன், மனைவி தன்னலமே இல்லாது பிறருக்காகச் செய்யும் சேவைகள் மிகவும் புனிதமானதாகும்.

திருமணமாகாத பெரும் தலைவர்கள், தொண்டு உள்ளத்துடன் வாழும் பூமி இது.  எனவே, தர்மத்தை இறைவழியில் சென்று காப்பது தனிமனிதனின் கடமையாகும். சேவை செய்வதற்காகவே குடும்பத்துக்குள் புகுந்திடாமல், முழு உலகையும் தங்கள் குடும்பமாகக் கருதிய ஞானிகளைக் கொண்ட பூமியில் வாழுகின்றோம். கரிசனையுடன் தர்மம் இயற்றுக.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மார்ச் – 20

 

VRA-20180319-m08-MED.jpgகிமு 44 : ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்­வுகள் இடம்­பெற்­றன.

1602: டச்சு கிழக்­கிந்­தியக் கம்­பனி அமைக்­கப்­பட்­டது.

1760: அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் பர­விய தீ, அந்­ந­கரில் 349 கட்­டி­டங்­களை அழித்­தது.

1815: எல்பா தீவில் இருந்து தப்­பிய பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் 140,000 இரா­ணுவப் படை­க­ளு­டனும் 200,000 தன்­னார்வப் படை­க­ளு­டனும் பாரிஸ் நகரை மீண்டும் கைப்­பற்றி “நூறு நாட்கள்” ஆட்­சியை ஆரம்­பித்தார்.

1861: ஆர்­ஜென்­டீ­னாவில் இடம்­பெற்ற பூகம்­பகம் மெண்­டோசா நகரை முற்­றாக அழித்­தது.

1916: அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்­பியல் கோட்­பாட்டை வெளி­யிட்டார்.

1934: ஜப்­பானில் ஹாக்­கோடேட் என்ற இடத்தில் இடம்­பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்ததில் சுமார் 2,165 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1942: போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாஸி ஜேர்­ம­னி­ய­ரினால் கட்­டாய வேலைக்குக் கொண்டு செல்­லப்­பட்ட 100 போலந்து நாட்­ட­வர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1942: மேற்கு யுக்­ரைனின் ரொஹார்ட்டின் நகரில் குழந்­தைகள், பெண்கள் உட்­பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்­ம­னி­ய­ரினால் கொல்­லப்­பட்­டனர்.

1948: சிங்­கப்­பூரில் முத­லா­வது தேர்தல் நடை­பெற்­றது.

1952: ஜப்­பா­னு­ட­னான சமா­தான உடன்­ப­டிக்­கையை அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற செனட் சபை அங்­கீ­க­ரித்­தது.

1956: பிரான்­ஸிடம் இருந்து டுனீ­சியா சுதந்­திரம் பெற்­றது.

1974: லண்­ட­னி­லுள்ள பக்­கிங்ஹாம் அரண்­ம­னையின் வெளியே இள­வ­ரசி ஆன் , அவ­ரது கணவர் கெப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகி­யோரைக் கடத்த எடுக்­கப்­பட்ட முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது.

varalaru-20-03-2017-copy.jpg1988: எரித்­தி­ரி­யாவில் எரித்­தி­ரிய மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் அஃபபெட் நகரைக் கைப்­பற்­றினர்.

1990: பிலிப்­பைன்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி பேர்­டினன்ட் மார்­கோஸின் விதவை மனை­வி­யான இமெல்டொ மார்­கோ­ஸுக்கு எதி­ரான லஞ்ச ஊழல் வழக்­கு­வி­சா­ரணை ஆரம்­ப­மா­கி­யது.

1995: டோக்­கி­யோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்­குதல் ஒன்றில் 12 பேர் கொல்­லப்­பட்டு 1,300 பேர் காய­ம­டைந்­தனர்.
2003: ஈராக் மீதான அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்டு படை­களின் படை­யெ­டுப்பு ஆரம்­ப­மா­கி­யது.

2006: சாட் நாட்டில் கிளர்ச்சிப் படை­யி­னரால் 150 இரா­ணுவ சிப்­பாய்கள் கொல்­லப்­பட்­டனர்.

2012: ஈராக்கில் 10 நக­ரங்­களில் இடம்­பெற்ற தொடர் தாக்­கு­தல்­களில் 52 பேர் உயி­ரி­ழந்­த­துடன் சுமர்250 பேர் காய­ம­டைந்­தனர்.
2012: கோட்டே ரஜ­ம­ஹ­வி­கா­ரையில் பௌத்த பிக்­குகள் இருவர் வெட்டிக் கொல்­லப்­பட்­டனர்.

2014: ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபூலில் உள்ள ஆடம்­பர ஹோட்­ட­லொன்றில் தலிபான் அங்­கத்­த­வர்கள் மேற்­கொண்ட தாக்­கு­தலில் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2014: உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை உட்பட புலம்பெயர் தமிழர்களின் 15 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்தது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பிரசென்ஸ் ஆஃப் மைண்ட் கை கொடுக்கும் பாஸ்! ஒரு தன்னம்பிக்கைக் கதை! #MotivationStory

 

கதை

`டைப்பாற்றலுக்குத் தேவைப்படுவதெல்லாம் தைரியம்; எதையும் இழக்கத் தயாராகிற, எதையும் எதிர்க்கத் துணிகிற உறுதி’ - அர்த்தமுள்ள கருத்தை நயமாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). கல்வி நமக்குக் கற்றுக்கொடுப்பது ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால், வாழ்க்கை நமக்கு வைக்கும் பயிற்சிகளில் வெற்றிபெற கல்லூரிப் படிப்பில் பெற்ற பட்டமோ, டிஸ்டிங்ஷனோ மட்டும் போதாது. `பிரசென்ஸ் ஆஃப் மைண்ட்’ எனப்படும் புத்தி சாதுர்யம் வேண்டும். அதாவது, எதையும் புதிதாக யோசிக்கும், புதிதாக அணுகும் படைப்பாற்றல் திறன். வாழ்க்கையின் பல தருணங்களில் வெற்றி நம் அருகே வரும்போதெல்லாம், எங்கே அது கைநழுவிப் போய்விடுமோ என்கிற பயமும் எழும். அந்த நேரத்தில்தான் தேவை கிரியேட்டிவிட்டி. இது இருந்தால் வெற்றியைச் சிக்கென்று பற்றிக்கொண்டுவிடலாம். பிரசென்ஸ் ஆஃப் மைண்ட் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் இக்கட்டையும் சமாளிக்கலாம்; எதிலும் வெற்றி பெறலாம்; நினைக்கும் உயரங்களையெல்லாம் அடையலாம். இந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை இது.

 

அமெரிக்காவின், நியூயார்க்கிலிருக்கும் மிகப் பிரபலமான பிசினஸ் ஸ்கூல் அது. அந்தப் பள்ளியில் படித்தவர்களில் பலரும் புகழ் பெற்ற தொழிலதிபர்களாகியிருந்தார்கள். பலர், பெரிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். அந்தப் பள்ளியில் படித்து முடித்தவுடனேயே வேலைக்கு உத்தரவாதம் என்கிற நிலை. ஆனால், அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. அந்த பிசினஸ் ஸ்கூலில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை; சேர விரும்பும் மாணவரின் தனித் திறமையை ஆராய்வார்கள். பல சோதனைகளை வைப்பார்கள். அந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை ஆரம்பித்திருந்தது. இருக்கும் சொற்ப இடங்களுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். மாணவர்களை இன்டர்வியூ செய்ய ஐந்து பேர்கள் நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவே அமைக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வு

நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஒரு மாணவன், அந்தப் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வந்திருந்தான். அவனுக்கு அந்தப் பள்ளியில் சேரவேண்டுமென்பது கனவு, விருப்பம், லட்சியம். தனக்கு முன்னால் இன்டர்வியூ அறைக்குள் நுழைந்த மாணவர்களில் பலர் வெளிறிப் போன முகத்துடன் திரும்பி வருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கும் நடுக்கமாகத்தான் இருந்தது. ஆனால், அதை வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தான். அவனுடைய முறை வந்தது. அவன் இன்டர்வியூ நடைபெறும் அறைக்குள் நுழைந்தான். அந்த நிபுணர்கள் குழுவுக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்தான். வெகு இயல்பாக இருக்க முயற்சி செய்தான். அவர்களுக்கு ``ஹலோ சார்...’’ சொன்னான்.

இன்டர்வியூ செய்யும் நிபுணர் குழுவிலிருந்தவர்களில் ஒருவர், அவனுடைய கல்விச் சான்றிதழ்களையும் மற்றவற்றையும் சரிபார்த்தார். பிறகு இன்டர்வியூ ஆரம்பமானது. மற்றொருவர் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னார். ``மிஸ்டர்... நாங்க உன்கிட்ட கேட்கிறதுக்கு ஈஸியான பத்து கேள்விகளும், கஷ்டமான ஒரேயொரு கேள்வியும் இருக்கு. உனக்கு எது வேணுமோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம். நீ பதில் சொல்றதைப் பொறுத்துதான் இந்த ஸ்கூல்ல உனக்கு இடம் கிடைக்கும்...’’

அந்த மாணவன் ஒருகணம் யோசித்தான். ``சார் என்கிட்ட கஷ்டமான அந்த ஒரேயொரு கேள்வியையே கேளுங்க சார்...’’

``சரி... நீ உன் சாய்ஸைச் சொல்லிட்டே. பெஸ்ட் ஆஃப் லக்’’ என்றவர் அந்தக் கேள்வியைக் கேட்டார். ``இரவு முதலில் வந்ததா, பகல் முதல்ல வந்ததா? இதுக்கு பதில் சொல்லு...’’

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? சரியாக பதில் சொல்லவில்லையென்றால் பள்ளியில் இடம் கிடைக்காது. அவன் கற்பனை செய்து வைத்திருந்த எதிர்காலம்..?

``ம்... சொல்லுப்பா?’’ இன்னொரு நிபுணர் அவசரப்படுத்தினார்.

இன்டர்வியூவ்

அவன் நிறுத்தி, நிதானமாகப் பதில் சொன்னான்... ``பகல் சார்.’’

``எப்படிச் சொல்றே?’’


``ஸாரி சார். `கஷ்டமான ஒரேயொரு கேள்விக்கு பதில் சொன்னா போதும், ரெண்டாவது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை’னு ஏற்கெனவே நீங்க சொல்லியிருக்கீங்க... ’’

மாணவனுக்குப் பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

புதின் ஏன் சிரிக்கிறார்? : புதின் குறித்து கூகுளில் தேடப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்

புதின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சனிக்கிழமை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின், 2024 வரை ரஷ்ய அதிபராகத் தொடர உள்ளார். ரஷ்ய தலைவர் புதின் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், அவரை பற்றி இன்னும் நிறைய விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

ஒரு சோதனை முயற்சியாக, கூகுள் தானாக பரிந்துரைக்கும் தேடல்களைக் காண, புதினைப் பற்றி சில கேள்விகளைத் கூகுளில் தட்டச்சு செய்யத் தொடங்கினோம். கூகுளில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடிவு செய்தோம் (சிலவற்றை மிகவும் வித்தியாசமானதாக இருக்கலாம்).

புதின் திருமணமானவரா?

இல்லை. எங்களுக்குத் தெரிந்தவரை இல்லை. புதினும், அவருடன் 30 வருடங்கள் மணவாழ்வில் இருந்த லுயூத்மிலாவும் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் விவாகரத்து செய்தனர். இவர்கள் விவாகரத்து செய்வதற்கு சில மாதங்கள் முன்பு, பொதுவில் ஒன்றாக அரிதாகவே காணப்பட்டனர்.

புதினும், லுயூத்மிலாவும் 2013-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.படத்தின் காப்புரிமைAFP Image captionபுதினும், லுயூத்மிலாவும் 2013-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

முன்னாள் ஜிம்னாஸ்ட் வீராங்கனையும், அரசியல்வாதியுமான அலினா கபேவேவுடன் புதின் டேட்டிங் செய்ததாக வதந்திகள் உள்ளன. ஆனால், இது உண்மையா என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.

இடது கைக்காரரா?

புதின்படத்தின் காப்புரிமைREUTERS

இல்லை. இந்த படம் எடுக்கப்பட்ட ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஏதேனும் மாற்றங்கள் நிகழவில்லை என்றால், புதின் இடது கைக்காரர் இல்லை.

பணக்காரரா?

இந்த தேர்தலுக்கு முன்பு ரஷ்ய மத்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட தகவலில் படி, புதினின் ஆண்டு சம்பளம் 1,12,000 டாலராகும்.

ஆனால், புதின் ஒரு ஊழல்வாதி என்றும், தனது சொத்துக்களை பல ஆண்டுகளாக மறைத்து வைத்துள்ளார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அமெரிக்க கருவூல அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

''தனது நண்பர்களைப் பணக்காரர்களாக மாற்றுபவராக நாங்கள் அவரை பார்க்கிறோம். அவரது நெருங்கிய நண்பர்களும், நண்பர்களாக இருந்து அவரால் ஓரம்கட்டப்பட்டவர்களும் அரசின் சொத்துகளை பயன்படுத்துகின்றனர்'' என அப்போதைய அமெரிக்க கருவூல அதிகாரி ஆடம் சூபின் கூறுகிறார்.

புதின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த குற்றச்சாட்டுகளை ''தூய கற்பனை'' என கிரெம்ளின் மாளிகை கூறுகிறது.

இருந்தாலும், 2007 ஆண்டின் ஒரு சிஐஏ குறிப்பு, புதினின் அப்போதைய தனிப்பட்ட சொத்து 40 பில்லியன் டாலர்கள் என கூறுகிறது. புதினின் சொத்து குறித்து 2012 ஆண்டு கருத்து கூறிய ஆய்வாளரும், டொனால்ட் டிரம்ப்பின் விமர்சகருமான ஒருவர், புதினின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என்றார். இது அவரை உலகின் மிகவும் பணக்கார மனிதராக மாற்றியிருக்கும்.

இறந்துவிட்டாரா?

இல்லை. இந்த தேர்தல் வெற்றி அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

2015-ம் ஆண்டு 10 நாட்கள் பொதுவெளியில் அவர் காணப்படாததால், அவரது உடல் நலன் குறித்து ஊகங்கள் கிளம்பின.

புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டரா? இறந்துவிட்டாரா? மீண்டும் தந்தையாகிவிட்டாரா? என அனைத்து விதமாக பேச்சுகளும் எழும். ஆனால், அவர் மீண்டும் வெளிவந்தது,'' வதந்திகள் இல்லையென்றால் வாழ்க்கை அலுப்பாக இருக்கும்'' என்று மட்டும் கூறுவார்.

புதின்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

புதின் ஏன் சிரிக்கிறார்?

அவர் நம்மில் இருந்து வேறுபட்டவர் அல்ல; நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் உடல் எண்டோர்பின் உருவாக்குகிறது, நரம்பு சமிக்ஞைகள் உங்கள் முக தசைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவை சிரிப்பை உண்டாக்குகின்றன.

உக்ரைனை ஆக்கிரமிக்க நினைக்கிறாரா?

ஆம், அவர் ஏற்கனவே உக்ரைனை ஆக்கிரமித்துவிட்டார். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைந்துகொண்டார்.

ரஷ்யபடத்தின் காப்புரிமைAFP

2014-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரேனில் மற்ற பகுதிகளுக்குள் நுழையவில்லை. ஆனால், அங்குள்ள ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கு, தங்கள் நாட்டு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்ததை ரஷ்யா ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக அனைவராலும் நம்பப்படுகிறது.

சிரியாவுக்கு ஆதரவளிக்கிறரா?

ரஷ்யாவுக்கு சிரியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். அங்கு ரஷ்யாவுக்கு இரண்டு ராணுவ தளங்கள் உள்ளன. பஷர் அல்-அசாத்தின் அரசு சிறிது காலத்திற்கு ரஷ்யாவுடன் ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்தது.

புதின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2011 ல் சிரியாவில் யுத்தம் வெடித்தபோது, ரஷ்யா அசாத்தை ஆதரித்தது.; ஆனால் செப்டம்பர் 2015 வரை ரஷ்யா அங்கு போரில் ஈடுபடவில்லை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவைத் தனது ஆனைத்து இலங்குகளையும் அடையவிடாமல் போராட வைப்பது, அசாத்தை பதவியில் வைத்திருப்பதன் மூலம் சர்வதேச அளவில் தன்னை நிரூபிப்பது என்ற இரண்டு நோக்கங்களுக்காக ரஷ்யா சிரியாவில் உள்ளது.

புதினுக்கு மகன் உள்ளாரா?

இல்லை. ஆனால்,கேட்ரீனா, மரியா என இரண்டு மகள்கள் உள்ளனர் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னாள் நடன கலைஞரான கேட்ரீனா மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மரியா மருத்துவதுறையில் பணிபுரிவதாக நம்பப்படுகிறது.

அதிகம் அறியப்படாத அவர்களை பற்றி, புதினிடம் இருந்து எந்த தகவல்களையும் பெற முடியாது. ஆனால், கேட்ரீனாவும் அவரது கணவரும் பெரும் பணக்காரர்களாக உள்ளனர் என 2015-ம் ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

புதின்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

ஆங்கிலம் தெரியுமா?

ஆம். அவர் சரளமாக ஆங்கிலம் பேசும் காணொளி உள்ளது. தனது மொழிபெயர்ப்பாளர்கள், ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றால் புதினே திருத்துவார் என அவரது செய்தி தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை பிடிக்குமா?

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. இதற்கு புதினால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

http://www.bbc.com/tamil

  • தொடங்கியவர்

14 நாள்கள்

 
 

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

`பூ' பார்வதியின் புதிய பிரச்னை முதல் சுட்டிப் பெண்ணின் `வாவ்' பார்வை வரை கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

p94a_1521463992.jpg

பிரச்னைகளைத் தாண்டி சாதிக்கும் பார்வதி!

கே
ரளாவின் சிறந்த திரைப்பட நடிகைக்கான இந்த ஆண்டின் விருதை வென்றிருக்கிறார் நடிகை பார்வதி. தமிழில் `பூ' மற்றும் `மரியான்' படங்களில் நடித்த பார்வதி, மலையாளத் திரையுலகில் `என்னு நின்டெ மொய்தீன்', `சார்லி' எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். ‘டேக் ஆஃப்’ என்ற படத்தில் நடித்ததற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதைப் பெறுகிறார். பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய மலையாள மொழி நடிகைகளில், முதல் எதிர்ப்புக் குரல் தந்தவர் பார்வதி. “டேக் ஆஃப் படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில்தான் அந்தப் பிரச்னை வெடித்தது. அப்போதுதான் `உமன்-இன்-சினிமா கலெக்டிவ்' அமைப்பும் தோன்றியது. வாழ்க்கை அப்படியே மாறிப்போனது. அதன்பின் எனக்குப் பயம் தோன்றவில்லை” என்று கூறும் பார்வதி, “இப்போது நான் செய்யும் வேலை அமைதியாக இருக்கிறது. எனக்கான பாராட்டு அத்தனை அதிகம் இல்லை என்றாலும், பணிக்குத் திரும்பும் ஆர்வத்தை இந்தப் படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்.

மம்மூட்டி நடித்து வெளிவந்த `கசபா' திரைப்படத்தில், பெண்களுக்கு எதிரான தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதற்காகத் தன் கண்டனங்களைப் பார்வதி பதிவுசெய்ய, மம்மூட்டி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில நடிகர்களும் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பிரச்னை மேல் பிரச்னை. இத்தனையும் தாண்டி இந்த விருது கைகளில் கிடைக்கப்போகிறது என்பதில் பெரிதாக மகிழ்வு இல்லை என்று கூறும் பார்வதி, இனி தன் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும், இதுபோன்ற பிரச்னைகளைத் தாமரை இலைத் தண்ணீர்போல ஒதுக்கக் கற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்.

சும்மாவா... இவர்தான் தாமரைப் ‘பூ’வாச்சே?


p94b_1521464024.jpg

பார்பி... இனி வெறும் அழகுப் பதுமையல்ல!

உல
கெங்கும் உள்ள பெண்களின் பால்ய பருவத்து உற்ற துணை பார்பி பொம்மைகள்தாம். பல தலைமுறைகளாகப் பெண் குழந்தைகளின் தோழியாக வலம்வந்த பொம்மைகள் குறித்து விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. நீண்ட பழுப்பு நிற ப்ளாண்டு கூந்தல், நீலக் கண்கள், எடுப்பான மார்புகள், சிறுத்த இடை, நீண்ட கால்கள், தட்டையான வயிற்றுப்பகுதி என அழகின் இலக்கணமாக இருந்த பார்பி பொம்மைகள்தாம் சிறுமிகளுக்கு சைஸ் ஸீரோமீது அதீத ஆர்வம் வரக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அழகுப் பதுமைகளாக மட்டுமே பெண்ணைப் பார்க்க வைக்கும் உளவியலை பார்பி பொம்மைகள் பரப்பி வருவதாகவும், தவறான ‘ரோல் மாடலாக’ பார்பி பொம்மையைக் கருதுவதாகவும் பெரும்பான்மையான தாய்மார்கள் பார்பி பொம்மை தயாரிக்கும் மேட்டல் நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் கூறியிருந்தார்கள்.  

p94c_1521464053.jpg

இந்த எண்ணத்தை மாற்ற, கடந்த 2015-ம் ஆண்டு முதல் `ஷீரோஸ்' என்ற பெயரில் சாதனைப் பெண்கள் போன்ற பொம்மைகளை உருவாக்கிவருகிறது மேட்டல் நிறுவனம். அமெரிக்க வாள்சண்டை வீராங்கனையான இப்திஹஜ் முகமதின் வடிவ பொம்மையை இஸ்லாமிய ஹிஜாப் அணிந்த முதல் பொம்மையாக அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். இங்கிலாந்து குத்துச்சண்டை வீராங்கனை நிகோலா ஆடம்ஸ், அமெரிக்க ஸ்னோ-போர்டர் க்ளோ கிம், ஆஸ்திரேலிய பசுமைச் செயற்பாட்டாளர் ஸ்டீவ் இர்வினின் மகளான பிண்டி இர்வின், சீன கைப்பந்து வீராங்கனை ஹு ரோக்கி, பிரெஞ்சு சமையல் கலைஞர் ஹெலென் தெரோஸ் என விதம் விதமான பெண்களின் வடிவில் பொம்மைகளை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று மூன்று பொம்மைகளை `இன்ஸ்பயரிங் உமன்' என்ற அடைமொழியுடன் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது மேட்டல். மெக்ஸிக எழுத்தாளர் மற்றும் ஓவியரான ஃப்ரீடா காஹ்லோவின் பொம்மை - அவரது டிரேட்மார்க்கான அடர்ந்த புருவங்கள், அழுத்தமான சிவப்பு உதட்டுச் சாயம், மெல்லிய கரங்கள் என ‘அழகு’ பற்றிய பொது வரைமுறையை மீறி நிற்கிறது. 1940-களில் உலகைத் தனியாக விமானத்தில் சுற்றி, காணாமல் போன அமேலியா இயர்ஹார்ட்டின் பொம்மை 40-களின் தொளதொள உடை, பாய் கட் கூந்தல் ஸ்டைலுடன் சிரிக்கிறது. பெரிய கண்ணாடி, சீரியஸான முகம் என அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது அமெரிக்க கணிதவியல் நிபுணரான கேத்தரின் ஜான்சனின் பொம்மை. புற அழகை ஒதுக்கி, மன வலிமைக்கு முக்கியத்துவம் தரும் சிறந்த ரோல் மாடல்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பொம்மைகளுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது!

`கமான் பார்பி லெட்ஸ் கோ பார்ட்டி' பாட்டை இனிமே பாடப்படாது. மூச்!


p94d_1521464095.jpg

அடடா மெலிண்டா!

மை
க்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவர் மனைவி மெலிண்டா இருவரும் இந்தியா உள்பட வளர்ந்துவரும் எட்டு நாடுகளின் மகளிர் மேம்பாட்டுக்கென 170 மில்லியன் டாலர் வழங்கியிருக்கிறார்கள். வரும் நான்கு ஆண்டுகளில் இந்தப் பொருளாதார உதவியைச் செய்யவுள்ளனர். பாலின சமத்துவம் மலர பெண்களின் பொருளாதார விடுதலை மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கும் மெலிண்டா, அந்தப் பொருளாதாரச் சுதந்திரத்தை வளரும் நாடுகளின் பெண்கள் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். “அதிகாரம் உள்ள பெண்களின் கைகளில் இந்தப் பணம் சென்று அடைந்தால், அனைத்தும் மாறும்” என்றும் கூறியிருக்கிறார். `பெண்களின் கைகளில் பொருளாதாரச் சுதந்திரம் இருந்தால் மட்டுமே, குடும்பத்தை ஏழ்மையிலிருந்து வெளிக்கொணரும் கல்வி, சத்தான உணவு, உடல்நலம் பேணுவது என ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பணம் செலவிடப்படும் என்பதை ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன' என்றும் தன் குவார்ட்ஸ் ஓப்-எட் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அவர்.

இம்முயற்சியில், முதலாவதாக பில் - மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் விளைபொருள்களை நல்ல விலையில் விற்று லாபம் பெற உதவும். இரண்டாவதாக, இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா உள்பட எட்டு நாடுகளில் பெண்கள் டிஜிட்டல் வங்கிக் கணக்குகளை இயக்க உதவும். இறுதியாக, சிறு வணிகம் முதல் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு வரை பல்வேறு தளங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படும் என்று தன் திட்டத்தைத் தெளிவாக முன்வைத்திருக்கிறார் மெலிண்டா. அவரது விரிவான திட்டம் அறிய இங்கு சொடுக்கவும்: https://goo.gl/yxRxWx

தங்க மனசுக்காரி!


p94e_1521464135.jpg

அமெரிக்காவைக் கலக்கிய இரண்டு வயதுச் சுட்டி!

அமெ
ரிக்காவைச் சேர்ந்த இரண்டு வயதுச் சுட்டிப்பெண் பார்க்கர் கரி, தன் அம்மாவுடன் தேசிய போர்ட்ரைட் கேலரிக்கு சென்றாள். அங்குள்ள பிரமாண்டமான ஓர் ஓவியத்தைப் பார்த்து வாய்பிளந்து நின்றுவிட்டாள். தாய் எவ்வளவு சொல்லியும் அங்கிருந்து நகரவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட பென் ஹைன்ஸ் என்ற நபர், அந்தச் சுட்டி வாய்பிளந்து நின்றதைத் தன் மொபைலில் படம்பிடித்துக்கொண்டார். முகநூல் பக்கத்தில் வாய்பிளந்து நிற்கும் சிறுமியின் புகைப்படத்தை அவர் வெளியிட, அது வைரல் ஆனது. ஓவியத்துக்கு போஸ் கொடுத்த வி.ஐ.பி அம்மணிக்கு இதுபற்றித் தெரியவர, பார்க்கர் கரியின் தாயை அவரின் அலுவலகத்தார் தொடர்புகொண்டு பேசினார்கள். பார்க்கர் கரியை அந்த வி.ஐ.பி சந்திக்கும் நாள் வந்தது.

வீட்டுக்குள் நுழைந்த வி.ஐ.பி-யைக் கண்டதும் துள்ளிக் குதித்துக் கட்டிக்கொண்டார் அந்தச் சுட்டிப்பெண். இருவரும் சேர்ந்து டெய்லர் ஸ்விஃப்ட்டின் ‘ஷேக் இட் ஆஃப்’ பாடலுக்கு நடனமாடினார்கள். `நீங்கள் ஒரு ராணி' என்று அந்த வி.ஐ.பி-யைப் பார்த்துப் பெருமை பொங்கச் சொன்னாள் சுட்டி. சிறுமியுடன் தான் நடனமாடும் காணொளியைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த வி.ஐ.பி, `உன்னைச் சந்தித்ததில் பெருமகிழ்வு பார்க்கர். பெரும் கனவுகள் காண். என்றாவது ஒருநாள் உன் ஓவியத்தை நான் பெருமையுடன் பார்ப்பேன்' என்று எழுதினார். பார்க்கர் கரி ஒரு ஸ்டார் என்று அவளது பாட்டி சொல்ல, “அதெல்லாம் இல்லை... நான் பெரிய பெண்ணாகிவிட்டேனாக்கும்” என்று பதில் சொன்னாள் அந்தச் சுட்டி. அந்த வி.ஐ.பி தன் முழு உருவ ஓவியத்தை அந்தக் காட்சிக்கூடத்தில் திறந்து வைக்கும்போது சொன்னது இதுதான் - “இந்த ஓவியத்தை இந்த இடத்தில் வந்து பார்க்கும் ஆப்பிரிக்கன் அமெரிக்கன் சிறுமிகள்மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன்.” ஓவியத்தின் தாக்கம், இரண்டு வயது சிறுமியை இந்த வி.ஐ.பி-யுடன் நடனமாட வைத்திருக்கிறது. அந்த வி.ஐ.பி - மிஷெல் ஒபாமா!

அழகு குட்டிச் செல்லமே!


p94f_1521464173.jpg

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை

12
வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வழி செய்யும் சட்டத் திருத்தத்தை, நாட்டிலேயே முதல் மாநிலமாக, மத்தியப்பிரதேச மாநிலம் கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து ஹரியானா மாநிலமும் அதற்கான சட்ட முன்வரைவை கையில் எடுத்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, குற்றவியல் சட்டம் (ராஜஸ்தான் திருத்தம்-2018) மசோதாவைச் சட்டசபையில் சமர்ப்பிக்க, குரல் வாக்கெடுப்புமூலம் மசோதா நிறைவேறியிருக்கிறது. இபிகோ 376AA எனும் பிரிவைக் குற்றவியல் சட்டத்தில் சேர்க்க வழிவகை செய்திருக்கிறது இந்த மசோதா. இதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும், குறைந்தபட்ச தண்டனையாக இறக்கும் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும்.

ஆயுள்தண்டனையே 14 ஆண்டுகள்தான் என்றாலும், குற்றத்தின் தன்மை கருதி, சாகும்வரை கடுங்காவல் என்ற கடுமையான திருத்தத்தைக் கொண்டு வர நேர்ந்தது என்று கூறியிருக்கிறார் கட்டாரியா. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா நிகழ்த்திய பட்ஜெட் உரையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்றவியல் ஆவண பீரோவின் அறிக்கைப்படி, அந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 4,034 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவீட்டில் நாட்டிலேயே நான்காவது மாநிலமாக உள்ளது ராஜஸ்தான். இந்தச் சட்டத் திருத்தம் போலவே, கூட்டு வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 377DD-யும் கொண்டுவரப்படவிருக்கிறது.

மற்ற மாநில அரசுகளும் இதைக் கவனிக்கலாமே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் உயிரிழப்பு

 

 
KENYAAILINGRHINOjpg

படம்: ஏபி

 உலகின் கடைசி  ஆண்  வெள்ளை காண்டாமிருகம் கென்யாவில் உயிரிழந்துள்ளது.

கென்யாவிலுள்ள Ol Pejeta வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,” உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டமிருகம் இறந்துவிட்டது. 45 வயதான சுடானுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலையில் சரிவு காணப்பட்டது.

சுடானுக்கு வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகள் இருந்தன. தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதன் நிலைமை மிக மோசமாகியது. அதனால் எழுந்து நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை கருணைக் கொலை செய்ய முடிவு செய்தோம்.

கடந்த சில மாதங்களாக சுடானை உயிருடன் வைக்க நாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு ஆகியோருடன் வசிந்து வந்தது. இந்த நிலையில் சுடான் உயிரிழந்துள்ளதால் அந்த இனத்தில் இரண்டு பெண் காண்டா மிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.

சுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? #WorldSparrowDay

 
 

வீட்டைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பேணிவரும் நபர்களுக்கு அந்தக் கீச்... கீச்... ஓசையின் இனிமையைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சின்னஞ்சிறு மென்மையான உடலின் அழகை அவர்கள் ரசிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. குறுகுறுவென அங்கும் இங்கும் நொடிக்கொரு முறை நோட்டமிடும் அந்தக் கண்களையும், சிதறிக்கிடக்கும் சிறுதானியங்களைக் குதித்து குதித்து கொத்தித் திண்ணும் அந்தச் சிற்றலகுகளையும் கண்களால் பருகிப் பரவசமடையாமலும் இருந்திருக்க முடியாது. சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் அந்தச் சிட்டுக்குருவிகளின் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் வெள்ளை நிறம் கூட அதற்குத் தனி அழகுதான்.

சிட்டுக்குருவி

 

"மனையுறைக் குரீஇ" என்று சங்க இலக்கியங்களால் இவை குறிப்பிடப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மனை என்பதற்கு வீடு என்றொரு பொருளுண்டு. வீட்டில் உறைந்து வாழும் குருவி என்று காரணப் பெயர் வைத்து அழைத்துள்ளார்கள் ஆதித் தமிழர்கள். அது உண்மைதான் அல்லவா, வீட்டின் சந்து பொந்துகளிலும் கூட சில வைக்கோல்களை வைத்து கூடு கட்டி வாழக்கூடியவை சிட்டுக்குருவிகள். வீட்டில் இருக்கும் சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைப்பது பாவமாகத்தான் 1990-கள் வரையிலுமே கருதப்பட்டது. இருந்த கொஞ்சம் அரிசியையும் பசியோடு கீச்சிட்ட சிட்டுக்களுக்குத் தானமளித்து பாரதியே செல்லம்மாவிடம் திட்டு வாங்கியுள்ளார். கேட்டவுடன் கட்டியிருக்கும் வேட்டியையும் கழட்டித் தருபவராயிற்றே. ஆனால் சிட்டுக்களுக்குத் தெரியுமா, தங்களுக்காகத் திட்டு வாங்குவது பாரதி என்று. அப்படி பாரதிக்குத் திட்டு வாங்கித் தந்த பாவமோ என்னவோ, இந்தக் குருவிகள் அன்று போல் மனிதர்களோடு இயைந்து வாழும் வாய்ப்பினைப் பெரும்பாலும் இழந்துவிட்டன என்று நினைக்கத் தோன்றுகிறது.

கற்பனைகளை ஒதுக்கிவிட்டுச் சிறிதளவு பகுத்தறிவோடு சிந்தித்தாலே போதும், உண்மை புரிந்துவிடுகிறது. ஆம், அவற்றின் இந்நிலைக்குக் காரணம் அதுவல்ல. இன்று நாம் வாழும் வீடுகள் அனைத்தும் அவை வாழமுடியாமல் போனதுதான் முதல் காரணம். இன்று நம்மால் அவற்றின் இனிமையான கீச்சொலியைக் கேட்கமுடியவில்லை என்றவுடன் அவை அழிந்துவிட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்று சொல்லி அதற்கென ஒரு நாள் வைத்துப் பற்பல முயற்சிகளை முன்னெடுக்கிறோம். அது ஒருபுறமிருக்க இதை அறிவியலால் இன்னும் முழுமையாக நிரூபிக்க முயலவில்லை என்றே தோன்றுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அவை வழக்கம்போல் வாழ்வதும், அத்தோடு கிராமங்களிலும், சிறுநகராட்சிகளிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் ஆங்காங்கே நடத்தப்படும் குறுகிய ஆய்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது புரிகிறது.

சிட்டுக்குருவி

முதலில் ஒரு உயிரினம் அழிந்து வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை பற்றிய தெளிவான அறிக்கை வேண்டும். அதைப் பொறுத்தே கான மயில், உள்ளான் போன்ற பறவைகள் அழிவின் விளிம்பில் இருப்பவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிட்டுக்குருவிகள் பற்றிய முழுமையான ஆய்வறிக்கை இதுவரை இந்தியளவில் வெளியிடப்படவில்லை. மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக் குறைவு மற்றும் அதிகரிப்பு பற்றிய தகவல்கள் கூட ஆங்காங்கே சில சூழலியலாளர்களால் சிறு அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே தெரியவந்தது. உலகளவில் இன்று 54 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்கின்றனர். பிறகு எப்படி சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவையாகக் கூறுகிறார்கள்?

சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1.) அவை முன்போல் அதிகமாகக் காணப்படாதது.

2.) 2005-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அங்கே சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறியது.

இங்கிலாந்தில் குருவிகள் குறைந்து வருவதாகக் கூறியதன் தாக்கமே இந்தியாவிலும் எதிரொலித்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் குறைந்த அதே சமயத்தில் அதன் அருகே இருக்கும் ஸ்காட்லாந்திலும், வெல்ஷிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருவேளை அது வாழ்வதற்கான சூழல் இங்கிலாந்தில் அழிந்து வந்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கே வந்திருக்கலாம். அதுபோலத்தான் இந்தியாவிலும், நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு, அவைகளுக்கு ஏற்ற சூழலுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. வாழ்விடங்களைக் கண்டறியும் இந்தப் போராட்டத்தில் சில குருவிகள் மட்டுமே வெல்கின்றன. மற்றவை நகர்ப்புறங்களில் வாழ முடியாமல் மடிந்துபோகின்றன.

சிட்டுக்குருவி

 

பூனைகள், காக்கைகள் போன்றவற்றிற்கு இரையாவது, கூடுகட்டப் போதிய புதர் பகுதிகளோ, வீட்டில் பொந்துகளோ இல்லாமை, அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவு, பயிர்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள் போன்றவற்றால் அவை அழிந்துவருவது என்னவோ உண்மைதான். ஆனால், செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகள் சிட்டுக்களின் அழிவிற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுவது உண்மை எனச் சொல்லமுடியாது. காரணம், இதுவரைக்கும் எந்த ஆய்வும் இதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. மனிதர்களிடையே வாழும் பறவைகள் என்பதால் இவற்றின் அழிவு நம் கண்ணுக்கு நன்கு தெரிகிறது. ஆனால், சிட்டுக்குருவிகள் போல இன்னும் பறவையினங்கள் இன்றோ நாளையோ என தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவற்றையும் சிரத்தை எடுத்து கவனிப்பது அவசியம். ஆனால், நாம் இன்னும் சிட்டுக்குருவிகளைக் காப்பதற்கே போதுமான முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை. வருடந்தோறும் இந்நாளைக் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறோம். இதனை அரசுதான் செய்யவேண்டும் என்பதில்லை. தனி மனிதர்களாகிய நம்மிடம் இருந்தே தொடங்கலாம். கொஞ்சம் அறமும், அக்கறையும் இருந்தாலே அதற்கு போதும். இதற்கு நல்ல உதாரணம், கோவை பாண்டியராஜன்

https://www.vikatan.com

 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? - உலக சிட்டுக்குருவி தினம்


 

 

chittukuruvi-day

 

இன்றைக்கு உலக சிட்டுக்குருவி தினம் என்பது சிட்டுக்குருவிக்குத் தெரியாது.  அவ்வளவு ஏன்... இந்த தினம் தெரிகிறதே தவிர, சிட்டுக்குருவியை நாம் ஒருநாளேனும் ஒருபொழுதேனும் நினைத்துப் பார்க்கிறோமா என்றால்... அதுவும் இல்லை.

எண்பதுகளின் டீன் பருவத்தில் இருந்தவர்களுக்கு சிட்டுக்குருவி நன்றாகவே பரிச்சயம். 90கள் வந்த போது, சிட்டுக்குருவிகளைத் தேடுவோரும் குறையத் தொடங்கினார்கள். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலாமா என்று கேட்பார்கள். ஒருவகையில், முடிச்சுப் போடலாம்; போடமுடியும் என்றுதான் தோன்றுகிறது.

90களில் லேசாக எட்டிப்பார்த்து, 2000 த்தின் தொடக்கத்தில் நீட்டநீட்டமாய் நிற்கத் தொடங்கிய செல்போன் டவர்கள், நமக்கு வேண்டுமானால் பயன்பாட்டுக்கு உதவிக் கொண்டிருக்கலாம். ஆனால் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால், சிட்டுக்குருவிகள் தாக்கப்பட்டன. தெறித்துப் பறந்தன. சில, பறந்து விழுந்தன. மடிந்தன. இன்னும் சில... ‘விட்டாப் போதும்டா சாமீ’ என்று எங்கோ பறந்து சென்றன.

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

சேதி தெரியுமா - என்னை

விட்டுப் பிரிஞ்ச கணவன்

இன்னும் வீடு திரும்பலை’

என்று  எங்கோ போய்விட்ட கணவனை நினைத்து, அந்தத் துயரத்தை சிட்டுக்குருவியிடம் கொட்டித் தீர்த்த நாயகிகள் உண்டு. சிட்டுக்குருவியைப் பார்ப்பதும் அதனுடன் பேசுவதும் தன் பிரச்சினைகளையெல்லாம் அந்தக் குருவியிடம் எடுத்துரைப்பதுமே மன பாரங்களைக் குறைப்பதாகப் பார்க்கப்பட்ட காலம் அது.

சிறுவயதில், எண்பதுகளில்... ஏதோ ஒரு விளம்பரம். வங்கி விளம்பரமோ என்னவோ அது. ஒரு குருவி வாயில் குச்சி ஒன்றை எடுத்துக் கொண்டு பறந்து சென்று, ஓர் மரத்துக் கிளையில் வைக்கும். இப்படியே குச்சியைக் கவ்வி, பறந்து, கிளையில் வைத்து கூடு கட்டியிருக்கும். அடுத்து, அந்தக் குருவி தம்பதி சமேதராக, குழந்தை குட்டிகளுடன் கூட்டில் குடியிருக்கும். ‘ஒரு குருவியே கூடு கட்டும் போது, நீங்கள் ஏன் வீடு கட்டக் கூடாது’ என்று வீடு கட்டச் சொல்லி, வீட்டுக்கு லோன் தருவதாகச் சொல்லி விளம்பரம் வந்ததாக நினைவு. இன்றைக்கு வீடு கட்ட வறண்ட ஏரிகள் இருக்கின்றன. பாவம்... கூடு கட்டுவதற்குத்தான் மரங்களும் இல்லை; குருவிகளும் காணோம்.

‘ஏ குருவி... சிட்டுக்குருவி

உன் ஜோடியெங்கே அதைக் கூட்டிகிட்டு

வந்து விட்டத்துல வந்து கூடு கட்டு.

பொல்லாத வீடு; கட்டு பொன்னான கூடு.

பொண்டாட்டி இல்ல வந்து

என் கூட பாடு’

என்று ‘வா... வந்து என் வீட்டில், என் வீட்டு விட்டத்தில் கூடு கட்டிக்கோ’ என்று குருவியை கூவிக்கூவி அழைத்த காலமெல்லாம் செல்போன் டவரேறிப் போச்சு. இன்றைக்கு பல வீடுகளில்,பிளாஸ்டிக் குருவிகளும் கூண்டுகளும் அழகுக்கு வைக்கப்படுகின்றன. கைத்தட்டினாலோ  ஏதேனும் சத்தம் கேட்டாலோ குருவிகள் சத்தம் போடுவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிட்டுக்குருவிகள் இப்படித்தான் இருக்கும் போல என்று குழந்தைகள் கொஞ்ச நேரம் கைத்தட்டி குருவியுடன் விளையாடிவிட்டு, பிறகு செல்போனில் விளையாடப் போய்விடுகிறார்கள்.

ஆண்ட்ராய்டு ஜாதிக்காரர்கள் என்றுதான் செல்போன் பயன்பாட்டாளர்களை சொல்லவேண்டும். இன்னும் நாற்பது ஐம்பது வருடத்தில், கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதெல்லாம் போய், செல்போன் டவர் இல்லாத ஏரியாவில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்  என்பது போல, செல்போன் கோபுர தரிசனம் நான் ஸ்டாப் டவர் தரிசனம் என்றாகிவிடும். நீரின்றி அமையாது உலகு என்று சொன்னதை மறந்து, செல்போன் டவரின்றி அமையாது உலகு என்றாகிவிட்ட சூழலில், சூழலாவது சுற்றுச்சூழலாவது.

இத்தனையும் சொல்லிவிட்டு, ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாரதி பாடியதைச் சொல்லாமல் போனால், எங்கிருந்தோ சிட்டுக்குருவியின் அழுகுரல் செவி தொட்டு, மனதைத் தைத்து இம்சிக்கும்.

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

பிபிசி பெட்டகம்- காலத்தை வென்ற ஸ்டீஃபன் ஹாக்கிங்

``ஒரு கண்ணோட்டத்தில், இயற்கை சக்திகளின் கருணையில் வாழும் வெறும் பலவீனமான ஜந்துக்களே மனிதர்கள் `` என ஹாக்கிங் கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்

உலகின் மிகச் சிறந்த ஆசிரியருக்கான விருதுடன் 15 கோடி ரூபா பரிசை வென்ற பிரித்தானிய ஆசிரியை அன்ட்ரியா ஸஃபீராகோ: தமிழ் உட்பட 35 மொழிகளைப் பேசுகிறார்

உலகின் மிகச் சிறந்த ஆசி­ரி­ய­ராக பிரிட்­டனைச் சேர்ந்த ஆசி­ரியை அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ தெரிவு செய்­யப்­பட்டு 10 இலட்சம் அமெ­ரிக்க டொலர் (சுமார் 15 கோடி ரூபா) பரிசை வென்­றுள்ளார்.

Great-teacher.jpg

துபாயில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ­வுக்கு மிகச் சிறந்த ஆசி­ரியர் விருது வழங்­கப்­பட்­டது.

இந்­தியத் தொழி­ல­தி­ப­ரான சன்னி வர்­கி­யினால் ஸ்தாபிக்­கப்­பட்ட வர்கி மன்­ற­மா­னது, குளோபல் எடி­யூ­கேஷன் அன்ட் ஸ்கில்ஸ் ஃபோரம் எனும் விழாவை வரு­டாந்தம் நடத்தி, உலகின் சிறந்த ஆசி­ரி­ய­ருக்­கான விருதை வழங்­கு­கி­றது.

Great-teacher1.jpg

இம்­முறை 4 தட­வை­யாக நடத்­தப்­பட்ட உலகின் மிகச் சிறந்த ஆசி­ரியர் விருது விழா­வுக்­காக 173 நாடு­களைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர்.

10 பேர் கொண்ட இறுதிப் பட்­டி­யலில், துருக்கி, பிரிட்டன், தென் ஆபி­ரிக்கா, கொலம்­பியா, பிலிப்பைன்ஸ், அமெ­ரிக்கா, பிரேஸில், பெல்­ஜியம், அவுஸ்­தி­ரே­லியா, நோர்வே ஆகிய நாடு­களைச் சேர்ந்த ஆசி­ரிய ஆசி­ரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தனர்.
நேற்­று­முன்­தினம் துபாயில் நடை­பெற்ற வைபவத்தில் பிரிட்­டனின் அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ முத­லிடம் பெற்று, உலகின் மிகச் சிறந்த ஆசி­ரி­ய­ருக்­கான விருதைப் பெற்­றுக்­கொண்டார்.

Great-teacher0.jpg

அவ­ருக்கு ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், துபாயின் ஆட்­சி­யா­ள­ரு­மான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் இவ்­வி­ருதைக் கைய­ளித்தார்.

38 வய­தான அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ, லண்­ட­னின்’ பிறென்ட் பகு­தி­யி­லுள்ள அல்­பேர்ட்­டன் சமூக கல்­லூ­ரியில் கலை மற்றும் ஆடைத்­துறை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­கிறார்.

Andria-Zafirakou-2.jpg

வறு­மை­யான குடும்­பங்­களைச் சேர்ந்த பல மாண­வர்­க­ளுக்கு அன்ட்­ரியா கற்­பிக்­கிறார். இம்­மா­ண­வர்கள் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்­த­வர்கள். அம்­மா­ண­வர்­களின் கல்­வியில் அதிக அக்­கறை செலுத்தும் ஆசி­ரியை அன்ட்­ரியா, மாண­வர்­களின் பெற்­றோர்­க­ளுடன் வகுப்­ப­றை­யிலும் அவர்­களின் வீட்­டிலும் இணைந்து பணி­யாற்­று­கிறார்.  இதனால் அப்­பெற்­றோ­ருக்கு உற்­சா­க­மூட்­டு­வ­தற்­காக அப்­பெற்­றோர்­களின் தாய் மொழி­க­ளிலும் அடிப்­படை வார்த்­தை­களைக் கற்­றி­ருக்­கிறார் அண்ட்­ரியா. தமிழ் உட்­பட 35 மொழி­களில் அடிப்­படை வார்த்­தை­களை அவர் கற்­றி­ருக்­கி­றாராம்.

பிரித்­தா­னிய முன்னாள் பிர­தமர் டோனி பிளெயர், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் பிர­தமர் ஜூலியா கில்லார்ட், பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி நிக்­கலஸ் ஸர்­கோஸி அமெ­ரிக்க முன்னாள் உப ஜனாதிபதி அல் கோர் உட்பட பலர் இந்நிகழ்வில் அதிதிகளாக பங்குபற்றினர். உலகின் மிகச் சிறந்த ஆசிரியையாக தெரிவான அன்ட்ரியா ஸஃபீராகோவுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஸ்மார்ட்போனைத் தூர வையுங்கள்!

shutterstock774611779

நவீன வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அலாரம் செட் செய்து அதிகாலை கண் விழிப்பது முதல், செய்திகளைத் தெரிந்துகொள்ள, ஷாப்பிங் செய்ய, உணவை ஆர்டர் செய்ய, தகவல்களைத் தேட எனப் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கைகொடுக்கின்றன. செயலிகள் துணையோடு ஸ்மார்ட்போனிலேயே கற்றுக்கொள்ளவும் செய்யலாம். இன்னும் பலவிதங்களில் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த முடிகிறது.

ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இது கவனச்சிதறலுக்கான சாதனமாகவும், நேரத்தை வீணடிக்கும் வழியாகவும் இருப்பதுதான் பிரச்சினை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளை போனிலிருந்தே அணுக முடிவதால், நேரம் காலம் இல்லாமல் போனைப் பயன்படுத்த பெரும்பாலானோர் பழகிவிட்டனர். பலருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒரு மோகமாகவே மாறியிருக்கிறது. ஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால், சிலவற்றைப் பின்பற்ற வேண்டும், சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 

நோட்டிபிகேஷன் வேண்டாம்

நோட்டிபிகேஷன் வசதி பயனுள்ளது என்றாலும், கவனச்சிதறலில் அதற்குத்தான் முதலிடம். சமூக ஊடக சேவைகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அறிவிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்பால், தேவையில்லாமல் அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் தூண்டுதல் ஏற்படுகிறது. எனவே, முதலில் நோட்டிபிகேஷன் வசதியைத் துண்டிப்பது நல்லது. எப்போது தேவையோ அப்போது மட்டும் போனை எடுத்துப் பார்க்க இதுவே சிறந்த வழி. அதோடு, அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதும் நல்லது.

 

செயலி நீக்கம்

உள்ளங்கையிலிருந்தே சமூக ஊடக சேவைகளை அணுக முடிவது நல்லதுதான். ஆனால், அதிக நேரம் செலவாகிறது எனத் தெரிந்தால், தயங்காமல் சமூக ஊடக சேவை செயலிகளை நீக்கிவிடுவது நல்லது. அவசரத் தேவை எனில், போனில் பிரவுசர் மூலம் இந்த சேவைகளை அணுகலாம். இதேபோலவே பயன்படுத்தாத எல்லாச் செயலிகளையும் நீக்கிவிடுங்கள்.

 

சுய கட்டுப்பாடு

போனை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு நீங்களே ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். மதிய உணவு இடைவேளையின்போது, உணவு சாப்பிடும்போது, நண்பர்களுடன் இருக்கும்போது, சமூக நிகழ்வுகளில், படுக்கையறையில் போனை எடுப்பதில்லை என உறுதிகொள்ளுங்கள். இரவு படுக்கச்செல்லும் முன், இணைய டேட்டா வசதியைத் துண்டித்துவிடுங்கள்.

 

கைக்கடிகாரம் போதும்

அலுவலக நேரத்தில் போனைப் பக்கத்தில் வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். அல்லது ஏரோபிளேன் மோடில் போட்டு வையுங்கள். அதேபோல, கைக்கடிகாரம் அணிந்து செல்லுங்கள். நேரம் பார்ப்பதற்காக போனை எடுக்காமல், கடிகாரத்திலேயே நேரம் பார்த்துக்கொள்வது பணியில் கவனம் செலுத்த உதவும்.

 

நண்பர்களின் உதவி

ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உங்கள் நோக்கத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களை அறியாமல் போனைக் கையில் எடுக்கும்போது அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தலாம். அவர்களுக்கும் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு உண்டாகலாம்.

இந்த வழிமுறைகளோடு, ஸ்மார்ட்போன் மோகத்திலிருந்து விடுபட போனை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தும் வழக்கத்தையும் மேற்கொள்ளலாம். இதற்கான உதாரணங்கள்:

 

பேசுங்கள்

சும்மாயிருக்கும் நேரத்தில் போனில் சமூக ஊடகங்களில் உலவ நினைப்பதைவிட, நீண்ட நாட்களாக பேசமால் இருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து அவரிடம் பேசுங்கள். குறிப்பிட்ட ஒரு கேள்வியைக் கேட்டு அவரிடம் உரையாடுங்கள். சில நிமிடங்கள்தாம் பேச இருப்பதாகக் கூறிவிட்டே பேசலாம். நட்பைப் புதுப்பித்துக்கொண்டதுபோலவும் இருக்கும்.

 

திட்டமிடுங்கள்

ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் பதிவிடுவதற்குப் பதில் உங்கள் அன்பானவர்கள் பற்றி யோசியுங்கள். குடும்ப உறுப்பினர்களைத் திரையரங்குக்கோ உணவு விடுதிக்கோ அழைத்துச்செல்லத் திட்டமிடலாம். போனிலேயே முன்பதிவு செய்யலாம். உறவுகளுடன் கூடுலாக நேரத்தைச் செலவிடுங்கள்.

 

கேளுங்கள்

போன் திரைதான் மிகப் பெரிய எதிரி. இதற்கு மாற்றாக ‘பாட்காஸ்டிங்’ எனப்படும் குரல் வழி இணைய ஒலிபரப்புகளைக் கேட்கலாம். ஆடியோ நூல்களைக் கேட்கலாம். உங்கள் குரலில் செய்திகளைப் பதிவுசெய்யலாம். உதாரணத்துக்கு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, குழந்தைகளுக்கான செய்திகளைப் பதிவுசெய்து அதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

 

முதலீடுக்கு யோசியுங்கள்

முதலீடு செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் தனிநபர் செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அவற்றில் நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் படம் பார்ப்பதைவிட, ஓய்வு கால நிதித் திட்டமிடல் தொடர்பான குறிப்புகளை வாசிப்பது நல்லது அல்லவா!

 

எழுதுங்கள்

சிறந்த விஷயங்கள் அலையடிக்கின்றனவா? அதை போனில் உள்ள குறிப்பேட்டில் எழுதி வையுங்கள். இதற்கென பிரத்யேகச் செயலிகளும் இருக்கின்றன. இது ஒரு பழக்கமாக மாறினால், உங்கள் போனையே ஒரு நாட் குறிப்பைப் போலப் பயன்படுத்தலாம். தேவைப்படும்போது இந்தக் குறிப்புகளைத் திரும்பிப் பார்த்து ஊக்கம் பெறலாம்.

 

சொல் புதிது

டிக்‌ஷனரி செயலிகளை இயக்கி, புதிய சொற்களுக்கான பொருள்களை அறிந்துகொள்ளலாம். தினம் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்வது என வைத்துக்கொள்ளலாம். தெரிந்துகொள்ளும் சொல்லைப் பயன்படுத்தியும் பார்க்கலாம். பாக்கெட் போன்ற செயலியைப் பயன்படுத்தி, கட்டுரைகளை வாசிக்கலாம். இணையத்தில் உலவும்போது கண்ணில்படும் நல்ல கட்டுரைகளைப் பின்னர் வாசிக்க இந்தச் செயலி உதவுகிறது.

 

மூளைக்கு வேலை

செஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். உடற்பயிற்சிக்கு உதவும் செயலிகளைத் தரவிறக்கம் செய்து, பிட்னசில் கவனம் செலுத்தலாம். ஸ்மார்ட்போனைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், நேரம் வீணாவதைத் தவிர்ப்பதுடன் செயல்திறனையும் அதிகரித்துக்கொள்ளலாம். 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘இவர்களின் தேடல் என்ன?’
 

image_6e0e3699d4.jpgகாரசாரமான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது, சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கிக்கொண்டிருப்பதை, தொலைக்காட்சியில் அவ்வப்போது காட்டிக்கொண்டிருப்பார்கள். 

விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விவாதம் சுவாரஷ்யமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இளைஞன் ஒருவன், அலைபேசியில் எதையோ பார்த்தபடி இருந்தான்.  

உரையைக் கேட்ட சிலர், எழுந்து கேள்விகளைக் கேட்டு, தங்கள் சந்தேகங்களை நீக்கிக் கொண்டார்கள். ஆனால், அந்த இளைஞனோ, சபையை நோக்கி, எல்லாம் புரிந்ததுபோல், சிரித்து, தலையை அசைத்தான். மீண்டும் அலைபேசியில் சிக்குண்டான்.  

விவாதமுடிவில், சபையினருக்கு ஒரு குறிப்புத்தாள் வழங்கப்பட்டது. எல்லோரும் எழுத, இவன் மட்டும் ‘திருதிரு’ என விழித்து, பக்கத்தில் உள்ளவர்களைச் சுரண்டி, விவரம் கேட்டு நச்சரித்தான். விரிவுரைகளைக் கேட்காதவனுக்கு எதைத்தான் புரியவைப்பது. 

இத்தகைய நடிகர்கள், வீட்டிலேயே இருந்திருக்கலாம். இவர்களின் தேடல் என்ன?  

  • தொடங்கியவர்

உதவி கேட்டு வரும் உறவினரை அணுகுவது எப்படி? - உறவின் மேன்மை சொல்லும் கதை! #FeelGoodStory

 

தன்னம்பிக்கை கதை

`நீங்கள் ஒருபோதும் எனக்கு மேலானவரல்ல; கீழானவரும் அல்ல. எப்போதும் என் அருகிலேயே இருப்பவர்’ - அமெரிக்கப் பத்திரிகையாளர் வால்டர் வின்செல் (Walter Winchell) உறவுக்குப் புது விளக்கம் தந்திருக்கிறார். பல வருடங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம், பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்னல் என்று வரும்போது உறவுக்குக் கைகொடுப்பதுதான் அழகு, நேசம், மனிதாபிமானமும்கூட. இது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு மனிதனின் வாழ்க்கை முன்னேற்றம், பல உறவுகளுக்கு அதிருப்தியையும் அசூயையையும் ஏற்படுத்தும். நல்ல நிலையில் வாழும் ஒரு மனிதர்... அவரிடம் உதவி கேட்டுப் போகும் இன்னொருவன்... `இல்லை’ என்ற வார்த்தை வந்துவிட்டால், அந்த கணத்திலிருந்து உறவு அறுந்துபோகும். பகையும் வன்மமும் வளரும்.  காரண, காரியங்களைக்கூட யோசிக்கத் தோன்றாது. இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், எப்படிச் சமாளிக்கலாம் என்று சொல்லித் தருகிறது இந்தக் கதை. 

 

உறவின் மேன்மை

ஸ்வீடனிலிருக்கும் எஸ்கில்ஸ்டுனா (Eskilstuna) நகரம். அங்கே நகைக்கடை அதிபர் ஒருவர் இருந்தார். திடீரென ஒருநாள் மாரடைப்பு வந்து இறந்துபோனார். அவருடைய இறப்புக்குப் பிறகுதான் அவருடைய உண்மையான நிலைமை தெரியவந்தது. அவர் அத்தனை வருடமும் சம்பாதித்து வைத்திருந்தது பணத்தை அல்ல, கடனை. நகைக்கடை உட்பட அவரின் சொத்துகள் முழுவதும் பறிபோயின. அந்தக் குடும்பம் நடுத்தெருவில் நிற்காத குறை. நகைக்கடை அதிபருக்கு ஒரே ஒரு மகன். சாப்பாட்டுக்கே பிரச்னை எனும் நிலைமையும் அந்தக் குடும்பத்துக்கு வந்தது. 

நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை அழைத்தார். நீலக்கல் (Sapphire) பதித்த ஒரு நெக்லஸை அவனிடம் கொடுத்தார். ``இது உன் அப்பா ரொம்ப ஆசையா எனக்கு வாங்கிக் கொடுத்த நெக்லஸ். இதைக் கொண்டுபோய் உன் சித்தப்பாகிட்ட கொடுத்துட்டு இதுக்கு என்ன பணம் கிடைக்குமோ அதை வாங்கிட்டு வா...’’ என்று சொன்னார். 

நகைக்கடை அதிபரின் தம்பியும், அதே ஊரில் ஒரு நகைக்கடை வைத்திருந்தார். அம்மாவின் வார்த்தையைத் தட்ட முடியாத மகன், சித்தப்பாவின் கடைக்குப் போனான். அவரிடம் நெக்லஸை நீட்டினான். விஷயத்தைச் சொன்னான். 

உறவுகள்


அவனுடைய சித்தப்பா, நெக்லஸை வெகு கவனமாக ஆராய்ந்தார். பிறகு சொன்னார்... ``மகனே... உன் அம்மாகிட்ட போய் இப்போ மார்க்கெட் நிலவரம் நல்லா இல்லைனு சொல்லு. கொஞ்ச நாள் காத்திருந்து இதை வித்தா நல்ல விலை கிடைக்கும்.’’ 

அவன் யோசனையோடு சித்தப்பாவைப் பார்த்தான். `இன்றைய செலவுக்கு என்ன செய்வது?’ அவர் அத்தோடு விடவில்லை. அவன் வீட்டுச் செலவுக்கு கணிசமாக ஒரு தொகையைக் கொடுத்தார். அடுத்த நாளிலிருந்து, அவர் கடைக்கு வந்து நகைத்தொழிலைக் கற்றுக்கொள்ளச் சொன்னார். அதன் மூலம் அவன் குடும்பத்துக்கும் ஒரு வருவாய் கிடைக்கும் என அறிவுறுத்தினார். அந்தப் பையன் மகிழ்ச்சியோடு திரும்பிப் போனான். 

மறுநாளிலிருந்து சித்தப்பாவின் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.  விலையுயர்ந்த நகைகளையும், கற்களையும் எடைபோடவும், அதன் மதிப்பைத் தெரிந்துகொள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகினான். அந்தத் தொழிலில் வெகுவாகக் கைதேர்ந்தவனானான். நகையின் மதிப்பை அறியவும், வைரம் உள்ளிட்ட கற்களின் எடைபோடவும் அவனைத் தேடி அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வர ஆரம்பித்தார்கள். அவன் புகழ் மெள்ள மெள்ள வளர்ந்துகொண்டே இருந்தது. 

ஒருநாள் சித்தப்பா அவனை அழைத்தார். ``மகனே... போய் உன் அம்மாகிட்ட சொல்லு. `மார்க்கெட் நல்லா இருக்கு. இப்போ அந்த நெக்லஸை வித்தா நல்ல விலைக்குப் போகும்’னு. நாளைக்கு மறக்காம அந்த நெக்லஸை எடுத்துட்டு வா...’’ 

அவன் அன்று இரவு வீடு திரும்பியதும், முதல் காரியமாக அம்மாவின் நீலக்கல் நெக்லஸை எடுத்துப் பார்த்தான். சோதித்தான். அதிர்ந்து போனான். அந்த நெக்லஸில் இருந்தது விலையுயர்ந்த கல் அல்ல, போலி. 

அடுத்த நாள் அவன் சித்தப்பாவின் கடைக்கு வந்தான். ``நெக்லஸ் கொண்டு வந்தியா?’’ என்று கேட்டார் சித்தப்பா. 

``இல்லை.’’ 

``ஏன்?’’ 

``அதுல இருந்தது போலிக்கல். பத்து பைசாவுக்குப் பெயராது.’’ 

வைரம்


சற்று நேரம் இருவருக்குமிடையே அமைதி நிலவியது. பிறகு பையன் கேட்டான்... ``நான் அன்னிக்கி இந்த நெக்லஸைக் கொண்டு வந்தப்போ, `இப்போ மார்க்கெட் நிலவரம் நல்லா இல்லை. கொஞ்ச நாள் காத்திருந்து இதை வித்தா நல்ல விலை கிடைக்கும்’னு ஏன் சொன்னீங்க?’’ 

``இதை அன்னிக்கிக் கொண்டு வந்தப்போ நீ உடைஞ்சு போயிருந்தே. உனக்குப் பணம் தேவையா இருந்துது. அந்த நேரத்துல `இது போலி’னு நான் சொல்லியிருந்தா, நான் பொய் சொல்றேன்னு நீ நினைச்சிருப்பே. உன்னோட வீட்டு நிலைமை சரியில்லைனு தெரிஞ்சதாலதான் போலி நகையை, நல்ல நகைனு நான் சொன்னேன். இப்போ உனக்கு இதுல நல்ல அனுபவம் வந்துருச்சு. உனக்கே இது போலினு தெரிஞ்சிடுச்சு. அதுனாலதான், இதைக் கொண்டுவரச் சொன்னேன்...’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சலூன் கடையில் நூலகம்! - வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படவைக்கும் பட்டதாரி

 
 

அந்தக் கடையில் முடி வெட்டிக்கொள்ளவோ, ஷேவ் செய்துகொள்ளவோ புதிதாக நுழைகிற யாரும், இது சலூன் கடைதானா இல்லை, நூலகமா என்று ஒருகணம் திகைத்துப்போகிறார்கள். காரணம், தனது சலூன் கடையை சிறு நூலகமாக மாற்றி வைத்திருக்கிறார் அதன் உரிமையாளர்.


சலூன்

 


புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடியில், 'இந்தியன்' என்ற பெயரில் சலுான் கடை வைத்துள்ளார், கணேசன். இவருக்கு வயது 50. தோற்றத்தில் படுசுத்தமாக 'பளிச்'என்று இருக்கிறார். பொதுவாக சலூன் கடைகளில், டி.வி, ஹேர்கட்டிங் மாடல் படங்கள்தான்  இருக்கும். ஆனால், கணேசனின்  கடையில்  விதவிதமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எல்லாமே பெரும் இலக்கிய ஆளுமைகள் எழுதிய புத்தகங்கள். இதுதவிர, கார்ல் மாக்ஸ்,லெனின், சேகுவேரா, உள்ளிட்ட உலகத் தலைவர்களின் நூல்களும்  திருக்குறள், திருவாசகம், மு.மேத்தா, வைரமுத்து,  அப்துல் கலாம், கருணாநிதி, கண்ணதாசன் உட்பட, பலர் எழுதிய  புத்தகங்கள்  வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, புத்தகங்களை வைக்க இடமில்லாமல், அட்டைப் பெட்டிகளிலும் அடுக்கி வைத்துள்ளார். மற்றும் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, இலவசமாக எடுத்துச்சென்று படிக்கின்றனர். மணமேல்குடியில், கணேசனை எல்லோரும் கவிஞர் என்றும் இவரது கடையை 'சலுான் லைப்ரரி' என்றும் குறிப்பிடுகிறார்கள்.


சலூன்
 

கணேசனிடம் நாம் பேசினோம். "சிறு வயதில் எனக்கு  தமிழாசிரியராக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. நான்  எட்டாவது படிக்கும் போது என் அப்பா  இறந்துவிட்டார். அதனால், அவர் நடத்திவந்த சலுான் கடையை, குடும்ப வருமானத்துக்காக  நான் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.  அதனால், பள்ளிப் படிப்பை  பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனாலும், படிக்கிற ஆசை மட்டும் எனக்குள்ளே இருந்துகொண்டே இருந்தது. படிக்கிற ஆசையில், எல்லாவிதமான புத்தகங்களையும் விலைகொடுத்து வாங்கி, அன்று முதல் இன்று வரை படித்துவருகிறேன். படிக்கப் படிக்க எழுத்தும் வசப்பட்டது. ஒருகட்டத்துக்குப் பிறகு, கல்வித் தகுதி அவசியம் என்று தோன்றியது. திறந்தவெளிப் பல்கலையில் எம்.ஏ., வரலாறு, அண்ணாமலைப் பல்கலையில் பி.லிட்., அஞ்சல் வழிக் கல்வியில் அடிப்படை இந்தியும் படித்துள்ளேன். தற்போது, முனைவர் பட்டத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.

சலூன்

 

இப்போது, திறந்தவெளி பல்கலை மாணவர்களுக்கு யோகா பேராசிரியராகவும் இருக்கிறேன். பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும்  புத்தக வாசிப்பு ஆர்வத்தையும் பழக்கத்தையும்  உருவாக்க வேண்டும்  என்ற நோக்கத்துடன் எனது கடையை ஒரு நூலகமாக  அமைத்து வைத்திருக்கிறேன்" என்றார் கணேசன். இவர், மணமேல்குடியின்' தமுஎசக-வின் கிளைத் தலைவராக இருக்கிறார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

50 அடி உயரத்தில் மாற்றுத்திறனாளிகளின் மெய் சிலிர்க்க வைக்கும் நாடக அரங்கேற்றம்

பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவில் அமைக்கப்பட்டதன் 70வது ஆண்டை குறிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பிரம்மாண்டமான சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

  • தொடங்கியவர்

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் சூப்பர்ஹீரோ நாய்கள்... காமிக்ஸில் வராத கதாநாயகர்கள்!

 
 

1982-ம் ஆண்டு. கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு பனிமலை. ஆன்னா ஆலனுக்கு (Anna Allen) அப்போது 22 வயது. சாகச விரும்பி. அதனால்தான் அவருக்குக் கிடைத்த எத்தனையோ வேலைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆபத்து நிறைந்த இந்தப் பனிமலைப் பகுதியில் வேலைக்கு வந்துள்ளார். இவர் வேலை செய்வது பனிச்சறுக்கு விளையாட்டினை (Skiing) ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனத்தில். அன்று வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

ஆன்னா ஆலன் - நாய்கள் சூப்பர் ஹீரோக்கள்

 

ஆன்னா ஆலன்

அங்கிருந்த சில நண்பர்களோடு பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தார் ஆன்னா. ஒரு கட்டத்தில் பனிச்சறுக்கு விளையாட்டிற்குக் கிளம்பலாம் என்று நண்பர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கான பிரத்யேக உடைகளை எடுக்க , கட்டடத்தின் உள்ளே தனக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு லாக்கரை நோக்கி நடக்கிறார் ஆன்னா. அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
திடீரென, ஏதோ ஒரு பெரிய சத்தம் பின்னணியில் கேட்டது. என்ன, ஏது என்று ஆன்னா பார்ப்பதற்குள் அந்தப் புகை அவரைச் சூழந்தது. உடல் சில்லிட்டது. அவ்வளவுதான் அவருக்குத் தெரிந்தது. மயங்கிவிட்டார். 20 மணி நேரம் ஆகியிருக்கலாம். லேசாகக் கண் திறந்து பார்த்தார் ஆன்னா.

சூப்பர் ஹீரோ நாய்கள்

சில இரும்புப் பெட்டிகள், அந்தப் பனி அவரின் முகத்தை மூடாமல் காத்து நின்றன. மற்றபடி எங்குமே நகர முடியாத நிலை. ஆன்னாவுக்குப் புரிந்தது தான் மிகப்பெரிய பனிச் சரிவில் (Avalanche) மாட்டியிருக்கிறோம் என்று. நாள்களை, நிமிடங்களை, நொடிகளை எண்ணத் தொடங்கினார். தன் நாக்கினால் தொட முடிந்த தூரத்தில் இருந்த சில அழுக்குகளை இழுத்து உணவாக எடுத்துக்கொண்டார். ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்கவில்லை. உயிர் மட்டும் மிச்சமிருந்தது. அது ஐந்தாவது நாள். வெளியே ஆன்னாவைத் தேடும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. நிச்சயம் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்றே அனைவரும் நம்பினார்கள். குறைந்தபட்சம் அவர் உடலையாவது மீட்க வேண்டும் என்று நினைத்தனர். இறுதி முயற்சியாக அந்த 'மீட்பு நாயை' (Rescue Dog) கொண்டு வந்தார்கள். அரை மணி நேரத்திற்குள்ளாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்தது. அதைத் தன் மூக்கால் துளைத்தது. கால்களைப் போட்டு கிளறியது. அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கு ஆன்னா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். அங்கிருந்து அவரை மீட்டெடுத்தார்கள்.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நாய்கள்

இடது காலின் பாதங்கள் அறுத்தெடுக்கப்பட்டன. வலது கால் மூட்டிற்குக் கீழ் அனைத்தும் வெட்டியெடுக்கப்பட்டன. இதோ... இன்று 58 வயதில் இன்னும் அதே பகுதியில், அதே வேலையில் இருக்கிறார். இன்றும் அந்த 'மீட்பு நாய்களுக்கு' நன்றிக்கடன் பட்டவளாக வாழ்ந்து வருகிறார்.

பனிச்சரிவில் சிக்கும் மனிதர்கள்

பனிமலைகளில் ஏற்படும் பனிச்சரிவில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களை மீட்க இன்றும் உலகம் முழுக்க பல 'மீட்பு நாய்கள்' (Avalanche Rescue Dogs) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பனிச்சரிவில் சிக்கும் மனிதர்களைக் கண்டுபிடிக்க இந்த நவீன உலகிலும் சரியான தொழில்நுட்பம் இல்லை. இந்த நாய்கள்தான் அதற்குப் பெருமளவு உதவுகின்றன. ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shpeherd), ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் (Australian Shepherd), பார்டர் கொல்லீஸ் (Border Collies), கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

மனிதர்களை மீட்கும் நாய்கள்

அரைமணி நேரத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவை இந்த மீட்பு நாய்கள் அலசிவிடும். இதை மனிதர்கள் செய்ய பல மணி நேரங்கள் பிடிக்கும். இந்தப் பனிச்சரிவுகளில் சிக்கும் மனிதர்களில் 90% பேரை முதல் 15 நிமிடங்களில் கண்டுபிடித்தால் உயிரோடு மீட்டு விடலாம். அரைமணி நேரத்திற்குப் பிறகு, இந்த உயிர் பிழைத்தலுக்கான வாய்ப்பு 30% ஆகக் குறையும். இரண்டுமணி நேரத்திற்குப் பிறகு அது வெறும் 10% தான். வரலாற்றில் எப்போதாவது ஆன்னா போன்றவர்கள் நாள்கள் கடந்தும் உயிரோடு கண்டெடுக்கப்படுவதுண்டு. ஆனால், அது ஆச்சர்ய நிகழ்வாக மட்டுமே இருக்கும். இந்த நாய்களுக்கு ஒரு வயது வரை எந்தப் பயிற்சிகளும் வழங்கப்பட மாட்டாது. அந்தப் பகுதியை அவை நன்றாக உணர வேண்டும் என்பதற்காக, அந்தப் பகுதிகளில் சும்மா சுற்றிவர விடப்படும். ஒரு வயதிற்குப் பிறகு, அவைகளுக்கு மிகக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படும். தங்களின் மோப்ப சக்தியை உபயோகப்படுத்தி பனிச்சரிவில் சிக்கியிருக்கும் மனிதர்களை அவை அடையாளம் காண்கின்றன. 

 

இன்று உலகம் முழுக்கப் பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடக்கும் பகுதிகளிலும், பனி மலையில் ட்ரெக்கிங் செய்யும் பகுதிகளிலும் இந்த நாய்கள் மனிதர்களைக் காக்கும் 'சூப்பர் ஹீரோ'க்களாகவே வாழ்ந்து வருகின்றன. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் இறந்த நாள் (மார்ச்.21, 2008)

 

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி,

 
ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் இறந்த நாள் (மார்ச்.21, 2008)
 
யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமும் சமக்கிருதக்கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் இறந்த மார்ச் 21, 2008 இறந்தார். இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1935 - பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.
* 1948 - முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
* 1960 - நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

* 1970 - முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.
* 1980 - ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
* 1984 - மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.

* 1994 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
* 1998 - புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

பறவைகளுக்காக கனடாவில் வடிவமைக்கப்படும் கட்டடங்கள்

உயர் கட்டடங்கள் மீது பறவைகள் மோதி இறப்பதை தவிர்ப்பதற்காக, நகர கட்டுமானங்களின் வடிவத்தை மாற்றியிருக்கிறது கனடா அரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.