Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நட்சத்திரங்களுடன் பேசிய ஹாக்கிங்!

 
21CHSUJTINKU

விண்வெளிப் பயணத்தில்...   -  AP

 

குழந்தைப் பருவத்தில் அம்மா, அப்பாதான் முன்னுதாரணமாக இருக்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய விரும்புவோம். இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங்கின் குழந்தைப் பருவமும் இப்படித்தான் இருந்தது. அவரது தாய், தந்தை இருவரும் புதிய விஷயங்களைத் தேடித் தேடித் தெரிந்துகொள்வதில் ஈடுபாடு கொண்டவர்கள்.

ஹாக்கிங்கின் அம்மா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல் தலைமுறை பெண் பட்டதாரிகளில் ஒருவர். தந்தை மருத்துவ விஞ்ஞானியாக இருந்தார். பெற்றோர் இருவருமே தொலைக்காட்சி பார்ப்பதில் ஈடுபாடு காட்டியதில்லை. சாப்பிடும் நேரத்தில்கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். எல்லோரின் கையிலும் ஒரு புத்தகம் இருக்கும்.

பள்ளியில் ஸ்டீவன் ஹாக்கிங், முதல் மதிப்பெண் மாணவராக இருந்ததே இல்லை. ஆனால் புத்தக வாசிப்பில் தீவிரமாக ஆர்வம் காட்டினார். புல் தரையில் படுத்துக்கொண்டு இரவில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார். வீட்டுக்குச் செல்வதற்கான புதுப்புது பாதைகளை, தங்கை மேரியுடன் சேர்ந்து கண்டுபிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 16 வயதிலேயே உதிரிப் பாகங்களைச் சேர்த்து ஒரு கணினியை உருவாக்கிவிட்டார் ஸ்டீவன் ஹாக்கிங்.

சூரியக் குடும்பத்தைப் பற்றி உலகம் அதுவரை அறிந்திராத தகவல்களைச் சொன்ன இயற்பியல் விஞ்ஞானியாக ஹாக்கிங் மாறினார். நாம் வாழும் உலகம், உலகத்தை உள்ளடக்கியிருக்கும் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விளக்குவதற்கு முயன்றார்.

21CHSUJTINKU1

டெல்லியில் ஹாக்கிங்   -  Associated Press

 

ஆராய்ச்சிப் படிப்பை முடித்தபோதே பிரபலமாகிவிட்டார். 21-வது பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. தனது ஷூவுக்கு முடிச்சைப் போடும்போது உடல் ரீதியான சங்கடத்தை உணர்ந்தார் ஹாக்கிங். நடப்பதிலும் பேசுவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. தசையும் உடல் இயக்கமும் மெதுவாகச் செயலிழந்து போகும் நோய் அது. மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்கமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

உயிருக்கு அச்சுறுத்தும் நோயையே வேலையைத் துரிதமாக்கும் கருவியாக்கினார் ஹாக்கிங். கலிலியோ இறந்த அதே நாளில் 300 வருடங்கள் கழித்து 1942-ம் ஆண்டு பிறந்தவர். இயக்க விதிகளைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன், பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கிய ஐன்ஸ்டைனைப்போல உலக மக்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியாக இருந்தார். உடல் செயல்பட முடியாத நிலையோ, உயிருக்கு அச்சுறுத்தும் நோயோ லட்சியங்களுக்குத் தடையே அல்ல என்பதை உணர்த்தியதால் சாதாரண மனிதர்களுக்கும் உதாரணமானவராகத் திகழ்ந்தார்.

shutterstock1045884769

அவரால் நடக்க முடியாமல் போனது. சக்கர நாற்காலியில் ஏறிக்கொண்டார். எழுத முடியாமல் போனது. குரல் கொண்டு தொடர்புகொண்டார். பேச முடியாமல் போனது. தசைகள் அசைவதைப் புரிந்துகொள்ளும் பிரத்யேக கணிப்பொறி நிரலைப் பயன்படுத்தி எண்ணங்களை வெளியிட்டார்.

நோய்களும் உடல் செயலின்மையும் ஹாக்கிங்கின் உற்சாகத்தைக் குறைக்கவேயில்லை. பயணத்தில் தீராத ஆர்வம் கொண்டார். அண்டார்டிகா உட்பட அனைத்துக் கண்டங்களுக்கும் பறந்து சென்றார். ஸ்டார் டிரக் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார். வெப்பக் காற்று பலூனில் பறந்து 60-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரத்யேக போயிங் விமானத்தில் பூஜ்ய ஈர்ப்புப் பயணத்தை மேற்கொண்டார். பந்தயங்கள் வைத்து நண்பர்களான சக விஞ்ஞானிகளிடம் தோற்பதிலும் ஹாக்கிங் பேர் பெற்றவராகத் திகழ்ந்தார். மருத்துவர்களின் கணிப்பைத் தகர்த்து, 76 ஆண்டுகள்வரை வாழ்ந்து காட்டினார்.

பிரபஞ்சம், கருந்துளைகள் பற்றி இவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை. சக்கர நாற்காலியிலேயே பயணப்பட்டாலும் அவர் கனவுகள் பெரியவை. அவர் எழுதிய ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டிய தருணம் இது.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘மனத் தடங்கள் வராது’
 

image_a87e5e22b6.jpgசங்கீதத்தின் மூலம் பக்தியுடன் இறைவனை மனம் குளிரச் செய்யும் ஆன்மாவோடிணைந்த சமர்ப்பணமே இறைவன் விரும்புவதாகும்.  

இசைக்கலைஞன் மனம் உருகப் பாடும்போது, இறைவன்பால் எமது நெஞ்சம் சிலிர்ப்பூட்டி ஈர்த்தெழும். ஈசன் நாமத்தைப் பாடுதலும் சொல்லுதலும் பெரும் விரதம் பூணுதல் போலாகும். பாடுவது மட்டுமல்ல, இசைக்கருவிகளை அதனுடன் இணைக்கும்போது, ஈசனும் மெய்யுணர்வுடன் ரசித்த, பெருவரமளிப்பார்.

இந்த நாத அலை, தேகத்திலும் ஆச்சரியமூட்டும். மெல்லிய அதிர்வுடன், புளகாங்கிதமாக்கும். இதயமும் இலேசானால் தீய எண்ணங்கள் கருகிப்போகும். சங்கீத ரசனை ஒருவரம்; இதனால் கிடைக்கும் புது அனுபவம் புது உலகில் சஞ்சாரம் செய்ய வைக்கும்.  மென்மையான கீதமே மனத்துக்கு உகந்தது.

இன்று இடிஇடிக்கும் இசையில், மக்களில் பலர் மயங்கிக் கிடக்கின்றார்கள்.  

நல்ல இசையைக் கேட்க இஷ்டப்படுங்கள். மனத் தடங்கள் வரவே வராது.

  • தொடங்கியவர்

438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் பூமிக்கு திரும்பினார் (1995, மார்ச் 22)

 
 
 

ரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி வீரர் வலேரி விளாடிமிரோவிச் போல்யாகோவ். 1942ம் ஆண்டு ரஷ்யாவின் தூலா நகரில் பிறந்த இவர், வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப்

 
 
 
 
438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் பூமிக்கு திரும்பினார் (1995, மார்ச் 22)
 
ரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி வீரர் வலேரி விளாடிமிரோவிச் போல்யாகோவ். 1942ம் ஆண்டு ரஷ்யாவின் தூலா நகரில் பிறந்த இவர், வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். 1972ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி விண்வெளிப் பயணத்துக்காக மூன்றாம் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டு விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

1994ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை தொடங்கினார். பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு 438 நாட்களை வெற்றிகரமாக விண்ணில் கழித்த அவர், 1995 மார்ச் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார். மிர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளி வீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் விண்ணில் காலம் கழித்து சாதனை புரிந்தார். இதன்மூலம் மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

இவரது மொத்த விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும். பல்வேறு பயணங்களில் மொத்தம் 678 நாட்கள் விண்ணில் கழித்த போல்யாகோவ், 1995ம் ஆண்டு ஜூன் 1-ல் ஓய்வு பெற்றார். விண்வெளி சாதனைகளுக்காக பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

 

பெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் (1943, மார்ச் 22)

 

வரலாற்றில் மிக அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது இரண்டாம் உலகப்போர். 1943-ம் ஆண்டு இந்த உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள காட்டின் என்ற கிராமத்திற்குள் மார்ச் 22-ம் தேதி நாசி படையினர் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர்.

 
 
 
 
பெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் (1943, மார்ச் 22)
 
வரலாற்றில் மிக அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது இரண்டாம் உலகப்போர். 1943-ம் ஆண்டு இந்த உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள காட்டின் என்ற கிராமத்திற்குள் மார்ச் 22-ம் தேதி நாசி படையினர் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர்.

கிராமங்களில் உள்ள வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினர். வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் அனைவரும் எந்திர துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோல் நாசி படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் பல கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். நாசி படையினரின் ஆதிக்கத்தில் இருந்த மூன்று ஆண்டுகளிலும், அந்த நாட்டில் சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேநாளில் வரலாற்றில் இடம்பெற்ற பிற நிகழ்வுகள் வருமாறு:-

1939 - இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, லிதுவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1960 - ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 - இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி செனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 - இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்பை அறிமுகம் செய்தது.

2005 - தமிழ்த் திரையுலக நடிகர் ஜெமினி கணேசன் மறைவு

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சொர்க்கம், நரகம்... இரண்டில் எதில் நீங்கள் இருக்கிறீர்கள்? - தன்னை உணரச் செய்யும் கதை!  #MotivationStory 

 
 

தன்னம்பிக்கை கதை

`ன்னுடைய அனுமதியில்லாமல் யாராலும் என்னைக் காயப்படுத்த முடியாது’ - இவ்வளவு தைரியமான வார்த்தைகளைச் சொன்னவர், வன்முறை வழிகளில் நம்பிக்கையில்லாத அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. ஆனால், நாமோ பிறர் உதிர்க்கும் சின்னச் சின்ன வார்த்தைகளில் சுருங்கிப்போகிறோம்; யாரோ, ஏதோ சொன்னதற்காக கவலையைத் தோளில் ஏற்றிக்கொண்டு அலைகிறோம்; உற்ற நண்பர்களை, நெருக்கமானவர்களையே சந்தேகத்தோடு பார்க்கிறோம். நமக்குப் பிறரிடமிருந்து கிடைக்கும் எதிர்வினைகளுக்கு நாம்தான் காரணம் என்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்பதில்லை. இடவலப் பிழை தவிர, தன்முன் நிற்கும் உருவத்தை அப்படியே பிரதிபலிப்பது கண்ணாடி. உறவுகளும் அப்படித்தான். நாம் பிறர்க்கு என்ன செய்கிறோமோ, அதுதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை. 

 

ஃபோர்ட்டாலேஸா (Fortaleza)... பிரேசிலில் இருக்கும் மிகப் பெரிய நகரம். அங்கே ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவரின் தந்தை விட்டுவிட்டுச் சென்றிருந்த சொத்து ஏகத்துக்கும் இருந்தது. அது போதாதென்று, 20 வருட காலம் `பிசினெஸ்... பிசினெஸ்...’ என அலைந்து திரிந்ததில் அதைவிட கணிசமாகச் சொத்து சேர்த்திருந்தார். அண்மைக்காலமாக அவரை ஒரு கவலை அரித்துக்கொண்டிருந்தது. அவரை வீழ்த்த உடனிருப்பவர்களே முயற்சிக்கிறார்கள் என்கிற எண்ணம். `என்னைச் சுற்றியிருக்கும் யாரும் எனக்கு உண்மையாக இல்லை’ என்கிற நினைப்பு நாளுக்கு நாள் அவருக்கு வலுத்துக்கொண்டே போனது. அவரைக் கொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள், பின்தொடர்கிறார்கள் என்கிற பயம்கூட அவருக்கு வந்தது. அந்த சந்தேகம் அவரை மனதளவில் வீழ்ந்துபோகச் செய்தது. 

கண்ணாடி

எல்லோரிடமும் எரிந்துவிழுந்தார். அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார். இரவுகளில் நித்திரையின்றி தவித்தார். சாப்பாடு குறைந்துபோனது. பயம் ஒரு வேலிபோல அவரைச் சுற்றிப் படர்ந்தது. மருத்துவரிடம் போகலாமா என்றுகூட அவர் யோசித்தார். ஒருநாள் அவருக்கு ஒரு பாதிரியார் நினைவுக்கு வந்தார். சிறு வயதிலிருந்து அந்தப் பணக்காரரின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவர் அந்த பாதிரியார். கருணைவடிவான அவரின் முகம் நினைவுக்கு வந்ததுமே அவருக்கு பாதி தெம்பு வந்துவிட்டது. `அடடே... இத்தனை நாள்கள் அவர் ஞாபகம் இல்லாமல் போய்விட்டதே...’ என்று யோசித்தார். பல மாதங்களாக சர்ச்சுக்குப் போகாததும் அவருக்கு உறைத்தது. உடனே தன் காரை எடுத்துக்கொண்டு பாதிரியாரைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். 

அது ஒரு மதிய நேரம். வார நாள்கள் என்பதால் சர்ச்சில் ஒருவரைக்கூடக் காண முடியவில்லை. பணக்காரருக்கு பாதிரியாரின் அறை தெரியும். நேரே அங்கே போனார். பாதிரியாருக்கு, பணக்காரரைப் பார்த்ததும் ஆச்சர்யம். வரவேற்றார், விசாரித்தார். கொஞ்ச நேரம் கழித்து, ``உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஃபாதர்...’’ என்றார் பணக்காரர். 

``சொல்லுப்பா...’’

``என்னைச் சுத்தியிருக்குறவங்க யாரையும் என்னால நம்ப முடியலை. என் மனைவி, பிள்ளைகள் எல்லாருமே எனக்கு சுயநலக்காரங்களா தெரியறாங்க. இங்கே யாருமே சரியில்லை...’’ என ஆரம்பித்து, பல சம்பவங்களைச் சொல்லிப் புலம்பினார் பணக்காரர். பாதிரியார் அவர் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டார். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கேட்டார்... ``சின்ன வயசுல உன் அம்மாவோ, அப்பாவோ கதை சொல்லி கேட்டிருக்கியா?’’ 

``கேட்டிருக்கேனே... அப்பா சொல்லிக் கேட்டதில்லை. அவருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஆனா, அம்மா பல கதைகளைச் சொல்லியிருக்காங்க. `கதை சொன்னாத்தான் தூங்குவேன்’னு நான் அடம்பிடிச்சிருக்கேன்...’’ சொல்லும்போதே பழைய நினைவுகள் இதமாக அவர் மனதில் விரிந்தன. 

``இப்போ நான் ஒரு கதை சொல்லட்டுமா?’’ 

பணக்காரர் இப்போது ஒரு குழந்தைபோல ஆகிப்போனார். ``சொல்லுங்க ஃபாதர்...’’ என்றவர், தன் இருக்கையிலிருந்து ஆர்வமாக முன்னகர்ந்தார். 

பெண்

``ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு கிராமத்துல பெரிய வீடு ஒண்ணு இருந்தது. அந்த வீட்டுக்குள்ள ஒரு ரூம்ல நூத்துக் கணக்குல கண்ணாடிகள் இருந்துச்சு. யார் வேணும்னாலும் அந்த வீட்டுக்குள்ள போகலாம். ஒரு சின்னப் பொண்ணு ஒரு நாள் அந்த வீட்டுக்குள்ள போனா. சுத்தியிருந்த கண்ணாடியில அவளை மாதிரியே நூத்துக்கணக்குல பொண்ணுங்க. இவ சிரிச்சா, அத்தனைபேரும் சிரிச்சாங்க. இவ கைதட்டினா, அவங்களும் கைதட்டினாங்க. `இந்த உலகத்துலயே அழகான, சந்தோஷமான இடம் இந்தக் கண்ணாடி வீடு’னு நினைச்சா அந்தப் பொண்ணு. அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்துட்டுப் போவா.

 அதே வீட்டுக்கு ரொம்ப துயரத்தோட, மனஅழுத்தத்துல இருந்த ஒரு ஆள் வந்தான். அவனும் சுத்திப் பார்த்தான். சுத்தியிருந்த நூத்துக்கணக்கான கண்ணாடியில அவனை மாதிரியே இருந்த உருவங்கள் எல்லாமே சோகத்தோட இருந்தாங்க. அவனையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவன் பயந்துபோய் அவங்களை அடிக்கக் கை ஓங்கினான். அவங்களும் அவனை அடிக்கக் கை ஓங்கினாங்க. `இந்த உலகத்துலயே மிக மோசமான இடம் இந்தக் கண்ணாடி வீடு’னு நினைச்சான் அவன். உடனே அங்கேயிருந்து வெளியேறிட்டான். 

இந்த உலகமும் அந்த வீட்ல இருக்குற ரூம் மாதிரிதான். அதுக்குள்ள நாம இருக்கோம். நம்மைச் சுத்தி நூத்துக்கணக்கான கண்ணாடிங்க இருக்கு. நாம சிரிச்சா, அதுல தெரியுற பிம்பங்களும் சிரிக்கும்; நாம அழுதா பிம்பங்களும் அழும். இந்த உலகமும் சொர்க்கம், நரகம் மாதிரிதான். அதை எப்படி எடுத்துக்குறதுங்கறது நம்ம கையிலதான் இருக்கு. குறை சொல்றதைவிட்டுட்டு, மத்தவங்களை நம்புறதுக்கு முதல்ல நீ பழகு. மத்தவங்ககிட்ட அன்பு காட்டு... எல்லாம் சரியாப் போயிடும்.’’ 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

"ஜிம்ல சைக்கிள் ஓட்றீங்க... ஆனா ரோட்ல ஓட்ட மாட்றீங்களே?" - அரியலூர் சகோதரர்களின் மர சைக்கிள்

சிக்னலில் நிற்கும் கார், பைக் போன்ற நூறு வாகனங்களுக்கு நடுவில் சைக்கிளில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் கிரீன் சிக்னலுக்காகக் காத்திருந்தால் அவரை அதிசயமாகப் பார்க்கும் நவீன உலகமிது.  நம்மிடையே நகரங்களில் மறைந்துவிட்ட, கிராமங்களில்கூட மறையும் நிலையில் உள்ள ஒரு பழக்கம் எதுவென்றால் அது 'சைக்கிள் ஓட்டுதல்'. சைக்கிள் ஸ்டாண்டுகள் பைக் ஸ்டாண்டுகளாகவும், கார் ஸ்டாண்டுகளாகவும் மாறிவிட்டன. 

 மர சைக்கிள்

 

சைக்கிள் ஓட்டுவதால் பணம் மிச்சமாகிறது; உடம்பு ஃபிட் ஆகிறது; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் நல்ல பிள்ளையாக இருக்கும் இந்த சைக்கிள்கள் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது மரத்துண்டுகளால் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 17-ம் நூற்றாண்டில் 1971-ல் பிரான்ஸில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக். இவரது பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால், வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்களாம்.

காய்ந்த மரத்துண்டுகளை செதுக்கிக்கொண்டிருக்கும்போது அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம்தான் சைக்கிள்.  இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு காலால் உந்தித்தள்ளினால் சைக்கிளை முன்னோக்கி உருளும்படியாக இருந்தது. 'The celerifire’ என்று அழைக்கப்பட்ட இந்த வகை சைக்கிளில் திசைமாற்றியோ, மிதி இயக்கியோ (பெடல்) , தடையோ (பிரேக்)  இல்லை. இதுதான் சைக்கிள் உருவாகக் காரணமாக அமைந்தது. இதனை முன்மாதிரியாகக்கொண்டு அடுத்தடுத்த அறிஞர்கள் அவரவர் சிந்தனைப்படி சைக்கிள்களை உருவாக்கினார்கள். 1910-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள அஸ்டன் நகரில் ‘ஹெர்குலிஸ்’ கம்பெனி துவங்கப்பட்டது. இக்கம்பெனி துவங்கப்பட்டே பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது டயர் சுவடுகளைப் பதிந்தது.  

     மர சைக்கிள்

ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் பழைய சைக்கிள்களை இரும்புக் கடையில் போட்டுவிட்டு உடம்பைக் குறைப்பதற்காக,  ஜிம்மில் 'சைக்கிளிங்' ஓட்டிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் சைக்கிள் ஓட்டுவது குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக முழுவதும் மரத்தினாலான சைக்கிளை வடிவமைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் சகோதரர்கள் மூவர். அரியலூர் மாவட்டத்தில் தயாராகி வரும் மரத்தால் ஆன சைக்கிளுக்கு அனைவரின் மத்தியிலும் ஆதரவு பெருகி வருகிறது.

பாஸ்கர்ராஜாஅரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர், திருநாவுக்கரசு, ராஜா மூவரும். சகோதரர்களான 3 பேரும் மரத் தொழிலகம் வைத்து நடத்தி வருகின்றனர். வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் செய்தல்,  கோயில்களில் சுவாமிகள் வீதி உலா வரும் பல்வேறு வாகனங்கள் செய்தல் எனப் பல விதங்களில் தங்களது திறமையைக் காட்டி வரும் இவர்கள், கடந்த ஒகி புயலின்போது, தங்களது பட்டறையில் மரத்தினாலான சைக்கிளைச் செய்துபார்க்க வேண்டும் என யோசனை செய்துள்ளனர்.

தொடர்ந்து, பாஸ்கர் மற்றும் ராஜா ஆகிய இருவரும் தலா ஒரு சைக்கிள் செய்யத் தொடங்கினர்.  சக்கரம், செயின், பிரேக் தவிர்த்து மீதி அனைத்தும் மரத்தால் செய்யபட்டுள்ளது. முழுக்க தேக்கு மரங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சைக்கிள்கள் பார்ப்போரை ஓட்டிப் பார்க்கத் தூண்டுகிறது. தினமும் அவ்வழியே வருவோர் போவோர் என 10-க்கும் மேற்பட்டோர் ஓட்டிப்பார்த்துச் செல்கின்றனர். மரத்தினால் செய்யப்பட்ட மர சைக்கிளை ஓட்டிச்செல்லும்போது சாலையில் செல்லும் பலரும் கண்சிமிட்டாமல் பார்த்து வியப்படைகின்றனர்.

  தேக்கு மர சைக்கிள்

இதுகுறித்து, பாஸ்கரிடம் பேசினோம். ”நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது. ஆனால், இன்று அது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணம்கூட சொல்லலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில், நம் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், இன்று அவையெல்லாம் நம் வீட்டின் பரணிலோ அல்லது ஏதோ ஒரு மூலையிலோ இருக்கின்றன. இன்னும் சிலர், அவை எதற்கு என்று பழைய இரும்புக்கடையில் போட்டுவிட்டு காலியாக வைத்துள்ளனர். அதே போல் பலரும் சைக்கிளை மறந்து மோட்டார் டூ வீலர் பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டனர். அவசரத்துக்கு மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தினாலும், மற்ற நேரங்களில் பலரும் சைக்கிளை உபயோகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விதத்தோடு இந்த மரத்தினாலான சைக்கிள்களை உருவாக்கினோம். மரத்தினால் சக்கரம் செய்தால் வேகமாகச் செல்ல முடியாது. எனவே, சில உதிரிபாகங்களை கடையில் வாங்கி உபயோகித்துள்ளோம். முன்பெல்லாம் பலரும் சைக்கிளை ஓட்டியதால் வலிமையுடன் இருந்தார்கள். ஆனால், தற்போது உடலை வலிமைப்படுத்த முற்படும் சிலரே ஜிம் சென்று ஓடாத சைக்கிளை தினமும் ஓட்டுகின்றனர்" என்றார்.

மர சைக்கிளை ஓட்டும் சிறுவர்கள்

அவரைத் தொடர்ந்து ராஜா பேசத்தொடங்கினார். ''மரத்தினால் செய்யப்பட்ட இந்த சைக்கிளை பார்க்கும் பலரும் சிறிது நேரம் ஓட்டிவிட்டுச் செல்கின்றனர். அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டதென்பதால் இதற்குச் செலவு ரூ.10 ஆயிரம் வரை ஆகிறது. சைக்கிள் முழுவதும் பாலிஷ் போட வேண்டும். தேக்கு மரத்தால் செய்யப்பட்டதால் எடை குறைவாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஓட்டலாம். நமது நாட்டில் அதிகமாக மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் சுற்றுப்புறச் சூழ்நிலை அசுத்தமாக மாறி, நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகமாகி வருகிறது. மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்கூட சைக்கிளில் செல்வதை விரும்பும்போது, நமது நாட்டில் அது தகுதி குறைவு என்ற நிலை வந்து விட்டது" என்றார்

சாலைகளில் சைக்கிள்கள் அதிகரிக்க வேண்டிய நேரமிது!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

புடவைக்கு அனுஷ்கா... ஹேர்ஸ்டைலுக்கு நயன்தாரா... ஃபேஷன் ஐகான்ஸ்

நதியா கம்மலில் ஆரம்பித்து குஷ்பு ஜாக்கெட் வரை  கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் சினிமா நடிகைகள்தான் ஃபேஷன் ஐகான். ``ஜோதிகா `36 வயதினிலேயே' படத்தில் கட்டியிருந்தாங்கள்ள அந்த புடவைதான்'', '' 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாரா போட்டிருந்த அந்த ஸ்கர்ட்தான்' என நம் ஊர்ப் பெண்கள் எல்லாவற்றிலும் நடிகைகளின் ரெஃபரென்ஸ்களைத்தான் பிடிப்பார்கள். அப்படி எந்தெந்த உடையில் எந்த நடிகையை ஃபேஷன் ஐகானாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று கடந்த வாரம் ஒரு சர்வே நடத்தியிருந்தோம். அதன் ரிசல்ட் இதோ!  

 

 

 

அனுஷ்கா

புடவையில் மக்களின் மனதைக் கவர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா என எல்லோரையும் பின்னுக்குத்தள்ளி 52.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் அனுஷ்கா.   `அருந்ததி' முதல் `பாகுபலி' வரை பெரும்பாலான படங்களில் புடவைதான் அனுஷ்காவின் காஸ்ட்யூம். புடவை அழகில் 28.2 சதவிகிதம் வாக்குகள் பெற்று `லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 10.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று கீர்த்தி சுரேஷ் மூன்றாம் இடத்திலும், 7.8 சதவிகிதம்  வாக்குகள் பெற்று சமந்தா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

நயன்தாரா


புடவைக்கு அடுத்து, மேற்கத்திய ஆடையில் மக்களின் சாய்ஸ் நயன்தாரா. சமந்தா, நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரில் அதிகப்படியான வித்தியாசங்கள் ஏதுமின்றி 27.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று நயன்தாரா முதல் இடத்திலும், 26.4 சதவிகிதம் வாக்குகள் பெற்று தமன்னா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். `ஹோம்லி' கதாபாத்திரத்தில் இவர்கள் அசத்தினாலும், மாடர்ன் உடைகளுக்கு இவர்கள் என்றுமே ஐகான்தான். 19.8 சதவிகிதம் வாக்குகள் பெற்று காஜல் அகர்வால் மூன்றாம் இடத்திலும், 16.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா நான்காம் இடத்திலும், 8.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று ஹன்சிகா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

நயன்தாரா


விதவிதமான தோற்றத்துக்கு, உடைகளில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சிகை அலங்காரத்தில் சிறு திருத்தம் செய்தாலே வித்தியாசமான தோற்றம் எளிதில் சாத்தியம். இந்த ட்ரெண்டை செட் செய்தவர் நயன்தாரா. நித்யா மேனன், சமந்தா, நயன்தாரா, தமன்னா மற்றும் ஹன்சிகா ஆகியோரில் 49.3 சதவிகிதம் வாக்குகள் பெற்று சிகை அலங்கார ராணியாக மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து 25 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சுருள்முடி கொண்டவர்களுக்கு நித்யா மேனன்தான் ஐகான். 9.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று நித்யா மேனன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 9.2 சதவிகிதம் வாக்குகள் பெற்றும் ஹன்சிகா நான்காம் இடத்திலும், 6.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று தமன்னா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

அனுஷ்கா

 

ராணி என்றால் வேறு ஆப்ஷனே இல்லாமல் எல்லோரின் நினைவுக்கும் வருபவர் அனுஷ்காதான். 92.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று, தமன்னா, நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலை வீழ்த்தி கெத்து ராணியாக முதலிடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி என அனுஷ்காவின் துணிச்சலான ராணி கெட்அப்பின் லிஸ்ட் நீளம். இவரைத் தொடர்ந்து அனைவராலும் வரவேற்கப்பட்டவர் நயன்தாரா. `காஷ்மோரா' படத்தில் மிரட்டும் ராணியாய் வந்து அனைவரையும் ஈர்த்தவர் 5.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

  • தொடங்கியவர்

இன்று உலக நீர் தினம்! தண்ணீருக்காக கண்ணீர் விடும் அவலம் வேண்டாம்!

 

இன்று உலக நீர் தினம்! தண்ணீருக்காக கண்ணீர் விடும் அவலம் வேண்டாம்!

1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட பரிந்துரைக்கமைய மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து வருடா வருடம் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அரிதாக கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப் பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தல் என்பதாகும்.

ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் தொனிப் பொருள் 'இயற்கைக்கு தண்ணீர்" என்பதாகும்.

இன்று உலக நீர் தினம்! தண்ணீருக்காக கண்ணீர் விடும் அவலம் வேண்டாம்!

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி இந்த உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர் ஆகும்.

நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது.

பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்கள் அனைத்திற்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்க முடியாது.

உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லை என்றால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடயம்.

இன்று உலக நீர் தினம்! தண்ணீருக்காக கண்ணீர் விடும் அவலம் வேண்டாம்!

நீரின்றி நிலமில்லை, நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும், சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகின்றது.

அதே வேளை தூய நீரின் எல்லை அருகி வருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லை இன்றி பயன்படுத்துவதும் நீர்ப்பற்றாக்குறை நிதமும் வழி வகுக்கும்.

எனவே நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற, நீர் வளம் காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.

இன்று உலக நீர் தினம்! தண்ணீருக்காக கண்ணீர் விடும் அவலம் வேண்டாம்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

 

சொகுசு கார் யுகத்தில் `சைக்கிளிங்’ ஆர்வம் காட்டும் சென்னை இளைஞர்கள்

இந்த சொகுசு கார் யுகத்தில், 'சைக்கிளிங்` மீது ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள் சென்னை இளைஞர்கள்.

  • தொடங்கியவர்

பாத்திரம் கழுவிய சுபாஷினி இப்போ பத்மஸ்ரீ... நிஜ மெர்சல் கதை!

 
 

பிறந்த நிமிடத்திலிருந்து வறுமை துரத்தும், எளியவர்களுக்காக வாழும் அசாதாரண பெண்ணின் கதையிது. மேற்கு வங்கத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கொத்துக்கொத்தாக இறந்த விவசாயிகளின் கிராமத்தில் பிறந்தவர் சுபாஷினி. கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தெற்குப் பக்கமாகத் தள்ளியிருந்த குல்வா கிராமத்தில், சிறுநிலம் கொண்ட குறு விவசாயிதான் அவரின் தந்தை. 14 குழந்தைகளுக்கும் உணவிட முடியாத அந்த ஏழைக் குடும்பத்தில்,  சுபாஷினியின் தாய்தான் அவர்களின் ஒட்டுமொத்த ஆதாரம். தேவாலயங்களில், ஆஸ்ரமங்களில், தொண்டு நிறுவனங்களில், பண்ணையார் வீடுகளில் என பல இடங்களில் உணவைப் பெற்று குழந்தைகளை வளர்த்திருக்கிறார். பாடுபட்டு வளர்த்த குழந்தைகளில் 7 பேர் இறந்துவிட, 12 வயதில் சுபாஷினிக்குத் திருமணம் நடந்திருக்கிறது.

சுபாஷினி

 

மாதத்திற்கு 200 ரூபாய் சம்பளம் வாங்கும் விவசாயக் கூலி, சுபாஷினியின் கணவர் சதன் சந்த்ர மிஸ்ட்ரி. நான்கு குழந்தைகளும், கணவரும் மட்டுமே உலகமாய் வாழ்ந்த சுபாஷினியின் வாழ்வு 1971-ல் தலைகீழாக மாறியிருக்கிறது. இரைப்பைக் குடல் அழற்சி என்னும் எளிதாக சிகிச்சையளிக்கக்கூடிய நோய்தான் சந்த்ர மிஸ்ட்ரிக்கு. வயிற்று வலியாலும், வயிற்றுப்போக்காலும் துடித்தவரை கொல்கத்தாவின்  டோலிகுஞ்ஜ் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் சுபாஷினி. வலியால் துடித்த மனிதரைக் கண்டுகொள்ளாமல் பணம் கேட்ட அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இறந்திருக்கிறார் சந்த்ரா. கணவர் சந்த்ரா மரணத்தைத் தழுவியதை விட, பணம் இல்லாத காரணத்தால் நல்ல சிகிச்சை பெற முடியாத துயரத்தில் இறந்தார் என்னும் சிந்தனைதான், சுபாஷினியை அதிகம் வதைத்திருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத, ஏழை சுபாஷினியின் வாழ்க்கைப் போராட்டம் துவங்கிய நாள் அது.

கண்ணீரையும் பயத்தையும் ஒருசேர துடைத்துக்கொண்டு, இனி ஒருவர் பணம் காரணமாக சிகிச்சையளிக்கப்படாமல் இறக்கக்கூடாது என்று தனி ஒருத்தியாய் அந்த முடிவை எடுக்கிறார். சின்னதாக இலவச மருத்துவமனை ஒன்றைக் கட்டவேண்டும் என்பதுதான் அது. வீட்டு வேலை பார்க்கும் சுபாஷினியின் மொத்த வருமானமே மாதத்துக்கு 100 ரூபாய்தான். அதுவும் 5 வீடுகளில் வேலை பார்த்தால்தான் இந்தச் சம்பளம் கிடைக்கும். வறுமை மட்டுமே லட்சியத்துக்குத் தடையாய் இருந்துவிடக் கூடாது. என்ன செய்வது?

ஒரு குழந்தையையாவது படிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில், முதல் மகன் அஜய் மிஸ்ட்ரியை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட சுபாஷினி, மற்ற குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்க்கிறார். பிறகு தெருத்தெருவாக காய்கறி விற்கத் தொடங்கிய அவர், சாலையோரக் கடை விரித்து கிடைத்த தொகையில் சிறு பகுதியைச் சேமிக்கத் தொடங்குகிறார். 

காலம் உருண்டோடுகிறது. 20 வருடங்களாகி விட்டது. சேமித்த  பணத்தைச் சோதனை செய்தபோது, 10,000 தேறியிருந்தது. அதில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதற்கு கிராமவாசிகளின் உதவியை நாடுகிறார். திரட்டிய பணத்தின் மூலமும், ஏதுமற்றவர்களின் பொன்னுழைப்பின் மூலமும், இருபதுக்கு இருபது அடியில் ஒரு சின்ன மருத்துவமனை உருவாகிறது.

கீற்றுக்கொட்டகை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரையில், ஆட்டோ ரிக்‌ஷாவில் லவுட்ஸ்பீக்கரைக் கட்டிக்கொண்டு, இலவச  மருத்துவம் பார்க்க வரும்படி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் கிராம மக்களும் சுபாஷினியும். அன்பிற்கான அழைப்பில் முதலில் இணைந்தவர் டாக்டர்.ரகுபதி சாட்டர்ஜி. மேலும் ஐந்து மருத்துவர்கள் வரிசையாக இணைந்து, இலவச மருத்துவத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். முறையான மருத்துவமனையாக உருமாறிய அந்தக் கீற்றுக் கொட்டகை, முதல் நாளில் 252 நோயாளிகளைக் கண்டது. ”Humanity Hospital” என்று பெயரிடப்பட்ட சுபாஷினியின் மருத்துவமனை இன்றுவரை தன் சேவைக் கரங்களை நீட்டியே வைத்திருக்கிறது.

மழைக்காலங்களில் முட்டி வரையிலான நீருடன், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சுபாஷினியின் மகனான மருத்துவர் அஜய் மிஸ்ட்ரி, சேவையைத் தனது தோளிலும் ஏற்றிக்கொண்டிருக்கிறார். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பட்டாச்சார்யாவை, தொடர் முயற்சிக்குப் பின் அணுகி, மருத்துவமனைக் கட்டடத்துக்கான தொகையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியாக, பல மருத்துவர்கள், அரசு அதிகாரிகளின் உதவி மற்றும் முயற்சிகளும் சேர்ந்து பலனளிக்க, சிறப்பு மருத்துவப் சிகிச்சைப் பிரிவுகளுடன், 3 ஏக்கர் நிலத்தில், இரண்டு மாடி மருத்துவ அகமாக உயர்ந்திருக்கிறது ‘ஹ்யுமனிட்டி ஹாஸ்பிட்டல்’.

மகன் அஜய் மிஸ்ட்ரியிடம் மருத்துவமனையை ஒப்படைத்து விட்டார்; இளைய மகள் அதே மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறார். மூத்த மகளும், மற்றொரு மகனும் ரோட்டோரக் கடையில் காய்கறி வியாபாரம் செய்வதற்குத் துணை புரிந்துகொண்டு, அதே வாடகைக் குடிசையில் வாழ்கிறார் 70 வயதான ’பத்மஸ்ரீ’ சுபாஷினி மிஸ்ட்ரி. ஆம். சமீபத்தில் ராஷ்ட்ரபதி பவனில்  ’பத்மஸ்ரீ’ பட்டம் பெற்றிருக்கிறார் சுபாஷினி மிஸ்ட்ரி.

                                             subhasini mistry

 

''எப்படியம்மா உணர்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம், “விருது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் மருத்துவமனைக்கு இன்னும் தேவைப்படும் உதவிகளை அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். உலகத்திலிருக்கும் எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்க நினைக்கிறேன். வலியில் இருக்கும் நோயாளிக்குச் சிகிச்சையை மறுத்துவிடாதீர்கள். சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் அவலநிலையை ஒருவருக்கும் தந்துவிடாதீர்கள்” என்கிறார் கால்கள் தள்ளாடி, கைகூப்பிய அந்த வைராக்கிய மனுஷி.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

புதிய காதலுக்காக மிஸ்டர் பீன் தியாகம் செய்த ஆடம்பர மாளிகை

 

Untitled-1.jpger124t.jpg

 

காதலுக்காக எதனையும் இழக்கத் தயார் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் தனக்குச் சொந்தமான, தான் மிகவும் விரும்பும் 10 மில்லியன் பவுணுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொகுசு மாளிகையை முன்னாள் மனைவியான இந்தியப் பிரஜை சுனேத்ரா சாஸ்திரிக்கு அண்மையில் வழங்கியுள்ளார். 63 வயதான மிஸ்டர் பீன். அவர் அதனை இரண்டு வருடங்களாக நடைபெற்ற விவாகரத்து வழக்கின் பின்னரே நஷ்டஈடாக வழங்கினார்.

இங்கிலாந்தின் தெற்குப் பிராந்தியத்தில் அழகான மலைத்தொடருக்கு அண்மையில் அமைந்த கோல்டன்வர்ன்ட்ஸில் அதிநவீன சொகுசு மாளிகையை அமைக்க மிஸ்டர் பீன் என்ற உலகம் போற்றும் இங்கிலாந்தின் பிரபல நடிகரான 63 வயதுடைய ரொவன் எட்கின்சன் தனது அயலவர்களுடனும் மற்றும் கட்டட நிர்மாணக் கலைஞர்களுடனும் ஒரு தசாப்த காலமாக போராட்டதில் ஈடுபட்டிருந்தார். அவ்வாறான பாரிய மோதலுக்குப் பின்னர் தனது கனவு மாளிகையை உருவாக்கிய காதல் நடிகன் தனது 56 வயதான முதல் மனைவியை கைவிட்டு 34 வயதான அழகிய நடிகை லுயிஸ் போர்டின் அரவணைப்பை சட்டபூர்வமாகப் பெற்றமை அவ்வாறான போராட்டத்தின் பின்னராகும்.

பி. பி. ஸி. நிறுவனத்தின் ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்த சுனேத்திராவுடன் இரண்டு தசாப்தகாலமாக தொடர்ந்த திருமண வாழ்க்கையை நிறைவு செய்த மிஸ்டர் பீன், அறிவிப்பாளரும் நடிகையுமான லூயிஸுடன் காதல் கொண்டது நான்கு வருடங்களுக்கு முன்னராகும்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த லூயிஸ் அப்போதே இந்த இங்கிலாந்து அரச குடும்பத்தாரின் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தார். மேலும் பிரித்தானிய அரச குடும்பத்தின் விவரண தொலைக்காட்சி கதைத் தொடரின் இரண்டாவது பாகத்தில் வில்லியம் இளவரசரின் மனைவியான கேட் இளவரசியின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார். பின்னர் Crashing தொலைக்காட்சித் தொடரிலும் Fast Girls திரைப்படத்திலும் நடித்து பிரபலமடைந்தார்.

மிஸ்டர் பீனுக்கும் லூயுசுக்கும் இடையே 2012ம் ஆண்டிலேயே காதல் மலர்ந்தது. இருவரும் ‘வெஸ்ட் என்ட்’ மேடை நாடகத்துக்கு பங்களிப்பைச் செய்த போதே ஒருவரையொருவர் விரும்பினார்கள். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த இந்தக் காதல் மிஸ்டர் பீனின் திருமண வாழ்க்கையை கசப்பாக ஆக்கும் நிலைவரை கொண்டு சென்றது. 2014ம் ஆண்டு சுனேத்திராவுடனான திருமணம் அவரின் இந்த நிலையால் முறிவுற்றது. தனது வயதான கணவரின் புதிய காதல் தொடர்பில் கோபமும், விரக்தியும் அடைந்த சுனேத்ரா பிள்ளைகளான 25 வயது பென் மற்றும் 21 வயதான லிலியுடன் கணவரைப் பிரிந்து சென்றார். அது மட்டுமல்ல விவாகரத்து வழக்கையும் தொடுத்தார்.

பிள்ளைகள் இருவருடன் வேறாக வாழ வேண்டிய நிலையை எண்ணி இந்தியப் பெண்ணான சுனேத்ரா மிகவும் கோபமடைந்தார். இரண்டு தசாப்த காலமாக வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட தனது கணவர் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை நாடுவதை எந்தவொரு பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள். அவர் பெருந்தொகையான பணத்தை (80 மில்லியன்) நஷ்டஈடாக அதனாலேயே கோரினார். மிஸ்டர் பீன் முன்றாவது தடவையாகவும் இச்சந்தர்ப்பத்திலேயே தந்தையானார்.

இறுதியில் தனது இளம் மனைவிக்காக தனது உயிரைவிட மேலாக நேசித்த சொகுசு மாளிகையை கைவிடத் தீர்மானித்தார்.

நஷ்டஈடு குறித்து தொடர்ந்து ஆராய நேரகாலமும் அவருக்கு இல்லை. ஏனென்றால் புதிதாகத் தந்தையானதால் அவர் வேறு உலகிலேயே இருந்தார். மேலும் இளம் மனைவியின் அரவணைப்பில் இருந்தவருக்கு முன்னாள் மனைவி வயதானவராக காட்சியளித்தார்.

இளம் காதலால் பூரித்துப் போயிருந்த அவருக்கு தன்னுடைய முதுமை மறந்து போய்விட்டது. தாத்தாவாக வேண்டிய வயதில் உள்ள தமது தந்தையார் புதிதாக தந்தையானது குறித்து முதல் தாரத்தின் பிள்ளைகளான பென்னும், லிலியும் மிகவும் கோபமடைந்துள்ளார்கள்.

தங்களது தந்தையின் அன்பைப் பறித்துக்கொண்ட லூயிஸின் மீதும் அதை விட வெறுப்படைந்துள்ளார்கள்.

அவர்கள் தற்போது தனது தாயாருக்குக் கிடைத்த சொகுசு மாளிகையில் வசிக்கத் தயாராகி வருகின்றார்கள்.

தமது தந்தையின் முதற் பெயரை அவர்கள் தவிர்த்து தாயின் முதற்பெயரையே அவர்கள் தற்போது பாவிக்கின்றார்கள்.

http://www.thinakaran.lk

  • தொடங்கியவர்
‘எளிமை இழிவு அல்ல’

image_1c31d0512e.jpgஒருவர் சோறும் சம்பலும் வயிராறச் சாப்பிட்ட பின்னர், அவரால் எந்த அமிர்தத்தையும் விரும்பி இரசித்து மீண்டும் உண்ண முடியாது.

வயிற்றின் கொள்ளளவுக்கு மேல் சாப்பிட முடியாது. நிறைந்த உறக்கத்தை ஏழை ஒருவன் பஞ்சுக்கட்டில் மூலம் பெறுவதில்லை. ஓலைப்பாயில் ஒய்யாரமாகத் தூங்குகின்றான். என்னதான் பானங்களைக் குடித்தாலும் தாகம் தீர்க்கத் தண்ணீர்போல் வருமா? 

எல்லாச் சொகுசு வாழ்க்கையும் மனிதன் தானாகவே திணித்துக் கொண்டதுதான். ஏழைகள் கூட இனிமையாக வாழ்கின்றார்கள். கஷ்டங்கள் வந்தாலும் சமாளித்துக் கொள்கின்றார்கள்.  

வெய்யிலும் மழையும் குளிரும் இயற்கையுடன் வாழ்பவனை ஒன்றும் செய்வதில்லை. குளிரூட்டப்பட்ட அறைக்குள் முடங்குபவர்களுக்கு ஏராளமான தொல்லைகள். வருந்தி தேகத்தை வதைக்கின்றார்கள். எளிமை இழிவு அல்ல; பணம் மட்டும் பெருமையும் அல்ல.

  • தொடங்கியவர்

நீங்கள் சிட்டி ரோபோவா இல்லை டாக்டர் வசீகரனா? - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! #MorningMotivation

 
 

எல்லோரும் பேசும், எல்லோரும் கேட்கும், எல்லோரும் விவாதிக்கும் வார்த்தையாக இருக்கிறது மன அழுத்தம். இந்த மன அழுத்தத்துக்கு முதல் காரணமாக எல்லோருமே சொல்வது வேலை அழுத்தம். வொர்க் ப்ரஷர்தான் பெரிய பிரச்னையே எனப் புலம்பாதவர்களை இந்தத் தலைமுறையில் பார்க்க முடியாது. நமக்கான சரியான வேலையைத் தேர்ந்தெடுத்தால், சரியான வேலை சூழலில் இருந்தால் மட்டுமே இந்த வேலை அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முடியும். அப்படியானால் சரியான வேலை, சரியான சூழலுக்குள் நாம் ஃபிட்டாவது எப்படி?

மன அழுத்தம்

 

1. வெறுக்கும் வேலையில் இருக்காதீர்கள்!

முதலும், முடிவுமான ஒரே யோசனை, விரும்பும் வேலையில் இருக்க வேண்டும் என்பது. ஒரு வேலையைப் பிடித்துச் செய்யும்போது மன அழுத்தமோ அல்லது வேறு எந்த அழுத்தங்களோ, அங்கே உங்களை சூழ முடியாது. வேலை உங்களுக்கு எப்போது பாரமாக இருக்கிறது, 'அய்யோ இன்னைக்கு வேலைக்குப் போகணுமா' என்று தோன்றுகிறதோ, அப்போது நீங்கள் வேலையை, பணியிடத்தை மாற்ற வேண்டிய சூழல் வந்துவிட்டது என்று அர்த்தம். நிறைய பேர் இந்த வேலைதான் நமக்கு செட் ஆகும், நமக்கு வேறு வேலை கிடைக்குமா என்று தயங்கும்போதுதான் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.

வேலை மாறியதால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் என்று யாரும் கிடையாது. உழைப்பு உங்களுடையது. அதனால் எந்த வேலை மாறினாலும் கடுமையாக உழைக்க முடியும் என்று நம்புபவர்கள் வேலையை மாற்றத் தயங்க வேண்டியதில்லை. தொடர்ந்து மோசமான வேலை சூழலில் இயங்கும்போது அது மன அழுத்தத்தை அதிகரித்து தீவிர உடல், மன பிரச்னைகளில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வேலை கசக்க ஆரம்பிக்கும்போதே வேலை மாற்றத்துக்கான சிறுசிறு முயற்சிகளை எடுக்க மறக்காதீர்! 

2. உங்களுக்கு நீங்களே டாக்டர்!

வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், உடல் பலத்தை இழுந்துவிட்டால் அதன்பிறகு எந்த வேலையையுமே செய்ய முடியாது. ஒருவர் தான் விடுமுறை எடுத்தால் தன்னுடைய வேலைக்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்தே குடும்பத்தோடு எந்த விடுமுறைக்கும் வெளியூர் சென்றதில்லை. எந்நேரமும் வேலை, அது தரும் பிரஷர், வேலை போனால் என்ன செய்வது என்கிற பயம் என எல்லாம் சூழந்து 38 வயதிலேயே அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நம்முடைய உடல் என்பது ரோபோ அல்ல. யாரும் எதையும் ப்ரோகிராம் செய்ய முடியாது. அதனால் 24/7 என எந்நேரமும் நம் உடல் இயங்காது. குறைந்தபட்சம் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் என்பது கட்டாயம். அதனால் டாக்டர் வசீகரனாக மாறி சில கேட்ஜெட்கள் துணையை நாடுங்கள். இப்போது ஃபிட் பிட் என ஃபிட்னஸ் ஸ்ட்ரிப்புகள் பெருமளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதை போனோடு ப்ளூடூத்தில் கனெக்ட் செய்துவிட்டால் போதும். உங்களுடைய உடல் சார்ந்த முக்கால்வாசி இயக்கங்களை அது சொல்லிவிடும். அந்த ஃபிட் பிட் நீங்கள் எவ்வளவு நேரம் ஆழ்ந்து தூங்குகிறீர்கள் என்பதைச் சொல்லும். அதையே நீங்கள் ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ளலாம். 

3. காது... நல்லா கேளு!    

காதுகள்தான் நம் உடலின் மிக முக்கியமான பகுதி என்பதை வேலை, வேலை எனச் சுழல்கிற எல்லோருமே நிச்சயம் மறந்திருப்போம். வேலையில் மூழ்கிவிட்டால் யார் என்னப் பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் திரும்பாது. ஆனால், காதுகள் மிகமிக முக்கியம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, உடன் வருபவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள், எதைப் பற்றி அதிகம் விவாதிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்தப் பேச்சுகளை வைத்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கு அந்த உரையாடல்கள் நிச்சயம் உதவும். உங்களைப் பற்றியும், உங்கள் வேலையைப் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று உங்கள் சகாக்கள், உங்கள் மேலதிகாரிகள் என எல்லோரிடமும் அடிக்கடி பேசி கருத்துக்களை வாங்குங்கள். நீங்கள் சரியான திசையில்தான் செல்கிறீர்களா என்று கணக்குப்போட அது அவசியம்.

மன அழுத்தம்

4. தோல்விகள் பலப்படுத்தும்!

தோல்வி என்பது முடிவல்ல. தோல்விகள்தான் உங்களை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுபோகும் என்பதோடு உங்களை எல்லா சூழலையும் தாங்கும் மனிதராக/மனுஷியாக மாற்றும். தோல்விகளைக் கடந்துவரும்போது மிகப்பெரிய வலிகளைத் தாங்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அந்த வலிகளைத்தாங்கினால் பின்னர் பெரிய வெற்றிகளைத் தூக்கிக்கொண்டாட முடியும். மிக முக்கியமாக கிரியேட்டிவான வேலைச்சூழலில் தோல்விகள் அல்லது ஏமாற்றங்கள் என்பது சகஜம். பாசிட்டிவ் எண்ணங்களோடு இதைக் கடந்துவரவேண்டும்.

5. சகோக்கள் முக்கியம்!

பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட மனிதர்களோடு பழகுங்கள். அடுத்தவர்களைப் பற்றியும், வேலையையைப் பற்றியும் எப்போதும் புலம்பிக்கொண்டே இருக்கும் சகாக்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்களின் நெகட்டிவ் பேச்சுக்களை உங்களையும், உங்கள் வேலையையும் நிச்சயம் பாதிக்கும்.

6. பணம் உங்கள் மகிழ்ச்சியின் அளவீடு அல்ல!

உங்களிடம் போதுமான பணம், சொந்தமாக வீடு, கார் என எல்லாம் இருக்கிறது என்பதற்காக வேலையில் எமோஷனலான முடிவுகளை எடுக்கக்கூடாது. பணம் அதிகம் இருப்பது வெற்றிக்கான குறியீடு கிடையாது. பணத்தைத்தாண்டி நல்ல விஷயங்களில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். பணத்தைத்தாண்டி உடன் இருப்பவர்களின் மகிழ்ச்சி மட்டுமே வெற்றிக்கான அளவுகோல். அதை அடையும் முயற்சிகளில் இறங்குங்கள்.

7. உங்கள் வாழ்விடம் அலுவலகம் அல்ல வீடு!

நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டிய இடம் அலுவலகம் அல்ல, வீடு. அதிகபட்சம் 9 மணி நேரம் என்பது வேலைக்கு ஓகே. அதைத்தாண்டி போகக்கூடாது. 9 மணி நேரத்துக்கு மேல் என்றால் நீங்கள் வேறு யாருக்கோ உழைத்துக்கொண்டிருகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதிக நேரம் அவர் அலுவலகத்தில் இருப்பார் என்பதற்காக எல்லாம் யாரும் ஊதிய உயர்வு தருவதில்லை. அலுவலக இ-மெயில், வாட்ஸ்அப்களை மறந்துவிட்டு குடும்பத்துக்கான நேரத்தை குடும்பத்தினருடன் மட்டுமே செலவிடுங்கள்.

8. வருத்தப்பட்டு பாரம் சுமக்காதீர்கள்!

வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தால் எந்த பாரமும், அழுத்தமும் குறையாது. ஏதாவது ஒரு மாற்றம் செய்தால் மட்டுமே மனம் நிம்மதியடையும். அதனால் உங்களுக்குள்ளே நீங்கள் வருத்தப்படுவது, அல்லது அருகில் உள்ளவர்களிடம் வருத்தப்படுவது தேவையற்றது.வருத்தமும், பயமும் உங்களை சூழந்துகொண்டால் நீங்கள் எந்தத் தெளிவான முடிவையும் எடுக்கமுடியாது.

9. கற்றுகொண்டேயிரு!

கற்றுக்கொண்டேயிருப்பதும், வேலையில் அப்டேட்டாக இருப்பதும் மட்டும் செய்தால் போதும் நீங்கள் வேலை குறித்து பயப்படவேண்டியதேயில்லை. உங்கள் துறையில் என்னென்ன மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் அது குறித்துப் படியுங்கள். அதற்கான கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். எல்லாவகையிலும் அப்டேட்டாக இருக்கும்போது புதிய வேலைகள் உங்களைத் தேடிவரும்.

10. உங்கள் மகிழ்ச்சிதான் முக்கியம்!

`வெற்றிபெற்றால்போதும். அதுதான் எனக்கு சந்தோஷம்’ என்பதுதான் பலரின் ஸ்டேட்மென்ட். வெற்றி என்பது ஒரு ப்ராசஸ். அதற்கு எவ்வளவு காலம் என்கிற வரைமுறை இல்லை. உங்களின் தற்போதைய நிலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியாகவும், உண்மையாகவும் இருக்கும்போது பயமும், அழுத்தமும் உங்களை விட்டுப்பபோய்விடும்.

 

கூல் நண்பர்களே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

ந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த நேரம், இந்திய கிரிக்கெட்டின் கதாநாயகன்கள் கோலியும் தோனியும் இன்ஸ்டாகிராமில் செம பிஸி. கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடனான காதல் படங்கள் பகிர, தோனியோ மகள் ஸிவா மற்றும் மனைவியுடனான படங்களை வீடியோவாகத் தொகுத்து ஹார்ட்ஸ் அள்ளினார். தோனி தன் வீட்டு நாய்களுக்கு கேட்ச் பயிற்சி அளிக்கும் காட்சிகளும் இருக்க, வீடியோ செம வைரல்! கூல் கேப்டன்ஸ்!

p23as_1521541069.jpg

p23b_1521541078.jpg


p48c_1521616751.jpg

சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் சரோஜா, கீர்த்தி சுரேஷின் பாட்டி. கீர்த்திக்கு அவர் பாட்டி மீது அலாதி ப்ரியம். அதனால், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி வந்து அவர் நடிப்பதைப் பார்ப்பது என படம் முடியும் வரை அவர் கூடவே இருந்திருக்கிறார். இந்தப் படத்தில் சரோஜாவுக்கு காஸ்ட்யூம் டிசைனர் கீர்த்திதான் என்பது ஹைலைட். சென்னையில் ஃபேஷன் டிசைனிங் படித்ததைத் தன் பாட்டி படத்தின் மூலம் அப்ளை செய்திருக்கிறார் கீர்த்தி.


‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஆரம்பித்து பாலிவுட் வரை எட்டிப் பிடித்திருக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா.

முதல் முறையாக இந்திப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்காக சின்சியராக இந்தி படித்துக் கொண்டு இருக்கிறார்! 

p66a_1521620145.jpg

மீபத்தில் தெலுங்கில் நடித்து வெளியான ‘ஆவ்’ ஹிட் அடித்ததில் இப்போது தெலுங்கு தேசத்திலும் ரெஜினா ரொம்ப பிஸி!!

சிறுவயது முதலே கூடைப்பந்து வீராங்கனையான ரெஜினாவுக்குக் கால்பந்து என்றாலும் பிரியம்.


p85a_1521626561.jpg

ந்திர அரசின் ‘கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சித்துறை’யின் நல்லெண்ணத் தூதுவராக இருக்கும் சமந்தா, தனது ஆடை தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துபவர். பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அந்தந்த நிகழ்ச்சிக்கேற்ற மாதிரி ஆடையமைப்பு மேற்கொண்டு, உடை அணிவார்.. ஹைதராபாத்தின் சந்துபொந்துகளில் விற்கும் உள்ளூர் உணவுவகைகளை ஆர்வமாகத் தேடிச் சென்று உண்ணக் கூடிய சமந்தாவின் ஃபேவரைட், சீன உணவுகள்.    


p93a_1521626580.jpg

p93b_1521626588.jpg

p93c_1521626598.jpg

கிளாமர் கேரக்டர்கள் தேடிவந்தால், கதைகூடக் கேட்காமல், ‘நோ’ சொல்லிவிடுவாராம், சாய் பல்லவி. ‘‘அம்மா, அப்பா மனசு நோகுறமாதிரி எதையும் செய்யமாட்டேன்; டிரெடிஷனல் காஸ்டியூம்ஸ்தான் என் சாய்ஸ்!’’ என்கிறார், சாய் பல்லவி. தவிர, மேக்-அப் போட்டு நடிப்பதும், சாய் பல்லவிக்குப் பிடிக்காதாம்!


p96a_1521627780.jpg

p96b_1521627790.jpg

‘மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜா இப்போது பல படங்களில் பிஸி. இருந்தும், நெட் ஃபிலிக்ஸில் வெப் சீரியஸ் பார்ப்பதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். அதுவும், ‘நார்கோஸ்’ எனும் வெப் சீரியஸை முதலிலிருந்து பார்த்து வருகிறாராம். புதிதாக ஐபோன் 8+ மொபைலை வாங்கியிருக்கும் இந்துஜா, ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கான ஷாட் இல்லாதபோது அதில் கேம் விளையாடுவது வழக்கம். பிடித்த உணவு என்றால் இந்துஜாவின் முதல் சாய்ஸ் ஒன் அண்டு ஒன்லி பொங்கல்தான். தங்கச்சி சுடருக்கு ஒரு பொங்கல் பார்சல்ல்ல்...!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு

 
 

தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும், புகழின் உச்சியிலிருந்த அதே காலகட்டத்தில் தன் அழகாலும், இயற்கையான நடிப்பாலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு 'காதல் மன்னனாக' கொடிகட்டிப் பறந்தவர் ஜெமினிகணேசன். அவர் நம்மை விட்டு பிரிந்து இன்றோடு பதிமூன்று வருடங்கள் ஆகின்றன. அவரது நினைவு நாளையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவோம். வாருங்கள்!

ஜெமினி கணேசன்

 

ஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம்மா. புதுக்கோட்டையில் நல்ல வசதியுடன் வாழ்ந்த குடும்பத்தில், முதல் குழந்தை பிறந்த சில நாள்களிலேயே  இறந்து விட ராமசாமி - கங்கம்மா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் ஜெமினி கணேசன். பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.

புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நாராயணசாமி அய்யர் ஜெமினி கணேசனுக்கு சின்னத் தாத்தா முறையாகும். ஜெமினி கணேசன் தனது பத்து வயது வரை நாராயணசாமி அய்யர் வீட்டில்தான் வளர்ந்தார். மேலும், தேவதாசி முறையை ஒழிக்க காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜெமினிக்கு அத்தை முறையாகும்.

ஜெமினி கணேசன் புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். அதன்பிறகு, தனது ஏழாம் வகுப்பை சென்னையில் உள்ள ராஜாமுத்தையா செட்டியார் பள்ளியிலும் அதன்பிறகு பிற வகுப்பை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்தார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் முதன் முறையாகப் பார்த்த தமிழ்ப்படம் டி. வி. சுந்தரம் - டி. பி. ராஜலட்சுமி நடித்த 'வள்ளிதிருமணம்'. 48 பாடல்கள் கொண்ட அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் அந்தச் சமயத்தில் ஜெமினிக்கு மனப்பாடமாக இருந்ததாம். அந்தப் பாடல்களைப் பாடிப்பாடி ரசிப்பாராம் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். சில காலம் வேலையில்லாமல் இருந்த ஜெமினி, தான் படித்த கிறித்துவ கல்லூரியிலேயே ரசாயன விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார்.

பின்னாளில், ஜெமினி ஸ்டூடியோவில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு வருபவர்களை நேரில் அழைத்து, அவர்களின் திறமையை எடை போட்டு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார் ஜெமினிகணேசன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அப்படி ஜெமினிகணேசன் அதிகாரியாகப் பணியாற்றியபோது, ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு வந்தவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.

1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் ‘மிஸ் மாலினி' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘தாய் உள்ளம்' என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். பின்னாளில் ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தனர். ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட அடையாளப் பெயர் பின்னாளில் அப்படியே நிலைத்துவிட்டது.

எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜெமினி கணேசன்

எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர் ஜெமினி கணேசன்தான். அந்தப் படத்தின் பெயர் ``மனம் போல் மாங்கல்யம்". ஜெமினிகணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். ஜெமினியின் வாழ்வில் சாவித்திரி இடம்பெற வழிவகுத்த படம் "மிஸ்ஸியம்மா." அதற்கு முன்பு இணைந்து நடித்திருந்தாலும் கூட, மிஸ்ஸியம்மாவில் இருந்துதான் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.

1955 ம் ஆண்டு சாவித்திரியைக் கரம் பிடித்தார் ஜெமினிகணேசன். ஆரம்பத்தில், அபிராமபுரத்தில் 400 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்த ஜெமினி சாவித்திரி ஜோடி, பின்னாளில் தி. நகர் அபிபுல்லா வீதியில் சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தனர்.

சாவித்திரி மீது உயிரையே வைத்திருந்தார் ஜெமினிகணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்கும் வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் சாவித்திரி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். சாவித்திரியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத ஜெமினி அந்த வாய்ப்பை முதலில் மறுத்துவிட்டார். சிவாஜியும் பி. ஆர். பந்தலுவும் தொடர்ந்து வற்புறுத்தவே சாவித்திரிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஜெய்ப்பூர்க்குச் சென்று விட்டார் ஜெமினி. தினமும், போன் செய்து சாவித்திரியுடன் தவறாமல் பேசி வந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து ஜெமினிகணேசன் சென்னை திரும்பிய பிறகுதான் சாவித்திரிக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் விஜயசாமுண்டீஸ்வரி.

எம்ஜிஆர், ஜெய் சங்கருடன் ஜெமினி

தமிழ் சினிமாவில் ஈடுஇணையற்ற ஜோடியாய் விளங்கிய ஜெமினிகணேசன் - சாவித்திரி பிரிவதற்கு காரணமாய் இருந்த திரைப்படம் "பிராப்தம்". மூகமனசுலு என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். மூகமனசுலு படத்தை பார்த்த சாவித்திரி அதை தமிழில் ரீமேக் செய்து, தயாரித்து, டைரக்ட் செய்ய ஆசைப்பட்டார். இதை அறிந்த ஜெமினி, "தமிழில் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்க வேண்டாம். விஷப்பரீட்சை" என்றார். பின்னர், இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மூலம் கண்ணீருடன் சாவித்திரியை விட்டு பிரிந்தார் ஜெமினி. பின்னாளில், ஜெமினி கூறியது போல பிராப்தம் படத்தின் மூலம் தனது பெரும்பாலான சொத்துகளை இழந்தார் சாவித்திரி.

ஜெமினி கணேசன் - சாவித்ரி

ஜெமினி கணேசன் நடிகர் மட்டுமன்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். இவர் வேகத்துக்கு யாராலும் கார் ஓட்ட முடியாதாம். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் நடந்ததுண்டு.

ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் 'நான் அவனில்லை'. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து 'இதய மலர்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர் ஜெமினிகணேசன். இவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆருடன் 'முகராசி' என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெமினிகணேசன். ஜெய்சங்கருடன் 'ஒருதாய் மக்கள் ' படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெமினிகணேசன். பின்னர் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் ஜெமினிக்கு பதில் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.

மேலும், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் பின்னர் அவர் பெரிய நடிகரானதும், `உன்னால் முடியும் தம்பி’, ’அவ்வை சண்முகி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 'அலாவுதினும் அற்புத விளக்கும்’ படத்திலும் ஜெமினி நடித்திருந்தார். விஜயகாந்துடன் ’பொன்மனச்செல்வன்’, கார்த்திக்குடன் ’மேட்டுக்குடி’, பிரபுதேவாவுடன் "நாம் இருவர் நமக்கு இருவர்", அர்ஜுனுடன் "கொண்டாட்டம்" ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் ஜெமினிகணேசன். இதுதவிர "கிருஷ்ண தாசி" என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசனுடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி ஆகிய மூன்று பேரும்தான். சாவித்திரி 25 படங்களிலும், சரோஜாதேவி 21 படங்களிலும், பத்மினி 19 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், 'காதல் மன்னன்' என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன்தான். திரைப்படங்களில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக வாழ்ந்தவர்.

எஸ்.ஏ. அஷோகன், ஜெமினி கணேசன்,  எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா

ஜெமினிகணேசன் தமிழில் 172 படங்களும், மலையாளத்தில் 9 படங்களும், இந்தியில் 5 படங்களும்,தெலுங்கில் 4 படங்களும் மற்றும் மர்ம வீரன், நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி, சதி சுமதி(தெலுங்கு), ஜீசஸ் (மலையாளம்) ஆகிய படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். "கல்யாணப்பரிசு" வெள்ளி விழா கண்டது. மொத்தத்தில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.

இவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, 1970 ஆம் ஆண்டு "காவியத்தலைவி" திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது கிடைத்தது.1966-67ல் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது.

1970 ம் ஆண்டு மத்திய அரசால் 'பத்மஸ்ரீ’ விருது பெற்றார் ஜெமினிகணேசன்.

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன், 2005 ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார்.

ஜெமினிகணேசனின் உடல் ஊர்வலமாக பெசன்ட்நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஜெமினிகணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

ஜெமினிகணேசன் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. காலத்தால் அழியாத காவியத் திரைப்படங்களைக் கொடுத்த காதல் மன்னன் என்றென்றும் நம் நினைவில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

செந்தில் மட்டும் சமாதானம் ஆகியிருந்தார்னா... அய்யோ அதை நினைச்சுப் பார்க்கவே முடியலை..! #HBDSenthil

 

சினிமாவில் வேலை செய்வதையே பலரும் பாக்கியமாக நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலக் கலைஞர்களைப் பெற்றமைக்காக சினிமாவே பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த வரிசையில் கண்டிப்பாக நகைச்சுவை ஜாம்பவான் செந்திலுக்கும் ஓர் இடம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இருக்கும். அப்படிப்பட்ட கலைஞனின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய ஒரு பகிர்வு.  

செந்தில்

 

செந்திலுடைய பதினேழு வயதில் அவரது தந்தை திட்டிவிட்ட காரணத்தினால் சொந்த ஊரான ராமநாதபுரத்திலிருந்து கிளம்பி, சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். இங்கு பல விதமான மனிதர்களைச் சந்தித்தது போல், எண்ணெய்க் கிடங்கு, பார் என பல இடங்களில் பல விதமான பணிகளையும் சந்தித்துள்ளார். மறுபக்கம் கலை மேல் இருக்கும் ஆர்வத்தில் பல நாடகங்களில் நடித்து மக்களை மகிழ்வித்துக்கொண்டும் இருந்தார். இதற்கு நடுவில் இவரது வீட்டில் இவரைத் திரும்ப வரச் சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் எதற்கும், வலைந்துகொடுக்காத செந்தில், சென்னையிலேயே இருந்து தன்னுடைய கலைப்பயணத்தை தொடந்துகொண்டிருந்தார். ஒருவேளை சமாதானத்துக்கு சாய்ந்துகொடுத்து ஊருக்கே திரும்பிப் போயிருந்தால், தமிழ் சினிமா இப்படியொரு மகத்தான கலைஞனை இழந்திருக்கும். அதை இப்போது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இவரது முடிவு பிற்காலத்தில் கவுண்டமணிக்கும் சாதகமாக அமைந்தது.

கலையின் மீதுள்ள காதல், நகைச்சுவையின் மீதுள்ள ஈர்ப்பு, மற்றவர்களை மகிழ்விக்கும் போது கிடைக்கும் போதை... இவை அனைத்தும் ஒன்றிணைந்து பல படங்களில் இவரை நடிக்க வைத்தது. ஆரம்ப காலப் பாடங்களில், பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அவ்வவ்போது சில படங்களில் தலைகாட்டி வந்தார் செந்தில். ஐந்து வருடங்களாக தொடர்ந்து விடாமுயற்சியோடு சினிமாவில் ஜொலிக்க தன்னால் முயன்றளவு முயற்சி செய்துகொண்டே இருந்தார். `தனியா ஏன்டா ராஜா கஷ்டப்படுற அதான் நான் இருக்கேன்ல' என்ற ரகத்தில் ஒருவர் தோளில் செல்லமாக தட்டிக்கொடுத்து இவருடன் கூட்டு சேர்ந்தார் ஒரு மனிதர். அவர் பெயர்தான் கவுண்டமணி. பிற்காலத்தில் கவுண்டமணி என்று கூகுலில் தேடினால் அதற்கடுத்து செந்தில் என்ற பெயரும் வரும் என்று தெரியாமலே அப்பொழுது இருவரும் ஜோடி சேர்ந்தனர். அதன் பின்னர் இருவரையும் தனித்தனியாக திரையில் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. 

செந்தில்

குறிப்பிட்ட காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் டாப்பிக்கை எடுத்தால், அதில் சொர்ப்ப நடிகர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். குறிப்பாக, தற்பொழுதுள்ள நகைச்சுவையின் நிலைபாடு போல் இல்லாமல் அப்பொழுது ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களிடமும் ஒவ்வொரு தனித்துவம் இருந்தது. அந்தக் கால சினிமாக்களில் தனித்துத் தெரிவதென்பது சாதாரண காரியமல்ல. வெறும் வாழைப்பழம், க்ரீஸ் டப்பா, பெட்ரமாஸ் லைட் எனஇவைகளை வைத்தே வயிறு குழுங்கச் சிரிக்க வைத்தவர்கள் கவுண்டமணி - செந்தில். இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டுவந்தனர்.  ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் எனப் பல நடிகர்கள் உச்சத்தில் இருந்த சமயம்; அந்த சமயத்திலும் அனைவருடனும் ஜோடி சேர்ந்த இந்தக் கூட்டணி, படத்தின் ஹீரோக்களைவிட தங்களது நகைச்சுவைகளின் மூலம் ரசிகர்களை வெகுவாக கட்டியிழுத்தனர். காதல் ஜோடிகளுக்குக்கூட கிடைக்காத `கெமிஸ்ட்ரி' என்ற வரம் இவர்கள் இருவருக்கும் கிடைக்கப்பெற்றது. `அண்ணே இல்லேன்னா இந்தப் படத்துல நான் நடிக்க மாட்டேன் சார்' என செந்தில் சொன்னது இருவரின் பாசத்துக்கான அடையாளம். 

அதுமட்டுமின்ற தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகர்களுக்கு செந்தில்தான் ஃபேவரைட் காமெடியன். மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கும் இவர்தான் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி நடிகராம். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். செந்திலுக்கும் ஶ்ரீதேவியை ரொம்பப் பிடிக்குமாம். ஆனால் இதுவரை செந்தில் ஶ்ரீதேவியைப் பார்த்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் எதார்த்தமாக ஏர்போர்டில் சந்தித்துள்ளார். இதுவரை இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளும் தருணம் இருவருக்குமே அமையவில்லை. இவரைப்போல் பல கலைஞர்களுக்கும் செந்தில் ரொம்பவும் பிடித்த நடிகர். நமக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன?!

 

பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் அண்ண்ண்ண்ண்ணே...

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகின் அழகிய நகரான ரோமின் நிலை என்ன தெரியுமா?

ரோம் நகரில் வீதி தோறும் அதிகரித்து வரும் குப்பைகளால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள உள்ளூர் தன்னார்வலர் அமைப்பு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ண்டனின் ‘மேடம் டுஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியக’த்தில் இடம் பிடித்திருக்கிறார்கள் பாகுபலியும் கட்டப்பாவும். உலகம் முழுக்க வெளியாகி, வெற்றிபெற்ற ‘பாகுபலி’ படத்தைக் கௌரவிக்கும் வகையில் இந்த இரு கதாபாத்திரங்களின் சிலைகளையும் காட்சிக்கு வைக்கவிருக்கிறார்கள். இதன்மூலம் `மேடம் டுஸாட்ஸி’ல் மெழுகுச் சிலை நிறுவப்படும் முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை சத்யராஜ் பெற்றுள்ளார். வாழ்த்துகள் கட்டப்பா மாமா அவர்களே!

p36a_1521611729.jpg


ஷாருக்கானின் மகள் சுஹானாகானும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார்! ஆனால், இப்போதைக்குப் படிப்புதான் முக்கியம் என அப்பா கான் ஸ்ட்ரிக்டாகச் சொல்லி யிருக்கிறார். படிப்பு முடிந்ததும் பாலிவுட்டில் நிச்சயமாக என்ட்ரி இருக்கும் என்றும் சொல்லி யிருக்கிறார் அம்மா கௌரி கான்! மகள் கான்

p36b_1521613441.jpg


மிஷ்கினின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சாந்தனு. இந்தப் படத்தில் மிஷ்கினோடு பி.சி.ஸ்ரீராமும் முதன்முறையாகக் கைகோக்கவிருக்கிறார். `நந்தலாலா’ படத்திலேயே சாந்தனுதான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. அப்போது தவறிப்போன வாய்ப்பு இப்போது கிடைத்திருப்பதில் சாந்தனு செம உற்சாகத்தில் இருக்கிறார். எடுடா மேளம்... அடிடா தாளம்...


லியானாவுக்குத் திருமணமாகிவிட்டதாகச் செய்தி பரவியது. ஆனால், அது பற்றி இலியானா வாயே திறக்கவில்லை. சமீபத்தில் நடந்த பட விழாவொன்றில் அஜய் தேவ்கன் இலியானாவிடம், “உனக்குத் திருமணம் ஆகிடுச்சுன்னு சொல்றாங்களேம்மா?” எனக் கேட்கவும், திருமணம் ஆனதை ஒப்புக்கொண்டிருக்கிறார் இலியானா! வாழ்த்துகள் இலி!

 

p36c_1521613455.jpg


‘ரேஸ்-2’ படத்துக்குப் பிறகு கவர்ச்சி காட்டாமல், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ போன்ற படங்களில் நடித்தார் தீபிகா படுகோன். இப்போது மீண்டும் கவர்ச்சிக்கே திரும்பவிருக்கிறாராம். விரைவில் ‘ஹேட் ஸ்டோரி’ மாதிரியான படத்தில் நடிக்கவிருக்கிறாராம். `ரசிகர்கள் என்னை இப்படித்தான் என முத்திரை குத்திவிடக்கூடாது. என்னால் எல்லாவிதமான ரோலையும் ஹேண்டில் செய்ய முடியும்’ எனச் சொல்கிறார். எல்லோரும் இதையேதான் சொல்றாங்க!

p36d_1521613469.jpg


கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்ற டேவிட் பெக்காம் இப்போது கல்லூரி மேடைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பெக்காமின் பேச்சு கட்டாயம் இடம்பெறுகிறதாம்! ஆரம்பத்தில் `என்ன பேசுவதென்றே தெரியவில்லை...’ எனத் தயங்கியவர் இப்போது அசராமல் நடிகர் சிவகுமார் போலப் பல மணிநேரம் சொற்பொழிவாற்றிச் சிறப்பிக்கிறாராம். க்யாரே ஸ்பீக்கிங்கா?

p36e_1521613505.jpg


றைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் படமாக்க செம போட்டாபோட்டி பாலிவுட்டில்! ராஜ்குமார் ஹிரானி, நீரஜ் பாண்டே, ஜோயா அக்தர், அஷுதோஷ் கவரிகர் என ஹிட் இயக்குநர்கள் எல்லோருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். யார் ‘ஆக்‌ஷன், கட்’ சொல்லப்போகிறார்கள் எனச் சீக்கிரமே தெரிந்துவிடும். மீண்டும் மயிலு!

p36f_1521613519.jpg


சிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் படத்தயாரிப்பில் ஈடுபடப்போகிறார். இதற்காக விவேக்கின் டீம் கதைகேட்டுவருகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ மாதிரியான இளைஞர்களைக் கவரும் கதைகள்தான் வேண்டும் எனக் கேட்கிறார்களாம். அனேகமாக விவேக் ஜெயராமனையே ஹீரோவாக்கும் திட்டம் இருக்கிறதோ என்னவோ? ஏற்கெனவே ‘பாஸ்’ இருக்கிறார்ப்பு!


p36g_1521613538.jpg

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கிசானும், கிறிஸ் டக்கரும் இணையவிருக்கிறார்கள். ‘ரஷ் ஹவர்’ படத்தின் நான்காம் பாகம் தயாராகவிருக்கிறது. இந்த முறை முந்தைய பாகங்களைவிட ரஷ் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் இருவரும். வா தல... வா தல!


p36h_1521613552.jpg

சுதந்திரப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் நினைவாக மகனுக்கு ‘ஆசாத் ராவ் கான்’ எனப் பெயரிட்டவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். தற்போது வாடகைத்தாய் மூலம் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அமீரும் மனைவி கிரண் ராவும் முடிவெடுத்திருக்கிறார்கள். `ஆண் குழந்தை என்றால் நான் மிகவும் மதிக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை வைப்பேன். பெண் குழந்தை என்றால் என் அம்மா பெயரான ஜீனத் என வைப்பேன்’ என்றும் சொல்லியிருக்கிறார் அமீர் கான். யுனிக் ஆக்டர்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வேற்று கிரக தக்காளி

வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த தக்காளிக்குள் ஸ்‍ரோபெரி பழம் உருவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை குரோக்ஸ்பீன்ஸ் என்ற ரெடிட் பயனாளர் பகிர்ந்து உள்ளார். இது “ஸ்ட்ரோமோட்டோ” எனப் பெயரிடப்பட்டுள்ளது, தி சன் தகவல் வெளியிட்டு உள்ளது.

இது குறித்து குரோக்ஸ்பீன்ஸ் கூறும் போது ‘ஸ்‍ரோபெரி’ வெளிப்புற சதை அழகாக மென்மையாகவும், சிறிது மெலிதாகவும் இருந்தது. இது போன்று நான் பார்த்தது இல்லை. இது வேற்று கிரக பழம் போல் நான் எண்ணினேன் என கூறினர்.

New post (Bizarre photo of mutant tomato-strawberry ‘alien fruit’ disgusts internet – but would you eat it?) has been published on Best of Borneo Island - http://borneosights.com/bizarre-photo-of-mutant-tomato-strawberry-alien-fruit-disgusts-internet-but-would-you-eat-it/ 

DY2ShjwVwAAoQCx.jpg

http://metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial

 
 

திரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலிர்க்கும். தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் எனும் டி.எம்.எஸ் 1922- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். ஆம், இன்று அவருடைய பிறந்த தினம் என்பதால் அவருடனும் நெருங்கிப்பழகிய இயக்குனர் விஜயராஜிடம் அவருடைய சிறப்புகளைக் குறித்துக் கேட்டோம்...

டி எம் சௌந்தரராஜன்

 

11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய டி.எம்.எஸ் அவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் தான். அவர் தனது கடைசி காலம் வரை தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டவர். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. 'நாம் அரசு ஊழியர் இல்லை, ஓய்வெடுக்க. ஒரு கலைஞன் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவன் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படி அவர் சொல்லும்போதே அவர் 90 வயதை தொடவிருந்தார். பாடுவதைப்போலவே அவர் சமையலிலும் கைதேர்ந்த கலைஞர். அவர் ரசம் வைத்தால் தெரு முழுக்க மணக்கும் என்பார்கள். நிஜமாகவே ஒரு அற்புதமான ரசனைக்காரர் அவர். அவர் விரும்பியே தனது ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்தார். எல்லா செயலிலும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக உழைப்பார். 

டி எம் எஸ்

டி.எம்.எஸ் அவர்களின் 90-வது பிறந்த நாள் தொடக்கத்தை மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் அவரோடு  கொண்டாடினோம். அங்கு அவர் பாடிய கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் பாடல்களின் சிடியை கோயிலில் கொடுத்தோம். அவர்கள் அதை உடனே கோயிலில் ஒலிபரப்பி அவரை பெருமைப்படுத்தினார்கள். அப்போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி வியந்து நெகிழ்ந்துப்போனார். தான் முருகப்பெருமானுக்காக உருகி உருகிப்பாடிய பாடல்களையெல்லாம் சொல்லி கண்கலங்கினார். முருகப்பெருமானின் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் தான் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் நிஜமாகவே அவர் முருகனின் பக்தராக இருந்தது தான். எத்தனையோ பாடகர்கள் வரலாம், என்றாலும் டி.எம்.எஸ்... டி.எம்.எஸ் தான்' என்றார்.

 

 

ஆம், மல்லிகைப் பூவை மறைத்துவிட முடியும்! வாசத்தை?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/smhrkalifa

ஆண்ட்ராய்டு போன் என்பது ரஜினி படம் மாதிரி எல்லோருக்கும் புரியுது. ஐபோன் என்பது கமல் படம் மாதிரி நிறைய பேருக்குப் புரிய மாட்டேங்குது.

twitter.com/manivannan7402

டேட்டாவை ஆன் செய்தவுடன் முதலில் செய்வது “சைலன்ட் மோட்” அல்லது “வைப்ரேஷன் மோட்”

p112a_1521632303.jpg

facebook.com /Karl Max Ganapathy

ஹெல்த் மினிஸ்டர்னா `நீங்க நல்லா ஆரோக்கியமா இருக்கீங்கம்மா... இதையே மெயின்டைன் பண்ணுனீங்கன்னா எங்க ஆட்சிக்குப் பெருமை’ அப்படித்தான சொல்லிருக்கணும். அதான டீசன்டு... கவுரத!

facebook.com/Vignesh T

தமிழன் ஏன் இட்லி சாப்பிடுகிறான்?

இ - எனும் உயிரெழுத்து நாம் உயிர் வாழ்வதற்கு

ட் - எனும் மெய்யெழுத்து நாம் உடலை வளர்ப்பதற்கு

லி - எனும் உயிர்மெய் எழுத்து உயிர் வாழ்வதையும் உடல் வளர்வதையும் குறிக்கிறது.

இதுதான் தமிழ் மொழியின் அதிசயம். நம் முன்னோர்கள் எந்தப் பெயரையும் சாதாரணமாக வைப்பதில்லை.

p112b_1521632321.jpg

twitter.com/nandhu_twitts

உன்னை பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது உனது செல்போன் மட்டுமே...

twitter.com/KeethaSj

ஆதார்ல இருக்கிற போட்டோவதான் வலைதள ஐடில எல்லாம் யூஸ் பண்ணணும்னு அரசாங்க ஆர்டர் வந்தா எப்படி இருக்கும்

p112d_1521632351.jpg

twitter.com/ShivaP_Offl

மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி.. காடும் காடு சார்ந்த இடம் முல்லை.. அப்படியே இதன் தொடர்ச்சியாக ஆதார்கார்டும் பான்கார்டும் சார்ந்த இடம் இந்தியான்னு சொல்லப் போறாங்க..

twitter.com/anbu_vimal

முன்னாடி கல்யாணம் பண்ணும்போது ஜாதகப் பொருத்தம் பார்ப்பாங்க, ஆனா இப்ப pay slip பாக்குறாங்க  #பொருந்திட்டா_கல்யாணம்

p112c_1521632336.jpg

twitter.com/HAJAMYDEENNKS

தனியார் பள்ளிகளில்  இவ்வளவு கட்டணம் எனக் கதறுபவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை!

twitter.com/RakshiRishi

எதையாவது வெட்டினால் தான் `விழா’ என்றாகிவிட்டது. ஆடு,கோழி,கேக்,எக்ஸட்ரா...

p112e_1521632364.jpg

facebook.com/shanmugame

நம் மண்ணின் தெய்வங்களை ‘சிறு’ தெய்வங்கள் என்று அழைப்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது.

facebook.com/Murali Appas

அதென்னமோ தெரியல நாலுபேரு ஒருத்தனைப் பாராட்டுனா மனசு தாங்கமாட்டேங்குது உடனே உள்ள புகுந்து அவனை நக்கலடிச்சாத்தான் நிம்மதியாயிருக்கு.

இத்தனைக்கும் அவனோட எந்த வாய்க்கா வரப்புச் சண்டையும் நமக்கு இருக்காது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வெளிச்சம் தேடும் சாகசப் பயணம்

 

 
fifty%20pictures

ஐம்பது படங்களில் ஒன்று.

இயற்கையின் அறியப்படாத அதிசயங்கள் உலகெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் வடக்கொளி (Northern lights). ‘அரோரா போரியாலிஸ்’ என்றழைக்கப்படும் இந்த வெளிச்சம், வட துருவப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் நாடுகளில் இரவு நேரங்களில் ஏற்படும். அண்மையில் இந்த வெளிச்சம் அமெரிக்காவை, கனடாவை ஒட்டிய வட துருவ பகுதிகளில் தெரிந்தன. மார்ச் 14-ம் தேதி ஏற்பட்ட சூரியப் புயலே இதற்குக் காரணம்.

இந்த ஒளி எப்படி ஏற்படுகிறது? பூமிப் பந்தின் மேலடுக்கில் காணப்படும் ‘அயன்’ (Ion) என்றழைக்கப்படும் கண்ணுக்குப் புலப்படாத துகள்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த ஒளி ஏற்படுகிறது. இது வட துருவப் பகுதிகளில் மட்டுமே ஏற்படக்கூடியது.

இந்த ஒளியை ஆய்வு செய்வதில் உலகெங்கும் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம்வரை மட்டுமே நீடிக்கக்கூடிய ஒளி இது. மற்ற வகை ஒளியை ஆராய்ச்சிக் கூடங்களில் ஏற்படுத்துவதைப் போல இந்த வடக்கொளியை ஆய்வகங்களில் ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.

fifty%203%202

இப்படியான சிறப்பு வாய்ந்த வடக்கொளியை ஒளிப்படமும் வீடியோவும் எடுத்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வானியல் ஒளிப்படக் கலைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கேமராவும் கையுமாக வடதுருவ நாடுகளைச் சுற்றி வருவது வாடிக்கை. இவர்களில் ஒருவர்தான் கிறிஸ் ராட்ஷலாஃப் (Chris Ratzlaff). அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இயற்கையின் அற்புதங்களைப் படம் படிப்பதில் கைதேர்ந்தவர்.

மின்னல், சூறாவளி, சூரியப் புயல் என இயற்கையின் வெளிப்பாடுகளைப் படம்பிடித்து அவற்றைச் சமூக வலைத்தளங்களில் அதிகமான அளவில் பகிர்ந்திருக்கிறார் அவர். வடக்கொளி மீதும் தீராத ஆர்வம் கொண்டவ அவர், அண்மையில் ஏற்பட்ட வடக்கொளியைப் படம் பிடித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

படத்துக்கு அங்கீகாரம்

இப்படிப் படம் பிடித்ததன் மூலம் கிறிஸ் ராட்ஷலாஃபுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் மழைக்கு நடுவே எப்படி ஒரு சில நிமிடங்கள் வானவில் தோன்றுகிறதோ, அதுபோலவே வட துருவப் பகுதிகள், அதன் அருகே உள்ள நாடுகளில் இரவு நேரங்களில் வடக்கொளி தோன்றுகிறது.

passport

இது எப்படி வரும், எப்போது வரும் என்பது போன்ற தகவல்கள் வானிலை மையங்கள் அறிவித்தாலும், எதுவும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், எப்போது தோன்றும் என்றே தெரியாத வடக்கொளியைத் துரத்தித் துரத்தி ஒளிப்படம் எடுத்ததற்காகத்தான் கிறிஸுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இதுவரை உலகில் அறியப்படாத வகையில் புதுவகையான வடக்கொளியைத்தான் கிறிஸ் அண்மையில் படம் பிடித்திருந்தார். இதை நாசாவுக்கும் வடக்கொளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அவர் அனுப்பிவைத்தார். புது வகையான வடக்கொளிக்கு ‘ஸ்டீவ்’ என்ற பெயரை கிறிஸ் சூட்டியிருந்தார்.

steev

கிறிஸ் எடுத்த படம்.

 

இந்தப் பெயர் சூட்டியதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். “புது வகையான உயிரினம் ஒன்று ‘ஓவர் தி ஹெட்ஜ்’ என்ற அனிமேஷன் படத்தில் வரும். அப்போது அந்த உயிரினத்துக்கு ஸ்டீவ் என்ற பெயர் வைக்குமாறு அந்தப் படத்தில் வரும் அணில் சொல்லும். அதைப் போன்றே இந்த புதிய வடக்கொளிக்கு ஸ்டீவ் என்று பெயர் வைத்தேன்” என்கிறார் கிறிஸ்.

இந்த ஒளியை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர்களும் புதிய வகை வடக்கொளியை ‘ஸ்டீவ் பினாமினன்’ (Steve Phenomenon) என்றே அழைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

அட்டகாசமான வானிலை உலா

இன்று (மார்ச் 23) சர்வதேச வானிலை ஆய்வு தினம். 191 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச வானிலை ஆய்வு தினத்தைக் கொண்டாடிவருகிறது. உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு இயற்கை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்த அமைப்பு முடிவெடுத்திருக்கிறது.

chris%20arora1

கிறிஸ் ரேட்ஷலாஃப்

இதற்காக உலகம் முழுவதுமிருந்து யார் வேண்டும் என்றாலும் வானிலை தொடர்பான காட்சிகளையும் வானிலை அதிசயங்களையும் ஒளிப்படங்களாக எடுத்து அனுப்பலாம் என இந்த அமைப்பு அறிவித்தது. இதில் ஓர் ஒளிப்படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கண்ணைக் கவரும் வகையில், ஏராளமான ஒளிப்படங்கள் குவிந்திருக்கின்றன. இதிலிருந்து மிகச் சிறப்பான 50 ஒளிப்படங்களைத் தேர்வு செய்த சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு, அவற்றைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கம், இன்ஸ்டாகிராம், ஃப்ளிக்கர் எனச் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள வானிலை ஆய்வாளர்கள், இயற்கை விரும்பிகள் மத்தியில் வாக்கெடுப்பும் நடத்தியிருக்கிறது. இதிலிருந்து ஒரு சிறந்த படம் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த 50 ஒளிப்படங்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? goo.gl/1FB83F என்ற ஃபேஸ்புக் இணைப்பில் பார்க்கலா

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நயன்தாராவின் அசத்தல்  லுக்!

நடிகை நயன்தாரா அறம் படத்தை தொடர்ந்து கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அறம் படம் ஒரு சிறப்பான இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தது.

தற்போது விசுவாசம், கோலமாவு கோகிலா என பல படங்கள் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். எது எப்படியோ பொது நிகழ்ச்சிகளில் நயன்தாராவின் லுக் ஒரு தனி ஈர்ப்பை பெறும்.

படத்தில் கூட அவருக்கென ஒரு ஹேர் ஸ்டைல், உடைகள் என ட்ரண்டாகி வருகின்றன. சமீபத்தில் கருத்து கணிப்பில் சிகை அலங்காரத்தில் அவருக்கு தான் அதிக ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று World of women 2018 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் நயன்தாரா கலந்துகொண்டார்.அவருக்கு சினிமாவில் சாதித்து வரும் பெண் என்ற அடிப்படையில் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

DY-7WvtVMAABJdZ.jpg

வழக்கம் போல புடவை கட்டி வந்து பலரையும் ஈர்த்துவிட்டார்.

DZBvhX1VMAAwMEn.jpg

DY_H7fNU8AAEFMg-Copy.jpgDY_IGotVAAA_t8v-Copy.jpg

8.jpg

29135051_10217261093225903_877301535_n-C

DY_IHcFUQAAZR24-Copy.jpg

http://metronews.lk

  • தொடங்கியவர்

உலக காசநோய் விழிப்புணர்வு நாள் மார்ச்.24, 1996

 

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

 
 
உலக காசநோய் விழிப்புணர்வு நாள் மார்ச்.24, 1996
 
காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982-ம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24-ம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1923 - கிரீஸ் குடியரசாகியது.

• 1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.

• 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

• 1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.

• 1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வண்ணத் தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 25- 1954

 
 
 

வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் அகலம் 12 இன்ச் ஆகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1807 - அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. * 1821 - (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை

 
வண்ணத் தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 25- 1954
 
வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் அகலம் 12 இன்ச் ஆகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1807 - அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. * 1821 - (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது. * 1857 - பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். * 1911 - நியூயார்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.

* 1918 - பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. * 1941 - இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகோஸ்லாவியா இணைந்தது. * 1947 - இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர். * 1949 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.

 

 

 

கிரீஸ் குடியரசு பெற்ற நாள்: மார்ச் 25

 

 
 

கிரேக்கம் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.

 
 
 
 
கிரீஸ் குடியரசு பெற்ற நாள்: மார்ச் 25
 
கிரேக்கம் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.

மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ- யூரோ மக்கள் கி.மு.2000-ம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200-ம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ- யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.

கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, 2-ம் பிலிப் மற்றும் அவரது மகன் ஆகியோர் மசிடோனியாவின் மகா ஆலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460-ல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821-ல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17-ம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் 1827-ல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மனியின் பிடியில் சிக்கியது. 1967-ல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இதற்குப் பின்னர் குடியரசானது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஒரு மணி நேரம் இருளில் மூழ்கிய உலகின் முக்கிய நகரங்கள் #EarthHour

பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்புவியின் முக்கியமான தலங்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை இருளில் மூழ்கும்.

இப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார முறை 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. இப்போது இதனை 187 நாடுகள் கடைப்பிடிக்கின்றன. சனிக்கிழமை (மார்ச் 24) இரவு உலகெங்கும் முக்கிய தலங்கள் அனைத்திலும் விளக்குகள் அணைக்கப்பட்டது. இந்தியாவில் இந்தியா கேட் பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இந்தியா கேட், புது தில்லி

விளக்குகள் அணைக்கப்படும் முன்

 

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

 

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

ஒபேரா ஹவுஸ் - சிட்னி, ஆஸ்திரேலியா

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

nவிளக்குகள் அணைக்கப்பட்ட போது

தேசிய அரங்கம் - பீஜிங், சீனா

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

பெட்ரொனஸ் டவர்ஸ் - கோலா லம்பூர், மலேசியா

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

தாய்பெய் 101 - தாய்பெய், தாய்வான்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

nவிளக்குகள் அணைக்கப்பட்ட போது

சூப்பர் ட்ரீஸ் (SuperTrees) - சிங்கப்பூர்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

nவிளக்குகள் அணைக்கப்பட்ட போது

கதீட்ரல் - மாஸ்கோ, ரஷ்யா

விளக்குகள் அணைக்கப்படும் முன்

nவிளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

கொலோசியம் -ரோம், இத்தாலி

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

பர்தீனன் ஆலயம் - ஏதென்ஸ், கிரேக்கம்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்படும் முன்

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

விளக்குகள் அணைக்கப்பட்ட போது

 

http://www.bbc.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.