Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இல்லத்தரசிகளுக்கான வீக் எண்ட் அழகுக் குறிப்புகள்! #BeautyTips

 
 

ல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, வேலைப் பார்க்கும் பெண்களாக இருந்தாலும் சரி... வீக் எண்ட்டிலாவது உங்கள் உடல்நலனிலும், அழகிலும் அக்கறை கொள்ளவேண்டும். இதோ உங்களுக்கான அழகுக் குறிப்புகள் பற்றிச் சொல்கிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த்.

அழகு

 

தலைக்குப் பாதாம் ஆயில் பாத்!
சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு அன்றுமட்டும் விடுமுறை கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி  ஊற விடுங்கள். 

ஆயில்

பப்பாளி ஃபேஷியல்!
தலையில் எண்ணெய் ஊறுகிற அதே நேரம், பப்பாளிப் பழம் அல்லது அதன் தோலை முகத்தில் தடவி, கால் மணி நேரம் ஊற விடுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு விருப்பமான காபியோ, டீயோ போட்டுக் குடித்து ஃபிரெஷ்ஷாகுங்கள்.

ஃபேஷியல்

பாசிப்பருப்பு பேக்!
உங்கள் சருமம் வறண்டது என்றால், சிறிதளவு பாசிப்பருப்பு மாவு, பாலேடு இரண்டையும் கலந்து பேக்காக போட்டுக்கொண்டு (பப்பாளி பேக் மீது) 15 நிமிடம் ஊற விடுங்கள். பிறகு, தாடையிலிருந்து மேல்நோக்கி விரல்களால் வட்ட வட்டமாகத் தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்தெடுங்கள். முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்றாகும். ஃபேஷியல் செய்தது போன்ற உணர்வும் உங்களுக்குக் கிடைத்துவிடும். 

பியூட்டி

அன்னாசிப்பழ பேக்!
உங்கள் சருமம் எண்ணெய்ப் பசை கொண்டது என்றால், ஒரு துண்டு பப்பாளி, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 4 சொட்டு தேன் சேர்த்துக் கலந்து  கொள்ளுங்கள். ஏற்கெனவே பப்பாளிப் பழ பேக் போட்டு வைத்துள்ள முகத்தில், இந்த அன்னாசிக் கலவையை தடவி, கால் மணி நேரம் காய விடுங்கள்.  பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாகத் தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள். இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகி விடும்.

பாடி மசாஜ்

பாடி மசாஜ்!
இப்போது உடம்புக்குக் கவனம் கொடுக்க வேண்டிய நேரம். முடிந்தால் உடம்பு முழுக்க பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு குளியலறைக்குள் பத்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து இருங்கள். பிறகு, வீட்டில் அரைத்த சீயக்காய் பொடியை அரிசிக் கஞ்சியில் கலந்து (முந்தைய நாளே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்) தலையில் அழுந்தத் தேய்த்து குளித்துவிடுங்கள். அடுத்து, கடலை மாவுடன் தயிரைக் கலந்து உடம்பு முழுக்கத் தடவி, கீழிருந்து மேலாகத் தேய்த்து தேய்த்து, இறந்த செல்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். உடம்பு வழு வழுவென்று ஆகி விடும். 

ரோஜா

ரோஜாக் குளியல்!
வாரம் முழுக்க சாமிப்படங்களுக்குப் போட்ட ரோஜாப்பூக்களை முந்தைய இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். புதுப் பூவையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தண்ணீரை வடிகட்டிக் குளித்து முடித்ததும் தலை முதல் பாதம் வரை ஊற்றிக் குளியுங்கள். ஒரு ரூபாய்கூட செலவில்லாத ஸ்பா இதுதான். 

அழகு

கால் அழகு!
 உங்கள் குளியலறையில் பியூமிக் ஸ்டோன் கட்டாயம் இருக்கட்டும். குளிக்கும்போதே பியூமிக்ஸ் ஸ்டோனால் பாத ஓரங்களை நன்கு தேய்த்தெடுங்கள். பாதவெடிப்பு எளிதில் மறைந்துபோகும்.

கை அழகு!
குளித்து முடித்தவுடன் நகங்களைக் கட் செய்து ஷேப் செய்துகொள்ளுங்கள். பிறகு நெயில் பாலீஷ் போட்டால் விரல்கள் ஜொலிஜொலிக்கும். 

பியூட்டி

கூந்தல் அழகு!
குளித்து முடித்ததும் முடியைக் காயவிடுங்கள். காய்ந்ததும், அடிப்பகுதியை லேசாக ட்ரிம் செய்துவிடுங்கள். ஒவ்வொரு வார முடிவிலும் முடியை ட்ரிம் செய்தால் உங்கள் வெடிப்பில்லாத முடிவளர்ச்சிக்கு கேரன்டி.  

இதையெல்லாம் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்துவந்தாலே உங்கள் சருமம் உங்களைக் கொண்டாடும்.

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பேசும் படம்: இயற்கையின் கித்தான்கள்!

 
Aleppuzha%20beachkerala

ஆலப்புழை கடற்கரை, கேரளம்.

 

Ooty%20tea%20esate

ஊட்டி தேயிலைத் தோட்டம்.

 

alapuzha%20Back%20waterkerala

ஆலப்புழை கழிமுகம், கேரளம்.

 

beauty%20of%20western%20ghats-kadayam

மேற்குத் தொடர்ச்சி மலை, கடையம்.

 

morning%20games%20at%20marina%20chennai

சென்னை மெரினா கடற்கரை.

 

 
 
 
  • தொடங்கியவர்

குழந்தையுடன் ஹை-பை விளையாடும் தோனி...! வைரலாகும் வீடியோ

 

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக், ஐ.பி.எல் சீசன் ஆரம்பம் ஆகும் முன்னரே, சென்னை ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. 

தோனி

 

photo credit: twitter/ @ChennaiIPL

இதனால் சென்னை வீரர்கள் செயல்கள் அனைத்தும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆம், ஐபிஎல் 11-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். தினமும் வலைப்பயிற்சி கலந்துகொண்டு வரும் அவர்கள், ஓய்வு நேரத்தில் மற்ற நிகழ்ச்சிகளில்  கலந்துகொள்கின்றனர். இரண்டு ஆண்டுக்கு பிறகு ஆடவுள்ளதால், சென்னை அணியை விளம்பரப்படுத்தும் வேலைகள்  மும்முரமாக நடைபெற்று வருகிறது.  அதன்படி, பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா, விஜய் உள்ளிட்ட வீரர்கள் நேற்றுமுன்தினம் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாக பரவியது. 

இந்நிலையில், தோனி நேற்று இரவு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரசிகையின் குழந்தையுடன் தோனி விளையாட ஆரம்பித்தார். குழந்தையின் கையை தட்டி ஹை-பை விளையாடிய காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இந்தக் காட்சிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாக பரவிவருகின்றன. 

 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

'செல்லப் பிராணிகள்': பிபிசி-தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

  •  
ஜி சுடலைமணி, தூத்துக்குடி ஜி சுடலைமணி, தூத்துக்குடி அஸா அஸார் அஸா அஸார் பிரபுதேவன், trichy பிரபுதேவன், திருச்சி Balaji G ஜி. பாலாஜி P.செல்வக்குமார், நாகப்பட்டினம் பி.செல்வக்குமார், நாகப்பட்டினம் A. MANIKANDAN, சேலம் எ. மணிகண்டன், சேலம் ச.கார்த்திக், மதுரை ச.கார்த்திக், மதுரை Rohini Balasubramanian ரோஹினி பாலசுப்பிரமணியன் Yogalakshmi யோகலட்சுமி ஜி.வைரம் ஜி.வைரம் kapilan கபிலன் Aravindh Rengaraj, திருச்சி அரவிந்த் ரங்கராஜ், திருச்சி வள்ளி சௌத்திரி.ஆ, கோவில்பட்டி ஆ. வள்ளி சௌத்திரி. கோவில்பட்டி A.N.Naveenraj, Salem எ.என்.நாகராஜ், சேலம் சூர்யா.ப.க., சென்னை ப.க. சூர்யா, சென்னை வ.நா.ஹாரிஷ் ராகவ், ஈரோடு வ.நா.ஹாரிஷ் ராகவ், ஈரோடு Partheepan Raj பார்தீபன் ராஜ்

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கஷ்டம் 4ஜி, சந்தோஷம் 2ஜி

 

 
memes%206
memes%2010
memes%202
     
 
memes%203
memes%204
memes%205
memes%201
 
memes%207
memes%209
  • தொடங்கியவர்
‘உங்களை நீங்களே வசப்படுத்துக’
 

image_3adc32a335.jpgஒருவரின் விதி பலராலும் வரையப்படுகிறது. யார்யாரோ இடையில் புகுந்து கொள்கின்றார்கள். தாய், தந்தை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, முகம் தெரியாத நபர்கள் கூட, தனி மனிதனின் வாழ்க்கையில் புகுந்து, நல்லதையோ அல்லது அல்லாததையோ செய்து முடிக்கின்றனர்.

சுயமாக ஒருவன் தனது சுயபுத்தியில் வாழ்ந்தாலும் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு, சொல்லாமல் கொள்ளாமல் உள்நுழைந்து விடுகின்றது.

தங்கள் அறிவின்படி, கடமையை விட்டு விலகாமலும் நேர்மையே ஒரே சீரானவழி என்று உறுதியாக நின்றால், விதி அவர்கள் சொற்படி நடந்தே தீரும். சந்தேகமே வேண்டாம்.

முதலில் நீங்கள், உங்களைச் செதுக்கும் உளவலிமையைப் பெறுவீர்களாக.பெற்றோர், உற்றோர், மற்றையோர்களுக்கும் உரிய மரியாதைகளை மனமுவந்து வழங்குக.

எதற்கும் விதியை மட்டும் காரணம் சொல்லற்க. உங்களை நீங்களே வசப்படுத்துக.

  • தொடங்கியவர்

ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் (மார்ச் 26, 1953)

 
அ-அ+

அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இதே மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்தார். நியூயார்க்கில் 1914ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக்

 
 
 
 
ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் (மார்ச் 26, 1953)
 

அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இதே மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்தார்.

நியூயார்க்கில் 1914ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948 இல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார்.

1952 ஆம் ஆண்டில் கொள்ளை நோய்க்கு 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 21,269 பேர் முடக்குவாதத்திற்குள்ளாயினர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இதனால் தனது ஆய்வை தீவிரப்படுத்திய சால்க், 1952ம் ஆண்டு போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்தார். பின்னர் இதனை மேம்படுத்தி, 1953ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தார். 1955 ஏப்ரல் 12ல் சால்க் தடுப்பூசி வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு சால்க் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.

அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் "ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?" எனக் கேட்டார்.

1960-ல் கலிபோர்னியாவில் உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை சால்க் நிறுவினார். இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது. சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.வி.க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

 

 

அல்ஜீரியாவில் 32 குழந்தைகள் உட்பட 52 பேர் படுகொலை - மார்ச் 26, 1998

 
அ-அ+

அல்ஜீரிய வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவமாக கருதப்படும், குழந்தைகள் படுகொலை இதே மார்ச் 26-ம் தேதி அரங்கேறியது.

 
 
 
 
அல்ஜீரியாவில் 32 குழந்தைகள் உட்பட 52 பேர் படுகொலை - மார்ச் 26, 1998
 
அல்ஜீரிய வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவமாக கருதப்படும், குழந்தைகள் படுகொலை இதே மார்ச் 26-ம் தேதி அரங்கேறியது.

1998ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி, போரியட் லடாப் நகராட்சியின் ஓவத் போவாய்சா பகுதியில் கோடரி மற்றும் வாள்கள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தது.

2 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகள் உள்ளிட்ட 52 பேர் இந்த தாக்குதலுக்கு இரையானார்கள். மேலும் 3 இளம்பெண்களையும் அந்த கும்பல் கடத்திச் சென்றுவிட்டது. இதே நாளில் நாட்டின் மற்றொரு பகுதியான யோவுப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மரியாதை என்பது ஒருவழிப் பாதையல்ல! - பாடம் சொல்லும் கதை #MotivationStory

 
 

கதை

`றிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம்தான் மரியாதையைப் பெற்றுத்தரும்’ - மறைந்த நடிகர் புரூஸ் லீ சொன்ன வைர வாக்கியம் இது. இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்துவிடும். இது ஒருபுறமிருக்கட்டும். மரியாதை என்பது ஒருவழிப் பாதையல்ல... இருவழிப்பாதை. அதாவது கொடுத்து, பெறுவது. கேட்டுப் பெறுவதல்ல. இது புரிந்துவிட்டால் பிரச்னையில்லை. உறவுகள் பலமாக இருப்பதற்கான அடிப்படையே பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும்தான். ஒருவருக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கத் தவறுவதுகூட விரிசலுக்குக் காரணமாகலாம். இது கணவன் - மனைவி உறவுக்குக்கூடப் பொருந்தும். `முதலில் உன்னை மதிக்கக் கற்றுக்கொள். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள்’ என்பது கன்ஃப்யூஷியஸின் பொன்மொழி. தன்னை உணர்ந்தவர் வறட்டு கௌரவம் பார்க்க மாட்டார்; யாரிடமும் தனக்கான மரியாதையை கேட்டுப் பெற மாட்டார். இந்த வாழ்வியல் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் கதை ஒன்று உண்டு. சாம் மானக்‌ஷா

 

ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்‌ஷா (Sam Manekshaw) காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் இது. இதை கட்டுக்கதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதை உணர்த்தும் செய்தி அபாரமானது. அவர் ஓர் இளம் ராணுவ அதிகாரி. அண்மையில்தான் லெப்டினன்ட்டாக (Lieutenant) பதவி உயர்வு பெற்று, அந்தப் படை முகாமுக்கு வந்திருந்தார். இளம் வயதிலேயே தனக்கு இப்படி ஒரு பதவி கிடைத்ததில் அவருக்குக் கொஞ்சம் பெருமிதமும் இருந்தது. ராணுவத்தில் ஒரு நடமுறை உண்டு. தனக்கு மேலிருக்கும் அதிகாரி வந்தால், வீரர்கள் அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் பதவிக்குக் கொடுக்கப்படும் மரியாதை.   

ஒருநாள் மாலை நேரம். அந்த இளம் ராணுவ அதிகாரி வழக்கம்போல ரவுண்ட்ஸுக்குப் போனார். படை முகாமில் எல்லாப் பணிகளும் முறையாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் வேலை அது. மெதுவாக நடந்தார். ஓரிடத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் (Rifleman) ஒருவர், சீருடையில் பணியிலிருந்தார். நின்றுகொண்டிருந்த அவர், இளம் ராணுவ அதிகாரி வருவதை கவனிக்கவில்லை. அதனால் சல்யூட் அடிக்காமல் விட்டுவிட்டார். 

அவரைக் கடந்து சென்ற லெப்டினன்ட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. அந்த ராணுவ வீரரை அருகே அழைத்தார். ``நான் வர்றேன்னு தெரிஞ்சும் ஏன் எனக்கு சல்யூட் வைக்கலை?’’ என்று கேட்டார். 

ராணுவ வீரர்

அந்த ராணுவ வீரர் அப்பாவித்தனமாக உண்மையைச் சொல்லிவிட்டார். ``ஆபிஸர்... உண்மையிலேயே நீங்க வந்ததை நான் கவனிக்கலை. மன்னிச்சுடுங்க...’’ 

இளம் அதிகாரிக்கு இந்த பதில் மேலும் கோபத்தைத் தூண்டியது. ``வேணும்னே சல்யூட் அடிக்காம இருந்துட்டு பொய் வேற சொல்றியா?’’ 

``இல்லை...’’

``குறுக்கே பேசாதே... உனக்கெல்லாம் பனிஷ்மென்ட் குடுத்தாதான் புத்தி வரும்...’’ என்றவர் ஒருகணம் யோசித்தார்... ``ம்... அதான் சரி... 1,000 தடவை சல்யூட் அடி!’’ என்றார். 

ராணுவ வீரர், சல்யூட் அடிக்க ஆரம்பித்தார். `ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து...’

அப்போது யதேச்சையாக அந்த வழியாக வந்தார் தளபதி மானக்‌ஷா. ராணுவ வீரர் சல்யூட் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். லெப்டினன்ட் மானக்‌ஷாவின் அருகே ஓடி வந்தார். 

``என்ன நடக்குது இங்கே?’’ 

லெப்டினன்ட் தனக்கு மரியாதை தராத வீரருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டிருப்பதைச் சொன்னார். 

``ரொம்ப சரி. லெப்டினன்ட்... ஒரு சோல்ஜர் உனக்கு சல்யூட்வெச்சா நீ என்ன செய்யணும்?’’ 

இளம் அதிகாரி வெளிறிய முகத்தோடு சொன்னார்... `பதிலுக்கு சல்யூட்வெக்கணும்.’’ 

மரியாதை

``அப்புறமென்ன... ஆகட்டும். நீயும் ஆயிரம் சல்யூட் அடி...’’ 

மானக்‌ஷா போய்விட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அந்த முகாமிலிருந்தவர்கள் ஒரு ராணுவ வீரரும் லெப்டினன்ட்டும் மாறி மாறி சல்யூட் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்! 

*** 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

`எங்களைக் கொன்றுவிட்டு மரங்களைத் தொடுங்கள்!’ - இந்திய பெண்களைப் போற்றும் கூகுள் டூடுள் #ChipkoMovement

 

சிப்கோ இயக்கம்

இன்று கூகுள் டூடுல் சித்திரத்தை கவனித்தீர்களா? ஒரு மரத்தைச் சுற்றி நான்கு பெண்கள் அரண் போல கைகோத்து நின்றுகொண்டிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

சிப்கோ இயக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கோபேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்த ‘சாண்டி பிரசாத்’, மலைவாழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், காடுகளை அழிவில் இருந்து காக்கவும் 1973-ல் சிப்கோ இயக்கத்தை தொடங்கினார்.  கிராம மக்களுக்குக் காட்டை மையமாகக் கொண்ட தொழில்களை உருவாக்கி கற்றுக் கொடுத்தார். காட்டைச் சுரண்டும் நடவடிக்கைகளைத் தடுத்தார்.  எங்களை வெட்டி சாய்த்துவிட்டு மரங்களை வெட்டுங்கள் என்று மக்கள் முழங்கினர். முக்கியமாக காட்டில் விறகு சேகரிக்கும் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிப்கோ இயக்கம் சாண்டி பிரசாத்தால் தொடங்கப்பட்டது என்றாலும், மரங்களுக்காக உயிரை மாய்த்த  அம்ரிதா தேவிதான் இதற்கு வித்திட்டவர்.  18-ம் நூற்றாண்டில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங், என்பவர் ’மார்வார்’ என்ற வனப்பகுதியில் புதிதாக ஓர் அரண்மனை அமைக்க ஆசைப்பட்டார். இதையடுத்து, அந்த வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்க்க ஆட்களை அனுப்பினார்.  ஆனால், அங்கு வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்'  இன மக்கள் மரங்களை வெட்ட அனுமதிக்கவில்லை. மன்னர் அனுப்பிய ஆட்கள் மரங்களை வெட்டாமல் அங்கிருந்து நகர மாட்டோம் என்றனர். இனி பேசிப் பயனில்லை என்று நினைத்த பிஷ்ணோய் மக்கள், தங்கள் குழந்தைகளுடன் மரங்களைக் கட்டிப்பிடித்து நின்றனர். முதலில் எங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு மரங்களை வெட்டுங்கள் என்றனர். மன்னர் அனுப்பிய ஆட்கள் வேறு வழியின்றி அம்ரிதா தேவியையும் அவரின் மூன்று  குழந்தைகளையும் முதலில் வெட்டிக் கொன்றார்கள். பின்னர்  363 மரங்களையும் அதைக் கட்டிப் பிடித்த கிராம மக்களையும் வெட்டிச் சாய்த்தனர்.  

சிப்கோ இயக்கம்
 

மரங்களுக்காக குடும்பத்துடன் உயிர் நீத்த அம்ரிதா தேவிதான் இந்தியளவில் மரங்கள் அழிப்பை தடுக்கும் போராட்டத்துக்கு வித்திட்டவர். அம்ரிதா தேவிதான் சிப்கோ இயக்கத்தின் முன்னோடி. ’சிப்கோ’ என்றால் இந்தியில் அணைத்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். சிப்கோ இயக்கத்தின் 45-வது ஆண்டு நிறைவை நினைவுப்படுத்தும் விதமாக இன்றைய கூகுள் டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க

 

 

வாட்ஸ்-அப்பில் வைரலான ‘பஞ்ஞாரம் விற்று நடஞ்நு குஞ்சு..’ என்கிற அந்த வீடியோவைத் திரும்பத் திரும்பப் பார்த்துச் சிரித்தபோதுதான் சட்டென அந்த ஐடியாவைச் சொன்னார் மலையாள நண்பர். (என்னது, இதற்கு அர்த்தம் வேணுமா? கட்டுரையை முழுசாப் படிங்க. தெரியும்!) ‘‘எந்துனு ஈ சமயம் வெல்லம் தேசமாயி ஆலப்புழைக்கு (Aleppey) போகாம்பாடில்லா?’’ (See Translation: ‘‘இந்த தடவை ஏன் தண்ணீர் தேசமான ஆலப்புழாவுக்குப் போகக் கூடாது?’’) 

அழகின் தேசம்; அழகிகளின் தேசம்; இயற்கையின் தேசம்; கடவுளின் தேசம்... கேரளாவை இப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள். ‘தண்ணீர் தேசம்’ என்றும் எக்ஸ்ட்ராவாக கேரளாவுக்குப் பட்டம் கொடுக்கலாம். (வைரமுத்து மன்னிக்க!) தடுக்கினால் தண்ணீரில்தான் விழ வேண்டும் என்கிற அளவுக்குத் தண்ணீரால் மிதந்த ஆலப்புழாவும் குமரகமும்தான் என்னை இப்படிக் கவிஞனாக்கியது. ஒரு பொதுஅறிவு விஷயத்தோடு கட்டுரையை ஆரம்பிக்கிறேன். கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள். இதில் 9 மாவட்டங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. கூகுள் மேப்பில் நீலக்கலரில் இருந்த ஆழப்புழாவை டார்கெட் செய்து, சென்னையிலிருந்து வண்டியைக் கிளப்பினேன்.

alleppey

மாநிலம் விட்டு மாநிலம் போக, ஏகப்பட்ட வழிகள் இருப்பது தமிழ்நாடு to கேரளாதான். தேனி, குமுளி வழியாக கேரளா போகலாம்; நாகர்கோவில், கன்னியாகுமரி வழியாகப் போகலாம்; கோவை, பாலக்காடு வழியாகப் போகலாம். தென்காசி, செங்கோட்டை வழியாக தென்மலை போய்ப் போகலாம். ஒரு பெரிய வாழை இலை விருந்தில் எல்லாமே பிடித்த ஐட்டங்களாக இருந்தால், எந்த உணவில் கை வைப்பது என்கிற சந்தோஷக் குழப்பம் வருமே.. அதுபோன்றதொரு பெருங்குழப்பம் இதில் உண்டு. காரணம், எல்லாமே செம போதையான பாதைகள். செங்கோட்டையில தங்குவோம் என்றால் குற்றாலம் இழுக்கும். குமுளியில் தங்கிட்டுப் போகலாம் என்றால் தேக்கடி நாள்களைச் சாப்பிட்டு விடும். நாகர்கோவிலுக்கும் தொட்டிப்பாலம், பேலஸ், திற்பரப்பு என்று எக்கச்சக்க இடங்கள் உண்டு. 

நான் கோவை - பாலக்காடு வழியைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், பாலக்காட்டில் 300 வருடங்கள் வாழும் ஆமைபோல், வேலை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் அந்தச் சாலை...? அதையும் தாண்டி நான் இந்த ரூட்டைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பாலக்காடு தாண்டி சாலக்குடி, எர்ணாகுளம், சேர்த்தலா வழியாகப் போனால் குமரகம் என்றொரு ஏரியா இருக்கிறது. 'இத்தனை பெரிய ஏரியா' என்று எந்த சீஸனிலும் வியக்க வைப்பதுதான் குமரகத்தில் உள்ள வேம்பநாடு ஏரியின் ஸ்பெஷல். சொல்லப்போனால், ஆலப்புழாவுக்குப் பிறகு படகு வீடுகளுக்கு குமரகம்தான் சீனியர் என்கிற விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

alleppey

கோவையிலிருந்து பாலக்காட்டுக்குச் செல்ல ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது... பாலக்காட்டிலிருந்து திருச்சூருக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது... ஆனால் திருச்சூரைத் தாண்டுவதற்கு ஒரு யுகமே தேவைப்பட்டது. எப்போதுமே பீக் அவர்ஸாக இருப்பதுதான் திருச்சூரின் ஸ்டைல்போல. கட்டை வண்டிப் பயணம் மாதிரி இருந்தது. ஒவ்வொரு பள்ளத்துக்கும் கியரை மாற்றி ஆக்ஸிலரேட்டர் மிதித்து என்று டயர்டே ஆகிவிடுவார்கள். ஆனால், கேரள மக்கள் குடும்பத்தோடும், காதலி/காதலன்களோடும், நண்பர்களோடும் என்று உற்சாகமாக பைக்குகளிலும் கார்களிலும் அந்த வெறித்தனமான டிராஃபிக்கிலும் ஜாலியாக டிரைவிங் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘பாலைவனத்தைக் கடப்பவர்கள்தாம் கதறி அழுகிறார்கள்; வசிப்பவர்கள் அல்ல’ என்று யாரோ ‘வலைபாயுதே’வில் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. 

alleppey

திருச்சிவபேரூர் எனும் மலையாள வார்த்தையிலிருந்து மருவி, திருச்சூர் ஆகியிருக்கிறது இந்த ஊர். சேர மன்னர்கள் இதை ‘தென் கயிலாயம்’ என்றழைப்பார்களாம். அதாவது, சிவன் பள்ளிகொண்ட இடம். திருச்சூரைச் சுற்றித்தான் அதிரப்பள்ளி, சாவக்காடு பீச், சக்தன் தம்புரான் அரண்மனை, விலாங்கன்குன்னு என்று ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. இங்குள்ள புன்னத்தூர் கோட்டா எனும் இடம், யானைகளின் சரணாலயத்துக்குப் பெயர்போனது. இங்கே 100-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றனவாம். நம்மூரில் சில பல ஆயிரங்களில் நாய்களைச் செல்லப் பிராணியாக வாங்கி வாக்கிங் கூட்டிக்கொண்டு போவது மாதிரி, இங்கே சில கோடீஸ்வர குருவாயூரப்ப பக்தர்கள் யானைகளைச் செல்லப் பிராணிகளாக வாங்கி, இந்தக் கோயிலுக்குத் தானம் பண்ணி விடுவார்களாம். குட்டிகளாக இருக்கும்போதே வாங்கிப் பழக்கி விடுவார்கள் என்பதால், சில யானைகள் தங்கள் ஓனர்களை அடையாளம் கண்டுகொள்ளும் தருணம் செம ஃபீலிங்காக இருக்குமாம். அதுபோக, திருச்சூர் கோயில் திருவிழாக்களில் யானைகளும் இப்படித் தானம் செய்யப்பட்டவைதாம். ஒவ்வொரு திருவிழாக்களின்போதும், ஏதாவதொரு யானைகளால் அசம்பாவிதம் நடப்பதை மட்டும் தடுக்கவே முடியவில்லை.

திருச்சூர் வெளியே வந்து இடதுபுறம் திரும்பினால், ஒரு வழியாக சாலக்குடி வந்திருந்தது. சாலக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் அதிகம். திப்பு சுல்தான் மைசூருக்குப் படையெடுக்கும்போது, சாலக்குடியில்தான் தனது படை பரிவாரங்களுடன் படையெடுப்பைத் தொடங்கத் திட்டம் போட்டாராம். எப்போதுமே பரபரக்கும் சாலக்குடி ஆறு, கேரளாவுக்கு வரப்பிரசாதம்தான். 

aleppey

சேர்த்தலாவில்தான் மீன் கறி ரொம்ப ஃபேமஸ் என்றார்கள். மீன்களின் பெயர்தான் வித்தியாசமாக இருக்கிறது. சென்னையில் வறுபடும் அதே மீன்கள்தான். வஞ்சிரம் இங்கே நெய் மீன் என்றழைக்கப்படுகிறது. கானாங்கத்தைக்கு அயிலா என்கிறார்கள். பாறை மீனுக்குக் கறி மீன் என்று பெயர். இருட்டுவதற்குள் குமரகம் போக வேண்டும் என்பதுதான் திட்டம். சாலையோரம், பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு போவதுபோல், கறி மீன்களைப் பிடித்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். 

குமரகம் போகும் வழியிலேயே சொர்க்க வாசல் திறந்துவிட்டதுபோல் இருந்தது. காரணம், வேம்பநாடு ஏரி. குமரகம் வந்துவிட்டதற்கான அறிகுறி. ஏரியா மொத்தமும் ஏரியாகச் சூழ்ந்திருப்பதுதான் குமரகத்தின் ஸ்பெஷல். லேசான இருளில் ஏரி நன்றாகவே பயமுறுத்தியது. குமரகத்தில் தங்குவதற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உண்டு. ஆனால், கொஞ்சம் மிடில்கிளாஸிலிருந்து அடுத்தகட்டத்தில் நீங்கள் இருக்க வேண்டும். காரணம், இங்கே குறைந்தபட்ச ரூம்களே 3,500-ல் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. 

aleppey

ஓகே! அரசாங்க காட்டேஜ் மாதிரி தெரிகிறதே என்று உள்ளே நுழைந்தேன். KTDC எனும் கேரள டூரிஸத்தின் அரசாங்க காட்டேஜில், ஜஸ்ட் 14,999 ரூபாய் மட்டுமே கேட்டார்கள். ஆனால், `காசுக்கேற்ற தோசை' மாதிரி காட்டேஜ்களைக் குறை சொல்ல முடியாது. முட்டுக்கொம்புகளுக்கு மேல் தென்னந்தோப்புகளுக்கு இடையே, மூங்கில் கழிகளில் அமர்ந்து காற்று வாங்கியபடி படகுகளையும் காயல் நீரின் இரவு நேர சலசலப்பையும் ரசித்துக்கொண்டே கட்டஞ்சாயாவை அருந்தினால், மோட்சம் கிடைக்கப் பெறலாம். ஆனால் `வானம்’ பட சிம்பு மாதிரி 20 ரூபாய் டீ-ஷர்ட்டைத் தேடிக்கொண்டிருப்பவன் நான். ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று வெளியே வந்தால், ‘‘மோட்டார் போட்டிங், சைட் சீயிங், லேக் வியூ ரூம்கள், காம்ப்ளிமென்ட்ரி பிரேக்ஃபாஸ்ட் எல்லாமே நன்னல் பீக்குன்னு’’ என்று பிரைவேட் கைடு ஒருவர் சுற்றி வளைத்தார். 22,000 ரூபாய் என்று கார்டை நீட்டினார். ‘‘படகு வீடானு சார்... பிரமாமாயிட்டுண்டுண்ணு...’’ என்று புரொமோட் செய்தார். அதே மோட்சம் மேட்டர் இதற்கும் பொருந்தும்போல! அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு நழுவி விட்டேன். ‘ஓணம் பண்டிகையின்போது, கோடீஸ்வரர்கள் குமரகத்தை டார்கெட் செய்வதுதான் இதற்குக் காரணம்’ என்று தொழில் ரகசியம் சொன்னார் நம்மூரிலிருந்து குமரகத்தில் காட்டேஜ் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர். குமரகத்தில் தங்கி படகுச் சவாரியை அனுபவிக்கலாம் என்று நினைத்தால் நடக்காது போலிருந்தது. 

aleppey

என் போன்ற வறுமைக் கோட்டுக்கு இந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு, குமரகத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் கோட்டயம் நல்ல ஆப்ஷன். கோட்டயத்தில் 900 ரூபாயிலிருந்து ரூம்கள் கிடைத்தன. என்ன, 15 கி.மீ போய்விட்டு மறுநாள் திரும்பி வர வேண்டும். வந்தேன். குமரகத்தில் எல்லாமே காஸ்ட்லி ஆக இருந்தது. குமரகத்தில் பறவைகள் சரணாலயம் இருப்பதாகச் சொன்னார்கள். 14 ஏக்கர் பரப்பளவில் ஏகப்பட்ட பறவைகளோடு பரந்து விரிந்திருக்கிறது சரணாலயம். புலம் பெயர் பறவைகளுக்கான சரணாலயம். பறவை விரும்பிகளுக்கு செம ஆப்ஷன் இது. நம் ஊரிலேயே பார்க்கக் கிடைக்கிற கொக்குகளைக்கூட, தலை சாய்த்து ரசித்து ஒளிஓவியம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் சிலர். சைபீரிய கொக்கு, காட்டு வாத்துகள், நீர்க் குயில்கள், வெண்குருகுகள், பாம்புதாராக்கள் என்று வெரைட்டியாக பறவைகள் பெயர் சொன்னார்கள்.

aleppey

வெளியே வந்து மோட்டார் போட்டிங்குக்குப் பேரம் பேசி ஏறினேன். ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் கேட்டார்கள். நான்கைந்து பேராகச் சேர்ந்தால் ஆளுக்கு நூறு என்று ஷேர் பண்ணிக்கொள்ளலாம். அரைமணி நேரம் பயணத்தை எக்ஸ்டெண்ட் செய்து, ஏரி வழியாகவே ஆலப்புழா பார்டரைத் தொட்டு வர தனி ரேட். ஸ்பீடு போட்டிங்குக்குத் தனி ரேட். 1,400 ரூபாய். படகுப் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஏரியின் ஆரம்ப ஆழமே 28 மீட்டராம். போகப் போக டபுள், ட்ரிபிள் என்று GST போல் ஆழம் எகிறுமாம். பெரிய தனவான்கள் படகு வீடுகளை வாடகைக்கு எடுத்திருப்பார்கள்போல. ஏரியில் ஆழம் நிறைந்த ஏரியாவில் நச்சென்று நங்கூரத்தைப் போட்டு படகை நிறுத்தி, இரவு தங்க வைப்பதுதான் படகு வீடுகளின் ஸ்பெஷல். மீன் பிடிக்கக்கூட ஆப்ஷன் உண்டு. 

‘வேள்பாரி’ தொடரில் வரும் தேவாங்குபோல், வேம்பாடு ஏரியின் வடக்குப் பக்கம் பார்த்து அமர்ந்திருந்தேன். ஏரியின் அழகு ஏதோ ஒரு பரவச நிலைக்குக் கொண்டு சென்றது. திடீரென ஓரிடத்தில் படகை நிறுத்திவிட்டு, ``ஈ இடத்தில நேரத்தே இவ்விட 40 ஏக்கரு நிங்கள்ட ஒரு ராஜ்யசபா எம்.பி மேடிச்சிட்டுண்டு’’ என்று ‘நடுப்பக்கம் நக்கி’ மாதிரி காதோரமாக ஸ்கூப் நியூஸ் சொன்னார் படகோட்டி. சிபிஐ-க்கு வேலை இருக்கும் போல!

படகில் அப்படியே மேற்காலே போனால், ஆலப்புழா வருகிறது. ஆனால், படகு கொஞ்ச தூரம் போய் திரும்பிவிட்டது. சாலைப் பயணம் போய் ஆலப்புழா போனால்தான் முழுமையாக ரசிக்க முடியும் என்பதால்தான் இந்த ஐடியா. ஆலப்புழாவில் தங்கும் ரூம்கள் பர்ஸைக் கடிக்கவில்லை. Non-AC ரூம்கள் 800 ரூபாயிலிருந்து 1,200 வரை கிடைக்கின்றன. போட் ஹவுஸும் எடுக்கலாம். குமரகத்தைவிட மலிவாகச் சொன்னார்கள். 8,000 முதல் 12,000 வரை போட் ஹவுஸ் வாடகை சொன்னார்கள். இங்கே ஒரு நாள் என்பது மதியம் 12 மணி முதல் காலை 9 மணி வரை. படகு வீடு என்றால், ஒரே இடத்தில் தங்குவதில்லை. மதியம் 12 மணிக்கு ஆலப்புழா ஏறினால்... அடுத்த நாள் காலை மீண்டும் 9 மணிக்கு அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிடுவார்கள்.

aleppey

கேரளாவில் காலை டிஃபனாக புட்டு, இட்லி கிடைக்கிறதோ இல்லையோ, மாட்டிறைச்சியும் மீன் வறுவலும் காலங்காத்தாலேயே தயாராக இருக்கிறது. அசைவப் பிரியர்களுக்கு ஜமாய்தான். அதேபோல் நம் ஊர் மாதிரி 'போதை நிலையம்' அரசுடைமையாக்கப்படவில்லை என்பதால், தனியார் பார்களில் கூட்டம் அள்ளுகிறது. தண்ணீர் தேசத்தில் யாரும் தண்ணீரில் மிதந்தபடி வாகனம் ஓட்டக் கூடாது என்பதில் கறாராக இருக்கின்றனர் காவல்துறையினர். காலையில் தூங்கி எழுந்த மூஞ்சியோடு - வெறும் ஷார்ட்ஸ்-டீஷர்ட்டோடு ஆதார் கார்டில் இருப்பதுபோல் இருந்த என்னை வழிமறித்து செக் செய்தனர். ‘வண்டியை நிறுத்து.. எங்கேருந்து வர்ற... வாயை ஊது...’ என்பனபோன்ற ஒருமை செக்கிங்கெல்லாம் இங்கே இல்லை.  என்னை மரியாதையாகவே செக் செய்தனர். நான் நிரபராதி என்று தெரிந்ததும், மன்னிப்புக் கேட்டுவிட்டு, வழியும் சொல்லியனுப்பினார் ஓர் அதிகாரி. 

ஆலப்புழா பஸ் ஸ்டாண்டுக்குப் போனால்... மூடப்பட்ட திரையரங்குகள் மாதிரி காலியாக இருந்தது. ஏதும் ஸ்ட்ரைக்கா என்று விசாரித்தால், எப்பவுமே இப்படித்தானாம். ஆலப்புழாவில் பேருந்துப் பயணமெல்லாம் மலையேறிவிட்டது. எல்லாமே படகுப் பயணம்தான். எங்கேயோ ஹார்ன் சத்தம் கேட்டது. பஸ்தான் வருகிறது என்று விலகி வழிவிட்டேன். அரசாங்க டவுன் பஸ் என்று நினைத்தால், அரசாங்க டவுன் போட் அது. போட்டிலிருந்து வந்த ஹார்ன் சத்தம். ஆலப்புழாவைச் சுற்றிப் பல கிராமங்களில் பஸ் போக்குவரத்தே கிடையாது. போக்குவரத்துக்குப் படகுதான் ஆதாரம். நகரப் பேருந்துகளில் பயணம் செய்வதுபோல் நகரப் படகுகளில் ஏறி டிக்கெட் வாங்கிப் பயணிக்கிறார்கள் மக்கள். 8 ரூபாயிலிருந்து டிக்கெட் ஆரம்பிக்கிறது. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ``சீக்கிரம் ஸ்கூலுக்குப் போகணும்... டிராஃபிக் இல்லாம இருக்கணும்’’ என்று மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக மலையாளத்தில் வேண்டிக் கொண்டிருந்தார் ஒரு கேரள மாணவி. என்னது, தண்ணீரில் டிராஃபிக்கா? 

aleppey

ஆம்! நம் ஊரில் ஒன்-வேயில் டூ-வே பாதை போட்டுப் பறக்கும் வாகனங்கள் போல் இங்கே 'சர்புர்' என்று கிளம்ப முடியாது. ‘தண்ணிதான் கிடக்கே’ என்று உங்களுக்குரிய லேன் மாறி, நடுவே புகுந்து இஷ்டத்துக்குப் படகை விரட்டினால் தண்டம் கட்ட வேண்டும். ஒவ்வொரு படகுக்கும் ஒவ்வொரு லேன்; குறிப்பிட்ட லேன் மாறி படகு ஓட்டக் கூடாது; ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்க வேண்டும்; குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும்; பள்ளி மாணவர்களுக்குக் குறைந்த செலவில் போட் பாஸ் வழங்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கவனிக்க! 

உலகம் கடலால் சூழ்ந்துள்ளதுபோல், ஆலப்புழா முழுக்க தண்ணீரால் சூழ்ந்துள்ளது. நடுநடுவே ஓடையைக் கடந்து சாலைக்குப் போக ஊழல் இல்லாத பாலங்கள் கட்டியிருக்கிறார்கள். காஷ்மீருக்கு அடுத்து படகு வீடுகளுக்குப் பெயர் பெற்றிருக்கிறது ஆலப்புழை. ஆண்டுக்கு ஒரு முறை இங்கே படகுப் போட்டியும் நடத்துகிறார்கள். ஒரு முறை ஆலப்புழாவில் படகுப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் நேரு, ‘‘படகுப் போட்டி நடத்துங்கள்’’ என்று ஒரு பரிசுத் தொகை அனுப்பியிருந்தாராம். அப்போது முதல் படகுப் போட்டி வெகு ஜரூராக நடந்து வருகிறது. ஆலப்புழாவின் பெரிய அட்ராக்ஷனே இந்தப் படகுப்போட்டிதான். ஒரு படகில் கிட்டத்தட்ட 100 பேர் இருப்பார்கள். ஒரே நேரத்தில் டைமிங் மிஸ் ஆகாமல் துடுப்பு போட வேண்டும். 

aleppey

சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் போட்டிங்குக்கு, ரேஷன் கடைபோல க்யூவில் நிற்க வேண்டியதிருக்கும். ஆலப்புழாவில் படகுப் பயணத்துக்கு அலையவோ, காத்திருக்கவோ தேவையில்லை. நம் போன்ற வெளியூர்க்காரர்களைப் பார்த்ததுமே சுற்றி வளைத்துவிடுகிறார்கள் கைடுகள். `ஞான் மனோகரமாயிட்டுச் சுத்திக் காணிக்கா. ஒரு மணிக்கூர்னு 300 தந்னால் மதி!’’ என்று பாவமாக ஒரு படகோட்டி என்னை அப்ரோச் செய்தார். 

ஆயிரக்கணக்கில் படகுகள் இங்கே ஓடுவதாகச் சொன்னார்கள். அதனால் இங்கே பீக் - ஹவர்ஸ் எல்லாம் உண்டு. டிராஃபிக் இல்லாத பீக்-ஹவர்ஸில் அந்தப் படகில் ஏறினேன். ஆனால், ஓரிடத்தில் டிராஃபிக் ஆகி, ‘போட் ஜாம்’ ஏற்பட்டு தண்ணீருக்கு நடுவே தவித்து ரசித்தது தனிக்கதை! ஸ்கூல் பஸ் மாதிரி அது ஸ்கூல் போட் ஆக இருக்க வேண்டும். எதிரே இருந்த படகில் அத்தனை பேரும் பள்ளிக் குழந்தைகள். அத்தனை நெரிசலிலும் மங்கலான நீரோடைக்கு மேல் தெளிந்த நீரோடை மாதிரி பயணித்துக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். 

aleppey

தரையில் மாதிரி தண்ணீரிலும் சில படகுகளில் போலீஸ் ரெய்டெல்லாம் நடந்தது. லைசென்ஸ், RC காட்டுவதுபோல், படகு வீடு வாடகைக்கு எடுத்திருப்பவர்கள், ரசீதைக் காண்பிக்க வேண்டும். வேம்பநாடு ஏரியில் ஏதோ ஓரிடத்தில் படகை நிறுத்தினார்கள். நெடுஞ்சாலைப் பயணங்களில் சில மொக்கையான மோட்டல்களில் பேருந்துகள் நிற்குமே... அதேபோன்றதொரு டீ பிரேக். ஆனால், நல்ல கட்டஞ்சாயா கிடைத்தது. ‘பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு’ என்பார்கள். கேரளாவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் அனைத்திலும் முன்னுரிமை வகிக்கிறார்கள். ஹோட்டல் உரிமையாளராக, படகு ஓனர்களாக, டூரிஸ்ட் கைடுகளாக, சாயா போடுபவர்களாக... என்று சேச்சிகள் கேரளாவின் பொருளாதாரத்தில் எந்நேரமும் பங்கு வகித்தபடி இருக்கிறார்கள். லேசான மழைத் தூறலுக்கு இடையே சேச்சி ஒருவர் தயாரிப்பில் கட்டஞ்சாயா உறிஞ்சிவிட்டு மீண்டும் படகுப் பயணம். 

aleppey

கரையில்... இல்லை.. தண்ணீரில் வீடுகளே கட்டியிருந்தார்கள். தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன வீடுகள். இத்தாலியின் வெனிஸ் மாநகரம் இப்படித்தான் இருக்கும் என்று சில படங்களில் பார்த்ததாக ஞாபகம். கிராமமே மிதந்துகொண்டிருந்தது. வீக் எண்ட் என்பதால், ஒரு வீட்டுத் தலைவர் தன் குழந்தைகளுடன் வாசலிலேயே மீன் பிடித்து மனைவிக்கு க்ளீன் பண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆன் தி ஸ்பாட்டில் அவர்கள் வீட்டில் மீன் குழம்போ, வறுவலோ ரெடியாகிக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு வீட்டு வாசலில், ‘பைக் எடுத்துட்டு மார்க்கெட்டுக்குக் கிளம்புவதுபோல்’ குட்டி வள்ளத்தை (படகை) எடுத்தபடி, "மார்க்கெட் போயி பஞ்ஞார வாங்கிட்டு வராஞ்" என்று போட்டிங்கில் ஷாப்பிங் கிளம்பினார் ஒரு குடும்பத் தலைவர். (முதல் வரிக்கான அர்த்தம்: பஞ்ஞார என்றால் சர்க்கரை. சர்க்கரை விற்றபடி நடந்துபோனார் குஞ்சு என்ற ஒருவர்! இதுதாங்க அந்தப் பாடலோட அர்த்தம்!) இங்கே ஒவ்வொருவர் வீட்டிலும் வள்ளம் இருக்க வேண்டும். அவசர காலத்துக்கு இதுதான் லைஃப் போட்!

எனக்குப் படகை விட்டிறங்க மனசே இல்லை. ‘இந்தக் காயல் கரையோரம் ஒரு வாழ்க்கை வாய்த்தால் எப்படி இருக்கும்?’ என்று தண்ணீரில் மிதந்த ஒரு வீட்டுக்கருகே செல்ஃபி எடுத்து, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்தேன். 850 கான்டாக்ட்ஸ் இருந்த என் போனில் 840 பேர் ‘Seen’ என்று வந்திருந்தது.
 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகிலேயே மனிதநேய மிக்க சிறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நார்வேயிலுள்ள ஹால்டன் சிறை, உலகிலேயே ’மனிதநேய மிக்க சிறை’ என்று அழைக்கப்படுகிறது. சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம் செலவிடுவது என ஒரு சாதாரண வாழ்க்கையைபோல கைதிகள், சிறை தண்டனையை அனுபவிக்கின்றனர்.

  • தொடங்கியவர்
 
 
 

111 வகை சீஸ் கொண்ட உலகின் முதல் பீட்சா!!

 

111 வகை சீஸ் கொண்ட உருவாக்கப்பட்ட உலகின் முதல் பீட்சாவினை அமெரிக்காவைச் சேர்ந்த சமையல் கலைஞர், வடிவமைத்துள்ளார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள வண்டொலி பிட்சா கடையில் இந்த பிட்சா உருவாக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை படைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிட்சா, அளவில் மிகுதியாகி விட கூடாது என்பதற்காகப் பயன்படுத்த அனைத்து வகை சீஸ்-களும் 2.6 கிலோகிராம் அளவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மொஸாரெல்ல, எமெமென்டல், லைசஸ்டெர்ஷையர் சிவப்பு, காம்டே மற்றும் ரேலெட் டி சேவ்ரே வகைகள் முதலிய வகை சீஸ்-கள் கொண்டு இந்த பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.

பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறவைத்த இந்த பிட்சாவினை உண்பதற்காக துடித்தப் போதிலும், கின்னஸ் சாதனையாளர் நீதிபதிகள் ஆய்வினை முடித்தப் பிறகே இந்த பிட்சா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

127977-pizza-300x169.jpg

http://newuthayan.com

  • தொடங்கியவர்

ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவி ஷ்லோகா பற்றிய சுவாரஸ்யங்கள்!

 

ஷ்லோகா மேத்தா

 

மிகப் பிரமாண்டமாக, பல கோடிகளை செலவிட்டு நடத்தப்படும் திருமணத்துக்கு, ஆங்கிலத்தில் ‘பிக் ஃபேட் வெட்டிங்’ (Big Fat Wedding) என்பார்கள். அப்படி ஒரு திருமணத்தை வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். இந்தியாவின் பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், ‘ரோஸி புளு’ என்கிற பிரபல வைர நிறுவனத்தின் உரிமையாளரான ரசூல் மேத்தாவின் மகள், ஷ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. 
மார்ச் 24-ம் தேதி, கோவாவின் ஐந்து நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற நிச்சயார்த்தத்தில், மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். ஆகாஷ் அம்பானியும் ஷ்லோகா மேத்தாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். குடும்ப நண்பர்கள் என்றும் கூறலாம். நீடா அம்பானிக்குச் சொந்தமான 'திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளி'யில்தான் இருவரும் படித்தார்கள். ஷ்லோகா மேத்தாவைப் பற்றிய சில சுவாரஸ்ய துளிகள் இங்கே... 

*1990 ஜூலை 11-ம் தேதி பிறந்த ஷ்லோகா, ரசூல் மேத்தாவின் இளைய மகள். இவருக்கு விராஜ் மேத்தா என்ற சகோதரனும், தியா மேத்தா என்ற சகோதரியும் இருக்கின்றனர். 

*அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழத்தில் மானுடவியல் (Anthropology) படித்துவிட்டு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிட்டிகல் சயின்ஸில், சட்ட முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறார். 

* ரசூல் மேத்தாவும், விராஜ் மேத்தாவும் சேர்ந்து வைர நிறுவனத்தைப் பார்த்துக்கொள்கின்றனர். இவரின் தாய், மோனா மேத்தாவும், தங்கை தியாவும் நகைகள் வடிவமைப்பை கவனித்துக்கொள்கின்றனர். ஷ்லோகா, ரோஸி புளுவின் தொண்டு நிறுவனமான, 'ரோஸி புளு ஃபவுண்டேஷனின் இயக்குநராக 2014-ம் ஆண்டு முதல் பதவி வகிக்கிறார். 

* சமூக சேவையில் ஆர்வமுள்ள ஷ்லோகா, ‘ConnectFor' என்ற தன்னார்வலர் அமைப்பையும் நடத்திவருகிறார். 

ஷ்லோகா மேத்தா

* பயணம் செய்வது மற்றும் பாடல்கள் கேட்பது, ஷ்லோகாவின் விருப்பமான பொழுதுபோக்கு. 

* ஒருமுறை வைர பிசினஸ் பற்றி ஷ்லோகாவிடம் கேட்டபோது, “எனக்கு பிசினஸில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. பெண்களுக்கு வைர வியாபாரம் ஒத்துவராது என்று நினைக்கிறேன். ஒன்று, அவர்கள் நகை வடிவமைப்பாளராக மாறிவிடுவார்கள், அல்லது மனித வளத்துறைக்கு வேலை செய்வார்கள். ஒரு வடிவமைப்பாளர் ஆவதற்கான கற்பனைதிறன் என்னிடம் இல்லை. வைர வியாபாரத்தில் ஈடுபடுவது பற்றி நான் நினைத்தும் பார்த்ததில்லை' என்றார். 

* ஆகாஷூம் ஷ்லோகாவும் சுவிட்சர்லாந்தில் உள்ள Gstaad என்ற ரிசார்ட் நகருக்கு விடுமுறையில் சென்றுவந்தனர் என்று கூறப்படுகிறது. 

* ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் இயக்குநராக இருக்கிறார். 

* நிச்சயார்த்தத்துக்குப் பிறகு இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மும்பையில் உள்ள பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிப்பட்டனர். 

 

இவர்களின் திருமணம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துகளும் வெளிவந்துள்ளன. இது, இவர்களின் வியாபார உத்தி என்று சிலரும், அம்பானி தன் பிசினஸை விரிவுபடுத்துவதற்குச் செய்த திட்டம் என்றும் கருத்துக்கள் பரவிவருகின்றன. இதைப் பற்றி பெரியதாக அலட்டிக்கொள்ளாமல், ஆகாஷும் ஷ்லோகாவும் அமைதி காத்துவருகின்றனர். 

டிசம்பரில் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தை, மும்பையிலுள்ள ஒப்ராய் நட்சித்தர ஹோட்டலில் ஐந்து நாள்கள் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நீர்வாழ் உயிரினங்களுடன் சென்று ஆய்வு செய்யும் ரோபோ மீன் “சோஃபி”

நீர்வாழ் உயிரினங்களை ஆய்வு செய்ய எம்ஐடி சிசெயில் நிறுவனம் செய்த மென்மையான ரோபோ மீன்தான் ’சோஃபி’. மீன்களுக்கு பக்கத்தில் நீந்தி செல்லும் இந்த ரோபோ மீன், கண்களாக வைக்கப்பட்டிருக்கும் லென்ஸை கொண்டு உயர் பிரிதிறனுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கிறது.

  • தொடங்கியவர்
‘எண்ணங்களின் குழப்பம்; கண்ணீரின் பிரவாகம்’
 

image_0e1a6f3004.jpgமனதின் வெப்பம் கண்ணீரின் பிரவாகம்; எண்ணங்களின் குழப்பம்; துன்பங்களோடு கூட்டுச்சேரும்.

அளாதவன் மனிதனேயல்ல; நான் அழுவதில்லை என்று சொல்வதும் அழகல்ல; வீம்புக்காக அழாமல் இருக்கலாம். துன்பங்களின் வடிகால் கண்ணீர்தான். இதனால் படிப்படியாகக் கவலைகள் கரையும்.

இரக்கம் கொள்பவர்கள் நெகிழ்ந்துபோகின்றார்கள். நெகிழ்ச்சி கோழைத்தனமல்ல; வீரனுக்கு நெஞ்சில் உரமும் உண்டு. இரக்கத்தின் வலிமையும் உண்டு.

அன்பின் அடிநாதம் இரக்கம் அல்லவா! உயிர்களுக்கு இரங்குபவன், அதன் துன்பங்களைக் கண்டு, மனம் குமைந்து போவான்.

இரக்கம் கொண்டவர்களுக்கு, உதவும் மனப்பான்மை உருவாகும். செயல்மூலம் காட்டி நிற்பர். பரிதாபம் காட்டுவார்கள். அவர்களின் கரங்களைப் பலப்படுத்துக. 

சந்தோசப்படுத்துதலே இன்பகரமானது.

அழுது முடித்ததும், உடன் எழுக!

  • தொடங்கியவர்

விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் செய்த யூரி ககாரின் இறந்த தினம்: மார்ச் 27-1968

 
 அ-அ+

யூரி அலெக்சியேவிச் ககாரின்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது

 
 
 
 
விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் செய்த யூரி ககாரின் இறந்த தினம்: மார்ச் 27-1968
 
யூரி அலெக்சியேவிச் ககாரின்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்.

ககாரின் ஏப்ரல் 12, 1961-ல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

இவர் 1968-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி மரணம் அடைந்தார்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஜிமிக்கி கம்மல் ஸ்டைலில் வைரல் ஹிட்டாகும் சமந்தாவின்  ‘ரங்கம்மா மங்கம்மா’!

 

 
000_rangamma_song

 

சமந்தா, ராம்சரண் தேஜா நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவெங்கும் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ரங்கஸ்தலம்’. இப்படத்தின் இயக்குனர் சுகுமார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரங்கம்மா, மங்கம்மா’ பாடல் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரல் ஹிட்டான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இணையாகத் தற்போது இணையத்தில் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டு பலமுறை பகிரப்பட்டு வருகிறது.  இத்திரைப்படம் 1980 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் பீரியட் திரைப்படங்களில் ஒன்று என்றொரு தகவலிருக்கிறது. அது உண்மையா? வதந்தியா? எனப் படம் வெளிவந்தால் தெரியும்.

ரங்கஸ்தலத்தின் வைரல் ஹிட் ‘ரங்கம்மா, மங்கம்மா’ பாடல் டீஸர்;

 

இத்திரைப்படத்தின் நாயகன் சிட்டி பாபுவாக ராம்சரண் தேஜா நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் என நாயகி சமந்தா தெலுங்கு நேர்காணலொன்றில் சமீபத்தில் காண நேர்ந்தது. சமந்தாவுக்கு இத்திரைப்படத்தில் ராமலட்சுமி எனும் கிராமத்துப் பெண் வேடம். சமந்தாவை இதுவரை நாம் நகர்ப்புறத்து பப்ளி துறு துறு பெண் வேடங்களில் தான் கண்டிருப்போம். ஆனால், இத்திரைப்படத்தில் சமந்தா முற்றுலுமாக ராமலட்சுமியாகவே மாறி முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறாராம். படத்தின் பலமாக இயக்குனர் கருதுவது ராமலட்சுமி கதாபாத்திரத்தைத் தான். திருமணத்திற்குப் பின் சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல் திரைப்படம் என்ற பெருமையும் இத்திரைப்படத்துக்கு உண்டு. தெலுங்கில் ‘ஏ மாய சேஸாவே’ (தமிழ் விண்ணைத் தாண்டி வருவாயா’ வின் தெலுங்கு ரீமேக்’) திரைப்படத்தைத் தொடர்ந்து மனம், ஈகா (ஈ) திரைப்படங்களைத் தொடர்ந்து தனது நடைப்புத் திறனை வெளிக்கொணர வாய்ப்பளித்த திரைப்படங்களில் ரங்கஸ்தலமும் ஒன்று. இது எனது அதிர்ஷ்டம் என்று இத்திரைப்படம் குறித்து ஸ்மைலி பேட்டிகளைத் தட்டி விட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சமந்தா.

ஹாட்ஸ் ஆப் டு யூ புதுமருமகளே!

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

`கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?’ - கேள்விக்கு பதில் சொல்லும் கதை! #FeelGoodStory

 
 

 

பிரபல அமெரிக்க நடிகர் பிரெண்டென் ஃப்ரேஸசர் (Brendan Fraser) ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்...  `என் வாழ்க்கையில் நான் மிகுந்த திருப்தியை அடைந்துவிட்டேன். அழகான மனைவி வாய்த்திருக்கிறார்; சுவாரஸ்யமான தொழில் (Career), என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறது; நான் மிக மிக மகிழ்ச்சியான ஆள் என்பதையும் நான் அறிவேன்.’ பிரெண்டென் ஃப்ரேஸருக்குக் கிடைத்த மன நிறைவு யாருக்கும் எளிதில் வாய்க்காதது. இந்த நிறைவு கிடைப்பது வரம். கிடைத்த வாழ்க்கையில் திருப்தியடையாதவர்களுக்குத் தெரியாது... அவர்கள் இடத்தை அடைய எத்தனையோ லட்சம் பேர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது. எளிமையாக, அடக்கமாக, மகிழ்ச்சியாக, பிறர் மேல் கள்ளம் கபடமில்லாத அன்பு செலுத்தி வாழ்வதுதான் வாழ்க்கை. இப்படி வாழ்பவர்களுக்குத்தான் திருப்தி கிடைக்கும். ஆரோக்கியத்தோடு, அடிப்படைத் தேவைகளுக்குப் பிரச்னையில்லாமல், சுற்றம் சூழ திருப்தியாக வாழ்வது இருக்கட்டும்; மிகப் பெரும் துயரம், இன்னல்கள் ஏற்பட்டாலும், அவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு இயல்பாக வாழ்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரின் கதை இது. 

 

தன்னம்பிக்கை கதை

மூன்று `கிராண்ட் ஸ்லாம்’ பட்டம் (ஆஸ்திரேலியன் ஓப்பன், விம்பிள்டன், யு.எஸ்.ஓப்பன்) வென்ற டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷே (Arthur Ashe). அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை டீமில் (United States Davis Cup team) சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் கறுப்பின வீரர். அமெரிக்காவின் வர்ஜீனியாவிலிருக்கும் ரிச்மாண்டில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயது ஆன போது அம்மா இறந்து போனார். ஆர்தரும் அவருடைய தம்பியும் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். அப்பாவும் பிரமாதமான வேலையெல்லாம் பார்க்கவில்லை. குழாய் ரிப்பேரிலிருந்து, எலெக்ட்ரிக்கல் வேலை வரை கிடைக்கும் வேலைகளைச் செய்யும் கூலித்தொழிலாளி (Handyman). ஆனாலும், அக்கறையோடு பிள்ளைகளை வளர்த்தார். பல கறுப்பினக் குழந்தைகளின் பிடித்த விளையாட்டாக இருந்த கால்பந்து பக்கம் ஆர்தரின் கவனத்தைச் செல்லவிடாமல் தடுத்து, டென்னிஸில் ஆர்வம் ஏற்படச் செய்தார். 

ஆர்தருக்கு, ஜான்சன் என்கிற நல்ல கோச்சரும் கிடைத்தார். 1963-ம் ஆண்டு, அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் டீமில் சேர்ந்ததிலிருந்து ஆர்தருக்கு ஏறுமுகம்தான். பல பரிசுகள், பதக்கங்கள், கிராண்ட் ஸ்லாம் பட்டம்... வெற்றியில் ஏறிக்கொண்டிருந்தவருக்கு இடிபோல ஒரு துயரம் வந்து சேர்ந்தது. 1979-ம் ஆண்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக பைபாஸ் சர்ஜரியும் செய்துகொண்டார். இதய அறுவைசிகிச்சை நடந்து சில மாதங்கள் கழிந்த பிறகும்கூட அவரால் முன்பைப் போல ஓட முடியவில்லை. ஓடினால், மார்பில் வலி வந்தது. இதைச் சரிசெய்வதற்காக இன்னொரு இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டார். 1988-ம் ஆண்டு மற்றோர் இடி. அவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இதய அறுவைசிகிச்சை நடந்தபோது ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் இருந்திருக்கலாம் எனக் காரணம் சொல்லப்பட்டது. 1992-ம் ஆண்டு தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை பகிரங்கமாக அறிவித்தார் ஆர்தர். 

FeelGoodStory

ஆர்தர் ஆஷே-வுக்கு எய்ட்ஸ் இருந்ததோ, அதனால் அவர் உயிரிழந்தார் என்பதோகூடப் பெரிய செய்தியல்ல. அதை அவர் இயல்பாக எடுத்துக்கொண்டதுதான் நம்மை இன்றுவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் செய்தி. அவருக்கு இப்படியொரு கொடிய நோய் இருப்பதை அறிந்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்குக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆர்தர் பதிலெழுதுவார். 

ஒரு ரசிகரிடமிருந்து வந்த கடிதத்தில் இப்படி எழுதியிருந்தது... `இப்படி ஒரு மோசமான நோய்க்கு கடவுள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?’ 

அதற்கு ஆர்தர் ஆஷே பதிலெழுதினார்... ``ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் 50 லட்சம் குழந்தைகள்தான் முறையாக டென்னிஸ் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிலும் ஐந்து லட்சம் பேர்தான் தேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்களாகிறார்கள். அந்த ஐந்து லட்சம் பேரில் 50,000 பேர்தான் இந்த விளையாட்டில் தீவிரமாக இறங்குகிறார்கள். அவர்களிலும் 5,000 பேர்தான் கிராண்ட் ஸ்லாம் போட்டி வரைக்கும் வருகிறார்கள். அவர்களில் 50 பேர் விம்பிள்டன் வரைக்கும் தேறுகிறார்கள். கடைசியாக நான்கே நான்கு பேர் செமிஃபைனலிலும், இரண்டு பேர் ஃபைனலிலும் விளையாடுகிறார்கள். அந்த இருவரில் நான் வெற்றி பெற்று, கோப்பையைக் கையில் வாங்கியபோது, நான் கடவுளிடம் `என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்கவில்லை. இப்போது நான் வலியோடும் வேதனையோடும் இருக்கும்போது மட்டும் `கடவுளே என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்பது எப்படி நியாயம்?’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்:

 
25CHLRDUGADICELEBRATIONS

Visakhapatnam, Andhra Pradesh 18-03-2018: Artistes performing Kolatam as part of the Ugadi celebrations, organised by District Administration and the Department of Language and Culture, at VUDA Children Arena, in Visakhapatnam on Sunday. ---. Pphoto: C.V.Subrahmanyam.

கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

 

25CHLRDSARAH

சர்வதேச அளவில் சாலைகளில் பைக் ரேஸ் நடைபெறுவதுபோல் பாலைவனங்களில் நடைபெறும் பைக் ரேஸ் போட்டிகளைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதுபோன்ற பாலைவன பைக் ரேஸில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் முதல் பெண் சண்டிகரைச் சேர்ந்த சாரா காஷ்யப்.

25CHLRDJEMIMAHRODRIGUES

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இளம் புயலாக வலம்வருகிறார் 17 வயது ஜெமிமா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஜெமிமா சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

25CHLRDAGAINSTBILL

மத்திய அரசு கொண்டுவரவுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாதென உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த திருநங்கைகள் செல்வி, நேயா இருவருக்கும் தமிழக அரசு,நிரந்திர பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. அரசு வேலைக்கான வயது வரம்பை இந்த இருவரும் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. படம்: எம்.வேதன்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

நடமாடும்போதே மூளையை ஸ்கேன் செய்யும் புதிய சாதனம்

நோயாளிகள் நடமாடும்போது மூளையின் செயல்பாட்டை கண்டறியும் வகையில் புதிய ஸ்கேனர் கருவியை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்

சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கும் நாடகக்கலை! #WorldTheatreDay

 
 
Chennai: 

இன்றைய தமிழக அரசியலுக்கு, திராவிட சிந்தனைகளுக்கு நாடகங்களே முன்னோடி. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் பவர்ஃபுல் மீடியாவாக இருந்த நாடகக்கலை, சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கிறது. இன்று உலக நாடக தினம்!

ஆண்களைப் பார்த்து ஆண்கள் மேடைகளில் காதல் ரசம் சொட்ட பாடிக்கொண்டிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. ஆம், அப்போது நாடகங்களில் பெண்கள் நடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலகட்டம். நீண்ட தலைமுடிகள் வளர்த்து ஆண் நடிகர்களே பெண் குரலில்  பேசி நடித்து வந்தனர். வெகுஜன மக்களுக்கான பொழுது போக்கு அம்சமாக அப்போது நாடகங்களே இருந்தன. ஆரம்பகால  சினிமாக்களில் கூட பெண் வேடத்தில் ஆண்கள் நடித்துள்ளனர். மெள்ள மெள்ளதான் பெண்களும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். தமிழகத்தின் அரசியலுக்கு நாடகங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. எம்.ஆர். ராதா. அண்ணா. கலைஞர், எம.ஜி.ஆர், எனப் பலரும் நாடகங்களின் வழியே மக்களுக்கு அறிமுகமானவர்கள்.

 

 

நாடகம்

 நாடகங்கள் என்றவுடனே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பள்ளி நாடகங்களும், திருவிழாக்களின் நாடகங்களும்தான். பள்ளி ஆண்டு விழாக்களைக் கூட இன்று 'குறும்படங்கள்' ஆக்கிரமித்துவிட்டன. ஒருபுறம் நவீன நாடகங்களில் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய நவீன நாடகங்கள் குறிப்பிட்ட அறிவுசார் தளங்களில் இயங்குபவர்களுக்கு மட்டுமேயான ஒன்றாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாடகம் கிராம மக்களுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்தது.

 

நாடகம்

 

இன்றும் தமிழகத்தின் கிராமங்களில், ஊரின் மையப் பகுதியில் கோவிலுக்கு அருகில் நாடக மேடை ஒன்று வெறிச்சோடி காட்சியளிக்கும். கடந்த நிதியாண்டில் கட்டப்பட்டது என எம்.எல்.ஏ வின் பெயரை நீலநிறத்தில் கட்டம் போட்டு வெள்ளை பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.  பலருக்கும், ஆடு-புலி ஆட்டமோ, சீட்டோ விளையாடும் களமாகியிருக்கும் அந்த மேடை,  தமிழக கிராமங்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தது. அந்த மேடைகள்தான், தன் மகனையே தன் கைகளால் கொலை செய்ய நேர்கையில் கூட பொய் பேசாத அரிச்சந்திரனை , வள்ளியை முருகன் திருமணம் செய்ய பிள்ளையார் எப்படி தூது போனார் என்ற சுவாரஸ்யத்தை, மதுரைவீரன் ஏன் கடவுளானார் என்ற நிதர்சனத்தை, நல்லதங்காளின் வாழ்வை இன்னும் பல தெய்வங்களின் வரலாற்றை, ராஜ்பாட்களை, ஸ்த்ரிபாட்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், விடுதலை உணர்வை கிராம மக்களிடையே உண்டாக்க பகத்சிங்கள் தோன்றிய மேடைகள் அதுதான். முற்போக்குக் கருத்துகளை, கம்யூனிச சிந்தாந்தங்களை மக்களிடையே கொண்டு சேர்த்த பங்கு அந்த மேடைகளுக்கு உண்டு. ஊர்த் திருவிழாக்களின்போது, குடும்பம் குடும்பமாக கோரைப் பாய்களை மைதானத்தில் விரித்து, முறுக்கு. கடுங்காப்பி சகிதம் பப்பூன்களை, மாரியம்மன்களைப் பார்த்து சிரித்து, சிலிர்த்து அதிகாலையில் வீடு திரும்பிய நினைவலைகளை அந்த நாடக மேடைகள் தாங்கி நிற்கின்றன. பிற்காலத்தில், ஒரு சாமி படமும், ரசிகர் மன்றங்களின் சார்பில் இரண்டு திரைப்படங்களும் கோவிலின் சுவரில் திரைகட்டி ஒலிபரப்ப ஆரம்பித்தனர். அப்போதே ராஜபாட்களும், ஸ்த்ரீபாட்களும் மீசை சகிதம் முழுக்க ஷேவிங் செய்த முகத்துடன், நீண்டு வளர்த்த தலைமுடியுடன் சமையல்காரர்களாகவும், கொத்தனார்களாகவும் மாறிப்போனார்கள். ப்ப்பூன்கள் அவ்வப்போது அரசியல் கூட்டங்களில் ஆரம்ப நேர கலகலப்பிற்கும், கரகாட்டத்தின் இரட்டை அர்த்த வசனத்திற்கும் தங்கள் திறமையை ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். அதனை விரும்பாத பலர் ஸ்பின்னிங் மில்களுக்குச் சாப்பாட்டுக் கூடையுடன் வேலைக்குச் செல்கிறார்கள்.

நாடகம்

 தற்போது  நாடகக் கலை வளர்ச்சியடைந்துவிட்டது நவீன நாடகங்கள் வரத் தொடங்கிவிட்டன. பல மாத ஒத்திகை பார்த்து வித்தியாசமான ஒளி மற்றும் ஒலியமைப்புடன் நவீன நாடகங்கள் இன்று தலைநகர்களின் முக்கிய இடங்களில் அவ்வப்போது நடைபெறுகின்றன. எழுத்தாளர்களின் சிறுகதைகளை , சமூக விழிப்புஉணர்வு கருத்துகளை, தனிமனித அவலங்களை நேர்த்தியான உடல்மொழி, வசனங்கள், இசையுடன் மேடைகளில் அரங்கேற்றும் நாடகக் கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். டெல்லி மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பல்கலைக்கழகங்கள் உட்பட பல கல்லூரிகளில் நாடகக் கலை ஒரு படிப்பாக வைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் தெருக்களையே மேடைகளாக்கி கலைஞர்கள் பலர் 'வீதி நாடகம் ' போடுவதை நாம் பார்த்திருப்போம். திரைப்படங்கள் மக்களின் அன்றாடங்களில் ஒன்றாகிப் போனதாலும், திரைத்துறையைப் போல பெரும் பணம் புலங்காததும் நாடகங்கள் இன்று வெகுஜன மக்களைவிட்டு சற்று விலகியிருக்கிறது என்பதே உண்மை. ஹாலிவுட்டில் இன்றும் திரைப்படங்களைப் போன்றே நாடகங்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. திரை நட்சத்திரங்களுக்கு நிகராக நாடகக் கலைஞர்களுக்கும் ரசிகர்பட்டாளம் இருக்கிறது. ஆனால், நமது சமூகத்தில் அப்படியான ஒரு சூழல் இல்லை. ஐ.டி துறைகளில், மார்க்கெட்டிங் துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் இன்று ஆர்வத்தின் பேரில், பகுதி நேர நாடகக் கலைஞர்களாகப் பயிற்சி பெற்று நடித்து வருகிறார்கள். நிகழ்த்து கலையான நாடகங்கள் அவ்வளவு எளிதான கலை இல்லை. கிரிக்கெட்டை போல தருணத்தைத் தவறவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டிய ஒன்று. ஒலியமைப்பு, ஒளியமைப்பு , வசனம் , நடிப்பு என அனைத்துமே நேரடியாக மக்களுக்கு முன் அரங்கேறும்போது அது கடத்தும் அனுபவம் அலாதியானது. அதற்கான அதீத பொறுப்புணர்வு நாடகக் கலைஞர்களுக்குத் தேவை. சினிமா ஷீட்டிங்கைப் போல ரீ-டேக் களுக்கு வாய்பே இல்லை. நாடகங்கள் குறித்து ஒரு தட்டையான மதீப்பீடு ஒன்று பெருவாரியானவர்களிடம் உண்டு. அது, சினிமாவில் நடிக்கப் போவதற்கான ஒரு பயிற்சிக் களமாக நாடகம் பார்க்கப்படுவது. அதை முன்னணி நாடகக் கலைஞர்கள் பலரும் மறுத்துவருகிறார்கள்.

நாடகம்

 

 

ஆரம்பகாலகட்டத்தில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், M.R. ராதா, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் பலரும் நாடக மேடைகளிலிருந்து திரைக்கு வந்தவர்கள் என்பதால், நாடகக் கலை சினிமாவிற்கான முதற்படி என்ற பொதுப் பார்வை தவறானது. நாடகம் சினிமாவைப் போல தனிக்கலை. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட நாடகக் கலையின் முன்னோடிகள் பலர் வாழந்துள்ளனர். பல்வேறு சபாக்களில் நாடகங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கட்டணம் கொடுத்து விடிய விடிய நாடகங்கள் பார்த்த காலம் இன்று வழக்கொழிந்து விட்டது. இலவசமாக அரங்கேற்றப்படும் நாடகங்களுக்குக் கூட இன்று மக்கள் திரள் வருவதில்லை. வேஷம் தரித்த கலைஞர்கள் தங்களின் கலையைக் காப்பாற்ற, வானம் அதிர ஒலிக்கும் இசைக்கேற்ப தன் நடிப்பை காற்றில் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிச்சனில் டாய்லட்... அறையின் வாடகை 25 ஆயிரம்... 'பள பள' ஹாங்காங்கின் இருண்ட பக்கம்!

 
 

யில் பர்த் போல ஒரு சிறிய படுக்கை.  பெட்டுக்கு முன் சிறிய டி.வி. சாப்பிட்ட தட்டுகள் கால்களுக்கிடையே கிடக்கின்றன. இரு பக்கங்களிலும் பொருள்கள் தாறுமாறக இறைந்துள்ளன.. உடைகள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. சமையல் அறைக்குள்ளேயே கழிவறை.... இப்படியும் ஒரு வீடு... அதிலும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இது ஏதோ மும்பை தாராவி என்று நினைத்து விடாதீர்கள். உலகிலேயே அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் ஓடும் 'பளபள' ஹாங்காங் நகரத்தின் இருண்ட பக்கத்தை காட்டும் கல்லறை வீடுகள்தாம் இவை.  'coffin Cubicles’ என்று அழைக்கப்படும் இந்த மினியேச்சர் வீடுகளை ஒரு முறை சென்று பார்த்தால் 'மனித வாழ்க்கை இவ்வளவு துயரம் நிரம்பியதா? என வெறுமை சூழ்ந்து கொள்ளும். 

ஹாங்காங்கின் கல்லறை வீடுகள்

 

photo :  Kin Cheung /AP

ஹாங்காங் என்றதும் ஜாக்கிசானும் வானுயர்ந்த கட்டடங்களும்தான் நினைவுக்கு வரும். ஷாங்காய் நகரம் உருவாவதற்கு முன் சீனாவின் மிக முக்கிய துறைமுக நகரம் இது. சுற்றுலாவால் வளம் கொழிக்கும் பூமி. இரவில் பார்த்தால் நியூயார்க் நகரம் தோற்றுவிடும். அவ்வளவு  அழகுடன்  மின்மினி பூச்சியாக மின்னும். பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில்தான் ஹாங்காங் நகரம் பிரமாண்ட வளர்ச்சியை எட்டியது. 1997- ம் ஆண்டு ஹாங்காங் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது,  காஷ்மீர் போல தனி அந்தஸ்துடன் ஹாங்காங் நகரம் சீனாவுடன் உள்ளது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில்,  பணக்காரர்களிடத்திலேயே செல்வம் மேலும் மேலும் சேர்வதால், சம நிலை வருவாய் இல்லாத மக்கள் அதிகம்.  

செல்வச்செழிப்புமிக்க ஹாங்காங் நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு. ஏழை மக்கள் வாடகை கொடுத்து வசிப்பது எல்லாம் கடினமான காரியம். இதனால், ஹாங்காங் நகரில் 2 லட்சம் மக்களுக்குக் கல்லறை வீடுகள்தாம் கூண்டு. அதில், 40 ஆயிரம் சிறார்களும் இருக்கிறார்கள். புறாக்கூண்டில் பார்ட்னர்ஷிப் போலத்தான் பல குடும்பத்தினரின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. சுமார்  6’ x 2.5’  என்ற அளவுள்ள பகுதிக்குள் பெட், டி.வி., கழிவறை, கிச்சன் எல்லாமே சேர்ந்தே இருக்கிறது.  400 சதுர அடி கொண்ட வீடு 20 பேர் வாழக்கூடிய கல்லறை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. கல்லறை வீட்டுக்கு வாடகை கேட்டால் தலை சுற்றி விடும். மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை கட்டினால்தான் கல்லறை வீடு கூட உங்களுக்குக் கிடைக்கும். 

ஹாங்காங்கின் அழகிய தோற்றம்

பொதுவாக ஹாங்காங்கின் அடித்தட்டு மக்கள்தாம் கல்லறை வீடுகளில் வசிக்கின்றனர். வெயிட்டர்கள், காவலாளிகள், சலவைத் தொழிலாளி, சவரக்கடைக்காரர் போன்றவர்களுக்குக் கல்லறை வீடுகள் மட்டுமே கதி. 1950- ம் ஆண்டு முதலே ஹாங்காங்கில் கல்லறை வீடுகளில் மக்கள் வசிக்கத் தொடங்கியுள்ளனர். சீனாவிலிருந்து வந்த தொழிலாளர்கள்தாம் முதலில் குடியேறினர். ஹாங்காங் பணக்கார நகரமாக இருந்தாலும் ஆறில் ஒரு ஹாங்காங்வாசி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளார். வாங்கும் சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கே போய் விடும்.  

ஹாங்காங்கில் கல்லறை வீட்டில் வசிப்பதை விட ஏதாவறு குற்றம் செய்து விட்டு சிறைக்குச் சென்று சொகுசாக வாழலாம் என்று கூட காமெடிக்குச் சொல்வார்கள். ஏனென்றால்,  சிறைவாசிகளுக்குக் கூட அங்கே நல்ல அகலமான அறையில் சுகாதாரமான முறையில் வாழ முடியும். கடந்த 2015- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஹாங்காங்கில் 88 ஆயிரம் கல்லறை வீடுகள் உள்ளன. ஐ.நா அமைப்பு ,`கல்லறை வீடுகள் மனித குலத்துக்கே இழுக்கு. கல்லறை வீடு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தது. எனினும் ஹாங்காங் அரசால் கல்லறை வீடுகளை ஒழிக்க முடியவில்லை. கல்லறை வீட்டுவாசிகளுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு கல்லறை வீடுகளும் துயரம் நிறைந்தது!

ஹாங்காங் நகரின் கல்லறை வீடுகள்

photo;  benny lam

நோயாளியான தாயைக் காப்பாற்றப் போராடும் மகன் , சகோதரியைப் படிக்க வைக்கும் சகோதரன், பெற்றோரை இழந்த பேரனை வளர்க்கும் தாத்தா, வாயோதிகத்துடனும் நோயுடனும் போராடும் மூதாட்டி, கணவரை இழந்து குழந்தைகளுடன் தவிக்கும் தாய், இன்றாவது வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்த கண்களுடன் வாழும் இளைஞர்கள்... இவர்கள்தாம் கல்லறை வீடுகளின் அங்கத்தினர். `நேஷனல் ஜியராகிரபி' சேனலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பென்னி லாம், ஒரு முறை கல்லறை வீடுகளைப் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தார். 'அன்றைய தினத்தில இரவு முழுவதும் மனித வாழ்க்கையை நினைத்து நான் அழுது கொண்டே இருந்தேன்'' என ஃபேஸ்புக்கில் மிகுந்த வேதனையுடன் கல்லறை வீடுகள் குறித்து பென்னி லாம் பதிவிட்டிருந்தார்.

வாழ்க்கை முடிந்த பிறகு கல்லறையை நோக்கிப் பயணிப்போம்...இங்கே  கல்லறையில் வாழ்வதே சிலருக்கு வாழ்க்கையாகிவிடுகிறது!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘தொலைக்க வேண்டியதை அணைக்கலாகாது’
 

image_7fdc6e9c6f.jpgமனத்துக்கும் அழகுக்கும் சம்பந்தம் இருக்கின்றது. நெஞ்சில் எந்த விதமான சலனமும் இன்றி வாழ்பவர்கள், அழுத்தங்களைக் களைந்து எறிபவர்களாகின்றனர். 

எனவே, முகம் எந்நேரமும் பிரகாசித்த வண்ணம் இருக்கும். இதனால் தேகமும் வலுப்பெற்றுப் புன்னகை தவளும் படியாகத் தங்களை உருவாக்குகின்றார்கள். 

இதனாலேயே, அழகு பெருகுகின்றது. வயது முதிர்ந்தவர்கள் கூடத் தெளிவுடன் வாழ்ந்தால், பராயம் முதிர்வதே தெரியாது. மாறாத, இளமை குன்றாது, அதிசயப் பிறவிபோல் தோற்றம் காட்டி நிற்பர். 

கவலைகளைக் கழற்றுவது எளிதன்று. ஆனால், அவைகளைச் சுமந்து, எவ்வளவு காலத்துக்கு வாழப்போகின்றீர்கள்? துன்பங்கள் சூழாத வாழ்க்கையுண்டோ? 

துன்பம் போய்விடத் தயாராக இருந்தாலும், அதை விட்டுவிட விரும்பாத மனிதர்கள், அடுத்து அதிலிருந்து மீண்டுவர எண்ணம் கொள்ள வேண்டுமல்லவா? தொலைக்க வேண்டியதை அணைக்கலாகாது.புரிந்து கொள்க.

  • தொடங்கியவர்

தமிழுலகுக்கு பெருமை தேடி தந்த விபுலானந்த அடிகளார்

 

 

SWAMI_26032018_SPP_GRY.jpg

அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து 126 வருடங்களாகின்றன.இன்று 27ம் திகதி அடிகளாரின் பிறந்த தினம் ஆகும்.

கிழக்கின் காரைதீவு பழந்தமிழ்க் கிராமத்தில் அடிகளார் பிறந்தார்.

சாமித்தம்பி_ கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-.03-.27 அன்று அடிகளாரைப் பெற்றெடுத்தனர்.

அடிகளாரின் இயற்பெயர் தம்பிப்பிள்ளை. அவர் நோய்வாய்ப்படவே கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று விரதம் அனுஷ்டித்து நோய் குணமாகவே முருகப் பெருமானின் பெயரான 'மயில்வாகனன்' எனும் பெயரை அவருக்குப் பெற்றோர் சூட்டினர்.அதனால் அவரது பிறப்புப் பதிவு தாமதமாயிற்று. ஆதலால் அவரது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மேமாதத்தில்தான் பதிவு வைக்கப்பட்டது. அதற்காக அவர் மே மாதம் பிறந்தவர் என்று தவறாகக் கொள்வோரும் உள்ளனர்.

கிழக்கில் உதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ்மொழியின் எழிலைப் பரப்பியவர் சுவாமி விபுலானந்தர். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி பலகோணங்களிலும் உலக அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

இலங்கையில் தோன்றிய பல தமிழறிஞர்கள் தமிழகத்திற்குச் சென்று சைவ மடங்களில் தங்கி நூலறிவைத் துறைபோகப் பெற்றனர். மேலும் அவர்கள் பல நூல்களை இயற்றியும் அச்சிட்டும் வெளியிட்டனர். அவர்களில் சிவஞான சித்தியார்க்கு உரை எழுதிய ஞானப்பிரகாசர், தமிழ் நூல்களை பிழையறப் பதிப்பித்த ஆறுமுக நாவலர், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய முதலில் வழிகாட்டிய சபாபதி நாவலர், தமிழ் அகராதிக் கலைப்புலவர் கதிரவேற்பிள்ளை முதலியோர் சிறந்து விளங்கினர்.

இவர்கள் அனைவரையும் விட ஒரு படி மேலே செல்கிறார் 'யாழ்நூல்' என்னும் அரிய இசைத்தமிழ் நூலையும் 'மதங்க சூளாமணி' முதலிய நாடகத் தமிழ் நூலையும், மேலும் பல நூற்றுக்கணக்கான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கவிதைகளையும் தமிழ் உலகிற்குத் தந்த சுவாமி விபுலானந்தர்.

இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்பன முத்தமிழ் எனப்படும். மக்களுக்கு எண்ணத்தை ஊட்டுவது இயற்றமிழ்; உணர்ச்சியை ஊட்டுவது இசைத் தமிழ்; நல்வழி காட்டுவது நாடகத் தமிழ்.

இவ்வாறு நாட்டின் நலனையும் மக்களின் ஒழுக்கத்தையும் கருதியே தமிழுக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் தமிழை மூவகைப்படுத்தினர். அத்தகைய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால் 'முத்தமிழ் வித்தகர்' எனப் போற்றப்பட்டவர் நம் விபுலானந்த அடிகளார்.

விபுலானந்த அடிகள் 19-.07-.1947இல் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1948இல் வெளிவந்த 'ஈழமணி' பத்திரிகையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு அடிகளாரை நினைவுகூருகிறார்.

'சங்கத் தமிழ் கேட்க வேண்டுமானால் இருவரிடம் கேட்க வேண்டும். ஒருவர் பெரும் பேராசிரியர் சாமிநாதையர். மற்றொருவர் விபுலானந்தர்.'

அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்' சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.

இராமகிருஷ்ண சங்கம் பல ஆன்மிக ஞானிகளை உலகிற்கு அளித்திருந்தாலும் வீரத் துறவி விவேகானந்தருக்கும் தமிழிசைத் துறவி விபுலானந்தருக்கும் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்றே கூற வேண்டும்.

'சிலப்பதிகாரம் வெளிவந்த அந்த ஆண்டிலே யானும் பிறந்ததினாலே பள்ளியிற் படிக்குங் காலத்திலே மூத்தோர் கையிலே அந்நூற் பிரதியிருக்கக் காண்பதும் என் கையினாலே அதனைத் தீண்டுவதும் எனக்குப் பேருவைகையினைத் தரும் செயல்களாக இருந்தன' என்று அடிகளே கூறுகிறார். (யாழ் நூல் ப.29)

'அஃதன்றியும், ஈழநாட்டின் குணபாலிலே என் முன்னோர்க்கு உறைவிடமாகிய காரேறு தீவிலே கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வழிவந்த மன்னர்களாலே நிறுவப்பட்ட பைழமையான கண்ணகியார் கோயில் ஒன்று உள்ளது. அதன் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் மீதுள்ள ஆர்வம் பெருகியது' என்கிறார் அடிகள் (யாழ். நூல் ப.29)

தமிழகத்தில் புகுந்த பிமொழிகளின் இசை ஆதிக்கத்தால் தமிழ் இசை தேய்பிறையானது; யாழ்க் கருவியும் தமிழகத்தில் இருந்து மறைந்து போயிற்று.

தமிழிசைக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை விபுலானந்த அடிகள் மிகவும் வேதனையோடு தமக்கே உரிய இனிய தமிழ் நடையில் யாழ்நூலின் பின்வருமாறு விளக்குகிறார்:-

'முன்னாளிலே பாணன் கையிலும் பாடினி கையிலும் இருந்த யாழ்க் கருவியானது இளங்கோவடிகள் காலத்தில் இசையாசிரியன் கையிலும் நாடக மகள் கையிலும் போய்ச் சேர்ந்து விட்டது.

அதற்கேற்ப அக்கருவியும் 'சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின் மலர் புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம் போல் வனப்பெய்தி' விளங்கியது.ஆளுடைய பிள்ளையார் காலத்தில் தெய்வம் ஈந்த பொற்பலகை மீதேறி அன்பருள்ளத்தை உருக்கிய அருட் கவியாயிற்று.

கொங்குவேளும் திருத்தக்க தேவரும் நூலெழுதிய காலத்தில் அரசிளங் குமரிகள் கையேறி அவர் விரும்பிய காதலரை அவருக்கு அளிக்குங் கருவியாயிற்று. பெருமை பொருந்திய யாழிசைக் கருவி மறைந்ததோடு அதன் வழி எழுந்த பண் மரபும் மறைந்து போயிற்று. யாழ் வாசித்த பாணனுந் தன் தொழிலை இழந்து விட்டான்' என மனம் மிக வருந்துகிறார் .

இந்தச் சந்தர்ப்பத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி 1893இல் அமெரிக்காவில் வாழ்ந்த தலைசிறந்த தத்துவஞானி ஜே.எச்.ரைட் என்பவர் தெரிவித்த கருத்தை இங்கு கூறுவது பொருத்தமாகும்.

'அமெரிக்க நாட்டின் நல்லறிஞர்கள் அனைவருமே ஒன்று திரண்டு நின்றாலும் கல்வியில் சுவாமி விவேகானந்தருக்கு ஒப்பாக மாட்டார்கள்'

இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.

அடிகளாரின் நீண்ட நாளைய இசை ஆராய்ச்சிப் பணி 1947இல் 'யாழ் நூல்' என உருப்பெற்றது. கரந்தைத் தமிழச் சங்கத்தின் ஆதரவில் திருக்கொள்ளும் புதூர் ஆலயத்தில் 20-.06.-1947,21.-06-.1947 ஆகிய இரு தினங்களிலும் 'யாழ்நூல்' அரங்கேற்ற விழா நடந்தேறியது. அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.

விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது.

இறைவனின் திருப்பாதங்களில் சூட்டப்படவேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகிறார் அடிகள்:

'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ...' என்பதே அப்பாடல்.உள்ளக் கமலமே இறைவன் வேண்டுவது என்பதே அடிகளாரின் கருத்தாகும்.

http://www.thinakaran.lk

  • தொடங்கியவர்

காலம் முழுக்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை? - பாடம் சொல்லும் கதை! #FeelGoodStory

 
 

கதை

`வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வாழ்க்கைத் துணையை திரும்பத் திரும்ப, ஏராளமான முறை காதலிக்க வேண்டும்’ - திருமண வாழ்க்கைக்குப் புது அர்த்தம் சொல்லிச் சென்றிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மிக்னான் மெக்லாஹ்லின் (Mignon McLaughlin). வாழ்க்கைத்துணையின் மேல் கடைசிவரை காதல் இல்லாமல் போவதுதான் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருப்போம், மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்போம், எரிச்சலுக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருப்போம்... இவற்றையெல்லாம் நாம் திரும்ப நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு ஒளிமயமான, அழகான, அற்புதமான ஒரு காலம் இருந்திருக்கும். அதைத்தான் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். மண வாழ்க்கைக்கு இந்த மனப்பான்மை மிக மிக அவசியம். நம்மில் யாருமே மிகச் சரியானவர்கள் கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குறை நிச்சயமிருக்கும். அந்தக் குறைகளோடு நம்மை அங்கீகரிப்பவர்கள்தான் நம்மிடம் மாறாத நேசம் கொண்டிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை விட்டுக்கொடுத்துப் போகும் மனோபாவம். விட்டுக்கொடுத்துப் போவது நம் எல்லோருக்குமே எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் கதை இது.

 

தேவாலயம்

அது, ஒரு தேவாலயம். அன்றைக்கு அங்கே ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை இளைஞன், கருநீல பேன்ட்டும், கோட்டும் அணிந்து கந்தர்வனைப்போல் காட்சியளித்தான். மணப்பெண், வெள்ளை நிற கவுனில் ஒரு தேவதையாகத் தெரிந்தாள். இருவரும் அழகோ அழகு! `பொருத்தமான ஜோடி’ என்று வந்தவர்களெல்லாம் பேசிக்கொண்டார்கள்.  இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். நட்பாக ஆரம்பித்த உறவு, திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இருவருக்குமே வாழ்க்கைத்துணை பொருத்தமாக அமைந்தது என்கிற எண்ணம் ஒரு பெருமிதத்தைத் தந்திருந்தது.

சில மாதங்கள் கழிந்தன. ஒரு மாலை நேரம். அந்தப் பெண் தன் கணவனிடம் வந்தாள். ``ஏங்க ஒரு விஷயம்...’’

``சொல்லுப்பா...’’

``இன்னிக்கி ஒரு பத்திரிகையில ஒரு கட்டுரை படிச்சேன். அதாவது, `உறுதியான திருமண வாழ்க்கையை மேற்கொள்வது எப்படி?’-ங்கிறதுதான் அந்தக் கட்டுரையோட தலைப்பு. அதுல ஒரு முக்கியமான பாயின்ட் சொல்லியிருந்தாங்க...’’ அவள் தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தாள். ``உங்களுக்கு என் மேலயோ, எனக்கு உங்க மேலயோ எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துற விஷயங்களையெல்லாம் ஒரு லிஸ்ட்டா எழுதணுமாம். அதைப் படிச்சுப் பார்த்துட்டு, அந்தக் குறைகளையெல்லாம் எப்படிச் சரிபண்றதுனு ரெண்டு பேரும் பேசித் தீர்க்கணுமாம். அந்தக் குறைகளையெல்லாம் களைஞ்சுட்டாலே நம்ம திருமண வாழ்க்கை அற்புதமானதா மாறிடுமாம்...’’

காதல்

கணவன், அவள் சொல்வதை கவனமாக `உம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான். 

``நாம ரெண்டு பேரும் அப்படி ஒரு லிஸ்ட்டை எழுதுவோமா... நான், எனக்கு உங்க மேல இருக்குற குறையையெல்லாம் பட்டியல் போடுறேன். அதே மாதிரி நீங்களும் என்கிட்ட பிடிக்காததையெல்லாம் எழுதுங்க... என்ன ஓ.கேவா?’’

கணவன் அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் தனித்தனி அறைக்குள் நுழைந்தார்கள். மனைவி, தன்னை கணவன் எரிச்சல்படுத்திய, கோபப்படுத்திய சம்பவங்களையெல்லாம் அசைபோட்டாள். அவனிடம் அவளுக்குப் பிடிக்காததையெல்லாம் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். கணவனும் மனைவியிடம் பிடிக்காததையெல்லாம் யோசித்தபடி இருந்தான்.

அடுத்த நாள் காலை, இருவரும் காலை டிபன் பொழுதில், டைனிங் டேபிளில் சந்தித்துக்கொண்டார்கள். ``என்னங்க... நேத்து நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல... லிஸ்ட் ரெடி பண்ணிட்டீங்களா?’’

`ஆமாம்’ எனத் தலையசைத்தான் கணவன்.

``முதல்ல நீங்க லிஸ்ட்டைப் படிக்கிறீங்களா, நான் படிக்கட்டுமா?’’

``நீயே படி.’’

அவள் அந்த பேப்பரை எடுத்தாள். கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு அவளிடம் `குறைகள் பட்டியல்’ இருந்தது. அவள் கணவனிடம் அவளுக்குப் பிடிக்காத ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க ஆரம்பித்தாள். அவள் படிக்கப் படிக்க, கணவனின் கண்களில் நீர் நிறைந்துபோனது. அவன் முகத்தைப் பார்த்தவள், ``என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.

கணவன் மனைவி

``ஒண்ணுமில்லை. நீ படி...’’

அவள் மேலே தொடர்ந்தாள். தன் கையில் வைத்திருந்த மூன்று பக்க குறைப் பட்டியலையும் படித்து முடித்தாள். பிறகு, அந்த பேப்பரை மடித்து, கணவனிடம் கொடுத்தாள்.

``சரி... இப்போ நீங்க உங்க லிஸ்ட்டை எடுத்துப் படிங்க. அப்புறமா ரெண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வருவோம்...’’

கணவன் சொன்னான்... ``நீ வெச்சிருக்குற மாதிரி என்கிட்ட எந்த லிஸ்ட்டும் இல்லை. நான் முதன்முதல்ல உன்னை எப்படி அன்போட, காதலோட பார்த்தேனோ அப்படியேதான் இப்பவும் நீ இருக்கே. எனக்காக நீ எதையும் மாத்திக்கவேண்டிய அவசியமில்லை. நீ அழகானவ, அன்பானவ. எனக்காக உன்னோட எந்த நடவடிக்கையையும் மாத்திக்க வேண்டாம். ப்ளீஸ்...’’

அவளுக்கு அப்போதுதான் தன் கணவன், தன் மேல் வைத்திருக்கும் அன்பின், காதலின் ஆழம் புரிந்தது. இப்போது அவள் கண்களிலும் நீர் திரள ஆரம்பித்திருந்தது.

***

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.