Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர்-யூரி ககாரின்

பூமியிலிருந்து விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதரான ரஷ்யாவின் யூரி ககாரினின் நினைவு நாள் குறித்த சிறப்புச் செய்தி.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காட்டு யானைக்கு புகைப்பழக்கமா? திகைக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்

காட்டு யானை ஒன்று வாயிலிருந்து புகையை உமிழும் காணொளி இந்தியாவிலுள்ள வனவிலங்கு வல்லுநர்களை திகைக்க வைத்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த வினய் குமார் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் இந்த 48 விநாடிகள் ஓடும் காணொளியை 2016 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் அலுவல் ரீதியாக மேற்கொண்டிருந்த பயணத்தின்போது நாகர்ஹோல் வனப்பகுதியில் எடுத்துள்ளார்.

இதன் முக்கியத்துவம் தெரியாதததால் அப்போதே இந்த காணொளியை வெளியிடவில்லை என்று பிபிசியிடம் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

காட்டு யானை ஏன் புகையை உமிழ்கிறது என்பது புரியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒரு காட்டு யானை இதுபோன்ற செய்கையில் ஈடுபடுவது போன்ற காணொளி வெளியாவது இதுவே முதல்முறை என்றும், இந்த காணொளி வல்லுநர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்றும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பொம்மைகளின் கதை: கண்களை உருட்டும் ஷோன்ஹட்!

28chsujdollsjpg

ஷோன்ஹட் பொம்மையின் தலையைத் திருப்பலாம். காலை மடக்கி உட்கார வைக்கலாம். நம் விருப்பம்போல் கையாளும் இந்தப் பொம்மைகள் மரத்தால் செய்யப்பட்டவை.

ஷோன்ஹட் பொம்மைகளை உருவாக்கிய ஆல்பர்ட் ஷோன்ஹட்டின் சொந்த நாடு ஜெர்மனி. 1911-ல் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் குடியேறினார். மரத்தில் பியானோ பொம்மைகளைச் செய்துவந்த குடும்பத்தின் மூன்றாவது தலைமுறைக் கை வினைஞர் ஆல்பர்ட். ஹம்டி டம்டி சர்க்கஸ், ரிங்மாஸ்டர், லேடி சர்க்கஸ் ரைடர் ஆகிய பொம்மைகள் இவர் உருவாக்கியவையே. இவற்றை வாங்கிய குழந்தைகள் வழியாகவே புகழ்பெற்றன.

28chsujdolls2jpg

அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ்வுட் மரத்திலிருந்து பொம்மையின் முகத்தை நேர்த்தியாகச் செதுக்கி எடுப்பார். அதிகபட்ச வெப்பமும் அழுத்தமும் கொடுத்து பொம்மையின் முகத்தை வழுவழுப்பாக மாற்றுவார்.

கண்களும் செதுக்கி உருவாக்கப்பட்டவைதான். ஆனால் கண்ணாடிக் கண்களைப்போல பளபளக்கும். பொம்மையின் முடியும் மரத்தில் செதுக்கப்பட்டு வண்ணம் கொடுக்கப்படும்.

கை, கால்களைத் தனியாகச் செய்து மடக்கி அசைக்கும்படி ரப்பரால் இணைக்கப்படும். காலப்போக்கில் பொம்மைகளின் வலுவுக்காகவும் வெகுதூரம் பயணிப்பதற்காகவும் எஃகு ஸ்பிரிங்குகளும் வைக்கப்பட்டன.

ஷோன்ஹட் நிறுவனம் செய்த பொம்மைகள் முதலில் 16 அங்குலம் நீளம் இருந்தன. அதன் தலையை வடிவமைத்தவர் இத்தாலிய சிற்பி கிராஜியானோ.

1915-ம் ஆண்டு தம்பியுடன் சேர்ந்து ஷோன்ஹட் அறிமுகப்படுத்திய இரண்டு குழந்தை பொம்மைகள் புகழ்பெற்றன. குறும்பு முகம் கொண்ட ஸ்கிக்கல்-பிரிட்ஸ், அழுமூஞ்சி டூட்சி வூட்சி பொம்மைகள்தான் அவை. 15 அங்குலம் உயரத்தில் இருந்தன. வெள்ளை லினன் சூட், தொப்பி அணிந்த ‘பஸ்டர் ப்ரவுன்’ பொம்மையும் புகழ்பெற்றது. இதன் உயரம் 21 அங்குலம்.

 

28chsujdolls1jpg
கண்களை அசைத்த பொம்மைகள்!

1919-ல் ஷோன்ஹட் சகோதரர்கள் செய்த பொம்மைகளின் மரக்கண்கள் அசையத் தொடங்கின. ஆனால் முதல் உலகப் போர் முடிந்து அமெரிக்கா மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தது. அதனால் கடைகளில் ஷோன்ஹட் பொம்மைகள் வாங்கப்படாமல் அலமாரிகளிலேயே காத்திருந்தன.

ஜெர்மனியிலிருந்து விலை மலிவான பொம்மைகள் அமெரிக்காவுக்கு வந்தன. அதனாலும் ஷோன்ஹட் பொம்மைகளை வாங்க ஆள் இல்லாமல் போனது. செலுலாய்ட் போன்ற எடை குறைவான பொருட்களில் செய்யப்பட்ட மென்மையான பொம்மைகள் ஏராளமாக வந்தன. அதிக எடைகொண்ட ஷோன்ஹட் பொம்மைகளுக்கு மதிப்பும் குறைந்தது.

1924-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஷோன்ஹட் பொம்மைகூட செய்யப்படவேயில்லை.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாஹு 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள்: மார்ச் 29- 2005

 

யாஹு 2005-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி 360 டிகிரி சேவையை முதன்முதலில் தொடங்கியது. இதே தேதியில் நிழந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1945 - இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது. * 1971 - மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

 
யாஹு 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள்: மார்ச் 29- 2005
 
யாஹு 2005-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி 360 டிகிரி சேவையை முதன்முதலில் தொடங்கியது.

இதே தேதியில் நிழந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1945 - இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது. * 1971 - மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

* 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர். * 1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. * 2004 - பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன. * 2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.

* 2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது. * 2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது. * 2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

புகையிலை தடை செய்த முதல் நாடு அயர்லாந்து: மார்ச் 29- 2004

 

அயர்லாந்து அரசு 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை வித்தது. இதன்மூலம் வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை அயர்லாந்து பெற்றது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார். * 1831 - துருக்கிக்கு எதிராக

 
 
 
 
புகையிலை தடை செய்த முதல் நாடு அயர்லாந்து: மார்ச் 29- 2004
 
அயர்லாந்து அரசு 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை வித்தது. இதன்மூலம் வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை அயர்லாந்து பெற்றது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார். * 1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது. * 1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது. * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

* 1867 - கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1-ல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரசு ஒப்புதலை அளித்தார். * 1879 - ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர். * 1886 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலகிலேயே பயமில்லாதவர்கள் யார் தெரியுமா? - அடையாளம் காட்டும் கதை #FeelGoodStory

 
 

உன்னை அறிந்தால்

`சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம்பிக்கையோடிருங்கள். ஏனென்றால், அவற்றில்தான் உங்களின் பலம் உறைந்துகிடக்கிறது’ - ஒரு மாபெரும் விஷயத்தை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார் அன்னை தெரஸா. ஒருவர் மீது முழு நம்பிக்கை வைப்பதுகூட ஒருவகையில் நமக்கு ஆற்றலைத் தரும் என்பது உண்மையே! இதைத்தான் `நம்பினார் கெடுவதில்லை’ என்கிறது ஒரு மூதுரை. நம்பிக்கையின் சக்தி தெரிந்துவிட்டால், நாம் எதற்கும் கலங்க மாட்டோம். பிரச்னைகள் ஏற்பட்டால், ஏதோ ஓர் அதிசயம் நடக்கும், நம்மை தேவதைகள் வந்து காப்பாற்றும் போன்ற எண்ணமெல்லாம் தோன்றாது. சரி... ஒருவர் மேல் நமக்கு நம்பிக்கை எப்படி வரும்? `இவர்தான் நமக்கு எல்லாம்...’, `இவர் நம்மோடிருக்கும்போது எந்தக் கஷ்டமும் வராது’ என்கிற நினைப்பு மிக மிக நெருக்கமாக உணர்கிற ஒருவருடனிருக்கும்போதுதான் ஏற்படும். அவர்களிலும் மிக முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பவேண்டிய உறவு அது. யார் அந்த உறவு என்பதை விளக்கும் கதை இது. 

 

லண்டனிலிருந்து பெர்மிங்ஹாம் (Birmingham) அப்படி ஒன்றும் அதிக தூரமில்லை. விமானத்தில் பயணம் செய்தால், நான்கு மணி நேரத்துக்குள் போய்விடலாம். லண்டன் ஏர்போர்ட்டுக்கு அந்த இளம் தொழிலதிபர் வந்து சேர்ந்தபோது விமானம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. போர்டிங் கேட்டை மூடுவதற்கு சில நிமிடங்களே இருந்தபோது அவன் உள்ளே நுழைந்திருந்தான். பரபரப்பாக இருந்தான். அன்றைய பயணமும் அதே பரபரப்போடுதான் இருக்கப் போகிறது என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. பெருமூச்சுவிட்டபடி, வியர்வை வழிய கவுன்ட்டரில் தன் டிக்கெட்டைக் காண்பித்தான். விமானத்தை நோக்கி விரைவாக நடந்தான். 

விமானம்

விமானத்தில் ஏறி, தன் இருக்கையில் அமர்ந்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. மெதுவாக அக்கம் பக்கம் அமர்ந்திருந்தவர்களை நோட்டமிட்டான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்து ஜன்னலோரமாக நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். முதலில் அந்த மனிதரோடுதான் சிறுமி வந்திருக்கிறாள் என்று அவன் நினைத்தான். அந்தச் சிறுமி தன் கையிலிருந்த சீட்டுக்கட்டுகளை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மனிதர் சிறுமியின் பக்கம் திரும்பவே இல்லை. இவனின் மகளுக்கும் இந்தச் சிறுமியின் வயதுதான் இருக்கும். சற்று நேரம் கழித்துதான் அந்தச் சிறுமி தனியாக விமானத்தில் பயணம் செய்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அந்த நினைப்பே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

விமானம் கிளம்பியது. இப்போது அவள் சீட்டுக்கட்டை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு நோட்டுப் புத்தகத்தில் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்குப் பின்னர் அவன், அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தான். ``உன் வயசு என்ன கண்ணு?’’ 

``ஒன்பது.’’ 

``உனக்கு எது ரொம்பப் பிடிக்கும்?’’ 

``கார்ட்டூன் சேனல் பார்ப்பேன்... டிராயிங் வரையறதும் பிடிக்கும்.’’ இப்படி நீண்ட உரையாடலில் அவளுக்கு, பக்கத்து வீட்டிலிருக்கும் பொமரேனியன் நாய், வீட்டு வாசலிலிருக்கும் மரத்தில் குதித்து விளையாடும் அணில், அவளுடைய வகுப்பாசிரியை லாரா டீச்சர், அம்மா ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கித்தரும் சாக்லேட் ஐஸ்க்ரீம் இவையெல்லாம் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டான். இத்தனைக்கும் அவன் கேட்ட கேள்விகளுக்கு ஒற்றைவரியில் அல்லது வெகு சுருக்கமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

சிறுமி கதை

ஆனாலும், தனிமையில் அந்தச் சிறுமி விமானத்தில் பயணம் செய்வது அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவ்வப்போது ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடியிருந்தான். விமானம் வானில் பறந்து ஒரு மணி நேரமிருக்கும். பயங்கரமான ஒரு குலுக்கல்... பயணிகள் அதிர்ந்துபோனார்கள். அப்போது ஒலிபெருக்கியில் பைலட்டின் குரல் ஒலித்தது... ``பயணிகள் பயப்பட வேண்டாம். எல்லோரும் அவரவர் சீட் பெல்ட்டுகளை அணிந்துகொள்ளவும். மிக மோசமான வானிலை காரணமாக விமானம் இப்படி அசையவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது...’’ இதைக் கேட்டதும், பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்துகொண்டார்கள். அதற்குப் பிறகும் பலமுறை விமானம் குலுங்கியது; அப்படியும் இப்படியும் அசைந்தது. பயணிகள் எல்லோரும் மரண பயத்தோடு உறைந்துபோயிருந்தார்கள். அவர்களில் சிலர் அழ ஆரம்பித்திருந்தார்கள்; பலர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். அந்த இளைஞனும் தன் இருக்கையை எவ்வளவு இறுக்கமாகப் பிடிக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருந்தான். ஆனாலும், அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. விமானம் குலுங்கி, ஆடும்போதெல்லாம் ``கடவுளே...’’ என்று முணுமுணுத்தான். 

ஒரு கணம் அவன் திரும்பிப் பார்த்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியின் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. துளிக்கூட பயமில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏதோ ஒரு ரைம்ஸை அவள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறாள் என்றுகூட அவனுக்குத் தோன்றியது. அவள் எடுத்து வந்திருந்த நோட்டுப் புத்தகங்கள், சீட்டுக்கட்டுகள் அழகாக, அவளுக்குப் பக்கத்திலிருந்த பையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. 

சிறிது நேரம் கழித்து விமானம் குலுங்குவது நின்றது, விமானம் சீராகப் பறக்க ஆரம்பித்திருந்தது. சில நிமிடங்கள் கழித்து ஒலிபெருக்கியில் மறுபடியும் பைலட்டின் குரல் ஒலித்தது. அவர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக மன்னிப்புக் கேட்டார். `இன்னும் சிறிது நேரத்தில் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கிவிடுவோம்’ என்கிற உறுதியையும் கொடுத்தார். 

பயணிகள் இயல்புநிலைக்குத் திரும்பினார்கள். சற்று நேரம் கழித்து அந்த இளைஞன், சிறுமியிடம் கேட்டான்... ``ஏய் குட்டிப் பொண்ணு... உன்னை மாதிரி தைரியமான ஒருத்தரை நான் என் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை. விமானம் குலுங்கினப்போ, பெரியவங்களான நாங்களே பயந்து நடுங்கிக்கிட்டிருந்தோம். உன்னால எப்படி அமைதியா, பயமில்லாம உக்கார்ந்திருக்க முடிஞ்சுது?’’ 

சிறுமி, இப்போது நேருக்கு நேராக அவனைப் பார்த்துச் சொன்னாள்... ``நான் ஏன் பயப்படணும்? என்னோட அப்பாதான் இந்த ஏரோப்ளேனோட பைலட். அவர், என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்க்கிட்டிருக்கார்!’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நான் ஏன் மாற வேண்டும்? - ஜீனி பரே

 
 

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

 

ஜீனி பரேவுக்கு முதன்முறையாகச் செடிகளை அறிமுகப்படுத்தியவர்கள் அவரின் அப்பாவும் அம்மாவும்தான். 1740-ம் ஆண்டு பிரான்ஸில் பிறந்த பரேவுக்குப் பள்ளிக்கல்வி அவசியம் என்று அவர்கள் நினைக்கவில்லை. `நீ எழுதி, படித்து என்ன செய்யப்போகிறாய்? எங்களுக்கு உபயோகமாக வீட்டிலேயே இருந்தபடி மருத்துவத் தொழில் படித்துக்கொள்' என்று சொல்லிவிட்டார்கள். மூலிகையைக் கொண்டு குணப்படுத்தும் முறை மட்டுமே அவர்களைப் பொறுத்தவரை மருத்துவம். எல்லா நோய்களுக்கும் இயற்கை தீர்வை வைத்திருக்கிறது என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை. `நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் ஜீனி. எல்லா வகையான செடிகளையும் தெரிந்துகொள். ஒவ்வொன்றையும் அடி முதல் நுனி வரை படி. ஒவ்வொரு செடியையும் கடவுளாக நினைத்து வணங்கு. மனிதர்களிடம் நோய்கள் மண்டிக்கிடக்கின்றன. செடிகளிடம் தீர்வுகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த இரண்டையும் இணைப்பதே நம் பணி. புரிகிறதா?' 

p70a_1521450801.jpg

ஜீனி பரே ஒருபடி மேலே சென்று செடிகளைக் காதலிக்கவே தொடங்கி விட்டார். ஒரு மலரைக் காட்டிலும் உன்னதமான, பரிசுத்தமான ஒரு படைப்பு இந்த உலகில் இருந்துவிட முடியுமா? இலைகளின்மீது கையைப் படரவிடுவதைக் காட்டிலும் சிலிர்க்கவைக்கக்கூடிய இன்னோர் அனுபவம் இந்தப் பூமியில் இருக்கிறதா? அடுத்த பிறவி என்றொன்று வாய்க்குமானால் ஒரு புல்லின் நுனியாக இருந்துவிட முடிந்ததால் போதும் என்று பரவசப்பட்டுக்கொண்டார் பரே. எந்நேரமும் தோட்டத்திலும் காட்டுப் பகுதியிலும் பழியாய் கிடக்கும் ஜீனியை மூலிகைப் பெண் என்றே சுற்றிலும் உள்ளவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

ஒருநாள் ஃபிலிபர்ட் கோமர்சன் என்பவரை ஜீனி காட்டுப் பகுதியில் சந்திக்க நேர்ந்தது. தன்னைப் போலவே உலகை மறந்து ஃபிலிபர்ட்டும் செடி கொடிகளைத் தேடித் தேடி சேகரித்துக்கொண்டிருந்ததை ஜீனி கண்டார். இருவரும் உரையாட ஆரம்பித்தனர். `நான் தாவரவியல் ஆய்வாளர். விதவிதமான செடி வகைகளைச் சேகரிப்பது என் மனதுக்கு நெருக்கமான பொழுதுபோக்கு' என்றார் ஃபிலிபர்ட். `அது சரி, எல்லோரும் புகழும் மூலிகைக் பெண் நீங்கள்தானா? உங்களைப் பார்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். இனி நாம் இணைந்தே செடிகளை ஆராயலாமா? எனக்குத் தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கு என்னைக் காட்டிலும் அனுபவம் அதிகம் என்பதால் உங்களிடமிருந்து நான் நிறைய கற்கமுடியும் என்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?'

அதற்குப் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தனர். இணைந்தே மூலிகைகளைத் தேடிச் சென்றனர். இணைந்தே இயற்கையை ஆராதித்தனர். ஃபிலிபர்ட் தன் மனைவியைச் சமீபத்தில் இழந்துவிட்டதை அறிந்து ஜீனி வருந்தினார். தன் புதிய நண்பரின் வாழ்வில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைத் தன் அன்பைக் கொண்டு நிரப்ப முயன்றார். இந்த அன்பு காதலாக மாறிக்கொண்டிருப்பதை இருவருமே அறிந்திருந்தனர். இருவரும் அதை வரவேற்கவும் செய்தனர்.  

p70c_1521450831.jpg

இரு ஆண்டுகள் கழிந்து பிரெஞ்சு அரசாங்கத் திடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது. `பிரெஞ்சு நாட்டின் புகழையும் செல்வத்தை யும் பெருக்கும்வகையில், உலகைச் சுற்றிவர இரண்டு கப்பல்களை அதிகாரபூர்வமாக நியமிக்கவிருக்கிறோம். புதிய பிரதேசங்களைக் கண்டறிந்து அவற்றை பிரான்ஸோடு இணைத்து நம் எல்லைகளை விரி வாக்குவதே இந்தப் பயணத் தின் நோக்கம். பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கிறார்கள். அந்த வரிசையில் தாவரவியலில் நிபுணத்துவமும் ஆர்வமும் கொண்டவர்கள் எங்க ளோடு இணைய விரும்பி னால் விண்ணப்பிக்கலாம்.' 

உடனே தனது விண்ணப் பத்தை அனுப்பிவைத்தார் ஃபிலிபர்ட். அவருடைய பெயர் இணைத்துக் கொள்ளப்பட்டது. `அப்படியானால் நான்?' என்று ஜீனி ஆதங்கத்துடன் கேட்டாரே தவிர, தன்னுடைய கேள்வியின் அபத்தம் அவருக்கு புரிந்துதான் இருந்தது. ஆண்கள் மட்டுமே இத்தகைய பயணங்களில் விண்ணப்பிக்க முடியும். பெண்களை பிரான்ஸ் தடை செய்திருந்தது. ஃபிலிபர்ட்டுக்கு ஆழமான வருத்தங்கள். தன்னுடைய உதவியாளரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அனுமதி அவருக்கு வழங்கப் பட்டிருந்தது. இருந்தும் தன்னுடைய உதவியாளரும் ஆசானும் காதலியும் வாழ்க்கைத் துணையுமான ஜீனியை அவரால் அழைத்துச் செல்லமுடியாது என்பது கொடுமையானது இல்லையா?

ஜீனி அழுகையைக் கட்டுப் படுத்திக்கொள்ள முயன்றார். ஃபிலிபர்ட்டைப் பிரிந்திருக்க வேண்டுமே என்பது மட்டுமல்ல வருத்தத்துக்குக் காரணம். `நான் ஒரு பெண்ணாக இல்லாமல் போயிருந்தால், உலகம் முழுக்க உள்ள வனப்பகுதிகளையும் அங்கு படர்ந்திருக்கும் பச்சை பசுமைகளையும் ரசித்து மகிழ்ந்திருக்கலாம் அல்லவா? இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டு வியப்பதில் ஆண் பெண் வேறுபாடு எங்கே வருகிறது?'

அப்போது மின்னல் போல ஒரு யோசனை தோன்றியது. `நான் ஏன் ஓர் ஆணாக மாறக்கூடாது?'

`அதெப்படி முடியும்?' என்று சொல்ல நினைத்த ஃபிலிபர்ட் ஜீனியின் கண்களில் தென்பட்ட வெளிச்சத்தைக் கண்டதும் அமைதியானார். ஜீனி தயாராக ஆரம்பித்தார். கத்தரிக்கப்பட்ட துணி உருண்டை தயாரானது. தன் உடலின் மேல் பகுதியில் மம்மி போல் அடுக்கடுக்காகத் துணியைச் சுற்றிக்கொள்ளத் தொடங்கினார். ஃபிலிபர்ட் உதவிக்கு வந்தார். தலைமுடி கத்தரிக்கப்பட்டது. ஃபிலிபர்ட்டின் ஆடைகளை அணிந்துகொண்டார். மறுநாள் வரிசையாக நின்றுகொண்டிருந்தவர்களுக்கு மத்தியிலிருந்து ஜீனியைத் தன் உதவியாளராகத் தேர்ந்தெடுத்தார் ஃபிலிபர்ட். ஜீனி தன் பெயரை ஜான் என்று மாற்றிக்கொண்டார். இது நடந்தது 1766-ம் ஆண்டு.

லூயி ஆண்டனி போகன்வில்லா என்னும் ராணுவ ஜெனரலின் தலைமையில் ஈடோலி என்னும் பெயர்கொண்ட கப்பல் பிரான்ஸிலிருந்து கிளம்பியது. இந்த ஜெனரல் ஃபிலிபர்ட்டுக்கு நெருக்கமானவரும்கூட என்பதால் அவர் உதவியுடன் ஃபிலிபர்ட் தன் உதவியாளரைத் தன்னுடனே தங்கவைத்துக்கொண்டார். மற்ற நேரங்களில் ஜீனி கப்பலில் உள்ள மற்ற ஆண்களோடு சேர்ந்து பயணம் செய்தார். அவர் களோடு சேர்ந்து உண்டார். அவர் களுடைய பணிச்சுமைகளைப் பகிர்ந்துகொண்டார்.

எந்த வகையில் ஒரு பெண் ஆணிடமிருந்து வேறுபடுகிறார் என்று அவருக்குப் புரியவில்லை. `இவர்கள் செய்யும் எல்லாவற்றையும் என்னால் செய்ய முடிகிறது. கடினமாக உழைக்க முடிகிறது. கனமான பொருள்களைத் தூக்க முடிகிறது. நியாயப்படி ஒரு பெண்ணாகவே முழு சுதந்திரத்துடன் இந்தக் கப்பலில் நான் பயணம் செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஆண்களின் உலகமாக இருப்பதால் அவர்களே அதிகாரம்மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களே விதிகளை உருவாக்குகிறார்கள். அந்த விதிகள் அனைத்தும் பெண்களை விலக்கிவைக்கின்றன, பாரபட்சமாக நடத்துகின்றன. ஒரு பெண்ணாக இருப்பது இந்தக் கப்பலின் விதிமுறைகளின்படி பெருங்குற்றம் என்பதால் அந்த விதிகளை நான் வளைக்க வேண்டியிருக்கிறது. எதற்காக இந்தப் பொய் வேடத்தை நான் புனைய வேண்டும்? இந்தா எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு துப்பாக்கியை என்னிடம் ரகசியமாக ஃபிலிபர்ட் அளிக்கவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது?'

வெளிப்படையாக ஒருவரும் எதுவும் கேட்கவில்லை என்றாலும் சில பணியாளர்களுக்கு ஜீனியைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டது உண்மை. இவன் ஏன் நம்மோடு அதிகம் கலக்காமல் தள்ளியே இருக்கிறான்? ஏன் எப்போதும் ஃபிலிபர்டுடன் மட்டும் தங்குகிறான்? பகல், வெயில், இரவு எது வந்தாலும் ஏன் இறுக்கமான முழு ஆடைகளை அணிந்துகொள்கிறான்? ஏன் நம்மோடு இணைந்து குளிப்பதைத் தவிர்க்கிறான்?

ஜீனி தன்னுடைய உடலை மொய்த்த கூர்மையான விழிகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு பயணத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்த முயன்றார். அதற்காகத்தானே இத்தனை சிரமங்கள்? புதிய பிரதேசங்களில் கப்பல் தரை இறங்கும்போது பாய்ந்தோடி சென்று அங்கிருந்து  தாவரங்களை ஆராய்ந்தார். புதிய வகை செடிகளைக் கவனமாகச்  சேகரித்துக்கொண்டார். புதிய மலர்களை, கனி வகைகளை, மரங்களை நெருங்கிச் சென்று பார்வையிட்டார்.

கிட்டத்தட்ட இரண்டாண்டு காலப் பயணம் முடிவுக்கு வருவதற்குள் ஜீனி யார் என்பதை ஒருநாள் கண்டுபிடித்து விட்டார்கள். சில குறிப்புகளின்படி, தாகித்தி தீவில் ஒருமுறை கரை இறங்கும்போது அங்கிருந்த  பழங்குடிகள், `வா பெண்ணே'
என்று ஜீனியை வரவேற்று அழைத்திருக்கிறார்கள். அதிர்ந்துபோன கப்பல் பணியாளர்கள் ஜீனியை இழுத்துக் கொண்டு போய் போகன்வில்லாவிடம் நிறுத்தியிருக்கிறார்கள்.

`ஆம், நான் பெண்தான்' என்று ஜீனி அவரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.  `உன் உழைப்பும் திறமையும் போற்றத்தக்கது. பரவாயில்லை, இருந்துவிட்டுப் போ' என்று அவர் ஜீனியை மன்னித்துப் பயணம் முடிவடையும்வரை கப்பலில் பணியாற்ற ஒத்துழைத்திருக்கிறார் அவர். இதனால் மனம் நெகிழ்ந்த ஜீனி, பிரேசிலில் தான் கண்ட புதிய, அழகிய மலருக்கு  போகன்வில்லாவின் பெயரைச் சூட்டினாராம். பிறகு கப்பல் மொரீஷியஸ் தீவைச் சென்றடைந்தபோது, ஜீனியும் அவர் கணவரும் இறங்கி அங்கேயே தங்கிவிட்டனர். தன் கணவரின் மறைவுக்குப் பிறகு ஜீனி மீண்டும் பிரான்ஸ் திரும்பினார். 1807-ம் ஆண்டு தனது 67-வது வயதில் ஜீனி இறந்துபோனார். 

ஜீனியை போகன்வில்லா மன்னித்து விட்டாலும் கப்பலில் இருந்தவர்கள் மன்னிக்கத் தயாராகயில்லை. ஒரு குழு சினம்கொண்டு ஜீனியை இழுத்துச் சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்து பழி தீர்த்துக்கொண்டது என்று வாதிடுகிறது ஜீனியின் வாழ்வையும் அவர் பயணத்தையும் ஆராய்ந்துள்ள ஒரு புதிய புத்தகம். அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு நிகழ்வை விவரித்தாலும் வலுவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்களை இந்நூல் அளிக்கவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அப்படி நடந்திருக்க முடியாது என்று மறுக்கவும் அவர்களால் முடியவில்லை. ஜீனியின் வாழ்வும் பணிகளும் இன்னும் இருளில் மூழ்கிக்கிடப்பதையே இத்தகைய மாறுபட்ட, ஒன்றோடொன்று முரண்பட்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இன்றைய தேதியில், தாவரவியல் துறையில் இயங்கியவர்கள் குறித்து ஆராய்பவர்களின் நினைவுகளில் மட்டுமே ஜீனி பரே தங்கியிருக்கிறார். மற்றபடி, உலகை வலம்வந்த முதல் பெண் என்று வரலாறு அவரை நினைவில்வைத்திருக்கிறது. இதையும் சில விமர்சகர்கள், ‘நமக்குத்தெரிந்து முதல் பெண்’ என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று திருத்துகிறார்கள்.

போகன்வில்லா, ஃபிலிபர்ட் ஆகியோரின் பயணக் குறிப்புகளிலிருந்தே ஜீனியை நம்மால் உயிர்ப்பித்துக் கொண்டுவர முடிகிறது. மற்றபடி ஜீனி சேகரித்த செடிகளின் மாதிரிகள் இன்றளவும் பயன்படுகின்றன என்கிறார்கள் அத்துறை சார்ந்தவர்கள். `அதுபோதும் எனக்கு, வேறெதுவும் தேவையில்லை' என்றுதான் அநேகமாக ஜீனியும் சொல்லியிருப்பார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

`காக்கா முட்டை’ படத்தில் 30 வயதுப் பெண்ணாக நடித்தபோது, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 22 வயதுதான். இப்போது தலைகீழான சூழல் அமைந்திருக்கிறது ஐஸ்வர்யாவுக்கு. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் 16 வயது பள்ளி மாணவியாக நடிக்கிறார். 16- 25 வயது வரை நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை, பெண்கள் கிரிக்கெட், விவசாயம் என்று பல தடங்களில் பயணிக்கிறது. இதற்காக ஜிம் வொர்க் அவுட், டயட், கிரிக்கெட் பயிற்சி என்று மெனக்கெட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

p19a_1522043775.jpg


பார்க்க சைலன்டாக இருந்தாலும் சரியான சாகசப்ரியை த்ரிஷா. நடுராத்தியில் பேய்ப்படங்கள் பார்த்து பயப்படுவது என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். ஹாரர் படங்கள் பார்த்துவிட்டு பயமே இல்லாமல் தூங்குவதை விளையாட்டுபோலச் செய்துபார்ப்பாராம். அதனால்தான் ஸ்கூபா டைவிங், பாரா கிளைடிங் மாதிரியான அட்வெஞ்சர்களில் அடிக்கடி ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் த்ரிஷா. சமீபத்தில்கூட நிவின் பாலியோடு சேர்ந்து ஸ்கூபா டைவிங் செய்திருக்கிறார்.

p57a_1522133465.jpg

p57b_1522133475.jpg

p57c_1522133485.jpg


வ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அதை முதல்நாள் இரவே வாங்கிப் படித்துப் படித்து, பயிற்சி செய்து கொள்வார் சாயிஷா. ஸ்பாட்டுக்கு வந்தவுடன் வசனம் பேசும்போது முடிந்தளவு ரீடேக் வாங்காமல் நடிப்பதுதான் சாயிஷா பாணி! நடனம் என்றால் சாயிஷாவுக்கு உயிர். சிறுவயதிலிருந்தே முறைப்படி பல்வேறு விதமான நடனங்களைக் கற்றுக்கொண்டார்.  பாலிவுட்டின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதைவெளிகாட்டிக்கொள்ளாமல் எளிமையோடு பழகுபவர். புதுமையான ஃப்ளேவர்களில் கேக் செய்து சாப்பிடுவதுதான் சாயிஷாவின் ஹாபி... இப்போது டயட்டில் இருப்பதால் சோகத்தில் இருக்கிறது பேபி!

p82a_1522147148.jpg


தொடர்ந்து பிஸியாகவே இருந்த நயன்தாராவால், கொச்சினில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று அப்பா அம்மாவோடு நேரம் செலவிட முடியாமலே இருந்ததாம். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்துவருவதால், நீண்ட நாள்களுக்குப் பிறகு கொச்சின் சென்றுள்ளார் நயன்தாரா. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் வரை அப்பா அம்மாவோடு கொச்சினில் இருப்பதுதான் நயனின் பிளானாம். விட்டாச்சு லீவு!

p86a_1522148687.jpg

ஓவியம்: பிரேம் டாவின்சி

  • தொடங்கியவர்

பாட்டில் பழசு செடிகள் புதுசு

 

 
 
 
shutterstock511949737
shutterstock625739570

ரு தோட்டம் வைத்து அதில் பல செடி கொடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான கால அவகாசம் இந்தக் காலத்து இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்தாலும், ஒரு குட்டிச் செடியாவது வளர்க்க வேண்டும் எனப் பலருக்கு ஆசை இருக்கிறது. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ சின்ன சின்ன செடிகளை வைத்துக்கொள்வதுண்டு. அதை அழகாகவும் எளிய முறையிலும் செய்ய சில முறைகள் உள்ளன ...

   
shutterstock511949737
 

 

பாட்டில் பாட்:

நாம் தண்ணீர் பாட்டில்களைப் பல இடங்களில் வாங்கிப் பருகுவதுண்டு. ஆனால், அந்த பாட்டில்களைக் குப்பையில் போடாமல் சேர்த்து வைத்தால், ஒரு பாட்டில் பாட் உருவாக்கலாம். பாட்டிலைப் பாதியாக வெட்டி, அடிப்பகுதியில் மண் நிரப்பி , தேவையான பூச்செடிகளை வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் மேஜையிலே இந்த பாட்டில் பாட்-ஐ வைத்து அழகு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: பிளாஸ்டிக் பாட்டில், மண், அலங்கரிக்க பொருட்கள்

முக்கியமாக இதை பிளாஸ்டிக் பாட்டில்களில் செய்ய வேண்டும். மேலும் இதற்கு அழகு சேர்க்க வண்ணம் பூசுவது, விண்டேஜ் லுக் கொடுக்க கயிற்றால் அலங்கரிப்பது போன்றவற்றைச் செய்தால் அவை பார்க்க அழகாக இருக்கும். இவை பாட்டில்தானா என வியக்க வைக்கும் அளவுக்கு அதன் தோற்றமே மாறிவிடும்.

shutterstock757702492

 

பல்ப் பாட்:

வீட்டில், பழைய காலத்தில் உபயோகித்த லோ வாட்ஸ் பல்புகள் தற்போது அழிந்து வருகின்றன என்று கூறலாம். அந்த வகையில் இந்த பல்பைக் காண முடிந்தாலே அதிசயம். அதிலும், அழகான பூந்தொட்டியாகப் பயன்படுத்தினால் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்!

தேவையான பொருட்கள்: லோ வாட்ஸ் பல்ப், பச்சை செடி ( எ.கா. மணி ப்ளாண்ட்) , நீர்.

உபயோகித்த பல்புகளை மட்டுமே பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால், அதில் டங்க்ஸ்டன் செயலிழந்திருக்கும். பல்பின் மேலுள்ள பகுதியைத் திருகினால் அதைக் கழற்றிவிடலாம். அதன் பிறகு, அதிலுள்ள டங்க்ஸ்டனை எடுத்துவிட்டு, நம் செடியை பொருத்திவிட வேண்டும். இதை மேசையிலும் வைக்கலாம் அல்லது கயிறு கட்டி வீட்டு பால்கனியிலும் தொங்க விடலாம். குறிப்பு: சில செடிகளுக்குச் சூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். எனவே, வெயில் படும் இடத்தில் வைப்பது நல்லது.

 

காபி கப் பாட்:

காபி கப்பில் பல டிசைன்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஒருவருக்கு ஏதேனும் பிறந்தநாள் பரிசளிக்க வேண்டும்மென்றால் முதலில் தோன்றுவது வித்தியாசமான ஒரு காபி கப்பை வாங்கி அசத்திவிடலாம் என்பதே. ஆனால், அதில் எத்தனை பேர் அந்தப் பரிசைப் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் கேள்வி. அப்படி நெருங்கியவர்கள் கொடுத்த காபி கப்பைப் பூட்டி வைக்காமல், தினந்தோறும் நீங்கள் பார்க்கும் வகையில் அழகான பூந்தொட்டியாக மாற்றலாம்.

தேவையான பொருட்கள் : காபி கப், மண், செடிகள்

காபி கப்பில் மண் நிரப்பி அதில் செடியை நட்டால் மட்டுமே போதும். மேலும் அழகாக்க வேண்டுமென்று நினைத்தால், ஓவியம், ஸ்டிக்கர், பீட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி கப்பை அலங்கரிக்கலாம். இதற்கு டேபிள் ரோஜா, கேக்டஸ் போன்ற செடிகளை உபயோகிக்க வேண்டும்.

shutterstock774810175
 

 

டயர் பாட்:

வாகனங்களின் தேவையற்ற டயரை எடைக்கு தான் போட வேண்டுமென்று இல்லை. இந்த டயர்களுக்கு மெருகேற்றி நம் வீட்டினுள்ளே வைத்தால் அதுதான் டயர் பூந்தொட்டி. வாகனப் பிரியர்கள் வீட்டை அதே தீம் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என நினைத்தால் இதைப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் : டயர், பூச்செடிகள், பெயிண்ட்

முதலில் டயர் முழுவதும் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் பெயிண்ட் செய்து காய வைக்க வேண்டும். பிறகு, டயரின் உள்ளே உள்ள இடைவெளியில் மண் நிரப்பவேண்டும். கீழே உள்ள பகுதியில் மட்டும் மண் நிரப்பினால் போதுமானது. அதில் செடிகளை நட வேண்டும் . டயரின் மேற்பகுதியில் இரண்டு துழையிட்டு அதில் கயிற்றைக் கொண்டு கட்டி சுவரில் தொங்கவிடலாம். குறிப்பு: பூச்செடிகளை மட்டும் நட்டால் பார்க்க அழகாக இருக்கும்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

இரு நாடுகளில் ஒரே நேரத்தில் வாழும் ராஜ குடும்பத்து வாரிசுகள்

பதினைந்தாம் நூற்றில் தோன்றிய ராஜ குடும்பத்து வழியில் வந்தவர்கள் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதி இந்தியாவிலும் மற்றொரு பகுதி மியான்மரிலும் உள்ளது

  • தொடங்கியவர்
‘காலம் போல், சிறந்த ஆசான் இல்லை’
 

image_d58179ac17.jpgஉங்களுக்கு பிடிக்காதவர்களில் அல்லது யாராவது உங்களில் பகைமை கொண்டவர்களின் நற்செயல்களை மனமாரப் பாராட்டுங்கள். அக்கணமே அவர்கள் உங்களின் மனவிலாசத்தைப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்துவார்கள். 

எவரும் எமக்கு எதிரிகள் இல்லை. எந்தத் தீயவர்களையும் மாற்றும், திருத்தும் திறனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வீர்களாக. அது முடியாது விட்டால், அவர்களிடமிருந்து விலகி நிற்கலாம். ஆனால், தொடர்ந்தும் குரோதம் கொள்வதை நிறுத்துக. 

அவரவர் வினைப்பயன் அவர்களுக்கே கிட்டும். இதில் நாம் யார் தலையிட முடியும்.   

இறை தீர்ப்பின் தண்டனையில் விமர்சனம் எதற்கு? காலம் சொல்லும் ஆசான் போல், சிறந்த ஆசான் வேறு இல்லை.

  • தொடங்கியவர்

Ãhnliches Foto

யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் ‘டெட் பூல்-2’ திரைப்படம் மே 18-ல் வெளியாகிறது. அங்குலம் அங்குலமாய் மற்றவர்களைப் பங்கம் பண்ணுகிற மரணகலாய் சூப்பர் ஹீரோ டெட்பூல். படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. அதற்காக டப்பிங் பேச ரன்வீர் சிங்கை அணுகியிருக்கிறது படக்குழு. ரன்வீரோ ‘நான் ரொம்ப பிஸி’ என நழுவி விட்டார். உச்ச நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இதுமாதிரி வேலைகளில் தலையைக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ரன்வீர். நோ சொல்லிப் பழகு!

p36a_1522061948.jpg


ன்னைப் பற்றி வரும் பாசிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் செய்திகளைத்தான் ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பாராம் அஜீத். இதற்காகவென்றே ஓர் உதவியாளரைத் தனியாக நியமித்திருக்கிறார். அவருடைய வேலையே ஆன்லைன் முதல் பத்திரிகைகள் வரை அஜீத்தைப் பற்றி வரும் எதிர்மறைச் செய்திகளைச் சேகரித்து அவர் பார்வைக்கு அனுப்புவதுதான்! ‘நல்லதைச் சொல்ல ஆயிரம் பேர் இருப்பாங்க. இதுமாதிரியான நெகட்டிவ் கருத்துகளைக் கேட்டால்தான் நமக்கான சரியான திசையை நாம தீர்மானிச்சுக்க முடியும்!’ என்று டிரேடு மார்க் சிரிப்பை உதிர்ப்பாராம் அஜீத். சூப்பர் தல! 

p36b_1522061988.jpg


p36c_1522062003.jpg

பிரகாஷ்ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், விஜி சந்திரசேகர் வரிசையில் இயற்கை விவசாயியாக மாற இருக்கும் அடுத்த நட்சத்திரம் நயன்தாரா. தனது நீண்டநாள் கனவான இயற்கை முறை விவசாயத்துக்கான ஆயத்தப் பணிகளைச் செய்துவருகிறார், இதற்காக இத்துறையில் அனுபவமுள்ளவர்களைச் சந்தித்துவருகிறார். இவர் வேற மாதிரி!


p36d_1522062028.jpg

`ஓம் ஷாந்தி ஓம்’, `ஹேப்பி நியூ இயர்’ வெற்றிகளுக்குப் பிறகு இயக்குநர் ஃபராகான்- ஷாருக்கான் கூட்டணி மீண்டும் கைகோக்கிறது. இதில் கடுப்பில் இருப்பவர் ஃபாராவின் கணவர் ஷிரிஷ் குந்தர். ஷாருக் கையால் முன்பு ஒருமுறை பார்ட்டியில் குத்து வாங்கியிருக்கிறார் குந்தர். அதனால்தான் இந்த கடுப்ஸ். ஃபராகான் ஷாரூக்கும் குந்தரும் சந்திப்ப தற்கான வாய்ப்புகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார். இருக்கு... என்டர்டெயின் மென்ட் இருக்கு!


p36e_1522062052.jpg

ஹாட்ரிக் கோல்கள் அடிப்பது கிறிஸ்டியானோ ரொனால்டோ வின் ஹாபி. சீசன் தொடக்கத்தில் சைலன்ட்டாக இருந்துவிட்டு, ஃபினிஷிங்கில் விஸ்வரூபம் எடுக்கும் CR7, சீசன் முடிவில் எக்கச்சக்க சாதனைகளைப் படைத்திருப்பார். சாம்பியன் அணிகளையே கதறவிடுவது இந்த ரியல் மாட்ரிட் ஜாம்பவானின் பியூட்டி. சமீபத்தில் கத்துக்குட்டி ஜிரோனா அணிக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்க, `ஹாட்ரிக்கில் எங்க தல ஆஃப் செஞ்சுரி’ எனப் புகழ்பாடுகின்றனர் ரியல் மாட்ரிட் ரசிகர்கள். ரொனால்டோ இதே ஃபார்மில் நீடித்து, ஜூன் மாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பையை வென்று தர வேண்டும் என்பது போர்ச்சுகல் ரசிகர்களின் வேண்டுதல். நடக்கும் பாஸ்!


p36f_1522062066.jpg

றைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் ஒய்.எஸ்.ஆராக நடிக்கவிருக்கிறார் மம்மூட்டி. ‘யாத்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாராவும் இருக்கிறார். இரண்டு முறை ஆந்திர முதல்வராக இருந்து 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர் ஒய்.எஸ்.ஆர். பரபரப்பான திரைக்கதை அமைத்திருக்கிறாராம் படத்தின் இயக்குநர் மஹி.எஸ்.ராகவ். அன்று அம்பேத்கர், இன்று ஒய்.எஸ்.ஆர்!


p36g_1522062081.jpg

‘96’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘செக்கச் சிவந்த வானம்’ என அரை டஜன் படங்களில் ஓய்வே இல்லாமல் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. அடுத்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ‘மாமனிதன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பவர், எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க விருக்கிறார்.  ஜூனில் படப்பிடிப்பு. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


p36h_1522062097.jpg

மிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உச்ச நட்சத்திரங்களோடு நடித்தவர் ஷ்ரேயா சரண். கடந்த வாரத்தில் திடீரென்று ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோஷீவைத் திருமணம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த மணவிழாவில் ஷ்ரேயாவிடம் ஹிந்தியில் தன் காதலை வெளிப்படுத்தி, சுற்றியிருந்தவர்களை ஆச்சர்யத்திலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தியிருக்கிறார் ஆன்ட்ரீ. மகிழ்ந்திரு மகிழ்ந்திரு!


p36j_1522062120.jpg

ணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் என டாப் இயக்குநர்களின் ஒளிப் பதிவாளராக இருப்பவர் ரவி.கே. சந்திரன். இவர் மகன் சந்தானகிருஷ்ணன் தற்போது தமிழில் தயாராகிவரும் ‘நோட்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். மலையாளத்தில் 2015-ல் வெளியான ‘டூ கன்ட்ரீஸ்’, இந்தியில் வெளியாகவுள்ள ‘பாகி 2’ திரைப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளிச்சம் பாய்ச்சுங்கள்!


சென்ற வாரம் ஒரு காண்டாமிருகத்தின் மறைவுக்காக ஒட்டுமொத்த உலகமும் துக்கம் அனுசரித்தது. அழிந்துவரும் அரிய உயிரினமான ‘நார்த் வொயிட்’ வகை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் ‘ஸூடான்’. கென்யாவின் `ஒல் பெஜேயா’ காப்பகத்தில் வாழ்ந்து வந்த ‘ஸூடான்’ தன் 45வது வயதில் உயிரிழந்தது. தற்போது இந்த இனத்தில் எஞ்சியிருப்பது ஸூடானின் மகள்களான `நாயின்’ மற்றும் `ஃபட்டு’ மட்டும்தான். 45 வயது நிரம்பிய ஸூடானின் மரபணுக்களைப் பாதுகாத்து வரும் ஒல் பெஜேயா காப்பகம் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் மீண்டும் இந்த இனத்தைப் பெருக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. மீண்டெழு இனமே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

68 வயதிலும் 20 வயது வாலிபர்!!!

 

சீனாவில் 68 வயதான முதியவர்  ஒருவர் 20 வயது இளைஞர் போன்ற தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் 1950ஆம் ஆண்டு பிறந்த  ஹு ஹாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

New_Layout__3_.jpg

அங்கு இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்களும் முதியவர்களுக்கான நிகழ்ச்சியில் இந்த இளைஞர் ஏன் கலந்து கொள்கிறார்?  என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு காரணம் 20 வயது இளைஞனைப் போன்ற  ஹு ஹாயின் தோற்றம், உடல்மொழி, உடை தான். அதன் பிறகு தனது வயதுக்குரிய சான்றை அவர் சமர்பித்து போட்டியில் கலந்து கொண்டார்.

'மிக நவீன தாத்தா (Most Modern Grandpa) என்ற பட்டத்தை வென்ற ஹு ஹாய் வெளியுலகில் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி, பத்திரிகைகள், மொடலிங் துறை என பல துறைகளில் பணியாற்றினார்.

 

இது தொடர்பாக ஹு ஹாய் கூறுகையில்,

"என்னுடைய இந்தத் தோற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருக்க யோகா செய்கிறேன். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்கிறேன். தினமும் 30 நிமிடங்கள் படிகளில் ஏறி இறங்குகிறேன். குறைவான ஆனால்  ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறேன்.

சில சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறேன். இவை தவிர, நான் எப்போதும் என்னை 20 வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்கிறேன். வயது என்பது வெறும் எண்கள்தான். நாம் எப்படி உடலை வைத்துக் கொள்கிறோம். எப்படி நல்ல எண்ணங்களை நிறைத்துக் கொள்கிறோம். எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொருத்தே நம் உருவம் வெளிப்படுகிறது. முதுமை என்பது தவிர்க்க இயலாதது.

எல்லோரும் ஒருநாள் முதுமையடையத்தான் போகிறோம். ஆனால் அந்த முதுமையை ஏதோ கெட்ட அம்சம் போலவும், மரணத்தை நெருங்குவது போலவும் நினைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமற்றது. இந்த எண்ணம் உங்கள் வயதை விட அதிக முதிர்ச்சியைக் கொண்டுவந்துவிடும். நான் மரணமடையும் கடைசி நொடியிலும் என்னை இருபது வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்வேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனம், உடல், உடலியக்கம் என 3 விதமான வயதுகள் இருக்கின்றன. கடைசி இரண்டு வயதுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

என்னுடைய உடல், உடலியக்கம் சார்ந்த வயது 40. ஆனால் என் மனதின் வயது 20 ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருபது வயது இளைஞர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அவரைப் போலவே இளமையாக சிந்திக்கவும் முடியும். இளமை என்பது அணுகுமுறைதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசமான வாழ்க்கையை வாழுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

45000 சொற்கள்... 70 மைல் தூர கோடு... ஒரு பென்சில் என்னவெல்லாம் செய்யும்? #PencilDay

 
 

பென்சில்

' பென்சில் ' பள்ளிப்பருவத்து தொலைந்து போன ஞாபகம். குழந்தைகளாய் இருக்கும்போது பென்சிலை தான் பயன்படுத்தினோம். ஏனென்றால் தவற்றை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கொடுக்கப்பட்டது. வளர்ந்ததும் பேனாவில்தான் எழுதியாக வேண்டும். அப்பொழுது தவறு செய்தால் திருத்துவது சிரமம். அடிக்கமட்டும்தான் முடியும். நமது தவறும் தெளிவாகத் தெரியும். 'பென்சில் நமது  பயிற்சி பருவமும் கூட. எழுதுவதற்கும், வரைவதற்கும் பயன்படுத்தப்பட்ட பென்சில் பள்ளிப்பருவம் முடிந்ததும் தேவைப்படுவதில்லை. அதைப்பற்றி நினைப்பது கூட இல்லை.         

 

ஆண்டுதோறும் மார்ச் மாதம்  30 ஆம் தேதி தேசிய பென்சில்  தினமாக கொண்டாடப்படுகிறது.  கடந்த 150  வருடங்களுக்கும் மேலாக பென்சில் உற்பத்தி மற்றும் அதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், 1858 - ல் ஹைமேன் லிப்மான் ( Hymen Lipman) பென்சிலின் அடியில் அழிப்பானை இணைத்து பென்சிலின் வடிவமைப்பைப் புதிதாக மாற்றினார். ஒரு மர  பென்சிலில் கிராபைட் நான்கில் மூன்று பங்கும், அழிப்பான் ( Eraser) நான்கில் ஒருபங்கும் சேர்த்து உருவாக்கினார். அன்றிலிருந்து மர பென்சிலின் ஒரு பக்கம் எழுதுவதற்கும், மற்றொரு பகுதி அழிப்பதற்கும் பயன்பட்டது. இவர் உருவாக்கிய பென்சிலின்  புதிய வடிவமைப்பை கௌரவிக்கும் விதமாக தேசிய பென்சில் தினம் கொண்டாடப்படுகிறது. 

பென்சில் - தோற்றம், வரலாறு :

 லத்தின் மொழியில் பெனிசிலஸ் ( penicilus) என்பதற்குச் சிறிய வால் ( Little tail) என்று பொருள். 500 வருடங்களுக்கு முன்பே கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டாலும், 200 வருடங்களுக்கு முன்பே பென்சில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் ஃபேபர் குடும்பம் ( Faber family) பென்சில் தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை. பிறகு 1795-ல்   N.J. Conde என்பவர் பென்சிலை உருவாக்கினார். உலர்ந்த கிராபைட்டுடன், களிமண் மற்றும் நீரைச் சேர்த்து காயவைத்து பின்னர் பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள கருமைப்பகுதியை உருவாக்கினார். இவரின் பென்சில்கள் பிரபலமடைந்தது. இவர் பயன்படுத்திய முறையே இன்றளவும் பென்சில் தயாரிப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 

1890 - ஆம் ஆண்டு  L&C Hardmuth Company of Austria Hungary, கோஹினூர் ( Koh - I - Noor) எனும் பிராண்ட் பென்சிலை உருவாக்கினர். கோஹினூர் எனும் புகழ்மிக்க வைரத்தின் பெயரை,  இவர்கள் உருவாக்கிய பென்சிலுக்கு தேர்வு செய்தனர். இவர்களின் நோக்கம் இந்த பென்சில்கள் உலகின் விலையுயர்ந்த, சிறந்த பென்சிலாக இருக்க வேண்டும் என்பதே. உற்பத்தியாளர்கள் முதன்முதலில் உருவாக்கிய பென்சிலை மஞ்சள் நிறத்திலேயே செய்தனர். ஏனெனில் மஞ்சள் நிறமானது ராயல்டி மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மற்ற நிறுவனங்களும் மஞ்சள் நிறத்தை தாங்கள் உருவாக்கும் பென்சில்களுக்கும் பயன்படுத்தி, இவையும் உயர்ந்த வகை பென்சில்கள்  எனக் காட்டிக்கொண்டனர். மக்களும் மஞ்சள் நிறத்தில் வரும் பென்சில்களையை சிறந்தது எனக் கருதி வாங்கினர். 

பென்சில்

பென்சில் குறித்த சுவாரஸ்யமான செய்திகள் :
ஒரே ஒரு மர பென்சிலால் 45,000 வார்த்தைகளை எழுத முடியும். 70 மைல் தூரம் வரை கோடு  வரைய  முடியும்.

பென்சிலால் நீரின் அடியிலும் எழுதலாம். ஜீரோ ஈர்ப்பு சக்தியுள்ள விண்வெளியிலும் பென்சிலால் எழுத முடியும். அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கள் விண்வெளி பயணத்தின் போது பென்சிலை பயன்டுத்துகின்றனர். 

ஒரு நல்ல அளவுள்ள  மரத்தினால் கிட்டத்தட்ட 3,00,000 பென்சில்களை உருவாக்க முடியும்.

உலகளவில் ஒரே ஆண்டில் 14 பில்லியினுக்கும் மேற்பட்ட பென்சில்கள் உருவாக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 62 முறை உலகைச் சுற்ற முடியும். 

வளர்ந்து வரும் சூழ்நிலையில் எழுதுவதைக் கூட மறந்து விடுகிறோம். நமது கைகளை கைப்பேசிக்கும், கணினிக்குமே தானமாகத் தந்துவிட்டோம்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹர்பஜனின் 'தமிழ்' பதிவுகளை கலாய்க்கும் மீம் கிரியேட்டர்கள்

ஹர்பஜனின் புல்லரிக்க வைக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைTWITTER

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், போட்டி குறித்த விளம்பரங்கள் ஊடகங்களில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. இச்சூழலில், புதிய விளம்பர யுத்தியை கையிலெடுத்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

11-ஆவது ஐபிஎல் கபோட்டிகள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முதல் மே மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் ஏலத்தில், சென்னை அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை இரண்டு கோடி ரூபாய்க்கும், மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோவை 6.40 கோடிக்கும் வாங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வானதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், '' வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு" என்று தமிழ் மொழியில் பதிவிட்டிருந்தார்.

ஹர்பஜனின் இந்த தமிழ் ட்வீட்டை கொண்டாடிய கிரிக்கெட் ரசிகர்கள் இப்போது வரை சுமார் 12,414 பேரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் குவிந்துள்ளது.

அடுத்ததாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஹர்பஜன் சிங், நான் வந்துட்டேன்னு சொல்லு, தமிழின் அன்பு உடன்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது''. தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க என்று பதிவிட்டிருந்தார். அஜித் ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் குறிவைத்து இந்த ட்வீட்டை ஹர்பஜனுக்காக தயார் செய்துள்ளார் தமிழகத்தை சேரந்த சரவணன் பாண்டியன். இவர்தான் ஹர்பஜனின் தமிழ் குரு.

ஒருபுறம் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்கள் தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் அவரது ட்வீட்களை வைத்து மீம் கிரியேட்டர்கள் அதகளம் செய்து வருகிறார்கள்.

''தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே. இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்.'' இது ஹர்பஜனின் சமீபத்திய ட்வீட்.

இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வரும் சில மீம்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைEFACDIM ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைTWITTER ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைVVA MEMES - TWIITER ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைTWITTER ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைTWITTER ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைTWITTER ஹர்பஜன் சிங்கின் புல்லரிக்கும் 'தமிழ்' பற்று - போட்டுத்தாக்கும் மீம் கிரியேட்டர்கள்படத்தின் காப்புரிமைTWITTER

http://www.bbc.com

 

 

ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்டும்... ட்ரோல்களும்

 
 
DZhTcTFVwAAH0nLjpgkljpg
kioppng
DZhTcTFVwAAH0nLjpgkljpg
kioppng

 ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்களுக்கு என தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு, தமிழகத்தைச் சேர்ந்த அவரது ரசிகரான சரவணனின் நட்பால் ட்விட்டரில் பல நேரங்களில் தமிழில் ட்வீட் பழக்கத்தை கொண்டிருக்கிறார்.

   

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து ஹர்பஜனின் தமிழ் ஆர்வம் கூடுதலாகியுள்ளது. சென்னை ரசிகர்களின் கேள்விகளுக்கு அழகிய தமிழில் பதிவிட்டு வருகிறார் ஹர்பஜன் சிங்.

இந்த நிலையில் சென்னையில் ஹர்பஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே .இந்த பந்தம் தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியமாக தொடரட்டும்” என்று பதிவிட்டுருக்கிறார்.

ஹர்பஜனின் தமிழ் ஆர்வத்தை நாளுக்கு நாள் ட்ரோல்களும் ரசிக்கும் வகையில் பெருகி வருகின்றனர். இதோ அவற்றின் தொகுப்பு:

Chennai%20Super%20Kingjpg
DZhRq7qVwAIVHNjpgkjpg
 
lkijpg
DZhPzFbU8AA4lWijpgkjpg

100

DZhTcTFVwAAH0nLjpgkljpg

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/kusumbuonly

காருக்கு முன்னாடி நிக்கிறது எருமை மாடா, மனுசனான்னு கண்டுபிடிக்க ஒருவழிதான் இருக்கு... ஹாரன் அடிக்கும் பொழுது வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை. ஒரு அசைவும் இல்லாம நின்னா அது மனுசன்.

twitter.com/amuduarattai

திருமணத்தி்ன்போது போடும் மூன்று முடிச்சைவிட வலிமையானது, ஹோட்டல் சாம்பார் பார்சல் கவரில் போடும் முடிச்சு.

twitter.com/kumarfaculty

தண்ணீர் லாரிகளை உருவாக்கியது மணல் லாரிகளே..!

twitter.com/Mani Pmp

சுவிட்ச் போடாம சார்ஜ் போட்ட கதைதான், நாம வெறித்தனமா வேலை பார்க்கும்போது முதலாளி வெளியில் போயிருப்பது.

p110a_1522220705.jpg

twitter.com/nathanjkamalan

'உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்' என்றவுடன் கேட்கும் ஆவலைவிட பயம்தான் முதலில் தொற்றிக்கொள்கிறது!

twitter.com/HAJAMYDEENNKS

ஆடம்பரச் செலவு செய்யாதவர்களையும் கஞ்சன் லிஸ்ட்டில் சேர்த்துவிடுகிறார்கள்..!

twitter.com/indupriya911

ஆடியோடி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைக் கூப்பிட்டு, படினு சொல்வதைவிடவா ஒரு கொடிய வன்முறை இவ்வுலகில் இருந்துவிடப்போகிறது...

facebook.com/santhosh.narayanan.319

ரஹ்மான் இரவில் இசை அமைத்தார்;

ராஜா இரவுக்காக இசை அமைத்தார்.

ftwitter.com/ThePayon:

 ``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு.

twitter.com/Kadharb32402180: `நல்லா இருக்கீங்களா?’னு கேட்டா, `இருக்கேன், இல்லை’ன்னு சொல்லுங்கடா. அதென்ன பழக்கம், ரோடுனுகூட பார்க்காம நிற்கவெச்சு ஒரு மணி நேரம் புலம்புறது? முடியலடா சாமி!

p110b_1522220724.jpg

p110c_1522220733.jpg

twitter.com/Raajavijeyan: `கடைசித்  தலைமுறை  நாம்தான்’ எனப் பதிவு  போட்ட முதல்  தலைமுறை  நாம்தான்.

twitter.com/SukumarBjp26: ``ஏர்போர்ட்ல ஒரு காபி விலை 180 ரூபாயாம்! கேட்டதும் ஆடிப்போயிட்டேன்’’ - சிதம்பரம்! ``அப்புறம்..?’’, ``ஆடி கார்ல ஏறி வீட்டுக்குப் போயிட்டேன்!’’

p110e_1522220765.jpg

twitter.com/withkaran:

கட்சியில முக்கியப் பேச்சாளர்கள், தலைவர்கள் பேசி முடிக்க, ரெண்டு நாள்கள் தேவைப்படுற ஒரே கட்சி தி.மு.கதான்!

twitter.com/yugarajesh2:

`சிக்கிச் சீரழிஞ்சு சின்னாபின்னமாகி செருப்படி வாங்குற நிலை வரும்போது, இந்தப் பெட்டியைத் திறந்து பாரு’னு வடிவேலுவுக்கு அவர் தாத்தா ஒரு பெட்டியைத் தர்ற மாதிரி, எங்க தாத்தா, `BSNL போனைக் கடைசிவரைக்கும் கட் பண்ணாம வெச்சுக்கோடா’னு சொன்னதன் அர்த்தம் இப்பதான் புரியுது.

p110d_1522220753.jpg

twitter.com/ikrthik:

நீண்ட மெளனத்துக்குப் பிறகு வரும் `miss you’,  அழுதுகொண்டே சொல்லும் `hate you’ பெண்கள், தங்கள் காதலைச் சொல்ல  `I love you’-க்களைத் தேர்ந்தெடுப்பதில்லை!

twitter.com/KeethaSj:

தோசை வார்ப்பது கலை, இட்லியைத் தட்டிலிருந்து எடுப்பது தவம், குழிப்பணியாரத்தைத் திருப்புவது தியானம், உப்புமா சாப்பிடுவது மோன நிலை!

p110f_1522220779.jpg

twitter.com/withkaran:

நடிச்சிட்டிருக்கும்போது `அரசியல்ல கருத்து சொல்லலையா?’னு கேட்கிறது. அரசியலுக்கு வந்த பிறகு `சினிமாவுல கருத்து சொல்லலையா?’னு கேட்கிறது!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.

வரலாற்றில் இன்று….

மார்ச் – 30

நிகழ்வுகள்

1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1814 – நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர்.
1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.
1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
1842 – அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.

pencill-500x303.jpg
1867 – அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²), ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஆஸ்திரியாவினுள் நுழைந்து வியன்னா நகரைக் கைப்பற்றினர்.
1949 – ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரெய்க்ஜாவிக் நகரில் கலவரம் இடம்பெற்றது.
1965 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.

 

பிறப்புகள்

1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)
1925 – தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (இ. 2014)
1936 – யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 2015)

இறப்புக்கள்

1949 – பிரீட்ரிக் பேர்ஜியஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1884)
1965 – பிலிப் ஹென்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1896)
2005 – ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘கோழைத்தனமான நடிப்பு’
 

image_48589fb08d.jpgவலிமை நிறைந்த பெரும்பான்மைச் சமூகம், வலுக்குன்றிய சமூகத்தைக் குற்றம் சுமத்தியபடியே, சமாதானத்துக்கு அழைப்பது, வேடிக்கையானதும் மமதையின் உச்சமுமாகும். 

இவையெல்லாமே ஒப்புக்காக உலகத்தை ஏய்க்கும் செய்கைகள். ஆனால், இத்தகைய நோக்கம் கொண்டவர்கள், தமது சுயநல நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக மிரட்டும் தொனியுடன் பேசுவதை விட்டு விடுவதேயில்லை.  பரந்த, விசுவாசமான, உறுதியான செம்மையுடன் உரையாட விரும்பாது விட்டால், மீளாத இருட்டுக்குள் எல்லோரும் வாழ வேண்டியதுதான். 

ஒற்றுமையுடன் வாழ்வதில் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது? நெஞ்சில் உரம் கொண்டவர்கள்போல், உலகத்துக்குப் பயமேதும் இல்லை என்று சொல்வதும்கூட கோழைத்தனமான  நடிப்புத்தான். 

கொடுத்து மகிழ்வதே சந்தோஷம். பறித்து எடுப்பதில் ஏது சுகம்? கர்ஜனை மூலம் சுபீட்சம் கிட்டாது. அமைதி வழியே சிறந்தது.  

  • தொடங்கியவர்

முதலாவது பூமி நேரம் நிகழ்ச்சி சிட்னியில் தொடங்கப்பட்ட நாள்: மார்ச். 31, 2007

 

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்

முதலாவது பூமி நேரம் நிகழ்ச்சி சிட்னியில் தொடங்கப்பட்ட நாள்: மார்ச். 31, 2007
 
வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. 

இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். 

உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓபரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889

 

1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது.

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889
 
1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 

1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது. 

அக்காலத்தில் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது. 

இக்கோபுரம் அதன் உச்சியிலுள்ள 20 மீட்டர் உயரமுள்ள தொலைகாட்சி ஆண்டனாவை சேர்க்காமல், 986 அடி உயரமானது. 10 ஆயிரம் டன்கள் எடை கொண்டது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது உலகின் அதிக உயரமான கோபுரம் இதுவேயாகும். 

இதன் பராமரிப்புக்காக ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலை மாறும்போது உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக ஈபிள் கோபுரத்தில் உயரத்தில் பல சதுர மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது. 

இக்கோபுரம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதை பார்க்க வருகிறார்கள். இக்கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28-ஆம் தேதி பெற்றது. இது கட்டப்பட்ட காலத்தில் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காது என்றே கருதினார்கள். 

ஆனால், இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக் கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909-ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபிள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது. 

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள் 

* 1866 - சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. 

* 1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது. 

* 1909 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது. 

* 1918 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

• 1931 - நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 

* 1959 - திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார். 

* 1966 - சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. 

* 1970 - 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது. 

* 1979 - மோல்ட்டா விடுதலையை அறிவித்தது. 

* 1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது. 

* 2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

``இவன் நினைப்பது அவனுக்குத் தெரியும்!" - இரட்டையர்களின் திகிலூட்டும் டெலிபதி உண்மையா? #TwinTelepathy

 
 

டெலிபதி

பதின்வயது ஆங்கிலப் பெண்ணான ஜெம்மா ஹக்டன் ( Gemma Houghton) அன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டாள். ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக அவள் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. இருந்தும் அது என்னவென்று முழுமையாக அவளுக்குப் புலப்படவில்லை. சில நிமிட யோசனைக்குப் பிறகு அவளின் இரட்டைச் சகோதரியான லீயன்னெவின் ( Leanne Houghton) முகம் அவள் மனதில் தோன்றி மறைந்திருக்கிறது. உடனே, தன்னுடன் பிறந்த இரட்டைச் சகோதரியான அவளுக்கு ஏதோ ஓர் ஆபத்து என்று அவளுக்குப் பொறி தட்டியிருக்கிறது. மாடியில் அவளின் அறைக்கு ஓடியிருக்கிறாள். அங்கே, குளியலறை டப்பில் அரை மயக்க நிலையில் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தாள். சரியான நேரத்தில் தன் சகோதரியை வெளியே இழுத்து முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வரவைத்து, உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள் ஜெம்மா. இது 2009-ம் ஆண்டு டெலிக்ராஃப் தளத்தில் வெளியான செய்தி. இது ஓர் உதாரணம் மட்டுமே. இரட்டைப் பிறவிகள் பலர் இது போல தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை நிறைய முறை விவரித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Twin Telepathy அதாவது இரட்டையர்களின் டெலிபதி என்கிறார்கள்.

 

சென்ற வருடம், ஓர் ஆங்கிலப் பொழுதுபோக்கு தளமொன்று தங்கள் வாசகர்களில் யாரேனும் இரட்டைப் பிறவிகள் இருந்தால், தங்களுக்கு நேர்ந்த டெலிபதி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதற்கு வாசகர்கள் பதிவிட்ட சம்பவங்கள் அனைத்தும் திகிலூட்டுபவை! ஒரே நாளில் ஒரே கனவை பகிர்ந்து கொள்வது, வெளியே சென்ற தம்பிக்கு விபத்து என்று சொல்லாமலே தெரிந்து கொண்டது; ஒருவர் காலில் டேட்டூ இட்டுக்கொள்ள அது காயமான பின், மற்றொருவருக்கும் அதே இடத்தில் இரத்தக் காயம் ஏற்பட்டது; ஒருவருக்குக் காய்ச்சல் வந்தும் அதற்கான அறிகுறிகளே இல்லாமல் இருக்க, மற்றொருவர் காய்ச்சல் இல்லாவிட்டாலும் அதற்கான அறிகுறிகளுடன் படுத்துக்கிடந்தது; ஒரே க்ரீட்டிங் கார்டை இருவரும் அன்னையர் தினத்தன்று, அம்மாவிற்காகத் தேர்ந்தெடுத்தது என அந்தப் பட்டியல் நீள்கிறது. இந்த ஒவ்வோர் அனுபவமும் முன்னிறுத்தும் விஷயம் ஒன்றுதான். இரட்டையர்கள் வெவ்வேறு மனிதர்கள் என்றாலும், அவர்களின் உணர்வுகள் எப்போதும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றன. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்றொருவன் என்ன முடிவு எடுப்பான் என அறிந்துகொள்ள கூடிய அளவுக்கு அவர்கள் இடையே இந்த டெலிபதி உணர்வு இருப்பதாகப் பலருடைய அனுபவங்கள் நமக்குக் கூறுகின்றன. அதிலும் ஒரே தோற்றமுடைய இரட்டையர்கள் என்றால் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு சிலரின் கருத்து.

1844-ம் ஆண்டு, புகழ்பெற்ற எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டுமாஸ் ( AlexanderDumas), தி கார்சிகன் பிரதர்ஸ் ( The Corsican Brothers) என்ற புதினத்தை வெளியிட்டார். இது ஓட்டிப் பிறந்து பின்னர் பிரிக்கப்பட்ட இரட்டைச் சகோதரர்களின் கதை. இதில் ஒருவரின் எண்ணங்களை மற்றொருவர் சொல்லாமலே புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் ஒருவரின் வலியை இன்னொருவர் உணருவது எனக் கதை அமைத்திருப்பார், இது ஒரு கற்பனைக் கதைதான் என்றாலும், அந்தக் காலகட்டத்தில் இந்த இரட்டையர்களின் டெலிபதி என்பது மிகவும் பேசப்பட்ட ஒரு மரபு ஆராய்ச்சி! சரி, இதற்கு மருத்துவ அறிவியல் என்ன விளக்கமளிக்கிறது?

இரட்டையர்கள் என்றாலே எப்போதும் ஒருவித ஆச்சர்யம் நமக்குத் தொற்றிக்கொள்ளும். அதிலும் ஒரே தோற்றம் கொண்டவர்கள் என்றால் அவ்வளவுதான். எங்கேனும் பொது இடங்களில் அவர்களைப் பார்த்தால்கூட, ஒரு நிமிடம் நின்று கவனித்து, ஆச்சர்யப்பட்டுவிட்டுதான் நகர்வோம். திரைப்படத்தில்கூட ஒரு கதாபாத்திரம் டபுள் ஆக்ஷன் என்றால், அந்தப் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். இப்படி ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்களை Identical Twins அல்லது Monozygotic Twins என்கிறார்கள். இவர்கள் ஒரே கருமுட்டையில் ( Zygote) இருந்து தோன்றிய இரு கருக்கள் ( Embryo).இவர்களின் தோற்றம் ஒரே அச்சில் வார்த்தது போல ஒன்று போலவே இருக்கும். இவர்களின் பாலினம் மாறுபடாது. இவர்கள் ஆண் அல்லது பெண் இரட்டையர்களாக மட்டுமே இருப்பார்கள். மற்றொரு வகையான இரட்டையர்களை Fracternal அல்லது Non-Identical Twins என்கிறார்கள். இதில் இரண்டு குழந்தைகளும் ஒரே பாலினமாகவும் இருக்கலாம், மாறுபட்டும் இருக்கலாம். காரணம், இவர்கள் வெவ்வேறு கருமுட்டையிலிருந்து அவதரித்தவர்கள். ஆனால், இவர்களின் உருவம் நிச்சயம் ஒன்றுபோல இருக்காது.

பொதுவாக, இரட்டைப் பிறவிகள் என்னும் போது அவர்களுக்கு மரபணு மற்றும் DNA ஒற்றுமை அதிகம் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அவர்கள் வாழும் விதம், வளர்க்கப்படும் விதம், உடுத்தும் உடை, படிக்கும் பள்ளி, வகுப்பு என ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பலருக்கு நண்பர்கள் கூட ஒரே மாதிரி அமையலாம். இவ்வகைச் சூழல் இரட்டையர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண சகோதர சகோதரிகளுக்குக் கூட அமையலாம்தான். ஆனால், அங்கே வயது வித்தியாசம் ஒரு பெரிய இடைவெளியாக இருக்கும். இங்கே இரட்டையர்கள், ஒரே நேரத்தில் தூங்கச் செல்வது, ஒரே பொம்மை வேண்டுமென அடம் பிடிப்பது, ஒற்றுமையாக எல்லா இடத்திற்கும் சென்று வருவது என அதகளம் செய்வார்கள். சில சமயம், ஒருவர் சொல்ல வருவதை, மற்றொருவர் சொல்லி முடிக்கும் ஆச்சர்யங்கள் எல்லாம் நிகழலாம். இதையும் தாண்டி அவர்கள் உணர்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போலவும், இருவருக்கும் சொல்லப்படாத டெலிபதி இணைப்பு ஒன்று இருப்பது போலவும் தோன்றும். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இருப்பதாக அறிவியல் பூர்வமாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இன்றளவில் அது ஓர் அமானுஷ்யம் கலந்த போலி விஷயமாக ( Pseudoscience) மட்டுமே பார்க்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, மேலே படித்த ஹக்டன் சகோதரிகளின் கதையை எடுத்துக் கொள்வோம். சம்பவம் நடந்தபோது இருவரும் தங்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அப்போது ஏதோ ஓர் ஆபத்து என்று ஜெம்மாவிற்கு தோன்றுகிறது. அது என்ன என்ன என்று மீண்டும் மீண்டும் யோசிக்கும் பொழுதுதான், லீயன்னெவின் எண்ணமே அவளுக்குத் தோன்றியிருக்கிறது. இவ்வகை எண்ணங்களை உளவியல்படி பகுப்பாய்வு செய்தால்...

``ஒரு சில நேரங்களில் அதீத உணர்வுகளால் உந்தப்பட்டு நிற்கும்போது. நம் எண்ண ஓட்டங்கள் சொல்ல வரும் விஷயத்தை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. காரணம், அவற்றை ப்ராசெஸ் செய்யும் அளவிற்கு நம் மூளைக்கு நேரம் இல்லை. அதாவது, ஒரு கொடூரமான பயம் ஒரு விஷயத்தால் ஏற்படுகிறது என்றால், அந்த விஷயம் என்னவென்று கிரகித்துக்கொள்ளும் முன்னரே மூளை பய உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்திருக்கும். பயம் உண்டான பின்பு அதை எப்படிப் போக்குவது என்ற சிந்தனையே மேலோங்குவதால் அதற்கான காரணம் நமக்குப் பெரிதாகத் தோன்றுவதில்லை. இந்தச் சம்பவத்தில் லீயன்னெவிற்கு முன்னரே அடிக்கடி வலிப்பு வந்ததாகக் கூறுகிறார்கள். ஜெம்மாவின் மூளை ஒருவித படபடப்பான நிலைக்குச் செல்ல, திடீரென தோன்றிய பயமே காரணம். இந்தப் பயம் உருவாக, லீயன்னெவை பல நேரம் காணாத நிலை காரணமாக இருக்கலாம். அது ஜெம்மாவின் மூளையை எட்டும் முன்பே, பயம் ஆட்கொண்டதால், உண்மை நிலை அவளுக்குப் புரிய, சில நிமிடங்கள் ஆகியிருக்கிறது. அவ்வளவே!

ஹக்டன் சகோதரிகள்

PC: MEN

இது இயல்பாகவே, நம் எல்லோருக்கும் தோன்றும் எண்ணங்கள் போலத்தான். ``கடைக்குச் சென்ற அம்மா ஏன் இன்னும் வரவில்லை?" , ``அப்பா இன்று வர ஏன் இவ்வளவு தாமதம்?" என்பது போன்ற எண்ணங்களின் வெளிப்பாடுதான் இதுவும். இப்படி நாம் எண்ணும் போது, ஏதோ ஒரு நாள், அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ ஏதோ ஒரு சிறு விபத்து ஏற்பட்டுவிட, உடனே எனக்கு உள்ளுணர்வு சொல்லியது. எனக்கும் அம்மாவிற்கும் டெலிபதி தொடர்பு இருக்கிறது என்று கூரிவிடுவோமா என்ன? யதேச்சையாக நடந்த சம்பவம் என்று கடந்துவிட மாட்டோம்? ஆனால், அத்தகைய சம்பவம் இங்கே இரட்டையர்கள் இடையே ஏற்படுவதால், அதனால் மட்டுமே பூதாகரம் ஆக்கப்பட்டு, பெரிதாகப் பேசப்படுகிறது. ஒரே வீட்டில் ஒன்றுபோல வளர்க்கப்பட்டவர்களின் எண்ண ஓட்டங்கள், எடுக்கும் முடிவுகள் ஒன்றுபோல இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? பல காலம் ஒன்றாய் வாழ்ந்த தம்பதிகள் இடையேகூட அவ்வகை ஒற்றுமை இருக்கும். இத்தகைய சம்பவங்களும் கொட்டிக் கிடக்கும். இது அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுக்குக்கூடப் பொருந்தும்.

ஒரு சம்பவம் எப்படிப்பட்டது என்றால் அது பரபரப்பாகப் பேசப்படும்? அது இதுவரை நடக்காத ஒன்றாக, ஆச்சர்யப்படுத்தும் விதமான ஒன்றாக இருக்க வேண்டும். இரட்டையர்கள் அடுத்தடுத்த நாளில் மரணித்தார்கள் என்றால் அந்தச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்படும். அவர்கள் இடையே ஒரு மாயத் தொடர்பு இருந்ததாகக் கூறுவார்கள். ஆனால், ஒருவர் இறந்து பல வருடங்கள் கழித்து இறந்த இரட்டையர்களின் கதைகள் ஆயிரம் இருக்கும். அது ஒரு பெரிய விஷயமாகவே படாது. இவ்வகை சம்பவங்கள் யதேச்சையாக நடக்கும் ஒன்றாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. காரணம், இந்த உலகில் தற்போது நூறு மில்லியன்களுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இத்தகைய அமானுஷ்ய சம்பவங்கள் தங்களுக்கு நடந்ததாகக் கூறுபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதை வைத்து அறிவியல் ரீதியாக ஒரு முடிவை நாம் எட்டவே முடியாது.

இரட்டையர்கள் என்பதற்காகவோ அல்லது சகோதர-சகோதரி என்பதற்காகவோ அவர்களை ஒன்றுபோலவே வளர்க்க வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவம் உண்டு என்று நாம் உணர்ந்து செயல்பட வேண்டும், அண்ணன் போலவே செய், உன் இரட்டைச் சகோதரி போலவே செய் என்று கட்டாயப்படுத்தாமல் அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அது சரி, உங்களுக்குத் தெரிந்த இரட்டையர்களின் வாழ்வில் இத்தகையச் சம்பவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அதைப் பதிவு செய்யுங்களேன்!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

தலையை வெட்டிய பின்னும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்

 

அமெரிக்காவில் நடைபெற்ற அதிசயம் இது. தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசயக் கதை இது.

'மிராகிள் மைக்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES/BBC WORLD SERVICE Image captionகோப்புப்படம்

இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான சம்பவம். 70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம் 'மிராக்கிள் மைக்' என்ற பெயரில் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது இச்சேவல்.

தலை வெட்டப்பட்ட பிறகு நீண்ட காலம் வாழ்ந்த சேவல் இதுதான் என்று கூறப்படுகிறது.

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொலராடோவில், ஃப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

'மிராகிள் மைக்'படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionகோப்புப்படம்

சுமார் 40 - 50 உருப்படிகளை வெட்டியிருப்பார்கள். ஆனால் அதில் ஒன்று மட்டும் உயிருடன் தத்தித் தத்தி நடைபோட்டுக் கொண்டிருந்தது.

ஓல்சென் மற்றும் கிளாராவின் கொள்ளுப் பேரன் ட்ராய் வாட்டர்ஸ் அந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறார், "வெட்டும் வேலை முடிந்ததும், கொள்ளு தாத்தாவும், பாட்டியும் இறைச்சியை சுத்தப்படுத்த தொடங்கியபோது, அதில் ஒன்று மட்டும் தலை வெட்டப்பட்ட நிலையிலும் அங்கும் இங்கும் தளிர் நடை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்."

ஃப்ரூடாவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது Image captionஃப்ரூடாவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது

தலையில்லா சேவலை தம்பதிகள் ஆப்பிள் பெட்டி ஒன்றில் வைத்து விட்டு சென்று விட்டார்கள். சற்று நேரத்தில் இறந்துவிடும், அதுவரை அது முண்டமாக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் காலையில் வந்து பார்த்தபோதும் அது உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார் ஓல்சென்.

சிறுவனாக இருந்தபோது தனது முப்பாட்டனிடம் இருந்து இந்தக் கதையை கேட்டிருக்கிறார் ட்ராய் வாட்டர்ஸ்.

மைக் என்ற அந்த சேவலை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.

வாட்டர்ஸ் சொல்கிறார், ''இறைச்சி விற்கும் சந்தைக்கு செல்லும்போது அந்த தலையில்லா சேவலையும் கொள்ளுத் தாத்தா எடுத்துச் சென்றார். அந்த காலத்தில் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல குதிரை வண்டியை பயன்படுத்துவார்கள்.''

"இந்த சம்பவத்தை கேட்டவர்களில் சிலர் இதை கட்டுக்கதை என்று கூற, அது உண்மையா இல்லையா என்று பந்தயங்களும் நடந்தது. பந்தயப் பொருட்களாக பியர் அல்லது அதுபோன்ற பல பொருட்கள் வைக்கப்பட்டன."

மைக்கைப் பற்றிய செய்தி அந்த வட்டாரம் முழுவதும் தீயைப் போல பரவியது. உள்ளூர் பத்திரிகை ஒன்று ஓல்ஸேனிடம் பேட்டி எடுக்க தனது செய்தியாளரை அனுப்பியது. தொடர்ந்து பல பத்திரிகையில் மைக் மற்றும் ஓல்செனின் புகைப்படங்களும், கட்டுரைகளும் வெளியாகின.

சில நாட்களுக்குப் பிறகு, 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரத்தில் கண்காட்சிகளை நடத்தும் ஹோப் வேட், ஃப்ரூட்டோவிற்கு வந்தார். மைக்கை பார்த்து உறுதி செய்துக் கொண்டார். தனது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருமாறு ஓல்ஸேனுக்கு அழைப்புவிடுத்தார்.

அமெரிக்கா சுற்றுப்பயணம்

அவரின் அழைப்பை ஏற்று முதலில் சால்ட் லேக் நகரத்திற்கு சென்ற ஓல்ஸேன், முதலில் யூடா பல்கலைக்கழகத்திற்கு மைக்கை கொண்டு சென்றார். அங்கு மைக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

பல கோழிகள் மற்றும் சேவல்களின் தலையை வெட்டியும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதாவது வெட்டப்பட்ட பிறகு எத்தனை நேரம் அவை உயிர் வாழும் சாத்தியங்கள் இருக்கும் என்று ஆராயப்பட்டது.

மைக் தலைவெட்டப்பட்டும் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர் உறுதி செய்தபிறகு மைக் கண்காட்சிகளிலும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது. மைக்கின் உரிமையாளரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்பட்டது.

கிளாரா மற்றும் லாய்ட்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionகிளாரா மற்றும் லாய்ட்

'மிராக்கிள் மைக்' என்று மைக்குக்கு பெயர் சூட்டினார் ஹோப் வேட். 'மிராக்கிள் மைக்' பற்றி 'லைஃப் மேகஸின்' கட்டுரை வெளியிட்டது.

அதற்கு பிறகு லாய்ட், கிளாரா மைக் மூவரும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கலிஃபோர்னியா, அரிஜோனா மற்றும் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளுக்கும் அவர்கள் சென்றனர்.

மைக்குடன் சென்ற இந்த சுற்றுப்பயணம் தொடர்பான குறிப்புகளை கிளாரா எழுதி வைத்திருக்கிறார். அவை இன்றும் வாடர்ஸிடம் இருக்கின்றன.

ஆனால் சுற்றுப் பயணத்தின்போதே, 1947ஆம் ஆண்டு அரிஜோனாவின் ஃப்ரின்க்ஸில் மைக் இறந்துவிட்டது.

தலையில்லாத மைக் எப்படி உணவு சாப்பிட்டது?

மைக்குக்கு தினமும் திரவ வடிவிலான உணவுகள் சொட்டு மருத்து கொடுப்பதுபோல் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

தொண்டையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்ச் மூலமாக மைக்கின் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒரு நாள் சிரிஞ்ச் கொண்டு செல்ல மறந்துவிட்ட நிலையில், மாற்று ஏற்பாடு செய்வதற்குள் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மைக் இறந்துவிட்டது.

தலை வெட்டப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும், ஒரு சிறிய சிரிஞ்ச் இல்லாத காரணத்தால் உயிரிழந்தது 'மிராக்கிள் மைக்'.

பொருளாதார நிலை சீரானது

வாட்டர்ஸ் சொல்கிரார், "மைக்கை விற்றுவிட்டதாக தாத்தா அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் சில நாட்களுக்கு பிறகு என்னிடம் உண்மையை சொல்லிவிட்டார்."

ஆனால் அவருடைய வாழ்க்கை நிலையும், பொருளாதார நிலைமையும் முன்னேறியதற்கு காரணம் மைக்தான்.

மைக் எப்படி தலையில்லாமல் பல மாதங்கள் வாழ்ந்தது என்பதற்கான சாத்தியக்கூறுகளை சொல்கிறார், நியூகைஸல் பல்கலைக்கழகத்தின், நடத்தை மற்றும் பரிணாம மையத்துடன் இணைந்து பணிபுரியும் கோழிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிபுணரும், பேராசிரியருமான டாம் ஸ்மல்டர்ஸ்.

"கோழி மற்றும் சேவலின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள ஒரு சிறிய பகுதியில்தான் இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று".

மைக்கின் தலையை வெட்டியபோது, அதன் அலகு, முகம் மற்றும் கண்கள் வெளியே வந்துவிட்டன, ஆனால் அதன் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீதமும் வெட்டுப்படவில்லை. இதனால், மைக்கின் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்த்து என்கிறார் பேராசிரியர் டாம் ஸ்மல்டர்ஸ்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?!

 
 
Chennai: 

டெஸ்ட் மேட்ச்னா ஒயிட், ஒரு நாள் சர்வதேசப் போட்டினா ப்ளூ, IPL னா கலர்ஃபுல் ஆனா, யூனிஃபார்ம். மைதானத்துலதான் சீருடைனா, விளம்பர படங்கள்லயும் அதே ஜெர்ஸிதான் நம்ம கிரிக்கெட் ஹீரோக்களுக்கு காஸ்ட்யூம். ஆனால், ஸ்டைல் ஐகான்ஸ் சினிமாவுல மட்டுமில்லை, விளையாட்டிலும் இருக்கிறார்கள். அதிலும் அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட்டில்தான் டாப் ஐகான்ஸ் உள்ளனர். வீரர்களின் ஸ்டைல்லை பின்பற்றும் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களின் டீப் ஃபேஷன் சென்ஸ் என்னவென்று. இப்போ நாமும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே! கிரவுண்ட விட்டு வெளில வந்து, நம்ம நாயகர்களின் அவுட்ஸ்டேண்டிங் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போமா?

கிரிக்கெட்

 


ஹார்திக் பாண்டியா :

ஹார்திக் பாண்டியா


கட்டுக்கோப்பான உடலமைப்பு, பிரைட் ஹேர்கலர்ஸ், விதவிதமான ஹேர்ஸ்டைல், வித்தியாசமான காஸ்ட்யூம், ரொம்பவே கூலான லுக். இதுதான் ஹார்திக் பாண்டியா. கைகளில் டாட்டூ, காதுகளில் கடுக்கன், கழுத்தில் கனமான செயினுடன் ட்ரெண்டி இளைஞர் பாண்டியா. வெஸ்டர்ன் உடையில் மட்டுமல்ல, அவர்களின் கலாசார உடையிலும் புதுமையைப் புகுத்தி ஐகானாகவே மாறிவிட்டார் இவர். சாதாரண குர்த்தாதான் ஆனால், அவர் அதை உடுத்திக்கொள்ளும் விதம், வித்தியாசம். விளையாட்டில் மட்டுமல்ல, தன்னை மெருகேற்றிக்கொள்ள பல புதுமைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாண்டியா, ஃபேஷன் உலகிலும் ஆல்ரவுண்டர்தான்.


ரவீந்திர ஜடேஜா :

ரவீந்திர ஜடேஜா


இப்போல்லாம் பசங்கள அடையாளம் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டமாயிடுச்சு. காரணம், மீசை மற்றும் தாடிக்குள் முகம் புதைந்திருப்பதுதான். சமீப காலமாக அடர்த்தியான தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது. இதுல ஜடேஜா எக்ஸ்பர்ட்னு  சொல்லலாம். மீசை, தாடியை ட்ரிம் பண்ணறதுல இத்தனை வெரைட்டியானு பிரம்மிக்கிற அளவுக்கு ஏராளமான ஸ்டைல் இவர் அறிமுகப்படுத்தியது. அடர்ந்த சுருட்டை முடியிலும் ஸ்டைலிஷ் ட்விஸ்ட் கொண்டு வந்தவர் ஜடேஜா. எந்த விழாக்காலமாக இருந்தாலும், இவர் தேர்ந்தெடுக்கும் ஆடைகள் சிம்பிளாக இருக்கும். ஆனாலும் இவரின் ஹேர் மற்றும் தாடி ஸ்டைலில் இரட்டை சதம் அடித்து விடுவார். தற்போதுள்ள இளைஞர்களின் தாடி மற்றும் சிகையலங்காரத்தின் ஃபேஷன் ஐகான் ஜடேஜா.


யுவராஜ் சிங் :

யுவராஜ் சிங்


'YWC Fashion' எனும் தனது ஆடை அலங்கார பிராண்டின் அறிமுகத்தன்று நடந்த ஃபேஷன் ஷோவில், தன்னுடன், தன் சக வீரர்களையும் ராம்ப்பில் (Ramp) நடக்கவிட்டு அழகு பார்த்தவர் யுவராஜ் சிங். ஏற்கெனவே தன்னை மெருகேற்றிக்கொள்வதில் தனி கவனம் கொண்டிருந்த யுவி, ஃபேஷன் பிராண்டை உருவாக்கியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கேஷுவல் உடை, சிறப்பு நிகழ்வுகளின் உடை, பார்ட்டி உடை என அனைத்துக்கும் யுவியின் சாய்ஸ், அல்ட்ரா மாடர்ன் வகைகள்தான். எப்போதும் , கூடவேயிருந்து ஆதரவளித்து வரும் யுவியின் மனைவியின் டிரஸ் செலெக்ஷனும் டாப் க்ளாஸ். பல தடைகளைத்தாண்டி வெற்றிப்பாதைகளை பதித்து வரும் இவர்கள் இருவருமே இண்டோவெஸ்டர்ன் ஃபேஷன் ஐகான்கள்.


சுரேஷ் ரெய்னா :

சுரேஷ் ரைனா


இந்தியாவின் ஹேர் ஜெல் விற்பனை சூடுப் பிடிக்க காரணம் ரெய்னாதான். அதெப்படி முடி நேரா ஸ்ட்ராங்கா நிக்குதுனு கூகுள்ல தேடல்கள் அதிகமானதற்கு முக்கியக் காரணம். மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான `ஹாக் (Hawk)' எனும் ஹேர்ஸ்டைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, `சுரேஷ் ரெய்னா ஹாக்' என்ற ட்ரேட்மார்க்கையும் பதித்துவிட்டார் இவர். தன் நிச்சயதார்த்த நாளன்று க்ரீம் மற்றும் சிவப்பு குர்த்தாவிலும், திருமண நாளன்று ஐவரி ஷெர்வானியிலும் மிளிர்ந்தார். ஹேர்ஸ்டைலுக்கு மட்டுமல்ல அவரின் கேஷுவல் ஸ்டைலுக்கும் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்.


மகேந்திர சிங் தோனி : 

மகேந்திர சிங் தோனி


ஸ்டைல் ஐகானில் ரெய்னாவுக்கு டஃப் போட்டியாளர் தோனி. நீண்ட நேரான முடி, ஒரு காலத்தில் தோனியின் அடையாளம். இப்போதும், `ஓல்ட் தோனி ஹேர்ஸ்டைல்' என்றுதான் பலரும் `லாங் ஹேர்ஸ்டைலுக்கு' அடையாளம் காட்டுகின்றனர். அந்தளவுக்கு மனதில் பதிந்த தோற்றம் அது. அதனைத் தொடர்ந்து பல்வேறு விதமான ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸிங் ஸ்டைல் என கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஃபேஷனிலும் பல ரசிகர்களை வென்றார் தோனி. விழா நாள்களில் உடுத்தும் ஷெர்வானி முதல் பயிற்சியின்போது உடுத்தும் சாதாரண ஜெர்ஸி வரை, தோனியின் பாணி தனி. கோட் சூட்களில் அதிகம் காணப்படும் கிரிக்கெட் தல தோனி, தற்போது நம்ம ஊரு தல போல `சால்ட் அண்ட் பெப்பர்' சிம்பிள் ஹேர்ஸ்டைலில் காணப்படுகிறார்.


விராட் கோலி :

விராட் கோலி

 


இந்திய பாரம்பர்ய உடைகளான ஷெர்வானி, குர்தா பைஜாமா, மேற்கத்திய உடைகளான ஜீன்ஸ், பேன்ட், ஷர்ட், டீ-ஷர்ட், ஸ்டைலிஷ் தாடி மற்றும் ஹேர்ஸ்டைல், ட்ரெண்டி டாட்டூ, கூலர்ஸ் அல்லது சாதாரணக் கண்ணாடி, வித்தியாசமான கைக்கடிகாரம், கண்களைப் பறிக்கும் ஸ்போர்ட்ஸ் ஷூஸ், இப்படி எல்லாவற்றிலும் ட்ரெண்ட் செட் செய்துகொண்டிருப்பவர் விராட் கோலி. ஆடை, சிகையலங்காரம் எனத் தன்னை மெருகேற்றிக்கொள்வதில் இவர் எடுக்கும் முயற்சிகள்  அசர வைக்கும். தனக்கு எது பொருந்தும் என்பதைவிட எதெல்லாம் பொருந்தாது என்பதில் கவனமாக இருப்பார். இப்படிப்பட்ட கூல் ஐகானுக்குச் சொந்தமாக WROGN என்ற பெயரில் ஃபேஷன் ஆடைகள் பிராண்டும், One8 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டும் இருக்கின்றன (இல்லனாதான் ஆச்சர்யம்!). விளையாட்டில் மட்டுமல்ல, கலர்ஃபுல் வாழ்க்கைக்கும் இவர் கேப்டன்தான்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விற்றது டீ: பெற்றது கோடி

 
 
 
 
Bhakti Chai Tea, USA Woman,Brook Eddie,பக்தி சாய் தேநீர், அமெரிக்கா பெண், அமெரிக்காவின் கொலராடா,  புரூக் எடி, பக்தி சாய் நிறுவனம், இந்தியாவில் சுற்றுப்பயணம் ,அமெரிக்கா சிறந்த தொழில்முனைவோர் பட்டியல்,   America Colorado,  Bhakti Chai Company, Tour in India, America Best Entrepreneur List,
 
 

 

 

புதுடில்லி: இந்திய பயணத்தின் போது, சுவைத்த தேநீரை மறக்க முடியாத பெண் ஒருவர், அமெரிக்காவில் அதனை தயாரித்து விற்று கோடீஸ்வரியாகியுள்ளார்.
அமெரிக்காவின் கொலராடாவை சேர்ந்தவர் புரூக் எடி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், 2002 ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் சுவைத்த தேநீர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. சொந்த ஊருக்கு திரும்பிய பின்னரும் அதன் சுவையை எடியால் மறக்க முடியவில்லை.
கொலரடா நகரில் ஏராளமான காபி கடைகள் உள்ளன. அங்கு சென்று அவர் தேநீர் சுவைத்த போதும், இந்தியாவில் கிடைத்த சுவை அவருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2006 முதல், வீட்டில் தேநீர் தயாரித்து, பக்தி சாய் என்ற பெயர் வைத்து, தனது காரில் பின் பகுதியில் வைத்து பகுதி நேரமாக விற்பனை செய்ய துவங்கினார். இஞ்சி மற்றும் மசாலா சேர்த்து அவர் தயாரித்த தேநீருக்கு பலர் வாடிக்கையாளர்களாக மாறினர். இதனையடுத்து, புரூக் தயாரித்த தேநீர் பல காபி கடைகளில் விற்பனையானது.

 

முழு நேர வேலை:



மேலும், 2007 முதல் இணையதளம் மூலமும் விற்பனை துவங்கினார். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, முழுநேர வேலையை விட்டுவிட்டு, தேநீர் விற்பனையில் முழு கவனம் செலுத்தினார்.விற்பனை மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வகையில் 2008 ல் பக்தி சாய் நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது.

எடி புரூக்கின் கடும் உழைப்பு காரணமாக, அமெரிக்காவின் தொழில்முனைவோர் பத்திரிகையின், சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் 5வது இடத்திற்குள் வந்தார். இந்த வருடம் 7 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பக்தி சாய் நிறுவனம் கூறியுள்ளது.

http://www.dinamalar.com

  • தொடங்கியவர்

"முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!" - கமலாதாஸ் #KamalaDas

 
 

கமலா தாஸ்

“முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!”

 

இந்த வாக்கியம் உங்களுள் சில சலனங்களையும் அச்சங்களையும் முளைக்கவிடுகிறதா? எனில், கமலா தாஸ் எனும் அற்புத மனுஷியைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆபரணங்கள் மற்றும் ஆடைகளைக் அகற்றுவது குறித்து ஏன் அப்படி சொன்னார் என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன்பு சில கேள்விகள்.

நீங்கள் ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் அன்பில் திளைத்திருக்கிறீர்களா? காமவயப்பட்டுள்ளீர்களா? காதலின் சூடான குளிர் ஊசிகளை நெஞ்சில் வாங்கியிருக்கிறீர்களா? நிச்சயம் அவை அழகான தருணங்கள். அந்த அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் எனத் தெரியுமா? மாதம் மாதம் மாதவிடாய் தருணங்கள், மாதவிடாய்க்கு முன்பான அந்த ஒரு வார உணர்வுக் கலவைகள் எனப் பெண்ணின் காதல் உணர்வுகளும் அத்தகையதே. ஆணின் காதல் கொண்டாட்டங்களைப் பதிவுசெய்தே வளர்ந்த இலக்கியங்களின் கட்டமைப்பே நம் சமூக அடித்தளம். பூவினால் தொட்டால்கூட சிறு கோடு விழுந்துவிடும் என்று தயங்கும் அளவுக்கு மென்மைகளின் இதழ்கள் வளர்த்த பெண்ணின் உணர்வுகள், காதல் தொட்டால் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தும்? பெண்ணின் காதல் உணர்வுகளை, காம ஆசைகளை அத்தனை அழகியலுடன் ஆயிரம் வண்ணங்களாக ஒளிர ஒளிர எழுதியவர் கமலா தாஸ்.

எந்தப் பெண்ணைச் சுற்றிலும் வானம் நிறைந்திருக்கும்; வண்ணங்கள் நிறைந்திருக்கும்; அழகுப் பூத்துக் குலுங்கியிருக்கும். ஆனால், உயிர்சக்தி நிரம்பிய அவள் ஆற்றல் வானத்தில் சிறகுகள் விரிக்க ஒரு தடை இருக்கும். அது காதலோ, அடக்க இயலாத காமப் பெருக்கோ, ஆணுக்கே கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும்போது, பெண்ணின் பாலியல் ஆசைகள் குறித்து இங்கே பேசமுடியுமா? அதிகம் வேண்டாம், கணவனிடம் தன் பாலியல் ஆசைகளைத் தயக்கமின்றி கூறும் மனைவிகள் இங்கே எத்தனை பேர்? அது, பெண்ணின் மிகமிக அழகான பக்கங்களில் ஒன்று. பருவம் எய்துவது முதல் பதின் வயதுகளில் தன்னைக் கவரும் ஆணை பற்றிய ஒரு பெண்ணின் எண்ணங்கள் இன்றுவரை இலக்கியங்களில் முழுமையாகப் பதிவுசெய்யப்படவில்லை. மனிதகுல அழகியல் பக்கங்களின் அதியழகான பக்கங்கள் அவை. தன் கதைகளில், கவிதைகளில் அந்த அழகுகளை மனம் தொடும் மெல்லிசையாகப் படரவிட்டவர் கமலா தாஸ்.

கேரளத்தின் புண்ணையூர்குளம் என்ற சிறு கிராமமே கமலாதாஸின் பூர்வீகம். அவரின் தந்தை வீ.எம்.நாயர் ‘மாத்ருபூமி’ என்ற மலையாள நாளிதழின் ஆசிரியர். தாய் பாலாமணியம்மாள் மலையாளக் கவிஞர். இந்தப் பின்னணியில் வளர்ந்த கமலாதாஸ் இளமையிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கினார். அவரது பூர்வீக கிராமத்தின் நாலப்பாட்டு வீடு ‘என் கதை’யின் மூலம் மிகப் பிரபலமானது. தனது 15 வயதில் மாதவ் தாஸ் என்னும் வங்கி அதிகாரியை மணந்தார். அவரின் பெரும்பாலான நாள்கள் கொல்கத்தாவிலேயே கழிந்தன. அவரின் முதல் ஆறு கவிதை தொகுப்புகள் ஆங்கில மொழியில்தான் வெளிவந்தன. பின்பு, அவர் மலையாளத்திலும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அவரின் எழுத்தார்வத்திற்கு கணவர் மிகவும் உதவியாகயிருந்தார். பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன், ஜாப்பனீஸ் போன்ற மொழிகளிலும் அவர் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்திய நவீன கவிதைகளின் தாய் என டைம்ஸ் பத்திரிக்கை இவரைக் குறிப்பிட்டிருக்கிறது.

கமலா தாஸ்

மாதவிக்குட்டி, கமலா தாஸ் என்ற பெயர்களில் இலக்கியம் படைப்பார். என்றேனும் உங்கள் அம்மாவின் காதல்கள் குறித்துக் கேட்டிருக்கிறீர்களா? காதல் இல்லை நண்பர்களே... 'காதல்கள்'தான். மனித மனம் நிச்சயம் குரங்குதான். அதில் சந்தேகம் கிடையாது. காதலையும் காமத்தையும் சுற்றி படுபயங்கரமான அபத்தங்களைப் பூசிவைத்திருக்கும் இந்தச் சமூகத்தில், தன் காதல்களையும் காம ஆசைகளையும் ‘என் கதை’யில் செதுக்கியவர் கமலா தாஸ். அது, அவரின் சுயசரிதை. காதல் என்பது ஒருமுறை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படைவாதக் கொள்கைகளை அடித்து உடைத்ததுதான் கமலா தாஸ் எழுத்துகளின் வெற்றி. உடனே முகம் சுளிக்க வேண்டாம் நண்பர்களே... 'என் கதை' நமக்கு கமலாதாஸின் கதையை மட்டுமின்றி, காதலையும் அறிமுகப்படுத்தும்.

இன்று காதல் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்கிறது. 'நீ என்னைக் காதலிக்கிறாயா? காதலி! எனக்கும் பிடித்திருக்கிறது. திடீரென்று நானில்லாதபோது காமப் பசி எழுகிறதா? சம்மதம் சொல்லும் இணையுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள். என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நட்பை உணர்கிறாயா? சில ஹார்மோன் துடிப்புகளை உணர்கிறாயா? நான் பாரம் சுமக்கும்போது கேளாமலேயே உன் தோளையும் மடியையும் தருவாயா? உன்னைத்தான் தேடுகிறேன், வா இணைந்து வாழலாம்' என்கிறது.

இப்படியான சில அற்புதங்கள் நிகழ, கமலா தாஸின் எழுத்துகள் விதை போட்டிருக்கிறது எனச் சொன்னால் அது மிகையில்லை. இன்றுவரை குறும்பட லட்சுமியையே ஏற்றுக்கொள்ளாத சமூகம், கமலா தாஸை எப்படி எதிர்கொண்டிருக்கும்? ஆம்! அழுத்தங்கள், மிரட்டல் மயம்... தன் இறப்புக்குச் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறினார். கமலா சுரையா எனப் பெயரை மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுதினார். 2009 மே 31-ம் தேதி மறைந்தார்.

1934 மார்ச் 31-ம் தேதி பிறந்த கமலா தாஸின் பிறந்தநாள் இன்று. எதற்காக அவர் உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றுவது குறித்து பேசினார் தெரியுமா?

'முதலில் என்னைச் சூழ்ந்துள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன். பின்பு, இந்த மெல்லிய அரக்கு நிறத் தோலையும் அதனுள் இருக்கும் எலும்புகளையும் உதறுகிறேன். இறுதியில் வீடற்ற, அனாதையான, அதியழகு நிறைந்த தோல், எலும்புகள் என அனைத்துக்கும் அடியில் உள்ள என் ஆன்மாவை உங்களால் காண இயலும் என நம்புகிறேன்'

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

90 கி.மீ வேகத்தில் பறக்க உதவும் எந்திர ஆடை

 

எந்திர ஆடை மூலம் உலகிலேயே வேகமாக செல்லும் கேபிள் வழியில் பறக்கும் முயற்சி இது. விமானி ரிசர்ட் பிரவ்னிங் கண்டுபிடித்துள்ள இந்த கருவிக்கு அவர் தன் கைகளையும் கால்களையும் அசைக்கும்போது உந்துவிசை கிடைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.