Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட வெசாக் தினம்

கௌதம புத்தர் பிறந்த, பரிநிர்வாணம் அடைந்த மற்றும் மறைந்த தினமே வெசாக் தினம் என்று உலகெங்கும் உள்ள பௌத்தர்களால் அனுட்டிக்கப்படுகின்றது. இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
தாங்கிக் கொள்ள மனம் இருந்தால்…
 

image_6fe8d39c32.jpgஎங்களுக்கு யாராவது தேவையற்ற விதத்தில் அளவுக்கு மீறி, இல்லாதவை பொல்லாதவைகளைச் சொன்னால், நாங்கள் அவர்களிடத்தில் எச்சரிக்கை செய்ய வேண்டும். காரியம்பெறச் சிலர் தேவையின்றி, பொய்யான புகழ் உரைகளைப் பொழிவார்கள். நல்ல நோக்கத்துக்காக இன்றிச் சுயநலம் மேலிட சிலர் எதுவுமே செய்யலாம். 

ஆனால், வெளிப்படையாகவே உதவி கோருவதில் தவறு ஒன்றும் கிடையாது. தகைமைகள் உள்ளவர்கள் முகஸ்துதிக்கோ அல்லது காரணமின்றிப் புகழப்படுவதையோ விரும்பமாட்டார்கள். 

யாராவது கூச்ச மிகுதியால், வார்த்தைகள் வெளியே வராமல்த் திணறினால், நீங்களே வலிந்து கேட்டுத் தேவையானவற்றை இயன்றளவு செய்து கொடுத்தல் சிறப்பாகும். 

பலகரங்களால் தூக்கி நிறுத்தப்படுவதே, இந்த உலகம். இந்தக் கரங்களுடன் உங்கள் கரங்களும் இணைந்து கொள்ளட்டும். 

இப்படி இணைவதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதுகூட, எமக்குப் பெருமைதான். தாங்கிக் கொள்ள மனம் இருந்தால் மலையும் சிறுதுரும்புதான்.

  • தொடங்கியவர்

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952
 
உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1  முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். * 1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார். * 1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது. * 1885 - புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான். * 1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின்படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது. * 1928 - அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.

* 1933 - ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார். * 1945 - இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர். * 1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது. * 1964 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது. * 1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர். * 1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

* 2002 - கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர். * 2004 - நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.

 

 

இந்தோனேசியாவின் தேசிய கல்வி நாள்: மே 2

இந்தோனேசியாவின் தேசிய கல்வி நாள்: மே 2
 
இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-ந்தேதி தேசிய கல்வி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக இந்தோனேசியக் குடியரசு என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும். 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள்தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையையும், ஜனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. சக்கார்த்தா இந்த நாட்டின் தலைநகரம்.

பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பைன்சு, ஆத்திரேலியா என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது.

இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

20 கி.மீ தூரம் செல்லும் உலகின் முதல் வயர்லெஸ் கம்யூனிகேஷன்..! - அமேசான் பழங்குடியினரின் அதிசயம்

 
 

இன்றைய நாள்களில் பக்கத்து ரூமில் இருப்பவரைக் கூப்பிடக்கூட போன் செய்கிறோம், வாட்ஸ்அப்பில் மேசேஜ் போடுகிறோம் இல்லையென்றால் மிஸ்டுகால் கொடுத்தே  கடுப்பேத்தி வரவைத்துவிடுகிறோம். இந்த இணையமும் செல்போன்களும் வந்தபிறகு கடல் கடந்து இருப்பவரைக்கூட தொடர்புகொள்வது அவ்வளவு எளிதாகிவிட்டது. ஆனால், இவையெல்லாம் இல்லாத காலத்தில் ஒருவர் மற்றவரைத் தொடர்புகொள்ள நிறைய வழிமுறைகளை வைத்திருந்தனர். எல்லாமே கொஞ்சம் கடினமானதாகத்தான் இருந்தன. செய்தி கொண்டு போன தூதுவன் ஒருவன் நெடுந்தூரம் ஓடியே இறந்ததில் உருவானதுதான் மாரத்தான் ஓட்டம். இப்படி வரலாறு நெடுக்க செய்தியைக் கடத்துவதைக் குறித்த நிறைய கதைகளும் தகவல்களும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இருபது, முப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கோயிலில் வழிபாடு முடிந்தபின்தான் அன்றைய நாளை ஆரம்பிக்கும் மன்னர்களும் இருந்ததாகச் சொல்லுவதுண்டு. அந்த இருபது முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் செய்தியை எப்படி உடனே கடத்த முடியும் என ஆச்சர்யங்களும் கேள்விகளுமாய்த்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உண்மையாய் நடந்தவைதான். நாம் இன்றும் ஆச்சர்யப்படும் வகையில் அறிவியல்ரீதியாக முன்னேறியே இருந்துள்ளார்கள். ஆனால், இன்றும் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் உதவியின்றி பல மைல்கள் தொலைவுக்கு எளிதில் தொடர்பு கொள்கின்றனர் அமேசான் காடுகளில் வாழும் போரா (Bora) எனும் பழங்குடி மக்கள். 

அமேசான் காடுகளின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் போரா பழங்குடியின மக்கள் கொலம்பியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பரவிக் காணப்படுகின்றனர். மனிதன் எழுப்பக்கூடிய ஒலியானது அதிகபட்சமாக 200 மீட்டர் வரை செல்லக்கூடியது. ஆனால், போரா பழங்குடியின மக்கள் 20 கிமீட்டர் வரைக்கும் ஒலியின் மூலம் தகவல்களைப் பரப்புகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ட்ரம் போன்ற இசைக்கருவிதான் இதற்குக் காரணம். அதன் மூலம் இவர்கள் எழுப்பும் ஒலியானது எளிதில் 20 கிமீட்டர் தூரத்துக்குப் பயணிக்கிறது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் சாதாரண உரையாடலில் இருந்து முக்கியமான அறிவிப்புகள் வரை எல்லாவற்றுக்கும் இந்த ட்ரம்மின் மூலம் ஏற்படுத்தும் ஒலியைப் பயன்படுத்துகின்றனர். போரா பழங்குடியின மக்களின் மொழியும் இந்த ட்ரம்மின் மூலம் எழுப்பப்படும் ஒலியும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று journal Royal Society Open Science இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்த ட்ரம்மின் ஒலியின் ரிதமும் மொழியின் ரிதமும் ஒன்றாக உள்ளது. அவர்களின் மொழியின் கூறுகள் ஒலி வடிவமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் அந்த மக்கள் எவ்வித பயிற்சியும் இல்லாமல் இந்த ட்ரம் ஒலியின் மூலம் சொல்லப்படும் தகவல்களை எளிதில் புரிந்துகொள்கின்றனர். 

அமேசான்

Photo - JULIEN MEYER/LAURE DENTEL

அவர்கள் பயன்படுத்தக் கூடிய இந்த ட்ரம்கள் Manguare Drums என்று அழைக்கப்படுகிறது. பாரம்பர்யமாகப் போரா பழங்குடியின மக்களின் வீடுகளில் இந்த ட்ரம்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ட்ரம்மை வைத்திருக்க வேண்டும் என்ற வழக்கமும் இங்கு இருக்கிறது. உருளை வடிவில் மரப்பீரங்கிகளைப் போன்று காணப்படும் இந்த ட்ரம்மின் மேல் முனையில் பிளவு ஒன்று காணப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட இரு உருளைகளும் 6.5 அடி இருக்கின்றன. அதில் மரத்தடி வைத்து அடிப்பதன் மூலம் ஒலியை எழுப்புகின்றனர். போரா பழங்குடியின குழுக்களில் இருக்கும் அனைவரும் இந்த ஒலி வடிவத் தகவல்களைப் புரிந்து கொள்கின்றனர். இந்த ட்ரம்மின் மூலம் நான்கு வகையான ஒலியானது எழுப்பப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான உணர்வைச் சொல்லப் பயன்படும் ஒலிக்குறிப்புகள். அதுமட்டுமில்லாமல் திருவிழா நேரத்தில் இசைக்கருவியாகவும் அறிவிப்புகளை மக்களிடையே சேர்ப்பதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் பயன்படுத்துகின்றனர். Manguare Drums மூலம் எந்தவகையான செய்தியையும் தகவல்களையும் போரா பழங்குடியின மக்களிடையே சொல்ல முடியும். இந்த மக்களின் அறிவிப்புகளானது 15 வார்த்தைகளுக்கும் 60 தாளங்களுக்கும் இருக்கிறது. இன்னும் நெருக்கமாக இந்த ட்ரம் ஒலிகளைக் கேட்டால் அந்த மக்கள் பேசுவதைப் போலவே இருக்கிறது ஆய்வாளர் ஃப்ரன்க் செய்ஃபர்ட் (Dr Frank Seifart). 

போரா பழங்குடியினர்

Photo - Dirk Schroeder / CHROMO / agefotostock

 

அழிந்து வரும் பேச்சு வழக்குகளை ஆவணப்படுத்தி வருகிறார் மொழியியல் ஆய்வாளரான ஃப்ரன்க் செய்ஃபர்ட் (Dr Frank Seifart). இந்தப் போரா மொழியின் பேச்சு வழக்கை ஆவணப்படுத்தச் சென்றபோதுதான் இந்தத் தகவல் பரிமாற்றத்தைக் கண்டிருக்கிறார். ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழகத்தைச் (University of Amsterdam) சேர்ந்த ஃப்ரன்க் செய்ஃபர்ட் மற்றும் சில ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோதுதான் இந்தத் தகவல் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தனித்துவமான இந்த ட்ரம்கள் இப்போது 20 மட்டுமே உள்ளது. மேலும் போரா மொழியானது ஸ்பானிஷ் மொழியின் தாக்கத்தால் மெதுவாக அழிந்து வருகிறது. அவர்களது போரா மொழி அழிந்தால் இந்த ட்ரம் ஒலி தகவல் பரிமாற்றமும் அழிந்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போதிருக்கும் 20 ட்ரம்களில் கூட ஐந்தாறுதான் பயன்பாட்டில் உள்ளது. சிலர்தான் அதை வாசிக்கிறார்கள். 1900-களில் 15000 பேர் இருந்த போரா பழங்குடியினர் இப்போது வெறும் 1500 பேர் மட்டுமே இருக்கின்றனர் இதுவும் மிக முக்கியமான காரணம், சட்டத்துக்குப் புறம்பாக அமேசான் காடுகளில் மரம் வெட்டுவதில் இவர்களைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களால் இந்தப் பழங்குடியின மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அடர்த்தியான காடுகளுக்குள் செல்லச் செல்ல செல்போன் டவர்கள் கிடைப்பதுக்கூட அரிதுதான். சாதாரண சூழ்நிலைகளிலும் சரி இக்கட்டான சூழ்நிலைகளிலும் சரி காடுகளில் செய்தித் தொடர்புக்கு இவை பெரிதும் கைகொடுக்கும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.

வரலாற்றில் இன்று….

மே 02

நிகழ்வுகள்

1568 – ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.
1808 – மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
1876 – பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1885 – புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.
1889 – எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
1928 – அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.
1933 – ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
1964 – 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
2002 – கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.
2006 – குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2009 – வல்லிபுரக்குறிச்சி மருதடி தான்றோன்றியீஸ்வரர் தேர்.

பிறப்புக்கள்

1921 – சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
1969 – பிறயன் லாறா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாளர்
1975 – டேவிட் பெக்காம், இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1519 – லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (பி. 1452)
2009 – கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்

சிறப்பு நாள்

போலந்து – கொடி நாள்
ஈரான் – ஆசிரியர் நாள்
இந்தோனீசியா – தேசிய கல்வி நாள்

http://metronews.lk

  • தொடங்கியவர்

நீங்கள் ஒருவர் 99 பேருக்குச் சமம்... எப்போது தெரியுமா? உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

'திடமான நம்பிக்கையுள்ள ஒருவர், ஆர்வம் மட்டுமே கொண்ட 99 பேருக்குச் சமமானவர்’ - இங்கிலாந்து தத்துவவியலாளர் ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) அழகாகச் சொல்கிறார். 'நம்பிக் கெட்டவர் எவருமில்லை’ என்பது நம் முன்னோர்களின் மூதுரை. ஏதோ கருத்து வேற்றுமையில் பெற்றோர் நம்மைப் பிரிந்து போயிருக்கலாம்; பிள்ளைகள் நம்மைவிட்டு விலகிச் சென்றிருக்கலாம்; நண்பர்கள் மனக்கசப்பில் நம்மைத் தவிர்த்திருக்கலாம்; பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்காமலே போயிருக்கலாம்; வேலையை இழந்திருக்கலாம்... எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையைவிடாமல் பற்றிக்கொண்டிருப்பவர்களை, அவர்களின் உறுதியான அந்த மனப்பான்மையே காப்பாற்றிவிடும். பல அற்புதமான, கடினமான தத்துவங்களைப் புரிந்துகொள்ளக்கூட நம்பிக்கை உதவும். இந்த நம்பிக்கையைத்தான் பக்தி மார்க்கத்தில் 'சரணாகதி தத்துவம்’ என்று சொல்கிறார்கள். 'சாமி... நீதான் என்னைக் காப்பாத்தணும்’ என்று சரணடைந்து வீழ்கிற சாதாரண பக்தி. 'எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவான்’ என்கிற நம்பிக்கை. எளிய மனிதர்களின்  நம்பிக்கை எவ்வளவு பெரிய தத்துவத்துக்குச் சமம் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை. 

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இறையியல் (Theological) பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன. அங்கே போய் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் வருவார்கள். பின்னாள்களில் மதபோதகர்களாகி, தேவாலயங்களில் தாங்கள் புரிந்துகொண்ட இறையியல் தத்துவங்களை எளிமையாக்கி மக்களுக்கு விளக்கிச் சொல்வது இவர்களுடைய வேலையாக இருக்கும். 

விளையாட்டு கதை

அது, அமெரிக்காவிலுள்ள ஒரு இறையியல் கல்லூரி. அங்கே சில மாணவர்கள் படித்துவந்தார்கள். அந்த மாணவர்களில் ஒருவர் பெர்னார்டு ட்ராவேய்யில்லே (Bernard Travaieille). இறையியல் தத்துவங்களையும் பாடங்களையும் படிக்கும் நேரம் தவிர, மீதமிருக்கும் நேரத்தில் அந்த மாணவர்களில் சிலருக்கு ஒரு வழக்கம் இருந்தது. கல்லூரிக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் பேஸ்கெட் பால் விளையாடுவது. பெர்னார்டு இறையியல் கல்லூரியில் அந்த வருடம்தான் சேர்ந்திருந்தார். அவருக்கும் பேஸ்கெட் பால் விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

அந்த மைதானத்துக்கு ஒரு காவலாளி இருந்தார். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்; தலை நரைத்த முதியவர். மாலை நேரத்தில் இவர்கள் வரும்போதெல்லாம் அந்த முதியவர் அன்போடு வரவேற்பார். அவர்கள் மைதானத்தில் விளையாடப் போனதும், தன் கையிலிருக்கும் புத்தகத்தை எடுத்துக்கொள்வார். எதைப் பற்றியும் கவலைப்படாமல், யாரைப் பற்றியும் யோசிக்காமல் படிக்க ஆரம்பித்துவிடுவார். மாணவர்கள் விளையாடிவிட்டு வந்ததும், அவர்களுக்கு சிரித்த முகமாக விடை கொடுப்பார். பிறகு, மைதானத்தின் வெளி கேட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். சில நாள்களாக அவரின் இந்த நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்தார் பெர்னார்டு. 

ஒருநாள் வழக்கம்போல மாணவர்கள் விளையாடி முடித்தார்கள். பெர்னார்டு, அந்த முதிய காவலாளியின் அருகே நின்றார். ''ஐயா... ஏதோ புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தீங்களே... என்ன புத்தகம் அது?’’ 

''திருவெளிப்பாடு...’’ 

பேஸ்கெட் பால்

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பெர்னார்டு. 'திருவெளிப்பாடு’ (Book of Revelation) என்பது, 'புதிய ஏற்பாடு’ நூலில் இருக்கும் ஒரு பகுதி. 'இதையெல்லாம் பாடமாகப் படிப்பதற்காக நாம் வந்திருக்கிறோம். இந்தப் பெரியவர் எளிதாக இதைப் படிக்கிறேன் என்று சொல்கிறாரே?!’

திரும்பவும் அவரிடம் பெர்னார்டு கேட்டார்... ''திருவெளிப்பாடா?’’ 

''ஆமாம் தம்பி. புதிய ஏற்பாடுல சொல்லப்பட்டிருக்குற அதே திருவெளிப்பாடுதான்.’’ 

''உங்களால அதுல என்ன சொல்லப்பட்டிருக்குனு புரிஞ்சுக்க முடியுதா?’’ 

''புரிஞ்சுதே...’’ 

''என்ன புரிஞ்சுது... அதுக்கு என்ன அர்த்தம்?’’ 

''வேற என்ன... 'இயேசுதான் வெற்றி பெறுவார்’ இதுதான் அர்த்தம்.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

14 நாள்கள்

 
 

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

பெண்கள் பாதுகாப்புப் போராளி!

மீபகாலமாகப் பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. காஷ்மீர் மாநிலம், கத்துவாவில் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்ட எட்டு வயதுச் சிறுமி, உன்னோ மற்றும் சூரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற பாலியல் கொடூரங்கள் என நாடே கொந்தளிக்கிறது. இந்தச் சூழலில் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் போராட்டத்தைத் தொடங்கினார், டெல்லி பெண்கள் கமிஷனின் செயலாளர் சுவாதி மலிவால். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் பேசி வரும் மலிவால், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனை இன்னமும் அதிகரிக்கப்பட வேண்டும்; குறிப்பாக சிறுவர்/சிறுமியர் மீதான வன்முறை, பாலியல் வல்லுறவு வழக்குகள் துரித நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

p12a_1524953629.jpg

‘ரேப்-ரோக்கோ’, ‘ஸ்டாப் ரேப்’ என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்தபடி நூற்றுக்கணக்கான பெண்கள் சுவாதியுடன் ராஜ்காட்டில் அமர்ந்தனர். ஏப்ரல் 12 அன்று, பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி, அதை வெளியிட்
டிருந்தார் சுவாதி. ‘சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஆறு மாதங்களுக்குள் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்கிற கோரிக்கையை அதில் வலியுறுத்தியிருந்தார். பத்து நாள்களுக்குப் பின் பிரதமர், ‘பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும், இதுபோன்ற குற்றங்கள் இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்’ என அறிவித்தார். தன் உண்ணாவிரதத்தை இதன்பின் கைவிட்ட சுவாதி, ஐ.நா சபை வழிகாட்டல்படி காவல்துறையில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற தன் அடுத்த கோரிக்கையைக் கையில் எடுத்திருக்கிறார். 

திருத்தங்களுக்குப் பிறகாவது திருந்தட்டும்!

சுவாதியின் உண்ணாவிரதம் முதல் அச்சுறுத்தும் `ஆப்' விளையாட்டு வரை... கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!


p12b_1524953652.jpg

ண்டன் பார்லிமென்ட் ஸ்கொயரின் முதல் பெண் சிலை!

லண்டனைச் சேர்ந்த கரோலின் பெரெஸ், புகழ்பெற்ற பார்லிமென்ட் ஸ்கொயரில் அதைக் கவனித்தார். காந்தி, மண்டேலா என உலகத் தலைவர்களும், வின்ஸ்டன் சர்ச்சில், ஜார்ஜ் கேனிங் என இங்கிலாந்தின் சிறந்த தலைவர்களின் சிலைகளும் கம்பீரமாக நிற்கும் லண்டன் நகரின் மையப் பகுதியில், ஒரு பெண்மணியின் சிலைகூட இல்லை! ‘’உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலா இந்த நிலை?’ என்று எண்ணிய கரோலின், 2016-ம் ஆண்டு, ‘ஆன்லைன் மனு' ஒன்றைத் தயாரித்துப் பரப்பினார். லட்சக்கணக்கான பெண்களின் டிஜிட்டல் கையெழுத்துடன் மனு லண்டன் மேயரது அலுவலகத்தை எட்டியது. 2017-ம் ஆண்டு பெண் சஃப்ரஜிஸ்ட் போராட்டத்தின் முகம் என்று அடையாளம் காணப்படும் மில்லிசன்ட் ஃபாசட்டின் உருவச் சிலையை பார்லிமென்ட் ஸ்கொயரில் காந்தி மற்றும் மண்டேலா போன்ற அமைதியையும் அன்பையும் போதித்த தலைவர்களின் சிலைகள் அருகே நிறுவப் போவதாக அறிவிக்கப்பட்டது. மனு செய்தது, வடிவமைத்தது முதல் நிறுவுவது வரை இந்தச் சிலை முழுக்க முழுக்க பெண்களின் உழைப்பால் அமைக்கப்பட்டது.

பெண்களுக்கு ஓட்டுரிமை முதல், ஆண்களுக்கு நிகரான சம்பளம் வரை நியாயம் கேட்டுப் போராட்டங்கள் இங்கிலாந்தில் நடைபெற்று ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சஃப்ரஜிஸ்ட் போராட்டங்கள் என்ற பெயர்கொண்ட இவற்றால்தான் இங்கிலாந்து மற்றும் அதன் காலனி ஆதிக்க நாடுகளில் பெண்களின் உரிமை குறித்த புரிந்துணர்வும், விழிப்பு உணர்வும் ஏற்பட்டன. 1875-ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜின் நியூன்ஹேம் கல்லூரியைத் தொடங்கியவர்களில் ஒருவர் மில்லிசன்ட். பெண்களுக்குப் படிக்கும் உரிமையும், ஓட்டளிக்கும் உரிமையும் கிடைத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று வீதிகளில் இறங்கிப் போராட்டங்களைத்  தொடங்கியவர் இவர். மில்லிசன்ட்டின் வழிகாட்டலில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் 1918-ம் ஆண்டு முதன்முறையாக முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்தது இங்கிலாந்து. சிலையைத் திறந்துவைத்துப் பேசிய இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, “மில்லிசன்ட் இல்லையென்றால் இன்று நான் பிரதமராக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கமாட்டேன், பெண் உறுப்பினர்கள் யாரும் இன்று பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள்; நமக்கு எந்த உரிமையும் முன்னேற்றமும் இருந்திருக்காது” என்று கூறினார்.

உண்மைதான்!


p12c_1524953677.jpg

கிரிக்கெட் ஆண்களுக்கானது மட்டுமல்ல!

ந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்  கேப்டனான மித்தாலி ராஜ், கடந்த பத்து ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட்டின் தூதுவராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறியது, மித்தாலி மற்றும் இந்தியப் பெண்கள் அணியின் இருபது ஆண்டுக்கால தவம்! கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு ஐ.சி.சி பெண் கிரிக்கெட் ஃபோரம் கூட்டத்தில் பேசிய மித்தாலி, தான் விளையாடத் தொடங்கியபோது மகளிர் கிரிக்கெட் அணி பற்றி விவரமே தெரியாமல் இருந்த நாள்கள் தொடங்கி, இன்று தெருவில் இறங்கி நடக்கையில் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டும் நிலை வரை, தன் பத்தாண்டு கிரிக்கெட் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

பெண்கள் கிரிக்கெட் பற்றிய விழிப்பு உணர்வு இப்போது அதிகரித்திருப்பதாகக் கூறிய மித்தாலி, கிரிக்கெட் என்னும் விளையாட்டு ஆண்களுக்கானது என்ற மனத்தடை இப்போது நீங்கியிருப்பதாகவும்,  விளையாட்டு குறித்து பெண்கள் அதிகம் பேசி வருவது மகிழ்ச்சி தருவதாகவும் கூறினார். பெண்கள் கிரிக்கெட் ஒரு தனி ‘பிராண்ட்’டாக உருவெடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியது என்றும், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைத்துவருவதாகவும் கூறியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டுக்கு தனி இடம் வந்தாச்சு. ஃபுட்பால், கபடின்னு மத்த விளையாட்டையும் கொஞ்சம் கண்டுக்கங்க ஐயா!


p12d_1524953698.jpg

விண்ணில் அசத்தும் வில்லட் ஓவியா!

‘நீ
ட்’ தேர்வுக்கு எதிராகப் போராடித் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவை நினைவுகூரும் வகையில், தான் வடிவமைத்திருக்கும் சிறிய செயற்கைக்கோளுக்கு அனிதா-சாட் எனப் பெயரிட்டிருக்கிறார் மாணவி ஒருவர். திருச்சியை அடுத்த திருவெறும்பூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளி மாணவி கே.ஏ. வில்லட் ஓவியா. 500 கிராம் எடைகொண்ட இந்தச் சிறிய செயற்கைக்கோள் வரும் மே ஆறாம் தேதியன்று மெக்சிகோ நாட்டிலிருந்து ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்படவிருக்கிறது. அதற்கான கவுன்ட் டவுன் சமீபத்தில் தமிழகத் தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. வளி மண்டலத்தில் 15 கி.மீ உயரத்தில் மூன்று மணி நேரம் மட்டுமே பறக்கவுள்ள இந்தச் செயற்கைக்கோள், காற்றின் தரம், தட்பவெப்பம், அழுத்தம் போன்றவற்றை அதில் இணைத்துள்ள சென்ஸார்கள் மூலம் கண்டறிய உதவும். செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்கள் மெக்சிகோ நகரின் அஸ்ட்ரா லேபுக்கு அனுப்பப்படும். பின்னர் பாராசூட் மூலம் கடலில் இறங்கும் செயற்கைக்கோள் மீட்கப்படும்.

“செயற்கைக் கோளில் உள்ள வாயு சென்ஸார்கள் காற்றில் உள்ள கரியமில வாயு, பிராண வாயு போன்றவற்றையும் அளவிடும். இதைக் கொண்டு காற்றில் உள்ள மாசு அளவிடப்பட்டு, வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான செயல் திட்டம் வகுக்கலாம்” என்று ஆர்வத்துடன் கூறுகிறார் ஓவியா. கடந்த மூன்று ஆண்டுகளாக இதன் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார் இவர். ‘அக்னி இக்னைட் இந்தியா’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து இந்த சாட்டிலைட்டைத் தயாரித்துள்ளார். இத்தனையும் செய்துவிட்ட ஓவியா, இப்போது ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகிவருகிறார்.

வாழ்த்துகள்... சாட்டிலைட் பெண்ணே!


p12e_1524953726.jpg

‘சர்ஜரி ஆப்’ விளையாட்டுகள்... உஷார்!

`பி
யூட்டி கிளினிக்’, ‘பிரின்சஸ் பிளாஸ்டிக் சர்ஜரி’, ‘பிளாஸ்டிக் சர்ஜரி சிமுலேட்டர்’, ‘லிப் சர்ஜரி சிமுலேட்டர்’, ‘சூப்பர் ஸ்டார் பிளாஸ்டிக் சர்ஜரி’ - இவை எல்லாம் சமீபகாலமாகப் பிரபலம் ஆகிவரும் ஆப்கள். அதிர்ச்சி அடையும் வகையில் இவற்றை விளையாடுவது பெரியவர்கள் அல்லர்... நம் வீட்டுக் குழந்தைகள். சிமுலேட்டர் மூலம் அறுவை சிகிச்சை விளையாட்டுகள் விளையாடுவது வாடிக்கைதான். ஆனால், உதடு அறுவை சிகிச்சை, மூக்கைத் திருத்தும் அறுவை சிகிச்சை, இடையைச் சிறுக்க வைக்க, மார்பு அளவைப் பெரிதாக்க எனப் பல சிகிச்சை முறைகளைக் குழந்தைகள் விளையாட்டாகத் தருகின்றன இந்தச் செயலிகள் (ஆப்). இவற்றுக்கு எதிராகக் களம் இறங்கியிருக் கிறார்கள் பொதுமக்கள் மற்றும் ‘பாடி ஷேமிங்’ எனப்படும் உடல் அவமானப்படுத்துதலுக்கு எதிரான அமைப்புகள்.

இதுபோன்ற செயலிகள் மூலம் அழகியல் குறித்த தவறான எண்ணங்களை பெருநிறுவனங்கள் இளைய தலைமுறையினரிடம் விதைத்து வருகின்றன என உலக அளவில் பெரும் எதிர்ப்பை இவர்கள் கிளப்பியிருக்கிறார்கள். ``நாம் பாலியல் குறித்த அறிவைச் சரியான வயதில் குழந்தைகளுக்குத் தராமலிருப்பது போலவே, அழகைப் பிரதானமாகக் கொண்ட தவறான விளையாட்டுகள் பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்துவதில்லை” என்கிறார் அமெரிக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் காங்கெல்லோ. ஆப்பிள் நிறுவனத்தின் டாம் நியுமேர் “ஆப்பிள் நிறுவனம் இவை போன்ற விளையாட்டுகளை ஆப் வடிவில் அனுமதிப்பதில்லை” என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஐஸ்டோரில் இந்தச் செயலிகள் அழிக்கப்பட்டுவிட்டன. கூகுள் நிறுவனமும் இவற்றை அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் இந்தச் செயலிகள் மிக எளிதாகத் தரவிறக்கம் செய்யப்படும் வகையில்தான் இருக்கின்றன. இதுகுறித்த விழிப்பு உணர்வு இன்னமும் நம் மக்களிடம் வரவில்லை.

ம்க்கும்… நாம எல்லாத்துலயும் லேட்டுதான்!


p12f_1524953752.jpg

சர்வதேச அளவில் சாதிக்கும் மீனா கந்தசாமி!

ர்வதேச அளவில் புனைகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பெயிலிஸ் பெண்கள் விருது வழங்கப்படுகிறது. 2018-ம் ஆண்டுக்கான ‘மகளிர் புனைகதை விருது’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த விருதின் இறுதிப் பட்டியலில் ஆறு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மீனா கந்தசாமியும் ஒருவர். இவர் எழுதிய ‘வென் ஐ ஹிட் யூ’ என்ற ஆங்கில நாவலுக்காக மீனாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விருதுத் தேர்வு குறித்து நடுவர் குழுத்  தலைவர் சாரா சாண்ட்ஸ் கூறுகையில், “நடுவர்களிடம் நேர்மையாகவும் நேரடியாகவும் பேசக்கூடிய படைப்புகளைத்தான் தேர்ந்தெடுத்தோம். இன்டர்நெட்டின் தாக்கம், பாலியல் வன்முறை, துக்கம், மெர்மெய்டுகள் என வித்தியாசமான களம் கொண்ட புத்தகங்களையே தேர்வு செய்தோம்” என்றார்.

பெஸ்ஸி என்ற ஏழரை அங்குல வெண்கலச் சிலையும், முப்பதாயிரம் பவுண்டு ரொக்கப் பணமும் இந்த விருதுப் பட்டயத்துடன் வழங்கப்படுகின்றன. ஜூன் 6 அன்று விருது யாருக்கு என்பது தெரியவரும்.

மனமுறிவு மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான எமோஷனல் அடக்குமுறை, வன்முறை குறித்து மிகுந்த வலியுடன் ‘வென் ஐ ஹிட் யூ’  நாவலில் பதிவுசெய்திருக்கிறார் மீனா.

ஆல் தி பெஸ்ட், மீனா! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

 
 

ஸ்பின்னர்களை பிட்ச் ஆஃப் தி பால் சென்று அடிக்க வேண்டும், பவுன்சர்கள் வந்தால் ஹூக் செய்ய வேண்டும், மெதுவாக பந்துகள் வந்தால் பின்கால்களில் சென்று விளையாட வேண்டும், ஆஃப் சைடில் வந்தால் கட் செய்ய வேண்டும், இல்லையேல் கவர் திசையில் விளையாட வேண்டும். பேடில் போட்டால் ஃபிளிக் செய்ய வேண்டும், சரியான நேரத்தில் நகர்ந்து இன்சைட் அவுட் விளையாட வேண்டும். ஒரு பேட்ஸ்மேனால் இப்படி அனைத்து ஷாட்களையும் சுத்தமாக, சிறப்பாக விளையாட முடியாது. சிறப்பாக ஹூக் செய்பவர், கட் செய்ய கஷ்டப்படுவார். ஃபிளிக் செய்யும் பேட்ஸ்மென் கவர் டிரைவில் கோட்டை விடுவார். இதெல்லாம் சிறப்பாக செய்தாலும் ஸ்பின்னர் வந்துவிட்டால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடும், நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்குமாறாக சுத்தமாக அனைத்து ஷாட்களையும் விளையாடும் பேட்ஸ்மென் நிச்சயம் ஜாம்பவானாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான்தான் பிரையன் சார்லஸ் லாரா.  #HBDLARA

lara

கிரிக்கெட்டை கொண்டாட்டமாக மாற்றிய பேட்ஸ்மேன் பிரையன் லாராவுக்கு இன்று 49-வது பிறந்தநாள்!

டார்கெட் அதிகமென்றால் பதற்றம், எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தால் பொறுமை என்பது போன்ற ரியாக்ஷன்களைக் குறைவாக கொடுப்பவர் லாரா. பயமா... எனக்கா? என்பதுபோல்தான் இருக்கும் அவரின் அணுகுமுறை. தனது பேட்டிங் திறமைமீது அசாத்தியமான நம்பிக்கை அவருக்கு உண்டு. ஒரு உதாரணம் சொல்கிறேன். தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு மிகஅருகில் இருந்தது விண்டீஸ். முதல் இன்னிங்சில் ஃபாலோ ஆணைத் தவிர்க்கவே விண்டீசுக்கு இருபத்து ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. ஃபாலோ ஆன் வந்தால் தோல்வி உறுதி. எதிர்முனையில் இருப்பதோ கட்டக்கடைசி பேட்ஸ்மென். இந்த நிலைமையில் யாராக இருந்தாலும் நிதானமாக இருப்பார்கள், தங்களின் விக்கெட் மிகமுக்கியம் என பொறுமையைக் கடைபிடிப்பார்கள். முடிந்தவரை ஸ்ட்ரைக்கில் இருந்து தடுப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், அந்த நிலையில் லாரா என்ன செய்தார் தெரியுமா?

இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவர் த விக்கெட்டில் வீச, ஸ்டம்பை நோக்கி சின்ன டர்ன், அழகான கவர் டிரைவ், நான்கு ரன்கள். அடுத்த பந்தும் அதேபோல வீச, இறங்கிவந்து லாங் ஆனுக்கு மேலே ஒரு சிக்ஸ். அடுத்த பந்தும் அதேபோல, கொஞ்சம் ஸ்ட்ரெயிட்டாக இன்னுமொரு சிக்ஸ். நான்காவது பந்தில் லைனை விட்டு கொஞ்சம் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை, பெளலர் தலைக்குமேலே சென்று அடிக்க ஒன் பவுன்ஸ் ஓவர் தி ரோப். ஐந்தாவது பந்தில் இன்னுமொரு ஸ்ட்ரெயிட் டிரைவ், ஆறாவது பந்தில் அழாகான லேட் கட் என மேலும் இரண்டு பவுண்டரிகள். ஆகமொத்தம் இருபத்தெட்டு ரன்கள். மூன்று விக்கெட் எடுத்த பெளலர், கொஞ்சம் தப்பினாலும் அணிக்குத் தோல்வி என்பதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி ஒரு முரட்டுத்தன பேட்டிங் பெர்ஃபாமென்ஸ்... அதை வேறுயாராலும் செய்ய முடியாது. இந்த ஓவரில் பந்தைநோக்கி இறங்கியும் வந்தார், பின் சென்று லேட்டாகாவும் விளையாடினார். அந்த ஃபூட் வொர்க் இருக்கிறதே, அதுதான் இவ்வளவு ரன்களுக்கும் காரணமா, லாரா?
 

லாரா


அந்த இருபத்தெட்டு ரன்கள் எடுத்த ஓவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வழங்கிய ஓவராக உள்ளது. அதற்கடுத்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்து ஃபாலோ ஆனைத் தவிர்த்தது விண்டீஸ். ஆட்டம் டிராவானது. ''நான் கிட்டத்தட்ட அனைத்து பந்துகளையும் ஒரேமாதிரிதான் வீசினேன். ஆனால், அந்த பந்தை எவ்வாறெல்லாம் அடிக்கலாம் என லாரா எனக்கு சொல்லிக்கொடுத்தார். முதலில் இரண்டு பவுண்டரிகளுக்கு பின்னர் தடுப்பாட்டம் ஆடுவார் என நினைத்தேன். அவர் அடித்த திசையில் ஆட்களை நிற்கவைத்தேன். ஆனால், அவரின் மூளையிலிருந்ததோ வேறு எண்ணங்கள் என்பதை கடைசி பந்தில்தான் உணர்ந்தேன்” என்று போட்டிக்குப் பின்னர் சொன்னார் ராபின் பீட்டர்சன். ஒரு குறிப்பிட்ட வகையான பந்தை வீசும்போது, பேட்ஸ்மேனால் குறிப்பிட்ட ஷாட்களைத்தான் அடிக்க முடியும் என்றில்லை, நீங்கள் சரியாக விளையாடினால் அந்தப் பந்தை எந்த திசையிலும் அடிக்கலாம் என விளையாடிக் காட்டியவர் பிரையன் லாரா.

ஒரு அணி தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே இருக்கும்போது, எந்தவொரு வீரராலும் உற்சாகமாக விளையாட முடியாது. விண்டீஸ் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தபோது, தனிநபராக அந்த அணியை தூக்கிநிறுத்தப் போராடியவர் லாரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இருநூறுகள் உள்பட  கிட்டத்தட்ட அறுநூற்று ஐம்பது ரன்களை விளாசினார். ஆனால், அணிதான் மூன்றுக்கு பூஜ்யம் என்று தோற்றுப்போனது. அவர் விளையாடிய 131 டெஸ்ட் போட்டிகளில் 61 போட்டிகளில் விண்டீஸ் தோற்றுள்ளது என்பதே, அவர் விளையாடிய சூழலைச் சொல்லும்.  முதல்தர கிரிக்கெட்டில் ஐநூற்று ஒன்று நாட் அவுட், டெஸ்ட் கிரிக்கெட்டில் நானூறு ஒன்று நாட் அவுட் என மாபெரும் ரன்களை தனது அதிகபட்ச ரன்களாக தன் வசம் வைத்துள்ளார் லாரா. 

lara



எந்தவீரர் சிறப்பாக விளையாடினாலும் அதனைப் பாராட்டக்கூடிய பண்புடையவர். 2015 உலகக்கோப்பையின்போது, காலிறுதியில் பாகிஸ்தானின் வாஹாப் ரியாஸ் அருமையான பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவை திணறடித்தார். அப்போது அவரின் நடத்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது, அவரின் விளையாட்டை பாராட்டி அபராதத்தை தான் செலுத்துவதாகச் சொன்னார் லாரா. நேர்த்தியான கிரிக்கெட்டின்மீது அவர் வைத்துள்ள நேசத்துக்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். 
பத்தாயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்த பிரையன் லாரா ஓய்வுபெறும்போது கடைசியாக ரசிகர்களைப் பார்த்து ''நான் உங்களை மகிழ்வித்தேனா?” என்று கேட்டார். அதற்கு மைதானமே அதிருமளவுக்கு எழுந்த ஆரவாரம் பதில்சொன்னது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘எங்களை மீறி எதுவும் நடக்காது’
 

image_ac845e87ea.jpgஉங்கள் வீட்டில் செலவுகள் அதிகரித்து விட்டதா? இதைக் குறைக்க வழிகளைக் கண்டறிந்தே ஆக வேண்டும். தினசரி உங்களை அறியாமலேயே, ஏதோ ஒரு செலவைச் செய்து கொண்டே இருக்கின்றீர்கள்.  

எனவே, உங்களாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் செலவுகளை எழுதி வைத்திடுங்கள். எந்தச் சிறு செலவாயினும் அதை விட்டுவைக்காமல், எழுதியே தீருங்கள். 

மாதக் கடைசியில் மொத்தச் செலவைக் கணக்கிடுங்கள். அப்போதுதான் தவறு எங்கே நடந்தது எனப் புரிந்து கொள்வீர்கள். சின்னச் செலவுகள்கூடப் பெரிதாக உருவெடுக்கும்.  

அநாவசியச் செலவுகளையும் எங்களை அறியாமல் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளையும் அவதானியுங்கள். அவைகளை எப்படிக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் எனக் கணக்கீடு செய்யுங்கள்; ஓரளவாவது குறைந்தே தீரும். எங்களை மீறி எதுவும் நடக்காது என்பதை நம்புங்கள்.

  • தொடங்கியவர்

உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 3

 
அ-அ+

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி

 
 
 
 
உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 3
 
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

19p1_1525229624.jpg

‘அறம்' மதிவதினி கதாபாத்திரத்துக்குப் பிறகு நயன்தாராவுக்கு சீரியஸான கதைகள்தாம் வருகின்றனவாம். ‘மைக்கேல் மதன காமராஜன்' போன்ற காமெடிக் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நயன், சீரியஸான கதைகளைத் தவிர்க்க முனைகிறார்.


93p1_1525229648.jpg

று வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருக்கும் அதிதி ராவ், எந்த பிஸி ஷெட்யூலிலும் நடன வகுப்புக்கு விடுப்பு எடுத்ததில்லை. ‘லண்டன் பாரிஸ் நியூயார்க்’ படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கும் அதிதி, இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார். ‘தாஸ் தேவ்’ இந்திப்படத்தில் தன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும் என்று நம்பிக்கையோடிருக்கிறார் அதிதி.  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கிரிக்கெட்டில் சம ஊதியம் என்பது இன்றும் பெருங்கனவே- மித்தாலி ராஜ் . பிற துறைகளை போன்று விளையாட்டுத்துறையிலும், குறிப்பாக கிரிக்கெட்டில் பாலின பாகுபாடு இல்லாமல் சரிசமமாக ஊதியம் கிடைப்பதில் பிரச்சனை நிலவுகிறது. இதுகுறித்து இந்திய மற்றும் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களின் கருத்துக்களை விளக்குகிறது இந்த காணொளி.

  • தொடங்கியவர்

செல்வம், வெற்றி, அன்பு... மூன்றில் எது வேண்டும் உங்களுக்கு? - நம்பிக்கைக்கதை #MotivationStory

 
 

'நாம் அன்புக்குப் பிறந்தவர்கள்; அன்புதான் நம் தாய்’ - அழகாகச் சொல்லியிருக்கிறார் இஸ்லாமியக் கவிஞரும் சூஃபி ஞானியுமான ரூமி (Rumi). கல்வி, வேலை, செல்வாக்கு, புகழ், குடும்பம்... என்று நாம் ஒவ்வொருவரும் தேடி ஓடும் அத்தனைக்குப் பின்னாலும் ஆதாரமாக இருப்பது அன்பு ஒன்றே. இப்படி யோசித்துப் பாருங்கள்... நம்மை நேசிக்கவோ, நம் மேல் அன்பு பாராட்டவோ ஒருவர்கூட இல்லையென்றால் என்ன ஆகும்? வாழ்க்கை வெறுத்துப் போகும். வாழ்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எதிலும் வெற்றி, எங்கேயும் வெற்றி என்கிற இலக்குத் தவறில்லை. சுகபோகமாக வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பொருள் ஈட்ட வேண்டும் என்று நினைப்பதும் தவறில்லை. ஆனால், நாம் வெற்றி பெற்றதை, பணம் சேர்த்ததையெல்லாம் பகிர்ந்துகொள்ள ஒரே ஒரு ஜீவனாவது வேண்டுமில்லையா? அதனால்தான் புத்தர் தொடங்கி உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் அன்பு செய்தலைப் பிரதானமாக வலியுறுத்துகிறார்கள். இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது இந்தக் கதை! 

உன்னை அறிந்தால்

காலை 11:00 மணியிருக்கலாம். அந்த வீட்டிலிருந்த பெண்மணி ஒரு தெரு வியாபாரியின் குரல் கேட்டு வெளியே வந்தார். அந்த வீட்டு வாசலுக்குப் பக்கத்திலிருந்த ஒரு சிறு திண்டில் மூன்று முதியவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். மூவருக்கும் அடர்ந்த, வெண்மையான தாடி. வெகு தூரத்திலிருந்து வந்திருப்பது அவர்களின் முகம் களைத்திருப்பதிலிருந்தே தெரிந்தது. முதுமையோடு இருந்தாலும், பார்த்தவுடனேயே எல்லோரையும் வசீகரித்துவிடும் அழகு அவர்கள் முகத்தில் தெரிந்தது. அதையும் தாண்டி, கருணை பொங்கும் முகம் மூவருக்குமே! 

அந்தப் பெண்மணிக்கு அவர்களைப் பார்த்ததுமே ஒரு மரியாதை ஏற்பட்டுவிட்டது. கூடவே பரிவும் தோன்றியது. ''ஐயா, நீங்கள்லாம் யாருன்னு தெரியலை. ஆனா, பார்த்தாலே உங்க முகத்துல களைப்பும் பசியும் தெரியுது. உள்ளே வந்து ஏதாவது சாப்டுட்டுப் போங்களேன்’’ என்றார். 

அந்த முதியவர்களில் ஒருவர் கேட்டார்... ''உங்க கணவர் வீட்டுல இருக்காராம்மா.’’

''அவர் காலையிலேயே கிளம்பி வேலைக்குப் போயிட்டாரே...’’

''பரவாயில்லை. அவர் வந்ததும், நாங்க உள்ளே வர்றோம்.’’ 

அந்தப் பெண்மணி வேறு எதுவும் செய்ய முடியாமல் வீட்டுக்குள் போய்விட்டார். அன்றைக்கு அந்தப் பெண்ணின் கணவர் வீடு திரும்ப மாலையாகிவிட்டது. கணவர் வந்ததும், விஷயத்தைச் சொன்னார் அந்தப் பெண். ''அப்படியா... உடனே அவங்களை உள்ளே அழைச்சுக்கிட்டு வா. போ...’’ என்று அனுப்பினார் கணவர். 

அந்தப் பெண்மணி வெளியே வந்தார். அந்த முதியவர்களிடம் போனார். ''ஐயா... இப்போ தாராளமா நீங்க வீட்டுக்குள்ள வரலாம். என் கணவர் வந்துட்டார். வாங்க... வாங்க...’’ என்று கூப்பிட்டார். 

''அம்மா... நீங்க எங்களை கூப்பிட்டதுக்கு நன்றி. நாங்க வர்றோம். ஆனா, மூணு பேரும் சேர்ந்து உள்ளே வர முடியாது.’’ என்றார் அவர்களில் ஒருவர். 

வெற்றி, செல்வம், அன்பு கதை

''ஏன் அப்படி?’’ 

''அது அப்படித்தான். இதோ இவர் இருக்காரே...’’ ஒரு முதியவரைக் கையைக் காட்டி அவர் சொன்னார்... ''இவர் பேரு 'செல்வம்’.'' இன்னொருவரைக் கையைக் காட்டி, ''இவர் பேரு 'வெற்றி’...’’ தன்னைக் காட்டி, ''நான் 'அன்பு’. நாங்க மூணு பேரும் சேர்ந்து மொத்தமா ஒரு வீட்டுக்குள்ள நுழைய முடியாது. உங்களுக்கு யாரு வேணும்னு குடும்பத்துல போய் ஆலோசனை பண்ணிட்டு வந்து சொல்லுங்க... அதுக்கு ஏத்த மாதிரி நாங்க வர்றோம்.’’ 

இப்போதுதான் அந்தப் பெண்மணிக்கு வந்திருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதும் தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு என்பதும் புரிந்தது. வீட்டுக்குள் ஓடினார். கணவரிடமும் மற்றவர்களிடமும் விஷயத்தைச் சொன்னாள். 

கணவர் சொன்னார்... ''அடடா... எவ்வளவு நல்ல விஷயம். உடனே போய் செல்வத்தை வரச் சொல்லு. நம்ம வீடு முழுக்க பணம், நகை, நட்டுனு ரொம்பிடும். அப்புறமென்ன... வாழ்நாள் முழுக்க நாம கவலையில்லாம இருக்கலாம்.’’ 

''பணம் எதுக்குங்க? நமக்கு வெற்றிங்கிற புகழ் ஒண்ணு போதுமே...’’ 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் மகள் சொன்னாள்... ''இதெல்லாம் எதுக்கும்மா? நாம எப்படியும் பணத்தச் சம்பாதிச்சுகிட்டுதான் இருக்கோம். அப்பாவுக்கு ஏற்கெனவே நல்ல வக்கீல்ங்கிற பேர் இருக்கு. அன்பை உள்ளே வரச் சொன்னா, நாம ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்கலாம்ல?’’ 

இதைக் கேட்டப் பெண்ணின் கணவர் சொன்னார்... ''ஆமா. நம்ம மக சொல்றதுதான் சரி. போ... போய் அன்பை நம்ம விருந்தாளியா வீட்டுக்குள்ள வரச் சொல்லு.’’ 

அன்பு

அந்தப் பெண்மணி வெளியே போனார். ''ஐயா, உங்கள்ல அன்பு எங்க வீட்டுக்கு விருந்தாளியா வரணும்னு நாங்க எல்லாருமே விரும்புறோம்’’ என்று சொன்னார். 

முதியவர்களில் 'அன்பு’ எழுந்தார். வீட்டுக்குள் போக அடியெடுத்து வைத்தார். அவ்வளவுதான். 'வெற்றி’, 'செல்வம்’ ஆகிய இருவரும் அவரைப் பின் தொடர ஆரம்பித்துவிட்டார்கள். ஆச்சர்யப்பட்டுப்போன அந்தப் பெண்மணி, ''நான் அன்பை மட்டும்தானே கூப்பிட்டேன். நீங்களும் வர்றீங்களே?’’ 

அவர்களில் 'செல்வம்’ சொன்னார்... 'நீங்க செல்வத்தையோ, வெற்றியையோ கூப்பிட்டிருந்தீங்கன்னா, மத்த ரெண்டு பேரும் வெளியிலேயே நின்னுருப்பாங்க. நீங்க அன்பை அழைச்சுட்டீங்க. அன்பு எங்கெல்லாம் போகுதோ, நாங்களும் அவர் பின்னாலேயே போவோம். எங்கெல்லாம் அன்பு இருக்கோ, அங்கெல்லாம் செல்வமும் வெற்றியும் இருக்கும்.’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மலையகத்தில் அதிசயம்! படையெடுக்கும் மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎2‎/‎2018 at 6:53 AM, நவீனன் said:

அந்த ஹூக்... டிரைவ்... ஃப்ளிக்... வி லவ் யூ லாரா! #HBDLara

 
 

ஸ்பின்னர்களை பிட்ச் ஆஃப் தி பால் சென்று அடிக்க வேண்டும், பவுன்சர்கள் வந்தால் ஹூக் செய்ய வேண்டும், மெதுவாக பந்துகள் வந்தால் பின்கால்களில் சென்று விளையாட வேண்டும், ஆஃப் சைடில் வந்தால் கட் செய்ய வேண்டும், இல்லையேல் கவர் திசையில் விளையாட வேண்டும். பேடில் போட்டால் ஃபிளிக் செய்ய வேண்டும், சரியான நேரத்தில் நகர்ந்து இன்சைட் அவுட் விளையாட வேண்டும். ஒரு பேட்ஸ்மேனால் இப்படி அனைத்து ஷாட்களையும் சுத்தமாக, சிறப்பாக விளையாட முடியாது. சிறப்பாக ஹூக் செய்பவர், கட் செய்ய கஷ்டப்படுவார். ஃபிளிக் செய்யும் பேட்ஸ்மென் கவர் டிரைவில் கோட்டை விடுவார். இதெல்லாம் சிறப்பாக செய்தாலும் ஸ்பின்னர் வந்துவிட்டால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடும், நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்குமாறாக சுத்தமாக அனைத்து ஷாட்களையும் விளையாடும் பேட்ஸ்மென் நிச்சயம் ஜாம்பவானாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான்தான் பிரையன் சார்லஸ் லாரா.  #HBDLARA

lara

கிரிக்கெட்டை கொண்டாட்டமாக மாற்றிய பேட்ஸ்மேன் பிரையன் லாராவுக்கு இன்று 49-வது பிறந்தநாள்!

டார்கெட் அதிகமென்றால் பதற்றம், எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தால் பொறுமை என்பது போன்ற ரியாக்ஷன்களைக் குறைவாக கொடுப்பவர் லாரா. பயமா... எனக்கா? என்பதுபோல்தான் இருக்கும் அவரின் அணுகுமுறை. தனது பேட்டிங் திறமைமீது அசாத்தியமான நம்பிக்கை அவருக்கு உண்டு. ஒரு உதாரணம் சொல்கிறேன். தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு மிகஅருகில் இருந்தது விண்டீஸ். முதல் இன்னிங்சில் ஃபாலோ ஆணைத் தவிர்க்கவே விண்டீசுக்கு இருபத்து ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. ஃபாலோ ஆன் வந்தால் தோல்வி உறுதி. எதிர்முனையில் இருப்பதோ கட்டக்கடைசி பேட்ஸ்மென். இந்த நிலைமையில் யாராக இருந்தாலும் நிதானமாக இருப்பார்கள், தங்களின் விக்கெட் மிகமுக்கியம் என பொறுமையைக் கடைபிடிப்பார்கள். முடிந்தவரை ஸ்ட்ரைக்கில் இருந்து தடுப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், அந்த நிலையில் லாரா என்ன செய்தார் தெரியுமா?

இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவர் த விக்கெட்டில் வீச, ஸ்டம்பை நோக்கி சின்ன டர்ன், அழகான கவர் டிரைவ், நான்கு ரன்கள். அடுத்த பந்தும் அதேபோல வீச, இறங்கிவந்து லாங் ஆனுக்கு மேலே ஒரு சிக்ஸ். அடுத்த பந்தும் அதேபோல, கொஞ்சம் ஸ்ட்ரெயிட்டாக இன்னுமொரு சிக்ஸ். நான்காவது பந்தில் லைனை விட்டு கொஞ்சம் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை, பெளலர் தலைக்குமேலே சென்று அடிக்க ஒன் பவுன்ஸ் ஓவர் தி ரோப். ஐந்தாவது பந்தில் இன்னுமொரு ஸ்ட்ரெயிட் டிரைவ், ஆறாவது பந்தில் அழாகான லேட் கட் என மேலும் இரண்டு பவுண்டரிகள். ஆகமொத்தம் இருபத்தெட்டு ரன்கள். மூன்று விக்கெட் எடுத்த பெளலர், கொஞ்சம் தப்பினாலும் அணிக்குத் தோல்வி என்பதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி ஒரு முரட்டுத்தன பேட்டிங் பெர்ஃபாமென்ஸ்... அதை வேறுயாராலும் செய்ய முடியாது. இந்த ஓவரில் பந்தைநோக்கி இறங்கியும் வந்தார், பின் சென்று லேட்டாகாவும் விளையாடினார். அந்த ஃபூட் வொர்க் இருக்கிறதே, அதுதான் இவ்வளவு ரன்களுக்கும் காரணமா, லாரா?
 

லாரா


அந்த இருபத்தெட்டு ரன்கள் எடுத்த ஓவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வழங்கிய ஓவராக உள்ளது. அதற்கடுத்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்து ஃபாலோ ஆனைத் தவிர்த்தது விண்டீஸ். ஆட்டம் டிராவானது. ''நான் கிட்டத்தட்ட அனைத்து பந்துகளையும் ஒரேமாதிரிதான் வீசினேன். ஆனால், அந்த பந்தை எவ்வாறெல்லாம் அடிக்கலாம் என லாரா எனக்கு சொல்லிக்கொடுத்தார். முதலில் இரண்டு பவுண்டரிகளுக்கு பின்னர் தடுப்பாட்டம் ஆடுவார் என நினைத்தேன். அவர் அடித்த திசையில் ஆட்களை நிற்கவைத்தேன். ஆனால், அவரின் மூளையிலிருந்ததோ வேறு எண்ணங்கள் என்பதை கடைசி பந்தில்தான் உணர்ந்தேன்” என்று போட்டிக்குப் பின்னர் சொன்னார் ராபின் பீட்டர்சன். ஒரு குறிப்பிட்ட வகையான பந்தை வீசும்போது, பேட்ஸ்மேனால் குறிப்பிட்ட ஷாட்களைத்தான் அடிக்க முடியும் என்றில்லை, நீங்கள் சரியாக விளையாடினால் அந்தப் பந்தை எந்த திசையிலும் அடிக்கலாம் என விளையாடிக் காட்டியவர் பிரையன் லாரா.

ஒரு அணி தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே இருக்கும்போது, எந்தவொரு வீரராலும் உற்சாகமாக விளையாட முடியாது. விண்டீஸ் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தபோது, தனிநபராக அந்த அணியை தூக்கிநிறுத்தப் போராடியவர் லாரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இருநூறுகள் உள்பட  கிட்டத்தட்ட அறுநூற்று ஐம்பது ரன்களை விளாசினார். ஆனால், அணிதான் மூன்றுக்கு பூஜ்யம் என்று தோற்றுப்போனது. அவர் விளையாடிய 131 டெஸ்ட் போட்டிகளில் 61 போட்டிகளில் விண்டீஸ் தோற்றுள்ளது என்பதே, அவர் விளையாடிய சூழலைச் சொல்லும்.  முதல்தர கிரிக்கெட்டில் ஐநூற்று ஒன்று நாட் அவுட், டெஸ்ட் கிரிக்கெட்டில் நானூறு ஒன்று நாட் அவுட் என மாபெரும் ரன்களை தனது அதிகபட்ச ரன்களாக தன் வசம் வைத்துள்ளார் லாரா. 

lara



எந்தவீரர் சிறப்பாக விளையாடினாலும் அதனைப் பாராட்டக்கூடிய பண்புடையவர். 2015 உலகக்கோப்பையின்போது, காலிறுதியில் பாகிஸ்தானின் வாஹாப் ரியாஸ் அருமையான பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவை திணறடித்தார். அப்போது அவரின் நடத்தைக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது, அவரின் விளையாட்டை பாராட்டி அபராதத்தை தான் செலுத்துவதாகச் சொன்னார் லாரா. நேர்த்தியான கிரிக்கெட்டின்மீது அவர் வைத்துள்ள நேசத்துக்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். 
பத்தாயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்த பிரையன் லாரா ஓய்வுபெறும்போது கடைசியாக ரசிகர்களைப் பார்த்து ''நான் உங்களை மகிழ்வித்தேனா?” என்று கேட்டார். அதற்கு மைதானமே அதிருமளவுக்கு எழுந்த ஆரவாரம் பதில்சொன்னது. 

https://www.vikatan.com

 

பேவரிட் கிறிக்கட் வீரர்களில் இவரும் ஒருவர் 
 
 

  • தொடங்கியவர்
‘மனம் மாறும் தன்மை கொண்டது’
 

image_e66fa776e7.jpgஎப்போதும் ஒரே வழியில் சிந்திக்க வேண்டும் எனக் கருதுதல்  முழுமையாகாது. சில செயல்களை முழுமையாகச் செய்துமுடிக்க, வேறு இலகுவழி உண்டா எனவும் சிந்திக்க வேண்டும்.  

சிரமமான பணியை இலகுவாக்க பல வழிகள் உள்ளன. அதுபோல, எங்கள் மனம் சொல்லும் ஒரே மார்க்கமே, சரியானது எனவும் நினைக்கக் கூடாது.  

மனம் மாறும் தன்மை கொண்டது. நல்ல விடயங்களைச் செய்வதற்காக, எமது சிந்தனைகளை வழிப்படுத்தி, வேறு வழிகளில் அதை மாற்றி, புதியன செய்து மகிழலாம். 

யாரோ எவரோ சொன்னவைகளுக்காக, விடாப்பிடியாகச் சில காரியங்களை ஆராயாமல் செய்வதுண்டு. இந்தக் குருட்டு நம்பிக்கைகள் எமது பலத்தை வீணடித்தும் விடலாம். ஒரே பக்கமாகச் சாய்வது, புத்திசாலித்தனமல்ல; முட்டாள்த்தனம்தான்.  

காலம் கழிந்தபடி உள்ளது. நேரவிரயம் ஆபத்தானது. சிந்தித்து நல்ல மாற்றங்களைச் செய்தால், காலம் விரயமின்றிப் பொன்போல் பெறுமதியாகிவிடும்.

  • தொடங்கியவர்

1924 – பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின

வரலாற்றில் இன்று….

மே 04

நிகழ்வுகள்

1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
1494 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
1626 – டச்சு பயணி பீட்டர் மின்யூயிட் மான்ஹட்டன் தீவை அடைந்தார்.
1799 – நான்காம் மைசூர்ப் போர்: திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
1814 – பிரான்ஸ் மன்னன் முதலாம் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் எல்பா தீவை அடைந்தான்.
1855 – அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றும் நோக்கில் 60 பேருடன் சான் பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்பட்டார்.
1886 – ஹேமார்க்கெட் கலகம்: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
1904 – பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – ரோட்ஸ் என்ற கிரேக்கத் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.
1919 – மே நான்கு இயக்கம்: சீனாவின் பகுதிகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.1924-200x125.jpg
1924 – பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1930 – பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானினால் முதல் நாள் ஆக்கிரமிக்கப்பட்ட துளகி தீவின் (சொலமன் தீவுகள்) மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு ஜெர்மனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949 – இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1973 – சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது.
1979 – மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் போர்க்கப்பல் ஒன்று ஆர்ஜெண்டீனாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1994 – இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
2000 – லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.
2002 – நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1767 – தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
1945 – என். ராம், இந்தியப் பத்திரிகையாளர்
1983 – த்ரிஷா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1799 – திப்பு சுல்தான், மைசூர் மன்னன் (பி. 1750)
1879 – சேர் முத்து குமாரசாமி, இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
1949 – எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் (பி. 1925)
1980 – டீட்டோ, யூகோஸ்லாவியாவின் அதிபர் (பி. 1892)

சிறப்பு நாள்

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
நெதர்லாந்து – இறந்தவர்கள் நினைவு நாள்
சீனா – இளைஞர் நாள் (青年节, மே நான்கு இயக்கம் நினைவு – 1919)

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஒரு கிளி, கொரில்லா, யானை... விலங்குகள் நிகழ்த்திய நம்ப முடியாத ஆச்சர்யங்கள்!

 
 

சம்பவம் 1:

அமெரிக்காவின் டென்வர் நகரம். அங்கிருந்த ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் மேகன் ஹோவர்டு (Maegan Howard), சமந்தா கூஸ்க் (Samantha Kuusk) ஆகியோர் குடியிருந்தனர். சமந்தா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். சமந்தாவுக்கு ஆறுதலாக அவருடைய தோழி மேகன் உடனிருந்தார். சமந்தாவின் பெண் குழந்தை ஹான்னாவுக்கு (Hannah) அப்போது இரண்டு வயது. 

சமந்தா காலை நேரத்தில் வேலைக்குக் கிளம்பிவிட, மேகன்தான் அவர் திரும்பும் வரை ஹான்னாவைப் பார்த்துக் கொள்வார். ஹான்னா கொஞ்சம் துடுக்கானவள். சேட்டை கொஞ்சம் அதிகம்தான். ஒரு சில நிமிடங்கள் அவளைக் கவனிக்காமல் விட்டாலும் கூட ஏதோ ஒரு பிரச்னையை ஏற்படுத்தி விடுவாள். பாட்டில் தண்ணீரைக் கீழே கொட்டிவிடுவது, கிளியைக் கூண்டிலிருந்து திறந்துவிட்டு விடுவது, டிவி ரிமோட்டை உடைத்துத் தள்ளுவது என அவள் சேட்டைகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும். 

சமந்தாவிற்கு அவரின் அப்பா ஒரு கிளியைப் பரிசாக அளித்திருந்தார். அது குவாக்கர் (Quaker) எனும் இனத்தைச் சேர்ந்த கிளி. அது சில வார்த்தைகளை அவ்வளவு அழகாக உச்சரிக்கும். ஒரு பாடலையும் கூட மிமிக்ரி செய்யும். அந்தக் கிளிக்கு ``வில்லி" (Willie) எனப் பெயரிட்டிருந்தார் சமந்தா. 

ஒரு நாள் காலை சமந்தா வேலைக்குக் கிளம்பிவிடுகிறார். மேகன், ஹான்னாவுக்கான உணவைத் தயார் செய்து கொண்டிருந்தார். ஹான்னா ஹாலில் உட்கார்ந்து கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தாள். வில்லி தன் கூண்டிலிருந்த பழத்தைக் கொறித்துக் கொண்டிருந்தது. 

மேகனுக்கு அவசரமாக பாத்ரூமை உபயோகிக்க வேண்டிய கட்டாயம். அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்ததை, சிம்மில் வைத்து விட்டு பாத்ரூமிற்குப் போனார் மேகன். சரியாக முப்பது நொடிகள்தாம் ஆகியிருக்கும். அதற்குள் வில்லி கத்த ஆரம்பித்துவிட்டது. 

``மம்மா பேபி..." ``மம்மா...பேபி..." என்று பெரும் குரலெடுத்துக் கத்தியது. 

மேகன் ஒரு நொடி யோசித்தார். வில்லி ``மம்மா" என்று சொல்வதுண்டு. ஆனால், ``பேபி" என்று இப்போதுதான் முதன்முறையாகச் சொல்கிறது. அவசர அவசரமாக வெளியே வந்தார். ஒரு நொடி அதிர்ச்சியடைந்துவிட்டார். ஹான்னா, அடுப்புக்கு அருகில் நெருங்கிவிட்டிருந்தாள். அவளின் கைகள் சூடாக இருக்கும் அந்தப் பாத்திரத்தை இன்னும் சில நொடிகளில் தொட்டுவிடும். அது தொடும் நொடி, அந்தச் சூடான பாத்திரம் அப்படியே அவள் மீது கவிழ்ந்து, அவளின் மிருதுவான மேனியைப் பொசுக்கிவிடும். 

கிளி, யானை, கொரில்லா

``வில்லி" (Willie)

அதுவரை கத்திக்கொண்டிருந்த வில்லி...படபடவென சிறகுகளை அடித்து ஹான்னாவை நோக்கி பறந்தது. மேகனுவும் வேகமாக ஓடினார். வில்லி ஹான்னாவிடம் பறந்து அவளை இடைமறித்து ஒரு சில நொடிகள் தாமதிப்படுத்தியது. அதற்குள், மேகன் ஓடிவந்து ஹான்னாவைத் தூக்கிவிட்டார். 

மாலை வீடு திரும்பிய சமந்தா விஷயத்தைக் கேள்விப்பட்டு மேகனுக்கு நன்றி சொன்னார். மேகனோ வில்லியைக் கை காட்டினார். வில்லியைக் கையிலெடுத்து முத்தமிட்டு நன்றி சொன்னார் சமந்தா... பதிலுக்கு ``தேங்க் யூ" என்று சொன்னது வில்லி. 

சம்பவம் 2:

கோடைக்காலம். மதிய உணவு முடிந்திருந்த நேரம். சிகாகோவிலிருக்கும் ``ப்ரூக்ஃபீல்ட் ஜூ" (Brookfield Zoo). அந்தப் பொடியன் அப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரில்லாக்கள் நிறைந்திருந்த கூண்டு. பலரும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பொடியன் திடீரென அந்தத் தடுப்பு வேலியின் மீது ஏறினான். ஒரு நொடியில் நிலை தடுமாறி கொரில்லா கூண்டிற்குள் விழுந்துவிட்டான். விழுந்தவன் அப்படியே மயங்கிவிட்டான். 

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதறிப் போய் கூச்சலிடத் தொடங்கிவிட்டார்கள். பூங்காவின் காவலர் க்ரெய்க் உடனடியாக அங்கு ஓடி வந்தார். அபாயத்திற்கான ``சிக்னல் 13" யைக் கொடுத்தார். பணியாளர்கள் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கூண்டுக்குள் இருந்த பிந்தி ஜூவா (Binti Jua) என்ற அந்தக் கொரில்லா மெதுவாக அந்தப் பொடியனை நெருங்கியது. அவன் மயக்க நிலையில் இருந்தான். எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியிலிருந்தவர்கள் போட்ட கூச்சலில், கூண்டிலிருந்த மேலும் பல கொரில்லாக்களும் அந்தச் சிறுவனை நெருங்கின. க்ரெய்க் அவசர அவசரமாகத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார். முதலில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, நெருங்கி வரும் கொரில்லாக்களைத் தடுத்து நிறுத்த முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 

கொரில்லா, கிளி, யானை

பிந்தி ஜூவா (Binti Jua)

ஆனால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை. பிந்தி, பின்னால் வந்த பிற கொரில்லாக்களைத் தடுத்தது. அவற்றோடு குரல் உயர்த்தி சண்டையிட்டது. அந்தச் சிறுவனை குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு, தடுப்பு வேலியின் அருகே வந்தது. க்ரெய்க் உற்று நோக்கியது. ஏதோ சமிக்ஞை செய்தது. க்ரெய்க் அதனருகே சென்றார். அந்தச் சிறுவனை க்ரெய்கிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டிற்குள் சென்றது. அங்கிருந்த மற்ற கொரில்லாக்களையும் கூட்டிக் கொண்டு கூண்டுக்குள் திரும்பச் சென்றது. 
மயக்கமடைந்திருந்த சிறுவனுக்கு முதலுதவி செய்யப்பட்டது. அவன் காப்பாற்றப்பட்டான்.  

சம்பவம் 3:

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஒல்காரா கிராமம். மாலை நேரம். லலிதா தன் வீட்டை விட்டு சற்று தள்ளியிருக்கும் கடைக்குச் சென்றிருந்தார். வீட்டில் அவரின் பெண் குழந்தை பாசந்தி மட்டும் தனியே தூங்கிக் கொண்டிருந்தார். அது மலை கிராமம். சாப்பாடு யானை வந்துவிட்டது. அதுவும் கொம்பு வைத்த ஒற்றை யானை. 

யானை

உணவுக்காக லலிதாவின் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு கட்டத்தில் அந்த ஓட்டு வீட்டை தன் தும்பிக்கையால் தகர்க்க ஆரம்பித்தது. ஓடுகளை உடைத்தது. சுவற்றையும் உடைக்கத் தொடங்கியிருந்தது. தூக்கத்திலிருந்த பாசந்தி அழத் தொடங்கினாள். அவளின் அழுகைச் சத்தம் யானைக்குக் கேட்டது. சுவற்றை இடிப்பதை நிறுத்தியது. குழந்தையைப் பார்த்ததும், அதைச் சுற்றி கிடந்த உடைந்த கற்களை அப்புறப்படுத்தியது. குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது. அதற்குள் ஊர்க்காரர்களும் கூடிவிட்டார்கள். யானையை எப்படி விரட்டுவது என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த யானையோ குழந்தையைச் சுற்றியிருந்த கற்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் அமைதியாகக் காட்டுக்குள் சென்றுவிட்டது. 

யானை

``Unlikely Heroes"  என்ற புத்தகத்தில் உலகம் முழுக்க மிருகங்கள் மனிதர்களுக்குச் செய்த சில ஆச்சர்யமான சம்பவங்களைத் தொகுத்திருக்கிறார் ஜெனிஃபர் ஹோலந்து. அதில் கூறப்பட்டிருக்கும் 37 சம்பவங்களிலிருந்து தான் மேற்கூறிய மூன்று சம்பவங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 

யானை

 

``மிருகங்கள் பல சமயங்களில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற அபூர்வமான, ஆச்சர்யமான சம்பவங்களை நிகழ்த்திவிட்டு மிக இயல்பாகவே அவை இருக்கின்றன. நாம் ஓர் அளப்பரிய சாதனையைச் செய்துவிட்டோம். நமக்குப் பல விருதுகள் கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கும் என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் இல்லை அவற்றுக்கு...இந்தச் செயலைச் செய்வதற்கு முன்னர் எப்படியான இயல்போடு இருந்தனவோ, அப்படியேதான் இருக்கின்றன. மிருகங்கள் மனிதர்களை எப்போதுமே மதிக்கின்றன. மனிதன்தான் அவற்றை மதிப்பதில்லை." என்று சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜெனிஃபர். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

38p1_1525170934.jpg

`ஜிப்ஸி’ படத்தில் ஹிப்பி இசைக்கலைஞனாக வரும் ஜீவா கிடார் வாசிக்க கற்றுக்கொள்கிறார். இசைக்கலைஞர் ஒருவரை தன் கிழக்குக் கடற்கரை சாலை வீட்டிலேயே தனியறையில் தங்கவைத்து முழுநேரமாக கற்று வருகிறார். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!


38p2_1525170950.jpg

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் மூன்றாவது முறையாக இணைகிறார், விஜய்சேதுபதி. ‘சேதுபதி’ படத்தில் போலீஸ்காரரின் வாழ்க்கையை விவரித்த அருண், இப்படத்தில் உலக மகாத் திருடன் ஒருவனைப் பற்றிய கதையைக் காட்சிப்படுத்தவிருக்கிறார். வர்றார் திருடர்!


38p4_1525170985.jpg

`ஹாரிபாட்டர்’, `டாவின்சி கோட்’ புத்தகங்களின் விற்பனை சாதனைகளை எல்லாம் முறியடித்து சாதனை படைத்த நாவல் எல்.ஜேம்ஸ் எழுதிய `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே’. உலகம் முழுவதும் 52 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 150 மில்லியன் காப்பிகளுக்கு மேல் விற்றுத்தள்ளியது இந்த எரோடிக் நூல். இப்போது எல்.ஜேம்ஸின் பெயர் கின்னஸில் `உலகின் பணக்கார எழுத்தாளர்’ என்கிற பட்டியலில் இடம்பிடிக்கப்போகிறது. அள்ளு அள்ளு...


38p3_1525170967.jpg

ங்கனா ரணாவத், இப்போது இயக்குநர். `தேஜு’ என்ற படத்தை இயக்கி நடிக்க விருக்கிறார். படத்தில் அவருக்கு 80 வயதுடைய பாட்டியின் வேடம். `எமோஷனலான இந்தக் கதைக்கு விருதுகள் நிச்சயம்!’ என்று எல்லோரும் சொன்னாலும், கங்கனா வேறு மாதிரி சொல்கிறார். ``அதுதான் இல்லை. இது கமர்ஷியல் கதை. அது என்ன என்பது சஸ்பென்ஸ்!’’ என்று சிரிக்கிறார். ரிவால்வர் ராணி!


38p6_1525171022.jpg

ர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படும் இயக்குநர், ஈரானைச் சேர்ந்த ஜாஃபர் பனாஹி. அரசுக்கு எதிரான படங்களை இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பிறகு  விடுதலை செய்யப்பட்டார் பனாஹி. இவரது சமீபத்திய படைப்பான ‘த்ரீ ஃபேசஸ்’ திரைப்படம் அடுத்த மாதம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. தற்போது அவரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை பிறப்பித்துள்ளது ஈரான் அரசு. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையுத்தரவை நீக்கக்கோரி சர்வதேச அளவில் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், திரைப்பட ரசிகர்கள். ரிலீஸ் பனாஹி!


38p5_1525171003.jpg

ரு சீசன் சொதப்பினாலே அடுத்த சீசனில் `அட்ரஸ்’ இல்லாமல் செய்துவிடும் ஐரோப்பியக் கால்பந்து உலகம். அப்படிப்பட்ட இடத்தில் 22 ஆண்டுகளாக ஒரே அணியின் மேனேஜராக இருந்துள்ளார் அர்சென் வெங்கர். 1996-ம் ஆண்டு அர்செனல் மேனேஜராகப் பதவியேற்றவர், இந்த சீசனுடன்  எமிரேட்ஸ் ஸ்டேடியத்துக்கும், Gooners-க்கும் `குட்பை’ சொல்கிறார். 2003-04 சீசனில் ஒரு போட்டியில்கூடத் தோற்காமல் அர்செனலை, ப்ரீமியர் லீக் பட்டம் வெல்லவைத்தவர், கடந்த சில ஆண்டுகளாக பயங்கரமாக சொதப்பிக்கொண்டிருந்தார். அர்செனல் தோற்கும் ஒவ்வொரு முறையும் `Its enough Wenger’ என பேனர் பிடித்தனர் ரசிகர்கள். ஒருவழியாக அவரும் விலகுவதாக அறிவித்துவிட்டார். பைபை ஜென்டில்மேன்


38p7_1525171039.jpg

ம்மூட்டியின் ‘ஒரு குட்டனாடன் ப்ளாக்’ படப்பிடிப்பு  எர்ணாகுளம், கொச்சி போன்ற பகுதிகளில் நடந்துவருகிறது. படப்பிடிப்புக் காட்சிக்காக மம்மூட்டி அவரது லிமிட்டட் எடிஷன் பிஎம்டபிள்யூ 1200GS பைக் ஓட்டும் வீடியோ சமூகவலைதளங்களில வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த பைக்கின் விலை தோராயமாக 21 லட்சம். யப்பாடி!


38p8_1525171070.jpg

நேரம் கிடைக்கும்போது தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நள்ளிரவு வேளைகளில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் விஜய். சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த அன்று தானே பைக் ஓட்டியபடி அண்ணா நகரில் இருக்கும் ஐஸக்ரீம் பார்லருக்கு மகளோடு வந்திருக்கிறார். வர்லாம் வர்லாம் வா!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: கார்ன் ஃப்ளேக்ஸ்

 
Corn%20-1

கண்டுபிடிப்புகளால்தான் உலகம் இவ்வளவு முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவு அது கண்டுபிடித்த கதையும் சுவாரசியமானது. அப்படிப்பட்ட சில கண்டுபிடிப்புகளின் சுவையான கதையைப் பார்ப்போம்.
 

JohnHarveyKelloggjpg

ஜான் கெல்லாக்

நூறு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் வெற்றிகரமாக இருந்துவருகிறது. இன்று நமது உணவுப் பழக்கத்திலும் ஊடுருவி விட்டது. பாலில் போட்டு காலை உணவாகவும் சூப்பில் அலங்காரமாகவும் மிக்சரில் சுவைக்காகவும் கார்ன் ஃப்ளேக்ஸ் சேர்க்கப்படுகிறது. குழந்தைகளின் விருப்பமான உணவுப் பொருளில் ஒன்றாக இது மாறிவிட்டது.

கண்டுபிடிப்பின் கதை

சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்களின் உணவு கொழுப்பு நிறைந்ததாக இருந்தது. இதனால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போதுதான் ஒரு தேவாலயம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு, ஆரோக்கியமான உணவு ஒன்றைத் தயாரிக்கும்படி மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கிடம் கேட்டுக்கொண்டது. இவரும் இவருடைய தம்பி வில் கெய்த் கெல்லாக்கும் இணைந்து உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடையை நடத்திவந்தனர். ஆரோக்கிய உணவுக்காக ஊட்டச்சத்து மிக்க ரொட்டியைத் தயாரிக்க முயற்சி செய்தனர். அது ஏனோ சரியாக வரவில்லை.

ஒருநாள் ரொட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, காய்ந்து பாத்திரத்தில் ஒட்டியிருந்தது. வில் கெல்லாக் அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்போது சருகுகள்போல் உதிர்ந்தன. அவற்றை அருகில் இருந்த சூடான பாத்திரத்தில் போட்டார்.

WillKeithKelloggjpg

வில் கெல்லாக்

சட்டென்று பொரிந்தன. ஆச்சரியமடைந்தவர், சுவைத்துப் பார்த்தார். ஓரளவு சாப்பிடக்கூடியதாகத்தான் தெரிந்தது. உடனே கோதுமை மாவை எடுத்து, இதேபோல் செய்து பார்த்தார். ஜான் கெல்லாக்கிடம் காட்டினார். அவருக்கும் பிடித்துவிடவே, வீட் ஃப்ளேக்ஸ் உருவானது. பல முயற்சிகள். பரிசோதனைகளுக்குப் பிறகு, 1906-ம் ஆண்டு கோதுமைக்குப் பதில் மக்காச்சோளத்தில் உருவான ‘கார்ன் ஃப்ளேக்ஸ்’ விற்பனைக்கு வந்தது.

கெல்லாக் நிறுவனமும் உருவானது. கெல்லாக் சகோதரர்கள் தங்கள் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 122 ஆண்டுகளில் பல உணவுப் பொருட்களைப் புதிதாக உருவாக்கி, இன்றும் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது கெல்லாக்.

கண்டுபிடிப்போம்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

 
 
#வரலாற்றில்_இன்று
மே 4, 1979 - பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர் பதவியேற்ற தினம் இன்று.
  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/Gopi007twitz

Cute என்ற வார்த்தையை ஆண்கள் பெண்களிடத்திலும் பெண்கள் நாய்களிடத்திலும் பயன்படுத்துகிறார்கள். #Verified

twitter.com/udaya_Jisnu

“என்னடா தலை ஈரமா இருக்கு, குளிச்சிட்டு வர்றியா?”

“கரண்டு போனது தெரியாம, ரூம்ல தூங்கி எந்திரிச்சுவரேன்”

112p1_1525230909.jpg

twitter.com/ajay_aswa

“திருக்குறளைப் படித்து அதன்படி செயல்படுங்கள்” - எடப்பாடி பழனிச்சாமி.

சரி சரி, அதெல்லாம் இருக்கட்டும் திருக்குறளை எழுதியவர் யார்னு சொல்லிட்டுப் போங்க...

twitter.com/sultan_Twitz

‘பத்திரிகையாளர்கள் பற்றி தவறுதலாக சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது தவறானது’ - எச்.ராஜா #குடிச்சுப் போட்ட பாட்டிலைத் தூக்கி எடைக்குப் போட்டானாம்; எடைக்குப் போட்ட காசை வாங்கிக் குடிச்சுப் போட்டானாம்!

112p7_1525230921.jpg

twitter.com/itzkarthik_v

‘‘பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது காங்கிரஸ். பா.ஜ.க-வுக்கு வளர்ச்சி மட்டுமே நோக்கம்” - பிரதமர் மோடி சார் அந்த 15 லட்சம்...

twitter.com/Thaadikkaran

எந்த மாதிரி கட் பண்ணணும்னு கேட்டுட்டு, அவருக்கு வந்த மாதிரி கட் பண்ணி விடுவது சலூன்கடைக் காரரின் டிசைன்..!!

112p2_1525230940.jpg

twitter.com/HAJAMYDEENNKS

தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்குத் தெரியும் - ராமதாஸ் #வெயிலின் விளைவுகள் பயங்கரமானவை !

twitter.com/bhaskarvasugi

Trial ரூம்ல கண்ணாடியைப் பார்க்கிறப்போ வர்ற கோபம், தட்டுல சோத்தைப் பார்த்ததும் போயிடுது, அப்புறம் எங்கிருந்து...

twitter.com/thoatta

‘ஐ விக்கெட்’னு கத்திட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், கதவோரமா இம்ரான் தாஹிர் ஓடிட்டு இருக்கான்...

112p3_1525230954.jpg

facebook.com /டி.வி.எஸ். சோமு

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினி #அடுத்து, இந்திராகாந்தி மறைவுக்கு இரங்கல் அறிக்கை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது (லேட்டா வந்தாலும்...)

facebook.com /  Sakthi Tamilselvan

“அதான் சச்சின் அவுட் ஆயிட்டார்ல... டிவிய ஆஃப் பண்ணிட்டுப் போய்ப் படிடா”

- 90ஸ் கிட்ஸ் அம்மாக்கள்..

112p4_1525230970.jpg

facebook.com /  Somee Tharan

ஆசாராம் சாமியும் குற்றவாளியாம்.நித்தியானந்தா முதல் ஊருல உள்ள சாமிங்க மேல எல்லாம் புகார். புகாரே இல்லாத ஒரே சாமி எடப்பாடி பழனிசாமி!

facebook.com / Suresh Kannan

ரஜினி திடீர் அமெரிக்க பயணம்- செய்தி

‘நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி’ - வசனத்தை சீரியஸா எடுத்துக்கிட்டாரோ?

112p5_1525230998.jpg

facebook.com / Shahul Hameed

கடவுள் இல்லைன்னு சொன்னா ராமசாமி...

கடவுளே நான்தான்னு சொன்னா பழனிசாமி..

facebook.com/rajeev.rajamani.9

பிடிச்ச பாட்டை ரிங்டோனா வைக்கணும்.

பிடிக்காத பாட்டை அலாரம் டோனா வைக்கணும்.

twitter.com/amuduarattai

சைடு ஸ்டாண்டு மட்டும் இல்லையென்றால், நிறைய பேர் புல்லட் வாங்கியிருக்கவே மாட்டார்கள்.

112p6_1525231015.jpg

twitter.com/HAJAMYDEENNKS

குழந்தைகளிடம் முத்தம் வாங்குவதும், மேனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவதும் ஆண்களுக்கு எளிதில் கிடைக்காத  வரங்கள்!

twitter.com/viji_tamilachi

நாலு தோசை வாங்கும்போது கடைக்காரர்கிட்ட ‘ரெண்டு ரெண்டாத் தனித்தனியா கட்டுங்க’னு சொல்லி அதிகமா சட்னி சாம்பார் வாங்குற முறையைக் கண்டுபிடிச்சது பூரா நம்ம பயலுகதான்!

twitter.com/its_kutty

அவள் என் வாழ்வில் வந்த பிறகுதான்...

100 ரூபாய்க்கு எல்லாம் சாக்லெட் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கொஞ்சம் செய்தி, நிறைய கலாய்... மீம்ஸை அதிகம் விரும்புவதும் பகிர்வதும் எதனால்?

 
 

மீம்ஸ்... இன்று பல ஃபேஸ்புக் பக்கங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ஃப்ரீ ஹிட். சில ஆயிரம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஒரு சின்ன பக்கமாக இருந்தாலும் சரி, பல லட்சம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் பெரிய பக்கமாக இருந்தாலும் சரி, மீம்கள்தான் அங்கே பிரபலம். மீம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி, திட்டுவதற்காகவாது அங்கே கூட்டம் சேரும். சொல்லப்போனால் இன்றைய இணையர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களின் பக்கம் செல்வதே இரண்டு மீம்களைப் பார்த்துச் சிரிக்கத்தான். மோடி முதல் ஊறுகாய் ஜாடி வரை, நாம் மீம்களில் பேசாத விஷயங்களே கிடையாது. தோனி சிக்ஸ் அடித்தாலும் மீம்... டக் அவுட் ஆனாலும் மீம்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை சாமி என விளம்பரம் செய்தாலும் மீம்... ஃபேஸ்புக் மார்க் லைவ் வந்தாலும் மீம்! 'அவென்ஜர்ஸ்' வில்லன் தாநோஸ்-க்கும் மீம்... 'காலா' சிங்கிள் ட்ராக்கிற்கும் மீம்! "போதும்டா... மிடில..." என யாரேனும் ஒரு பிரபலம் புலம்பினால் அதை வைத்தே ஒரு மீம். ஹைக், வாட்ஸ்அப் வரை மீம்கள் வந்து நம்மை ஃபார்வர்ட் செய்யச் சொல்லி கெஞ்சும். காரணம், மீம்ஸ் டிசைன் பண்றது ரொம்ப ஈசி பாஸ்! இந்த மீம்ஸ் பற்றி கொஞ்சமே கொஞ்சம் ஹிஸ்டரி...

மீம்ஸ்

பல விஷயங்களைப் போல, மீம்ஸ் கலாசாரமும் மேற்கத்திய நாடுகளிலிருந்து இங்கே வந்ததுதான். மீம்ஸ் என்றால் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்தும், ஒரே ஒரு வரி விளக்கம். மீம் என்பது படம், வீடியோ, லிங்க், இணையதளம், ஹேஷ்டேக் இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது அனைத்தையும் சேர்த்து அவியலான ஒரு வடிவில், ஓர் இடத்தில் இருக்கும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் செயல். அப்போதைய அரசியல் மற்றும் கலை சூழல்கள் மீம்களின் முக்கியக் கருவாக இருக்கும். இந்த 'மீம்' (Meme) என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் புகழ்பெற்ற உயிரியல் நிபுணர் ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins). அவர் எழுதி 1976-ம் ஆண்டு வெளிவந்த 'The Selfish Gene' என்ற புத்தகத்தில் 'மீம்' என்ற சொல்லாடலை கலாசாரத் தகவல்கள் எப்படிப் பரிமாறப்படுகின்றன என்ற செயலோடு தொடர்புப்படுத்தி பேசி இருப்பார். நம் இன்டர்நெட் மீம்களும் கிட்டத்தட்ட அதனோடு தொடர்புடையது என்பதால் அதே பெயர் இதற்கும் வந்துவிட்டது. இன்டர்நெட் மீம்ஸை 1993-ம் ஆண்டு மைக் காட்வின் (Mike Godwin) என்பவர் கொண்டு வந்தார். ஏற்கெனவே இருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சில மாறுதல்கள் செய்து, அதன் மூலம் நாம் சொல்ல வந்த கருத்தை பட்டெனவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே மீம்களின் பணி. 

மீம்ஸை பகிர்வது எதனால்

இன்டர்நெட்டால் மீம்கள் பிரபலமடைந்திருந்தாலும், இன்டர்நெட்டிற்கு முன்பே, மீம்கள் இருந்திருக்கின்றன. ஏற்கெனவே யாரோ சொன்ன ஒரு கருத்து, செய்துவிட்ட செயல் போன்றவற்றை மேற்கோள் காட்டி, ஒரு கலையின் உதவியுடன் அதை நையாண்டி/விமர்சனம்/பாராட்டு/எதிர்ப்பு என நாம் செய்யும் விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் மீம்ஸ் என்ற பெயருக்குள் அடக்கிக்கொள்ளலாம். உங்களின் ஏழாம் வகுப்பு கணக்குப் பாட நோட்டில், பாட்ஷா ரஜினியை வரைந்து 'நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி' என எழுதினீர்களே அதுவும் ஒரு மீம்தான்!  சரி, நாம் இப்படி மீம்ஸை பித்துப் பிடித்ததுபோல் கொண்டாட என்ன காரணம் தெரியுமா?

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய மூன்று கட்ட நீண்ட உளவியல் ஆராய்ச்சியில் இதுகுறித்து முழுமையான விளக்கங்கள் கிடைக்கின்றன. நாம் ஒரு விஷயத்தை ஆன்லைனில் நம் ப்ரோஃபைலில் ஷேர் செய்ய ஐந்தே ஐந்து காரணங்கள்தான் இருக்க முடியும்.

கிரிக்கெட் மீம்

1) நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஒரு தகவலைக் கொண்டு செல்ல வேண்டும்; அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

2) நாம் யார், நம் எண்ண ஓட்டங்கள் எப்படிப் பட்டவை, நம் மனத்தின் நிலைப்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

3) இருக்கும் உறவுகளை வலிமைப்படுத்த வேண்டும்; புது உறவுகளை வளர வைக்க வேண்டும்.

4) நாம் தன்னிறைவு பெற வேண்டும்.

5) நாம் விரும்பும் விஷயங்களை உலகமும் விரும்ப வேண்டும். அதுகுறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு வேண்டும்.

உள்ளே இருக்கும் படங்களின் தரம், வார்த்தையில் இருக்கும் பிழைகள், சிறுபிள்ளைத்தனமான  கருத்துகள் போன்றவற்றைக்கூட பொருட்படுத்தாமல் நீங்கள் ஒரு மீம்மை ஷேர் செய்யும் காரணத்தை நிச்சயம் இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்றில் அடக்கி விடலாம். சில சமயங்களில் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள்கூட இருக்கலாம். அதைக் கிட்டத்தட்ட உங்களின் மன ஓட்டத்தோடு ஒத்துப்போகிறவர்கள் ரசிப்பார்கள். அது மட்டுமின்றி, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சேட்டிங் ஆப்களில் மீம்கள், ஸ்மைலிகள், ஜிஃப் படங்களை அதிகம் பகிர்வதன் மூலம் அனுதாபம், பச்சாதாபம், பரிவு, அன்பு போன்ற குணநலன்கள் அதிகம் வளரும் என்கின்றன உளவியல் சார்ந்த ஆய்வுகள். காரணம், காட்சி அல்லது பார்வைக்குரிய விஷயங்களை அதிகம் விரும்புபவர்கள், இணையம் என்ற நிழல் உலகில் இருந்தாலும் நிஜ உலகின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாகவே இருப்பார்கள். நிஜத்திலும் இந்தக் குணநலன்களைப் பிரதிபலிக்கும் மனதைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் மீம்

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் லைக்/ஷேர் செய்த மீம்களை வைத்தே அவர்களின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு, கொள்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். அகவயத்தன்மை (Introvert) கொண்டவர்கள் பலருக்கு இன்று சமுதாயத்தில் ஒரு வலிமையான குரலை கொடுத்து இருக்கின்றன நம் சமூக வலைதளங்கள். உதாரணமாக, உங்கள் நண்பர் அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டார். ஆனால், சமூக வலைதளங்களில் சூப்பர்ஸ்டாராக இருப்பார். 4,000 நண்பர்கள், 50,000 ஃபாலோயர்கள் என மார்கிற்கே சவால் விடும் பக்கம் ஒன்றை நடத்தி வருவார். அவரா இப்படி, என நீங்களே வியந்து போவீர்கள். தனிமை, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை சமூக வலைதளங்கள் இன்று உடைத்து எறிந்திருக்கின்றன. அதில் மீம்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் சொல்ல வந்த கருத்தை உங்களால் வார்த்தைகளால் கோர்க்க முடியாமல் இருக்கலாம். அதை நீங்கள் பார்த்த ஒரு மீம், இரண்டே இரண்டு படங்களுடன் அதைக் கூறி இருக்கும். அதை நீங்கள் ஷேர் செய்ய முனைவீர்கள்.

 

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி நேரில் உங்கள் நண்பர்களுடன் விவாதம் செய்யும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதோ, அதேபோல இங்கேயும் நடக்கும். ஆனால், பலர் சமூக வலைதளத்தில் இப்படி நிகழ்வதை மிகவும் பெரிதாக எடுத்துக்கொள்வார்கள். காரணம், இது பொது மேடையில் அரங்கேறும் செயல்! ஆகவே, ஒரு மீம்மோ, கருத்தோ ஷேர் செய்யப்படும் முன்பு அது எந்த அளவுக்குச் சரியானது, யாரையேனும் புண்படுத்துகிறதா, போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். கேளிக்கை மற்றும் நகைச்சுவை அவசியம்தான். ஆனால், அது யாரையும் தாக்கிவிடக் கூடாது. ஒருவரின் கருத்தோடு, கண்ணோட்டத்தோடு நீங்கள் மோதலாம். அது குறித்து விவாதிக்கலாம். அது அதையும் தாண்டி அவர் மீதே நிகழும் நேரடி வார்த்தைப் போர் (personal attacks) ஆகிவிடக் கூடாது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்
‘காதலின் வெற்றி, முதுமையில் துலங்கும்’
 

image_8a8ce96095.jpgகாதலுக்குப் பொய் சொல்வதுதான் அழகு. காதலியைச் சமாதானம் செய்யக் காதலன் சொல்லும் பொய்கள் மிக வேடிக்கையாக இருக்கும். அவை பொய் என அவள் உணர்ந்தும் கூட, பொய்க் கோபம் பூண்டு, அவள் மனத்துக்குள் எல்லையற்ற மகிழ்வெய்துவதும் பொய்யல்ல. 

தனக்காகக் காதலி சொல்லும் பொய்யையும் அவள் படும்பாட்டையும் குறுகுறு விழிகள், துடிக்கும் இதழ்களுடன் குறும்பான செய்கையையும் இரசிக்காமல் இருக்க முடியுமா? 

அன்பு உள்ளம் கொண்டவர்கள் செய்யும் எந்தக் காரியங்களுமே, இரசனைக்குரியதுதான். காதலர்கள் சின்னக் குழந்தைகளாகச் செயற்படுவதுகூடப் புதுமையல்ல. 

இவர்களின் ஊடல்கள், பரிகாசங்கள், சேட்டைகள் ஆகியவற்றைக் காலம் கடந்த பின்னர் நினைத்து, தமக்குள் உள்ளூர மகிழ்வெய்துவதும் வயது முதிர்வதும் தங்கள் காதல் வாழ்வை இறுதிக்காலம் வரை தொடர்வதும் அன்புக்குக் கிடைத்த, அதுவே பெருமைகொள்ள வைக்கும் வெற்றிதான். காதலின் வெற்றி, முதுமையில் துலங்கும்.

  • தொடங்கியவர்

பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில்

 
 
பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818
 
கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.

காரல் மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்ஸ் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். 
 

 

 

தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916

 

பி.யு.சின்னப்பா, தமிழ் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.

 
 
 
தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916
 
பி.யு.சின்னப்பா, தமிழ் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி.யு.சின்னப்பாவானார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.

சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.இராமச்சந்திரன், எம்.கே.ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தனது 19-வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி ‘சந்திரகாந்தா’ மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. இந்த படம் பெரு வெற்றி பெற்றது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ.சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.

ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். கிருஷ்ணபக்தி படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 இல் தமது 35-ஆவது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் ‘வனசுந்தரி’. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த ‘சுதர்சன்’ இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1925 - தென்னாபிரிக்காவில் ஆப்ரிக்கன் மொழி அதிகாரபூர்வ மொழியானது.
* 1955 - மேற்கு ஜெர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
* 1991 - ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
• 1916 - இந்தியாவின் 7-வது குடியரசு தலைவரான ஜெயில் சிங் பிறந்த தினம்
• 1922 - தமிழ் திரைப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி பிறந்த தினம்
• 2006 - இந்திய திரைப்பட இசையமைப்பாளர் நௌசத் அலி இறந்த தினம்.
* 2007 - கென்யாவின் விமானம் ஒன்று கேமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.