Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
நிலாவில் நடந்த 6வது விண்வெளிவீரரான எட்கரின் மரணம்
 
 

வாஷிங்டன்: நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார்.

Edgar Mitchell, Apollo 14 astronaut who walked on moon, dies at 85

அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு.  இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற பெருமை எட்கருக்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி 94 பவுண்ட் எடைகொண்ட சந்திர மண்டல பாறைகள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்ததிலும் எட்கரின் பங்கு இன்றியமையாதது.

 

அவற்றை அமெரிக்காவில் 184 விஞ்ஞானிகள் குழுக்களுக்கும், மற்ற 14 நாடுகளிலும் ஆராய்ச்சி செய்தனர். இதன் மூலம் நிலா குறித்த பல தகவல்கள் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்தது. விண்வெளிக்குச் சென்று வந்த பின்னர், எட்கரின் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவிலும், அமெரிக்க கடற்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். நிலாவில் கால் பதித்து நடந்ததின் 45-வது ஆண்டு விழாவை கடந்த 5-ந் தேதி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 4-ந் தேதி மாலை புளோரிடாவில் எட்கரின் மரணம் அடைந்தார்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

 

ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்து கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். ஸ்லிம்மாக இருக்க வைக்கும் லிஸ்ட்டில், இதோ 8 உணவுகள்.

நல்ல கொழுப்பை சேர்க்கும் 'பாதாம்'

patham.jpgநல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பை தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், வைட்டமின் இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். முன்னாள ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

apple.jpgபசி உணர்வை போக்கும் 'ஆப்பிள்'

ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வை தரும். ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்னையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம்.

கொழுப்பு சேர்வதை தடுக்கும் 'வாழைப்பழம்'

banana.jpgவாழையில் உள்ள பொட்டாஷியம் சத்து, மாவு சத்தை உடலுக்குள் கிரகிக்க உதவும். வயிறு நிறைந்த உணர்வும், கல்லீரலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். பசித்த வயிறுக்கு தேவையான கலோரிகள் கிடைப்பதால் அதிக அளவு உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இரவு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

Purokoli.jpgஆற்றல் தரும் 'புரொகோலி'

புற்றுநோயை எதிர்க்க கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பக புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் புரொகோலியில், 30 கலோரிகள் கிடைக்கும். இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஸ்டீம் குக்காக புரொகோலியை தயாரித்து சாப்பிடுவது நல்லது.

rice%20broun.jpgஎடையை பராமரிக்கும் 'பிரவுன் அரிசி'

ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. பைடோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும். கொழுப்பை சேரவிடாத மாவு சத்துதான் இதில் உள்ளது என்பதால் தினமும் வெள்ளை அரிசிக்கு பதிலான பிரவுன் அரிசிக்கு மாறலாம். சீரான எடையை பராமரிக்க எளிய வழி.

Carrot.jpgகலோரிகளை குறைக்கும் 'கேரட்'

நீர் சத்து, நார்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் கிவிக்கர் உணவாக இருக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Kollu.jpgஎடையை குறைக்கும் 'கொள்ளு'

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வதுண்டு. கொழுப்பை கரைக்க கூடியது கொள்ளு. கொழுப்பை எரிக்கும். உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்பை கரைத்துவிடும். மாவுசத்துக்கள் கொழுப்பாக சேராமல் தடுக்கப்படும். இதய நோய், மூப்படைதல் ஆகியவை தடுக்கப்படும்.

athi%20palam.jpgஎடையை பராமரிக்கும் 'அத்தி'

பிரெஷ் அத்தியில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும், செரிக்கும் போது ரத்தத்தில் மெதுவாக சர்க்கரையின் அளவு சேரும். இதனால் உடல் எடையும் அதிகரிக்காது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள்ளே வைத்திருப்பதால் அத்தி பழம் அல்லது ஜூஸாக அடிக்கடி பருகலாம்.

விகடன்

  • தொடங்கியவர்

கொடிய விஷமுள்ள பிளாக் மாம்பாவிடம் இருந்து தப்பிய உலகை மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர்!

 

தென்ஆப்ரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள் பட்டை வலி காரணமாக தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அண்மையில் தென்ஆப்ரிக்காவின் புகழ்பெற்ற க்ரகர் தேசிய பூங்காவுக்கு ஸ்டெயின் தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார். சாலையோரத்தில் கொடிய விஷம் கொண்ட, பிளாக் மாம்பா பாம்பு காரில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளது.

dale.jpg

அதனை பார்த்த டேல் ஸ்டெயின் விஷமில்லாத பிரவுன் ஹவுஸ் பாம்பு என கருதி,அருகில் சென்று  அந்த பாம்பை கையால் தூக்கி சாலையோரத்தில் போடுவதற்கு முனைந்து அருகில் சென்றுள்ளார். பாம்பை தூக்க முனைந்த போதுதான், அது கொடிய விஷமுள்ள பிளாக் மாம்பா பாம்பு என்பதை கண்டு அலறிய டேல் ஸ்டெயின் தூர விலகியுள்ளார்.

black%20.jpg

இந்த பாம்புதான் ஆப்பிக்காவிலேயே கொடிய விஷமுள்ள பாம்பு ஆகும். அந்த கண்டத்தில் இந்த பாம்பு கடியால் அதிகம் பேர் இறந்து கொண்டிருக்கின்றனர். உலகிலேயே மிக வேகமாக போகக் கூடிய பாம்பும் இதுதான். கடைசி நேரத்தில் பிளாக் மாம்பா என்று தெரிந்து கொண்டதால், ஸ்டெயின் அதனை கையில் எடுக்கவில்லை. இல்லையென்றால் டெ ஸ்டெயின் அந்த பாம்பிடம் கடி பட்டிருப்பார்.

அந்த பிளாக் மாம்பா பாம்பினை வீடியோ எடுத்துள்ள ஸ்டெயின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

p28b.jpg

சீஸர் சான்ட் (Caesar Sant)... வயது ஏழு. அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதியில் வாழும் இந்தச் சுட்டி, இரண்டு வயதில் இருந்தே வயலின் இசைத்து அனைவரையும் கவர்ந்த குட்டி இசை மேதை. இப்போது, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். இந்த இசைத் திறமைக்கு சவால்விடுவது போல, ‘சிக்கிள் செல் அனீமியா’ (sickle-cell anaemia) என்கிற மிகவும் அரிய நோய், சீஸரைத் தாக்கியிருக்கிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறான். இதை, நேஷனல் ஜியாக்ரஃபி சேனல் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கும்போது உண்டாகும் வலியால் சீஸர் துடிப்பதும், சற்று நேரத்தில் புன்னகையோடு வயலின் வாசிப்பதும் உருக்கமாக இருக்கிறது. இந்த நோயைக் குணப்படுத்த, 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இணையத்தில், சீஸருக்காக நிதி திரட்டப்பட்டுவருகிறது.

 

  • தொடங்கியவர்

ஒரு வார்த்தை... ஒரு வருஷம்!

 
பா.ஜான்ஸன்

 

க்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி தெரியும்... அதில் ஒவ்வோர் ஆண்டும் புத்தம்புதிய வார்த்தைகள் சேர்க்கப்படுவது தெரியுமா? அந்தந்த ஆண்டில் உலகம் முழுக்க ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளைச் சேகரித்து, ‘வேர்டு ஆஃப் தி இயர்’ என ஒரு சொல்லைத் தேர்வுசெய்கிறார்கள். அதனுடன் வேறு சில சொற்களையும் தேர்வுசெய்து டிக்‌ஷனரியில் சேர்க்கிறார்கள். அப்படி 2015-ம் ஆண்டில் `வேர்டு ஆஃப் தி இயர்' ஆகத் தேர்வான சொல், `எமோஜி' (Emoji). கடந்த சில ஆண்டுகளில் இப்படித் தேர்வுசெய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் இங்கே...

எமோஜி (Emoji)

சிரிப்பு, அழுகை, வருத்தம்... என நவரச உணர்வுகளை வெளிப்படுத்த, செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தும் ஸ்மைலியின் பெயர்தான் `எமோஜி'.  பல வார்த்தைகளில் விவரிக்கவேண்டிய விஷயங்களை, ஒரே ஸ்மைலியில் உணர்த்தும் மேஜிக்தான் `எமோஜி'. கடந்த வருடம் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான் p86aa.jpg.

போவ்வெர்ட் (bovvered)

`தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க!', `என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?' போல வைரலான வார்த்தைதான் இந்த போவ்வெர்ட். `தி கேத்தரின் டேட் ஷோ' என்பது பிரிட்டனில் மிகவும் பிரபலமான காமெடி தொடர். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் லாரன். இவர் `Am i bothered?' என சொல்வதற்கு th-க்கு பதில் vv-யைச் சேர்த்து bovvered என உச்சரித்துவிட, அதை வைரலாக்கிக் கலாய்த்தது சோஷியல் மீடியா. இந்த வார்த்தை ட்ரெண்டிங் ஆகி உலகம் முழுக்கப் பரவ, ஆக்ஸ்ஃபோர்டும் அகராதியில் இணைத்துவிட்டது. Bother-க்கு வரும் அர்த்தத்தையே இந்த வார்த்தைக்கும் வழங்கிவிட்டார்கள்.

p86a.jpg

பாட்காஸ்ட் (Podcast)

IPod மற்றும் Broadcast என்ற வார்த்தைகளின் கலப்படம்தான் Podcast. ஐபாடில் பாடலைச் சேமித்துவைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதுதான் `பாட்காஸ்ட்'. ஐபாட் பிரபலமாக ஆரம்பித்த நேரத்தில் இந்த வார்த்தையை இணைத்துக்கொண்டது ஆக்ஸ்ஃபோர்டு.

லோகவோர் (locavore)

`உள்ளூர் உணவு' உண்பவரைக் குறிக்கும் 4ஜி தலைமுறையின் வார்த்தை இது. ஹெர்பிவோர், கார்னிவோர் போல லோக்கல் உணவுகளை உண்பவரை லோக்கல்வோர் என்று சொல்ல ஆரம்பித்து அது `லோகவோர்' ஆனது. உள்ளூர் உணவுகள் அழிந்துவரும் நிலையில் அவற்றை ஊக்கப்படுத்த உருவான இந்த வார்த்தை, இப்போது உலகம் முழுக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 வேப் (Vape)

சிகரெட்டுக்கு மாற்றாக வந்த இ-சிகரெட்டை குறிக்கும் சொல் இது. Vapour அல்லது Vaporize என்ற வார்த்தையைத் தழுவி வந்தது. `சிகரெட் பிடித்து வெளியிடுவது புகை; இ-சிகரெட் பிடித்து வெளியிடுவது ஆவி (Vape)' என்கிறார்கள். இ-சிகரெட் எல்லா இடங்களிலும் பரவலாக உபயோகிக்கப்பட, ஸ்மோக்கிங் ரூம்கள்போல `வேப்பிங் ரூம்கள்'கூட உருவாக ஆரம்பித்தன.

செல்ஃபி (Selfie)

இந்த வார்த்தைக்கு விளக்கம் சொல்லத் தேவை இல்லை. `1839-ம் ஆண்டு ராபர்ட் கொர்னிலியஸ் எடுத்ததுதான் முதல் செல்ஃபி’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு அப்போது `செல்ஃபி' எனப் பெயர் வைக்கப்படவில்லை. இப்போது, `செல்ஃப் போர்ட்ரைட்' என்ற அர்த்தத்துடன் அகராதியில் பதிந்திருக்கிறது செல்ஃபி.

ஜிஃப் (GIF)

`கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மெட்' (Graphic Interchange Format) என்பதன் சுருக்கமே GIF. புகைப்படத்துக்கும் வீடியோவுக்கும் இடையிலான ஒரு நிலை. ஒரு வீடியோ காட்சியில் சில நொடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு லூப்போல திரும்பத் திரும்ப ஓடவிடுவதுதான் ஜிஃப் செயல்படும் விதம். இப்போது ஜிஃப்-பிலேயே மீம்ஸ் எல்லாம் வந்துவிட்டன.

ஸ்க்வீஸ்டு மிடில் (Squeezed middle)
 
சமூகத்தின் ஒரு பகுதியினரை மட்டும், அதாவது நடுத்தர வர்க்கத்தினரைத் தாக்கும் வரி விதிப்பைக் குறிக்கும் சொல் இது. வருமானம் உயரும் வேகத்தைவிட, செலவுகள் அதிகம் ஆகும். 2011-ம் ஆண்டு உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதாரத் தள்ளாட்டத்தைச் சந்தித்தபோது, அதை எதிர்கொள்ள வரி விதிப்பை அதிகரித்தன. அப்போது உருவான இந்தச் சொல்,
உலகம் எங்கும் ஏராளமானோரால் பயன்படுத்தப்பட்டது.

ரெஃப்யூடியேட் (Refudiate)

சாரா பாலின் என்பவர், தன் ட்வீட் ஒன்றில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். Refute, Repudiate என்ற இரு வார்த்தைகளின் பொருளும் `மறுப்பது' என்பதுதான். அவர் இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து `Refudiate' எனப் பயன்படுத்த, பலரும் `இப்படி ஒரு வார்த்தையே இல்லையே?' எனக் கேள்வி கேட்டனர். புதிய சொல்லின் ஈர்ப்பு காரணமாக இணையத்தில் பலரும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்து, கடைசியில் டிக்‌ஷனரியிலும் இடம்பிடித்துவிட்டது.

VIKATAN

  • தொடங்கியவர்

லோயர் பாடி வொர்க் அவுட்ஸ்

 

 

 

p10b.jpg

டப்பதில் இருந்து மலையேறுவது வரை, நம் அன்றாடச் செயல்களில் பெரும் பங்கு வகிப்பவை நம் கால்களே. அவை ஆரோக்கியமானதாகவும் உறுதியானதாகவும் இருக்கவேண்டியது அவசியம். நாம் மேல் உடலுக்கும் வயிற்றுக்கும் காட்டும் அக்கறையை, கீழ் உடலுக்குக் குறிப்பாகக் கால்களுக்கு அளிப்பது இல்லை. முன், பின் தொடை, பின்பக்கம், பின்னங்கால், கெண்டைக்கால் தசைகளே உடலைத் தாங்கிப் பிடிக்க உறுதுணையாக இருக்கின்றன.

கீழ் உடலுக்கான உடற்பயிற்சி கால்கள், இடுப்பு எலும்பு, தசைகளை உறுதியாக்குகிறது. இந்தத் தசைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால், கால்களை முன் பின்னாகவும், பக்கவாட்டிலும் அசைக்க முடியும்.

சைடு லெக் ரைஸ் (Side leg raise)

p10a.jpg

தரையில் பக்கவாட்டில் படுக்க வேண்டும். கையை மடித்து உள்ளங்கையால் தலையைத் தாங்க வேண்டும்.  இப்போது, வலது காலைப் பின்புறமாக நன்கு மடிக்க வேண்டும். அதே நேரத்தில், இடது காலை உயர்த்திப் பழையநிலைக்கு வர வேண்டும். இப்படி 20 -  30 முறை செய்ய வேண்டும். இதேபோல் வலதுபுறமும் செய்ய வேண்டும். 

பலன்கள்: இதனால் இடுப்பு, தொடைத் தசைகள் ஃபிட்டாகும். வலிமை பெறும்.

ரஷ்யன் ட்விஸ்ட் (Russian twist)

p11a.jpg

தரையில் கால்களை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும். கைகளைக் கோத்து, மார்புக்கு அருகில் கொண்டுவந்து வைக்க வேண்டும். இப்போது, உடலை வலது பக்கம் 45 டிகிரிக்குச் சாய்த்தபடி கைகளைத் தரையை நோக்கிக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகள் கழித்துப் பழைய நிலைக்குத் திரும்பி, இதேபோல இடதுபுறமும் செய்யவேண்டும். இதை 10 - 15 முறை செய்ய வேண்டும். பின்னர், 30 விநாடிகள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: இது வயிற்றுப் பகுதிக்கு நல்ல பயிற்சியாகவும் முதுகுப் பகுதியைப் பலப்படுத்தி, நல்ல உடல் கட்டமைப்பைத் தரும் பயிற்சியாகவும் இருக்கிறது. மேலும், இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக்குகிறது.

ஓவர்ஹெட் ஸ்குவாட் (Overhead squat)

p12a.jpg

சுவரின் மீதோ, சுவரில் சுவிஸ் பாலை வைத்தோ பேலன்ஸ் செய்தபடி கால்களை அகட்டி நிற்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருத்தல் வேண்டும். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, நாற்காலியில் அமர்வதுபோல அமர்ந்து, எழுந்திருக்க வேண்டும். 10 - 12 முறை இரண்டு செட்களாகச் செய்ய வேண்டும்.

பலன்கள்: இதனால், உடலின் மையப்பகுதி, இடுப்பு, மூட்டு, தோள்பட்டை உறுதியாகின்றன.

காஃப் ரைஸ் (Calf raise)

p12b.jpg

ஒரு பலகை அல்லது படிக்கட்டின் மேல் நின்று செய்ய வேண்டிய பயிற்சி இது. தொடக்கத்தில் கடினமாக இருக்கும் என்பதால், ஒரு சுவரைப் பிடித்தபடியோ, ஸ்விஸ் பாலை பிடித்தபடியோ செய்யலாம். முதலில், சுவரை ஒட்டியபடி நேராக நிற்க வேண்டும். பிறகு, முழு உடலும் முன்னங்காலில் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இரண்டு நிமிடங்கள் இப்படியே நிற்க முயற்சிக்க வேண்டும். இப்படி 10-12 முறை செய்ய வேண்டும். 

பலன்கள்: தொடை, கெண்டைக் கால் பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

குளுட் கிக்பேக்ஸ் (Glute kickbacks)

p12c.jpg

தரையில் மண்டி இட்டு, கைகளைத் தரையில் ஊன்ற வேண்டும். முதுகு நேராக இருக்கட்டும். தலையை உயர்த்தியபடியே, வலது காலைப் பின்பக்கம் நேராக நீட்ட  வேண்டும். நேராக நீட்ட முடியவில்லை என்றால், மடக்கியவாறே காலை உயர்த்தலாம். இதேபோல இடது பக்கமும் செய்யவேண்டும். 15 - 20 முறை, 3 முதல் 5 செட்கள் செய்யலாம்.  

பலன்கள்: இது பின்பக்கத் தசைகளை உறுதிப்படுத்தும்.

சிங்கிள் லெக் பெல்விக் பிரிட்ஜ் (Single leg pelvic bridge)

p13a.jpg

தரையில் மல்லாந்து படுத்து, கைகளை உடலை ஒட்டி வைக்க வேண்டும். கால்களை மடக்கி, தரையில் பதிக்க வேண்டும். வலது காலை மடக்கி, இடது கால் மூட்டுக்கு மேல் போட வேண்டும். பிறகு, வயிறு மற்றும் இடுப்பை உயர்த்த வேண்டும். மேல் உடல் எடை முழுவதும் தோள்பட்டையில் தாங்கியபடி இருக்க வேண்டும். இப்போது, வலது காலை நேராக நீட்டிப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த நிலையில் 20 - 30 விநாடிகள் இருக்க வேண்டும். இப்படி, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். 

பலன்கள்: வயிறு, இடுப்பு, கால், தோள்பட்டை என அனைத்துத் தசைகளையும் உறுதிப்படுத்தும் பயிற்சி இது.

மவுன்ட்டெயின் க்ளைம்பிங் (Mountain climbing)

p13b.jpg

உடல் எடை முழுவதையும் கால் விரல், உள்ளங்கையால் தாங்கியபடி, குப்புறப் படுக்க வேண்டும். உள்ளங்கை, தோள்பட்டைக்கு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேல் உடல் நேர்க்கோட்டில் இருக்கட்டும். இப்போது, வலது காலை மடக்கி, மார்புக்கு நேரே கொண்டு வந்து, பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது காலுக்கும் செய்ய வேண்டும். இதை, 12 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: முழு உடலுக்குமான பயிற்சி.உடலின் வளைவுத்தன்மை, ரத்த ஓட்டம், அதிகரிக்கும். முக்கியமாக டெல்டைட்ஸ், பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், குவார்ட்டிசெப்ஸ், ரெக்டஸ் அப்டாமினல் தசைகளுக்கான பயிற்சி இது.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

பெப்ரவரி - 08

 

660varalaru-08-02-2016.jpg1238 : ரஷ்­யாவின் விளா­டிமிர் நகரை மொங்­கோ­லியப் படைகள் எரித்­தன.

 

1587 : இங்­கி­லாந்து அரசி முதலாம் எலி­ஸ­பெத்தை கொலை செய்ய முயற்­சித்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு ஸ்கொட்­லாந்து அரசி முதலாம் மேரி தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

1622 : இங்­கி­லாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்­கி­லாந்தின் நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்தார்.

 

1761 : லண்­டனில் நில­ந­டுக்கம் பதி­யப்­பட்­டது.

 

1849 : புதிய ரோமன் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

 

1900 : போவர் போர்: தென் ஆபி­ரிக்­காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்­தா­னியப் படைகள் போவர்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.

 

1904 : சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்­கி­யது.

 

1924 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் மரண தண்­ட­னை­க­ளுக்கு முதற் தட­வை­யாக நச்சு வாயுவை பயன்­ப­டுத்தும் முறை நெவாடா மாநி­லத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1942 : ஜேர்மன் நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் ஜேர்­ம­னியை விட்டுத் தெற்­கா­சி­யா­வுக்குப் புறப்­பட்டார்.

 

1942 : சிங்­கப்பூரை ஜப்பான் ஆக்­கி­ர­மித்­தது.

 

1952 : பிரித்­தா­னிய அர­சி­யாக இள­வ­ரசி 2 ஆம் எலி­ஸபெத் சம்­பி­ர­தா­யபூர்வமாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டார். 

 

1963 : கியூ­பா­வு­ட­னான போக்­கு­வ­ரத்து, பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் ஐக்­கிய அமெ­ரிக்க மக்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­ட­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எஃப். கென்­னடி அறி­வித்தார்.

 

1974 : 84 நாட்கள் விண்ணில் சஞ்­ச­ரித்த பின்னர் முத­லா­வது அமெ­ரிக்க விண்­வெளி ஆய்­வு­கூடமான ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்­பினர்.

 

1989 : போர்த்­துக்­கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதி­யதில் 144 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2005 : இஸ்­ரேலும் பலஸ்­தீ­னமும் போர் நிறுத்­தத்­திற்கு உடன்­பட்­டன.

 

2010 : ஆப்­கா­னிஸ்­தானின் இந்­துகுஷ் மலையில் ஏற்­பட்ட பனிச்­ச­ரி­வினால் 172 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : சவூதி அரேபியாவின் மதீனா நகரில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீயினால் 15 யாத்திரிகர்கள் உயிரிழந்ததுடன் 130 பேர் காய மடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=660#sthash.pLjIHjzG.dpuf
  • தொடங்கியவர்

ஹிலாரி கிளின்­டனின் நடனம்

ff.jpg

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட எதிர்­பார்த்­துள்ள முன்னாள் இரா­ஜாங்க செய­லாளர் ஹிலாரி கிளின்டன் மான்­செஸ்டர் பிராந்­தி­யத்­தி­லுள்ள நியூ­ஹம்­ஷி­யரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கையின் போது, அந்­நி­கழ்வில் ஒலிக்­கப்­பட்ட இசைக்கு ஏற்ப ஏனைய பெண் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் நடன அசைவை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.

virakesari

  • தொடங்கியவர்

12657786_982390521809642_711803595957943

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கியவருமான மொஹமட் அசாருதீனின் பிறந்தநாள்.

போட்டி நிர்ணய, பந்தயக்காரர்களுடன் தொடர்புபட்ட குற்றங்கள் காரணமாக ஆயுட்காலத் தடைக்குள்ளாகி இந்தியக் கிரிக்கெட்டுக்கு நீங்க முடியாக் கறையையும், ரசிகர்களுக்கு கவலையையும் ஏற்படுத்தியவர்.

  • தொடங்கியவர்

இந்த வீடியோவை பார்த்தீர்கள் என்றால் இந்தியாவுடன் காதலில் விழுந்து விடுவீர்கள்!

 

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் பற்றி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஒரு கட்டுரை எழுதியது. ''பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஃபுயூல்ட் பை லவ்'' என்ற  அந்த விளம்பரத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
              

அதாவது லண்டனில் இருந்து ஒரு முதிய பெண்மணி ஹைதரபாத் நோக்கி பயணிக்கிறார். அவருக்கு விமானத்தில் ஹெலினா  என்ற பணிப் பெண், காலில் ஷாக்ஸ் மாட்டி விடுகிறார். அப்போது பணிப்பெண்ணின் கேசம் கலைந்து போய் இருக்கிறது. அந்த பெண் பயணி விமானப்பணிப் பெண்ணுக்கு பாசத்துடன் கேர்பின் மாட்டி விடுகிறார்.

தொடர்ந்து விமானம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த முதிய பெண் பயணியால் மட்டும் உறங்க முடியவில்லை. என்ன வென்று பணிப்பெண் விசாரிக்கிறார். தொடர்ந்து இருவருக்குள்ளும் ஒரு பந்தம் உருவாகிறது. மேற்கொண்டு அறிய இந்த வீடியோவை பார்த்தீர்கள் என்றால் இந்தியாவுடன் காதலில் விழுந்து விடுவீர்கள்!

விகடன்

  • தொடங்கியவர்


லண்டன் பஸ்ஸில் வெடித்த 'குண்டு

  • தொடங்கியவர்

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

 

ள்ளி வகுப்பறைகள் முதல் பெரிய பெரிய வேதியியல் ஆய்வுக் கூடங்கள் வரை தனிம அட்டவணை எனப்படும் பீரியாடிக் டேபிள் இல்லாமல் இருக்காது. நவீன வேதியியலின் மூலாதாரமான தனிம அட்டவணையை வடிவமைத்த டிமிட்ரி மேண்டலீவின் 182-ம் பிறந்தநாள் இன்று.

அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

1. பிப்ரவரி 8, 1834-ம் ஆண்டு சைபீரியாவில்  பிறந்த மென்டலீவ், தனது பன்னிரெண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். மேலும் சைபீரியாவில் தரமான கல்வி இல்லாததால்,  அவரது குடும்பம்  மாஸ்கோ நகருக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு உடன் பிறந்தவர்கள் 16 பேர். அதில் இவரே இளையவர்.

dimentry_vc1.jpg



2. 20 வயதிலேயே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் இவரது கோப குணத்தால் சில ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களே இவரை முன்னுக்கு வர விடாமல் தடுத்தனர். காசநோயால் பாதிக்கப்பட்டபோதிலும் படுக்கையிலிருந்தே விடாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பீட்டர்ஸ்பார்க் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றினார்.

3. 1969-ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற தனிம அட்டவனையை வடிவமைத்தார். ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரித்தான பண்புகளை துல்லியமாக ஆராய்ந்து வரிசைப்படுத்தினார்.

இது குறித்து ஒரு முறை அவர் கூறுகையில், "தனிமங்கள் அடுத்தடுத்து அட்டவணை போல் இருப்பதாக கனவு கண்டேன்.  எழுந்ததும் அதை அப்படியே தாளில் எழுதினேன் " என்று கூறினார். மேண்டலீவின் துல்லியத்தை இன்றைக்கும் ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். அவர் அட்டவனையை உருவாக்கியபோது கண்டுபிடிக்கப்படாத காலியம், ஜெர்மானியம் போன்ற தனிமங்களுக்கு அதில் இடம் கொடுத்தது வியக்கத்தக்கது.

4. இவர் இரு முறை திருமணம் புரிந்து 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். தனது 72-ம் வயதில் காய்ச்சலால் இறந்தார்.

5. மேண்டலீவின் அபார அறிவு திறனை பாராட்டும் வகையில்,  ஒரு தனிமத்திற்கு மேண்டலீவியம் என்று அவரது பெயர் சூட்டப்பட்டது.  அது மட்டுமின்றி நிலவில் ஒரு பெரிய பள்ளத்திற்கு 'மென்டலீவ் க்ராடர் ' என  பெயரிடப்பட்டுள்ளது. ரஷியாவில் மென்டலீவ் பல்கலைக்கழகம் என இவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இயங்குகிறது.

vikatan

  • தொடங்கியவர்
களைகட்ட ஆரம்பித்தது பிரேஸிலின் “சம்பா” நடனக் களியாட்ட விழா
 

1472314.jpg

 

பிரே­ஸிலின் “ரியோ கார்­னிவேல்” எனும் வரு­டாந்த களி­யாட்ட விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை ரியோ டி ஜெனைய்ரோ நகரில் ஆரம்­ப­மா­கி­யது.

 

 

14723_brazil-samba-2016-3.jpg

 

14723_brazil-samba-2016.jpg

14723_brazil-samba-2016-2.jpg

 

சம்பா நடனப் பாட­சா­லை­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட சம்பா நடனக் களி­யாட்ட ஊர்­வ­லங்கள் ரியோ நகரம் மற்றும் சாஓ பௌலோ நக­ரங்­களில் நடை­பெற்­றன. 

 

1472319.jpg

 

 

ஸிகா வைரஸ் வேக­மாக பர­வு­வ­தாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் உட்­பட  பல இலட்சம் மக்கள் இந்த விழாவில் பார்­வை­யா­ளர்­க­ளாக கலந்­து­கொண்­டனர்.

நாளை மறுதினம் வரை இவ்விழா நடை பெறவுள்ளது.

 

 

14723VRA-20160207-m06-MED.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=14723#sthash.yoGGPk8l.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நெடுந்தீவுக்கு உரித்தான அரியவகைத் தாவரங்கள்

 

 

nenthivu.jpg

 

 



மாதிரிப் பனந்தோட்டம்
ஐந்தேக்கர் நிலத்தில் மாதிரிப் பனந்தோட்டம் செய்யப்பட்டுள்ளது. பனை வளர்ப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படலாம் என்பதற்கு அடையாளமாக பனை அபிவிருத்திச்சபையின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தீவில் பனைகளை ஒழுங்குபடுத்தி அமைத்துப் பனை வளத்தைச் சீராக்கி அவற்றில் இருந்து உச்சபயனைப் பெறும் பொருட்டு மாதிரிப் பனந்தோட்ட அமைப்புக் காணப்படுகிறது.

 

முசுட்டை இலை
முசுட்டை இலை மிகவும் சத்துள்ள உணவாகக் காணப்படுகின்றது. நெடுந்தீவு மக்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இத்தாவரம் அமைந்துள்ளது.

சோற்றுடன் சேர்த்து வறையாக வறுத்தும் மீன் என்பவற்றுடன் பிரட்டியும் இவ்வுணவு உண்ணப்படுவதை அவதானிக்கலாம்.

 

ஈச்சமரம்
சிறிய ஈச்சமரங்கள் பரவலாகக் காணப்படும். அதன் காய்கள் சிவப்பு நிறத்திலும் பழம் கறுப்பு நிறத்திலும் காணப்படும்.

பழுத்த பழங்கள் மிகச் சுவையுள்ளதாக இருக்கும். ஈச்சமரம் பல குலைகளைக் கொண்டிருக்கும். அவற்றைச் சுவைப்பது ஒருவகை இன்பமாகும்.

நெடுந்தீவு மக்களின் பிரதான பழங்களில் இவ்ஈச்சம்பழங்களும் முக்கியம் பெறுகின்றன.

 

பனம்பாத்திகள்
பனைமரத்திலிருந்து பழுத்து விழும் பனம்பழம் முக்காலி, இருகாலி, குடவன் என்று அழைக்கப்படும்.

மூன்று விதைகளைக் கொண்டிருப்பதை முக்காலி என்றும் இரண்டு விதைகளைக் கொண்டிருப்பதை இருகாலி என்றும் தனியொரு விதையுடன் காணப்படுவதைக் குடவன் என்றும் அழைக்கப்படும்.

இவ்வாறு பனையில் இருந்து விழும் பனம் பழத்தின் பெரும்பகுதியை மாடுகளே உணவாக உட்கொள்கின்றன.

ஒரு பகுதி பனம்காய்கள் மட்டும் நல்ல பனங்காய்களாகத் தெரிவுசெய்யப்பட்டு பனாட்டுப் பினைவது, பனங்களி எடுப்பது போன்றவற்றிற்குத் தெரிவு செய்கின்றார்கள்.

இவ்வாறு மாடு சூப்பிய மற்றும் பனங்களி எடுத்த விதைகளைப் பொறுக்கியெடுத்து மணற்பாங்கான நிலங்களில் பாத்திகளாக அமைத்து நடுவார்கள்.

அதாவது பாத்திகளை நன்கு பண்படுத்தி அதற்குள் பல அடுக்குகளில் இப்பனம் விதைகளை நடுவார்கள். அவை ஆறுமாத காலம் வரை வளர்ந்து பீலிகள் வெளிவரத் தொடங்கும். இக்காலத்தில் அவற்றைக் கிண்டி பனம்கிழங்கு எடுப்பார்கள்.

பாத்திகள் பண்படுத்துவதற்கு ஏற்ற விதத்தில் கிழங்குகளின் விளைச்சல் இருக்கும்.

இக்கிழங்குகளை எடுத்து ஒடியலாக்கல் அல்லது புளுக்கொடியலாக்கல் ஆகிய பணிகளில் ஈடுபடுவார்கள். பாத்தி வெட்டுதல், பண்படுத்துதல், பாத்தி கிண்டுதல் ஆகிய தொழில்கள் மிகச் சிரமமானவை.

அவற்றை இங்குள்ள மக்கள் மிக இலகுவான முறையில் கையாள்வார்கள்.

பாத்திபோடுவதற்கென்றே தெரிவு செய்யப்பட்ட இடங்கள் இங்குள்ளன. கட்டிறாஞ்சல்லி, மாவிலி, மணற்கிணற்றடி, குடவிலி, பெரியதுறை என்று காணப்படும் மணற்பாங்கான இடங்கள் பனங்கிழங்கு விளைச்சலுக்கு ஏற்றவையாகக் காணப்படுகின்றன.

இவ்விடங்களில் விளையும் கிழங்குகள் தரமானவையாகக் காணப்படும். 

இங்குள்ள மக்களின் பிரதான தொழில்களில் ஒன்றாக பனம்பாத்திபோட்டுக் கிழங்கு கிண்டும் முறைமை காணப்படுகின்றது. 

வீரகேசரி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12688026_473206692880289_493657628827900

பிரேசிலிய திராட்சை மரம் (மேலும் Jabuticaba என அழைக்கப்படும்) பழங்கள்  கிளைகளில் இல்லாது.

இது நேரடியாக  மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து பூத்து காய்கிறது. 

 

 

8 hours ago, நவீனன் said:
நெடுந்தீவுக்கு உரித்தான அரியவகைத் தாவரங்கள்
nenthivu.jpg

இவ்வாறு மாடு சூப்பிய மற்றும் பனங்களி எடுத்த விதைகளைப் பொறுக்கியெடுத்து மணற்பாங்கான நிலங்களில் பாத்திகளாக அமைத்து நடுவார்கள்.

அதாவது பாத்திகளை நன்கு பண்படுத்தி அதற்குள் பல அடுக்குகளில் இப்பனம் விதைகளை நடுவார்கள். அவை ஆறுமாத காலம் வரை வளர்ந்து பீலிகள் வெளிவரத் தொடங்கும். இக்காலத்தில் அவற்றைக் கிண்டி பனம்கிழங்கு எடுப்பார்கள்.
 

வீரகேசரி

சொல்ல மறந்தது.

பனங்கிழங்கு பாத்தியில் பனங்கொட்டை முளை விட்டவுடன் அதை புடுங்கி, கோடாலியால் இரண்டாக்கி நடுவில் இருக்கும் பூரானையும் திங்கலாம்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

பெப்ரவரி - 09

 

661varalaru.jpg1822 : புதி­தாக அமைக்­கப்­பட்ட டொமி­னிக்கன் குடி­ய­ரசை ஹெயிட்டி  முற்­று­கை­யிட்­டது.

 

1825 : அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் 4 வேட்­பா­ளர்­களில் எவ­ருக்கும் பெரும்­பான்­மை­யான தேர்தல் கல்­லூரி வாக்­குகள்  கிடைக்­கா­ததால் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபை­யினால் ஜோன் குயின்ஸி அடம்ஸ் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

 

1885 : முத­லா­வது தொகுதி ஜப்­பா­னியர் ஹவாய் தீவை வந்­த­டைந்­தனர்.

 

1895 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த வில்­லியம் ஜி. மோர்கன் கரப்­பந்­தாட்ட (volleyball)  விளை­யாட்டை அறி­மு­கப்­ப­டுத்­தினார். கரப்­பந்­தாட்டம் தற்­போது  இலங்­கையின் தேசிய விளை­யாட்­டாகும். 

 

1897 : பெனின் மீது பிரித்­தா­னியர் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.

 

1900 : இலங்­கை­யிலும், இந்­தி­யா­விலும் நில­ந­டுக்கம் உண­ரப்­பட்­டது.

 

1900 : டேவிஸ் கிண்ண டென்னிஸ் சுற்­றுப்­போட்டி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1904 : ரஷ்ய - ஜப்­பா­னிய யுத்­தத்தில் போர்ட் ஆர்தர் சமர் ஆரம்­பித்­தது.

 

1942 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பக­லொளி சேமிப்பு நேரம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1962 : ஜமெய்க்கா சுதந்­திரம் பெற்­றது.

 

1965 : வியட்நாம் போரில் ஐக்­கிய அமெ­ரிக்க தாக்­குதல் படைப்­பி­ரிவு முதற்­த­ட­வை­யாக தென் வியட்­நா­மிற்கு அனுப்­பப்­பட்­டது.

 

1969 : போயிங் 747 விமா­னத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

1971 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் 6.4 ரிச்டர் அளவில் நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது.

 

1971 : சந்­தி­ர­னி­லி­ருந்து திரும்­பிய அப்­பலோ 14 விண்­கலம் மூன்று அமெ­ரிக்­கர்­க­ளுடன் பூமியை அடைந்­தது.

 

1975 : சோவியத் யூனியனின்  சோயூஸ் 17 விண்­கலம் 29 நாள் பய­ணத்தின் பின் பூமிக்குத் திரும்­பி­யது.

 

1986 : ஹேலியின் வால்மீன் சூரி­ய­னுக்கு அண்­மையில் எட்­டரைக் கோடி கி.மீ. தூரத்தில் வந்­தது.

 

1991 : லித்­து­வே­னி­யாவில் சுதந்­தி­ரத்­துக்கு ஆத­ர­வாக மக்கள் வாக்­க­ளித்­தார்கள்.

 

1996 : ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்­பாட்­டினை முறித்­துக்­கொண்ட சில மணி நேரத்தில் லண்­டனில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் இருவர் கொல்­லப்­பட்­டனர்.

 

2001 : அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு அருகில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கியொன்று, ஜப்பானிய மீன்பிடி பயிற்சிக் கல்லூரியொன்றின் கப்பலுடன் தற்செயலாக மோதியதால் கப்பலிலிருந்த 9 பேர் உயிரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=661#sthash.SOxQgOGi.dpuf
  • தொடங்கியவர்

12694779_982695288445832_536579087556394

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் க்லென் மக்க்ரா பிறந்த தினம்.

உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்த சாதனையும் (71) மக்க்ராவின் வசமே உள்ளது.
Happy Birthday Glenn McGrath

  • தொடங்கியவர்
தாய்வானின் தலைகீழான தோற்றத்தில் வீடு
2016-02-09 10:48:32

தாய்வானின் தாய்பே நகரிலுள்ள பூங்காவொன்றில் தலைகீழான தோற்றத்தில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

14742house-3.jpg

 

இரு மாடிகளைக் கொண்ட இவ் வீட்டின் வெளிப்புறத் தோற்றம் மாத்திரமல்லாமல், உள்ளேயும் அனைத்துப் பொருட்களும் தலைகீழாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

14742house-2.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=14742#sthash.U0NpxWZU.dpuf
  • தொடங்கியவர்

என்னது! ஒபாமாவுக்கே வைஃபை கிடைக்கலையா? (வீடியோவை பாருங்கள் தெரியும்)

 

வெள்ளை மாளிகையில் வைஃபை வசதி சரியான முறையில் கிடைப்பதில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

obama%20cell%20phone.jpg

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் Super Bowl என்ற நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட ஒபாமாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் வைஃபை வசதி சரியான முறையில் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்,

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இணையதொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பல இடங்களில் வைஃபை வசதி கிடைப்பதில்லை. அந்த பிரச்னையால் நானும், பாதிக்கப்பட்டுள்ளேன். குறிப்பாக எனது மகள்களான சாஷா மற்றும் மாலியா ஆகிய இருவரும் வைஃபை வசதி கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடைவார்கள். வெள்ளை மாளிகை பழைய காலத்து கட்டடம் என்பதால், சரியான முறையில் வைஃபை அங்கு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்.

விகடன்

  • தொடங்கியவர்

பார்க்காமலேயே பார்த்த காதல் போய் 'ஆப்'வழி காதல் வந்து விட்டது!

 

வாலென்டைன்ஸ் டே‘ நெருங்கி விட்டது. காதலர்கள் பார்ட்னர்களுடன் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். சிங்கிள்ஸ்கள் யாரை புரோபாஸ் பண்ணலாம்னு ஆராய்ச்சில இறங்கிட்டுருக்காங்க. ஆனால் தெருவுல நின்னு இல்ல... ஆப் வழியாக. பார்க்காமலேயே காதல், பார்த்த பின்னர் வந்த காதல் எல்லாம்போய் இப்போ 'ஆப் ' வழி காதல் காலத்தில் இருக்கிறோம்.உங்களுக்கு பிடித்தமானவர்களை இப்போது ஆப்ஸ்களே தேர்வு செய்து தருகிறது. அந்த வகையில் 7 வாலென்டைன்ஸ் டே ஆப்ஸ்கள் களத்தில் இருக்கின்றன.

'ஓகேக்யூபிட்'

ok.jpgஇந்த ஆப்தான் வாலென்டைன்ஸ் டேவுக்கு என்று உருவாக்கப்பட்ட முதல் ஆப்.

'ஒகேக்யூபிட்' என்றால் உங்கள் பார்ட்னரை நாங்கள் தருகிறோம் என்றுதான் அர்த்தம்.  உள்ளே என்ட்ரியானதுமே உங்களுக்கு பிடித்தவர்களின்  புரொஃபல்களை  மின்னல் வேகத்தில் தேடலாம். உங்களுக்கு பிடிச்சவங்களோட புகைப்படங்களையும் நீங்கள் பார்க்க முடியும். ஆனால் இந்த ஆப் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் உங்களுக்கு தலையே கிறு கிறுத்து விடும். எல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான்.  இந்த ஆப்-பில் உள்ள குறைபாடு இன்பாக்சில் குறைந்த அளவு கான்வர்சேஸன்களே சேமித்து வைத்துக் கொள்ள முடியும். எனவே புத்திசாலித்தனமாக செயல்படுவது அவசியம்.

 

'டின்டர்'

tind.jpgடேட்டிங்களுக்கு இந்த ஆப் தான் அகில உலக ஃபேமஸ்.. இந்த ஆப்-பில் ஒருவரே பல புரொபல்களை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்தமானவரை தேர்வு செய்த பின்னர்,  அவர்களுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம். நாம் பேசும் நபர் உண்மையான தகவல்களைத்தான் தருகிறாரா? என்பதை ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.  இந்த ஆப்-பில் இருந்து ஒருவருக்கு அப்ளிகேசன் போட்டு,  அவர் ஓகே செய்து விட்டால், நீங்கள் அவருடன் சாட்டிங் செய்ய முடியும்.

'வூ '

உங்களை போன்றே குணநலன்களும், டேஸ்ட்களையும்woo.jpg கொண்டவரை காட்டிக் கொடுக்கும் ஒரு ஆப் இது. ஒருவருக்கு ஒருவர் பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டும். சம்பந்தப்பட்டவர்களை பற்றிய புரொஃபைல்ஸ், பயோடேட்டாக்களும் இந்த ஆப்-பில் இருக்கும். நீங்கள் கேட்கும் சமயத்தில் உடனடியாக பதில் வரவில்லையென்றால், உங்கள் கேள்விகளுக்கு விருப்பம் இருக்கும்போது பதில் அளிக்கும் வசதியும் இந்த ஆப்-பில் இருக்கிறது. இதற்காக டாக் சர்ச் ஆப்சனும் உள்ளது.


'ட்ரூலி மேட்லி'

இருக்கும் ஆப்ஸ்களிலேயே மிகவும் பாதுகாப்பான ஆப்-பாக இதுதான் கருதப்படுகிறது. டேட்டிங்குக்கு புகழ்பெற்ற ஆப் இது. இதனை பயன்படுத்துபவர்கள் ஃபேஸ்புக் அல்லது லிங்லைன் வழியாக தங்கள் விரும்பியவரின் புரொஃபைல்களை செக் செய்து கொள்ளலாம்.

'பம்பிள்'

இது பெண்கள் விரும்பும் ஆப். பெண்களிடம் உங்களுக்கு பிடித்தவர் எப்படி இருக்க வேண்டும். உங்களவர் பற்றிய கனவு என்ன? என்ற கேள்வியைதான் முதலில் வைக்கும். பெண்கள் தங்களுக்கு பிடித்தவரை எளிதாக அப்ரோச் செய்ய இந்த ஆப்-பில் வழிவகை உண்டு. தங்களுக்கு பிடித்தவருடன் 24 மணி நேரம் மெசேஜ் அனுப்பலாம். 24 மணி நேரத்துக்கு பிறகு அந்த வாய்ப்பு இருக்காது.  தானாகவே அழிந்து விடும். இந்த ஆப்-பில் 'பைபி' என்ற ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. இதன் மூலம் பெர்ஃபெக்ட் பார்ட்னரை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

'ஹாட் ஆர் நாட் '

இது காதல் விளையாட்டு ஆப். ஃபேஸ்புக் வழியாக சைன் இன் செய்து விட்டு உங்களை சுற்றிருப்பவர்களில், உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு உங்களது படங்கள் போன்றவற்றை அனுப்பலாம். இந்த ஆப் உங்கள் மொபைல் எண்ணை கேட்கும். பின்னர் உலகம் முழுக்க நீங்கள் மெசேஜ் அனுப்பலாம்,  படிக்கவும் செய்யலாம்.  மிகவும் பாதுகாப்பான ஆப்-பும் கூட.

'ஹிட்ச்'

இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது ஹிட்ச். இந்த ஆப் சமூக வலைதளங்களை வைத்து உங்கள் அருகில் இருப்பவர்களை உங்களுக்கு காட்டும். உங்களை போன்ற டேஸ்ட் உள்ளவர்களை உங்களுக்கு பரிந்துரைக்கும். சில சமயங்களில் உங்கள் புரொஃபலை நீங்கள் விரும்புபவர்களுக்கு காட்டாமலேயே  உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாழ்த்து சொல்ல முடியும். இதற்காக பிரைவேட் மோட் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

உலகிலேயே மிகப் பெரிய காலிஃபிளவர் இது. சாதாரண காலிஃபிளவரை விட 20 மடங்கு பெரியது. இதன் எடை 27.48 கிலோ. இலைகளின் நீளம் 6 அடி. பிரிட்டன் விவசாயி Peter Glazebrook இதனை விளவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த காலிஃபிளவர் இடம் பிடித்துவிட்டது.

12670413_676697345766144_510274454119082

12717232_676697325766146_338422276470984

 

  • தொடங்கியவர்

குறட்டைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு ?

 

  • தொடங்கியவர்

12687801_982696351779059_759549721932568

இங்கிலாந்து அணியின் முன்னாள் சாதனை சுழல்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கரின் பிறந்தநாள்.

டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை முதலில் வீழ்த்திய பெருமை லேக்கருக்கே உரியது.
ஒரே போட்டியில் 19 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரே வீரரும் இவரே..

  • தொடங்கியவர்

இப்படி ஆகப் போகிறது நயகரா நீர்வீழ்ச்சி!

 

நிமிடத்துக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கியூபிக் தண்ணீரை கொட்டும் நயகரா நீர்வீழ்ச்சி தண்ணீரே விழாமல் சில நாட்கள் காய்ந்து கிடக்கப் போகிறது. என்ன நயகராவில் தண்ணீர் விழாதா? என்று யாரும் யோசிக்க வேண்டாம். செய்து காட்டத்தான் போகிறது அமெரிக்கத் தொழில் நுட்பம்.

nia%20.jpg

நயகரா நீர்வீழ்ச்சியில் இருந்து அருகில் உள்ள ஸ்டேட் பார்க் தீவு பகுதியையும் இணைக்கும் 115 ஆண்டு கால பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்வதற்காக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நயகராவில் நீர்வீழ்ச்சி பகுதியை நோக்கி செல்லும் தண்ணீரை சில நாட்கள் வேறு பகுதிக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

gara.jpg

இதற்கான ஏற்பாடுகளை என்ஜீனியர்கள் இந்த பணியை செய்யவுள்ளனர். நயகராவில் தண்ணீரை திசை திருப்புவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1969ஆம் ஆண்டு இதே போன்று என்ஜீனியர்கள் செய்து காட்டியுள்ளனர். அந்த சமயத்தில் கனடா பகுதியில் உள்ள ஹார்சஸ்ஹோ நீர்வீழ்ச்சிக்கு  தண்ணீரை திசை திருப்பியுள்ளனர்.

அப்போது பாறைகள் நிறைந்த நயகராவை லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர். அமெரிக்க- கனடா நாட்டு எல்லையோரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகப் புகழ்பெற்றது. அமெரிக்கா செல்லும் எந்த ஒரு சுற்றுலாபயணியும் இந்த நீர் வீழ்ச்சியை பார்க்காமல் வரமாட்டார்.

http://www.vikatan.com/news/world/58754-niagara-falls-may-be-turned-off-briefly.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.