Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அரியாலையில் பேரீச்சை மரம்

tmp4.jpg

உதயன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இடது கைப்பழக்கம் சரியா?

 

 

டது கையால் எழுதுவது, பொருளை எடுப்பது, வீசுவது, பிடிப்பது, இடது காலால் உதைப்பது, தள்ளுவது என... எல்லா செயல்களுக்கும் இடது கை, காலைப் பயன்படுத்துபவர்களைக் கிண்டல் செய்வார்கள் பலர். வேறு சிலரோ, `இடது கைப் பழக்கம் அதிர்ஷ்டம்’ என்பார்கள். உலகில், 10 சதவிகிதம் பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்தான். மிகப்பெரிய பிரபலங்கள் பலரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்கள். இடது கையைப் பயன்படுத்துவது ஏதேனும் குறைபாடா... இயல்பான விஷயம்தானா... சிலர் மட்டும் ஏன் எல்லாவற்றுக்கும் இடது கை, காலைப் பயன்படுத்துகிறார்கள்?

பொதுவாக, இடது மூளை, வலது புற உடலை இயக்கும். அதுபோல, வலது மூளை, இடது புற உடலை இயக்கும். அதிகமாக இடது கை, கால்களைப் பயன்படுத்துவோரின் உடலில், வலது மூளை அதிகமாக ஆதிக்கம் செலுத்தும்.

p44b.jpg

எப்படிப் பெரும்பாலானவர்களுக்கு வலது கைப் பழக்கமோ, அப்படிச் சிலருக்கு இடது கைப் பழக்கம் இயற்கையாக, இயல்பாக வருகிறது. இது ஒரு நோயோ, குறைபாடோ கிடையாது. சில பெற்றோர், குழந்தைகளின் இடது கைப் பழக்கத்தைத் திருத்த வேண்டும் என, குழந்தையை மிரட்டியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். திருத்துவதற்கு இது ஒன்றும் தவறே அல்ல; இயல்பான செயல்பாடு என்ற புரிதல் அவசியம்.

சில சமயங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, இடது மூளை பாதிக்கப்படும்போது, வலது மூளை ஆதிக்கம் பெறுகிறது. இதனால், திடீரென இடது கைப் பழக்கத்துக்கு மாறுவார்கள் சிலர். இதுவும் இயல்பான ஒரு மாற்றமே.

p44c.jpg

இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை அடித்து, திருத்த முயற்சிக்காமல், அவர்களின் போக்கில் விட வேண்டும்.

இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களின் செயல்திறன் குறைந்துபோகலாம்.

p45a.jpg

இடது கைப் பழக்கம் உள்ளவர்களால், பலதரப்பட்ட பணிகளை (Multi tasking) ஒரே நேரத்தில் செய்ய முடியும். ஆதலால், கட்டாயப்படுத்தி அவர்களின் பழக்கத்தை மாற்றக் கூடாது.

சாப்பிடுவதற்கு மட்டும் வலது கையால் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தலாம். இந்தப் பழக்கம் அவர்களால் முடியுமா என்பதை, மருத்துவர் உதவியுடன் முடிவு செய்யலாம்.

 

p45b.jpg

இடது கைப் பழக்கம் உள்ளவர்களால் நிச்சயம் நன்றாக எழுத, படிக்க முடியும். உலகில், சாதனை புரிந்தவர்களில் பலர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்தான். வலது மூளைதான் நம்  படைப்பாற்றல், உருவகப்படுத்துதல், இசை போன்ற பல முக்கியச் செயல்பாட்டுக்குப் பொறுப்பாகிறது. மேலே படத்தில் உள்ள சாதனையாளர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்தான்.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 17
 
 

article_1429248139-soundarya300.jpg1492: ஆசியாவிலிருந்து வாசனைத் திரவியங்களைக் கொண்டுவருவது தொடர்பாக கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கும் ஸ்பெய்ன் அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1895: முதலாவது சீன – ஜப்பான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1912: சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சுமார் 150 பேர் பலி.

1941: ஜேர்மனியிடம் யூகோஸ்லாவியா சரணடைந்தது.

1946: பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.

1961: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்காவிலிந்து சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட 1,400 கியூப அகதிகள் கியூபாவில் தரையிறக்கப்பட்டனர். இவர்களில் 100பேர் காஸ்ட்ரோவின் படைகளின் தாக்குதலில் பலியாகினர். 1,189பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

1971: இந்தியாவின் கல்கத்தா நகரில் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்  பங்களாதேஷ் அரசாங்கம் அமைக்கப்பட்டது.

1975: கம்போடியாவில் கெமர் ரூச் படைகள், தலைநகர் நாம்பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.

1986: 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.

2004: இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா, பெங்களூரில் விமான விபத்தில் உயிரிழந்தார்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12957479_1223981180954309_69939799159290

With best figures of 9/51 and 800 test wickets, Happy Birthday to former Sri Lanka bowler Muttiah Muralitharan - Sri Lanka Cricket

  • தொடங்கியவர்

காலி வாட்டர் பாட்டில்களை கொடுத்தால் தண்ணீர் கொடுக்கும் மெசின்: மாணவர்களின் கண்டுபிடிப்பு

 

plasticvc2.jpg

இன்றைக்கு வெளியே செல்லும் நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லுவதில்லை. நமது தாகத்தை நினைத்த இடத்தில் தீர்க்கும் அளவிற்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படும் மினரல் வாட்டர் எங்கும் பெருகிவிட்டது. நாம் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்திய பின் அந்த பாட்டில்களை தூக்கி வீசி விடுகிறோம். அது குப்பையாக மாறி சுற்றுசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.

இதனை தடுக்கும் விதமாக மும்பை ஐஐடியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இருவர் புதிய மெசின் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதில் நம்மிடம் இருக்கும் காலி பாட்டில்களை அந்த மெசினிடம் கொடுத்தால் அது புதிய 300  மில்லிலிட்டர் அளவு கொண்ட தண்ணீர் பாட்டிலை தரும். இதன் மூலமாக மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை வீதியில் வீசாமல் இதில் போடுவார்கள். அதனால் சுற்றுசூழலை காக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த மாணவர்கள்.

plasticvc1.jpg


இது குறித்து அவர்கள் கூறுகையில், “ இதனை உருவாக எங்களுக்கு 95 நாட்கள் ஆனது. இந்த கருவியில் மொத்தம் மூன்று கிடங்குகள் இருக்கும். ஓன்று பிளாஸ்டிக் குப்பைகளுக்கு. மற்றொன்று அலுமினியம் வகையான கழிவுகள், மற்றும் மூன்றாவது இதர வகையான கழிவுகளுக்காக இருக்கும்.”

இந்த கருவியில் ப்ளுடூத் மற்றும் வைபை வசதியும் இருக்கும். இதன் மூலமாக குப்பைகளை சேமிக்கும் அந்த கிடங்கு 80% நிறைந்ததும் அந்த மெசினை பராமரிக்கும் நபருக்கு தகவல் அனுப்பிவிடும். உடனே அந்த நபர் வந்து அதில் உள்ள கழிவுகளை அகற்றி விடுவார்.
இது தற்போது சோதனை முன்னோட்டமாக மும்பை ஐஐடி ஹாஸ்டலில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த மெசினை மும்பை மற்றும் சத்திஸ்கர் நகரங்களில் வைக்கப்படவுள்ளது. இந்த மெசின் உற்பத்தி செய்வதற்கு 50,000 முதல் 1,00,000  வரை ஆகும்.

vikatan

  • தொடங்கியவர்

சுவையான சில தகவல்கள்

 

 

p116a.jpg

ஊழலால் கட்டப்படும் கட்டடங்கள்

கொல்கத்தாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலம் ஒன்று கடந்த வாரம் அப்படியே நொறுங்கி விழுந்தது. 24 உயிர்களைப் பலியாக்கிய இந்தக் கோர சம்பவத்தில் 80-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அங்கு வேலை செய்த எட்டு அதிகாரிகளைக் கைதுசெய்து, தற்போதைக்கு பிரச்னையை மூடி இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் அரசியல் லாபங்களுக்காக அறிக்கைகளை தாக்கல் செய்துவிட்டனர். #kolkattakillers என்பது ட்ரெண்ட் அடித்தாலும், கொலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. பாரத் மாதா கீ ஜெய்!

கேமநகூ வெல்லுமா?

நெட்டிசன்ஸ் பெரும்பாலும் உடன்பிறப்புகளாகவோ, ரத்தத்தின் ரத்தங்களாகவோதான் இருப்பார்கள். தற்போது பலர் கேமநகூ என்கிற கேப்டன் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள். கேப்டன் பேசாமல் இருப்பதும், வைகோ தொடர்ந்து பேசுவதும்தான் தற்போதைய மக்கள் நலக் கூட்டணியின் பிரச்னை. #ThisTime4MNK என்ற டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் அடிக்க வைத்து மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக ட்விட்டினர். ஒருவேளை ஜெயிச்சுடுமோ?

வேற லெவல் ஏப்ரல் ஃபூல்

கூகுள், சாம்சங் மாதிரியான பெரிய நிறுவனங்கள் இந்த முறை வேற லெவலில் உலக முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினார்கள். யூடியூபில் அது தொடர்பாக வீடியோக்கள் அப்லோடினார்கள். பார்ப்பவர் களை உண்மைதானோ என நம்பவைக்கும் அளவுக்கு பல வீடியோக்கள் இருந்தன. அதில் லெக்ஸஸ் என்ற வாகன நிறுவனம் செய்ததெல்லாம் ரொம்ப மோசம். நாம் காரில் பயணிக்கும்போது, நம்மைப் பாதுகாக்க சீட் பெல்ட் அணிவோம். அதற்குப் பதிலாக அவர்களது புது வெல்க்ரோ டெக்னாலஜியின் மூலம் சீட்டினை நாம் அணியும் ஆடையோடு ஒட்டிக்கொள்ளும் முறையில் பிரத்யேகமான மாடல், வித்தியாச ஆடைகள், சீட் என வீடியோ ஒன்றை வெளியிட்டு அசரடித்தனர். செம வைரலான வீடியோ நான்கு லட்சத்துக்கும் அதிகமாக ஹிட்ஸ் அள்ள #lexus ட்ரெண்ட் ஆனது. ஒட்டிக்கோ...ஓட்டிக்கோ!

நீ கலக்கு புள்ள

p116b.jpg

பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் நடந்து முடிந்த பெண்களுக்கான உலகக்கோப்பையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் முறையாக வெற்றி வாகை சூடியது. ஐந்தாவது உலகக்கோப்பை தொடராக இது இருந்தாலும், கடந்த மூன்று முறையும் வென்று அசத்திய ஆஸ்திரேலிய மகளிர் அணியை வென்று கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதில்லை. @windieswomen என்ற ஐ.டி உலக அளவில் இடம் பிடித்தது. முன்னேறுங்கள்!

அதி வேக ரயில்

p116c.jpg

சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் அதிவேக ரயிலாக மார்ச் மாதம் வரை இருந்தது. மணிக்கு 150கிமி வேகத்தில் செல்லும் சதாப்தியைப் பின்னுக்குத் தள்ளி மணிக்கு 160கிமி வேகத்தில் பயணித்தது கடிமான் எக்ஸ்பிரஸ். டெல்லி முதல் ஆக்ரா வரை செல்லும் இந்த ரயில்தான், தற்போதைய அதி வேக ரயில். ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரயிலின் மற்றொரு சிறப்பம்சம் முதன்முறையாக ரயிலில் பணிப்பெண்களைப் பணி அமர்த்தி இருக்கிறது மத்திய அரசு. #GatimaanExpress இந்தியா முழுவதும் விரைவாக ட்ரெண்ட் அடித்தது. அப்படியே தமிழ்நாட்டுக்கு ஒரு வண்டி அனுப்பறது!

இதெல்லாம் எவ்ளோ பெரிய...

p116d.jpg

பல நிருபர்கள் இணைந்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு பட்டியல், உலகையே அதிரச் செய்தது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் கருப்புப்பணத்தை மீட்போம் எனக் கூறும் அரசியல் பேச்சுகளைக் கேட்டு புளித்துப்போன நம் காதுகளுக்கு, புதிதாக வேறு ஒரு இடத்திலும் பணத்தைப் பதுக்குகிறார்கள் என்ற விஷயம் அதிர்ச்சியைத் தந்தது. அமிதாப், ஐஸ்வர்யா ராய், அதானி குழுமம் பல இந்தியத் தலைகளும் இதில் தப்பவில்லை. ஆனால், இதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘அமிதாப்ஜி, நாங்கள் உங்களோடு துணை நிற்கிறோம்’ என #IAmWithAmitabhBachchan தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்து அசிங்கப்படுத்தினர் அமிதாப் ரசிகர்கள்.

இனி காரிலே படுக்கலாம்

p116f.jpg

ஓலா கேப் என்ற தனியார் நிறுவனம், கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி கார் புக் செய்பவர்களுக்கு புதிய வசதி ஒன்றை அளித்தது. அதன்படி, இனி இரவு நேரம் ஓலா கார்களைத் தூங்கும் அறைகளாக பயன்படுத்திக் கொள் ளலாம். ஓர் இரவுக்கு வெறும் 249 ரூபாய் என அறிவித்தது ஓலா. புக் செய்தவர்களுக்கு தலையணையும் ஏப்ரல் ஃபூல் வாசகம் எழுதிய அட்டையும்தான் மிச்சம். எல்லோரும் இதற்கு ஆசைப்பட்டு செய்த #OlaRooms தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது. எங்க நம்பிக்கையைப் பொய் ஆக்கிட்டீங்களே பாஸ்!

இது வெஸ்ட் இண்டீஸ் டைம்!

p116e.jpg

சம்பளப் பிரச்னை, நன்றாக விளையாடும் வீரர்களை அணியில் சேர்க்காமல் பந்தாடுவது என மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு பரம எதிரியாக இருந்தது மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் போர்டு. டி20-யில் விளையாடும் கெயில், ப்ரேவோ, சமி ஆகிய வீரர்களை ஒருநாள் போட்டிகளில் விளையாட போர்டு அனுமதிப்பது இல்லை. இதையெல்லாம் கடந்து இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையை வென்று இருக்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான உலகக்கோப்பை, பெண்கள் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்துக் கோப்பைகளையும் வென்று சாதித்து இருக்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. உலக அளவில் ட்ரெண்ட் அடித்தது #WT20. எப்படியோ இந்தியப் பேராவது ஜெயிக்குதே!

vikatan

  • தொடங்கியவர்

 

இவர் நடிகர் அல்ல.. அதுக்கும் மேல! - ஹேப்பி பர்த்டே சீயான்!

 

hbdchiyaan.jpg

சினிமா உலகில் தினம் ஒருவர் புதிதாக அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வந்த வேகத்தில் சினிமாவின் உண்மைகளுக்கும், தோல்விகளுக்கும், யதார்த்தங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் காணாமல் போனவர்கள் ஏராளம். ஆனால், சிலர் திரையுலகம் தரும் வலிகளைச் சுமந்து அர்ப்பணிப்போடு நடித்துச் சாதனை படைக்கிறார்கள். அவர்களை இந்தத் திரையுலகம் ’வாடா மகனே.. வா வா!’ என்று தூக்கித் தோளில்வைத்துக் கொண்டாடுகிறது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர்களில் தவிர்க்கவே முடியாதவர் ‘சீயான்’ விக்ரம். 

கென்னடி ஜான் விக்டர் என்ற விக்ரம் பிறந்தது சென்னையில்.  பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, குதிரையேற்றம், நீச்சல் விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்தார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் தனது தந்தையின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்த விக்ரம் தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.

ஆவரேஜ் ஓபனிங்.. அடுத்தடுத்து சிக்ஸர்கள்

hqdefault.jpg 


விக்ரமைப் பொறுத்தவரை, ஓவர்நைட் ஸ்டார் அல்ல அவர். நாயகனாக அவரது துவக்கம் ‘ஆஹா ஓஹோ’ என்றெல்லாம் இருக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், 1991ல் வந்த ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் இவரை ஓரளவு அடையாளம் காட்டியது. பிறகு பி.சி.ஸ்ரீராம் நடிப்பில் 1992ல் மீரா திரைப்படம். இப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் 1999 ஜனவரியில் வெளியான பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’ படம் வரை பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு என்று போய் துணை நடிகர், துண்டு துக்கடா என்றெல்லாம் பாராமல் வெறியோடு நடித்துக்கொண்டே இருந்தார்.

டிசம்பர் 1999 ல்  வெளியானது பாலாவின் 'சேது'. ஊரே பற்றிக் கொண்டாற்போல, ‘யார்யா இந்த மனுஷன்’ என்று கொண்டாடியது. விக்ரமை ஓரளவு தெரிந்திருந்த போதிலும், சேது படம் வெளிவந்தபோதுதான், ‘அட.. ’அமராவதி  ‘அட.. ’அமராவதி படத்தில் இவர் அஜித்க்கு டப்பிங் குரல் கொடுத்தார்.. காதலன்ல பிரபுதேவா குரல் யார்துன்னு நெனைக்கற? விக்ரமுது!’ என்று இவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லி மகிழ்ந்தனர். ’கென்னி’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் விக்ரம், ரசிகர்களால் 'சீயான்' என்று அழைக்கப்பட்டது சேது படத்தினால்தான். சேது படத்தின் கடைசி காட்சியில் இயலாமை கலந்தபடி நாயகியின் உடலைவிட்டு நீங்கி வெளியே நடக்கும் காட்சியில், ஒரு தேர்ந்த நடிகருக்கான அனைத்துத் திறமைகளையும் வெளிக்காட்டியிருப்பார். அதன்பிறகு தில், காசி, தூள், ஜெமினி, சாமி பட்டதெல்லாம் சிக்ஸர்களாகப் பறந்தது.


"புண்ணியம் தேடி காசிக்குப் போவார்.. இ்ங்கு நம் நாட்டினிலே ..
இந்த காசியைத் தேடி யாரு வருவார் ..
இந்த உலகத்திலே.."

எனக் கண்களை உள்ளே இழுத்துச் சிமிட்டியபடி ஆர்மோனியப் பெட்டியோடு 'காசி'யாகப் பாடும்போது நிஜமாகப் பிறவியிலேயே கண்பார்வையற்றவரைப் போலவே தோன்றும். படத்தின் இயக்குநர் காட்சிகளை விவரித்த பின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டுகின்ற ஒரு நடிகனாக மாறினார். 'பிதாமகன்' திரைப்படத்தில் சித்தன் எனும் மனப்பிறழ்வு நோய் ஆட்கொண்ட வெட்டியானாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் வெறும் ஆடை அலங்காரத்தில் மட்டும் காட்டிவிடக்கூடியதல்ல. சாக்குத்துணிகளை உடுத்தி ஒரு மலைக்கிராமத்து வெட்டியானாக சுடுகாட்டில் வசிக்கிற போதும், தன்மீது பிரியம் கொண்டவர்களுக்கு தீங்கெனும்போது எதிரிகளைப் பந்தாடும் காட்சிகள் என அனைத்திலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படு்த்தியிருப்பார். தலையை வெடுக்கென திரும்பி அடுத்தவரைப் பார்க்கும் அந்தக் காட்சி நம்மை அச்சமுறச் செய்யும். தில், தூள், ஜெமினி, சாமி என்று ஆக்ஷன் அவதாரத்திலும் சளைக்காமல் நடித்தார்.

வெர்சடாலிடி விக்ரம்!

vikramaslady.jpg விக்ரமைப் பொறுத்தவரை, படம் முழுவதும் நடிக்கிற வேடமென்றாலும் சரி, கந்தசாமி திரைப்படம் போல, சில நிமிடங்களே வரும் பெண் கதாபாத்திரம் என்றாலும் சரி.. உழைப்பு நூறு சதம்தான்! 'அந்நியன்' திரைப்படத்தில் 'மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி' யாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராமானுஜம் என்கிற அம்பியாக, சமூக நலனுக்கெதிரானவர்களைப் பழிவாங்கும் அந்நியனாக, நாயகியை விரட்டி விரட்டிக் காதலிக்கிற ரெமோவாக மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிற பாத்திரம். விநாடிகளில், ஒரு கேரக்டரிலிருந்து மற்றொருவராக அநாயசமாக மாற வேண்டும். அதை இவரை விட வேறு யாரேனும் இவ்வளவு சிறப்பாய் செய்திருக்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான்.  'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் ஆறு வயது சிறுவனுக்குரிய மனவளர்ச்சியோடு படம் முழுக்க கிருஷ்ணாவாக வருவார். நீ யாரென்று விசாரிக்கும்போது ரொம்பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி "நிலா... நிலா... எனக்கு வேணும்'' என்று தழுதழுத்த குரலில் கெஞ்சும்போது கூடவே அவரது கை, கால் மட்டுமல்ல சைகைகளும் மழலை பேசும். சிறுவர்களைப் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்து இழுத்து விடுவதும் யதார்த்தம். ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதிருக்கும்  போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்பார். அதற்கு விக்ரம் கொடுக்கும் ரியாக்‌ஷன் க்ளாஸ். ஐந்து வயதுக் குழந்தை சாராவுடன் பாசத்தைப் பரிமாறும் காட்சிகளில் தானும் சகவயதுக் குழந்தையாகவே மாறியிருப்பார் விக்ரம்.


சக்ஸஸ் சீக்ரெட்

vikram-look-1609141.jpgஇவரது சக்ஸஸ் சீக்ரெட், இவரது அர்ப்பணிப்புதான். இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டியும், பின்பு, கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் ஒல்லியாக இளைத்தும் ஆச்சரியப் படுத்தினார். படத்திற்கு என்ன தேவையோ அதைச் சற்றும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். உடல் இளைக்க வேண்டுமா உடல் எடையைக் கூட்ட வேண்டுமா உடல்நிலையைப் பற்றித் துளியும் கருத்தில் கொள்ளாமல் நூறு சத உழைப்பைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆரம்பம் முதலே செயல்படுத்தி வருபவர்.  க்ராஃபிக்கா இருக்கும் என்ற கேள்விக்கு, ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,  முழுப் பாடல் ஒன்றுக்கு மேடையில் வித்தியாசமான வேடத்தில் வந்து அசத்தி விடையளித்தார்.

'தாண்டவம்' திரைப்படத்தில் கண்பார்வையற்றவராக டேனியல் கிஷ் எனும் அமெரிக்கரிடம் 'எக்கோ லொகேஷன்' என்னும் நுண்ணிய ஒலியை வைத்து எதிரிலிருப்போரைக் கணிக்கும் முறையைப் பயிற்சியெடு்த்து நடித்திருப்பார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து, இயக்குநரின் படைப்பாற்றலுக்கு எந்தளவுக்கு உருவம் கொடுக்க முடியுமோ அதைவிடவும் அதிகமாகத் தன் மெனக்கெடலை அசாத்தியமாகச் செய்யக்கூடியவர் இந்த சீயான்!


சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். இந்திய திரைப்படத் துறையின் ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகள், மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் எல்லாம் இருந்தாலும், விருதுக்காக வருந்தும் ரகமில்லை இவர். தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள், வறுமையால் கல்விகற்க முடியாத குழந்தைகளுக்கு கல்வியளித்தல் போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட 'Spirit of chennai' எனும் பெயரில் வெள்ள நிவாரணப் பாடல் ஒன்றை தயாரித்து அவரே இயக்கினார். 2011 ஆம் அண்டு 'UN - HABITAT' அமைப்பு இவரைத் தூதுவராக நியமித்தது. இந்த அமைப்பின் நோக்கம் பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமூக வேறுபாடுகளை வேரோடு களைதல் மற்றும் சிறப்பான நீர் மேலாண்மை போன்ற திட்டங்களை பரவலாக அனைவரிடமும் கொண்டுசேர்ப்பது என்பது குறி்ப்பிடத்தக்கது.

'ஐ' படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பைப் பாராட்டி தேசிய விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனப்படுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதற்கெல்லாம் வருத்தப்படுபவர் அல்ல விக்ரம்.

“யாராவது ஒரு டைரக்டர் உங்ககிட்ட, ‘இந்தப் படத்துல ஒரு காட்சிக்காக நீங்க நெஜமாவே சாகணும்னு சொன்னா, ஓகே சார்.. டப்பிங் முடிச்சுட்டு கடைசியா அந்தக் காட்சிய ஷூட் பண்ணிக்கலாம்’ன்னு சொன்னாலும் சொல்வீங்க விக்ரம்” என்று ஒரு நடிகர் விக்ரமைப் பாராட்டியிருக்கிறார். அக்மார்க் நிஜம்தான் அது. இந்த மனுஷன் சொல்லக்கூடியவர்தான்!

நிச்சயம், கீழே இருக்கிற வசனத்தை, விக்ரமின் மாடுலேஷனிலேயேதான் படிப்பீர்கள்.

அந்நியன் :  உனக்கு தைரியம் இருந்தா
அம்பி :         என்ன சுட்றாதேள்
அந்நியன் :  என்ன சுட்றா
அம்பி :         பெருமாள் சத்தியமா
அந்நியன்:   அந்த அஞ்சு கொலையும்
அம்பி :         நா எந்தத் தப்பும் பண்ணல
அந்நியன் :  பண்ணதே நாந்தான்
அம்பி :         என்ன வெளிய போக விடுங்கோ
அந்நியன் :  அம்பிய வெளிய போக விட்றா

படிக்கும்போதே புல்லரிக்கிறதா? அந்நியன் படத்தின் இந்தக் காட்சியில், பிரகாஷ்ராஜ் விக்ரமின் ட்ரான்ஸ்ஃபார்மேஷன் நடிப்பில் வியந்து "பின்றியேடா! எம்ஜியாரைப் பார்த்திருக்கேன் சிவாஜியப் பார்த்திருக்கேன் ரஜினியப் பார்த்திருக்கேன் கமலைப் பார்த்திருக்கேன் உன்னை மாதிரி ஒரு நடிகனைப் பார்த்ததேல்லியேடா" என்பார்.

அது DCP பிரபாகர், அந்நியனிடம் சொல்வதல்ல. நம் சார்பில் ஷங்கரும், சுஜாதாவும், விக்ரமிடம் சொன்னது!
  

ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யூ சீயான்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

பாலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்டான ஸ்போர்ட்ஸ் படங்களில் அடுத்தது, `உத்தா பஞ்சாப்'. படத்தில் பீஹாரில் இருந்து பஞ்சாபுக்கு இடம்பெயர்ந்துவரும் ஹாக்கி வீராங்கனையாக நடிக்கிறார் அலியா பட். மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் வீராங்கனைகளை, போதை மருந்துகள் எப்படிச் சீரழிக்கின்றன என்பதுதான் கதை.

p24.jpg

ஜான்சி ராணியாக நடிக்கிறார் கங்கனா ரணாவத். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். `என் ரோல்மாடல்களில் ஒருவர் ஜான்சி ராணி. வீரப்பெண்மணியான ஜான்சியாக நடிப்பது என் வாழ்நாள் சாதனை' என உருகியிருக்கிறார் கங்கனா.

p24b.jpg

`டங்கல்' படத்தில் மல்யுத்த வீரராக நடிப்பதால் கிட்டத்தட்ட  90 கிலோ வரை எடையைக் கூட்டினார் அமீர் கான். அதே படத்தில் இளமையான மல்யுத்த வீரர் போர்ஷனும் இருப்பதால், இப்போது 12 கிலோ எடை குறைத்திருக்கிறார் அமீர். ‘என் கவனம் எல்லாம் கடைசி ஷெட்யூலுக்காக எடை குறைப்பதிலேயே இருந்தது. ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், மலை ஏற்றம், நீச்சல் என தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை பயிற்சிசெய்தேன். மூன்று வார முழுமையான பயிற்சிக்குப் பிறகு, எதிர்பார்த்த உடலமைப்பைக் கொண்டுவந்துவிட்டேன்’ என்கிறார் அமீர்.

p24c.jpg

லகம் முழுக்க ஷார்ட் வேவ் கட்தான் இந்த சம்மரின் ஹேர்ஸ்டைல். ஹாலிவுட்டின் கிம் காதர்ஷியன் தொடங்கி பிரியங்கா சோப்ரா வரை பிரபலமான ஸ்டைல் இது.  சமந்தா, ஸ்ருதிஹாசன் இருவரும் இப்போது இந்த ஷார்ட் வேவ் கட்டுக்கு மாறியிருக்கிறார்கள். `எனக்கு 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது' என உற்சாக செல்ஃபி போடுகிறார் ஸ்ருதிஹாசன்.

p24d.jpg

னுஷ்கா ஷர்மா - விராட் கோஹ்லியின் டின்னர் டேட்டிங்தான் கடந்த வார வைரல். `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்’ என சோஷியல் மீடியா பரபரக்க, `நண்பர் என்ற முறையில் டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்றதற்காக கோஹ்லி ட்ரீட் வைத்தார், அவ்ளோதான்’ என்கிறார்கள் அனுஷ்காவின் நண்பிகள்!

p24e.jpg

p24f.jpg

`எங்கள் நாட்டுக்குள், லியோனார்டோ டி காப்ரியோவை அடுத்த முறை நுழையவிட மாட்டோம்' எனக் கொந்தளிக்கிறது இந்தோனேஷிய அரசு. கடந்த வாரம் இந்தோனேஷியாவுக்குச் சென்றிருந்த லியோனார்டோ, அங்கு காட்டில் உள்ள ஒராங்குட்டான் குரங்குடன் கைகுலுக்குவதுபோல் போட்டோ எடுத்து `பனை எண்ணெய்க்காகக் காட்டை அழிப்பதோடு, ஓராங்குட்டான் இனத்தையும் அழித்துவருகிறது இந்தோனேஷிய அரசு' என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். `எங்கள் நாட்டையும் காட்டையும் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்' என இந்தோனேஷிய அமைச்சர், லியோனார்டோவுக்குப் பதில் கொடுக்க, உலகம் முழுக்க இந்தோனேஷியாவுக்குக் கண்டனங்கள் பறக்கின்றன!

vikatan

  • தொடங்கியவர்

13012682_1084306581628355_91320895578004

மழை தந்த நிஜ 'சூப்பர் ஸ்டார்' நடிகர் சித்தார்த்... பிறந்தநாள் இன்று..

கடந்த டிசம்பர் மாதம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்த போது பல தரப்பில் இருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்தன‌. சினிமா நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்தனர். அதிலும் நடிகர் சித்தார்த்தும் சிறப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராமல் உதவிகள் செய்து நிஜ ஹீரோவானார்

ஹேப்பி பர்த்டே சித்தார்த்..

  • தொடங்கியவர்

'பெண் கடவுள்' ரோபோ.!

 

155905_878.jpg

இதுவரை உருவாக்கப்பட்ட மனித வடிவான ரோபோக்களிலேயே அச்சு அசலாக பெண்ணொருவரைப் போன்ற தோற்ற அமைப்பையும் செயற்பாட்டையும் வெளிப்படுத்தும் ரோபோவொன்றை வடிவமைத்துள்ளதாக சீன ரோபோ வடிவமைப்பாளர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

ஜியா ஜியா என பெயர் சூட்டப்பட்ட இந்த ரோபோ 'பெண் கடவுள்' என செல்லமாக அழைக்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான பெண் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பெண்ணொருவரை போன்று கச்சிதமாக கண் அசைவு மற்றும் உதட்டசைவு என்பவற்றையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்துகிறது.

இந்த ரோபோவை சீன விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சென் ஸியோபிங் வடிவமைத்துள்ளார்.

 

இந்த ரோபோ மனிதர்களின் பேச்சு மற்றம் உடல் பாவனைகளைப் புரிந்து அவற்றுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் மென்பொருள் நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

virakesari

  • தொடங்கியவர்

விதவிதமாய் சவப்பெட்டிகள்!

 

 

p124a.jpg

ன்னதான் ஆட்டம் போட்டாலும், கடைசியில கிடைக்கப் போவது ‘ஆறடி நிலம்’னு சொல்றோம். ஆனா, செத்த பிறகும் ‘வெரைட்டி’ காட்டணும்னு நினைக்கிற உலகம் பாஸ் இது. இதோ, இந்தச் சவப்பெட்டிகளின் கதையைக் கேளுங்க!

p124b.jpg

p124c.jpg

p124d.jpg

p124e.jpg

p124f.jpg

நமக்கெல்லாம் சவப்பெட்டினா நாலாப்பக்கமும் வழிச்சுச் சீவின பலகைதான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, அது மட்டுமே இல்லை! தங்கத்துல, வைரத்துல, ஏன் வைடூரியத்துலகூட சவப்பெட்டி செஞ்சிக்குவாங்க பணக்காரங்க. இந்தக் கொஞ்சம் பணக்காரர், கொஞ்சம் கொஞ்சம் பணக்காரர், பணக்காரர் இவங்களுக்கெல்லாம் என்ன பண்றதாம்னு யோசிச்ச பல பேர்தான் ‘சவப்பெட்டி’யில வெரைட்டி காட்டுறாங்க. பஸ்ஸுல டிராவல் பண்ணும்போது என்ன பண்றோம்? கவர்மென்ட் பஸ், ஆர்டினரி பஸ், ஏசி, ஏன்... படுத்தேகூட டிராவல் பண்றோம்ல, அது மாதிரி சில ஆயிரத்துல இருந்து, பல லட்சம் வரைக்கும் அவங்கவங்க சக்திக்குத் தகுந்த மாதிரி சவப்பெட்டி வாங்கிக்கலாம். அல்லது இப்பவேகூட ஆர்டர் எடுத்து வெச்சுக்கலாம்!

முழுக்க மெத்தை, தலையணையோட சவப்பெட்டி, பெட்-ஷீட் வெச்சு, எம்பிராய்டரியில தெச்சு டிசைன் பண்ணின சவப்பெட்டினு அட்ராசிட்டி தாங்கலை! இன்னும் சிலர் மீன், நண்டு, சேவல், கோழி, சிங்கம், புலினு உயிரினங்களோட உருவத்துல சவப்பெட்டிகளை விற்பனைக்கு வெச்சுருக்காங்க. கார், பைக், ஏரோப்ளேன்னு ஏனைய எலக்ட்ரானிக் அயிட்டங்களிலும் சவப்பெட்டிகள் கிடைக்கின்றன. அப்படி, உலகம் முழுக்கக் கிடைக்கும் விதவிதமான சவப்பெட்டிகளின் கொஞ்சூண்டு ட்ரெய்லர் இங்கே!

இனி யாராச்சும் சொல்லுவீங்க, செத்த பிறகு ‘ஆறடி மண்ணு’தான்னு!

vikatan

  • தொடங்கியவர்
வசந்த காலம்...
 
 

article_1460886522-r.jpg

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் அழகிய மலர்கள் மலர ஆரம்பித்துள்ளன. இவை, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக ரம்மியாக மலர்ந்துள்ளன.  இப் பூங்காவானது  நவீனமயப்படுத்தப்பட்டு புதியவகை பூக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. நுவரெலியா வசந்தகாலத்தில் விக்டோரியா பூங்காவை  அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பா.திருஞானம்)

article_1460886537-3.jpg

article_1460886558-4.jpg

article_1460886569-5.jpg

article_1460886578-06.jpg

article_1460886596-08.jpg

article_1460886605-09.jpg

article_1460886650-11.jpg

article_1460886661-12.jpg

article_1460886670-13.jpg

article_1460886679-14.jpg

article_1460886691-15.jpg

article_1460886700-16.jpg

article_1460886711-17.jpg

article_1460886721-18.jpg

article_1460886736-29.jpg

article_1460887193-g.jpg

article_1460886751-30.jpg

article_1460886762-31.jpg

article_1460886775-32.jpg

article_1460886786-33.jpg

article_1460886803-34.jpg

article_1460886814-35.jpg

article_1460886829-37.jpg

article_1460886841-38.jpg

article_1460886852-39.jpg

article_1460886862-40.jpg

-tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

 

p74a.jpg

ப்பானைச் சேர்ந்த கெனிச்சி இடோ என்பவரைக் குரங்கு மனிதன் என்றுதான் எல்லோரும் கூப்பிடுகிறார்கள். இவருக்கும் குரங்குக்கும் அப்படி என்ன சம்பந்தம்னு மண்டையைப் போட்டு பிச்சிக்க வேணாம். கெனிச்சிக்கு சின்ன வயசுல இருந்தே குரங்குனா கொள்ளைப் பிரியம். டிஸ்கவரி சேனல்ல குரங்கு ஓடுவதை, தாவுவதை, குதிப்பதைப் பார்த்து அது மாதிரியே தானும் செய்து பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கங்கா சந்திரமுகியா மாறின மாதிரி கெனிச்சி முழு குரங்காகவே மாறிட்டார். உடனே ஓர் ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொண்டார். ஜப்பானின் பிரபல கோமாஷவா ஒலிம்பிக் பார்க்கில் நடந்த அந்த ஓட்டப்பந்தயம் எப்படிப்பட்டதென்றால் கையையும் காலையும் உபயோகப்படுத்தி குரங்கு மாதிரியே ஓடி வர வேண்டும். மனசுல குரங்கை வேண்டிக்கிட்டு களத்தில் இறங்கிய கெனிச்சி அட்டகாசமாக ஓடி அந்த 100 மீட்டர் குரங்கு ஓட்டத்தில் உலக சாதனை படைத்து கின்னஸிலும் இடம்பிடித்து விட்டார்.

p74b.jpg

p74c.jpg

p74d.jpg

ஏற்கெனவே கட்சுமி டமகோஷினு ஒருவர் இதே குரங்கு ஓட்டத்தில் 15.86 வினாடியில் ஓடி வந்ததே சாதனையாக இருந்தது. அதை 15.71 வினாடியில் ஓடி முறியடித்திருக்கிறார். சரி, ஓடும்போது குரங்கு மாதிரி ஒகே. மற்ற நேரத்தில்... அங்கேதான் மேட்டரே. சாதாரணமா வீட்டுக்குள்ளே கூட குரங்கு மாதிரியேதான் வாழ்கிறார். அவ்வளவு ஏன் ஹெவி ட்ராஃபிக்கில் ரோட்டை க்ராஸ் பண்ணும்போதுகூட குரங்கு மாதிரிதான்  கடந்து செல்கிறார். ‘ராவணன்’ படத்துல வர்ற கார்த்திக்கை விட மோசமான ஆளா  இருக்கிறார் ப்ரோ!   

vikatan

  • தொடங்கியவர்
1980 : ஸிம்பாப்வே குடியரசு உதயமானது
 

வரலாற்றில் இன்று...

ஏப்ரல் - 18

 

705zimbabwe_map--varalaru.jpg1025 : போலந்தின் முதல் மன்­ன­னாக போலெஸ்லாவ் குரோப்றி  முடி சூடினான்.

 

1835 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் மெல்­பேரன் நகரம் அமைக்­கப்­பட்­டது. 

 

1906 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்கோ நகரில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

1909 : பிரான்ஸின் வீரப் பெண்­ணான ஜோன் ஒப் ஓர்க் பத்தாம் பயஸ் பாப்­ப­ர­சரால் புனி­தப்­ப­டுத்­தப்­பட்டார்.

 

1912 : கடலில் மூழ்­கிய டைட்­டானிக் கப்­பலின் பய­ணி­களில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் நகரை சென்­ற­டைந்­தனர்.

 

1930 : பி.பி.சி. வானொலி தனது வழ­மை­யான செய்தி அறிக்­கையில் இந்­நாளில் "எந்த செய்­தி­களும் இல்லை" என அறி­வித்­தது.

 

1941: ஜேர்­ம­னியப் படைகள் ஏதன்ஸை நெருங்கும் போது கிறீஸ் பிர­தமர் அலெக்­சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்­கொலை செய்து கொண்டார்.

 

1942 : டோக்­கியோ நகர் மீது அமெ­ரிக்கப் போர் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­டன.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் ஹெலி­கோ­லாந்து என்ற சிறு தீவின் மீது ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட போர் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தின.

 

1949 : அயர்­லாந்து குடி­ய­ரசு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1954 : கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

 

1955 : முத­லா­வது ஆசிய - ஆபி­ரிக்க மாநாடு இந்­தோ­னே­ஷி­யாவில் ஆரம்­ப­மா­கி­யது. 29 நாடுகள் பங்­கு­பற்­றின.

 

1980 : ஸிம்­பாப்வே குடி­ய­ர­சுக்கு (முன்னாள் ரொடீ­சியா) சர்­வ­தேச அங்­கீ­காரம் கிடைத்­தது. கனான் பனானா அதன் முதல் ஜனா­தி­ப­தி­யா­கவும் ரொபரட் முகாபே பிர­த­ம­ரா­கவும் பத­வி­யேற்­றனர்.

 

1983 : லெப­னானில் பெய்ரூத் நகரில் அமெ­ரிக்க தூத­ர­கத்தில் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் 63 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1993 : பாகிஸ்­தானில் பிர­தமர் பெனாஸிர் பூட்டோ தலை­மை­யி­லான  அமைச்­ச­ரவை மற்றும் நாடா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி குலாம் இசாக்கான் கலைத்தார்.

 

1996 : லெப­னானில் ஐ.நா. கட்­டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவு­கணைத் தாக்­குதல் நடத்­தி­யதில் 106 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

2013 : ஈராக் தலை­நகர் பாக்­தாத்தில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

 

2014 : எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 16 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 18: உலகப் பாரம்பரிய தினம்

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

13055364_1118050274920428_32584197505211

  • தொடங்கியவர்

ஏப்ரல் 18:அறிவியல் அறிஞர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தினம் இன்று...

13040974_707682812667597_870233930414999

  • தொடங்கியவர்

அக்கட தேசத்து அழகிகள்!

 

 

p19a1.jpg

மூன்று தென்னிந்திய சினிமாக்களின் முக்கனி அழகிகள் இவர்கள்!

டோலிவுட்  பவானி ரெட்டி:

கன்னடத்துப் பைங்கிளியான பவானி நடித்தது எல்லாமே தெலுங்குப் படங்கள்தான். ராஜேந்திர பிரசாத்தின் ‘ட்ரீம்’ படம் மூலம் என்ட்ரி ஆனவர் ‘டபுள் ட்ரபிள்’, ‘தி எண்ட்’, ‘ஒடர்ப்பு யாத்ரா’, நரசிம்மராஜு’ என சுமார் படங்களில் மூஞ்சி காட்டினார். தமிழில் சின்னத்திரை மூலம் ‘ரெட்டைவால் குருவி’ என்ற சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சிக்கென பிடித்துக்கொண்டு சென்னையில் லேண்ட் ஆனவருக்கு, மீண்டும் ‘துரும்’ என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோயின் சான்ஸ் அடித்திருக்கிறது. ‘சீரியலோ, சினிமாவோ சின்ஸியரா இருப்பேன்!’ என்கிறார் பவானி. ஏம்ப்பா இந்தப் பொண்ணை வளர்த்து விடுங்கப்பா..!

சாண்டல்வுட் அய்ந்த்ரிதா ராய்:

p19b.jpg

2007-ன் ஹிட் படமான ‘மெரவனிகே’ படத்தில் கேரியரை ஆரம்பித்த அழகு ராக்கெட். பிறப்பால் ராஜஸ்தானி. வளர்ப்பால் மும்பை மோகினி! அப்பா விமானப்படை அதிகாரி என்பதால் கடைசியில் டீன் ஏஜில் லேண்ட் ஆனது பெங்களூரு மண். படித்தது பல் மருத்துவம். ஆனால் பிடித்தது மாடலிங். விளம்பர உலகம் வாரி அணைக்க, குறும்படங்கள் மூலம் ரூட் பிடித்து பெரும்படங்களுக்கு நடிக்க வந்துவிட்டார். ‘ஜங்லீ’, ‘வாயு புத்ரா’, ‘மனசாரே’, ‘வீர பரம்பரே’, ‘பாரிஜாதா, ‘தூள்’, ‘பரமாத்மா’ ‘பஜ்ரங்கி’ எனக் கலக்கி எடுத்தவர் கன்னட சினிமாவின் பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்டான ‘முங்காரு மலே’வின் இரண்டாம் பாகத்தில் கணேஷோடு நடித்துக்கொண்டிருக்கிறார். சூப்பர் ராய்!

மல்லுவுட் ரெபா மோனிகா ஜான்:

p19c.jpg

கொச்சின் அழகி. தாத்ரி ஹேர் ஆயில் விளம்பரத்தில் இந்தத் தாரகையைத் தரிசித்திருப்போமே! ‘மழாவில் மனோரமா’ சேனலின் அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர். பெங்களூருவில் வளர்ந்தவர் ‘மிடுக்கி’ என்ற டி.வி ஷோ மூலம் பாப்புலர் ஆனார். ஆட்டமும் நடிப்பும் அப்போது இவரது இரு கண்களாக இருக்க, சின்னத்திரைப் பிரபலமாய் கேரளத்தை வசீகரித்தார். எக்கச்சக்க டெஸ்ட்டுக்குப் பிறகு இளம் தலைமுறை இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ரெப்பப்பா ரெப்பப்பா ரெபா!

vikatan

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
சென்னை IIT மாணவிகளின் 'Be Our Pondatti' பாடல் இணையத்தைக் கலக்குகிறது
 


மணமகள் தேவை விளம்பரங்களை கிண்டலடிக்கும் விதமாக சென்னை IIT யைச் சேர்ந்த மாணவிகள் மூவர் இணைந்து உருவாக்கிய ஆங்கில பாடல் வீடியோவொன்று இணையத்தை கலக்க ஆரம்பித்துள்ளது.



16091Be-our-pondati1.jpg


16091be-our-Pondati3.jpgகனேடிய பொப்பிசைப் பாடகி கேர்லி றே ஜெப்சன் 2012 ஆம் ஆண்டில் வெளியிட்ட “கோல் மீ மேபி” எனும் பாடல் 12 சர்வதேச விருதுகளை வென்றது. அந்த பாடலைத் தழுவியதாக சென்னை மாணவிகளின் பாடலும் இயற்றப்பட்டுள்ளது.


“எங்கள் பொண்டாட்டி ஆகுங்கள்” (Be Our Pondatti)  எனும் இந்த ஆங்கிலப் பாடலில் “பொண்டாட்டி”, “அம்மா செல்லம்” போன்ற சில தமிழ் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.


மணமகள் தேவை விளம்பரங்களில் குறிப்பிடப்படும் விடயங்களை கிண்டலடித்து இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. கிருபா வர்கீஸ், அனுக்ரிபா இளங்கோ, அஸ்மிதா கோஷ் ஆகியோர் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர். கிருபா வர்கீஸ் இப்பாடல் வீடியோவில் தோன்றுகிறார்.

 

16091be-our-Pondati-2.jpg

கிருபா வர்கீஸ், அனுக்ரிபா இளங்கோ, அஸ்மிதா கோஷ்


 

போட்டியொன்றுக்காக இவர்கள் பாடல் இயற்றினராம். ஏப்ரல் 4 ஆம் திகதி யூரியூப் இணையத்தளத்தில்  வெளியிடப்பட்ட இப் பாடல்  470,000 இற்கும் அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

 

பாடல் வீடியோ :

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஜடேஜா பேட்டிங், பவுலிங் செய்து பார்த்திருப்பீங்க, வாளை சுத்தி பார்த்திருக்கிறீர்களா?: வீடியோ இதோ
 
 
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் அழகாக வாளை சுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
 
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், என்ஜினியர் ரீவா சோலான்கிக்கும்(25) குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
அந்த நிகழ்ச்சியின்போது ஜடேஜா தனது குடும்பத்தார், உறவினர்கள் முன்பு வாளை வீசி அழகாக சாகசம் செய்தார். அவர் வாள்வீச்சில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணைதயளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.
ரீவா சோலான்கி ஆத்மியா கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
 
அவரது தாய் பிரஃபுல்லபா சோலான்கி இந்திய ரயில்வே ஊழியை ஆவார்.
 
ரீவாவின் தந்தை ஹர்தேவ்சிங் சோலான்கி ஒரு தொழில் அதிபர்.ஹர்தேவ் சிங் திருமணத்திற்கு முன்பே ஜடேஜாவுக்கு ஆடி கார் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.
  • தொடங்கியவர்

சிக்கினாங்க!

 

 



red-dot3.jpg ஜான் கென்னடி-மர்லின் மன்றோ: அமெரிக்க வரலாற்றில் ஜான் கென்னடி இருக்கும் வரை மர்லின் மன்றோவின் பெயரும் இருக்கும். பார்ட்டிகளில் சந்தித்துக்கொண்ட படங்களையும் தாண்டி இருவருக்குள்ளும் நிகழ்ந்த ரொமான்ஸ் வீடியோ என ஒன்று இன்றுவரை உலகைக் கலக்கி வருகிறது. முகம் சரியாகத் தெரியாவிட்டாலும் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் ஸ்ட்ராங்கான கென்னடி இந்தச் சேட்டையைச் செய்திருப்பார் எனச் சொல்பவர்களும் உள்ளனர். இந்த வீடியோவை அமெரிக்காவின் மன்ஹாட்டனைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 1.5 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி இருக்கிறார். தன் பெர்சனல் கலெக்‌ஷனுக்காகவாம்! பலர் பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கேட்டும் அந்த வீடியோவைத் தரவில்லை அவர்.

p36a.jpg

red-dot3.jpgகடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபராக இருந்த பில் கிளிண்டனின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றியவர் மோனிகா லெவின்ஸ்கி. இவருக்கும் பில் கிளிண்டனுக்கும் தவறான உறவு இருந்ததாக ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மரபணு சோதனையில் இருவரும் உறவுகொண்டது நிரூபணம் ஆனது. இப்போது மோனிகா லெவின்ஸ்கி வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் பிஸி.

red-dot3.jpgஉடி ஆலன் - ஸூன் -யு-ப்ரெவின்: ஹாலிவுட் இயக்குநர் சுடி ஆலனின் வளர்ப்பு மகள் என சொல்லிக்கொண்ட ஸூன் 2014-ல் அவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் எனப் புகார் கொடுத்தார். அப்போது கண்ணீரை மட்டுமே பதிலாகக் கொடுத்தார் உடி. ‘அவள் என் பிரியத்துக்கு உரியவள்’ என்று மட்டும் சொன்னார். ஆனால், சில வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களைக் வைத்து உடி ஆலனைக் காதலிப்பதாகவும் வயது பொருட்டே இல்லை’ எனவும் பேட்டி ஒன்றில் சொன்னார். எக்கச்சக்க வயசு வித்தியாசத்தைக் காரணம் காட்டி உடியைக் கழுவி ஊற்றுகிறார்கள் சிலர். இருவரும் இப்போது ஜோடியாகவே எங்கும் செல்கிறார்கள்.

p36b.jpg

red-dot3.jpgநடிகையும் பிரபல மாடலுமான கிம் கர்தாஷியனைத் தெரியாத டைம்பாஸ் ரசிகர்களும் இருப்பார்களா? பின்னழகுக்குப் பெயர்போன இந்த அழகியுடன் 33 வயதான வில்லியம் ரே நார்வுட் ஜே என்ற பாடகர் டேட்டிங் போவது போன்ற பலான வீடியோ ஒன்று 2007-ல் செம வைரல் ஆனது. அது வேண்டுமென்றே பிசினஸுக்காகப் பரப்பப்பட்ட வீடியோ என்ற சர்ச்சையும் உண்டு.

p36c.jpg

red-dot3.jpgஅர்னால்டு ஸ்வாஸ்நெகர்- பேட்டி பீனா: உலகை ஆக்‌ஷனில் கலக்கிய அர்னால்டு ஸ்வாஸ்நெகர் சின்ஸியராய் காதல் மனைவியோடு மட்டும் வாழ்ந்து வந்தவர் என்ற பிம்பம் சில வருடங்களுக்கு முன் உடைந்தது. மனைவி மரியா ஸ்ரிவருக்குத் தெரியாமலேயே தனி ட்ராக் ஓட்டி இருக்கிறார். ஆம். வீட்டு வேலை செய்ய வந்த பேட்டி பீனாவையும் காதலித்து ரகசியமாய் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் பெண், அர்னால்டின் புஜ பல பராக்கிரமங்களைப் பேட்டியில் 13 வயது மகனோடு பீனா சொல்லியிருக்கிறார். மனைவி ஸ்ரிவரிடம் அதற்கான ஆதாரங்களை 2011-ல் பீனா காட்டியபோது ஸ்ரிவர் அர்னால்டை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

 

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

வலைபாயுதே

 

p101a.jpg



``ஊதுங்க...''

``உஃப்...”

``நல்லா ஊதுங்க.”

``(புளூடூத்தில்) ஒரு நிமிஷ்ஷ்ஷம் இருடி...

ஊதச் சொல்றார்ல!”

``யாருகூடப் பேசற?”

``உஃப்...”

``இப்ப உன்னை ஊதச் சொன்னனா?”

``ஒரு நிமிஷ்ஷ்ஷம் இருடி... ஊத வேணாம்கிறாரு.”

``டாய்... குடிச்சிருக்கியா?”

``நான் வந்தவுடனே ஆம்லெட் போடுடி.”

``ஏய்... அங்கே என்ன பேச்சு... இங்கே ஊதுறா!”

``உஉஉஉஉஃப்...”

அடுத்த விநாடி, பொத்தென்ற சத்தம். பார்ட்டி, பைக்குடன் கீழே விழுந்துவிட்டது. அசைவே இல்லை. அவனை என்ன செய்வது எனக் குழம்பிய போலீஸ், அடுத்தவரிடம் போய்விட்டார்.
``ஹலோ, நில்லுங்க சார்!”

அவர் நின்றார். நிற்க முடியாமல் கீழே விழுந்தவன்தான் என்ன ஆனான் எனத் தெரியவில்லை. நான் வந்துவிட்டேன். ‪#bantasmac‬

facebook.com/Suba Barathi: அடித்தவரிடமே சரணடையும் குழந்தைகள், அடுத்தவரிடம் சரணடையத் தொடங்குகையில் ஆரம்பிக்கிறது அந்த misunderstanding!

twitter.com/bri2o: என்ன படிச்சு என்ன பிரயோஜனம்... தியேட்டர்ல படம் ஓடும்போது பேசக் கூடாதுனு தெரியலை. `கரகர'னு கேட்குது DVD-யில் பார்க்கும்போது... என்ன ஸ்டேட் கவர்ன்மென்ட், என்ன சென்ட்ரல் கவர்ன்மென்ட்!

facebook.com/uma.gowri.98: யாரையும் பகைச்சுக்கக் கூடாது. நாளைக்கு அவங்க மூலமா ஏதாவது காரியம் ஆகவேண்டி இருக்கும். இது சாமானியனின் அரசியல்!

p101b.jpg

twitter.com/ gpradeesh: யோசித்துப் பார்த்தால், இப்போதைய வாழ்வின் அத்தனை சுக-துக்கங்களுக்கும் வடிவேலுவின் ஏதோ ஒரு டயலாக் பொருந்திவிடுகிறது!

twitter.com/ mehaoviya: அரசியல், கிரிக்கெட், இலக்கியம்னு நல்லா பேசுங்க. ஆனா, சொந்தப் பிள்ளைகள் பாடத்துல சத்தேகம் கேட்டா, ட்யூஷனுக்கு அனுப்பி வெச்சிருங்க!

twitter.com/ BoopatyMurugesh: ஆபீஸ்ல வேலை பார்க்கலாம்னு உட்காரும்போது `மீட்டிங்'னு கூட்டிப்போய்டுறாய்ங்க. மீட்டிங்ல வெச்சு `என்ன வேலைபார்த்த?'னு கேட்கிறாய்ங்க. :-(

twitter.com/ kiramaththan: முன்னாள் மந்திரி பார்த்திருப்ப, முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திருப்ப, முன்னாள் வேட்பாளர் பார்த்திருக்கியா... பார்த்திருக்கியா? :)))))))))))

twitter.com/ thoatta: `யார் யாருக்கு எவ்வளவு கோடி?'ங்கிறது எல்லாம் வைகோ தெளிவா சொல்றாரு, அப்ப த்ரிஷா, நயன் சம்பளம் எல்லாம் நிச்சயம் தெரிஞ்சுவெச்சிருப்பார்ல!

twitter.com/ Baashhu: பெண்களைப் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் பெண்களிடம் நான் புரிந்துகொண்டது!

p101c.jpg

twitter.com/ withkaran: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வந்ததுல ஒரு பெரிய ட்விஸ்ட், கருணாஸ் சொந்தமா கட்சி வெச்சிருக்கார்னு தெரியவந்ததுதான்!

twitter.com/ VivekChandran07: வீட்டில் உள்ள ஒரு பொருளை அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அது தொலைந்துவிட்டது என அர்த்தம்!

twitter.com/ Aruns212: `பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க!' என்பது எப்போதும் பெருமைப்படுத்துவதற்குச் சொல்லப்படுவது இல்லை!

twitter.com/ ChainTweter: ஜென்ட்ஸ் அதிகமா இருக்கிற டீக்கடைக்கு லேடீஸ் போனா, `மகாராணி வரணும்'னு `முத்து' படத்துல மீனாவுக்குக் குடுத்த அதே ரெஸ்பெக்ட்  குடுக்குறாங்க!

twitter.com/ Ulaganandha: துவைச்சுக் காயப்போட்ட துணி, ஒரு மணி நேரத்துல காஞ்சிடுது. குளிச்சுட்டுப் போட்டுக்கிட்ட துணி, ஒரு மணி நேரத்துல ஈரமாகிடுது. #சென்னை!

twitter.com/ InbaSankar: அசைவ ஹோட்டல்ல சிக்கன் பிரியாணிக்கு முட்டை இலவசமா குடுக்குறாங்க. என்னிக்காவது சைவ ஹோட்டல்ல பொங்கலுக்கு வடை இலவசமா குடுத்திருக்காய்ங்களா?

p101d.jpg

twitter.com/ karaiyaan:  வைகோ, சரத்குமார், ஜி.கே.வாசன், வேல்முருகன், மாற்றப்பட்ட வேட்பாளர்கள் எனப் பலரையும் காமெடி பீஸ் ஆக்கிய அம்மாவை, `ஜோக்கர் மேக்கர்' என்றழைக்கலாம்!

twitter.com/ YesTN : நம்ம ஊரு பஸ்ல பொம்பளை ஸீட்ல உட்காந்திருக்கிற ஆம்பளை நிலைமைதான், அம்மா கட்சி வேட்பாளர்களுக்கு எல்லாம்!

facebook.com/jill.kamatchirajan: ராஜீவ் காந்தி படுகொலை, பிரபாகரன் படுகொலை. இந்த இரண்டு துருவக் கொலைகளிலும் தி.மு.க மட்டும் தர்ம அடி வாங்குவது வரலாற்று விநோதம்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒபாமாவை இப்படி அவமதிக்கலாமா? - ஒரு உணவகத்தின் உச்சக்கட்ட அநாகரிகம்!

 

 

obamatailet.jpg 

ஷ்யா நாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று,  அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை மிகவும் கீழ்த்தரமாக அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் Krasnoyarsk என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த மாதம்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பெருமைப்படுத்தும் வகையில், ‘President Café’ என்ற உணவகத்தை, பெயர் வெளியிடப்படாத ஒருவர் புதிதாக திறந்துள்ளார்.

இந்த உணவகத்தின் வரவேற்பறையில் விளாடிமிர் புடினின் குழந்தை பருவம் முதல், அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து ஜனாதிபதி பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமில்லாமல், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஜெர்மனி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ரஷ்ய அதிபரின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளதால், உணவகத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யாவையும், அதிபர் புடினையும் பெருமைப்படுத்த அந்த உணவகத்தின் உரிமையாளர் இந்த வேலைகளை செய்துள்ளார்.

ஆனால், இந்த உணவகத்தின் கழிப்பறையில் உரிமையாளர் செய்துள்ள ஒரு காரியம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறைக்குள் நுழைந்தவுடன், கீழே தரையில் போடப்படும் ‘தரை விரிப்பு’ (Floor-mat) அமெரிக்க தேசிய கொடியில் இருக்கிறது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன் மீது ஏறி நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, கழிவறையில் உள்ள ‘டாய்லெட் பேப்பரில்’(Toilet Paper) அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

vikatan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வியாபார யுக்தியின் வறுமைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

ஒபாமாவை இப்படி அவமதிக்கலாமா? - ஒரு உணவகத்தின் உச்சக்கட்ட அநாகரிகம்!

 

 

obamatailet.jpg 

ஷ்யா நாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று,  அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை மிகவும் கீழ்த்தரமாக அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் Krasnoyarsk என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த மாதம்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பெருமைப்படுத்தும் வகையில், ‘President Café’ என்ற உணவகத்தை, பெயர் வெளியிடப்படாத ஒருவர் புதிதாக திறந்துள்ளார்.

இந்த உணவகத்தின் வரவேற்பறையில் விளாடிமிர் புடினின் குழந்தை பருவம் முதல், அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து ஜனாதிபதி பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமில்லாமல், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஜெர்மனி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ரஷ்ய அதிபரின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளதால், உணவகத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யாவையும், அதிபர் புடினையும் பெருமைப்படுத்த அந்த உணவகத்தின் உரிமையாளர் இந்த வேலைகளை செய்துள்ளார்.

ஆனால், இந்த உணவகத்தின் கழிப்பறையில் உரிமையாளர் செய்துள்ள ஒரு காரியம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறைக்குள் நுழைந்தவுடன், கீழே தரையில் போடப்படும் ‘தரை விரிப்பு’ (Floor-mat) அமெரிக்க தேசிய கொடியில் இருக்கிறது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன் மீது ஏறி நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, கழிவறையில் உள்ள ‘டாய்லெட் பேப்பரில்’(Toilet Paper) அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

vikatan

பிரான்சின் சர்க்கரவர்த்தி..நெப்போலியன்...செயின்ட் ஹெலேனா தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த வேளையில், அவரை அவமதிக்கும் நோக்குடன் பிரிடிஷ் காரர்... நெப்போலியனது படத்தைக் கழிவறைகளின் சுவர்கள் மீது கீறி வைத்தார்களாம்!

பின்னர் அவனைக்ச் சீண்டும் நோக்கில் சிறைக்காவலர்கள்..அவனிடம் போய்.. உனது படத்தைக் கழிவறையில் கீறி இருக்கிறார்களே..நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார்களாம்!

அதற்கு அவன் கூறிய பதில் இதுதான்!

ஆங்கிலேயர்களுக்கு அடிக்கடி மலச் சிக்கல் ஏற்படுவதுண்டு! அதனால் அவர்கள் கழிவறைகளில் நீண்ட நேரத்தைச் செலவழிக்கிறார்கள்! இதனைத் தவிர்ப்பதற்காக நிர்வாகம் எனது உருவத்தைக் கழிவறைச் சுவர்களில் வரைந்து வைத்திருக்கின்றது! எனது படத்தைப் பார்த்தவுடன்..மலச்சிக்கல் மறைந்து உடனடியாக அவர்களுக்கு எல்லாமே ஒழுங்காகப் போய்விடும்!

 

அடுத்த நாள்...நெப்போலியனது படங்கள் ஒன்று கூட அந்தச் சுவர்களில் காணப்படவில்லை!

இந்தப் பதில் தான்....ரசிய முதலாளிகளுக்கும் பொருந்தும் போல உள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.