Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஏப்ரல் 26: அதிரடி நாயகன் ஜெட் லீ பிறந்த தினம் இன்று

புரூஸ் லீ, ஜாக்கி சான் ஆகியோரின் வரிசையில் அதிரடி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஜெட் லீ பிறந்த தினம் இன்று.

13082732_1123264244399031_37425033478310

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஈழத்து காந்தி என்று பெருமைப்படுத்தப்படும் தந்தை செல்வா (S.J.V.செல்வநாயகம்) அவர்களது நினைவு தினம்.
சாத்வீக வழி நின்று தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர்.

13076572_1032232556825438_45697052267783

  • தொடங்கியவர்

தட் ‘தெரிஞ்சுதான் பேசறாரா’ மொமென்ட்:

p4b.jpg

‘படிப்படியா மதுவிலக்கு கொண்டுவருவேன்னு அறிவிக்கிறீங்களே, எப்படில்லாம் வாட்ஸ்-அப்ல கிண்டல் அடிக்கிறாங்க தெரியுமா? கால்படி, அரைப்படி, முக்காப்படினு குறைப்பீங்களானு கிண்டலடிக்கிறாங்க. உங்களை எந்த அளவுக்குக் கிண்டல் செய்கிறார்களோ அந்த அளவுக்கு நாடு நாசமாகிவிட்டதுனு அர்த்தம்’னு பேசியிருக்கிறவர் யார் தெரியுமா? நம்ம ‘ஆங்’ கேப்டன்தான். ஆஹாங்! வாட்ஸ்-அப்ல கிண்டலடிக்கப்படறதைப் பற்றி கேப்டன் பேசலாமா? இதுவரைக்கும் 334589 மீம்ஸ் உங்களைப் பற்றி வந்திருக்கு கேப் டன்! (புள்ளிவிவரம் உல்லுலாயி!)

தட் ‘இது உங்களுக்கே நல்லாயிருக்காங்ணா?’ மொமென்ட்:

p4c.jpg

‘தெறி’ படத்தில் ஓப்பனிங் சீன். கேரளாவில் பைக் ரிப்பேர் ஆகி, குனிஞ்சு ரிப்பேர் பார்த்துக்கிட்டிருக்கார் இளைய தளபதி அணில் அண்ணா. அவரோட பொண்ணு நைனிகா, கடுப்பாகி நிற்க, ஒரு கார்காரர் வேகமாகப் போக கீழே கிடந்த தண்ணீர், பாப்பா முகத்தில் ‘தெறி’க்கிறது. அது மழைநேரம். உடனே கோபமான விஜய், வேகமா பைக் ஓட்டி, அந்த காரை ஓவர்டேக் செய்கிறார். அந்த காரும் நிற்கிறது. மழை வலுக்க ஆரம்பிக்கிறது. பாப்பாவும் விஜய்யும் தொப்பலா நனைஞ்சுடறாங்க. அப்புறம் கார்காரரிடம் ‘ஸாரி‘ சொல்லச் சொல்கிறார். அவரும் ஸாரி கேட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார். ஆக்சுவலி, அந்த கார்காரர் அந்தப் பாப்பா மூஞ்சியில் அடிச்சது கையளவு தண்ணிதான். ஆனால் அணில் அப்பா, ஸாரி கேட்க வைக்கிறேன்னு பாப்பாவை மழையில் நனையவிட்டுட்டாருங்ணா!

தட் ‘நல்லாச் சொன்னாங்கய்யா’ மொமென்ட்:

p4d.jpg

‘கருணாநிதி குழப்பத்தில் இருக்கிறார். 2011ல் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தாரோ, அதையே 2016-லிலும் கொடுத்துள்ளார்’னு சொல்லியிருக்காங்க ஜெயலலிதா. ஆட்சியில் இருக்கிறப்பவே ‘அடுத்து ஆட்சிக்கு வந்தால் படிப்படியா மதுவிலக்கு’னு அறிவிக்கிறதும் டெய்லி நாலு வேட்பாளர்களை மாற்றிச் சுற்றுக்கு விடறதும்... மேடம் எவ்ளோ தெளிவா இருக்காங்க!

தட் ‘அரிசிக்கு அக்கப்போரா?’ மொமென்ட்:

p4e.jpg

‘‘ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுவது அம்மா அரிசியல்ல, மோடி அரிசி. ஏனென்றால் அரிசிக்கான மானியத்தை மோடிதான் வழங்குகிறார்’’னு பொங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். (அரிசின்னா பொங்கத்தானே செய்யணும்!) ‘‘நீங்கள் சாப்பிடும் அரிசியில் கடவுள் உங்க பேரை எழுதியிருக்கார்’னு ஒரு கோல்டுமொழி சொல்வாங்க. ஆனா ஜவடேகர் அதில் மோடி பேர் எழுதியிருக்குனு சொல்லியிருக்கிறார். ஐயா, மத்திய, மாநில மந்திரிப் பெருமக்களே, அது மோடி அரிசியும் அல்ல, லேடி அரிசியும் அல்ல. பாழாப்போன எங்க அரிசி. வரி கட்டுறது நாங்கதானே?

தட் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ மொமென்ட்:

p4f.jpg

‘கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக இருக்கிறது’னு வருத்தப்பட்டிருக்காங்க அழகுக்குட்டி செல்லம் அனுஷ்கா. உங்களுக்கு வெயிலில் மேக்கப் போட்டு நடிக்கிறது கஷ்டமா இருக்குனா மேக்கப்பே போடாம, வேகாத வெயிலில் தேர்தல் பிரசாரம்கிற பெயரில் நடிச்சுக்கிட்டிருக்காங்களே எங்க தலைவர்கள், அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?

தட் ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ மொமென்ட்:

p4g.jpg

‘தி.மு.க. ஒரு குடும்பக் கட்சி. அவர்களுக்குக் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை உள்ளது’ - சொல்லியிருப்பவர் ராதிகா சரத்குமார்.

தட் ‘செல்ஃபி புள்ள’ மொமென்ட்:

p4h.jpg

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் ஓர் ஊர் பெரிந்தல்மன்னா. அங்கே தேர்தல் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடந்திருக்கு. கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி போயிருக்கார். கூட்டம் முடிஞ்சதும் அங்கிருந்த மாணவர்கள் கும்பலாக் கூடி முதல்வரோடு செல்ஃபி எடுத்திருக்காங்க. அதில் தள்ளுமுள்ளு ஆகி, அங்கிருந்த கண்ணாடி உடைந்து உம்மன்சாண்டியின் காலில் காயம் ஏற்பட்டிருக்கு. அப்புறமா, கொஞ்சநேரம் கழிச்சு அவர் கிளம்பிப்போயிட்டாராம். எப்படில்லாம் செல்ஃபி மோகம் பிடிச்சு ஆட்டுதுங்கிறது ஒரு மேட்டர்னா, அந்த மாநிலத்தில் முதல்வரோடு காயம் ஏற்படுற அளவுக்கு செல்ஃபி எடுத்துக்க முடியுது. நம்ம தமிழ்நாட்டில்...? ஹூம்!

தட் ‘உங்களுக்கு எப்படிண்ணே தெரியும்?’ மொமென்ட்:

p4i.jpg

‘‘அ.தி.மு.க பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. தி.மு.க இன்னும் பணம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. எப்படி கொடுப்பதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள்’’னு பேசியிருக்கிறார் வைகோ. அது எப்படி... யார் எவ்வளவு கோடி பேரம் பேசுறாங்க, யார் ஓட்டுக்குக் காசு கொடுக்கிறாங்க, கொடுக்கலைங்கிற விவரமெல்லாம் வைகோவுக்கு மட்டுமே தெரியுது?

vikatan

  • தொடங்கியவர்

  சுற்றுச்சூழல்... மரம் காப்போம்.. உயிர் வாழ்வோம்..

placeholder

placeholder

  • தொடங்கியவர்

மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள் எவை

  • 160128153903_bed_bugs__624x351_bbc_nocre
 

மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள்- வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்று தெரியவந்துள்ளது.

வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின் அளவிலான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டைப் பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.

மிகவும் அடர்த்தியான நிறங்களையே அந்த மூட்டைப் பூச்சிகள் தேடிச் சென்றுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்கான சிறந்த வழிகளை கண்டறியமுடியும் என்று நம்பப்படுகின்றது.

துணிகளிலும், படுக்கைகளிலும், சுவரின் துளைகளிலும், மரப் பொருட்களின் இடுக்குகளிலும் ஒட்டிக்கொண்டு வாழும் இந்த மூட்டைப் பூச்சிகள், சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களை தவறுதலாக சக மூட்டைப் பூச்சிகள் என்று நினைத்துவிடுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

BBC

  • தொடங்கியவர்

13055665_1123406794384776_80580974611730

தாஜ்மஹால் பின்புறம்!

  • தொடங்கியவர்
விண்வெளியில் மரதன் ஓட்டம்
 

பிரித்தானிய விண்வெளி வீரரான டிம் பீக், விண்வெளியில் மரதன் ஓடியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து ட்ரெட்மில் எனும் உடற்பயிற்சி இயந்திரத்தின் மூலம் இவர் மரதன் ஓட்டத்தில் ஈடுபட்டார். 

 

16244Tim-Peake.jpg

 

உலகின் பிரதான மரதன் ஓட்டப் போட்டிகளில் ஒன்றான லண்டன் மரதன் ஓட்டப் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பிரித்தானியரான டிம் பீக், அன்றைய தினத்திலேயே விண்வெளியில் மரதன் ஓட்டத்தில் ஈடுபட்டார். பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 

மரதன் ஓட்டமென்பது 42.192 கிலோமீற்றர் (26.2, மைல்) தூரம் கொண்ட ஓட்டப் போட்டியாகும். டிம் பீக்கும் ட்ரெட்மில் இயந்திரத்தில் 42 கிலோமீற்றர் ஓடி முடித்தார்.

 

3 மணித்தியாலங்கள், 35 நிமிடங்கள் 21 விநாடிகளில்  இத்தூரத்தை அவர் பூர்த்தி செய்தார். இவர் 1999 ஆம் ஆண்டு நேரடியாகவே லண்டன் மரதன் ஓட்டத்தில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

16244Tim-Peake2.jpg

 

சர்வதேச விண்வெளி நிலையத்தில்  புவியீர்ப்பற்ற நிலையில் சரிந்துவிடாமல் இருப்பதற்காக அவரின் உடல் கூரையுடன் பிணைக்கப்பட்டிருந்தது.  களைப்பைவிட சரிந்துவிடாமல் ஓடுவதே தனக்கு சவாலாக இருந்ததாக டிம் பீக் கூறியுள்ளார். 

 

எனினும், விண்வெளியில் மரதன் ஓடிய முதல் நபர் டிம் பீக் அல்லர். 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றபோது அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மரதன் ஓடினார்.  4 மணித்தியாலங்கள் , 23 நிமிடங்களில் அவர் ஓடி முடித்திருந்தார்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: சொத்து விவரம்.. அவ்வளவு நல்லவங்களா?

 

 
dhavam_2829489f.jpg
 

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் அவர்களின் சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தலைவர்களின் சொத்து மதிப்பு நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

❤Gowtham S :

இவ்வளவு நாள் மாறி மாறி ஆட்சி செய்த கலைஞர், ஜெ. சொத்து கணக்கு பார்க்கும் போது கண்ணு வேர்க்குது அவ்வளவு நல்லவங்களா நீங்க?

பங்காளி:

எப்படி வந்தது இவ்ளோ பணம்?

அந்த அம்மாவின் சொத்து இரட்டிப்பு

அந்த ஐயாவின் சொத்து 8.5 கோடி உயர்வு

மருத்துவருக்கு 64 கோடி

110° F நாவ்!:

போதிய அளவு சொத்து இல்லாத போது, பொது நலன் பேசப்படுகிறது!

சி.பி.செந்தில்குமார்:

ஜெ., சொத்து மதிப்பு 2011ல் 64 கோடி. 2016ல் 113 கோடி ரூபாய்.

#சசிகலா சிட்பெண்ட்ஸ்ல டெபாசிட் பண்ணி இருப்பார் போல, செம வட்டியா இருக்கு!

PKP.Ramesh:

தவ வாழ்வு வாழவே 114 கோடி சொத்து தேவைப்படுகிறது என்றால் சாதாரண வாழ்வு நடத்தினால் எவ்வளவு தேவைப்படும்? அம்மா நீங்கள் தவவாழ்வையே தொடருங்கள்!

Mani Ram:

கருணாநிதி பெயரில் காரோ, விவசாய நிலமோ இல்லை: சொத்து மதிப்பு விவரத்தில் தகவல்...

Kalyanaraman:

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி - செய்தி

#இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? போய் குமாரசாமி கிட்ட சொல்லுங்கப்பா.

என் தாகம்:

அன்புமணியிடம் 30 லட்சம் சொத்து- செய்தி

#மாற்றம் ஏமாற்றம் அன்புமணி.

பசி.!:

இருக்குறதுலையே பெரிய தமாசு அண்புமணியோட சொத்து மதிப்புதான்..

ஜுஜ்பி:

பிச்சைகாரன் கூட தனது உண்மையான சொத்தை சொல்லாத பொழுது, அரசியவாதிகள் உண்மையான சொத்துக்கணக்கை தெரிவிப்பார்கள் என்று நம்ப நாங்க என்ன லூசா?

கிறுக்கன் கிருஷ்ணா:

5 வருடங்களில் இரண்டு மடங்கான ஜெயலலிதா சொத்து மதிப்பு!

தட் ..நாத்து நட்டாயா ,, கதிர் அறுத்தாயா ..மொமென்ட்

ஜானகி ஸ்ரீதரன்:

கருணாநிதி சொத்து மதிப்பு 63 கோடியாம் பா.

dhavam1_2829488a.jpg

teekay:

சாதாரண மக்களே கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ள போது அன்புமணி தன் சொத்துக்கணக்கை நியாயமாக சொல்லிருக்க வேண்டும். நம்பகத்தன்மையில் சறுக்கல்.

கவிஞன் மோக்கியா:

சொத்து மதிப்பு

கலைஞர் : 13 கோடி

ஜெயலலிதா : 113 கோடி

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?

நம்புனாதான் சோறுன்னு சொல்லிட்டாங்க.

Foodie Panda:

ஒரு ரூவா சம்பளம் வாங்குன அம்மாவுக்கு 118 கோடி சொத்து. ஒண்ணுமேயில்லாம வந்த அய்யாவுக்கு 70 கோடி சொத்து. #வாழ்கஜனநாயகம்

ரைட்டர் பிசாசு™:

அப்பிடி எதுல இன்வெஸ்ட் பண்ணுவாங்க? சொத்து மதிப்பு 5 வருசத்துக்கொருக்கா டபுளாகிட்டே போவுது?!

UKG:

என்னிடம் சக்தியில்லை. மக்களாகிய நீங்கள்தான் எனக்கு சக்தி கொடுக்கவேண்டும்ன்னு சொன்ன ஏழை பங்காளரின் சொத்து மதிப்பு இந்த வயதிலும்.

ஞானக்குத்து:

தமிழக மக்கள் தான் எனது குடும்பம்- ஜெ.

118 கோடிய எப்படி பங்கு போட்டு கொடுப்பீங்க அம்மா?

Mohan TamilDigital:

அன்புமணிக்கு சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் மட்டுமே; வீடு, வாகனம் இல்லை!

ஐயோ பாவம் !! ஊருக்கு ஊரு வாடகை வண்டியில் போயிதான் பிரச்சாரம் பண்றாரு !!

ரயில் கணேசன்:

ஏழை பங்காளர்கள் காட்டும் சொத்து கணக்கை பாத்து பயப்படாதிங்க மக்களே!

சேகர் சுபா டி:

‪#‎அடடே‬! தேர்தல் கமிஷனுக்குக் காமிக்கிற சொத்து மதிப்பு வேற, இன்கம்டாக்ஸ் ஆசாமிகளுக்குக் காமிக்கிற சொத்து மதிப்பு வேற! மனைவி, துணைவி, இன்னபிற அப்புறம் வாரிசுகளுக்குக் காமிக்கற சொத்துக் கணக்கே தனிதான்.

ப. செல்வகுமார்:

"ஏங்க... இவ்வளவு சொத்து இருக்குன்னு கணக்கு காட்றீங்களே, எப்பிடி வந்துச்சு?"

'மாசாமாசம் போஸ்டாபிஸ்ல கட்டின பணம், எல்.ஐ.சி.யில் கட்டுனது.. அதோட வீட்டுக்கு பக்கத்துல ரெண்டு சீட்டு பிடிச்சேன்... எல்லாம் சேர்த்துத்தான் எலெக்‌ஷனுக்காக எடுத்தேன்..'

tamil.thehindu

  • தொடங்கியவர்

நாயகனில் கதாநாயகியாக அறிமுகமாகி, இன்று தமிழில் முன்னணி குணச்சித்திர நடிகையாக விளங்கும்
திரைப்படங்களில் அம்மா என்றால் இப்போது இவர் தான் என்னும் அளவுக்கு அன்பைக் கொட்டி நடிக்கும் அழகிய நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்த நாள்.

13083348_1032233710158656_21183073564911

  • தொடங்கியவர்
அலுவலகக் கதிரை ஓட்டப் போட்டி
 

தாய்­வானின் தென்­பி­ராந்­திய நக­ரான தாய்­னானில் அலு­வ­லகக் கதிரை ஓட்டப் போட்­டி­யொன்று நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. ஒபீஸ் செயார் ரேஸ் குரோன் ப்றீ என இப்­போட்டி அழைக்­கப்­ப­டு­கி­றது.

 

தாய்னான் வீதி­யொன்றில் நடை­பெற்ற இப்­போட்­டியில் அலு­வ­ல­கங்­களில் பயன்­ப­டுத்தும் கதி­ரையில் அமர்ந்­த­வாறு போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

 

162452016-04-24T103720Z_733707799_GF1000

162452016-04-24T104012Z_865866277_GF1000

162452016-04-24T115921Z_1373304425_GF100

162452016-04-24T115926Z_510768676_GF1000

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

11242780_1031009363605787_21547787691698

இயலாது என்று எதுவும் இல்லை

  • தொடங்கியவர்

இதுதாண்டா இன்டெலிஜென்ஸ்!

 

p111.jpg

ஒரு நிறுவனம், `வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று அறிவித்தது. நிறைய பேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.

அனைவரையும் ஒர் அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். வினாத்தாள்களும், விடைத்தாள்களும்  வழங்கப்பட்டன. நிறுவனத்தின் மேலாளர் சொன்னார்... ``இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு ஐந்து நிமிடம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்.’’

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின், விடைத்தாள்களை வாங்கினார் மேலாளர். அப்போது நேர்காணலில் கலந்துகொண்டவர்கள், ``நேரம் குறைவாகக் கொடுத்துவிட்டீர்கள், அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை’’ என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதாமல் வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர். அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்... ‘‘விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டுக்குச் செல்லலாம்!’’ அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். ``வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு அந்த மேலாளர், ``எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியைப் படித்துப் பாருங்கள்’’ என்றார். படித்துப் பார்ததுவிட்டு எதுவும் பேச முடியாமல் கிளம்பிச் சென்றனர். அந்தப் பத்தாவது கேள்வி இதுதான்... 10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.

இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல... சிந்திக்க வேண்டிய விஷயம். இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை கிடைத்திருக்கும் அல்லவா?!

- வாட்ஸ்அப் கதை

vikatan

  • தொடங்கியவர்

உங்களால் உங்களுக்கே கூச்சம் காட்ட முடியுமா?

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 27
 

article_1430050808-benitomussolini1.jpeg1865: அமெரிக்காவில் மிசிசிப்பி நதியில் கப்பலொன்று வெடிப்புக்குள்ளாகி  மூழ்கியதால், 1700 பேர் பலி.

1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினி ஜேர்மன் சிப்பாய் போல் வேடமணிந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது கிளர்ச்சியாளர்ளால் கைது செய்யப்பட்டார்.

1981: Xerox PARC நிறுவனத்தினால் கணினி மௌஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

1992: பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 700 வரலாற்றில் முதல் தடவையாக பெண்ணொருவர் (பெட்டி பூத்ரோய்ட்) சபாநாயகராக தெரிவானார்.

1992: ரஷ்யாவும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளும் உலக வங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தன.

1993: ஸாம்பியாவின் தேசிய கால்பந்தாட்ட அணி வீரர்கள் அனைவரும் விமான விபத்தொன்றில் இறந்தனர்.

1994: தென்னாபிரிக்காவில் முதலாவது ஜனநாயக பொதுத்தேர்தல் நடைபெற்றது.

1996: லெபனான் யுத்தம் முடிவுற்றது.

2001: தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

2005: எயார்பஸ் A380 எனும் பாரிய  விமானம் தனது முதல் பறப்பை பிரான்ஸில் மேற்கொண்டது.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13096111_10154563317229578_1373623512091

  • தொடங்கியவர்

என்னென்னமோ இலவசம்!

ரு பேன்ட் வாங்கினால் இரண்டு பேன்ட் இலவசம். சிக்கன் வாங்கினால் சிக்கன் 65 மசாலாதூள் பாக்கெட் இலவசம். அஞ்சு மனை வாங்கினால் அருவா மனை‬ இலவசம்னு கண்டதுக்கும் ஆஃபர் குடுக்கிறாங்க. அதுல சில கொலக்குத்து சலுகை ஆஃபர்கள் இவை!

p42b.jpg

red-dot3.jpg பாளையங்கோட்டையில் பிரபல சிம்கார்ட் நிறுவனம் தனது புதிய கிளையைத் திறந்தாங்க, அப்போ அறிமுக சலுகையாக புது சிம் வாங்குறவங்களுக்கு பெட்ஷீட் இலவசமாக் கொடுத்திருக்காங்க. ஒருவேளை போர்த்திக்கிட்டு போன் பேசுறவங்களுக்காக இருக்குமோ?

p42a.jpg

red-dot3.jpg திருப்பதியில் 8 லட்டு வாங்கினால் அதைக் கொண்டுபோக ஒரு பை இலவசம்னு ஆஃபர் குடுத்தாங்க. சரி அப்போ 7 லட்டு வாங்குறவன் எப்படிங்க கொண்டு போவான்?

p42c.jpg

red-dot3.jpg கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் விசித்திரமான ஒரு ஆஃபர் கொடுத்தாங்க. இரண்டு லார்ஜ் சரக்கு வாங்கினால், ஒரு ஸ்மால் இலவசம். ஊரெல்லாம்  இதை போஸ்டரா அடிச்சு ஒட்டி குடிமகன்களை குஷிப்படுத்தியிருந்தாங்க. இதே மாதிரி ‘வேதாளம்’ ரிலீஸ் டைம்ல 7 பீர் வாங்கினால் ‘வேதாளம்’ படத்தின் டிக்கெட் இலவசம்னு இன்னொரு குரூப் சொன்னாங்க. ரெண்டு பேரும் நல்லா வருவீங்க.
 

p42d.jpg

red-dot3.jpg வீனா லியா என்ற இந்தோனேஷியப் பெண் தன்னுடைய வீட்டை விற்பனை செய்ய விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தின் கடைசி பாராவில் ஒருவரியைச் சேர்த்திருந்தார். அது இதுதான். இந்த வீட்டை வாங்குபவர்கள் இலவசமாக என்னையும் திருமணம் செய்துகொள்ளலாம். இது ஒரு அரிய வாய்ப்பு. யாரும்  மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்கனு இமான் அண்ணாச்சி மாதிரி விளம்பரம் பண்ணியிருக்கார்.
 

p42e.jpg

red-dot3.jpg ஹெல்மெட் கட்டாயம்னு சட்டம் வந்தப்போ பொள்ளாச்சியில் ஒரு மளிகைக் கடைக்காரங்க வித்தியாசமா ஒரு ஆஃபர் கொடுத்தாங்க, 25 கிலோ அரிசி மூட்டை வாங்கினால் ஒரு ஹெல்மெட் இலவசம். ஹெல்மெட் கடையை விட அரிசிக் கடையில் கூட்டம் கூடிடுச்சு. உங்க கடையில் சாம்பிள் அரிசி கிடைக்குமா ப்ரோ?
 
red-dot3.jpg இதெல்லாம் சும்மா ஜுஜுபி. நடக்கப் போற எலக்‌ஷன்ல வோட்டுக்காக இதைவிட சூப்பரானா ஆஃபர்லாம் நம்ம அரசியல்வாதிகள் கொடுப்பாங்கனு சொல்றீங்களா?

vkatan

  • தொடங்கியவர்

கடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்

 

டுபாய் கடற்­க­ரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்­ல­மாக அழைக்­கப்­படும் கட­லுக்கு கீழாக அமைந்த படுக்­கை­ய­றை­களைக் கொண்ட மிதக்கும் விடு­முறை வாசஸ்­த­லங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடல் வாழ் உயி­ரி­னங்­களை நேருக்கு நேர் கண்டு களித்­த­வாறு பொழுதைக் கழிக்­கவும் உறங்­கவும் உதவும் இந்த விடு­முறை வாசஸ்­த­லங்கள் டுபாய் கடற்­க­ரை­யி­லி­ருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த விடு­மு­றை­ வா­சஸ்­த­லங்கள் ஒவ்­வொன்­றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பணம் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேற்­படி விடு­முறை வாசஸ்­த­லங்­களை ஸ்தம்பிக்கும் பணி 2018 ஆம் ஆண்­டுக்குள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதன் பிர­காரம் முதலாவதாக 4,000 சதுர அடி அளவான விடுமுறை வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

resize__1_.jpg

resize__2_.jpg

resize__3_.jpg

resize__4_.jpg

resize.jpg

virakesari.lk

  • தொடங்கியவர்

ஜெர்மனியைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஜூலி மேரி, தெருக்களில் அனாதையாக சுற்றித்திரிந்த ஒரு நாய்க்குட்டியைத் தன் வீட்டுக்கு எடுத்துவந்து வளர்த்தார். அந்த நாய்க் குட்டி வளந்ததும் அதன் நிறமும், பிரகாசமான கண்களும் பார்ப்பதற்கு சிங்கம்போல இருப்பதாகத் தோன்றவே, ரெடிமேட் சிங்கமுடியை நாய்க்கு அணிவித்து, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள பல்வேறு இடங்களில் 'பிக் சிட்டி லயன்' என்ற பெயரில் பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்து, நெட்டில் பரப்பியதும் வைரல் ஹிட் ஆனது.

13087578_712404888862056_472468778772648

13102868_712404892195389_463254917893595

13076981_712404928862052_567247476772578

13095741_712404945528717_788471234659087

13092139_712404982195380_768273582231854

vikatan

  • தொடங்கியவர்

2500 ல் உலகம் எப்படி இருக்கும்? ஒரு மினியன் கற்பனை... #WhereIsMyGreenWorld

Minions.jpg
சிட்டி 4.4.4-ம், சட்டி 4.4.3-ம் இன்ஸ்டா கிராமத்துல மீட் பண்றாங்க. அப்போ நடக்கற நிகழ்கால செய்திகளைப் பற்றி பேசி அரட்டை அடிக்கிறாங்க. இவங்க இருக்கிறது கிபி 2500 என்பதால் நீங்கள் அவங்கப் பேசிக்கறத கேக்கனும்னா டைம் மெஷின்ல முதல்ல ஏறணும். டிக்கெட்  ஃப்ரீதான். பெல்ட்டை போட்டு லாக் பண்ணிக்கோங்க, கரம் சிரம் வெளியே நீட்டாதீங்க. கிளம்பப் போறோம். வந்து சேர்ந்துட்டோம்.
 
சிட்டியும் சட்டியும் என்னப் பேசிக்கிறாங்கன்னு பாப்போம்.
 
சிட்டி 4.4.4: 
 
அரிசி, கம்பு, சோளம்னு ஏதோ பழங்காலப் பயிராம், அதை எவனோ ஒருத்தன் தன் வீட்டு மொட்டை மாடியில பயிரிட்டு விருது வாங்கியிருக்கான்.  நான் என் மொட்டை மண்டையை சுரண்டி பாக்கறேன், இப்படி ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குது.
 
சட்டி 4.4.3:
 
அது என்ன சாதனை, நம்ம பய ஒருத்தன் 30 வயது வரை, உயிர்வாழ்ந்து வாட்ஸ்அப்பில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வாங்கிருக்கான். உனக்கு என்ன வயசு இப்போ?
 
சிட்டி 4.4.4: 
 
எனக்கு வயசு 9. ஆனா இப்பவே நட், போல்டு, சிப்பெல்லாம் ஆடுது,  என்ன பண்ண? அவன் உயிர் வாழக் காரணமே வேங்கைமான்னு ஒரு கிரகத்துக்குப் பக்கத்துல இருக்க தண்ணீர்ல ஒரு ஜூஸ் குடிச்சுதானாம். அந்தத் தண்ணீர் ஜூஸை மஸ்ரோ செயற்கைக் கோள் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே இவன் கண்டுபிடிச்சிருக்கான். 
 
bots.jpgசட்டி 4.4.3:
ஓ..... அதான் எலெக்‌ஷன் டைம் பாத்து நம்ம மத்திய அரசே கண்டுபிடிச்ச மாதிரி பீத்திக்கிட்டு அந்த கிரகத்துல இருந்து தண்ணீர், ஜூஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்னு அறிவிச்சிருக்கோ.
 
சிட்டி 4.4.4: 
 
ஆமாம், அப்படித்தான்னு நினைக்கிறேன். இன்னொரு விஷயம் தெரியுமா? நம்ம எல்லைக்குள்ள அத்துமீறி நுழைந்த ரோபோ தீவிரவாதிகளை நம்ம நாட்டு ரோபோ ராணுவம் தூக்கி அடிச்சிருக்கு பாத்துக்க. சிக்கின ஐந்து தீவிரவாதி ரோபோக்களோட சிப்பே வித்தியாசமா இருக்காம். அது என்னன்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்காங்களாம். 
 
சட்டி 4.4.3:
 
சரி அண்ணே, உலக நாடுகள் மொத்தமும் சேர்ந்து, அழிஞ்சு போன பூமியில புதையல் ஏதோ எடுக்க நம்ம கிரகத்தையும் பூமியையும் இணைக்கப் போறாங்களாம். ரயில் பாலம் பிஸ்தானிக் மெட்டல் டெக்னாலஜியாம்.  நம்ம நிறைய பேருக்கு வேலை கிடைக்குமாம்.
 
சிட்டி 4.4.4: 
 
வேலை கிடைச்சு சம்பாதிச்சு என்னத்த கிழிக்க. என் சிப்பு ஆடறது நின்னுடுமா, இல்லை நான் தான் 31 வருஷம் வரை வாழ்ந்து சாதிக்கப் போறனா. இந்த அரசையும் ஆட்சியும் மாத்தணும் அதுக்கு ஏதாவது பண்ணனும். 
 
சட்டி 4.4.3:
 
ஆமாம், இவனுங்க தொல்லை தாங்க முடியல. வர்ற எலெக்‌ஷன்ல எல்லாரும் கட்டாயம் ஓட்டு போடனுமாம். அதுக்கு ஒரு 'விர்ச்சுவல் டிஸ்ப்ளே' எல்லார் சிப்புக்கும் அனுப்புவாங்களாம். அதுல இருந்த இடத்துலருந்தே ஓட்டு போட்டுறலாம். ஓட்டு போட்டா, ஒரு டெரா பைட் மெமரி சேவர் இலவசமா தருவாங்களாம். 
 
eightcolAdepictionofthePhilaeprobetouchd
 
சிட்டி 4.4.4: 
 
இதுதான் இங்க காமெடியே. இலவசங்கிற பேர்ல இவிங்க அறிவிக்கறதெல்லாம் பணமா தெரியலையாம் இந்த எலக்‌ஷன் கமிஷனுக்கு. ஆனா, ஆணி புடுங்கிற வேலை செய்ற ஏழை ரோபோட்,  தான் வாங்கின கடனை திருப்பி கொடுக்க கொண்டு போன பணத்தையெல்லாம் கைப்பற்றி விட்டாங்களாம்
 
சட்டி 4.4.3:
 
சரி, அதுக்கு நமக்கென்ன. நம்ம ஃப்யூசைப் பிடுங்காம இருந்தா சரி.  எங்க தெருவுல இன்னிக்கு ரோபாயி அம்மனுக்கு பவர் ஏத்துறாங்க. பாட்டுக் கச்சேரிலாம் இருக்கு. ரோபோ ரீட்டா ஆட்டம் இருக்கு நான் போறேன்.
 
சிட்டி 4.4.4:
 
ஆமா நானும் சீக்கிரம் போறேன். ஏன்னா பத்தாண்டுக்கு ஒரு தடவை எங்கிருந்தோ வர்ற திரவ மழை இன்னிக்கு பெய்யும்னு ரமணன் ஆராய்ச்சி மையத்துல சொல்லிருக்காங்க. அதுல ரோபோக்கள் நனைஞ்சா ஆயுள் குறைஞ்சுடுமாம். 
 
minion1.png
ஒகே பை... பை... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.....!
vikatan
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'கையில் குழந்தையுடன் தாய்!'- 4800 ஆண்டுக்கு முந்தைய படிமம் கண்டுபிடிப்பு (வீடியோ)

தைவானில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கையில் குழந்தையுடன் இருக்கும் தாயின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமம் சுமார் 4800 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தைவானின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 48 மனித படிமங்களில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


 

இதுகுறித்து இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை பொறுப்பாளர் சூ வெய் லீ கூறுகையில், இதனை தோண்டி எடுத்த போது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தோம் என்றும், தாய் தன் கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போன்று படிமம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

 

vikatan

  • தொடங்கியவர்

அட.. சொல்ல வைக்கும் சமந்தா!
 

சமந்தா தனது சொந்த முயற்சியில் பலருக்கும் உதவும் வகையில் 'பிரத்யுக்ஷா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளாராம். 'நிறைய பேருக்கு உதவ ஆசை. ஏன்கிட்ட இருக்க பணத்தை வச்சு நிறைய செய்யணும். இதுவரை 70 பேருக்கு இலவசமா இதய ஆபரேஷன் பண்ண ஹெல்ப் பண்ணிருக்கேன்' என நெகிழ்கிறார் சமந்தா

13095992_1929281390631595_79433555740954

  • தொடங்கியவர்

பெண் சிங்கங்கள்!

 

p48.jpg

பைக் ஓட்டுறதோட மட்டும் இல்லாமல் பைக் ரேஸ் உலகத்தையே கலக்கி எடுக்கிற பெண் சிங்கங்கள் இவர்கள்!

p48a.jpg

அனா கர்ரஸ்கோ: ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் ரேஸிங் சாம்பியன். மோட்டோ 3 வகையில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பாயின்ட்டுகளைக் குவித்த முதல் பெண். ஜெயிப்பதற்காக உயிரையே பணயம் வைப்பவர்.

p48b.jpg

கட்ஜா போயன்ஸ்கன்: ஜெர்மனி வீராங்கனை. 250 சிசி ரோடு ரேஸிங் கேட்டகிரியில் உலகின் நம்பர் ஒன் சாம்பியன். இட்டாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் என எல்லாப் பதக்கஙக்ளையும் கக்கத்தில் வைத்திருப்பவர். ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் 7108 கிமீ தூர ரேஸான ‘ட்ரான் சைபீரியா ரேலி’யில் கலந்துகொண்ட ஒரே பெண்.

p48c.jpg

ஜென்னி டின்மௌத்: இங்கிலாந்தின் நம்பர் ஒன் பைக் ரேஸர். ஆண்கள் மட்டுமே போய் கலக்கும் ‘ஐஸில் ஆஃப் மேன் டிடி’ எனப்படும் பொதுவழிப் பாதையில் கலக்கும் ஒரே பைக் ரேஸிங் பெண் என்ற சாதனையை கின்னஸில் பதிய வைத்திருக்கிறார். உலகின் எல்லாவகை சூப்பர் பைக்குகளையும் அனாயசமாய் தெறிக்கவிடும் ஜென்னிக்கு சைக்கிள் ரேஸில் கலந்து கொள்வது இன்னொரு ஹாபி.

p48d.jpg

எலீனா ரோசெல்: ஸ்பெயின் தேவதை. மோட்டோ 2-வில் இப்போதுதான் உலகின் கவனத்தை ஈர்த்துவரும் சுட்டி லேடி.  உலக சாம்பியன் பட்டங்களைப் பெறவில்லை என்ற போதிலும் இவரது பைக் ஓட்டும் ஸ்டைலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. ஒவ்வொரு முறையும் மயிரிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடும் இவர் விரைவில் சாம்பியனாய் ஜொலிப்பார் பாருங்கள்!

p48e.jpg

மரியா காஸ்டெல்லோ: ‘ஐசில் ஆஃப் மேன் டிடி’ போட்டியில் கலந்து கொண்டு உலகின் மிக வேகமான பெண் என்ற பட்டம் பெற்றவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவரின் ஆவரேஜ் ஸ்பீடு 114.73! கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ்களில் கலந்து கொண்டு சில்வர்களை அள்ளி வருவதில் கில்லாடி லேடி!

vikatan

  • தொடங்கியவர்

இந்த அழகி உண்மையில் பிறந்தவள் அல்ல..
படைக்கப்பட்டவள்..
ஜியா ஜியா இவள் பெயர்
ஆமாம்..
சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள மிக ஆற்றலும் புத்தி சாதுரியமும் கொண்ட ஜியா ஜியா என்ற பெண் ரோபோ தான் இது.

13051488_565535726946280_595725711362309

13087693_565536653612854_899706152249297

13102831_565536736946179_199785077183593

  • தொடங்கியவர்

பாம்பு என்றால் இவர் நடுங்க மாட்டார்!

 

p56a.jpg

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா? என்னது... பிரபலமான்னு கேட்காதீங்க ப்ரோ. அங்கே நண்டு சிண்டுக்கெல்லாம் இவரை நல்லாத் தெரியும். மேட்டருக்குப் போகலாமா?

p56b.jpg

சுரேஷுக்கு சின்ன வயசுல இருந்தே பாம்புனா ரொம்பப் பிடிக்கும். 12 வயசு இருக்கும்போதே விஷம் உள்ள நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்திருக்கிறார். இப்படிப் பாம்பு பிடிச்சே ஏரியாவில் ஃபார்ம் ஆக, கேரளா அரசாங்கம் சுரேஷைக் கூப்பிட்டு வனப் பாதுகாவலர் வேலை கொடுத்திட்டாங்க. சுரேஷ் சும்மாவே ஆடுவார். பதவியும் கிடைச்சா...  பாம்புகளின் நிபுணராகிவிட்டார். யார் வீட்ல பாம்பு புகுந்தாலும் இவருக்குதான் போன் வரும். இதுவரை 30,000 பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அதில் 3,000 பாம்புகளிடம் கடியும் வாங்கியிருக்கிறார். அப்படிக் கடித்த பாம்புகளில் 300 பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டதாம். ரொம்ப சீரியஸான கண்டிஷனில் ஆறு முறை ஐ.சி.யூ-வில் அட்மிட்டாகிப் பிழைத்திருக்கிறார். காரணம் அவர் பாம்பு பிடிக்கும்போது எந்த விதப் பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லையாம். கேட்டால் குச்சி வெச்சுப் பிடிக்கிறதுல என்ன சார் கிக்கு இருக்கு என்றிருக்கிறார். பெரிய பெரிய பாம்புகளைக் கையில் பிடித்தபடி போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு அல்லு கிளப்புகிறார்.

p56c.jpg

‘எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?’ என்று கேட்டால், பாம்புகள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு உண்டாக்கவும், அரியவகைப் பாம்புகளைப் பாதுகாக்கவும்னு சொல்லியிருக்கிறார். அதோடு மிகவும் அரியவகைப் பாம்பு இனங்களைக் கண்டுபிடித்து அதன் முட்டைகளை சேகரித்துப் பாதுகாப்பாக அடைகாக்கவும் ஏற்பாடு செய்கிறார். குஞ்சு பொரித்ததும் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம். எல்லாத்தையும் விட ஹைலைட்டான விஷயம் 2013-ல் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கேரளாவுக்கு வந்தப்போ, சுரேஷ் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

p56d.jpg

நீங்க நிஜமாவே பெரிய ஆளுதான்யா!

vikatan

28 minutes ago, நவீனன் said:

‘எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?’ என்று கேட்டால், பாம்புகள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு உண்டாக்கவும், அரியவகைப் பாம்புகளைப் பாதுகாக்கவும்னு சொல்லியிருக்கிறார். அதோடு மிகவும் அரியவகைப் பாம்பு இனங்களைக் கண்டுபிடித்து அதன் முட்டைகளை சேகரித்துப் பாதுகாப்பாக அடைகாக்கவும் ஏற்பாடு செய்கிறார். குஞ்சு பொரித்ததும் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம். எல்லாத்தையும் விட ஹைலைட்டான விஷயம் 2013-ல் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கேரளாவுக்கு வந்தப்போ, சுரேஷ் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

என்னமோ சொல்லுங்க சார், ஆனால் பழமொழி என்ன சொல்லுதண்டா - கோவில் இல்லாத ஊரிலயும் பாம்பு இருக்கிற ஊரிலயும் குடியிருக்காதே எண்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.