Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சில தகவல்கள்

ஆப்கி பார் ரெண்டு வருசம் ஆச்சு சர்க்கார்!

p116.jpg

இந்த மாதத்துடன் மோடி, இந்தியப் பிரதமராகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விடும். வெளிநாட்டு சுற்றுலாக்களில் மோடி பிஸியாக இருந்தாலும், வாரம் ஒருமுறை தவறாமல் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிவிடுகிறது மத்திய அரசு. க்ளீன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா எனப் பெயர் சூட்டு விழாக்களை மட்டுமே நடத்திக்கொண்டு இருக்கும் மோடி அரசுக்கு  #2yrsFailedModiSarkar என ட்ரெண்ட் அடித்து சூடு போட்டனர் நெட்டிசன்ஸ். ஏன்ன்ன் இப்டி?

கேப்டன் ராக்ஸ்

p116a.jpg

ட்விட்டரில் @iVijayakant என்ற ஐ.டி-யில் இயங்குகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். கடந்த ஞாயிற்றுக்கிழமை #Tweet2Vijayakant என்ற டேக் மூலம் ட்விட்டர்வாசிகளின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார் கேப்டன். ஒரு கட்டத்தில் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் @iVijayakanth என்ற ஐ.டி-யில் வேறு ஒருவர் ஜாலியாய்ப் பதில் சொல்ல களை கட்டியது ட்விட்டர். கேப்டன் ஒரு குழப்பக்குறி!

கபாலி

p116b.jpg

கடந்த வாரத்தின் உலக வைரல் என்றால் அது ரஜினியின் கபாலி டீஸர்தான். யூ டியூபில் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடி ஹிட்ஸை அள்ளி, இன்னும் கலக்கிக்கொண்டு இருக்கிறது. #KabaliTeaser , #kabali என எல்லாமே உலக ட்ரெண்டிங்தான். இரவு 12 மணி ரிலீஸ் போன்ற எதுவுமே இல்லாமல், காலையில் சாதரணமாக 11 மணிக்கு வெளியாகி, யூ டியூபை க்ராஷ் ஆக்கியது கபாலி. நெருப்புடா!

சோதனை மேல் சோதனை தோனிக்கு!

p116c.jpg

இந்திய அணியின் நிரந்தர கேப்டன் தோனிக்கு இந்த ஐ.பி.எல். மிகவும் மோசமானதாக இருந்து வருகிறது. கெவின் பீட்டர்சன், டூ ப்ளெஸிஸ், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பூனே வீரர்கள் காயம் காரணமாக வெளியே செல்ல, பாதாளத்தில் இருக்கிறது தோனியின் பூனே அணி. சில ஆண்டுகளுக்கு முன், தோனி ஒரு பேட்டியில், “எவ்வளவு பணம் செலவழித்து அணிகளை வாங்குகிறார்கள். அதனால், அரையிறுதி வரையிலாவது அணியைக் கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார். ஆனால், அது தோனிக்கு இந்த முறை எட்டாக்கனி ஆகிவிடுமோ என்கிற சோகத்தில் இருக்கிறார்கள் #dhoni ரசிகர்கள். என்ன ஆச்சு தோனிக்கு?

த்ரிஷா இல்லைனா த்ரிஷாதான்

p116d.jpg

கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் நடித்துவருகிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் ரஜினியைத் தவிர த்ரிஷாவுடன் நடிக்காத ஹீரோக்களே இல்லை. #HappyBirthdayTrisha  என ட்விட்டரில் த்ரிஷாவை ட்ரெண்ட் அடிக்க வைத்த த்ரிஷாவின் ரசிகக் கண்மணிகள், ஃபேஸ்புக்கையும் விட்டுவைக்கவில்லை. த்ரிஷா த்ரிஷா த்ரிஷா!

p116e.jpgட்விட்டரால் நான்

ட்விட்டர் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ட்விட்டர் வழி தங்களின் வாழ்க்கைமுறை எப்படி மாறியிருக்கிறது என்பதை #BecauseOfTwitter என்ற ஹேஷ்டேகில் பதிவு செய்தார்கள் நெட்டிசன்ஸ். 140 எழுத்துகளுக்குள் எழுதக் கற்றுக்கொண்டேன், நண்பர்களை அதிகம் சம்பாதித்தேன், வேலை கிடைத்தது எனப் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஜாக்கிற்கு நன்றி!

தமிழன் கேட்ஜெட்ஸ்

p116f.jpg

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலம் முதல், கௌதம் கார்த்தி வரை பயன்படுத்திய கேட்ஜெட்ஸ் பற்றி #TamizhanGadgets என்ற டேக்கில் எழுதினர் நெட்டிசன்ஸ். இயக்குநர் ஷங்கர், கமல், ஜெய்ஷங்கர், ரஜினி என பலரையும் ஓட்டித் தள்ளினர் நெட்டிசன்ஸ். பாலிவுட் பக்கம் இன்னும் உக்கிரமா இருப்பாங்க!

என்ன செய்யப்போகிறோம் நாம்?

p116g.jpg

இந்தியா முழுவதிலும், பல்வேறுவிதமான ஒடுக்குமுறைக்கு இரையாகிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள்தான். 30 வயதான சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, அவரது வீட்டில் கடந்த வாரம் பிணமாகக் கிடந்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தார் ஜிஷா #JusticeForJisha என்ற டேக்கில், இவரது கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இணையவழிப் போராட்டம் நடத்தினர் நெட்டிசன்ஸ். ப்ச்!

vikatan

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தங்கத்திலே ஒரு கார்! வைரல் வீடியோ

 

துபாய்: குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016 கண்காட்சி தற்போது நடைபெறுகிறது. அதில், இடம்பெற்ற தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கார் ஒன்று, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த தங்க காரின் வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.


   

 

பிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான நிசான் நிறுவனம், புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இந்த காரின் விலை, 10 லட்சம் அமெரிக்க டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில்,  6 கோடியே 50 லட்சம் மதிப்புடையது. நிசானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மாடல் ஆன இது ஒரு பந்தய கார் ஆகும். இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர். 3.8 லிட்டர் என்ஜின் மற்றும் வி6 டுவின் டர்போ 545 எச்.பி. என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த தங்க கார், அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் உடையதாகத் திகழ்கிறது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ் மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது,  அதற்கேற்ப  வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
vikatan

  • தொடங்கியவர்

பிலாஸ்டிக் பாட்டில்களால் ஒரு கலை வடிவம்
==============================================

வின்ஸண்ட் வேன் கோவின் ஸ்டார்ரி நைட் படைப்பு, பிலாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேன்கோவின் உண்மையான படைப்பு 1989 ஆண்டு உருவாக்கப்பட்டது.

தாய்வானிய நிறுவனத்தால் இந்த படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தது (Photos)

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தது (Photos)

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya, தனது முதல் பயணத்தை மத்திய ஐரோப்பாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கித் தொடங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பயணத்தை ஆரம்பித்த விமானம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சரக்கு விமானம் 10 பிரித்தானிய போர் தாங்கிகளை சுமக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

6 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த சரக்கு விமானம் 600 தொன் எடையிலானது.

இந்த சரக்கு விமானம் தனது அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தை இந்தியா, மலேசியா வழியாக முன்னெடுக்கிறது.

இந்த ராட்சத விமானம் தரையிறங்குவதைக் காண 50 ஆயிரம் பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக உலகின் பெரிய சரக்கு விமானம் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்ததை அடுத்து இந்த விமானம் உக்ரைன் கைவசம் வந்தது.

அந்த விமானத்தையே தற்போது உக்ரைன் நாட்டினர் மாற்றி அமைத்து உயிர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

3401201900000578-0-image-a-12_1462890666135

3402525B00000578-0-image-a-18_1462890781564

34010D2900000578-0-image-a-22_1462890799713

3401FF2B00000578-0-image-a-20_1462890789199

34011D7B00000578-0-image-a-15_1462890766342

340377BF00000578-3583171-image-a-72_1462895471854

340377DE00000578-3583171-image-a-73_1462895479943

3403297D00000578-0-image-a-27_1462892064211

newsfirst.lk

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.... 

மே 12

 

723Colombo,_after_Kip25.jpg1551 : பெரு நாட்டின் தலை­நகர் லீமாவில் சான் மார்கோஸ் தேசிய பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க கண்­டத்தின் மிக பழை­மை­யான பல்­க­லைக்­க­ழகம் இது­வாகும். 

 

1656 : கொழும்பை போர்த்­து­கே­ய­ரி­ட­மி­ருந்து ஒல்­லாந்தர் கைப்­பற்­றினர்.

 

1689 : பிரான்­ஸுடன் போரி­டு­வ­தற்­காக இங்­கி­லாந்தின் மூன்றாம் வில்­லியம் ஒக்ஸ்பேர்க் கூட்­ட­ணியில் இணைந்தார்.

 

1797 : பிரெஞ்சு மன்னன்  நெப்­போ­லி­யனின் படைகள் இத்­தா­லியின் வெனிஸ் நகரைக் கைப்­பற்­றின.

 

1881 : வட ஆபி­ரிக்க நாடான டுனீ­சியா, பிரான்ஸின் நேரடி ஆட்­சியின் கீழ் வந்­தது.

 

1922 :  அமெ­ரிக்­காவின் வேர்­ஜீ­னியா மாநி­லத்தில் 20 தொன் விண்கல் வீழ்ந்­தது.

 

1926 : இத்­தா­லி­யினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஆகாயக் கப்­ப­லான "நோர்ஜ்", வட­து­ரு­வத்தின் மீது பறந்த முதல் வான்­க­ல­மா­கி­யது.

 

1937 : ஆறாம் ஜோர்ஜ் மன்னர்; பிரித்­தா­னி­யாவின் மன்­ன­ராக முடி சூடினார்.

 

1942 : 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்­லப்­பட்­டனர்.

 

1949 :  ஜேர்­ம­னியின் பேர்லின் மீதான முற்­று­கையை சோவியத் ஒன்­றியம் நிறுத்­தி­யது.

 

1955 : இரண்டாம் உலக யுத்­தத்தை தொடர்ந்து நேச­ நா­டு­களின் ஆக்­கி­ர­மிப்பு முடி­வுற்­றதால் ஆஸ்­தி­ரியா மீண்டும் சுதந்­திரம் பெற்­றது. 

 

1965 : சோவியத் ஒன்­றி­யத்தின் லூனா 5 விண்­கலம் சந்­தி­ரனில் மோதி­யது.

 

1981 : ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்தை (ஐ.ஆர்.ஏ) சேர்ந்த  பிரான்சிஸ் ஹியூஸ், பிரித்­தா­னிய சிறையில் உண்ணாவிர­த­மி­ருந்து இறந்தார்.

 

1982 : போர்த்­து­கலில் பாப்­ப­ரசர்  இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரை கொலை செய்ய மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

 

2002 : அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு விஜயம் செய்தார். 1959 ஆம் ஆண்­டின்பின் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஒருவர் கியூபாவுக்கு விஜயம் மேற்­கொண்­டமை அதுவே முதல் தட­வை­யாகும். 

 

2003 : சவூதி அரே­பி­யாவின் றியாத் நகரில் அல் கைதா அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்ட குண்டுத் தாக்­கு­தலில் 26 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் 160 பேர் காய­ம­டைந்­தனர்.

 

2006 : பிரே­ஸிலின் சாவோ போலோ நகரில் ஏற்­பட்ட பாரிய வன்­மு­றை­களில் 150 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2007 : பாகிஸ்­தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட வன்­மு­றை­களில் சுமார் 50 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2008 : சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார்  69,000 பேர் உயிரிழந்தனர்.

 

2015 : நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 218 பேர் உயிரிழந்த
துடன் 3500 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'விளக்கேந்திய சீமாட்டி' புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்.

தாதியர் சேவையை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய இவரது ஞாபகார்த்தமாகவே இன்றைய நாளை உலக தாதியர் தினமாகக் கடைப்பிடிக்கிறோம்.

13179042_1041775939204433_23497435132810

  • தொடங்கியவர்
வாழ்வியல் தரிசனம்

article_1463025947-images.jpgதாய்க் குரங்கிடம் குட்டிக் குரங்கு சொன்னது, 'அம்மா, எப்போதும் பக்கத்து மரத்திலிருக்கும் குரங்கு என்னைப் பார்த்து, நீ இந்த மனிதர்களை போல அழகற்றவனாகவே இருக்கின்றாய் எனக் கேலிசெய்கிறது' எனச் சொல்லி அழுதது.

அதற்குத் தாய்க் குரங்கு சொன்னது 'அதற்கு உன்மீது பொறாமை. நீதான் அழகான குரங்கு, அதுதான் மனுஷக் குரங்கு' என்று தனது குட்டியைத் தேற்றியது.

ஒவ்வொரு இனமும் தங்களது இனமே சிறப்பானதும் மிக அழகானதும் எனக் கருதலாம். ஆனால், அவை அழகு பற்றி, தங்கள் சிறப்புப் பற்றி என்ன கருதுகின்றது என எமக்குத் தெரியாது.

ஆனால், சகல ஜீவராசிகளுமே தமது இனங்களுக்கிடையே ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் இணைந்து வாழ்கின்றன.

மனித இனமோ வித்தியாசமானது. இவர்களுக்கு மதம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுடன் பணம், அந்தஸ்து பேதங்களும் உள்ளன.

என்ன மனிதர்கள் இவர்கள். வெட்கம். வெட்கம்...

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பெண்களுக்கு மரியாதை... வரவிருக்கும் கூகுள் எமோஜிகள்!

 

து எமோஜிகளின் காலம். சிரிப்பது, அழுவது என்ற இரண்டு உணர்வுகள் தாண்டி காதல், கோபம், வருத்தம், குழப்பம் என அத்தனை உணர்ச்சிகளையும் ஸ்மைலிகள் என்னும் எமோஜிகள் பிரமாதமாகப் பேசுகின்றன. 
 
இந்நிலையில், பெண்களின் உரிமைக்கான குரலாகவும், வேலை என்பது பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் வகையிலும் 13 புதிய எமோஜிகளை இவ்வருட இறுதியில் வெளியிட உள்ளது, பிரபல தேடுதல் வலைதளமான கூகுள்.
googleemoji4.jpg
பெண்கள் என்றாலே ஆடை, மேக்கப் என்று அவர்களின் வெளித்தோற்றங்கள் மட்டுமே அடையாளமாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், எல்லா துறைகளிலும் இன்று ஆளுமைகளாக அசத்திக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அவர்கள் வெற்றியை அங்கீகரிக்கவும், கௌரவிக்கவும் இந்த எமோஜிகள், ‘உழைக்கும் பெண்கள்’ என்ற குறியீட்டின் அடிப்படையில் வெளியாக உள்ளன என்று கூகுள் தெரிவித்துள்ளது.
 
உடல்நலம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, விவசாயம், உணவு, இசை உள்ளிட்ட 13 துறைகளில் பெண்களின் உருவமைப்புகளை இந்த எமோஜிகள் வெளிப்படுத்த உள்ளன. 
 
" பெண்கள் குறித்த பாசிட்டிவான முன்னெடுப்புகளை உலகுக்குத் தரவே இந்த புதிய எமோஜிகளை வடிவமைத்துள்ளோம். இது நிச்சயமாக சர்வதேச அளவில் அவர்களுக்கான மரியாதையில் நேர்மறை அலைகளை உருவாக்கும்" என்று இந்த எமோஜிகளை வடிவமைத்த கூகுளைச் சேர்ந்த நால்வர் அணி தெரிவித்துள்ளது.
 
இந்த வருடத்தின் இறுதியில் பெண்களுக்கு மரியாதை செய்யும் எமோஜிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது கூகுள்.
 
பெண்மை போற்றுதும்!
vikatan
  • தொடங்கியவர்

  13147865_1041756675873026_20417069844355

கென்ய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் தோமஸ் ஓடோயோவின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்
மனித முகத் தோற்றத்தில் மாங்காய்...
 
 

article_1463047020-IMG-20160512-WA0008.j

கிண்ணியா, குறிஞ்சாக் கேணி இரண்டாம் வட்டாரப் பகுதியிலுள்ள மாமரத்தில் மனித முகத்தையொத்த மாங்காய் காய்த்திருப்பதைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: ஏ.எம்.ஏ.பரீத்)

article_1463047033-IMG-20160512-WA0009.jarticle_1463047043-IMG-20160512-WA0010.j

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p84a.jpg

ந்தியா அதிர்கிறது... மூன்றே நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களைப் பெற்று இதற்கு முன்னர் இருந்த எல்லா ரெக்கார்டுகளையும் உடைத்திருக்கிறது ரஜினியின் `கபாலி' டீஸர். வெளியான முதல் நாள் ஃபேஸ்புக், ட்விட்டரில் #Kabaliteaser என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. அதற்கு அடுத்த இடத்தில் இன்னொரு ஹேஷ்டேக்கும் உலக அளவில் ட்ரெண்டானது. அது டீஸரில் ரஜினிகாந்த் சொல்லும் `மகிழ்ச்சி’. #magizhchi 

p84b.jpg


p84c.jpg

ல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ராக், சமீபத்தில் `ராக் கிளாக்' என்ற செல்போன் ஆப் ஒன்றை வெளியிட்டார். சாதாரண அலாரம் ஆப்தான் இது. ஆனால், இதில் ஸ்பெஷலாக `ராக் டைம்' என செட் செய்துவிட்டுத் தூங்கினால் காலை 4:15 மணிக்கு ராக்கே உங்களை எழுப்பிவிடுவார். ராக்கின் தன்னம்பிக்கை வாசகங்கள் அவர் குரலிலேயே உங்களைத் தட்டி எழுப்பும். நீங்கள் எழும் வரை விடமாட்டார். இந்தச் செயலியில் ‘ஸ்னூஸ்’ பட்டனே கிடையாது. ‘காலையில் இழுத்துப் போத்திக்கொண்டு தூங்குவதை நான் வெறுக்கிறேன். அதற்குதான் இந்தச் செயலி’ என்கிறார் ராக்.


p84d.jpg

`போபியா' பட ட்ரெய்லர் மிரட்டியிருக்கிறது. `கபாலி' ஹீரோயின் ராதிகா ஆப்தேவின் அசத்தல் இது. ஆள் அரவமற்ற வீட்டில், தனிமையில் ஏற்படும் பாதுகாப்பற்ற பயத்தை நெருப்பாக நடித்து நெகிழ வைத்திருக்கிறார் ராதிகா. இந்த வருடத்தின் ஆகச் சிறந்த திரில்லர் படமாக இது இருக்கும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.


p84e.jpg

`ஏஸ் அகெய்ன்ஸ்ட் ஆட்ஸ்’  என சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியாகிறது. `என் வாழ்க்கைக் கதை, இந்தியாவின் அடுத்த தலைமுறை வீராங்கனைகளை தன்னம்பிக்கையுடன் உருவாக்கினால் மகிழ்ச்சி’ என்கிறார் சானியா.


p84f.jpg

`ஏய் தில் ஹை முஷ்கில்' படம் மூலம் மீண்டும் வருகிறார் கரண் ஜோகர். மூன்று வருடங்கள் ஜாலியாகச் சுற்றித்திரிந்தவர்,  ஒரு மெகா கூட்டணியோடு திரும்பி வந்திருக்கிறார்.
ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா... என மெர்சல் டீம். படம், தீபாவளி ரிலீஸ்.


p84g.jpg

p84h.jpg

ஃபுளோரிடாவில் உள்ள ஒரு பொம்மைக் கடைக்குப் போனார் ஜெனிஃபர். அங்கு வெள்ளை நிற பொம்மைகளும், பெண் குழந்தைகளுக்கான பொம்மைகளும்தான் இருந்தன. `ஆண் குழந்தைகளுக்கான மற்றும் கறுப்பினக் குழந்தைகளுக்கான பொம்மைகள் ஏன் இல்லை?' என யோசித்தார். உடனே, `மெலநிட்ஸ்' என்ற பெயரில் `பிரவுன் பாய்ஹுட்' என்ற கான்செப்டில் பொம்மைகளை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டார். கிறிஸ்துமஸுக்குள் ஆன்லைன் விற்பனையும் தயாராகிவிடும். `பொம்மைனா, அதைப் பார்க்கும் குழந்தைகள் அதில் அவங்களையே பார்க்கணும். அதுக்காகத்தான் என்னுடைய இந்த முயற்சி’ என்கிறார் ஜெனிஃபர்.


p84j.jpg

`டங்கல்' படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்தப் படத்துக்காக மாமிச மலைபோல ஏற்றிய உடலை இப்போது ஸ்லிம் ட்ரிம்மாக மாற்றி, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் அமீர் கான். தலைப்பு, `சீக்ரெட் சூப்பர்ஸ்டார்'. இதில் அமீர் `இசையமைப்பாளர்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், படத்தின் ஹீரோ அவர் கிடையாது. யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

vikatan

  • தொடங்கியவர்

13221290_1041754779206549_60192955828445

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை வீரரும், தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கலக்கி வரும் சகலதுறை வீரர் கிரண் பொல்லார்டின் பிறந்தநாள் இன்று
 

  • தொடங்கியவர்

கண்ணே கேமராதான்!

 

p90.jpg

ண்டனைச் சேர்ந்த ஸ்டீபன் வில்ஷிரே வித்தியாசமான மனிதர். இவருடைய கண்கள் கேமரா போன்றதாம். எந்த  ஒரு காட்சியையும் ஒரு முறை பார்த்தால் அதை அப்படியே வரைந்து அசத்திவிடுவாராம்.

ஐந்து வயதாகும்போது இவருக்குள் இருக்கும் ஓவியத்திறமையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஸ்டீபனின் பெற்றோர்கள். பள்ளியில் படிக்கும்போது முதன் முறையாக பிரஷைக் கையில் எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் விலங்குகள், கார்களை வரைந்து பழகியவர், ஏழு வயதாகும்போது புதிய முயற்சியாக லண்டனில் இருக்கும் முக்கியமான சில இடங்களை வரையத் திட்டமிட்டு ஒரே ஒரு முறை அந்த இடங்களைப் பார்த்துவிட்டு அப்படியே வரைந்திருக்கிறார். இதனால் சின்ன வயதிலேயே லண்டன் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவருடைய அபூர்வமான திறமையைப் பார்த்து வியந்த பள்ளி ஆசிரியர் இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.

குறிப்பிட்ட சில இடங்கள், கட்டடங்களை மட்டும் அதுவரை வரைந்து வந்தவர், திடீரென விஸ்வரூபம் எடுத்து பூமியின் நில அமைப்பையே வானில் இருந்து வரையத் தொடங்கிவிட்டார். இதற்காக ஹெலிகாப்டரில் பல கிலோமீட்டர்கள் பறந்து வரைய வேண்டிய இடங்களைப் பார்த்தபடியே செல்வாராம். தரை இறங்கியதும் அதை அப்படியே கேன்வாஸில் கொண்டுவந்து ஆச்சரியப்படுத்திவிடுவாராம்.

p90a.jpg

இது எப்படி சாத்தியம் எனக் கேட்பவர்களுக்கு, “எந்த ஓர் இடத்தையும் தெளிவாக ஒருமுறை பார்த்துவிடுவேன். என்னுடைய கண்கள் ஒரு கேமராவைப் போல  செயல்படும். இதனால் அந்த இடத்தின் ஒவ்வொரு அங்குலமும் மனதில் அப்படியே  பதிந்துவிடும்” என்கிறார். குறிப்பாக லண்டனின் சில பகுதிகளை வரையத் திட்டமிட்டபோது ஹெலிகாப்டரில் நான்கு சதுர மைல் தூரம் சுற்றி 19 அடி பேப்பரில் வெறும் இருபதே நிமிடங்களில் வரைந்திருக்கிறார். அதேபோல் ஜப்பான் நிலநடுக்கத்தின் போதும் ஹெலிகாப்டரில் பறந்தவர், அங்கே ஏற்பட்டுள்ள பாதிப்பை 32 அடி நீள கேன்வாஷில் ஏழு நாட்கள் வரைந்தார். இந்த ஓவியத்தை ஹாங்காக், துபாய், ஜெருசலம் ஆகிய நாடுகளில் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இதில் ஹைலைட்டான விஷயம் இந்த ஓவியங்களில் இருக்கும் அனைத்து இடங்களும் இம்மி பிசகாமல் அந்தந்த இடத்திலேயே இருக்கின்றன.  பிறரிடம் பேச்சு மூலம் தொடர்பு கொள்வதைவிட ஓவியம் மூலம் தொடர்புகொள்வது எளிதான விஷயம் என்பது ஸ்டீபனின் தத்துவம்!

vikatan

  • தொடங்கியவர்

ஸ்டார் ஃபிட்னெஸ்

தினமும் வொர்க்அவுட் செய்வதைத் தவிர்க்கும் பலரும் சொல்லும் காரணம் `நேரம் இல்லை.’ ஆனால், அது உண்மையா? `இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி... எப்பவும் பிஸி’ என்று கிண்டலுக்காகச் சொல்லப்படுவதைக் கவனித்து இருப்போம். உண்மையில், அமெரிக்க அதிபர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

p14a.jpg

dot3%283%29.jpg`இளம் வயதிலேயே உடற்பயிற்சியை என் வாழ்வின் ஓர் அங்கமாக்கிக்கொண்டேன். எனக்காகவும் சரி, நாட்டுக்காகவும் சரி... உடல்நலம் முக்கியம் என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன். அதனால்தான் சொல்கிறேன், இளைஞர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறைகொள்ள வேண்டும்’ என்கிறார்.

dot3%283%29.jpg22 வயதில் இருந்தே புகையிலை, மது இரண்டையும் ஒபாமா தொடுவது இல்லை. `நம் உடலுக்குள் செலுத்தும் அசுத்தங்களைக் குறைப்பதுதான் எளிதான உடற்பயிற்சி’ என்பது ஒபாமா ஸ்டைல்.

dot3%283%29.jpgஒபாமா இளம் வயதில் தனது உடற்பயிற்சிகளைத் தொடங்கிய காலத்தில், தினமும் மூன்று மைல் ஓடுவார். இன்று வரை அந்தப் பழக்கம் மாறவில்லை. `உடற்பயிற்சி என்பது அன்றாட விஷயம். அது நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்’ என்பது ஒபாமாவின் ஹெல்த் ரூல்.

dot3%283%29.jpgவிளையாட்டின் மீது ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். வாரம் நான்கு நாட்கள் வொர்க்அவுட். கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் இரண்டு நாட்கள். `விளையாட்டும் உடற்பயிற்சிதான். ஆனால், உடற்பயிற்சியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பது ஒபாமா பன்ச்.

dot3%283%29.jpgஆர்கானிக் உணவுகள் மீது ஒபாமாவுக்கு நம்பிக்கை அதிகம். அமெரிக்கா முழுவதும் பிரபலமான ஜங்க் ஃபுட்கள் அவருக்கு அலர்ஜி. நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகள் எல்லாமே ஒபாமாவின் ஃபேவரிட்’ என ரகசியம் சொல்கிறது வெள்ளை மாளிகை கிச்சன்.

p15a.jpg

dot3%283%29.jpgஒபாமாவைவிட அவர் மனைவி மிஷல் ஒபாமா உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அமெரிக்கர்களை ‘ஓடு... ஓடு’ என முடுக்குபவர் இவர்தான்.

dot3%283%29.jpg‘`உண்மை அறிவோம்’ என்பது முதல் பாயின்ட். உடற்பயிற்சிகளைத் தொடங்கும் முன், என்ன செய்தால் நம் உடல் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை அறிவது அவசியம்’ என்கிறார் மிஷல். அதனால், முறையான ஆலோசகரை நாடி, அவரிடம் கேட்டுப் பயிற்சிபெறச் சொல்கிறார்.

dot3%283%29.jpg`ஆரோக்கிய உணவே போதுமானது. நாம் உண்ணும் அதிகப்படியான உணவைச் செரிக்கத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. எனவே, தேவையானவற்றை, அளவாக உண்பதும் ஒருவித உடற்பயிற்சிதான்’ என்கிறார்.

dot3%283%29.jpg`நாம் சொல்வதை உடல் கேட்டால்தான், மனமும் கேட்கும். எனவே, உங்கள் உடலை நீங்கள் விரும்பும்வண்ணம் பராமரிக்கப் பழகுங்கள். மற்றவை தானாக நிகழும்’ என்பது ஒபாமா தம்பதி கண்ட உண்மை.

dot3%283%29.jpg`குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய மிக முக்கியமான விஷயம், உடற்பயிற்சிதான். எனவே, அதில் உங்கள் செல்லத்தைக் காட்டாதீர்கள்’ என்கிறார்.

dot3%283%29.jpg கடந்த ஐந்து ஆண்டுகளாக  ‘லெட்ஸ் மூவ்’ என்ற உடற்பயிற்சி சார்ந்த பிரசாரத்தை மேற்கொள்கிறார் மிஷல். `அமெரிக்கர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே எனது லட்சியம்’ என்கிறார் ஃபர்ஸ்ட் லேடி.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

மே 13

 

724pope.jpg1648 : இந்தியாவில் மன்னன் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் டில்லி நகரில் செங்கோட்டை நிர்மாணம் பூர்த்தியாகியது.

 

1787 : அவுஸ்திரேலியாவில் குடியேற்றம் அமைப்பதற்காக குற்றவாளிகள் நிறைந்த 11 கப்பல்களுடன் பிரித்தானிய தளபதி ஆர்தர் பிலிப் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டார்.

 

1846 : மெக்ஸிகோ மீது அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.

 

1861 : பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தானில் முதலாவது ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டது.

 

1917 : போர்த்துக்கலில் பாத்திமா மாதாவை நேரில் கண்டதாக 3 சிறார்கள் அறிவித்தனர்.

 

1939 : முதலாவது வர்த்தக எவ்.எம். வானொலி நிலையம் அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

 

1940 : பிரான்ஸ் மீதான ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.

 

1940 : ஜேர்மன் படைகளுக்கு அஞ்சி, நெதர்லாந்து அரசி வில்ஹெல்மினா பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்.

 

1950 : முதலாவது போர்மியூலா வன் மோட்டார் பந்தயப் போட்டி பிரிட்டனின் சில்வர் ஸ்டோன் நகரில் நடைபெற்றது.

 

1958 : அமெரிக்க உப ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் வெனிசூலாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, அவரின் கார் அமெரிக்க எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது.

 

1958 : பென் கார்லின் என்பவர், நிலத்திலும் நீரிலும் பயணம் செய்யக்கூடிய வாகனத்தின் மூலம்  உலகை சுற்றிவரும் பயணத்தை பூர்த்தி செய்தார். இப்பயணத்துக்கு 10 வருடகாலம் சென்றது. இச்சாதனையை புரிந்த ஒரே நபர் இவராவார்.

 

1969 : மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் சீன, மலாய் இனத்தவர் களிடையே பாரிய வன்முறை மூண்டது.

 

1972 : ஜப்பானின் ஒசாகா நகரில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீயினால் 118 பேர் உயிரிழந்தனர்.

 

1981 : ரோம் நகரில் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை கொல்லும் நோக்குடன் துருக்கியை சேர்ந்த மெஹ்மத் அலி என்பவர் பாப்பரசரை துப்பாக்கியால் சுட்டார். இதனால் காயமடைந்த பாப்பரசருக்கு அவசர சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

 

1989 : சீனாவின் தியனமென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

 

1995 : ஒட்சிசன் வாயுவை கொண்டுசெல்லாமல், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் எனும் சாதனையை பிரிட்டனைச் சேர்ந்த 33 வயதான அலிஸன் ஹார்கிறேவ்ஸ் என்பவர் படைத்தார்.

 

1998 : இந்தோனேஷியாவில் சீன இனத்தவர்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள் இடம்பெற்றன.

 

1998 : பொக்ரான் எனும் இடத்தில் இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. (1998 மே 11 ஆம் திகதியும் 3 அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியிருந்தது). ஜப்பானும் அமெரிக்காவும் இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தன.

 

2000 : நெதர்லாந்தில் பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

 

2006 : பிரேஸில் சிறைச்சாலைகளில் பாரிய வன்முறைகள் ஏற்பட்டன. 

 

2008 : இந்தியாவின் ஜெய்பூர் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்தனர்.

 

2011 : பாகிஸ்தானின் சர்ஸடா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 98 பேர் உயிரிழந்தனர், 148 பேர் காயமடைந்தனர்.

 

2014 : ஐரோப்பாவில்  வெள்ளத்தால் 47 பேர் உயிரிழந்தனர்.

 

2015 : புங்குடுதீவில் மாணவி வித்தியா கொல்லப்பட்டார்.

 

2015 : பிலிப்பைன்ஸின் வெலேன்சுவேலா நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நுவரெலியா வீட்டில் மூன்றரை அடி உயர தேன்கூடு
 

 

நுவரெலியா மாநகர எல்லைக்குள் உள்ள அன்டபேங்க் கிராமத்தில் வீடொன்றின் முன்பகுதியில் தேன் கூடொன்று  5 மாதங்களாக காணப்படுகிறது.

 

1661250.jpg

 

இந்த தேன் கூடு மூன்றரை அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

 

இந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இதுவரையிலும் எந்தவித இடையூறுகளும் தேனீக்களால் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 

1661251.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சமந்தாவின் டுவிட்டர் கலகல!
 
 

article_1463121736-2.jpg

தமிழ், தெலுங்கில் தற்போது  முன்னணி ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. தமிழில் 'தெறி, 24' என அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுக்களையும், தெலுங்கில் 'பிரம்மோற்சவம், அ...ஆ' ஆகிய வரப்போகும் இரண்டு ஹிட்டுக்காகவும் காத்திருக்கிறார். 

இந்நிலையில், டுவிட்டரில் நேற்று ஒரு மணித்தியாலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்தார். முதல் கேள்வியே விஜய்யைப் பற்றிய கேள்வியாக வந்தது.

விஜய்யைப் பற்றி ஒரு வார்த்தையில்...?
தெறிடா...

வெற்றியையும், தோல்வியையும் எப்படிப் பார்க்கிறீர்கள் ?
அவை என்னை சமமாகவே பார்க்க வைக்கின்றன.

தமிழ்நாடு தேர்தலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தயவு செய்து ஓட்டு போடுங்கள், அடுத்தவர்கள் உங்கள் முடிவை எடுக்க வேண்டாம்.

நீங்கள் மலையாளத்தில் நடிக்க விரும்பினால் யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பம் ?
துல்கர் சல்மான்

உங்கள் அபிமான நடிகர் யார் ?
இப்போது எட்டி ரெட்மேய்ன்

உங்கள் எப்போதுமான அபிமான திரைப்படம் எது ?
ஷஷாங்க் ரிடம்ப்ஷன்

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியம் எது ?
திரையுலகத்துக்கு பிறகான வாழ்க்கையில் வெற்றி.

பயணத்தின் போது மறக்காமல் நீங்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் என்ன ?
என் தோல் பாதுகாப்பு பற்றிய பொருட்கள், மருந்துகள், தரமான உள்ளாடைகள்.

சாகும் காட்சிகளில் நடிக்கும் போது அழ வைத்து விடுகிறீர்களே ? அது பற்றி...
உங்களை அழ வைக்கும் அளவுக்கு நடிப்பேனா என்பதுதான்...

கமர்ஷியல் வெற்றி அல்லது நல்ல விமர்சனம் ?
இரண்டுமே...

சில சமயங்கள் எட்ரே ஹெப்பர்ன்-ஐ ஆடை அலங்காரத்தில் ஞாபகப்படுத்துகிறீர்கள், அவர் உங்களை பாதித்துள்ளாரா ?
நன்றாகவே...

உங்கள் வாழ்க்கையில் இது இல்லாமல் இருக்க மாட்டேன் என நீங்கள் நினைப்பது ?
சவால்

நீங்கள் நடிகையாக இல்லையென்றால் என்னவாகியிருப்பீர்கள் ?
வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும்...

குற்றத்தனமான சந்தோஷம் எது ?
கவலையாக இருந்தால் நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிடுவேன்....

உங்கள் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் எது ?
அதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

குலாப் ஜாமூன் அல்லது ரசகுல்லா ?
குலாப் ஜாமூன்...

மக்களின் எந்தக் கேள்வி உங்களை வெறுப்படைய வைக்கும் ?
படபிடிப்பு தளத்தில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தைச் சொல்லுங்கள் என்பார்கள் அதுதான்... அது ஏன் என்னை வெறுப்படைய வைக்கிறது என்பது தெரியாது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ரசித்த சிறந்த திரைப்படம் எது ?
அது நிறைய இருக்கிறது....

உலகத்திலேயே உங்களது விருப்பமான இடம் எது ?
வீட்டைத் தவிர வேறு சிறந்த இடம் எதுவுமில்லை...

கேரளாவில் உங்களது அபிமான இடம் எது ?
ஆலப்புழை

உயிருடன் அல்லது இறந்தவர்கள் யாருடன் விருந்து சாப்பிட வேண்டும் ?.
எட்ரே ஹெப்பர்ன், ஹிட்லர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில்.

எந்த கேள்விக்கு பதிலளிப்பது உங்களை எரிச்சலடைய வைக்கும் ?
உங்களுடன் நடிப்பவர்களில் யாரைப் பிடிக்கும்...என்ற கேள்வி...

உங்களுக்குப் பிடித்தமான புத்தகம் எது ?
சாந்தாராம்

உலகத்தில் எந்த நாட்டுக்குப் போக விருப்பம் ?

பெரிஸ்

வெற்றியின் ரகசியம் என்ன ?
ரகசியம் எதுவுமில்லை, கடின உழைப்புதான்...

நீங்கள் எடுத்த ஏதாவது ஒரு முடிவு பற்றி வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?
ஆமாம், 2012ல் எடுத்த சில முடிவுகளைப் பற்றி...

அட்லீ, 'தெறி 2'ஆம் பாகத்துக்கு நடிக்க அழைத்தால் போவீர்களா ?
அதில் என்ன சந்தேகம்...

இயக்குநர் அட்லீ பற்றி ....
எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் இல்லாமல் அவர் ஒருவருடன் பணியாற்றுவேன்...

உங்கள் விருப்பமான நிறம் எது ?
சீசனுக்கு ஏற்றபடி மாறும்...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் சிறிய அட்வைஸ் என்ன ?
அனைத்து இளைஞர்களே, பெரிதாகக் கனவு காணுங்கள்...சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்...

ஜிம் அல்லது காபி ஷாப் ?
ஜிம்...

உங்கள் விருப்பமான உணவு ?
ஜப்பானிஸ்...

யாருடன் நடனமாட பயப்படுவீர்கள் ?
ஜுனியர் என்டிஆர்.

கடவுள் உங்களுக்குக் கொடுத்த மிகச் சிறந்த விஷயம் எது ?
என்னுடைய உறுதி...

ஹொரர் திரைப்படங்களில் நடிக்க ஐடியா உள்ளதா ?
ஆமாம்..ஆமாம்..ஆமாம்..

உங்களுடைய உண்மையான போட்டியாளர் யார் ?
நான் போட்டியை விரும்புபவள், அது உத்வேகத்தைக் கொடுக்கும். ஆனால், பெயர் மட்டும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும்...

கடினமான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வீர்கள்?
தனிமையாக இருப்பேன்...

நடிக்காத போது எந்த விடயத்தைச் செய்ய ஆசைப்படுவீர்கள் ?
சமைக்கக் கற்றுக் கொள்வேன்.

உங்களுக்கு வரும் மிகச் சிறந்த பயம் எது ?
ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் போவது...

உங்களுடைய ஸ்டைல் பற்றி...
சிறிய மற்றும் கம்பீரமானவள்...

உங்களிடம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது ?
'மூடி'யாக இருப்பதை...

உங்களைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்...
ஒரு வார்த்தை கடினம், நான் தேர்வு செய்ததே நானாக இருக்கக் காரணம்...

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வாத்தியக் கலைஞரான தவில் இசை வித்தகர் இணுவில் வி. தெட்சணாமூர்த்தி அவர்களின் நினைவு தினம்.

13151881_1042357119146315_84899375453698

  • தொடங்கியவர்

இதுதான்... இவ்வளவுதான் அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது!

 

collage.jpg

ஆண் -  பெண் உறவில்,  பெண் தன் நேசத்தில் நிறைந்து தளும்புகிறவளாக இருக்கிறாள். அவள் காதலை மட்டும் கடலெனப் பருகிவிட்டு, அவன் அவளுக்கு பதிலுக்குக் கொடுப்பது, காகம் கல்லைப்போட்டுக் குடித்த தண்ணீரைப்போல தூரில் கிடக்கும் பிரியம் மட்டுமே. நியாயம்தானா இது? 

‘நான் என்னதான் செய்யணும்... அப்படி அவளுக்கு என்னதான் வேணும்?’ என்ற ஆண்களின் கேள்விகள் வேண்டுமானால், அதை ஒரு சிக்கலான விஷயம்போல சித்தரிக்கலாம். ஆனால் அதற்கான பதிலும், அவள் எதிர்பார்ப்பும் மிகவும் எளிமையானவை. உங்கள் காதலி, மனைவி உங்களிடம் வேண்டுவது, ஏங்குவது, அன்பின் பரிமாற்றமே!  
 
உங்களுடன் பேச வேண்டும்!
 
அவளுக்கு உங்களுடன் பேச வேண்டும். எவ்வளவு பரிதாபமான கோரிக்கை இது? ஆனால் அதுதான் அவள் நிலை. அவள் சந்தோஷங்களை, துக்கங்களை, அச்சங்களை, கேளிக்கைகளை அவள் உங்களிடம் பேச வேண்டும், பகிர வேண்டும். யோசித்துப் பாருங்கள்... சமையல் குறித்த கட்டளைகள், பள்ளி, ட்யூஷன், ஃபீஸ் என்று குழந்தைகள் குறித்த விசாரிப்புகள், அலுவலகம், தொழிலில் நீங்கள் பெற்று வரும் அழுத்தங்களை வெளிப்படுத்தும் கோபங்கள், தலைவலி, கால்வலி என்று உங்கள் உடல் நோவைச் சரிசெய்யச் சொல்லும் ஏற்பாடுகள்... இதுதான் உங்களுக்கும் அவளுக்குமான உரையாடலாக இருக்கிறது. 
 
என்றாவது அவளிடம், உங்கள் தொழிலின் வெற்றித் தருணங்களை, அலுவலகத்தில் அன்று பெற்ற பாராட்டை, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ரசித்த ஒரு பதிவை அவளுடன் பகிர்ந்திருக்கிறீர்களா? அல்லது, அவளது செடி பூத்த முதல் மலரை, அவள் ரசித்த பாடலை, அவள் ஊரின் கதைகளைப் பற்றி அவள் உங்களுடன் பேசி மகிழும் மணித்துளிகளை அவளுக்குத் தந்திருக்கிறீர்களா? அதைவிட மேலான வேலைகள் உங்களுக்கு இருப்பதாக இப்போதும் நீங்கள் நினைத்தால், ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் வெட்டியாகக் கழிக்கும் பொழுதுகளைச் சுட்டிக்காட்டட்டும் உங்கள் மனசாட்சி உங்களுக்கு! 
 
சின்னச் சின்ன அக்கறை வேண்டும்!
 
சமையல் அறையில் குக்கர்பட்ட சூடு, காய் நறுக்கும்போது கத்தி அறுத்த வெட்டு, வழுக்கி விழுந்த ரத்தக்கட்டு, வேலைக்கு விரைந்து ஓடுகையில் எங்கோ இடித்து கன்னிப்போயிருக்கும் வலிகளில் இருந்து பிரசவத் தையல்கள் வரை... அவளின் எந்தக் காயங்களும் உங்களுக்குப் பதறாதுதான். அதனால் இப்போதெல்லாம் அவளுக்கு எல்லாக் காயங்களும் ஊமைக்காயங்களே. ஆனால், இத்தனை வலிகளையும் அவள் உங்களுக்காக, உங்களாலேயே அனுபவிக்கிறாள் என்ற உண்மையும் உங்களால் உணரப்படாமல் ஊமையாகிக்கிடப்பதுதான் வேதனை. 
 
ஒரு காய்ச்சல் என்றால்கூட அம்மாவையோ, மனைவியையோ படுத்தியெடுக்கும் ஆண்களின் சௌகரியம் எல்லாம் அறியாதவள் அவள். ஒருவேளை அவளது தலைவலியை அவள் வாய்விட்டுச் சொன்னால், முதுகு வலிப்பதாகச் சொன்னால், பித்தவெடிப்பில் ரத்தம் கசிவதாகச் சொன்னால், சொன்னதில் இருந்து மறுமுறை, ஒரே ஒருமுறை, ‘சரியாயிடுச்சா?’ என்று மனதிலிருந்து கேளுங்கள். காலையில் சொன்ன அவளின் வலியை, அந்த நாளின் முடிவில் நீங்கள் நினைவுவைத்துக் கேட்பதிலேயே பாதி நோவு பறந்துவிடும் அவளுக்கு!
 
அவள் சுமை உணர வேண்டும்!  
 
வீடு, வேலை என்று இரட்டைச் சுமையில் தள்ளாடும் பெண்களைப் பற்றி பேசினாலே பிடிப்பதில்லை உங்களுக்கு. உங்களின் தேவைகள், உங்கள் வீட்டின் ஒழுங்கு, உங்கள் பிள்ளைகளின் பொறுப்புகள் இவற்றில் எல்லாம் எந்தக் குறையும் இல்லாதவாறு, அவள் பணிக்குச் செல்ல ஆட்சேபம் சொல்லாத மகத்தான சுதந்திரம் நீங்கள் அவளுக்குக் கொடுத்திருப்பது. ஆம், அவள் தலையணை உறை மாற்றி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதுதான். ஆம், அவள் இந்த வீட்டை இன்னும் நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்தான். ஆம், நீங்கள் மெத்தைமீது வீசிவிட்டுப் போகும் ஈரத்துண்டை அப்புறப்படுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லைதான். செய்கிறாள். சிணுங்கிக்கொண்டோ, முணங்கிக்கொண்டோ, விம்மிக்கொண்டே அவள் இதையெல்லாம் செய்கிறாள். 
 
அலுவலகத்தின் திறன் ஓட்டத்தில், முதுகில் உங்கள் வீட்டைச் சுமந்தபடியே ஓடும் அவளை, கால்கள் இரண்டையும், கைகள் இரண்டையும் காற்றின் விசையில் வீசி ஓடும் அவளின் சக ஆண் போட்டியாளர் கடந்துசென்று எக்களிக்கும்போதும், அவள் துவண்டுபோய்விடுவதில்லை. ஏனெனில், தன் வீட்டை விலையாகக்கொடுத்து ஈட்டும் எந்த வெற்றியும் வெற்றியல்ல என்பதை அவள் அறிவாள்.
 
அப்படியிருந்தும், ‘வீட்டை ஒழுங்காவே பார்க்கிறதில்ல’ என்ற உங்களின் நன்றியில்லாத பேச்சுதான் அவளைத் துண்டு துண்டாக்கிவிடுகிறது. பெரிதாக அடுக்குவதால், பெரிதாக எதுவும் கேட்கவரவில்லை. அவள் தன் இரட்டைச் சுமை பற்றிப் புலம்பும்போது, அதை நம்புங்கள். அவள் சிரமங்களை ஒப்புக்கொள்ளுங்கள். ‘ரொம்ப வேலையா... ரெஸ்ட் எடுத்துக்கோ’ என்ற உங்களின் வார்த்தைகளே, அவள் இயக்குத்துக்கான எரிபொருள்! 
 
சிரிப்பில் கரைய வேண்டும்! 
 
அவளை நீங்கள் கடைசியாக சிரிக்கவைத்தது எப்போது? மிகக் கடினமான கேள்வி இது. சரி, அவளிடம் நீங்கள் கடைசியாக சிரித்துப் பேசியது எப்போது? அதனினும் கடினமான கேள்வியாக இருக்கக்கூடும். அலுவலகம், முகநூல், வாட்ஸ்அப் குரூப்கள் என்று எங்கும் பொங்கிப் பிரவாகமெடுக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வால், உலகத்தையே சிரிக்கவைக்க மெனக்கெடுகிறீர்கள். உங்கள் அலைபேசியில் உள்ள பெண் கான்டாக்ட்களுக்கு செய்தி அனுப்பும்போது, அது அலுவல் செய்தியாக இருந்தாலும்கூட குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலி இல்லாமல் அனுப்புவதில்லை. 
 
ஆனால், அவளிடம் நீங்கள் சிரித்துப் பேசவும், அவளை நீங்கள் சிரிக்கவைக்கவுமான தகுதியற்றவளாக அவள் ஆகிப்போனது துயரம். ஓர் உண்மை என்னவெனில்,  நீங்கள் சிரிக்கப் பேசும்போது மற்றவர்கள் எல்லாம் நீங்கள் உதிர்க்கும் சிரிப்புத் துணுக்குகளை ரசிப்பவர்கள். அவள், அந்தச் சிரிப்பில் பூக்கும் உங்களை ரசிப்பவள். மகிழ்ந்து, லயித்து நீங்கள் அவளிடம் ஒரு நகைச்சுவையை பகிரும்போது, மின்னும் உங்கள் கண்களில் காதல் கொள்பவள். யார் யாருக்கோ விதவிதமான ஸ்மைலிங் எமோஜிகளை தேடித் தேடித் தட்டும் நீங்கள், சின்ன ஸ்பரிசம் தரும் அருகாமையில் அவளிடம் அமர்ந்து சிரித்துப் பேசினால்போதும், அருவி அன்பு அது அவளுக்கு. நனைந்து கரைந்துபோவாள்! 
 
காற்றலையில் அனுப்பும் காதல் வேண்டும்!
 
வீட்டைவிட்டு வெளியேறும்போது அவளை மறந்துபோகிறீர்கள். மீண்டும் வீட்டுக்குள் நுழையும்போதே உங்கள் உலகில் அவள் நுழைகிறாள். ஆனால் அவளால் அவ்வாறு உங்கள் நினைவின்றி இருக்க முடியாது. அந்தத் தனிமையை துரத்தத்தான் டிவியில் இருந்து இணையம்வரை தன்னை ஒப்படைக்கிறாள். அந்தப் பகல்களில் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி, ஓர் அலைபேசி அழைப்பு உங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால், அவளின் அந்த நாள் அத்தனை அழகாகிவிடும். 
 
சப்பாத்திக்கு மாவு பிசைந்துவைப்பதில் இருந்து, பிள்ளைகள் இரைத்துவிட்டிருந்த பொருட்களை எடுத்து வைப்பதுவரை, பின் இரவு நீங்கள் வீடு திரும்பும் சூழலை சுகமாக்குவதற்கான வேலைகளை முன் இரவே முடித்துவைப்பவள் அவள். காலணி கழட்டும்போது அவளைக் கண்டுகொள்ளாமல் கவிழ்ந்துகொண்டாலும்கூட, உங்கள் கண்களை விடாமல் துரத்தி அசதியா, அழுத்தமா, சந்தோஷமா, கோபமா என்று உங்கள் முகத்தில் மனதைத் தேடி நிற்பவள் அவள். அவள் பகல்களை மலரச் செய்யும் பிரியத்தை காற்றலையில் அனுப்பலாம்தானே?! 
 
அவள் புரிந்துகொள்ளப்படப் பிறந்தவள் அல்ல. நேசிக்கப்படப் பிறந்தவள். அவள் தன்னைப்பற்றி விளக்கத் தேவையில்லாத அளவுக்கு நீங்கள் அவளுக்குக் கிடைத்துவிட்டால், அவள்தான் இந்த உலகின் மிக சந்தோஷமான, ஆசிர்வதிக்கப்பட்ட பெண்!
 
உங்கள் வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாளா?!
vikatan
  • தொடங்கியவர்

13227740_1042356032479757_45037482683419

ஹிந்தித் திரையுலகின் கவர்ச்சி ராணி சன்னி லியோனின் பிறந்தநாள்.

தமிழிலும் 'வட போச்சே'யில் கலக்கியவர் சன்னி
Happy Birthday Sunny Leone

ஆயிரக்கணக்கான இளைஞரின் அன்பை வென்றுள்ள நடிகை இவர்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

p15a.jpg

dot1.jpg அ.தி.மு.க பிரசாரங்களில் எப்போதுமே ஆட்டம் - பாட்டத்துக்குக் குறைவிருக்காது. பிரசார மேடைகளில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்-கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த முறை ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் பிரசாரத்தின்போது கொஞ்சம் ஹைடெக்காக ஹிப்ஹாப் டான்ஸுக்கு ஏற்பாடுசெய்திருந்தனர் வடசென்னை அ.தி.மு.க.வினர். ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை', `தங்கத்தாமரையே வருக வருக’ பாடல்களுக்கு இடையே குத்துப்பாடல்களுக்கும் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது ஹிப்ஹாப் டீம். புது வியூகமா இருக்கே!

11.jpg


p15b.jpg

dot1.jpg ‘ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது, அவருக்கு ஒரு ரூபாய்கூட சொத்து கிடையாது. ஆனால், தற்போது 120 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனு தாக்கல்செய்திருக்கிறார். இதனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவார். முதலமைச்சர் ஆகமாட்டார். சசிகலாதான் முதலமைச்சர் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள `அம்மா உணவகம்’, `அம்மா பள்ளிக்கூடம்’, `அம்மா ஸ்கூட்டர்’ போல விரைவில் அம்மாவுக்கு ஜெயிலும் வரும்’ என சுப்ரமணியன் சுவாமி பேச, பக்கத்தில் அப்பாவியாக நின்றுகொண்டிருந்த பா.ஜ.க வேட்பாளர், `கடைசி வரைக்கும் `நாம ஜெயிப்போம்'னு சொல்லவே மாட்டேங்கிறாரே...' எனக் குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தார். இவருக்கு பேச்சுல கண்டம்!


p15c.jpg

dot1.jpg மதுரை, கோவை பிரசாரங்களை முடித்துக்கொண்டு சென்னை வந்த ராகுல்காந்தி கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தை, வேகம். சென்னை மதுரவாயலில் இரவு 8 மணிக்குத் தொடங்கவேண்டிய கூட்டத்துக்கு 9.45 மணிக்குத்தான் வந்தார் ராகுல். ‘மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமாக வந்தது. சென்னை விமானநிலையம் வந்ததும் கார் டிரைவரிடம் `வேகம்... வேகம்...' என்று சொல்லிக்கொண்டே வந்தேன். அதனால்தான் 10 மணிக்கு முன்னாள் வர முடிந்தது’ எனச் சிரித்தபடி சொன்னார் ராகுல். மதுரவாயலில் சரியாக பத்தே நிமிடங்கள் மட்டுமே பேசினார். பேசும்போது ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என எல்லோரின் பெயருக்குப் பின்னாலுமே மறக்காமல்ஜி சேர்த்துக்கொண்டார். ‘5000 ரூபாய்க்கு இலவசங்கள் கொடுத்துவிட்டு, மதுக்கடைகள் மூலம் உங்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாயைப் பறித்துக்கொள்கிறார் ஜெயாஜி’ என்று சொல்லிவிட்டு தமிழில் வணக்கம் போட்டார் ராகுல். ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்!


p15d.jpg

dot1.jpg வில்லிப்புத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் முத்துக்குமார்தான், கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதில், தமிழத்தின் இளம்வேட்பாளர்.

32 வயது முத்துக்குமார் சென்னை எம்.ஐ.டி-யில் பி.டெக் முடித்து அமெரிக்காவின் கெல்லாக் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். ஜப்பானில் மாதம் 6 லட்ச ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த முத்துக்குமாரை, ÿவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட அழைத்துவந்திருக்கிறார் கிருஷ்ணசாமி. ‘கோவில்பட்டிதான் என் சொந்த ஊர். நான் மட்டும் நல்லா சம்பாதிச்சு, சொகுசா இருந்தாபோதுமா? என் மக்கள் இன்னும் கஷ்டப்படுறாங்களே? அதான் அண்ணண் சொன்னதும் ஜப்பானில் இருந்து  கிளம்பிட்டேன்’ என்கிறார் முத்துக்குமார். படித்தவர், பண்பாளர், இளைஞர்!

vikatan

  • தொடங்கியவர்

13217515_1042355519146475_83716251809851

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நுவான் சொய்சாவின் பிறந்தநாள் இன்று
 

  • தொடங்கியவர்

வாழ்வியல் தரிசனம்

article_1463111816-uititu.jpgதோல்வியடைந்தால் மனம் சோர்ந்திடக் கூடாது என்கிறோம்.

அதேபோல், வெற்றிகளை நாம் பெற்றுவிட்டாலும் உள்ளம் பேதலிக்கக்கூடாது. அதாவது, வெற்றி பெற்றுவிட்டோம் என நாம் மமதை கொண்டு தங்களை மறந்து எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது.

எமக்கு அனுகூலமான விடயங்கள் நடந்தால் சந்தோஷமடையாமல் இருக்க முடியுமா? எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வரப்பிரசாதங்களும் கடவுளால் கிடைக்கப்பட்டது எனக் கருதி, அதனை ஏற்று அவருக்கே அதனை அர்ப்பணம் செய்வதே நன்றியறிதலாகும். மேலும், எமக்கு இது விடயத்தில் உதவியோரையும் நினைக்க வேண்டும்.

பணிவுடன் நல்லவற்றை ஏற்பதே அடுத்தடுத்து வரும் வெகுமதிகளுக்கான வழியுமாகும்.

எல்லாமே என்னாலே தான் என எண்ணி விடுதல் ஆணவத்தை அணைத்தலாகும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13221343_1042353395813354_22162202166021

பிரபல இளம் பின்னணிப் பாடகர் பென்னி தயாளின் பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற பூசை..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.