Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அட... சென்னைல இப்படியும் நடக்குமா..?

 

central6002.jpg

 

ந்த தேர்தல் பரபரப்பையும் தாண்டி ஒரு ஃபேஸ்புக் தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்தி, சிந்திக்க வைத்தது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் போகும்போதும் வரும்போதும் முன்னால் சென்ற வாகனத்தை இடித்து, ஏதாவது உடைந்துவிட்டால் ஒரு ‘ஸாரி’ சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவோம். பாதிக்கப்பட்டவரும் , ‘இந்த நெரிசலில் ஏன் வம்பு’ என கடந்துபோய்விடுவார். இல்லையேல் இருதரப்பும் வாக்குவாதத்தில் இறங்கினால் கூட்டம் கூடி, போலீஸில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்குக்கூட போய்விடுவது உண்டு. இது, சென்னைவாசிகள் அன்றாடம் சந்திக்கும் காட்சி. சமயத்தில் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு,  போய் திரும்பிவந்து பார்க்கும்போது கண்ணாடி, லைட்டுகள், இண்டிகேட்டர்கள் உடைந்து இருப்பதை பார்த்திருப்போம். ‘எவன்டா இப்படி உடைச்சி வெச்சிருக்கான். அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...’ என்று கொலைவெறி கொள்வோம்.

அப்படி ஒரு வாகன ஓட்டியை கொலைவெறி நிலைக்கு கொண்டுபோன ஓர் உடைப்பு ஆசாமி, பிறகு backlite1.jpgதான்செய்த செயலால் அந்த வண்டி உரிமையாளரை நெகிழச் செய்து இருக்கிறார். மனிதமும் நேர்மையும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அந்த சம்பவம்.

கடந்த 14 ம் தேதி இரவு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே,  மார்க் நைட் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தால், வண்டியின் பின்புறம் விளக்கு உடைந்து காணப்பட்டுள்ளது. ‘எவனோ உடைச்சுட்டு ஓடிட்டான்...’ என்று மார்க் மனசுக்குள் திட்டிக் கொண்டிருக்கும்போதே, வண்டியில் மாட்டிவைத்திருந்த அவரின் ஹெல்மெட்டுக்குள் ஒரு சிறிய வெள்ளை பேப்பர் சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததை கவனித்தார். அதனை பிரித்து பார்த்தால், உள்ளே 200 ருபாய் பணம். அத்துடன் வண்டியின் பின்புற லைட்டை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்டு சில வாசகங்கள். பணத்தையும் கடிதத்தையும் பார்த்த மார்க்குக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. இந்த காலத்திலும் இப்படி மனிதர்க்ள் இருக்கிறார்களா? என்று அதனை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் மார்க், "சாலையில் அவசரமும் பொறுப்பற்றத்தன்மையுடன் நடந்துகொள்பவர்களுக்கு மத்தியில் மனிதத்தை வலியுறுத்தும்வகையில், அந்த நண்பர் இந்த காரியத்தை செய்திருக்கிறார். இன்னமும் எனக்கு அந்த நபர் வியப்பை அளிக்கிறார். நண்பர்களே இந்த விஷயத்தை தயவு செய்து ஷேர் செய்யவும். எனது நன்றி அந்த மனிதருக்கு சென்று சேர வேண்டும். இந்த விஷயத்தை யார் செய்தாலும் அவர் ஒரு நல்லமனிதர்" என்று பதிவிட்டுள்ளார். இது ஃபேஸ்புக்கை கலக்கி வருகிறது.

யார் சொன்னா சென்னை மனிதம் இல்லாத ஊருனு?

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எரிகல் விழும் காட்சி
====================

எரிகல் ஒன்று விழும் காட்சி வட அமெரிக்காவில் தெளிவாக தெரிந்ததாம். விமான நிலையத்தின் அருகில் இருந்த கெமராக்களில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பூமிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

  • தொடங்கியவர்

கார் போன்ற சிறிய வகை விமானம் ; விரைவில் சந்தையில்

 

கார்களைப் போன்று எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை விமானத்தை ஜேர்மனியைச் சேர்ந்த "லிலியம்' என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.

குறித்த விமானத்தை வீட்டு மின்சாரத்தில் மின்னேற்றம் செய்து கொண்டு, இரண்டு பேருடன் 500 கிலோ மீற்றர் வரை பறந்து செல்லக்கூடியவாறும் இந்த விமானத்தை நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக மேலே கிளப்பவும், நினைத்த இடத்தில் செங்குத்தாக கீழே இறக்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

இதுகுறித்து "லிலியம்' நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டேனியல் வீகண்ட் கூறியதாவது:

33F327AE00000578-3579328-image-a-12_1462

சாதாரண மக்களின், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தக் கூடிய விமானத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள்.

நாங்கள் உருவாக்கும் விமானங்களுக்கு, விமான நிலையங்களின் சிக்கலான, செலவு பிடிக்கும் உட்கட்டமைப்பு தேவை அமையாது வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலிருந்தே அந்த விமானத்தை பறக்கச் செய்யவும், தரையிறக்கச் செய்யவும் இயலும் வகையில் அந்த விமானத்தை வடிவமைத்து வருகிறோம்.

விமானத்தில் இருந்து வெளியேறும் சத்தத்தை குறைக்க, சாதாரண விமான என்ஜின்களுக்குப் பதிலாக மின்சார என்ஜின்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு, தரையிறங்கும் போதும், கிளம்பும் போதும் நீண்டு மடங்கும் சக்கரங்கள், இறக்கை போல் உயர்ந்து இறங்கும் கதவுகள், ஏராளமான இட வசதி, வீட்டு மின்சாரத்திலும் கூட மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன் (பேட்டரி) ஆகிய அம்சங்களை எங்கள் விமானம் கொண்டிருப்பது சிறப்பாகும்.

33F3259B00000578-3579328-The_egg_shaped_

எதிர்வரும் 2018-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடிய அந்த விமானங்கள், ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 500 கி.மீ. வரை பறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

 "லிலியம்' நிறுவனம் உருவாக்கி வரும் விமானத்தின் மாதிரி வடிவம் சோதிக்கப்பட்டு வருகிறது. 

virakesari

  • தொடங்கியவர்
ஓய்வேதுமின்றி 80 மணித்தியாலங்களில் 563 கி.மீ. ஓடிய நபர்
 

1671665.jpgஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஓய்வேதுமின்றி சுமார் 80 மணித்தியாலங் களில் 563 கிலோமீற்றர் தூரம் ஓடும் ஆற்றலைக் கொண்டுள்ளார்.


டீன் கார்னாஸெஸ் என்பவரே இந்த அபூர்வ ஆற்றலைக் கொண்டுள்ளார்.  இவ ரின் உடலில் உள்ள அரிய வகையான மரபியல் நிலைமையே இதற்குக் காரணம்.

 
53 வயதான டீன் கார்னாஸெஸ் சிறு வயதிலிருந்து இவர் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்.


உயர் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் மைதானத்தில் 15 சுற்றுகள் கொண்ட ஓட்டப் போட்டியொன்றில் டீன் கார்னாஸெஸ் பங்குபற்றினார்.

 

எனினும் அவருக்கு களைப்பு எதுவும் தெரியவில்லை. அதனால், மேலதிகமாக 90 சுற்றுகள் அவர் ஓடினார். அப்போதுதான் தனக்கு ஓர் அபூர்வ ஆற்றல் இருப்பதை அவர் முதன்முதலில் உணர்ந்துகொண்டாராம்.


இரு பிள்ளைகளின் தந்தையான அவர், இப்போதும் ஓட்டப் போட்டிகளில் பங்கு பற்றி வருகிறார். மரதன் ஓட்டப் போட்டிகள் 42.195 கிலோமீற்றர் (26.2 மைல்) தூரம் கொண்டது.

 

1671663.jpg

 

ஆனால், இந்தத் தூரமெல்லாம் டீன் கார்னாஸெஸூக்கு ஒரு பொருட்டே அல்ல. ஓய்வே எடுத்துக் கொள்ளாமல் 80 மணித்தியா லங்கள், 44 நிமிடங்களில் (350 மைல்) 563 கிலோமீற்றர்) தூரம் அவர் ஓடி முடித்துள்ளார்.


50 நாட்களில் 50 மரதன் போட்டிகளில் கலந்துகொண்ட சாதனை யையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அப்போதும் அவருக்கு தசைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையாம்.


1671664.jpg

 

பொதுவாக நாம் உடற்பயிற்சிகள், ஓட்டத்தில் ஈடுபடும்போது உடலில் உள்ள குளுகோஸ் சக்தியாக மாற்றப்படுகிறது. இதனால் லக்டிக் அமிலம் உற்பத்தியாகும்.

 

அந்த அமிலம் அதிகரிக்கும் போது தசைப்பிடிப்பு, களைப்பு ஏற்படும். இந்த நிலையில், நாம் சுவாசிக்க வேண்டியிருக்கும்.


1671662.jpg

 

ஆனால், டீன் கார்னாஸெஸின் உடலில் இவ்வாறு லக்டிக் அமிலம் தேங்குவதில்லையாம். இதனால், அவர் தொடர்ச்சியான உடல் தசை களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கலாம்.


ஒரு தடவை, 15 நிமிடங்களின் பின் நிறுத்தப்பட வேண்டிய சோதனை யொன்றுக்கு கார்னாஸெஸை மருத்துவர்கள் உட்படுத்தினர்.

 

1671661.jpg

 

ஆனால், ஒரு மணித்தியாலங்களாகியும் டீன் கார்னாஸெஸ் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அதனால் மருத்துவர்கள் போதும் எனக்கூறி அச் சோதனையை நிறுத்தினராம்.

 

இதேவேளை ஓடிக்கொண்டிருக்கும்போதே உறங்கிய அனுபவத்தை யும் தான் கொண்டுள்ளதாகவும் டீன் கார்னாஸெஸ் தெரிவித்து ள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வாழ்வியல் தரிசனம் 
 
 

article_1463543457-hfh.jpgநாசுக்காக, கடமையிலிருந்து நழுவிக் கொள்பவர்களும் நல்ல பெயர் எடுப்பதுண்டு. கடமை செய்வதில் தேக சுகம் பார்க்காமல் உழைப்பவர்கள், கண்டுகொள்ளப்படாமலும் இருப்பதுண்டு. அரச, தனியார் நிறுவனங்களில் இந்நிலை உண்டு.

நடித்து வாழ்பவர்களுக்கே நல்லபெயர் கிடைப்பதாகப் பலர் விசனப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். தனது பணியில் சிரத்தையில்லாதவர்களுக்கு இறைவன் கருணை எப்படிக் கிடைக்கும். உழைப்பு என்பது, எமக்கானது என்பது மட்டுமல்ல என்பதை இத்தகையோர் உணர்ந்தால், இப்படியாக நடந்துகொள்வார்களா?

கஷ்டப்பட்டு வேலை செய்வது தேகத்துக்கு ஆகாது எனச் சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.

மனநிறைவுடன், தரப்பட்ட பணியை நிறைவாகச் செய்தால், தேகம் சௌக்கியமாகும். இது விடயத்தில், மிகையாக உடலை வதைப்பதும் ஆகாது.

பணிகளைச் செய்பவன் பிணியாளனாகக் கூடாது.

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...... 

மே - 19

 

1535 : பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்­டியே வட அமெ­ரிக்கா நோக்­கிய தனது இரண்­டா­வது பய­ணத்தை 110 பேருடன் மூன்று கப்­பல்­களில் ஆரம்­பித்தார்.

 

1536 : இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்­றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலேயின்" வேறு ஆண்­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்டு தலை துண்­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார்.

 

1604 : கன­டாவின் மொன்ட்­ரியல் நகரம் அமைக்­கப்­பட்­டது.

 

1649 : இங்­கி­லாந்தை பொது­ந­ல­வாய நாடாக அங்­கீ­க­ரிக்கும் சட்­ட­மூலம் அந்­நாட்டு நாடா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்­டது. அடுத்த பதி­னொரு ஆண்­டு­க­ளுக்கு இங்­கி­லாந்து குடி­ய­ர­சாக இருந்­தது.

 

1848 : மெக்­ஸிகோ, அமெ­ரிக்கப் போர் கலி­போர்­னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகு­தி­களை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு 15 மில்­லியன் டொலர்­க­ளுக்குக் வழங்க மெக்­ஸிகோ முன்­வந்­ததை அடுத்து போர் முடி­வுக்கு வந்­தது.

 

1897 : ஐரிஷ் எழுத்­தாளர் ஒஸ்கார் வைல்ட் இங்­கி­லாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடு­தலை பெற்றார்.

 

1950 : அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்ஸி மாநி­லத்தின்  தெற்கு அம்போய் துறை­மு­கத்தில்  பாகிஸ்­தா­னுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காக வைக்ப்­பட்­டி­ருந்த ஆயு­தங்கள் வெடித்­ததால் தெற்கு அம்போய் நகரில் பாரிய சேதம் ஏற்­பட்­டது.

 

1961 : சோவி­யத்தின் வெனேரா 1 வெள்ளி கோளை கடந்­ததன் மூலம் வேறொரு கோளைக் கடந்த முத­லா­வது விண்­க­ல­மா­கி­யது.

 

1971 : சோவியத் ஒன்­றியம் மார்ஸ் 2 எனும் விண்­க­லத்தை ஏவி­யது.

 

1991 : சேர்­பி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வாக குரோ­ஷி­யர்கள்  வாக்­க­ளித்­தனர்.

 

2009 : தமி­ழீழ விடு­தலைப் புலிகள் தலைவர் வே. பிர­பா­க­ரனின் உடல் இலங்கைப் படை­யி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அறிவிக்கப்பட்டது.

 

2010 : தாய்லாந்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அந்நாட்டுப் படையினரால் முறியடிக்கப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

வன் குமார்... `இவர்தான் ரியல் `பாகுபலி'' எனக் கொண்டாடுகிறார்கள் கர்நாடகாவின் சிவமோகா மக்கள். தன் தாய், தினமும் தண்ணீருக்காக அலைவதைக் காண சகித்துக்கொள்ள முடியாமல், தன் வீட்டுக்குப் பின்னால் தனி ஆளாக இறங்கி, கிணறு ஒன்றைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறார் 17 வயது இளைஞர் பவன். இரண்டு மாதக் கடும் உழைப்புக்குப் பிறகு, 53 அடியில் தண்ணீர் கொப்பளிக்க, ஊரே உற்சாகமாகிவிட்டது. `இவ்வளவு காலமாக என் அம்மா பட்ட கஷ்டத்துக்கு முன்னால, நான் பட்ட கஷ்டம் ஒண்ணும் பெருசு இல்லை' என்கிறார் பவன். 


p22b.jpg

ந்த ஊருக்குப் போனாலும் ஹோட்டல்களில் தங்குவதைத் தவிர்க்கிறார் ப்ரியங்கா சோப்ரா. `நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. ரகசிய கேமராக்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம் எனச் சந்தேகப்படுகிறேன். மும்பையைத் தாண்டி எந்த ஊருக்குப் போனாலும் நண்பர்கள் வீட்டில்தான் தங்குகிறேன். இப்போது அடிக்கடி அமெரிக்கா செல்வதால், அங்கே சொந்தமாகவே வீடு வாங்க முடிவுசெய்துவிட்டேன்' என்கிறார் ப்ரியங்கா!


p22c.jpg

ந்தியாவில், 90-களின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான். ஆள்காட்டி விரலை தலைக்கு மேல் தூக்கி பம்பரம்போல் சுழன்று, தீய சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் அந்தச் சக்திமான், இப்போது மீண்டும்வருகிறார். ` `சக்திமான்' என்றாலே என் முகம்தான் மக்களுக்கு ஞாபகம் வரும். அதனால் அந்தக் கதாபாத்திரத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்' என தினமும் ஜிம்மில் தனது பழைய லுக்குக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் முகேஷ் கண்ணா. இந்தச் சக்திமானுக்கு வயது 57.


p22d.jpg

`லண்டனின் முதல் முஸ்லிம் மேயராக’ப் பதவி ஏற்றுள்ளார் 44 வயதான சாதிக் கான். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 57 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் சாதிக். இவரது பெற்றோர், பாகிஸ்தானில் இருந்து லண்டனில் குடியேறியவர்கள். `முஸ்லிம்கள் மீதான தேவையற்ற பயத்தை மக்கள் கைவிட வேண்டும். பயத்தால் எதையும் சாதிக்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளாகத் தீர்வுகாணப்படாமல் இருக்கும் வெளிநாட்டு மக்களின் பிரச்னைகளுக்கு, நான் தீர்வு கிடைக்கச் செய்வேன்' என நம்பிக்கையோடு சொல்கிறார் சாதிக் கான்.


p22e.jpg

ந்திராவில் இலவச மோர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதற்கு 39 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆனால், இந்தத் திட்டத்துக்கு தனது உறவினரின் ஹெரிடேஜ் நிறுவனத்திடம் இருந்துதான் தயிர் வாங்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனங்களைக் கிளப்பியிருக்கிறது. `மோர் வழங்கும் திட்டம் ஏழைகளின் வளர்ச்சிக்கானதா அல்லது சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கான வளர்ச்சித் திட்டமா, மற்ற நிறுவனங்களில் இருந்து தயிர் வாங்கினால் அது மோர் ஆகாதா?' என எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன!


p22f.jpg

`எப்பவும் சீரியஸ் படங்களிலும் அவார்டு படங்களிலுமே நடித்துக்கொண்டிருக்கிறீர்களே, கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பம் இல்லையா?' எனக் கேட்க, `எனக்கு அந்த ஆசை இருக்கிறது. `சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'போல ரகளையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்கிறார் கல்கி கோச்சலின்.


p22g.jpg

பாலிவுட்டின் பயோபிக் ட்ரெண்டில் லேட்டஸ்ட், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. மராத்திய மொழி இயக்குநர் பர்மோட் கோர், கலாமின் வாழ்க்கையை இயக்குகிறார். `நான் ராமேஸ்வரம் சென்று கலாம் இல்லத்தை பார்த்து அவர் குடும்பத்தினருடன் இந்தப் படம் பற்றிப் பேசிவிட்டு வந்தேன். அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவரது முழு வாழ்க்கையையும் இரண்டரை மணி நேரத்தில் கொண்டுவருவது சவால்தான். ஆனால், கலாமின் அர்ப்பணிப்பை அடுத்த தலைமுறைக்குச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது' என்கிறார் இயக்குநர் பர்மோட். படத்தில் அப்துல் கலாமாக நடிக்கப்போவது இர்ஃபான் கான்!

vikatan

  • தொடங்கியவர்

13254879_1046292515419442_14182400754433

பிரபல திரைப்பட, நாடக நடிகரும் இயக்குனருமான கிரீஷ் கர்னாட்டின் பிறந்தநாள்

 
  • தொடங்கியவர்
வெள்ளம் நிறைந்த வீதிகளில்...
 

அடைமழையால் பியகம பகுதி வீதிகளில் வெள்ளம் நிறைந்திருந்த போது, நேற்று முன்தினம் பிடிக்கப்பட்ட படங்கள் இவை.

16737f03.jpg

 

16737f02.jpg

 

16737f01.jpg

 

16737f04.jpg

/metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13247734_1046342928747734_57818265809338

தமிழ் திரை உலகின் கலக்கும் அழகு நட்சத்திரம் லக்ஸ்மி மேனனுக்கு இன்று பிறந்த நாள்.

  • தொடங்கியவர்

 

p124a.jpg

மோடிக்கு ஆப்பு!

கேரளாவில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி அங்கு பிரசாரம் மேற்கொண்டார்.கொல்கத்தாவில் பேசியதைப்போல, இங்கும் பேசி மாட்டிக்கொண்டார். குழந்தைகளின் பிறப்பு விகிதம், சோமாலியாவைவிட, கேரளாவில் மோசம் எனப் பேசினார் மோடி. கேரள மக்கள் ஒன்று சேர்ந்து ட்விட்டரில் மோடியை வறுத்து எடுத்தனர். எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்கூட ஒன்றிணைந்துவிட்டார்கள். மோகன்லாலின் பட வசனமான ‘போ மோனே தினேஷா’வை (ஒழிஞ்சுபோ தினேஷா) மையமாக வைத்து ##PoMoneModi, #modiinsultskerala போன்ற டேக்குகளில் மோடி பேசியதற்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். நமக்கு நாக்குல சனி!

தன்னடக்கத்திற்கு இது 14-வது ஆண்டு!

p124c.jpg

கடந்த மே 10-ம் தேதியோடு, தனுஷ் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்து 14 ஆண்டுகள் ஆகின்றன. தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், விருதுகள், நடிகர், இந்திப் படம் என கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். தனுஷின் ரசிகர்கள் அவருக்காக #14YearsOfThalaivarDhanush என்ற டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தனர். வாழ்த்துக்கள் ப்ரோ!

நல்லாத்தானே இருந்தீங்க?

p124b.jpg

கோலிவுட் தல- தளபதி ரசிகர்கள் மட்டும்தான் எதிர்க்கட்சி நடிகரை படு கேவலமாகத் திட்டி தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்குவார்கள். பலர் இதைக் கண்டித்தாலும், ரசிகர்கள் இதைப் பெரிய பொருட்டாக எடுத்துக்கொண்டதே இல்லை. தற்போது இந்த நோய், தெலுங்கு ரசிகர்களிடமும் பரவி இருக்கிறது. மகேஷ் பாபுவையும், பவன் கல்யாணையும் திட்டி, #IlliterateMaheshBabu என்று தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தனர்.  இதை மட்டும் டக்குனு கத்துக்கிறீங்க!

நம்பவா போறோம்?

p124d.jpg

ஓட்டுப் போடுதல் பற்றிய விழிப்பு உணர்வு பாடல் ஒன்றைப் பாடி இணையத்தில் வெளியிட்டார் சிம்பு. பீஃப் சாங்கால் புண்ணாகிப்போன அவரது இமேஜை, இந்தப் பாடல் கண்டிப்பாக மாற்றும் என்றார்கள். ஆனால், பாடல் வரிகள் வேற லெவலில் இருக்கின்றன. “போடு மாமா... போடாமா விட்டாக்கா உன்னோட மடமை, போடாமா விட்டுட்டோம் பல வாட்டி... போட்டுத்தான் பார்ப்போம் இந்த வாட்டி’ இப்படிப் போகும் வரிகளால் பாடல் சமூகத்துக்கான பாடலாய்த் தெரியவில்லை. சிம்புவின் ரசிகர்கள் #ottapodumama என்ற பாடலை, தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தனர். என்னா வில்லத்தனம்?

பெண் சிங்கம்!

p124e.jpg

அயல்நாட்டுக்காரர் என்ற வசையை, பா.ஜ.க-காரர்களிடமும், ஆர்.எஸ்.எஸ்-காரர்களிடமும் தொடர்ந்து பெறுபவர் சோனியா கந்தி. ‘ஆம், நான் இத்தாலியில்தான் பிறந்தேன். இந்தியாவில் 48 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் 93 வயது அம்மாவும், சகோதரிகளும், இத்தாலியில்தான் இருக்கிறார்கள். ஆனால்  என் சாம்பல், இந்தத் தேசத்தில் என் அன்புக்குரியர்வகளோடுதான் கலக்கும்’ என சோனியா பேசி இருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் #LionessSonia எனப் பாசமாக ட்ரெண்ட் அடிக்க, ஆமாம், மனிதநேயமே இல்லாத சிங்கம்தான் என நக்கல் அடித்தனர் காவி கும்பல்ஸ். ரிங் மாஸ்டர் யாருங்க ?

vikatan

  • தொடங்கியவர்
 

வியட்னாமின் மாபெரும் தலைவர் ஹோ சி மின் பிறந்த நாள்.

வியட்நாம் விடுதலை அடைய முன்னின்று போராடிய போராளி, வியட்நாம் சுதந்திரமடைந்த பிறகு பிரதமராக, பின் ஜனாதிபதியாகப் பதவியேற்றும் இறக்கும் வரை அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாமியப் போரைத் தான் இறக்கும் வரை முன்னின்று நடத்திய வீரத் தளபதி.

இவரது பெயரையே தங்கள் முக்கிய நகருக்குச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளார்கள் வியட்நாமியர்.

மிகத் துணிச்சலான தலைவரை ஞாபகப்படுத்திக்கொள்வோம்.

13244814_1046288145419879_40696262648086

 
  • தொடங்கியவர்
அன்பாகப் பழகுவதால்...
 
 

article_1463630717-IMG-20160518-WA0008.jமேல் நாடுகளில், மனிதர்களை விட நாய்களின் தொகைதான் அதிகமானது என ஓர் ஆய்வாளர் கூறினார். மேலும், இவற்றில் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட இனங்களும் உண்டு எனவும் கூறப்படுகின்றது.

மேலை நாட்டவர்களின் முக்கிய செல்லப் பிராணிகளில் முதலில் இடம்பிடிப்பது நாய்தான். அடுத்தது பூனை என்பதை நாம் அறிவோம்.

நாய் நன்றியுடையது மட்டுமன்றி, எஜமானைப் பாதுகாக்கும் அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது. இதனோடு, அன்பாகப் பழகுவதால் ஏற்படும் மகிழ்ச்சியில் தேகம் தெம்பு பெறுகின்றது.

ஆயினும், தக்க பராமரிப்பு ஆதரவின்றித் தெருவில் சுற்றித்திரியும் விசர் நாய்களினால் வருடாந்தம் பல நூற்றுக்கணக்காணவர்கள் மரணமடைவதும் உண்டு. 

அரசும் ஜீவகாருண்ணிய சங்கங்களும் இதுவிடயத்தில் கவனம் எடுக்க வேண்டும். வாழும் உரிமை சகல உயிர்களுக்கும் உண்டு.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் மிகவும் நீள­மான ‘பீஸா’

The oven was custom made...

உலகப் பிர­பலம் பெற்று விளங்கும் 'பீஸா' உணவின் பிறப்­பி­ட­மான இத்­தா­லிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமை­யல்­கலை நிபு­ணர்கள் உல­கி­லேயே மிகவும் நீள­மான பீஸா உணவைத் தயா­ரித்து சாதனை படைத்­துள்­ளனர்.

...to allow the giant pie to be rolled through

2,000 கிலோ­கிராம் மா, 1,600 கிலோ­கிராம் தக்­காளி, 2,000 கிலோ­கிராம் வெள்ளை பாலாடைக் கட்டி, 200 லீற்றர் எண்ணெய், 30 கிலோ­கிராம் திரு­நீற்­றுப் ­பச்சை இலை (பாஸில் இலை), 1,500 லீற்றர் நீர் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி மேற்­படி 2 கிலோ­மீற்றர் நீள­மான பீஸா உணவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

It wont stay hot for long !

100 சமை­யல்­கலை நிபு­ணர்கள் கூட்­டி­ணைந்து 11 மணித்­தி­யா­லங்­களைச் செல­விட்டு இந்த பீஸா உணவை தயா­ரித்­துள்­ளனர்.

An aerial view of the team around the oven

இதற்கு முன் மிகவும் நீள­மான பீஸா உணவு கடந்த வருடம் மிலான் நகரில் இடம்­பெற்ற உணவு கண்­காட்­சியின் போது தயா­ரிக்­கப்­பட்­டது. அந்த பீஸா உணவின் நீளம் 1,595.45 மீற்றராகும்.

virakesari

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13235369_1046766712038689_46374132949850

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீசும் சகலதுறை வீரர் கௌஷல் லொக்குஆரச்சியின் பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்

உலகின் முதல் ஸ்டிரைக்!

முதல் வேலை நிறுத்தம் (எகிப்து):

13239368_1139501766108612_81635006391731

பிரமிட் கட்டும் தொழிலாளர்கள் செய்ததுதான் முதல் வேலை நிறுத்தம். கி.மு 1152-ம் வருடம் நடந்த போராட்டம் அது. 'பிரமிடுகள் கட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கோதுமை ஒழுங்காக வந்து சேரவில்லை' என்பது புகார். சொந்தக் காசில் உணவை வாங்க வேண்டிய கட்டாயம். சுத்தியலைத் தூக்கிப்போட்டுவிட்டு அந்த ஏரியாவை காலி செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து இப்படி நடந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் கோதுமை மூட்டை மூட்டையாக வந்து இறங்கியதும் ஓய்ந்துபோனது. தொழிலாளர்களுக்குள்ளேயே தொழிலாளர் தலைவர்கள் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்தப் போராட்டத்தில்தான்!

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....... 

மே 20 

 

729varalaru.jpg526 : சிரியா, துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

 

1570 : முதலாவது நவீன உலக வரைபடத்தை ஆப்ரஹாம் ஓட்டேலியஸ் வெளியிட்டார்.

 

1631 : ஜேர்மனியின் மட்ஜ்பர்க் நகரை உரோமனிய படையினர் முற்றுகையிட்டு அந்நகரிலுள்ள பெரும்பாலான மக்களை படுகொலை செய்தனர்.

 

1802 : பிரான்ஸின் குடியேற்ற நாடுகளில் பிரெஞ்சு மன்னன் நெப்போலியனினால் மீண்டும் அடிமை முறை ஏற்படுத்தப்பட்டது.

 

1882 : ஜேர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி நாடுகளுக்கிடையில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

 

1873 : அமெரிக்காவில்  லெவி ஸ்ட்ரோஸ் ஜேக்கப் டேவிஸ் ஆகியோர் நீல ஜீன்ஸ்களுக்கு காப்புரிமை பெற்றனர்.

 

1883 : இந்தோனேஷியாவின் கரகட்டோவா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இதனால் சுமார் 36,000 பேர் உயிரிழந்தனர்.

 

1891 : தோமஸ் அல்வா எடிஸனினால் கைனெட்டஸ்கோப் எனும் சினிமா கருவி முதல் தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

 

1899 : அமெரிக்காவில் அதிவேகமாக காரில் பயணம் செய்தமைக்காக முதலாவது அபராதம் விதிக்கப்பட்டது நியூயோர்க் நகர வீதியொன்றில் ஜேக்கப் ஜேர்மன் என்பவர் மணித்தியாலத்துக்கு 12 மைல் (19.31) கி.மீ.) வேகத்தில் பயணம் செய்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டது.

 

1902 : அமெரிக் காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது. தோமஸ் எஸ்ட்ராடா பால்மா, கியூபாவின் முதலாவது ஜனாதிபதியானார்.

 

1927 : சார்ள்ஸ் லிண்ட்பேர்க் என்பவர் நியூயோர்க்கிலிருந்து பாரிஸ் நோக்கி தனியாக விமானத்தில் புறப்பட்டார். அத்திலாந்திக் சமுத்திரத்தை தனியாக எங்கும் நிற்காமல் கடந்த முதல் விமானி இவராவார்.

 

1948 : சீனாவின் முதலாவது ஜனாதிபதியாக சியாங் கே ஷேக் தெரிவுசெய்யப்பட்டார்.

 

1956 : அமெரிக்காவின் முதலாவது ஐதரசன் குண்டு பசுபிக் சமுத்திரத்தில் வீசப்பட்டது.

 

1965 : பாகிஸ்தான் விமானமொன்று எகிப்தின் கெய்ரோ நகரில் விபத்துக்குள்ளானதால் 121 பேர் உயிரிழந்தனர்.

 

1980 : கனடாவிலிருந்து பிரிவது தொடர்பாக கியூபெக் மாநிலத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 60 சதவீதமானோர் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தனர்.

 

1983 : எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக முதலாவது தகவல் “சயன்ஸ்” சஞ்சிகையில்  வெயியிடப்பட்டது.

 

1989 : சீனாவின் தியனமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை எதிர்கொள்வதற்காக சீன அரசு இராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தியது.

 

1990 : ருமேனியாவில் கம்யூனிஸ ஆட்சி முடிவடைந்தபின் முதல் தடவையாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

 

2002 : கிழக்கு திமோரின் சுதந்திரத்தை போர்த்துகல் அங்கீகரித்தது.

 

2006 : பங்களாதேஷில்  ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களான 18 இலட்சம் பேர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 

2013 : அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் டோர்னடோ சுழற்காற்றினால் 24 பேர் பலியானதுடன் 377 பேர் காயமடைந்தனர். 

 

2014 : நைஜீரியாவில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்பு களில் 118 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்கக் கண்டத்தினைக் கண்டறிந்த முன்னோடிகளில் ஒருவரான இத்தாலிய நாடுகாண் பயணி கிறிஸ்தோபர் கொலம்பஸ் நினைவு தினம்.

ஸ்பெய்ன் அரசரின் அனுசரணையுடன் இவர் கரீபியன் தீவுகளுக்கு மேற்கொண்ட கடல் பயணம், அட்லாண்டிக் கடலைக் கடந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையை வழங்கியது.

13221472_1046772198704807_14730828820679

  • தொடங்கியவர்

 

 

p69a.jpg

dot1.jpg  ராகுல் டிராவிட்தான் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஜூனியர் கிரிக்கெட் டீமின் பயிற்சியாளர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய ஏ மற்றும் ஜூனியர் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் டிராவிட். இந்த ஓர் ஆண்டில் மட்டும் அவருக்கு 2.62 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டி.வி வர்ணனையாளரான சுனில் கவாஸ்கருக்கு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு மட்டும் 90 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியிருக்கிறது பி.சி.சி.ஐ. காஸ்ட்லி கேம்!

dot1.jpg  ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு, பெல்ஜியம் போலீஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிக்கைதான் கடந்த வார ஆன்லைன் வைரல். ஃபேஸ்புக்கில் பல ஆண்டுகளாக இருந்த `லைக்’ பட்டனோடு சமீபத்தில் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக புதிய பட்டன்களையும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், `இந்த பட்டன்களைப் பயன்படுத்த வேண்டாம்' என, தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது பெல்ஜியம் போலீஸ். `ஃபேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளைவைத்து நம்மைப் பற்றி அறிந்துகொள்ளும் ஃபேஸ்புக் நிறுவனம், நம்மை வகைப்படுத்திக்கொண்டு நமக்கு ஏற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் சம்பாதிக்கிறது. மனநிலையை அறிந்து மார்க்கெட்டிங் செய்வதை இது மேலும் எளிதாக்குகிறது. எனவே, உங்கள் தனி உரிமையைப் பாதுகாக்க விரும்பினால், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்’ என எச்சரித்துள்ளது. புத்திசாலி போலீஸ்!

p69b.jpg

dot1.jpg  அஜித் - விஜய் என இருவருமே இந்த முறை சம்மரைக் கொண்டாடியது லண்டனில்தான். ஒவ்வொரு வருடமும் சம்மருக்கு, லண்டனில் உள்ள மனைவி சங்கீதாவின் வீட்டுக்குப் போவது விஜய்யின் வழக்கம். இந்த முறையும் விஜய் லண்டன் போக, அவருக்கு முன்னரே லண்டனுக்குப் பறந்துவிட்டார் அஜித். கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறையை லண்டனில் கொண்டாடிய தல-தளபதிகள் வாக்களிப்பதற்காக மீண்டும் சென்னை பறந்துவந்துவிட்டார்கள்! சின்சியர் சிட்டிசன்ஸ்!

p69c.jpg

dot1.jpg  சன்னி லியோனி ஃபேஷன் டிசைனராகவும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் உடுத்தும் ஆடைகள் பெரும்பாலும் அவரே டிசைன் செய்தவை. சமீபத்தில் பெர்ஃப்யூம் விளம்பரம் ஒன்றில் தங்க நிற உடையில் தகதகத்தவர், ‘இது நானே டிசைன் செய்தது. எனது மனதில் எப்போதும் ஒரே தீம்தான்... ராயல்டி. இளவரசி, அரசக் குடும்பப் பெண்கள் உடுத்தும் உடையின் கம்பீரத்தோடு தான் நான் என் உடைகளை டிசைன் செய்வேன்' என்கிறார் சன்னி. ராணி மகாராணி!

p69d.jpg

dot1.jpg  ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன், தீபிகா படுகோன் எடுத்துக்கொண்ட படம், `இதுவரை இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வாங்கிய படம்' என்ற சாதனை படைத்திருக்கிறது. வின் டீசலுடன் இணைந்து `XXX-ரிட்டன் ஆஃப் ஸாண்டர் கேஜ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் தீபிகா படுகோன்.  அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படம் இது. இன்ஸ்டாகிராமில் பொதுவாக லைக்ஸ் வாங்குவது கடினம். தீபிகாவின் இந்த போட்டோ மூன்று லட்சம் லைக்ஸைத் தாண்டியிருக்கிறது. லைக்ஸ் பேபி!

p69e.jpg

dot1.jpg  கோலிவுட்டின் லேட்டஸ்ட் க்யூட் ஹீரோயின் ரித்திகா சிங். `இறுதிச்சுற்று' படத்தில் பாக்ஸராகக் கலக்கிய ரித்திகாவின் கால்ஷீட்டுக்காகத்தான் காத்திருக்கின்றன கோலிவுட்
கம்பெனிகள். `காக்காமுட்டை' இயக்குநர் மணிகண்டனின் படத்தில் நடித்துவரும் ரித்திகா, `சிறுத்தை' சிவா இயக்கும் அஜித்தின் அடுத்த படத்திலும் நடிக்கிறார். யார் ஹீரோவாக இருந்தாலும் ரித்திகா சிங் கதை கேட்டு, பிறகு அவரது அம்மா-அப்பா இருவரும் கதைகேட்ட பிறகே ஓ.கே சொல்கிறார் ரித்திகா! தெளிவுச்சுற்று!

dot1.jpg  தொடர்ந்து ஆறாவது முறையாக நாக் அவுட் முறையில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். சமீபத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆன்டர்செஜ் சோல்ட் ராவை எதிர்த்து மோதினார் விஜேந்தர். இந்தப் போட்டி எட்டு ரவுண்டுகள் கொண்டது என அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது ரவுண்டிலேயே நாக் அவுட் பன்ச்சுகள் மூலம் சோல்ட்ராவை வீழ்த்தினார் விஜேந்தர். இதன்மூலம் தொழில்முறையிலான பாக்ஸிங்கில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத வீரர் என்பது மட்டும் அல்ல, தொடர்ந்து நாக் அவுட் முறையில் வெற்றிபெறும் வீரராகவும் சாதனை படைத்துவருகிறார் விஜேந்தர். பன்ச் மன்னன்!

vikatan

  • தொடங்கியவர்

13217483_1046761985372495_63081094769142

தமிழ்த் திரையுலகின் அற்புதப் படைப்பாளி...
இலங்கையில் பிறந்து இந்தியாவின் சினிமாத்துறையில் அற்புத ஒளிப்பதிவாளராகவும் கருத்துள்ள இயக்குனராகவும் பரிணமித்த
அமரர் பாலு மகேந்திராவின் பிறந்த தினம் இன்று.

  • தொடங்கியவர்

தமிழறிஞர் கால்டுவெல் பற்றி?

13239193_1139501346108654_13687171130005

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக அவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆங்கில நூல் தமிழ் மொழிக்கும் அதன் திராவிடக் குடும்பமான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்குமான உறவை உலகுக்குச் சொன்னது. அதனால்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கால்டுவெல்லையும் மலையாள மொழியை ஆய்வுசெய்த டாக்டர் குண்டட் ஆகிய இருவரையும், 'அவர்களுக்கு திராவிடம் கடன்பட்டுள்ளது’ என்று சொன்னார்.

நற்கருணை தியான மாலை, தாமரைத் தடாகம், நற்கருணை, பரதகண்ட புராதனம் ஆகிய நூல்களை தமிழில் எழுதும் அளவுக்கு தமிழைக் கசடறக் கற்றவர். கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகச் சென்னை வந்தார். கிறிஸ்துவம் கற்பிக்கவே தமிழ் படித்தார். அதன் பிறகு தமிழ் அவரை விடவில்லை. எங்கு போனாலும் நடந்தே போகும் பழக்கம் வைத்திருந்தார். சென்னையில் இருந்து நெல்லை வரை பல்வேறு ஊர்கள் வழியாக நடந்துபோய் தமிழ்நாட்டு மக்களை படித்தவர் அவர். ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான தொப்புள் கொடி உறவை முதலில் சொன்னவரும் கால்டுவெல்லே!

  • தொடங்கியவர்
தொடர்ச்சியாக 120 மணித்தியாலங்கள் விளையாடப்படும் கால்பந்தாட்டப் போட்டி
 

16756christobar.jpgமிக நீண்ட நேரம் கால்­பந்­தாட்டப் போட்டி ஒன்றை நடத்தி புதிய உலக சாதனை ஒன்றை நிலை­நாட்டும் முயற்­சியை சிலி தேசிய வீரர்­க­ளான கிறிஸ்­டோபர் டொசெல்லி, பிறயன் கரஸ்கோ ஆகிய இரு­வரும் ஆரம்­பித்­துள்­ளனர்.


சிலி தலை­நகர் சன்­டி­யாகோ “பைசென்­டி­னெரி” விளை­யாட்­ட­ரங்கில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இப் போட்­டியை 120 மணித்­தி­யா­லங்கள் (ஐந்து தினங்கள்) தொடர்ச்­சி­யாக நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது.

 

அத்­துடன் இப் போட்­டியில் 3,000 வீரர்கள் விளை­யா­ட­வுள்­ள­தாக அந் நாட்டு ஊடகம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. இப் போட்டி நேற்­று­முன்­தினம் ஆரம்­ப­மா­னது.


ஸ்கொட்­லாந்தில் கடந்த வருடம் 105 மணித்­தி­யா­லங்கள் தொடர்ச்­சி­யாக விளை­யா­டப்­பட்ட கால்­பந்­தாட்டப் போட்­டியே தற்­போது நீண்ட நேரம் விளை­யா­டப்­பட்ட போட்­டிக்­கான சாத­னையைக் கொண்­டுள்­ளது.


‘‘என்னைப் பொறுத்த மட்டில் இது ஒரு பெருஞ் சவா­லாகும். இது ஒரு கிறுக்­குத்­த­ன­மான வேலைதான். ஆனால், விளை­யாட்­டுத்­த­ன­மான இந்த முயற்­சியை நிறை­வேற்­ற­மு­டியும்’’ என சிலி கோல்­காப்­பாளர் டொசெல்லி கூறினார்.


இப் போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு வீரரும் குறைந்தது ஒரு மணித்தி யாலம் விளையாடுவார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
முப்பரிமாண (3டி) ஓவியங்களை வரைந்து வியக்க வைக்கும் இளைஞர்
 

விளை­யாட்டுப் போட்­டிகள் நடை­பெறும் மைதா­னங்­களில் வர்த்­தக இலச்­சி­னைகள் முப்­ப­ரி­மாண (3டி) ஓவி­யங்­க­ளாக வரை­யப்­பட்­டி­ருப்­பதைப் பலரும் அவ­தா­னித்­தி­ருப்போம்.

 

14044.jpg

 

வெளி­நா­டு­களில் ஓவி­யர்கள் பலர் வீதி­களில் விசித்­தி­ர­மான முப்­ப­ரி­மாண ஓவி­யங்­களை வரைந்து மக்­களை வியக்­கவைப்­ப­துண்டு.

 

14046.jpg

 

இலங்­கையைச் சேர்ந்த துஷார சம்பத் எனும் இளை­ஞரும் சிறப்­பான வகையில் முப்­ப­ரி­மாண ஓவி­யங்­களை வரை­கிறார். 

 

14047.jpg

 

31 வய­தான துஷார சம்பத், தெனி­யா­யவை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவர். பௌத்த விகா­ரை­களில் ஓவியம் வரை­வதை தான் வழக்­க­மாக கொண்­டுள்­ள­தா­கவும், 3டி ஓவி­யங்களைப் பார்த்து தானும் அத்­த­கைய ஓவி­யங்­களை வரைய வேண்டும் என விரும்­பி­ய­தா­கவும் மெட்ரோ நியூஸுக்கு தெரி­வித்தார்.

 

14051.jpg

 

தான் சுய­மா­கவே இத்­த­கைய ஓவி­யங்­களை வரை­வ­தற்கு கற்­றுக்­கொ­ண­ட­தா­கவும் அவர் கூறினார். 

 

14052.jpg

14053.jpg

14055.jpg

140Untitled-4.jpg

140Untitled-5.jpg

140_metro-news-page-13.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தெக்கத்தி சினிமாவை உய்விக்க வந்த உஜாலா அழகிகள் இவர்கள்...

டோலிவுட் தீக்‌ஷா

p112a.jpg

ஃபெமினா மிஸ் இந்தியா அழகியான டெல்லிப் பொண்ணு. ஐடிசி அப்பாவால் இந்தியா முழுக்க டிராவல் ஆக மல்ட்டி லாங்குவேஜ் பேபி ஆகிவிட்டார். தெலுங்கு ‘வேதம்’ படத்தில் நடித்த தீக்‌ஷாவுக்கு ‘ராஜபாட்டை’ வாய்ப்பைத் தமிழில் கொடுத்தது. ஆனாலும் படம் மொக்கையானதால் இங்கே வாய்ப்புகள் இல்லை. ஆனால் ‘நிப்பு’, ‘ஊ கொடதாரா? இலிக்கி படதாரா?’ ‘ரெபெல்’ என வரிசையாய் தெலுங்கில் ஹிட் படங்கள். அது தந்த பப்ளிசிட்டியில் ‘லெகர் ஹம் தீவானா தில்’ என்ற பாலிவுட் வாய்ப்பும் கிட்டியது. சிம்புவோடு ‘வேட்டை மன்னன்’ வெயிட்டிங். அப்புறம் பாருங்க. தீக்‌ஷாவுக்கு தீச்சட்டி தூக்க வேண்டியதுதான்!

மல்லுவுட் திவ்யா பிள்ளை

p112b.jpg

துபாய் விமான நிறுவனத்தில் வேலை பார்த்த ஒய்யார அழகி. இவரின் தோழி மூலம் கிடைத்ததுதான் சினிமா வாய்ப்பு. தன் தோழியின் திருமணத்துக்கு துபாய் வந்த நடிகர்-கம்-டைரக்டர் வினீத் குமாரின் கண்ணில்பட கிடைத்தது ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ‘ஆயால் ஞான் அல்ல’ படத்தின் வாய்ப்பு. போனால் போகிறதென்று 20 நாட்கள் பெங்களூரில் நடந்த ஷூட்டிங்கிற்கு வந்தவருக்கு ஃபஹத் ஃபாசில் ஜோடி என இங்கு கிடைத்த வெல்வெட் வரவேற்பில்  மலையாள சினிமாவின் தீவிர விசிறியாகி விட்டார். ‘இனிமே என்ட ஸ்டேட் கேரளாவாக்கும்!’ என கூல் பேபியாக தம்ஸ்-அப் காட்டுகிறார். திவ்யா சீக்கிரமே தமிழ்நாட்டுப்புள்ள ஆகணும்!

சாண்டல்வுட் ஜெனிஃபர் கொட்வால்

p112c.jpg

குஜராத்தி குல்மொஹர் மலர். மும்பையில் பொருளாதாரம் படித்த படிப்பாளி பப்பாளி. ‘ஜஸ்ட் மொஹபத்’ போன்ற இந்தி சீரியல்களில் ஹிட் பேபியாக வலம் வந்தவருக்குத் துண்டு துக்கடா ரோல்கள் பாலிவுட்டில் வரிசை கட்டி வந்தன. சுபாஷ் கய்யின் ‘யாதீன்’ நல்ல அறிமுகம் கொடுக்க கன்னட சூப்பர் ஹீரோ சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ‘ஜோகி’யில் நடித்தார். படம் சூப்பர் ஹிட்டாக ‘சத்யவான் சாவித்ரி’, ‘ஈ பந்தனா’, ‘நீ டாடா நா பிர்லா’, ‘மஸ்த் மஜா மாடி’, எரதானெ மடுவே’ என வரிசைகட்டி வந்தன ஹிட்ஸ். இப்போது பிஸியாக விளம்பரங்களிலும் தெறி அடிக்க ஆரம்பித்து விட்டார் ஜெனி. கம் ஆன் ஜெனி!

vikatan

  • தொடங்கியவர்

நம்பிக்கைதான் வாழ்வின் வழிகோல்...
 
 

article_1463720266-shutterstock_22633691நம்பிக்கைதான் நல்ல வாழ்வை அமைக்க வழிகோலும்.

வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டவர்கள், உலகம், தங்களுக்கு எதிராக செயற்படுகிறது எனச் சொல்வார்கள். வாழ்க்கையில் ஏதாவது வெற்றிக்கொண்டவர்களோ, தங்களுக்கு எல்லாமே கிடைத்து விட்டதாக உலகத்தை மெச்சிக் கொள்வார்கள், மேலும் சிலர் கிடைத்தவைப் பற்றி எக்காளமிடுவதுமுண்டு.

ஆனால், வாழ்வை முழுமையாகப் புரிந்தவர்களோ ஒன்றுமே பேசாமல் மௌனியாக இருந்து விடுகின்றனர். ஞானிகள் பேசாமல் இருப்பதே இதற்குத்தான்.

புரியாதவர்களிடம் பேசிப் பயனும் இல்லை என்றாலும் ஞானிகள் கனகச்சிதமாக உபதேசங்களை மிகச் சுருக்கமாகவும் சொன்னார்கள்.

பொறுமை சகிப்புத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கையில் ஒருபிடிப்பு வரும். நம்பிக்கைதான் நல்ல வாழ்வை அமைக்க வழிகோலும். நம்புக தோழர்களே.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.