Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பைசா அளவில் பறக்கும் ரோபோ
--------------------------------------------------------------------
சக்தியை சேமித்து சிறப்பாக செயல்படுவதாக, இதை உருவாக்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிப்பு

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

குப்பை உலகங்களின் மீது ஒளிப்பட வெளிச்சம்!

 

 
  • light_2861396g.jpg
     
  • light1_2861397g.jpg
     
  • light8_2861416g.jpg
     

எட்டு ஆண்டு காலம்! உலகின் அழுக்குகளாக ஆக்கப்பட்ட நகரங்கள், நகரங்களின் அழுக்குகளாக ஆக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் ஆகிய இடங்களுக்குப் பயணித்து அந்தப் பகுதிகளின் மக்களுடைய வாழ்க்கையை, அந்த இடங்களின் கோலங்களை ஒளிப்படம் எடுத்திருக்கிறார் பிரபல ஒளிப்பட-இதழாளர் ஆடம் ஹின்டன். ரியோ டி ஜெனிரோ, ஜகார்த்தா, மணிலா, கேப் டவுன், மும்பையின் தாராவி என்று பல இடங்களைத் தனது ஒளிப்படங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நவீன வாழ்க்கையின், நவீன நகரங்களின் மறைக்கப்பட்ட இன்னொரு முகத்தை நம்மால் இந்த ஒளிப்படங்கள் வழியாகக் காண முடிகிறது.

தனது பயணத்தைப் பற்றி அவரே சொல்கிறார்: “2004-ல் நான் இந்தப் பணியைத் தொடங்கியபோது, உலகின் பெரும்பாலான மக்கள்தொகை கிராமப் புறங்களில் வசித்தது. தற்போது பெரும்பாலான மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள்.

நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை 2050-க்குள் 70 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் இதர வாய்ப்புகளுக்காகவும், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் கோடிக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்கிறார்கள்.

உலகின் வளர்ந்துவரும் நகரங்களைச் சூழ்ந்துள்ள சேரிகளில்தான் இந்த மக்கள் குடிபுக வேண்டிவருகிறது.

பெரும்பாலும் அந்த நகரங்களின் வசதி படைத்த பகுதிகளால் தூக்கியெறியப்பட்ட பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு, கிடைக்கும் இடத்தில் அவர்கள் தங்கள் குடிசைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

lidgt6_2861405a.png

பாலங்களுக்கு அடியில், குப்பை மேடுகளுக்கு அடியில், கரடுமுரடான மேட்டுப் பகுதியில் என்று குடியிருக்க லாயக்கற்ற இடங்களைத்தான் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த முத்திரைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல், சகஜமாக ஏற்றுக்கொண்டு அந்த மக்கள் வாழ்கி றார்கள்.

இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழும் மக்களைத் தேடி அவர்கள் தரப்பு உண்மைக் கதைகளை நான் சொல்ல விரும்பினேன்.

முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த நம்மில் பலருக்கும் சாதாரணமாக இருக்கக்கூடிய விஷயங்களைத்தான் அவர்கள் தங்களின் பெரும் நம்பிக்கையாகக் கொண்டு, அவற்றை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுகிறார்கள் என்பதை நான் எல்லோருக்கும் காட்ட விரும்பினேன்.”

ஜகார்த்தாவுக்கு அவர் சென்றபோது அங்குள்ள மேம்பாலங்களைக் கண்டு அதிர்ந்துவிட்டார். அந்த மேம்பாலங்களுக்கு அடியில் சாக்குத் துணி, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்ட ஏராளமான குடிசைகள் இருந்ததை அவர் பார்த்திருக்கிறார். குட்டிக் கிராமமே அங்கே இருந்திருக்கிறது.

கடைகள், மதுக்கடைகள், கையேந்திபவன்கள் என்று மேம்பாலத்துக்கும் கீழே ஒரு வாழ்க்கை நதி குப்பையும் கூளமுமாக ஓடிக்கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்கிறார். குப்பையும் கூளமும்தான், ஆனால் அவையெல்லாம் அவர்கள் போட்டவையல்ல, மேம்பாலத்துக்கு மேலே செல்பவர்கள் போட்டது.

light7_2861415a.jpg

ஆடம் செல்லும் இடங்களிலெல்லாம் வறுமை, துயரம், குப்பைகள், கடுமையாக ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவற்றை மட்டுமல்ல, இவ்வளவு மோசமான சூழலிலும் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு உயிரோட்டத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கும் மக்களையும் கண்டு வியந்திருக்கிறார்.

குப்பை வீடுகளுக்கிடையேயும் அவர்களுக்கென்ற கலாச்சாரம், விளையாட்டுகள், சுகதுக்கங்கள் என்று எல்லாம் ஆடமின் ஒளிப்படங்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றுள் சில இங்கே தரப்படுகின்றன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!

nagakadaru60022.jpgலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களிடம் அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க,  கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.

ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன் பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலகநாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்துகொண்டிருந்தவர்...ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts) உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru) அந்த நவீன விவசாயி.

இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும் விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள், செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’ செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான் ‘கூகுள் அலர்ட்ஸ்’. உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில், ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள் மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால் இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்துவிட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில் செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள் மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும்.

ஆந்திரபிரதேசத்தில் கம்பலாகுடம் (Gampalagudem) எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு. அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில், தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை கணினி பொறியாளராக படிக்க வைத்தார். பிறகு, புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்புமுடித்தார் கடாரு.

கூகுள் அலர்ட்ஸ்

nagakadaruright1.jpg2003 ம் ஆண்டு, கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர் உருவாக்கியபோது,  இவருடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர்,  இதனைஅங்கீகரிக்கவில்லை. இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய CEO க்களான Sergey Bring மற்றும் Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன் வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள்,  அதன் தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை பாராட்டியதோடு,  நாக கடாருவின் கண்டுபிடிப்புமிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர்.

இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில் பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட கடாரு,  வெகு சீக்கிரத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார். 

இப்போது இவரின் புதிய அவதாரம், 'விவசாயி'.... ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில் 320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக வாங்கிப்போட்ட அந்நிலத்தை,  5 வருடங்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான் விவசாயம் செய்யும் திட்டம். தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின் வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், தன் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடிவை எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை பாதாம் தோட்டமாக மாற்றி விட்டார். இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம் விவசாயியாக கடாரு விளங்குகிறார்.

nagakadaru6002.jpg

"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது. இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன். அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம் பற்றி படித்தேன். எனது முயற்சியால்  இன்று இந்த நிலத்தில் பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும் விளைவிக்கிறேன்.  என் நிலத்தில் 8 பேர் வேலை செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன் வருமானம் கிடைக்கிறது" என்கிறார் விவசாயி நாக கடாரு.

வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு, தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது  'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.

nagakadaru60011.jpg

"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ரீதியாகக் கொண்டு செல்வதற்கே, இந்த படிப்பை படிக்கிறேன்" என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்டபடியே சொல்கிறார் நாக கடாரு.

விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !

vikatan

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

மே 21: ராஜீவ் காந்தி நினைவு தின சிறப்பு பகிர்வு

இந்த நாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி என்கிற வித்தியாசமான பாரத அரசியல்வாதி நினைவு தினம் இன்று.
அரசியல் சதுரங்கத்தில் எந்த காய் வேண்டுமானாலும் எதையும் வெட்டலாம் என்பதற்கு
நிகழ்கால எடுத்துக்காட்டு ராஜீவ். அடிப்படையில் வெளிநாட்டில் கல்வி பயின்று
அங்கேயே சோனியாவுடன் காதல் பூண்ட இந்த கோமான் வீட்டு குமரன் சஞ்சயின்
மரணத்திற்கு பின் ஏற்பட்ட வெற்று இடத்தை நிரப்பவும் , இந்திராவின் மரணத்தின்
பொழுது தள்ளாடிய காங்கிரசை முட்டுக்கொடுத்து நிறுத்த வந்தவர் தான் இவர்.

இந்திரா இறந்த பொழுது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை பெருமரம்
விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்று சாவகசமாக சொன்னார். இந்திரா மரணம்
தந்த அனுதாப அலையில் நேருவால் கூட பெறமுடியாத வெற்றியை பெற்றார்.

பெரிய நிர்வாக அறிவில்லாத இவர் ,ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவு
செயலாளர் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது
அங்கேயே அவர் நீக்கப்படுவதாக அறிவிக்க அந்த செயலாளர் (தமிழர் )பைத்தியம் என்று
விட்டார்.

புதுரத்தம் பாய்ச்சுகிறேன் என கிளம்பிய இவர் வி.பி.சிங்கை தன்னுடைய
அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். மீது ஊழல் பூதத்தை கிளப்பினார்
வி.பி.சிங்.முதலில் நிதி அமைச்சராக இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆப்பு
வைக்கிறார் என ராணுவ துறைக்கு மாற்றப்பட்ட வி.பி.சிங் இவருக்கே செக் வைத்தார் .
போபர்ஸ் ஊழல் வெளிவந்ததும் மக்கள் அதிர்ந்தார்கள்.

பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காமல் இந்தியா
அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தீராத அவப்பெயரை தேடிக்கொண்டார்.
இந்தியாவின் வியட்நாம் இலங்கை என்று வர்ணிக்கிற அளவுக்கு
அநியாயங்கள்,உயிரழப்புகள் எழுந்தன. அதன் விளைவு தனு என்கிற விடுதலிப்புலிகளின்
மனித வெடிகுண்டின் வெடிப்பில் சிதறுண்டு போனார் என்பது சோகமான ரத்தம்
தோய்ந்த முடிவு .

ராஜீவ் பஞ்சாயத் ராஜ் என்கிற கனவை முழு மூச்சாக முன்னெடுப்பு எடுத்தார்.
தொழில்நுட்ப துறை பெரிய அளவில் நகர்வதற்கான ஆரம்ப அச்சாரங்கள் அவர்
காலத்தில் போடப்பட்டவையே. லைசன்ஸ் ராஜ்யத்தை மட்டுப்படுத்துகிற பணிகள் அவர்
காலத்தில் தான் தொடங்கின. தொலைதொடர்பு துறை கிராமங்களுக்கு போய் சேரும்
அற்புதத்தை செய்த பி சி ஓ அவர் காலத்தில் அறிமுகமானதே.

ஷாபானு வழக்கில் முஸ்லிம்களிடம் நல்லபெயர் வாங்குகிறேன் பேர்வழி என இவர்
கொண்டு வந்த சட்டத்தால் மதவாத சக்திகளும் பீறிட்டு கிளம்பியது வலிமிகுந்த
வரலாறு. இந்து மதவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது அதை முடுக்கி விடும்
வகையில் அயோத்தி சிக்கலை மீண்டும் கிளறி விட்டார் இவர். அப்படியே நூல்
பிடித்துக்கொண்டு நாட்டையே ரத்த பூமியாக்கியது ஹிந்து மதவாதம்.

ராஜீவ் விமர்சனத்துக்குரிய நிகழ்கால பிம்பம் - இளமை மட்டும் போதாது , அரசியலில்
கொஞ்சமாவது பாடம் பயின்று இருக்க வேண்டும் , பெரியவர்களின் சொல்லையும்
மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ராஜீவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்
.

vikatan

  • தொடங்கியவர்

வாவ்... தீவுகள்

கார்க்கிபவா

 

ரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணங்கள்போலதான் பெரும்பாலானவர்களின் சுற்றுலாத் திட்டங்களும். தினமும் இத்தனை இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என, அலுவலக டார்கெட்களை அங்கேயும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே திரிவது இந்தியர்களின் மரபு.

வீடு திரும்பியதும் நான்கு நாள் சுற்றுலா களைப்பைப் போக்கவே, ஒரு வாரம் ரெஸ்ட் எடுப்பவர்கள் நாம். ஆனால், பயணமும் சுற்றுலாவும் அப்படி இருக்கக் கூடாது. `இந்த ஊருக்குப் போங்க. அதுதான் உண்மையான சுற்றுலா’ என சில தீவுகளைக் கைகாட்டுகிறார்கள் உலகின் சிறந்த ஊர்சுற்றிகள். ‘கொண்டாடக் கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு’ என டாப் ஐந்து தீவுகளுக்குப் போகலாம் வாங்க...

 போராபோரா, பிரான்ஸ்

அழகழகான குடில்கள். விண்டோ ஏ.சி-க்குப் பதில், விண்டோவே ஏ.சி மரக்குடிலின் வெளியே நின்று பார்த்தால் தண்ணீருக்குக் கீழே பவழப்பாறைகளும் மீன்கள் ஓடுவதும் தெரிந்தால் எப்படி இருக்கும்?

p38a.jpg

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் இந்த `போராபோரா' தீவின் குடில்கள் அத்தனை அழகு.  தீவுச் சுற்றுலாவிலேயே கொஞ்சம் காஸ்ட்லியானதும்கூட. கூட்டம் குறைவு. தங்கும் ஹோட்டலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அவர்களே தனி ஃப்ளைட் வைத்து உங்களைக் `கடத்திக்’கொண்டுபோய்விடுவார்கள். ஆழ்கடலுக்குள் மாஸ்க் போட்டுக்கொண்டு நீந்தி பவழப்பாறைகளையும் அரிய மீன்வகைகளையும் கண்டுகளிக்கலாம். ஸ்கூபா டைவிங்கும் உண்டு. `எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல...’ வகையறாக்களின் ஃபேவரிட் ஹனிமூன் ஸ்பாட்டும் இதுதான்!

சண்டோரினி, கிரீஸ்

கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள சண்டோரினி தீவு, சாட்டிலைட் கோணத்தில் பார்த்தால் படுக்கவைத்த டைனோசர்போல இருக்கும்.  இது 91 சதுர கிலோமீட்டர் சொர்க்கம். வெறும் 20 ஆயிரம் பேர்தான் மக்கள்தொகை. ஒருபுறம் மலைமுகட்டில் அமைந்துள்ள வெள்ளைச்சுவர் கட்டடங்கள், மறுபுறம் கடல் என ரகளையான இடம் இது. ‘வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி... மனசுக்குள் வெள்ளையடி’ என்னும் சண்டோரினி, டாப் தீவுகள், டாப் 10 டிராவல் ஸ்பாட்ஸ் என எல்லா பட்டியலிலும் இடம்பெற்றுவிடும். காரணம் கிரேக்கக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டடங்களும், இந்தக் குட்டித்தீவில் அமைந்துள்ள ஒயின் தொழிற்சாலைகளும்தான். தீவின் தட்பவெப்ப நிலை அவ்வளவு இதம்.

p38b.jpg

சண்டோரினி தீவில் விளையும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். இன்னும் எந்தத் தமிழ்ப்பாடலிலும் ‘சண்டோரினி தக்காளி கன்னங்கள்’ என எழுதப்படாதது ஏன் என்பது பற்றி விசாரணை கமிஷன் நிச்சயம் தேவை. அப்புறம் ஒரே ஒரு விஷயம். வரலாற்றின் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு நடந்த இடங்களில் இதுவும் ஒன்று. பயப்படாதீங்க பாஸ்... அது நடந்து ஜஸ்ட் 3,600 வருஷங்கள்தான் ஆச்சாம்!

 சிஷெல்ஸ் தீவு

p38c.jpg

இந்தியப் பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் இருந்து அப்படியே 1,500 கிலோமீட்டர் போனால் இருக்கிறது சிஷெல்ஸ் தீவு. குறிப்பிடத்தக்க அளவு தமிழர்களும் வாழும் இந்தத் தீவின் சிறப்பு அம்சம், காடுகளுக்குள் நீங்கள் டிரெக்கிங் போகலாம். அங்கங்கே கண்ணுக்கு விருந்தாக விழும் அருவிகளை ரசித்துக்கொண்டே போனால், கடற்கரையில் முடியும். ஒரே நேரத்தில் காடு, அருவி, கடற்கரை என்று இயற்கையின் பல வடிவங்களைக் கண்டு மெய் மறக்கலாம்.  சுற்றுலாதான் இவர்களது வாழ்வாதாரம். ஆனாலும் இயற்கை கெடாமல் பாதுகாப்பதில் கறாராக இருக்கிறார்கள். எந்த ஒரு சுற்றுலாத் திட்டமும் இந்தத் தீவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒப்புதலுக்குப் பின்னரே அங்கீகரிக்கப்படும். இங்கே சுற்றுச்சூழல் சட்டம் அத்தனை வலிமையானது. எனவே, இங்கே நீங்கள் பெரிய பெரிய கடல் ஆமைகளைக் கண்டுகளிக்கலாம். பறவை இனங்களையும் ரசிக்கலாம். அருவியில் நனையலாம். கடலில் குளிக்கலாம். ‘பொல்யூஷன் எங்கும் புகுந்துவிடாத தீவு' என்றால், அதற்கு சிஷெல்ஸ் தீவுதான் ஒரே சாய்ஸ்.

 பாலி தீவு, இந்தோனேஷியா

 இந்தோனேஷியாவின் பாலித் தீவு, சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால் ஒரு பெரிய திமிங்கிலம் போல தோன்றும். இது வெள்ளை மணல் கடற்கரைக்குப் பிரசித்தம். கடலை ஒட்டி... உங்கள் ஜன்னல் திரையை விலக்கினால், அலைகளை அதன் சத்தத்தோடு ரசிக்கக்கூடிய அளவுக்கு, அறைகள் கடலுக்கு நெருக்கமாக இருக்கும். ஒருபுறம் மலைகள், மறுபுறம் கடற்கரை, நகருக்குள் கட்டடங்கள்... என இந்தத் தீவு ஒரு பஃபே டைப் சுற்றுலாத்தலம்.

p38d.jpg

நீருக்குள், ஊருக்குள் என இங்கு இருக்கும் கோயில்களின் அழகை ரசிக்கவே கூட்டம் அள்ளும். ஸ்கை டைவிங், சர்ஃபிங் செய்ய ஏற்ற இடம் இது. ‘வாரம் இருநாள் வாழியவே’க்கு சரியான சாய்ஸ் பாலித் தீவுகள். மற்ற தீவுகளைவிட `நம்ம ஊருக்குப் பக்கத்துல’ என்றால் பாலிதான். இந்தோனேஷியாவில் செலவும் கம்மிதான். அங்கும்கூட நாணய மதிப்பு ரூபாய்தான். இந்திய மதிப்பில் 10 ரூபாய் தந்தால், அந்த ஊர் காசு 2,000 ரூபாய் கிடைக்கும்.

மாவோய், ஹவாய் 

p38e.jpg

அட்வென்ச்சர், அமைதி என கலக்கல் காக்டெய்ல் ரசிகர்களின் முதல் சாய்ஸ் மாவோய் என்கிற ஹவாயின் இரண்டாவது பெரியத் தீவு. `The Valley Isle' எனச் செல்லமாக அழைக்கப்படும் மாவோ-யின் பரப்பளவு கிட்டத்தட்ட டெல்லிக்கு சமம். கண்ணாடி போன்ற  க்ரிஸ்டர் க்ளியர் கடற்கரைகளை ரசிக்க பெருங்கூட்டம்  படை எடுக்கிறது. தரைமட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஹலியாகலா மலையினூடே அட்வென்ச்சர் பயணம்  இங்கே பிரபலம். எப்போதும் தீப்பிழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் எரிமலைகளுக்கு மேலாக ஒரு ஹெலிகாப்டர் பயணம் போக ஆசையா? அது இங்கே சாத்தியம். `இதற்கு எதற்கு ஹவாய்? நம்ம தலைவர்களின் தேர்தல் பிரசாரத்திலேயே ஹெலிகாப்டரும் உண்டு; தீப்பிழம்பும் உண்டு' என்பவர்களுக்கு லீவும் கிடைக்காது; தீவும் கிடைக்காது. `கொல்லும் ராணுவம், அணு ஆயுதம்...

பசி பட்டினி கரி பாலிட்டிக்ஸ்’ என நெகட்டிவ் விஷயங்களே இல்லாத ஒரு காந்தி மண் இந்த மாவோய்!

vikatan

  • தொடங்கியவர்

ஏன் இந்த கொலவெறி?

 

p58b.jpg

ப்ராங்க்ஸ் எனப்படும் வேடிக்கை வம்பு நிகழ்ச்சிகளை பக்காவாக ப்ளான் பண்ணி யூ டியூபில் வெளியிட்டு வைரலாக்கி ஹிட்டடிக்கும் ‘நெகட்டிவ்’ குரூப்தான் ‘ஜலால் பிரதர்ஸ்’.

p58a.jpg

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் மேக்ஸ் ஜலால், அர்மான் ஜலால் மற்றும் ரெபீன் ஜலால் என்ற  மூவர் அணிதான் ஜலால் பிரதர்ஸ். இவர்களுடைய வேலையே பொது இடங்களில் பாம் வைப்பது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற டெரரிஸ ப்ராங்க்ஸ்களை செய்து பார்த்துப் பொதுமக்களை மிரள வைப்பதுதான். 18, 19, 20 வயது ஆகும் இந்தச் சகோதரர்கள் சமீபத்தில் போலீஸால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் பலமுறை தீவிரவாதத் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தாலும் சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் எல்லை மீறி இருக்கிறார்கள். குழந்தைகளையும் வீடியோக்களில் நடிக்கவைத்து பயமுறுத்தி இருக்கிறார்கள். சாலையோரம் டெலிபோன் பூத்தில் பேசிக்கொண்டிருக்கும் தந்தையோடு நிற்கும் சிறுமி மீதும் தந்தை மீதும் காரில் போகும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது போல ஒரு லைவ் ப்ராங்க் செய்து மெல்பர்ன்வாசிகளிடம் கிலி ஏற்படுத்தியிருக்கிறார்கள். குழந்தையின் உடலில் பாம் கட்டி மாலுக்குள் நடமாட விடுவது, லைவ்வாக துப்பாக்கிச் சண்டை ஒன்றை பொது இடத்தில் நடத்திக் காட்டுவது என எல்லாமே நினைத்துப் பார்க்கவே குலை நடுங்க வைப்பவை. ஆனால், கூலாகப் பொது இடத்தில் நடித்த சூட்டோடு அதை அழகாக எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளி அல்லு கிளப்புகிறார்கள். கடைசியாக ப்ராங்கில் நடித்த தங்கள் குடும்ப உறுப்பினர்களான அந்தச் சுட்டிகளோடு செல்ஃபி எடுத்துப் போட்டு ‘பெப்பே’ காட்டுவார்கள். இந்த முறை போலீஸ் உள்ளே தூக்கி வைத்து கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

p58c.jpg

‘‘விளையாட்டாகத்தான் இதைச் செய்தோம். இப்போது இணையத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். தத்ரூபமாக ஒரு தாக்குதலைச் செய்து காட்டுவது என்பது லேசுபட்டக் காரியமில்லை. போலீஸார் விழிப்பு உணர்வுடன் இருக்கிறார்களா என்பதை டெஸ்ட் செய்வதே எங்கள் நோக்கம்!’’ எனத் தெனாவெட்டாகச் சொல்லி இருக்கிறார்கள் இந்த ஜலால் பிரதர்ஸ்.

p58d.jpg

விடுவார்களா ஆஸ்திரேலிய போலீஸ்? இவர்களை வளரவிட்டால் நிஜத் தீவிரவாதத் தாக்குதலையும் நடத்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

vikatan

 

  • தொடங்கியவர்

கொடுத்து வைத்த ஆமையார்
============================
இது ஹென்ரி. நியூ யார்க் செண்டர்ல் பார்க் பூங்காவை சுற்றிவருவது இவரது பொழுதுபோக்கு.

மெதுவாக நடப்பார் என்பதால், குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் கொண்டுசெல்லப்படுகிறார்.

இவரது உரிமையாளர் இல்லாதபோது இவரது தனிப்பட்ட பராமரிப்பாளர் தான் இவரை இங்கு கொண்டுவருவார்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 22
 
 

article_1432268215-Republic.jpg334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.
1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.

1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.

1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.

1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம்  ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர்.  இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.

1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.

1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.

1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீ லங்காவாக மாற்றப்பட்டது.

1990: வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.

1990: விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

2004: நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மே 22: சதி தேவையில்லை என்று முழங்கிய ராஜாராம் மோகன்ராய் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாக rajarammohanroy.jpgஇருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் !

அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.

பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர் இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.

இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.

பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.

மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு சதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.

ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.

லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்

1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :

இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.

vikatan

  • தொடங்கியவர்
நீள­மான கூந்தல் அழகி
 

ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் முழங்காலையும் கடந்து செல்லும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார்.

 

1676801.jpg

 

தேஷிக் குபனோவா எனும் இந்த யுவதி கடந்த 13 வருடங்களாக தலைமயிரை வளர்த்து வருகிறாராம்.

 

இக்கூந்தல்  அவரின் முழங்காலையும் கடந்து சென்றுவிட்டது. எனினும் கூந்தலை கத்தரிப்பதற்கு அவர் மறுத்து வருகிறார். 

 

16768inline_hair.jpg

 

அடுத்த வருடம் தனது பாதங்களைத் தொடும் அளவுக்கு தனது கூந்தல் வளரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அந்த இலக்கை அடைந்த பின்னரே கூந்தலை கத்தரிக்கத் திட்டமிட்டுள்ளதாவும் தேஷிக் குபனோவா கூறிள்ளார். 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சும்மாவே இவங்க தொல்லை தாங்க முடியல இதுவேற

  • தொடங்கியவர்

தமிழ்வாணன்

 
 
lena_2863527f.jpg
 

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாசிரியர்

பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இன்று (மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார். இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார். எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும், எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது. ‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.

# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’ என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார். இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம். இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’ வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். ‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படித்தனர். இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா, அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர். கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார். வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை பார்ப்பதில் வல்லவர்.

# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய 2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார். ‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை. ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு வந்துவிடுமாம்.

# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால் 56-வது வயதில் (1977) காலமானார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p108a.jpg

facebook.com/Carfires:

8 கி.மீ நடந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துட்டுப் போறது பெருமை இல்லை சென்றாயன்ஸ். 68 வருஷம் ஆகியும் அவங்களுக்கு ரோடு போட்டுக்கொடுக்க முடியாததை நெனச்சு வெட்கப்படுவோம்.

facebook.com/guru.shree.16:

அம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வரப்ப பாட்டில்களை பதுக்கிவெக்கிற மாதிரி, தேர்தலுக்காக காடுவெட்டி குருவைப் பதுக்கிவெச்சிருக்கு பா.ம.க.

facebook.com/naadodi.ilakkiyan:

``ஏங்க... சாமிக்கு பூ வாங்கிட்டு வாங்க!''

``ம்''

``அப்படியே எனக்கும்.''

``அதான் முதல்லயே சொல்லிட்டியே!''

``???''

``நீதானே எனக்கு சாமி'' ‪#இலக்கிய_இல்லறம்‬

facebook.com/yuvathamizh:

இப்போது நான் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனம், எனக்கு எட்டாவது நிறுவனம். முந்தைய ஏழு நிறுவனங்களிலும் இனிப்பும் கசப்பும் கலந்த நிறைய அனுபவங்கள் உள்ளன. அவற்றில் மூன்று நிறுவனங்களில் சம்பளப் பாக்கிகூட உண்டு. கடைசியாக வெளிவந்த நிறுவனம், எனக்கு அறுபது ஆயிரம் ரூபாய் தரவேண்டும். சில நிறுவனங்களின் நிர்வாகம், எனக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. சில ஊழியர்களோடு கருத்துவேறுபாடு இருந்திருக்கிறது. ஏழு நிறுவனங்களில் இருந்தும் விலகியபோது, ஏழு விதமான காரணங்கள் இருந்திருக்கின்றன. இரண்டே நிறுவனங்களில்தான் அவர்களிடம் இருந்து விடைகொடுத்து மகிழ்ச்சியாக வெளியேற முடிந்தது.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிறுவனங்களைப் பற்றியோ, இங்கு பணியாற்றிய சகப்பணியாளர்களைப் பற்றியோ எங்குமே பொதுவெளியில் தவறான முறையில் எதையும் பேச மாட்டேன். வேண்டுமானால், இனிமையான விஷயங்களைப் பெருமையாகப் பகிர்ந்து கொள்வது உண்டு. இந்தத் தன்மையை அடிப்படையான `job ethics' என்றும் நம்புகிறேன்.

ஒரு நிறுவனத்தில் நமக்கு வேலை போய்விட்டால், அடுத்த நிறுவனம் நம் திறமையை மதித்து அழைத்து வேலை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஜால்ரா அடித்தோ, பழைய நிறுவனத்தை இகழ்வதின் மூலம் புதிய நிறுவனத்தை அசத்தியோ வேலைக்குச் சேருவோமேயானால் அந்த வேலைக்குப் பெயரே வேறு. எந்த வகையிலும் நம்பகத்தன்மையே இல்லாத ஒரு மனிதரை யாரும் மனமுவந்து மதிப்பது இல்லை.

காசு எப்போ வேணும்னாலும், எவ்வளவு வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் பாஸ்... நாம மண்டையைப் போட்டப் பிறகு ‘நல்ல மனுஷன் போய் சேர்ந்துட்டானே!’ங்கிற ஃபீலிங்கை நாலு பேரிடமாவது ஏற்படுத்துறதுதான் லைஃப்லயே டஃப் டாஸ்க்கு

p108b.jpg

twitter.com/deebanece: பல வருஷங்களுக்குப் பிறகு இப்பதான் எங்க ஏரியா கவுன்சிலரைப் பார்த்தேன். பாவம், அவர்கூட தவ வாழ்வு வாழ்வாருபோல... பளபளனு இருக்காப்ல.

twitter.com/Baashhu: தேர்தலுக்கு எத்தனையோ கோடி செலவு பண்றானுவ, அந்த மெஷினை மறைக்க இன்னும் அட்டைப்பெட்டியைக் கிழிச்சு வெச்சிருக்கானுவ!

twitter.com/mani_kuttans: பேங்க்ல வேகமா வேலை செய்யுறது, பணம் எண்ணுற மெஷின் மட்டும்தான். 

twitter.com/arattaigirl: பழக்கடையில ஒரு அம்மா.... `ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?' - கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

twitter.com/unmaivilambbi: எல்லோர் அலைபேசியிலும் உள்ளது... முன்பு ஒருகாலத்தில் எல்லாமுமாக இருந்த ஒரு நபரின் தொலைபேசி எண்.

twitter.com/navi_n: நாம் கழுவி வைத்தப் பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்.

twitter.com/iLagaan: அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி முடி வெட்டுறதும் முடிவெடுக்கிறதும் ரொம்பக் கஷ்டம்!

twitter.com/mekalapugazh: கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால், நிறையத் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்.

twitter.com/writernaayon: நவக்கிரகங்கள் ஆண்களாக இருக்கும்போதே நம்மை இப்படி ஆட்டுவிக்கின்றனவே, அவை பெண்களாக இருந்திருந்தால்..!

twitter.com/chevazhagan1: ரெண்டு கொசுவத்தியைத் தனித்தனியாப் பிரிக்கிறதுக்கு நான் படுறபாடு இருக்கே... ஸ்ஸப்பா!  எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் பிரிச்சாங்களோ!

p108c.jpg

twitter.com/i_Soruba: வருடத்துக்கு ஒன்று இரண்டு முறை மட்டும் போக நேர்கிற சொந்த ஊரில் முதலில் வியக்கவைப்பது சட்டென வளர்ந்து நிற்கும் அக்கம்பக்கத்துக் குழந்தைகள்.

twitter.com/VignaSuresh: `எல்லாரும் தூங்குறாங்க. இப்ப பேச முடியாது' என்பது மற்றவர்களுக்கான பிரச்னை.

`இன்னும் யாரும் தூங்கல. இப்ப பேச முடியாது' என்பது காதலர் பிரச்னை.

twitter.com/ThePayon:  `தென்னந்தோப்பு' என எழுதினால் சாதா நடை. `தேங்காவனம்' என எழுதினால் கவித்துவம்!

twitter.com/meenadmr: ஃபேஸ்புக், ட்விட்டர், எஸ்.எம்.எஸ் பார்க்காமல், செல்போன் கையில் இருப்பதை மறந்து ஒரு சினிமா பார்த்தால் அது நல்ல படம்.

twitter.com/arattaigirl: கடன் கேட்பதைவிட... திரும்பப் பெறத்தான் அதிக ஆயத்தப்பொய்கள் தேவைப்படுகின்றன!

twitter.com/su_boss2: ஓட்டு போடாதவங்க காரணத்தை பேப்பர்ல எழுதி VAO-கிட்டயும் RI-கிட்டயும் கையெழுத்து வாங்கி கலெக்டர் ஆபீஸ்ல கொடுக்கணும்னு சொன்னா போதும், 100 சதவிகித வாக்குப்பதிவு.

twitter.com/pshiva475:  பேப்பர்காரன்: சார்... பழைய பேப்பர் இருந்தா கொடுங்க.

நம்மாளு: மனைவி ஊருக்குப் போயிட்டாப்பா.

பே.காரன்: அப்படின்னா ஒளிச்சுவெச்சிருக்கிற பாட்டலையாவது கொடுங்க சார்.

twitter.com/gpradeesh:  சென்னை விமான நிலைய கூரையைவிட அதிகமா உடைஞ்சது, கார்த்திக் கட்சியாத்தான் இருக்கும். இன்னிக்கு நாலு பேரு பிச்சுட்டுப் போயி தனியா கடை போட்ருக்கானுக!

p108d.jpg

facebook.com/ashoker.1409:

பூரண மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் குடிப்பழக்கத்துக்கான சிகிச்சை மையங்கள் எத்தனை, எங்கு தொடங்கப்படும்? தெரியாது.

சிகிச்சை மையங்களுக்கு எனத் தனியாக இடம் தேடாமல், காலி செய்யப்படும் டாஸ்மாக் பார்களில் தொடங்கப்பட வேண்டும். அதாவது, டாஸ்மாக் இருந்த இடங்களில் சிகிச்சை மையங்கள்!
நம் குடிமகன்களுக்கு இது ஒரு nostalgia-வாக இருக்கும் இல்லையா? ;) ``டெய்லி மூணாவது டேபிள்ல சரக்கடிச்சாதான் மப்பேறும்பானே... அவந்தான் அந்த மூணாவது பெட்ல கெடக்குறான்!'' :)))
இப்படி அமைப்பதால் ஒன்று, சிகிச்சை மையங்களைத் தேடி அலையவேண்டி இருக்காது. இரண்டாவது, மது என்பது கெட்ட பழக்கம் என்ற எண்ணத்தையும் அதைப் பொதுவெளியில் எடுத்துக்கொள்வதில் இருந்த தயக்கத்தையும் அடித்து நொறுக்கிய அந்தப் பரவலாக்கப்பட்ட இடங்களிலேயே அதற்கான சிகிச்சை அளிப்பது என்பது அரசின் அறம் சார்ந்த நிலைமாறுதலாக இருக்கும்.

மூன்றாவதாக, ஒரு பழக்கத்துக்கு அடிமையான பின்னர், தொடர்ந்து அங்கு செல்ல பழக்கப்பட்ட கால்கள், சிகிச்சைக்கு என புதிய இடம் செல்ல மறுக்கும் அல்லது தயங்கும். அதே இடத்தில் சிகிச்சை என்பது உளவியல்ரீதியாக நல்ல பலன் அளிக்கக்கூடும்.

டாஸ்மாக் இருந்த இடத்தில் சிகிச்சை மையம் என்பதன் இன்னொரு உட்கருத்து, அத்தனை எண்ணிக்கையில் சிகிச்சை மையங்கள் தேவைப்படுகின்றன என்பதுதான். அத்தனை மருத்துவர்கள், பணியாளர்கள் சாத்தியமா என்பது எல்லாம் தீர்க்க முடியாத பிரச்னை ஒன்றும் அல்ல. ஏனெனில், மது விற்பதற்கே பட்டதாரிகளைப் பயன்படுத்தியவர்கள் நாம்!

facebook.com/saravanan.chandran.77:

இந்தத் தேர்தலில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். சொல்லிவைத்தாற்போல, அத்தனை பேரும் `விவசாயத்தை, விவசாயியைப் பாதுகாப்போம்!' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், `தமிழ்ச் சமூக வாழ்வில் விவசாயிக்கு என்னவிதமான இடத்தைக் கொடுத்திருக்கிறோம்?' எனக் கேள்வி எழுப்பிப்பாருங்கள். நம் வீட்டுப் பெண்களை ஒரு வணிகருக்குச் சம்பந்தம் பேசுகிறோம். அல்லது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற தொழில் சார்ந்த ஊழியர்களுக்குச் சம்பந்தம் பேசுகிறோம். பணம் படைத்தவராக இருந்தாலும், ஒரு விவசாயிக்குத் திருமணம் செய்துகொடுப்போமா? ஆக, பணம் பிரச்னை அல்ல. அது இரண்டாம்பட்சம்தான். மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கும் விவசாயியைவிட எட்டாயிரம் சம்பாதிக்கும் ஓர் ஊழியருக்குத்தான் முன்னுரிமை தருகிறோம். தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை மனநிலையே விவசாயத்துக்கு எதிராகவே இருக்கிறது. இந்தச் சமூக ஆழ்மனது, அரசியல் கட்சிகளின் மீது மட்டும் பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கிறது. இதைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டிருக் கிறேன். பச்சைத் துண்டு, பச்சைத் தலைப்பாகை எல்லாம் பம்மாத்து வேலைகள்தான்.

facebook.com/kirthikat:

ஓர் அங்கமாக வாழ்ந்த அந்தக் கிராமத்துத் தெருக்களில் அந்நியமாக, ஆச்சர்யமாக அவர்கள் பார்க்கும்படி நடந்து போவது வேரை விட்ட செடிகளின் விதி.

vikatan

  • தொடங்கியவர்

இறுதி வார்த்தை!

13239293_1140513586007430_10957286143598

காலத்தின் புழுதியை அப்பியபடி
நெடுநாட்களாக
நின்றுகொண்டிருக்கிறது
அந்த கார்.

துவக்கத்தில் ஒரு நாள்
தீவிரவாதியருவனின்
வெடிகுண்டைப்
பதுக்கியபடி நிற்பதாக
எல்லோரும் சந்தேகப்பட்டதுண்டு.

போகப்போக
கல்லெறிக்கோ வெயிலுக்கோ
நாய்கள் மறைந்துகொள்ளவோ
அதற்குப் பின்
அவசரத்துக்கு ஆடவர் நின்று
சிறுநீர் கழிக்கவோ
வரும் போகும் விடலைகள்
தங்கள் பெயரைக் கிறுக்கிப் பார்க்கவோ

வழி தொலைத்தவர்களுக்கு
அடையாளம் காட்டவோ
என மாறிப்போனாலும்

நிறுத்தப்பட்ட கடைசி நாளில்
'நாளை பார்க்கலாம்’
என அதை ஓட்டியவன்
சொல்லிச் சென்றதை
இன்னமும் நம்பிக் காத்திருக்கிறது
அந்த கார்!

vikatan

  • தொடங்கியவர்

அரசியல் ஐ.பி.எல்!

 

ருவேளை அரசியல் கட்சிகள் எல்லாம் ஐபிஎல்லில் குதிக்க நினைத்தால் என்னென்ன கட்சிக்கு எந்த ஐபிஎல் டீம் பொருத்தமாக இருக்கும் என்ற கற்பனைதான் இந்தக் கட்டுரை.

ம.தி.மு.க- ஆர்.சி.பி பெங்களூர்

p60a.jpg

ஒரு முறை வைகோ மேடையில் பேசுவதைப் பார்த்தால் புரிந்துவிடும். எப்படி ஆர்.சி.பி லீக் மேட்ச்சில் எல்லோரையும் தோற்கடித்துவிட்டு முதலாவதாக பிளே ஆஃபுக்குள்  நுழைந்து அதே வேகத்தில் வெளிவருமோ... அதே போல் முதலாகக் கூட்டணி அமைத்து, மூச்சுக்கு 300 முறை ‘அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சி’ எனத் தொண்டை கட்டப் பேசி கடைசியில் சொந்தத் தொகுதியில்கூட மண்ணைக் கவ்வி வெளியே வரும் பாருங்க. டாட் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிய மொமென்ட்!

அ.தி.மு.க- மும்பை இந்தியன்ஸ்

p60c.jpg

பல வருஷங்களுக்கு முன்னாடி ரிட்டயர்ட் ஆன சச்சினை கேலரியில் உட்கார வைத்துக்கொண்டே எப்படி மும்பை இந்தியன்ஸ் வண்டி ஒடுதோ.. அதே போல்தான் இன்னும் எம்.ஜி.ஆர் படத்தை வைத்துக்கொண்டு ‘எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க’ என வண்டியை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தி.மு.க- சென்னை சூப்பர் கிங்ஸ்

p60b.jpg

சேப்பாக்கத்தில் மஞ்சள் சட்டைனா கோபாலபுரத்தில் மஞ்சள் துண்டு. இங்கே எப்படித் தொண்டர்கள் எப்போது ‘பழம் நழுவிப் பாலில் விழும்’ என காத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அங்கே ரசிகர்கள் எப்போது  ‘ஸ்டிடேயத்திலிருந்து வெளியே பந்து வரும்’ என காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தே.மு.தி.க- கிங்ஸ் 11 பஞ்சாப்

p60d.jpg

எப்படி பஞ்சாப் அணியின் இறுதிக்கட்ட லீக் போட்டியின் வெற்றி, தோல்வியை வைத்து மூன்றாம் மற்றும் நான்காம் இடத்துக்கு அணிகள் ஃபிளே ஆஃபுக்குத் தேர்வு பெறுமோ, அதே மாதிரிதான் தே.மு.தி.க-வின் வாக்குகளை நம்பி மூன்றாம் இடத்துக்குக் காத்துக்கொண்டு இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ‘அதுக்காக கேப்டனும் தக்காளித் தொக்கா’னு கேட்டீங்கனா நாங்க பொறுப்பில்லை.

காங்கிரஸ்- சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

p60e.jpg

இரண்டு பேருமே ‘முடியட்டும் விடியட்டும்’ என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எதிர்பார்ப்பு பொய்த்து இரு அணிக்கும் துண்டு விழும் பட்சத்தில், தமிழ்நாட்டில் கட்சியைப் பார்ப்பதும் அங்கே ஹைதராபாத்தில் டீமை பார்ப்பதும் டவுட்தான்.

நாம் தமிழர் கட்சி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

p60f.jpg

இங்கே கட்சித் தலைவரும் சரி, அங்கே அணித் தலைவரும் சரி சீரியஸாக இருப்பதாக நினைத்து, பார்ப்பவர்களுக்கு சிரிப்புதான் மூட்டுகிறார்கள். அடிக்கடி சேட்டை பண்ணி மீடியாவில் சிக்குவதும், லூஸ் ஸ்டாக் விடுவதும் அவங்களுக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் போல.

பா.ஜ.க – குஜராத் லயன்ஸ்

p60g.jpg

‘குஜராஜ் மாதிரி இங்கேயும் ஜெயிப்போமா?’ எனத் தமிழ்நாட்டில் தொண்டர்களும்... ‘தமிழ்நாட்டுக்கு விளையாடியாது போல் நமக்கும் விளையாடுவார்களா?’ என குஜராத்தில் ரசிகர்களும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 23
 
 

article_1432354234-WG120.jpg1430: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் பர்கன்டிய படையினரால் கைது செய்யப்பட்டாள்.

1568: ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக நெதர்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1805: இத்தாலிய மன்னனாக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போர்னபார்ட் முடிசூட்டப்பட்டார்.

1846: மெக்ஸிகோ ஜனாதிபதி மரியானோ பரதீஸ் உத்தியோகபூர்வமற்ற வகையில் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தார்.

1915: முதலாவது உலக யுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்த இத்தாலி ஆஸ்திரிய-ஹங்கேரி மீது போர் பிரகடனம் செய்தது.

1949: ஜேர்மன் சமஷ்டி குடியரசு (மேற்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.

1951: திபெத் மக்களின்  அமைதியான விடுதலைக்காக திபெத்தியர்கள் சீனாவுடன் 7 அம்ச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.

1995: ஜாவா எனும் கணினி மொழியின் முதல் பதிப்பு வெளியாகியது.

1998: வட அயர்லாந்து சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக 75 சதவீதமான வட  அயர்லாந்து மக்கள் வாக்களித்தனர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மே 23: உலக ஆமைகள் தினம்

இன்று உலக ஆமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள், மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆமைகள் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை.

13237795_1141497015909087_78908827642016

  • தொடங்கியவர்

சூரிய சக்தியால் உலகைச் சுற்றும் விமானம்

 

சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியிலிருந்து உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

160521122803_solar_512x288_bbc_nocredit.
 

சோலார் இம்பல்ஸ் இரண்டு என்ற இந்த விமானம் உலகைச் சுற்றி வருவதற்கு எடுக்கின்ற கடைசிக்கட்ட முயற்சி இதுவாகும்.

ஒக்லஹோமா மாகாணத்தின் ஒகியோவிலுள்ள டேடனிலிருந்து இந்த விமானத்தின் 12வது பயணம் தொடங்கியுள்ளது.

இந்த பயணத்திற்கு 17 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BBC

  • தொடங்கியவர்
சந்தேகங்கள் இருக்கும் வரை...
 
 

article_1463976801-luopop.jpgசந்தேகங்கள் இருக்கும் வரை அறிவுத் தேடல்கள் தொடரும். அறிவு இன்றேல் சந்தேகம் இல்லை. சந்தேகமில்லாது விடில் அறிவின் முதிர்ச்சியும் இல்லவேயில்லை.

இவற்றை மனிதன் தேடியபடி இருக்கும் ஆய்வுக்கு ஓய்வும் கிடையாது.

மனிதர் எதனையும் செய்யாமல் கண்டு கொள்ளாமல் இருந்தால், அது சடம் போன்ற உணர்வேயற்ற வாழ்க்கைதான்.

சடமாக வாழ்பவர்களுக்கு இன்ப, துன்ப நுகர்ச்சிகளும் இல்லை. இவர்கள் இயற்கை அழகை அதன் சூட்சுமத்தைப் புரியப் பிரியப்படப்போவதுமில்லை.

உலகின் இன்ப, துன்ப நுகர்வினில் புகுந்து கொள்ளாதவன் மனிதனேயல்லன், தன்னையும் உணர்ந்து, பிறர் நலனையும் கண்டு வாழ்பவனே உயிருள்ள ஒருவனுமாவான். ஆனால், உயிரோடு இருப்பவர்களில் சிலர் இயக்கமின்றி உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிங்கத்தின் கூண்டில் குதித்த வாலிபர்...! (திக்..திக்.. வீடியோ)

ஹைதராபாத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கத்தை தொட்டு பார்க்கும் ஆசையில் அதன் கூண்டிற்குள் மதுபோதையில் இளைஞர் ஒருவர் குவித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.



 

ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் மது போதையில் தள்ளாடியபடி, சிங்கத்தை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு அதன் கூண்டிற்குள் குதித்துள்ளார். இதையறிந்த சரணாலய பராமரிப்பாளர், சாதுர்த்தியமாக செயல்பட்டு சிங்கங்கள், அந்த இளைஞரை தாக்காதவாறு ‌அதனை விரட்டியடித்தார். அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் அந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

vikatan

  • தொடங்கியவர்

13268434_1048636398518387_15666412226137

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கிரஹாம் ஹிக்கின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்
ஆடை அலங்கார கண்காட்சி
 
 

article_1463982542-ss%20%281%29.jpg

நுவரெலியா குதிரை பந்தய திடலில் ஆண், பெண் இருபாலாருக்குமான ஆடை அலங்கார  கண்காட்சி நடைபெற்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகள் விதவிதமாக காட்சிப்படுத்தப்பட்டன.

article_1463982561-ss%20%282%29.jpg

article_1463982576-ss%20%283%29.jpg

 

article_1463982742-ss%20%2825%29.jpg

article_1463982758-ss%20%2827%29.jpg

article_1463982796-ss%20%2811%29.jpg

article_1463982603-ss%20%285%29.jpg

article_1463982618-ss%20%286%29.jpg

article_1463982631-ss%20%289%29.jpg

article_1463982642-ss%20%2816%29.jpg

 

article_1463982660-ss%20%2821%29.jpg

article_1463982674-ss%20%2818%29.jpg

article_1463982691-ss%20%2813%29.jpg

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13248522_1048638755184818_74795428833844

  நடிகர் ரகுமானின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா...?

tortoiseleftt.jpgலகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில்தான் உள்ளது. இந்தியா மூன்று  பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாக திகழ்ந்து வருகிறது. இதில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இலட்சத்தீவு கடல், அந்தமான் கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, கம்பாத் வளைகுடா, மற்றும் பாக் நீரிணை ஆகிய கடல் பரப்புகள் அமைந்துள்ளன. இந்த கடல் பரப்பை சுத்தமாக வைத்திருக்கும் உயிரினங்களில் கடல் ஆமை இன்றியமையாதவை.

உலக பெருங்கடல்களில் ஏழுவகை ஆமைச் சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டும் பச்சை ஆமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐவகை ஆமைகள் உள்ளன. காலம் முழுவதும் கடல் நீரிலேயே வசிக்கக் கூடிய ஆமைகள் இனப்பெருக்க காலத்தின்போது மட்டும் கரை பகுதிகளில் வந்து முட்டையிட்டு செல்லுகின்றன. அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடற்கரை பகுதிகளையே முட்டையிட ஆமைகள் தேர்ந்தெடுக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தமட்டில் கன்னியாகுமரிக்கும், திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளிலும், தனுஷ்கோடி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளிலும் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இவ்வாறு பிறக்கும் ஆமை குஞ்சுகள் தாம் பிறந்த இடத்தின் நிலவியல் அமைப்பு, காந்தபுலம், தோற்றம், நறுமணம் ஆகியவற்றை தங்கள் உணர்வில் பதிந்து கொண்டு வளர்ச்சி அடைந்த பின் குஞ்சு பொறிக்க இந்த இடத்தினையே தேர்வு செய்யும் வினோத பழக்கம் கொண்டவை.

சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுமார் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடியவை. இவை கடல் பாசிகள், சிறு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்கின்றன. கடல் ஆமைகள் தங்கள் சுவாசத்தின் போது கடல் நீரை மாசு படுத்தாமல் சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டவை ஆகும். இதனால் ஆமைகளை ‘கடல் சுத்திகரிப்பான்’ என மீனவர்கள் அழைக்கின்றனர். ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகளின் புகழிடமாக கச்சத் தீவு இருந்து வந்தது. இதனால்தான் இந்த தீவு ‘கச்சத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.

tortoise600111.jpg

கடல் நீரை இயற்கையாகவே சுத்திகரித்து தரும் ஆமைகளின் உயிருக்கு தற்போது பல வகைகளிலும் ஆபத்துகள் நேர்ந்து வருகிறது. முட்டையிடும் பருவ காலங்களின் போது கரையை நோக்கி வரும் ஆமைகள் இழுவலையில் சிக்கி உயிரிழப்பதும், கடலில் தூக்கி எரியப்படும் கழிவு பொருட்களாலும், இனப்பெருக்க பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடபடாத பணிகளாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன. இந்த அழிவில் இருந்து ஆமைகளை காக்கவே மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

tortiseamai5002.jpg

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆமைகள் மீட்புக் குழுவினர் ஆமைகள் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே இந்த நாளில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கையின் படைப்பில் உருவான கடல் ஆமைகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஆதாரமாக திகழும் கடலை காத்து வருகின்றன. நாமோ அந்த ஆமைகளின் உயிரை காக்க முடியாவிட்டாலும் அவற்றின் அழிவுக்கு துணை போகாமல் இருக்க வேண்டும் என்பதே ஆமைகள் ஆதரவு அமைப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

vikatan

13245482_1048634981851862_27950896275868

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

நேரமில்லை!

ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை
விமர்சித்தேன்
ட்விட்டரில் அரசியல்
பேசினேன்
பிளாக்கில் திரையுலகைப்
பின்னியெடுத்தேன்
ஸாரி... அப்பா
உங்களிடம் அடுத்த வாரம்
பேசுகிறேன்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.