Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

ஹீரோயின்களின் பாதங்களை பூமியில் பதியவிடாமல், அரை அடி உயரத்தில் தேவதைகளாக்குபவை ஹை ஹீல்ஸ். ஆனால், செருப்புகூட இல்லாமல் வெறும் கால்களுடன் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடந்து அதிரவைத்தார் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ். `நடிகைகள் ஹை ஹீல்ஸ் அணிந்துதான் ரெட் கார்ப்பெட்டில் நடக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜூலியா இப்படி வந்தார்' என மீடியா சொல்ல, ‘கணுக்காலில் சுளுக்குப்பா... அதான்' என சிம்பிளாக முடித்துவிட்டார் பிரெட்டி வுமன்!


p22b.jpg

`அஸாருதினின் முழு அனுமதியுடன் எடுக்கப்பட்ட `அஸார்' படத்தில் பொய்கள் அதிகம்' என டென்ஷனில் எகிறுகிறது கிரிக்கெட் ரசிகர் கூட்டம். `அஸாருதின், மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டார்' என முதன்முதலில் சொன்னவர் தென்ஆப்பிரிக்க கேப்டன் ஹான்சி க்ரோனியே. ஆனால், படத்தில் புக்கி ஒருவர் சொல்வதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. மேட்ச் ஃபிக்ஸிங் நடந்ததாகச் சொல்லப்படும் மேட்சில், நடுவரின் தவறான தீர்ப்பால் அஸாருதின் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆவதுபோல காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில், அந்த மேட்ச் ஃபிக்ஸிங் ஆட்டத்தில் அஸாருதின் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேலும், இந்தப் போட்டிகளின்போது உண்மையிலேயே இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது சச்சின் டெண்டுல்கர். ஆனால், படத்தில் அஸாருதின் கேப்டனாகக் காட்டப்பட்டிருக்கிறார் எனக் கடுப்பாகிறார்கள் ரசிகர்கள்.


p22c.jpg

மிழ், தெலுங்கு சினிமாவில் யார் ஹிட் ஹாட் ஹீரோயின் என்பதில் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும்தான் போட்டி. சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நயன்தாரா நடிக்க இருந்த நிலையில், அந்த வாய்ப்பு அப்படியே இப்போது அனுஷ்காவுக்குத் திரும்பியிருக்கிறது. நயன்தாரா, தெலுங்கில் `பாபா பங்காரம்', தமிழில் `இருமுகன்', `கஷ்மோரா' என பிஸியாக இருக்க, அனுஷ்காவோ `பாகுபலி -2', `பக்மதி' என பிஸியாகப் பறக்கிறார். இருவருமே இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள்!


p22d.jpg

பாலிவுட்டின் மோசமான படம், மோசமான நடிகர் - நடிகைகளுக்கு வழங்கப்படும் விருது ‘கன்டா அவார்ட்ஸ்’. 2015-ம் ஆண்டின் மிக மோசமான படமாக சல்மான் கான் நடித்த ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’வும், மோசமான நடிகராக ‘தில்வாலே’ படத்தில் நடித்த ஷாரூக் கானும், மோசமான நடிகையாக ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’ படத்தில் நடித்த சோனம் கபூரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மோசமான நடிகர் சிறப்பு விருது என `பாம்பே வெல்வட்' படத்தில் நடித்த கரண் ஜோகருக்கு!


p22e.jpg

பிரபல பாடகர் சோனு நிகாமின் `பிச்சைக்காரன்' வேடம், சமீபத்திய ஆன்லைன் வைரல். யூ டியூப் சேனல் ஒன்றின் வீடியோவுக்காக மும்பையின் ஜுஹு-வில் பிச்சைக்காரர்போல மேக்கப் போட்டு, சோனு நிகாம் ஹர்மோனியத்துடன் தெருவில் அமர்ந்து பாட ஆரம்பித்தார். `ஒரு பிச்சைக்காரர் இவ்வளவு சுத்தமாகப் பாடுகிறாரே!' எனக் கூட்டம் கூடிவிட்டது. கடைசி வரை அவர் சோனு நிகாம் என யாருக்கும் தெரியவில்லை. `ஒருநாள் நான் நானாக இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இந்த வேடம். ஓர் இளைஞன் என் கையைப் பிடித்து `அங்கிள், நீங்க காலையில சாப்டீங்களா?' எனக் கேட்டதோடு, என் கையில் 12 ரூபாயைத் திணித்ததை என்னால் மறக்கவே முடியாது.  என நெகிழ்கிறார்.


p22f.jpg

நெக்லஸ் டால் தமன்னா! அதுவும் ‘சோக்கர்’ வகை நெக்லஸ்கள் என்றால் பேபிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘சின்ன வயதில் இருந்தே எனக்கு நெக்லஸ் மீது பைத்தியம். ஆனால், இடையில் நெக்லஸ்களை பெண்கள் விரும்பி அணியாதது வருத்தமாக இருந்தது. இப்போது மீண்டும் நெக்லஸ் ட்ரெண்ட் திரும்புவதில் ஐ'ம் ஹேப்பி’ என நெக்கைக் காட்டிச் சிரிக்கிறார் தமன்னா!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13329380_1051943228187704_13270359381833


Happy birthday misbah ul haq

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சீகர அழகில் மயக்கும் ‘மல்லு, டோலி, சாண்டல்’-வுட்களின் யூத் சாய்ஸ் இவர்கள்...

சாண்டல்வுட் திஷா பாண்டே

p99a.jpg

ராஜஸ்தான் புள்ளிமான்.  கேரியரை மும்பையில் ஆரம்பித்தது இந்த அழகு மான். பிரின்ஸ் ஜுவல்லரி, அமுல் லஸ்ஸி போன்ற விளம்பரங்களில் இந்த மானைப் பார்த்திருக்கலாம் நீங்கள். ‘ராம்’ படத்தின் இந்தி ரீமேக் ‘போலோ ராம்’ படத்தில் ஹீரோயினாக 2010-ல் அறிமுகமானவருக்கு  ‘ரேஸ்’ படம் மூலம் தெலுங்கிலும், ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ என்ற தமிழ்ப் படத்திலும் ஒரே நேரத்தில் அழைப்பு வந்தன. ஆனால் ரெண்டு ஃபீல்டிலும் க்ளிக் ஆகவில்லை. ‘ஜெய் லலிதா’ என்ற ஹிட் கன்னடப் படத்தில் நடித்ததும் அப்படியே பெங்களூருக்கு ஜாகை மாற்றினார். ‘பாம்பே மிட்டாய்’, ‘சுப்ரமணி’ என்ற இரண்டு கன்னடப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆல் தி பெஸ்ட் திஷா!

மல்லுவுட் அபர்ணா பாலமுரளி

p99b.jpg

ந்த வருடத்திய ஃபஹத் ஃபாசிலின் மெகா ஹிட் படமான ‘மகேசின்டே பிரதிகாரம்’ படத்தில் ஜிம்ஸி என்ற கேரக்டரில் மனதை வருடிய பாலக்காட்டு அழகி. படித்தது ஆர்க்கிடெக்சர் என்றாலும் நடிப்பும் நடனமும் பெரு விருப்பம். இன்னொரு இலவச இணைப்பாய் வசீகரக் குரலும் அம்மணிக்கு வாய்த்திருக்கிறது. அதே படத்தில் ‘மௌனங்கள்’ என்ற ஹிட் பாடலைப் பாடி இருக்கிறார். படத்தில் இவர் ஆடிய ஃப்ளாஷ் மாப் ஒரே டேக்கில் ஓகே ஆனதாம். இப்போது அரை டஜன் படங்கள் கையில். நமக்கும் சான்ஸ் இருக்கு சேட்டா!

டோலிவுட் அனுஷுயா பரத்வாஜ்

p99c.jpg

விசாகப்பட்டினத்துத் தேவதை படித்தது பி.டெக். ஆனால் பார்த்ததோ டி.வி காம்பியரிங். சாக்‌ஷி டி.வி-யில் செய்தி வாசிப்பு, மா மியூஸிக்கில் காலை நேரத்தில் கதைப்பு என அனு தொட்டதெல்லாம் டி.வி-யில் தெறி ஹிட். இந்த ஐந்து அடி எட்டு அங்குல உயரம் கொண்ட பெண்ணை ஆடியோ ரிலீஸில் தெலுங்கு சேனலில் நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். அது தந்த பப்ளிசிட்டியில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமான ‘க்ஷணம்’ படம் செம என்ட்ரி. ஆத்வி சேஷுடன் நடித்த போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் ரோலுக்காகவே பொண்ணுக்கு இப்போ ஆக்‌ஷன் அதிரடி ரோல்கள் வெயிட்டிங்கில். இக்கடச்சூடு அம்மாயி!

vikatan

  • தொடங்கியவர்

Apple iPhone 6S Vs Samsung Galaxy S7..! போன்களை கீழே போட்டால் என்ன ஆகும்? ஒரு வினோத பரிசோதனை (வீடியோ)

Apple iPhone 6S, Samsung Galaxy S7 ஸ்மார்ட் போன்களின் தரத்தை மதிப்பீடு செய்ய ஒரு வினோதமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட் போன்கள் தரையில் தவறி விழும் போது எந்த அளவு உறுதித்தன்மையை கொண்டுள்ளது என்பதை காண்பிக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு போன்களின் அனைத்துப் பகுதியும் தரையில் விழும்படி இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் Apple iPhone 6S உடன் ஒப்பிடும் போது Samsung Galaxy S7 ஸ்மார்ட் போன், அடிப்பக்கம் மட்டுமே உறுதி தன்மையுடன் உள்ளது. ஆனால் பின்பக்கம், தொடுதிரை ஒருமுறை கீழே விழுந்தால் பலத்த சேதம் அடைகிறது.



அதேசமயம் Apple iPhone 6S அனைத்து சோதனையிலும் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. மேலும், 5 முறை கீழே விழுந்தால் மட்டுமே போனின் தொடுதிரை செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

இதற்கு முன்னதாக Samsung Galaxy S7, HTC 10 போன்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சோதனையில் HTC 10 ஸ்மார்ட் போனே சிறந்ததாக உள்ளது. 34 முறை கீழே போட்ட பிறகு தான் HTC 10 தொடுதிரையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

vikatan

  • தொடங்கியவர்
வாழ்வியல் தரிசனம்
 
 

article_1462333034-gg%2815%29.jpgதனது வாழ்க்கைக்கு, தானே கதாநாயகன் என்கின்ற உரிமையையும் தனித்துவத்தையும் ஒருபொழுதும் விட்டுக்கொடுக்கலாகாது. தனது சுய ஆளுமையில் நம்பிக்கை வைக்காதவர்களே, பிறரிடம் தங்களை ஒப்படைத்துவிட்டு சுயமாக முடிவெடுக்கும் திறனை இழந்தவர்களாகின்றனர்.

தனது திறனில் நம்பிக்கைகொண்டு இயங்குவது, வீம்போ அல்லது கர்வம் கொண்டதாகவோ கருதல் ஆகாது. 

ஆயினும், தன்னிடம் உண்மையான அக்கறை கொண்டோரிடம் ஆலோசனைகளைக் கேட்பதில் தவறு கிடையாது.

எந்தவிதமான சுய சிந்தனையின்றி நடந்துகொள்வதே மகா தவறாகும். பெரியோர்களின் அறிவுரையினைக் கேட்காமலும் மனம்போன படி வாழலாகாது.

தனக்கும் ஒரு வாழ்க்கையை இறைவன் அளித்துள்ளான் என்ற இறுமாப்புடன், படைப்பின் நோக்கத்தை உணர்ந்து நடப்பவனே உண்மையான மனிதனாவான்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தொடர்ந்து 10,000 நாட்களாக தினமும் ஓடும் நபர்
 

1691945.jpgபிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர், 10,000 நாட்­க­ளாக தினமும் ஓட்டப் பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கிறார்.  

 

புத்­தாண்டுப் பிறப்­பின்­போது தாம் மேற்கொள்ளும் தீர்­மா­னங்­களை பலர் ஓரிரு தினங்­க­ளி­லேயே கைவிட்டு விடுவர். ஆனால், 57 வய­தான லென்வோர்த் வில்­லி­யம்ஸன் இவர், 1989 ஆம் ஆண்­டி­லி­ருந்து தினமும் ஓட்­டப்­பயிற்­சியில் ஈடு­ப­டு­கிறார்.

 

நிறு­வ­ன­மொன்றில் பொறி­யியல் முகா­மை­யா­ள­ராக பணி­யாற்றும் வில்­லி­யம்ஸன் ஒவ்­வொரு நாளும் உடற்­ப­யிற்­சிக்­காக ஓடு­வ­தற்கு 1987 ஆம் ஆண்டு தீர்­மா­னித்தார். ஆனால் 1987, 1988 ஆம் ஆண்­டு­களில் அவர் இம்­மு­யற்­சியில் தோல்­வி­யுற்றார்.

 

மூன்­றா­வது தட­வை­யாக 1989 ஜன­வரி 1ஆம் திகதி மீண்டும் ஓட ஆரம்­பித்தார். அப்­போ­தி­ருந்து தினமும் தவ­றாமல் ஓடு­கிறார் வில்­லி­யம்ஸன்.  
அவர் தொடர்ச்­சி­யாக ஓடும் 10,000 ஆவது நாளாக கடந்த மே 18 ஆம் திகதி அமைந்­தது. 2018 டிசெம்பர் 31 ஆம் திகதி இந்­ந­ட­வ­டிக்­கையில் அவர் முழு­மை­யாக 30 வரு­டங்­களை பூர்த்தி செய்­த­வ­ராக விளங்­குவார் என நம்­பப்­ப­டு­கி­றது.

 

மழையோ, வெயிலோ, பனியோ எது­வென்­றாலும் லென்வோர்த் வில்­லி­யம்ஸன் ஓடு­வ­தற்குத் தயங்­கு­வ­தில்லை.  

 

ஜிம்மில் பளு தூக்­குதல் போன்ற பயிற்­சி­க­ளிலும் அவர் ஈடு­ப­டு­து­வண்டு. ஆனால், ட்ரெட்மில்லில் ஓடுவதற்கு அவர் விரும்பவில்லை. ஏனெனில் எல்லா காலநிலைகளிலும் அவர் திறந்த வெளியில் ஓடுகிறார். 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜிங்கா.. ஜிங்கா!

 

 

p34a.jpg

ந்தச் சிறுவனுக்கு வயது 17. அவனுடைய அணி வீரர்கள் ஓட்டமும் நடையுமாக மைதானத்துக்குள் நுழைய, அவன் மட்டும் எதையோ யோசித்தபடி தயங்கித் தயங்கி நடக்கிறான். இருள் குறைந்து, வெளிச்சம் அவன் கண்களில் விழுகிறது. பரந்துவிரிந்த மைதானத்தில் காலடி எடுத்துவைத்ததும், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரச் சத்தம் அவனை என்னவோ செய்கிறது. சுற்றிச்சுற்றிப் பார்க்கிறான். கால் முட்டி வலி தாங்காமல் அவன் முகம் மாறுகிறது.

இப்படித்தான் தொடங்குகிறது, பிரேசில் கால்பந்து வீரர் பீலேவின் வாழ்க்கைக் கதையான `பீலே: பர்த் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம். 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் பீலேவின் வாழ்க்கை அப்படியே ஜீரோ டு ஹீரோ கதை.  பெருமிதக்  கண்ணீர் வழியும் திறமைக் கொண்டாட்டமாக அதைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஜெஃப் - மைக் சகோதரர்கள். இசை, நம்ம ரஹ்மான்!

p34b.jpg

`எட்டு வருடங்களுக்கு முன்னர்’ என்ற ஸ்லைடுடன் பீலேவின் குழந்தைப் பருவத்துக்கு நகர்கிறது படம். கொடிகளில் காயும் பழைய சாக்ஸ்களைத் திருடி, கால்பந்து செய்து விளையாடு கிறார்கள் சிறுவர்கள். அவர்களது கால்பந்து ஆர்வத்துடன், திறமையும் அதிகரிக்கிறது. லோக்கல் டோர்னமென்ட் ஒன்றின் இறுதி ஆட்டத்தில் ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்கிறார்கள். ஆனால், பீலே அட்டகாசமாக ஆடுகிறான். ஆட்டத்தைப் பார்த்த அனைவரும் முடிவில் `பீலே... பீலே...' என ஆர்ப்பரிக்க, உடலில் இருக்கும் ஐந்தரை லிட்டர் ரத்தத்தையும்விட அதிகமாக அவனுக்கு அட்ரீனலின் சுரக்கிறது. கெத்தாக நடந்து வீட்டுக்குப் போகிறான் பீலே.

ஆனால், வீட்டில் அவன் காதைத் திருக அம்மா காத்திருக்கிறாள். அவள் கால்பந்து என்றால், மழையைக் கண்ட சென்னைவாசி ஆகிவிடுவாள். எல்லாவற்றையும் ஆசிட் ஊற்றி அழித்துவிட்டு, படிப்பை மட்டும் கவனிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம் அல்ல... கட்டளை. அதற்குக் காரணம், பீலேவின் அப்பா. பிரேசில் நாட்டு ஆண்களைப்போல அவரும் ஒரு கால்பந்து வெறியர். அம்மாவுக்குத் தெரியாமல் பீலேவை ஃபைனலுக்கு விளையாட அழைத்துச் சென்றதே அவர்தான். 1950-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரேசில் தோற்பதைக் கண்டு அவர் கதறி அழுகிறார். அதைப் பார்க்கும் பீலே, ‘நான் பிரேசிலுக்கு உலகக்கோப்பையை ஜெயித்துக் கொடுப்பேன்ப்பா' என்கிறான்.

See Also: இதுதான் பெங்காலி சினிமா!

நண்பனின் மரணம் பீலேவின் வாழ்க்கையை மாற்றுகிறது. தன் அம்மாவிடம் இனி படிப்பை மட்டும் கவனிப்பதாகச் சொல்கிறான். மருத்துவமனையில் கழிவறையைச் சுத்தம்செய்யும் அப்பாவுக்கு உதவியாக வேலைக்குச் செல்கிறான். ஆனால், அப்பாவும் கால்பந்து வெறியர் ஆயிற்றே. பீலேவின் ஆட்டம் மூர்க்கத்தனமானது. `கால்பந்தை கொஞ்சம் சாஃப்ட்டாக அடித்துப் பழக வேண்டும்' என்கிறார் அப்பா. அதற்காக தோட்டத்து மரங்களில் தொங்கும் மாம்பழங் களை வைத்து இருவரும் பயிற்சிசெய்கிறார்கள்.

p34c.jpg

சில ஆண்டுகள், அம்மாவுக்குத் தெரியாமல் அப்பாவுடன் மாம்பழத்தில் மட்டும் விளையாடுகிறான் பீலே. அதைப் பார்க்கும் அவன் அம்மா, அவனை ஒரு கால்பந்து பயிற்சியாளரிடம் சேர்க்கிறாள். தனது ஊரையும் குடும்பத்தையும்விட்டு நகரத்துக்குக் கிளம்பும் பீலே, அடுத்த 18-வது மாதத்தில் பிரேசில் நாட்டுக்காக உலகக்கோப்பை போட்டியில் ஆடும் அளவுக்கு வளர்கிறான். உலகக்கோப்பை போட்டிக்காக முதன் முதலில் மைதானத்தில் பீலே நுழைவதுதான் படத்தின் முதல் காட்சி.

பீலே ஒரு கறுப்பர். போர்த்துக்கீசியர்கள், ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக பிரேசிலுக்கு அழைத்து வரும் பல நூற்றாண்டு வரலாறு சில நிமிடங்களில் சொல்லப்படுகிறது. அவர்களின் தற்காப்புக் கலை, பீலேவின் கால் பந்தாட்ட டெக்னிக்களில் வெளிப் படுகிறது. `ஜிங்கா' எனப்படும் அந்த உத்தி, பீலேவால்தான் பிரபலமாகிறது. 1958-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஜிங்கா என்னவெல்லாம் செய்கிறது என்பதை, ரஹ்மானின் ‘ஜிங்கா’ பாடலோடு பார்க்க வேண்டும். ரஹ்மானின் பின்னணி இசை, படத்துக்கு மிகப் பெரிய பலம்.

`எனக்கு பீலே பற்றி எதுவும் தெரியாது. இந்தப் படத்துக்காகத்தான் அவரைப் பற்றி படித்தேன். என் வாழ்க்கையும் கிட்டத்தட்ட பீலேவின் வாழ்க்கை போன்றதுதான்’ என்கிறார் ரஹ்மான். படம் பார்த்த பீலே, `ரஹ்மானின் இசையில், பிரேசில் இசையின் சாயலைப் பார்த்தேன்' எனப் பாராட்டினார்.

p34d.jpg

இளவயது பீலேவாக நடித்த கெவின் டி பாலா, அவரின் அச்சு அசல் ஜெராக்ஸ். அதுவே படத்துக்கு மிகப் பெரிய பலம். சிறு வயது பீலேவாக நடித்திருக்கும் லியோனார்டோ லிமா செம க்யூட். `உண்மையில், நான் அவ்வளவு அழகாக இருந்தது இல்லை’ என கமென்ட் அடித்திருக்கிறார் பீலே. அப்பாவாக நடித்த சியோ ஜார்ஜ், பிரேசில் நாட்டு சூப்பர் ஸ்டார்.

பீலே என்பது இவரது நிஜப்பெயர் அல்ல. இவரது ஃபேவரிட் கோல் கீப்பர் `பைல்'(Bile) என்றவரின் பெயரை சிறு வயதில் `பீலே' என இவர் தவறாக உச்சரிக்க, அதைவைத்தே நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டார். தனக்கு நேர்ந்த அவமானத்தையே மூலதனமாக்கி வெற்றியை ரசித்தவர் பீலே என்கிற எட்சன் அரண்ட்ஸ் நாசிமெண்டோ.

`இந்தப் படத்தில் `ஃபுட்பால் கம்மியா இருக்கு', `இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம்’ என நெகட்டிவ் விமர்சனங்களும் இருக்கின்றன. பீலே என்ற ராட்சசனின் வெற்றியே, `நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட'  எனத் தன்னை நோக்கி வந்த  விமர்சனங்கள் அனைத்தையும் கோலுக்குள் காலால் உதைத்துத் தள்ளியதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல!


p34e.jpg

பீலேவின் ரெக்கார்டுகள் ஏராளம். ஆனால், ஒரே போட்டியில் அவர் அப்பா அடித்த  ஐந்து ஹெட்டர் கோல்  சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை.

 பீலே தனது சிறுவயதில் நண்பர்களுடன் ஆரம்பித்த ஃபுட்பால் டீமின் பெயர் `ஷூலெஸ் ஒன்ஸ்'. ஷூக்கள் இல்லாமலே விளையாடி இறுதிப்போட்டி வரை வந்தார்கள்.

மூன்று முறை உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த ஒரே வீரர் பீலேதான்.

 பீலே, 92 முறை ஹாட்ரிக் கோல் அடித்திருக்கிறார். நான்கு கோல்கள் 31 முறையும், ஐந்து கோல்கள் 6 முறையும் அடித்திருக்கிறார். பெனால்டி கிக்கில் கோல் அடிப்பது எல்லாம் கோழைத்தனம் என்பது பீலேவின் அதிரடி ஸ்டேட்மென்ட்.

பிரேசில் அரசு பீலேவை `தேசிய பொக்கிஷம்' என அறிவித்தது!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 29
 
 

article_1432876383-Everst300.jpg1864: மெக்ஸிகே மன்னர் முதலாம் மெக்ஸிமிலியன் (ஆஸ்திரியாவில் பிறந்தவர்) முதல் தடவையாக மெக்ஸிகோவை சென்றடைந்தார்.
1867: ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1903: சேர்பிய மன்னர் அலெக்ஸாண்டர் ஓப்ரெனோவிக் அவரின் மனைவி ட்ராகாவும் தலைநகர் பெல்கிரேட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

1948: ஐ.நா. சமாதானப் படை ஸ்தாபிக்கப்பட்டது.

1953: நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள் எனும் சாதனைக்குரியவர்களாகினர்.

1988: பெல்ஸியத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது  மதிலொன்று சரிந்து வீழ்ந்ததால் 39 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1990: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் தெரிவானார்.

1999: டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.

1999: 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.

2005: ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வெள்ளரிப் பழங்களின் வளர்ச்சிக்கு இசையின் மூலம் வலுவூட்டும் விவசாயி
 

ரஷ்­யாவைச் சேர்ந்த விவ­சாயி ஒருவர், தான் உற்­பத்தி செய்யும் பயிர்­க­ளுக்கு இசையின் மூலம் வலு­வூட்­டு­வ­தாக கூறு­கிறார். 

 

1692249.jpg

 

55 வய­தான வலேரி டெனி­லென்கோ எனும் இவ்­வி­வ­சாயி, ரஷ்ய சைபீ­ரிய பிராந்­தி­யத்­தி­லுள்ள கிராஸ்­னோயார்ஸ்க் பகு­தியில் வசிக்­கிறார். 

 

இவ­ருக்குச் சொந்­த­மாக வெள்­ளரித் தோட்­ட­மொன்று உள்­ளது. இத்­தோட்­டத்­தி­லுள்ள தாவ­ரங்­களின் மத்­தி­யி­லி­ருந்து இசைக்­க­ரு­வியை வாசிப்­பதை வலேரி டெனி­லென்கோ வழக்­க­மாகக் கொண்­டுள்ளார். 

 

1692248.jpg

 

தினமும் இவ்­வாறு தாவ­ரங்­க­ளுக்­காக இசை­ய­மைப்­பது வெள்­ளரிப் பழங்­களின் வளர்ச்­சியை ஊக்­கு­விப்­ப­துடன், அதன் சுவை­யையும் அதிகரிக்கச் செய்கிறது என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p107a.jpg

facebook.com/palaapattarai

சென்னையில் 100 சதவிகித வாக்குப்பதிவு வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் பரவலாக இருப்பதுபோல மின்வெட்டு, லோ வோல்டேஜ், குடிநீர் தட்டுப்பாடு, பேருந்து வசதிகள் போன்றவற்றை சென்னையிலும் அமல்படுத்தினால் போதும். தேவைக்கு அதிகமாக மற்ற இடங்களில் இருந்து உறிஞ்சி எடுத்து, நோகாமல் மக்களை நோம்பு கும்பிடவைத்தால், சுரணை யற்றுப்போய் வீட்டில் உட்கார்ந்து டி.வி-யோ, வெளியூருக்கு ஜாலி ட்ரிப்போ சென்றுவிடுவார்கள்.

தமிழ்நாட்டின் மற்ற மக்களைப் போலவே சென்னை மக்களுக்கும் அடிமடியில் கை வைத்துப்பாருங்கள் ஆட்டோமேட்டிக்காக ஓட்டுப்பதிவு 100 சதவிகிதம் நடக்கும்!

twitter.com/thoatta: `ஏன்டா... சென்னையில வெள்ளம் வர்றப்பதான்டா மொத்த தமிழ்நாடும் வந்து உதவ முடியும். நீங்க வாக்களிக்கவுமா வந்து உதவணும்?’

twitter.com/ikrthik: பாடல் கேட்டுக்கொண்டு, படம் பார்த்துக்கொண்டு, தூங்கிக்கொண்டு, தூரங்களைக் கடக் கிறார்கள். பயணம் என்பது வாகனத்துக்கு வெளியே உள்ளது!

twitter.com/Dhrogi: குழந்தைகளின் உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புரியும்... அலையின் பிரமாண்டமும் அது கொடுக்கும் குதூகலமும்!

twitter.com/Kozhiyaar: நின்னுக்கிட்டி ருக்கிற வண்டியில ஏ.சி போட்டுத் தூங்க, வண்டி ஓனரா இருக்கணும்னு அவசியம் இல்லை. டிரைவரா இருந்தாலே போதும்!

twitter.com/kumarfaculty:  வாழைப் பழத் தோலை நடுரோட்டில் போடுவதற்கு சற்றும் சளைத்தது அல்ல... வாட்டர் பாக்கெட்டைக் கீழே வீசுவதும்!

twitter.com/LeelavathiTalk: சாலையைக் கடக்கையில் தன் தந்தை கை காட்டினால் வாகனம் நிற்கும் என்பது குழந்தையின் நம்பிக்கை!

p107b.jpg

twitter.com/aruntwitz:  பெரிய சைஸ் டிஸ்பிளே வேணும்னு மொபைல் சைஸைப் பெருசாக்கிட்டே போறாங்க. கடைசியில கட்டைப்பையில மொபைலைத் தூக்கிட்டுப்போற நிலைமை வரப் போகுது!

twitter.com/manipmp: `நாளையில் இருந்து படிக்கிறேன்’னு சொன்னவனும், `நாளையில் இருந்து குடிக்கலை’னு சொன்னவனும் ஜெயிச்சது இல்லை!

twitter.com/ThowfiqS: `செத்துட்டான்’னு நெனச்ச சொந்தக்காரன் திடீர்னு இன்னிக்கு போன் பண்ணுவான் பாருங்க... `என் பொண்ணு 1130 மார்க்...உன் பையன் எவ்ளோ’னு!

twitter.com/saravana: ஜெனரேட்டர் ஓடி முடிந்து கரன்ட் வந்தா எவ்வளவு அமைதியா இருக்குமோ, அப்படி இருக்கு... தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

twitter.com/g_for_Guru: சில கட்சிகள் மட்டுமே ஆத்மப் பரிசோதனை செய்யும் நிலையில் இருக்கின்றன. மற்றவைக்கு பிரேதப் பரிசோதனைதான்!

twitter.com/Sowmi_: வீட்டுல இருக்கும் எல்லோருக்கும் தனித்தனி ஹார்லிக்ஸ் வந்துருச்சு. அடுத்தது டாக்டருக்கு, இன்ஜினீயருக்கு, வியாபாரிக்குனு வருமோ?

twitter.com/ranilisa: `கடவுள் ஏன் கல் ஆனார்?’னு கேட்டா ஆத்திகன். `கல் ஏன் கடவுள் ஆச்சு?’னு கேட்டா நாத்திகன். தட்ஸ் ஆல்!

twitter.com/thoatta: ஹோட்டல்களில் பல பேருக்கு மெனுகார்டு என்பது அடுத்தவங்க இலைதான்!

twitter.com/I_Purusho: எத்தனை தடவை ஜெ. ஜெயிச்சாலும், ஜெயா டி.வி-யை, ஓர் அரை மணி நேரம் பார்க்கிற சக்தி இன்னும் மக்களுக்கு வரலை!

p107c.jpg

twitter.com/manipmp: எல்லா சமையல் நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு, கடைசியில் உப்புமா செய்யும் மனைவிபோலத்தான் மாற்றத்தை விரும்பும் மக்களும்!

twitter.com/chevazhagan1 : அதிகமா சம்பாதிக்கிறவன் ஃபேமிலி டாக்டர் வெச்சுக்கிறான். அளவுக்கு அதிகமா சம்பாதிக்கிறவன் ஃபேமிலி வக்கீல் வெச்சுக்கிறான்!

twitter.com/Dhrogi:  வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருக்காங்க... அவங்ககிட்ட பேசுறதுக்கு கூடவே ஓர் ஆளையும் கூட்டிட்டுவந்தி ருக்கலாம் :-(

facebook.com/nelsonxavier08

தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று என்பதை வாக்காளர்கள் ஏற்கவில்லை என ஒரு தியரி ஓடிக்கொண்டிருக்கிறது. `மாற்று’ என முன்னிறுத்தியவர்களைத்தான் ஏற்கவில்லையே தவிர, `மாற்று’ என்கிற சிந்தனையையே ஏற்கவில்லை என்பது திரிபுவாதம். இன்னமும் தேர்தல்கள் இருக்கின்றன!

facebook.com/altappu.vinoth:

கண்டதை எழுதிவெச்சாலே தமிழ் வாத்தியார்கூட பாவப்பட்டு அரை மார்க் போடுவாருடா... சும்மாவாச்சும் ம.ந.கூ - 1-ன்னு போடுங்கடா. டபுள் பைக்ல ஸ்டாண்டிங்ல வந்த கூட்டணிடா அது!

vikatan

  • தொடங்கியவர்

டி-ஷர்ட்டைக் காட்டினாப் போதும்!

 

p78a.jpg

மொழி தெரியாத ஊருக்குப் போய்  விழி பிதுங்கியிருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு டி-ஷர்ட் போடறதுதான். புரியலையா?

p78b.jpg

p78c.jpg

p78d.jpg

பாஷை தெரியாத ஊரில் நாம் சிக்கி சிதறுதேங்காய் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ‘ஐகான் ஸ்பீக்’ நிறுவனத்தினர் டி-ஷர்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த டி-ஷர்ட்டின் முன்புறத்தில் ரயில், மருத்துவமனை, பேருந்து, உணவு, பீர், மணி, வைஃபை என ஒரு டூரிஸ்ட்டுக்குத் தேவையான விஷயங்களை குறிக்கும் 40 குறியீடுகள் அச்சிடபட்டிருக்கின்றன. பாஷை தெரியாத ஊரில், அந்தக் குறியீட்டில் கைவைத்துக் காட்டி நாம் நினைப்பதை அந்த மக்களுக்குத் தெரிவிக்கலாம். அதேபோல், எங்கேயும் நாம் அடிவாங்கிவிடக் கூடாது என்பதற்காக சர்ச்சைகுரிய சில குறியீடுகளைக் கழட்டிவிட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு, அதில் மத சம்பந்தபட்டக் குறியீடுகள் எதுவும் இருக்காது. இந்த ‘ஐகான் ஸ்பீக்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்ஜ் ஹார்ன் கூறுகையில், ‘ஒருமுறை நாங்கள் வியட்நாம் நாட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கு நான் ஓட்டிக்கொண்டிருந்த மோட்டார் பைக் ஒரு சின்ன கிராமத்தைக் கடக்கும் வழியில் பிரேக் டவுன் ஆகிவிட்டது. பைக் மெக்கானிக் பற்றி விசாரித்தால், அந்தக் கிராமத்து மக்களுக்கு எங்களுக்கு தெரிந்த ஆங்கிலம், பிரெஞ்ச் என எந்த மொழியும் தெரியவில்லை. அப்போது, என் நண்பன் பேப்பரில் நாங்கள் சொல்ல நினைப்பதை வரைந்து அவர்களிடம் காட்டினான். அந்த டெக்னிக்தான் எங்களுக்கு உதவியது. அதுவே, இந்த டி-ஷர்ட்டை உருவாக்க வைத்தது’ என்கிறார். இதே டி-ஷர்ட் வாடாமல்லி கலரில் கிடைக்குமா பாஸ்?

vikatan

  • தொடங்கியவர்

13335679_1175416262477613_77615225983977

  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம் இன்று(மே 29)

மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று தான்

உலகின் மிக உயரமான அந்த சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும்
எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும், எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், பசி இழப்பு, உடல் செயல்பாடுகள்
ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்

ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக
படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி
போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி
மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு
போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .

நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து
எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே
தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .

நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட
பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார் . மனிதனின்
கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று

vikatan

  • தொடங்கியவர்

மே 29: ஐ.நா. சபையின் அமைதிப் படை தினம்

13254252_1144967118895410_31367084880879

இந்த தினம்- ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக அமைதி காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு ஒரு சல்யூட் செய்வோம்..

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

மே - 30

 

1536 : இங்­கி­லாந்து மன்னர் 8 ஆம் ஹென்றி ஜேன் செய்மோர் எனும் பெண்ணை திரு­மணம் செய்தார். 

 

1574 : பிரான்ஸில் 3 ஆம் ஹென்றி மன்­ன­ரானார்.

 

1631 : பிரான்ஸின் முத­லா­வது பத்­தி­ரி­கை­யான “லா கஸெட்” வெளி­வர ஆரம்­பித்­தது.

 

735charle-taylo.jpg1814 : பிரான்ஸின் எல்­லையை 1814 ஆம் ஆண்­டி­லி­ருந்த நிலைக்கு மாற்­று­வ­தற்­கான உடன்­ப­டிக்கை பிரான்­ஸுக்கும் 6 ஆம் கூட்­டணி நாடு­க­ளுக்கும் இடையில் கைகெய­ழுத்­தி­டப்­பட்­டது. கைது செய்­யப்­பட்ட நெப்­போ­லியன் போனபார்ட், அல்பா தீவுக்கு அனுப்­பப்­பட்டார்.

 

1913 : அல்­பே­னியா சுதந்­திர நாடா­கி­யது.

 

1815 : தென் ஆபி­ரிக்­கா­வுக்கு அருகில் சூறா­வ­ளி­யினால் கப்­ப­லொன்று உடைந்­ததால் 372 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1876 : ஒட்­டோமான் சுல்தான் அப்துல் அஸீஸை அவரின் மரு­மகன் 5 ஆம் மூரத் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­விட்டு புதிய சுல்­தா­னானார்.

 

1917 : கிறீஸில் முதலாம் அலெக்­ஸாண்டர் மன்­ன­ரானார்.

 

1942 : ஜேர்­ம­னியின் கொலோன் நகரில் பிரிட்­டனின் ஆயிரம் விமா­னங்கள் இணைந்து 90 நிமி­டங்கள் தாக்­குதல் நடத்­தின.

 

1966 : கொங்­கோவின் முன்னாள் பிர­தமர் எவ­ரிஸ்டே கிம்பா உட்­பட அர­சி­யல்­வா­திகள் பலர் ஜனா­தி­பதி ஜோஸப் மொபுட்­டுவின் உத்­த­ர­வினால் பகி­ரங்­க­மாக கொல்­லப்­பட்­டனர்.

 

1967 : நைஜீ­ரி­யாவின் கிழக்குப் பிராந்­தி­ய­மான பயா­பரா, சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. இதை­ய­டுத்து, உள்­நாட்டு யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

 

1972 : இஸ்­ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலை­யத்தில் ஜப்­பா­னிய செம்­படை கிளர்­ச்சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் 24 பேர் பலி­யா­ன­துடன், 78 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1974 : எயார் பஸ் ஏ–300 விமானம் முதல் தட­வை­யாக சேவையில் ஈடு­பட்­டது.

 

1998 : ஆப்­கா­னிஸ்­தானில் 6.6 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டதால் சுமார் 5,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1998 : பாகிஸ்தான், கரான் பாலை­வ­னத்தில் அணு­குண்டு சோத­னை­யொன்றை நடத்­தி­யது.

 

2012 : சியரா லியோன் சிவில் யுத்­தத்தில் இடம்­பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான சர்வதேச நீதிமன்றம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்தது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

ஜோன் ஆப் ஆர்க் நினைவு தின சிறப்பு பகிர்வு..

சரித்திரத்தில் மிக இளம் வயதில் சாதித்த பெயர்களில் முக்கியமான இடம் ஜோன் ஆப் ஆர்க்குக்கு உண்டு. பிரெஞ்சு தேசத்தை ஒட்டி இருந்த லோரைன் பகுதியை சேர்ந்தவர் அவர். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு தேசத்துக்கு இடையே அடிக்கடி போர் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இங்கிலாந்து படைகள் பெருவெற்றி பெற்றுக்கொண்டு இருந்தன. பிரெஞ்சு தேசம் தோல்வியில் சிக்கிக்கொண்டு தத்தளித்தது. மன்னர் ஏழாம் சார்ல்ஸ் நம்பிக்கை இழந்து முடங்கிப்போனார்.

எளிய விவசாயக்குடும்பத்தில் பிறந்திருந்த ஜோன் ஆப் ஆர்க் என்கிற சிறுமிக்கு திடீரென்று மாற்றங்கள் நிகழ்ந்தன. தேவ தூதர்களின் குரல் கேட்பதாகவும்,பிரான்ஸ் தேசத்தை மீட்கும் பொறுப்பு தனக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சொன்னதை கேலியாகவே பார்த்தார்கள். மன்னரை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகே அவர் பார்க்க முடிந்தது. தான் முன்னின்று வெல்வதாக அவர் சொன்ன பொழுது பதினேழு வயது பெண் ஒருத்தி எதோ பிதற்றுகிறாள் என்றே முதலில் மன்னர் எண்ணினார்.

அவளின் தீர்க்கத்தை கண்ட பிறகு படைகளுக்கு அவளை தலைமைதாங்க அனுமதித்தார். ஆர்லியன்ஸ் கோட்டையை நோக்கி படைகளை செலுத்துகிற பணியை அவள் ஏற்றாள். ஆண்போல போர் உடை பூண்டு,நீண்ட வாளை ஏந்தி போர்க்களம் புகுந்தாள் அவள். உத்வேகமூட்டும் உரைகள்,கம்பீரமான ஜோனின் பேச்சுக்கள் ஆகியன பிரெஞ்சு
படைகளை வெற்றிப்பாதையில் அழைத்து சென்றன. வெற்றி மீது வெற்றி பெற்றது பிரெஞ்சு படை. நடுவில் ஜோன் ஆப் ஆர்க்குகு உடல்நிலை சரியில்லாமல் போன பொழுது படைகள் பின்வாங்கின. உடல் நிலை சீர்படுவதற்கு முன்னரே படைகளுக்கு தலைமையேற்று முழு வெற்றியை உறுதி செய்தார் அவர்.

ஏழாம் சார்லசை மன்னராக முடிசூட்டிய பின்னர் அவரை இங்கிலாந்துக்கு துரோகம் செய்து விற்றுவிட்டார்கள். மத நம்பிக்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டார்,சூனியக்காரி என்றெல்லாம் குற்றஞ்சாட்டி அவர் மீது விசாரணை நடைபெற்றது. விறகுகள் அடுக்கி எரித்து கொல்லப்படவேண்டும் என்று முடிவானது. அப்படியே மொட்டையடித்து,விறகுகள் நிரப்பி எரித்தார்கள். தீ பற்றி எரியும் பொழுது அவளருகே நின்ற பாதிரியாரை ,"தள்ளி நில்லுங்கள் ! தீ உங்களை சுட்டுவிடப்போகிறது !" என்று கருணை பொங்க சொன்ன பெண் அவள் !

இந்தியாவின் இந்திரா காந்தி,தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அவரே ரோல் மாடல். வரலாறெங்கும் ஜோன் ஆப் ஆர்க் நிறைந்து இருக்கிறாள் (ஜோன் ஆப் ஆர்க் நினைவு தினம் மே முப்பது )

vikatan

  • தொடங்கியவர்

தர்மம் குன்றாமல் வாழ்ந்து வந்தால்...
 

article_1464579157-popuoi.jpgமக்களைத் தரிசித்தல் என்பது, மிகப் பெரும் பாக்கியமாகும். இறைவன் படைப்பில் உருவான மக்களை, அவன் வடிவிலேயே காணும் மனப்பக்குவம் எமக்கு உண்டா என்று எம்மையே நாம் கேட்போமாக.

எங்களுடன் இணைந்து உலாவரும் ஜனத்திரள்களில், யாரோ எவரோ மகா புனிதராக இருக்கலாம்.

புண்ணிய ஆத்மாக்கள் பரந்துபட்ட பூமியில் சஞ்சாரம் செய்து வருகின்றமையினாலேயே இன்னமும் இந்தப் புவனி சமநிலையில் சுற்றிவருகின்றது.

தர்மம் குன்றாமல் வாழ்ந்து வந்தால் மட்டுமே பூமி காப்பாற்றப்படும்.

மக்களை நாம் நேசித்தால் மட்டுமே, அதர்மம் செய்யும் எண்ணம் அறவே தொலையும். ஓரிரு துஷ்டர்களுக்காக மக்களை விடுத்து தூரப்போய்விடமுடியாது. மகா ஜனங்களை கௌரவிப்பதனாலே எமது ஜென்மத்தினூடான ஷேமங்களும் இணைந்து வரும். புரிந்துகொள்க. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13308479_1052897021425658_21932662786995

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரமுமான ஸ்டீவன் ஜெரார்டின் பிறந்தநாள்.
கழக மட்டப் போட்டிகளிலும் கலக்கி வரும் வீரர் இவர்.
Happy Birthday Steven George Gerrard

  • தொடங்கியவர்

p120a.jpg

பாசமலர்கள்

தமிழகத்தில் முதல்வருக்கான பதவி ஏற்பு விழாவில், ஸ்டாலினுக்கு உரிய இடம் ஒதுக்காததுதான் இந்த வார ஹாட் டாபிக். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு பக்கம் கண்டன அறிக்கைவிட, ஜெயலலிதாவோ தெரியாமல் நடந்துவிட்டது மன்னிச்சூ என சோக அறிக்கை வாசிக்க, அதிர்ந்து போய்விட்டனர் நெட்டிசன்ஸ். அதிர்ச்சி முடிவதற்குள் ஸ்டாலினும் நன்றி தெரிவிக்க, என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? இதுக்கு எப்படி மீம்ஸ் போடுவது என மீம் பாய்களும் நொந்துகொண்டனர். #stalin #jeyalaitha போன்ற வார்த்தைகள் ட்ரெண்டிலேயே இருந்தன. ஷாக் ஆகிட்டோம்!

கொக்கி குமாரு

p120b.jpg

‘புதுப்பேட்டை’ படம் வெளியான சமயத்தில், படம் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சியில் போடும்போதெல்லாம், படம் ஹிட்தான். தனுஷ், செல்வராகவன், நா.முத்துக்குமார், யுவன் என எல்லோருக்கும் வேற லெவல் அங்கீகாரம் கொடுத்த படம் ‘புதுப்பேட்டை’. படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக #10yearsofepicpudhupettai என்ற டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினார்கள் புதுப்பேட்டை ரசிகர்கள். பார்ட் 2 எப்ப சார் வரும்?

மகான்

p120c.jpg

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாளை ட்விட்டரில் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அவரின் சினிமா வசனம், நிகழ்ச்சிகளில் அவர் பேசியது என கவுண்டமணியின் வசனங்கள் எல்லாவற்றையும் ட்விட்டாக்கினர் மகான் ரசிகர்கள். #goundamani,#hbdgoundamani,#rockstargoundamani போன்ற டேக்குகளில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அட்ராசக்க...அட்ராசக்க!

ஐந்து வார்த்தையில் திகில் கதை

ஐந்து வார்த்தைகளில் திகில்கதை சொல்ல வேண்டும் என்பது கடந்த வாரத்தின் ட்விட்டர் விளையாட்டு.  ‘என்ன! இனிமேல் ட்விட்டர் இருக்கவே இருக்காதா?’, ‘மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள், நாளை திங்கட்கிழமை’, ‘எங்க அப்பா, என் மொபைலைப் பார்த்துட்டார்’, ‘உங்க லவ்வர் வேறு ஒருவரைக் காதலிக்கிறார்’ என ஜாலி கேலி திகில் ட்விட்டுகளைத் தட்டிவிட்டு #5WordScaryStory என்பதை ட்ரெண்டாக்கினர் நெட்டிசன்ஸ். இரண்டு செகண்ட் கதை போல!

என்னை மறந்ததேன்!

இப்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு ஆல்பம் வெளியாகிறது. ஆல்பத்தில் இருக்கும் ஐந்து பாடல்களைக் கேட்டு முடிக்கும் முன்பு, அடுத்த ஆல்பம் வெளிவந்துவிடுகிறது. இப்படி தினமும் எத்தனையோ பாடல்களை மறக்கிறோம். அப்படி நாம் #மறந்தபாடல்கள் என்னென்ன? என ஜாலியாக ஆரம்பித்த ட்ரெண்டில் பல பாடல்களை நெட்டிசன்ஸ் கொட்ட, தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது. மறந்துட்டேன்!

ஆப் கி பாருக்கு வயது இரண்டு

p120d.jpg

மோடி பிரதமராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி விழா நடத்தப்பட்டது. ‘இன்று மட்டும் 1,000 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார்கள்’ என கெஜ்ரிவால் பரபரப்புக் குற்றச்சாட்டு கிளப்பினார். இரண்டு ஆண்டுகள் மோடி செய்தது என்ன? செய்வதாய் விளம்பரப்படுத்தியது என்ன? போன்றவற்றைப் பற்றி, ட்விட்டரில் #Modi2Years,#modisarkar,#modified2years போன்ற டேக்குகளில்  விவாதம் செய்தனர். இந்த ஆண்டாவது இந்தியாவில் இருப்பீங்களா?

சல்லு பாய் ரிட்டன்ஸ்

p120e.jpg

சல்மான் கான் படத்தின் போஸ்டர் வெளியானாலே ட்ரெண்ட் ஆக்குவது சல்மான் கான் ரசிகர்களின் ஸ்டைல். அவர் நடித்த ‘சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியான சில நிமிடங்களிலேயே, 50,000 லைக்ஸ் அள்ளிய ட்ரெய்லர், அட்டகாசமான ட்ரெய்லர், ஆரோக்கியமான ட்ரெய்லர் என வேறு லெவலில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். #sultantrailerfastest50klikes, #sultantrailer,#powerpackedsultantrailer என ட்ரெண்ட் அடித்துக்கொண்டே இருந்தார்கள். ‘கபாலி’ ட்ரெய்லர் வரட்டும் சல்லு!

மறுபடியும் அஜித், முருகதாஸ்!

p120f.jpg

அஜித் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வெளிவந்து இருக்க வேண்டிய படம் ‘மிரட்டல்’. ஏதோ பிரச்னையில் அஜித் விலகிக்கொள்ள, தற்போது ‘தீனா’வுக்குப் பின், மீண்டும் அஜித்-முருகதாஸ் கூட்டணி உருவாக இருக்கிறது. ட்விட்டரில் அஜித்தின் படத்தை ட்விட்டர் கவர் படமாக முருகதாஸ் வைக்க, #mirattal பற்றிய பேச்சுகள் மறுபடியும் வரத் தொடங்கி இருக்கிறது. மீண்டும் வருமா தல?

vikatan

  • தொடங்கியவர்

13308710_1052894738092553_18467130835918

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தம்மிக பிரசாத்தின் பிறந்தநாள்.
Happy Birthday Dhammika Prasad

  • தொடங்கியவர்

இவரும் தனி ஒருவனே!

 

p112a.jpg

துணைக்கு ஒருவர்கூட இல்லாமல் யாருமே இல்லாத காட்டில், தனியாக வாழ்வதற்கான தில் இருக்கிறதா உங்களுக்கு?

‘என்னது தனியாவா...அய்யய்யோ சான்ஸே இல்லை’னு சொல்லாம ஒரு காட்டில் ஒருவர் மட்டும் 10 வருடங்களாகத் தனியா வாழ்ந்துட்டு இருக்கார்.பீலால்லாம் விடாதீங்க பாஸ்.. இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நீங்கள் கேட்டால் அப்போ நீங்க சீனாவுக்குதான் போகணும். வடமேற்கு சீனாவில் இருக்கிறது ‘ஸ்வான்ஷான்ஷீ’ என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 10 வருடங்களாகத் தனியே தன்னந்தனியே தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் லியுஷென்ஜியா.

‘சொந்த பந்தமெல்லாம் இல்லாமல் இப்படி எதுக்கு பாஸ் தனியா வாழுறீங்க?’ என்று கேட்டால், தன் லைஃப் ஹிஸ்டரியை அலுத்துக் கொள்ளாமல் அவிழ்த்துவிடுகிறார்.

முன்பு 20 குடும்பங்கள் வாழ்ந்த இந்தக் கிராமத்தில் விளைச்சல் இல்லாமல் உணவுப்பொருட்களின் உற்பத்தி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.வறட்சியின் காரணமாகவும், வயதான காரணத்தாலும் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பிக்கக் கடைசியாக லியுவின் தாயும், சகோதரனும் இறந்து போனார்கள். தன் குடும்பம் வாழ்ந்த ஊரைவிட்டு வெளியேற முடியாத லியு அங்கேயே தனியாக வாழ ஆரம்பித்தார்.

p112b.jpg

‘ஊன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு காட்டுநாய்கள் கத்தும். ஆரம்பத்துல எனக்கு பயமா இருக்கும். அப்புறம் அதுவே எனக்குப் பழகிடுச்சு’ என்று சொல்லும் லியுவிற்கு 20 செம்மறி ஆடுகள் இப்போது தோழர்களாம். உணவே கிடைக்காத ஊரில் லியுவால் எப்படி வாழ முடியும்? தன் வாழ்வாதாரத்துக்காக பல மைல்கள் தொலைவு நடந்துபோய் வனத்துறையில் பாதுகாவலராகப் பணி புரியும் லியு மாதத்திற்கு 700 யுவான் சம்பாதிக்கிறார். இந்தப் பணத்தை வைத்துதான் தனக்குத் தேவையான உணவு, உடை எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறார்.

‘அது அதுக்குனு ஒரு நேரம் வரணும். அப்படி வரும்போதுதான் மக்களோட மக்களா வேறொரு மாகாணத்துல சேர்ந்து வாழ்றது பற்றி யோசிக்க முடியும்’ என்கிறார் லியு, செம கூலாக.

இந்த அரசியல்வாதிங்க தொல்லையெல்லாம் அவருக்கு இருக்காதுல்ல!

vikatan

  • தொடங்கியவர்
1981 : யாழ். நூலகம் எரிக்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று....

மே - 31

 

455 : ரோமா­னிய மன்னர் பெட்­ரோ­னியஸ் மெக்­ஸி­மஸை மக்கள் கல்லால் அடித்து கொன்­றனர்.

 

526 : துருக்­கியில் ஏற்­பட்ட பாரிய பூகம்பம் கார­ண­மாக சுமார் 250,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

736JL022113.jpg1790 : அமெ­ரிக்­காவில் பதிப்­பு­ரிமை சட்டம் இயற்­றப்­பட்­டது.  

 

1859 : லண்டன் பிக் பென் கடி­காரம் நேரத்தை காண்­பிக்க ஆரம்­பித்­தது.

 

1889 : அமெ­ரிக்­காவின்  பென்­சில்­வே­னியா மாநிலத்தின் ஜோன்ஸ்­டவுன் நகரில் அணைக்­கட்­டொன்று உடைந்­ததால் சுமார் 2200 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1910 : தென் ஆபி­ரிக்க ஒன்­றியம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1911 : மெக்­ஸிகோ புரட்­சி­யின்­போது ஜனா­தி­பதி போர்­பி­ரியோ டயஸ் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்றார்.

 

1927 : போர்ட் “மொடல் ரி” ரகத்தைச் சேர்ந்த கடைசி வாகனம் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது. 

 

1929 : முத­லா­வது பேசும் கார்ட்­டூ­னான மிக்கி மௌஸ் வெளி­யி­டப்­பட்­டது.

 

1935 : தற்­போ­தைய பாகிஸ்­தானின் குவேட்டா பகு­தியில் 7.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டதால் சுமார் 40,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1942 : அவுஸ்­தி­ரே­லி­யாவின்  சிட்னி நகரில் ஜப்­பா­னிய நீர்­மூழ்­கிகள் கடும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டன.

 

1961 : தென் ஆபி­ரிக்க ஒன்­றி­ய­மா­னது தென் ஆபி­ரிக்க குடி­ய­ர­சா­கி­யது.

 

1962 : மேற்­கிந்­திய சம்­மே­ளனம் கலைக்­கப்­பட்­டது.

 

1970 : பெரு நாட்டில் பூகம்­பத்­தை­ய­டுத்து ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் சுமார் 47,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1981 : 97,000 இற்கும் அதி­க­மான நூல்கள், சுவ­டி­க­ளுடன் யாழ் நூலகம் எரிக்­கப்­பட்­டது.

 

1985 : அமெ­ரிக்கா, கன­டாவில் சுழற்­காற்­றினால் சுமார் 97 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2004 : ஊட­க­வி­ய­லாளர் நடேசன் மட்­டக்­க­ளப்பில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

 

2005 : புல­னாய்­வுத்­துறை உயர் அதி­கா­ரி­யான மேஜர் நிசாம் முத்­தலிப் கொழும்பில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

 

2010 : காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரே­லியத் தடைகளை  முறியடிக்கு நோக்குடன் மனிதாபிமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் களில் இஸ்ரேலிய கடற்படையினர் மேற்கொண்ட முற்றுகைகளின்போது 9 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'உலக புகையிலை எதிர்ப்பு தினம்'...இந்த ஆண்டிற்கான தீம் 'ப்ளெயின் பேக்கேஜிங்!' #WhereIsMyGreenWorld

s4.jpg

ன்று, "உலக புகையிலை எதிர்ப்பு தினம்". புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும், ஏதாவதொரு 'தீம்'-ஐ மையப் படுத்தியே இந்த தினம் குறிக்கப்படுகிறது. அந்த தீமில் கூறப்பட்டுள்ளது கடைபிடிக்கப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டின் தீம் "புகையிலைப் பொருட்களின் சட்ட விரோத வர்த்தகத்தை தடை செய்வது" (Stop illicit trade of tobacco products) என்பதாகும். உலகளவில் உபயோகிக்கப்படும் பத்தில் ஒரு சிகரெட், சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுவதாகும்.

s3.jpg

இளைஞர்களை தன் வலைக்குள் விழ வைக்க, மிகக் குறைந்த விலையில் இப்புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், அரசை ஏமாற்றுவது, அதிக விலையில் விற்பது, போலியான பொருட்களை விற்பது எனப் பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான தீம் "Plain packaging". இப்படிச் செய்வதற்கான முக்கியமான காரணம், plain packaging புகையிலை பொருட்களின் கவர்ச்சியைக் குறைக்கிறது; புகையிலை விளம்பரங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது; மேலும், நமக்கான எச்சரிக்கை உணர்வை அது மேலும் அதிகரிக்கிறது.

s2.jpg

இனி புகையிலைப் பொருட்களின் அட்டைகளில், நிலையான நிறம் மற்றும் நடையில் மட்டுமே எழுத்துக்கள் இருக்கும் (Standard styles and fonts). பிராண்டின் பெயர், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் லோகோ தவிர பிற விளம்பர தகவல்கள் ஏதும் இனி அட்டையில் இடம்பெறாது.

புகையிலையைக் கட்டுப்படுத்த பல நிலைகளில் எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த plain packaging முறையை நம் அரசு நடைமுறைப் படுத்துகிறதா என்பதை நம் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

2012 ஆம் ஆண்டு டிசம்பரில், முதன் முதலில் ஆஸ்திரேலியா முற்றிலுமாக அனைத்து புகையிலைப் பொருட்களுக்கும் plain packaging முறையைக் கொண்டு வந்தது. இதேபோல், 2015-ல் அயர்லாந்து, இங்கிலாந்து, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகளவில் இத்திட்டத்தைக் கொண்டு வர, இதை மையப்படுத்தி இந்த ஆண்டின் "உலக புகையிலை எதிர்ப்பு தினம்" அமையப் போகிறது.

2016 WNTD (World No Tobacco Day)க்கான இலக்குகள்...

புகையிலைக் கட்டுப்பாட்டின் விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக Plain packaging முன்னிலைப்படுத்தப்படப் போகிறது.

s1.jpg

உறுப்பினராய் இருக்கும் நாடுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தி, அதை உலகமயமாக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாடுகளும் செய்து, நமக்கு அவர்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்ந்தால், இம்முயற்சி எளிதில் வெற்றி அடைந்துவிடும்.

இத்திட்டத்தை ஏற்று நடத்தும் நாடுகளில், அரசியல் ரீதியான இடையூறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இன்று நம்மில் பலருக்கு தெரியாத புகையிலை பற்றிய குறுந்தகவல்கள்...

புகையிலை உபயோகிப்பவர்களில் 50% பேருக்கும் மேலாக இறந்து போகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் பேர் புகையிலையால் மட்டும் மரணிக்கின்றனர். இதில் ஏறத்தாழ 6,00,000 பேர் புகையிலை உபயோகிப்பவர்களின் அருகாமையில் இருப்பவர்கள்.

புகையிலை உபயோகிப்பவர்களில் 80% பேர் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

நம் நாட்டின், நம் உலகின் நிலை இதுதான். எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், எத்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும், எவ்வளவு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும் தனிமனித ஒழுக்கம் ஏற்படாவிடில் எதுவும் மாறாது!

"மகள்(ன்)களைப் பெற்ற
அப்பாக்களுக்கு
நிச்சயம்
தெரிய வேண்டும்
புகையிலை
உயிரைக் குடிக்கும் என்று".

vikatan

  • தொடங்கியவர்

13323437_1053531964695497_36436453856750

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரொஷான் மகாநாமவின் பிறந்த தினம்.
Happy Birthday Roshan Siriwardene Mahanama

நேர்த்தியான துடுப்பாட்ட வீரராக விளங்கிய மகாநாம, அற்புதமான களத்தடுப்பு வீரராகவும் விளங்கினார்.
தற்போது உலகின் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தராக விளங்குகிறார்.

  • தொடங்கியவர்

மொழி இனி எதற்கும் தடையில்லை!

 

p68a.jpg

‘வெளிநாட்டுப் பெண்ணை மணந்த தமிழர்’னு அடிக்கடி பெட்டிச் செய்தியைப் படிச்சிருப்பீங்க. ‘எனக்கும் வெளிநாட்டுப் பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைதான். ஆனா, நமக்குதான் இங்கிலிபீஸே வராதே’னு ஏங்கிக்கிட்டு இருக்கிற எல்லோருக்குமே ஓர் இனிப்பான செய்தி. இனி இந்தி, இங்கிலீஷ், சைனீஸ், உருதுனு எல்லா மொழிகளையும் கத்துக்கணும்னு அவசியமில்லை. உட்கார்ந்த இடத்துல இருந்தே புரிஞ்சுக்கலாம். எப்படி?

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இருக்கிற ‘வாவர்லி லேப்ஸ்’ கம்பெனிதான் இந்தப் புண்ணிய வேலையைச் செஞ்சிருக்கு. பல வருடம் கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கும் இந்தக் கருவியை, பாட்டு கேட்கிறதுக்காக ஹெட்-போனை மாட்டிக்கிட்டு புளூடூத் மூலமா மொபைல்ல கனெக்ட் பண்ணிக்குவோமே... அதே சிஸ்டம்தான் இதற்கும். சரி, மாட்டியாச்சு... பிறகு? அவ்வளவுதான். இனி நம்மகிட்ட வந்து நமக்குப் புரியாத பாஷையில் பேசி நேரத்தை வீணடிக்கிற, ‘என்னைப் பார்த்தா இங்கிலீஷ் பேசுறவன் மாதிரியா தெரியுது?’னு எரிச்சல்படுத்துற கேரக்டர்களுக்கெல்லாம் நீங்க டஃப் கொடுக்கலாம். சுருக்கமா சொன்னா, எந்த ஒரு மொழியையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஆனால் பேச முடியாது!

p68b.jpg

அப்புறம்? மொழிப்பிரச்னை இல்லாமல் ஊர் சுற்றலாம். ஊர், மாநிலம், நாடு தாண்டியும் காதலிக்கலாம். ஏரியாவில் இருக்கிற பானிபூரி கடைக்காரன் உங்களைப் பார்த்து நக்கலா பேசுறானா, பெருமையா பேசுறானானு பொரணி கேட்கலாம். இதுவரை புரியாத மொழியில் யார்கிட்டேயாவது திட்டு வாங்கியிருந்தா, இனிமே திட்டாமப் பார்த்துக்கலாம். இப்படி ‘பைலட்’ கருவியில் இருக்கும் சிறப்பம்சங்கள் ஏராளம். இப்போதைக்கு ஸ்பானிஸ், ஃபிரான்ஸ், இத்தாலி, இங்கிலீஷ், இந்தி மொழிகளில் உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்புகளோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியில் உலகின் அனைத்து மொழிகளையும் ‘டிரான்ஸ்லேட்’ செய்யும் வசதிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, வருகிற செப்டம்பரில் விற்பனைக்கு வரவிருக்கிறது ‘பைலட்’ கருவி. ஆர்வம் தாங்காமல் துடிப்பவர்களுக்காக ‘வாவர்லி லேப்ஸ்’ நிறுவனத்தின் இணையதளத்தில் இப்போதே புக்கிங் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. விலை 129 அமெரிக்க டாலர்!

இந்தக் கருவி ‘கிலிக்கி மொழி’யை டிரான்ஸ்லேட் பண்ணுமானு கேட்டுடாதீங்க மக்கழே!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.