Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 2030ஆம் ஆண்டளவில் 13.5 வீதமானவர்கள் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் 2030ஆம் ஆண்டளவில் 13.5 வீதமானவர்கள் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும்
 
இலங்கையில் 2030ஆம் ஆண்டளவில் 13.5 வீதமானவர்கள் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும்
இன்று உலக நீரிழிவு நோய் தினம்.  உலகை அச்சுறுத்தும் நோய் வகைகளுள் ஒன்றுதான் நீரிழிவு நோய். நீரிழிவு நோய் பரம்பரை நோய்.இது தொற்றாதது என்றாலும் அது சடுதியாக மக்கள் மத்தியில் ஊடுறுவுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலை சிறுநீரக வைத்திய நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்தார்.
 
இன்றைய தினம் நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வடக்கு தவிர்ந்த இலங்கையின் புள்ளிவிபரத்தின் படி 10.3வீதமானவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தின் ஆய்வின்படி 16.4வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் இந்நோயின் மொத்தக் கணக்கெடுப்பின்படி 2030ஆம் ஆண்டளவில் இந்நோயால் 13.5 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
 
யாழ்.போதனா வைத்தியசாலையில் 5534 பேர் நீரிழிவு நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அதுமட்டுமல்ல வடக்கில் புலம்பெயர் உறவுகள் அதிகம்.புலம்பெயர் உறவுகள் வடக்கிற்கு வரும்போது இனிப்பு பண்டங்களை அதிகம் கொண்டு வருவார்கள். இதனால் இந்நோய் வடக்கில் அதிகமானவர்களை பாதிக்கும். பாதிக்கப்பட்ட குறித்த நோய் தொற்றாத நோய் இந்த தொற்றாத நோய்களை குணப்படுத்த முடியாது கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் செயற்கை மென்பானங்கள் இந்நோய்க்கு பிரதான காரணமாகின்றது.எனவே இயற்கையான பானங்களை பருகுவதால் உடல்சுத்தப்படுத்தப்படும்.எனவே எதிர்வரும் 20ஆம் திகதி 1000 இளநீர் மர நடுகை திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த  நோய் ஏற்படாமல் தடுக்க சரியான உடற்பயிற்சி மற்றும் முறையான உணவுப்பழக்கவழக்கம் உறுதுணையாக இருக்கும்.குறித்த நோய் ஏற்பட்டால் கண்,இதயம்,சிறுநீரகம் என்பன பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்றார். 
 
                                                                  1447239231_press%20meet1.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.