Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதன் தொடர்பில் பயங்கரவாத் தடைப் பிரிவு விசாரணை நடத்துகின்றது – சட்ட மா அதிபர் திணைக்களம்

Featured Replies

குமரன் பத்மநாதன் தொடர்பில் பயங்கரவாத் தடைப் பிரிவு விசாரணை நடத்துகின்றது – சட்ட மா அதிபர் திணைக்களம்

 

குமரன் பத்மநாதன் தொடர்பில் பயங்கரவாத் தடைப் பிரிவு விசாரணை நடத்துகின்றது – சட்ட மா அதிபர் திணைக்களம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தொடர்பில் பயங்கரவாதத் தடைப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாதத் தடைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.


ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு தொடர்பிலான விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.


இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125831/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

கே.பி க்கு எதிராக 192 குற்றச்சாட்டுக்கள்; அதில் 46க்கு சாட்சிகள் இல்லை

 

முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு தலைவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி சம்பந்தமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இதனை நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஜேவிபி தாக்கல் செய்துள்ள 192 குற்றச்சாட்டுக்களில் 46 குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக, நாட்டின் அனைத்து பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் வாயிலாகவும் அறிக்கை பெறப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

பெறப்பட்ட அறிக்கைகளின் படி, குமரன் பத்மநாதனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித சாட்சிகளும் காணப்படவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குமரன் பத்மநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிதாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 3ம் திகதிக்கு ஒத்தி வைத்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அறிக்கையை அதற்கு ஒருவாரம் முன்னதாக நீதிமன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.