Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவன்ட் கார்ட் ஆயுதங்களைப் பொறுப்பேற்கத் தொடங்கியது கடற்படை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

avant-380-seithy.jpg

சர்ச்சைக்குரிய மிதக்கும் ஆயுதக் களஞ்சியமான எவன்ட் கார்ட் கப்பலிலுள்ள சகல ஆயுதங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. எவன்ட் கார்ட் நிறுவனத்தின் கீழுள்ள ஆயுதங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

   

தென்பகுதி கடற்படையைச் சேர்ந்தவர்கள் குறித்த கப்பலில் உள்ள ஆயுதங்களை கரைக்குக் கொண்டுவரும் பணிகளை ஆரம்பித்திருப்பதுடன், இந்த நடவடிக்கையை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 3000 ஆயுதங்கள் குறித்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் காணப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

எவன்ட் கார்ட் கப்பலின் செயற்பாடுகளை கடற்படையினரிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதன் பின்னரே அதிலுள்ள ஆயுதங்களை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் முதற்கட்டமாகவே மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள ஆயுதங்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=144751&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.