Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் மிதக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்! - வடக்கில் மட்டும் 75 ஆயிரம் பேர் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

flood-161115-400-seithy.jpg

இடைவிடாமல் பெய்துவரும் அடைமழையால் வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கு மாகாணத்தில் 22 ஆயிரத்து 541 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 597 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 765 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 29 வீடுகள் முழுமையாகவும், 592வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

   

வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மேலாக பெருமழை பெய்துவருகிறது. எனினும், தாழமுக்கம் இன்று மாலையுடன் குறையும் சாத்தியம் காணப்படுகிறது என்றும், இதனால் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிதீன் தெரிவித்தார்.

காங்கேசன்துறை தொடக்கம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை வரையான பகுதிகளில், கடும் காற்றுடன் மழை பெய்வதால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. கடலுக்குச் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்ததால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடாமல் உள்ளனர். வீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகின்றது. நகரப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், மலையகம், வடமத்திய மாகாணத்திலும் அடைமழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்ட நாளாந்த நிலைமை அறிக்கையின்படி, யாழ். மாவட்டத்தில் 18 ஆயிரத்து 36 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 336 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 361 குடும்பங்களைச் சேர்ந்த 976 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 79வீடுகள் பகுதியளவுசேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 139 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் முழுமையாகவும் 418 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 12 இடைத்தங்கல் முகாம்களில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 765 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 5 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாகவும் 5 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 270 குடும்பங்களைச் சேர்ந்த 815 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

flood-161115-seithy%20(1).jpg

flood-161115-seithy%20(2).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=144916&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.